Powered By Blogger

Tuesday, November 22, 2022

ஊவா ? ...ஊஹூமா ?

 நண்பர்களே,

வணக்கம். உங்களின் எண்ணங்களை நீங்கள் அவசரமாய்த் தெரிவிக்க அவசியமாகிடும் குட்டிப் பதிவு இது ! 

டெட்வுட் டிக் ! வாயைத் திறந்தாலே கூவம் மணக்கும் இந்த நாயகனை நினைவிருக்கலாம் ; போன வருஷம் "நரகத்திற்கு நடுவழியே" இதழ் மூலமாய் அறிமுகம் கண்டிருந்தார் ! And இதோ - டிசம்பரில் மனுஷனின் அடுத்த ஆல்பம் காத்திருக்க, அதன் மொழிபெயர்ப்பினில் மாங்கு மாங்கென்று பணியாற்றி வருகிறேன் ! முதல் ஆல்பத்திலேயே வசனங்கள் செம கரடு முரடாய் இருந்தது நினைவிருக்கலாம் & நானுமே அவற்றை பெருசாய் cushion செய்திட முயன்றிருக்கவில்லை என்பதாய் ஞாபகம் ! பரவலாய் இதற்கு வரவேற்பு இருந்ததாகவுமே எனது ஞாபகம் சொல்லுகிறது ! ஆனால் ஒண்ணேகால் ஆண்டுகளுக்குப் பின்பாய், இந்தக் கெட்ட பையனோடு மறுக்கா புழங்க ஆரம்பிக்கும் போது தான், முதல் ஆல்பத்துக்குக் கொஞ்சமும் குறையில்லாத வசன நடையில் ஆல்பம் # 2 அனல் பறக்கப் பயணிப்பது புரிகிறது ! 

பாதியை நெருங்கி விட்டேன் எனும் போது லைட்டாக ஒரு நெருடல் உள்ளுக்குள் : ரொம்பவே லயித்து, ஒரிஜினலின் நடையோடு பயணித்து வரும் எனக்கு இந்த தெறி டயலாக்ஸ் ரொம்பவே இயல்பாய்த் தென்படுகின்றன ! ஆனால் இங்கிலீஷிலான மொழியாக்கங்களின்றி, நேரடியாய் தமிழில் மாத்திரமே வாசிக்கவுள்ள உங்களுக்கு இது எவ்விதம் தோன்றிடுமோ ? என்ற கேள்வி உள்ளுக்குள் ! So கீழ்க்கண்ட பதில்களுள் உங்களுக்குத் பொருந்துவதை அவசரமாய் டிக் அடியுங்களேன் ப்ளீஸ் :

Option A : ஒரிஜினலில் உள்ள அதே வார்த்தைப் பிரயோகங்கள் தமிழிலும் தொடரட்டும் ; 18+ வயதினருக்கான வாசிப்பு material எனும் போது, இங்கே குஷன் போட்ட கையுறைகளுடன் எங்களை அணுக வேண்டியதில்லை !! உள்ளது உள்ளபடிக்கே வர்ட்டும் மாமு !

Option B : ஒரிஜினல் பாணி என்பதற்கோசாரம் எல்லாவற்றையும்  அப்படியே உல்டா அடிப்பது நமக்கு சுகப்படாது நைனா ! கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு....இல்லாங்காட்டி மண்டையோட ஒரே போடு ! சும்மா காரம் குறைச்சலா வந்தா தப்பில்லே !

Option C : உள்ளபடிக்கே வரட்டும் ! ஆனா நாங்க புக் வந்ததுக்கு அப்பாலே கும்மியடிச்சு குண்டுக்கட்டா மூ.ச.க்கு தூக்கிக்கினு,  போவோமே ..போவோமே !! ஐ ..ஜாலி...ஜாலி !!

Option D :  இதை நான் வாங்கவோ, வாங்கினா படிக்கவோ செய்யப் போறதில்லே ! அதனாலே நீ போர்த்திட்டு படுத்துகினாலும் சரி, படுத்துக்கினு போர்த்திக்கிட்டாலும் சரி நேக்கு நோ டென்க்ஷன் ! சிங்க்க்க்க் இன் த ரயின்ன்ன் !

காத்துள்ள இரண்டாம் பாதிக்குள் பயணிக்கும் முன்பாய் இந்தத் தெளிவு எனக்குக் கிட்டினால் மகிழ்வேன் guys ! இந்த நொடியில் செம raw & செம கரடு முரடாகவே வரிகளை அமைத்துள்ளேன் ! And please note : இம்மி கூட எக்ஸ்டரா நம்பர்ஸ் இங்கே நஹி ; எல்லாமே ஒரிஜினலின் தடத்துடனான பயணம் தான் ! So சொல்லுங்களேன் ப்ளீஸ் - இயன்றமட்டுக்கு துரிதமாய் ப்ளீஸ் !

Bye all ! See you around !!

146 comments:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்💐💐💐💐💐💐

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. Replies
    1. அப்பொழுது தான் முழுமையாக ரசிக்க முடியும் என்பது எனது கருத்து.

      முதல் கதையை பொறுத்தவரை அப்படி ஒன்றும் கரடுமுரடா தெரியவில்லை. கதையும் எனக்கு சராசரியே

      Delete
    2. இங்கே highlight கதை அல்ல கிருஷ்ணா ; சொன்ன விதமும், சுற்றி வந்த கதை மனிதர்களும் தான் !

      Delete
  4. Me வந்துட்டேன்...😍😘😃

    ReplyDelete
  5. இனிய திருமண நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆல்பத்தில அப்படி ஒன்றும் ராவாக தெரியக்காணோமே...

      மை ஆப்சன் A

      Delete
  7. @Edi Sir..😍😃😘

    டெட்வுட் டிக்..😃😍

    *My ஓட்டு option A*

    உள்ளது உள்ளதுபடியே கொடுங்க Sir..👍

    நாங்களும் எப்பதான் பெரியபுள்ளைகளாகிறது..💛❤

    ReplyDelete
  8. இதயங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்..!

    இந்த நல்ல நாளில் என்னைப்போன்ற இளைஞர்களை வாழ்த்தி ஆசிர்வதித்தால் நன்றாக இருக்கும்..! 😎

    ReplyDelete
    Replies
    1. அட ஏம்பா.. வெந்த புண்ணிலே அதிகாரி கதையை பாய்ச்சிட்டு...

      Delete
    2. டைமிங் பாயசம் !

      Delete
    3. ஹேர்டையும், ப்ரஷும் போல ; தொப்பையும் பெல்ட்டும் போல ; இளமையோடு ஒட்டி உறவாடி வளர, அந்த யூத்திடமிருந்து உளமார்ந்த வாழ்த்துக்கள் சார் !

      Delete
  9. கரடு பிளஸ் முரடாகாவே இருக்கட்டுங்க... தலை வாங்கி அதிகாரியையே படிச்சவங்க நாங்க...

    ReplyDelete
  10. @All..😍😃

    ஓட்டை ஓங்கி குத்துங்க நட்பூக்களே ..Option A ..✊

    ReplyDelete
  11. Replies
    1. ஐ... இது நல்லார்க்கே...

      Delete
    2. ///Option C. Two laddus///

      ஹிஹி!! செம செம! இந்த டீலிங் எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்கு!!

      Delete
    3. இளம் டைகர் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்தே கொலை வெறி ஏறுதே ?!!

      Delete
    4. ///இளம் டைகர் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்தே கொலை வெறி ஏறுதே ?!!///

      ஆமாம் சார்...

      யங் டைகர் எழுத ஆரம்பிச்சதுல இருந்தே மச்சான் குளிக்கிறதும் இல்லை.. தலை சீவுறதும் இல்லையாம் சார்..

      எந்நேரம் பாத்தாலும் ஒரு அழுக்கு சட்டையை மாட்டிக்கிட்டு சிலுக்கு சிலுக்குன்னு புலம்பிக்கிட்டே இருக்கிறதா கேள்வி சார்..!

      Delete
    5. அப்படியெல்லாம் பொலம்பிட்டிருந்தா வீட்ல உயிரோட இருக்க முடியாதுப்பா.

      Delete
  12. // Option A : ஒரிஜினலில் உள்ள அதே வார்த்தைப் பிரயோகங்கள் தமிழிலும் தொடரட்டும் ; 18+ வயதினருக்கான வாசிப்பு material எனும் போது, இங்கே குஷன் போட்ட கையுறைகளுடன் எங்களை அணுக வேண்டியதில்லை !! உள்ளது உள்ளபடிக்கே வர்ட்டும் மாமு //


    I go with this option.

    ReplyDelete
  13. // முதல் ஆல்பத்திலேயே வசனங்கள் செம கரடு முரடாய் இருந்தது நினைவிருக்கலாம் //
    டெட் வுட் டிக்கை பொறுத்த வரை கலப்பில்லாமல் இருப்பதே இயல்பாய் இருக்கும் என்று தோன்றுகிறது,முதல் ஆல்பத்தில் கரடு முரடாய் வண்டியை ஓட்டி விட்டு,இரண்டாம் ஆல்பத்தில் வண்டியை இழுத்து பிடித்தால் இயல்பு முரணாய் அமைய வாய்ப்புள்ளது…

    ReplyDelete
  14. Replies
    1. செம்பனார்கோவிலில் செம ஊற்று போலிருக்கே ராஜா சார் - பத்து நாட்களுக்கு முன்னே ?

      Delete
  15. இதயங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்..!💐💐💐💐💐

    இந்த நல்ல நாளில் என்னைப்போன்ற குழந்தைகளை வாழ்த்தி ஆசிர்வதித்தால் நன்றாக இருக்கும்..! 😎

    ReplyDelete
    Replies
    1. நானே நர்சம்மா வந்து குளிப்பாட்டக் காத்திருக்கும் பச்சை மண்ணு சார் ! இன்னிக்கி தான் பொறந்தேன் !

      Delete
  16. Replies
    1. ஐ தலைவர் A optionனுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்! தலைவர் தானா இது :-) நம்ப முடியவில்லை :-) நம்ப முடியவில்லை :-)

      தலைவர் வளர்க்கிறார் :-)

      Delete
    2. யாரை இல்ல எதை வளர்க்கிறார் சார் ?

      Delete
    3. சார் வளர்கிறார் என படியுங்கள் சார் :-)

      Delete
  17. Option A with a little bit of your style...

    ReplyDelete
  18. Option A தான் எடி சார்.

    ReplyDelete
  19. இதயங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்..!🌹 Option A .சார்

    ReplyDelete
  20. இதயங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்..!💐💐💐💐💐

    தங்களது Best Halfக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்த இடுங்கள் சார்...

    ReplyDelete
  21. முதல் கதை பாதி படித்த ஞாபகம்...பெருசா தெரிலன்னே நினைக்கிறேன்.எப்படி வந்தாலும் சரி....ஆனாலும் ஆப்சன் பி நல்லாருக்குமோ

    ReplyDelete
  22. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார்💐

    ReplyDelete
  23. முந்தைய பாகத்தின் மொழிபெயர்ப்பு முகம்சுளிக்கும்படியாய் இல்லை என்பதாலும், அந்த நடை அந்த (டெட்வுட் டிக்) கேரக்டருக்கு மிகப் பொருத்தமாய் இருந்ததாலும்...

    என்னுடைய option : A

    ReplyDelete
  24. Option A : ஒரிஜினலில் உள்ள அதே வார்த்தைப் பிரயோகங்கள் தமிழிலும் தொடரட்டும் ; 18+ வயதினருக்கான வாசிப்பு material எனும் போது, இங்கே குஷன் போட்ட கையுறைகளுடன் எங்களை அணுக வேண்டியதில்லை !! உள்ளது உள்ளபடிக்கே வர்ட்டும்

    ReplyDelete
  25. இனிய திருமண வாழ்த்துக்கள் எங்கள் கனவுலக ஆசிரியருக்கு 💐🌹💐.
    ஆப்ஷன்A.
    அப்படியே வரட்டுமே சார்.

    ReplyDelete
  26. 49 பின்னூட்டத்தில் 40 ஓட்டுகளுக்கு மேல் option Aக்கு எனவே நீங்கள் இரண்டாம் பகுதியை மொழிபெயர்க்க ஜாலியாக கிளம்புங்க விஜயன் சார்.

    :-)

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ஓட்டு B-க்கு ! அந்த ஒத்தை ஓட்டு 100 சாதா ஓட்டுக்களுக்கு சமானம் சார் !

      Delete
    2. அட போங்க சார். வீட்டில் அவன் ஓட்டே அவனுக்கு கிடையாது சார்:-)

      Delete
    3. ///அட போங்க சார். வீட்டில் அவன் ஓட்டே அவனுக்கு கிடையாது சார்///

      PfB ஹிஹிஹி :)))))

      Delete
  27. டியர் விஜயன் சார்,

    எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பப்படியே ₹@#%& #@%, ^$%*! %>/&...! :-)

    ReplyDelete
    Replies
    1. கீபேடிலே அம்புட்டு தானோ கிய்யா முய்யா கீய்ஸ் கார்த்திக் ?

      Delete
  28. Many thanks all for the anniversary wishes 🙏 😀

    ReplyDelete
  29. Replies
    1. கழுகு வேட்டையில் (1993?) திருமண அழைப்பிதழ் பார்த்தவுடன் சிவகாசி எங்க இருக்குன்னு மேப்பில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்... ஸ்கூல் முடிஞ்சவுடன் சாயங்காலம் கல்யாணம் போலாம்ன்னு நினைச்சேன்... எப்படியும் போகணும்னு முடிவு பண்ணிட்டேன்...?? பிறகு மத்தவங்க சொல்லி தான் அது வெகுதூரம்ன்னு தெரிஞ்சது.... ஹாட் லைன்னில் பேச்சு கொடுத்த ஒருவரை தேடி சிவகாசி போக என்னால் முடிஞ்சது என்னமோ 2007ல் தான்.
      அதன் பிறகு அவர் புதல்வர் திருமண நிகழ்வு போகிட எனது அன்றைய வேலை அனுமதிக்க வில்லை...
      தங்களுக்கும் தங்களின் பெட்டர் ஆஃப் அவர்களுக்கும் Happy returns வாழ்த்துக்கள் சார்

      Delete
    2. நாம படிக்கிற குடுக்குற காமிக்ஸ் Recommended for 18+ என்று இருத்தல் ஆகாது. அன்று போல எடிட்டிங் என்றும் தொடர வேண்டும்.

      Delete
    3. Our comics is not like a commercial or masala cinema.

      Delete
  30. Option B
    நாம படிக்கிற காமிக்ஸ் நாலு பேருக்கு குடுக்கும் போஸ்து நல்லா இருக்குன்னு சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. அட்டையில் Recommended for 18+ என்று போட்டிருப்பதையுமே இரவல் கொடுக்கத் தான் வேணுமா சார் ?

      Delete
    2. சார்.. பேசாம அட்டைப்படத்துலயே பெருசா "இது இரவல் கொடுப்பதற்கு அல்ல! அப்படியே இரவல் கொடுத்தாலும் பெண்கள், குழந்தைகள், இதயம் பலஹீனமானவர்களுக்கு கண்டிப்பாக அல்ல!"னு போட்டீங்கன்னா எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்!

      Delete
  31. ஆஹா... இன்னிக்கு பொறந்த பச்சைமண்ணு தன்னதனியா "உலகமே சுற்றுவேன் "குது... நல்ல ஜோக் sir...1part ல அப்படி ஒன்னும், "பச்சை யாவோ.. மஞ்சளாவோ, புளு கலர் லயோ..."ஒன்னும் இல்லனு நினைக்கிறேன்.... Option a.. ஓகே sir....

    ReplyDelete
  32. என்னங்க இது... நான் ஏழுதறது எல்லாம் மறையுது...

    ReplyDelete
  33. ஆஹா... வந்திருச்சு.... இந்த போனு.... 😄

    ReplyDelete
  34. 18+ தேவை என்பதை செலக்ட் செய்வதற்கான ஆப்சனும் "A" என அமைந்து இருப்பது தற்செயலானது இல்லை என தோன்றுவது எனக்கு மட்டுந்தானா?

    எதுவாகினும் என் வோட்டு A க்குதான்..தற்போதைய நிலையில் குறைந்த பட்ச வாசகர்களின் வயது 40+ எனும் போது 18+எல்லாம் இங்கே பெரிய சமாச்சாரம் இல்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. // 18+ தேவை என்பதை செலக்ட் செய்வதற்கான ஆப்சனும் "A" என அமைந்து இருப்பது தற்செயலானது இல்லை என தோன்றுவது எனக்கு மட்டுந்தானா? // No comments

      // தற்போதைய நிலையில் குறைந்த பட்ச வாசகர்களின் வயது 40+ எனும் போது 18+எல்லாம் இங்கே பெரிய சமாச்சாரம் இல்லை சார்...// Fact fact

      Delete
  35. option- A,
    Sir
    திருமண
    தின
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. Option A sir - in the last 40 years there have been so many family movies with uncensored scenes that have even visited our living rooms. Panbaavadhu ***iraavadhu ;-) :-p

    ReplyDelete
  37. Option A- போன இதழில் வந்த மாதிரியே இருக்கட்டும்

    ReplyDelete
  38. இனிய திருமண நாள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  39. கண்டுபிடித்து விட்டேன் அந்த 2ஆவது புத்தகம் சென்னை புத்தக விழாவில் சினிஸ்டர் 7 தானே அது. 3ஆவது புத்தகமாக மேகி போட்டு விடவும். நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இப்போ எங்க ஸ்டீல் வந்து அருவி போல கவிதையாக பொழிவார்.

      Delete
    2. //சினிஸ்டர் 7 தானே அது//
      Most anticipated Book

      Delete
  40. Option A.

    உள்ளதை உள்ளபடியே கொடுங்கள் சார்.

    நானெல்லாம் மாடஸ்டி & கார்வினை (வேறு காமிக்சில்) காதலர்களாக பார்த்து நொந்தவன். ஒரிஜினலை விரும்புகிறவன்.

    இந்தமாதிரி பிரச்சினைகள் இல்லாத கார்ட்டூன் கதைகளை நிறைய போடுங்கள் சார். (நாம் கேக்கறத கேட்டு வைப்போம்).

    ReplyDelete
    Replies
    1. // இந்தமாதிரி பிரச்சினைகள் இல்லாத கார்ட்டூன் கதைகளை நிறைய போடுங்கள் சார். (நாம் கேக்கறத கேட்டு வைப்போம்). //

      அதே அதே :-)

      Delete
  41. எனது விருப்பம் ஆப்ஷன் ஏ.
    சென்ற ஆல்பம் நன்றாகத்தான் இருந்தது. உங்கள் பாணியில் அதே மொழி நடையை தொடரலாம்.

    ஆனா ஆப்ஷன் சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  42. படிக்க புதிதாய் காமிக்ஸ் இதழ் இல்லாத காரணத்தால், இல்லத்தில் தொல்லைக்காட்சியும் ஒழிந்து போன காரணத்தால் ,பல புரட்டல்களுக்கு பிறகு ஷெல்டனின் கதை படித்து நீண்ட நாட்களாயிற்றே என அவரின் அத்தனை சாகஸங்களையும் எடுத்து வெளியே வைத்தேன்...நெவர் பிவோர் ஸ்பெஷலில் அவரின் சாகஸத்தை மூன்றாவது முறையாக எடுத்து மறுவாசிப்பாக படிக்க ஆரம்பித்தாலும் முதல் முறை படிப்பது போலவே பட்டாஸாய் கதை பரபர வென பறக்க வைத்து மூன்று நாட்களில் அந்த ஒட்டு மொத்த மூன்று பாக சாகஸம் ,அடுத்து வந்த ஒப்பத்தின் கதை ,இன்று எஞ்சி நின்றவனின் கதை என படு அட்டகாசமாய் ,ஆக்‌ஷன் அதகளமாய் அதிரடிக்கிறார் ஷெல்டன்..உடனே அடுத்த வந்த ஷெல்டன் இதழ்களையும் எடுத்து அருகே வைத்து கொண்டேன்..லார்கோவிற்கு துளியும் குறையா அதிரடி நாயகர்...

    இப்படி பட்ட நாயகரை குறைவான படைப்புகளோடு படைப்பாளர்கள் ஏன் நிறுத்தினார்கள் என்பதும் இவரின் சில இதழ்கள் இன்னமும் நம்மிடம் எஞ்சி நிற்பதன் காரணமும் புரிந்து கொள்ள முடியவில்லை..

    புதிதாய் இணைந்த காமிக்ஸ் தோழர்களே.. நீங்கள் அதிரடி ரசிகர் எனில் மறவாமல் ஷெல்டனை ரசித்து விடுங்கள் ..இல்லையேல் பின்பு வருத்தப்படுவீர்கள்.

    சார் ஷெல்டன் கதை ஏதும் புதிதாய் பிறப்பின் மறவாமல் அட்டவணையில் இணைத்து விடுங்கள் சார்..

    🙏🏻

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஒப்பந்தத்தின் கதை *

      Delete
    2. ஷெல்டனின் "வரலாறும் ஒரு வல்லூறும்" - எனது all time favourite களில் ஒன்று. Highly Recommended.

      Delete
  43. இதயம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துகள் டியர் எடி..!💐💐

    ReplyDelete
    Replies
    1. அட ... இன்னைக்குமா சார் :-) ;-)

      Delete
    2. ///அட ... இன்னைக்குமா சார் ///

      பலப்பல நாடுகள் சுத்தறவராச்சே - இருந்தாலும் இருக்கும்! :D

      Delete
    3. அட ... இன்னைக்குமா சார் :-) ;-)

      Ragavan sago
      மூணு நாளு நான் லேட்டாத்தான் பதிவு பார்த்தேன்

      Delete
  44. சார் அந்த Caption போட்டியின் ரிசல்ட்?

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக பார்த்திபன் சாய்பாபு சேலம் குமார் மூவரில் யாராவது ஜெயிக்க வாய்ப்புள்ளது

      Delete
    2. நாளைக்கு நாளைக்கு குமார்:-)

      Delete
  45. உஷார்... அழகிய ஆபத்து..!
    ஏஜெண்ட் சிஸ்கோ சாகசம் அபாரம். செம திரில்லர் படக்கதை. கதை அப்படியே ஜெட் வேகத்தில் பறக்கிறது. அந்த ராவான வசனங்கள் இன்னும் சுதி ஏற்றுகிறது. அந்த. 95 ம் பக்கத்தில் உள்ள 11 வது பேனலில் உள்ள வசன்த்தை தவிர்த்து. அந்த இடத்தில் ஆங்கில வார்த்தையையே பதிவிடலாம். மிச்சபடி இந்த ஆண்டின் மிரட்டலான கதை. டெக்ஸ் மற்றும் Zagor போன்ற ஹீரோக்களை ஓரமாக ஒக்காருப்பா என்று கெத்து காட்டுகிறது. முன்பு வந்த சிஸ்கோ இந்த அளவுக்கு பொறி கிளப்பியதா ....? 96 பக்கங்களில் எங்கும் குறை காண முடியாது. ஜேம்ஸ்பாண்ட் 2.0. வை காட்டிலும் படு சூப்பர். அழகிய அசுரன் மாஸ்.

    ReplyDelete
    Replies
    1. செம‌செம விமர்சனம்

      Delete
    2. கதை ok. தான்..
      கொஞ்சம் கைடுலைன்ஸ் - இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
      இந்த உளவாளி யார்-அந்த உளவாளி யார். -என்று கொஞ்சம் பொறுமையாக யோசித்தால்தான் புரியும்..

      Delete
  46. ரீலா..? ரியலா..?
    மேக் & ஜாக் - இந்த ஆண்டு வேணுமா .. என்பதற்கான பதில் இது. சுப்பா பட்டைய கிளப்புதையா காமிடி. பட்டை சரக்காகட்டும், ஆரஞ்சு ஜுஸ் ஆகட்டும் , பெண் ரசிகைகள் கூட்டமாகட்டும்,
    மிட்டாய் கடைய பாக்கிற பக்கி ஆகட்டுடேம், 20 ம் பக்கத்துல வர்ற 7 வது பேனலாகட்டும், கர்ர்ர்.. உப்.. உ.. ஆகட்டும் எல்லாமே வேற லெவல். சுத்த மறை கழண்ட கும்பல்டா என்ற குரலுக்கு வர்ற பின்பாட்டு அந்த எக்கோ பிரமாதம். ரீலிலே ரியல் சிகாகோ அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை. மிகவும் ரசித்து படித்து இருக்கிறீர்கள்

      Delete
    2. என்னோட பேவரேட்- ஆயிருச்சு. ஒரே நேரத்துல படிச்ச 6 + 1 புத்தகங்களும் பிரமாதம்.
      +1 அடுத்த ஆண்டுக்கான செலபஸ் புத்தகம் செம கிக். நேரம் கிடைக்கிறப்போ அத புரட்டுறதே செம ஜாலி...

      Delete
    3. கார்டூன் காமெடி என்பதில் - நிகழ்கால காமெடி-நம் சமகால மனிதர்கள்-சார்ந்த காமெடித் தொடர் என்பதால் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது..
      "ரீலா?..ரியலா.?..-வில் கடைசியில் - பணம் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு அமைந்தும் - அதைவிட்டுக் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பிவிடுவது. - ரொம்பவே அவர்களை ரசிக்கச் (நேசிக்கச்) செய்துவிட்டது..
      மேக் & ஜாக்-எனக்கு மிகவும் பிடித்த காமெடித் தொடர்...

      Delete
  47. பாலைவன பரலோகம்
    மறு பதிப்பு சிங்கிள் ஆல்பம் நன்று. விலை மலிவு.
    முன்பு படித்தேனா என்று தெரிய வில்லை. மிகவும் ஒர்த்தான புத்தகம். என்னை பொறுத்த வரை டெக்ஸ் கிளாசிக்ஸ் சிங்கிள் ஆல்பமாக இந்த விலையில் வருவதே, மிக அதிகமான மக்களை சென்றடையும். 130 பக்க கலர் கதை வெறும் 150 ₹ மட்டுமே.
    ஹார்ட் கவர் என்பதாலே நான் டெக்ஸ் கிளாஸிக்ஸ்-2 வாங்க வில்லை.

    ReplyDelete
  48. நடு நிசி வேட்டை..!

    4ம் பக்கத்தில் பகோரிவெரா -வுக்கு கொடுக்குற இன்ரடக்ஷனில் பற்றி எரியும் நெருப்பு , 116 ம் பக்கத்தில் 5 வது பேனலில் தெறிக்கிற கிளைமாக்ஸ் நம்மை என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பை தந்து விடுகிறது.
    புதிதாய் காமிக்ஸ் படிப்பவர்க்கு எளிய பரிசாய் கொடுக்க சிறந்த படைப்பு இது.

    ReplyDelete
    Replies
    1. // புதிதாய் காமிக்ஸ் படிப்பவர்க்கு எளிய பரிசாய் கொடுக்க சிறந்த படைப்பு இது. //

      +1

      Delete
  49. கைப்புள்ள ஜாக்!

    என்னை பொறுத்தவரை சிறுவர்களுக்கான நல்ல படைப்பு. 3 மற்றும் 4 இன்றுதான் படித்தேன். நல்ல சைஸ். 30 ₹ விலையில் விற்றால் இது மாணவ சிறார்களை எளிதில் சென்றடையும். புத்தக
    கண்காட்சியில் லயன் காமிக்ஸ் பற்றி நல்ல விளம்பரத்தை எடுத்து செல்லும். எங்களை போன்றவர் சிறுவர்களுக்கு பரிசாய் கொடுக்க நல்ல தொகுப்பு இது.

    ReplyDelete
  50. Point - point சந்தா சேந்தாச்சு.

    ReplyDelete
  51. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  52. @Salem Kumar..😍😘

    ஆமாங்க ஜி..
    இன்று பதிவுகிழமைதான்.😎

    அதெல்லாம் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் செய்திகள் நம்ப எடிட்டர் வச்சிருப்பாரு. 👍♥

    இன்றைய பதிவு பட்டைய கிளப்புற பதிவாதான் நிச்சயம் இருக்கும். But பட்டி டிங்கரிங் எல்லாம் பாத்து கொஞ்சம் லேட்டாதான் பதிவ போடுவாரு.😃

    அதனால வாங்க... நாம ரெண்டுபேரும் போய் லஞ்ச் ஃபுல் கட்டு கட்டிட்டு லைட்டா மத்தியான தூக்கத்த போட்டுட்டு வருவோம்.😍😘😃😀

    ReplyDelete
    Replies
    1. அதே தான் அண்ணா. காளான் பிரியாணி ரெடி ஆகுது. சாப்பிட்டு விட்டு தூக்கத்தை போட வேண்டியது தான்.

      Delete
    2. //காளான் பிரியாணி ரெடி ஆகுது//
      சாப்பிட்டா நிச்சயம் தூக்கம் வர்றது நிச்சயமா சகோ?

      Delete
  53. @Edi Sir..😍😘

    December books எப்ப கிளம்புதுங்க..😃

    December in November ங்களா?..😘

    கைப்புள்ள ஜாக் வரானுங்களா Sir..😶

    ReplyDelete
  54. @Edi Sir..😍😘

    *உயிரைத்தேடி - கலர்*
    announcement இன்றைய பதிவுல வருதுங்களா Sir..😐

    இதெல்லாம் நமக்கு தெரிஞ்சதுதான்..
    ஆனால், இதனுடன் சேர்த்து நம்ப எடி ஜி *அதிரடி அறிவிப்புகள்* இன்னைக்கு வெளியிடுவாருன்னு @Salem Kumar ji சொல்றாருங்க Sir..😶

    உண்மைங்களா Edi Sir..😘😍😃

    ReplyDelete
  55. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete