நண்பர்களே,
வணக்கம். கூப்பிடு தொலைவில் பண்டிகைப் பொழுது காத்திருக்க - ஆங்காங்கே சில பல கிலோ சுவீட்களும், காரங்களும் துவம்சமாகத் துவங்கியிருப்பது நிச்சயம் ! ஆண்டுக்கொருவாட்டியே தீபாவளி எனும் பொழுது போட்டுத் தாக்குங்கள் guys ! இப்போ இல்லாட்டி பின் எப்போ ?
பெரியதொரு மைசூர்பாகு டப்பி சைசுக்கு தீபாவளி மலர் காத்திருக்க - அத்தனை கவனத்தையும் அட்டவணையே விழுங்கிக் கொண்டது தவிர்க்க இயலா நிகழ்வே ! Anyways அந்த 'அட்டவணை படலம்' ஓவர் எனும் போது - மெது மெதுவாய் ரெகுலர் இதழ்களை அலசும் ரெகுலர் பணிக்குள் புகுந்திட இனி உங்களுக்கு நேரம் கிட்டிட வேண்டியதே அவசியம் ! விடுமுறைகளில் அவற்றைப் படிக்க சிலருக்கு சாத்தியமாகிடலாம் ; 'விடுமுறைகளில் தான் நான் சூப்பர் பிசியே' என்று முறுக்குப் புளிந்த கையோடு, மைசூர்பாகுக்கு Youtube-ல் ரெசிபி தேடும் பலருக்கு மறுக்கா ஆபீஸ் பணிகள் துவங்கிடும் போது தான் நேரம் கிட்டிடலாம் ! So காத்திருப்போம் !
இடைப்பட்ட பொழுதுகளில் அட்டவணைகளின் அலசல்களை இங்கே தொடருவோம் ! போன பதிவில் 300+ பின்னூட்டங்களுக்கு அப்பால் சரியாய் கவனம் தர சாத்தியப்பட்டிருக்கவில்லை ; maybe அங்கே கேள்விகள் ஏதேனும் கேட்டிருந்த நண்பர்கள், அவற்றை இங்கே மறுக்கா போஸ்ட் செய்திட மெனெக்கெட்டால் - நிச்சயம் பதில் தர முனைவேன் !!
அப்புறம் தங்கத் தலைவனது ரசிகர்களுக்கு ஒரு small request ! மீண்டும் "கேப்டன் டைகர்" அவதாரில் புதுசாய் ஒரு ஆல்பம் விரைவில் பிரெஞ்சில் வெளியாக உள்ளதாய்ச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! சமீபத்தில் அவற்றின் கோப்புகள் கிட்டின & முழுசையும் செம ஆர்வத்தோடு புரட்டினேன் ! ஒன்றே ஒன்றை மட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது : கார்சனின் நண்பரை இத்தனை காலமாய் செம குஷியாய் நீங்கள் ஒட்டி வந்துள்ளீர்கள் ; உங்களின் ரவுசுகளை டெக்ஸ் ரசிகர்களும் செம sportive ஆக எடுத்து வந்துள்ளனர் ! நேரம் கிடைக்கும் பொழுது டெக்ஸ் ரசிகர்களிடம் அந்தக் கலையைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கற்றறிந்து கொள்ள இனிமேல் நீங்களும் கூட முயற்சித்திட வேண்டி வரலாம் ! அதனால் இந்த தீபாவளிக்கே கூட தீய்ந்து போகாத நாலு முறுக்குகளையோ ; அதிரசங்களையோ வீடு தேடித் போய்க் கொடுத்தபடிக்கே - "ஊட்டிலே அத்தினி பேரும் நலமா பங்காளி ?" என்று பழக ஆறாம்பித்து விடுவது பொதுவான நலத்துக்குத் தேவலாம் என்பேன் ! ஆனாக்கா - அந்தப் பட்சணங்களைத் தின்ன கையோடு புதுசா லடாய் ஆரம்பிச்சா - அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது !!
Bye guys !! See you around !! Enjoy the holidays !!
Me the first.
ReplyDeleteவணக்கம் விஜயன் சார்,
ReplyDelete2020 சந்தா அட்டவணை படித்தவுடன், 20/20 பார்த்த உணர்வு. தெளிவான திட்டமிடல் தெரிகிறது/தெறிக்கிறது. அங்குசத்திற்காக யானை வாங்க வேண்டுமோ என்று எண்ண வைக்காமல், தலை வாழையில் அதிரசத்தில் ஆரம்பித்து, பாயசத்தில் முடிப்பது போன்று அத்தனை பதார்த்த கூட்டு அணிகளும் அருமை. அவ்வப்போது மானே/தேனே போல கடவாயில் கட்டை விரலை வைத்து, தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்து 'சிங்கமுத்து சர்க்கஸ்' செய்யப்போவதும் தெரிகிறது. வாழ்த்துக்கள். வழக்கம் போல ABCDEJM மற்றும் இன்னபிற வகையறா சந்தாக்களும் ரெண்டு பார்சேல். இதழ்களுக்கு கிரைம் நாவல் 'ராஜேஷ்குமார்' பாணியில், அட்டகாச தலைப்பு வைக்க ஏதேனும் '11 பேர் கொண்ட குழு' இருக்கிறதா....?
அப்புறம் உங்களை சார்ந்தோருக்கும், இந்தப் பதிவினை திருத்தி டைப்அடித்து, பிரிண்ட் எடுத்து 'சோர்ந்தோருக்கும்' தீபாவளி வாழ்த்துக்கள்.
நம்மள் கி ஆபீஸின் மொத்த ஜனத்தொகையே 11 தேறாதுங்கோ சார் ! தலைப்பு வைக்கும் பணிகளுக்கெல்லாம் நாம் ரொம்பவே விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையைக் கையில் எடுப்போம் ! படுக்கையிலிருந்து வலப்பக்கமாக இறங்கினால் அது "படலம்" ; இடப்பக்கமெனில் "மர்மம்" !!
Delete@மேற்கிலிருந்து ம. ராஜவேல்
Deleteதேர்ந்த வார்த்தைப் பிரயோகங்களோடு பிரமாதமாக எழுதுகிறீர்கள் நண்பரே!!
அடிக்கடி எழுதுவதில்லை என்பதுதான் குறையே!!
சார்.. வேட்டையை மறந்திட்டீங்க.☺☺☺
Delete//படுக்கையிலிருந்து வலப்பக்கமாக இறங்கினால் அது "படலம்" ; இடப்பக்கமெனில் "மர்மம்" !!//
Deleteஅப்படியெனில் நீங்கள் அடிக்கடி இடப்பக்கம் இறங்குவதில் ஏதோ மர்மம் இருக்கிறது... :-) :-) :-)
//அடிக்கடி எழுதுவதில்லை என்பதுதான் குறையே!!//
வீட்டில் பெரியவர்க்கு (ஆதவன்), அடுத்த படியாக சின்னவர் (ஆதிரன்) வந்ததிலிருந்து பணிச்சுமை சற்றே அதிகம். ஆனால் அவ்வப்பொழுது அடிக்கடி நம் தளத்தில் நடைபெறும் 'கோஷ்டி கான' குரளி வித்தைகளை, பதுங்கு குழியில் இருந்து எட்டிப்பார்த்து ஆர்ப்பரிக்கும் 'மௌனச்சாமி'யாகிப் போனேன். இனி அவ்வப்போது விரத வேஷம் கலைக்க முற்படுகிறேன்.
//சார்.. வேட்டையை மறந்திட்டீங்க.☺☺☺//
செல்போன் பார்த்து பார்த்து, நாற்பதை தொடப்போகும் கண்கள் சற்றே மச மச வென்று இருப்பதால், 'வேட்டையை' முதலில் மாற்றி படித்து விட்டேன்... :-) ;-)
3rd
ReplyDeletePaid subscription for 2020 and Jumbo 3 this morning Editor sir. Happy Deepavali to all our team, readers and all families ...
ReplyDeleteMany thanks sir !! உங்களுக்கும், உங்கள் இல்லத்தவர்கட்கும் நம் வாழ்த்துக்கள் !
Deleteஅடடே......
ReplyDelete7
ReplyDeleteவந்தாச்சு
ReplyDeleteFeatured post ஆக 2020 அட்டவணைப் பதிவை மாற்றி விடலாமே சார்...
Deleteமாத்தியாச்சு சார் ! நன்றிகள் !
Deleteஜிம்மியோட நண்பர் எதாச்சும் சொல்ல வர்றாரா சார்?
ReplyDeleteஐயாம் இன் தி மௌன விரதம் சார் ! பெப்பெப்பே பெப்ப்ப்பப்ப்பே !
DeleteHi..
ReplyDeleteஅப்புறம் தங்கத் தலைவனது ரசிகர்களுக்கு ஒரு small request///
Deleteவெறும் அட்டைப் படத்தையே ஒரு வருசம் பார்ப்போம்.. கதை எப்பிடி இருந்தால் என்ன சார்.. அது தங்க தலைவன் கதை அவ்வளவு தான்.
அட டே...!!!
Deleteஅப்போ போட்டே தீரலாம்னு சொல்றீங்களா ?
Deleteஆசிரியருக்கும் குடும்பத்தாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், அனைத்து காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteDeepavali greetings to all guys
ReplyDeleteசீக்கிரமே பரட்டையின் புத்தம்புது ஜாகஜம் வெளியாகப் போகிறது என்பதைத் தான் எடிட்டர் அப்படி சுத்திவளைச்சு சொல்லியிருக்கார் போல!!
ReplyDeleteவெளியாகட்டும் கவனிச்சிக்கறோம்... கிர்ர்ர்ர்...
உங்களுக்கு கிடைக்கிற சான்சை விட எனக்கு சான்ஸ் ரொம்ப அதிகம் கவனிக்கிறதுக்கு.. முறுக்கு புளிஞ்சமா சாப்பிட்டமான்னு இருக்கனும்..
Deleteரம்மி :-) உண்மை.
Deleteஅவரு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதி விட்டார். :-)
சந்தா Dல் ஒரு ஆச்சரியம்.'பனியில் ஒரு குருதிப்புனல் 'இரு வண்ணங்களில் என்றுள்ளது.
ReplyDeleteஎன் பெயர் டைகர்ல் B/Wல் சில பக்கங்கள் க்ரே ஷேடில் இருந்தனவே.அது மாதிரியா சார்?
சாரி....சந்தா E
Deleteஇல்லை சார்..இது முற்றிலும் வேறு மாதிரி !
Deleteஓ...புது முயற்சிக்கு வாழ்த்துகள் சார்.நான் ஆர்வத்துதுடன் எதிர்நோக்குகிறேன்.
Deleteகவ்பாய் கதைகள் ஆறு கதைகள் இருக்கு இன்னிங்க அதை எப்பொ வெளியீடு விர்கள்
ReplyDeleteநான் இன்னமும் வெளியே உள்ளேன் ஐயா
ReplyDeleteசந்தோஷப்படுங்க சாமி அதுக்கு !!
Deleteஷெல்டனோட பயணம் செய்து கொண்டிருக்கிறேன் இரவு நேர அலுவலகத்தில்...
ReplyDeleteநன்றி சார்...
ஷெல்டனோடயா ? அந்தப் பாப்பாகூடவா தலீவரே ?
Deleteஅந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம். :-)
Deleteஇருவரும் கூடத்தான் சார் ..
Deleteமறைப்பானேன்..:-)
மாதம் ஒரு கார்ட்டூன் (அது C யோ..., Maxi யோ... எதாவது ஒன்று) கிடைக்குமாறு ஷெட்யூல் போட்டு வெளியிடுங்கள் சார், கொரியரைத் திறந்ததும் என் மகளை பரவசப் படுத்துவது அதுதான்.
ReplyDeleteதீபாவளி மலர்..
ReplyDeleteஜூலியா..
ஒரு இல்லத்தின் கதை :-
அழகான.. ஆழமான.. உணர்வுக்குவியலுடன் ஒரு க்ரைம் கதை.!
வழக்கமான க்ரைம் கதைகளில் ஒரு டெட்பாடி கிடைக்கும்..., கொலையாளி யார் என்று துப்பறிவார்கள்..!
ஆனால் இங்கேயோ அந்த டெட்பாடி யாரென்று துப்பறிவதே பெரும் சவாலாக இருக்கிறது.. அதன்பின்தான் கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள்..!
பெரிதாக ஆக்சன் காட்சிகள் இல்லை.. பரபரப்பான நொடிக்குநொடி திருப்பங்கள் இல்லை..,
ஆனாலும் கதையை ஆரம்பித்து சில பக்கங்கள் தாண்டியதும் முடிவு தெரியும்வரை கீழே வைக்கமுடியாதபடி கட்டிப்போட்டு விடுகிறது.!
ஒரு இல்லத்தின் கதை - ஒரு உள்ளத்தின் கதை
ரேட்டிங் - 9/10
ஆஹா...அதற்குள் படித்து விமர்சனமும் ரெடியா கண்ணரே..அருமை..:-)
Deleteமீள் பதிவாக்கும்........
Deleteஆஹா...அதற்குள் படித்து விமர்சனமும் ரெடியா ..
Deleteஅருமை கண்ணரே..:-)
என்னது தான்ல உண்மையான மீள்பதிவாக்கும்..:-(
Deleteநான் புரட்டி பார்க்கிறதையே இன்னும் முடிக்கலை...!
Deleteமீள்பதிவு..:-)
Deleteகிர்ர்ர்ர்....
Deleteவிஜயன் சார், அடுத்த வருட தீபாவளி மலராக இரண்டு டெக்ஸ் கதைகள் மேக்ஸி சைசில் வருவது சந்தோஷம். அதனுடன் இலவச இணைப்பாக 30பக்க டெக்ஸ் இதழ் பெரிய சைசில் கொடுப்பதாக உள்ளது. எனது வேண்டுகோள் அந்த இலவச டெக்ஸ் கதைக்கு பதில் புதிய கதாநாயகர்கள் கதையை கொடுக்க முடியுமா? அவைகளின் பக்கங்கள் அதிகம் எனில் பெரிய சைசில் கொடுப்பதற்கு பதில் compact size அல்லது தற்போது வரும் கருப்பு வெள்ளை புத்தகங்கள் அளவில் கொடுக்க முயற்சிக்கலாம். புதிய கதைக்களம் முடியாது எனில் புதிய கார்டூன் கதையை அல்லது மறுபதிப்பு காணாத நமது கிளாசிக் கதைகளை கொடுக்கலாமே. புதிய கதைகளை இது போன்ற நேரங்களில் முயற்சித்து அவை அனைவராலும் ஏற்றுக் கொள்ளபட்டால் 2021 சந்தாவில் அதனை இணைக்கலாமே?
ReplyDeleteஅதேபோல் மற்றும் ஒரு யோசனை: சந்தாதாரர்களுக்கு கொடுக்கும் நான்கு டெக்ஸ் கதைகளுக்கு பதில் இரண்டு டெக்ஸ் கதைகள் மற்றும் புதிய அல்லது நமது கிளாசிக் கதைகளை முடிந்த அளவில் கொடுக்க முடியுமா வரும் ஆண்டுகளில்? இதுவும் சில புதிய கதை தளங்கள் மற்றும் கதாநாயகர்களை முயற்சிக்க உதவும்.
ஒருவேளை புதிய கதைகளை இவ்வாறு கொடுக்க வாய்ப்பு இல்லை (பக்கங்கள் அதிகம்/பதிப்பகத்தார் சம்மதிக்க வேண்டும்/இல்லை வேறு காரணங்களால்) என்றால் பழைய சில கிளாசிக் கதைகளை மட்டுமாவது தரலாமே?
குறைந்த பட்சம் தீபாவளிக்கு கொடுக்கும் டெக்ஸ் கதைகளுக்கு மாற்றாக மட்டுமாவது வேறு கதையை கொடுக்கலாமே?
அதேபோல் 2020 டெக்ஸ் மெமிஸ்டோ கதை ஏதாவது வருகிறதா? பல நண்பர்கள் அதனை தளத்தில் கேட்டார்கள் அதனை படிக்க வாய்ப்புகள் உண்டா?
ஏன் நண்பரே..
Deleteநல்லாத்தானே போய்ட்டு இருக்குது...:-(
தலைவரே சாமத்தில் இங்கே என்ன பண்றிங்க,போய் தூங்கங்க போங்க.....
Deleteஇப்ப தூங்குனா 12 ,12.30 க்கு எந்திருச்சு பில் போடற வேலை நிறைய்ய இருக்கு ரவி சார்..தூங்கிட்டா நிம்பிளால் எழுந்திரிக்க முடியாது அதான் இங்கே ஒரு கண் ஷெல்டனோடு ஒரு கண்..:-)
Delete---12345678910
Delete2020 அட்டவணை T20 match மாதிரி தெறிப்பதற்கு காரணமே டெக்ஸ் அறிவிப்புக்கள்தான். எனவே....
Delete-123456789
🥺🥺
Deleteநான் உட்பட நிறைய்ய நண்பர்கள் வினவிய வினா ..
ReplyDeleteதோர்கல் முழு தொகுப்பாக வரவேண்டும் என்பதே சார்..
என்னையும் கூட சேர்த்துக்குங்க தல.
Deleteஇருந்தாலும் அந்த ஸ்லிப் கேஸ் ஆர்வத்தைத் தூண்டுகிறது..!
// தோர்கல் முழு தொகுப்பாக வரவேண்டும் என்பதே சார்.. //
Delete5 இதழ்களையும் ஹார்ட் பைண்டிங்கில் வெளியிடுவதை விட ஸ்லிப் கேஸில் வெளியிடுவது சிறப்பான தேர்வாக இருந்தால் சரிதான்,அப்படி இல்லையெனில் மறுபரிசீலனை செய்யலாம்.....
என்னதான் இருந்தாலும் ஹார்ட் பைண்டிங்கில் கிடைப்பது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சிதான்.....
அந்த சூட்கேஸ் சாரி ஸ்லிப் கேஸ் டைகர் கதைக்கு கொடுக்கலாமே. தோர்கலை hard boundல் பார்த்து இரண்டு வருடம் ஆகப்போகிறது.பார்த்து செய்யுங்கள் சார்.
Deleteபழகியதைத் தாண்டி மற்ற சகலத்தையுமே கணக்குப் பரீட்சையைப் போலவே பாவிப்பானேன் guys ? தோர்கலையே 4 வருஷங்களுக்கு முன்வரையிலும் இதே போலத் தான் பார்த்து வந்தோம் என்பது நினைவுள்ளதா ? வாழ்க்கையே பல வர்ணங்களிலானது எனும் போது இயன்ற மட்டிலும் ஒவ்வொன்றையுமே ரசிக்கத் தான் முயன்றிடுவோமே ?
Deleteதோர்கல் கதையே வானவில் தான். எனவே அவருக்கு hard boud கொடுங்கள். :-)
Delete//GMT+5:30
Deleteசார் ஏ சந்தவில் உங்க ஒவ்வோர் அறிவிப்பும் அதிரச் செய்ய மூச்சிறைக்க தொடர்ந்த எனக்கு தோர்கள் ஐந்து பாகம் ஒரேகதை என்ற வரிகள் உற்சாகத்தை எகிறச் செய்ய நிதானமாய் மூச்சை நிதானிக்கிறேன்,,. ராகவனே ரமணா,,,,என நன்றிய காமிக் லவருக்கு சொல்ல ,,,மனதில் ஓர் புஸ் சுவாரஷ்ய கு றைவால் ஐந்து தனித் தனி இதழ்களாய் என படிக்க, ,,,,அடுத்து வரி துள்ளச் செய்ததுண்மயே, ,,,பாக்ஸ்,,,அடடா இபக்கு இணையாகவா,,,கேலிக்குறியோடே நோக்க இரத்தச்சிவப்பு இபவ மிஞ்ச முடியாது என நினைக்க,,,,ஆனா நீல வண்ணத்ல வானைத் தொடும் பாக்ஸ் மனக்கண்ல வர,,,,ஹார்டு பவுண்டு அட்ட சிறப்பகீதுமேங்க,,,,,கூழுக்கும் ஆச மீசைக்கும் ச,,,சார் ஒரே தொகுப்பா ஹார்டு பவுண்டு அட்டைல அந்த பாக்ச வச்சு அதுக்கு ஈடா கலர் டெக்ஸ்ல கை வைக்கலாமே, ,,,,அப்டியே வெளி சுற்றுக்கு அதுக்கான விலய கூட்டிட்டா போச்சுஃ//
ஸ்டீல்க்ளா
+1 hard Bound if it is not affecting budget
DeleteWish you happy Deepavali editor sir and my dear friends🎆🎇🎆🎇
ReplyDeleteThanks & our wishes too sir !
Deleteமுழுப் பதிவையும் தற்போதுதான் படித்து முடித்தேன் சார்,பதிவும் அட்டகாசம்,இதழ்களின் தேர்வும் அட்டகாசம்.........
ReplyDeleteபதிவை படித்து முடித்தவுடன் நிறைய கேள்விகள் மனதில் வந்து போயின,நாளை நேரம் கிட்டியவுடன் நினைவில் நிற்பதை பதிவிடுகிறேன்.....
நவம்பர் இதழ்கள் இன்று மாலைதான் கிடைத்தது,இதழ்களின் தரிசனமே இனிதான்....
நாளை இதழ்கள் வாசிப்பில் நேரம் செலவிட வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறேன்......
பன் 'னுடன் பார்சல் ஜம் 'மென்று வந்து விட்டது .இனி ஜாம் தடவி சாப்பிட வேண்டியதுதான் எனப் பிரித்துப் பார்த்தால்..,பிதுங்கிக் கொண்டு முன்னே தோன்றிய பன்னும் தீபாவளி மலரின் பருமனைக் கண்டு ஒதுங்கிக் கொண்டது.ரெண்டு மீசைக்காரர்களும் அமைதியாக பம்மிக் கொண்டிருக்க, தீபாவளி மலரோ கும்மியடித்து கும்மாளம் போட்டபடி முன்னே வருகிறது. நீண்ட நாட்கள் பின்னே ஒரு மெகா குண்டு புக்கான தீபாவளி மலரைத் தாண்டி கண்கள் நகர மறுக்கிறது. பின்னே 600 பக்கம் என்றால் சும்மாவா ? அந்தப் பக்கங்களைப் பற்றி பக்கம் பக்கமா வாசிக்கத் தோன்றுகிறது.ஆனால் அது பக்கவாத்தியம் ஆகிவிடாமல் அடக்கியே வாசிக்கிறேன்.
ReplyDeleteநசுக்கிய அதே தீபாவளி மலரைக் கொண்டு வெயிட் போட்டுப் பாருங்களேன் சார் - ஒருக்கால் பழையபடிக்கே புஷ்டியாய் மாறிடக்கூடும் !
DeletePaid for All in all அழகுராஜா
ReplyDeleteநன்றிகள் சார் !
Delete2020 அட்டவணையில் இளமையில் கொல் பற்றி ஏதும் இல்லையே சார் ..
ReplyDeleteமுடிந்தால் NEW லார்கோ , TIGER ஜம்போ வில் கொண்டு வாருங்கள் சார் ...
புதிய லார்கோவை தமிழாக்கம் செய்ய புதுசாய் யாராவது வந்தால் தான் சார் ! And கதையும்....ஏதோ-ஏதோ...!
Deleteசார் நிச்சயமா பொருளாதார புதிய சேர்த்து விட்டதாக இதயம் கூரிய வாசிப்பு கோரிடலாம். அடுத்த பாகமும் வரட்டும் பபார்ப்போம்....சாதா ஓவியர் அவர்...நிச்சயம் தூள் கிளப்பும்கிறது பட்சி
Deleteஸ்டீல்
Thank you sir and the team. Got the books today and very happy. Enjoyable Diwali. Also eager to get the next year books.
ReplyDeleteநேற்று இன்று நாளை ஆசிரியர்களுக்கும் தங்கள் பணியாளர்களுக்கும் நம் காமிக்ஸ்
ReplyDeleteநண்பர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐
Happy Diwali to you, junior and father. Aldo to fellow readers
ReplyDelete:-)
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteசந்தா A: அமர்க்களம் ! தோர்கல் 5 பாக ஆல்பத்திற்கு குடும்பத்தோடு காத்திருக்கிறேன்; எனது மனைவி வழக்கம் போல் ஜனவரியில் வரும் என்றார்! பதிவை முழுவதும் படித்ததும் கொடைமலர் என்று சொன்னேன்! மனதில் சந்தோசம் அவருக்கு! மிகவும் மகிழ்ச்சி! அதுவும் box செட் செம!!
DAMOCLES இந்தவருடமும் தொடர்வது இரட்டை மகிழ்ச்சி!
ட்யுராங்கோ அமைதியாக சாதிக்கும் இந்த நாயகன் தொடரட்டும்!
ட்ரெண்ட் ஒரு கதை மட்டும் தான் என்பது வருத்தமே; இவரின் கதைகள் வருடத்திற்க்கு இரண்டு என்று தொடர்ந்து 2022 புதிய கதைகளை களம் இறக்கலாம்!
சோடா சோடை போகமாட்டார் என நம்புகிறேன்! ஆர்வத்தை கிளப்பும் அறிமுகமாக உள்ளது!
சந்தா B: மார்ட்டினுக்கு ஒரு ஸ்லாட் சேர்த்து இருக்கலாம் சார்! நரகத்திற்கு நேர்பாதை 200 பக்கம் ரொம்ப ஆவலாக இருந்தேன்! அதனை கண்ணில் காண்பிக்காமல் இருக்க காரணம் என்ன?
Tex கண்ணில் விரலை விட்டு ஆட்டிய P-யின் அடுத்த கதையை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!
சந்தா C: மாதம் 1 கிடைக்குமாறு ஷெட்யூல் போட்டு வெளியிடுங்கள் சார், கொரியரைத் திறந்ததும் என் குழந்தைகளை குஷி படுத்துவது அதுதான். முடிந்தால் ரின் டினை வாண்டு ஸ்பெஷலில் கொடுங்கள்! லக்கி கதை இன்னும் ஒரு புதிய கதையை சந்தா C-ல் கொடுத்து இருக்கலாம்!
சந்தா D: அருமையான முயற்சி சார், நிச்சயமாக வெற்றி பெறும். நமது பழைய வாசகர்களின் கண்களில் படவும் நல்ல வாய்ப்பு. தரத்தில் கவனம் வேண்டும் சார். இதில் வரமால் உள்ள அந்த ஸ்பைடர் கதையையும் ஒரு புதிய ஆர்ச்சி கதையையும், ஒரு ஜேம்ஸ் பாண்ட் மற்றும் டயபாலிக் கதைகளுக்கு பதில் கொடுத்து இருக்கலாம்!
வாண்டு ஸ்பெஷலுக்கு ஒரு பெரிய கைதட்டல் மற்றும் ஆரவாரம் சார்.
எங்கே (தனியொருவன்) இவரை தொங்க விட்டு விடுவீர்களோ என பயந்தேன்! தனியொருவன் இரண்டாம் பாகத்தை தருவதற்கு ஸ்பெஷல் நன்றி!
கோவையில் வெளிவரும் லக்கி லுக் கதை புதியதா? அல்லது மறுபதிப்பா ? தயவு செய்து புதிய கதையை கொடுங்கள்!
வாண்டு ஸ்பெஷல் கதைகள் பற்றிய அறிவிப்புகள் எப்போது வரும்?
சிறு வருத்தம்: ஈரோடு ஸ்பெஷல் இளம் டைகர் வருவதால் 'இளமையில் கொல்' மீண்டும் தொங்கலில் விட்டு விட்டீர்களே... இது நியாயமா :-(
ஜம்போவில் டெக்ஸின் சிங்கத்தின் சிறுவயதில் இந்த முறை கிடையாதா? அல்லது அதுதான் இளம் tex -ஆக சந்தா Dயில் வருகிறதா?
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தவருடமும் கென்யாவை கண்ணில் காட்டாமல் காரணங்கள் சொல்வதை ஏற்க முடியவில்லை! வருத்தம் அதிகம் இதில் எனக்கு!
13 ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டீர்கள்! இந்த முறை கொஞ்சம் ஆர்வமுடன் இந்த புதிய கதைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!
பாயிண்ட் சிஸ்டதில் மாற்றம் ஏதும் உண்டா ?
மொத்தத்தில் 2020 சந்தோசத்தை அதிகபடுத்தியுள்ளது! அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது! நன்றி!
விஜயன் சார்,
Delete// அதுவும் box செட் செம!! //
இந்த கமெண்டை மறந்து விடுங்கள். எனது வீட்டில் கடந்த வருடம் XIII கதைகள் தொகுப்பை 6 கதைகள் வீதம் 3 hard bound புத்தகங்களாக கொடுத்து ரொம்ப நன்றாக இருந்தது, அதேபோல் இந்த தோர்கல் ஆல்பத்திற்கும் கொடுக்க சொல்லுங்கள் என்றுள்ளார். இந்த வருடம் வந்த தோர்கல் கதை hard boundல் வராததும் அவருக்கு வருத்தம்.
முடிந்தால் ஜனவரி சென்னை புத்தகக் திருவிழாவில் தோர்கலை கொடுங்கள். சென்னை புத்தகக் திருவிழாவிற்கு குடும்பத்துடன் விஜயம் செய்ய உள்ளோம்.
//நரகத்திற்கு நேர்பாதை 200 பக்கம் ரொம்ப ஆவலாக இருந்தேன்! அதனை கண்ணில் காண்பிக்காமல் இருக்க காரணம் என்ன?//
Deleteதலைப்பு மெய்யாகிடக்கூடாதே என்ற ஆசையன்றி வேறெதுவும் இல்லை சார் ! சில நேரங்களில் காணாது போகும் விஷயங்களின் மீது அளப்பரிய மையல் கொள்வதே நமக்கெல்லாம் வாடிக்கை ! அதற்குப் பின்னணியில் சிம்பிளாய் ஏதேனும் காரணமிருக்கக்கூடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம் !
என்னுடைய பதிவின் copy paste போல உள்ளதே நண்பரே...
Delete//லக்கி கதை இன்னும் ஒரு புதிய கதையை சந்தா C-ல் கொடுத்து இருக்கலாம்!//
Deleteஇருப்பதே 6 ஸ்லாட்ஸ் & இருக்கும் நாயகர்களும் 6 ! இதில் யாரைக் கழற்றி விட்டு லக்கிக்கு ௧ ஸ்லாட் கூட்டுவதோ சார் ?
//தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தவருடமும் கென்யாவை கண்ணில் காட்டாமல் காரணங்கள் சொல்வதை ஏற்க முடியவில்லை! வருத்தம் அதிகம் இதில் எனக்கு!//
Deleteகதையையும் வாங்கி, பணத்தையும் முடக்கி ; உழைப்பையும் முடக்கி வைத்திருக்கும் என்னை விடவுமா சார் ?
சரவணன் @ கொஞ்சம் உங்கள் பிண்ணூட்டத்தின் காபி & பேஸ்ட். காரணம் நானும் உங்களின் சில கருத்துக்களை விரும்பினேன். நன்றி.
Deleteலக்கியை கார்டூனில் இணைந்து கார்டூனின் எண்ணிக்கையை 7 உயர்தவே இந்த கோரிக்கை.
Deleteமிக்க நன்றி நண்பரே... ஆசிரியரின் பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி.
Deleteவிஜயன் சார், தீபாவளியின் முதல் (கர்னல் கிளிப்டன்) பத்தே சிக்ஸர். சூப்பர், அருமையான காமெடி கதை, முக்கியமாக சீனுக்கு ஏற்றார் போல் நீங்கள் எழுதிய டயலாக்குகள்.
ReplyDeleteஇவர் அடுத்த வருடமும் தாராளமாக வரலாம்.
கிளிப்டன் உடன் வரும் நாவல் எழுத்தாளர் அடிக்கும் கூத்து லக்கியின் புரட்சி தீ கதையின் சில sequenceஐ நினைவுபடுத்தியது. அட்டகாசமான காமெடி விருந்து தீபாவளிக்கு.
DeleteSIR, subscription link not available for 2020??
ReplyDeleteHuh ? They are online since yesterday morning & we are already around Subscription # 70....
DeleteSir - I had written to you about it. The YELLOW subscription is not immediately visible on two counts. There was no yellow shade on the image and second - you had to sort by highest price to see it and subscribe.
DeleteI struggled searching for 15-20 minutes and was almost reaching your often used "போடா டே" moment when I suddenly sorted stuff out - this is on www.lioncomics.in.
Whereas at lion-muthucomics.com NO SUBSCRIPTION link is visible on the HOME page at all still, at the time of this comment !
Both will be sorted out in the morning....have been 2 incredibly hectic days for the front desk & the internet link has been a disaster these 2 days.
Deleteவிடுமுறையில் கொல்..!
ReplyDeleteகர்னல் ஹெரால்ட் கப்கேக் க்ளிப்டனின் சாகசங்களை பக்கத்தில் இருந்து பார்த்து நாவல் எழுதும் ஆசையில் ஒரு கில்லாடி அம்மணி கர்னலுடன் ஜோடி சேர...
அந்நேரத்தில் பெரும்புள்ளி ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது பங்களாவிற்கு நாவலாசிரியை சகிதம் கர்னல் போய் இறங்க..
அங்கே.. அந்த பெரும்புள்ளியின் இரட்டை மகன்களில் ஒருவன் சந்தேகத்திடமான வகையில் ஏற்கனவே இறற்திருக்க..
இன்னொரு மகனின் மீதும் கொலைமுயற்சி போல.. கவனிக்க "போல" சில சம்பவகள் நடைபெற...
பெரும்புள்ளியின் மருமான் மேல் கரும்புள்ளி விழ (அதாவது டவுட்டு) ..
க்ளைமாக்ஸ்.. ஹிஹி என்று முடிய..
விடுமுறையில் கொல் இனிதே நிறைவுறுகிறது.!
அந்த நாவலாசிரியை அடிக்கும் லூட்டிகளும் சவடால்களும் செம்ம கலகலப்பு.! அம்மணியிடம் மாட்டிக்கொண்டு க்ளிப்டன் படும் பாடுகள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன.!
கலரிங் சும்மா பட்டையைக் கிளப்புது..! அந்த சாலைகளையும் கார்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.!
லண்டனின் சாலைகளில் கர்னலும், நாவலாசிரியையும் மாற்றி மாற்றி கார் ஓட்டும் காமெடியில் கர்னலின் புத்திசாலித்தனம்.. செம்ம.!
விடுமுறையில் கொல் - புன்னகை.
ரேட்டிங் 9/10
மார்க்குகள் உதைக்குதே சார் ?
Deleteபுன்னகைக்கே 9 /10 போடுவதாகயிருந்தால் - சிரிப்புக்கு ? வெடிச் சிரிப்புக்கு ?
சிரிப்புக்கு 18/10
Deleteவெடிச் சிரிப்புக்கு 99/10
கார்ட்டூன்ஸ்னாவே 9 கீழ மார்க் போட மனசு வருவதில்லை சார்.. :-)
2020 அட்டவணை பிரமாதம்!
ReplyDeleteடயபாலிக் இடம்பிடித்துவிட்டார் - மிக்க நன்றி எடிட்டர் சார்.
மலிவு விலைப்பதிப்புகள் நிச்சயம் இன்னும் பல வாசகர்களை உள்வாங்கிட உதவப்போகிறது பாருங்கள். எடையும் குறைவாக இருக்குமென்பதால் அயல்நாட்டு வாசகர்களுக்கு (உச்சத்தில் நிற்கும் பொதிச் செலவில்) இவை மிகப்பெரிய வரம்!
ஜேம்ஸ் பாண்ட் பற்றி சில தினங்களுக்குள் ஒரு 'கோடி' காட்டிவிட்டு களத்திலும் இறக்கிவிட்டீர்கள். 'ராணி' போலவே சென்சாரில்லாமல் படங்களும் வருமோ தெரியவில்லை :-)
தில்லான் - கதைகள் ஏற்கனவே ராணியில் வந்துள்ளன. அதுபோல ஏ.எக்ஸ்.ஏ வும் வந்திருக்கிறது. இளவரசிக்கு படம்போட்ட ரொமேரோவின் சித்திரங்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கும் (!!!).
வாண்டு ஸ்பெஷல் அறிவிப்புக்கு - சிவப்புக்கம்பள வரவேற்பு. நம் வாசகர்களின் பங்களிப்பும் ஏதாவதொரு வகையில் அவற்றில் இடம்பெறமுடிந்தால்..... டபுள் ஹேப்பி!
//இது டிஜிட்டல் யுகம் சார் ! எது கிடைக்காது போனாலும் சுலபமாய் மறுபதிப்பிட இயலும் !//
ReplyDeleteஅண்மைய வருடங்களில் வெளியாகி சடுதியாக விற்றுத் தீர்ந்துவிட்ட இளவரசியின் கழுகு மலைக்கோட்டை, லக்கி லூக்கின் ஒற்றைக் கை பகாசுரன், நிஜங்களின் நிசப்தம் (கிராபிக் நாவல்) போன்ற இதழ்களை மறுபதிப்பு செய்யும் எண்ணமுண்டா சார்?
எல்லாமும், எல்லா நேரமும் கிடைத்துக் கொண்டே இருந்தாலும் சலித்து விடும் நண்பரே ! கொஞ்ச காலமாவது சிலதாவது கையிருப்பில் இல்லை எனும் பட்சத்தில் எஞ்சியுள்ளன கொஞ்சமாவது ஜாஸ்தியாய் விற்பனை காணவொரு முகாந்திரமாகிடும் !
Deleteவுட்சிடி கும்பலுக்கு இன்னொரு ஸ்லாட் ஒதுக்கி இருந்திருக்கலாம் சார்...நீங்கள் காரணத்தை விளக்கி இருந்தாலும் வினவாமல் இருக்க முடிய வில்லை ..
ReplyDeleteமன்னக்கவும் சார்..
தலீவரே...
Deleteநான் கேக்க ஆசைப்பட்டதை அப்படியே கேட்டுட்டிங்களே..
கண்ணுல ஜலம் வெச்சுண்டேன்..!
தலீவரே....யாரிடத்தை எடுத்துக் கொண்டு இன்னொரு ஸ்லாட் என்று சொல்லுங்களேன் ? அல்லது அந்த சந்தாப் பிரிவில் மட்டும் 7 இதழ்கள் என்று வைத்துக் கொள்வதா ?
Deleteஹீம்..:-(
Deleteகவ்பாய் கதைகள் ஆறு கதைகள் இருக்கு இன்னிங்க அதை எப்பொ வெளியீடுவிர்கள்
ReplyDeleteகௌபாய்க் கதைகள் ஏராளம் உள்ளனவே....நீங்கள் குறிப்பிடுவது எதையோ ?
Deleteஇந்த பரபரப்பில் ஜானதன் தாத்தா ஓய்வெடுக்க போயிட்டார் போல,அடுத்த தொகுப்பு விரைவில் என்ற அறிவிப்பை முதல் தொகுப்பில் பார்த்ததாக நினைவு.......
ReplyDeleteபுதிய சந்தா அறிவிப்பில் ”ஆயா புகழ்” டயபாலிக்கிற்கு இரண்டு ஸ்லாட்கள் கிடைத்தது வியப்பளிக்கிறது சார்.....
Deleteவெறும் ஒற்றை ஸ்லாட்டுக்கு ஒரேயொரு கதை வாங்குவது = "அண்ணாச்சி...ஒரேயொரு கடலைமிட்டாய் எடுத்துக்கட்டுமா ?" moment #
Deleteபின்னது சாத்தியம் ; முன்னது நஹி சார் !
Thorgal.. Hard cover pls... 5 in 1..
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே. ஆசிரியருக்கும் நமது காமிக்ஸ் உறவுகளுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள். ஆசிரியருக்கு தவ்சண்ட் வாலா நன்றி.தீபாவளி மலரை தீபாவளிக்கு முன்னரே இல்லங்களுக்கு அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி. அடுத்த ஆண்டின் அட்டவணையை புத்தக வடிவில் வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.தல டெக்ஸின் அறிவிப்புகள் அனைத்துமே ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.அருமையான அட்டவணை.அருமையான சுவைமிக்க பன்.தீபாவளி வாழ்த்து அட்டை சிறப்பு.டைகரின் அறிவிப்பு மிக சிறப்பு.மொத்தத்தில் காமிக்ஸ் உறவுகளுக்கு மிகச் சிறந்த தீபாவளியாய் அமைந்துள்ளது.நன்றி ஐயா.
ReplyDeleteதீபாவளிக்குக் கையில் இல்லாவிடின் அதனில் சிறப்பே இராதே சார் ; அதனால் தான் நிறையவே முன்னேற்பாடுகள் !
Deleteசொன்னபடிக்கே தீபாவளிக்கு முன்னமே பார்சல் கிடைச்சது.. பன்னுதான் கொஞ்சம் நசுங்கி போச்சு 😁😁 நன்றி சார்..
ReplyDeleteதீபாவளி ரஷ்ஷில் ரயிலிலும், பஸ்ஸிலும், கடைத்தெருக்களிலும் நாம் நசுங்காததா ?
Deleteசந்தா D யில் Archie வர வாய்ப்பு உண்டா சார்? Pls..
ReplyDeleteSorry, no sir !
Delete// உங்களின் ரவுசுகளை டெக்ஸ் ரசிகர்களும் செம sportive ஆக எடுத்து வந்துள்ளனர் ! நேரம் கிடைக்கும் பொழுது டெக்ஸ் ரசிகர்களிடம் அந்தக் கலையைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கற்றறிந்து கொள்ள இனிமேல் நீங்களும் கூட முயற்சித்திட வேண்டி வரலாம் ! //
ReplyDeleteசரியா சொன்னீங்க சார் 👍🏼🙏🏼
எவ்வளவு வந்தாலும் தாங்குவோம் சார்💪🏼
மொத்தத்தில் நாம இப்போ ஹேப்பி அண்ணாச்சி 💃🏻💃🏻💃🏻
.
அப்படீங்கிறீங்க ?
Deleteஏன்? இன்னும் வருமா?
Deleteகவ்பாய் கதைகள் ஏராளம் இருக்கு இன்னிங்க பிடித்தவர் வாங்கிடுகள் என்று வெளியீடுகள் சார்
ReplyDeleteகண்ணே.. கொலைமானே!!! - தலைப்பு வைப்பதற்கு விருது எதுவும் கொடுத்தால் நம்ம எடிட்டருக்கு யோசிக்காமல் வழங்கலாம்.
ReplyDelete2020 அட்டவணை பார்த்தவுடன் வந்த யோசனை - இப்பவே பணம் அனுப்பிடறேன். எல்லா புத்தகத்தையும் நீங்களும் உடனே அனுப்பிடுங்க சார்!! :-))
எடிட்டர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
Sci Fi ஜானர் கதைகளை நாம் இன்னும். முயற்சிக்கவே இல்லை. நமது வட்டத்தின் ரசனைகள் அடுத்த தளத்திற்கு மாறிவிட்டது உங்களுக்கே தெரியும் . அதனால் ஆல்டபரான் போன்ற கதைகளை முயற்சி செய்யலாமே சார்!!
விஞ்ஞானத்தோட வீம்பா விளையாண்டு பார்க்கலாமே!! :-))
AXA கி.பி.2080-ல் நடைபெறும் கதை சார் ! நம்ம sci-fi ஜானர் பசியை போக்குனா மாதிரியும் இருக்கும் ; நம்மாட்களின் கலை தாகத்தைப் (!!!) போக்குனா மாதிரியும் இருக்கும் என்று நினைத்தேன் ! துரதிர்ஷ்டவசமாக திட்டம் பணாலாகிப் போச்சு !!
Deleteபேசாம சிறார்களுக்கு மட்டும்னு ஸ்டிக்கர் ஒட்டி ரிலீஸ் பண்ணினா என்ன ? :-)
Deleteபுரட்சிப்பெண் ஷீலான்னு ராணில படிச்ச ஞாபகம்,,,,அப்ப பிடிக்கல, ,,காலம் சென்ற பின் படிக்க வெகுவா ரசித்தேன்,,,,நிச்சயம் பட்டய கிளப்பும்
Deleteஜம்போவில் கார்ட்டூனுக்கு ஒரு ஸ்லாட் உண்டு தானே சார்?
ReplyDeleteபார்க்கலாம் சார் ! மீதமுள்ள அந்த 3 ஸ்லாட்களுக்கென இன்னும் தீர்க்கமாய் யோசிக்கவில்லை என்பதே நிஜம் !
Deleteஅந்த புது பரட்டை சார்?
Deleteவிதி வலியது போலவே...?!!
Deleteசரவணன் அருமையான யோசனை ஜம்போவில் கார்ட்டூன்.
Delete./Raghavan26 October 2019 at 00:06:00 GMT+5:30
Deleteஅந்த புது பரட்டை சார்?
Vijayan26 October 2019 at 00:39:00 GMT+5:30
விதி வலியது போலவே...?!!//
:-)))))
தீபாவளி புத்தகங்களில் கர்னலும், ஜூலியாவும் மட்டுமே பாக்கி..
ReplyDeleteகுறைந்தபட்சமாக ஒற்றை வரியிலாவது விமர்சனம் ?
Deleteடெக்ஸ் தூள் கெளப்பிருக்குமே,,,சர்க்கஸ் சார்பு கதைகள் சறுக்காதே
Deleteடைகர் fans இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் தாங்கி கொள்ள வேண்டும்(கலாய்ப்புகளை), but டெக்ஸ் fans வருடத்திற்கு 8 முறை தாங்கி கொள்ள வேண்டி வரலாம்...☺
ReplyDeleteசொல்லணும்னு தோணுச்சு....சொல்லிப்புட்டேன் !
Delete:-)
Deleteடியர் எடிட்டர்
ReplyDeleteஒரு விண்ணப்பம் - போன வருஷமே கேட்டதாய் ஞாபகம் .. அந்த catalog அட்டையையும் அடுத்த முறை கொஞ்சம் தடிமனாக்கிடுங்களேன். வருடங்களுக்கு நிலைக்கும்.
மற்றபடிக்கு போட்டி வந்தாச்சு - படிக்க மனசே வரலை - அடிக்கடி படம் பார்த்துக்கொண்டு catalogஐ மேய்ந்துகொண்டிருக்கிறேன்.ரவுண்டு bun சுவை நன்று - என்ன கொஞ்சம் ரவுண்டா வராமல் ... ஹ்ம்ம் .. எப்படி சொல்றது .. லிங்க வடிவத்தில் பிதுங்கி வந்தது :-D :-D :-D
ரவுண்டென்பர்....வட்டமென்பர்....வளையமென்பர்....
Deleteசதுரமாயினும் சுவை குன்றா பன்னை !!
புலவர் முத்துவிசயனாரின் புதிய கவிதை 437.
கேட்டலாக்கின் உட்பக்கங்களும், அட்டைப்படமும் ஒரே தாளில் பதினாறு பக்கங்களாய் மடிக்கப்படும் விதம் அமைத்துள்ளோம் சார் ! அட்டையை மாத்திரம் தனியாய்ப் பின் செய்யும் பாணியிதனில் கிடையாது ! So உட்பக்க காகித பருமனே அட்டைக்கும் தேறும் !
Deleteஎல்லாரும் நல்லாருங்கப்பு.....
ReplyDeleteநான் தீபாவளி மலரை பார்க்கவே பல நாட்கள் ஆகும் போல இருக்கு.
இந்தியாவின் மத்தியப் பிரதேசம், ஜபல்பூரிலிருந்து- ஜம்புலிங்கம்
முத்து 450வது மைல்கல் சிறப்பிதழ் என்னாச்சு சார்?
ReplyDelete2021-ல் காத்திருப்பதற்கு இப்போதே தூக்கத்தைத் தொலைப்பானேன் நண்பரே ?
Deleteசார்....
Deleteபழிவாங்கும் புயல் மாடஸ்டி வரை முத்து வெளியீட்டு எண் 436 நிறைவு பெறுகிறது.2020க்கு முத்துவில் ஒரு 14இதழ்கள் வராதா?
நான் வரும் என்று நினைத்து வேகமாய் அட்டவணைப் பதிவைப் பார்த்தால் மொத்தமே முத்து இதழ்கள் 10 தான் வருகிறது.அடச்சே என்னமோ போடா மாதவா என்று சொல்லிக்கொண்டேன்.இல்லாத மூளையைக் கசக்கியதால் மண்டைக்குள் திடீரென்று LED 100வாட்ஸ் பல்பு எரிந்தது.ஐந்து பாக தோர்கல் தனித்தனி இதழ்களாக வருவதால் தனித்தனியாகத் தானே வெளியீட்டு எண் வரும்,அப்ப 450 இதழ்கள் என்ற எண்ணிக்கை வந்துவிடுகின்றதே சார்.
எப்பூடி...நாங்கெல்லாம் அப்பவே அப்பூடியாக்கும்.!
எங்க சார் எங்க சிறப்பிதழ் எங்க சார்?
ஒவ்வொரு இதழின் விற்பனைக்குள்ள பார்கோட் குறியீட்டுக்கும் அதன் வெளியீட்டு நம்பருக்கு தான் தொடர்பே ! ஐந்து தனித்தனி இதழ்களாய் அவற்றை விற்கவும் போவதில்லை ; 5 தனித்தனி பார்கோடுகளும் வழங்கப் போவதுமில்லை எனும் போது ஐந்து தனித்தனி வெளியீட்டு நம்பர்கள் எங்கிருந்து முளைக்கப் போகின்றனவோ ?
Deleteஎன்றைக்குமே மைல்கற்களைத் தேடி ஓடுவதில் சுவாரஸ்யம் இராது நண்பரே ! நம் போக்கில் பயணம் ; பயணத்தின் போக்கில் மைல்கற்கள் என்பதே பொருத்தமாயிருக்கும் !
Deleteதவிர நீங்கள் உருவகப்படுத்திடும் NBS போன்ற இதழ்களெலாம் இனியும் சாத்தியமாகாது ! So கூட்டணி இதழ் எனில் இந்த ஸ்லிப் கேஸ் பாணி தான் இனிமேல் ! சிறுகச் சிறுக அதற்குப் பழகிக் கொள்வோமே ?
ஆஹா,,,,,
Deleteதலைப்புகள் சிலதை தவிர பெரும்பாலானவைகள் அருமையாக இருக்கிறது
ReplyDelete124th
ReplyDeleteஒரு முழுமையான சந்தா சார் வாழ்த்துக்கள்.. உங்களது ரெக்கார்டை நீங்களே முந்துகிறீர்கள்.. போன வருட சந்தாவை தான் கூறுகிறேன்.
ReplyDeleteசந்தா d அருமையான முயற்சி கண்டிப்பாக வெற்றிபெறும்
அனைத்து வகைகள் மற்றும் ஜம்போ சேர்த்து பணம் அனுப்பிவிட்டு ஒரு மெயிலும் தட்டி உள்ளேன்.
என்ன ஒரு அமர்க்களமான கதை பிஸ்டலுக்கு பிரியாவிடை baracuda அண்டர்டேக்கர் பவுன்சர் போல இல்லாதது குறை. அதனை எப்படியாவது நிறைவேற்றிவிடுங்கள் ப்ளீஸ்.
//என்ன ஒரு அமர்க்களமான கதை பிஸ்டலுக்கு பிரியாவிடை baracuda அண்டர்டேக்கர் பவுன்சர் போல இல்லாதது குறை. அதனை எப்படியாவது நிறைவேற்றிவிடுங்கள் ப்ளீஸ்.//
Deleteஅதுக்குதான் மூனு கேப்பிருக்கே,,,,அப்றம் ஆயிரம் பதிவு ஸ்பெசல்,,,பல பார்வை ஸ்பெசல்
ReplyDeleteகிர்பியை கொண்டுவந்ததிற்கு நன்றி!
காரிகனும் கொண்டுவர ஏதாவது செய்யுங்கள்.
ப்ளுகோட்டடு பட்டாளம் எனக்கு சரிபடுவதில்லை
விலையில்லா இதழ்கள் மூன்று சந்தா கட்டினாலும் உண்டா?
டியர் எடிட்டர்ஜீ !
ReplyDelete2020 அட்டவணை சம்பந்தமாக ஒரு சின்ன வேண்டுகோள்.
தோர்கலை ஐந்து தனித்தனி புத்தகமாக பாக்ஸ் செட்டில் போடுவதை தவிர்த்து ஒரே புத்தகமாக ஹார்ட் கவர் பைண்டிங்கில் வெளியிட்டால் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் வசதியாக இருக்கும். ( ஓம் குண்டு புக்காய நமஹ! )
மொத்த அட்டவணையில் யெல்லோ ஷர்ட்காரரின் ஆதிக்கம் ரொம்பவே அதிகமாக இருப்பதாக படுகிறது. மலிவுவிலை பதிப்புகளிலும் அண்ணாரே நாட்டாமை செய்தால் எப்படி சார்? அவருக்கு இரண்டு இடம் மட்டும் ஒதுக்கி மிச்ச இரண்டு இடங்களை மாடஸ்டிக்கு கூடுதலாக ஒன்றும் , அந்நாளைய சூப்பர் ஸ்டார் மந்திரவாதி மாண்ட்ரேக்குக்கு ஒன்றுமாக ஒதுக்கினால் ஒரு சமநிலை உண்டாகுமே சார். ஒரே மாதிரி வெஸ்டர்ன் கதைகள் என்றில்லாமல் ஒரு வெரைட்டியும் கிடைக்கும்.( ஓம் இங்கிலாந்தாய நமஹ! )
பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்!
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார்.
இளம்ப தலை கதைகளை குறைக்கனுமா? பள்ளிபாளையத்துக்கு இங்கிருந்தே ஆட்டோ புக் பண்ண வேண்டி வரும் போல் இருக்கே.
Deleteஅடுத்த வருடம் அட்டவணை தயாரிக்கும் போது ஆசிரியர் நண்பர் பு.சா சொன்னதையும் பரீசிலனை செய்ய வேண்டும். ப்ளீஸ்.
Delete// பள்ளிபாளையத்துக்கு இங்கிருந்தே ஆட்டோ புக் பண்ண வேண்டி வரும் போல் இருக்கே. //
Deleteஹைய்யா , மாண்ட்ரேக் கதையோட தலைப்பு ரெடி!
" அட்லாண்டிக்கில் ஒரு ஆட்டோ "
இளம் டெக்ஸ்ல கை வெச்சா எங்க பல்சரும் பத்து பேர சுமந்த படி வரும்,,,
Deleteஇளம் டெக்ஸ்ல மட்டுமில்லே.. கைக்குழந்தை டெக்ஸக் கூட யாரும் தொடமுடியாது - புரிஞ்சுக்கோங்க! கிர்ர்ர்..
Deleteஅமெரிக்கா ஈரோடு கோவை - எல்லா ஊருக்கும் ஆட்டோ வரும் ....
Deleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDelete⚡️✨🌟⭐️💫💥
கரூர் தாத்தாவுக்கும் எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.
Deleteதாத்தாவா...
Deleteஏதோ அங்க இங்க சில கருப்பு முடி இருக்கிறது உண்மைதான்..
ஆனாலும் இன்னும் நான் பொம்மை புக் படிக்கிற யூத்துதான் அண்ணா...
கரூர் தாத்தாவுக்கும் எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.
Deleteஏம்பா.. ஏன்..😩😩😩
Deleteதீபாவளி புக் படிக்க போறேன்..💃🏻💃🏻💃🏻
அட்டவணையால் ஹேப்பி. இதுக்கு மேல பெட்டரா வேற அட்டவணை ஏதும் தர முடியுமான்னு தெர்ல. தல கதைகள், குறிப்பா இளம் தல, அதிகமா இருக்கறது மகிழ்ச்சி.
ReplyDeleteதங்கத்தலைவனின் 12 புக் ஸ்பெசல் வேற நாக்குல ஜலம் ஊற வைச்சுட்டுருக்கு. ஆகஸ்ட்டுக்கு டிக்கெட் போடுன்னு கையெல்லாம் இப்பவே நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. லீவு இல்லைன்னு மூளை சொன்னாலும் மனசு கேக்க மாட்டேங்குது. 2021 ல் இளமையில் கொல்லின் மீத இரண்டு பாக வண்ண இதழ்களை மறந்துடாதீங்கோ.
தோர்கல் ஸ்லிப் கேஸ் எனக்கென்னவோ வித்யாசமா பண்ண என்னமோ திட்டமிருக்குன்னு தோணுவதால் வரும் வரை வெயிட் பண்ணப் போறேன்.
2016ல தந்த டீசர்ட் ரெண்டும் இன்னும் போட்டுட்டு சுத்திட்டு இருக்கேன். லோகோ தான் கொஞ்சம் கொஞ்சமா காணாம்ப் போயிடுச்சு. 😌. டீசர்ட் ஐடியாவும் மகிழ்ச்சி.
ரூட் 66 லிஸ்ட் கண்டிப்பாக 2020 லியே போட்டுடுங்க சார். அற்புதமான அரசியல் த்ரில்லர். கென்னடியின் காலகட்டத்திற்கு அழைத்து செல்லும் கதை. பட்டய கிளப்பும் என நம்புகிறேன்.
இதழ்கள் தேர்வு மொத்தமும் மெத்தத் திருப்தி. எங்கள் சந்தோசத்திற்கு இத்தனை பல்டி அடிக்கும் உங்களுக்கும் ,ஜூ. எடிககும் உங்கள்டீமுக்கும் எங்கள் அன்பு.
அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஷெரிப் அண்ணா..!!!
Delete/// தங்கத்தலைவனின் 12 புக் ஸ்பெசல் வேற நாக்குல ஜலம் ஊற வைச்சுட்டுருக்கு. ஆகஸ்ட்டுக்கு டிக்கெட் போடுன்னு கையெல்லாம் இப்பவே நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. லீவு இல்லைன்னு மூளை சொன்னாலும் மனசு கேக்க மாட்டேங்குது. ///
Deleteஎல்லாம் இந்த பொம்மை புத்தகம் படுத்தும் பாடு...
எதுக்கும் உங்க வீட்டு சாமிய நினைச்சுப் பார்த்துக்குங்கோ...🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஷெரிப் அண்ணா..!!!
Deleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள் கருவூர் அண்ணா..!!!
Deleteசந்தாவில் இல்லாதவர்களுக்கு விலையில்லா இதழ்கள் கிடைக்க வழியேதுமுண்டா சார்?
ReplyDeleteSir I saw your post before sleeping. What dreams! Full of Muthu comics, Mini Lion, lion comics (including Archie)
ReplyDeleteநல்லவேளையா உங்க கனவுல திகில் காமிக்ஸ் வரலை.. இல்லேன்னா, நம்ம கருப்புப் பாட்டீம்மா பொக்கை வாயைக் க்ளோஸ்அப்புல காட்டி "பேராண்டி.. சிவகாசிலேர்ந்து வந்த ரவுண்டு பன்னுல இந்தப் பாட்டீம்மாவுக்கும் ரவூண்டு கொடுத்திருக்கக் கூடாதா..? பாட்டீம்மாக்களின் சாபத்துக்கு ஆளானா என்ன நடக்கும்னு தெரியுமில்லே?ஹிஹிஹி!!"ன்னு சிரிச்சிருந்திருந்தா உங்களுக்கு குளிர் காய்ச்சல் கண்டிருக்கும்!!
DeleteActually now only I read the post fully sir. Your explanation is convincing esp. for Tex. Let us thank Tex
ReplyDeleteஇந்த வருடம் டைகர் குண்டு புத்தகம் ஈரோட்டில் வர உள்ள நிலையில் புதிய டைகர் கதையை 2021 வெளியிடலாமே.
ReplyDeleteகடந்த வருடம் வந்த இளம் டைகர் க(இளமையில் கொல்?) இந்த வருடம் தொடராது வருத்தமே.
ஐம்போவில் புதிய கதைகள் அல்லது கடந்த வருடம் வந்த ஆக்சன் ஸ்பெஷல் போல் சில கிளாசிக் கதைகளை இணைந்து கிளாசிக் ஸ்பெஷல் என கொடுக்கலாமே?
புத்தகங்களை கை பற்ற நேற்றே ஆபீஸ் இல் பெர்மிஷன் கேட்டு மதியமே கிளம்பி நேற்று மாலை வந்து விட்டேன் வீட்டுக்கு.
ReplyDeleteபுத்தகங்கள் உருவாக்கம் அட்டகாசம் அதும் தீபாவளி மலர் அருமை. இன்று ஆற அமர எல்லா புத்தகங்களையும் படித்து பதிவிட வேண்டும்.
நண்பர்கள் மற்றும் ஆசிரியர் , junior ஆசிரியர் அவர்களது குடும்பத்திற்கும் டீம் க்கும் எனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
சார் d சந்தா உண்மையிலே அசத்தல்.....அதுவும் கடைகளில் தங்க விடப்படும் என்பது மகிழ்ச்சி....இதில் குழந்தைகள் கவரும் இலவச இணைப்புகள கடைகளில் தருவதுடன் சில பல கிச்சு காளியை போன்ற இலகுவான கதைகளும் இணைத்திருக்கலாம் .கதைகள் தேர்வு சுவாரஸ்யம் . சிறு வயது டெக்ஸ்டைல் நம்ம ஸ்பைடர் போலீஸ் மீண்டும் நம்ம வளரும் காமிக்சுக்கு புத்துணர்வூட்டட்டும். ராணி ரசிகர்களும் காமிக்ஸ் என பார்க்க வைக்க ஜேம்ஸ் கண்டு வந்ததும் கை ககொடுக்கட்டும்....டயபாலிக் அருமை. ஒரே காரணத்திற்காக போட்டு தில்லானா அதற்கு மாறாக வேற கதய போடலாமே .ரிப்பும் மாடஸ்டியும் கேட்ட ரசிகர்கள் கொண்டாடச் செய்யுமென்பது ஐயமில்லை...சந்தா டி வெற்றி பெற செந்தூர் வேலவன் வேண்டுகிறேன் நானும்....
ReplyDeleteஸ்டீல்
இரண்டு நாட்களாக வாயடைத்துப் போய் கிடக்கிறேன் என்றால் மிகையல்ல!
ReplyDeleteஇத்தனை வெரைட்டி ஹீரோக்களை கவர் பண்ணி இப்படி ஒரு சந்தா சாத்தியமா???
அதுவும் கடந்த ஆண்டு தொகைக்கே!
அசாத்தியங்களை சாத்தியமாக்கும் ஆசிரியர் சாருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏
இடம் கிடைத்த ஹீரோஸ்களின் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐💐
இடம் இல்லா ஹீரோஸ்களின் ரசிகர்கள் கவலைப்படேல் நண்பர்களே! நிச்சயமாக வருங்காலத்தில் நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.
டெக்ஸ் ஏன் அதிக ஸ்லாட் என தாங்கள் கொடுத்து உள்ள விளக்கம் இதற்கு மேலும் யாரையும் திருப்தி கொள்ள செய்யாதிருக்குமா என்ன???
இத்தகைய அசாத்தியமான அதிசயத்தை நிகழ்த்தியுள்ள தங்களோடு தோள் கொடுத்து நிற்க சற்றேனும் நாங்களும் முயல்வோம் சார்.
நண்பர்களே @ நாமும் ஏதாவது செய்ய வேணும் என்ற சிந்தையில் உதித்த எண்ணங்கள் சில! பதிவிடுகிறேன்!
செம்மைபடுத்துங்கள்! செயல்படுத்துங்கள்!
வெற்றி நமதே!💪💪💪💪💪💪
ReplyDeleteஆஹா ! 2020 அட்டவணை வந்துருச்சு ! பொங்கும் ஆர்வத்தில் ஓடி வந்தேன் !
அகில உலகமும் தேடி அலைஞ்சி நமக்காக காமிக்ஸ் புதுமைகளை கண்ணில் காட்டி வரும் எடிட்டர் சாரின் தேடல்கள் இன்னும் விரிவாக்கம் செய்திட நமது பங்காக ஒவ்வொரு ரசிகரும் சிறிய முயற்சி செய்வோம் ஃப்ரெண்ட்ஸ், வாருங்கள் !
இங்கு கமெண்ட்கள் பொங்கி வழிவது போல சந்தா எண்ணிக்கை 500, 1000னு பெருகவும், விற்பனை சிறக்கவும் நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும் தொடர்ந்து அதிகரிக்க செய்வோம்.
நாம காமிக்ஸ் காதலர்கள் எல்லோரும் இத்தருணத்தில் சரியான முயற்சிகள் மேற்கொண்டால் அவற்றின் பலன்களை 2020 ஜனவரி சென்னை புத்தக விழாவில் ஆசிரியர் சாருடனான சந்திப்பில்
தெரிந்து கொள்ளலாம்.
நம்மகிட்ட இருக்கும் smart phone எனும் மந்திரப்பெட்டி வாயிலாக நமது நட்புகள் , உறவு வட்டங்களில் what's app, ஃபேஸ்புக் போன்றவற்றில் உரையாடி உலா வருகிறோம். நம்ம காமிக்ஸ் அறிமுகப்படலம், நமது சொந்தங்கள் மற்றும் நட்புகளிலிருந்து தொடங்கட்டுமே !
காமிக்ஸ் மீள் வருகை பற்றி தெரிந்திட வாய்ப்புகள் இல்லாத நமது சொந்தங்கள் & நட்புகளிடம் முதலில் அதை பற்றி தெரிவித்துவிட்டு, இந்த 2020ம் ஆண்டுக்கான சந்தாஅட்டவணையை அறிமுகப்படுத்துவோம்.
குறைந்த விலை சந்தா Dயோ, அல்லது அதில் உள்ள 007,
அல்லது மேக்ஸியில் உள்ள வாண்டு இதழ்களோ ஏதோ ஒரு அம்சம் அவர்களை கவரலாம். சந்தாவில் இணைந்து கொள்ள www.lioncomics.in முகவரி மற்றும் சந்தா அட்டவணையை அவர்கள் பார்வைக்கு அனுப்பி வையுங்கள்.
ஏதாவது ஒரு முழு சந்தாவோ, ஒற்றை சந்தாவோ அல்லது ஒரு ஒற்றை இதழோ வாங்க அவர்கள் முயற்சித்தாலே நல்ல ஆரம்பம் அல்லவா!
முயற்சி திருவினையாக்கும் ஆயிரங்களே!
நாளை முதல் அல்ல ! இன்று முதல் இப்பொழுதே உங்கள் முயற்சிகள் தொடரட்டும்!🙏🙏🙏🙏🙏🙏
(சந்தா அட்டவணை இணைத்து நீங்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுக்கள், பேஸ்புக் குழுக்கள் &மற்ற இணைய வசதிகள் உள்ள இடங்களிலும் பதிவு செய்யுங்கள் தோழர்களே!)
செஞ்சுருவோம்
Deleteசந்தா e என்னவென்று சொல்ல எப்படி சொல்ல சந்தோசத்த...முதல் கத ரெம்ப எதிர்பார்த்த . .ஆனா எதிர்பாராத கிடைத்த ஸ்பின் ஆஃப் .. .சில நேரங்களில்....சில மூடிய பக்கங்களை மறுபடியும் வாசித்திடக் கூடாது என தாங்கி வரும் கோழைகளின் பூமி தலைப்பே எதிர் பார்ப்பது தூண்ட . ...காலனின் தாவும் அந்தக் கொலைகாரச்சுறாவும் அந்த பக்கங்கள் புரட்டாதி துடிக்கும் மனச அடக்கம் திணற ....பனியில் ஒரு குருதிப் புனல் ...அடடா நெப்போலியன் மடையா. ...அடடா இருவண்ணமா . .இன்னாது. ..மிரட்டும் வண்ணம்...ஆஹா புதிரான எதிராகக் மாத இதழ் இதன் பிடுங்க சார்பு மானசீக கோரிக்கையுடன் அடுத்த பககத்துக்கு தாவ பிரளயம் ஆஹா நல்லவேளை விலக்கலன்னு பாஞ்சா பேய்க்கத...அனைத்தும் கிடைத்த அட்டகாசம் சந்தா.. .அடுத்த வருட சந்தாவின் மணிமகுடம் eeeeeee
ReplyDeleteமெகா சுசீலா இருக்கம் இருளில் மைந்தர்கள் கார்சனின் கடந்த காலமும் இத போலன்ன மனச ஆறுதல் பூதாகாரமாக தாண்டும். ..காலைல லக்கி புதுக்கதயாருந்தா நல்லாருக்குமேன்னு நெனச்சு படி....வாண்டு ஸ்பெஷல் நம்ம வாண்டு வரும் பொது ஆசிரியர் தரும் பரிசா இத விட எதிர்க்கும்....சார் நான் கத புத்தக உலகில் நுழைந்தது தங்கள் ஆர்ச்சியால் என்றால்...என் மழலையஉம் வாண்டு ஸ்பெசலும் கால் வைப்பது 2020ல இத விட சந்தோசம் வேறெது வேணும் சார....இத விட சிறந்த பரிசு அதாவது நிறைந்த சந்தோசத்த...நானடைந்த ...அடையும் அடையப் போகுமதே சந்தோசத்த என் மகவுககும் தரப்போவத நெனச்சா....செந்தூராணை கும்பிடுகிறேன். ...கேள்விகள் தொடரும்
ReplyDeleteஸ்டீல்
2020 சந்தா கட்டியாச்சு! (முதல் பாதி மட்டும் தான்)
ReplyDelete
ReplyDeleteமெகா சைசஉல இருக்கம் இருளில் மைந்தர்கள் கார்சனின் கடந்த காலமும் இத போலன்ன மனச ஆறுதல் படுத்தி தாண்ட. ..கோவைல லக்கி புதுக்கதயாருந்தா நல்லாருக்குமேன்னு நெனச்ச படி....வாண்டு ஸ்பெஷல் நம்ம வாண்டு வரும் பொது ஆசிரியர் தரும் பரிசா இத விட ஏது இருக்கும் . ....சார் நான் கத புத்தக உலகில் நுழைந்தது தங்கள் ஆர்ச்சியால் என்றால்...என் மழலையஉம் வாண்டு ஸ்பெசலும் கால் வைப்பது 2020ல இத விட சந்தோசம் வேறெது வேணும் சார....இத விட சிறந்த பரிசு அதாவது நிறைந்த சந்தோசத்த...நானடைந்த ...அடையும் அடையப் போகுமதே சந்தோசத்த என் மகவுககும் தரப்போவத நெனச்சா....செந்தூராணை கும்பிடுகிறேன். ...கேள்விகள் தொடரும்
ஸ்டீல்
நமது லயன் முத்து காமிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDelete
ReplyDeleteNO SPOILERS !!!!!!!!!!!!!!!!!!!
தங்க தாமரை மகளே !! வா அருகே !!!
( கதையை படித்தால் இவ்வரிகளின் காரணம் புரியும் )
துரோகமே துணை !!!!!!
ஏண்டா இக்கதையை படிக்க ஆரம்பிச்சோம்னு ஆகி போச்சு !!!
ம்ஹூம் ..நீங்க நினைக்கற மாதிரியில்ல .....
நீண்ட தூக்கம் தொலைத்த இரவுகளின் ஊடே கடின பணிகளுக்கு பின் நித்ரா தேவியை இறுக்க அணைத்து( சித்ரா தேவி –ன்னு படிச்சுடாதீங்க )
சாவாகசமான வேலை காத்திருக்கா காலை பொழுதில் ஷெல்டனை வாசிக்க துவங்கி பாதி தூரம் கடந்தபோது’’ இன்னிக்காவது காலையில சூடா சாப்பிடலாம்ல’’ என்ற எனது அக்காவின் வயதொத்த குக்கின் கூக்குரல் காது ஜவ்வை கிழிக்க மனமில்லாமல் பாதியில் வைத்து போனேன் ..
முந்திரி பதிந்த நெய்ப்பொங்கலும் வடையும் கேசரியும் கல்யாண நாள் மறந்த கணவனை நோக்கும் அகமுடையாளின் முகத்தை போல ஆவி பறக்கும் இட்லிகளும் கூட கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை .
கதையை பற்றி வந்தியத்தேவன் குதிரையை போல மனம் தாவி குதித்து கொண்டிருந்தது....
அதனால கதையை ஒரே சூட்டில் படிக்கமுடியும்னா படிங்க ..இல்லாட்டி கஷ்டம் ..
கதையின் சின்ன PROLOGUE பாம்பு மாத்திரை மாதிரி துவங்கி லஷ்மி வெடி மாதிரி கடேசில வெடிக்குது ..
அப்புறம் பத்தாயிரம் வாலா சரவெடிதான் ..
கதை முழுக்க வழியெங்கும் கண்ணி வெடிகள் –திருப்பங்கள் –உண்டு
பார்த்து நட(டுங்கு)க்கவும் ............................
கதையின் முடிவோ அணுகுண்டு ...
9.5 / 10
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பின் குறிப்பு 1..
கதையில் 38-ம் பக்கம் வரும் MI 5
இதை இதுநாள் வரை M 15, M 16 , என்றே வாசித்து கொண்டு இருந்தேன்..
முதன்முறையாக MI 5 என சரியாக வாசிக்கிறேன் ...
பிரிட்டிஷ் அரசின் உளவுப்படையான SECURITY SERVICE –ன் முன்னாளைய பெயர் ...
MI 5 .. MILITARY INTELLIGENCE ,SECTION 5 ...
உள்நாட்டு விவகாரங்களை பார்த்து கொள்ளும்
SECRET INTELLIGENCE SERVICE ...MI 6
MI 6 .. MILITARY INTELLIGENCE ,SECTION 6 ...
அயல்நாட்டு விவகாரங்களை பார்த்து கொள்ளும் .
( அமெரிக்காவில் எப்பிஐ ,சிஐஏ மாதிரி )
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பின் குறிப்பு 2
பக்கம் 24-ல் ஹோட்டல் மானேஜரிடம் ஹானஸ்டி ஸ்விஸ் ஸுட் என சொல்வதாக வருகிறது ...எங்க வூட்டுக்காரம்மா ரொம்ப நாள் முன்னாடியே அதை ஸ்வீட் அப்படின்னு சொல்லனமுன்னு திருத்தியிருக்காங்க
SWISS SUITE ..PAGE 24
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அட்டகாசம் செல்வம் அபிராமி சார். எப்போதும் போலவே நிறைய தகவல்களுடன். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
Delete///நீண்ட தூக்கம் தொலைத்த இரவுகளின் ஊடே கடின பணிகளுக்கு பின் நித்ரா தேவியை இறுக்க அணைத்து( சித்ரா தேவி –ன்னு படிச்சுடாதீங்க )///
Deleteஇதை நான் படிக்கும்போது ஒரு இறுக்கமான சூழலில் இருந்தேன்.. ஆனால், அதை மறந்து கெக்கபிக்கேன்னு சிரிச்சு வச்சு, வீட்டுக்காரம்மாவின் 'நீயெல்லாம் எந்த மாதிரியான ஜென்மம்யா?' என்பது மாதிரியான ஏளனப் பார்வையை (ஒரு லட்சத்து நாலாயிரத்து ஏழாவது முறையாக) வாங்கிக் கட்டிக் கொண்டேன்!!
பழிக்குப் பழி'ங்களா செனாஅனா?
நா இன்னிக்கு,,,அருமை செனா
Deleteஇரண்டு புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். ஷெல்டன் மற்றும் கிளிப்டன்.
ReplyDeleteமுதலில் ஷெல்டன் அட்டகாசம் சரியான கதை அதும் அந்த கிளைமாக்ஸ் உண்மையிலேயே சரியான திருப்பம் அடுத்த வருடம் ஷெல்டன் இல்லயே என்ற குறை தான் இப்போது மனதில் இருக்கிறது.
கிளிப்டன் எப்போதும் போல சில இடங்களில் எல்லாம் வெடி சிரிப்புக்கு உத்திரவாதம். அடுத்த வருடம் கண்டிப்பாக இடம் கொடுக்கலாம். முதல் இரண்டு பந்துகளும் சிக்ஸர் சென்று விட்டன.
இப்போது தீபாவளி மலருடன்...
ஆசிரியர் அவர்தம் குடும்பத்தார், ஆசிரியரின் அலுவலக தோழர்கள், மற்றும் நம் காமிக்ஸ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅட்டவணை ரிலீஸ் அன்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்றுதான் வீடு திரும்பினேன். முதல் அட்டாக்காம்.பரவாயில்லை. எவ்வளவோ பாத்துட்டோம். இதையும் பார்த்துவிட்டோம்னு திருப்தியுடன் வீடு திரும்பினேன்! வந்தவுடன் கூரியர் பெட்டியைத்தான் தேடியது மனம்.
பெட்டியைத் திறந்தால் நகைக் கடை திறக்கவந்து(கும்பலில்) நசுங்கிய நயன்தாராவை போல கையில் கிடைத்தது ரவுண்டு பன். இன்னும் ருசி பார்க்கவில்லை. ஆசிரியர் அன்புடன் அளித்தது.கசக்கவா செய்யும். மனைதை கொள்ளை கொள்ளும் குண்டு தீபாவளி மலர்.மற்ற இதழ்கள் எதனையும் இன்னும் ரசிக்கவே ஆரம்பிக்கவில்லை. அட்டவணையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். முதல் சந்தோஷம் ரூபாய் நாற்பது விலையில் பரவசமூட்டும் இதழ்கள்.கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும். மீண்டும் ரிப் கெர்பி! மிக்க மகிழ்ச்சி சார். இந்த வரிசையில் முத்துவில் வந்து இதுவரை மறுபதிப்பு காணாத ரிப் கெர்பி, காரிகன், சார்லி, ஜார்ஜ் கதைகளை அவ்வப்போது முயற்சிக்கலாம். டயபாலிக்! மற்றொரு இன்ப அதிர்ச்சி! இந்த அட்டவணை கிராஃபிக் நாவல் உள்பட எல்லாமே ஜெயிக்கிற குதிரைகளாகத்தான் தோன்றுகிறது. டெக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? பட்ஜெட் பற்றாக்குறையால் இந்த ஆண்டு கார்ட்டூன்,ஜம்போ சந்தாவை தவிர்க்கலாமென்று இருந்தேன்.ஆனால் அட்டவணையை பார்த்த பின் மனம் அலைபாய்கிறது. பார்ப்போம். காலம் என்ன முடிவு செய்கிறதென்று.
டி.வி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் பற்றிய பதற வைக்கும் செய்திவேறு. நம் அனைவரின் ப்ரார்த்தனைகளும் அக்குழந்தை நலமுடன் வெளிவருவதாக இருகட்டுமே.
நண்பரே பூரண நலம் பெற செந்தூரானை வேண்டுகிறைன்,,,அக்குழந்தை பிழைத்து விடும்
Deleteநலத்தைப் பேணுங்கள் ஐயா
Deleteதுரோகமே துனை ..ஷெல்டன்..
ReplyDeleteஆரம்பத்தில் செக்க சிவந்த வானம் போல பல கேங்ஸ்டர் ஸ்டன்ட்கள் ..என்னடா ஷெல்டனின் வேகம் காணவில்லையே என்று நினைக்கும் நேரத்தில் காதோரம் நரைத்த ஹீரோ என்ட்ரி ஆக அதன் பிறகு கதை படு ஸ்பீடு மட்டுமல்ல ..பலப்பல திருப்பங்கள்..அதிரடி திருப்ப களை மேக்ஸ் என வழக்கம் போல ஷெல்டன் தூள் கிளப்பி விட்டார்..பாப்பாவும் சோடை போகவில்லை ..மீண்டும் ஷெல்டன் வரமாட்டார் என அறிந்தாலும் மனமோ துரோகத்தின் துனைக்கு பிறகு மீண்டும் ஷெல்டனை காண துடிக்கிறது..
ஹீம் பழைய ஷெல்டனே துணை..
Sir AXA please😜🤪🤩😭😭😭😭
ReplyDeleteடியர் எடி,
ReplyDelete2080 க்குள்ளாவது ஆக்ஸா வெளியிட்டிடுவீங்கதானே?!?! :) Jokes apart, Axa வின் இடத்தை ரிப்கிர்பி, மாடஸ்தி, ஜேம்ஸ் பாண்ட், டில்லான் என்று கிளாசிக் கதாநாயகர்கள் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இவர்கள் வருடாவருடம் தொடர வேண்டும், எப்படியும் AXA வுக்கும் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பலாம்.
என்ன டெக்ஸ் கதைகள் நான்கு, D வரிசையில், இடம் பிடிக்காமல் இருந்திருந்தால, இவர்களுக்கு இன்னும் இடங்கள் கிடைத்திருக்கலாம் என்று ஒரு ஆதங்கம் தான்.
ஆனால், 40 ரூபாய் புத்தக முயற்சி பலரை சென்றடைய டெக்ஸ் தாக்கம் உதவும் எனும் அடிப்படையில், உங்கள் முடிவுடன் ஒத்துபோகிறேன்.
அப்புறம், வழக்கம் போல, நானும் ஆல்-இன்-ஆல் 'ஜம்போ' அழகு ராஜா தான்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உங்கள் குழுவிற்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்.
// 40 ரூபாய் புத்தக முயற்சி பலரை சென்றடைய டெக்ஸ் தாக்கம் உதவும் எனும் அடிப்படையில், உங்கள் முடிவுடன் ஒத்துபோகிறேன்.//
Delete+1
+
Deleteதீபாவளி மலரில் டெக்ஸ் முடித்தாகிவிட்டது. அக்மார்க் டெக்ஸ் சாகசம்.
ReplyDeleteவருடா வருடம் குண்டு டெக்ஸ் கதைகளை தீபாவளி மலராக படித்து வந்த்தால் என்னவோ இந்த வருட டெக்ஸ் கதை உடனே முடிந்த மாதிரி ஒரு பீலிங்...
இனிமேல் தீபாவளி மலரை டெக்ஸ்க்கு என்றே ஒதுக்கலாம் (சர்வமும் நானே போல)
மற்ற தீபாவளி மலர் கதைகள் நாளை....
Wish you happy Deepavali🧨🧨🧨🎆🎆🎇🎇🧨🧨🧨🧨🧨🧨
ReplyDeleteசார் வழக்கம் போல ஜம்போ அட்டகாசம்,,,,,,ஹெர்மன் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, ,,,ஜேம்ஸ அடுத்து உள்ள தனியொருவனப் பாத்த பின்னரே நிம்மதி ,,,,மூன்று இடங்கள் சுவாரஷ்யமா காத்திருக்கிறேன்,...
ReplyDeleteகர்னல் கிளப்டன் - காமெடி கலக்கல்!
ReplyDelete200
ReplyDelete
ReplyDeleteNO SPOILERS!!!!!!1
விடுமுறையில் ‘’கொல்’’லென சிரி!!!!!
DE GROOT –ன்னா டட்ச் மொழியில் பெரியவர் /உயரமானவர்னு அர்த்தமாம் !!
நிஜமாலுமே கிளிப்டன் கதாசிரியர் பெரிய ஆளுதான் !!!
கேலியா ,கிண்டலா ஒரு துப்பறிவாளர் கதை வேணும்னா மனுஷர் சரியான நபர்தான் ...
அகதா-ங்கற கதாபாத்திரம் மூலம் அகதா கிறிஸ்டியை கிண்டல் பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன் ...நல்லாத்தான் இருக்கு ..
கிளிப்டன் ..8.5 /10
வெகுண்டெழும் வேங்கைகள் அழகுதான் !!!!
தாவி குதித்தோடும் மான்களும் அழகுதான்
விஜயன் சார்,
ReplyDeleteவணக்கம்.தீபாவளி வாழ்த்துக்கள் சார்..i
சாரி சார் அட்டவணையை படித்து முடித்து (திகைத்து). கமென்ட் எழுதுவதற்கு முன்பு Load more. ( ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். கொஞ்சம் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க ஏதுவாக கமெண்ட்களை அடக்கி வாசித்தால் எத்தனை பேரை அட்டவணை சந்தோசப்படுத்தி யோ-அல்லது - ம்ஹூம் வேறு மாதிரி சான்ஸே இல்லை. _ ஆசிரியர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அன்றோ.ii
அட்டவணையில் சந்தா - A/B/C/ E_Maxi - யின் அறிவுப்புகள் ஒரளவு எதிர்பார்த்தவைகள் தான்.
சந்தா Dதான் ஹை- லைட். அதைப் Uற்றிய கற்பனைகள், ஆலோசனைகள் - சொல்ல துடித்து அடக்கிக் கொண்ட போது இவ்வளவு சிறப்பான திட்டமிடலை எதிர்பார்க்கவில்லை சார். ராயல் சல்யூட் சார்.
மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் ஒதுங்கிக் ெகாள்கிறேன்.
இந்த மாதத்தில் - அக்டோபர் 2019ல் - இதுவரை 4176 கமெண்ட்கள் பதிவாகியுள்ளன..
ReplyDeleteஇப்போது 4177..
ஏதோ சொல்லனும்ன்னு தோனிச்சு..
அப்புறம் இந்த மாதத்து க்ளிப்டன் மற்றும் ஷெல்டன் கதைகள் படித்தாயிற்று..
ஷெல்டன் கதையில் இறுதி திருப்பங்கள் அருமை..
க்ளிப்டன் கதையில் பாட்டிம்மாவின் பங்கு அசத்தல்..