நண்பர்களே,
வணக்கம். ஈரோட்டில் நமது விழா ஓவர்...! புத்தக விழாவும் ஓவர்... ஓவர்....! ஆகஸ்டின் ஒரு பாதியும் ஓவர்... ஓவர்... ஓவர்...! பொழுதுகளின் ஓட்ட வேகமோ ஓவரோ ஓவர்! Phewwww!!!
மெய்யாலுமே மண்டைக்குள் மழை பெய்து ஓய்ந்தது போலொரு பீலிங்கு! And - இதோ கூப்பிடு தொலைவில் தீபாவளியும், தீபாவளி மலர்களும், 2025 அட்டவணையும், Electric '80s தனித்தடத்தின் முதல் இதழும் காத்திருக்க - அவை நோக்கிய நமது அடுத்த ஓட்டம் ஆரம்பிக்கிறது! நிஜத்தைச் சொல்வதானால் - ”வாசக விழா வெயிட்டிங்... வெயிட்டிங்” என கிட்டத்தட்ட ஒரு மாதத்தை ஓ.பி. அடித்து விட்டு இப்போது மறுக்கா ரெகுலர் பணிக்குள் திரும்பிட மாடு சண்டித்தனம் பண்ணுகிறது! ஒரு மாதிரியாய் ”ம்பா... ம்பா...” என்று மாட்டை வண்டியில் பூட்டும் வேளையில், ஆகஸ்டின் இதழ்கள் பற்றி நாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோமென்று உறைக்கிறது! ஓ.கே. - வேதாளர் கலரில் வந்திருந்தாலும் க்ளாஸிக் ரசிகர்களைத் தாண்டி பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார் தான்! So அவருக்கோசரம் no problems ; விற்பனையில் அவர்பாட்டுக்கு fire விட்டுக்கொண்டிருக்கிறார் ! ஆனால் -
- டபுள் ஆல்பங்களில் டின்டின்
&
- தெறிக்க விடும் தாத்தாஸ்
இவர்களோ அவ்விதமாய் லூஸில் விடக்கூடிய நாயகர்களல்லவே?!
விழாவுக்கு ரெடியாகும் ஜோரில் ஆகஸ்ட் துவக்கத்தையும், விழா முடிந்த குஜாலை மறு வாரமும் ரசித்துத் திளைத்தான பின்னே - நீங்களும் back to the வாசிப்பு modes-க்குத் திரும்பினால் தானே நலம் guys?! And உலகை வென்ற டின்டினின் ஒரு க்ளாஸிக் அதிரடியினை படம் பார்த்தபடிக்கே பீரோவில் போட்டுப் பூட்டி வைப்பது தப்பாச்சுங்களே...? So டின்டினோடு சாகசப் பயணம் போக எனக்குத் தெரிந்த சில காரணங்களைக் கொண்டே இந்தப் பதிவினை உருவாக்கிடலாமுங்களா ?
The மாறிப் போன ஊர்ஸ்:
போன தபா நேபாளத்தின் பனிச்சிகரங்கள் என்றால் இந்த முறை இரண்டு அத்தியாயங்களில் இரண்டு zone-களில் கதையும், டின்டின் & கோவும் பயணிக்கிறார்கள்! முதலாம் பாகத்தில் கதை சுழல்வது கேப்டன் ஹேடாக் வசிக்கும் இங்கிலாந்தில்!
இங்கே சின்னதொரு அட்ஜெஸ்மண்ட் இல்லாதில்லை guys! ஹெர்ஜ் உருவாக்கிய ஒரிஜினல் கதைகளின்படி கேப்டன் ஹேடாக்கும், பட்லர் நெஸ்டாரும் குடியிருக்கும் அந்த மார்லின்ஸ்பைக் மாளிகையானது இருப்பது பெல்ஜியத்தில்! And அதன் ஒரிஜினல் பெயர் மௌலின்ஸார்ட்! ஆனால் டின்டினை இங்கிலீஷில் மொழிபெயர்த்து வெளியிட்ட சமயத்தில் அந்த ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு டீமானது எப்படியோ கேப்டன் ஹேடாக்கின் ஜாகையை “இங்கிலாந்து” என்று மாற்றி, அந்த மாளிகைக்கும் “மார்லின்ஸ்பைக்” என்று பெயரிட்டு அதற்கு ஹெர்ஜின் சம்மதத்தையும் வாங்கி விட்டுள்ளனர் ! பிரெஞ்சு பதிப்புகளை விடவும் இங்கிலீஷ் பதிப்புகள் உலகமெங்கும் பரவலாகிய காரணத்தால், கேப்டன் ஹேடாக் குடியிருப்பது இங்கிலாந்தில் என்பதாகவே டின்டின் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது (me included) !. பற்றாக்குறைக்கு அந்த பட்லர் பணிவிடைகள் செய்யும் பாணியானதுமே ஒரு பிரிட்டிஷ் அடையாளமே எனும் போது, யாருக்குமே அந்த இடக்குறியீட்டில் நெருடல்கள் நேரவில்லை!
In fact இந்தக் கதைக்குப் பேனா பிடிக்கத் தொடங்கும் வரைக்கும் எனக்குமே இது குறித்த ஞானம் லேது! “திபெத்தில் டின்டின்” ஆல்பத்தில் நம்மவர்கள் டில்லி... காட்மண்டு... திபெத் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் - இந்த topic எழக்கூடவில்ல. ” ஆனால் “மாயப் பந்துகள் 7” கதையோடு சவாரி செய்திட்ட சமயம் தான் ஆங்காங்கே நெருடல்கள் தோன்றின.
டின்டின் ரயிலிலிருந்து இறங்கும் துவக்க சீன்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோ ஒரு இங்கிலீஷ் கிராமீய ரயில் நிலையமல்ல!
அதே போல கதை நகர, நகர, புரபஸர் மார்க் பால்க்னர் டாக்ஸி பிடித்து டின்டினின் வீட்டுக்கு வரும் போது, சித்திரங்களில் தென்பட்டதோ பிரிட்டிஷ் டாக்ஸி அல்ல!
அப்பாலிக்கா புரபஸர் கேல்குலஸைக் கடத்திப் போகிறார்களென்ற sequences-களில் சாலையோரம் தடுப்புகளைப் போட்டு விட்டு காவல் காப்போருமே பிரிட்டிஷ் போலீஸாரல்ல!
அப்புறம் தான் ப்ரெஞ்சு ஒரிஜினல்களையும், இங்கிலீஷ் பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஞானம் பிறந்தது! பார்த்தால் - டின்டினும், கேப்டன் ஹேடாக்கும் பயணமாகும் துறைமுக நகரமெல்லாம் பெல்ஜியத்தில் இருப்பதாக ஒரிஜினலிலும், இங்கிலாந்தில் இருப்பதாக இங்கிலீஷ் பதிப்பிலும் பதிவாகியிருப்பது தெரிந்தது! சரி, ரைட்டு - நம் மத்தியில் உள்ள நண்பர்களில் almost all இங்கிலீஷ் பதிப்புகளையும் படித்து வளர்ந்தவர்களாகவே இருப்பர் எனும் போது, பிரட்டிஷ் அடையாளத்தோடே தொடர்வது தான் மதியென்று தீர்மானித்தேன்.
The உலகம் சுற்றும் டின்டின்:
மார்லின்ஸ்பைக்... அங்கிருந்து துறைமுக நகரம்... அப்புறம் அங்கிருந்து பெரூ தேசம்... அங்கிருந்து அமேசான் கானகம்... அப்புறமாய் இன்கா பூமி என்று இங்கே நமது சாகஸக் குழுவினர் அடிப்பது தெறி ஷண்டிங்! மாற்றம் காணும் கதை பூமிகளோடு அந்தந்த ஊர் மக்களை, இடங்களை, கலாச்சாரங்களை நமக்கு ஹெர்ஜ் அட்டகாசமாய் காட்சிப்படுத்துகிறார்! இதில் ஒரு சுவாரஸ்யப் பின்னணியும் உள்ளது!
“மாயப்பந்துகள் 7” ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக துளிர்விட்டது 1943-ன் இறுதியில்! அந்நேரமெல்லாம் பெல்ஜியம் - நாஜிக்களால் வீழ்த்தப்பட்டு அவர்களது ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்தது. பெல்ஜியத்தை ஆண்டு வந்த நாஜிக்களோடு ஹெர்ஜ் அவர்களுக்கு நல்லதொரு நட்புறவு இருந்ததாக ஒரு சந்தேகம் நிலவி வந்த நாட்கள் அவை! And 1944 செப்டம்பரில் நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்தினுள் புகுந்து, நாஜிக்களை விரட்டியடித்த தருணத்தில் ஹெர்ஜ் மீது "நாஜி அனுதாபி" என்ற முத்திரை குத்தப்பட்டது மட்டுமல்லாது, அவரது படைப்பான இந்த டின்டின் சாகஸமும் முடக்கப்பட்டது! 2 வருடங்களுக்குப் பின்னால் அந்த நாஜி அடையாளத்தை ஹெர்ஜ் அழித்த பிற்பாடே, ”மாயப்பந்துகள் 7” & அதன் க்ளைமேக்ஸ் பாகமான “கதிரவனின் கைதிகள்” 1946 செப்டம்பர் முதலாய் மறுபடியும் பிரசுரிக்கப்பட்டது and 1948 வரைக்கும் நீண்டு சென்று சுபம் கண்டது! So இந்தக் கதைக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் வயதாக்கும்!! 84 ஆண்டுகள் கழிந்த பின்னருமே இதனில் பெருசாய் புராதன அடையாளங்களின்றி, அந்தப் பழம் நெடியின்றி (சு)வாசிக்க முடிவதே கதாசிரியரின் ஜாலங்களுக்கொரு tribute!
முழு புக்காய் வெளியான சமயம் தெறி வெற்றி கண்டது மட்டுமன்றி - டின்டின் தொடரின் டாப் சாகஸங்களுள் ஒன்றாகவும் இது கொண்டாடப்பட்டது! 130 மொழிகளில், கிட்டத்தட்ட 24 கோடி வாசகர்கள் ரசித்துள்ள இவற்றை நீங்களும் (சு)வாசிக்க வேணாமோ? உலகின் ஏதேதோ கோடிகளிலிருக்கும் கோடானு கோடிகள் ஆராதிப்பதற்குக் காரணம் என்னவென்று பார்த்திடத்தான் வேணாமுங்களா?
The கதை மாந்தர்கள்:
இந்தக் கதையை தவறாமல் படிக்க இன்னொரு காரணமும் உள்ளதென்பேன்! Oh yes - இந்த டபுள் டமாக்காவில் கிட்டத்தட்ட டின்டின் யுனிவெர்ஸின் முக்கால்வாசிப் பேர் ஆஜராகி விடுகின்றனர்!
- டின்டின் & ஸ்நோயி & கேப்டன் ஹேடாக் வழக்கம் போல கதையின் பிரதான தூண்களாகின்றனர் !
- புரபஸர் கேல்குலஸ் தனது குடாக்கு பாணியில் இந்தக் கதையில் முதுகெலும்பாகிறார்! அவர் கடத்தப்பட, அவரை மீட்டே தீருவேனென்று டின்டின் & ஹேடாக் புறப்படுவதே கதையின் அடிநாதம்! And க்ளைமேக்ஸில் சும்மா கலக்கலாய் ஒரு உடுப்பில் மனுஷன் பிரசன்னமாகிறார்!
- ‘ப்‘ போட்ட தாம்ப்ஸனும், ‘பாப்பா போட்ட தாப்பா‘வில் வருவது போலான ‘ப்‘ போடாத தாம்ஸனும் - இந்த டபுள் சாகஸத்தின் ரவுசு பார்ட்டிகள்! கதை நெடுக இந்தத் துப்பறியும் ஜோடி அடிக்கும் லூட்டிகளை ரசிக்காது போனால் - நாமெல்லாம் VGP கோல்டன் பீச்சின் சிலை போன்ற வாயில்காப்பான்களுக்கு tough தரும் பார்ட்டிகளாகிடுவோம்! அற்புதமான பாத்திரப்படைப்பு these detectives என்பேன்!
- பியான்கா காஸ்டப்பியாரே: பாடகி! திடுபீரங்கி ! கேப்டன் ஹேடாக்கை இன்னொரு ஆல்பத்தில் விரட்டி விரட்டி லவ்ஸ் விடும் இத்தாலியப் பெண்மணி! டின்டின் யுனிவர்ஸில் அம்மணிக்கொரு முக்கிய இடமுண்டு!
- ஜெனரல் அல்கஸார்: கத்தி வீசும் வித்தைக்கரராக இங்கே அறிமுகமாகும் மனுஷன் ஒரு தென்னமெரிக்க குட்டி தேசத்தின் ப்ரெஸிடெண்ட்! அங்கே புரட்சி வெடிப்பதும்; ஆட்சியாளர்கள் மாறுவதும் பாப்கார்ன் சாப்பிடுவது போல சராசரி நிகழ்வுகளே! (இது தவிர்த்து) மொத்தம் 3 ஆல்பங்களில் இடம் பிடித்திடும் மனுஷன் இவர்!
- புரபஸர் கேன்டனோ: மாயப்பந்துகளின் தாக்கத்தால் தூக்கத்தைத் தழுவுவோரில் ஒருத்தரான புரபஸர் “எரிநட்சத்திர வேட்டை” (The Shooting Star) சாகஸத்திலும் வருகை தருபவர்!
So டின்டின் யுனிவெர்ஸின் ஒரு landmark சாகஸத்தினை படிக்காமல் பூட்டிப் போடுவது நியாயமாரே?
The கதை:
கொஞ்சம் இஸ்திரி; கொஞ்சம் மாந்த்ரீகம்; நிறைய அட்வென்சர்; எக்கச்சக்கமாய் ஜாலியான நகர்த்தல்கள் என்று ஓட்டமெடுத்திடும் கதையின் மையப்புள்ளி yet again நட்பு தான்! போன தபா நண்பர் சேங்கை பனிமலை யெடியிடமிருந்து மீட்க உயிரையே பணயம் வைக்கும் டின்டின் இம்முறை ஆப்த சகாவான புரபஸர் கேல்குலஸை மீட்பதுக்கோசரம் செய்திடும் சாகஸங்கள் எண்ணிலடங்கா! ரயிலை நாசம் செய்து போட்டுத் தள்ள முயற்சி; அடர் கானகத்தின் தீரா இன்னல்கள்; மோட்டாவான முதலைகளோடு மல்லுக்கட்டுதல்; கான்டோர் மலைக் கழுகுகளோடு மோதல் - என டிசைன் டிசைனாக எழுகின்றன - டின்டின் & கோ தாண்டிட வேண்டிய இடர்கள்!! So இதனை ஒரு “கார்ட்டூன் கத” என்று புறம்தள்ளக் கூடிய நண்பர்கள் - சற்றே மறுபரிசீலனை ப்ளீஸ்!
இம்புட்டுக் காரணங்கள் போதாதென்றால் - இன்னமுமே இரு முக்கிய காரணங்கள் உள்ளன டின்டினோடு தாமதகளின்றி அன்னம் - தண்ணி புழங்கிட!
1. முதலாவது of course - ரூ.600 செலவிட்டு வாங்கின பொஸ்தவங்கள் கொஞ்சமாச்சும் சேவை செய்திட அனுமதித்தல் அவசியமன்றோ?
2. More importantly - டின்டின் போன்றதொரு மெகா ப்ளாக்பஸ்டர் ஹீரோவுடன் ‘பொம்ம புக்‘ பயணம் புறப்படவே நமக்கு நேரம் குறைச்சலாகிறதெனில் சிக்கல் around the corner என்பேன் ! டின்டின் எனும் ஒரு காமிக்ஸ் உலக உச்சத்தின் தெருப்பக்கம் தலை வைத்துப் படுக்கவே நமக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன என்பதில் no secrets ! யதார்த்தம் அவ்விதமிருக்க, மெகா தம் கட்டி ஏறியுள்ளதொரு சிகரத்தின் உச்சியிலிருந்தான பார்வைகள் கூட நம்மை பரவசம் கொள்ளச் செய்யாது, கொட்டாவியை விடச் செய்கிறதெனும் பட்சத்தில், நிலவரம் கலவரமே !! சிஸ்கோ ; ஆல்பா ; Soda ; மேக் & ஜாக் ; IR$ ; நீலப்பொடியர்கள் ; லேடி S ; etc etc என்ற தொடர்கள் உங்களை துள்ளிக் குதிக்கச் செய்யாது போயிருப்பின், அதனைப் புரிந்து கொள்ள இயல்கிறது ! பச்சே, டின்டின் எனும் ஒரு அசாத்திய ஆளுமையும் நொண்டியடிக்க நேரிடும் பட்சத்தில் - phewwwww !!
டின்டினுக்கே நம்ம கையிலே படிக்க நேரமில்லை எனும் பட்சத்தில், புதுசாய் தொடர்களைத் தேடுவதில் பெருசாய் லாஜிக்கும் இல்லாது போகிடும் ; ஜிலோன்னு கபிஷ் ; இஸ்பிடர் ; ஆர்ச்சி என்று ட்ராவல் பண்ணவே அப்பாலிக்கா சபலமும் எழுந்திடும் என்பது தானே யதார்த்தம் guys ? More importantly, வாசிப்பு எனும் சுவர் இருந்தாலன்றோ, சந்திப்புகள், கலாய்கள், க்ரூப்கள், கலாட்டாக்கள், பதிவுகள் எனும் சித்திரங்களைத் தீட்டிட இயலும் ? So சுவர் பலஹீனமாகிச் செல்வதை முன்னிருக்கும் சித்திரங்களில் அழகியலில் மறந்திட்டோமெனில் அது சிக்கலுக்கான பாதையாகிப் போயிடாதா folks ?
இங்கு இந்த டாபிக்கை நான் திறக்க இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது guys ; ஆண்டொன்றுக்கு 3 டின்டின் = ரூ.900 என்பதே இப்போதைய திட்டமிடல் ! அந்தப் பணத்தை நீங்கள் தரத் தயாராக இருந்தாலும், அது விரயமாகிடலாகாதே என்ற நெருடல் உள்ளுக்குள் உள்ளது ! So அரும்பாடுபட்டு எட்டிப் பறித்ததொரு மாம்பழத்தை அழுகிப் போக அனுமதியாது, சுவைப்போமே ? என்பதே ஈ பாலக்காட்டு மாதவனின் வேண்டுகோள் ! Final தீர்ப்பு நிண்ட கரங்களில் !!
So இன்றைய விடுமுறையையோ - தொடரவுள்ள வாரயிறுதியினையோ டின்டின் தினங்களாக மாற்றிப் பார்க்கலாமா? Give it a read please & let's celebrate Tintin the way the world has been celebrating !!
Bye all....see you around !!
P.S : அப்புறம் தாத்தாக்களும் உள்ளாருங்கோ இந்த மாதத்தினில் !!
Present sir
ReplyDeleteSuper 😊
Delete1st
ReplyDeleteFirst 😁
ReplyDeleteபொய் பொய் இவரு மூன்றாவது 😂
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeletePayapullainga Inga thaan irukanga polaye 😂🤣🤣
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...
ReplyDelete🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் நண்பர்களே. நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஇரண்டு டின்டின் கதைகளையும் அம்மா படித்து முடித்து விட்டார்கள்
ReplyDeleteநன்றாக இருந்தது, முடிவு அவர் எதிர்பாரதது என்றார்
இனிதான் எனக்கு
நான் வேதாளர் மட்டும் படித்துள்ளேங்க, ஆசிரியரே
பேசாம அம்மாவுக்கு ஒரு ID உருவாக்கி குடுத்துப்புடுங்க ரம்யா !
DeleteCorrect சார்.
Deleteஅந்த மொத்த கதையின் உயிர் நாடியே அந்த க்ளைமேக்ஸ் டுவிஸ்ட் தான். நான் எல்லாம் கைதட்டி விசில் அடித்து சில்லறைகளை சிதற விட்டேன். முதல் முறை எனது அப்பா எனக்கு அந்த கதையைச் சொன்ன போது. இந்த முறை படிக்கும் போது முடிவு எனக்கு தெரிந்து இருந்தாலும் வழி நெடுக சார் எழுதிய தமிழ் நம்மை புதியதாக படிப்பது போலவே உணர வைக்கிறது.
Deleteஇந்த வருடத்தின் டாப் கதைகளில் கட்டாயம் இந்த டபிள் ஆல்பம் உண்டு.
இனிமேல் தான் படிக்க வேண்டும் சார்.
ReplyDeleteஅடுத்த முறை மூணு டின்டின்னா...!?!?
ReplyDelete♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்த வருஷமே மூணு தானே சார் ?
Deleteஆஜர்
ReplyDeleteவரும் சனிக்கிழமை... எங்கள் வீட்டில் டின்டின் கிழமை. கண்டிப்பாக இரண்டையும் முடித்திடுவோம் சார்...
ReplyDeleteசூப்பர் saturday !!
Deleteஎனது கமெண்ட்ஸ் பதிய மாட்டேங்குது சாரே..
ReplyDeleteஅயல்நாட்டு சாதி போலும் சார் ! Browser மாற்றி பாருங்களேன் !
Deleteதாத்தாக்கள் படிச்சாச் வழக்கம் போலருமை சார்....சரி டின் டின்னில் படியேறுவோம்
ReplyDeleteபடியேறும் படலம் பற்றி கவிதையா இல்லாம சொல்லுங்கய்யா அப்பாலிக்கா !
Deleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🎂🍫🤝🎉
உள்ளேன் ஐயா
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteமு பாபு
ஆத்தூர்
மாயப்பந்துகள் 7 படிச்சாச்சு சார் இரண்டாம் பாகம் ஆரம்பிக்க வேண்டும்.
ReplyDeleteசார் தமிழ் மொழிபெயர்பில் அட்டகாசம் பண்ணுகிறீர்கள் அதுவும் கேப்டன் வசனத்திற்கு ஒவ்வொரு முறை ஒவ்வொரு வசனம் பீல் மாறாமல் வேறு எந்த மொழியிலும் இது போல இல்லை என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன நெருடல்கள் எனக்கும் இருந்தது சார் இப்போது நீங்கள் விளக்கம் அளித்த போது தான் புரிகிறது.
கதையில் ஸ்னோயி வேற செம லூட்டி அடிக்கிறது 😁
வேதாளர் பிரின்டிங் இந்த முறை நன்றாக இருந்தது அதில் மீண்டும் கருப்பு பெயிண்ட் வேறு ஒரு இடத்தில் தேவை பட்டுள்ளது. வேதாளருக்கு கல்யாணம் மொத்த புதகத்திலும் அவ்வாறு அடித்து ஏண்டா அந்த புத்தகம் வாங்கினோம் என்று தோன்றிவிட்டது.
அதற்கான காரணம் இளம் வாசகர்களுக்காக என்றால் அவ்வாறு அடித்தால் மட்டும் அவர்களுக்கு வாசிக்கும் எக்ஸ்பீரியன்ஸ் நன்றாக இருக்கும் என்று நினைகிறீர்களா
சத்தியமாய் நான் போனவாட்டியும் சரி, இந்தவாட்டியும் சரி, கறுப்படிக்கச் சொல்லியிருக்கவில்லை கிருஷ்ணா ! நம்மாட்களாக ஆர்வக்கோளாறில் செய்திருக்க வேணும் - இந்த தார் சட்டி வேலையை !
Deleteநாளை ஒரு குச்சியோடு ஆபீசுக்குப் போகணும் !
நம்பிட்டோம் சார்...
Deleteநம்பிட்டோம்...😃😃😃😀😀😀
கண்டிப்பாக குச்சி வேண்டும் சார் அப்படியான once in a life time கதையில் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் 😭
Deleteடின்டின் என் நண்பரின் மகன்கள் பெட்டி வந்த அன்றே எடுத்துக் கொண்டு போயிட்டாங்க சார்.. அநேகமா இன்னும் 15 நாள் ஆகும் என்னிடம் வந்து சேர
ReplyDeleteஆஹா !!
Deleteவந்துட்டேன்
ReplyDeleteபுத்தக விழா இதழ்கள் அனைத்துமே வாசித்தாயிற்று.. மாண்ட்ரேக் மட்டும் வாசிப்பில்...
ReplyDeleteடின் டின் இரண்டு பாக, இரண்டு இதழ் சாகசம்..
என்ன சொல்ல..
இரண்டு பாகங்களையுமே இடைவெளி இல்லாமல் பயணப்பட்டு முடித்தேன்..
அடடா..
அந்த வர்ணக் கலவைகளுக்காகவே மீண்டும், மீண்டும் புரட்டத் தோணுகிறது..
கேப்டனின் வசனங்கள் அனைத்துமே செம்ம.. கெக்கே, பிக்கே வென சிரித்து விட்டேன்..
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமான கதிரவனின் கைதிகள் பக்கா மாஸ்..
ஏதோ ஒரு புதிர் தேசத்திற்குள் நம்மை இட்டுச் சென்ற உணர்வு..
கடைசியில் சூரியக் கடவுளுக்கு பலியாகவிருக்கும் நம் நண்பர்களை டின் டின் காப்பாற்றும் யுக்தி அட்டகாசம்..
ஒரு டின் டின் ஆங்கிலப் பதிப்பின் விலையிலை நமக்கு இரண்டு டின் டின் ஆல்பங்களை கொடுத்த நம் ஆசானுக்கு நன்றிகளும், வணக்கங்களும்....
அடுத்த டின் டின் & கோ விற்காக வெறித்தனமான வெய்ட்டிங்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
+1000000😍😘
Delete'ஏக் தம்மில்' டின்டினை வாசிப்பதெல்லாம் ஒரு வரம் சார் !
Delete😍😘🙏💐💐
DeleteGood Guna!
Deleteவேதாளர் இம்முறை வர்ணக் கலவையிலும் ஸ்கோர் செய்து விட்டார்.. 💪🏻💪🏻💪🏻💪🏻
ReplyDeleteமினி டெக்ஸ்..
ReplyDeleteநறுக்.. 👌🏻👌🏻
க்ளாசிக் சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல்-02
ReplyDeleteசட்டித் தலையன் சிலந்தி மன்னன படுத்தற பாட்ட படிக்கறது அது ஒரு மாதிரி ஜூஜூலிப்பாவாத்தான் இருக்கு..❤️❤️❤️
29th
ReplyDeleteThigil library
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
இன்றுதான் டின்டின் 2 தொகுப்புகளையும், மாண்ட்ரெக் ஸ்பெஷல் 2
ReplyDeleteதொகுப்பினையும்
படித்து 78 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினேன்...😍😘
கூடுதலாக சூறாவளியின் தடத்தில் (Tex) & அதிர்ஷ்டத்தைத் தேடி (வேதாளர்)- இருகதைகளையும் மீள்வாசிப்பு செய்து
சுதந்திர தினத்தை சிறப்பாக நிறைவு செய்துவிட்டேன்..😍😘😄😀
தாத்தாஸ் னையும் மீள் வசிப்பு இன்று..
Delete😍😘😄😀
மீள் வாசிப்பு ; மேல் வாசிப்பெல்லாம் ரைட்டு சார் ; but கொஞ்சமே கொஞ்சமாய் படித்ததில் பிடித்தது / பிடிக்காதது பற்றியும் எழுதலாமே ?
Deleteநான் வாங்கும் புத்தகங்களில் காமிக்ஸ் தவிர்த்த மற்ற புத்தகங்களை 60-70 சதவீதம் புத்தகங்களை முழுவதுமாக படித்து விடுவேன். காமிக்ஸ் இது வரை 100 சதவீதம் அந்தந்த மாதமே படித்து விடுவேன். தற்போது கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு வீடு மாற்றும் வேளையில், புத்தகங்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பத்திரமாக பேக்கிங் செய்து விட்டேன் சார். அடுத்த வாரம் சென்னைக்கு சென்ற பிறகே புத்தகம் படிக்க முடியும் ஆசிரியரே... ஆனால் கண்டிப்பாக இந்த மாதத்திற்குள் படித்து விடுவேன்....
ReplyDeleteSuper sir...
Delete35.
ReplyDeleteடின் டின்னை கிடப்பில் போட மனசு வருமா சார். இந்த வார சனி, ஞாயிறு என்று இரண்டு நாட்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன். பொதுவாக ஒரு நாளில் ஒரு கதை மட்டுமே படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அது அளவில் சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி. அப்போது தான் அந்த கதையின் தாக்கத்தை முழுமையாக உணர முடியும் என்பது என் எண்ணம்.
ReplyDeleteதொகுப்பாக வரும் கிளாசிக் கதைகளை மட்டும் இரண்டு அல்லது மூன்று கதைகளை ஒரே நாளில் படிக்க முயற்சிப்பேன். அந்த வகையில் நிலுவையில் உள்ள காரிகன் special 2 இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் 4 கதைகளை படித்து விட்டேன். இணும் 6 பாகி இருக்கிறது. இது போக மே மாதம் ஆன்லைன் புத்தக விழாவில் வந்த 4 மினி கதைகள், ஆகஸ்ட் மாத மினி டெக்ஸ், மான்ட்ரேக் special 2 மற்றும் Superstar special 2 படிக்க நிலுவையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்தையும் படித்து முடித்து விடுவேன்.
சென்ற மாத ரேட்டிங்
1. லக்கி லூக் - A+, Excellent
2. டெக்ஸ் - A, Very Good
3. ராபின் - A, Very Good
4. ஸ்பைடர் - E, Below Average
சிலந்தியார் மார்க்குகளுக்கு அப்பாற்பட்டவர் நண்பரே !
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteWhat a coincidence Sir..
😃😍
இன்று நானும் டின்டின் ரசித்து படித்து முடிக்கிறேன்..
எடிட்டர் சார்😘 நீங்களும்
டின்டின் படித்து விட்டீர்களா என பதிவிடுகிறீர்கள்..😍😘
படித்த பின்னே பதிவிட்டால் வருங்கால சந்ததிகளுக்கு அதுவொரு pointer ஆக இருந்திடுமே ஜம்பிங் தல ?
Deleteசுதந்திர தின விழாவில்
ReplyDeleteசுதந்திரமாக
டின் டின் படிக்க முடிந்தது
💪💪💪💪💪❤️❤️❤️
சுதந்திர வாசிப்பின் ரிசல்ட் என்னவோ சார் ?
Deleteஇம்மாத சிறப்பே டின்டின் தான் என்பதே சொல்லவும் வேண்டுமா என்ன...முதல் இதழை போலவே அதே தரம் ,அதே பிரமிப்பு ,அதே அட்டகாசம்...முதல் பாகமான மாயப்பந்துகள் 7 அட்டைப்படம் சிறப்பு...இரண்டாவது பாக அட்டைப்படம் அதை விட சிறிது சுமாரே ஆனாலும் அதுவே ஒரிஜினல் என்பதும் நம்மால் மாற்ற முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது நாம் ஏதும் செய்ய முடியாது தான்..
ReplyDeleteமுதல் பாகத்தை மட்டும் முதலில் படித்து விடலாம் என நினைத்து வாசிக்க தொடங்கி அதன் விறுவிறுப்பும்..நகைச்சுவையும் முடித்த அடுத்த நிமிடமே "கதிரவனின் கைதிகளையும்" எடுத்து வாசிக்க வைத்து விட்டது ஒரே மூச்சில்...
உண்மையை சொல்ல போனால் சிறிது மனச்சோர்வுடன் இந்த இதழை வாசிக்க எடுக்கும் பொழுது இந்த மனநிலையில் இதழை வாசிக்க வேண்டுமா இப்பொழுது வாசித்தால் முழுதாக மனதில் ஒட்டுமா ரசிக்கத்தான் முடியுமா நாளை பார்த்து கொள்ளலாமா என்று நினைத்தாலும் பரவாயில்லை சிறிது வாசித்து பார்க்கலாம் என வாசிக்க தொடங்கினேன்..மற்ற மனச்சூழல்களை புறம் தள்ளியதுடன் பல இடங்களில் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தது இந்த இரு தொகுப்புகளும்...இந்த முறை டின்டின்னை விட கேப்டன் தான் நிரம்ப ரசிக்கவும் ,சிரிக்கவும் வைத்து விட்டார் எனில் டின்டின்னின் நாலு கால் நண்பனும் பட்டைய கிளப்பி விட்டான்..ஓர் துப்பறியும் கதையை படிப்பது போல் விறுவிறுப்பு ..லக்கி ,சிக்பில் போல நகைச்சுவையிலும் சிறப்பு என இரு தடங்களுமே இணைந்து ரயில் பாதை போல் இணைந்தே ரசிக்க வைத்தது ..வெகு அட்டகாசம்...டெக்ஸை வாசித்தவுடன் அடுத்த டெக்ஸ் எப்பொழுது என மனம் நினைப்பது போல் இப்பொழுது இரண்டு பாக டின்டின்னை வாசித்தவுடன் மீண்டும் டின்டின் எப்பொழுது என ஏங்க வைத்து விட்டார் இந்த டின்டின்..
அருமை... அட்டகாசம்....
தலீவரே...செயலாளரையும் உங்கள போல சுறுசுறுப்பாக்க முயற்சி பண்ணுங்களேன் ?
Delete:-)))
Delete// உண்மையை சொல்ல போனால் சிறிது மனச்சோர்வுடன் இந்த இதழை வாசிக்க எடுக்கும் பொழுது இந்த மனநிலையில் இதழை வாசிக்க வேண்டுமா இப்பொழுது வாசித்தால் முழுதாக மனதில் ஒட்டுமா ரசிக்கத்தான் முடியுமா நாளை பார்த்து கொள்ளலாமா என்று நினைத்தாலும் பரவாயில்லை சிறிது வாசித்து பார்க்கலாம் என வாசிக்க தொடங்கினேன்..மற்ற மனச்சூழல்களை புறம் தள்ளியதுடன் பல இடங்களில் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தது //
Delete+2 Me to felt the same!
Super sir....
Deleteச்செல்லாக்குட்டி "ஸ்நோயி"யின் "டும்ப்படிடக்கா",
ReplyDeleteகிளைமாக்ஸ்க்கு முன் சிறைச்சாலையில் நியூஸ்பேப்பர் துண்டை வைத்து காட்டும் ஆட்டம்,
போகுமிடத்திலெல்லாம் பூனைகளுடன் வம்பிழுத்து பிரச்சனைகளை உண்டாக்குவது,
எழும்புதுண்டை கண்ட உடனே குதூகலிப்பது என ஸ்நோயியின் அட்டகாசங்கள் அனைத்தும் வயிறு குலுங்க ரசித்து சிரிக்க வைக்கிறது..😍😘😃😀
கேப்டன் ஹேடாக்"ன்
அனுபவ அலப்பறை அறிவுரைகள் (முதலைமேல் உட்கார்ந்துவிட்டு),
அவரது "பறக்க தெரிந்த பறாக்காவெட்டி", "வளர்ந்து கெட்ட வெங்காயங்கள்",
"சுனாமிய செவுளோடு சாத்த", "சண்டாளன்களுக்கு சங்கு ஊத"... என "தெரி மாஸ்" கமெண்டுகள், கடைசியாக அந்த ல்லாமாவுடனான வஞ்சத்தை தீர்த்து கொள்வது..😃😃..
ஆகியவை மனதுவிட்டு ரசித்து சிரிக்க வைத்த பல இடங்கள்..😃😃😃😃
அந்த 'ப்' போட்ட தாம்ப்ஸன் & 'ப்' போடாத தாம்ஸன்- இரட்டை குழப்பவாதிகளின் குழப்பும் கமெண்ட்கள் வேற லெவல்..😃😍😘😀
(Tintin ஐ தேடி
தேடி கடைசியாக பெங்குவின்களை அலற 😃😃 வைக்கிறார்கள்..
அதன்பிறகு என்னவானார்கள், எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை)
ஞாபகமறதி புரபசர் கேல்குலஸ்...😃😃-ன்
ஞாபக மறதி செம்ம..😃😃அதுவும் கிளைமாக்ஸ் ல் உயிரோட எரிக்கபட முயற்சி நடக்கும்போது கேப்டனிடம் நலம் விசாரிப்பதும், அதற்கு கேப்டனின் பதிலும்.. தூள் ரகம்..😃😀
மொத்தத்தில் இன்னைக்கு டின்டின் படிச்சபிறகுமனசு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு சார்..😃😍😘😀
Magic of Herge sir!
Deleteஜம்பிங் தலைவரே சின்ன வயதில் ஸ்நோயி போல ஒரு நாய் குட்டி வேண்டுமே வேண்டும் என்று நான் பிடித்த அடம் எல்லாம் இவ்வளவு தான் என்று இல்லை. அதற்கு நான் வாங்கிய அடிகளுக்கும் அளவே இல்லை.
Deleteடும்ப்படிடக்கா....!!
Deleteஅதிலேயே "அடி " இருக்கே சார் - அப்புறம் வாங்காம போயிருக்க முடியுமா?
டெக்ஸ் வில்லரே வந்தாலும் வேதாளரோ மாண்ட்ரேக்கோ கிர்பியோ சார் லியோ இவங்கதான் எனக்கு ஃபஸ்ட்டு. அப்படி இருக்க ஆசிரியரின் அன்புடன் வழங்கப்பட்ட லெஜண்ட்ஸ் மூவர் ஆட்டோகிராப் புடன் பெற்றுக்கொண்ட,மாண்ட்ரேக் முடிக்காம மத்தபக்கம் பார்வைய திருப்ப முடியுமா.60களில் எழுதப்பட்ட சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகள் இப்பொழுதும் சுவாரஸ்யம் குறையாமல்இருக்கிறது.அயல்கிரவாசியின் பார்வையில்"//தேனிக்கள் கஷ்டப்பட்டு மலர்களில் இருந்து சேமிக்கும் தேனை மனிதர்கள் உணவுக்காகஎடுத்துக் கொள்கிறீர்கள் .அதுபோல் நீங்கள் எடுக்கும் தங்கத்தை எங்கள் ஆயுளை நீட்டிக்க நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்"//வித்யாசமான கற்பனை .இதுபோல் ஒவ்வொரு கதையிலும் புதுவிதமான கற்பனைகள் இனிய வாசிப்பு அனுபவத்தை கொடுக்க ஒரு ஃபிரஸ்ஸான ஆல்பமாக மின்னுகிறது .மாண்ட்ரேக் ஸ்பெசல் 2 .ராஜசேகரன் கரூர்
ReplyDelete👍✊👌@கரூர் சக்தி ஜி 💐
DeleteSuper!
Deleteமாண்ட்ரேக் 2ம் தொகுப்பு அபாரம்,முதல். தொகுப்பு போல மாண்ட்ரேக்கை துப்பறியும் கதைகளுக்கு அடைக்காமல் அவரது ஜானருக்கு நியாயம் செய்த கதைகள்.
ReplyDeleteஇடையில் தாத்தாக்கள் முடிச்சாச்சு.பேத்தி ஸோபிக்கு பட்டப்பெயர் ,மரணவாய் மல்கோவா+கூர் மண்டை மந்திரவாதி .....ஸோபியின்குழந்தைக்குகாரணமான நபர்யாரென்று சொல்லப்பட்டாலும் அவரைப்பற்றிய அதிக விபரங்கள் தெரிவிக்கப்படாமலே ஆசாமிபரலோகம் சென்றுவிட்டார்.
ReplyDeleteOk.... Tin Tin ஐ அலசி ஆராஞ்சுற வேண்டியதுதான். Edi sir recommend செய்துள்ளார். So started reading TIN TIN😍🥰💐💐💐💐
ReplyDeleteஒரு நாளும் இல்லாத திருநாளாக, இந்த மாதம் வெளியான 4 இதழ்களையும் படித்து முடித்து விட்டேன்!!!
ReplyDeleteஅதற்கு கார்ணம் இடையறாத பயணங்கள் மட்டுமே!
எந்த கதையையுமே ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன் என்று சொல்லாமல், ரசித்து முடித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட விமர்சனங்கள் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதால், எதையும் எழுதியற்சுக்கவில்லை ஐயா!
டின் டின் ஆகட்டும், தத்த்தாக்கள் ஆகட்டும், வேதாள மாயாத்மாவாக இருக்கட்டும், அனைவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த மாத கதைகள் புரிய வைத்துள்ளன!
டின் டின் கதையில்.வந்த வசனங்கள் ஒவ்வொன்றும் பின்னிப் பெடலெடுக்கின்றன. இன்கா பேரரசு பற்றிய கதைகளை அவை உலகம் முழுக்க பரவும் காலகட்டங்களுக்கு முன்பே ஹெர்ஜ் அடிநாதமாக, கதைக்களமாக பயன்படுத்தியுள்ளார் என்னும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்டன் தலையில் எங்கப்பன் எட்டாயிரம் குண்டு போட
எம்டன் தலையில் எங்கப்பன் எண்ணூறு குண்டு போட
போன்ற கேப்டன் ஹேடாக்கின் கோபம் தெறிக்கும் வசனங்களும், ஸ்நோயியின் குடாக்குத்தனமான சிந்தனைகளும் சீரியஸ் ஆன கதையை, சிரிப்போடு வேகமெடுக்க வைப்பது உண்மை!
சமயோசித புத்தி, உலக அறிவு, பட்டறிவு என அனைத்தும் பயன்படுத்தும் வித்தகனாக டின் டின் இப்போது ஆகிவிட்டார்!
Super ji. Nice review.
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteடின் டின் இரண்டு கதைகளும் அருமை; கடந்த வார இறுதியில் படித்து முடித்துவிட்டேன்.
ReplyDeleteடின் டின் அடுத்த கதை எப்போது என்று சொல்லுங்கள் சார்.
டெக்ஸ் சில கதைகள் போரடித்து உள்ளன ஆனால் இதுவரை வந்துள்ள டின் டின் மூன்று கதைகளும் அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தை எனக்கு கொடுத்தது.
நன்றி சார்.
ஸ்னோயி டயலாக் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்தது.
Deleteஇரண்டு கதைகளும் எல்லா தரப்பு வாசகர்களை கவரும் வகையில் இருந்தது.
Deleteஇதுவரை கதை சொல்லும் காமிக்ஸ், லக்கி லூக் என பயணித்த என் செல்ல பாப்பாக்களின் காமிக்ஸ் பயணம் வரும் சனி ஞாயிறுகளில் டின் டின் நோக்கி அடுத்த பயணம் எனது துணையுடன்.
ReplyDeleteஅவர்களின் கருத்துடன் மீண்டும்
டின் டின் பதிவுக்கு வருகிறேன்.
Super
Deleteஅன்பின் ஆசிரியர் அவர்களுக்கு.... நேர நெருக்கடி சார். அடுத்த வாரத்தில் படித்து முடித்து முடித்து விடுவேன் சார்.
ReplyDeleteபுஸ்வாணம்ங்கிறாங்க... கம்பி மத்தாப்புங்கிறாங்க... இந்த சத்தத்தையெல்லாம் காதால கேக்க மட்டும் தான் முடியுது. கண்ணால பாக்க முடியலியேடா அப்பா..
ReplyDelete(கவுண்டர் ஃபீலிங் வாய்ஸ்)
அக்டோபர் 3ம் தேதி வரைக்கும் காத்திருக்கணும், புத்தக வாசிப்பு அனுபவத்திற்காக... ஹூம்ம்...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா...
Read both tintin on day of delivery and posted my reviews in last blog post itself
ReplyDeleteசார் இந்த மாத புத்தகங்கள் அனைத்தும் படித்து முடித்து விட்டேன். மாண்ட்ரேக் மட்டும் 4 கதைகள் பாக்கி.
ReplyDeleteபடித்த வரை I'm really happy. எல்லா கதைகளும் அருமை அதும் டின்டின் உண்மையாகவே அட்டகாசம். உங்கள் மொழிபெயர்ப்பு சூப்பர். அதும் கேப்டன் ஹேடாக் நீங்கள் எழுதிய அனைத்து வசனங்களும் ரொம்பவே அருமை. ஆங்கிலத்தில் ஒரே போன்ற வசனமே வரும் அதை இடத்திற்கு தக்கவாறு நீங்கள் மாற்றியது அழகாக செட் ஆகி விட்டது. I really loved it Sir. Keep the good work going.
பரபரவென்ற கதைக்களம், கதை நடக்கும் இடத்திற்கு கையோடு நம்மை அழைத்துச் செல்கிறது. மெய் மறக்க வைக்கும் சித்திரங்களோடு நகரும் கதையில் கேப்டனின் வசனங்கள் மட்டும் ஒரே மாதிரியாக, போர் அடிக்கும் விதமாக கதையின் சுவாரசியத்தை குறைக் கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த வசனங்கள் கதையின் ஓட்டத்திலிருந்து நம்மை பிரித்து விடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது... மற்றபடி அனைத்தும் அட்டகாசம்!!!!
ReplyDelete//. கேப்டனின் வசனங்கள் //
DeleteBut I liked it😄
👍😀😀
Deleteபரணி சார், உங்களதும் என்னுடைய கருத்தும் அனேக இடங்களில் ஒத்துப் போவதை பார்த்து இருக்கிறேன்..
Deleteஉண்மை ஜி
Deleteடின் டின் இது போன்ற ஒரு ஆங்கில ஒரிஜினல் புத்தகம் விலை Rs. 650 to 800/- ஆனால் நமது விலை Rs.300; அட்டகாசமான உலகத் தரம் எல்லா வகையிலும் எனவே நாம் கொடுத்தது வைத்தவர்கள் நண்பர்களே. Don’t miss it. உங்கள் குழந்தைகள் கூட இந்த டின் டின் இதழ்களை கண்டிப்பாக விரும்புவார்கள்.
ReplyDeleteஇந்த மாத புத்தகங்கள் அனைத்தும் படித்தாச்சு
ReplyDeleteஈரோடு புத்தக விழா ஸ்பெஷலுக்கும் திகில் லைப்ரரிக்கும் இன்று தான் பணம் கட்டி உள்ளேன். அனேகமாக திங்கட்கிழமை என் கைக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன். இந்த மாத கதைகள் அனைத்தும் அட்டகாசம்.
டின் டின் கதையை இதுவரை இரண்டு தடவை மறு வாசிப்பு செய்து விட்டேன் அட்டகாசம். முதல் பாதத்தில் முதல் பக்கத்தில் ஆரம்பித்து இரண்டாம் பாகத்தின் கடைசி பக்கம் வரை கதை நம் கையைப் பிடித்து சூறாவளி வேகத்தில் இழுத்துச் செல்கிறது.
வணக்கம் சார். இன்று சனிக்கிழமை பதிவு நாள் சார். இன்று பதிவு உண்டாங்களா சார்?
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteசார்... இன்னிக்கி நம்மாட்கள் டின்டின் படிக்க வேண்டிய கிழமை!
DeleteAnd பாவப்பட்ட 3 தாத்தாஸும் வெயிட்டிங்!
Deleteசெனா. அனா. சாரை தாண்டி யாரும் தாத்தாக்கள் பற்றி ஒற்றை வரி எழுதியதாகக் கூட தெரியலை! 2025க்கு இவர்கள் தொடரத் தான் வேணுமா? என்ற கேள்வி என்னுள் இந்த நொடியில் 🤕...
For a change - இந்த வாரயிறுதியினை ஆகஸ்டின் august ஆளுமைகளை வாசித்து அலச பயன்படுத்திடுவோமே?!
DeleteAnd இயன்றமட்டுக்கு நானும் உட்புகுந்து கொள்கிறேன் சார்!
One of the biggest takeaways for me : வாசக சந்திப்புத் திருவிழா தருணங்களில் எம்புட்டு பெரிய தலைக்கட்டா இருந்தாலும் கவனம் ஈட்டுவது கடினம் போலும்!
DeleteSo இத்தகைய பொழுதுகளில் தேமே என்று தலயே இறக்கி விட்டுடணும் போலும்!
சார் அடுத்த வருடம் டின் டின் வேண்டும் அதே போல் தாத்தாவும் வேண்டும். Please include them.
Delete// செனா. அனா. சாரை தாண்டி யாரும் தாத்தாக்கள் பற்றி ஒற்றை வரி எழுதியதாகக் கூட தெரியலை! //
DeleteI believe Karur Rajashekar sir shared his review about this story already sir! :-)
//இத்தகைய பொழுதுகளில் தேமே என்று தலயே இறக்கி விட்டுடணும் போலும்!//
DeleteYES SIR .. FINISHED BOTH TINTIN AND VEDHALAR .. BUT THATHAS COULD NOT CROSS MORE THAN 2 PAGES .. MAYBE FOR EBF MONTH ONE FULL FLEDGED TEX SHOULD VE BEEN THERE SIR ..
சார் செனா அனா மட்டும் அல்ல நம்ம சூர்யா ஜீவா அவர்களும் விமர்சனம் எழுதி இருந்தார். அட்டகாசமான விமர்சனம்
Deleteவாங்க குமார் 😊
Deleteஅப்படி சொல்லுங்கள் குமார் 😊
Deleteடெக்ஸ் போன்ற நேர்கோட்டு கதைகளை விட தாத்தாகள் கதைகள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். கிராபிக் நாவல்கள் குறைந்து வரும் நிலையில் தாத்தாக்கள் மட்டுமே ஊறுகாய் போல் இருக்கிறார்கள்.மக்களே அவர்களையும் நிறுத்திப்புடாதிங்க. என் போன்ற ஒரு சில மாற்றுக்கள வாசகர்களுக்காக பெரும்பான்மை வாசகர்கள் கருணை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteதாத்தாக்கள் உடன் இன்று மாலை முதல் பயணம். கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்றாலும் வேலையை தவிர மற்ற விஷயங்களில் நேரம் செலவிட முடியவில்லை சார்.
ReplyDelete// வாசக சந்திப்புத் திருவிழா தருணங்களில் எம்புட்டு பெரிய தலைக்கட்டா இருந்தாலும் கவனம் ஈட்டுவது கடினம் போலும்! //
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை சார்; தலையே வந்து இருந்தாலும் இது தான் நிலவரம் சார் என்னை பொறுத்தவரை 😊 இங்கே பெரும்பாலான வாசகர்கள் 40 வயதுக்கு மேல். தற்போது இருக்கும் கம்யூட்டர் வாழ்க்கையில் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது; அதுவும் அந்த காலம் போல இவ்வளவு இருந்தால் போதும் என்று இருக்க முடியவில்லை ஏன் என்றால் சுற்றி உள்ள எல்லாமே விலை ஏறிக்கொண்டே இருக்கிறது + நிலைப்புத்தன்மை குறைந்து விட்டது. இந்த நேரத்தில் காமிக்ஸ் மட்டுமே எங்களை இவைகளை மறக்க செய்கிறது; உடனே படிக்க முடியவில்லை என்றாலும் அந்த அந்த மாதத்தில் படித்து விடுவோம். இது தான் தற்போது அனைவரின் நிலை எனவே தயவு செய்து காமிக்ஸ் ஆர்வம் மற்றும் வாசிப்பை குறைத்து விட்டோம் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் சார்.
அதே,அதே...
Delete@Parani..👍✊👌
Delete+10000000 👍
Run..Run..Run..என்று ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் சற்றே இளைபாற உதவுவது காமிக்ஸ் மட்டுமே..😃😍✊👌
டின் டின் கதையில் ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது; அனைவரும் ஏதாவது ஒரு வகையில் என்னை கவர்ந்து விட்டார்கள் சார்.
ReplyDeleteஈரோடு ஸ்பெஷல் மற்றும் திகில் லைப்ரரி பார்சல் இன்று வந்துவிட்டது. நேற்றுதான் பணம் கட்டினேன். அதற்குள் இன்று அனுப்பிய அலுவலக சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteபார்சல் உடைச்சாச்சு முதல் பார்வையில் அட்டகாசமாக அனைத்து அட்டை படங்களும் இருக்கின்றன. பணி அதிகமாக இருப்பதால் இரவு தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும்
ReplyDeleteஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். பெங்களூர் நேரத்தில் சேர வேண்டும் என்பதால் 3 மணிக்கு விழா அரங்கில் இருந்து கிளம்பி விட்டேன். எனவே திகில் லைப்ரரி மற்றும் விழாவுக்கு வந்த வாசகர்களுக்கு கொடுத்த goodies எனக்கு கிடைக்கவில்லை. ஜஸ்ட் மிஸ் 😆
ReplyDeleteதேங்க்ஸ் பரணி ஜி. சார் நான் தாத்தாஸ் பற்றி விமர்சித்துள்ளேன்.இன்றைய பதிவில் ஆழமாக அலசி விடுகிறேன் .ராஜசேகரன் .கரூர்
ReplyDeleteசூப்பர் சார்,. தரமான சம்பவம் வருது என சொல்லுங்கள் 😊
Deleteடின் டின் கதையில் மற்றும் ஒரு சிறப்பு positive vibration 😊
ReplyDeleteWe request you sir not omit thathas and all books may be published soon or later please
ReplyDeleteI would have missed last two panels but can't putdown easily and read to over to find a key knot of story may be iam little slack but happy to read again and continue with other thathas thanks for presenting that beautysir
ReplyDeleteOne of good finds by you is thathas story. Even though the art is clumpsy the story is excellent .please continue thathas all the stories
ReplyDeleteAyya Saturday ayuduchuu
ReplyDeleteதமிழில் "ஆமா சனிக்கிழமை ஆயிடுச்சு"ங்கசார்
ReplyDelete//2025க்கு இவர்கள் தொடரத்தான் வேண்டுமா?.எனும் கேள்வி என்னுள் இந்நேரம்.// சார்.இங்கு பெரும்பாலும் அனைவருமே தாத்தாக்கள் ரசிகர்கள்தான் எனது கணிப்பில்.விமர்சனத்தில் வெளிப்படுத்திக்க லை அவ்வளவுதான்.வருடம் ஒன்று என்பதே குறைவுதான்.இரண்டாவது வேண்டும் சார்
ReplyDeletePathivum illa... varathavangalukku thigil library yum illaa
ReplyDeleteஇனிமே பதிவு கிழமைகளே கிடையாது போல!
ReplyDeleteஹூம்.. 😤 சரி விடுங்க மக்களே நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதான் போல!!😤😤🫤
ஆமாம் விஜய்! ஆசிரியர் வாட்ஸுப் பக்கம் போனதில் இருந்து பதிவு என்பது :-(
Delete😟😟😟😟😟😟
Delete// ஆசிரியர் வாட்ஸுப் பக்கம் போனதில் இருந்து பதிவு என்பது :-( // absolutely true
Deleteஇரண்டாவது குழந்தை பிறந்தால் அதற்கு கவனிப்பு கொஞ்சம் கூடுதலாக இருப்பது இயல்பே.
Deleteஆனால் எனக்கு ஒரு சிறு வருத்தம் உண்டு.
தனது பதிவுகளில் ஏதாவது ஒரு இடத்திலாவது திகில் லைப்ரரி பற்றி ஆசிரியர் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தேன். புத்தகம் வெளிவந்து மூன்று வாரமாகியும் திகில் லைப்ரரி எனகிற வார்த்தை கூட எங்கும் இல்லையே, ஏன்?
ஆசிரியரே,இந்த மாதம் தாத்தாஸ்க்கு தான் முதல் விமர்சனம் வந்தது
ReplyDeleteதிருவண்ணாமலை சேரந்த சுரேஷ் சகோ ஈரோடு விழா பதிவில் தனது விமர்சனத்தை பதிவிட்டிருந்தார்
வாட்சப் குழுக்களிலும் தாத்தாஸ் கதை அலசி கொண்டிருந்தனர், சகோதரர்கள்
Note this point also sir 😊
Deleteஎடிட்டர் சார், அதை வாசித்து மறுமொழியும் கொடுத்திருந்தார். வேலைபளுவில் மறந்திருப்பார் போல
Deleteநானும், எனது அம்மாவும் தாத்தாஸ் கதைக்காக ஜூன் மாத்திலிருந்து காத்திருக்கிறோம்
ReplyDeleteஅதுவும் எங்க அம்மா ஒரு நாள் நமது கோவை புத்தக விழா ஸ்டால் பக்கம் எட்டி பார்த்தது, தாத்தாஸ் புக் இருக்குமா என்று தான்
இந்த மாதம் முதலில் கையில் ஏந்தியது தாத்தாஸ் புக்கை தான்
டின்டின் சாகங்களை மக்கம் கவனம் திரும்பியதால், தாத்தாஸ் பின் தங்கி விட்டனர்
நேற்று தாத்தாஸ் கதையும் படித்து முடிச்சுட்டாங்க, அம்மா
விமர்சனம் கேட்டால், கதையும் சேர்த்து சொல்லிடுவாங்க
அதனால் இன்று படித்து முடித்து விட்டு இருவரது விமர்சனங்களையும் பதிவிடுகிறேங்க ஆசிரியரே
தாத்தாஸ் வேண்டாமென முடிவு மட்டும் எடுக்காதீர்கள், ஆசிரியரே
Super super 👏🏻
Deleteஉங்கள் பார்வையில் எப்படி இருக்காங்க தாத்தாஸ் என காண ஆசை.
Deleteதாத்தா கதைகளை நிறுத்தினால் 'தலீவர் தாத்தா' முன்னிலையில் ஆயிரம் தாத்தாக்களை ( எல்லாம் நம்ம வாசகர்கள்தான் ) சிவகாசியில் இறக்கிப் போராட்டம் நடத்துவோம். ஒற்றை வேப்பிலையை இடுப்பில் கட்டிப் போராட்டம் ( அதையும் பின்புறமாக தான் கட்டுவோம் ஹி ஹி ! )
ReplyDelete😃😃😃😃😃Rofl😀😀😀😀😀
Deleteஅப்படியே வார இறுதியில் பதிவு வர வேண்டும் என்று ஒரு போராட்டம் செய்வோம், சகோ
Deleteபதிவில்லா சனி ஞாயிறு நல்லாவே இல்லைங்க 😟😟😟
ஆமாம் ஆமாம். ஒற்றை வேப்பிலை வாழ்க சாரி தலைவர் வாழ்க 😁
Delete// பதிவில்லா சனி ஞாயிறு நல்லாவே இல்லைங்க 😟😟😟 // ஆமா எனக்கெல்லாம் என்ன கிழமை என்றே தெரியவில்லை சகோ
Deleteஈரோடு புத்தகத் திருவிழா: விழாவில் ஓரளவு எல்லா நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட கால அவகாசத்துகுள் நடந்து முடிந்தன; பாராட்டுக்கள். விழாவுக்கு பலநாட்கள் உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
ReplyDeleteவிழாவில் மிக பெரிய குறையாக நான் நினைப்பது சொன்ன நேரத்திற்கு ஆரம்பிக்காத்து. பரந்து பரந்து காலையில் எழுந்து நேரத்திற்கு வந்த நண்பர்கள் பலர். ஆசிரியர் குடும்பம் மற்றும் கருணையஈனநதம அவர்கள் எல்லோரும் விழா நடக்கும் இடத்திற்கு நேரத்துக்கு வந்து விட்டார்கள்.
ஆனால் விழா ஆரம்பித்து சொன்ன நேரத்தை விட மிகவும் தாமதமாகவே. இது போன்ற பலர் கூடும் நிகழ்வில் நேரத்திற்கு விழாவை ஆரம்பிப்பது நன்று. இனி வரும் காலங்களில் இதனை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்🙏😊🙏😊
சரியான கருத்து சார்...
Deleteசார் இன்று பதிவு கிழமை.
ReplyDeleteஅது நேற்று 😄
Deleteஅதாவது சனிக்கிழமை 😄
Delete//விழா ஆரம்பித்தது சொன்ன நேரத்தைவிட மிகவும் தாமதமாகவே இது போன்ற பலர் கூடும் நிகழ்வில் நேரத்திற்கு விழாவை ஆரம்பிப்பது நன்று.இனி வரும் காலங்களில் இதனை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்//பரணி ஜி
ReplyDelete+10000000000000000
தாத்தாக்கள் வழக்கம் போல இந்த முறையும் சூப்பர். வசனங்கள் செம சார்ப் 😊 இது போன்ற நல்ல கதைகள் தொடர்ந்து வர வேண்டும். தாத்தா நம்மில் ஒருவர் ☺️
ReplyDeleteதிகில் லைப்ரரி அனைத்து கதைகளும் நன்றாக இருந்தது. என்னைப் பொருத்தவரை திகில் லைப்ரரி தொடரலாம்
ReplyDeleteநேற்று திகில் லைப்ரரி படித்து விட்டேன். இன்று நேரம் கிடைக்கும்போது வலைமன்னன் மற்றும் சட்டித் தலையுடன் 13 நம்பர் பிளாட்டுக்கு செல்ல வேண்டும்
ReplyDeleteநேற்று திகில் லைப்ரரி படித்து முடித்து விட்டேன். இன்று மழை மன்னன் மற்றும் சட்டித் தலையுடன் 13ம் நம்பர் பிளாட்டுக்கு செல்ல வேண்டும். மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டி வரும்
ReplyDeleteமாயமில்லே....மந்திரமில்லே...
ReplyDeleteஅட்டைபடம் அருமை கதையின்
ஸோஃபியா கையில் ஒரு வெட்டுக்கிளி
ஏன் நமக்கு சொல்கிறது
சாதரண பொம்மலாட்டத்தில் இப்படியும் யோசிக்க முடியுமா என்று சிந்திக்க வைக்கிறார் ஒரு வயதான லேடி, அவரை கலாய்த்து விடும் அண்ட்வான் தாத்தா செம கலாய்
வெட்டுக்கிளிக்கு மந்திரவாதி என்று பெயர், அதற்கான காரணம் அப்பப்பா இயற்கையின் விந்தையான படைப்பு, அறிவியலின் கண்ணோட்டம், சமூக ஆர்வளாகளின் கண்ணோட்டம் என பல, இவற்றில் அந்த ஊர் மக்களின் கண்ணோட்டம் நம் சோபியுடன் இருக்கும் உவமையை காண வைக்கிறது
ஸோஃபியாவின் குழந்தைக்கு யார் அப்பா என்று தெரிந்து கொள்ள துடிக்கும் ஊர் மக்கள்(தாத்தாஸ்கள்), அவர்கள் செய்யும் கலாய்ப்புகள், naughty fellows
இருந்தாலும் ஒரு காதல் கதை இருக்கும் என எதிர்பார்த்தேன்
முதல் மூன்றில் இருந்த ட்விஸ்ட் போன்று ஸோஃபியாவின் கதையிலும்
என்னை பொறுத்த வரையில் அவளுக்கு நடந்தது எல்லாமே harrasment
உனக்கு எதுவும் செட் ஆவாது என சொல்லும் அந்த ஆணாதிக்க முகரையை பெயர்க்க தான் தோன்றிற்று
சரியான தண்டனை
கேட்காமல் கிடைத்த குழந்தையை பக்குவபட்டு ஏற்று கொள்ளும் மனம்
தந்தை பாசத்துக்கும், ஒரு உண்மையான காதலுக்கும் ஏங்கும் அவள் மனது
எல்லாவற்றையும் விட அடுத்தவங்களை காயபடுத்த கூடாது என்பதற்காகவும் ஒதுங்கி இருக்கிறது
மூடநம்பிக்கை என்பது தெருவாசல் வரைதான், நமக்கு என்று வரும்போது மூடநம்பிக்கை மேல் நம்பிக்கை வைக்கிறது மனது என்பது காட்டி உள்ளார்
DeleteWell in my opinion, they deserved punishments for wronging her
பக்கங்கள் 17, 18 அருமை, அதுவும் ஸோஃபியாவின் கற்பனையை காண்பிக்க பயன்படுத்திய கலரிங் அருமை
முட்டையை மட்டும் வைத்து கொண்டு காணாத வெட்டுக்கிளியை சால்ஜ்பாக பயன்படுத்தி மக்களை ஏமாற்ற பார்க்கும் சின்ன புத்தி கொண்ட பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தின் தலைவர்
நிறுவனம் வருமா, வராதா, வந்தால் என்ன பிரச்சனை வரவில்லை என்றால் என்ன பிரச்சனை மக்கள் கண்ணோட்டம், அவர்கள் செயல்களில் நல்ல கலாய்ப்புடன் சொல்லி உள்ளார் கதாசிரியர்
தாத்தாஸ்கள் லூட்டிகள் சிறப்பு🤣🤣🤣🤣🤣, அதுவும் அந்த புது மிலிட்ரி தாத்தா 😂😂😂
அவர்களை ஸோம்பிகளாக ட்ரீட் செய்த வால் பசங்க, ROFL momemt
இந்த தாத்தாஸ் ஒசக வயசுக்காரங்களை கிழவன்,கிழவி என்று சொல்லும்போது 😂😂😂😂😂
Wifi க்காக காட்டில் இருக்கும் அர்னாடெ, தாத்தாஸ் திடீரென தோன்றும் போது 😂😂😂
பெர்தா லேடி டாப் மாஸ், மில்சே தாத்தா மனதை கவர்கிறார்
மொத்தத்தில்
அருமை அருமை அருமை
பல இடங்களில் நன்றாக சிந்திக்க வைத்தது, சிரிக்கவும் வைத்தது
கலரிங் வேலை ரொம்ப பிடித்திருந்தது
சித்திரங்களில் முகவெளிபாடுகளும், உடல்மொழியும் அருமை
சோஃபியாக்கு லவ் ஸ்டோரியாக மாறினால் நன்றாக இருக்கும்
அவள் தந்தையின் மனப்போக்கை அறிந்து கொள்ள விரும்புகிறேன்
நல்ல நட்பு இப்படி கூட பிரிய நேர்கிறது😟
அடுத்த வருடம் தாத்தாஸ் கதையினை தொடரந்திடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன், ஆசிரியரே
Excellent review!! super!!!
DeleteWe all love தாத்தாஸ் :-)
தாத்தாஸ் இன்றைய சமூகத்திற்கு கண்டிப்பாக தேவை! இளைய தலைமுறையினர் கண்டிப்பாக இதனை ரசிக்க ஆரம்பிப்பார்கள்.
Delete// பக்கங்கள் 17, 18 அருமை, அதுவும் ஸோஃபியாவின் கற்பனையை காண்பிக்க பயன்படுத்திய கலரிங் அருமை //
Delete+1
// பக்கங்கள் 17, 18 அருமை, அதுவும் ஸோஃபியாவின் கற்பனையை காண்பிக்க பயன்படுத்திய கலரிங் அருமை //
Deleteஒரு நிமிடம் பிரின்டிங் மிஸ்டேக் என நினைத்துவிட்டேன்; பின்னர் இரண்டு பக்கம்களின் வசனம்களின் வேறுபாட்டை கவனித்தேன் , அதே போல் வண்ணம்கள்!
//Excellent review!! super!!!
DeleteWe all love தாத்தாஸ் :-)//
நன்றி பரணி சகோ 💐💐💐
//தாத்தாஸ் இன்றைய சமூகத்திற்கு கண்டிப்பாக தேவை! இளைய தலைமுறையினர் கண்டிப்பாக இதனை ரசிக்க ஆரம்பிப்பார்கள்.//
Delete+9
// மூடநம்பிக்கை என்பது தெருவாசல் வரைதான், நமக்கு என்று வரும்போது மூடநம்பிக்கை மேல் நம்பிக்கை வைக்கிறது மனது என்பது காட்டி உள்ளார்// இதைத்தான் நானும் எழுத நினைத்தேன். எனக்கு வந்தால் இரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.
Deleteஎன்ன ஒரு detailing.. செம
Delete@SURYAJEEVA
Deleteநன்றி சகோ
@Kumar
Deleteநன்றி சகோ 💐
தாத்தா தாரு மாரு. அருமை, அருமை. ரெகுலர் சந்தாவிலேயே வேண்டும். அதுக்கும் ஆப்பு வைத்து விடாதீர்கள். புத்தக விழாவில் வருவது எல்லாம் சாத்தியமில்லை.
Deleteஅடுத்த அத்தியாயம் சோபியின் டாடி மீது spotlight அடிக்கவிருக்கிறது ரம்யா!
Deleteஅருமை ஆசிரியரே
Delete//தாத்தா தாரு மாரு. அருமை, அருமை. ரெகுலர் சந்தாவிலேயே வேண்டும். அதுக்கும் ஆப்பு வைத்து விடாதீர்கள். புத்தக விழாவில் வருவது எல்லாம் சாத்தியமில்லை.//
Delete+9
// அடுத்த அத்தியாயம் சோபியின் டாடி மீது spotlight அடிக்கவிருக்கிறது ரம்யா // அப்போ கண்டிப்பாக சீக்கிரமே
Deleteடின் டின் சாகசம் ...மாயப்பந்துகள் 7
ReplyDeleteநேற்று இரவு முதல் முறையாக என் இரண்டு பிள்ளைகளுக்கும் (வயது 8, வயது 6) டின் டின் அறிமுகம் செய்து அருகில் அமர வைத்து வாசித்து காண்பித்தேன்.
இருவரும் வசனங்களை காதில் வாங்கிக் கொண்டு படங்களின் மேல் பார்வையை ஓட வைத்தவாறு வந்தனர்.
இந்த சாகசம் இரண்டு பாக கதைகள் என்பதை அவர்களிடம் ஆரம்பத்தில் சொல்லவே இல்லை.
ஒட்டுமொத்த கருத்தாக இந்த சாகச கதை அவர்களுக்கு மிகவும் ரொம்ப மிகவும் பிடித்து விட்டது.
தற்சமயம் அறிமுகத்தில் இரண்டு பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்த இரண்டு பாத்திரங்கள்
ஸ்நோயி
கேப்டன் ஹேடாக்
ஸ்நோயி. .. பூனையிடம் வம்பு பண்ணும் இடங்களிலும், சேட்டை பண்ணும் இடங்களிலும் மிகவும் ரசித்து மகிழ்ந்தனர்.
கேப்டன் ஹேடாக் ... அனைத்து இடங்களிலும் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளார். மகிழ்ச்சி ஆரவாரம் தான்.
ஸ்நோயி ... துறைமுகத்தில் தொப்பியை எடுத்து வந்து டின் டின் வசம் கொடுக்கும் முதல் படத்திலேயே இது ப்ரொபஷர் தொப்பி போல உள்ளது என இருவரும் கண்டுபிடித்து விட்டனர்.
முதல் முறையாக வாசிக்கும் சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் கதையமைப்பு அருமை.
மம்மியின் கையில் இருந்த அந்த தங்க வளையல் தான் ப்ரொபசர் அணிந்திருந்தார் அவரை கடத்தும் போது அதை மட்டும் எடுத்துச் சென்று இருக்கலாமே ஏன் அவரையும் கடத்திக் கொண்டு போனார்கள் என கதையின் இடையில் ஒரு கேள்வி கேட்டனர்.
கதை வாசித்து முடித்த பின்னர் மீண்டும் சில காட்சிகளை சொல்லி அந்த பக்கத்தில் உள்ள படங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றனர் அவ்வாறு காண்பித்தேன் அதை கொஞ்ச நேரம் ஆழ்ந்து கவனித்தார்கள் என்ன புரிந்ததோ ?என்ன ரசித்தார்களோ எனக்கு தெரியாது..
இருவரின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 10/10
இன்று காலை பள்ளி கிளம்பும்போது பெரிய பிள்ளை என்னிடம் கேட்ட கேள்வி அடுத்த புத்தகம் எப்போது வரும் ?
இரண்டாவது புத்தகமும் வந்துவிட்டது இன்று இரவு மீண்டும் வாசிக்கலாம் என சொன்னதும் எனக்கு எவ்வளவு சந்தோசம்..!
உடனடியாக இரண்டாவது பிள்ளைக்கு விஷயம் காதிற்கு சென்றவுடன் அந்த புக்கை இப்பொழுது பார்க்க வேண்டும் என அடம் பிடித்து இருவரும் அட்டை படத்தை மட்டும் பார்த்து விட்டு சென்றனர்.
ஆஹா செம செம
Deleteசெம்ம நண்பா செம்ம செம்ம. வாழ்த்துக்கள். அட்டகாசமான எழுத்து.
DeleteSuper super. Good to spend time with kids by telling our comics stories.
Deleteநன்றி தோழர்களே...!
Delete// Super super. Good to spend time with kids by telling our comics storie
Deleteகச்சிதமான கருத்து சார்..
முன்பெல்லாம் செல்லும் வழி எல்லாம் கடைகளில் வார, மாத இதழ்கள் வண்ண வண்ணமாக கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு வகையில் புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுது நாம் வாசித்தால் மட்டும் போதாது நம் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி கதைகளை சொன்னால் தானாக அந்த விதை மரம் ஆகிவிடும்.
அந்த விதையும் நாம் தான் , விதைக்கு தண்ணீர் ஊற்றுபவரும் நாமாக தான் இருக்க வேண்டும் .
👌👌👌
Deleteகாலமாய் நண்பர்களிடம் முன்வைக்கும் வேண்டுகோளே இது தான் சார் - பிள்ளைகளுக்குக் கதை சொல்ல மட்டும் நாம் நேரம் செலவிட்டால் வாசிப்பெனும் விருட்சம் யுகங்களுக்கு நிலைத்திடும்!
Deleteடின்டின் அற்புதமான துவக்கப் புள்ளி சார் - 6 & 8 வயதிலான வாண்டுகளை பொம்ம புக் உலகிற்குள் நுழைத்திட!!
Delete//டின்டின் அற்புதமான துவக்கப் புள்ளி சார் - 6 & 8 வயதிலான வாண்டுகளை பொம்ம புக் உலகிற்குள் நுழைத்திட!!//
Delete+9
Test
ReplyDelete🤔🤔🤔
Deleteதல உங்களுக்கே testa?
Deleteஆசிரியரே
ReplyDeleteதாத்தாஸ் ரெகுலர் தடத்தில் வந்தால் சிங்கிள் ஆல்பம் ஓகே
தனியாக வந்தால் டபுள் (அ) டிருபுள் ஆல்பமாக வேண்டுங்க, ஆசிரியரே
ஏனென்றால் அதற்கு பிறகு வர வாய்ப்பு கம்மியாகி விடும்
// தனியாக வந்தால் டபுள் (அ) டிருபுள் ஆல்பமாக வேண்டுங்க, ஆசிரியரே //
Delete+1
வரவர கடல் என்னைப் போல ஆகி விட்டாங்காளே
Deleteஆமாங்க சகோ 😁😁😁😊😊
Deleteதாத்தா அடுத்த வருடம் சந்தாவில் இல்லை என்றால் நான் காமிக்ஸ் படிப்பதை நிறுத்துவது தவிர எனக்கு வேற வழியில்லை 😆 வருத்தமான விஷயமாக இருந்தாலும் சிரிக்கிற மாதிரி எமோஜி போடனும் என ஈரோடு (கி)இளவரசர் சொல்லி இருக்கிறார் 🤣
Delete# தனியாக வந்தால் டபுள் (அ) டிருபுள் ஆல்பமாக வேண்டுங்க ஆசிரியரே #
DeleteI support.😘👍✊👌
@Parani Sago
Deleteஅதே அதே 😁😁😁
@Now or Never
Delete💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
ஆருடத்தின் நிழலில்
ReplyDeleteஜிம்மியை சுற்றி செல்கிறது கதை
அவரது மனம் ரொம்ப மென்மையானதாக உள்ளது, உறுதியானதாகவும் உள்ளது
அரியானவை நேசிப்பதில் மென்மை காதலை வெளிப்படுத்துகிறார், தன் எல்லைக்குள் இருந்து கொண்டு அதை தாண்டாமல் தன் உறுதியினை காண்பிக்கிறார்
இவையிரண்டும் இல்லாத இரு கொலைக்காரர்கள், இக்கதையில்
முன்னெல்லாம் ராபின் கதைகளில் சென்டிமென்டோ, அழ வைப்பதையோ பார்க்க முடிந்தததில்லை
லேடி டாமிசனும் நம்ம ஜிம்மியும் அழும்போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது
அதற்குமேல் மார்வின்
சிரிக்க வைக்கும் மார்வினும் மனதை கலங்க வைக்கிறார்
சித்திரங்கள் அருமையோ அருமை
செம்ம செம்ம சிஸ்டர்
Deleteநன்றி சகோ 💐💐💐
Deleteராபின் 2.0 எல்லா கதைகளும் கலங்க வைக்கிறது ☺️ மனதை நெகிழ செய்கிறது முடிவு 😊
Deleteஅருமை.. மேடம்..
Deleteராபினுக்கு தனித்தனியே பரவலாக ஒருங்கிணையாத மெகா ரசிகர்கள் கூட்டம் உள்ளது மேடம்... உங்களைப் போலவே..
Delete//அருமை.. மேடம்..//
Deleteநன்றி சகோ 💐
///ராபினுக்கு தனித்தனியே பரவலாக ஒருங்கிணையாத மெகா ரசிகர்கள் கூட்டம் உள்ளது மேடம்... உங்களைப் போலவே..///
Delete👍👍👍🤝🏽🤝🏽
நானும் ராபின் ரசிகன் தான் சகோ
ReplyDeleteவேலை பளுக்கிடையில் மாயாஜால மன்னன் மாண்ட்ரேகின் இரண்டு கதைகள் படித்து முடித்துள்ளேன். இந்த இரண்டு கதைகளுமே மாண்ட்ரெக்கின் ஆத்மா கதைகளாக வந்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. என்னை பொருத்தவரை இந்த புத்தகங்கள் தலைவாழை விருந்துதான். விருந்தை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete200
ReplyDelete