Powered By Blogger

Monday, September 05, 2022

நாடி புடிக்கலாம் வாங்க..!

 நண்பர்களே,

வணக்கம். வெத்திலைப்பொட்டி மாதிரியொரு டப்பியைக் கையில் ஏந்தியபடிக்கே, நெற்றி முழுக்கப் பட்டையைப் போட்டுக்கினு. குடுமியோட ஒரு பெருசு வரும்....!! "வைத்தியர் ஐயா...! அம்மிணி பொசுக்குன்னு மயக்கம் போட்டுப்புடிச்சி..! இன்னான்னு சித்தே பாத்துச் சொல்லுங்க !" என்று நைனாக்கார கேரக்டர் புலம்பும் !.....அம்மணியின் நாடியை புடிச்சுக்கினு வைத்தியர்வாளும் ஒண்ணரை நிமிஷம் மூஞ்சை சீரியஸா வைச்சுக்கினு இருக்கும்....! அப்புறமா - "எல்லாம் நல்ல விஷயம் தான் ; நீங்க தாத்தாவாகப் போறீங்கன்னு !" நைனாகிட்டே சிரிச்சிக்கினே சொல்லுவாரு ! "அடப்பாவி மவளே !!" என்று நைனா கொந்தளிக்கும் போது தான் தெரியும் - வைத்தியர் சொல்லிப்போட்டது அந்தக் குடும்பத்துக்கு சந்தோஷம் தரவல்ல சேதியல்ல என்பது ! அந்த வைத்தி இடத்தில நம்மளை வைச்சுக்கோங்க....(குடுமி போட தோதுப்படாதென்பதையெல்லாம் பெருசாக்கிக்காதீங்க !) உங்க ரசனைகளெனும் நாடிய புடிச்சி - "ஆகாகா...நல்ல சேதி தான்....கி.நா.குவியலா வர போகுது!"ன்னு சொல்லி விட்டு ஜாலியாய் நடையைக் கட்டியிருப்பேன் - உங்கள் முகங்கள் பேஸ்தடித்து அஷ்டகோணலாகியிருப்பது தெரியாமலே ! 

இதோ அத்தகைய சொதப்பல் இந்தவாட்டி just miss  - போன பதிவின் உபயத்தினில் ! Of course - இங்கே கருத்துச் சொன்ன 75+ நண்பர்கள் நமது வாசக வட்டத்தின் முழு பிரதிபலிப்பாகிட இயலாது தான் ; ஆனால் கோடிக்கணக்கான ஜனம் வாக்களிக்கும் தேர்தல்களின் முடிவுகளையே கணிக்க முயலும் exit polls கூட வெறும் ஆயிரம்+ அபிப்பிராயங்களின் அடிப்படையில் தானே இயங்கிடுகின்றன ? So இந்தப் பருக்கைகளை, உலையில் கொதிக்கும் சோற்றுச் சட்டியின் sample ஆகப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது ! 

ப்ளூகோட்ஸ் பட்டாளமா ? மேக் & ஜாக்கா ? என்று வினவியிருந்தேன் ! எனது பர்சனல் favorite மேக் & ஜாக் தான் எனும் போது - "ப்ளூ கோட்ஸ் தொடரின் அந்த dark humor வாசகர்களுக்கு லயிக்காது....so அந்த சிகாகோ டிடெக்டிவ் ஜோடியோடே சவாரி செய்யலாம்" என்று  தான் நிச்சயம் தீர்மானித்திருப்பேன் ! ஆனால்....ஆனால்...உங்களின் வாக்களிப்பைப் பார்த்தால் : 

  • ப்ளூ கோட்ஸ் score செய்திருப்பது 30.5 மதிப்பெண்கள் ! 
  • மேக் & ஜாக் ஜோடியோ 11.5 மட்டுமே !!  

கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஓட்டுக்கள் ஸ்கூபி & ரூபி ஜோடிக்கு !! "நான் அப்டியே ஷாக்காகிட்டேன் " என்றெல்லாம் ஓவர் பில்டப் தரமாட்டேன் தான் ; ஆனால் நாடிபிடிக்கும் கலையில் இன்னும் நிறையவே தூரம் பயணிக்க வேண்டுமென்பதை புரிந்திருக்கிறேன் !

Same goes for மர்ம மனிதன் மார்ட்டின் too ! இவரை உள்ளுக்குள் நுழைக்காவிட்டால் சுனாமி சாத்தி விடும் ; வெள்ளம் வெளுத்துவிடும்...பூகம்பம் புரட்டி எடுத்து விடும் - என்ற ரீதியினில் உள்ளாற எண்ணியிருந்தேன், இத்தனை நாட்களாய் ! ஆனால்...ஆனால்... "தெய்வமே....நீ நல்ல இருப்பே...அவருக்கொரு தற்காலிக ஒய்வு கொடு !" என்ற குரல்களே உரத்துக் கேட்டுள்ளன !!

  • மார்ட்டின் வேணும் என்போர் : 18 
  • மார்ட்டின் வேணாம் என்போர் : 22 

Again ராஜதந்திரங்களில் ராவோடு ராவாக, ஒரு ரகசிய rush course கற்றாக வேண்டுமென்பது புரிகிறது !! தவிர, ஒவ்வொரு ஆண்டிலும் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ? ரசிப்பது என்ன ? பெருசாய்க் கருதாதது என்ன ? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் have been an eye-opener to me ! என் கோலிக்குண்டுக் கண்களையே அகல விரியச் செய்ய உங்கள் எண்ணப்பகிரல்களுக்குச் சாத்தியமாகியுள்ளது எனில் - அவற்றின் சாரம் எத்தகையதென்று பார்த்துக் கொள்ளுங்களேன் ! கொஞ்சமே கொஞ்சமாய் பதிலளிக்க நீங்கள் மெனெக்கெட்டால் அதன் பலன் எவ்விதமிருக்கும் என்பதை வரும் அக்டோபர் 30-ம் தேதி நிச்சயம் பார்க்கத் தான் போகிறீர்கள் guys ! Thanks a ton !!

Bye for now ...செப்டெம்பர் அலசல்கள் தொடரட்டுமே !! And SUPREME '60s + YEAR END SPECIALS-களுக்கான முன்பதிவுகளையும் செய்திடலாமே - ப்ளீஸ் ?

நண்பர் கிரியின் கைவண்ணம்...! 

And இது - நண்பர் ஆதியின் கைவண்ணம் - for the காரிகன் cover ! அந்த எழுத்துருவும், header பேனரும் சூப்பராக உள்ளதாக எனக்குப்பட்டது ; உங்களுக்கு  guys ? 

204 comments:

  1. Edi Sir..
    சகோ ஆதியின் கைவண்ணத்தில் காரிகன் ச்சும்மா தக தக ன்னு மின்னுராருங்க...😍

    ReplyDelete
  2. இரவு வணக்கம் 🙏🙏

    ReplyDelete
  3. Edi Sir..
    தாத்தாஸ் படிச்சிட்டேன்.
    செம்மையா இருக்குங்க.

    பியாரோ தாத்தாவிற்கு தன் பழைய காதலியின் நினைவுகள் Flashback ல வர்ரப்ப எல்லாம் அதை b/w ல வரைஞ்சிருக்கிறது சூப்பரா இருக்குங்க.

    அந்த ப்பீப்பீ பாட்டி ஹேக்கிங் கத்துக்க போறப்ப அந்த அர்னாட் பையன் கையில வச்சிருக்கற லேப் டாப்ல "Hacker inside" ன்னு லோகோவுலகூட சின்ன சின்ன டீடெய்லஸ் கொடுத்திருக்கிறது Wow..😍👍

    பீட்டர் தாத்தாவும், பியாரோ தாத்தாவும் கட்டிபுரண்டு அடிச்சிகிறப்ப பீட்டரின் மனைவி ரேமொண்ட் லபுஷே கிட்டே துடைப்பகட்டையிலே மாத்து வாங்கிறப்ப கூட அவங்கதான் தன்னோட பழைய காதலி ஆன்னி பொன்னின்னு பியாரோ தாத்தாவுக்கு தெரியாம போனது ரொம்ப பரிதாபங்க.😑

    மொத்தத்துல *தாத்தாஸ்* க்கு next slot க்கு துண்டுபோட்டுடுங்க.

    3வது தடவையா திரும்ப திரும்ப தாத்தாஸ் படிச்சி ரசிச்சிட்டுருக்கேன்.

    ReplyDelete
  4. தாத்தாஸ் குறிப்பா *ப்புவாய்ங்* தாத்தா பண்ற அட்டகாசம் தாங்க முடியலீங்க..😁😄😃😀😘😍
    சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சுங்க.

    மொத்தத்தில தாத்தாஸ் வேற..வேற..லெவலுங்க..

    ReplyDelete
  5. காரிகன் அட்டைப்படம் சூப்பர் வாழ்த்துக்கள் உதய் குமார் ஜி

    ReplyDelete
  6. நண்பர் (உதய்?) ஆதியின் கைவண்ணம் - அட்டகாசம்! அட்டைப்படத்தின் பிரம்மாண்டத்தை பலமடங்கு கூட்டுகிறது! 'சீக்ரெட் ஏஜென்ட்' என்று தமிழிலேயே இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பர்சனல் டச் கிடைத்திருக்கும் என்பது என் யூகம்!

    ReplyDelete
    Replies
    1. தமிழில் தான் வரும் நண்பரே, என்னிடம் எடிட்டர் அளவுக்கு நல்ல font இல்லை .... எனவே இங்கிலிஷ்...

      Delete
  7. //சூப்பராக உள்ளதாக எனக்குப்பட்டது//
    என் பாக்கியமே சார் அது. நன்றி.

    ReplyDelete
  8. நண்பர் கிரியின் சுப்ரீம் 60 design பிரமாதம்... ஆர்ட் பேப்பரில் கலக்கும்...

    ReplyDelete
  9. காரிகன் அட்டைப் படம் அருமையாக உள்ளது.

    சுப்ரீம் ஸ்பெஷல் சந்தா கட்டியாச்சு.

    குண்டு புக் முடிவு அக்டோபரில் தெரிய வரும் போல...

    கார்ட்டூன் கதைகளை முன் பதிவு முறையில் சுஸ்கி விஸ்கி போல 2023ல் வெளியிடுங்கள் சார். ஸ்மர்ஃப், பென்னி, கிட் லக்கி, லியார்னடோ தாத்தா, ப்ளூ கோட், மேக் & ஜாக், மதியில்லா மந்திரி, Spirou and Fantasio, Marsupilami, Asterix, Tintin, ompa-pa, bone, ரின் டின் கேன், etc. (கேக்கறத கேட்டு வைப்போம்)

    லக்கி லூக், சிக் பில், சுஸ்கி விஸ்கி - இம்மூன்றும் கண்டிப்பாக வரும் என்று தெரிகிறது. அதோடு மற்ற கார்ட்டூன் கதைகள் வந்தால்.. ஆஹா..

    Mind Voice: கோட்டை சாமி... தூக்கத்தில் இருந்து எழுந்திரு...

    ReplyDelete
    Replies
    1. // கார்ட்டூன் கதைகளை முன் பதிவு முறையில் சுஸ்கி விஸ்கி போல 2023ல் வெளியிடுங்கள் சார். ஸ்மர்ஃப், பென்னி, கிட் லக்கி, லியார்னடோ தாத்தா, ப்ளூ கோட், மேக் & ஜாக், மதியில்லா மந்திரி, Spirou and Fantasio, Marsupilami, Asterix, Tintin, ompa-pa, bone, ரின் டின் கேன், etc. (கேக்கறத கேட்டு வைப்போம்) //

      +1

      Delete
  10. @ கிரி ஜி..😍😘🙏

    சுப்ரீம் 60 விபரங்கள் அடங்கிய design தயார் செய்து, சுற்றுக்கு அனுப்பி, நம் நண்பர்கள் சொன்ன அத்தனை corrections யும் அசராது செய்து முடித்து அட்டகாசமாக தயார் செய்து தந்துள்ள சகோ கிரியின் உழைப்பினை பாராட்ட வார்த்தைகளே இல்லை.👍👏💐

    Hatsoff Giri ஜி..❤💛💙💚💜

    ReplyDelete
  11. அட்டகாசமான டிசைன்கள். வாழ்த்துகள் கிரி (ஒன் பேஜ் விளம்பரங்கள்) உதய் ஆதி (காரிகன் அட்டைப்படம்).

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  13. நண்பர் கிரி மற்றும் திரு ஆதி இருவரின் படைப்புகளும் அட்டகாசம்.. வாழ்த்துகள்..!!

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  14. நண்பர்கள் கிரி அண்ட் ஆதி இருவரின் உழைப்பும் அதன் வெளிப்பாடும் அருமை. அட்டகாசம்.

    ReplyDelete
  15. சூப்பர் சார்..... நண்பர்கள் ஆதி....கிரி செமையாருக்கு நண்பர்களே.....அதிலும் ஆதியின் விளம்பரம் இது வரை வந்ததிலே டாப்....காரிகன் அட்டை வெடிக்குது.....இது வரை வந்ததி'லை டாப்பென....எழுத்துருவுமே அட்டகாசமா பொருந்துது டாப்பிடத்துக்கு

    ReplyDelete
  16. நண்பர ஆதியின கை வண்ணம் சூப்பர். சின்ன திருத்தம்.முத்து லோகோ அந்த பேனரில் இல்லாமல் எப்போதும் போல் மேலே வந்தால் நன்றாக இருக்கும். காரிகன் அழகாக இருக்கிறார். பாராட்டுகள் ஆதி சார்

    ReplyDelete
    Replies
    1. // . சின்ன திருத்தம்.முத்து லோகோ அந்த பேனரில் இல்லாமல் எப்போதும் போல் மேலே வந்தால் நன்றாக இருக்கும். //

      Yes. I echo the same!

      Delete
  17. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் & பாராட்டுக்கள் உதய் ஆதி ப்ரோ.

    ReplyDelete
  19. வாழ்த்துகள் & பாராட்டுக்கள் கிரி ப்ரோ.

    ReplyDelete
  20. காரிகன் கவர் simply superb.

    ReplyDelete
  21. சார் ஒரு கோரிக்கை.

    நீங்கள் அறுபதிலும் சாகசம் வரும் பதிவில் குறிப்பிட்ட விங் கமாண்டர் ஜார்ஜ் இன் நெப்போலியன் பொக்கிஷம் போன்ற கதைகளை நான் படித்தது இல்லை. அதே போல டிடெக்டிவ் சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை எல்லாம் அதிக பட்சம் ஒரு 30 பேரிடம் தான் இருக்கும். இந்த கதைகளையும் இரண்டு முறை print செய்து விட்ட காரணத்தினால் வெளியிட வேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் சார்.

    அந்த புத்தகத்தை what's app குழுக்களில் வாங்க முயற்சித்தால் நமது சுப்ரீம் 60s சந்தாவை விட அதிகம் செலவாகும்.

    எனவே ஏற்கனவே முத்துவில் வந்து இருந்தாலும் இது போன்ற சிறந்த கதைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. //விங் கமாண்டர் ஜார்ஜ் இன் நெப்போலியன் பொக்கிஷம் போன்ற கதைகளை நான் படித்தது இல்லை. அதே போல டிடெக்டிவ் சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை எல்லாம் அதிக பட்சம் ஒரு 30 பேரிடம் தான் இருக்கும். இந்த கதைகளையும் இரண்டு முறை print செய்து விட்ட காரணத்தினால் வெளியிட வேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் சார்.//
      +123456

      Delete
    2. @Kumar ji..

      I agreed your views.👍
      நம்ப எடிசார்தான் மனசு வைக்கோனும்.😍🙏💐💐

      Delete
    3. சிறை மீட்டிய சித்திரக்கதை best in story சார்லி அதனால் இந்த கதை இடம் பெற்றால் நன்றாக இருக்கும்

      Delete
    4. //நீங்கள் அறுபதிலும் சாகசம் வரும் பதிவில் குறிப்பிட்ட விங் கமாண்டர் ஜார்ஜ் இன் நெப்போலியன் பொக்கிஷம் போன்ற கதைகளை நான் படித்தது இல்லை. அதே போல டிடெக்டிவ் சார்லியின் சிறை மீட்டிய சித்திரக் கதை எல்லாம் அதிக பட்சம் ஒரு 30 பேரிடம் தான் இருக்கும். இந்த கதைகளையும் இரண்டு முறை print செய்து விட்ட காரணத்தினால் வெளியிட வேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் சார். //

      முற்றிலும் உண்மை இந்த கதைகளை மறுபடி வெளியிட்டால் நன்றாக இருக்கும் இதை படிக்காமல் இருப்போர் நிறைய பேர் இருக்கலாம்.

      Delete
  22. ஆதி & கிரி . பாராட்டுக்கள் உங்கள் ஈடுபாடு, மற்றும்உழைப்பு பிரமிப்பு . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  23. நண்பர் கிரி & உதய் ப்ரோ இருவரின் படைப்புகளும் அட்டகாசம்...அசாத்திய பணி வாழ்த்துகள்..!!🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  24. நண்பர் கிரி மற்றும் திரு ஆதி இருவரின் படைப்புகளும் அட்டகாசம்.. வாழ்த்துகள்..!!

    💐💐💐💐💐💐

    ReplyDelete
  25. காரிகன் அட்டைப்படம்
    ,எழுத்துருக்கள் கலக்கல்..

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள், பாராட்டுகள் நன்றிகள். உதய்&கிரி சகோஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  27. சொர்க்கத்தில் சாத்தான்கள்..
    எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க வேண்டிய இளம் டெக்ஸின் கதை.
    சிவந்தமண்...
    சித்திர ஜாலம். அட்டகாசம்..அதகளம்.. இன்னும் வார்த்தைகள் இருந்தாலும் போடலாம்
    மேற்கிந்தியத் தீவையும் அதைச் சார்ந்த கடலையும் கண்முன்னே காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை.
    நாமே அந்த தீவில் இருப்பது போன்ற பிரமை.
    மண்ணில் உயிர் வாழ்வதற்க்கான போராட்டமே கதை.
    டேங்கோவின் அடுத்த கதைக்கு ஆவலுடன வெயிட்டிங். டேங்கோவிடம் ஏதோ ஒரு வசீகரம் எதிர்பார்க்க வைக்கிறது
    துள்ளுவதோ முதுமை ...
    பழைய காதலியை தேடி அலையும் பியரோ தாத்தாவின் கதை.
    கடைசி 4 பக்க பப்பெட் ஷோ அற்புதம். யதார்த்தமான, சுற்றுச்சூழலை பாழ்படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்குமான சவுக்கு.
    அந்தத் தீவின் கதைதான் நமது தற்போதைய உலகத்தின் நிலை என்று சொல்லியிருக்கும் விதம், நம் முகத்தில் அறைகிறது.
    இந்த மாதத்தின் டாப் ரேங்க் கதை இதுவே.
    அப்புறம் அந்த ''ப்ப்பூவாய்ங்..'' பாமர் மேன்.. எப்படி சார் இப்படியெல்லாம்?...
    அடுத்த கதை கண்டிப்பாக சீக்கிரம் வேண்டும்.

    ReplyDelete
  28. துள்ளுவதோ முதுமை :-

    ஒரு கதையை ரசிக்க எத்தனை அம்சங்கள் தேவையோ.. அத்தனை அம்சங்களையும் கொஞ்சமும் குறைவின்றி தன்னகத்தே கொண்டிருந்தது இந்த துள்ளுவதோ முதுமை.!

    கதையினூடே இழையோடும் நகைச்சுவை நம் இதழ்களை கடைசிவரை மலர்ந்தபடியே வைத்திருக்கிறது..!
    முதல் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஆங்காங்கே வரும் ரொட்டிக்கடை அம்மிணி... அடுத்தடுத்த முறைகளில் வாடிக்கையாளர்களின் பதிலில் கடுப்புகள் கூடினாலும் அதே தொணியில் கேள்விகளை வைக்கும் அந்த அம்மிணி செம்ம ஸ்மார்ட்..!

    வசனங்கள் சில இடங்களில் ராவாவாக இருந்தாலும் இக்கதைக்கு அவைதான் அழகூட்டுகின்றன.!

    அப்புறம்.. அன்ட்வான் தாத்தா போய்ச் சேரும் பார்வை இல்லை பாதை உண்டு குழுவினர் செய்யும் அட்ராசிடிஸ் பயங்கரம் (அந்த ரெண்டு நர்சுகள் மட்டும் சுந்தரம்)..! ஹேக்கராக விரும்பும் குழுவின் தலைவி.. டனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு வைரஸ் அனுப்பி வைத்திருப்பதாக சொல்வதாகட்டும்..( என்ன ஒரு சுதந்திரம் பாருங்கள்..).. பிடிக்காத பார்களிலும் ஹோட்டல்களிலும் டேரா போட்டு, அவற்றின் வாடிக்கையாளர்களை குறைத்து வருமானத்துக்கு வேட்டு வைப்பதாகட்டும்... இடதுசாரி கட்சி மீட்டிங்கில் ஷான் தாத்தாவை கேஸ் பாம் போடவைத்து எல்லோரையும் மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடவைப்பதாகட்டும்.. பார்வை இல்லை பாதை உண்டு கும்பலின் அட்டகாசம் ரொம்ப ஜாஸ்திப்பா..!

    லவ் சென்டிமென்ட் வேற இருக்குதுங்க கதையிலே.! அநாமத்தில் கிடைத்த பணத்தை தன் பியரோ தாத்தாவுக்கு அனுப்பிவைக்கும் பேத்தி.. சும்மா ஏதோ ஒரு பேர் இருக்கட்டுமேன்னு ஆன் போன்னிங்கிற பேர்ல அனுப்பி வைக்க..
    நம்ம தாத்தா சின்னவயசுல நிஜம்மாவே ஆன் போன்னிங்கிற ஒரு டக்கர் ஃபிகரை டாவு கட்டியிருந்திருக்காரு..! எப்பவோ செத்துப்போனதா நினைச்சிருந்த ஆன் போன்னி உயிரோட இருக்குன்னு நினைச்சி லவ் ஃபெயிலியர்ல தற்கொலையெல்லாம் பண்ணிக்கப்போறாரு.. அப்புறம்.. அந்தகாலத்திலே ஆன் விசயத்திலே அவருக்கு போட்டியா இருந்த பந்தா பிட்டர் தாத்தாவை புரட்டி எடுத்துட்டு ஜெயிலுக்கு வேற போறாரு..

    பார்வை இல்லை பாதை உண்டு குழுவில் இருந்து திரும்பி வரும் அன்ட்வான் தாத்தாவும் மில்சே தாத்தாவும் சேர்ந்தகொண்டு பியரோ தாத்தாவை வெளியே கொண்டுவரவேண்டி பந்தா பீட்டர் தாத்தாவைப் பார்த்துப் பேசப்போனா.. அங்கே ஆன் போன்னி ரூபத்தில் அதிர்ச்சி காத்திருக்கிறது..!

    எல்லாத்தையும் மீறி பியரோ தாத்தாவை வெளியே கொண்டுவந்து திருத்தி எப்படி வழிக்கு கொண்டு வராங்கன்னு புத்தகத்துல பாத்து தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    உடுக்கை இழந்தான் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

    ஆனால் கடைசியில் பொம்மலாட்டம் மூலமாக சொல்லப்படும் மில்சே தாத்தா எழுதிய கதை செம்ம டச்சிங்..!

    நண்பனிடம் அதை சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை என்பதாலும்.. அது தெரியாமல் இருந்தாலே அவன் சந்தோசமாக இருப்பான் என்பதாலும்.. அவன் சம்மந்தப்பட்ட ரகசியத்தை அவனிடமிருந்தே மறைக்கும் உன்னத நட்பு... சூப்பர் தாத்தாஸ்..!


    துள்ளுவதோ முதுமை - அத்தனையும் புதுமை

    ReplyDelete
    Replies
    1. என்னங்க கதைய முழுசா அப்பிடியே சொல்லிட்டேன்...!

      விமர்சனம் எப்போ போடுவீங்க...!!

      😄😄😄

      Delete
    2. சொல்லீட்டிங்க - என மாற்றி படிக்கவும்

      Delete
    3. அப்போ நீங்க இன்னும் கதையை படிக்கவே இல்லைன்ன்னு தெரியுது மிதுன்...😂😂😂

      Delete
  29. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  30. கிரி & ஆதி @ சூப்பர்

    ReplyDelete
  31. துள்ளுவதோ முதுமையும், பரோட்டா, நானும்( NAAN), உணவு அரசியலும்

    "ஏப்பா! ஒரு டீ போடு"..

    "பாலோடா? ப்ளாக் டீயா, லெமன் டீயா?"

    "பால் போட்டுத்தான்"

    "பசும்பாலா? எருமைப்பாலா? ஆவின் பாலா? பால் பவுடரா?"

    "ம்ம். பசும்பால்."

    "நாட்டுப் பசு மாட்டுப் பாலா? சிந்து பசு மாட்டு பாலா?"

    "ம்ம்..நாட்டுப் பசு மாட்டுப் பால்"

    " டீ டிகாக்‌ஷனா? பாக்கட் டஸ்ட் டீயா?"

    " டிகாக்‌ஷன்தான்"

    " டபரா செட்லயா? கிளாஸ்லியா?
    பேப்பர் கப்பிலியா? ப்ளாஸ்டிக் கப்லியா?"கப் அண்ட் சாஸரா?

    "பேப்பர் கப்புதான்"

    "ஆடை, நுரை சேத்தா? சேக்காமலியா?"

    "சேக்காம குடு"

    "லைட்டா? மீடியமா? ஸ்டிராங்கா?"

    " மீடியமா குடு"

    "சக்கரை போட்டா? போடாமலியா?"

    "சக்கரை போட்டுக் குடு"

    "வெள்ளை சக்கரையா? நாட்டுச் சக்கரையா? கருப்பட்டி சக்கரையா?"

    "நாட்டுச் சக்கரை போடு"

    "முழுச் சக்கரையா? அரைச் சக்கரையா?"

    "போடாங்...உன் கடையில டீ குடிக்க வந்த என்னை செருப்பால அடிச்சுக்கணும்"

    "உங்க செருப்பாலாயா? என் செருப்பாலயா?"

    "உன் செருப்பைக் குடுடா"

    "வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?"

    * * * * ------------- * * * *

    கடைசி நான்கைந்து வரிகளை நீக்கிவிட்டு மேலோட்டமாக இல்லாது ஆழப் பார்த்தால் மீதி எல்லாமே வெறும் வேடிக்கை பேச்சல்ல எனப்
    புரியும்...

    உதாரணமாக நாட்டுச் சர்க்கரைக்கும் வெள்ளைச் சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசம்..முன்னது பின்னதை விட உடலுக்கு நல்லது.

    கண்ணாடி டம்ளரை கழுவுவதில் சரியாக இருக்க வேண்டும். ப்ளாஸ்டிக் கப் பயங்கர கெடுதி.

    ReplyDelete
    Replies
    1. இதை இங்கு சொல்ல காரணம் துள்ளுவதோ முதுமையில் வரும் பேக்கரி கடையில் நிகழும் உரையாடல்கள் மற்றும் எடிட்டர் சார் உபயோகப்படுத்திய ஒரு மொழிபெயர்ப்பு வார்த்தை..

      பேக்கரி கடை உரையாடல்கள் சாதாரண பசிக்கான ரொட்டியில் நிகழும் உணவு அரசியலை பேசுவதாக, அதிலும் வர்த்தகப் பெருநிறுவனங்கள் வணிக ரீதியான பார்வையை முன் வைப்பதாகச்
      சொல்லப்படுகிறது.

      கதையின் ஒரு முக்கிய பிரச்சினையை தீர்த்து வைக்க ஸோஃபியா இந்த உரையாடல்களின் சாராம்சத்தை பயன்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

      எடிட்டர் உபயோகப்படுத்திய " மைதா"
      என்ற சொல் இந்த நெடிய பதிவுக்கு அச்சாரமிட்டது.

      இந்த உரையாடல்களில் இடம் பெறும் பெயர்களின் மூலம் அறிய ஆங்கிலப் பிரதியை படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

      படித்தபின் மனதில் தோன்றியது ஒரு சாமான்ய பிரெஞ்சு குடிமகன் மட்டுமே இதில் உள்ள நகைச்சுவையின் பூரணத்துவத்தை உணர இயலும் என்பதே..

      அதற்காகவெல்லாம் விட்டுவிட முடியுமா என்ன?

      கோதுமை தானியத்தின் கட்டமைப்பு என்ன ?

      அய்யோ! சாமி! பாட்டனி கிளாஸா? என நடுக்கம் ஏற்படலாம்.

      நமது உணவு வாழ்வியலும் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த பார்வை அவசியமாகிறது. ( அரிசிக்கும் கோதுமை தானியத்துக்கும் கட்டமைப்பில் பெரிய வித்தியாசமில்லை).

      1. வெளியில் உள்ள உமி ( husk)
      Chaff எனச் சொல்வர். நெல்லில் இது
      Hull.

      2.அடுத்த அடுக்கு தவிடு ( Bran) .மிகத் தடிமனான பகுதி. விட்டமின்கள் , தாதுச் சத்து(minreals) நார்ச் சத்து இவற்றைக் கொண்டது..மொத்த தானியத்தில் 14%.

      3. அடுத்த அடுக்கு வித்தக விழையம்
      ( Endosperm). அதிக ஸ்டார்ச் ,சுமாராக புரதம் உள்ளது.[ கார்போஹைட்ரேட்+ புரோட்டின்). இது 83%

      4. வித்து ( GERM) விட்டமின்கள் , தாதுச் சத்து(minreals) இவற்றைக் கொண்டது..மொத்த தானியத்தில் 14%.தாவர ரசாயனங்களும்( phytochemicals) உள்ளது.
      கரோட்டினாய்டுகள், ப்ளாவானாய்டு
      கள் போன்றவை.மனித உடல் நலம் பேணுபவை.

      Delete
    2. இதை அரைத்தால்

      1. முழுமையான கோதுமை மாவு

      ( whole wheat flour)

      2. சன்னமான கோதுமை மாவு
      ( refined wheat flour)

      கிடைக்கும்.

      முதல்வகையில் ப்ரான், எண்டோஸ்பெர்ம் , ஜெர்ம் ( முறையே தவிடு, வித்தக விழையம், வித்து)
      அனைத்தும் இருப்பதால் ஊட்டச் சத்து அதிகம்.

      இரண்டாவதில் எண்டோஸ்பர்ம் மட்டுமே இருப்பதால் கார்போஹைட்ரேட் அதிகமாய் புரதம் கொஞ்சமாய் மட்டுமே கிடைக்கும்.
      கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் நீரிழிவு நோய்க்கு வாய்ப்புகள் அதிகம்.

      இயற்கையில் பீட்டா கரோட்டின் காரணமாய் கோதுமை மாவு மஞ்சளாய் இருக்கும்.

      இதை வெள்ளை நிறத்துக்கு மாற்றுவார்கள். எப்படி?

      ப்ளீச்சிங் ஏஜன்ட்கள் மூலமாக .

      பென்ஸாயில் பெராக்ஸைடு மூலமாக. கார்பமேட்ஸ் மூலமாகவும்.
      மாவுக்கு மிருது தன்மை கொண்டுவர குளோரின் வாயுவை பயன்படுத்துவார்கள்.இவை இரண்டும் நச்சுப் பொருள்கள். இவை இரண்டும் மாவில் நடத்தும் வேதிவினைகள் காரணமாக அலாக்ஸான்( Alloxan) என்ற வேதிப்
      பொருள் உருவாகும்.இது ஆய்வகங்களில் பிராணிகளில் சர்க்கரை நோய் உருவாக்கி ஆய்வு செய்ய உபயோகிக்கப்படுகிறது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை அழிக்க வல்லது.

      Delete
    3. பல பயன் கோதுமை மாவு எனப்படும்
      - All purpose wheat flour- இதுவே மைதா என தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது.புற்று நோய், குடல் உபாதைகள் சர்க்கரை நோய் ஏற்படுத்த வல்ல இது இன்னும் மோசமாய் தென்னிந்தியாவில் கோதுமை விளைச்சலின்மை காரணமாய் மரவள்ளிக்கிழங்கு ( tapioca) மாவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் ஸ்டார்ச் அளவு மிக அதிகம் என்பதால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

      பரோட்டா ,நான் ( Naan) போன்றவை
      All purpose wheat flour எனப்படும் மைதாவிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.கேக்குகள், பேஸ்டா போன்றவையும் அப்படியே.

      ஆங்கில ப்ரதியில் 3-ம் பக்கம் முதல் பேனலில் கடைக்கார அம்மணி அன்ட்வானிடம் பேசும் வசனம்
      What kind would you like?
      " plain ? Whole wheat? or sourdough?

      இதில் sourdough என்பது கோதுமை மாவு உட்பட மாவு ( ரை, பார்லி கூட)எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ப்ரெட் உருவாக உதவும் ஈஸ்ட் கமர்சியல்( வணிக பயன்பாட்டு) ஈஸ்ட் ஆக இல்லாமல் தானாகவே உருவாகும் வைல்ட் ஈஸ்ட் ( wild east) .இது தமிழ்ப் பதிப்பில்இல்லை .தமிழில் எழுதுவது கடினமே. ஒட்டுமொத்த உரையாடல்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே நோக்கம்.

      பக்கம் 24 முதல் பேனல் ஆங்கில வசனம்

      Customer1 : hi! I can't decide between " origine" and Essentielle.

      கடைக்காரப் பெண்மணி: Essentielle is with stone mill flour. That makes all the difference.

      Custmer2: what about fleurmiliune du pape?( இது தமிழில் இடம் பெறவில்லை)

      Stone mill flour - என்பதற்கு மைதா என தமிழில் இடம் பெற்றுள்ளது.

      Delete
    4. வட இந்திய Farming engineering வீடியோக்கள் எல்லாவற்றிலும் மைதா என்பது பென்ஸாயில் பெராக்ஸைடு, குளோரின் மூலம் ப்ளீச் செய்யப்பட்ட ரீபைன்ட் செய்யப்பட்ட கோதுமை மாவு என்றே உள்ளது.

      கல் அரவை இயந்திரம் மூலம் அரைக்கப்படும் stone mill flour ஒரு முழுமையான கோதுமை மாவாகும்.
      ( whole wheat flour). இதன் texture - ஐ கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்புமுண்டு .

      இதனை மைதா எனச் சொல்வதால் என்ன நஷ்டம்?

      ப்ரான்ஸ் ஒரு ஐரோப்பிய யூனியன் நாடு .பென்ஸாயில் பெராக்ஸைடு, குளோரின் போன்ற ப்ளீச்சிங் ஏஜன்ட்கள் ஐரோப்பிய யூனியன் முழுமையும் தடை செய்யப்பட்டவை.

      ( சீனா, இங்கிலாந்தும் கூட)

      ஆனால் அமெரிக்க FDA ( உணவு மற்றும் மருந்து கழகம்) தடை செய்யவில்லை.

      அமெரிக்கா ஒப்புக் கொண்ட பல விஷயங்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொள்வதில்லை.

      கோதுமை ப்ளீச்சிங் ஏஜன்ட்கள்

      மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகள்

      ஹார்மோன் தூண்டுதலுக்குள்ளாகும் கறவை மாடுகள்

      சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மக்கள்.

      இதனாலேயே ப்ரான்ஸின் கடையொன்றில் மைதா என்பதை உபயோகப்படுத்த முடியாது.

      Delete
    5. மைதா குடல் புற்றுநோய், இதர குடல் உபாதைகள் ஏற்படுத்தும். குடலில் ஒட்டும் தன்மையுடையது.( போஸ்டர் ஒட்ட பயன்படுத்துவது இதனாலேயே).

      பின் ஏன் மைதா அதிகம் பயன்படுத்தப்படுகிறது.?

      உணவுப் பொருள்களை தயாரிக்க வசதியானது. பின் சுவை.

      அமெரிக்காவில் ஏன் மைதா?

      உணவு கார்ப்பரேட்டுகளின் லாபி எனச் சொல்லலாம்.

      பர்கர், டஃப்நட் , பன்கள் ,பேஸ்ட்ரீஸ் என எல்லாம் ஆல் பர்ப்பஸ் மாவே.

      (பரோட்டா, நான் பிரியர்கள் கவனமாக இருக்கவும்)

      பக்கம் 24- ல் தொடரும் ஆங்கில உரையாடல்

      Customer 1 : I will take one of those.

      கடைப் பெண்மணி: sarmentine? White? Or wholegrain?

      Sarmentine என்பது spelt ரக கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் மாவு. Sarment எனப்படும் படர்கொடி கவட்டை வடிவில் பிரிந்து செல்லும் .அதன் வடிவில் இருப்பதால் sarmentine.

      White flour: வெள்ளை கோதுமை மாவு.
      ப்ரான்ஸில்தான் ப்ளீச்சிங் தடை செய்யப்பட்டுள்ளதே? பின் எப்படி வெள்ளை என்றால் கோதுமை மாவை அதற்கான தகுந்த வெப்பநிலையில் 4-7 நாட்கள் வைத்திருந்தால் இயற்கையான வளிமண்டல பிராணவாயு மூலம் ஆக்ஸினனேற்றம் பெற்று ( natural oxidation of beta carotenes) மஞ்சள் நிறம் நீங்கி வெண்மை அடையும்.
      இந்தியர்கள் உட்பட ஆசியர்கள் மைக்ரோவேவ் ஓவன் மூலம் ப்ரான்ஸில் வெள்ளை நிறத்தை குறுக்கு வழியில் அடைவதாகவும் சொல்வார்கள்.

      Delete
    6. Wholegrain முன்பே குறிப்பிட்டுள்ளது போல் ரீபைன் பண்ணாதது .இந்த ரொட்டி ஊட்டச் சத்துள்ளது .ஆனால் மிருதுவாக இருக்காது.

      பக்கம் 25 - ல் வரும் டு பேப் எனப்படும் FLEURMILIUNE DU PAPE பற்றி அறியமுடியவில்லை.

      அதே பக்கம் 25- ல் வரும் ஒரிஜினல் ( origine ) மேலே குறிப்பிட்ட நாட்டுப் பசு மாட்டின் பாலில் தயாரான டீ வேண்டும் எனக் கேட்பது போல் ஒரு ஜோக் எனத் தோன்றுகிறது. அதன் இயல்பான நகைச்சுவையை பிரெஞ்சு குடிமகனால் மட்டுமே முடியும் போல.

      பச்சரிசி , புழுங்கலரிசி, இட்லி அரிசி,சாப்பாட்டு அரிசி, பாலிஷ்ட், அன்பாலிஷ்ட் அரிசி என நம்மிலும் உள்ள வேறுபாடுகளை அறிய முயற்சி செய்ய இது உதவியது.

      ஒரே பச்சரிதான்.

      முறுக்கு பிழிய உதவும் ப.மாவின் பக்குவம் வேறு. இடியாப்பம் பிழிய உதவும் ப. மாவின் பக்குவம் வேறு என்பதை நம்மால் மட்டுமே உணர இயலும்.

      Wholegrain கோதுமை மாவை நமது பாரம்பர்ய கைக்குற்றல் அரிசியோடு
      ஒப்பிடலாம்.

      விசித்திரம் என்னவெனில் அரிசியோ, கோதுமையோ ப்ரான் எனப்படும் தவிடு நீக்கி உண்ணும் நமக்கு அதே ப்ரானில் இருந்து தயாரிப்படும் நார்ச்சத்து டயட்டரி ஃபைபர் என்ற பெயரில் குடல் சுத்தம் செய்ய குடல் அசைவுகளை சரிப்படுத்த மலமிளக்கியாக மருந்தென தரப்படுவதுதான் .

      து.முதுமை பிரெஞ்சு உணவுக் கலாச்சாரத்தில் உள்ள அரசியல் பற்றி நையாண்டி செய்வதை மேலோட்டமாகவேனும் புரிந்து கொள்ள முயல்வதே பதிவின் சாராம்சம்.

      Delete
    7. இப்போ கோதுமை சாப்பிடுறது தப்புன்னு சொல்றிங்களா.. இல்லே.. இந்தக் கதையை படிச்சது தப்புன்னு சொல்றிங்களா..? :-)

      சோக்ஸ் அப்பார்ட்டு...

      உண்மையிலேயே நிறைய பீஸ் குடுத்து தெரிஞ்சிக்கவேண்டிய விசயங்களை சும்மாவே சொல்லிக் குடுத்துட்டிங்க செனா...! வாழ்க..! 🙏

      Delete
    8. நிறைய புதிய விஷயங்கள்,,, ஏற்கனவே alloxan குறித்து படித்து இருக்கிறேன். அதன் பாதகத்தை குறித்து ஆய்வு செய்த அமெரிக்க அறிவியலாளர் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டார் என்றும் படித்திருக்கிறேன். தாத்தாஸ் பேசும் அரசியல் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை ஏனெனில் இந்த கதை நடக்கும் காலம் ஐரோப்பா.. உங்களுடையது போன்ற அலசல்கள் மேலும் நமக்கு வரலாறை புரிய வைப்பதோடு உலக அரசியலையும் உள்வாங்க உதவும்

      Delete
    9. L.S.@ புரோட்டா வாரம் ஒருமுறை போட்டு தள்ளிடுவேன்..மீ புரோட்டா பிரியர்.... இனி மாதம் ஒருமுறை என மாற்றிக்கொள்கிறேன்.🙏

      முழுகோதுமை மாவில் பரோட்டா செய்யும் கடை தேடி பார்க்கிறேன்.

      Delete
    10. ///சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மக்கள்.

      இதனாலேயே ப்ரான்ஸின் கடையொன்றில் மைதா என்பதை உபயோகப்படுத்த முடியாது.////

      --துள்ளுவதோ முதுமை..கதையின் முழு கட்டமைப்பு இப்போது லேசாக புரிபடத்துவங்குது!

      Delete
    11. ப்பா!! ரொம்ப நாளா மைதா மாவைப் பத்தி மனசுக்குள்ளே இருந்த டவுட்டுகளை ஒட்டுமொத்தமா தீர்த்துட்டீங்க செனா அனா!

      உஷ்ஷாப்பாடா!!நல்லவேளையா நான் பரோட்டா பிரியனல்ல!!

      பை த வே, நீங்கள்லாம் நியாயப்படி ஒரு ரிப்போர்ட்டரா இருந்திருக்கணும்..

      Delete
    12. Sir. Sharing in my fb wall with ur permission regarding alloxan

      Delete
    13. //Sir. Sharing in my fb wall with ur permission regarding alloxan//

      Sir! Please don't. I shall explain the reason later.

      Delete
    14. சூப்பர் செனா....அப்படியே இத யூட்யூப்ல விளம்பரமா கொடுக்க தாத்தா கதை விமர்சனமா

      Delete
  32. முந்தய பதிவி கேள்விகளின் பதில்... இதான் உங்க டக்கா என்று எனக்கு பல மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.

    1. நான் முதலில் எதிர்பார்பது புது நாயகர்கள் & குன்டு கதம்ப புக்ஸ் இருக்கா என்றுதான்.

    2. புதியவர்களின் அறிவிப்புகள் என்னை குஜாலாக்குகிறது..., தாத்தாஸ், அண்டர்டேக்கர், ஸ்டேர்ன், மேகி காரிசன் அந்த மீட்டர்களை அதிக படுத்தியுள்ளனர்

    3. மனதில் இரத்தம் வடிய வைக்கும் கேள்விகல்...கார்ட்டூனின் இந்த நிலமை
    a) புளூகோட் பட்டாளம்
    b) variety முக்கியம் , ஆண்டு மலரில் இரண்டு லக்கி இருப்பார், ஆகையால் புளூகோட்

    4. சொன்னா அடிக்க வருவாங்த :) அத்தினில ஒரு இடம் கொடுத்தா யாரையும் கழட்டி விடவேண்டாமே!?

    5. 10% அதிகரிப்பு சமாளிக்களாம் என இதையம் சொன்னாலும் , சைஸ் குறைப்பு என்கிறது மனது.

    6. மார்ட்டின் எனக்கு பிடிக்கும்

    7. தோர்கல்க்கு என ரசிகர்கள் பலர் உள்ளனர் & போட்டி , விளக்கம் என்று விளம்பரமும் நடக்கிறது. He deserves more.

    ReplyDelete
  33. தாத்தாக்களுக்கு அடுத்தாண்டு இரண்டு ஸ்லாட் ஒதுக்க முடியுமா ஆசிரியர் சார் ?

    ReplyDelete
  34. @ கிரிதரசுதர்சன்

    பின்றீங்க ப்ரோ! 'supreme 60'க்கு அந்த நியான் லைட் எஃபெக்டே கண்களை அள்ளுது!

    ரசணையுள்ள, கலர்ஃபுல் படைப்பு!!

    ReplyDelete
    Replies
    1. 60களில் பிரபலமான கலர் காம்பினேஷன் எது என்று தேடி தயார் செய்தது. :))

      Delete
  35. // ஸ்டாலில் எவையெல்லாம் காலியோ, அவற்றினில் மேற்கொண்டு புக்ஸ் அனுப்பிட சனிக்கிழமை மாலையில் நம்மாட்கள் கிட்டங்கியிலிருந்து அள்ளி வந்த வேளையில் நான் அங்கு தானிருந்தேன் !! அந்த டைட்டில்களை கொஞ்ச நேரம்  மௌனமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் !! மாயாவி....லாரன்ஸ்-டேவிட்....லக்கி லூக்....டெக்ஸ் வில்லர்....கென்யா...பீன்ஸ்கொடியில் ஜாக்....Alpha ....கலவையாய் கொஞ்சம் கார்ட்டூன்ஸ் !! No அர்ஸ் மேகினா....No கி.நா......No ஷெல்டன்....No லேடி S .....No மர்ம மனிதன் மார்ட்டின்....No அழுத்தமான கதைகள் !! இப்டிக்கா திரும்பினால் கூரியருக்கென போட்டு அடுக்கியிருந்த டப்பிக்களில் கணிசமாய் வேதாளர் boxes ..ரிப் கிர்பி boxes ...மாண்ட்ரேக் boxes ...! கையில் மிஞ்சியிருந்த டப்பிக்களை வேறேதோ புக்ஸ் அனுப்பிட நம்மாட்கள் பயன்படுத்துகிறார்கள் போலும் என்றெண்ணி - "இந்த டப்பாக்களில் வேற புக்ஸ் அனுப்பாதீங்க ; அதுபாட்டுக்கு உள்ளே இருக்கட்டும்" என்றேன் !! "ஊஹூம்...இவற்றினுள் உள்ள அனைத்துமே SMASHING 70s புக்ஸ் தான் சார் ; இன்னமும் Smashing-க்கு தினமும் புதுசா சந்தா கட்டுறாங்க சார் ; அந்தந்த box லேயே வைச்சு அனுப்புறோம் !!" என்று நம்மவர்கள் பதில் சொன்ன போது எனக்கு மறுக்கா மண்டை blank ஆகிப் போனது !! 
    "மூக்கை முன்னூறு தபா சுத்துற கதைகளை எதுக்குடா தேடித்திரியுறே ? எதை பிரியமா வாங்குறாங்களோ - அதைச் சிவனேன்னு போட்டுப்புட்டு போக வேண்டியது தானே ? ரசனையை உசத்துறேன் ; ரசத்துக்கு பொடி போடுறேன்னு எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை ?" என்று என்முன்னே குந்தியிருந்த மாண்ட்ரேக் சார் கேட்பது போலவே இருந்தது !!  இந்தப் புள்ளிகளை நிறையவாட்டி இந்தக் கடைசிப் பத்தாண்டுகளில் பார்த்தாச்சு தான் & இதே கேள்விகளை ஏகப்பட்டவாட்டி என்னையே கேட்டுக் கொண்டும் விட்டாச்சு தான் ! ஆனால் அவையெல்லாமே இந்த SMASHING '70ஸ்க்கு முன்பான பொழுதுகள் !! இம்முறை இந்த க்ளாஸிக் நாயகர்கள் + high quality books என்ற கூட்டணியிலான சந்தாப் பிரிவு மாற்றி எழுதியிருப்பது எக்கச்சக்கச் சந்தா இலக்கணங்களை :
    **4 இதழ்களையும் சேர்த்து வாங்கினால் மட்டுமே சந்தா என்றோம் - வேதாளர் நீங்கலாய் மீதப் பேர் கிட்டங்கிக்குக் குடி வந்திடப்படாதே என்ற பயத்தினில் !! 
    **வேதாளருக்குப் பணம் செலுத்தும் போதே - ரிப் கிர்பிக்கும் அட்வான்ஸ் அவசியமென்றோம் முகவர்களிடம் - அதே பய முகாந்திரத்தினில் ! 
    ஆனால்...ஆனால்...நீங்கள் தெறிக்க விட்டிருக்கும் வாணவேடிக்கைகளில் எங்கள் மூஞ்சிகளில் முழுக்கக் கரி ! வேதாளருக்குச் சவாலிட்டார் ரிப் கிர்பி ! ரிப்புக்கு tough தருகிறார் மாண்ட்ரேக் !! "காரிகன் எப்போ ??" என்று நம்மவர்களை இப்போதெல்லாம் அதட்டுகிறார்கள் முகவர்கள் !! 
    இன்னொரு பக்கமோ Soda ; சர்பத் என்ற இதழ்களை மாங்கு மாங்கென்று பணியாற்றித் தயாரித்து அதே முகவர்களிடம் கொண்டு போனால்,,"சரி...சரி...5 புக் அனுப்பி வையுங்க...அடுத்த மாசமா காசு தர்றேன் !" என்கிறார்கள் ! சத்தியமாய்த் தெரிலீங்கோ இந்த நொடியில் எது சரியென்று !! 
    And yes - இந்த செம ஹிட் பட்டியலில் இம்மாதத்து சுஸ்கி & விஸ்கியையுமே சேர்த்துக்கோங்கோ ப்ளீஸ் ! தீபாவளியை தரிசிக்கும் வரைக்கும் இந்த dutch ஜோடி நம் கிட்டங்கிகளில் இருந்தால் நான் ரொம்ப ரொம்ப வியப்பு கொள்வேன் ! And அதே கதை தான் - வேதாளர் + ரிப் + மாண்ட்ரேக் ஆல்பங்களுக்குமே !! நடப்பாண்டின் இறுதிக்கு முன்பாய் இவர்கள் மூவருமே சிவகாசிக்கு விடைதந்திருப்பார்கள் என்பது நிச்சயம் !! இவர்கள் அனைவருக்கும் மத்தியிலான பொதுவான அம்சங்கள்  என்னவென்று ஆராய பெரியதொரு ராக்கெட் விஞ்ஞானமெல்லாம் அவசியமாகிடாது !!

    *அனைவருமே க்ளாஸிக் நாயக / நாயகியர் !

    *அனைவருமே பால்யங்களின் நினைவூட்டிகள் !

    *நேர்கோடே எங்கள் மூச்சு !" என்போர் இவர்கள் சகலரும் !

    *அட்டகாசத் தயாரிப்புத் தரங்கள் !

    *சேகரிக்க அழகான இதழ்கள் !

    *ஹார்ட்கவர்ஸ் !

    இதோ - மேஜை மீது குவிந்து கிடக்கும் தொடரும் மாதங்களது tough stories பக்கமாய்ப் பார்வை தன்னிச்சையாய் ஓடுகின்றது !! 2023-ன் இறுதி செய்யப்பட்ட அட்டவணை பக்கமாகவும் ஒரு துரிதப் பார்வை நீள்கிறது !  பார்த்த கையோடு கண்ணாடி முன்னே போய் நின்றால், ரின்டின் கேனுக்குச் சித்தப்பு போலொரு பேமானி மண்டையன் தான் அங்கே தென்படுகிறான் !! அவ்ரெல் டால்டன் கூட அந்த பேமானி மண்டையனை விட விவேகமானவனாக தென்படுகிறான் இந்த நொடியினில் !  //

    இந்த வரிகளின் பாதிப்பு 2023 ஆம் ஆண்டு அட்டவணையில் பிரதிபலிக்குமா ரமேஷ்?? காத்திருப்போம் அட்டவணை பதிவு வரும்வரை சுரேஷ்!

    பிரதிபலித்தால் சரி. விற்பனையாகும் தளங்களில் விளையாடும் கதைகள் வருவதே காமிக்ஸ் எதிர்காலத்திற்கு நல்லது! அதையும் மீறி ஆசிரியருக்கு கட்டைவிரல் டேஸ்ட் தான் பிடிச்சுருக்குன்னா ஒண்ணும் பண்ண முடியாது!

    ReplyDelete
  36. Sir. i love mack and jack very much. But since u have given either bluecoats or mack&Jack, i selected bluecoats since its a classic cult like Lucky luke. Please continue both

    ReplyDelete
  37. ****துள்ளுவதோ முதுமை****

    எவ்வளவு சரக்கு இத்துனோன்டு புக்குகுள்ள ஏவ்வளோ இருக்கு. காமடி, ரோமான்ஸ் , மெஸேஜு, டிவிஸ்டு.
    நிறைய எழுதனும்...
    இதற்க்கு ஏன் சார் பயப்பட்டீங்க, இதை சாய்ஸில் விட்டவர்கள் missing something good

    ReplyDelete

  38. """""கம்பேக் 500 ஸ்பெசல்"""""

    சந்தா 2023 லைம்லைட்ல இருக்கும் போதே அடுத்த ஆண்டு கிராஸ் ஆகும் இரு மைல்கல்கள் பற்றிய நினைவூட்டலை பண்ணிவிடுகிறோம் சார்....

    தங்களின் கடுமையான பணி நெருக்கடி சூழலில் இவற்றையும் ஒரு கன்சிடர் பண்ண வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்...

    மைல்கல்1....

    இம்மாதம் லயன் 423ம் முத்து 468ம் வெளியாகியுள்ளது.... லயன்450& முத்து 500- ஸ்பெசல்கள் 2024ல தான் வரும்னு நினைக்கிறேன்...

    கம்பேக் ஆனதில் இருந்து லயன், முத்து, கி.நா., சன்ஷைன், மேக்ஸி, ஜம்போ, லயன் லைப்ரரி...
    என இதழ்கள் வெளியாகி வருகிறது. ஜனவரி2012 கம்பேக்கில் இருந்து,
    இம்மாத இதழ்களோடு 462 ல் வந்து நிற்கிறோம்...

    இதுவரை வெளியாகியுள்ள இதழ்களின் பிரேக்அப்...,

    முத்து----156

    லயன்----211

    காமிக்ஸ் க்ளாசிக்ஸ்---2

    சன்சைன்- 26

    சன்ஷைன் கி.நா.--- 5

    லயன் கி.நா.---21

    ஜம்போ--- 24

    மேக்ஸி--- 8

    முத்துமினி- 6

    தி லயன் லைப்ரரி-5

    மொத்தம்--464.

    *இன்னும் இந்த ஆண்டு காத்துள்ள இதழ்கள்: 8

    2022முடியும் போது மொத்தம்: 472.

    """"""2023ல வெளிவரும் 28வது இதழ் கம்பேக்கிற்கு பிறகான 500வது இதழ்....."""""

    பதினோரு ஆண்டுகளில் 500இதழ்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வட்டத்திற்கு இது இமாலய சாதனை.... வாழ்த்துகள் சார்💐💐💐💐💐💐

    ப்ரைன் லாராவுக்குப் பிறகு ஐச்சதம் (501*) அடிக்கப்போவது சிவகாசி "லாரா" தான்....!!!

    இரட்டை சதம், முச்சதம்,...வரிசையில் ஐச்சதம் சரிதானுங்களா Lusettesofia???

    (வெளியீடு எண் இல்லாத டெக்ஸ்ஃப்ரீ, எலியப்பா கைப்புள்ளை ஜாக்ஸ் & இலவச இதழ்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படல....!!!!)

    ஏற்கனவே தல 75க்கு ஒரு மெகா செலபரேசன் இருப்பதால் இந்த "கம்பேக்500 ஸ்பெசல்""-- ஒரு சின்ன குண்டுபுக்காக மட்டுமே ப்ளான் பண்ண வேண்டுகிறோம். விலை உயர்வு சூழலில் குண்டுபுக் ஒதுக்க இயலாவிட்டாலும் 500வது இதழ் என பிரிண்டிங்ல அந்த குறிப்பிட்ட இதழில் இருந்தா கூட அது கொணரும் உணர்வு அலாதியானது..

    (தங்களது துவக்க கால 2012ஜனவரி பதிவுகளை ஆராய்ந்து முத்து 313ல் இருந்தும், லயன் 210ல இருந்தும் கணக்கிட்டு உள்ளோம்...

    2012 கம்பேக்கின் ஆரம்ப இதழ்கள்...

    #காமிக்ஸ் க்ளாசிக் 26- கொலைகார கலைஞன்-பார்க்க ஜன12, 2012தேதி பதிவு

    #முத்து காமிக்ஸ் 313- விண்ணில் ஒரு குள்ளநரி-பார்க்க ஜன21,2012 தேதி பதிவு

    #லயன் கம்பேக் ஸ்பெசல் முதல் இதழாக மலர்ந்தது இது நாம் அனைவரும் அறிந்தது.

    சன்ஷைன் கி.நா. 5ம் 2014ல வெளியாகிவை. இப்போது லயன் கி.நா.தொடர்ந்து வருகிறது.)

    ReplyDelete
    Replies
    1. பாக்கெட் சைசு கோடை மலர் சைசுல ஓர் புதிய கதை கொண்ட குண்டு புக்கு...பழமைக்கு பழமயா....புதுமைக்கு புதுமயா

      Delete
    2. Adengappa. U are a walking encyclopedia of lion group sir

      Delete
    3. க்ளா @ எக்ஸலன்ட் ஐடியா...! கிடைச்சா உனக்கு அது கிஃப்ட்டுய்யா!

      Delete
  39. Sir,

    Agreed about Mac & Jack vs Bluecoats. However Martin Yes vs Martin No is not a distinctive race yet. We never know how it would go if we have 50 more votes. Can we issue a "thundu cheetu" on Martin with upcoming Diwali releases and then decide? Ask non-web fans to respond as well please - before any conclusions?

    ReplyDelete
  40. நண்பர் ஆதியின் எழுத்துரு,கிரி அவர்களின் டிசைனிங் இரண்டும் அசத்தல்...

    ReplyDelete
  41. // தெய்வமே....நீ நல்ல இருப்பே...அவருக்கொரு தற்காலிக ஒய்வு கொடு !" என்ற குரல்களே உரத்துக் கேட்டுள்ளன !! //
    போச்சா,போச்சா, அந்தஒரு வடையும் போச்சா...!!!

    ReplyDelete
  42. துள்ளுவதோ முதுமை :
    பொம்மலாட்டத்தில் சொல்லப்படும் விழிப்புணர்வு சார்ந்த செய்திக்காகவே இந்தக் கதை எனக்கு பிடிச்சிருக்கு...
    காமிக்ஸ் கதைகளில் இதுபோன்ற செய்திகளை கொஞ்சம் ஒரு மிடறு தூக்கலாக சொன்னால்கூட பிரச்சார தொனி வந்து விடும்,அப்படியில்லாமல் ராவான ஒரு கதையில் உறுத்தல் இல்லாமல் செய்தி சொன்ன விதம் சிறப்பு...
    தாத்தாஸ் ஆல் பாஸ்.அவங்க இடத்தை கெட்டியா பிடிச்சிக்கிட்டாங்க,கதாபாத்திரங்கள் இளமையானவர்களோ,
    முதுமையானவர்களோ கதை சொல்லப்படும் பாணி,திரைக்கதை நகர்த்தும் விதம் முக்கியம் என்பதை தாத்தாஸ் களங்கள் நிரூபிக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. // பொம்மலாட்டத்தில் சொல்லப்படும் விழிப்புணர்வு சார்ந்த செய்திக்காகவே இந்தக் கதை எனக்கு பிடிச்சிருக்கு // மிகச் சரி

      Delete
  43. சொர்க்கத்தில் சாத்தான்கள் :
    சரியான கலவையில் Commercial Elements சேர்க்கப்பட்ட கதை,கொஞ்சம் கூட போரடிக்காமல் போகுது,யங் டெக்ஸ் 2 கதை எல்லாம் படிச்சா பத்தலை இன்னும் கொஞ்சம்னுதான் சொல்லத் தோணுது,டெக்ஸ் இளவயதில் இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் சிறுதடுமாற்றம்,கொஞ்சம் கவனப்பிசகான செயல்கள் போன்றவை சரியான வகையில் கதாசிரியர்களால் கையாளப்பட்டுள்ளது...
    அனுபவங்கள் பின்னாளில் கூர்மதி கொண்ட செயல்களுக்கு தலையை நகர்த்தி சென்றிருக்கும் என்பதில் பிசகில்லை,அந்த உத்தியும் பின்னாளில் கதாசிரியர்களால் கையாளப்பட்டிருக்கும்...!!!

    ReplyDelete
  44. @all
    காரிகன் டைட்டில் பேனர் டிசைன் வாழ்த்திய யாவருக்கும் பணிவான நன்றிகள். ஆசிரியரின் ஆசியுடன் உங்களின் ஆசிகள் எனக்கு கூடுதல் தெம்பு... நண்பர் கிரியின் படைப்பும் சூப்பர். Will do my best before sending the final draft.

    ReplyDelete
  45. வாசகர்: சார், இன்றைக்குப் பதிவுக் கிழமை!

    எடிட்டர்: வெத்திலைப்பொட்டி மாதிரியொரு டப்பியைக் கையில் ஏந்தியபடிக்கே, நெற்றி முழுக்கப் பட்டையைப் போட்டுக்கினு. குடுமியோட ஒரு பெருசு வரும்....!! "வைத்தியர் ஐயா...! அம்மிணி பொசுக்குன்னு மயக்கம் போட்டுப்புடிச்சி..! இன்னான்னு சித்தே பாத்துச் சொல்லுங்க !" என்று நைனாக்கார கேரக்டர் புலம்பும் !.....அம்மணியின் நாடியை புடிச்சுக்கினு வைத்தியர்வாளும் ஒண்ணரை நிமிஷம் மூஞ்சை சீரியஸா வைச்சுக்கினு இருக்கும்....! அப்புறமா - "எல்லாம் நல்ல விஷயம் தான் ; நீங்க தாத்தாவாகப் போறீங்கன்னு !" நைனாகிட்டே சிரிச்சிக்கினே சொல்லுவாரு ! "அடப்பாவி மவளே !!" என்று நைனா கொந்தளிக்கும் போது தான் தெரியும் - வைத்தியர் சொல்லிப்போட்டது அந்தக் குடும்பத்துக்கு சந்தோஷம் தரவல்ல சேதியல்ல என்பது ! அந்த வைத்தி இடத்தில நம்மளை வைச்சுக்கோங்க....(குடுமி போட தோதுப்படாதென்பதையெல்லாம் பெருசாக்கிக்காதீங்க !) உங்க ரசனைகளெனும் நாடிய புடிச்சி - "ஆகாகா...நல்ல சேதி தான்....கி.நா.குவியலா வர போகுது!"ன்னு சொல்லி விட்டு ஜாலியாய் நடையைக் கட்டியிருப்பேன் - உங்கள் முகங்கள் பேஸ்தடித்து அஷ்டகோணலாகியிருப்பது தெரியாமலே ! 

    வாசகர்: என்னது?

    எடிட்டர்: கண்ணு தெரியாத கருப்பான கழிவறையை விட்டு, விறகு அடுப்பிற்குள் குடி போனால், நெருப்பால் அபிஷேகம் செய்யப் படும்!

    வாசகர்: புரியாத மாதிரி பேசறது தான் இப்போ பேஷன் போல! ஆளை விடுங்க சாமி!

    பி.கு.:
    ஒன்றுமில்லை, இன்றைக்கு கைப்புள்ள ஜாக் படித்துக் கொண்டிருந்தேன், மேலே உள்ள வசனங்களில் சில, அதிலிருந்து (இ)லவட்டப்பட்டவை தான்! புத்தகத்தின் அட்டையில் கூட, அந்தத் தலைதெறிக்க ஓடும் காட்சி என்பது தான் ஹைலைட்டே! :) பகடிகள் ஒருபுறமிருக்கட்டும்! ஒரு பக்கக் கதைகளின் தொகுப்புகளாக இன்றி,  30 முதல் 40 பக்க அளவிலான எளிய கதைகளை, மாதா மாதம் வெளியிடும் வாய்ப்புள்ளதா சார்? (அந்த 60ஸ், 70ஸ் தொகுப்புகளில் உள்ள கதைகளை தனித்தனி இதழ்களாக வெளியிட்டாலே இந்த வகையறாவில் வந்துவிடும்!

    ReplyDelete
    Replies
    1. // கண்ணு தெரியாத கருப்பான கழிவறையை விட்டு, விறகு அடுப்பிற்குள் குடி போனால், நெருப்பால் அபிஷேகம் செய்யப் படும்! //

      எனக்கு ஒண்ணுமே புரியவில்லை! ஏதாவது dictionary உண்டா இதன் அர்த்தம் தெரிந்து கொள்ள :-)

      Delete
  46. நண்பர் கிரி மற்றும் திரு உதய் இருவரின் உழைப்புக்கும், படைப்புக்கும் மனமார்ந்த .. பாரட்டுக்கள்..!!

    ReplyDelete
  47. மார்டின் குறைந்த வித்தியாசத்தில் தான் வெளியே உள்ளார். எனவே அவருக்கான இடத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் ஐயா...

    போன வருடமே அவரும், டைலான் டாக்கும் சேர்ந்து வர வேண்டிய சாகசம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது இன்னும் மனதில் நிழலாடுகிறது...

    ReplyDelete
  48. நெப்போலியன் பொக்கிசம், சார்லியின் சிறைமீட்டியசித்திரக்கதை இரண்டும் அவசியம் வேண்டும். சார். மனசு வைங்கப்ளீஸ். . இதில் நெப்போலியன் பொக்கிசம்நான்படித்ததில்லை. சிறைமீட்டியசித்திரக்கதைநன்கு ஞாபகத்தில்உள்ளது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  49. டியர் எடி,

    மொபைலில் தமிழில் தட்டச்சு செய்வது ஒரு பிரம்மபிரயத்தன காரியமாக மாறி வருவதால்.... பொறுமையாக நமது பதிவுகளில் கருத்துகளை மடிக்கணினி மூலம் தட்டச்சு செய்யலாம் என்று எண்ணி ஒவ்வொரு பதிவுகளிலும் கருத்து போடுவதையே மிஸ் பண்ணிவிடுகிறேன்.

    உதாரணம், முந்தைய கருத்து கணிப்பு பதிவு. முடிவுகள் என் மனம் ஒத்திருப்பதால், முடிந்து போன தேர்தலில் ஓட்டு போவதில்லை.

    ஆனால் இனி இன்ஸ்டன்ட் கருத்துகள் மட்டும் தொடர்ந்து போட்டு விடுகிறேன். 🥰👍

    ReplyDelete
  50. காரிகன் அட்டைப் படத்தில் secret agent காரிகன் என மேலே உள்ள பேனரை உதய் நன்றாக செய்து உள்ளார். முதல் லோகோ பேனரை விட்டு கொஞ்சம் வெளியே சென்று உள்ளது. அதனை கொஞ்சம் சரி செய்தால் நன்றாக இருக்கும். பாராட்டுக்கள் உதய்.

    ReplyDelete
  51. சுப்ரீம் 60 ஒரு பக்க விளம்பரம் வழக்கம் போல அட்டகாசமான தயாரிப்பு. அதிலும் எழுத்துக்களுக்கு உபயோக படுத்தி உள்ள வண்ணம் செம. பாராட்டுக்கள் கிரி.

    ReplyDelete
  52. இந்த பதிவு மிகவும் தயக்கத்துடன் எழுதப்படுகிறது.

    எனது பதிவு எனது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் பாத்திரமாக விளங்கும் எடிட்டர் சார் அவர்களை காயப்படுத்தி விடுமோ என்ற அச்சமும் நடுக்கமும் ஏற்படுகிறது.

    ஏனெனில் இப்பதிவு துள்ளுவதோ முதுமையில் உள்ள மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சில சித்தாந்த பிழைகளை சுட்டிக் காட்ட முயல்கிறது.

    ஒரு தீவிர வாசகனாய் அந்த உரிமையை பெற்று இருந்தபோதும் பொதுவில் இப்பார்வையை வைப்பது சரிதானா? என்ற கேள்வி எழுந்தது. சக வாசகர்களும் இவற்றை அறிய வேண்டியது அவசியம் என உணர்வு ஏற்பட்டதன் விளைவே இப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு மிகவும் தயக்கத்துடன் எழுதப்படுகிறது.

      எனது பதிவு எனது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் பாத்திரமாக விளங்கும் எடிட்டர் சார் அவர்களை காயப்படுத்தி விடுமோ என்ற அச்சமும் நடுக்கமும் ஏற்படுகிறது.

      ஏனெனில் இப்பதிவு துள்ளுவதோ முதுமையில் உள்ள மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சில சித்தாந்த பிழைகளை சுட்டிக் காட்ட முயல்கிறது.

      ஒரு தீவிர வாசகனாய் அந்த உரிமையை பெற்று இருந்தபோதும் பொதுவில் இப்பார்வையை வைப்பது சரிதானா? என்ற கேள்வி எழுந்தது. சக வாசகர்களும் இவற்றை அறிய வேண்டியது அவசியம் என உணர்வு ஏற்பட்டதன் விளைவே இப்பதிவு.


      1. Neither eyes nor master

      பக்கம் 11- ல் "பார்வை இல்லை பாதை உண்டு அமைப்பின் தலைமையகம் இதுதானா ? " என அன்டெய்ன் பாபாவிடம் கேட்பதாக வருகிறது.

      பின்பு பக்கம் 13-ல் மேப்பில் இவ்வாறாகவே பார்வை இல்லை பாதை உண்டு என மறுபடியும் வருகிறது. NEITHER EYES NOR MASTER என்ற சொற்றொடர் இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

      பக்கம் 14-ல் Bliss island - ன் உள்ளே அன்டெயினும் பாபாவும் நுழைகையில் கதவின் மேல் இவ்வாசகம் NETTHER EVES NOR MASTER என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.

      Neither eyes nor master என்பது NEITHER GOD NOR MASTER என்ற புகழ்பெற்ற அனார்கிஸ ஸ்லோகனின் மாறுதலான subdued வடிவம் என்றே கருத தோன்றுகிறது.அல்லது கண்பார்வை மங்கிவரும் முதியவர்கள் அடங்கியது என்பதால் மூல ஸ்லோகனின் பகடி வடிவம் என எடுத்துக் கொண்டாலும் சரி.

      Neither god nor master என்ற சொற்றொடர் - ஐ உருவாக்கிய லூயிஸ் அகஸ்டெ ப்ளான்க் ( LOUIS AGASTE BLANQUI) -ன் blanquism ( ஒரு சிறிய ரகசிய திறமையான குழு மூலம் அரசாங்கத்தை கவிழ்த்து ஒரு தற்காலிக சர்வாதிகார அரசை ஏற்படுத்தி பின் மக்களிடம் அதிகாரத்தை கொடுத்து சோஷியலிசத்தை உருவாக்குவது) (anarchist ) அராஜகத்தைப் பின்பற்றுவர்களால் ஏற்கப் படவில்லை என்றாலும் அவர் உருவாக்கிய ஆண்டவனும் இல்லை எமை ஆள்பவனும் இல்லை( neither god nor master )என்பதை ஸ்டாண்டர்டு ஸ்லோகனாக எடுத்துக் கொண்டார்கள். போராட்டக் களங்களில் ஈடுபட்டு வரும் பியரி ( Pierre mayou) ஒரு இடது சாரி நபர் என்பதோடு அனார்கிஸ்ட்டும் என்பது இந்த மாறுபட்ட ஸ்லோகன் மூலம் தெரிய வருகிறது. Sort of left wing fellow + anarchist. இந்த புரிதல் பக்கம் 37-ல் ஏற்பட்ட இன்னுமொரு மொழிபெயர்ப்பு தவறை அறிய உதவியது்.

      அனார்கிஸம் தேவை இல்லாத தேவதையிலேயே நாம் கேள்விப்பட்டதுதான்

      அனார்கிஸம் என்ற அரசியல் கொள்கையை உருவாக்கிய Pierre Joseph proudhorn - ன் முதல் பெயர்தான் நமது கதையில் வரும் Pierre Mayou - க்கு வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் கொஞ்சம் உண்டு.

      Delete

    2. மே மாதம் தே. இ. தேவதை - க்கு அனார்கிஸம் பற்றிய எனது விமர்சன கட்டுரையின் ஒரு பகுதி இங்கே.

      "'STV @

      ஹெலன் கதாபாத்திரம் ஆழமானது.அவள் சாதாரண பெண்ணல்ல.Anarchism என்ற அராசக வழியைப் பின்பற்றுபவள்.அரசு அல்லது பெரிய பணக்காரர்கள்
      வைத்திருக்கும் பொருளை கவர்ந்து எளியவர்களுக்கு வழங்குவதால் அவளை
      ஏதோ ராபின்ஹூட் பாணி என்றோ தீவிர இடதுசாரி கம்யூனிசவாதி என்றோ
      எண்ணி விடலாகாது.

      அனார்கிஸம் anorkhos என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. Arkhos என்றால் ஆள்பவன் எனப் பொருள். Anorkhos என்றால் அரசின்மை அதாவது "having no ruler "எனப் பொருள்.

      இவர்கள் - அனார்கிஸ்ட்கள்- படிநிலை அரசாள்வதை புறக்கணிப்பவர்கள்.
      உதாரணமாக முதல்வர் - அமைச்சர்கள்- அரசு அதிகாரிகள் என்ற hierarchy படிநிலை மூலம் மக்கள் ஆளப்படுவதை விரும்பாதவர்கள். இதன் மூலம் சுதந்திரம் பறிபோவதாக உணர்கிறார்கள்.


      ஆண்டவனும் இல்லை; எமை ஆள்பவனும் இல்லை என்பது இவர்கள் தாரக
      மந்திரம்.NEITHER GOD NOR MASTER. இதில் பலவிதங்கள் உண்டு.
      1. தனிமனித அராஜகம்
      2. சமுதாய அராஜகம்
      3. க்ரீன் அராஜகம்

      இன்னும் பல."'

      சுருக்கமாக ஒரு பொலிட்டிக்கல் ஸ்லோகனின், ஒரு பொலிட்டிக்கல் ஐடியாலஜியின் subdued வரி வடிவத்தை ஒரு கதாபாத்திரத்தின் குணாம்சத்தை வேறு வகையில் மொழிபெயர்ப்பு செய்தது ஒரு அடிப்படை பிழை என மனம் எண்ணுகிறது.

      Delete

    3. 2. பக்கம் - 19ல் லைப்ரரியில் " வாசித்தால் யாசிக்க மாட்டாய் " என்ற பலகை உள்ளது. அராத்துப் பேர்வழிகளாய் அக் கட்டிடத்தில் முதியவர்களும் இளைஞர்களும் திகழ இது பொருத்தமற்றது எனத்
      தோன்றுகிறது.

      மூலத்தில் உள்ள " waste your time . READ " என்பது lupano- ன் நையாண்டி இயல்புக்குப் பொருத்தமானது.

      " உன் நேரத்தை வீண்டிக்க விரும்புகிறாயா? படி"

      என்ற நக்கலான வாசகமே கதையின் தன்மைக்கு பொருத்தமானது.

      Delete

    4. 3.பக்கம் 37 ல் " ஷான் ப்ரான்ஸே கோப் ஒரு இடதுசாரி அரசியல்வாதி " என எழுதப்பட்டுள்ளது.

      Pierre ஒரு இடது சாரி அனுதாபி. அவர் குழு எப்படி மற்றொரு இடதுசாரி அரசியல் வாதியை எதிர்க்கும்.?

      மூலத்தில் உள்ளது கீழே.

      "
      Jean Francois cope is a conservative politician and former president of ump"


      கன்சர்வேட்டிவ் என்பது வலது சாரிகள். UMP என இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது 2002 - ல் உருவான Union for Popular Movement என்ற வலதுசாரிகள் ஒன்றிணைந்து உருவான கூட்டமைப்பு. 2015-ல் les Republicans என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

      வலது , இடது என்பது சிறிய பிழை என்றாலும் கதையின் அடிப்படை அரசியல் சித்தாந்தம் எதைக் கொண்டு நகர்கிறது என்பதில் பெரிய முரணை ஏற்படுத்துகிறது அல்லவா?


      ***""""""***†*************////////

      து. இளமையின் சில இழைகள் மிக நுட்பமானவை.

      Delete
    5. L.S.@ பிரமாதமான அலசல்கள்......

      நுட்பமான விவரங்களை நிறைய நேரம் எடுத்துக் கொண்டு வழங்கியுள்ளீர்கள்.. சிறப்பு...🙏

      எனக்கு அந்த லைப்ரரி வாசகம் மட்டுமே முழு கதையில் தாத்தாக்களின் ரவுசுக்கு சற்றும் பொருத்தம் அற்றதாக தோன்றியது....

      அனார்கிஸ்ட் பியரி என்ற பின்னனி இக்கதைக்கு மேலும் சில மதிப்பெண்களை கூட்டுகிறது... கதாசிரியர் இருக்கும் திசைக்கு ஒரு மரியாதை கலந்த வணக்கம்🙏

      Delete
    6. அருமையான விளக்கம் செல்வம் அபிராமி.

      Delete
  53. All September books are good - very breezy reads and a great time pass !

    ReplyDelete
  54. நண்பர் கிரியின் கைவண்ணமும் ஓவியர் ஆதியின் அட்டையும் கலக்கல்.

    ReplyDelete
  55. லக்கி, கிட் ஆர்டின் & கோ வெடிச்சிரிப்பு ரகமென்றால் ப்ளூ கோர்ட் தொடரை பிரித்துக்காட்டுவதே அந்த dark humor தான். அதேவேளை ப்ளூ கோட் க்கு ஆதரவு தெரிவிப்பதால் மேக் & ஜாக் வரவேண்டாம் என்றில்லை. இருவருக்குமே நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இருவருக்குமே வாய்ப்பு தரலாம்.

      Delete
  56. காரிக(ர்)ன் ஸ்பெஷலில் பனித்தீவின் தேவதைகள், பனிமலைபூதம் போன்ற கிளாசிக் Sci-Fic கதைகள் வந்தால் அருமையாக இருக்கும். ஒரு துப்பறியும் ஹீரோவாக மட்டுமல்லாது அவ்வப்போது Sci-Fic, வேற்றுலக, அமானுஷ்ய கதைகளையும் எமக்கு காதில் பூச்சுற்றல் என்று ஒரு சிறு நெருடல் கூட ஏற்படாதவாறு கொண்டு செல்லும் லாவகம் உள்ள காரிகன் கதைகளை பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வைரஸ் x
      இரண்டாவது வைரக்கல் எங்கே
      மிஸ்டர் பயங்கரம்
      இன்னும் வேற லெவலில் இருக்கும்

      Delete
    2. இரண்டாவது வைரக்கல் எங்கே?
      One of my Favorite Corrigan Story

      Delete
    3. இதே கதை மேத்தாவில் எங்கே அந்த வைரம் என வெளியானது. My all time childhood favourite. இது மட்டும் தொகுப்பில் இருந்தால் அட்டகாசம் தான்.

      Delete
    4. லெஃப்ட் இண்டிகேட்டர்
      ரைட்ல கை காட்டல்

      நேரா வண்டிய விடுதல்...

      இதிலிருந்து நான் என்னா சொல்ல வர்ரென்னா...

      ஹி ஹி ஹி

      Delete
  57. ஆசிரியர் சார்@

    நேற்று அடுத்த ஆண்டில் வரக்கூடிய மைல்கல் இதழ்களில் ஒன்றைப் பார்த்தோம்....இன்று மற்றது!

    1948முதல் உலகின் பல நாடுகளில் பட்டையை கிளப்பி வர்றார் போனெல்லி ஹீரோ டெக்ஸ் வில்லர்.(நல்லவேளை இவருக்கு வைக்கும் போதே மரியாதையான பெயர் சூட்டிட்டாங்க). அடுத்த ஆண்டு டெக்ஸ் வில்லரின் 75வது ஆண்டை சிறப்பாக கொண்டாட உள்ளார்கள் போனெல்லி நிறுவனத்தார்.

    (அவுக கொண்டிட்டு போகட்டும் அதை ஏன்யா இங்க நினைவு படுத்துறாய்னு நட்பூஸ் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது..😉)

    இத்தாலியில் 75வருடம் பிறக்கும்போது நம்மூர்லயும் தல ஒரு சாதனை பண்ணுவாரு.....அது,

    """"தமிழ் டெக்ஸ் 150"""'

    தமிழ் காமிக்ஸில் ஒரே நாயகனின் 150வது புத்தகம் என்ற சாதனையை ஜனவரி 2023ல வர்ற டெக்ஸ் புத்தகம் ஈட்டும்.....

    ஏற்கனவே அடுத்த ஆண்டு டெக்ஸ்க்கு வாணவேடிக்கைகள் காத்திருப்பதால் ஜனவரி மாத டெக்ஸ் இதழையே தமிழ் டெக்ஸ் 150வது இதழாக வெளியிட வேண்டுகிறோம்...

    இதற்கு ஒரு குண்டுபுக் கேட்பது ரொம்ப ஓவராகப்போயிடக்கூடும்.

    ஒரு இதழின் முதுகில் டெக்ஸ் 150னு பார்க்கும் போது அது கொணரும் உணர்ச்சிகளை ஃபீல் பண்ணக் காத்துள்ளோம்....💃💃💃💃

    ReplyDelete
  58. லயன்-முத்து டெக்ஸ் புத்தகங்கள்....

    1.தலைவாங்கிக் குரங்கு-1985

    2.பவளசிலை மர்மம-1986

    3.பழிவாங்கும் பாவை-1987

    4.பழிக்குப்பழி-1987

    5.ட்ராகன் நகரம்-1988

    6.இரத்த முத்திரை-1988

    7.வைக்கிங் தீவு மர்மம்-1989

    8.மாய எதிரி-1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் புக்கில் இணைந்து வந்தது)

    9.அதிரடிக் கணவாய்-1989

    10.எமனோடு ஒரு யுத்தம்-1990

    11.மரணத்தின் நிறம் பச்சை-1991

    12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்1991

    13.பழிவாங்கும் புயல்-பிப்ரவரி1992

    14.கழுகு வேட்டை-நவம்பர்1992

    15.இரத்த வெறியர்கள்-1993

    16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)

    17.பாலைவனப் பரலோகம்-1995(லயன் டாப்10 ஸ்பெசல்)

    18.மரண முள்-1996

    19.நள்ளிரவு வேட்டை-1996

    20.மரண நடை-1997

    21.கார்சனின் கடந்தகாலம்1-1997

    22.கார்சனின் கடந்தகாலம்2-1997

    23.பாங்க் கொள்ளை-1997

    24.எரிந்த கடிதம்-1998

    25.மந்திர மண்டலம்-1999

    26.இரத்த நகரம்-1999

    27.எல்லையில் ஒரு யுத்தம்-2000

    28.பழிவாங்கும் பாவை-CC-மறுபதிப்பு-2000
    29.மரண தூதர்கள்-2000

    30.மெக்ஸிகோ படலம்-2001

    31.தனியே ஒரு வேங்கை-பாகம்1-2002

    32.கொடூர வனத்தில் டெக்ஸ்-பாகம்2-2002

    33.துரோகியின் முகம்-பாகம்3-2002

    34.பயங்கரப் பயணிகள்-பாகம்1-2002

    35.துயிலெழுந்த பிசாசுகள்-பாகம்2-2002

    36.பறக்கும் பலூனில் டெக்ஸ்-2003

    37.ஓநாய் வேட்டை-பாகம்1-2003

    38.இருளின் மைந்தர்கள்-2003

    39.இரத்த தாகம்-பாகம்2-2003

    40.சாத்தான் வேட்டை-2003

    41.கபால முத்திரை-பாகம்1-2004

    42.சிவப்பாய் ஒரு சிலுவை-2004

    43.சதுப்பில் ஒரு சதிகார கும்பல்-பாகம்2-2004

    44.இரத்த ஒப்பந்தம்-பாகம்1-2005

    45.தனியாத தணல்-பாகம்2-2005

    46.காலன் தீர்த்த கணக்கு-பாகம்3-2005

    47.கானகக் கோட்டை-2006

    48.பனிக்கடல் படலம்-2007

    49.மரணத்தின் முன்னோடி-பாகம்1-2008

    50.காற்றில் கரைந்த கழுகு-பாகம்2-2008

    ReplyDelete
    Replies
    1. 51.எமனின் எல்லையில்-பாகம்3-2008

      52.தலை வாங்கிக் குரங்கு-CC-2012

      53.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013

      54.பூத வேட்டை-2013

      55.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-2013-சன்ஷைன் லைப்ரரி

      56.தீபாவளிமலர்2013-சன்ஷைன் லைப்ரரி (நீதியின் நிழலில், மரண தேசம் மெக்ஸிகோ )

      57.நில் கவனி சுடு-2014

      58.காவல் கழுகு-2014

      59.சட்டம் அறிந்திரா சமவெளி-2014

      60.கார்சனின் கடந்த காலம்-2014-சன்ஷைன் லைப்ரரி-முதல் வண்ண மறுபதிப்பு

      61.வல்லவர்கள் வீழ்வதில்லை-டிசம்பர்2014

      62.தி லயன் 250-ஜூலை2015 (ஒக்லஹோமா,முகமில்லா மரண தூதன்,பிரம்மன் மறந்த பிரதேசம்)
      63.தீபாவளி வித் டெக்ஸ்-நவம்பர்2015
      (டைனோசரின் பாதையில், எமனின் வாசலில்)

      64.சட்டத்திற்கொரு சவக்குழி-சனவரி2016

      65.திகில் நகரில் டெக்ஸ்-பிப்ரவரி2016

      66.விதி போட்ட விடுகதை-மார்ச்2016

      67.தலையில்லாப் போராளி-ஏப்ரல்2016

      68.டாக்டர் டெக்ஸ்-மே2016

      69.பழிவாங்கும் புயல்-ஜூன்2016

      70.குற்றம் பார்க்கின்!-ஜூலை2016

      71.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி இதழ்-ஆகஸ்டு2016

      72.துரோகத்திற்கு முகமில்லை-செப்டம்பர்2016

      73.தற்செயலாய் ஒரு ஹீரோ-அக்டோபர்2016

      74.சர்வமும் நானே!-நவம்பர்2016

      75.நீதிக்கு நிறமேது?-டிசம்பர்2016

      76.ஆவியின் ஆடுகளம்-சனவரி2017

      77.அராஜகம் அன்லிமிடெட்-பிப்ரவரி2017

      78.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-மார்ச்2017

      79.ஒரு வெறியனின் தடத்தில்-ஏப்ரல்2017

      80.கவரி மான்களின் கதை-ஜூன்2017

      81.கியூபா படலம்-லயன்300-ஜூலை2017

      82.மரணத்தின் நிறம் பச்சை-ஆகஸ்ட் 2017

      83.கடற்குதிரையின் முத்திரை-செப்டம்பர்2017

      84.தீபாவளிமலர்-அக்டோபர்2017
      (ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
      அழகாய் ஒரு அராஜகம்)

      85.ட்ராகன் நகரம்-நவம்பர்2017
      86.ஒரு கணவாய் யுத்தம்-ஜனவரி2018

      87.விரட்டும் விதி-பிப்ரவரி2018

      88.வெண்பனியில் செங்குருதி-பிப்ரவரி2028

      89.பாலைவனத்தில் புலனாய்வு-மார்ச்2018

      90.கடைசிப்பலி-ஏப்ரல்2018

      91.பவளச்சிலை மர்மம்-ஏப்ரல்2018

      92.நடமாடும் நரகம்-ஜூன்2018

      93.இரவுக்கழுகின் நிழலில்-ஜூன்2018

      94.காற்றுக்கு ஏது வேலி-ஜூலை2018

      95.டெக்ஸ் மினி 3in1-விரட்டும் விதி-ஆகஸ்ட்2018

      96.சைத்தான் சாம்ராஜ்யம்-செப்டம்பர்2018

      97.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-செப்டம்பர்2018

      98.டைனமைட் ஸ்பெசல்-அக்டோபர்2018

      99.காதலும் கடந்து போகும்-நவம்பர்2018

      100.புனிதப் பள்ளத்தாக்கு-நவம்பர்2018

      Delete
    2. 101.காலனின் கானகம்-டிசம்பர்2018

      102.யார் அந்த மரண தூதன்-டிசம்பர்2018

      103.சாத்தானின் சீடர்கள்-ஜனவரி2019

      104.வைகிங் தீவு மர்மம்-பிப்ரவரி2019

      105.பாலைவனத்தில் ஒரு கப்பல்-மார்ச்2019

      106.டெக்ஸ் மினி3in1-2-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019

      107.பச்சோந்திப் பகைவன்-ஏப்ரல்2019

      108.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மே2019

      109.சிங்கத்தின் சிறுவயதில்-ஜூன் 2019.

      110.நட்புக்கு நாட்களேது-ஜூலை2019

      111.தகிக்கிம் நியூ மெக்சிகோ-ஆகஸ்ட்2019

      112.பழி வாங்கும் பாவை-ஆகஸ்ட்2019

      113.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-செப்டம்பர்2019

      114.புதைந்து போன புதையல்-அக்டோபர் 2019

      115.சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்-நவம்பர்2019

      116.சூது கொல்லும்-டிசம்பர்2019

      117.ரெளத்திரம் மற-டிசம்பர்2019

      118.இருளின் மைந்தர்கள்1-சனவரி2020

      119.இருளின் மைந்தர்கள்2-சனவரி2020

      120.ரெளத்திரம் மற- 4in1 தொகுப்பு-சனவரி2020

      121.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020

      122.வானவில்லுக்கு நிறமேது!-மே2020

      123.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020

      124.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020

      125.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020

      126.தலைவாங்கி குரங்கு-அக்டோபர் 2020

      127.தீபாவளிமலர்-நவம்பர்2020

      128.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020

      129.மரணமுள்-சனவரி2021

      130.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021

      131.கழுகு வேட்டை-ஏப்ரல்2021

      132.நெஞ்சே எழு-மே2021.

      133.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021.

      134.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021

      135.சிகப்பாய் ஓரு சிலுவை-ஆகஸ்ட்2021

      136.கண்ணே கொலைமானே-அக்டோபர்221

      137.தீபாவளிமலர்2021-நவம்பர்2021.

      138.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021

      139.டெக்ஸ் க்ளாசிக்1-பழிக்குப்பழி&கானகக் கோட்டை-ஜனவரி2022

      140.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022

      141.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022

      142.டெக்ஸ் க்ளாசிக்2- இரத்த வெறியர்கள்-பனிக்கடல் படலம்-ஏப்ரல்2022

      143.விடாது வஞ்சம்-மே2022

      144.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022

      145.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022

      146.மெளன நகரம்-ஆகஸ்ட்2022

      *147.சொர்க்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022*

      148.தீபாவளிமலர்2022

      149.நிழல்களின் ராஜ்யத்தில்...நவம்பர் ஆர் டிசம்பர்

      *150.********************** *(2023ன் முதல் டெக்ஸ் புக்)*

      Delete
    3. குறிப்பு 1:- வெளியீடு எண்கள் இல்லாத மினி டெக்ஸ்கள் இந்த லிஸ்ட்ல சேர்க்கப்படல!

      1.இருளோடு யுத்தம்-மார்ச்2020 (சந்தா ஃப்ரீ கிஃப்ட்)

      2.விண்டர் ஸ்பெசல்- ஃப்ரீ வித் தீபாவளிமலர்-நவம்பர்2020

      3.பனியில் ஒரு புதுநேசம்- ஃப்ரீ வித் லயன்400-ஆகஸ்ட்2021

      குறிப்பு2:- தீபாவளிமலர் 2021 உடன் இலவச இணைப்பாக அறிவிக்கப்பட்ட "ஓநாய் ஜாக்கிரதை" அத்துடனேயே இணைக்கப்பட்டது...! எனவே அதை தனி புக்காக கருத இயலாது.

      குறிப்பு3:- இந்த லிஸ்டை சரிபார்க்க இப்போ வாய்ப்பிராது, அதனால நோ டெக்ஸ் 150னு முடிவு பண்ணினாலும் ஓகேதான்..

      ஒரேயொரு டெக்ஸ் புக்மார்க் "தமிழ் டெக்ஸ்150" னு போட்டு தாருங்கள்... கொண்டாட்டத்திற்கு ஏதோ ஒன்று இருந்தாவே போதுமானது!🤩🤩🤩

      Delete
    4. வரவேற்கின்றேன். ஆமோதிக்கின்றேன்.

      330பக்க கறுப்பு வெள்ளை புக் வந்தாலும் போதும். கொண்டாடி மகிழ்வோம்.

      Delete
    5. நிச்சயமா அது இளம் டெக்ஸ் மெகா குண்டு ..பன்னெண்டு கதைகள் இணைந்த 150 மற்றும் டெக்ஸ் 85 கொண்டாட்டசென்னை புத்தக விழா ஸ்பெசல்தான்....ஒரே கல்ல மூனு மேங்கா

      Delete
  59. டேங்கோ - சிவந்த மன்

    ரம்மியமான கடல் மற்றும் தீவுகளின் ஓவியஙகள் செம்ம.. என்ன கலரிங்.. Superb.
    கதையும் கலக்கல், நல்ல அக்‌ஷ்ன் படம் பார்த்த திருப்த்தி.
    அடுத்த கதை எப்ப வரும்?

    ReplyDelete
  60. தாத்தாஸ் கதை அற்புதம்.

    10/10

    முதல் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து தொடங்குது கதை, தனக்கு கிடைத்த பெரும் பணத்தை தாத்தாக்கள் போராட்ட குழுவுக்கு அனுப்பும் பேத்தி அவளே எதிர் பார்க்காத அந்த தாத்தாவுடைய பழைய காதலியின் பெயரில் அனுப்ப அந்த பெயர் அந்த தாத்தாவுடைய பழயைய காதலியின் நினைவுகளை தூண்டிவிட பிறகு அவர் எடுத்த முடிவு என்ன.

    இதற்கிடையே நடக்கும் போராட்ட குழுவின் ஐடியா அதகளம், அந்த "புவாங் தாத்தாவை" வைத்து அவர்கள் கொடுக்கும் தண்டனை அட்டகாசம்.

    அந்த மீட்டிங்கில் எல்லாரும் தெறித்து ஓட நாமக்கோ குபீர் சிரிப்பு தான் வருது.

    இறுதியில் பொம்மலாட்டம் மூலம் அவர்கள் சொல்லும் கதையும் கருத்தும் இந்த காமிக்ஸ் படிப்பது வெறும் பொழுது போக்குக்கு மட்டும் இல்லை உலகியலின் நடைமுறையையும், இன்றைய மக்களின் பொறுப்பற்ற ஆடம்பர வாழ்க்கையையும் பொடாரென்று புறடியில் அடித்த மாதிரி சொல்லி முடிப்பது அற்புதம்.

    படிக்காத வாங்காத மக்கள் இருந்தால் மிஸ் பண்ணாம படிச்சு பாருங்க தாத்தாஸ் அடிச்சு ஆடறாங்க.

    ReplyDelete
  61. நாளை பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  62. சுஸ்கி & விஸ்கி : இவர்களின் கதையை இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன். சில மாதங்களுக்கு முன் விளம்பரத்தில் சுஸ்கி & விஸ்கியை பார்த்தபோது... இது விச்சு கிச்சு, ஸ்மர்ஃப் போல குழந்தைகளுக்கு ஏற்ற குட்டி குட்டி கதைகளின் தொகுப்பாக இருக்கும் என நினைத்தேன். புத்தகத்தை பார்த்த பின்பு தான் முழு நீள கதைகள் இரண்டு என தெரிந்துகொண்டேன். இரண்டு கதைகளும் அருமையாக இருந்தது. கண்ணை பறிக்கும் சித்திரங்கள். ரசிக்க வைக்கும் கதை. கச்சிதமான மொழிப்பெயர்ப்பு. அட்டகாசமான காமெடி. என இரண்டு கதைகளும் அருமையாக இருந்தது. சதா நேரமும் செல்போன் விளையாட்டுக்களில் லயித்து கிடக்கும் குழந்தைகளுக்கு கதை படிக்கும் ஆர்வத்தை தூண்ட இப்படிபட்ட கதைகள் நிறைய வரவேண்டும். அடுத்த ஆண்டு சந்தா C' யில் சுஸ்கி & விஸ்கியை வெளியிடுங்கள். (அல்லது) இதே போல ஹார்ட் கவரில் சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் ஒன்று வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சு & வி -ன் முதல் கதை மந்திரவாதி + உயிர் பெறும் சீட்டுக் கட்டுகள் என ஃபேண்டஸியாக இருந்தபோதும் குழந்தைகள் , பெரியவர்கள் யாருக்கும் உறுத்தலாக தோன்றாதவண்ணம் நகைச்சுவை அம்சம் தூக்கலாக இருந்தது
      தனிச் சிறப்பு..

      இரண்டாவது sci- fi ரகம் + ஹியூமர்.

      இதுவும் நல்ல காம்பினேஷன்.

      சு& வி உள்ளம் கவர் கள்வராக மாறியதில் ஆச்சர்யமில்லை.

      Delete
  63. அருமையாக பேனர் வடிவமைத்த என் அன்புத் தோழன் உதயக்கு என் வாழ்த்துகள்... சென்னையில் நாம் சந்திக்கும் போது... ஒரு பெரிய treatஐ எதிர்பார்க்கிறேன் உதய்...

    நண்பர் கிரி எப்பொழுதும் போல கலக்கியுள்ளார்... அவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துகள்...

    ஆசிரியர் சார்... நண்பர் மார்டின் தனது வருகை தொடர சரிசமமாக வாக்குகள் பெற்றுள்ளார்... அதை மனதில் கொண்டு தயவு கூர்ந்து அடுத்த அட்டவணையில்... ஒரு ரிசர்வட்டு தொகுதி ஒதுக்குமாறு பணிவன்புடன் கேட்டமர்கின்றேன்... நன்றி..!!! வணக்கம்...!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் தோழரே... ட்ரீட் இல்லாமலா.... நிச்சயம்... நீங்களும் டக்கராய் தலைவன் கதையினை மொழிபெயர்த்து முத்திரை பதிக்க போகிறீர்கள். என்பதில் ஐயமில்லை... அதற்கும் ட்ரீட் உண்டு தானே...😊

      Delete
    2. உங்க டிசைனைவிடவா பெரிய ட்ரீட் இருக்க போகுது. அந்த அட்டைபடத்தை முழுமையாக்கியத் உங்க டிசைன்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நன்றி கிரி சகோ, நீண்ட நாளாய் எங்கள் சந்திப்பு திட்டம் தள்ளி போய் கொண்டேயுள்ளது. சென்னையில் நடந்தால் நீங்களும் வரலாமே.

      Delete
  64. செப்டம்பர் மாதம் வந்தாவே *ஆசிரியர் திரு விஜயன் சாரை முதன் முதலில் சந்தித்தது நினைவு வந்திடும் ஆனா...*, ஒவ்வொரு தபாவும் அவரை சந்தித்த நாள் தாண்டி தான் நினைவு வரும்.... இம்முறை சில நாள் முன்பே நினைவு வந்திட்டது.... இரு ஸ்பெசல் புக் வேண்டி தளத்தில் லிஸ்ட் போட பழைய மெயில்ஸ்லாம் செக் பண்ணிட்டு இருக்கும் போது இதும் நினைவுல வந்தது... இதே நாளில் பத்தாண்டுகளுக்கு முன்பு 09/09/2012 ல் ஆசிரியரை முதன் முதலில் சந்தித்திருந்தேன்.... அதைப்பற்றி ஒரு சிறப்பு நினைவலைகள் இன்று பார்ப்போம்...😍😍😍

    இங்கே, தளத்தில் அப்போதெல்லாம் மெளனவாசகராக எல்லா பதிவுகளையும் வேடிக்கை பார்த்து வருவேன்.... 2012சென்னை விழா தொடங்கி எடிட்டர் விஜயன் சார், காமிக்ஸ் ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறார்... அதன் அடுத்த ஸ்டாப் ஆக பெங்களூரு காமிக்கானில் இரு நாட்கள் சந்திப்பு அனைவரும் வாரீர் என அனைவரையும் அழைத்து இருந்தார்...

    *2012 கம்பேக்கிற்கு பிறகு நேரில் காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பது தொடக்கம் பெறாத காலம் அது. லயன் வலைத்தளத்தில் உலாவந்த சிலரை எல்லோருக்கும் போல வெறும் பெயர்களாக மட்டுமே எனக்கும் தெரியும்.

    *கம்பேக் ஸ்பெசல், சர்ப்ரைஸ் ஸ்பெசல், டபுள் த்ரில் ஸ்பெசல்... என ரெகுலர் புத்தகங்களே சிறப்பு மலர்களாக வெளியாகி சக்கபோடு போட்டு வந்தன. ஒரு மாசத்துக்கே ஒரு புத்தகம் தான் எனும் போது விமர்சனங்கள் வரிசை கட்டின. மாசம் பூரா நிறை,குறை என வெச்சி செஞ்சு வந்தாங்க.

    *அப்பத்தான் 2012 சம்மர் இறுதியில் ஒரு நாள்.....

    *"பெங்களூரு காமிக்கான் செப்டம்பர் 8-9, 2012--அனைவரும் வாரீர்; ஆதரவு தாரீர். உங்களை வரவேற்பது:உங்கள் எடிட்டர் விஜயன்"* ---- என்ற அறிவிப்பை போட்டு இருந்தார்...🤩

    *டெக்ஸ் கதைக்கு அடுத்து ஹாட்லைன் தான் ரொம்ப பிடிச்ச பகுதி. "எடிட்டர் S.விஜயன்" என ரொம்ப நாளாகவே பார்த்து பார்த்து பரிச்சயம் ஆன பெயர்; இவரது வசனங்கள் வாயிலாக ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருந்தார். தொலைவு காரணமாக சிவகாசி போய் நேரில் சந்திக்க எண்ணியது கிடையாது என்றுமே. "அட பெங்களூரு பக்கம் தானே போய் பார்ப்போம்" என்ற எண்ணத்தை ஸ்பார்க் பண்ணிச்சு ஆசிரியரின் இந்த அறிவிப்பு!

    *பெங்களூரா நாங்களும் வருவோம்னு வீட்டில் தொற்றி கொண்டார்கள். "விஜயன் சாரை பார்க்க போறம்மா, காமிக்ஸ் விழா"- என சொல்லி கழட்டி விடபார்த்தும் பாச்சா பலிக்கல. ரொம்ப நாள் எங்கும் வெளில போகல நாங்களும் வந்தே தீருவோம்னு வீட்டில் அடம் பிடிச்சாங்க..

    *காமிக்ஸ் வாங்கப் போறம்னு தெரிஞ்சதும் என் தங்கை பையன் அவுங்க தெரு நண்பனோட அப்பாவுக்கு சில காமிக்ஸ் வாங்க வேணும் என இணைந்து கொண்டான். (பிறகு அவரோட அறிமுகம் கிடைத்து, பழைய ரசிகர் என தெரிந்து கொண்டேன். 2013 முதல் இன்றளவும் லயன்-முத்து சந்தாவில் லஷ்மன பெருமாள் எனும் அவர் தொடர்கிறார். என்றாவது ஈரோடு விழாவிற்கு அழைத்து வர்றேன்)

    *பெங்களூரு போக ட்ரெயின் தேர்ந்தெடுத்தேன். எங்கயோ ஹீலாலிகேவுல இறங்கி, சேர் ஆட்டோ பிடித்து மெயின் ரோடுவந்து, டவுன்பஸ்ஏறி பெங்களூரு ஊருக்குள் வந்து, செயின் ஜான்ஸ்ல இறங்கி, மறுபடியும் ஆட்டோ பிடிச்சா விழா நடக்கும் ஸ்டேடியம் போய் விடலாம்னு தகவல்களை திரட்டியாச்சுது.

    ReplyDelete
    Replies

    1. *சேலம் டூ பெங்களூரு ட்ரெயின் அதிகாலை 5மணிக்கு போல. போய் சேர 10மணி ஆகிடும். பிறகு அந்த லோக்கல் ட்ராவலிங் இன்னும் நேரம் எடுக்கும், பொடியனை வெச்சிகிட்டு டிபனுக்கு எங்கே தேடுவதுனு ரோசனை. நானுமே பசி தாங்க மாட்டேன்... ஹி.. ஹி...!! பைனலி ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்வது தான், கட்டுச்சோறு!

      *சோறெல்லாம் எம்பையன் காலைல சாப்பிட மாட்டான்னு தங்கை சொல்ல, ஒரு வழியாக பூரி+ உருளைகிழங்கு குருமானு முடிவாச்! சரி, மொத மொத எடிட்டர் சாரை பார்க்க போறோம்; வெறுங்கையாகவா போறதுனு என் சிற்றறிவுக்கு ஏற்ப ஒரு சின்ன கிஃப்ட் வாங்கினேன். என்ன அதுவென பின்னர் சொல்றேன்!

      *2012,செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 3மணிக்கு எழுந்து டிபன் கட்டிகிட்டு போய் சேலம் ஜங்சன்ல யஷ்வந்த்பூர் ட்ரெயின் ஏறி ஆச்சி. ட்ரெயின் விசிலை விட சத்தமாக என் மனசுக்குள் விசில் அடித்தது. டெக்ஸை நமக்கு தந்தவரை பார்க்க போறோம்னா சும்மாவா!!!

      *ஓசூரில் அரை மணி நேரம் கட்டய
      போட்டு விட்டது ட்ரெயின்! எத்தனை ஆரவாரம் அங்கே! கூடை வியாபாரிகளிடம் இட்லி வாங்கி சாப்பிடும் மக்கள் ஒரு பக்கம், வேகவைத்த குச்சி கிழங்கோடு ஒரு கூட்டம், அவித்த கடலை விற்கும் பாட்டிம்மாவிடம் வாங்கும் ஒரு 10பேர்...என கலவையான காலை! நாங்களும் பூரியை சாப்பிட்டுவிட்டு, சில ஸ்நாக்ஸ் வாங்கிட்டோம்.

      *மேலே சொன்னவாறு எல்லா வகை பிரயாணத்தையும் முடித்து அந்த ஸ்டேடியம் சென்று சேர்ந்தோம். இங்கே அதுமாதிரி எந்த விழாவும் நடக்கலயே என குண்டை தூக்கிப் போட்டான் செக்யூரிடி! திகைத்து போய் பேஸ்து அடிச்சிடுச்சி எனக்கு...!!!

      *செக்யூரிட்டியின் பதில் தூக்கிவாரிப்போட்டதை அடுத்த ஓரிரு நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு, ஸ்டேடியம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்ல விசாரித்தேன். விசயம் விளங்கிட்டது. பெங்களூருல கோரமங்களா என்ற பெயரில் 2 ஸ்டேடியங்கள் இருக்கும் போல. ஒன்று பெரியது அவுட்டோர்; மற்றது சிறிதான இன்டோர். காமிக்கான் நடப்பது இன்டோர்ல; நாம இருப்பது அவுட்டோர்ல என ஒருவழியாகப் புரிய போன உசுரு திரும்பிச்சு!

      *மொத ஆட்டோ ட்ரைவர் எங்கே காமிக்கான் நடக்குதுனு தெரியாமல் எங்களை பெரிய ஸ்டேடியம் அழைத்து சென்று விட்டார். மறுபடியும் வேறொரு ஆட்டோ. இம்முறை சரியான இடம். தூரத்திலயே "வெல்கம் டூ காமிக்கான்2012" போர்டுகள் வரவேற்றது. மீண்டும் என் மனசில ஒலித்த விசில் ஓசூர் வரை கேட்டு இருக்கும்.

      Delete

    2. *டிக்கெட் வாங்கிட்டு லைன்ல நிக்கவும், கையில் டேக் அடித்து விட்ட மினி கோட் யுவதியை பார்த்ததும் இது வேற லெவல் விழா என புரிந்து போனது. 11மணிக்கு தான் உள்ளே அனுமதி தந்தாங்க! 20நிமிட காத்திருப்பு 20நொடியில் பறந்தது.

      *பேட்மிட்டன் உள்ளறங்கில் தடுப்பை வைத்து விழா ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.

      *எடிட்டர் சாரை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டே ஒவ்வொரு ஸ்டால் ஆக போனோம். முத்து காமிக்ஸ் என இருந்த நமது ஸ்டால் கண்ணில் பட்டது. பில்லிங் டேபிளில் இருந்த பெரியவரிடம் (அவர் தான் திரு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என பின்னர் தெரிந்து கொண்டேன்) எடிட்டர் சார் எங்கே என கேட்டேன். பக்கத்தில் இருந்த குழுவை கை காட்டினார்.

      *வாங்க சார், வாங்க என எடிட்டர் சார் முன்னே வந்து கையை நீட்டினார். 22வருடங்களாக அவரது எழுத்துக்கள் வாயிலாக உள்வாங்கி இருந்த பிம்பத்தை நிஜமாக பார்த்தபோது நா உலற , உள்ளம் பதற சற்றே தடுமாறிப்போனேன். உள்ளத்தின் உதறலை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு கை கூப்பினேன். சட்டுனு கைகளை பிடித்து குழுக்கினார். அவரை பார்க்க என்றே வந்துள்ளதாக சொன்னபோது லேசாக ஆச்சர்யம் காட்டிதாக பட்டது. சேலம் டூ பெங்களூரு பக்கம்தான், வருவது எளிது என அவரே விளக்கி சொன்னார், அருகே இருந்த நம்மவர்களிடம்....

      *"டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன் சார் நான்"---- என தட்டு தடுமாறி சொல்லியே விட்டேன்.

      "கம்பேக் ஆகி இன்னும் டெக்ஸ் வர்ல; இப்ப வருவது சந்தோசம் சார்"-- என அம்மாத இதழ் வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல இருந்த டெக்ஸ் வருகிறது விளம்பரம் பற்றி சொன்னேன்.

      "நிறைய டெக்ஸ் இனிமே வருது சார் "--என பதில் தெரிவித்தார்.

      *அருகில் சில ரசிகர்கள் இருந்திருப்பார்கள் போல. சாரோடு போட்டோ எடுத்துக்கொண்டேன். என் பையன் பொடியனை, எடிட்டர் சார் அவரோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போஸ் தந்தது பெரு மகிழ்ச்சியை தந்தது.

      *எடிட்டர் சாருக்கு என வாங்கி இருந்த கிஃப்ட்டை என் மனைவி ஞாபகப்படுத்தினாள். சில மாதங்களில் வர இருக்கும் முத்து நெவர் ஸ்பெசல் வெற்றிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள் தெரிவித்தேன்.

      Delete

    3. ####என்னுடைய வருகை& சிறு சந்திப்பை பற்றி தளத்தில் எடிட்டர் சாரின் விவரிப்பு...., ..

      *.////மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?////.....*

      *நான் அதிகம் முறை படிச்சது மேற்கண்ட வரிகளை தான். பின்னர் வந்த *சூ.ஹீ.சூ.ஸ்பெசல்ல பிரிண்டிங்ல அந்த பதிவுல இருந்த இந்த வரிகள்& போட்டோக்களை அடுத்த ஓரிரு மாதங்கள் எங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்...🤩🤩🤩🤩!*

      *சொற்ப நேரமே என்றாலும் நிறைவான சந்திப்பு. வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல சாரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு புறப்பட்டேன். மற்ற ஸ்டால்களை லேசாக நோட்டம் விட்டோம். ஒவ்வொரு ஹீரோவை போல வேடமணிந்த இளம் யுவதிகள் பட்டாம் பூச்சிகளை போல சுற்றித் திரிந்தனர். டோரோ, இன்னொரு பொம்மை உடன் என் மகன் போட்டோ எடுத்து கொண்டான். ஆனா....சரி வேணாம், சொல்லி என்ன ஆகப்போவுது.

      *மீண்டும் டவுன் பஸ் ஏறி கெம்பேகெளடா பஸ்நிலையம் வந்ததோ, அங்கிருந்த எண்ணிலடங்கா பேருந்துகளோ, நகரின் பிரமாண்டங்களோ, வெளியே இருந்த ஓரு ஓட்டலுல்ல சாப்பிட்ட பிரியாணியோ, யஷ்வந்த்பூரின் விஸ்தாரங்களோ எதுவும் மனிதில் நிற்கல. *எடிட்டர் சாருடனான சொற்ப நேர சந்திப்பை மட்டுமே மனம் அசை போட்டது மறுபடி மறுபடி......!*

      *சுவீட் பாக்ஸில் இருந்த இனிப்பை அங்கே குழுமி இருந்த நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தந்து மகிழ்ந்தார் எடிட்டர் சார். சாரின் எளிமையாக பழகும் விதம் கண்டு எல்லா நண்பர்களும் மலைத்து போனோம்.*


      *அதற்கு பிறகு ஆசிரியர் உடன் நிறைய முறை சந்தித்தும் அவரோடு அருகருகே உட்கார்ந்து உணவு உண்டும் உள்ளேன்.... எத்தனை நினைவுகள் இருந்தாலும் இந்த முதல் சந்திப்பு என்றென்றும் இனிமையானது🤩🤩🤩🤩🤩

      -----STV.

      Delete
    4. புகைப்படங்கள் இந்த லிங்கில்...

      https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0qKTD1xu4jLd64JSx7LvHbyEg9bsupLPEfcWJedik542MJD71e9CdwsTHyqCMeUqPl&id=100036515580386

      *@நண்பர்களே*

      *நீங்களும் ஆசிரியர் உடனான உங்களின் முதல் சந்திப்பை இங்கே பகிரலாமே.....🙏🙏🙏*😍😍😍😍😍

      Delete
    5. எனது முதல் காமிக்ஸ் சந்திப்பு ஆசிரியருடன் நடந்தது பெங்களூர் காமிக்கானில் தான். அங்கு பல காமிக்ஸ் நண்பர்களை பார்த்தேன் எனது கூச்ச சுபாவம் காரணமாக நண்பர்களுடன் பேசவில்லை அவர்கள் ஆசிரியருடன் பேசுவதை அருகில் நின்று ரசித்தேன். ஓரளவு பேசி அறிமுகமான நண்பர் ஷாலும் பெர்ணான்டஸ். பல நண்பர்கள் நமது ₹10/20 புத்தகங்களை கட்டுக்கட்டாக வாங்கிச் சென்ற நாள் அது.

      பெங்களூர் காமிக் கான் என் காமிக்ஸ் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

      Delete
    6. பெங்களூர் காமிக் கான் பற்றிய பதிவில் நான் நமது ஸ்டாலை நோட்டம் இட்டுக் கொண்டு இருக்கும் போது எடுத்த போட்டோ அந்த பதிவில் இருந்தது மகிழ்ச்சியை கொடுத்தது; வீட்டில் அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தேன். முகம் முழுவதும் போட்டோவில் தெரியாதது வேற விஷயம் :-); அதே ஃபோட்டோ அடுத்த மாத புத்தகத்திலும் வந்து இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. :-)

      Delete
    7. Sriராமின் டெக்ஸ் வேஷத்தை கண்டு அழ ஆரம்பித்த எனது மகள் வீடு திரும்ப ஆட்டோவில் ஏறும் வரை நிறுத்தவே இல்லை, அவள் அழுகையை நிறுத்த முடியாத காரணத்தால் சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்ப நேர்ந்தது:-)

      Delete
    8. அங்கே கார்த்திக் ஆசிரியரை காமிக்ஸ் பற்றி இன்டர்வியூ எல்லாம் எடுத்ததை பார்த்த போது அட இவரு பெரிய காமிக்ஸ் ரசிகர்போல :-) அதன் பின்னர் அவரது பிளாக்கை அடிக்கடி சென்று அவரின் எழுத்துக்களை ரசிக்க ஆரம்பித்தேன்:-)

      இப்ப பாருங்க நம்ப கார்த்திக் பெங்களூரில் அவர் இருக்கும் ஏரியாவில் இருந்து நான் இருக்கும் வர்தூருக்கு புல்லட்டில் கிளம்பி வருவார் பாருங்க:-)

      Delete
    9. ///அங்கே கார்த்திக் ஆசிரியரை காமிக்ஸ் பற்றி இன்டர்வியூ எல்லாம் எடுத்ததை பார்த்த போது அட இவரு பெரிய காமிக்ஸ் ரசிகர்போல///--

      PfB@ 101%அக்மார்க் நிஜம்தான் நண்பரே!

      கார்த்திக், ஆசிரியரை பேட்டி எடுத்த வீடியோ லிங் இதோ...

      https://youtu.be/RK8PYMP2-B0


      Delete
    10. ///பெங்களூர் காமிக் கான் பற்றிய பதிவில் நான் நமது ஸ்டாலை நோட்டம் இட்டுக் கொண்டு இருக்கும் போது எடுத்த போட்டோ அந்த பதிவில் இருந்தது மகிழ்ச்சியை கொடுத்தது///

      என் கிஃப்ட் போட்டோ தளத்தில் பார்த்து துள்ளிக்குதித்தேன்....

      அடுத்து வந்த புக்கில பிரிண்டிங்ல வேற பார்த்து ஆஹானு ஆகிட்டது...
      ரொம்ப ஜாலியான நினைவுகள்...💞

      கமிங் நவம்பர்19&20 மீண்டும் பெங்களூரில் காமிக்கான் நடக்கிறது போல..... இயன்றால் சந்திப்போம்

      Delete
    11. நம்ப ஸ்டால் இருந்தால் கண்டிப்பாக சந்திக்கலாம்:-) அதற்கு வாய்ப்புகள் கம்மி ஏன் என்ற காரணத்துடன் ஆசிரியர் பலமுறை இங்கே சொல்லி உள்ளார்.

      Delete
    12. எடிட்டரை முதலில் பார்த்த தருணம்



      நியுயார்க் –லிருந்து இங்கிலாந்தின் FOYONES நகரை வேனிற்கால மார்க்கமாய் சென்றடையும் டிரான்ஸ்காண்டினன்ட்டல் விமானத்தின் எக்சிகியூட்டிவ் கிளாஸ் –ன் சொகுசான இருக்கையில் உட்கார்ந்திருந்தேன் ..



      விமானத்தின் உட்புற குரோமிய தகடுகள் சாண்டில்யன் மட்டுமே வர்ணிக்க முடியும் போல் இருந்த அழகிய கிரேக்க விமான பணிப்பெண்களின் கன்னங்களோடு பளபளப்பில் போட்டி போட்டு கொண்டு இருந்தன....

      பின்புறம் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு ஸ்பானிஷ் பெண்ணுக்கு பணிப்பெண்கள் உதவி செய்த லாவகம் அவர்கள் MIDWIFERY கற்று இருப்பார்களோ என எண்ண தோன்றியது ..



      இரு இருக்கைகள் மட்டுமே நடை பாதையின் (AISLE) இரு புறமும் இருந்தன ..ஜன்னல் ஓரம் இருந்த என் சீட்டுக்கு இடப்புறம் இருந்த சீட்டில் இருந்த போர்ச்சுகீசிய வாலிபனும் அருகில் – பக்கத்து வரிசையில் அவனை போலவே AISLE சீட்டில் அமர்ந்து இருந்த பிரெஞ்சு பெண்ணும் கண்ணால் பேசி கொண்டதை விவரிக்க சாகுந்தலம் இயற்றிய மகாகவி காளிதாசன் வந்தால்தான் உண்டு ...வெகு சீக்கிரம் சீட்டை மாற்றி கொள்ள விண்ணப்பிப்பார்கள் என தோன்றியது ..



      முதல்முறை பயணிப்போர் வாந்தி எடுத்தால் அதனை சேகரிக்க பாலிகார்பனேட் பைகள் வைக்கப்பட்டு இருந்தன...தாயின் கருப்பை அளவுக்கு ஏசெப்டிக் சுத்தமாய் இருந்த அப்பைகளை பார்த்தால் வரும் வாந்தி கூட சிக்மாய்ட் கோலன் ( SIGMOID COLON) அளவுக்கு பின்னோக்கி சென்று விடும் என எனக்கு எண்ணம் உதித்தது ...

      அப்போது கேப்டன் குரல் எல்லாருக்கும் கேட்டது..

      ‘’ மின் காந்த புயல் ஏற்பட்டு இருப்பதால் விமானம் 15000 அடிகள் தாழப்பறந்து பத்து நிமிடங்கள் மிக மெதுவாக சென்று பின் மீண்டும் பழைய நிலையை அடையும் ‘’

      குளிரூப்பட்ட கேபினுக்குள்ளும் எனக்கு அச்சத்தில் முன் நெற்றி வேர்த்தது .



      பின்னர் காஷ்மீர் சில்க் ஒப்ப மென்மையான குரலில் பணிப்பெண் அருகில் வந்து இது வழக்கமான ஒன்றுதான் என சொல்லியபோது மூச்சு முட்டியது ..

      மூச்சு முட்டியதற்கு காரணம் அச்சம் அல்ல ..பணிப் பெண்ணின் சுகந்தமான பர்ப்பியூம் ...

      ரணகளத்திலும் .....!!!!



      அப்போதுதான் அந்த அதிசயமான காட்சியை ஜன்னல் கண்ணாடி வழியே காண நேர்ந்தது ...

      எங்கள் விமானத்தின் இறக்கையிலிருந்து வெறும் இருபது அடி தூரத்தில் பிரிஸ்டலில் இருந்து நியூயார்க் செல்லும் எனக்கு மிகவும் பரிச்சயமான ஏர்லைனர் விமானம் எதிர்திசையில் சென்று கொண்டு இருந்தது..

      அதுவும் மின் காந்த புயலை தவிர்க்க தாழ பறந்து மெதுவாக சென்றதால் இரு விமானங்களும் ஒரே இடத்தில் நிற்பது போல் பிரமை ஏற்பட்டது



      இது பற்றி கேப்டன் எச்சரிக்கை ஏதும் செய்யவில்லையே என எண்ணி கொண்டு இருந்தபோதே அவ்விமானத்தின் நேர் எதிர் ஜன்னலோரம் பின்புலத்தில் தெரிந்த வாளிப்பான டேனிஷ் விமானப்பணிப்பெண்ணையும் மீறி தன மொழி நடையாலும் விழி அளவாலும் மிக அறிமுகமான முகம் தென்பட்டது ..

      நம் எடிட்டரேதான் ...........



      உற்சாகமாய் நான் கையை ஆட்ட யாரென்று தெரியாவிடினும் தமிழ் முகம் என்பதாலோ என்னவோ எடிட்டரும் கையை ஆட்டினார் ..

      இப்படியாக அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் மேல் மின் காந்தப்புயல் சூழ காமிக்ஸ் புயலை முதன் முதல் பார்த்தேன் ..

      ............................................................................................................................................



      இப்படி சுவாரஸ்ய சூழலில் எடிட்டரை சந்தித்தேன் என எழுத விரும்பினாலும் நிஜத்தில் ஈரோடு புத்தக திருவிழாவில் லீ ஜார்டின் ஹோட்டல் பக்க நுழைவாயிலோரம் ஒரு பெரும் பதிப்பக பாரம்பர்யம் கொண்ட நெறியாளரை சந்திக்கிறோம் என்ற தடுமாற்றத்தில் பயண களைப்பு எஞ்சி நின்ற முகத்துடன் எல்லாரையும் போல நாக்குளர ஹலோ சார் என்று சொன்னேன்

      .................................................................................................................

      Delete
    13. 19.02.2020 - ல் எழுதப்பட்ட இப்பதிவுக்கு 1 மாதம் கழித்து
      கோவிட் லாக் டவுன் துவங்கியது.

      தினம் ஒரு பதிவு என எடிட்டர் சார் கலக்கலைத் துவங்க தளம் களைகட்டியது. ஆயிரம் பதிவுகள் கண்ட அனாயச நிகழ்வு நடந்ததும் அப்போதுதான். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே தினம் ஒரு பதிவு சம்பவங்கள் எல்லாம் நடக்கும்.

      Delete
    14. அருமையான கற்பனை செல்வம் அபிராமி.

      Delete
    15. இது பற்றி கேப்டன் எச்சரிக்கை ஏதும் செய்யவில்லையே என எண்ணி கொண்டு இருந்தபோதே அவ்விமானத்தின் நேர் எதிர் ஜன்னலோரம் பின்புலத்தில் தெரிந்த வாளிப்பான டேனிஷ் விமானப்பணிப்பெண்ணையும் மீறி தன மொழி நடையாலும் விழி அளவாலும் மிக அறிமுகமான முகம் தென்பட்டது ..

      நம் எடிட்டரேதான் ...........



      உற்சாகமாய் நான் கையை ஆட்ட யாரென்று தெரியாவிடினும் தமிழ் முகம் என்பதாலோ என்னவோ எடிட்டரும் கையை ஆட்டினார் ..

      இப்படியாக அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் மேல் மின் காந்தப்புயல் சூழ காமிக்ஸ் புயலை முதன் முதல் பார்த்தேன்///
      அவருக்கு மேவறம் இருந்த நான் கையையும் காலையும் ஆட்டினதை கவனிக்கமால் டேனிஷ் வகையறாவை மட்டும் கவனித்திருந்த வயதான மருத்துவர் வாழ்க..

      Delete
    16. //இப்ப பாருங்க நம்ப கார்த்திக் பெங்களூரில் அவர் இருக்கும் ஏரியாவில் இருந்து நான் இருக்கும் வர்தூருக்கு புல்லட்டில் கிளம்பி வருவார் பாருங்க:-)//

      "போட்" டில் வருவார் -ங்கறத
      தப்பா " புல்லட்"-டில்னு எழுதிட்டீங்களா?

      Delete
    17. அவருக்கு மேவறம் இருந்த நான் கையையும் காலையும் ஆட்டினதை கவனிக்கமால் டேனிஷ் வகையறாவை மட்டும் கவனித்திருந்த வயதான மருத்துவர் வாழ்க

      அட! வெட் நர்ஸ் நாப்கின் மாட்டிக்கிட்டு இருந்தப்ப கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்த அந்த குழந்தை நீங்கதானா?

      Delete
    18. செல்வம் அபிராமி @ லொல்லு :-)

      பெங்களுரில் நிலவரம் கடந்த இரண்டு நாட்களாக பரவாயில்லை என்பதால் "புல்லட்" என சொல்லி இருந்தேன்:-)

      Delete
  65. காமிக்ஸ் காதலர்களுக்கு இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  66. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  67. சிவந்த மண் - படித்து முடித்த பிறகு கண்கள் பசுமையானது வண்ணத்தில் உள்ள படங்களால் :-)

    ReplyDelete
  68. கைப்புள்ள ஜாக் இரண்டு முறை வாசித்து விட்டேன். இரண்டாம் முறை என மகனுக்கு தினமும் கதை சொல்வதற்காக. சில காமெடியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  69. இளம் டெக்ஸ் வழக்கமான கதை தான் சொன்ன விதம் ரசிக்கும் படி இருந்து. நன்று.

    ReplyDelete
  70. சார் இன்று பதிவுக் கிழமை ...

    ReplyDelete
  71. சார் இன்று பதிவுக் கிழமை ... :-)

    ReplyDelete
    Replies
    1. அடடே ராகவா நீங்களுமா :-)

      Delete
  72. Sir - Please try for Adhiradi Padai digest reprint sir. It was one of my favourites. More the stories, the merrier !

    ReplyDelete
    Replies
    1. நீங்க கேட்ட பிறகு நோ அப்ஜெக்சன் :-)

      Delete
    2. சீக்கிரமே அதிரடிப்படை/பெருச்சாளி பட்டாளம்/மின்னல் படையினர் என எல்லாம் சேர்த்து ஒரு வண்ண இதழாக போட்டுத் தாங்குங்கள் சார்.

      Delete
    3. ஆஹா எல்லாரும் திரும்ப திரும்ப கேட்போம்...

      Delete
    4. அதிரடி படையினரின் சாகசங்கள் காட்டுக்குள் அதுவும் அந்த பெரிய வாகனங்கள் வண்ணத்தில் செமயாக இருக்கும்.

      Delete
  73. அப்படியே சிஸ்கோ கிட்:-)

    ReplyDelete
  74. இன்றய பதிவில் இளம் டெக்ஸ் கொத்து....லயன் 500கம் பேக்....டெக்ஸ் 75 எல்லாம் இருக்காதுன்னு பட்சி பதறுது

    ReplyDelete
  75. ஆசிரியர் உடனான எனது முதல் சந்திப்பு ஈரோடு புத்தக விழாவில் நடந்தது. வருடம் மறந்துவிட்டது. இரத்தப் படம் முதல் கலர் தொகுப்பு வந்த ஆண்டு. அதுவரை ஆசிரியரை போட்டோவில் அவர் நேரிலோ பார்த்ததில்லை. அந்த வருடம்தான் நண்பர்களில் காமிக்ஸ் சந்திப்பு நடந்தது.

    ReplyDelete
  76. மழையில்லா மேகம்
    நிலவில் லா இரவு
    வலையில்லா ஸ்பைடர்
    பதிவில் லா சனியிரவு....

    ReplyDelete
  77. எடிட்டரின் புதிய பதிவு

































    இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  78. தூக்கம் கண்களை இறுக்கி பிடிக்க ஆரம்பித்து விட்டது. தூங்கப்போகிறேன்.

    ReplyDelete
  79. எடிட்டர் சார்.. தளத்தை அடிக்கடி refresh பண்ணி 'நாடி புடிக்கலாம் வாங்க' என்ற தலைப்பை பார்த்துப் பார்த்து.. அது இப்ப 'பீடி புடிக்கலாம் வாங்க'ன்ற மாதிரி நம்ம நண்பர்களுத் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. சீக்கிரமே பதிவு போட்டீங்கன்னா நம்ம நண்பர்கள் 'நடமாடும் புகை சமிக்ஞை' ஆகாமத் தடுத்திட்ட புண்ணியம் உங்களுக்குக் கிடைத்திடும்!

    ReplyDelete
  80. @all
    இன்றைய பதிவு..

    *அக்டோபரில் வரவுள்ள தீபாவளி ஸ்பெஷல் குண்டுபுக் பற்றியதாக இருக்கும்* என்று நினைக்கிறேன்..😍

    ReplyDelete
  81. @Salem Kumar ji..

    ஜி.. வாங்க நாம ரெண்டு பேரும் உடனே போய் புதுபதிவு கியூ வுல துண்டை போடுவோம்.

    ஏகப்பட்ட பேரு கியூவுல waiting..
    😃

    ReplyDelete
  82. Edi Sir..
    இன்று சனிக்கிழமை பதிவ சீக்கிரம் போடுங்க😘
    கை காலெல்லாம் நடுங்குது..

    தலை தானா சுத்துது..

    வாய் கோணிட்டே போகுது..

    சீக்கிரம் பதிவ போடுங்க..😃😄😁😀

    ReplyDelete