Powered By Blogger

Friday, March 03, 2023

மெர்சலூட்டும் மார்ச் !

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் புக்ஸ் ரெடி ஆவதைக் காட்டிலும், அவற்றை கூரியர்க்காரவுக மறுநாளே பட்டுவாடா செய்வது செம பேசுபொருளாகிப் போச்சு !! இங்கே கடந்த இரண்டரை மாதங்களாய் மொக்கை போட்டு வந்த ST கூரியர் கிளையினில், புதிதாய் ஆட்களை வேலைக்குச் சேர்த்திருப்பதால் நேற்றைக்கு நம்மிடமிருந்து புறப்பட்ட பார்சல்கள் சகலமும், நேற்றிரவே அவர்களது ஆபீஸிலிருந்தும் புறப்பட்டு விட்டன ! அதனால் தான் இன்று கணிசமான டெலிவரிக்கள் ! தொடரும் மாதங்களிலும் இந்தப் புதுப் பணியாட்கள், நல்ல ஆரோக்கியங்களோடும் ; கண்ணாலம், காதுகுத்து, மொய்விருந்து நிகழ்வுகளுக்கு மாதத்தின் மத்திகளில் மாத்திரமே போய்வரும் யோகத்தோடும் ; பக்கத்து ஆபீசில் ஐநூறு, ஆயிரம் சம்பளம் உசத்தித் தருவதாய்க் காட்டும் குச்சிமிட்டாய் சபலங்களுக்கு மசியாதவர்களாகவும் நீடூழி வாழ நம் அனைவரது சார்பிலும் ஒரு வேண்டுதலைப் போட்டு வைத்துவிடுவோமே guys ?  மிடிலே !!

Oh yes, புக்ஸ் நான்குமே உங்கள் கைகளில் இருக்கின்றன என்பதால் நான் பெரிதாக அறிமுகங்களைச் செய்திடத் தேவையிராது ! இத்தனை மட்டும் சொன்னால் போதுமென்பேன் - இம்மாத கூட்டணியானது LAYS சிப்ஸை விடவும் செம க்ரிஸ்பானது !!  V காமிக்ஸ் மாத்திரமென்றில்லாது - மீத 3 இதழ்களுமே இம்முறை உசைன் போல்ட்டுக்கு tough தரவல்ல racy ஆக்ஷன் த்ரில்லர்ஸ் ! 

எனது கண்ணோட்டத்தில் இம்மாதத்து highlight சந்தேகமே இன்றி I.R.$ தொடரின் அறிமுகம் தான் ! லார்கோ தொடரினில் படைப்பாளிகளின் வேகத்துக்கு ஈடு தந்திடும் நிலையைத் தொட்டாகி விட்டாச்சு, இனி புதுசாய் அவர்கள் படைத்தாலன்றி வெளியிடக் கதைகள் லேது எனும்போது, அந்த ஹை-டெக் பாணியினில் வேறு யாரையாச்சும் தேற்ற வழியுள்ளதா ? என்று யோசித்த நொடியில், நண்பர்கள் பலரும் கோரியிருந்த இந்த இன்கம்-டேக்ஸ் ஆபீசர் தான் மனதில் நிழலாடினார் ! ஒன்றோ, ஒண்ணரை ஆண்டுகளுக்கோ முன்னே நம்மிடம் வந்து சேர்ந்த மனுஷனுக்கு போன ஆண்டே வாய்ப்பளித்திருக்க வேண்டியது ; but க்ளாஸிக் நாயகர்களின் Smashing '70s கண்ட வெற்றியானது நிறைய பரண் உறக்கங்களை அவசியமாக்கி வைத்துவிட்டது ! So 2023-ன் முதல் க்வாட்டரிலேயே ஏஜென்ட் லேரி மாக்சுக்கு ஸ்லாட் தந்தே தீருவதென்று உறுதியாய் இருந்தோம் - and here you are !! 2 அத்தியாயங்கள் ; முழுவண்ணத்தில் ; லார்கோ ஸ்டைலிலேயே அமெரிக்காவில் துவங்கும் அதிரடிகள் all the way to Europe நீண்டு ஓடிட, ரொம்பவே சுவாரஸ்யத்துடன் பணியாற்றினேன் இந்த ஆல்பத்தினில் ! இயன்றால், இந்த மாதத்தினில் உங்கள் வாசிப்புகளில் "கரை படிந்த கரன்சி"க்கு முன்னுரிமை தந்தால் மகிழ்வேன் - எடிட்டர் # 900 முறைத்தாலுமே !!

இந்த மாதத்தின் இரண்டாம் கலர் இதழும் என்னை நிரம்ப ரசிக்கச் செய்ததொரு ஆல்பமே ! "வூட்டிலே பாஸ்டர் ; வெளியிலே NYPD டிடெக்டிவ்" என்று வலம் வரும் டேவிட் சாலமன் - மேலோட்டமாய்ப் பார்த்தால் செம சிம்பிளான சாகசத்தினில் இடம்பிடிப்பது போல் தெரியலாம் தான் ; ஆனால் வழிநெடுக ஓவியரோடு கூட்டணி போட்டுக்கொண்டு கதாசிரியர் விதைத்திருக்கும் குறிப்புகளை மிஸ் பண்ணிடாது கதையோடு பயணிப்பது ஒரு செம cute அனுபவம் என்பதை நீங்களும் சீக்கிரமே உணர்வீர்கள் ! And இங்கே ஒரு ஜாலி சேதியுமே !! SODA தொடருக்கு எப்போதோ 'சுபம்' போட்டிருந்தார்கள் ; ஆனால் மனுஷன் ஒரு இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு ரெடியாகியாச்சு ! அதே dark பாணியில் ; செம புது ஸ்டைலில் SODA ஆல்பம் # 13 ரெடியாகியுள்ளது ! கோப்புகளைக் கோரிப் பெற்றுப் பார்த்தேன் - சும்மா தெறி !! Maybe அடுத்த வாய்ப்பு கிட்டும் போது இந்தப் புது ஆல்பத்தைக் களமிறக்கிடலாமோ ?

மார்ச்சின் 2 black & white இதழ்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும் ரகம் - on the crispness factor !! 'இளம்' டெக்ஸ் பின்னிப் பெடல் எடுப்பது ஒரு பக்கமெனில் ஸாகோர் "புரவிகள் பூமி'யில் கோலோச்சுவது இன்னொரு பக்கம் ! Oh yes - இரு கதைகளுமே நமது கோலிவுட் சாயலில் இருப்பதை மறுக்க மாட்டேன் தான் ; ஆனால் இரண்டுமே சென்டிமென்டை கிளறும்  ரகக் கதைகள் என்பதையும் மறுப்பதற்கில்லை ! So எந்த இதழைக் கையில் எடுத்தாலும் ஒரு டாப் கியர் வாசிப்பு உத்தரவாதம் என்பேன் !



ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி & ஏற்கனவே ஆர்டர்களும் ரவுண்டு கட்ட துவங்கி விட்டன தான் ! இயன்றால் இம்மாதத்து இதழ்கள் நான்கையுமே வாங்கிடுங்களேன் ப்ளீஸ் - நிச்சயமாய் எந்த இதழும் உங்களை disappoint செய்திடாது என்பேன் ! இதோ - ஆன்லைன் லிங்க் : https://lion-muthucomics.com/monthly-packs/1072-march-pack-2023.html

And இதோ - இம்மாதத்து இதழ்களின் YouTube ப்ரிவியூவுமே !! கேமராவை சித்தே கிட்டக்க வைத்து விட்டேன் போலும் - எனக்கே ராப்பொழுதில் upload செய்யும் போது பயந்து பயந்து வருது ! நல்ல வெளிச்சமானதொரு பகலில் பார்க்க நேரம் கிடைக்குதா ? என்று பாருங்களேன் ! Here's the link :

https://youtu.be/9KDLNWr3i6o

Bye all ...see you around !!

193 comments:

  1. எங்க யாரையுமே காணமே ...

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே 🙏💐

    ReplyDelete
  3. மீ 2ப்பு பாஸ் 🤩😃

    ReplyDelete
  4. புரவிகளின் பூமி :-

    V காமிக்ஸின் ஹாட்ரிக் சிக்சர்.! சிக்கென இருக்கும் புத்தகத்தை கையில் ஏந்துவதே தனி சுகம்..! அடுத்து சித்திரங்கள்.. V காமிக்ஸ் சித்திரத் தரத்தில்.. தான் நம்பர் ஒன் என்பதை இம்முறையும் நிரூபித்துவிட்டது.!

    மிக எளிய நேர்கோட்டுக் கதை..! காட்டுக் குதிரை மந்தைகளை கைப்பற்றுவதில் இருவேறு குழுக்களின் அணுகுமுறை எப்படியெல்லாம் மாறுபடுகிறது... மனிதாபிமானத்தோடு குதிரைக்கு சிக்கலான பிரசவத்தை பார்த்து குட்டியை பிரித்தெடுத்து அதற்கு பெயரும் வைத்து கொண்டாடும் செவ்விந்தியர்கள் ஒருபுறம்..
    குட்டிக்குதிரையின் கறி சுவையாக இருக்குமென்று அதைக்கொன்று போடும் கிராதகர்கள் குழு ஒருபுறம்..
    இவர்களுக்கிடையே இருள்வன மாயாத்மா ஸாகோரும் அவரது நண்பரும் ஒருபுறம்..

    இந்த மூன்று குழுக்களையும் இணைத்து சென்டிமென்ட் நிறைந்த காட்சிகளோடு ஒரு அருமையான சிறு கதை இந்த புரவிகளின் பூமி.!

    சிக்கலான பிரசவத்தில் உயிர்பிழைத்த குதிரைக்குட்டியையை அவன் சுடும்போது நமக்கே பகீர் என்று இருக்கிறது.. தாய்க் குதிரைக்கு எப்படி இருந்திருக்கும்..!? கதைதான் என்றாலும் அந்தக் காட்சியிலிருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது..! இறுதியில் அவனுக்கு தண்டனை கிடைக்கும்போதுதான் கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.!
    ஐந்தறிவுத் தாய்ப்பாசம்.. ஆறறிவுச் சகோதரப்பாசம் ரெண்டும் நம்மை நெகிழ வைக்கிறது..!

    ஒரே ஒரு குறை... கதையில் அந்தத் தாய்க்குதிரை மட்டும்தான் பெண்பால்..!

    புரவிகளின் பூமி - பொருத்தமான தலைப்பு.

    ReplyDelete
    Replies
    1. @KoK..😍😘😃

      தல ஸாகோர் கதைக்கு பட்டைய கிளப்பும் விமர்சனம் வழங்கியமைக்கு உங்களுக்கு ஸாகோர் பேரவையினர் சார்பாக
      மனமார்ந்த நன்றிகளும் 1000 😘க்களும்..

      Delete
    2. இதெல்லாம் நம்ம கடமை ஜம்பிங் தலைவரே..😍

      Delete
    3. //சிக்கென இருக்கும் புத்தகத்தை கையில் ஏந்துவதே தனி சுகம்..!//

      ஏனுங்னா....இந்த 'குண்டு புக் பேரவை...குண்டு புக் பேரவை'ன்னு ஒண்ணு இருந்துச்சே....அதை எங்கயாச்சும் பாத்தீக ?

      Delete
    4. // ஏனுங்னா....இந்த 'குண்டு புக் பேரவை...குண்டு புக் பேரவை'ன்னு ஒண்ணு இருந்துச்சே....அதை எங்கயாச்சும் பாத்தீக //
      நாங்க எது வந்தாலும் கொண்டாடும் ரகம் சார்!

      Delete
    5. But நிஜத்தைச் சொல்வதானால் - crisp reading = யதார்த்தம் !!

      Delete
    6. அது சரி....நன்னியும், முத்தாவும் தந்து செட்டில் பண்ணிப்புட்டாரே ஜம்பிங் தலைவர் ! பேசுன அமௌன்ட் பேங்குக்கு நேரடியா போயிடுமோ ?

      Delete
    7. ///ஏனுங்னா....இந்த 'குண்டு புக் பேரவை...குண்டு புக் பேரவை'ன்னு ஒண்ணு இருந்துச்சே....அதை எங்கயாச்சும் பாத்தீக ?///

      அந்தப் பேரவை டெக்ஸ் பொஸ்தகத்துக்கு மாத்திரந்தானுங் சார் வேலை செய்யும்.. மத்தபடி ஆபீசு பூட்டியேதான் கெடக்கும்..!


      ///அது சரி....நன்னியும், முத்தாவும் தந்து செட்டில் பண்ணிப்புட்டாரே ஜம்பிங் தலைவர் ! பேசுன அமௌன்ட் பேங்குக்கு நேரடியா போயிடுமோ ?///

      ஒரு நேர்மையான.. ஒரு கண்ணியமான.. ஒரு இதுவான.. ஒரு அதுவான.. இளந்தாரிப் பயலைப்பார்த்து இப்படி சொல்லிட்டிங்களே சார்..! (அமவுண்ட் எல்லாம் அட்வான்ஸாவே வாங்கிட்டுதான் சார் ஆரம்பிச்சதே.!)

      அடுத்த மாசம் மட்டும் தல டெக்ஸ் மேல கைவைக்கட்டும் இந்த கோடாரி மாயாத்மா... அப்புறம் பாருங்க..கோடாரி கீடாரி எல்லாம் என்ன கதி ஆகுதுன்னு..!

      Delete
    8. ஏனுங்னா....இந்த 'குண்டு புக் பேரவை...குண்டு புக் பேரவை'ன்னு ஒண்ணு இருந்துச்சே....அதை எங்கயாச்சும் பாத்தீக ?//
      ஹன்சிகாவையும்ர ரசித்தோம்..இலியானாவையும் ரசித்தோம்…

      அதாங்க தமிழ் வாச(ரசி)கர்கள்.

      Delete
    9. மாசத்துக்கு ஒரு குண்டு வெளியிட்டு பாருங்க. அத வாங்கிபுட்டு தா மறு வேலை.

      Delete
  5. ஓநாய் கூட்டத்தில் டெக்ஸ்: பாசமான அக்கா தம்பி, ஒரு ஓநாய் கூட்டம் அவர்களுடன் டெக்ஸ்; இந்த மூன்று புள்ளிகளை அழகாக இணைத்து விறுவிறுப்பான ஆக்ஷன் கதையை கொடுத்து உள்ளார்கள். இந்த மூன்று புள்ளிகளுடன் நான்காவது புள்ளி ஒன்றும் வருகிறது, கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரம். நேர்கோட்டு கதை என்றாலும் அதனை சுவாரசியமாக கொடுத்து உள்ளது டெக்ஸ் கதைகளின் சிறப்பு! இளம் டெக்ஸின் விவேகம் கொஞ்சமாக இந்த கதை தொடரில் அதிகரித்து வருகிறது, வசனமும் அதற்க்கு ஏத்தபடி அமைத்தது சிறப்பு! முதல் பக்கத்தில் ஆரம்பித்த சலூன் கடை அதிரடி விறுவிறுப்பு கடைசி வரை இருந்தது சிறப்பு. புத்தகத்தை எடுத்ததும் தெரியவில்லை கதையை படித்து முடித்ததும் தெரியவில்லை, தோட்டாவின் வேகம் கதை.

    ஓநாய் கூட்டத்தில் டெக்ஸ் முழு திருப்தி.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் அட்டை படம் செம மாஸ்!

      Delete
    2. கீழேயுள்ள எழுத்துரு கூடுதல் வசீகரம் சார் ! உபாயம் : நண்பர் ஜகத் !

      Delete
    3. கவனித்தேன் சார்! ஒரு பதிவில் நீங்கள் அவர் அனுப்பிய அனைத்து தலைப்புகளையும் பதிவிட்டு இருந்தீர்கள், மிகவும் அருமை! தலைப்புக்கு ஏற்ற மாதிரி தலைப்பை எழுதி உள்ளார்! மீண்டும் பாராட்டுக்கள் ஜகத் !

      Delete
    4. ///கீழேயுள்ள எழுத்துரு கூடுதல் வசீகரம் சார் ! உபாயம் : நண்பர் ஜகத் !///

      பாராட்டுகள் ஜகத்...💐💐

      Delete
  6. தப்பிச் சென்ற தேவதை :- அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள், இந்த காட்சிகளில் படங்களை கூர்ந்து பார்த்தால் இன்னும் ரசிக்க முடியும், இதுவே கதைக்கு பலம் சிறப்பான படங்கள் + நடைமுறையில் நடந்து வரும் ஒரு மோசடி கதை கரு + அந்த தேவதையார் என விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்கள்! புத்தகத்தை கீழ் வைக்க விடாமல் என்னை படிக்கச் செய்தது சோடாவின் வெற்றி!

    செரிமானத்தை சரி செய்து காமிக்ஸ் தாகத்தை மீண்டும் ஒரு முறை தீர்த்து வைத்தது சோடா!

    ReplyDelete
    Replies
    1. படங்களை கவனித்து படித்தால் சில clue கிடைக்கும் என ஆசிரியர் சொன்னது புரியும், அவை கதையின் பயணத்திற்கு முக்கியமானவை! டோன்ட் மிஸ் இட் friends.

      Delete
  7. IRS புதிய நாயகர் கதை என்பதால் நாளை கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் என உள்ளேன்!

    ReplyDelete
  8. // செம புது ஸ்டைலில் SODA ஆல்பம் # 13 ரெடியாகியுள்ளது ! கோப்புகளைக் கோரிப் பெற்றுப் பார்த்தேன் - சும்மா தெறி !! Maybe அடுத்த வாய்ப்பு கிட்டும் போது இந்தப் புது ஆல்பத்தைக் களமிறக்கிடலாமோ ? //

    Oh YES!

    ReplyDelete
  9. // இம்மாதத்து இதழ்களின் YouTube ப்ரிவியூவுமே !!

    https://youtu.be/9KDLNWr3i6o //

    மிகவும் அருமை சார்! தெளிவான ஒளி (கணீர் குரல் பிளஸ்) ஒலி பதிவு மிகவும் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. காலங்கார்த்தாலே மக்கள் ஆபீசுக்கு வரும் முன்னமே ஷூட் பண்ணினது சார் ! என்ன - upload பண்றதுக்குள்ளாற நெட் உசிர வாங்கிடுச்சி !

      Delete
    2. ஒளிபதிவாளர் சிறப்பாக ஒளி பதிவு செய்து உள்ளார்!

      Delete
    3. A film by முழியாங்கண்ணன் ராஜா !

      Delete
    4. செல்பி மோடில் எடுத்த மாதிரி தெரியவில்லை சார்!

      Delete
    5. ஆபீசில் ஈ-காக்காய் இல்லாத அதிகாலை சார் ! அடியேனே ஒளிப்பதிவு ; ஒலிப்பதிவு ; முழிப்பதிவு ! Mirror Image எப்படி off பண்ணனும் என்று நண்பர்கள் தான் போனவாட்டியே கற்றுத் தந்து விட்டனரே !

      Delete
    6. // Mirror Image எப்படி off பண்ணனும் என்று நண்பர்கள் தான் போனவாட்டியே கற்றுத் தந்து விட்டனரே ! //

      Super sir! Its a news to me! I need to learn that!

      Delete
  10. சார்.. வீடியோ நல்லாருக்குங்க. பாத்துட்டேன். பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்லே. எங்க மூஞ்சிய கண்ணாடில பாத்தே நாங்க பயப்படறமில்லை. உங்களைப் பாத்து பயந்துடுவமா.

    ReplyDelete
  11. வாரே வா 3ஆவது V காமிக்ஸ் simply superb. ஒரே ஒரு சம்பவம் தான் கதையே. ஆனால் அந்த ஓவியங்கள் நம்மை அங்கேயே கூட்டி சென்று விடுகிறது. அந்த குதிரைகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. அந்த சண்டை மின்னல் வேகம்,நம் கண் முன்னாலயே நடப்பது போல இருக்கிறது. ஹாட்ரிக் எடுத்த V காமிக்ஸ் எடிட்டருக்கு எனது வாழ்த்துக்கள்.

    எனது மதிப்பெண் 10/10.

    ReplyDelete
  12. தூங்குற நேரம் தவிர...முழிச்சிருக்கறப்பல்லாம்... சட்டி, பானை.. மரம்,மட்டை..காடு, கழனி.. வண்டி, மாடு.. ஏரி, குளம்..
    ஆகாயம், பூமி.. அல்லாமே
    நம்ம காமிக்ஸ் மாதிரி
    கலர், black &white ல மாத்தி, மாத்தி...கண்ணுக்கு ஓவியம் மாதிரி தெரியுது...
    என்ன sir இது வம்பா இருக்குது...😄

    ReplyDelete
  13. சூப்பர் சார்....சோடா புது ஆல்பம் ஒரு பக்கத்த கண்ண காட்டுங்க....அப்ப கார்ட்டூன்ல ஒரு டசன்ல ஒன்னா சோடா வரட்டுமே

    ReplyDelete
  14. Irsபுதிய அறிமுகம் லேரி மேக்ஸ் தூள் கிளப்புறார்.யூத அப்பன் கள் பாட்டன் கள் போட்டு வைத்திருந்த பணங்களை அவர்களது வாரிசுகள்கேட்கும்போது,அவர்கள் சார்ந்ததகவல்கள்,சம்பிரதாயமான ஆவணங்கள் ((வதைமுகாம்களில்தடமிண்றி தீர்த்துக்கட்ட பண்பட்ட வேர்களின் டெத் சர்டிபிகேட்)கேட்டுகதவைசாத்திய ஸ்விஸ் வங்கிகள்பற்றியமெகா ஊழலை தோண்டி எடுக்கிறார்"நம்மலேரி". ஜேம்ஸ்2.oபாணியில் நறுக்குத் தெளித்தார் போன்ற விறுவிறுப்பான கட்சாட்கள் ,ஆக்சன் சீக்வன்ஸ்கள்என பரபரக்கிறது கதை.லேரிமேக்ஸ்பூங்கொத்துடன் வரவேற்கிறேன். அடுத்த லேரிமேக்ஸ் விரைவில் வேண்டும் சார். irs

    ReplyDelete
  15. வான்ஹாமே. செல்டன் கூட்டணி மீண்டும் வந்தது போலிருக்கிறது லேரிமேக்ஸின்வரவு.வெல்கம் ஆபிஸர்லேரி சார் வெல்கம் .பன்ச் வசனங்களில் ஒற்றைக்கண் ஜாக்கையும் ஞாபகப்படுத்துகிறார் லேரி

    ReplyDelete
  16. கதையில் வரும் ஒரே பெண்பால் குதிரை.அதுவும் அப்பொழுதுதான் பிரசவித்த "தாய்க்குதிரை".நோட் திஸ் பாய்ண்ட் கண்ணன் ஜி.

    ReplyDelete
  17. புரவிகளின்பூமி 64 பக்க மினி சாகசம்.விறுவிறுப்பான இந்தக்கதை15 நிமிடங்கள் என்றால்126பக்க டெக்ஸ் அதே15நிமிடங்கள்.தல டபுள்விறுவிறுப்பு எப்பொழுதும் போல .சீனியரின் இடத்தைதொடஸாகோர் இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும்.

    ReplyDelete
  18. மோஷே கெல்டாப்பின் பிண்ணணிஎன்ன ?மேல்மட்டத்தினரையெல்லாம் அவரால் எப்படி ஆட்டுவிக்கமுடிகிறது?என்பது மட்டுமே கதையல்ல என்பது கடைசிநொடியில் பட்டென்று மொசாட் (அணுஆயுதங்கள்)களமிறங்கும்போதுதான்தெரிகிறது.இதுவரைநாம்படித்துள்ள அனைத்துஹைடெக்க்ரைம் த்ரில்லர்கதைகளையும்விஞ்சுகிறார் லேரி.இந்த வருடத்தின் மாஸ்ஹிட்இது.ஆல்பா டேங்கோ சிஸ்கோ வரிசையில் நாம் என்ன எதிர்பார்த்தோமோஅவை அனைத்தும் இந்த ஒரே கதையில்உள்ளது.

    ReplyDelete
  19. டியர் எடி,

    ST Couriers எப்புடி முன்னேறினாங்களோ.... ஆனா DTDC இந்த மாதம் வெள்ளி மதியமே சத்தமில்லாமல் டெலிவரி செஞ்சிட்டாங்க.

    இன்று அன்பாக்ஸிங் பண்ணி நன்றாவது படிச்சுபுடுறேன், தூங்கி (?!?!) எழுந்ததும். 🥰😁👍

    ReplyDelete
  20. எல்லோரும் விமர்சனமே போடறாங்களே ...

    எங்கே எங்கே எங்கே என் பார்சல்......?!

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I.R.S. அட்டையில் தலைப்பில் எழுத்து பிழையாக உள்ளதால் அதன் அர்த்தமே மாறிவிடுமே சார்.
      'கறை' படிந்த கரன்சி என்பது தானே சரியாக இருக்கும்
      'கரை' என்ற சொல்லின் பொருளே வேறு அல்லவா?

      Delete
    2. Extremely sorry sir. books courier இப்போதுதான் வந்தது. பார்சலை பிரித்தவுடன்
      I.R.S. புத்தகம் தான் முதலில் எடுத்தேன். எழுத்து ப் பிழை சரிசெய்யப் பட்டு 'கறை' என்று சரியாகவே உள்ளது.
      ஆனால் தங்கள் பதிவில் உள்ள அட்டை ப் படத்தில் 'கரை படித்த கரன்ஸி' என்று எழுத்துரு இருந்ததால் நான் அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
      Once again ,extremely sorry. Pardon me.

      Delete
  22. தப்பிச் சென்ற தேவதை

    ஆரம்பத்தில் ஒரு கார் chase உடன் ஆரம்பிக்கும் கதை முடியும் வரை அதே வேகம். கதை மட்டுமின்றி ஓவியங்களும் அருமை. அந்த இடித்துக் கொண்டு இருக்கும் கட்டிடத்திற்குள் சோடாவுக்கும் அந்த கொலையாளிக்கும் நடக்கும் சண்டை அப்பப்பா. அந்த பெண் லார்சி ரொம்ப நாட்களுக்கு நினைவில் இருப்பாள்.

    எனது மதிப்பெண் 12/10.

    முதலில் படித்த இரண்டு கதைகளுக்கும் என்ன ஒற்றுமை என்றால் இரண்டும் சோகமாகவே முடிகிறது.

    ReplyDelete
  23. இளம் வாசகனுக்கு சிறந்த கதை கரு கொண்ட புத்தகங்கள் வாங்க ஹெல்ப் பண்ணுங்க
    1)ரத்த படலம் எந்த பகுதியில் இருந்து ஸ்டார்ட் பண்றது..?
    2)LARGO WINCH நல்ல கதையா..? இன்ட்ரஸ்டிங்கா இருக்குமா
    3) யுகம் தாண்டியரு யுத்தம் நல்லா இருக்குமா..?
    4) லக்கி லுக் இப்போ available எந்த புக் நல்லா இருக்கும்?
    5)DETECTIVE SPECIAL-(BONELLI’S 3 IN 1) நல்லா இருக்குமா ரேட்டிங் சொல்லுங்க..?
    6) தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல இந்த புத்தகம் நல்லா இருக்குமா .?
    7) வழி அனுப்ப வந்தவன் புத்தகம் எப்படி..?

    ReplyDelete
    Replies
    1. ///6) தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல இந்த புத்தகம் நல்லா இருக்குமா .?
      7) வழி அனுப்ப வந்தவன் புத்தகம் எப்படி..?///

      6 புத்தகம் நல்லா கலர்ஃபுல்லா இருக்கும்..!

      7. பிரின்டட் பேப்பர்லாம் வெச்சி பின்னடிச்சி அட்டை ஒட்டியிருக்கும்.!

      ///1)ரத்த படலம் எந்த பகுதியில் இருந்து ஸ்டார்ட் பண்றது..?///

      எங்க நல்லா வெளிச்சமா படிக்க வசதி இருக்கோ.. அந்தப் பகுதியில உக்காந்து ஸ்டார்ட் பண்ணுங்க..!

      ஜோக்ஸ் அபார்ட் :

      எல்லாமே நல்லா இருக்கும்.. எதை வேண்டுமானாலும் தேர்வு பண்ணுங்க..!

      Delete
    2. All are good books to read. Good variety;-)

      Delete
    3. 1, முதல் பாகத்தில் இருந்து படிப்பது
      நன்று.
      2, மிக சிறந்த கதைகள்
      3, Top-10, கதைகளில்
      இதுவும் ஒன்று,
      4,லக்கி லுக்
      எது கிடைத்தாலும்
      o.K
      5, படிக்கலாம் உங்க விருப்பம்
      6, தேவ இரகசியம்
      தேடலுக்கல்ல. மிக அரிய பொக்கிஷம்,
      படிக்க ஒன்று பாதுகக்க ஒன்று இரண்டு புத்தகங்கள் தேவை
      7, ok Sir படியுங்கள்
      இது வேறு ஒரு
      கோணம் படிக்கலாம்

      Delete
    4. ரொம்ப ரொம்ப நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰😊 இந்த புக்ஸ் எல்லாம் முடிச்சுட்டு அடுத்த புக்ஸ்கு ஹெல்ப் கேட்பேன் மறக்காம ஹெல்ப் பண்ணுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😹😻

      Delete
    5. Subramanian anna
      இரத்தப் படலத்தோட முதல் பாகம் என்ன பெயர்

      Delete
    6. KiD ஆர்டின் KannaN
      😊😇😇🤣🤣🤭

      Delete
    7. கறுப்புக்
      கதிரவனின்
      தினம்
      எல்லா காமிக்ஸ்
      புத்தகங்களும்
      சிறந்ததே
      ஒவ்வொரு நண்பர்களின்
      பார்வை,
      கோணம்
      வேறுபடும்

      Delete
    8. இரத்தப்படலம்-இரண்டு சுற்றுக்கள்-உண்டு.
      நீங்கள் முதலில் லார்கோவின்ச்-என் பெயர் லார்கோ -வில் ஆரம்பியுங்கள்..சார்.

      Delete
    9. அப்றம் - ஒரு லக்கிலூக் (லயன் ஆண்டு மலர்-)
      இரு சிக்பில்- இதழ்கள்

      ClD ராபின் இதழ்கள் இரண்டு (அ)
      Detective Sp. (3 in 1 )
      ஜீலியா - வின் 'நின்றுபோன நிமிடங்கள்,, (ரூ 50 தான்)
      வாங்கி படித்து விமர்சனம் எழுதுங்கள்..
      உங்கள் ரசனை தெரிந்துவிடும்..
      (ஆனால் நாங்கள் அனைத்தை
      யும் ரசிக்கும் காமிக்ஸ் காதலர்-ஆக்கும்.. iii???

      Delete
    10. /////ஜீலியா - வின் 'நின்றுபோன நிமிடங்கள்,, (ரூ 50 தான்)/////

      I hope, julia will get another chance to prove her strength...

      Delete
    11. இன்று
      மாடஸ்டியே தனது இடத்துக்கு போராடும் நிலையில் ( ஒரு காலத்தில் அனைவருக்கும் கனவு நாயகி இவரே) Me too. ஜூலியா வெற்றி அடைய கடுமையாக போராட வேண்டும்.
      இன்று ரூபினி மட்டுமே ஜொலித்து கொண்டிருக்கிறார்.

      எது எப்படியோ,

      பள்ளி மாணவிகளுக்கு பரிசாக கொடுக்க,

      ////ஜீலியா - வின் 'நின்றுபோன நிமிடங்கள்,, (ரூ 50 தான்)///
      நல்ல சாய்ஸ்.

      Delete
    12. @Elango DCW ரொம்ப நன்றி நீங்க லக்கி லுக்கிங் ஆண்டு மலர் சொன்னீங்க. அந்த புத்தகத்தில் பெயர் என்ன என்று கூற முடியுமா?

      Delete
    13. நில்.. கவனி.. சிரி..(2023) ஆண்டு மலர். -
      இதை படித்து ரசித்துவிட்டீர்களானால் பின்னோக்கி வரிசையாக வாங்கிவிடுவீர்கள்-2022-2021-என்று..

      Delete
    14. @ELango DCW நில்.. கவனி.. சிரி..(2023) ஆண்டு மலர். இப்போது அவைலபில் இல்லை😔🥺😨😭
      இன்னொரு புத்தகத்தைப் பற்றி கேட்கிறேன்
      ஷெர்லாக் ஹோம்ஸ் விற்பனைக்கு ஒரு பேய் புத்தகம் நல்ல காமெடியாக இருக்குமா நன்றாக இருக்குமா இந்த

      Delete
  24. புரவிகளின் பூமி.v comicsல் மிகமிகச்சிறப்பான ஓவியங்கள்உள்ள கதைகள் மட்டுமே வரும் என்ற டெம்ப்ளேட் இம்முறையும் அட்சர சுத்தமாக பின்பற்றப்பட்டு வந்தது.அதிலும் குதிரையின் கண்களில் தெரியும் வில்லனின் முகம் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. ரசிகர் சார் நீங்க

      Delete
    2. ///குதிரையின் கண்களில் தெரியும் வில்லனின் முகம் அற்புதம்.///

      ஆமா ராஜசேகர் சார்...😍

      Delete
  25. மெய்யாலுமே மெர்சலூட்டும் மார்ச் தான் சார்.

    ReplyDelete
  26. டெக்ஸ் கதையும் படித்து விட்டேன். இன்னும் லேரி மாக்ஸ் மட்டுமே பாக்கி.

    அதையும் முடித்து விட்டு, இரண்டு விமர்சனங்கள் உடன் வருகிறேன்.

    ReplyDelete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. எடிட்டர் சார் இம்மாத முத்துக்காமிக்ஸ் இலக்கமும் தவறாக அச்சிட்டுள்ளார்கள். அண்மைக்காலமாக வெளியீட்டு இலக்கங்களில் பல தொடர்ந்து குழறுபடியாகி
    காமிக்ஸ் சேகரிப்பாளர்களையும் வாசகர்களையும் குழப்பத்துக்குள்ளாக்குகின்றது. நீங்கள் தான் இவற்றை மேற்பார்வை செய்து சீர் செய்ய வேண்டும் 🙏

    ReplyDelete
    Replies
    1. தவறான அனுமானம் நண்பரே ; 4 மாதங்களுக்கு முன்பாக ஒட்டு மொத்தமாக அட்டைப்படங்கள் அச்சாகின்றன ! அந்நேரத்தில் 'அந்த புக் இந்த மாதத்தில் ; இந்த புக் அந்த மாதத்தில்' என்ற திட்டமிடல் இருந்திருக்கும் & அதற்கேற்ப நம்பர்கள் வழங்கப்படிருக்கும்.

      ஆனால் on the ground பணியாற்றும் போது - கதைகளை இங்கும் அங்குமாய் மாற்ற நேரிடலாம் - வெவ்வெறு காரணங்களினால் ! தொடரும் மாதங்களில் நம்பர்களின் வேறுபாடுகள் சமனப்பட்டு விடும் !

      Delete
  29. புதிய பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  30. நேற்றிரவு புத்தகங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. நள்ளிரவில் - அந்த ஆசுவாசமான பொழுதில் - புத்தகங்களைப் புரட்டி ரசித்து அட்டைப்பட அழகை வரிசைபடுத்தியபோது..

    1. ஜம்ப்பிங் ஸ்டார் - இம்முறையும் அட்டைப்படம் + சிக்கென்ற மேக்கிங்கில் முதலிடம்!

    2. சோடா - செம! இதற்கு முன்பு வெளியான அட்டைப்படங்களைக் காட்டிலும் இது நச்!!

    3. இளம் டெக்ஸ் - செம மாஸ்! (பின்னட்டை இன்னும் டாப்!)
    4. IRS

    எல்லாமே உடனே படித்திடும் ஆவலைத் தூண்டிடும் அம்சங்கள் நிறைந்தவை! ஆனால் போனமாதப் புத்தகங்களையே இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறேன் என்பதால், இம்மாதப் புத்தகங்களை கொஞ்சம் ஆறவிட்டுப் படிக்கப் போகிறேன்!

    ஹாப்பி ரீடிங் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. ///இம்மாதப் புத்தகங்களை கொஞ்சம் ஆறவிட்டுப் படிக்கப் போகிறேன்///

      ஏன்... பார்சலை அடுப்புல வெச்சிருந்திங்களா.?!

      Delete
  31. நான் ஏற்கனவே உயிரைத் தேடி கருப்பு வெள்ளைக்குப் பணம் கட்டியுள்ளேன். வண்ணத்தில் வாங்க இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டும் ?

    ReplyDelete
    Replies
    1. சனி கிழமை
      டிசம்பர் 31-2022,
      அன்று
      விஜயன் Sir
      உயிரைத் தேடி
      புத்தகத்தை
      பற்றி ஒரு
      பதிவு வெளியிட்டு
      உள்ளார்
      அதை படிக்கவும்
      உங்கள்
      கேள்விக்கு
      பதில்
      கிடைக்கும்

      Delete
  32. V காமிக்ஸ் சந்தா செலுத்தியாச்சுங்க சார்.நன்றிங்க சார்.

    ReplyDelete
  33. V comics ku எப்படி சந்தா தொகை கட்டுவது

    ReplyDelete
    Replies
    1. G.Pay
      whats app
      லயன் காமிக்ஸ்
      அலுவலகத்தல்
      தொடர்பு கொள்ளவும்
      phone No
      லயன் காமிக்ஸ்
      புத்தகத்தில் உள்ளது

      Delete
  34. டார்க்வுட் நாவல் தொடரின் 10 பாகங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரு குண்டுப் புத்தமாகத் தந்தால் எப்படி இருக்கும் ? மிகச் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  35. எடிட்டர்900@விக்ரம்

    *புரவிகளின் பூமி......*

    சரசர பரபரவென ஓடுது.....!!

    வழக்கமான பின்னணியில் நினைவு கூறும் சம்பவம்... ஸாகோரின் எண்ட்ரி,
    கதையின் நேர்கோடான அதேசமயம் அழுத்தமான களம்,
    கதை நடக்கும் அசாதாரண இயற்கையியல்,
    கதையில் வரும் ஸாகோரை விட அழுத்தமான பாத்திரம் கதையை நகர்த்தி செல்லதுல்,
    ஸாகோரின் தலையீடால் க்ளைமாக்ஸில் நடக்கும் ட்விஸ்ட்...
    என அட்சர சுத்தமாக டார்க்வுட் நாவல்ஸ் கதை தொடரின் 2வது செக்மண்ட்...!!! முதல் சாகஸத்தை விட இது என்னை அதிகம் கவர்த்திழுக்கிறது.😍

    வன்மேற்கில் சர்வைவலின் ஆதாரமான குதிரைகளின் பின்னணி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    லோதனின் இறப்பு கலங்க வைக்கிறது.
    அவனுக்கும் குதிரைக்குமான பிணைப்பு பின்னணியில் விவரிப்பது அருமை.
    கோஹனும் லோதனும் ஒன்றாக வாழ்ந்ததை அவன் நினைவு கூறும் அந்த 3, 4 பேனல்கள் ஒட்டுமொத்த செவ்விந்தியர் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது.

    தொடர்ச்சியாக 2வது சாகஸமாக ஸாகோரை விட துணை பாத்திரங்களே மிளர்கின்றன.. முன்னதில் கென்ட்ராவும், இம்முறை லோதனும்....!!!

    ஓவியங்கள் பற்றி ஏற்கனவே நண்பர்கள் சிலாகித்து விட்டனர்!
    ஓவிய உன்னதம்!

    ReplyDelete
    Replies
    1. ///லோதனின் இறப்பு கலங்க வைக்கிறது.
      அவனுக்கும் குதிரைக்குமான பிணைப்பு பின்னணியில் விவரிப்பது அருமை.
      கோஹனும் லோதனும் ஒன்றாக வாழ்ந்ததை அவன் நினைவு கூறும் அந்த 3, 4 பேனல்கள் ஒட்டுமொத்த செவ்விந்தியர் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது.///

      +1 மாம்ஸ்..

      Delete
    2. அந்த குட்டி குதிரையின் இறப்பு கொஞ்சம் நேரம் பதைபதைக்க வெச்சிட்டது மாமா. கதை தான் என்றாலும், வன்மேற்கின் கொடூரம் மனிதர்களை மாத்திரம் இன்றி வாயில்லா ஜீவன்களையும் ஆட்டிவைக்கிறது...ஹூம்!

      அந்த விலங்குக்கு பிரசவம் பார்த்ததால் தன்னை தந்தையாகவே கருதும் மென்மையான உள்ளம் உள்ளவனாக லோதன் அறியப்படும்போது அவன் நம் சகோதரனாகவே உணரவைக்கிறான். அவனும் இறந்து போகும் காட்சி ரொம்பவே கலங்க வைக்கிறது.

      நாயகன் ஸாகோர், அந்த உயிரோட்டமான ஓவியங்கள் தாண்டி ஒரு குதிரைக்கும் மனிதனுக்குமான நேசமே மேலோங்கி நிற்கிறது!

      இக்கதையை தேர்வு செய்த விக்ரமுக்கும் வெளியிட்ட V comics teamக்கும் ஓரு ஸ்பெசல் தேங்ஸ் & பாரட்டு!


      Delete
  36. ஆசிரியரே ஸாகோர் ஆத்துகாரம்மா பெயர் சூட்டலும் கேப்சனும் ரிசல்ட் சொல்ல மறந்துட்டிங்க

    ReplyDelete
  37. எடிட்டர் 900@விக்ரம்
    &
    ஸாகோர், டார்க்வுட் கானகம், அமெரிக்கா@

    நாளை நாமக்கல் புத்தக விழாவின் லயன் ஸ்டாலில் ஸாகோர் பேரவை ஜம்பிங் தலைவர் "கோடாலி பாபு"- ஜியை சந்திக்க இருக்கிறேன்.

    நாமக்கல் முட்டையின் தலைநகரம் என்பதால் சந்திப்பை சிறப்பிக்க பின்வரும் ஐட்டங்கள் இருக்க கூடும்.

    முட்டை போண்டா
    முட்டை பஜ்ஜி
    முட்டை பப்ஸ்
    முட்டை மசால்
    முட்டை ஆம்லெட்
    முட்டை ஆஃபாயில்
    முட்டை குழம்பு
    முட்டை வருவல்
    முட்டை சுக்கா
    முட்டை 65
    முட்டை பிரியாணி
    முட்டை கலக்கி
    முட்டை சில்லி...+++++

    நீங்களும் விழாவைச் சிறப்பிக்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    "எடிட்டர் 899"- க்கு இவற்றை வாசிக்கும் போதே ஏவ்னு கேஸ் கிளம்பக் கூடும்... எனவே சந்திப்பு நம்போன்ற இளைஞர்களுக்கே!

    ReplyDelete
  38. ///எனவே சந்திப்பு நம்போன்ற இளைஞர்களுக்கே!///

    கூச்சம் என்பது சற்றும் இல்லை.. அப்படித்தானே..?

    ReplyDelete
    Replies
    1. காலையில் வெள்ளனவே சாயமேற்றி இளைஞனாகியாச்சி😎

      அத்தோடு காமிக்ஸ் படிச்சா மனசும் உடலும் என்றும் 16தான்னு காமிக்ஸ்பாடினியார் சொல்லி உள்ளாரேமே புறநானுலயோ அகநானூறலயோ...!

      Delete
  39. 🥰@Edi Sir.. 😘😍

    இன்றைக்கு புதியபதிவு ஏதும் *லட்சியம் 12.. நிச்சயம் 9*
    பற்றி வர வாய்ப்பு உண்டுங்களா 😘😘

    ReplyDelete
  40. Have read 3 books except soda. TeX super, and IRS is ultimate... Pls read IRS first, if possible, new hero / subject - felt like watching an action movie...Zagor, ok

    ReplyDelete
    Replies
    1. //felt like watching an action movie...//

      நிஜமே சார் ...ஒரு crisp ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான படம் எடுக்கலாம் IR$ கொண்டு !

      Delete
  41. புரவிகளின் பூமி படித்துவிட்டேன். இப்போது வாசிப்பில் நாய் வனத்தில் டெக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. நாய் நஹி...ஓநாய் சார் !

      Delete
    2. அப்போ இந்த ஆண்டின் மிக சிறந்த வெளியீடுகளை கொண்ட மாதம் என்று ரெக்கார்ட் நிகழ்த்தி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
      4 புத்தகங்கள் சூப்பர் டூப்பர் மாஸ் கிட்.
      இது முறியடிக்க படுமா. காத்திருப்பேன்.

      Delete
  42. IRS was simply mind blowing. Welcome Larry Max

    ReplyDelete
    Replies
    1. புரிதல்களில் எவ்வித நெருடல்களும் நேர்ந்திடலாகாதென்று நிறையவே மெனெக்கெட்டிருந்தோம் சார் ! Glad it worked ! 💪

      Delete
  43. என்னதான் செமி கார்ட்டூனாக இருந்தாலும் இதுவரை ஆக்சன்திரில்லராகவேஅறியப்பட்ட சோடாஇம்முறை மனதுவிட்டுசிரிக்கவைக்கிறார். ஓவியங்களில் மட்டுமல்லநகைச்சுவையிலும் கவர்கிறார்.. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இந்த கதையில் சிரிப்பு கொஞ்சம் ஜாஸ்தி.

      Delete
  44. அந்த சவ ஊர்வலக்காரில் ஏற்றியிருந்ததோநம்ம அரசாங்ககவக் கீலின் வீட்டம்மா வின் ஒண்ணுவிட்டமாமாவின்பெரியம்மாவின்பேரனாம். சேனலுக்கு பேனல் சிரிப்புவெடி

    ReplyDelete
  45. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  46. முதல் பார்வையில்.....!!!!

    1.லேரி B .மேக்ஸ்.

    2.ஸாகோர்.

    3.இளஞ்சிங்கம்.

    4.பாஸ்டர்.

    படித்துவிட்டுச் சொல்கின்றேன் நண்பர்களே.

    ReplyDelete
  47. இன்று பதிவு உண்டுங்களா சார் ?

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் போடலாமே சரவணன்

      Delete
    2. இன்று தான் படிக்க வேண்டும். படித்தவுடன் விமர்சனம் போடுகின்றேன் சார்.

      Delete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. கறை படிந்த கரென்ஸி - யூதர் மற்றும் நாஜி காலத்தில் நடந்த விஷயத்தை வைத்து இப்படி ஒரு சிறப்பான கதையை அதுவும் தரமான ஆக்ஷனை கலந்து அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் படி கொடுக்க முடியுமா? முடியும் என்பதே இந்த புது வரவு.

    கடந்த சில வருடங்களில் மிகச் சிறந்த அறிமுகம் லேரி.

    கடந்த அரைமணிநேரம் ஒரு சிறந்த ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி.

    ReplyDelete
  50. Replies
    1. ஆமாம். நாளைக்கு தா புக் அனுப்ப சொல்லணும் ஆபீஸில்.

      Delete
  51. ஓநாய் வனத்தில் டெக்ஸ்

    சும்மா ஒரு அட்டகாசமான ஹீரோ entry உடன் தொடங்கும் கதை. பரபரவென்று செல்கிறது. தவறான வழியில் சென்ற தம்பியை திரும்ப அழைத்து வர செல்லும் ஒரு பாசமுள்ள சகோதரியின் கதை.

    ரெகுலர் டெக்ஸ் கதை.

    எனது மதிப்பெண் 8/10.

    ReplyDelete
  52. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  53. v comics ஏஜெண்ட் ராபினின் ப்ளாக் மெய்ல் பண்ண விரும்பு..
    ஓவியங்கள் அருமை..
    வழக்கமான துப்பறியும் ராபின்..
    இம்முறை கொஞ்சம் நரைத்த தலையோடு சொல்லுங் கதையில் மூழ்கிப் போகிறார்..

    பேப்பர் தரம் நன்றாக உள்ளது..
    வழக்கமான டெக்ஸ் கதைகளின் பேப்பரை விட இது கொஞ்சம் கெட்டியாக உள்ளது..
    இப்படியே தொடரட்டும்..!

    ReplyDelete
  54. இந்தமாதம் முதலிடம் லேரிb.max கறை படிந்த கரண்சி.இரண்டாமிடம்ஓநாய்கூட்டத்தில் டெக்ஸ்

    ReplyDelete
  55. புரவிகளின் பூமி ஓவியங்கள் அதகளம் செய்கிறது..
    வாவ்..!!!

    ReplyDelete
  56. புரவிகளன் பூமி....அந்த குதிரைகளை பண்ணையில் சேர்த்தார்கள் என ஒற்றை வரியில் படித்திருப்போம் . எப்படி என விரியுது இக்கதை . என்னால்தான் பிடிபட்டது என போட்டி போடும் செவ்விந்தியர்கள் சிறுவர்களாய் அப்பாவிகளாய் பட , அவர்களை கொன்று குவிப்பதுடன் குட்டியையும் கொல்லும் கொள்ளையரை கொல்லும் நம்ம சாகோரும் நண்பரும் விறு விறு பரபர அட்டகாசக் கதை ....குதிரைகளை கட்டிப் போடலன்னாலும் நம்ம மாணவர்கள நிச்சயம் கட்டிப் போடும் . பழி வாங்கும் குதிரை அட்டகாசம் புரிய குட்டி குதிரை கண் கலங்க வைக்க பாய்ச்சலாய் பக்கங்கள் .

    ReplyDelete
    Replies
    1. என் மகன் சும்மாவே குதிரை கதை சொல்லுப்பான்னு கேட்பான்....இப்ப புத்தகத்த கைல கட்டிட்டே திரியுறான் குதிரையாய் நினைத்து....இது வரை பத்து முறைக்கு மேல் கதை சொல்லியாச்.....புத்தகத்த பாத்துதான் சொல்லனும்னு அடம் பிடிக்கிறான்....வி காமிக்ஸ் அதற்கான பாதையில் நடை போடுது என் வீட்டில்

      Delete
  57. @Edi Sir..😍😘😃

    @NBF 2023#..😃😍

    நேற்று சனிக்கிழமையும்,
    இன்று ஞாயிற்று கிழமையும் வாசகர்கள் கூட்டம் அலைமோதுகிறது..👍💪

    நமது ஸ்டாலிலும் பரவாயில்லையான பார்வையாளர்கள்..😍😃😘😀

    "லயன்முத்துகாமிக்ஸ் லாம் வருதுங்களா"..😘
    என்ற ஆச்சரிய பார்வையுடன் விசாரித்து வாங்கி சென்ற நடுத்தரவயது பழங்காமிக்ஸ் வாசகர்கள் அதிகம்..💐💐

    ReplyDelete
  58. @Edi Sir..😍😘😃

    #NBF 2023#❤

    இன்று ஸாகோர் புக்ஸ் Out of stock..💪👌

    உடனே நாமக்கல்லுக்கு அனுப்பி வையுங்கள்..😃🙏

    ReplyDelete
  59. Agreed Edi, Soda - Panneer Soda than... March is sema mercel month...

    ReplyDelete
  60. @Edi Sir..😍😘

    இன்று நமது முத்து காமிக்ஸ் ன் பழைய வாசகர்கள் இருவரையும் (திரு.துரைசாமி -புதிய தலைமுறை TV
    & திரு.சதிஸ்ராஜன் -சாய் தபோவனம்) மற்றும் அவ்வப்போது புத்தகங்கள் வாங்கும் நண்பர் ஒருவரையும் (திரு.மணிகண்டன், எருமப்பட்டி) சந்தித்ததில் மற்றற்ற மகிழ்ச்சி ..😍😘😃😀❤💐

    ReplyDelete
  61. Dear editor sir,
    லக்கி லுக் புயலுக்கு ஒரு பள்ளிக்கூடம் புத்தகத்தை ஆர்டர் செய்யும் பொழுது quantity 500 இருக்கிறது மாற்ற இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. Similar problem is there for some books in the website.
      Ex:
      https://lion-muthucomics.com/bluecoats/255-nanum-sippai-than.html

      Delete
    2. Search also doesn't work properly. @Edi sir kindly address these issues before online fest

      Delete
    3. Will have the backend people check...

      Delete
    4. இப்போது சரியாகி விட்டது

      Delete
  62. வணக்கம் சார் , டெக்ஸ் 75 கொண்டாட்டங்கள் சிறப்பிதழ்கள் எப்போது வர ஆரம்பிக்கும் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன். 🥰

    V காமிக்ஸ்சும் ஸாகோரும் இம்மாதத்துடன் தலா 3 கதைகளோடு அடைந்துள்ள ஹாட்ரிக் வெற்றி மகிழ்வூட்டுகிறது. புதிய நாயகர் IR$ க்கும் நல்ல விமர்சனங்கள் கிடைப்பதை காணமுடிகின்றது.

    "இளம்" டெக்ஸ் vs ஸாகோர் வரப் போகின்றதாமே. ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  63. புரவிகளின் பூமி...

    நச்சென்று சிக்கென்று ஒரு கால்மணி நேரத்தில் அந்த செவ்விந்திய புல்வெளி பிரதேசத்தில் உலாவிய அனுபவம் மிஸ்டர் ஹாட்சனுக்கு மட்டுமல்ல ..வாசித்த நமக்குமே..கருப்பு வெள்ளையில் ,தெளிவான தாளில் ..அழகான சித்திரங்களோடு இந்த ஸாகோர் அட்டகாசமாய் வெற்றி நடையை போட்டு உள்ளார்..நமது காமிக்ஸின் அதாவது வி காமிக்ஸின் மூன்றாவது இதழுமே முக்கனியில் ஒன்றாய் இனிக்கிறது என்று சொல்லவும் வேண்டுமா என்ன...?!

    இதில் ஸாகோரின் பங்கு குறைவாக இருப்பது போல தோன்றினாலும் அழகான ,விறுவிறுப்பான நறுக் ,சுறுக் சாகஸம்...

    ReplyDelete
  64. *கறை படிந்த கரன்ஸி*

    இம்மாதம் வந்த நான்கு இதழ்களில் இளம் டெக்ஸ்..அல்லது ஸாகோர் இதழையே முதலில் படிக்க இருந்தாலுமே ஆசிரியரின் கூற்றுப்படியும் ,நேரம் இருந்த காரணத்தினாலும் முதலில் வாசித்த கதை இந்த புது நாயகரின் இந்த கறை படிந்த கரண்சியே...ஆனாலும் அதிகம் ஆர்வம் எல்லாம் இல்லை..காரணம் புது அறிமுகங்கள் சிலரை அவ்வப்பொழது சமீபமாக அதிகம் கண்டுவந்தாலும் லார்கோ போல்..ஷெல்டன் போல் ,ஸாகோர் போல் அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமாய் எனக்கு அமையவில்லை என்பதே உண்மை..எனவே தான் அந்த ஆர்வமின்மை..மேலும் நாயகர் வேறு வருமானத்துறை அதிகாரி..இன்கம்டேக்ஸ் பணி சூழலான கதை பாணி என்பதால் ஒரு விறுவிறு கமர்ஷியல் பாணி ஆர்வலரான எனக்கு இது மனதுக்கு நெருக்கமாகுமா என்ற வினாவுமே மனதுக்குள் ...காரணம் மனம் கவர்ந்த லார்கோவின் அனைத்து கதைகளுமே தெறி ரகம் என சொல்ல தேவையில்ல..அப்படிப்பட்ட நாயகரின் ஒரு வரி ,பங்குசந்தை சம்பந்தப்பட்ட ஒரு சாகஸம் அத்தனை விறுவிறுப்பாய் அமையவில்லை எனலாம்..எனவே தான் இந்த ஆர்வமின்மை.. ஆனால் இந்த முறை இந்த வருமான துறை அதிகாரி புதுநாயகர் லேரி மேக்ஸ் உண்மையிலேயே சொல்கிறேன் அட்டகாசபடுத்திவிட்டார்.அட்டகாசமான சித்திரங்களும்..அசத்தலான கதைபாணியும்..விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளும்..சிறப்பான மொழிப்பெயர்ப்பும் சமீப அறிமுக நாயகர்களில் வெற்றிகரமான நாயகராய் இவர் முதல் இதழிலேயே என் மனதை கவர்ந்து விட்டார்..அட்டையில் தெரிவித்த படி இது ஹைடெக் வரிஏய்ப்பு க்ரைம் த்ரில்லரே .ஆனால் அனைவருக்கும் புரியும்படியாய் ,ஒரு கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் போல் செம பரபரப்பாய் கதை நகர்ந்து சென்றது..முதல் அத்தியாயத்தை விட அதன் தொடர்பான இரண்டாம் அத்தியாயம் கதையே படு ஸ்பீடாக கொண்டு சென்றது உண்மை..மொத்தத்தில் வருமானத்துறையை கண்டு பலர் அஞ்சும் இந்த நேரத்தில் இந்த வருமானத்துறை அதிகாரி லேரி மேக்ஸ் மனதில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டார்...மீண்டும் இவரின் சாகஸத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    கறை படிந்த கரன்ஸி - பக்கா புத்தம் புது கரன்சி போல் படபடக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. எங்க தலைவரையே இந்த கத மெர்சல்ஆக்கி விட்டது என்றால் இது எல்லா சென்டரிலும் (A B C D, ..etc) ஹிட்! போடுறா வெடிய :-)

      Delete
  65. கறை படிந்த கரன்ஸி ....

    எனக்கு ஒரு வழக்கம் உண்டு. புதிய நாயகர் அறிமுகமாகும் போது அந்தக் கதையையே முதலில் படிப்பேன். IRS கதையை முதலில் படித்தேன். கையில் எடுத்ததும் தெரியவில்லை படித்து முடித்ததும் தெரியவில்லை. ஒரு முக்கால் மணி நேரம் சென்றதே தெரியவில்லை.லேரி B மேக்ஸ் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் போல. எங்கும் புகுந்து புறப்படுகின்றார்.கன்னியரை கட்டிப் பிடிக்கின்றார்...எதிரிகளை சுடுகின்றார். மொத்தத்தில் லேரி லார்கோ பாதி 007 பாதி கலந்து செய்த கலவை. 96 வண்ணப் பக்கங்களில் எங்கே எங்கேயோ சுற்றி வந்த உணர்வு. ஆர்ப்பாட்டமான கதைக்கு கதகதப்பான சித்திரங்கள். உறுத்தாத வண்ணக்கலவை. செமத்தியான மொழிப்பெயர்ப்பு.அடுத்து எப்போ வருவாரோ என ஏங்க வைத்தது நிஜம். என்னுடைய மார்க் 9.9 /10.

    ReplyDelete
  66. ***** புரவிகளின் பூமி *****

    15 நிமிடத்தில் படிக்க உகந்த ஒரு நேர்கோட்டுக் கதையென்று எடிட்டர் தனது வீடியோ பதிவில் சொல்லியிருந்ததால் அதை நம்ம்ம்ம்பி நடுநிசியையொட்டிய ஒரு நேரத்தில் கதையைப் புரட்டினேன்! எனக்கு சுமார் முக்கால் மணி நேரம் பிடித்தது!

    'ஸாகோர் பேசுகிறேன்' பக்கத்தைப் படித்து சற்றே கடுப்பாகியபடியே கதைக்குள் நுழைந்தால் உள்ளே 'முன்னுரை' வழங்க நிழல் மனிதன் 'பில்ட்அப் பெரியசாமி'! 'உஷ் ஷப்பா' என்றபடிக்கே ஒருவழியாக கதைக்குள் நுழைந்தால் அந்த புல்வெளிப் பிரதேசத்தின் அழகும், ஆபத்தை உணராமல் மேய்ந்துகொண்டிருந்த காட்டுக் குதிரைகளின் அறியாமையும் மென்மையாய் மனதை வருடின!

    ஸாகோரும், அவரது செவ்விந்திய நண்பனும் காட்டுக் குதிரைகளைப் பிடிக்கும் அபார யுக்திகள் சகிதம் பரபர விறுவிறுப்பாய் பக்கங்கள் புரட்டப்பட்டன!

    எதிரிகளின் இடையூறு, புதிதாய் பிறந்த குதிரைக் குட்டி, அந்த குட்டிக்கு நேர்ந்த கதி, தாய் குதிரையின் தவிப்பு, புனித மனிடோவின் குதிரை ரூப பழிவாங்கல் - என்று மென்சோகத்தோடே கதை முடிகிறது!

    நேர்கோட்டுக் கதை தான் - ஆனால் அதற்காக லேசர் வைத்தா கோடு போடுவது?!! ஸாகோர் இந்தக் கதையிலும் ஒரு துணை நடிகர் போலவே வந்து போகிறார்! ஒரு குதிரை மனதில் நின்ற அளவுக்குக் கூட இவர் மனதில் நிற்காமல் போனது பரிதாபந்தான்! இவர் ஏன் குதிரைகளைப் பயன்படுத்தாமல் காடு முழுக்க நடந்தே செல்கிறார் என்பதற்கான ஏற்புடைய விளக்கம் கதையில் கூறப்பட்டிருப்பது சிறப்பு!

    குதிரைக் குட்டியை அந்த வில்லப்பயல் சுட்டுத் தள்ளவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய கதாசிரியரின் சமயோஜிதத்தைப் பாராட்டலாம்! தெளிவான, நேர்த்தியான சித்திரங்கள் வாசிப்பு அனுபவத்தை மேலும் இதமாக்குகின்றன!

    புதிதாய் காமிக்ஸ் வாசிப்பைத் துவங்கும் சிறுவர்களுக்கு ஏற்ற படைப்பு!

    அட்டைப்படம் : 10/10
    மேக்கிங் தரம் : 10/10
    சித்திரங்கள் : 10/10
    கதை : 7/10
    வசனங்கள் : 8/10

    புரவிகளின் பூமி - ரப்பர் பந்தில் அடிக்கப்பட்ட சிக்ஸர்!!

    ReplyDelete
    Replies
    1. தலீவர் நாலையும் பிரிச்சு மேஞ்சிட்டு பட்டாபட்டியைக் காயப் போடக் கிளம்பிப்புட்டார் - நீங்க ஒரு குட்டியூண்டை முக்கா மணி நேரத்துக்கு படம்பாத்துக்கினு இருக்கீங்களே ?!

      அடுத்த தேர்தல்லேயாச்சும் தலீவர் போஸ்டுக்கு முயற்சி பண்றா மெரி எண்ணமில்லியா ?

      Delete
    2. சரியா சொன்னீங்க சார்...:-))

      Delete
  67. புரவிகளின் பூமி:- வசனத்தின் பங்கு அதிகமின்றி பல இடங்களில் சித்திரங்களின் மூலம் கதையை நகர்த்திச் சென்று, பாசத்திற்கு முன் மனிதனும் விலங்குகளும் சமம் என்பதை 'நீதி'யாக நிலைநிறுத்தி நச்சென்று முடித்துள்ளனர். கதையில் ஸாகோர் வந்து போகிறார். V Crisp Reeding - சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. //கதையில் ஸாகோர் வந்து போகிறார்//

      ஜம்பிங் பேரவை தலைவரை இப்போ பாத்து காங்கலியே ?!

      Delete
  68. ஓநாய் வனத்தில் டெக்ஸ்...

    மீண்டும் ஒரு அதிரிபுதிரியான டெக்ஸ் சாகஸம்...இந்த முறை இன்றைய டெக்ஸின் அதே அதிரடி பாணியில் இளம் டெக்ஸ் பட்டையை கிளப்புகிறார்...சித்திரங்களோ அந்த வன்மேற்கு உலகில் நம்மையும் இளம் டெக்ஸ் உடன் உடன்பயணிக்க வைக்கிறது..எக்ஸ்பிரஸ் ஹாட்லைன் சுவீட்..வழக்கமான டெக்ஸ் பாணியில் வழக்கமான வெற்றியை எப்பொழுதும் போல டெக்ஸ் நம்மை மகிழ்விக்கிறார் ..அருமை..

    *தப்பி சென்ற தேவதை*

    இதுவரை வந்த சோடாவின் சாகஸங்களில் இந்த தப்பி சென்ன தேவதை சாகஸம் என்னை பொறுத்தவரை முதலிடத்தை பெறுகிறது...பரபரவென கதை பரபரக்கிறது...கார்ட்டூன் பாணி சித்திரங்களில் ஒரு முழுநீள ஆக்‌ஷன் மேளா சித்திரக்கதை...

    அட்டகாசம்..


    மொத்தத்தில் இம்மாதம் வெளிவந்த நான்கு இதழ்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு முந்துகிறது...நான்கு இதழ்களின் அட்டைப்படம் ,சித்திரத்தரம் மொழிஆக்கம் ,வண்ண இதழ்களின் வண்ணக்கலவை ..என அனைத்துமே சிறப்பாக அமைந்து உள்ளது...இனி அடுத்து வரும் இதழ்களை எதிர்நோக்கி....

    ReplyDelete
    Replies
    1. இம்மாதத்தின் நான்கையும் சடுதியாய் வாசித்த நீர் இன்று முதல் "நான்வாசி"என்று அன்போடு அறியப்படுவீராக !

      Delete
  69. அட்டையில் " கறை படிந்த கரன்ஸி".உள்ளே கரை படிந்த கரன்ஸி - என உள்ளது சார்.

    ReplyDelete
  70. ... கறைபடிந்த கரன்ஸி ...
    அமெரிக்காவிலும், ஸ்விஸ்ஸிலும்
    அதிரடியாய அரங்கேறும் அதகளங்கள்.
    லேரி மேக்ஸ்..
    லார்கோ , வேய்ன், 007 மூவரும் கலந்த கலவையான அதிரடி ஆட்டம் இவருடையது.
    விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை.
    96 பக்கங்கள் போனதே தெரியவில்லை.
    மார்ச்சில் முதலிடம் பிடிப்பவர் இவரே.
    இவரது தொடர்கள் விரைவில் வர வேண்டும்.

    ReplyDelete