Powered By Blogger

Saturday, September 28, 2024

அழைக்குது அக்டோபர்!

 நண்பர்களே,

வணக்கம். ஒரு தெறி பிஸி அக்டோபர் கூப்பிடு தொலைவில் காத்திருக்க இப்போவே பேஸ்மெண்டெல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கியாச்சு! இன்னான்றீங்களா?

- 440 பக்கங்களுக்கு டெக்ஸ் தீபாவளி மலர் ‘24!

- 104 கலர் பக்கங்களில் வேட்டையன் ஜாரோப்புடன் முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ‘24!

- 192 பக்கங்களில் மிஸ்டர் நோவுடன் நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர்!

ஆக 736 பக்கங்களின் பணியானது “ரா...ரா... சரசுக்கு ரா... ரா...” என்று மிரட்டலாய் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது! And இதிலொரு அழகான பின்புல ஒற்றுமையும் இல்லாதில்லை! 

நமது தற்போதைய மொழிபெயர்ப்பு டீமில் ஒன்றுக்கு, மூன்றாய் செம fresh யுவதிகள் இடம்பிடித்திருக்கின்றனர்! ஓசையின்றி எக்கச்சக்கமான பின்புலப் பயிற்சிகளுக்குப் பின்பாய் இந்த மூவரணி நமக்காக இப்போது பேனா பிடித்து வருகின்றனர்! Of course “பூ“ என்று அவர்கள் எழுதியிருப்பதை “புய்ப்பம்” என்று திருத்தி எழுதும் எனது திருகுதாளங்களும் உண்டு தான் ; இன்னமும் கணிசமான திருத்தங்களின்றி அவர்களது ஸ்கிரிப்ட்களைக் களமிறக்கச் சாத்தியமில்லை தான்! ஆனால் துள்ளிக் குதித்து வரும் நம்ம “இயமை” நிரந்தரமானதல்ல எனும் போது, ஒரு backup டீமை தயார் பண்ணிடும் அவசியம் ஜிங்கு ஜிங்கென்று முன்னே நின்று டான்ஸ் ஆடி வருகிறது! And மேலே நான் குறிப்பட்டுள்ள 3 தீபாவளி மலர்களும், ஒவ்வொரு அம்மணியின் கைவண்ணமென்பதால் அவற்றுள் புகுந்திட செம ஆர்வமாய் வெயிட்டிங்! 

அதுவும் அந்த டெக்ஸ் 4 பாக மெகா சாகஸமானது இப்போது நமக்கு நிரம்பவே பரிச்சயமாகிப் போயிருக்கும் எஸ்கிமோக்களின் இன்யூட் பூமியில் அரங்கேறிடும் த்ரில்லர்! இந்த 4 பாகங்களுக்கும் 4 தெறி அட்டைப்படங்கள் ஒரிஜினலில் போனெலி போட்டுத் தாக்கியிருக்க, அவற்றில் எதையுமே ஓரம்கட்ட மனசு கேட்கவில்லை! So நான் முன்னே குறிப்பிட்ட economy slipcase இந்த நவம்பரில் டெக்ஸுடன் களம் காண்கிறது! 224 பக்கங்கள் வீதம் 2 ஆல்பங்கள் & அவற்றை இந்த slip case-க்குள் வைத்து compact ஆக வழங்கவிருப்பதால் - ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்!

மற்ற கதைகளுக்குக் கூட மகளிரணி பேனா பிடித்து விடலாம் தான்; ஆனால் ‘தல‘ சாகஸங்களுக்கு அது அத்தனை சுலபச் சமாச்சாரமே நஹி! So டெக்ஸுக்கெனவே பிரத்தியேகமாய் ஒருத்தரை earmark செய்து - கிட்டத்தட்ட 40 டெக்ஸ் கதைகளை வாசிக்கும் அவசியத்தை அவருக்கு ஏற்படுத்தினேன்! “இவரு அவருக்கு தோஸ்த் ; அவரு இவருக்கு மச்சான் முறை... அந்தாளுக்கு, இந்தாளு சித்தப்பு!... So அவுக இப்படிப் பேசிக்கணும்; இவுக அப்படிக் கதைச்சிக்கணும்” என்று கிட்டத்தட்ட முக்கால் வருஷத்துக்குப் பாடமெடுத்து பாடாய்ப்படுத்தி எடுக்க - சகலத்துக்கும் எவ்வித எரிச்சலின்றி தலையாட்டினார். அதே சமயம் அவரவரது ஒரிஜினல் எழுத்து பாணிகளுக்கு தடா போட்டுப்புட்டால், அம்புட்டுப் பேரும் எனது clone-களாக மாறி - “புளகாங்கிதம் அடைந்தார்; “புழுக்கடிக்கு சொறிஞ்சார் என்று ஒரேமாதிரி எழுத ஆரம்பித்து விடுவரோ என்ற பயமும் இருந்தது! So அந்தந்தக் கதைகள் / நாயகர்கள் / தொடர்களுக்கென, நாம் இது நாள் வரை set செய்து வைத்திருக்கும் template-களை மதித்திடும் அவசியங்களை மட்டும் வலியுறுத்தினேன்! And here we are!! 

இந்தப் பயிற்சிப் பட்டறைகளின் பலனே போன மாதத்து டிடெக்டிவ் ரூபின் சாகஸத்தின் மொழிபெயர்ப்பு! ஒரு லேடி ஈரோயினிக்கு ஈ குஞ்சாகோபன் அவ்வை ஷண்முகயியாய் மாறி, பேனா பிடிப்பதைக் காட்டிலும் ஒரு ஒரிஜினல் ஸ்தீரியே பேனா பிடித்தால், வல்லியதொரு ஸ்க்ரிப்ட் சாத்தியமாகிடும் என்ற எண்ட சொப்பனம் மெய்யாகிப் போயீ! So வரும் நாட்களில் lady power புதுப்புது வாசிப்பு அனுபவங்களை - எனது திருத்தங்களுக்கு அவசியங்களின்றிப் படைக்கச் செய்தால் , ஞான் சிறப்பாய் ரண்டு நாட்களுக்கொரு ரீல்ஸ் போட்டுக்கினே குஜாலாய் பொழுதுகளை நகர்த்தும்! எண்ட குருவாயூரப்பா... ஆ நாள் சீக்கிரமே புலரட்டும்!

டெக்ஸின் அடுத்த மாத சாகஸம் காத்திருப்பது எஸ்கிமோ பூமியில் என்றால் - இதோ அக்டோபரிலேயே நம்மை அந்தப் பனிபடர்ந்த பூமிக்கு இட்டுச் செல்ல கமாண்டர் ப்ரூனோ ப்ரேஸில் தனது 2.0 அவதாரில் காத்திருக்கிறார்! முதல் சுற்றிலான ப்ரூனோ ப்ரேஸில் கதைகள் உருவாக்கப்பட்டது ஜாம்பவான் ஜோடியான Greg & Vance-ன் கைவண்ணங்களில் தான்! And நிஜத்தைச் சொல்வதானால் - இந்தத் தொடர் அந்நாட்களில் பதிப்புலகையும், வெள்ளித்திரைகளையும் ஆண்டு கொண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் 007-ன் ஒரு பாலிஷான வார்ப்பே! ஸ்டைலிஷான ஒரு நாயகர்; சும்மா பந்தாவான கோட்-சூட் என்று முதல் ஆல்பத்தில் வலம் வந்த ப்ரூனோ, தொடர்ந்த ஆல்பங்களில், முதலைப்பட்டாளத்தின் இதர அங்கத்தினர்களையும் இணைத்துக் கொண்டார்! இந்தக் கதைகள் ஒரிஜினலாய் உருவான 1967-ல் - அமெரிக்கா தான் உலகத்தின் மேய்ப்பராக அம்புட்டுப் பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். ரஷ்யர்கள், மற்றும் கம்யூனிஸ்ட் தேசங்கள் சகலமும், லோகத்தை நாசம் பண்ணப் பிறந்தோர் என்பதாகவும், அமெரிக்க இரகசிய ஏஜெண்ட்கள் தான் பூமியையே உருப்படியாய் சுழலச் செய்து கொண்டிருந்தனர் என்பதாகவும் படங்கள், நாவல்கள், காமிக்ஸ்கள் ரவுண்டு கட்டி அடித்து வந்தன! அந்தக் காலகட்டத்தின் உலக அரசியல் அரங்கிலும் Cold War ஒரு அதிமுக்கிய அம்சமாக இருந்து வந்ததால் - மேற்கத்திய வாசகர்கள் இந்த மாதிரியான படைப்புகளை செம ஆர்வமாய் ரசித்து வந்தனர். So அந்த நாட்களின் வெற்றிக்கான formula-வினை கதாசிரியர் Greg-ம் கையிலெடுத்திருந்தார் - ப்ரூனோ ப்ரேசில் தொடரின் வாயிலாக! 1969-ல் முதல் ஆல்பம்; 1971-ல் இரண்டாவது; அதன் பின்பாக 1977 வரைக்கும், ஆண்டுக்கொரு ஆல்பம் என வெளிவந்து கொண்டிருந்த தொடரானது ‘பச்சக்‘ என அத்தோடு படுத்து விட்டது! அதன் பின்பாய் 1995ல் ஒரேயொரு ஆல்பம் & அதன் பின்னர் பரணே ஜாகையாகியிருந்தது - முதலைப்பட்டாளத்துக்கு!

ஆனால் க்ளாஸிக் நாயகர்களுக்கு ஒரு புது லுக் தந்திடும் முனைப்பு வேகமெடுத்த போது முதலைப்பட்டாளம் 2.0 சாத்தியமானது! 2019-ல் இந்த முயற்சி ஒரு டபுள் ஆல்பத்தோடு துவங்கிட ; அதற்குப் பின்பாக ஒரு ஒன்-ஷாட் 2022-ல் வெளிவந்தது! இதோ அக்டோபரில் நீங்கள் வாசிக்கவிருப்பது அந்த ஒன்-ஷாட் தான்! 


பனிக்கடலில் முதலைகள் ஒரு புத்தம்புது கிரேட்டிவ் டீமின் கதை / சித்திரம் / கலரிங்கில் அனல்பறக்கச் செய்திடுகிறது - வடதுருவத்துப் பனிப்பூமியில்! இங்கே நாயகர்கள் / நாயகியர் அனைவருக்குமே வயது முதிர்ந்து இருப்பதாய், தயக்கமின்றிக் காட்டிடத் திட்டமிட்டுள்ள கதாசிரியர்  பாராட்டுக்கு உரியவர். அது மட்டுமன்றி ப்ரூனோவுக்கு ஒரு சராசரி மனிதனைப் போலான மெல்லிய உணர்வுகள்; சுக-துக்கங்கள் இருப்பதையும் அழகாய் கதையின் இறுதியில் உட்புகுத்தியுள்ளார்! சித்திரங்களோ முற்றிலும் வேறொரு லெவல்! பனிபூமியும் சரி, அந்த வனாந்திரங்களின் எழிலும் சரி, பனிக்கரடிகளின் மிரட்டலும் சரி - ஓவியர் + கலரிங் ஆர்டிஸ்டின் கைவண்ணங்களில் அதகளம் செய்கின்றன! So ரூ.135 விலைக்கு ஒரு ஆர்டிக் துருவப் பயணச்சீட்டு ரெடி ! இதோ - ஒரிஜினல் ராப்பர் + உட்பக்க previews!! அக்டோபரின் தவறவிடக்கூடாத இதழ்களுள் இதற்கு நிச்சயம் இடமுண்டு என்பேன்!

And மாதத்தின் இறுதி இதழாக இடம்பிடித்திட வேண்டிய ஸ்டெர்னின் “மாயா... எல்லாம் மாயா...” அந்த “மிஸ் பண்ணலாகாது” லிஸ்டில் இடம்பிடிக்கப் போகும் இன்னொரு இதழும் கூட ! இதோ - ஒரு மென்சோகம் நூலிழையாய் இழையோடும் நாயகர் ஸ்டெர்னை ஒரு அட்டகாசமான அட்டைப்படத்தில் ரசித்திடுவோமா? ஒரிஜினல் அட்டையே - நமது மெருகூட்டலுடன்!

கதையைப் பொறுத்தவரை இது நிகழ்வது நியூ ஆர்லியன்ஸ் நகரினில்! அது ஊடூ சூன்யங்களுக்கு பெயர் போன நகரம் எனும் போது, இந்த ஆல்பத்திலும் அதன் தாக்கத்தினைக் கண்டிட இயலும்! தனிமையில் உழன்று வரும் நம்மாளுக்கு ரம்யமாய் ஒரு தோழி இங்கு கிட்டிட, சுறுசுறுப்பாய் மனுஷன் சுற்றி வருகிறார்! நிஜத்தைச் சொல்வதானால் - இந்த வாரத்தின் நடுவாக்கில், அம்மாவின் முதலாண்டு நினைவு நாள் வந்திட்டதால் ரெண்டு நாட்களுக்கு அதனில் பிசியாகிப் போனேன்! And வார இறுதியினில் வெளியூர் பயணம் என்பதாலும் ஸ்டெர்னின் பணிகளை இன்னமும் முடித்தபாடில்லை! கையோடு பக்கங்களையும் கொண்டு வந்திருப்பதால் குட்டிக்கரணம் அடித்தேனும், மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்திட வேண்டும். நான் முடித்துத் தந்தால் மீதப் பணிகள் முற்றிலுமாய் மூன்றே நாட்களில் நிறைவு கண்டிடும்! ஜெய் பாகுபலி 💪!

Before I wind up, சிம்பிளான கேள்விகள் :

1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?

2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?

3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?

திருச்சியில் புத்தகவிழா அட்டகாசமாய்  ஓடிக்கொண்டுள்ளது and நமது ஸ்டால் நம்பர் : 60. அந்தப் பகுதி நண்பர்கள் ஒரு விசிட் அடிக்க இயன்றால் சூப்பர் 🔥🔥!!

Bye all... See you around! Have a lovely weekend!

191 comments:

  1. Ella special ithalukkum pay pannauma illa pannitomannu theriyala

    ReplyDelete
  2. Replies
    1. 😂
      சீக்கிரம் college சேர்ந்துடுங்க சார்🤗

      Delete
  3. Bruno Brazil என் ஃபேவரைட் சார்... முகமற்ற‌ கண்கள் புத்தகத்தை ஒரு ஆயிரமுறையாவது படித்திருப்பேன்... சிறு வயதில் அந்த படங்களின் அழகில் மயங்கி... அதே போல் வரைய கிளம்பிய பல கூத்துகள் உண்டு...

    I Love Bruno Brazil

    😍♥️🌹🔥

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோ... முகமற்ற கண்கள் நான் முதல் முறை சின்ன பக்கங்கள் மாத்திரம் முதல் முறை பார்த்திட்ட போது அந்த உயிரோட்டமான ஓவியம் தான் இரத்தப்படலம் 1 என்று நினைத்து விட்டேன். ராணி காமிக்ஸ் என்று ஒரு அற்புதமான காமிக்ஸ் இதழ் வெளிவந்த போது தான் இதுபோன்று லயன் காமிக்ஸ் தரம் வெளிப்பட்டது..

      Delete
    2. அதே அதே Doc. One of my favorite முகமற்ற கண்கள்.simply awesome

      Delete
    3. சூப்பர் A, KK... MARAKKA முடியுமா.. முகமற்ற கண்களையும், தவளை மனிதர்களின் முத்திரையை யும்... ❤️👍🙏

      Delete
  4. மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  6. புருனோ பிரேஸில் கதை படித்தது இல்லை... So eagar to read...😊

    தல டெக்ஸ் 440 பக்க மெகா ஆல்பம் மெகா வெயிட்டிங் 🥰

    ReplyDelete
  7. Bruno Brasil... With no shadows of doubt...
    We love you Sir...Thanks a lot...

    ReplyDelete
  8. எனதுஇம்மாத முதல் வாசிப்பு ப்ரூனோ பிரேசில் . எனது பெஸ்ட் குள்ள நரிகளின் இரவு

    ReplyDelete
  9. அடடே வந்துட்டேன்

    ReplyDelete
  10. 1. ஸடெர்ன். 2. 50 ஆனா சிலது மறக்கத்தான் செய்யுது. 3. I ❤️ Stern

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  12. முதல் ல அந்த பால்காரன் கணக்கை முடிச்சுறனும் னு திருவிளையாடல் தருமி சொல்ற மாதிரி .... முதலில் BRUNO BRAZIL கதையை படிச்சு முடிச்சுட்டு தான் மத்தது.😁😍🥰💐

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  14. ஸ்டெர்ன் & ப்ரூனோ அட்டைப் படங்கள் அள்ளுது

    ReplyDelete
  15. இரண்டு அட்டைப்படங்களும் செம கலக்கலாய் அமைந்து உள்ளது சார்...சூப்பர்...ப்ரூனோவின் உட்பக்க கலரிங் சித்திரங்கள் அதற்கு மேல் பட்டையை கிளப்புகிறது...ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  16. ப்ரூனோ குழுவினர் எனக்கு மிக பிடித்த நாயக குழு சார்.....அவர்களின் சித்திரங்கள் அப்பொழதே அவ்வளவு ரசிக்க வைத்த பாணிகள்...

    ReplyDelete
  17. ஸ்டெர்ன் கண்டிப்பாக வாங்குவேன்..கண்டிப்பாக வாசிப்பேன் சார்...

    ReplyDelete
  18. சார்.. இந்தவருட தீபாவளிக்கு 3 தீபாவளி மலர்கள் என்பது icing on the round bun! இப்பவே தீபாவளி நெருங்கிட்டாப்ல ஒரு குதூகலம்!! 🥳🥳
    'தல'க்கு இந்த மாசம் 'ஸ்லிப் கேஸ்' மரியாதை வேற!! நாலு அட்டைப்படங்கள் வேற!! ( நீ கலக்கு தல)😍😍😍🥰🥰🥰

    ReplyDelete
  19. முதல் வாசிப்பு கண்டிப்பாக ஸ்டெர்ன் தான் ஆகையால் கண்டிப்பாக வாங்கவும் செய்வேன்
    அடுத்து முதலை பட்டாளம் 2.0 எப்படி இருக்கு என்று படிக்க ஆவல்
    ஜேம்ஸ் பாண்ட் மற்றும் ஜானி போல இவரும் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்

    அது முடிந்து மற்றவர்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு அட்டைப்படங்களும் அமர்க்களமாக உள்ளது சார் பதிவிலேயே அடர்ந்த கலர்கள் கண்ணை பறிக்கின்றன நேரில் காண ஆவல்

      Delete
  20. இன்று பதிவை சீக்கிரமா குடுத்து விட்டீர்கள், அருமை ஆசிரியரே
    எங்கள் தலீவர் ஹாப்பி

    ReplyDelete
  21. ஸ்டெர்ன் அட்டைப்படம் செமயாக உள்ளது
    கண்டிப்பாக இந்த வெட்டியானை படித்துவிடுவேன்

    ReplyDelete
  22. அக்டோபர் வரிசை:
    1. ஸ்டெர்ன்
    2. ப்ரூனோ பிரேசில்
    3. டெக்ஸ்

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. தற்போதைய மொழிபெயர்ப்பு டீமில் ஒன்றுக்கு, மூன்றாய் செம fresh யுவதிகள் இடம்பிடித்திருக்கின்றனர்! ஓசையின்றி எக்கச்சக்கமான பின்புலப் பயிற்சிகளுக்குப் பின்பாய் இந்த மூவரணி நமக்காக இப்போது பேனா பிடித்து வருகின்றனர்! ///
    வாழ்த்துக்களுடன் நல்வரவு புது மகளிர் அணிக்கு.
    " சிங்கப்பெண்ணே. சிங்கப் பெண்ணே.. ஆணினமே உன்னை வணங்குமே..."
    (ஓ... பாட்டாவே பாடிட்டியா... குணா கமல் மாடுலேஷன்)

    ReplyDelete
  25. அட்டவனை பதிவு ரெடியாகிட்டு இருக்கிறது உளவாளிகள் தகவல் சொல்றாங்க ஆசிரியரே
    சகோதரர்கள் அட்டவனை பதிவுக்கு டைப்படித்து தர ரெடியாக இருக்கின்றனர் , நம்பி குடுக்கலாம், என்னைய தவிர்த்து வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார்கள், ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்..

      Delete
  26. இரத்தப்படலத்துக்கு பின், ஸ்லிப் கேஸ்.. அதுவும் டெக்ஸுக்கு முதன்முதலாய். ஆவலுடன் வெயிட்டிங.

    ReplyDelete
  27. செப்டம்பர் இதழ்கள்:
    1. வெள்ளை கரண்டி - அருமை, தொடரலாம்.
    2. ரூபின் - அட்டகாசம்!! இவரோட தொட்டால் தெறிக்கும் மட்டுமே படித்த ஞாபகம் உள்ளது. அடுத்த புத்தகம் 96 மணி நேரங்கள் கதையே ஞாபகம் வரவில்லையே... ஒருவேளை படிக்காமல் தேங்கி இருக்கிறதோ... தேடிப் பார்க்கனும்.

    ReplyDelete
  28. "இரவின் எல்லையில் " அட்டைப்படத்துக்கு பிறகு கலக்கலான கலர்ஃபுல் அட்டைப்படங்கள் அக்டோபர் மாத இதழ்களுடையது.
    ப்ரூனோ அட்டை ஜில்லுனு ஸ்கை ப்ளூ கலர்ஃபுல் என்றால் - இன்னொரு பக்கம் ஸ்டெர்ன் அட்டை டார்க்கில் மிரட்டுகிறது.
    அதேபோல இரண்டிலும் உட்பக்க படங்களும் பளீர் பளீர்.

    இந்த அக்டோபர் மாதம் டெக்ஸ் ஒருபக்கம் அதிரடி என்றால்,
    இன்னொரு பக்கம் "நள்ளிரவு நாயகனாக ஜானி,
    மிரட்டும் அட்டைப்படத்தோடு ஸ்டெர்ன்,
    பனிப் படலங்களுக்கு நடுவே ப்ரூனோ...என
    மினி தீபாவளிதான் அக்டோபர்.
    1.
    1)ப்ரூனோ.
    2)ஸ்டெர்ன்.
    3)ஜானி.

    2)சத்தியமாக நினைவில்லை.

    3) நண்பர்களின் பரிந்துரையில் சமீபத்தில் தான் இவரது முந்தைய பாகங்களை வாங்கினேன்.

    நேரமே வந்த இனிமையான பதிவு, மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  29. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  30. // அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ? //
    1.ப்ரூனோ,
    2.ஜானி,
    3.ஸ்டெர்ன்,
    4.டெக்ஸ்...

    ReplyDelete
  31. 2. ப்புரூனோ பிரேசிலு.. அதிஅற்புதமான ஓவியத்துடன் வந்த கதைகளை வாசகர்கள் அநியாயமா பகடி பண்ணி பரணுக்கு அனுப்பிட்டாங்கோ

    ReplyDelete
  32. ப்ரூனோ ப்ரேசில்-ஸ்டெர்ன்-டெக்ஸ்

    ReplyDelete
  33. ஸ்டெர்ன்
    புருனோ
    டெக்ஸ்..

    ஜானி வர்ராறா..

    அப்படி வந்தா ஜானிதான் பர்ஸ்டு..😍😘

    ReplyDelete
  34. //- 440 பக்கங்களுக்கு டெக்ஸ் தீபாவளி மலர் ‘24!////

    ---பீரோலு பீரோலு...

    //- 104 கலர் பக்கங்களில் வேட்டையன் ஜாரோப்புடன் முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ‘24!///

    --சிலுவரு பேட்டரி...சிலுவரு பேட்டரி...

    //- 192 பக்கங்களில் மிஸ்டர் நோவுடன் நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர்!///

    ---பீரோலுக்குள்ள பீரோலு...

    😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  35. //economy slipcase இந்த நவம்பரில் டெக்ஸுடன் களம் காண்கிறது! 224 பக்கங்கள் வீதம் 2 ஆல்பங்கள் & அவற்றை இந்த slip case-க்குள் வைத்து compact ஆக வழங்கவிருப்பதால் - ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்!///

    ---🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨
    🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

    தீபாவளி வந்தாச்சேஏஏஏஏஏஏஏஏஏ....

    ReplyDelete
  36. //இதோ அக்டோபரிலேயே நம்மை அந்தப் பனிபடர்ந்த பூமிக்கு இட்டுச் செல்ல கமாண்டர் ப்ரூனோ ப்ரேஸில் தனது 2.0 அவதாரில் காத்திருக்கிறார்!///

    ///ப்ரூனோ ப்ரேஸில்///--ம்ம்ம்ம்ம்... எவ்வளவு யோசித்தும் இந்த ப்ரூனோவை வாசித்த மாதிரி நினைவில்லை...இவரை முதன் முதலாக சந்திக்க உள்ளேன்..பார்ப்போம்..கவருவாரா??. இல்ல ராமையா கூடவே ஜோடி போடுவாரானு...!

    ReplyDelete
  37. //// “மாயா... எல்லாம் மாயா...” அந்த “மிஸ் பண்ணலாகாது” லிஸ்டில் இடம்பிடிக்கப் போகும் இன்னொரு இதழும் கூட ! இதோ - ஒரு மென்சோகம் நூலிழையாய் இழையோடும் நாயகர் ஸ்டெர்னை ஒரு அட்டகாசமான அட்டைப்படத்தில் ரசித்திடுவோமா? ஒரிஜினல் அட்டையே - நமது மெருகூட்டலுடன்!///

    ஆஆஆஆஆத்திஈஊஊஈ... அப்படியே மெர்சலூட்டுதுங் சார் அட்டைபடம்...சும்மா ஆயிரம் மார்க்கு அட்டைக்கு...

    ReplyDelete
  38. ////கதையைப் பொறுத்தவரை இது நிகழ்வது நியூ ஆர்லியன்ஸ் நகரினில்! அது ஊடூ சூன்யங்களுக்கு பெயர் போன நகரம் எனும் போது, இந்த ஆல்பத்திலும் அதன் தாக்கத்தினைக் கண்டிட இயலும்///

    அட டே..அட்டகாசம் சார்.. நம்ம லயன்300ன் கியூபா படலத்தில் தல டெக்ஸ் கூட இந்த நியூ ஆர்லியன்ஸ் போயிருந்தமே.. அப்ப இந்த வாங்கா சூன்யகாரனுகளை பார்த்திருந்தோம்.. மீண்டும் நியூ ஆர்லியன்ஸ் ஸா... அடி தூள்!

    ReplyDelete
  39. ////இந்த வாரத்தின் நடுவாக்கில், அம்மாவின் முதலாண்டு நினைவு நாள் வந்திட்டதால்....///

    ---- தாயாரின் வார்த்தைகள் இன்னமும் எங்கள் காதில் ஒலித்த வண்ணமே உள்ளதுங் சார்..

    "எம் பையனை பார்த்துக்கோங்கப்பா..."--னு அவங்க சொன்னதும் அந்த 2016 ஈரோடு விழாவில் அவர்களை பார்த்து பேசியதும் என்றும் நினைவிலிருக்கும்...
    அவரது வார்த்தைபடி நாங்கள் என்றும் தங்களோடு உடன் இருப்போம்!🙏

    ReplyDelete
  40. சூப்பர் சார்...
    அட்டைப் படம் நீலம்னாலே மனமெல்லாம் சந்தோச ஜாலம்தான் ...இதான் டாப்னு வாட்சப்ல பாத்து துதிக்கையை...கீழ வழுக்கி விழ வைக்குது பாசி பச்சை வண்ணம் கொண்ட ஸ்டெய்ன் நாந்தா டாப்னு...ரெண்டு அட்டையுமே செம சார்...ஆனாலும் ஓர் படி தூக்கல் ஸ்டெய்ன்...அந்த பின்வட்டம்..பேக்ரவுண்டு செம அசத்தல்

    ReplyDelete
  41. அதும் புருனோ உள்ள கம்யூனிச சிவப்பில் ...‌ஆவலோ ஆவலை கிளப்ப...பனிப்போர்...அந்த ரெண்டாவதுலயோ மூனாவதுலயோ படிச்ச கேட்டாலே குதூகலம் படுத்தும் எஸ்கிமோங்கிற வார்த்தை...அடடா

    ReplyDelete
  42. அடுதத மாச டெக்ஸும் எஸ்கிமோ...நாலட்டை ஸ்லிப் கேஸ்னு இதுக்கு மேல என்ன சார் வேணும்......மிஸ்டர் நோ முழுநீளக்கதே...அடேயப்பா...வேட்டையன் வேற....அப்புறம் ஏதோ ஓர் கடந்த கால பயணக்கதை...தீபாவளி ஏக்கத்தோட

    ReplyDelete
  43. 1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?


    ரொம்ப வருடம் கழித்து வருவதால் ப்ரூனோ தான் முதலில்
    1.ப்ரூனோ
    2.ரிப்போர்ட்டர் ஜானி
    3.டெக்ஸ்
    4.ஸ்டெர்ன்

    ReplyDelete
  44. 2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?

    இவரின் அப்பல்லோ படலத்தை மறக்க முடியுமா கதை ஆரம்பம் முதல் அதிரடியாய் பறந்து இறுதியில் சோகமாய் அந்த சோகம் நம்மையும் வெகுவாக தாக்கும் விதமாய் மறக்க முடியாத கதை ப்ரூனோ மறக்க இயலாத நாயகர்

    ReplyDelete
  45. // யுவதிகள் இடம்பிடித்திருக்கின்றனர்! ஓசையின்றி எக்கச்சக்கமான பின்புலப் பயிற்சிகளுக்குப் பின்பாய் இந்த மூவரணி நமக்காக இப்போது பேனா பிடித்து வருகின்றனர்! //

    நன்று சார். இவர்கள் எழுத்துக்களை படிக்க முடியும் ஆர்வமுடன் உள்ளேன். வாழ்த்துக்கள் இந்த அணிக்கு.

    ReplyDelete
  46. // நான் முன்னே குறிப்பிட்ட economy slipcase இந்த நவம்பரில் டெக்ஸுடன் களம் காண்கிறது! //

    வாரே வா☺️ சூப்பர் சார். ஆவலுடன் காத்திருக்கிறேன் 😍

    ReplyDelete
  47. // ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்! //

    தீபாவளிக்கு பலகாரதை சூப்பரா நீங்கள் தயார் செய்து வருவது நாளையே இது கைகளில் கிடைத்தது விடாதா என்று ஏங்க வைக்கிறது ❤️

    ReplyDelete
  48. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  49. 3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?

    கண்டிப்பாக படிப்பேன்

    ReplyDelete
  50. ப்ருனோ பிரேஸில் V.2.0. ஆல்பம் 3, அட்டைப்படம். உள்பக்க ப்ரீவீயூக்கள் அதகளம் செய்கிறது. ஓவியர் பிலிப் ஐமண்ட் (லேடி S புகழ்) கைவண்ணத்தில் சித்திரங்களில் தெறிக்கும் ஆக்ஷனும் கலரிங்கும் செம தெறி ரகம்.

    வாசிப்பு வரிசை
    1. ப்ரூனோ பிரேஸில்
    2. ஜானி
    3. ஸ்டெர்ன்
    4. டெக்ஸ்

    ப்ருனோ பிரேஸிலின் மர்மச் சவப் பெட்டிகள் & அப்போலோ படலம் மறக்க முடியுமா...?

    ஸ்டெர்னைக் காண ஆவலுடன் waiting.

    ReplyDelete
  51. 224 பக்கங்கள் வீதம் 2 ஆல்பங்கள் & அவற்றை இந்த slip case-க்குள் வைத்து compact ஆக வழங்கவிருப்பதால் - ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்!//

    அருமை... கண்டிப்பாக படிக்க முயற்சிக்கிறேன் சார்.

    ReplyDelete
  52. 1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?
    1. ஸ்டெர்ன் 2. ப்ருனோ 3. ஜானி 4. டெக்ஸ்

    2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?
    மறக்க முடியாது சார். முகமற்ற கண்கள், குள்ள நரிகளின் இரவு

    3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா? கண்டிப்பாக வாங்குவேன் வாசிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. // மறக்க முடியாது சார். முகமற்ற கண்கள், குள்ள நரிகளின் இரவு //

      குள்ளநரிகளின் இரவு - ராபின் ?

      Delete
    2. // இல்லை ப்ரூனோ பிரேஸில் //
      பார்க்கிறேன் ஜீ.. மாபியா சம்பந்தமான கதை என்பதாக ஞாபகம்

      Delete
  53. Bruno brazil லெண்டிங் லைப்பரி வாயிலாக படித்தது ஞாபகம் வருகிறது

    ReplyDelete
  54. // பனிக்கடலில் முதலைகள் //

    135 ரூபாய்க்கு ஆர்டிக்கை தரிசிக்க நான் ஆவலுடன் உள்ளேன் சார்.

    ReplyDelete
  55. 1. முதலில் ப்ருனோ பிரேசில் அடுத்தது ஸ்டெர்ன் பின் டெக்ஸ்.
    2. என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க?
    3. டெஃபினிட்டலி.... டெஃபினெட்லி...

    ReplyDelete
  56. // 1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ? //

    1) ரிப்போட்டர் ஜானி
    2) ஸ்டெர்ன்
    3) டெக்ஸ்
    4) ப்ருனே 2.0

    ReplyDelete
  57. // 2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு? //

    எனக்கு உள்ளது

    ReplyDelete
  58. 1. அன்றைய மனநிலைதான் எதை படிப்பது என்பதை முடிவு செய்யும். இப்போது கூற இயலாது. ஜானி, முதலைப்பட்டை மற்றும் டெக்ஸ். இவர்களில் ஒருவர் தான் எனபது மட்டும் நிச்சயம். முதல் வாசிப்பு ஸ்டெர்ன் இல்லை என்பது மட்டும் உறுதி
    2. நம்பினால் நம்புங்கள், ப்ரூனோ பிரேசிலின் கதைகளில் எனக்கு பிடித்தது சாக மறந்த சுறா தான். மற்றவை எனக்கு சுமார் ஆகத்தான் தெரிகிறது.
    3. கண்டிப்பாக ஸ்டெர்ன் வாங்கி படிப்பேன். ஆனால் விலை தான் ஓவர். பக்கங்களுக்கும் விலைக்கும் சம்மந்தம இல்லை. சன்சைன் லைப்ரேரி யில் வந்தாலும் இது கூடுதல் விலையே

    ReplyDelete
    Replies
    1. அது என்னங்கண்ணா - "சன்ஷைன் லைப்ரரியிலே வந்திருந்தாலும் " என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்? புரியலீங்களே?

      Delete
  59. muthalil tex ssagasam, piragu muthalai pattaalam ithai pdipatharku mun nostalgia vil konjam
    moozhga vendum... piragu sirithu thanimai thevai stern padippatharku.

    ReplyDelete
  60. 1995 க்கு பிறகு "முதலை பட்டாளம் " பரனில் குடியிருக்கிறார்களா... 😄😄😄
    கடவுளே.. சிரிப்பில கண்ணீர் வருதுங்க sir... எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதறீங்களோ.. 😄😄😄❤️..

    ReplyDelete
    Replies
    1. @வாடகைதான் கொடுக்கல போல..😃😀

      Delete
  61. ஈரோடு இளவரசே உங்கள் பிறந்தநாளான இன்று எங்களுக்கு அறுசுவை விருந்து கிடைக்குமா 😋

    ReplyDelete
  62. நகைச்சுவை நாயகர் இனிமையான பாடகர் நமது செயலர் ஈரோடு (சேலம்)விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
    2. @செந்தில் சத்யா
      @ K.S
      அன்பான வாழ்த்துக்கு ஆயிரத்தி சொச்சம் நன்றிகள் நண்பர்களே 😍😇😇🙏

      Delete
  63. முதல் வாசிப்பு ப்ரூனோ - தான்..
    அப்றம் - ஜானி ..
    மற்றவை - நுனிப்புல் மேய்தல்..
    பின் சாவகாசமாய் படித்தல்..
    ... மர்மச் சவப் பெட்டிகள் - முதல் இதழை விட .. "முகமற்ற கண்கள், "மிகவும் வசீகரித்த இதழ்...
    அந்த காலத்தில் மிகவும் ரசித்து பல தடவை படித்த இதழ்..
    ஸ்டெர்ன் - முதல் கதையில் வெட்டியான் + பிரேத பரிசோதனை டாகடர் போல் செயல்பட்டதால் சற்றே அருவருப்பு..
    ஆனால், இரண்டாம் கதையிலிருந்து - அந்த புத்தக் காதலால் மிகவும் பிடித்த நண்பர் ஆகிவிட்டார்..

    ReplyDelete
  64. அருமை குருநாயருக்கு அன்பு சிஷ்யபுள்ளயின் பிறந்தநாள் வணக்கங்கள்..!

    Happy birthday Erode vijay..💐💐

    ReplyDelete
    Replies
    1. ஹாப்பி பர்த்டே இரக்க சிந்தனை உள்ள ஈரோட்டு இளவரசரே.

      Delete
    2. "Big boss" க்கு Happy birthday wishes..😍😘💐💐

      Delete
    3. ஈவி@ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂

      Delete
    4. அடடே.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'பன்'பாளரே 💥💥

      Delete
    5. @KOK
      @செனா அனா
      @ஜம்பிங் ஜி
      @STVR
      @எசமான் ஜி
      @ஸ்டீல்

      அன்பான வாழ்த்துக்கு ஆயிரம் நன்றிகள் நண்பர்களே 😍😇😇🙏

      Delete

  65. //1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?

    2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?

    3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?//

    In a lighter vein

    வாசிப்பு வரிசை என்பதை விட கேள்வி வரிசை லாஜிக்கலாக பின்னிலிருந்து முன்னாக வரவேண்டும் என்பது போல் தோன்றுகிறது.



    3. ஸ்டெர்னை வாசிப்பேன். ஈரோட்டு இளவரசர் இரு கைகளாலும் விரித்து புஸ்தகத்தை படிக்கும் போது தலையை உள்ளே நுழைத்து படித்து விடுவேன்.

    எப்போது வாங்குவேன் என்றால்

    சல்லிசாக கிடைக்கும் போது வாங்காமல் விட்டுவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து ஒரு சந்தா தொகை கட்டும் அளவுக்கு விலையில் பேன்மேடு காமிக்ஸ் வெளியாகும் போது வாங்குவேன்.

    2. நான் கைமாத்து வாங்கிவிட்டு திருப்பி தராதோர் பட்டியலில் இவர் பெயர் இடம் பெறவில்லை. எனவே இவரை ஞாபகம் இல்லை.

    1. எனது குடும்ப ஜோசியர் தான் இதைப் பற்றி எல்லாம் முடிவு செய்வார். கிரகங்களின் நிலை பற்றி நன்றாகத் தெரிந்த பின் செயல்படுவது தானே உசிதமானது

    ReplyDelete
    Replies
    1. ///ஈரோட்டு இளவரசர் இரு கைகளாலும் விரித்து புஸ்தகத்தை படிக்கும் போது தலையை உள்ளே நுழைத்து படித்து விடுவேன்.///

      செனா அனா ஜி.. 'ஈரோட்டு இளவரசரின் அழகான, குட்டியூண்டு தொப்பையின் மீது சொகுசாக தலை வைத்து படுத்தபடியே கி.நா படிக்க ஆசை' என்று நேரடியாக சொல்லி இருக்கலாமே.. Why so பீடிகை? 😁😁😝

      Delete
  66. எனது வாசிப்பு வரிசையும் 1 . ப்ரூனோ பிரேசில். 2 . ஸ்டெர்டன் 3 .டெக்ஸ். வழக்கம்போல் ஜானி 4வது

    ReplyDelete
  67. காலப்பயணம் போய் ரொம்ப நாளாச்சே....ஆர்ச்சி யின் கோட்டைய பாத்து வெகு காலமாக...நீங்க வேற ரோஜர்...ப்ரூனோ பிரேசில்னு கேட்டு வைக்க...அட்டாணிய துலாவ...அகப்பட்டது ரோஜரின் மர்மகத்தியும்...காலத்தின் கால் சுவடுகளும்...துணையாக அடுத்தடுத்து இருந்த முகமற்ற கண்களையும் ....சாக மறந்த சுறாவயும் எடுத்து கொண்டு ...

    படிக்க அமர்ந்தேன் மர்மக்கத்தியோட...உள்ளிட்டவைமுன்பக்கம் ஒரிஜினலானதாய் வாளில் ஒளிபட்டதாலும் தெறிக்க அங்கிருந்து துலாவிக் கொண்டை பதிநாலாம் நூற்றாண்டுக்கும் வண்ணங்களோடும்...மாந்தர்களோடும் பயணிக்க..அட்டகாசம்...ஆவலென அந்த ரோலானின் வாள் காலத்திரையை கிழித்து வெளிப்படுது ....அந்த தொற்றிக் கொள்ளும் திருட்டுப் பயணி இன்னும் காணமே என புலம்புமிடங்களென நகைச்சுவையை தூவ...சுவாரஸ்யமாய் கதையை நகர்த்துகிறார் மேற்கொண்டு..சும்மா தெறித்த கதை இவர்கள் எப்படி மீண்டு வந்தார்களென முழிக்க வைக்க...கனவோன்னு பாத்தா தென் படும் வாளும்...டைம் லூப்போ என
    க/தையை/(தவை)த் தட்டும் விஞ்ஞானியும்...முரணாய் தோன்றினாலும் ஓர் சுவாரஸ்ய அனுபவமே...ரோஜருக்காயாவலுடன்.....காலத்தின் கால் சுவடுகள் ஈர்த்தாலும்


    முகமற்ற கண்கள வாசிக்கப் போகிறேன் முகம்முழுக்க கண்களுடன்

    ReplyDelete
  68. *மங்களமாய் மரணம்*

    ரூபின் - மேகி கேரிசனுக்கு எதிர்பதமான ஒரு கேரக்டர், சோடாவை போன்ற ஒரு அதிரடி நாயகி, கலக்கியிருப்பார் என்று எதிர்பார்த்து கதைக்குள் குதித்தால் ஏமாற்றமே. கடைசி சில பக்கங்களை மட்டும் ரூபினின் அதிரடிக்காக தாரை வார்த்து இருக்கிறார்கள். மற்றபடி கதை எங்கெங்கோ சுற்றி வந்து மூக்கை தொடுகிறது. 

    அனைத்து நாட்டு மருத்துவ உலகிலும் நடக்கும் கருப்பு பக்கங்களை தோலுரித்து காட்டும் கதைக்காகவே இந்த ஆக்கத்தை பாராட்டலாம். நடுவில் ஆணாதிக்க சிந்தனைகளை  சாடும் கருத்துக்கள் மெயின் கதைக்கு ஒட்டாமல் ஒரு கிளைக்கதையாகவே பயணிக்கிறது. முதல் இரண்டு கதைகளில் கலக்கிய ரூபிணி இந்த கதையில் ஒரு சைடு கேரக்ட்டராக வலம் வர வைக்க வேண்டிய அளவுக்கான கதையாக அமைந்துள்ளது. 

    கதையும் ஓவியங்களும் வழக்கம் போல ரசிக்கவே வைக்கிறது. தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஹோட்டலில் விட்டுச்சென்ற மாப்பிள்ளையை பேட்ரோல் காரிலேயே ஏற்றிச்செல்லும் காட்சி, எதற்காக என்று பிடிபடவில்லை. மீண்டும் ஒரு முறை இந்த கதையை நிதானமாக படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்கிறது இது போன்ற சந்தேகங்கள். 

    கதை 10/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 9.5/10 

    ReplyDelete
  69. *சிறையில் ஒரு அழகி*

    நம் தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கு புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் ஸ்பூன் மற்றும் ஒயிட்டின் கலகல சாகசம். கதையின் நாயகர்கள் சொதப்புவது தான் கிச்சு கிச்சு மூட்டுகிறது. மற்றபடி இருவரும் ஒன்றுமே செய்யாமல் கதை தாமாக நகர்கிறது. 

    கதையின் அடிநாதம் புதுமையாக உள்ளது. வரலாற்றில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற கதைகளில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து ரசிக்கும்படியாகவே கதையை நகர்த்தியிருக்கிறார்கள். கதையின் நிஜ கருவான கோட்னி பால்கனி மீதான இரு டிடெக்டிவ்களின் காதல் சுகப்படவில்லை. ஒரு வேளை இதன் பின் வரும் கதைகளில் அது இன்னும் மெருகேற்றப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். 

    கதையில் ஊடுருவி செல்லும் பல்வேறு அரசியல் (போராட்டக்காரர்களின் அரசியல், சாமியாரின் அரசியல், காவல்துறையின் அரசியல், மீடியாக்களின் அரசியல்) நடவடிக்கைகள், நகைப்பை கொண்டு வந்தாலும் அது தான் நிஜம் என்பது படிக்கும் எத்தனை நபர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பது சந்தேகமே. நம் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள ஆகச்சிறந்த ஆக்க்கமாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்கலாம். 

    சிரித்ததை விட இந்த கதையில் நான் சிந்தித்ததே அதிகம். இது போன்ற கதைகளை வெளியிடும் துணிச்சலுக்காகவே இந்த கதைகளை வாசகர்களாகிய நாம் இன்னும் அலசி ஆராய வேண்டும் என்பது என் ஆவல்.

    GOLDEN GOTH என்பது ஹோட்டலின் பெயர் என்று நினைக்கிறேன். அதை தமிழில் கோல்டன் கூஸ் என்று மொழிபெயர்த்தத்தின் ரகசியம் எனக்கு பிடிபடவில்லை. 

    ஹெலிகாப்டரில் DUMBO என்று எழுதப்பட்டிருந்ததை DUMB என்று ஒரு இடத்தில் காட்டியிருப்பது எதேச்சையானது என்பதையும் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. 

    மொத்தத்தில் மற்றொரு முறை ஓவியங்களை உள்ளார்ந்து நோக்கினால், இது போல் ஆங்காங்கே தூவப் பட்டிருக்கும் HUMOUR களை ரசிக்க இயலும் என்று எண்ணுகிறேன். 

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
  70. September books rating
    1. TEX
    2. ZAGOR
    3. SPOON AND WHITE
    4. RUBIN

    ReplyDelete
  71. சார் அக்டோபர் மாத புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. அக்டோபர் இதழ்கள் அக்டோபரில் கிடைக்கும்...

      Delete
  72. அட்டவணை பதிவை 26ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  73. https://youtu.be/S8bXy_OFEsw?si=4CNooZbSOdTLYNMR

    ஒரு நீளமான வீடியோ பதிவு folks ; நாளை எடிட் செய்து வாங்கி விடுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹஹ...கட்டுபடுத்த முடியல...எனக்குத்தான்...மீண்டுமோர் பொற்காலம் சார் இன்றைய இரவு...பழங்கால நினைவுகள் தரும் சந்தோஷத்துக்கு விலையேது...வாழ்ந்தாச்சு ஒரே இரவில் இத்தனை லயன் காலங்களயும்னு... இந்த ஒரே வருத்த அத்தனையும் கொட்டிக் கிடக்கு...புதையல்னு தேடுவோமே ஏங்குவோமே ..புதையல்னா இந்த இடந்தா...அந்த வருடந்தா

      Delete
    2. சார் ப்ளீஸ் டோன்ட் எடிட். நன்றாகத்தான் இருக்கிறது இப்போதுதான் முழுமையாக பார்த்து,கேட்டு முடித்தேன். பென்டாஸ்டிக்.

      Delete
    3. சார் அருமையான வீடியோ பதிவு. உங்கள் எழுத்தில் உள்ள சரளம் இப்போது வீடியோ பதிவிலும் வந்து விட்டது. The longer the Vlog better it is.

      Delete
    4. அப்படியே நேரில் அமர்ந்து நீங்கள் பேசுவது போல உள்ளது.

      Delete
    5. Best Year 1985. Without any doubt.

      Delete
  74. நமது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நான் நேற்று திருச்சியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு சென்று நமது முத்துக்காமிக்ஸ் ஸ்டாலின் திருமதி ஜோதி மேடத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் மேலும் நானும் எனது நண்பரும் ஒரு 1500 ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினோம்.
    மேலும் நிறைய வாசகர்கள் புத்தகத்தை வாங்கி சென்றனர். நன்றி.

    ReplyDelete
  75. @Edi Sir..😍😘

    1)அக்டோபர் புக்ஸ் எப்ப கிளம்புதுங்க சார்..

    2)2025 அட்டவணை எப்ப ரிலீஸ்ங்க சார்..

    3)தீபாவளி ஸ்பெஷல் + Electric' 80.. தீபாவளிக்கு முன்னாடியே கிடைச்சிடுங்களா சார்..

    ReplyDelete
    Replies
    1. கேள்வி எண் 3க்கு பதில் ஆமாம்.

      முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. //முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையே //

      மூன்று கேள்விக்குமே பதில்...

      இம்மாதம்

      Delete
  76. ஆண் : ஏனய்யா...
    அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
    உந்தன் ஞாபகமே

    பெண் : அம்மம்மா முதல் ப்ரூனோ பார்வையிலே
    சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே

    ஆண் : சின்னச் சின்ன பதில்களும்
    சின்னச் சின்ன கேள்விகளும்
    மின்னல் போல வந்து வந்து போகும்

    பெண் : பதில் வந்து கேள்வி தந்து
    கட்டிக் கொண்டபோதும்
    அந்த நினைவு வந்து அம்மாத புத்தகத்த தேடும்

    ஆண் : இது காலங்கள் நாட்கள் செல்ல

    பெண் : ஆ...

    ஆண் : நிறம் மாறிடும் தேடல்கள் அல்ல..

    பெண் : ஆ...

    ஆண் : ஏனய்யா...
    அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
    உந்தன் ஞாபகமே

    ***

    ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
    யூ ட்யூப் மேல் இளம் வாசகர்க்கோர்
    85 வித்தை காட்டியவா..

    பெண் : இம் மாத புக்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
    பதிவ போடாமல் அதை தேடாமல்
    நினைவை மறந்து வாட்டுவதா

    ஆண் : ஆசிரியகாரன் தானே பதில போட்டு நீயே
    ஏக்கம் தீரவே மெதுவாய் மெதுவாய்
    தொடரலாம்
    ஏனய்யா...கதை உன்னை நனைக்கும்
    இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

    பெண் : அம்மம்மா பதில் உன்னை கேட்டு
    இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் (இசை)

    ஆண் : துத் துத் துது... துத்
    துதுது..துத் துத் துது... துது

    இரு : துத் துத் துது... துத்
    துதுது..துத் துத் துது... துது

    ***

    ஆண் : அன்று விளம்பரம் சொல்லியது
    இம்மாதம் சத்தியம் பன்னியது
    அடி இப்போதும் புக் வாராமல்
    உந்தன் நெஞ்சில் நிற்கிறது

    பெண் : அங்கு ப்ரூனோ சோலைகளும்
    ஜானி கட்டும் பாத்திரமும்
    டெக்ச கேட்டோமே சண்டை போட்டோமே
    அது குடோனில் நிற்கிறது

    ஆண் : சேதிசொல்லிப் போவே தங்க லயனிலாவே
    ஆசை தீரவே பாக்கலாம்
    இந்த நாள் இரவு (இசை)

    ஆண் : துத் துத் துது... துத்
    துதுது..துத் துத் துது... துது

    ஆண் : ஏனய்யா...
    கதைய சுவாசிக்கவும் அன்ப வாசிக்கவும்
    தென்றல் காத்திருக்கு

    பெண் : அய்யய்யா ஸ்டர்ன காதலித்து புத்தி பேதலித்து
    புஷ்பம் பூத்திருக்கு

    ஆண் : உன்னை தொட்ட கதைக வந்து என்னை விட்டு
    என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக

    பெண் : உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று
    ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

    ஆண் : இன்று கேள்வி பாட்டெடுத்தோம்

    பெண் : ஆ..ஆ...

    ஆண் : பெரு மூச்சுடன் காத்திருக்கோம்

    பெண் : ஆ..ஆ...

    ஆண் : ஏனய்யா...
    அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே (இசை)

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை ஸ்டீல்
      💐💐💐💐💐

      Delete
  77. சூப்பர் ஸ்டீல். எங்கேயோ போயிட்டீங்க. 😂

    ReplyDelete
  78. @Edi Sir..😍😘

    #October books despatch Today#😍😃😘😀

    பனிக்கடலின் முதலைகளின் இறுதி ஆட்டத்தை நள்ளிரவின் நாயகன் வந்து மாயமாக மறைய வைக்க போகிறார்.👍👍👍😘😍

    ReplyDelete
  79. ஒற்றை நாளில் மொழி பெயர்ப்பு ஒற்றை நாளில் dtp .ஒற்றை நாளில் பிராஸஸிங் &பைண்டிங் ஒற்றை நாளில் டெஸ்பாட்ச் . இப்படியொரு தயாரிப்பில் வரும் புத்தகத்தை நாங்கள் படிக்கப் போகிறோம் என்பதை நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது . உங்கள் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லைங்க சார்

    ReplyDelete
  80. Chorus:யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ
    🎺🎺🎺🎺🎺🎺🎺🎺

    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ.

    பெ:உன்னை அழைத்தது லயன்
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
    கதையை குடுத்தது விசய....ன்

    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ.

    சொல்ல நினைத்தது ஜா..ன்
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
    மெல்ல ரசித்தது ஸ்டெர்...ன்

    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ.

    ஆர் யூ ரெடி. ரெடி. ரெடி.
    ஆர் யூ ரெடி. ரெடி. ரெடி.

    ஆ:ஐயம் ரெடி. ரெடி. ரெடி.
    யா>>>>>>>>>>>


    Chorus:தருத்தாரோ.தருத்தாரோ.
    தருத்தாரோ.தருத்தாரோ
    🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

    தருத்தாரோ.தருத்தாரோ.
    தருத்தாரோ.தருத்தாரோ

    🎹🎹🎹🎹🎹🎹🎹🎹

    பெ:நீருமின்றி மீனுமில்லை

    காமிக்சின்றி நானுமில்லை


    வா வா எந்தன் பார்சலே....
    கையணைக்க மெய்யணைக்க
    வேற்றுலகை தொட்டணைக்க
    ஆனந்தம் நான் சொல்லவா....

    ஆ:நீ.....புது ப்ரூனோ
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
    நா..ன் ரசிப்பேனோ....
    🎶🎶🎶🎶🎶🎶🎶

    நீ....யொரு டெக்ஸ் மேகம்
    🎶🎶🎶🎶🎶🎶🎶
    நான் தான் தொடும் செவ்வா..னம்

    பெ:ஆர் யூ ரெடி. ரெடி. ரெடி.

    ஆ:ஐயம் ரெடி. ரெடி. ரெடி யா


    யோஹோ. யோஹோ. யோஹோ. யோஹோ.

    பெ:உன்னை அழைத்தது லயன்
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
    கதயை குடுத்தது விசயன்.....


    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ


    டுய்டுய்.டுய்டுய்.டுய�
    ��டுய்.டுய்டுய்.
    டுய்டுய்.டுய்டுய்.டுய�
    ��டுய்.டுய்டுய்
    🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
    🎹🎹🎹🎹🎹🎹🎹🎹


    பெ:முன்னழகும் பின்னழகும்
    மூடி வைத்த தாளழகும்

    ராஜா நீ கொண்டாடத்தா....ன்
    முத்து நவநிறத்தழகும்
    முத்தமிடும் சித்திரமும்

    எந்நாளும் உன்னோடுதா...ன்

    ஆ:நா....ன் படிக்க
    🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

    தே...ன் குடிக்க
    🎶🎶🎶🎶🎶🎶🎶
    தாள் .....புரள
    கதையும் மயக்கா....தோ

    பெ:ஆர் யூ ரெடி. ரெடி. ரெடி.

    ஆ:ஐயம் ரெடி. ரெடி. ரெடி யா

    Chorous:யோஹோ. யோஹோ. யோஹோ. யோஹோ.

    பெ:அரே. உன்னை அழைத்தது லயன்..

    கதையை குடுத்தது விசய...ன்


    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ.

    பெ:சொல்ல நினைத்தது ஜான்
    மெல்ல சிரித்தது ஸ்டெர்ன்....

    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ.

    பெ:ஆர் யூ ரெடி. ரெடி. ரெடி.

    ஆ:ஐயம் ரெடி. ரெடி. ரெடி.....யா


    யோஹோ. யோஹோ.
    யோஹோ. யோஹோ

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை ஸ்டீல், கலக்கிட்டீங்க
      ❤❤❤❤❤

      Delete
    2. ரம்யா @ உண்மையை சொல்லனும். அவ எழுதினது ஏதாவது புரிந்ததா 😁

      Delete
    3. கலை கண்ணோடு பாருங்கள் பரணி சகோ

      Delete
  81. அய்யோ.. 😱😱😱

    இந்த "கவி சுனாமி" தொல்லை தாங்கமுடிலயே...😀😀😀

    ReplyDelete
  82. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  83. சார் அட்டகாசம். மாயா எல்லாம் மாயா. Stern படிப்பதை விட படம் பார்ப்பது தான் நிறைய. ஓவியங்களால் கதை நகர்கிறது. செம்ம ரொம்பவே ஒரு breezy read. கதை படித்து முடித்ததும். குமார் ரொம்பவே ஹேப்பி அண்ணாச்சி.

    ReplyDelete
    Replies
    1. எனது மதிப்பெண் 100/10

      Delete
    2. சேலம் குமாருக்கு சூடான ரவுண்ட் பன் பார்சல் 😊

      Delete
    3. // படம் பார்ப்பது தான் நிறைய. ஓவியங்களால் கதை நகர்கிறது. //

      உண்மை.

      Delete
  84. @Edi Sir..😍😘

    இன்று பதிவுகிழமை..😍😃😘😀

    ReplyDelete
  85. இன்று பதிவுகிழமை என்பதை ஞாபகபடுத்துவோர்..😃😍


    பதிவுபட்டாளம் குரூப் 😍😘

    சேலம் குமார், கோவை ரம்யா, சின்னமனூர் சரவணன் மற்றும் நாமக்கல் ஸ்ரீபாபு..💐💐

    ReplyDelete
  86. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. அதே தான் குமார்.

      Delete
    2. அவர்லாம் இப்ப சோசியல் மீடியாவுல ரொம்ப பிஷிங்க!🫤

      'நண்பர்களே வணக்கம்'லாம் போய் இப்ப 'hai guys' ஆகிடுச்சு! 😑

      பதிவு போடுங்க சார்னா அவசர அவசரமா 2 அட்டைப்படம் 4 வரிகளை எழுதிட்டு 'see you around soon' போட்டுட்டு ஓடிடறார். இவ்ளோ அவசரமா அப்படி எங்கதான் போறார்னு பார்த்தா.. கம்யூனிட்டில போய் உட்கார்த்துகிட்டு '😂' இந்த எமோஜி போடறவரை இன்னும் காண்கலையேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கார்..

      இப்படியே போச்சுன்னா இன்னும் கொஞ்ச நாள்ல பதிவு இப்படி வரும் :
      "நண்பர்களே.. வணக்கம். பதிவை கம்யூனிட்டில போட்டிருக்கேன் அங்கே போய் படிச்சுக்கோங்க. See you around soon"
      🫤


      Delete
    3. ஆமாங்க இளவரசரே, இப்பெல்லாம் புத்தகங்கள் கிளம்பி விட்டதுங்கிற பதிவு வரதே இல்லைங்க, சகோ

      Delete
  87. மாயா எல்லாம் மாயா படிக்க ஆரம்பித்து விட்டேன்😊

    ReplyDelete
    Replies
    1. பக்கம் 8ல கடைசி வரிசையில் இடது பக்கம் முதல் படம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பக்கம் 9ல முதல் மூன்று வரிசையில் முதல் படத்தை கவனியுங்கள் நண்பர்களே, ஓவியர் ஒரு அழகான காட்சி மூலம் அந்த வரிசையில் உள்ளவை எந்த நேரத்தில் நடக்கிறது என்று சொல்லி உள்ளார்.

      Delete
    2. பக்கம் 21 வசனங்கள் இல்லாமல் முழு பக்கத்தில் எவ்வளவு அழகாக கதையை ஓவியர் மூலம் நகர்த்தி உள்ளார் கதாசிரியர் 😍

      கதையில் இன்னும் பல பக்கங்கள் இப்படி உள்ளது சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது😊

      Delete
  88. *மாயா எல்லாம் மாயா*

    எங்கள் ஊர் இடுகாட்டில், எப்பொழுதாவது பெய்யும் அடைமழையில், தேங்கி நிற்கும் தண்ணீரில், பிணங்களில் குடிகொண்டிருக்கும் வைரஸ் கிருமிகள் பரவி குடிநீரில் கலக்காதா என்று யோசித்த காலங்கள் உண்டு. ஆனால் மழைவெள்ளத்தில் புதைத்த சடலங்கள் நீரில் மிதந்து வரும் என்று இந்த கதையில் யாரும் புதைப்பதில்லை என்ற சங்கதியை கேட்டவுடன், என்னாது சடலங்கள் எழுந்து வருமா என்று அதிர்ந்து போனேன்..

    அந்த இடத்தில் ஒரு குடையால் ஓட்டம் பிடித்த கதை, அதே குடையில் முடிந்தது நிறைவை தந்தது.

    ஸ்டெர்ன் கதையில் ஒவ்வொரு பாகமும், அடுத்த படிநிலைக்கு பயணமாகும்படி அமைத்திருக்கிறார்கள். முதல் பாகம் சூப்பர் என்றால் அதன் அடுத்த பாகம் அதை விட சூப்பர், அதன் அடுத்த பாகம் அதனை விட சூப்பர் என்று அதன் முந்தைய பாகங்களை விஞ்சி நிற்கிறது கதையும் ஓவியமும்.

    எட்டாம் பக்கத்தில் உள்ள கடைசி பேனல்களும் அதன் தொடர்ச்சியான ஒன்பதாம் பக்கத்தில் உள்ள 9 பேனல்களும் வசனமே இல்லாமல் ஆயிரம் வார்த்தைகளை சொல்லிச் செல்கிறது. இந்த 12 பேனல்களை எழுத்தாளர்களிடம் விவரிக்க கொடுத்திருந்தால், அநேகமாக 12 பக்கத்துக்கு எழுதி தள்ளியிருப்பார்கள். இது போல் எண்ணற்ற பக்கங்கள் ஓவியங்களே கதையை நகர்த்தியபடி. மௌனத்தை விட அழகான மொழி எங்குள்ளது என்று கவித்துமான எண்ணங்களை விதைத்தபடி செல்கிறது பக்கங்கள்

    மர்ரே, ஸ்டெர்ன்னிடம் வேலன்டினாவை வைத்து லந்து செய்யும் இடங்கள் மெல்லிய புன்னகையை நம் முகங்களில் கொண்டு வந்து விடுகிறது. கதையை தவிர்த்து கதையில் வரும் இன்ன பிற விஷயங்கள்;

    1700 களில் லூசியானாவில் எப்படி வூடூ சூனியம் பரவியது என்றும், எப்படி அது கத்தோலிக்க நம்பிக்கையிலும் ஊடுருவி உள்ளது என்றும் இந்த கதையில் சொல்லப்படவில்லை ஆனால் இது குறித்து மேலதிக தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. வூடூ கிறிஸ்துவம் என்று தனி மதமாகவே அதை நிர்மாணிக்க முடியும் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த கதையின் மூலம் நான் தெரிந்துக் கொண்ட புதிய செய்தி.

    அடுத்ததாக அழுகாமல் கிடக்கும் ஒரு பிணத்தின் அறிவியலை விளக்கும் காட்சி. இதுவும் எனக்கு ஒரு புதிய தகவலே. ADIPOSE tissue எப்படி adipocere ஆக மாறி பிணங்களை அழுகை விடாமல் பாதுகாக்கிறது என்பதை போகிற போக்கில் தூவி செல்கிறார்கள். அழுகாமல் இருக்கும் ராமானுஜரின் உடல் குறித்தும் சில சந்தேகங்களை தீர்த்து வைத்தது இந்த கதை.

    வசதியானவர்கள் இருப்பிடம் இருக்கும் பகுதியும், வசதியற்றவர்கள் வாழும் பகுதியையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் ஓவியங்கள் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் சோசியலிஸ்ட் மனநிலையை தட்டி எழுப்புகிறது.

    வசனங்களும் மொழிபெயர்ப்பும் அடிதூள்.

    இன்றைய வேலை சுளுவானதாக இருக்கும் என்று சொல்லும் மர்ரே, அதை வேதனையுடன் சொல்வது ஏன் என்று அடுத்த வந்த வசனம் ஒரு நிமிடம் இதயத்தை உலுக்கியது.

    மொத்தத்தில் பக்கத்துக்கு பக்கம் சரவெடி தான் எனும் பொழுது இன்று காலை தடைபட்ட மின்சாரத்துக்கும், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தாலும் தடைபட்டு போன இணைய தொடர்புக்கு நன்றியை சொல்லிக் கொள்வேன். அடுத்து டெக்ஸ்... ஆனால் கொஞ்சம் நம்ம வெட்டியானை அசைபோட நேரம் கொடுப்போம்.

    கதை 10/10

    ஓவியம் 11/10

    ஆக்கம் 10/10

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான விமர்சனம் நண்பரே 👌

      Delete
    2. அட்டகாசம் அட்டகாசம்.. இப்பவே படிக்கணும்போல ஆசை ஆசையாய் வருதே!!😍😍👌👌

      Delete
    3. அருமையான விமர்சனம் நண்பரே...

      Delete
  89. //3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?// :-)

    ReplyDelete
  90. மாயா - ஸ்டெர்ன்

    நான்கில் நான் முதலில் படிக்க எடுத்தது மாயா தான், முதல் மூன்று கதைகளில் ஸ்டெர்ன் கவர்ந்ததால் அவரது நான்காவது கதை மீது ஒரு ஆர்வம் இருந்தது.

    படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை நம்மை போட்டு தாக்குவது ஆர்ட் ஒர்க் முக்கியமாக கலரிங். காலை மாலை இரவை வேறுபடுத்திகிக்காட்ட கலரிங் அட்டகாசமாக பயன்படுத்தி உள்ளார்கள் இதில் என்னை மேலும் கவர்ந்தது நாம் பார்க்கும் angle ஐ பொறுத்து வேறு படித்தி காண்பித்துள்ளார்கள்.

    கீழ் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது வானம் சேர்ந்து ஒரு வெளிச்சமான நீல கலரிங் அதே நேராய் பார்த்தால் மயானம் மற்றும் மண் சார்ந்து பிரவ்ன்.

    அது போல வசனம் இல்லா பேனல்களில் அவரோடு சேர்ந்து நாமும் பயணம் செய்வது போல ஒரு மாயை, வசனம் இல்லாததால் ஆர்ட்டை நாம் கூர்ந்து ரசிக்கலாம்

    ஒவ்வொரு பேனலுக்கும் இது போல புகழ்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கலாம்.

    அடுத்து கதை இதுவரை நாம் பார்த்த கதைகளில் அவரது குணாதிசயங்கள் தெரியுமாறு கதைகள் இருக்கும் இதில் அவர் இருந்தாலும் அவர் கதையின் நாயகனாகவே இருக்கிறார்

    ஒரு கமர்சியல் ஆக்சன் அதிரடி கதை.
    ஒரு மோசடியாளனை ஹீரோ ஹீரோயின் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்ற வழக்கமான கதை களம் தான்.

    ஆர்டோடு சேர்ந்து படிக்கும் போது போர் அடிக்காமல் ரசிக்க முடிகிறது.

    தொடர்ந்து வரும் வருட சந்தாக்களில் கண்டிப்பாக இரண்டு வெட்டியான்களும் இடம் பிடிக்க வேண்டும்.

    ReplyDelete
  91. இன்றைக்கு முதலில் படிக்க எடுத்தது, வெட்டியானின் மாயா எல்லாம் மாயா...அடுத்தது என்ன என்று ஆர்வத்தோடு ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டது கதை. ஓவியங்கள் மற்றும் அற்புதமான வசனங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன. வித்தியாசமான கதை களம், இந்த ஹீரோவை வெகு தூரத்துக்கு கூட்டிச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை....
    ஸ்டெர்ன் கதைகள் நிறைய இருந்தால், இன்னும் அதிகமாக வெளியிடலாம், காத்திருப்போம் வெட்டியானுக்காக...

    ReplyDelete
  92. இறுதி ஆட்டம்

    டெக்ஸ் டெக்ஸ் தான். சும்மா சரவெடி.. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர்கள் தூக்கம் தொலைத்து தொல்லையை துரத்துகிறார்கள், முடிவில் சுபம்.

    ஓவியங்கள் பல இடங்களில் A1, சில இடங்களில் டெக்ஸ் முகம் இளமையாகவும் பல இடங்களில் முதுமையாகவும் காட்சியளிப்பது ஏனோ? கருப்பு வெள்ளையில் செம ENTERTAINER 

    கார்சன்-டெக்ஸ் கலாய்ப்பு இந்த கதையில் புது உச்சம் பெற்றுள்ளது. அதுவும் பல இடங்களில் கார்சன் டெக்ஸை கலாய்ப்பது செம.. 

    வில்லன்கள் பலமாக இருந்தால் தான் கதை சுவாரசியமாக இருக்கும் என்பது இந்த கதைக்கு ஒத்து வரவில்லை. டெக்சின் கதையில் டாப் என்று சொல்ல மாட்டேன் ஆனால் வி காமிக்ஸ்ஸின் BREEZY READING TEMPLATE க்கு WORTH தான கதை 

    கதை 9/10

    ஓவியம் 10/10

    ஆக்கம் 10/10

    ReplyDelete
  93. நள்ளிரவின் நாயகன்

    அக்மார்க் ஜானி சாகசம்..கலரிங் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.. ஒரு சீரியல் படக்குழுவின் ஒட்டு மொத்த குழுவுமே சந்தேக வளையத்தில்.. விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர்.. மிகவும் பிடித்திருந்தது

    ReplyDelete
    Replies
    1. அதிகாரி புக் எங்க ஒளிச்சு வைச்சு இருக்கீங்க, சகோ

      Delete