நண்பர்களே,
வணக்கம்! இராமாயணம், மகாபாரதமென்று ஆரம்பிக்கும் முன்பாக டிசம்பர் இதழ்களைப் பற்றி "பட்'டென்று சொல்லிவிடுகிறேனே folks! லார்கோவோடு தான் WWF போட வேண்டியிருக்குமென்ற எதிர்பார்ப்பு ஓரளவுக்கே மெய்யாகிப் போனது! இளம் டெக்ஸ் - 5 பாக சாகஸம் கூட நாக்குத் தொங்கும் பணிகளைக் கோரிவிட்டது! குழப்பங்கள் இல்லாத நேர்கோட்டுக் கதை தான் என்றாலும், 320பக்கங்கள் எனும் போது the sheer volume of the work குறுக்கைக் கழற்றி கையில் கொடுத்தே விட்டது! ரெகுலர் டெக்ஸை விட இளையவரின் கதைவரிசையில் எப்போதுமே சம்பாஷணைகள் ஜாஸ்தியே! And இங்கேயும் க்ரோ பழங்குடியினர்; ப்ளாக்ஃபுட் பழங்குடியினர் என்று அணி சேர்த்து காடு-மேடெல்லாம் நம்மவர் பயணிக்கிறார்! இதுவரைக்கும் "வோ'' போட்டுவிட்டு பெட்ரோல் காசும், பேட்டாவும் வாங்கிவிட்டுப் புறப்படும் சிகப்பின ஜனம் இந்தமுறை 'மைக் மோகன்' ஆன எனக்கே tough தரும் அளவிற்கு செம மாட்லாடுகிறார்கள்! எனக்கோ தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க வயிற்றில் புளியும் கரைந்து கொண்டிருந்தது! ஆனால், எத்தனை முயற்சித்தும், எடிட்டிங்கைத் திருப்திகரமாய் செய்திட இந்த 320 பக்கங்களும் கோரிட்ட உழைப்பைப் போடாது ஒப்பேற்ற வழியே இருக்கவில்லை! So சகலத்தையும் முடிக்கவே வியாழனாகிப் போய்விட்டது! மறுநாளே ப்ரிண்டிங்கும், முடிந்திருக்க, இன்று பைண்டிங் ஆபீஸ் வாசலில் நம்மாட்கள் கொட்டகை போட்டு அமர்ந்துள்ளனர்! So இன்றிரவு (சனி) அல்லது ஞாயிறு பகலில் புக்ஸ் ரெடியாகிவிடும் & திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! Terribly sorry all 🙏🙏 கடந்த இரண்டு மாதங்களாய் பழைய தொற்று வியாதி நம்மையும் அறியாமலே தோளில் ஏறிக் கொண்டதோ? என்ற பயம் கூட என்னைப் பீடித்துள்ளது! But முரட்டுப் பணிகள் ஒட்டுமொத்தமாய் ஆண்டின் இறுதிக்கென அணி சேர்ந்துவிட்டது தான் எதிர்பாரா இடரே! ஜனவரி முதலாய் 'பங்க்சுவல் பரமேஷ்' அவதார் உறுதி!
And சகல குட்டிக்கரணங்களுக்கும் காரணமே "சாம்பலின் சங்கீதம்'' இதழோடு நடத்த நேர்ந்த மெகா சடுகுடு தான் என்பதில் no secrets! எப்படியேனும் அதனை சேலம் புத்தகவிழாவினில் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுடன் ரிலீஸ் செய்தே தீரணும் என்ற வைராக்கியத்தில் தான் ரெகுலர் தட இதழ்களைக் கூட சற்றே ஆறப் போட்டிருந்தேன்! ஆனால், நவம்பர் இறுதியில் துவங்கியிருக்க வேண்டிய சேலம் விழாவானது டிசம்பர் 19-க்கென மாற்றம் கண்டது! ஆனால், அதன் பிற்பாடாய் பெருசாய் எவ்விதத் தகவல்களும் லேது! ஜனவரியில் துவங்கவுள்ள சென்னை புத்தகவிழாவின் தேதிகள் கூட அறிவிக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகளும் துவங்கியும் விட்டன! ஆனால், இந்தப் பதிவினை எழுதி வரும் நொடி வரைக்கும் சேலத்தின் திசையிலிருந்து சலனமற்ற மௌனமே! So வரும் வாரத்தினில் ஏதேனும் நல்ல சேதி கிட்டுகின்றதா என்று பார்க்க உத்தேசித்துள்ளோம்! In case நாமெல்லாம் எதிர்பார்க்கும் good news இல்லையெனில் டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! ஒரு அசாத்தியப் பணிக்கு இதுவொரு anti-climax ஆகத் தானிருக்கும் என்பது புரிகிறது; ஆனால், தயாராகி வரும் புக்கை இனியும் தேவுடு காக்கச் செய்ய மனசில்லை! தவிர 2025-ல் துவக்கிய முன்பதிவுகளுக்கு 2026 -ல் புக் என்பது நெருடுகிறது! So சேலம் விழா இருந்தால் சிறப்பு ; இல்லையேல் கூரியர் நண்பர்களே சிறப்பு விருந்தினராய் மாறி ரிலீஸ் செஞ்ச்சூ 🥹🥹!Phewwwwwwwww.....!
And இந்த நொடியில் சேலமும்; சாம்பலின் சங்கீதமும் சார்ந்த சன்னமான disappointments-ஐ ஓரம்கட்டி விட்டுப் பார்த்தால், உள்ளுக்குள் ஒரு செம குஷி & நிம்மதி & திருப்தி போட்டிங் தி குத்தாட்டம்! "2025 எனும் ஒரு அசாத்தியப் பரீட்சையை எழுதி முடிச்சாச்சு!'' என்ற திருப்தி உள்ளாற தாண்டவமாடிடுகிறது!
*தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா?
*சுமாராய் செய்திருக்கிறோமா?
*சொதப்பலாய் பண்ணிருக்கிறோமா?
என்பதைத் தீர்மானிக்க ஜுரிக்களான உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்! So எங்களைப் பொறுத்தவரை just being able to complete the trial - ஒரு ஜாலிலோ ஜிம்கானா அனுபவமாக இருந்துள்ளது!
மொத்தம் 57 இதழ்கள்..... கலரில் 33 & black & white-ல் 24!
இந்த 2025-ல் எதிர்காலத்துக்குள் டைவ் அடித்திருக்கிறோம்.....அழிவின் விளிம்பில் நிற்குமொரு apocalyptical பிரபஞ்சத்தில் "பயணம்'' பண்ணியிருக்கிறோம்! வரலாறுக்குள் வட்டமும் அடித்துவிட்டோம்....மன்னிக்காத வடுவாகிப் போன அணுகுண்டோடும், உலக யுத்தத்தோடும்! க்ரிப்டோ கரென்சி எனும் மெய்நிகர் பணவுலகினுள் சஞ்சாரம் செய்துவிட்டோம்! பங்குச் சந்தையின் பல்வேறு பரிமாணங்களோடு பொருதியும் விட்டோம்! "அலிபாபாவும், 40 திருடர்களும்'' வானவில்லின் ஒரு மழலை முனையெனில், மறுமுனையில் நிற்பனவெல்லாம் வேறு லெவல்! இந்தத் திரும்பிப் பார்க்கும் படலத்தினை விரல் நோவ எழுத இந்த நொடியில் "தம்'' லேது என்பதால் அடுத்த சில நாட்களில், சாம்பலின் சங்கீதம் பைண்டிங் முடிந்து புக் ரெடியான நாளில் ஒரு YouTube பதிவாக்கிடத் தீர்மானித்துள்ளேன்! So இந்த நொடியினில் இதோ சாம்பலின் சங்கீதம் அட்டைப்பட preview :
அப்புறம் சென்னையின் புத்தக மேளா ஜனவரி 7 to 19 தேதிகளில் என அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட அவசியமாகிடப் போகும் இதழ்கள் பக்கமாய் கவனங்களை திருப்பி வருகிறோம் ஜல்தியாய்! கைவசம் மாயாவி சார் இல்லாமல் பட்டினத்துக்குப் போனால் சரமாரியாய் சப்பல்ஸ் பிய்ய நேரிடும் என்பதால் அவரே நமது முதல் இலக்காகிடுகிறார்! வேக வேகமாய் தயாராகி வரும் இதழ்கள் பற்றி தொடரும் வாரங்களில் சொல்லுகிறேன்! இதோ இப்போதைக்கு "தவளை மனிதர்கள் " ரெடி ஆகி விட்டார் என்பது தகவல் !
And மறுபதிப்புப் படலங்களிருந்து இன்னமும் ஒரு க்ளாசிக் ஜாம்பவானின் குட்டிப் பிரிவியூமே இதோ! மாயாவிக்கான மோகம் வேறொரு லெவல் என்றால், வேதாளருக்கான கெத்தும் சளைத்ததே அல்ல தான்! So ஏற்கனவே ரெடி செய்திருந்த "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" கலரில் டிக் ஆகியுள்ளது! இதோ preview :
Bye all.. see you around.... இந்த நொடியில் ஊரில் இல்லாது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தே டைப்பி வருவதால், இதற்கு மேல் நீட்டி முழக்காது விடை பெறுகிறேன்! See you around all - ஜனவரியின் காவியத் தலைவன் தோர்கலுமே calling! Have a good Sunday 👍
P. S: உங்களுக்கான வினா :
இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்?



Hi
ReplyDeleteவணக்கம்
Deleteவாழ்த்துகள் தம்பி
DeleteHai
ReplyDelete😀🙏😭💯🥳
ReplyDelete3rd
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete10 kulla
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு முதலிடம் 😇💪✨
ReplyDelete😊😊😊💪💪
Deleteஆஹா உயிர் வந்தாச்
ReplyDeleteஸ்டீல் 🌹
DeleteMe too
ReplyDeleteஎடிட்டர் ஐயா தவளை மனிதர்கள் அட்டைப் படம் எப்போது காட்டுவீர்கள்
ReplyDeleteThis year books good
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கம்.
ReplyDelete🙏🙏🙏
அனைவருக்கும் இரவு வணக்கம்.
ReplyDeleteஇந்த வருடம் கடினமான வேலைப் பளுவால் நிறைய இதழ்கள் வாசிக்க இயலவில்லை.
ReplyDeleteஅதனால் எதுவும் சொல்ல இயலவில்லை.
மன்னிக்கவும் சார்.
இந்த வருடம் முழு திருப்தி .
ReplyDeleteசார் எவ்ளோ மெனக்கெடல்கள்....சூப்பர் சார் படித்த வரை அனைத்துமே....சொத்தை அனுபவிக்காம காத்து ரசித்து வரும் கருமியப்போல காத்திருக்கு பொக்கிசம்....ஓட்டத்தால் போரென்பதே கிடையாதெனும் போது...போரடிக்கும் போது காத்திருக்கு சொர்கம்.....இருந்தாலும் அனுபவித்து படித்து வருகிறேன்....அன்று முதல் இன்று வரை எனது சந்தோஷத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியாய் உருகி உருகி வெளிச்சம் தரும் தங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்....நாளை நமதே....லார்கோவும் வருதே
ReplyDeleteசேலத்தில் வெளியீடு இல்லாவிட்டால் சென்னையில் வெளியிடலாமே.. உங்கள் உழைப்புக்கு மற்றும் இத்தகைய வெளியீட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.
ReplyDeleteஅருமையான கருத்து!👍💐
Deleteஇப்போ தான் கீழே பதில் போட்டிருந்தேன் சார்....!
Deleteகணிசமான நண்பர்கள் பொறுமை இழந்து வருகின்றனர்! நம்மாட்கள் சாத்து வாங்குவதே பலனாகிப் போகிறது!
அட்டைப்படம் அருமை.....வேளாளர் அட்டை வேற லெவல் சார்.....தோழர்கள் ஆஹா....ஆஹா எத்தனை கோடி இன்பம் ஜனவரிக்குள்....தவளை மனிதன் வண்ணமா....இருவண்ணமா
ReplyDeleteசூனியக்காரியின் சாம்ராஜ்யம் மறு மதிப்பு அதுவும் கலரில் சூப்பர் நியூஸ் சாரே
ReplyDeleteபழைய அட்டை படமே சூப்பர்
Deleteசரி நண்பர் கார்த்திகை பாண்டியனோடு ஓர் செல்ஃபோன் வீடியோ உரையாடல் போட்ருவோம்
ReplyDeleteநீங்க தான் anchor கவிஞரே 💪
Deleteஒரு பேச்சுக்குதான சார்
Delete//சேலத்தில் வெளியீடு இல்லாவிட்டால் சென்னையில் வெளியிடலாமே.. உங்கள் உழைப்புக்கு மற்றும் இத்தகைய வெளியீட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.//
ReplyDeleteஆமோதிக்கிறேன்.. சென்னையில் வெளியிடுவது பற்றி யோசியுங்கள் சார்..
அது இன்னுமொரு மாதம் அடை காக்கும் பணியாகிப் போகும் சார்! And இப்போவே நம்மாட்கள் பதில் சொல்ல முடியாது நெளிந்த பிழைப்பாய் உள்ளது! "இன்னுமா ரெடியாகல?" என்று நித்தமும் வரும் போன்கள் எண்ணிலடங்கா 🤕🤕
Deleteரிலீஸ், வாசக மீட்ஸ் - என எதிலும் பங்கேற்கா நண்பர்களுக்கு பொறுமையின்றிப் போவதை புரிந்து கொள்ள முடிகிறது தான்!
Deleteசாம்பலின் சங்கீதம் இன்னும் தள்ளிப்போனால் என்ன நடக்கும் என்று புரிகிறது சார். நன்றி
Deleteசார்.. பதிவு எங்கேங்க சார்?🤔 வெறும் கமெண்ட் மட்டும் போட்டிருக்கீங்க.. அதுவும் நம்ம ஸ்டீல் போடும் கமெண்டை விட சின்னதாய்?0🧐
ReplyDelete"பிளாட்பாரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டான் பாத்தியளா?"ன்னு யாராச்சும் கேக்குறதுக்கு முன்னே ரயிலில் ஏறிட்டா தேவலாம்னு தோணுச்சு 🥹! So ஈ பதிவே மதின்னு தீர்மானிச்சூ!
Delete😁😁😁
Delete// டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! //
ReplyDeleteஅணுகுண்டு வெடிக்கும் கிளைமேக்ஸிற்கு வந்தாச்சி...
Hi Editor sir ,
ReplyDeleteHappy to know about Vedhalar book release . Wrapper is looking nice
Happy to hear that you are going to post a video on samablin sangeetham .
This year one of the great year .
Sambalin sangeetham and payanam are the two biggest releases in this year
வீடியோ "சாம்பலின் சங்கீதம்" பற்றி மட்டுமல்ல நண்பரே - the year 2025 பற்றி மொத்தமாய் ஒரு rewind!
DeleteThat is much more nice sir.
DeleteOnce again thanks for bringing sambalin sangeetham.
சார் அப்போ ஒரு பெரிய வீடியோ பதிவை எதிர்பார்க்கிறோம். சீக்கிரமே போடுங்க
Deleteஆமாங்க சார் ஒரு மணி நேர வீடியோ பதிவாக போடுங்க
Deleteவணக்கம் சார்
ReplyDelete🙏🙏
Delete// திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! //
ReplyDeleteஉழைப்பு அதிகமாய் தேவைப்பட்டிருப்பதால் தாமதம் பிரச்சினை அல்ல சார்,இதழ்கள் நிறைவாய் வரட்டும்,மகிழ்ச்சி,ஆவலுடன்...
புக்ஸ் வரட்டும் சார் - புரியும் ஏன் முழி பிதுங்கிப் போச்சு என்பது 🥹🥹
Delete///புரியும் ஏன் முழி பிதுங்கிப் போச்சு என்பது///
Deleteஇந்த டவுட்டு உங்களை முதல் தபா பார்த்ததுலேர்ந்தே இருக்குதுங்க சார்!🤔👀
😁😁😁😁😁😁😁😁😁😁
Delete😆😆😆
Deleteவிஜய் @ 🤣🤣🤣🤣🤣
Deleteசாம்பலின் சங்கீதம் அட்டைப்பட பாதிப்பு - பின்வருமாறு:
ReplyDeleteஉயரே ஒரு நெருப்புப் பிழம்பு
உருவாவதை உச்சி நோக்கிடும்
ஊராருக்குத் தெரியாது - அவர்கள்
உயிர் தங்கிடும் காலம் - ஒரு
கண்சிமிட்டல் வரையே என்பது!
நம்புனால் நம்புங்கோ : ஒரிஜினல் டிசைனில் தமிழில் எழுத்துக்கள் + நம்ம லோகோ பொருத்துவதற்கே 11 வாட்டி திருத்தங்கள் சொன்னார்கள் படைப்பாளிகள் 🥹🥹.
Deleteஉட்பக்க திருத்தங்கள் பற்றி தனியா ஒரு புக்கே போடலாம்!
😯😯😯😯
Deleteசெம விஜய்.
Delete// உட்பக்க திருத்தங்கள் பற்றி தனியா ஒரு புக்கே போடலாம் //
Deleteநாளைய சரித்திரத்தில் இடம் பிடிக்கும்...
கவிதை அருமை, இளவரசரே
Deleteமாயாவியாருடன் வேதாளரும் வருவது கட்டற்ற மகிழ்ச்சி
ReplyDeleteUrban மாயாவியும், Rural மாயாவியும் ஒன்னா வராங்கன்னு சொல்லுங்க!😁
DeleteROFL
Delete😂😂😂
Delete"ம"ட்டற்ற மகிழ்ச்சி.
ReplyDelete// *தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா? //
ReplyDeleteYES!!!
வந்துட்டேன்...
ReplyDeleteநீங்கள் ரொம்ப லேட் ஆக வரீங்க குமார்
DeleteSir
ReplyDeleteஇந்தாண்டின்
பயணம்
டபுள் OK Sir,
ஆனால்
(இரத்தப்படலம் இரண்டாம்
சுற்று தொடர் மட்டும்
மிஸ்ஸிங் சார்)
சாம்பலின் சங்கீதம் சேலம் புத்தக திருவிழாவில் வெளிவரும் என்று என்னை போல பல நண்பர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். சேலம் புத்தக திருவிழா இந்த வருடம் இல்லை என்றால் ஒரு சிறிய வாசகர் சந்திப்பு சேலத்தில் ஏற்பாடு செய்து இந்த் புத்தகத்தை வெளிஇட முடியுமா சார்? ஏதாவது சிறிய இடத்தில் பெரிய செலவு எதும் இல்லாமல் செய்ய முடியுமா சார்?
ReplyDeleteஇது ஒரு யோசனை மட்டுமே, தவறு என்றால் மன்னிக்கவும் சார்.
இந்த யோசனையை நானும் கம்யூனிட்டியில் சொல்லியிருந்தேன் சகோதரரே ஆனால் புத்தக விழா இல்லையெனில் அதனால் ஏற்படும் இழப்புகளை ஆசிரியர் சொன்ன பொழுது மனம் கனத்தது வாசகர் சந்திப்பென்ற ஒன்றின் மூலம் இன்னுமொரு சிரமத்தை அவருக்கு தருகிறதோ என்று தோன்றுகிறது
Deleteபுரிந்து கொண்டேன்.
Deleteயூ டியூப் லைவ் ரிலீஸ் ப்ரம் சிவகாசி சார்?
செலவு, சிரமம் என்பதெல்லாம் ஒரு பக்கம் சார்..... சேலத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற கண்ணாமூச்சியிலேயே நாட்கள் ஓட்டமெடுத்து விட்டன! பத்தே தினங்கள் இருக்கும் போது ஏற்பாடுகள் செய்ய, நண்பர்கள் டிக்கெட் போட அவகாசமே இல்லை!
Deleteஒரு online ZOOM மீட் போட்டுப்புடலாம் 21 டிசம்பருக்கு 👍
சூப்பர் சார் சூப்பர் நல்ல ஐடியா
Deleteமகிழ்ச்சி சார்.
Deleteராபின் 2.0 கதைகள் நன்றாக உள்ளன, கற்பனை கதை என்றாலும் ராபின் கூட்டாளிகள் இறப்பதாக காட்டுவதை மனது ஏற்றுக்கொள்ள முடியவில்லை; காரணம் இந்த 2.0 இயல்பான வாழ்க்கையில் நடப்பது போல அழுத்தமாக இருப்பதால் அவர்கள் நிஜ மனிதர்கள் போல மனதில் பதிந்து விட்டார்கள், இதுவரை நமது காமிக்ஸ் கதைகள் இந்த அளவு என் மனதை பாதித்தது இல்லை.
ReplyDelete// தவளை மனிதர்கள் //
ReplyDeleteவண்ணத்திலா சார்? எதுவாக இருந்தாலும் படிக்க ஆர்வமுடன் உள்ளேன் சார்.
மாயவிக்கெல்லாம் வண்ணம் சுகப்படுவதில்லை சார் ; சித்திரங்களில் வண்டி வண்டியாய் கருப்பு ஒரிஜினலாகவே இருக்க, கலரிங் சுமாராகவே செட் ஆகிறது! Black & white தான் மாயாவிக்கு பெஸ்ட்!
Deleteசூப்பர் முடிவு. இதனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் சார்
Deleteவணக்கமுங்க. எதாவது.
ReplyDelete😝😝😝😝😝😝😝😝😝
Deleteசென்னை புத்தக திருவிழாவுக்கு டெக்ஸ் கிளாசிக் பதிப்புகள் வண்ணத்தில் உண்டா சார்.? அதுவும் ஹார்ட் பௌண்டில் சார்?
ReplyDeleteNo sir
Deleteமுந்தையதொரு சென்னை புத்தக விழாவில் டெக்ஸ் மறுபதிப்பு விசாரணை ரொம்பவே இருந்தது,ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் விற்பனை சிறப்பாக இருந்திருக்கும் என்று முன்பு ஒருமுறை நீங்கள் சொன்னதாய் நினைவு சார்,டெக்ஸ் மறுபதிப்பு-சென்னை விற்பனை சிறக்க கூடுதல் உதவியாய் இருக்குமே சார்,யோசிக்கலாமே...
Deleteஇல்லை சார், வருஷக்கடைசி... பைண்டிங் நிறுவனங்கள் சகலத்திலும் டயரி தயார் செய்யும் பணிகள் குவிந்து கிடக்கும். நாமுமே மாயாவி, கபிஷ், வேதாளர், இன்னும் பிற என்று லைனில் நிற்போம். இதில் மேற்கொண்டும் ஒரு டெக்ஸ் ஹார்ட் கவர் வேலைக்கே சாத்தியமாகாது!
Deleteசார், அப்படி என்றால் ஹார்ட் கவர் இல்லாமல் டெக்ஸ் கிளாசிக் கலர் மறுபதிப்பு ஒன்று சார்.
Deleteசேலம் புத்தக திருவிழாவில் வருவதாக இருந்த கபீஷ் வண்ண கதை தொகுப்பு எப்போது வரும் சார்? இதனை டிசம்பர் மாத புத்தகங்களுடன் சேர்த்து அனுப்பி வைக்க முடியுமா சார்.
ReplyDeleteஇல்லை சார், ஞாயிறே பேக்கிங் முடிந்து விடும்!
Deleteஜனவரியில் வாங்கிடலாம்!
நன்றி சார்
Delete"யுகம் தாண்டியொரு யுத்தம்" (ARS MAGNA) கதையைக் கதாசிரியர் Alcante இரண்டாம் உலக யுத்தம் காலகட்டத்தில் நடந்தது போன்று சொல்லியிருப்பார். அந்தக் கதையின் கடைசியில் ஆகஸ்ட் 6, 1945 அன்று
ReplyDeleteஷிரோஷமா மீது
லிட்டில் பாய்" என்ற யுரேனியம் குண்டும் மற்றும் ஆகஸ்ட் 9, 1945 அன்று நாகசாகி மீது "ஃபேட் மேன்" என்ற புளூட்டோனியம் குண்டும் தாக்கியதால் இந்த பெரும் நகரங்கள் தரை மட்டமானது.
இந்த பெரும் சோகத்தினுடே சிறிய ஆறுதலாக இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தாலும், அணு குண்டு என்கிற ராட்சசனின் யுகம் ஆரம்பம் என்று முடித்திருப்பார். அதனுடைய நீட்சியாகத் தான் மற்றொரு கதாசிரியர் Bollee வுடன் இணைந்து இந்த அசுர "சாம்பலின் சங்கீதம்" கதையை அவர் படைத்திருக்கக் கூடும்.
சார், ஓரிஜினலில் வந்தது போல் அந்த ரெட் கலரில் டஸ்ட் ஜாக்கெட் உடன் வெளியிட ஏதேனும் வாய்ப்புகள் உண்டா...?
Deleteமுதல் பதிப்பு வெளியான பின்னர், கலெக்டர் எடிசன் என்று தனியாக வெளியிட்ட போது தான் ரெட் டஸ்ட் வந்தது என படித்த மாதிரி ஞாபகம், சகோ
Deleteநவம்பரிலும் ஒரு கலெக்டர் எடிசன் வெளியிட்டுள்ளனர்
//அதனுடைய நீட்சியாகத் தான் மற்றொரு கதாசிரியர் Bollee வுடன் இணைந்து இந்த அசுர "சாம்பலின் சங்கீதம்" கதையை அவர் படைத்திருக்கக் கூடும்.//
DeleteNot at all sir... இதற்கும் அதற்கும் இம்மியும் தொடர்பு லேது!
ஒன்று milkshake என்றால் மற்றொன்று கடுங்காப்பி! ஒன்று கேம்ஸ் பீரியட் என்றால் மற்றது ஹிஸ்டரி பீரியட் 🥹
And no dust jackets... அது பிரத்தியேக limited edition க்கு மட்டுமேவாம் சார்!
DeleteOk பரவாயில்லை சார்
Deleteஇதுவரை மறுபதிப்பாகாத அலிபாபா, சிந்துபாத், டிம்மி & ஜெர்ரி, சுட்டி நட்டி போன்றவர்களை மறுபதிப்போ அல்லது புதிய கதைகளோ 2026ல் திசைகள் நான்கில் வந்தால் நன்றாக இருக்கும் சார். ஆவன செய்யுங்கள். நன்றி 🙏🙏
ReplyDeleteசங்கர் சார், சுஸ்கி விஸ்கி புதிய கதைகளுக்கு நமது நண்பர்கள் பெரியதாக வரவேற்பு கொடுக்காமல் அவர்கள் இன்று சிவகாசி கோடவுன்ல் இருக்காங்க, கதை , நகைச்சுவை, மற்றும் தயாரிப்பு தரம் ரொம்ப நன்றாக இருந்தும்.
Deleteஎனவே நீங்கள் சொல்லுபவர்கள் வருவது எல்லாம் கனவாக போகலாம். ஆனால் இவை வந்தால் நமக்கு கொண்டாடம் தான்.
தாங்கள் கூறியபடி இந்த ஆண்டு சேலம் புத்தகத் திருவிழா நடைபெற வாய்ப்பு இல்லை என்பதையை
ReplyDeleteவந்து கொண்டிருக்கும் செய்திகள் சொல்லுகின்றன.
🥹🥹
Deleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteஒரு முழுமையான காமிக்ஸ் ஆண்டு 2025
ReplyDeleteEven if there s no salem book fair it is possible to have a small get together in salem and release the "BOMB" from Mr. karthigai pandian sir .. plz consider it sir ..
ReplyDelete74th
ReplyDelete///இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்? ///
ReplyDeleteபயணிகளின் பல்ஸ் அறிந்த; திறமையான டிரைவரும், எல்லா வசதிகளும் நிரம்பிய சொகுசு வண்டியும் இருக்க - பயணத்துக்கென்னங்க குறைச்சல் எடிட்டர் சார்?
நிறைவாய் உணர்கிறோம்!😇😇🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Definetly.🥰🥰. Definetly.. 😘😘
Deleteஅப்புறமும் வண்டியின் டாப்பிலே குந்துவானேன் தெய்வமே?
DeleteMe in 😘😘💐👍😄🙏
ReplyDelete//இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்? //
ReplyDeleteLet me start with சந்தா
***டெக்ஸ்***
ஜனவரியில் கெஸ்ட் ரோலில் தான் தொடங்கினார். ஆனால், இந்த வருடத்தின் ஒவ்வொரு கதையும் ஒன்றிலிரந்து ஒன்று மாறுபட்டு இருந்தது.
ஆக்ஷன்களும் தெறி, சித்திரங்களும் அட்டகாசம், கதைகளும் சிறப்பு.
உதிரம் பொழியும் நிலவே ஒரு தெறி வில்லனை அறிமுகப்படுத்தி ஆடுகளம் அருமையாக அமைந்திருந்தது.
மெக்சிகோவிற்கு ஒரு மாய ரயில் வண்ணத்தில் தீபாவளி சரவெடி
இளம் டெக்ஸ் கண்டிப்பாக வருடத்தின் இறுதி அதிரடியாக தான் இருப்பார்
டெக்ஸ் கதைத்தேர்வில் எல்லாமே மாஸ் என் பார்வையில்
DeleteYes without doubt one of the best years for டெக்ஸ். எந்த கதையும் சோடை போகவில்லை இந்த முறை.
Deleteஇன்னும் இந்த மாத யங் டெக்ஸ் லார்கோ இருக்கு. செம்ம வருடம் ends with a bang
DeleteYes bro...year end is gonna be awesome
Delete😘😘👍💐Edi Sir😘
ReplyDeleteநீங்க always First Rank student.. 👍😄
நீங்க கேட்கணுமா 😘
பரீட்சை நல்லா எழுதி இருக்கேனான்னு 😘😘😄😄
இத்தனை நாளும் ஆசிரியரே ஆசிரியரே ன்னு கூப்பிட்டுட்டு இப்போ திடீர்னு student னு சொல்லிடீங்களே ஜம்பிங் தல? 🤭
Deleteஇப்ப எல்லாம் ஆசிரியர்களை TRB exam எழுதி பாஸ் பண்ண சொல்றாங்க ji😄😄
Delete///இந்த நொடியில் ஊரில் இல்லாது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தே டைப்பி வருவதால்///
ReplyDeleteநல்லவேளையா நீங்க IndiGo ல போகலை!😤
Today’s News
DeleteIndigo🛫🛩️ is changing its name to *ItDidntGo*😘
😂😂😂😂
Deleteஜம்பிங் தல 😂😂😂
Deleteஏர்போர்ட் ஒன்னொண்ணும் சென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை விடவும் பெரிய சந்தைக்கடையாய் காட்சி தரும் இந்நேரங்களில் நம்பளுக்கு தரைவழிப் பயணமே மதி 💪
Delete*சாம்பலின் சங்கீதம்* .. 😘👍💐
ReplyDeleteபார்க்கவே பிரமாண்டமாய்🥰பிரமிப்பாய்💥 இருக்குது.. 😘
தமிழ் காமிக்ஸ் சரித்திரத்தில் சாம்பலின் சங்கீதம் நின்னு பேசும் சார் 😘👍💐
திருப்தி
ReplyDeleteநன்றி சார்
Deleteதிரும்பத் திரும்பவும் பேசப்படும்னுறது கூட உங்க கமெண்ட்ஸ்லயே தெரியுதுங்க ஜம்பிங் ஜி!😁
ReplyDelete😄😄😄😘👍
DeleteHi..
ReplyDelete// இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்?//
ReplyDeleteநமது மிகச் சிறந்த ஆண்டுகளில் ஒன்று 2025. If not the best year.
🙏🙏
Delete// இது வரைக்கும் "வோ" போட்டு விட்டு பெட்ரோல் காசும் பேட்டாவும் வாங்கி விட்டுப் புறப்படும் சிவப்பின ஜனம் இந்த முறை மைக் மோகன் ஆன எனக்கேtoughதரும் அளவிற்க்கு செம் மாட்லாடுகிறார்கள் // உங்கசோகத்தைக் கூட ரசிக்கிற மாதிரி சுவாரஸ்யமாசொல்றிங்க சார்!
ReplyDeleteசோகமெல்லாம் நஹி சார் - யதார்த்தம்!
Deleteலேட் ஆகுதே என்ற ஆற்றமாட்டாமை...!
ஜம்பிங் ஜி.... 🥹🥹... ராத்திரி டிவி பாப்பியளோ?
ReplyDeleteசார்... 😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣
ReplyDeleteஆக சேலம் ஆ சென்னையா என்ற oscillation இருந்தாலும் புத்தகம் இந்த மாதம் 18 courier மூலம் கிடைத்து விடும் என்பது பேரும் மகிழ்ச்சி
ReplyDeleteSir 👍🥰
சார் 😂🤣
ReplyDeleteடிவி பார்க்காம அவருக்கு தூக்கம் வராதாம் சார்.
ReplyDeleteஇந்த வருடம் மட்டுமல்ல 2012 லிருந்து இன்று(என்றுமே) வரை எல்லாமே திருப்தி பரம திருப்தி
ReplyDelete// தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா? //
ReplyDeleteYes, No doubt. பயணம், வதம் செய்வோம், சதுப்பில் ஒரு சடுகுடு....
என பல அருமையான தருணங்கள்.
Keep it up in 2026 also. 👍
**ஒரு கொடூரனும் கடற்கன்னியும்***
ReplyDeleteஜனவரியில் கேட்லிங் கன் வரலாற்று பின்னயில் எங்க தளபதி அதரகளம் செய்துவிட்டார்
வண்ண பக்கங்களும் அட்டைப்படமும் மிக சிறப்பாக உருவாக்கம்
***டின்டின்***
விண்கல் வேட்டை -அறிவியல் கற்பனையில் ஒரு கலக்கல் காமெடி பயணம்
கேல்குலஸ் படலம் - டிடெக்டிவ் அன்வென்ட்சர் காமெடி கலந்த அதகளம்.
இரண்டிலும் வசனங்கள் முக்கிய பங்காற்றின. நம் குடிமகனான கேபட்ன செய்யும் குடி ரகளைகள் ரசிக்க வைத்தன.
தயாரிப்பு தரம் சிறப்பு
***டிடெக்டிவ்ஸ்***
ரூபின் - கதை, வசனம், ஆக்ஷன்
சிக்ஸர் அடித்து அத்தனை ஆம்பளை புள்ளைங்க நடுவிலும் தனது இடத்தை மீண்டும் உறுதியாக்கிய நம் லேடி போலீஸ்
ரிப்போர்ட்டர் ஜானி - விறுவிறுப்பான சதுரங்கம்
மர்ம மனிதன் மார்டின் - நேர்கோட்டு மிஸ்ட்ரி, குழப்பமின்றி சுவாரசியமாக இருந்தது, சித்திரங்கள் ப்ளஸ்
***ஆக்ஷன்***
*டேங்கோ*- சுற்றுப்பயணம் இல்லை என்றாலும் கதை சுவாரசியமாகவே இருந்தது, இதிலும் சித்திரங்கள், டீடெயில்ஸ், வண்ணங்களின் மேஜிக் அருமை
ரீஎண்ட்ரி குடுத்த *வேய்ன் ஷெல்டன்* அதகளமே, ஹனியை கல்யாண செய்யும் முன் ஒரு வியட்நாம் சாகஸம் அட்டகாசமாகவே கனமான ப்ளாஷ்பேக், கதை ,சித்திரங்களும் வண்ணமும் ரசிக்க வைத்தது
***அறிமுகங்கள்***
ஸகுவாரா
அதிரடியில் இறங்கி சீட் போட்டுட்டார்
வெல்கம் டூ த க்ளப்
Catamount
சித்திரத்திலாலும், வண்ண கலவையாலும் தெறி ஆக்ஷன் காட்சிகளை நமக்களித்த எண்ட்ரி
அட்டைப்படம் செம டாப்🔥🔥🔥
வதை செய்யும் வேங்கைகளே
கருப்பு வெள்ளை சித்திரங்கள் ஜப்பானிய சாமுராய் சண்டைகளை சிறப்பாக வெளிப்படுத்தி நம்மை கட்டி போட்டது
போனெலி உபயத்தினால் ஒரு முழு வீச்சு மங்கா இல்லை என்றாலும் ஜப்பான் நாட்டு கதை கிடைத்ததில் மகிழ்ச்சி அந்நாட்டின் அரசியல் கதைக்களம் இயற்கை அழகோடு சொல்லப்பட்ட விதம் அருமை
ராபின் 2.0 இன்வெஸ்ட்கெட்டிவ் ஆபிஸர் விடாகொண்டனாக துப்பறிவதில் அதகளம் செய்திருந்தார், கதைக்களம் சிறப்பு
மிஸ்டர் நோ லேட்டாக எண்ட்ரி குடுத்திருந்தாலும் அழுத்தமான வெற்றி பெற்றிட்டார், ஒன்பது பாக கதையாய் அதிரடி செய்ய தயராகவும் உள்ளார்
ஜம்பிங் தல
சிரிக்கும் விசித்திரம் வித்தியாசமான சிறப்பான ஒன்று
ஸ்பெஷல்
சென்னை ஸ்பெஷல்
கதை சொல்லும் கதைகள் மீண்டும் எண்ட்ரி போட்டு ஜெயித்து காட்டியது,மை பேவரிட் "பட்டாணி இளவரசி".
மூன்றாம் தினம் வேற லெவல் 😁😁😁
***ஆன்லைன் மேளா***
வண்ண மேளா என்றே சொல்லிடலாம்
ரிலீஸான ஐந்துமே வண்ணத்தில் கலக்கல்,கதையிலும் அசத்தல்❤💛💙💚💜
டாப் டக்கர்ஸ்
லாஸ்ட்டாக ஸ்பெஷல் தினத்தில் நமக்கு புது வித்தியாசமான படைப்பாய் **பயணம** தயாரிப்பு தரத்தில் மகா சிறப்பு, கதையோ மனதை மிக கனக்க செய்தது, கருப்பு வெள்ளையில் கனமான தந்தை-மகன் பயணம் பாசம் நம்மை வென்றது.
திகில் கதைகள் மீண்டும் வந்ததில் மிக மிக மிக சந்தோசம்
ஈரோடு ஸ்பெஷலாக தங்க தலைவன் ஹார்ட் கவர் எண்ட்ரி 🔥🔥🔥🔥🔥
வண்ண காமெடி மேளா
ப்ளுகோட், சிக்பில், ஸ்பூன் & வொயிட்
இதில் ஸ்பூன் & வொயிட் கதைக்களமும், வசனங்களும் டாப் டக்கர்
அவர்களை விட்டு பிரிவதில் வருத்தமே
காமெடி ரவுண்ட்ப் கதைகள் குறைவு, ஆனால் அருமை
இந்த ஆண்டு வண்ணத்தில் வந்த கதைகளின் ஆர்ட்வொர்க் அட்டகாசம், மிகவும் ரசிக்க வைத்தது
கருப்பு & வெள்ளை வந்த கதைகளின் சித்திரங்கள் பாராட்டுக்குரியவை
இவ்வருடத்தில் கதைகளில் மட்டுமல்லாமல், சித்திரங்களும் அதகளம் செய்திருந்தன
இவ்வருடம் மைல்கல் ஆண்டே
வருடத்தின் இறுதியில்
Deleteஇரண்டு பெரிய தலைகள் தத்தம் தங்கள் நட்புகளோடு அதகளம் செய்ய உள்ளார்கள்
ஆண்டின் இறுதியாக வர உள்ள ***சாம்பலின் சங்கீதம்*** கிராண்ட் எண்ட்ரிக்கு வெயிடிங்
This comment has been removed by the author.
Deleteஅருமை ரம்யா. அட்டகாசமான பின்னூட்டம் இந்த ஆண்டு காமிக்ஸ் பயணம் பற்றி. சூப்பர்.
Deleteநன்றி சகோ 💐💐💐
Deleteஎடிட்டரின் இந்த வார இக்ளியூண்டு பதிவு குறையை நீங்க நீங்க ஓரளவுக்கு நிவர்த்தி பண்ணிட்டீங்க சகோ! செம!!👏👏💐💐💐
Deleteமகிழ்ச்சி இளவரசரே
Deleteநன்றிகள் 😁😊
ஆனா இளவரசர் பேசினா ஏன் எக்கோ ஆகுது? 🤔
Deleteஅது இந்த மாதம் இரண்டு அதிரடிகள் வர உள்ளனல்லவா, அதான் 😁
Deleteவர வர இளவரசரை விட குடிமக்கள் ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்டிருக்காங்களே?!!🤔👀
DeleteSuper super
DeleteNice. , 👍
Deleteசாம்பலின் சங்கீதம் அட்டைப்படம் தெறி
ReplyDeleteமகிவும் தரிசிக்க காத்திருந்த அட்டைப்படம்
ப்ளேன் டிசைன் செம
மற்ற மெழி டிசைனிங்கில் இது இல்லை
மிக அருமையான சேர்ப்பு, பிடித்துள்ளது
எழுத்துருவ ஆக்கம் அருமை
சாம்பலின் சொல்லில் கருப்பு சாம்பல் வண்ணத்திலும்
சங்கீதம் சிவப்பாய் அருமை,
புள்ளிகள் பாம்மிலிருந்து புகை போல
மற்றும் மறைய யதெதனிக்கும் எழுத்துகளாய் பெயர், செம அட்டகாச உருவாக்கம்
தவளை மனிதர்கள்
ReplyDeleteஇதுவரை படித்ததில்லை
இந்த மாயாவி கதையை படித்திட ஆவலுடன்
//ஒரு YouTube பதிவாக்கிடத் தீர்மானித்துள்ளேன்//
ReplyDeleteவெகு நாள் கழித்து ஒரு வீடியோ வர போகிறது
வெயிடிங் சார்
கடல் சிஸ்டர் ரிவ்யூ அருமை.வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராஜசேகர் சகோ
Delete//லேட் ஆகுதே என்ற ஆற்றாமை//அது சொல்ல தெரியாம தான் ரைமிங்கா இருக்கட்டுமேனு உங்க சோகம் எங்களுக்கு ஆசம். அப்படினு டைப்ப ஆரம்பிச்சு பாதில நிறுத்திட்டேன்
ReplyDeleteAstrix in tamil is golden dream 2026
ReplyDeleteஅப்படியே தானைத்தலைவர் ஸ்பைடரின் "தவளை எதிரி" ரீபிரிண்ட்
ReplyDelete+
ரிப்போர்ட்டர் ஜானி யின் '"இரத்தக்காட்டேரி மர்மம்" கலய் ரீபிரிண்ட் டையும்
ஜனவரி 2026 சென்னை புத்தகத் திருவிழா வுக்கு சேர்த்துக் கொள்ளவும்.
முன்பண நன்றிகள்
"இரத்தக்காட்டேரி மர்மம்"
Delete+9
ஜனவரியில் கிடைக்க வாய்ப்பில்லை
ஆனால் அடுத்த வருடத்தில் எதாவது ஒரு மாதத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும்
"நிலவொளியில் நரபலி", "பூத வேட்டை" மாதிரி ரெண்டு டெக்ஸ் ஒரே நேரத்தில் இன்னொரு முறை வருமா ?
ReplyDelete##நிலவொளியில் நரபலி", "பூத வேட்டை" மாதிரி ரெண்டு டெக்ஸ் ஒரே நேரத்தில் இன்னொரு முறை வருமா? ##.
ReplyDelete@ராஜசேகர் ஜி 😄😄
தட்டுங்கள் திறக்கப்படும் 😘😘
கேளுங்கள் கொடுக்கப்படும் 🥰🥰
இன்று பிறந்தநாள் காணும் மகளிர் அணி தலைவி கடல் யாழ் ரம்யா அவர்களுக்கு
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
நன்றிகள் தோழரே
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா💐
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ
Deleteநன்றிகள் செல்வம்லஅபிராமி சகோ 😊💐🌷🌹🌺🌸🌻🌾
Deleteநன்றிகள் குமார் சகோ 😊💐🌷🌹🌺🌸🌻🌾
இன்னைக்கு பொட்டி வந்துடும்...
ReplyDeleteஅதிசயம் ஆனால் உண்மை. எனக்கு டிசம்பர் மாதம் காமிக்ஸ் புத்தகங்கள் வந்து விட்டன.
Deleteஇன்று பிறந்தநாள் காணும் சகோதரி கடல்யாழ் ரம்யாவிற்க்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க ராஜசேகர் சகோ 😊💐🌷🌹🌺
Delete. "போர் கண்ட சிங்கம்"
ReplyDeleteசார் கொடுத்துள்ள இரு பக்க விளக்கவுரை பல இடங்களில் கதையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த விளக்கவுரை இல்லாவிடில் பல இடங்களில் கதையின் போக்கில் இல்லாமல் தனி விளக்கங்கள் தேவைப்படும்.இதனால் கதையின் வேகம் நிச்சயம் மட்டுப்படும். இதற்க்காக வே தனி உழைப்பை வழங்கிய ஆசிரியருக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சார்
பணம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான முதலாளி போன்ற வசனங்கள் கவர்கின்றன.
ReplyDeleteவாசிக்கும் முன்னர் ஒரு பார்வை....
ReplyDeleteபார்சலில் இருந்து இதழ்களை வெளியே எடுக்க முயன்றால் முதலில் வெளியே வந்தது அழகான பைவ் ஸ்டார் சாக்லேட்...எப்பொழுதும் புத்தாண்டு அன்று இனிப்பு வரும் இந்த முறை இறுதி மாதத்திலும் ஒரு இனிப்பு என ஓர் இன்ப ஆச்சர்யம் சார்...இதில் என்ன மிகப்பெரிய ஆச்சர்யம் எனில் இப்படி ஏதாவது பரிசு வரும் சமயம் எல்லாம் சரியாக பார்சலை பிரிப்பது எனது வாரிசுகளே...இந்த முறையும் அவர்கள் பிரிக்க முயன்ற பொழுது புத்தகம் மட்டும் தான் உள்ளது என நான் சொன்னால் அதெல்லாம் தெரியாது புத்தகத்தை தவிர வேற ஏதாவது இருக்கும் என சொல்லியபடியே பிரிக்க சொன்னபடி ஒரு பைவ் ஸ்டார்...நான் சொன்னேன்ல அதெல்லாம் என்னோட கைராசிப்பா என்கிறார்கள் வாரிசுகள்... :-)
*********
புயலில் ஒரு சூறாவளி பார்சலில் இருந்து புத்தகத்தை வெளியே எடுத்தவுடனே இந்த இதழின் பருமனை பார்த்ததுமே மிகப்பெரிய சந்தோசம் அதுவும் டெக்ஸ் வில்லர் சாகஸம் இப்படி பருமனாக பார்க்கும் பொழுதே மகிழ்ச்சி வழக்கமான மகிழ்ச்சியுடன் மேலும் இருமடங்கு கூடிவிடுகிறது பிறகு இது போன்ற டெக்ஸ் இதழ்களை வாசிக்கும் பொழுது எப்படியும் ஒண்ணரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் என ஒரே மூச்சில் வாசிக்க வைப்பதுடன் வாசிக்கும் சமயம் நாமே அந்த வன்மேற்கு உலகில் உலவி வருகிறோம் ..இப்படி டெக்ஸ் இதழ்களை பருமனாக காணும் பொழுது எல்லாம் மகிழ்ச்சியும் ..ஒரே மூச்சில் வாசிக்கும் பொழுது கிடைக்கும் ஓர் இன்ப சூழல் உலகை பிரித்து பிரித்து இட்டு மாதா மாதம் ஒரு டெக்ஸ்..12 அட்டைகள் என என்னத்தான் தாங்கள் சொன்னாலும் இந்த மகிழ்ச்சியை அது கொண்டு வராது சார்...இதழும் அட்டைப்படமும் சித்திரங்களையும் இன்னும் ரசித்து கொண்டு இருக்கிறேன் நாளை வன்மேற்கு உலகில் நுழைய...
******
போர் கண்ட சிங்கம்
டெக்ஸ் போலவே மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் ஓர் சூப்பர் ஸ்டார் லார்கோவின் சாகஸம்..லார்கோவின் அனைத்து சாகஸங்களுமே ஓர் பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்பட பார்த்த அனுபவங்களை தரும்...ஒரே ஓர் இதழ் மட்டும் பங்கு சார்ந்த இதழ் மட்டும் எனக்கு தோல்வியாக தெரிந்த ஒன்று..இந்த முறையும் பங்கு சந்தை சார்ந்த ஒன்றா என நினைக்கும் பொழுது ஓர் அழகான பங்கு சந்தை அறிமுக விளக்கம் கடிதம் போல் அளித்து சிறப்பு செய்து விட்டிர்கள்...எனவே இதில் அந்த குறையும் நேராது என்ற தெளிவுடனும்..ஆவலுடனும் சிங்கத்தின் குகையில் நுழைகிறேன்...
//நான் சொன்னேன்ல அதெல்லாம் என்னோட கைராசிப்பா என்கிறார்கள் வாரிசுகள்//
Delete😊😊😊❤❤
Super thala
Deleteமுதலில் படித்தது போர் கண்ட சிங்கம். நம்ம லயன் முத்து வில் ஒரு அட்டகாசமான ஹீரோ. எப்போதும் போல ஒரு பெரிய சூழ்ச்சியில் லார்கோ மாட்டிக்கொள்ள அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் கதை. அதும் முதல் அத்தியாய முடிவில் வரும் Sequence, மாயன் கோவிலில் துரத்தி வரும் அந்த கூட்டத்திடம் இருந்து தப்பிக்கும் sequence. பிறகு வரும் கிளைமேக்ஸ் Sequence எல்லாமே அருமை.
ReplyDeleteOnce again he proves he's one of the superstars in our universe.
அந்த இரண்டு பக்க விளக்க உரை மிகவும் தேவையான, எளிமையான ஒன்று. Awesome Job சார்.
இந்த புத்தகம் படித்த உடன் தோன்றியது போன வருடம் வந்த லார்கோவை மறுபடி படிக்க வேண்டும் என்று.
எனது மதிப்பெண் 10/10.
This comment has been removed by the author.
Deleteசூப்பர் குமார் சகோ
Deleteஜெட்ஸ்பீட் குமார் சகோ
Super Kumar
Deleteநன்றி நண்பர்களே..
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆமாங்க சார்
DeleteKumar is back
Deleteபோர் கண்ட சிங்கம்
ReplyDeleteகதை, Largo winch குழுமத்திற்கு (W Group) எதிராக நடக்கும் மிகப்பெரிய சதி மற்றும் நிதி மோசடிகளை மையமாகக் கொண்டது.
இந்தக் கதையின் தொடக்கத்தில், largo winch குழுமத்தின் பங்குகள் நியூயார்க் பங்குச் சந்தையில் திடீரென மர்மமான முறையில் கடுமையாக வீழ்ச்சியடைகின்றன.
இந்த வீழ்ச்சி ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக லார்கோவை குறிவைத்து நடத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த நிதித் தாக்குதல் என்று விரைவில் தெரிய வருகிறது. ஒரு மர்மமான அமைப்பு அல்லது நபர், லார்கோவைக் கவிழ்க்கவும், அவரது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றவும் முற்படுகின்றனர்.
Largo தனது நெருங்கிய சகாக்களான சைமன் மற்றும் சிலர் உடன் இணைந்து, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் சக்திகளைக் கண்டறியப் புறப்படுகிறார்.
பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் பங்குகளைக் கையாளும் மோசடிகள் மற்றும் நிதி பயங்கரவாதம், லார்கோ நம்பகமான வட்டத்திற்குள்ளேயே துரோகம் இழைக்கும் நபர்கள் ,
Largo winch கணினி சார்ந்த நிதித் தாக்குதல்களையும், புதிய வடிவங்களில் வரும் எதிரிகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தக் கதை ஒரு பரபரப்பான நிதித் த்ரில்லராக அமைக்கப்பட்டுள்ளது. சவால்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த பொருளாதார குற்றம் என்று இந்த கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
Philippe Francq-ன் படங்கள் எப்போதும் போலவே துல்லியமானதாகவும், நேர்த்தியாகவும் உள்ளன. குறிப்பாக நவீன நகரங்களின் பின்னணிகள்.
Score
8/10
Super super ji
Deleteபோர் கண்ட சிங்கம் கதை இன்னும் தொடர்வது போல் தெரிகிறது, இன்னும் வேறு ஏதோ ஒரு மோசடி நிறுவனத்தின் தொடர்பு இருப்பது போல தெரிகிறது. அடுத்த பாகத்தில் தான் முடிவுரை , கதை முற்றிலும் முடியும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅந்த புத்தகம் தான் இரவின் மடியில்.
Delete2024 ஜனவரியில் வெளியானது. இப்போ அதை தான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
Deleteகுருதியில் பூத்த குறிஞ்சி மலர் - அட்டகாசமான சித்திரம், மிரட்டும் வன்மேற்கு, மிரட்டும் திருப்பம், விறுவிறுப்பான கதை என ஒரு அட்டகாசமான அறிமுகம்.
ReplyDeleteமிஸ்டர் நோ - செம விறுவிறுப்பான கதை. அட்டகாஷ்
ReplyDelete