நண்பர்களே,
வணக்கம். வயசாகி விட்டதென்பதை உணர்ந்திட கண்ணாடியில் தெரியும் வெள்ளைமுடிகளை முறைத்து முறைத்துப் பார்க்க அவசியமில்லை ; அந்த வெள்ளைக்கற்றைகளை மறைக்கக் கரிச்சட்டிகளுக்குள் தலையை முக்கியெடுக்கும் அவகாசங்கள் சுருங்கிக் கொண்டே செல்வதைக் கணக்கில் கொள்ளவும் தேவையே இல்லை ! மாறாக, கல்யாண சீசனில் வந்து குவியும் அழைப்பிதழ்களின் எண்ணிக்கையிலேயே தெரிந்து விடுகிறது - நம்மள் கி அகவை என்னவென்று ! முன்னெல்லாம் அம்மா-அப்பாவுக்குப் பத்திரிகைகளைத் தந்து விட்டு - "நீங்களும் வந்துடுங்க தம்பி !" என்றபடிக்கே கிளம்பியோரெல்லாம் இப்போது நமக்கென தனியாய் ஒரு கார்டையும் ; 'சித்தப்பு...பெரிப்பு..மாம்ஸ்...மாம்பா...மச்சான்' என்று டிசைன் டிசைனாய்க் கடுப்படித்து விட்டுச் செல்லும் போதே புரிந்துவிடுகிறது - காலச்சக்கரங்களின் சுழற்சி நம்மை எங்கென கொணர்ந்து நிறுத்தியுள்ளதென்பதை ! So முகூர்த்த சீஸனும் துவங்கி, நெட்டுக்கு புதன், வியாழன், வெள்ளி என்று முகூர்த்த நாட்களும் ரவுண்டு கட்டியடிக்க, கல்யாண வீடு ; நிச்சயதார்த்தம் என்று எதெதெற்கோ கிளம்பிப் போய்க்கொண்டே இருந்தது போலாகி விட்டது - செவ்வாய் இரவு முதலே ! So பதிவுப் பக்கமும் சரி, பணிகளின் பக்கமும் சரி, இந்த வாரத்தின் முழுமையிலுமே எட்டிப் பார்த்திட இயலவில்லை ! And காத்திருப்பது தீபாவளி மாதமெனும் போது - டெக்சில் சுமார் 500 பக்கங்களும், ZAGOR-ல் இன்னொரு வண்டியும் வெயிட்டிங் ! So உள்ளுக்குள் லைட்டாய் உதறலோடே பணிகளுக்குள் நேற்றிரவு முதல் புகுந்தேன் - 2 ஹார்ட்கவர் இதழ்களையும் காலத்தில் கரைசேர்த்தாக வேண்டுமே என்று !
ZAGOR !!
போனெல்லியின் இந்த நாயகரை நாம் வாங்கி கணிசமாகவே காலம் ஓடி விட்டது ! ஏதோவொரு கொரோனா லாக்டௌன் சமயத்தினில் வாங்கியிருந்தோம் இவருக்கான உரிமைகளை ! And நடப்பாண்டின் ரெகுலர் அட்டவணைக்குள் - ஒன்று கென்யாவை நுழைத்தாகணும் ; அல்லது ஸாகோரை புகுத்திடணும் என்றதொரு இக்கட்டு முன்நின்றது - பட்ஜெட்டின் காரணமாய் ! காத்திருப்புப் பட்டியலில் "கென்யா" இன்னமுமே சீனியர் என்பதால் அட்டவணைக்குள் துண்டை விரிக்க அது முந்திக் கொண்டது & போனெலியின் இந்தப் புது வரவு இதோ - காத்திருக்கும் இந்த அக்டோபர் வரையிலும் தேவுடு காக்க வேண்டிப் போனது !! நிஜத்தைச் சொல்வதானால், ஸாகோரின் சாகசங்களை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாய்ப் பராக்குப் பார்த்து வந்திருந்த போதிலும், அவரை நமது அணிவகுப்புக்குள் கொண்டு வர பெரிதாய் ஒரு ஆர்வமோ, முனைப்போ தோன்றியதில்லை ! "இந்த மனுஷன் கௌபாய் மாதியும் தெரியக் காணோம் ; டார்ஜான் மாதிரியும் தோன்றக் காணோம் - இவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது ?" என்ற நினைப்பே காலமாய் ஓங்கியிருந்தது ! மேஜிக் விண்ட் போல் இந்தச் சிகப்பு பனியன்காரரின் சமாச்சாரத்திலும் சாத்து வாங்கிடப்படாதே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருந்தது ! ஆபத்பாந்தவர்களாய் வந்தோர், சுமார் ஒன்பதாயிரம் மைல்கள் தொலைவிலிருக்கும் முகமறியா பதிப்பகத்தினர் ! இங்கிலாந்தின் CINEBOOK பதிப்பகமானது பிராங்கோ-பெல்ஜியப் பெருங்கடலுக்குள் மூழ்கி முத்துக்கள் பலவற்றைச் சேகரித்து அற்புதமான ஆங்கில மொழியாக்கத்துடன் வெளியிடத் தொடங்கியது நமக்கு எத்தனை சகாயங்களை செய்துள்ளதென்பதை க்ரீன் மேனர் ஆல்பங்களும் சரி ; லார்கோ ; XIII ; XIII மர்மம் ; கிளிப்டன் ஆல்பங்களும் சரி - கதை கதையாய்ச் சொல்லும் ! என்னதான் நாமிங்கே பிரெஞ்சு மொழிபெயர்ப்பினைத் தெளிவாகச் செய்திட முனைந்தாலும், பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டோரோடு போட்டி போடவாவது முடியுமா ? அவர்களது செமத்தியான ஆங்கிலப் படைப்புகள் நமக்கு என்ன மாதிரியாய் உதவியுள்ளனவோ, அதே பாணியில் இத்தாலிய நல்முத்துக்களைத் தேர்வு செய்து அழகான மாலையாக்கி வரும் அமெரிக்க EPICENTER காமிக்ஸ் பதிப்பகமானதும் உதவிடக்கூடும் என்பதை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் உணர்ந்தேன் ! டைலன் டாக் ; டெக்ஸ் ; ஸாகோர் என போனெல்லியின் cult ஹீரோக்களை அட்டகாசத் தரத்தில் இங்கிலீஷில் அவர்கள் வெளியிடத் துவங்கியிருக்க, நமது ஆர்வ மீட்டர்களும் மெது மெதுவாய் உயரத்துவங்கின ! கூடவே கொஞ்சம் பயமுமே !! பயம் because - மேஜிக் விண்ட் தொடருக்குள் நான் தலைநுழைக்கத் துணிந்ததுமே இதே அமெரிக்கப் பதிப்பகத்தின் ஆங்கில மே.வி. ஆல்பங்களைப் பார்த்துத் தான் ! So 6 பாக ஆல்பமாய் ஸாகோர் அங்கே அறிவிக்கப்பட்ட போது பெருசாய் நான் சபலம் கொள்ளவில்லை ! 'வரட்டும்...எப்படி இருக்குன்னு பார்க்கலாம் !' என்பதே எனது ஆரம்ப ரியாக்ஷன் !
ஸாகோர் மீதான எனது மித ஆர்வத்துக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது !! டெக்ஸ் தொடரைப் போலவே இதுவும் செம நீளமான ரயில்பெட்டி ! 1961-ல் துவக்கம் கண்டுள்ள இந்த நாயகரின் சாகஸங்களின் எண்ணிக்கை 700-க்கு அதிகம் ! ஆனால் டெக்ஸ் வில்லரில் எவ்வித அறிமுகங்களும் இல்லாது, தொடரின் நடுவாக்கில் ஏதோவொரு கதையினை in random தேர்வு செய்து, 'பப்பரக்கா' என்று புகுந்திட்ட போதிலும், யாருக்கும் எவ்வித நெருடல்களோ, குழப்பங்களோ இல்லாது போனது போல இங்கே ஸாகோருக்கும் சாத்தியமாகிடாதென்ற பயம் எனக்குள் கணிசம் ! இந்த நாயகருக்கு நிச்சயமாய் ஒரு flashback இருக்கும் ; அதைச் சொல்லாது, குறுக்கால ஏதோவொரு கதையிலிருந்து நாம் ஆரம்பித்து வைத்தால் சப்பல்ஸ் பிய்வது சர்வ நிச்சயம் என்பதை ரொம்பச் சீக்கிரமே உணர்ந்திருந்தேன் ! ஆனால் ZAGOR-ன் அந்த 1960's ஆரம்ப ஆல்பங்களின் ஆர்ட் ஒர்க், ரொம்பவே தியாகராஜ பாகவதர் புராதனத்தோடு காட்சி தந்து மிரட்டிக் கொண்டிருந்தது ! பற்றாக்குறைக்கு அந்நாட்களின் அந்த ஜாகஜங்களில், மாங்காய் நறுக்கும் கத்திகளைக் கொண்டு டைனோசர் சைசிலான முதலைகளோடு ஸாகோர் மல்லுக்கட்டுவதும், சப்பட்டையான அவரது டிரேட்மார்க் கோடாரியைக் கொண்டு பீம்பாய்களை வீழ்த்துவதையும் லைட்டான 'கெக்கேபிக்கே' சகிதமே பார்க்கத் தோன்றியது ! So அமெரிக்காவில் Epicenter பதிப்பகமானது ஸாகோரைக் கலரில் களமிறக்கும் தகவல் காதில் விழுந்த சமயத்தில் கூட, பழைய பஞ்சாங்கத்துக்கு மேக்கப் போடப்பட்டிருக்கும் என்றே நினைத்திருந்தேன் ! ஆனால்...ஆனால்...அவர்களது முன்னோட்டங்களைப் பார்க்கப் பார்க்க கடைவாயெல்லாம் ஜொள்ளு பொங்கத் துவங்கியது - becos அங்கே பிதாமகர் போனெல்லியின் பெயரோடு M.BOSELLI என்றொரு பெயருமே கடேசியில் தென்பட்டது !!
இன்னுமொரு 20 ஆண்டுகளுக்குப் பிற்பாடு போனெல்லியின் வரலாற்றை ஆய்வு செய்தொமெனில், "போசெலி" எனும் இந்தப் படைப்புலக அசுரரின் பங்களிப்பின் முழுப்பரிமாணமும் சிறுகச் சிறுகப் புரிபடும் என்பேன் ! லேசாய்ப் பேஸ்த்தடித்துப் போய், ஒரே மாதிரியான வட்டங்களுக்குள் உழன்று வந்த பல போனெல்லி flagship நாயகர்களுக்குப் புதுசாய் ஒரு இலக்கும், அழகாய் ஒரு புனர்ஜென்மமும் தந்திருப்பது நிச்சயமாய்ப் பேசப்படும் ! So போசெல்லி இந்த ஸாகோர் மறுமலர்ச்சியினில் பங்கேற்கிறார் என்றாலே புராதனங்களுக்கு இடமிராது என்ற தெம்பு பிறந்தது !! ஒட்டு மொத்தமாகவே கதையினை இந்நாட்களின் பாணிகளுக்கேற்ப மாற்றியமைத்து ; முற்றிலும் புதுசாய் சித்திரங்கள் ; ஸ்கிரிப்ட் ; கலரிங் என்று போசெல்லி மேற்பார்வையில் பிரித்து மேய்ந்திருப்பதுமே தெரிய வந்த போது, இந்தத் தொடரினை தமிழில் முயற்சிக்கத் தடையென நான் எண்ணியிருந்த சமாச்சாரங்கள் சகலமுமே ஒற்றை நொடியில் காணாது போயிருப்பதையும் உணர்ந்தேன் ! தொடர்ந்த நாட்களில் ஒரு 448 பக்க மெகா கலர் ஆல்பத்தினில் ஸாகோரின் முன்கதை flashback + ஒரு சாகசமும் இடம்பிடிக்க, நெட்டில் செமத்தியான reviews ! அப்புறமென்ன - 'ரைட்ஸ் கோரிடும் படலம்' சிறப்பாய் அரங்கேறியது & ஸாகோரின் முழு flashback சார்ந்த 6 அத்தியாயங்களை வாங்கியிருந்தோம் ! And நமது 2022 அட்டவணையில் அழகாய் போஸ் கொடுத்து நின்றார் மனுஷன் !
இதுவரையிலுமானது ஸாகோர் முன்கதைப்படலம் ! தொடரவுள்ளது பின்கதைப் பேஸ்த்தடித்த படலம் !
இங்கிலீஷில் ஸாகோர் வெளிவந்திருந்தாலுமே, நாம் உரிமைகளை வாங்கிய பிற்பாடு நமக்கு தரப்பட்டது இத்தாலிய ஒரிஜினல்கள் தான் ! So அவற்றை வழக்கம் போல இங்கிலீஷுக்கு மொழிபெயர்த்து வாங்கி கருணையானந்தம் அங்கிளிடம் எழுத அனுப்பி விட்டேன் ! நேர்கோட்டுக் கதையே and ஸாகோர் இதன் முழுமையிலும் ஒரு வளர்ந்து வரும் நாயகராகவே வலம் வருவார் எனும் போது பன்ச் -கின்ச் பெருசாய் அவசியப்படாதென்று எண்ணியிருந்தேன் ! By and large எனது அனுமானத்தில் பிழைகளில்லை & அவரும் பணிகளைத் துவக்கியிருந்தார் ! ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் என்னை போனில் அழைத்தவர் - "மொத்தம் 6 பாகம் இருக்குப்பா ; ஆனா 4 பாகங்களில் அறிமுக படலம் முடிஞ்சா மாதிரி தென்படுது ! அத்தோடவே மங்களம் போட்டுப்புடலாமா - முதல் புக்குக்கு ?" என்று கேட்டார் ! எப்போதுமே விலைகளைக் குறைக்க ஏதேனுமொரு பொந்து தென்பட்டால் அதனைத் துளை போட்டு மெட்ரோ ரெயில் விட வாய்ப்பிருக்கா ? என்று பார்க்கும் புத்தி கொண்ட எனக்கு அந்தத் தகவல் தேனாய் இனித்தது ! "ஓ ..பேஷாய் முடிச்சிடலாம் ! அடுத்த 2 பாகங்களை 2023 ஆரம்பத்திலே இன்னொரு புக்காப் போட்டுப்புடலாம் !" என்று சொல்லிய கையோடு - ஸாகோர் : "4 அத்தியாயங்கள் - 240 பக்கங்கள் - ரூ.350" என்று விளம்பரத்தை ரெடி செஞ்சாச்சு !
கதைகளுக்கு DTP வேலைகள் ஏற்கனவே செம ஸ்பீடாய் நிறைவேறியிருக்க, என் மேஜையில் குவிந்து கிடந்த பக்கங்களுக்குள் வெள்ளியிரவு முதலாய் நானும் பேய் ஸ்பீடில் எடிட்டிங்கில் ஓட்டமெடுக்க ஆரம்பித்தேன் ! And சனி காலையில், 3 அத்தியாயங்களை அவசியமாகிய திருத்தங்கள் ; revisions சகிதம் எடிட் செய்து ஆபீசுக்கு அனுப்பிய போது எனக்குள் லைட்டாய் ஒரு நெருடல் ! கதை செம அட்டகாசமாய் பயணமாகிறது ஓ.கே. ; ஸாகோரின் துவக்கப்புள்ளிகள் ஒவ்வொன்றையுமே ஸ்பஷ்டமாய் போசெல்லி புரிய வைத்து வருகிறார் ஓ.கே.....ஆனால் முக்கால் கிணற்றைத் தாண்டி விட்டுள்ள நிலையிலும், கதையின் இறுதியினை நெருங்கி விட்டது போலான உணர்வே வர மாட்டேங்குதே ?!! என்பதே அந்த நெருடலாக இருந்தது ! "சரி, பர பரவென்று 4-ம் பாகத்தை படிச்சிப்புடலாம்" என்றபடிக்கே உப்மாவை விழுங்கியபடியே வேக வேகமாய் காலையில் வாசித்தால், கொழ கொழவென ஒரு உணர்வு - and அது உப்மாவின் கைங்கர்யமே அல்ல ! இங்கே முற்றுப்புள்ளி போடலாமென்ற எண்ணத்துக்கு அங்கிள் எவ்விதம் வந்தாரோ, கிஞ்சித்தும் புரியவில்லை ; செம டைட்டானதொரு தருணத்தில் தான் பாகம் 4-ஐ நிறைவு செய்திருந்தனர் ! பற்றாக்குறைக்கு கதையின் ஒரு முக்கிய மனிதன் சாய்க்கப்பட்டிருக்கும் நொடியும் அது ! So அந்த இலக்கினில் இந்தப் புதுக்கோலத்தை நிறைவு செய்தால் நூற்றுக்கு நூறு சுகப்படாது என்பது புரிந்தது ! And எல்லாவற்றிற்கும் மேலாக ZAGOR என்ற பெயர் நாயகனுக்குக் கிட்டுவது ஏன் ? எவ்விதம் ? என்ற கேள்விகளுக்குமே அத்தியாயம் 4-ன் நிறைவினில் பதிலில்லை !
'செத்தாண்டா சேகரு !!' என்றபடிக்கே கொஞ்ச நேரத்துக்கு தலையை சொறிந்தேன் - என்ன செய்வதென்றே கேள்வியோடு ! கதையின் முழுமையையும் நானே சரி பார்க்க மெனெக்கெட்டிராதது எனது பிழை என்பது புரிந்தது ! இதனில் என்னைத் தவிர்த்து வேறு யாரையும் குறை சொல்வதில் அர்த்தமே கிடையாது தான் ! ஆபீசுக்கு ஓட்டமாய் ஓடிப் போய் பாகம்ஸ் 5 & 6 கோப்புகளை எடுத்துப் பார்த்தேன் - நதி போல சீராய் கதை ஓட்டமெடுத்து, ஒரு ஆர்ப்பரிக்கும் க்ளைமாக்சில் நாயகனுக்கான பெயர்சூட்டலுடன் நிறைவுறுவது தெரிந்தது ! வேறு வழியே இல்லை - ஆறு அத்தியாயங்களுடன் ஒரே புக்காய் வெளிவந்தாலொழிய ஒரு star in the making சொதப்பிடவே வாய்ப்புகள் ஜாஸ்தி என்பது நெற்றியில் எழுதியிருந்தது ! ரைட்டு....உங்களிடம் உள்ளதைச் சொல்லி, மன்னிப்புக் கோரிய கையோடு, திட்டமிடலை மாற்றியமைப்பதைத் தாண்டி வேறு மார்க்கமில்லை என்ற writing was very much on the wall !! உங்களிடம் சாத்து வாங்குவது எனக்கொன்றும் புதிதில்லை என்றாலும் இந்தச் சொதப்பல் ரொம்பவே சங்கடமூட்டும் அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை ! Sorry folks ....மாறிடும் திட்டமிடல் கீழ்க்கண்டவாறு இருந்திடும் :
- **YEAR-END ஸ்பெஷல்ஸ் - மொத்தம் இரண்டே மெகா இதழ்கள் தான் !
- **ZAGOR - 360 பக்கங்கள் ; 6 அத்தியாயங்கள் ; முழு வண்ணம் ; ஹார்ட் கவர் !
- **மேகி கேரிசன் பாகம் 2 - நடப்பாண்டினில் இடம் பிடித்திடாது !
- **உயிரைத் தேடி - எவ்வித மாற்றங்களுமின்றி ரூ.200
So முன்பதிவுத் தொகை ரூ.700 (தமிழகத்தினுள்) என்றாகிறது !
ஆனால் - ஏற்கனவே ரூ.650 அனுப்பியுள்ள நண்பர்கள் இதற்கென மீண்டும் மெனெக்கெடத் தேவையிராது !
அவர்களுக்கு புக்ஸ் இரண்டுமே ரெடியான கையோடு அனுப்பிடுவோம் ! இனி முன்பதிவு செய்திடவிருக்கும் நண்பர்கள் மாத்திரம் ரூ.50 கூடுதலாய் அனுப்பிட வேண்டியிருக்கும் !! Once again deep apologies all !!! 🙏🙏
திடு திடுப்பென இன்னொரு 120 பக்க மொழிபெயர்ப்பும், அது சார்ந்த பணிகளும் இந்த நொடியினில் முளைத்து நிற்பதால், அதனுள் புகுந்திட I am இடத்தைக் காலி பண்ணிங் now ! கிளம்பும் முன்பாய் இதோ - ஸாகோரின் preview !! கலரில், புது பாணியில் செமத்தியாய் (எனக்கு) ரசிக்க முடிகிறது இந்த நாயகரை !! இதழ் வெளியான பிற்பாடு உங்களுக்கும் இவர் ரசிக்கும் பட்சத்தில், நம் முன்னே ஒரு சூப்பர் இடியாப்பச் சிக்கல் காத்திருக்கும் - 2023 அட்டவணைக்குள் இந்த மனுஷனை எவ்விதம் நுழைப்பதென்று ?!! Phew !!! அட்டவணை எல்லாமே ரெடி என்று பெருமூச்சு விட்டு ரொம்ப நாழியெல்லாம் ஆகவில்லை தான் !! புனித மனிடோ & ஒடின் - வழி காட்டுவீர்களாக !!
Before I sign out, நமது காமிக்ஸ் கேரவன் மலைக்கோட்டை மாநகரை நோக்கி செப்டம்பர் 16-க்குப் பயணமாகிறதென்ற சந்தோஷத் தகவல் ! நீண்டதொரு இடைவெளிக்குப் பின்பாய் திருச்சிக்குள் புகுந்திடவுள்ளோம் ! Fingers crossed !! மீண்டும் சந்திப்போம் ; see you around all !!
1st
ReplyDelete🤝😃
DeleteKumar, Shri இன்னும் காணலியே
Deleteகொஞ்சம் லேட் ஆகிவிட்டது doctor Sir
Deleteஇப்போது தான் முந்தைய பதிவினில் நீங்கள் சுட்டிக்காட்டியிருந்த பிழைகள் (தாத்தாஸ் கதை) பற்றி வாசித்தேன் ; கண்ணில்படும் குறைகளை highlight செய்திட இம்மி தயக்கம் கூட அனாவசியம் சார் ! ஒவ்வொரு பணிக்கும் கூடுதலாய் நேரம் ஒதுக்கிட சாத்தியப்பட்டால் maybe இது போன்ற தவறுகளைத் தவிர்க்க முயன்றிடலாம் தான் ; ஆனால் அதை ஒரு சாக்காகவெல்லாம் நான் சொல்ல மாட்டேன் !
DeleteBasically எனது வாசிப்பென்பது very limited in my growing days ! எக்கச்சக்க காமிக்ஸ் ; அப்புறம் Enid Blyton ; Perry Mason ; Agatha Christie ; Arthur Conan Doyle ; Edgar Allan Poe ; Sidney Sheldon ; Alistair Maclean ; Jeffery Archer ; Arthur Hailey என்று பெரும்பாலும் fiction பக்கமாகவே பயணித்தது ! தமிழிலோ இன்னும் சுத்தம் ; துப்பறியும் சாம்பு ; அப்புசாமி-சீதாப்பாட்டி ; சுஜாதா & பாலகுமாரன் நாவல்கள் என்பனவற்றைத் தாண்டிப் பெருசாய் வாசிக்க சந்தர்ப்பங்களும், அவகாசங்களும் வாய்த்திருக்கவில்லை ! இலக்கியம் ; உலக அரசியல் என்றெல்லாம் ஆழ்ந்து உள்வாங்கிட எனக்கு அந்நாட்களில் வாய்ப்பிருக்கவில்லை & இந்நாட்களில் பொறுமை லேது ! So இந்தப் பணியினில் கூடுதலாய் நாலு நாட்களைச் செலவிட்டிருந்தாலுமே பெருசாய் வித்தியாசங்கள் இருந்திராதென்பேன் !
Going ahead - இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுக்க நிச்சயம் முயற்சிப்பேன் சார் !
நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே ஒரு பெரிய ரிலீஃப் சார்..நமது காமிக்ஸ்களுக்கு தொடர்பான செய்திகளைத் தேடுவதில் அலுப்பு தோன்றுவதில்லை சார்.
Deleteடியர் எடி,
Deleteஉங்களை போலவே என் படிப்பு உலகம் காமிக்ஸ் மற்றும் சிறுவர் இதழ்களை சுற்றியே அமைந்து விட்டது. சிறு நாவல்கள் படித்திருந்தாலும், படங்களே இல்லாத பெரிய புத்தகங்களில் பக்கம் பக்கமாக வரிகளை படிப்பதில் இப்போதும் எனக்கு சிக்கலே. இலக்கியம் பற்றி உனக்கு தெரியாதா என்று மெத்த படித்த நண்பர்கள் கிண்டல் செய்கையில், நான் படிக்கும் காமிக்ஸே ஒரு இலக்கியம் தான் என்று பதில் கூறி விடைபெற்று கொள்கிறேன். இன்றளவும்.
என்னை போலவே நீங்களும் என்பதில உளமாற மகிழ்ச்சி. நமது கனவுலகங்களிலே நாம் சஞ்சரித்து கொள்வோம்.... To Each their Own 🥰
4th
ReplyDelete...
ReplyDeleteவணக்கம் 🙏❤️
ReplyDelete10 க்குள்ள..
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeletePresent sir
ReplyDeleteநானும்
ReplyDeleteஎல்லாராலும் எல்லா நேரத்திலும் எப்பொழுதும் சரியாக செயல்பட முடியாது. இது போன்ற நிகழ்வுகள் மிகவும் சகஜமானது. மன்னிப்பு தேவையில்லை . எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் உங்கள் பணியினை எவ்வித தயக்கம் இன்றி தொடரவும்.
ReplyDeleteஆம். சரியான புரிதல்.
Deleteவணக்கம் காமிக்ஸ் காதலர்களே.
ReplyDeleteMe வந்துட்டன்..
ReplyDeletezagor. 6 பாகங்கள், 360 பக்கங்கள், ஒரே புக்காய்... வாவ்.. Super. Waiting.
ReplyDeleteஸாகோர் ஆறு பாகங்களும் மொத்தமாக வருவது மகிழ்ச்சி.
ReplyDelete2023ல் போனெல்லி கதைகளுக்கு தனி சந்தா அறிவிக்கணும் போல..
வணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteWaiting to see Zagor and Uyirai Thedi sir
ReplyDelete360 பக்க ஒரே சாகசம்.. ஜாலிதானே சார். இந்த தீபாவளி தெறிக்கப் போகிறது.
ReplyDeleteஅப்பாடி ஒரே புத்தகமாக Zagor வாரே வா. 360 பக்கங்கள் பட்டைய கிளப்பப் போகிறது. I'm waiting
ReplyDelete// 360 பக்கங்கள் பட்டைய கிளப்பப் போகிறது //
Deleteயெஸ்...
// பற்றாக்குறைக்கு அந்நாட்களின் அந்த ஜாகஜங்களில், மாங்காய் நறுக்கும் கத்திகளைக் கொண்டு டைனோசர் சைசிலான முதலைகளோடு ஸேகார் மல்லுக்கட்டுவதும், சப்பட்டையான அவரது டிரேட்மார்க் கோடாரியைக் கொண்டு பீம்பாய்களை வீழ்த்துவதையும் லைட்டான கெக்கேபிக்கே சகிதமே பார்க்கத் தோன்றியது //
ReplyDeleteஇதே இது டெக்ஸ் என்றால் ரசிப்போம்லே :-)
This comment has been removed by the author.
Deleteஎஏல்ல தம்பி வலுவான கரங்களில் புல்லும் ஆயுதமே....உருளைக்கில் நுளையும்
Deleteவைக்கோலில்லயா
// இதே இது டெக்ஸ் என்றால் ரசிப்போம்லே :-) //
Deleteஅதுவுமே விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கே பரணி,பயங்கரப் பயணிகள்,துயில் எழுந்த பிசாசுகள் என நினைக்கிறேன்...
நிறைய பேருக்கு (டெக்ஸ் இரசிகர்களுக்கு கூட) இவை உவகை அளிக்கும் கதைகளாக இருப்பதில்லை...
Nanum
ReplyDeleteZAGOR - ஆகா ஆகா ஆறு பாகம் கொண்ட குண்டு புத்தகமா. சூப்பர் சூப்பர் இந்த தீபாவளிக்கு செம வாசிப்பு விருந்து.
ReplyDeleteயெஸ்ஸோ யெஸ்ஸு...
DeleteSir 2 hard covers are a good set. The other one appeared a misfit in the trio but I did not want to dampen your spirit. Van come as an individual album in Jan.
ReplyDeleteMaggy Garrisson இரண்டாம் அத்தியாயம் புத்தக விழாக்களின் விற்பனைக்கு உதவிடக்கூடும் என்று நினைத்திருந்தேன் சார் ; but சூழ்நிலைகள் panned out differently !!
Deleteஇதே தான் மேகி யை ஜனவரி புத்தக விழாவில் வெளியிட்டு விடலாம் சார்.
DeleteGood idea
DeleteZAGOR - வண்ணத்தில் படங்கள் அட்டகாசமாக உள்ளது. சீக்கிரம் இந்த புத்தகத்தை தயார் செய்து அனுப்பவும். ஆர்வம் அதிகரித்து விட்டது. சீக்கிரம் ZAGOR ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நாங்கள் ரெடி.
ReplyDeleteZAGOR சித்திரங்கள் வண்ணத்தில் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
Delete// ZAGOR ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நாங்கள் ரெடி //ரெடி ரெடி
Delete// ZAGOR சித்திரங்கள் வண்ணத்தில் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. //சித்திரங்கள் மட்டும் அல்ல வண்ணமும் அற்புதம். அப்படியே கண்ணைப் பறிக்கிறது.
DeleteZAGOR அடுத்த வருடம் இதேபோல் ஸ்பெஷல் இதழாக போடுங்கள். ரொம்ப யோசிக்க வேண்டாம் சார்.
ReplyDeleteஅவ்வளவு தான்.
Deleteஆமா...லார்கோ போல தங்கிடக்கூடாது
Delete// ZAGOR அடுத்த வருடம் இதேபோல் ஸ்பெஷல் இதழாக போடுங்கள். //
Deleteநல்ல யோசனை...
வந்தாச்சி.....
ReplyDeleteவந்தாச்சு
ReplyDeleteதங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்க தக்கது.எப்போதும் போல தங்களின் காமிக்ஸ் காதலால் 50 ரூபாய் (முன்பதிவு) போனாலும் பரவாயில்லை என்று 6 அத்தியாயங்களை யும் களத்தில் இறக்கும் தங்களுக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...அந்த 50 ரூபாயை எப்படியாவது எங்களிடம் வசுலித்து விடுங்கள்.அது தான் நாங்கள் உங்களின் காமிக்ஸ் காதல் மீது வைத்து இருக்கும் அன்பு....ப்ளீஸ்
ReplyDeleteஇங்கே விதைத்த எதுவும் சோடை போனதில்லை நண்பரே ! அன்பாகவோ, நட்பாகவோ அது வட்டியோடு நம்மிடம் வந்து சேர்ந்து
Deleteவிடும் ! So no worries !!
//அன்பாகவோ, நட்பாகவோ அது வட்டியோடு நம்மிடம் வந்து சேர்ந்து விடும் !//
DeleteTrue Statement Sir
// அன்பாகவோ, நட்பாகவோ அது வட்டியோடு நம்மிடம் வந்து சேர்ந்து விடும் ! //
Delete+1 இதுதான் நமது காமிக்ஸ் வட்டம்.
"இங்கு விதைத்த எதுவும் சோடை போனதில்லை" ஆத்மார்த்தமான வரிகள், எடி.
Deleteநம் குறுகிய வாசகர் வட்டத்தில் இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கையே, அனைவரையும் தொடர்ந்து பயணபட வைக்கிறது... தொடர்வோம்.👍
Sir sometimes gummanguththu also Heh Heh - avlo anbu
Deleteஎன்னது 6 பாகமா.....???
ReplyDeleteஙே...ஙே...ஙே....அறிமுகத்திலயே 2ஆல்பங்கள் பெற்ற லார்கோ, ஷெல்டன், பெளன்சர், அண்டர்டேக்கர்.....& கோவை ஓரங்கட்டிட்டு ஒரேஏஏஏஏஏஏஏஏ தம்மில் 6பாகங்கள் பெற்றுட்டாரே ஜாகோர்...
உண்மை டுராங்கோ கூட 3 பாகம் தான். அறிமுகமே 6 பாகமாக யாரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்.
Deleteஇதை 'ஏக் தம்' அன்றி வேறெவ்விதத்திலும் கையாண்டிருக்க இயலாதென்பதை இதழ் வந்த பிற்பாடு உணர்வீர்கள் நண்பர்களே !
DeleteZagor ல் எந்த மாற்றமும் நேராமல் அடுத்த மாதமே களம் காண எல்லாம்வல்ல புனிதமனிடோ உங்களுடன் இருப்பாயாக...
ReplyDeleteYes. Very good decision.
DeleteZAGOR அட்டைப்படம் அட்டகாசம்!! உள்பக்க சித்திரங்களும், குறிப்பாக வண்ணக் கலவைகளும் - வேற லெவல் வாசிப்பு அனுபவத்தைத் தரப்போவதாக உரக்கச் சொல்கிறது!
ReplyDeleteஅப்புறம் zagorஐ எப்படி உச்சரிக்க?!! எடிட்டரே 'ஸாகோர்' என்றும் 'ஸேகார்' என்றும் பதிவிட்டு, ஏற்னவே குழப்பிக்கிடந்த என்னை மேலும் குழப்பியிருக்கிறார்!
ஸாகோரும் வேணாம்.. ஸேகாரும் வேணாம்.. 'சேகரு'ன்னு பேர் வச்சிடுங்க செமயா இருக்கும்!
செத்தான் டா சேகரு...!
Delete🤪🤪🤪
ஏனுங்னா ..பின்னட்டையில் மொக்கை சைசில் பெயர் டமிலில் கீது ; பார்க்கலியோ ?
Deleteஅதே அதே எனக்கும் இந்த குயப்பம் வந்துடுத்து
Delete*ஜாகோர்* நன்னா இருக்கு.
இது ஆரம்பத்தில் அப்படி தான் அறிமுகம் ஆனது.
அப்பாலிக்கா ஸொகோர் & ஸாகோர்னு ஆயிட்டு 😇😇😇🙃🙃
பூவோ..புய்ப்பமோ - நாலு நாட்கள் பழகினால் எல்லாம் செட் ஆகி விடும் நண்பரே !
Deleteமை டியர் எடி
ReplyDeleteஸேகோர் என பெயர் சூட்டியிருந்த நீங்க வாசகாஸ் பொருட்டு டமீல் நாட்டு முறைப்படி °°சேகர்°° ன்னு மாத்து வீங்கன்னு நாங்க நம்பிட்டு இருக்கும்போது இப்போ திடீர்ன்னு **ஜாகோர்** பெயர் மாத்தினா நாங்கள்ளாம் கொழம்பி போகமாட்டோமா டியர் எடி .. இனி மறுபடியும் ஒன்னாங்கிளாஸ்ல இருந்து ஆரம்பிக்கோனும் .. 😉😉😍😍
Just fun only
மறுபடியும் ஒண்ணாங்கிளாஸா ? LKG ; UKG லே இருக்க கொயந்தைகள் தடுமாறுமே ? நிதானமா வரட்டும் புள்ளீங்க !
DeleteZAGOR கதையின் தீடிர் திருப்பமாக ஆறு பாகம் என மாறிய காரணத்துக்காக அதனை பிரித்து அல்லது தள்ளிப் போடாமல் ஆறு பாகங்களையும் ஒரே புத்தகமாக அடுத்த மாதமே சொன்னது போல் அதனை வெளியிட நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரியானது. பாராட்டுக்கள் சார். மகிழ்ச்சி.
ReplyDeleteகழன்று கொண்டிருக்கும் பெண்டுக்கு அந்தப் பாராட்டைக் கொண்டு ஒத்தடம் குடுக்க முடியுதான்னு பாக்கணும் சார் !
DeleteEdi Sir..
ReplyDeleteTex அ *டெக்ஸ்* ன்ன மாதிரி..
Zagor..அ *ஜகோர்* னு சொல்லிட்டு போலாமே..🥰
பாத்து மனசு வைங்க..🙏
பயபுள்ள பேரு *ஜாகோர்* னு மனசு full ஆ ரொம்பி கிடக்குதுங்க..
இப்ப வந்து பேர மாத்துனா..
கொஞ்சம் சங்கட்டமா இருக்குதுங்களே Edi Sir..😶
அப்புறம் *இளம் ஜாகோர்* கேக்க இப்பவே ரெடியாகிட்டோமுங்க..😍😘
///அப்புறம் *இளம் ஜாகோர்* கேக்க இப்பவே///
DeleteLOL :)))))
அந்த "இளம் ஸாகோரே" இவரு தானுங்கோ....பச்சிளம் பாலகன் ஒரு நாயகனாகிடுகிறான் !
Deleteவட போச்சே...
Deleteஐயையோ மீண்டும் உயிரை தேடி தள்ளி போகிறதா என்ற பதட்டம் அடுத்த வரிகளில் தீர்ந்தது.
ReplyDeleteமேகி தள்ளி போவதில் பிரச்சனை இல்லை சார். சரியான நேரத்தில் நீங்கள் கண்டுபிடித்ததில் எங்களுக்கு தான் மகிழ்ச்சி அதிகம்.
ஆர்ட் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது, கலர் கொஞ்சம் அடர்த்தியாக தெரிகிறதே முழிவதுமே அப்படிதானா சார்.
Zagor படிக்க ஆர்வமாக உள்ளது.
அடர்வர்ணங்களே கிருஷ்ணா ; ஆனால் அச்சில் கண்ணை உறுத்தாதென்று தான் நினைக்கிறேன் !
Deleteஅடர் வண்ண ரசிகரான எனக்கு அட்டகாசமே
DeleteEdi Sir..
ReplyDeleteYear end special... னா
டிசம்பர்ல தானே கிடைக்கும்?..🙆
Edi Sir..
ReplyDeleteTBF (திருச்சி ஃபுக் பேரு) க்கு தவறாம ஆஜராகிடுரோங்க..👍✊
அப்பாலிக்கா *ஒரு ஸ்பெஸல் ஊத்தப்பம்*..
கொஞ்சம் முறுகலா, கேரட்டை பொடி பொடியா மேலாப்பல தூவி.. TBF க்கு
அனுப்பிடுங்க..😃😍
அடிக்கிற வெயிலுக்கு ஊத்தப்பம்லாம் ஒத்துக்கிடாது சார் ; குல்பி ஐஸ் தான் ஷோக்கா இருக்கும் ! அண்ணாச்சிகிட்டே சொல்லி கவனிக்கச் சொல்லிடறேன் !
Deleteகுல்பி..கூட படா ஷோக்காதான் இருக்கும் Edi Sir..💐
Deleteநாங்க ரெடி..
பிரியாணியோ.. பிச்சுபோட்ட பரோட்டாவோ..
சாப்பிட நாங்க ரெடி..✌
குல்பியோ..
குடல் குழம்போ..
சாப்பிட நாங்க ரெடி..✊
இதெல்லாம் தர்றதா இருந்தா நாங்களும் திருச்சிக்கு ரெடி தான்.☺️
DeleteEdi Sir..
ReplyDelete*ஜாகோர்* அறிமுகபடலமே..
டைகர* போட்டு தள்ற மாதிரி இருக்கே..😍
சிம்பாலிக்கா..ஏதும் சொல்ல வர்ற மாதிரி இருக்கே..😄😎
ஏனுங்னா....அது புலி மெரியா தெரிது ? அது குள்ளமான ஒட்டகச்சிவிங்கியாகும் !
DeleteHa..ha..ha..😃😄😀😁
Deleteஅப்போ..ஜாகோரும் குண்டாத்தான் வர்றாரா..?
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஅட..ஜாகோர் கதை போசெல்லியின் ஆக்கமா.?சூப்பர் நியூஸ் சார்.
ReplyDeleteஇவரது கைவண்ணத்தில் உண்டான டெக்ஸ் கதைகள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கும்.
அந்த வகையில் ஜாகோரும் சாதிப்பார் என்ற நம்பிக்கை வலுப்படுகிறது.
//அட..ஜாகோர் கதை போசெல்லியின் ஆக்கமா.?சூப்பர் நியூஸ் சார்.
Deleteஇவரது கைவண்ணத்தில் உண்டான டெக்ஸ் கதைகள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கும்./
Bow to போசெல்லி..
இவரை புக்ஸ் நிறைய விக்குங்கறதால போசெல்லர்னு இவரை கூப்பிடணுமோ?
63rd
ReplyDeleteWelcome ஜாகோர்.
ReplyDeleteHi..
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு....
ReplyDeleteசார் சூப்பர் அறிவிப்பு....சூப்பர் விடுவிப்பு..இது வரை வந்த மா
ReplyDeleteற்றங்களிலே அட்டகாசமிதே..
படிக்க படிக்க பயம்...அடே...ஆஹா... மீண்டும் பயம்....அப்ப தீபாவளிக்கு வராதா....தீபாவளி மலர்னு தலைவாங்கிய அறிவித்த அதே உற்சாகம் 40 ஆண்டுகளுக்கு பின்னே மீட்பு
ReplyDeleteஆமாம் கொஞ்சம் பயமா இருந்துச்சு...என்ன சொல்ல வராருனு...அப்புறம் ஜாகோர் உறுதினு அப்பாடா இருந்துச்சு
Delete// ஆமாம் கொஞ்சம் பயமா இருந்துச்சு...என்ன சொல்ல வராருனு...அப்புறம் ஜாகோர் உறுதினு அப்பாடா இருந்துச்சு //
Deleteஉண்மையோ உண்மை. படிக்கும் போது மனது பக் பக்கென்று இருந்தது.
//படிக்க படிக்க பயம்...அடே...ஆஹா... மீண்டும் பயம்....//
Delete" தெனாலி" பொன்ராஜ்?
வண்ணங்களின் ஆட்சி ...அந்த பச்சயும் பஞ்சு மிட்டாயுமே சாட்சி
ReplyDeleteதீபாவளிக்கு இக்கதை உறுதி யாரெல்லாம் பந்தயத்துக்கு வாரீங்க
ReplyDeleteதீபாவளிக்கு தான், அப்பிறம் எதுக்கு பந்தயம்
Deleteஉள்ளேன் ஐயா..!!!
ReplyDeleteகானக அரசனாக
ReplyDeleteகௌபாய் யாக வரும்
லாகோர்ரை
குண்டாய் வரவேற்கிறோம்
இனிய காலை வணக்கம்
ReplyDeleteபோனோல்லி வலைபக்கம் எப்போதவாது போனதுண்டு, அப்போதிலிருந்து இந்த ஜாகோர் என்ற சேகர படிக்கனிம்னு ஆசை. அவரை கொண்டு வருவதற்கு நன்றிகள் ஆசிரியரே
நாலு பக்க கதை மாறி மூணாவது கதை எங்க போச்சுனு மண்டையை பிச்சிக்க வைக்காம ஆறூ பாகமாக கதை வருதல் நல்லதே
//நாலு பக்க கதை மாறி மூணாவது கதை எங்க போச்சுனு மண்டையை பிச்சிக்க வைக்காம ஆறூ பாகமாக கதை வருதல் நல்லதே//
Deleteரம்மி: டெக்ஸ் கதையே எடிட்டர் போடலாங்கறேன்.கடைசி பாகத்திலேர்ந்து வேணாம் கடைசி பக்கத்திலேர்ந்து ரிவரஸ்ல படிச்சா கூட புரியும்.
ரம்மி @ சின்னராசு உங்களை கலாய்ச்சுட்டாராம் 😀
Delete😅😅😂😂😂
Deleteமேரி கேரிசனின் முதல் பாகம் எளிதான வாசிப்பு மற்றும் கொஞ்சம் இயல்பான நகைச்சுவை மற்றும் வித்தியாசமான துப்பறியும் கதையாக இருந்தது. இவரின் அடுத்த பாகத்தை சரியான தருணத்தில் விரைவில் வெளியிடுங்கள் சார்.
ReplyDeleteYes! Maggie garrison is different. A thieving detective..
Delete// ஆறு அத்தியாயங்களுடன் ஒரே புக்காய் வெளிவந்தாலொழிய ஒரு star in the making சொதப்பிடவே வாய்ப்புகள் ஜாஸ்தி என்பது நெற்றியில் எழுதியிருந்தது ! //
ReplyDelete6 சாகஸங்களில் அதகளம் செய்ய ஜாகோர் வருவது மகிழ்ச்சி,வர்ணங்களும்,ஓவியங்களும் ஆர்வமூட்டுகின்றன...
அப்ப அக்டோபரில் 2 குண்டு புக் வரப்போகுது,அதுவும் ஹார்ட் பைண்டிங்கில்,அடடே சூப்பரு...
// இதழ் வெளியான பிற்பாடு உங்களுக்கும் இவர் ரசிக்கும் பட்சத்தில், நம் முன்னே ஒரு சூப்பர் இடியாப்பச் சிக்கல் காத்திருக்கும் - 2023 அட்டவணைக்குள் இந்த மனுஷனை எவ்விதம் நுழைப்பதென்று ?!! //
ReplyDeleteஅதெல்லாம் ஏதாவது ஒரு வழி இருக்கும் சார்,பார்த்து உள்ளே தள்ளி விடுங்க,இப்போது போடுவது போல்,குண்டு புக்காய் குறைந்தது 5 சாகஸங்களில்,ஹார்ட் பைண்டிங்கில்....
// டெக்சில் சுமார் 500 பக்கங்களும், ZAGOR-ல் இன்னொரு வண்டியும் வெயிட்டிங் ! So உள்ளுக்குள் லைட்டாய் உதறலோடே பணிகளுக்குள் நேற்றிரவு முதல் புகுந்தேன் - 2 ஹார்ட்கவர் இதழ்களையும் காலத்தில் கரைசேர்த்தாக வேண்டுமே என்று ! //
ReplyDeleteஅக்டோபர் 1 மற்றும் 2 சனி,ஞாயிறு...
அக்டோபர் 4 மற்றும் 5 ஆயுத பூஜை விடுப்போடு கூடிய தினங்கள்...
ஆக தீபாவளி இதழ்கள் செப்டம்பர் இறுதியிலா சார் ?!
இல்லை ஆயுத பூஜை விடுப்புகள் முடிந்தவுடன் ஆற அமர அக்டோபரிலா சார் ?!
ஆற அமர அக்டோபரில் வரட்டும். புத்தகங்கள் பைன்டிங் முடிந்த பிறகு நன்றாக காயவைத்த பிறகு வரட்டும்.
Deleteசரிங்கோ...
Deleteபுரிதலுக்கு நன்றிங்கோ :-)
Deleteசார் இவங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு வருடம் கழிச்சு அனுப்புனா நல்லா காஞ்சிராது
Deleteநல்லா காஞ்சிரும் 😋😋😋
Deleteஅக்டோபர் முதல் வாரத்தில லேட்டா வந்தா புக்ஸ் எப்படியோ வாசகர்கள் காஞ்சிப் போயிடுவாங்க!
Deleteமேகி காரிசன் இந்த தடவை வராதது கொஞ்சம் வருத்தமே. அவரின் வருகைக்கு காத்திருப்போம். இப்போதைக்கு ஜாகோரின் வரவை எதிர்பார்த்து.
ReplyDelete// மேகி காரிசன் இந்த தடவை வராதது கொஞ்சம் வருத்தமே // ஆமாங்கோ
Deleteமுத புக்கே நாங்க இன்னும் படிக்கல. இதுல நீங்க இடண்டாவது புக் போயிட்டீங்களா. இது என்ன சங்கதியோ மாதவா.
Deleteஅந்த அம்மா கருப்பா, சிகப்பா . நா இன்னும் பாக்கலீங்க.
Deleteஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மேரி கேரிஸை படியுங்கள் கண்டிப்பாக பிடிக்கும்.
Delete// டெக்ஸ் தொடரைப் போலவே இதுவும் செம நீளமான ரயில்பெட்டி ! 1961-ல் துவக்கம் கண்டுள்ள இந்த நாயகரின் சாகஸங்களின் எண்ணிக்கை 700-க்கு அதிகம் ! //
ReplyDeleteரொம்ப நீளமான பெட்டி போல,நாமளும் கொஞ்சம் ஸ்பீடா பின்னாடியே துரத்திகிட்டு போகனும்...
எவ்ளோ தம் கட்டித் துரத்தினாலும் அவுக வாலைக் கூட நாம கண்ணில் பாக்க ஏலாது சார் !
Deleteசிவந்த மண்: அழகான தீவில் தனது தாத்தா மற்றும் பால்யகால நண்பர்களை சந்திக்கும் டேங்கோ அவர்களுக்கு ஒரு பிரச்சனையில் உதவ ஆரம்பிப்பதில் கதை வேகம் எடுக்கிறது. டேங்கோ தாத்தா நம்மை எளிதில் கவர்ந்து விடுகிறார். அழகான ரம்மியமான தீவு ரொம்பவே ரசிக்கச் செய்தது, கதைக்கு சித்திரங்களும் வண்ணமும் மிகப்பெரிய ப்ளஸ். வில்லனுடன் நடக்கும் சண்டை அந்த நேரத்தில் டேங்கோ மனதில் ஓடும் எண்ணங்கள் ரசிக்கும்படி இருந்தது. அருமையான ஆக்சன் காட்சிகள்.
ReplyDeleteகடந்த கதையை விட இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. லார்கோ போல் அலட்டல் இல்லாமல் சாகசம் செய்யும் மற்றும் ஒரு நாயகர். விற்பனையில் இவர் சாதிப்பார் என நம்புகிறேன்.
This comment has been removed by the author.
Deleteகதையில் வரும் முழு பக்க ஓவியங்கள் எல்லாம் டாப் கிளாஸ்.
DeleteSORRY TO SAY THIS; SO FAR TANGO' S BEAUTY IS ONLY GSM DEEP
Deleteஇளம் டெக்ஸ் - அழகான குடும்பம் சுரையாடப்படுவதில் கதை ஆரம்பிக்கிறது, யார் அவர்கள் எதற்கு பெண்களை கவர்ந்து செல்கிறார்கள் என்ற கேள்வியுடன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் கதை அதே விறுவிறுப்பில் அடுத்த அடுத்த திருப்பங்கள் ஆக்சன் காட்சிகள் என நகர்வது கதையை நம்மை ஒரே மூச்சில் படிக்க வைக்க செய்து விடுகிறது.
ReplyDeleteசெய்யாத கொலைக்கு அப்பாவி கைது செய்யப்படுவது அதை டெக்ஸ் சமாளிக்கும் விதம் நன்று.
வில்லன்கள் என் வில்லன்கள் ஆனார்கள் என்று ஃப்ளாஷ் பேக் அட இப்படியும் மனிதர்களா என யோசிக்க செய்தது. வில்லன்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் ரொம்பவே கெட்ட பசங்க சார்.
வில்லன்கள் இவர்களால் தான் இருக்கும் என கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருந்தது.
இறுதி காட்சியில் ஷெரிப் செய்யும் செயல் ரசிக்க வைத்தது.
இளம் டெக்ஸ் - we want more.
+9
Deleteபாரடைஸ் மில் கிராமத்தின் பெயர் என்பதால் கதையின் தலைப்பை எடிட்டர் சார் எவ்வளவு " கேட்சி"- யாக வைத்து விட்டார் பாருங்கள்..செம தலைப்பு..
Deleteஆஜானுபாகுவாக இருப்பதால் அப்பாவியை தூக்கிலிடத் துணிந்து விட்டார்கள் பாருங்கள்..
இ.சி.ஈ.இளவரசர் அமெரிக்கா சென்றாலும் யுடா பிராந்தியம் பக்கம்
செல்ல வேண்டாம் .
// இ.சி.ஈ.இளவரசர் அமெரிக்கா சென்றாலும் யுடா பிராந்தியம் பக்கம்
Deleteசெல்ல வேண்டாம் . //
:-) :😂
ஈரோட்டு பக்கத்துலயே ஏதாவது யுடா பிராந்தியம் இருந்தாலும் அந்தப் பக்கமே போக மாட்டேன்! கிராதகனுக!
Deleteநம்ம இளம் டெக்ஸ் சமயோஜிதமா நடவடிக்கை எடுத்து முக்கிய சாட்சியத்தையே உண்மையை சொல்ல வச்சதனால ஆச்சு! இல்லேன்னா அந்த ஆஜானுபாகவதரோட நிலைமை என்ன ஆகறது!!!
// **YEAR-END ஸ்பெஷல்ஸ் - மொத்தம் இரண்டே மெகா இதழ்கள் தான் !
ReplyDelete**ZAGOR - 360 பக்கங்கள் ; 6 அத்தியாயங்கள் ; முழு வண்ணம் ; ஹார்ட் கவர் ! //
லயன் வெப்சைட்டில் இருக்கும் பழைய விளம்பரத்தையும் உடனடியாக மாற்றிடுங்க சார்,இல்லையேல் வலைப்பக்கத் தகவல் தெரியாத நண்பர்களுக்கு குழப்பம் நேரிடும்...
பிறகு தேவையில்லாத ஒரு சங்கடத்தை உண்டாக்கி விடப் போகிறது...
+1
Deleteஆமா...ஆமா..
Deleteஎன்னது புக்கே இன்னும் வல்லையா. நீங்க எல்லா படிச்சிடீங்கள்ளே நினைச்சுகிட்டே இருக்கே. நானு பணத்த கட்றே. ஸோகர் தூக்றேன்.
Delete🤣🤣🤣🤣அந்த கல்லுப்ப எடுத்து இரும்பு வடச்சட்டியிலப் போட்டு நல்லா வறுத்து தெறிக்கிற பதம் வந்ததும் ஒரு பனியன் துணியில் கொட்டி அப்படியே ஒண்ணா பொட்டணமாக்கி கஷ்டப்பட்டு எழுதுன அந்த கர்ம வீரருக்கு ஒத்தடம் கொடுத்துட்டோம்...
ReplyDeleteமணிக்கட்டு - கழுத்து பின்னாடி...
அப்படியே முதுகு தண்டுவடம்...
கடுத்து கெடுக்கும் இடுப்பு...
(பொறுக்க பொறுக்க எதமான சூட்டுல...)
இப்ப தேவலமா சார்...
😱😱😱😱😱😱😱😱
ஃஜாகோர் நல்லவெற்றி வீரன்...ஆனால் ஆதித்த கரிகாலனை
மிஞ்சுவான் போல ..🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஃஜாகோர் நல்ல விவேகி..அவசரகுடுக்கை வந்தியத் தேவனல்ல...🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
ஃஜாகோர் நல்ல தைரியசாலி...பொன்னியின் செல்வனைப் போல...🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕
ஃஜாகோர் முன்ஜாக்கிரதை பேர்வழி ...நம்ம ஆழ்வார்க்கடியானை விட...🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ஃஜாகோர் சரியான நேரத்தில் தீர்க்கமான முடிவெடுப்பானோ...நம்ம குந்தவை போல...✔️✔️✔️✔️✔️✔️✔️
படைப்பாளியின் வெற்றிப்படைப்பு....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அது மேல் பரணியின் புக்கை வைக்க
Delete🤣🤣🤣🤣🤣
Deleteபெரிய பழுவேட்டரையர் மாதிரி நந்தினி மாதிரி ஒரு அழகான பொண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டா தேவல. வறட்சி தாங்கல ...
Deleteசூப்பர்...
ReplyDeleteமகிழ்ச்சி...
நன்றி சார்...!
மாற்றம் ஏமாற்றம் இல்லாமல் அட்டகாச மாற்றம் ..கை தட்டி வரவேற்கிறேன் சார்...
ReplyDeleteஆனால் உங்களுக்கு இதழுக்கு ரூபாய் 50 இழப்பு என்பது தான் வருத்தப்பட வைக்கிறது...
இடுப்புல இருக்குற அந்த ஒத்த எலயக்கூட பத்தரமா பாத்துக்காம என்ன இது...தலீவர்ர்ர்ரே...
Deleteஅனுப்பப் சொல்லீருக்காரூ...
மறக்காம அந்த அம்பத மொதல்ல அனுப்புங்க...
போராட்டம்🛌🛌🛌🛌🛌🛌🛌🛌லாம் தள்ளி வெச்சாச்சி....
முடிஞ்சவங்க சந்தா கட்டறப்ப 50 ரூ சேத்து கட்டினாப் போச்சு.
Deleteசந்தால இல்லாதவங்க நேரடியா கட்டலாம்..(முடிஞ்சவங்க).
"நான் 5 zagor + 5 உ.தேடி"ங்கறதால 250 ரூ சந்தா கட்றப்ப கட்டணும்.
சகோதரர் கிரி அவர்களும், சகோதரர் ஆதி அவர்களும் திறம்பட டிசைன் செய்திருந்தார்கள். அருமை, வாழ்த்துக்கள் சகோதரர்களே 👏👏👏👏👏
ReplyDeleteபோன பதிவில் பதிவு செய்யல, ஆகையால் இந்த பதிவில்
மிக்க நன்றி சகோதரி
Delete😊😊😊
Deleteமர்ம மனிதன் மார்டின் இல்லாதது வருத்தமே😔😔😔
ReplyDeleteஅவருடயை கதைகள் ஏற்பட்ட தாக்கத்தினால் அவருடைய சாதா கதைகள் பெரிதாக தெரியவில்லை எனக்கு
ப்ரேக் எடுத்து கொண்டு நல்ல கதைகளுடன் வரவும்
சரியாக சொன்னீர்கள்
Deleteடியர் எடிட்டர் சார், Zagor அறிமுகத்திற்காக 6 பாகமாக வந்து தான் ஆக வேண்டுமென்றால் நாம் ஏற்கத்தான் வேண்டும். அவர் எமக்கு செட் ஆனார் என்றால் நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு முதல் ஒரு ரெகுலர் நாயகராக மாற்றி வருடம் 4 கதையாவது வரும்படி ஸ்லாட் ஒதுக்குங்கள்.
ReplyDeleteடைகர் கோலோச்சிய காலம் போல் டெக்ஸ்க்கு மீண்டும் ஒரு போட்டி நாயகர் இருக்கும் போது தான் வாசகர்களிடையேயும் வலைத்தளத்திலும் சுவாரஸ்யமான ஒப்பீடுகள், நகைச்சுவையான மோதல்கள் என்று ஒரு தனி உற்சாகம் கரைபுரண்டோடும்.
நம்மாட்கள் ஒரு flow-ல செட் ஆகி விட்டால், சிங்கம், புலி, கரடி என யார் சிக்கினாலும் வாரித்தள்ளி விடுவர் !
DeleteMagic wind மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா??
ReplyDeleteபல வாசக மரங்கள் ( மனம்) அ( இ)சைந்தால் மாஜிக் காற்று வரலாம்.:-)
Deleteபாவம் அவரை ஏன் தொந்தரவு பண்ணிக்கிட்டு?!!
Deleteமேஜிக் விண்ட் ; கமான்சே ; ட்யூக் ; அப்புறமா ஜெரெமியா !! இவர்கட்கு மனசிலே விசாலமாய், ஏக்கர்கணக்கில் இடம் ஒதுக்கிப்புடலாம் சார் ! பட்டாச் செலவு ; பத்திரப்பதிவுச் செலவு என்று எதுவுமே கிடையாதில்லையா ?
Deleteஎப்படி இருந்தாலும் zagor ஐ வர வேர்க்க காத்திருக்கும் எங்களுக்கு இது ஆர்வம் மூட்டும் சங்கதி
ReplyDelete/zagor ஐ வர வேர்க்க/
Delete"வேர்க்க "விறுவிறுக்க " காத்திருப்புக்கு zagor தகுதியானவர்தான் போல.
Doctor சார் ரொம்ப குஷி மூடில் இருக்கீங்க போலவே
Deleteஆமாம் அவர் வீட்டில் இன்று குதிரைவாலி அரிசி பிரியாணியாம் :-)
Deleteஇம்மாற்றம் நல்ல மாற்றமே, ஏமாற்றம் அல்ல. புத்தக அமைப்பில் உங்கள் ஆர்வம் நன்கு தெரிகிறது.
ReplyDeleteஒரு potential சூப்பர் ஸ்டாரை ரொம்பவே கவனமாய்க் கையாண்டாக வேண்டுமே என்ற சிரத்தை தான் சார் !
Delete// ஒரு potential சூப்பர் ஸ்டாரை // இது போதுமே
Deleteஅட.. ஸாகோருக்கும் ஒரு "கிட் கார்சன்" இருப்பார் போல...😍
ReplyDeleteபோச்சுடா!! இவருக்காவது " யங் கார்சனி" - ன்னு யாராவது இருக்கப்படாதா? எல்லாருமே " மொரட்டு சிங்கிள்ஸ்தானா?
DeleteNo worries sir...போசெல்லியின் ஸாகோர் 2.0 கொஞ்சம் ஜாலிலோ ஜிம்கானா பேர்வழியாகத் தான் வலம் வருகிறார் !
Delete// ஸாகோர் 2.0 கொஞ்சம் ஜாலிலோ ஜிம்கானா பேர்வழியாகத் தான் வலம் வருகிறார் ! // அடடே அருமை
Deleteசிவந்தமண் கதை படித்தேன் நன்றாக இருந்தது. ஆனால் கதை படிக்கும் போது கேப்டன் பிரின்ஸ் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இது எனக்கு மட்டும் தானா?
ReplyDelete//இது எனக்கு மட்டும் தானா?//
Deleteஅப்படித்தான் தோன்றுகிறது நண்பரே !
அப்படியா. நாளைக்கே புக்க பார்சல் அனுப்ப சொல்லி தந்தி அனுப்புறேன்
Delete@அறிவரசு ரவி
ReplyDeleteபறக்கும் பலூனில் டெக்ஸ் கதையும் பயங்கர அடி வாங்கியது நண்பரே.
அந்த கதை எனக்கு பிடித்திருந்தது
Delete@PFP
Deleteஎனக்கும் அந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் பறக்கும் பலூனில் டெக்ஸ் கதை மூச, முச பக்கம் அழைத்துச் சென்று விட்டதாக ஆசிரியர் எழுதி இருந்ததாக எனக்கு ஞாபகம் சகோ.
ப ப டெக்ஸ் குதிரைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தாத கதை.
Deleteஒரு வங்கி கொள்ளை அதை தொடர்ந்து பலூனில் சாகசம்.
டியர் எடி,
ReplyDeleteZAGOR அறிமுக தொகுப்பை 4 பாகங்களில் இருந்து, கதை பூர்த்தி பெற வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதற்கு, கரகோஷங்களுடன் வரவேற்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன். டெக்ஸ் போன்ற நெடுங்கதை காரணிகளை கொண்ட, அதே நேரம் மேஜிக் விண்ட் போல அமானுஷ்ய மந்திரங்களை அதிகம் தெளிக்காமல், வெளிவரும் Zagor தொடரை நமது இதழ்களில் பார்க்க நான் பல வருடங்களாக எதிர்பார்த்திருந்தேன்.
இப்போது அதன் அறிமுகம் சரியான முறையில் ஒரு டோட்டல் பேக்கேஜாக வெளிவர போகிறது என்பதில் எனக்கு தனிபட்ட முறையில் ஒரு ஆத்ம திருப்தியே. எண்ணப்படியே அடிச்சு தூள் கிளப்புங்கள். அக்டோபருக்கு ஸாகோர், டிசம்பருக்கு உயிரை தேடி என்று வெளியிட உத்தேசம் தானே ?! நவம்பரில் தீபாவளி டெக்ஸ் அதிரடி இடம் பிடித்து விடும் என்பதால் தான் கேட்கிறேன்.
ஒரே குறை, ஜகோர் என்று சொல்ல ஆரம்பித்த பிறகு, ஸாகோர் என்று சொல்வது கொஞ்சம் தகறாராக தானிருக்கு 😊. Zagor என்ற வார்த்தைக்கு தற்போதைய தமிழாக்கமான ஸாகோர் என்பதே சரியான உச்சரிப்பு என்றாலும், டார்ஜான், ஜாரோ, ஜகோர் என்று தெரிந்த பெயர் காரணிகளுடன் இதுவும் ஐக்கியமாகி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தான் 😶
பி.கு.: ஏற்கனவே இணையத்தில், ஸாகோரரே, இல்லை சேகரா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே ஆரம்பித்து விட்டதும் ஒரு காரணம்.... 😁
Might have as well given him one of our usual cannine names :-) ;-)
Deleteவேடிக்கை என்னவென்றால் கதையின் 360 வது பக்கம் வரைக்கும் ஹீரோவுக்கு பெயர் பாட்ரிக் வைல்டிங் தான் ! மொத்தத் தொகுப்பிலும் அவரது ஒரிஜினல் பெயரிலேயே வண்டி ஓடிடுகிறது !
DeleteNopes.. I am happy we didn't name him as Steve, John, or Nick 😁
DeleteLet him be the one and only Zagor or ஸாகோர் ... and not Sekar 😊
///360 வது பக்கம் வரைக்கும் ஹீரோவுக்கு பெயர் பாட்ரிக் வைல்டிங் தான் !///
Deleteசார்.. 'பேட்டரி வெல்டிங்'ன்ற பேர் கூட நல்லாத்தான் இருக்கு.
கல்லுல செஞ்ச சுத்தியலை எந்நேரமும் கையிலயே வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி வர்றதால அவருக்கு 'சுத்தி சேகரு'ன்னு பேர் வைச்சாக்கூட நல்லாத்தான் இருக்கும்னு தோனுது.
எடிட்டர்: ஏக் காவ்ன் மேன் ஏக் ஸாகோர் ரஹதா த்தா
Deleteரஃபிக் ராஜா: ஜகோர் தான் அச்சா
ஈ. விஜய்: சேகரோட தாத்தா
ராகவன்: ஜில், ஜங், ஜக்
செ. அபிராமி: சகோர், சாகோர், ஸகோர், ஸாகோர், ஷகோர், ஷாகோர், ஜகோர், ஜாகோர் அல்லது சாஹோர் - என்று நீங்கள் எப்படி அழைத்தாலும், அது Zagor என்ற செவ்விந்திய மொழியோசைக்கு இணையாகுமா என்று கேட்டால், அது ஆகாது. "Patrick Wilding" என்ற இயற்பெயரைக் கொண்ட நம் நாயகருக்கு, செவ்விந்தியர்கள் இட்ட பெயர் தான் "Za-gor-te-nay". அதாவது ஆங்கிலத்தில் "The Spirit with the Ax". அதை "கோடாரி மாயாவி" தமிழாக்கலாமா அல்லது "கோடாரி மாயாத்மா" என்று மொழிபெயர்க்கலாமா, போன்ற ஆராய்ச்சிகளுக்கு செல்லும் முன்னர், பரசுராம புராணத்தின் பத்தாம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் (Load More)
Karthik Somalinga ROFL :))))))
Delete😀😃
Delete@செ. அபிராமி:
Delete//"கோடாரி மாயாவி" என்று தமிழாக்கலாமா //
சரி ரொம்ப யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டேன், "கோடாரி மாயாவி"-யை சுருக்கி,கோயாவி என்று அன்புடன் அழைக்கலாம்!
பெயர் உதவி: https://sharehunter.wordpress.com/
கா சோ @ ROFL :-))))))
Deleteஆக எப்பவாச்சும் ஒருதடவையாவது என்னோட " ஆராய்ச்சி (?) " பதிவுகள்ல ஏதாச்சும் ஒண்ணையாவது காசோ முழுக்க படிச்சிருக்காரு .( அப்படியும் இன்னமும் நல்லாத்தான் இருக்காருங்க) . அந்த நெஞ்சுரத்தைப் பாராட்டி கம்பெனியின் சார்பாக ஏற்கனவே ஒரு டெக்ஸ் கதையில் வந்த, ஒரு லக்கி லூக் கதையிலும் வந்த , இப்பவும் சொர்க்கத்தில் சாத்தான்கள் கதையில் வந்திருக்கற " மர்மோன்கள்" பத்தி வெறும் 2000 வரிகளிலான " இணையக் குறும்பதிவு"( !) காசோவுக்கு அர்ப்பணம் செய்து விரைவில் வெளியாகும். தளத்தின் தாழ்வான பகுதியிலிருப்போர் மேடான பக்கத்து தளங்களுக்கு செல்லுமாறும், இதய பலகீனம் உள்ளவர்கள் டேட்டா இணைப்பைத் துண்டித்து பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Deleteஇரத்தப்படலம் 6 பாகங்கள் கொண்ட 3 புத்தகமாக வந்தது.அதன் பின்னர் ஸாகோர் தான் 6 பாகங்கள் கொண்ட ஒரே தொகுப்பாக வருகிறது என நினைக்கிறேன்.
ReplyDeleteஅப்ப இத கொண்டாடும் விதமா ஓர் சிறப்பு மலர்
Deleteசிவந்த மண்:
ReplyDeleteபொழுது போக்கு
அம்சங்கள் நிறைந்த ஆக்சன் கதை. அடுத்த நடக்க போவது தெரிந்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை. சமீப புது வரவில் கண்டிப்பாக டேங்கோ எனக்கு முதல் இடம். முதல் கதை பாலைவனத்தை அழகாக காண்பித்தார்கள் இதில் கடலை. முதல் கதை அளவிற்கு இரண்டாம் கதையில் ஆழம் இல்லை என்பது இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. இனி டேங்கோ சந்தாவில் நிரந்தர இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆல்பம் # 3 செமையாக உள்ளது கிருஷ்ணா
Delete// சமீப புது வரவில் கண்டிப்பாக டேங்கோ எனக்கு முதல் இடம் // எனக்கும்
Deleteஇந்த வருடம் வந்த புதிய நாயகர்/நாயகியில் எனக்கு பிடித்தவர்கள் ரூபி மற்றும் சிஸ்கோ.
ReplyDeleteஎனக்கும் இருவரையும் பிடித்து இருந்தது பரணி ஆனால் முதல் இடம் டேங்கோ விற்கு தான்.
Deleteகுமார்:-)
Deleteஆல்ஃபாவின் முதல் கதை ரசிக்கும்படி இருந்தது, இரண்டாம் கதை சுமார். அடுத்த எல்லாம் sure hits என திட்டமிடுவதால் இவருக்கு ஓய்வு கொடுக்கலாம்.
ReplyDeleteUnless it's a failure of gigantic proportions ஒரே சீசனோடு ஒரு நாயகருக்குக் கல்தா கொடுப்பது என்பது knee jerk ரியாக்ஷனாக மாத்திரமே இருந்திடும் சார் !தவிர சமீப சிங்கிள் ஆல்பமான "காலனின் காகிதம்" அழகான விற்பனை கண்டுள்ளதொரு இதழும் கூட !
Deleteஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ ; ரூபின் - இந்த நால்வருக்குமே இன்னொரு ஆண்டு நிச்சயம் வாய்ப்புகள் இருந்திடும் !
// சமீப சிங்கிள் ஆல்பமான "காலனின் காகிதம்" அழகான விற்பனை கண்டுள்ளதொரு இதழும் கூட !// அப்பாடி நல்ல வேளை
Deleteஇது எப்ப வந்திச்சு.
Deleteரூபி அக்காவுக்கு என்னோட ஆதரவு எப்பவு உண்டுங்க. என்னா ஸ்டெயிலு என்னா ஸ்டண்டு.
Delete// சமீப சிங்கிள் ஆல்பமான "காலனின் காகிதம்" அழகான விற்பனை கண்டுள்ளதொரு இதழும் கூட !//
Deleteசூப்பர் செய்தி. விற்பனையில் சாதித்து உள்ளார் என்றால் கண்டிப்பாக இடம் கொடுக்கலாம்.
டேங்கோ
ReplyDeleteசிம்பிளா சொல்றதா இருந்தா *சித்திர அதகளம்*.
ஓவியரோட திறமையை மெச்ச பாராட்டலாம்.
ஒரு ஜாலி டூர் போய் வந்த உணர்வை தருவது 😇😍😍😇
பறக்கும் பலூனில் டெக்ஸ், எனது ஆல் டைம் பெஸ்டில் இடம் பெரும் இதழ். பலூனில் கார்ஸனை வலுக்கட்டாயமாக டெக்ஸ் ஏற்ற, அதன் பின் கார்ஸனின் புலம்பல்கள், ரகளைகள் என படு சுவாரஸ்யமான நச் சாகஸம். மேகமூட்டதுடன் இருக்கும் வானமாக இருக்கட்டும், உயரே இருந்து கீழே பார்க்கும் காட்சிகளாக இருக்கட்டும், சித்திரங்கள் இன்னும் கண் முன் நிற்கிறது.
ReplyDeleteஸாகோர் மொத்தமாக வருவது சிறப்பு.
முத்து மற்றும் லயன் இரண்டும் ஒரே நிறுவனத்தில் இருந்தாலும், அந்நாளில் நான் ரசித்து படித்தது லயன் வெளியீடுகளையே. ஏன் என்றால் அதில் நீங்கள் கொடுத்த வெரைட்டி. திகில் & மினி லயனில் வந்த கதைகளும் லயனில் சேர்ந்து கொள்ள, அந்த ஆண்டும் லயனின் பத்தாவது ஆண்டு மலராக அமைய, அவ்வப்போது வாங்கிய நான், அந்த ஆண்டு முதல் ரெகுலர் வாசகன் ஆனேன். ஆனால் அதே சமயத்தில் வந்த முத்து மேல் பெரிதாக நாட்டம் இல்லை. வாங்கிபடிப்பேன், ஆனால் லயன் கொடுத்த ஈர்ப்பை முத்துவினால் கொடுக்க முடியவில்லை.
அப்போது நமது காமிக்ஸ் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது "லயனில் நிறைய நாயகர்கள், நிறைய கதைக்களங்கள் உள்ளது, ஆனால் ஏன் முத்து காமிக்ஸில் மட்டும் அந்த வெரைட்டியை கொணரவில்லை. நீங்கள் தொடங்கியதால் லயன் மேல் கரிசனமா என்று"
அதற்கு தாங்கள் அளித்த பதில் "லயன் ஒரு ஜாலியனா மாடர்ன் பையன் மாதிரி, லுங்கியிலும் திரியலாம், பேண்ட் சட்டையும் போடாலாம், பனியனுடனும் சுற்றலாம். ஆனால் முத்து என்பது காலம் காலமாக கோட் சூட் அணிந்த ஓரு ஜென்டிமேனாகவே பார்க்கபடுகிறது. அதற்கான ரசிகர் கூட்டமும் அதையே விரும்புகிறது. அதில் எவ்வித மாற்றமும் வேண்டாமே."
இப்பொழுது மைய பிரச்சனையே இதுதான், அந்த ஜென்டில்மேன்கள் (நமது நண்பர்கள் தான்) இன்னும் மாறாமல் அப்படியே அதே க்ளாஸிக் பாணியையே விரும்புகின்றனர். வேறு கதைகளுக்கு ஆர்வம் காட்டுவதும் இல்லை, வாங்குவதும் இல்லை. ஆனால் பனியன், லுங்கி பார்ட்டிகளான நாங்கள் வெரைட்டிகளிலேயே ஊறிப்போய் விட்டோம். அதனால் தான் க்ளாஸிக் கதைகளையும் வாங்குகிறோம். முத்து 50 ஆம் ஆண்டில் பழம் கதைகளுக்கு இடம் கொடுத்து அழகு பார்த்ததில் தொடங்கி, அதன் வெற்றியை கருத்தில் கொண்டு நீட்டித்தும் ஆகிவிட்டது. ஆனால் இது ஆரோக்ய பாதையை நோக்கி தான் செல்கிறதா என்றால் கேள்விக்குறியே.
இப்பொழுது தான் ஆகஸ்ட் மாத தோர்கலை படித்து முடித்தேன். பிரமாதம். என்ன ஒரு கதைக்களம், கதை சொல்லலில் என்ன ஒரு நேர்த்தி. இவரது கதைகளை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு தொங்களில் விடாமல் தொகுப்பாக்கி விட்டிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தோர்கல் தேவையா என்னும் நிலை நிச்சயம் வரவே கூடாது சார். இவருக்கே இந்த நிலை என்றால் இனி என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அடுத்து ஆல்பா, சிஸ்கோ, மார்டின், மேக்&ஜாக் என்று எதிர்ப்புகள் புதிய ஜானர்களுக்கும், புதிய களங்களுக்கும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. காலம் காலமாக இருக்கும்
பண்முகதன்மை எனும் நமது ரசனை இப்பொழுது அதள பாதாளம் நோக்கி செல்வதாக ஒரு எண்ணம் மேலோங்குகிறது
பேசாமல் இனி வரும் ஆண்டுகளில் மிச்சம் மீதி இருக்கும் க்ளாஸிக் நாயகர்களையும், டெக்ஸ் மறுபதிப்புககையும் போட்டு சந்தாவை நிரப்பி விடுங்கள். உங்களுக்கும் தலை நோவு மிச்சம், வேலைப்பளுவும் சற்று குறையும். விற்பனையிலும் சாதிக்கும், குடோனும் நிறையாது. அதன் பின் கேட்க மறுபதிப்புகளும் இருக்காது, போதிய அளவுக்கு க்ளாஸிக் நாயகர்களை தரிசித்த பின், அவர்களாகவே வெரைட்டிய கொஞ்சம் கண்ணுல் காமிங்க சார் என்று தெறித்து ஓடி வருவது நிச்சயம். அப்பொழுது பார்த்து கொள்ளலாம் நமது புது முயற்சிகளை.
நண்பர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக எண்ண வேண்டாம், தோர்கல் கதையை படித்த பின் எழுந்த உணர்ச்சி பெருக்கே இது. இன்னும் தாத்தாஸ் படித்த பிற்பாடு என்ன ஆகுமோ.
நன்றி