Powered By Blogger

Wednesday, November 16, 2022

கேரவன் கிளம்பிடுத்து !

 நண்பர்களே,

வணக்கம். மழைக்காலம் வந்தாலே பெண்டுகள் சித்தே கூடுதலாய்க் கழறுவது இயல்பு தானோ ? ஆபீசில் பாதிப் பேர் இஷ்டைலாக கண்ணாடி மாட்டிக் கொண்டு வர ; 'ஆத்தாடி....இது மெட்றாஸ் ஐ ஆச்சே ?!!' என்று மிரண்டடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் பார்த்தால், எனக்குக் கண்ணில் என்னவோ 'கிச் கிச்' போலொரு உணர்வு ! 'ரைட்டு....அண்ணாச்சி நமக்கு ஏற்றுமதி பண்ணிட்டன் !' என்ற பயத்தோடே மருத்துவமனைக்குப் போனேன் ! நம்ம கண்ணு இருக்கும் சைசுக்கு தூசு விழுந்தாலே டெரரா இருக்குமெனும் போது, ஊரெல்லாம் ஜனம் கண்ணைக்கசக்கித் திரியும் இந்த மெட்றாஸ் ஐ சீசனில் கேட்கவும் வேணுமா ? லேசாய் கண்ணை அகற்றிப் பார்த்த கையோடு....'யெஸ்..யெஸ்...Conjuctivitis தான் ; 5 நாளைக்கி சொட்டு மருந்து போடணும் ; ஐஸ் ஒத்தடம் தரணும் ; கண்ணைக் கசக்கப்படாது ; அப்பாலிக்கா வூட்டிலே உள்ளவுங்களுக்குத் தானம் பண்ணாம இருக்கணும்னா, நீங்க   திண்ணையிலே குடியேறிடுறது மதி !" என்று சொல்லி 150 ரூபாய் பீஸ் வாங்கிவிட்டு துரத்தி விட்டார் டாக்டர் ! "கண்ணு அப்டி ஒண்ணும் பெருசா உறுத்தலிங்களே.....சிவப்பாகலீங்களே டாக்டர் ...?" என்று கேட்டதுக்கு - கிரகணத்துக்கு தேதி சொல்லுவது போல "நாளைக்கி ஆகிடும்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார் ! கர்ம சிரத்தையாய் ஐஸ்கட்டிகளைக் கொண்டு கண்களைக் குளிப்பாட்டிக் கொண்டே ரூமுக்குள் முடங்கியதில் 2 நாட்கள் பணியாற்ற வாய்ப்பு கோவிந்தா ஆனது தான் மிச்சம் ; கண் சிவக்கக் காணோம் ! 'ரைட்டு....இது மெட்றாஸ் ஐயும் இல்லே ; மானாமதுரை ஐயுமில்லே ' என்று தீர்மானித்து விட்டு இன்று பகலில் ஆபீசுக்குத் திரும்பினால், ஆட்பற்றாக்குறையில் பரபரப்பாய் பல்டியடித்துக் கொண்டிருந்தனர் நம்மாட்கள் ! 

விஷயம் இது தான் : 

புத்தக விழா circuit மீண்டும் துவக்கம் காண்கிறது - விருதுநகர் ; தூத்துக்குடி ; சேலம் என்ற நகர்களில் ! 

வெறும் 25 கி.மீ.தொலைவில் உள்ள விருதுநகரில் நிகழவிருக்கும் முதல் புத்தக விழா இது !  BAPASI + மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டினில் அரங்கேறிடவுள்ள விழா எனும் போது, நிச்சயம் அட்டகாசமாக இருக்குமென்ற நம்பிக்கை நிரம்ப இருந்தது ! நம்பிக்கையோடு விண்ணப்பித்திருந்தோம் & பபாசி நிர்வாகிகளின் கனிவின் காரணமாய், நமக்கு விருதுநகர் விழாவினில் பங்கேற்க ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது ! So இன்றைக்கு மாலை அள்ளியடித்துக் கொண்டு புக்ஸோடு அண்ணாச்சி கிளம்பிச் சென்றாச்சு & ஸ்டால் # 27-ல் நமது இதழ்கள் தயாராய்க் காத்துள்ளன !  தினமும் பட்டிமன்றம், பிரபலங்களின் சொற்பொழிவுகள் என நிகழ்ச்சி நிரலும் பட்டையைக் கிளப்பிடுவவதால், நிச்சயமாய் எங்கள் மாவட்ட மக்கள் இந்த first ever புத்தக விழாவினை சூப்பர் வெற்றி காணச் செய்து விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது ! Fingers crossed !! 

சேலத்திலும் இந்த ஞாயிறு முதலாய்த் துவங்கும் விழாவினில் நமக்கொரு சிங்கிள் ஸ்டால் என்பதால் அண்ணாச்சி சேலம் going & நமது front office திருமதி.ஜோதி விருதுநகர் going ! அதற்குள்ளாக ஆபீசில் உள்ள பாக்கிப் பேர் கண்வலிகளும், காய்ச்சல்களும் தீர்ந்து பணிக்குத் திரும்பிடாவிடின் , அடியேன் நமது front ஆபீஸ் going ! இம்மாத புக்ஸ் 4-ம்  கிங்கரர்களாய் மிரட்டிக் கொண்டிருக்க, அவற்றை ஒருபக்கம் அமர்த்தி விட்டு, இன்னொரு பக்கம் பிரபா ஒயின்ஸ் ஓனராய் உங்களின் அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது தான் !! புனித ஒடின் இந்த நவம்பருக்கு மட்டும் 40 தேதிகள் கொடுப்பாராக !!

ரொம்ப ரொம்ப காலம் கழித்து சேலம் திருவிழாவினில் நாம் பங்கேற்பதில் செம excited !! வருண பகவான் கருணை காட்டினால் கொஞ்சமாய்ப் பிழைத்துக் கொள்வோம் !! Fingers doubly crossed !

2 விழாக்களுக்கும், அந்தந்தப் பகுதிகளின் நண்பர்கள் உற்சாகமான ஆதரவளித்து, நம்மளது நிரம்பி வழியும் கிட்டங்கியினை கொஞ்சமே கொஞ்சமாய் இலகுவாக்கிட உதவிடக் கோருகிறோம் ! Please do drop in folks !!

அப்புறம் 3 பதிவுகளுக்கு முன்னே ஒரு caption போட்டி வைத்திருந்தோம் ; ஆனால் கிட்டியிருந்த entries அத்தனை சுவாரஸ்யமில்லை ! So மறுக்கா ஒரு caption போட்டி இதோ ! வெள்ளிமுடியாரும்...சின்னக்கழுகாரும், டாடி கழுகார் இல்லாததொரு ஓய்வான தருணத்தில் என்ன பேசிக்கொள்வார்களென்பதை உங்கள் caption-களாக்கிடலாமே guys ? TOP 3 entries-க்கு அடுத்த டெக்ஸ் க்ளாசிக்ஸ் நமது அன்புடன் ! 

P.Sசந்தாக்களுக்கொரு நினைவூட்டலுமே folks !!



Bye all...see you around !! Have a great week ahead !

198 comments:

  1. Replies
    1. வாங்க வாங்க சார்....நான் டீ ஆத்துறேன்....நீங்க பேப்பர் படியுங்க !

      Delete
  2. Super sir. Wishing the team to have success in both the places.

    ReplyDelete
  3. ஒரு கைதியின் டைரி Sorry ப்ராங்க்பர்ட் டயரி அட்டகாசம் Sir!

    சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி புதுசு மற்றும் பழசு ரெண்டுக்கும் தலா ரெண்டு புக் கோட்டா கொடுங்க சார்.
    புருனோ பிரேசில், Blue berry, Wow ! Eagerly waiting for those books..

    ReplyDelete
  4. Welcome to Salem sir...ஆவலுடன் வெய்ட்டிங் சார்...

    ReplyDelete
    Replies
    1. Welcome sir .. TRY to visit SALEM stall by next weekend if possible .. its been a long time v had a meeting with u sir ..

      Delete
  5. 2013 க்கு பிறகு இப்பொழுது மீண்டும் சேலத்தில் ....மகிழ்ச்சியான செய்திங்க சார்....

    ReplyDelete
  6. திடீர் பதிவு.சந்தோஷம்.

    ReplyDelete
  7. ஹஹஹஹஹ.....வாழ்த்துக்கள் சார் விழா வெற்றி பெற....ஏதாச்சும் விழா மலர் உண்டா....மூன்று திருவிழாக்களாச்சே....ஒன்றாவது விடலாமே...

    ReplyDelete
  8. அடடே வணக்கம்🙋 நண்பர்களே🙏

    ReplyDelete
  9. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  10. இரு புத்தக திருவிழாக்களும் வெற்றி பெற வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  11. அடடே நம்ம ஊரில் புத்தக விழா அதில் நம்ம லயன் ஸ்டால் அருமை அருமை

    ReplyDelete
  12. கிட் வில்லர்:
    அங்கிள், உங்கள்மேல் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்தால் உங்க பெயரையே எனக்கும் வைத்திருப்பார்?

    கிட் கார்சன். :
    ஆமாப்பா ஆமா, எங்க இவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா தனியா போயிடுவானுங்களோன்னு பயந்து கூடவே கூட்டிட்டு திரியுற அளவுக்கு பாசம்.
    (அவ்வ்வ்வ்..............)

    ReplyDelete
  13. சேலம் மற்றும் விருதுநகரில் நமது புத்தக ஸ்டாலில் விற்பனை சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    தூத்துக்குடியில் இந்த முறை நமது ஸ்டால் கிடையாதா சார்?

    ReplyDelete
  14. ஐ விருதுநகரில் நமது ஸ்டால். விருதுநகரில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு இது பற்றி சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  15. Wishing our team a grand success in all these events....
    God bless...!!!!

    ReplyDelete
  16. கிட் வில்லர் : மாறுவேஷத்துல போய், வேவு பாக்க சொல்லி, டாடி அனுப்பினாருன்னு, நாமும் கிளம்பி வந்துட்டோம். நம்மள, யாரும் கண்டு பிடிச்சிட மாட்டங்கள்ல, அங்கிள்!

    கிட் கார்சன் : க்கும்.. கன்னத்துல மரு ஒட்டிக் கிட்டு வந்தாலும் கண்டுபிடிச்சிடுவானுங்க. ஆனா அந்த மஞ்ச சொக்காயை கழட்டினா, ஒரு பய உன்னை கண்டுபிடிக்க முடியாது. அது இருக்கட்டும் எப்படி என் கெட்டப்பு..

    ReplyDelete
  17. சேலம் & விருதுநகர் விழாக்களில் விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்...

    வருண பகவானின் ஆசிகள் நிறையவே தேவைப்படும்போல

    ReplyDelete
  18. கிட் கார்சன் : என் கண் பார்வை எப்படி இருக்குன்னு தெரிஞ்சிகிட்டியா? கரெக்ட்டா குறி வச்சி அடிச்சிருக்கேன் பாத்தியா?

    கிட் வில்லர் : நல்லா பாருங்க அங்கிள்... நீங்க பாட்டிலை சுடவே இல்ல.. எங்கப்பா இங்கே இருந்திருந்தா உங்களை வாரு வாருன்னு வாரியிருப்பார்

    ReplyDelete
  19. கிட்வில்லர் : அங்கிள்..நீங்க ஏன் அடிக்கடி வறுத்த கறி சாப்பிடறீங்க? ..😍

    கார்சான்: எல்லாம் அவளை மறக்கத்தான்..😩😃

    ReplyDelete
  20. விருதுநகரிலும், சேலத்திலும் (அடடே!) புத்தகத் திருவிழாக்கள் வெற்றியடையட்டும்!

    பணி முடிந்தபிறகு மாலைப் பொழுதுகளில் ஸ்டாலில் இருக்க முயன்றிடுவேன்!

    ReplyDelete
  21. ////ஆபீசில் உள்ள பாக்கிப் பேர் கண்வலிகளும், காய்ச்சல்களும் தீர்ந்து பணிக்குத் திரும்பிடாவிடின் , அடியேன் நமது front ஆபீஸ் going ! ////

    சார்.. front ஆபீஸில் நீங்க எப்ப உட்காருவீங்கன்னு தெரிஞ்சதுன்னா பத்து நிமிஷத்துக்கு ஒருவாட்டி "அலோ.. பிரகாஷ் பப்ளிஷருங்களா..? புக்குகளை எப்ப சார் அனுப்பி வைப்பீங்க?"ன்னு அடிக்கடி கேட்டுத் தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்!

    ReplyDelete
  22. கார்சன்: எப்படி ஐயாவோட புது லுக்கு?!                                                                
    கிட்:மீசையை வளர்த்துவிடலாம்,பற்களை வளர்க்க முடியாது.
    போய் பல்செட்டை மாட்டிட்டு வாங்க அங்கிள்!

    ReplyDelete

  23. விக்ரம் அரவிந்த் : டாடி.. என்னதான் நாம மாறுவேஷம் போட்டுக்கிட்டு front officeல உட்கார்ந்தாலும் நாம பண்ணப்போற வேலையென்னவோ ஃபோன் கால்ஸ் அட்டென்ட் பண்றதுதானே.. அப்புறம் எதற்கு இந்த பாடாவதி வேஷமெல்லாம்றேன்? இந்த வேஷத்துல உங்களைப் பார்க்க வேற சகிக்கலை டாடி!

    டாடி : அதில்லை மகனே.. 'போனவாட்டி வச்ச கேப்சன் போட்டில ஒருத்தர் கூட சரியா எழுதலை'ன்னு நான் பதிவுல எழுதினதைப் படிச்சுக் கடுப்பான வாசகர்கள் சிலபேரு ஆட்டோவுல கிளம்பி வந்துக்கிட்டிருக்காங்களாம்! அதான் இப்படி வேஷம்லாம்!

    ReplyDelete
  24. ஆஹா சேலத்தில் மீண்டும் புத்தக திருவிழா ..சூப்பர் சார்...வெற்றி அடைய மனமார்ந்த வாழத்துக்கள் .

    ஹூம் ..இந்த ஞாயிறு அலுவலக நாளாக போயிற்றே...:-(

    ReplyDelete
  25. கிட் : ஏன் அங்கிள் நீங்க வாழ்க்கை பூரா இப்படி கட்டை பிரம்மசாரித்தானா...?!


    கார்ஸன் : க்கும் உங்கப்பன் தான் ஆத்துல ஒரு கட்டை மிதந்து போனாக்கூட அந்தப்பக்கம் பாக்காத எதிரி எதிர் திசையில் பயணிக்கிறான்னு குறுக்கே கட்டையை போட்றானே அப்புறம் பிரம்மச்சாரியா இல்லாம என்ன பன்றது..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா! கட்டைய வச்சு கதை எழுதின விதம் சூப்பர் தலீவரே! :)

      Delete
  26. இரண்டு ஊருக்கு நம் கேரவன் வருகிறதா...அருமை
    விழா சிறப்பிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. கார்சன்: என்ன கிட் அப்பிடித் பார்க்கற...இந்த சிவப்பு சொக்கையில அய்யா அந்த ஜாகோர் பையன் மாதிரி ஜொலிக்கிறேன் தானே

    கிட்: உங்கள இந்த சிவப்பு சொக்கையில பார்க்க கிறிஸ்துமஸ் தாத்தா பார்க்கற மாதிரி இருக்கே...என்ன தாடியும் பல்செட்டும் மிஸ்ஸிங்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. கிட்: என்ன அங்கிள். துப்பாக்கி சத்தமே கேட்கல. ஆனா உங்க துப்பாக்கியிலிருந்து புகை வருதே! எப்படி?
    கார்சன்: தேங்ஸ்டா மகனே! சிகரெட்டை பத்த வச்சி என் வாயின்னு நெனச்சி துப்பாக்கி வாயில செருகிட்டேன் போலிருக்கு! பத்த வச்ச சிகரட்ட காணுமேன்னு ரொம்ப நேரமா தேடிகிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  30. கிட்: நாம இப்போ என் யூனிபார்ம் ல சுத்திகிட்டு இருக்கோம்...உங்க துப்பாக்கில என் புகை வந்துகிட்டு இருக்கு

    கார்சன்: புத்தக விழாவுக்கு போற கேரவன் வண்டிக்கு பாதுகாப்புக்கு நாமதான் போக போறோம்
    அதுக்கு தான் துப்பாக்கி நல்ல சுடுதான்னு பார்த்துகிட்டு இருக்கேன்...திருவிழா இத காட்டி கூட்டத்தை கூட்டிரலாம்....எப்பிடி ஐயாவோட யுக்தி

    கிட்: கூட்டம் வரத்துக்கு எங்க அப்பா மஞ்ச சொக்காய்யில வந்து நின்னாலே போதுமே

    ReplyDelete
  31. சார் விருதுநகர் புத்தக விழாவுக்கு நீங்கள் வருவீர்களா?

    ReplyDelete
  32. ஈரோடு அல்லது ஏதோ ஒரு ரோடு.. வாசகர் சந்திப்பை பற்றி யோசித்தீர்களா சார்? சும்மா ஞாபகப்படுத்தத்தான்...

    ReplyDelete
  33. கிட்: என்ன அங்கிள்! உங்க துப்பாக்கி குழல்ல இருந்து புகை வருது !
    கார்சன்: (பெருமிதம் பொங்க!!!) அடேய் கிட்! *இந்த அங்கிள் நெருப்புன்னு* இப்பவாச்சும் புரிஞ்சுக்கோ. நெருப்பில்லாம புகையாதுன்னு உங்கப்பன் உனக்கு சொல்லி தரல்லியா என்ன?

    ReplyDelete
  34. கிட்: என்ன அங்கிள்! உங்க துப்பாக்கி குழல்ல இருந்து புகை வருது !
    கார்சன்: (பெருமிதம் பொங்க!!!) அடேய் கிட்! இந்த அங்கிள் நெருப்புன்னு இப்பவாச்சும் புரிஞ்சுக்கோ. நெருப்பில்லாம புகையாதுன்னு உங்கப்பன் உனக்கு சொல்லி தரல்லியா என்ன? (நக்கலாக) இது கூட தெரியாத உன்னை மாதிரி அப்ரண்டிஸ எல்லாம் வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே... அய்யைஐயோ :)

    ReplyDelete
  35. கிட்: என்ன அங்கிள்! உங்க மூக்குக்கு என்ன ஆச்சு?
    கார்சன்: (பெருமிதம் பொங்க!!!) நாமளே நெருப்பு தானே! அப்புறம் எப்புடி நம்ம துப்பாக்கில இருந்து தனியா புகை வருதேன்னு குழலை மோந்து பாத்தேனா!!!! (கம்மிய குரலில்) பழுத்திடுச்சுபா கிட் மூக்கு பழுத்திடுச்சு!

    ReplyDelete
  36. கிட்: என்ன அங்கிள்! உங்க மூக்குக்கு என்ன ஆச்சு?
    கார்சன்: (பெருமிதம் பொங்க!!!) நாமளே நெருப்பு தானே! அப்புறம் எப்புடி நம்ம துப்பாக்கில இருந்து தனியா புகை வருதேன்னு குழலை மோந்து பாத்தேனா!!!! (கம்மிய குரலில்) பழுத்திடுச்சுபா கிட் மூக்கு பழுத்திடுச்சு! இந்த வாலிப வயசுல இதெல்லாம் ஜகஜமப்பா!!!

    ReplyDelete
  37. கிட் வில்லர் : என்ன அங்கிள் துப்பாக்கி புகையுது, முகத்துல ஒரு கள்ள சிரிப்பு என்ன விசயம்

    கார்சன் : உங்க குடும்பத்துக்காக நான் கல்யாணம் கூட பண்ணாம ஒரு தியாகியா கட்டை பிரம்மச்சாரியா வாழ்கிறேன்கிற விசயம் உன்னையும் உங்கப்பனையும் தவிர எல்லாருக்கும் தெரியும்,

    இப்பக்கூட யாரோ ஸாகோர்னு ஒரு பையன் பட்டைய கிளப்புறானாம், உங்க நைனோவாடே Super star பட்டத்துக்கு ஆபத்து வந்துரக்கூடாதேன்னு அவன் கோடாலியை சுட்டுட்டேன் எப்புடி என் திறமை

    ReplyDelete
    Replies
    1. ////கார்சன் : உங்க குடும்பத்துக்காக நான் கல்யாணம் கூட பண்ணாம ஒரு தியாகியா கட்டை பிரம்மச்சாரியா வாழ்கிறேன்கிற விசயம் உன்னையும் உங்கப்பனையும் தவிர எல்லாருக்கும் தெரியும்,////

      ஹாஹா! கேப்ஷனின் ஹைலைட்டே இந்தப் பகுதிதான்! :)))

      Delete
  38. அங்கிள்..நினைச்சா சிரிப்பு வர்ற மாதிரியான விஷயம் ஏதாவது உங்க வாழ்க்கைல நடந்திருக்கா... (கார்சன் ) இம்ம்.. இருக்கு, எட்டாப்பு படிக்கிறப்ப.. "வேப்பமரம் ஏது, எதுக்கு எல்லாம் பயன்படுகிறது " அப்படினு டீச்சர் கேட்டாங்க பா.. அதுக்கு நம்ம லினா.. "வேப்பமரம்.. பேய் ஓட்ட பயன்படுகிறதுங்க டீச்சர்.." அப்படினு சொன்னாளே பாரு... கிளாஸ் ரூமே ஹாஹn ஹா.. னு சிரிச்சிருச்சு... அப்பாவி லினா... மறக்கவே முடியல..

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கேப்ஷன்!! :))

      Delete
    2. விஜய்... கார்சனின் கடந்த காலத்தில் வரும் பெண்ணின் பெயர் லினா தானே..?

      Delete
  39. கிட் வில்லர் : மாட்டுக்கொம்பு மாதிரி மீசை வெச்சிருக்கிங்களே.. எதுக்கு அங்கிள்.?

    கார்சன்: நானும் கௌபாய்தான்னு சொன்னா ஒரு பயலும் நம்பமாட்டேன்கிறாங்கப்பா.. நீ கௌபாய் இல்ல கிழபாய்னு கிண்டல் வேற பண்றானுங்க.! இப்படி மீசை வெச்சிக்கிட்டா கௌபாய்னும் நம்புவாங்க.. கேலி பேசறவங்களும் பயப்படுவாங்க.! சுருக்கமா சொல்லணும்னா ஒரே தட்டுல ரெண்டு லெக்பீசு..எப்பூடி..!

    ReplyDelete
  40. **** நோ போட்டிக்காண்டி ***** (க்கும்! அப்படியே பரிசுகளை அள்ளிட்டாலும்...)

    கிட் : அங்கிள்.. போனவாரம் கூட நல்லாதானே இருந்தீங்க? திடீர்னு இப்படி பல் எல்லாம் கொட்டிப்போய் குடுகுடு கிழம் மாதிரி ஆகிட்டீங்களே.. என்னாச்சு?!!

    கார்சனு : கண்ணுல லேசா 'கிச் கிச்' பண்றாப்ல இருக்கேன்னு ஒரு கண் டாக்டர்ட்ட போனேன்.. அவரு என்னமோ 'அரிஜோனா ஐ' வந்திருக்குன்னு சொல்லி ஒரு சொட்டு மருந்தை 5 நாளுக்கு கண்ணுல விடச் சொன்னாரு! என்ன மருந்தைக் கொடுத்துத் தொலைச்சாரோ தெரியலை.. அஞ்சே நாள் தான்.. சினம் கொண்ட சிங்கம் மாதிரி இருந்த நான் இப்படி சூராவளியில் சிக்கின சில்வண்டு மாதிரி ஆகிட்டேன் பா!

    ReplyDelete

  41. கிட் : அங்கிள்....அதென்ன கண் கிட்ட ஒரு வடு
    கார்சன் : அந்த வடு வந்ததுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு...ரெண்டு குண்டு புக் போட்டதான் சொல்ல முடியும்

    கிட் : என்னது ரெண்டா...அதெல்லாம் சொல்ல வேண்டாம்...எனக்கு தான் தெரியுமே...

    கார்சன் : உனக்கு தெரியுமாவா....இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை...டெக்ஸ் நம் நண்பன் சொல்லிருக்கு மாட்டான்

    கிட் : சிவகாசி பண்ணு உங்களுக்கு வரலன்னு நீங்க சண்டை போட்டப்ப ஏற்பட்ட காயம்தானே இந்த வடு

    ReplyDelete
  42. கார்சன் : என்னடா கிட் அப்பிடி பார்க்கற...இந்த வயசுலும் இந்த அங்கிள் யூனிபார்ம்ல ஜொலிக்கிறேனா

    கிட் : இல்ல தாத்தா...உங்கள தந்தை கிழவனு கூப்பிட்டா எப்பிடி இருக்கும்

    கார்சன் : என்னது...ஏன்

    கிட் : தாய்க்கிழவி பெண்பால் அப்ப ஆண்பாலுக்கு தந்தை கிழவா தானே....அப்பிடி கூப்பிட எப்பிடி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா! 'தந்தைக் கிழவா' என்பது அர்த்தமுள்ள ஜோக் சகோ! :)))

      Delete
  43. டெக்ஸ்: எப்படி கிட், கார்சன் மாதிரி நம்ம கெட்டப், பய புள்ள தூங்கி எழுந்து வந்து பார்த்தான்னா மெர்சலாயிடுவான்லே...
    கிட்: ஐயோ டாடி, அங்கிள் உங்களை பார்த்து கெக்கே பிக்கே ன்னு சிரிக்கிறதுக்கு முன்னாடி உங்க பல்செட் மாட்டுங்க முதல்ல.

    ReplyDelete
    Replies
    1. கிட்: இந்த தள்ளாடுற வயசுலேயும் எப்படி எங்கப்பா மாறியே இப்படி நச்சுன்னு குறிவைக்கிறீங்க, அங்கிள்?

      கார்சன்: ஏலே, கிண்டலா? "டெக்ஸ் 75" கொண்டாடுறது நானா? உங்கப்பாவா?

      Delete
    2. முதல் ஜோக் சூப்பர்

      Delete
    3. // ஐயோ டாடி, அங்கிள் உங்களை பார்த்து கெக்கே பிக்கே ன்னு சிரிக்கிறதுக்கு முன்னாடி உங்க பல்செட் மாட்டுங்க முதல்ல. //

      :-)😂😂😂

      Delete
    4. நன்றி சகோ... கார்சரை கலாய்க்க விடுவோமா என்ன? 🤗

      Delete
  44. 1. முதலைப்பட்டாளம் - ஒரு டிரையல் ரன் தந்து பார்க்கலாம்
    2. Zarroff- கண்டிப்பாக வேண்டும். வெயிட்டிங்
    3. Thorgal- If the story writer is same, then we can have thorgal saga also
    4. lonesome- 4 books as a single issue
    5. Durango-i dont like him much. if published give as a bulky book
    6. double album for richochet-one classic and one 2.0
    7. கி நா
    8. stern-confirm slot
    9. lets try him also

    ReplyDelete
  45. கிட்வில்லர் : அங்கிள், உங்க பல் சேட் எங்க போச்சு , டொக்கு தெரியுதே,

    கார்சன்: வெளக்கி வச்சிருந்தேன் ப்பா...வெளிய போற அவசரத்துல உங்கப்பன் மாட்டிகிட்டு போயிட்டான்...

    ReplyDelete
    Replies
    1. 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
    2. செம கலாய். பரிசு உங்களுக்கே ஜனா

      Delete
    3. ஹா ஹா! அட்டகாசம் J ji! ஒரு டெக்ஸ் ரசிகனா கொஞ்சம் கோவம் வந்தாலும், சிரிக்காம இருக்க முடியலைங்கறதுதான் உண்மை! :)))))

      Delete
  46. கிட் வில்லர் : அங்கிள் , இன்னிக்கு கம்மங்கஞ்சியாம்...சீக்கிரமா வேட்டைக்கி போகலைன்னா நமக்கு சுக்கா ரோஸ்ட் கெடைக்காது போல.

    கார்சன்: என்னாது கஞ்சியா...

    ReplyDelete
  47. கார்சன்: ஏம்ப்பா...என்னமோ பொன்னியின் செல்வனாம்ல...

    அதுல "பொன்னி நதி பாக்கணுமே" பாட்டு ட்ரெண்டிங்காம்ல...

    நம்ம நவஜோ ரிசர்வ் பாட்ட எடுத்து விடு...


    கிட் வில்லர் :

    அரிசோனா பாக்கணுமே...

    ஈயாடா...எசமாறி...

    மாலைக்குள்ள...

    ஈயாடா ...எசமாறி...

    நவஜோ பொண்ணுக கண்டதுல...

    ஈயாடா...எசமாறி

    காற்றைப் போல...

    ஈயாடா...எசமாறி...

    பொட்டல் கடந்து...

    ஈயாடா...எசமாறி...

    கணவாய். கடந்து...

    ஈயாடா ...எசமாறி...

    ட்ரேடிங் போஸ்ட் போயி...
    ஈயாடா ...எசமாறி...

    ReplyDelete
  48. கிட் வில்லன்: யோவ் கேரட் மீச கிளிப்டன் தாத்தா, கார்சன் அங்கிள் எங்கயா? அவர் மாதிரி வேஷம் போட்டு யார ஏமாந்த போறீர்?

    கார்சன்: சூப்பர் பா!, நான் கார்சன் மாமா தான், லண்டன்லேந்து வந்த அந்த அழகுக்காக தான் இந்த Make up, எப்படி செம்மையா (ஜோள்ளு வழிய)

    ReplyDelete
  49. கார்ஸன் : ஏண்டா பையா, உங்கப்பனுக்கு காடுமேடெல்லாம் சுத்தறதுக்கு நான் வேணும், ஆனா சொகுசா விருதுநகர், சேலம்ம்னு புத்தக விழாவுக்கு போறதுக்கு மட்டும் இந்த டைகர் பயலா. எந்த ஊர் ஞாயமடா இது

    கிட் வில்லர் : அங்கிள், நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க, புத்தகவிழாக்களில் தல, தளபதி (டெக்ஸ், டைகர்) ஸ்பெசல் தான் ட்ரெண்டாம். அந்த டைகர் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால், இருக்கும் டைகரை வச்சு ஒப்பேற்ற உடனே கிளம்ப சொல்லி சிவகாசியில் இருந்து வந்த தந்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.

    ReplyDelete
  50. சேலம் மாவட்ட ஆட்சியாளர் பள்ளிக் குழந்தைகளை புத்தகத் திருவிழா அழைத்துச் செல்ல சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்,மாணவச் செல்வங்கள் மூலமாக புத்தகத் திருவிழா இன்னும் கொஞ்சம் களைகட்டும் என்று நம்புவோமாக...

    ReplyDelete
  51. கார்ஸன்: டேய் மகனே, தெரியாத்தனமா காட்டு முயல்னு நினைச்சு, ஒரு செவ்விந்தியனின் தலையில் உள்ள இறகை சுட்டுவிட்டேன். அவன் கடுப்பில் இந்த பக்கமாக தேடிக்கொண்டு வருகிறான். என்னைப்போல் நீயும் ஒண்ணுமே தெரியாதது போல் கம்முனு இந்த பக்கம் பார்த்தபடியே இரு, மறந்தும் திரும்பி பார்த்து என்னை பேச்சிலராகவே மேலே அனுப்பிவிடாதே.

    கிட் வில்லர் : நான் ஏன் அங்கிள் அதை செய்யப்போகிறேன். உங்கள் புகை சமிங்கை தான் செய்வதை சிறப்பாக செய்து விட்டதே (துப்பாக்கி புகை)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! அட்டகாசம்! நல்ல ரசணையான படைப்பு!! :))))

      Delete
  52. கிட் வில்லர் : அங்கிள், இந்த போனொலியினர் இளம் டெக்ஸ் போல் ஏன் இளம் கார்ஸனை களம் இறக்கவில்லை.

    கார்ஸன் (மீசையை தடவிக்கொண்ட்டே) : இந்த கார்ஸன் என்றுமே 16 என்கிற பெருமை போனொலிக்கு தெரியும்டா பையா. கூடவே சுற்றும் உங்களுக்கு தான் புரிய மறுக்கிறது

    ReplyDelete
  53. கார்ஸன் : டேய் தம்பி, அய்யாவோட கதைய ஹாலிவுட்ல படமா எடுக்கிறாங்களாம். நம்ம லயன் காமிக்ஸ்ல பிச்சு உதறுன டைட்டில்கல்ல இருந்து மூண செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். "பழி வாங்கும் புயல்", சர்வமும் நானே", "வந்தார் வென்றார்". இதுல ஒண்ண செலக்ட் பண்ணுடா ராசா

    கிட் வில்லர் : வேண்டாம் அங்கிள். லயன் கிராபிக் நாவல்ல வர " அந்தியும் அழகே", "துள்ளுவதோ முதுமை", "எல்லாம் கிழமயம்", இந்த மூணுல ஏதாவது ஒண்ண போட சொல்லுங்க பொருத்தமா இருக்கும்

    ReplyDelete
  54. கேப்சன் 1:
    கிட்:
    அங்கிள் நாம நல்லாதானே விற்கிறோம்.அப்புறம் ஏன் சில பேரு நமக்கு எதிரா போராட்டம் பண்றாங்க?
    கார்சன்:
    மத்தவங்கல்லாம் விற்குதுங்கறாங்க...
    இவங்கல்லாம் "விக்குது"-ங்கறாங்க..அதான் பிரச்சனை..


    கேப்சன் 2:
    கார்சன்:
    கிட் நான்லாம் ஒரு பெரிய வீரனாக்கும்.தெரியுமுல்ல....
    கிட்:
    ம்க்கூம்..கை நடு்க்கத்துல தெரியாம டிரிக்கர இழுத்து மேல பறந்துக்கிட்டு இருந்த காக்காவை சுட்டுட்டிங்க அங்கிள்.. படக்கூடாத இடத்துல ஏதும் சுட்டுக்கப் போறிங்க.. முதல்ல துப்பாக்கிய உள்ள வைங்க..


    கேப்சன் 3:
    கார்சன்:
    என் பேச்சை ஒழுங்கா கேட்டு நடந்திருந்தா உங்கப்பன் இந்நேரம் உருப்பட்டிருப்பார்..
    கிட்:
    நல்ல வேளை அங்கிள்,நீங்க எதுவுமே பண்ணல


    கேப்சன் 4
    கிட்:
    என்ன அங்கிள் ஏதோ யோசனையா இருக்கிங்க?
    கார்சன்:
    இல்ல,இந்த மெடிக்கல் ஃபீல்ட் இவ்ளோ தூரம் முன்னேறி இருந்தாலும்,இந்த பித்த நரைக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க மாட்டேங்கறாங்களே..அதை பத்தி தாம்பா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்


    கேப்சன் 5:
    கிட்:
    இந்தப் பக்கமா போனா செம்ம வேட்டை இருக்குனு எப்படி அங்கிள் சொல்றிங்க. எதிரிகளோட தடத்தை ஸ்மெல் பண்ணிட்டிங்களா?
    கார்சன்:
    அட நீ வேறப்பா..வறுத்தக் கறி வாசனை அந்தப் பக்கமா இருந்துதான் வருது..


    கேப்சன் 6:
    கார்சன்:
    காதலும் கடந்து போகுமுனு சொல்றாங்களே அது உண்மையா கிட்?
    கிட்:
    ஹிஹி ஆமா அங்கிள்..
    (மனதுக்குள்:
    ஏழு கழுதை வயசாகி, காலமே கடந்துப் போயிடுச்சாம்..இதுல காதல பத்தி பேச்சப் பாரு)


    கேப்சன் 7:
    கிட்:
    உங்களுக்கு பிடிக்காத பழமொழி என்ன அங்கிள்?
    கார்சன்:
    வேற என்ன?பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுவாங்கறதுதான்...


    கேப்சன் 8:
    கிட்:
    அங்கிள் லவ்வர்ஸ்-டே வரப் போகுதே..ஏதும் பிளான் இருக்கா?
    கார்சன்:
    அட நீ வேறப்பா..எனக்குலாம் பர்த்டேவே கிடையாதாம்...இதுல லவ்வர்ஸ் டேதான் குறைச்சலாக்கும்...ஹம்..


    கேப்சன் 9:
    கிட்:
    அங்கப் பாருங்க அங்கிள் ஏதோ புகை சமிக்ஞை மாதிரி தெரியுது..அர்த்தம் தான் புரிய மாட்டேங்குது..
    கார்சன்:
    கூகுள் டிரான்ஸ்லேட்டர்ல போட்டுப் பார்த்தா ஒரு செகண்ட்ல தெரிஞ்சிடப் போகுது..இதெல்லாம் பெரிய விசயமா கிட்?


    கேப்சன் 10:
    கிட்:
    எங்க டாடி எங்க அங்கிள்?ரொம்ப நேரமா ஆளையேக் காணோம்?
    கார்சன்:
    பொண்ணுப் பார்க்கப் போயிருக்கார்பா..
    கிட்:
    அப்பாடா..இப்பவாவது எனக்கொரு கல்யாணத்த பண்ணிப் பார்க்கணுமுனு அறிவு வந்துச்சே சந்தோசம்..
    கார்சன்:
    ஹோய்..பொண்ணுப் பார்க்கப் போனது எனக்கு மேன்.. உனக்கின்னும் பிப்டி இயர்சுக்கு அப்புறந்தான் மேரேஜ்லாம்.. அதுக்குள்ள என்ன அவசரம்?



    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பின்றீங்க பார்த்தீபன் சார்!! :)))

      Delete
    2. நீண்ட நித்திரைக்கு பிறகு நம்ம டாக்டர் . What a comeback. செம்ம சார் செம்ம செம்ம

      Delete
    3. //நீண்ட நித்திரை// ஹா ஹா... மாத்திரை தர்றவர இப்படி சொல்லலாமா ஐயா?

      Delete
    4. கேப்சன் 5: சிறப்பு

      Delete
    5. அனைத்தும் அருமையான சிரிப்பு வெடிகள் 😂😂😂

      Delete
  55. நான் போடும் கமெண்ட்ஸில் சிலது கொஞ்ச நேரத்திலேயே காணாமல் போய்விடுகிறதே... ஒரு கேப்ஷனையும், சில பதில் கமெண்ட்ஸையும் காணோம்!! :(

    ReplyDelete
  56. ஏற்கனவே இரண்டுமுறை இதைப் போட்டும் காணாமல் போனதால், இது 3வது முறை!! (அழகான இளவரசன்ற பொறாமைல யாரோ பில்லி-சூன்யம் வச்சிட்டாங்க போலிருக்கு!)

    ச்சும்மாக்காண்டி:
    (நன்றி : SURYA JEEVA)

    கார்சனு : துள்ளியமா குறிவச்சு அடிச்சுட்டேன் போலிருக்கே கிட்?!! 'சிலீர்'னு அந்த பாட்டில் உடைஞ்சு சிதறிய சத்தத்தை நீ கேட்டியா?

    கிட் : 'சிலீர்'னு சத்தம் வந்தது பாட்டில் சிதறியதால் அல்ல அங்கிள்.. பக்கத்து வீட்டுப் பாட்டிம்மாவின் பற்கள் சிதறியதால்!

    ReplyDelete
    Replies
    1. இதுவாவது நிக்குதா பார்ப்போம்!!

      Delete
    2. ஹிஹிஹி EV செம்ம

      Delete
    3. காது கேக்குதா? அப்படின்னு கிட் கேக்குற மாதிரி தான் எழுத நினைச்சேன். அப்புறம் கார்சன் ரசிகர்களின் மனம் புண்படுத்தக்கூடாதுன்னு மாத்திட்டேன்.. இதுவும் சூப்பரா தான் இருக்கு நண்பரே

      Delete
    4. //(அழகான இளவரசன்ற பொறாமைல யாரோ பில்லி-சூன்யம் வச்சிட்டாங்க போலிருக்கு!)//

      😋😋😂😂😂

      Delete
  57. கார்ஸன்: கட்ட கடைசியா, இந்த காளையன கட்டிக்க செண்பகம் சம்மதிச்சிட்டாப்பா!

    கிட்: சிறப்பான, தரமான சம்பவத்தை இனிமேல்தான் பார்க்க போறோம்னு சொல்லுங்க.

    கார்ஸன்: டேய்!! படவா!!   

    கிட்:  உங்க கல்யாணத்த சொன்னேன், அங்கிள்!

    ReplyDelete
  58. கிட் வில்லர் : அங்கிள், இந்த கெட்டப்பில் புது மாப்பிள்ளை மாதிரிதானே இருக்கீங்க அப்புறம் என்ன யோசனை?.

    கார்ஸன் : நான் எப்போதும் உனக்கு, உன் டாடிக்கும் மாதிரி தானேப்பா அன்னக்கி வறுத்த கறிக்கு ஆசை படாமல் இருந்து இருந்தா இன்னேரம் உன் பக்கத்தில் கிட் கார்ஸன் இருந்து இருப்பான்

    ReplyDelete
  59. கார்சன்: டே..கிட்டு.. டக்குன்னு திரும்பிடாத.. பொறுமையா திரும்பி பாரு..😍
    தூரத்தில் நச்சுன்னு ஒரு மஞ்சக்காட்டு மைனா வருது பாரு.. 😘அது பக்கத்துல வந்தோன்ன சொல்லு..
    நான் அப்படியே கேஷ்யுவலா திரும்பராப்பல திரும்பி ஒரு லவ் லுக் உடறேன்..❤

    கிட் வில்லர்: அய்யோ அங்கிளு..😬
    அது மைனா இல்ல.. நைனா...😃 Tex டாடி ரிடர்ன் வந்திட்டு இருக்காரு.
    உங்களுக்கு காதுதான் கேக்களேன்னு பார்த்தேன். இப்ப கண்ணும் அவுட்டா..😄😃😀

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! அட்டகாசம் பாபு ஜி!! எழுதிய விதம் - அருமை!! 😄😃😀😄😃😀😄😃😀

      Delete
  60. கிட்: என்ன அங்கிள் இங்கு குளிர்காத்து நல்லா ஜிவ்வுன்னு அடிக்கறது செம்மயால்ல.

    கார்சன்: க்கும்... இந்த குளிருக்கு பீரும் வறுத்த கறியும் கையில இருக்குறதுக்கு பதிலா பிஸ்டல கொடுத்து இப்படி நிக்க வைச்சுபுட்டானே உங்கப்பன்.

    ReplyDelete
  61. கிட். அங்கிள் டான்சர் லீனா கூட சோக்கா ஒரு ஆட்டம் போட்டுட்டு லவ் வை சொல்லிட்டுவர்றேன்னு போனிங்க இப்ப ஒரு மாதிரி முழிக்கிறிங்க
    கார்சன் . அது ஒன்னுமில்லப்பா அவளுக்கு ஏற்கனவே ஆளிருக்குன்னு சொன்னா நான் எனக்கொரு வாய்ப்பு குடுத்து பாரும்மான்னு சொன்னேன் சிரிச்சிக்கிட்டே மாஸா ஊத்திக்கொடுத்தாப்பா நானும் இதுதான் லவ்வோட ஆரம்பம்னு நினைச்சிகிட்டு சந்தோஷமா குடிச்சிட்டேன் இப்ப அது தொண்டையை கவ்வுதுப்பா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! மாஸா மேட்டரை சமயோஜிதமா பயன்படுத்தியிருக்கீங்க செ.ச!!

      Delete
    2. ஹா ஹா :-) இனி மாஸா கவனமாக இருக்கனும்:-)

      Delete
  62. உஷார் அழகிய ஆபத்து - அமெரிக்க அதிபரை பழிவாங்க நினைக்கும் கும்பல், யார் என்ன காரணம் என்பதை விட கதையை நகர்த்திய விதம் அருமை. தேவையான ஆக்சன் காட்சிகள் அதனை மிரட்டலான சித்திரங்களுடன் கொடுத்த ஓவியருக்கு ஒரு பூச்செண்டு.

    சிஸ்கோ என்றால் தெனாவட்டு என்பதை இந்த முறையும் அழுத்தமாக சொன்னது எனக்கு பிடித்து இருந்தது. வசனங்கள் மிகச்சிறப்பு இந்த கதையில்.

    இந்த வருடம் சிறந்த அறிமுகங்களில் சிஸ்கோ முதலிடம், ஜாகோர் இரண்டாம் இடம் மூன்றாம் இடத்தில் ரூபி.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் நம்புவது போலவா இருக்கு. நீங்க கருத்து கந்தசாமியாச்சே நீங்க சிஸ்கோ வுக்கு முதல் இடம்!!!! அடடே ஆச்சரியக்குறி

      அப்பறம் அது அமெரிக்க அதிபர் இல்லை பிரான்ஸ் அதிபர்.

      Delete
    2. சாரிப்பா அதிபர் என்றாலே என் கை அமெரிக்க அதிபர் என அடிக்க பழகிவிட்டது:-)

      Delete
    3. நம்பினால் தான் அடுத்த முறை ஈரோட்டில் உங்களுக்கு கறிச்சோறு :-)

      Delete
    4. அப்போ நம்பிட்டேன் நம்பிட்டேன்

      Delete
    5. // நீங்க கருத்து கந்தசாமியாச்சே //

      சேச்சே நான் கருப்பு கந்தசாமி:-)

      Delete
    6. அப்ப நானும் நம்பிக்கிறேன் சகோ 😋😋😋

      Delete
    7. True, Sisco is a promising Hero... But he don't have much stories it seems.

      Delete
    8. I like his stories very much compared with Tango and Alpha.

      Delete
    9. ரூபியின் தென்னாட்டு அதற்கு ஏற்ப ஆசிரியர் எழுதிய வசனங்கள் டாப்.

      Delete
  63. (கேப்சன்கள் தொடர்கிறது....)

    கேப்சன் 11:
    கிட்:
    அங்கிள் நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்..ஏன் ரொம்ப நேரமா ஒரே இடத்துலயே நின்னுக்கிட்டு இருக்கிங்க?
    கார்சன்;
    ஆமாம்பா...சூட்டிங் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்
    கிட்:
    ஆங் இதானே வேணாங்கறது.. உங்க காலுக்கு அடியில கிடக்கற பத்து ரூவா நோட்டுல சத்தியமா நான் பங்கு கேட்க மாட்டேன் அங்கி்ள்...தயவு செஞ்சு நகர்ந்து தொலைங்க.பத்து ரூவாய காப்பாத்த பத்து மணி நேரமா இப்படி நிக்கறதுலாம் டூமச் சொல்லிட்டேன்...


    கேப்சன் 12:
    கிட்:
    சுப்ரீமுக்கும் சுப்ரீமோவுக்கும் என்ன அங்கிள் வித்தியாசம்?
    கார்சன்:
    பல்லு போனவங்கல்லாம் சுப்ரீம்..
    நம்மள மாதிரி ஜொள்ளும் போனவங்கல்லாம் சுப்ரீமோ.. அவ்வளவுதான்..


    கேப்சன் 13:
    கார்சன்:
    இன்னைக்கு எனக்குப் பர்த்டேனு தெரிஞ்சு ஸ்பெசல் பீர்லாம் வாங்கிட்டு வந்து  வச்சுருந்த போல கிட்...செமையா கிக் ஏறுதுப்பா...
    கிட்:
    ஐயோ அங்கிள்..நானே குதிரைக்கு கலக்கி வச்சுருந்த கொள்ளு தண்ணிய காணோமுனு தேடிக்கிட்டு இருக்கேன், நீங்க வேற...


    கேப்சன் 14:
    கிட்:
    ஏன் அங்கிள் வாட்சப் ஸ்டேட்டஸ்லாம் ரொம்ப சோகமா வச்சுருக்கிங்க?
    கார்சன்:
    உங்கிட்ட சொல்றதுக்கு என்ன கிட்?கட்டை பிரம்மச்சாரினா கூட பரவால்ல,கட்டையில போற வரைக்கும் பிரம்மச்சாரினா எப்படிப்பா?வெரி சேட்.


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே சிரிப்புச் சரவெடிகள்!! :))))))

      Delete
    2. 😅😅😅😅😅😅 சிரிப்பு மழை

      //கட்டையில போற வரைக்கும் பிரம்மச்சாரினா..//
      HA HA HA கட்டை பிரம்மச்சாரிகள் மேலே உங்களுக்கு என்ன ஒரு பொறாமையோ? அப்பப்ப கேப்சனா வெளியே வருதோ சகோ...

      Delete
    3. கொள்ளு தண்ணி
      செம சகோதரரே

      Delete
  64. ச்சும்மாக்காண்டி தான்!

    கிட் : அங்கிள்.. ரொம்ப நேரமாவே எனக்கு தோட்டா வெடிக்கும் சத்தம் எதுவும் கேட்கலை. ஆனா உங்க துப்பாக்கியிலிருந்து புகை வருதே?!!

    கார்ஸனு : ஓ அதுவா.. இது டெங்கு காய்ச்சல் சீஸனாச்சே! அதான் உள்ளே குண்டுக்குப் பதிலா கொசுவர்த்தியை வச்சிருக்கேன்.

    ReplyDelete
  65. கிட்: எப்பவும் எங்க அப்பா மேலே கோபப்படுவீங்க இந்த முறை நம்ப சிவகாசி எடிட்டர் மேலே ஏன் கோபம்?

    கார்ஸன்: போன மாதம் வந்த கதையில் என்னை கட்டை பிரம்மச்சாரி என எழுதினால் கூட பரவாயில்லை கட்டையில் போகும் பிரம்மச்சாரி என எழுதியுள்ளார்:-(

    நன்றி பார்த்தீபன் சார்

    ReplyDelete

  66. கிட் .என்ன அங்கிள் பலத்த யோசனை
    கார்சன் . அது ஒன்னும் இல்ல மருமகனே நான் தினமும் ஒரு ஓட்டலில் வருத்த கறி சாப்பிடுவேன் ரொம்ப ருசியா இருக்கும் நேத்து உணவு அதிகாரிங்க அந்த ஓட்டலுக்கு சீல் வச்சிட்டாங்க
    கிட் . ஏன் சீல் வச்சாங்க அங்கிள்
    கார்சன் .அந்த ஓட்டல்ல நாய் கறி போட்டிருங்கங்க அதை கேள்விப்பட்டதில் இருந்து நாக்கு வெளியே தொங்கி மாதிரியே இருக்கு தந்தி கம்பத்தை பாத்தா காலை தூக்கனும்னு தோனுது மருமகனே

    ReplyDelete
  67. கிட் வில்லர்:
    ஏங்க அங்கிளு.😘. இந்த Tex டாடி நம்ம ரெண்டு பேருக்கும் சிவப்பு சட்டைய மாட்டி காலங்காத்தால இப்படி நிக்க வச்சுபுட்டு எங்கதான் போயிறுக்காரு?😏

    கார்சன்: அத ஏண்டா கேக்குற கிட்டு..😍
    பக்கத்து காட்டுக்கு யாரோ Zagor ன்னு ஒருத்தன் சிவப்பு சட்டைய மாட்டிகிட்டு ஜம்முன்னு வந்திருக்கானாம். கும்முனு பல பளே வேலைகள் ஒரு கல்லு கோடாலிய வச்சுகிட்டு அசால்டா செய்யிரானாம். காடே கிறங்கி கடக்காம்.

    அதான் உங்கப்பன் அவனை பாத்து ரெண்டு கல்லு கோடாலி கடன் வாங்க போயிருக்கான். அந்த மஞ்ச சட்டைய போட்டும், இந்த டுபாக்கிய தூக்கியும் போரடிச்சு போச்சாம். அதனாலதான் சிவப்பு சட்டைய போட்டு நம்பளை நிக்க வச்சுட்டு போயிருக்கான்.
    இனிமே நமக்கு இந்த சிவப்பு சட்டையும், கல்லு கோடாலியும் தான்.😏😏😒

    ReplyDelete
  68. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  69. அப்புறம் குமார்களே @ இன்றைக்கு அதானே அதே தான்:-)

    ReplyDelete
  70. @Edi Sir..😍😘

    கிட் வில்லர்:
    அங்கிளு..😃 இந்த Tex டாடி ய காலைல இருந்தே காணோமே?.. எங்க போயிருக்காரு?..😏

    கார்சன்:
    அதுவாடா கிட்டு..😍 நம்ப எடி அங்கிள பாத்து லட்சோப லட்சம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பான *உயிரைத்தேடி* டிசம்பர்ல வருமா ன்னு கேக்க போயிருக்காரு?..😉

    ReplyDelete
    Replies
    1. லட்சோப லட்சம்?

      Delete
    2. கனவு விரைவில் மெய்ப்படும் குமார்:-)

      Delete
    3. //கனவு விரைவில் மெய்ப்படும் குமார்:-)//

      wooowwww..... what a hope sago..?
      யாராவது ஸ்பான்சர் முன்வந்து ஒரு 16 அல்லது 32 பக்க பாக்கெட் சைஸ் குட்டி காமிக்ஸ் ஒன்று (Mayavi, Spider, Lucky Luke) புத்தக விழாக்களல்ல நம்ப காமிக்ஸ் சந்தா விவரத்தோடு வர்றவங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து பார்க்கலாம். 10, 100, 1000 என்று புது வாசகர் சேர்ந்தாலும் நல்ல விஷயம் தானே.

      Delete
  71. கிட் : என்ன அங்கிள், அப்பா இல்லையேன்னு குஷி ஆயிட்டீங்க போல தேரீது!

    கார்சர்: அது மட்டும் இல்லை கிட்டு. அடுத்து விடப் போறேன் லீனாவுக்கு ரூட்டு!

    மஞ்ச சட்ட அப்பீட்டு!
    லீனாவுக்கு ரூட்டு!
    பாடப்போறேன் பாட்டு!
    இப்போ விடு ஜூட்டு!

    ReplyDelete
  72. கிட்: அங்கிள்!  இந்த ஏகாந்த சூழ்நிலையில் "பொன்னிநதி பார்க்கையிலே" பாடலை பாடி ஆடினால் எப்படி இருக்கும்?!

    கார்ஸன்: எனக்கு இப்படி தீபாவளி துப்பாக்கியில் கேப் ரோல் போட்டு சுட்டு சுட்டு விளையாடுவதில் தான் இன்பம் அதிகம். இதுவே பழகி விட்டது. ஹி ஹி ஹி!!!

    ReplyDelete
  73. Caption from Gousiq Vetri, Maduravayil Chennai.

    கிட் : ஏன் அங்கிள் மீசையை இவ்ளோ பெருசா வச்சிருக்கிங்க...? மீசையை முறுக்கு படம் PART -2 எடுக்க போறீங்களா...?

    கார்சன் : அட நீ வேறப்பா... நானே உன் அப்பா டெக்ஸ் வில்லர் என்னுடைய
    " செவிங் கிரிம்மையும் , செவிங் மிசினையும் எடுத்து விட்டு போய்ட்டன்...
    போற போக்குல மீசையையும் , தாடியும் அதிகமாக வளர்ந்து காட்டுவாசி போல் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. Caption from Gousiq Vetri

      கிட்: அங்கிள் நீங்க தான் இப்ப யாரையும் சுடலையே அப்ப ஏன் உங்கள் துப்பாக்கில் இருந்து புகை வருது...?

      கார்சன் : அது வந்து நம்ம ஆடியன்ஸ் எல்லாம் நான் வந்து ஏதோ நூறு பேரை சுட்டு தள்ளுன மாதிரி நினைப்பாங்க...
      ஆனா...உண்மை என்னவென்றால் " கம்பியூட்டர் சாம்ரான்டி தான் துப்பாக்கி உள்ளே போட்டு வச்சிருக்கேன்... அதான் புகை வருது‌...

      கிட்: ஹா,ஹா, ஹா

      Delete
  74. கிட்: என்ன அங்கிள் டாடியை இன்னும் காணோம், நம்மள சிவப்பு சொக்காயில நிக்க வைச்சுட்டு எங்க போயிட்டார்

    கார்சன் :
    துப்பாக்கில புகை
    மீசைல முறுக்கு
    கன்னத்துல மரு
    இன்னைக்கு பதிவு
    ஜெயிக்கறவங்களுக்கு பன்னு
    உங்க டாடி வாங்கிட்ட போற சிவகாசி பன்னு


    ReplyDelete
  75. கிட் வில்லர் : யாருப்பா இது புதுசா தெரியுது...


    கார்சன் : யார் அப்பாவும் இல்லைங்க.நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை ங்க...

    ReplyDelete
  76. கார்சன் : " நிகழும் பார்த்தீப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள் திருவளர் செல்வன் கிட் கார்சனுக்கும் திருவாளர் செல்வி லீனாவுக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து....(பாடுகிறார்).

    கிட் வில்லர் : திருவாளர் கிழவின்னு சொல்லணும்...எங்கப்பா இருக்குற வரைக்கும் எனக்கே கல்யாணம் ஆகப் போறதில்லை...

    ReplyDelete
  77. கார்சன் : கிட்..பெம்மிகான் ரெடியா...

    கிட் வில்லர் : அங்கிள் சுக்கா ரோஸ்ட் - உருளைக் கிழங்கு ஞாபகம் வந்திடிச்சாக்கும்...இங்க நவஜோ ரிசர்வ்ல அது கெடையாது...செம்பிலான் கெடைக்கிறதே பெரிய விஷயம்....

    ReplyDelete
    Replies
    1. செம்பிலான் = பெம்மிகான்

      Delete
  78. கிட் வில்லர் : அங்கிள்.எப்டி உங்களால் முரட்டு சிங்கிளா காலம் கடந்த முடியுது...ஒரு கல்யாணம் காச்சிக்கெல்லாம்..ஆசை கீசை...

    கார்சன் : நாயன்மார் வரிசையில் அவதரித்த 64 ஆம் நாயன்மார் டெக்ஸ் வில்லரடிகள் சிங்கிள் முடராக பக்தி செய்யும் போது நாமெல்லாம் அவரை தொடர்வது தானே நியாயம்.

    ReplyDelete
  79. @Editor sir.. top graphic novels of 2022. Please check anything workouts for us.

    https://www.washingtonpost.com/books/2022/11/17/best-graphic-novels/

    ReplyDelete
  80. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  81. கிட்: அங்கிள் துப்பாக்கியால சுடாமலே புகை வருதே எப்படி ❓

    கார்சன்: கனவுலகில புட்டியோடு மிதந்துகிட்டு இருக்க வேண்டிய என்னை இந்த நேரத்துல குட்டிச் சாத்தான் உன்னோடு விட்டுட்டு போயிருக்கானே அந்த பயல். அதனால ஏற்பட்ட வயித்தெறிச்சல் புகை தான் இப்படி பிஸ்டல் வழியாக போகுது.

    ReplyDelete