நண்பர்களே,
வணக்கம்.ஒரு செம வெற்றிகரமான ஏப்ரலின் இதத்தில் உலகமே இளையராஜா சாரின் இசைச் சாரலில் நனைந்து கிடப்பது போல் தோன்றுவது என்னமோ நிஜமே! மெகா சைஸில் டின்டின் காலத்தை வென்றதொரு விருந்தினைப் படைப்பது ஒரு பக்கம் எனில், அரை டஜன் அமெரிக்க ஜாம்பவான்கள் கிங் ஸ்பெஷலை குத்தகைக்கு எடுத்திருப்பதோ மறுபக்கம்!And இவர்களுக்கெல்லாம் tough தர மோரிஸ்கோ கூட்டணியில் டெக்ஸ் & கார்சன் காத்திருக்க, இந்த மாதம் நமது ஆன்லைன் ஆர்டர்களும் சரி, முகவர்களின் ஆர்டர்களும் சரி - பட்டாசாய்ப் பொரிந்து வருகின்றன! So இதமான மழைச் சாரல் கலந்த இசை இந்த நொடியில் எனது காதில் ஒலிக்கும் பட்சத்தில் வியப்பே இருக்கக் கூடாது தான்! ஆனால், "புடைப்பான மூக்கு கொண்டோர் சங்கம்" என்ற பிரத்யேகமான அமைப்பில் அங்கம் வகிப்போருக்கு எப்போதுமே காதிலும் மண்டையிலும் கோக்குமாக்காய் ஏதேனும் கேட்பது தானே சகஜம்? And அந்தச் சங்கத்தில் நாமெல்லாம் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் - "all is well" என்றபடிக்கே அக்கடாவென காலாட்டிக் கொண்டிருக்காது, சற்றே சலனமூட்டும் இன்னொரு திக்கினில் சிந்தனை ஓடிடுகிறது.
"மய்யமா" பையன் பேச ஆரம்பிச்சிட்டானே?!" என்று முழிக்கிறீர்களா? சிம்பிளானதொரு உதாரணத்துடன் மேட்டருக்குள் நுழைகிறேனே?!
கோயமுத்தூர் அன்னபூர்ணாவுக்குள் நுழைந்த நொடியே புன்னகையோடு வரவேற்கும் சப்ளையரிடம் "இன்னா கீது பிரதர்?" என்ற கேள்வியை சம்பிரதாயத்துக்கு முன்வைப்பது உலக வழக்கம் தானே? அவரும் 'தம்' கட்டியபடியே "குக் வித் கோமாளி" ஷோவுக்குப் போக வேண்டிய ஐட்டங்களிலிருந்து, நம்மூர் இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல் வரை அடுக்கிக் கொண்டே போவார். நாமளோ பலத்த யோசனை பண்ணுவதானதொரு பாவ்லாவுக்குப் பின்னே, "ஒரு ஸ்பெஷல் தோசை" என்று ஆர்டர் சொல்லுவோம். In fact, உள்ளே நுழையும் போதே தலைக்குள் அந்த தோசையும், அன்னபூர்ணா சாம்பாரும் கைகோர்த்து ஒரு கதகளியே ஆடி முடித்திருக்கும். இருந்தாலும், அது தவிர இன்னும் வேறென்ன ஐட்டங்கள் உள்ளன ? என்பதை அவர் வாயால் கேட்டபடியே, மனக்கண்ணில் அவற்றை ஓடவிட்டு, வெளியே தெரியாதபடிக்கு கடைவாய்க்குள் கால் படி ஜொள்ளை விழுங்கிக் கொள்வது காலம் காலமாய் அரங்கேறிடும் இன்னொரு சம்பிரதாயம் தானல்லவா?
இப்போ அப்படியே அந்த அன்னபூர்ணா ஹோட்டலின் இடத்திலே நம்ம லயன் & முத்துவின் காமிக்ஸ் கடையை கற்பனையிலே கொண்டு வந்திடுங்க please. அந்த புன்னகைக்கும் சப்ளையரின் இடத்தில் முழி எது ? மூஞ்சி எது ? என்று இனம் காண முடியா ஒரு வளர்ந்த ஆந்தையனையும் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். இப்போ அந்த நீளமான வெரைட்டியான மெனு ஐட்டங்களின் இடத்தில் :
- தோர்கல்,
- மேக் அண்ட் ஜாக்,
- ப்ளூ கோட்ஸ்,
- சகுவாரோ,
- ஸ்டெர்ன்,
- மர்ம மனிதன் மார்டின்,
- மேகி காரிசன்,
- தாத்தாஸ்,
- சோடா,
- டேங்கோ
and இன்னபிற நாயகர்களை உருவகப்படுத்திக்கோங்க.கடைக்கு வர்றீங்க..... "இன்னா மேன் ஸ்பெஷல்?" என்று வினவுறீங்க. and நானும் வரிசை கட்டி அடுக்கிட்டு மூச்சு வாங்குறச்சே - "one டெக்ஸ் வில்லர், one டின்டின், one மாயாவி" என்ற ரீதியில் ஸ்பெஷல் தோசைகளுக்கும், இட்லிகளுக்கும், பொங்கல் வடைக்குமே ஆர்டர்கள் பறக்கின்றன. கிச்சனில் தந்தூரி நான் இருக்கு, நூடுல்ஸ் இருக்கு, கொத்து பரோட்டா இருக்கு தான்! ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ஆர்டர் கிட்டும் சமயத்துக்குள் bestsellers பட்டியலிலிருக்கும் இட்லிகளுக்கும், தோசைகளுக்கும் பொங்கல்களுக்கும் 40 ஆர்டர்களாவது விழுந்திருக்கின்றன. காலமாய் இதை அன்னபூர்ணா எவ்விதம் சமாளிப்பார்களோ தெரியலைங்கோ! ஆனால் சமீப காலங்களாய் நம்ம கடையிலே இந்த இக்கட்டானது சன்னம் சன்னமாய் பெரிதாகி வருவதே இந்த வாரத்தின் எனது பஞ்சப்பாட்டு.
வெறும் அரை டஜன் best seller ஐட்டங்களை கொண்டே செம சுளுவாய், லாபமாய், நோவுகளின்றி, கடையினை முன்செல்லும் நாட்களில் நடத்திட இயலும் போலும் என்பதுதான் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் இந்த ஏப்ரல் சொல்லும் செய்தி. Oh yes, புதுசு புதுசாய் நாயக நாயகியரை தோண்டித் துருவிக் கொணர்ந்து, அவர்களை அறிந்து கொள்வதில் கிட்டிடும் thrill அலாதி ரகம் தான். ஆனால் "ஓட்டமே வாழ்க்கை" என்று உருமாறி வரும் இந்த காலகட்டங்களில் புதியவர்களை பரீட்சித்துப் பார்க்கும் பொறுமைகளும், விளிம்பு நிலை நாயகர்களை சுவாரஸ்யமாய் ஏற்றுக் கொள்ளும் பாங்கும் நமக்கு எத்தனை தூரம் சாத்தியம் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த நொடியில் இது தலைக்குள் highlight ஆகித் தெரிவதற்குப் பிரதானமாய் ஒரு காரணம் உண்டு.
ஒரு மாதம் முன்மே நாம் 'FAB FIVE' என்ற ஐந்து ஸ்பெஷல் இதழ்களை முன்பதிவுக்கென அறிவித்திருந்தோம். and அதற்கு ஒற்றை மாதம் முன்பாக தாத்தாஸ் மற்றும் மேகி காரிசன் இதழ்களையும் அறிவித்திருந்தோம். ஓப்பனிங் என்னவோ பேஷாய்த்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் தாத்தாஸ் மற்றும் மேகி கூட்டணி பெருசாய் பிக்கப் ஆகவில்லை. சரி ரைட்டு, இவர்கள் இருவருமே வெகுஜன ரசனைகளிலிருந்து வெகு தொலைவில் நிலைகொண்டிருக்கும் நாயக நாயகியர்தானே, so இவர்களுக்கு பெருசாய் வேகம் தென்படாது போவதில் வியப்பில்லைதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.
தொடர்ந்த FAB FIVE-ல் டைலன் டாக் உண்டு, மர்ம மனிதன் மார்ட்டின் உண்டு, புது வரவு அந்நியன் உண்டு, கிராஃபிக் நாவல்கள் உண்டு, ஸாகோர் உண்டு, பச்சே, அங்கேயுமே நிலவரத்தில் பெருசாய் மாற்றமில்லை. மொத்தமாய் 30 நாட்களில் கிட்டியுள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கையானது, மூன்றே நாட்களில் 'கிங் ஸ்பெஷல் 3' விற்றுள்ள பிரதிகளை விடவும் குறைவு.
இங்கு இன்னொரு சுவாரஸ்யமும் உண்டென்று காதில் விழுந்தது. "FAB FIVE இதழ்களின் விலையெல்லாம் ரம்பவே சாஸ்தி" என்ற பரப்புரை ஆங்காங்கே இறக்கை கட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த அரிய கண்டுபிடிப்பினை கீழடி அகழாய்வுத் தளத்தில் கல்வெட்டாய் பொறித்தாலும் தப்பில்லை என்பேன். ஏன் என்கிறீர்களா? சித்தே கீழே பாருங்களேன்:
ரெகுலர் தடப் பக்கங்கள் / விலைகள்:
112 பக்க டெக்ஸ் - விலை ₹100
184 பக்க சாகோர் - விலை ₹150
96 பக்க மார்ட்டின் - விலை ₹90
48 பக்க (பெரிய சைஸ்) மாயாவி - விலை ₹100
FAB FIVE பக்கங்கள் / விலைகள்:
144 பக்க "அந்நியன்" - ₹100
192 பக்க சாகோர் - ₹160
176 பக்க மார்ட்டின் & டைலன் - ₹120
54 பக்க (பெரிய சைஸ்) கிராஃபிக் நாவல் - விலை ₹65
பரணில் காலமாய் உறங்கி வரும் கதைகளை வெளிச்சத்தைப் பார்க்க இறக்கி விட்டாலே போதும், இதில் அரை அணா லாபம் இல்லாங்காட்டியும் சிக்கலில்லை என்ற எண்ணத்தில், ரெகுலர் விலைகளைக் காட்டிலும் ரொம்பவே குறைத்து ஒவ்வொரு FAB FIVE இதழ்களுக்கு விலைகள் நிர்ணயித்துள்ளோம் !! And சந்தாக்களில் உள்ளோருக்கு no courier charges ! அப்படி இருக்கும்போது, "ரெம்ப காஸ்ட்லி" என்று ஒற்றை வரியில் எழுதப்படும் தீர்ப்புகளை வருங்காலம் போற்றிப் பாதுகாக்க கீழடிக்குக் கொண்டு செல்ல நினைப்பதில் தப்பில்லைதானே?
Coming back to track - வெரைட்டியானதொரு மெனு இருந்தாலும், சிக்கலே இல்லாத, பரிச்சயப்பட்ட, சுவையான சாப்பாடுகளே போதும் என்ற நிலவரம் தான் இன்றைய யதார்த்தம் என்று ஏப்ரலின் தெறி சேல்ஸ் சுட்டிக்காட்டுகின்றது.Of course, பரீட்சார்த்தமாய் புதுசு புதுசாய் முயற்சிக்கும் ஆர்வலர்கள் நம்மிடையே உண்டு தான். ஆனால் அவர்களது எண்ணிக்கையோ 200-ஐத் தாண்டவில்லை என்பதுதான் சிக்கலே.
ஏற்கனவே மீன் கடை நடத்தும் வடிவேலு போர்டில் செய்திருக்கும் விளம்பரத்தைப் போல, "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று இருந்த வாசகமானது, ஏகப்பட்ட கத்திரிகள் கண்டு, வெறுமனே "மீன்கள் விற்கப்படும்" என்ற நிலவரத்தில், ரெகுலர் தடத்தில் பயணித்து வருகின்றது. துளி தடுமாறினாலுமே அந்த நாயக / நாயகியர் ரெகுலர் அட்டவணையில் இடம் பிடித்திடுவதில்லை - கடந்த இரு ஆண்டுகளாய். ஆனாலும் தொடர்ந்து நமது வாசிப்புக் களங்கள் சுருங்கிக்கொண்டே செல்லும்போது, கையேந்தி பவனின் குட்டியூண்டு மெனுவைப் போல் முழுக்க முழுக்க best sellers மாத்திரமே கொண்டு ஒரு அட்டவணையை வரும் ஆண்டுகளில் உருவாக்கும் நிலை எழுந்தாலும் வியப்பதற்கில்லை என்பேன்.
'மாதந்தோறும் 'தல' இருந்தால் போதும் ; கிளாசிக்ஸ் ஏதேனும் தொட்டுக்க இருந்தால் போதும்..... லக்கி லூக் போன்ற லைட் வாசிப்புகளோ, கேப்டன் டைகரை போன்ற காலூன்றிய டாப் ஹீரோவோ, டின்டினை போலான clean reading fun தரவல்ல நாயகர்கள போதும்..'. இவர்களிடம் உள்ள ஈர்ப்பு ஒரு கரடுமுரடான சகுவாரோவிடமோ, ஒரு டைலன் டாகிடமோ, ஒரு தாத்தாக்கள் டீமிடமோ இருப்பதில்லை என்பதே பெரும்பான்மையின் தீர்ப்பாக அமைந்திடும் பட்சத்தில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எழுந்த நொடியில் சுருங்கிப்போன ஹோட்டல் மெனுக்களைப் போல நமது விசாலமான திட்டமிடல்களும், சிறகுகளை உள்ளே இழுத்துக்கொள்ளத்தான் வேண்டிப்போகும் போலும்.
இந்த நொடியில் இது ஒரு ஆதங்கப் புலம்பல் மாத்திரமே. முன்செல்லும் நாட்களில் இதேபோலான நிலவரம் தொடர்ந்திடும் பட்சத்தில் மட்டுமே முரட்டு மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரு ப்ளூ கோட்டையும், ஒரு மேக் & ஜாக்கையும் இறக்கி விட்டு, அவற்றில் கையில் மிஞ்சிடும் 300 பிரதிகளை அடுத்த 10, 15 ஆண்டுகளுக்குத் தூக்கிச் சுமப்பதற்குப் பதிலாக, அதே இடத்தில் கூடுதலாக இரண்டு லக்கி லூக்கை போட்டுவிட்டு, ஒன்றோ இரண்டோ ஆண்டுகளில் காலி செய்த கையோடு, கையைத் தட்டிப் புறப்படுவது சாலச் சிறந்ததாச்சே ? என்பது ஒரு பக்கம் நியாயமான வாதமாகவே தென்படுகிறது. And கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறேன் -. முழுக்கவே நாயகர்கள் அல்லாத....... கதைகளே நாயகர்களாய் உலவிய ஜம்போ காமிக்ஸின் காலங்களையெல்லாம் !!! நெடும் பெருமூச்சே இன்று விட முடிகிறது. காலத்தின்போக்கில் சில பல கோடுகள் நம்மையும் அறியாமல் நமது பாதங்களுக்குக் கீழே அழிந்து போவது தவிர்க்க இயலா நிகழ்வுகள் தானோ?
Please be sure, இது யாரையும் குறை சொல்லும் ஒரு முயற்சியே அல்ல. FAB FIVE -க்கு இன்னுமொரு மாசமோ, கூடுதலாகவோ அவகாசம் தந்தால் வண்டி ஓடிவிடுமென்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! That is just not a worry for me.....!! As a whole, எதுவுமே விற்காது, எதுலுமே சுவாரஸ்யம் காட்டாது நீங்கள் இருக்கும் பட்சத்தில் - 'லபோ திபோ' என அடித்துக்கொண்டு நான் உருண்டால், அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் பிடித்தமானவற்றை ஆராதிக்கிறீர்கள், கொண்டாடித் தள்ளுகிறீர்கள் எனும்போது, பிடித்துப்போன சரக்கின் பட்டியல் மட்டுமே சன்னமாகிப் போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போல இன்றைய conundrum நமக்கு !!!.
நேரமின்றிப் போனதால் ரசனைகளில் மாற்றம் அவசியமாகிறதா?
or
காலத்தின் ஓட்டத்தோடு ரசனை மாற்றம் என்பது தவிர்க்க இயலாததொரு சமாச்சாரம் தானா?
சொல்லுங்களேன் folks.....!! Bye for now.... Have a great Sunday. கோடைமலரின் இறுதிக்கட்டப் பணிகளுக்குள் தலை நுழைக்கப் புறப்படுகிறேன். See you around all.



Muthal vanakkam
ReplyDeleteவாழ்த்துகள் சசி சகோ
Deleteநேற்றுதான் நினைத்து கொண்டிருந்தேன்
Deleteஇந்த தடவையும் மிஸ் பண்ணிடுவீங்கன்னு நினைச்சேன்
ஆனால் சர்ப்ரைஸ் 😊😊😊😁😁
😅நன்றி அக்கா 👍
DeleteBlog கிற்கு புதிதாக வந்ததில் இருந்து என்னுடைய முதல் பதிவு முதல் கமெண்ட் ஆக இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக காத்திருந்து , நிறைய பதிவுகளை தவறவிட்டு , இன்று நினைத்தது நிறைவேறியது
DeleteFirst
ReplyDeleteMe 2
ReplyDeleteமுதல் வணக்கம் 🙏
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteஅடடே வந்துட்டேன்.
ReplyDelete7th
ReplyDelete🙋🏻♂️
ReplyDelete10 kulla
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteமீண்டும் சனிக்கிழமை இரவு பதிவு. மகிழ்ச்சி
ReplyDelete🥳🥳🥳
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDelete// இந்த மாதம் நமது ஆன்லைன் ஆர்டர்களும் சரி, முகவர்களின் ஆர்டர்களும் சரி - பட்டாசாய்ப் பொரிந்து வருகின்றன! //
ReplyDeleteரொம்ப சந்தோசம் சார். 🤩🤩🤩🤩
// மனக்கண்ணில் அவற்றை ஓடவிட்டு, வெளியே தெரியாதபடிக்கு கடைவாய்க்குள் கால் படி ஜொள்ளை விழுங்கிக் கொள்வது காலம் காலமாய் அரங்கேறிடும் இன்னொரு சம்பிரதாயம் தானல்லவா? //
ReplyDeleteஅன்னபூர்ணா போனது இல்லை.ஆனால் வெளியூர் பயணம் செல்லும் போது சாப்பிடும் ஹோட்டல்களில் இந்த பழக்கம் மற்றும் அனுபவம் உள்ளது.
🙏🙏🙏
ReplyDelete// சமீப காலங்களாய் நம்ம கடையிலே இந்த இக்கட்டானது சன்னம் சன்னமாய் பெரிதாகி வருவதே இந்த வாரத்தின் எனது பஞ்சப்பாட்டு. //
ReplyDeleteசார் என்ன ஒரு உதாரணம் சார். மிகவும் சரியான உதாரணம், நகைசுவையாக சொன்னாலும் அதன் பின்னே உள்ள உங்கள் ஆதங்கம் மற்றும் வலி புரிகிறது சார். நம்ம மக்கள் கொஞ்சம் புதிய கதைகளுக்கும் ஆதரவு கொடுத்தால் மனது மகிழும்
17ஆவது
ReplyDelete18+ comment
ReplyDelete// !அப்படி இருக்கும்போது, "ரெம்ப காஸ்ட்லி" என்று ஒற்றை வரியில் எழுதப்படும் தீர்ப்புகளை //
ReplyDeleteஇது போன்ற தவறான கருத்துக்களை உண்மையான காமிக்ஸ் காதலர்கள் செய்ய மாட்டார்கள் சார். காமிக்ஸ் வட்டம் மிக குறைவாக உள்ள இந்த காலகட்டத்தில் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை நண்பர்கள் தவிர்க்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நண்பர்களுக்கு நன்றாக தெரியும் நமது காமிக்ஸ் தரம் மற்றும் விலை. எனவே இது போன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் காமிக்ஸ் நண்பர்களே 🙏🏻
Delete+1000
Delete// நமது வாசிப்புக் களங்கள் சுருங்கிக்கொண்டே செல்லும்போது, கையேந்தி பவனின் குட்டியூண்டு மெனுவைப் போல் முழுக்க முழுக்க best sellers மாத்திரமே கொண்டு ஒரு அட்டவணையை வரும் ஆண்டுகளில் உருவாக்கும் நிலை எழுந்தாலும் வியப்பதற்கில்லை என்பேன். //
ReplyDeleteமிகவும் வருத்தமாக உள்ளது சார்.
உங்கள் விருப்பம் படி எது சரியோ அதனை தயங்காமல் செய்யுங்கள் சார். என்றும் உங்களுடன் இணைந்து பயணிப்போம் சார்.
// அதே இடத்தில் கூடுதலாக இரண்டு லக்கி லூக்கை போட்டுவிட்டு, ஒன்றோ இரண்டோ ஆண்டுகளில் காலி செய்த கையோடு, கையைத் தட்டிப் புறப்படுவது சாலச் சிறந்ததாச்சே ? என்பது ஒரு பக்கம் நியாயமான வாதமாகவே தென்படுகிறது //
ReplyDeleteசெய்யுங்க சார். நமது காமிக்ஸ் தொடர்ந்து வர எது சரியோ அதனை செய்யுங்கள் சார். எங்களுக்கு காமிக்ஸ் தொடர்ந்து வர வேண்டும் சார்.
❤️❤️👍👍🙏🙏🙏...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFab 5 விலை அதிகம் என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் இதை சுலபமாக கணிக்க இயலும். பொய் தகவல்களை பரப்புபவர்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறப்போவது இல்லை
ReplyDeleteஆனால் மேகி மற்றும் தாத்தாஸ் கதைகளுக்கு விலை மிக அதிகம். இதை மறுக்கமுடியாது
மேலும் மேற்கே போ மாவீரா புத்தக சைஸை குறைத்து சித்திர தரத்தை வீணடித்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை. தரத்திற்கு பெயர் போன லயன் காமிக்ஸுக்கு இது அழகல்ல. இது வாசகர்கள் நாம் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற மனப்போக்கை காட்டுகிறது.
இதோ இந்த மாதம் வந்திருக்கிற "ஜாக்கி போட்ட ஓநாய்" டெக்ஸ் சைஸ் புத்தக அளவு என்று விளம்பரபடுத்தி விட்டு, அதில் பாதியை மட்டுமே கொடுத்து இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது
// ஆனால் மேகி மற்றும் தாத்தாஸ் கதைகளுக்கு விலை மிக அதிகம். இதை மறுக்கமுடியாது //
Deleteகுறைந்த பிரிண்ட் ரன் + லாயல்டி போன்ற பல விஷயங்கள் உண்டு.
மேற்கே போ மாவீரா சித்திரங்கள் எல்லாம் எனக்கு நன்றாகவே இருந்தது. எதனை வைத்து இதுபோன்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. விளக்கமாக சொன்னால் நன்று.
// இது வாசகர்கள் நாம் எதை செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற மனப்போக்கை காட்டுகிறது. //
தவறு. கடும் ஆட்சேபனையை தெரிவிக்கிறேன்.
கடந்த 40 வருடங்களாக நமது காமிக்ஸ் படிக்கிறேன், நீங்கள் சொல்லுவது போல ஒருபோதும் நமது காமிக்ஸில் நினைத்தது இல்லை.
எப்போதும் சரியானதை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்படும் நமது ஆசிரியர் பற்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த தளத்தில் ஆசிரியர் பலவருடங்களாக புத்தக தயாரிப்பு மற்றும் செலவினங்களை திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவைகள் எல்லாம் உங்களுக்கும் தெரியும்.
இவை அனைத்தும் தெரிந்த நீங்கள் இது போன்று சொல்வது மனதை கஷ்டபடுத்துகிறது.
அகிலத்தையே அண்டர்வேர் பாக்கெட்டுக்குள் அடக்கி வைத்திருக்கும் வழுக்குப்பாறை நண்பருக்கு 'ஜாக்கி போட்ட ஓநாய்' இதழானது அச்சிடப்பட்டது மிகச் சரியாக டெக்ஸ்- வில்லர் சைஸிலான அதே காகிதத்தில்தான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
Deleteஇந்தப் பிரத்தியேகச் சித்திர பாணிக்கு நான்கு பக்கங்களிலும் வெள்ளை இடம் இருக்கப் படைப்பாளிகள் சம்மதிக்கவில்லை என்பதோ, 'Bleed என்று அழைக்கப்படும் அந்த மார்ஜின் இம்மியும் இன்றிப் படங்கள் மாத்திரம் சித்திரிக்கப்பட வேண்டும் என்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
ஆகையால்:
டெக்ஸ்-வில்லர் சைஸில் ஆரம்பித்த காகிதமானது மேலே ஒரு இன்ச், கீழே ஒரு இன்ச், அகல வசத்திலும் ஒரு இன்ச் என்று தாட்சண்யமின்றி வெட்டிக் கடாசப்பட்டு, காம்பேக்ட்டான சைஸில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புத்தக அளவானது கிட்டத்தட்ட ஒரு சதுர சைஸ்
இந்தக் கதைத் தொடருக்கு இந்த அளவு மாத்திரமே இன்றைக்கும் என்றைக்கும் சாத்தியம்.இது தான் fact & இதழின விளம்பரப்படுத்திய தருணத்தில் நமக்கு இது பற்றித் தெரியாது!
ஆகையால் பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் ஒரு கை கூழாங்கற்களை அள்ளி வீசுவது சில நேரங்களில் சாரம் கொண்டிருக்கலாம், ஆனால் பல நேரங்களில் கூழாங்கற்களாகவே இருந்து விடுகின்றன.
ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு பிரத்யேகமான வடிவம் (Format) உண்டு. இந்தப் படைப்பாளி எதை உத்தேசித்து வரைந்தாரோ, அதைச் சிதைக்காமல் அப்படியே வழங்குவதே ஒரு பதிப்பாளரின் கடமை. அதை விடுத்து, 'பெரிய சைஸில் இருந்தால் நன்றாக இருக்குமே' என்று நாம் செயற்கையாகப் படங்களை இழுத்து பெரிதாக்கினால், அது சித்திரங்களின் தரத்தைத்தான் பாதிக்கும்.
Delete
எனவே, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு நேர்த்தியான வடிவம் தானே ஒழிய, ஏதோ காகிதத்தை மிச்சப்படுத்தச் செய்யப்பட்ட காரியம் அல்ல.
நோக்கம் சரியாகவே இருப்பினும், பின்னணி அறியாது இதுபோல் தூக்கி வீசும் குற்றச்சாட்டுகள் பல தருணங்களில் மேலோட்டமான பார்வையாளர்களின் மனதில் மெய்யானதாகவே ரிஜிஸ்டர் ஆகிடவும் வாய்ப்புண்டு என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
Deleteமுன்வைத்த கருத்தில் பிழை இருப்பின் "அடடா தப்பிதமாக நான்தான் புரிந்து கொண்டேனோ" என்று ஒரு நாளும் யாரும் அவற்றை பின்வாங்க முனையப் போவதில்லை. வைக்கப்பட்ட குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவே தொடரும்.
ஒரு விசனம் இருக்கும் பட்சத்தில் "இது ஏன் இந்த சைஸில் வந்திருக்கிறது?" என்று கேட்டுவிட்டு அதற்கு நான் ஒரு பதில் தரும் வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டால் தப்பில்லையே?
என் பார்வையில் தோன்றுவது மாத்திரமே நிதர்சனம் என்ற எண்ணம் வியாபித்து நிற்பது பல தருணங்களில் இத்தகைய சிக்கல்களுக்கு முதல் புள்ளி ஆகிவிடுகிறது.
இதே "ஜாக்கி போட்ட ஓநாய் " பிரெஞ்சில் maxi சைசில் வந்துள்ளது தான் - and அதற்கு ஏற்ப சித்திரங்களை reformat செய்திடவும் மெனக்கெட்டுள்ளனர் தான்.ஆனால் இங்கோ நமது target audience குட்டீஸ் & GEN Z தான் எனும் போது, விலைகளில் சிக்கனம் ஒரு முக்கிய factor ஆகி விடுவதை தவிர்க்க இயலவில்லை!
Deleteஜாக்கி போட்ட ஓநாய் டெக்ஸ் சைஸ் என்பதால் நானுமே ஆவலுடன் இருந்தேன், வந்ததும் சைஸ் கூட ஒப்பிட்டு பார்த்தேன்.
Deleteபடைப்பாளிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க டைம் எடுத்ததாக கூறி இருந்தீர்கள், ஞாபகம் வந்தது, அதனால் ஓகே அவர்கள் ஒப்புதல் குடுத்து இருந்தால் சரியாக இருக்கும்ஙென நினைத்தேன். ஆனாலும் லைட்டாக உறுத்தல் இருந்தது உண்மையே, சார்
ஆனால் டெக்ஸ் சைஸில் போட்டால் வெள்ளை தாளாக இருப்பின், அது இப்புத்தகத்திற்கு சரியாக இருந்திற்காது
ஜாக்கி போட்ட ஓநாய் ஈர்ப்பே அந்த முழு பக்க கலரிங் தான். அது மிக அட்டகாசமாக வந்துள்ளது
I apologize Sir
ஏன் டெக்ஸ் சைஸ் இல்லை என்ற உறுத்தல் என்னிடமும் இருந்ததுங்க
சார் கடவுள் நமக்குத் தரும் பல நல்லதை மறந்து விட்டு....தரும் சிறிய சோதனைகள் கூட நாம் மேலே நகர...மாறிப் பயணிக்க தரும் வாய்ப்பே என உணர்ந்தும் உண்ணாமலும் கதறும் மானிடர் நமக்கு புரியப் போவதில்லை...எல்லாம் நன்மைக்கே
Delete"மேற்கே போ மாவீரா" ஒரிஜினலாய் கொள்முதல் செய்யப்பட்டது டிசம்பர் 2021-ல். அன்றைய திட்டமிடலின் படி இந்த ஆல்பத்திற்கு ஜெரமையா தொடர்களுக்கு கிட்டியது போலவே பிரெஞ்சு தூதரகத்தின் மானியமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த மானியத்துடன் வெளியிடும் தருணத்தில் விலையினை ரூபாய் 250 (லக்கி லூக் சைஸ்) என்று நிர்ணயித்திருந்தோம்.
Delete
ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் அந்த ஆல்பத்திற்கு மானியம் வழங்க தூதரகம் சம்மதம் சொல்லவில்லை. And கதையின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டதால், அன்றைக்கு இதனை ஓரம் கட்டிவிட்டோம்.
நடப்பு ஆண்டில் "புதைகுழிப் பூக்கள்" டெக்ஸ் வில்லர் சைஸில் கலரில் ரூபாய் 200-ல் அட்டவணையில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையும் வந்து, பணிகளும் நிறைவுறும் தருணத்தில்தான் எனக்கு அதில் துளியும் திருப்தியின்றி போய்விட்டது. ஆகையால் like for like மாற்றமாக அதே 200 ரூபாய்க்கு "மேற்கே போ மாவீரா"வை உள்நுழைப்பது தவிர்க்க இயலா கட்டாயமாகிப் போனது.
"இல்லை இல்லை இதை லக்கி லூக் சைஸில் தான் போட்டே தீரணும்" எனும் பட்சத்தில், இன்றைய விலைகளில் இதற்கு ரூபாய் 300 என்று விலை வைத்திருந்திருக்க வேண்டும். ஆக ஒட்டுமொத்தமாய் அத்தனை சந்தாதாரர்களிடமும் இன்னொரு 100 ரூபாய் கூடுதலாய் வசூலிக்க துண்டை விரித்திருக்க வேண்டும்.
அத்தகையதொரு சூழலை தவிர்க்கும் பொருட்டே புதைகுழிப் பூக்களின் விலையோடும், அளவோடும் ஒத்துச் செல்லும் வகையில் மேற்கே போ மாவீராவை திட்டமிட்டோம்.
இங்கு இன்னொரு விஷயமுமே உள்ளது. ஒரிஜினலாய் நாம் முன்மொழிந்துள்ள விலையிலிருந்து நாமாக தன்னிச்சையாக விலைகளை அதிகம் செய்துகொள்ள நமக்கு அதிகாரமும் கிடையாது. மறுக்கா படைப்பாளிகளிடம் சென்று மறுக்கா முறைப்படி அதற்கான ஒப்புதல் பெற்று, அதன் பின்னே மட்டுமே நடைமுறைப்படுத்திட இயலும். And இந்த பிராசஸ் ஒன்றரை மாதங்கள் சுலபமாய் பிடிக்கும்.
நானோ கடைசி நான்கு நாட்களில் கதை மாற்றத்தை திட்டமிட்டுவிட்டு உருண்டு புரண்டு இதழை கரை சேர்க்க முட்டி மோதிக்கொண்டிருந்த தருணத்தில் இந்த ஒன்றரை மாத குஷனுக்கு எங்கே போவதாம்? இதுதான் எதார்த்தம் இதுதான் எனது சிக்கலும். In fact ரூ .250 விலைக்கென ராயல்டி செலுத்தியுள்ளதொரு இதழினை ரூ . 200 விலைக்கு வெளியிட்டுள்ளோம்.
தேவையின்றி உங்களுக்கு செலவுகளை கூட்டிக்கொண்டே போக வேண்டாம் என்பது மாத்திரமே நமது நோக்கமே தவிர்த்து, எதை போட்டாலும் வாங்குவாங்கள்ல என்ற மமதை என்றைக்குமே கிடையாது.
I know... I know... எனும் ரகுவரனாய் வலம் வருவது சுலபமே ; ஆனால் எதார்த்தத்தோடு மல்லுக்கட்டுவது என்பது முற்றிலும் வேறு விதமானதொரு அனுபவம்.
ஒவ்வொரு பின்னணிக்கும் நான் இப்டியே நெஞ்சைத் திறந்து காட்டிக் கொண்டே போவதாயின் - டாக்டர் செழியனுக்கு tough தரக்கூடிய open heart surgery ஸ்பெஷலிஸ்ட் ஆகிடுவேன் தான் 💪💪
Deleteசார், குற்றச்சாட்டை வைத்த நண்பர்கள் உங்களின் விரிவான பதிலுக்கு பிறகு தனது தவறை அல்லது தமது கருத்து தவறு என்று உணர்ந்து இந்த தளத்தில் மனிப்பு கேட்ட நண்பர்கள் மிகவும் குறைவே. அதே நேரம் இங்கே அதிக முறை எந்த வித ஈகோ இல்லாமல் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்ட அன்பர் நீங்கள் ஒருவர் தான் சார்.
Deleteஇவ்வளவு விளக்கம் தேவையில்லை சார்,விட்டுத் தள்ளுங்க...
Deleteசார், இந்த விளக்கங்கள் தேவையில்லை நீங்கள் பக்கம் பக்கமாக காரணத்தை சொன்னாலும் நண்பர்கள் புரிந்தாலும் புரியாது போலவே இருப்பார்கள்.
Deleteஇதுபோன்ற நண்பர்களின் பின்னூட்டத்தை கடந்து செல்வது நலம்.
மேற்கே போ மாவீரா பற்றி கதை வெளிவரும் மாதத்தில் விரிவாக எழுதி இருகிறீர்கள் சார். .
DeleteThis comment has been removed by the author.
Deleteமேற்கே போ மாவீரா - சைஸ் குறைந்து வந்ததில் எனக்குமே வருத்தம் உண்டு. ஆனாலும் இந்த சைஸில் வந்ததற்கு காரணம் ஏதாவது இருக்கும் என்று நம்பினேன். இன்று தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சியே!
DeleteHi..
ReplyDelete😘💐Me in Sir 💐😘
ReplyDelete/// நாமளோ பலத்த யோசனை பண்ணுவதானதொரு பாவ்லாவுக்குப் பின்னே, "ஒரு ஸ்பெஷல் தோசை" என்று ஆர்டர் சொல்லுவோம் ///
ReplyDeleteஉண்மையில், நான் எந்த ஊருக்கு சென்றாலும், வெளியில் டிபன் சாப்பிட நேர்ந்தால் எனது ஆர்டர் ரவா தோசை மட்டுமே.
இது கால காலமாக என்னுள் ஊறிப் போன பழக்கம்.
சென்ற வருடம் ஏப்ரலில், எனது வெளிநாட்டுப்பயணத்திலும் இதே தான் நடந்தது.
நான் என் பையனுடன் இருப்பதற்காக நெதர்லாண்ட்ஸ் சென்ற போது, அங்கே அவனது வசிப்பிடமான யுட்ரெட் எனும் ஊரில் அன்ன விலாஸ், கிருஷ்ண விலாஸ் என இரண்டு தென்னிந்திய ஓட்டல்களுக்கும் எங்களை அழைத்துப் போனான்.அந்த ஹோட்டலிலும் (நம்மூர் ஆட்கள் தான்) நான் ஆர்டர் செய்தது ஸ்பெஷல் ரவா தோசை தான்..
என் பையன், அப்பா இங்கு வந்தும் இதே தானா என்று கேட்க, நான் எதிர் டேபிளை காட்டினேன்.
அங்கே அந்த நாட்டு தம்பதியர் இருவர் அதே ரவா தோசையையும், பொங்கலையும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த ஹோட்டல்களில் நம்மாட்களை விட அவர்களே அதிகமாக சாப்பிடக் கொண்டு இருந்தனர்.
எந்த நாட்டுக்குப் போனாலும், எத்தனை காலங்கள் மாறினாலும், நம்முடைய ரசனைகள் மட்டும் மாற்றமில்லாதது.
ONCE IN A MONTH for five months THE FAB FIVE.... the flaw of prebooking is in my concern
ReplyDeleteis it will be for long for five months....many readers think it is a long processed period....
it is just my POV...
5 பாக தொடரை 5 மாதங்களுக்கு இழுத்தால் உங்கள் வாதம் holds water நண்பரே! ஐந்தும் தனித்தனி இதழ்கள் எனும் போது அதில் என்ன long processed period??
Deleteஏப்ரல் மாதங்களில் நுழைந்து விட்டோம்...நண்பர்களோடு துள்ளிக்குதிக்க...உற்சாகத்தை ஏற்ற ஊருக்கு செல்லும் ஈர்ப்பு மட்டுபட்டு விட்டது வாழ்க்கைபயணத்தில்...வீட்டிலேயே நமக்கானவர்கள் வந்து விட்டதாலோ என்னவோ அந்த தேடல்கள் பூர்த்தியாக...
ReplyDeleteகோடைமலரை தேடி நுகரும் எண்ணம் மட்டுப்படுவதே படாதோ....நமக்கானவர்களுக்கும் தேவையான மலர்கள் கூடுதல் ஏக்கத்தை கிளறி விட....அதும் நீங்க தர உள்ள தாத்தாக்கள் உம்மாவும்...ஃபேபுலசும்....இதன் விலை குறித்த கால்குலசும் நீங்க மட்டும் மாறவே மாட்டீங்க...சூப்பர் சார்...நாங்களும் மாற மாட்டோம் வெற்றி நமதே....
முதல்ல நீங்க படிக்க சொன்ன பொன் நண்டு மனதோடு அட்டகாசமாய் நகர ...ஒரு பககத்தை அனைத்து புத்தகங்களிலும் படிக்கும் என்னை வேளாளர் இழுக்க...எப்படா பொக்கிஷ அறைக்கு போவோம் என சிறுவயது முதல் ரெக்ஸ போல காத்து கிடந்த எனக்கு ...காலம் கடந்தும் அதே சுவாரஸ்யம்...லைப்ரரியில் டைரிய திறந்தாலே சேரனின் சைக்கிள் பயணம் ...படிக்கும் வேதாளரை விட நமக்கதிகமா உற்சாகத்தை தர தவறாதே...சாலமன் கோப்பையை தாண்டி ஏதுமிருக்காதெனும் போதும் அதிலிருந்த ஈர்ப்பு...சிறிய கதைன்னாலும் வேற லெவல்....மனதை கவ்விய நண்டை விலக்கி விட்டு வருகிறேன் படித்து முடித்து விட்டு....தென்மாவட்ட அரசியல் களங்களிலில் அரசியல் மாற்ற வெளிச்சக் கீற்று போல கூடும் நம்பிக்கைகள்....நமக்கும் நடந்து ஃபேபுலஸ் ஃபைவ் கொண்டாடும் நாள் தொலைவிலில்லை...பிற மாநில சமூகநீதி போல ...நம்மை நாமே ஆளும் நாள் தொலைவிலில்லை...ஒரு ஃபேபுலஸ் ஃபைவாவது தேறட்டும்...மேலும் கூட்டும் இக்கதைகள்
ஃபேபுலஸ் ஃபவுக்கும்...தாத்தாக்கும் என்னோட ஓட்டை போட்டாச்சு
Deleteஅன்னபூர்ணா பற்றி பேசி, அன்னபூர்ணா இட்லி சாம்பார், தோசையை நினைவு படுத்தி விட்டீர்கள், திடீரென அதன் சுவாசம் வந்தது மூக்கில் திளைப்பது போல் இருந்தது
ReplyDeleteவெகு நாளாயிற்று அன்னபூர்ணா பக்கம் சென்று, ஒருநாள் போக வேண்டும்
பாத்தீங்கல்லே - நீங்களும் இட்லி -சாம்பார் பார்ட்டி தான்!
Delete😅😅😅
Deleteகாமிக்ஸ் என்றதும் நம்ம சிறுவயதில் ஈர்த்த முதல் நாயகர்கள் நினைவுக்கு வருவது இயல்பே, சார்
நான் 2014 வாங்க ஆரம்பித்த போது, தோர்கலால் தான் வீழ்த்த பட்டேன், அதன் பின் என்ன என்ன புது கதைகள் கொண்டு வந்துள்ளீர்கள் என்பதை அறியவே ஆவல் எழுந்தது. புது கதைகள் பார்த்ததில் குஷியோ குஷி.
ReplyDeleteசோடா, மேக் & ஜாக், ஜில் ஜோர்டன், ஆல்பா, சிஸ்கோ, நெவாடா வராமல் இருப்பது ரொம்ப வருத்தமே.
வருத்தத்தை மறக்க ஒரு கப் சாம்பார் எக்ஸ்ட்ரா 👍
Deleteகூட ஒரு குலோப் ஜாமுன் கிடைத்தால் நன்றாக இருக்குங்க, சார்
Delete// வருத்தத்தை மறக்க ஒரு கப் சாம்பார் எக்ஸ்ட்ரா //
Deleteஅது எல்லாம் தேவை இல்லை சார், ஒரு பாக்கெட் சீஸ் பாப்கார்ன் கொடுங்க சார் ரம்யாவுக்கு 😃
எங்கம்மா எப்போது இட்லி மட்டும் ஆர்டர் செய்வார், எனக்கோ வேறு என்ன இருக்கிறது என்றறிய ஆவல் இருக்கும், பணக்கட்டுபாடு என்பதை விட, இட்லி, தோசை தவிர்த்து மற்றவகளை நல்லா இல்லை என்றால் சாப்பிட முடியாது என்பதாக இருக்கும், அதனால் பணம் வேஸ்ட் ஆகும் என்பார்
ReplyDeleteமுயற்சித்து பார்த்தால் தானே தெரியும் என்பேன், நம்ம பேச்சு அப்போது டுபடாது
நான் பெரிதானதும், மற்றவைகளை முயற்சித்து பார்த்தேன், அவர்கள் ஸ்டைலில் நன்றாகவே இருந்தது
😊😊😊😊 அடுத்தமுறை கோவை செல்லும்போது அன்னபூர்ணா பக்கம் போய் பார்த்து விடலாம் என்று இருகிறேன்.
Deleteநம்ப ஆசிரியர் அன்னபூர்ணா பற்றி அடிக்கடி எழுதுவதை பார்த்தால் அந்த ஹோட்டலின் பிராண்ட் அம்பாசிடர் போல தெரிகிறது.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஎனக்கும் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் தோசையும் சாம்பாரும் favourite!
ReplyDeleteஎப்போ கோவை போனாலும் அன்னபூர்ணாவில் மேற்படி சமாச்சாரத்தை ஒரு பிடி பிடிக்காமல் வருவதில்லை. சமீபத்தில் ஒரு பகல் பொழுதில் சென்றிருந்தேன். வழக்கமாக பகல் நேரங்களிலும் கூட தாரளமாகக் கிடைக்கும் தோசை, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இப்போது மாலை 6 மணிக்கு மேல்தான் என்று சொன்னார்கள்.
லாரி டயரில் சிக்கிய சம்சா போல நொறுங்கிய மனதுடன் வீடு திரும்பினேன்!😢
// லாரி டயரில் சிக்கிய சம்சா போல //
Delete🤩🤩🤩🤩
இளவரசரே 😂😂😂
Deleteஇளவரசர் தொப்பையில் சிக்கிய இழந்த பழம் போல 😊
Delete///இளவரசர் தொப்பையில் சிக்கிய இழந்த பழம் போல///
Delete🤔
கிர்ர்ர்..😬😬😬
சரி இளவரசே முட்டை போண்டா என்று வைத்து கொள்ளலாம்.
Deleteஎல்லோரும் தோசை ரசிகர் என்றால் நான் சப்பாத்தி ரசிகர் (அதாவது கொஞ்சம் ரசனை கூடியர் மாதிரி காட்டிக்குவேன்)
ReplyDeleteஅதன் படி தான் போன பதிவில்
பின்னூட்டமிட்டேன்..
விலையும் 450 ரூயை தாண்டி விடக் கூடாது.. ஆனால் கலரில் வேணும்
(ஆர்ட் பேப்பரும் வேண்டாம் ..
முழுவண்ணமும் வேண்டாம்...
ஹார்டு பவுண்டும் வேண்டாம், ..) என்று
மொத்தத்தில் அந்த க்ளாசிக் நாயகர்கள் வட்டத்தை விட்டு வெளிவருவதாய் இல்லை.
மற்றபடி "மேற்கே போ மாவீரா "
விலையைக் கட்டுக்குள் வைக்க
சைஸை குறைத்து விட்டார் என்று புரிந்தது ...
என்னாலும் அதை ஒரு கதைப் புத்தகமாகத்தான் படிக்க முடிந்தது ...
என் ரசனை தான் அங்கு இல்லையே...
எல்லோரும் கொண்டாடிய "பயணம்" - நான் வாங்கவில்லை
படிச்சுட்டு தாங்கன்னு குடுத்தாலும் நான் படிக்க மாட்டேன்..
அற்புதமான ஓவியங்கள்..
அதற்கேற்ப அட்டகாசமான இதழ் சைஸ் என்று எனக்குத் தெரியும் தான்..
ஆனால் இந்தக் க்ளாஸிக் நாயகர்களைப் படிக்கும் போது வரும் குதூக்கலத்தையும், புன்முறுவலையும் தொலைத்து விடுவேனோ என்ற பயம்தான் ..
எனவே நீங்கள் க்ளாஸிக் நாயகர்களை தந்து கொண்டிருந்தால் என் மனம் அதில்தான் லயிக்கும்..
தாத்தாக்களையோ மேகியையோ
சந்தாவிற்குள் தந்தால் வாங்கிப் படிப்பேன்..
(பிள்ளைகளுடன் ஹோட்டலில் சாப்பிடும்போது கொஞ்சம் ப்ரைடு ரைஸ் டேஸ்ட் பார்பது போல்)
தனியாக ஹோட்டல் போனால்
சப்பாத்தி தான் எனது பிடித்தம் சார்...
சின்ன வயசில் நமக்கு பூரி சார் - இட்லியை கண்டாலே காண்டாகும் 🤕....
DeleteMakesh :
ReplyDeleteசார் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும். நானும் வாங்கிய நிறைய புத்தகங்கள் இன்னும் படிக்காமல் நூலகத்தில் அடுக்கி வைத்திருக்கிறேன். அதனால் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே வாங்குகிறேன் . ஆனால் ஒரு போதும் தங்களையோ அல்லது விலையையோ தவறாக நினைத்ததில்லை , நினைக்கவும் மாட்டோம் . ஏனென்றால் இது பெரிய வருமானம் தரக்கூடிய தொழில் அல்ல . இருந்திருந்தால் நிறைய தொழிலதிபர்கள் இந்த துறையில் குதித்திருப்பார்கள். இந்த காமிக்ஸ் உலகமானது சிறு வயது முதல் கொண்ட காதல் மற்றும் அர்ப்பணிப்பினால் இயங்குகிறது . எனவே சில விமர்சகர்கள் பற்றி கவலைப்படாமல் உங்கள் கைகளைப் பற்றி வரும் எங்களுக்காக தைரியமாக புதிய சிந்தனையில் வீறு நடை போடுங்கள். என்றும் துணையுடன் இருப்போம். தங்களின் உழைப்பிற்கு கோடி நன்றிகள்.//
எடிட்டர் என்ற உரிமையில் உங்களது பின்னூட்டத்தை சற்றே எடிட் செய்திடும் உரிமையினை கையில் எடுத்துக்க அனுமதியுங்களேன் ப்ளீஸ் 👍
உண்மை மகேஷ் சார்.
Deleteஏனுங்.... இட்லி.. சப்பாத்தின்னு track மாறிப்போச்சு! மேலே பதிவிலே நான் தெரிவித்துள்ள சமாச்சாரம் பக்கமாய் கருத்துக்கள் ப்ளீஸ்?
ReplyDeleteதற்போதைய சூழலில் புத்தகம் படிப்பதில், நண்பர்களிடம் பேச, குடும்பத்துடன் நேரத்தை செலவிட, ரத்த சொந்தங்களிடம் பேச என்பதுக்கு எல்லாம் நேரம் என்பது இல்லாமல் போகிறது சார்; செய்யும் வேலைக்கு என்று ஆபத்து வருமோ என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்; வேலைக்கு அதிக முக்கியத்துவம் தேவை தான் ஆனால் இப்போது ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தாலும் ஒரே கத்தி எல்லோர் தலைக்கு மேலேயும் சுத்திகொண்டே இருக்கிறது சார்.
Deleteசூப்பரா சொன்னீங்க PfB! நாளுக்கு நாள் பணிச்சூழல் கடுமையாகிட்டே போகுது. ஆனால், இளைப்பாறும் நிழலாய் எப்போதும்/அவ்வப்போது நமது காமிக்ஸ்!!
Deleteசார் ...ரசனை என்பது __படிப்பது என்பது__ குடும்பத்தில் என் ஒருவன் சார்ந்ததாக இருப்பது தான் பிரச்சனை...
ReplyDeleteகுடும்பத்தில் இன்னும் இரண்டு பேராவது காமிக்ஸ் படித்தால் என் ரசனையும் - அவர்கள் ரசனையும் வேறுபடலாம்.
அப்ப அனைத்து விதமான இதழ்களையும் வாங்கி சேர்க்கலாம் ...
என் ஒருவன் ரசனைக்கு மட்டுமே எனும் போது குறிப்பிட்ட இதழ்கள் மட்டும் சேர்த்து வைத்தால் போதுமே என்று தோன்றுகிறது...
இன்னும் ஒரு வருடத்தில் -பணி ஓய்வு - வீடு இடம் பெயற வேண்டும்.
எனவே குறிப்பிட்ட இதழ்கள் மட்டுமே என்னுடனேயே பயணிக்கும்..
எனவே என் ரசனை தாண்டி அனைத்து இதழ்களையும் வாங்குவேன் என்று வாக்குறுதி குடுக்க இயலாத நிலை என்பதும் ஒரு காரணமாக அமைகிறது சார்...
அதில் தப்பில்லை சார் - யதார்த்தம் always முன்னுரிமை பெற்றிட வேணும் சார்! And க்ளாசிக்ஸ் தொடர yet another reason என்று எடுத்துக் கொண்டால் போச்சு!
DeleteThe Feb Five-க்கு பணம் அனுப்ப வேண்டும் சார்..
Deleteசந்தாவில் உள்ளோர்
ரூ 600 - புத்தக் கூப்பனை உபயோகப்படுத்தவில்லை எனில் ரூ 200 கழித்து அனுப்பலாம் என்று படித்த ஞாபகம்
அது எவ்விதம் குறிப்பிடுவது என்ற சந்தேகம்..
(பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்து அந்த வேலையில் கொஞ்சம் பிஸி...)
ஏப் 23 யில் சிவகாசியில் ஒரு மேரேஜ் - ஆவலோடு காத்திருக்கையில்
அன்றே தேர்தல் தினம் என்பதால் கல்யாணம் முடிந்து ஓட்டுப் போட ஓடிவர வேண்டும் என்றநிலை ...
// பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்து அந்த வேலையில் கொஞ்சம் பிஸி //
Deleteவாழ்த்துகள் சார்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நண்பரே🌾🌾🌾🌾🌾🌾
Deleteநன்றிகள்
Deleteபரணி சார்
பொன்ராஜ் சார்...
🙂
Deleteதங்கள் மகளுக்கு வாழ்த்துகள் இளங்கோ சகோ
Deleteமறுவாசிப்பு: நேற்று - பரகுட இன்று - பிஸ்டலின் பிரியாவிடை
ReplyDeleteஇரண்டிலுமே கதையே ஹீரோ என்பதால் எனக்கும் செம favorites சார் 👍
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு படைப்பு சந்தைக்கு வருகிறது என்றால் அதன் நிறை, குறைகளை அலசத்தான் செய்வார்கள். அதுவும் ஒருவர் அதை பணம் கொடுத்து வாங்கும் போது அந்த பொருளுக்கான விமர்சனத்தை வைக்க தார்மீக உரிமை உண்டு
ReplyDeleteஜாக்கி போட்ட ஓநாய் இந்த சைசில் வந்ததற்கான காரணத்தை நீங்கள் முதலிலேயே சொல்லி இருந்தால் நான் ஏன் கேட்கப்போகிறேன்.
அறிவித்த சைஸை நீங்கள் தான் மாற்றியது எனும் போது அது குறித்து ஒரு update கொடுத்து விட்டால் பிரச்சனை அங்கேயே முடிந்து விடும். வாசகர்கள் அதை கண்டு பிடித்து கேட்கும் வரை காத்திருப்பது ஏன்.
ஜாக்கி போட்ட ஓநாய் சைஸ் மாற்ற விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. நிறைவுடன் கடந்து போகிறேன்
ஆனால் மேற்கே போ மாவீரா குறித்த தங்களது விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
புதை குழி பூக்கள் output சரியாக வரவில்லை, தரமற்ற பொருளை சந்தை படுத்த விருப்பம் இல்லை என்று கூறி ஒரு சித்திர புதையலை (மேற்கே போ மாவீரா) இப்படி கொத்து புரோட்டா ஆக்கி கொடுத்து இருப்பது எவ்வகையில் நியாயம்
உங்கள் அவசரத்திற்கு ஒரு படைப்பை இப்படி சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்
நமது தரம் இப்போது எங்கே போயிற்று.
கதை மாற்றம் காணும் போதே சைஸ் மாற்றத்தை பற்றி சொல்லி இருந்தால், அப்போதே என் எதிர்ப்பை பதிவு செய்து இருப்பேன். அதை விடுத்து வாசகர் ஒருவர் சுட்டி காட்டும் வரை அது குறித்து மௌனம் கொண்டிருப்பது ஏன்
இதை மெதுவாக பின் ஒரு நாளில் நீங்கள் குறிப்பிட்ட 300 விலையில் வெளியிட்டு இருக்கலாமே. இப்படி அரை குறையாக ஒரு புத்தகத்தை கொடுப்பதற்கு பதில் அந்த மாதம் ஒரு புத்தகம் வராமல் இருப்பதால் என்ன ஆகி விட போகிறது
மேலும் இங்கே பல புதிய/பழைய வாசகர்கள் மௌன பார்வையாளர்களாக இருப்பதற்கு காரணம், இங்கு இருக்கும் சில நாட்டாமைகளே ஆகும், இவர்கள் எப்படி என்றால்
ஆசிரியர் முயலுக்கு மூன்று கால் என்றால் அதற்கு இவர்கள் ஆமாங்க சார் அந்த மூணாவது கால் எவ்வளவு அழகு தெரியுமா, சூப்பர் சார் என்பார்கள், அதை தாண்டி அது அப்படி இல்லை என்று யாராவது சொல்லி கொண்டு வந்தால் அவர்களை எப்படி மட்டம் தட்ட முடியுமோ அப்படி தட்டி அவர்கள் மேலும் கேட்க முடியாதபடி செய்து விடுவார்கள்
துதிபாட மட்டுமே வர வேண்டும் என்றால் இன்னும் மௌன வாசகர்களின் எண்ணிக்கை கூடும்.
நான் சந்தா தொகையை முன் கூட்டியே கட்டியவன், அதில் அறிவித்த கதை மாற்றம் கண்டது OK. ஆனால் சைஸ் மாற்றம் குறித்து தெரிவிக்காதது ஏன். புத்தகத்தை பார்த்த பின்பு தான் நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இது சந்தாவில் இல்லாமல் தனியாக வந்திருந்தால் நான் வாங்கி இருக்கவே மாட்டேன்.
ஆமாங்க. நானும் நமது மறுவருகைக்கு பிறகு சந்தாவில் இருகிறேன். ஆனால் பாருங்க எனது பக்கத்து கருத்தை சொன்னால் நாட்டமை என்று சொல்வார்கள். ஆசிரியர்க்கு கொடி பிடிக்கிறேன் என்பார்கள். இதனாலேயே பலர் தங்களையும் இது போன்று சகவாசகர்கள் சொல்லி விடுவார்கள் என்று நினைத்து பலர் தங்கள் எண்ணங்களை பதிவிடாமல் மௌன வாசகர்களாக இருகிறார்கள் 😉
Deleteதாராளமாய் விமர்சியுங்கள் சாரே - நான் பார்க்கப் போகும் முதலோ, கடைசியோ இதுவல்ல எனும் போது doesn't make much of a difference. அப்புறம் 'மாற்றுக் கருத்தை முன்வைப்போரே நெச ஆர்வலர்கள் ; பாக்கிப் பேரெல்லாம் ஜால்ராக்கள்' என்பதெல்லாம் வசந்த மாளிகை காலத்துக் குற்றச்சாட்டு - so அதற்கொரு தபா தொண்டை தண்ணியை யாரும் வற்றடிப்பார்கள் என்று தோன்றவில்லை!
Deleteஉங்களது பாணியை தொடருங்கள் சாரே ; எனது பணியை நான் தொடர்கிறேன்! எவ்விதம் விமர்சிக்க வேண்டுமென்பதை நான் பாடம் நடத்த முனைந்திடப் போவதுமில்லை ; எனது பணியினை எவ்விதம் செய்வதென்பது குறித்த பாடங்களுக்குக் காது கொடுப்பதாகவும் இல்லை! Simple as that!
எல தம்பி நீ இளையராஜா ன்னு நெனச்சேன் பக்க வாத்தியம் தானா....பக்கா வாத்தியம் பின்றியலே மக்கா
Deleteதோட்டாக்களுக்கு காந்தியென்ன....ராஜபக்சேயேன்ன.....கல்யாண வீட்ல அறு சுவை விருந்தை மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு ஒரு சின்ன கல் பல்லிடையே சிக்கும் போது அதை செங்கலா நினைச்சு மத்தவங்க கிட்ட தூக்கிக் காட்டும் போது ...அருவருக்கத்தக்க செய்வது அந்த உணவு தந்தவரையா அல்லது கல்லை காட்டியவரையா....
ReplyDeleteஇங்க பார் வெற்றிகண்ட திறப்பினும் குற்றம் குற்றமே நா யாரு தெரியுமா அரிச்சந்திரன் பேரன்....
நேற்று படித்த ஒரு கதை சார்....இது போல் கிநாக்கள விடலாமே
ஐ... இந்த கி. நா. சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே கவிஞரே?!
Delete😂😂😂😂
Deleteசார் ஒரு ஸ்டாம்ப் கிடைக்குமா....அளந்து விட ஆசை.....தவறை சுட்டி காட்டுவது ஒரு கலை....நக்கலடிக்காம...நையாண்டி பண்ணாமன்னு வள்ளுவர் அழகா சொல்லித் வந்திருந்தாலும்...ஏனோ கனியிருக்க வேப்பங்காய் தந்தான் தேடுது மனது....
Deleteசார் இன்னும் நிறைய கிநா படிக்கனும் போலிருக்கு
எனக்கும் பக்கட் சைத்தான் வேணும்...உங்களுக்கு மாலைதான்...ஆனா 75 பேருக்கு டெக்ஸ் சைசுதான் வேனும்....என்னதான் பன்னுவியலோ....இங்கேயே இந்த போடு போட்டா....ஆஃபிசுல....
Deleteநான்யெல்லாம் காமிக்ஸ்னு
ReplyDeleteஒன்னு வந்தாலே போதும்னு வாழ்ந்துட்டு இருக்கேன். இதுல அது சரியில்லை,இது சரியில்லைன்னு ஒண்ணுமில்லத விஷயத்தை பெரிசா ஆக்காதிங்க.இதுக்கு மேல ஆசிரியர் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?
பிரீயா விடுங்க நண்பரே... இதெல்லாம் லோடு லோடாய் பார்த்துப் பழகிப் போய்விட்ட தியாகராஜ பாகவதர் காலத்து ஐட்டங்கள்! பொதுவெளிக் கம்பு சுற்றல்களுக்கு ஒரு sound effect-ம் இருக்கணுமில்லியா?
Deleteஆசிரியர் பாவம்தான்..
ReplyDelete" பயணம் "-- அவ்வளவு சிறப்பாக வெளியிட்டிருந்தும் நான் வாங்கவில்லை சார் ... என்று சில காரணங்களை குறிப்பிட்டு
பிண்ணுட்டமிட்டிருந்தேன் ...
இரு வேறு துருவங்கள் ....
சார் - இன்றும் "FAB FIVE வாணாம்" என ஒதுங்கி இருப்போர் மீது எனக்குத் துளியும் விசனங்கள் நஹி! கால ஓட்டம் விரட்டிப் பிடித்து ரசனைகளின் ஒரு பரிமாணத்தை, ஒரு பெரும்பான்மையிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டதே என்ற ஆதங்கம் தான்!
DeleteFAB FIVE - அநேகமாக வழக்கம் போல கடைசி சில நாட்களில் புக்கிங் சூடு பிடிக்கும் என்று நம்புகிறேன் சார்.
ReplyDeleteஆசிரியர் ஒரு தவறு செய்கிறார், அது அவருக்கு தெரிகிறது, ஆனால் அது குறித்து தாமாக முன் வந்து எதுவும் சொல்லவில்லை. வாசகருக்கு அது குறித்து வருத்தம் இருந்தாலும், அதை நாசூக்காக Office நம்பருக்கு அனுப்பி கேட்கிறார், அங்கும் நக்கலாக ஒரு பதில் வருகிறது.
ReplyDeleteஇங்கு கேட்டாலும் அதுவே தொடர்கிறது, கூடவே சில பக்க வாத்தியங்களுடன்.
ஒரு தவறை சுட்டி காட்டுவதே குற்றம் ஆக கருதப்படுகிறது இங்கே. ஆனால் தான் செய்த தவறை இதுவரை ஓத்து கொள்ள மனம் வரவில்லை.
இங்கே ஒரு படைப்பு சிதைக்க பட்டிருக்கிறது. தன் அவசரத்துக்காக கொத்து கறி ஆக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி கடந்து போக முடியும்
இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் முற்றிலும் களைய பட வேண்டும். அது சார்ந்து இங்கே எந்த விவாதமும் இல்லை.
ஆனால் என்னை எப்படி குற்றம் சொல்லலாம் என்று ஆசிரியரும், அவரை எப்படி குற்றம் சொல்லலாம் என்று சிலரும் கிண்டலடித்தால், தவறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்
இதோ இந்த மாதம் வெளி வந்திருக்கும் வேதாளர் கதையில் (King special 3) சித்திரங்கள் ஸ்டாம்ப் சைசில் இருப்பதை எப்படி சிலாகித்து எழுதுவது எழுதுவது என்று தெரியவில்லை
இதை குறையாக கூற இங்கு மறைமுக தடை இருப்பதால், வேறு வழியை கையாள வேண்டும். இங்கே நிறைகளை மட்டுமே பேச பலர் இருக்கையில், குறையை சுட்டி காட்ட ஒரு சிலராவது வேண்டாமா
அது இங்கே பல வசவுகளுக்கு மத்தியில் நானாக இருந்து விட்டு போகிறேன்.
தொடரும்
// இந்த மாதம் வெளி வந்திருக்கும் வேதாளர் கதையில் (King special 3) சித்திரங்கள் ஸ்டாம்ப் சைசில் இருப்பதை எப்படி சிலாகித்து எழுதுவது //
Deleteஎடிட்டர் அவர்களின் பதில்.
http://lion-muthucomics.blogspot.com/2026/04/blog-post.html?m=1
// அளவு மாற்றம் செய்திடும் போது பணிகள் ஏகமாய் பெண்டைக் கழற்றுகின்றன. ஒரிஜினல் சித்திர அமைப்பிற்கு ஏற்ப மெகா சைஸில் போடுவதாயின் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். What say all? //
// ஒரிஜினல் பேனல்களை இந்த சின்ன சைசுக்கு மாற்றியமைக்க நிரம்பவே நாக்குத் தள்ளுகிறது - குறிப்பாக வேதாளர் கதைகளில்!!
பேனல் அளவுகள் ஒரே சீராய் இருப்பதில்லை என்பது தான் கஷ்டமே! //
பேஷாய் நீங்களாவே இருந்து விட்டுப் போங்க சாரே - அப்டியே ஒரு சின்ன வேலையும் பண்ணிடுங்க!
Deleteவேதாளர் SUNDAY Strips ன்ணு நெட்டிலே அடிச்சு பாத்து, கையிலே ஒரு ஸ்கேல் சகிதம் ஒவ்வொரு பேனலயும் அளந்துக்கோங்க! பின்னே நம்ம புக் சைசையும் ஒருவாட்டி அளந்துக்கோங்க..... அதை, இதா மாத்துறப்போ என்ன இடர்கள் தலைதூக்குகின்றன என்பதையும் கவனியுங்க. அப்புறமா அவற்றை நீக்க என்ன பண்ணலாம்னு உங்களது ஞானத்தினை பயன்படுத்தி மார்க்கம் ஒன்றைக் கண்டுபுடியுங்க - உங்களுக்கு புண்ணியமாய் போகும்!
வடை மெய்யாலுமே சுட நிறைய வஸ்துக்கள் அவசியம் என்பது புரியு)லாம் ! வாயால் சுடுபவை பசியாற்ற உதவாது!
இந்தச் சிக்கலை தவிர்க்க Maxi சைசில் இவற்றை வெளியீடுவோமே என தொண்டை கிழிய கோரிக்கை வைக்கும் போது நீங்கள் இரான் யுத்தம் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பிசி என்பது தெரியாமல் போச்சு தான் சார்!
DeleteAnd தனிப்பட்ட உரையாடலை பொதுவெளிக்கு கொணருவதில் எனக்கு ஆர்வங்கள் கிடையாது ; ஆனால் அதை நீங்கள் செய்தான பின்னே நான் மௌனத்தைத் தொடர்வதில் அர்த்தம் இருக்கப் போவதில்லை!
Deleteசமாச்சாரம் இதுவே :
"மேற்கே போ மாவீரா " டெக்ஸ் சைசில் வந்ததை ஏற்க முடியாது. அதற்கான பிராயச்சிதம் - அதனையே பெரிய சைசில் மறுபதிப்பு போடுவது தான்!" என்று ஒரு வாட்சப் சேதி நமது கம்யூனிட்டி நம்பருக்கு வந்திருந்தது - நமது வழுக்குப்பாறை நண்பரிடமிருந்து. "ஆகட்டும் சார் - இப்போ போட்டதில் மிச்சம் இருக்கிற நானூற்று சொச்சம் பொஸ்தவங்கள் காலியாக குறைஞ்சது ஒரு 10 வருஷமாகும். அது காலியான பிற்பாடு போட்ருவோம் " என்று பதில் அனுப்பியிருந்தேன். எனது யோசனைக்கு இம்புட்டு தான் மருவாதியா? என்ற விசனம் பொங்கிடுவதில் என்னளவிற்காவது வியப்பில்லை!
😒😒😒😒😒
Delete"சைஸ் சிறிதாக்கி போட்டு சிதைச்சுபுட்ட" என்று பொங்கிடும் நண்பரின் பொறுமையான கவனத்துக்கு ஒரு சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விழைகிறேன் :
Deleteகாமிக்ஸ் உலகின் ஆகப் பெரிய உச்சங்களில் ஒருவரான டின்டின் எனது விளக்கத்துக்கு உதவட்டுமே !! ஒரே ஒருவாட்டி கோவையிலுள்ள ஏதேனும் ஒரு பெரிய புத்தகக்கடைக்குச் சென்று பார்த்தால், அதன் ஆங்கிலப் பதிப்புகள் எத்தனை எத்தனை சைஸ்களில் விற்பனைக்கு உள்ளன என்பது புரியவரும்.
மெகா மேக்ஸி சைஸில் வெளியான அதே ஆல்பம், நமது டெக்ஸ் சைஸிலும் அப்படியே சித்திரங்கள் சுருக்கப்பட்டு, எழுத்துருக்களும் சிறிதான நிலையில் வெளியிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். அந்த சின்ன சைசிலான இதழ்கள் ஒரு வண்டி இருப்பதை காணலாம்.
சொல்லப்போனால், ஆங்கிலப் பதிப்புகளில் அவையே best sellers கூட.
130 மொழிகளில் வெளியாகும் ஒரு 96 ஆண்டுகாலப் படைப்பினையே அதன் படைப்பாளிகள் சிறிதாக்கத் துளியும் தயங்காத போது, அத்தனை பெரிய பின்னணியெல்லாம் இல்லாததொரு சராசரிப் படைப்பினை, அவசியத்திற்கும், அவசரத்துக்கும் ஏற்ப அளவு மாற்றிடுவதில் நான் ஏன் தலையைப் பிச்சிக்கொள்ள போகிறேனாம்?
சரி, அதையுமே விட்டுவிடலாம். நடப்பாண்டின் அட்டவணையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த 'புதைகுழிப் பூக்கள்' ஒரிஜினலாக பிரெஞ்சில் வந்தது மேக்ஸி சைஸ்தான். ஆனால், துவக்கத்திலிருந்தே நாம் அதைத் திட்டமிட்டிருந்ததும், விளம்பரப்படுத்தியிருந்ததும் டெக்ஸ் சைஸில்தான். அன்றைக்கே "அநியாயம்" என்று நண்பருக்குப் பொங்கத் தோன்றாமல் போனது ஏனோ?
சரி, அதையுமே விட்டுவிடுவோமே. இம்மாதத்து 'ஜாக்கி போட்ட ஓநாய்' கூட ஒரிஜினலாக மேக்ஸி சைஸ்தான். நம்ம மத்தியிலோ காம்பேக்ட் சைஸில் வலம் வருகிறது. இதையும் குரல் கொடுக்க வேண்டிய பட்டியலுக்குள் நுழைத்தால் என்ன?
"தரத்தில் சமரசம் செய்யக்கூடாது" என்ற நண்பரின் சித்தாந்தம் புரியாமலில்லை. ஆனால், அதன் பின்னணி பற்றி விளக்கமாய் சொன்ன பிற்பாடும் சிவந்த கண்கள் நிறம் மாறிடாது என்பதில் அவர் பிடிவாதமாய் இருக்கும் பட்சத்தில் அது அவரது தீர்மானமாகவே இருந்துவிட்டு போகட்டுமே.
Deleteஎன்னமோ தினப்படி படைப்புகளை சிதைப்பதையே நாம் பணியாகக் கொண்டிருப்பது போலவும், நண்பர் டியூஷன் நடத்தத் தவறினால், ஓரத்தில கஞ்சா பொட்டலத்தை விற்கக்கூட நான் தயங்க மாட்டேன் என்பது போலவும் தரும் பில்டப்கள், அவரது அபிப்பிராயமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே.
நிலவரத்தை வெளிப்படையாய் ஒப்பித்துவிட்டேன். இதை முன்கூட்டியே போர்டில் எழுதி ஏன் தொங்கவிடவில்லை?என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க நிதானிக்கவும் போவதில்லை. இதனை கொழுப்பின் வெளிப்பாடு என்று பார்த்தாலும் சரி, 'திமிர் பிடித்த பயபுள்ள' என்ற ஏச்சைப் பெற்றுத் தந்தாலும் சரி - won't really matter! Period.
இன்னிக்கி குரூப்களில் குமுறிட செம content ரெடி 😎😎
Delete// மெகா மேக்ஸி சைஸில் வெளியான அதே ஆல்பம், நமது டெக்ஸ் சைஸிலும் அப்படியே சித்திரங்கள் சுருக்கப்பட்டு, எழுத்துருக்களும் சிறிதான நிலையில் வெளியிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். அந்த சின்ன சைசிலான இதழ்கள் ஒரு வண்டி இருப்பதை காணலாம்.
Deleteசொல்லப்போனால், ஆங்கிலப் பதிப்புகளில் அவையே best sellers கூட. //
என்னிடம் 2 புத்தகங்கள் உள்ளன சார், 20 வருடங்களுக்கு முன்னால் வாங்கியது. அன்றைக்கு அந்த பொடி எழுத்துக்கள் படிக்க முடிந்தது. இன்று டின் டின்இக்கு நமது தற்போதைய மேக்ஸி சைஸ் வாசிக்க ரசிக்க நன்றாக உள்ளது சார்.
ஃபிரஞ்சில் முதல் பதிப்பினில் மட்டுமே 45 லட்சம் பிரதிகள் விற்பனை காணும் ஆஸ்டெரிக்ஸ் & ஓபலிக்ஸ் தொடரில் கூட இந்த எகானமி சைஸ் உண்டு தான் சார். சொல்லப் போனால் ஆஸ்டெரிக்ஸில் நான் படித்த முதல் ஆல்பமே அந்த சின்ன சைஸ் புக் தான்.
Deleteலக்கி லூக்கிலும் இந்த சைஸ் இன்று வரை புழக்கத்தில் உண்டு தான்.
// லக்கி லூக்கிலும் இந்த சைஸ் இன்று வரை புழக்கத்தில் உண்டு தான். //
Deleteஎன்கிட்ட இதுவும் ரெண்டு புத்தகம் உள்ளது, Euro Books சார்.
Euro Books உள்ளூர் தயாரிப்பு சார் - ரொம்பவே சுமார். நான் குறிப்பிடுபவை Knight Books-ன் சர்வதேசப் பதிப்புகள்!
Deleteஓகே. நன்றி சார்.
DeleteHope Maxi Size will find a solution sir.
ReplyDeleteAnd it is our own comics which gave us bigger & clearer pictures making us expect the same in reprints.
E.g.
Compare the same picture
in
Madaalaya Marmam (Agent X 9 )
1st Print page 25 top
and in Corrigan Spl #2 page 178 top left.
Ofcourse we understand the practical difficulty in printing sir.
நண்பரே, ஆர்ட்டிஸ்ட்கள் வெட்டி ஒட்டி, ஓரங்களில் சித்திரங்களை நீட்டி வரைந்த நாட்களில் எல்லாமே சாத்தியப்பட்டது . பிராங்கோ - பெல்ஜியக் கதைகளையே நீள வாக்கிலான பாக்கெட் சைசுக்கெல்லாம் மாற்றியுள்ளோம் - கேப்டன் பிரின்ஸ் புக்ஸ் பாருங்களேன்!
Deleteஇன்று அது முடிந்து போனதொரு யுகம்!
நரகத்தின் எல்லையில் (திகில் ) புக்கை ஒருவாட்டி புரட்டுங்களேன்!
Deleteஇந்த இக்கட்டை தவிர்க்கத் தான் MAXI சைசுக்குப் போயிடுவோமே? என்று குரல் கொடுத்துப் பார்த்து வருகிறேன்...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//சரி, அதையுமே விட்டுவிடலாம். நடப்பாண்டின் அட்டவணையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த 'புதைகுழிப் பூக்கள்' ஒரிஜினலாக பிரெஞ்சில் வந்தது மேக்ஸி சைஸ்தான். ஆனால், துவக்கத்திலிருந்தே நாம் அதைத் திட்டமிட்டிருந்ததும், விளம்பரப்படுத்தியிருந்ததும் டெக்ஸ் சைஸில்தான். அன்றைக்கே "அநியாயம்" என்று நண்பருக்குப் பொங்கத் தோன்றாமல் போனது ஏனோ?
ReplyDeleteசரி, அதையுமே விட்டுவிடுவோமே. இம்மாதத்து 'ஜாக்கி போட்ட ஓநாய்' கூட ஒரிஜினலாக மேக்ஸி சைஸ்தான். நம்ம மத்தியிலோ காம்பேக்ட் சைஸில் வலம் வருகிறது. இதையும் குரல் கொடுக்க வேண்டிய பட்டியலுக்குள் நுழைத்தால் என்ன?//
இவை எல்லாம் எந்த சைசில் வெளி வந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சித்திரத்தை சுருக்கினால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்
தொடர்ந்து இரண்டாவது மாதமாக இப்படி size மாற்றம் ஏற்படுவது, அதுவும் எந்த அறிவிப்பும் இல்லாமல் என்பதால் தான் மீண்டும் இங்கே பதிவிட அவசியமானது
என் கோரிக்கை இது தான்,
விலை குறைப்பு என்று கூறி
எக்காரணத்தை கொண்டும் கீழ்கண்ட விசயங்களை செய்திட வேண்டாம்
Maxi அல்லது லக்கி லூக் size புத்தகத்தை டெக்ஸ் size அல்லது அதற்கும் சிறிய சைசில் வெளியிட வேண்டாம்
வண்ணப்புத்தகங்களை கறுப்பு வெள்ளையில் வெளியிட வேண்டாம்
வண்ணபுத்தகங்களை ஆர்ட் ஆர்ட் பேப்பரில் இருந்து மற்ற சாதாரண பேப்பருக்கு மாற்றிட வேண்டாம்
மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். ஆகையால் தரத்தில் சமரசம் செய்யும் எந்த முயற்சியும் இனி வேண்டாம்
மேலும் ஒரிஜினலாக கறுப்பு வெள்ளையில் வந்த புத்தகத்துக்கு கலர் அடிக்கிறேன் என்று செலவை கூட்டுவதை தாராளமாக தவிர்க்கலாம்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஒரு வித அவசரம் தெரிகிறது உங்கள் பணிகளில். கொஞ்சம் நிதானியுங்கள், சந்தா புத்தகங்களில் முழு கவனம் செலுத்துங்கள், அது போக கிடைக்கும் நேரத்தை மட்டும் special வெளியீடுகளுக்கு ஒதுக்குங்கள்
பக்க வாத்தியங்கள் தாண்டி அனைத்து வாசகர் கருத்துகளையும் பொறுமையாக கையாள பாருங்கள். ஒரு வித நக்கல் நையாண்டி பாணி பதில்களை தவிருங்கள்
இதற்கு மேல் பேசி என் கண்ணியத்தை இழக்க நான் விரும்பவில்லை. ஆகையால் நடையை கட்டுகிறேன்
ஆனால் இப்படியே விட்டு செல்லவும் கூடாது அல்லவா
Mr. நாட்டாமை, நாங்களும் trouser போட்ட காலம் முதல் கிட்டதட்ட நாற்பது வருடங்களாக லயன் வாசகர்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஆசிரியரிடம் ஒரு கேள்வி கேட்டால், முந்தி கொண்டு நீங்கள் ஏன் வருகிறீர்கள். உங்களை போல் 24 மணி நேரமும் என்னால் இங்கு கும்மி அடித்து கொண்டிருக்க முடியாது.
ஆகையால் அவ்வபோது தலை காட்டும் எங்களை போன்றோரின் கருத்துகளில் அதிகபிரசங்கிதனமாக மூக்கை நுழைக்க வேண்டாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்
திருநாவுக்கரசு சகோ
Deleteவார்த்தை பிரயோகத்தில் இத்தனை கடினம் வேண்டாமே
அருமையாகவும், அளவாகவும்,நாகரிகமாகவும் சொன்னீர்கள் திருநாவுக்கரசு சார் 👌
Deleteதன்னைத்தானே திருத்திக் கொள்வது கடினம்....உலகைத் திருத்துவது எளிது....டேய் சட்டை போடு....ஆனா பட்டன் இல்லாம அவசரத்துல மருத்துவமனைக்கு வராத....அப்படி ஒன்னும் நடமாட வேண்டிய அவசியமில்லை....எம்மா சின்னக் குழந்தை விழாம நடக்கனும்....இல்லன்னா உக்காத்தியே இருக்க வை...கீழ விழுந்தா அடி பட்டுறுமே....சார் இன்னோர் கிநா....கோழியா முட்டையா கேள்விக்கு பதில் கோழி முட்டை.....சர்க்கரை இல்லா ஊரில் இலுப்பய தின்னாதே....சக்கர வந்தா நான் தின்னு வேன்...எல்லாரும் சக்கரய தின்னுங்க ...மீறித் தின்னா ...கபர்தார்
ReplyDeleteகுறைகளை என்னிடம் சொல்லுங்கள்....நிறைகளை வெளியே சொல்லுங்கள்...இது ஆகச் சிறந்த கிநா....சார் நீங்க நெஞ்சக் கிழிஞ்சு காட்டி உத்தமனாக முடியாது...
Deleteகடைசி வரை கொடுத்தாதான் வள்ளல்....வள்ளல் தன்மையையே தானமாக வாங்கும் இறைவனை நிறுவிய கூட்டம் தானே நாம....ஆகற வேலய பாருங்க ஆசிரியரே
நா நக்கலா தான் கேட்பேன்...ஆனா நீங்க முட்டி போட்டு தவழ்ந்து தான் பதில் சொல்லனும்....ஏன்னா ஆனந்த விகடன...குமுதத்த கேள்வி கேட்டு குமுற இயலா வாசகன்...
Deleteநீங்க எப்படி இவ்வளோ ஆனந்தமா வாசக கும்மி அடிக்க முடியுது....அத நிறுத்தியே ஆவேன்....எல நாட்டாமை தீர்ப்ப மாத்து
Deleteகிங் ஸ்பெஷல் 3 அற்புதம்.அதிசயம்.
ReplyDeleteஆச்சர்யம். என்னவென்றால், துப்பாக்கியையோ முஷ்டியையோ தூக்காத வேதாளர், மாஜிக்கை பயன்படுத்தாத மாண்ட்ரெக். கதைகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் சார்.
நான் சின்ன வயதில் பிடித்து ரசித்த
ReplyDeleteசார்லியின் மகன் சாகஸம்
ஒரு நாள் மாப்பிள்ளை - கிடைத்ததில் மகிழ்ச்சி...
அப்றம், ரிப் கிரிபி-க்கு இந்த ஓவியரின் கதைகள் இடம் பெறுவது (கதைக்களம் சிறப்பு)
சந்தோசம் ...
மேலும் தொடரட்டும்...
***பாலைவனத்திலொரு பொன் நண்டு***
ReplyDeleteடின்டின் எனக்கு அறிமுகம் ஆனது
கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூலமாக பள்ளிக்கூட கோடை விடுமுறையில் மதிய நேரத்தில் பார்த்துள்ளேன். பின்னர் லெண்டிங் லைப்ரரியில் பார்த்த போது கார்ட்டூனாக வந்ததை புத்தகமாக போட்டுள்ளார்கள் என எண்ணினேன். அப்புறமாக தான் தெரிந்தது புத்தகமே முதலில் வந்தது என😁😁😁
டின்டின் கதாபாத்திரம் பிடிக்க காரணம் அவரது குணங்களான
மன உறுதி, துப்பறியும் திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சமயோகித திறனறிவு.
ஒரு துப்பறிவை ஆரம்பிக்கும் முன் பெரிய திட்டமிடதல் இருக்காது, ஆனால் விடாமுயற்சியுடன் விடையை கண்டுபிடிக்கும் வரை விட மாட்டார், அதற்கேற்றவாறு அவருக்கும் உபயங்களும் கிட்டிடும்.
ரொம்ப ரொம்ப முக்கியமாக நாடு விட்டு நாடு சுலபமாக பயணம் பண்ணுவார், கப்பலில் போவாரு, ப்ளைட்டில் பறப்பாரு, அதைவிட சில நேரங்களில் ப்ளைட் ஓட்டுவார்.எப்போ கற்றுக்கொண்டார் என தெரியல, சகலகலா வல்லனாக வலம் வருவார். இவையெல்லாம் ரொம்பவே கவர்ந்தது.
*Loved the free spirited adventure traveller detective*
*பொன் நண்டு*
தமிழின் புதிய ஆல்பத்தில் நம்ம இளம்
துப்பறிவாளர் பாதையில் ஒரு உணவு டின் க்ராஸ் பண்ண , சம்திங் பிஷ்ஷி என்று பார்த்தால் சம்திங் க்ராப்பி என பிடிபடுகிறது. தண்ணி மேல் மிதக்கும் கப்பலில், தண்ணியில் மிதக்கும் கேப்டனுடன் டின்டினுக்கு அறிமுகம் ஏற்படுகிறது.
கேப்டன் ஹேடாக் என் உயிர் நீ தானே , உன் உயிர் நான்தானே பாட்டு பாடாத மட்டும் தான் குறை, நம்ம செல்ல குடிமகனார் சென்ற இடமெல்லாம் அவரது வருகைக்காகவே காத்திருப்பது போல் அவரை வந்தடைகின்றன மது பாட்டில்கள், குடித்தால் மனுசன் ஜாலி பார்டி, கையில் இருந்து பிடுங்கி விட்டால் எதிரில் இருப்பவர் முடிந்தார். துப்பாக்கி சூடு-க்கு நடுவே இவரால் மட்டும் பயமின்றி குடிக்க முடியும்
இந்த தடவை கேப்டனுக்கு திட்றது விட குளறல் பாஷை தான் அதிகம் 😂😂😂
பாலைவனத்தில் கானல் நீர் தெரியும் என்றால் ஐயாவிற்கு தெரிவதோ மது பாட்டிகள், அதுவும் டின்டின் மது பாட்டிலாக😥😥😧😧😧. பாவம் பையன், ஸ்நோயி காப்பாற்றி விடுகிறது.
இந்த சேஷ்டையால் டின்டினுக்கு வரும் கனவு அதற்கு மேல் 😂😂😂😂😂
டின்டின் கேப்டனை காப்பாற்றிடும் ஒவ்வொரு தடவையும் கேப்டன் தவறாமல் சொதப்புகிறார், கோவித்து கொள்ளாமல் அவரையும் இழுத்து கொண்டு ஓடுகிறார் டின்டின்.
அருமையான பையன் டின்டின்.
அவருக்கு கீழ் இருப்பவர்கள் காசுக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்துவது கூட தெரியாமல் இருக்கிறார், ஆனாலும் கடல் பற்றிய அறிவும், கப்பல் பற்றியம் தகவல்களும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். குடித்திருந்தாலும் கடல் திசைகளும், தன் கப்பலை அடையாளம் காணுவதில் பிழையில்லை. ஆனால் இடையில் மது அனைத்தையும் கெடுத்து விடுகிறது.
கேப்டன் ஹேடாக் பச்சை தண்ணி குடித்து மயங்குவதால் எல்லாம் செம கலாய். அந்த வளிச்சு வாருன அந்த ஹேர்ஸ்டைல் அதுக்கு மேலே 😂😂😂
ஸ்நோயிக்கு இந்த கதையில் நல்ல வேட்டை, அதன் லூட்டிகள் ரசிப்பு, அதுவும் டின்டினுக்கு பூத கண்ணாடியை குடுத்துட்டு, தன்னோட எலும்பு துண்டை எடுத்து கொள்வது செம.
தாம்ஸன் & தாம்ப்ஸன் உலக பிரசித்தி பெற்ற டிடெக்டிவ்ஸ்!!!!!😁😁😁
நம்ம சிரிப்பு டிடெக்டிவ்ஸ் டின்டினுக்கு கொஞ்சம் உறுதுணையாக இருக்கின்றனர்.
துப்பாக்கி காட்டி மிரட்டுன பிறகும் ஓமர் சாலட்டை நாங்க துருவி துருவி விசாரிச்சுட்டோம், அவர் நிரபராதின்னு சொல்றாரு சொல்லும் போது இவிங்க வெகுளியா இல்லை பயங்கரமான மேங்கோ மடையர்களா என தோன்றியது😂😂😂😂😂
நம்ம கேப்டனுக்கு புதுசாய் சேர்க்கப்பட்ட வையிற வசனங்கள் ரசிக்க வைத்தன:
*வெங்காய விளக்கெண்ணெய்* ,
*வால் முளைத்த விளக்கெண்ணெய்*
*புத்தி கெட்ட புடலங்காய்*
*மேங்கோ மடையா*
டின்டின் & கேப்டன் ஓயினிலிருந்து வெளிப்படும் புகையில் போதையாகி போக, இருவரும் சேர்ந்து பாடும் போது 😂😂😂
இந்த சூழ்நிலைக்கு நன்றாகவே பாட்டு எழுதி உள்ளார் நமது புலவர்
வசனநடை கதையை சிறப்பாக எடுத்து செல்கிறது. ரசிக்கவும் வைத்தன
வர்ணசேர்க்கை அருமை, டின்டின் கதைகளை ரசிக்க வர்ண சேர்க்கைகள் முக்கிய காரணிகள்.
இதில் மெல்லிய மஞ்சள் கலரிங் அருமை.
நண்டு டிசைனை எழுத்துருவில் தமிழிலும் கொணர்ந்துள்ளது அழகு
அட்டகாசமான விரிவான விமர்சனம். பாராட்டுக்கள் ரம்யா
Deleteநன்றிங்க பரணி சகோ 😊💐
Deleteஇந்த கேப்டன் குடியினால் டின் டின்னை போட்டு தாக்குவது எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பாராதது, இந்த அளவு குடிக்கு அடிமையா இருந்து இருகிறார்.
Deleteஇவர்களின் இந்த பிளாஷ் பேக் அருமை. இப்படி இருந்த கேப்டன் இப்போது ஏன் டின் டின்னை இந்த அளவு மரியாதை மற்றும் அளவு கடந்த அன்புடன் இருக்கிறார் என்று புரிகிறது.
// துப்பாக்கி காட்டி மிரட்டுன பிறகும் ஓமர் சாலட்டை நாங்க துருவி துருவி விசாரிச்சுட்டோம், அவர் நிரபராதின்னு சொல்றாரு சொல்லும் போது இவிங்க வெகுளியா இல்லை பயங்கரமான மேங்கோ மடையர்களா என தோன்றியது /
DeleteYES. YES. LOL.
//இப்படி இருந்த கேப்டன் இப்போது ஏன் டின் டின்னை இந்த அளவு மரியாதை மற்றும் அளவு கடந்த அன்புடன் இருக்கிறார் என்று புரிகிறது.//
Deleteஆமாங்க சகோ
Sir - with already shrinking reading time - I guess 45+ work pressure + before-time-retiremnt anxiety - makes many read only 1 book a month sir. That is probably the reason why Fab 5 did not take off. The same Mini Lion + Junior Lion + Dhigil conondrum when Lion and Muthu rocketing off the shef !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாதந்தோறும் 'தல' இருந்தால் போதும் ; கிளாசிக்ஸ் ஏதேனும் தொட்டுக்க இருந்தால் போதும்..... லக்கி லூக் போன்ற லைட் வாசிப்புகளோ, கேப்டன் டைகரை போன்ற காலூன்றிய டாப் ஹீரோவோ, டின்டினை போலான clean reading fun தரவல்ல நாயகர்கள போதும்..'. இவர்களிடம் உள்ள ஈர்ப்பு ஒரு கரடுமுரடான சகுவாரோவிடமோ, ஒரு டைலன் டாகிடமோ, ஒரு தாத்தாக்கள் டீமிடமோ இருப்பதில்லை என்பதே பெரும்பான்மையின் தீர்ப்பாக அமைந்திடும் பட்சத்தில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எழுந்த நொடியில் சுருங்கிப்போன ஹோட்டல் மெனுக்களைப் போல நமது விசாலமான திட்டமிடல்களும், சிறகுகளை உள்ளே இழுத்துக்கொள்ளத்தான் வேண்டிப்போகும் போலும் //.
ReplyDeleteஇதைத்தான் இரண்டு பதிவுகளுக்கு முன்பே நான் உங்களிடம் எச்சரிக்கை செய்திருந்தேன் டியர் எடி .. இங்குள்ளவர்கள் 100 நண்பர்களை தாண்டி எல்லோராலும் நீங்கள் மதிப்பிடும் தாத்தா மேகி என எல்லார் மேலேயும் எல்லோரும் விருப்பம் கொள்வதில்லை என்று .. வாசகர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்க டியர் எடி. இன்றைய நிதர்சனம் இதுதான் இதை கடந்து போவதும் போகாததும் உங்கள் விருப்பமே .. நீங்கள்தான் முதல் போட்டு வாங்குகிறீர்கள் வெளியிடுகிறீர்கள் .. ஆனால் வெளியிடுவதை வாங்கி படிக்கும் ஆர்வம் அனைவருக்கும் வேண்டுமல்லவா. .. நிதர்சனத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள் .. உங்கள் மேல் உள்ள அன்பின் காரணமாகவே இதை இங்கே பதிகிறேன் மேலும் .உங்கள் விருப்பமே 🙏🙏
(பார்ங்க உங்க பதிவையே ஐந்து நாள் கழித்துத்தான் பார்க்கிறேன் .. எப்படா எடி பதிவை போடுவார் படித்து விட்டு பதில் எழுதி தூங்க போகலாம்ன்னு காந்திருந்தவர்களில் நானும் ஒருவன் .. ஆனால் இன்றைய நிலை ஐந்து நாள் கழித்து படிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மற்ற சிலர்க்கும் இதே நிலைதான் )
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteGood good Kumar.
Deleteஆமாங்க சார்
Deleteஆமாங்க சார்
Deleteஇன்று தாத்தாஸ் கதை ப்ரிவ்யூ காண்பிப்பீர்களா, சார்
ReplyDeleteஎனது அம்மா தாத்தாஸ் கதைக்காக வெயிடிங்
ரிப் கிர்பி, மாண்டிரேக், வேதாளர் படித்து வளர்ந்தவர், பின்னர் டெக்ஸ் டைகர் என மாற்றம்
இன்று கிராபிக் நாவல் ரசிகை எனது அம்மா
இன்று மேகி கேரிஸன் (அல்லது) தாத்தாஸ் ஆல்பத்தின் ப்ரீவ்யூ பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குங்க, சார்
Wow. உங்க அம்மாவின் காமிக்ஸ் நேசம் பற்றி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.
Deleteசூப்பர் சகோ!!💐
Delete😊😊😊
Delete