நண்பர்களே,
வணக்கம். இரவுக் கழுகாரின் 70-வது ஆண்டிது என்பதை டமாரம் அடிக்காத குறையாய் உங்கள் காதுகளில் போட்ட வண்ணம் உள்ளோம் ! அதே சமயம், இந்த நடப்பாண்டானது ஒரு கோஷ்டியின் 60-வது ஆண்டுமே என்பதை எப்படியோ 'மிஸ்' பண்ணிவிட்டோம் !! Oh yes - நமது நீலப் பொடியர்களின் 60-வது பிறந்தநாள் வருஷமிது ! 1958-ல் smurfs முதன்முறையாய்த் தலை காட்டியது Johann & Peewit என்றதொரு கார்ட்டூன் தொடரில். மறு வருஷமே தமக்கே தமக்கென ஒரு புதுப் பிரேத்யேகத் தொடரில் மிளிரத் துவங்கிவிட்டார்கள் ! So இந்த ப்ளூ குசும்பர்களுக்கு 60-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவோமா ?
இங்கொரு சுவாரஸ்யமான தகவலுமுண்டு ! பெல்ஜிய நாட்டின் பயணிகள் விமான நிறுவனமானது (Brussels Airlines) தங்கள் தேசத்துக் கலாச்சாரத்தின் மீது அளப்பரிய ஈடுபாடும், பெருமிதமும் கொண்டது ! பெல்ஜியத்தின் தலைசிறந்த நினைவுச்சின்னம் போலான சமாச்சாரங்களை அவ்வப்போது தங்களது விமானங்களின் வெளிப்பக்கத்தில் 'ஜம்மென்று' பெயிண்ட் செய்து பயணிப்பது வாடிக்கை ! டின்டின் இடம்பிடித்துள்ளார் ; மாக்ரிட் என்றதொரு பிரசித்தி பெற்ற ஓவியருக்கும் அந்த வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது ; பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு அந்த கெளரவம் கிட்டியுள்ளது ; கடந்த 13 ஆண்டுகளாய் பெல்ஜியத்தில் நடைபெற்றுவரும் Tomorrowland என்றொரு நடன நிகழ்ச்சியினை நினைவுகூரும் விதமாய் அதனையும் விமானத்தில் வரைந்துள்ளனர் ! அந்த வரிசையில் சென்றாண்டு புதிதாய் எதைத் தேர்வு செய்யலாமென்று ஒரு போட்டியை நடத்தியது பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ! பொதுமக்களின் வாக்குகளும், ஒரு உச்ச ஜூரி குழுவுமே தீர்ப்பைச் சொல்லவிருந்தனர் !! இறுதியாய் பெல்ஜியத்தின் கலாச்சார வெளிப்பாட்டுக்கு நமது smurfs பொடியர்களே இம்முறை பொருத்தமானவர்களென்று தேர்வாயினர் !! இளம் இத்தாலிய டிசைனரான மார்த்தா மாஸ்ஸ்ல்லானி தான் இந்த ஐடியாவை முன்மொழிந்து - பரிசீலனைக்கொரு டிசைனையும் தயார் செய்தவர் ! ஏர்பஸ் A-320 ரக விமானத்தின் வெளிப்பக்கமும், உள்பக்கமுமே நமது smurfs கும்பல் அட்டகாசமாய் இடம்பிடித்திட, இந்த மார்ச் மாதம் முதல் அந்த smurf விமானம் விண்ணில் பறக்கத் துவங்கியுள்ளது ! பாருங்களேன் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை !! இந்தத் தேர்வில் நமது ஆதர்ஷ smurfs-க்கு ஆதரவாய் இன்டர்நெட் மூலமாய் வோட்டளிக்கும் பெருமை நமக்குமே கிட்டியது ; 'சபக்' என்று ஒரே அமுக்கு பட்டனை !! And அந்த விமானத்தினை பெயிண்ட் செய்யும் அழகை இந்த வீடியோவில் (https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM) பார்த்தால் smurfs கட்சியல்லாத நண்பர்களுக்கும் கூட இந்தக் சுட்டுவிரல் மனுஷர்கள் மீது பிரியம் எழக்கூடும் ! ஒரு தேசமே கொண்டாடி, தங்கள் கலாச்சாரத்தின் பெருமிதச் சின்னமாய் அவர்களைப் பார்ப்பதென்பது எத்தனை உயரிய கௌரவம் !!! நாமும் அந்த ரசிகக் கோடிகளில் ஒரு தக்கனூண்டு அங்கமென்பதை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் !!
https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM |
டிசைனர் !! |
சும்மாவே promotion-களில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஜாம்பவான்கள் smurfs படைப்பாளிகள் ; இது ஒரு முக்கிய ஆண்டெனும் போது சும்மா விடுவார்களா ? சீனியரின் சிலை ; smurfs நோட்டுகள் ; நாணயம் ; பொம்மைகள் ; போட்டோ பிரேம்கள் என்று ஏதேதோ போட்டுத் தாக்கி வருகின்றனர் !! Phew....நாமோ இங்கே மதில் மேல் பூனைகளாய்க் குந்தியிருக்கிறோம் எனும் போது மெலிதான சங்கடம் உள்ளுக்குள் !! நம் எல்லோருக்குமே இவர்களைப் பிடித்துப் போய் விட்டிருந்தால் - ஆஹா....?!!
Back to reality - ஏப்ரல் இதழ்களின் முதல் ரவுண்ட் விமர்சனங்கள் பெரும்பாலும் positive என்பதில் மகிழ்ச்சி ! இங்கு மாத்திரமன்றி, மின்னஞ்சல் மூலமாகவும் நமக்கு இப்போதெல்லாம் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன ! And இன்னமும் விடாப்பிடியாய்க் கடுதாசி போடும் சில ஆர்வலர்களுமுண்டு ! So சின்னதாகவோ, நீளமாகவோ குறிப்பிட்ட அந்த 8 வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன ! அவற்றில் ஒன்றிரண்டில் கொஞ்சம் கோங்குரா காரம் கலந்தே இருக்கும் என்றாலும், பாராட்ட வேண்டியவற்றை 'பச்சக்' எனப் பாராட்டவும் செய்திடுகிறார்கள் ! இங்கே நமது வலைப்பதிவின்கருத்துக்களும், அந்த மின்னஞ்சல் / உள்ளூரஞ்சல் கடிதங்களும் ஒத்துப் போயிருப்பின் - அம்மாதத்து விமர்சனங்கள் bang on target என்று எடுத்துக் கொள்ளலாம் ! And இம்மாதம் சொல்லி வைத்தது போல சகலமும் ஒத்துச் செல்கின்றன !!
இம்மாதத்து surprise பெரிய இதழ்களல்ல - அந்த குட்டியூண்டு வண்ண TEX இணைப்பு தான் என்பது அப்பட்டம் ! இந்த வீரியம் மிகுந்த சிறுகதைகள் டெக்சின் ஒரு புதுப் பரிமாணம் என்று சொன்னால் அது hype அல்ல ! இரண்டே இதழ்கள் இதுவரைக்கும் வெளிவந்துள்ளன ; so இதைக் கொண்டே ஒரு தீர்ப்பெழுதுவது jumping the gun என்று தோன்றலாம் தான் ; ஆனால் சில தருணங்களில் பானை முழுசையும் இலையில் கொட்டிக், கபளீகரம் செய்து தான் ருசியைப் பிரகடனம் செய்தாக வேண்டுமென்ற அவசியம் கிடையாது தானே ? "கடைசிப் பலி" - "டிடெக்டிவ் டெக்சின்" இன்னமுமொரு முகமே என்றாலும், இதன் 32 பக்கங்களுக்குக் கிட்டியுள்ள தாக்கம் - "பாலைவனத்தில் புலனாய்வின்" 110 பக்கங்களுக்குக் கிட்டியதை விடவும் கூடுதல் தானே ? ஒரு கதாசிரியர் full form-ல் இருக்கும் போது அவரிடம் டெக்ஸ் போலொரு ஹீரோ ஒப்படைக்கப்பட்டால் பக்க எண்ணிக்கைகள் ஒரு பொருட்டே அவ்வதில்லை போலும் ! இந்தாண்டு காத்துள்ள 4 சிறுகதைகளுமே - இன்னும் வெவ்வேறு பாணிகளில் இருப்பதால் - இந்த கலர் டெக்ஸ் இணைப்பானது, இந்தாண்டின் ஓட்டத்தினில் இன்னும் சில பல பெரியண்ணாக்களையும், மாமாக்களையும் பின்னுக்குத் தள்ளிடும் சாத்தியங்கள் பிரகாசமென்பேன் ! கடுகு...காரம்...என்று புளித்துப் போன உவமைகளை இங்கே பயன்படுத்துவானேன் -காலத்துக்கு ஏற்ற மாதிரி புதுசாய் ஏதாச்சும் யோசிப்போமா ? பேட்டரி சிறுசானாலும், டாக்டைம் ஜாஸ்தி ?
"பவளச் சிலை மர்மம்" பற்றிப் பேசுவதாயின், குடுகுடுப்பைக்காரன் அவதார் எடுக்கத் தான் வேண்டிவரும் - simply becos இது ஹிட்டடிக்கும் என்ற ஆரூடம் இந்த இதழின் கலர் கோப்புகளைப் பார்த்த நொடியிலேயே புலனாகிவிட்டது என்பதைச் சொல்லிட வேண்டி வரும் ! இது நீங்களே செய்த மறுபதிப்புத் தேர்வு என்பதாலும், ஆளாளுக்கு அரை டஜன் தபாவாவது படித்திருப்பீர்களென்பதாலும், அங்கே நான் புதிதாய்ச் சொல்லவோ, செய்யவோ அதிகமிராது என்பது புரிந்தது ! மெருகூட்டலுக்கு வாய்ப்பிருக்கும் ஒரே இடம் வண்ண அச்சில் தான் ! பொதுவாய் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளின் அச்சுப் பணிகளுக்கும், (இத்தாலிய) டெக்ஸ் அச்சுப் பணிகளுக்குமிடையே ஒரு மெகா வேறுபாடு இருப்பது வாடிக்கை ! FB படைப்புகளின் லேட்டஸ்ட் கலரிங் பாணிகள் மெர்சலாக்கும் ரகம் - இம்மாத லேடி S கதையில் நாம் பார்த்தது போல் ! அதே சமயம் சற்றே பழைய கதைகளுக்கு சும்மா அடர், பளீர் வர்ணங்களை போட்டுச் சாத்தவும் செய்திருப்பார்கள் ! சிக் பில் கிளாஸிக்ஸ் கூட அதற்கொரு உதாரணம் ! கொலைகாரக் காதலியின் முதலிரண்டு பக்கங்களை பாருங்களேன் - பின்னணிகள் பச்சை ; ப்ளூ என்று அடர் வர்ணங்களில் கண்ணைப் பறிக்கும் ! ஆனால் டெக்சின் கலரிங் பாணிகளிலோ பெரும்பாலும் நீல வானின் பளீர் ப்ளூ ; மின்னும் மஞ்சள் சட்டை என்றிருப்பினும் கண்ணுக்கு ஒரு இதம் தூக்கலாய் இருப்பது போல் எனக்குத் தோன்றும் ! இம்மாத "பளிங்குச் சிலை மர்மம்" டைப்செட்டிங் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கம்பியூட்டர் screen-களை எட்டிப் பார்த்த நொடியே தீர்மானித்து விட்டேன் - ஒரு விருந்து காத்துள்ளதென்று ! அதகள ஆக்ஷன் ஒருபக்கம் ; வானவில்லின் ஜாலங்கள் இன்னொரு பக்கமெனும் போது - உங்கள் முகங்களில் சந்தோசம் படர்வதில் வியப்பேது ?
ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே ! So அதன் பொருட்டு "சை.சாம்." கோப்புகளும் முன்னமே வந்துவிட்டன ! ஆனால் சந்தாத் தொகை எகிறிக் கொண்டே போவதாய்த் தோன்றியதால் - உங்கள் favorite மட்டுமே களம் காண நேரிட்டது !
இம்மாதம் ஒரு "கிட் ஆர்டின்" மாதம் என்பதில் mixed reactions இருப்பதை உணர்கிறேன் ! கார்ட்டூன் காதலர்களுக்கு குஷியோ குஷி ; "கார்ட்டூனாஆஆ ??" எனக் கூடிய நண்பர்களுக்கு முகச்சுளிப்பு என்பதில் இரகசியமேது ? இங்கே எனக்கொரு சின்ன கேள்வி ! முன்பெல்லாம் - இந்த genre பிரிப்புகள் ; இத்தனை இதழ்கள் என்றெல்லாம் இல்லாத நாட்களில் முதல் மாதம் டெக்ஸ் வந்திருப்பார் ; அடுத்த மாதம் கறுப்புக் கிழவி ; தொடரும் மாதத்தில் சிக் பில் என்று அட்டவணை இருந்திருக்கும் ! அன்றைக்கெல்லாம் துளி கூட நெருடல்களின்றி கார்ட்டூன்களை அனைவருமே ரசிக்கத் தானே செய்தோம் ? ஆனால் இன்றைக்கு ரசனைகள்வாரியான சந்தாக்கள் என்றான பிற்பாடு - ஆக்ஷன் தவிர்த்த இதர genre-கள் ஒருவித நெளிவை நம்முள் ஒருசாராருக்குக் கொணரும் காரணம் என்னவாக இருக்குமோ ? Confusion .....!
சிக் பில் க்ளாசிக்ஸ் 2 மறுபதிப்புக் கதைகள் plus 1 புதுக் கதை என்று வந்திருப்பினும், எனக்கு எல்லாமே புதுசாகவே தெரிந்தன ! அந்த (குட்டிக்) கதை # 3 "எல்லாம் இவன் செயல்" தான் இந்த இதழின் best என்னைப் பொறுத்தவரைக்கும் ! வெறும் லெமன் ஜூஸ் குடித்துக் கொண்டே "என்ன ஸ்டெடியா இருக்கேன்னு பார்த்தியா ?" என்று சிலம்பும் கிட் ஆர்டினைப் போலான பார்ட்டிகள் ஒவ்வொரு நட்புவட்டத்திலும் உண்டு தானே ? அப்புறம் இன்னொரு கேள்வியுமே : சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? அல்லது ஓராண்டு ப்ரேக் விடல் தேவலை என்பீர்களா ? சி.பி.3 க்கு 'ஜே' போடுவதாயின் - உங்கள் கதைத் தேர்வுகள் எவையாக இருக்குமோ ?
அப்புறம் "நண்பனுக்கு நாலுகால்" செம breezy read என்று நினைத்தேன் நான் ! 30 பக்கத்தில் முடிக்காது, இதனையும் நார்மலான 44 பக்கங்களில் படைப்பாளிகள் திட்டமிட்டிருப்பின், இன்னுமே கதைக்கு வெயிட் கூடியிருக்குமென்று பட்டது ! And ரொம்பவே நண்டுகளாய் இல்லாது, ஒரு 12 வயது சுமார் பொடுசு உங்கள் வீட்டிலிருப்பின்,இதை படித்துப் பார்க்கச் சொல்லி கொடுங்களேன் - நிச்சயம் ரசிக்குமென்று எனக்குத் தோன்றுகிறது ! ஆர்டினின் அந்த அப்பாவித்தனமும், குடாக்குத்தனமும் யாரையும் சுண்டியிழுத்து விடாதா ?
Last of the month - லேடி S !! ஊர் சுற்றுவதைத் தாண்டி அம்மணி எதுவுமே செய்யக்காணோமே என்ற ஆதங்கம் நண்பர்களில் பலருக்கு இருப்பது புரிந்தாலும் - இந்தக் கதையினில் அவரொரு கருவியாய் மாத்திரமே சித்தரிக்கப்பட்டுள்ளதால் அடக்கி வாசித்திருப்பதாய் எனக்குப்பட்டது ! And அந்தச் சித்திரங்கள் ; கலரிங் அற்புதம் ; ஐரோப்பாவினில் நாமும் உலவியது போலான பீலிங் என்பனவெல்லாம் பாசிட்டிவ்களாய்ப் பட்டன என் கண்களுக்கு ! உங்களின் thoughts ப்ளீஸ் ?
On the road ahead - ட்யுராங்கோவின் எடிட்டிங் பணிகள் ஓடி வருகின்றன ! இந்த விடுமுறை தினத்தில் அதனை முடித்து தொடரவுள்ள வாரத்தில் அச்சுக்குச் செல்ல வேண்டுமென்பது திட்டம் ! அட்டைப்படத்துக்கென பொன்னன் சூப்பராய் 2 டிசைன்களைத் தயார் செய்து தந்துள்ளார் ; அவற்றை இப்போதே கண்ணில் காட்டினால், இதழ் வெளியாகும் வேளைக்குள் பழசாகிப் போய் விட்டதொரு உணர்வு மேலோங்கக்கூடும் என்பதால் கோஷாப் பெண்ணாய் மூடாக்குக்குள்ளேயே தொடரட்டுமே ? இதோ உட்பக்கத்திலிருந்தொரு preview :
And இதற்கு முன்பான பாகங்களிலிருந்து ஒரு கதைச் சுருக்கம் கோரியிருந்தது மறந்து விட்டதா guys ? யாராச்சும் கொஞ்சம் ஒத்தாசை செய்திடுங்களேன் - ப்ளீஸ் ?
Before I sign off : "ஜம்போ காமிக்ஸ்" சந்தாக்கள் செம விறுவிறு !! ஜூனில் முதல் flight என்பதால் இடைப்பட்ட 60 நாட்களுக்குள் சந்தாக்களை அனுப்பி வைத்து, நீங்களும் takeoff ஆகிடலாமே - ப்ளீஸ் ? And வழக்கம் போல அன்பின் பிரவாகம் தொடர்கிறது ! நமது அனாமதேய அன்பர் - நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணன் சாருக்கும் ஜம்போவின் சந்தாவை அன்பளிப்பாக்கியுள்ளார் ! மேற்கொண்டும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! இது தொடர்பாயொரு சிறுகுறிப்பு மஹாஜனங்களே : நிறைய ஆசை இருப்பினும், நம்மள் கி அடிமடியின் சுருக்குப் பையின் கனம் ரொம்பவே கம்மி என்பதால் நம்பள் யாருக்கும் சந்தாப் பரிசுகள் வழங்கும் நிலையில் இருக்கிறான் இல்லை ! So முகம்காட்ட விரும்பா ஒரு நண்பரின் தயாளத்தை எனதாகத் தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் !
ஏப்ரலில் விமர்சனங்களும், ஜம்போவின் சந்தாக்களும் தொடரட்டுமே ? Bye all ! See you around ! Wonderful Easter too !!