Powered By Blogger

Sunday, December 25, 2022

ஒரு கிருஸ்துமஸ் மாலைப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். நானே தானுங்க...899 பார்ட்டி ! உப-பதிவின் மினி மொக்கைகளை ஆரம்பிக்கும் முன்னமே அனைவருக்கும் உளமார்ந்த கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் ! ஆங்காங்கே விருந்துகளையும், 'விலா'க்களையும் இன்று சிறப்பித்துக் கொண்டிருப்பீர்கள் என்பது உறுதி ! ஜமாயுங்கோ !!

V காமிக்ஸ் !! ஆரம்பமே அதகள அதிரடி !!! தெறி மாஸ் !!  முதல் மூன்று மாத இதழ்களுக்கு, சுனாமியாய் வந்து குவிந்துள்ள ஆர்டர்கள், மெய்யாலுமே என்னை சற்றே திகைக்கச் செய்து விட்டன ! கடைசியாய் நாலைந்து பதிவுகள் இங்கே ஈயோட்டிக் கொண்டிருக்க, இந்தப் பதிவையோ நான் வெள்ளியன்றே களமிறக்க அவசியமாகிட,  response எவ்விதம் இருக்கப் போகிறதோ ? என்று லேசாக ஒரு 'டர்' இருந்தது உள்ளாற ! ஆனால் பதிவில் கரை புரண்டோடிய உற்சாகத்தில், வாராதிருந்த மௌன நண்பர்களுமே வீறு கொண்டு வாழ்த்துச் சொன்ன கையோடு, 'நாங்க வெறும் வாயிலே வடை சுடுற ரகம் இல்லீங்கோ' என்று ஆர்டர்களில் தாக்கித் தள்ளியிருப்பது honestly a humbling experience ! 'நாங்க இருக்கோம்' என்று சொற்களில் இதம் தருவது ஒரு உச்சமெனில், அதனை செயல்களிலும் நடைமுறைப்படுத்திக் காட்டுவதென்பது அசாத்தியம் ! எடிட்டர் # 900 & எடிட்டர் # 899 & எடிட்டர் # 1 ஆகியோரது நன்றிகளை கொத்தாகப் பிடியுங்களேன் folks !! Anyways எங்கள் தரப்பினில் வாயால் வடை சுடும் சுலபக் காரியத்தை 'ஜிலோ'ன்னு செய்து முடித்தாயிற்று ; இனி காத்திருப்பது தான் 900 வாலாவுக்கு மெய்யான சவால்கள் என்பது எனக்குப் புரிகிறது ; போகப் போக ஜூனியருக்குமே புரியத் துவங்கும் ! உங்களைப் போலவே ஞானும் வெயிட்டிங் ! 

இதோ - நேற்றைக்குக் கூட முதல் இதழின் அட்டைப்பட டிசைன்களை மூன்று, நான்கு விதங்களில் போட்டுப் பார்த்து நான்கையுமே பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வந்தார்கள் ! அதில் ஆக சாஸ்தி ஜிங்குச்சா கலரில் இருந்ததே எனக்கு ஓ.கே. என்றுபட்டது ; ஆனால் 'வேண்டாமே ஆணி பிடுங்குவதில் மும்முரம் - ஒரிஜினல் டிசைனே சூப்பர் தானே..? அதிலேயே தொடர்வோமே ?' என்று 900 அண்ணாச்சி சொல்ல, அதுவே final ஆகிறது ! 

கதையின் மொழிபெயர்ப்பிலுமே சுலபத்தன்மை இருந்தால் நல்லது என்று 900 சொல்ல, மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்கத் தெரியாத இக்கட்டு 899-க்கு ! நமக்குத் தான் பேனா புடிச்சாலே, 'காயாத கானகத்தே...நின்றுலாவும்....' என்ற இழுவை தானாய் வந்துப்புடுமே !! So தொடரும் மாதங்களில், V காமிக்ஸ் சார்ந்த மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாமுங்கோ ! முக்கிய தகுதி : எழுத்து நடை என் பாணியினில் இருக்கப்படாது ; யூத்தாய் ; பிரெஷாய் இருந்தால் அது கூடுதல் தகுதி !! ஆர்வமுள்ளோர் மின்னஞ்சல் ஒன்றைத் தட்டி விடுங்கள் ப்ளீஸ் ; no whatsapps !

அப்புறம் V காமிக்சில் பணியாற்ற கிராபிக் டிசைனர்கள் கூட விண்ணப்பிக்கலாம் ! Again, மின்னஞ்சல்கள் மாத்திரமே ப்ளீஸ் ! இங்கோ, வாட்சப்பிலோ கைதூக்கிக் காட்ட  வேண்டாமே ?! என்ன தான் வித்தியாசமாய் சமைக்க எண்ணினாலும், அதே கிச்சனில், அதே ஆட்கள், அதே சட்டிகளைக் கிளறும் போது  மைசூர்பாகுகளுக்கும், பாதுஷாக்களுக்கும் பெருசாய் வேறுபாடுகள் இராதென்றதொரு சிறு நெருடலே இந்தக் கோரிக்கையின் பின்னணி ! So புதுத் திறமைகள் களம் காண V ஒரு மேடையாக அமைந்தால் சந்தோஷமே ! அதே சமயம், "ஆங்...ஒட்டுமொத்தமா சமையல் ஆட்களை மாத்திப்புட்டு, பந்தியிலே  நல்லா இல்லாமப் போயிடப்படாதே ?!!" என்ற கவலைக்குரல்களும் ஒலிக்கக் கூடுமென்பது புரியாதில்லை ! No worries guys - பந்தியில் முதல் இலையில் சப்புக்கொட்டப் போவது ஆந்தைவிழியன் தான் ; so ஏதேனும் பதம் மிதமாய் இருப்பதாகத் தோன்றினால் 'பச்சக்' என்று அங்கேயே பிரேக் போடத் தயங்க மாட்டேன் ! உங்களை ஆய்வுக்கூடங்களின் பரிசோதனை எலிகளாக்கி, நிச்சயமாய் புது டீம் சமைத்துப் பழக மாட்டார்கள் என்பது மட்டும் சர்வ நிச்சயம் ! 

ரைட்டு....ஜூனியர் சார்பிலான அறிவிப்புகள் ஓவர் மகாஜனங்களே ! இனி, நம் பிழைப்பையும் பார்க்க முனைவோமா ? 

ஜனவரியின் 3 இதழ்களிலுமே எனது பணிகள் ஆச்சு ! வேதாளர் ஏற்கனவே பிரிண்ட் ஆகி பைண்டிங் போயுள்ளார் ! டெக்ஸ் & மைக் ஹேமர் தொடரவுள்ள நாட்களில் அச்சுக்குச் செல்லவுள்ளனர் ! நடப்பாண்டினில் post-corona boom காரணமா ? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் ஊருக்குள் இந்தாண்டு காலெண்டர், டயரி, புக்ஸ், gift items என்று சகலத்துக்குமே எக்குத்தப்பான டிமாண்ட் எகிறல் ! பேப்பர் விலை பிசாசுகளாய்த் தொடர்ந்தாலுமே இம்முறை, ஊருக்குள் செமத்தியான ஆர்டர்கள், வேலைகள் அனைவரிடமும் ! So பைண்டிங்கில் காலில் சுடுநீரைக் கொட்டிக் கொண்டு போய் நின்று எதுவும் ஆகிடப்போவதில்லை என்பது இப்போதே புரிகிறது ! ஜனவரியின் புக்ஸ் நிச்சயமாய் ஜனவரியிலேயே தான் இருக்கும் ; moreso V காமிக்ஸ் தயாரிப்புக்குமே அவகாசம் அவசியமாகிடுவதால் !  சற்றே பொறுமை ப்ளீஸ் !

And இதோ - காத்திருக்கும் 'தல' சாகசத்தை அட்டைப்பட டிசைனின் first look ! சனிக்கிழமை ஊரில் இல்லாது போக, அட்டைப்படக் கோப்புகளை வாங்கி வைக்க மறந்து போச்சு ; so நீங்கள் இப்போது பார்க்கவிருப்பது நமது சென்னை ஓவியரின் டிசைனை :


இது போனெல்லியின் ஒரிஜினல் டிசைனே ; ஆனால் வேறொரு ஆல்பத்துக்கானது ! நாம் வெளியிடவுள்ள "பகை பல தகர்த்திடு" ஆல்பத்தின் ஒரிஜினல் அட்டைப்படம் அத்தனை சோபிக்கவில்லை என்பதால் அதைப் பயன்படுத்திடவில்லை ! மாறாக, நமது தலைப்புக்குப் பொருந்துவது போலான இந்த டிசைனைப் போட்டு வாங்கி விட்டோம் ! இதே டிசைன், நண்பர் ஜகத்தின் எழுத்துருக்களுடன் தடாலடி கவர் ஆகியுள்ளது ! நாளை அதனை உங்கள் பார்வைக்கு இங்கே upload செய்திடுவேன் !

நாம் அடிப்பதோ ஈயடிச்சான் காப்பி ! அங்கே ஒரிஜினல் படைப்பாளிகளின் பணிகளை சற்றே பாருங்களேன் !!




அந்தக் குதிரை தான் என்னமாய் மெருகேறியுள்ளதென்று பாருங்களேன் !! Phew !! அப்புறம் நான் ஏற்கனவே சொல்லியிருந்த அந்த XIII மர்மம் வரிசையில் Lt .ஜோன்ஸ் சார்ந்த spin-offs தயாராகி வருகின்றன ! கவர் ஸ்கெட்ச் பாருங்களேன் :


சரி, நமக்கு இப்படியெல்லாம் படம் போட தெரியாது ; at least இப்படியொரு மீம் போட்டாச்சும் சந்தோஷப்பட்டுக்குவோம் !! A meme by #899 !


And அடுத்த பதிவு...."உயிரைத் தேடி !"




Bye all....see you around ! Have a fun Sunday !! And சந்தா(க்கள்) சார்ந்த நினைவூட்டலுமே !! 









237 comments:

  1. நண்பரே உயிரை தேடி புத்தகம் வருருருருமா

    ReplyDelete
    Replies
    1. And அடுத்த பதிவு...."உயிரைத் தேடி !" மேலே பாருங்களேன் நண்பரே !

      Delete
  2. தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. // நானே தானுங்க...899 பார்ட்டி //
    நான் அவன்(ர்) இல்லை,நானே வருவேன்...

    ReplyDelete
  5. இனிய மாலை வணக்கம் கா...கா.

    ReplyDelete
  6. Me present..😍😘😘
    Happy xmas to all ..

    ReplyDelete
  7. ஹேப்பி கிறிஸ்துமஸ் அனைவருக்கும்.

    எனக்கு ஒரு மீம் போட்டு இருக்கீங்களே சார். ஐய்யோ சொக்கா நான் என்ன செய்வேன். ROFL Sir.

    ReplyDelete
  8. குமாருக்கான Background Song...
    பார்த்த முதல்நாளில்..
    உன்னை பார்த்த முதல்நாளில்...

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..
    மு பாபு
    கெங்கவள்ளி.. சேலம்..

    ReplyDelete
  10. என்னை ஸாகோர் சங்கப் பொருளாளராக நியமனம் செய்த தலைவர் கோடாலி பாபுஜி அவர்களுக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க பொருளாளரே

      Delete
    2. தலைவர் , பொருளாளர், செயலாளர் என்று யாராச்சும் ஒருத்தர், ஜம்பிங் ஸ்டார் பற்றியொரு அறிமுகத்தை 'நச்' என்று எழுதி அனுப்புறீகளா ?

      Delete
    3. ///'நச்' என்று எழுதி அனுப்புறீகளா ?///

      'நச்'னு எழுதியனுப்பறாங்களோ இல்லையோ.. கண்டிப்பா 'இச் இச்'னு எழுதியனுப்புவாங்க சார்!!

      Delete
    4. @Edi Sir..😍😘😘
      கிடைச்ச வாய்ப்ப விட்டுடுவோமா...
      ஜம்ப் பண்றோம்..💪👍
      கலக்கறோம்...❤

      Delete
    5. எழுதி அனுப்பி விடுகிறோம் சார்.

      Delete
  11. உயிரை தேடி கலரில் கலக்குதே. இப்போ வருமோ? எப்போ வருமோ?

    ReplyDelete
    Replies
    1. Ji..டிரையிலர் வந்துடுச்சு..😍😘
      😑அடுத்து மெயின் பிக்சர் தானுங்க..💪👍

      Delete
  12. மாலை வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  13. அடுத்த பதிவுன்னா சனிக்கிழமை வரை காத்திருக்கனும்.. அடுத்த உப பதிவுன்னா சட்டு புட்டுன்னு 300 கமெண்ட்டை போட்டு தாக்கிட்டு உயிரைத் தேடி ய பத்தி தெரிஞ்சுக்கலாம்.. என்ன செய்யப் போறோமோ ?

    ReplyDelete
    Replies
    1. என் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கும் கேட்டு விட்டதா?

      Delete
    2. ஹிஹி! செஞ்சுடுவோம்.. செஞ்சுடுவோம்!! :)

      Delete
  14. மொழிபெயர்ப்பாளருக்கு என்ன என்ன தகுதிகள் தேவை சார்

    ReplyDelete
  15. V காமிக்ஸ் பணம் செலுத்தியாச்சு.

    உயிரை தேடி கலரில் அள்ளுது.
    காத்திருந்தது வீண் போக வில்லை.

    அடித்த பதிவிற்காக ஆவலுடன்

    ReplyDelete
  16. // ஜனவரியின் புக்ஸ் நிச்சயமாய் ஜனவரியிலேயே தான் இருக்கும் ; //
    அடக்கடவுளே....

    ReplyDelete
  17. எச்சூஸ் மீ.. ஐ யம் ஹியர்!!

    ReplyDelete
  18. முழிபெயர்க்கிற மாதிரி மொழி பெயர்க்கணுங்க ஜி..😃😀😀😀

    ReplyDelete
  19. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. "இனி காத்திருப்பது தான் 900 வாலாவுக்கு மெய்யான சவால்கள் என்பது எனக்குப் புரிகிறது ; போகப் போக ஜூனியருக்குமே புரியத் துவங்கும் ! உங்களைப் போலவே ஞானும் வெயிட்டிங் !"

    Nothing like that. Sir. Next generation is 10 times better than us. It will be easy ride for him

    ReplyDelete
    Replies
    1. யெஸ்!! எங்க 900 எடிட்டரின் ஆற்றல் பற்றி உங்களுக்கு சரியா தெரியலைன்னு நினைக்கிறேன் எடிட்டர் சார்.. அவர் ஒரு சூப்பர் மேன்!

      Delete
  21. ஹா ஹா! பதிவுல 899 & 900 பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் - செம்ம!!

    899ன் மீம்ஸ் - ஹீஹீஹீ!! அந்த மீம்ஸின் உள்ளார்ந்த அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது எடிட்டர் சார்! ஹிஹி!! :)

    ReplyDelete
    Replies
    1. மக்களே....நான் போட்ட மீம்ஸுக்கு உள்ளர்த்தம் , வெளியர்த்தம்னு எதுவுமே கிடையாது ! சில பல பேட் பாய்ஸ் சொல்வதைக் கேட்டு குழம்பிடாதீங்கோ !

      Delete
  22. உயிரைத் தேடி கலர் தெறிக்குதுங்க சார்....

    ReplyDelete
  23. சூப்பர் சார்....அட்டைப் படங்கள் அதகளம்.....உயிரைத் தேடி பைக்கில் பயல்கள் வருவது நினைவிருக்கு....அதே பக்கங்கள் கண்ல பார்த்தும் நினைவில்லை...கொரனா பூந்த வீடு போல பெட்ரோல் பங்க் நினைவு வருது....வண்ணத்ல இது வரை வந்த கதைவளயெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் வண்ணமாய் மிளிருது...வண்ணம் நமதாட்களா

    ReplyDelete
  24. ஹே... உயிரைத் தேடி ஓவியங்கள் மிரட்டுகிறதே.. இவை 80-களில் வெளிவந்த கதை என்பது பிரமிக்க வைக்கிறது..

    ReplyDelete
  25. மிஸ்டர் நோ மீசையில்லாத வேய்ன் ஷெல்டன் போல ஸ்டைலாக காட்சியளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் பைலட் ஹீரோ என்றாலே ஆக்ஷனுக்கும் பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காதே.. (நம்ம விங்-கமான்டர் ஜார்ஜ்,ஜான் சில்வர் போல..)

    ReplyDelete
  26. "பகை பல தகர்த்திடு" அட்டைப்படம் வண்ணத்தில் மிகவும் நன்றாக உள்ளது, ஓவியர் மிகவும் அற்புதமாக வரைத்து உள்ளார்; முகத்தில் தோன்றும் மாற்றங்களை & கசங்கிய சட்டையில் உள்ள மடிப்பு, சலூனில் கதவு மற்றும் மரத்தில் உள்ள வளைவுகளை மிகவும் அருமையாக ஓவியத்தில் கொண்டு வந்துள்ளார் இதனை A4 சைஸில் ஒரு போஸ்டராக சென்னை புத்தகத்திருவிழாவில் நேரில் சந்திக்கும் வாசர்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்! வருடத்தின் ஆரம்பத்தில் டெக்ஸ் கதைக்கு மொத்தத்தில் மிகவும் திருப்தியான ஒரு அட்டைப்படம்!

    ReplyDelete
  27. விஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழாவில் "V" காமிக்ஸின் முதல் இதழை வெளியிட வாய்ப்புகள் உண்டா சார்! சென்னை புத்தக திருவிழாவில் ""V" காமிக்ஸின் முதல் இதழை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் & ஒரு நல்ல விளம்பரமாக இருக்கும் களம் சார் இது & நமது நண்பர்கள் பலர் கலந்து கொள்வார்கள், மீண்டும் அனைவரும் சேர்ந்து ஒருநாளை சந்தோசமாக கொண்டாடிட ஒரு அருமையான தருணம் சார் இது. சென்னை புத்தக திருவிழா செல்ல வீட்டில் வழக்கம் போல் ஒருநாள் அனுமதி கிடைத்து விட்டது, எனது ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்து விட்டேன், ஜனவரி 7ம் தேதி உங்களையும் நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் நமது ஸ்டாலில் காத்துகொண்டு இருப்பேன் சார் !

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாலில் ஒரேயொரு வருஷம் (2013) நாம் செய்த அலம்பலுக்கு இன்று வரைக்கும் நனைத்துச் சுமந்து வருகின்றோம் சார் ! மறுக்கா அதே தப்பைப் பண்ணலாகாது !

      புக் ரிலீஸ் என்பதெல்லாமே ஸ்டாலில் சாத்தியமில்லை சார் !

      Delete
    2. சென்னை புத்தகக் திருவிழாவின் போது அங்கு உள்ள ஒரு சிறிய அரங்கில் மின்னும் மரணம் வெளியிடப்பட்டது போல வெளியிடத்தில் சிறிய அரங்கில் வெளியிட‌ முடியுமா சார்.

      Delete
  28. இனிய கிறஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Sir, சிறு வயதில் Lion muthu புக்ஸ் கடையில் வாங்கும் போதே அதன் அட்டை படம் மீது மிகுந்து எதிர்பார்ப்பு இருக்கும். இப்பொது Blogஇல் முன்னேரே வெளியிட்டு விடுவதால் கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மி ஆகி விடுகிறது. அதுவும் Blog post மீண்டும் மீண்டும் படிக்கும் போது அட்டைப்படம் மிகவும் familiar ஆகி விடுகிறது.
    லைன்/முத்து /V காமிக்ஸ் Final அட்டை படம் முன்னமே blogஇல் வெளியிடுவதே தவிர்க்க முடியுமா?

    ReplyDelete
  30. டியர் எடி,

    விக்கு ஒரு துண்ட போட்டு வச்சாச்சு.

    கூடவே உயிரை தேடி வன்ன கலவை கண்னை பறிக்கிறது. கலர் செய்யும் ஆர்டிஸ்டுக்கு ஒரு ராயல் சலூட்.

    பி.கு.... லெப்டினன்ட் ஜோன்ஸ் ஸ்பின்ஆஃப் அறிவிப்பை மேலுலகத்தில் இருந்து அமரர் நண்பர் பழனி கண்டிப்பாக பார்த்து புன்முறுவல் பூத்திருப்பார் என்பது உறுதி. Would be a Great tribute for him.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ப்ரோ, ஆசிரியர் நமது பால்யத்து உயிரைத்தேடி கொண்டு வந்திட்டாலும், கலரிங் செய்யப்பட்டாலும், இந்த இதழ் கலரிங் செய்தல் அவசியம் என்று விடாப்பிடியாக ஆசிரியரிடம் கோரி initiate செய்தது நீங்களே... அதற்கு உங்களுக்கு ஒரு ராயல் சலூட் ப்ரோ.

      Delete
  31. தலைவர் , பொருளாளர், செயலாளர் என்று யாராச்சும் ஒருத்தர், ஜம்பிங் ஸ்டார் பற்றியொரு அறிமுகத்தை 'நச்' என்று எழுதி அனுப்புறீகளா ?////

    ஸாகோர் ;

    மரத்துக்கு மரம் தாவும்
    மக்கள் காப்பாளன்.

    இவன் காட்டை ஆள்வான் ...

    எங்கள் மனத்தையும் வெல்வான்.

    நிதியை நேசிக்காமல்

    நீதியை நேசிப்பான்.

    இவன் வருகையைக் கண்டு காட்டு மிருகங்கள் மட்டுமல்ல நாட்டு விலங்குகளும் பயப்படும்.

    சித்திர வித்தகர் விஜயர் கண்ட சொக்கத் தங்கம் ஸாகோர் .......

    விஜயரின் மைந்தர் விக்ரமரால் ஜொலிக்கின்றார் வைரமாய்.

    வெற்றி வேந்தர் விக்ரமரின் V காமிக்ஸின் தலைமகன் ஸாகோர் வாழிய ..வாழியவே !!!

    V காமிக்ஸ் வீறு நடை போட்டிட வெற்றி நாயகர் ஸாகோர் துணையால் வெல்க ....வெல்கவே ...!!!!

    ReplyDelete
    Replies
    1. பொருளாளர் கவிதை மழை பொழிஞ்சிட்டார்! ஜம்ப்பிங் ஸ்டார் இதைப் படிச்சார்னா 'தங்கக் கோடாலி' பரிசு நிச்சயம்!!

      Delete
  32. @நன்றி பொருளாளரே..💪✊👍

    ReplyDelete
  33. @செயலாளரே..😍
    @பொருளாளரே..😘

    மாதம் சராசரியா 10 பதிவு போட்டாலே நாம பத்தே மாசத்துல 1000 பதிவ தாண்டிட்டு கிப்ட் ஆ ஒரு குண்டுபுக்கேட்டு வாங்கிடலாம்.💪👍😃😍😘

    ReplyDelete
    Replies
    1. செஞ்சுப்புடுவோம் தலைவரே. அதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேலை ?!

      Delete
    2. ஜம்பிங் ஸ்டார் க்ரூப்ங்கிறது சரியாத்தான் இருக்கும் போல.. மாசத்துக்கு 10ன்னா, 10 மாசத்துல 100ங்கிறத ஜம்ப் பண்ணி நேரா 1000க்கு போயிட்டாங்க..

      Delete
    3. ////ஜம்பிங் ஸ்டார் க்ரூப்ங்கிறது சரியாத்தான் இருக்கும் போல.. மாசத்துக்கு 10ன்னா, 10 மாசத்துல 100ங்கிறத ஜம்ப் பண்ணி நேரா 1000க்கு போயிட்டாங்க..////

      ஹா ஹா ஹா!! :)))))

      ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை மக்கள்ரொம்பத் துடிப்பாத்தான் இருக்காங்க!

      Delete
    4. அவர்கள் சொல்லும் கணக்கு சரிதான் அதாவது 900+100 = 1000 பதிவுகள்.

      Delete
  34. I love translating, and i would really, dearly love to...!
    But I barely have time leftover after work and family.
    Anyway, I'm excited and looking forward to the youthful comic experience.

    ReplyDelete
  35. வி காமிக்ஸ் முயற்சிக்கு வாழ்த்து. ஜுனியர் எடிட்டருக்கு நல்லதொரு தொடக்கம். இந்த புதிய முயற்சியிலும் கெள பாய் கதைகளின் ஆதிக்கம் இல்லாதிருத்தால் நல்லா இருக்கும் (ஒரு நப்பாசை).

    ReplyDelete
  36. சீஃப் எடிட்டர் : என்னம்மா ஆச்சு? ஏன் அழறே? 'ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை' தலைவர்களைப் பேட்டி எடுக்கத்தானே உன்னை அனுப்பியிருந்தேன்?!!

    பெண் நிருபர் : அடப் போங்க சார்! எதைக் கேட்டாலும் அவங்க 'நச் நச்'னு பதில் சொல்லுவாங்கன்னு சொல்லி அனுப்புனீங்க. ஆனா அவங்ககிட்டே எதைக் கேட்டாலும் 'இச்😘 இச்😘'னு தான் பதில் தராங்க!

    ReplyDelete
  37. Edi ji,

    நான் வருட சந்தாவில் இருக்கிறேன், V comics இரண்டு செட்டு புத்தகங்கள் வேண்டும்,
    170+170=340/- அனுப்பலாம் அல்லவா.

    ReplyDelete
    Replies
    1. Ha ha - technically if you have two sandhaas I think :-) Otherwise it has to be 170+300 :-) :-)

      Delete
    2. சாரி நோ சார் ....ஒரு சந்தாவுக்கு ஒரு புக் மாத்திரமே நம் அன்புடன் ! மேற்கொண்டு வேணுமெனில் ரூ.170 + rs.240 - provided அந்ததந்த மாதத்து கூரியர்களுக்குள் 2 புக்குகளை நுழைக்க முடியுமெனில் ! இல்லாங்காட்டி rs.170 + ரூ.300 !

      Delete
  38. @Edi Sir..😍😃😘

    #மாறாக, நமது தலைப்புக்குப் பொருந்துவது போலான இந்த டிசைனைப் போட்டு வாங்கி விட்டோம் ! இதே டிசைன், நண்பர் ஜகத்தின் எழுத்துருக்களுடன் தடாலடி கவர் ஆகியுள்ளது ! நாளை அதனை உங்கள் பார்வைக்கு இங்கே upload செய்திடுவேன்#

    upload வேன்னு சொன்னீகளே..😘😃

    ReplyDelete
  39. மாயாவி மறுபதிப்புகள் எப்போதுங்க சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. புது இதழ்களின் பணிகள் முடிந்தான பின்னே சார் !

      Delete
  40. ஆசிரியர் சில பதிவுக்கு முன் மாடஸ்டி டைஜெஸ்ட் பற்றி சொன்னதாக ஒரு நினைவு. அதற்கு என்னுடைய சாய்ஸ்
    1. கத்தி முனையில் மாடஸ்டி
    2. மாடஸ்டி in இஸ்தான்புல்
    3. மரண கோட்டை
    4. கானகத்தில் கண்ணாமூச்சி
    5. கற்கால வேட்டை
    6. நடுக்கடலில் அடிமைகள்
    7. இரத்த சிலை
    8. மந்திர மண்ணில் மாடஸ்டி
    9. மரண இயந்திரம்
    10. கார்வினின் யாத்திரைகள்
    மற்றும் சில புதிய கதைகள்

    ReplyDelete
  41. சென்னை புத்தக கண்காட்சியில் 7ம் தேதி ஸ்டாலில் ஆசிரியர் வரும் நேரம் தெரிந்தால் ட்ரெயின் டிக்கெட் புக் செய்ய வசதியாக இருக்கும். சிங்கம் கர்ஜிக்குமா

    ReplyDelete
    Replies
    1. டிக்கெட்டைப் போட்டுடுங்க சார் ; ஸ்டால் உறுதியாவது நெருக்கவட்டில் தான் தெரியும் ! எப்படியாயினும் சனி மாலை 4 மணி சுமாரிலிருந்து அக்கட தான் இருப்பேன் !

      Delete
  42. அடுத்த வருடம் Deadwood Dick வருவாரா

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போம் சார் !

      Delete
    2. அப்போ வாய்ப்பு இருக்கு 🤩

      Delete
    3. தயவு செய்து இதை ரெகுலர் சந்தாவில் கொண்டு வராதீர்கள். அதை மீறி சந்தாவில் வந்தால் எனக்கு அனுப்பாதீர்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

      Delete
    4. அடுத்த வருட சந்தா தான் அறிவிச்சாச்சே சார். அதில் டெட் வுட் இல்லை. கவலை வேண்டாம்.

      Delete
    5. @புன்னகை ஒளிர் : ஏன் சார் - "பார்ப்போம் " என்ற ஒற்றை வார்த்தை தானே சொன்னேன் - அதற்குள் டெஸ்பாட்ச் அளவுக்குப் பயணம் பண்ணி விட்டீர்களே ?! Relax...!

      Delete
  43. எடிட்டர் சார்.. இந்தவாட்டி நீங்க CBFக்கு போகும்போது வெறும் மாஸ்க் மட்டும் போட்டுக்கிட்டுப் போறது அவ்வளவு பாதுகாப்பில்லைன்னு தோனுது! முகம் முழுக்க கவர் ஆகிறமாதிரி ஒரு ஹெல்மெட்டும் போட்டுக்கோங்க!! நான் ஏதோ கொரோனா பயத்துல இப்படிச் சொல்றதா நினைச்சுக்கவேண்டாம்! கொரோனாவையே குலைநடுங்கச் செய்யும் 'ஜம்பிங் ஸ்டார் பேரவை'யின் சில முக்கிய புள்ளிகள் அங்கே உங்களை டார்கெட் (😘) பண்ணியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்!

    ஒருவேளை ஜூனியரும் உங்ககூட வந்தார்னா, அவருக்கு ஹெல்மெட்டோட கூடவே ஒரு PPE kitம் மாட்டிக் கூட்டிவந்துடுங்க. ஏன்னா சில 'முக்கிய புள்ளிகள்' அவரை ஹார்டு-டார்கெட்(😘😘😘) பண்ணியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்!


    ReplyDelete
    Replies
    1. ////EV ROFL 👄////

      ப்பா!! எம்புட்டு கவர்ச்சியா சிரிக்கறீங்க!!

      Delete
    2. // ப்பா!! எம்புட்டு கவர்ச்சியா சிரிக்கறீங்க!! //

      ஜம்பிங் ஸ்டார் ரசிகர் மன்றத்தில் உள்ளவங்க எல்லாம் இப்படித்தான் போல் விஜய் :-) நீங்க மயங்கி விடாதீங்க :-)

      Delete
    3. ///ஜம்பிங் ஸ்டார் ரசிகர் மன்றத்தில் உள்ளவங்க எல்லாம் இப்படித்தான் போல் விஜய் ///

      ஆமாங்க PfB! வாயை 'ஊஊ'ன்னு வச்சுக்கிட்டு ஒரு குரூப்பாத்தான் சுத்திக்கிட்டிருக்காங்க! நம்மை மாதிரி இளைஞர்களுக்கு இங்கே பாதுகாப்பே இல்லாமப் போய்டுச்சு!

      Delete
  44. ஏங்க, இப்படியெல்லாம் நடக்குமா என்ன.

    ReplyDelete
  45. ஈ. இ. செம பார்ம்ல இருக்கார் உபபதிவு வாங்கிட்டுத்தான் விடுவார் போல. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு உயிரைத் தேடிதான....
      உடனே தெரியனுமா....
      நண்பர்கள் அனைவரும் இயன்ற வரை பதிவை போடுங்க...இன்றே உப பதிவு....அப்படிதான் உயிரைத் தேடி...இங்கே பரவும் பயப்படுத்தல்களை கற்பனையால் இன்றைய கொரனா குறித்து அன்னை காட்டிய கதை தப்பிப் பிழைத்தால்....
      ஒற்றையாய் போராடும் ஈவியோடும் குமாரோடும் கரம் கோர்ப்போம்...

      Delete
  46. //புது இதழ்களின் பணிகள் முடிந்தானபின்னே. //யார் அந்த மாயாவி. இப்பவும் ரசிக்கவைக்கும் சூப்பர்கதைங்க சார் ஆவலுடன் வெய்ட்டிங். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. யார் அந்த மாயாவி எப்பொழுதுமே ரசிக்க வைக்கும் ராஜசேகர் சார்.

      Delete
  47. V காமிக்ஸ் எடிட்டர் : ஆனாலும் இந்த ஜம்ப்பிங் ஸ்டார் சங்கத்தின் சலம்பல் ரொம்பவே ஓவராகிட்டிருக்கு டாடி!

    மிடில் எடிட்டர் : ஏன் மகரே - என்னாச்சு?!!

    V கா.எ : V-காமிக்ஸில் 'விக்கியின் விளையாட்டு வயதில்' தொடரா வெளியாகணுமாம்.. இல்லேன்னா போராட்ட களத்துல ஜம்ப் பண்ணப்போறதா அறிக்கை விட்டிருக்காங்க!

    ReplyDelete
    Replies
    1. செம செம செம. நீங்களே சில விஷயங்களை ஜம்பிங் ஸ்டாருக்கு எடுத்து கொடுப்பீங்க போல தெரியுது :-)

      Delete
    2. @Erode Vijay 😘😘😘

      வாருங்கள் ஜம்பிங் ஸ்டார் சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளரே...😃😀🙏💐

      Delete
    3. ///Erode Vijay 😘😘😘///

      வர வர இப்பல்லாம் தளத்துல நிம்மதியா ஒரு கமெண்ட்டு கூட போட முடியலை! எதைச் சொன்னாலும் பின்னாடியே வந்து 'இச் இச் இச்'னு அள்ளி வீசிட்டு ஒரே ஜம்ப்ல காணாமப் போயிடறாங்க!

      வெரி டெலிகேட் பொசிஷன்!😰😰

      Delete
    4. "ஏன் மகரே ..." ஹா..ஹா.. ஈ.வி.சார் கடைசில காதலிக்க நேரமில்லை பாலையா மாதிரி ஆக்கிட்டீங்களே நம்ம எடிட்டர் சாரை..?

      Delete
    5. ஆனா பாலைய்யா பார்க்க ஜம்முனு இருப்பார்..

      Delete
  48. /// வெரி டெலிகேட் பொசிஷன்!😰 ///
    இச்..சத்தம் கேட்டு வீட்டுக்காரம்மா வந்துட்டாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பத்து சார்! எனக்கு வெட்க வெட்கமா வந்துருச்சு!! :)

      Delete
  49. இருக்காதா?
    வாலிப (?) வயசா(யிடு)ச்சே...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! இந்த வாலிப வயசு இன்னும் என்னென்ன அனுபவங்களைத் தரக் காத்திருக்குதோ..?!!

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கூழாங்கல் கோடாலியா இல்லாதவரைக்கும் சரிதானுங்க பத்து சார்! ;)

      Delete
    2. When God closes one door, he opens another. அந்த வழியா எகிறி குதிச்சு ஓடிடுங்க.

      Delete
    3. மூடின கதவு, திறந்துவச்ச கதவு, பொத்துனாப்ல சாத்தின கதவு - எல்லாத்தையும் சேர்த்து தூக்கிட்டே ஓடிடுவேணுங்க பத்து சார்! :)

      Delete
    4. உயரமான இடத்துக்கு தானே EV...(Matinn Vadivasal Effect...)

      Delete
    5. ///உயரமான இடத்துக்கு தானே EV...(Matinn Vadivasal Effect...)///

      ஹா ஹா ஹா! இன்னும் அதை நீங்க மறக்கலையா? :D

      Delete
  51. பூரி கட்டை, மத்து, கரண்டி., etc...
    அனுபவம் புதுமை..
    அவரிடம் கண்டேன்..

    ReplyDelete
  52. V காமிக்ஸ்க்கு தனி blog இருந்தால் நன்றாக இருக்கும் சார்

    ReplyDelete
    Replies
    1. ///V காமிக்ஸ்க்கு தனி blog இருந்தால் நன்றாக இருக்கும் சார்///

      ஆமாம் சார்! ஜம்ப்பிங் பார்ட்டிகளை எடிட்டர் விக்கியிடம் கோர்த்துவிட்டுட்டு நாம இங்கே பாதுகாப்பா இருக்கலாம்!

      Delete
  53. V காமிக்ஸ்க்கு சந்தா போட்டாச்சு. காஞ்சிபுரம புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு ஒரு ₹4230 க்கு புக்ஸ் வாங்கியாச்சு.‌எல்லாம் நம்ம மெபிஸ்டோவுக்காக.

    ReplyDelete
  54. மறுபடியும் கொரோனா! எடிட்டர் சார் சென்னை செல்வது உசிதமா? கோவையில் ஒருவர். சென்னையில் இருவர் இன்று மட்டும். கேள்விகள் பல!

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ! ஜம்ப்பிங் ஸ்டார் சங்கத்துக்காரங்க வாங்கிவச்ச லிப்ஸ்டிக் எல்லாம் வேஸ்ட்டாகிடும் போலயே?!!

      Delete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. சார்.. CBFல் நமக்கு ஸ்டால் உறுதியாகிவிட்டதா?

    இம்முறை நான் சென்னைக்கு வர 99% வாய்ப்புகள் இல்லை எனினும் அந்த 1% க்காக டிக்கெட் போட்டுவைத்திருக்கிறேன்!

    மற்றவை, புனித மனிடோவின் அருட்பார்வையில்!!

    ReplyDelete
    Replies
    1. புனித மனிடோவா இல்ல வீட்டம்மாவா :-)

      Delete
    2. ஹிஹி! அது புனித முனிடோ!! ;)

      Delete
  57. "பகை பல தகர்த்திடு" தலைப்பை இன்னும் பொருத்தமாக்க, "பகை பல பெயர்த்திடு" பொருந்திடுமோ? டெக்ஸ் அடிக்கடி வில்லன்ஸ் முகரையை பெயர்க்கும் ஆள் அல்லவா? சமீபத்தில் இது போன்ற சிறப்பு டெக்ஸ் அட்டையை பார்க்கவில்லை.... சூப்பர் அட்டை... மேலும் பலகை வரும் இடமெல்லாம் .மிக நேர்த்தியாக ஓவியர் கலக்கியுள்ளார்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் ஓவியரே!

      Delete
    2. வெறும் கருத்து தான் சகோ...😊

      Delete
  58. //இதுவரை வந்ததிலேயே இதுதான் டாப்பட்டை (டாப் அட்டை) // வெய்ட்டிங்கவிஞரே சீக்கிரம் கவிதையுடன்வாங்க ப்ளாக் காத்தாடுது கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  59. நாளை உயிரைத்தேடி பதிவுக்கிழமை....Fingers Crossed...

    ReplyDelete
    Replies
    1. S ji...😍😘நாளை பதிவு கிழமை..😃😍

      Delete
    2. சார், இன்று பிசியான வருட இறுதி நாள், கொஞ்சம் முன்கூட்டியே பதிவிட கூடுமானால் நன்றாக இருக்கும்...

      Delete
  60. யாராவது V-Comics blogன் லிங்க்கை இங்கே ஷேர் செய்யுங்களேன் ப்ளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. @😘😘😘💪💪💪👍😍😍😍

      Delete
    2. வந்துட்டார்டா வந்துத்டார்டா திரும்பிப் பார்தக்காமல் ஓடுங்கடா :-)

      Delete
  61. சார்! புத்தகங்கள் கிளம்பிவிட்டதா?

    ReplyDelete
  62. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  63. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

    ReplyDelete
  64. V காமிக்ஸ் சந்தா பரவாயில்லைங்களா சார் ?

    ReplyDelete
    Replies
    1. // V காமிக்ஸ் !! ஆரம்பமே அதகள அதிரடி !!! தெறி மாஸ் !! முதல் மூன்று மாத இதழ்களுக்கு, சுனாமியாய் வந்து குவிந்துள்ள ஆர்டர்கள், மெய்யாலுமே என்னை சற்றே திகைக்கச் செய்து விட்டன//
      உங்கள் கேள்விக்கு பதில் சார்.

      Delete
  65. *டெக்ஸ்வில்லர் 150....*

    1985ல் லயன் காமிக்ஸில் அறிமுகம் ஆகி மாதந்தோறும் ஒரு இதழ் வெளியாகும் அளவு வளர்ந்துள்ள *டெக்ஸ் வில்லர்* இதழ்கள் செய்துள்ள சாதனைகள் பல....

    *இம்மாதம் டிசம்பர்-2022ல் புதியதொரு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார் இந்த அரிசோனா அதிகாரி!*

    *லயன் காமிக்ஸ் வரலாற்றில் 150 இதழ்களில் இடம்பெறும் முதல் நாயகன் டெக்ஸ் வில்லரே...*

    லயன் காமிக்ஸில் அதிக ஸ்பெசல்களில் இடம்பெற்ற நாயகனும் இவரே...

    இதழ்களின் பட்டியல் இதோ....

    (தனித்தனி வெளியீடு எண்கள் உள்ள இதழ்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, தொடர்கதைகள்& மறுபதிப்புகள் உட்பட...)
    1.தலைவாங்கிக் குரங்கு-நவம்பர்1985

    2.பவளசிலை மர்மம-ஜூலை1986

    3.பழிவாங்கும் பாவை-1ஜனவரி987

    4.பழிக்குப்பழி-ஏப்ரல்1987

    5.ட்ராகன் நகரம்-மே1988

    6.இரத்த முத்திரை-நவம்பர்1988

    7.வைக்கிங் தீவு மர்மம்-ஏப்ரல்1989

    8.மாய எதிரி-ஜூலை1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் புக்கில் இணைந்து வந்தது)

    9.அதிரடிக் கணவாய்-நவம்பர்1989

    10.எமனோடு ஒரு யுத்தம்-ஜூலை1990

    11.மரணத்தின் நிறம் பச்சை-பிப்ரவரி1991

    12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்-ஏப்ரல்1991

    13.பழிவாங்கும் புயல்-பிப்ரவரி1992

    14.கழுகு வேட்டை-நவம்பர்1992

    15.இரத்த வெறியர்கள்-ஏப்ரல்1993

    16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-மே1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)

    17.பாலைவனப் பரலோகம்-மே1995(லயன் டாப்10 ஸ்பெசல்)

    18.மரண முள்-ஏப்ரல்1996

    19.நள்ளிரவு வேட்டை-நவம்பர்1996

    20.மரண நடை-மார்ச்1997

    21.கார்சனின் கடந்தகாலம்1-ஏப்ரல்1997

    22.கார்சனின் கடந்தகாலம்2-மே1997

    23.பாங்க் கொள்ளை-ஜூலை1997

    24.எரிந்த கடிதம்-பிப்ரவரி1998

    25.மந்திர மண்டலம்-மே1999

    ReplyDelete
    Replies
    1. 26.இரத்த நகரம்-நவம்பர்1999

      27.எல்லையில் ஒரு யுத்தம்-ஜனவரி2000

      28.பழிவாங்கும் பாவை-CC-மறுபதிப்பு-மார்ச்2000
      ப29.மரண தூதர்கள்-நவம்பர்2000

      30.மெக்ஸிகோ படலம்-செப்டம்பர்2001

      31.தனியே ஒரு வேங்கை-பாகம்1-பிப்ரவரி2002

      32.கொடூர வனத்தில் டெக்ஸ்-பாகம்2-மார்ச்2002

      33.துரோகியின் முகம்-பாகம்3-மே2002

      34.பயங்கரப் பயணிகள்-பாகம்1-ஆகஸ்ட்2002

      35.துயிலெழுந்த பிசாசுகள்-பாகம்2-அக்டோபர்2002

      36.பறக்கும் பலூனில் டெக்ஸ்-ஜனவரி2003

      37.ஓநாய் வேட்டை-பாகம்1-மே2003

      38.இருளின் மைந்தர்கள்-ஜூன்2003

      39.இரத்த தாகம்-பாகம்2-ஜூலை2003

      40.சாத்தான் வேட்டை-அக்டோபர்2003

      41.கபால முத்திரை-பாகம்1-ஏப்ரல்2004

      42.சிவப்பாய் ஒரு சிலுவை-மே2004

      43.சதுப்பில் ஒரு சதிகார கும்பல்-பாகம்2-ஜூலை2004

      44.இரத்த ஒப்பந்தம்-பாகம்1-ஏப்ரல்2005

      45.தனியாத தணல்-பாகம்2-ஜூன்2005

      46.காலன் தீர்த்த கணக்கு-பாகம்3-ஆகஸ்ட்2005

      47.கானகக் கோட்டை-மே2006

      48.பனிக்கடல் படலம்-மே2007

      49.மரணத்தின் முன்னோடி-பாகம்1-ஏப்ரல்2008

      50.காற்றில் கரைந்த கழுகு-பாகம்2-ஆகஸ்ட்2008

      Delete
    2. 51.எமனின் எல்லையில்-பாகம்3-நவம்பர்2008

      52.தலை வாங்கிக் குரங்கு-CC-மார்ச்2012

      53.சிவப்பாய் ஒரு சொப்பனம்-ஜனவரி2013

      54.பூத வேட்டை-ஜூன்2013

      55.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-ஜூன்2013-சன்ஷைன் லைப்ரரி

      56.தீபாவளிமலர்-நவம்பர்2013-சன்ஷைன் லைப்ரரி (நீதியின் நிழலில், மரண தேசம் மெக்ஸிகோ )

      57.நில் கவனி சுடு-மே2014

      58.காவல் கழுகு-ஜூலை2014

      59.சட்டம் அறிந்திரா சமவெளி-ஆகஸ்ட்2014

      60.கார்சனின் கடந்த காலம்-அக்டோபர்2014-சன்ஷைன் லைப்ரரி-முதல் வண்ண மறுபதிப்பு

      61.வல்லவர்கள் வீழ்வதில்லை-டிசம்பர்2014

      62.தி லயன் 250-ஜூலை2015 (ஒக்லஹோமா,முகமில்லா மரண தூதன்,பிரம்மன் மறந்த பிரதேசம்)
      63.தீபாவளி வித் டெக்ஸ்-நவம்பர்2015
      (டைனோசரின் பாதையில், எமனின் வாசலில்)

      64.சட்டத்திற்கொரு சவக்குழி-சனவரி2016

      65.திகில் நகரில் டெக்ஸ்-பிப்ரவரி2016

      66.விதி போட்ட விடுகதை-மார்ச்2016

      67.தலையில்லாப் போராளி-ஏப்ரல்2016

      68.டாக்டர் டெக்ஸ்-மே2016

      69.பழிவாங்கும் புயல்-ஜூன்2016

      70.குற்றம் பார்க்கின்!-ஜூலை2016

      71.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி முழுவண்ண இதழ்-ஆகஸ்டு2016

      72.துரோகத்திற்கு முகமில்லை-செப்டம்பர்2016

      73.தற்செயலாய் ஒரு ஹீரோ-அக்டோபர்2016

      74.சர்வமும் நானே!-நவம்பர்2016

      75.நீதிக்கு நிறமேது?-டிசம்பர்2016

      Delete
    3. 76.ஆவியின் ஆடுகளம்-சனவரி2017

      77.அராஜகம் அன்லிமிடெட்-பிப்ரவரி2017

      78.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-மார்ச்2017

      79.ஒரு வெறியனின் தடத்தில்-ஏப்ரல்2017

      80.கவரி மான்களின் கதை-ஜூன்2017

      81.கியூபா படலம்-லயன்300-ஜூலை2017

      82.மரணத்தின் நிறம் பச்சை-ஆகஸ்ட் 2017

      83.கடற்குதிரையின் முத்திரை-செப்டம்பர்2017

      84.தீபாவளிமலர்-அக்டோபர்2017
      (ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
      அழகாய் ஒரு அராஜகம்)

      85.ட்ராகன் நகரம்-நவம்பர்2017
      86.ஒரு கணவாய் யுத்தம்-ஜனவரி2018

      87.விரட்டும் விதி-பிப்ரவரி2018

      88.வெண்பனியில் செங்குருதி-பிப்ரவரி2028

      89.பாலைவனத்தில் புலனாய்வு-மார்ச்2018

      90.கடைசிப்பலி-ஏப்ரல்2018

      91.பவளச்சிலை மர்மம்-ஏப்ரல்2018

      92.நடமாடும் நரகம்-ஜூன்2018

      93.இரவுக்கழுகின் நிழலில்-ஜூன்2018

      94.காற்றுக்கு ஏது வேலி-ஜூலை2018

      95.டெக்ஸ் மினி 3in1-விரட்டும் விதி-ஆகஸ்ட்2018

      96.சைத்தான் சாம்ராஜ்யம்-செப்டம்பர்2018

      97.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-செப்டம்பர்2018

      98.டைனமைட் ஸ்பெசல்-அக்டோபர்2018

      99.காதலும் கடந்து போகும்-நவம்பர்2018

      100.புனிதப் பள்ளத்தாக்கு-நவம்பர்2018

      Delete
    4. 101.காலனின் கானகம்-டிசம்பர்2018

      102.யார் அந்த மரண தூதன்-டிசம்பர்2018

      103.சாத்தானின் சீடர்கள்-ஜனவரி2019

      104.வைகிங் தீவு மர்மம்-பிப்ரவரி2019

      105.பாலைவனத்தில் ஒரு கப்பல்-மார்ச்2019

      106.டெக்ஸ் மினி3in1-2-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019

      107.பச்சோந்திப் பகைவன்-ஏப்ரல்2019

      108.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மே2019

      109.சிங்கத்தின் சிறுவயதில்-ஜூன் 2019.
      110.நட்புக்கு நாட்களேது-ஜூலை2019

      111.தகிக்கிம் நியூ மெக்சிகோ-ஆகஸ்ட்2019

      112.பழி வாங்கும் பாவை-ஆகஸ்ட்2019

      113.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-செப்டம்பர்2019

      114.புதைந்து போன புதையல்-அக்டோபர் 2019

      115.சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்-நவம்பர்2019

      116.சூது கொல்லும்-டிசம்பர்2019

      117.ரெளத்திரம் மற-டிசம்பர்2019

      118.இருளின் மைந்தர்கள்1-சனவரி2020

      119.இருளின் மைந்தர்கள்2-சனவரி2020

      120.ரெளத்திரம் மற- 4in1 தொகுப்பு-சனவரி2020

      121.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020

      122.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
      123.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020

      124.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020

      125.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020

      Delete
    5. 126.தலைவாங்கி குரங்கு-அக்டோபர் 2020

      127.தீபாவளிமலர்-நவம்பர்2020

      128.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020

      129.மரணமுள்-சனவரி2021

      130.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021

      131.கழுகு வேட்டை-ஏப்ரல்2021

      132.நெஞ்சே எழு-மே2021.

      133.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021.

      134.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021

      135.சிகப்பாய் ஓரு சிலுவை-ஆகஸ்ட்2021

      136.கண்ணே கொலைமானே-அக்டோபர்221

      137.தீபாவளிமலர்2021-நவம்பர்2021.

      138.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021

      139.டெக்ஸ் க்ளாசிக்1-பழிக்குப்பழி&கானகக் கோட்டை-ஜனவரி2022

      140.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022

      141.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022

      142.டெக்ஸ் க்ளாசிக்2- இரத்த வெறியர்கள்-பனிக்கடல் படலம்-ஏப்ரல்2022

      143.விடாது வஞ்சம்-மே2022

      144.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022

      145.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022

      146.மெளன நகரம்-ஆகஸ்ட்2022

      147.சொர்க்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022

      148.தீபாவளி மலர்-அக்டோபர்2022

      149.பாலைவனப் பரலோகம்-அக்டோபர்2022

      *150.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022.*

      Delete
    6. குறிப்பு1:- வெளியீடு எண்கள் இல்லாத மினி டெக்ஸ்கள்:-

      1.*இருளோடு யுத்தம்*-மார்ச்2020 (சந்தா ஃப்ரீ கிஃப்ட்)

      2.*விண்டர் ஸ்பெசல்*- ஃப்ரீ வித் தீபாவளிமலர்-நவம்பர்2020

      3.*பனியில் ஒரு புதுநேசம்*- ஃப்ரீ வித் லயன்400-ஆகஸ்ட்2021

      குறிப்பு2:- தீபாவளிமலர் 2021 உடன் இலவச இணைப்பாக அறிவிக்கப்பட்ட "*ஓநாய் ஜாக்கிரதை*" அத்துடனேயே இணைக்கப்பட்டுவிட்டது...!

      Delete
    7. Amazing compilation bro. Thank you for sharing with all.

      Delete
    8. அருமையான தொகுப்பு STVR!!

      Delete
    9. டெக்ஸ்ஜி டெக்ஸ் பட்டியலில் ஓநாய் வேட்டை இரண்டாவது பாகம் விடுபட்டிருக்கிறது அதையும் சேர்த்துக் கொள்ளவும் நன்றி.

      Delete
    10. அட்டகாசமான stats டெக்ஸ் அடி தூள்.

      Delete
    11. அப்படியே அனைத்து அட்டை படங்களையும் ஒரு சேர கண்ல காமிச்சீங்கன்னா பிறவி பயனை அடைஞ்சுருவேன். நடக்குமா காண கிடைக்குமா.

      Delete
    12. அட்டகாசம் சார்🥰 தகவலுக்கு நன்றிகள்
      எடிட்டர் சார் சத்தமே இல்லாமல் டெக்ஸ்வில்லரை வைத்து இப்படியொரு "மைல் கல்" சாதனை பண்ணிவிட்டு கொண்டாடாமல் இருக்கிறீர்களே. இது நியாயமா💁🏻‍♂️ 100,150 இதழ்கள் எல்லாமே எமக்கு தெரியாமலே கடந்து போனது வருத்தமாக உள்ளது.😭
      STVR அவர்களின் பட்டியலை சரிபார்த்து அவ்வப்போது அப்டேட் பண்ணி டெக்ஸ் மைல்கல் இதழ்களில் இணைத்து விடுங்கள். 🙏🏻எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

      Delete
  66. @Tex Vijayaragavan..😍😘

    அருமையான தொகுப்பு..💪👍❤

    இதேபோல் 1000 தொட Tex ன் அன்பு தம்பி "எங்கள் தங்கம் ஜம்பிங் ஸ்டார் ஸாகோரை"😍 வாழ்த்த வேண்டுகிறோம்..🙏😘😍

    ReplyDelete
  67. நண்பர்கள் மற்றும் ஆசிரியர் & அவர் குடும்பத்தினர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் உளம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  68. @Senior Edi Sir😍 /
    நம்ப Edi Sir😍/
    Jr.Edi Vikki 😘 & குடும்பத்தினர் மற்றும் நமது அலுவலகத்தினர்😍/நமது காமிக்ஸ் நட்பூக்கள் 😃அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..❤💐

    ReplyDelete
  69. இன்று பதிவு முன்மாலையிலா ? இரவிலா?

    ReplyDelete
  70. @நடு ராத்திரி..😍😘😃

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா ? அப்ப நமக்குச் சிவராத்திரி தான்.

      Delete
    2. Yes Ji..😃
      😍புத்தாண்டு பதிவாக *உயிரைத்தேடி* விவரங்கள் Mid night அல்லது நாளை காலை வரும்..👍

      இன்றைய பதிவு வந்தவுடனே நம்ப எல்லோருமே புத்தாண்டு பதிவு கேக்க ஆரம்பிச்சுடுவோமே..😍😃
      அதான் இப்படி ஒரு ஐடியா பண்ணிருக்காராம் நம்ப எடி சார்..😍😘😃😀

      Delete
  71. 2023 ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய தின நல்வாழ்த்துக்கள்:-)

    ReplyDelete
  72. Replies
    1. உயிரைத்தேடி..தேடி வாடிப்போய் கிடக்கிறோமே..😶

      Delete
    2. நீங்க ஒரு கவிதையை எடுத்து விடுங்க ஸ்டீல்.

      Delete
  73. எடிட்டருக்கும் லயன் முத்து யுனிவர்ஸைச் சேர்ந்த அனைவருக்கும் உளம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  74. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. ஒருவேளை ராத்திரி 11.59 க்கு பதிவு போல. விடமாட்டான் இந்த படித்துறை பாண்டி. வருசத்தோட மொத ஷோவ சுட சுட பாத்தே தீருவேன். இது மங்கம்மா மேல சத்தியம்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இருக்கேன் சார் உங்க gang member

      Delete
  76. ஓவியங்களில் மிரட்டும் உயிரைத் தேடி Post-Apocalyptic கதையாயிருக்கும் போலயே...🙄 நமக்குப் பிடித்த வகையறாக்களில் ஒன்று

    ReplyDelete
  77. எடிட்டர் ஐயா மற்றும் காமிக்ஸ் நட்புகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்🧨🧨🎆🎆🎆🎂🎂🎂💐🎂💐🎇🎉🎉

    ReplyDelete
  78. என்னங்க. அதுங்குள்ள ஊர் உறங்கியாச்சா. நாம மட்டுந்தா விழிச்சு இருக்கோமா. New year party - வேற அந்தாண்ட போயிகிட்டு இருக்கு. நம்ம செயளாளர் பொருளாளர் தலைவர் யாரையு காணுங்க. இன்னைக்கு Show உண்டு தானே.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உண்டு சார். இங்கேயே தான் இருக்கேன்

      Delete
    2. தலீவர் ஆஜருங்கோ..😘😘😘😍

      Delete
  79. உயிரைத்தேடி.. தேடி.. தேடி.. மனசு வாடுதே..

    ReplyDelete