Powered By Blogger

Thursday, December 01, 2022

பிறந்தது டிசம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். மார்டினுடனான மல்யுத்தம் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் அவகாசமெடுத்து வைக்க, இதோ - இன்றைக்குத் தான் டிசம்பர் இதழ்கள் கூரியர்களில் கிளம்பிட சாத்தியப்பட்டுள்ளது ! So ஒரு முழுமையான black & white மாதத்துடன் நடப்பாண்டின் அட்டவணை பூர்த்தி காண்கிறது ! 



டெக்ஸ் & டெட்வுட் டிக்கின் ஆல்பங்கள், வெவ்வேறு பாணிகளில் கௌபாய் ஜானர்களின் பிரதிநிதிகளாக இருந்திட, மாடஸ்டி - ஆக்ஷனுக்கும், மார்ட்டின் - மர்ம த்ரில்லருக்கும் கொடி பிடித்து நிற்கின்றனர் இம்மாதம் ! வழக்கத்தை விடவும் கணிசமான கூடுதல் பக்கங்களுடன் (248 pages) டெக்ஸ் இந்த black & white கூட்டணியின் 'தல' ஸ்தானத்தை தனதாக்கிக் கொள்கிறார் ! இம்மாதத்து அலசல்களிலும் நம்மவரே முதல் ஸ்லாட்டை பிடித்து நின்றாலும் வியப்புக் கொள்ள மாட்டேன் ! ஆனால், பாக்கி மூவருமே அவரவரது பாணிகளில் செம tough போட்டியாளர்களே ! க்ளாஸிக் பிரியர்களுக்கு இளவரசி வழங்கவிருப்பது டபுள் தெறி ! Noir ரகப் பிரியர்களுக்கு டெட்வுட் டிக் தரவிருப்பது ஸ்ட்ராங்கான black coffee ! அப்புறம் எது மாதிரியும் இல்லா மர்ம மாதிரிகளை ஆராதிப்போராய் நீங்களிருப்பின் - will be tough to look past மார்டினின் "வரலாற்றின் வாடிவாசல் " ! 

நிஜத்தைச் சொல்வதானால், மார்ட்டினின் இந்த 80 பக்க ஆல்பத்தைக் கரை சேர்ப்பதற்குள் நிரம்பவே தண்ணீர் குடித்து விட்டேன் ! ஒரு fantasy முடிச்சு ; அதனைத் தொடர்வதெல்லாமே ஒருவிதக் காலப்பயணக் கோட்பாடு - எனும் போது, ஏகமாய் பிரெஞ்சு வரலாறு இங்கே பின்னிக் கிடக்கின்றது ! அதனுள் குதித்து 'ஆட்சியாளன் யாரு ? அண்ணாச்சி யாரு ?" என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, மர்ம மனிதனின் நாடியை தொட அவசியப்பட்டது ! And ஒற்றை இரவினில் மேலோட்டமாய் இந்த சரித்திரப் பாடங்களை உரு போட்டு வைத்து, கதையின் மாந்தர்களை இனம் கண்டு முடித்து, கதாசிரியரின் ஆக்கத்துக்கு கிட்டக்க போய் நிற்பதற்குள் கிறுகிறுத்து விட்டது ! End of the day - கொஞ்சம் விளக்கங்களோடு ; வரலாற்றுக் குறிப்புகளோடு கதையினை வாசிக்கும் போது -'அட' என்றே தோன்றியது ! மார்ட்டினின் படைப்பாளிகள் நம்மை விட ஏழெட்டு மாடிகள் கூடுதல் உசரத்தில் நிற்பதே நாம் தட்டுத் தடுமாறுவதன் காரணம் என்பது புரிகிறது ! கூகுள் தேவனை இறுக அனைத்துக் கொண்டே, ஏணிப்படிகளைத் தேடிப் பிடித்து நாமும் மெது மெதுவாய் மேலேறினால், மர்ம மனிதனின் தோள்களில் நாமும் கைபோட இயலும் தான் போலும் ! எது எப்படியோ - for sure - தொடரும் நாட்களில் பிரெஞ்சுப் புரட்சி சார்ந்த எக்கச்சக்க தரவுகளை நீங்கள் இங்கே பார்க்கக்கூடும் தான் ! 


ஆக 248 + 128 + 120 + 80 = 576 பக்கங்கள் காத்துள்ளன - இம்மாதத்தின் உங்களின் வாசிப்புகளுக்கு ! தத்தம் விதங்களில் இவை ஒவ்வொன்றிலும் ஈர்ப்புகளுக்குப் பஞ்சமில்லை என்பதால் - இந்த ஒற்றை மாதமாவது எல்லா இதழ்களையும் முயற்சித்துப் பார்க்கக் கோருவேன் ! ரொம்பவே வித்தியாசமான கூட்டணி for sure folks !

நடப்பாண்டின் ரெகுலர் சந்தா தடம் இந்த இதழ்களோடு நிறைவுறுவதால் - இனி புதிய பயணத்திற்கென நீங்களும், நாங்களும் தயாராகிட வேண்டிய வேளையும் நெருங்கியாச்சு ! எங்க தரப்பில் வேஷ்டியை மடிச்சுக் கட்டிக்கினு, முண்டாசையும் இறுக்கமாய்க் கட்டியபடிக்கே - இரும்புக்குதிரையினைக் கிளப்பியாச்சு ! சந்தாக்களில் இணைந்தபடிக்கே please hop on folks !



And அந்த caption போட்டிக்கு அசல்நாட்டு ஜட்ஜையாக்கள் 3 நாட்களுக்கு முன்னமே தங்களது தேர்வுகளைத் தெரிவித்திருந்தாலும், இந்தப் பதிவினில் அதனை அறிவித்து விடலாமே, என்றபடிக்கு கொஞ்சமாய் மிக்சர் தின்னுக்கினு ஓரம்கட்டி விட்டேன் ! இதோ அவர்களின் (நமது) தேர்வுகள் :

TOP 1 : ஜம்பிங் ஹீரோ ஜாகோர் ஸ்ரீஈஈ பாபு சார் ! (மஞ்சக்காட்டு மைனா / நைனா)

TOP 2 : ஈடுமில்லா ; இணையுமில்லா ; நிஜாருமில்லா ஒரேயொரு தலீவர் ! (கட்டை பிரம்மச்சாரி)

TOP 3 : கேப்ஷன் கிங் பார்த்திபன் சார் ! (Almost all of them !!)

வாழ்த்துக்கள் வெற்றியாளர்களே & கலந்து கொண்ட அம்புட்டு ஜனங்களுமே ! And கணிசமாய் நேரம் ஒதுக்கி, தீர்ப்புச் சொன்ன ஜட்ஜுமார்களுக்கும் கும்பிட்டுக்கிறோமுங்க !! வெற்றி பெற்ற நண்பர்களுக்கு அடுத்த டெக்ஸ் க்ளாசிக்ஸ் நம் அன்புடன் !! 

அப்புறம் இந்த ஞாயிறு வரை நீட்டிக்கப்பட்டுள்ள சேலம் புத்தக விழா பற்றி !! எட்டோ, பத்தோ ஆண்டுகளுக்கு முன்னே ஒரேயொருமுறை சேலத்தில் புத்தக விழா நிகழ்ந்தது நினைவுள்ளது & சொற்பமான இதழ்களின் கையிருப்புகளோடு நாமும் அங்கே தலை காட்டியிருந்தது நினைவுள்ளது ! If memory serves me right - அந்நாட்களுக்கு அது அழகான விற்பனையே ! ஆனால் ஏனோ, அதன் பின்பாய் சேலத்தில் பெரியளவில் விழாக்கள் நடைபெறவில்லை & நடைபெற்ற விழாக்களில் நமக்கு கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையவில்லை ! So இம்முறை பெரிதாய் எதிர்பார்ப்புகளின்றியே சேலத்தில் கேரவனை பார்க் செய்தோம் ! But surprise ...surprise ........"தமிழகத்தின் TOP 6-க்குள் நாங்களும் இருக்கிறோம்டா தம்பி ; எங்க கெத்து என்னான்னு பாக்குறியா ?" என்று மார்தட்டாத குறையாக சேலத்தின் பெருமக்கள் தெறிக்க விட்டுள்ளனர் !! ஒவ்வொரு நாளுமே அனல் பறக்கும் விற்பனைகள் & தினமுமே முந்தைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிக்காட்டும் நம்பர்களில் சேல்ஸ் ஓடியுள்ளது ! இன்னமும் ஈரோட்டின் விற்பனையினை விஞ்சிட ஏகமாய்ப் பயணிக்க வேண்டியிருக்கும் தான் ; ஆனால் அதற்குள் கோவையினை முந்தியாச்சு - சேலத்தின் நம்பர்கள் ! And இந்த நம்பர்கள் ; அங்குள்ள நண்பர்களின்றி சாத்தியமே இல்லை என்பதையும் சொல்லியே தீரணும் ! அதுவும் வாரயிறுதிகளில், ஷிப்ட் போடாத குறையாக நமக்கு ஸ்டாலில் நண்பர்கள் ஆற்றி வரும் உதவி, இந்த சேலம் புத்தக விழாவின் செம highlight ! Thanks a ton all !! ரொம்பச் சீக்கிரமே நமது திட்டமிடல்களில் - இந்த இரும்பு நகரினையும் ஒரு முக்கிய அங்கமாக்கிட வேண்டிவரும் போலும் !! இன்னமும் 4 நாட்களிருக்க, ஈரோட்டை எட்டிப் பிடிக்க வாய்ப்பிருக்குமா ? என்பதே இந்த நொடியின் நமது கேள்வி !Fingers crossed ! அப்புறம் புது புக்ஸ் - சனி & ஞாயிறுக்கு ஸ்டாலில் கிடைக்கும் guys ! 

அதற்கு மத்தியில் ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு : 

https://lion-muthucomics.com/latest-releases/1045--december-pack-2022.html

Happy shopping & reading guys !

207 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. Caption போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தலைவர் இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். ஸ்பெஷல் பாராட்டுக்கள் தலைவரே. தலைவரால் நம்மை சிரிக்க வைக்க கூட முடியும் என நிரூபித்து விட்டார். சூப்பர் தலைவரே.

      Delete
    2. தான் கலந்து கொண்ட முதல் Caption போட்டியிலேயே வெற்றி பெற்ற பாபுவுக்கு பாராட்டுக்கள்.

      Delete
    3. நன்றிகள் Parani ஜி..🙏💐😎

      First time first..😍😘
      Me Happy ji...❤💛💙💚💜

      Delete
  3. மார்ட்டின் முன் அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. புத்தகத் திருவிழாவில் ஹாரர் கதைகளை கேட்கும் நண்பர்கள் இந்த புத்தகத்தை வாங்க வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. TOP 1 : ஜம்பிங் ஹீரோ ஜாகோர் ஸ்ரீஈஈ பாபு சார் ! (மஞ்சக்காட்டு மைனா / நைனா)

    TOP 2 : ஈடுமில்லா ; இணையுமில்லா ; நிஜாருமில்லா ஒரேயொரு தலீவர் ! (கட்டை பிரம்மச்சாரி)

    TOP 3 : கேப்ஷன் கிங் பார்த்திபன் சார் ! (Almost all of them !!)
    🎂🎂🎂🎉வெற்றி வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎉🎉🎉🎉

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார்...

      Delete
    2. வாழ்த்துகளுக்கு நன்றி @ஸ்மால்பாய் ஆத்தூர் மாதேஷ் @ G.Senthilkumar ji @Ramya சகோ..😍😘😃⭐🌟🍓

      Delete
  6. சேலம் விற்பனை நிலவரம் மகிழ்ச்சி. அதுவும் விற்பனையில் பட்டையை கிளப்புகிறது என்பது சூப்பர் நியூஸ். சேலம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  7. Replies
    1. நன்றிகள் நண்பரே...

      Delete
    2. @Surya jeeva 🌺🌸
      Thanks for the wishes சகோ..🙏

      Delete
  8. போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் & பாராட்டுக்கள் கேப்ஷன் வெற்றியாளர்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. @Sivalingam ji..😍
      @சின்னமனூர் சின்னமச்சான் சரவணன் ஜி..😃😘😍

      Thanks for the வாழ்த்துக்கள்..🌹🌷🌸🍁

      Delete
  10. மார்ட்டின் கதையின் பெயர் சும்மா தெறி.

    அட்ட்டடகாசமாக இருக்கு.

    ReplyDelete
  11. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..:-)

      Delete
    2. @Salem Kumar ji..😃😘
      Thanks for the wishes ji..👍👏🙏🍓

      Delete
  12. Me வந்துட்டேன் ..👍😍😘😃😀

    ReplyDelete
  13. விற்பனையில் கோவையை முந்திய சேலத்துக்கு வாழ்த்துக்கள்🥳🥳🥳👏👏👏👏

    ReplyDelete
  14. @Edi Sir..😍😃😀😘
    & Caption judge அய்யாஸ்..😍😘

    Caption போட்டியில் முதல் பரிசு வழங்கியமைக்கு *ஜம்பிங்ஸ்டார் ஸாகோர் படை* சார்பாக நன்றிகளை ஜம்ப் பண்ணி சொல்லிக்கிறனுங்க ..💐💐💐🙏🙏🙏


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஜாகோர் சார்...:-)

      Delete

  15. கோடாலியுடன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் சாய்பாபு சகோ, என்றும் இளமையுடன் வளம் வரும் தலீவர் மற்றும் இந்த தடவை பல வதவிதமான கேப்ஷன்கள் சிறப்பாக எங்களை சிரிக்க வைத்து வயிறு வலி தந்த பார்த்திபன் சகோ
    மூன்று சகோகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..

      ( என்றும் இளமையுடன்.....# நீங்களாவது
      யாருக்கும் பயப்படாம உண்மையை பேசறீங்களே நன்றி சகோ..)


      இதை இந்த அமெரிக்காகாரங்களுக்கு ,மேச்சேரிகாரங்களுக்கு எல்லாம் சத்தமா சொல்லுங்க சகோ..)

      Delete
    2. @கடல்யாழ் சகோ..😍😘😃

      கடல் போன்ற மனத்திலிருந்து வந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..✨🌟🍎🍓🌸🌻

      Delete
  16. வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி இரவுகழுகாரே...:-)

      Delete
    2. @இரவுகழுகார்..😍😃
      Thanks for the wishes ji..😍✊👏

      Delete
  17. அப்போ நாளைக்கு திருவிழா ஆரம்பம். சூப்பர்

    ReplyDelete

  18. வெற்றி பெற்ற
    கோடாலியார்
    தலீவர்
    கேப்ஷன் கிங் பார்த்திபன் மூவருக்கும் வாழ்த்துக்கள் சேலம் குமார்வெற்றி பெருவாரென நினைத்தேன் அவரும் பட்டையை கிளப்பியிருந்தார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் சத்யா அவர்களே...

      Delete
    2. @Senthil Sathya..😍😄

      வாழ்த்துகளுக்கு நன்றி ஜி..

      Delete
  19. ஆஹா...எதிர்பார்க்கவே இல்லை சார்...கேப்ஷன் போட்டியில் நிறைய்ய கலந்து உள்ளேன் தான் ..ஆனால் முதல்முறையாக பரிசு பெறுகிறேன் ..உள்ளமெல்லாம் துள்ளுகிறது..ஆசிரியர் அவர்களுக்கும் ..தேரந்தெடுத்த நண்பர்களுக்கும் மனமாரந்த நன்றிகள்..

    பரிசு பெற்ற மற்ற இரு நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் தலீவரே..💐💐💐

      கோடாலி பாபுஜிக்கும் பார்த்தீபன் சாருக்கும் வாழ்த்துகள்..💐💐

      நடுவர்கள் ரட்ஜா மற்றும் ஆல்இன்ஆல் அழகுராஜா இருவருக்கும் பாராட்டுகள்..💐💐💐

      Delete
    2. நன்றி அய்யா...:-) ///

      எதேய்.... அய்யாவா..!?

      Delete
  20. நாளை புத்தகம் ..

    ஆஹா ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  21. போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    சேலம் புத்தக திருவிழா விற்பனை முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சியான செய்தி Sir

    ReplyDelete
  22. Waiting for books.
    My reading preference
    1. Modesty
    2. Tex
    3. Deadwood dick
    4. Martin

    ReplyDelete
  23. சேலம் புத்தக விழா பெரிய வெற்றி பெற்றுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சார்.....

    விற்பனைக்கு உதவிய அனைத்து நல் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பு வணக்கங்கள்💞🙏💕

    அடுத்த முறை ஒரு ஸ்பெசல் ரீலீஸ் கொடுத்து பாருங்க சார்,ஈரோடுக்கு டஃப் பைட் தருவோம்...😍

    ReplyDelete
  24. இந்த மாத புத்தகங்கள் ஒரு வித்தியாசமான கதம்ப கதைகள், ஆசிரியர் சார் கைபுள்ளையை சொல்லாம் விட்டுவிட்டார். நாளை வரவுள்ள ஐந்து விதமான சுவையுடைய பதார்த்தங்களை சுவைக்க தயாராகுங்கள் நண்பர்களே :-)

    ReplyDelete
  25. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற அன்பு நண்பர்கள்---
    சங்க தலீவர்,
    கோடாலி பாபுஜி&
    பார்த்தீபன் சகோ 3வருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐

    நடுவர் பணியாற்றிய பாரீஸ் மாப்பு& டெக்ஸாஸ் மாப்பு இருவருக்கும் பாராட்டுகள்🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. @Salem Tex ji😍😘..

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி..🙏💐

      You are my inspiration and you are my motivator..🙏✨🌟⭐🍓
      எல்லா புகழும் எங்கள் Comics Encyclopedia @ Salem STV ji க்கே..💐🌷🌹🌸🌺🙏

      Delete
    2. "கோடாலி" ஸாகோர் பாபுஜி@ அன்பான வார்த்தைகளுக்கு😍🙏

      இம்முறை உங்க பங்களிப்பு ரொம்பவே சிறப்பு.. முதன்முறையாக கலந்து கொள்பவர் போலவே தெரியல, நிறைய கேப்சன்கள் குபீர் சிரிப்பு ரகம்...
      யூ ஆர் எ வெல் டிசர்வ் வின்னர்!💐


      பழக்கப்பட்ட ஸ்டைல்களில் விமர்சனங்கள் & கலந்துரையாடல் களை கண்டுவந்த ரசிகர்களுக்கு உங்க வரவு நல்ல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது....

      உங்க ஃபேவரைட் ஹீரோ போலவே உங்க ஸ்டைலும் ஃப்ரீ ஃப்ளோயிங்....

      நிறைய ரசிகர்கள் முன்வந்தா தளம் ரிஃப்ரெஷ் ஆகிட்டே இருக்கும்...

      Delete
  26. வழக்கமான 224 பக்கங்களை விட 24 பக்கங்கள் அதிகமாக 248பக்கங்களில் ரீலீஸ் ஆகும் டெக்ஸ் இதழை காண ஆவலுடன்....

    ReplyDelete
  27. ஜாலிப் போட்டியை அறிவித்த ஆசிரியருக்கும்,வெற்றி பெற்றவர்களில் ஒருவனாக என்னையும்(!!) தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கும்,உடன் வெற்றி பெற்ற சகோக்களுக்கும், வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

    கிட்:
    அங்கிள்..டாட் எங்க கோவமா போறாரு?
    கார்சன்:
    நம்மளை நாஸ்தி பண்ணவங்களோட டாப்3 லிஸ்ட் கிடைச்சிடுச்சாம்..அதான் அவங்களை நாஸ்டா பண்ணக் கிளம்பிட்டாரு....
    கிட்:
    அப்ப இன்னைக்கு சிறப்பான சம்பவம்லாம் இருக்குனு சொல்லுங்க..சூப்பரு...

    மீண்டும் நன்றி..

    ReplyDelete
  28. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. கேப்சன் போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்

      Delete
  29. இந்த மாத release இல் நமது முதல் வாசிப்பு டெட் வுட் டிக் தான் 😍

    ReplyDelete
  30. பிளாக் அண்ட் வைட் கலக்கல் gift கொடுத்த எடி sir கு நன்றி. 😍😍😍

    ReplyDelete
  31. எடிட்டர் சார்... மேலே 'Supreme 60' விளம்பரத்துல சார்லியை 'காரிகன்'னு போட்ருக்காங்க பாருங்க!

    கேப்ஷன் போட்டியில் வெற்றிவாகை சூடிய நம்ம 'ஜம்ப்பிங் ஸ்டார்' பாபு, 'எவர் யூத் ஸ்டார்' தலீவர் மற்றும் 'கேப்ஷன் சூப்பர் ஸ்டார்' பார்த்தீபன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!! கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. // மேலே 'Supreme 60' விளம்பரத்துல சார்லியை 'காரிகன்'னு போட்ருக்காங்க பாருங்க! //

      ஆமாம்.

      Delete
    2. @Erode பூனைக்குட்டீ..😃😍🐘
      @Palladam SK ஜி..

      வாழ்த்துகளுக்கு நன்றிகள்💗💓💝 ..

      Delete
    3. :-)

      நன்றி செயலரே...

      Delete
    4. யோவ் ... Blueberryய Tigerனு படிக்கிறீரு .. Chesterஅ டூபின்னு படிக்கிறீரு - அப்புறம் சார்லி காரிகனா இருந்தா என்ன? சரவணனா இருந்தா என்ன? பேசாம படியும் ! :-)

      Delete
    5. ஹிஹி! சரி விடுங்க - ரெண்டுல ஒன்னை 'இளம் காரிகன்'னு எடுத்துக்கறேன்!

      Delete
  32. Replies
    1. யாருப்பா நீயி.. புதுசா இருக்கே.?

      Delete
  33. மூணு பேரோட காமெடி கலாய்ப்புகளையும் இங்கே பதிவிடலமே டியர் எடி .. 😍

    ReplyDelete
  34. தென் நாளைய புத்தகங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..

    மேலும் விளம்பரத்தில் சார்லிக்கு பதில் காரிகன் என்கிற வாசகமே திரும்பவும் இடம்பெற்றுள்ளதை கவனிங்க டிர் எடி ..

    ReplyDelete
  35. போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் மூவருக்கும், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @புன்னகை ஒளிர்..😍💐🌾🌷
      Thanks for the wishes ji..💐🌸🌺

      Delete
  36. டியர் எடி,

    முழுவதும் கருப்பு வெள்ளை மாதமாக வருவது, நமது மறுவருகைக்கு பிறகு இதுவே முதன் முதல் என்பது சரிதானா ?!

    மார்டின் பற்றி பல பதிவுகளில் படித்த பின், தலைச்சன் வாசிப்பிற்கு ஆர்வத்துடன் - I am Waiting ☺️

    ReplyDelete
  37. ஆஹா..சூப்பர் சார்....மார்ட்டின் அட்டை ....விளம்பரங்கள் அருமை...வாழ்த்துக்கள் நண்பர்களே.....சேலம் நண்பர்களே அட்டகாசம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டீல் அய்யா....

      Delete
  38. ஜனவரிக்கு....ஸ்பைடரா... இ.பவா....உயிரைத் தேடியா....சாகரா....புதிய அதிரடித் கதைகளா

    ReplyDelete
  39. @ Steel கிளா பொன்ராஜ்..😍😃😀😘

    கேளுங்க ..கேளுங்க ..கேட்டுகிட்டே இருங்க ஜி..✊💪

    ReplyDelete
  40. போச்சு பெங்களூர் பரணி சார்..இதையும் காணோம்..

    ஏதோ வெளிநாட்டு சதி..:-(

    ReplyDelete
    Replies
    1. தலைவரே கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு உங்கள் ஸ்டைலில் ஒரு கடுதாசி எழுதி சாரி ஒரு ஈ-மெயில் அனுப்பி விடுங்கள். அப்புறம் பாருங்கள் :-)

      Delete
    2. உடனடியாக செயல்படுத்துகிறேன் அய்யா...:-(

      Delete
  41. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. @MKS.Ramm..😃😍
      Thanks for the wishes Ram ji..❤💜🙏

      Delete
    2. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள் ...

      Delete
    3. நன்றி நண்பர்களே...

      Delete
  42. கேப்சன் போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  43. அன்புடையீர் வணக்கம்
    எனது நண்பர் ஒருவர் ரெகுலர் காமிக்ஸ் ரசிகர். திருவண்ணாமலை மாவட்டம். ஒரு புக் ஏஜண்டிடம் ரெகுலராக புக்ஸ் (maximum all books) வாங்கி விடுவார். நான் அவரிடம் 2023 அட்டவணை பார்த்தாகி விட்டது.நீங்கள் பார்த்தாச்சா எப்படி உள்ளது என்றால் அவர்

    அந்தக் கொடுமையை ஏன் கேக்குற என்கிறார்.
    சென்ற மாதம் புக்ஸ் இரண்டும் வாங்கி விட்டேன். அட்டவணை கேட்டதற்கு காரிகன் spl book வாங்கினால் மட்டுமே அட்டவணை கொடுப்பதாக சொல்லி விட்டார். ஏன் என்றால் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மறுத்து விட்டனர்.

    காமிக்ஸ் அட்டவணை என்பது மாதம் மாதம் வரும் புத்தகங்களுக்கு உரியது. 3 மாதத்திற்கு ஒருமுறை வரும் புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.
    அதுவும் இல்லாமல் அதை வாங்கினால் மட்டுமே அட்டவணை கொடுப்பதாக கூறுவது நியாயமாக படவில்லை.
    ஆசிரியர் இது பற்றி கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  44. கேப்சன் போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

    Reply

    ReplyDelete
  45. டிசம்பர் பார்சல் வந்தாச்சே...!

    முதலில் எதைப் படிக்கலாம்..!?

    நிழல்களின் ராஜ்ஜியத்தில்.. எப்போதும் ஏமாற்றாத வில்லர் அண்ட் கோவை முதலில் படிப்பதா..?!

    வரலாற்றின் வாடிவாசல்... மார்ட்டின் மிஸ்ட்ரீயை பார்த்து நீண்ட காலம் ஆச்சி.. இதைப் படிக்கலாமா.?

    அல்லது..

    உதிரத்தின் நிறம் கறுப்பல்ல..

    டெட்வுட் டிக்கின் முதல் பாகம் மறந்தே போச்சி.. அதைப்படிச்சிட்டுதான் இதை. படிக்கமுடியும்.. இதைச் செய்யலாமா.?

    அப்புறம்.. பார்சலில் இன்னுமொரு புத்தகம் இருக்கு... அதைப்படிச்சிட்டு... "பாராட்டலாமா.!?"

    ஏதுமறியா இச்சிறியேனுக்கு வழிகாட்டி உதவுங்கள் சான்றோரே..!!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு புக் இருக்குனு சொன்னிங்களே அத படிங்க சகோதரரே😋😋😋

      Delete
    2. சூப்பர் சகோ..!
      நானும் அதைத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன்..!
      சொல்லப்போனா.. படிச்சே முடிச்சிட்டேன்..!

      அந்த இன்னொரு புத்தகத்தின் தலைப்பு.. "2022ன் காமிக்ஸ் பிரவாகம்"
      அந்த ஒரேப் பக்க புக்கை படிச்சது மட்டுமில்ல.. அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன்..!

      Delete
    3. இருந்தாலும்.. நம்ம கடல்யாழ் சகோ உத்தரவிட்டு இருக்காங்க.. அதுக்காகவாச்சும் அந்த இன்னொரு புக்கை படிச்சி விமர்சனம் போடலாமின்னு இருக்கேன்...
      (மாடஸ்கா கதைகளுக்கு விமர்சனமே எழுதாம இருந்திட்டேன்னு ராசுன்னு ஒரு போலி ஐடி ஆசாமி நெம்ப வருத்தப்பட்டாக)..
      விமர்சனம் முன்னபின்ன இருந்தா என்னைய கோவிச்சிக்காதிங்க நண்பர்களே..!

      விமர்சன டீசர் :

      கரண்ட் பொட்டியில டேஞ்சர் தொடாதேன்னு எழுதியிருக்குமே.. அதுமாதிரி..
      அட்டையிலயே எச்சரிக்கை குடுத்துட்டாங்க.. சிரிச்சே செத்துருவிங்கன்னு..!
      மேல மாடஸ்கா ப்ளைசின்னு எழுதியிருக்கு.. கீழே அமயா அக்கா துப்பாக்கியோட நிக்குது.. உள்ளே போய் மாடஸ்காவா அமயாக்காவான்னு பாத்துட்டு அப்பால வர்ரேன்.!

      Delete
    4. ////மேல மாடஸ்கா ப்ளைசின்னு எழுதியிருக்கு.. கீழே அமயா அக்கா துப்பாக்கியோட நிக்குது.. ///

      கிட்.. :))))))))

      ஒரு முக்கிய வித்தியாசத்தை நீங்க கவனிக்கலை. அமாயாவின் கூந்தலின் நிறம் - வெளிர் மஞ்சள்! (க்கும்! கூந்தலை எல்லாம் நீங்க எதுக்கு கவனிக்கப் போறீங்க!!)

      Delete
    5. //அட்டையிலயே எச்சரிக்கை குடுத்துட்டாங்க.. சிரிச்சே செத்துருவிங்கன்னு..!//

      😂😂😂😂😂

      Delete
    6. //அமாயாவின் கூந்தலின் நிறம் - வெளிர் மஞ்சள்! (க்கும்! கூந்தலை எல்லாம் நீங்க எதுக்கு கவனிக்கப் போறீங்க!!)//

      குறும்புக்கார பூனையார்

      Delete
    7. ///ஒரு முக்கிய வித்தியாசத்தை நீங்க கவனிக்கலை. அமாயாவின் கூந்தலின் நிறம் - வெளிர் மஞ்சள்! (க்கும்! கூந்தலை எல்லாம் நீங்க எதுக்கு கவனிக்கப் போறீங்க!!)///

      அப்படீன்னா... அமயாக்காவுக்கு டை அடிச்சி போட்டோ எடுத்திருக்காங்களா குருநாயரே..?
      😯😯😮

      Delete
    8. ///அப்படீன்னா... அமயாக்காவுக்கு டை அடிச்சி போட்டோ எடுத்திருக்காங்களா குருநாயரே..?///

      இதென்ன பிரமாதம்?! சிலபல மாசங்களுக்கு மின்னாடி இந்த அமாயா பொண்ணை ஒரு தென்னிந்திய தொழிலதிபர் சாகஸம் பண்ணக் கூப்பிட்டிருந்தாரு. சாகஸத்துக்கு கிளம்புற நேரமாப் பாத்து அமாயாவுக்கு உடம்பு சரியில்லாமப் போய் படுத்துக்கிச்சு! ஆனா அந்த சாகஸம் குறித்த நேரத்துல வெளியாகி ரசிகக் கண்மணிகளின் வாயில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துச்சு!
      என்ன நடந்திருக்கும்னு இப்ப யூகிச்சிருப்பீங்களே...? ;)

      Delete
    9. அண்டர்வேர் குருநாயரே...😉😉

      Delete
  46. டிசம்பர் பெட்டியை கைப்பற்றியாச்சி,
    4 இதழ்களும் 4 வெரைட்டியா டாலடிக்குது,டெக்ஸ் இதழ்களுக்கு பின் அட்டையில் புயலில் ஒரு புதையல் வேட்டை முந்தைய இதழின் விளம்பரம் அப்படியே வந்துடுச்சி போல,அடுத்த வெளியீட்டில் பகை பல தகர்த்திடு-டெக்ஸ் இதழின் விளம்பரத்தை பார்த்துட்டு,பின் அட்டையில் புயலில் ஒரு புதையல் வேட்டையை பார்த்தவுடன் அடுத்த மாதம் 2 டெக்ஸோன்னு நினைச்சிட்டேன்...
    முத்து 51 வது ஆண்டு மலர் புதுமுகம் மிக்கி ஸ்பிரெய்ன் எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறார்...
    கைப்புள்ள ஜாக்,எலியப்பா தொகுப்பு அறிவிப்பு கார்ட்டூன் பிரியர்களுக்கு மகிழ்வளிக்கும்...
    சர்ப்ரைஸ் அறிவிப்பு யார் அந்த மாயாவி,ஆழ்கடலில் மாயாவி தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியை நோக்கிய நகர்வா ?!
    கண்டிப்பாக இத்தொகுப்பு சிறப்பாக விற்பனையாகும்,இக்கதைகள் முதல் மறுபதிப்பா சார் ?!
    அடுத்த அறிவிப்பில் டெக்ஸ்,முத்து 51 என இரு அறிவிப்புகள் மட்டுமே இருக்கே,வேதாளர் அறிவிப்பில் இருக்கார்தான்,ஜனவரியில் கடைசி எண்ட்ரியா ?! இல்லை புத்தக கண்காட்சியை முன்னிட்டு முந்தி வருவாரா ?!
    எதை முதலில் படிக்கறதுன்னு குழப்பமா இருக்கு,இங்கி பிங்கி பாங்கி போட்டுதான் பார்க்கனும் போல...

    ReplyDelete
    Replies
    1. வேதாளர் ஜனவரி துவக்கத்திலேயே சார் ! And மாயாவி கதைகள் ஒன்னரை ஆண்டுகளாய் கையில் உள்ள சரக்கு ; அட்டைப்படமுமே "சன்ஷைன் லைப்ரரி" என்று இருப்பதைக் கவனியுங்கள் !

      Delete
  47. // அப்புறம் புது புக்ஸ் - சனி & ஞாயிறுக்கு ஸ்டாலில் கிடைக்கும் guys ! //
    சிறப்பான செய்தி...

    // சேலத்தில் கேரவனை பார்க் செய்தோம் ! But surprise ...surprise ........"தமிழகத்தின் TOP 6-க்குள் நாங்களும் இருக்கிறோம்டா தம்பி ; எங்க கெத்து என்னான்னு பாக்குறியா ?" //
    சேலத்தில் புத்தக விழா சிறப்பாய் செல்வது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...

    ReplyDelete
  48. ஹைய்யா புக்கு வந்திடுச்சாம்! சாயந்திரம் கொரியர் ஆபீஸுக்குப் போய் கைப்பற்றணும்!

    ReplyDelete
  49. அட...நடப்பாண்டில் வாங்கியது - வாசித்தது கணக்குத் தாளைப் பூர்த்தி செய்து அதற்குள் கணிசமானோர் வாட்சப் பண்ணியுள்ளனர் !! Surprise !!

    ReplyDelete
  50. அப்புறம் வாசிக்க ஆரம்பிப்போர் எந்த இதழிலிருந்து துவங்குகிறீர்களென்றும் தெரிந்து கொள்ள ஒரு சன்னமான ஆவல் !

    ReplyDelete
    Replies
    1. நான் முதலில் டெட் வுட் டிக் படித்து விட்டேன் சார். சும்மா சொல்லக் கூடாது கெட்ட பய சார் இவன். ஆரம்பம் முதலே அதிரடி. கறுப்பர்கள் அனுபவித்த கொடுமையை கொஞ்சம் கூட பிரசங்கம் போல இல்லாமல் அட்டகாசமாக ஒரு ஆக்சன் கதையில் சொன்னது செம்ம.
      எனது மதிப்பெண் 9/10.

      Delete
    2. ///அப்புறம் வாசிக்க ஆரம்பிப்போர் எந்த இதழிலிருந்து துவங்குகிறீர்களென்றும் தெரிந்து கொள்ள ஒரு சன்னமான ஆவல் !///

      சிரித்துச் சாகவேண்டும்..
      (மெய்யாலுமே சார்..😂)

      Delete
    3. இம்முறை சிலபல பகடி பார்ட்டிகளை அம்மணி பந்தாடப் போவதைக் காண ஆர்வத்துடன் வெயிட்டிங் செஸ்தாணு !

      Delete
    4. Deadwood Dick மொழி நடையில் உறுத்தல்கள் எதேனும் குமார் சார் ?

      Delete
    5. 1. மண்டைகொழப்பி மார்ட்டின் 
      2. செ(ஞ்ச)மரக் கு(த்து) (Anagram ஹி ஹி !!)
      3. தலைவர் Tex 
      4. முதிர்கன்னி அம்மா 

      Delete
    6. மொழி நடை கொஞ்சம் ஜெர்க் அடித்தாலும் இதுவே சாலப் பொருத்தம் சார்,இதுவே அசல் தரிசனம்...
      பேனல்களை பார்க்கும் போது கண்டிப்பா கொஞ்சமாவது எடிட் செய்திருப்பீர்களோ என்று எனக்கு தோன்றியது,செய்தீர்களா சார் ?!

      Delete
    7. Nopes.....எடிட்டிங் ஒரேயொரு பேனலில் மட்டுமே சார் - பயல் அந்த ப்ராத்தலுக்குள் நுழையும் frame !

      Delete
    8. எனக்கு எங்கேயும் கொஞ்சம் கூட நீங்கள் extra நம்பர் போட்டது போல தெரியவில்லை சார். உங்கள் மொழிபெயர்ப்பு அனல் பறக்கும் கதைக்கு பொருத்தமாகவே இருந்தது சார்.

      Delete
  51. எடி ஜி,

    கொரியர் பாக்ஸ் திறந்தவுடன் பிரின்டிங் மை வாசனை மூக்கை துளைத்தது, இந்த முறை முன்பை விட அட்டை படத்தின் தயாரிப்பு தரம் உயர்வாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பிரிண்ட் ஆன சூட்டோடு அனுப்பிய புக்ஸ் சார் ; கறுப்பு மசி குபீரென்று நாசியைத் தாக்கும் !

      Delete
    2. Maybe இளவரசி பளிச்சென்று இருந்ததால் அட்டைப்படங்கள் as a whole பளிச்சென்று இருந்திருக்குமோ ?

      Delete
  52. கைப்புள்ள ஜாக் புதிய கதைகளா சார்? அல்லது இந்த வருடம் வந்த கதைகளின் தொகுப்பா சார்?

    ReplyDelete
  53. காரிகன் ஸ்பெஷல் -1: முதல் 5 கதைகள் படித்து விட்டேன். ஓகே ரகம். கொஞ்சம் பழைய நெடி வசனங்களில் தெரிகிறது; ஒரு கதையில் தனது துப்பாக்கியில் தோட்டா இல்லாததை தனக்கு தானே அடுத்த 3-4 பக்கங்களில் சொல்லிக் கொண்டே இருந்தது நெருடியது.

    ReplyDelete
    Replies
    1. // அடுத்த 3-4 பக்கங்களில் // பேனல்களில் என வாசிக்கவும் சார்.

      Delete
  54. இந்த வருடம் வந்த வேதாளர், மாண்டரேக், ரிப் மற்றும் காரிகன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததில் முதல் இடம் ரிப், இரண்டாம் இடம் வேதாளர், மூன்றாவது இடம் மாண்ட்ரேக்.

    காரிகன் கதையை படிக்கும் போது கதையோடு ஒன்ற சிரமமாக இருந்தது. ஏன் என தெரியவில்லை.

    ReplyDelete
  55. இந்த ST கொரியன் மேடராசுக்கு எப்போமே 2 நாள் தள்ளி தான் வாரான் .. லேட்டா வரவனுக்கு என்ன மரியாதை (கொரிய'ர்' னு சொல்லிக்கிட்டு). 2023 DTDCல கேட்டு பார்க்கணும்.

    ReplyDelete
  56. அட்டைப்படம் டெக்ஸ் மாடஸ்டி டெட்வுட் மூனுமசத்த....மாடஸ்டி டெட்வுட் போட்டி போட...மாடஸ்டி முந்துகிறார் இது வரை வந்ததிலே நாந்தா டாப்பென

    ReplyDelete
  57. உதிரத்தின் நிறம் கறுப்பல்ல :
    இரத்தமும் சதையுமாய்,இரணகளமும் ரெளத்திரமாய் களமாடும் மேற்கத்திய பூமியின் கதையிது...
    நிறங்கள் குறித்தான விஷம சிந்தனைகள் மனித இனத்தை எப்படி குரூர தன்மையுடன் மாறியுள்ளது என்பதை வாசிக்கும் போது மனம் சற்று ஆடித்தான் போகிறது...
    கதை பயணப் போக்கிலும்,டிக்கின் விவரிப்பிலும் நம் கண்முன்னே விரிகிறது...விரியும் கதையின் துவக்கத்தில் வரும் காட்சி அமைப்புகளும்,கதை மாந்தர்களின் காரமேறிய வார்த்தைகளும் இது பெரியவர்களுக்கானது என்பதை தெள்ளத் தெளிவாய் கோடிட்டுக் காட்டி விடுகிறது...

    டிக்கிற்கும்,சிரிகாகுவா செவ்வியந்தினுக்குமான உரையாடலும், காட்சி அமைப்பும் அபாரமாக கையாளப்பட்டுள்ளது...
    சிரிகாகுவா கேள்வியும்,டிக்கின் தடுமாற்றமும் மனதை ஊடுறுவும் காட்சிகள்...
    காட்சியின் முடிவில் டிக் எடுப்பது செம அதிரடியான தில்லான முடிவு...

    டிக்கிற்கும் டிக்கின் நண்பன் லெராய்க்ற்குமான (கொலைகள் செய்வது குறித்தான) உரையாடல்களும் ஆழமானது,எது அவசியமானது,எது அநாவசியமானது என்ற நோக்கம் சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது...

    பெண்களை வெறும் சதைகளாக பார்ப்பது,குடிக்கிறது,கும்மாளம் போடறது,குளிக்காம சுத்தறது,நிறவெறி இனவெறியோட சுத்தறதுன்னு எம்புட்டு மோசமா வாழ்ந்துருக்கானுங்க பக்கி பயலுங்க...

    கதையின் மையக்கருவாய் எதை வரையறுப்பது ?!
    துவக்கத்தில் செவ்வியந்திர்கள் வெள்ளை இனப் பெண்களை கொடூரமாய் வேட்டையாடுகின்றனர்...
    கறுப்பினத்தவன் என்ற ஒரே காரணத்திற்காக பிணம் கூட சூறையாடப்படுகிறது...
    டிக் தேடித் தேடி வேட்டை ஆடப்படுகிறார்,டிக்கால் மொத்த ஊரே வேட்டை ஆடப்படுகிறது...
    இங்கே,
    எது சரி ?!
    எது தவறு ?!
    யார் நல்லவர் ?!
    யார் கெட்டவர் ?!

    வசனங்கள் ரெளத்திர தாண்டவமாடுகிறது,

    "துரதிர்ஷ்டவசமாய் ஆண்டவன் அந்த நொடியில் அங்கேயில்லை ! நான்தான் இருந்தேன் "

    "கஷ்டங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றின ராஜகுமாரன் பனி போல வெள்ளையாக இருந்ததாக அவள் பாடினப்போ எனக்குமே கோபம் கோபமா வந்திச்சி"

    "தோலின் நிறத்தைத் தவிர்த்து பாக்கி எதுவுமே மாறலை ! அதே தரித்திரம்,அதே வறுமை"

    "பார்வைகளாலே எங்களைச் சங்கறுக்க அந்தக் கையாலாகாத கும்பல் முயற்சி பண்றது புரிஞ்சது!
    அவன்களுக்கு அது மட்டும்தான் முடியும்"

    -அனலடிக்கும் வசனங்கள்...

    டிக் பிணம் போல் குதிரையில் தப்பிக்கும் காட்சிகள் கொஞ்சம் ஜெர்க் அடிக்கத்தான் செய்கிறது...

    ஊரையே வேட்டையாடும் டிக்கின் கோபத்திற்கான நியாயமும் சரியாகவே கையாளப்பட்டுள்ளது...
    அப்பப்பா எத்தனை டுமீல்கள்....
    ஊரையே வேட்டையாடிட்டு வந்தவுடன் பெண்களுடன் சல்லாபிப்பது-இவ்வளவு ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பான்னு நமக்குத் தோணும்,அதை கேட்ச் செய்த விதமாய் அடுத்து வரும் வசனம் நம்மை சிரிக்க வைக்கிறது...

    டிக்கின் கேரக்டர் வடிவமைப்பு கிட்டத்தட்ட டியூராங்கோவின் கேரக்டரை ஒட்டியது தான்,சூழலை பொறுத்து முடிவெடுப்பது,யாருக்கும் நல்லவனுமில்லை,யாருக்கும் கெட்டவனுமில்லை...

    ரத்தமும்,வன்மமும்,வசவுமாய் கதையில் தோய்ந்திருப்பினும் அழுத்தமான கதைக் கரு நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது...

    ரணகள சூழலிலும் நக்கலும்,நையாண்டியுமாய் டிக்கின் பார்வையில் கதை நகர்வது இறுக்கமான சூழலை சற்றே தளர்த்துகிறது...

    வாசிப்பில் இருந்து வெளியே வந்தவுடன் எங்கே இருக்கிறோம் என்ற சிந்தனை எழுந்தது,சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் தோன்றியது...

    இறுதி பன்ச் செம,பிரியாவிடை,பரிதாப வடைன்னுல்லாம் எதும் நிகழலை ! அவரவர் பாதைகளிலே மெளனமாய்ப் புறப்பட்டோம்...

    உதிரத்தின் நிறம் கறுப்பல்ல,மேற்கத்திய இருள் முகம்...

    அடுத்த டிக்கின் பயணத்திற்காக ஆவலுடன்...

    எமது மதிப்பெண்கள்-10/10...

    ReplyDelete
    Replies
    1. அனலடிக்கும் அலசல் சார் ; கதையின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ! மொழிபெயர்ப்பு சிரமமாக இருந்ததாகவெல்லாம் பீலா விட மாட்டேன் ; நிஜத்தைச் சொல்வதானால் ஜாலியாக இருந்தது இந்தக் கெட்ட பயலுடனான பயணம் !

      2023 -க்கு டிக்கை 'டிக்' அடிக்காது விட்டுப்போட்டோமே என்ற கவலை மட்டுமே மேலோங்குகிறது ! சூட்டோடு சூடாய் ஒரே ஸ்டைலில் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்திருக்கலாம் !

      Delete
    2. Still have time Sir
      Podunga oru special track book
      Regards
      Arvind

      Delete
    3. 2023 இல் ஏதேனும் ஒரு இடைவெளியில் டிக்கை நுழைத்து விடுங்கள் சார்...

      Delete
    4. அட்டகாசமான விமர்சனம் அண்ணா. அடுத்த வருடம் எதேனும் வாய்ப்பு இருந்தால் டெட் வுட் கொண்டு வாருங்கள் சார்.

      Delete
    5. // 2023 -க்கு டிக்கை 'டிக்' அடிக்காது விட்டுப்போட்டோமே என்ற கவலை மட்டுமே மேலோங்குகிறது //
      பாறை போலான டிக்கை அசைத்து பார்க்கும் இடமான சிரிகாகுவா செவ்விந்தியனுடனான உரையாடலும்,செவ்விந்தியக் குழந்தையைப் பார்த்தவுடன் டிக் இளகும் காட்சியும்,டிக்கும் அவன் நண்பன் லெராயும் பேசும் உரையாடல்களும் இது சாதாரண கதையல்ல என்று உணர்த்தியது சார்,ரொம்பவே டச்சிங்கான இடங்கள்,ஒருவனின் நிறத்தை வைத்து குணாம்சங்களை எடை போடும் சமூக அமைப்பைப் பார்த்து எள்ளி நகையாடும் காட்சிகள் அவை...
      மீண்டும் என்னைப் படிடா வெண்ணை என டிக் சொல்கிறார் சார்,வாசிப்பாளனை அசைத்துப் பார்க்கும் சில கதைகளில் இதுவும் ஒன்று...

      Delete
  58. மாடஸ்டியின் சிரித்துச் சாக வேண்டும், காரிருள் காரிகை - இரண்டுமே தரமானா ஆக்‌ஷன் கதைகள், வெகு காலத்திற்குப் பிறகு இளவரசியிடமிருந்து அட்டகாசமான கம்பேக்.. ஓவியங்களும் பிரமாதம்.. முதல் கதை இருபது பக்கங்களுக்குப் பிறகு ஜெட் வேகம்.. முடிந்த அளவு சென்சார் செய்யப்பட்ட, தேவையே இல்லாத சில பப்பி ஷேம் பேனல்கள் தவிர ஓவியங்களும் அசத்தல் . இரண்டாவது கதை காரிருள் காரிகையின் தைனா வெகுகாலத்திற்கு நினைவில் இருக்கப்போகும் கதாப்பாத்திரம்.கிளாஸிக்கில் பெரிதாக விருப்பமில்லாதவர்கள் கூட dont miss it.

    ReplyDelete
  59. டியர் எடிட்டர் சார் - இந்த இரண்டு கதைகள் , 3x2 பேனல்கள் பார்மேட், கைகளுக்கு அடக்கமாகவும், கண்களுக்கு படிக்க இதமாகவும் இருக்கின்றன. இளவரசியின் இரண்டு கதைத்தேர்வுகளுக்கும் பெரிய ஒரு பூங்கொத்து.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு இரண்டாய் இளவரசி சாகசங்கள் எனும் போது, கதைகளில் வீரியம் குறைவாய் இருப்பின் - SURF EXEL ஜாஸ்தியாகிப் போகுமென்ற பயம் தான் சார் - கதைத் தேர்வுகளுக்கென மெனெக்கெட்டதன் பின்னணி ! Glad it worked

      Delete
  60. Dead wood dick, தொடங்கியதும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை அவ்வளவு ஸ்பீடாக கதை ஓட்டம் . Dead wood dick இவருக்கு ரசிகனாகி விட்டேன்.

    ReplyDelete
  61. Dead wood dick தொடர்ந்து வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தொடரில் எஞ்சியிருப்பது ஒரேயொரு புக்கிற்குத் தேறக்கூடிய அளவிலான 180 பக்கங்கள் மட்டுமே சார் ! சுபம் போட்டு விட்டார்கள் அத்தோடு !

      Delete
  62. Dead wood dick கதை படிக்க தொடங்கியது முதல் கடைசி வரை ஏதோ ஒன்று கதையை பாதியில் நிறுத்த விடாமல் இழுத்துச் சென்றது, கதையின் ஓட்டமா அல்லது உங்களது வசனங்களா என்று தான் தெரியவில்லை. புத்தகங்கள் வந்தன்றே படித்த முதன்முறை முதல் கதை deadwood dick, எனக்கு கதையில் குறை சொல்வதற்கென்று எதுவுமே இல்லை அருமை

    ReplyDelete
    Replies
    1. கதை ஓட்டம் மெயின் பாடகரைப் போல ; நமது வசனங்கள் பக்கவாத்தியம் மாதிரி சார் ! முன்னதே ஈர்ப்புகளின் காரணி !

      Delete
  63. முதலில் படித்தது-மாடஸ்டியே..

    ReplyDelete
  64. மாடஸ்டி இதழ்-ஓவியமும் பளிச்-சென்று அமைந்து படிக்கத் துவங்கினால் ..
    பாக்கியராஜ் - ன் "தாவணிக்கனவுகள்"- படத்தில் சினிமா பார்க்கும் சீனில் பேபி அஞ்சு சொல்வது போல். "ஐயோ...எடிட்டர் சார் கருப்புமை பூச மறந்துட்டிங்க..." என்பதுபோல் பல Frame கள் உள்ளதே..
    . ஏன் சார்..?i இம்மாதம் நான்கு இதழும் B&W என்பதால் கருப்புமை தட்டுப்பாடா..?
    (அல்லது)- இதுக்குத்தானே மாடஸ்டி கதை கேக்கிறீங்க..
    தந்தாச்சு..இனிமே கேட்காதீங்க..
    என்பது போல் உள்ளதே..?i ஏன் சார்..?ii..இப்படி பண்ணீட்டீங்களே... ii.

    ReplyDelete
    Replies
    1. சற்றே புரியும் விதமாய் உங்களின் குறைப்பாட்டை பதிவிட்டால் உதவும் நண்பரே ; கமல் பாணியிலான பின்னூட்டம் ஹேஷ்யமான புரிதலைத் தாண்டி எதையுமே தெரிவிக்கவில்லை !

      மொத்த புக்கும் ஒரே மாதிரி உள்ளதா ? அல்லது கொஞ்சப் பக்கங்கள் மட்டுமா ? மொத்த புக்குமே எனில் அது அச்சில் கோளாறான பிரதியாய் இருக்க வாய்ப்பில்லை ! சில மட்டுமே எனில் வெறொரு புக் அனுப்பிடலாம் !

      அப்புறம் தொட்டதுக்கெல்லாமே உள்ளர்த்தம் தேட மெனெக்கெட வேண்டாமே ப்ளீஸ் ? இந்த ஒற்றை இதழ் நமது முதலீட்டில் ஆறிலக்கத் தொகை ; அதனை வேண்டுமென்றே சொதப்ப நான் அதானி குழுமத்தினனும் அல்ல ; ஆகப் பெரும் சைக்கோவும் அல்ல நண்பரே !

      Delete
    2. அவர் சொல்ல வருவது மாடஸ்டியை நிறைய இடங்களில் டிரெஸ் இல்லாமல் free ஆக விட்டதைப் பற்றி என நினைக்கிறேன் சார்.

      Delete
    3. Free ஆக விட்டாலும் சாத்துவோம் ; கோடு போட்டாலும் சாத்துவோம்னா, மாயாவியாரிடம் அந்த அரூப ஆற்றலை இரவல் வாங்கி அம்மணியை இனிமேல் கண்ணுக்குத் தெரியாமல் உலவ விட வேண்டியது தான் சார் ! டெட்வுட் டிக் கதைகளையே வெளியிடும் மாதத்தில் மாடஸ்டிக்கு சென்சார் வேண்டியதில்லை என்று பட்டது தான் காரணம் !

      Delete
    4. 5.30க்கு பார்சலை கைப்பற்றியதும் - படித்து (பார்த்து) ரசித்து விட்டு..
      கமெண்ட் போட்டது..
      அதனால் வந்த- "கல்யாணம் ஆகாத பொண்ணு கீழே நிற்கிறாள்." குழப்பம்..சார்..

      Delete
    5. இன்னொருவாட்டி, புதுசாய்ப் படித்துப் பாருங்களேன் நண்பரே - புக் வெளுத்துப் போய் வந்து சேர்ந்திருப்பதான அர்த்தம் தோன்றுவது புரியும் !

      Delete
  65. @Edi Sir..😍😘

    Me received December books today..💐💪👍

    ReplyDelete
  66. ஸாரி சார்..நான் நீங்கள் மாடஸ்டி கதையில் செய்யும் சென்சார் சம்பந்தமாகத்தான் காமெடியாக பதிவிட்டேன்''..(அவ்வளவு சீரியசாகவா - அர்த்தம் வருகிறது..) ஸாரி..சார்..
    "

    ReplyDelete
  67. மாடஸ்டி ஸ்விம்மிங்-டிரஸ்ஸில்-இருப்பதையே - கோடு போட்ட சட்டையெல்லாம் போட்டு மறைப்பீங்களே..அதைத்தான் குறிப்பிட்டேன்..சார்.

    ReplyDelete
  68. @Edi Sir..😍😃

    இன்று பதிவுக்கிழமை..✌👍🌷💐

    ReplyDelete
  69. சார் டிசம்பர் இதழ்கள் அட்டகாசமான வரவேற்பு பெற்று இருப்பதால். ஒரு ஸ்பெஷல் பதிவு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி புத்தகங்களை எப்போது அனுப்புவிங்க எடிட்டர் சார் என எழுத மறந்து விட்டீர்களா குமார்:-)

      Delete
    2. இன்னும் நிழல்களின் ராஜ்ஜியம் இருக்கே

      Delete
    3. அது அடுத்த அரைமணி நேரத்தில் அல்லது இன்றையப் பதிவு வருவதற்குள் முடிந்து விடுமே குமார்:-)

      Delete
  70. அழகான நான்கு இதழ்கள்...


    நான்கும் ஒரே அளவில் கருப்பு வெள்ளை பக்கங்களில் ..

    குண்டு ,ஒல்லி ,மிதம் என அனைத்து வித பக்கங்களில்..


    ஒவ்வொரு இதழின் அட்டைப்படமும் ,உட்பக்க சித்திரங்களும் அட.டகாசமாய் மின்னுகிறது ..

    இரவு ஒவ்வொரு இதழையும் பக்கம் டூ பக்கம் ரசித்து கொண்டே இருந்தேன்..என்னை பொறுத்தவரை இப்பொழது எல்லாம் பெரிய இதழ்களை விட இந்த அளவு புத்தகங்கள் இன்னமும் மனதை கொள்ளை கொள்வது உண்மை...இன்று தான் இதழ்களில் வாசிக்க நுழைய வேண்டும்...எந்த இதழை முதலில் தேர்ந்தெடுப்பது என தடுமாறி கொண்டு இருக்கிறேன்..:-)

    ReplyDelete
    Replies
    1. எனது ஒரே வருத்தம் - 3 போனெல்லி இதழ்களையும் ஒரு குண்டாந்தடியாய் போட்டிருக்கலாமே என்று ...

      Delete
  71. ஜனவரியில் வரவுள்ள ஸ்பெஷல் இதழ்களுக்கான முன் அறிவிப்பு + முன் பதிவு பற்றிய பதிவாக இருக்குமா :-)

    ReplyDelete
    Replies
    1. இப்ப தான் பரணி நீங்க நம்ம வழிக்கு வந்து இருக்கீங்க

      Delete
    2. மாயாவி + எலியப்பா+ கைப்புள்ள ஜாக்+ இன்னும் என்ன இதழ்கள் உண்டு என்பதை சொல்லுங்கள்

      Delete
    3. ஆமாம் விஜயன் சார், ஜனவரியில் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ் வைத்து இருக்கீங்க... சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க :-) (பாட்ஷா பட மாடுலேஷனில் வாசிக்கவும்)

      Delete
    4. நான் கேட்பது ஸ்பெஷல் இதழ்கள் மட்டுமே. டெக்ஸ், மைக் ஹேமர், வேதாளர் உண்டு என்பது தெரியும்.

      Delete
    5. // மாயாவி + எலியப்பா+ கைப்புள்ள ஜாக் //

      குமார் இது எல்லாம் நொறுக்கு தீனிகள் மெயின் டிஷ் பற்றி ஆசிரியர் சார் இன்னும் சொல்ல வில்லை:-) வெயிட் அன் வாட்ச்:-)

      Delete
    6. ஆமாம் குமார் ஸ்பெஷல் இதழ்கள் பற்றியே எனது பின்னூட்டமும்.

      சென்னையில் புத்தகத் திருவிழா சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு என்பதால் நமது(க்கு) விருந்தும் வெயிட்டாக இருக்கும் என நினைக்கிறேன்.

      Delete
    7. ஸ்டீல் பாணியில் நீங்களும் இறங்கிட்டீங்களே சார் - பில்டப்களில் ?!

      SUPREME '60 ஸ் ; ரெகுலர் தடத்தின் சந்தா - என 2 முக்கிய சமாச்சாரங்கள் அரங்கேறி வரும் தருணத்தில் குறுக்காலே பெருசாய் எதையும் நுழைப்பது சுகப்படாது சார் ! And சர்ப்ரைஸ்ஸ் எல்லா நேரங்களிலும் கனமாய் இருக்க வேண்டுமென்பதில்லையே ?

      Delete
    8. சார் மூன்று ஆண்டுகள் கழித்து சென்னை புத்தகக் திருவிழாவில் நாம் எனும் போது நமது என்ட்ரீ செம மாஸாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் சார்:-)

      Delete
    9. ஸ்டால் உறுதியாகட்டும் சார் முதலில் !

      Delete
    10. // And சர்ப்ரைஸ்ஸ் எல்லா நேரங்களிலும் கனமாய் இருக்க வேண்டுமென்பதில்லையே ? // இருக்க வேண்டியது இல்லை தான் சார். உயிரை தேடி Confirm. மேகி உண்டா சார்? நம்ம தானைத் தலைவனின் சினிஸ்டர் செவன்? போதும் சார் இதுக்கு மேல என்ன கேட்க போகிறேன்.

      Delete
    11. // ஸ்டால் உறுதியாகட்டும் சார் முதலில் ! // இந்த முறை உறுதி சார்.

      Delete
    12. தெய்வமே ....லார்கோ இரண்டாம் பாகம் நவம்பர் 2023 க்குத் தான் அங்கேயே ரெடியாகிறது ! ஜனவரியிலேயே நாம போடணும்னா உங்க கவிதைகளைப் போட்டுத் தான், ரெண்டாம் பாகத்தை தேற்றணும் !

      Delete
  72. Dear Editor,
    Modesty Blaise 1st story was awesome
    Great comeback after few dull stories earlier
    She deserves a golden oldies special more than Corrigan
    Maxi Size and big panels will be great
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. //Great comeback after few dull stories earlier//

      Very true !

      Delete
  73. Martin Mysterie - was amazing sir !! Un-put-downable just .. read in single sitting this early morning !!

    ReplyDelete
    Replies
    1. Yes sir. .Martin is always way ahead of us ! Whenever we manage to catch up, it's a treasure chest !

      Delete
  74. 200 மெயின் புதிய பதிவு ப்ளீஸ்:-)

    ReplyDelete