Powered By Blogger

Saturday, July 27, 2024

அண்மையில் ஆகஸ்ட் !

நண்பர்களே,

வணக்கம். எட்டித் தொடும் அண்மையில் ஆகஸ்டும் காத்திருக்க, நமது ஜாம்பவான்கள் களமிறங்க வேண்டிய வேளையும் நெருங்கி விட்டது! நான் குறிப்பிடும் ஜாம்பவான்களோ – கலர்-கலரான டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு கைகளில் க்ரிக்கெட் மட்டைகளை ஏந்தி நிற்கும் வாசக வீரர்களல்ல – நமது ‘பொம்ம புக்‘ அணிவகுப்பின் ஜாம்பவான்களே! So அடுத்த சில நாட்களிலேயே உங்களை சந்திக்கக் காத்திருப்போருக்கு ‘ஹலோ‘ சொல்வோமா? Here they are: 

டின்டின் & கேப்டன்  ஹேடாக்

வேதாளர்

தாத்தாஸ் 

டின்டின் பற்றியும், அவரது தயாரிப்பின் பின்னணிகள் பற்றியும் ஏகமாய் ஜனவரியிலேயே எழுதியிருந்தேன்! So புதுசாய் "நான் ஏழு மலைகளை ஏறினேன்; ஏழு சமுத்திரங்களைத் தாண்டினேன்" என்றெல்லாம் இன்னொரு தபா அள்ளி விடமாட்டேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நம்ம கார்த்திக் சோமலிங்காவோடு முதல் டின்டின் இதழின் முஸ்தீபுகளின் சமயத்தில் செய்த பணிகள் இன்றைக்கும் கைகொடுத்து வருகின்றன! Oh yes – “மீன்கள் விற்கப்படும்” என்ற ரேஞ்சுக்கு கார்த்திக் suggest செய்திருந்த பலவற்றை “காயாத கானகத்தே, நின்றுலாவும் காரிகையே” – இங்கே நயமான நெய் மீன்கள் நித்தமும் கிடைக்கும்” என்ற ரேஞ்சுக்கு நான் tweak பண்ணியிருந்தேன் தான்! But 'தத்தாபுத்தா'வென்றேனும் டின்டினுக்கான வசன பாணி template-ஐ  செட் பண்ணிட சாத்தியமாகி, படைப்பாளிகளிடமும் உங்களிடமும் ஏற்கனவே ஓ.கே. வாங்கிட்டதால், டின்டின் எக்ஸ்பிரஸ் இந்தவாட்டி தடையின்றித் தடதடத்து விட்டது! 

And மெர்சலூட்டும் அந்த கதைக்களம் எனது வேலையை ரொம்பவே சுலபமாக்கி விட்டதையும் சொல்லியே தீரணும்! டின்டின் தொடரின் டாப் சாகஸங்களுள் மிக முக்கியமானவை நாம் ஆகஸ்டில் ரசித்திடவிருக்கும் டபுள் ஆல்பங்கள் என்று சொல்லலாம்! எங்களது ஸ்கூல் லைப்ரரியில் அநேகமாக இந்த 2 புக்குகளுமே எனது கைரேகைகள் பட்டு ஓடாய்த் தேயாத குறை தான்! கணக்கே இராது – இவற்றை நானும் சரி, எனது நண்பர்களும் சரி – படித்து ரசித்த தடவைகளுக்கு! So ஒரு iconic தொடரின் iconic கதைகளைக் கையிலெடுக்கும் போது, மொழிபெயர்ப்பாளரின் பணி அந்தமட்டிற்கு சுலபமாகிப் போகிறது!

டின்டின் கதைகளின் அடிநாதமே அவருக்கும், கேப்டன் ஹேடாக்குக்கும், புரபஸர் கேல்குலஸுக்கும், நாலுகால் தோழன் ஸ்நோயிக்கும் இடையிலான நட்பு தான்! And இந்த டபுள் ஆல்பத்திலும் அதுவே அழுத்தமான முக்கியத்துவம் பெறுகிறது! காணாமல் போகும் புரபஸரைத் தேடி, காடு, மேடு, கானகம், பனி மண்டலம் என வெறித்தனமாய் தேடல் அரங்கேறுகிறது! போனவாட்டி திபெத்திலும், நேபாளத்திலும் நம்மவர்கள் சுற்றியலைந்தனர் என்றால் – இம்முறையோ களம் தென்னமெரிக்காவின் இன்கா பூமியில்! கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் வரலாறு; கொஞ்சம் இங்கிலாந்தில்; அப்புறம் முழுசாய் தென்னமெரிக்காவில்; என்று தடதடக்கிறது இந்த 124 பக்க சாகஸப் பயணம். கேப்டன் ஹேடாக் வழக்கம் போலவே தெறிக்க விட, டிடெக்டிவ் இரட்டையரான தாம்ஸனும், தாம்ப்னும் தம் பங்கிற்கு கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர். ஆக்ஷனுக்கும், ஜாலியான கதையோட்டத்துக்கும் மத்தியில் ஒரு டைட்டான, த்ரில்லராய் கதை நகர்த்தலை அமரர் ஹெர்ஜ் செய்திருப்பது தான் இங்கே highlight!

ஒரிஜினலைப் போலவே இரட்டை ஆல்பங்களாய், ஒரிஜினலின் அதே அட்டைப்படங்களோடு, அதே பக்க அமைப்புகளோடு, இம்மி கூட வேற்று சமாச்சாரங்களுக்கு இடமின்றி இந்த இரு ஆல்பங்களும் வந்திடவுள்ளன! And போன இதழைப் போலவே தயாரிப்புத் தரமும் இருந்திடும் - அதே பெங்களூரு ஏற்றுமதிக் குழுமத்தின் கைவண்ணத்தோடு! இந்தவாட்டி கிட்டத்தட்ட 2 மாதங்களாகிப் போச்சு - அவர்கள் ப்ராசசிங் & அச்சை முடித்து, முழுவதுமாய் மிஷினில் பைண்ட் செய்து புக்ஸை மொத்தமாய் சப்ளை செய்வதற்கு! And போன தடவையைக் காட்டிலும் கட்டணங்கள் சற்றே உசந்தும் போயிருக்கின்றன! Yet, கைகளில் ஏந்தும் போது, உணர முடியும் கெத்து, அந்தக் காசுக்கு நியாயம் செய்வதாய் சொல்கிறது! Fingers crossed - உங்களுக்குமே அதே திருப்தி கிட்டிட! இதோ - அட்டைப்பட previews & உட்பக்க ட்ரெய்லர்கள்:




ஆகஸ்டின் all-color மேளா மாதத்தினை வித்தியாசமானதொரு பாணியில் பட்டாசாய்ப் பொறியச் செய்யவிருப்பது ஏற்கனவே நாம் பிரிவியூ செய்து விட்ட நம்மள் கி தாத்தாஸ் தான்! லயன் கிராபிக் நாவல் தடத்தின் இதழிது என்பதால் நீங்கள் அதற்கும் சேர்த்தான சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில் பெருசுகளின் yet another ராவடியை ராவாக ரசித்திடலாம்! தொடரின் முதல் மூன்று ஆல்பங்கள் - தலா ஒவ்வொரு தாத்தாவினை மையப்படுத்திப் பயணித்தன என்றால் - இந்த நான்காம் ஆல்பத்தில் focus இருப்பது பேத்தி ஸோஃபி மீது! By now, இந்தத் தொடரின் ‘போட்டுத் தாக்கு‘ வசன பாணிக்கு நாம் பரிச்சயமாகியிருப்போம் என்பதால் பெரிய புருவ உயர்த்தல்களின்றி பயணித்திடலாம் என்பேன்! Can't wait for தாத்தாஸ் to reach you! சின்னதொரு reminder yet again guys: முந்தையை 3 ஆல்பங்களையும் ஒருக்கா புரட்டி விட்டு இந்த ஆல்பம் # 4-க்குள் புகுந்திட்டால் நலம்!

ஆகஸ்டின் V காமிக்ஸில் வரவிருப்பவர் வேதாளர். Sy Barry-ன் அட்டகாசமான கைவண்ணத்தில் உருவானதொரு சாகஸமான “அதிர்ஷ்டத்தைத் தேடி” முழு வண்ணத்தில் வரவிருக்கிறது! And இம்முறை கலரிங் பொறுப்புகளை ஏற்கனவே வேதாளர் கதைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டதொரு வடஇந்திய டிஜிட்டல் ஆர்டிஸ்ட் கையாண்டுள்ளார். இதோ - அட்டைப்பட preview ! 

உட்பக்க கோப்புகளை கேட்டு வாங்க மறந்துப்புட்டேன் ; நாளை இங்கே upload செய்து விடுகிறேன் !! 

புக்ஸ் சகலமும் அச்சாகி விட்டன! In fact டின்டின் புக்ஸ் டப்பிகளில் டெலிவரியாகி, ஒரு வாரத்துக்கு மேலாச்சி. தாத்தாக்களும் ரெடி! வேதாளர் மாத்திரம் பைண்டிங்கில் உள்ளார்! அவரும், விலையில்லா ஒரு டெக்ஸ் 32 பக்க கலர் இதழும் பைண்டிங் முடிந்து செவ்வாய் மாலை நம்மிடம் வந்து சேர்ந்திடும் & புதனன்று இங்கிருந்து புறப்பட்டு விடும். So ஆகஸ்ட் முதல் தேதிக்கு இந்தப் புது இதழ் கத்தை உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று திட்டமிடல்! PLEASE NOTE : சந்தாப் பிரதிகளை ஈரோட்டுக்கு கொண்டு வருவதாக திட்டமிடல் நஹி ! So "என்னோட பொஸ்தவங்களை அங்கே வாங்கிக்கிறேன் !" என்ற கோரிக்கைகள் வேணாமே - ப்ளீஸ் !

ஆகஸ்ட் பிறந்த மறுநாளே, ஈரோட்டு புத்தக விழா துவங்கவிருப்பதும், அதைத் தொடர்ந்த வாரயிறுதினில் நமது ஈரோட்டுச் சந்திப்பும் காத்திருப்பதால் நம்மாட்கள் அனைவரும் பம்பரமாய் சுற்றிக் கொண்டுள்ளனர். டீம் ஈரோடும் அங்கே ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டுள்ளனர் - தங்களது சொந்த வேலைகளையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு! 

And ”ஈரோட்டுக்கு வாரீகளா?” என்ற வினவலுக்கு "Oh yes" என்று கிட்டத்தட்ட 245 நண்பர்கள் பதில் தந்துள்ளனர். போன தபா சுமார் 175 பேர் வருகை தந்திருந்ததே ஒரு திருவிழா feeling ஏற்படுத்தியிருந்தது; இம்முறை அந்த நம்பரை ஆராமாய் விஞ்சிடல் சாத்தியம் போல் தென்படுவதால், அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் குத்துடான்ஸ் போட்டு வருகின்றன! சகல ஏற்பாடுகளும் கச்சிதமாய் அமைந்து அன்றைய பொழுதில் நம் அனைவருக்குமே மகிழ்ச்சி பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவும், ஓடினும் அருள்புரிவாராக! 

நான் மறந்துவிடும் முன்பாக இங்கொரு interlude: "ஈரோடு ஸ்பெஷல்ஸ்" என இரண்டே இதழ்கள்தான் வெளிவருகின்றன:

- மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 : ரூ.450

- ஸ்பைடர் Vs ஆர்ச்சி ஸ்பெஷல் : ரூ.80

இரண்டுமே ஈரோட்டு சந்திப்பன்று (ஞாயிறு - ஆகஸ்ட் 4) Hotel Oasis அரங்கிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். So வருகை தர எண்ணியுள்ள நண்பர்கள் கூரியர்களுக்கு தண்டம் அழத் தேவையின்றி, நேரில் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு அவை தேவையெனில் இங்கோ, நமது அலுவலக வாட்சப் நம்பருக்கோ - "1 செட்" என்றொரு confirmation மட்டும் செய்திடக் கோருகிறேன் ! அதற்கேற்பவே புக்ஸை கொண்டு வருவதாக உள்ளோம் !

ஈரோடு வந்திட இயலா நண்பர்கள் கூரியர் கட்டணமாய் ரூ.60 (தமிழகம்) சேர்த்து ரூ.590 அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். வெளி மாநிலமெனில் ரூ.90/- கூரியர் !

Before I sign out - கோவை புத்தக விழா சார்ந்த news !! வாரநாட்களில் அத்தனை விறுவிறுப்பு இல்லது போக, கொஞ்சமாய் பேஸ்தடித்திருந்தது சேல்ஸ் ! ஆனால் வாரயிறுதியில் அனல் பறக்கும் விற்பனை செமத்தியாக கைதூக்கி விட்டுள்ளது ! கடைசி நாளான நாளைக்கும் அதே வேகம் இருக்கும் பட்சத்தில் போன வருஷத்து ரெக்கார்டை சமன் செய்திடலோ, விஞ்சுவதோ சாத்தியமாகிடும் !! Fingers Crossed கோவை மக்கா ! 

ரைட்டு...2025 அட்டவணையினில் பெயர் சூட்டும் படலம் ஓடிக்கொண்டிருப்பதால், அதனைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! 

"உதிரம் பொழியும் நிலவே !"

"இளமை எனும் பூங்காற்று...!!" - 

இவையெல்லாம் டெக்சின் தலைப்புகள் !! நம்பவாச்சும் முடியுதா ?

Bye all....have a cool weekend !! See you around !

140 comments:

  1. ஆகஸ்ட் நாலை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  2. Very happy to see Vedhalar again sir . Please continue publishing Vedhalar stories sir,
    Wrapper looks awesome !

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்....

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. ஈரோட்டுக்கு சஸ்பென்ஸாக இரட்டை வேட்டையர்கள் வருவார்களென நினைத்தேன் அப்படியே கபீஷூம் களமிறங்கி விடுமென எதிர் பார்த்தேன் தங்களின் உடல் நிலை காரணமாக இவர்கள் வரமுடியாதது சின்ன வருத்தமே

    ReplyDelete
    Replies
    1. இந்த மாசம் டின்டின் மாசம் சாமீ....300 + 300 = 600.

      தாத்தாஸ் : ரூ.150

      வேதாளர் : ரூ.100

      மாண்ட்ரேக் : ரூ.450

      ஸ்பைடர் vs ஆர்ச்சி : ரூ.80

      டோட்டல் போடுங்களேன் - பர்ஸ் பழுத்திடும் இதிலேயே !!

      Delete
    2. 300+300+150= 3 காமிக்ஸ்.
      Ok super ...

      Delete
  6. அடுத்த வாரம் இன்னேரம் ஓயாசிஸ் பரபரப்பாக இருக்கும் எப்போது விடியும் நண்பர்களை பார்ப்போமென ஆவல் களை கட்டும் அடுத்த வாரம் சீக்கிரமே வரட்டும்

    ReplyDelete
  7. Sir...what about Kapish release? We were eagerly awaiting for him. But no info about him....can you pls share more info about Kapish release date sir....

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அத்தியாயமாய் புரட்டுவோம் சார் ; இன்னமும் நடப்பாண்டில் நிறைய புத்தக விழாக்கள் காத்துள்ளனவே !

      ஆகஸ்டின் பட்ஜெட் இப்போவே ரூ.1380 என்றுள்ளது !! அதன் மீதும் கவனம் கொள்ள வேண்டியுள்ளதே !

      Delete
    2. என்னோட பட்ஜெட் ₹ 750/-தான்.
      ,இது Ok தான்

      Delete
    3. சேலம் புத்தக விழாவினை ஒட்டி கபிஷை களமிறக்கலாமென்று நினைத்திருக்கிறேன் சார் ! அட்டவணைப் பணிகளை அதற்கு முன்பாய் முடிக்க வேண்டியுள்ளது !

      Delete
    4. நான் எல்லா சந்தாவும் சேர்த்து எடுத்துள்ளேன் எனவே எனக்கு 450+80=530 தான் பட்ஜெட்.

      Delete
  8. @Edi Sir..😍😘

    "Erode Specials..
    One set "

    for me Sir..👍👍👍

    ReplyDelete
  9. @Edi Sir..😍😘

    Me in..😍😘

    போட்டேனே..

    மஹிக்கு அடுத்து போட்டேனே..


    காணாமே...😶😏

    ReplyDelete
    Replies
    1. மஹி பைக்குள்ளாற போட்டுக்கிட்டாரோ ?

      Delete
  10. "உதிரம் பொழியும் நிலவே !"......"இளமை எனும் பூங்காற்று...!!" -

    இப்படி சொன்னாக்கா தா,
    டெக்ஸ் மறு ஜென்மம் எடுக்க போறாறா என்ன... அவரு ரூட்டு தனி பாஸ்.
    .யாரு செத்தா நமக்கென்ன...
    டெக்ஸ் ரூட் தனி பாஸ்.
    அப்படித்தான் டெக்ஸ் இருக்கணும்.
    டெக்ஸ்க்கு , இது மேட்டரா என்ன.
    நீங்க என்ன டைட்டில் சொன்னாலும்
    நாங்க என்ன சொல்ல போறோம் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ல வர்றது இன்னான்னு புரிஞ்சா தானே சார் - நான் ஏதாச்சும் சொல்றதுக்கு ?

      Delete
    2. எங்களுக்கு இருக்கிற ஓர் வடிகாலே, டெக்ஸ் தான். அந்த தலைப்பு எப்படி இருக்கணும் அவசியம் எங்களுக்கு இல்லை.
      மாசம் ஒரு டெக்ஸ்
      எங்களுக்கு வேணும் அவ்வளவுதான்.

      Delete
    3. இத யாருக்கும் சொல்லாதீங்க.
      நா கடைஞ்சு எடுத்த கேப்டன் டைகர் ரசிகன்ன்னு , ரம்மிகிட்ட கூட சொல்லாதீங்க.
      ரகசியம் பாஸ்
      குறிப்பா பொன்ராஜ்க்கு சொல்லாதீங்க.

      Delete
  11. ///"உதிரம் பொழியும் நிலவே !"......"இளமை எனும் பூங்காற்று...!!///

    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😂😂

    ReplyDelete
    Replies
    1. நாமக்கல் பக்கமா போயிருந்தீங்க ??

      Delete
  12. ஈரோடு ஸ்பெஷல்ஸ் - எனக்கும் ஒரு செட் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    ReplyDelete
  13. ஈரோடு ஸ்பெஷல் ஒரு செட் வேண்டும் ஈரோட்டில்

    ReplyDelete
  14. @Edi Sir..😍😘

    Welcome dear twin detectives Thomson & Thompson..😍😍💐💐

    ReplyDelete
  15. ஈரோடு ஸ்பெஷல்க்கு பணம் கட்டியாச்சு. கடமை முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. @Padmanaban ji..

      Erode special க்கு பணம் அனுப்ப சொல்லலியே..

      எத்தனை பேருக்கு வேணும்னு "Want one set" தானே போட சொன்னாரு..😶😶

      Delete
    2. ஜம்பிங் பேரவையாரே ! பதிவை பத்து சார் முழுசாய் படிச்சிருக்கார் !

      //ஈரோடு வந்திட இயலா நண்பர்கள் கூரியர் கட்டணமாய் ரூ.60 (தமிழகம்) சேர்த்து ரூ.590 அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். வெளி மாநிலமெனில் ரூ.90/- கூரியர் !//

      Delete
    3. Ok...ok..Sir..

      அப்ப பத்து ஈரோடுக்கு வர்லியா...😎

      Delete
  16. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  17. ##உதிரம் பொழியும் நிலவே !"

    "இளமை எனும் பூங்காற்று...!!" ##

    2025 அட்டவணை இளமை ததும்ப போகுதுறது..

    இப்பவே தெரிஞ்சிடுச்சு சார்..😍😘

    பனிவிழும் மலர்வனம்

    உன் பார்வை ஒரு வரம்

    ...😍😘

    இப்படி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சார்..😍😘

    ReplyDelete
  18. எடிட்டர் சார்,.
    ஈரோடு திருவிழாவிலே,
    எனது பட்ஜெட்க்கு ஏற்றால் போல்,
    புத்தகங்களை வாங்கி கொள்கிறேன்.
    அடுத்த ஆண்டு வழக்கம் போல் அனைத்து புத்தகங்களை வாங்கி விடுகிறேன். இந்த ஆண்டு,
    தவிர்க்க முடியாத பிரட்சனையாவ் ,
    சந்தாவில் நான் இல்லை.

    ReplyDelete
  19. ஈரோட்டுக்கு கபீஷஐ எப்படியாவது தயார் செய்து கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ஈரோடு வரைக்கும்லாம் காத்திருக்க வேண்டியிராது சார் ! இந்த வருஷ கடைசிக்குள்ளாறவே கபிஷ் களமிறங்கிப்புடுவான் !

      Delete
    2. நான் கேட்டது இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு சார்😆 வர வர ரொம்ப சமாளிக்கறஈஙக 🤣

      Delete
  20. July 2024
    மறுபதிப்பு - 175
    கிளாசிக் - 250
    மொத்தம் = 425
    புதிய கதை - 350

    August 2024
    புதிய கதைகள் - 750
    கிளாசிக் - 630

    எங்கே செல்லும் இந்த பாதை...

    காரிகன் 2 - இன்னும் ஒரு கதை கூட படிக்கவில்லை. துணைக்கு மான்ட்ரேக்கும் இருக்கட்டும்.

    எனக்கும் ஈரோடு special ஒரு set வேண்டும் சார். வாசகர் சந்திப்பில் பெற்றுக் கொள்கிறேன்


    ReplyDelete
    Replies
    1. சந்தா தடத்தில் மாண்டரேக் கிடையாது.....

      க்ளாசிக் நாயகர்கள் அனைவரும் தனித்தடத்தில்...

      "விரும்புவோர் வாங்கிக்கலாம்" என்ற சுதந்திரம்....

      ரெகுலர் சந்தாவில் ஒரேயொரு மறுபதிப்பு இடம்பிடிக்கும் பட்சத்தில் கூட ( *ஸ்பைடரின் விண்வெளிப்பிசாசு)* அதனை ஸ்கிப் செய்திடும் வாய்ப்புடன் ஒரு *NO SPIDER* சந்தாப் பிரிவும் உண்டு...

      இம்புட்டுக்கும் பிறகு, "நான் க்ளாசிக் பொஸ்தவங்கள வாங்கியே தீருவேன் ; ஆனா படிக்க மாட்டேன்! பச்சே சோகமா pathos சாங் மட்டும் பாடிட்டு இருப்பேன்" என்றால் -"ரைட்டுங்கண்ணா" என்று உங்க சாரீர வளத்தை பாராட்டிக்கிட்டே நடையை கட்ட மட்டுமே எனக்கு சாத்தியப்படும்!

      அப்புறம் "விண்வெளிப் பிசாசு " புத்தகக் கையிருப்பு ரெட்டை டிஜிட் எண்ணிக்கைக்கு வந்திடுச்சுங்க என்பதையும் கொசுறு தகவலா சொல்லிடுறேனே சார் !

      Maybe pathos சாங்கின் நடுவாக்கே இன்னொரு பிரதியை வாங்கிப் போட்டுப்புடலாமில்லீங்களா சார்!

      Delete
  21. இதுவரை வந்துள்ள அனைத்து கிளாசிக் ஆல்பங்களை யும் இரண்டாமிடத்துக்கு அனுப்பிவிட்டு முதலிடத்தை பிடிப்பார் மாண்ட்ரேக் என்பது எனது அனுமானம்.

    ReplyDelete
  22. Eagerly waiting for Erode book fair as well as 40 years completed LION MEETING at OASIS😍🥰. TIN TIN 2 issues, Mandrake spl, Spider vs Archie, Phantom.... Wow really a treat to the eyes. 💐
    அப்புறம் தாத்தாஸ் உம் உண்டா சார்? 😍🥰

    ReplyDelete
  23. உள்ளேன் ஐயா... (கறிக் கடையில்)..!!

    ReplyDelete
    Replies
    1. @Kok ji..😍😃

      6.45 க்கு கறி கடையில் உள்ளேன் அய்யா...😘

      9.10 க்கு இப்ப என்ன குழம்பு சட்டிக்குள் மண்டைய உட்டுட்டேன் அய்யாவா..😃😃😃

      Delete
  24. ################
    "ஈரோடு ஸ்பெஷல்ஸ்"
    - மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 : ரூ.450
    - ஸ்பைடர் Vs ஆர்ச்சி ஸ்பெஷல் : ரூ.80
    ################

    எனக்கு ஒரு செட்டுடுடுடுடூடூ... 😍

    ஆமா டியர் எடி, இங்கேயும் போட்டுட்டு வாட்ஸ்அப்ல யும் போட்டுட்டா டபுள் கவுண்ட் ஆயிடாதில்லையா ?! 🥹😁

    ReplyDelete
  25. நண்பர்களுக்கு ஞாயிறு வணக்கம்.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமா அடுத்த வாரம் இந்நேரம் ஈரோடு பயணம்.

      Delete
    2. என்னாது 8.00 மணிக்கு பயணமா..😏

      பிச்சு..பிச்சு..😃😃
      8.00 மணிக்கு You must be @ ஓயாசிஸ்...😍

      Delete
    3. வந்து விடுகிறேன் ஜம்பிங் தல

      Delete
  26. TIN TIN Rs.300+300
    Overdose
    இந்த மாதம் ஒன்று அடுத்த மாதம் ஒன்று
    வெளியிட்டிருக்கலாம்.ஏற்கனவே
    கார்ட்டூன் புத்தகங்கள் விற்பனை இல்லை
    என்று நிறைய கார்டூன் கதைகள் குறைந்த விட்டது.

    எப்படி rs .600 க்கு கார்ட்டூன் புத்தகங்கள் வாங்க முடியும்.

    இதற்கு TIN TIN rs.300 + Rs 300 க்கு வேறு சில கார்ட்டூன் கதைகள் வெளியிட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அபிப்பிராயப் பஞ்சம் என்றைக்குமே இருந்திடப் போவதில்லை நண்பரே!

      டின்டின் 2 பாகக் கதை.... ஒன்றை இப்போதும், அடுத்ததை அடுத்த மாதமும் படிக்க நம்மில் எத்தனை பேர் தயாராக இருப்பார்களேன்று லைட்டாய் விசாரித்து தான் பாருங்களேன்?

      அப்புறம் டின்டின் ஒரு கார்ட்டூன் தொடரென்று யார் சொன்னது சார்? "ஆக்க்ஷன் & அட்வெஞ்சர் - கொஞ்சம் நகைச்சுவையோடு" என்பதே உலகளாவிய அடையாளம் எனும் போது, இந்தப் புது அடையாளம் குத்த முனைவானேன்?

      Delete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. ஈரோடு ஸ்பெஷல் புத்தகம் 1 செட் எனக்கு தேவை எடுத்து வாருங்கள் சார் நன்றி

    ReplyDelete
  29. // புதனன்று இங்கிருந்து புறப்பட்டு விடும். So ஆகஸ்ட் முதல் தேதிக்கு இந்தப் புது இதழ் கத்தை உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று திட்டமிடல்! //
    அருமை,அருமை...

    ReplyDelete
  30. // விலையில்லா ஒரு டெக்ஸ் 32 பக்க கலர் இதழும் பைண்டிங் முடிந்து செவ்வாய் மாலை நம்மிடம் வந்து சேர்ந்திடும் //
    சிறப்பு,சிறப்பு...

    ReplyDelete
  31. // "உதிரம் பொழியும் நிலவே !"

    "இளமை எனும் பூங்காற்று...!!" - //
    ”வாராயோ வெண்ணிலாவே” இதையும் சேர்த்துக்குங்க சார்...

    ReplyDelete
  32. அடுத்த வாரம் இந்நேரம்லாம் சிவகாசிலேர்ந்து வந்த லோடு லாரிலேர்ந்து பன் டப்பிகளை இறக்கி வச்சுட்டிருப்போம்.. எடிட்டர் ஒரு ஓரமா நின்னுகிட்டு மரத்தடி மீட்டிங்கில சொல்ல வேண்டிய பதில்களை ஒத்திகை பார்த்துட்டிருப்பாரு..
    "சார்.. லைட்டா பசிக்கிறாப்ல இருக்கு.. துளியூண்டு பன்னு சாப்பிட்டுக்கவா" கேட்போம்.. ஒத்திகை பாக்கற பிசில "சரி சாப்பிட்டுக்கோங்க"ம்பாரு...
    முடிஞ்ச்!😝

    ReplyDelete
    Replies
    1. @Vijayஅண்ணா
      நான் எல்லாம் பாக்கெட் உடைக்காமலேயே உள்ளே இருக்கும் பன்களை அப்படியே சாப்பிட்டு விடுபவன்.
      ஆசிரியர் சரி சொல்லிவிட்டு நீங்கள் அந்த பெட்டி எட்டிப் பார்க்கும் பொழுது ஏமாற கூடாதே என்பதற்காகவே இந்த எச்சரிக்கைப் பதிவு.

      Delete
    2. @ சதாசிவம்
      'ஊட்டிக்கு தனியாதான் போகணும் போலிருக்கே' - மொமெண்ட்!😂😂😂😅

      Delete
  33. வரலாறு படித்த மருத்துவர்கள் யாரவது பதில் சொல்லுங்களேன்..

    உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கப்படும் மென்மையான பன்னுகள் அதிக அழுத்தம் காரணமாக உணவுப்பாதையின் இன்னொரு பகுதியில் மரக்கட்டைகளாகிவிடும் வாய்ப்புகள் உள்ளதா?🤔

    ReplyDelete
    Replies
    1. இதை தவிர்க்க இரண்டே வழிகள் ஜி..

      1)குறைவாக பன் சாப்பிடவேண்டும்.

      2)நல்ல சூடாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
      அப்படி குடிக்கும்போது பன் வெந்து விடுவதால் முளைக்காது.அதனால் மரகட்டையாகும் வாய்ப்புகள் மிக குறைவே.
      😃😃

      Delete
    2. //1)குறைவாக பன் சாப்பிடவேண்டும்.//

      இப்படியொரு அதிர்ச்சியளிக்கும் பதிலை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்களைங்க ஜி!😰😰😰

      ///நல்ல சூடாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
      அப்படி குடிக்கும்போது பன் வெந்து விடுவதால் முளைக்காது.அதனால் மரகட்டையாகும் வாய்ப்புகள் மிக குறைவே.///

      😂😂😂செம ஐடியா ஜி ! ஏற்கனவே பல கட்டைகள் உங்களால் வெந்துதனிந்துருப்பது புரிகிறது 😝😝😝

      Delete
    3. வெந்து தணிந்தது காடு

      Delete
  34. @Now Or Never டெக்ஸ் விஜயராகவன் அண்ணன் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டார். ஈரோடு வரும்போது என்னை தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறார். நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. Welcome சதாசிவம் ஜி..

      4.8.2024 காலை 8.-8.15 க்கெல்லாம் Erode Bus stand வந்துவிடுங்கள்..
      பக்கத்திலேயே நல்ல சைவ ஓட்டல்கள் உள்ளன.
      காலை டிபனை முடித்துவிட்டு பொடி நடையாக நடந்தால் பக்கத்திலேயே ஓட்டல் ஓயாசிஸ்..😍
      8.45 க்கெல்லாம் அட்டெண்டன்ஸ் போட்டு விடலாம்..

      Welcome ji..😍😘💐💐

      ஏதாவது சந்தேகம் என்றால் கூகுள் ஆண்டவரையோ அல்லது எங்கள் "காமிக்ஸ் என்சைக்ளோபீடியா" STV அண்ணாவையோ தொடர்பு கொள்ளுங்கள்..👍👌

      Delete
    2. நன்றி ஜி ஈரோடு வந்ததும் உங்களை நேரில் பார்க்கிறேன்

      Delete
  35. ஈரோடு ஸ்பெஷல்ஸ் - 1 set

    ReplyDelete
  36. ஈரோட்டுக்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை 245 ஆகவே
    40 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு ஊர்வலம் செல்லாமா ? நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. நான்லாம் தனியா நடந்துவந்தாலே ஊர்வலம் போராப்லதான் இருக்கும்ங்க ஜி! 😅

      Delete
    2. நீங்க ஒரு ஆள் நடந்தா நூறு ஆள் நடந்தா மாதிரி.

      Delete
  37. //"உதிரம் பொழியும் நிலவே !"

    "இளமை எனும் பூங்காற்று...!!" -

    இவையெல்லாம் டெக்சின் தலைப்புகள் ...!!//

    வில்லருண்டு வினையில்லை.

    ReplyDelete
  38. ஸ்பைடரின் விண்வெளி பிசாசு, நீண்ட வருடங்களாக எதிர்பார்ப்பில் இருந்த கதை. கருப்பு வெள்ளையே நன்றாக இருக்கும்.

    அடுத்து வரும் ஸ்பைடரின் கதையை கருப்பு வெள்ளையிலேயே எதிர்பார்க்கிறேன் சார்

    ReplyDelete
  39. ஈரோட்டு ஸ்பெஷல்
    மான்ரேக்
    ஸ்பைடர் ஆர்ச்சி
    எனக்கு ஒரு செட் சொல்லி விடுங்கள்
    சதாசிவம் காங்கேயம்

    ReplyDelete
  40. ஈரோடு ஸ்பெஷல் இதழ் எனக்கு ஒரு செட் சார்....

    ReplyDelete
  41. நான் 1995 வரை எங்கள் கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதன்பின் ஒன்பதாம் வகுப்புக்காக தாராபுரம் நகருக்கு படிக்கச் சென்ற போது தான் ராணி காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது. முதல் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் வந்த போது வீட்டில் என் அம்மா அதை வாங்கி தீயில் போட்டதோடு இல்லாமல் என்னை அடியும் பின்னி விட்டார்கள். அப்பொழுது எங்கள் ஊரில் இருந்து தாராபுரம் நகருக்கு பஸ் கட்டணம் ஒரு ரூபாய் 75 பைசா. தனியார் பஸ் ஒன்றில் மட்டும்ஒரு ரூபாய் 25 பைசா பள்ளி செல்பவர்களுக்காக மட்டும் வாங்குவார்கள். தினமும் எனக்கு ஐந்து ரூபாய் வீட்டில் கொடுத்து விடுவார்கள். பசுக்கு இரண்டு ரூபாய் 50 பைசா போக.மீதமருக்கும் இரண்டு ரூபாய் 50 பைசாவில் ஒரு ரூபாய் 50 பைசா என்பது ஸ்னாக்ஸ்க்கு சென்று விடும். மீதமிருக்கும் ஒரு ரூபாயை சேர்த்தால் 22 ரூபாய் வரும். அந்த நேரத்தில் ஏதாச்சையாக ராணி காமிக்ஸ் என் கண்ணில் பட்டது. விலை இரண்டு ரூபாய் 50 பைசா என்று நினைக்கிறேன். அதன் பின் என் வகுப்பு தோழன் ஒருவனால் லயன் காமிக்ஸ் அறிமுகமானது. அவன் என்னிடம் அறிமுகப்படுத்தியது 1995இல் 25 ரூபாய் விலையில் வந்த லயன் டாப் 10 ஸ்பெஷல் தான். அந்த ஒரு மாத ஸ்னாக்ஸ் களை தியாகம் செய்து அந்த புத்தகத்தை வாங்கினேன். நான் படித்த முதல் கதை தல டெக்ஸ் வில்லரின் பாலைவனப் பரலோகம் கதை தான். டெக்ஸ் கதைகளையோ முன்பின் படித்திடாத போதும் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்று வரை அந்த கதை பேனல் டு பேனல் மனப்பாடமாக இருக்கிறது. அன்று முதல் நான் டெக்ஸுலரின் ரசிகனானேன். அந்த சமயத்தில் வெளியான அனைத்து கதைகளும் கிளாசிக்ரகம். தீபாவளி மலராக வெளிவந்த நள்ளிரவு வேட்டை. மரண முள் போன்ற இதழ்கள் டெக்ஸ் வில்லர் வெறியன் ஆகவே ஆக்கியது. அதன் பின் வந்த மரண ஒப்பந்தம் கானலாய் ஒரு காதல் காலன் தீர்த்த கணக்கு
    மரண நடை
    லயன் ஜாலி ஸ்பெசலில் இடம் பெற்ற கானா கோட்டை. கௌபாய் ஸ்பெஷலில் இடம் பெற்ற கதையின் தலைப்பு மறந்துவிட்டது பாஸ்டர் நகரில் நடந்த அந்த சாகசம் அனைத்தும் பேனல் பை பேனலாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் தற்போது வரும் கதைகள் படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது, ஆனால் ஏன் மனதில் நிற்க மாட்டேங்குது என்பது தான் புரியவில்லை. மறு பதிப்பாக வெளிவந்ததில் ட்ராகா நகரம் மற்றும் பழிவாங்கும் புயல் இதழ்கள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஏதோ மற்ற கதைகள் மனதில் நிற்கவில்லை. சில கதைகள் மறுவாசிப்புக்கு ஏற்றதாக இருந்தாலும் ஏனோ அந்தக் கதைகள் மனதில் நிக்காமல் போவது ஏனோ என்று தான் தெரியவில்லை. தளபதியின் தங்கக் கல்லறை வந்தபோது அந்தக் கதை வேறு பரிணாமத்தில் இருந்ததை பார்த்து டைகரின் வெறித்தனமான ரசிகன் ஆனேன். ஆனால் அதற்காக டெக்ஸை நான் புறக்கணிக்கவில்லை. மின்னும் மரணம் இப்பொழுதும் நான் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கும் இதழ்.

    ReplyDelete
  42. பணிச்சுமை அழைக்கிறது ஈரோட்டில் சந்திப்போம்.
    நன்றி

    ReplyDelete
  43. டின் டின் & வேதாளருக்காக ஆவலுடன் வெயிட்டிங் 🗓️😊

    ReplyDelete
  44. எனக்கு ஈரோடு ஸ்பெஷல் 3 செட்.

    ReplyDelete
  45. இந்த மாதம் டெக்ஸ் இல்லையா? அப்ப ஈரோட்டுக்கு கிளாசிக் டெக்ஸ் கதை ஏதாவது சர்ப்ரைஸஆ உண்டா சார் 😃

    ReplyDelete
    Replies
    1. விலையில்லா கலர் டெக்ஸ் சார்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஆம் சாதாசிவம் சகோ... மின்னும் மரணம் ...நான்
      பலமுறை பார்த்து, படித்து,திகைத்து, பிரமித்து,
      அதே நினைவில் இருந்த நாட்களும் உண்டு... காமிக்ஸ் வரிசையில் அது ஒரு அற்புதம்... வாழ்த்துக்கள் நன்றி... ❤️👍🙏...

      Delete
  46. *** ஆருடத்தின் நிழலில் ****
    ரிட்டையரான ராபினும் அவரது பழைய சகாக்களும் தங்களது பழைய சாகசங்களை நினைவுகூர்ந்திடும் எல்லா கதைகளுமே நன்றாகவே இருக்கிறது. இந்தக் கதையும் அப்படியே! நேர்கோட்டில் இல்லாமல் சற்றே வளைந்து நெளிந்து செல்வதும் கூட வித்தியாசமாக இருக்கிறது!
    சித்திரங்கள் அபாரம்!

    9.5/10

    ReplyDelete
  47. // உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கப்படும் மென்மையான பன்னுகள் அதிக அழுத்தம் காரணமாக உணவுப்பாதையின் இன்னொரு பகுதியில் மரக்கட்டைகளாகிவிடும் வாய்ப்புகள் உள்ளதா?🤔 //

    @ EV சார்..

    பன் சாப்பிடும் போட்டி என்றுதான் சொல்லப்பட்டுள்ளது அந்த பன்னை டீ அல்லது காபியில் தொட்டு சாப்பிடக்கூடாது என்ற விதிமுறைகள் ஏதுமில்லை. இந்த வழிமுறையை நாமாக தான் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
    வாழ்த்துக்கள் சார்.

    ஒரு ஜக் நிறைய டீ அல்லது காப்பியை கையோட எடுத்துச் செல்லுங்கள் வழக்கு போல் நீங்கள் தான் பண்பான வெற்றியாளர்...

    ReplyDelete
    Replies
    1. அழகான பன்னுகளை அவசர அவசரமாக சாப்பிடுவதில் லாஜிக் கிடையாது விக்ரம் ஜி! போட்டியின் போது கிடைக்கும் பன்னுகளை அப்படியே அள்ளி சென்று மேடையின் பின்புறமாய் சாவகாசமாய் அமர்ந்து கொண்டு ரசித்து ருசித்து சாப்பிடும் ஐடியாவில் இருக்கிறேன்😝😝

      Delete
  48. //உட்பக்க கோப்புகளை கேட்டு வாங்க மறந்துப்புட்டேன் ; நாளை இங்கே upload செய்து விடுகிறேன் !! //

    upload please sir!

    ReplyDelete
  49. வணக்கம் நண்பர்களே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  50. வேதாளர் அட்டைப்படம் தெறிக்க விடுகிறது.. 🔥🔥🔥🔥🔥

    ReplyDelete

  51. / உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கப்படும் மென்மையான பன்னுகள் அதிக அழுத்தம் காரணமாக உணவுப்பாதையின் இன்னொரு பகுதியில் மரக்கட்டைகளாகிவிடும் வாய்ப்புகள் உள்ளதா?🤔 //

    மரக்கட்டை என்ன கரியாகவே மாற வாய்ப்புகள் உண்டு.😄. கார்பன் உள்ள பொருள்கள் பல மில்லியன் ஆண்டுகள் தொடர்ந்து அதீத வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் ஆளானால் கரி உருவாகும். குறுகிய நேரத்திற்குள் அதிக பன்கள் சாப்பிட்டால் அவ்வளவு காலம் எல்லாம் சாதாரண மனிதர்களுக்கு தேவை இல்லை. நமது ஈரோடு விஜய்க்கோ இளவரசர் என்பதாலும் உடல் பரிமாண அளவு காரணமாகவும் வைரங்களே உருவாகலாம். Wouldn't that be asssome? 😄😂. ( இளவரசரின் உடல் பரிமாணம் பற்றி குறிப்பிட்டதால் ராஜ நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு capital punishment அதாவது விண்வெளி பிசாசை 100 முறை வாய்விட்டு படிக்க வேண்டும் என்பது போன்ற தண்டனை விதிக்கப்பட்டு விடுமோ?)

    Leaving that humour note,

    இந்திய பன்கள் முக்கிய மூலப் பொருட்களாக refined white flour மற்றும் dry yeast இவற்றைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

    Refined white flour? அப்படின்னா?

    வசீகரா படத்தில்

    தளபதி விஜய்: பொள்ளாச்சியில் அன் எம்ப்ளாய்டாக இருக்கேன்.

    வடிவேலு:அப்படின்னா?

    தளபதி விஜய்: வேலை வெட்டி இல்லாதவன்னு அர்த்தம்

    அதேதாங்க. Refined white flour னா மைதா மாவுன்னு அர்த்தம். மைதா மாவு மலச்சிக்கலை உருவாக்கும். அல்லது ஏற்கனவே இருக்கும் மலச்சிக்கலை அதிகரிக்கும். கோதுமையில் இருந்து பெறப்படுவது தான்.

    ஆனால் 100% whole grain கோதுமை மாவு குடலுக்கு நல்லது. மலச்சிக்கல் வராது.

    மைதா மாவு மிருதுவான தன்மைக்கும் கூடுதலான ருசிக்கும் உத்திரவாதம் அளிக்கும்.

    100% whole grain கோதுமை மாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதேமலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கு காரணம்.

    தாத்தாக்கள் கதையில் ஒரு பேக்கரியில் நடைபெற்ற உரையாடல்களின் முழு அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டி கோதுமையின் அனாடமியை முழுக்க படிக்க நேர்ந்தது. மைதா மாவு பரோட்டா போன்றவை பற்றி இது குறித்து ஒரு பதிவும் முன்பே இட்டிருந்தேன்.

    சுருக்கமாகச் சொன்னால் இந்திய பன்கள் மைதா மாவு கொண்டு பெரும்பாலும் தயாரிக்கப்படுவதால் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.

    பன்களை வழங்குவது சிவகாசி பாரி

    ஆகிட முடியுமா பரோட்டா சூரி மாரி? 😊

    விரைவாக உணவு உண்ணும் போட்டிகள் இயல்பாகவே சில சிக்கல்களை உள்ளடக்கியவை.

    நாசுக்காக மேச்சேரி கண்ணனும்,
    இரக்க சிந்தனை உள்ள ஈரோட்டு இளவரசரும் இந்த போட்டி வேண்டாம் என கடந்த பதிவுகளில் சொல்லி இருந்தார்கள்.

    பொதுவாகவே உணவு பொருள்களை விரைவாக சாப்பிடும் போது இரண்டு முக்கிய தொந்தரவுகள் ஏற்படலாம்.

    1. உணவுப் பொருள்கள் உணவுக் குழலில் அடைத்துக் கொண்டு விடலாம்.(choking)

    2. அவசரமாக விழுங்கும்போது உணவுப் பொருள் உணவுக் குழலை விடுத்து மூச்சுக்குழலின் உள்ளே நுழைந்து விடலாம். (Asphyxia)


    முதலாவது உதாரணம் 2017 மார்ச் 31 கனக்டிகட் -டில் நெல்சன் என்ற 21 வயது கல்லூரி மாணவன் pancake சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு கேக் தொண்டையில் மாட்டிக் கொள்ள எண்டோஸ்கோப் மூலம் அதை எடுக்க வேண்டி இருந்தது.

    இரண்டாவதற்கு உதாரணம் 2017 ஏப்ரல் இரண்டில் டென்வரில் doughnut சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட42 வயது ட்ராவிஸ்
    Asphyxia காரணமாக மரணிக்கவே நேர்ந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர் கூட sick ஆவது இயல்பானது.

    சில சமயம் சட்ட சிக்கல்களிலும் இது கொண்டு போய் விடலாம்.

    எடிட்டர் சார் இன் கவனத்திற்கு கொண்டு வரவே இதை எழுதுகிறேன். மற்றபடி எடிட்டர் சாரின் முடிவே இறுதியானது.

    பன்களை கீர்த்தி செட்டியின் கன்னங்களாக நினைத்து விழுங்கிவிட்டு கோட்டை அழிங்க முதல்ல இருந்தே சாப்பிடுறேன் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த பதிவு அவசியம் இல்லை தான். 😂


    ReplyDelete
    Replies
    1. ///நமது ஈரோடு விஜய்க்கோ இளவரசர் என்பதாலும் உடல் பரிமாண அளவு காரணமாகவும் வைரங்களே உருவாகலாம்///

      ஹி ஹி அப்படின்னா சீக்கிரமே நான் ஒரு நடமாடும் வைரச் சுரங்கமா மாற போறேன் சொல்லுங்க😝😝😝

      Delete
    2. கேட்டீங்களா மக்களே பன்னு சாப்பிட்டா ☝🏼இதுக்கு மட்டும் தான் வருமாம் ✌🏼 இதுக்கு வரவே வராதாம். கார்ப்பரேஷன்லேர்ந்து வந்து உடைப்பெடுக்கிற அளவுக்கு பண்ணிடாதீங்க!😂😂

      Delete
    3. உங்க பஞ்சாயத்துக்கு நாங்க தா வடிகாலா...

      Delete
    4. பைதவே, இந்த வாட்டி நீங்க வரிங்க தானே செனா அனா?!!
      மீன் பிடிக்கும் போட்டி வெச்சிடலாம் வாங்க!

      Delete

    5. இந்த மீன் பிடிக்கிற ஆசையினால் தான் மீன் விழியாளை தொழிலதிபர்கள் பக்கம் நழுவ விடும்படி ஆகிப் போச்சு.

      எடிட்டர் சார் வசம் இருக்கிற தார் சட்டிகளை லவட்டி செல்லும் போட்டி ஏதாவது கைவசம் இருந்தா சொல்லுங்க 😊

      Delete
  52. /// அப்ப பத்து ஈரோடுக்கு வர்லியா...///
    நான் தற்போது அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கிறேன். அக்டோபர் 1ம் தேதி தான் இந்தியா ரிடர்ன்.
    ஈரோடு புத்தக விழாவிற்கும், லயன் 40ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    Reply

    ReplyDelete
  53. மருத்துவ சேவைப் பிரிவு அருகிலேயே இருக்க கவலை நமக்கெதற்கு.

    ReplyDelete
  54. நாளை இந்நேரம் நம்மை கொள்ளையடிக்க...டின்டின்...தாத்தாபேத்தி...வேதாளர்...ஒன்றையொன்று விஞ்சும் எதிர்பார்ப்பில் கொரியர் வண்டிக்குள் குந்தியிருப்பர்.....ஆகஸ்டே வருக...ஆனந்தம் தருக

    ReplyDelete
  55. கவிஞர் சார் இன்று(31.7.24 ). புதன் கிழமை தான் புத்தகங்கள் கிளம்புகின்றன.நாளை வியாழன்( 1.8.24)நமக்கு கிடைக்கும் என்றே சார் கூறியுள்ளார். "என்று தான்நான் புரிந்து கொண்டுள்ளேன்". தப்போ?!!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதும் சரி கவிஞர் சொன்னதும் சரிதான். இன்று கூரியர் வண்டிக்குள் புத்தகங்கள் குந்தி இருக்கும் என்று தான் அவர் சொல்லி இருக்கிறார்.

      Delete
  56. இந்த தளம் டெஸ்ட் தளமாயும்....வாட்சப் 20/20யாயும் மாறி வருவது எனக்கு மட்டுந்தானா

    ReplyDelete
    Replies
    1. Ella million hit kkum special issue ketpomnu athuku marraitaaro Aasiriyar

      Delete
  57. அதாகப் பட்டது...

    வந்து...

    வந்து...


    ஈரோட்டுல வந்து....



    பேசிக்கிறேன்

    ReplyDelete