Sunday, April 05, 2015

கொஞ்சம் சிந்திங்க பாஸ் !!

நண்பர்களே,

வணக்கம். உஷார் - இதனையொரு ஜாலியான சீரியஸ் பதிவாகவும் பார்க்கலாம் - சீரியசான ஜாலிப் பதிவாகவும் பார்க்கலாம் !! டைப் அடிக்க தம் இல்லாத காரணத்தால் நம்மாட்களைக் கொண்டு இதனை டைப் செய்து jpeg -ல் பதிவிட்டுள்ளேன்....so  இதனிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்யும் வழிமுறை எனக்குப் பரிச்சயமில்லை என்பதால் அதற்கான ஆட்கள் வந்து உதவும் வரையிலும் பிழைகளை மன்னிக்கக் கோருகிறேன் ! Here goes this sunday's ramble...!!



"இராட்சஸக் குள்ளன்"  படிக்கும் சமயம் எனது reactions ; 
அட...கதை புதுசா தோணுதே...!  
அடங்கப்பா...
என்ன விட்டிருங்க அண்ணாத்தே..! 
Oh my good God !!
என்னாலே முடிலே..! 
எல்லாம் divine design !!


P.S : மின்னும் மரணம் நம் தரப்புப் பணிகள் 80% நிறைவடைந்து விட்டன...இனி பாக்கி வேலைகளை இந்தப் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின்னே பார்த்து விட்டு, நம் பைண்டரின் தலை மேல் நர்த்தனம் ஆட வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ள பணி  ! So, getting closer to the April 19th deadline !! 

அனைவருக்கும் ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள் ! 

Saturday, April 04, 2015

ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...!

நண்பர்களே,

வணக்கம். வழக்கமாய் நானொரு பதிவிட, நீங்கள் பின்னூட்டங்களோடு  தொடர்வது மாமூல் ! இன்றைக்கு மட்டும் நடைமுறையை மாற்றிக் கொள்வோமே - உங்கள் பின்னூட்டங்கள் முந்திக் கொள்ள  - புதிய பதிவோடு இந்த இடத்தை நாளைக்கு நான் நிரப்பிடுகிறேனே ?! நேற்று வெகு சீக்கிரமே சகல சந்தாப் பிரதிகளையும் கூரியர்களிடம் ஒப்படைத்து விட்டதால் இன்று உங்கள் வீட்டுக் கதவுகளை டெலிவரி தோழர்கள் தட்டிட வேண்டும் ! ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும் இணைந்த இம்மாத இதழ்களின் package பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை தவறாது இங்கே பதியலாமே ?! கடந்த பதிவின் நெரிசலில் புது இதழ்கள் காணாது போய் விட வேண்டாமே என்ற அவாவில் இந்த quickie பதிவு ! !  Happy reading...catch you tomorrow ! 


Sunday, March 29, 2015

இன்னொரு ஞாயிறு...இன்னுமொரு பதிவு...மீண்டும் மூர்த்திகள் !

நண்பர்களே,

வணக்கம். இது மும்மூர்த்திகளில் இருவர் எழுந்தருளும் நேரம் ! "மாயாவி ; லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ என்று அந்தப் பெயர்களைக் கேட்டாலே இன்னமும் எனக்கு சிலிர்த்துப் போகும் ; நான் தாட்டியமாய் இருக்கும் போதே அந்த மறுபதிப்புகளை போட்டு முடிச்சிடுங்க - ப்ளீஸ் !" என்றவாறு இந்தாண்டின் சென்னைப் புத்தகவிழாவின் போது என் முன்னே புன்சிரிப்போடு  நின்ற முதியவரை மட்டுமன்றி, இது போன்ற "மும்மூர்த்தி வாஞ்சை" செண்டிமெண்ட்களை ஏராளமான முறைகள் என்னிடம் பகிர்ந்துள்ள அத்தனை vintage ரசிகர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது ! இது பற்றி நாம் ஓராயிரம்   முறைகள் பேசி விட்டோம் ; விவாதித்து விட்டோம் ; வியந்து விட்டோம் ; சிரித்து உருண்டும் விட்டோம் தான் ; ஆனால் இன்னமும் இந்த மறுபதிப்பின் வேளைகளில் நிகழுமந்த விற்பனை மாயாஜாலத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது ! "ஏப்ரலின் வெளியீடுகளுள் மறுபதிப்புகளும் உண்டா ? அப்படியானால் ஒவ்வொன்றிலும் 25 கூடுதலாய்ப் போடுங்களேன் !" என்று  2 நாட்களுக்கு முன்பு கூட, கோவையின் ஒரு பிரதான புத்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியது போல் ஆங்காங்கே தவறாது நிகழ்வதுண்டு - "மாயாவி" என்ற பெயரைக் கேட்ட மறுகணம் !  

"புதுயுகக் கதைகள் ; மாறுபட்ட ரசனைகள்" என்றெல்லாம் தொண்டை நரம்பு புடைக்க நான் ஒரு பக்கம் சவுண்ட் விட்டுத் திரிய.."அது கிடக்கு அரை லூசு !" என்ற பாணியில் நமது இந்தப் புராதனச் சின்னங்களை இன்னமும் ரசிக்கும் அணி அநேகம் ! பால்ய நினைவூட்டல்களாய்ப் பார்த்தாலும் சரி ; குழப்படியற்ற சிம்பிளான கதைகளென்று பார்த்தாலும் சரி - இந்தக் கதைகள் உலகின் எந்தவொரு மொழியிலும் பெற்றிருக்காத வரவேற்பை நாம் யுகங்களாய்  நல்கி வருவது நிஜம் ! இங்கிலாந்தில் வெளியான இந்தக் கதைகள் பின்னாட்களில் இத்தாலிய மொழியில் ; பிரெஞ்சில் ; ஸ்பானிஷில் கூட வெளிவந்துள்ளன ! In fact - சமீபமாய் போனெல்லி அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது - "நீங்கள் ஸ்பைடர் கதைகளையும் வெளியிட்டுள்ளீர்கள் தானே ?" என்று அவர் கேட்டார் !  எனக்கு நிஜமான ஆச்சர்யம் - இரண்டு காரணங்களின் பொருட்டு : முதல் ஆச்சர்யம் - "ஸ்பைடர்" என்றதொரு 1960's பிரிட்டிஷ் ஹீரோவை கூட   இவர் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ; இரண்டாவது - நமது இதர வெளியீடுகளின் விபரங்களையும் மனுஷன் இத்தனை நுணுக்கமாய் கவனித்து வந்துள்ளாரே என்று ! அப்புறம் தான் தெரிந்தது 1970-களின் ஏதோ ஒரு தருணத்தில் இத்தாலியின் ஒரிஜினல் கூர்மண்டையரோடு சில காலத்துக்கு நம்மாள் போட்டி போட்டிருக்கிறார் என்று ! 

அதே போல ஸ்பானிஷ் மொழியிலும் மாயாவியின் பிரபல கதைகள் சகலம் + ஸ்பைடரின் சாகசங்களின் பெரும் பகுதி + லாரன்ஸ்-டேவிட்டின் சாகஸங்களென ஒரு முழு சுற்று வெளிவந்துள்ளன ! சொல்லப் போனால் இம்மாத லாரன்ஸ் - டேவிட் மறுபதிப்பான FLIGHT 731-க்கு நாம் அட்டைப்பட தோசை சுட்டிருப்பது ஸ்பானிஷ் மாவின் புண்ணியத்திலேயே! சமீபமாய் நமது புது இதழ்களுக்கான ராப்பர்கள் ஒரிஜினல்களைத் தழுவியே அமைத்து வருவதால் அதற்கென பெரியதொரு மெனக்கெடலுக்கு அவசியம் நேர்வதில்லை ! ஆனால் இந்த மறுபதிப்புகளின் விஷயத்தில் மட்டுமே சிக்கல்கள் அட்டைப்பட வடிவங்களில் எழுகின்றன ! ஒரிஜினல் டிஜிட்டல் பைல்கள் படைப்பாளிகளிடமே இல்லையெனும் போது - அட்டைப்படங்களுக்காக நாமிங்கே மொக்கை போடுவது வாடிக்கையாகி வருகிறது ! அந்நாட்களில் ப்ளீட்வே உருவாக்கியிருந்த அட்டைப்பட டிசைன்கள் அழகாய் இருப்பினும் அவற்றை நிறைய முறை நாம் பார்த்தாகி விட்டோமென்பதால் அவற்றினருகே செல்லும் அவசியங்களை சற்றே குறைத்திட நினைக்கிறோம். So இதர மொழிகளில் நம் மும்மூர்த்திகளின் உலாக்கள் நம் கவனத்தை அவ்வப்போது ஈர்ப்பது வாடிக்கையாகியுள்ளது இப்போது ! 

இதோ - அந்த ஸ்பானிஷ் அட்டைப்பட டிசைன் ; அதன் பின்னே ப்ளீட்வேயின் ஒரிஜினல் டிசைன் + நமது கூட்டணித் தயாரிப்பு ! தமிழில் நாம் அன்றைய நாட்களில் வெளியிட்ட FLIGHT 731-ன் அட்டைப்பட ஜாடையும் லேசாக இருந்திடும் பொருட்டு கொஞ்சம் பட்டி-டிங்கரிங் செய்துள்ளோம் ! இறுதி வடிவில் லாரன்ஸ் ஏதோ பரத அபிநயம் பிடிப்பது போல் தோற்றம் தந்தாலும் வழக்கமான துப்பாக்கி-கத்தி-கப்படா பாணியிலிருந்து இதுவொரு சின்ன மாற்றமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்தேன் ! May 1967-ல் ஒரிஜினலாய் உருவாக்கப்பட்ட இந்த லாரன்ஸ்-டேவிட் சாகசம் தான் தமிழுக்கு இந்த நாயகர்களை அறிமுகம் செய்து வைத்த கதை ! அன்றைய நாட்களில் இந்தக் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் well chronicled என்பதால் நான் என் பங்குக்கு அதனுள் தலைவிடப் போவதில்லை ! 



இந்தத் தொடர்கள் வெளியானது இங்கிலாந்தில் தான் எனினும் அவற்றின் படைப்பாளிகள் பெரும்பாலும் இத்தாலியர்களாகவோ, ஸ்பெயின் நாட்டவராகவோ தான் இருந்துள்ளனர் ! FLIGHT 731 கதைக்கு சித்திரம் போட்டவர் ரபேல் லோபெஸ் என்ற இந்த ஸ்பெயின் நாட்டு ஜாம்பவான் தான் ! 

இவர் பணியாற்றியுள்ள கதைகள் / தொடர்கள் பற்றிய பட்டியலைப் போட இங்கே இடம் பற்றாது - மனுஷன் அப்படியொரு பிரம்மிக்கச் செய்யும் எண்ணிக்கையிலான கதைகளை உருவாக்கியுள்ளார் ! லா-டே ஜோடியின் கதைகளில் மட்டும் 7 இவரது கைவண்ணம் ! 

1.தலை கேட்ட தங்கப் புதையல்
2.காற்றில் கரைந்த கப்பல்கள்.
3.பார்முலா X -13
4.FLIGHT 731
5.விண்ணில் மறைந்த விமானங்கள்
6.மஞ்சள் பூ மர்மம்
7.CID லாரன்ஸ்

இவை தவிர, இரும்புக்கை மாயாவி & ஸ்பைடர் - கதைகளுக்கும் நிறைய சித்திரங்கள் போட்டுள்ளார் ! கணினிகள் இலா அந்நாட்களிலேயே இத்தனை அதகளம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் ! 

தொடர்வது நமது ஆஸ்தான மாயாவியாரின் மறுபதிப்பு - "கொள்ளைக்கார மாயாவி" - for the umpteenth time ! இந்த இதழ் தமிழில் வெளியான நாட்களில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்ததொரு கதை ! கிளைமாக்சில் வில்லனைத் துரத்திச் செல்லும் மாயாவியின் நெஞ்சில் வந்து விழும் சம்மட்டி அடி ; அண்டங்காகம் சுமந்துவரும் அந்த விசித்திர ஆயுதம் ; நிழல்படைத் தலைவரை மூக்கோடு சேர்த்துக் குத்தும் sequence என்று மனதில் 'பச்சக்' என பதிந்து போன விஷயங்கள் ஏராளம் ! இன்று திரும்பவும் படிக்கும் போது கண்ணில்பட்டவை பெரும்பாலும் கதையின் லாஜிக் ஓட்டைகளும், மொழியாக்கத்தின் அன்றைய vintage பாணியுமே ! கதையைச் செப்பனிட இயலாதெனும் போது - மொழிநடையை சிறிதேனும் சீர் செய்திடவாவது முயற்சிப்போமே என்று ஆங்காங்கே கொஞ்சமாய் கை வைத்துள்ளேன் ! ஓரளவுக்குப் பற்கள் ஆட்டம் காணாது இப்போது கதையைப் படிக்க முடிந்திட்டால் - செலவிட்ட நேரம் உருப்படியானது என்றாகும் ! இனி வரும் நாட்களிலும் இது போல் (அவசியப்படும்) மாற்றங்களை மட்டும் செய்திடவுள்ளோம் - அதற்கான அவகாசம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் !

இதற்கான அட்டைப்படம் - ஒரிஜினல் டிசைனின் உபயமே - முன்னட்டைக்கு ! பின்னட்டையுமே கூட ஒரு ஸ்பானிஷ் நாட்டு ஓவியரின் கைவண்ணத்தின் தழுவல் - நமது பின்னணி வர்ணச் சேர்க்கைகளோடு ! "பார்க்கப்..பார்க்கப் பிடிக்கும் ரகம் " என்ற நம்பிக்கையோடு இந்த டிசைனை இரும்புக்கையாரின் இம்மாத இதழுக்கு ராப்பராக்குகிறோம் !  Genuinely curious to know how you find them !  



செப்டெம்பர் 1967-ல் உருவான இந்தக் கதைக்கு இன்றைய வயது 48 !! Still going strong !! உலகத்திலேயே இவை தற்போது லைவ்வாக வெளியாவது நமது தமிழில் மட்டுமே என்ற விதத்தில் நாம் பெருமைப்பட்டுக் கொள்வதா ? அல்லது (காமிக்ஸ்) உலகமே எங்கெங்கோ சவாரி செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட - புறப்பட்ட இடத்திலிருக்கும் மரங்களைச் சுற்றிய டூயட் காதலர்களாய் இன்னமும் நம்மைப் பார்த்துக் கொள்வதா ? - விடையறியாக் கேள்வியே ! 

இதோ நம்மில் பலருக்கு காமிக்ஸின் மறு சொல்லாகிப் போய் விட்ட மாயாவியாரின் முக்கிய படைப்பாளிகள்   : 
Jesus Blasco
Tom Tully
கதாசிரியர் டாம் டல்லி ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர் ! ஓவியர் ஜீசஸ் ப்ளாஸ்கோ ஸ்பெயினைத் தாயகமாகக் கொண்டவர்! "கொள்ளைக்கார  மாயாவியின்"  சித்திரங்களைப்  போட்டவர்  ஜீசஸ்  ப்ளாஸ்கோ இல்லையெனினும் கூட, அந்நாட்களில் இதர மாயாவி ஓவியர்களின் முன்மாதிரியே ப்ளாஸ்கோவின் பாணி தான் ! அந்நாட்களில் இங்கிலாந்தில் ஓவியர்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லை தான் ; ஆயினும் இந்தக் கதைவரிசைகளை அயல்நாட்டு ஓவியர்களிடம் ஒப்படைத்ததன் பின்னணி சிக்கன நடவடிக்கைகளே ! இங்கிலாந்தில் ஆகும் செலவுகளை விட, இத்தாலி ; ஸ்பெயின் போன்ற இடங்களில் இவற்றைத் தயாரித்து வாங்குவது பணம் மிச்சம் செய்திடவொரு முக்கிய வழியாக அமைந்திருந்தது ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் சகலத்தையும் அச்சிட்டதும் கூட இத்தாலியில் தான் ! Outsourcing சமீபத்திய நடைமுறையல்ல என்பது தெளிவு ! 

'ரமணா' பாணியில் சிக்கிய புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிப்பதொடு இந்த மறுபதிப்புகளில் எனது கடமை முடிந்து போகிறது ! மேலோட்டமாய்ப் புரட்டிப் பார்த்து விட்டு, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கியான பின்னே இதழ்களைப் பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டி விடாது - please do give them a read ! உங்கள் வீட்டிலுள்ள இளம் வாசகர்களுக்கும் கூட இவை ஒரு சுலபமான துவக்கப் புள்ளியாக இருந்திடலாம் என்பதால் அவர்களுக்கும் படிக்கக் கொடுத்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! "காமிக்ஸ் சேகரிப்பு" என்பது ஒரு சுகமான ஹாபி தான் ; ஆனால் வாசிப்புக்கும் அதனில் ஒரு வாய்ப்பின்றிப் போகும் பட்சத்தில் வெறும் சேகரிப்புகள் மட்டுமே நெடு நாள் ஓடாதே ! 

புராதனங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் பணிகள் ஒரு பக்கம் கறுப்பு-வெள்ளை அச்சோடு நிறைவுபெற்றிருக்க, மறு பக்கமோ வண்ணச் சூறாவளிகளில் தளபதியும், கோமானும் நம்மை பிசியாக ஆழ்த்தி வருகின்றனர் ! "மின்னும் மரணம் " அச்சுப் பணிகள் 70% ஐத் தாண்டி விட்ட நிலையில் - லார்கோவின் பிரிண்டிங் குறுக்கே புகுந்துள்ளது ! வரும் வார இறுதிக்குள் அத்தனையையும் முடித்து விட்டு பைண்டிங் படையெடுப்பில் மூழ்கிடுவதே இப்போதைய அட்டவணை ! அடுத்த சனிக்கிழமை துவக்கம்  எங்கள் ஊரின் கோவில் திருவிழாவின் பொருட்டு புதன்கிழமை வரையிலும் விடுமுறை எனும் போது - மின்னும் மரணம் மெகா இதழினை ஏப்ரல் 19-க்குத் தயார் செய்திட ராட்சஸ முயற்சிகள் அவசியமென்பது இப்போதே புரிகிறது ! எங்களது பைண்டரின் நிலையை நினைத்தால் இப்போதே எனக்குப் பாவமாய் உள்ளது - நம்மவர்கள் தற்காலிகமாய் அவர் ஆபீசில் தான் குடித்தனமே செய்யப் போகிறார்கள் என்பது உறுதி !  இதில் தளபதியின் போஸ்டர் வேறு தயார் செய்தாகணும் - phew !!!  

Moving on, நமது தலையின் 330 + 220 + 110 பக்கக் கதைகளின் தொகுப்பான லயன் 250-வது இதழின் பணிகளும் இன்னொரு தடத்தில் தடதடத்து வருகின்றன ! இரண்டு கதைகள் கிட்டத்தட்ட 70% முடிவடையும் நிலையில் -துரதிஷ்டவசமாய் டெக்ஸ் கதைகளை மொழிபெயர்க்கும் இல்லத்தரசிக்கு சின்னதொரு விபத்தில் எலும்பு முறிவு நேர்ந்து ; அறுவை சிகிச்சைக்கும் அவசியமாகிப் போய் விட்டது ! நான் கைகளைப் பிசைந்த வண்ணம் இருந்த நிலையில் 15 நாட்கள் ஓய்வுக்குப் பின்னே கடமையுணர்வோடு சிரமப்பட்டேனும் தன பங்குப் பணிகளைப் பூர்த்தி செய்து அவர் ஒப்படைத்து விட்டதில் பூரித்துப் போய் விட்டோம் !! பணம் என்பதையெல்லாம் தாண்டி ஒருவித அர்ப்பணிப்பு இல்லையெனில் இது போன்ற செயல்வேகம் சாத்தியமே ஆகாது ! தலைவணங்குகிறோம் ! 

நேற்றுத் தான் 2015-ன் அட்டவணையும், திட்டமிடல்களும் துவங்கியது போலான உணர்வு தலைக்குள் இன்னமும் தேங்கிக் கிடக்க, வருடத்தின் முதல் 5 மாத இதழ்களின் பணிகள் நெருக்கி முடியும் தருணம் புலர்ந்து விட்டதும் புரிகிறது ! வழக்கமாய் ஆகஸ்டிலேயே மறு ஆண்டுக்கான யோசனைகளை ஆரம்பித்து வந்துள்ளேன் - கடந்த 2 வருஷங்களாய் ! அப்படிப் பார்க்கையில் இன்னமும் மூன்றே மாதங்களில் THE YEAR NEXT பற்றிய தீவிர பரிசீலனை துவங்கிடும் நேரமும் வந்து விடும் ! இம்முறை எனது வேலைகளை சுலபமாக்க அதிர்ஷ்டவசமாக ஒரு புதுப் பதிப்பகத்தின் பரிச்சயம் நமக்குக் கிட்டியுள்ளது ! 'எதைப் போட..? எதை வேண்டாமென்று சொல்ல ? ' என்று விழி பிதுங்கும் விதமுள்ளது அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ! நமது தற்போதைய இதழ்கள் அத்தனையையும் பார்த்து விட்டு ரொம்பவே குஷியாகிய நிலையில் - உரிமைகளைத் தர சம்மதம் சொல்லியுள்ளனர் ! மின்னும் மரணம் தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்றான பின்னே, கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு, அவர்களை நேரில் சந்திப்பதாக திட்டம் ! So 2016-ல் நிறையவே அதிரடிகள் காத்துள்ளன folks ! அதற்குள் நமது விற்பனை எண்ணிக்கை கொஞ்சமே கொஞ்சமாய் புஷ்டியாகிடும் பட்சத்தில், அவர்கள் கோரும் ராயல்டிகளை செலுத்திட - முரட்டு அந்தர்பல்டிகளுக்கோ ; திரும்பவும் கடன் கோரி வங்கியின் கதவைத் தட்டுதலோ அவசியமாகாது போகலாம் ! நம்பிக்கையோடு முயற்சிகளை செய்து வருகிறோம் ! 

அடுத்த மாதம் முதல் ரேடியோ விளம்பரங்களை ஒவ்வொரு மாதத்து முதல் வாரங்களிலும் செய்வதாக உள்ளோம். தற்போதைக்கு சென்னை ; கோவை ; சேலம் ஆகிய மூன்று நகரங்களில் கவனம் செலுத்த உள்ளோம் ; இந்தப் பகுதிகளில் நல்ல reach உள்ள சேனல்கள் எவை ? என்பது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் guys ?

சரி ...இப்போதைக்கு நான் புறப்படும் வழியைப் பார்க்கிறேன்..! 'யார் ஜெயிச்சால் நமக்கென்ன ?" என்ற மோன நிலையில் ஞாயிறின் பகல்  பொழுதை பைனல்ஸ் பார்ப்பதில் செலவிட்டு விட்டு, அடுத்து காத்திருக்கும் பௌன்சரின் "கறுப்பு விதவை"யின் மொழிபெயர்ப்பில் செலவிடுவதாக உள்ளேன் ! See you around soon ! Bye for now ! 

P.S : ஏப்ரல் துவக்கத்தின் இதழ்கள் மூன்றும் (லார்கோ + மாயாவி + லாரன்ஸ்) ஏப்ரல் மூன்றாம் தேதி இங்கிருந்து புறப்படும் !  

Tuesday, March 24, 2015

இது கவிதை நேரம்..!

நண்பர்களே,

வணக்கம். ஒரு அவசர வேண்டுகோள்  : "மின்னும் மரணம்" தொகுப்பினில் ஒரே ஒரு பக்கம் காலியுள்ளது ! அதனில் நம் தளபதியைப் பற்றி குட்டிக் குட்டியாக ஹைக்கூ கவிதைகள் சிலவற்றைப் போட்டாலென்னவென்று     தோன்றியது ! So உங்களுள் உறையும் அந்த வைரமுத்துக்களையும், நா.முத்துகுமார்களையும் தட்டி எழுப்புங்களேன் ? ஆறு வரிகளுக்கு மிகாமல். அழகாய் நம் தளபதியாரைப் பற்றிய கவிதைகளாக எழுதி அனுப்பிடலாம் ! சீரியஸ் கவிதைகள் ; ஜாலியான கவிதைகள் - எல்லாமே welcome !

இந்த வேண்டுகோளை கடந்த பதிவின் பின்பகுதியினில்  இணைத்திட்டால்  நிறைய நண்பர்களின் கண்களில் படாமலே போகக் கூடுமென்பதால் இதற்கொரு தனிப்பதிவு status தந்துள்ளேன் ! உங்கள் கவிதை அருவிகளை இங்கேயே ஆறாய் ஓடச் செய்யுங்களேன் - அதனில் எல்லோரும் மூழ்கி களித்திடுவோமே ?! 

இது தவிர, இதழோடு நாம் தரும் அந்த வழக்கமான book-mark -ஐ நீங்களே பிரத்தியேகமாய் டிசைன் செய்திடும் வாய்ப்பும் உள்ளது ! நீங்கள் டிசைன் செய்திடும் அழகான ஆக்கத்தினை உங்களின் பெயரோடு சேர்த்து அச்சிடுவதாக உள்ளோம் !  இதுவுமே டைகரின் உருவமோ / செய்தியோ தாங்கியதாகவே இருத்தல் அவசியம் ! So why not get cracking ?

Sunday, March 22, 2015

ஒரு கோமானும்...ஒரு மர்ம மனிதனும்...!

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் அட்டவணையில் ஒரு குட்டியான / ஜாலியான மாற்றமென்ற சேதியோடு இந்த வாரத்துப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேனே..! (ஏற்கனவே அறிவித்திருந்த) நமது புது அறிமுகத்தின் "விண்ணில் ஒரு வேங்கை" மே மாதத்துக்கு இடம் மாறிட, நம் கோடீஸ்வரர் திடும் பிரவேசம் செய்கிறார் - "டாலர் ராஜ்யம்" வாயிலாக ! ஏப்ரலில் "மின்னும் மரணம்" பணிகள் நம்மை நிறையவே பிசியாக வைத்திருக்கும் தருணத்தில் லார்கோவையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டால் பளு கூடிடுமே என்ற எண்ணத்தில் மிஸ்டர். கோமானை ஒரு மாதம் கழித்தே களமிறக்கிடத் திட்டமிட்டிருந்தேன் ஒரிஜினலாய் ! ஆனால் 56 பக்கங்களினான "வி.வே."யோடும் ; 2 மறுபதிப்புகளோடும் ஏப்ரலின் துவக்கக் கோட்டாவை முடித்திட மனது கேட்கவில்லை ! (மறுபதிப்புகளை மெய்யாகவே, முழுசுமாய்ப் படிக்கும் நண்பர்களின் சதவிகிதம் என்னவாக இருக்குமென்ற ஒரு curiosity எனக்குள் !) எல்லாவற்றிற்கும் மேலாக -லார்கோவின் இந்த அதிர்வேட்டு சாகசத்தின் வேகம் அசாத்தியமானது என்பதால் சிரமங்களே தெரியவில்லை பணிகளில் !! So here comes the blue jeans billionaire - with his albums # 13 & 14 !

2004-ல் முதல் பாகமான "கதை சொல்லும் கரென்சி" வெளியாகிட,சரியாக ஓராண்டின் இடைவெளிக்குப் பின்னே இரண்டாம் பாகமான - "டாலர் ராஜ்யம்" வெளிவந்திருந்தது 2005-ல் ! இது போன்ற த்ரில்லர் கதைகளை ஒரு முழு ஆண்டின் break விட்டு வெளியிடும் பதிப்பகங்களின் தைரியங்களும் ; வாசகர்களின் பொறுமைகளும் உண்மையிலேயே நமக்கு அன்னியமாய்த் தோன்றுமொரு விஷயம் ! இதோ - டாலர் ராஜ்யத்தின் அட்டைப்படத்தின் first look :


சமீப நாட்களது பாணியின் தொடர்ச்சியாக ஒரிஜினல் டிசைன்களே இம்முறையும் முன் & பின் அட்டைப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன - சிற்சிறு மாற்றங்களோடு ! லார்கோவின் அந்த வித்தியாசமான முகத்தை நாம் வரைய முற்பட்டால் ரணகளமாகிப் போவதால் 'சிவனே' என்று ஒரிஜினல்களையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வருகிறோம் ! Hope it looks o.k! உட்பக்கங்களில் இருந்தும் இதோ குட்டியாய் ஒரு டிரைலர் :


வழக்கமான அக்மார்க் அதிரடிகள் ; வழக்கமான பிசினஸ் சிக்கல்கள் ; பொறிகளுக்குள் மாட்டி விட்டு பின்னே வெளியேறும் வழக்கமான லாவகம் என லார்கோவின் கதைகளின் சகல template களும் இந்த சாகசத்திலும் முழுவீச்சில் உண்டு ! ஆனால் opening sequence தான் கதையின் ஹைலைட்டே ; செம அதிரடியான துவக்கம் ! லார்கோவின் கதைகளில் சுவாரஸ்யத்துக்கு என்றுமே பஞ்சம் கிடையாதென்பதொடு - அவை என்றைக்குமே மொழிபெயர்ப்புக்கு அற்புதமான வாய்ப்புகள் தரும் களங்களாக இருப்பதுண்டு ! இம்முறை கருணையானந்தம் அவர்கள் மொழிபெயர்ப்பின் முதல் படியினை செய்திருக்க, லார்கோ ; சைமன் வசனங்கள் + final touches எனது பேனாவினது ! நம் கோடீஸ்வரரை மீண்டுமொரு ஹிட் நாயகனென்று நிரூபிக்க இந்தக் கதை ஒரு சூப்பர் வாய்ப்பு !

கோமான் to மர்ம மனிதன் - இத்தாலியப் புராணம் தொடர்கிறது - சென்ற வாரம் நான் விட்ட இடத்திலிருந்தே ! போனெல்லி அலுவலகத்தில் டெக்ஸ் கதாசிரியரையும், அவர்களது பணிக்கூடத்தையும் பரக்கப் பரக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை ! அட..டெக்ஸ் புதிய இதழ்களின் ராப்பர்களா இவை ? என்றபடிக்கு வாய் பிளப்பது ஒரு பக்கமெனில், டைலன் டாக் ; மார்ட்டின் ; இன்ன பிற போனெல்லி கதாநாயகர்களின் அணிவகுப்பு என திரும்பிய திசையெல்லாம் யாராவது ஒருத்தர் சுவற்றிலிருந்து என்னைப் பார்த்து சிரிப்பதோ - முறைப்பதோ நடந்து கொண்டிருந்தது ! ஒரு பெரிய corporate அலுவலகத்தின் ஜாடையில் இல்லாது போனெல்லியின் ஆபீஸ் ஒரு studio லுக்குடன் வித்தியாசமாக இருப்பதுண்டு ! ஒவ்வொரு அறைக்குள்ளும் ஏதோவொரு நாயகரின் கதைகளுக்கான பணிகள் ; மேஜை நிறைய கதைகளின் ஸ்க்ரிப்ட்டும் ; ஓவிய மாதிரிகளும் என்று குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது !

அப்போது உயரமான,கம்பீரமானதொரு வெண்தாடி மனிதர் அங்கு பிரசன்னமாக அவரை அறிமுகம் செய்து வைக்கும் முன்பாகவே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது எனக்கு ! மர்மமனிதன் மார்டின் கதைத்தொடரின் படைப்பாளியான ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி தான் அவர் ! சென்ற முறையே அவரை நான் சந்திக்க வாய்ப்புக் கிட்டயிருந்த போதிலும், 'ஹலோ' சொல்வதைத் தாண்டி ஏதும் பேசிட வாய்ப்பில்லாது போயிருந்தது ! ஆனால் இம்முறையோ என்னை தனது அறைக்குக் கூட்டிச் சென்று ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் ! அவரது அறைக்குள் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களின் சேகரிப்பு ஒரு வண்டி இருப்பதைக் காண முடிந்தது ! மார்ட்டினின் கதைகள் வரலாறு + எதிர்காலமென ஒரு புதுமையான combo-வில் இருப்பதால் அதற்கென ஏராளமாய் பின்னணி research அவசியம் என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்கும் தான் ; ஆனால் பரீட்சைக்குப் படிப்பது போல இத்தனை ஆழமாய் அதனுள் படைப்பாளிகள் மூழ்கிடுவதை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு தாளவில்லை !

"ஹ்ம்ம்ம்... முத்து காமிக்ஸ் !" என்று அழுத்தமாய்ச் சொன்னவர் சமீபத்திய ம.ம.ம.இதழ் ஒன்றை     நீட்டினார்  என்னிடம் ! அவரது முதுகுக்குப் பின்னே தெரிந்த கம்பியூட்டர் திரையில் "சரித்திரத்தைச் சாகடிப்போம் " என தமிழில் முரட்டு எழுத்துக்களோடு ஒரு black & white பக்கம் பிரதானமாக நின்றது !! என்றோ ஒரு சமயத்தில் நாம் வெளியிட்டிருந்த மார்ட்டின் கதையினை ஸ்கேன் செய்து தனது கம்ப்யூட்டரில் அவர் வைத்திருந்ததைப் பார்த்த போது எனக்கு  'ஜில்'லென்று இருந்தது ! இந்தத் தலைப்புக்கு அர்த்தமென்ன? என்ற கேட்ட மனுஷனுக்கு என்னமோ ஒரு விளக்கம் சொல்லி வைத்தேன் ! "எனக்கு அந்தத் தடியான புக்கில் இன்னும் இரண்டு வேண்டுமே..!!" என்று அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போதே அவர் நமது LMS பற்றித் தான் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! அதனில் வந்திருந்த "கட்டத்துக்குள் வட்டம்" கதை அவரது favorites களுள் ஒன்று என்றும் ; LMS -ல் அதனைப் பார்த்த போது மிகுந்த சந்தோஷம் கொண்டதாகவும் சொன்ன போது எனக்குத் தலை கால் புரியவில்லை ! 

தமிழில் மார்டினுக்குள்ள வரவேற்பு பற்றியும், அந்தக் கதையின் தன்மை காரணமாய் அது டெக்ஸ் போன்ற bestsellers உடன் போட்டி போடுவது சாத்தியமாகாது தான் என்றும் அவரே சொன்ன போது அவரது யதார்த்தம் புரிந்தது / பிடித்தது ! 1982-ல் மார்ட்டின் கதைகளைத் தொடங்கியவர் இன்னமும் இதற்கென இத்தாலிய மொழியிலொரு தீவிர வாசக வட்டமிருப்பதை இயல்பாய்ச் சொன்னார் ! நாம் இதுவரை ம.ம.ம. கதைகளை அளவாகவே பயன்படுத்தி வந்திருப்பதால் ஆழமான "மார்ட்டின் ஞானம்" எனக்கிருக்கவில்லை எனும் போது பொதுவாகவே பேசிக் கொண்டிருந்தேன் ! அடுத்த மாதம் மார்ட்டினின் சாகசம் வெளியாகவிருப்பதால் அது பக்கமாய்ப் பேச்சு திரும்பியது ! கனவின் குழந்தைகள் + பிரபஞ்சப் பயணிகள் என 2 பாகக் கதையிது ; இதற்கென நமக்கு வந்திருந்த CD க்கும், ஒரிஜினல் இதழுக்குமிடையே முதல் சில பக்கங்களில் வேற்றுமை இருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினேன் ! பல்லாயிரக்கணக்கான பக்கங்களை உருவாக்கிய மனுஷனுக்கு ஒவ்வொரு கதையும் துல்லியமாய் நினைவில் நிற்கும் போல ; உடனே டிஜிடல் பைல்களின் நிர்வாகியை வரவழைத்து ஏதோ சொல்லிட, சற்றைக்கெல்லாம் ஒரு பச்சை நிற தடிமனான ஆல்பமும், ஒரு மெலிதான மார்ட்டின் இதழும் அங்கே வந்து சேர்த்தன ! ஒரிஜினலாய் இந்தக் கதையினை மாதந்திர வெளியீடாகத் தயாரித்த சமயம் முதல் 10 பக்கங்களை வேறொரு விததமாய் உருவாக்கி இருந்ததாகவும், பின்னாட்களில் அதனை ஒரு தொகுப்பாய் வெளியிட்ட வேளைதனில் சில மாற்றங்களைச் செய்ததாகவும் விளக்கினார் ! So மாற்றங்களால் கதை துளியும் மாறிடாது என்றும் புரியச் செய்தார் ! கம்பியூட்டராவது - கத்திரிக்காயாவது - ஒரு கைதேர்ந்த ஆற்றலாளரின் நினைவாற்றலின் முன்னே இயந்திரங்கள் பிச்சை தான் எடுக்க வேண்டுமென்று தோன்றியது ! ஜெர்மனியில் ; அமெரிக்காவில் ; துருக்கியில் ; செர்பியாவில் ; குரோவேஷியாவில் என வெளியாகியிருக்கும் மார்டினை ஆசியத் துணைக்கண்டத்தில் வெளியிடும் ஒரே பதிப்பகம் நாமே என்பதை அவர் matter of fact சொன்ன போது இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றியது ! மாறுபட்ட ரசனைகளுக்கும் ஸ்வாகதம் சொல்லும் எங்கள் வாசகர்களுக்கொரு பேட்டி தர  இயலுமா என்று நான் கேட்ட போது - of course !!" என்று சொல்லி தனது மின்னஞ்சல் முகவரியைத் தந்தார் ! So அவரிடம் கேட்க உங்களுக்குக் கேள்விகளிருப்பின் - please do mail me ! 




தமக்கையின் இல்லத்திலொரு விசேஷம் என்பதால் ஞாயிறு காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டியுள்ளதால் இவ்வாரத்துப் பதிவை இதற்கு மேல் நீட்டிட அவகாசமில்லை ! So இத்தாலியப் புராணத்தையும், இவ்வாரத்துப் பதிவையும் நிறைவு செய்வதற்கு முன்பாய் குட்டியாய் சில துணுக்குச் சேதிகள் : 

  • டெக்சின் ஒவ்வொரு புது இதழும் 190,000 இதழ்கள் விற்பனை காண்கின்றனவாம் - இத்தாலிய மொழியினில் மட்டும் !
  • இத்தாலிக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் டெக்சுக்கு வெறித்தனமான ரசிகப் பட்டாளம் உண்டாம் !! 
  • டெக்சின் விற்பனை எண்ணிக்கைகளைப் பின்தொடரும் நாயகர் டைலன் டாக் தானாம் !! 
  • டைலன் டாக் ரசிகர் மன்றம் என 2 தனித்தனிக் குழுக்கள் இத்தாலியில் உள்ளனவாம் ! 
  • நாம் இதுவரை "வீதியெங்கும் உதிரம்" & "நள்ளிரவு நங்கை"  இதழ்களில்  215 பிரதிகள் இத்தாலியில் விற்றுள்ளோம் !! இது நமது சென்னை விற்பனைகளை எட்டிப்பிடிக்கும் எண்ணிக்கை !! 
  • டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...! 
  • நமது 2013 தீபாவளி மலரில் வெளியான டேவிட் போநெல்லியின் பேட்டி தான் அவரது முதல் பேட்டியாம் !! நிஜமான சந்தோஷத்தொடு அதைச் சொன்னார் டேவிட் ! 
  • "மின்னும் மரணம்" அச்சுப் பணிகள் துவங்கி மூன்று நாட்களாகி விட்டன ! Touch wood - இது வரையிலான வேலைகள் பிரமாதமாக நடந்தேறியுள்ளன ! இன்னுமொரு வாரம் 'தம்' பிடித்து இரவு, பகல் பாராது நமது டீம் உழைப்பை நல்கிட்டால் அட்டகாசம் தான் !! Fingers crossed !!
  • ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! அது என்னவாக இருக்குமென்ற யூகங்களை உங்களிடம் விட்டு விடுகிறேன் ! இதழ் வெளியாகும் சமயம் அது என்னவென்று சொல்கிறேனே..! 
  • ஏப்ரல் 13-23 தேதிகளுக்குள் நடந்திடும் சென்னை புத்தக சங்கமத்தில் நாம் பங்கேற்கிறோம் !
  • சென்னையில் நிறைய கடைகளை எட்டிப் பிடிக்க முயற்சித்தும் வருகிறோம் ; இம்மாதம் துவக்கம் கீழ்க்கண்ட கடைகள் அனைத்திலும் நமது இதழ்கள் கிடைக்கும் :  

Discovery Book Palace,
No-6,Mahavir complex,First floor,
Munusamy salai,
K.K.Nagar west
Chennai-600078
cell-9940446650,ph no-044 65157525

Park Book House
20/2,EVR Periyar high road,
Near golden cafe,
Peramet,
chennai-3, cell- 94448 96858

Sri Eswar Enterprises
Archana arcade,new no-27,old no-16
Natesan street
T.Nagar
Chennai-600017,cell-98846 68667,
ph no-o44 24345902,24339591

Bella Publishers & Book Sellers
52,Ranganathan street,
T.nagar,
Chennai-17,cell- 94441 01894,ph no-044 24341622,24311644

New Book Lands
52,C,North usman road,Basement,
Near panagal park
Fly over north end,
T.nagar
Chennai-17,
cell- 98402 27776,98402 907776,ph-044 2815 8171,28156006

T.Raja sekar,
M/S.Books Corner,
AB-2,Second avenue,
opp;Spencers dairy building,
Anna nagar
chennai-40,
cell-98415 67467,ph -044 42172388

தொடர்ந்து ஊர் ஊராய் பயணம் மேற்கொண்டு நமது விற்பனை முயற்சிகளை செய்து வருகிறோம் ! ஒன்றுக்குப் பாதி சொதப்பலாகுவதும், வசூல்களுக்கு மல்லுக்கட்டுவதும் ஆங்காங்கே நிறையவே நிகழ்ந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை ; ஆனால் 'தம்'கட்டிக் கொண்டு ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறோம் - ஆண்டவனும், காமிக்ஸ் ரசிகர்களும் நம்மைக் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் guys ! Bye for now !