நண்பர்களே,
ஞாயிறு காலை வணக்கங்கள். தொடர்ச்சியாய் மூன்று வாரங்களுக்கு இங்கிட்டும், அங்கிட்டும் ஓடும் வேலைகள் வந்து சேர, வாரயிறுதிகளுக்கு ஊட்டாண்ட இருக்க சாத்தியப்படவில்லை ! As a result - பதிவுகள் ஞாயிறுகளுக்கே என்றாகிப் போய்விட்டுள்ளன !! Sorry மக்களே.....!
ரைட்டு....இந்த வாரப் பதிவில் எதைப் பற்றிப் பேசலாம் ? என்ற ரோசனைக்கு முன்பாக நம்ம பதிவுப் பக்கத்தைப் பற்றியே பேசிடலாமா ? Becos இதை டைப்ப நான் அமர்ந்த தருணத்தில் பல்லடத்து நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது : "2025-ன் 22 வாரங்களில் வெறும் 23 பதிவுகள் தான் ! ரொம்பவே ஸ்லோவா தெரியுதே சார் ?" என்று !! பொதுவாய் நான் நம்பர்களை பின்தொடரும் ரகமே அல்ல தான் ; நண்பர்கள் சொன்ன பிற்பாடே "இந்த வருஷம் இதழ் # 400 வருது ; டெக்ஸ் 250 வருது" என்பதையெல்லாம் உணர்ந்திட ஆரம்பிப்பேன் ! So இங்கேயும் நிலவரம் அதுவே ! ஆனால் கொஞ்ச காலமாகவே blog லைட்டாக பின்சீட்டுக்குச் சென்றிருப்பதை நான் புரிந்திருக்காதில்லை ! சரியாகச் சொல்வதானால் நம்ம வாட்சப் கம்யூனிட்டி துவங்கிய நாள் முதலாய், அங்கே வாரத்தின் பாதிப் பொழுதை ஓட்டும் வாய்ப்பு அமைந்திருக்க இங்கே interact செய்திடும் நேரம் அடி வாங்கியுள்ளது ! அதில் உள்ள சுலபம், வேலைகளை சுளுவாய் முடித்துத் தருவது போலான பீலிங்கை தருவதால், ஒரு விக்கெட் வேணும் எனும் போதெல்லாம் இந்திய கேப்டன்கள் பும்ராவிடம் பந்தை ஒப்படைப்பது போல, இப்போல்லாம் எனது முதல் தேர்வாய் வாட்சப் கம்யூனிட்டியே இருந்து வருகிறது ! ஆனால் இங்கேயோ - அங்கேயோ, "நாங்க படிப்போம் ; அத்தோட நடையைக் கட்டிக்கினே இருப்போம் ! அம்புட்டு தென் !!" என்ற மௌன நண்பர்களின் trend மாற்றங்களின்றித் தொடர்வதை பார்க்கும் போது இரு மார்க்கங்களுமே ஒன்றுக்கு ஒன்று சமமே என்று தோன்றுகிறது ! குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையிலான நண்பர் வட்டமே இங்கும் சரி, அங்கும் சரி - சுவாரஸ்யங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டுள்ளனர் ! So நிரந்தர வாசிப்புக்கு உதவிடும் blog பக்கமாய் வண்டியை ஒரு U-டர்ன் போடச் செய்யலாமோ ? என்ற மகா சிந்தனை உள்ளுக்குள் துளிர் விடுகிறது !
பற்றாக்குறைக்கு நம்ம மகளிரணித் தலைவி கொரோனா லாக்டௌன் நாட்களின் பதிவுகளை இப்போ தான் வாசிக்கத் துவங்கியுள்ளார் போலும் - 'பாரிசில் கொரில்லா கிட்டே சிக்கிய படலம் டெரரா கீது ; கொரியப் பயணம் குன்சா கீது ; உங்க தாத்தா பற்றிய நினைவுகள் ஜிலோன்னு கீது !' என்றெல்லாம் சேதி அனுப்ப, "ஆமால்லே....ப்ளோக்கின் அட்டகாச நாட்களவை !!' என்ற நோஸ்டால்ஜியா கவ்விக் கொண்டது ! மேலோட்டமாய் பின்னோக்கி blog-க்குள்ளே பயணித்த போது அந்நாட்களின் உற்சாகங்கள், மகிழ்வுகளை ஸ்பஷ்டமாய் feel செய்திட இயன்றது ! ஆனால் ஓட்டம்-ஓட்டம்-முடிவில்லா-ஓய்வில்லா ஓட்டம் எனும் வட்டத்தினுள் ஆளாளுக்குச் சிக்கிக் கிடக்க, புத்தக வாசிப்புக்கான அவகாசங்கள் மட்டுமன்றி, இந்த blog-ல் முன்போல interact செய்திடுவதற்கான அவகாசங்களும் மட்டுப்பட்டிருப்பது தெளிவாய் தெரிய ஆரம்பித்தது ! So ஆளில்லா blog கடையிலே நாயராய் டீ ஆத்தும நேரத்துக்கு லேட்டஸ்ட்டான கம்யூனிட்டி சாயா கடையிலே மாஸ்டர் ஆகிப்புடலாம் ! என்ற சபலம் தலைதூக்கியது ! And here we are !
இங்கே வேகம் சற்று குன்றியதற்கு இன்னொரு காரணமும் உள்ளது ; அது தான் "எழுத்தயர்வு" !!! "இன்னாடா இது புது ஐட்டமா கீது ?" என்ற யோசனையா ? வேறொண்ணுமில்லை folks - மாதத்தின் 30 நாட்களும் எதையோ - எதையெதையோ எழுதிக்கினே இருப்பது போலொரு உணர்வு இப்போதெல்லாம் ! முன்னே புக்ஸ் எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும் ; நம்ம கருணையானந்தம் அங்கிளும் ஆக்டிவாக இருப்பார்கள் ! So பாரத்தின் கணிசத்தை அவர் தோளிலும் ஏற்றி விட்டுப்புட்டு கொஞ்சம் பிரீயாக இருக்க சாத்தியமாகிடும் ! ஆனால்.......
*வண்டி வண்டியாய் இதழ்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போக ,
*கதை ரகங்களும் வித விதமாகிட,
*க்ளாஸிக் நடை மட்டுமே சகலத்துக்கும் நியாயம் செய்யப் போறாது என்ற புரிதல் பிறந்திட,
*புதுப் புது மொழிபெயர்ப்பாளர்களை நாடும் அவசியங்களும் புலர்ந்திட,
*வண்டி வண்டியாய் எழுத்தாளர்களை சரமாரியாக முயற்சிக்க ,
*இன்று வரைக்கும் யாரது மொழியாக்கங்களும் (கணிசமான) பட்டி-டிங்கரிங் இல்லாது தேற மறுக்க,
நம்ம கையிலே பேனா நிரந்தரமாய் நிலைகொண்டிருப்பது போலவே ஒரு சூழ்நிலை ! 😟😟
கதைகளும், களங்களும், காலங்களும் மாறிக் கொண்டே போனாலும், மாதம் முதல் தேதியிலிருந்து முப்பது தேதி வரைக்கும் 'பேனாவுடன் ஒரு பேமானி' அவதார் இம்மியும் மாற்றம் காணக் காணோம் ! So வாரஇறுதிகளையே ; ஞாயிற்றுக்கிழமைகளையே - சலவைக்கு ஆற்றுக்குப் போகும் மையப் பொழுதுகளாக்கி வரும் சூழலில், வாரம்தோறும் அந்தப் பணிக்குவியலை (NOT பணக்குவியல் தெய்வங்களே !!) மூட்டை கட்டி வைத்து விட்டு blog பக்கமாய் ஆஜராகி, இங்குமொரு நெடும் பதிவை எழுத மண்டை ஒத்துழைக்க சண்டித்தனம் செய்கிறது ! என் எழுத்தின் மீது எனக்கே நேரும் அயர்வு அது என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! That's what I meant by "எழுத்தயர்வு" !! உங்களுக்கு எனது மாமூலான writing அலுத்துப்புடக் கூடாதே !! என்பது தான் பிரதான கவலையாக இருந்து வந்தது ; ஆனால் நிலவரமோ சமீபமாய் உல்டாவாகி நிற்க, திருட்டு முழி முழித்துக் கொண்டிருப்பது பலனாகிறது ! In fact அந்தந்த மாதத்துப் பணிகள் சகலத்தையும் முடித்து விட்டு, லைட்டாய் நீட்டி, நெளிக்க முனையும் போது "ஹாட்லைன் பெண்டிங் இருக்கு அண்ணாச்சி !" என்று மைதீன் முன்னிற்பான் ! முழுசாய் drain ஆகிப் போயிருக்கும் அந்நேரத்தில் அந்த 2 பக்கங்களை எழுதும் உற்சாகத்தைத் திரட்டுவது கூட ஒரு செம பிரயத்தனமாய் இருப்பதுண்டு !! கலப்படங்களற்ற நிஜம் இது தான் folks !!
இங்கு தான் உங்களின் பங்களிப்புகளின் அவசியம் பன்மடங்காகிடுவதுண்டு ! 'தம்' திரட்டி பதிவை எழுதி விட்டுப் போன பிற்பாடு இங்கே ஒருவித மயான அமைதி நிலவும் போது, ஜிஞ்சர் தின்ன மங்கி போல வதனம் மாறிப் போகும் ! Oh yes - முழுசாய் இல்லாவிடினும், ஓரளவுக்காச்சும் பதிவுகளை நீங்கள் படிக்கிறீர்கள் என்பது தெரியும் தான் ; ஆனால் சர்க்கஸில் வேஷம் கட்டும் கோமாளியைப் போல பார்வையாளர்களின் சிரிப்பலைகளில் தான் பேட்டரி ரீசார்ஜ் ஆகிடுவது நிதர்சனம் ! அதுவும் இந்த ரொம்பவே பழசு எனும் போது self recharge நிகழ்வது அரிதாகிக் கொண்டே செல்கிறது ! உங்களின் சூழல்கள் எனக்குப் புரிகின்றன folks ; பிழைப்புகளைப் பார்க்கவே ஓராயிரம் கரணங்கள் போட வேண்டியுள்ள நாட்களிவை எனும் போது இது எவ்விதத்திலும் உங்களைக் குறைப்பட்டுக் கொள்ளுமொரு சமாச்சாரம் கிடையாது ! மாறாக மண்டைக்குள் ஸ்விம்மிங் போட்டு வந்த எண்ணங்களின் வெளிப்பாடு மாத்திரமே !
And last but not the least - மாறி வரும் காலகட்டங்களுக்கும், அவை கொணரும் மாற்றங்களுக்கும் யாருமே விதிவிலக்காகித இயலாதல்லவா ? So ஜட்டியை மேலாக்கா மாட்டிக்கினு யூத் சூப்பர்மேன் என்று டிராமா போட்டுத் திரிந்தாலும் நம்மள் கி வயசு 58 என்பதை ஒவ்வொரு காலையும், இரவும் நினைவூட்டத் தவறுவதில்லை ! So இப்போதெல்லாம் ராக்கூத்துக்களின் நீளங்கள் முன்போல் சாத்தியமாவதில்லை ; அலாரம் வைச்சு அதிகாலை 4 மணிக்கு டைப்புவதெல்லாம் கற்பனையில் கூட முடிவதில்லை ; ரயில் நிலையங்களிலும்,மேல் பெர்த்களிலும் தொங்கிக் கொண்டு பதிவுகளை எழுத தம் இருப்பதில்லை ; விட்டம் வரை கொட்டாவிகளோடு வாய் விரியும் முதல் நொடியில் shut down கொடுத்துப்புட்டு சொப்பன லோகத்துக்கு பயணிக்கும் சபலன்களைத் தவிர்க்க முடிவதில்லை ; and எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு நிஜத் தாத்தாவின் அவதார் தரும் கலப்படமற்ற மகிழ்வுகளுக்கு முன்னுரிமை தரும் ஆசைக்கு அணை போட முடியவில்லை !
So இந்த slowdown ஒரு விதத்தில் நம் அனைவருக்குமே தொடர்பு கொண்டது ! But யதார்த்தத்தினை தாண்டியும் வாரமொரு உற்சாகக் குதி போட உங்களுக்கு சாத்தியப்பட்டால், மில்சே தாத்தால்லாம் rolemodel ஆக இருக்கும் போது, நிச்சயமாய் எனக்கும் இயலாது போகவே போகாது ! நான் ரெடி....நீங்க ரெடியா ? இந்த வாரத்துக்கான கேள்வியாய் உங்கள் முன்னே நான் வைக்க விழையும் கேள்வி கூட நமது blog சார்ந்ததே !!
- ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?
- அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ?
Bye all...."பே.பி.பே" அவதார் ரிப்போர்ட்டர் ஜானியுடன் மறுக்கா அழைப்பதால் கிளம்புகிறேன் all !! See you around .....Bye for now !! Happy Sunday !!
Me first 🥇
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
DeleteHello
ReplyDeleteவணக்கங்கள் சகோ
DeleteMe in🥰😘💐
ReplyDeleteMe third
ReplyDeleteஆயிரத்தில் எதுவும் மிஸ் பண்ணியதாக ஞாபகமில்லை சார்...
ReplyDeleteஎனது மனதை விட்டு விலகா பதிவுகள்
XIII ரீப்பிரிண்டிங் களேபர பதிவுகள்
கொரோனா கால பதிவுகள்...
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteMe fourth😍🥰
ReplyDeleteMe 5th
ReplyDeleteகொரோனா கால பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்... அடுத்தவருடன் அளாவளாவ முடியாத அந்த காலங்களில், எனது மனதில் மகிழ்ச்சியும், எனது பணியில் மன நிறைவும் அளித்தவை நமது கொரோனா கால பதிவுகளும் உரையாடல்களும்தான் சார்...
ReplyDeleteஎன்னளவில் இந்த blogகிற்கு அந்த காலங்களுக்காகவே நன்றியுடன் இருப்பேன் சார்...
சூப்பர் டாக்டர் சார் 💐🎉👌
Delete🙋♂️
ReplyDelete11வது
ReplyDeleteஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?
ReplyDeleteதோராயமாக ஆயிரத்து சொச்சமும் சார்..
அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களா ?
முதன்முதலில் கமெண்ட் பப்ளிஷ் ஆன தருணம்..
நட்புகள் சொந்தங்களான தருணம்..
கமெண்ட் படிப்போரை புன்னகையோடு வைத்திருக்க வேண்டுமென நினைத்து மொக்கை போட்ட அனைத்து தருணங்களும்..
❤❤❤❤❤
Delete/// எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு நிஜத் தாத்தாவின் அவதார் தரும் கலப்படமற்ற மகிழ்வுகளுக்கு முன்னுரிமை தரும் ஆசைக்கு அணை போட முடியவில்லை ! ///
ReplyDeleteCongratulations sir. நிஜ தாத்தாவிற்கு எங்களது வாழ்த்துக்கள்.
அன்ட்வான் சங்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைத்து பதிவுகளையும் அணைத்திருக்கிறேன் சார்..🥰🥰
ReplyDeleteஎல்லாமே....அப்பப்ப ரிவர்சும் போவதுண்டு
ReplyDelete....இரத்தப்படலத்த
லார்கோ படங்கள் வண்ணத்தில் காட்டியது...
பரகுடாவோடு கப்பல் கொள்ளையர்கள் கதைக வான்ஹாமே கூடன்னு நீங்க அளந்து விட்டு ஆசைய நடுத்தெருல விட்டது
கிளாசிக் தொகுப்பு முதன்முதலாக அறிவித்தது...இரு வண்ணக் கதைகள்...சுஸ்கி விஸ்கி....பறக்கும் பிசாசு...கொலைப்படை
கொரனா கும்மாளங்கள்...நிச்சயமா கதையாய் மட்டுமே கேட்டகந்தசாமி அவர்கள்.....நீங்க ஊர் சுற்றிய கதைகள்...காலையில் விடிஞ்சு எழவே சங்கடமாயிருக்குமெனக்கு நீங்க இரவும் ஸ்கூட்டர் ல சுத்தி ரீவ்ஸ் தேடியது...எல்லாத்துக்கு மேல் உங்க வாழ்க்கை எனக்கு ஊக்கமருந்து...சொல்லாமல் விட்டததிகம்...அந்த சைக்கோ கொலைகாரன் கதை யாருக்கும் புரியாமலோ ஏத்துக்க இல்லாமலோ சுமாரென நீங்களும் ஒப்புக்கொண்ட நினைவுகள்...முதன்முதல் நண்பர்களோடு ஈரோட்டில் அலப்பறை நினைவுகள்
இரத்தபடல இரண்டாம் பாகத்தில் தூள் கிளப்பும் வாழைத்தோட்ட அதிபரின் மனைவி ஸ்பின் ஆஃப் தோல்வி விமர்சனங்கள்
Delete😊😊❤❤❤
Deleteக்ளாசிக் மறு பதிப்புகள் பற்றிய அனைத்து பதிவுகளும் ஒரு வித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறன..
ReplyDeleteமீ மிஸ்ஸிங் நிறையவே Edi சார் 😘
ReplyDeleteபடிச்சதுல புடிச்சது எல்லாமேதான் சார் 😘😘😄
👍😘🥰
அப்புறமா நம்பில நிம்பிள் blog ல mention பண்றது ரொம்பவே புடிக்கும் சார்.. 😄😄😘😘
ReplyDeleteஆமாங்க கோடாலியாரே, அவைகள் எல்லாமே ஸ்பெஷல் தருணங்களே
Deleteஆண்டின் இறுதியில் வரும் அடுத்த ஆண்டிற்கான அட்டவணைப் படலப் பதிவு ..அது ஒரு செம்ம போதை சார்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஅனைத்து பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து உள்ளது சார்..
ReplyDelete*******
தளத்தில் நினைவில் தங்கிய டாப் பதிவு எனில்..
எனது கடிதத்திற்கு பதில் சொல்லும் விதமாக "மாற்றமே உன் விலை என்ன..?!" என்ற அந்த கிராபிக் நாவல்களுக்கான விளக்க பதிவு ..
****
NBS இதழ் அட்டவனை விவர பதிவு....
*******
Top 3 பதிவில் முதல் இடம் பிடிப்பது உங்கள் தாத்தா பற்றி நீங்கள் எழுதிய பதிவு தான்.
ReplyDeleteஇரண்டாம் இடம் பிடிப்பது சீனியர் எடிட்டருக்கு நீங்கள் எழுதிய இதுவும் கடந்து போகும் பதிவு.
Deleteஅப்புறம் நீங்கள் இரண்டு பாகமாக எழுதிய ரஷ்யா வில் பனியில் மாட்டிக் கொண்ட பதிவு. அதும் அந்த 2nd பார்ட் delay ஆகி வர என்ன நடந்ததோ என்று என் சிண்டை பிய்த்துக்கொண்டு காத்திருந்த நாட்கள்
Deleteயெஸ்! மூன்றுமே அற்புதமான பதிவுகள்!💐💐💐😍😍
Deleteநான் தற்போதுதான் படித்தேங்க, சகோ
Deleteரஷ்யாவின் குளிரை கோவையின் கோடை மழைநாட்களில் படித்திட ஜில்லோன்னு இருந்ததுங்க, சகோ
அருமை நண்பரே
Delete///ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?///
ReplyDelete2012ல் தான் இப்படியொரு blog இருப்பது தெரிய வந்தது சார். யாரும் இல்லாத ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் தனியாக சுற்றிக் கொண்டிருந்தது போன்ற நிலையிலிருந்து எனக்கு, ஒரு கல்யாண வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த கலகலப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த பிளாக் தான்! அன்று முதல் உங்களுடைய எல்லா பதிவுகளையும் வாசித்து வருகிறேன். 'Load more' பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று சில நண்பர்கள் என் மீது கடுப்பாகும் அளவிற்கு கமெண்ட் போட்டிருக்கிறேன் 😁. blogகின் ஒரு ஓரத்திலேயே பானி பூரி கடை வைத்து படுத்து கிடந்த காலம் எல்லாம் கூட உண்டு. 😝 பணிச்சூழல் காரணமாக இன்று எனது பங்களிப்பு குறைந்து விட்டிருந்தாலும், இப்போதும் கூட பிளாக்கில் உங்களது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.
அன்றைய நாட்களில் நமது வெளியீடுகளில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டிருக்கும்.. பேப்பர் தரத்திலோ, அட்டைப்பட தரத்திலோ, பைண்டிங் தரத்திலோ அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் இங்கே விவாத பொருளாகும் என்பதால் நண்பர்கள் விவாதிக்கவும் நிறைய சமாச்சாரங்கள் இருந்தது. இன்று எல்லா குறைகளுமே களையப்பட்டு விட்டது. புத்தக தரத்தில், பேப்பர் தரத்தில், பிரின்டிங் தரத்தில் அட்டகாசமான நிறைவு கண்டு விட்டோம். நிறைய நண்பர்களுக்கு பணிச்சூழல் என்பது கடுமையான வெயில் என்று எடுத்துக் கொண்டால், நாங்கள் தங்கி இளைப்பாறும் நிழல் காமிக்ஸும், உங்களது எழுத்துக்களும் தான் சார்! 🙏💐💐
அருமை அருமை இளவரசரே
Deleteசெம்ம EV செம்ம. இளைப்பாறும் நிழல் நம்ம காமிக்சும் ப்ளாக்உம் தான்.
Deleteஅருமை செயலரே
Deleteசும்மா சப்பைக்கட்டு கட்டாதீங்க விஜய்! அப்ப வாலிப வயசு, லயன் வாத்தியாரை வம்புக்கு இழுக்குமளவு தெம்பு இருந்தது! இப்போ, வாலிபரின் வாப்பா வயசு, சொம்பைத் தூக்கி தண்ணி குடித்தாலே தோள்பட்டை வலி பின்னி எடுக்கிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள்! :-)
Deleteகார்த்திக்.. ஹி ஹி.. அதுவுந்தேன்.. இதுவுந்தேன் 😁😁
Deleteவிஜய்... 😄😄😄... ❤️
Deleteநான் அநேகமாக எல்லா பதிவுகளையுமே படித்து விட்டேன் சார். 2014 kku பிறகு தான் blog பக்கம் வந்தேன். எனவே Covid நேரத்தில் நீங்க முன்னாடி போட்ட எல்லா பதிவுகளையும் திரும்ப சென்று படித்தேன்.
ReplyDelete29th
ReplyDeleteபல நூறு ஆண்டுகளாக இப்படி நம்பர் மட்டுமே போட்டு வரும் நமது texkit நண்பர் கூட இந்த blog ல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் 💐💐
Deleteஇளவரசரே 😂😂😂
Delete///அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ? ///
ReplyDeleteஒவ்வொரு வருடமும் அட்டவணை பதிவு வெளியாகும் எல்லா தருணமுமே மறக்க முடியாத உற்சாகத் தருணங்கள் தான் சார்!
நான் blog பக்கம் வந்த புதிதில், எனக்கு அப்போது தோன்றிய சந்தேகங்களை 10 கேள்விகளாக்கி ஒரு கமெண்டில் கேட்டு வைக்க; அந்த கேள்விகளுக்கான பதிலை நீங்கள் ஒரு தனிப் பதிவாகவே போட்டது பர்சனலாக எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு!😇😇😇
💞
ReplyDelete//பாரிசில் கொரில்லா கிட்டே சிக்கிய படலம் டெரரா கீது ; கொரியப் பயணம் குன்சா கீது ; உங்க தாத்தா பற்றிய நினைவுகள் ஜிலோன்னு கீது !' என்றெல்லாம் சேதி அனுப்ப,//
ReplyDelete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Always captivated by the humor sense in your writing, Sir
அப்போதய ப்ளாக் பதிவுகளுக்கு பார்வைகள் எவ்வளவு என்ற கணக்குகளையும் காட்டி இருந்தீர்கள்
ReplyDeleteதற்போதைய பணிசூழல் புரிகிறதுங்க, சார்
வாரம் தவறாமல் படிக்கிறேன். எதையும் மிஸ் பண்ணியது இல்லை.
ReplyDelete1. தங்களுடைய வெளிநாடு புத்தக விழா பயண பதிவு. ரூம் கிடைக்காமல் நீங்ககள் அல்லாடியதை நகைச்சுவையாக பதிவிட்டது, எங்களை நேரில் கூட்டி சென்று காண்பிப்பது போல் இருந்தது + தாத்தாவின் நினைவலைகள் பதிவு
2. முத்து 50 ஆம் ஆண்டு முன்னோட்ட பதிவு. வண்டி வண்டியாக choice கொடுத்து, அதிலிருந்து எங்களை தேர்ந்தெடுக்க செய்தது.
3. ஆண்டுதோறும் வரும் அட்டவணை பதிவு
//ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?//
ReplyDelete2014 -இல் தான் ப்ளாக் பக்கம் வந்தேன்
ஆங்கில பெயருடன் ஆங்கிலத்தில் ஆரம்பித்தது என் கமெண்ட்ஸ்கள்
இப்போது தமிழில் வேகமாக டைப்படிக்க தேறி உள்ளேன்
அதற்கு காரணம் இந்த ப்ளாக், இந்தலப்ளாக் மூலம் கிடைத்த காமிக்ஸ் நட்புகள்
லயன் முத்து காமிக்ஸ் என் வாழ்வில் கண்டிப்பாக முக்கிய பங்குண்டுங்க, சார்
2014 வந்து அப்போதைய பழைய ப்ளாக் போஸ்ட்களை படித்துள்ளேன்
Deleteகொரோனா காலங்களில் இங்கு வராமல் இருந்ததில் பழைய ப்ளாக் போஸ்ட்களை இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேங்க
அவைகளை படிக்க என்று தேடி போகலை, ஒரு இனிய காலைபொழுதில் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போதைய காமிக்ஸ் பற்றி இருக்கு, அது எப்போது வந்தது என்று தேடிட, பழைய போஸ்ட்கள் எழுத்துகள் கவர்ந்தன
மழைநாட்களின் அருமையான தருணங்களாக உருவானது.
தங்களுடைய அனுபவங்களும், சகோதரர்களின் கமெண்ட்ஸ்களும் படிக்க ஒரு அருமையான வாய்ப்பாக மாறியது
2016 ல் தான் நமது தளத்திற்க்கு நுழைந்தேன் அதற்கு பிறகும் அதற்கு முன்பும் வந்த அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறேன் டாப் 3 என்றால்
ReplyDelete1.ஒரு பரண் உருட்டும் படலம்
ஏனென்றால் ஸ்பைடர் & மும்மூர்த்திகள் மீண்டும் வருகிறார்கள் என அறிவித்த அற்புத பதிவு ஆனந்த பதிவு
2.3. மட்டுமல்ல எப்போதும் குதுகலத்தையும் ஆவலையும் தருகின்ற பதிவுகள் அட்டவணை பதிவுகள் தான் ஆசிரியரே
😊😊😊😊😊
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஹாட்லைன்,சிங்கத்தின் சிறுவயதில் படித்தபின்புதான் காமிக்ஸே படிக்கிற ரகம் நான். புதிய ஹீரோக்கள்,உலக அளவில் பெற்ற வாசக எதிர்வினை,பழைய ஹீரோக்களின் தற்போதைய மார்க்கெட் என எங்களுக்கு தெரியாத விவரங்களோடு அந்தந்த மாத காமிக்ஸை அறிமுகம் செய்தால் பிளாக் சூடுபிடிக்கும்.
ReplyDelete1. ஈரோட்டில் இத்தாலி
ReplyDelete2. முத்து ௪௦௦ ஸ்பெஷல்
3 ரத்த படலம் தொடர்பான blog
Sir allmost எல்லா பதிவுகளையும் படிசாச்சு. பதிவு வராத நாளெல்லாம் ஒரு வருத்தம் உண்டு. உங்களை பதிவு எங்களுக்கு ஒரு போதை sir. அதனாலேயே dont stop. Best 3. 1. ரஷ்யாவில் நீங்க 2. அட்டவணை பதிவு 3.நெவர் before special பதிவு
ReplyDeleteகுடும்ப நிகழ்வுகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என உணர்த்தும் பதிவுகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteடாப் 3
ReplyDeleteஇதுவென்று சொல்ல ஒன்றை முடியாதுங்க, சார்
பல ஸ்பெஷல் மறக்கவியா தருணங்கள் உள்ளன, சார்
மௌன பார்வையாளராக ஆரம்பித்து, கமெண்ட்ஸ்கள் போட்டு, பின்னர் சண்டை போட கற்றுக்கொண்டது, அதுவும் தமிழல் வேகமாக டைப்படிக்க இதற்காக கற்று கொண்டது 😁😋,
சகோதரர்கள் எழுதும் விமர்சனங்களால் ஆர்வம் ஏற்பட்டு விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து, மகளிரணி தலைவியாக மாற்றம் பெற்று, புத்தக விழாக்களின் பதிவுகளில் உற்காசமாகி புத்தக விழாக்களுக்கு படையெடுத்தது, தங்களை சந்திக்க உந்துதலை தந்தது, சகோதர்களின்லபெற்று தந்தது எல்லாமே ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு ஸ்பெஷல் உண்டுங்க
தற்போதைய நிலையில் மனதை இடம் பிடித்திருப்பது
ஒரு பட்டாம்பூச்சியின் பரிமாணம்
ஒரு விருட்சத்தின் கதை
அப்புறம் ப்ரவுன் பூதத்தின் ஆல்மோஸ்ட் சிக்கவிருந்த தங்களின் பாரிஸ் படலம்😁😁😁
சூப்பரா சொன்னீங்க சகோ! 💐💐
Delete// அப்புறம் ப்ரவுன் பூதத்தின் ஆல்மோஸ்ட் சிக்கவிருந்த தங்களின் பாரிஸ் படலம் // 🥶🥶🥶
Deleteசெம செம
Deleteநன்றிகள் சகோதரர்களே
Deleteநன்றிகள் தோழரே
அந்நாட்களில் விதவிதமான கேப்ஷன் போட்டிகள் விறுவிறுப்பாக போகும்
Deleteமுதன் முதலில் கலந்து கொண்ட கேப்ஷன் போட்டி டைகரின் ப்ரஞ்ச் புத்தகம் பரிசு என்ற அறிவித்த போது, அதுவரை முயற்சி பண்ணாத நான் டைகரின் தீவிர ரசிகையாக நிறையா என்ட்ரிகள் போட்டேன்😁😁😁
அது பின்னர் புஸ்வானமாக போனது வேறு விசயம்
கேப்ஷன் போட்டிகள் தளத்தை கலகலவென்று வைத்திருந்தன
டியர் விஜயன் சார்,
ReplyDeleteநான்கு வரிகள் எழுதி, அவற்றை ஐந்தாறு தடவைகள் செப்பனிட்டு அழகு பார்ப்பது எனது பாணி! "அட அட, சும்மா பின்றியேப்பா!" என அப்போதைக்குத் தோன்றினாலும், அதையே ஒருவாரம் கழித்துப் படிக்கையில், "அடச்சை, படு மொக்கையாக உளறி வைத்திருக்கிறோமோ?!" என்று தோன்றுவதுண்டு!
எப்போதாவது சில வரிகள் எழுதும் எனக்கே இப்படி என்றால், தினந்தினம் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, எழுத்தயர்வு ஏற்படுவதில் வியப்பில்லை! அது நல்லதும் கூட, நம் எழுத்துக்கள் நமக்கே சலிப்புத் தட்டும் போது தான் புதுப்புதுப் பாணியில் எழுத வேண்டும் என்ற உத்வேகம் எழும்!
ஆனால், ஒரே ஒரு பக்க ட்விஸ்டை மற்றும் நம்பிக்கொண்டு, நூற்றுக்கணக்கான பக்கங்கள் - வளவளவென்று பயணிக்கும் - வழக்கமான கதைகளில் பணிபுரிவதும் சிரமம் தான்!
//இன்று வரைக்கும் யாரது மொழியாக்கங்களும் (கணிசமான) பட்டி-டிங்கரிங் இல்லாது தேற மறுக்க//
அவர்களது மொழியாக்கங்களை, உங்கள் (லயன்) பாணியில் மாற்றி எழுத நீங்கள் முனைவதும் ஒரு காரணமாக இருக்கலாம், இல்லையா?! ;-)
மற்றபடி, சந்தா / புத்தக அறிவிப்பு மற்றும் பட்டறிவு / நினைவுப் பகிர்வுகளை இங்கேயும்,
நினைவூட்டல்கள், கருத்துக் கணிப்பு, பெயர் சூட்டும் போட்டி, கவர்ச்சி காட்டும் பாட்டி வகையறாப் பதிவுகளையும், அவற்றுக்கு வரும் எண்ணற்ற பதில்கள் மற்றும் கவிதைகளை வாட்ஸ்-அப்பிலும் வைத்துக் கொள்ளலாம்! :-)
//அவர்களது மொழியாக்கங்களை, உங்கள் (லயன்) பாணியில் மாற்றி எழுத நீங்கள் முனைவதும் ஒரு காரணமாக இருக்கலாம், இல்லையா?! ;-)//
DeleteTrue கார்த்திக்... ஆனால் தற்சமயம் நம்மவர்கள் நிர்ணயித்திருக்கும் அந்த உச்சாணிக் கொப்பு ஸ்டாண்டர்ட்ஸ் - என் பாணியிலோ, இன்ன பிற எழுத்துப் பார்ட்டிக்களின் பாணிகளிலோ கிட்டாது போயின் மனசு ஒப்ப மறுக்கிறது! சில சகோதரிகளின் எழுத்துக்கள் refreshingly different ஆக இருக்கும் தருணங்களில் அவற்றை நான் நோண்ட முனைவதில்லை! But அவ்வித தருணங்கள் few & far between 🤕 என்பது தான் சிக்கலே!
இதனில் ஒரு நயம் வளர்த்திட கணிசமான அவகாசம் புடிக்கிறது ; but வெவ்வேறு காரணங்களின் பொருட்டு தேர்ச்சி கண்ட சகோதரிகள் ஜுட் விட்டுவிடுகின்றனர்! ஒருவரது கணவர் கொரோனாவில் மரித்துப் போனார் ; இன்னொருத்தர் Gulf போயாச்சு ஆத்துக்காரருடன்...
//கவர்ச்சி காட்டும் பாட்டி வகையறா//
Deleteஅது அவுக இல்லே தானே சாமி? 🥹🥹
வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteBLOG Vs WhatsApp Community
Deleteஇரண்டுமே அதனதன் பங்கை செவ்வனே ஆற்றினாலும் கம்யூனிட்டி அணுக நெருக்கமாகவும் உடனடி பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையிலும் இருக்கிறது.
நண்பர்கள் சொன்னதுபோல தளம் நிரந்தரமான பதிவுகளுக்கும் குறிப்பிட்ட தகவலை தேடி பெறவும் வசதியாக உள்ளது.
இரண்டின் சாதகங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்வோம் சார்...
2017ல் காமிக்ஸ் குடும்பத்தில் மீண்டும் இணைந்த பிறகு எழுதிய அனைத்து பதிவுகளையும் வாசித்திருக்கிறேன் சார். ஆரம்பத்தில் மவுனப் பார்வையாளனாகவும் பிற்பாடு பதிலுரைக்க பங்கேற்க என பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறேன். அந்த விஷயத்தில் தளம் நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளதென்பதை மறுக்க இயலாது.
அனைத்து பதிவுகளையும்...
ReplyDeleteகொரோனா கால பதிவுகள் மற்றும் திரு குணா அவர்கள் சொன்னதைப் போன்று அடுத்த வருட அட்டவணை வெளியிடும் நேரப் பதிவுகள்..
///ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?///
ReplyDelete2016 முதல் தான் எனக்கு பிளாக் அறிமுகம் சார் ..
அதனால் சரிபாதி தான் நான் படித்திருக்க வாய்ப்புள்ளது சார்.
////அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ? ////
1)மறு பதிப்பாக பழைய இதழ்கள் பற்றிய அறிவிப்பு வந்தபோது பரவசம் ஆனானேன்
(ஏனெனில் அப்போது பழைய இதழ்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டிருந்தேன்)
2)இரத்த படலம் வண்ணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நமது காமிக்ஸ் உலகிற்கு பெருமை சேர்த்த தருணம்
3) வருடமொருமுறை வரும் புத்தக விழா நிகழ்வுகள்
1. புது வருட அட்டவணை அறிவிப்புகள்
ReplyDelete2. மாதம் தோறும் புக்ஸ் despatch தேதி அறிவிப்பு செய்தி...
3. சந்தா தவிர மற்ற புக்ஸ்/newபுக்ஸ் ரிலீஸ் அறிவிப்புகள்
4. இதர ஸ்பெஷல் அறிவிப்புகள்...
உங்கள் தாய்வழி தாத்தா பற்றிய ஒரு பதிவு நெகிழ்வானது.
ReplyDeleteYes sir.... கொரோனா சமயத்தில் எழுதியதென்று நினைக்கிறேன்!
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகிட்டத்தட்ட எல்லாமுமே படிச்சு இருக்கேன்.
ReplyDeleteஉங்களுடைய அந்த ரஷ்யா & ஐரோப்பாவில் பாஸ்போர்ட் தொலைத்த திகில் பதிவுகள்.
கொரோனா கால மினி பதிவுகள்.
கிளாஸிக் தொகுப்பு அறிவிப்புகள் போன்றவை.
இன்னும் பல . . .
In some ways - இதுவொரு காலப் பயணம் மாதிரி என்பேன்!
Deleteமாதம் தவறாத காமிக்ஸ்,
ReplyDeleteவாரம் தவறாமல் ப்ளாக் பதிவு,
வாரத்தில் இரண்டு நாள் கம்யூனிட்டி,
என இதொரு தனி சந்தோஷ உலகம் சார்.
வேலை பிஸி,களைப்பு இவற்றால் பதிவை சுடச்சுட சில சமயங்களில் படிக்க முடியாமல் போவது உண்மைதான் சார்,
ஆனா உடனே படிக்கறமோ,பிறகு ஆற அமர படிக்கறமோ,"வாரப்பதிவு வந்திருச்சா?,
இந்த வாரம் என்ன எழுதிருப்பார்?" என, வேலை அவசத்திலும், ஆவலுடன் இங்கே எட்டிப்பார்த்து - பதிவு வந்துள்ளதை பார்ப்பதே எங்களுக்கு பெரிய உற்சாகம் தொற்றிக் கொள்ளும் சார்.
அதிலும் கம்யூனிட்டி ஓபன் பண்ணபின் கூடுதல் உற்சாகம்தான்.எனர்ஜி குறைய குறைய உங்களது "ஹாய்,ஹலோ" பதிவு வந்துவிடுகிறதே.
ஆகையால் எதுவாயினும் தொடர்ந்து எழுதுங்கள் சார்.
2021 பின்பகுதியில் இருந்து இன்றுவரை பதிவுகளை படித்தாயிற்று சார்.
டாப் 3 என்று சொல்ல பலதும் உள்ளதுங்க சார்,
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின்,
1)வருடம் மொத்தமும் வரும் இதழ்களைப் பற்றிய ஒவ்வொரு வருட அட்டவணை பற்றிய அறிவிப்புகள்.
2)வாசகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான+ 2023 ன் பிரமாண்டமான "கார்சனின் கடந்த காலம்" மெகா சைஸ் மறுபதிப்பு பற்றிய அறிவிப்பு,
3)"குண்டு" இதழ் பற்றிய அறிவிப்பும், அதற்கு வாசகர்கள் தந்த உற்சாக ஆதரவு பதிவு.
இவற்றில் இழைந்தோடும் அன்பும், மகிழ்ச்சியும் என்றென்றும் மறக்க இயலா நினைவுகள் சார்.
மேலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழைய பதிவுகளை படித்து வருவதும் மேலும் உற்சாகம்தான்.
2014 / 2015 வாக்கில் படிச்சுப் பாருங்க சார் - சும்மா WWF பாத்த எபெக்ட் இருக்கும்!
DeleteGood old days sir .. missing those golden days .. enna fightu ..
Deleteசண்டை தானே போட்ரலாங்க, சகோ 😋😋😋
Delete// மீண்டும் மாதம் ஒரு கார்ட்டூன் கதைகள் வரும் காலம் எப்போது என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். //
Delete+1
// இந்த slowdown ஒரு விதத்தில் நம் அனைவருக்குமே தொடர்பு கொண்டது //
ReplyDeleteஅப்ப நாம எல்லாம் பூமர் அங்கிள்ஸா மாறிட்டமா சார்...😄😄😄
சாதா பூமர்ஸ்லாம் நஹி சார்....பூப்போட்ட டண்டடாயர் போட்ட பூமர்ஸ் 💪💪
Delete// ரிப்போர்ட்டர் ஜானியுடன் மறுக்கா அழைப்பதால் கிளம்புகிறேன்//
ReplyDeleteமே வில் ஜூன் உண்டுங்களா சார்...
இல்லீங்க சார்.... டெக்ஸ் வில்லர் பெண்டு கழற்றும் 235 பக்க நீளம்! முழுசையும் மாற்றி எழுதுவதற்குள் சீவன் பாதி போயிண்டே 🤕🤕!
Deleteவாசித்து விட்டு நம்மவர்கள் விமர்சனம் பகிரும்போது,அந்த சீவன் யு டர்ன் போட்டு திரும்ப வந்துடும் சார்...
Delete1.ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?
ReplyDelete2014 வாக்கில் வந்ததாக நினைவு...
2.அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ? //
பொதுவாய் ஆண்டு அட்டவணை பதிவுகளை ரொம்பவே விரும்பிப் படிப்பதுண்டு சார்...
நான் 2017ல் இருந்துதான் பிளாக்கில் உள்ளேன் . அப்போது கீபேடு செல்தான் வைத்திருந்தேன் . ஆனாலும் அக்கம் பக்கத்து நண்பர்கள் செல்லில் ப்ளாக் போட்டுத்தர சொல்லி வாசித்து வந்தேன்
ReplyDeleteஇருந்தாலும் முதன் முதல் ப்ளாக் படித்த பிறகு ஒருவாரம் கூட மிஸ் பண்ணிய தில்லை.நண்பர்கள் செல்லில் வாசித்தலில் சில சங்கடங்கள் வரblogபார்ப்பதற்க்காகவே ஆன்ட்ராய்டு செல் வாங்கினேன். நினைவில் நிற்கும் பதிவுகள்அட்டவணை பதிவு வந்த நாட்களில் தூங்காமல்விடிய விடிய அனலைஸிஸ் செய்து கொண்டிருப்பது.அப்புறம் பொட்டி கிளம்பிடுச்சுனு 1ந்தேதி வரும் ஸ்பெசல் பதிவுகள்
நீங்க 2017 பேட்ச் தானா சார் 🤔🤔🤔? ரொம்ப முன்ன இருந்தே நீங்க பதிவு போடற மாதிரியொரு பீலிங்கு!
Delete// அட்டவணை பதிவு வந்த நாட்களில் தூங்காமல்விடிய விடிய அனலைஸிஸ் செய்து கொண்டிருப்பது. //
Delete+1
விடிய விடிய தீபாவளி நாட்கள் அவை எனக்கு!
2019 தான் எனக்கு தமிழில் காமிக்ஸ் வருவதே தெரியும்.. ஆகையால் அநேகமாக 2019 கடைசி நான்கு மாதங்களிலிருந்து அனைத்து பதிவையும் படித்து அன்றன்றே படித்து விடுவது வழக்கம்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் பொழுது உங்கள். முதல் பதிவில. இருந்து படிக்க அரம்பித்தேன். பதிவில் உள்ள கமென்ட்ஸ் படிக்க ஆரம்பிச்சு ஒரு கட்டத்தில் தலை சுத்தியதால் பதிவை மட்டும் படித்து விட்டு ஏதாவது ஒரு comment பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தேன்.. ஆகையால் இன்னும் நான் படிக்க வேண்டிய பதிவுகள் அதிகம்.
நினைவில் நின்றவை
உங்கள் பயணப் பதிவுகள், அட்டவனை பதிவுகள் மற்றும் சில புது கதாநாயகர்கள் குறித்த அறிமுக பதிவுகள்..
பழைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்குள் போனால் - பழைய MGR / நம்பியார் பட வாள்சண்டைகளை மிஞ்சும் ரேஞ்சுக்கு fights அரங்கேறியிருக்கும் சார் !
Deleteஆமா சார். என்னா அடி... எப்படி சார் தாங்குனீங்க..
Delete//அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ? //
ReplyDeleteஎல்லா பதிவுகளும் அந்தந்த நேரத்து ஸ்பெஷலாகத்தான் தெரிகிறது ஆசிரியரே... அதிலும் அதிக உற்சாகம் தருவது, நீங்கள் அவவ்வப்போது புறப்படும் வாடகை சைக்கிளிலான பின்னோக்கிய காலப்பயணங்கள்... அந்த அனுபவங்கள்... அதை நீங்கள் விவரிக்கும் விதம்... அந்த நெரேட்டிவான நடை... அந்த சுய எள்ளல் தெறிக்கும் நகைச்சுவை... அதற்கு நான் அடிமை... உங்களை போல எல்லாம் என் பயணங்களை விவரிக்க எத்தனித்திருக்கிறேன். எத்தனையோ டிராவலோக்களை வாசித்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்று எங்களை தம்மோடே கூட்டிச் செல்லும் கலையை கற்றவரை நான் வாசித்ததில்லை...
சமயங்களில் நான் இவ்விதமாய் நினைப்பதுண்டு. நீங்கள் மட்டும் ஒரு தேசாந்திரியாகி அந்த அனுபவங்களையெல்லாம் எழுத்தாக்கி எங்களுக்கு தருவதாய் இருந்தால் இந்த காமிக்ஸுக்கு முன்னால் காதல் கொள்வது அதுவாகத்தான் இருக்கும். என்போல் பயணங்களின் மேல் பித்து பிடித்து திரியும் ஒருவனுக்கேற்ற தீனியையும் திருப்தியையும் ஒரு சேர அளிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான்... நன்றி ஆசிரியரே!!
சார்....'இதயம் பேசுகிறது " என்றொரு பத்திரிகை உண்டு late '70s...'80s களில்! அதன் எடிட்டாரான திரு. மணியன் பயணக் கட்டுரைகளில் மன்னர்! இன்று எனக்கு பெரிதாய் நினைவில்லை - but அந்நாட்களில் அவருக்கு ஒரு fan following இருந்தது!
Deleteநாமள்லாம் இலுப்பைப் பூக்கள் சார்!!
///என்போல் பயணங்களின் மேல் பித்து பிடித்து திரியும் ஒருவனுக்கேற்ற ///
Deleteம்.. அப்பவே லைட்டா டவுட்டு ஆனேன் 🤔😁
//இலுப்பைப்பூ//
Deleteஓர் இடத்தை பற்றியோ அது சார்ந்த இன்னபிற தகவலகளையோ வண்டி வண்டியாய் யார் வேண்டுமானாலும் சொல்லலாம் சார்...
ஆனால் அன்று நீங்கள் பனியில் பயணித்த அந்த ஒரு ராத்திரி அனுபவத்தில் என் உடலும் உறைந்து போனதை இலுப்பைப் பூ என்று நீங்கள் சொல்வது உங்களை நிறைகுடமாகவே காட்டுகிறது.
//லைட்டா டவுட்டு//
Deleteஇளவரசே!! தங்கள் ஐயம் தீர்ந்ததா... இல்லை போட்டி ஏதாவது வைத்து ஐயம் தீர்ப்போர்க்கு பொற்கிழி அளிக்கும் உத்தேசம் ஏதேனும் இருக்கிறதா?
பொற்கிழியா? அலுமினியகிழிக்கே வழியில்லைங்க!
Deleteகஜானாவிலிருந்த மொத்த வரிப்பணமும் அந்தப்புரப் புனரமைப்புக்கே சரியாகிவிட்டது! இப்படியாப்பட்ட நிலைமையில் போட்டி போட்டி என்று என் போட்டியை உருவுகிறீர்களே!😅
சொன்னால் நம்ப மாட்டீர்கள் சார் ; ஆனால் ஒரு கட்டத்தில் அப்பா விடிய விடிய ஒவ்வொரு சனியிரவும் விழித்திருப்பார்கள் பதிவைப் பார்க்கும் பொருட்டு !!
Delete2013 ...2014 வாக்கிலெல்லாம் இன்டர்நெட் செம மொக்கையாக இருக்கும் ; so ஒரு பதிவை முடிப்பதற்குள் உசுரில் பாதி போயிருக்கும் ! அப்பாவிடமிருந்தோ இரவில் வாட்சப் மெசேஜஸ் வந்து கொண்டே இருக்கும் - "ஆச்சா ? ஆச்சா ?" என்று !!
நாங்கள் உங்களை நச்சரிப்பதை விட
Deleteசீனியர் சார் பதிவிற்க்காக உங்களை நிறையவே கேட்டிருப்பார் போலங்க, சார்
தங்கள் பதிவின் தாக்கம், சார்
விஜய்ன் சார், பதிவு போட்ட இரண்டு நாட்களுக்கு வாட்ஸ் ஆப் கம்யூனிட்டி பக்கம் எதுவும் போடாமல் இருந்தால் காமிக்ஸ் நண்பர்கள் இங்கு ஃபோகஸ் செய்வார்கள். வாட்ஸ் ஆப் கம்யூனிட்டி ஆரம்பித்து பிறகு நான் கவனித்தது இங்கு பதிவு போட்ட அதே நாளில் வாட்ஸ் ஆப் கம்யூனிட்டியிலும் நீங்கள் ஏதாவது போடுகிறீர்கள் அதனை கொஞ்சம் நிறுத்தினால் நன்றாக இருக்கும் சார். இது வேண்டுகோள் மற்றவை உங்கள் விருப்பம் 😊
ReplyDeleteவாட்ஸ் ஆப் கம்யூனிட்டி உங்களுக்கு பலவகையில் உதவுகிறது உண்மை. ஆனால் இந்த பனைமரத்தில் ஒருகுத்து தென்னை மரத்தில் ஒரு குத்து என்பது சில நேரம் நாமே பதிவுக்கு குழி தோண்டுவது போல எனக்கு தோன்றுகிறது சார்.
Delete///பதிவு போட்ட இரண்டு நாட்களுக்கு வாட்ஸ் ஆப் கம்யூனிட்டி பக்கம் எதுவும் போடாமல் இருந்தால் காமிக்ஸ் நண்பர்கள் இங்கு ஃபோகஸ் செய்வார்கள்.///
Delete+111111
இன்றும் இங்கு ஒரு பதிவு அங்கிட்டு ஒரு போஸ்ட் 😔
Deleteஇன்னிக்கி அங்குமொரு போஸ்ட்டா ???? புதுப் பதிவுக்கான லிங்கை தவிர்த்து நண்பர் கிருஷ்ணா அனுப்பியிருந்த TEX விமர்சனத்தை மட்டும் தானே forward செய்திருந்தேன் சார் ?
Deleteஒரு வேளை அது தவிர்த்தும் வேறு ஏதேனும் பதிவாகி இருந்தால், அது இணைப்பிரபஞ்சத்தில் நம்ம டூப் ஆராச்சும் போய் பண்ணின வேலையா இருக்கக்கூடும் !!
அங்கு பதிவு வரும் நாட்களில் எதுவும் போஸ்ட் செய்ய வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் சார். கிருஷ்ணா விமர்சனத்தை நாளை கூட அங்கு போடலாமே சார். ☺️
Deleteஅதுக்கு 2 replies வந்திருக்கு சார் - அதையும் வேணும்னா இங்கே இருக்க கணக்கிலே சேர்த்துக்கோங்க !!
Deleteஉங்கள் விருப்பம் சார் ☺️
Deleteஉங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறேன் சார்.
ReplyDeleteசனிக்கிழமையானால் புது பதிவு வந்திருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் பார்க்கும் வட்டத்தில் நானும் ஒருவன்.
உங்கள் எழுத்து நடைக்கு பல காலம் முன்பே காமிக்ஸ் கதைகள் மூலம் ரசிகனான/வாசகனான என்னைப் போன்றவர்களுக்கு blog ஒரு போனஸ்.
சுஸ்கி விஸ்கி மீண்டும் வருகிறார்கள் என்ற பதிவு, ஆண்டு அட்டவணை பதிவுகள், கொரோனா காலத்து பதிவுகள், என்று பல மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் பதிவுகள் ஏராளம்.
மீண்டும் மாதம் ஒரு கார்ட்டூன் கதைகள் வரும் காலம் எப்போது என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எழுதுவதை தொடருங்கள்.. நாங்களும் பின் தொடர்கிறோம்.
விடாப்பிடியான உங்க கார்ட்டூன் காதலுக்கு என்றேனும் நம்மவர்கள் மனமிறங்குவார்களென்று நானும் வேண்டிக் கொள்கிறேன் சார் !
Delete// மீண்டும் மாதம் ஒரு கார்ட்டூன் கதைகள் வரும் காலம் எப்போது என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். //
Delete+100000000000000001
99
ReplyDeleteMe the 100
ReplyDelete😝😝😝😝😝
Delete101
2003-2004 ம் வருடத்தில் இருந்தே இந்த ப்ளாக் அனைத்து பதிவுகளையும் படித்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteடாப் 3 மொமெண்ட்ஸ்
1. வெளிநாட்டில் கிழவிகளிடம் பாஸ்போர்ட் தொலைத்துவிட்டு நீங்கள் அல்லாடிய விஷயத்தையும் நகைச்சுவையாக பதிவு செய்தது.
2. மறுபதிப்பு மற்றும் அட்டவணை பதிவுகள்
3. 1000 கமெண்ட்ஸ் கண்ட பிறகும் நீங்கள் ரிப்ளை செய்யாமல் இருந்த போது தங்கள் உடல் நிலை குறித்து கவலை கொண்ட பதிவு.
ஒரு 13 ஆண்டுகளின் டயரிக்கு இணையானது நம்ம blog !!
Delete//வெளிநாட்டில் கிழவிகளிடம் பாஸ்போர்ட் தொலைத்துவிட்டு நீங்கள் அல்லாடிய விஷயத்தையும் நகைச்சுவையாக பதிவு செய்தது.//
Deleteஇந்த பதிவின் பின் நான் கோவை புத்தகவிழாவில் களப்பணியாற்றிய போது, சிலர் பேர் என்னிடம் வந்து சார் ஊருக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்டாரா என்று கேட்டார்கள்
அந்த அளவிற்கு ப்ளாக்கின் எபேக்ட் இருந்த நாட்கள்
ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?
ReplyDeleteஎல்லா பதிவுகளையும். Infact 2014 வாக்கில் தான் ப்ளாக்குக்கு முதன் முதலாக வந்தாலும் அதறகு முன் வந்த பதிவுகளை ஒவ்வொன்றாக பின்னோக்கி சென்று வாசித்திருக்கிறேன்.
அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ?
தாத்தாவை பற்றி நீங்கள் எழுதிய பதிவு எப்போதுமே என்றுமே எல்லாவற்றிலுமே ஸ்பெசல்.
சந்தா அறிவிப்புகள், பயண கட்டுரைகள், ஆன்லைன் புத்தக விழா அறிவுப்புகள் என பல்வேறு மொமென்ட்கள் இருக்கின்றன. அவற்றில சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்வது கடினம்.
//தாத்தாவை பற்றி நீங்கள் எழுதிய பதிவு எப்போதுமே என்றுமே எல்லாவற்றிலுமே ஸ்பெசல்.//
Delete+9
பூப்போட்ட சொக்காய்களை போட்டு ரெடியாகியாச்சா யூத்ஸ் ?
Deleteஒரு பதிவில் டெக்ஸ் கதைகளில் ஒரு காட்சிக்கு எப்படி ஸ்கிரிப்ட் எழுதுறாங்க என்று ஒரு பெரிய பத்தியை பதிவிட்டு அதை பற்றி சொல்லி இருந்தீங்க
ReplyDeleteஅப்போது வேலையில் சேர்ந்து 7,8 மாதங்கள் ஓடியிருக்கும் அலுவலகத்தில் சில பந்தா பேர்வழிகள் உண்டு
மதிய லஞ்ச் நேரத்தில் சக அலுவலகர் ஒருவர் எனக்கு ஒன்றம் தெரியாது என்று என்னிடம் நான் சினிமாவில் சேர போகிறேன், என்னிடம் சூப்பரான கதையெல்லாம் இருக்கு என்றும் தான் பெரியாளாக போகிறேன் என்னிடம் தம்பட்டம் அடித்தார்
எனக்கு இந்த ஸ்கிரிப்ட் ஞாபகம் வந்தது, இதை வைத்து ஒரு சினமாவிற் காட்சிக்கு எப்படி எல்லாம் ஸ்கிரிப்ட் எழுதுனும் தெரியுமா என்று இதை பயன்படுத்தி பேசினேன், அப்படியா என்று வாய் பிளந்தார்
அதன்பின் என்னிடம் சினிமாவை பற்றி தம்பட்டம் அடிக்கவில்லை
ஆக 'தல' long distance-ல் கூட சில்லுமூக்கை சிதற விட்டிருக்கிறார் !!
Deleteஆமாங்க, "தல" ராக்ஸ்
Delete//2012 ன் மத்தியில் வாங்கிய நோக்கியா கீ பேர்டு செகன்ட் ஹாண்ட் போனில் ப்ளாக் வாசித்து மகிழ்ந்துள்ளேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் அந்த மாடல் போனில் load moreக்கு பின்னர் வரும் கமெண்ட்கள் காட்டாது//
Deleteசகோ சேலம் டெக்ஸ் விஜயராகவன் சொன்னது தான், நான் மறந்து போன விசயம், 2019-இல் தான் ஆண்ட்ராய்ட் போன் எனக்கென்று தனியாக கிடைத்தது
அதஉவரஐ நோக்கியா கீ போர்ட் போனில் லோட் மோரில் படிக்க கஷ்ட படனும்
அப்போதெல்லாம் லோட் மோர் சீக்கிரமா வந்திடும்😁
அலுவலகத்தில் தான் பாதி நாட்கள் நம் ப்ளாக்கில் பதிவிட பயன்படுத்தி கொண்டிருந்தேன்
ReplyDeleteநுரையுடன் விரைந்து வரும் அலைகளுக்கு கரையை தொடுவதில் அலுப்பு ஏதுமில்லை.
சில பாடல்களை மறுபடி மறுபடி பாடினாலும் தாயின் மடியில் இருக்கும் குழந்தைக்கு தினந்தோறும் தாலாட்டு பாடல்களை கேட்பதில் அலுப்பேதும் இல்லை. ஒவ்வொரு நாளும் நீ அழகாய் இருக்கிறாய் என்ற ஒற்றை வரியை சொல்லி செல்லும் உண்மை காதலனின் வார்த்தைகளை கேட்க உண்மை காதலிக்கு அலுப்பேதும் இல்லை.
தன் மனதில் தோன்றும் உணர்வுகளை கவிதையாய் வடிக்க தமிழில் வார்த்தைகளை தேடும் ஒரு கவிஞனின் தேடலில் அலுப்பு ஏதுமில்லை. தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்து அமைதியான வாழ்வு வாழ வைக்கும் மன்னனின் முகத்தை தினம் தோறும் பார்ப்பதில் மக்கள் மனதில் அலுப்பு ஏதுமில்லை. தினந்தோறும் சூரிய ஒளியை பார்த்தவுடன் இதழ் விரிக்க கமல மலருக்கு அலுப்பு ஏதும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு சாகுபடியிலும் அதே விதையை விதைத்து வளர்ந்து நிற்கும் உணவு பயிரை மன மகிழ்வுடன் பார்க்கும் விவசாயியின் கண்களில் அலுப்பு ஏதுமில்லை.
உங்கள் பதிவை எத்தனை முறை பார்த்தாலும் படித்தாலும் எங்களைப் போன்ற வாசகர்களுக்கு அலுப்பு ஏதும் தோன்றுவதில்லை.
கோதை குறமாது குணதேவமடமாது இரு
பாலும் உற வீறிவரு குமரேசா’
என திருப்புகழ் சொல்லுவதுபோல் இணையதளமாக இருந்தாலும் சரி பகிரியாக இருந்தாலும் சரி( திருப்பரங்குன்றத்தில் தேவயானை உடன் மணமுடித்த முருகனாக இருந்தாலும் இலங்கையின் கதிர்காமத்தில் தினைப்புனம் காத்த வேட்டுவ வள்ளியை மணந்த முருகனாக இருந்தாலும் சரி இரண்டும் ஒரே முருகன் தானே ) எழுதுவது நீங்கள் தான் என்பதால் எவ்வித வேறுபாடும் இல்லை.
மறு பதிப்பு குறித்து நீங்கள் முதன் முதலில் அறிவித்த போது வாசகர்களின் எழுச்சி குறித்த பதிவு மறக்க முடியாதது.
சிகரங்களின் சாம்ராட் விமர்சனங்கள் குறித்த பதிவு மறக்க முடியாதது.
தேவதையின் கதை இடம்பெற்ற விமர்சனங்கள் அடங்கிய பதிவும் மறக்க முடியாதது. களப்பிரர்களின் இருண்ட காலம் போல வெள்ளை சட்டையில் ஒரு சிறு கரும்புள்ளி போல ஒரு பதிவையே அழிக்க நேர்ந்த கட்டாயத்தில் அந்தப் பதிவையும் மறக்க முடியாது.
அனைத்து பதிவுகளையும் படித்து இருக்கிறேன். இணையப் பதிவை துவங்கி சில ஆண்டுகளுக்குப் பின்பே வந்து சேர்ந்தாலும் அப்போதே பின்னோக்கி பயணித்து அனைத்து பதிவுகளையும் படித்து இருக்கிறேன்.
எழுத்தயர்வு உங்களுக்கு ஏற்பட அவசியம் எதுவும் இல்லை.
வாசகர்களுக்கு வாசிப்பயர்வு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் 🌹.
//நுரையுடன் விரைந்து வரும் அலைகளுக்கு கரையை தொடுவதில் அலுப்பு ஏதுமில்லை.
Deleteசில பாடல்களை மறுபடி மறுபடி பாடினாலும் தாயின் மடியில் இருக்கும் குழந்தைக்கு தினந்தோறும் தாலாட்டு பாடல்களை கேட்பதில் அலுப்பேதும் இல்லை. ஒவ்வொரு நாளும் நீ அழகாய் இருக்கிறாய் என்ற ஒற்றை வரியை சொல்லி செல்லும் உண்மை காதலனின் வார்த்தைகளை கேட்க உண்மை காதலிக்கு அலுப்பேதும் இல்லை.
தன் மனதில் தோன்றும் உணர்வுகளை கவிதையாய் வடிக்க தமிழில் வார்த்தைகளை தேடும் ஒரு கவிஞனின் தேடலில் அலுப்பு ஏதுமில்லை. தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்து அமைதியான வாழ்வு வாழ வைக்கும் மன்னனின் முகத்தை தினம் தோறும் பார்ப்பதில் மக்கள் மனதில் அலுப்பு ஏதுமில்லை. தினந்தோறும் சூரிய ஒளியை பார்த்தவுடன் இதழ் விரிக்க கமல மலருக்கு அலுப்பு ஏதும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு சாகுபடியிலும் அதே விதையை விதைத்து வளர்ந்து நிற்கும் உணவு பயிரை மன மகிழ்வுடன் பார்க்கும் விவசாயியின் கண்களில் அலுப்பு ஏதுமில்லை.//
அருமையாக சொன்னீங்க சகோ
கபாலத்தினுள் கொஞ்ச காலமாக ஓடிப் பிடித்து வந்த எண்ணங்களை இங்கு இறக்கி வைத்த பிற்பாடு ஒருவித relief சார் !! தொடரும் வாரங்களில் (தர்மயுத்தம் பண்ணாத) பழைய பன்னீர்செல்வமாய் களமிறங்கிப்புடலாம் !!
Delete//பழைய பன்னீர்செல்வமாய் களமிறங்கிப்புடலாம் !!//
Delete💪💪💪💪💪
// பழைய பன்னீர்செல்வமாய் களமிறங்கிப்புடலாம் !! //
Deleteஇத இததான் எதிர் பார்த்தேன் சார். நீங்க பழைய பன்னீர் செல்வமா கண்டிப்பாக வருவீங்க என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது சார் 😍
Selvam sir @ Well said! every line 100 likes sir.
Deleteசெனா அனா ஜி... 💐💐💐💐
Deleteஅருமை செனா
Deleteஆஹா.. Selvam அபிராமி... மிக அருமை. ❤️👍🙏..
Deleteஇதுவரை வந்த எல்லா பதிவுகளையும் ரசித்து படித்து இருக்கிறேன். இனியும் இதனை செய்வேன். இந்த தளம் நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் பின்னூட்டங்களை படித்து ரசிப்பேன் சார். இந்த தளத்தின் மூலம் தான் பல சிறந்த உண்மையான காமிக்ஸ் நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள் சார்.
ReplyDeleteமூம்மூர்த்திகள் திரும்ப வருவதாக சொன்ன பதிவு அன்று முழுவதும் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது 😀
காமிக்ஸ் அட்டவணை போட்டியில் நான் கலந்து வெற்றிபெற்ற அறிவுப்பு வந்த பதிவு. 😍
உங்கள் தாத்தா பற்றிய பதிவு சார்!
Deleteஉங்களிடம் உரிமை இருக்கிறது என்று ஒரு நபர் அதிகமாக உரிமை எடுத்து உங்கள் சட்டையை கிழித்த பதிவு, என்னை விடிய விடிய தூங்காமல் இருக்க செய்தது; உங்களின் சட்டையை அந்த நபர் கிழித்த பிறகு அவரின் தொடர்பை முழுமையாக நிறுத்திவிட்டேன்.
அது யாருல
Deleteதங்களின் பயணக்கட்டுரைகளுக்காகவும் சந்தா அறிவிப்புக்களுக்காவும் காத்திருந்தது உண்டு..
ReplyDelete1.ஆயிரத்துச்சொச்சம் பதிவுகள் இருக்கும் இந்த சமுத்திரத்தில் நீங்கள் தோராயமாக படித்திருக்கக்கூடியது எம்புட்டு folks ?
ReplyDeleteallmost all sir ..
2.அதே போல நினைவில் தங்கிய TOP 3 BLOG MOMENTS என்று எவற்றைச் சொல்வீர்களோ ?
தாத்தாவை பற்றி நீங்கள் எழுதிய பதிவு .. சந்தா அறிவிப்புகள், பயண கட்டுரைகள், ஆன்லைன் புத்தக விழா அறிவுப்புகள் என பல்வேறு மொமென்ட்கள் இருக்கின்றன.
on a personal note when u announced my title as winner for supremo special ..
and also my memes u posted in ur blog sir .. those too unforgetable ..
DeleteLion blog spotக்கு முந்தைய காலங்களில் இயங்கி வந்த lioncomics.comல அட்டை படங்களை மட்டுமே போடுவீங்க..அதை 3மாதத்திற்கு ஒரு முறை மணிக்கு 30ரூபா கொடுத்து ப்ரவுசிங் செண்டர்ல ரசித்து வந்துள்ளேன் சார்.
ReplyDelete//Lion comeback special ஐ பெற என் அக்கவுண்டில் இருந்த 25ரூபாய் போக மீதி 75ரூபாய் அனுப்பி வையுங்கள் சார்//-- னு லயன் அலுவலகத்தில் இருந்து வந்த போஸ்ட் கார்டு பார்த்து 75ரூபாய்க்கு மணியார்டர் பண்ணி அந்த புத்தகத்தை வாங்கி இருந்தேன். அதில் தான் lioncomics.blogspotபற்றிய தகவலும் கிடைத்தது. மீண்டும் அதே மாதமொருமுறை ப்ரசிங் சென்டர் ல போய் மொத்தமாக வாசிப்பு பாணி தொடர்ந்தது.
2012ன் மத்தியில் வாங்கிய நோக்கியா கீ பேர்டு செகன்ட் ஹாண்ட் போனில் ப்ளாக் வாசித்து மகிழ்ந்துள்ளேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் அந்த மாடல் போனில் load moreக்கு பின்னர் வரும் கமெண்ட்கள் காட்டாது. சில நண்பர்கள் இது குறித்து வினவ அப்போது நண்பர் கார்த்திக் சோமலிங்கா தந்த ஒரு லிங், லேட்டஸ்ட் 25 கமெண்ட்களை மட்டுமே காட்டும். இதில் கொஞ்சம் நாள் ஓடியது.
2012செப்டம்பரில் என் புரோபைல் மாதம் ஒரு வாசகர் பகுதியில் வந்த போது அதில் என் ஆசையாக குறிப்பிட்டு இருந்தது "லயன் ப்ளாக்ஸ்பாட்ல கமெண்ட் போடும் நண்பர்களை கெட் டு கெதரில் சந்திக்கணும்" . பின்னர் அது புத்தகவிழாக்களில் நிறைவேறியது.
NBS வந்த போது ப்ரவுசிங் சென்டர் போய் வாழ்த்து கமெண்ட் போட்டு இருந்தேன்
2014ன் துவக்கத்தில் ஆன்ட்ராய்டு போன் வாங்கி பதிவுகளில் தலைகாட்ட துவங்கினேன்.
அப்போதுலாம் 10நாட்கள், 8நாட்கள் என வேறுபட்ட இடைவெளிகளில் பதிவு வரும்
பின்னர் ஞாயிறுதோறும் பதிவு என்ற நடைமுறை தொடர்ந்தபோது வாழ்வின் ஒரு அங்கமாக லயன் ப்ளாக் மாறிப்போனது.
துவக்க காலங்களில் ஈவிக்கு என் கருத்துகளை ஆங்கிலத்தில் நான் அனுப்ப,அவர் அதை தமிழ் பண்ணி இங்கே போட்டது முதல் நானும் தள நடப்புகளில் பங்கு கொண்டேன்.
Delete2014ல் ஓரேமாதிரி சிந்தனை ஒரு மாதிரி லயனை கொண்டாடி, ஒரே மாதிரி உதை வாங்கிய நண்பர்கள் மானசீகமாக இணைந்தோம். பின்னர் நெருங்கிய சொந்தமாக மாறியதும் அவர்கள் இன்றி டே டு லைஃப்பே இல்லை என்றாகிப்போனது. சோ எங்களில் பலரது வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்தது லயன் ப்ளாக்.
ஒரு பதிவைவுயம் விட்டதில்லை.. பல பதிவுகளை பலமுறை வாசித்ததும் உண்டு. பல நேரங்களில் உள்ளங்கை ரேகை போல பதிவுகளில் எந்தெந்த விசயம் எந்தெந்த பதிவுகளில் இருக்கும் என தளத்தை ஊன்றி கவனித்து இருத்திக் கொண்டேன்.
பட்டியல்கள் எழுதி இங்கே போடச்செய்வது என்னை பொறுத்து கோல்டு மெடல் வாங்குவது.. உச்சத்தை பார்த்த அதே நேரம் விவாதங்கள், சண்டை சச்சரவுகள், சட்டை கிழிசல்கள்னு இங்கே தரை தொட்டதும் தவிர்க்க இயலாத நிகழ்வாகிப்போனது.
கொரோனா கால தினந்தோறும் பதிவுகள் தான் லயன் தளத்தின் உச்சபட்ச மொமென்ட் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை..
//விவாதங்கள், சண்டை சச்சரவுகள், சட்டை கிழிசல்கள்னு இங்கே தரை தொட்டதும் தவிர்க்க இயலாத நிகழ்வாகிப்போனது.//
Deleteஆமாங்க சகோ 😊😁😁
உணவில் எது பிடிக்கும்னா எதை குறிப்பிடுவது..எல்லாமுந்தான்...
Deleteரொம்ப பிடித்த பதிவு வகைகள் என வேண்டுமானால் குறிப்பிடலாம்
1.தாங்கள் எழுதும் நினைவோ ஒரு பறவை எனும் பழங்கதைகள்
2.தங்களின் பயண பதிவுகள்
3.சந்தா அறிவிப்பு பதிவுகள்
4. பழைய ஹீரோஸ்களின் வண்ண மறுபதிப்பு அறிவிப்புகள்
5.புதிய புதிய புத்தகங்களின் முன்பதிவு அறிவிப்புகள்
6.தீபாவளிமலர், NBS, LMS, dynamite, supremo போன்ற முக்கிய இதழ்கள் வரும் சமயங்களில் போடும் முன்தினபதிவு
7.புத்தக விழா ரிப்போர்ட் கார்டு பதிவுகள்
8.மாதந்தோறும் வரும் பார்சல் கிளம்பியாச்சி பதிவுகள்
போலவே லயன் தள பதிவுகளில் பாப் 3, டாப்10னு எதையும் பிரித்தறிய இயலாது
இருப்பினும் சில பதிவுகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்துட்டே இருக்கும்
அவற்றுள் சிலது..
1.தங்களின் தாய் வழி தாத்தா பற்றிய பதிவு
2.முதன் முதலில் வண்ணத்தில் லக்கி ஸ்பெசல், டைகர் ஸ்பெசல் அறிவிக்கப்பட்ட பதிவு
3.கனடா, ரஷ்யா, ப்ரான்ஸில் தாங்கள் சிக்கிய பதிவுகள்
4.ஆங்குலம் ஆங்குலமாய் ஒரு பதிவு என ப்ரான்ஸ் அங்குளம் விழாவில் சீஃப் கெஸ்ட் ஆக தாங்கள் கலந்து கொண்ட பதிவு
5.முத்து ஜாம்பவனாக இரும்புக்கையார், டைகர்& லயன் ஜாம்வானாக ஸ்பைடர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
6.நாயகன் டெக்ஸ்வில்லர் என டெக்ஸின் ஆதிக்க பதிவுகள்
7.சிகரங்களின் சாம்ராட் அண்டர்டேக்கர் பற்றிய விவாதபதிவு
8.இரத்தப்படல பதிவுகள்-யார் யார் எப்படி என அறியச் செய்த பதிவுகள்
9.முத்து 50 கொண்டாட்ட நிகழ்வு
10.2016ல் சந்தா பரிசு பெற்றதை அறிவித்த பதிவு
தளத்தின் முக்கியத்துவம் அறிந்து அதனை மீட்டெடுப்பு
Deleteசெய்வதை வரவேற்கிறேன்.
எதை எப்படி செய்யணும்னு தாங்கள் அறிவீர்கள்
தளம் & கம்யூனிடி இரண்டுக்குமான சமநிலையை காலப்போக்கில் சரிபடுத்திவிடூவீர்கள் என வழக்கம்போல தொடர்கிறேன் சார்.
அருமை அருமை சகோ
Delete//ஆங்குலம் ஆங்குலமாய் ஒரு பதிவு என ப்ரான்ஸ் அங்குளம் விழாவில் சீஃப் கெஸ்ட் ஆக தாங்கள் கலந்து கொண்ட பதிவு//
Deleteஅட ஆமாங்க சகோ, மறந்து போயிற்று
ஆங்குலம் பெயரையும் அதனை உச்சரிப்பு செய்வதையும் காமெடி பண்ணிட்டு இருந்தது
அதில் ஆசிரியர் தான் நடந்த சென்ற ஸ்டைலை பகடி பண்ணிருந்தார்
அப்போது சாருக்கு ப்ரான்ஸில் கிடைத்த பெருமையை, ஆபிஸில் சிலாகித்து கொண்டிருந்தேன் சொல்லி கொண்டு இருந்தேன்
ஆம் STV. நான் காலையில் யோசித்தது இதைத்தான்... கம்யூனிட்டியின் தாக்கத்தில் களையிழந்து விட்டதே தளம்!!
Deleteஆசிரியரின் இப்பதிவால் மீண்டும் புத்துணர்வு பெற்று விட்டது.
Excellent @விஜயராகவன்
Deleteநமது தளத்தில் லேப்டாப் மூலம் படித்து பதிவிட்டேன்; பட்டன் மொபைலில் நமது பதிவை படிக்க மட்டும் செய்வேன்.
Deleteமுதுகு வலி காரணமாக சிகிச்சை எடுத்துவந்த போது தளத்தில் நடந்த பிரச்சனையை முழுவதும் பட்டன் ஃபோன் மூலம் படித்து தெரிந்து கொள்ள முடியவில்லை அப்போது மருத்துவமனையில் இருந்து கொண்டு கார்த்திக் சோமலிங்கா உடன் ஃபோனில் பேசி தெரிந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
மிக அருமை ராகவன்... வாழ்த்துக்கள்.. ❤️👍🙏...
DeleteMotoE 2G Mobile வாங்கிய நாள் தொட்டு, தங்களது பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். அலுப்பு தட்டாத, சுய பகடி கலந்த நகைச்சுவை மிளிரும் பதிவுகளை ரசிக்க தவறுவதேயில்லை.
ReplyDeleteமுத்து 50 பற்றிய அறிவிப்புகளோடு, வாசகர்களின் மலரும் நினைவுகள் கலந்து கட்டி அடித்த பதிவு மறக்க இயலாதது.
சில பல குஸ்திகள் நடந்தேறி பதிவுக்கே பை,பை சொல்லிய பதிவும் மறக்க இயலாது. அப்போதும் பழைய பன்னீர் செல்வமாக மறுபடி திரும்பி வந்தீர்கள்.
வாட்சப் கம்யூனிட்டியை விட நான் blogல் தங்கள் பதிவையே பெரிதும் விரும்புகிறேன்.
அடுத்த வருட அட்டவணை பற்றிய பதிவை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்து, படித்து, ரசிப்பது அலாதி சுகம்.
//ஒரு கட்டத்தில் அப்பா விடிய விடிய ஒவ்வொரு சனியிரவும் விழித்திருப்பார்கள் பதிவைப் பார்க்கும் பொருட்டு !!
ReplyDelete2013 ...2014 வாக்கிலெல்லாம் இன்டர்நெட் செம மொக்கையாக இருக்கும் ; so ஒரு பதிவை முடிப்பதற்குள் உசுரில் பாதி போயிருக்கும் ! அப்பாவிடமிருந்தோ இரவில் வாட்சப் மெசேஜஸ் வந்து கொண்டே இருக்கும் - "ஆச்சா ? ஆச்சா ?" என்று !! //
பிதாமகரே உங்கள் பதிவுக்கு காத்திருந்திருக்கிறார் என்பதை கேடபதற்கு பெருமையாக இருக்கிறது.
மாதத்தில் ஒருமுறையாச்சும் சைக்கிளை எடுத்திட்டு கிளம்பினாதான் அது பயன்படுத்த சுளுவாக இருந்திடும்... அதனால மாதமொரு பயணக்கட்டுரை வேண்டுங்க சார்.
//மாதத்தில் ஒருமுறையாச்சும் சைக்கிளை எடுத்திட்டு கிளம்பினாதான் அது பயன்படுத்த சுளுவாக இருந்திடும்... அதனால மாதமொரு பயணக்கட்டுரை வேண்டுங்க சார்.//
Deleteஆமாங்க சகோ
இதே இதே இதைத்தான் நானும் வழிமொழிகிறேன்
நான் சென்ற வருடம் பணிஓய்வு பெற்ற பிறகு தான் blog ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். சில சமயம் உற்சாகமாய் தாங்கள் எழுதும் blok க்குகள் ஆச்சரியமாய் இருக்கும். எப்படி இப்படி ஒரு ரசனையான எழுத்து மொழியில் வசீகரிக்கும் விதத்தில் எழுதுகிறார் என்றும், படிக்கும் எனக்கே மூச்சு வாங்குகிறதே, இவர் எப்படி எழுதுகிறார் என்றும் பிரமிப்பாய் இருக்கும்.சில சமயம் எழுத்தயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டுதான். தற்சமயம் தங்கள் தந்தையின் நினைவுகள் கூட காரணமாக இருக்கலாம். அச் சமயம் சுருக்கமாக எழுதி விடுங்கள். எழுதாமல் இருந்து விடாதீர்கள். மொழியாக்கத்தை பட்டி டிங்கரிங் பார்ப்பது, தங்கள் காமிக்ஸ் குழந்தையின் மேல் உள்ள அக்கறைதான். பையன் டியூசனே படித்தாலும் நன்றாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? என்று கவனிக்கும் அக்கறைதான். நான் கிளாசிக்ஸ் மறு மதிப்புகள் பற்றிய தகவல்களை ஆவலோடு எதிர்பார்ப்பது உண்டு.
ReplyDeleteஒரு முறை தாங்கள் 'கொள்ளைக்காரப் பிசாசு' வண்ணப்பதிப்பு யாரிடமாவது இருந்தால், அனுப்பி வைத்தால் ஒரு வருட சந்தா இலவசம் என்று அறிவித்திருந்தீர்கள்.
நான் சிறு வயதில் அதை அட்டை போட்டு பைண்டிங்காக நானே தைத்து வைத்திருந்தேன். என் தம்பி பெரியவனான பிறகு, அவனுடைய நண்பர்களுக்கு படிக்க கொடுத்த பல புத்தகங்கள் திரும்பி வரவேயில்லை. அதில், நானே ஒரு காமிக்ஸ் எழுதி வைத்திருந்ததும் அடக்கம். அதை என் காமிக்ஸ் நண்பன் பத்து ரூபாய்க்கு அப்போதே கேட்டு நான் தராமல் வைத்திருந்தேன். தங்களுக்கு கொள்ளைக்கார பிசாசு நீண்ட நாள் வைத்திருந்தும் தர முடியாமல் போனது வருத்தம்தான். சந்தாவுக்காக அல்ல.
தங்களின் முத்து காமிக்ஸ் 500வது இதழை எதிர்பார்த்து ஏமாந்தது ஒரு கதை. அதில், 500 இதழ்களின் பட்டியல் மற்றும் முத்து காமிக்ஸின் பழைய நினைவுகள் என நிறைய இருக்கும் என எதிர் பார்த்து ஏமாந்தேன்.
மற்றபடி தங்களின் உற்சாகமான புதிய வார்த்தைப் பிரயோகங்களோடு கூடிய அனைத்துப் பதிவும் ரசனையானதுதான். Keep it up. All the best.
super!!!!!
Delete154th
ReplyDeleteBlog பதிவுகள் எதையும் படிக்காமல் விட்டதில்லை, இது எனக்கு பெரிய Stress buster,
ReplyDeleteபனி பொழியும் இரவில் நீங்கள் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நிகழ்வு
தங்களின் தாத்தா குறித்த பதிவுகள்
லயன் சூப்பர் ஸ்பெஷல் தயாரிப்புப் பணிகள் குறித்த பதிவுகள்
கொரானா காலப் பதிவுகள்
மறுபதிப்புகள் குறித்த அனைத்து பதிவுகள்
இவையெல்லாமே சிறந்த பதிவுகள்
ஓய்வு கிடைக்கும் நேரங்களில் முதல் பதிவில் இருந்தே படிப்பேன்,
Blog ன் முதல் பதிவில் எனது Comment ம்இருக்க வேண்டும் என்பதற்காக தாமதமாக பதிவிட்டேன்
அருமை சகோ 💐💐💐
Delete🙏🙏🙏
ReplyDelete1. சனி ஆனால் தவம் கிடப்போம் உங்களின் பதிவிற்காக... அப்படி இருக்க உங்களின் பதிவு எனக்கு வார விடுமுறை மாதிரி ( விடுமுறையே இல்லாத எனக்கு )... அவ்வளவு சந்தோசம் தரும் ❤️❤️❤️❤️.
ReplyDelete2.a. தல சார்ந்த பதிவுகள் எனக்கு ஆல் டைம் ஃபேவரைட்.
B. ஒவ்வொரு வருட அட்டவணை பதிவு. ( இப்போது கூட போரடித்தால் ஏதேனும் ஒரு அட்டவணை பதிவு )எடுத்து படித்துக் கொண்டே இருப்பேன்.
C. ஒவ்வொரு ஸ்பெஷல் இதழ்களின் பதிவு.
கரூரில் திருவிழா நடந்து கொண்டுள்ளதுங்க சார் .. ஊர் சுத்தறதில பிஸியாயிட்டேன்.சாரிசார்.மறுபடி இப்பதான் blogவர முடிந்தது.2017ல் சென்னை பு.வி. வந்திருந்தேன்.அங்கு தான் முதல் முதலாக நமக்கு ஒரு தளம் இருப்பதையே அறிந்து கொண்டேன். ஈரோடு இளவரசர் செல்லில் முதன்முதலாக நமது blog வாசித்தேன்..அன்றிலிருந்து இன்றுவரை எந்த பதிவையும் தவற விட்டதே இல்லை. பதிவு இல்லாத ஞாயிறு வெறுமையான நாளாகவே கழியும்
ReplyDeleteசமீபத்தில்தமிழக அரசு விழாவில் கலெக்டர் முதல் அனைவரும் தங்களுக்கு மரியாதை செய்ததையறிந்துநாங்கள் அனைவரும் நெகிழ்ந்து நெக்குருகி நின்ற பதிவு.
ReplyDeleteஎனக்கும் 😍
Delete
ReplyDelete1. உங்கள் பயண கட்டுரைகள் பிடிக்கும் சார்.
2. பழைய இதழ்கள் பற்றிய மேக்கிங் ஆஃப் நன்றாக இருக்கும்.
3. புதிய அட்டவணை.
அதில் எனக்கு பிடித்த கதாநாயகர்கள் லிஸ்ட்.
புதிய நாயகர்கள் அறிமுகம்.
4. தங்க கல்லறை. மறு மொழி பெயர்ப்பு.அது பற்றிய விவாதங்கள்.(ஹிஹிஹி)..
எப்போதும் என் மொபைலில் புக் மார்க் ஆக தங்கள் பிளாக் இருக்கும்.
Initially Whatsapp community was very interesting. I ran 3 communities in last 1 year and currently owner of 2 communities with 350 members and almost 20 groups. So, i feel not to come and participate in lion comics whatsapp community, even though i am a member of that.
ReplyDeleteI read all ur blogs sir
top 3 of mine
1. The very first blogpost of urs i discovered in 2013. About NBS i think. I was so, so, so happy reading u after very long time
2. Your detailed travelogue on buying machines in snow
3. i don't remember whether its comiccon 2012 post or not. the post where your photo came. I have known u for 20 yrs, but it was the first time i seen your photo. I used to imagine how you look like for many hours during my childhood.
and many other posts of urs. all are treasures sir. Whatsapp community is like fastfood. Blog always provides a full meal satisfaction.
டாக்டர் @ அந்த பதிவு 2012 பெங்களூரு காமிக்கான் பதிவு. ஆசிரியரை நம்மிள் பலரும் சந்தித்தது அப்போது தான்.
Deleteநானும் ஆசிரியர் சாரை அன்று தான் நேரில் சந்தித்தேன்.
அவரது ரைட்அப்பில் என் வருகையை பற்றி குறிப்பிட்டுள்ளதை ஒரு ஆயிரம் தடவை வாசித்து இருப்பேன்.
அந்த பதிவின் லிங்
https://lion-muthucomics.blogspot.com/2012/09/blog-post_13.html?m=0
Editor sir,
ReplyDeleteஉலகின் எந்த இடத்தில இருந்தாலும் தங்களின் ஞாயிறு பதிவை வாசித்து விடுவேன். அதன் ஆரம்ப காலத்திலிருந்து. தங்களின் பதிவு என்றுமே சலிப்பு தட்டியதில்லை.
சில நண்பர்களின் பின்னூட்டமும் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும், உதாரணமாக : நம்ம இளவரசர், டாக்டர் செல்வம் அபிராமி, கார்த்திக் சோமலிங்கா, நம்ம மேச்சேரி கண்ணன், காமிக் லவர் ராகவன், ராஜ்குமார் (இப்போது இவர் இங்கு வருவதில்லை), நம்ம தளத்தின் புள்ளிவிரப்புலி டெக்ஸ் விஜய், தலீவர், பெங்களூரு பரணி, Spoiler இல்லாமல் விமர்சனம் எழுதும் அறிவரசு ரவி, சூர்யா ஜீவா. அவ்வப்போது நம்ம எடிட்டரை வம்புக்கிழுக்கும் கணேஷ் குமார், திருநாவுக்கரசு ஆகியோரது பின்னூட்டங்களையும் படிக்கப் பிடிக்கும்.
Radja ji.. 🥲🥲🥲😇😇🙏💐💐
Delete😊 வெரி குட் ஆப்சர்வேஷன்
Deleteநன்றி சார்.. ஆத்தா நான் பாஸாயிட்டேன் moment
Deleteஅருமை Radja சகோ
Delete// ஆத்தா நான் பாஸாயிட்டேன் moment //
Deleteநானும் 😍
I'm following this blog since 2012. I never missed anyone till date...
ReplyDelete2. நினைவில் நின்றவை:
a. இரத்தப்படலம் வண்ணத்தில் வெளியிட்ட போது நடந்த அலப்பறைகள், அதையே 2ம் முறை கேட்ட போது விழுந்த மொத்துக்கள், கார சார விவாதங்கள்
b. நீங்கள் கனடா சென்று, பனிப்புயலில் மாட்டிக் கொண்டதைப் பற்றிய பதிவு
c. உங்களுடைய தாத்தாவைப் பற்றி நீங்கள் உளமாற பகிர்ந்து கொண்ட பதிவு
இந்த மூன்றும் தான் சட்டென நினைவுக்கு வந்தன சார்...!
எடிட்டர் சார், வர வர கதைகளில் நெறைய மத சார்ந்த வார்த்தைகள் யூஸ் செய்கிறீர்கள்... பண்ணாம இருந்தா நன்றாக இருக்கும்... வீட்டில் இருந்தா ஓகே.. வெளிய வேண்டாமே
ReplyDeleteUseless words....
Deleteகதையின் ஒரிஜினலில் ஏற்ப இருப்பதை தவிர்த்து தேவையின்றி எந்த சொற்களும் இருந்ததல்லைங்க
Deleteமேலும் தாங்கள் பதிவிட்ட கமெண்ட் தெளிவாக இல்லங்க
எதை சொல்றீங்க என்று புரியலைங்க
மேலிருக்கும் ப்ளாக் பதிவை படித்தீர்களா, சார்
Deleteசெந்தில் நாதன்... சொல்வதை புரியும் படி சொல்லுங்கள்...🤔 மத சம்பந்தமான வார்த்தைகள் எதை அதிகமாக use பன்றார் எடிட்டர்... வீட்டில் ஓகே.. வெளியில் வேண்டாமா... 😄😄... ஓ.. ஜீசஸ், கடவுளே.. என்ற வார்த்தைகளையா... 😄😄ஆமா... நிதானத்தில தான் இருக்கிறீங்களா...? 😄😄
Deleteஎடிட்டர் அடிக்கடி சொல்ற அந்த "use less words" என்ன, என்ன.. அப்படினு கொஞ்சம் சொல்லுங்க சாரே... 😄😄❤️
Deleteஎதையுமே விட்டதில்லை
ReplyDeleteநச்
Deleteமதசம்பந்தமான வார்த்தை "//ஆன்மா சாந்தியடையட்டும்//". அல்லது// "பாவப்பட்ட"//என்று நினைக்கிறேன் .
ReplyDeleteசகோ 😂😂😂
Deleteராஜசேகரன்... 😄😄😄... Nice.. 😄❤️👍
ReplyDeleteநாளை போய் நேற்று வா - முதல் 30 பக்கம்கள் நேர்கோட்டில் பயணித்த கதை அடுத்த 30 பக்கம்களில் மண்டையை சுற்றவிட்டு விட்டது :-) கடைசி 30 பக்கம்களை மீண்டும் ஒருமுறை இந்த வார இறுதியில் மீண்டும் ஒருமுறை படிக்க போகிறேன்!
ReplyDeleteமுதல் 30 பக்கம்களில் ஓவியம் ஒரு ஸ்டைலில் அழகாக உள்ளது அடுத்த 30 பக்கம் ஓவியம் வேறு மாதிரியாக உள்ளது? கதைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா சார்? அல்லது இருவேறு ஓவியர்கள் இந்த கதைக்கு பணியாற்றியுள்ளார்களா சார்?
குட் அப்வேர்சன், பரணி சகோ
Deleteஐந்தாம் பக்கத்தில் கீழ் பகுதியை பாருங்கள் சகோ,
மூன்று ஓவியர்கள்
பெயரை குறிப்பிட்டு உள்ளார்கள்.
நமது சாருக்கு அனுப்பிய பதில்களில், முதலில் வேலை செய்தவர் பாதியில் நின்றுவிட, பின்னர் வேறு ஓவியர்கள் கிடைத்ததாகவும், அவர்களை கொண்டு கதையினை முடித்தாகவும் கூறி உள்ளாருங்க, கதையின் ஆசிரியர்
Thank you @ Ramya!
Delete@ பரணி சகோ
Delete💐💐💐
ஒற்றை கண் மர்மம் - விடுமுறைக்கு ஒரு தீவுக்கு செல்லும் மாயாவி புதிய பிரச்சனையை சந்தித்து அதனை எப்படி வெல்கிறார் என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லி உள்ளார்கள்! மாயாவி அறையை நோட்டம் விடும் ஒற்றை கண்ணை தனது இரும்புகையால் நங் என ஒரு குத்துவிட அது என்ன என்று தெரிந்து கொள்ள பின்தொடர நாமும் அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் நானும் அவரை பின் தொடர பரபர வென்று சம்பவங்கள், வேற்று கிரக மனிதர்கள் ஏன் எதற்கு எப்படி என்று சுஜாதா அவர்கள் பாணியில் காரணம்களை கதையின் போக்கில் சொல்லி அசத்தி விட்டார்கள்! காதில் பூ சுத்தும் கதை மாதிரி தெரிந்தாலும் இதுவும் நடக்கலாம் என்று சிந்தனையை விதைத்து விட்டது.
ReplyDeleteஇந்த முறை கதைக்கு வண்ணம் சிறப்பு! முதல் முறையாக இந்த கதையை படித்தேன், புராண நெடி ஏதும் இல்லாமல் படிக்க நன்றாக இருந்தது. இந்த கதையின் அட்டைப்படம் புத்தக திருவிழாவில் அனைத்து தரப்பு வாசகர்களையும் கவர்ந்து இதனை வாங்கி படிக்கச் செய்யும்.
இந்த கதையை தேர்ந்தெடுத்து நமக்கு அறிமுகம் செய்து வைத்த சீனியர் எடிட்டர் அவர்களுக்கு நன்றி! அற்புதம்! காமிக்ஸ் வடிவில் என்றும் சீனியர் எடிட்டர் நம்முடன் இருப்பார் என்பதற்கு இந்த ஒரு கதை மிக சரியான உதாரணம்! நன்றி சார்.
Till now I have read all your posts in the blog
ReplyDeleteபரணி ஜி அருமையான விமர்சனம் . கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது
ReplyDeleteமேக் & ஜாக்
ReplyDeleteகதை - RAOUL CAUVIN
ஓவியம் - ARTHUR BERCKMANS / JEAN - POL
மொழியாக்கம் - S விஜயன்
கதைகளின் காலகட்டம் - 1925 லிருந்து 1931 வரை
அல் கபோன். ஒரு ஜாலியான டான். சிகாகோவின் சிம்ம சொப்பனமாக இருந்தான். சமயத்தில் சிகாகோவின் ராபின் ஹூட் என்று போற்றப்பட்டவன். தன்னை ஒரு டானாக காட்டிக் கொள்வதை விட, ஒரு வெற்றிகரமான வியாபாரியாக காட்டிக் கொள்ளவே அவன் விரும்பினான். கைதான பின்பு அவனது வாழ்க்கை அதள பாதாளத்துக்கு சென்றதை வெளிச்சம் போட்டு காட்டினால், கொலை பாதகத்துக்கு அஞ்சாத ஒருவன் மீது கழிவிரக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ள அளவுக்கு கடும் கஷ்டங்களை அனுபவித்தவன் அல் கபோன். 1899ல் பிறந்து சிகாகோ நகரின் இண்டு இடுக்குகளில் எல்லாம் வளர்ந்து, ஒரு கட்டத்தில் சிக்காகோ காவல்துறையின் ஊழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வன்முறை மூலம் நகரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒருவனை, மக்கள் கொண்டாடினார்களா, அல்லது பயந்து ஒதுங்கினார்களா என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளை எல்லாம் இந்த கதைகளில் இல்லை. அல் கபோன் போன்ற டான்கள் எவ்வளவு பயந்தாங்கொள்ளிகள் என்று, கதை நாயகர்களின் மூலம் ஆங்காங்கே அவனை தோலுரிப்பதை மட்டுமே கதாசிரியர்கள் கையில் எடுத்துள்ளனர்.
எலியட் நெஸ். அல் கபோனுக்கு நேரெதிர் துருவமாக விளங்கியவர். நிதி மற்றும் கருவூல துறையில் மது போதை ஒழிப்பு பிரிவில் வேலைக்கு சேர்ந்த எலியட் விரைவிலேயே, நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்ததுடன் இல்லாமல், அந்த துறையில் ஒரு பத்து அதிகாரிகள் கொண்ட குழுவாக செயல்பட்டார். இவர்கள் UNTOUCHABLES என்ற பட்டப்பெயருடன் சிகாகோ நகரத்தையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். இந்தக் கதையில் எலியட் டை சிறு சிறு பகடிகளுடன் கலாய்த்து தள்ளியிருக்கும் கதாசிரியர், அவரை ஒரு ஹீரோ போலவே கொண்டாடியிருக்கிறார் என்பது நிதர்சனம். இந்தக் கதைகளில் சிகாகோ போலீசில் உள்ள ஊழல் குறித்து இது வரை நான் படித்த கதைகளில் எங்கும் குறிப்பிட்டது போல் தெரியவில்லை.
என்னடா மேக் & ஜாக் னு தலைப்பிட்டு விட்டு கப்போனுங்கிறான், எலியாட் ன்றான், மேக்கும் ஜாக்கும் எங்கப்பா என்று கேட்கிறீர்களா, இதோ கதைகளுக்குள் நுழைவோம்.
ஒரு தனியார் பாடிகார்ட் அமைப்பு நடத்தி வரும் ஜாக் மற்றும் அவரது அசிஸ்டன்ட் மேக் இவர்களின் சாகசங்கள் தான் இந்த தொடர். முதல் முதலில் வந்த கதை 1970ல் வந்திருந்தாலும், நமது எடிட்டர் நமக்கு அறிமுகப்படுத்த 2000ல் வெளியான ஆல்பத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்தக் கதையில் 1995 முதல் ஓவியப் பணியை ஏற்றுக் கொண்டு செயலாற்றிய ஜீன் போல் விளையாடி இருக்கிறார். நகைச்சுவை வசனங்களில் குறைவே என்றாலும், கதாபாத்திரங்கள் அடிக்கும் லூட்டிகளிலும், முக பாவனைகளிலும், அசத்தி இருக்கிறார்கள்.
2000ல் வெளிவந்த கதை முதலில்
1993ல் வந்த கதை இரண்டாவது வெளியீடு
1991ல் வந்தது மூன்றாவது
1992 நான்காவது
1980ல் வெளியான கதை 5வது என பார்த்து பார்த்து கதைகளை select செய்து கதைகளை வெளியிட்டுள்ளார் ஆசிரியர்
*வாடகைக்கு கொரில்லாக்கள்*
Deleteஅது என்ன கொரில்லா? பாடிகார்டுகளுக்கு பிரென்ச் மொழியில் கொரில்லா என்று செல்லப்பெயர் உண்டாம். ஒரு பிணத்துக்கு காவல் இருக்க அமர்த்தப்பட்ட பாடிகார்டுகளின் நிலைமை படு மோசமாக மாறும் என்று வாசகர்களாகிய நாமே சிந்திக்க இயலாத நிலையில் மேக் மற்றும் ஜாக்கின் நிலைமையை யோசித்து பாருங்க.
இதில் அல் கபோனை வாறு வாறு என்று வாரியிருக்கிறார்கள். கிடைக்கும் கேப்பில் எல்லாம் கிடா வெட்டியிருக்கிறார்கள். பத்தாம் பக்கத்திலேயே கதையின் சாராம்சத்தை சொல்லி விட்டு, எப்படி இந்தக் கதையை நகர்த்திக்கிட்டு போறேன் பாரேன் என்று நம்மை கை பிடித்து அழைத்து செல்லும் கதாசிரியர் செம்மையாக விளையாடி இருக்கிறார். இதன் மொழியாக்கம் அநேகமாக கருணையானந்தம் சார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் பழைய நெடி அடித்தாலும் அதை எடிட்டரின் கத்தரி பல இடங்களில் நேர்த்தி செய்திருப்பது கண்கூடு.
இந்தக் கதையில் முதியோர் இல்லம் குறித்து தங்களது கருத்துக்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றனர் இதன் படைப்பாளிகள்.
*நடனமாடும் கொரில்லாக்கள்*
சிறையில் இருந்து தப்பிக்கும் ஒரு கைதி, அவனது வித்தியாசமான பின்னணி, அவனைக் கண்டுபிடிக்க பணியில் அமர்த்தப்படும் மேக்கும் ஜாக்கும், அந்த கைதியை தேடி அலையும் அல், கூடவே எலியட், என்று அதிரடி சரவெடி தான். இது ஒரு வித்தியாசமான கதைக்களம். கைதானவர்களின் அடையாள அட்டையை பார்த்த பின்பு, அந்த காவல் துறை உயர் அதிகாரியின் முகம் போகும் போக்கு, விழுந்து விழுந்து சிரித்த தருணங்களில் ஒன்று.
*கதவைத் தட்டும் கோடி*
இந்தக் கதைக்கு விமர்சனம் இந்த புத்தகத்தின் பின்பக்கத்திலேயே உள்ளது. நாலு வரிகளில். அல் கபோன், ஒரு குடிகார வாரிசு, கோடிகளில் சொத்து, விலா நோகும் சிரிப்பு. ஒரு குடிகாரன் நினைத்தால் குடியை விலக்கி வைத்து நன்றாக வாழ முடியும் என்பதை இந்தக் கதையின் மூலம் நிறுவியிருக்கிறார்கள். மது விலக்கு உள்ள நேரத்தில் இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மது கிடைக்கிறது என்ற மேக்கின் சந்தேக கேள்விக்கு ஜாக் அளிக்கும் பதில் நெத்தியடி.
"பாழாய்ப்போன இந்த பழக்கம் அண்டும் பொழுது, அதைத் தேடி அலையாமல் மனுஷன் ஓய மாட்டான்"
இப்படி ஒரு வசனத்தை சாதாரணமாக சொல்வது போல் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்/எடிட்டர். (ஒரிஜினலா அல்லது நம்ம எடிட்டர் சாரின் improvisationனான்னு தெரியல)
*பாவை மிரண்டால் பார் கொள்ளாது*
செம ஜாலியான ஒரு கான்செப்ட். மது விலக்கு அமுலில் இருக்கும் காலத்தில் கள்ளச்சாராயம் எப்படி ஓடும் என்பதை நம் தமிழக வரலாறு அறிந்ததே. அரசே சாராயம் விற்கும் பொழுதே கள்ளச்சாராயம் கொடி கட்டி பறக்கும் பொழுது, மது விலக்கு காலத்தில் சொல்லவா வேண்டும். அப்படிப்பட்ட கள்ளச்சாராயத்தால் விதவையானதாக சொல்லப்படும் மூன்று பெண்கள் நம் ஹீரோக்களின் துணையோடு கள்ளச்சாராயத்தை ஒழிக்க பாடுபடும் கதை. அல் கபோணை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறார்கள். கதையின் ட்விஸ்ட் தான் செம... எலியாட் நெஸ்ஸையும் செமையாக இந்தக் கதையில் கலாய்த்திருக்கிறார்கள்.
*ரீலா ரியலா*
அல் கபோனும் இல்லாமல், எலியாட் நெஸ்ஸும் இல்லாமல், இருந்தாலும் கதையில் வேறு ஒரு மாஃபியா கும்பலை கையில் எடுத்துக் கொண்டு கலக்கி இருக்கிறார்கள். நான் தனிப்பட்ட மனிதர்களை ஆராதிப்பதில்லை. அத்தி பூத்தார் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் என்னை ஆட்கொள்வதுண்டு, ஆனால் அவர்களை தூர இருந்து ரசிப்பதையே வழக்கமாக கொண்டவன் நான். ஆனால் எனது உறவினர்கள் பலர் யாராவது celebrityயைக் கண்டால் துரத்தி சென்று போட்டோ எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது என்று பித்து பிடித்து திரிவதுண்டு. இது இந்தியாவில் மட்டுமே நிகழும் நிகழ்வு என்று நினைப்பதுண்டு. ஆனால் ஹாலிவுட் நடிகர்களுக்கும் இதே நிலைமை தான் என்று இந்த கதையின் மூலம் தெரிந்துக் கொண்டேன். fan following வைத்து இந்தக் கதையில் ரவுண்ட் கட்டி அடித்துள்ளார்கள்.
அருமை மிக அருமை. தொடரட்டும் உங்கள் விமர்சனம் 😍
DeleteThank you sir
Delete