Powered By Blogger

Wednesday, October 23, 2024

புதுசாயொரு உச்சம் !!

 நண்பர்களே,

வணக்கம். தீபாவளி மலர்களுக்கு நாம் புதியவர்களே அல்ல தான் ; ஆனால் மூன்று ஸ்பெஷல் இதழ்கள் ஒருசேர தெறிக்க விடுவது இது தான் மொத தபா என்று நினைக்கிறேன் ! லயன்-திகில்-மினி-லயன்-முத்து காமிக்ஸ் - என 4 இதழ்களை கட்டியிழுத்துக் கொண்டிருந்த நாட்களில் கூட 'ஏக் தம்'மில் தீன் மலர்கள் போட்ட நினைவில்லை எனக்கு ! திகிலில் கோடை மலர் போட்டிருக்கிறோம் தான் ; மினி லயனிலும் கோடை மலர் ; ஹாலிடே ஸ்பெஷல் ; வின்டர் ஸ்பெஷல் என்றெல்லாம் போட்டுள்ளோம் - but ஒரு தீபாவளி ஸ்பெஷலை போட்டுத் தாக்கியதாய் ஞாபகமில்லை ! So இந்தத் தருணமானது நமது பயணத்தில் ஒரு மைல்கல் என்பதில் no doubts ! And இந்த நொடியில் நடந்துள்ள சம்பவம் தான் இந்த மைல்கல்லுக்கே செம கெத்து சேர்த்திடுகிறது !! இன்னான்ரீங்களா ?

வேற ஒண்ணும் இல்லீங்கோ......!! "ஏய் மேன்...இன்னா நீ மட்டும் தான் ரெகார்ட் போடுவியா....? நாங்கள்லாம் என்ன தக்காளித் தொக்கா ?" என்றபடிக்கே தீபாவளி மலர் combo-வுக்கு ஆர்டர் போட்டிருக்கிறீர்கள் பாருங்க - மெய்யாலுமே மெர்சல் ! தாறுமாறு !! அதகளம் !! ரவுசோ ரவுசு !! Phewww .....!!!

நேற்றைக்கு சந்தா டெஸ்பாட்ச் முடிச்ச கையோடு ஆன்லைனிலும், GPay மூலமாகவும் ஆர்டர் செய்திருந்தோருக்கான டெஸ்பாட்ச் பக்கமாய் இன்று நம்மாட்கள் புகுந்த போது தான் உங்களின் விஸ்வரூபங்களின் முழுப்பரிமாணம் புரிபட்டது !! மாலை 7 மணி சுமாருக்கு நான் CC டிவியில் பார்த்த போதும் பேக்கிங் முடிந்தபாடில்லை !! And கொஞ்ச நேரத்துக்கு முன்னே கூரியர் லிஸ்ட் அனுப்பியிருந்தார்கள் ; அந்த எண்ணிக்கையைப் பார்த்த போது மெய்யாலுமே அரண்டு போனேன் !! ஒற்றை நாளின் ஆர்டர்களுக்கு இதுவொரு அசாத்திய உச்சம் guys !! கொரோனா லாக்டௌன் நேரத்தில் நடத்திய முதல் ஆன்லைன் மேளாவிற்கு அப்புறமாய் இப்படியொரு நம்பரை இன்றைக்குத் தான் பார்க்கின்றோம் ! Absolutely awesome !!!!!

And இது போதாதென ஏஜெண்ட்களின் ஆர்ட்ரைப் பார்த்தால், அங்கும் பட்டாசு தான் !! எட்டு மாசமாய் பணம் அனுப்பியிராதவருமே பழைய பாக்கியை செட்டில் செய்து விட்டு இன்றைக்கு மூன்று இதழ்களுக்கும்  போட்டிருக்கும் ஆர்டர் அம்புட்டு வெயிட் !! அக்டோபர் புக்ஸ் வெளியாகி மூன்றே வாரங்களில் மூன்று ஸ்பெஷல் இதழ்களோடு களமிறங்கியிருக்கிறோமே - முகவர்கள் திணறிடுவார்களோ ? என்ற பயம் லேசாய் இருந்தது உள்ளுக்குள் ! But "போலே...போய் அடுத்த வேலையை கவனி, இதை நாங்க பாத்துக்குறோம் !!" என்று சொல்லாது சொல்லி விட்டார்கள் முகவர்ஸ் !! Phewwwwwww !! 

இதில் best part என்னவெனில் - மூன்று மலர்களுமே ஆர்டர்களில் வெயிட்டான இடம்பிடித்துள்ளன ! Of course 'தல' டெக்ஸ் எப்போதும் போல் leader of the pack ; அவருக்கான ஆர்டர்கள் மற்றவற்றைக் காட்டிலும் என்றைக்குமே கூடுதலாக இருந்திடும் தான் ! But இந்தவாட்டி வேட்டையனும் சரி, மிஸ்டர் நோவும் சரி, சளைக்காது tough தந்து வருகின்றனர் !! இரு இதழ்களுமே தயாரிப்பிலும் அழகாய் அமைந்துவிட்டதால் - எதை முதலில் வாசிப்பது என்ற சந்தோஷக் குழப்பம் தாண்டவமாடப் போவது உறுதி !! 

So - அடிச்சு தூள் கிளம்பியுள்ள நீங்கள், அலசல்களோடும் அதகளம் செய்து விட்டால், இந்த தீபாவளி ஒரு தீபாதெறியாக உறுதிபட அமைந்து விடும் !! இந்த அன்புக்கும், எல்லையறியா காமிக்ஸ் நேசத்துக்கும் ஒரு கோடி நன்றிகள் மக்கா - happy reading !!!!


91 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு

    ReplyDelete
  2. வாவ் அருமை சார் 🤗

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  4. Happy to hear அண்ணாச்சி...

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  8. மிக இனிமையான செய்தி... ஸ்பெஷல் இதழ். எப்போதுமே ஒரு தனி தனித்துவம். இந்த முறை மூன்று புத்தகத்திலும் தீபாவளி மலர் என்று தாங்கி வந்ததே பெரிய ஆனந்தம்.... இதேபோன்று ஒவ்வொரு தீபாவளியும் வந்தால் அடடா...❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

  9. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  10. @Edi Sir.. 😘🥰
    புக்ஸ் வந்திடுச்சு வீட்டுக்கு.. 👌👍

    But சனிக்கிழமை நாமக்கல் போன பிறகுதான் படிக்க இயலும்.. 😘👍🥰💐

    உடனே படிக்க முடியலேயே அப்படீங்கற வருத்தம் மனசுக்குள்ள இருந்தாலும் புக் இன்னைக்கு கிடைச்ச நண்பர்கள் முகத்துல தெரியற அந்த 10000 வாட்ஸ் பாத்த உடனே மனசு நிறைஞ்சிடுச்சு சார்..🧨🧨🧨🧨🧨🥰😘

    தீபாவளி சரவெடிதான்.🥰🧨💐💥❤️‍🔥✨🌟.

    ReplyDelete
  11. // தீபாவளி மலர் combo-வுக்கு ஆர்டர் போட்டிருக்கிறீர்கள் பாருங்க - மெய்யாலுமே மெர்சல் ! தாறுமாறு !! அதகளம் !! ரவுசோ ரவுசு !! Phewww .....!!! //
    மகிழ்ச்சியான செய்தி,தீபாவளி விற்பனை தெறிக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஒரே மாதத்தில் எல்லா இதழ்களும் விற்று தீர வாழ்த்துக்கள். புது ரெகார்ட்

      Delete
  12. வந்துட்டேன். புத்தகங்கள் வந்து விட்டன. இன்று மெய்யாகவே தீபாவளி தான் சார். பன் வந்தாச்சு. வெற்றி வெற்றி

    ReplyDelete
  13. Next milestone weight aa kodai malar dhan pola 😍😍😍😍

    ReplyDelete
  14. ஒற்றை நாளின் ஆர்டர்களுக்கு இதுவொரு அசாத்திய உச்சம் guys !! கொரோனா லாக்டௌன் நேரத்தில் நடத்திய முதல் ஆன்லைன் மேளாவிற்கு அப்புறமாய் இப்படியொரு நம்பரை இன்றைக்குத் தான் பார்க்கின்றோம் ! Absolutely awesome !!!!!
    💪💪💪💪💪💪

    ReplyDelete
  15. பணிமண்டலப் போராளிகள் 

    கிரேட் சிலேவ் ஏரிக்கரையில் மூன்று நபர்களிடம் இருந்து தொடங்கும் கதையானது, இது எந்த வகையான கதை மாந்தர்களை உள்ளடக்கியது என்று அச்சாரம் போட்டபடி ஆரவாரமாய் ஆரம்பிக்கிறது.

    டோக்ரிப் இனப் போராளி, ஒரு இனுயிட் இளைஞன், ஒரு வெள்ளைக்கார காதலன். ஆஹா என்று எழுந்து உட்கார்ந்தால்  வாசிப்புக்கு தீனி போட்டபடி பக்கங்கள்.நகர்கின்றது. இவர்கள் மூவருக்கும் நட்பு உருவாக, நம் நால்வர் குழு வேறு ஒரு இடத்தில் கதையில் நுழைய பற்றிக் கொண்ட திரி போல சர்ரென்று கதை நகர, திருப்பங்கள் சரவெடியாய் தூள் கிளப்ப, தீபாவளி டோய் என்று உள்ளம் கொண்டாடியது.

    டெக்ஸ் கார்சனின் கலாய்ப்புகள் பல இடங்களில் சிரிப்பை வரவழைத்தது. நீண்ட நாட்கள் கழித்து டெக்ஸ் கார்சன் கலாய் A 1 ரகம். 

    பல்வேறு பிராந்தியங்கள், அந்தந்த மண்ணிற்கே உண்டான பழங்குடிகள் அவர்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை தெரிந்துக் கொண்டதில் ஒரு பூரண திருப்தி. 

    அந்த இரு பெண்கள், உண்மையில் இந்த கதையில் சக்தியே இவர்கள் தான். தாண்டவமாடியிருக்கிறார்கள். அதிலும் கைதியாய் இருந்தாலும் மிரட்டி இருக்கிறார் டாவ்ன். என்ன தான் சிங்கப்பெண் என்றாலும் காதலன் மைக்கை பார்த்தவுடன் கரையும் டல்லாஸ் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்கள்.

    கதையை படிக்கும் பொழுது உறுத்தியது ஒன்றே ஒன்று தான்.

    சுடப்பட்டது வாத்து என்று  தெரிந்துக் கொண்டாலும், பருந்து என்றே பலமுறை குறிப்பிட்டுள்ளது குழப்பத்தையே தருகிறது.

    கதையில் வித்தியாசமாக பட்டது ஒன்றே ஒன்று தான் 

    தோழிகள் என்று குறிப்பிடாமல் நண்பிகள் என்று உபயோகப்படுத்தப்பட்ட பதம் வித்தியாசமாக இருந்தது.

    மொத்தத்தில் தீபாவளிக்கு ஏற்ற ஒரு வானவேடிக்கை இந்த புத்தகம் 

    கதை 10/10 ஓவியம் 10/10 மேக்கிங் 8/10

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் sir... ❤️👍🙏...

    ReplyDelete
  17. சார் லயனில் மட்டுந்தா தீபாவளி மலர் வந்துள்ளதா..,
    ஆஹா...


    நம்ம டெக்சின் கச்சிதமான ஸ்லிப் கேசும்...மிஸ்டர் தோலின் அட்டையும் வேற லெவல்...


    வேட்டையன் கிநா...நீண்டநாளுக்கு பிறகு ...ஏற்கனவே வெற்றி பெற்ற கிபா


    போதாதா

    ReplyDelete
  18. பட்டாசு வணக்கங்கள்

    ReplyDelete
  19. ஆன்லைன் 'தெறி' விற்பனை ரொம்பவே மகிழ்ச்சி அளிக்கிறது எடிட்டர் சார்! 😍😍😍😇😇😇😇🥰🥰🥰💐💐

    ReplyDelete
  20. #வேங்கை_என்றும்_உறங்காது
    2024ன் தீபாவளி மலராக வந்திருக்கிறது இந்த "தெளசன் வாலா ஆட்டோபாம் சரவெடி" என்றால் சற்றும் மிகையில்லை.

    இந்த கதை இந்த வாரம் வருவது தெரிந்து,
    மிக மிக சமீபத்தில் இதன் முந்தைய கதையான "நில் கவனி வேட்டையாடு " கதையை படித்து முடித்து அசந்து போனேன்.
    இந்த கதையின் மிகுந்த எதிர்பார்ப்பை 💯 💯 பூர்த்தி செய்துள்ளது இந்த "வேங்கை என்றும் உறங்காது ".

    #நில்_கவனி_வேட்டையாடு கதையில்-
    1932 களின் மத்தியில் பிரேஸிலின் ஏதோ ஒரு தீவில், மனித வேட்டையாடியும்,
    வேட்டையாடப்பட்டும், நம் ஹார்ட் பீட்டை சற்று எகிற வைத்த ஆன்டிக் ஹீரோ "ஜெனரல் ஜாரோப்" இம்முறை வேட்டையாடியது -
    10 வருடம் கழிந்து ரஷ்ய மண்ணில் - அதும் USA இராணுவத்துக்கு உதவியாக.

    இந்த கதையில் எனக்கு பிடித்தது ஜாரோப்பின் நச்சென்ற ஷார்ப்பான நேர்முறையான உரையாடல்கள் தான்.
    உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல்,மனதை சாமாதானப்படுத்த பொய்யான சப்பைக் கட்டுகட்டினாலும்,
    நிதர்சனம் என்று ஒன்று உள்ளதே அதை மாற்ற யாராலும் முடியாது,
    இதை ஒவ்வொரு முறையும் தன்னை வெறுக்கும் வீரர்களின் ஏளனமான பேச்சுக்களை உதறிவிட்டு, எந்த சூழலிலும் தன் நிலையில் தடுமாறாமல், உண்மை நிலையை ஒவ்வொரு முறையும் ஆணி அறைந்தாற்போல உணர வைக்கும் ஜாரோப்பின் பேச்சுக்கள் கதை முடிந்தும் நம்முள் நிழலாடும்.

    கதை தொடங்கிய 11 வது பக்கத்தில் இருந்து ஆரம்பமாகிறது வேட்டையரின் அதிரடியான என்ட்ரீ, தொடர்ந்து அசால்டாக இராணுவத்தில் நுழையும் நம் ஹீரோ வெகு ஷார்ப்பாக பேசும் வசனங்களில் தொடங்கி,
    இராணுவ குழுவோடு ரஷ்ய எல்லையில் கால் வைக்கும் ஜாரோப்புக்கு
    மட்டுமல்ல, நமக்கும் காத்திருப்பது பல ஆச்சரியங்கள், சுவாரஸ்யமான உரையாடல்கள், அதிர்வேட்டு சாகசங்கள், பனியில் நடக்கும் மரண போராட்டங்கள், உறவுகளின் பாசப் பிணைப்புக்கள் என என என.....
    அடுத்த வேட்டையை எதிர்பார்த்தபடியே
    மன நிறைவோடு முடிகிறது கதை.

    வழக்கம்போல சித்திரங்கள் ஓகே,
    தமிழ் மொழிபெயர்ப்பு மிகமிகச் சிறப்பு,
    கதை சட்டென முடிந்த ஏக்கத்தைதவிர மற்றதெல்லாம் ஓகே ரகம்.

    நீங்க இதோட முன்னாள கதையான #நில்_கவனி_வேட்டையாடு கதையை படிக்கலைனா தயவுசெய்து எப்படியாவது அந்த புக் வாங்கி படிச்சிருங்க.
    அதை படித்தாலே ஆட்டோமெட்டிக்கா மனசு இந்த கதையை தேடிப் போகும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அந்த கதையில் பல கதாபாத்திரங்களுக்கு இந்த கதையோடு பல தொடர்புகளுள்ளது. மாறாக-நேராக இதில் நுழைந்தால் சில நெருடல்களுக்காக மறுபடியும் முதல் கதையை தேட வேண்டி வரும். முதல் கதையை படித்து விட்டு இதில் நுழைந்தால் ஒரு அட்டகாசமான அனுபவத்தை உணரலாம்.

    இந்த கதையை தீபாவளியன்று ஹாயாக தீபாவளி பலகாரங்களை நொறுக்கியபடியே படித்து பாருங்களேன் தோழமைகளே - கதை படிக்க இன்னும் சற்று தூக்கலாக இருக்கும்.
    தீபாவளியை மகிழ்ச்சியோடு, முன்கூட்டியே எக்ஸ்ட்ரா எனர்ஜியை தந்து, பட்டிகையை கூடுதல் மகிழ்வோடு கொண்டாட உதவிய எடிட்டர் அவர்களுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.
    💕💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💞

    ReplyDelete
  21. தீபாவளி டெக்ஸ் இதழ் மெர்சல் ரகம். Slip case idea பிரமாதம். இது போல் different ஆன சிந்தனையும், பல ரகப்பட்ட கதைகளும், வெவ்வேறு விதமான சைஸ்களும் தான் நமது பலமே. மூன்று தீபாவளி மலர்களும் அற்புதம். இதே போன்று ஓவ்வொரு வருடமும் தொடர்ந்தால் ஓவ்வொரு வருடமும் காமிக்ஸ் தீபாவளி தான்

    ReplyDelete
  22. சற்று முன்பு தான் புத்தகங்கள் கிடைக்கப்பெற்றேன்! ஸ்லிப் கேஸ் - நான் எதிர்பார்த்ததை விடவுமே தரமானதாகவும், அழகானதாகவும் அமைந்திருந்தது! அழகாக உள்ளே குடிகொண்டிருந்த இரண்டு புத்தகங்கள் சகிதம் அந்த ஸ்லிப் கேஸை கையில் ஏந்தி தடவி தடவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்! 'பாருங்கய்யா எங்க லயன் காமிக்ஸ் தீபாவளி மலர" என்று யாரிடமாவது காட்டி பெருமிதப்பட்டு கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.. அப்படியொரு தயாரிப்புத் தரம் ! இதை ஸ்லிப் கேஸ் எதுவும் இல்லாமலேயே ஒரே புத்தகமாக்கி தீபாவளி மலராக எங்களிடம் கொடுத்து இருக்கலாம் தான்.. அப்படி கொடுத்திருந்தாலும் நாங்கள் கொண்டாடி இருப்போம் தான்.. ஆனால் எங்களுக்கு சிறப்பான மற்றும் ஒரு புதுமையான அனுபவத்தை தர வேண்டும் என்ற உங்களது மெனக்கெடல்கள் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது! நன்றிகள் எடிட்டர் சார்.. மூன்று தீபாவளி மலர்களுமே அற்புதமான தயாரிப்பு தரத்தில் அசத்தலாக வந்திருக்கிறது!! 😍😍😍🥰🥰🥰🙏🙏

    ReplyDelete
  23. மிகவும் மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  24. புத்தகங்கள் இன்னும் வரவில்லை சார். நாளைக்கு கிடைத்தால் மகிழ்ச்சி ☺️

    ReplyDelete
    Replies
    1. நன்றாக காய்ந்த பின்பு வரும் ...

      Delete
    2. காய்ந்து விட்டதாம் குமார் 😃 புத்தகங்கள் இன்று வந்து விட்டது ☺️

      Delete
    3. நீங்களா, இல்லை புத்தகங்களா பரணி...

      Delete
    4. புத்தகங்கள் தான் பத்து சார் 😆

      Delete
  25. தீபாவளி மலர்கள் கிடைத்தன.. அருமை ..
    அழகு... ரசனை..
    உங்களுக்கு (உங்கள் டீமிற்கு)என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.. ii

    ReplyDelete
  26. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  27. மூன்று தீபாவளி மலர்கள் ஒரே சமயத்தில்... முதல் முறையாக....

    உண்மையான மைல்கல் சாதனை இதுவே. 😍👏

    ReplyDelete
  28. டெக்ஸ் வில்லரின் "பனி மண்டல போராளிகள்"தெறிக்கவிடுகிறது.பாக்ஸ் இன் தலைவர்மின்கனின் அனுமதி பெற்று அவரது பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும் ஜிம் பிராண்டனின் குழுவினர் பாக்ஸ் இனத்தவர்களாலேயே தி டீ ரென தாக்கப்படுகிறார்கள். பலத்த சேதாரம்.என்ன நடக்கு மோ என்ற பதட்டம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.பின்புறமாக மறைந்துதாக்கவரும் பாக்ஸ் இனத்தவர்கள் பின்புறமாக ஒவ்வொருவராக தாக்கப்படுகின்றனர் .முதலில் தாக்குவது" டைகர் ஜாக்."பிறகு கார்சன் , கிட்,&டெக்ஸ் .எழுந்து நின்று விசிலடிக்க தோன்றுகிறது .60 பக்கக்களுக்குள்ளாகவே கிளைமாக்ஸ் வந்துவிட்டது போன்ற பரபரப்பு .பிறகு கைது செய்யப்பட்ட பாக்ஸ் இனத்தவர்கள் ,தலைவர் மின்கன் முன் நிறுத்தப்பட அவருக்கு தெரியாமல் மாந்திரிகன்அஸ்கூக். சூழ்ச்சியினாலேயே அவர்கள் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டது தெரிய வருகிறது.தலைவர் மின்கனின் கழுத்திலும் கத்தியை வைக்கும் மாந்திரிகன் அஸ்கூக்கை புயல் வேகத்தில் செயல்பட்டு வீழ்த்துகிறார் டைகர் ஜாக்.இஉதெல்லாம் 72பக்கங்களுக்குள்ளாகவேநடக்கின்றன.பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு ...ராஜசேகரன் .கரூர்

    ReplyDelete
  29. நேற்றே நானும் இலவசமாக இல்லத்தில் இருக்க ...நேற்றே பார்சலும் கைகளுக்கு சிக்க கொண்டாட்டம் தான் ...ஆற அமர இதழ்களை பிரித்து அட்டகாசமான மூன்று தீபாவளி மலர்களையும் கண்ட பொழுது எல்லையில்லா மகிழ்வு...ஆம் முதன்முறையாக மூன்று தீபாவளி மலர்கள்...குண்டாக ...,மினிகுண்டாக...,பெரிதாக ...என இதழ்கள் பட்டாசாஸ் தெறித்தது ..

    வி காமிக்ஸ் அட்டைப்படம் இணையத்தில் பார்த்ததை விட இதழில் இன்னும் சிறப்பாக தென்பட்டது..போன முறையே வி காமிக்ஸ் பெரிதாக உள்ளதாக சந்தோசப்பட்ட பொழுது சந்தோசப்பட்ட பொழுது இந்த முறையோ அதை விட பெரிதாக தீபாவளி மலராக கொழுக் ..மொழுக் என வி காமிக்ஸை கைகளில் ஏந்தும் பொழுது மிக மகிழ்ச்சி...உட்பக்க சித்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளது..

    அடுத்த வேட்டையனின் இதழ் முத்து காமிக்ஸின் தீபாவளி மலர்..அடேங்கப்பா....என சித்திரங்களும் ,வண்ணங்களும் மிக அழகாக தெளிவாக அட்டகாசமாக இருந்தது..


    இந்த இரண்டு தீபாவளி மலர்களை ரசித்து விட்டு லயன் தீபாவளி மலரை...தல மலரை தான் ..ஹைய்யா ஸ்லிப் கேஸில் இருந்து வெளியே எடுக்காமலே மேல் அட்டைப்படங்களையும்..அதன் பருத்த கனத்தையும் பல நிமிடங்களுக்கு ரசித்து கொண்டிருந்தேன் ..ஸ்லிப் கேஸ் பாக்ஸ் கனமாக இருக்காது என தாங்கள் தெரிவித்து இருந்தாலும் அதுவே மிக சிறப்பாக இருந்தது சார்..அட்டைப்படம் வேறு லெவல் என நினைத்தால் உள்ளே இருந்து இரண்டு கனமான இதழ்களை வெளியே எடுத்தால் அதன் அட்டைப்படங்களும் அடுத்த லெவல்..ஒரு கதை ...ஒரே பாக்ஸில் ..இரண்டு இதழ்கள் ..முன்பக்க வேற லெவல் மூன்று அட்டைப்படங்கள் என வாவ்..வாவ்...அசத்தல் ரகம் இந்த லயனின் தீபாவளி மலர்..இனி குண்டு இதழ்களை இப்படியே கூ கொடுக்கலாம் சார் என சொல்ல வைத்து விட்டது இதன் தரங்களும் அட்டைப்படமும்...

    மொத்ததில் உண்மையான தீபாவளி நேற்றே தொடங்கி விட்டது காமிக்ஸ் ரசிகர்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. // நேற்றே நானும் இலவசமாக இல்லத்தில் இருக்க //

      ROFL 😂 என்ன தலைவரே இது 🤣

      Delete
  30. ஒரே வருத்தம் என்னவெனில் எப்பொழதும் அனைத்து சந்தா நண்பர்களுக்கும் "பண்பானது " வந்து

    சேரும் பொழுது இந்த முறை செல்பி எடுத்த நண்பர்களுக்கு மட்டுமே என்பது மட்டுமே..


    செல்பி நானும் எடுத்து அனுப்பி இருக்கலாம...ஆனால் ஆசிரியர். முதல்நாளில் எடுத்து வரும் செல்பிக்கு மட்டுமே என்று அறிவித்த படியால் இதழை இரண்டாம் நாள் தான் கைகளுக்கு பெற்றேன் என்பதால் அதில் கவனம் கொள்ள வில்லை..


    சரி விடுங்கள் அடுத்த முறை வழக்கமான " பண்பை" நடைமுறை படுத்துங்கள் சார்..:-)

    ReplyDelete
  31. என்னால் நமது குரூப்பில் பார்வையிட மட்டும் முடிகிறது பதிவிட முடியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் நண்பரே...:-(

      Delete
    2. நாம இன்னும் வளரனும் போல..:-)

      Delete
  32. பனி மண்டல போராளிகள் வழக்கமான டெக்ஸ் கதைகளைப் போல இல்லை . "ஒரு கிராபிக் நாவல் போல"இல்லையில்லைபல கிராபிக் நாவல்கள் போன்ற விசயங்களை கொண்டுள்ளது . புரூனோ பிரேசில் ,மற்றும் ஸ்பூன் &ஒயிட் போல ஏகப்பட்ட அலசல்களையும் பரபரப்பையும் உண்டாக்கும்

    ReplyDelete
  33. இதழ்களை எல்லாம் ரசித்து விட்டு எந்த இதழை முதலில் வாசிக்கலாம் என குழப்பத்தில் ஆழ்ந்து வழக்கம் போல் பிடித்தமான இதழ் கடைசி என டெக்ஸை அந்த பக்கம் வைத்து விட்டு அடுத்த இரண்டில் குண்டான வி அடுத்து ரசிக்க வைக்க அதனையும் அந்த பக்கம் வைத்து விட்டு அளவில் பெரிய முத்து தீபாவளி மலரை கைகளில் எடுத்தேன்..

    கதையும்..சித்திரங்களும் இரண்டாவது பக்கங்களில் இருந்தே அதற்குள் உள்நுழைய வைக்க அடேங்கப்பா ...ஒரு பனி பெரும் தேசத்தில் ஒரு பரபர யுத்தத்தில் நானும் கலந்து கொண்டு வெளியேறியது போல் ஓர் திகில் அனுபவம்..கதை ராணுவ போர் கதையாக அமைய அதன் தொடக்கமும் முடிவும் வேறு ஒரு த்ரில்லர் பாணியாக அமைய வாசித்து முடித்த பின் இந்த வேட்டையனின் அடுத்த வேட்டை எப்பொழுது என கேட்க வைத்து விட்டது..

    மேலும் பொதுவாக எனக்கு இந்த ராணுவகதைக்கள் ,போர்கதைகள் ( அதிரடி படை நீங்கலாக..) எல்லாம் அவ்வளவு ரசிக்க வைப்பது இல்லை..கதை முழுவதும் போர் நடந்து கொண்டே இருக்கும் எவர் எந்த நாட்டிற்காக போரிடுகிறார்கள்..இது இந்த நாடு நியாத்தின் பக்கமா..அதர்மத்தின் பக்கமா ..இந்த கதாபாத்திரம் இந்த நாட்டுக்காரனா ..அந்த நாட்டுக்காரனா என கதை வாசித்து கொண்டு இருக்கும் பொழுதே குழப்பங்கள் தலைத்தோடும் ..ஆனால் இந்த வேட்டையனின் போர் தேசத்திலோ இரண்டு தேசங்களுக்கு நடுவில் நுழைந்தாலும் எந்த வித குழப்பமும் இல்லாமல் செம பரபரப்பாகவும்..விறுவிறுப்பாகவும்..ஏன் படபடப்பாகவும் கொண்டு சென்று இந்த வேங்கை வாசிக்கும் நம்மையும் அந்த போர் களத்தில் நடுவில் கொண்டு சென்று விட்டது..

    மொத்ததில் இந்த முத்து தீபாவளி மலர் சிப்பிக்குள் முத்தே...

    ReplyDelete
  34. தீபாவளி ஸ்பெஷல் இதழ்கள் தெறி விற்பனை செம 🎊💐😍

    ReplyDelete
  35. மூன்று தீபாவளி மலரின் கதைகளுமே, அந்தந்த காலகட்டத்துக்கு கொண்டு சென்றது, டெக்ஸ் slipcase அருமையாக இருந்தது. வருடம் வருடம் டெக்ஸ்ட தீபாவளி மலரை இவ்வாறு slipcase செய்து விடலாம்.
    Electric 80s spider மட்டும் கூடுதலாக இறக்கி விட்டிருந்தால் இன்னும் செமையாக இருந்திருக்கும்

    ReplyDelete
  36. Received the books now! Thank you! டெக்ஸ் மற்றும் வேட்டையன் என்னுடன் பயணிக்க உள்ளார்கள்!

    ReplyDelete
  37. நள்ளிரவு நாயகன் - இடியாப்பம் இடியாப்பம் தான் சிக்கல் சிக்கல் தான் ஜானி ஜானி தான் 😃

    ReplyDelete
  38. ரொம்ப நாள் கழித்து மறுபடியும் காமிக்ஸ் படிக்க தொடங்கி உள்ளேன்.

    பெட்டி வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அடடே கணேஷ் எப்படி இருக்கீங்க

      Delete
    2. ஏன் சார் - போன மாச புக்ஸ் சகிதம் selfie லாம் போட்டிருந்தோமே? ரெகுலராகத் தான் அலசியும் வருகிறீர்களே?

      Delete
    3. நன்றாக இருக்கிறேன் குமார்.

      விஜயன் சார் மன்னிக்கவும். சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இன்றைக்கு தான் நான் தளத்திற்கு வருகிறேன்.

      Delete
    4. மறுவருகைக்கு வாழ்த்துகள் கணேஷ் சகோ

      Delete
  39. பரணி ஜி ஒரு வழியா ஜானி முடிச்சாச்சுங்களா ? நான் இன்னும் பத்து பக்கம் தாண்டாம தவிச்சுக்கிட்டிருக்கேன். தமிழ்ல படிக்கிற நமக்கே இப்படின்னா வேற்று மொழியில் படிச்சு, புரிஞ்சு,நமக்கு புரியற மாதிரி மொழிபெயர்த்து,.....எடிட்டர் சார் பாவம் இல்லைங்களா

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நேற்று மாலை படிக்க ஆரம்பித்த நான் இன்று மதியம் படித்து முடித்தேன். சித்திரங்கள் மற்றும் வண்ணம் அட்டகாசம். தெளிவான எளிமையானமொழிபெயர்ப்பு உடனே படித்து முடிக்க செய்தது.

      Delete
  40. சார் முதலில் பிடியுங்கள் ஒரு பெரிய பூங்கொத்தை 3 தீபாவளி மலர்கள் அருமையான ஒரு ஐடியா. அனைத்தும் முதல் பார்வையில் அட்டகாசம்.

    முதலில் படித்தது வேட்டையன் ஜாரோப். ஒரு rescue மிஷனுக்கு ரஷ்யா அனுப்பப் படும் அவன் அங்கே ஆடும் ருத்ர தாண்டவம் தான் கதை. அதும் முதலில் அவனை பிடிக்க அமெரிக்காவில் வரும் ராணுவத்துக்கு அவன் வைத்து இருக்கும் பொறிகள் எல்லாம் வேற லெவல். மொழிபெயர்ப்பு சுகன்யா யாருங்க அந்த சகோதரி சும்மா பட்டைய கிளப்பறாங்க.

    ReplyDelete
  41. தீபாவளி மலர் 2024
    டெக்ஸ் - பனிமண்டல போராளிகள்


    வழக்கமான டெம்ப்லேட் டெக்ஸ் கதைகளை விட நீளமான வித்தியாசமான டெக்ஸ் கதைகள் மீது அலாதியான ஆர்வமுள்ள எனக்கு இந்த கதை செமத்தியான தீனி என்றால் மிகையாகாது.

    கதை நடக்கும் கனடாவின் வடக்கு பனிப் பிரதேசங்கள் நமக்கு அடிக்கடி பரிச்சியப்படாத பூமியாக இருந்தாலும் முக்கிய கதை மாந்தர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்களே. கனடிய போலிஸின் வடக்கு பகுதி கர்னலான ஜிம் பிராண்டன், அவரது வளர்ப்பு மகளான கேத்தி டாவ்ன் (இன்யூட் தந்தையான நௌடாக் மற்றும் தாய் மேரி காம்டன் ஆகியோரின் மகள் - பனிவனப் படலம்- தீபாவளிமலர் 2020) ஆகியோருடன் பாடகி/ பேரழகி டல்லாஸ் என்கிற மோலி ரெய்னீ மற்றும் அவளின் காதலன் மைக் (இவர்களின் முன் கதை தமிழில் வெளிவந்திருந்தால் கூறுங்கள் நண்பர்களே...) இவர்களோடு நம் நால்வர் கூட்டணி.

    வடக்கு உறைபனி கடலில் புதிய பாதை கண்டறிய கிளம்பிய டெரர் மற்றும் எரெபஸ் என்ற இரு கப்பல்களில் பயணித்து மாயமாய் மறைந்துபோன பயணிகளின் குறிப்புகளை ஆராய செல்லும் குழுவில் மேற்படி நம் பெண்மணிகள் இடம் பெற்றிட அவர்களை தேடி ஒவ்வொருவராக கிளம்புகிறார்கள். கதை அந்த பனிக் கானகத்தில் திக்கு திசை தெரியாமல் ஓடிச் சுழன்று புரண்டு திரும்பி நம்மையும் அதனூடே அலைகழித்து அட்டகாசமான கிளைமாக்ஸோடு முடியும்போது நமக்கும் குளிரில் வெடவெடத்து மூச்சுவாங்குகிறது.

    வேட்டையாடவும் வழிகாட்டவும் வேண்டி குழுவில் இடம்பெற்ற டாவ்ன் மற்றும் டல்லாஸ் இவர்களே இக்கதையின் உயிர்நாடி. கதையில் ஏறத்தாழ அத்தனை பக்கங்களையும் தமதாக்கி அதகளம் புரிந்திருக்கிறார்கள் இருவரும். அவ்விருவரின் அழகைக் காட்டிலும் அதீத மனோதிடம் நம்மை அசரவைக்கிறது.

    டோக்ரிப்கள், இன்யூட்கள், பாக்ஸ்கள், ஹாரேக்கள், மெட்டிஸ்கள் இத்தோடு வடபகுதி நரமாமிச மஹஹாக்கள் என ஏகப்பட்ட பூர்வகுடி மக்களை கடந்து இந்தப் பயணம் நீள்கிறது. என்ன... வடக்குப் பனிப்பகுதி கதைகள் என்றாலே இந்த கேன்னிபல்களும் இடம்பெற்று விடுவது எளிதில் யூகிக்க முடிகிறது.
    அந்த டோர்னுக்குக்கும் டக்குகாக்கும் இடையிலான பகையும் நெஞ்சை உருக்கும் அதற்கான காரணமும் இறுதியில் அது முடியும் விதமும் அருமை!!

    ஆக மொத்தத்தில டெக்ஸின் தீபாவளி மலர் ஆயிரம் வாலா சரவெடி!!

    ReplyDelete
  42. இன்று தான் பார்சல் வந்தது.

    பெட்டியை திறந்ததுமே அந்த மை வாசம் நாசியை துளைச்சுது.

    தீபாவளி மலர்கள் மூன்றுமே செம்ம.

    டெக்ஸ் பாக்ஸ் மெலிதாக இருந்தாலும் அட்டகாசம்.

    அனைத்தும் திருப்தியே

    ReplyDelete
  43. பனி மண்டல போராளிகள்....


    சரியாக இரண்டு தொகுப்பு புத்தகங்களையும் வாசிக்க எடுத்து கொண்ட நேரம் மூணேகால் மணி நேரம் சார்..

    இந்த மூன்று ப்ளஸ் மணி நேரங்களில் கதையை பற் றி நான் எதுவும் சொல்ல போவது இல்லை..ஒன்றே ஓன்று தான்

    டெக்ஸ் கதை என்றால் ஒன்றே தான் அட்டைப்படம் தான் வேறு என்பவர்கள் உடனடியாக வாசியுங்கள்..

    டெக்ஸ் இடத்தில் டைகரை நினையுங்கள் ...

    அவ்வளவே சொல்ல முடியும்..

    வில்லனே நாயகனாய் மனதில் அழுத்தமாய் நுழைந்த களமாய்...

    கண்டிப்பாக மொழி ஆக்கத்திற்கு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை உணர முடிகிறது.




    ஆசிரியருக்கு எழுந்து நின்று பலமான கை தட்டல்கள்..

    ReplyDelete
  44. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  45. வேங்கை என்றும் உறங்காது :-

    நில் கவனி வேட்டையாடு கதை மூலம் நமக்கு அறிமுகமான நிகோலாய் ஜாரோப்பின் இரண்டாவது கதை..!
    முதல் கதையின் தாக்கமே இன்னும் குறைந்தபாடில்லை.. கதையின் ஆரம்பத்தில் ஜாரோப் மீது நமக்கு ஏற்படும் வெறுப்பும் கோபமும்.. கதைப்போக்கில் நம்மை அறியாமலேயே பரிவும் பச்சாதாபமுமாக மாறிவிடும்.. ஜாரோப் தப்பவேண்டுமென நம்மை பதைபதைக்க வைத்துவிடும்.. அப்படிப்பட்ட நில் கவனி வேட்டையாடு கதையின் நாயகனை இம்முறை முற்றிலும் வேறோரு களத்தில்.. அதாவது இண்டாம் உலகப்போரின் பின்னனியில் மாஸ்கோவின் பனி பூமியில் காண்கிறோம்.!

    ஒரு குடிகாரனின் வாக்குமூலத்தின்படி 11ஆவது பக்கத்தில் அறிமுகமாகிறான் ஜாரோப்..
    எதிரி மண்டியிட்டு கைகூப்பி கெஞ்சிக்கொண்டு இருக்க.. நான்கு வேட்டை நாய்கள் புடைசூழ.. கையில் க்ராஸ்போவுடன் முதுகைக் காட்டிக்கொண்டு அறிமுகமாகும் பேனலிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறான் ஜாரோப்.!

    அதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் ஜாரோப்பின் வீட்டை முற்றுகையிட.. தொடரும் அதிரடிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையானவை..!

    வேறு வழியின்றி.. ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்யப்பகுதி வழியாக.. கடும் போர் நடந்துகொண்டிருக்கும் மாஸ்கோவிற்குள் நுழைந்து.. ரஷ்யாவின் தலைச்சிறந்த அணு விஞ்ஞானியும் ஜாரோப்பின் முன்னாள் காதலியுமான லெட்மிலாவை அமெரிக்காவிற்கு கொண்டுவரும் பொறுப்பை ஏற்கிறான் ஜாரோப்.!

    ஜெர்யானியர்கள் ஒருபுறம் ரஷ்யப்படைகள் மறுபுறம்.. இவற்றுக்கிடையே நாட்டுப்பற்று மிகுந்த விஞ்ஞானியான லெட்மிலாவை சம்மதிக்க வைத்து அமெரிக்கா கொண்டுவரவேண்டும்.. பத்மவியூகத்திற்குள் நுழையும் அபிமன்யூவின் நிலையில் ரஷ்யாவில் கால்வைக்கும் ஜாரோப் குழு சாதித்ததா.. அல்லது சாகடிக்கப்பட்டதா என்பதே கதை.. அல்ல.. அல்ல.. திரைப்படம்.!

    புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டால்.. முடிக்காமல் உங்களால் கீழே வைக்கவே முடியாது.. சவாலே விடுகிறேன்.!

    கதையின் ஊடே போரின் கொடுமைகளையும்.. தோற்றுப்போன நாட்டு குடிமக்களின் பரிதாப நிலையையும் பொட்டில் அடித்தாற்போல் சில காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள்.!
    கதை படுவேகம் மட்டுமல்ல.. பரபரப்பும் கூட..! சித்திரங்கள் நன்றாகவே இருக்கின்றன..! சில இடங்களில்.. இருளின் பின்னனியில்.. பனிப்போர்வையில்.. யார் யாரை தாக்குகிறார்கள் என்று லேசான குழப்பம் ஏற்படுவது உண்மைதான்.. ஆனால் வசனங்கள் அதனை தெளிய வைத்துவிடுகின்றன.!

    ஜாரோப்பின் வாரிசான அனாஸ்டாஸியாவின் அதிரடியை அடுத்த பாகத்தில் காண ஆவலோடு இருக்கிறேன்..! இந்த முரட்டுப்பயலின் வேட்டையைவிட அந்த முத்தழகியின் வேட்டை சுவாரஸ்யமாக இருக்குமென தோன்றுகிறது..😇

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம். நேரம் எடுத்து இது போன்று விமர்சனம் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

      Delete
  46. வேங்கை என்று முடியாது

    திரைப்படமாக எடுக்கக்கூடிய அத்தனை விதமான அம்சங்களும் உள்ள ஒரு காமிக்ஸ். வெகு நாட்களுக்கு பிறகு கையில் எடுத்தவுடன் படித்து முடித்த புத்தகம். Highly recommended.

    ReplyDelete
  47. வேங்கை என்றும் உறங்காது : படித்து முடித்த என்னையும் உறங்கவிடலை 👌

    ReplyDelete
    Replies
    1. நேற்று மதியம் ஆரம்பித்த வேட்டை இன்று காலை முடிந்தது; ரஷ்ய பயணம் இனிதே முடிந்தது.

      Delete
    2. வேட்டையன் -இன் வேட்டை வசனங்கள் செம 👌

      Delete
  48. வேங்கை என்றும் உறங்காது

    ஒரு ஆக்ஷன் அதகள திரைப்படத்துக்கு தேவையான அத்தனை சாகசங்களும் உள்ளடக்கிய காமிக்ஸ்.
    வெகு நாட்களுக்கு பிறகு கையில் எடுத்தவுடன் முழுவதுமாக முடித்த புத்தகம். Highly recommended.
    Rating 10/10

    ReplyDelete
  49. 🥰💐
    அடிச்சு புடிச்சு ஊருக்கு ஓடியாந்து பார்சலை பிரிச்சு எடுத்தா "காருக்குல்ல பொண்ணு இருக்கு பாத்துக்கோ".. -ன் ற மாதிரி கவருக்குள்ள பன்னு.. 🤩🤩

    எடுத்து ஒரே அமுக்கா அமுக்கிட்டு..

    பார்த்தா..

    நச்சுனு Tex economy கவர்.. கண்ணை கவர்ற மாதிரி இருந்துச்சி.. 🥰

    அதுக்கு
    உள்ளார பாத்தா..

    ரெண்டு வால்யும் டெஸ்ட் புக்ஸ்ம் இச்சு😘.. இச்சு😘 னு "இச்சு தா... இச்சு தா " னு பாடிட்டு இருந்துச்சு..

    கீழ பாத்தா..

    "வேட்டையன் ஜாரோப் ".. 😍
    "கிச்சு" னு கலவரப்படுத்துச்சு..🫨

    அதுக்கு பக்கத்துல..
    "Mr.No".. "பச்சு" னு பயங்கரமா இருந்துச்சு..🫣

    அதுக்கும் கீழ பாத்தா..
    சந்தோஷத்துல உடம்பெல்லாம் 'ஜில்' னு ஆகி போய் .. "அச் .. அச் "-னு தும்மல் வர்ற மாதிரி நம்ப 2025 காமிக்ஸ் அட்டவணை.. 💗💖


    மொத்தத்துல
    இந்த தீபாவளி கலவர / கவர்ற தீபாவளி... 👍👍👌😘😘😘

    ReplyDelete
  50. மொத்தத்துல November issues "நோ issues"😄😄👍

    ReplyDelete
  51. இன்று பதிவு கிழமை. தீபாவளி புக் படிக்கிறத வேகத்தில் எல்லோரும் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது .

    ReplyDelete
  52. நவம்பரில் புத்தகம் எதுவும் இல்லை எனவே எலக்ட்ரிக் 80ன் முதல் புத்தகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  53. 🥰😘definetly ji👍

    அநேகமா November 25th Electric'80 முதல் book வரும்.. 🥰👌👍

    ReplyDelete
  54. கானகத்தில் கறுப்பு நிழல்


    வி காமிக்ஸ் இந்த முறை தீபாவளி மலராக கெத்தாக கொத்தாக ஜொலிக்க மிஸ்டர் நோ வுடன் நாமும் கானகத்தில் களம் இறங்கிய அனுபவம்...

    காட்டிலோ பழங்குடியினரைகொன்று புசிக்கும் கொடிய மிருகம் ...ஒரு பக்கம் விலங்குகளை கொல்வது தவறு என்ற கொள்கையுடன் அதன் நடமாட்டத்தை.. வேட்டையை மட்டும் படம் பிடிக்கும் நாயக கூட்டம்..இன்னொரு பக்கம் அதனை கொன்று... தான் சிறந்த வேட்டைக்காரன் என்ற பெயரை பெற வேண்டும் என்ற வேட்கையோடு அதனை கொல்ல துடிக்கும் ஒரு கூட்டம்..

    இறுதியில் அந்த கொடிய விலங்கு என்னவானது என்பதை நாமும் அந்த கானகத்தினுள்ளே உள்ளே அச்சத்துடன் உலவ வைத்து விட்டது இந்த கானகத்தின் கறுப்பு நிழல்..

    புலி வேட்டையுடன் ஓர் குடும்ப நிகழ்வும்..புலிக்கு சிறையா என பரிதாப்படுபவரே புலியால் வேட்டையாடப்படுவதும்...புலியை கொல்ல கூடாது என்பவரே புலியை கொல்ல ஆயுதத்தை தூக்குவதும் என கதையில் நிகழும் மாறுதல்கள் நிஜ வாழ்வை பிரதிபலிக்கிறது...மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா எனும்படி...

    இறுதியில் மிஸ்டர் நோ மிக பரபரப்பாக கிளம்ப வந்த கதையில் தான் திடுக் திருப்பமோ என நினைக்க அது அவரின் அடுத்த சாகஸத்திற்கான திடுக் திருப்பம் என அறிந்து புன்னகையை பூக்க வைத்தது..

    மிஸ்டர் நோ ஐயம் வெயிட்டிங்...

    ReplyDelete