Powered By Blogger

Saturday, May 17, 2025

வாஷிங் பவுடர் நிர்மா !!

 நண்பர்களே,

வணக்கம். பொதுவாய் பாக்கிகளை வசூல் பண்ணப் போகும் பொழுதுகளில் - "இன்னிக்கி போய்ட்டு நாளான்னிக்கி வா...! அடுத்த வாரம் போய்ட்டு அதுக்கடுத்த வாரம் வா" - என்ற ரீதியில் பதில்கள் கிடைக்கும் போதெல்லாம்,  வெளியே "சரிங்க அண்ணாச்சி" என்று படு செயற்கையான சிரிப்போடு நடையைக் கட்டினாலும், உள்ளுக்குள் செம காண்டாகிடுவதுண்டு ! But முதல் தபாவாய் ஒரு மொக்கையான தவணை சொல்லப்பட, அதனை குஷியாய் நாமும் ஏற்றுக் கொள்வது  நிகழ்ந்துள்ளது ! Becos அந்தத் தவணையில் டிசைன் அப்டி : "நாளை போய் நேற்று வா ....!!

நமது ஆன்லைன் மேளாவிற்கென புக்ஸ் தேர்வு செய்யும் தருணத்தில் உட்புகுந்த surprise entry தான் இந்த கி.நா. and வயசானாலும் உங்களது வாசிப்பு ரசனைகளின் நாடித்துடிப்பினை இந்த சித்த வைத்திய சிகாமணி ஓரளவுக்கு அறிந்து வைத்திருப்பதை ஊர்ஜிதம் செய்திடவும் உதவியுள்ள இதழிது ! இடியாப்பங்கள் நமக்கு எப்போதுமே இஷ்டமான டிபன் என்பது ரிப்போர்ட்டர் ஜானி ; மர்ம மனிதன் மார்ட்டின் காலம் முதலே தெரிந்த விஷயம் தான் ; plus காலப் பயணங்களும், இணைப் பிரபஞ்சங்களுமே உங்களுக்கு செமத்தியாக ரசிக்கும் என்பதை "சிகரங்களின் சாம்ராட் " சூப்பராக நிரூபித்தது ! So இது போலான கதைகள் ஏதேனும் தென்படுகின்றனவா ? என்று நடு நடுவே நோட்டம் விட்டுக் கொண்டேயிருப்பது சில ஆண்டுகளின் வழக்கம் ! In fact மரத்தைச் சுற்றி டூயட் பாடும் மாமூல்கள் அல்லாத எதையும் ஆர்வமாய் நோக்குவது இப்போதெல்லாம் ஒரு பிடிவாத குணமாகவே மாறிப் போச்சு ! 

அப்படிப்பட்டதொரு mindset சகிதம் சுற்றத் துவங்கிய பிற்பாடு தான் SODA முயற்சிப்போமே என்று பட்டது ; ரூபின் worth a try என்று பட்டது ; ஸ்பூன் & ஒயிட் வரலாமே என்று பட்டது ; டெட்வுட் டிக் நிச்சயம் ஏமாற்ற மாட்டானென்று பட்டது ; தாத்தாக்கள் வலம் வரட்டுமே என்று பட்டது ; ஸ்டெர்ன் வாய்ப்புக்கு உகந்தவன் என்று பட்டது !! So இத்தகைய mindset உறையும் தருணத்தில், சில பல ஜாம்பவான்களோடு நமது தேடல்களை நிறுத்திக் கொள்ளாது, நிரம்ப passion சகிதம் முயற்சித்து வரும் நம்மைப் போலான இரண்டாம், மூன்றாம் நிலையிலிருக்கக்கூடிய படைப்பாளிகளையும் பரிசீலிக்கத் தோன்றுவதுண்டு ! In fact இத்தாலிய மொழியில், பிரெஞ்சு மொழியில் மட்டுமல்லாது - ஏகப்பட்ட கோக்குமாக்கான மொழி பேசிடும் மார்க்கெட்களிலும் பராக்குப் பார்ப்பது அவ்வப்போதைய பொழுதுபோக்குகள் ! 

கொரோனாவுக்கெல்லாம் முன்பாக, இத்தாலியில் ஒரு படைப்பாளி அவராக நம்மைத் தொடர்பு கொண்டிருந்தார் - தான் புதிதாய் உருவாக்கி வரும் ஒரு black & white தொடரினை தமிழில் வெளியிட நமக்கு ஆர்வமிருக்குமா ? என்ற கேள்வியோடு ! நமக்குத் தான் புதுசாய் எந்த பொம்ம பொஸ்தவத்தைப் பார்த்தாலும் கண்ணு பிரகாசமாகிடுமே ? "ரைட்டு, அனுப்புங்க சார் - பார்க்கலாம்" என்றேன் ! துரதிர்ஷ்டவசமாக அந்தப் படைப்பு ரொம்ப சுமார் ; கௌபாய் பின்னணியில் இருந்தாலும் பெரிய விறுவிறுப்பு இல்லை ! ஒரு மாதிரி பூசி மெழுகி "ஊருக்குப் போய் கடுதாசி போடறேன் !" என்ற ரீதியில் கழன்று கொண்டேன் ! அவருக்கு அதனில் கொஞ்சம் ஏமாற்றம் என்ற போதிலும் புரிந்து கொண்டார் ! அவராகவே தான் வெவ்வேறு ஐரோப்பிய சிறு படைப்பாளிகளின் திக்கில் கையைக் காட்டிடவும் செய்திருந்தார் ! So இங்கும், அங்குமாய் இத்தினி காலமாய் ரவுண்டு அடித்ததன் பலனாய் கண்ணில்பட்ட ஒரு வண்டிக்கதைகளுள் ஒன்று தான் "கர்மாவின் சாலை" என black & white-ல் நாம் முயற்சிக்க நினைத்த கி.நா. !! அந்தக் கதை முழுக்க ஒரேயொரு கார் ; ஒரேயொரு ஆசாமி ; ஒரேயொரு செல்போன் தான் & இரவில் ஒண்டியாளாய் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அரங்கேறும் ஒரு சம்பாஷணையில் அவனது வாழ்க்கையே தலைகீழாய் மாறிப் போவது தான் அந்த ஆல்பத்தின் plot !  நமது வாட்சப் கம்யூனிட்டியில் உங்களிடம் இது பற்றிச் சொல்லி விட்டு, "இதை முயற்சிப்போமா folks ?" என வினவியிருந்த சமயம் கிட்டிய response மிரட்டலானது !  So அந்தக் கதையினை வாங்க ரெடியான வேளையில், "இன்னமும் கூட எங்களிடம் சில கி.நா.க்கள் உண்டு ; பார்க்குறீங்களா ? " என்று கேட்டனர் ! Oh yes - பேஷாய் !! என்று சொல்ல, நாலைந்து கதைகளின் கோப்புகள் வந்து சேர்ந்தன ! பொறுமையாய் அவற்றை புரட்டிய போது இந்த ஒற்றைக் கதை புருவங்களை உயரச் செய்தது ! "அட...அந்த மாநாடு படம் மாதிரி time loop அது, இதுன்னு போகுதே கதை ?" என்று உறைத்தது !! 

மிகச் சரியாக அந்நேரத்துக்கு "வைகறைக் கொலைகள்" b&w கி.நா.வினை ஆன்லைன் மேளாவுக்கென அறிவிக்கவெல்லாம் ரெடியாகி இருந்தேன் ! அது ஏற்கனவே ஜம்போ காமிக்சில் சில வருஷங்களுக்கு முன்பாய் வந்திருக்க வேண்டிய ஆல்பம் & ராப்பர் கூட பிரிண்ட் ஆகி வருஷமாய் ரெடியாய் காத்துக் கிடக்கிறது ! அதை வெளியிட்டால் வேலையும் லேசு, முடங்கிக் கிடைக்கும் காசும் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணமிருந்தது பின்புலத்தில் ! But இந்தக் கி.நா கதையென்றால் புதுசாய் பணி ; புதுசாய் கொள்முதல், தயாரிப்பு என காத்திருப்பது புரிந்தது ! ஆனால் நமக்கு தான் வானர புத்தியாச்சே ? புதுசாய் ஒரு கொப்பில் ஏறி நின்றால், கீழிறங்க மனசு வராதே ? ரைட்டு...எதுக்கும் உங்ககிட்டவே இது பற்றியும் கேட்டுப்புடலாம் !! என்ற எண்ணத்தில் - back to the whatsapp community !! அங்கேயே நீங்கள் ஏகோபித்த குரலில் செம thumbs up தந்தது மட்டுமன்றி, இதற்கொரு தலைப்பு வைக்கும் முயற்சியினை திருவிழாவாகவே மாற்றி விட்டிருந்தீர்கள் ! அப்புறமென்ன - "வாம்மா மின்னல்" தான் !! Fast Forward-ல் ஓட்டமெடுத்த கதையில் அதே வேகத்துக்குப் பணியாற்றினோம் and அதற்குப் பின்பான சமாச்சாரங்களை நீங்கள் அறிவீர்கள் !  

ஒரு புதிரான கதைக்கு புக்கிலேயே விடை போடுவதா ? வாணாமா ? என்ற கேள்வியும் அடுத்து முன்நின்றது ! இங்கேயும் நான் அமர நினைத்த போதி மரம் நம்ம கம்யூனிட்டி தான் ; ஆனால் சின்னதொரு வித்தியாசம் this time ! போதி மரத்துக்குக் கீழே குந்தும் முன்னமே ஒரு தீர்மானம் எடுத்திருந்தேன் - "nopes ; பதிலை புக்கிலேயே போட்டுடைத்து விட வேணாமே" என்று !! சிந்திக்கவும், கலந்துரையாடவும் கிட்டியுள்ள இப்படிப்பட்டதொரு அழகான வாய்ப்பை தவற விடலாகாது என்பது என்னுள் இருந்த உறுதி ! "அப்புறம் எதுக்குலே எங்க கிட்டே கேட்டே ?" என்ற கடுப்புடனான கேள்வி எழலாம் உங்களுள் ! நீங்களும் "ஆங்...வேணாம்டா தம்பி ..சஸ்பென்ஸ் தொடரட்டும் ! புக்கில் போட வாணாம் !" என்று சொல்வீர்களெனவே எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் பெரும்பான்மையினரோ உல்டாவாய் பதில் சொன்னீர்கள் ! அந்த நொடியில் கண்முன்னே கலர் கலராய் மூ.ச. விளக்குகள் ; கச்சேரிகள் சர சரவென அணிவகுத்தன தான் - but நாம பாக்காத மு.+மூ.ச.க்களா ? இண்டிகேட்டரை போட்டுக்கினே நேராக வண்டியை செலுத்தினேன் ! And இதோ இங்கே நிற்கிறோம் !! 

இந்தக் கதையின் knot சிலருக்குப் புரிந்துள்ளது / அல்லது புரிந்துள்ள நம்பிக்கை புலர்ந்துள்ளது ! சிலருக்கோ புரியில்லா ! இது குறித்து again நம்ம வாட்சப் கம்யூனிட்டியில் அலசல்கள் , விளக்கங்கள் அரங்கேறின தான் ! ஆனால் அவற்றை சாவகாசமாய் வாசிப்பது, விவாதிப்பது என்பதெல்லாம் அங்கே வாட்சப்பில் நடைமுறை சாத்தியம் அல்ல என்பதால் பஞ்சாயத்து ஜமுக்காளத்தை நம்ம blog எனும் ஆலமரத்தின் கீழ் கொணர்ந்தாச்சு ! இயலும் பட்சத்தில் அங்கே பதிவிட்ட நண்பர்கள் தங்களது பதிவுகளை இங்கேயும் repost ப்ளீஸ் ? விவாதங்களை இங்கே தொடரலாம் & நானும் உட்புகுந்திட இங்கே வாய்ப்பு அமைந்திடும் ! So "நாளை போய் நேற்று வா !!" ஆல்பத்தில் உங்களுக்குப் புரிந்தவற்றை / புரியாதவற்றை இங்கே வாஷிங் பவுடர் நிர்மா போட்டு அலச முனைவோமா all ?

Bye for now....விவாதங்கள் துவங்கும் பொழுதில் கச்சேரியில் கலந்து கொள்கிறேன் ! See you around ! 



231 comments:

  1. Wow வந்துட்டேன்...

    ReplyDelete
  2. Replies
    1. நீங்க இல்லியா, உங்க இணை பிரபஞ்சமா, இளவரசரே

      Delete
  3. வைகறைக் கொலைகள் சில வருடங்களுக்கு முன்பாக வந்திருக்க வேண்டிய ஆல்பம் .ராப்பரெல்லாம் கூட ரெடி அக்கடானு அதவெளியிட்டுட்டு ஜாலியா வேடிக்கை பாக்காம அதைவிட நல்ல கதையா தென்பட்ட உடனே அதற்க்காக உழைக்க ஆரம்பித்தீர்களே.ஒரு உன்னதமான வழிநடத்தலின் கீழ் நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை ஆயிரமாவது தடவையா உறுதியானது.

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே !

    ReplyDelete
  7. மார்டினை ராஜினாமா செய்து விட்டு வரும் ஜூலியா காப்பாற்றுகிறார்? அது கொலை முயற்சியா? அல்லது சாதாரன விபத்தா? இந்த கதைக்கு இந்த பக்கம் எந்த வகையில் உதவுகிறது?

    இது தெரிந்து விட்டால் கத புரிஞ்சுடும் சார்

    ReplyDelete
    Replies
    1. உங்க முதல் வரியை புரிஞ்சுக்க மூணுவாட்டி வாசித்தேன் சார் - "அதென்ன மார்டினை ராஜினாமா பண்றதுன்னு 🤕🤕??'

      Delete
    2. ///Comma missing sir.. Sorry///

      நோ நோ! கி. நா படிச்சா இப்படித்தான் ஆகும் 😝

      Delete
    3. நாளை போய் நேற்று வந்தா confrimமா ஆகும் சார்

      Delete
    4. Comma vachhu parkanum pola martin,

      Delete
  8. 2. மாரடினுக்கு கால இயந்திரம் கிடைப்பது இயல்பானது.. அவன் மூலம் ஜூலியாவுக்கு கிடைப்பதும் இயல்பானது. ஆனால் யேட்டரை பாதுகாக்க சென்றதாலேயே லூவுக்கு கால இயந்திரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை..

    அப்படியே லூவுக்கு கால இயந்திரம் கிடைத்திருந்தாலும், லூ தன்னை கொல்ல செல்கிறான் என்று உணர்ந்த டெவன் கண்டிப்பாக தான் கொன்றது தன் தோழி ஜூலியாவை தான என்று தெரிந்துக் கொண்டிருப்பான்.. அதையும் மீறி தன்னைக் காக்க அவன் காலப் பயணம் செய்வானா? அல்லது தன்னால் தன் தோழி இறந்தால் என துவண்டு விடுவானா?

    ReplyDelete
    Replies
    1. ஜூலியாவும், டெவனும் போலீஸ் இலாகாவில் வேலை புரிபவர்கள், புரிந்தவர்கள்
      இருவருக்கும் போலீஸ்களுக்குரிய அப்பாவிகளை பாதுகாப்பது மற்றும் குற்றங்களை தடுப்பது போன்ற குணங்கள் சதையில் ஊறி போனவை, உதாரணத்துக்கு மார்டினை காப்பாற்றுவது.
      அவள் வேலையை விட்ட பிறகும் பாடிகார்ட் வேலையே செய்கிறாள்(தன் முன்னாள் வேலையை ஒத்து)...
      குற்றம் சாட்டப்பட்ட தனியாக வாழும் போது கூட அதை ஒரு வாய்ப்பாக கருதி குற்றம் புரிவர்களை கொல்கிறார்கள் ஜூலியாவும்,டெவனும்.

      தங்களால் ஏற்பட்ட தவறுக்கு பொறுப்பேற்று வயதான அவர்கள் பதிலுக்கு இறக்க வேண்டுமென ஏற்று கொள்வார்களே தவிர, தவறேதும் செய்யாத தங்களின் அப்பாவி இளவயது உயிர் பறிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது.
      கொலை செய்யும் நோக்கில் கொலை நடக்கவில்லை, சம்பந்தம் இல்லாமல் நல்லவர்களை கொல்வது தவறு என்பது அவர்கள் கருத்து

      ஆகையால் டெவனுக்கு தெரிந்தாலும், துவண்டிடாமல் வந்து காப்பாற்றிடுவான், அது சுயநலத்தால் அல்ல

      Delete
    2. டெவன் இறந்தால் தன்னால் கொல்லப்பட்ட அப்பாவியான ஜூலியா உயிர் பிழைக்க கூடுமே. ஆனா முதல் டைம் லைன் போல டெவன் இறந்தால் ஜூலியா சக அதிகாரியை கொன்ற குற்றத்துக்கு மாட்டிக் கொள்வாள்..

      Delete
    3. ஒரு வேளை இது தான் கதையின் முக்கியமான முடிச்சா

      Delete
  9. 3. கால இயந்திரம் அனிந்து வரும் ஜூலியாவும் மார்டினும் இறந்த பிறகு அந்த கால இயந்திரம் என்ன ஆனது?

    ReplyDelete
  10. உதாரணத்துக்கு நான் போன வருடம் பார்த்த கொரியற் டிராமாவை எடுத்துள்ளேன்

    கொரியன் டிராமா : Marry my husband

    கதாநாயகி தோழியால் ஏமாற்றப்பட்டு கேன்சர் நோய் வந்து, கணவனால் கொலை செய்யப்படுவாள்.
    இறந்து போன அவள் அப்பா, தன் பெண் சரியான முடிவுகளை எடுத்து நன்கு வாழ தன் மகளை கடந்த காலத்திற்கு போகும் ஒரு வாய்ப்பினை அளித்திடுவார்.

    கதாநாயகி தான் ஏமாற்றுபடுவதிலிருந்து தப்பிக்க யோசிக்க ஆரம்பிக்கும் போது
    சில விசயங்களை கதாநாயகி நோட் பண்ண ஆரம்பிப்பார்.

    உதாரணமாக ஒரு சூடான காபி ஜக் டேபிள் மேலிருந்து விழுந்து இவள் கையில் பட்டு காயமாகி வடு ஏற்பட்டிருக்கும், அந்நிகழ்வு நினைவுக்கும் வரும்போது அந்த ஜக் விழும்போது கதாநாயகி ஒதுங்கி விட, அது அங்கு வரும் ஹீரோவின் கையில் பட்டு அந்த காயம் அவனுக்கு ஏற்பட்டு விடும்.

    இதுபோன்று சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கதாநாயிகி அலசி பார்க்கும் போது அவளுக்கு என்ன புரிந்திடும் என்றால் ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்கள் நடந்தே தீரும், அந்த சம்பவங்கள் தனக்கு நடக்காமல் இருக்க ஏற்கனவே எடுத்த முடிவிகளிலிருந்து மாற்றி முடிவெடுக்கனும் அல்லது அஅந்த இடத்தில் இருந்து ஓதுங்கி போகனும்

    இந்த கான்சப்ட்டை புரிந்து கொண்டு தன்னை ஏமாற்றிய தோழிக்கு திசை மாற்றி விட பார்ப்பாள் கதாநாயகி,
    ஏமாற்றும் காதலனையும் பிரிய பார்ப்பாள்.

    முதலில் வெற்றிகள் வந்தடையும், ஆனால் இவள் தோழிக்கு பதிலாக சில விசயங்கள் இவள் கூடவே வேலை பார்க்கும் இவளை போன்று அமைதி காத்திடும் இன்னொரு பெண்ணுக்கு இவளுக்கு ஏற்பட்ட சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
    அதை தன் ஏமாற்றும் தோழிக்கு திசை திருப்பி விட வாய்ப்புகளை உருவாக்குவாள், அவள் தோழி இவளை ஏமாற்றும் எண்ணத்தை கைவிட்டாள், அச்சம்பவங்கள் நடக்காது, ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்டால் அவள் தோழிக்கு மாறிவிடும்

    Cause point is ஏமாற்ற நினைக்கும் காதலனும், தோழியும்

    *நம்ம கதைக்கு வருவோம்*

    இங்கு ஜூலியா போலீஸ் வேலையை விற்று விட தீர்மானித்து , அவள் சட்டத்தை எதிர்த்து வாழ்ந்த வாழ்க்கை இல்லாமல், நல்லதொரு பாடிகார்ட்டாக மாறுகிறாள்

    ஆனால் அது டெவனை பாதிக்கிறது indirectly

    அப்கோர்ஸ் ஜூலியா மற்றும் டெவன் கனெக்ஷன் உண்டுதான்
    ஜூலியா பணியில் இல்லாதபோது அதே வேலையில் அங்கு இருக்கும் அவள் நண்பன் மீது அந்த விதி சென்று விடுகிறது

    *இரண்டு விசயங்கள் நடந்தே தீர்கிறது:*
    சக அதிகாரியை கொன்ற பழி யாரேனும் ஒருவர் (ஜூலியா அல்லது டெவன) மீது கண்டிப்பாக விழுந்திடும்
    அந்த தொழிலதிபர் மீட்டிங்கில் விபத்தாகிய கொலை நடந்தே தீருகிறது (யேட்டர் அல்லது ஜூலியா)

    ஆட்கள் மாற்றி நடந்திடும், சம்பவங்கள் நடப்பதை மாற்றிட முடியாது

    ReplyDelete
    Replies
    1. ஜூலியா பாதுகாப்புக்கு வருவது *லியோனர்ட்க்காக*, ஆனால் அது கெல்டர் தலைமை தாங்கிடம் தொழிலதிபர் மீட்டிங் தானே, ஆகையால் *முதல் ஜூலியா* போன்று *டெவன்* குறி வைத்து இருக்கலாம், அந்த இடத்தில் அப்போது லியோனர்ட் கைகுலுக்கி கொண்டிருப்பது கெல்டருடன், கெல்டரை குறி வைக்கும் போது லியானர்ட்க்கு குண்டு படலாம்(ஏற்கனவே நடந்தப்படி) என்று இந்த ஜூலியா லியானர்ட்டை காப்பாற்றுகிறாள், முதல் நிகழ்வு போல் அந்த குண்டு லியானர்ட்டையே பதம் பார்க்க யத்தனித்துள்ளது, ஜூலியா குறுக்கே வர, அவள் பலி ஆகிறாள்

      குறி கெல்டரையே, தவறுதல் லியானர்ட்(ரீப்பிட்), ஆனால் முடிவு மாறுதல்(காப்பாற்றுபடுதல்) ஜூலியாவின் பலி

      Another person starts

      Delete
    2. ///Marry my husband///

      என்னவொரு அருமையான தலைப்பு!!😁

      Delete
    3. ஏமாற்றும் தோழி தலையில் கட்டி விடுவாள 😁😁😁😂😂

      Delete
  11. 4. இந்தக் கதையில் முக்கியப் புள்ளியாய் கெல்டர் வருகிறார். ஆனால் கதையில் அவரது பங்களிப்பு எதுவும் இல்லாதது போல் உள்ளது? Except for being a target for Julia and Devon.

    ReplyDelete
    Replies
    1. சார்.... கேள்வி complex ஆக இருப்பதால் பதிலும் அதே மாதிரி complex ஆக இருக்கணுமென்று நாமாகவே சில தருணங்களில் எதிர்பார்க்கிறோமோ ? அந்தக் கோணத்திலும் ஒருக்கா யோசித்துப் பாருங்களேன் ?

      Delete
    2. சார் இந்த ஓட்டல் பாரசலில் சாம்பார் கட்டி கொடுப்பாங்க.. வெறுமனே நூலை சுத்தி கட்டக் கூட மாட்டாங்க.. ஆனா அத பிரிக்கிற சிரமம் இருக்கே..

      Delete
    3. கதை ரொம்ப சிம்பிள் என்றால் திரில் இல்ல சார்.. நீங்க விளக்கம் கொடுக்கும் வரை சிக்கலை பலமா போடுவோமே.. கடைசியா இவ வளவு தானா.. என்று மூச்சு விடுவதில் ஒரு பேரானந்தம்

      Delete
  12. கதையின் knot அன்பு என்று comminityயில் விவாதத்தில் நண்பர்கள் மூலம் கிடைத்த பதில்.. இறந்தவரை மீட்க யாரை வேண்டும் என்றாலும் கொல்லலாம் என்பது தான் உதைக்கிறது.

    ReplyDelete
  13. அந்த நொடியில் கண்முன்னே கலர் கலராய் மூ.ச. விளக்குகள் ; கச்சேரிகள் சர சரவென அணிவகுத்தன தான் - but நாம பாக்காத மு.+மூ.ச.க்களா ? இண்டிகேட்டரை போட்டுகினே நேராக வண்டியை செலுத்தினேன் ! //


    மூ.ச
    ப்ளாக் சேர்ந்த புதிதில் இந்த மூ.ச விளக்கம் தேடியரநாட்கள் உண்டு, விரவான வார்த்தைகள் கிடைத்தும் புரியாமலும் இருந்தன
    ப்ளாக்கில் தொடர் அங்கத்தினராய் இருக்க பின்னர் அறிந்து கொண்டேன்

    இதனால் இந்த மூ.ச-வை விடாமல் ஷார்ட் பிலிமிலும் சேர்த்தி இருந்தார் ஸ்டாலின் சகோ

    ReplyDelete
  14. தமாசாக ஒரு சந்தேகம் எழுந்தது

    லூவுக்கு 25 வயது இருக்கலாம்..30 வயது பின்னே செல்லும் லூ பிறந்திருக்க மாட்டான் தானே.. ஒரு வேளை ஜூலியா போல டெவனும் காப்பாற்றப் பட்டிருந்தால், அவனும் ராஜினாமா செய்த பிறகு மார்டினை ஜூலியா காப்பாற்றியது போல டெவன் யாரை காப்பாற்றுவான்..

    (ரொம்ப ஓவராப் போறேனோ.. போவோம்)

    ReplyDelete
    Replies
    1. இதை படிக்கிறவங்க தூங்க கூடாது, அப்படிதானே, சகோ

      Delete
    2. ஏதோ நம்மால முடிஞ்சது

      Delete
    3. லூவைன்னு வச்சிக்கங்க... அதுதானே கரெக்டா இருக்கும்!

      Delete
    4. லூ தான் பிறந்திருக்க மாட்டானே சார்

      Delete
    5. மார்ட்டினுக்கும் லூவுக்கும் ஏறத்தாழ ஒரே.வயதாகத்தான் இருக்குமென தோன்றுகிறது.

      Delete
    6. நீங்க அப்படி வறீங்களா..

      Delete
  15. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  16. நாளை போய் நேற்று வா!

    நேர்கோட்டு காலப்பயணத்திலான ஒரு லூப்! எதிர்காலத்திலிருந்து இறந்த காலத்தை தேடிச் சென்று பழிவாங்குவதுதான் கதையின் ஒற்றைவரி!

    பெரிய குழப்பங்களில்லாத காலப்பயண கதை விரும்பிகளுக்கு சரியான தீனி... எந்த ஒரு பாராடக்ஸும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப் பட்ட சாதாரண டைம் லூப்...

    சிகரங்களின் சாம்ராட், தலைகாத்த தனயன், தி மவுண்டன் ஆப் டைம் மாதிரியான தோர்கல் கதைகள் போல குழப்பமேற்படுத்தக் கூடிய பேரடாக்ஸ்களோ டைம் ஜம்ப்களோ இல்லையென்பது ஒரு வகை மிஸ்ஸிங்தான்..

    டெவன்- ஜூலியா பிரபஞ்ச இணைகள் (அதாவது copy of the same entity of a multiverse), என்டேங்கிள் செய்யப்பட்ட குவாண்டம் இணைகளாகக் கொண்டாலும் சரி!

    எதிர்கால ஜூலியா மூலம் தன்னால் தவறுதலாக லியானர்ட் யேட்டர் கொல்லப் படுவதை தெரிந்து கொள்ளும் நிகழ்கால ஜூலியா அதை தவிர்க்கும் பொருட்டு தன்னை பணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறாள்.

    அதன் பின்னர் தன்னுடைய டைம் லைன் டெவனுக்கு நடந்து வருவதை அறிந்து கொண்டும் அதை எந்த விதத்திலும் மாற்ற முற்படாமல் பிப்ரவரி 17, 2045ல் (காலண்டரில் குறித்து வைக்கப்பட்டுள்ளது) நடக்கும் மீட்டிங்கிற்காக காத்திருக்கிறாள்.

    எதற்காக??
    இதற்கான விடைதான் கதையின் முடிச்சு.

    மற்றபடியான டைம் லூப்களும், ஆக்சன் அதிரடிகளும் வழமையானவையே என நினைக்கிறேன்.

    பி.கு:

    லியானர்ட்டை காப்பாற்றுவதுதான் ஜூலியாவின் குறிக்கோள். தான் செய்த தவறை தானே திருத்தும் முயற்சியில் தன் உயிரை இழந்து விடுகிறாள்.

    இந்த பாயிண்ட்டைதான் அவள் காத்திருப்பது எதற்காக எனக் கேட்டிருந்தேன். மற்ற நிகழ்வுகள் எல்லாம் ஒன்று போல் அவளது பிரபஞ்ச இரட்டையால் நிகழ்த்தப் படும்போது லியானர்டின் கொலையும் நடக்கும் என்பதை எதிர்பார்த்தே அந்த நாளை காலெண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அவரைக் காப்பாற்றும் பொறுத்து காத்திருக்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. தேடிச் சென்று பழிவாங்குவது மட்டுமல்லாமல் அதன் மூலம் அக்கொலைச் சம்பவம் நிகழாமல் தடுப்பதுமே முக்கிய காரணம்.

      - நண்பர்களின் திருத்தம்

      Delete
  17. சுரேஷ் சார்.

    கதையில இருக்குற சம்பவங்களை வைச்சு அதைச் சுற்றி யோசித்தால் குழப்பமே வராது.

    சில விசயங்களை நாமாக கற்பனை பண்ணிக்கிறதால, அதாவது இது அப்படி இருக்குமோ இது இப்படி இருக்குமோன்னு

    இதனால நாம குழம்பித் தான் போவோம்.

    ஜஸ்ட் ஒரு சின்ன உதாரணம் தான் நான் சொல்ல வர்றது.

    ReplyDelete
    Replies
    1. Correct sir.. ஆனா தேவையில்லாம சிறு வயது மார்டினை காப்பாற்றும். Scene எதுக்கு? என்று கேட்டாலே பதில் கிடைக்கலியே சார்

      Delete
    2. பாருங்க, இங்கே கூட உங்க இணைப்பிரபஞ்ச டபுள் அவர் பங்குக்கு ஒரே கேள்வியை மறுக்கா கேட்டிருக்கார் சார்!

      Delete
    3. அதாவது இளவயது மார்ட்டின் ஜுலியாவ எதிரியாக பார்க்க காரணம் அவங்க அப்பாவை ஜூலியா தவறுதலா கொல்றா. அதனால பகையாளி ஆகுறா.

      ஆனால் அதே மாதிரி தான் சிறு வயது மார்டின காப்பாத்தறது தற்செயலான ஒரு நிகழ்வு. அவ அவன் பேரைக் கேட்டதுக்கு அப்புறம் தானே அவன் மார்ட்டின்னு தெரியுது அவளுக்கு.

      இங்கு இது விதியின் விளையாட்டாவே நான் பார்க்குறேன்

      Delete
    4. //இங்கு இது விதியின் விளையாட்டாவே நான் பார்க்குறேன்//

      +9

      Delete
    5. போலீஸ் வேலையை விட்டுட்டு வேறு வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்கிறாள், விதி அவளை எந்த குரோதமும் இல்லாத குழந்தை மனம் கொண்ட சிறுவயது மார்டினை சந்திக்க வைக்கிறது,

      மார்டினுக்கு வந்த வெறி இளவயது ஜூலியாவை கொல்ல தூண்டியது, ஆனால் ஜூலியா சுயநலமாய் யோசிக்காமல் அப்பாவி சிறுவனை ஒன்றும் செய்யவில்லை

      அந்த சூழ்நிலையில் இருக்கும் பெரிய மனிதர்களே பொறுப்பு, அவர்களின் நல்லெண்ணம் கொண்ட இளவயதல்ல

      Delete
    6. கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு.. ஆனா..

      Delete
    7. இன்னும் கொஞ்சம் குட்டையை குழப்புவோமா கடல்

      மார்டினை காப்பாற்றும் ஜூலியாவை விட அவளை கொல்ல வரும் மார்டினுக்கு வயது அதிகம்..

      Delete
    8. திருவண்ணாமலை வநதேன்ன்னா, தலையில் கொட்டு வைத்துட்டு தான் மறு வேலை

      நான் சொல்ல வந்தது வயதை பற்றி அல்ல

      பெரிய வயதில் செய்யும் தவறுக்கு சிறு வயதில் இருப்பவர்கள் பொறுப்பு இல்லை என்பதை ஜூலியா புரிந்து கொள்கிறாள்
      ஆனால் அந்த புரிதல் வளர்ந்த மார்டினுக்கு இல்லை

      Delete
  18. அதுசரி! ஆலமரத்து நடுவில உட்காருந்து இருக்கிற ஒருத்தர் ஓகே... இன்னொருத்தர் அவரோட பிரபஞ்ச இணையாங்க சார்?

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தர் கருத்து சொல்லும் கன்சாமி - குந்திருக்கார்! இன்னொருத்தரு கன்பர்மா மாத்து விழ போகுது என்பதை தெரிந்திருந்து ஜுட் விட ரெடியா கீற இணை - நின்னிட்டு இருக்கார் 💪

      Delete
    2. இதல்லாம் கன்ஃபார்ம்ன்னு தெரிஞ்சு ஓசரத்துல மரத்து மேல ஒருத்தர் முழிச்சுக்கினு, குந்திக்கிட்டு இருக்கார் பாருங்க.
      (சார் இந்த ஆந்தையார வெச்சே ஒரு புது காமிக்சுக்கு லோகோ உருவாக்கலாம் போலயே. அவ்ளோ அம்சமா இருக்கு)

      Delete
    3. //சார் இந்த ஆந்தையார வெச்சே ஒரு புது காமிக்சுக்கு லோகோ உருவாக்கலாம் போலயே. அவ்ளோ அம்சமா இருக்கு//

      அட ஆமாங்க சகோ, நன்றாக இருக்கும்ல

      Delete
  19. *நாளை போய் நேற்று வா*

    கதையின் மையக் கரு காலப் பயணம்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க...

    ஆனால் என்னோட பார்வை & புரிதல் *விதியை யாராலும் மாற்ற முடியாது* என்பது தான் கதையின் மையம்.

    இதைச் சுற்றித் தான் காலப் பயணம் நடக்குது.

    முதலில் எதிர்காலத்தில் இருந்து வரும் ஜீலியா தன்னோட கடந்த கால (இளவயது) ஜீலியாவின் உயிரை மார்டின் யேட்டரிடம். இருந்து காப்பாற்ற வருகிறாள்.

    எதிர்காலத்தில் இருந்து வருவதால் அவளுக்கு கடந்த காலத்தின் சகலமும் தெரியவர அதனால் அவள் தன்னால் மற்றவர்களுடைய வாழ்வில் நடக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறாள்.

    *ஆனால் விதி வலியது.* அது டெவனை அந்த இடத்தில் இருத்தி வைக்குது 😇😊 ஜுலியா வாழ்க்கையில என்னென்ன நடக்குதோ அதே டெவன் வாழ்க்கையில நடக்குது.

    இங்கு ஜீலியாவுக்கு பதில் டெவன் இடம் மாறும் போது அங்கு லியனார்ட்டுக்கு பதில் ஜீலியாவை விதி பலியிடுது.

    இப்போ மார்டினுக்கு பதில் ஜீலியாவின் பையன் லூ டெவனை வேட்டையாட துரத்துறான்.

    அதே இங்கும் டெவன் ஜீலியா பண்ணதைப் போல தன்னைத் தானே காத்துக் கொள்ள கடந்த காலம் பயணிக்கிறான்....

    அதே ரிப்பீட்டு...

    *தெளிவுரை: விதியை யாராலும் மாற்ற முடியாது*

    ReplyDelete
  20. இதுல மேலும் சில குறிப்புகள்.

    ஜுலியா போலிசா இருக்கறதால தான் தன்னால டெவன் கொல்லப் படுவதும் அதைத் தொடர்ந்து லியனார்ட் கொல்லப் படுவதும் நடக்கிறது.

    அதனால தன்னுடைய போலிஸ் வேலைய விட்டுட்டு வேற வேலைய தேர்ந்தெடுக்குறா.

    ஆனால் பின்னாளில் அவள் செய்தித் தாளில் டெவனைப் பற்றி படிக்கும் போது தன்னுடைய வாழ்வில் நடந்ததே டெவனுக்கும் நடக்குறத உணர்றா.

    2045 பிப்ரவரி லியனார்ட் கொல்லப் படும் நாள்னு குறிச்சு வைச்சா.

    அதே நாளில் அவள் லியனார்ட்டுக்கு பாதுகாப்புக்கு போக அவன் கொல்லப் படுவதை தடுக்கிறாள்.

    ஆனால் அங்கு அவளே உயிரிழக்க நேரிடுது.

    அதற்கு பழிவாங்க லூ புறப்படுகிறான்.

    அதனால் தான் 2015 தேதில டெவன் வாழற காலத்துக்கு லூ காலப் பயணம் செய்ய...

    இங்கு தான் விதியை மாத்த முடியாதுன்னு சொல்ல வர்றேன்.

    ஆள் மாறினாலும் நடக்க வேண்டிய சம்பவங்கள் நடந்தே தீரும்னு சொல்ல வர்றேன்.

    அதே போல மாட்டின சிறு வயதுல ஜுலியா காப்பாத்துவது தற்செயலானது.

    ஏன்னா மார்டின கொல்ல யாருக்கும் முகாந்திரம் இல்லை.

    ஏன்னா அவங்க அப்பாவோட மரணத்துக்கு பழி வாங்கவே எதிர் காலத்தில் அவன் முயற்ச்சிக்கிறான்.

    ஆனால் அதை ஜுலியா தடுத்துடறாள்.

    Terminator பாதி & final destination மீதி தான் இந்தக் கதை 🤷🏻‍♂️

    ReplyDelete
    Replies
    1. உங்க விளக்கம் படி பார்த்தா

      டெவன் தப்பிச்சுடுவான்
      லூ செத்துடுவான்

      டெவன் ராஜினாமா செய்துடுவான்
      ஜூலியாவை விதி மீண்டும் துரத்தும்..

      கரெக்டா சார்

      Delete
    2. இப்படி மாறி மாறி லூப் தொடர்ந்து கொண்டே இருக்கும்....

      செனா அனா சொன்ன மாதிரி எண்ணற்ற இணைபிரபஞ்சங்கள் உருவாகி அங்கங்க எக்கச்சக்க டெவன், எக்கச்சக்க ஜூலியா, எக்கச்சக்க மார்ட்டின், எக்கச்சக்க லூன்னு ஒரே சம்பவம்தான் போங்க...

      Delete
    3. அப்புறம் செத்துப்போன யேட்டர், சாகாத யேட்டர், செத்துப்போன ஜூலியா, சாகாத ஜூலியா ன்னு ஒரு ரவுண்டு...

      Delete
    4. இது நல்லா இருக்கு சார்..

      நான் தான் நீ, ஆனா இங்க இல்லை, அங்கே.. என்று பேசிக்குவாங்களோ

      Delete
    5. முதல் லூப்ல இரண்டு யேட்டரும் செத்துடுறாங்க

      இரண்டாவதுல இரண்டு யேட்டரும் பிழைச்சுக்கிறாங்க

      Delete
    6. உங்க புரிதலை பகிருங்கள் சுரேஷ் சார்‌

      கேள்வி கேட்குறது சுலபம் 😂🤣 பதில் சொல்லத் தான் நிறைய யோசிக்க வேண்டியது இருக்கு 😇😁

      Delete
    7. காலப் பயணம் பண்ணும் போது அங்கு பச்சை நிற ஒளி வருதே கவனிச்சீங்களா

      MIB படத்துலேயும் இப்படித் தான் வரும்

      Delete
    8. Yes sir. கையில் கட்டியிருக்கும் காப்பு activate ஆனதால் உண்டான் ஒளி.

      கதை புரிதலில் நான் விலகி வந்துட்டேன் சார்.. இத நான் simple கதையா பாக்கல..

      இந்தக் கதையில எண்ணற்ற கோணம் உள்ளது..

      Delete
  21. இனி மற்றவர்களுடைய கோணம் & ஆய்வுகள் & கருத்துக்களைப் பார்ப்போம்.

    என்னுடைய கதையின் புரிதலோடு ஒத்துப்போகுதா அப்படின்னு

    ReplyDelete
  22. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  23. நாளை போய் இன்று வா....


    இக்கதையை இரண்டு விதமாக அனுபவிக்கலாம்.....

    இக்கதையை படித்து விட்டு யோசிக்காம காலப் பயணம் என கடந்தால் இது ஓர் நேர் கோட்டுக்கதை...

    செனா முதல்....உத்து பாத்து ஆராயும் கடல் வரை....ஓவியங்களை விட வரிகளில் தேடலில் ஈடுபடும் என் போன்றோர்க்கு...
    நிக்க வைக்கும் இடங்கள்

    1. ஓடு

    .
    2. அந்தக் காரோட்டிய தேவையில்லாம கொல்லும் 3.மொட்டையன்
    ஒரு குறுக்கிடும் போலீசதிகாரி கொல்லப்படல்
    4. சக அதிகாரிய கொன்றாய்னு பழி சுமத்தப்படும்
    5. நான்தா நீ
    6. காதலன் துரோகம்
    7. 30 வருசம் மட்டுமே பின்னால் போகமுடியும்
    8.முன்னரும் பின்னரும் கால அவகாசத்த குறைக்கும் முயற்சில ஈடுபடுறாங்க
    9. உயிரோடு தந்தைய மீட்க
    10. சுட்ட உடனைவரலை...கால் தாமதங்கள் காரணங்கள்
    11. சுடுகிறாள்
    12. வியாபாரி போட்டியாளனை கொல்ல வந்து விஞ்ஞானியை
    13. அந்த காப்ப அணிந்த இவளும் சற்று தாமதமாய் தான் வருகிறாள்
    14. டெவன் குறுக்க மறுக்க ஓட
    15. கொல்வதை தடுக்கும் டெவன்
    16. மார்டின் மாற்றி எழுதிட்டான்...ஏத்துக்கோ
    என்னைக்காவது முழுசா சொல்லு....அது தெளிவா எழுதிட்டேன்....படிச்சிக்கோ...மாத்தி எழுதியிருக்கேன்

    17. சிறுவன காக்கைல
    அந்த கார் வேணும்னே வந்ததா
    18.நாயகியின் மாணவன்




    இதுல முப்பது வருடம் மட்டுமே பின்னோக்கி பயணிக்கலாம்கிறதே முக்கிய முடிச்சு. காலதாமதம்ங்ற வரிகளுமே....ஒரு பத்து நாள் தாமதம்னு வைத்தால்...திரும்ப திரும்ப நடக்கும் இன்ஃபைனட் சுழற்ச்சிகளில் ஜீலியா அந்தக் கொலையில் ஈடுபடாமலே வயதாகி இறப்பாள்.அடுத்து நண்பருக்கும் இதை கதைதான்....இதுதான் நம்ம புராணம் சொல்லும் பலபிறவிகளோ...இதே கதைதான் டெவன் மற்றும் லூவுக்கும்....

    ஆனால் தேவையில்லாமல் இருவர் கொல்லப்படுகிறார்களே....அந்த காரோட்டிதான் சிறுவயது மார்ட்டின கொல்ல வந்திருப்பானோ...
    அந்த போலீசதிகாரி காலப் பணத்தில்.. வரப்போகும் அடுத்த பயணியோ என தேடல் பித்தனாக்க....அதற்கான இணைப்பை என் மனதுக்குள் ஓட்டி பார்க்க...எத்தனையோ கொலைகளுக்கு தீர்வு காணாமல் எக்ஸ் ஃபைல்களாய் வைப்பார்களேஅவை கூட இக்காலப் பயணிகள் லீலைதானோ....ஆதித்த கரிகாலன் முதல் கென்னடி...யார் அந்த சார் வரை....முடியாமல் விமர்சனமாய் விமர்சனத்தில் வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Steel கிட்டதட்ட எல்லா optionனையும் வச்சிட்டாரு..

      Delete
  24. ஜூலியாவின் இரண்டாவது டைம் லைனில் லூ அவளது பாதுகாவலர் தொழிலில் ஒரு ஜூனியர் பார்ட்னர் மாத்திரமே.

    ஜூலியாவின் வாழ்க்கையில் முதல் டைம் லைனில் நடந்தவை டெவனின் இரண்டாவது டைம்லைனில் அப்படியே நடக்குமாயின் லூ இளவயது மற்றும் முதிர் வயது டெவன் இருவரையும் பிடிக்க யாரை பிணைக் கைதியாக பயன்படுத்துவான்?

    ReplyDelete

  25. @ எடிட்டர் சார்! லைலா என்ற பெயரை ஜூலியா என நீங்கள் மாற்றியதற்கு ஏதேனும் சிறப்பு காரணங்கள் உண்டா சார்?

    ReplyDelete
  26. பக்கம் 35 மற்றும் 37 இவற்றில் சுவரில் தொங்கி இருக்கும் போட்டோவில் காட்டப்படும் பெண் ஜூலியாதானா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார்.அது டெவனின் அம்மாவாக இருக்கக் கூடும்.. காலண்டரில் கிட்டதட்ட middle of the monthல call mom என்று குறிப்பிட்டுள்ளது, எனக்கு இந்த பார்வையை. காட்டியது

      Delete
    2. MOM acronym for middle of the month

      Delete
  27. இளவயது ஜூலியா முதிர்வயது மார்ட்டினை கொல்லுகிறாள் ஏப்ரல் மாதம் 2015 -ல். தனது முதல் டைம் லைனில்.

    இளம் வயது ஜூலியாவின் இரண்டாவது டைம்லைனில் தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விடுவதால் அவளது இரண்டாவது டைம்லைன் துவங்குகிறது. அவளது இந்த இணை பிரபஞ்ச வாழ்க்கையில் மார்ட்டினின் பங்களிப்பு ஏதுமில்லை. இளவயது மார்ட்டினை அவள் காப்பாற்றுவது
    மிகவும் தற்செயலானது. தனது முதல் டைம் லைனில் முதிர் வயது மார்ட்டினை கொன்ற கிட்டத்தட்ட அதேகால நேரத்தில் இளவயது
    மார்ட்டினை அவள் காப்பாற்றுவது
    இணை பிரபஞ்சம் ஜூலியாவின் தற்சார்பு துணிபுக்கு அல்லது சுய விருப்ப கொள்கைக்கு (free will) அளிக்கும் பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?

    ReplyDelete

  28. 2045 பிப்ரவரி 17 -ல் நடக்கும் தொழிலதிபர் கருத்தரங்கில்
    கெல்டர் மீதான கொலை முயற்சி நடக்கும் என அறிந்திருக்கும் ஜூலியா அவர்களாக அழைத்தோ அல்லது தானே விரும்பிப் பெற்றோ லியோனார்ட் -க்கு பாதுகாவலர் பணிக்கு செல்கிறாள்.

    கெல்டர் மீதான கொலை முயற்சி நடக்கும் என்று அறிந்திருக்கும் ஜூலியாவுக்கு மறுபடியும் குறி தவறி லியோனார்ட் கொல்லப்படுவார் என்பது கடைசி நொடியில் தான் தெரிகிறது. அதுவும் கட்டிடத்தின் உயரத்தில் ஸ்னைப்பர் ரைபிள் லென்ஸ் உருவாக்கும் ஒளி பிரதிபலிப்பினாலோ அல்லது ரைஃபிளின் முனை வெளிப்படுத்தும் ஒளிக் கீற்றையாலோ. ஒரு பாதுகாவலராய் தனது கடமையை செய்து முடிக்க இணை பிரபஞ்சம் கொடுத்த ஒத்துழைப்பா இது?

    ReplyDelete
    Replies
    1. மாடி மீது இருந்து சுட்டதாக முதிர் ஜூலியா இளம் ஜூலியாவிடம் சொல்லி விடுகிறாள். இதை 30 ஆண்டுகளில் ஜூலியா மறந்து இருக்க வாய்ப்புண்டா..ஏனேனில் கடைசி நேரத்தில் தான் அவளுக்கு பொறி தட்டுகிறது.

      Delete

  29. ஜூலியாவின் முதல் டைம் லைன் மற்றும் இரண்டாவது டைம் லைன் இரண்டை பற்றியுமே நாம் பார்க்கிறோம்.

    கதை பெரும்பாலும் ஜூலியாவை சுற்றியே வருகிறது. சுமார் 30 வருடங்கள் ஜூலியா தனது முதல் டைம் லைனில் பெரும் போராட்டங்களுடன் வாழ்க்கை நடத்துகிறாள். அந்த முதல் டைம்லைனில் டெவெனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்க கூடும்?

    ReplyDelete
    Replies
    1. இறந்துப் போன சக அதிகாரியே டெவன் தான் என்பது என் கணிப்பு சார்

      Delete
    2. வாய்ப்பிருக்குங்க சார்..

      Delete
    3. //இறந்துப் போன சக அதிகாரியே டெவன் தான் என்பது என் கணிப்பு சார்//

      இது நான் யோசிக்காத ஒன்று, ஒருவேளை ஜூலியா போலீஸ் வேலையை விட இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்

      Delete
  30. //ராஜினாமா செய்து விட்டு வரும் ஜுலியா,மார்ட்டினை காப்பாற்றுகிறார்//என்பதாக நான் புரிந்து கொண்டுள்ளேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. இது கூட நல்ல பார்வை சார். தன் எதிர்கால வார்ப்பால் கொல்லப்பட்டவனை காப்பாற்றியாச்சு...செம

      Delete
    2. காலையிலேயே களை கட்டிவிட்டது போல...

      Delete
    3. கண்ணை
      மூடினா
      கனவிலும்
      ஜூலியா
      தானே

      Delete
    4. செஅ வுக்கு ஒரு சிசா போல உங்களுக்கு நாபோ இவா ஆயிடுச்சு...

      Delete
    5. சிகரங்களின் சாம்ராட்.. எல்லாமே தெளிவா இருக்கும் சார்..

      கதை நடக்கும் இடம்
      செயலாக்கம்
      காரண காரியம் எல்லாமே

      இங்க

      எல்லாமே நம்ம யூகத்துக்கு விட்டுட்டானுவ

      Delete
  31. லியோனார்ட்- விடிய விடிய விஞ்ஞானி கதைய பில்லர் பேஜ் போல கொடுக்க முடியுமா சார் 😊

    ReplyDelete
  32. வாஷிங் பவுடர் நிர்மா - கரைகளை நீக்கி துணிகளை பள்ளிச் என்று கொடுக்க நிர்மா 😊

    ReplyDelete
  33. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  34. கெல்டர் has to be killed .. till that this loop will continue .. or கெல்டர் has to be left alive .. no attempt should be done on him ..

    ReplyDelete
    Replies
    1. கெல்டர் சுடப்பட்டிருந்தால் டைம் லூப் என்று ஒன்று நடந்திருக்காதுல

      மாநாடு திரைப்படம் போல, ஆக இங்க கெல்டர் கொல்லப்படும் வரை ரீப்பீட் ஆகலாம்

      செம சகோதரரே

      Delete
    2. ஆஹா, அதுக்கு தான் கெல்டர் character.. முதல்ல அவன போட்டு தள்ளு லூ.. ஆனா அவனை சுடப் போனா ஏழரை தானே கூடுது..

      Delete
    3. ஜூலியா (அல்லது) டெவன் கெல்டரை சுட்டால் தான் சரியாக இருக்கும்

      நீங்க ஏன் இதெல்லாம் கெல்டர் முன்னமே நடக்க போறதை தெரிந்து கொண்ட அவனோட pre-planned விளையாட்டுகளாக இதை பார்க்க கூடாது

      Delete
  35. இந்த வருடம் நம்ம தாத்தாஸ் செய்திடும் அடுத்த அட்வென்ச்சர் பாகம் எப்போது வந்திடுங்க, சார்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்... வெயிட்டிங் பார் தாத்தாஸ் லூட்டி...

      Delete
    2. இன்னும் நாலு பாகம் பெண்டிங் சார்

      Delete
  36. @ செனா அனா
    @சுரேஷ் தனபால்
    @கடல்யாழ்...

    சுக்குநூறாக கலைஞ்சி குழப்பும் கதையை..அக்கு வேறாக ஆணி வேறாக அலசி நிறைய விசயங்களை தெளிவுபடுத்திவிட்டீங்க.

    வாழ்த்துகள்.💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ💐💐💐💐💐

      Delete
    2. தெளிவாகிட்டீங்களா

      ஏன்னா

      நான் இன்னும் தெளியல சார்

      Delete
  37. கதை இப்போது பிடிபட்டுவிட்டது இதோ ஐந்து நிமிடத்தில் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. புதுசா என்ன சொல்லப் போறாரோ...🥶🥶

      Delete
    2. நேற்றைய ஐந்து நிமிடமா? அல்லது நாளைய ஐந்து நிமிடமா? 🤔

      Delete
    3. பாதி புரிந்ததிற்கே இம்புட்டுன்னா, முழுதாக புரிந்ததிற்கு எம்புட்டு வருமோ

      Delete
  38. கதையின்படி ஜூலியாவிற்கு மார்டின் யேட்டரை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுக்கச் சென்று அவன் புரிந்து கொள்ளாததால் ஜூலியாவால் தோளில் குண்டடி பட்டு டைம் ட்ராவல் மூலம் தப்பிப்பது போல காண்பிக்கப்படுகிறது. அங்கிருக்கும் வேறு கைகாப்பை பயன்படுத்தி தன்னுடைய இளமைக்கால ஜூலியாவை காப்பாற்ற அவளால் முடிகிறது. ஆனால் லூவின் பழிதீர்க்கும் முயற்சியில் டைம் ட்ராவல் செய்வதற்கான கைக்காப்பு எங்ஙனம் கிடைத்திருக்கும் வாய்ப்புள்ளதெனத் தெரியவில்லை.... அதுபற்றிய விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  39. இந்த கதையை நாம் ஜூலியாவின் பார்வையில் இருந்து மட்டுமே பார்க்கிறோம். ஜூலியாவின் இரண்டாவது டைம் லைன் மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு விட்டோம். ஆனால் டெவெனின் இரண்டாவது டைம் லைன் பற்றி யோசிக்க மறந்து விட்டோம்.

    முதல் டைம் லைனில் ஜூலியா டெவனை கொன்றதாக பழி சுமத்தப்பட்டு 30 வருடம் போராட்ட வாழ்வில் வாழ்ந்து கெல்டரை கொல்ல முயன்று லியோனார்ட்டை கொன்று விடுகிறாள். இதனால் மார்ட்டினால் துரத்தப்படுகிறாள். முதிர்வயது மாற்றினும் முதிர்வயது ஜூலியாவும் 30 வருடம் பின்னோக்கிய பயணத்தை துவங்குகிறார்கள்.


    டெவனை இப்போது பார்ப்போம். டெவன் ஜூலியாவை கொன்றதாக பழி சுமத்தப்பட்டு 30 வருட போராட்ட வாழ்வுக்குப் பிறகு
    கெல்டரை கொல்ல முயன்று தனது இரண்டாவது டைம்லைனில் இருக்கும் முதிர் வயது ஜூலியாவை கொல்லுகிறான்.

    இளவயது டெவனை கொல்லு வதற்காக 30 வருடம் பின்னோக்கி பயணிக்கும் லூ இளவயது மற்றும் முதிர் வயது டெவனை பிடிப்பதற்காக டெவெனின் அம்மாவை பிணை கைதியாக பயன்படுத்துகிறான். டெவெனின் இந்த டைம் லைனில் ஜூலியா உயிரோடவே இல்லை. பின்னோக்கி பயணித்த லூவும் முதிர் வயது டெவனும் டெவெனில் இந்த டைம்லைனில் மரணிக்கிறார்கள்

    அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் டெவன் தனது போலீஸ் வாழ்க்கை ராஜினாமா செய்து வெளியேறுகிறான். அப்போது இளவயது லூவை ஒரு கார் விபத்தில் இருந்து அவன் காப்பாற்றுகிறான்.

    இளவயது ஜூலியா தனது இரண்டாவது டைம்லைனில் மார் ட் டி னை காப்பாற்றுவது கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    ஜூலியாவும் டெவனும் அவரவர்களுடைய இரண்டாவது டைம் லைனில் முறையே மிகவும் இளவயது மார்ட்டினையும் லூவையும் காப்பாற்றுவதன் மூலம் இந்த லூப் தொடர்வதை உறுதி செய்கிறார்கள்.

    ஜூலியா மற்றும் மார்ட்டின் 2015-ல் இவர்களின் காலண்டர்களில் ஒரு நாள் இடைவெளி இருந்தால் கூட போதும் இந்த லூப் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

    ஜூலியாவின் முதல் இரண்டாவது டைம் லைன்களை மட்டும் பார்க்காமல் டெவனின் முதல் இரண்டாவது டைம் லைன்களை உற்று நோக்க வேண்டும்.

    சுருக்கமாக ஜூனியர் டெவன் இருவரின் போராட்ட வாழ்வின்போது ஒருவர் போராட்ட வாழ்வு வாழும் போது மற்றொருவர் அந்த டைம் லைனில் உயிரோடவே இல்லை.

    இருவரின் வெவ்வேறு டைம் லைன்களும் அதில் அவர்களின் செயல்பாடுகளும் மற்றொருவரின் வாழ்வை பாதிக்கின்றன.

    இளவயது ஜூலியாவை தேடி முதிர் வயது மார்ட்டின் வரும் நாளும் இளம் வயது டெவனை தேடி லூ வரும் நாளும் ஒன்றல்ல.
    அதே மாதமாக அதே வருடமாக இருக்கலாம். ஆனால் நாள் ஒன்றல்ல.

    இந்த லூப் முடிவு இல்லாதது.

    ReplyDelete
    Replies
    1. Fantastic explanation.. But வேற வேற இனைப் பிரபஞ்சம் என்றால் மட்டுமே இந்த explanation logicகுடன் முடிக்கலாம்.. Waiting for editors explanation

      Delete
  40. தமிழில் வந்த மாநாடு இந்த கதையை தழுவி எடுத்ததா? இதற்கும் பதில் வேண்டும் 😊

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க.. அது வேற ஒரு கதை edge of tomorrow.. அதில் கொஞ்சம் modify செய்தால் மாநாடு

      Delete
  41. நல்ல வேளை நான் இன்னும் கதையை முழுசாக படிக்கவில்லை 😊 இன்று பெங்களூரூ நோக்கி பயணம். நாளை நிதானமாக படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எதே.. அநியாயம் சார்.. ஏறக்குறைய பயங்கர spoilerகளுடன் படிக்கப் போறீங்க..

      Delete

  42. ஜூலியாவின் கதை விளக்கமாக சொல்லப்பட்டிருப்பது போல் டெவனின் கதையையும் ஜூலியாவின் கதையை அடிப்படையாக வைத்து மற்றொரு கதையாக எழுதினால் மர்மம் முற்றிலும் விலகும்.

    மாறுதல் பெற்ற ஜூலியாவின் டைம் லைனில் இளவயது மார்ட்டின் ஜூலியாவால் காப்பாற்றப்படுவது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கதையின் லூப் தொடர்வதற்கு மிக மிக அவசியமான ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ இத ஒரு தொடர்கதையாகவே எழுதிகிட்டு போகலாம் எனத் தோனுது

      Delete
  43. யாரும் யாரையும் கொல்ல வேண்டாம். யாரும் சாகவும் வேண்டாம். யாரு செத்தாலும் நமக்கு தான் பிரச்சனை!🥹

    ReplyDelete
  44. வாசகர்களின் மண்டை சூடேறி ணங் ணங் என்று சுவரில் மோதிக்கொள்வதை மறைந்திருந்து ரசிக்கும் எடிட்டர் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இப்ப எடிட்டரின்  மைண்ட் வாய்ஸ்.. பேசாம நாமளே விளக்கம் கொடுத்திருக்கலாம், சுவாரசியமா இருக்கும்னு இவனுங்கள விளக்கம் கேட்டா இவங்க வேற எங்கெங்கேயோ போயிகிட்டு இருக்காங்க.. இப்ப போய் கதாசிரியர் வந்து இது தான் கதைன்னு சொன்னா கூட நம்ப மாட்டாங்க போலிருக்கே 

      Delete
    2. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாட்டு பேக்கிரவுண்டுல ஓடும்.

      Delete
  45. Folks..... கதையின் ஒட்டத்தோடு அந்தந்த பாத்திரங்களின் அகவைக் கணக்குகளையும் போட்டுப் பார்க்கணுமோ?

    இள வயது ஜூலியா maybe 25 என்று வைத்துக்கொண்டு ஆரம்பித்தால்...

    ReplyDelete
    Replies
    1. JULIYA - 25 / DEVON - 28 / MARTIN - 14 in 2015 LOU - 25 in 2045 ,

      Delete
  46. அவள் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறை செல்லும் போது எத்தனை வருடங்கள் கழிந்திருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. she was jailed in 2017 and she escaped jail in 2019

      Delete
    2. 2 ஆண்டுகள் என்று எதைக் கொண்டு சொல்கிறீர்கள் சார்?

      Delete
    3. ஒரு யூகம் தான் சார், கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லையே சார்.. சில வருடங்களில் என்று தான் ஜூலியா சொல்கிறாள் 

      Delete
    4. டெவன் தப்பித்து விட்டான் என்று செய்தித்தாளை ஜூலியா படிக்கும் நேரத்தில் அவரது ஆசான் உடன் பேசும் நேரத்தில், அவரது ஆசான் கற்றுக்குட்டி என்று சொல்கிறார். அதற்கு கோபம் கொள்ளும் ஜூலியா தானும் வருஷமா வேலை செய்வதாக சொல்கிறார். ஆக குறைந்தது நான்கு அல்லது 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது என் கணிப்பு சார் 

      Delete
    5. அந்த யூகத்தை இன்னும் கொஞ்சம் flexible ஆக்குங்கள் சார் - சில timelines match ஆகும் விதமாய்!

      Delete
  47. தப்பிதமாய் அவனது தந்தை லியனார்ட் சுடப்பட்டு சாகும் பொழுதில் மார்டினின் வயது என்னவாக இருந்திருக்க வேணும்?

    ReplyDelete
  48. காலப்பயண கைக்காப்பில் திருத்தங்கள் செய்து, குறைச்சலான அவகாசங்களுக்குமே travel செய்யும் வசதியை மார்ட்டினின் விஞ்ஞானிகள் உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. கதைப்படி அந்த திருத்தங்கள் செய்யப்படல சார், இரண்டே லியனார்ட் இறந்த இரண்டே மாதத்தில் மார்ட்டின் காலப்பயணம் செய்கிறான் 

      Delete
    2. Page 30 : சாத்தியமாகும் முதல் காலகட்டத்துக்கு திரும்பிப் போக மார்ட்டின் தீர்மானிக்கிறான். So அந்த travel time என்ன?

      Delete
    3. Page 27 : செத்துக் கிடக்கும் லியனார்ட் முன்னே இருக்கும் மார்ட்டின் தலை நிறைய கேசத்துடன்....

      Page 30 : Time travel செய்ய ரெடியாகும் மார்டினோ மொட்டை மண்டை...

      Delete
    4. 2045ல் இருந்து பயணம் செய்யும் ஜூலியா சொல்வதை வைத்து பார்த்தால் 30 ஆண்டுகள் தான் பயணம் செய்ய முடியும் சார்.. so correction of time is not made yet

      Delete
    5. //Page 30 : Time travel செய்ய ரெடியாகும் மார்டினோ மொட்டை மண்டை...//

      நூறாவது நாள் படத்துல வில்லன் சத்யராஜ் கொலை செய்ய வரும்போது மொட்டை அடிச்சுட்டு வருவாருல, அந்த மாதிரி சார்
      வில்லன் லுக் வேணும்ல

      அப்கோர்ஸ் அந்த கேசத்தை பத்தி தோணுச்சு தான், இருந்தாலும் முக்கியதுவம் குடுக்கல

      ஒரு சந்தேகம், அந்த கேசத்தை வைச்சு, இன்னூம் எதாவது குழப்பி விடுறீங்களா

      Delete
    6. Timelines மீது இன்னொரு முறை பிரெஷ்ஷாக பார்வைகளை ஓட விடுவோம் சார் - without preconceived notions!

      Delete
    7. ஒரு வேளை அப்பா செத்ததுக்கு அங்கேயும் மொட்டை போட்ருப்பாங்களா ரம்யா? 🥹🥹

      Delete
    8. Timelines மீது இன்னொரு முறை பிரெஷ்ஷாக பார்வைகளை ஓட விடுவோம் சார் - without preconceived notions!// இந்த கேள்வி தான் எனக்கு முதலில் வந்தது சார், அப்புறம் மார்ட்டின் கிளம்பிய பிறகு காலப்பயணம் செய்யும் ஜூலியா சொல்வதை வைத்து பார்த்ததில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று புரிந்தது சார் 

      Delete
    9. //ஒரு வேளை அப்பா செத்ததுக்கு அங்கேயும் மொட்டை போட்ருப்பாங்களா ரம்யா//

      அதைதான் முதலில் நினைத்தேன், இங்கன வேண்டாம்னு தோணியது

      Delete
    10. மார்ட்டின் மொட்டை போட்டதும் காரணம் என நான் நினைப்பது சார்.

      ஒரு வேளை ஜூலியா கொல்லப்பட்ட பிறகு மார்ட்டின் வெற்றிகரமாக மீண்டும் திரும்பி வந்தாலும், அவனது DNA கொலை நடந்த இடத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக மொட்டை போட்டிருக்கலாம், அவன் மீண்டும் ரத்தக் கசிவு வராமல் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதற்கும் அதுவே காரணம். 

      ஒரு வேளை dna சிக்கினால், இள வயது மார்ட்டின் சிறை செல்ல நேர்ந்திருக்கும் 

      Delete
    11. 2015-இல் அந்த அளவுக்கு யோசிப்பதாக இருந்திருந்தால் ஜூலியா சக அதிகாரியை கொன்றதாக பழி சுமத்தப்பட்டு சிறை சென்றிருக்க மாட்டாள், சரியான ஆளை பிடித்திருப்பார்களெ

      இரத்த கசிவு அவன் வேகத்துக்கு ஒரு தடையே

      Delete
    12. அவன் 2045ல் இருந்து வருகிறான் sister. so அந்த காலத்தில் DNA mapping முடிந்திருக்கும்.. 

      Delete
    13. சில படங்களில் பார்த்துண்டு இந்த மாதிரி, its kinda of something to do with attitude change...அவன் கேரக்டரில் ஏற்படும் மாற்றம்

      ஆனால் முதல் டைம்லைனில் மொட்டை பார்த்துட்டு, இரண்டாவது டைம்லைனில் மொட்டை தலையை எதிர்பார்த்து ஏமாந்து போனேன்

      ஜூலியா எடுத்த முடிவால் மாறிய டைம்லைனில் மொட்டை தலை, கேசம் மிகுந்த தலையாக மாறி இருக்கலாம்

      Delete
    14. ஜூலியா எடுத்த முடிவால் மாறிய டைம்லைனில் மொட்டை தலை, கேசம் மிகுந்த தலையாக மாறி இருக்கலாம்

      Delete
  49. தனது முதல் டைம்லைனில்
    கெல்டரை கொல்ல முயன்று தனது இரண்டாவது டைம் லைனில் இருக்கும் முதிர் வயது ஜூலியாவை கொன்றுவிடும்
    டெவன் யார் இந்த பெண்மணி என்று குழம்புகிறான்.

    ஏனெனில் அதே ஜூலியாவை பல வருடங்கள் முன்பாக கொன்றதற்காக தான் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
    எனவே அந்தப் பெண்மணி ஜூலியாவாக இருக்க கூடும் என்பதை அவனால் எண்ணிப் பார்க்க கூட முடியாது.

    இந்த முடிச்சும் அவிழ்கிறது.

    ReplyDelete
  50. இது டெவன் மற்றும் ஜூலியாவின் இணை பிரபஞ்சங்களுக்கு இடையேயான கால வளையம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்தப்புர பணிப்பெண்கள் அணியும் 'கால் வளையம்' தான் தெரியும்!😐

      Delete
  51. பக்கம் 12ல் கார் ஓட்டிவரும் ஒரு அப்பாவி இளைஞன் மார்ட்டினால் கொல்லப்படுகிறான். அந்த இளைஞனைப் பற்றி ஏன் யாருமே விவாதிக்கவில்லை?
    கொல்லப்பட்ட இளைஞன் யாரென்று தெரிகிறதா?
    கதையின் முக்கிய சூட்சுமம் அதில் ஒளிந்திருப்பதை யாரவது கவனித்தீர்களா?

    புரிந்தவர்கள் விளக்கலாம்!😌

    ReplyDelete
    Replies
    1. Yes.... நடப்பு டைம் லைனில் உருவாகும் மாற்றம்... அதற்கு இங்கு முக்கியத்துவம் உண்டா?

      Delete
    2. வரும் வழியெல்லாம் ஜூலியாவைத் தவிர மீதி எல்லோரையும் சரியா குறி பார்த்து சுட்டு தொலைச்சானே சார் 

      Delete
    3. காரை ஓட்டி வரும் இளைஞனும் இன்னும் பிற கொல்லப்பட்டவர்களும் லூவினாலும் கொல்லப்படலாம். பீரியட்.

      Delete
    4. தன் தந்தையை இழந்த வலி, வெறியாகி மாறி உள்ளது அவனிடம்
      அவன் கால பயணம் செய்யும் முன்னே ஜூலியா சுட்டு விடுகிறாள்
      அதை விட அதிர்ச்சு, முதிர் வயது ஜூலியா வந்து காப்பாற்றுவது, இதனால் வெறி அதிகரித்து தடை போடுபவர்களை யெல்லாம் கொல்கிறான்

      Delete
    5. //காரை ஓட்டி வரும் இளைஞனும் இன்னும் பிற கொல்லப்பட்டவர்களும் லூவினாலும் கொல்லப்படலாம். பீரியட்.//

      ஓஓஓ, ஜூலியா டெவனாக மாறினாலும், இவர்களுக்கு மாற்றமில்லை

      Delete
    6. Yes.... அவர்கள் மரிப்பதே விதி.... சாவு வருவது யார் கையிலிருந்து என்பதில் தான் மாற்றங்களே!

      Delete
  52. 2045 ல் மார்டினை, ஜூலியா சுடும் பொழுது அவள் காலில் கட்டு இல்லை, ஆனால் 2015ல் அவள் காலப்பயணம் வரும் பொழுது காலில் கட்டுடன் வருகிறாள்? இதற்கும் கதைக்கும் சம்பந்தம் உள்ளதா?

    ReplyDelete
  53. 2045-ல் மார்டினை சுட்டுக் காயப்படுத்தும் ஜூலியாவின் வயதென்ன?

    ReplyDelete
    Replies
    1. 55 இருக்கும் சார்

      Delete
    2. 2015 -25 என்று வைத்து கொண்டால், 55 வயதிருக்குங்க

      Delete
    3. மார்ட்டினுக்கு என்றொரு timeline போடுவோமா?

      2015-ல் ஜூலியா காப்பாற்றும் போது பையனுக்கு 15 இருக்குமா?

      Delete
    4. அவன் கண் முன்னே டாடி சுடப்படும் போது?

      Delete
    5. டாடியின் கம்பெனிக்கு பொறுப்பேற்கும் வயதில்?

      Delete
    6. டாடி சுடப்படும் தருணத்தில் அவனுக்கு வயது 45 தான் என்பதை எதைக் கொண்டு உறுதி செய்கிறீர்கள் சார்?

      Delete
    7. 2015- 15 வயது என்றால் 2016-இல் 45 தானே இருக்க முடியுங்க, சார்

      Delete
    8. Page 58 பாருங்களேன்...

      Delete
    9. //2015- 15 வயது என்றால் 2016-இல் 45 தானே இருக்க முடியுங்க//

      Huh?

      Delete
    10. பக்கம் 58 ல் 2045 பிப்ரவரி மாத மார்ட்டின் சார், ஆனா ஜூலியாவை கொள்ள வருவது அவனது ஏப்ரல் மாத வார்ப்பு சார் 

      Delete
    11. //Page 58 பாருங்களேன்...//

      இது குறஅத்து யோசிக்காமல் இல்லை

      சுரேஷ் சகோ கூறியது போல் இரண்டு மாதங்களில் ஏற்படும் மாற்றமும் எதிர்காலம் தான் என எடுத்து கொண்டேன்

      Delete
  54. எடிட்டர் சார் story டைம் லைன் மீது சந்தேகப்பார்வையை வீசுகிறார்.. அந்த மூன்று காலண்டர்கள் தவிர்த்து வேறு ஏதாவது காலத்தை குறிக்கும் பொருட்கள் இந்த கதையின் ஓவியங்களில் உள்ளதா 

    ReplyDelete
    Replies
    1. ஒரு நியூஸ் பேப்பர் இருக்கிறது. டெவன் சிறையில் இருந்து தப்பிய தலைப்பு செய்தியுடன், ஆனால் அதில் ஆண்டு இல்லை மாதம் மட்டுமே உள்ளது 

      Delete
  55. நல்லவேளையா இந்தக் கதையில் முக்கிய கதாபாத்திரங்கள் ஜூலியா, மார்ட்டின், டெவன் மற்றும் லூ - நான்கு பேர் தான்! இன்னும் 2 பேர் இருந்திருந்தாலும் நம்ம கதி அதோ கதி தான்!!🥶

    ReplyDelete
  56. நாமெல்லாம் சிண்டை பிச்சுக்க, கதாசிரியரிடமே இந்த plot குறித்து கேட்டேன்...... அவரும் சுருக்கமாய் அனுப்பியுள்ளார் 😁😁😁

    ReplyDelete