Powered By Blogger

Saturday, November 02, 2019

நி + நி + நி !!

நண்பர்களே,

வணக்கம் ! மாதத்தின் இரண்டாம் தேதியே....! ஆனால் அதற்குள் நவம்பரின் இதழ்கள் வெளியாகி ஒரு யுகம் ஆனது போலான உணர்வு எனக்கு ! இன்னமும் கடைகளில் வாங்கிடும் வாசகர்களின் கைகளுக்கு புக் கிடைத்திருக்காதெனும் போது எனது அலசல்களை இப்போதே முன்வைப்பதும் பொருத்தமாகயிராது ! So எதைப் பற்றி எழுதுவதோ என்ற ரோசனை மெதுவாய் எட்டிப் பார்த்தது ! மறுக்கா துபாய் போன கதை...மறுக்கா உசிலம்பட்டி போன கதை என்று எதையாச்சும் அவிழ்த்து விடணுமோ ? என்று மோவாயை தடவிக்கொண்டிருந்த போது தான் அந்த மின்னஞ்சல் வந்து சேர்ந்தது ! சுவாரஸ்யமானதாக இருந்ததால் அதனை உங்களோடு பகிர்வதில் தவறிராதென்று நினைத்தேன் ! தவிர, இதே போன்ற சிந்தனைகள் கொண்ட நண்பர்களும் இங்கு (மௌனமாய்) இருப்பின், அவர்கட்கும் பதில் சொன்னது போலிருக்குமே என்று நினைத்தேன் ! இதோ அதன் முக்கிய வரிகள் :

"உலகெங்கும் காமிக்ஸ் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் நிலையில் நாம் டெக்ஸையே கட்டி அழுவானேன் ? பற்றாக்குறைக்கு இப்போது பல் போன ஜேம்ஸ் பாண்ட் 007-ஆ ? ஏகப்பட்ட புதுப்புது கதைகளை பற்றி நீங்களே அவ்வப்போது முன்னோட்டம்லாம் தந்துள்ளீர்கள் ; அதில் எதையாச்சும் உள்ளே நுழைப்பதற்குப் பதிலாக அரைத்த மாவையே அரைப்பானேன் ?! இதில் உங்களை மட்டும் குறை சொல்லமாட்டேன் ; ஜேம்ஸ் பாண்ட் என்ற உடனேயே இங்கே விசில் பறக்குதே ! வாசகர்கள் கேட்டதைத் தான் தருகிறீர்கள் என்று புரிகிறது, ஆனாலும் புதுசாய் வரக்கூடிய கதைகளுக்கு இந்தக் கிழட்டு ஹீரோக்கள் கேட் போடுவதில் வருத்தம் ! அதற்காக நான் டெக்ஸ் பிடிக்காதவன் இல்லை, நானும் அவருக்கு அடிமையே ! இருந்தாலும் ஒரு நப்பாசை !" என்ற ரீதியில் செல்கிறது !


ஏற்கனவே அட்டவணை வெளியான வேளையிலேயே நண்பர் J ப்ளஸ் ஓரிருவர் இதே ரீதியில் இங்கே எழுதியிருந்தது நினைவுள்ளது ! ஆனால் அவற்றிற்கு விரிவாய் பதில் சொல்ல நேரம் இருந்திருக்கவில்லை அப்போது ! So here goes  : 

ஒரு மாயையைக் கொஞ்சமே கொஞ்சமாய் உடைத்திட அனுமதியுங்களேன் guys !

:"அங்கே" ஆயிரமாயிரமாய் காமிக்ஸ் கொட்டிக் கிடப்பதென்னவோ நிஜம் தான் ; துளி கூட அதனில் மாற்றுக கருத்தே கிடையாது ! ஆனால் நமக்கு ஏற்புடையவற்றின் சதவிகிதம் அவற்றுள் எத்தனை என்பதில் தான் சிக்கலே  ! அமெரிக்காவெனும் உலக காமிக்ஸ் சூப்பர்மார்க்கெட்டினுள் எட்டிப் பார்த்தால் அங்கு கோலோச்சும் முக்காலே மூன்றுவீசத்தினர் சூப்பர் ஹீரோக்களே ! BATMAN போன்ற மெகா ஸ்டார்கள் நம் எட்டும் எல்லைகளைத் தாண்டிய உச்சத்தில் இருப்பதால் அவரைப் பராக்கு மட்டுமே பார்க்க முடிகிறது ! அவர் நீங்கலாய் அங்கே அதகளம் செய்துவரும் இதர சூப்பர் நாயகர்களுக்கும் நமது ரசனைகளுக்கும் எத்தனாம் பொருத்தமென்று யோசிக்க ரொம்ப நேரம் தேவையே படுவதில்லை ! வெள்ளித்திரையில் மெர்சலூட்டும் X MEN ; AVENGERS  இத்யாதியினரை காமிக்சில் நாம் ரசிக்க ரொம்பவே மாறிட வேண்டும் நம் ரசனைகளின் மீட்டர்களில் ! அட...சூப்பர் நாயகர்களை விட்டுத் தள்ளிவிட்டு ரெகுலரான ஆக்ஷன் நாயகர்களை பரிசீலனை செய்வோமே என்று சமீபமாய் ஹாலிவுட் திரைப்படமாக ஹிட்டடித்த JOHN WICK -ன் காமிக்ஸ் வார்ப்பினை ஆவலோடு பரிசீலித்தேன் ! ஆனால் இன்றைய நமது எதிர்பார்ப்புகளுக்கு அவர் தீனி போடமாட்ட்டாரென்றே தோன்றியது ; நிறைய action sequences ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்திட - 22 பக்கங்கள் கொண்டதொரு பாகத்தை ஐந்தே நிமிடங்களில் புரட்டி முடிக்க முடிந்தது ! So உலகின் டாப் காமிக்ஸ் மார்க்கெட்டினுள் நமக்கொரு பெரும் களம் காத்திருப்பதாய் தோன்றிடவில்லை ! At least என் பார்வையினில் !

அங்கிருந்து நேராக உலகின் இரண்டாம் மெகா மார்க்கெட்டான ஜப்பான் பக்கமாய் கவனத்தைத் திருப்பினால் "மங்கா...மக்கா !!" என்று தெறிப்பது புரிகிறது ! அந்த ரசனைகளுக்கு ; அந்தக் கதை பாணிகளுக்கு ; சித்திர பாணிகளுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் பரிச்சயம் கொண்டிட நிறையவே முயற்சிகள் தேவைப்படும் என்பதுமே புரிகிறது ! So அங்கிருந்து உலகின் மூன்றாம் பெரிய மார்க்கெட்டான பிரான்க்கோ-பெல்ஜிய தளம் பக்கமாய்ப் பாய முற்பட்டால் - அங்குள்ள scenario இதுதான் !

பிரெஞ்சில் மட்டும் குறைந்தது 20+ஓரளவுக்குப் பெரிய காமிக்ஸ் பதிப்பகங்கள் உள்ளன ! அவர்களின் முக்கால்வாசிப் பேரை எனக்குத் தெரியும் !   இந்தியா போன்றொரு புது மார்க்கெட்டில் தங்களின் ஆக்கங்கள் வெளியானால் மிகச் சந்தோஷம் என்பதே அவர்களுள் பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் ! ஆனால் உருட்டு-உருட்டென்று உருட்டினாலும், குறிப்பிட்ட ஐந்தாறு பதிப்பகங்கள் நீங்கலாய் பாக்கிப் பேரின் கேட்லாக்களிலிருந்து நமக்கு ஆகின்ற மாதிரியாய்ச் சமாச்சாரங்களைத் தேடித் பிடிப்பது குதிரைக் கொம்பே ! ஒன்று சித்திர பாணிகள் சுமாராயிருக்கும் ; அல்லது கதைக்களங்கள் நமக்கு அந்நியமாயிருக்கும் ! So நாசூக்காய் "ஊருக்குப் போயி கடுதாசி போடுறேன் !" என்று நான் கிளம்பிய தருணங்கள் நிறையவே  ! இன்றைக்கு மொத்தமே 6 பிரெஞ்சுப் பதிப்பகங்களோடு மாத்திரமே நாம் பணியாற்றுகிறோம் - இன்னமுமே சிலபல வாயில்கள் நமக்குத் திறந்தே உள்ள போதிலும் ! இதுவே தான் இத்தாலியிலும் கதை ! போனெல்லியைப் போலவே black & white-ல் கதைகள் வெளியிடும் பதிப்பகங்கள் நிறையவே உள்ளன ! அவர்களுள் ஒரே ஒரு பதிப்பகம் மட்டும் நமக்கு பல்ப் தந்து விட்டது ! நாம் ரொம்பவே ஆர்வம் காட்டியும், ராயல்டிக்களில் துளியும் இறங்கி வராது போனதால் அவர்களோடு ஒத்துழைக்க சாத்தியப்படவில்லை ! அவர்கள் நீங்கலாய் பாக்கிப் பேர் willing to permit us to work with them ; ஆனால் அதற்கான சரக்கை அவர்களது ஆக்கங்களிலிருந்து என்னால் தேடித் திரட்ட இயலவில்லை !!

வெறும் வாய்வார்த்தையாய் நிறுத்திடாது - ஒரு உவமையோடுமே விளக்குகிறேனே ? THE GUANTANAMO KID என்ற பெயரில் ஒரு கிராபிக் நாவல் பிரெஞ்சில் உள்ளது ! ஒரு நிஜக் கதையின் காமிக்ஸ் ஆக்கமிது ! ஆப்பிரிக்காவில் வறுமையானதொரு குடும்பத்தில் பிறந்து - பிழைக்க வாய்ப்புக் கிட்டி பாகிஸ்தான் செல்கிறான் ஒரு இஸ்லாமியக் குட்டிப்பைய்யன் தனது பத்தாவது வயதிலோ- என்னவோ ! அங்கே வண்டி சுமூகமாய் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு தொழுகைவேளையில் 'திடு திடு'ப்பென உட்புகும் காவல்  படைகள் நிறைய பேரை தீவிரவாதிகளென்ற சந்தேகத்தில் கைது செய்கிறது ! அதனில் இந்தச் சிறுவனும் சேர்த்தி ! போலீஸ் லாக்கப்பிலிருந்து பின்னர் அவர்கள் எல்லாமே அமெரிக்கர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர் - "அல் கைதா தீவிரவாதிகள் இவர்கள்" - என்ற முத்திரையோடு !! நமது பொடியனுமே இதனில் அடக்கம் ! அத்தனை பேரும் நாடுகடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு - அங்கே குவாண்டனாமோ எனும் உச்சபட்ச வதைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றனர் ! அங்கே சிறையில் அவன்பட்ட அல்லல்கள் ; அங்கு அரங்கேறிய வதைகள் ; அவன் பார்த்த கொடூரங்கள் ; நிஜவாழ்வில் உலகின் முதல் ஜனநாயகத்திலும் நிகழ்ந்திடும் மனிதயுரிமை மீறல்கள் என்று இந்த ஆல்பம் தெறிக்க விடுகிறது ! கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அங்கே சிறையிருக்கும் சிறுவன் ஒருமாதிரியாக வெளியே வந்து சேர்கிறான் ! அவனது சிறைவாழ்வை புத்தகமாக்கினர் ; பின்னே காமிக்ஸாகவும் உருவாக்கினர் !  வாழ்வியலின் இன்னல்கள் சார்ந்த அட்டகாசமானதொரு படைப்பு இது ! கதையின் அவுட்லைனைப் படித்த போதே "எப்படியிருந்தாலும் இதை வாங்கியே தீர வேண்டுமே !!" என்று உள்ளுக்குள் குடைந்தது !! So உரிமைகளையும் வாங்க துண்டை விரித்தோம் ! ஆனால் அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போது - சித்திர பாணிகள் ரொம்ப ரொம்ப ஏமாற்றமளித்தன ! நீங்களும், நானும் பென்சிலை எடுத்துக் கொண்டு படம் போட்டிருந்தால் எவ்விதமிருக்குமோ - அப்படியிருந்தது ! (இந்த புக்கின் ஆங்கிலப் பதிப்பு கூட அமேசானில் உள்ளது)  2020-ன் கிராபிக் நாவல் பட்டியலில் முதல் இதழாய் இது இடம்பிடித்திருக்க வேண்டியது - ஆனால் அந்த சித்திர பாணியின் நெருடல்கள் பிரேக் போட்டுவிட்டன ! இதே ரீதியில் நான் நிராகரித்துள்ள அட்டகாசக் கதைக்களங்களைப் பட்டியிலட வேண்டுமெனில் இந்த ஞாயிறு போதாது நண்பர்களே ! 

Of course - ஒரு சக்தி வாய்ந்த கதைக்கருவைச் சொல்லிட இந்தமட்டுக்குச் சித்திரங்கள் போதுமென்று படைப்பாளிகள் எண்ணியிருக்கலாம் ; and அதனில் வெற்றியும் கண்டிருக்கலாம் ! ஆனால் நமக்கோ தரமான சித்திரங்கள் ; முறையான பேனல்கள் என்று எல்லாமே கச்சிதமாய் இருந்திடல் அவசியமன்றோ ? "உலகைப் புரட்டிய கதை" என்று நான் விளம்பரப்படுத்தி உங்களை வாங்கவும் செய்திடலாம் நான் ; ஆனால் பக்கங்களைப் புரட்டவே நீங்கள் சிரமம் கொள்ளின், அதனில் நாம் காணப்போகும் பயன் என்னவாக இருக்கக்கூடும் ? 'ஐயா புண்ணியவானே...என்னளவுக்கு இதுவே போதும் ; இதிலேயே நான் படித்துக் கொள்வேன் !" என்று இங்கே நண்பர்களில் சிலர் அபிப்பிராயம் கொண்டிடலாம் தான் ; ஆனால் நான் பார்த்திட வேண்டியது பெரும்பான்மையின் பாதணிகளில் நின்றல்லவா ? If maybe we all want this - great !!

நம்மளவிலாவது ஒரு காமிக்ஸ் தொடர் / கதை வெற்றி கண்டிட மூன்று 'நி' க்கள் அவசியம் :

* நிறைவான கதைக்களம் 

* நிறைவான சித்திரங்கள் 

* "நிறைய" என்றில்லா ராயல்டி !!

இந்த மூன்று 'நி' க்களும் சங்கமித்தால் மாத்திரமே அங்கே நமக்கான சாத்திய வாயில்கள் திறந்திடும் என்பதே யதார்த்தம் !! 

மலையாய்க் கதைகள் காத்துள்ளன என்று நிறையமுறைகள் இங்கு நான் சொன்னது நிஜமே ! ஆனால் நாம் நிறையவே ; நிறைய விஷயங்களில் மாறினாலொழிய அவற்றின் பக்கம் தலைவைக்க இயலாதென்பதுமே நான் சொல்லாத சேதி !!

* எக்கச்சக்கமாய் ஒற்றைப் பக்க gags கொண்ட அட்டகாச கார்ட்டூன்கள் உள்ளன ! எனக்கு அவற்றைப் பார்க்கும் போது நாவில் ஜலம் ஊறும் தான் ! ஆனால் 'முடியவே முடியாது ; ஒற்றைப் பக்க gags பக்கநிரப்பிகளாய்த் தவிர எங்களால் பார்க்கவே முடியாது !" என்று நீங்கள் தீர்மானமாய்ச் சொல்லிடும் போது அக்கட கேட் போட்டுவிடுகிறேன் !

* எக்கச்சக்கமான தொடர்கள் அட்டகாசமாய்ப் பயணிக்கின்றன ; இடையினில் திடுமென 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரங்களின் மிகுதிகளோடு ! சரி...கொஞ்சம் சென்சார் செய்து கொள்ளலாமா ? என்று அந்தப் படைப்பாளிகளிடம் கேட்டால் - "கத்திரி போட்டா முத டெட் பாடி நீ தான் !" என்று பதில்கள் வரும் போது அந்தத் தொடர்களுக்குப் பிரியாவிடையே தந்திட நேர்கிறது ! Not all creators are o.k. with censor !

* Esoterics என்பது காமிக்சில் ஒரு பெரும் கதைப்பிரிவு !மாயாஜாலம் ; ரசவாதம் என்ற பின்னணிகள் கொண்ட கதைகள் இவை ! இவை சார்ந்த நிறைய தொடர்கள் ; வண்டி வண்டியாய் ஆல்பங்கள் உள்ளன ; ஆனால் நமக்கவை ஒவ்வுமோ ? ஒவ்வாது ? என்ற பயத்தில் no thank you ! சொல்லிடுக்கிறோம் !!

* யுத்த கதைகள் காமிக்ஸ் பேழைகளின் ஒரு முக்கிய அங்கம் ! "யுத்தம் பக்கம் போனாக்கா சத்தமில்லாமல் குளோஸ் பண்ணிப்புடுவோம் !!" என்று நீங்கள் மிரட்டுவதால் - "ச்சீ..சீ..இந்தப் பயம் புயிக்கும் !!" என்று நடையைக் கட்டிவிடுகிறேன் !

* வரலாறு சார்ந்த காமிக்ஸ் படைப்புகள் again  கொட்டிக் கிடக்கின்றன ! நம்மிடம் ஆர்வம் + பொறுமை அவசியமல்லவா - இத்தகைய ஆக்கங்களைப் படித்திட ? உதாரணம் சொல்கிறேனே ? நெப்போலியனின் அண்டத்தை வென்றிடும் படையானது மாஸ்கோவை நெருங்குகிறது ! வெகு விரைவில் வீழவுள்ள அந்தத்  தலைநகரில் வசிக்கும் பெருங்குடி மக்கள் தீர்மானிக்கின்றனர் : இத்தனை காலம் நாம் வாழ்ந்த மாட மாளிகைகளும், சொகுசுகளும் தீக்கிரையானால் கூடப் பரவாயில்லை - எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிடக் கூடாதென்று !! So "மாஸ்கோவைக் கொளுத்துங்கள் " என்று உத்தரவிடுகின்றனர் ! இந்தப் பின்னணியில் ஒரு ஆல்பம் உருவாகியுள்ளது !

அதே நெப்போலியனின் படைகள் உருக்கும் சைபீரியக் குளிரில் மேற்கொண்ட நெடும் படையெடுப்பைச் சொல்லும் கதைகள் உள்ளன ! நமக்குத் பொறுமையும், வரலாற்றினில் ஆர்வமும் இருப்பின், இது போன்ற தேடல்கள் சாத்தியமே !! ஆனால் பள்ளிக்கூடத்திலேயே தலைமுழுகிய இஸ்திரியை இங்கே வந்து படிக்கணுமாடாப்பா ? என்ற கேள்விகளும் எழுமென்பதால் டிக்கியை மூடிக் கொண்டு நடையைக் கட்டுகிறேன் ! 

* Women-centric காமிக்ஸ் ஒரு வண்டியுள்ளன ! ஆனால் கையில் பிஸ்டலைத் தூக்கிப்புட்டு 'பிளாம்-பிளாம்' என்று ரகளை செய்யாட்டி - "ஐயே...இந்தப் புள்ளே  தேறாது போலிருக்கே !!" என்று முத்திரை குத்திடுகிறோம் - LADY S ; ஜூலியாவுக்கு நேர்ந்தது போல ! 

SCI-FI பற்றிச் சொல்லவே வேண்டாம் ; திரும்பிய திக்கிலெல்லாம் தெறிக்க விடுகிறார்கள் அங்கே ! நாமிங்கே முயற்சித்தால் தெறிக்கப்போகும் முதல் சில்லு மூக்கு யாருடையதாய் இருக்கும் என்று யூகிப்பது அத்தனை கஷ்டமா - என்ன  ? ஆண்டாண்டு காலமாய் நண்பர் கரூர் டாக்டர் ராஜாவும் VALERIAN தொடரை முயற்சிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தானிருக்கிறார் ; but  அதற்கென நாம் தயாராகியுள்ளோமா என்ற கேள்வி இன்னமும் பதிலின்றியே உலவுகிறதே !  

* Ditto for Horror stories !! Vampires...Zombies....Walking Dead ..பிணம்தின்னிகள் போன்ற கதைகள் அயல்வாசகர்கட்குப் பிடிப்பதால் அவையும் ஆண்டொன்றுக்கு ஏராளமாய் வெளியாகின்றன ! ஆனால் அவற்றைப் பார்த்தாலே நாம் 'உவ்வே' எனும் போது "சுடுகாட்டோடு நிறுத்திக்கோங்கடாப்பா உங்க சங்காத்தத்தை" என்று சொல்ல வேண்டி வருகிறதல்லவா ? 

'அப்டின்னா நமக்கு ஆகக்கூடிய கதைகளே வேற இல்லியா ?' என்ற கேள்வியும் இங்கு எழுமென்பது புரியாதில்லை ! Of course உள்ளன நண்பர்களே ; எனது கைவசமே தற்சமயம் குறைந்தது 5 சூப்பர் ஆல்பங்கள் உள்ளன - 'ஏக் தம்'மில் வெளியிட வேண்டிய நெடுந்தொடர்களாய் ! ஒற்றை இதழே ஐநூறு / அறுநூறு ரூபாய்களை விழுங்கிடும் என்பதால்  ஏதேனும் வாகான தருணங்களில் அவற்றை சிறுகச் சிறுக இறக்கிடலாமே என்ற எண்ணத்தில், கங்காரூ தன குட்டியைத் தூக்கித் திரிவது போல இந்தக் கதைகளையும் சுமந்தே திரிகிறேன் ! ஐநூறு ரூபாய்க்கு ஒரு இதழ் எனுமிடத்தில் தற்போதைய சந்தா D-ன் முழுமையுமே (12  இதழ்கள் !!) அடங்கிடுமே எனும் போது தராசின் முள் அந்தப்பக்கம் சாய்கிறது !  So நிறைய நேரங்களில் நமக்குத் பிடிக்கக் கூடிய கதைகள் இருந்தாலும், இதுபோன்ற நடைமுறை நெருக்கடிகளுக்கும் தலைசாய்த்திட வேண்டியுள்ளதல்லவா ?

"டெக்ஸ் வில்லருக்கு ஒரு பெரிய குண்டு வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்னை !" என்று சில நண்பர்கட்குத் தோன்றிடலாம் ! ஆனால் மஞ்சளணிந்த மாய வாத்து இடும் பொன் முட்டையின் புண்ணியத்திலேயே, நம் பயணம் சாத்தியப்படுகிறது என்பதை அவர்கள் மறந்திட்டார்கள் என்பதற்காக நானும் மறந்திட இயலுமா ? இதுபற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் எனும் போது no more repeats !

காமிக்ஸ் வாசிப்பென்று வரும் போது பொதுவாய் நாம் நம்முள் உள்ளதொரு template-லிருந்து அதிகமாய் விலகிட விரும்புவதில்லை என்பது கண்கூடு ! இதோ - அந்நாட்களது ஜேம்ஸ் பாண்ட் 007 மறுவருகைக்கு இத்தனை உற்சாகம் பிரவாகமெடுப்பதே அதற்கொரு உதாரணம் ! Over a period of time - அந்த உத்வேகம் குறையும் தான் ; மும்மூர்த்திகளின் நிலையைப் போல ! ஆனால் மும்மூர்த்திகளுக்கும் - ௦௦7-க்குமிடையே ஒரு சன்ன வேற்றுமையுள்ளது ! முன்னவர்கள் அதற்கும் முந்தய தலைமுறையினை மகிழ்வித்தவர்கள் ! பின்னவரோ - இன்று active வாசகர்களாய் உள்ளோரை சிறுவயதில் வசியம் செய்தவர் ! So மும்மூர்த்திகளை விட 007 ஒரு தலைமுறை later ஆசாமி என்பதால் அவரது சுவாரஸ்ய ஆயுட்காலம் சற்றே தீர்க்கமாய் இருக்குமென்று நம்பிடலாம் ! இந்தக் கதைகளுக்கான உரிமைகளை நான் வாங்கிடத் தீர்மானித்ததே அந்த நம்பிக்கையினில் தான் ! "End of the day - காமிக்ஸ் படிக்க நான் நினைப்பது எனக்குள் உள்ள இளைஞனை ; பாலகனை மீட்டெடுத்துக் கொள்ளவே ; so அதற்கு உதவிடும் சாகசங்களே மதி !" என்று சொல்ல கணிசமானோர் நம் வட்டத்தில் இருக்கும் போது அவர்களது லாஜிக்கில் நாம் குறை காண இயலாது தானே ? 

மலையாய்க் காமிக்ஸ் குவிந்து கிடப்பது நிஜமே ; ஆனால் அவற்றுள் நமக்கு ஏற்புடையவை சொற்பமே என்பது தான் யதார்த்தம்  ! GLENAT என்பது தான் பிரான்சின் இன்றைய மிகப்பெரிய காமிக்ஸ் பதிப்பகம் ! வரும் ஆண்டு முதல் அவர்களது படைப்புகளையும் நாம் வெளியிடவுள்ளோம் ! ஆண்டொன்றுக்கு அசாத்திய எண்ணிக்கையில் ; அசாத்தியத் தரத்தில் ஆல்பங்கள் வெளியிடுகிறார்கள் ! ஆனால் அவர்களோடு கரம்கோர்க்கும் நமக்கு அந்த அசாத்திய எண்ணிக்கையினுள்  - நம் மார்க்கெட்டுக்கு ஆகிடக்கூடிய கதைகளை இனம் காண்பதென்பது சுலபக்காரியமே அல்ல என்பதை அனுபவத்தில் சொல்கிறேன்  !! True - அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அற்புதமாய் உள்ளன தான் ; அவர்களது தரங்களில் துளியும் திகட்டல் 'நஹி' தான் ! ஆனால் நம் ரசனைகள் வெகு குறுகலானவை என்பதே பல நேரங்களில் சிக்கல் ! 

So "டெக்ஸ் நிறைய ஸ்லாட்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் ; அவரைப் போடுறதை நிறுத்திப்புட்டா இன்னும் நிறைய புதுசுக்கு வழி பிறக்கும் !!"  ; "இதோ இப்போ ஜேம்ஸ் பாண்ட் 007 என்று சொல்றீங்க ; இவரும் புதுசாய் மடைதிறப்பதற்குத் தடை !" என்ற ரீதியிலான சிந்தைகளெல்லாமே ஒரு சோப் குமிழியே !

சின்னதாய் தொடர்ந்திடும் கேள்விகளை  மட்டும் பரிசீலித்துப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு பதில் சொல்லுங்களேன் guys ?

1. இன்றைக்கு நமது வரிசையில் டிடெக்டிவ் கதைகள் என்று உருப்படியாய் எத்தனை உள்ளன ? CID ராபின் & ரிப்போர்ட்டர் ஜானி என்ற இருவரைத் தவிர்த்து - கடந்து 15 ஆண்டுகளில் வேறு யாரேனும் தலைகாட்டி ; சாதித்துக் காட்டியுள்ளனரா ?

2. அதே கேள்வி கார்ட்டூன் சார்ந்த நாயகர்கள் பற்றியும் !இன்றைக்கும் 1987-ல் நம் மத்தியில் அறிமுகமான லக்கி லுக் தானே கார்டூனின் கிங் ? அதன் பின்னே நாமும் 'தம்' கட்டி லியனார்டோ தாத்தா ; ஸ்மர்ப்ஸ் ; பென்னி ; அது இதுவென்று முயற்சித்துப் பார்த்தும் மண்ணைக் கவ்வியது தானே மிச்சம் ?

3. Repeat : இதே கேள்வி - இம்முறை லார்கோ வின்ச் என்ற நாயகரைக் கொண்டு ! ஆண்டொன்றுக்கு 5000+ ஆல்பங்கள் வெளியாகின்றன பிரான்க்கோ-பெல்ஜிய மார்க்கெட்டில் ! 1990-ல் அறிமுகம் கண்டவர் லார்கோ ! அதன் பின்னே சுமார் 30 ஆண்டுகள் ஓட்டமெடுத்து விட்டன ; so சுமாராக 150,000 ஆல்பங்களும் இடைப்பட்ட இந்த 360 மாதங்களில் வெளியாகியிருக்க வேண்டும் ! அந்த ஒன்றரை லட்சத்தில் இன்னும் ஒரேயொரு லார்கோ clone கூடவா இருந்திராது போயிருப்பார் ? இன்னும் ஒரேயொரு இரத்தப்படல XIII இருந்திடாதா போயிடுவார் ? அதற்கான பதில் - எனக்குத் தெரிந்த மட்டிலாவது NO என்பதே !! 

"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் நாம் தேடும் தரத்திலான டிடெக்டிவ்ஸ் மேற்கொண்டு கிட்டியிருப்பின் இத்தனை ஆண்டுகளில் நான் விட்டு வைத்திருப்பேனா guys ?

"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் சுகமான கார்ட்டூன் தொடர்கள் மிகுந்திருப்பின் கொஞ்சத்தையாவது இங்கே கொணர்ந்திருக்க மாட்டோமா  guys ?

"அங்கே" கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் குவியலினுள் இன்னொரு லார்கோ ; இன்னொரு  XIII  பதுங்கியிருப்பின் பிச்சை எடுத்தாவது  அவர்களை இட்டாந்திருக்க மாட்டேனா ?

Yes, of course - TINTIN ; ASTERIX ; BATMAN போன்ற iconic  நாயகர்கள் உள்ள போதிலும் அவற்றை நாம் தொடாதே இருக்கிறோம் தான் - simply becos அவர்கள் வீற்றிருப்பது நம் உசரங்களுக்கு எட்டா ஒரு உச்சத்தில் ! 

Yes, of course - இன்னமும் சில பதிப்பகங்களின் ராயல்டி எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருப்பதால் அவற்றினை முயற்சிக்க சிரமங்கள் உள்ளன தான் ! ஆனால் அற்புதமான கதைகளை இருப்பின் - காசைப் பற்றிக் கவலை வேண்டாம் ; எப்பாடுபட்டாவது வாங்கிடலாம் ! என்ற தீர்மானத்துக்கு நான் வந்தும் ஆண்டுகள் இரண்டாச்சு ! தற்போதைய ஹெர்லாக் ஷோம்ஸ் கார்ட்டூன் கதைகளுக்கான கட்டணங்களைக் கேட்டால் நம்ப மாட்டீர்கள் !! அட, அவ்வளவு ஏன் - மாடஸ்டிக்கே நாம் தந்து வருவது ஒரு பெரும் தொகையே ! So அவசியமெனில் ; தரமான கதைகள் கிட்டிடுமெனில், பணங்களை ஒரு தடையாகிட இப்போதெல்லாம் அனுமதிப்பதில்லை ! But அதையும் மீறிய டாப் கியர் ராயல்டி எதிர்பார்ப்புகளை நடைமுறையில் கொண்டு வரும் நிறுவனங்களை நாம் பெருமூச்சோடு பராக்கு மட்டுமே பார்த்திடுகிறோம் ! 

So சில ஜாம்பவான் பதிப்பகங்களின்  exceptions நீங்கலாய், தரமான கார்ட்டூன்கள் ; தரமான டிடெக்டிவ்ஸ் ; தரமான ஆக்ஷன் ஹீரோக்கள் / கதைகள் என சிக்கியிருப்பின் - இன்னமும் அதே பழைய நாயகர்களோடு வலம் வந்து கொண்டிருப்போமா guys ? புதிதாய்க் கதைகள் இல்லை என்பதிலேயே ஒரு கதையும் புதைந்துள்ளதைச்  சுட்டிக் காட்டவே இந்த பதிவு !! "TEX இடத்தை ஆக்கிரமிக்காட்டி வேறு படைப்புகள் கொட்டித் தீர்த்திடும் !" என்ற எண்ணங்கள் சரியல்ல என்பதையுமே சொல்லத் தான்  ! Probably TEX ஸ்லாட்களைக் குறைத்திருந்தால் அந்த இடத்தில இன்னும் கொஞ்சம் மார்ட்டின் ; இன்னும் கொஞ்சம் ராபின் & ஜூலியா என்று வந்திருப்பார்கள் ; நீங்களும் இன்னும் கொஞ்சம் கழுவி ஊத்தி இருப்பீர்கள் !! கடைசி 7 ஆண்டுகளில் வெளியான மார்ட்டின் கதைகளுள் - "கனவுகளின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" & "மெல்லத் திறந்தது கதவு" நீங்கலாய் நினைவில் நின்ற கதைகள் எவையென்று எனக்கு நினைவூட்டுங்களேன் ப்ளீஸ் ? மிக உயரத்தில் அளவுகோல்களை நிறுத்திய பின்னே மனுஷன் சற்றே தடுமாறினாலும் ஒரு "நியூட்டனின் புதுஉலகம்" தானே பலனாகிறது ? சிலபல ஆளுமைகள் தாட்டியமாய் இடம்பிடித்திடும் வரை அவர்கள் தடைகளாய்த் தெரியக்கூடும் தான் ; ஆனால்  கதிரவனின் கத்திரி உக்கிரத்திலிருந்து நம்மை மறைத்து நிற்கும் சிகரங்கள் அவர்கள் என்பது பொறுமையாய் யோசித்தால் புரியும் ! 

"இவுகளை வுட்டா வேற நாதியே கிடையாதாக்கும் ? வேற கதையே கிடையாதாக்கும் ? அட போவியா ?!!' என்ற மைண்ட்வாய்ஸ் ஆங்காங்கே ஒலிக்குமென்பது எனக்குப் புரியாதில்லை ! Of course - மொத்த காமிக்ஸ் உலகையே அளந்த வாமணனும் அல்ல நான் ; இன்னமும் எனக்குத் தெரிந்திரா பதிப்பகங்கள் / தொடர்கள் என நிறையவே இருக்கக்கூடும் தான் ! ஆனால் இன்றைக்கு நமது தேடல்களை சாத்தியமாக்குவது இந்த 52 வயசுக்காரனின் ஆற்றல்கள் மாத்திரமே எனும் போது - அதனுக்குட்பட்டவற்றையே செயல்படுத்திட இயலுமன்றோ ?

சில ஆண்டுகளுக்கு முன்பாய் நண்பர்கள் சிலர் ஏதோ சில சுவாரஸ்ய தொடர்களின் புக்குகளைக் காட்டி - "இவற்றை முயற்சித்துப் பார்க்கலாமே ?" என்று கேட்டார்கள் ! நானும் அவற்றின் உரிமையாளர்களைத் தேடிப்பிடித்து கேட்ட போது - 'சாரி...அந்தக் கதைகள் எவற்றையுமே  டிஜிட்டலில் பத்திரப்படுத்தவில்லை ! So அவை இனி யாருக்கும் சாத்தியம் நஹி !' என்று கைவிரித்து விட்டார்கள் ! இதே அனுபவம் வெகு சமீபமாய் ஒரு மிகப்பெரிய பதிப்பகத்திடமுமே நேர்ந்தது ! அட்டகாசமாயொரு புது கவ்பாய் கார்ட்டூன் நாயகரை இனம்கண்ட மகிழ்ச்சியில் உரிமைகளுக்கோசரம் பேசத் துவங்கினால் - "அட...நாங்களே இப்படியொரு தொடரைப் போட்டிருப்பது இப்போது தான் தெரியுது ! வெரி சாரி...கோப்புகள் இல்லை !" என்று சொல்லிவிட்டார்கள் ! நானோ அதன் உரிமைகளை நிச்சயமாய் வாங்கிடலாமென்று பெயரெல்லாம் வைத்து விளம்பரமும் ரெடி செய்து விட்டேன் !! So நடைமுறை சிக்கல்களுக்கு இப்படியுமொரு பரிமாணம் உண்டு !

கடந்த 2 + ஆண்டுகளாய் கிராபிக் நாவல்களின் தடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நமது comfort zone-களிலிருந்து வெளியே வந்திடும் முயற்சிகளைச் செய்து தானே வருகிறோம் ? நடப்பாண்டின் சூப்பர்ஹிட்டான "பராகுடா" அந்த branching  out -ன் பலன் தானே ? "முடிவிலா மூடுபனி ; முடியா இரவு ; என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" ; நிஜங்கள் நிசப்தம்  போன்ற கதைகளெல்லாம் நம் வாசிப்புகளில் இடம்பிடித்திருப்பது மாற்று ஜானர்களையும் நாம் அரவணைக்க சிறுகச் சிறுகத் தயாராகி வருகிறோம் என்பதற்கான indicators தானே ? So ஒற்றை ராத்திரியில் டெக்ஸ் ; டைகர் ; ஜேம்ஸ் பாண்ட் என சகல கமர்ஷியல் நாயகர்களுக்கும் VRS தந்துவிட்டு முற்றிலும் புது வாசிப்புகளென்ற திக்கில் பயணிப்பது சாத்தியமாகாது என்பதை ஏற்றுக் கொள்வோமே guys !! வாசிப்பில் உசத்தி; கம்மி என்று ஏன் பாகுபாடெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பானேன் ? காலத்தில் பின்னோக்கிப் போயும், அங்கிருந்து முன்னோக்கி காலத்தில் பயணிக்கும் தோர்கல் கதைகளையும் நாம் பந்தாடத் தான் செய்கிறோம் எனும் போது நம் பயண திசையில் பிசகில்லை என்று நம்பிக்கை கொள்வோம் ! மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் ; but அவற்றை விரட்டி விரட்டிப் போய் அரவணைக்காது, take it as it comes என்று ஏற்றுக் கொண்டால் எல்லாம் சுகமே !! Just my two cents !!

And rest assured guys : நமக்கியன்ற கதைகளை / நமக்குகந்த கதைகளை / நமக்கு சாத்தியமாகிடும் கதைகளை ஓசையின்றித் தேடித் திரட்ட நான் முயன்று கொண்டேயிருப்பேன் ! Bye all !! See you around again !!

P.S : வரும் நாட்களில் "அந்தச் சந்தா ; இந்தச் சந்தா" என்ற பிரிவுகளே waste என்றாகிடும் போலும் !! கிட்டத்தட்ட 95 % சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா' சந்தாக்களே !! வெகு வெகு சொற்பமாய் இதர பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளோர் கண்ணில்படுகின்றனர் !! மனசுக்கு ரொம்பவே நிறைவைத் தரும் விஷயமிது !! Let's keep it going guys !!!

241 comments:

  1. நண்பர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  2. ///!! அட, அவ்வளவு ஏன் - மாடஸ்டிக்கே நாம் தந்து வருவது ஒரு பெரும் தொகையே///

    ஹிஹி.. அவ்வளவு சிரமப்படணுமா சார்.? :-)

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ஏற்கனவே அண்டர்டேக்கர் டாக்டரா மாறி சுத்திகிட்டிருக்காரு. இப்படியெல்லாம் சொன்னா கட்டை வண்டி கட்டி நேரா மேச்சரி வரப் போறாரு.

      Delete
    2. நா.. நான்.. வ..வவ..ந்து அ..அஅ..அது..க்க் கெல்லாம்.. பப்பப்பபப யயயப்ப் படமாட்டேன்..!

      வவ்வ்வ்வவவ வர.. ட்டும்ம்ம்மேமே...!

      Delete
    3. அவ்வளவு சிரம்ம பட்டதால் தானே ..

      ஒரே இளவரசி ,ஒரே மாடஸ்தி என இன்னமும் கோலோச்சுகிறார் அன்று முதல் இன்று வரை...:-)

      Delete
    4. எதுக்கு இவ்வளவு பயப்படறீங்க கண்ணரே? ஆர்டினின் ஆயுதம் மாதிரி மேச்சரி கண்ணனின் ஆயுதத்தை எடுங்க. உச்ச கட்டைல சங்கரா ன்னு பாட ஆரம்பிங்க. செனா மேச்சரிப் பக்கமே வர மாட்டாரு.

      Delete
    5. பாடணூமாக்கும்....

      தொண்டைய செருமுனாலே போதுமே...

      அந்த இருமல் சத்தத்துலயே கந்தர்வ கான குயில் இனிமைலயே...
      இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேன் னு செ அ ஓடீடுவாருல்ல....

      Delete
    6. இசையாலே வசமாகா இதயமெது..!

      Delete
    7. // ஹிஹி.. அவ்வளவு சிரமப்படணுமா சார்.? :-) //

      க்யாரே?
      ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ன்னு ஒரு புக்தான் வருது.
      அதுக்கும் ஆப்பு வைக்காதீங்க பெரியவரே!
      -மாடஸ்டி ஆர்மி.
      (உடல் துணிமணிக்கு!
      உயிர் மாடஸ்டிக்கு!)

      Delete
    8. ///உடல் துணிமணிக்கு!
      உயிர் மாடஸ்டிக்கு!)///

      ரெண்டுமே மாடச்ட்டிக்கு தேவைப்படாதே பாபு..!?

      Delete
    9. ஜான் - யோவான். பீட்டர் - பேதுரு மாதிரி மாடஸ்டி - மாடச்சட்டிங்கிறது பொருந்தி வருதே.

      Delete
    10. ஜான் - யோவான். பீட்டர் - பேதுரு மாதிரி மாடஸ்டி - மாடச்சட்டிங்கிறது பொருந்தி வருதே.

      Delete
    11. மடிப்பாக்கத்துலேருந்து உங்க வூட்டுக்கு ஆட்டோ வரும், பரவால்லையா? ;)

      Delete
    12. சொந்த ஆட்டோவாகவே இருந்தாலும் சென்னை To கரூர் ஒன்றரை நாள் ஆகிடும். அதுக்குள்ள ஐயாம் எஸ்கேப்.

      Delete
    13. சொந்த ஆட்டோவாகவே இருந்தாலும் சென்னை To கரூர் ஒன்றரை நாள் ஆகிடும். அதுக்குள்ள ஐயாம் எஸ்கேப்.

      Delete
    14. @கண்ணன்
      ஒரு பெண்மணி என்றும் பாராமல் அவ மரியாதையா ??

      Delete
    15. ///ஒரு பெண்மணி என்றும் பாராமல் அவ மரியாதையா ??///

      ஆணும் பெண்ணும் சமம்தானே சிவா.,
      எல்லாத்திலேயும்..!

      Delete
  3. VENKATESHC, உள்ளேன் ஐயா

    ReplyDelete
  4. நல்ல பதிவு.. ஒரே இரவில் உலகமே மொத்தமாய் மாறி விட போவதில்லை தான்..

    ReplyDelete
    Replies
    1. மொத்தமாய் மாறினாலும் குழப்பமே...:-)

      Delete
  5. அட்டகாசமான பதிவு இது சார். அப்படியே உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை கொட்டி விட்டீர்கள். எனக்கு உங்கள் வருத்தம் புரிகிறது சார். உங்களால் எப்போது முடியுமோ அப்போது நீங்கள் சுமக்கும் இதழ்களை வெளியிடுங்கள் சார். நான் காத்து இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  6. நிஜங்களின் நிசப்தம், சிப்பாயின் சுவடுகளில், இரவே இருளே கொல்லாதே போன்றவற்றை பிரித்து மேய்ந்நு ஆராதித்த நாங்கள்தான் டெக்ஸ் வில்லரையும் ரசிக்கிறோம்.!
    டெக்ஸ் வில்லரை ரசிப்போருக்கு கிநாக்களில் ஈடுபாடோ தெளிவோ இருக்காது என்பது போல் சொல்லவேண்டாமே..!?

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லர் ஒரு நல்ல டைம்பாஸ். ஸ்ட்ரெஸ் ரிலீவர். என்னை போன்ற டைகர் ரசிகனுக்கு டெக்ஸ் பிடிக்க அதுவும் ஒரு காரணம்.

      Delete
    2. // டெக்ஸ் வில்லர் ஒரு நல்ல டைம்பாஸ். ஸ்ட்ரெஸ் ரிலீவர். என்னை போன்ற டைகர் ரசிகனுக்கு டெக்ஸ் பிடிக்க அதுவும் ஒரு காரணம் //

      +9

      Delete
    3. //டெக்ஸ் வில்லர் ஒரு நல்ல டைம்பாஸ். ஸ்ட்ரெஸ் ரிலீவர். என்னை போன்ற டைகர் ரசிகனுக்கு டெக்ஸ் பிடிக்க அதுவும் ஒரு காரணம்.///

      என்னால் இது ஏன் முடியவில்லை?. தீபாவளி மலரில் இன்னமுமே டெகஸ் படிக்கவில்லை.
      லாஜிக் ஓட்டை இருந்தால் என்னால் படிக்க முடிவதில்லை.
      பாதி டெகஸ் காமிக்ஸ் படிக்க முடிந்தது. இரண்டு வில்லன்கள் பேசினால் மூன்றாவது வில்லன் ஒட்டுகேட்டு கேட்டு விடுகிறான்.
      ஒருதடவை ஒட்டு கேட்கும் படலம் நடந்தால் பரவாயில்லை, ஒவ்வொரு முறையும் என்றால் எப்படி?.

      Delete

    4. // டெக்ஸ் வில்லர் ஒரு நல்ல டைம்பாஸ். ஸ்ட்ரெஸ் ரிலீவர்\\

      எனக்கு டெக்ஸ் தான் எனக்கு ஸ்ட்ரெஸை வரவைக்கிறார்.

      Delete
  7. ///வெகு சமீபமாய் ஒரு மிகப்பெரிய பதிப்பகத்திடமுமே நேர்ந்தது ! அட்டகாசமாயொரு புது கவ்பாய் கார்ட்டூன் நாயகரை இனம்கண்ட மகிழ்ச்சியில் உரிமைகளுக்கோசரம் பேசத் துவங்கினால் - "அட...நாங்களே இப்படியொரு தொடரைப் போட்டிருப்பது இப்போது தான் தெரியுது ! வெரி சாரி...கோப்புகள் இல்லை !" என்று சொல்லிவிட்டார்கள் ! நானோ அதன் உரிமைகளை நிச்சயமாய் வாங்கிடலாமென்று பெயரெல்லாம் வைத்து விளம்பரமும் ரெடி செய்து விட்டேன் !! ///


    வடை போச்சே..!!


    ஏதாச்சும் மிராக்கிள் நடக்க வாய்ப்பு இருக்குமா சார்..!?

    ReplyDelete
    Replies
    1. மிராக்கிளா நடந்தா பைசைக்கிள்ள போயாச்சும் வாங்கீடுங்க....

      Delete
  8. நடைமுறை சிக்கல்களும் யதார்த்தமும் உங்களுக்கு மட்டுமே தெரியும். எது சாத்தியப்படுமோ அதை சரியான தருணத்தில் கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.

    ஆல் இன் ஆல் அழகுராஜா அதிகம் பதிவாகுதுன்னா அது உங்களுடைய அட்டவணைக்கான கடின உழைப்பின் வெற்றி. அப்படியே போன வருடத்தை விட ஒரு 50 சந்தா அதிகமானா இன்னும் சந்தோசம்.

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு முறை அட்டவணை வெளிவரும் போதும் இவ்வாறு கேட்பது சகஜம்தானே sir. உரிமையுடன் உங்களிடம் தான் கேட்க முடியும் . அனைவரையும் திருப்தி படுத்துவது கடினம், கதைகளை தேர்ந்தெடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சியும் சிரமமும் புரிகிறது. உங்களது மன பாரத்தை இறக்கி விட்டீர்கள்.

    அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் எல்லாம் சுகமே.

    ReplyDelete
  10. மார்ட்டின் கதையில் நீங்க மேலே சொன்ன மூன்று கதைகள் தவிர 7 வருடத்தில் எத்தனை கதை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் தீபாவளி ஸ்பெஷலில் வந்துள்ள விசித்திர உலகம் டக்கரான கதை என்று மட்டும் சொல்வேன். நீங்க சொன்ன மூன்றொடு நாலாவதாய் இதுவும் இடம் பிடிக்கும்..

    அப்புறம் மற்ற ஜானர் கதைகளில் வேறு பதிப்பகங்களோடு முடியாவிட்டாலும், போனெல்லியில் இருந்தாவது ஏதாவது பாத்து பண்ணுங்க சார். போனெல்லி கி.நா எல்லாம் இப்போ சமீப காலமா படிச்சு வறோம். அவங்க dampyr ஐ படமாக எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாம இன்னும் காமிக்சாய் கூட பார்க்கலை.

    இங்க நிறைய பேருக்கு டைலன் டாக் பிடிக்கலை. ஆனா அவர் டிசி ல பேட்மேனோடு சாகசம் பண்ண போயிட்டார். நீங்க சொன்னது போலவே ரசனைகளில் விசாலம் தேவை நமக்கு. அதை கொஞ்சம் கொஞ்சமாக நீங்க தருவிங்கன்னு நம்பிக்கை இருக்கு! 💐💐

    ReplyDelete
  11. ///வரும் நாட்களில் "அந்தச் சந்தா ; இந்தச் சந்தா" என்ற பிரிவுகளே waste என்றாகிடும் போலும் !! கிட்டத்தட்ட 95 % சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா' சந்தாக்களே !! வெகு வெகு சொற்பமாய் இதர பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளோர் கண்ணில்படுகின்றனர் !! மனசுக்கு ரொம்பவே நிறைவைத் தரும் விஷயமிது ///

    வாசகர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த எடிட்டர் என்பது இதன்மூலம் புலனாகிறது சார்.!

    நாடியை நல்லாப் பாக்குறதாலே.. எனக்கு மட்டும் பவர் இருந்தா உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்திடுவேன் சார்.!

    ஆனா அதைவெச்சி நர்ஸ் செலக்ஷன் பண்ணி கிளினிக்கெல்லாம் ஆரம்பிக்கப்டாது.. ஆம்மா..! :-)

    ReplyDelete
    Replies
    1. நர்ஸ செலக்ஷன் பண்ணா நாமதான் கிளினிக் ல இருக்குற மாதிரி ஆயிடும்

      Delete
    2. பரவாயில்ல...நா பார்மசிஸ்ட்...

      Delete
    3. அப்போ நான்தான் பேஷண்ட்.

      Delete
  12. முதலில்,உங்களுக்கு, நன்றி வணக்கம், சார்,இந்த குதிரை ஓடுமா,அந்த,குதிரை ஓடுமா,என்று யோசிக்க வேண்டாம்,விற்பனையில்,முதலிடம்,காண்பது,எந்த கதையோ அதற்கு முதலிடம்,கொடுப்பது தானே முறை,உண்மையே, டெக்ஸ்,டைகர்,லக்கி லுக்,இவை, மூன்றும் தானே விற்பனையில்,முதலிடம், பிறகு தானே மற்ற கதைகள், கதையும், ஓவியமும் ஒரே நேர்கோட்டில், சென்றால், அந்த கதையும் வெற்றி தானே, வருடம் ஒன்று, புது, கதைகள் தரலாமே,

    ReplyDelete
  13. Science fiction, Horror stories, History related comics - we can try...sir u can choose few in this category
    Science fiction comics will be useful for our future generation kutties. I fully support on this.

    ReplyDelete
  14. எம்மாம் பெரிய மாத்திரை.....

    படித்துவிட்டு வருகின்றேன் நண்பர்களே...

    ReplyDelete
  15. //"கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போது - சித்திர பாணிகள் ரொம்ப ரொம்ப ஏமாற்றமளித்தன ! நீங்களும், நானும் பென்சிலை எடுத்துக் கொண்டு படம் போட்டிருந்தால் எவ்விதமிருக்குமோ - அப்படியிருந்தது" //உண்மை சார்.மர்ஜானே சத்ரபி என்ற பெண் எழுத்தாளரின் ' ஈரான்- குழந்தைப்பருவம்" கிராபிக் நாவல் என்று விளம்பரப்பபடுத்தி இருந்ததைப் பார்த்து வாங்கி. படிக்க முடியாமல் நொந்துபோய் புத்தகம் இன்றுவரை தூங்குகிறது. சித்திரங்கள் நீங்கள் சொன்ன அதேவிதம். சிலசமயம் நமது எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளித்துவிடுகின்றன என்பதே நிஜம்.

    ReplyDelete

  16. Tex is our flagship brand. No one can replace him for many years to come. I can read a new Tex everyday if possible 😊😊

    ReplyDelete
  17. //"கோப்புகளை வரவழைத்துப் பார்த்த போது - சித்திர பாணிகள் ரொம்ப ரொம்ப ஏமாற்றமளித்தன ! நீங்களும், நானும் பென்சிலை எடுத்துக் கொண்டு படம் போட்டிருந்தால் எவ்விதமிருக்குமோ - அப்படியிருந்தது" //உண்மை சார்.மர்ஜானே சத்ரபி என்ற பெண் எழுத்தாளரின் ' ஈரான்- குழந்தைப்பருவம்" கிராபிக் நாவல் என்று விளம்பரப்பபடுத்தி இருந்ததைப் பார்த்து வாங்கி. படிக்க முடியாமல் நொந்துபோய் புத்தகம் இன்றுவரை தூங்குகிறது. சித்திரங்கள் நீங்கள் சொன்ன அதேவிதம். சிலசமயம் நமது எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளித்துவிடுகின்றன என்பதே நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. ///.மர்ஜானே சத்ரபி என்ற பெண் எழுத்தாளரின் ' ஈரான்- குழந்தைப்பருவம்" கிராபிக் நாவல் என்று விளம்பரப்பபடுத்தி இருந்ததைப் பார்த்து வாங்கி. படிக்க முடியாமல் நொந்துபோய் புத்தகம் இன்றுவரை தூங்குகிறது.///

      கை கொடுங்க சார்..!

      எங்கிட்டயும் அந்தப்புத்தகம் இருக்கு.! பாதி கூட தாண்டமுடியவில்லை..! காரணம் சித்திரங்கள் மட்டுமில்லை..!

      Delete
    2. சித்திரங்கள் மட்டும் இல்லையா...

      பெரிய எழுத்து கோலப்ப நாயனார் புராணம் மாதிரி இருக்கோ...

      Delete
    3. J ஐயா..@

      அத்தேதானூங்கோ..!

      Delete
    4. என்னா ஒரு சந்தோஷம். சிவந்த மண் படத்துல நாகேஷ் நம்பியார்கிகிட்ட மாட்டிகிட்டதும் மத்தவங்ககள எட்டி எட்டி பார்ப்பாரே, அதுமாதிரி.

      Delete
  18. லார்கோ ஷெல்டன் அண்டர்டேக்கர் போன்றவர்களை கை குலுக்கி அனுப்பி விட்டோம் அதற்கு பதில் நாம் கூட்டி வந்திருக்கும் ஒரே புது வரவு சோடா மட்டுமே.
    நம் ரசனை எனும் குதிரையை வேறு பக்கம்செலுத்தும் நேரமிது இல்லை எனில் குண்டுசட்டியில் குதிரையை ஓட்ட வேண்டியதாகி விடும். இப்போ இல்லை என்றல் எப்போ? ஒரு சோதனை முயற்சியாய் பலதரப்பட்ட ஜானர்களை (ஹாரர் மாயாஜாலம் sci-fi வரலாறு வார்) என ஒரு சந்தாவை உருவாக்கி பார்ப்போமே விரும்புவோர் இணையும் பொருட்டு ?
    M H MOHIDEEN

    ReplyDelete
  19. War comics பிடிக்காதவங்க இருக்காங்களா? என்ன கொடும சார் இது...

    ReplyDelete
  20. Every year allot two slots for new genres for pilot study or in the kundu book sir...

    ReplyDelete
  21. இனிய ஞாயிறு காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே!!

    ReplyDelete
  22. எது நடைமுறைக்கு சாத்தியமானது என்பது எங்களை விட தங்களுக்குத்தான் புரியும் சார்..

    நிறைவான "ரசிக " இதழ்கள் வரும்பொழுதே மற்ற ரசிக பாணி இதழ்ஐளையும் தேர்ந்தெடுத்து கொண்டு தானே வருகிறீர்கள்..

    டெக்ஸை ரசிக்கும் நண்பர்கள் தாம் கிராபிக் நாவல்களையும் ரசித்து கொண்டாடி வருகிறார்கள்..


    கமர்ஷியல் நாயகரை விரும்புவோர் கிராபிக் நாவலை விரும்ப மாட்டார்கள் என்ற "மாயை " எல்லாம் முடிந்து போன ஒன்று சார்..அதற்கு காரணமும் தங்களின் தேர்வுகள் தாம்..

    எந்த சமயத்தில் ,எப்பொழுது பாதையை திசை திரும்பி போக வேண்டும் என்பது தாங்கள் அறிவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் ..


    எனவே நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள்..உங்கள் பாதையில் நாங்கள் தொடர்கிறோம்..

    ReplyDelete
  23. P.S : வரும் நாட்களில் "அந்தச் சந்தா ; இந்தச் சந்தா" என்ற பிரிவுகளே waste என்றாகிடும் போலும் !! கிட்டத்தட்ட 95 % சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா' சந்தாக்களே !! வெகு வெகு சொற்பமாய் இதர பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளோர் கண்ணில்படுகின்றனர் !! மனசுக்கு ரொம்பவே நிறைவைத் தரும் விஷயமிது !

    #######


    இந்த பதிவிற்கான விடையும் இந்த பின்குறிப்பிலியே உள்ளது சார்..


    வாழ்த்துக்கள்..:-)

    ReplyDelete
  24. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  25. எங்கள் பொழுதுபோக்குக்கு உதவுவது ஆக்க்ஷன் நிறைந்த பரபர கதைகளே.அதை மனதில் கொண்டு நல்ல புத்தகங்களை வெளியிடுங்கள். எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. :-))))


      சுருக்கமாக அழகாக சொல்லி விட்டீர்கள் நண்பரே..)

      Delete
  26. And rest assured guys : நமக்கியன்ற கதைகளை / நமக்குகந்த கதைகளை / நமக்கு சாத்தியமாகிடும் கதைகளை ஓசையின்றித் தேடித் திரட்ட நான் முயன்று கொண்டேயிருப்பேன்


    #######


    டெக்ஸ் ரசிகர்கள் காத்திருக்கிறோம் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. அப்போ மற்ற ரசிகர்கள்?????

      Delete
    2. அதெல்லாம் கேட்டா பதுங்குகுழிக்கு ஜூட்....

      Delete
    3. மற்ற ரசிகர்களை அவர்களை தான் கேட்க வேண்டும் ..இதற்கு எல்லாம் பதுங்கு குழி தேவையில்லை ஜே சார்..:-)

      Delete
  27. எல்லா மாதமும் இதழ்கள் கிடைத்தவுடன் ஓரிரு நாளில் படித்து முடித்துவிடும் நடைமுறை இந்த முறை தடையாகி விட்டது சார்..

    தீபாவளி மலரில் டெக்ஸ் கதை மட்டுமே படிக்க முடிந்துள்ளது ..மற்ற
    கதைகளை இன்று தான் படிக்க முடியம் என நினைக்கிறேன்..


    படித்தவரையில்..

    ஷெல்டன் ..ஆரம்பத்தில் வாரிசு முறைகள் கொஞ்சம் குழப்பினாலும் ஷெல்டன் வருகைக்கு பிறகு பரபர ..


    கர்னல்...மோசமும் அல்ல ஆஹா,ஓஹோ ரகமும் அல்ல ..அதே சமயம் முன்னர் வந்த சாகஸங்களுக்கு இது பரவாயில்லை ரகம் ..

    டெக்ஸ்...மேலே நண்பர் சொன்ன படி நல்ல பொழுது போக்கான ஆக்‌ஷன் கதையே ( ஆக்‌ஷன் குறைவாகவே இருந்தாலும் )


    மார்ட்டின் ,ஜூலியா ,ராபின்,டைலன் இனியே...

    ReplyDelete
  28. // Women-centric காமிக்ஸ் ஒரு வண்டியுள்ளன ! ஆனால் கையில் பிஸ்டலைத் தூக்கிப்புட்டு 'பிளாம்-பிளாம்' என்று ரகளை செய்யாட்டி - "ஐயே...இந்தப் புள்ளே தேறாது போலிருக்கே !!" என்று முத்திரை குத்திடுகிறோம் - LADY S ; ஜூலியாவுக்கு நேர்ந்தது போல ! //

    லேடி S மற்றும் ஜுலியா கதைகள் எனக்கு
    மகவும் பிடித்தது. புதிய கதை களங்கள் வித்தியமான பாணி. வரவேற்பு இல்லாதது வருத்ததை அளிக்கறது.

    ReplyDelete
  29. நான் என்னுடைய online சந்தா செலுத்த முடியவில்லை.
    Password மறந்து விட்டேன். அதை reset செய்ய முடியவில்லை.
    Online தளத்தை ஒரு முறை reset செய்யும்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எந்தத் தளத்தில் சிக்கல் சார் ?

      Delete
    2. Lioncomics.in னில் தான் எப்போதும் பணம் செலுத்துவேன்.
      பாஸ்வேர்ட் மறந்து விட்டது.forgot password click செய்து மாற்றம் செய்ய முடியவில்லை.

      Delete
  30. சார். பார்த்துபார்த்துஒன்னொன்னாடிக்அடிச்சுஒருரூட்டில்பயணத்தைஆரம்பிச்சாச்சு. நாங்களும்மூட்டைமடிச்டுபயணத்திற்குரெடியாயாச்சு. இப்போஏன்திடீர்தடுமாற்றம். பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டஒருஅட்டவணையும்ரெடி. உங்கள்கரம்பிடித்துநடக்கநாங்களும்ரெடிபயணத்தைஆரம்பிப்போம். நாரறிந்தவரைமாடஸ்டியைப்போன்ஒருஹீரோஅல்லதுஹுரோயின்ஆக்ஷன்டெம்ப்ளேட்டில்இல்லவேஇல்லை. விதிவிலக்குராபின்ஒருவரே. கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. No தடுமாற்றம்ஸ் சார் ! ஒருவாட்டி மண்டைக்குள் ஒரு பாதை fix ஆகிவிட்டால் அப்பாலிக்கா நானே என் பேச்சைக் கேட்க மாட்டேன் !

      Delete
  31. புதிய கதைகள் கௌபாய் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்று ஆக்ஷன் கதைகளாக இருக்க வேண்டும் ௭ன்ற எதிர்பாரப்பகள் தான் காரணம். அல்லது நாம் படித்த கதைகளோடு ஒற்று படுத்தி பார்க்க படுகறது. புதிய கதைகளை அதன் பாணியில் ரசிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து சகோ இதை தான் ஆசிரியரும் சொன்னார்.

      Delete
  32. இதை போட்டிருக்கலாம் அதை கழற்றி விட்டிருக்கலாம் இது ஓவர்டோஸ்னு சொல்பவர்ளுக்கு தெளிவாக மிகச் சிறப்பாக பதிலளித்துள்ளீர்கள் சார், நல்லா ஓடும் குதிரைகளின் மீதுதான் யாருமே பந்தயம் கட்டுவார்களே இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல! அதே போல சிலகதைகளை போடததின் சிக்கலும் தெளிவாக புரிகிறது! அதே 40 ரூபாய் விலையில் வெளிவரப்போகும் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் விற்பனையில் புதிய அத்தியாயம் எழுதுமென நம்புகிறேன்! நல்ல முயற்சி

    ReplyDelete
    Replies
    1. //40 ரூபாய் விலையில் வெளிவரப்போகும் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் விற்பனையில் புதிய அத்தியாயம் எழுதுமென நம்புகிறேன்! நல்ல முயற்சி//

      நம்பிக்கையோடு முயற்சிப்போம் சார் !

      Delete
  33. நல்ல ஆழமான பதிவு. நிறைய விஷயங்களை பற்றி எங்களுக்கு புரிய வைக்க முயன்று இருக்கிறீர்கள் சார். நிறைய இடங்களில் உங்களுக்கே உரித்தான நையாண்டி. பல இடங்களில் சிரித்து விட்டேன்.

    ReplyDelete
  34. 99 என்னும் சுப்பர் ஹிரோ காமிக்ஸ் முடிந்தால் முயற்சி செய்யவும்.

    நான் superhero காமிக்ஸ் ரசிகன் கிடையாது. ஆனால் அந்த தொடர் என்னை மிகவும் கவர்ந்தது விட்டது.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் அது என்ன title? But நான் சூப்பர் ஹீரோ ரசிகனே

      Delete
    2. 99 விதமான அதீத சக்திகள் கொண்ட மனிதர்களை ஒரு புரபஸர் ஒன்றினைப்பார்.

      அவர்கள் ஒவ்வொருரிடமும் ஒரு மந்திர கல் இருக்கும்.

      ருகால் என்னும் சக்தி வாய்ந்த வில்லன் அந்த 99 கல்லையும் அடைய நினைப்பான்.

      Action னும் இருக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு நபரின் குடும்ப பின்புலம் மற்றும் குணதிசயம் போன்ற வைகளும் நன்கு விவரிக்க பட்டிருக்கும்.

      கதை வலுவாக இருக்கும் சுப்பர் ஹீரோ காமிக்ஸ் இது.

      Delete
    3. Title of the book? Is it available in Amazon?

      Delete
    4. எனக்குத் தெரிந்த "99" தொடர் இதுவே சார் :

      https://en.m.wikipedia.org/wiki/The_99

      Delete
    5. கணேஷ் சொன்னதும் இதுவே சார். நன்றி

      Delete
  35. இனிமையான காலை வணக்கம் சார்.

    முதலில் எமது ஆதங்க கேள்விக்கு இப்பதிவை பதிலாக்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    வழமைபோல் நடைமுறை எதார்த்தங்களை நிறைவாக சொல்லியமைக்கும் தலை வணங்குகிறேன்.

    எந்திரமயமாகிக் கொண்டே போகும் மானுட வாழ்வியலில் எஞ்சி நின்று சுவை கூட்டுவது புத்தகங்கள் மட்டுமே.

    அச்சுவையிலும் தீஞ்சுவை காமிக்ஸ் மட்டுமே.ஏனென்றால் அவை பால புருவங்களின் பிரதிபலிப்புகள்.

    அதன் தொடர்ச்சியாக இதுவரை வளர்ந்து விட்ட எங்களை இக்கலை கட்டியே வைத்துள்ளது.கால ஓட்டத்தில் மாறாமல் பயணிப்பது இக்கணத்தில் சாத்தியமில்லை...

    உங்கள் அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்து ஏற்புடையதை அணைத்துக்கொள்ள தயங்கியதில்லை.
    ஆனால் மறுபதிப்புகள் ஆக்ரமித்துக் கொள்ளும் இடங்களே எமது ஆதங்கமாய் வெளிப்பட்டன.

    கொட்டிக்கிடக்கும் ஊரளவில்
    வெட்டிக்கொண்டது பெயரளவில் மாத்திரமே என்பது நிதர்சனம்.ஏற்கனவே படித்து ரசித்து சிலாகித்தும் கைவசமும் உள்ளவற்றை மீண்டும் தருகின்றீர்களே....என்பதே எனது கருத்து.
    007ஐ நீங்கள் பிரஸ்தாபிக்காமல் இருந்திருந்தால் என்ற வகையில் எண்ணிப் பாருங்கள்... வேறிரண்டு நவீனங்கள் ஆங்கிருந்திருக்கும்.....

    மேற்கூறியவை எமது எண்ணம் மாத்திரமே.

    "காணாது கண்ட கம்பங்கூழ
    சிந்தாம குடிடி சில்லி மூக்கி"

    ReplyDelete
    Replies
    1. //007ஐ நீங்கள் பிரஸ்தாபிக்காமல் இருந்திருந்தால் என்ற வகையில் எண்ணிப் பாருங்கள்... வேறிரண்டு நவீனங்கள் ஆங்கிருந்திருக்கும்.....//

      இன்னொரு 2 இளம் டெக்ஸ்
      கதைகளும் ; இன்னொரு மாடஸ்டியும் அங்கே பிடித்திருப்பார்கள் சார் !

      Delete
    2. அதற்கு 007 எவ்வளவோ தேவலாம்

      Delete
    3. இந்த இரண்டு தேர்வுகளுமே எனக்கு ஓகே சார்...:-)

      Delete
  36. எனக்கு கிநாக்கள் பிடிக்கும். எந்த புதிய கதை களங்களை வரவேற்பேன்
    கேப்டன் டைகரின் தீவர ரசிகை. ஜான் வான் ஹாமே கதைகள் ரொம்ப விருப்பம்.
    ஆனால் டெக்ஸ் தான் என் சூப்பர் ஹீரோ.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலோனோரின் எண்ணங்களை பிரதிபலித்து இருக்கிறீர்கள் கடல்யாழ்..!

      Delete
    2. @ கடல்யாழ் : ஒ .வா .தி. வா . !

      Delete
    3. கடல் யாழ் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒத்து கொள்கிறேன். டெக்ஸ் தான் என் சூப்பர் ஹீரோ தவிர.

      Delete
    4. ஆனால் கடல்யாழ் அவர்களுக்கு ,அவரின் சூப்பர்ஸ்டாரை ஒத்து கொள்வதற்கு தடை ஏதும் இல்லையே...:-)

      Delete
    5. சரி தான் தலைவரே. அவருக்கு தான் சூப்பர் ஸ்டார் எனக்கு இல்லை.

      Delete
    6. அவரும் அவருக்கு தான்னு சொல்லியிருக்காங்க குமார் ..உங்களுக்கும்ன்னு சொல்லலையே ..

      Delete
    7. கடல்யாழ் ரம்யா டைகர் ரசிகையாக இருந்தாலும் மனதில் உள்ள உண்மையான கருத்தை சொன்னதுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏

      Delete
  37. விஜயன் சார்
    // ஒற்றைப் பக்க gags கொண்ட அட்டகாச கார்ட்டூன்கள் உள்ளன ! எனக்கு அவற்றைப் பார்க்கும் போது நாவில் ஜலம் ஊறும் தான் ! //

    இவைகளை அனைத்து சந்தாவும் செலுத்தும் நண்பர்களுக்கு அல்லது ஏதாவது சிறப்பிதழுடன் இலவசமாக காமிக்ஸ் ஏதாவது கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் இதுபோன்ற கார்ட்டூன் கதைகளை குறைந்த பக்கங்கள் அல்லது உங்களால் முடியும் அளவுக்கு அல்லது சந்தாதாரர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கலாமே? இந்த முயற்சியில் கதை பிடித்து விட்டால் அதற்கு பின்னர் வரும் ஆண்டுகளில் சந்தாவில் சேர்க்கலாமே?

    இது புதிய கதைகள் வெற்றிபெறுமா என நினைக்கும் வேறு கதை/களங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. இலவசமாய் எதற்காக பரணி?.

      அதே நாற்பது ரூபாயில் வரட்டுமே...

      Delete
    2. இவை ரசனைசார் விஷயங்களேயன்றி பணம்சார் பிரச்னையாய் நான் பார்த்திடவில்லை !

      லியனார்டோவை நாம் உதற பக்க நீளங்களைத் தாண்டியேதேனும் காரணங்கள் சொல்லுங்களேன் ?

      Delete
    3. லியனார்டோவின் சில கதைகளை வாண்டு ஸ்பெஷலில் கொடுக்க முடியுமா? வாண்டுகளை சிந்திக்க மற்றும் சிரிக்க வைக்க சரியான ஆள்.

      Delete
  38. // வரலாறு சார்ந்த காமிக்ஸ் படைப்புகள் again கொட்டிக் கிடக்கின்றன ! நம்மிடம் ஆர்வம் + பொறுமை அவசியமல்லவா //
    நாம் இன்னும் போக வேண்டிய தூரங்கள் எவ்வளவோ உள்ளன,எனினும் தற்போதைக்கு இருக்கும் பட்டியலே நீளமாக உள்ளதால் நெரிசல்கள் குறைய,குறைய ஏற்படும் வெற்றிடங்கள்,தேடுதல்கள்,மன மாற்றங்கள் போன்றவைகளின் அடிப்படையில் வரும் காலங்களில் மற்றவைகளுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்று நம்புவோமாக.....

    ReplyDelete
  39. // ஒற்றைப் பக்க gags கொண்ட அட்டகாச கார்ட்டூன்கள் உள்ளன ! எனக்கு அவற்றைப் பார்க்கும் போது நாவில் ஜலம் ஊறும் தான் ! //
    அடடே,கேட்கும்போதே ஆசையா இருக்கே....

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன் என்று கேட்டாலே காதல் ஆகிறதே

      Delete
  40. // ஆனாலும் புதுசாய் வரக்கூடிய கதைகளுக்கு இந்தக் கிழட்டு ஹீரோக்கள் கேட் போடுவதில் வருத்தம் //
    விற்பனையிலும்,வரவேற்பிலும் இவர்கள் சாதிக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லையே,புதுசோ,பழசோ நமக்கு பிடிச்சிருக்கா,கதையில் வலு இருக்கா என்பதே முக்கியம்....
    வரும் காலங்களில் புதுசுக்கு 50 சதவீதம்,பழசுக்கு 50 சதவீதம் என சம அளவில் வாய்ப்பு கிட்டினால் இதுபோன்ற சிந்தனைகள் குறையுமோ என்னவோ.....

    ReplyDelete
    Replies
    1. 'புதுசு' என்ற ஒரே அளவுகோல் போதாதே சார் - வாசிப்புக்குத் தேர்வாகிட !

      Delete
    2. 'புதுசு' என்ற ஒரே அளவுகோல் போதாதே சார் - வாசிப்புக்குத் தேர்வாகிட !

      #######


      100 % உண்மை சார்..

      Delete
  41. தீபாவளி டெக்ஸ், பேன்சி ரக வெடி மாதிரி எதிர்பாபார்த்தேன் கம்பி மத்தாப்பு மாதிரி ரகம்..

    ReplyDelete
    Replies
    1. கம்பி மத்தாப்பா..

      எம்ஜியாரு பாம்பு மாத்திரை கொளுத்தினதேயில்லையோ...

      Delete
  42. நானே பரவாயில்ல போலிருக்கே.

    ReplyDelete
  43. // வாசிப்பில் உசத்தி; கம்மி என்று ஏன் பாகுபாடெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பானேன் ? //
    சரிதான் சார்......

    ReplyDelete
  44. // எனது கைவசமே தற்சமயம் குறைந்தது 5 சூப்பர் ஆல்பங்கள் உள்ளன - 'ஏக் தம்'மில் வெளியிட வேண்டிய நெடுந்தொடர்களாய் //
    அடடே,அடடே, கேட்கும் போது நாக்கு சப்பு கொட்டுதே,வருசத்துக்கு ஒன்னு போட்டாக் கூட 5 வருசம் ஆகும்போல,ஹும் இந்த கதையெல்லாம் எப்ப தரிசிக்க........
    ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா,இதையெல்லாம் போட.......

    ReplyDelete
    Replies
    1. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முன்பதிவுக்கென முயற்சி செய்யலாம்..!இல்லையென்றால் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இல்லையென்றால் நம்ம தலீவரோட கன்னால நாள் போன்ற முக்கிய விசேச நாட்களுக்கு வெளியிடலாம்.. முன்பதிவு அடிப்படையில்..!

      ஏக் தம்மில் அப்படிப்பட்ட கதைகளை படிப்பதற்கு மிகவும் ஆவலாய் இருக்கிறோம் சார்.!

      Delete
    2. சத்தியமாக நானும் இதே தான் நினைத்தேன் ரவி சார். பட்ஜெட் மிகப்பெரிய தடை ஆக இருக்கிறதே. கண்ணன் சொன்ன ஐடியா ஓகே 3 months ku பதில் 6 மாதமாக வைத்து கொள்ளலாம். வருடத்திற்கு இரண்டு புத்தகங்கள் முன் பதிவுக்கு மட்டும்.

      Delete
    3. அதற்கொரு திட்டமுள்ளது ; லேசாய் மண்டைக்குள் துளிர் விட்டுவரும் அந்த யோசனையை சித்தே டெவெலப் செய்துவிட்டுச் சொல்கிறேன் நண்பர்களே !

      Delete
    4. // சத்தியமாக நானும் இதே தான் நினைத்தேன் ரவி சார். //
      இதுக்கு ஏன் குமார் சத்தியம் எல்லாம்.....

      Delete
    5. // ஏக் தம்மில் அப்படிப்பட்ட கதைகளை படிப்பதற்கு மிகவும் ஆவலாய் இருக்கிறோம் சார்.//
      அதே,அதே.....

      Delete
    6. // அந்த யோசனையை சித்தே டெவெலப் செய்துவிட்டுச் சொல்கிறேன் நண்பர்களே ! //
      அருமை சார் அருமை,அப்படியே அந்த யோசனையை டெவலப் அண்ணி,டெவலப் பண்ணி உருவேத்தி ஒரு பென்டிரைவில் காப்பி பண்ணி வெச்சிடுங்க சார்...
      ஏன்னா பல யோசனையில் மறந்து போயிடக்கூடாது இல்லையா....
      சரியான நேரத்தில் டபக்குனு உள்ளே இறக்கிடுங்க...

      Delete
    7. // அதற்கொரு திட்டமுள்ளது ; லேசாய் மண்டைக்குள் துளிர் விட்டுவரும் அந்த யோசனையை சித்தே டெவெலப் செய்துவிட்டுச் சொல்கிறேன் நண்பர்களே ! // ஆஹா ஆஹா அருமை அருமை சார். நல்ல செய்தியாக சொல்லி இருக்கிறீர்கள் காலை வேளையில் நன்று நன்று.

      Delete
    8. // அதற்கொரு திட்டமுள்ளது //
      வரும் ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் லயன் முத்து 450 மற்றும் லயன் 400 இதழ்கள் வர வாய்ப்புருக்குதானே சார்,சும்மா ஒரு ஞாபகத்துக்கு சார்.....

      Delete
    9. ///அதற்கொரு திட்டமுள்ளது ; லேசாய் மண்டைக்குள் துளிர் விட்டுவரும் அந்த யோசனையை சித்தே டெவெலப் செய்துவிட்டுச் சொல்கிறேன் நண்பர்களே !///

      ஆஹா.. இது போதுமே..!

      விரைவாக டெவலப் செய்யுங்க சார் ப்ளீஸ்..!

      Delete
  45. சார் அந்த லாயல்டி பாயிண்ட் நிலவரம் என்ன சார் ???

    ReplyDelete
    Replies
    1. போன வருஷம் இதற்கெனவொரு ஈ-மெயில் ஐடி-லாம் உருவாக்கினால் மொத்தமே 3 பேர் தான் பதில் போட்டார்கள் சார் ! இம்முறை ஏதேனும் one shot redemption திட்டமிடணும் போலும் !

      Delete
  46. எனக்கு டிடெக்டிவ் ஜெரோம் பிடித்திருந்தது.. ஸ்மர்ஃப் பிடித்திருந்ததது.. ஜில் ஜோர்டான் பிடித்திருந்தது.. சுட்டி லக்கி பிடித்திருந்தது.. ரின்டின்கேன் பிடித்திருந்நது.. லேடி S பிடித்திருந்தது..

    இவையெல்லாம் இந்த வருசம் வராததுக்கு டெக்ஸ் வில்லர்தான் காரணம்.. நிறைய பேத்துக்கு டெக்ஸ் பிடிக்கிறதுதான் காரணம்.. டெக்ஸ் நிறைய விக்குறதுதான் காரணம்..


    அப்படீன்னு நான் சொன்னா..

    நீங்க என்னைப்பத்தி என்ன நினைப்பிங்க..!?:-)

    ReplyDelete
    Replies
    1. //நீங்க என்னைப்பத்தி என்ன நினைப்பிங்க..!?:-)//

      நாயித்துக்கிழமை சமையலை சித்தே சாவகாசமாய்த் தொடங்குவதாக உங்களுக்கு உத்தேசம் என்று !

      Delete
    2. //நாயித்துக்கிழமை சமையலை சித்தே சாவகாசமாய்த் தொடங்குவதாக உங்களுக்கு உத்தேசம் என்று !//

      😂😂😂😂😂

      Delete
    3. ///நாயித்துக்கிழமை சமையலை சித்தே சாவகாசமாய்த் தொடங்குவதாக உங்களுக்கு உத்தேசம் என்று !///

      சூட்சுமத்தை கண்டுவுட்டிங்களே சார்..!:-)

      Delete
  47. நமது நண்பரும் காமிக்ஸ் ஆர்வலருமான பிரான்ஸ் ராட்ஜா அவர்களின் மாமனார் முன்னால் MLA திரு.புருசோத்தமன் (புதுவை அதிமுக செயலாளர்) அவர்கள் காலமானார் என செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  48. \\காமிக்ஸ் படிக்க நான் நினைப்பது எனக்குள் உள்ள இளைஞனை ; பாலகனை மீட்டெடுத்துக் கொள்ளவே ; so அதற்கு உதவிடும் சாகசங்களே மதி //

    +1000000000000000

    ReplyDelete
  49. விறுவிறுப்பான,சூப்பர், ஆக்‌ஷன், திரில்லர்,மாயாஜாலம்,மொத்தமாக,கலந்த,கதைகள்,இருந்தால், போடுங்க,சார்,

    ReplyDelete
    Replies
    1. பவர்ஸ்டாரைக் கொண்டு ஒரு காமிக்ஸ் தயாரித்தால் தான் உண்டு சார் - இத்தனை ஜானர்களையும் ஒன்றிணைக்க !

      அதுவரையிலும் தோர்கலைக் கொண்டாடிக் கொள்வோமே ?

      Delete
    2. ///விறுவிறுப்பான,சூப்பர், ஆக்‌ஷன், திரில்லர்,மாயாஜாலம்,மொத்தமாக,கலந்த,கதைகள்,இருந்தால், போடுங்க,சார்,///

      எதிர்காலம் எனதே ன்னு ஒரு கதை அடுத்தவருசம் வரப்போகுது சார்.!

      அநேகமா நீங்க கேக்குறதுக்கு மேலேயே அந்தக் கதையில இருக்கும்னு தோணுது சார்.! :-)

      நீங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டேன்.! ஓ.கே தானே ப்ளைசி பாபு..!?

      Delete
  50. இந்த 2020 வருடம். டெக்ஸ் ரசிகர்களுக்கு பட்டாசான வருடம். 7 சந்தா B, 4 சந்தா D, maxi Tex 2, 4 இலவச டெக்ஸ். மொத்தம் 17 புத்தகங்கள் டெக்ஸ் மட்டுமே. இதில் தீபாவளி மலரில் இரண்டு maxi சாகசம். Jumbo vil Young Tex kku ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார். நான் மிக ஆர்வமாக எதிர் பார்ப்பது சந்தா D 4 டெக்ஸ் கதைகளை. 12 டெக்ஸ் வந்த வருடத்தை இந்த வருடம் முந்தி செல்லவேண்டும். அத்தனை கதைகளும் வெற்றி பெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே..

      வழிமொழிகிறேன்..:-)

      Delete
  51. விஜயன் சார்,

    டெக்ஸ் சாந்தாவின் ஆணிவேர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்கள் கருத்து க்கு உடன்படுகிறேன்

    டெக்ஸ் முதல் அனைத்து காமிக்ஸ் நாயகர்களுக்கு பிடிக்கும்.

    தீபாவளிக்கு இரண்டு டெக்ஸ் ஆல்பங்கள். ‌இரட்டிப்பு மகிழ்ச்சி. மெகா தீபாவளி விருந்து.

    அதே தீபாவளி மலருடன் இலவச இணைப்பாக மெக்ஸி டெக்ஸ். இலவசமாக கொடுக்கும் புத்தகம் கூட டெக்ஸ்தானா ? அதற்கு வேறு புதிய கதைகளை முயற்சி செய்யலாம்.

    அதே போல் முழு சந்தாதாரர்களுக்கு இலவச டெக்ஸ் கதைகளை கொடுப்பதற்கு புதிய கதைகளை (பக்கங்கள் அதிகம் எனில் 1/2) மட்டுமாவது முயற்சி செய்யலாமே சார்.

    விலையில்லாமல் கொடுக்கும் கதைகளுக்கு புதிய அல்லது பிற கதைகளை முயற்சி செய்யலாம் என்ற எனது ஆதங்கம் மட்டுமே இது. ஒரு கோரிக்கை மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. பரணி எனக்கு அந்த இலவச color Tex மிகவும் பிடிக்கிறது. 200, 300 பக்க கதைகளை விட இது அட்டகாசமாக இருக்கிறது. எனவே இலவச டெக்ஸ் ku ஜே ஜே

      Delete
    2. அதாவது.. அந்த யங் டைகர் கதைகளை இப்படி வெளியிடலாம்னு சுத்தி வளைச்சி சொல்றிங்க.. சரியா பரணி.?

      சோக்ஸ் அப்பார்ட்டூ...

      நல்ல யோசனை பரணி..! பெரியது எனில் நாலு இதழ்களுக்குப் பதில் ஒரு இதழ் கூட வழங்கலாம்..!

      ஆனால்.. நடைமுறை சாத்தியங்கள், சிக்கல்கள் என்னவென்பது எடிட்டருக்கு மட்டுமே தெரியும்.!

      எனவே.. எதுவானாலும் சம்மதமே..!

      Delete
    3. // நடைமுறை சாத்தியங்கள், சிக்கல்கள் என்னவென்பது எடிட்டருக்கு மட்டுமே தெரியும்.! //

      உண்மை. முடிந்ததை ஆசிரியர் செய்யட்டும்.

      Delete
  52. இந்த வருட சிறந்த இதழ்களில் சிங்கத்தின் சிறு வயதில் ஒன்று. எனவே ஜம்போ வில் கண்டிப்பாக ஒரு டெக்ஸ் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை.. வாண்டு ஷ்பெசல்ல ஒண்ணு வேணும்னு கேக்காம விட்டிங்க.!:-)

      Delete
    2. அதற்கு சுட்டி டெக்ஸ் கிடைத்தால் டபிள் ஓகே.

      Delete
    3. ஜம்போ பயணம் தொடங்கியதிலிருந்து இள வயது டெக்ஸ் வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஜம்போ சீசன் 3 இல் மட்டும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது.

      Delete
    4. இந்த வருட சிறந்த இதழ்களில் சிங்கத்தின் சிறு வயதில் ஒன்று. எனவே ஜம்போ வில் கண்டிப்பாக ஒரு டெக்ஸ் வேண்டும்

      #####


      எனக்கு "சிங்கத்தின் சிறு வயதில் " எதில் வந்தாலும் ஓகே..:-)

      Delete
  53. All in all Azhaguraja for tn couriers 5250 or 5500 in the site link is it there???

    ReplyDelete
  54. டிடெக்டிவ் ஜேரோம் try பண்ணலாமே சார்
    .. இந்த மாத டைலன் ஜூலியா நன்றாக இருந்தது .. If possible one slot for both in 2020 ..
    இரு வருடங்களுக்கு முன்பு ஈரோடு book fair ல் batman க்கு தனி சந்தா இருந்தால் try பண்ணலாம் என்று சொன்னீர்கள் .. ஏதும் possible sir ..

    ReplyDelete
  55. (சும்மா கொளுத்திப் போடுவோம்:-))

    இப்போ..

    செனா அனாவுக்கு மாடஸ்டி புடிக்கும்..
    காமிக் லவருக்கும் ஷெரீப்புக்கும் மாடஸ்டி புடிக்காது..!

    ஷெரீப்புக்கு ஜூலியா புடிக்காது..
    காமிக் லவருக்கும் செனா அனாவுக்கும் ஜூலியா புடிக்கும்..!

    காமிக் லவருக்கு ஸ்மர்ஃப் பிடிக்கும்..
    செனா அனாவுக்கும் ஷெரீப்புக்கும் ஸ்மர்ஃப் புடிக்காது..!

    இதுல எந்த ரசனை உசத்தி ..!?

    (பஞ்சாயத்தை ஆரம்பிங்க..! தூங்கி எந்திரிச்சி சாவகாசமா வர்ரேன்.!:-))

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைத்தவர்.... பகல்ல எல்லாம் தூங்க முடியுது... அதுவும் காலை சாப்பாடு முடிந்த உடன் ‌:-)

      Delete
    2. இதில் என்ன சந்தேகம்..

      எனது ரசனை தான்..!

      Delete
    3. கொடுத்து வைத்தவர்.... பகல்ல எல்லாம் தூங்க முடியுது... அதுவும் காலை சாப்பாடு முடிந்த உடன் ‌:

      #####

      உங்களுக்கு இப்ப தான் தெரியுது ..இப்ப பொறாமைபடுறீங்க..நான் பல மாசமா பொறாமை படுறேன்..:-)

      Delete
    4. //கொடுத்து வைத்தவர்.... பகல்ல எல்லாம் தூங்க முடியுது... அதுவும் காலை சாப்பாடு முடிந்த உடன் ‌:-)//

      வேற வழி இல்லையே, 75 வயசுக்கு மேலே ஆனதால் மதியம் தூக்கம் அவசியம் என்று அவரது குடும்ப டாக்டர் சொல்லிட்டாராம்

      Delete
    5. ஏஞ்சாமீ நீங்க வேற...!

      நானே ரெண்டு மாசமா பத்தியச் சாப்பாட்டை முழுங்கிட்டு தெம்பு இல்லாம தூங்கி சமாளிச்சிக்கிட்டு இருக்கேன்..!

      நீங்களானா..

      கொடுத்துவவைத்தவர்.. இன்ட்ரஸ்ட் வாங்குறவர்னு பீதியக் கிளப்புறிங்க..!

      Delete
  56. எனக்கென்னவோ, பழைய 007 கதைகள் அதிகமாக ஹிட் ஆகும் என்று படுகிறது. என்னத்தான் புது007 அதிரடியாக இருந்தாலும் பழைய 007 ன் இலேசான சோம்பேறித் தனத்துடன் கூடிய British dry humor தமிழ் மொழிப்பெயர்ப்பிலும் பளிச்சிட்டால் சூப்பர்தான்....

    ReplyDelete
  57. மார்டின் கதைகள் படிக்க அதிகளவு கவனகுவிப்பை கோருகின்றன என்பது எனது கருத்து

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் லியோம். பலூன்களில் உள்ள ஒரு வார்த்தை கூட விட முடியாது. விட்டால் கதை புரியாது.

      Delete
  58. தங்களால் விளம்பரம் செய்யப்பட்டு கைவிடப்பட்ட பல கதைகள் உள்ளன.

    அவற்றை முயற்சிக்கலாம்..

    ஸ்மர்ப் ஸ்பெஷல்

    பென்னி ஸ்பெஷல்

    போன்ற ஸ்பெஷல் இதழ்கள் முன்பதிவுக்கு என ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடலாம்.



    ReplyDelete
  59. சிவப்பு ரோஜாக்கள்

    டைலன் டாக்...ன் இந்த சாகஸம் வண்ணத்தில் வந்த சில சாகஸங்களை விட கூடுதல் ரசிப்பை ஏற்படுத்தியது..திகைக்க செய்யும் ,நம்ப முடியாத க்ளைமேக்ஸ்ம் தான் பலமா ,பலவீனமா என அறிந்து கொள்ள முடியா எண்ணத்தை ஏற்படுத்தியது .ஆனால் அதுதானே டைலனின் பாணி எனும் பொழது பலமாகவே எண்ணலாம்..நன்று..அடுத்த வருட டைலன் க்கு ஒரு சீட் போட இந்த சாகஸம் கண்டிப்பாக உதவும் என்பது உண்மை...


    இனி மார்ட்டின் உடன் செல்ல இருப்பதால் இந்த சுருக்கமான விமர்சனம் மட்டுமே

    சிகப்பு ரோஜாக்கள் வாசனையே குருதி தெறித்தாலும் ..:-)

    ReplyDelete
  60. ஓய் தலீவரே... டைலானுக்கு வந்தா மட்டும் தக்காளி 🍅 சட்னி... வஞ்சம் மறப்பதில்லைன்னா மட்டும் இரத்தப் பொறியலா?+

    ReplyDelete
    Replies
    1. கதை களம் தாய்யா இரத்த பொறியலையும் ,தக்காளி சட்னியையும் தீர்மானிக்கிறது ..நானல்ல...:-)

      Delete
  61. @ஆசிரியர்
    ஆல் இன் ஆல் சந்தா ஆன்லைன் லிஸ்ட்ங்கில் வரவில்லை சார் அதிகபட்சமாக 5000 வரையான தொகையே காண்பிக்கிறது..
    இரண்டு தவணையாக பணம் செலுத்தும் வசதி உள்ளதென்றால் அதையும் தயவு செய்து லிஸ்ட் செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  62. சார் உங்க பதிலால் அட்டவணை குறித்து கேட்க நினைத்த கேள்விகள் கேள்விகளாகவே போயின. கொட்டிக் கிடக்கும் கதைகளில் நமக்கான கதைகள் குறைவு, ,ராயல்டி மிக அதிகம் எனக் கூறியதிலிருந்து ஒரு கேள்வி, பேட் மேனோ அர்லது ஆஸ்ட்ரிக்சோ வெளியிட்டா அதாவது அளவான எண்ணிக்கையில் வெளியிட்டால் ஒரு கதை எவ்வளவுக்கு நமக்கு புத்தகமாய் கிடைக்கும்னு சொன்னா அதற்கான தனி சந்தா ஆறு இதழ்களுக்கு விட வாய்ப்புள்ளதா ? யுத்தக் கதைகள் ஒன் சாட் கதைகளை வெளியிடலாமே, தொடர்கள்தான் நமது இதழ்களில் சோபிக்கவில்ரைன்னு நினைக்கிறேன் .மாயாஜாலக் கதைகளும், வரலாற்றுக் கதைகளும் நிச்சயம் கலக்கும் முயற்ச்சிக்கலாமே,,,,அந்த ஐந்து மூன்று நான்கு பாக இதழ்கள நடுநடுவிலே ஙெளியிடலாமே ,,,,அந்த ஆயிரம் பக்ப கௌபாய் கதை வெளியிடும் எண்ணம் உள்ளதா,,,

    ReplyDelete
  63. கொஞ்சம் லேட்டா வந்துள்ளேன் ஐயா.!

    ReplyDelete
    Replies
    1. இப்பவே லேட்டஸ்ட் டா பதில் போட்டுக்க

      Delete
    2. சரிங்க சார்.

      ஆனா.. கேள்வி என்னான்னு சொல்லலையே..!

      Delete
    3. நீங்க பதில சொன்னீங்கன்னா அதை வச்சி கேள்வி கேட்டுறலாம்..எப்பூடி?

      Delete
  64. ///வரும் நாட்களில் "அந்தச் சந்தா ; இந்தச் சந்தா" என்ற பிரிவுகளே waste என்றாகிடும் போலும் !! கிட்டத்தட்ட 95 % சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா' சந்தாக்களே !! ///


    ஆனாலும் நீங்க தீர்க்கதரிசி சார்.
    கவுண்டரின் காலத்தால் அழியாத ஒரு வசனத்தை சந்தாவுக்கு சூட்டியபின்னே, அதை செலக்ட் செய்ய முடியாமல் போனால்தானே ஆச்சரியம்.😊😊😊

    ReplyDelete
  65. மர்ம மனிதன் மார்ட்டின் விசித்தர உலகமிது..


    ஆரம்பத்தில் மார்ட்டினின் பக்க எண்களை பார்க்கும் பொழுது ஆஹா ..போயிட்டே இருக்குதே ஒரே வாசிப்பில் முடித்து விட வைத்து விடுமா என்ற பயம் எழுந்த்து உண்மை .அதன் காரணம் போன முறை மார்ட்டின் அந்த அளவுக்கு ஈடு செய்யவில்லை.

    ஆனால் இந்த முறை இரு பாகங்களாக ஒரு நீண்ண்ண்ட சாகஸமாக மார்ட்டின் உடன் விசித்திர உலகத்தில் வாசிக்கும் தன்னையும் உடனழைத்து கொண்டே பரபரவென பறக்கிறார்..ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை ..

    செம....இந்த முறை மார்ட்டின் மீண்டும் மனதை கவர்த்து கொண்டார்...


    இந்த வருட தீபாவளி மலரில் டெக்ஸ் ,டைலன் ,மார்ட்டின் மூவருமே கலக்கி விட்டார்கள்.

    இனி இருப்பது ராபினும் ,ஜூலியாவும் மட்டுமே..


    படித்து விட்டு மீண்டும்...

    ReplyDelete
  66. ///அவ்வளவு ஏன் - மாடஸ்டிக்கே நாம் தந்து வருவது ஒரு பெரும் தொகையே ///

    மக்களே! நல்லா கேட்டுக்கோங்க.

    ReplyDelete
  67. ///அதற்கொரு திட்டமுள்ளது ; லேசாய் மண்டைக்குள் துளிர் விட்டுவரும் அந்த யோசனையை சித்தே டெவெலப் செய்துவிட்டுச் சொல்கிறேன் நண்பர்களே !///

    இது போதுமே.சீக்கிரமே படம் வரைந்து பாகம் குறிக்கும் நாள் வராமல் போகாது.

    ReplyDelete
  68. //Esoterics என்பது காமிக்சில் ஒரு பெரும் கதைப்பிரிவு !மாயாஜாலம் ; ரசவாதம் என்ற பின்னணிகள் கொண்ட கதைகள் இவை ! இவை சார்ந்த நிறைய தொடர்கள் ; வண்டி வண்டியாய் ஆல்பங்கள் உள்ளன ; ஆனால் நமக்கவை ஒவ்வுமோ ? ஒவ்வாது ? என்ற பயத்தில் no thank you ! சொல்லிடுக்கிறோம் !!//ஆஹா ஆவலத் தூண்டுதே

    ReplyDelete
  69. //வரலாறு சார்ந்த காமிக்ஸ் படைப்புகள் again கொட்டிக் கிடக்கின்றன ! நம்மிடம் ஆர்வம் + பொறுமை அவசியமல்லவா - இத்தகைய ஆக்கங்களைப் படித்திட ? உதாரணம் சொல்கிறேனே ? நெப்போலியனின் அண்டத்தை வென்றிடும் படையானது மாஸ்கோவை நெருங்குகிறது ! வெகு விரைவில் வீழவுள்ள அந்தத் தலைநகரில் வசிக்கும் பெருங்குடி மக்கள் தீர்மானிக்கின்றனர் : இத்தனை காலம் நாம் வாழ்ந்த மாட மாளிகைகளும், சொகுசுகளும் தீக்கிரையானால் கூடப் பரவாயில்லை - எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிடக் கூடாதென்று !! So "மாஸ்கோவைக் கொளுத்துங்கள் " என்று உத்தரவிடுகின்றனர் ! இந்தப் பின்னணியில் ஒரு ஆல்பம் உருவாகியுள்ளது !

    அதே நெப்போலியனின் படைகள் உருக்கும் சைபீரியக் குளிரில் மேற்கொண்ட நெடும் படையெடுப்பைச் சொல்லும் கதைகள் உள்ளன ! நமக்குத் பொறுமையும், வரலாற்றினில் ஆர்வமும் இருப்பின், இது போன்ற தேடல்கள் சாத்தியமே !! ஆனால் பள்ளிக்கூடத்திலேயே தலைமுழுகிய இஸ்திரியை இங்கே வந்து படிக்கணுமாடாப்பா ? //சார் விறுவிறுப்பு இருந்தா அரச்ச மாஙானாலும் வரட்டுமே

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் ஒரு கதை nepolean படைகள் பற்றி கிராஃபிக் நாவலில் உண்டு தானே

      Delete
    2. அதன் தலைப்பு பனியில் ஒரு குருதிப்புனல்

      Delete
    3. 'வாட்டர்லூவில் வஞ்சம்'

      Delete
    4. 'வாட்டர்லூவில் வஞ்சம்'

      Delete
  70. //மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் ; but அவற்றை விரட்டி விரட்டிப் போய் அரவணைக்காது, take it as it comes என்று ஏற்றுக் கொண்டால் எல்லாம் சுகமே !! Just my two cents !!

    And rest assured guys : நமக்கியன்ற கதைகளை / நமக்குகந்த கதைகளை / நமக்கு சாத்தியமாகிடும் கதைகளை ஓசையின்றித் தேடித் திரட்ட நான் முயன்று கொண்டேயிருப்பேன் ! Bye all !! See you around again !!
    //இதுவே போதும் சார் ,,,,காத்திருப்போம்

    ReplyDelete
  71. 2020 அட்டவணையில் முத்து காமிக்ஸின் 450-வது இதழ் எது?

    ReplyDelete
    Replies
    1. அது 2020 இல்லை 2021 இல் தான் வருகிறது

      Delete
  72. Vaterloovil vanjam nice title👍👍

    ReplyDelete
  73. விவேக் சொல்லுவாரே - "விக்ஸ்'' என்பதைத் தான் அப்படி சுத்தி சுத்தி எழுதி இருக்கிறேன்னு.
    அது மாதிரி "காமிக்ஸ் " என்பதை எப்படி சுத்தி சுத்தி எழுதினாலும் அது குழந்தைத் தனமான ரசனை தான் - அதற்கு ஹீரோயிச மே. அளவு கோள்.
    அதைத் தாண்டி புதிய ஜானரில் கதை தேடினால் " நீரில்லை நிலமில்லை" என்று "நிஜங்களின் நிசப்தம் "தான் பதிலாக கிடைக்கும். சேர்த்து வைத்து பாதுகாத்து -மறுபடி படிக்க முடியாமல் _ இந்த அவஸ்தை தேவையா - என்று தெறித்து ஓடி விட வே தோன்றும்.
    என்னைப் பொறுத்தவரை சந்தா - Dதான் 2020-ஆம் ஆண்டின் ஹைலைட் -
    நிச்சயம் இனிவரும் ஆண்டில் இதில் நிறைய செய்ய - புதிய முயற்சிகளுக்கு _ யோசிக்க ஆசிரியருக்கு வாய்ப்பு அமைந்து கொண்டிருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  74. ஒரு இல்லத்தின் கதை..!

    தலைப்பை பார்த்து சாதாரணமாக படிக்கத் தொடங்கியது எவ்வளவு மடத்தனம் என மனசுக்குப் புரிந்தது.

    கதை ஒருபக்கம் கதை சொல்லிக்கொண்டு நகர, ஓவியங்கள் மறுபக்கம் மறைமுகமாக சொல்ல முயல, பத்தாம் பக்கம் தாண்டுவதற்குள் பொத்தாம்பொதுவாக படிப்பது வேலைக்காகாதென புரிந்தது.

    மனதை ஒருமுகப்படுத்திய பின்னே.புத்தியை ஆசுவாசப்படுத்திய பின்னே, ஜுலியாவோடு பயணிப்பது சுலபமானது.
    எனவே,
    கடைசி கதைதானே வேகமாகப் படிக்கலாம் என நினைத்தால் ,ஏகப்பட்ட வேகத்தடைகளில் வழுக்கிவிடும் வாய்ப்புண்டு.

    ஆகையால்,
    பொறுமையே பெருமை.!

    ஜுலியா..!

    வாழ்க.!வாழ்க! (கோரஸ்) .

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம் GP . Julia இந்த மாதத்தின் ஹிட். மிக அழகான கதை.

      Delete
  75. Dear Editor,

    I am one of the guys who is disappointed that we are not taking to 1-2 page gags :-( We are missing a lot of famous series by sticking to this approach. I think from 2020 I would have to go for English editions of Leonardos and other few-page-gags, sadly ! If only we were quick to adapt. Sigh !! I can understand the chagrin at your end too ...

    ReplyDelete