Powered By Blogger

Thursday, March 04, 2021

பொம்ம பொஸ்தவ தினம் ?

 நண்பர்களே,

வணக்கம். மார்ச் மாதத்து முதல் வியாழன் உலக புத்தக தினமாம் ! எதெதுக்கோ தினங்கள் இருக்கும் போது - இது இருப்பதில் நிச்சயமாய்த் தப்பே நஹி ! ஏப்ரல் 23 தான் சர்வதேச புத்தக தினம் ; இந்த மார்ச்சின் விசால கிழமை சமாச்சாரம் இங்கிலாந்தில் மட்டுமே என்றும் எங்கோ படித்தேன் ! அட,அதுவும் இருக்கட்டும் ; இதுவும் இருக்கட்டுமே ?!  ரைட்டு...எவ்வளவோ புத்தகங்கள் குவிந்து கிடந்தாலும், நமக்கு இந்த 'பொம்ம புக்ஸ்'னா தனி இஷ்டம் எனும் போது - இந்த நாளில் உங்களின் ALLTIME Favorite Comics பற்றிச் சொல்லுங்களேன் ? நமது இதழ்களுள் தான் என்றில்லாது - இங்கிலீஷில் அல்லது இன்ன பிற மொழிகளில் வாசித்த காமிக்ஸ்களையும் இந்த ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்ளலாமே ?

அப்புறம் இன்றைக்கு கூரியரில் கிளம்புகின்றன மார்ச்சின் இதழ்கள் ! மாலை ஆன்லைன் லிஸ்டிங்கும் இருந்திடும் ! So மார்ச்சில் தாமத மார்ச் இம்முறை ; sorry guys !!

மீண்டும் சந்திப்போம் ! Bye for now !!

206 comments:

  1. /ரெண்டு டாப்லெஸ் சீன்ஸ் ; அப்புறமா கணிசமான தாராளமய கொள்கை என்று பயணிக்கும் கதை சார் ; சொல்லுங்க என்ன பண்ணலாம்னு ?/
    இந்த தளத்தின் கி(இ)ழம் வாலிபர்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்து கொள்ளும் அதே நேரத்தில் எங்களுக்கு கோவிட்19 தடுப்பூசி அட்டவணை தற்போது உள்ளதால் அவசர அழுவல் (அலுவல் அல்ல அல்ல) இருப்பதால் மட்டுமே நீங்கள் தப்பித்தீர் சாரே... இல்லையேல் பிச்சு பிச்சு சார் :)

    ReplyDelete
    Replies
    1. *அந்தியும் அழகே* குரூப் பாய்ஸ் கமெண்டுக்கு பயந்து மினி பதிவா சார்??? :)

      Delete
    2. "பாய்சுங்களா" ? ...இந்த நிஜார்லாம் போட்டுக்கினு, அரும்பு மீசையோட சுத்தி வருவாங்களே ....அவங்கள சொல்றீங்களா ?

      Delete
    3. அய்யா புத்தகப்பிரயரே ஏற்கனவே சிவகாசிக்கரார் வாரு வாருனு வாருகிறார்.

      பூரா மை பூசும் கேசக்காரவுகளாகவே இருக்கோம்..

      இதுல நீங்க வேறு எடுத்து தர்றீங்களே சாமி😉😉😉

      அப்புறம் நாமும் கண்டு ரசிக்கும் அணியில் உண்டுங்கோ!😍

      Delete
    4. ஹா ஹா தெரியும் டெக்ஸ் சார். நமது தன்னலமற்ற வேண்டுகோளை கத்திரி இன்றி தொண்டுள்ளத்துடன் எப்பாடுப்பட்டாவது நிறைவேற்றுவோம். BY : "அந்தியும் அழகே" பாய்ஸ் யூத் கிளப் லைப் டைம் மெம்பர்ஸ் :P

      Delete
    5. இந்த (கி)க்ளப்ல மெம்பர் ஆக விண்ணப்பம் கிடைக்குமா

      Delete
    6. செந்தில் சார்@ நீங்களாம் நம்ம அ.அ. கிளப்பில் ஆல்ரெடி அங்கம் சார்.

      ✂️ ஐ எடுக்காம இருக்க வைக்கும் நோக்கம் நிறைவேற உறுதிஎடுப்போம்.

      Delete
    7. சார்...இது 'கிளப்' ஆ...இல்ல 'கிழப்'ஆ...!?

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம் _/\_

    ReplyDelete
  3. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.....

    ReplyDelete
  4. Karsanin kadantha kalam & Thanga kallarai all time favourite.

    ReplyDelete
  5. ALLTIME Favorite Comics பற்றிச் சொல்லுங்களேன் ?


    லயன் காமிக்ஸ்...


    தட்ஸ்ஆல் யுவர் ஆனர்...

    ReplyDelete
    Replies
    1. சட்டுனு பார்க்கையில் லயன் டேட்ஸ் மாதிரியே தெரிஞ்சது தல...😉

      Delete
  6. // இன்றைக்கு கூரியரில் கிளம்புகின்றன மார்ச்சின் இதழ்கள் //
    அடடே,இனிய செய்தி...!!!

    ReplyDelete
  7. ஹாப்பி பொம்ம பொஸ்தவ டே!!

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான பொம்ம பொஸ்தவ நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நாளை திருவிழா தான்.

    ReplyDelete
  10. மூத்த ரசிகர் அன்பின் சீனியர் எடிட்டர் ஐயா செளந்திரபாண்டியன் சாருக்கும்,

    நம்ம எடிட்டர் விஜயன் சாருக்கும் பொம்மை புஸ்தவத்தை என்னை போல கிராமத்தில் இருந்து வந்த எளியவருக்கும் கொண்டு சேர்த்தமைக்கு இந்த பொம்ம பொஸ்தவ நாளில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏

    வண்ண புத்தகங்கள்,

    கிராபிக் நாவல்கள்,

    கெளபாய் நாயகர்கள்,

    துப்பறியும் டிடெக்டிவ்கள்,
    ....
    ....
    ....
    இன்னும் பலவகையான புத்தகங்களை படித்து இரும்பூதும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. இரும்பூதும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் - புரியலையே

      Delete
  11. // இன்றைக்கு கூரியரில் கிளம்புகின்றன மார்ச்சின் இதழ்கள் //

    யாஆஆஆஹீ...ஹீ....ஹீ...💞

    ReplyDelete
  12. All time favorite comics, in the order below
    1. Reporter Johnny அடிச்சுக்க ஆலேயில்ல
    2. Tiger - தங்க கல்லரை
    3. Oblix
    4. Lucky Luke
    5. பயங்கர பயணம் - suskie and wiskie
    6. Wayne Shelton - light read at the same time gripping story.
    6. Largo - எல்லா கதைகளும்
    7. வன ரேஞ்சர் ஜோ - I might have read at least 30 times
    8. Thorgal
    9. Undertaker
    10. Durango
    11. Jeremiah - இந்த கதை நிருத்தபட்டதில் வருத்தம்

    ReplyDelete
    Replies
    1. //Jeremiah - இந்த கதை நிருத்தபட்டதில் வருத்தம்//

      ஆமாம் சார், ரொம்பவும் வருத்தமே! புத்தம்புது ஆம்னிபஸ் டிஜிட்டல் எடிசன் 3 ஆல்பங்கள் செமையாக இருக்கு. எடிட்டரும் நண்பர்களும் மனது வைத்தால் சரி!

      Delete
    2. // புத்தம்புது ஆம்னிபஸ் டிஜிட்டல் எடிசன் 3 ஆல்பங்கள் செமையாக இருக்கு // Editor sir - At least some limited edition that can be brought out only for interested parties with higher price

      Delete
    3. //7. வன ரேஞ்சர் ஜோ - I might have read at least 30 times//---

      செம சார். அருமையான தேர்வு.

      Delete
  13. என்னோட ஆல்டைம் பேவரைட் மின்னும் மரணம் தான். நம்மளை மாதிரி சராசரி மனிதர்களை மாதிரியான ஒரு சாதாரண சிப்பாய். நட்பு, காதல், தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் இவற்றால் எல்லா சதிவலையையும் உடைச்சு வெற்றி அடையறதே கதை. ப்யூர் அண்டர்டாக் ஸ்டோரி. ஐ லவ் அண்டர்டாக்ஸ். சார்லியர் & மோபியஸ் என்னும் ஜீனியஸ்களின் அற்புத படைப்பு. The one and only மின்னும் மரணம்.

    ReplyDelete
    Replies
    1. மீன்னும் மரணம்---- ஒரு சரித்திரம்.

      மி.மி.& இ.ப.கருப்பு வெள்ளை குண்டுபுக் 2ம் மத்திய காலத்தின் டாப்ஸ்!

      Delete
  14. என்னுடைய favourite காமிக்ஸ் வரிசை... நம் லயன்/முத்து அல்லாது.... வலேரியன் & லாரலீன.. (VALERIAN & LAURELINE)... வலேரியன் தமிழில் பேசும் நாள் வரவே வராது என எண்ணும் போது... மனம் கனக்கிறது...

    ReplyDelete
  15. Indrajal comics which was introduced to me by my mother in 1983. My first comics ! Then Poonthalir Amar chitra kathai, STR? Sarithira Kathai. Paico classics, Romance Library which reminds me of Johnny Nero.

    ReplyDelete
  16. எனக்கு ஃபேவரிட் இரும்பு மனுசன் ஆர்ச்சி, சட்டித்தலையன், கோட்டையின் டிரைவர், தற்பெருமைகளின் மன்னன், மண்டையன் எல்லாமே அவன் தான் சார்...

    என்றாலும், கேப்டன் ப்ளூபெர்ரி தான் முதலிடம் பெற்றவர்... உடைந்த மூக்கும், அழுக்கு படிந்த உடம்பும், மொட்டையில், சுருள் முடியில், பரட்டை தலையில், தொப்பியுடன் இருக்கும் போதும் கூட, சில்க்கை சைட் அடிக்கும் அந்த மனுஷன் கிட்ட ஏதோ ஒரு மாயம் இருப்பதை யாரும் மறுக்கப் போவதில்லை....

    ReplyDelete
  17. Mehta, Ashok, Rani.....Early & mid 1980s is a golden age sir. Papa Manjari early issues with most pages comics.

    ReplyDelete
  18. When I was in 3rd or 4th STD one boy sold me a packet size black & white comics at 10 paise!( Not Muthu/Lion) That was the pocket size comics I had ever seen.

    ReplyDelete
  19. Then Pocket size lion comics attracted me very much. But that time felt Rani comics laminated wrapper better. I think lion comics first kannadi attai book was 1986 Kodai Malar. Till now there is some kick in Lion comics and Muthu Comics logo. .....I yearn for pocket size black and white comics (pocket size in the sense 1980s pocket size.. not 'Vichitra Savaal' pocketsize. I will write more when I find more time sir. What nostalgic memories!

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவுகள் சார்.

      அந்த கண்ணாடி வழு வழு ரேப்பர் க்கு மயங்காம யாரும் இருக்க முடியாது.

      Delete
  20. எனக்கு பிடித்த புத்தகம் தங்கக் கல்லறை தான். அது ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதது. அதற்கு இணையான தாக்கம் ஏற்படுத்தியது சூப்பர் சர்க்கஸ் தான். இரண்டுமே எனது டாப் லிஸ்டில் எப்போதுமே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலில் படித்த இரும்பு மனிதனை மறக்க முடியுமா??? பூபதி சொன்னது போல தொடக்க காலத்தில் படித்த ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி நெஞ்சில் பசுமரத்தாணி போல் எப்போதும் இருக்கும்...

      Delete
    2. சூப்பர் சர்க்கஸ் அட்டை வேற லெவல்ல இருந்தது. எனக்கு பூம்...பூம்...படலம்தான் பேவரைட்.

      Delete
  21. In my opinion we can enjoy the artwork of comics better when we dont know the language . That was what I felt...when I was unable to read I saw a cartoon strip in a magazine...I used to ask my mother to tell the story again and again it was never boring. And I enjoyed the illustration completely ignoring the balloons. Now we pay most of out concentration on story....

    ReplyDelete
    Replies
    1. //Now we pay most of out concentration on story.... // Absolutely true

      Delete
    2. //
      I used to ask my mother to tell the story again and again it was never boring. And I enjoyed the illustration completely ignoring the balloons. //

      சார் ...சட்னி காரமாக இருக்குமென்று சீனி மட்டுமே தொட்டு பிள்ளைகளுக்கு இட்லி ஊட்டிய தாய்மார் எண்ணிலடங்காதல்லவா ? அட, நமக்கே கூட அதைத் தந்திருப்பார்கள் ! அன்னிக்கு ருசித்த அதே பாணியில் இன்றைக்கும் சாப்பிட முடிவதில்லையே ? என்று நாம் எப்போதாவது கவலை கொண்டிருப்போமா ?

      "தக்காளி தொக்கா ? ஊத்து ; கொத்தமல்லி சட்னியா ? போட்றா அம்பி !" என்று ரவுண்டு கட்டவல்லவா செய்கிறோம் ?

      ஆனால் ....

      ரசனைசார் சமாச்சாரம் எனும் போது மட்டுமே, "அன்னிக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?" என்ற nostalgia நாயகர்களாகிப் போகிறோம் ! சீனி இட்லியை ரசிக்க முடிந்ததற்கு அந்த வயதும் ; காரமோ, தித்திப்போ பழகாத நாக்கும் காரணங்கள் என்ற கோணத்தில் சிந்த்தித்துப் பாருங்களேன் சார் !

      Delete
    3. //காரமோ, தித்திப்போ பழகாத நாக்கும் காரணங்கள்//

      நச்!

      Delete
    4. உண்மை சார். ஆனால் எங்கள் அலசல்கள், விமர்சனம் "அருமை! சூப்பர் !" என்றளவிற்கு மட்டுமே இருந்த காலத்தில் அங்குலம் அங்குலமாக புத்தகத்தை திரு ம்ப திரும்ப ரசிக்க நேரம் + விருப்பம் இருந்தன. நமது புது அவதாரத்தில் நான் அவ்வாறு ரசித்து Green Manor (so difficult typing Tamil)sir.

      Delete
  22. அர்ஸ் மேக்னா.....
    ஆசிரியர் உட்பட பல நண்பர்கள் தெரிவித்த கருத்து யாதெனில், சென்ற மாத வெளியீடுகளில் முதலாவதக இந்த புத்த்கத்தை படித்திருக்க வேண்டும் என்பதே... கதை முழுமையும் படித்ததும் புரிந்தது எதற்காக அவ்வாறு கூறினர் என்று.
    சிலருக்கு இது ஒரு கல்யாண விருந்திற்கு ஒப்பாயிருக்கும்.
    தமிழில் எனக்கு நினைவு கூற முடிந்த வரை, symbolism - குறியீடுகள் நிறைவாய் உள்ள கதைகள் அரிது. அதிலும் Davinci code, Angel's and demon போன்ற சவாலான, சற்றே சறுக்கினாலும் மிக பெரும் பிணக்குகளை கொண்டுவரும் கதைகள் ஏதுமில்லை என்பதே என்னொப்பிய அனுமானம். நிற்க

    இதுவரை நான் எந்தவொரு அர்ஸ் மேக்னா விமர்சனத்தையும் படிக்காமல் தவிர்த்து வந்தேன், எதிர்பார்பின்றி எதிர்கொள்வோம் என.

    வேதியியல்- chemistry பிறந்தது ரசவாதத்திலிருந்தே -alchemy, இன்று நாம் உபயோக படுத்தி வரும் வேதியியல் குறியீடுகளுக்கு முன்பாகவும் பல்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குறியீடுகள் அனைத்தும் பல நேரங்களில் தங்கள் கண்டுபிடிப்புகள் பிறருக்கு தெரிந்திட கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.
    தங்கள் வாழ்க்கை முழுவதும் இத்தகைய ஆராய்ச்சிகளில் செலவிட அவர்களுக்கு பணம் தேவைப்பட்ட போதிலே, அரசர்களின் தேவையும் வந்தது.
    எல்லா அரசுகளுக்கும் எல்லா காலங்களிலும் தேவையாக இருந்தது ஆயுதங்கள், தங்கம். எல்லா அரசர்களுக்கும் எல்லா காலங்களிலும் தேவையாக இருந்தது மரணத்தை வென்ற பெருவாழ்வு.
    இதனை புரிந்து கொண்டவர்கள் ரசவாதிகள்.
    அவர்களின் இந்த பேராசையை உபயோகப்படுத்தி தங்கள் பரிசோதனைகளை முன்னெடுத்து சென்றனர் பலர்.
    நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் படித்தறிந்த எண்ணற்ற அஸ்திரங்களும் அவையே...
    மோகன அஸ்திரம் முதல் சக்தி அஸ்திரம் வரை அத்துனையும் விஞ்ஞானம் எனக் கொண்டால், ஏன் அரச குமாரர்கள் வீடு துறந்து காடு புகுந்து அவர்களிடம் கற்று அதற்கென மந்திரங்கள் -chemical equations - புரிந்து, என நம்மிடையே இருந்ததை தொலைத்து விட்டிருகிறோம்.
    இந்த கதையில் வருவதை போல், லூயிஸ் XIV போன்ற பலர் தங்களுக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என அழிக்க எண்ணி சிதைத்தவை எண்ணிலடங்க செல்வங்கள்.
    நம்மிடையே களப்பிரர் காலம் என கூறப்படும் காலம் தோன்றியது அதன் பொருட்டே...
    வாழ்வோ சாவோ, வெற்றியோ தோல்வியோ, அதன் வார்ப்பும் வடிவும் அவசியம். "வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே" என்பது நகைச்சுவை மட்டுமல்ல...
    நாமுமே இழந்து நிர்க்கின்றோம் சில நூற்றாண்டு வரலாற்றை...
    (ஒரு இடைச்சொறுகல்) ஆசிரியர் சிங்கத்தின் சிறுவயது_வலை புத்தகமாக கொண்டுவர வேண்டும், நம்முடைய சிறிய காமிக்ஸ் வட்டத்தின் வரலாறு அது.

    அர்ஸ் மேக்னா--- தொடரும்

    ReplyDelete
    Replies
    1. நவநீதன் அட்டகாசமான ARS மேக்னா விமர்சனம். எங்க இருந்து எங்க போய் லிங்க் பண்ணி இருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்கள்....

      Delete
    2. ////ஆசிரியர் சிங்கத்தின் சிறுவயது_வலை புத்தகமாக கொண்டுவர வேண்டும், நம்முடைய சிறிய காமிக்ஸ் வட்டத்தின் வரலாறு அது./////

      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!
      இது பேச்சு!

      Delete
  23. // Now we pay most of out concentration on story.... // Absolutely true

    ReplyDelete
  24. என்னோட ஆல்டைம் ஃபேவரீட்னா...



    மின்னும் மரணம்(அரிசோனா லவ் நீங்கலாக) & கார்சனின் கடந்த காலம் (கருப்பு வெள்ளை)

    தங்கக் கல்லறை & வல்லவர்கள் வீழ்வதில்லை.

    மற்றபடி.. எப்போதும் நெஞ்சுக்கு நெருக்கமாய் இருப்பது கார்ட்டூன்களே.!

    ReplyDelete
  25. மலைக்கோட்டை மர்மம் !

    ReplyDelete
  26. அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. ஆல் டைம் பேவரைட்..னா

    அது.

    தங்கக் கல்லறை.

    மின்னும் மரணம்

    கார்சனின் கடந்தகாலம்.

    ReplyDelete
  28. அர்ஸ் மேக்னா...
    Treasure Hunt - புதையல் வேட்டை...
    இந்த விளையாட்டு சிறுவயது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. சிறு சிறு துப்புகள் கொடுத்து, ஒன்று மற்றொன்றை நோக்கி இட்டுச்செல்லும். இறுதியாக சிறு பரிசொன்று கிடைக்கும். இந்த மாதிரி விளையாட்டுகளில் பரிசை விட, யார் புதிர்களை வேகமாக விடுவித்து செல்கிறார்கள் என்பதே பெருமை தரக்கூடிய ஒன்று. It's not the destination but the journey....
    இந்த புத்தகத்தை ஒரு முறை முழுமையாக ஓரே வாசிப்பில் படித்து, நிதானமாக பிறகு அசைபோடுவதாய் மற்றொமுறை படித்து பார்த்தேன்...
    கிட்டத்தட்ட ஆடுபுலி ஆட்டம்,சதுரங்கத்திற்க்கு இணையான கதையோட்டம்.
    வரலாற்றின் சில உண்மை நிகழ்வுகளோடு கற்பனையாக பல சம்பவங்கள் சேர்த்து நம்பத்தகுந்த ஒரு கதையை தந்துள்ளார்.

    Crusade wars - சிலுவை போர்கள் தொடங்கி, நிக்கோலஸ் ஃப்லம்மேல், ஓப்பென்ஹெய்மேர்- மன்ஹாட்டன் திட்டம் வரை உண்மைகளை அருமையாக, இடைச்சொறுகலாக பயன்படுத்தி இருக்கும் விதம் மிக சிறப்பு.
    பிலிப், சோஃபி, பெயர்கள் கூட மிக பொறுத்தம். சோஃபி எனில் அறிவு எனும் பொருள், பிலிப் எனில் விருப்பம்...
    இருவரும் சேர்ந்து இந்தக்கதையினில் அறிவை விரும்பி தேடி அடைகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. // இருவரும் சேர்ந்து இந்தக்கதையினில் அறிவை விரும்பி தேடி அடைகின்றனர் // அடடே பெயர்களுக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டா செம்ம செம்ம.

      Delete
    2. செம விமர்சனம நவநீதன். கலக்கல்.

      Delete
    3. விமர்சனம் நன்று நவநீ.

      Delete
    4. அருமை நவநீதன் சார்!

      Delete
  29. Dear Editor
    My favorites
    1.Karsonin kadantha kalam
    2.Thanga kallarai
    3.Rathapadalam
    4.Spider -Ratchasa kullan,Neethi kavalan
    5.Green Manor
    6.Largo -opening story and NBS story
    7.Obelix and Asterix-many titles
    8.Graphic novel about American history published in 2019 lion comics
    Regards
    Arvind

    ReplyDelete
  30. // இந்த நாளில் உங்களின் ALLTIME Favorite Comics பற்றிச் சொல்லுங்களேன் //
    அது இருக்கு சார் நிறைய,சொல்லநேரம்தான் வேணும்...

    ReplyDelete
  31. ஆல் டைம் பேவோரைட் காமிக்ஸ்: characters
    முகமூடி வீரர் மாயாவி;
    லக்கி லூக்;
    ஃப்ளாஷ் கார்டன்;
    டெக்ஸ் வில்லர்;
    மாடஸ்டி.... 😍
    புக்ஸ் :
    கால்வின் அண்ட் ஹோப்ஸ்;
    ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஓபெலிக்ஷ்;
    நருட்டோ;
    ராணி காமிக்ஸ்;
    அப்புறம்....
    அப்புறம்....
    அப்புறம்....
    லயன் முத்து சன்ஷைன் ஜம்போ காமிக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. கால்வின் அண்ட் ஹோப்ஸ் - One of my favorite too, It will take us back to childhood.

      Delete
  32. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  33. All Time favorite.. நம்ம பெயரறியா பேரரசு XIII முதலிடத்திலும், மின்னும் மரணம் இரண்டாமிடத்திலும், தங்கக் கல்லறை மூன்றாமிடத்திலும் உள்ளது. அப்புறம் டெக்ஸ் குண்டு புக் எல்லாமே ஆல் டைம் ஃபேவரிட் தான்.

    ReplyDelete
  34. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    1. Acacia - Mimosa nilotica/Acacia vera
    எனும் குறிப்பிட்ட வகை தாவார வகையினை குறிக்கும்.ப்ரீ மாசென்ஸ் அமைப்பினர் இறந்ததும் இந்த வகை தாவாராத்தின் ஒரு கிளையை எறியூட்டுவர் அல்லது புதைப்பர். இது மரணமில்லா ஆன்மாவினை குறிக்கும்.

    அகாசியா genus இல் கிட்டதட்ட 800 வகை தாவரங்கள் இருந்தாலும், இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது நமக்கு மிகவும் பரிச்சயமான-கருவேல மரம். (பல்லுக்கு உறுதி) சீமை கருவேல மரம் (Prosopis juliflora) நமக்கு செய்யும் தீமைகளால் அதை வெட்ட எண்ணி, கருவேல மரங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. பின்னி பெடல் எடுத்துட்டீங்க நவநீதன்.

      நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க.. அருமை!

      Delete
    2. அடேங்கப்பா விமர்சனம் நவநீதன் அவர்களே...

      பாராட்டுகள்..

      Delete
  35. எனக்கு ஃபேவரைட் காமிக்ஸ் லயனின் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் & இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில்

    ReplyDelete
  36. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    2. கிங் சால்மன் பில்லர்ஸ் - Boaz and Jachin
    பைபிள் கூற்றுப்படி இந்த தூண்கள் இரண்டும் உலகத்தையும் சொர்கத்தையும் இணைக்கும் பாலத்தை குறிக்கின்றது.
    ப்ரீ மசென்ஸ் அமைப்பினர் இந்த தூண்களை வலிமைக்கும் - Boaz,நிலைத்து ஸ்தபிக்கப்பட்ட- Jachin அமைப்பிற்க்கும் குறியீட்டு பயன்படுத்திக் கொண்டனர்

    ReplyDelete
  37. இந்த நன்னாளில் நம்முடைய ஃபேவரீட் ஹீரோக்களையும் வரிசைப்படுத்திடலாமே..

    1.லக்கி லூக் & வுட்சிடி போலிஸ் (கிட்டத்தட்ட அனைத்து கார்ட்டூன் ஹீரோஸ்)

    2.கிட்கார்சன் மற்றும் டெக்ஸ்வில்லர் & கேப்டன் டைகர் & ரிப்போர்ட்டர் ஜானி & ட்யூராங்கோ

    3. XIII@ ஜேசன் மக்லேன் & வேய்ன் ஷெல்டன் & லார்கோ வின்ச் & தோர்கல் ஏஜிர்சன்

    மற்றும்..

    The one and only

    Our beloved Editor..

    Mr.ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்

    (எந்தக் கதையில வந்திருக்காருன்னு கேட்கப்படாது.. ரெண்டு கதைகள்ல ஹீரோவா வந்து சாகசம் செஞ்சிருக்கார்.!) :-))

    ReplyDelete
  38. எனக்கு பிடித்த புத்தகங்கள்:
    இத்தலைப்பை எடுத்தாலே பழைய (இனிய) நினைவுகளை அசைபோடத் தூண்டுகிறது...
    ஏனெனில் 2013 ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று சேலத்தில் நடந்த உலக புத்தக தின விழா சார்ந்து "என்னை செதுக்கிய நூல்கள்" எனும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது,
    இந்த வாய்ப்பு கிடைத்த நிகழ்வு சுவராஸ்யமானது...
    எனது ஊரைச் சேர்ந்த நூலகத்தில் அந்த நாட்களில் அதிகநேரத்தை செலவிட்டு வந்த நாட்களவை,இலக்கு தெரியாத பயணத்தை ஆற்றுப்படுத்திய நாட்களது...
    கட்டுரைப் போட்டியின் முதல் நாளதுவரை எவரும் பங்கெடுக்க வராதநிலையில் ஆள்கணக்கு காட்ட நூலகத்தில் சார்பில் நீங்கள் வந்து சும்மா எழுதிட்டுப் போங்க,இல்லையெனில் எனக்கு சங்கடம் என்று நூலகர் வேண்ட,சரி போய் சும்மா எதையாவது எழுதி வைப்போம் என்று அடுத்த நாள் போட்டிக்கு போக முடிவெடுத்தேன்...
    எந்த பயிற்சியும் எடுக்க நேரமில்லை,எடுக்கவும் தோணவில்லை...
    கட்டுரைப் போட்டி கிட்டத்தட்ட 02.00 மணிநேரம் நடந்ததாக நினைவு,எழுத உட்கார்ந்ததுதான் தெரியும்,பிரவாகம் எடுத்த நினைவுகளை கொட்டித் தீர்த்துவிட்டேன்...
    அம்புலிமாமா,பூந்தளிர்,பாலமித்ரா,இரத்னபாலா,க்ரைம் நாவல்,குமுதம்,விகடன் வழியே பயணித்து ஓஷோவின் தத்துவங்களில் ஊறி,ஆங்காங்கே கொஞ்சம் இலக்கியங்களைத் தொட்டு இறுதியாக நம் காமிக்ஸில் முத்திரை பதித்து முடித்தேன்...
    நமது காமிக்ஸ்கள் உணர்வு ரீதியாக என்னை எந்த அளவு ஆக்ரமித்தது,அதன்வழி கிடைத்த நட்புகள் என கட்டுரை இனிதே நிறைவுற்றது...
    பரிசு கிடைத்தாலும் சரி,இல்லை என்றாலும் சரி,நாம் சொல்ல வந்ததை நிறைவாய் சொல்லி விட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்...
    கிட்டத்தட்ட 12 பக்கங்கள் எழுதியாக நினைவு...
    அடுத்த வாரம் போட்டி முடிவு வெளியானது பார்த்தால் சேலம் வட்ட அளவில் முதல் பரிசு (₹.1,000/-) & பாராட்டுச் சான்று...
    அட சொக்கா என்னால் நம்பவே முடியலை,எனது ஊர் நூலகருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சிங்கோ...
    வாயெல்லாம் பல்லாக அவர் இருந்த அதேவேளையில் பெருமையோட பெருமையா அந்த ஆயிரம் ஓவாவை அப்படியே நம்ம நூலகத்துக்கு நன்கொடையா கொடுத்துடுங்க வேண்டுகோள் விடுக்க,அதையும் செய்தாயிற்று...
    பரிசளிப்பு விழா எடப்பாடியில் நடந்தது,பரிசளித்த நபர் தற்போதைய முதல்வரும் அப்போதைய அமைச்சருமான திரு.எடப்பாடி அவர்கள்...

    பரிசு பெற்ற அடுத்த 12 நாட்களில் எனக்கு அரசுப்பணி கிடைத்தது தனிக்கதை...

    ஆசிரியர் சொன்ன தலைப்பு இந்த நினைவுகளை தூண்டி விட்டது...

    அடுத்து முடிந்தால் எனக்குப் பிடித்த காமிக்ஸ் இதழ்களைப் பற்றி பதிவிடுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ///பரிசளிப்பு விழா எடப்பாடியில் நடந்தது,பரிசளித்த நபர் தற்போதைய முதல்வரும் அப்போதைய அமைச்சருமான திரு.எடப்பாடி அவர்கள்...///

      வாவ்.. சூப்பர் ரவி.!
      வாழ்த்துகள் வாழ்த்துகள்..!

      அதுவும் பரிசுப்பணத்தை நூலகத்திற்கு நன்கொடையாக கொடுப்பதற்கு வாசிப்பின் மேல் காதல் இருக்கும் நபர்களால் மட்டுமே முடியும்.. மீண்டும் வாழ்த்துகள்..!

      (ஒரு ஐயாயிரமோ பத்தாயிரமோ செலவு பண்ணி நண்பர்களுக்கு ட்ரீட் வெச்சிடுங்க.)

      Delete
    2. அட டே!!!

      செம்ம..
      செம்ம..

      வாழ்த்துகள் ரவி💐💐💐💐💐

      (அந்த ட்ரீட் என்னிக்கினு தெரிஞ்சா பெர்மிஷன் போட வசிதி!)

      Delete
    3. சூப்பர் நினைவுகள் அறிவரசு. மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அருமை. வாழ்த்துக்கள்.

      Delete
    4. // அந்த ட்ரீட் என்னிக்கினு தெரிஞ்சா பெர்மிஷன் போட வசிதி! //
      சொல்லிடுவோம்,சொல்லிடுவோம்...

      Delete
    5. // ஒரு ஐயாயிரமோ பத்தாயிரமோ செலவு பண்ணி நண்பர்களுக்கு ட்ரீட் வெச்சிடுங்க. //
      வெச்சிடுவோம்,வெச்சிடுவோம்...

      Delete
    6. பொக்கிஷம் போன்ற நினைவுகள் அருமை அண்ணா.... நீங்கள் இந்த விசயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மகிழ்ச்சி

      Delete
    7. பரிசாக கிடைத்த பணத்தை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியது மிகவும் தரமான சம்பவம். வாழ்த்துக்கள்.

      Delete
    8. அடேங்கப்பா செம அறிவரசு ரவி அவர்களே..

      Delete
    9. நினைவுகளை அசைபோடுவதுதான் எத்துனை ரம்மியமாக இருக்கிறது! வாழ்த்துகள் சார்!

      நான் ரம்மியை சொல்லலைங்கோ...

      Delete
    10. நன்றி நட்பூஸ்...

      Delete
    11. // நினைவுகளை அசைபோடுவதுதான் எத்துனை ரம்மியமாக இருக்கிறது! //
      உண்மைதான் நண்பரே...
      கடந்தகாலங்களில் இனிய நிகழ்வுகளை மட்டுமே நம் மனம் எடுத்துக் கொள்ள விரும்புகிறது...
      மற்ற நினைவுகளை நாம் அனுபவங்களாக எடுத்துக் கொள்வதே நலம்...

      Delete
  39. உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  40. எனது ஆல் டைம் favorites..
    1. லார்கோ
    2. முகமுடி வீரர் மாயாவி
    3. மாண்ட்ரக்
    4. கேப்டன் பிரின்ஸ்
    5. ஜானி (ரிப்போர்ட்டர் )
    6 டெக்ஸ்
    7. கேப்டன் tiger
    8 ஸ்பைடர்
    9. சுஸ்கி விஸ்கி
    10 டுரங்கோ

    சார், புத்தக விழாவில் மார்ச் புத்தகங்கள் எப்போ கிடைக்கும்?

    ReplyDelete
  41. என்னோட நெஞ்சிலே என்றும் நிழலாடும் காமிக்ஸ்கள்.....

    #1989-90ல முதல் முதலில் 9ப்புல படித்த ப்ளாஷ் கார்டன்(ராணி காமிக்ஸ்)

    #அடுத்த சில ஆண்டுகளில் படித்த, தவறு சுவாசித்த 007கதைகள் (ராணி காமிக்ஸ்)

    #1990களின் ஆரம்ப வருடங்களில் ஓருநாளில் படித்த, "வக்கீல் கொலை"- என்ற கெளபாய் கதை- (ராணி காமிக்ஸ்). கதை சின்னதுனாலும் அது என்னை மெய் மறக்க செய்தது. அன்று முதல் கெளபாய் கதைகளின் ரசிகனாக என்னை மாற்றியதும் இந்த கதையே!

    #அடுத்த ஓரிரு ஆண்டுகளில் "பழிவாங்கும் புயல்"-ல் தொடங்கி படித்த டெக்ஸ் கதைகள்- முழு நேர கெளபாய் ரசிகனாகவே மாற்றின!

    #இந்த சமயத்தில் 1995வாக்கில் வெளியான "தங்க கல்லறை"--- மாஸ்டர் பீஸ் ஆஃப் கெளபாய் ஜானர்! (சத்தியமாக டெக்ஸ் கதைகளை அதற்கு முன்பு படிக்கலனா நானும் இன்று டைகர் ரசிகனே)

    #1997ல வந்த "கார்சனின் கடந்த காலம்"- கெளபாய் கதைகளை புதிய உச்சத்திற்கு இட்டுச் சென்றது!

    #இந்த காலகட்டத்தில் பாகம் பாகமாக வெளியான இரத்தப்படலம்! ஜேசன் தன் கடந்தகாலத்தை தேட, நானோ ஜேசனின் முன் கதைகளை தேடினேன்!

    #ஆர்ச்சியின் உலகப்போரில் ஆர்ச்சி, ஸ்பைடரின் கடத்தல் குமிழிகள் & சுஸ்கி விஸ்கியின் பேரிக்காய் போராட்டம்& லக்கியின் பூம்..பூம்..படலம்! ஹாலவுட்டில் ஜாலி,
    உட்சிடி கோமாளீஸ் நிறைய கதைகள், லயனின் மொத கி.நா. :-இரத்த பூமி!...என நிறைய ஒற்றை கதைகள் இந்த காலகட்டத்தில் நம்ம பேவரைட்ல சேர்ந்தன!

    இவை அனைத்தும் கம்பேக்கிற்கு முன்பே....

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு இதழையும் அசைபோட்டு அது தந்த உணர்வுகளை எழுதுங்கள் நண்பரே! ஆர்வமாக இருக்கிறேன்... உங்கள் எழுத்துக்களைக் காண....

      Delete
  42. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


    MY ALLTIME Favorite Comics

    புரட்சி தீ - லக்கி லூக்
    சதுரங்க வெறியன் - ஸ்பைடர்
    ஆர்ச்சியின் உலகப்போரில் ஆர்ச்சி
    தலை கேட்ட தங்க புதையல் - லாரன்ஸ் & டேவிட்
    கழுகு வேட்டை - மாடஸ்தி & கார்வின்
    பந்தம் தேடிய பயணம்/நள்ளிரவு வேட்டை - டெக்ஸ் & கார்ஸன்
    தங்கக் கல்லறை - டைகர்
    தோர்கல்
    XIII - முதல் 9 பாகங்கள்

    ReplyDelete
  43. ALLTIME Favorites
    - நடுக்கடலில் எலிகள் (மினி லயன் - டொனால்ட் டக்)
    - பனிப்பூதம் (ஆர்ச்சி), தவளை எதிரி (ஸ்பைடர்)
    - பழி வாங்கும் புயல் (டெக்ஸ்)
    - ஒரு வீரனின் கதை (முத்து)
    - தங்கக் கல்லறை
    - பூம் பூம் படலம்
    - வாண்டுமாமாவின் நந்து சுந்து மந்து, பலே பாலு, வீர விஜயன், பூதத்தீவு
    - தேங்கு, வாலின் மீலின் கதைகள் (பிக்கிக்கா இதழ்)

    Can enjoy those any part of my life :-)

    ReplyDelete
  44. இதோ என்னுடைய பேவரைட் ஹீரோக்களின் வரிசை:

    1. டைகர்
    2. லக்கி லூக்
    3. தோர்கல்
    4. டெக்ஸ்
    5. உட்சிட்டி கோமாளிகள்
    6. 13
    7. லார்கோ
    8. பௌன்சர்.

    ReplyDelete
    Replies
    1. அருமை!

      இது தொடர் நாயகர்கள் வரிசை... கார்ட்டூன், தனித்தனி கிராபிக் நாவல்கள் தவிர்த்து...

      1.டைகர்
      2.தோர்கல்
      3.XIII
      4.லார்கோ
      5.டெக்ஸ்
      6.பௌன்சர் & அண்டர்டேக்கர்
      7.டியூராங்கோ
      8.ஜெரெமயா
      9.ரிப்போர்ட்டர் ஜானி
      10.ஷெல்டன்


      கார்ட்டூன்களை பொறுத்தவரை எல்லாமே நெஞ்சுக்கு நெருக்கமாகத் தான் (நன்றி KOK)

      1.லக்கிலூக்
      2.சிக்பில் குழுவினர்
      3.புளூகோட்ஸ்
      4.ஸ்மர்ப்ஸ்
      5.மந்திரியார் & ஹெர்லாக் ஷோம்ஸ்

      Delete
  45. All time fav..
    "அழகியை தேடி"

    ReplyDelete
    Replies
    1. ஏழாம் வகுப்பு படிக்கும் போது அதை ஒளிச்சு வச்சி படிச்ச திரில்.. :-)

      Delete
    2. அது ஒரு த்ரில் :)

      Delete
    3. பிஞ்சிலயே பழுத்துட்டீங்க இருவரும்... ம்...!!

      நமக்கு 10ப்புலதான் மிஸ் ஜூலியின் தரிசனம் கிடைத்தது!💞💞💞

      Delete
    4. எனக்குமே கூட மறக்க முடியாத இதழ் அது. ராணி காமிக்ஸ் #1 . நான் 5ஆம் வகுப்பு படிக்கும் போது 1985 -86 இறுதி வேலை நாளன்று கதை புத்தகம் வீட்டில் இருந்து கொண்டு வரச்சொல்லி முன்தினம் சொல்லி இருந்தார் கள். அப்படி கொண்டு வந்த ஒரு பையன் தான் அன்று Central attraction. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு!!!

      Delete
    5. பின்பு பழைய புத்தகக்கடையில் கிடைத்தது. ஆசிரியர் திரு. ராமஜெயம் தமிழில் காமிக்ஸே இல்லை நாங்கள் தான் முதலில்.. என்பது போல் அள்ளி விட்டிருந்தார்.

      Delete
  46. மினும் மரனம் - எல்லாருடய favorite

    ReplyDelete
  47. ##All time favourite comics###

    பயங்கர பொடியன் ,
    சூப்பர் சர்க்கஸ்
    கொலைகார காதலி ,
    விண்வெளியில் ஒரு எலி,
    காசில்லா கோடிஸ்வரன்
    இ.கை மாயாவி , ஸ்பைடர் & ஆர்ச்சி அனைத்து கதைகளும்,
    ரிப் கிர்பி
    ராணி காமிக்ஸ் ல் வந்த டைகர் & ஹென்றி
    கறுப்பு கிழவி கதைகள்
    திகில் - சிரிக்கும் மரணம்
    & சாவதற்கு நேரமில்லை
    சிறுவர் மலரில் வந்த- உயிரை தேடி
    மிண்ணும் மரணம்
    வாராதோ ஒரு விடியலே -டைலன் டாக்
    இரத்த படலம்
    பழிவாங்கும் புயல்
    கார்சனின் கடந்த காலம்
    திகில் லைப்ரரியில் வந்த பெர்ரி மேசன் கதை
    ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. காசில்லா கோடீஸ்வரன்... வித்தியாசமான தேர்வு சிவா! சூப்பர்!

      Delete
  48. என்னுடைய ALL TIME Favorite Comics

    1.கேப்டன் டைகர் காமிக்ஸ்.

    மற்ற அனைத்து லயன் முத்துகாமிக்ஸ் புக்குகளும் (நம் ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து காமிக்ஸ் புக்குகளும் எனக்கு Favorite Comics தான்).

    ReplyDelete
  49. Replies
    1. அப்ப இஸ்பைடருல 😉

      Delete
    2. ஆர்ச்சி, ஸ்பைடருனு பழகியதுலாம் என்னாச்சு க்ளா???

      Delete
  50. பிடித்த காமிக்ஸ். . யெஸ் லயன் காமிக்ஸ். ... அப்படியும் ஒன்னு சொல்லனும்னா1. துப்பறியும் சாம்பு. 2.வேங்கை வேட்டை. ரிப்கிர்பி 3.சூப்பர் சர்க்கஸ். லக்கி 4.குள்ள நரிகளின் இரவு முதலைப்பட்டாளம் 5.மரணத்தை முறியடிப்போம் இளவரசி 6. ஒரு ஒப்பந்தத்தின் கதை ஷெல்டன் 7.ஆதலினால் அதகளம் செய்வீர்லார்கோகரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  51. ஹீரோஸ் 1.டெக்ஸ் 2லக்கி.3.இளவரசி4.லார்கோ.5ஷெல்டன் 6.கிர்பி.7.டைகர்.8கிர்பி.9.இரும்புக்கை மாயாவி 10.சார்லி.

    ReplyDelete
  52. எனது விருப்ப இதழ்

    இரத்தப்படலம் திகில் முதல் இதழ்
    இரத்தப்படலம் ஜம்போ
    இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பு
    இரத்தப்படலம் மறுமறுபதிப்பு விரைவில்...

    XIII ஸ்பின் ஆப்...


    இதற்கு பிறகு

    தங்கக்கல்லறை
    கார்சனின் கடந்த காலம்
    மின்னும் மரணம்...

    ReplyDelete
  53. Parcel வந்தாச்சு.. ஆனா சார்(நான்தான்) வெளியே இருக்கிறதால நைட்டு இல்லைன்னா நாளைக்குதான் பார்சலை கையால் தொடமுடியும்.. சோ சேடு.!

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் இன்னும் வரவில்லை என்பதை இப்படி கூட சுற்றி வளைத்து சொல்லலாம் கண்ணா :-)

      Delete
    2. எனக்கு புத்தகங்கள் வந்து விட்டது ஆனால் நான் தற்போது தூத்துக்குடியில் உள்ளேன். திங்கள்கிழமை தான் புத்தகங்களை பார்க்க படிக்க முடியும்.

      Delete
    3. 7010898635 .. எங்கூரு எஸ் டீ கூரியர் ஆபீஸ் நம்பர்.! நம்மாளுதான் தைரியமா போனைப் போட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க பரணி 😂😂.!

      வீட்டுலயே குந்திகினு மோட்டுவளைய வெறிச்சி பாத்துகினுகிற மாசங்களில் எல்லாம் ரெண்டுநாள் கழிச்சிதான் புத்தகபார்சல் வரும்..!
      இந்தமாசம் வீடே தங்காம சுத்திக்கிட்டு இருக்கேன்.. இப்போ பாருங்க டான்னு காலைல 9 மணிக்கெல்லாம் .. பார்சல் வந்துகிது வாப்பா ஏய்.. னு நம்மாளு போன் பண்றாப்ல. 😂😂.!

      Delete
    4. அந்த நம்பரில் கூப்பிட்டு பேசினேன்..‌ உங்கள் குருநாயர் குரலை மாற்றி நல்லாவே பேசினார். என்ன அவர் மறந்து போய் வீடியோ காலில் குரல் மாற்றி பேசி தொப்பையோடு நான் அவனில்லை என மாட்டிக்கொண்டார் :+)


      // இந்தமாசம் வீடே தங்காம சுத்திக்கிட்டு இருக்கேன். //

      சூப்பர். மகிழ்ச்சி.

      Delete
    5. 😂😂😂😂😂

      எம்புட்டு வெள்ளந்தியா இருக்காரு பாருக..!

      ஆனா உங்களையும் சும்மா சொல்லக்கூடா Nokia 1100 வுக்கே வீடியோ கால் பண்ணி பேசியிருக்கீங்களே..! :-)

      Delete
    6. எவரெடி பேட்டரி போட்டு வீடியோகால் செய்யலாம் கண்ணா :-) ஐயோ பாவம் இந்த ரகசியம் கண்ணுக்கு தெரியாது போல :-)

      Delete
  54. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    3.நட்சத்திரம்: கதையின் படி முதல் துப்பாக இறுதி துப்பு என இரண்டு இடங்களிலும் வருவது நட்சத்திரம்.
    முதலாவதாக வருவது 12 முனை இறுதியாகப் வருவது 16 முனை கொண்ட நட்சத்திரம்.
    ஃப்ரீ மசோன்ஸ் அமைப்பினர் 12 அல்லது 16 முனை நட்சத்திர அமைப்புகளை அதிகம் பயன்படுத்தியது இல்லை.
    ஆனால், 12 என்பது மிகவும் மதிக்கப்படும் ஒரு என். நம்முடைய யந்திரம், 12 முனை நட்சத்திரம், 12 ராசியை குறிக்கும். கிரேக்கர்கள், 12 ஒலிம்பிய கடவுளர்களை குறித்தும், கிறிஸ்துவர்கள் 12 சீடர்களை குறிப்பிட்டு உள்ளார்.
    பொதுவாக நட்சத்திரம், இருள் நீங்கி ஒளி வரும் என்ற நம்பிக்கையை விதைக்க அனைத்து பேகன்- pagan கலாச்சார நம்பிக்கைகளில் உள்ளது.
    அவ்வாறு கொண்டால், இந்த புதிரை விடுவிக்க முதல் ஒளி கற்றை வீசப்பட்டது என கொள்ளலாம்

    ReplyDelete
  55. எனக்குப் பிடித்த காமிக்ஸ் இதழ்கள்:
    1.ரிப்போர்ட்டர் ஜானி.
    காரணம்-வாசிப்பில் சவாலைக் கொடுப்பவை,
    2.மர்ம மனிதன் மார்ட்டின்.
    காரணம்-வாசிப்பில் சவாலை கொடுக்கும் அதே நேரத்தில்,புதிரான களங்களில் அடித்து விளையாடுவது.
    3.தல டெக்ஸ்வில்லர்.
    காரணம்-தன்னம்பிக்கையும்,தைரியமும் கொடுக்கும் களம்,கதையில் வில்லர் வகுக்கும் வியூகங்கள் வியக்க வைப்பவை.
    மிகக் கவர்ந்த இதழ்கள் சில-
    பழி வாங்கும் புயல்,பழி வாங்கும் பாவை,கழுகு வேட்டை,மரண முள்,கார்சனின் கடந்த காலம்,சிகப்பாய் ஒரு சொப்பனம்,வல்லவர்கள் வீழ்வதில்லை,எமனின் வாசலில்,சர்வமும் நானே,சட்டதிற்கொரு சவக்குழி,டெக்ஸ் டைனமைட் ஸ்பெசல்,ஒரு ரெளத்திர ரேஞ்சர்,பந்தம் தேடிய பயணம்,சிங்கத்தின் சிறு வயதில்,எதிரிகள் ஓராயிரம்,பனிவனப் படலம்,காற்றுக்கு ஏது வேலி...
    4.தளபதி டைகர்.
    காரணம்-இறுதிவரை போராடி எடுத்தக் காரியத்தை முடிக்கும் குணம்,எதிர் முகாமில் என்ன யோசிப்பார்கள் என்பதை யோசித்து உத்தியை வகுப்பது...
    மிகக் கவர்ந்த சில இதழ்கள்-
    மின்னும் மரணம்,தங்கக் கல்லறை,இரத்தக் கோட்டை...
    5.ட்யூராங்கோ.
    காரணம்-எதிலும் பிடிபடாத,வரையறுக்க முடியாத குணம்...
    6.லக்கி லூக்.
    காரணம் சொல்ல வேண்டுமா என்ன,அழுத்தமான தருணங்களில் எம்மை ஆற்றுபடுத்தியவை...
    7.சிக்பில் & கோ.
    காரணம் சொல்ல வேண்டுமா என்ன,அழுத்தமான தருணங்களில் எம்மை ஆற்றுபடுத்தியவை...
    8.ஸ்மர்ப்ஸ்.
    காரணம் அது ஒரு தனி உலகம்,இந்த கான்செப்டில் அடர்த்தியான நிறைய செய்திகளை சாமார்த்தியமாக நுழைத்திருப்பது கூடுதல் சிறப்பு...
    9.ஷெல்டன்,லார்கோ.
    காரணம்-வாசிப்பவர்களுக்கு ஒரு மனவுறுதி கிடைக்கும்...
    10.கிராபிக் நாவல்களில் பெரும்பாலனவை.
    காரணம் கதைக்களத்தின் அடர்த்தி,புதுவிதமான கோணங்களில் கதை சொல்லும் உத்தி,மூளையை கசக்கி யோசிக்கத் தூண்டுவது,எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான களங்கள்...

    பொதுவாக இதெல்லாம் நமக்கு பிடித்த தொடர்கள்...

    இதைத் தவிர்த்து பராகுடா,ஜேஸன் பிரைஸ்,அர்ஸ் மேக்னான்னு சர்ப்ரைஸ் வெளியீடுகள் நம்மை அப்பப்ப மெர்சாலாக்குவது தனி டிராக்...

    ReplyDelete
  56. எனக்கும் புத்தகங்கள் வந்திருக்கும்,ஆனால் நான் சேலத்தில் உள்ளேன்...

    ReplyDelete
  57. புத்தகம் வாங்க நேரா சென்னைக்கே போறேன்.....

    ReplyDelete
  58. காமிக்சும் நானும்!

    சிறு வயதில் ஆறாம் வகுப்புக்கு முன்னதாக எந்த ஒரு புத்தகம் வாசிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை. மலைப்பகுதி பள்ளியொன்றில் பாடபுத்தகங்களைத் தவிர்த்து வேறு எதையும் பார்த்ததில்லை. வாரமோ மாதமோ ஒருமுறை பார்க்கும் கடையிலும் புத்தகங்களைக் கண்ட ஞாபகம் இல்லை.
    முதன் முதலாக நான் வாசித்த புத்தகம் அறை எண் 7 என்ற ராணி காமிக்ஸ் புத்தகம்தான். அது இன்னமும் பசுமரத்தாணி போன்று ஞாபகம் உள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக லயன், முத்துவின் அறிமுகம், அவையெல்லாம் அப்போது கிட்டாக் கனி! ஒரு புத்தகத்தை மூன்று நான்கு நண்பர்களுக்குள் பகிர்ந்துகொண்ட ஞாபகங்கள் பசுமையாக உள்ளது. அதில் ஒருவர் மட்டும் இப்போதும் நம்மிடையே இருக்கிறார், இதையும் அமைதியாய் இதை வாசித்துக் கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

    கோகுலம், வாண்டுமாமா, மாயாஜாலக் கதைகள் முதலியவற்றை ரசித்துக் கொண்டிருந்த எனக்கு லயன், முத்துவின் பரிச்சயமான முதல் இதழ் (இரும்புக்கையாரின் சாகசமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்) ஞாபகத்தில் இல்லை. ஆனால் அதன்மீது ஏற்பட்ட ஈர்ப்பு வித்தியாசமானது என்பது மட்டும் உண்மை. அதன் பின்னர் பழைய இதழ்களை நண்பர்களிடமும், பழைய புத்தகக் கடைகளிலும் தேடி படித்தது ஞாபகம் இருக்கிறது. இரும்புக்கையாரும், ஸ்பைடரும், ராணி காமிக்ஸ் மாயாவியாரும் எனது பால்ய வயதை பரவசமாக்கிய கதாநாயகர்கள்.
    தங்கக் கல்லறை இதழையும் அந்த நண்பரிடமிருந்துதான் வாங்கிப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். அதுவரை என்னிடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது டேனியல் டெஃபோவின் ராபின்சன் குரூசோ தான். கிட்டத்தட்ட தனித்தீவுக்கு போய் அதுமாதிரியே வாழ வேண்டும் என்று இலக்கு ஏற்படுத்திக் கொண்ட அளவுக்கு அது என்னை ஆட்கொண்டுருந்தது. அந்த எண்ணத்தை மறக்கச் செய்து முழுக் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது தங்கக் கல்லறையே! லக்னரின் (கஸ்டாப்) குயுக்தியும் டைகரின் இயல்பான ஆக்சனும் கதைக்குள் இழுத்துச் சென்றாலும்… இறுதி பாகத்தில் வரும் உண்மையான லக்னரின் சிரிப்பு முதுகுத்தண்டை சில்லிடச் செய்த உணர்வை இப்போதும் அனுபவிக்க முடிகிறது. முழுவதுமாக என்னை காமிக்ஸ் உலகத்துக்குள் இழுத்துச் சென்று சிறைவைத்துக் கொண்ட கருந்துளை தங்கக் கல்லறை இதழே!

    ReplyDelete
    Replies
    1. லயன் முத்துவின் இதழ்களை தொடர்ச்சியாக வாங்கத் தொடங்கிய காலகட்டம். கார்சனின் கடந்த காலம்! அதில் ஆசிரியர் ஒரு பாடலை மொழி பெயர்த்திருப்பார்…
      “தவிக்குதே நெஞ்சம் தனிமையில்…
      தடையாய் பாதையில் பாவி செவ்விந்தியர்கள்…
      தப்பியோடி காணத் துடிக்கிறேன்…
      அந்த அழகுப் பெண்ணை…
      நான் பிரிந்து வந்த என் காதல் தேவதையை…”
      அப்பப்பா அந்த வரிகளை மனப்பாடம் செய்து பாட்டாக பாடிக் காட்டியதையெல்லாம் நினைத்தால் இப்போதும் மனதில் பூப்பூக்கிறது. அந்த வயதுக்கே உரிய உணர்வுகளின் மத்தியில் ஒரு அட்டகாசமான கதை. அதை மறுபதிப்பில் ஆசிரியர் மாற்றிவிட்டது, அந்த இதழின் மீது ஒட்டுதலையே குறைத்துவிட்டது. பழைய இதழை தேடி சேகரித்த பின்னர்தான் அது மட்டுப்பட்டது.

      Delete
    2. மின்னும் மரணம்! மெகா ஸ்பெசல்!! இரண்டு நண்பர்கள் சேர்ந்து போய் அந்த இதழை வாங்கிய ஞாபகம்! போட்டி போட்டுக் கொண்டு படித்தது… எத்தனை முறை… கணக்கே இல்லை…. கிளைமாக்சில் விகோ சிரிக்கும் இடம்… அந்த முகம் வெகுநாட்கள் ஞாபகத்தில் இருந்தது. அந்த கதைவரிசையில் நான் கடைசியாக படித்த்து திசை திரும்பிய தோட்டா என நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக தொடர்ந்த காலங்கள் வாழ்க்கைப் போட்டியில் காமிக்ஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம். ஏதோ ஒரு புத்தகவிழாவில் லயன் அரங்கினைப் பார்த்து ஆச்சரியப்பட்டு… பின்னர் மீள்வருகை தெரிந்து இணைந்து கொண்டேன்.
      தொடர்ந்து மறுவருகைக்கு பிந்தைய இதழ்களை சிறுகச் சிறுக வாங்கி சேகரித்து விட்டேன். மின்னும் மரணத்தை அப்போதுதான் முழுவதுமாக படித்தேன். பதினொரு பாகங்கள், அந்த அசாத்திய படைப்பினை ஒரேமூச்சில் படித்து முடித்தேன். இதற்கு முன்னர் இப்படி ஒரேமூச்சில் படித்த கதை ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி, சமீபத்தில் வேள்பாரி!

      Delete

    3. இரத்தப்படலம்! ஆரம்பத்தில் முதலும் தெரியாமல் முடிவும் தெரியாமல் படித்தபோது அவ்வளவாக ஈர்க்கவில்லை, இதைப் படித்தால் தலை சுற்றும் என்று விலகியே போயிருக்கிறேன். மறுபதிப்பின்போது கூட பெரிய ஈடுபாடு இல்லாமல் முன்பதிவு செய்யவில்லை. நல்லவேளையாக அதன்பின்னர் வாங்கிவிட்டேன்… வான் ஹாமின் ஜாலத்தை உணர்த்திய இதழ் இது. 19 பாகங்களும் பொறுமையாக தேவையான இடங்களில் மீண்டும் திரும்பத் திரும்ப படித்து ரசித்த இதழ் இது. அதிக நாட்கள் செலவழித்து படித்து கதையோட்டத்தையும் ஜேசனின் மர்மத்தையும் புரிந்து கொண்ட (அதுதான் இன்னமும் தொடர்கிறதே!) நாட்கள் சில வருடங்களுக்கு முன்னர்தான்.
      பழைய நண்பர்கள் பால்யத்தை எண்ணி சிலாகிக்கும் போதெல்லாம் நாம் நிறைய தவறவிட்டு விட்டோமோ என்கிற எண்ணம் எழுவதுண்டு. முத்துவின் முதல் இதழிலிருந்து வாசகர்களாக இருக்கும் வரம் பெற்ற நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன். வணங்குகிறேன்!

      நன்றி நண்பர்களே!

      Delete
    4. "டேனியல் டெஃபோவின் ராபின்சன் குரூசோ தான். கிட்டத்தட்ட தனித்தீவுக்கு போய் அதுமாதிரியே வாழ வேண்டும்"
      எனக்குமே... என்ன, அப்போதைய என பள்ளி கனவு கண்மணியும் என்னுடனே சேர்ந்து இருந்தால் என்னும் எண்ண ஓட்டம் அப்போதெல்லாம் 😂😍

      Delete
    5. சிறப்பு நண்பரே...

      அருமையாக தொகுத்து உள்ளீர்கள் உங்களது அனுபவங்களை...

      டெக்ஸ் பற்றிய பார்ட் படிக்கும் போது பரவசம் அடைகிறது மனசு.

      நன்றிகள்& வாழ்த்துகள்!

      Delete

  59. |, மாடஸ்தி
    ஸ்மர்ப்ஸ்
    லார
    வேய்ன்
    டெக்ஸ்
    டைகர்
    லக்கி லூக்

    ReplyDelete
  60. இந்த மாதம் முதலில் படித்தது வழியனுப்ப வந்தவன்!!!! அட்டகாசமான மென் சோகம் இழையோடும் கதை. ரொம்பவே யதார்த்தமான வெஸ்டர்ன் கதை. அழகிய அகதி, ARS மேக்னா வரிசையில் இந்த மாதம் முதல் இடம் பிடிக்கும் கதை, நான் இன்னும் டிடெக்டிவ் ஸ்பெஷல் படிக்கவில்லை.

    எனது மதிப்பெண் 10/10

    ReplyDelete
    Replies
    1. அடடே! ஏர்லி பேர்ட்! அருமை!! எனக்கு இன்னும் புத்தகமே வரலை!?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நீங்கள் எழுதிய லோக்கல் லாங்குவேஜ் பெரிதாக இடரவில்லை சார். கதையின் போக்குக்கு தேவையான ஒன்றாக தான் இருந்தது. Stern is here to stay.

      Delete
    4. முதலில் கதையை படிக்க தூண்டியது அந்த ஒவியங்களே... சும்மா படம் பார்க்கலாம் என்று ஆரம்பித்து முதல் இரண்டு பக்கங்கள் பார்த்தேன் அப்படியே கட்டிப் போட்டு விட்டது. அற்புதம்....

      Delete
  61. எனக்கும் இன்று புத்தகம் வரவில்லை.

    காமிக்ஸ் தவிர்த்த இதர ஆல் டைம் ஃபேவரிட் லிஸ்ட். வாண்டுமாமா:
    வீரவிஜயன்.பவழத்தீவு,ஒநாய்க்கோட்டை,மூன்று மந்திரவாதிகள்,அம்புலிக்கு அப்பால்,சிலையைத்தேடி,
    பலே பாலு, வீராதிவீரன்.
    Etc..
    சாண்டில்யன் :
    கடல்புறா.யவனராணி,ராஜமுத்திரை,ஜலதீபம்,ராஜதிலகம்,ராஜபேரிகை,விஜய மகாதேவி.
    கல்கி :
    பொன்னியின் செல்வன்'அமரதாரா,சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு.
    ர.சு.நல்ல பெருமாள் :
    கல்லுக்குள் ஈரம், போராட்டங்கள்
    சுஜாதா:
    ஸ்ரீரங்கத்து தேவதைகள், விஞ்ஞானக் கதைகள்
    etc..
    பாலகுமாரன் :
    உடையார்,மெர்க்குரிப்பூக்கள்,கரையோர முதலைகள்..etc..
    ஜெயமோகன்:
    வெண்முரசு .
    ராகி.ர.:
    பட்டாம்பூச்சி,மறுபடியும் தேவகி
    etc..
    எண்டமூரி :
    தூக்கு தண்டனை, பணம், வாழ்வே வா சபலம், பிரளயம், நாலாவது தூண், சிவதாண்டவம், நிலாப்பெண். முற்றுப் பெறாத பயணம்.. Etc...
    லா.ச.ரா.:
    சிறுகதைத் தொகுதிகள் 1 முதல் 4 வரை, அபிதா, ஜனனி, கல்சிரிக்கிறது, பாற்கடல், சிந்தாநதி..etc.
    ஸ்ரீ வேணுகோபாலன் :
    திருவரங்கன் உலா, மதுரா விஜயம்.

    இன்னும் என் புத்தக அலமாரியில் உள்ள அனைத்தும்..




    ReplyDelete
    Replies
    1. ஜலதீபம்.... மஞ்சு 🥰

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எமிலி..காதரைன்..பானு தேவி..

      Delete
    4. Hmmmmm... இதய சந்திரன் போல அலை பாயும் மனது எனக்கில்லை 😂

      Delete
    5. கலக்கறிங்க 10 சார்....

      Delete
    6. நன்றி ரவி சார்.. வாசிப்பு என் வாழ்க்கைப் பாதையை விசாலமாக்கியது. 1975 முதல் இன்று வரை நான் எதிர் கொள்ளும் பிரச்னைகளை சிரித்த முகத்துடன் எளிதில் கடந்து செல்ல முடிகின்றது. எதிர்வரும் அனைத்தையும் தாண்டிய பயணத்திற்கு என்னை பண்படுத்தி, துணையாக வருகின்றது. கையில் கிடைக்கும் காகிதம் கசங்கி இருந்தாலும், அதையும் பிரித்து படித்து விட்டு தூக்கி வீசுங்கள். வாசிப்பு அறிவை வளர்க்கிறது. அனைத்தையும் தாங்கி நிற்கக்கூடிய மனோபலத்தை அளிக்கின்றது. வாசிப்பை நேசித்தால், அனைவரையும் நேசிக்கும் பக்குவம் தானாக வரும். Simply to say. Books are my friend, philosopher and guide.

      Delete
    7. // கையில் கிடைக்கும் காகிதம் கசங்கி இருந்தாலும், அதையும் பிரித்து படித்து விட்டு தூக்கி வீசுங்கள். //

      மளிகை கடை வைத்திருந்த மாமா அவர்களுக்கு டீ வாங்கிக் கொண்டு போய் கொடுத்த நினைவுகள் உள்ளது,அப்போதெல்லாம் டம்ளரில் டீ வாங்கி சென்றால் மூடி எடுத்துக் கொண்டு போக துண்டு பேப்பர்தான் வைத்து தருவார்கள்,அதை தூக்கி எறியாமல் படித்துக் கொண்டிருப்பேன்...
      மாமா அவர்கள் அதை வைத்து என்னை கிண்டல் செய்து கொண்டிருப்பார்,அவரது கடைக்கு எடைக்கு போடப்பட்ட குமுதம்,விகடன்,கல்கண்டு என பலதரப்பட்ட இதழ்கள் இருக்கும்,அதையெல்லாம் எடுத்து புரட்டிக் கொண்டே இருப்பின்...
      சோவியத் யூனியன் தமிழ் பதிப்புகள் அங்குதான் எனக்குக் கிடைத்தது,அதில் நாடோடிக் கதைகள் படித்த நினைவுண்டு,ஒரு பக்கம் திட்டுகளை வாங்கிக் கொண்டு இதை எல்லாம் படித்துக் கொண்டிருந்தது நினைவலைகளில் வந்து செல்கிறது...ம் அதெல்லம் ஒரு காலம்...

      Delete
    8. ஒரு மினி லைப்ர்ரியே இங்கே பதிவாக அமைந்திருக்கு... செம பத்து சார்.

      உங்க பேவரைட்ல நானும் 10க்கு மேல படித்து உள்ளேன். நம்மளதும் பெட்டிகளில் தூங்குது புரட்ட யாராவது வருவாங்களானு ஏங்கி கொண்டே!

      Delete
  62. அட...

    டைலன் டாக்கின் ஒரு கனவு இல்லம் வண்ணத்தில்.. சர்ப்ரைஸ்.!!

    ReplyDelete
    Replies
    1. அதற்கான டிரெய்லருமே கலரில் தானே வந்திருந்தது ?

      Delete
    2. பப்பூபூபூஹூஹூஹூ....

      நெஜம்மாவே எனக்குத் தெரியாது சார்.! பல்பு வாங்குறது புதுசு இல்லேன்னாலும் இதைக்கூட கவனிக்காம விட்டிருக்கேனே...!

      Delete
  63. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    4. Prudence - விவேகம்
    Prudentia- இந்த புத்தகத்தில் பக்கம் 20 முதல் பேனலில் காமிக்கப்படும் பெண்ணுருவே prudence.
    Prudence என்பது விவேகம் என பொருள் கொள்ளலாம்.
    செயல் அல்லாது அந்த செயலை ஆற்றிட பின்னணியில் இருப்பது தான் இது. நாம் நம் எதிரே ஒரு பாம்பு வர கண்டால் அந்த
    பாம்பை கழியால் அடிக்கலாம், காலால் மிதிக்கலாம் அல்லது அதன் போக்கில் விட்டு விடலாம்- விஷமுள்ள பாம்பா, பார்த்தது வீட்டிலா அல்லது வெலியிலா என பல வேறு காரணிகளை பொறுத்து நாம் முடிவெடுத்து செயலாற்றுவோம்.
    இந்த குறியீடு, அவர்களிடம் கிடைக்க பெற்ற அணுசக்தி அவர்கள் வரையில் பாதுகாக்க பட வேண்டியது அதுவே இது நாள் வரையிலான விவேக முடிவு. தற்பொழுதோ, இரண்டாம் உலக யுத்தம் முடிவிலாது பல உயிர்களை பலி கொண்டுவர, அந்த இரகசியத்தை நல்லவர் கைகளில் சேர்பிப்பதே விவேகம்.

    ReplyDelete
  64. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    5. Gallic wars - கேய்லிக் யுத்தம்.
    'horum omnium fortissimi sunt belgae' - 'அவர்களுள் தீரர்கள் பெல்ஜியர்'...

    8 ஆண்டுகளுக்கு ரோமானியர்களுக்கும், கேய்லிக் இனகுழுவினர்க்கும் இடையே நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில் ஜுலியஸ் சீசர் உச்சரித்த வார்த்தைகள்.
    தமிழில் வஞ்ச புகழ்ச்சி அணி என்று ஒன்று உண்டு.புகழ்வது போல் இகழ்வது. ரோம் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே செல்ல தடையாக இருந்த குழுக்களை வென்று பெரிய படை திரட்டினர்.
    இதில் பிலிப் பெருமைப்படும் அளவு பெரிய காரணம் ஏதுமில்லை. அந்த சிறுவன் சொன்னது போல, வெறும் 18 நாட்களில் வீழ்ந்தது இன்றய பெல்ஜியம். அன்று 6 வருடங்கள் போராடினர். அது guerilla போர் முறை.

    சிறு குறிப்பு- asterix and obelix vs Caesar இதை மய்யப்படுத்திய ஒரு பகடி

    ReplyDelete
    Replies
    1. குறியீடுகளை வெச்சி வித்தியாசமா பண்ணி இருக்கிங்க,ரொம்ப மெனக்கெட்டு பண்ணியிருப்பங்க போல நவநீதன் சார்...

      Delete
  65. முன்னால் வருங்கால முதல்வரிடம் பரிசு பெற்ற அறிவரசு ரவி சாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  66. மதிப்பிற்க்குரிய செனா. அனா. சார் பதிவிடாத குறையைப் போக்கிக் கொண்டிருக்ககும் நவநீதன் சாருக்கு ஒரு பூங்கொத்து. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அவர் லெஜென்ட்...
      இது எனக்கு மிக பிடித்த களம். அதுதான் நன்பரே காரணம். தங்கள் அன்புக்கு நன்றி

      Delete
  67. டிடெக்டிவ் ஸ்பெஷல் படித்து முடித்து விட்டேன். ராபின் மற்றும் டைலன் இரண்டுமே அபாரம். மார்ட்டின் படித்து முடித்ததும் தலைவரோட வார்த்தைகள் தான் ஞாபகம் வந்தது "ஒரு நிமிடம் அப்படியே தல சுத்திடுச்சு" இன்னும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    எனது மதிப்பெண்
    ராபின் 9/10
    டைலன் 9/10
    மார்ட்டின் நேநேநே

    மொத்தத்தில் ஒரு அலாதியான அனுபவமே....

    ReplyDelete
    Replies
    1. DTDC இந்த மாசம் கவுத்துடுச்சி,நாளைக்காவது பலன் கொடுக்குதான்னு பார்ப்போம்...

      Delete
    2. //ராபின் மற்றும் டைலன் இரண்டுமே அபாரம். //

      டைலன் புடிச்சிருந்துச்சா சார் - அந்த 32 பக்க அளவினில் ?

      Delete
    3. எனக்குத் ரொம்பவே பிடித்து இருந்தது சார். மினி டெக்ஸ் போல மினி டைலன் சூப்பர் ஹிட் தான். அருமையாக இருந்தது சார்.

      Delete
  68. கார்ட்டூன்களுக்கு Maxi சைஸ் பாந்தமாக இருக்கிறது.!
    லக்கி லூக், சிக்பில் போன்ற மறுபதிப்புகளுக்கு Maxi சைஸ் ஓ.கே சார்.!

    டெக்ஸ் கதைகளுக்கு Maxi அத்தனை சுகப்படவில்லை.! ரெகுலர் சைஸ்தான் டெக்ஸ்க்கு பக்கா மாஸ்.!

    ReplyDelete
    Replies
    1. மாக்சிக்கு மொத்தமாய் ஷட்டர் போட்டாச்சு சார் ; ஆகையால் இனி டக்கி டூக்குக்கும் சரி ; டக்ஸ் பில்லருக்கும் சரி - அவரவரது மாமூலான அளவுகளே !

      Delete
    2. இது கார்ட்டூன்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்போம்.(தேதி பின்னர் அறிவிக்கப்படும்) .!

      நேத்துதான் கௌபாய் எக்ஸ்பிரஸை மாக்ஸியில பார்த்து புளகாங்கிதம் அடைஞ்சேன்.! விடியறதுக்குள்ள அதுக்கும் ஆப்பா..!?

      ஹூம்... போந்தாக் கோழி கூவி பொழுது விடியவாப் போகுது..!!

      இந்த முடிவை நீங்கள் எடுத்திருப்பதற்கு ஏதேனும் வலுவான பின்னனியோ அல்லது பெரும்பான்மை வாசகர்களின் அதிருப்தியோ காரணமாக இருக்கக்கூடும் சார்.!

      காட்டுல இருந்தாலும் சரி.. கூண்டுல இருந்தாலும் சரி.. சிங்கம் சிங்கம்தான்..!

      எனவே..

      எந்த வகையில் வந்தாலும் கார்ட்டூன்ஸை தொடர்ந்து காதலிப்பேன் என்று உறுதியளிக்கும் அதே வேளையில்..

      டக்ஸ் பில்லருக்கும் அதே ஆப்புதானே என்ற சந்தோசத்தோடு..

      மறுக்கா கௌபாய் எக்ஸ்பிரஸை படிக்கப் போறேன்..!

      Delete
  69. பத்மனாபன் சார் . இதுதான்னு இல்லாம எல்லா ஜானர்களிலும் படிச்சு வாழ்ந்திருக்கீங்க வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜசேகரன் சார். விரைவில் எதிர்வரும் என் பணி ஓய்வுக்காலம் என் நீண்ட கால சேகரிப்பான புத்தகங்களுடனே இருக்கும்.

      Delete
  70. ஆவலுடன் முதல் வாசிப்பில் லக்கி. எதிர்பார்ப்பைஆசிரியர்பூர்த்தி செய்துள்ளார் நன்றிகள்சார் பல இடங்களில் புதியவசனங்கள். பேச்சுவார்த்தைக்கு இடமேஇல்லை. டுமீல் டுமீல் டுமீல் சரிசரிநீ கெஞ்சிக் கூத்தாடி விளக்கியதிலே புரியுது சரி நான் என்னோட கருத்தை மாத்திக்கிறேன்............. டக்கி டக்கை எங்கேப்பா... காணோம். ரசித்த இடங்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. மாசா மாசம் உங்க நினைவாற்றலால் கலக்குறீங்க சாரே !

      Delete
    2. உண்மை சா. பாராட்டுக்கள் ராஜசேகரன்.

      Delete
  71. எனக்கு மிகவும் பிடித்த கதை ராணி காமிக்ஸில் வந்த வெள்ளை இளவரசி முத்து காமிக்ஸ் வந்த முகமூடி வேதாளர்

    ReplyDelete
  72. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    6. Godfrey of Bouillon & first crusade war - காட்ஃப்ரெய் ஆஃப் பூயாவ்ன் & முதலாம் சிலுவை போர்.
    முதலாம் சிலுவை போரில் சற்றேறக்குறைய 100000 நபர்கள் பங்கு கொண்டனர். கிறுஸ்துவர்களின் புனித நகரமான ஜெருசலேத்தை இஸ்லாமியர்கள் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற பரப்புரையின் பெயரால் போப் இரண்டாம் அர்பன் என்பவரால் துவக்கம் பெற்றது. உண்மை காரணம் 'அலெக்ஷிஒஸ்'- Alexios of Byzantium empire - அரசருக்கு இஸ்லாமியர் படையெடுப்பிலிருந்து தப்பிக்க உதவி தேவைப்பட்டது. போப்பிற்க்கு தங்கள் அதிகாரம் செலுத்த நிதியும், படையும் தேவைப்பட்டது.
    போரினில் கலந்து பலரை மாய்த்த நைட்ஸ் - knights அவர்களுக்கு பாவ மன்னிப்பும், புண்ணிய சொர்கமும் இந்த புனித போரில் கலந்துகொண்டால் நிச்சயம் உண்டு என கூறி துவக்கம் பெற்றது.
    அதில் கலந்து கொண்ட பல படை தளபதிகளில் ஒருவர் காட்ஃப்ரெய் ஆஃப் பூயாவ்ன். ஜெருசலேம் நகரை கைப்பற்றும் இறுதி யுத்தத்தில் சுமார் 12000 நபர்களே மீதம் இருந்தனர். முதலில் கோட்டையை உடைத்து உள்ளே புகுந்தவர், முதலாவதாக ஜெருசலேம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர் காட்ஃப்ரெய் ஆஃப் பூயாவ்ன்.
    எல்லா போர்களை போல் இதிலும் மாண்டவர்கள், கர்ப்பழிக்க பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், கொள்ளை அடிக்க பெற்றவர்கள், மதம் மாற்றம் செய்ய பட்டவர்கள் இலட்சம் பேருக்குமேல். நிற்க.

    பெல்ஜியம் எனும் புது நாடு 1830 இல் உருவாக்கம் பெற்ற போது, டச்சு மொழி மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் இரண்டு பகுதி மக்களையும் இனைக்கவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் அவர்களுக்கு ஒரு மாவீர பிம்பம் தேவைப்பட்டது. அதற்காகவென காட்ஃப்ரெய் ஆஃப் பூயாவ்ன் சிலையை நிர்மாணித்து பெல்ஜியம் மக்களை ஒன்று படுத்தினர். பல பிரிவு மக்களையும், மதம் ஒன்றால் ஒன்றுபடுத்த உதவிய இவர் தற்போதைய ஆய்வின் படி, பெல்ஜியம் நாட்டினை சேர்ந்தவர் அல்ல.... 😂😂😂

    முதலாம் உலகப்போர் துவங்க ஒரு முக்கிய காரணமாய் இருந்த இரண்டாம் வில்ஹெல்ம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் நாஜிகள் உடன் இணைந்து யூதர்களை வேட்டையாடிய லியோன் போன்றோர் தங்களை இவரின் பரம்பரை என கூறிக்கொண்டே செய்த அராஜக செயல்கள் எண்ணிலடங்காது.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான தகவல்கள் சார்...

      முதல் சிலுவைப் போர் அந்தியோக்கியா படையெடுப்பு, பாக்தாத் தலையீடு அந்த காலகட்டம் குறித்து கொஞ்சம் சொல்லுங்க சார்!

      Delete
    2. சூப்பர்...சூப்பராக கொண்டு போறீங்க நவநீத்.

      முடிந்தவுடன் அனைத்தும் ஒரு தொகுப்பாக போட்டோக்களுடன் உங்க முகநூல் பேஜ்ல பகிர்ந்து வையுங்கள்.

      அர்ஸ் பற்றிய என்சைக்ளோவாக எந்நேரமும் ஐயங்கள் தீர்த்துகிட உதவும்.

      Delete
  73. 60 களின்உர்சுலாஆன்ட்ரெஸ் டாக்டர் நோ, 80களின் ராணி காமிக்ஸ் டாக்டர் நோ, 2.020களின் லயன் காமிக்ஸ் டாக்டர் நோ, ஒப்பீடு சென்சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  74. சென்னை புத்தகக் திருவிழா விற்பனை துளிகள் ப்ளீஸ் நண்பர்களே.

    ReplyDelete
  75. சார் இன்று பதிவுக் கிழமை.....

    ReplyDelete
  76. புத்தகங்கள் வந்துவிட்டன.
    கையை கொடுங்கள் நவநீதன் சார். பாராட்டுகள். சரித்திர சம்பவங்களை அள்ளித்தெளித்து, தெறிக்கவிடுகிறீர்கள். அர்ஸ் மேக்னா உங்களுக்குள் உறங்கிக் கிடந்த விமர்சகரை தட்டி எழுப்பி விட்டது போலிருக்கிறது. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சும்மா அருமையாக எழுதுகிறார்.

      Delete
    2. ஆரம்பித்து விட்டதை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உந்துதலே காரணம் 🙏🏻

      Delete
  77. ஒரு காலத்தில் நான் சாப்பிடும் போதெல்லாம் கையில் இருந்த புத்தகம் கௌபாய் எக்ஸ்பிரஸ். கதையை விட சில வசனங்கள் இன்னும் மனதில் தங்கியிருப்பதற்கு காரணம் தங்கள் எழுத்துநடையே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // கதையை விட சில வசனங்கள் இன்னும் மனதில் தங்கியிருப்பதற்கு காரணம் தங்கள் எழுத்துநடையே // நூற்றுக்கு நூறு உண்மை

      Delete
  78. அர்ஸ் மேக்னா- குறியீடுகள்
    7. V.I.T.R.I.O.L - "visita interiora terrae, rectificandoque, invenies occultum lapidem"
    ஃப்ரீமேசன் அமைப்பில் ஒருவர் இணையும் முன் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சடங்குகளில் ஒன்று, அவர்கள் கூடும் இடமான- 'லாட்ஜ்'என்று அழைக்கப்படும் கட்டிடத்தில் Chamber of Reflection - பிரதிபலிப்பு அறை என்று ஒன்று இறுக்க, அதில் அமர்ந்து, தன்னுடைய முடிவை, மனதை, திட சித்தத்தை, எண்ணி தியானம் புரிய வேண்டும்.
    அந்த அறையில் சேவல், ரொட்டி, தண்ணீர், உப்பு, கந்தகம், மணல் கடிகாரம், அரிவாள் மற்றும் ஒரு மண்டையோடு இருக்கும். இவை கூடவே VITRIOL எனும் வார்தை பொறிக்க பட்டிருக்கும்.
    இங்கு இருக்கும் ஒவ்வொன்றும் குறியீடுகளே,
    சேவல்- வீரம், திண்மை, விவேகம், அனைத்தையும் குறிக்கும் அதே சமயம் ரசவாதத்தில் பாதரசத்தை குறிக்கும்.
    ரொட்டியும் தண்ணீரும் எளிமையை குறிக்க, அரிவாள்- scythe காத்திருக்கும் மரணத்தையும், மண்டையோடு நிலையாமையையும், மணல் கடிகாரம்- மனிதரின் குறுகிய கால வாழ்வினையும், உப்பும் கந்தகமும்- நம்பிக்கை, தன்னலமற்ற ஈகை தன்மைக்கும் குறியீடுகளாகும்.
    "visita interiora terrae, rectificandoque, invenies occultum lapidem"
    எனில், மண்ணின் ஆழத்தை தேடி பார்த்தால், ஒளிக்கப்பட்டிருக்கும் கல்லினை கண்டுகொள்ள முடியும் என பொருள் தரும்.
    இதன் மறைபொருள்- கண்ணதாசன் பாடிச்சென்ற 'மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி, என்னை தோண்டி ஞானம் கண்டேண் இது தான் என கட்சி'.

    இதை தான் தவறாக அர்த்தம் கொண்டு philosopher stone என தேடி திரிந்தனர்.

    Occult - நம் இயல்பறிவுக்கு அப்பால் மறைந்து உள்ளன- Esoteric senses, experiences.

    ReplyDelete
  79. My Favourite books
    1. poonthalir
    2.Ambulimama
    3.Gokulam
    4.Lion
    5.muthu
    6.Thigil
    7.mini lion
    8.Rani comics
    Favourite stories
    Pavala silai marmam
    Thalia vangi kurangu
    Irathakateri marmam
    Thanga kallarai
    Minimum marmam
    Young Tex stories
    Largo winch
    Irattai vettaiyar
    Steel claw
    Spider
    Lawrence and David
    Rip kirpy etc.
    Novel
    Rajesh Kumar
    Subha

    ReplyDelete
  80. All time favourite
    One and only willer Tex willer
    Bond James bond.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லர்-- சும்மா பேரை கேட்டாவே அதிருதில்ல...😍

      Delete
  81. சார் புத்தகங்கள கைப்பத்தியாச்...ஜேம்ஸ் அட்டை நேர்லச்ச்சும்மா மிரட்ட....சொக்கிப் போய் பார்க்க நன்றி கலந்த அட்டை லக்கி கோஷ்டியோட கலக்க....மொதமொத...நம்ம சூப்பர் சர்கச தடவிபார்த்த உணர்வு லக்கியோட காலண்டர தடவயில....டிடெக்டிவ் ஸ்பெசல் வழவழன்னு அட்டகாச குண்டாய் வெடிச்சிருவேன் நாதா மொதன்னு சொல்லாட்டா ...என கூடுதலாய் என்னை நோக்கி துப்பாக்கியோட மிரட்டியபடி இருவர் பாய...திகைத்துதான் போகிறேன் அதே காலண்டர் போல சொரசொரப்பால் மதிமயங்கி லக்கி அட்டை அழகைக் கண்டு...சத்தியமா சொல்றஞ்சாமி...இதுவரை வந்த ஒட்டு மொத்த அட்டைகளும் ...அன்பளிப்புவளும் ஒன்ன ஒன்னு விஞ்சுவது இந்த மொறதான்...நன்றிவள்

    ReplyDelete