Powered By Blogger

Sunday, September 25, 2022

புலியாருக்கொரு கேள்வி !

நண்பர்களே,

மதிய வணக்கம் ! கேள்விகளென்றாலே இங்கே உற்சாகம் ஒரு மிடறு கூடி விடுவதை எண்ணற்ற முறைகள் பார்த்து விட்டோம் & கார்சர் சார்ந்த வினா latest to the list ! உள்ளதைச் சொல்வதனால் சமீப மாதங்களில் நான் கேட்டிருந்த ஏகப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த பதில்கள் நிரம்பவே பயன் தந்துள்ளன ! In particular - 2023 அட்டவணைக்கு உங்களின் inputs செமத்தியாக உதவியுள்ளன ! அக்டோபர் 30 புலரும் போது அது புரியும் ! And நேற்றைய வினாவுமே உங்களின் அபிப்பிராயங்களை தெள்ளத் தெளிவாய் போட்டுத் தாக்கியிருக்க, மெய்யாலுமே சந்தோஷம் எனக்கு - அதனைக் கேட்டு வைத்ததில் ! கலாய் in moderation ; and கதையின் சூழல்களுக்கேற்ப என்று வைத்துக் கொள்வோமே - இனி வரும் காலங்களில் !

While you are in the answering mode - இன்னொரு கேள்வியுமே folks ! கொஞ்ச காலமாகவே நண்பர் ஒருவர் வைத்திடும் கோரிக்கை சார்ந்த வினா இது ! சூட்டோடு சூடாய் இதையுமே சபைக்கு கொண்டு வந்துவிட்டால் "வேணும் - வேண்டாம்" என்பதைத் தீர்மானித்து விடலாமில்லியா ? இதோ விஷயம் :

"முத்து 50-வது ஆண்டினில் அதன் டாப் சாகசங்களுள் பிரதானமான - "தங்கக் கல்லறை" இதழினை MAXI சைசில் ஹார்டகவர் சகிதம் போட ஏன் தயக்கம் ? ஒரிஜினல் தமிழாக்கத்தோடு" என்பதே நண்பரின் கேள்வி ! 

நிஜத்தைச் சொல்வதனால், எனக்கு அந்த இதழும், அதன் நீட்சியான முதன் முதல் ஈஸ்ட்மேன் கலர் மூ.ச.வும் நேற்றைய சமாச்சாரங்களாய்த் தென்படுகின்றன ! So மறுபதிப்புக்கு மறுபதிப்பு - இத்தனை சீக்கிரமே தேவை தானா ? என்ற எண்ணத்தில் பெரிதாய் திட்டமிடவில்லை ! But சமீபத்திலும் நண்பர் மறுக்கா நினைவூட்டியிருக்க, நேற்றைய பதிவிலேயே அதனைக் கேட்டிராது போனோமே என்ற எண்ணம் எழுந்தது ! So சொல்லுங்களேன் folks - ஹார்டபவுண்ட் Limited collector's  எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா ?

Simple & straight answers please 🙏 ?

Bye for now...see you around !



339 comments:

  1. Replies
    1. ஹார்டபவுண்ட் Limited collector's எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா /

      நோ!

      Delete
    2. இது இல்லையெனில் வேறு எதுவும் இல்லை என்ற பதிலாக இல்லாமல் இருந்தால் டெக்ஸின் புதிய வண்ணக் கதையை - 130- 200 பக்கங்களுக்குட்பட்டு ஒரே கதை ஹார்ட் பவுண்டில் ஆர்ப்பரிக்கும் நகாசு வேலை நுணுக்கங்களுடனான அட்டையோடு வெளியிடவும்.

      Delete
  2. ஹார்டபவுண்ட் Limited collector's எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா ?

    YES YES YES YES ☺️

    ReplyDelete
  3. "Yes "to "Thanga kallarai " hard bound .. Also "Yes" to remaining parts of "Illamayil kol " to be published as part of Muthu 50 celebration ..

    ReplyDelete
  4. வேண்டாம் Sir
    புதியதாக
    எதவாது
    முயற்சிக்கலாம்

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. ஹார்டபவுண்ட் Limited collector's எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா /

    நோ!

    Reply

    ReplyDelete
  7. Absolutely yes for maxi hard cover with original translation...

    அப்படியே அந்த காரசனின் கடந்த காலம் மேக்ஸி ஹார்ட் கவர்.. அவரை கலாய்த்ததற்கு பிராய்ச்சிதமாக.

    தல தளபதி காம்போ முன்பதிவிற்கு மட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....அருமையான அட்டகாசமான இனிப்பான ஈர்ப்பான யோசனை. வரவேற்கின்றேன்.ஆதரிக்கின்றேன்.

      Delete
    2. தங்ககல்லறையே வேண்டாம் எனும் போது கார்சனின் கடந்த காலமும் வேண்டாம்:-)

      Delete
  8. டியர் எடி,

    மறுபதிப்புக்கு மறுபதிப்பு, உப்புக்கு சப்பாணியாக ஹார்ட்கவர் ... இதெல்லாம் தேவையில்லாத ஆணிகளே.

    இதை விட கிளாசிக் நாயகர்களின் வெளிவராத தொகுப்புக்கு முதலீடும் நேரமும் ஒதுக்குவது சிறப்பான செயலாக இருக்கும்.

    ReplyDelete
  9. சார் இதென்ன சார் கேள்வி ? தங்கக் கல்லறையைப் போட்டுத் தாக்குங்கள் சார். நாங்கள் என்றும் உங்கள் பின் நிற்போம்.. எங்கள் ஆதரவு என்றென்றும் உங்களுக்கு அமோகமாக உண்டு சார்.

    ReplyDelete
  10. Yes. I like to have the limited edition

    ReplyDelete
  11. மறுக்கா மறுக்கா மறுபதிப்பு எந்த கதை என்றாலும் நோ. அதுவும் சமீபத்தில் மறுபதிப்பான கதைகளுக்கு பதில் வேறு புதிய கதைகள் அல்லது இதுவரை மறுபதிப்பு காணாத கதைகளை மட்டும் கொடுங்கள் சார்.

    ReplyDelete
  12. தங்கக் கல்லறைக்கு ஹார்ட் பவுண்ட்தான் அந்த கதைக்கு மரியாதை செய்யும் அதன் கதைத்தரம் அந்த மாதிரி

    ReplyDelete
  13. // So சொல்லுங்களேன் folks - ஹார்டபவுண்ட் Limited collector's எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா ? //
    தற்போதைக்கு வேண்டாம் சார்,அதற்கு இன்னமுமே நாட்கள் உள்ளதாய் தோன்றுகிறது....
    கார்சனின் கடந்த காலத்திற்கு பொழுது புலரும்பொழுது தங்கக் கல்லறையை தோண்டி எடுத்தால் போதும்,அப்படி வரும்போது ஹார்ட்பைண்டிங்கில் டெக்ஸ் புக் சைஸ் அல்லது ரெகுலர் கார்ட்டூன் புக்ஸ் சைஸ் ஓகே...
    மேக்ஸி சைஸ் வேண்டவே வேண்டாம்...
    மேலும் எனக்கு பிடித்த இதழ்களில் தங்கக் கல்லறையும் ஒன்று என்றாலும் திரும்ப,திரும்ப ஒரே மாவையே அரைத்துக் கொண்டிருப்பது மற்ற இதழ்களுக்கான திறவுகோலை தொலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்...

    ReplyDelete
  14. அமெரிக்க உள்நாட்டு போரில் டைகரின் கதையை பிய்த்து பிய்த்து போட்டதை மொத்தமாக போடலாமே

    ReplyDelete
  15. Yes to தங்கக் கல்லறை. Double Yes

    ReplyDelete
  16. Yes... For Thanga Kallarai.

    Also request for remaining young tiger stories...

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  18. தங்கக் கல்லறை வந்தபோது அந்தக்கதையை பார்த்து மிரண்டு போனவன் நான். அப்போதிருந்து தான் நான் தளபதியின் ரசிகன் ஆனேன். ஆனால் ஏற்கனவே கலரில் மறு பதிப்பாய் இந்த இதழ் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஆகவே அந்தக் கதையில் மறுபதிப்பாக கொண்டு வருவதற்குப் பதில் வேறு ஏதேனும் கதைகளை மறுபதிப்பாக கொண்டு வரலாம் என்பது எனது அபிப்பிராயம். தளபதியின் தீவிர ரசிகனான நானே இந்த கதையை வேண்டாம் என்று கூறுவது துரதிர்ஷ்டமான சூழ்நிலைதான். ஆனால் எதார்த்தம் வேறாக இருப்பதால் அதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை தான். வேண்டுமானால் அதற்கு பதிலாக இளம் டைகர் பாகம் 2,3 கலரில் வெளியிடலாம்.

    ReplyDelete
  19. டியர் எடிட்டர் சார், விருப்பம் இல்லை. வேறு ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் !!

    ReplyDelete
  20. No sir,

    இன்னும் மறுபதிப்பு காணாத பல நல்ல கதைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் Sir

    ReplyDelete
  21. ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் தங்க கல்லறையை.. maxi size இல்..
    மு பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  22. வேணாம் சார்.இதற்கு பதிலாக பிரளயம் கதையை லிமிடெட் எடிஷனில் முன்பதிவுக்கு மட்டும் என்று போடலாம்.அந்த கதையை பெரிய சைஸில் வெளியிட்டால் நன்றாகவே இருக்கும்.கொஞ்சம் ஆபாசம் இருக்குமென்றாலும் பெரிய சைஸில் படிக்கும்போது அந்த கதையமைப்பும் திகில் போர்ஷன்களும் நன்றாக செட் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. +11111111 இந்த மறுபதிப்புகளை கொஞ்ச காலம் ஒத்தி வையுங்கள் சார்.

      Delete
  23. தங்கக் கல்லறை கருப்பு வெள்ளை, கலர் இரண்டிலும் வந்து விட்டது.... அடுத்து வருவதில் என்ன பெரியதான மாற்றம் இருக்கும் எனத் தெரியவில்லை.... புதிய கதைகளை தேர்ந்தெடுப்பது நல்லது....

    ReplyDelete
  24. முத்து 50-வது ஆண்டினில் அதன் டாப் சாகசங்களுள் பிரதானமான - "தங்கக் கல்லறை" இதழினை MAXI சைசில் ஹார்டகவர் சகிதம் போட ஏன் தயக்கம் ? ஒரிஜினல் தமிழாக்கத்தோடு" என்பதே நண்பரின் கேள்வி !

    இதுதான் , இதை தான், இதையே தான் எதிர்பார்த்தோம்..

    ReplyDelete
  25. Maxi size - No
    Maxi Size with hardbound - No No
    Maxi size thanga kallarai with hard bound - No No No

    ReplyDelete
  26. தங்கக் கல்லறை:

    பழைய மொழிபெயர்ப்பில் ஹார்டு கவரில் மேக்ஸி சைசில் தரமாக வர டபுள் ஓகே சார்..

    ஒரு பத்து புத்தகங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் டீன் ஏஜர்களின் பிறந்த நாளுக்கு கிப்ட் ரெடி!!

    ReplyDelete
  27. நோ!

    ஏற்கனவே சொல்லிட்டேன்னாலும், இப்போ 'யெஸ்' சொல்றேன்..

    யெஸ்!!!

    ஆனா ஒரு கன்டிஷன்! மொத்தக் கதையும் 3Dயில் இருக்கணும்!('இரத்தத்தடம்' மாதிரியான 3D இல்லை) மேக்ஸி சைஸ்! அட்டைப்படம் hologramsல இருக்கணும்! உள் பக்கங்களை படித்து ரசிக்க 3D கண்ணாடி இலவச இணைப்பா கிடைக்கணும்!

    விலை கொஞ்சம் கூடுதலானாலும் கவலை இல்லை!

    சாத்தியமா? உங்களுக்கு சாத்தியமா?

    எப்போ பார்த்தாலும் அப்பாவி வாசகர்களான எங்களையே கேள்வி கேட்டு பதிவு போடறீங்களே.. எங்கே இதுக்கு 'முடியும்'னு நீங்க பதில் சொல்லுங்க பார்ப்போம்?!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு நீங்க புக் வேண்டாமென்றே சொல்லியிருக்கலாம் ப்ரோ

      Delete
    2. சர்வ வல்லமை படைத்த நம் எடிட்டருக்கு இதெல்லாம் சப்ப்பை மேட்டருங்க உதய் ப்ரோ! "oh yes!! புக்மார்க் கூட ஹேலோகிராம்லயே கொடுத்துட்டாப் போச்சு!"ன்ற பதிலோட வருவார் பாருங்க!

      Delete
  28. Yes Sir!

    காமிக்ஸின் அருமை தெரிந்தவர்கள் ; கலெக்ஷனின் பெருமை தெரிந்தவர்கள்; காமிக்ஸின் தீவிர ரசிகர்கள்; கலையை ஆராதிக்க தெரிந்தவர்கள்; இப்படி ஒரு பொக்கிஷத்திற்கு சொல்லும் பதில் தான்..

    Yes Sir!

    ReplyDelete
  29. தங்கக் கல்லறை

    ஹார்ட் பவுண்ட்

    Maxi சைஸ்

    இதுவல்லவோ வேண்டும்!

    எப்போ பணம் அனுப்பணும் சார்?!

    ReplyDelete
  30. Thanga Kallarai...Already Reprint Edition only. so you can try this with hard Bound reprint may be after 2 to 3 years Gap sir. But So many books we need as reprint from All Dhigil, All Mini Lion, Old Muthu Stories. Please give preferene to Reprints only to the stories which have not reprinted recently. (NB. We will buy Thanga Kallarai Hard Bound Maxi Size any way).

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எந்த காமிக்சையும் MAXI சைசில் போட எனக்கு 100 சதவிகிதம் பிடிக்கும்.
      அப்படியிருக்கும் போது யதார்த்த நாயகர் புலியார் முதன் முறையாக ஹார்டகவர் சகிதம், மாக்ஸி சைசில்
      முழுவண்ணத்தில் அதுவும் ஹார்ட் பௌண்ட் கவரோடு பட்டாசாய் தெறித்து வெளிவர எனது 200 சதவீத விருப்பத்தினை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

      Delete
  32. நாங்க மொத்தம் நாலு பேர், காமிக்ஸ் புக் கலெக்ஷன்மேல அப்படி ஒரு வெறி, ஒவ்வொருத்தரு ஓட்டும் ஒரு பத்து ஓட்டுக்கு சமம்!

    எனவே ஓட்டெடுப்பை கணக்கில் கொள்ளும் போது எங்களின் இந்த 40 ஓட்டுகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளவும்!

    நீங்கள் எந்த வெளிநாட்டிற்கு கொள்முதலுக்கு சென்றாலும் - இந்த புத்தகத்தை அவர்களுக்கு அன்பின் அடையாளமாக, தரத்திற்கு அத்தாட்சியாக பரிசளிக்கலாம்!

    நாங்களும் ஆளுக்கு இரண்டு என வாங்கி, காலத்திற்கும் உங்கள் புகழை மேலோங்க செய்து வருவோம்!

    ReplyDelete
  33. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    A big no to தங்க கல்லறை

    ReplyDelete
  34. தங்க கல்லறை maxi size with hard cover double ok sir

    ReplyDelete
  35. தங்க கல்லறை

    டைகர் கதை வறட்சியினால் நீங்க இந்த முடிவை எடூத்திருந்தீர்களேயானால்
    கண்டிப்பாக என் பதில் நிச்சயமாக நோ என்றே இருக்கும் .. ஆல்ரெடி இருமுறை கலரில் வந்துவிட்டதே .. வேறு சில கதைகள் தொடர்ந்து வெளியிட முடியாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதை முயற்சி செய்யலாமே ..

    ReplyDelete
  36. இங்கே உள்ள 95% மக்களும் ( சில டைகர் பேன்ஸ்-ம் கூட நோ தான் சொல்கிறார்கள் ) எனவே தங்ககல்லறை யை கல்லறைக்குள்ளேயே புதைச்சிடுவோம் டியர் எடி .. மறுபதிப்பாய் வெளிவராமல் இருக்கும் கதைகளுல்
    சிறப்பான கதை ஒன்றை தேர்வு செய்து 50 ஆண்டு மலர்க்கு அர்பணிச்சிடுங்க எடி

    ReplyDelete
  37. முதல் பதிப்பு பலரிடம் இல்லாவிடினும், கலர் புக் சமீபகாலமாக விற்பனை குழுக்களில் சக்கை போடு போட்ட இதழ். தற்போது சிலரிடம் மட்டுமே இல்லாமல் இருக்கும்.
    பிரபலமான, சுவாரஸ்யமான கதைதான் என வாசகர்கள் போற்றினாலும், இந்த மறு மறுபதிப்பு
    நோ. பதிலாக புதிய கதைகள் வெளியிடலாம். நன்றி 🙏

    ReplyDelete
  38. தங்கக்கல்லறைக்கு எதிர்ப்பு பலமாய் உள்ளதே . ஏன் இப்படி ? Maxi size ல் கெட்டி அட்டையில் வண்ணத்தில் சித்திரங்கள் பெரிதாக அழகாக இருக்குமே . நண்பர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே ?

    ReplyDelete
    Replies
    1. நாம் ஓர் கட்சி நண்பரே

      Delete
    2. ///வண்ணத்தில் சித்திரங்கள் பெரிதாக அழகாக இருக்குமே . நண்பர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே ?////

      "அழகு வண்ணத்தில் ஏற்கனவே வந்ததுதானே.. சித்திரங்களைப் பெரிதாக ரசிக்கவேண்டுமானால் முப்பது ரூபாய்க்கு ஒரு பூதக்கண்ணாடி வாங்கினால் போதாதா?"- என்று நண்பர்கள் நினைத்திருக்கலாம் சரவணன் ஜி! :)

      Delete
    3. விஜய் சகோ, பூதக்கண்ணாடி எல்லா இதழுக்கும் பொருந்துமே ஐரோப்பிய 48, 98 பக்க பட்ஜெட் தாண்டிச்செல்லும் எந்த நீ.........ளமான கதைகளுக்கும் தானே...

      Delete
    4. புக் தான் மேக்ஸி சைஸில் இருக்கும். ஆனால் புக்கின் உள்ளே இருக்கும் பேனல் வழக்கம் போல தான் இருக்கும். இது தேவை இல்லாத முயற்சி. இதற்கு பதில் எத்தனையோ கிளாஸிக் கதைகள் மறு பதிப்பாக வெளியிடலாம்.

      Delete
    5. //புக் தான் மேக்ஸி சைஸில் இருக்கும். ஆனால் புக்கின் உள்ளே இருக்கும் பேனல் வழக்கம் போல தான் இருக்கும்.//

      அறியாமை இது சகோ

      Delete
    6. //புக் தான் மேக்ஸி சைஸில் இருக்கும். ஆனால் புக்கின் உள்ளே இருக்கும் பேனல் வழக்கம் போல தான் இருக்கும். இது தேவை இல்லாத முயற்சி//

      + 111111111

      Delete
  39. No எடி ஜி,
    2012 பிறகு வண்ணத்தில் வந்த தங்க கல்லறை ஒன்றுக்கு மூன்று காப்பியாக கைவசம் உள்ளது,
    மேலும் இதுவரை வெளிவராத டைகர் கதைகள் பல இருக்கும் போது அவற்றின் சிலவற்றை தரமான கதைகளை தேர்ந்தெடுத்து வெளிவிட முயற்சி செய்யலாமே பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இதனை பார்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  40. வருகின்ற வருடம் டெக்ஸ் வருடம் என்பதால் இதுவரை வெளி வராத மறு பதிப்புசெய்யாத மரண தூதர்கள் ,ரத்த நகரம் ,மெக்ஸிகோ படலம் போன்ற கதைகளுக்கு ஒரு வாய்ப்பு வண்ணத்தில் தரலாமே எடி ஜி .

    ReplyDelete
  41. Replies
    1. கென்யாவின் அடுத்த பாகங்கள் நன்றாக இருந்தால் ஓகே.

      Delete
    2. //நோ சார்....அந்த இடத்ல ஓர் கென்யா அடுத்த கதையோ...வேறு கதையோ வரட்டும்//

      + 11111111

      Delete
  42. Hmmm ... My vote is yes but majority mandate even with original dialogues looks to be a no.

    Will wait for few more years. Retire aagum munnar idhai kEttu vaangikkuvom :-)

    ReplyDelete
  43. அல்லது கிளாசிக் நாயகரின் ஒரு தொகுப்பை உள்ளே புகுத்திவிடுங்கள் தங்க கல்லறைக்கு பதிலாக

    ReplyDelete
  44. ஜெஸ்லாங் collection, Sherlock Holmes collection போன்ற

    ReplyDelete
  45. அல்லது மேலே ஒரு நண்பர் கூறியது போல கென்யா போன்ற ஒரு தொகுப்பை புகுத்தி விடுங்கள்

    ReplyDelete
  46. தங்கக்கல்லறை Hardbound பழைய மொழிபெயர்ப்பிற்கு.... Yessss

    ReplyDelete
  47. நோ.

    அதற்கு பதிலாக வெளிவராத டைகர் கதை வந்தால் படிக்க ஆர்வமாக இருக்கும்.

    கலெக்சனுக்காக வாங்கி அடுக்கி வைப்பதால் சிலர் விருப்பப் படலாம். முடிவு உங்கள் கையில்.

    ReplyDelete
    Replies
    1. I am not a collector but it is a worthy album - to be neatly done. Last time in color it had come with a sticker to correct title misprint on first page and several "dialogue in bubble" issues making the panels unclear. Also when I read the old dialogues they were far superior. All in all though we had a reprint we did not have one worth collecting or retaining!

      Delete
  48. தங்கக்கல்லறைக்கு எதிர்ப்பு பலமாய் உள்ளதே தளத்தில். ஏன் இப்படி ? Maxi size ல் கெட்டி அட்டையில் வண்ணத்தில் சித்திரங்கள் பெரிதாக அழகாக இருக்குமே . நண்பர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே ?

    ReplyDelete
  49. நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி. ஆனால் யோசித்துப் பாருங்கள். டெக்ஸின் தலையில்லாப் போராளி சைஸில் தங்கத் தலைவனின் தங்கக்கல்லறை வரும் வாய்ப்பை இழக்க விரும்புகின்றீர்களா ? மறுமறுபதிப்பு என்றாலும் ஸ்டாக்கில் இல்லை. வந்தவுடன் விற்றுத் தீரப் போகிறது. புதிதாகக் காமிக்ஸ் படிப்பவர்களுக்கும் தங்கத் தலைவனை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. அரிய வாய்ப்பை இழக்க மனம் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தலையில்லா போராளியோடு அது நின்று விட்டதே. இப்போது வரும் மேக்ஸி எல்லாமே பெரிய சைஸில் வழக்கம் போல் சித்திரங்களோடு வருவதால் தான் இந்த எதிர்ப்பு என்பது என் யூகம். சித்திரங்களை சிறிதாக வைத்து, மேக்ஸி சைஸில் வந்து என்ன பயன்.

      Delete
  50. தேவையில்லை அதற்கு பதிலாக வேறு கதையை வெளியடலாம்

    ReplyDelete
  51. ஒன்றிரண்டல்ல , ஓராயிரம் யெஸ்'கள் சார்.

    அப்படியே கார்சனின் கடந்த காலம் கதையையும் maxi சைஸில் வெளியிட்டாலும் கூட சில ஆயிரம் யெஸ்'கள் !

    ReplyDelete
    Replies
    1. Yes - agreed to KKK in Maxi Size as well

      Delete
    2. Yes... காமிக்ஸ் பரிசு கொடுக்க சிறந்த புத்தகம் இவை இரண்டும்

      Delete
    3. கார்சனின் கடந்த காலத்திற்கும் BIG NO.

      Delete
    4. KKK - A neat edition is needed for messing up the final page panels to the back cover. Plus due to reduced pages the panels appeared shorter in the color edition. It is worth a reprint in future if not now.

      Delete
  52. Yes.

    ஒரிஜினல் மொழிபெயர்ப்பி்ல் Maxi size ல் வெளியிடப்பட வேண்டிய கதைகள் 2. 1. தங்கக் கல்லறை. 2. கார்சனின் கடந்த காலம்.

    ReplyDelete
    Replies
    1. கார்சனின் கடந்த காலம் ரெகுலர் சைசிலேயே வரணும் மச்சான்.! மேக்ஸி சைஸில் சில அசௌகரியங்கள் உள்ளன.! டெக்ஸ் லில்லருக்கு அந்த ரெகுலர் சைஸ் ஒரு கூடுதல் வசீகரம்..!

      Delete
    2. தலீவர் ஆணியே பிடுங்க வாணாம்னு ஆணித்தரமா சொல்லிக்கிட்டிருக்க, நீங்க இங்க கிச்சு கிச்சு தாம்பூலம் ஆடிட்டிருக்கீங்களே ?

      Delete
    3. தலீவர் சொல்றதை அவரே கேக்க மாட்டாருங்க சார். நாங்க எதுக்கு கேக்கனும்.

      Delete
  53. இதே ரீதியில் போனால் "இளவரசிக்கு ஒரு கேள்வி" ன்னு கேட்டு விடுவீர்கள்.

    மாடஸ்டிக்கு கண்டிப்பாக ஸ்லாட் வேண்டும் சார்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாசம் நடுவாக்கிலே அக்காக்கொரு கேள்வி காத்திருக்கும் சார் !

      Delete
    2. "இளவரசி"க்கு மட்டும் ஒரு Maxi_இதழ் (8 கதைகளுடன்) வெளியிட்டுவிட்டால், அப்றம் - Maxi_இதழ்களுக்கு நிறைய பெ ருமை வந்துசேரும் சார்...

      Delete
    3. Modestykku Smashing 70s mathiri Maxi ithazha?

      Semma supera irukkume....

      Delete
  54. நிறைய நோ தென்படுவதால், ரத்தப்படலம் மாதிரி குறைந்த எண்ணிக்கையில் அதை முன்பதிவில் அடைந்தால் மட்டுமே வெளியீடு என்ற முறையில் அறிவிக்கலாமே. 2022 லயே தான் வரணுங்கறதில்லே. கொஞ்சம் தள்ளி வந்தா கூட ஓகே.

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல ஐடியா, புதுசா காமிக்ஸ் படிக்க முயற்ச்சிக்கும் நண்பர்களுக்கு நான் கொடுக்க விரும்பும் கதை. இன்னொரு காப்பி இருந்தா நல்லது.

      Delete
    2. சகலத்தையும் முன்பதிவு தடத்திற்கு கொண்டு செல்வதில் எனக்கு உடன்பாடு லேது சார் - வாத்து பிரியாணி போட்ட கதையாகிடப்படாதே !

      Delete
    3. புக் பேர் ஸ்பெஷலாக வாய்ப்பு இருக்குமா

      Delete
    4. Definitely pre-booking route can be tried sir - my be in due time.

      Delete
  55. NO

    இந்த ஸ்லாட்டில் வன்மேற்கின் வரலாறு ஒன்றினை கூடுதலாக போடலாம் சார்.!

    ReplyDelete
  56. இப்போதைக்கு வேண்டாம் ஆசிரியரே

    ReplyDelete
  57. I'm a die hard Tiger fan. But NO!
    ஏற்கனவே கலரில், நல்ல தரத்தில் வந்த கதை. I'd buy this with a shrug rather than excitement.

    ReplyDelete
    Replies
    1. Lovely way of putting things in perspective sir 👏

      Delete
  58. @ALL : ஆத்தாடியோவ் ! இந்த முயற்சிக்கு அத்தனை வேகம் இராதென்றே பட்டது எனக்கு ; ஆனால் இத்தினி NO-ஸ்.... அதுவும் தளபதி ரசிகர்களிடமிருந்துமே வரக்கூடும் என்பதை எதிர்பார்க்கவில்லை தான் !

    ஒரு விஷயம் இங்கே நிரம்பவே மகிழச் செய்கின்றது - and அது நண்பர்களின் கலவையான குரல்கள் ! வழக்கமாய் ரியாக்ட் செய்திடா நண்பர்கள் கூட தம் எண்ணங்களைப் பகிர்வது செம heartening !! உங்கள் குரல்களுக்கு சர்வ நிச்சயமாய் மதிப்பிருக்கும் folks - எனது தீர்மானங்களில் !!

    Thanks for the inputs ! Keep them coming please 🙏

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்லிட்டீங்களா சார்...சாரி...

      Delete
    2. சார் டைகர் பேன்ஸா சுத்திட்டிருக்கறவங்கள்ல நிறைய பேர் டெக்ஸோட ஸ்லீப்பர் செல்லுங்க சார்.

      Delete
    3. ஆசிரியருக்கு வணக்கம்,
      தங்க கல்லறை கண்டிப்பாக வேண்டும் என்று கேட்கவில்லை சார்.

      நான் காமிக்ஸ் சுவையூட்ட நண்பர்களுக்கு நம் காலம்காலமாய் ருசித்த கிளாசிக் கதைகளை அன்பளிப்பாய் தருவதுண்டு. அவை எப்போதும் ஸ்டாக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புவதில் என்ன தவறு? இப்போது நீங்கள் போட நினைக்கும் தங்க கல்லறை (ரூ. 300/- ???) இடத்தில் வேறு என்ன சிறந்த கதைகள் கிடைத்து விடக்கூடும்? சாத்தியமாக தெரியவில்லை.

      தங்க கல்லறை, இரத்த கோட்டை, லக்கி லூக் கதைகள், பிரின்ஸ் கதைகள், ஸ்பைடர் கதைகள், சில டெக்ஸ் கதைகள், ஜூலியா கதை ... என்று பட்டியல் நீளும்... இவை கைவசம் இல்லையென்றால் வேறு கதைகள் பரிசளிப்பேன். போன வருடம் என்னை சந்திக்க வந்த நண்பரின் கர்ப்பிணி இல்லத்தரசிக்கு "மனதில் உறுதி வேண்டும்" காமிக்ஸ் கொடுத்தேன்.

      இன்று பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் creative head ஆக பணி புரியும் எனது நண்பர் விவாக பரிசாக இப்பொது அரிதாக கார்சனின் கடந்த காலம் வண்ண புக் பரிசளித்தேன்.

      பரிசளிக்க இப்போதும் ஸ்டாக்கில் உள்ள பிரின்ஸ் கதைகள் தான் எனது தேர்வு. நான் படிக்க விருப்பம் கொள்ளாத நீளமான காமிக்ஸ் வீட்டில் குவிந்து தன கிடக்கின்றன... இன்னொருவர் வேண்டும் என்று சொல்வதை நான் ஒருநாளும் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.

      ஆனால் வேண்டும் என்று விருப்பப்படும் இதழ்களுக்கு தான் எத்தனை போர்க் கொடிகள்? அப்பப்பா...

      Delete
    4. ஆனால் வேண்டும் என்று விருப்பப்படும் இதழ்களுக்கு தான் எத்தனை போர்க் கொடிகள்? அப்பப்பா..

      ####


      இது போர்க்கொடி அல்ல நண்பரே...ஆசிரியர் வேண்டுமா ..வேண்டாமா என வினா தொடுத்து இருக்கிறார்..வேண்டும் என்பவர் வேண்டும் என்கிறார் ..வேண்டாம் என்கிறவர் வேண்டாம் என்கிறார் அவ்வளவே...எப்படி டெக்ஸ் கார்சன் கலாய்ப்பு குறையுங்கள் ..கலாய்ப்பு நோ என்றும் எஸ் என்றும் நண்பர்கள் எப்படி பதிலை கூறுகிறார்களோ அப்படித்தான் இதுவும் ..இதில் போர் எதுவும் இல்லை நண்பரே..:-)

      Delete
    5. okay, sago... நான் எனது குணத்தினை மனதில் வைத்து இதனை சொன்னேன். வேண்டாம் என்று சொல்லி கடப்பது வேறு...... ம்ம்ம் சரி விடுங்கள்.

      Delete
    6. @ஆதி
      நண்பர்களுக்கு காமிக்ஸ் பரிசளிப்பது சிறப்பான செயல் சகோ! நல்லதொரு முன்னுதாரண காமிக்ஸ் வாசகராகத் தொடந்திட என் வாழ்த்துகள்!

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Adi @ நண்பர்களுக்கு காமிக்ஸ் பரிசளிப்பது சிறப்பான செயல் சகோ! நல்லதொரு முன்னுதாரண காமிக்ஸ் வாசகராகத் தொடந்திட என் வாழ்த்துகள்! +1பி


      நன்றி:காபி டீ பன்னு & வடை உபயோகம் விஜய். :-)

      Delete
    9. @ PfB

      ///நன்றி:காபி டீ பன்னு & வடை உபயோகம் விஜய்///

      அது 'உபயோகம்' இல்லைங்க.. 'உபயம்'! (தமிழ்ல ஃபெயிலா நீங்க?)
      'உபயோகம்'னு போட்டீங்கன்னா காபி, டீ, பன்னு, வடையெல்லாத்தையும் நானே தின்னு தீர்த்துட்டதா அர்த்தம்!!

      ஒருவேளை வேணும்னேதான் அப்படிப் போட்றுக்கீங்களோ?!! கிர்ர்ர்...

      Delete
    10. 🤝🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

      Delete
  59. ஆஹா அருமைங்க sir. ஏதேனும் ஒரு வகையில் மீண்டும் டைகர் நம்மிடையே வந்தால் மிக்க மகிழ்ச்சி. என்னிடம் 97ல் வந்த இரண்டு பாகமும், பின்னாளில் திகில் தொகுப்புடன் வந்த பதிப்பும் பின்னர் வந்த மறு மறு பதிப்பும் உள்ளது. ஆயினும் எங்கள் தங்கத் தலைவர் டைகர் வருகிறார் எனில் என்னைப் பொறுத்தவரை டபுள் ஓகே தான்.

    இயன்றால் தங்கக் கல்லறை யுடன் இரும்புக்கை எத்தன் மற்றும் பரோலோகப் பாதை, இரத்தக் கரம் ஆகிய 4 தொகுப்பையும் ஒன்றிணைத்து வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். இவைகள் மட்டுமே ஹார்டு பவுண்டில் இல்லை.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவில் டைகரை நினைவு கூர்ந்ததுக்கு மிக்க நன்றிங்க விஜயன் sir.

    ReplyDelete
  60. காமிக்ஸ்ன் தீவிர ரசிகனாய் நான் இருந்தாலும் ,வாழ்க்கையவே காமிக்ஸ்ன் சுவையாய் நான் வளர்ந்து இருந்தாலும் , நமது அனைத்து காமிக்ஸ் இதழ்களையுமே பொக்கிஷமாய் நான் நினைத்தாலும் மறு ,மறு பதிப்பு கதைக்கெல்லாம் பெரிய நோ தான் சார் என்னை பொறுத்தவரை ..அது எந்த நாயகர் கதையாக இருந்தாலும்...

    நான் கலெக்‌ஷனுக்காக மட்டும் காமிக்ஸ் வாங்குவது இல்லை சார் ..படித்து விட்டு கலெக்‌ஷனில் வைப்பதற்கு வாங்குகிறேன்..எனவே ஏற்கனவே இருக்கும் அதே ,அதே இதழை மீண்டும் எந்த பாணியில் கொடுத்தாலும் *எனக்கு* வேண்டாம் சார்..

    ReplyDelete
  61. No. But I really want some Tiger stories. Please go for young tiger series.

    ReplyDelete
  62. தங்க கல்லறை இப்போது வேண்டாம்

    ReplyDelete
  63. தங்க கல்லறை
    Yes....
    Yes...
    Yes...

    ReplyDelete
  64. ###ஹார்டபவுண்ட் Limited collector's எடிஷனாய் "தங்கக் கல்லறை" போடும் எண்ணமானது உங்களுக்கு ரசிக்கின்றதா ?####

    No sir

    ReplyDelete
  65. கடந்த பதிவு "கார்ஸனுக்கொரு கேள்வி"

    உங்கள் பானி ** YES **

    ReplyDelete
  66. தங்க கல்லறை...! - டபுள் ஓகே

    23 வைரங்கள் அனைத்தும் நார்மல் சைஸ் ஹார்ட் பைண்டிங்கில் இருக்கும் போது இதுவும் அதே சைசில் இருந்தால் கலெக்ஷனுக்கு நன்றாக இருக்கும்....!

    ReplyDelete
  67. NO sir, vendaam. Please put that effort on Young Tiger series, Tiger fans waiting eagerly.

    ReplyDelete
  68. அருமை எடிட்டர் சார்...

    வர வேண்டிய புதியவைகளை எங்கள் கைகளில் தவழ விடலாமே.

    ஏற்கனவே கை வசம் இருக்கும் காமிக்ஸ்களை மீண்டும் மீண்டும் வெளியிடுவது வியாபார நிமித்தம் ஏற்புடையதாக இருக்கலாம்.

    ஆனால் கால ஓட்டத்தில் காமிக்ஸ் மீதே ஒருவித சலிப்பை தந்துவிடும் என்பது நிதர்சனம்.

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. Thanga kallarai reprint no sir. any other new tiger books please.

    ReplyDelete
  71. சார் அனேகமா இதும் லோட் மோர் சீக்கிரமா வந்துடும் போல. அடுத்த பதிவில் வரும் கேள்விக்கான ஐடியாக்கள்.
    1. கிட் ஆர்டினை டாக்புல் எப்ப பாத்தாலும் அடி பின்றாரு. எனக்கு நெம்ப வருத்தமா இருக்கு. டாக்புல் இனி கிட் ஆர்டினை அடிக்காத மாதிரி கதை வரணும். ஆம்/இல்லை
    2. ஸ்பேடர் பெல்காமை அவ்வளவு பெரிய சயன்டிஸ்டை, வயதில் முதியோரை கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசறது நல்லாவா இருக்கு. வரப்போற சினி்ஸ்டர் செவன்ல இந்த மாதிரி வசனங்கள் இடம்பெறாமல் பாத்துக்கவும். இல்லேன்னா டாக்டர் வீட்டுக்கு நாங்க ஆட்டோ அனுப்புவோம். ஆம்/இல்லை.

    இன்னும் சில பல ஐடியாக்கள் இருக்கு. வீட்ல கோழிக்கு ஷேவிங் பண்ணி மேக்கப் போட கூப்பிடறாங்க. முடிச்சுட்டு வந்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. ////2. ஸ்பேடர் பெல்காமை அவ்வளவு பெரிய சயன்டிஸ்டை, வயதில் முதியோரை கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசறது நல்லாவா இருக்கு. வரப்போற சினி்ஸ்டர் செவன்ல இந்த மாதிரி வசனங்கள் இடம்பெறாமல் பாத்துக்கவும். ///

      சேச்சே...இஸ்பெடைர் வாயால வாழ்த்து வாங்க புண்ணியம் பண்ணி இருக்கணும்பா....

      பெல்காமோ
      பப்பிள்காமோ எதானாலும் எங்க டானை டலைவரு வாழ்த்துவாரு...🤪

      ருல்ஸ் லாம் டெக்ஸ் வில்லருக்குத்தான்...🤭

      சரி உன் பேச்சே வெச்சிகிட்டாலும் இப்ப உள்ள இஸ்பெடைர் புக்குகள்ல எல்லாம் வயசான பெல்காமை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளதுலாம் பிளேடு வெச்ச அழிச்சிருவாங்களோ😉

      இல்ல நாங்க ஊருக்கு மட்டுமே உபதேஷ் பண்ணுல,இதெல்லாம் இனி தொட மாட்டோம்னு சொல்வாங்களோ...

      Delete
  72. தங்ககல்லறை + கார்சனின் கடந்த காலம் MAXI Size
    தல தளபதி கலெக்டர்ஸ் ஸ்பெஷலாக போட்டு விடுங்கள் சார்.
    (படைப்பாளிகள் அனுமதி சிக்கலால் இப்போது முடியாவிட்டாலும் சில வருடம் கழித்தாவது)

    ReplyDelete
  73. ///கலாய்ப்பு நோ என்றும் எஸ் என்றும் நண்பர்கள் எப்படி பதிலை கூறுகிறார்களோ அப்படித்தான் இதுவும் ..////---- என்ன பணுவது தல... கைமேல பலன் கிடைக்கும் னு யாரும் எதிர்பார்க்கல அல்லவா!!!!

    டெக்ஸ் புக் வாங்கி பரண்ல அடுக்குறவங்களாலயே டெக்ஸ், கார்சனை கலாய்ப்பதை தாங்க்க்க முடியலனு சொன்னா டெக்ஸ் ரசிகன் கம்முனு போனாம்ல...

    உப்ப அதே ரிஜக்ட் டைகருக்கு வந்திருக்கு.. தீர்ப்பு கொடுத்தது அதே மக்கள்ஸ்.. இப்பவும் அதே மாதிரி கம்முனு போகணும்ல...ஆனா நாங்க போமாட்டம்ல.. ஊருக்கு தானே உபதேசம் பண்ணுவோம்...🤪

    ReplyDelete
    Replies
    1. விஜயராகவன் - Tex vs Carson கலாய்ப்பு வேறு - முத்துவின் 50ம் ஆண்டு மைல்கற்களில் ஒன்றாக தங்கக்கல்லறை மாக்ஸி Hardbound கேட்பது வேறு. ரெண்டையும் ஏன் ஒண்ணாக்குறீங்க? நமக்கு வேணும்ங்கிறதை கேக்கறதுல என்ன ப்ராபளம்?

      Delete
  74. தவிக்குதே நெஞ்சம் தனிமையில்...
    தடையாய் பாதையில் பாவி செவ்விந்தியர்கள்...
    தப்பியோடி காணத் துடிக்கிறேன்.. அந்த சின்னப் பெண்ணை..என் அழகுச் சிலையை…!

    அந்த அழகுச் சிலையை.. நான் பிரிந்து வந்த என் காதல் தேவதையை..!

    லினா மற்றும் கிட் கார்சன்..😘

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாட்டுதான்.... லயன் காமிக்ஸ்ஸின் 50வது ஆண்டுல கா.க.கா. மறு மறுபதிப்பாக போடலாமணு கேள்வி வரும்... அப்ப உபயோகமாக இருக்கும்...😍

      Delete
    2. போனமுறையே ஒரு மாசக் கதறல் வீணாய் போனதுதான் பலன் மாம்ஸ்.!

      மறுபதிப்பில் போய்ப் பாரு..!

      Delete
    3. ஏழை சொல் அம்பலம் ஏறாது..!

      Delete
    4. Same for Thangakkalarai old dialogue edition also KoK ...!

      Delete
    5. /* லயன் காமிக்ஸ்ஸின் 50வது ஆண்டுல கா.க.கா. மறு மறுபதிப்பாக போடலாமணு கேள்வி வரும்... அப்ப உபயோகமாக இருக்கும்.*/

      அப்போ நம்மில் பலருக்கு காலம் கடந்திருச்சதுன்னா கஷ்டமுங்களே - அதுனால இப்போவே கேட்டு வாங்கிடுறது நல்லதுன்னேன் :-)

      Delete
  75. புலியா அல்லது புலித்தோல் போர்த்திய புளியா?!

    இங்கு நடப்பதை எல்லாம் பார்த்தால் தேர்ந்த நாடகம் போல் அல்லவா உள்ளது :(

    ஒருவேளை அப்படி இருக்குமோ ?!அதேவேளை இப்படியும் கூட இருக்குமோ?!

    ஒரு பெரிய கோட்டை நாங்கள் தாண்டி விட்டதால், அதை சிறிய கோடாக காட்ட புலி எனும் அதைவிட பெரிய கோடு தான் வரையபட்டதோ?!

    இங்கு உலவும் இரவு கழுகுகள் தான் பதில் சொல்ல‌ வேண்டும்!?

    நாடகமே உலகம், நமக்கும் அதில் ஒரு வேஷம், அதில் கிடைப்பதோ அன்றாடம் துவேஷம் :(

    ReplyDelete
  76. மறுபதிப்புகளை இனிமேல் சற்று குறைக்கலாம் சார்.ஏனென்றால் எத்தனையோ கதைகள்,கதைக்களங்கள், இன்னும் நாங்கள் பார்த்தே இருக்காத ஹீரோக்கள் என பல பொக்கிஷங்கள் எவ்வவோ இருக்கின்றதே.நம்மில் பெருவாரியான வாசகர்களின் விருப்பத்திற்காகவும் நமது பால்ய காலத்து ஹீரோக்களை தரிசிக்கவும் Smash70,Smash 60 என வெளியிட்டு வெற்றியும் கண்டீர்கள்.ஆனால் அதற்காக 50,40 என்றே பின்னோக்கி போய்விடக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  77. கெழவனுக வர்ற பிரெஞ்சு புரச்சி கிராபிக் நாவலுக்கு பதிலா தங்கக் கல்லறை மாசா மாசம் பதிப்பிக்கலாம் :-) ;-)

    ReplyDelete
    Replies
    1. KS +1

      'கெழவனுக' ?!!

      அந்தக் கதையில் வரும் தாத்தாக்களின் சம்பாஷனைகள் + லொள்ளுகள் + நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒன்னு தோனும்! இன்னும் சிலவருசங்கள் கழிச்சு (அல்லது இப்பவே ) - இந்தத் தாத்தாக்கள் எல்லாம் வேற யாரும் இல்லை - அட இது நாம தான்னு!!

      நாமதான்னா நாம எல்லோருமேதான்!!

      'கெழவனுக'?!!

      Delete
    2. Kumar Selam - if you just get in the sense of the 50th year of the iconic Muthu comics and Blueberry that revitalized the once sagging Muthu circulation - you would understand what is being asked. I have the Graphitti Design's English collect of whatever blueberry stories published in Maxi Hard Bound. Amazing to say the least. All we are asking is two parts in that format so that years later into our retirement we can look back with pride.

      If you miss Muthu 50 there ain't a proper occasion where this can be part of Tamil Comics History.

      Compared to this saga (or even the other Blueberry sagas - Kelavan french purachchi is just another tale. It is in fact not fair that you can compare any Blueberry album with Kelavan comich :-)

      Delete
    3. Certain things are not about reprint or resale - it is about the sense of historic occasion that is being celebrated - you would always have a couple of repeats for such occasions and for Muthu 50 WITHOUT a classic Blueberry is just unthinkable.

      Delete
    4. Sir you can ask for Blueberry but you can't degrade the other book. As i am a die hard Blueberry fan my self. And I have not compared Blueberry with any other book and you only compared the same with Old geezers. And Just scroll up and see that I've voted for தங்கக் கல்லறை and I'm also disappointed that majority have not voted in our favor. We have to move on whether we like it or not.

      Delete
    5. Saw all that. My point was for Ol' geezers in comparison with Blueberry and nothing else. I repeat Old Geezers is just yet another story and does not mean I degrade it - I liked it as I had stated earlier in my review but all I am stating is a comparison. For me it is unthinkable that average fares like Alpha, Rubin and an alright Old Geezers find space in the 50th year of Muthu where a Blueberry classic could not !!

      Again when I say Alpha, Rubin, Old Geezers - it is the original itself that is hap-hazard and the Tamil versions just reflect the plain lines.

      Delete
  78. இல்லை சார். வேண்டாம்

    ReplyDelete
  79. சென்ற வாரம் சில நாட்கள் அரியதாக பணிச்சுமை குறைந்ததால் சில-பல காமிக்ஸ்களை படிக்க முடிந்தது:

    1) லக்கி லூக் சிறப்பிதழ் - super 
    2) ரூபின் - No Go - ஒன்ற முடியவில்லை 
    3) சிக் பில் - decent 
    4) ஜானி - has become stale - out of sync with time 
    5) SODA - காலனோடு கூட்டணி - Refreshing
    6) Mata Hari - எனக்குப் பிடித்திருந்தது (இரண்டாம் வாசிப்பு - மக்கள் கழுவி ஊற்றினார்களே என்று மறுபடியும் வாசித்துப் பார்த்தேன்)
    7) போர்முனையில் தேவதைகள் - Oh No - No go !!

    Also completed all smashing 70s so far published. Warm and light reading - relaxing for the mind. Classics track-ஐ நிறுத்தி விடாதீர்கள் சார் !

    ReplyDelete
  80. தங்கக்கல்லறை Maxi size ல்.........அருமை!
    நம்ம கதை வழக்கம்போல எதை எடுத்தாலும் மூணு தான்!!!
    எப்போ சார் பணம் அனுப்பட்டும்?

    ReplyDelete
  81. தங்கக் கல்லறைக்கு NO சார்.

    அதற்கு பதில் மீதம் இருக்கும் 'இளமையில் கொல்' ஒரு சில பாகங்களையாவது போட முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  82. தல வாக்கெடுப்பும், தங்க கல்லறை வாக்கெடுப்பும்....

    இரண்டு நாள் நல்லா ஜாலியா போனது.... நிறைய எதிர்பாரா ரிசல்ட்கள், ட்விஸ்ட்கள், காமெடிகள் அறங்கேறி வார இறுதியை எக்ஸைட்மென்ட் ஆக வைத்தன....

    ஒரு சில பாடங்களையும் இந்த வாக்கெடுப்புகள் சுட்டி காட்டுகின்றன......

    சரக்கு முறுக்கா இருக்கணும் என்பதில் நண்பர்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக சொல்லி உள்ளனர்.....

    தல , கார்சனை கலாய்ப்புக்கு எதிர்பார்த்தது போலவே 70:30னு இருந்தது.....

    சமீபத்திய நாட்களில் தங்க கல்லறை& கார்சனின் கடந்த காலம்--2ம் மறு-மறுபதிப்புக்கான கோரிக்கைகளில் இருந்தன.
    அவற்றின் நிலைப்பாடு என்னானு தெளிவாக 2வது வாக்கெடுப்பு காட்டிட்டது...

    தங்க கல்லறையில் அறிமுகமாகி தலைக்கு டஃப் பைட் கொடுத்து அந்த சமயத்தில் டாப்பாக இருந்த டைகரின் மறுபதிப்பு கோரிக்கை முதலில் வந்தது, சீனியாரிட்டி படியே. ரிசல்ட்டுதான் நிதர்சனத்தை தெளிவாக காட்டிட்டது.

    சனிக்கிழமை வாக்கெடுப்பில தலைக்கு நிறைய ஆதரவு இருந்தது, அதே ஆதரவு தொடருமானு தெரிஞ்சிக்க கார்சனின் கடந்த காலம் மறு மறு மறுபதிப்பு வோட்டிக்கை முதலில் வைத்து இருந்தால் என்னாவது???
    தலைக்கு இன்னும் கொஞ்சம் "பலமாக" விழுந்திருக்குமோ🤣🤣🤣
    ..
    தலையின் தலை தப்பியது...😉
    நீ வழக்கம் போல கெத்து நடை போ தல.....

    ஐரோப்பாவில் யாரு கிரியேட் பண்ணிய புள்ளையோ ராசா ஊடால வந்து தலையோட தலையை காத்த..நீ நல்லாயிருக்கணும் ஐயா...


    ReplyDelete
    Replies
    1. மதி மயக்கும் காமிக்ஸ்....

      வழக்கமாக மீ எமோஜனலாக இருப்பேன்... யெஸ்டர்டே நம்ம ப்ரோ எக்ஸைட்மன்ட் ஆகிட்டாரு.....

      சனிக்கிழமை வாக்கெடுப்பு செல்லாது, இங்கே எல்லா வாசகர்களும் இல்லை; தான் கலந்து கொள்ளவில்லை என்றாரு... சரி தெளிவாக இருக்கிறாருனு நினைச்சேன்

      கொஞ்சம் நேரத்திலயே வந்த 2வது வாக்கெடுப்பு அவர் கிஃப்ட் கொடுக்க நினைச்ச
      தங்க கல்லறை பற்றியது என்றவுடன், ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் எடுத்த நிலைப்பாடை மறந்திட்டாரு....

      த.க. வுக்கு சீரியஸாக வாக்களித்து வெற்றி பெறும்னும் நம்பிட்டாரு போல..அவசரப்படாம செயல்படும் அவரையும் எக்ஸைட்மண்ட் ஆக்கி சற்றுமுன் தான் சொன்னதை மறக்க வெச்சிட்டதுல்ல இந்த "மதிமயக்கும் பொம்மை புக்"...

      த.க.வுக்கு வாக்களிக்க இங்கே அனைத்து ரசிகர்களும் இல்லை என்பதை எப்படி சட்டுனு மறக்க வெச்சதுல்ல. அதான் காமிக்ஸ். அவரோட எக்ஸைட்மண்ட் பார்த்து எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது...
      அதான் கொஞ்சம் ஒரு கலாய்ப்பை பண்ணிவிட்டோம்.
      ஜாலியாக கலாய்த்து ஃபன் பண்ணத்தானே ப்ரெண்ட்ஸ்!

      நண்பர்கள் வாக்களிப்பு அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதை அவரால் அக்சப்ட் பண்ணிக்க இயலவில்லை என்பது அவரது ஏமாற்றத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது..விரைவில் அவர் எதிர்பார்த்தது கிடைக்கட்டும்💐💐💐💐💐

      Delete
  83. Reprints , Re-Reprints , Re-Re-Reprint கள் நமக்கு புதிதல்லவே !
    தங்க கல்லறை RRR க்கு மட்டும் ஏனிந்த எதிர்ப்பு நண்பர்களே ???
    ஹார்டு கவரில் maxi சைஸில் பழைய B&w பதிப்பு மொழிபெயர்ப்பில் அந்த கதையை படிப்பது , ஒரு அபாரமான வாசிப்பு அனுபவம்.

    மிஸ் பண்ணீறாதீக , அப்புறம் வருத்தப்படுவீக.

    ReplyDelete
  84. வேண்டாம் ஆசிரியரே... அதற்கு பதில் பீரோவில் தூங்கும் பழைய ஹீரோக்களை தூசி தட்டி எழுப்பி ஒரு குண்டு புக்காக போடலாமே.

    ReplyDelete
  85. இன்னிக்கி எதைப்பற்றி வாக்களிக்கணும் ஆசிரியர் சார்??

    2நாளாக ஓட்டுபோட்டு எக்ஸைட் ஆக உள்ளதே.. அக்கா, அண்ணன்னு யாரும் சந்தாவுல பிடிக்கணுமா வேணாமானு ஏதும் போட்டு விடுங்க சார்!!!

    ReplyDelete
  86. தேவையில்லை அதற்கு பதிலாக வேறு கதையை வெளியடலாம்.
    அமெரிக்க க்ரைம் கலெக்ஷன்.

    ReplyDelete
  87. தங்க கல்லறை நோ

    ReplyDelete
  88. ஸ்பைடர் படையில் ஒரு நாள்....

    ஸ்பைடர்: ஹே.... ஆர்டினி செல்லக்குட்டி...!
    கில்லி, கோலின்னு விளையாட போவியா, அது விட்டுட்டு இது என்ன பெரிய பிஸ்தா மாதிரி பொம்மை புக் படிக்கிற?

    ஆர்டினி: ம்கூம்.... என்னை எப்படியெல்லாம் நீங்க வசை பாடியிருக்கீங்கன்னு நம்ம பழைய புக்ல இருந்து நோட்ஸ் எடுக்கிறேன்... சீக்கிரமே மனித உரிமை கமிஷன் உங்க மேல பாயுதான்னு இல்லையான்னு பார்க்க தானே போறீங்க...?

    பெல்ஹாம்: அடேய் ஆர்டினி, நீ பண்ண டுபாக்கூர் வேலைக்கு எல்லாம் சைத்தான் விஞ்ஞானியோடு பாஸ் உன்னையும் சேர்த்து உலகமே விட்டு வேறே கிரகமே கடத்தியிருக்கணும்.... திட்டினதோடு விட்டாரேன்னு சந்தோஷப்படுவியா? அது விட்டுட்டு.....

    ReplyDelete
  89. If you release Thanga Kallarai Reprint, definitely I'll purchase for collection (Editor) Sir. But personally I will say No... instead if you go for Namibia or other stuffs (Like Kenya), it would rather interesting and highly appreciated sir. This would be my humble request sir.

    ReplyDelete
  90. வணக்கம் ஃப்ரெண்ட்ஸ், நலம் நலமறிய ஆவல்!

    வெகு நாட்களாகிவிட்டன, உண்மையில் மாதங்களாகியும் விட்டன - பதிவுகளைப் படித்தோ ; அதற்கான கமெண்டுகளைப் பார்வையிட்டோ?!

    மொபைல் எண்ணை மாற்றி விட்டதால், நண்பர்களால் என்னிடம் பழைய காலம் போல் காமிக்ஸ் கதைகள் பற்றி காரசாரமாக அளவளாவ முடியவில்லை அவர்களுக்கு! ( இங்கு ஒரு வருத்தமான முகபாவம் ஒன்று மட்டும்)

    ஆனால் காமிக்ஸ் படிக்கும் காளையவர்கள், லேசுபட்டவர்களா ?! என்ன?!

    தொடரும் - (இது தாங்க இப்ப ட்ரெண்டு)

    ReplyDelete
    Replies
    1. என் அருமை நண்பர்களிடம் இருந்து ஏதாவது அஞ்சல் அட்டைகள் வாரம் தோறும் தவறாமல் என்னை வந்தடையும்!

      அதில் முக்கியமாக வரும் செய்திகள் எவை என்றால் -

      1. சார், நீங்க இன்னும் காமிக்ஸ் படிக்கிறீங்களா?!

      2. ஏன் உங்களுடைய மொபைல் எண்ணை எங்களிடம் பகிர்வதில்லை?

      3. முன்பு போல் லயன் வலைதளத்தில் ஏன் கமெண்ட் போடுவதில்லை?

      4. பயந்துட்டியா குமாரு?

      5. சார், லயன் பிளாக் ஃபுல்லா ஒரே டெம்ப்ளேட் கமெண்ட்டுங்க.. செம போர் அடிக்குதுங்க சார்...

      6. இந்த மாசம் பாத்தீங்கன்னா... சமுதாய அக்கறையப்பற்றி, தாத்தாங்க கதையில பேசுறாங்கன்னு ஒரு அக்கப் போருங்க :(

      7. அதுல ஒரு ஆபிசர் வேற, தாத்தா தான் தி பெஸ்ட் ஆப் தி இயர் அப்படின்னு சொல்றாருங்க :(

      8. சார் உங்களுக்கு பிளேடு பத்தி தெரியுமா?!

      9. பிளேடு சாருடைய பதிவுகள் ஒவ்வொன்னும் செம.. அடி தூள்.. நீங்க கண்டிப்பா படிச்சு பாக்கணும்..

      10. முன்னாடி எல்லாம் பிளேடு மாதிரி நிறைய பேர் இருந்தாங்களாம்...

      11. இப்ப பிளேடு சார் மட்டும்தான் செம கலக்கு கலக்கிட்டு இருக்காரு...

      அப்படி இப்படின்னு இன்னும் பல சங்கதிகள் எழுதிக் கொண்டே இருந்தார்கள்...

      சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று தான் வந்தேன். வந்தவுடன் பதிவில் ஒரு கேள்வி, அந்த கேள்விக்கும் பதில் அளித்தேன்!

      யார் சார் அந்த பிளேடு?! எனக்கே பாக்கணும் போல இருக்கு !!

      Delete
  91. ///கெழவனுக////

    --போன பதிவுல வயசை காட்டி கார்சனை கிண்டல் அடிக்க கூடாதுனு சொன்னவங்களாம் எங்க சார் போயிட்டீங்க...🤭

    ReplyDelete
    Replies
    1. Carson needling was inside the story. Kelavan kindal is about the book in comparison with Blueberry adventures - both are not same ;-)

      Delete
    2. Yes...both r not same..but more worsen then Carson needling...🤣🤣🤪

      Delete