Powered By Blogger

Saturday, February 08, 2025

ஒரு breezy பிப்ரவரி !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு திருப்தியான பிப்ரவரி சில முக்கிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது எனக்கு! "வாசிப்புக்கு நேரம் குறைஞ்சுக்கிட்டே போகுது... படிக்காது கிடக்கும் புக்ஸின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது..!' என்ற உங்களின் இக்கட்டுகளுக்கு மருந்தென நான் எண்ணியிருந்தது crisp வாசிப்புக் களங்களையே! பெருசு பெருசாய், மெகா இதழ்களைப் போட்டு உங்களை மூச்சுத் திணறப் பண்ணாது, "நறுக்'' என்று வாசித்திட மீடியம் நீளங்களிலான புக்ஸை உருவாக்குவதே இனி இலக்காகிட வேண்டும் என்று நம்பியிருந்தேன்!ஆனால், "தப்புக் கணக்கு மாம்ஸ்! கதையின் நீளங்களை விடவும், அவற்றின் வீரியங்களே வாசிப்பை நிர்ணயம் செய்கின்றன! So பக்கங்கள் ஜாஸ்தியாய் இருந்தாலுமே பரால்லே; கதைகள் செம விறுவிறுப்பாய், tight ஆகப் பயணித்தால் போதும்! வாசிக்க நாங்க ரெடி!'' என்று உங்களின் பிப்ரவரி அலசல்கள் என் காதில் சேதி சொல்லி ­ வருகின்றன! 

Without an iota of doubt - "மாதம் மூன்று புக்ஸ்'' தான் சரிப்படும் என்பதுமே இந்த பிப்ரவரியில் அழுந்தப் பதிவாகியுள்ள இன்னொரு சமாச்சாரம்! So - ரொம்பச் சொற்ப மாதங்கள் நீங்கலாக, பாக்கிப் பொழுதுகளில் "3'' என்பதே நமது நம்பராக இருந்திடும்! And இம்மாதத்து மூன்றின் மீதான எனது பார்வை இதோ : 

தலைநகரில் தலைமகன் :

சில டெக்ஸ் கதைகளைப் பார்க்கும் போதே தெரிந்து விடும்- இவை சொல்லியடிக்கும் என்று! அதிலும் பாலைவனங்களில் காய்ந்து திரியாமல் "தல'' பெருநகரங்களில் கால் வைக்கும் போதெல்லாம் கதைகள் ஒரு மிடறு கூடுதல் சுறுசுறுப்போடு பயணிப்பதை நிறையவே பார்த்துள்ளோம்! நடப்பாண்டுக்கென கதைகளைத் தேர்வு செய்த போது, இந்த ஆல்பத்தை நான் "டிக்' அடித்ததன் முதற்காரணமே இரவுக்கழுகார் வெள்ளை மாளிகையின் பிரதிபலி­ப்பில் நின்று கொண்டிருந்த அந்த அட்டைப்படம் தான்! And உட்பக்கங்களைப் புரட்டிய போது குஷாலாய் இரும்புக் குதிரையில் நம்மவர்கள் பயணம் செய்வது தெரிந்தது! அந்த "ரயில் சென்டிமெண்ட்' கூட நமக்கு ஏகமாய் ஒர்க் அவுட் ஆகியுள்ளதெனும் போது, மறுபேச்சின்றி நம்ம 2025 எக்ஸ்பிரஸில் இதனை ஏற்றியாச்சு ! And இந்த ஆல்பத்தின் highlight மாமூலான 'ணங்... கும்.. சத்...... சமாச்சாரங்களில்லை என்பது ஒரு pleasant surprise..! சுவாரஸ்யமான சம்பவக் கோர்வைகள்.. பரபரவென்ற நகர்வுகளே கதைக்கு மூலதனமாகிட, பெரியதொரு ஆக்ஷன் sequence இல்லாமலே வண்டி "ஜம்''மென்று ஓடிவிடுகிறது! ப்ளஸ் அமெரிக்கா என்றாலே யாராச்சும் ஒரு ஜனாதிபதியை ஒரு கும்பல் போட்டுத் தள்ளும் சதி அரங்கேறிடுவதும் நமது காமிக்ஸ் உலகில் ஒரு ரெகுலர் அங்கம் தானே? இங்கேயோ ஆபிரஹாம் லிங்கனின் சாவுக்கு ஒரு தியரி சகிம் டெக்ஸ் & கார்ஸன் பயணிக்க - ஒரு செம breezy read சாத்தியமாகிடுகிறது! அந்த Jose Ortiz சித்திரங்களோ- கேக் மீதான ஐஸிங்! And விற்பனையில் ஏற்கனவே அனல் பறப்பது கண்கூடாய்த் தெரிகிறது - இந்தத் தலைமகனின் ஆல்பத்தினில் ! அதற்கான பெரும் பங்கு - செம positive reviews களைப் பகிர்ந்திட நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள சிரத்தையே என்பேன் ! என்ன தான் விளம்பரம் பண்ணினாலுமே, உங்களின் அலசல்களுக்கு இருக்கும் வெயிட் வேறெதற்கும் லேது என்பதே யதார்த்தம் !

சிரிக்கும் விசித்திரம்:

Till date - தமிழில் ஸாகோரின் best த்ரில்லர் என்பேன்! வஞ்சத்திற்கொரு வரலாறு' & பனிமலைப் பலி­கள் அட்டகாசமான ஆக்ஷன் மேளாக்களாய் இருந்திருந்தன தான்! ஆனால், இந்த ஆல்பமோ கொஞ்சம் மாந்த்ரீகம்.. கொஞ்சம் பழங்குடி நம்பிக்கைகள்.. நிறைய ஆக்ஷன்.. சுவாரஸ்யமானதொரு கதைக்களம்... மிரட்டலான வில்லன் என்று ஒரு அக்மார்க் த்ரில்லருக்கான சகல அம்சங்களோடும் அமைந்திருக்க, செம racy வாசிப்புக்கு க்யாரண்டி தந்திடுகிறது! ஒரு உக்கிரமான வில்லன் கதையின் வெற்றிக்கு எத்தனை அத்தியாவசியம் என்பதை yet again பார்த்திட முடிகிறது ! அந்த இளிக்கும் விகார முகத்தோடு பயல் நம்ம கோடாரி மாயாத்மாவோடு மோதும் இடங்களெல்லாமே செம அனல் !! And கொஞ்சமாய் நிலவரத்தை இலகுவாக்கிட தொப்பையன் ஸீகோவும் கதை நெடுகப் பயணிப்பதால் ஓவர் இறுக்கமுமின்றி இந்த சாகஸம் தடதடப்பது obvious! டெக்ஸ் கதைகளில் கார்சன் ஜோக்கடித்துத் திரிந்தாலும், மனுஷனுக்கு ரொம்பவே அழுத்தமான கேரக்டர் என்பதை உலகே அறியும்! ஆனால், இங்கோ- இந்தப் பச்சைச் சட்டைப் பார்ட்டி அந்த மாதிரியெல்லாம் எவ்வித அழுத்தமான பொறுப்புகளும் இல்லாமலே செந்தில் பாணியில் சுற்றி வருவதால், நெடுக மொக்கைக் காமெடி வரிகளையாக ஸீகோவுக்கு அமைத்துப் போவதில் எனக்குச் சிரமங்கள் இருந்திருக்கவில்லை! Maybe இந்த குண்டுத் தோழன் ஸாகோருக்கு அறிமுகமாகிடும் ஆல்பத்தினை வாசித்தால் இவனது பின்னணி இன்னும் கொஞ்சம் தெளிவாய்த் தெரிய வரலாமோ, என்னவோ - but இந்தத் தருணத்தில் காமெடி பார்ட்டியாகவே தென்படுகிறான் மனுஷன் ! And டைலன் டாக் கதைகளில் வரும் அந்த உதவியாளன் க்ரௌச்சோவைப் போலவே ஸீகோவும் கதைப்பதாகத் தென்பட்டால் - அதற்கென முதுகில் மத்தளம் வேணாமே ப்ளீஸ்?! By nature - இருவருமே கதைகளின் ஊடே பயணிப்பது "கடி''ப்பதற்காக மட்டுமே!!

So போனெலியின் இரு பிரதம நாயகர்களும் ஒரு சேர ஓங்கியடித்தால் அதன் தாக்கம் எவ்விதமிருக்கும் என்பதை உணர்ந்திடும் இந்த நொடியிலேயே it's all about story selections என்பதை ஆயிரத்து நாற்பத்தியெட்டாவது தபாவாகவும் உணர முடிகிறது! ஆக, 'சின்ன இதழ்கள்.. சுருக்கமான பக்கங்கள்' என்ற மந்த்ராவை விட.., "எடுத்தால் கீழே வைக்க இயலா விறுவிறுப்புடனான இதழ்கள்" என்பதையே நமது தேடல்களின் தாரக மந்திரமாக்கிட முயன்றிடுவோம்! Maybe இத்தாலி­யில் ஒரு காமிக்ஸ் ரசிகரை நமக்கு கதை சார்ந்த ஆலோசகராக்கிட வேணும் போலும்! Thinkinggggg!! 

அதே போல கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸாகோராருக்கு வாய்ப்புத் தந்திடவும் விழையணும் போலும்! ஒரு வெற்றி ஈட்டிடும் டெம்போவினை ஆறிப் போக இனி அனுமதிக்கக் கூடாதென்றுமே படுகிறது! நடப்பாண்டின் அட்டவணையில் 2025-ல் காத்திருக்கும் ஒரே ஸாகோர் சாகஸம்- இளம் டெக்ஸுடன் கரம் கோர்த்திடும் ""எட்டும் தூரத்தில் யுத்தம்' மாத்திரமே! அதற்கு முன்பாக ஏதேனுமொரு முழுநீள solo ஸாகோர் அதிரடியைக் களமிறக்கியாக வேணும் என்று படுகிறது! Your thoughts please folks?

ஸ்பூன் & ஒயிட் :

1970-களில் ஏகப்பட்ட அமெரிக்க டி.வி.சீரியல்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தன! 1975-ல் Starsky & Hutch என்றொரு போலீஸ் டிடெக்டிவ் சீரியல் துவங்கியது! இரண்டு நாயகர்கள்... ஊரையே துவம்ஸம் செய்தாலும் காரியம் சாதித்தாக வேண்டுமென்று நினைப்போர்! அவர்களை ஒரு inspiration ஆக எடுத்துக் கொண்டு இந்த ஸ்பூன் & ஒயிட் தொடரை அதன் கதாசிரியர் உருவாக்கினாரோ, என்னவோ - கதையின் ஓட்டம் கிட்டத்தட்ட அதே பாணியில்! இந்தத் தொடர் இருப்பது எனக்கு சில காலம் முன்பே தெரியும் தான்! ஆனால், மாமூலான சிரிப்புப் பார்ட்டிகளை நாம் முயற்சித்து வந்த நாட்களவை! 

க்ளிப்டன் ஜெயம் கண்டிட மாட்டாரா? 

மேக் & ஜாக் தேறிட மாட்டார்களா? 

ஸ்மர்ப்ஸ் சாதித்துவிட மாட்டார்களா? 

என்றெல்லாம் மோட்டைப் பார்த்தபடியே வேண்டிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், தெலுங்குப் பட பாலையா பாணியில் இருப்பதாகத் தென்பட்ட இந்த ஜோடியின் கதைகள் உங்களுக்கு ரசிக்குமென்ற நம்பிக்கை எனக்கு இருந்திருக்கவில்லை! So அந்த நொடியில் கிடப்பில் போட்டிருந்தேன்! ஆனால், லக்கி லுக் & சிக் பில் தவிர்த்த பாக்கி சிரிப்பு நாயகர்கள் அனைவரையுமே நாம் சுற்றில் விட்டிருந்ததால் மண்டை காய்ந்து போயிருந்தேன் ! எதைத் தின்றால் கார்ட்டூன் பித்தம் தெளியுமோ என்ற desperation-ல் தான் ஸ்பூன் & ஒயிட்டை உட்புகுத்தத் தீர்மானித்தேன்! நிரம்ப யோசித்து அறிமுகம் செஞ்சோர் அனைவருமே திருவிழாவில் காணாது போன குழந்தைகளைப் போல முழித்து நின்ற வேளையில், இந்த ஸ்பூன் & ஒயிட் ஜோடி "எவனா இருந்தா எனக்கென்ன?' என்றபடிக்கே எதிர்ப்படும் சகலத்தையும் பந்தாடியபடிக்கே கரை சேர்ந்துள்ளனர்! Honestly a surprise !!

போன கதையிலும் சரி, இந்த "குத்துங்க எஜமான் குத்துங்க'' கதையிலும் சரி- வில்லன்கள் வித்தியாசமான ஆசாமிகள்! நாம் வழக்கமாய்ப் பார்த்திடும் கார்ட்டூன் மொக்கை பீஸ்களாக அல்லாது, இவர்கள் கொடூரமான பார்ட்டிகளாக அமைந்திடுவதால் கதை சூடுபிடிக்க உதவுகிறது என்பேன்! And நிஜத்தைச் சொல்வதானால் - ஏகப்பட்ட அமெரிக்க சமூகப் பகடிகள், சினிமா/ டி.வி. சார்ந்த லந்துக்கள் இடம்பிடித்திருப்பதைப் பார்த்த வேளையில், நமக்கு இதெல்லாம் எவ்விதம் ரசிக்கப் போகிறதோ? என்ற மெல்­லிய பயம் உள்ளுக்குள் துளிர்விட்டது தான்! ஆனால், அந்தக் குள்ளனின் அதிரடி அராத்துக் கேரக்டர் கட்டமைப்பின் பெயரைச் சொல்லி ­ கதையினை செம breezy ஆகவும், racy ஆகவும் நகற்ற சாத்தியப்பட்டது! 

அது சரி, உங்க பார்வையில் ஸ்பூனா? ஒயிட்டா? - இந்தத் தொடரின் நிஜமான ஈரோ யார் guys?

ரைட்டு... இன்னமும் பிப்ரவரி புக்ஸை வாசிக்க நேரம் கிட்டிருயிருக்காத நண்பர்கள் - இந்த வாரயிறுதியில் நேரத்தை உற்பத்தி செய்திடுவர் என்ற நம்பிக்கையில் மார்ச் நோக்கி நாம் மார்ச் செய்து கொண்டிருக்கிறோம்Again மார்ச் மாதத்தின் ரெகுலர் தடத்தில் மூன்றே இதழ்கள் தான் & again அங்கேயுமே ஒரு பட்டாசான டெக்ஸ் சாகஸம் வெயிட்டிங்! "சாபம் வாங்கிய சுரங்கம்" இன்னொரு ஆயிரம்வாலாவாய் ரகளை செய்யக் காத்துள்ளது !



அப்புறம் ELECTRIC '80s தனித்தடத்தின் இதழ் # 2 தே மார்ச்சில் ஆஜராகிடும் பொருட்டு ''The அதிரடி ஆர்ச்சி ஸ்பெஷல்'' செம ஜரூராய் தயாராகி வருகிறது & தற்சமயமாய் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி''க்குள் பணியாற்றி வருகிறேன்! Surprise.....surprise சட்டித்தலையனுடனான இந்தப் பயணம்  செம சுவாரஸ்யமாய் ஓடி வருகிறது! நிஜத்தைச் சொல்வதானால், இப்போதெல்லாம் ஆர்ச்சி ஆல்பங்களில் தட்டுத் தடுமாறித் தான் சவாரி செய்ய முடிந்திருக்கிறது! ஆனால், ரொம்பவே pleasant surprise "புரட்சி தலைவன் ஆர்ச்சி'' அட்டகாசமாக ஓட்டமெடுத்து வருகிறது! நம்ம ஆதர்ஷ சட்டித் தலையனின் வஜனங்களுக்கு மட்டும் ஒரு வார்னிஷ் பூச்சைத் தந்துவிட்டால் படிக்க இன்னமும் ஜாலியாக இருக்குமென்று பட்டது ; so அந்தப் பணிகள் ஓடி வருகின்றன இந்த நொடியினில் ! 1987-ல் ஒரிஜினலாக வெளி வந்த இந்த இதழை நம்ம சாத்தான்ஜி வாசித்திருக்க மாட்டாரென்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறேன் !! தெய்வமே...வோட்டு போட்ட களைப்பில் மனுஷன் பதிவின் இந்தப் பத்தியினைப் பார்த்திடாது போக வேணும் !! அப்புறம் இந்தத் தருணத்தில் தோன்றிடும் இன்னொரு சமாச்சாரம் - உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு நம்ம ஆர்ச்சியை அறிமுகம் செய்தீர்களெனில் சர்வநிச்சயமாய் ரசித்திடுவார்களென்பது தான் பசங்களுக்குப் பிடிக்கக்கூடிய ரோபாட் நாயகன், குசும்பான பேச்சு, நேர்கோட்டுக் கதைக்களம், ஜாலியான ஆக்ஷன் - என்ற இந்த template இன்றைய இளசுகளுக்குமே பிடிக்காது போகாதென்பேன் ! Why not give it a try மக்களே ?

இங்கொரு கொசுறுத் தகவல்! 

சிறார்களுக்கென அழகானதொரு காமிக்ஸ் நூலகத்தினை  திறக்கும் முயற்சியில் நம்மிடமிருந்து கணிசமான புக்ஸ் கொள்முதல் செய்திருக்கிறார்கள் - சில பொதுநலம் சார்ந்த நல்ல உள்ளங்கள் ! அழகான இதழ்களாகத் தேர்வு செய்து நாமும் பரிந்துரைத்துள்ளதால்- ஒரு ஜா­லியான வாசக அணி இங்கிருந்து மெது மெதுவாக உருவாகிடுவதற்கான முதல் புள்ளி போடப்பட்டுள்ளது! Fingers crossed !!

And நடந்து வரும் நெல்லை புத்தகவிழாவிலுமே பள்ளி மாணாக்கர்கள் - க்ளிப்டன்; ஜில் ஜோர்டன்; சிறுத்தை மனிதன், என நமது ""சிறப்பு விலை scheme-ல்'' எக்கச்சக்கமான கலர் புக்ஸை ரூ25/-, ரூ .30/- விலைகளில் அள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றனர்! நமக்கும் கிட்டங்கியில் கும்பகர்ணத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தோர் புறப்பட்டதில் மகிழ்ச்சி & புதியதொரு வாசிப்புத் தலைமுறைக்கு அப்படியே விதை போட முடிவதிலும் பெருமகிழ்ச்சி!பற்றாக்குறைக்கு சொற்ப விலைகளில் அழகான சிலபல இதழ்களை உருவாக்கிடும் முனைப்பில் ஜுனியர் எடிட்டர் பிஸி! So அடுத்த சுற்று புத்தக விழாக்களில் கூடுதலாய் பட்டாசுகளை எதிர்பார்த்திடலாம்! 

Moving further ahead, கடந்த சில தினங்களாக நமது வாட்சப் கம்யூனிட்டியினில் - பரணுக்குப் போயிருக்கும் சில பல நாயகர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருதோம் !! அந்த லிஸ்ட்டில் நிறையவே பெருமக்கள் இடம் பிடித்திருப்பினும் - கீழ்க்கண்ட இருவரை மறுக்கா கூட்டி வருவது குறித்து நீங்கள் என்ன நினைத்திடுகிறீர்களென்று அறிந்திட ஆவல் !! So - இங்கே பதிவிட விரும்பினாலும் சரி, இதற்கான வோட்டெடுப்புப் பக்கத்தினில் பதிவிட்டாலும் சரி, will help !! இதோ லிங்க் : 

https://strawpoll.com/ajnE1ArE9nW

https://strawpoll.com/e6Z2AWra8gN

அப்புறம் இன்னொரு வோட்டிங்குமே வெயிட்டிங் - இம்முறை அடுத்த சுற்று கலர் டெக்ஸ் மறுபதிப்புகளுக்காக!! Your choices please :

https://strawpoll.com/e7ZJaV7LPg3

Bye all...see you around ! Have a fun weekend !

155 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. //பற்றாக்குறைக்கு சொற்ப விலைகளில் அழகான சிலபல இதழ்களை உருவாக்கிடும் முனைப்பில் ஜுனியர் எடிட்டர் பிஸி! So அடுத்த சுற்று புத்தக விழாக்களில் கூடுதலாய் பட்டாசுகளை எதிர்பார்த்திடலாம்! //

    மீண்டும் ஒரு காமிக்ஸ் பொற்காலம்

    ReplyDelete
  4. அப்படியே சோடாக்கு ஒரு ஓட்டு?

    ReplyDelete
    Replies
    1. ரோஜருக்கு பதில் சோடா வேண்டும்

      Delete
    2. பெப்ஸி, கோக்?...

      Delete
    3. அது எல்லாம் நான் தொட்டு கூட பார்பது இல்லை பத்மநாபன் சார் ☺️

      Delete
    4. ஆமா ஏன் சோடா போலிங் இல் இல்லை

      Delete
  5. ஆர்ச்சியின் இந்த இரண்டு கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். உலக போரில் ஆர்ச்சி சிறுவயதில் பலமுறை ரசித்து படித்த கதை. விமானத்தின் முன்னால் உட்கார்ந்து கொண்டு ஏவுகணைகளை பிடித்து எறியும் படங்களை மறக்க முடியாது சார். சிறு வயதில் ஆர்ச்சி மாதிரி ஒரு ரோபோ நமது நாட்டுக்கு இருந்தால் எந்த ஒரு நாட்டை பற்றி நாம் பயப்பட வேண்டியதில்லை என்று நண்பர்களிடம் பேசியது பசுமையான நினைவுகள் சார்.😊

    ReplyDelete
  6. குத்துங்க எஜமான் குத்துங்க- தப்பி ஓடின தடி தக்காளியும் அவனோட நைனா கூடவே இருந்தால் ஒரே கல்லில் ரெண்டு பூசணிக்காய் அடிச்சிடலாம் 😂

    ReplyDelete
  7. ஆர்ச்சி புத்தக சைஸ் மாக்ஸியா அல்லது டெக்ஸ் சைஸ்ஆ சார்?

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  9. சார் ஸாகோருக்கு ஆன் லைன் புத்தக விழாவில் ஒரு வாய்ப்பு கொடுங்கள். 3 மாதத்துக்கு ஒரு ஸாகோர் வருவது போல பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் ஸாகோர் takes ஃபர்ஸ்ட் பிளேஸ்.

    ReplyDelete
  10. சாபம் வாங்கிய சுரங்கம் பின் அட்டை அட்டகாசம் அதையே முன் அட்டையாக்க முடிந்தால் கோடி நமஸ்காரம்

    ReplyDelete
  11. இரவுக்கழுகுகளுக்கு வணக்கம் ..

    ReplyDelete
  12. Welcome Roger& Jill jordan... Welcome Boys 😍🥰💐💐💐

    ReplyDelete
  13. @Edi Sir.. 😘😘🥰🥰

    ஜில் ஜோர்டான் க்கும், ரோஜார் க்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் சார் 😘🫣💐💐

    ReplyDelete
  14. படிச்சிட்டு வரேன்!!

    ReplyDelete
  15. //அது சரி, உங்க பார்வையில் ஸ்பூனா? ஒயிட்டா? - இந்தத் தொடரின் நிஜமான ஈரோ யார் guys?//

    இந்த இதழைப் பொருத்தமட்டில் இதன் உண்மையான நாயகர் இக்கதையின் வசனகர்த்தா ஆகிய எடிட்டர் சார் தான்.

    உள்ளூரில் உள்ள எல்லா தரப்பு வாசகர்களையும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வண்ணம் வசனங்களை கையாண்ட விதம் அற்புதம்.

    ReplyDelete
  16. ஸாகோரின் முரட்டு ஆல்பங்களை இறக்கி விடுங்கள் சார்!!

    ReplyDelete
  17. ஜோர்டான் வேண்டும்❤️
    ரோஜர் வேண்டாம்.❌

    ReplyDelete
  18. ஜாகோர் அடுத்தக் கதையை வரவியிருக்கும் ஆன் லைன் புக் ஃபேரில் எதிர்ப்பார்க்கிறேன் சார்.
    ஜோர்டான் அவசியம் வர வேண்டும். ரோஜர் கதையையும் காண ஆவலுடன் Waiting.

    ReplyDelete
  19. அட, அடுத்த மாதமும் டெக்ஸ் கதையின் ஓவியர் Jose ortiz . வாவ், சூப்பர் சார்.

    ReplyDelete
  20. சூப்பர் சார்....டெக்ஸ் அட்டை பட்டய கிளப்புது வித்தியாசமாருக்கு...ஆர்ச்சிக்காக காத்திருக்கிறேன்...ஜுனியரின் முயற்ச்சி வெற்றி பெற செந்தூரானை வேண்டுகிறேன்....தூள் கிளப்புக்கு விக்ரம்

    ReplyDelete
  21. சார் கார்ட்டூனில் வித்தியாசமான ரூபின்...ஸ்பூன் வெற்றி ஜில்லுக்கும் ஜில் தரலாம் முயற்ச்சிப்போமே நம்ம ப்ளூகோட்டிடத்தில்...
    ரோஜர் நிச்சயமா வேண்டும்...வித்தியாச லயிப்புக்கு...ப்ரூனோ போல 2.0 இருக்கா

    ReplyDelete
  22. மூன்று புக்குகளும் மிக அருமை.
    1. ஸ்பூன் அண்ட் வொயிட் வெற்றி பெற்றதுக்கு மொழி பெயர்ப்பு மற்றும் சரியான சொல்லாடல்கள் மிகவும் அருமை. 9.9/10.
    2. தலை புக் எடுத்தால் முடிக்காமல் சாப்பிட கூட முடியாது. 10/10.
    3. மாயாத்மா - மாஸ். போகிற போக்கில் நான் கட்சி மாறி விடுவேனோ என சந்தேகம் வருகிறது. 10/10.
    இதுபோல் நிறைய கதைகள் வர வேண்டும்.
    ஆசிரியர் சொன்னது போல் மாதம் மூன்று புக்ஸ் கண்டிப்பாக பத்தாது.
    அனைத்தும் இப்போது படிச்சாச்சு. மீதி நாட்களில் என்ன செய்ய?

    ReplyDelete
  23. சார். ரோஜருக்கு பதில் சோடா.

    ReplyDelete
  24. Coimbatore இல் இருந்து senthilnathan... Great going.

    ReplyDelete
  25. நடக்கும் சிலை மர்மம் பள்ளிப் பருவத்தில் படித்து வியந்த கதை...

    2012 மறு வருகைக்குப் பிறகு 1-2 கதைகள் மறுபதிப்பாக வந்தன என்றாலும், ரோஜர் சரியாக போகவில்லை என மூட்டை கட்டப்பட்டார்.

    ஆனால், கொரோனாவுக்குப் பிறகு வந்த 'நேற்றைய நகரம் ' அவர் இழந்த பெருமையா மீட்டெடுக்கும் அளவுக்கு breezy reading ஆக இருந்தது. முறையான அறிமுக குறிப்புகளுடன் வெளியிடப்பட்டால் ரோஜர் மீண்டும் வலம் வருவார்!

    ReplyDelete
  26. புரட்சித் தலைவன் ஆர்ச்சி - இந்த கதையிலும் ஆர்ச்சி க்ரூல்ஸ்களை பந்தாடும் என்பது நினைவு...!

    ReplyDelete
  27. இனிய காலை ஞாயிறு வணக்கங்கள் 💐💐💐

    ReplyDelete
  28. சிரிக்கும் விசித்திரம் கதையில் வரும் வில்லன் மீண்டும் சாகோருடன் மோதும் வேறு கதைகள் இருந்தால் வெளியிடுங்கள்

    ReplyDelete
  29. 'அலைகளின் ஆலிங்கனம்' கதை மிரட்டலாய் இருந்தது. அதன் பின்பு வெளியானவை சற்று சுமாராகவே அமைந்திருந்தது. குறிப்பாக, 'காவியில் ஒரு ஆவி'யை ரொம்பவே சிரமப்பட்டு படித்து முடித்த ஞாபகம் எனக்கு!

    ஆக, இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஆகவேண்டியதை முடிவெடுக்கலாம் என்பதே என் நிலைப்பாடு!

    ReplyDelete
    Replies
    1. முதல் கதை சூப்பர் ஈவி...இரண்டாவது கதை படிக்கவே முயற்ச்சி செய்யல தட்டியெடுக்கனும்

      Delete
  30. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  31. அப்புறம் இன்னொரு வோட்டிங்குமே வெயிட்டிங் - இம்முறை அடுத்த சுற்று கலர் டெக்ஸ் மறுபதிப்புகளுக்காக!!

    *மந்திர மண்டலம்
    *பழிக்குப் பழி

    இந்த இரு டெக்ஸ் மறுபதிப்பு கலர் ஆல்பங்கள் நீங்கலாக நம்மிடம் வேறேதும் ஸ்டாக் இல்லை!

    So அடுத்த சகலர் ரீ-பிரிண்ட்ஸ் சுற்றுக்குத் தயார் ஆகி வருகிறோம் folks!

    அதற்கென உங்கள் தேர்வுகள் என்னவாக இருக்குமோ - from the following list? ஏதேனும் 3 மட்டும் தேர்வு செய்யுங்களேன் ப்ளீஸ்?

    https://strawpoll.com/e7ZJaV7LPg3

    லிங்க் பதிவிலும் இணைக்கப்பட்டுள்ளது!

    ReplyDelete
  32. குத்துங்க எஜமான் குத்துங்க...அருமை சார்....அடுத்து அடுத்து என ஆவலை கிளப்ப...இடையிலே அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்படும் இந்தியர்கள் நினைவு வருவது ஆச்சரியம்னா...ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைகளும் நினைவில் வருவது தற்செயல்னா...சைனாக்காரர்களும் அங்க தூள் கிளப்ப...நீக்ரோவ தலைமையதிகாரியா வைக்க...



    கூஃபியும்...அந்த கதறும் துப்பாக்கி தாங்கி ஸ்பூனும்...ஆங்காங்கே நகைச்சுவைகளும்...பத்திரிக்கையாளர் இன் துணிச்சலும்....காதலின் துணிவு மாய் அட்டகாசம்....இனி சிரிக்கும் விசித்திரம்...ஈரோடு எலக்சன்னு கூட வைக்கலாம் குத்துங்க எஜமான் குத்துங்க....சைனர்களா...அமெரிக்கர்களா...காமெடியா ...இந்த மூனுல ஒன்னுக்கு குத்தலாம்

    ReplyDelete
  33. சிரிக்கும் விசித்திரம்...அட்டையை தாண்ட இயலாம தாண்டுனா...உணர்ந்து கொள்ளத் தெரிந்தோ விடும் இந்த மகாநதி ஆயிரம் மொழிகளில் பேசும்...என வரிகள் ஜீவிதம்பெற....உயிரோட்ட ஓவியங்களில் கரத்தை நீட்டிய படியே தொலைய தயார்...மீண்டு வருகிறேன் வாழ்ந்துவிட்டு...

    ReplyDelete
  34. டிராகன் நகரம் போடுங்க சார்

    ReplyDelete
  35. சார்...இது தான் பிப்ரவரி..இன்னும் ஒரே ஸாகோர் தாம் இந்த அட்டவணைப்படியா ..?!

    முடியவே முடியாது ஸாகோரை இன்னும் மூன்று சாகஸத்திலாவது தலை காட்ட வையுங்கள்..


    இல்லையேல் போராடுவோம் போராடுவோம்...

    போராடி கொண்டே இருப்போம்..

    ReplyDelete
  36. So பக்கங்கள் ஜாஸ்தியாய் இருந்தாலுமே பரால்லே; கதைகள் செம விறுவிறுப்பாய், tight ஆகப் பயணித்தால் போதும்! வாசிக்க நாங்க ரெடி!''

    ######


    ஆயிரம் முறை எஸ் சார்...

    ReplyDelete
  37. சாபம் வாங்கிய சுரங்கம்..

    அட்டைப்படம் செம சார்..


    இப்பொழுது எல்லாம் அட்டைப்படம் ஒவ்வொரு மாதமும் பட்டைய கிளப்புகிறது..

    சம்பந்தப்பட்டோருக்கு வாசகர்களின் சார்பாக ஒரு பூங்கொத்தை கொடுத்து விடுங்கள்...:-)

    ReplyDelete
  38. ஜில் ஜோர்டான் மற்றும் ரோஸர் மீண்டும் வரட்டும்.

    ReplyDelete
  39. 1 : இரத்த ஒப்பந்தம்
    2 : மரண தூதர்கள்
    3 : சிகப்பாய் ஒரு சொப்பனம்
    இந்த மூன்று கதையும் மறுபடிப்பு செய்யலாம்.
    ஆசிரியரே நள்ளிரவு வேட்டை இதில் விடுபட்டுள்ளது கவனிக்கவும்.
    முடிந்தால் அந்தக் கதையையும் பரிசீலனை செய்யவும். தல கதைகளிலேயே வித்தியாசமாக நள்ளிரவு வேட்டை கதையில் மட்டும் ரிப்போர்ட்டர் ஜானி கதையில் வருவது போல் கடைசி பேனலில் தான் வில்லன் யார் என்பது தெரியவரும். அட்டகாசமான ஆக்சன் கதையும் கூட

    ReplyDelete
  40. ஆம் sir... சிகப்பாய் ஒரு சொப்பனம்... ❤️👍

    ReplyDelete
  41. Replies
    1. மணக்கும் மண்பானை இதனை படித்தவுடம் நினைவுக்கு வந்தது கொடைக்கானலில் மண் மணம் என்று ஒரு உணவகம். சமையல் முழுவதும் மண் பானையில் பெண்களால் செய்து இயங்கும் உணவகம். நன்றாக இருக்கும்

      Delete
  42. If possible use the same title cover ( purachi thalaivan Archie) for Archie issue

    ReplyDelete
  43. // பற்றாக்குறைக்கு சொற்ப விலைகளில் அழகான சிலபல இதழ்களை உருவாக்கிடும் முனைப்பில் ஜுனியர் எடிட்டர் பிஸி! //

    பலே பலே சூப்பர்

    ReplyDelete
  44. // நெல்லை புத்தகவிழாவிலுமே பள்ளி மாணாக்கர்கள் - க்ளிப்டன்; ஜில் ஜோர்டன்; சிறுத்தை மனிதன், என நமது ""சிறப்பு விலை scheme-ல்'' எக்கச்சக்கமான கலர் புக்ஸை ரூ25/-, ரூ .30/- விலைகளில் அள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றனர்! //

    சிறப்பு சார். மிக்க மகிழ்ச்சி 😍

    ReplyDelete
  45. அப்போது இந்த விஷயத்தை எழுத மறந்து விட்டேன்.
    எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பறக்கும் பலூனில் டெக்ஸ் கதை வெளிவந்த போது அந்தக் கதை நேராக உங்களை மூஸா பக்கம் இழுத்துச் சென்று வெளுத்து வாங்கியது.
    ஆனால் அந்தக் கதையையும் இங்கே லிஸ்ட் செய்த உங்கள் தகிரியத்தை பாராட்டையே தீர வேண்டும்.
    ஆனால் ஹிட் அடித்த நள்ளிரவு வேட்டை மிஸ் ஆனது எப்படி என்று தான் எனக்கு இப்போது புரியவில்லை

    ReplyDelete
  46. சிரிக்கும் விசித்திரம் இப்படிபட்ட கதைகளை படித்து வெகுநாட்களாகி விட்டது....கதை முழுக்க அசுரப் பாய்ச்சல் நமது குருதியும் பற்றியெறிய பதறியபடியே ஓட வைக்கிறான் ஸ்மைல்...மாற்று மருந்தை கண்டுபிடித்த இரத்தத்தை சுத்தம் செய்யும் யுக்தி அபாரம்...இரத்த நாளங்கள் எப்படி தாக்கு பிடிக்க வைக்கிறோம் என மருத்துவர் வியக்க...மதி கால் மந்திரம் முக்காலென சாகோர் முடித்து வைக்க.....மாந்ரீகனின் வரிகளால் இறுதியிலும் முகமூடியோடே கடைசி வரை வாழும் ஸ்மைல்....


    நிறம் ஏதானாலென்ன வல்லவனே ஆளுவான் என்னும் வரிகள் பூர்வக்குடிகளை முடங்கிப் போடுவதை போல நம்மையும் அச்சுறுத்தி அடக்கிப் போடாமலில்லை .

    கதையின் துவக்கமே நதி போல ஈர்க்க நம்ம கண்ணரும் ஆசிரியரும் ஓவியத்தோடு ...வரிகளால் தீப்பிடிக்க வைக்க...சாகோரின் கதைகளுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  47. டெக்ஸின் பழைய சாகசங்களான "இரத்த முத்திரை" மற்றும் "அதிரடி கணவாய்" ஆகிய கதைகளுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். இந்த கதைகள் இதுவரை மறுபதிப்பு கண்டதில்லை. ஆகையால் "எமனோடு ஒரு யுத்தம்" கதைக்கு பிறகு இவ்விரு கதைகளை வெளியிட வேண்டும் என்பது எனது கோரிக்கை

    ReplyDelete
  48. தலைநகரில் தலைமகன்

    கதை: நிஸ்ஸி
    ஓவியம்: ஜோஸ் ஆர்டிஸ்

    அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் படுகொலை நடந்தேறிய அந்த உண்மை நிகழ்வு தான் இக்கதையின் மையக்கரு.
    இந்த கொலையை நிகழ்த்தும் பூத் 10 நாளில் பிடிபட்டு சாகிறான். இது ஒன்று போதுமே நிஸ்ஸிக்கு . கொலைக்கு முன் பூத் எழுதிய அந்த திட்டத்தின் சதிகாரர்களின் பெயர்கள் அடங்கிய கடிதம், அதன் பாதுகாப்பு, அதன் இருப்பிடம் அறிந்து அதைக் கைப்பற்றும் டெக்ஸ் சதிகாரர்களின் தடைகளை மீறி அந்த ரகசிய கடிதத்தை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியிடம் சேர்த்தாரா என்பது மீதி.....!

    சுட்டெரிக்கும் பாலை இல்ல, தொண்டையை அடைக்கும் புழுதி கிடையாது, டெக்ஸின் முஷ்டிக்கும், குதிரைகளுக்கும், துப்பாக்கிகளுக்கு வேலை ரொம்ப குறைச்சல். கதை முழுக்க நகரத்தில் நடப்பது என்று டெக்ஸ் கதையில் ஒரு அரிதான ஒரு விஷயம். அதை இந்த கதை கொண்டு வந்து அழகாக சொல்லியுள்ளர்.

    கதையில் இரும்புக் குதிரை நகர ஆரம்பித்தவுடனே கதையும் பரபரவென அடுத்து என்னவென்று ஓட்டமெடுக்கிறது. கதையில் ஆக்ஷன் குறைவு என்றாலும் எந்தயிடத்திலும் தொய்வில்லாம் செல்கிறது.

    க்ளைமாக்ஸில் வெள்ளை மாளிகையில் நுழைய டெக்ஸ் சேரட் வண்டியை ஓட்டிக் கொண்டு நுழைவது எல்லாம் ரொம்ப புதுசு. பாதுகாப்பிற்கு வெளியில் 4/5 பேர் தான் உள்ளனர். அந்த ரகசியக் கடித்தை அமெரிக்க ஜனாதிபதியிடம் ( கிராண்ட் என்று நினைக்கிறேன்) சேர்த்து விட்டு விடை பெறுகிறார். ஏற்கனவே டெக்ஸ் ஜனாதிபதியை அறிமுகம் கொண்டவராக சொல்கிறார். (சாண்டா ஃபேவில் காப்பாற்றியதாக சொல்கிறார்) இதைப் பற்றி வேறேதாவது கதையுள்ளதானு தெரியலை.

    ஜோஸ் ஆர்டிஸ் ஓவியங்கள் வழக்கம் போல at its best. கதையின் ஒரு பேனலில் வெள்ளை மாளிகைக்குப் பதில் கேப்பிடால் பில்டிங் தவறுதலாக வரைந்து, பின்பு ரீபிரிண்டிங்கில் வரும் போது அது சரி செய்யப்பட்டதாக ஒரு பேச்சு. இதழின் பின்னட்டையில் டெக்ஸிக்கு பின் இருப்பது US கேப்பிடால் பில்டிங் (காங்கிரஸ் ஹவுஸ்) டெக்ஸின் வழக்கத்திற்கு மாறான சூழலில் நிகழும் கதையாகயிருந்தாலும் எந்த விதத் தொய்வில்லாமல் சென்று தூள்கிளப்புகிறது. டெக்ஸின் ஹிட் லிஸ்டில் +1.

    ReplyDelete
    Replies
    1. ///ஏற்கனவே டெக்ஸ் ஜனாதிபதியை அறிமுகம் கொண்டவராக சொல்கிறார். (சாண்டா ஃபேவில் காப்பாற்றியதாக சொல்கிறார்) இதைப் பற்றி வேறேதாவது கதையுள்ளதானு தெரியலை.///

      அப்படி ஏதாவது கதை இருந்தால் வெளியிடுமாறு எடிட்டர் சமூகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏

      Delete
  49. எந்த ஓட்டு பூத்திலும் நம்ம பேரை காணோமே!

    ReplyDelete
  50. ரெண்டு போலிஸ் கார்ஸ் ஒரு டி. வி. நடிகை இவர்களை வைத்து என்ன காமெடி தர முடியும்.? என நினைத்தால்மொழிபெயர்பு பட்டையை கிளப்பிய உள்ளது. செய்து செத்து விளையாடுவோமா மிஸ்டர்.. நான் விளையாடுவேனாம். நீ செத்துப் போவியாம்! கார்ட்டூன் கதை களிலேயே அதிக வசனங்கள் உள்ள கதை இதுவாக தான் இருக்கும். ஆனால் எத்தனை முறை படித்தாலும் பிறகு ஒரு புதிய புத்தகத்தை படிக்கும் உணர்வே எழுகிறது. சார்
    அஆன் லைன்மேளாவிற்க்கு லிஸ்ட்ல ஸ்பூன்&ஒய்ட்சேர்த்துக்குங்க

    ReplyDelete
  51. சிரிக்கும் விசித்திரம்: ஒர்த் வர்மா, ஒர்த் . ஃபைனலி ஒரு டாப் ரேட் வில்லன். ஃபெண்டாஸ்டிக் ரைட்டிங். கதை எங்குமே தொய்வில்லை, வில்லன் கேரக்டர் டெவலப்மெண்ட் சொல்ல வார்த்தையே இல்ல. கதாசிரியர்க்கும் அந்த கேரக்டர் மேல ஒரு ஈர்ப்பு இருந்து இருக்கணும், அதனால அவன உயிரோட விட்டுட்டாரு. இந்த கேரக்டர் பழைய சக்தியை மறுபடியும் அடைந்து நம்ம தல கூட மோதுனா அதுதான் பிளாக் பஸ்டர் ஈவன்ட்..

    என் ரேட்டிங்: 10/10

    ReplyDelete
  52. ZAGOR AND TEX BOTH ARE GOOD THIS MONTH .. BOTH 9/10 ..

    WHITE SPOON LOOKS 18+ .. CANNOT BE PUT IN CARTOON GENRE .. CAN T EVEN FIGURE WAT KINDA GENRE IT IS .. 5/10 ..

    ReplyDelete
    Replies

    1. குத்துங்க எஜமான் குத்துங்க இதழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக?

      இதில் என்ன சந்தேகம்?. ஸ்பூன் அண்ட் ஒயிட் முதல் இதழ் பற்றிய அறிமுகத்தின்போதே எடிட்டர் சார் இதைப் பற்றி தெளிவாக எழுதி இருக்கிறார். அரசியல் சினிமா ஊடகம்,சில உணவு கலாச்சாரம் இவை பற்றிய பகடிக்கான இதழ் என்று தெளிவாக எழுதி உள்ளார்.

      இது கார்ட்டூன் genre அல்ல என நீங்கள் எழுதியிருப்பது ஒரு வகையில் உண்மைதான்.

      இத்தொடரின் ஓவியரான Simon leturgie அவரது தந்தையான jean leturgie பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் என்பதால் தனது ஒன்பதாவது வயதிலேயே ஓவியம் வரைய கற்றுக்கொள்ள துவங்கினார்.

      தனது 19 ஆவது வயதில் தனது தந்தையிடம் ஸ்கிரிப்ட் எழுதி தரச் சொல்லி ஆன்லைன் காமிக்ஸ் வெளியிட்டார்.

      பின்னர் போல் ஸ்டார் என்ற காமிக்ஸ் தொடரையும் தந்தை தனயன் ஜோடி வெளியிட்டது.

      இதைப் பார்த்த Dupuis பதிப்பகம் இருவரையும் இணைந்து புதிதாக ஒரு genre -ல் HUMOUR LIBRE - ஆங்கிலத்தில் FREE HUMOUR என்ற வகையில் இதழ்களை வெளியிட்டது.

      இந்த FREE HUMOUR GENRE -வில் மேலும் பல தொடர்களும் வெளிவந்தன.

      உதாரணத்துக்கு சில

      THE KIDS

      THE Professor'S DAUGHTER

      LILO AND Lollipop

      PHOENIX

      இந்த ப்ரீ ஹுயூமர் வகையறாவை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள்.

      ABSURD, DARK, CYNICAL

      அபத்தமான, இருண்ட, கொஞ்சம் இழிவான நகைச்சுவை.

      (DUPUIS பதிப்பகம் ஸ்பூன் அண்ட் ஒயிட் தொடரின் மூன்று இதழ்களுக்கு பிறகு குழந்தைகளுக்கான இதழ் தயாரிக்கப் போவதாக சொல்லி இவர்களை வேறு ஒரு பதிப்பகத்திடம் அனுப்பிவிட்டது.
      இது குறித்து கோபமடைந்த SIMON LETURGIE பின்னாட்களில் DUPUIS பதிப்பகம், பதிப்பாளர்கள் குறித்து பகடி காமிக்சை வெளியிட்டார் )

      SIMON லக்கி லூக்கின் கருப்பு வெள்ளை வெளியீடுகளின் போது பேய் நகரம் இதற்கான(ghost town) ஓவியங்களை வரைந்தார்( 2023).

      இப்போது நமது லயன் முத்து பதிப்பகம் வெளியிட்டு இருக்கும்
      Three little pigs இதழின் ஓவியரும் இவரே. தமிழில் விடா முயற்சி.

      Dupuis புதிதாக வெளிக் கொண்டிருந்த free humour genre சில கதை தொடர்களோடு நின்று போனது. இப்போது வெளிவரும் ஸ்பூன் அண்ட் ஒயிட்டை வெளியிடுவது வேறு பதிப்பகம்.

      5/10 என மதிப்பெண் தருவது உங்களுடைய உரிமை. ஆனால் பிரெஞ்சில் எப்படியோ தமிழில் நகைச்சுவை வசனங்கள் மிகவும் அற்புதம்.





      Delete
    2. அருமையான தகவல்கள் செல்வம் சார்

      Delete
    3. /// பிரெஞ்சில் எப்படியோ தமிழில் நகைச்சுவை வசனங்கள் மிகவும் அற்புதம்.///
      உண்மை சார்.
      உதாரணமாக என்று சொல்ல முடியாதபடி, பக்கத்துக்கு பக்கம் பகடியில் கபடி ஆடி இருக்கிறார் ஆசிரியர்.

      Delete
    4. அதே பழைய பன்னீர்செல்வமா வந்துட்டீங்க செனா அனா!! சூப்பர் 💐💐💐😍

      Delete
  53. 'தலைநகரில் தலைமகன்' - அருமை! வரலாற்று சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு கதைப் பின்னணியில் டெக்ஸும், கார்சனும் பெரியதொரு ஆர்ப்பாட்டங்களின்றி பயணித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது!
    எதிரிகளின் வியூகங்களை முன்கூட்டியே கணித்து டெக்ஸும் கார்சனும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவது சுவாரஸ்ய சம்பவங்கள்!
    வாஷிங்டன் ரயில் நிலையத்தில் நிகழும் துப்பாக்கி சண்டையும், இறுதியில் நம் நாயகர்கள் ப்ரெசிடெண்டை சந்திக்கும் நிகழ்வும் பரபரப்பின் உச்சங்கள்!

    கடைசி பக்கத்தில் 'செவ்விந்தியர்களுக்கு ஏதாவது பார்த்து பண்ணுங்க சாமி' என்று பிரசிடெண்டிடம் கோரிக்கை வைத்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் டெக்ஸும் கார்சனும், வெளியேறி வந்தபிறகு 'இவர்கள் அப்படி எந்த நல்லதும் செவ்விந்தியர்களுக்கு செய்துவிடப்போவதில்லை' என்று தங்களுக்குள் பேசிக்கிகொள்வதும் யதார்த்தமான கதை சொல்லும் பாணிக்கு அழகு!

    கதைக்காக தல!😍😍

    ReplyDelete
  54. இம்மாதம் வெளியான புத்தகங்களில் கதைகளை நான் ரசித்த வகையில்..

    முதலிடம் : ஸ்பூன் & வொய்ட்
    இரண்டாமிடம் : ஸாகோர்
    மூன்றாமிடம் : தல

    இது ஒரு ஒப்பீடுக்ககத் தானே தவிர, இம்மாத மூன்று இதழ்களுமே தத்தம் பாணியில் பட்டையை கிளப்பியிருக்கின்றன என்பதே உண்மை!😍😍😍

    ReplyDelete
    Replies
    1. // இம்மாத மூன்று இதழ்களுமே தத்தம் பாணியில் பட்டையை கிளப்பியிருக்கின்றன என்பதே உண்மை //

      True.

      Delete
  55. ஆஹா.. ஆஹா.. 🥰😘🙏💐

    "வண்ணத்தில் ஒற்றை கண் மர்மம்"... 😘💐

    நானும் blog ல் கேட்டுக்கொண்டே இருந்தேன்... 😘🙏💐

    ஆசையை நிறைவேற்றியதற்கு
    கோடானுக்கோடி நன்றிகள் சார்.. 😘🙏💐💐💐💐🥰😘🥰😘

    ReplyDelete
  56. 😘😘🥰🥰💐
    "வருகிறது வண்ணத்தில் விச்சு கிச்சு"🥰😘

    Wow 🥰😘

    இன்னைக்கு என்ன முழிச்ச முகம் ராசியானதாக இருக்குமோ.. 🤔🤔

    நல்ல விஷயங்களா காதுல விழுதே.. 😄😘💐

    ReplyDelete
  57. எப்போ..😘 எம்புட்டு..🥰
    தனி புக்கிங்கா.. 🥰😘

    சொல்லுங்க Sir😄🙏💐😘

    முதல் புக்கிங் என்னுதாதான் இருக்கணும்.. 😘🥰😘

    ReplyDelete
  58. செவ்விந்தியர்கள கூட்டத்தில்
    " நேருக்கு நேர் வா சாகோர் மோதிக் பார்த்து விடலாம் " என்று சிரிக்கும் விசித்திரம் அறைகூவல் விடும் வேளையில் பூம் என்ற வெடிச்சத்தத்துடன் சுற்றிலும் நெருப்பு எறிய சாகோர் வெளிவருவது ஹீரோயிசத்தின் உச்சம். கொண்டாடலாம் சாகோரை.

    ReplyDelete
  59. /உதாரணமாக ,என்று சொல்ல முடியாத படிக்கு பக்கத்துக்கு பக்கம் பகடியில் கபடி ஆகியிருக்கிறார் ஆசிரியர்//சூப்பர்ங்க பத்மநாபன் சார்.

    ReplyDelete
  60. //ஆசை ,தோசை, நூடுல்ஸ், சூப்.// அப்பளம் வடைக்கு பதிலாக //நூடுல்ஸ் ,சூப் //.அந்த "உதாரணத்தில் "ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் பக்கத்துக்கு பக்கம் என்று குறிப்பிட்டேன் சார்.

      Delete
  61. விமர்சனம் *சிரிக்கும் விசித்திரம்*

    அபரிமிதமான ஆற்றலும், வலிமையும் நல்லவனுக்கு கிடைக்கும் போது அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் வரமாக அமைகின்றது.


    அதுவே...

    கெட்டவனுக்கு கிடைக்கும் போது...

    அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் சாபமாக அமைகிறது...

    இதுவே இந்தக் கதையின் மையக் கரு.

    தி மாஸ்க் என்ற ஆங்கில படத்தை ஞாபகப் படுத்தும் விதமாக கதையின் வில்லனின் ஆற்றல் அமைக்கப் பட்டுள்ளது.

    அட்டைப் படத்தில் ஜோக்கரைப் போன்ற ஆனால் கொடூரமாக சிரிக்கும் வில்லனின் முகம் தொடங்கி கதையின் ஆரம்பப் பக்கத்தில் வரும் ரம்யமான சூழலைக் கொண்ட ஆறும், மலையும் அமைந்த பகுதியில் தொடங்கும் ஓவிய நளினங்கள் கதை நெடுக வந்து நம்மை ரசிக்க வைக்கிறது. 💓👌🏻👏🏻

    வேகமாக விறுவிறுப்பாக நகரும் கதையில் நம்மை வேகமாக கடந்து செல்ல விடாமல் அழகான நேர்த்தியான ஓவியங்கள் கட்டியிழுத்து ரசிக்க வைக்கின்றன என்றால் அது மிகையாகாது.

    ஓவிய பேனல்களை ரசித்துக் கொண்டே போகும் போது ஓவியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    ஆங்காங்கே மனித உணர்ச்சிகளை (கோபம், அதிர்ச்சி, ஏளனம், சோகம்) & டார்க் வுட் கானகத்தின் வனப்பை அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார். 💐👏🏻

    பக்கம் 50ல் (முதல் பேனலில்) வில்லனின் மறு பிரவேசத்தில் அவனுடைய கொடூரமான கண்களையும் வஞ்சமான சிரிப்பையும் வரைந்திருக்கும் விதம் அருமை. 👏🏻👌🏻

    கெட்ட எண்ணம் கொண்ட கொள்ளையன் வழியில் ஜாகோர் எதிர் பாராத விதமாக குறுக்கே வர அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் கொள்ளையன் மலையில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக நினைக்கையில்.

    விதி அவனை ஒரு தீய எண்ணம் கொண்ட ஒரு மாந்திரீகனிடம் கொண்டு வந்து சேர்க்க அவன் மூலம் கிடைக்கும் ஒரு முகமூடியின் துணையால் அசுர ஜென்மமாக உருவெடுக்கிறான்.

    விசித்திரமான முகமூடியின் மூலம் தனக்கு கிடைத்த சக்தியைக் கொண்டு மறுபடியும் தீயவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை தனக்கென உருவாக்க முயற்சிக்கையில் அவன் எதிர் பாரா வகையில் வேறு கூட்டாளிகள் அவனோடு சேர்ந்து அவனுடய சக்தியின் மூலம் டார்க் வுட் கானகத்தையே அவன் வசப் படுத்த அவனுக்கு வழி காட்டுகின்றனர்.

    கதையில எப்பவுமே ஹீரோவின் கையே ஓங்கி அவரின் ஆதிக்கமே கதை நெடுக இருக்கும்.

    ஆனால் இக்ககதையில் வில்லனின் சக்தியின் வீரியத்துக்கு ஸாகோரால் தாக்குபிடிக்க முடியாமல் போகிறார்.

    ஒரு கட்டத்தில் வில்லனுக்கும் ஸாகோருக்கும் நடக்கும் சண்டையில் வில்லனின் கை ஓங்கி ஸாகோர் படு காயமடைந்து பின் வாங்கி ஓடும் நிலை வந்திடும்.

    வில்லனின் நுட்பமான கேட்கும் திறன், சிறுத்தைக்கு இணையாக வேகமாக செயல் படும் திறன், காயம் பட்டாலும் விரைவில் குணமாகிடும் அற்புத சக்தி இவற்றைக் கொண்ட வலிமையான ஆற்றலுடையவனை ஸாகோர் எதிர் கொண்டு ஜெயிக்கும் இடம் அருமை 💓👌🏻

    வலிமையான எதிரியை மீண்டும் எதிர் கொள்ள இம்முறை விவேகத்துடன் களமிறங்குகிறார் ஸகோர்.

    தீயவனின் கைகளில் அதிகாரம் சென்றால் தீய விளைவுகள் ஏற்படும் என்று காட்டில் இருக்கும் பழங்குடியினருடன் சேர்ந்து எவ்வாறு அவனை வீழ்த்தி வாகை சூடினார் என்பதை பர பரப்பான ஆக்சன் கலந்து கதையை கொண்டு சென்றுள்ளனர்.

    இறுதியில் வில்லனுக்கு கிடைக்கும் தண்டனை விசித்திமானது, எதிர் பாராதது.

    *ஸாகோர் கதையில் இது ஒரு முக்கிய கதையாக வலம் வரும் என்று படிக்கும் போது உணர முடிகிறது. காரணம் வில்லன்*.

    இருள் வனத்தில் ஒரு சிரிக்கும் விசித்திரன்.

    இது போன்ற ஸாகோர் கதைகளை அவ்வப் போது வெளியிட்டால் ஸாகோருக்கும் ஒரு வலுவான ரசிகர்கள் கூட்டம் உருவாகிடும்.

    ReplyDelete
    Replies
    1. செம விமர்சனம்!!💐💐💐😍👏👏

      Delete
    2. நன்றி பரணி சார் & ஈரோடு இளவரசரே

      Delete
    3. அருமை நண்பரே....தீயவனின் கைகளில் அதிகாரம் சென்றால் தீய விளைவுகள் ஏற்படும் என்று காட்டில் இருக்கும் பழங்குடியினருடன் சேர்ந்து எவ்வாறு அவனை வீழ்த்தி வாகை சூடினார் என்பதை பர பரப்பான ஆக்சன் கலந்து கதையை கொண்டு சென்றுள்ளனர்...




      நாட்டு நடப்பும் கூட

      Delete
  62. //இதுபோன்ற ஸாகோர் கதைகளை அவ்வப் போது வெளியிட்டால் ஸாகோருக்கும் ஒரு வலுவான ரசிகர்கள் கூட்டம் உருவாகிடும்//+11111111111

    ReplyDelete
  63. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. எஸ். இன்று பதிவுக் கிழமை!!
      இன்றைய பதிவில் வ ஒ க ம +
      விச்சு கிச்சு இவைகள் பற்றி முழுமையான தகவல்கள் வரலாம்!!

      Delete
    2. என்ன குமார் பதிவுகிழமை பதிவை இன்னும் காணோம்?

      Delete
  64. Replies
    1. உங்கள நீங்களே டெஸ்ட் பண்ணுறதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் தல 😊

      Delete
    2. வேற யாரும் நம்ம தலீவர டெஸ்ட் பண்ணிட்டு உசிரோட வீடு திரும்பமுடியும்னு நினைக்கறீங்க? 😝

      Delete
  65. வருடம் ஒரு கலர் மறுபதிப்பு

    ReplyDelete
  66. // ""எட்டும் தூரத்தில் யுத்தம்' மாத்திரமே! அதற்கு முன்பாக ஏதேனுமொரு முழுநீள solo ஸாகோர் அதிரடியைக் களமிறக்கியாக வேணும் என்று படுகிறது! Your thoughts please folks? //

    +1 Yes. Please

    ReplyDelete
  67. // வாரஸ்யமான சம்பவக் கோர்வைகள்.. பரபரவென்ற நகர்வுகளே கதைக்கு மூலதனமாகிட, பெரியதொரு ஆக்ஷன் sequence இல்லாமலே வண்டி "ஜம்''மென்று ஓடிவிடுகிறது! //

    100% True sir!

    ReplyDelete
  68. ///நடப்பாண்டின் அட்டவணையில் 2025-ல் காத்திருக்கும் ஒரே ஸாகோர் சாகஸம்- இளம் டெக்ஸுடன் கரம் கோர்த்திடும் ""எட்டும் தூரத்தில் யுத்தம்' மாத்திரமே! அதற்கு முன்பாக ஏதேனுமொரு முழுநீள solo ஸாகோர் அதிரடியைக் களமிறக்கியாக வேணும் என்று படுகிறது! Your thoughts please folks?///

    சார் டெபனட்டலி.. டெபனட்டலி!!😍

    ReplyDelete
  69. Yes ,சார் டெபனட்டலி.. டெபனட்டலி

    ReplyDelete
  70. சார்.. பல ஆண்டுகளா ஒவ்வொரு வார இறுதியிலும் உங்க பதிவை படிச்சிட்டு, உங்களை அப்படியே ஏதாச்சும் முட்டு சந்து பக்கமா கூட்டிட்டு போய்.. நீங்க பேந்தப் பேந்த முழிச்சிட்டு நிக்கிற அழகை பாப்கான் சாப்பிட்டுட்டே ரசிச்சுப் பழகிட்டோம். இப்போ அது இல்லன்னா கை காலெல்லாம் வெட வெடங்குது சார்.
    ஒருவேளை நீங்க பிஸின்னா கூட, நம்ம ஜூனியர் எடிட்டரை இந்த பக்கமா அனுப்பி வச்சீங்கன்னா, அவருக்கும் முட்டு சந்து மாளிகையை சுத்திக் காட்டி ஒரு intro கொடுத்து அனுப்பி வைப்போமே சார்?😌

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை ஜூனியரும் பிஸின்னா, நம்ம கருணையானந்தம் சாரையாவது அனுப்பி வையுங்க.. முட்டு சந்துக்குள் ஒரு மெல்லிய பட்டிமன்றம் நடத்திட்டு சமத்தா அனுப்பி வச்சுடறோம். 😁

      Delete
    2. 😊😊😊😊👍👍👍👍🙏🙏🙏🙏

      Delete
    3. சமந்தான்னு படிச்சுட்டேன்...

      Delete
    4. பத்து சார்.. உங்களுக்கென்ன சார்.. நீங்க வெள்ளைக்கார சமந்தாக்களை பார்க்கப் போறீங்க!😝

      Delete
    5. நீங்க சமந்தாவ நினைச்சு கிட்டே இருங்க 😂

      Delete
  71. EV sir🤣🤣🤣🤣😊😊😊😊👍👍👍👍🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சிவா ji.. நம்ம முயற்சியெல்லாம் வீணாப்போச்சே.. இன்னும் பதிவக் காணோமே!! 😑

      Delete
  72. உங்க வரைக்கும் தகவல் வந்து விட்டுதா ஈ.வி....

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு இந்த மாதிரி தகவல்கள் தான் முதலில் வரும்.

      Delete
    2. PfB.. கிர்ர்ர்ர்ர்..😼

      Delete
  73. v காமிக்ஸில் வரும் கோடாலி நாயகனின் கதைகளின் சிறப்பு ஓவியம்; அதுவும் இந்த மாத கதையில் அட்டகாசம்; இவ்வளவு அழகான தெளிவான ஓவியத்துகாகவே முதல் இடம் கொடுக்கலாம்; ஒவ்வொரு பேனலில் வரும் சித்திரங்கள் இடம், சூழ்நிலை, மனிதர்கள் என அனைத்தையும் நேரில் பார்பது போல அங்கு நாமும் இருக்கும் ஒரு உணர்வை தருகிறது.

    ReplyDelete
  74. //ஒவ்வொரு பேனலில் வரும் சித்திரங்கள், இடம்,சூழ்நிலை,மனிதர்கள் என அனைத்தையும் நேரில் பார்ப்பது போல அங்கு நாமும் இருக்கும் ஒரு உணர்வை தருகிறது.//சூப்பர் பரணி சார்.

    ReplyDelete
  75. இப்படியாக.. இந்த வார இறுதி மு.சந்துகளின் குணங்களோ.. மூ.சந்துக்களின் மணங்களோ இன்றி சப்பென்று கழிந்தது!😰😤

    ReplyDelete