நண்பர்களே,
வணக்கம். அப்பப்போ எங்கயாச்சும் ஜென் தத்துவங்கள்னு எதையாச்சும் படிச்சுப் போட்டா, அதை உங்ககிட்டே பகுமானமா இறக்கி வைக்கவொரு வாய்ப்பு கிடைக்காதான்னு மண்டைக்குள்ளே குடைவது வழக்கம். இதோ - ஒரு சமீபத்தைய வாசிப்பை உங்க மடிகளிலே இறக்கி வைக்க லட்டு போல் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது - இந்தச் சென்னைப் புத்தக விழாவின் நிறைவோடு !!
ரீல்ஸ் போடும் பொருட்டு ஒரு நதியில் இறங்கி நிக்குறோம்னு கற்பனை பண்ணிக்கோங்களேன்..."அடியேன் தாமிரபரணி ஆத்திலே நிக்கிறேன்...அண்ணாத்தே கூவத்துக்குள்ளே நிக்குறேன்" என்று குரல் கொடுப்போம் தானே ? ஆனால் ஜென் தத்துவத்தின்படி அது பிழையாம் !! (ஊஹூம்...ரீல்ஸ் போடுறதோ, கூவத்துக்குள்ளாற இறங்குவதோ தப்புன்னு ஜென் சொல்லலே..!) நதியின் உள்ளே கால்பதித்த நொடியினில் நம்மைத் தொட்டுச் சென்ற நீரானது, ஆற்றின் ஓட்டத்தில் அதுக்குள்ளாற அரை மைல் கடந்து போயிருக்கும் எனும் போது - ஆற்றினை ஒரே இடத்தில நிலைகொண்டிருக்கும் ஒரு சமாச்சாரமாகவே வகைப்படுத்த முடியாதாம் ! அது நிரந்தரமாய், இடைவிடாது ஓடிக் கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வாம் ! ஆக "ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல !" என்கிறது அந்தத் தத்துவம் !
எப்புடி - நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? இனி ஹேப்பியா மேட்டருக்கு வர்றேன் !!
மாற்றங்கள் இல்லா விஷயங்கள் வாழ்க்கையில் almost எதுவுமே லேது தானே ?! So இந்த காமிக்ஸ் பயணத்திலும் பல மாற்றங்கள் தாமாகவும், சில மாற்றங்கள் நம்மாலும் நிகழ்ந்திடுவதை தவிர்க்க வழி ஏது ? 2012 முதலாய் மறுவருகை என்ற போது தரத்தில், தயாரிப்பில், தேர்வுகளில், காலங்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு மனமுவந்து உட்பட்டோம் - and அது ஒன்றே நம்மை இங்கு வரை இட்டு வந்துள்ளது. மாறிவரும் உங்களது ரசனைகளுக்கேற்ப நமது தேடல்களை மாற்றியமைத்துக் கொள்ளும் அவசியமானது இடைப்பட்ட காலங்களில் ஓசையின்றி நம்மிடையே நிலைகொண்டது ! மாயாவியையும், ஸ்பைடரையும் நம்பி ஆரம்பித்தவர்கள், நீங்கள் மண்டையில் தட்டும் முன்னமே லார்கோ, ஷெல்டன், தோர்கல், ரூபின், டேங்கோ, ஸ்டெர்ன், பவுன்சர் etc etc என மாற்றங்களைப் புகுத்திக் கொண்டோம் ! இதோ - ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடு கூட நமது வாசிப்பில் ஒரு freshness தொடர்கிறதெனில், அதற்கு இந்த அத்தியாவசிய மாற்றங்களே காரணம் எனலாம். But இந்த நொடிதனில் நமது விற்பனைகள் சார்ந்த பாணிகளில் ஒரு quantum மாற்றத்தினை கொணரும் அவசியம் தலைதூக்கி இருப்பதே இந்தக் குடியரசு தினப் பதிவின் சாரம் ! லீவு நாள் தான் என்பதால் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் நான் கொஞ்சம் அழுந்த விளக்க முற்படுவதை சகித்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன் !!
அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை (printrun) சார்ந்ததே ஒரு இதழின் விலை நிர்ணயம் என்பதை நாமறிவோம் ! So நமது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கிய நாளில் எவ்வளவு புக்ஸ் விற்கும் என்றோ ? இந்த வண்ணம், ஆர்ட்பேப்பர் போன்ற ஆடம்பரங்களை ஏற்றுக் கொள்வீர்களா ? என்றோ நமக்குத் தெரிந்திருக்கவில்லை ! கடைசியாய் black & white இதழ்களை நியூஸ்பிரிண்ட்டில் அச்சிட்டுக் கொண்டு 2007 ..2008 வாக்கில் மொக்கை போட்டுத் திரிந்த நாட்களில், நமது பிரிண்ட்ரன் 4000 பிரதிகள் & அவற்றுள் குறைந்தபட்சம் 1500 கையில் தேங்கி நிற்கும் ! முகவர்களிடமிருந்து 6 மாதங்கள் கழித்து இன்னும் கொஞ்சம் unsold returns ஆகத் திரும்பிடும். So யதார்த்தத்தில் அன்றைக்கு விற்றது தோராயமாய் 2000 பிரதிகளே ! And therefore அதே பழைய கணக்கினை துவக்கப் புள்ளியாகக் கொண்டு 2012 முதலாய் comeback செய்த சமயத்திலும் 2000 பிரதிகள் அச்சிட்டோம் !! ஒரு கடும் காமிக்ஸ் வறட்சிக்குப் பின்பாய் பஞ்சுமிட்டாயோடு ஆஜராகும் சாண்டா க்ளாஸைப் போல நாம் அந்நாட்களில் தென்பட்டிருப்போம் என்பதால் சும்மா தெறி சேல்ஸ் தான் !! இங்கே வலைப்பக்கமும் விற்பனைகளுக்கு செமத்தியான ஒத்தாசை செய்திட, டாப் கியரில் வண்டி ஓட்டமெடுத்து வந்தது ! கண்ணாலம் ஆன புச்சிலே தினப்படி "மானே..தேனே..பொன்மானே.."என்று லட்டர் போடுவதும், குழந்தை, குட்டிகள் ஆன பிற்பாடு "கொஞ்சம் பிசி பேபிம்மா !" என்று குறுந்தகவல் அனுப்புவதும் காலத்தின் கட்டாயங்கள் தானே ?! So அந்தத் துவக்கத்து பெரும் உத்வேகம்...euphoria சற்றே மட்டுப்பட்ட நாட்களில் விற்பனைகளும் மட்டுப்பட்டன, and அதன் நீட்சியாய் நமது பிரின்ட்ரன்னையும் குறைத்துக் கொண்டோம். கொரோனா காலகட்டங்களில் நிலவரம் கலவரமாகிட, கழுதை கட்டெறும்பே ஆகியும் போனது ! பிரிண்ட்ரன் குறையும் பொழுது விலைகள் ஏறுவது தவிர்க்க இயலா நிகழ்வென்பதால் படிப்படியாய் விலைகளும் ஏறிடவே செய்துள்ளன ! Cut to the present now !!
கொரோனாவுக்குப் பின்பான கடந்த சில ஆண்டுகளாகவே நாம் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையில் சரி பாதியினையே அந்தந்த மாதங்களில் விற்பனை செய்து வருகிறோம் ! சந்தாக்களில் ஒரு நம்பர் ; முகவர்கள் மார்க்கமாய் இன்னொரு நம்பர் ; ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடும் நண்பர்களின் வாயிலாய் ஒரு நம்பர் & இறுதியாய் புத்தக விழா விற்பனைகளில் மீதம் - என்பதே ஒரு இதழின் விற்பனை முழுமை காண வேண்டிய ரூட் ! Touch wood - உங்கள் அன்புகளின் புண்ணியத்தில் Route 1 (சந்தா) ; Route 2 (ஏஜெண்ட்ஸ்) & Route 3 (ஆன்லைன் வாடிக்கையாளர்கள்) சிக்கலின்றி ஓடி வருகின்றன ! ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே அந்த Route # 4 - அதாவது தமிழகப் புத்தக விழாக்களின் விற்பனைகளில் தலைதூக்கி வந்திருக்கும் very selective buying தான் விளிம்புநிலை நாயகர்களை நமக்கொரு தீரா பாரமாக்கியுள்ளது !!
விளக்கிச் சொல்கிறேனே :
இந்த மாதம் சோடா, டெக்ஸ் & ப்ளூகோட்ஸ் - என்றொரு கூட்டணி என்று வைத்துக் கொள்வோமே ?! வாசிக்கிறீர்களோ, இல்லியோ - by default சந்தாவில் உள்ள அனைவருக்கும் சோடாவும் விற்றிருக்கும், டெக்ஸும் போணியாகி இருக்கும் & ப்ளூகோட்ஸ் புக்ஸும் சேல்ஸ் ஆகியிருக்கும். முகவர்களோ, சோடாவில் கம்மியாய் ஆர்டர் செய்வார்கள், but still கொஞ்சமாகவாச்சும் வாங்கி விடுவார்கள். இதே கதையே - ஆன்லைனில் செலெக்ட் செய்து வாங்கிடும் நண்பர்களின் நிலவரத்திலும்! 'கார்ட்டூன் நமக்கு கொத்தில்லா !" என சிலர் அதைத் தவிர்த்து விடுவர் ! 'சோடா - நீ போடா' என்றும் சொல்லி விடுவர் ! So அங்கேயும் ஒரு கணிச சுணக்கமிருக்கும். இவ்விதம் மிஞ்சிடக்கூடிய கையிருப்பினை ஒவ்வொரு புத்தக விழாவிலும் வாங்கிடும் casual வாசகர்களே காலி செய்ய முன்னெல்லாம் உதவிடுவார்கள் ! ஆக, variety என்ற தேடலில் நான் அடிக்கும் குட்டிக்கர்ணங்களின் பலன்கள் பெரியளவிற்கு சேதாரத்தினை விளைவித்ததில்லை ! Of course - கமான்சே ; லேடி S போலான தொடர்கள் துவக்கம் முதலே கோணலான ரூட்டில் போனது காலத்தின் கோலமென்று மனதைத் தெற்றிக் கொண்டேன் ! ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சிறுநகர / பெருநகர விழாக்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே விற்பனை பாணியே தென்படுகிறது !! இந்த நாயகர்களின் ரசிகர்களை சங்கடம் கொள்ளச் செய்வது எனது நோக்கமே அல்ல ; வெற்றியோ-தோல்வியோ, அந்த நாயகப் பெருமக்களை இங்கு அறிமுகம் செய்தவனே நான் தான் எனும் போது அவர்களது முதல் ரசிகனாகவும் நானே இருப்பேன் என்பதில் ரகசியங்கள் ஏது ? Yet - நான் செல்லவிருக்கும் புள்ளி விபரங்கள் யதார்த்தத்தினை பறைசாற்றிட மாத்திரமே :
- பவுன்சர் : (சாபம் சுமந்த தங்கம்) - சென்னை விழாவில் : 7 பிரதிகள் & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்வை 19 பிரதிகள் !!
- சாகச வீரர் ரோஜர் (மஞ்சள் நிழல்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 4 பிரதிகள் !!
- சோடா (தப்பிச் சென்ற தேவதை) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 7 பிரதிகள் !!
- சிஸ்கோ (கலாஷ்னிகோவ் காதல்) - சென்னை விழாவில் : 3 பிரதிகள் & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 20 பிரதிகள் !!
- வஞ்சம் மறப்பதில்லை (ஜம்போ காமிக்ஸ்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 5 பிரதிகள் !!
இந்த ரீதியில் நான் அடுக்கிக் கொண்டே போகலாம் ; ஆனால் காதிலே கசியக்கூடிய தக்காளிச் சட்னியைக் கொண்டு அடையார் ஆனந்த பவனின் டிபன் வேளையையே சமாளித்து விடமுடியும் என்பதால் தொடராது நிறுத்திக் கொள்கிறேன் !
ஒவ்வொரு இதழிலும் குறைந்த பட்சமாய் 300 பிரதிகள் ஸ்டாக்கில் தேங்கி நிற்கிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஆண்டொன்றுக்கு நான்கும், ஏழுமாய் கையிருப்புகள் விற்றால் நம்ம கொள்ளுப் பேரப்பிள்ளைகள் காலம் வரைக்கும் இந்த ஸ்டாக் தாக்குப் புடிக்கும் !! இதில் இன்னொரு ஆகப் பெரிய கொடுமையும் உள்ளது !! சரி, ரைட்டு கையில் தேங்கியிருக்கும் புக்ஸை நஷ்டத்துக்குனாலும் விழாக்களுக்கு வரும் ஸ்கூல் பசங்களிடம் விற்பனை செய்திடலாம் ; அது எதிர்காலத்திற்கான முதலீடு என்று எடுத்தும் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் செயல்பட்டு வருகின்றோம் - since 2023. ஆனால்...ஆனால்...புள்ளைங்க கிட்டே smurfs விற்கலாம் ; கிளிப்டன் விற்கலாம், பென்னி விற்கலாம், லியனார்டோ தாத்தா விற்கலாம் - ஆனால் பவுன்சரை ??? சோடாவை ??? கிராபிக் நாவல் தாத்தாக்களை ??? அவர்களை எந்தவொரு நிலையிலும் பிள்ளைகளிடம் தர இயலாதெனும் போது - இவை ஈச்ச மரங்களின் கனிகளுக்கு ஈடான வணிகத்துக்கே இனி பயனாகிடும் என்பதே இந்த நொடியில் குமட்டில் குத்துகிறது !! சோடா போன்ற ஒரு noir தொடரினை நிரம்பவே ஆசைகளோடு, அளப்பரிய எதிர்பார்ப்புகளோடு கொணர்ந்தேன் ! But அது பெரியளவில் click ஆகிடவில்லை எனும் போது நோகிட இங்கே யாருமில்லை !! பலருக்கும் அது ரசிக்கவில்லை எனும் போது அதன் பொருட்டு யாரையுமே குறை சொல்லிட இயலாதே ?! Just need to accept it and move on !!
So இந்த நொடியினில் கையிருப்புகள் சார்ந்த ஒப்பாரியல்ல எனது பதிவின் நோக்கம் ! அவற்றை எவ்விதம் கையாள்வதென்பதை நிதானமாய் யோசித்துக் கொள்வோம் தான் ! மாறாக - இனி வரும் காலங்களில், விற்பனையின் செம Elite நாயகப் பெருமக்களைத் தாண்டிய இதர பார்ட்டிகளை எவ்விதம் கையாள்வதோ ? என்பதே எனது விசனம் ! மாயாவியாரும், வேதாளரும், டெக்ஸும், டின்டின்னும், லக்கி லூக்கும், லார்கோவும் இன்னும் சில முக்கியஸ்தர்களும் சிந்தும் வியர்வைகளின் பலனில் தோர்கல்களும், பவுன்சர்களும்,ஷெல்டன்களும் இனியும் தொடர்ந்தால் நம்ம கிட்டங்கியும் தாங்காது, நம்பள் கி புட்டாணியும் தாங்காது ! கடவுள் புண்ணியத்தில் சாத்தியப்பட்டிருக்கும் ஒரு அட்டகாச சென்னையின் விற்பனை இந்தாண்டினை ஓரளவிற்குக் கடந்திடும் வழியினைக் காட்டியுள்ளது. தற்போதைய திருப்பூர் விழாவும் சரி, தொடரவுள்ள சேலம், நெல்லை, போன்ற விழாக்களிலும் சரி, விற்பனைகளின் முனைப்பு இதே போல தொடர்ந்தால் - ஆண்டின் இறுதி வரைக்கும் ஜானி நீரோவின் பழைய ஜாக்கிகளை இரவல் கோரிடாமலே தப்பித்து விடுவேன் ! அல்லாங்காட்டி தலீவரின் பதுங்குகுழிப் பக்கமாய் வந்து ஒண்ணோ-ரெண்டோ பட்டாபட்டிகளை லவட்டியே தீர வேண்டியிருக்கும் !
இந்த நொடியினில் நம் முன்னே உள்ள options செம clear :
Option ஒன்று : மருவாதியா விற்பனை கண்டிடும் மகராசர்களோடு மட்டுமே இனி வண்டியினை ஓட்டிட வேணும் ! விஷப்பரீட்சைகள் ; குட்டிக்கரணங்கள் என்பனவற்றை பேப்பரில் மட்டுமே எழுதி வாசித்துக் கொண்டாக வேண்டும் !
Option இரண்டு : விற்பனையில் ஒத்தாசை அவசியமாகிடும் நாயகப் பெருமக்களை திடு திடுப்பென கைகழுவாது அவர்களோடும் பயணிக்க வேண்டுமெனில் - "சாம்பலின் சங்கீதம்" போல அவர்களது எல்லா இதழ்களுக்குமே முன்பதிவுக்கேற்ப மட்டுமே பிரிண்ட்ரன் & விலைகள் நிர்ணயிக்க வேண்டி வரும் ! இதோ ஒரு உதாரணமே காட்டுகிறேன் :

இதோ - நமது அணிவகுப்பின் மணிமகுடங்களில் சிலவாக நான் கருதிடும் நாயகப் பெருமக்களின் கதைகள் கைவசம் உள்ளன !! ஆனாலும் அவர்களைக் களமிறக்கும் தகிரியம் இப்போதில்லை என்னிடம் ! நார்மலான விலைகளில், நார்மலான எண்ணிக்கையில் இவர்களது ஆல்பங்களை அச்சிட்டால் - இன்பநிதியின் பேரன் அரசியலில் குதிக்கும் நாளிலும் கூட ஸ்டாக் இருக்கும் என்பதே காரணம் ! So ஒவ்வொரு க்வாட்டருக்கும் இது போல் கி.நா.க்களில் ; second-tier கார்ட்டூன்களில் ; தோர்கல் போன்ற fantasy களங்களில் ; நமது புதுத் தேடல்களில் ; அல்லது மறுபதிப்புகளில் இருந்து இரு கதைகளைத் தேர்வு செய்து short term முன்பதிவுகளுக்கு அறிவித்தால் - ஒரு குறைந்தபட்ச நம்பர் தேறிடும் சமயத்தில் அதற்கேற்ப அச்சிட்டுக் கொள்ளலாம். And இவற்றில் இம்மி கூட excess பிரதிகள் இருக்காத விதத்தில், "சாம்பலின் சங்கீதம்" இதழுக்குச் செய்தது போல் மிகச் சரியாகத் தயாரித்தோமெனில் ஸ்டாக் எகிறாது & கிட்டங்கியும் குலுங்காது ! But in the bargain - விலைகள் சர்வ நிச்சயமாய் கூடுதலாகவே இருக்க நேரிடும் !
"கொஞ்ச காலத்துக்கு இந்தக் கூத்துக்கள் எதுவுமே வாணாமே ? விக்கிற பொஸ்தவங்களை மட்டும் போட்டுப்புட்டு, நிம்மதியா இருப்போம் !" என்று சொன்னீர்களெனில் ஓகே பாஸ் ! என்று கேட்டுக் கொள்வேன் ! மாறாக -
"இறங்கி ஆடித்தான் பார்ப்போமே" - என்று சொல்லிடும் பட்சங்களில் நீங்கள் செய்திட வேண்டிய காரியங்கள் மூன்று இருக்கும் :
முதலாவது - வாங்குவதைத் தவறாது படிக்க நேரம் எடுத்துக் கொள்வது !! நீங்க டெக்ஸை நாலு நாள் முன்னேவோ, பின்னேவோ படிச்சாலும் அவரது அரண் இம்மியும் விரிசல் காணாது ! ஆனால் ஒரு மித வலு நாயகரையும், தலைமாட்டில் தேமே எனக் கிடத்தினால் அது அவரை சீக்கிரமே ICU-விற்கு இட்டுச் சென்று விடும் என்பதே அனுபவப்பாடம் !
இரண்டாவது - விலைகளில் இருக்கக்கூடிய jumps-களை பொறுத்துக்க வேண்டி வரும் !! ஓவர்னைட்டில் ஒபாமா ஆவது முழியாங்கண்ணனின் நோக்கமல்ல என்பதை நம்பிட வேண்டி வரும் ! சுணக்கங்களின்றி விற்பனையாகிடும் ஒரு ரெகுலர் நாயகரின் கலர் இதழ் மெயின் தடத்தினில் ரூ.135 விலையில் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் ; அதே சைசில், அதே பக்கங்களுடன் இந்த முன்பதிவு முயற்சிகளில் வரக்கூடிய ஒரு கி.நா. maybe ரூ.200 விலைக்கு வர நேரிடலாம் ! So க்ரூப்களில் கும்மியடிக்க முகாந்திரம் தேடும் பெருமக்கள் இத்தகையதொரு வாய்ப்பு கிட்டிடும் பட்சத்தில் செம குஷியாகி விடுவர் என்பதை யூகிக்க முடிகிறது ! But இத்தனை நாட்களாய் நாம் பழகி விட்டிருக்கும் variety-ஐ நிரந்தரமாய் காவு கொடுக்க வேணாமே ? என்ற உந்துதலே இந்த முன்மொழிவுக்கு என்னைத் தூண்டியுள்ளது ! And at this point of time - பகடிகளுமே போரடித்துப் போய்விட்டன ! கிண்டல்களின் புண்ணியத்தில் உரமேறுவதே எனது தனிப்பட்ட அனுபவமும் கூட !
மூன்றாவதான கோரிக்கை : இதில் opt செய்திடும் நண்பர்களின் மத்தியில் ரசனை சார்ந்த ஒற்றுமை அவசியமாகிடும் ! உதாரணத்துக்கு - எனக்கு "மேகி வேணாம்...தாத்தா மட்டும் போதும் !" என்றோ "தாத்தா வேணாம் - மேகி மட்டுமே மதி !" என்றோ pick & choose செய்திடக் கூடாது ! ஒவ்வொரு twin அறிவிப்பும் ஒரு குறிப்பிட்ட கதை பாணியினில் இருந்திடும் !
- "கார்ட்டூன் Twins" என அறிவிக்கும் பட்சத்தில் maybe ஒரு ரின்டின் கேன் + ஒரு மேக் & ஜாக் இருந்திடக்கூடும் !
- "Newbies Twins " என்று அறிவித்தால் - இரு இதழ்களுமே புது வரவுகளாக இருந்திடும் !
- "Classic Twins" என அறிவித்தால் - maybe இரட்டை வேட்டையரும், ஜான் மாஸ்டரும் இருக்கக் கூடும் !
So இந்த முயற்சிகள் எப்போது ; எவ்விதம் வந்தாலும் - இரட்டையர்களாகவே, இணைபிரியாதவைகளாகவே இருந்திடும் ! And ஆரம்பத்தில் ஒரு குறைந்தபட்ச நம்பருக்கென புக்கிங் செய்திட 45 நாட்களின் அவகாசங்கள் தந்து பார்ப்போம் ; maybe முன்பதிவுகள் அதை விடவும் துரிதமாகவே கிட்டிடுகின்றன எனும் பட்சத்தில் அந்த முன்பதிவுச் சாளரத்தினை 30 நாட்களாகக் குறைத்துக் கொள்வோம் !
So இதுவே கொஞ்ச காலமாய் என்னுள் குடியிருந்த சிந்தனைகளின் வெளிப்பாடு ! நடப்பாண்டில் சென்னை விழாவின் விற்பனைகளைப் பார்த்தான பின்னே இது குறித்தொரு இறுதித் தீர்மானத்துக்கு வரலாமென்று நினைத்திருந்தேன். And now that அந்த விபரங்கள் கைக்கு வந்து விட்டன எனும் போது - பந்தை உங்கள் திக்கில் போட்டாச்சு folks !! எவ்விதம் ஆடுவதென்ற தீர்மானம் இனி உங்கள் கைகளில் !
இங்கொரு குறிப்புமே : Just maybe இந்த விஷப்பரீட்சைகள் தேவையற்ற ஆணிகளே என்றே தீர்மானிக்கிறீர்கள் எனும் பட்சத்தில், ரெகுலர் தடத்தினில் வரக்கூடிய பந்தயக் குதிரைகளின் எண்ணிக்கைகளில் எவ்வித குறைகளும் இராது ! ஆண்டுக்கு 30 to 32 புக்ஸ் என்ற அந்த ரெகுலர் சந்தாத் தடத்து நம்பர்கள் தொடர்ந்திடவே செய்யும் ; maybe டெக்ஸுக்கு, லக்கி லூக்குக்கு, டின்டினுக்கு, சிக் பில்லுக்கு, டைலனுக்கு slots கூடுதலாய் ஒதுக்குவோம் ! So மெனுவில் variety மட்டுப்படுமே தவிர, சுவையில் பங்கமிராது !!
Bye all...see you around ! Have a great week going ahead !
P.S : Going ahead, இதுவொரு முக்கிய பதிவு என்பதால் - SAFE OK / RISK OK என்றேனும் ஏதாச்சுமொரு direction தந்திட நண்பர்கள் அனைவரும் முனைந்தால் நலமென்பேன் ! மௌனமே பெரும்பான்மையின் மொழியெனில் மருவாதியாய் safe option-ஐ தேர்வு செய்வதைத் தவிர்த்து நமக்கு வேறு மார்க்கமிராது !! Please do write 🙏
வந்துட்டேன்...
ReplyDeleteபல யுகம் கழித்து முதல் இடம்.
Deleteஅட சூப்பர் சகோ
Deleteவாழ்த்துகள் 💐💐💐
வாழ்த்துக்கள் நண்பரே
Delete💐💐💐💐💐💐
DeleteSuper
Deleteபாராட்டுக்கள் குமார்
DeleteHi
ReplyDeleteMe in😘💐🙏
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் 🙏🙏
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎம்மாம் பெரிய பதிவு. படிச்சுட்டு வருகிறேன்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteOption 2
ReplyDelete1 கோரிக்கை : உடன்படுகிறேன்
2.கோரிக்கை : உடன்படுகிறேன்
3.கோரிக்கை : உடன்படுகிறேன்
சார் இறங்கி ஆடித்தான் பார்ப்போமே...
ReplyDeleteசார் இந்த தனி தடம் காலத்தின் கட்டாயம். உங்களது அத்தனை ஆப்ஷன்களுக்கும் Yes.
ReplyDeleteமேகி+ தாத்தாக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.❤️
ReplyDeleteMe too சாரே
DeleteMe 3 சாரே..!
Deleteஇந்த Cartoon Twins எல்லாம் always welcome.
ReplyDeleteA big YES sir
ReplyDeleteYes to what sir - Option 1? Option 2?
DeleteOption 2😘😘
Deleteநீங்க இறங்கி ஆடுங்க சார் 😘👍
*தீ பரவட்டும்* 🔥🔥🔥
Option 2 sir
DeleteOption ஒன்று : - yes
ReplyDeleteOption 1 - Safe heroes சார்!
Deleteyes sir
DeleteYes
ReplyDeleteஇறங்கி ஆடிப் பார்த்திடலாம் சார்
தயார் 💪💪💪
Option 2 Sir
ReplyDeleteOption 2
ReplyDeleteமூன்று கோரிக்கைகளும் Yes
Risk OK Sir
Deleteகாமிக்ஸ் சிங்கங்கள் சிங்கிளாக வந்தாலும், கூட்டணியோடு களம் காண வந்தாலும் எனது ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு.
ReplyDeleteA big *YES* for option 2 Sir😘💐
ReplyDeleteI am waiting for *Twin Dhamakka*😘💐😄👍
இந்த காலத்து ஆறாம் வகுப்பு சிறார்கள் முதல் Naruto manga படிக்க ஆரம்பித்து விடுகின்றனர், அதில் Dark tone உள்ளது
ReplyDeleteபதின்ம வயது சிறார்களுக்கு "சோடா" ஓகே சார்
பவுன்சர் வேண்டாம்
//ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல !" என்கிறது அந்தத் தத்துவம் ! //
ReplyDelete👌👌👌
😍😍😍
Deleteகூவத்துலே இறங்கும் பட்சத்தில் இது நெசம் தான்...!
Deleteஅடுத்த தபா இறங்கும் போது கூவம் கூடுதல் கலீஜா இருக்கும்... அப்புறம் இவனும் அதே இவனா இருக்க மாட்டான் - தோல் வியாதிஸ்தனா மாறி இருப்பான்!
Yes to the pre booking sir. Price will not be an issue. It will save books in shelf. When people choose , pay and buy the books, they will read quickly for sure.
ReplyDeleteOption 2 accepted.sir
ReplyDeleteஎன்னுடைய ஓட்டு "Yes".
ReplyDeleteசா. ச போல முன்பதிவே சிறந்தது.
வெரைட்டி கதை விரும்பிகள் இதை மறுக்க மாட்டார்கள்.
விலையும் சற்று அதிகம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
Option 2 - Yes
ReplyDeleteSir - again a complicated thought process sir :-) Please keep it simple. We have the main track for popular heroes.
ReplyDeleteFor side-tracks:
a) Decide what you want to publish
b) Announce for limited print run
c) When you get enough bookings to break-even, just knock it off
No twin-packs, bun-packs, Just KISS sir - Keep It Simple and Straight !!
//Sir தப்பா எடுத்துக்காதீங்க, என்னால தத்தாவா படிக்க முடியல. ஆன மேகி ரொம்ப பிடிக்கும். நா என்ன பண்றது. Print in run ok thaan. அத தனி தனி பூக்க குடுத்துடூங்களே.//
Deleteசிம்பிளா Kiss ப்ளீஸ் சார்?
Simple logic sir... If I announce a pack of 6 books with a mix of genres, will end up mucking the deal...
Deleteஇப்போது "கார்ட்டூன் வேணாம்" என்போர் அந்த கார்ட்டூன் ட்வின்ஸ் பேக்கை ஸ்கிப் செய்தால் மட்டும் போதும். Will give them the liberty to choose their buys better...
Makes sense sir - but from what I have observed it is cartoons that have smaller interest group - others book 100% will read.
DeleteNot at all sir... I know becos I have a clear pattern on online sales preferences and bookfair purchases. There is a clear and selective bias...
DeleteSme don't buy graphic novels...some skip cartoons...some opt out of reprints.. One size doesn't fit them all sir... Never ever!
//Sir தப்பா எடுத்துக்காதீங்க, என்னால தத்தாவா படிக்க முடியல. ஆன மேகி ரொம்ப பிடிக்கும். நா என்ன பண்றது. Print in run ok thaan. அத தனி தனி பூக்க குடுத்துடூங்களே.//
DeleteFor me, it is the opposite. I prefer Thaatha and not maggie. :)
கார்ட்டூன் கதைகள் குறிப்பிட்ட முன் பதிவிற்கு வெளியிட முன்பே கேட்டிருந்தேன் சார்...
ReplyDeleteஎன்னளவில் நீங்கள் வெளியிடும் அனைத்து கதைகளையும் வாங்குவேன்... படிப்பேன்...
கதைகள் தொடர்ந்து வெளிவர, குறைந்த பிரின்ட் ரன்னில் முன் பதிவின் மூலம்
உங்கள் கைகளை கடிக்காத வகையில் வெளியிடுங்கள் சார்..
Option 2 - Yes
ReplyDelete🙋🏻♂️
ReplyDeleteபழைய சோறும், களியும்.. 😘
ReplyDeleteஉடம்புக்கு நல்லதுதான்.. 👍🥰
அதே சமயம்..
அத்தோவும், பாணி பூரியும் சாப்பிடலாம்.. 😘👍💐
நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்ல.. 😘😄
ஆ 1
ReplyDeleteகோ 1: கொஞ்சம் சிரமம். புத்தகங்கள் வருடத்திற்கு ஒருக்கா தான் பெறுவதால்.
கோ 2 & கோ 2: உடன்படுகிறேன்.
ஆ 1? ஷெரிஃப்? நம்ப முடியவில்லை..
Deleteஆப்ஷன் 2 க்குத்தானே கோரிக்கைகள் அப்ளிக்கபிள்..?
ரிஸ்க் ஓகே என்பது தான் என் சாய்ஸ். தவறா ஆ 1 ன்னு குறிப்பிட்டிருக்கேன்.
DeleteSir தப்பா எடுத்துக்காதீங்க, என்னால தத்தாவா படிக்க முடியல. ஆன மேகி ரொம்ப பிடிக்கும். நா என்ன பண்றது. Print in run ok thaan. அத தனி தனி பூக்க குடுத்துடூங்களே.
ReplyDeleteOption2 - Risk option
ReplyDelete49th
ReplyDelete// எப்புடி - நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? இனி ஹேப்பியா மேட்டருக்கு வர்றேன் !! // ROFL வாய் விட்டு சிரித்து விட்டேன் சார்.
ReplyDeleteஆமாங்க சகோ 😂😁
DeleteOption 2 sir. முன்பதிவு போய்ரலாம்.
ReplyDelete//இதோ - ஒரு சமீபத்தைய வாசிப்பை உங்க மடிகளிலே இறக்கி வைக்க லட்டு போல் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது - //
ReplyDeleteஇரண்டு இரண்டு லட்டுகளா தரேங்கிறீங்க
லட்டு சாப்பிட ரிஸ்க் ஓகே சந்தோசமா சாப்பிட தயார்
முன் பதிவு சரியான வழி. 60 சதவீதம் முன்னரே உறுதியாக விடும்.
ReplyDeleteRisk Ok Sir
ReplyDeleteOption 2 ...ana ungalukku ethu kattupadiyagutho athu ok sir
ReplyDeleteRisk ok
ReplyDeleteசார்
ReplyDeleteவணக்கம். ஆப்ஷன்-1 ஐ நான் தேர்வு செய்வேன். சந்தாவில் இருப்பினும் சில புத்தகங்களை மீள் வாசிப்பு செய்ய முடியவில்லை.
Safe is OK Sir.
ReplyDeleteHi Editor sir,
ReplyDeleteMy choice is option 2 sir
Option 2 risk okay
ReplyDeleteSafe ok sir
ReplyDeleteஇரண்டுக்குமே ஏதாவது விதத்தில் ஒரு பேலன்ஸ் தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம் சார். அது எங்களுக்கும் எப்போதுமே சாதகமாக இருந்து வருகிறது.. நன்றி. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅந்த "ஏதாவது " என்னவென்றும் சொல்லிட்டா என் பாடு லேசாகிடுமே சார்?!
DeleteOption-2...
ReplyDeleteRisk OK Sir...
விருதுநகர் இன்று இரவு பயணம். நிதானமாக படித்து எனது கருத்துக்களை பதிவிடுகிறேன் சார்.
ReplyDeleteநிதானமாகவே படிச்சிட்டு வாங்க சார்...
DeleteSafe ok
ReplyDeleteநீங்கள் முன் பதிவுக்காக புத்தகம் வெளியிடும் பட்சத்தில் நிச்சயம் நான் அதை முன்பதிவு செய்வேன். எனக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி. எனக்கு எப்படியாவது கார்ட்டூனும் கிராபிக் நாவலும் வந்தால் போதும். கார்ட்டூன் லிஸ்ட்ல மேகிய சேர்த்துட்டதால யாருக்கும் சந்தேகம் வராது
ReplyDeleteOption 2 OK sir..
ReplyDeletePrint run option. இல் புதியவைகளை களம் இறக்கலாம் சார்! இல்லையெனில் காமிக்ஸ்ரசனை தேங்கி விடக்கூடும்.
ReplyDeleteபதிவை முழுசாய் படிங்க சார்...
DeleteSir I come under purchasing all the books category. I’m fine with whatever options. Engalucku comics venum… anh 😀🤩😀
ReplyDeleteஎன்னை போல ஒருவர் ☺️
DeleteV ll try twin options sir .. RISK OK .. WITHOUT VARIETY IT ll GET BORING SIR WITHOUT ANY EXCITEMENT ..
ReplyDeleteSafe ok
ReplyDeleteதடுப்பாட்டம் ஆடலாம்.
இறங்கி அடிப்பதென்றால் யோசிக்க வேண்டும்.
Risk OK sir
ReplyDelete✨⭐
ReplyDeleteஇதுவரை வாக்கு எண்ணிக்கைகளின் நிலவரம்...
ReplyDeleteSafe OK. 06
Risk OK 18
மஹீ,
ReplyDeleteஉங்க ஓட்டு எதற்கு...!? எனக்கு புரியல...
Risk ok என்பதற்குங்க, சகோ
Deleteஉடனே படிக்க வாய்ப்பு அமையாது என்கிறார்
பிளாக் காஃபி குடிச்சிட்டு வந்து சொல்லுவார்.
DeleteRisk Ok என்பது தான்.
DeleteOption A sir
ReplyDeleteஅபிஷேக் ஷர்மா ஆட்டம் தான் நமக்கு ரொம்ப பிடிக்கும் சார்
ReplyDeleteSafe OK 07
ReplyDeleteRisk OK 18
Risk OK (Option 2)
ReplyDeleteOption 2 ok Sir
ReplyDeleteOPTION 1
ReplyDeleteWarm welcome sir.
Delete// "ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல ! //
ReplyDeleteசூப்பராக இருக்கிறது!
வேலைக்கு வந்த பிறகு நானும் எனது நண்பனும் அடிக்கடி சொல்லிக்கொள்வது, மனிதன் ரோபோ கிடையாது. எந்த ஒரு விஷயத்தை மீண்டும் செய்யும் பொழுது அதே மாதிரி மீண்டும் செய்வான் என்று எதிர்பார்க்க கூடாது.
ஓடி போய் விடுடா பரணி 😊
😂😂😂
Deleteஆபீசிலே ஜென் தத்துவத்தை அவிழ்த்து விடுங்க சார் - தெறிச்சு ஓடிடுவாங்க 💪
Deleteபல கம்பெனிகளில் அவங்களே வேலையில் இருந்து பலரை தெறிக்க விடுறாங்க சார் கடந்த ஆறு மாதங்களாக. அதனால் நோ ஜென் தத்துவம் இன் ஆபீஸ் சாப்ட்☺️
DeleteRisk ok sir.
ReplyDeleteரிஸ்க் எடுக்க தயங்கினால் பதில் சுவையாக டெக்ஸ்..லக்கி ...சிக்பில் கூடுவார்கள் என்பதால் எனது ஆப்ஷன் SAFE OK என்பதே சார்....!
ReplyDeleteஎன்ன தலைவரே உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது எல்லாம் பிஸ்கோத் சாப்பிடுவது போல நினைத்தேன்
Deleteரிஸ்க் எடுக்கலைன்னா லட்டு கூடுதல் எனும் பொழுது எனது பார்வை வேறாகிறது பரணி சார்...:-)
Deleteசரிங்க தல
Delete// நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? //
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும். ரொம்ப நாள் ஆசை போல் தெரிகிறது சார்.
நேற்று கமல் பட வீடியோ ஏதாவது பார்த்தீங்களா 🤔
சார் நீண்ட நாட்கள் கழித்து பதிவு வந்த சில மணி துளிகளில் நூறை கடக்கும் கமெண்ட்ஸ்....:-)
ReplyDeleteஉங்க பட்டாப்பட்டி செண்டிமெண்ட் போல தலீவரே 💪
Deleteஅதே அதே தலீவரே
Deleteஆமாம் தலைவரே. எல்லாம் அந்த ஒற்றை வேபிள்ளை மகிமை தலைவரே
Deleteபுது கட்சியின் மகிமை...:-)
Deleteதலீவரே 9 மணிக்கு முழிச்சு கமெண்ட் போடுறீங்க
Deleteபதிவை 8.50 க்கு பாத்துட்டேன் சகோ...பத்து நிமிஷம் தாண்டிருந்தா ஆழ்கடல் உறக்கம்...:-)
Deleteசூப்பர்
Deleteபுதுகட்சி வாழ்க
அப்ப இன்னிக்கு நீங்க நைட் ஷிப்ட் இல்லையா ☺️
Deleteஅரசியல் வேண்டாம் தல 😀
Delete:-)))
DeleteSafe OK 09
ReplyDeleteRisk OK 21
இருக்கும் மேடையில் இருந்தே கட்சி மாறுகிற வடிவேல் மாதிரி நம்ம நிலமை ஆயிற கூடாது...:-(
DeleteSafe ok... பிடித்த ஹீரோக்கள் அதிகம் வருவதோடு, வாங்கியதை படித்தோம் என்ற சந்தோஷத்தோடு உங்கள் குடோனை நிரப்பாமல் உங்கள் மனதையும் பாக்கெட்டை நிரப்பினால் அதுவே ஒரு சந்தோசம் தானே.. அதனால் எனது போட்டி இப்போதைக்கு safe ok🙏🌹🌹
ReplyDeleteஎனது ஓட்டு safe
ReplyDeleteNo sir. Price is very high. Option 1. Safe. Increase the books count in santha. Decrease the limited prints
ReplyDelete1.அபிஷேக் சர்மா
ReplyDelete2.இஷான் கிஷன்
3.சூர்யகுமார் யாதவ்
இவர்களில் யாராவது போல் இறங்கி ஆடுங்க ஆசிரியரே
// கமான்சே ; லேடி S போலான தொடர்கள் துவக்கம் முதலே கோணலான ரூட்டில் போனது காலத்தின் கோலமென்று மனதைத் தெற்றிக் கொண்டேன் ! //
ReplyDelete😒😒😒😒😒
// வஞ்சம் மறப்பதில்லை (ஜம்போ காமிக்ஸ்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 5 பிரதிகள் !! //
ReplyDeleteஇளம் டெக்ஸ் கதையா சார்?
Graphic நாவல்
Deleteஅச்சச்சோ - இல்லே சார் ! அதுவொரு ஒன்ஷாட் !
Deleteஓகே சார். நன்றி குமார்.
Delete// காதிலே கசியக்கூடிய தக்காளிச் சட்னியைக் கொண்டு அடையார் ஆனந்த பவனின் டிபன் வேளையையே சமாளித்து விடமுடியும் என்பதால் தொடராது நிறுத்திக் கொள்கிறேன் ! //
ReplyDeleteசிரிப்பது போல தெரிந்தாலும் அதன் பின்னால் உள்ள வலி புரிகிறது சார்.
// முதலாவது - வாங்குவதைத் தவறாது படிக்க நேரம் எடுத்துக் கொள்வது !! நீங்க டெக்ஸை நாலு நாள் முன்னேவோ, பின்னேவோ படிச்சாலும் அவரது அரண் இம்மியும் விரிசல் காணாது ! ஆனால் ஒரு மித வலு நாயகரையும், தலைமாட்டில் தேமே எனக் கிடத்தினால் அது அவரை சீக்கிரமே ICU-விற்கு இட்டுச் சென்று விடும் என்பதே அனுபவப்பாடம் ! //
ReplyDeleteஅதே சமயம் படித்த கதைகளை பற்றி ஒரு வரியாவது விமர்சனம் எழுதுவது மிக மிக முக்கியம் சார்.
சிலருக்கு மௌனமே ஆதர்ஷ மொழியாகிப் போகுதே சார் - யாரை என்ன சொல்வது ?
DeleteRISK OK - double okay.
ReplyDeleteஇந்த வருட சந்தாவில் சாதிக்கும் நாயகர்களுக்கு முன்னுரிமை என்பதை இப்போதே கொண்டு வந்து விடலாமே சார். அடுத்த வருடம் வரை நீங்கள் காத்துகொண்டு இருக்க வேண்டாமே சார்.
பஸ் வருவதற்குள் முழு பதிவையும் படித்து விட்டேன்.
ReplyDeleteஅட்டகாசமான சிந்தனை. என்றும் உங்களுடன் இருப்போம்.
Option 2 Sir, அருமையான தொலைநோக்கு சிந்தனை, இப்போதாவது விழித்துக் கொண்டு முன் எடுத்துச் செல்வது பற்றி மகிழ்ச்சி.
ReplyDeleteஅதற்கென்று நீண்ட தொடர் வரிசைகளான ஆல்ஃபா, சிஸ்கோ & IRS போன்றவற்றை இறக்கிடாதீங்கோ.....? இதற்கு செட் ஆகாது..
Risk ok
ReplyDelete// ராபின் 2.0 கூட இந்த ‘ஓகே’ லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்திருப்பதில்! சர்வ நிச்சயமாய் இவருக்கு முந்தைய ‘டாப்’ பட்டியலில் இடம் கிட்டியிருக்க வேண்டும் தான்! ஆனால் ஏனோ புரியலை - அந்த அளவிற்கான அதிரடி வரவேற்பில்லை! //
ReplyDeleteஇந்த தொடர் நன்றாக உள்ளது. அதுவும் கடந்த வருடம் வந்த மூன்று பாக கதை ரொம்பவே பிடித்திருந்தது. இவருக்கும் இந்த நிலையா.
மாட்டின் கதைகள் முன்பு போல எனக்கு பிடிக்கவில்லை, கதைகள் அந்த அளவு என்னை ஈர்க்க வில்லை. கடந்த ரெண்டு வருடங்களாக வந்த இவரின் கதைகளை பாதி பக்கம்களுக்கு மேல் படிக்காமல் வைத்துள்ளேன் சார்.😒
SAFE OK சார்
ReplyDeleteநீங்கள் எது வெளியிட்டாலும் எப்போதும் என் ஆதரவு உண்டு. ஆனால், எனக்கும் நமது ஷெரிப் மாதிரி புத்தகங்கள் தாமதமாகத்தான் கிடைக்கிறது. படிப்பது Tex மட்டுமே. நேரமின்மை என்று சொல்வது சரியாக இருக்காது. அனைத்து கதைகளையும் இந்த வருடம் படிக்க முயற்சி செய்கிறேன்.
விதி எழுதிய வெற்றி வரிகள் : டெக்ஸ் கதையில் மற்றுமொரு ஹிட் கதை. மிக நன்று. (அந்த அல்வா வசனம் மட்டும் சரியாக ஒட்டவில்லை)
Risk OK sir
ReplyDeleteRisk ok. I will skip stories like rin tin can from reading but I will purchase them to support you
ReplyDeletePost More content youtube also sir
ReplyDeleteOption 1
ReplyDeleteரிஸ்க் அல்லாம் நம்பில்கி ரோஸ் மில்க் குடிக்கிற மாறி ய்ங் sir...போட்டு வுடுங்க sir... 😄😄❤️👍👍🙏
ReplyDelete😀😀😀😀
DeleteRISK OK
ReplyDeleteRisk option ok. I want the company to do well in the long run. So whichever path is better for you financially, I'm in.
ReplyDeleteAnd letting the market choose the product is a wise idea, even though one may not like the results (i.e. what the market prefers).
I personally prefer comics and/or storylines from the yesteryears for the nostalgic warmth they offer. A sprinkle of modern stories and new arena are fine though.
"RISK OK"
ReplyDeleteஎங்கள் காமிக்ஸ் ஆவல்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் & ஆர்வத்தை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்து, முடிந்தவரை உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம்.
Please do go ahead sir. Although new comic books currently reach only a small and select audience in Tamil Nadu, your extraordinary efforts to curate and bring together both renowned and emerging comic books from across the world are truly commendable. The passion, dedication, and perseverance you show in nurturing this niche readership deserve genuine appreciation and respect sir.
Well said sir 😊
Delete🙏
DeleteOption 2
ReplyDeleteSAFE OK.
ReplyDeleteFor 2026, we don't try these play. Instead of this, introduce some new graphics novels.
🥹🥹 பதிவை முழுசா படிங்க சார் ; நீங்க அறிமுகப்படுத்தக் கோரும் புது கி.நா. க்கள் தான் maximum risk சார்ந்தவை!
Deleteசகோதரர்களே
ReplyDeleteதங்களின் கருத்துகளை சொல்லிட உரிமை உண்டு
அதற்கு முன்னர் இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன,
நம்மளுக்கு விருப்பமான கிராபிக் நாவல், கார்ட்டூன் மற்றும் குறைவாக ரசிக்க படுகின்ற இன்ன பிற காமிக்ஸ் கள் வேண்டுமெனில் வாசகர்களாகிய நாம் ரிஸ்க் எடுக்க தயாரா அல்லது நமது ரெகுலர் ஹிட்ஸ்களே போதுமா
கதைகளை படித்து நமது கருத்து பதிவிடுதல் முக்கியம்
ReplyDeleteஇரண்டு வருடம் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்காமல் இருந்து மீண்டும் வாங்க துவங்கிய போது முதலில் வாங்கியது டெக்ஸ் கதைகளே, விற்று தீர்ந்து விடும் கிடைக்காது என்ற எண்ணத்தில், ப்ளஸ் என் அம்மாவின் கோரிக்கை டெக்ஸ் & டைகர் கதைகள் வேண்டும் என்று இருந்ததால்
கிநா-க்கள் மற்றும் புதிய புத்தகங்கள் வாங்கும் போது விமர்சனங்களை துணை நாடினேன்,
ரிஸ்க் எடுக்க கொஞ்சம் தயக்கம், ஏனென்றால் மாதம் மாதம் வாங்கி கொண்டிருந்த போது தெரியவில்லை, அப்போது ஒட்டு மொத்தமாய் வாங்கும்போது பணம் + அம்மாவின் திட்டு, அவர்க்கும் பிடிக்க வேண்டும், கிநா-க்களை ரசிப்பவர் தான், ஆனால் எல்லாமே பிடிப்பதில்லை
முதலில் தாத்தாஸ் + டெட்வுட் டிக் சரியான விமர்சனங்கள் கிட்டவில்லை
நான் சரியாக தேடவில்லை என்றி கூட சொல்லலாம்
பின்னர் சகோதரர் தோர்கல் சரஙணகுமார் தாத்தாஸ் மற்றும் டெட்வுட் டிக் கதைகளை ரசித்து தனக்கு பிடித்ததை எழுதி இருந்தார்
ஒரு புத்தகத்தை வாங்கினேன், அம்மாவிற்கும் பிடித்திருந்தது, ஆக மற்ற புத்தகங்களேயும் வாங்கினேன்
கதை + சித்திரம் + வர்ணங்கள் + வசனங்கள் ரொம்ப ரசித்து படித்தேன்
அதே போன்று டெட்வுட் டிக், சித்திரங்கள், கதை & வசனங்கள் செம
இறுதியில் கண் கலங்கவும் வைத்த கதை
பிடித்த கதைகளில் பிடித்த விசயங்களை சொல்வதும் முக்கியம்
கதைகளில் பிடிக்காத விசயத்ததையும் சொல்லிடலாம், மொத்தமாய் இந்த கதை நல்லா இல்லை என்பதை விட எது பிடிக்கவில்லை சொல்லலாம்.
உதாரணத்திற்கு
கதை நன்றாக சித்திரங்கள் பிடிக்காமல் போகலாம்,
கதையும் சித்திரமும் பிடித்திருக்கும், ஆனால் எதோ ஒரு பகுதி பிடிக்காமல் போகலாம்
ஏனெனில் கதைத் தேர்வில் இவை உதவிடலாம்
எஸ் ரம்யா
DeleteRisk ok
ReplyDeleteRisk OK
ReplyDeleteSir I'm ok with advance booking .
ReplyDeleteNow you have clear picture of sales in the book fairs, its high time to look for other options in the book fairs.
RISK OK SIR
ReplyDeleteNo other publisher has introduced as many new charaters as Lion-Muthu and i wish you continue that sir.
Limited print run is an excellent idea to reduce your burden and tryout new stories as well.
சொப்பன சுந்தரி &
ReplyDeleteஅழகு ராஜாக்கள்
கூட்டணி எனக்கு ok sir
ரிஸ்க் ஒகே என்பதே என் விருப்பம்.
ReplyDeleteஎனக்கு தெரிந்து தமிழில் தான் அதிக காமிக்ஸ்கள் வந்துள்ளன.
இதில் நீண்ட நெடிய நாட்கள் இன்னும் உயிப்போடு லயன் முத்து மட்டுமே. இதற்கு காரணங்கள்:
1. லயன் ஆசிரியரின் தணியாத காமிக்ஸ் தாகம்
2. பல்வேறு வகை ( கார்ட்டூன், காமடி, கௌபாய், ஹாரர்...)
3. வித்தியாசமான தேடல் ( தேவ ரகசியம் தேடலுக்கல்ல, பிஸ்டலுக்கு பிரியா விடை, பயணம், சாம்பலின் சங்கீதம்.. )
வாழ்க லயன் முத்து ஆசிரியர்..
வளர்க அவர்தம் காமிக்ஸ் முயற்சி
சிறப்பு நண்பரே
Deleteஉங்களது கிடங்கு போல வீட்டிலும் பிரச்சனை தான் 2012 பின் வாங்கிய புத்தகங்கள் எண்ணிக்கை காரணமாக இனி வீட்டில் வைக்கவும் இடம் இல்லை இது எனது பெர்சனல் பிராப்ளம்
ReplyDeleteஎனது ஓட்டு safe தான். நீங்கள் இரண்டாக போட்டாலும் பிக் and choose thaan எனக்கு சரி பட்டு வரும். மேகி வேண்டாம் தாத்தா ஓகே அதுபோல
எடிட்டர் சார். ரிஸ்க் ஓகே தான். ஆனாலும் ஆசிரியர் மற்றும் வாசகர் இருவர் கையையும் கடிக்காத வகையில் இருந்தால் போதுமானது. மேலும் கிட்டங்கியில் துயிலும் புத்தகங்களை புத்தக விழாக்களில் பல பதிப்பகங்கள் கையாளும் பாதி விலைக்கு தள்ளும் முயற்சி கை கொடுக்குமா என்று பார்க்கவும். பல பதிப்பகங்களில் நான் இம்முறையில் நிறைய விற்று தள்ளுவதை பார்த்திருப்பதால் கேட்கிறேன். வருத்தம் தரும் விஷயம் என்றாலும் கையிருப்பு குறைவதால் பாரம் குறைந்தால் சரிதான்.
ReplyDelete@ALL : உத்தேசமாய் 40 நண்பர்கள் RISK OK என்றும் ; 15 நண்பர்கள் SAFE OK என்றும் சொல்லியுள்ளனர். மௌனமே மீத நண்பர்களின் பதிலாக இருக்கிறது.
ReplyDeleteSo பிப்ரவரியின் டெக்ஸ் இதழில் இந்தப் பதிவினை பிரிண்ட் செய்திட உள்ளோம் - to reach out to readers beyond the blog too! அவர்களிடமிருந்து ஏதேனும் பதில் வருகிறதா? என்றும் பார்க்கலாம்.
எது எப்படியானாலும் இந்த கி. நா. Twins package (மேகி + தாத்தா ) மட்டும் அறிவித்து, முயற்சித்துப் பார்ப்போம் - ஜெயமெனில் தொடருவோம் 👍... இல்லையேல் safe ஆட்டம் ஆடத் தீர்மானிக்க வேண்டியது தான்!
🤝🏽🤝🏽🤝🏽👍👍
DeleteGood plan Sir. Hoping for the Best.
Deleteஆனாலும் மௌன நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள முடியலியே என்ற ஆதங்கம் தொடரவே செய்கிறது!
Deleteஇன்னும் சொல்லப் போனால் அரட்டைகளில் ஜாலியாய் பங்கேற்போர் கூட இன்னும் பதில் சொல்லக் காணோம் தான்.... 2027 முதல் Safe ஆட்டம் தான் லோடிங் போலும் 🥹🥹
// பிப்ரவரியின் டெக்ஸ் இதழில் இந்தப் பதிவினை பிரிண்ட் செய்திட உள்ளோம் - to reach out to readers beyond the blog too! அவர்களிடமிருந்து ஏதேனும் பதில் வருகிறதா? என்றும் பார்க்கலாம். //
Deleteநல்ல ஐடியா. அனைவரின் பதிலை அறிந்து கொள்ள விரும்புவது.
🙏🏻
// இன்னும் சொல்லப் போனால் அரட்டைகளில் ஜாலியாய் பங்கேற்போர் கூட இன்னும் பதில் சொல்லக் காணோம் தான்.... //
Delete😒😒😒😒😒
Safe okன்னு சொல்றாரு ஒருத்தர் ஆனா கி.நா வேண்டும்னும் கேக்கிறாரு
DeleteRisk okன்னு சொல்றவர் nostalgicகாக தான் புத்தகமே வாங்கிறேன்னு சொல்றாரு
Confusion
சார் மேகி + தாத்தாஸ் இறக்கி விடுங்க
Let the results speak themselves..
One final risk
இரண்டாவது ஆப்சன் எப்பவுமே நலம் சார்...அடிச்சு ஆடுவோம்
ReplyDelete//இன்னும் சொல்லப் போனால் அரட்டைகளில் ஜாலியாய் பங்கேற்போர் கூட இன்னும் பதில் சொல்லக் காணோம் தான்.... 2027 முதல் Safe ஆட்டம் தான் லோடிங் போலும் //
ReplyDeleteஇதுதான் சரியாக இருக்கும் என கருதுகிறேன்
Safe ok sir
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteதற்போதைய விற்பனை நிலவரங்களின் படி, தேக்கம் கண்டுள்ள கதை வகைகளை - கூடுதல் விலையில், முன்பதிவுகள் ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கையை எட்டினால் மட்டுமே வெளியிடப் போகும் ஒரு முயற்சிக்கு - “RISK OK” என்று பெயரிட்டது ஏனென்று புரியவில்லை சார்! விலையும், கதை வகையும் ஓகே என்றால் முன்பதிவு செய்யப் போகிறார்கள், இல்லை என்றால் தவிர்த்து விடப் போகிறார்கள். நீங்களும் முன்பதிவு செய்யாதவர்களுக்கு விற்கப் போவதில்லை! இதில் வாசகர்களுக்கோ, உங்களுக்கோ என்ன ரிஸ்க்?! தவிர, இவை போன்ற முன்பதிவு முயற்சிகள் நமக்குப் புதிதும் அல்ல!
அப்படிப்பட்ட கதைகளை வழக்கமான எண்ணிக்கையில், வழக்கமான விலைக்கு வெளியிட்டு, இருப்பில் வைத்திருந்தால் தான் உங்களுக்கு ரிஸ்க்! ஆக, அப்படித் தொடர்வதில் உள்ள "RISK OK"-வா, இல்லை விற்கக்கூடிய கதைகளை மட்டும் குறைந்த விலையில் வெளியிடும் முடிவில் உள்ள "SAFE OK"-வா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!
//So இந்த முயற்சிகள் எப்போது ; எவ்விதம் வந்தாலும் - இரட்டையர்களாகவே, இணைபிரியாதவைகளாகவே இருந்திடும் !//
கூடுதல் விலையிலான லிமிடட் பிரிண்ட் ரன் கதைகளை ஜோடியாக வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஏன் என்று புரியவில்லை சார்! வெவ்வேறு வகைக் கதைகளின் முன்பதிவுகளை, தனித்தனியே அறிவிக்கலாம். முன்பதிவு எண்ணிக்கையை தொடும் கதைகளை மட்டும் தனித்தனியே வெளியிடலாம் - கதைகளை தேர்ந்தேடுத்து வாங்க விரும்பும் வாசகர்களுக்கும் அது தான் உதவியாக இருக்கும்! மற்றபடி வெளியாகும் அனைத்து காமிக்ஸ்களையும் நான் வாங்கி விடுவேன் என்பதால், தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் சிக்கல் இல்லை!
எப்பூடி - உங்கள மெரியே தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா?! :-D
Deleteஅப்படிப் பார்த்தால் தாத்தாக்கள் கதை வரவே முடியாது காசோ.
மேகியை வாங்குபவர்கள் தாத்தாக்களையும் சேர்த்து வாங்க வேண்டும். மேகி காரிசனுக்கு ஓரளவுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு.
மேகி வாங்க வேண்டுமென்றால் தாத்தாவையும் வாங்க வேண்டும் என்பது வாசகர்களுக்கான பைனான்சியல் ரிஸ்க்.
இரண்டு கதைகளை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிண்ட் ரன்னில் வெளியிடுவதால் அது தயாரிப்பு செலவுகளை குறைத்து விலை நிர்ணயம் மட்டுப்பட ஏதுவாகும். தவிர ஒவ்வொரு கதைக்கும் ஒன்றரை மாத கால அவகாசம் பொறுமை இழக்க வைக்கலாம்.
200 பிரதிகள் பிரிண்ட் என எதிர்பார்த்து 170 முன்பதிவுகள் கிட்டுமாயின் அதை எடிட்டர் சாரால் தள்ளிவிட முடியாது. அந்த வகையில் அவருக்கும் இது ஒரு பைனான்சியல் ரிஸ்க்தான்.
ரிண் டின் கேன் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால் மேக்& ஜாக்
வேண்டும் என நினைப்போருக்கும் இது பொருந்தும். கார்ட்டூன் வேண்டும் என்ற நினைக்கும் ரசிகர்களை இது போல் முயற்சிகள் திருப்தி படுத்த இயலும்.
இரும்பு கை மாயாவி பிளஸ் தாத்தாக்கள் என எடிட்டர் சார் முயற்சி செய்தாலும் ஆச்சரியப்படக்கூடாது. 😂
க்ளாஸிக் + காண்டெம்ப்ரரி CC TWIN
என எடிட்டர் சார் வெளியிட்டாலும் தாத்தாவுக்காகவே நான் அதை வாங்க முயற்சிப்பேன்.
தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் வரவில்லை என எடிட்டர் சார் பதிவு மூலம் அறிந்தபோது நான் எழுதிய பதிவு இது.
//தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் வரத் தேவையில்லை தான்.
இரும்பினால் ஆன கை தேவை இல்லை ஐயா. ஒரு அலுமினிய சுண்டு விரலாவது இந்த தாத்தாக்களிடம் உண்டா?
தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் வரத் தேவையில்லை தான்
வலை துப்பாக்கி தேவையில்லை. அட்லீஸ்ட் ஒரு தீபாவளி துப்பாக்கியாவது இந்த தாத்தாக் களிடம் உண்டா? முதல் பாகத்தில் ஒரு டபுள் பாரல் கன்னை தூக்கிக் கொண்டு ஓடியதோடு சரி.
தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் வரத் தேவை இல்லை தான்.
சாதாரண RCS SMS க்கு ததிகனத்தோம் போடும் தாத்தாக்களிடம் ஸ்பைடர் போல் சிரசாசன எஸ்எம்எஸ் எதிர்பார்க்க முடியுமா?
தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் வரத் தேவை இல்லை தான்
ஒலி மாசை தடுப்பதற்காக farting ஐ ஆயுதமாக பயன்படுத்தும் தாத்தாக்களினால் ஸ்பைடர் கதையில் வருவது போல் ஒரு பெரு நகரத்தையே கயிறு கட்டி இழுத்துச் செல்ல முடியுமா?
தாத்தாக்கள் ரெகுலர் சந்தாவில் தேவையில்லை தான்.
முதலாளித்துவ மோசடிகள், அழிந்து வரும் வனவிலங்குகள் பாதுகாப்பு, ரசாயனத்தால் விளையும் உணவுப் பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு, மாற்றுக் கள அரசியல், உணவு கலப்படம், தேனீக்கள் மூலம் இயற்கை உணவு பற்றிய வழிகாட்டுதல், ஐரோப்பிய களம் என்றாலும் உலகம் முழுவதற்கும் பொதுவான கருத்துப் பின்புலம் போன்ற மூலை யில் இருக்கும் மதியழகன் டீக்கடையின் பெஞ்சில் அமர்ந்து பேசுவதற்கு கூட அருகதை இல்லாத விஷயங்களை அடி நீரோட்டமாக கொண்டு நையாண்டி பாணியில் செல்லும் தாத்தாக்களின் கதை ஸ்பைடர் இன் ஒரு விகார சிரிப்புக்கு இணையாகுமா?
தாத்தாக்கள் கதை ரெகுலர் சந்தாவில் வரத் தேவை இல்லை தான்.
ஆர்ச்சியை எடைக்கு போட்டால் பேரிச்சம்பழம் ஆவது தேறும்.அப்பா பெயர் தெரியாமல் வளரும் ஸோஃபியின் குழந்தை, அப்பாக்கள் தேவையில்லாமலே உடலுறவு அற்ற பாலின பெருக்கம் செய்யும் ஒரு வெட்டுக்கிளி வகை(parthenogenesis ) இரண்டையும் நக்கலான ஒப்புமை செய்து அறிவார்ந்த விஷயங்களையும் இடக்கு மடக்காக சொல்லி செல்லும் பாணி
ஒரு வேப்பம்பழத்துக்கு கூட போனியாகாதுதான். ( வாழைப்பழம் கூட parthenogenic fruit தான்).
தாத்தாக்கள் கதை ரெகுலர் சந்தாவில் வரத் தேவையில்லை தான்.///
இதுபோன்ற வாசகர்களை திருப்தி படுத்த எடிட்டர் சார் எடுக்கும் முயற்சி என கருதிக் கொள்ளவும்.
இரட்டை வேட்டையர் போன்ற கிளாசிக் பிரியர்களுக்காகவும் இது போன்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன.
@செனா. அனா:
Delete//இரண்டு கதைகளை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிண்ட் ரன்னில் வெளியிடுவதால் அது தயாரிப்பு செலவுகளை குறைத்து//
ஒரே கதையை 500 பிரதிகள் அச்சிட்டால் தயாரிப்புச் செலவுகள் குறையலாம்; இரு வேறு கதைகளை, தலா 250 பிரதிகள் வெளியிட்டால் எப்படிக் குறையும் என்று புரியவில்லை.
முன்பதிவு எண்ணிக்கையை தனியே எட்ட இயலாத கதைகளுக்கு இந்த இரட்டை முன்பதிவு முறை சாதகமாக இருக்கும் தான் - அந்த வகையில் வாங்குபவர்களுக்கு ரிஸ்க் தான்! ஆனால், இரண்டில் ஒன்று பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், இரண்டையுமே தவிர்த்து விடக்கூடிய ரிஸ்க்கும் உள்ளது!
மற்றபடி, உங்களையும் இப்படி மாங்கு மாங்கென்று மாவு பிசைய வைத்தமைக்கு வருந்துகிறேன் நண்பரே! :-D
Delete///ஒரே கதையை 500 பிரதிகள் அச்சிட்டால் தயாரிப்புச் செலவுகள் குறையலாம்; இரு வேறு கதைகளை, தலா 250 பிரதிகள் வெளியிட்டால் எப்படிக் குறையும் என்று புரியவில்லை.//
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் வெவ்வேறு நிற கவர்களில் 10 சோப்புகளை வெளியிடுவார்கள். ஏதாவது ரெண்டு தான் கிளிக் ஆகும் மற்ற எட்டையும் இழுத்து மூடி விடுவார்கள். அதுபோல் மற்ற பாயிண்ட்களை எடுத்துக்கொண்டு இந்த பாயிண்டை விட்டு விடுவோம் 😂...
//ஆனால், இரண்டில் ஒன்று பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், இரண்டையுமே தவிர்த்து விடக்கூடிய ரிஸ்க்கும் உள்ளது!//
ஆனால் காசோ! அதைப்பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு..
//மற்றபடி, உங்களையும் இப்படி மாங்கு மாங்கென்று மாவு பிசைய வைத்தமைக்கு வருந்துகிறேன் நண்பரே! :-D//
பல காரணங்களினால் இன்று பணிச் சுமை குறைவு என்பதால் கைகள் சும்மாதான் இருந்தன.. 😂.
//ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் வெவ்வேறு நிற கவர்களில் 10 சோப்புகளை வெளியிடுவார்கள். ஏதாவது ரெண்டு தான் கிளிக் ஆகும் மற்ற எட்டையும் இழுத்து மூடி விடுவார்கள்//
Deleteசரியாப் போச்சு போங்க... உங்க பாயிண்டை வச்சே இதை மறுபடி விளக்குகிறேன் செனா.அனா.! :-D
பத்து சோப்புகளையும் ஒரே கவரில் போட்டு விற்றால், எந்தெந்த சோப்பை இழுத்து மூடலாம் என்ற முடிவுக்கு HUL வர முடியாதில்லையா?! தவிர, தங்களுக்கு பிடித்தமான சோப்பை மட்டுமே வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் காம்போ பேக்கை கண்டாலே காண்டாகி விடுவார்களே?!
மற்றபடி, ரிஸ்க்/ரஸ்க் - காம்போ/சோலோ எது வேண்டுமானாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வித காண்டாமிருகமும் இல்லை! :-)
Delete///பத்து சோப்புகளையும் ஒரே கவரில் போட்டு விற்றால், எந்தெந்த சோப்பை இழுத்து மூடலாம் என்ற முடிவுக்கு HUL வர முடியாதில்லையா?! தவிர, தங்களுக்கு பிடித்தமான சோப்பை மட்டுமே வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் காம்போ பேக்கை கண்டாலே காண்டாகி விடுவார்களே?!//
என்னோட பொருள் எடுத்து என்னையே போட்டுட்டீங்க 😂. முடிச்சு விட்டீங்க போங்க
//மற்றபடி, ரிஸ்க்/ரஸ்க் - காம்போ/சோலோ எது வேண்டுமானாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வித காண்டாமிருகமும் இல்லை! :-)///
Understood... ஆனா எனக்கு இது ரொம்ப பர்சனல் காசோ.... தாத்தாக்கள், சோடா, ஸ்பூன் அண்ட் ஒயிட் ஸ்டெர்ன் போன்றவைகள் மீண்டும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று பெரிய ஆசை.. அவை எந்த ரூபத்திலாவது வந்தால் போதும் என்ற எண்ணம்.
Reply
//தாத்தாக்கள், சோடா, ஸ்பூன் அண்ட் ஒயிட் ஸ்டெர்ன் போன்றவைகள் மீண்டும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று பெரிய ஆசை.. அவை எந்த ரூபத்திலாவது வந்தால் போதும் என்ற எண்ணம்.//
Delete+9
எடி ஜி,
ReplyDeleteஒரு தெளிவான 'பிசினஸ் மாடல்' மற்றும் 'கலைத் தாகம்' இரண்டையும் கலந்து எங்கள் முன்வைத்துள்ளீர்கள்.
,ஒரு தீவிர வாசகராகவும் அதே சமயம் எதார்த்தத்தைப் புரிந்துகொண்ட ஒரு நண்பராகவும் எனது விருப்பத்தைப் பொறுத்து இரண்டு விதமான பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்
ஆப்ஷன் 1: "RISK OK" (ஆசிரியரின் முயற்சிக்கு ஆதரவு தருபவர் என்றால்)
சார், உங்களது இந்த வெளிப்படையான பகிர்வுக்கு முதலில் நன்றிகள். 'வெரைட்டி' என்பதுதான் லயன்/முத்து காமிக்ஸின் உயிர்நாடி. டெக்ஸ், லக்கி லூக் எனப் பாதுகாப்பான பாதையில் மட்டுமே சென்றால், உலகத் தரம் வாய்ந்த மற்ற படைப்புகளைத் தமிழ் வாசகர்கள் இழக்க நேரிடும்.
எனது பதில்: RISK OK.
இரட்டையர் முறை (Twins): நீங்கள் சொன்ன 'Twin' முறை ஒரு அருமையான ஐடியா. நமக்குத் பிடித்த நாயகனுக்காக, இன்னொரு புதிய நாயகனையும் சேர்த்து ஆதரிப்பதில் தவறில்லை. இது புதிய தேடல்களுக்கு வாசகர்களைக் கொண்டு செல்லும்.
விலையேற்றம்: தரமான காகிதத்திலும், மிகக் குறைந்த பிரதிகளிலும் வரும்போது விலை கூடுதல் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு நல்ல படைப்புக்காகச் சில ரூபாய்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயார்.
உங்களது 'விஷப்பரீட்சை' வெற்றிபெறத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறோம். இறங்கி ஆடுவோம் சார்.
ஆப்ஷன் 2: "SAFE OK" (பொருளாதாரச் சூழல் மற்றும் வழக்கமான நாயகர்களை விரும்புபவர் என்றால்)
தற்போதைய சூழலில் உங்களது தயக்கம் நியாயமானதுதான். விலையேற்றம் மற்றும் வாசிப்பு நேரம் குறைவு போன்ற காரணங்களால், புதிய முயற்சிகள் 'ஐசியூ'வுக்குப் போவதை விட, வழக்கமான நாயகர்களைக் கொண்டு பதிப்பகத்தைப் பலப்படுத்துவதே புத்திசாலித்தனம்.
எனது பதில்: SAFE OK.
நிம்மதியான பயணம்: ஸ்டாக் தேங்கி, முதலீடு முடங்குவதை விட, விற்கக்கூடிய புத்தகங்களை மட்டும் வெளியிட்டுப் பதிப்பகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதே சிறந்தது.
வழக்கமான நாயகர்கள்: டெக்ஸ், லக்கி லூக், சிக் பில் போன்ற 'பந்தயக் குதிரைகள்' எப்போதுமே எங்களை ஏமாற்றுவதில்லை. அவர்களின் கதைகளை எண்ணிக்கையில் அதிகப்படுத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியே.
தரம் குறையாமை: வெரைட்டி குறைந்தாலும் சுவை குறையாது என்ற உங்களது வாக்குறுதியே போதுமானது.
வீணான மன உளைச்சலை விட, பாதுகாப்பான லாபகரமான பாதையே தற்போதைக்குச் சரி.
எனது கருத்து (A Neutral Perspective):
ஆசிரியர் கேட்பது ஒரு 'Crowdfunding' போன்ற மாடல். அதாவது, "யார் படிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் பணம் கட்டுங்கள், உங்களுக்காக மட்டும் அச்சிடுகிறேன்" என்கிறீர்கள்.
ஒரு தீவிர சேகரிப்பாளர் (Collector) என்றால் RISK OK சொல்வதே சிறந்தது. ஏனெனில், இது போன்ற கிளாசிக் மற்றும் புதிய கதைகள் வராமல் போனால், பின்னாட்களில் அவை கிடைக்கவே கிடைக்காது.
ஆகா எல்லோரும் கமல் மாதிரியே பேச ஆர்ம்பிச்சுட்டாங்க 😊
ReplyDelete😂😂😂
Delete//ஆகா எல்லாரும் கமல் மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டாங்க//👏👏 😀
ReplyDelete😃😃😃
இரண்டு கதாநாயகர்கள் நல்ல முயற்சி. டபுள் என்ஜின் போல் வேகம் எடுக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete*கர்மாவின் சாலையில்*
ReplyDeleteஒற்றை ஷாட் என்று சொல்லிடலாம்,
பேக் சீட்டை கூட காண்பிக்கவில்லை கதையை படைத்தோர்.
ஜஸ்ட் கார் முகப்பில் கதையின் முக்கிய கதாபாத்திரம் *ராய்* , தன்னந்தனியே பயணத்தில் யாருக்காவும் நடிக்க தேவையில்லாமல் முகத்தில் காட்டப்படும் முகபாவனைகள் ராயின் அகத்தை பிரபதிபலிக்கின்றன.
சின்னதாய் கூட மற்றவர்களின் ஒரு புகைப்படம் கூட காட்டாமல் கதையை படைத்ததிற்கு பாராட்ட வேண்டும். நம் கற்பனைக்கு விட்டு விட்டார்கள், என் மனமும் மறுமுனையில் போனுக்கு பின்னே எப்படி ஒரு காட்சி என கற்பனை செய்து கொண்டது.
இது படமாக வந்துள்ளது என புத்தகம் வரும் முன்னே அறிந்து கொண்டேன்.
படத்தில் பின்னனி இசை இருக்கும், கார் மூவ்மெண்ட் இருக்கும், வசனங்களை ஏற்ற இறக்கமாக பேசிடுவார்கள், நல்ல நடிகரை போட்டால் முகம் மற்றும் உடல் மொழி எக்ஸ்பிரஸன்ஸ் மூலம் நம்மை ஈர்த்திட வல்லமை ஏற்படுத்திடலாம், அப்கோர்ஸ் அதற்கு மெனக்கெடனும்.
ஆனால் படிக்கும் போது நம்மை ஈர்த்திட வைக்க முடியும் என்பதில் நம்பி இறங்க தில் வேண்டும்💪💪💪
*தமிழில் வசனங்கள் கதையோடு ஒன்றி ரசிக்க வைத்தது* , சிரிக்க வைத்தது, போனில் மற்ற கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்கள் எப்படி இருப்பார்கள் ஒரு முறையாவது காண்பிப்பாங்களா என்ற ஆர்வத்தை கிளப்பவே செய்தது.
காரின் வெளிப்புற இரு ஓரங்களில் தான் பின்னனியில் பயணம் செய்யும் பாதை ரொம்ப குறைவாக தெரியுமாறு இருந்தாலும், அதிலும் கவனம் செலுத்தி இருப்பது நன்றாகவே தெரிந்தது.
அட்டைப்பட டிசைன் பாராட்டிய ஞாபகம் உள்ளது, மீண்டுமொரு முறை பாராட்டுகள் KSP கார்த்திக் சகோ👏👏👏
நூற்றுக்கணக்கான டிசைகளிலிருந்து
கதைக்கேற்ற டிசைனை செலக்ட் செய்துள்ளீர்கள் சார்( மீண்டுமொரு முறை தங்களது வாட்சப் மெஸேச்சை தெறிக்க விட்டோம் 😁😁😁😋😋)
*எனக்கு பிடித்திருந்தது*
*Not exaggerating Sir*
*இது போன்று வித்தியாசம் கதைகளை தருவதற்கு நன்றிகள், சார்❤💛💙💚💜*
அவ்வப்போது புது விதமான இது போன்று வித்தியாசமான கதைகள் வரவேண்டும் என்பது என் விருப்பம்
இந்த கதையை சென்னை புவியிற்கு இடமாற்றி *திசைகள் நான்கில்* வரவுள்ள கதை மேல் ஆர்வம் கூடியுள்ளதுங்க
Super review Ramya
Deleteநன்றி பரணி சகோ
DeleteSustainability is of top priority!! So, I would suggest to go Safely
ReplyDeleteI. Regular subscription: For Top sellers like Tex, Tiger, Tintin etc
ReplyDeleteII. Limited print run: For Thorgal, Shelton etc ( Also for new heroes on a trial basis)
III. Book fair: Reprints including Mayavi, Modesty, Johnny nero, Lawrence & David
Safe Ok. டெக்ஸ் கதைகளிலும் ஆக்சன் அதிகமா இருக்கிற கதைகள கொடுத்தா பரவாயில்லை. குறிப்பாக விதி எழுதிய வெற்றி வரிகள் கதையில நம்ம ஆளுங்க வேலை என்னன்னு தெரிஞ்சிக்கவே 70 பக்கங்கள் ஆகிருச்சு. டெக்ஸ் ஸ்பெஷல் புக்கும் ஒரே ஒரு கதை கலர்ல ஹார்ட் கவர் போடுவதற்கு பதிலா 2,3 கருப்பு வெள்ளை டெக்ஸ் கதைகள ஹார்ட் கவர்ல கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்
ReplyDeleteOption RISK OK SIR
ReplyDelete***The குட் ..பேட் & அக்ளி!***
ReplyDeleteஅட்டைப்படம் மாஸ்🔥🔥🔥
செமயாக ஈர்க்கின்றது
டைலன் டாக்-கிற்கு சரியான அட்டைப்படம்
*Rest in Peace*
சித்திரங்கள் 100/10
வர்ணங்கள் 100/10
கதை :85/10
சித்தரங்களால் செம மிரட்டல், சித்திரத்தின் ஒவ்வொரு நுணுக்கமும் செம, *வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை அமைத்ததற்கு ஓவியருக்கு பாராட்டுகள்.*
"மெய்க்கும், கனவுக்கும் இடையிலான கோட்டை என்னால் வேறுபடுத்த முடியவில்லை"
முக்கால்வாசி கதை வரை இதுதான் எனது நிலையும்.
இறுதியில் புரிகிறது டைலனின் மனநிலை.
சைக்காலக்கிஜலாக இதை அணுகி வித்தியாசப்படுத்தி உள்ளார் கதாசிரியர்,
டைலன் மனதின் துயரம், வேதனை அதனின் தாக்கம், எந்த அளவிற்கு உளைச்சல் ஏற்படுத்திடும் என்பதை அருமையாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
இந்த கதை மிக பிடித்திருந்தது.
*நிழலுடன் நடனம்*
அருமையான த்ரில்லிங் கதைக்களம்.
ஆனால் த்ரிலிங்கா ஆரம்பித்ததை இரண்டாவது பாதியில் அவசர நிலையில் முடித்தது சுவாரசியத்தை குறைத்து விட்டது, இன்னும் கொஞ்சம் பக்கங்கள் சேர்த்து சொல்லப் பட்டிருக்க வேண்டியது. சித்திரம் சுமார்
வர்ணங்கள் ப்ளஸ்
டைலனின் கதைகளில் மனதின் ஆழங்களையும் அது வெளியில் ஏற்படுத்திடும் தாக்கங்களும் சொல்லப்படும். இந்த இரு கதைகளிலும் மனதால் ஏற்படும் தாக்கங்களை திகில் கான்செப்ட் மூலம் நன்றாகவே வெளிப்படுத்தி உள்ளனர், அதுவும் முதல் கதை ரொம்பவே.
டைலன் டாக் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறையாவது கண்டிப்பாக வேண்டும்.