Powered By Blogger

Saturday, May 11, 2024

மேஜர் சுந்தர்ராஜன் ஹியர் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு "அப்பாடா" பதிவு..😃!! நீண்ட நாட்களுக்கு பிறகு மண்ணை குளிர்ச்சியாக்கப் பெய்த மழையைபோல மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளாவை "கிராண்ட் சக்சஸ்" ஆக்கிய நண்பர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏 ஆந்தை விழியனின் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு புக்கிங்குகள், விற்பனைகள்..👍நமது சின்னஞ்சிறு டீமின் மெம்பர்கள் இப்போதுதான் கடைசி புத்தக பார்சலை அனுப்பிவிட்டு "அப்பாடா" என்று உட்கார்ந்தார்கள்.. ! (நன்னி ஜம்பிங் பேரவை தலைவரே !! ஏதேனும் ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்க்க வேணும் போலும் !!)

Oh yes, இரண்டே இரண்டு ஆர்டர் நீங்கலாய் பாக்கி சகலத்தையும் நம்மாட்கள் அனுப்பி முடித்து விட்டார்கள் ! And  of course - அந்தப் புது இதழ்களை அடுத்த வாரத்தினில் அனுப்பிட வேண்டும் ! இந்த வாரத்தின் திங்களும், புதனும் கோவில் திருவிழாவினையொட்டி உள்ளூர் விடுமுறைகள் என்பதால் டெஸ்பாட்ச் கொஞ்சம் தேங்கி விட்டது ! இல்லாவிடினுமே இம்முறை வந்திருந்த ஆர்டர்களுக்கும் சரி, அந்த FCBD புக்குகளுக்கும் சரி, இரண்டு கிட்டங்கிகளிலும் உருட்டி புக்ஸை எடுக்க வேண்டியிருந்ததால் அநியாயத்துக்கு நேரத்தை விழுங்கியதை மறுக்க இயலாது ! பத்தாண்டுகளுக்கு முன்பான இதழ்களை, படர்ந்து கிடந்த தூசுப் படலங்களைத் தட்டிய கையோடு சேகரித்துக் கொண்டு வருவதே ஒரு பெரும் பிரயத்தனமாகிப் போனது !! Anyways - கண்ணாலம் ஆன பிற்பாடு தாய்வீட்டை விட்டுப் பிரியத்  தடுமாறும் பாசமான புள்ளீங்களை ஒரு பெருமூச்சோடு வழியனுப்புவது போல, நம்மோடே இத்தினி காலமாய் ஐக்கியமாகியிருந்த சில பல புக்ஸ்களுக்கு பிரியாவிடை தந்து அனுப்பி வைத்திருக்கிறோம் !  And பழைய புக்ஸை இந்தத் தருணத்தில் பார்த்த போது பற்பல மலரும் நினைவுகளும் நிழலாடத் தவறவில்லை ! "ஹைய்யோ ...இந்த புக்குக்குத் தானே புளியமரத்திலே கட்டி வைச்சு கும்முனாங்க !"......"ஆத்தீ....இந்த புக்கோட தானே மொதவாட்டி மூத்திர சந்துப் பயணம் !!" ......"அச்சோ....இந்த புக்குக்கோசரம் முட்டுச் சந்திலே மொத்து வாங்கி எம்புட்டு நாளாச்சு ?!!" என்ற ரேஞ்சில் அந்தக்காலத்து ஈஸ்ட்மேன் கலரில் flashbacks ஜிவ்வென்று ஓட்டமெடுத்தன !! In fact - வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமோ ? என்று கூடத் தோன்றுகிறது ! ஒவ்வொன்றிலும் தான் எத்தனை நவரசங்கள் ? What say people ?

இங்கே உள்ளூரில் விடுமுறை என்றாக, சொந்த ஜோலியாய் நானும் சில நாட்களுக்கு சென்னைக்குப் பயணமாக, ஸ்பெஷல் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் இன்று முதலே மறுக்கா தலை நுழைக்க முடிந்துள்ளது ! ரைட்டு....பதிவைப் போட்டுப்புட்டு தொடரலாமென்று இங்கே ஆஜராகி, உங்களின் last batch of comments-களுக்குள் புகுந்தால், திடீரென்று "தானைத் தலைவர் ஸ்பைடருக்கொரு ஸ்பெஷல் !!" என்ற கோரிக்கை எழுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது !! "ஹை..இதென்ன புது ஐட்டமா இருக்கே ?" என்ற கேள்வியோடு முகத்திலொரு புன்னகை விரிந்ததை மறுக்க மாட்டேன் ! புதுசாய் நமக்கு வேலை வைக்காமல், அப்டிக்கா சூடு பண்ணி, அப்டியே பரிமாறக்கூடிய மறுபதிப்புப் பதார்த்தங்களென்றால் எனக்கு எப்போதுமே ஓ.கே. தான் ; ஆனால் மெய்யாலுமே இவற்றை நாம் இன்று ரசிக்கும் வாய்ப்புகள் எத்தனை சதவிகிதம் ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்ட போது கிடைத்த பதிலில் அத்தனை வலு இருந்திருக்கவில்லை! 

In fact ஐம்பது ரூபாய்க்கு க்ளாஸிக் ஸ்பைடர் கதைகள் மறுபதிப்பான 2015 / 2016 ஆண்டுகளில் நம்ம கூர்மண்டையரை வாருவதே நிறைய பேருக்கு மாதாந்திர ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்தது ! ஒரு கட்டத்தில் எனக்கே போதுமென்று பட்டதாலே, கடைசி batch ஸ்பைடர் இதழ்களை அன்றைக்கு மறுபதிப்பிடவில்லை ! பழசோ, புதுசோ பொதுவாக நமது இதழ்களை வாங்கிடும் அந்த core குரூப் நீங்கள் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை ! So உங்கள் விருப்பங்களுக்கேற்ப ஒரு க்ளாஸிக் ஸ்பெஷலை ரெடி பண்ண முயற்சிக்கலாம் தான் ; ஆனால் எனது நெருடலோ - இவற்றை வாங்கிடக்கூடிய புது வாசகர்களை எண்ணியே ! Of course -மஞ்சக் கொடிய புடிச்சுக்கிட்டு, கூட்டம் கூட்டமால்லாம் புதிய வாசகர்கள் படையெடுக்கப் போவதில்லை தான் ; but still புத்தக விழாக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது newcomers நமது இதழ்களை அள்ளிச் செல்கின்றனர் என்பது நிஜம் ! அந்தப் புதியவர்கள், அந்த manga தலைமுறை,  நம்ம இஸ்பைடர் சாகசங்களை இன்றைக்குப் படிக்கும் பட்சத்தில், அவர்களது ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமோ ? என்ற குழப்பம் தான் எனக்கு ! இந்த ஜனவரிக்கு சென்னைக்கென நாம் மறுபதிப்பு செய்த லக்கி லூக் இதழ்களெல்லாம் தெறி ஹிட்ஸ் ! வசனங்களில் நிறைய tweak செய்திருந்தோம் & அந்தக் கதைகள் சகலமுமே செமத்தியான evergreen hits ! So அவற்றை நாம் (சு)வாசித்தாலும் சரி, புதியவர்கள் வாசித்தாலும் சரி, வண்டி ஓடி விடுகிறது ! Oh yes, ஸ்பைடரின் சூப்பர்-ஹீரோ சாகசங்கள் - அமெரிக்காவில் விண்ணைத் தொடும் விற்பனை காணும் அந்த மனிதன்-இந்த மனிதன் சாகசங்களுக்குச் சளைத்தவைகளே அல்ல தான் & நம்மை தாங்கிப் பிடித்த ஜாம்பவானும் இவரே ! So அவரை மட்டம் தட்டும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது ! But மாறியுள்ள காலங்களில் / ரசனைகளில் இவருக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்த curiosity என்னுள் நிறைய உள்ளது !! கொஞ்சம் பேசுங்களேன் guys இது பற்றி ?

ஒற்றை இதழ், இரண்டு இதழ்களென்றால் கூடப் பரவாயில்லை ; ஆனால் ஒரு முழுநீளத் தொகுப்பென்பது totally a different beast !! அதனை சமாளித்து விடலாமென்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா folks ? இதோ - ஆகஸ்டில் நம்ம தானைத் தலைவர் மெகா சைசில், கலரில், "விண்வெளிப் பிசாசு" உடனான மோதலில் களமிறங்கிடவுள்ளார் - நம்ம கரூர் ஸ்பைடர்மன்றத் தலைவரின் மொழிபெயர்ப்புடன் ! விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமே guys ? What say ? 

And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! So அவர் சூட்டவிருக்கும் புய்ப்பங்களோடு, ஸ்பைடரும் ஒரு கொத்தைச் சூட்டச் செய்தால், ஈரோட்டுக்கு வரும் போது அம்புட்டு பேரும் ஊட்டியின் மலர்க்கண்காட்சிகளிலிருந்து ஓடியாந்தோர் போலிருப்பது உறுதி ! பரால்லீங்களா ?   

Moving on, வருஷத்தில் ஒரு பாதியினைக் கடக்கும் தருவாயினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போது - 40-வது லயன் ஆண்டுமலர் ;  ஈரோடு ; தீபாவளி ; கிறிஸ்துமஸ் - என்பனவற்றையெல்லாம் தாண்டி, அடுத்த ஆண்டினுள் பார்வைகளை ஓட விடும் சபலங்கள் மேலோங்குகின்றன ! And காத்துள்ள 2025-ல் முத்துவின் இதழ் # 500 வெயிட்டிங் ! In fact முத்துவின் ஆண்டுமலரே இதழ் நம்பர் ஐநூறாகவும் இருந்திடவுள்ளது ! So அதற்கு என்ன திட்டமிடுவது ? என்ற கேள்வி தலைக்குள் இப்போதே உருட்டி வருகிறது ! 

அடுத்தாண்டுக்கென என்னிடமுள்ள அடுத்த கேள்வி - பொதுவானது !! இது வரையிலும் குண்டு புக்ஸ் ; புஷ்டியான புக்ஸ் - என்று டிராவல் செய்திருந்த நாம், 2024-க்கென crisp வாசிப்புகள், முன்செல்லும் பாதையென்று தீர்மானித்திருந்தோம் ! And அந்த முனைப்போடு நடப்பாண்டின் அட்டவணையினையும் அமைத்திருந்தோம் ! இதோ - முதல் 5 மாதங்கள் ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், எனது கேள்விகள் இவையே :

1.இந்த வாசிப்பு அனுபவம் எவ்விதம் ரசிக்கிறதோ மக்கா ? 'எடுத்தோம்-படிச்சோம்' என்ற ஸ்டைல் சுகப்படுகிறதா ? இதோ - இந்த மே மாதம் கூட ஒரு க்ளாஸிக் உதாரணம் ! போனவாட்டி, இதே டேங்கோவையும், இதே சிக்பில்லையும், துணைக்கு ரூபின் அம்மணியையும் கூட்டிக் கொண்டு, கூட்டணி இதழாய் வெளியிட்டு, அதே மாதத்தில் மேற்கொண்டும் இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தோம் ! ஆனால் இம்முறை, ஒவ்வொன்றும் தனித்தனியாய், நறுக் என்ற crisp பாணியில் !! இது ஓ.கே. என்பீர்களா ? அல்லது 'என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ? 

2.இந்த ஆண்டினில் இதுவரைக்கும் பதினைஞ்சோ, பதினாறோ இதழ்கள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன் ! அவற்றுள் நீங்கள் வாசித்தது  எத்தனையை ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ? 

3.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இருந்துள்ளன இம்முறை என்ற எனது இந்த அனுமானம் சரிதானுங்களா ? இல்லாங்காட்டி, நான்பாட்டுக்கு கனா கண்டுக்கினு இருக்கேனுங்களா ?

உங்களின் மெய்யான பதில்கள், அடுத்த ஆண்டிற்கென ஒரு blueprint போடும் முதற்கட்டப் பணிகளுக்கு உரம் சேர்க்கும் என்பதால், தவறாது பதில்ஸ் ப்ளீஸ் ? இதோ - இந்தப் பதிவில் நான் தருமி அவதாரில் கேட்டுள்ள கேள்விகளின் தொகுப்பு - பதிவுகளும் crisp ஆக இருந்தால் தேவலாமென்று எண்ணிடும் நண்பர்களுக்கோசரம் !! So மேஜர் சுந்தர்ராஜனாய் ஒருக்கா performance பண்ணிய கையோடு நான் கிளம்புகிறேன் !! கபாலத்துக்கு மேல் பணிகள் காத்திருப்பதால் ஓட வேண்டுமுங்கோ !! Bye all....see you around ! Have a bright Sunday !!

QUESTIONS AT A GLANCE :

1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ? 

2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?

3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?

4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? 

5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?

6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?

7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?

P.S : பன் போட்டியில் வென்று, நமது இஸ்திரியில் பெயர் பொறித்திருக்கும் நண்பர், தனது அட்ரஸ் & போன் நம்பரை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடக் கோருகிறேன் ப்ளீஸ் ! ஒரு வேளை பன் பார்சலை இரக்க சிந்தனை கொண்ட கிளவரசருக்கு, ச்சீ..சீ.....இளவரசருக்கு அனுப்பிட எண்ணினாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் சாத்தியமே !! 

And இதோ - ரவுண்டு பன் படலத்துக்குப் பிற்பாடாக ஒரு ஸ்பாஞ் கேக் போட்டி !! இதோ - ஆழ்ந்த சிந்தனையில் லயித்துக் கிடக்கும் நம்ம வலைமன்னருக்குப் பொருத்தமான மைண்ட்வாய்ஸ் ஒன்றை எழுதி அனுப்புவோருக்கு ஸ்பா.கே. 4 பார்சல்லல் !! And இம்முறை நடுவராக இருந்து தேர்வு செய்திடவுள்ளது - நம்ம கரூர் ராஜசேகரன் சார் ! புலவர்களே களமிறங்குங்கள் !






425 comments:

  1. Me the first for the first time in my life

    ReplyDelete
    Replies
    1. Super E.V sir... வாழ்த்துக்கள்👌👌👌

      Delete
    2. EV இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா

      Delete
    3. வர வர இப்பல்லாம் இளவரசரின் பேச்சை யாருமே நம்ப மாட்றீக!

      Delete
    4. நம்ம்ம்பி வாழ்த்திய ஒரே ஒரு நல்ல உள்ளம் JSVPக்கு நன்றி! :)

      Delete
    5. ஒரே ஒரு ஏமாந்த உள்ளமோ😳🤔

      Delete
    6. அவரு ஒரு அப்பிராணி

      Delete
    7. வாழ்த்துகள் சகோ @Erode Vijay

      //Me the first for the first time in my life//

      ஏப்ரல் மாத ஒரு பதிவில் முதல் கமெண்ட் போட்டுள்ளீர்கள், சகோ
      அப்பறும் அதூவிம் தங்களது முதல் முறை இல்லைனு எங்களுக்கு தெரியும் ஈரோடு பன் இளவரசரே

      Delete
    8. சகோ.. என்னோட இந்த 25 வருஷ லைஃபுல இதான் முதல் கமெண்ட். நம்புங்க சகோ!

      Delete
    9. Ivare pathivu poda sollitibwait pannuvaram..ivare mutha commentum pottupaaramm..
      Orutharukkum vaippu kodukka mattaram

      Delete
    10. அடடே! நம்ம TexKit கூட பொங்கியெழுந்துட்டாரே!! for the first time in his life! :)

      Delete
    11. கரெக்ட் EV. ஆமா நம்ம Texkit பொங்கிட்டாரே

      Delete
  2. Replies
    1. மீண்டுமா 😳
      இருந்தாலும் வாழ்த்துக்கள் STV Sir 🤝🤝🤝

      Delete
    2. தேங்யே நண்பரே... சிலுவரு பேட்ரியா குவியுது....🤣

      Delete
    3. இனி நீங்க " சில்வர் ஸ்டார் STV "🥈

      Delete
    4. செம்ம சகோ
      வாழ்த்துகள்

      Delete
  3. Replies
    1. மூன்றாவது இடம் வென்றதுக்கு வாழ்த்துகள் சகோ

      Delete
    2. வெண்கல வீரர் பட்டம் உங்களுக்கு Karthick சார் 😅

      Delete
  4. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. அடடே வந்துட்டேன்...

    ReplyDelete
  6. Replies
    1. 😂😂😂 just பாஸ் சார்

      Delete
    2. //😂😂😂 just பாஸ் சார்// வாங்க பன்னு போட்டி வெற்றியாளரே 😄

      Delete
    3. பன்னை நினைச்சாலே பயமா இருக்கு சார்😀😀😀

      Delete
  7. @Edi Sir..😍😘

    இந்த அப்பாடக்கர் போட்ட "அப்பாடா" வை பெரிய மனது கொண்டு ஏற்றுகொண்டது மட்டும் அல்லாமல் அதனை ஆரோக்யமான போட்டியாக அறிவித்தமைக்கு நன்றிகள் சார்..🙏💐

    இப்போதுதான் மனது "அப்பாடா" என்று இருக்கிறது..😃😍🙏

    ReplyDelete
  8. // மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளாவை "கிராண்ட் சக்சஸ்" ஆக்கிய நண்பர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏 ஆந்தை விழியனின் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு புக்கிங்குகள், விற்பனைகள்..👍நமது சின்னஞ்சிறு டீமின் மெம்பர்கள் இப்போதுதான் கடைசி புத்தக பார்சலை அனுப்பிவிட்டு "அப்பாடா" என்று உட்கார்ந்தார்கள்.. //

    மிக்க மகிழ்ச்சி சார். மனதுக்குள் மத்தாப்பு சார் 😊

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  10. ஸ்பைடர் : ஹூம்.. எப்படியோ சிரசாசனத்துல டெலிபதி அனுப்பியே என் தமிழ் ரசிகக் கண்மணிகள் மூளைக்கு பாலீஷ் அடிச்சு ஒரு குண்டு புக்குக்கு கோரிக்கை வச்சுட்டேன். இனி மத்ததெல்லாம் அந்தக் கல்நெஞ்சக்கார எடிட்டரின் கையிலே தான் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. நச் கமெண்ட் சார்👌👌👌

      Delete
    2. @EV..😃😍

      டக்கர்..டாப்டக்கர் ஜி...👍👍💐🌷

      Delete
    3. நன்றி நண்பர்களே! ஸ்பாஞ்ச் கேக் போல மிருதுவான உள்ளம் கொண்டவர்கள் நீங்கள்!

      Delete
    4. @EV Ji..😍😃

      அப்படியே நம்ப ஸ்பைடர் மைண்ட் வாய்ஸ்க்கும் இரண்டு நச் கமெண்ட்ஸ் போடறது..😃😀😀

      Delete
    5. ஸ்பாஞ்ச் கேக்கான வசனங்களில் தூள் கிளப்புறீங்க சகோ

      Delete
  11. 1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ?

    பார்க்கலாமே சார்.

    2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?

    கண்டிப்பாக டைம் மெஷின் ல ஏறி பின்னால் போவது என்றாலே நமக்கு அல்வா சாப்பிடுவது போல.

    3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?

    முடியாது. இது வரை மறு பதிப்பு காணாத 3 ஸ்பைடர் கதைகளையாவது இணைத்து ஒரே புத்தகமாக வேண்டும்

    4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ?

    இந்த வருடம் வந்த லார்கோ போல ஒரு அட்டகாசமான இதழ். பழங் கதை நண்பர்களுக்கு ஒரு மாயாவி ஸ்பெஷல். அப்பறம் ஒரு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல ஒரு புத்தகம். ஆக மொத்தம் 3.

    5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?
    எனக்கு ஓகே தான்.

    6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?

    அத்தனையும்

    7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?

    நீங்க சொன்ன ஆறும் சூப்பர் ஹிட் அண்ட் so many varieties too.

    ReplyDelete
  12. Spider Mindvoice : "ம்ம்ம் .. ஒரு காலத்துல எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாரா இருந்தோம்? மாசா மாசம் ஹிட்டடிச்சோம் ! குண்டக்க மண்டக்க ஒரு புக்க போட்டு கொண்டாடுன்னா இந்த எடிட்டர் கேள்வியா கேட்டுக்கினு கீறாரே? நேரம்டா "

    ReplyDelete

  13. களவாணி என்ற பழைய தமிழ் படத்தில் ஒரு காமெடி சீன் வரும்..
    கதாநாயகி போலியாக சூசைட் அட்டெம்ட் செய்வாள்..மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அவளை ஹீரோ பின்வாசல் வழியாக கடத்தி சென்றிருப்பான்..அந்த விசயம் தெரியாமல் அவளுடைய சொந்த கார பெண்கள் பழங்களோடு அவளை பார்க்க வர,
    காமெடியன் கஞ்சா கருப்பு ஒரு பேமசான டயலாக் சொல்வார்...
    பாத்து மெதுவா வாங்க..அவளை பின் பக்கமா தூக்கிட்டு போயிட்டிருக்கான்..அது தெரியாம சாவகாசமா வர்ரீங்களேன்னு...
    பின் குறிப்பு:
    ஸ்பைடர் கதைகள் வண்ணத்தில் பிளாக் மார்கெட்டில் அமோக விற்பனை..
    இடை குறிப்பு:
    ஸ்பைடர் டைஜஸ்ட் சாவகாசமாக போடுவதற்கும் மேலேயுள்ள காமெடி சீனுக்கும் சம்பந்தம் கிடையாது...

    ReplyDelete
    Replies
    1. திருட்டுத்தனமாய் இழுத்துப் போய் தாலி கட்ட சாஸ்திர-சம்பிரதாயங்கள் தேவைப்படாது சார் ! ஆனால் முறைப்படி கண்ணாலம் பண்ண நாள்-நட்சத்திரம் ; பந்தல், அய்யர் ; சமையல் ; சொந்தக்காரர்கள் ; பங்காளிகள் என ஏகம் அவசியம் !

      பிளாக் மார்க்கெட்டில் அம்பது புக்ஸை கொள்ளை விலைக்கு விற்றாலே கல்லா நிரம்பி விடும் ! அவர்கள் தரும் பில்டப்பிலேயே வாங்கும் சபலம் உங்களுக்கு எழுந்திடும் ! ஆனால் நம்ம பாடு அத்தனை சுலபமல்ல ; குறைந்த பட்சமாய் 400 புக்கிங்களாவது தேவை ! அதற்கு அவசியமாகிடும் time frame ஆண்டவனுக்கே வெளிச்சம் ! அது வரையிலும் உங்களது உவமையின்படி ரூமுக்கு வெளியே நிற்கவே தேவைப்படும் !

      MYOMS சந்தாக்கள் இப்போது தான் நூறையே தாண்டியுள்ளன எனும் போது திருட்டுத் தாலி கட்டும் துரிதங்கள் நமக்கு தோதுப்படாது சார் !

      Delete
    2. "குறைந்த பட்சமாய் 400 புக்கிங்களாவது தேவை !"

      நிச்சயம் புக்கிங் ஆகிவிடும் சார்.
      The chess man, லயன் ஆங்கில பதிப்பு போல் கிரவுன் சை ஸு ஓவியங்கள் font போன்றே அச்சில் ஷார்ப்பான நேர்த்தி இருந்து விட்டால் போது எத்தனை கதை வந்தாலும் இதழ் சூப்பர்ஹிட் ஆவது உறுதியன்றோ... வண்ணமெல்லாம் தேவை இல்லை. உள்ளது போன்றே அச்சுத் தரம் வந்தால் போதும்...

      Delete
    3. அப்படியே சிறுவர்களுக்கு ஏற்ற அளவில் உள்ள 64 பக்க பாக்கெட் சைசில் "குதிரை வீரன் ஆர்ச்சி" போட்டு விடுங்கள் சார். நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்.
      சீனியர் வாசகர் சேலம் குமார் விருப்பம்... எனதும் கூட

      Delete
    4. @Uday adi ji..😍😃

      அருமையான ஐடியா ஜி..😍😃👍👌

      Delete
    5. Now or never நன்றி ப்ரோ, ஆசிரியர் ஃபைனல் ஆக என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். :)

      Delete
  14. முத்து இதழ் 500:
    தங்க கல்லறை பழைய மொழி பெயர்ப்பில் சமீபத்தில் வந்த கார்சனின் கடந்த காலம் போன்ற பெரிய சைஸில்..

    ReplyDelete
    Replies
    1. அடடே அருமை டாக்டர் சார். சரியான தேர்வு.

      Delete
    2. லயன் 40க்கு 3 புத்தகங்கள் என்றால், முத்து 50க்கு ஒரு 4 புத்தகங்கள் ஆவது வேண்டும் அல்லவா?

      அந்த நாலில் ஒன்று இந்த தங்கக் கல்லறை. மீதி 3 என்ன சார்?

      Delete
    3. Absolutely - either as 500th Issue or companion to 500th issue (501)

      Delete
  15. 1. சுகப் படாது.

    2. புதிய பதிவுகளே வேண்டும். பழைய லிங்க் வேண்டுமானால் பதிவிடலாம்.

    3. ஆண்டுக்கொரு ஸ்பைடர் ஸ்பெஷல் ஓகே.

    4. மீதமுள்ள இளம் டைகர் 3-5 பாகங்கள் கெட்டி அட்டையில்.

    5. நன்றாகத்தான் இருக்கிறது. பழைய கதைகளை மறு வாசிப்பு சாத்தியமானது (லார்கோ, வேய்ன் ஷெல்டன், லக்கி லூக், ஸ்மர்ஃப்ஸ், சிக் பில், மற்றும் பல பழைய கதைகள் ஒரு வண்டி படித்தேன்.) ஆனால் பல ஆயிரம் புதிய கதைகள் இன்னும் தமிழில் வராததால் நம் ஆயுள் காலத்தில் எவ்வளவு படிக்க முடியுமோ தெரியாது. அப்படி நினைக்கையில் நிறைய புதிய கதைகள் வந்தால் நன்றாக இருக்கும்.

    6. அனைத்தும் படித்து விட்டேன்.

    7. அனைத்தும் அருமையான வாசிப்பு அனுபவம் கொடுத்த கதைகள்.

    ReplyDelete
  16. 1. உங்க பதிவு லெவெல்க்கு யாருக்கும் வருவது ரொம்ப கஷ்டம்... So, வேணாம் nu தோணுது sir 🤗

    2.கண்டிப்பா கும்மியடிக்கலாம் சார்👍

    3. விண்வெளி பிசாசு எப்படி இருந்தாலும் எங்களுக்கு ஸ்பைடர் டைஜஸ்ட் போட்டே ஆகணும் சார்💪

    4. தங்களுக்கு தெரியாத சட்டமா யுவர் ஆனர் 😉 நீங்களே பார்த்து நல்லதா, மெகாசைஸ்ல
    பண்ணுங்க சார்😊

    5. Ok ok ஸார் 👍

    6.ஒரு டஜன் ஸார் 🙏

    7. டெபணட்லி... டெபணட்லி ஸார் 🤝🤝🤝

    ReplyDelete
    Replies
    1. 4. முத்து 500 kku முத்துவின் சொத்து "புலியார் "வந்தால் சூப்பர் ஆக இருக்கும் சார்🤗

      Delete
    2. மீண்டும் ஒருமுறை,
      ஆல்ஃபா, சிஸ்கோ, டேங்கோ மூவர் கூட்டணியில் ஒரு Combo Special வெளியிடலாமா?🤔

      Delete
  17. // And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! So அவர் சூட்டவிருக்கும் புய்ப்பங்களோடு, ஸ்பைடரும் ஒரு கொத்தைச் சூட்டச் செய்தால், ஈரோட்டுக்கு வரும் போது அம்புட்டு பேரும் ஊட்டியின் மலர்க்கண்காட்சிகளிலிருந்து ஓடியாந்தோர் போலிருப்பது உறுதி ! பரால்லீங்களா ? // தன்னை அறியாமல் ஓட்டை வாய் உலகநாதன் ஒரு உண்மையை சொல்லி விட்டார்.

    மாண்ட்ரேக் ஸ்பெஷல் 2 ஈரோடு புத்தக விழாவில் போடு வெடிய.

    நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. @Edi Sir😍😘..

      ஈரோடு விழாவில மாண்ட்ரெக் ஸ்பெஷல வெளியிடறப்ப ஒரு "மேஜிக் ஷோ" நடத்தி வெளியிட்டா எப்படி இருக்கும்..😃😍👍👌👌

      Delete
  18. @ ஏழே கேள்விகள்..👍

    எனது பதில்கள்..😍

    1)பதிவ ஆளாளுக்கு எழுதினால் அருமையாக இருக்கும்..💐💐

    2)"இதே நாள்..
    இதே மாசம்.. பத்தாண்டுகளுக்கு முன்"😍

    "கிழித்து தோரணம் கட்டிய மொமண்ட்களை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்"😃😃😃

    பட்டைய கிளப்புங்க சாரே..😍😘

    3)விண்வெளி பிசாசை கட்டாயம் ரசிச்சுகிட்டே
    ஸ்பைடர் டைஜஸ்ட முடிவு பண்ணிடுவோம்.💐💐

    4)"முத்து 500" க்கு முத்துவில் வந்த முத்தான மூன்று + லயனில் வந்த லயமான மூன்று+ திகிலில் வந்த திடுக்கிடும் மூன்று+ ஜீனியரில் வந்த ஜாலியான ஒன்று என பத்து முத்துக்களை மொத்தமாக கொடுத்தால் வேண்டான்னா சொல்லப்போறோம்..😍❤💛

    5)"Crisp reading" டபுள் ஓ.கே சார்..👍👍

    (ஸ்லிம்ரன் Ok தான்.. அப்பப்ப குண்டூஸ் குஷ்புவ மறந்துடாதிங்க சாரே😍)

    6)நடப்பாண்டில் இதுவரை வெளிவந்த அத்தனையுமே படிச்சாச்சு சாரே..😍
    (அதை விட வேற வேலை..😃😍😘👍)

    7)100% உங்க அனுமானம் சரிதான் சாரே..😍😃😘😀👍👌👌

    ReplyDelete
  19. 1... எழுதுங்க சார்
    2...சூப்பராருக்கும்.....இது போல் ஏதோ கதைகள் உண்டுண்ணு துவக்கத்ல 2012 ல நீங்க சொன்னதா ஞாபகம்
    3... விண்வெளிபிசாசு ஸ்பைடரின் பெஸ்ட் அல்லவா....அதும் வண்ணத்லங்ற போது....நிச்சயம் ஹிட்டாகும்....ஸபைடருக்கும் ஓர் பெரிய புக்...அது பக்கம் முழுக்க வெள்ளையே பார்க்காது...ஆரஞ்சு...கிளிபச்சை.ப்ளூ...பிங்னு தாள்கள வண்ணத்ல கலக்குனா செமயாருக்குமே...இளந்தலைமுறை நிச்சயம் ரசிக்கும்...அதன் ஆய்வகஙதிறன்கள ஊக்குவிக்கும்...இவையனைத்துமே அதாவது ஸ்பைரின் கருவிகள் வருங்காலத் தலைமுறையால் சாத்தியமாகலாம்..

    ReplyDelete
    Replies
    1. 4...இது வரை வந்ததிலயே பெரிய மெகா குண்டுக் கதை அதிக பக்கங்களில்...500 சார்...முதல் மெகா சாதனை...பாத்து கவனிக்கவும்


      5. எல்லாமே சூப்பர் தான்


      6... டின்டின் கூட படிக்கல...நாலு பக்கம் கடந்ததும் அசந்து போனேன்...ரசிச்சுப் படிக்க எடுத்து வச்சிருக்கேன்...பௌன்சர் சும்மா பிரிச்செடுத்துட்டார்...அமர்க்களம்...விரிவாய் விமர்சிக்க நேரங் கிட்டல...மீண்டும் படிச்சு விமர்சிக்க ஆவல்..
      படித்தவை குறைவே...நிச்சயம் எதை எடுத்தாலும் ரசிக்க வைக்கின்றன...அருமை...

      Delete
  20. 1. இது ஓ.கே.
    2. எல்லாம் ☺️
    3. All sir

    ReplyDelete
  21. Thanks. Sir. மிகப்பெரிய கௌரவம் சார் எனக்கு .நம்பவே முடியல . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஸார்👏👏👏🎊🎊🎊

      Delete
    2. @ராசுகுட்டி அய்யா..😍💐

      இனி ராசயோகம்தான்..
      பட்டைய கிளப்புங்க..💐💐👍👌

      Delete
    3. வாழ்த்துகள் நண்பரே.

      Delete
    4. வாழ்த்துக்கள் ராஜசேகர் சார்.

      Delete
    5. தீர்ப்பு சொல்லும் ஜட்ஜய்யாவாக பதவி உயர்வு பெற்ற நண்பர் ராஜசேகருக்கு வாழ்த்துகள்....கலக்குங்க💐

      Delete
  22. //And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் //

    செம்ம ஸார்...
    This time he will conquer 💪

    ReplyDelete
  23. ## என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ? ##

    Only குண்டு புக் 😎

    ReplyDelete
  24. # ஸ்பைடரின் ஸ்பாஞ் கேக் போட்டி#😍😃

    #ஸ்பைடர் மைண்ட் வாய்ஸ்#

    நான் பாட்டுக்கு சிவனேன்னு அடிக்கிற வெயிலுக்கு அக்கடா ன்னு வலையில காத்தாட படுத்துகிடக்கிறேன்..😑

    என்னை "டைஜஸ்டு" ..ன்னு சொல்லி,
    'ரி ரிலீஸ்' பண்ணி தேர இழுத்து தெருவில விடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க..😶

    நடத்துங்க.😃. நடத்துங்க..😀

    ReplyDelete
  25. ##முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ#₹
    நான்கு special புக்ஸ் -
    அதில் ஒரு குண்டு புக் 😎

    ReplyDelete
    Replies
    1. "என்ன போடலாம் ?" என்பதே வினா ! "எப்படிப் போடலாம் ?" என்பதல்ல !

      So குண்டு..ஒல்லி என்பன பதில்களாகிடாது சார் !

      Delete
    2. நம்ம ஆஸ்ட்ரிக்ச போடலாம்.டின் டின்னோடு கூடுதல் உத்வேகம் தருமே.ரெண்டாவது காமிக்ஸ் ஜாம்பவான் வந்தா வேணாம்பதாரு

      Delete
    3. வௌக்குமாத்த தூக்கிட்டு ஆஸ்டெரிக்ஸ் கம்பெனி நிக்குறதும் பின்னணியில் தெரியுமே....உங்க பட்சி கிட்டே ஒருக்கா கேட்டுப் பாருங்க கவிஞரே !

      Delete
    4. ROFL..😃😃😃😄😄😍😘😀

      Delete
    5. ஆசிரியரே உங்க கமெண்ட் படிச்சுட்டு ஸ்டீல் சகோ விட்றுவாரு பார்த்தா, அவர் பின்வாங்கறதா இல்லைங்க

      இரண்டு பேரின் கமெண்ட்களும் ROFL 😂😂😂😂😂

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  26. ஸ்பைடர்....

    சும்மா ஹாயாக படுத்து கிடக்க விடுவாறா இவரு..இவரு தலை உருளுறது பத்தாதுன்னு நம்ம தலையையும் உருட்டுறாரே...இனி ஒவ்வொருத்தரும் என்ன கூவச் செய்து படுத்துவாங்களே...கொடுக்கட்டும் .கொடுக்கட்டும்..வாங்கட்டும்..வாங்கட்டும்..
    பரிசு வாங்குறவ பார்சல்ல கேக்குல கன்ன ஒளிச்சு வச்சு வலையால வாய அடச்சிருவம்...ஒரு பய பரிசுன்னு இந்த ஸ்பைடர் வாய் புடுங்கி பாக்க இனிமே வரக்கூடாது...

    ஆமா..ஸ்பைடரா கொக்கான்னானாம்

    ReplyDelete
  27. 1. ட்ரை பண்ணலாம்.
    2. கண்டிப்பா பண்ணலாம்.
    3. ஸ்பைடரின் மைண்ட் வாய்ஸ் : இதெல்லாம் வேலைக்காவது…ஆந்தை விழியாரை அலேக்கா தூக்கிட்டுப் போய் நடு மண்டைல நச்சுன்னு கொட்டினாத்தான் நம்ம ஸ்பெசலை நாம பாக்க முடியும் போல.
    4. Crisp reading ok. special தருணங்களில் கொஞ்சம் ஸ்பெசலா விருந்து வைக்கலாமே.

    ReplyDelete
  28. @Edi Sir😍😘..

    ஈரோடு விழாவில மாண்ட்ரெக் ஸ்பெஷல வெளியிடறப்ப ஒரு "மேஜிக் ஷோ" நடத்தி வெளியிட்டா எப்படி இருக்கும்..😃😍👍👌👌

    ReplyDelete
    Replies
    1. போன வருஷம் ஈரோட்டில் முத்து பொன்விழா கொண்டாட்டத்துலயே மேஜிக் ஷோ நடந்ததுங்களே ஜம்ப்பிங் தலீவரே?
      யாரோ ஒரு நண்பர் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த முத்து லோகோ ஃபோட்டோ ஃபிரேம்களை நண்பர்களின் கண் முன்னாலேயே டஷ்ஷ்னு மாயமா மறைய வச்சாரே!!

      Delete
    2. Vijay செம்ம டைமிங் காமெடி 👌😀😀😀

      Delete
    3. @ஸ்ரீ..😍😃😘😀

      வழக்கமா நிறைய டைமிங் பன்ச்சுகளை போட்டு தாக்கி நிறைய இம்ப்ரெஸ் பண்ணுவீங்களே..😃😃😃

      என்னாச்சு..😃😶😶

      Delete
    4. @EV..😃😃😀

      வழக்கம்போல இந்த வருசம் ஈபுவி க்கும் நீங்கதானே ஆர்கனைசர் ஜி..😃

      சிங்கிள் சிங்கமா கலக்க போறீங்கதானே..😍

      இந்த வருசமும் உங்க டவர் மேலே பாட்டுக்காக ஈகர்லி வெயிட்டிங் ஜி..😍😍😍

      Delete
    5. ஜம்ப்பிங் தலீவரே.. உங்க அன்புக்கு நன்றிகள் ஜி!

      இந்தவாட்டி ஒரு விழா குழு கமிட்டியை நிறுவி ஏற்பாடுகளை கவனிக்கறதுன்னு போனவருசமே எடிட்டராலும் நண்பர்களாலும் முடிவு பண்ணப் பட்டிருக்குங்க ஜி!

      பேசாம இந்தவாட்டி சேலத்துலயே விழாவை ஏற்பாடு பண்ணிடலாமான்னு கூட யோசனை இருக்குங்க ஜி! அதுக்கு முக்கிய காரணம் - ஈரோட்டை விடவும் சேலம் சிலபல வசதிகள் நிறைஞ்சதா இருக்கு! (உதாரணம் : பஸ் ஸடாண்டுக்கு மிக அருகிலேயே புத்தகத் திருவிழா அரங்கம் மற்றும் நிறைய ஹோட்டல்ஸ்)

      எடிட்டரின் ஐடியாவையும் கேட்போம்!!

      Delete
  29. Dear Editor
    My views
    1.Would love Spider digest including stories like neethikkavalan spider,yaar antha mini spider,Sathuranga veriyan and recently not published old stories.
    2.Muthu 500 must have 500 pages,Stories your choice,all new but
    3Last year book numbers were good ,I am a fan of big books.
    Regards
    Arvind

    ReplyDelete
  30. காத்தோடு வலையாட ஆட-ஆட
    வாசகனென்ற வாயாட ஆட-ஆட
    ஸ்பாஞ்சோடு கேக்காட ஆட-ஆட
    கொண்டாடும் விசயா நீ ஆடு! (கட்டோடு)

    ஸ்பாஞ்சுகள் காற்றோடு ஆட-ஆட
    பன்னுகள் பந்தாக ஓட-ஓட
    வலையாலே பாய்பின்னி ஆட-ஆட
    கேக்குண்ண வாயாலே நீ பாடு! (கட்டோடு)
    முதிராத ஆர்டினி ஆட-ஆட
    முளைக்காத சொல்லாட ஆட-ஆட
    உடனோடு பெல்ஹா மாட-ஆட
    சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)

    வாசக மரத் தோப்பாகத்
    தேடிவரு பாட்டாக
    விசயர வர் கேக்கெரிய
    சின்னவரி நீ பாடு!

    பன்னகண்டு முன்னாட
    கேக்கு மனம் பின்னாட
    கண்டு கண்டு இளவரசே
    தெம்பாக நீ ஆடு! (கட்டோடு)

    பன்னாலே பல்லாட
    கேக்காலே நாவாட
    ஸ்பைடரின் மனமாட
    திட்டமிட்டு நீ பாடு!
    விசயன் நாக்கு நீராட
    வாசகன் கேக்க போராட
    ரெண்டு பக்கம் நானாட
    நண்பனே நீ ஆடு! (கட்டோடு)

    ReplyDelete
    Replies
    1. கவித கவித சார்👏👏👏🔥🔥🔥

      Delete
    2. சூப்பர் ஸ்டீல் சகோ💐💐💛💛💛

      Delete
  31. ஆஹா..ஆஹா..
    அருமை..அருமை..💐💐

    மாமன்னர் முத்து விசயனாரின் அவையிலே வீற்றிருக்கும் நம் கோவை கவி பொன்ராசப்ப புலவரின் கவிதை அருமை..👌

    பலே கவிஞரே..பலே..😃👍👌

    ReplyDelete
  32. விடுபட்ட லார்கோ ஆல்பம், தங்க கல்லறை மறுபதிப்பு எப்போது எதிர்பார்க்கலாம்? அண்டர் டேக்கர், பவுன்சர் போன்ற அதிரடி நாயகர்கள் வேறு இருந்தால் ட்ரை பண்ணலாமே வாத்தியாரே!

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  35. முத்து #500 ஒரு குன்டு புத்தகமாக வேண்டும் சார், லயன் திபாவளி ஸ்பெஷல் 2019, லயன் மேக்னம் ஸ்பெஷல் மாதிரி ஒரு multi story combo with top heroes of Muthu comics கேப்டன் டைகர், டைலன் டாக், மார்ட்டின், ராபின், மாடஸ்டி

    ReplyDelete
  36. நீண்ட நாட்களுக்கு பிறகு மண்ணை குளிர்ச்சியாக்கப் பெய்த மழையைபோல மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளா"கிராண்ட் சக்சஸ்" 💐💐💐💐💐💐

    ReplyDelete
  37. அதே நாப்பதாண்டு கூட்டணி.... ஹஜ் ஆல்ஃபா..சிஸ்கோ டேங்கோ இருமடங்கு கதைகள் முத்துல விட்டது போல

    ReplyDelete
  38. /// பன் போட்டியில் வென்று, நமது இஸ்திரியில் பெயர் பொறித்திருக்கும் நண்பர், தனது அட்ரஸ் & போன் நம்பரை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடக் கோருகிறேன் ப்ளீஸ் ! ஒரு வேளை பன் பார்சலை இரக்க சிந்தனை கொண்ட கிளவரசருக்கு, ச்சீ..சீ.....இளவரசருக்கு அனுப்பிட எண்ணினாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் சாத்தியமே !! ///

    கண்டிப்பா அனுப்பிடறேன் சார்👍

    பரிசு பன்னா மட்டும் இருந்தா அது கண்டிப்பா ஈரோட்டு இளவரசருக்கு(?!) தான் சார்🤗😅


    ReplyDelete
    Replies
    1. உங்க அன்புக்கு நன்றி JSVP நண்பரே! ஆனா ரவுண்டு பன்னை நீங்களே சாப்பிட்டு இன்புறுங்க! நான் இப்போ ஸ்பாஞ்ச் கேக்குக்கு மாறிட்டேன் ஹிஹி!! :)

      Delete
    2. 😳

      மாற்றம் ஒன்றே மாறாததோ🤔🤔🤔

      Delete
  39. Hi editor sir! For 500th Book - we can combine best old and some new stories. For old stories , we can add Thigil stories like Karupu Kilavi and We can choose some best stories. We can come up with 6.

    ReplyDelete
  40. 💯 நீண்ட நாள் கழித்து 100.

    ReplyDelete
  41. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  42. Batman வர வாய்ப்புண்டுங்களா? திகிலில் வந்த கதைகள் வந்தாக்கூட அதிருமில்லே

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார். அந்த tales of the Batman, Legends of the Dark knight series எல்லாம் போடலாம் சார். கொஞ்சம் கருணை காட்டுங்க

      Delete
    2. Nice idea sir👌
      , நான் இந்த கதைகளை படித்தது இல்லை சார்👍

      Delete
    3. @Mahi ji..😍😃

      Batman.. வந்தா சிறப்பாதான் இருக்கும்...😍😃

      பொழுதா பொழுதன்னிக்கும் டுமீக்கோல்.. டூமிக்கோல் னு இந்த குதிரைகார ஈரோக்களையே போட்டு தாக்கறத விட ...
      தாவறவரு... குதிக்கிறவரு.. மாயமா மறையறவரு.. இப்படியாபட்ட ஈரோஸ்களுக்கு வாய்ப்பு கொடுங்க சார்..😃😃😃😀😀😀

      Delete
  43. // 1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ? //
    அடடே...

    ReplyDelete
  44. // 2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ? //
    வித்தியாசமான சிந்தனைதான்...

    ReplyDelete
  45. // 3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ? //
    எது,எதையோ டைஜெஸ்ட் செய்யும்போது,இதையும் டைஜெஸ்ட் செய்துதான் பார்ப்போமே சார்...

    ReplyDelete
  46. // 4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? //
    மறுபதிப்புக்கு வாய்ப்பெனில் தங்கக் கல்லறையை களமிறக்கலாம்,அதுவும் ஏதாவது ஒரு தருணத்தில் வந்துதானே ஆகவேண்டும்...
    புதிய இதழ்களுக்கு வாய்ப்பு அளிப்பதாயின் ட்யூராங்கோ,டேங்கோ மாதிரி அறிமுகம் ஆகும் சிறப்பான புதியதொரு ஆக்‌ஷன் கதையை களமிறக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. //புதிய இதழ்களுக்கு வாய்ப்பு அளிப்பதாயின் ட்யூராங்கோ,டேங்கோ மாதிரி அறிமுகம் ஆகும் சிறப்பான புதியதொரு ஆக்‌ஷன் கதையை களமிறக்கலாம்...//

      +9

      Delete
  47. // 5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ? //
    ஓகேதான் சார்...

    ReplyDelete
  48. // 6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ? //
    ஜனவரி முதல் மார்ச் வரை வந்த இதழ்களை படித்தாயிற்று, ஏப்ரல் இதழ்கள் மட்டும் படிக்கனும்,மே மாத இதழ்களை முடித்தாயிற்று...

    ReplyDelete
  49. // 7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ? //
    கண்டிப்பாக சரிதான் சார்...

    ReplyDelete
  50. பதிவின் முதல் வரிகளை படித்தது என்னடா இது, நம்ம ஜம்பிங் தலைவர் எழுதுன வரிகள் ஆயிற்றேனு ஒரே சிந்தனை
    அருமைங்க ஆசிரியரே
    வாசகர்களின் வரிகளை ரசித்ததோடு இன்றி, எங்களுக்கு பல விதத்திலும் மதிப்பளிக்கும் எங்கள் ஆசிரியரே 💐💐💐💐💐, தங்களுக்கு எங்கள் கோடான கோடி அன்புகள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை கடல். என்றும் அன்புடன்

      Delete
  51. //ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா //

    அருமையான யோசனைங்க, ஆசிரியரே
    செமயாக இருக்கும் 😊😊😊

    ReplyDelete
  52. //வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?//

    ஒரு தடவையாவது நடத்தி பார்க்கலாங்க ஆசிரியரே 😊😊💐💐💐

    ReplyDelete
  53. // ஒற்றை இதழ், இரண்டு இதழ்களென்றால் கூடப் பரவாயில்லை ; ஆனால் ஒரு முழுநீளத் தொகுப்பென்பது totally a different beast !! அதனை சமாளித்து விடலாமென்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா folks ? //
    உண்மையைச் சொல்லனும்னா கொஞ்சம் கஷ்டம்தான் சார் ஹி,ஹி...

    ReplyDelete
    Replies
    1. // "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! //
      அடடே சூப்பரு...ஆவலுடன் சார்...

      Delete
  54. //விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?//

    பண்ணிடலாங்க ஆசிரியரே

    ReplyDelete
  55. // And காத்துள்ள 2025-ல் முத்துவின் இதழ் # 500 வெயிட்டிங் ! In fact முத்துவின் ஆண்டுமலரே இதழ் நம்பர் ஐநூறாகவும் இருந்திடவுள்ளது ! So அதற்கு என்ன திட்டமிடுவது ? என்ற கேள்வி தலைக்குள் இப்போதே உருட்டி வருகிறது ! //
    வன ரேஞ்சர் ஜோவின் யானைக் கல்லறை முத்துவில் வெளியானதா சார் ?!
    அப்படி இருந்தால் வனரேஞ்சர் ஜோவின் கதைகளைக் கூட கூடுதலாய் முத்து 500 க்கு சேர்த்துக் கொள்ளலாமே,அந்தக் கதைகள் நன்றாக இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. அடடே அருமை ரவி அண்ணா வண்ணத்தில் வன ரேஞ்சர் ஜோ.
      1. புதையல் பாதை
      2. யானைக் கல்லறை
      3. சிறுத்தைகள் சாம்ராஜ்யம் சேர்த்து ஒரே குண்டு புக்.

      Delete
    2. 3 புக் இருக்கா,ம் அப்ப ஒரு குண்டு புக் ரெடி...

      Delete
  56. // ஆனால் இம்முறை, ஒவ்வொன்றும் தனித்தனியாய், நறுக் என்ற crisp பாணியில் !! இது ஓ.கே. என்பீர்களா ? அல்லது 'என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ? //
    crisp பாணி ஓகேதான் சார்,சாதகமான சூழல்கள் அமைந்தால் 2025 இல் முடியவில்லை என்றாலும்,2026 இல் குண்டு புக்ஸ்களை களமிறக்கலாம் சார்...

    ReplyDelete
  57. // இம்முறை நடுவராக இருந்து தேர்வு செய்திடவுள்ளது - நம்ம கரூர் ராஜசேகரன் சார் ! //
    வாழ்த்துகள் இராஜசேகர் சார்...

    ReplyDelete
  58. //5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா//

    பதினாறு ரெகுலர் இதழ்களில், ஒன்பது கதைகள் படிச்சுட்டேங்க
    Crisp reading நன்றாக போகிறதுங்க ஆசிரியரே

    ஆனாலும் நடுவில் ஸ்பெசல் இதழ்கள் பார்க்க தவறு படிக்க ஆவலுடன்

    இதோ பாருங்க டேங்கோ இரண்டொரு நாளில் முடித்துவிட்டு ஆன்லைன் மேளா புத்தகங்களுக்கு காத்திருப்பு ஆரம்பமாகி விடுங்க, ஆசிரியரே

    ReplyDelete
  59. ஸ்பைடர் : சமந்தா சன் பாத் எடுக்கற ஸ்டைல்ல இப்படி லேசா டர்ன் பண்ணிப் படுத்து ஒரு ஃபோட்டோ ஸூட் எடுத்து அந்த தமிழ்நாட்டு எடிட்டரின் கண்ணுல படறாப்ல அவரோட ஆபீஸ் டேபிள்ல வச்சுட்டேன்னா.. அந்த சினிமாஸ்கோப் கண்ணுகள்ல மூனு நாளைக்கு வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு எப்படியும் ஒரு குண்டு புக் போடறதுக்கு ஓகே சொல்லிடுவார்ன்ற நம்பிக்கை இருக்கு எனக்கு! ஸ்பைடரா.. கொக்கானான்னாம்.. ஹோ ஹோ ஹோ!!

    ReplyDelete
  60. //நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?//

    9 இதழ்கள் படிச்சாச்சுங்க ஆசிரியரே
    இன்று டேங்கோ கதை முடித்தால் பத்து ஆகிடுங்க ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. நம்ம மகளிரணித் தலைவியே படிக்காம இருக்கலாமா - ஐயகோ !!

      Delete
  61. //லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?//

    You Win Sir 💐💐💐💐💐

    ReplyDelete
  62. //And இம்முறை நடுவராக இருந்து தேர்வு செய்திடவுள்ளது - நம்ம கரூர் ராஜசேகரன் சார் //

    வாழ்த்துகள் சகோ 💐💐💐💐💐

    ReplyDelete
  63. நன்றிகள் அறிவரசு ரவி சார்.&கடல் ஸிஸ்

    ReplyDelete
  64. 1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ?

    TRY பண்ணலாம் சார் ..

    2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?

    TRY பண்ணலாம் சார் ..

    3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?

    SPIDER .. NOT INTERESTED ..

    4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ?

    தங்க கல்லறை கா.க.கா FORMATல் .. அல்லது YOUNG TIGER ஸ்டோரீஸ் ..மாயாவி IN கலர் .. வன ரேஞ்சர் ஜோ ALL 3 STORIES IN COLOR .. லார்கோ THAT UNPUBLISHED STORY .. ஒரு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல ஒரு புத்தகம்..

    5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?

    OK SIR EXCEPT FOR YOUNG TEX ..CAN'T REMEMBER THE CHARACTERS FROM PREVIOUS ISSUES .. YOUNG TEX பிரித்து போடாமல் ஒரே குண்டு புக் ஆக போடுங்கள் .. அல்லது வரிசையாக மாதம் ஒரு பாகமாக தொடர்ந்து போடுங்கள் சார் .. இந்த வருடம் வந்த கதையின் கிளைமாக்ஸிற்கு இன்னும் ஒரு வருடம் வெயிட் பண்ணனும் சார் ..

    6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?

    ALL ..

    7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?

    YES SIR ..

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸுக்கு அடுத்த ஆண்டு வரைக்கும் காத்திருக்கத் தேவையிராது நண்பரே !

      Delete
  65. 1.உங்கள் பாணியில் எழுத உங்களால மட்டும் தானே முடியும். may be ஓரிருவர் சுவாரசியமாக எழுத முடியும். சும்மா தானே, சும்மா எழுதச் சொல்லுங்க, சும்மா ரசிப்போம்.

    2. ஏற்கனவே அதை தான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன் ஆசிரியரே. உங்கள் பழைய பதிவுகளை ஒவ்வொன்றாக படித்து கடந்த காலத்துக்கு காலப் பயணம் செய்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் 1000 பதிவு எழுதி முடிக்கும் முன்பு அனைத்தையும் படித்து விட வேண்டும் என்று எண்ணம். பார்க்கலாம்.

    3.ஸ்பைடர் கதைகளை கண்டால் ஓடி விடுகிறேன். ஒரு நல்ல கதைக்காக waiting. இந்தக் கதையாவது ஈர்க்குமா என்று பார்க்கணும்

    4.நல்ல கதை.

    5. ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து புத்தகத்தையும் படித்து விடுகிறேன். ஆனால் நேரமின்மை காரணமாக அந்த ஒன்றரை மணி நேரம் என்பது நாலைந்து நாட்கள் ஆகிறது. இதுவுந்தேன் அதுவுந்தேன் என்பது போல் உள்ளது சாரே. அப்புறம் அந்த இளம் டெக்ஸ். ப்ளீஸ் சார் சஸ்பென்ஸ் தாங்கல
    6. சுப்ரீம் sixties corrigan மட்டும் பாக்கி

    7.டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - crisp reading என்பது ஓகே சார் ஆனால் லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; என்பது crisp reading வகையறாவில் என்னால் இணைக்க முடியவில்லை. இவை மூன்றும் வேற லெவல். டெட்வுட் டிக் சற்றே அந்த crisp reading boundary யை தாண்டியது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பு க்ரிஸ்போ, நஹியோ - நன்றாக இருந்தால் போதும் சார் !

      Delete
  66. முத்து 500 க்கு முத்துவின் ஸ்டார் க்ளாசிக் கலெக்சனாக

    இரும்புக்கையார், ஜானி நீரோ, ஸ்பைடர், ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட் போன்றோரை கொண்ட க்ளாசிக் தொகுப்பு.

    சமகால சூப்பர் ஹிட்டான லார்கோ & இளம் டைகர் இவங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பேடர் & ஆச்சீ லயன் பார்ட்டிங்களாச்சே சார் ?

      Delete
  67. ஸ்பைடர் மைண்ட் வாய்ஸ்

    நாலு ஸ்பாஞ் கேக்குக்கு என்னை போன்ற மகா சிந்தனையாளனின் சிந்தனையை போட்டியாக்கி, அதிலும் இந்த ஈரோடு விஜய் நான் நினைக்கிற மாதிரியே எழுதி, பரிசும் பெற்று... இவங்களை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது. ஏதாவது செஞ்சே ஆகணும்

    ReplyDelete
  68. முத்து 500 க்கு சார்லி, லிங்கமாண்டர் ஜார்ஜ் வேதாளர் காரிகன் ,ரிப் கிர்பி, மாண்ட்ரெக் இதுவரை வெளிவராத புதுக்கதைகளாக ஒரு குண்டு புக் & லார்கோ கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் சார்

    ReplyDelete
  69. இரும்பு கை மாயாவின் ஒற்றை கண் மர்மம் லாரன்ஸ் டேவிட் மற்றும் ஜானின் நீரோ இதுவரை வெளிவராத கதைகள் ஏதேனும் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. லாரன்ஸ்-டேவிட் நிறையவே புதுசு உள்ளது சார் - மீண்டும் கிங் கோப்ரா பாணியில் !! பரால்லீங்களா ?

      Delete
  70. முத்து 500 க்கு என்னுடைய சாய்ஸ் ரூட் 666 லிஸ்ட் இதுக்கு வாய்ப்பு குறைவு இருந்தாலும் ஆசைதானே படறோம். எதுக்கு அளவாப்படனும்.

    மத்தபடி மாயாவி மாமா, ஜாக்கி ஜானி எல்லாம் வந்தா எப்பும் போல வாங்கி அடுக்கி வைச்சுக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. லயன்காமிக்ஸின் பராகுடா குறித்து எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை-கடற்கொள்ளையர், வைரங்கள், தீவுகள்

      https://www.jeyamohan.in/198869/

      Delete
  71. கடற்கொள்ளையர், வைரங்கள், தீவுகள்

    https://www.jeyamohan.in/198869/

    ReplyDelete
    Replies
    1. //நாகர்கோயில் சென்றால், அதிர்ஷ்டம் இருந்தால் அரிதாக வரும் ஆங்கிலப்படங்களைப் பார்க்கலாம். ஸ்பான், சோவியத் நாடு இதழ்களின் வண்ணப்படங்களில் வெளிநாட்டு நிலக்காட்சிகளை பார்க்க பத்து கிலோமீட்டர் நடந்து செல்வோம். தொலைக்காட்சி வந்து உலகமெனும் விந்தையை இல்லாமலாக்கிவிட்டது என்றுகூட படுகிறது

      அன்றுமுதல் இன்றுவரை சில ஈர்ப்புகள் தொடர்கின்றன. ‘கௌபாய்’ படங்கள். படக்கதைகள். படங்கள் இவ்வளவு கொட்டிக்கிடக்கையில் ஏன் படக்கதைகள்? படத்தில் எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார்கள். என் கனவில் நான் பலமடங்காக விரித்துக்கொள்ள இடமில்லை. படக்கதைகள் என் கற்பனைக்கான தொடக்கங்களை அளிக்கின்றன, எனக்கு அவ்வளவு போதும்.

      முத்து காமிக்ஸின் பராகுடா பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. கடலாதிக்கத்தில் ஸ்பெயின் ஓங்கியிருக்கும் காலம். ஆழ்கடல்களுக்கு அப்பாலுள்ள நிலங்கள், ஆளில்லா தீவுகள், புதையல்கள், துரதிருஷ்டம் கவ்விய வைரங்கள், கடற்கொள்ளையர்கள், வீரசாகச இளைஞர்கள், சீமாட்டிகள் என ஐரோப்பிய மாலுமிக் கதைகளில் காணக்கிடைக்கும் எல்லாம் அடங்கியது பராகுடா என்னும் காமிக்ஸ் கதைத்தொடர்

      ஸ்பெயினில் இருந்து கிளம்பும் டோனா எமிலியோ சான்ஸே டெல் ஸ்கியூபோ என்னும் சீமாட்டியிடமிருந்து கஷார் என்னும் வைரம் இருக்கும் இடத்திற்கான வரைபடம் பராகுடா என்னும் மர்மமான கொள்ளைக் கப்பலை நடத்தும் கொள்ளையனான பிளாக் டாக்குக்கு கிடைக்கிறது. ப்யூர்ட்டோ பிளாங்கோ என்னும் தீவுக்குச் செல்கிறது அக்கப்பல். கடற்கொள்ளையர்கள், அடிமைவணிகர்கள் ஆளும் தீவு அது. அங்கிருந்து அந்த வைரத்தைச் சுற்றிச்சுற்றி செல்கிறது கதை.

      ஐரோப்பிய படக்கதைகளில் மட்டும் சாத்தியமான அபாரமான படங்கள். மிகமிக நுணுக்கமான தரவுகளுடன், விரிவாக வரையப்பட்ட முழுமையான ஓவியங்கள் கொண்டது ஒவ்வொரு கட்டமும். ஆடைகள், அணிகலன்கள், கட்டிடங்கள், நில அமைப்புகள் எல்லாமே திகைப்பூட்டுமளவுக்கு அசலானவை. அதேசமயம் சினிமாவில் சாத்தியமே இல்லாத காட்சிக் கோணங்கள்.

      படக்கதை சினிமாவை விட வேகமானது. சினிமாவின் ஒரு ‘ஷாட்’ குறைந்தது முப்பது செகண்ட் நீளலாம். ஒரு காட்சி இரண்டு நிமிடங்கள். ஆனால் இரண்டே படச்சட்டகத்தில் அந்த காட்சியை முழுமையாக நம் கற்பனைக்குள் செலுத்திவிடுகிறது படக்கதை.

      பெல்ஜியச் சித்திரக்காரர் Jean Dufaux வரைந்து உருவாக்கிய காமிக்ஸ் இது. சமகாலத்தின் மிகச்சிறந்த படக்கதை வல்லுநராக அவர் கருதப்படுகிறார். படக்கதைகள் எல்லா அகவையினருக்கும் கற்பனைகளை தூண்டவேண்டும். ஒரு வரலாற்றாய்வளனுக்கும் அவற்றில் ஆர்வமூட்டும் சில இருக்கவேண்டும். அத்தகையவை ஜீன் டுவா வரையும் படக்கதைகள்.

      அசோகமித்திரனை அவர் வாழ்க்கையின் இறுதியில் சந்தித்தபோது அப்போது வாசித்துக் கொண்டிருப்பது அலக்ஸாண்டர் டூமாவின் ‘‘The Count of Monte Cristo’ என்னும் சாகசநாவல் என்று சொன்னார். ”நீ வாசிச்சிருக்கியோ?” என்றார். நான் அதிகம் வாசிக்கப்படாத பிளாக் டியூலிப் உள்ளிட்ட நாவல்களை வாசித்திருக்கிறேன் என்றதும் பரவசமானார். நாங்கள் ஒரே மனநிலையில் இருந்து அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

      இன்றிருந்திருந்தால் பராகுடாவை அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்திருப்பேன்.//

      நன்றி - எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு !

      Delete
  72. ஸ்பைடர்( மைண்ட் வாய்ஸ்)::: ஜார்ஜ் சார்லி காரிகன் போன்ற பயல்களுக்கெல்லாம் கிளாசிக் போடுற இந்த ஆந்தை முழியன்( மன்னிக்கவும் ஸ்பைடரின் மன ஓட்டத்தில்) நமக்கு ஒரு ஸ்பெஷல் புக் போடறதுக்கு இப்படி யோசிக்கிறானே. லயனின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த எனக்கு இப்படி ஒரு தலை எழுத்தா.... என்னோட தலையெழுத்தை என்னன்னு சொல்ல 😭😭😭😭😭

    ReplyDelete
  73. முத்துவின் 500 ஆவது இதழ் பற்றி :1. முத்துவின் 50 வது ஆண்டு மலர் போல் புது ஹீரோக்கள் இல்லாமல்வந்தால் நன்றாக இருக்கும்.2. இந்த இதழை முத்துவின் கிளாசிக் ஹீரோக்கள் அலங்கரிப்பார்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும்.3, முத்து என்றால் நினைவுக்கு முதலில் வருபவர் இரும்புக்கை மாயாவி என்றாலும் மணிமகுடம் கேப்டன் டைகர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அந்த இளம்டைகரின் மீதி தொடரை கையில் எடுக்கலாம். குண்டு புக்கு ஒல்லி புக்கு எல்லாமே உங்கள் விருப்பமாகவே இருந்தாலும்.... ஒரு சின்ன ஆசை புது புது அட்டைகளுடன் பத்து கதைகள்
    வந்தாலும் அந்தப் பத்து கதையும் ஒன்றாக தொகுத்து குண்டு புக்காக கையில் ஏந்து போது கிடைக்கும் அந்த சுகம் வேற லெவல் ஆசிரியரே..... 200 பக்க பெரிய சை ஸை இரண்டாக மடக்கினா 400 பக்கமாக வருமே அந்த குண்டே போதுமே. டைகர் உடன் யாரையெல்லாம் கூட்டணி சேர்க்க முடிந்தால் குண்டு புக்காக வருமோ அவர்கள் எல்லாம் இணைத்து இதுவரை ஆயிரம் பக்க கனவை
    நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம் வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் டைகர் கூட ஜிம்மியை கூட்டணி சேர்க்கலாம் ; சில்க் பிள்ளையைச் சேர்க்கலாம் நண்பரே ! வேற யாரையும் சேர்க்க வழி லேதுவே !

      Delete
  74. விண்வெளி பிசாசை வெறி கொண்டு வரவேற்கிறேன்... 🔥🔥🔥

    ReplyDelete
  75. ஸ்பைடர் டைஜஸ்ட் கண்டிப்பாக தயக்கமில்லாமல் களமிறக்குங்கள் சார்..
    தானைத் தலைவன் ஏமாற்ற மாட்டான்..

    ReplyDelete
  76. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் படிக்கும் கதையிது...!
    (சொந்த வேலை காரணமாகவும், உடல்நலம் சரியில்லாத எனது தாயார் சமீபத்தில் இறந்துவிட்டதாலும் எதிலும் மனம் ஒட்டவில்லை! அதனால் உண்டான இடைவெளி!)

    பௌன்சர் - சாபம் சுமந்த தங்கம்

    டைகர் கதைகளைப் போல செம விறுவிறுப்பு!

    இதுபோன்ற கௌபாய் கதைகள் தரும் வாசிப்பனுவமே தனிசுகம் தான்!

    அதிலும் கதை முடியும் தருவாயில் "இதோ ரயோ கிராணடே! நம் ஊரை நெருங்கிவிட்டோம்" என பௌன்சர் சொல்லும் போது நாமே நமது ஊருக்கு திரும்பியது போல ஒரு உணர்வு! எத்தனை கதைகளில் இந்த ஆற்றை கடந்ததை படித்திருப்போம்!

    ஒரு கதை ஒரு வாழ்க்கை; நாம் என்னதான் வசதி படைத்தவராய் இருந்தாலும், எத்தனை நாடுகள் சுற்றினாலும் 60, 70 ஆண்டுகளில் என்னத்தை அனுபவித்துவிட முடியும்!

    ஒரு கதை ஒரு வாழ்க்கையை சித்தரிக்கிறது! நூறு விதமான கதைகளை படித்தால் நூறு வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை பெறமுடியும்!

    தன்மைக்கு சிறந்த மருந்து வாசிப்பே!

    பௌன்சர் - சாபம் சுமந்த தங்கம்
    9/10 👌

    ReplyDelete
    Replies
    1. தன்மைக்கு - தனிமைக்கு

      Delete
  77. ஸ்பைடர் மைண்ட் வாய்ஸ்:

    இந்த எடி ஐயா எதேதோ புது புது கதையெல்லாம் செம்ம குவாலிட்டிலே போட்டு கலக்கறாரு..
    ஆனாக்கா, நான் ரொம்பவே அழகா இருக்கற சதுரங்க வெறியன் கதைய மட்டும் ஏன் போட மாட்டேங்கறாரு..
    அதுலயும் பாருங்க, கதையோட தலைப்பு சதுரங்க வெறியனாம்.. வெறியனுக்கு மேல வெறியன் நான் இருக்கும் போது இன்னொரு வெறியனா..??!!

    இந்த எடி ஐயாவ நெனச்சா வெறி வெறியா வருது...!

    ReplyDelete
  78. நிலுவையில் உள்ள மூன்று ஸ்பைடர் கதைகளையும் ஹார்ட் பவுண்டில் டெக்ஸ் வில்லர் சைசில் வெளியிடுங்கள் சார்..
    அப்படியே சட்டித் தலையனின் பழைய கதைகளையும் டைஜஸ்டாக கொண்டு வர ஆவண செய்யுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  79. ///1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ? ///

    ஒன்றிரண்டு தேறிடும் சார்! ஆனா இது கொஞ்சம் விபரீத விளையாட்டுத்தான்! உதாரணத்துக்கு நம்ம ஸ்டீல் ஒரு பதிவப் போட்டு அதை நாம படிக்க வேண்டியதாச்சுன்னா நம்ம நிலைமை யோசிச்சுப் பாருங்க! :)

    ReplyDelete
    Replies
    1. நான் அன்னைக்கு லீவ்...

      Delete
    2. நான் ராஜினாமா!

      Delete
    3. //நம்ம ஸ்டீல் ஒரு பதிவப் போட்டு //

      கவித மழையில் நனைவோம், சகோ 😊😊😊

      Delete
    4. என்னங்க சகோஸ்
      மேலே பாருங்க, என்னமா ஒரு பாட்டு எழுதி உள்ளார், 😍😍😍

      Delete
    5. இப்போதான் கவனிச்சேன் சகோ! பின்றார்!! அவர் ஒரு பிறவிக் கவிஞர் தான்!

      Delete
  80. All issues read except three sir - Bouncer, Chik Bill (will do today) and that unfinishable Young TEX. 95% breezy reads sir ! Compared to last year where I had read only 50% of the books which also excluded the fatties except Phantom 2.

    However I am looking forward to Mandrake 2 ASAP sir !

    Then that SPIDER collection - he he he !

    ReplyDelete
  81. *ஸ்பைடர் மைண்ட் வாய்ஸ்*


    முத்து 500 வர போகுது...ஆனாலும் நாம எவ்ளோ பெரிய குற்ற சக்ரவர்த்தியா இருந்தாலும் நம்மள உள்ளே விட மாட்டாங்க...முத்து 40 ல தான் இந்த ஆசிரியர் என்னோட சமகால தோழர்களைதான் நிராகரிச்சுட்டாரு...500 ல் ஆவது புதுசு இளசுன்னு போடாம தெரிஞ்ச நண்பர்களை போட்டா ஓகே இல்லீன்னா ஆந்தை விழியாரை கடத்தி கொண்டு வர நானே வேண்டா வேண்டாம் பெல்ஹாமும் ,ஆர்டினியும் போதும் வேற வழி இல்ல..

    ReplyDelete
    Replies
    1. போட்டிக்கும் ஆச்சு...நம்ம எண்ணத்தையும் சொல்லியாச்சு ..டூ இன் ஒன்

      Delete