நண்பர்களே,
வணக்கம். முதல் தேதியில் பதிவோடு (தமிழ்) புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் கடந்த 2 வாரங்களாகவே தெருவை பெருக்கி வரும் நாக்கார் ஒத்துழைக்க மறுக்க, பின்னூட்ட வாழ்த்தோடு நேற்று நடையைக் கட்டும்படியாகிப் போனது ! அதனாலென்ன - இதுவுமே புத்தாண்டின் பொழுது தானே ? So உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் all !! நலம் + வளம் + கரை புரண்டோடும் மகிழ்வு - இல்லங்கள்தோறும் குவிந்திடட்டும் !
Without a doubt - ஏப்ரல் ஒரு ஸ்மாஷ் ஹிட் மாதமே & அதன் நடுநாயக நாயகர் - ஆப்பிள் கன்னத்து சார்லி தான் ! டெக்ஸ் & ஸாகோர் கரம் கோர்க்கும் landmark இதழ் கூட இரண்டாமிடம் பிடிக்க, ஒரு க்ளாஸிக் நாயகர்.....அதுவும் இக்ளியூண்டு star power கூட இல்லாததொரு நாயகர், புன்னகையோடு உசக்கே குந்தியிருப்பதை வியப்போடே பார்க்கிறேன் ! And கதையின் நாயகரையும்...கதைகளையும் கொண்டாடும் முன்பாகவே அந்த சைசுக்கு கிட்டியுள்ள வரவேற்பானது மெய்யாலுமே மிரட்டல் ரகம் ! அதன் தாக்கம் எதிர்பாரா இடங்களிலெல்லாம் எதிரொலித்திருப்பது தான் கடந்த வாரத்தின் highlight !
"ட்ரிங்..ட்ரிங்...லயன் ஆபீசுங்களா ? சொவமா இருக்கீகளா ? ஏலே இந்த மாசத்து புது பொஸ்தவம் வந்திருக்காமே....அத கொஞ்சம் போட்டு வுடுறியளா ?" - இது ஏஜெண்ட் !
"சார்...அது வந்து.....பழைய பாக்கி 7 மாசத்துக்கு மேலா நிற்குது..... !" என்னமோ நாம் கடன் கேட்பது போல், தயங்கியபடியே இழுப்பது - நம்மாட்கள் !
"தோ...இன்னிக்கி பாத்து போட்டு விடுறோமலே !" - இது ஏஜெண்ட் !
"லொஜக்" - இது GPay !
"சார்...பாக்கியில் பாதி அமௌன்ட் அனுப்பி இருக்கார்....புது புக் கேக்குறார்....போட்டு விடவா ?" - இது நம்மாட்கள் - என்னிடம் !
"சார்லி வேண்டாம்...! விலை கூடுதல் ; திரும்ப பில் ஏறிடும்...! பாக்கி 2 புக்ஸ் மட்டும் போட்டு விடுங்க...!" - இது அடியேன் !
2 நாட்கள் கழித்து மறுக்கா : "ட்ரிங்...ட்ரிங்...ஏ பொஸ்தவ பண்டலிலே குறையுதாமே மக்கா ? இந்த மாசம் மூணு பொஸ்தவமாம்லே ? ரண்டு தான் வந்திருக்கு ?" - இதுவும் ஏஜெண்ட் தான் !
"அது வந்து சார்...அந்த புக் ஸ்பெஷல் புக்...கொஞ்சமா தான் பிரிண்ட் பண்ணியிருக்கோம்...அதனாலே..." - இந்த இழுவையும் நம்மாட்கள் தான் !
"சரி...சரி...இன்னிக்கி முன்பணம் போட்டு வுடுறேன்....இன்னிக்கே டிராவல்ஸிலே அனுப்புங்க !" - again ஏஜெண்ட் !
"சரி சார்..! ஆனா இந்த புக்கில் ரிட்டர்ன் எடுக்க மாட்டோம்...நீங்க எவ்ளோ விக்குமோ - அவ்ளோ மட்டும் வாங்கிக்கோங்க !" - this நம்மாட்கள் !
"அத நான் பாத்துக்குறேன்லே....நீங்க இன்னிக்கே டிராவல்ஸில் போட்டுப்புடுங்க !" - this ஏஜெண்ட் !
பல மாதங்களாய் பணத்தைக் கண்ணிலேயே காட்டியிருக்கா முகவர் கூட "சார்லி" என்ற பெயருக்கோசரம் மறுபடியும் நமது லைனுக்கு வருவார் - என்று யாரேனும் என்னிடம் இந்த ஏப்ரலுக்கு முன்பாக சொல்லியிருப்பின், 'அண்ணாச்சி முன்கூட்டியே ஏப்ரல் fool' பண்றாக !' என்றபடிக்கே நகர்ந்திருப்பேன் ! பொதுவாய் இது போலான நிகழ்வுகளெல்லாம், ஸ்பைடருக்கும் ; டெக்ஸ் வில்லருக்கும் ; XIII-க்கும் மாத்திரமே நடக்கப் பார்த்திருக்கிறோம் ! சென்றாண்டு SMASHING '70s அறிமுகம் கண்ட போது "வேதாளர் ஸ்பெஷல் -1" இது போன்ற வரவேற்பினைப் பார்த்திருந்தது ! அதன் பின்பாய் இது போலானதொரு பரபரப்பு சார்லியின் உபயமே !
சார்லி என்ற நாயகனுக்கும், அழகான நேர்கோட்டுக் கதைகளைத் தந்த அதன் பிதாமகருக்கும், பிசிறில்லாத மொழிபெயர்ப்புக்கு நமது கருணையானந்தம் அவர்களையும் தாண்டி அடுத்தபடியாக நான் நன்றி சொல்ல வேண்டியது - இந்த இதழைப் பார்த்த பிற்பாடு கமெண்ட்களால் தெறிக்க விட்ட உங்களுக்குமே தான் ! பாசிட்டிவ் கமெண்ட்களால் இங்கேயும் சரி, FB / வாட்சப் க்ரூப்களிலும் சரி, நீங்கள் போட்டுத்தாக்கியுள்ள பட்டாசுகளை நான் முழுசுமாய்ப் பார்த்திராது போயிருக்கலாம் தான் ; ஆனால் நீங்கள் செய்து வரும் ஆர்ப்பரிப்புகளின் பலன்கள் விற்பனையினில் ஸ்பஷ்டமாய் பிரதிபலிப்பதை பார்த்தே வருகிறேன் !
அப்புறம் இம்முறை MAXI சைஸினை நாம் புறக்கணித்ததன் பொருட்டு, கண்கள் எக்கச்சக்கமாய்ச் சிவக்க, "இந்த ஆணி நீ பிடுங்கியிருக்கவே தேவை இல்லாத ஆணி !! இத்தினி இன்ச் நீளத்தில, இத்தினி கனத்தில ; இன்ன நிறத்தில, இந்த ஆங்கிளிலே ; இன்ன மெரி சுத்தியலைக் கொண்டு தான் ஆணியடிச்சிருக்கணும் நீ !" என்ற விளக்கவுரைகளுடனான பாலபாடங்கள் நமக்கு இன்னொரு பக்கம் எடுக்கப்பட்டதையுமே நீங்கள் அறிந்திருப்பீர்கள் ! அது சார்ந்த விவாதங்களும், சர்ச்சைகளுமே பரபரப்பையும், விற்பனைகளையும் இன்னொரு ரவுண்டு தூக்கி விட்டதென்பேன் ! பற்றாக்குறைக்கு, "அடுத்து இன்னா திட்டம் கண்ணு ? இதையே பாக்கெட் சைசில் போட்டாக்கா 800 பக்கம் வரும்லே ?" என்ற ரவுசும் எங்கேயோ பதிவாகியிருக்க, "அடங்கொன்னியா....இந்த அகுடியா உனக்கு தோணாம போச்சே ?" என்று என்னை நானே நொந்து கொள்வதும் நடந்தது ! பாடம் எடுக்க விழையும் நண்பர்களின் ஆர்வம் புரிகிறது தான் ; ஆனால் பல்ப்பத்தைக் கையில் தந்து எழுதக் கற்றுத் தரும் முனைப்பில், சில பல அடிப்படைகளை மறந்து விட்டார்களென்பது தான் சிக்கலே ! "MAXI சைசில் போடாங்காட்டி, வெளங்கவே வெளங்காதென்று தொடை தட்டியபடிக்கே கொடி பிடிப்போருக்கு, சின்னதொரு refresher to memories :
*இது வரையிலுமான 5 க்ளாஸிக் ஆல்பங்களை MAXI சைசில் வெளியிட்டு வந்தவனும் நான் தான் ! இன்னமுமே அந்த சைஸை பார்த்துப் பார்த்துப் பெருமூச்சிட்டு வருபவனும் நான் தான் !
*"MAXI சைஸ் வேணாமே ப்ளீஸ் ? படிக்க சுகப்படவில்லை" என்று தொடர்ச்சியாய் நண்பர்கள் கோரிய போதும் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாது பிடிவாதம் காட்டியவனும் நானே !
*பரீட்சார்த்தமாக ஒரேயொரு சார்லி ஸ்பெஷலை மட்டும் இந்த half MAXI சைசில் தயாரிப்பதென்ற எண்ணத்துடன், தொடரவிருக்கும் ரிப் கிர்பி ஸ்பெஷல் இதழினை எப்போதும் போலவே MAXI சைசுக்கென திட்டமிட்டு, அதன் அட்டைப்படத்தையும் MAXI சைசில் தயார் செய்து வைத்திருப்பதும் நானே !
*அட...அதற்கடுத்த "விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷலின் 3 கதைகளுமே MAXI கூட சைசில் தயாராகி உள்ளன !
*இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் !
*ரசனைசார் விஷயங்கள், சலசலக்கும் நீரோடையைப் போல என்றைக்குமே ஓரிடத்தில் நில்லாது பயணித்துக் கொண்டேயிருக்கும் சமாச்சாரம் ! So நேற்றைய ரசனைகளோ, அவை சார்ந்த தீர்மானங்களோ சோழ ராஜ்ஜியங்களின் கல்வெட்டுக்களாய் என்றென்றும் சாஸ்வதமாய் இருத்தல் கட்டாயமல்ல என்பதை உணர்ந்து, எனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்வது ஒரு தெய்வ குற்றம் ஆகிடாதென்று புரிந்து கொண்டிருப்பதும் நானே !
*And வழக்கம் போலவே "கண்ணாலம் தான் கட்டிக்கிட்டு மூ.ச.போலாமா ? இல்லே மூ.ச. போயி கண்ணாலம் தான் கட்டிக்கலாமா ?" என்று பாட்டுப் பாட வேண்டியிருப்பவனும் நானே !
இந்த "சர்வமும் நானே" விளக்கமானது, தொடரும் நாட்களில் புதிய பல விளக்குமாற்று சாத்துக்களிலிருந்து என்னைக் காத்திடுமென்ற அபத்த நம்பிக்கைகளெல்லாம் நஹி ; சும்மா ஒரு டைம் பாஸுக்கோசரம் சொல்லி வைத்தேன் !
Moving on, கிட்டத்தட்ட கடந்த 3 வாரங்களாகவே தொடர்ந்திடும் பெர்சனல் சமாச்சார நோவுகள் ஒரு பக்கமும், ஆன்லைன் புத்தக மேளாவின் ரவுசுகள் இன்னொரு பக்கமும் துவாரபாலகர்களாய் நின்றிட, அவர்களுக்கு மத்தியில் ஒரு வாசலை ; நடைபாதையைக் கண்டு பிடிக்க குட்டிக்கரணங்கள் டஜன்கணக்கில் அரங்கேறி வருகின்றன ! "இலட்சியம் ஒரு டஜன்....நிச்சயம் முக்கால் டஜன்" என்ற tag line கேட்க செமத்தியாய் இருப்பதென்னவோ நிஜம் தான் ; ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்குள் நம்ம XIII-க்கே பழைய ஞாபகங்களெல்லாம் வந்து விடும் போலும் ! Phewwwwwwwww ! இதில் பிரதான கொடுமையே, குவிந்துள்ள எக்கச்சக்கத்திலிருந்து - எதைக் களமிறக்குவது என்ற குயப்பம் தான் ! எதையேனும் ஒரு கதையைத் தேர்வு செய்வது ; அதனுள் பணியாற்றத் துவங்குவது ; பேனா பிடிக்கும் போது அது கொஞ்சமாய் ஜவ்வு இழுக்கும் பட்சத்தில், இன்னொன்றைத் தேர்வு செய்து அதற்குள் குப்பை கொட்ட ஆரம்பிப்பதென ஓடிய பொழுதுகளுக்கு ஒரு வழியாய் இப்போது தான் சுபம் போட்டுள்ளோம் ! புக்ஸ் பட்டியலும் ரெடி ; மெயினான இதழ்களுமே (என்னளவிற்கு) இன்னமும் 2 மாத்திரமே பாக்கி ! இன்னும் 2 நாட்கள் கவனத்தைச் சிதற விடாது, பணியாற்றிட இயன்றால், அப்புறம் அச்சு ; பைண்டிங் என work on the ground தான் பாக்கி ! புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக !
அப்புறமாய் உங்களில் பலர் ஏற்கனவே FB / வாட்சப் க்ரூப்களில் பார்த்திருக்கக்கூடியதொரு சமாச்சாரத்தின் மீது நம்மாலான வெளிச்சமுமே :
'தல' டெக்ஸ் நம்மிடையே ஒரு மூத்த சகோதரரைப் போல கடந்த 38 ஆண்டுகளாய் உலவி வருவதில் no secrets ! மாயாவிக்குப் பின்னதாய் இத்தனை நெடும் காலத்துக்கு தனது star power-ஐ தக்க வைத்திடும் ஆற்றல் நமது இரவுக் கழுகாரைத் தவிர்த்து வேறு எந்த நாயகருக்கும் கிடையாதென்பதிலுமே no secrets தான் ! இந்த ஜாம்பவான் நம் மத்தியில் உலவி வந்துள்ள பொழுதுகளை, அவர் முத்திரை பதித்துள்ள இதழ்களையும் பட்டியல் போட்டது மாத்திரமன்றி, டெக்ஸ் & டீம் சாகசம் செய்துள்ள ஒவ்வொரு இதழின் அட்டைப்படத்தையுமே போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர் நண்பர்கள் ! லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! உண்டான வேலையைப் பார்க்கவே மேலெல்லாம் நோவும் இந்தக் காலத்தில் ஒரு காமிக்ஸ் நேசத்தினை சிலாகிக்க நண்பர்கள் எடுத்துள்ள மெனெக்கெடல்கள் மிரட்டல் ரகம் ! தலைவணங்குகிறோம் சார்ஸ் !!
இந்த Monumental பணி வெளிச்சத்துக்கு வந்திருக்கும் வேளையினில், சில பல டெக்ஸ் கேள்விகளை முன்வைக்காது போகலாமோ ? So here you go guys :
1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
Before I sign out - சில ஜாலி updates :
**தல' புராணமாகவே இந்தாண்டு தொடர்ந்திடாது ; நாங்களும் இருக்கோம்லே !!" என்று மார்தட்ட நம்ம டைகரார் தயாராகிப்புட்டாருங்கோ ! ஒரு வழியாக இளம் டைகர் தொகுப்பின் மொழியாக்கம் டெக்ஸாசிலிருந்து சுடச் சுட வந்தாச்சு ! இங்கே நண்பர் மகேந்திரன் பரமசிவத்துக்கு ஒரு ரவுண்ட் செமத்தியான applause தந்திட நாம் கடமைப்பட்டுள்ளோம் ! இந்தத் தொடருக்குப் பேனா பிடிப்பது எத்தனை பகீரதப் பிரயத்தனம் என்பதை நானறிவேன் ! Thanks a ton sir !! (உங்களுக்கான சின்ன சன்மானத்தில் இக்கட கடா விருந்துக்கு ஏற்பாடு செஞ்சுப்புடலாமோ ? மச்சான்காரர்கிட்டே கேட்டுப்புடலாமா ? ) So நல்லதொரு நாளாய்ப் பார்த்து தட்டை மூக்காரை உள்ளாற இழுத்துக்க all is ready ! ஆரம்பிக்கலாமுங்களா ?
**அப்புறம் புதுசாயொரு கார்ட்டூன் ஜோடி சிக்கியுள்ளனர் ! இவர்களின் பாணியோ சற்றே மாறுபட்டது ! "கார்ட்டூனா.....ஆஆஆ....." என்ற விசனக்குரல்கள் மாத்திரம் உரக்க ஒலிக்காதிருப்பின், இவர்களை ஒரு சுபயோக சுபமாதத்தில் தமிழ் பேசச் செய்திடலாம் தான் ! What say guys ?
**புத்தக விழா கேரவனின் அடுத்த ஸ்டாப் : முத்து நகர் ! தூத்துக்குடியில் ஏப்ரல் 21 முதல் துவங்கும் விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் guys !
**அப்பாலிக்கா இந்தக் கி.நா. ராப்பர் எப்படியுள்ளது folks ?
First
ReplyDeleteSecond?
ReplyDeleteS60 இந்த முறை சந்தா நான் கட்டியதற்கு இரண்டே காரணங்கள்: ஒன்று FOMO 🤷♂️, இரண்டு விங் கமாண்டர். Charlie எல்லாம் நான் கேள்வி பட்டது கூட இல்லை. ஆனால் Charlie speciall book கிடைத்த இரண்டு நாட்களில் பாதி புத்தகம் படித்திருக்கிறேன் என்றால் atleast 50% காரணம் அந்த adipoli சைஸ் தான். Maxi படிக்க எவ்வளவு சிரமம் என்பதை இந்த புத்தகம் கைகளில் தவழும்பொழுது தான் தெரிகிறது. Thank you for deciding to continue with that. I can't wait to meet wing commander in this size
DeleteYes for new cartoon
DeleteFOMO?!
DeleteFear of Missing Out
Deleteவந்துட்டேன்.
ReplyDelete3வது பாஸ்...
ReplyDelete🌹
ReplyDeletePresent sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஅட்டகாசமான பதிவு சார். இதை இதை இதைத் தான் உங்களிடம் நான் எதிர்பார்த்தேன்.
ReplyDeleteபுது கார்ட்டூன் ஜோடிக்கு double ok
ReplyDelete1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1. கார்சனின் கடந்த காலம்.
2. கழுகு வேட்டை.
3. நிலவொளியில் நரபலி
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1. பழி வாங்கும் புயல்
2. சைத்தான் சாம்ராஜ்யம் பழைய அட்டை
3. தீபாவளி மலர் 2020
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
என்னிடம் கண்டிப்பாக ஒரு 140இருக்கும்
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
இந்த கேள்வியை சாய்ஸ் இல் விட்டு விடுகிறேன் சார்.
// இந்த கேள்வியை சாய்ஸ் இல் விட்டு விடுகிறேன் சார். //
Deleteஅதெல்லாம் முடியாது. ஏதேனும் சொல்லவும். காமிக்ஸ் ல் பழம் தின்று ஏப்பம் விட்டவர். இப்படி சொல்லலாமா
ஒரு வேளை நண்பருக்கு ,அவரின் சங்கத்திலிருந்து NOC சான்று கிடைக்கவில்லையோ. பொறுத்திருந்து பார்ப்போம்
Deleteநீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்
Delete// ஒரே கதை டெம்ப்ளேட், பல அழகான அட்டை படங்கள்... //
நன்றி டாக்டர் AKK
வணக்கம் நண்பர்களே
ReplyDelete// MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் ! //
ReplyDeleteசபாஷ்!!! சரியான முடிவு!!!
இதை நான் ஆமோதிக்கிறேன்!
Delete50/50
Deleteவணக்கம் உறவுகளே!
ReplyDeleteமதிய வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏💐💐💐🌞🌞🌞
ReplyDeleteMaxi is perfect size for reading a comics.hope u consider maxi s too
ReplyDeleteகார்ட்டூன் கதைக்கு double thumbs up.
ReplyDeleteவணக்கம் 🙏
ReplyDelete1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1. கார்சனின் கடந்த காலம்.
2. டிராகன் நகரம்
3. சர்வமும் நானே
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1. சர்வமும் நானே
2. ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
3. புத்தம் புது பூமி வேண்டும்
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
154உம் இருக்கிறது
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
ஒரே கதை டெம்ப்ளேட், பல அழகான அட்டை படங்கள்...
ஹிஹிஹி
Deleteஅட்டைப் படம் இதுவரை வந்ததிலேயே டாப்
ReplyDeleteடசன்ல ஒன்னா சார்
Delete154 இதழில் எனக்கு பிடித்த கதை!! தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு முதல் முதலில் அறிமுகமான 1/தலைவாங்கி குரங்கு!!
ReplyDeleteஇன்றும் சரி இன்றும் சரி
2/டிராகன் நகரம்.
ஒரு மாஸ் ஹிட் மாஸ் கதை
3/கார்சனின் கடந்த காலம்!
1....1... கார்னிஷ் கடந்த காலம்
ReplyDelete2... நிறைய
3. நிறைய
.....
2....
1. தலை வாங்கிக் குரங்கு...
2... நிறைய
3... நிறைய
3....
4.... நம்மால் முடியாத நியாயங்கள திமிரா நடைமுறை படுத்துவது....சொல்லி பாருன்னு எதிரே நிற்பவன் கடவுளின் பவரோட இருந்தாலும் தாடைய பேப்பது
இல்லாதவை....
Delete1. அதிரடித் கணவாய்
2.என்னோடு யுத்தம்
3. மரண நடை
4. எரிந்த கடிதம்
5. இரத்த நகரம்
6. மரண தூதுவர்கள்
7. மந்திர மண்டலம்
8. மெக்சிகோ படலம்
இவை மட்டும் கையிலில்லை(146)
பிடித்ததுல தலைவாங்கியாருக்கு இரண்டாமிடம்
Deleteஇரண்டாமட்டை அன்று சொரசொரப்பா வந்து மிரட்டிய ஒரே அட்டையான பழி வாங்கும் பாவை
Delete1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1. கார்சனின் கடந்த காலம்.
2. டிராகன் நகரம்
3. பழி வாங்கும் புயல்
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1. கார்சனின் கடந்த காலம் பழைய 2 அட்டைகள்
2. தீபாவளி மலர் 2020
3. ஒரு காதல் யுத்தம்
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
என்னிடம் 154ம் உள்ளது
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
தெளிவான நேர் கோட்டுக் கதைகள், நேர்மை, துணிவு, தர்மம் வெல்லும் என்று நம்பிக்கையை கொடுப்பது.
1. இருளின் மைந்தர்கள்
ReplyDelete2. சர்வமும் நானே
3. நிலவொளியில் நரபலி
Vathachu
ReplyDelete1.கார்சனின் கடந்த காலம்.
ReplyDelete2. பழிவாங்கும் பாவை.
3.பந்தம் தேடிய பயணம்.
Around 100-110 Tex Villar books.
ReplyDeleteReason for long standing is simple, he stands on behalf of justice, quick decision, action
Me வந்தாச்சுங்கோ..😍😍😍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// சும்மா ஒரு டைம் பாஸுக்கோசரம் சொல்லி வைத்தேன் ! //
ReplyDeleteஹா ஹா, இம்மாத சார்லி இதழ் ஒரு டைரியைப் போல சிக்கென்று அருமையாக இருந்தது. மற்றபடி அந்த சைஸ் மாற்றத்தின் போது நடந்திருக்கக் கூடிய சேதாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் போக விரும்பாமல், டைரிக்கு உண்டான மரியாதையைச் செய்து விட்டேன் - மெதுவாகப் படிக்க முயற்சிக்க வேண்டும். மற்றபடி, சார்லியின் முகத்தைப் பார்த்தாலே எனக்கு இந்திரஜால் தான் ஞாபத்திற்கு வந்து தொலைக்கும் என்பதால், வண்ணக் கலரில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.
//3 வாரங்களாகவே தொடர்ந்திடும் பெர்சனல் சமாச்சார//
புத்தக விழாக்கள், ஒரு டஜன் இதழ்கள் என்றெல்லாம் குழம்பிக் கொள்ள வேண்டாம் சார்... முடிந்தால் சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள், சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
//வண்ணக் கலரில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது//
Deleteஎனக்கும்தான் நண்பரே
நா வந்துட்டேன்.
ReplyDelete////So நல்லதொரு நாளாய்ப் பார்த்து தட்டை மூக்காரை உள்ளாற இழுத்துக்க all is ready ! ஆரம்பிக்கலாமுங்களா ?/////
Deleteஇப்பதாங்க உண்மையானதிருவிழா.
அட்ரா சக்கண்ணாணாம்.
அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஜர்
ReplyDeleteசூப்பர் நன்றி கலந்த வாழ்த்துகள் மகி
ReplyDeleteடெக்ஸ் வில்லர்
ReplyDeleteடாப் 3
1.சாத்தான் வேட்டை
2.கார்சனின் கடந்த காலம்
3.லயன் 250
எனக்கு பிடித்த Top 3 கதை:
ReplyDelete1) தலை வாங்கிக் குரங்கு
2) பழிக்குப் பழி
3) கழுகு வேட்டை / கார்சனின் கடந்த காலம்
டாப் 3 அட்டைப்படம்
1) தலை வாங்கிக் குரங்கு
2) பவளச் சிலை மர்மம்
3) வைக்கிங் தீவு மர்மம்
154 இதழ்களில்:
145 - 148 உள்ளன.
4) ரசனைக்கு ஏற்றவாறு நன்றாக உள்ளதால்.
சார் இலைய போட்டாச்சு....ரொம்ப பசிக்குது....விருந்தை இரவு வரை நீடிக்காம மாலையே போடுங்கள்
ReplyDelete// Without a doubt - ஏப்ரல் ஒரு ஸ்மாஷ் ஹிட் மாதமே & அதன் நடுநாயக நாயகர் - ஆப்பிள் கன்னத்து சார்லி தான் ! //
ReplyDeleteகேட்பதற்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது சார
மீண்டும் டிடெக்டிவ் சார்லியை எங்களிடையே கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு தான் நாங்கள் மிகப்பெரிய நன்றியை சொல்லி கொண்டாட வேண்டும் எடிட்டர் சார்.
டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் அமோக வெற்றி அலை இன்னும் ஓயவில்லை. தாங்கள் மீண்டும் அடுத்த பதிவிலும் தொடர்ந்து எழுதக்கூடிய ஒரு சூழலை உருவாகலாம் எடிட்டர் சார்
டெக்ஸ் டாப் 10 கதைகள்:
ReplyDelete1: லயன் காமிக்ஸ் இல் என் முதல் கதையான பாலைவன பரலோகம்.
2: மரண முள்.
3: பழிவாங்கும் புயல்
////நண்பர் மகேந்திரன் பரமசிவத்துக்கு ஒரு ரவுண்ட் செமத்தியான applause தந்திட நாம் கடமைப்பட்டுள்ளோம் !////
ReplyDeleteகோடாலி சங்க தலைவரின் சார்பாக, சங்க செலவில் ஒரு பூங்கொத்து ரெடி.
/////உங்களுக்கான சின்ன சன்மானத்தில் இக்கட கடா விருந்துக்கு ஏற்பாடு செஞ்சுப்புடலாமோ ? மச்சான்காரர்கிட்டே கேட்டுப்புடலாமா ? ////
ReplyDeleteஆடலும் பாடலுமோட....
57th
ReplyDeleteதமிழ் புத்தாண்டு பதிவு வரல்ல..
ReplyDeleteடெக்ஸ் டாப் 3 அட்டை படம்
ReplyDelete1.நடமாடும் நரகம்
2.எமனுடன் ஒரு யுத்தம்
3.தீபாவளி மலர் ( எமனின் வாசலில்)
டெக்ஸ் புத்தகம் கையில் உள்ளது 83 இருக்கிறது
ReplyDeleteசூப்பர் தோழரே
Delete3.பழிவாங்கும் பாவை (1987) அட்டை ஒரு texture எபக்டோடு வந்தது எத்தனை பேருக்கு நினைவு உள்ளது ?
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் காமிக்ஸ் சகோதரர்களே
// இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் ! //
ReplyDeleteஎந்த சைஸில் இதழ் வந்தாலும் வாங்கத்தான் போகிறேன் சார்,இருப்பினும் இந்த சைஸ் பிடிச்சிருக்கு அவ்வளவுதான்,மற்றபடி இதுவரை 5 கதைகள் சார்லியில் படிச்சாச்சி,படிச்சவரை எல்லா கதைகளும் நிறைவே,மெல்லிய நீரோடை போல ஆர்பாட்டம் இன்றி கதை நகர்கிறது,சார்லி போன்ற மென்மையான துப்பறியும் ஹீரோவிற்கு ஏற்றாற் போல கதைக் களம் அமைத்திருப்பதும் ஒரு பலம் என்று நினைக்கிறேன்...
பழைமை நெடிகள் கூட பெரிதாய் எங்கும் தட்டுபடவில்லை...
என்ன ஆங்காங்கே தட்டுப்படும் எழுத்துப் பிழைகள் மட்டும் சிறு உறுத்தலாய் தெரிந்தது...
சார்லி ஓகே,ஓகே இரகம்தான்...
// Moving on, கிட்டத்தட்ட கடந்த 3 வாரங்களாகவே தொடர்ந்திடும் பெர்சனல் சமாச்சார நோவுகள் ஒரு பக்கமும், ஆன்லைன் புத்தக மேளாவின் ரவுசுகள் இன்னொரு பக்கமும் துவாரபாலகர்களாய் நின்றிட //
ReplyDeleteகடினமான தருணங்களை விரைவில் கடந்து வாருங்கள் சார்...
// அப்பாலிக்கா இந்தக் கி.நா. ராப்பர் எப்படியுள்ளது folks ? //
ReplyDeleteமந்திரமில்லே,மாயமில்லே...திகிலடிக்குது சார்...
1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1.கார்சனின் கடந்த காலம்,
2.வல்லவர்கள் வீழ்வதில்லை,
3.டைனமைட் ஸ்பெஷல் (டெக்ஸ் 70)
4.(A)சர்வமும் நானே.
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
சொல்லத் தெரியலை...
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
தோரயமாக 100 வரை இருக்கலாம்,முதல் 50 வெளியீடுகளில் பெரும்பான்மையானவை இல்லை...
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
நம்மில் இருக்கும் ஹீரோயிசத்தை,வெளிப்படுத்த விரும்பும் சாகஸங்களை, ஒரு பாத்திரம் வலுவாக தொடர்ந்து செய்து வருவதால் இருக்கலாம்,ஒருவகையில் டெக்ஸின் பாத்திர வடிவமைப்பு நம்மில் பலருடைய மனப்பிம்பத்தின் வெளிப்பாடுதான்...
+18 துளியும் இல்லாததால். நேர்கோட்டு கதைகள். தீயவர்கள் தண்டிக்க படுவார்கள் என்ற நீதி நிலைநாட்டப் படுவதால்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅப்புறம் அடி உதை குத்து என்று நம்ம பார்ட்டி கொடியவர்களை பந்தாடும் போது நம்மையும் அனுமதிப்பதால்.
Delete👌
Delete// தீயவர்கள் தண்டிக்க படுவார்கள் என்ற நீதி நிலைநாட்டப் படுவதால். //
Deleteஉண்மை...
// புத்தக விழா கேரவனின் அடுத்த ஸ்டாப் : முத்து நகர் ! தூத்துக்குடியில் ஏப்ரல் 21 முதல் துவங்கும் விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் guys ! //
ReplyDelete22 மற்றும் 23 ஆன்லைன் திருவிழாவிற்கு ஆவலுடன் வெயிட்டிங் சார்...
நானும் நானும். அதும் குற்ற நகரம் கல்கத்தா ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது.
Deleteயெஸ்...
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteநம்ப Ancient கல்கத்தா பற்றிய கதை Bonelli ல் இருந்தா?..😃
Wow..😍❤Super Sir..👍👌💪
உள்ளேன் ஐயா..!!
ReplyDelete///இங்கே நண்பர் மகேந்திரன் பரமசிவத்துக்கு ஒரு ரவுண்ட் செமத்தியான applause தந்திட நாம் கடமைப்பட்டுள்ளோம் ! இந்தத் தொடருக்குப் பேனா பிடிப்பது எத்தனை பகீரதப் பிரயத்தனம் என்பதை நானறிவேன் ! Thanks a ton sir !///
தெய்வ மச்சான்...!!!
///அப்புறம் புதுசாயொரு கார்ட்டூன் ஜோடி சிக்கியுள்ளனர் ! இவர்களின் பாணியோ சற்றே மாறுபட்டது ! "கார்ட்டூனா.....ஆஆஆ....." என்ற விசனக்குரல்கள் மாத்திரம் உரக்க ஒலிக்காதிருப்பின், இவர்களை ஒரு சுபயோக சுபமாதத்தில் தமிழ் பேசச் செய்திடலாம் தான் ! What say guys ?////
ReplyDeleteதயவுசெஞ்சி யோசிக்காதிங்க சார்.. தைரியமா களமிறக்கி விடுங்க..!
இல்லேன்னா சிவகாசியில தண்ணிபஞ்சம் தலைவிரிச்சாடட்டும்.. அந்தப் பக்கம் போயிறாதிகன்னு சொல்லி கார்ட்டூன் ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து... வருணபகவானுக்கு லஞ்சம் குடுத்துருவோம்..!
குற்ற நகரம் கல்கத்தா..
ReplyDeleteதலைவாங்கும் தேசம் கதைக்குப் பிறகு இப்போதான் இந்திய மண்ணில் ஒரு காமிக்ஸ் கதை நம்ம பேனர்ல பாக்ப்போறோம்னு நினைக்கிறேன்..!
😍😍😍😍😍😍😍😍😍
I think நவகாளி incident
Deleteஅது என்ன incident சார். நேரம் இருந்தால் கூறவும்.
Delete1. டெக்சின் டாப் 3 கதைகள்.
ReplyDeleteமனதுக்கு பிடித்த நெருக்கமான கதைகள் பல இருப்பதால் இதைப் பட்டியலிடுவது சிரமமே. இருந்தாலும், கார்சனின் கடந்த காலம், பழிவாங்கும் புயல், சாத்தான் வேட்டை எனக்குப் பிடித்த டாப் 3 கதைகள்.
2. டாப் 3 அட்டைப்படங்கள். இன்னும் மனதில் நிற்கும் முதன் முதலில் கடைகளில் தொங்கிய தலை வாங்கிக்குரங்கு (1), பழிவாங்கும் பாவை (112), பனிக்கடல் படலம் (141).
3. எல்லாமே இருக்கு.
4. ஏன்னா டெக்ஸின் வசீகரத்தை ஒரு வரியில் அடக்க முடியாது.
////லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! ////
ReplyDeleteஐயாயிரம் கைதட்டல்கள் மாமா விஜயராகவன் & Dr. Strange என்கிற ராஜேஷ்குமார் இருவருக்கும்...😍
மகிழ்ச்சி கிட் மாமா
Delete1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1. கார்சனின் கடந்தகாலம்
2. வல்லவர்கள் வீழ்வதில்லை
3. காதலும் கடந்து போகும்
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1. லயன் 250 *
2. சர்வமும் நானே
3. LMS
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
வெறும் 154 மட்டுமே..
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
Tex is Tex
Tex ஒரு வரியில்
Deleteசகலகலா வல்லவன்.
///சகலகலா வல்லவன்./// ஆமா..
Deleteஇன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் !
ReplyDeleteHappy இன்று முதல் Happy., 😊😊😊😊
எல்லோரும் ஹேப்பி...
Delete///அப்புறம் புதுசாயொரு கார்ட்டூன் ஜோடி சிக்கியுள்ளனர்
ReplyDeleteயாரங்கே இவர்களைப் பிடித்து அடைத்து வையுங்கள். வெளியே விடக்கூடாது. ஜாக்கிரதை^_^🌞🌞😄😄😄
கன்னியாகுமரியில் புத்தக கண்காட்சி வந்ததுன்னு கேள்விப்பட்டேன் நம்ம கேரவன் அங்க இருக்குமா..??
ReplyDeleteவேலைப்பளுவின் காரணமாக காலை முதல் இணையமே வராமல் இருக்க நண்பகல் பதிவு வந்துள்ளது என்பதையே சில நிமிடங்களுக்கு முன்னரே அறிந்து ஓடி வந்தேன்..
ReplyDeleteஅட்டகாசம் சார்..மகிழ்ச்சியை தந்த பதிவு
அமெரிக்க ஷெரீப்ன் மொழிஆக்கத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..
வாழ்த்துக்கள் ஷெரீப் அய்யா..
பாராட்டுகள் படித்த பின்னர் தாம் ஆமாம்
ஏன்னா நான் ரொம்ப ஸ்டிரிட்டு ஸ்டிரிட்டு ஸ்டிரிட்டு...
:-)
என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் ஆன்லைன் புத்தக திருவிழா வருதுன்னு ரொம்ப பில்டப் பண்ணி வச்சிருக்கேன் ப்ரண்ட்ஸ் எல்லாரிடமும் தோர்கல் வாங்குங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கேன் 😄😄😄
ReplyDeleteஆன்லைன் புத்தக திருவிழாக்கு வெறித்தன வெயிட்டிங்😉😊😊😊
1. நள்ளிரவு வேட்டை
ReplyDelete2. சாத்தன் வேட்டை
3. கார்சனின் கடந்த காலம்
ReplyDeleteரொம்ப செமத்தியான பதிவுங் சார்..
இத்தனை கடுமையான பணி நெருக்கடியில் இத்தனை அசாத்திய பதிவு போட்டுள்ளீர்கள்...ரொம்ப மகிழ்ச்சிங் சார்!
செம வேலை இன்று, வேலைக்கு இடையே சிலமுறை பதிவை மீண்டும் மீண்டும் படித்து ரிலாக்ஸ் பண்ணிப்கொள்ள இயன்றது.
தங்களின் வெளியீடுகள் மட்டுமல்ல பதிவும் நேர்கோடு, ப்ரீஸிரீடிங் தான் சார்...😍😍😍😍
////லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! உண்டான வேலையைப் பார்க்கவே மேலெல்லாம் நோவும் இந்தக் காலத்தில் ஒரு காமிக்ஸ் நேசத்தினை சிலாகிக்க நண்பர்கள் எடுத்துள்ள மெனெக்கெடல்கள் மிரட்டல் ரகம் ! தலைவணங்குகிறோம் சார்ஸ் !! ////
ReplyDelete----சார், சார் ரொம்ப பெரிய வார்த்தைகள்லாம் வேணாம் சார்🙏🙏🙏
1994ல 18வயசுல தான் லயன் காமிக்ஸ் நிறைய படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதற்கு சில காலம் முன்பு ராணி காமிக்ஸ்கள்தான் கொஞ்சம் பரிச்சயம்.... அப்போது சீனியர் நண்பர்கள் கிட்ட இரவல் வாங்கி படிக்க என்றே லயன் காமிக்ஸ் லிஸ்ட்டை டயரியில எழுதி வந்தேன்.. அது இத்தனை ஆண்டுகாலம் கழித்து பல பட்டியல் போட உதவுது.
Deleteமுன்பெலாம் லயன்ல ஒரு தபா பெயர் வந்தா போதும் னு இருந்த காலங்கள் மாறி இப்ப நிறைய முறை இடம்பெற முடிகிறது என்பதே ரொம்ப மகிழ்ச்சியான விசயம் சார்😍
பட்டியலில் இருந்தவைகளின் அட்டைபடங்கள் தேடி எடுத்து இணைத்து ஒரு மெகா தொகுப்பாக்கிய நண்பர் டாக்டர் ராஜேஷ்குமாரின் பணிதான் அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள் & பாராட்டுகள்💐💐💐💐
ஒவ்வொரு முறையும் மனச்சோர்வு நீங்க டெக்ஸ் கதைகளே உதவுகிறது. லாக்டவுனின் கடுமையைக் குறைத்து மனச்சிதைவாகாம காத்தது தங்களின் இதழ்களும், தங்களின் வசனங்களுமே!🙏🙏🙏
Delete+100
Deleteஅருமையான-அட்டகாசமான பதிவுசார்...
Deleteஅட்டவணையைப் பார்க்கும் போது ஒன்று இரண்டு கதை புத்தகங்கள்- தவறவிட்டுவிட்டது தெரிகிறது. ஆனால், நான் மறுபதிப்பு கேட்பவன் அல்ல.. ஒரே டெக்ஸ்-ஆனால் புதிது புதிதாய் - கதைக்களன்களின் மேல் உள்ள ஈர்ப்பே டெக்ஸை -
மேலும், ரசிக்கச் செய்கிறது.. தங்கள் உழைப்பிற்கு நன்றிகள்..சார்.
அட்டவணையை தயாரித்த_ ரசிகர்கள்-சேலம் Tex விஜயராகவன்-டாக்டர். ராஜேஷ்குமார்- அவர்களுக்கு-பெரிய நன்றிகள்..
Deleteஎப்போதோ படிச்சு இருந்தாலும் இன்னமும் பசுமையாக நினைவில் நிற்கும் டெக்ஸ் கதைகள் பல.
ReplyDeleteஅதில் மூன்று மட்டுமே பட்டியல்ல சொல்லனும்றதால
1) கார்சனின் கடந்த காலம்
(சிறு வயதில் படித்தபோதே அந்த பன்னாக் சிறு நகரமும், அப்பாவிகளின் அட்டூழியம் & கார்சினின் இளவயது காதல்...)
2) கொடூர வனத்தில் டெக்ஸ் 3 பாக கதை.
(இதில் அந்த அடர்ந்த காட்டுக்குள் டெக்ஸ் & கோ செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அங்கு ஏற்படும் அடிதடிகள், ராணுவ வீரனின் அந்த தியாகம் & நண்பணின் துரோகம்....
அதிலும் அந்த ராணுவ மேஜரை குத்து விடுவதை புகைப்படம் எடுக்கும் அந்த நபர் சல்லிவன்னு நினைக்கிறேன்... 😇😍
3) இரத்த ஒப்பந்தம் & தணியாத தணல்
(லிலித்தை சந்திப்பது ம் ஒரு மெல்லிய நூலிழை போன்ற காதலும்...
டெக்ஸ் லிலித்தை பற்றி கிட் கிட்ட "கிராண்ட் கென்யானின் சலசலக்கும் ஓடையை போன்ற கண்கள்..." அடடா என்ன வரிகள் 😍🤩)
இவைகள் தற்போதைய முதல் மூன்று.
டாப் 3 அட்டைப்படங்கள்:
Delete1) சர்வமும் நானே
2) டைனமைட் ஸ்பெஷல்
3) புதைந்து போன புதையல்
//// And கதையின் நாயகரையும்...கதைகளையும் கொண்டாடும் முன்பாகவே அந்த சைசுக்கு கிட்டியுள்ள வரவேற்பானது மெய்யாலுமே மிரட்டல் ரகம் ! அதன் தாக்கம் எதிர்பாரா இடங்களிலெல்லாம் எதிரொலித்திருப்பது தான் கடந்த வாரத்தின் highlight ! ///
ReplyDelete----யாஹீஹீஹீ...ஹீ.ஹீ... செம்ம நியூஸ் சார்...
துணிச்சலான முயற்சிக்கு செம வெற்றி வாழ்த்துகள் சார்💐💐💐💐
ரிஸ்க் எடுத்தாத்தான் ரஸ்க்குனு ஒன்ஸ் எகெய்ன் ப்ரூவ் ஆகிட்டது.
முழுக்க முழுக்க தங்களின் டைம்லி டிஸிஸன் செய்த மேஜிக்... இதற்கான ஓட்டிங் தளத்தில நடந்த போது நானெல்லாம் வெறும் வேடிக்கை பார்க்கும் அணியே, காரணம் முத்து காமிக்ஸின் மெதுநடை ஹீரோக்கள் சுத்தமாக படிக்க முடியலனு,நோ சந்தா பார்S60...
இதழ் வெளியாகி வாட்ஸ்ஆப்பில நண்பர்களது பரவலான மகிழ்ச்சியை பார்க்க பார்க்க புரிந்து போனது, மேக்ஸியை விட இதன் இலகுவான கையாளும் தன்மையின் பலம்.
ஷெரீப்பின் சார்லி புக்கை என் கடைக்கு கொண்டு வந்து கொடுத்து, 10நிமிடங்கள் இந்த புக்கின் பாஸிடிவ்களை சொல்லி, பாருய்யா இதன் லைட் வெயிட்டை என வியந்து பேசிய பேபி எ சுசியின் பாராட்டு, எதோ பண்ணீட்டீங்கனு புரிய வெச்சது.
புக்கை பார்த்துட்டு நானும் வியந்தே போனேன்... ஸ்டன்னிங் ஆன தயாரிப்பு, மயிலறகு போன்ற மெல்லிய எடை!
அப்பவே டெக்ஸாஸ்க்கு போன் பண்ணி மாப்பு ஷெரீப்கிட்ட பேசினோம்.
"யோவ் மாப்பு செமயா புக் , பிச்சிட்டாரு"- னு ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிடங்கள் புக்கின் அருமைகளை பேசிவியந்து போனோம்....
சார்லினா யாருனே தெரியாம இருந்த என்னையும் படிக்க வெச்சிட்டது, தங்களின் முயற்சி!!!
அபாரமான வெற்றி, தரமான தயாரிப்புக்கு......
///பல மாதங்களாய் பணத்தைக் கண்ணிலேயே காட்டியிருக்கா முகவர் கூட "சார்லி" என்ற பெயருக்கோசரம் மறுபடியும் நமது லைனுக்கு வருவார் - என்று யாரேனும் என்னிடம் இந்த ஏப்ரலுக்கு முன்பாக சொல்லியிருப்பின், 'அண்ணாச்சி முன்கூட்டியே ஏப்ரல் fool' பண்றாக !' என்றபடிக்கே நகர்ந்திருப்பேன்///
ReplyDelete_--ஹா...ஹா...இதான் சார்,இந்த ப்ரீ ப்ளோயிங் நடைக்குத்தான் சார் நாங்கள்லாம் அடிமைகள் ஆகிட்டோம்...இந்த எழுத்துக்களை காணத்தான் சார் நள்ளிரவிலும் இங்கே டேரா போட்டுள்ளோம். வியாழன் இரவே நாளை பதிவுக்கிழமை சார்பு கூவுறோம்.
புத்தகம் வாசிக்கிறோம்,, ரசிக்கிறோம் என்பதை தாண்டி,
எடிட்டர் &வாசகர்கள் இடையே ஒரு பிடிப்பான பந்தம் நீடிக்க பாலமாக இருப்பது தங்களின் இந்த நையாண்டி ஸ்டைலே!!!
எடிட்டர் என்பதை தாண்டி பலருக்கும் ரோல் மாடலாக இருப்பது இந்த எழுத்துக்களின் சொந்தக்காரர் ஆக தாங்கள் இருப்பதே.........
ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
ReplyDeleteடெக்ஸ் கதைகள் மன அழுத்தத்தை குறைக்கிறது
( உதாரணம் அக்கா இறந்து மூன்று நாட்கள் மிகவும் மன கஷ்டத்தையும் மன அழுத்தமும் என்னை வதைத்துக் கொண்டிருந்தது 5 ம் நாள் லயன் காமிக்ஸ் பார்சல் வந்தது நான் படித்தது சூது கொல்லும் டெக்ஸ் வில்லர் சாகஸம் கிளைமேக்ஸ் பாம் போட்டு வில்லன் கூட்டத்தையே சிதற விடும் போது எனனை அறியாமல் குதூகலத்துடன் மன அழுத்தம் விலகி ரிலாக்ஸாகி விட்டேன் )
அதே..அதே...😍😃😘😀👍👌💪💪💪❤💛
ReplyDeleteஎடி சார் உங்களின் நையாண்டி நடைக்கு இந்த தமிழ் காமிக்ஸ் வாசக உலகே அடிமை..💐💐🙏
// *இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் ! //
ReplyDeleteGood move sir. I like it.
///நீங்கள் செய்து வரும் ஆர்ப்பரிப்புகளின் பலன்கள் விற்பனையினில் ஸ்பஷ்டமாய் பிரதிபலிப்பதை பார்த்தே வருகிறேன் ! //// போட்டுத்தாக்கு.. போட்டுத்தாக்கு....
ReplyDeleteAthu
Delete// **புத்தக விழா கேரவனின் அடுத்த ஸ்டாப் : முத்து நகர் ! தூத்துக்குடியில் ஏப்ரல் 21 முதல் துவங்கும் விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் guys ! //
ReplyDeleteWow super sir. I reached Tuticorin today evening sir and I will be in here during our book fair.
// **அப்புறம் புதுசாயொரு கார்ட்டூன் ஜோடி சிக்கியுள்ளனர் ! இவர்களின் பாணியோ சற்றே மாறுபட்டது ! "கார்ட்டூனா.....ஆஆஆ....." என்ற விசனக்குரல்கள் மாத்திரம் உரக்க ஒலிக்காதிருப்பின், இவர்களை ஒரு சுபயோக சுபமாதத்தில் தமிழ் பேசச் செய்திடலாம் தான் ! What say guys ? //
ReplyDeleteWow super news. I love cartoons. Please release it early sir.
+5
Delete// **அப்பாலிக்கா இந்தக் கி.நா. ராப்பர் எப்படியுள்ளது folks ?//
ReplyDeleteSema sema. Online book fair graphic books cover is too good.
// லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! //
ReplyDeleteGood job doctor and Vijayaragavan.
தேங்யூ பரணி..
Delete////*"MAXI சைஸ் வேணாமே ப்ளீஸ் ? படிக்க சுகப்படவில்லை"///
ReplyDelete--- என்னுடைய கோரிக்கையும் இதுவேங் சார்...
வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கக் கூடிய மேக்ஸி சைஸ்ல முதல் சீசன்4, S70புத்தகங்கள் அப்படியே தூங்குது..ஒரு செல்ஃபி எடுத்ததை தாண்டி அதை கையில் வைத்து வாசிக்கும் எண்ணம் வரவேயில்லை; மேக்ஸி நமக்கானது அல்ல என்பது 100% சரியானது!
❤️
ReplyDelete////*இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் ! ///
ReplyDeleteஅட்டகாசம் சார்...👏👏👏👏👏👏
வரவேற்கிறேன் பெருமகிழ்ச்சியோடு....
இனி மற்ற பழைய ஹீரோக்களும் பட்டையை கிளப்புவதில் சார்லியை விஞ்சுவார்கள் என்பது திண்ணம்!
இனி நானும் கூட S60ஐ ஆவலோடு எதிர்பார்ப்பேன்.. இந்த அளவில் ரிப்,காரிகனை முற்றிலும் வாசிக்க இயலும்....
///இந்த "சர்வமும் நானே" விளக்கமானது, தொடரும் நாட்களில் புதிய பல விளக்குமாற்று சாத்துக்களிலிருந்து என்னைக் காத்திடுமென்ற அபத்த நம்பிக்கைகளெல்லாம் நஹி ; சும்மா ஒரு டைம் பாஸுக்கோசரம் சொல்லி வைத்தேன் ! ///
ReplyDelete_---மீண்டும் ஒரு குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள் சார்..
சீரியஸான விசயத்தின் முடிவில் ஸ்பான்டேனியஸாக ஜோக் அடிக்க இயலும் தங்களின் டைமிங் வியக்க வைக்கிறது் சார்.
காய்ச்ச மரம் தானே கல்லடி படும்?? என்பது மீண்டும்மீண்டும் நிரூபணம் ஆகிட்டே உள்ளது....
///புக்ஸ் பட்டியலும் ரெடி ; மெயினான இதழ்களுமே (என்னளவிற்கு) இன்னமும் 2 மாத்திரமே பாக்கி ! இன்னும் 2 நாட்கள் கவனத்தைச் சிதற விடாது, பணியாற்றிட இயன்றால், அப்புறம் அச்சு ; பைண்டிங் என work on the ground தான் பாக்கி ! புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! /// யாஹீஹீஹீ....ஹீ..ஹீ... அப்படி போடுங்க அருவாளை....
ReplyDeleteஆன்லைன் விழாவின் நாளுக்காக அதீத ஆவலுடன்....
1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
ReplyDelete1.பழிவாங்கும் புயல்
2.கார்சனின் கடந்த காலம்
3.கழுகு வேட்டை
2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1.தலை வாங்கி குரங்கு
2.பவளசிலை மர்மம்-மறுபதிப்பு
3.ஓநாய் வேட்டை
3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
154மே...((பழையனவற்றை சேகரிக்க கொஞ்சம் நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது)
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
""""TeX is comics; Comics is Tex"""
////இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
Delete154மே...((பழையனவற்றை சேகரிக்க கொஞ்சம் நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது)/////
அதனாலே தான் சேலம் டெக்ஸ் என்று உங்களை அழைக்கிறோம்.
///*தல' புராணமாகவே இந்தாண்டு தொடர்ந்திடாது ; நாங்களும் இருக்கோம்லே !!" என்று மார்தட்ட நம்ம டைகரார் தயாராகிப்புட்டாருங்கோ ! ஒரு வழியாக இளம் டைகர் தொகுப்பின் மொழியாக்கம் டெக்ஸாசிலிருந்து சுடச் சுட வந்தாச்சு ! இங்கே நண்பர் மகேந்திரன் பரமசிவத்துக்கு ஒரு ரவுண்ட் செமத்தியான applause தந்திட நாம் கடமைப்பட்டுள்ளோம் ! இந்தத் தொடருக்குப் பேனா பிடிப்பது எத்தனை பகீரதப் பிரயத்தனம் என்பதை நானறிவேன் ! Thanks a ton sir !!///
ReplyDeleteThe news of the year......😍
போட்டு தாக்கு மாப்பு👏👏👏👏
அப்படியே அந்த இளமையில்கொல்- பாகம் 2&3- போட்டுபுட்டா இளம் டைகர் எல்லாம் கலராகிடும் சார்
///அப்படியே அந்த இளமையில்கொல்- பாகம் 2&3- போட்டுபுட்டா இளம் டைகர் எல்லாம் கலராகிடும் சார்////
Deleteஆமாங்கோ ..எடிட்டர் சார்...
வரவேற்கிறேன்.
Deleteஆமாம் சார் இளமையில் கொல் பாகம் 2&3 கலரில்
DeleteTop 3 Stories
ReplyDelete1. கார்சனின் கடந்த காலம்
2. வல்லவர்கள் விழ்வதில்லை
3. நிலவொளியில் ஒரு நரபலி
Top 3 Covers
1. பழி வாங்கும் புயல் (Maxi)
2. இருளின் மைந்தர்கள்
3. The lion 250
3. Total Books - 144
4. Reason - Entertainment with quality
சார்லி சார்.. தூள் கிளப்பீட்டீங்க..
ReplyDeleteடெக்ஸ் TOP 3 : டெக்ஸ் கதைகள் என்றாலே பம்பர் ஹிட்தான் என்றாலும் சில கதைகள் நச் என்று மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும். 1.எத்தனையோ கதைகளில் டெக்ஸ்வில்லர் சோலோவாகவும் தன் குழுவினருடன் தூள்கிளப்பி இருந்தாலும் தன்கூடவே இருந்து இரண்டாவது கதாநாயகன் ரேஞ்சுக்கு இருக்கும் கார்சனை கௌவரப்படுத்தும் விதமாக அவருக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு ஆக்ரோஷமான கதை "கார்சனின் கடந்த காலம்." ஒரு கதையில் காதல்,நட்பு,தியாகம்,துரோகம்,பாசம் மற்றும் பழிவாங்குதலை இத்தனை வீரியமாக சொல்லமுடியுமா..? முடியும் என்பதற்கு உதாரணம் இந்த அதிரடி படைப்பு.அதிலும் கார்சன் தான் நேசித்த பெண்ணாலயே அடித்து வீழ்த்தப்படுவது உணர்ச்சிகரமான திருப்பம்.இந்த கதையில் வரும் 'அப்பாவிகள்' அமைப்பைப் பற்றி சொல்ல வேண்டாம்.20 வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடுவதும்,பழிவாங்குவதற்கு சமயம் பார்த்து செயல்படுவதும்.. அட்டகாசமான ப்ளாஷ்பேக் காட்சிகளும் பிரமாதமாக இருக்கும். 2.நிறைய டெக்ஸ் கதைகளில் மெயின் வில்லன் பெரும்பாலும் பண்ணை முதலாளியாகவே இருப்பான்.டெக்ஸிடம் மாங்கு மாங்கு என சுவராஸ்யமில்லாமல் உதை வாங்குவான்.ஆனால் இந்த கதையிலோ ஆனானப்பட்ட டைகர் ஜோவையே கொடுமைப்படுத்தி சொல்லுடா என் பேரை.. வரச்சொல்லுடா டெக்ஸை ஒற்றைக்கு ஒற்றை என சவால் விடுவான்.ஒரு கட்டத்தில் 'யாருய்யா அவரு.. எனக்கே பார்க்கனும்போல இருக்கு என டெக்ஸ்வில்லரே கேட்பார்.அப்படி ஒரு வில்லன் அமைந்த கதை கழுகு வேட்டை.க்ளைமாக்ஸில் அவன் சொன்னபடி ஒற்றைக்கு ஒற்றை நிற்பதும் (மரண) இசையை ஒலிக்கும் கடிகார ஒலி நின்றதும் இருவரும் துப்பாக்கிகளை முழக்குவதும் நாமே களத்தில் நிற்பதுபோல இருக்கும். 3.வழக்கமாக எல்லா கதைகளிலுமே டெக்ஸ் &கோ மட்டுமே மனதில் நிற்பார்கள்.கதையில் இடம்பெறும் சில கேரக்டர்கள் டெக்ஸை தாண்டி மனதில் நிற்பது அபூர்வம்.இந்த கதையிலும் காதல்,நட்பு, அரசியல் etc..etc.. இருந்தாலும் ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கும்.அதிலும் மூன்றாம் பாகம் முழுவதும் ஆக்ஷன் அதகளமாகவே இருக்கும்."வல்லவர்கள் வீழ்வதில்லை" என கதையின் தலைப்பே கம்பீரமாக இருக்கும். மேற்கண்ட மூன்று கதைகளிலுமே கதை முழுவதும் பாடல் மற்றும் இசை பிரதானமாக இருக்கும்.சினிமாவாக எடுத்திருந்தால் இந்த மூன்று கதைகளுமே நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகியிருக்கும்.
ReplyDeleteடெக்ஸின் சிறப்பான கதைகளை அருமையாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே...செம செம...
Deleteகா.க.கா..ஒரு காவியம் தான்..
+ 5
Deleteமுதலில் ஷெரிப் ஜிக்கு ஒரு பூங்கொத்து.
ReplyDeleteரெண்டு பூங்கொத்து கொடுத்து விடலாம் ராஜசேகர் சார்.
Deleteகாமிக்ஸ் என்சைக்ளோபீடியா, புல்லிவிபரப்புலி, தளத்தின் ரமணாசேலம் டெக்ஸ் விஜயராகவனார், & டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சார் இருவரும்அளித்துள்ள இந்த காமிக்ஸ்பரிசுக்குநன்றிகள் சார்ஸ். உங்கள்காமிக்ஸ்ஆர்வத்திற்கு தலைவணங்குகிறேன்.
ReplyDeleteக்ளாசிக் நாயகர்கள் அனைவருமே இனி சார்லி சைசில். ஆசிரியர் சாருக்கு நன்றி
ReplyDeleteநன்றி நன்றி
Deleteநாம் யாராக, எப்படிஇருக்க ஆசைப்பட்டோமோ அப்படி இருப்பவர்தான் டெக்ஸ். நம்முடைய பிம்பம்தான் டெக்ஸ். டெக்ஸ் டாப் 10 1.பழி வாங்கும் புயல். 2 பழிவாங்கும் பாவை. 3.கார்சனின் கடந்த காலம் 4.விதிபோட்டவிடுகதை. 5.சூதுகொல்லும்6.டிராகன் நகரம்7.ஒருபிரளயப்பயணம்8.துரோகத்திற்கு முகமில்லை. 9.நில்கவனிசுடு10. புத்தம்புதியபூமி வேண்டும்
ReplyDeleteஆம் ஜி... டெக்ஸ உடன் நாமுமே இருக்கும் ஃபீலிங்
Deleteராஜசேகர் சார் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த பழி வாங்கும் புயல், பழி வாங்கும் பாவை இரண்டும் கிட்ட தட்ட ஒரே கதை தானே!!!!
Deleteஇதற்கு முன் கிட் ஆர்டினும் ஜேம்ஸ் பாண்ட் ம்நம்ம நாட்டுக்கு ஜஸ்ட் சும்மா ஒரு விசிட் அடித்துள்ளார்கள்என்றாலும் தலைப்பிலேயே '' கல்கத்தா'' ஆர்வத்தைத்தூண்டுகிறது.அதுவும் மிரட்டலான அட்டைப்படத்துடன்
ReplyDeleteஆமா நீங்க சார்லி கதைக்கு விமர்சனம் எழுதவில்லையே?
Deleteடியர் எடி,
ReplyDeleteஎதிர்பார்த்த விற்பனை தகவல்கள் கொண்ட பதிவு, அமர்க்களம்.
சும்மா அழகு பார்ப்பதற்கு மட்டுமில்லாமல், படிக்கவும் ஏதுவாக அமைப்பு இருப்பதே அனைவருக்கும் பிடித்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை.
சற்றே கவனம் தேவை, பேனல்களை பிரிக்கும் போது செங்குத்தாக தலைகீழாக வராமல் செய்ய.
ஆனால், சார்லி தொகுப்பு ஒரு அரிய முயற்சி. பாராட்டுகள் DTP குழுவிற்கு. மென்மேலும் உயரட்டும் இந்த அர்ப்பணிப்பு.
இனி வரும் எல்லா கிளாசிக் இதழ்களையும் இதே சைஸில் தா முடிவெடுத்து விட்டீர்கள் தானே?!?! உங்கள் நானே கடைசி பத்தியை வைத்து அது தான் என்று தெரிகிறது. 🙏
அந்த அச்சான Maxi சைஸ் அட்டையை, முன்பதிவு செய்த நண்பர்களுக்கு ரிப் காம்பேக்ட் தொகுப்புடன், போஸ்டர் போல அனுபித்து விட்டீர்கள் எனில் சிறப்பு. 🥰
132வது
ReplyDelete////லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! உண்டான வேலையைப் பார்க்கவே மேலெல்லாம் நோவும் இந்தக் காலத்தில் ஒரு காமிக்ஸ் நேசத்தினை சிலாகிக்க நண்பர்கள் எடுத்துள்ள மெனெக்கெடல்கள் மிரட்டல் ரகம் ! தலைவணங்குகிறோம் சார்ஸ் !! ////
ReplyDeleteபாராட்டுதலுக்கு உரிய மெகா முயற்சி.
வாழ்த்துக்கள் STV மற்றும் Dr.ராஜேஷ்குமார் சார்.
தேங்யூ பத்து சார்..
DeleteFIRST A BIG THANKS TO TEX ANNA AND DR. STRANGE SIR FOR COMPILING THESE ..
ReplyDelete1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?
1.நள்ளிரவு வேட்டை
2.மந்திர மண்டலம் , சர்வமும் நானே
3.சாத்தான் வேட்டை , வல்லவர்கள் வீழ்வதில்லை ..
2.இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?
100-120...
3.TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?
1.சர்வமும் நானே
2.புதைந்து போன புதையல்
3.மரணத்தின் முன்னோடி
4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?
TEX STORIES ARE COMMERCIAL , BLOCKBUSTER .. EASY AND BREEZY READ ..
இரும்புக்கை மாயாவியின் தலையில்லா கொலையாளி, கண்ணீர் தீவில் மாயாவி, சுவிட்சர்லாந்தில் மாயாவி, தவளை மனிதர்கள் நல்ல தரமான மறுபதிப்புகள் தேவை. மாயாவி மறுபதிப்பு ஸ்பெஷலாக போடலாம். இந்த கதைகள் அரிதான சூப்பர் டூப்பர் ஹீட் கதைகள்.
ReplyDeleteSir this year Athiradi kanavai ,marana thuthuvarkal reprint hard binding kidaikuma...these two are rare
ReplyDelete@Suresh ji..😍😃
Delete+111111
1)1.கார்சனின் கடந்த காலம்
ReplyDelete2.விதி போட்ட விடுகதை
3. ஒரு கணவாய் யுத்தம்
2) தோராயமாக 120
3) பாஸ்
4) Simply he is a Super Hero that we dreamed to live
பனியில் ஒரு பித்தலாட்டம் - ஒரு விஐபி தனது டிரைவருடன் வந்து பனி விழும் சுற்றுலா தளத்தைப் பார்வையிட்டு மறுநாள் தங்கள் தோற்றத்தில் சில மாற்றங்களை செய்து விட்டு அங்குள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர அவர்கள் யார் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி ஆரம்பிக்க சார்லி அதனை துப்பறிந்து நமக்கு பதில் கொடுக்கிறார்; இந்த ஆள் மாறாட்டம் ஹோட்டலில் உள்ளவர்கள் தெரிந்தாலும் என்ன மாதிரியான பித்தலாட்டம் என நம்மைப் போலவே அவர்களும் யோசிப்பதே சிறப்பு. அபூர்வ ராகங்கள் கதையை போல தனது மற்றும் ஒரு தாய் எனத் தெரியாமல் அவளை கல்யாணம் செய்ய ஆசைப்படும் காட்சிகள் அங்கு கூட இப்படி யோசித்து இருக்கிறார்களே என அட போட வைத்தது.
ReplyDeleteவாட்ஸ் அப் மற்றும் சோசியல் மீடியா என மனிதர்களுடன் மனம் விட்டு பேச மறந்துள்ள இந்த காலத்தில் இந்த கதையில் சார்லி மூலம் நான் கதை மாந்தர்களுடன் சில மணிநேரம் பேசிவந்தது போல் ஒரு அற்புத அனுபவம் கிடைத்தது.
உண்மை தான் பரணி.
Deleteவிதி போட்ட விடுகதை, பந்தம் தேடிய பயணம்
ReplyDeleteகார்சனின் கடந்த காலம்
ஓக்லஹோமா
145
நான் அட்டைப் படங்களின் காதலன் அல்ல
கதாநாயகனுடன் மூன்று பேர் சேரும்போது கதைக்களம் வெகுவாக விரிகிறது. இரண்டு மூன்று கிளைகளாக கதை விரிந்து
வெகு சுவாரஸ்யமாக நகர்கிறது. (உடைந்த மூக்கரை காட்டிலும் மூக்கை உடைப்பவர் பிரபலமானது இந்த கூட்டணியினால் தானோ என்னவோ?)
// நான் அட்டைப் படங்களின் காதலன் அல்ல // அடடே என்னைப்போல் ஒருவன்.
DeleteWarm welcome friend
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் ஆறே நாட்கள்
ReplyDeleteடெக்ஸ் vs ஸாகோர்!
ReplyDeleteபிதாமகரும், தலைமகன்களும் ஒரு சேர கூட்டணி அமைத்த சாகசம் இது!
V காமிக்ஸ் குழுமத்தின் இந்த மாத வெளியீடு ஒரு நான்-ஸ்டாப் ஆக்சன் விருந்து!
கதையை படிக்கும் முன்பாகவே, டெக்ஸும், ஸாகோரும் இணைந்து வரும் இந்த சாகசத்தில் ஹீரோயிசம் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தேன்...
ஆனால், கதைக்கு துளியும் தொடர்பில்லாத இழைகள் இங்கே இல்லை என்பதே உண்மை!
செவ்விந்தியர்களை அவர்களுடைய அன்னை பூமியில் இருந்து துரத்தியடிப்பதை சொல்லும் அழுத்தமான கதைக்களம். இதற்கு முன்பு டைனமைட் ஸ்பெஷலில் வந்த மாதிரி அழுத்தம் இது...
ஆடாம் க்ரேன், செவ்விந்திய ஏஜெண்ட் பாப் நெய்பர்ஸ், தனது இனத்துக்காக போராடி கோழைத்தனமாக வீழ்த்தப்படும் செவ்விந்திய தலைவர்கள் கிரே உல்ப் மற்றும் பெட்டா நோஹானே என அனைவருமே இந்த கதையில் சாதாரணமாக உலவிச் செல்லும் கதை மாந்தர்கள்!
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து செய்த அருமையான சாகசம் இது.
ஸாகோரின் தீர்க்கதரிசனமும், டெக்ஸின் வீரியமும், பிதாமகர் போசெல்லியின் கதை சொல்லும் திறன் மூலமாக இங்கே எம்மை முழுதாக கட்டிப்போட்டு விட்டது!
Rating : 10/10
நன்றி ஐயா!
This comment has been removed by the author.
Delete// கதைக்கு துளியும் தொடர்பில்லாத இழைகள் இங்கே இல்லை என்பதே உண்மை! //
DeleteYes
Boo bro,
DeleteWell said.
பூபதி அட்டகாசமான விமர்சனம். அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Delete@discoverboo ji..😍😃
Deleteசெம..செம..👍👌👏👏
இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் !
ReplyDeleteமொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் - மிக்க நன்றி Editor Sir.
இன்னும் 4 நாட்கள் மட்டுமே
ReplyDeleteஅடுத்த ஞாயிறு வாய்ப்பிருந்தால் நானும் முத்துநகரில் கலந்து கொள்வேன்
ReplyDeleteVaada va
Deleteஅப்படியில்லல...வாழவா
Deleteடெக்ஸ் கதைகள் 1.தலை வாங்கிக் குரங்கு. 2.கார்சனின் கடந்த காலம். 3.டிராகன் நகரம் +சர்வமும் நானே. டாப் 3 அட்டைப் படங்கள் 1.தலைவாங்கிக் குரங்கு. 2. பழிவாங்கும் பாவை ( பழையது). 3.லயன் 250 இதழ். டெக்ஸ் கதைகள் நேர்கோட்டுக் கதைகளாகவும் மனப் பளுவை குறைப்பதாகவும் இருப்பதால் மிக ரசிக்கின்றேன்.
ReplyDeleteஅரை நிஜார் சைஸ் புக்கே போதும்............
ReplyDeleteஅலமாரியில் இருப்பதை விட ............அடிகடி படிக்க செய்யும் சைஸ் தான் முக்கியம்
கரெக்ட் ...கரெக்ட். இனிமே இந்த சைசுக்கு சார்லி சைஸ்'ன்னே பேர் வெச்சுருவோம்.
Deleteசைஸ் முக்கியம் சார்லிலி லி
Deleteசார்லி ஸ்பெசல் கதை1:-
ReplyDelete*பனியில் ஒரு பித்தலாட்டம்..*
நான் முழுதும் வாசித்த முதல் சார்லி கதை இது.... மிக மிக இலகுவான கதையோட்டம்....
கதை நடக்கும் ஊரின் பனியின் குளிர் நம்ம முகத்தில், நரம்புகளில் ஊடுறுவுது... கடுமையான வெப்பத்தின் தாக்கத்தில் ச்லீர்னு ஒரு லெமன் ஜூஸ் பருகிய இதம்...
மரியாதைக்குரிய திரு கருணையானந்தம் ஐயா அவர்களின் பழமையான சொற்கள் மிகுந்த வசனங்கள் 1970களில் உலாவ வைத்தது.
33வருட காமிக்ஸ் வாசிப்பில நான் பார்த்த மிக மிக நேர்கோட்டு கதை இதுவாகத்தான் இருக்க இயலும்...
தன் கணவரது சொத்துக்கு ஆசைப்படும் பாலே நடன அழகி ஸில்வியா, அவரது முதல் மனைவியின் மகனையும் காதல் வலையில் வீழ்த்துகிறாள்... கணவரை ப்ளாக்மெயில் செய்யும் முயற்சியில் அவளது பாய் ப்ரெண்டுடன் இணைந்து தன் கணவரை போட்டு தள்ளிடறா.... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கும் பேராசையில்....
நம்ம பப்ளிமாஸ் செல்லாகுட்டி சார்லி, ஜென்டில்மேன் ஸ்டைலில் துப்பறிந்து கொலைக்கான ஆயுதமான ஸ்நைப்பரையும் கொலையாளியையும் கோழி அமுக்காக அமுக்குறார்....!!!
ஒரு ஏழெட்டு வயசில படிக்க வேண்டிய சாகசம், கொஞ்சம் தாமசமாக, (ஒரு 30ஆண்டுகள்தான்..ஹி..ஹி...) 48வயசுல வாசிக்கிறேன்....ஸ்டில் ஒரு அழகான ப்ரீஸி ரீடிங் ஆக இருந்தது....
தொடர்ச்சியாக எல்லா கதையையும் வாசித்துடுவேன்னு நினைக்கிறேன்....
2வது கதையில் சந்திப்போம்....🤩🤩🤩
அடடே டெக்ஸ் வாங்க வாங்க...
Delete@STV..ji..😍😃😘😀
Deleteகலக்குங்க தல..❤💐
சார்லிக்கு விமர்சனம்..😍👍👌👏👏👏
சூப்பருங்கோ ஜி..😍😍😘😘
OBF 21,22 ஆ..😘
ReplyDeleteஇல்ல 22,23 ஆ..😍
யாராவது விளக்குங்க சகோஸ்..😶
22,23 தான் ஜம்பிங் தல. சனி ஞாயிறு.
Deleteகுமார் சேலம்சார் புத்தகம் வந்த அன்றே சார்லிக்குவிமர்சனம் எழுதிட்டேன். தளத்திலும் இருந்தது. அப்பாலிக்கா காணாப் போய்டுச்சு
ReplyDeleteகுமார் சேலம்சார் ஏப்ரல் 5'' புதுசா ஒரு சாயா:'பதிவுல யே சார்லி முதல்கதைக்கு விமர்சனம் எழுதிட்டேன்ங்க சார். நன்றிங்க சார்
ReplyDeleteபார்த்து விட்டேன் சார். நன்றி நன்றி நன்றி.
Deleteஇன்னும் 3 நாட்கள் மட்டுமே...
ReplyDeleteகாமிக்ஸை பொருத்தவரை கையில் வந்ததும்,
ReplyDeleteஅப்படியே அதன் புது மணத்தை சற்று முகர்ந்தோமா,
அட்டையை முன்னும் பின்னும் திருப்பி, உள்பக்கங்களை புரட்டி, மாடு நுனிப்புல்லை மேய்வது போல அவசரமாக ஒரு முறை மேய்ந்து விட்டு,
பின் மறுபடியும் சாவகாசமாக 4 நாளைக்கு தினமும் ஆசை தீர எடுத்தெடுத்து பாத்து பாத்து,
"அடடா அடுத்தடுத்த வெளியீடுகள் இன்னுமே சுவை கூடுதலாக இருக்குமே" என ரசித்து மகிழ்ந்து அசை போட்டோமா?,
பின் ஒருநாள் சட்டென கதைக்குள் நுழைந்து, சாவகாசமாக படித்து விட்டு,
நிறை குறைகளை பற்றி அசை போட்டு மகிழ்ந்தபடி அடுத்த காமிக்ஸை எதிர்பார்த்து காத்திருப்பேன்.
இப்படித்தான் என் காமிக்ஸ் ரசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று கொஞ்சம் படிக்க தாமதமானாலும் இன்னுமும் காமிக்ஸ் மீதுள்ள இந்த ரசனை மாறவேயில்லை.
இன்று படித்ததை பகிர்ந்து கொள்ள நண்பர்களும், வலைதளங்களும் இருப்பதால் இந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகிறது.
"காமிக்ஸில் லாஜிக் பார்ப்பது,
காதில் பூ சுற்றுகிறார்கள்,
சைஸ் சரியில்ல, தரம் சரியில்ல,
ஒரே ஹீரோவை தொடர்ந்து போட்டு போரடிக்கிறார்கள் என கேலி செய்வது,
தமிழில் வெளிவந்துள்ள அந்த கதை சார்ந்த ஆதி மூலம் ரிஷிமூலங்களை மெனக்கெட்டு தேடியலைந்து, தோண்டியெடுத்து,அதன் தரத்தைப் பற்றி தமிழுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சிப்பது, அபிப்ராயம் கேக்காமலேயே "இந்த கதைகள் போட வேண்டாம்" என ஆசிரியருக்கே அறிவுரை சொல்வது போன்ற விமர்சனங்கள்,
ஆசிரியருக்கே அதிகப்பிரசங்கித்தனமாக அறிவுரை கூறும் மறைமுக பதிவுகள்" போன்ற எண்ணங்கள் எல்லாம் என்னுள் எழவே எழாது.
அவ்வளவு உயர்ந்த ரசனை கொண்டவர்களாக இருந்தால் அதற்கு தீனி போடத்தான் ஏராளமான இலக்கிய புத்தகங்களும், ஆங்கில புத்தகங்களும், வெளிநாட்டு இதழ்களும் இருக்கின்றனவே!
ஏன் குறை என நினைக்கும் காமிக்ஸ் பக்கம் வரவேண்டும்?.
மாடஸ்டி, மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி ஸ்டெல்லா, ஸ்பைடர்,டெக்ஸ், டைகர், ஆர்ச்சி,ஷெல்டன், லார்கோ, காரிகன், ரிப் கெர்பி, மாரட்டின், க்ராஃபிக் நாவல், வேதாளர், கிஸ்கோகிட், சார்லி லக்கிலூக் இன்னும் பெயர்குறிப்பிடா எல்லா நாயகர்களின் காமிக்ஸூம் வேண்டும்.
எந்த காமிக்ஸூம் சரித்திர நிகழ்வுகள் கிடையாது. எல்லாமே கற்பனைதான் எனும்போது அந்த கற்பனைக்கு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது யார்?.
முடிந்தவரை ரசிக்கலாமே?.
காமிக்ஸ் படிப்பவர்களுள் பெரும்பாலோர் பசிக்கு சாப்பிடுபவர்களே தவிர,
ருசிக்கு அல்ல.
தரம் பிரித்து உயர்ந்த ரசனை, காதில் பூ சுற்றுகிறார்கள் என்ற விமர்சனம் எல்லாம் எழாமல், அனைத்து நாயகர்களும் எப்போதும் நம் கரங்களில் தவழும் நாள் ஒன்று மலருமானால் அதுதான் உண்மையான காமிக்ஸ் திருநாளாக இருக்கும்
// எந்த காமிக்ஸூம் சரித்திர நிகழ்வுகள் கிடையாது. எல்லாமே கற்பனைதான் எனும்போது அந்த கற்பனைக்கு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது யார்?.
Deleteமுடிந்தவரை ரசிக்கலாமே?.//
+1
////அவ்வளவு உயர்ந்த ரசனை கொண்டவர்களாக இருந்தால் அதற்கு தீனி போடத்தான் ஏராளமான இலக்கிய புத்தகங்களும், ஆங்கில புத்தகங்களும், வெளிநாட்டு இதழ்களும் இருக்கின்றனவே!
Deleteஏன் குறை என நினைக்கும் காமிக்ஸ் பக்கம் வரவேண்டும்?.///
--- நல்ல கேளவிங்க..
அங்கெலாம் போனா இவுங்களை விட பழம் தின்றுசெடி நட்ட வங்களாம் இருப்பாங்க....இவுங்கள சீந்தாமாட்டாங்கள்ல....!!!
இங்கனா கேட்க ஒரு நாலைஞ்சி பேரு சிக்கிட்டதால எல்லாந்தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிடலாம்ல....!!
ஏங்க ஒரு புக்கு பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கானு கூட உணர இயலாதவங்க தாங்க அந்த சிலரும்!
6மாசமா லைனுக்கு வராத ஏஜெண்ட் கூட வாங்கும் ஒரு புக்கு பிடிக்கலனா, அது யார் தவறுங்க?? புக் மீதா?
அதென்னாது, ஆங், "ஆடத்தெரியாதவன் தெரு கோணலா இருக்குன்னானாம்"
இந்த SMASHING 70s&60s க்ளாசிக் புத்தகங்கள் பற்றி நம் தளங்களை விட, புத்தக திருவிழாக்களில் மற்றும் வெளியில் உள்ள காமிக்ஸ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சைஸோ, தரமோ அங்கு முக்கியமாகப்படவில்லை. தான் விரும்பிய கதைகள் மீண்டும் வருவதே அவர்களின் குதூகலத்துக்கு காரணம்.இதைவிட ஒரு காமிக்ஸ்க்கு என்ன வேண்டும்?.
ReplyDeleteஎந்த சைஸிலோ, கலரோ,வெள்ளையோ,
எதில் வந்தால் தான் என்ன?.
இப்படித்தான் வரவேண்டும் என்ற வரைமுறை உள்ளதா என்ன?.
ஒரு 300 பக்க கதைக்கு என்ன தரமோ
அது இருந்தால் போதாதா?.
"அய்யோ ஏமாத்திட்டாரு" என புலம்புவது
என புரியாமல் பேசுவது என்ன வகை?.
இன்றைய விலைவாசி நிலவரங்களை அனுசரித்தே புத்தகங்களின் நிலை மாறும்.
இதுக்கு காமிக்ஸ் மட்டும் விதிவிலக்கல்ல.
"இதுதான், இப்படிதான் வரும். என் புத்தகம் எப்படி வரவேண்டும் என சொல்ல நீ யார்?" என முகத்திலடித்தது போல பேசும் பல பதிப்பக ஆசிரியர்களுக்கு மத்தியில்,
எது சொன்னாலும் அதற்கு பொறுமையாக பதில் சொல்லும் லயன் ஆசிரியர் உங்களுக்கு இளக்காரமாகவே தெரிவார்.முதல்ல ஆசிரியர் என்ற மரியாதையை அவருக்கு கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் உதய்ஆதி நண்பரே.
அவருக்கு தெரியும் எதை எப்படி எந்த வகையில் தரவேண்டும் என.
40 வருட அனுபவமுள்ளவருக்கு நீங்கள் கூறித்தான் ஒரு காமிக்ஸ் போட வேண்டும் என்ற அறிவுரை அவசியமற்றது.
காமிக்ஸ் பற்றி விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை உண்டு,
ஆனால் மற்றவர்களுக்கு பிடித்ததை,
"எங்களுக்கு எப்படி வந்தாலும் வாசிப்போம்"
என கொண்டாடி மகிழ்வோரை பற்றி,
"ஒரு தவறான விசியத்தை கொண்டாடுகிறார்கள்" என திரித்து
விமர்சித்து பதிவிடுவது எந்த வகையான நாகரீகமோ?.
நண்பர் உதய்ஆதி, தயவுசெய்து புத்தக திருவிழாக்களில் கலந்து கொண்டு அங்கு வரும் காமிக்ஸ் ஆர்வலர்களை கவனிக்க அழைக்கிறேன்.
விவரம் தெரியாத வரை நமக்கு எல்லா காமிக்ஸ் கதைகளும்,சைஸ்களும் பிடித்தன.
குட்டி புக்கையும் ரசித்தோம்,
அதைவிட பெரிய சைஸையும் ரசித்தோம்,
பெரிய சைஸையும் ரசித்தோம்,
அதைவிட சின்ன சைஸையும் ரசித்தோம்.
இங்கு ரசனை என்பது கதையே தவிர சைஸ் அல்ல.
பல காலம் கடந்து இன்றைக்கு நாம் இருக்கும் டெக்னாலஜியில் இன்னும் காமிக்ஸ் கதைகள் தமிழில் வருவதென்பதே அபூர்வம். அதையும் 1009 குறைகள் சொல்லிக்கொண்டு,
பிடித்து கொண்டாடுவோரின் ரசனையையும் கிண்டல் செய்து, எத்தனை நாளைக்கு இப்படி கதறுவார்கள் என தெரியவில்லை. ஆனால் இவர்களுக்கு தெரியவில்லை - இவர்கள் விமர்சிக்க விமர்சிக்கதான் காமிக்ஸ் இன்னமும் அதி வேகமாக வரவேற்பை பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என. அதற்காக நண்பருக்கு ஒரு வாழ்த்தை சொல்லலாம்.
நெடிய 2 பின்னூட்டங்களுக்கு நன்றிகள் இரு நூறு சார் !
Deleteயதார்த்தமான அந்தப் பார்வையில் மிளிரும் அன்புக்கும் , புரிதலுக்கும் இன்னொரு இருநூறு நன்றிகள் !
காமிக்ஸ் மீதான இன்றைய பார்வைகளை அழகாய் விவரித்துள்ளமைக்கு அடுத்த 200 சார் !
நமக்கு நடத்தப்படும் பாடங்களின் பொருட்டு உங்களுள் எழுந்திடும் வருத்தங்களையும் காரமின்றிப் பதிவிட்டமைக்கு இன்னொரு டூ ஹண்ட்ரெட் !
ஒரு வாசகன் - எடிட்டர் என்ற ரீதியில் மட்டுமே பார்த்திட்டால் - இந்தப் பின்னூட்டங்களுக்கு அத்தனை நேரம் செலவிட தோணியிருக்கவே செய்யாது ! அழகாய் உள்ளத்தின் குரலைப் பதிவிட்டுள்ள போதே நம் மீதான கரிசனம் ஸ்பஷ்டமாய்த் தெரிகின்றது ! So அந்த வகையில் இன்னொரு 200 நன்றிகள் சார் !
இப்படி ஆயிரத்தில் உங்களை போலவே பலருக்கும் நன்றி சொல்லும் கடமை உள்ள ஒருவனுக்கு, கோபமோ , வருத்தமோ கொள்ள நேரமும் கிடையாது ; அவசியமும் கிடையாது சார் ! So தேவையான நல்ல விஷயங்களின் பொருட்டு காதைத் தந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டே இருப்பேன் ! இளக்காரங்களோ ; பகடிகளோ அவரவரது குக்கர்களின் பிரஷர் ரிலீஸ் - why would I even bother about them sir ?
அப்புறமா அந்த ஆன்லைன் புத்தக மேளா புக்ஸ் வெளிவரட்டும் சார் ; குக்கர் விசில்கள் நிறைய கேட்கப்போவது சர்வ நிச்சயம் ! :-)
Delete// இன்றைய விலைவாசி நிலவரங்களை அனுசரித்தே புத்தகங்களின் நிலை மாறும்.
Deleteஇதுக்கு காமிக்ஸ் மட்டும் விதிவிலக்கல்ல. //
+1
///!"ஒரு தவறான விசியத்தை கொண்டாடுகிறார்கள்" என திரித்து
Deleteவிமர்சித்து பதிவிடுவது எந்த வகையான நாகரீகமோ?.///---
வார்டன்னா அடிப்போம்🤭
"எனக்கு பிடிக்காத ஒன்று யாருக்கும் பிடிக்க கூடாது"--- யப்பா எப்படியாபட்ட உயர்ந்த சிந்தனை!!!
@Edi Sir..😘😘
Deleteஅது விசில் சத்தமல்ல..😃
சாமி புறப்பாடு நடக்கும்போது கேட்கும் வேட்டு சத்தம்..😍😘😃
Let us enjoy..😘😘
ஒவ்வொரு அமில அர்ச்சனைக்கும் பின்னே ஒரு behind the scenes காரணமுண்டு என்பது இங்கு நிறைய நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை சார் ! இன்று என்றில்லை ; எப்போதுமே நிலவரம் அது தான் ! So ரொம்பவெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் !
Delete////why would I even bother about them sir ?///---
Deleteஎன்னங்க ஆசிரியர் சார் இப்படி பொசுக்குனு ................!!!!🤭🤭🤭🤭இதுக்கெலாம் நாதஸ் திருந்த மாட்டாங்க.... அப்புறம் நமக்கும் டைம் பாஸ்க்கு கன்டென்ட் வேணுங்களே!!!
சார் ஞாயிறன்று முத்து நகர்ல வாங்க வாய்ப்புண்டா....அல்லது அதற்கு முன்னரே வாங்க வாய்ப்புண்டா ...குக்கர் உணவை
Delete@ஸ்ரீ..😍😘😃
ReplyDelete1)##காமிக்ஸை பொருத்தவரை கையில் வந்ததும்,
அப்படியே அதன் புது மணத்தை சற்று முகர்ந்தோமா,
அட்டையை முன்னும் பின்னும் திருப்பி, உள்பக்கங்களை புரட்டி, மாடு நுனிப்புல்லை மேய்வது போல அவசரமாக ஒரு முறை மேய்ந்து விட்டு,
பின் மறுபடியும் சாவகாசமாக 4 நாளைக்கு தினமும் ஆசை தீர எடுத்தெடுத்து பாத்து பாத்து....😃##
😍😃😘Wow..ஸ்ரீ ஜி..❤
அது எப்படி? புத்தகம் வந்தவுடன் நான் என்ன பண்ணுவேன் என்பதை என்னுள் இருந்து பார்த்ததை போல சொல்லியிருக்கிறீர்கள்..Hats off ji..😘👌👍💪❤
2)##இந்த SMASHING 70s&60s க்ளாசிக் புத்தகங்கள் பற்றி நம் தளங்களை விட, புத்தக திருவிழாக்களில் மற்றும் வெளியில் உள்ள காமிக்ஸ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சைஸோ, தரமோ அங்கு முக்கியமாகப் படவில்லை. தான் விரும்பிய கதைகள் மீண்டும் வருவதே அவர்களின் குதூகலத்துக்கு காரணம்.இதைவிட ஒரு காமிக்ஸ்க்கு என்ன வேண்டும்?.##😃😍
😍😃😘உண்மைதான்..💪
என் கருத்தும் இதேதான் ஸ்ரீஜி..😃😍
நானெல்லாம் தமிழில் காமிக்ஸ் தொடர்ந்து வருவதை மனப்பூர்வமாக வரவேற்கும் கட்சி..💐🌷
ஸ்ரீ& ஜம்பிங் தல@ +10000
Deleteநானெல்லாம் புக் அட்டையவே 3நாள் ரசிக்கும் பார்ட்டி...
அதும் இப்ப வந்த சார்லி புக் மாதிரி நகாசு வேலைகளோடு வந்தா ஆஹா...
200
ReplyDelete