Powered By Blogger

Thursday, October 17, 2019

ஒரு கேள்வியும்..ஒரு சேதியும்...!

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் சேவாக் மாதிரி ; லாரா மாதிரி, டிரிபிள் செஞ்சுரிகளை போட்டுத் தாக்குகிறீர்கள் ; போகிற போக்கில் வார நாட்களுக்கு Garfield உபபதிவு என்ற யுக்தியைத் தான் நான் கையாண்டாகணும் போலும் ! ஆனால் அதற்கு இந்த உ.ப.வில் அவசியமிராதென்று நினைக்கிறேன் - simply becos அடியேன் வசம் இன்னொரு (முக்கிய) கேள்வியுள்ளது ; ஒரு முக்கிய சேதியுமுள்ளது ! 

கடந்த பதிவினில் "மொக்கைபீஸ்கள் of 2019 எவையோ ? என்ற பட்டியலிடக் கோரியிருந்ததில், ஆங்காங்கே நமது கேரட் தலை ரிப்போர்ட்டர் ஜானியின் 2.0 அவதாரும் அடிபட்டதைக் காண முடிந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் அதில் எனக்குக் கொஞ்சம் வியப்பே - becos மாமூலான க்ளாஸிக் ரிப்போர்ட்டர் ஜானி கதைகளின் அந்த தேய்ந்த போன template-லிருந்து இந்தப் புது பாணி நிரம்பவே மாறுபட்டிருப்பதாய்த் தோன்றியது ! ஆனால் 'இதுக்கு - அதுவே தேவலை ; அதுக்கு - இது டப்ஸா !' என்ற அபிப்பிராயம் பரவலாயிருப்பின் அதற்கு செவிசாய்க்கும் கடமை உள்ளது எனக்கு ! அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் 2020-ன் அட்டவணை அச்சுக்குச் செல்லவுள்ள நிலையில், இறுதி நிமிட மாற்றம் அவசியமாயின் - last chance to do it !!

ஆகையால் ஆயிரம் பின்னூட்டப் புகழ் நண்பர்வாள் : "க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?" என்ற கேள்விக்கு துரிதமாய் விடை ப்ளீஸ் !! And  இயன்றமட்டுக்கு அனைவரது அபிப்பிபிராயங்களும் கிட்டினால் ஒரு ஏகோபித்த தீர்மானமாய் இருந்திட உதவுமே ? சொல்லுங்கண்ணே : Old is gold-ஆ ? இல்லாங்காட்டி New is Nifty-ஆ ?

Please do let me know guys !

அப்புறம்....அப்புறம்....இன்னொரு அதிரடி நியூஸ் !! 

'தளபதி' ரசிகக்கண்மணிவாள் : மறுக்கா பிரவேசம் பண்ணக் காத்திருக்கிறார்  நமது ஆதர்ஷ நாயகர் !! இது "இளம் டைகர்" தொடரல்ல - ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் - புத்தம் புது படைப்பு டீமோடு !! பாருங்களேன் அட்டைப்படத்தை !! நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது - இதன் பிரெஞ்சுப்பு பதிப்பு !இரு பாகங்களில் நிறைவுறும் சாகசமிது ! Hopefully there would be more to follow !! கச்சேரி மீண்டும் களை கட்டவுள்ளது போலத் தெரிகிறது folks !! நாமும் ஜோதியில் ஐக்கியமாகிடலாமா ?
Bye all...see you around !


335 comments:

  1. Sir both classic and new reporter Johny 50/50

    ReplyDelete
  2. If Johny new version is better than classic publish new version

    ReplyDelete
  3. Bruno brazil2.0 for jumbo and ratthapadalam new spin off for lion in 2020 I am expecting this announcement from editor.

    ReplyDelete
    Replies
    1. G ask total xiii spinoff complete special edition hard binding.. limited print run...sorry and also one shot new xiii album

      Delete
  4. ஜானி 2.0 க்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கலாம். அப்புறம் தீர்மானிக்கலாம் சார். புதுசா பழசாவென்று.
    டைகர் கேட்கவே வேண்டாம். அடுத்த ஆண்டு சந்தாவில் அவரையும் சேர்த்துக் கொள்ளலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. A.T. R Sir, Don’t worry sir. காலம் திரும்ப வாய்ப்புள்ளது. கண்டிப்பாக மூவேந்தர்கள் ஆகிய மும்மூர்த்திகள்வருவர். சிறிது நாட்களுக்கு முன் நீங்கள் வேண்டி பதிவிட்ட மாயாவியின் 3 in 1 ஸ்பெஷல் சூப்பர் சார். Muthu comics வாரமலரில் வெளி வந்த இரும்பு கை மாயாவியின் " ஒற்றை கண் மர்மம்" எனும் கதையும் சேர்ந்தால் மேலும்அருமையாய் இருக்கும். சார்.

      Delete
  5. ஜானி..முடிஞ்சா இரண்டுமே மாத்தி மாத்தி.

    ஒண்ணுதான்னா..ஓல்டுதான்

    டைகர்....எங்க ஜோதி?..எங்க ஜோதி?

    ஐக்கியமாவணும்...

    ReplyDelete
  6. ஜானி 2.0 இன்னொரு வாய்ப்பு தரலாம்.‌ஒரு கதையை மட்டும் வைத்து தீர்ப்பு சொல்வது சரியாகாது.

    ReplyDelete
  7. Posting again :), if you read in last , please excuse
    ஜனவரி (Best)
    ****************
    தோர்கல்: (Super hit)
    3 சிறந்த கதை, Fantasy, Sci-Fi & Sentiment, most discussed
    +ve: எல்லாமே!!!
    -ve: none

    பாராகுடா: (Super hit)
    காமிக்ஸின் பாகுபலி 1, கண்களுக்கு விருந்து, எத்தனை விதமான கதைமாந்தர்கள்!!!
    +ve: ஓவியங்கள், கதை
    -ve: 18+(கதைக்கு தேவை)

    சாத்தானின் சீடர்கள்: (Fail)
    ஜனவரியின் திருஷ்டி பொட்டு
    +ve: டெக்ஸ், விறுவிறுப்பான தொடக்கம்
    -ve: கதை, மொக்கை வில்லன்

    பிப்ரவரி (Average)
    ****************
    ஜானி 2.0: (Just pass)
    இதற்க்கு இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
    +ve: ஜானி 1.0 கதைமாந்தர்களின் ஜீவின் அப்படியே 2.0விலும் உள்ளது
    -ve: கதையுடன் எங்குமே ஒன்று முடியவில்லை

    ஜெரெமயா: ( Average)
    கதை-1:??? (முந்தைய ஜெரெமயா படித்ததில்லை)
    கதை-2: அருமை, SciFi இல்லாத குறையை தீர்த்து.
    கதை-3: சாத்தானின் சீடர்கள் மாறுவேடத்தில்!!!
    +ve: ஓவியங்கள், பிறளையத்திற்கு பிந்தைய கதைக்களம்
    -ve: முழுமையாக கதைக்களத்தை பயன்படுத்து.

    வைக்கிங் தீவு மர்மம்: (Good)
    விறுவிறுப்பான தொடக்கம், வைக்கிங்கையும் கௌ-பாய், செவ்விந்தியர்கள் நம்பகத்தன்மையான கதை
    +ve: அமைதியான அருமையான கிளைமாக்ஸ்
    -ve: none

    ந(ட)னமாடும் கெரில்லாக்கள் இன்னும் படிக்கவில்லை

    மார்ச் (Good)
    ****************
    பாலைவனத்தில் ஒரு கப்பல்: (Good)
    டெக்ஸ் மற்றும் கார்சனின் முழுநீள அதிரடி
    +ve: வித்தியாசமான கதைக்களம்
    -ve: சென்ற மாதம் வைக்கிங்ஸ் இந்த மாதம் சீனர்கள்... Coincidence

    ஹெர்லாக் ஷோம்ஸ்: (Very Good)
    சிரிப்புக்கு இவர் கியரன்டி.
    +ve: ஒரிஜினல் ஷெர்லாகின் ஜீவன் குறையாமல் சிரிக்க வைப்பது
    -ve : none

    முடிவில்லா மூடுபனி: ( Very good)
    கி.நா with a positive end
    +ve: கடைசிவரை வரும் suspense
    -ve: சில பதில்கள், ஓவியத்தை உற்று நோக்கினால் மட்டுமே உணர முடியும்

    நிழலும்.. நிஜமும்..: (Good)
    ஜேம்ஸ் பாண்ட் ஏன் இங்கிலாந்தில் நிராயுதபாணியாக சுற்றுகிறார்‌ என்பதற்க்கான பதில்
    +ve: மனி பென்னி in action, வில்லன்
    -ve: கதை நீளம் முன்பை விட சிறியதாக தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. நல்ல அலசல் சார். புது முயற்சி அருமை.

      Delete
  8. அட டே ஒரே வாரத்தில் 3வது பதிவு!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ரெக்கார்டு நோட் பண்ணுங்க நோட் பண்ணுங்க

      Delete
    2. பிற்காலத்தில் நீங்க புள்ளி விபரம் சொல்லும் போது இதெல்லாம் மக்களுக்கு சொல்லுங்க.

      Delete
    3. இதுல இன்னும் என்ன வென்றால் சனி இரவு பதிவு மற்றும் 24 அட்டவணை பதிவு வரும் போது எங்க போய் முடியபோகுதோ

      Delete
  9. டைகர் ஓகே..பழைய ஜானிக்கு எனது ஓட்டு....

    ReplyDelete
  10. // இது "இளம் டைகர்" தொடரல்ல - ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் //
    ரெகுலர் தடம்தானே,படிக்கற மாதிரி இருக்கவே வாய்ப்பிருக்குன்னு தோணுது,அது மட்டுமில்லாமல் தல எப்பவும் மெயின் ரோல் பண்ணும்போது,குறைந்தபட்சம் தளபதி கெஸ்ட் ரோலிலாவது வர வேண்டுமே,இல்லேன்னா கொஞ்சம் பேருக்கு பொசுக்குனு இருக்குமே.....

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமில்லாமல் தளபதி எப்பவும் மெயின் ரோல் பண்ணும்போது,குறைந்தபட்சம் தல கெஸ்ட் ரோலிலாவது வர வேண்டுமே,இல்லேன்னா கொஞ்சம் பேருக்கு பொசுக்குனு இருக்குமே..... :)

      Delete
    2. அட,மாத்தி யோசியாக்கும்.......

      Delete
  11. ஜானியா ஜானி 2.0 வா என்றால் எனக்கு

    ஜானி தான் சார்...:-)

    ReplyDelete
  12. எனக்கு ஜானி 2.0 நிரம்ப பிடித்து இருக்கிறது. ஒரே ஒரு chance அடுத்த வருடம் பிளீஸ் சார்.

    ReplyDelete
  13. இளம் டைகர் இல்லீன்னா தாராளமா தொடரலாம் சார்...அ..ஆனா அது தொடரா முற்று பெறும் கதையா சார்..?!

    ReplyDelete
    Replies
    1. தலீவரே. தலீவர்னு கூட பாக்க மாட்டோம். அடி பின்னிப்புடுவோம். கஷ்டப்பட்டு ஆகஸ்ட் சிறப்பிதழா இளம் டைகர் தொகுப்பு கேட்டுருக்கோம் இந்த நேரத்துல அது வேண்டாம் இது வேண்டாம்னு சொல்றீங்களா? வீடு புகுந்து தூக்கிடுவோம். அதாவது பதுங்கு குழி புகுந்து.

      Delete
    2. வேண்டாம்னு நான் எங்கே சொன்னேன் ஷெரீப்...:-(

      இளம் டைகரை பொறுத்தவரை நல்லாலை ன்னு சொல்லலை...நல்லா இருந்திருந்தா நல்லாருக்கும் ன்னு தானே சொன்னோம்..

      Delete
    3. இளம் டைகர் இல்லீன்னா..###

      ஓ...இதுக்கு இப்படி அர்த்தம் வருதா சாரி ஷெரிப்..இளம் டைகரை போல் இல்லாமல் அதாவது தொடராக இழுத்து கொண்டே போகாமல் இருந்தால் ஓகே சார்..என்பதை தான் சுருக்கமாக சொல்லி ..ஹீஹீ...:-(

      Delete
    4. இளம் டைகரை பொறுத்தவரை நல்லாலை ன்னு சொல்லலை...நல்லா இருந்திருந்தா நல்லாருக்கும் ன்னு தானே சொன்னோம்..//

      தலீவரே...உங்க போக்கே சரியில்லை. உங்களை தூக்கினாதான்சரியாவீங்க இருங்க ரம்மியை கூப்புடறேன். வேணாம். அவரு டெக்ஸ் ஸ்லீப்பர் செல்.
      திருப்பூர் ப்ளுபெர்ரி. தலீவரை தூக்குங்க. ரொம்ப செலவெல்லாம் பண்ண வேணாம். குச்சி ஐஸ் வாங்கித் தரேன்னு சொன்னாலே பஸ்ல உங்களை நம்பி வந்துடுவார். அவருக்கு ஒரு நூதனமான தண்டன
      வைச்சிருக்கேன்.

      Delete
    5. .என்பதை தான் சுருக்கமாக சொல்லி ..ஹீஹீ...:-(//

      கி நா படிச்சு படிச்சு அந்த மாதிரியே பேசுனா என்னை மாதிரி தொண்டனுக என்ன பண்ணுவது தலீவரே?

      Delete
    6. ///ஓகே ஷெரீப்.. "ஆபரேசன் தல" இனிதே ஆரம்பம்...///

      பலப்பல ஆப்பரேசன்களை அசால்ட்டா சந்திச்சவர் நம்ம தலீவர்'ன்றதை புரிஞ்சுக்காம பேசிக்கிட்டிருக்கீங்களே?!! போனமாசம் கூட அவரா விரும்பி பண்ணிக்கிட்ட ஆப்பரேசனைப் பாராட்டி கவர்ண்மென்டே அஞ்சு கிலோ அரிசி எல்லாம் வழங்கி கெளரவிச்சாங்கலாமே?!!

      ப்பூ.. தலீவரா கொக்கா?!!

      Delete
    7. செயலரே. உங்களை வைச்சுகிட்டு தலீவர் படற பாடு இருக்கே. 🤣🤣🤣🤣

      Delete
  14. முதலில் ஜானி - 2.0 எனக்கு ஓகே சார் ....

    தங்கத்தலைவன் 2.0 - வருக வருக என வரவேற்கிறோம் ....

    ReplyDelete
  15. எங்க தளபதிக்கு டபிள் ஓகே. போட்டு விடுங்க சார்.

    ReplyDelete
  16. நீங்கள் இணைத்துள்ள அட்டைப்படம் கூட க்ளாசிக் ஜானி அட்டைப்படம் தான் சார் கலக்கலாக உள்ளது..:-)

    ReplyDelete
    Replies
    1. முதல் அட்டை 2.0 தலைவரே

      Delete
    2. நான் இரண்டாவது அட்டையை தான் க்ளாசிக்கா உள்ளது என தெரிவித்து உள்ளேன் குமார் அவர்களே..:-)

      Delete
    3. முதல் அட்டை 2.0.
      பச்சோந்தி பின்புலம், ஜானியை நோக்கி துப்பாக்கி பிடித்திருக்கும் கை, ஜானி அணிந்திருக்கும் அதே ஸ்டைல் கோட் அணிந்துள்ளது.
      ஆகையால் ரஜினிகாந்த் நடித்த ஜானி போல், 2 ஜானி உள்ளார்கள் ஜானி 2.0ன் 2ஆவது கதையில்.‌ ஹி..ஹி..ஹி..

      Delete
  17. // க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?" //
    புதிய ஜானி 2.0 எனக்கு பிடித்தே இருந்தது,ஆஹா,ஓஹோ இரகம் இல்லேன்னாலும்,படிக்கலாம் இரகமே....
    எனினும்,ஒப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது எனது ஓட்டு பழைய இடியாப்பச் சிக்கல் ஜானிக்கே.....
    வாசிப்பில் ஆகச்சிறந்த சுவராஸ்யத்தை கூட்டுவது அதுவே.....
    அப்படியே மற்றொரு கோரிக்கையையும் பரிசீலிக்கவும் சார்,பழைய ஜானி போடனும்னு முடிவு பண்ணிட்டா,இரண்டு கதைகள் தேர்வு செய்து முடிஞ்சா கெட்டி அட்டையில் போட்டுவிடுங்க சார்,உங்களுக்கு புண்ணியமா போகும்,எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி........

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க அண்ணா

      Delete
    2. வழி மொழிகிறேன்.

      Delete
    3. //அப்படி சொல்லுங்க அண்ணா //
      நாமளும் சொல்லிகிட்டேதான் இருக்கோம் குமார்,எப்போது காலம் கனியும்னு தெரியலை,பொறுத்திருந்து பார்ப்போம் நடக்குதான்னு........

      Delete
    4. Me also support it..old version is better than new one...no twist and turn like old one..but dont put again reprint story sir

      Delete
  18. சேவாக் மாதிரி ; லாரா மாதிரி, டிரிபிள் செஞ்சுரிகளை போட்டுத் தாக்குகிறீர்கள் ; போகிற போக்கில் வார நாட்களுக்கு Garfield உபபதிவு என்ற யுக்தியைத் தான் நான் கையாண்டாகணும் போலும்

    #####

    வந்துட்டோம் சார்..பழைய பன்னீர் செல்வமா வந்துட்டோம்..:-)

    ReplyDelete
  19. நடுச்சாமம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் இனியும் யாம் கண்விழித்து கொண்டு இருந்தால் ஆத்தா வையும் என்பதால் அனைவருக்கும் இனிய இரவு வணக்கத்தை தெரிவத்து கொள்கிறேன் சார்..:-)

    ReplyDelete
  20. யாஹ்ஹூஹூஹூ... யிப்பீஈஈஈஈ...

    டைகரின் மறுபிறப்பு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது!! உடைந்த மூக்காருக்கு நிமிர்ந்த வாலாரின் ஆரவார வரவேற்பு!! யாஹ்ஹூ!!!!

    பி.கு : நிமிர்ந்த வாலார் ஒரு தீவிர தல ரசிகரே!! ஆனாலும் உடைந்த மூக்காரின் (மின்னும் மரணம், இரத்தக்கோட்டை, தங்கக்கல்லறை உள்ளிட்ட) ஒன்றிரண்டு தரமான வெற்றிகளுக்காகவே இப்போது சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்!

    எனக்கு ஜானி2.0 பிடித்தே இருக்கிறது!! பழைய ஜானியும் பிடித்தே இருக்கிறது!! ஆகவே பழசி, புதுசி இரண்டுமே வேண்டும்!! இரண்டில் ஏதாவது ஒன்றுதான் என்றால் என் வோட்டு (இப்போதைக்கு) புதுசிக்கே!!

    ReplyDelete
    Replies
    1. இரண்டில் ஏதாவது ஒன்றுதான் என்றால் என் வோட்டு (இப்போதைக்கு) புதுசிக்கே

      #####

      சாரி பூனை...:-)

      Delete
  21. /// ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் - புத்தம் புது படைப்பு டீமோடு !!///

    அட்றா சக்க..


    அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க...

    ReplyDelete
  22. பழைய ஜானிக்கே ஜே.!

    ReplyDelete
  23. ///: "க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?" என்ற கேள்விக்கு துரிதமாய் விடை ப்ளீஸ் !///

    அதுல ஒண்ணு..

    இதுல ஒண்ணு..

    அதாவது அதுவுந்தே இதுவுந்தே..!

    ஆனால் ஏதாவது ஒண்ணுமட்டுமே என்றால்..


    பழையபாணிக்கே எனது வோட்டு..!

    ReplyDelete
  24. க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?" என்ற கேள்விக்கு துரிதமாய் விடை ப்ளீஸ் !!

    பழைய ஜானி வேண்டும்.

    புதிய ஜானி முடியல.. விட்டுருங்க ப்ளீஸ்.

    ReplyDelete
  25. புதிய டைகர் கதைகள் நன்றாக இருந்தால் தாராளமாக முயற்சிக்கலாம் சார்.

    ஆனால் என் பெயர் டைகர் போல் இருந்தால் தயவு செய்து வேண்டாம்.

    ReplyDelete
  26. மீண்டும் டைகரா.?சூப்பரான தகவல்.

    புது ஓவியர், புது கதாசிரியர் கைவண்ணத்தில் எங்கள் பழைய டைகரை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  27. விஜயன் சார், புதிய டைகர் கதைகள் வந்தாலும் இளம் டைகர் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். இந்த வருடம் வந்த இளமையில் கொல் மிகவும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  28. ///அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் 2020-ன் அட்டவணை அச்சுக்குச் செல்லவுள்ள நிலையில்///

    சார் அச்சுக்குப் போறதுக்கு முன்னாடியே அதை இங்கே ஒரு பதிவாப் போட்டீங்கன்னா நாங்க எல்லாருமா சேர்ந்து புரூப்ரீடிங் பாத்திருவோம்ல? ஹிஹி!!

    என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே? (டெம்ப்ளேட் உதவி : எல்.கர்ணன், சேலம்)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி. Definitely definitely

      Delete
    2. அதே மாதிரி ஒவ்வொரு மாத புக்ஸையும்... ஹி.ஹி..

      Delete
  29. //சார் அச்சுக்குப் போறதுக்கு முன்னாடியே அதை இங்கே ஒரு பதிவாப் போட்டீங்கன்னா நாங்க எல்லாருமா சேர்ந்து புரூப்ரீடிங் பாத்திருவோம்ல? ஹிஹி!! //
    என்னாவொரு வில்லத்தனமான ரோசனை........

    ReplyDelete
  30. அடுத்த வருட (2020) சந்தா பணம் இந்த மாத ஆரம்பத்தில் செலுத்திவிட்டேன். மாத கடைசியில் ஆசிரியர் 2020ன் அட்டவணையை வெளியிட போவதால் இந்த முன் ஜாக்கிரதை முத்தன்னா அவதாரம்:-)

    ReplyDelete
    Replies
    1. பார்ர்ர்ர்ர்ரா!!!!

      வாழ்த்துகள் PfB!! எல்லா நண்பர்களுக்கும் உங்களை மாதிரியே ரோசனை வரணும்னு வேண்டிக்குவோம்!!

      Delete
    2. // அடுத்த வருட (2020) சந்தா பணம் இந்த மாத ஆரம்பத்தில் செலுத்திவிட்டேன். //
      அடடே,அசத்தறிங்களே பரணி.......

      Delete
  31. ///அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் 2020-ன் அட்டவணை அச்சுக்குச் செல்லவுள்ள நிலையில்///

    கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் சார். பல சினிமா படங்கள் சூட்டிங் நடக்கும் போதே திருட்டுத்தனமாக வெளியிடும் காலம். அட்டவணை நீங்கள் வெளியிடுவதற்கு முன் வெளிவராமல் பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  32. தேதி 17 ஆகுது,மாசத்துல பாதி நாள் ஓடிருச்சி,இன்னும் தீபாவளி இதழ்கள் பற்றிய முன்னோட்டங்கள் இல்லையே,அய்யகோ இதை யாரும் கேட்க மாட்டீர்களா........

    ReplyDelete
    Replies
    1. அண்ணா அட்டவணையில் இப்போ பிஸியா இருக்கோம். அது வந்த பிறகு தீபாவளி மலரை அலசி காய வைக்கலாம்

      Delete
  33. Wowwwww...Tiger back in action!!!!Really Great news..Lion with Tiger fills the forest..நீண்ட நாள் கழித்து நல்ல தகவல்

    ReplyDelete
  34. இது என்ன கேள்வி? டைகர் வரலாமான்னு? மாச மாசம் வர டொக்ஸ் படிக்கறோமாம். வருசத்துக்கு ஒரு தடவை வர தளபதியை படிக்க மாட்டோமா? தினம் கிடைக்கறது பூவு. என்னிக்காஙது ஒரு நாள் கிடைக்கறது தங்கம். தங்கத்தை வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களான்னேன்.

    ReplyDelete
  35. ஜானி 2.0. செனா அனா சொன்னது தான் என் பதிலும். (அங்க ப்ளஸ் ஒன் போட்டா நம்பர் போடறாங்கன்னு சொல்லிடுவாங்கன்னு தனியாவே எழுதிட்டேன்). என்னை மாதிரி சோம்பேறி சொக்கனை படுத்தறீங்களேப்பா. 😫

    ReplyDelete
  36. டைகர் கதைகளை வரவேற்கிறேன்..
    ஜானி பழசும் புதுசும் சேர்ந்த மாதிரி ஒரு புக் போடுங்க சார்..

    ReplyDelete
  37. ஜானி இரண்டும் வேண்டும்.ஒன்று தான் என்றால் old is goldக்கே என் ஓட்டு.

    ReplyDelete
  38. ஆல்ரெடி நம்மிடம் டிடக்டிவ் காமிக்ஸ் குறைவு தானே
    அதனால் 1 ஜானி 2.0 + 1 ரெகுலர் ஜானி =2 ஸ்லாட் குடுங்க சார்

    ReplyDelete
  39. ///ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் - புத்தம் புது படைப்பு டீமோடு !! பாருங்களேன் அட்டைப்படத்தை !! நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது - இதன் பிரெஞ்சுப்பு பதிப்பு !இரு பாகங்களில் நிறைவுறும் சாகசமிது ! Hopefully there would be more to follow !! கச்சேரி மீண்டும் களை கட்டவுள்ளது போலத் தெரிகிறது folks !! நாமும் ஜோதியில் ஐக்கியமாகிடலாமா ?///


    நாமும் நவம்பரிலேயே வெளியிட்டாலும் நல்லாதேன் இருக்கும்.! ஆனாப்பாருங்க.. யாராவது கண்ணு வெச்சிட்டா என்ன பண்றதுன்னும் பயம்மா இருக்கு.!

    அதனால ஒரு ரெண்டு மாசம் நாங்க பொறுத்துக்கிறோம்.! சிரமம்தான்.. எப்படியாச்சும் பல்லைக் கடிச்சிக்கிட்டு பொறுத்துக்கிறோம்.!

    நீங்க என்ன பண்றிங்கன்னா சார்.. அந்த ரெண்டுபாக கதையை.. அந்த செல்லத்தை அந்த பப்லுகுட்டியை அலேக்கா கிட்நா பண்ணிட்டு வந்து ஜனவரி 2020ல ரிலீஸ் பண்ணிடுறிங்க.. அம்புட்டுதேன்.!

    ReplyDelete
  40. வார்ம் வெல்கம் 🐅!!

    கண்டிப்பா அடுத்த வருடம் புது டைகருக்கு வாய்ப்பு கொடுங்க

    ReplyDelete
  41. பழைய ஜானிக்கே என் வாக்கு!

    பிரின்ஸ்+ஜானி---பிரிக்க வேணாம் சார்!

    ReplyDelete
  42. டைகரை வரவேற்கின்றேன்.
    அடுத்த ஆண்டே வந்தால் இன்னும் மகிழ்வேன்.

    ReplyDelete
  43. சார் Old is gold
    New is nifty
    அதாவது அதுவுந்தே
    இதுவுந்தே
    அப்றம் முழுசா படிக்காம பாதிலயே கருப்புதா எனக்கு பிடிச்ச கலரு பிடிக்கலன்னு அவசரபட்டு சொல்லிட்டேன் மீதிப் பாதிய இன்னைக்குதா படிச்சேன் விறுவிறுன்னு, ,,,அதாவது ப்ளூகோட் மொக்கையில்லன்னு இதில் கூறிக்கிறேன்,,,,,டைகர் தூள் கிளப்பட்டும் ,,,,இவருக்கும் அடுத்த வருட பயணத்துல துண்டு போட்டு சீட்ட புடிக்கவும்,,,,அடுத்த வருடம் Xiii...டைகர், லார்கோ, ,,,மான்ஸ்டர்னு களை கட்டும் போலவே,,,,

    ReplyDelete
    Replies
    1. ///அதாவது ப்ளூகோட் மொக்கையில்லன்னு இதில் கூறிக்கிறேன்,,,,,///

      வியக்கேன்..:-)

      Delete
  44. 2020ல் முத்து 450 என்ற மைல்கல் இதழ் வரவுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக NBS போன்ற சிறப்பிதழ் வெளியிட்டால் மிகச்சிறப்பாக இருக்கும் எ எ கருத்து.450 என்பது அசாதாரணம்.எனவே இதைக் கொண்டாடும்விதமாக ஒரு குண்டுச் சிறப்பிதழ் தந்தால் மிகச் சிறந்த பொக்கிஷமாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்..!
      நாங்க ஒண்ணும் பெருசா ஆசைப்படலே..!
      450 க்கு 450 பக்கங்கள்லயும் 500க்கு 500 பக்கங்ள்லயும் வெளியிட்டீங்ன்னா போதும் சார்.!

      Delete
    2. // 450 என்பது அசாதாரணம்.//
      உண்மை,இதற்குத் தேவை குண்டு புக் ஹார்ட் பைண்ட் ஸ்பெஷல்......

      Delete
  45. அப்புறம்....அப்புறம்....இன்னொரு அதிரடி நியூஸ் !!

    'தளபதி' ரசிகக்கண்மணிவாள் : மறுக்கா பிரவேசம் பண்ணக் காத்திருக்கிறார் நமது ஆதர்ஷ நாயகர் !! இது "இளம் டைகர்" தொடரல்ல - ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் - புத்தம் புது படைப்பு டீமோடு !! பாருங்களேன் அட்டைப்படத்தை !! நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது - இதன் பிரெஞ்சுப்பு பதிப்பு !இரு பாகங்களில் நிறைவுறும் சாகசமிது ! Hopefully there would be more to follow !! கச்சேரி மீண்டும் களை கட்டவுள்ளது போலத் தெரிகிறது folks !! நாமும் ஜோதியில் ஐக்கியமாகிடலாமா ?///
    ஓஹோ...

    ReplyDelete
  46. ///- ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர்////---போன மாசந்தான் இந்த போட்டோ கிடைக்க, அதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணி இருந்தோம். உடனடியாக தாங்களும் வெளியிட கேட்க மகிழ்ச்சி சார்! புதிய டைகருக்கு நல்வரவு!💐💐💐💐💐

    ReplyDelete
  47. க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?"//
    இதிலென்ன கஞ்சத்தனம்??? இரண்டுமே தான்..

    ReplyDelete


  48. //நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது - இதன் பிரெஞ்சுப்பு பதிப்பு !இரு பாகங்களில் நிறைவுறும் சாகசமிது ! Hopefully there would be more to follow !! கச்சேரி மீண்டும் களை கட்டவுள்ளது போலத் தெரிகிறது folks !! நாமும் ஜோதியில் ஐக்கியமாகிடலாமா ?//


    சார் அடுத்த ஆண்டு அட்டவணையில் இடம் ரிசர்வ் செய்திடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. // சார் அடுத்த ஆண்டு அட்டவணையில் இடம் ரிசர்வ் செய்திடுங்கள் //
      ஆசை,தோசை,அப்பளம்,வடை......

      Delete
    2. //ஆசை,தோசை,அப்பளம்,வடை......//

      அய்யா புரட்டாசி முடிந்து விட்டது. மெனுவை மாற்றிக்கொள்வோமா ???

      Delete
  49. எனது ஓட்டு புதிய ஜானி க்கு கண்டிப்பாக உண்டு.
    புதிய டைகர் வரவேற்பை பொருத்து முடிவு செய்யுங்கள்

    ReplyDelete
  50. // "க்ளாஸிக் இடியாப்பப் பழசா ? அல்லது 2.0 புதுசா ?" என்ற கேள்விக்கு துரிதமாய் விடை ப்ளீஸ் !! //

    அதுவுந்தேன்

    இதுவுந்தேன்

    அம்புட்டுதேன் 🙏🏼😇

    பழையது நாஸ்டாலஜியாவுக்காக என்றாலும் இன்னமும் வெளிவராத நல்ல
    கதைகள் இருந்தால்வெளியிடலாம் சார் 😍

    புதியதில் நீங்க பார்த்து நன்னா இருக்குன்னு நினைச்சீங்கன்னா அதுலயும் ஒன்னு வெளியிடுங்கோ

    நன்றி சார்
    .


    .

    .

    ReplyDelete
  51. // 'தளபதி' ரசிகக்கண்மணிவாள் : மறுக்கா பிரவேசம் பண்ணக் காத்திருக்கிறார் நமது ஆதர்ஷ நாயகர் !! இது "இளம் டைகர்" தொடரல்ல - ரெகுலர் கேப்டன் டைகர் அவதாரைத் தொடரவுள்ளனர் - புத்தம் புது படைப்பு டீமோடு !! பாருங்களேன் அட்டைப்படத்தை !! நவம்பர் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. //


    வாவ் நல்ல செய்தி சார் 😍
    என்ன பதிமூன்று இரண்டாவது ரவுண்டு மாதிரி இல்லாம இருந்தா சரி🤐

    வழக்கம் போல நீங்களே படிச்சி பார்த்து முடிவு பண்ணுங்க சார்

    நம்மாளுங்களோட எதிர்பார்ப்பு என்னுன்னு

    உங்களுக்கு தெரியாததா என்ன சார் 🤷🏻‍♂️

    இல்ல நாங்கதான் முடிவு பண்ணனுமுன்னு நினைச்சீங்கன்னா ஒரு புக்கு வாங்கி அனுப்பி வையுங்க படிச்சிட்டு சொல்லிடலாம் 🙏🏼😇

    ஓடிடுடா கைப்புள்ள
    🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

    .

    ReplyDelete
  52. எனது வோட்டு "இடியாப்பச் சிக்கல் பழசு"


    அதுவும் முக்கியமாக "இரத்தக்காட்டேரி மர்மம்" வேண்டும்

    ReplyDelete
  53. Jhonny 2.0 - இன்னுமொரு வாய்ப்பாவது அவசியம் வேண்டும் சார். பழைய பாணியும் இருக்கட்டும் தப்பில்லை! :-)

    ReplyDelete
  54. கேப்டன் டைகர் - எப்போதும் அவருக்கு வரவேற்பு உண்டு!

    ReplyDelete
  55. இந்தப் பதிவின் மேற்புறத்தில் முதலாவதாக இருக்கும் ஜானி2.0வின் 'R.I.P RIC' புத்தகத்தின் ஒரிஜினல் ஃப்ரென்ச் பிரதி என்னிடம் இருக்கிறது!! இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு கேப்ஷன் போட்டியில் வென்றதற்காக சிவகாசி கம்பேனிலேர்ந்து பரிசா அனுப்பி வச்சிருந்தாக! அதை இங்கே சொல்லி பெருமைப் பட்டுக்கறது மட்டும்தான் என்னோட நோக்கம்னு நினைச்சீங்கன்னா - இல்லை!அதுவுந்தே.. ஆனா, இந்தா கீழே இருக்கே - இதுவுந்தே!

    அந்த புக்கு ஃபிரெஞ்ச்சு மொழில இருந்துச்சு! அப்புறம் எங்கே படிக்க?! அதனால, அப்படியே புரட்டி படம் மட்டும் பார்த்தேன்.. அதுல ஜானியும், நாடீனும் ஷேம் ஷேம்.. பப்பி ஷேமாக.. கடவுளே கடவுளே!!

    ரொம்ப டீசன்டான காதலர்களாய் அவர்களிருவரையும் ரசித்திட்ட நம் பழைய வாசகர்களுக்கு இந்த பப்பி-ஷேம் காட்சியைப் பார்க்க நேரிட்டால் எந்தமாதிரியான ரியாக்ஷன் கொடுப்பாங்களோ தெரியலை?!! ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. _\\\ரொம்ப டீசன்டான காதலர்களாய் அவர்களிருவரையும் ரசித்திட்ட நம் பழைய வாசகர்களுக்கு இந்த பப்பி-ஷேம் காட்சியைப் பார்க்க நேரிட்டால் எந்தமாதிரியான ரியாக்ஷன் கொடுப்பாங்களோ தெரியலை?!! ஹிஹி!!\\\\

      இது பற்றிய ஆராய்ச்சி உடனே தேவை. காலத்தின் காட்டாயம் கூட. ஜனவரி மாதமே ஆராய்ச்சி தொடங்கி விட்டால் நல்லது.

      Delete
    2. குறும்பு என்றால் பூனை, பூனை என்றால் குறும்பு 😂

      Delete
    3. அப்ப அவசியம் வேண்டும். (கர்சீஃப் ப்ளீஸ்) .

      Delete
    4. ///கர்சீஃப் ப்ளீஸ் ///

      ஏற்கனவே சொதசொதன்னு நனைஞ்சிருக்கு! பர்ர்ர்ர்ரால்லியா உங்களுக்கு? ;)

      Delete
    5. ஏற்கனவே தளததுல நிறைய தொவச்சி தொங்க விட்டிருக்கு. அது கூட இதையும் தொவச்சிடலாம் விடுங்க.

      Delete

    6. ஏற்கனவே தளததுல நிறைய தொவச்சி தொங்க விட்டிருக்கு. அது கூட இதையும் தொவச்சிடலாம் விடுங்க.://

      🤣🤣🤣செம.

      Delete
  56. ஜானி கதைகள் இரண்டுமே நன்றாக உள்ளது.
    டைகர் கதைகள் மீள் உருவாக்கம் பெறுவது மகிழ்ச்சி.தொடர்ந்து தமிழில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன்......
    அடுத்தவருட அட்டவணையில் ப்ரின்ஸ் கதைகளுக்கு இடம் இருக்குமா?என்பது புரியவில்லை.


    ப்ரின்ஸ் கதைகள் லயனில் வெளிவருவதற்கு காப்பிரைட் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பது புரிகிறது.வந்தால் மகிழ்ச்சி ,வராவிட்டாலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.


    பின்குறிப்பு.

    எந்த ஒரு விசயத்தையும் உண்மைக்கு மிக நெருக்கமாக அணுக விரும்புவது என்னுடைய இருப்பு.
    தவறானவற்றை மிக வலிமையாக சுட்டி காட்ட விழைவதும்,அதில் ஓரளவேனும் மாற்றத்தை ஏற்படுத்த இயன்ற வரையிலும் முயற்சிப்பதும் சிறுவயதிலிருந்தே உடன் வளர்ந்துவிட்ட தீமய பழக்கங்களில் ஒன்று.
    பல நேரங்களில் இதை மன நோயாகவும் கருதியிருக்கிறேன். போலித்தனமான பசப்பலான வார்த்தைகள் மூலம் மேடை நாடக ஆக்கங்களை நிஜ வாழ்வில் ஒரு கணம் கூட ஜீரணிக்க இயல்வதில்லை.
    என்னுடைய பல வார்த்தைகள் ஏதேனும் ஒருவகையில் தள நண்பர்களையோ,ஆசிரியர் குழுவையோ காயப்படுத்தியிருந்தால் மனதார வருந்துகிறேன்.மன்னிக்க கூடிய பெருந்தன்மை இருந்தால் மன்னித்தும் விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மன்னித்து விட்டேன்.

      Delete
    2. ஸ்ரீ ஒவ்வொரு மனிதரும் தனித்துவமான வரே. உங்கள் மனதிற்கு பட்டதை நீங்கள் வெளிப்படையாக சொல்கிறீர்கள். ஆசிரியரும் அதை தான் கேட்கிறார். இதில் எதுவும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நன்றி

      Delete
    3. ///
      ப்ரின்ஸ் கதைகள் லயனில் வெளிவருவதற்கு காப்பிரைட் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பது புரிகிறது.///---

      தவறான புரிதல் ஸ்ரீ! இதுபற்றி தெளிவாகவே எடிட்டர் சார் அவரோட 2018பிறந்தநாள்க்கு அடுத்துவந்த பதிவில் விளக்கிட்டார்.

      பிரின்ஸ் கதையின் முதல் உரிமையாளரிடம் அவரோட உரிமை ஒப்பந்தம் இன்னும் சில வருடங்கள் இருக்கு.

      பிரின்ஸ் வருவதில் 0.0000000000001% கூட தடையில்லை!

      மேற்கொண்டு உங்களுக்கு நண்பர்கள் விவாதம்+விளக்கம் பார்க்கனும்னா என்னுடைய வாட்ஸ்அப் நெம்பரில் கூப்பிடுங்க
      9629298300!

      Delete
  57. *ஜானியை பொறுத்தவரை old is gold.
    2.0 வேண்டாம் எனச் சொல்லவில்லை, ஆனால் பழைய பாணிக்கு இது ஈடாகாது.


    *கேப்டன் டைகரின் மறுவரவு மகிழ்ச்சி, முடிந்தால் அடுத்த ஆண்டே slot ஒதுக்கி விடுங்கள் சார்.

    ReplyDelete
  58. எனக்கு இரண்டு ஜானிகளும் ஒ.கே தான்.

    ReplyDelete
  59. ரிப்போட்டர் ஜானி

    பழசும் புதுசும் வந்தால் சந்தோஷமே. எனக்கு டபுள் ஓகே !

    ReplyDelete
  60. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றாரு தளபதி.வேணாம்னு சொல்வோமா.ஜோதியிலலகலந்திடுங்க சார்.

    ReplyDelete
  61. 1.ரிப்போர்ட்டர் ஜானியின் 2.0 ..

    பேசாம ஒரு ஜானி ஸ்பெஷல் போற்றலாம் சார்..பழசு ஒன்னு.. 2.0 ஒன்னு .. ore book a ..

    2.கேப்டன் டைகர்

    'தளபதிய' அடுத்த வருஷம் எப்படியாவது சேர்த்திடுங்க sir ..

    ReplyDelete
    Replies
    1. ஜானி ஸ்பெஷல் க்கு double ok. இந்த ஐடியா அருமை

      Delete
  62. மறு வாசிப்புக்கு ஏற்ற, கதைகள் அத்தனையும், நீங்கள் வெளியிடலாம், டைகர் கதைகளை சிகப்பு கம்பளம், விரித்து வரவேற்கிறேன்

    ReplyDelete
  63. மறுபதிப்பிற்க்கு பழசு அப்புறம் புதுசு ஆகரெண்டு ஜானியும்வேண்டும். நடனமாடும் கொரில்லாக்கள் நகைச்சுவையின் உச்சம். ஜனாதன் இப்ப படிக்கிறப்ப நல்லாருக்கமாதிரியே இருக்கறதுஎனக்குமட்டுமா. கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  64. ஜானி 2.0 அப்படி ஒன்றும் குறைவான இதழல்ல.

    நான் இன்னமும் காமிக்ஸ் படிக்கிறேன் என்றால் அதில் பழைய ஜானிக்கும் பங்கு உண்டு.
    ।இரண்டுமே வேண்டும்

    ReplyDelete
  65. டைகர் 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  66. தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு வேண்டுகிறேன்...

    சில ஃப்ளாப் இருந்தாலும், தமிழ் காமிக்ஸ் சூப்பர் காவியங்களான, ரத்தக்கோட்டை, தங்கக்கல்லரை, மின்னும் மரணம் (இன்னும் பார்க்க அதிர்ஷ்டம் வரல) தந்த தளபதிக்கு என்னென்றும் ஆதரவளியுங்கள் ப்லிஷ்..

    ReplyDelete
    Replies
    1. காவியம்னா அது என் பெயர் டைகர் தான்! மற்ற 3ம் மிக பெரிய ஹிட்ஸ்!!!

      Delete
    2. ஆனாலும் உங்களுக்கு மன உறுதி ஜாஸ்தி.

      Delete
    3. என் பெயர் டைகர்- இரு உண்மை சம்பவங்களை இணைத்தது. அதில் டைகர் உலவுவது மட்டுமே கதாசிரியர் கற்பனை! அங்கே டூம்ஸ்டோனில் இருந்த பல சூதாடிகளில் ஒருவரை டைகராக உருவகப்படுத்தி இருக்கார்.

      ஜெரோனீமோ & ஓகே கார்ல் கன் பைட்--- இரண்டையும் வரலாற்று பக்கங்களில் படித்து விட்டு "என் பெயர் டைகரை " கையில் எடுங்கள்!

      தானாகவே அந்த புக்மேல் மரியாதை+பிடித்தம் வந்துடும். கெளபாய் கதை என்ற ப்ளஸ்ம் சேர்ந்து கொள்ளும்.

      மசாலா கதைகள் ஆயிரம் வரும்; போகும்...

      என் பெயர் டைகர்-- மாதிரி இன்னொன்னு ஜீன் ஜிரோவ்-ஆலயே கிரியேட் பண்ண முடியாது.

      டைகர் மேல் இருக்கும் வெறுப்பில் அணுகினால் நல்ல கதையை தவறவிடுவீங்க!

      Delete
    4. என் பெயர் டைகர் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் இது வெளியான போது அதை தளத்தில் வெளிபடுத்தியதற்கு பெரிதாக வரவேற்பில்லை.குறிப்பாக அந்த கதையை மட்டம் தட்டுவதிலேயே குறிப்பாக இருந்தனர்.கும்பல் மனோபாவத்தோடு விஷமச் சிந்தனைகளை விதைப்பதிலேயே சிலர் முனைப்பு காட்டியதாக நினைவு.
      கதை பல இடங்களில் விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் கதாசிரியர் தவற விட்டதாக தோன்றும். கதையின் முடிவையும் தெளிவாக உணர்த்தவில்லை.
      எத்தனையோ மோசமான கதைகளுக்கு "" என் பெயர் டயர் வண்டி"" நன்றாகவே இருந்தது.
      வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும்.

      Delete
    5. என் பெயர் டைகரில் ஜெரோனிமாவிடம் சிறைபட்ட டைகர் எவ்வாறு மீண்டார் என்பதும்.
      தப்பியோடிய வில்லன் நிலை என்னவாகியது என்பதும் விளக்கப்படவில்லை.
      அதன் இன்னொரு பாகத் தொடர்ச்சியில் இதை கதாசிரியர்கள் தெளிவு படுத்துர்.

      அனேகமாக இந்தாண்டு வெளிவரும் டைகர் கதைதான் இதன் இறுதி பாகமாக இருக்கும்.

      Delete
    6. 1.ராணுவ படைப்பிரிவு வருவதால் டைகர் தப்பித்துடறார்.!

      2வது சந்தேகம் கி.நா. பாணி ஸ்ரீ!
      அந்த க்ளைமாக்ஸில் அவன் பணத்தோடு போயிட்டான். அதற்கு மேல் வேற சாகசங்களில் அவன் தலைகாட்ட கூடும்.
      அந்தந்த கதாபாத்திங்களை அப்படியே விடுவது ஒரு வகை எண்ட்.


      3.இந்த புதிய டைகர் கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை; இது முற்றிலும் வேற ட்ராக். கதை சொன்னா சுவாரஸ்யம் குறைந்து விடும்.

      Delete
    7. சார் டைகர் காமிக்ஸில் பிடித்த விஷயங்கள்,


      சாகச பயணங்கள்.

      ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும் நுணுக்கம்.

      இயல்பான கதை நடை.

      டைகரின் டெபுட்டி தாத்தா..

      அருமையான சித்திரங்கள்..


      இன்னும் சொல்லிட்டே போகலாம்...

      தங்கக்கல்லரையை எப்போ எடுத்தாலும் என்னால் complete பண்ணாம வைக்க முடியாது...

      டைகர் உலகம் ஒரு தனி....உலகம்.

      சார் ஆன்லைனில் உள்ள ரத்தபடலம் பேக் (ஆறு புத்தகங்கள்) தொடர்கதையா அல்ல தனித்தனி கதைகளா... அட்வைஸ் பிளீஸ்..

      Delete
    8. Saravanan @ அந்த 6ம் வாங்கி விடுங்கள். ்்

      அருமையான பேக்கேஜ் அது.

      இருத்தப்படலம் சுற்று 1ல் அதாவது அந்த 18பாகங்களில் வரும் மிக முக்கிய கேரக்டர் பின்னனி பற்றிய மிஸ்ட்ரி சீரியஸ்ல 3புத்தகங்கள் உள்ளன.
      அவைகள்..விரியனின் விரோதி! காலனின் கைகூலி&கர்னல் ஆமோஸ்!
      (இந்த வகையில் 13தனித்தனி புத்தகங்கள் பிரான்சில் வெளியாகி உள்ளன. இதை தனித்தனியாக படிக்கலாம், மற்றவை பிற்பாடு வரும்.)

      அந்த 6ல் பாக்கி 3ம் இரத்தபடலம் 2வது சுற்றின் 5கதைகள் கொண்டவை. அது ஒரு மினி சீரியஸ்.

      Delete
    9. அந்த கதையை மட்டம் தட்டுவதிலேயே குறிப்பாக இருந்தனர்.கும்பல் மனோபாவத்தோடு விஷமச் சிந்தனைகளை விதைப்பதிலேயே சிலர் முனைப்பு

      ######
      கதை பல இடங்களில் விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் கதாசிரியர் தவற விட்டதாக தோன்றும். கதையின் முடிவையும் தெளிவாக உணர்த்தவில்லை.

      ######

      உங்கள் விமர்சனத்திற்கு உங்கள் விமர்சனமே பதில் நண்பரே...:-)


      மற்றபடி நோ கமெண்ட்ஸ்..:-)

      Delete
    10. @ Selam Tex Vijayaragavan,

      Sir thanks for the clarification.. I am ordering the books now.

      Delete
  67. Sir,

    Reserve Ric Hochet for a MAXI SPECIAL - one OLD type and one NEW type - provided the stories are conclusive in one album each - the old ones will though unsure about the new ones.

    Yes to Blueberry ..

    No to XIII until they complete the ARC and we can go for a hard bound.

    ReplyDelete
    Replies
    1. சார்.... வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம் தாண்டிய வலைபதிவில் கிடைத்த நம்பிக்கையுடன், மின்னும் மரணம் கிடைக்க காத்ததிருக்கின்றேன்.

      ஒரு வேண்டுகோளுடன் சில குறிப்புகள்.

      நான் கலங்கரைவிளக்க தலைமை இயக்குநரகத்தில் பணியாற்றுகின்றேன்..

      எங்கள் மண்டல அலுவலகம் சென்னையிலும் உள்ளது....

      நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், எனது சென்னை நண்பர் மூலம் மின்னும் மரணம் புத்தகத்தை நான் பெற இயலும்.

      மின்னஞ்சல் முலம் ஆசிரியரிடமும் வேண்டுகோள் வைத்துள்ளேன்.


      சார் புத்தகத்தின் மதிப்பறிந்தவுடன் தங்களின் / ஆசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைக்க தயாராக உள்ளேன் அல்லது நண்பர் முலமாகவும் தங்களிடம் சேர்க்க இயலும்.

      நம்பிக்கையுடன் நான்.

      நன்றி..

      Delete
    2. After Editor either confirms here that he has your email or forwards me your email, I can hand it over to your friend. You can leave your e-mail here.

      The discounted price of the book was 900/- and hundred towards courier. So total amount is Rs.1000/- only - it is a NEW book - however I need your identity to hand over the book. I do not want to hand over to re-sale mafia !!

      Delete
    3. @Saravanan

      ஆயிரம் ரூபா பணத்தையும், ஆதார் கார்டையும் எடுத்துக்கிட்டு கோத்தகிரி பெண்டுக்கு வந்துடுங்க! :D

      Delete
    4. Ragavan ji...

      Great..!

      குருநாயரே..

      அந்த தாடிக்கு அவ்வளவு தூரமெல்லாம் வரமுடியாது.பக்கமாச் சொல்லுங்க.!

      Delete
  68. "ரெகுலர் கேப்டன் டைகர்"
    மறுபடியும் வருவதில் சந்தோசம், ஹித ஆகுதோ இல்லையோ தமிழுக்கு கொண்டு வந்தேயாகனும். :-))

    ReplyDelete
  69. சார் நைசா அசலூர் போய் கசப்புஅப்புசியோட அவுட்லைன் கேள்வி பட்டேன்... தயவுசெஞ்சு தளபதிய நம்மூருக்கும் கொண்டுவந்துருங்க...

    ஆனா ஒன்னு சார் அசலூர் யூரோ, டாலரெல்லாம் நகனைக்கும் போது நீங்கள் அளிக்கும் பொக்கிஷங்கள் மிகவும் விலையுயர்ந்தவை.

    ReplyDelete
  70. புத்தக திருவிழா 2019 திருவண்ணாமலை அப்டேட்ஸ்...இன்றைக்கு எக்கச்சக்க மாணவர்கள் அரங்கை அலங்கரித்தனர்..தொடர்ச்சியான அப்டேட்களை வழங்க நேரப்பற்றாக்குறை சார்.. சாரி. சிறுவர்களுக்கான ப்ளூ கோட்ஸ் லக்கி லூக் போன்றவை நல்ல விற்பனையை கண்டிருக்கும்... இங்குள்ள காமிக்ஸ் வாசகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலிருக்கிறேன். அடுத்த ஆண்டில் ஸ்டாலுக்கு முயற்சியுங்கள் ப்ளீஸ்.. இம்முறை ஒரே ட்ராபேக்...பேருந்து நிலையத்திலிருந்து தொலைவில் அமைந்து விட்டது என்பதுதான்.. நன்றி.

    ReplyDelete
  71. ஐ....ஜானி டபுள் ஆல்பம்ஸ் ஓல்ட் ப்ளஸ் நியூ..சேர்த்து ஒரே இதழில்....

    ReplyDelete
  72. I believe old johnny is good. Johnny 2.0 stories are not impressive.
    Since we have completed Prince & Barne stories, this is the right time for Johnny classics. Expecting at least 3 johnny stories (classic) in year 2020.

    ReplyDelete
  73. ஜானி old ஹி ஹி
    ஜானி 2.0 ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  74. ஜானி 2.0 மற்றும் பழசு இரண்டுமே வரட்டும் சார்.
    டைகர்க்கு waiting...

    ReplyDelete
  75. Iyago Deivame... Johnny 2.0 vendave vendaam.

    1.0 is still doing great.

    ReplyDelete
  76. !இரு பாகங்களில் நிறைவுறும் சாகசமிது !

    #####

    டைகரின் இந்த இரு பாகத்தில் நிறைவுறும் என்பதை இப்பொழுது தான் சரியாக கவனித்தேன் சார்..அப்ப கண்டீப்பா ஓகே..என்ன தான் டெக்ஸ் ரசிகரா நாங்க இருந்தாலும் டைகர் மேல எங்களுக்கும் ஒரு பச்சாதாபம் உண்டு சார்..அவரும் வெற்றி பெற வேண்டும் என்று...எனவே ..:-)

    ReplyDelete
    Replies
    1. என்னை பொருத்தவரை மிண்ணும் தங்க கல்லரை பக்கத்தில் மட்டுமல்ல தூரத்தில் நிற்க கூட எந்தவொரு டெகஸ் காமிக்ஸ்க்கும் அருகதை கிடையாது.

      டைகர் வேண்டாம் என்பதே என் நிலை.

      உங்களுடைய பச்சாதபம் டைகர்க்கு தேவையில்லை.

      Delete
    2. பொதுவாக நண்பர்கள் எல்லோரும் காமிக்ஸ் பிரியர்களே,தலைவர் பரணியும் நல்ல காமிக்ஸ் இரசிகரே,பொதுவில் எந்த காமிக்ஸ் இதழ் சிறப்பாக அமைந்தாலும் பெரும்பாலான நண்பர்கள் அதை பாராட்டவே செய்கின்றனர்.....
      நானும் அப்படியே,இதில் டெக்ஸ், டைகர் என்ற பாரபட்சங்கள் இல்லை....
      ஆனால் நீங்கள் டெக்ஸ் எனும் கதை பாத்திரத்தின்மேல் துவேஷம் காட்டுவதாகவே தோன்றுகிறது...
      இது ஏன் நண்பரே ??????
      இது எனது கருத்து மட்டுமே.....
      யாரையும் வருந்தச் செய்ய அல்ல....

      Delete
    3. கரெக்ட் ரவி.!

      இங்கே டெக்ஸ் வில்லர் கதாப்பாத்திரத்தை எத்தனை மட்டமாக சித்தரித்து பேசினாலும் எல்லோரும் (நாம் உட்பட) அதை ஜாலியான கலாய்ப்பாக எடுத்துக்கொண்டு போய்விடுகிகிறோம்.!

      அது வெறும் கலாய்ப்பாக இல்லாமல் பலநேரங்களில் நிறைய பேர்களிடம் ரொம்ப உக்கிரமாகவே வெளிப்படுகிறது..!

      ஆனால் டைகரையோ மாடஸ்டியையோ இங்கே யார் வெறுமேனே ஜாலியாக கலாய்த்தாலும் அதை யாரும் ஜாலியாக எடுத்துக்கொள்வதில்லை.!
      அவ்வளவு ஏன்.. டெக்ஸை கலாய்ப்பவர்களே டைகரையோ மாடஸ்டியையோ ஏதாவது சொல்லிவிட்டால் ஜாலியாக எடுத்துக்கொள்வதில்லை..

      என்னவகை முரண் இது என்று நானும் ஐந்தாறு வருடங்களாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்..!

      Delete
    4. ரவி@ சித்தர்கள்,துறவிகள் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை எனக்கு தெரியும். ஜென் துறவி ஒருவரின் கதை உங்களுக்கு சொல்கிறேன்.

      ஒரு ஜென் துறவி சிற்றோடையில் முகம் கழுவச் சென்றார். அவர் ஓடையில் நீரில் நிற்கையில் ஓடையில் நீண்டுகொண்டு இருந்த மாமரக்கிளையில் இருந்து ஒரு தேள் நீரில் விழுந்து தத்தளிக்கிறது.

      உடனே இரக்கப்பட்ட துறவி தேளை கையில் எடுத்து மரக்கிளையில் வைக்கிறார். அப்படி அவர் வைப்பதற்குள் அது ஓரிரு முறை அவரைக் கொட்டுகிறது.

      மீண்டும் அது நீரில் விழுகிறது;தத்தளிக்கிறுது. மீண்டும் துறவி எடுத்து கிளையில் விடுகிறார். மீண்டும் அது அவரை கொட்டுகிறுது.

      இதைப்பார்த்த அவரது சிஷ்யன் கேட்கிறான். சாமி, தேள் கடிக்கிறது எனத் தெரிந்தும் தாங்கள் மீண்டும் மீண்டும் அதை காப்பாற்றுவது ஏன்?

      துறவி சொல்கிறார், "தேள் கொட்டுகிறது என்பதற்காக நான் என் குணத்தை மாற்றிக் கொள்ள முடியாதே! கொட்டுவது தேளின் குணம்; காப்பது என் குணம்!"


      Delete
    5. அரிவரசு @ ரவி:


      டெகஸ் நான் வெறுக்கவில்லை. ஆனால் என்னனால் டெக்ஸை ரசிக்க முடியவில்லை என்பதே நிஜம்.

      எனக்கு varity பிடிக்கும். விதவிதமான காமிக்ஸ் கதை வருவதை டெகஸ் காமிக்ஸ் தடுக்கிறது.

      தேவையில்லாமல் அதிக ஸ்லாட் டெக்ஸ் எடுத்து கொள்கிறது என்பது என் நிலைபாடு.

      இன்றே எடுத்து கொள்ளுங்கள். நிறைய பேர் இரண்டு ஜானி வேண்டும் என்று கேட்டும் ஒரு ஜானிக்கு மட்டுமே வாய்ப்பு. ஏனெனில் ஸ்லாட் பற்றகுறை.

      ஒத்துகொள்கிறேன் விற்பனையில் டெகஸ் சாதிக்கிறது. ஆனால் நிறைய பேர் சேர்ந்து செய்தாலும் தவறு தவறு தான்.

      நிர்வான உலகில் கோமனம் கட்னவன் கோமாளி.

      Delete
    6. /// துறவி சொல்கிறார், "தேள் கொட்டுகிறது என்பதற்காக நான் என் குணத்தை மாற்றிக் கொள்ள முடியாதே! கொட்டுவது தேளின் குணம்; காப்பது என் குணம்!"\\\

      கதையெல்லாம் நல்லா இருக்கு. ஆனால் என்னை "செமி சைக்கோ" ன்னு சொன்ன சேலம் தேள் இந்த கதையை வேல மெனக்கெட்டு சொன்னதுதான் எனக்கு சிரிப்பா வருது.

      Delete
    7. ///விதவிதமான காமிக்ஸ் கதை வருவதை டெகஸ் காமிக்ஸ் தடுக்கிறது.

      தேவையில்லாமல் அதிக ஸ்லாட் டெக்ஸ் எடுத்து கொள்கிறது என்பது என் நிலைபாடு.////---

      இதனால் தான் செமி சைக்கோனு ஃப்ரூப் ஆகுது. டெக்ஸ் வர்லனா அங்கே மற்ற காமிக்ஸ் வரும்னு எந்த கோமாளி சொன்னது????

      டெக்ஸ் வருவது கருப்பு & வெள்ளையில்; ஜானி வருவது கலரில். டெக்ஸ் ஸ்லாட் 6போதும்னா 3காமிக்ஸ் கம்மியாத்தான் வரும்.

      இல்லை டெக்ஸே வேணாம்னு எடிட்டர் சார் முடிவு பண்ணா கருப்பு வெள்ளை சந்தா காலி தான் ஆகும்!

      அங்கே உடனே ஜானியோ விதவிதமான காமிக்ஸ் அங்கே வராது.

      நமக்கு கடவுள் ஏதாவது கொடுத்து இருந்தா அதை உபயோகித்து பார்க்கனும்!

      அப்புறம் இந்த தளத்திற்கு வந்து போற ஒவ்வொரு ரசிகருக்கும் தெரியும் யார் தேள்னு!

      Delete
    8. \\\அது வெறும் கலாய்ப்பாக இல்லாமல் பலநேரங்களில் நிறைய பேர்களிடம் ரொம்ப உக்கிரமாகவே வெளிப்படுகிறது..! \\\

      நீங்கள் டைகரை பற்றி உக்கிரமாக எழுதிய காலம் உண்டு. அதை பார்த்து நான் வேதனை பட்டது காலமும் உண்டு.





      உண்மையில் நான் முதல் முறையாக கமெண்ட் போட்டதே, டைகரை கேவலமாக திட்டி கமெண்ட் போட்ட ஒருவரை எதிர்த்து தான்.

      தற்போது டைகர் காமிக்ஸ் வருவது நின்று பிறகே அனைத்து விதமான விவாதங்களும் முற்றுப்புள்ளி பெற்றது.

      டைகர் லயன்முத்து காமிக்ஸ் ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துபோவதில்லை. லயன்முத்து ரசிகர்களை நம்பி டைகர் காமிக்ஸ் இல்லை.

      அதனால் டைகர் காமிக்ஸ் வர வேண்டாம். வேண்டுமானாலும் இன்னும் ரெண்டு டெகஸ் ஸை ஸ்லாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் பரவாயில்லை.

      Delete
    9. ///
      நீங்கள் டைகரை பற்றி உக்கிரமாக எழுதிய காலம் உண்டு. அதை பார்த்து நான் வேதனை பட்டது காலமும் உண்டு.///


      அது எதற்கான பதில் என்பதையும் கொஞ்சம் சொன்னால் பரலாயில்லை.!

      அல்லது அந்த உக்கிரத்தை இங்கே எடுத்துப் போடுங்களேன் பார்ப்போம்.!

      பலமுறை என்னுடைய டாப் 5 லிஸ்டில் மின்னும் மரணமும், தங்கக்கல்லறையும் இடம்பிடித்திருக்கின்றன. வெறுப்பு இருந்தால் அப்படி சொல்ல முடியுமா!?

      இப்போது கூட மேலே டைகர் கதை மீண்டும் வருவதை அறிந்ததும் நான் போட்டிருக்கும் கமெண்ட்டைப் போய் பாருங்கள்.!

      டெக்ஸை கலாய்த்த டைகர் ரசிகருக்கு பதிலளித்தால் அது வெறுப்பா.. உக்கிரமா..!?

      பலே பலே நல்ல நியாயம்.. 😜😜😜

      Delete
    10. \\அப்புறம் இந்த தளத்திற்கு வந்து போற ஒவ்வொரு ரசிகருக்கும் தெரியும் யார் தேள்னு!\\

      அப்டியா!! நீங்கள் கூட மிகப்பெரிய காமிக்ஸ் மறுவிற்பணை பிரதிநிதி கேள்விபட்டேன்.

      நானுமே கூட உங்களிடம் கறுப்பு கிழவி கிடைக்குமா என்று கேட்கலாம் என்று இருந்தேன்.

      வேண்டாம்!!! உங்களுக்கு அந்த காமிக்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று தெரிந்தால் ஓவர் விலை சொல்வார். அவரிடம் போய்டாதிங்க என்று நண்பர்கள் எச்சரிக்கை செய்ததால் தான் நான் உங்களை அனுகவில்லை.

      Delete
    11. // என்னவகை முரண் இது என்று நானும் ஐந்தாறு வருடங்களாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.//
      பாயிண்ட் தான்,இதற்கு பதிலே கிடைக்காதோ......

      Delete
    12. டெக்ஸை கலாய்ப்பார்களாம் பதிலுக்கு டைகரை கலாய்த்தால் கோவம் வருமாம்.. நாங்கல்லாம் மோசமான ஆளுங்களாம்..!

      வம்பை ஆரம்பிச்சவங்க நல்லவங்களாம்.. பதில் சொன்னவங்க கெட்டவங்களாம்..!

      Delete
    13. \\\இப்போது கூட மேலே டைகர் கதை மீண்டும் வருவதை அறிந்ததும் நான் போட்டிருக்கும் கமெண்ட்டைப் போய் பாருங்கள்.! \\\

      தேவையில்லாத எந்த கமெண்ட் டையும் நான் படிப்பதில்லை.

      Delete
    14. // தேவையில்லாமல் அதிக ஸ்லாட் டெக்ஸ் எடுத்து கொள்கிறது என்பது என் நிலைபாடு.//
      டெக்ஸ் தனி டிராக்கில்தானே வருகிறது கணேஷ் ஜி,தல யார் வழியிலும் குறுக்கிடுவதில்லையே,
      நம் ஆசிரியருக்கு எப்போதும் விற்பனையில் உத்திரவாதம் இருப்பதை கொஞ்சம் கூடுதலாக வெளியிடுவதில் தவறில்லையே...
      அவர் கோணத்தில் சற்று பார்க்கலாமே...

      Delete
    15. ///அப்டியா!! நீங்கள் கூட மிகப்பெரிய காமிக்ஸ் மறுவிற்பணை பிரதிநிதி கேள்விபட்டேன்.///
      ---😂😂😂😂😂😂ha...ha...ha... Joke of the century!

      வாழ்க்கையில் இதுவரை ஒரு பழைய காமிக்ஸ் கூட விற்றது கிடையாது. இனிமேலும் அப்படியே! என்னிடம் டெக்ஸின் காமிக்ஸ் தாண்டி இருந்தால் தானே விற்க!

      நல்லா விசாரித்து பாருங்க! எம்பெயரை சொல்லி உங்களை யாரோ ஏமாற்ற பார்த்து இருக்காங்க!

      Delete
    16. // இல்லை டெக்ஸே வேணாம்னு எடிட்டர் சார் முடிவு பண்ணா கருப்பு வெள்ளை சந்தா காலி தான் ஆகும்! //
      உண்மை தான்......

      Delete
    17. ///தேவையில்லாத எந்த கமெண்ட் டையும் நான் படிப்பதில்லை.///

      ஆனால் நான் தேவையில்லாத சிலதை படிப்பது மட்டுமல்ல பதிலும் சொல்லுவேன்.!

      Delete
    18. \\\உண்மை தான்......\\\
      அதனால் எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது. எனக்கு கருப்பு வெள்ளையில் நாட்டம் கிடையாது.

      Delete
    19. // அது வெறும் கலாய்ப்பாக இல்லாமல் பலநேரங்களில் நிறைய பேர்களிடம் ரொம்ப உக்கிரமாகவே வெளிப்படுகிறது // ஒருவேளை அந்த கேரக்டராகவோ மாறிடுவாங்களோ.....

      Delete
    20. \\\ஆனால் நான் தேவையில்லாத சிலதை படிப்பது மட்டுமல்ல பதிலும் சொல்லுவேன்.!\\\

      என் இஷ்டம். ஏன் அதனால் உங்களுக்கு எதுவும் பிரச்சினையா?

      Delete
    21. ///தல யார் வழியிலும் குறுக்கிடுவதில்லையே///---101% சத்தியமான வார்த்தை!

      Delete
    22. // தேவையில்லாத எந்த கமெண்ட் டையும் நான் படிப்பதில்லை. //
      விவாதத்தை ஆரோக்கியமாகவே கொண்டு செல்வோம் ஜி,பழையதை கிளறுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்...

      Delete
    23. \\\ஒருவேளை அந்த கேரக்டராகவோ மாறிடுவாங்களோ.....\\\

      மறவேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் நான் உக்கிரபான கேரக்டர் தான். இதுல புதுசா மாற வேண்டிய தேவை என்ன?

      Delete
    24. உங்களுடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும் என்று நம்பி மீண்டும் ஏமாந்ததுதான் மிச்சம்..!

      மிஸ்டர் கணேஷ்குமார்.. நீங்கள் தொடருங்கள் சார்.. குட்லக்.!

      Delete
    25. //என் இஷ்டம். ஏன் அதனால் உங்களுக்கு எதுவும் பிரச்சினையா //
      ??????

      Delete
    26. என் பெயர் டைகர்,,,டைகர் வரலாற்றிலேயே வித்தியாசமான கதை,,,திரும்ப எடுத்துப் பொறுமைzயா படிங்க,,,,இத தங்கக் கல்லறைக்கு இணைய உணருவீங்க, ,,அங்க டைகர் மட்டும் ஹீரோல்ல,,,ஜெரோனிமஆ, எர்ப் கோதரர்கள் ப்ளஸ் கதை,,,வானவில்லின் ஒரு முனை கல்லறைன்னா மறு முனை என் பெயர் டைகர்,,,மாற்றம் வேண்டுவோரின் மாறுபட்ட அட்டகாச மறுமுனை அது,,

      Delete
    27. ///விற்பனையில் உத்திரவாதம் இருப்பதை கொஞ்சம் கூடுதலாக வெளியிடுவதில் தவறில்லையே...///

      நிறைய பேர் வாங்குவதால் தானே விற்பனை ஆகிறது.

      அதனால் தான் நிறைய பேர் சேர்ந்து செய்தாலும் தவறு தவறுதான் என்று சொன்னேன்.

      Delete
    28. // இதுல புதுசா மாற வேண்டிய தேவை என்ன? //
      எப்போதுமே இது போன்ற பதில்கள் தானா????

      Delete
    29. \\\உங்களுடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும் என்று நம்பி மீண்டும் ஏமாந்ததுதான் மிச்சம்..!\\\

      Same to you.

      Delete
    30. புலவர்களே சர்ச்சை தேவைதான், ,,அது சண்டையாக மாறி விடக்கூடாது,,,,எனக்கு பிடித்தது அது போதுமே

      Delete
    31. // டெக்ஸை ரசிக்க முடியவில்லை என்பதே நிஜம்.//
      இதில் தவறில்லை,பிடிக்காததை தாண்டியும் செல்லலாம் ஜி......

      Delete
  77. Johnny - 1.0 YES
    Johnny - 2.0 NO (because it doesn’t have Johnny signature screenplay)
    Tiger - YES but check out the story first pls

    ReplyDelete
  78. sir, கேப்டன் டைகரின் மீள்வருகை "தங்க கல்லறை" போல Super Duper Hit ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

    ஜானியின் கதைகள் Old:New 2:1 என வரலாம், Sir.

    ReplyDelete
    Replies
    1. கிரி சார் ஒழுங்காக பரீட்சை க்கு படிக்காமல் உங்களுக்கு blog la என்ன வேலை?

      Delete
  79. ஆசிரியர் பாடு திண்டாட்டம் தான். அதிகப்படியான நண்பர்கள் இரண்டு வேண்டும் என சொல்லி உள்ளார்கள். அனேகமாக ஆசிரியர் தனது வழக்கமான அறிவியல் பூர்வமான முறையில் முடிவு செய்வார் என்று நினைக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. அதுல ஒண்ணு ..

      இதுல ஒண்ணு..

      அதானே பரணி..!

      Delete
    2. இங்கி பிங்கி பாங்கி...ஹி...ஹி...!!!

      Delete