Powered By Blogger

Saturday, April 01, 2023

ஏப்ரல் ஏகாந்தம் !

 நண்பர்களே,

வணக்கம். தினுசு தினுசான இடங்களிலிருந்தெல்லாம் இந்தப் பக்கத்தின் பதிவுகளை எழுதி இருக்கிறேன் தான் ! ஆனால் அவற்றின் ஒவ்வொரு தடவைகளுமே, "சப்பானிலேர்ந்து ஜாக்கி சான் கூப்ட்டாகோ.....அமெரிக்காவுல இருந்து  மைக்கேல் ஸாக்ஸன் கூப்டாகோ" பாணியில் எங்கெங்கோ குந்தியிருந்திருப்பேன் ! ஆனால் மொதவாட்டியாய் உள்ளூரில், but வித்தியாசமானதொரு இடத்திலிருந்து இந்தப் பதிவினை டைப்புகிறேன் ! So இதுவொரு மித நீளப் பதிவாகவே இருக்கும் ; 'ஒன் பை டூ' சாயாவை பச்சக்கென்று ஊற்றிக் கொள்வது போல் ஒப்பேற்றிடக் கோருகிறேன் !

For starters - அறிவிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை புத்தக விழாவானது மாவட்ட நிர்வாகத்தினரால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ! புக் பார்சலெல்லாம் போட்டு அனுப்பி விட்டு, நம்மாட்கள் அண்ணாமலையார் நகருக்குக் கிளம்பியும் விட்டனர் தான் ; but பாதி  வழியில் ஊர் திரும்ப வேண்டியதாகிப் போயுள்ளது !  அநேகமாய் ஏப்ரலின் 10 தேதிவாக்கில் இந்த விழாவும், இன்னொரு மித சைஸ் நகர விழாவும் அரங்கேறிடக்கூடும் என்று தகவல் ! So நமது ஆன்லைன் புத்தக விழாவின் தேதி நிர்ணயத்துக்கு சொக்காயைக் கிழிக்குமொரு சூழல் ! Anyways அடுத்த வாரத்தில் திருவண்ணாமலை & அந்த other விழாவின் தேதிகளும் ஊர்ஜிதம் காணக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கிறோம் ; fingers crossed !

Moving on.....ஏப்ரலின் அட்டவணை சற்றே புதிரானது என்பேன் ! And கதை நாயகர்களின் கூட்டணியினை இம்முறை நான் குறிப்பிடவில்லை ; மாறாக - சந்தா தடங்களின் கூத்தை சுட்டிக்காட்ட விழைகிறேன் ! ஒருக்கால்..


*"க்ளாஸிக் நாயகர்களின் சங்காத்தமே வேணாம்டா சாமி" என்ற அணியினராய் நீங்கள் இருந்தால் - இம்மாதத்து டிடெக்டிக் சார்லி ஸ்பெஷல் உங்களுக்கு வர வாய்ப்பில்லை ! 

*V காமிக்ஸ் இரண்டாம் க்வாட்டருக்கு நீங்கள் சந்தா செலுத்தியிருக்கவில்லை எனில் - இம்மாதத்து "TEX vs ZAGOR" இதழ் உங்களுக்கு வந்திடாது தான் !

*And "இந்த கி.நா.வே எனக்கு புடிக்காதுடாப்பா !" என்ற அணியினராய் நீங்கள் இருந்து, 'உலகம் சுற்றும் வாலிபர்ர்ர்ர்ர்' சந்தாவை மறுத்துவிட்டு, Point டு Point சந்தாவில் மட்டுமே சேர்ந்திருக்கும் பட்சத்தில் - இம்மாதத்து XIII மர்மம் - "எந்தையின் கதை" உங்களைத் தேடிப் பயணிக்காது !

*ஒருக்கால் - மேற்படி 3 பத்திகளில் விவரித்துள்ள அத்தனை விஷயங்களுக்கும் - "ஆமாம்பா...ஆமாம் !" என்று ஆமோதிக்கும் நிலவரம் உங்களதாக இருக்கும் பட்சத்தில் - 'உங்களுக்கு பூரியே வைக்கலை' கதை தான் இந்த மாதம் ! There simply will be nothing to send you !

நமது இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு இது போலானதொரு மாதம் அமைந்திருக்கவே இல்லை தான் ; குறைந்த பட்சமாய் ஒரேயொரு புக்காவது main stream சந்தாவிலிருந்தாவது உங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கும் ! But இம்முறை திட்டமிடலின் போது இந்த ஆங்கிளில் யோசிக்கத் தவறி விட்டேன் ! So உங்களின் சந்தாப் புதுப்பித்தல்களையும் / சந்தாப் பிரிவுகளையும் ஒருவாட்டி செக் பண்ணி விடுங்களேன் ப்ளீஸ் ? And காத்துள்ள செவ்வாய் காலை தான் இம்மாதத்து கூரியர்கள்  கிளப்பிடவுள்ளன எனும் போது - V காமிக்ஸ் ஜோதியினில் இணைந்திடவோ, SUPREME '60s பாதையில் புகுந்திடவோ இந்த வேளையினை பயன்படுத்திக் கொள்ளலாமே folks ?

இம்மாதத்தின் despatch சற்றே லேட் ஆனதற்கு காரணங்கள் இரண்டு ! தவிர்க்க இயலா குடும்ப நிகழ்வினில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓடியே போய்விட்டது முதல், முக்கிய காரணமெனில், # 2 - இம்மாதத்து V காமிக்ஸ் ! எந்த நேரத்தினில் Team V இளம் மொழிபெயர்ப்பாளர்களை சமீப பதிவொன்றில் சிலாகித்தேனோ தெரியலை - இம்மாதம் சொதப்பல்ஸ் ஆப் சொக்கம்பட்டி ஆகிப் போச்சு ! இந்த ஸாகோர் vs டெக்ஸ் சாகசமானது நாமெல்லாம் ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் இதழ் என்பதில் no secrets & இது சமீபமாய் இங்கிலீஷிலுமே வெளி வந்துள்ளதொரு இதழும் கூட எனும் போது - இக்கட மொக்கை போட்டால் மூக்கு பழுத்துப் போகுமென்பது உறுதி ! ஏற்கனவே ஒழுங்காய், மருவாதியாய் எழுத முற்படும் வேலைகளிலேயே,  'நடை சரியில்லை..ஓட்டம் சரியில்லை...' என குறைபாடுகள் ஒலித்திட, Team V-ன் இளம் எழுத்தாளப் பெண்மணி தந்திருந்த வெகு சுமாரான script அப்படியே வெளியாகிடும் பட்சத்தில், டப்பா டான்ஸ் ஆடி விடுமென்பதை உணர்ந்த போதே மார்ச்சின் இறுதி வாரம் புலர்ந்திருந்தது ! சரி, வழக்கம் போல ராக்கூத்துக்கள் ; ரா பல்ட்டிகளை அடித்து மாற்றி எழுதிட வேண்டியது தான் என்றபடிக்கே தட்டுத்தடுமாறி பணிகளுக்குள் புகுந்தேன் ! 

ஆனால் போக போக பல்லெல்லாம் ஆடோ ஆடென்று ஆடத் துவங்க, உச்ச ஆதங்கத்தில் - "என்னம்மா இப்புடி பண்ணுறீங்களே ? இந்தா கீது இங்கிலீஷ் ஸ்கிரிப்ட்...இந்தா கீது உங்க மொழிபெயர்ப்பு....and இந்தா கீது அதனை இப்போ திருத்தி எழுதிய எனது ஸ்கிரிப்ட் ; இவ்ளோ வித்தியாசத்தில் எழுதினா எப்புடி தேத்துறது ?" என்று வாட்சப்பில் ஒருபாட்டம் அழுது மெசேஜ் அனுப்பினேன் ! கொஞ்ச நேரம் கழித்து, "ஐயோ...ரொம்ப சாரி சார், உங்க மொழிபெயர்ப்பை வாசிக்கும் போது நான் கோட்டை விட்டிருப்பது புரியுது ; ஆனால் ஏதோ குளறுபடி சார் !! எனது ஸ்கிரிப்ட் இதுவே அல்ல. நிறைய இடங்களில் ஓரிரு வரிகளை காணோம் ; நிறைய இடங்களில் நான் எழுதியது மாற்றி எழுதப்பட்டுள்ளது !" என்று குண்டைத் தூக்கிப் போட்டார் ! எனக்குமே  அந்நேரத்துக்குள் இந்த விஷயம் புரிந்திருந்தது and அப்புறம் தான் தெரிய வந்தது - நமது DTP பிரிவினர் எனது வேலையை சுலபமாக்கிடும் முயற்சியாய் அவர்களுக்குத் தெரிந்த மொழிமாற்றத்தை ஓசையின்றிச் செய்து, ஓட்டிங் & பிட்டிங் பண்ணியிருக்கின்றனர் என்பது ! கிறுகிறுத்துப் போனேன் !! ஒரு பக்கம் ஷெரீபிடமிருந்து கோரிப்பெற்றிருந்த இங்கிலீஷ் பக்கங்கள் ; இன்னொரு பக்கம் இளம் மொழிபெயர்ப்பாளர் எழுதி அனுப்பியிருந்த ஸ்கிரிப்ட் ; and மறு பக்கத்தில் நமது உள்ளூர் மொழிபெயர்ப்புடன் DTP செய்யப்பட தமிழிலான பக்கங்கள் ! கொஞ்ச நேரம் போராடிப் பார்த்தேன் - வெறும் பட்டி டிங்கரிங் செய்து கதையினைத் தேற்றிட ! ஆனால் தொங்கிப் போன நாக்கு - "இந்த ஆட்டத்துக்கு நான் வரவே இல்லைடா சாமி" என்று கதறி விட்டது ! அப்புறமென்ன ? ஆடுறா ராமா...தாண்டுறா ராமா..கதை தான் ; கோட்டை முழுசுமாய் அழிச்சிப்புட்டு பொரோட்டாவை முதல்லேர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன் ! 

126 பக்கங்களிலான கதை இது & நிஜத்தைச் சொல்வதானால் குறைந்தது 150 பக்கங்களிலாவது சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதை - at least in my opinion ! So வசனங்கள் கணிசமோ, கணிசம் ! மாமூலான V காமிக்ஸ் ஸாகோர் கதைகளைப் போல இங்கேயும் சித்திரங்கள் மிகுந்து ; வஜனங்கள் குறைச்சலாய் இருந்திருந்தால் தலை தப்பியிருப்பேன் ! But கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணம் & 2 இத்தாலிய ஜாம்பவான்கள் சந்தித்துக் கொள்ளும் கதையுமே எனும் போது, கம்பி மேல் நடக்கும் லாவகத்தில் கணிசமான டயலாக்ஸ் சகிதம் கதை நகர்கிறது ! 'இந்தா..ஆக்ஷன் sequence வந்திருச்சிலே..டுபாய்ங்..டுபாய்ங்..என்று சுட்டபடிக்கே பக்கங்கள் ஓடி விடுமென்று பார்த்தால் - ஊஹூம் ....ரைபிள்களை இறக்கி விட்டு மறுக்கா பேச ஆரம்பிக்கிறார்கள் ! ஒரு டெக்ஸ் / ஸாகோர் சிங்கிள் ஆல்பத்தில் ; அதுவும் இங்கிலீஷில் உள்ளதொரு புக்கில் இத்தனை குட்டிக்கரணம் போட வேண்டியிருக்குமென்று சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கவில்லை ! வெள்ளியிரவு தான் என் பணிகள் முழுசுமாய் முடிந்து, சனி மதியம் தான் பிரிண்டே ஆனது ! And கொடுமையிலும் கொடுமை, எங்க ஊரின் தகிக்கும் வெயிலுக்கு மத்தியிலேயே மழை கொட்ட ஆரம்பித்தது !! So பைண்டிங் போக மாலை வரைக்கும் வாய்ப்பின்றிப் போய்விட்டது ! திங்கள் தான் பைண்டிங் துவக்கிடுவார்கள் & செவ்வாய் டெஸ்பாட்ச் ! Phew ....சாரி guys !! 

இதோ - இந்த இதழின் அட்டைப்படம் & உட்பக்க பிரிவியூ !!


இங்கே ஜம்பிங் பேரவையினர் மட்டுமன்றி, நாமும் தெரிந்து கொள்ளுமொரு ஆச்சர்ய விஷயம் உள்ளது ! ஸாகோர் நம் மத்தியில் அறிமுகமானது தான் லேட்டே ஒழிய, கதை உருவாக்கத்தின்படி, வயதில் அவர் டெக்ஸுக்கு ரொம்பவே சீனியர் ! So கல்கதாயுதம் ஏந்திய நமது மாயாத்மாவுக்கு கிட்டத்தட்ட டெக்சின் தந்தை வயதென இந்த ஆல்பம் மூலமாய் நிறுவப்பட்டுள்ளது ! பேரவை தலைவர் கொஞ்சமாய் ஜம்ப்பிக்கை மட்டுப்படுத்துவரா இதன் பொருட்டு ? - தொடர்ந்து விவாதிப்போம் ! 

Moving back.....ஒரு குட்டியான ஜாலி பகிரல் !! 

பிப்ரவரியின் இறுதியினில் தேசத்தின் தலைநகருக்கு ஒரு விசிட் அடிக்க நேர்ந்தது & புது டில்லி புத்தக விழாவே அதன் பின்னணி ! ஒவ்வொரு சர்வதேசப் புத்தக விழாவிலும் ஏதேனும் ஒரு நாட்டைத் தேர்வு செய்து அதன் தலைசிறந்த படைப்பாளிகளை ; படைப்புகளை கவுரவிப்பது வாடிக்கை ! And 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய் மறுக்கா களமிறங்கியிருக்கும் டில்லி புத்தக விழாவினில் பிரதம விருந்தாளிகளாய் கெளரவிக்கப்பட்டது : பிரான்ஸ் ! So அவர்களின் தேசத்து top எழுத்தாளர்கள் ; சிந்தனையாளர்கள் ; முக்கிய பதிப்பக பிரதிநிதிகள் என்று சரமாரியாக டில்லிக்குப் படையெடுத்திருந்தனர் & இவற்றிற்கான  அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று ஒருங்கிணைத்து வந்தது டில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு ! அவர்களின் அயரா செயல்பாடுகளின் ஒரு பகுதியாய் - பிரெஞ்சு தேசத்துடன் நெடும் காலத் தொடர்பு கொண்டுள்ள இந்திய பதிப்பகங்களுள் ஒரு சிறு எண்ணிக்கையிலானோரை மட்டும் தூதரகத்தில் ஒரு காலை ப்ரேக்பாஸ்ட மீட்டிங் ஏற்பாடாகி இருந்திருக்கிறது ! And அந்த காலைச் சந்திப்பின் முக்கிய விருந்தினராக இருக்கவிருந்தது - பிரெஞ்சு பதிப்பக சங்கத்தின் தலைவர் போலும் ! அவரைச் சந்திக்கக்கூடிய இந்தியப் பதிப்பகங்களின் பட்டியலை தூதரகம் தயார் செய்த போது, 38 ஆண்டுகளாய் பிரெஞ்சு காமிக்ஸ் உலகோடு கரம்கோர்த்துள்ள நமது பெயரும் அதனில் இடம் பிடித்திருக்கிறது ! So ஜனவரியின் ஒரு பொழுதிலேயே நமக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டிருந்தனர் - "டில்லி சந்திப்பினில் நீங்களும் கலந்து கொள்ள முடியுமாவென்று கேட்டு !" கவுண்டர் பாணியில்..."சேலத்திலே மாநாடு...டில்லியில் மீட்டிங்கு" என்றெல்லாம் பிகு பண்ணிடாது - "Oh yes ...தேதியையும், நேரத்தையும் மட்டும் சொல்லுங்கஜி....இந்த ஆந்தையன் டணால் தங்கவேலுவாய் - டணாளென்று அங்கே ஆஜராகிப்புடுவான் !" என்று பதில் போட்டேன் ! இதை விடவும் நமக்கு ஆணி பிடுங்கும் வேலை வேறு என்ன இருக்க முடியும் ? 

அதைத் தொடர்ந்து கிட்டிய பதிலில், சந்திப்புக்கான ஏற்பாடுகள் ; கலந்துகொள்ளவிருக்கும் இதர 11 இந்திய பதிப்பகங்களின் விபரங்கள்,  என சகலமும் இருந்தது ! அந்தப் பட்டியலில் நாம் ஒருத்தர் மட்டுமே முழுக்க முழுக்க 'பொம்ம புக்' போடும் பார்ட்டி ; பாக்கிப் பேரெல்லாம் இலக்கியம் ; வரலாறு ; தத்துவம் ; கலைகள் என்று specialize செய்வோர் ! ஹிந்தியில் டின்டின் வெளியிடும் பதிப்பகத்தினர் கூட பட்டியலில் இருந்தனர் ; ஆனால் கிட்டத்தட்ட 15,000 தலைப்புகளில் புக்ஸ் வெளியிட்டு வரும் அந்த ஜாம்பவான்களுக்கு, காமிக்ஸ் ஒரு கூடுதல் ஜானர் மட்டுமே ; அது தவிர்த்து வேறு துறைகளில் வண்டி வண்டியாய் பிரெஞ்சு புக்ஸை மொழிமாற்றம் செய்து ஹிந்தியில் வெளியிட்டு வருகின்றனர் ! And breakfast பட்டியலில் நம்மைத் தவிர்த்து 2 தமிழ் பதிப்பகங்களும் இருந்ததையும் கவனித்தேன் - தத்துவம் & வரலாறு துறைகளில் பிரான்ஸோடு கரம் கோர்த்த அனுபவத்துடன் ! பொதுவாக இங்கேயே 'பொம்ம புக்' வெளியீட்டாளர்கள் என்று லைட்டான பரிகாசப் பார்வைகள் நம் மீது படிவதை நிறைய முறைகள் உணர்ந்துள்ளோம் தான் ; இப்போ இப்போ, புத்தக விழாக்களுக்கு தவறாது attend பண்ணுவதாலும், ஆங்காங்கே நீங்கள் அதிரடியாய் தரும் ஆதரவானது கவனங்களை ஈர்ப்பதாலும், அந்தப் பார்வைகளில் புரிதல் புலர்ந்துள்ளது ! ஆனால் ஒரு Pan India பதிப்பகப் பெரியவர்களின் மீட்டிங்கில், வெறும் பொம்ம புக் மட்டுமே வெளியிடும் ஒரு 'மதராசியை' எவ்விதம் ஏற்றுக்கொள்வார்களென்று கணிக்க இயலவில்லை ! 

But surprise....அந்தக் காலைச் சந்திப்பின் போது அனைவரும் இயல்பாகவே பழகினர் ! And சந்திப்பின் ஹைலைட்டே - அன்றைய மீட்டிங்கின் நாயகரான பிரெஞ்சுப் பதிப்பகத் துறையின் தலைவரானவர் நாம் காலமாய் கரம் கோர்த்து வரும் காமிக்ஸ் குழுமத்தின் தலைவருமே என்பது தான் ! செம வாஞ்சையோடு நமது மார்க்கெட் பற்றி ; நம் வாசக வட்டம் பற்றி ; ரசனைகள் பற்றியெல்லாம் பேசினார் & அவருக்கு மாத்திரமன்றி அங்கு குழுமியிருந்த அனைவருக்குமே வியப்பு - ஒரு பிராந்திய மொழியினில், பிரெஞ்சுப் படைப்புகளுக்கு இத்தனை காலமாய் ஆர்வம் தொடர்வதில் ! And வெகுஜன ஜானர்கள் மாத்திரமன்றி, "நிழல்களின் நிசப்தம்" போலான இருண்ட கி.நா.க்கள் கூட எங்களது சிறுவட்டத்துக்கு அத்துப்படி என்று நான் கெத்துக் காட்டிய போது மெய்யாலுமே பெருமையாக இருந்தது folks ! அளவில் நம் வட்டமானது "அபூர்வ சகோதரர்கள்" அப்புவாய் இருக்கலாம் தான் ; ஆனால் இந்த வட்டம் சாத்தியப்படுத்திக் காட்டும் சாகசங்களோ  'விக்ரம்' கமல் ரேஞ்சுக்கானவை என்பதை அந்த நொடியில் மறுக்கா உணர முடிந்தது ! Thanks ever so much all - for making this journey a lifetime of fun and passion !!

ரைட்டு....அப்புறமாய் நமது "ஆன்லைன் புத்தக விழா" பற்றி : 

ஒரு வாரம் தவிர்க்க இயலா காரணங்களினால் செலவாகிப் போக, நமது ஆன்லைன் விழாவும் அதற்கேற்ப ஒரு வாரம் பின்செல்கிறது ! ரம்சான் புனித நாளில் துவங்கிடவுள்ளது (ஏப்ரல் 22) ஒன்பது இதழ்கள் நிச்சயம் ; இன்னும் கூடுதலாக்கிடுவது லட்சியம் ! And trust me guys - உங்கள் பாக்கெட்களை பெரிதாய் பதம் பார்க்கப் போவதில்லை இந்தக் கத்தை & சுவாரஸ்யத்தில் குறை வைத்திடப்போவதில்லை !

And V காமிக்ஸ் அடுத்த 3 மாதங்களுக்கான சந்தா புதுப்பித்தல் இன்னும் செய்திருக்கா பட்சத்தில் - why not give it a go now folks ?

Bye all...பகிர்ந்திட நிறைய உள்ளன ; பணிகளுமே நிறைய இருப்பதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around ! Have a great weekend !

114 comments:

  1. ஜெயிச்சுட்ட மாறா

    ReplyDelete
  2. புதிய பதிவு சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  3. வெள்ளனவே நான் வந்துட்டேன்..😍😃😘😀

    ReplyDelete
    Replies
    1. ஆமா கோடாலியாரே பதிவு நேரம் இரவு

      9.28....

      9.28...

      9.28...😍

      Delete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  6. No updates on book fair books again sir 😃

    ReplyDelete
    Replies
    1. 22 னா இன்னும் 20நாட்கள் உள்ளனவே பரணி.... 10நாள் போகட்டும்..

      Delete
    2. //No updates on book fair books again sir//

      Never promised any updates at all sir...!

      Delete
    3. I never said that you have promised us sir 😁

      Delete
  7. வந்தாச்சு வணக்கம் சார்& வணக்கம் நட்பூஸ்.....!!!

    ReplyDelete
    Replies
    1. இது அசல் தானா ? நம்பலாமா ?

      Delete
    2. அசல் தான் சார்....
      மை செல் இன் சர்வீஸ்... ஓன்வீக் ஓசி WI-FIமாதிரி ஓசி செல்... கோடுவேர்டு பார்த்தோடனே டக்குனு தங்களுக்கு தெரிஞ்சிடும்,
      "மாடஸ்தி வாழ்க"😉

      Delete
  8. Interesting post sir

    Never thought I would be witnessing a month like this.. but i am happy because I will get all the three books

    ReplyDelete
  9. Will be waiting for tiruvannamalai caravan

    ReplyDelete
  10. Vijayan சார், டெக்ஸின் தனிக்கதை இந்த மாசம் இல்ல அப்படின்னா வந்து புத்தகத் திருவிழாvukku Tex கிளாசிக் மறுப்பது எதுவும் வருதா சார்?

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் V காமிக்சில் தான் (இளம்)டெக்ஸ் இருக்கிறாரே சார் ?

      அப்புறம் ஏப்ரல் 22 க்கு இன்னும் மூணே வாரங்கள் தானே சார் - சார்லியோடு ஜாலியாய் நாட்களை நகர்த்துங்கள் ! விடை தெரியும் வேளை புலர்ந்திருக்கும் !

      Delete
  11. மினி காமிக்ஸ் ஹீரோஸ் பற்றிய தகவல்
    இருக்கும் என்று நினைத்திருந்தேன் கொஞ்சம் ஏமாற்றமே.

    ReplyDelete
    Replies
    1. சார்...இப்போதே அறிவித்து விட்டால் ஆன்லைன் மேளாவின் நாட்களில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது ?

      Delete
  12. புதிய பதிவுக்கு வணக்கம் ஐயா

    ReplyDelete
  13. V comics.. அட்டைப்படம் அட்டகாசம் சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் முன் பின் அட்டை இரண்டுமே அருமை.

      Delete
  14. March மாசம் ரொம்ப லெங்க்த்தா போகுதே

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  16. டெல்லி க்ளைமேட் எப்படி இருந்தது, ஆசிரியரே

    ReplyDelete
  17. Online புத்தக திருவிழா அறிவிப்புகளில் என்ன புதிய புத்தகங்கள் என்ற முழுமையான அறிவிப்பு வரும் என்று காத்திருக்கிறோம் Sir

    ReplyDelete
  18. ///டெக்ஸுக்கு ரொம்பவே சீனியர் ! So கல்கதாயுதம் ஏந்திய நமது மாயாத்மாவுக்கு கிட்டத்தட்ட டெக்சின் தந்தை வயதென இந்த ஆல்பம் மூலமாய் நிறுவப்பட்டுள்ளது///

    ---ஹா...ஹா...ஹா.. கடவுள் இருக்குறான் குமாரு....!!!


    நாமக்கல்லில், சின்னமனூரில், சேலத்தில் சிலபல ச்லீர் கள் கேட்கின்றன....

    இந்தமாதத்தின் முதல் ஸ்வீட் நியூஸ் இதில் சார்😘😘😘😘😘😘😘(நாங்களும் ஈமோஜி போடுவாம்ல)

    ReplyDelete
    Replies
    1. பேரவை தலைவர ஆளையே காங்கலியே

      Delete
    2. ஆனா அந்த அப்பா வயது நபர் விட்ட ஒரு குத்திலேயே டெக்ஸ் மண் சோறு சாப்பிட்ட தருணத்தைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் சார்.

      Delete
    3. வீக்கம் குறைஞ்சபின்னே வருவாங்க சார்....

      Delete
    4. @STV-sub..😍😃😘😀

      தறிகெட்டுபோய் தகராறு பண்ணும் தனயனை (டெக்ஸ்) தலையில் தட்டி வைக்கும் தந்தையின் கதை *கலவரபூமியில் கனவைத்தேடி*..😍

      இது எந்தையின் கதை அல்ல.. ஒரு பாசக்கார தந்தையின் கதை..💪

      தவறாது வாங்கி படியுங்கள் ..💐🙏

      Delete
  19. ///செம வாஞ்சையோடு நமது மார்க்கெட் பற்றி ; நம் வாசக வட்டம் பற்றி ; ரசனைகள் பற்றியெல்லாம் பேசினார் & அவருக்கு மாத்திரமன்றி அங்கு குழுமியிருந்த அனைவருக்குமே வியப்பு -///

    வாவ்..பெருமையான கணங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தது போல சார். உங்களுடைய அசராத உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் சார் இவை.

      Delete
  20. ஐயா, அடுத்த மாத V காமிக்ஸ் பல்டிகள் வரை மட்டும் படித்து விட்டு இந்த கமென்ட்...

    தயவுசெய்து, 2-3 நாட்கள் தாமதமானாலும் பரவாயில்லை... அவசரகதியில் புக் அனுப்ப வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு black & white புக்கின் தயாரிப்புப் பணி 8 மணி நேரங்கள் மட்டுமே நண்பரே ! நிதானமாய் செய்கிறோம் பேர்வழியென்று முனைந்தாலும் அதே 8 மணி நேரத்து வேலையை தான் ஜவ்விழுத்து செய்யப் போகிறோமே தவிர, அதனில் சிறப்பாயோ, குறைவாயோ ஏதும் இராது !

      Delete
  21. ////நான் கெத்துக் காட்டிய போது மெய்யாலுமே பெருமையாக இருந்தது folks ///

    ஒரு லெமன் சோடா பருகியது போல இருக்குங் சார் சில்லுனு

    ReplyDelete
  22. ///ரம்சான் புனித நாளில் துவங்கிடவுள்ளது (ஏப்ரல் 22) ஒன்பது இதழ்கள் நிச்சயம் ; இன்னும் கூடுதலாக்கிடுவது லட்சியம் ! And trust me guys - உங்கள் பாக்கெட்களை பெரிதாய் பதம் பார்க்கப் போவதில்லை இந்தக் கத்தை & சுவாரஸ்யத்தில் குறை வைத்திடப்போவதில்லை !///

    பிரியாணி+சர்ப்ரைஸ் புக்ஸ்... செமயாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சனிக்கிழமைங்கோ ! Maybe குஸ்கா..நோ பிரியாணி !

      Delete
    2. பண்டிகை தினத்தில் கிழமைகளுக்கு லீவுனு மனிடோ வாக்குல சொல்லப்பட்டுள்ளதாமேங் சார்....

      Delete
  23. டெல்லி புத்தக விழாவினில் தங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் போற்றுதலுக்குரியது...

    உங்களுடைய ஆர்வமும், தேடல்களுமே எங்களுக்கு உற்சாகமூட்டும் டானிக் என்றால் அது மிகையல்ல... இது உங்கள் வசனம் அல்ல, எங்கள் வசனமும் கூட...

    நீங்கள் ஆர்வமுடன் தேடி இருந்திராவிட்டால், எங்களுக்கு ஒரு xiii யோ, பிளூபெர்ரி யோ, லக்கி லூக்கோ எங்களிடம் வந்திருக்க மாட்டார்கள்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அங்கீகாரம் எனக்கானது அல்ல நண்பரே....நம் ரசனைகளுக்கானது !

      Delete
  24. // மொதவாட்டியாய் உள்ளூரில், but வித்தியாசமானதொரு இடத்திலிருந்து இந்தப் பதிவினை டைப்புகிறேன் //

    விஜயன் சார் , வணக்கம் இந்த பதிவை எங்கிருந்து சார் எழுதினீங்க அதை தெரிந்து கொள்வது ரொம்ப ஆவலா இருக்கேன் சார்.

    Mepco college annual day sir?

    ReplyDelete
  25. அதென்னமோ புதிய அறிவிப்புகளிலே மனசு சிக்கித் தவிக்குது. ஏப்ரல் ஆன்லைன் புத்தகவிழாவுக்காக வெயிட்டிங். போதுமான வெயிட்டில்லாததால் புக்கெல்லாம் சேலத்திலேயே இருக்கு. ஆகஸ்ட் புத்தகவிழாக்குள்ளாவது ஒரு 15கிலோ+ காமிக்ஸ் தேறினா நல்லாருக்கும்.

    ReplyDelete
  26. இம்மாத காம்போ சற்று வித்தியாசமானதுதான்!

    ReplyDelete
  27. டெக்ஸ் அட்டை .சூப்பர் சார்...பின்புற நீல நிறம் ஆளத் தூக்குது....நேரில் காண ஆவல்....எந்தையின் கதையும்....சார்லி கதையும் எப்படா வரும்னு வழி மேல் விழியுடன்

    ReplyDelete
  28. ஆன்லைன் புக்பேர்வரை இதே சஸ்பென்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணலாங்க சார். அப்பதான் ஆன்லைன்விழா களைகட்டும்

    ReplyDelete
  29. டெக்ஸ் ஒருஉன்னதமான மனிதர்என்பதால்ஸாகோரை பெருந்தன்மையுடன் மன்னிக்கும்ஒரு கதையும்பின்னாளில் அமைக்கப்படலாம். அதுபோன்றகாலம் வரும்வரை காத்திருப்போம்இப்பத்திக்கு ஸாகோர் அபிமானிகள்சந்தோசப்பட்டுக்கலாம். டெக்ஸ் v/sஸாகோர். ஸாகோர்வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. We missed ur post foe a week. Daily I used to check twice

    ReplyDelete
  31. "V comics" சந்தா திங்கள் அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படுமாங்க சார்?.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீ ஜி..😍😃

      V காமிக்ஸ் 2nd குவார்ட்டர் சந்தா அனுப்பிச்சீட்டீங்களா...😶

      Delete
  32. சூப்பர் சார்...தலைநகரின் நிகழ்வுகளை படிக்க படிக்க மனம் கூதுகலமாகிறது..அருமை...இன்னும் இரண்டு நாள்களில் புது இதழ்களை காணவும் மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  33. டெக்ஸ் ஸாகோர் கதையில் எவர் நாயகராய் மிளிரபோகிறார்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்...:-)

    ReplyDelete
  34. //நாம் காலம் காலமாய் கைகோர்த்து வரும் காமிக்ஸ் குழுமத்தின் தலைவரும் கூட .//எந்தக் குழுமங்சார் போனெலிங்களா?

    ReplyDelete
    Replies
    1. இது ஃப்ரெஞ்ச் குழுமம் சார். Dargaud என்று நினைக்கிறேன்.

      Delete
  35. டியர் விஜயன் சார்..
    டில்லி புத்தக விழாவில்-சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்..சார்..
    ஒரு மாதமாக அது பற்றி மூச்சுவிடாமல் இருந்துவிட்டீர்களே..
    எழுத நிறைய விசயம் இருக்குமே..
    சார், எனக்கு தெரியவேண்டியது. நமது பழைய நண்பர்- இன்ஸ்பெக்டர் கருடா - சுட்டிக் குரங்கு கபிஷ்- இவர்களின் பதிப்பகங்களை தொடர்புகொள்ள முடிந்ததா?.i. என்பது தான்.
    இவர்கள் நிச்சயம் நம் இளைய தலைமுறையினரை காமிக்ஸ் படிக்க வைப்பார்கள்..
    தமிழ்வழியில் படிக்காதவர்களால்-உடனடியாக ஒரு லக்கிலூக்- கையோ- சிக்பில்-யையோ படித்து புரிந்து கொள்ளும் ஒரு மெச்சூரிட்டி இல்லை என்றே கருதுகிறேன்..
    ஒருவேளை ஏப்- 22-யில் அனைத்திற்கும் விடைகிடைத்துவிடும் என்று நம்புகிறேன் சார்..

    ReplyDelete
  36. ஸாகோர் vs டெக்ஸ் //
    ஒரு கனவு நிறைவேறியது.நன்றி சார்🙏. இதே போல் நமது காமிக்ஸ்களில் வந்த வேறு இரு நாயகர்கள் இணைந்து அசத்தும் Crossover சாகசங்கள் இருந்தால் அவற்றையும் எமது கண்ணில் காட்டுங்கள் சார்🙏.

    கல்கதாயுதம் ஏந்திய நமது மாயாத்மாவுக்கு கிட்டத்தட்ட டெக்சின் தந்தை வயதென இந்த ஆல்பம் மூலமாய் நிறுவப்பட்டுள்ளது//
    இக்கதையில் ஸாகோரின் நரைத்த தலையை பார்ததிலிருந்தும் தீபாவளிக்கு வந்த அறிமுகக் கதையில் ரைபிள்களும் ரிவால்வர்களும் சற்றே புராதன மாதிரிகளில் இருப்பதை கவனித்ததில் இருந்தும் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் இருந்தது. காலகட்டங்களால் சங்கடங்கள் ஏற்படாத வண்ணம் கதை எழுதி இருவரையும் ஒரேகதையில் தோன்ற வைத்த கதாசிரியரை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

    நமது DTP பிரிவினர் எனது வேலையை சுலபமாக்கிடும் முயற்சியாய் அவர்களுக்குத் தெரிந்த மொழிமாற்றத்தை ஓசையின்றிச் செய்து, ஓட்டிங் & பிட்டிங் பண்ணியிருக்கின்றனர்//
    😩😩😩
    ஆனால் பாவம் அவர்களுக்கும் இத்தனை வருடங்களாக வாசகர்களை லயன்-முத்து வுடன் கட்டிப்போட்டு வைத்திருப்பது கதைகளின் தரத்தை விடவும் காந்தம் போல் ஈர்க்கும் உங்கள் எழுத்துக்கள் தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இம்முறை மன்னித்துவிட்டு இதை லேசாக கோடிட்டு காட்டி விடுங்கள் சார்.

    *டெல்லியில் தங்களுக்கு கிடைத்த மதிப்பும் அங்கீகாரமும் மகிழ்ச்சியளிக்கிறது.💐

    ReplyDelete
  37. வணக்கம் சார்.நமது தலைநகர் டில்லியில் நடந்த விழாவில் தங்களுக்கும் நமது காமிக்சுக்கும் கிடைத்த மதிப்பும் அங்கிகாரமும் எங்களை நெஞ்செல்லாம் பூரிக்க வைத்தன. இன்னும் இன்னும் இன்னும் தாங்களும் சீனியர் எடிட்டரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளன. மேன்மேலும் புகழேணியில் ஏறிட தங்களை வணங்கி மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  38. @Edi Sir..😍😃😘😀

    1)2023- ரெகுலர் சந்தா- கட்டியாச்சு.👍

    2)S-60 சந்தா கட்டியாச்சு👍👍

    3)V comics -2nd quarter சந்தா கட்டியாச்சு..👍👍👍

    4)உயிரைத்தேடி-
    (B&W and கலர்)-
    இரண்டுக்குமே பணம் கட்டியாச்சு..😍❤..

    வேற எதுவும் வுட்டு போச்சா..😶

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஆன்லைன் புத்தக விழாவில் வெளியாகும் புத்தகங்களுக்கு அறிவிப்பு வந்த உடன் பணம் கட்ட வேண்டும் ஜம்பிங் தல. அவ்வளவு தான்

      Delete
  39. ஆனால் பாவம் அவர்களுக்கும் இத்தனை வருடங்களாகவாசகர்களைலயன் முத்துவுடன்கட்டி ப்போட்டு வைத்திருப்பது கதைகளின் தரத்தை விடவும் காந்தம் போல் ஈர்க்கும் உங்கள் எழுத்துக்கள் தான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அடடடடே! அபிஷேக்,50வருடமாகோலோச்சும் முத்துவின் வெற்றி ரகசியத்தை அசால்டாக சொல்லிவிட்டாரே.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் வருடக் கணக்கில் நாங்கள் தொடர முக்கியமான காரணம் இதுவே.

      Delete
  40. விஜயன் சார்,

    கடந்த 2-3 வாரங்களாகவே ஆன்லைன் புத்தகத் திருவிழா காய்ச்சல் வந்து விட்டது! மேலும் ஆன்லைன் புத்தகத்திருவிழா தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிச்செல்வது காய்ச்சலை இன்னும் அதிகரித்து விட்டது என்பதே உண்மை; முக்கிய காரணம் ஒரு டஜன் காமிக்ஸ் கதைகள் அதுவும் கோடை விடுமுறை நேரத்தில்; மீண்டும் எங்களை எங்களில் குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்ல போகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்னால் விருதுநகர் பொங்கலுக்கு வந்து விட்டேன், பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக சென்று கொண்டுள்ளது! முதலில் அறிவித்த தேதியில் ஆன்லைன் புத்தக திருவிழா நடந்து இருந்தால் நேற்று சிவகாசிக்கு வந்து அனைத்து புத்தகங்களையும் கைப்பற்றி இருப்பேன் :-) இந்தவாரம் மீண்டும் பெங்களூர் திருப்பி விடுவேன்; இந்த மாத இறுதியில் தூத்துக்குடி செல்ல திட்டமிட்டுள்ளேன், முடிந்தால் அந்த நேரம் ஆன்லைன் புத்தக திருவிழா நடந்தால் சிவகாசி செல்ல வேண்டும்!

    முடிந்தால் ஆன்லைன் புத்தக திருவிழா புத்தகங்கள் பற்றி க்ளூ கொடுங்கள் சார், அதனை வைத்து அடுத்த 20 நாட்களை ஒட்டி விடுவோம் சார் என்ன புத்தகங்கள் வரும் என்ற சிந்தனையில் :-)

    ReplyDelete
  41. விஜயன் சார், இந்த பதிவை படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை என்னா ஒரு வேகம்! ஆனால் புதிவு ஏதோ முழுமையடையாமல் முடிந்தது போல் தோன்றியது பதிவை முழுவதும் படித்து முடித்த பிறகு!

    ReplyDelete
  42. விஜயன் சார், வி-காமிக்ஸ் அட்டைப்படம் சூப்பர்! முன் அட்டை மற்றும் பின் அட்டை படங்கள் மற்றும் வண்ண சேர்க்கை சிறப்பாக உள்ளது! இரண்டு அட்டைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் உள்ளது சார்!

    ReplyDelete
  43. விஜயன் சார், டில்லி புத்தக விழாவினில் நிகழ்வுகள் அருமை! நமக்கு கிடைத்த அங்கிகாரம் மகிழ்வை தருகிறது! இது போன்ற விஷயங்களை நீங்கள் பகிரும் போது அதனை வாசிக்கும் எங்களுக்கு மனதில் ஓடும் சந்தோஷத்தை விரிவிக்க வார்த்தைகள் இல்லை. மிகவும் பெருமையாக உணருகிறோம் சார், எங்களுக்கு இந்த காமிக்ஸ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி சிறப்பான காமிக்ஸ் கதைகளை கொடுத்து தொடர்ந்து எங்களை காமிக்ஸ் வாசிக்க செய்து வரும் உங்களுக்கு நன்றி சார். உங்கள் தேடல்கள் தொடரட்டும் என்றும் போல் சிறப்பானதையே தரும் உங்களை தொடருவோம்!

    ReplyDelete
  44. விஜயன் சார், டில்லி புத்தக விழாவினில் நிகழ்வுகள் அருமை! நமக்கு கிடைத்த அங்கிகாரம் மகிழ்வை தருகிறது! இது போன்ற விஷயங்களை நீங்கள் பகிரும் போது அதனை வாசிக்கும் எங்களுக்கு மனதில் ஓடும் சந்தோஷத்தை விரிவிக்க வார்த்தைகள் இல்லை. மிகவும் பெருமையாக உணருகிறோம் சார், எங்களுக்கு இந்த காமிக்ஸ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி சிறப்பான காமிக்ஸ் கதைகளை கொடுத்து தொடர்ந்து எங்களை காமிக்ஸ் வாசிக்க செய்து வரும் உங்களுக்கு நன்றி சார். உங்கள் தேடல்கள் தொடரட்டும் என்றும் போல் சிறப்பானதையே தரும் உங்களை தொடருவோம்!

    நன்றி : PfB

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், வி-காமிக்ஸ் அட்டைப்படம் சூப்பர்! முன் அட்டை மற்றும் பின் அட்டை படங்கள் மற்றும் வண்ண சேர்க்கை சிறப்பாக உள்ளது! இரண்டு அட்டைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் உள்ளது சார்!!

      நன்றி : PfB

      Delete
  45. ஈ.வி. விமர்சனங்களை இரவல் வாங்குவதன் மர்மம் என்னவோ?
    நீங்கள் போடும் விமர்சனங்களின் ரசிகன் நான்.
    உங்கள் விமர்சனங்கள் எப்போதும் புதுமையாக நன்றாக சிந்திக்க தூண்டும் வகையில் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @Sridharanrckz

      அன்புக்கு நன்றிகள் ஜி! அதிக வேலைப்பளு காரணமாக புத்தகங்களைப் படிப்பதிலும், இங்கே அரட்டைகளில் பங்கேற்பதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை! இதுவும் கடந்துபோகும் என்று காத்திருக்கிறேன்!

      Delete
  46. //(ஏப்ரல் 22) ஒன்பது இதழ்கள் நிச்சயம் ; இன்னும் கூடுதலாக்கிடுவது லட்சியம் ! And trust me guys - உங்கள் பாக்கெட்களை பெரிதாய் பதம் பார்க்கப் போவதில்லை இந்தக் கத்தை & சுவாரஸ்யத்தில் குறை வைத்திடப்போவதில்லை !//
    சொன்னது மட்டுமல்ல சொல்லாததும் வரும் எனப்படுவது எனக்கு மட்டுந்தானா

    ReplyDelete
  47. டில்லி புத்தக விழாவினில் நிகழ்வுகள் அருமை

    ReplyDelete
  48. ////ஹிந்தியில் டின்டின் வெளியிடும் பதிப்பகத்தினர் கூட பட்டியலில் இருந்தனர்////

    O jesus; forgive them...

    ReplyDelete
    Replies
    1. 80-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் வெளிவரும் ஒரு தொடரை இந்தியாவில் வெளியிடுவோரை ஆண்டவர் வாழ்த்த மாத்திரமே செய்வார் சார் !

      Delete
  49. //////ஒவ்வொரு சர்வதேசப் புத்தக விழாவிலும் ஏதேனும் ஒரு நாட்டைத் தேர்வு செய்து அதன் தலைசிறந்த படைப்பாளிகளை ; படைப்புகளை கவுரவிப்பது வாடிக்கை ! And 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய் மறுக்கா களமிறங்கியிருக்கும் டில்லி புத்தக விழாவினில் பிரதம விருந்தாளிகளாய் கெளரவிக்கப்பட்டது : பிரான்ஸ் ! So அவர்களின் தேசத்து top எழுத்தாளர்கள் ; சிந்தனையாளர்கள் ; முக்கிய பதிப்பக பிரதிநிதிகள் என்று சரமாரியாக டில்லிக்குப் படையெடுத்திருந்தனர் & இவற்றிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று ஒருங்கிணைத்து வந்தது டில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு ! அவர்களின் அயரா செயல்பாடுகளின் ஒரு பகுதியாய் - பிரெஞ்சு தேசத்துடன் நெடும் காலத் தொடர்பு கொண்டுள்ள இந்திய பதிப்பகங்களுள் ஒரு சிறு எண்ணிக்கையிலானோரை மட்டும் தூதரகத்தில் ஒரு காலை ப்ரேக்பாஸ்ட மீட்டிங் ஏற்பாடாகி இருந்திருக்கிறது ! And அந்த காலைச் சந்திப்பின் முக்கிய விருந்தினராக இருக்கவிருந்தது - பிரெஞ்சு பதிப்பக சங்கத்தின் தலைவர் போலும் ! அவரைச் சந்திக்கக்கூடிய இந்தியப் பதிப்பகங்களின் பட்டியலை தூதரகம் தயார் செய்த போது, 38 ஆண்டுகளாய் பிரெஞ்சு காமிக்ஸ் உலகோடு கரம்கோர்த்துள்ள நமது பெயரும் அதனில் இடம் பிடித்திருக்கிறது////

    உலகின் சிறந்த படைப்புக்களை, தேர்வு செய்து, அதை சிறப்பாக மொழி மாற்றம் செய்து, நீண்ட காலமாய் நமக்கு வாழ்வின் ஜீவ நாடியாய்,தென்றலாய் வருடி வரும் நமது ஆசிரியருக்கு ஓர் விழா எடுக்க வேண்டியது நமது கடமை. அது சிவகாசியிலா அல்லது ஈரோட்டிலா. இரண்டு தலைவர்களின் முழு பொறுப்பு அது. வாசகர்களாய் இருக்கும் நமக்கு உள்ள உரிமை அது. நாம் தான் அவரை முதலில் கௌரவிக்க வேண்டும். இது நமது விழா.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் புன்னகை ஒளிர் சார்

      Delete
    2. 'விலாவில்' வாங்கிய முச்சந்தி விளாசலுக்குப் பின்பாய் "விழா" என்பதை பேப்பரில் எழுதிப் பார்த்துக் கொள்ள மட்டுமே இ சாயாக்கடை நாயருக்கு தகுதி உண்டு சாரே ! நிங்கள் அன்பு ஒன்றே போதும் ; ஞான் பாட்டுக்கு ஓரமாய் டீ ஆத்திச் செல்லும் !

      Delete
  50. பொட்டி கிளம்பியாச்சா சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் லிஸ்ட்டிங் போட்டாங்க.... சோ, பொட்டி கிளம்பிங்கு....வெள்ளனவே கொரியர் ஆபீஸ் போயிடலாம்..

      Delete
  51. Online listing ready.
    Pathivukku naangalum ready.

    ReplyDelete
  52. இந்த நாள் இனிய நாள்....
    பதிமூனிலே இவருக்கு என்ன நேர்ந்தது என தேடிய கதைபக்கங்களே அதிகம்...இன்று ஒரே புக்காய்
    .....

    சார்லி முதன்முறையாய் ஏக எதிர்பார்ப்பில்....


    இரு ஜாம்பவான்களின் மோதலாய் ஓரிதழ்

    ReplyDelete
  53. நம்ம பரணி நமது லயன் அலுவலகத்திற்கு சென்று நேற்று மாலையே புத்தகம் வாங்கி updates கொடுத்து விட்டார். இன்றைய எனது கூரியர்க்கு So Eagerly waiting.

    இன்னும் ஆன்லைன் புத்தக விழா, அந்த சூப்பர் டூப்பர் செய்தி எல்லாத்துக்கும் வெயிட்டிங்.

    ReplyDelete
  54. பரணி சார்,
    எங்ளை விட்டு விட்டு ஆட்டத்தை சொல்லாம கொள்ளாம ஆரம்பிச்சிட்டீங்களே. சிவகாசி வருவதை முன்பே சொல்லி இருந்தால் அங்கே உங்களை நேரே சந்தித்து இருப்பேனே. போங்க சார்.

    ReplyDelete
  55. ஸ்ரீவி நான் வாழ்ந்த ஊர். ஸ்ரீவியில் எனது அக்கா மற்றும் எனது அண்ணன்கள் அங்கு இருக்கிறார்கள். நான் தற்சமயம் மதுரையில் இருக்கிறேன். வரும் வியாழன் வரை ஸ்ரீவியில் இருப்பேன்.

    ReplyDelete