நண்பர்களே,
வணக்கம்! புது வருஷம் ஆரம்பித்தது நேற்றைக்குப் போலுள்ளது - ஆனால், அதற்குள்ளாக காலெண்டரில் ஒரு கற்றைக் காகிதங்களைக் கிழித்துவிட்டோம்! இதோ பிப்ரவரியுமே நாளை கதவைத் தட்டக் காத்துள்ளது! சில தருணங்களில் காலத்தின் இந்த மின்னல்வேக ஓட்டமானது மூச்சிரைக்கச் செய்யத் தவறுவதில்லை! 9 சென்னைப் புத்தக விழா ஸ்பெஷல்ஸ் + 3 ரெகுலர் தடத்தின் இதழ்கள் - ஆக, மொத்தம் ஒரு டஜன் புக்ஸ் ஜனவரிக்குக் கச்சிதமாய் ரெடி பண்ணியாச்சு; and அவற்றின் பெரும் பங்கு ஹிட்ஸ் என்ற மகிழ்வோடு லைட்டா மிதப்பாய் மல்லாந்தால், "தம்பி டேய்.. அடுத்த மாசத்துப் பணிகள் வெயிட்டிங்'' என்று கபாலத்துக்குள் குரல் கேட்கின்றது! So அடித்துப் பிடித்து ஆண்டின் இரண்டாவது மாதத்துக்கென ரெடியும் ஆகியாச்சு! Here we go with the previews!
எப்போதும் போலவே இன்ன பிற நாயக/ நாயகியரின் ஆல்பங்களை முன்நின்று இழுத்துப் போகும் எஞ்சினாக நிற்பது "தல' டெக்ஸ் தான்! "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று வாசித்திருப்போம்; அதையே நமக்கேற்ப கொஞ்சமாய் tweak செய்வதாக இருப்பின் - "டெக்ஸ் இல்லா மாதம் சப்பையே!'' எனலாம் போலும்! So காத்திருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனுமொரு மார்க்கத்தில் டெக்ஸ் & டீம் ஆஜராகிக் கொண்டே இருப்பார்களென்பது 2026-க்கான நமது தீர்மானங்களுள் பிரதானமானது! அதன் நீட்சியாய்- இதோ நடப்பு வருடத்தின் முதல் டபுள் ஆல்பம்! 224 பக்கங்களில் கதை + 8 பக்கங்களுக்கு ஹாட்லைன்; வலையிலிருந்து பதிவு; அடுத்த வெளியீட்டு விபரங்கள் என இம்முறை 232 பக்க இதழாக " என் இனிய பொய்யே' ' தயாராகியுள்ளது!
டெக்ஸ் கதைகளின் பாணிகளில் ஒருவித ஒற்றுமை இருப்பினும், அவற்றின் படைப்பாளிகளுக்கேற்ப கதைகளில் சன்னமான வேற்றுமைகள் இருப்பதுண்டு! கதாசிரியர் மௌரோ போசெல்லி டபுள் பேரல் துப்பாக்கியைப் போலானவர் - செம கமர்ஷியல் கதையையும் உருவாக்க வல்லவர் ; அதே சமயம் இரவுக் கழுகாரையும், டீமையும் ஆர்ஜெண்டினா மண்ணுக்கும், கனேடிய வனாந்திரங்களுக்கும் அனுப்பி நாக்குத் தொங்கப் பாடுபடச் செய்யவும் தெரிந்தவர், ஆனால் Pasquale Ruju போன்ற கதாசியர்கள் அத்தனை கனங்களின்றி yet செமத்தியாக ரசிக்கும் கதைகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றனர்! வாசிக்க எல்லா ரகங்களும் நமக்கு ரம்யமாகவே இருந்தாலும் - பணியாற்றும் சோம்பேறி மாடனின் பார்வையில் அந்த ஜாலியாய் ஓட்டமெடுக்கும் ரகக் கதைகள் கொஞ்சம் ஸ்பெஷல்! Simply becos மாற்றி எழுதவோ; எடிட் பண்ணவோ அவை ஆகச் சுலபமாய் இருப்பதுண்டு! இந்த பிப்ரவரியும் செம ஜாலியாய் ஆந்தை விழியனை வைத்திருக்கும் கதையே! அதென்ன பொய்யில் இனிப்பு? ஜீராவிலே முக்கி எடுத்த பலகாரத்தை மொசுக்கினபடியே எவனோ ஒரு பயபுள்ளை பொய் சொல்லியிருக்குமோ? என்று நினைக்கத் தோன்றலாம்! மாறாக இந்தக் கதைக்களமே ஒரு பொய்யனைச் சுற்றிச் சுழல்கிறது! ஒரு தாய்ப் பொய் போடும் குட்டிகள் பற்பல பொய்களாய் வளர்ந்து ஒரு பெரும் இடியாப்ப சிக்கலாய் விஸ்வரூபமெடுக்க, நம்மவர்கள் களம் காணும் கட்டாயம் ஏற்படுகிறது! ஒரு செமத்தியான ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது- அட்டகாசமான சித்திரங்களில்! Without a doubt இம்மாதத்தின் highlight என்பேன்!
பிப்ரவரியின் அடுத்த Black & white இதழில் நமது ஆதர்ஷ இளவரசியும், கர்ரீஷ் கார்வினும் போட்டுத் தாக்குகின்றனர்! மாடஸ்டியின் சில சாகஸங்கள் சூடு பிடிக்கவே பாதிக் கதை தேவைப்படுவதுண்டு; அப்புறமாய் தான் வண்டி வேகமெடுப்பதுண்டு! ஆனால், இந்த ஆல்பமோ நேர் மாறு! ஆரம்பமே டாப் கியரில் தான்! 1994ல் உருவாக்கப்பட்ட இந்த சாகஸத்தில் பெருசாய் timeline உதைக்கவில்லை! So புராதனம் எட்டிப் பார்க்காது crisp ஆகப் பயணிக்கின்றது கதை! தவிர ஆதிவாசிகள் கெட்டப்பில் இளவரசி+ கர்ரீஷ் கதையின் பாதிக்கும் மேல் சுற்றி வருவதால் கண்களுக்கும் நிரம்பவே குளிர்ச்சி வெயிட்டிங்! And அட்டைப்படமோ ஒரிஜினல் ட்ராயிங்கிலிருந்து AI அண்ணாத்தேயின் சகாயத்தோடு நிரம்பவே மெருகூட்டப்பட்டதொன்று! பாருங்களேன் மிளிர்ந்திடும் அட்டைப்படத்தினை!
ரெகுலர் தடத்தின் இதழ்கள் நிறைவுற- Electric'80s தனித்தடத்தின் Penultimate இதழாக The King's ஸ்பெஷல் -2 இம்மாதம் பருமனூட்ட வருகிறது! முதல் ஆல்பத்தைப் போலவே இம்முறையும் 6 க்ளாஸிக் நாயகரின் கதைகளும் இடம்பிடிக்கின்றன! வேதாளர்; ரிப் கிர்பி; & மாண்ட்ரேக்குக்கு தலா இரண்டு கதைகள் & பாக்கிப் பேருக்குத் தலா ஒரு சாகஸம் என்பது ஞாபகம்! அப்புறம் சார்லியின் "பேய் தீவு இரகசியம்' ' க்ளாஸிக் மறுபதிப்பு என்பது கொசுறுத் தகவல்! எல்லா சாகஸங்களுமே மித நீளக் கதைகள் தான் & சகலமுமே நேரோ நேரான கோட்டுக் கதைகளே எனும் போது - பாத்திரம் துலக்கிய கையோடோ; துணிகளை மொட்ட மாடியில் காயப் போட்டு வந்த கையோடோ துளி குழப்பமுமின்றித் தொடர்ந்திட இங்கே சாத்தியமாகிடும்! Of course இந்த ஜாம்பவான்களெல்லாம் VRS வாங்கிடும் வயதிலான oldies தான்- ஆனால், நமது நினைவலைகளை இதமாய்த் தட்டித் தாலாட்டும் சூட்சமம் அறிந்தவர்கள் என்பதால், இன்னமும் இவர்களுக்கான மவுசு குறையவில்லை தான்! சென்னை புத்தகவிழாவில் The King's ஸ்பெஷல் -1 ஒரு bestseller & மற்ற ரிப் ; சார்லி தொகுப்புகளுமே did pretty decent!! நீலாம்பரி பாணியில் சொல்வதானால் இந்தப் படையப்பர்களுக்கு வயசானாலும், அழகும், ஸ்டைலும் குறைந்தபாடில்லை!
இதோ- அனல் மெய்யாலுமே பறந்திடும் அட்டைப்படப் preview! உட்பக்க ப்ரிவியூக்களுமே கீழே உள்ளன! And முக்கியமான நினைவூட்டல் - இந்தத் தனித்தடத்தில் நீங்கள் subscribe செய்திருக்காத பட்சத்தில் கூரியர் கவர்களில் பருமன் குறைவாகவே இருந்திடும்!
மாடஸ்டி & டெக்ஸ் பைண்டிங்கில் உள்ளனர்! செவ்வாயன்று பணி முடிந்து வந்து சேர்ந்திட- புதன் காலையில் டெஸ்பாட்ச் இருந்திடும்! படுத்தி எடுக்கும் பல்வலியும், அதற்கான சிகிச்சைகளும் நடுவாக்கில் சில நாட்களைக் கபளீகரம் செய்துவிட்டதால் அது டெஸ்பாட்ச் தேதியின் தாமதமாகப் பிரதிபலித்துவிட்டது! பல் ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனில் குந்தியபடியே மாடஸ்டியை எடிட் செய்த முதல் பேமானி என்ற பெருமை அநேகமாய் வேர்ல்டு லெவலில் அடியேனையே சார்ந்திடும் என்று நினைக்கிறேன்!
அப்புறம் போன பதிவின் நீட்சியாய் மேகி கேரிஸன் & தாத்தாஸ் சார்ந்த limited edition முன்பதிவுக்கான படலம் இன்று முதல் துவக்கம் காண்கிறது! போன பதிவிலேயே இதைப் பற்றி நாக்குத் தொங்க விளக்கியுள்ளதால் இன்னொரு மேஜர் சுந்தர்ராஜன் அவதாருக்கு அவசியமிராதென்று நினைக்கிறேன்! So "The கிராபிக் நாவல் Twins'' உங்களது ஆதரவை எதிர்நோக்கி வெயிட்டிங்! 60 நாட்களின் முன்பதிவுச் சாளரம் சரியாக இருக்குமென்ற நம்பிக்கையோடு களம் காண்கிறோம்! So பிப்ரவரி & மார்ச்சில் முன்பதிவுகள் & ஏப்ரலில் தயாரிப்பு & மே மாத ஆன்லைன் மேளாவில் ஆஜர் என்பதே இந்த நொடியின் திட்டமிடல்! இந்தப் புது ரூட்டுக்கு எவ்விதம் வரவேற்பு இருக்குமோ? என்ற படபடப்போடு விடை பெறுகிறேன் all!
டின்டினும், ராபினும் ஸகுவாரோவும் ஏக காலத்தில் மேஜையை நிரப்பிக் கிடப்பதால் அவர்களோடு கரணமடிக்க கிளம்புகிறேன்! Bye all.. see you around! Have a fun Sunday.!














First
ReplyDeleteஅட ரொம்ப நாளைக்கு பிறகு
Deleteவாழ்த்துகள் சகோ
me first
ReplyDeleteஇல்ல நீங்க ரெண்டாவது சார்
Deleteவணக்கம்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteMe in😘💐👍
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDelete✨🍁😍
ReplyDeleteஇளவரசி
ReplyDeleteரிப் கிர்பி
டெக்ஸ்
Perfect February
ரிப் கிர்பி
Deleteவேதாளர்
சார்லி
GenZ
Wow
வணக்கங்கள்
ReplyDeleteHi
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவேலூர் ஜெயில்லயா
Deleteவணக்கம்
ReplyDeleteமாடஸ்டி 😍😍😍
ReplyDeleteKINGS SPECIAL cover looks awesome .. give this phantom cover as poster sir ..
ReplyDeleteHi Editor sir,
ReplyDeleteTex and kings special book wrapper looks awesome sir .
//பல் ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனில் குந்தியபடியே மாடஸ்டியை எடிட் செய்த முதல் பேமானி என்ற பெருமை அநேகமாய் வேர்ல்டு லெவல் அடியேனையே சார்ந்திடும் என்று நினைக்கிறேன்!//
ReplyDeleteபல வெரட்டியான கதைகளை தமிழ் காமிக்ஸில் தருவது மட்டுமல்ல
இதுபோன்று பல பல்டிகள் நீங்கள் மட்டுமே அடித்திருக்கிறீர்கள், சார்
😟😟😟😟😟
தற்போது ஓகேங்களா,சார்?
Delete//கண்களுக்கும் நிரம்பவே குளிர்ச்சி வெயிட்டிங்! //
ReplyDeleteஇளவரசரே எங்கே இருக்கீங்க
Graphic நாவல் Twins kku பணம் கட்டியாச்சு.
ReplyDelete💪💪💪
Deleteநானும் பணம் அனுப்பியாச்சு
Deleteசூப்பர் பரணி
Deleteவணக்கம்
ReplyDelete"224 பக்கங்கள் டெக்ஸ் "
ReplyDelete+8 பக்கங்கள் வலைப் பதிவிலிருந்து,
எதிர்பாராத இன்ப அதிர்ச்சிங்க சார் ஆவலுடன் வெய்ட்டிங்
கடல் சகோ, நீங்க ரொம்ப லேட்.இளவரசர் சிவகாசிகிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு
ReplyDelete😂😂😂
Deleteஅதானே பார்த்தேன். சிவகாசியில் நமது அலுவலகம் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிவதாக சொல்லுறாங்க, இளவரசை சீக்கிரமாக நமது அலுவலகத்தை விட்டு வெளியேற சொல்லுங்க.
DeletePfB 😁😁😁😁
Deleteபரணி சகோ
Deleteவிருதுநகரில் இருப்பதால் எட்டி பார்த்து தெரிந்து கொண்டீர்கள் போல
நான் பெங்களூர் வந்து 4 நாட்கள் ஆகிறது.
Delete// "டெக்ஸ் இல்லா மாதம் சப்பையே!'' எனலாம் போலும்! So காத்திருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனுமொரு மார்க்கத்தில் டெக்ஸ் & டீம் ஆஜராகிக் கொண்டே இருப்பார்களென்பது 2026-க்கான நமது தீர்மானங்களுள் பிரதானமானது! அதன் நீட்சியாய்- இதோ நடப்பு வருடத்தின் முதல் டபுள் ஆல்பம்! //
ReplyDeleteசிறப்பு மிகவும் சரியான தீர்மானம்.
டெக்ஸ் அட்டைப்படம் சித்திரம் அழகு
ReplyDeleteபின்னட்டை டிசைனிங் அருமை
// என் இனிய பொய்யே //
ReplyDeleteஎன்ன ஒரு கவிதை தனமான தலைப்பு.😍
அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது, ஓவியர் வரைந்த படத்தை அப்படியே அட்டைப்படமாக பிரிண்ட் செய்து உள்ளது போல உள்ளது. செம.
ஆமாங்க சகோ
Deleteஇதுவரை வந்ததில் இருந்து வித்தியாசமாக அழகாய் உள்ளது
Hi..
ReplyDeleteடெக்ஸ் உட்பக்க சித்திரங்கள் புள்ளி புள்ளியாக தெளிவில்லாமல் உள்ளது. கதையின் சித்திர அமைப்பு இதுதானா அல்லது குறைந்த resolution படமா சார்?
ReplyDeleteLow resolution sir... நான் ஊரில் இல்லை என்பதால் மெயிலில் அனுப்பியுள்ளனர். Files resolution அந்த அழகில் உள்ளது!
Delete👍👍👍
Deleteநன்றி சார்.
DeleteThis comment has been removed by the author.
Deleteபரணி சகோ
Deleteசெம 😂😂😂
ஆனா பாருங்க நீங்களும் இளவரசி ரசிகர் என்பதை நமது அலுவலகத்தில் உள்ளவர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளதால் இளவரசிக்கு ஹை resolution உள்ள அழகான படத்தை அனுப்பி உள்ளார்கள் 😀
Deleteவந்துட்டேன்
ReplyDeleteஇந்தக் கதைக்களமே ஒரு பொய்யனைச் சுற்றிச் சுழல்கிறது!//
ReplyDeleteஅதனாலே தா மஞ்ச சொக்காய் போட்டுட்ணு சுத்தினு இருக்காப்பிலே..
// கர்ரீஷ் கார்வினும் //
ReplyDeleteகார்வின் கேள்விபட்டு இருக்கிறேன், இது என்ன புதுசாக கர்ரீஷ் கார்வின் சார்?
எல்லாம் இளவரசர் வைத்த பெயர் தான் சகோ 😁😁😁
Deleteஇளவரசி கூட இவரால் மீன் பிடிக்க முடியவில்லை என்ற கோபத்தில் கார்வின் பெயரை இப்படி மாற்றி விட்டாரா 🤔
Deleteஅதே அதே சகோ
Deleteகர்ரீஷ் - ஒரு மிகப்பெரிய வீரர்! ஒரு போராளி! ஒரு படைத்தலைவர்! நாற்கால் பாய்ச்சலில் சென்று தன் எதிரிகளை துவாம்சம் செய்வதிடும் வேட்டைப் புலி அவர்!
Deleteநீங்கள் அவரைப்பற்றி அறியாதது ஆச்சரியமே PfB!👀
இளவரசர் சொல்லி நான் அந்த நான்கு கால் விலங்கை பற்றி தெரிந்து கொள்வது எனது பாக்கியம்
Delete"டைட்டானிக் தாத்தா'' கார்ட்டூன் கதைகள் குறைத்து வரும் காலத்தில் இது போன்ற கதைகளே எனக்கு ஆறுதல். முதலில் படிக்க போவது இதனைத்தான் சார்.
ReplyDeleteடெக்ஸ் கதையை விட அந்த 8 பக்க ஹாட்லைன் ஆவலை கூட்டுகிறது சார்....:-)
ReplyDelete//8 பக்கங்களுக்கு ஹாட்லைன் ; வலையிலிருந்து பதிவு ; அடுத்த வெளியீட்டு விபரங்கள் என//
Deleteதலீவரே.... 👆
இரவு நேரம் என்பதால் அவசரமாய் படித்துள்ளாருங்க, தலீவர்
Deleteஇல்லை என்றாலும் தலைவர் சரியாக படித்து விடுவாரா?
Deleteபரணி சகோ செம ஃபார்மில் இருக்கீங்க 😂😂😂
Deleteதலைவர் பெயரை கேட்டாலே இப்படி எழுத வந்துருது ரம்யா.
Deleteதலீவருதான் தங்களது உற்சாகத்துக்கு காரணமா 😁😁😁
Deleteஹாட்லைன் என்ற வரிக்கும் வலையிருந்து என்ற வரிக்கும் நடுவில் இருக்கும் ஒரே புள்ளியை மட்டும் கவனத்தில் கொண்டு விட்டேன் சார்...:-(
Deleteமாதம் ஒரு டெக்ஸ்...
ReplyDeleteஇந்த முறை 100% என்பதில் மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி சார்....!
டெக்ஸ்..இளவரசி...வேதாளர் அனைத்து நாயகர்களின் அட்டைப்படமும் அட்டகாசமாய் மின்னுகிறது சார்...சூப்பர்...
ReplyDelete// The King's ஸ்பெஷல் -1 ஒரு bestseller & மற்ற ரிப் ; சார்லி தொகுப்புகளுமே did pretty decent!! //
ReplyDeleteமகிழ்ச்சி தரும் தகவல் சார்.
// பல்வலியும், அதற்கான சிகிச்சைகளும் நடுவாக்கில் சில நாட்களைக் கபளீகரம் செய்துவிட்டதால் அது டெஸ்பாட்ச் தேதியின் தாமதமாகப் பிரதிபலித்துவிட்டது! //
ReplyDeleteசரியான காரணம் இல்லாமல் தாமதம் ஆகாதே என்று நினைத்தேன். பல் வலி இப்போது எப்படி உள்ளது சார். Get well soon sir.
// டின்டினும், ராபினும் ஸகுவாரோவும் ஏக காலத்தில் மேஜையை நிரப்பிக் கிடப்பதால் அவர்களோடு கரணமடிக்க கிளம்புகிறேன்! //
ReplyDeleteகரணம் அடிப்பது எல்லாம் சரிதான் சார், மேஜை கொஞ்சம் பெரிதாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள் சார்.
எடிட்டர் கர்ணமடிக்க ஒரு ஸ்டூல் இருந்தா போதாது? 🤔
Deleteவால் மாட்டிக்காது? 😊
Deleteசகோதரர்களே 😂😂😂
Deleteஇளவரசே உங்க திறமை நம்ப எடிட்டருக்கு கிடையாது.
Deleteசெல்வம் சார், இளவரசர் மாதிரி பெரிய வால் கிடையாது. எனவே கவலை வேண்டாம் 😉
Deleteஎனக்கெல்லாம் சின்ன வயசுலயே வாலை ஒட்ட நறுக்கிட்டாங்க PfB!😝😝
Deleteநீங்க ஆடுகிற ஆட்டத பார்த்தால் அப்படி தெரியவில்லை இளவரசே
Deleteடெக்ஸ் கதை பற்றிய விவரிப்பு ஆர்வத்தை கிளப்புகிறது😍😍😍
ReplyDeleteஅப்படின்னா இந்தவாட்டி வழக்கமான கதை இல்லையா? 🤔
Deleteஇல்லைங்க இனிய பொய்யான கதை 😋😁
Deleteசகோ... 😂😂😂😂
Deleteஇளவரசியின் அட்டைப்படம் இதுவரை வந்ததிலேயே டாப் அட்டைப்படமாக இருக்கும்!! 😍😍😍😍😍😍
ReplyDeleteஇளவரசிக்கு காட்டுவாசி வேஷம்னு வேற சொல்லிட்டீங்க.. 😍😍😍 ரொம்ப ரொம்ப ஆதிகாலத்து காட்டு வாசிகளா இருந்தா நல்லாருக்கும் 😍😍😝😝
டெக்ஸ் கதையில் 8 பக்கங்களுக்கு ஹாட் லைனா?!!! ஆஹா!!😍😍😍😍
'டைட்டானிக் தாத்தா' ஆவலைத் தூண்டுக்கிறார்! ஆவலோடு வெயிட்டிங்..😍😍😍
'The கிங் ஸ்பெஷல்-2' அட்டைப்படத்தில் தீப்பொறி தெறிக்கிறது!! 😍😍😍😍 இந்த அட்டைப்படத்தைப் பார்க்கும் போது எனக்கு ஏனோ 'Never before ஸ்பெஷல்'ன் டஸ்ட் கவர் ஞாபகத்துக்கு வருகிறது!!😍😍😍😍
மேகி, தாதாத்தாஸ் - இருவருமே என் விருப்பத்துக்குரியவர்கள்!! அவர்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.... 😍😍😍😍😍
// மேகி, தாதாத்தாஸ் - இருவருமே என் விருப்பத்துக்குரியவர்கள்!! அவர்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்....//
Deleteசீக்கிரமாக பணத்தை அனுப்புங்க விஜய்.
அது போன வார வலைப்பதிவும் சேர்த்துங்க, இளவரசரே
Deleteஇளவரசரே பின்னட்டை டிசைன்களும் நல்லா ஜூம் பண்ணி பாருங்க
Deleteஆமாம் சகோ. மறுபடியும் படித்தபோது தெளிவாகிவிட்டது!😁😁👍
Delete///சீக்கிரமாக பணத்தை அனுப்புங்க விஜய்.///
DeletePfB... யா டெபனட்டலி.. டெபனட்டலி!👍😍😍
///இளவரசரே பின்னட்டை டிசைன்களும் நல்லா ஜூம் பண்ணி பாருங்க///
Deleteநம்ம அல்ட்ரா மாடர்ன் இளவரசியை அமையா மாதிரி அலைய விட்டுட்டாங்களே சகோ!!😅
😂😂😂
Deleteசிறு திருத்தம் கி(இ)ளவரசியை அமையா பாட்டி மாதிரி என்று சொல்லுங்க
Deleteஉடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் சார்.. புத்தகங்கள் ஓரிரு நாட்கள் லேட்டாகக் கிடைப்பத்தால் எங்களுக்கு எதுவும் நட்டமாகிவிடாது! ஜனவரி போன்ற ஹெவி வெயிட் மாதத்திற்குப் பிறகு பிப்ரவரியை ஒரு லைட் வெயிட் மாதமாகத் திட்டமிடுங்கள் - உங்களுக்கும் சற்றே ஓய்வு கிடைத்ததைப் போலிருக்கும்!🙏
ReplyDelete
ReplyDelete//படுத்தி எடுக்கும் பல்வலியும், அதற்கான சிகிச்சைகளும் நடுவாக்கில் சில நாட்களைக் கபளீகரம் செய்துவிட்டதால்//
தீபாவளி பண்டிகை பொருட்டு ஊரை சுற்றியபோது ஸ்வீட் கடையில் நுழைந்து
பல இனிப்புகளை ஸ்வாஹா செய்ததை எடிட்டர் சார் எழுதவில்லை. ஒரு இனிய பொய்.
வாசகர்களுக்கு போட்டி நடத்தி பன் தருகிறேன் பேர்வழி என்று அனுப்பியது போக மீதி பன்களை, புது வருடத்தில் வாசகர்களுக்கு அனுப்பியது போக மீதி டைரி மில்க், 5 ஸ்டார் சாக்லேட்களை ஸ்வாஹா செய்து ( அல்லது சாப்பிட்டது போக மீதி சாக்லேட்டுகளை வாசகர்களுக்கு அனுப்பி 😊) இப்படி குழந்தை மாதிரி அழிச்சாட்டியம் செய்தால் பல் வலி எப்படி வராமல் போகும்?😁
தாத்தா மேகி அறிவிப்பு இவ்வளவு விரைவில் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி ❤️
இன்னும் சிறிது நேரத்தில் முன்பதிவு செய்து விடுவேன். 🌹
😊😊😊😊😊
Delete/// அல்லது சாப்பிட்டது போக மீதி சாக்லேட்டுகளை வாசகர்களுக்கு அனுப்பி ///
Delete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 செம!!
❤️👍🙏...
ReplyDeleteModesty Unexpected. Thanks sir
ReplyDeleteExpect the unexpected sir. அது தான் நம்ப எடிட்டர் ஸ்டைல்
Deleteசென்னை புத்தக விழாவிலே டபுள் ஸ்டால் கிடைச்சிருந்து - அம்மணியோட இந்தப் படத்தை 8 அடி உசர பேனர் ஆக்கி இருந்தா.. 🥹🥹?
ReplyDeleteநம்ப டாக்டர்ஸ் எல்லாம் உங்களுக்கு கும்ப மரியாதை செய்து இருப்பார்கள் சார்.
Deleteபிப்ரவரி மாதமும் ஒரு கொண்டாட்ட மாதமே.
ReplyDeleteஎட்டுக்காமிக்ஸ் ஹீரோக்களின் கதைகள் ஒரே மாதத்தில்.
டெக்ஸ்
Phantom
சார்லி
Carigon
George
Mandrake
Rip kirby
Modesty
காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்கள் பலரை ஒரே மாதத்தில் சந்திக்க வைக்கும் மாதம் இந்த பிப்ரவரி மாதம்.
இந்த பிப்ரவரி மாதம் காமிக்ஸ் Nostalgia ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கிளாசிக் கதைகளிலேயே ஆக சிறந்த மொக்கை இந்த மான்ட்ரேக் தான். இவருக்கு இரண்டு கதைகள் கொஞ்சம் ஓவர் சார்.
ReplyDeleteஅந்த ஆறு பேரில் ஏதோ ஓரளவுக்கு ரசிக்க முடிவது ரிப் கிர்பியையும், வேதாளரையும் தான். ஆகையால் 3+2+1+1+1+1=9. இந்த வரிசையில் இருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்
///கிளாசிக் கதைகளிலேயே ஆக சிறந்த மொக்கை இந்த மான்ட்ரேக் தான்?//
Delete+1
EV இதெல்லாம் நல்லா இல்ல ஆமா.
Deleteநானும் அதையே தான் சொல்றேனுங்க KS! 😝
DeleteThis comment has been removed by the author.
Deleteஇளவரசருக்கு கட்டம் சரியில்லை 😉
Deleteவாண்ட் ஆக வந்து வண்டியில் ஏறுகிறார்.
ஹீஹீ.. 😁😁
DeleteLast week reply... " Option 2" sir
ReplyDeleteஆயிரம் பக்க டெக்ஸ்…!!
ReplyDeleteஅப்படியே டெக்ஸ் மறுபதிப்புகளும்
Delete+1000
Deleteரெண்டாயிரம்
Deleteமூனா..யிரம்!
Deleteநாலாயிரம் 😁
Delete100
ReplyDeleteபல் ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனில் குந்தியபடியே மாடஸ்டியை எடிட் செய்த முதல் பேமானி என்ற பெருமை அநேகமாய் வேர்ல்டு லெவலில் அடியேனையே சார்ந்திடும் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteஅப்படியெல்லாம் கிடையாது தனது முதல் நாயகி என்பதால் காதல் அபிமானி யாகி இருப்பீர்கள் ஆசிரியரே
சார்...என்னவோ தெரியல இந்த மாத ஃபிப்ரவரிய எதிர்பார்க்கவே தோணல....ஆனா நேற்றிரவு இளம் டெக்ச வாசிக்க துவங்கைல ரீசார்ஜ் ஆக துவங்க...இங்க வந்தா அடடா இம்மாத புத்தகங்கள்னு பதிவ பாத்ததும்தான் புத்தகம் வருவேன்னு தோண...டெக்ஸ் எப்போதையும் விட இப்ப ஜாஸ்தியா உந்த...அடுத்த மாடஸ்டி காட்டிய பக்கங்களோ வேற லெவல் அதிரடின்னு சொல்ல...கிங் ஸ்பெசல்....தாத்தாக்கள் அழகிய வாழ்க்கை எனும் வரிகள் உற்சாகப்படுத்த...இதோ தடாலடியாய் மீண்டுமோர் விருந்து ...கடந்த கடைசி காலாண்டு மாதங்கள் போலவே....அதுவும் அந்த மாடஸ்டி பக்கங்கள் 80 களுக்கை அழைத்துச்செல்ல....டெக்சை விட கூடுதல் உற்ச்சாகம் இப்பக்கத்தை நிரவிய அதிரடி களை பார்த்ததுமே
ReplyDeleteஅந்த லிமிட்டெட்டும் ஆவலோடு
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteஒரு சிறிய நிகழ்வு.
ReplyDeleteசாலையில் ஒரு பூதம்:
இந்த புத்தகம் வந்த போதே படித்து விட்டு தனியாக எடுத்து வைத்து விட்டேன். ஊரில் இருந்து எனது தங்கை மகள் வரும் போது அவளுக்கு கதை சொல்ல. அவர்களும் பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வர, அந்த கதையை பாப்பா பயப்படாதே நிஜமான பூதம் இல்லை வெறும் மேக் அப் தான் என்று சொல்லி முழு கதையையும் சொல்லி முடித்து விட்டேன் அவளும் ரொம்ப interesting ஆக முழு கதையையும் கேட்டு விட்டு நன்றாக இருப்பதாக சொன்னாள். அப்போது எனது தங்கை வந்து என்ன கதை கேட்கிறீங்க என்று கேட்க அதற்கு பாப்பா சொன்ன பதில் " ரோட்ல ஒரு பேய்" . 😂🤣😂🤣
அருமை குமார். மகிழ்ச்சி
Delete😁😁😊😊😁
Deleteநன்றி நண்பர்களே
Delete😂😂😂😂😂
Deleteஹா ஹா 😁😁😁
Deleteஅருமை நண்பரே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிருநாவுக்கரசு சார் மாண்ட்ரேக்கின் நல்ல கதைகள் பல இன்னும் உங்கள் பார்வைக்கு வரவில்லை .இன்னும் சில காலங்களில் நீங்களும் மாண்ட்ரேக் ரசிகராக மாறிட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்
ReplyDelete"ரோட்ல ஒரு பேய்"இது எனக்கு புடிச்சிருக்கு
ReplyDeleteவிமர்சனம்
ReplyDeleteகாவியத் தலைவன் தோர்கல் - விடை கொடு ஆரிசியா
தான் மிகவும் நேசித்த ஆரிசியாவை காலன் தன்னோடு அழைத்துச் சென்று விட
அதனால் மனதொடிந்து பெரும் துயரில் இருக்கும் தோர்கலை சந்திக்கிறது நிதோக் என்னும் மந்திர சக்தி படைத்த பேசும் பாம்பு, அவனுடைய துன்பத்தை போக்கும் வழி தனக்கு தெரியும் என்று அவனைத் தூண்டி விடுகிறது.
(இந்த நிதோக் பாம்பு தோர்கல் முதல் சுற்று கதைகளில் அவனின் எதிரி.)
நாம் மிக நேசிக்கும் ஒருவரை இழந்து தவிக்கும் போது அவரை மறுபடியும் மீட்டு வரக்கூடிய ஏதாவது மாயாஜால வழி கிடைத்தால் யாரா இருந்தாலும் ஒரு கணம் தடுமாறித் தான் போவார்கள், அதை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவும் நினைப்பார்கள்.
இங்கு நிதோக்கின் உதவி எப்படிப் பட்டது என்று புரிய வைக்க ஒரு சிறு கதையை உதாரணமாக சொல்லலாம்.
ஒரு ஏழைக் குடியானவன் தினமும் வேலை எல்லாம் முடித்து இரவு உறங்கச் செல்லும் முன் கடவுளை வணங்கி நன்றி சொல்லி விட்டுத் தான் உறங்குவான். இது அவனுடைய அன்றாட பழக்கம். ஒரு நாள் வேலை செய்த களைப்பினால் கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்து தூங்கி விட்டான். மறுநாள் காலை எழுந்தவுடன் இரவு கடவுளை வணங்காது உறங்கி விட்டோமே என்று மிகவும் வருந்தினான்.
மறுநாளும் கடினமான வேலையால் ஏற்பட்ட அசதியால் கடவுளை வணங்க மறந்து போய் தூங்கி விட்டான். திடீரென்று நள்ளிரவில் யாரோ அவனைத் தட்டி எழுப்பி இன்றும் நீ கடவுளை வணங்க மறந்து தூங்கி விட்டாய் அவரை வணங்கி பின்னர் மறுபடியும் தூங்கச் செல் என்றது அவ்வுருவம்.
அந்தக் குடியானவனும் என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுறியே ஏன் என்றும் நீ யார் என்றும் கேட்டான்.
அதற்கு அவ்வுருவம் நேற்று நீ உறங்கும் முன் கடவுளை வணங்காது தூங்கியதற்காக மிகவும் வருந்தினாய் அல்லவா அதனால் கடவுளுக்கு உன் மேல் பரிவு அதிகமாகி விட்டது, நீ இன்றும் அதே போல் வணங்காமல் தூங்கி நாளை வருத்தப் பட்டால் மறுபடியும் கடவுளுக்கு உன் மேல் பரிவு அதிகமாகிடும்னு சொல்லிட்டு. . .
நான் தான்
_சாத்தான்_ என்றது.
மேற்சொன்ன இந்தக் குட்டிக் கதையின் மையம் தான் நிதோக் தோர்கலுக்கு உதவும் நோக்கம் என்பது பின்னர் தெரியவருகிறது.
ஆரிசியா மீது கொண்ட அபரிமிதமான காதலாலும் அவளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையாலும் உந்தப் பட்டு நிதோக் கொடுக்கும் ஓரோபோரஸ் என்னும் காலத்தை கடக்க உதவும் மாய மோதிரத்தை பயன் படுத்துகிறான் தோர்கல்.
உன்னால் எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக் கொள் என்று புத்தர் கூறியுள்ளார்
ஆனால் தோர்கலின் அறிவை அவனது உணர்ச்சிகள் மறைத்து விடுகின்றன.
ஓரோபோரஸ் மோதிரத்தை பயன் படுத்தி தோர்கல் விதியை மாற்றினானா இல்லை நிதோக்கின் சூழ்ச்சி வலையில் சிக்கினானா. . .
என்ற கேள்வியுடன் நகரும் கதைக்கு. . .
அழகான ஓவியங்களும் அதற்கு தீட்டப் பட்ட வண்ணங்களும் நம் கண்களுக்கு விருந்து படைத்து கவர்ந்து இழுத்து செல்கிறது.
கதையில் வரும் ஸ்காரிலிங் என்னும் கூட்டத்தினரின் கட்டுமஸ்தான உடல் உறுதியும் சண்டையில் அவர்கள் காட்டும் வீரமும் தீரமும் வியக்க வைக்கிறது.
கதையில் கடைசியில் வரும் ட்விஸ்ட் எதிர் பாராதது. & செம்ம.
ஓவியம் 10/10
கதை 10/10
வண்ண கலவை 10/10
முதல் சுற்று தோர்கல் கதைகள் எப்படி போகப் போக விறுவிறுப்பு கூட்டியதோ அதே போல இரண்டாம் சுற்று கதையும் ஆவலைத் தூண்டுவதாக ஆரம்பித்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் நானும் தோர்கல் கதையின் அட்டை படத்தையும் அதன் தலைப்பையும் பார்த்து அதை வாங்காமல் கடந்து வந்தவன் தான். .
ஆனால் பின்னர் நண்பர் சரவண குமார் மூலம் கதையை படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் தோர்கலின் படிக்காத மற்ற ஆல்பங்களை எல்லாம் வாங்கி படித்து விட்டேன்.
தற்போது வந்துள்ளது இரண்டாம் சுற்று கதைகள். அதனால் இதுவரை முதல் சுற்று கதைகளை படிக்காத நண்பர்கள் வாங்கி படித்து பாருங்கள்.
அடுத்தடுத்த ஆல்பங்களை தொடர்ந்து படிக்கும் போது அந்த கதைகள் நம்மை ஈர்த்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது இந்த தோர்கல் கதை தொடர்.
விண்வெளி, காலப்பயணம், மாயாஜாலம், விசித்திர குள்ளர்கள், ராட்சத மிருகங்கள் போன்றவற்றோடு. . .
குடும்பத்தை நேசிக்கும் ஒரு ஒரு ஆணின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் சவால்கள், பிரிவு, துரோகம், காதல், பாசம், இதனுடன் அவன் செய்யும் சாகசங்களை எல்லாம் படித்து ரசிக்கலாம்.
அற்புதமான விமர்சனம் சிவா. Just brilliant
Deleteதரமான விமர்சனம்
Deleteசூப்பர் சிவா சகோ 👏👏👏
Deleteநன்றி நண்பர்களே
DeleteThe கிங்ஸ் ஸ்பெஷல்சூப்பர் ஆக உள்ளது.
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி நான்கு கதைகளுமே அருமை. சென்னை புத்தக விழா ஸ்பெசல். இந்த ஃபார்மெட் பக்கத்துக்கு 2 பேனல் படிக்க நன்றாக இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் சூப்பர் ஆக இருக்கும் சார். நன்றிகள்
ReplyDeleteஉங்கள் ஆசைபடியே நடக்கும் குமார்
Deleteவணக்கம் ஆசிரியரே. நமது ஆன்லைன் ஸ்டோரில் கிராபிக் நாவல் முன்பதிவு இரண்டு புத்தகமாக மட்டுமே வருகிறது. ஒரு புத்தகம் மட்டும் முன்பதிவு செய்ய வழி இல்லையா.
ReplyDelete