Powered By Blogger

Friday, October 19, 2018

2019 - The Announcements !

நண்பர்களே,

சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all ? இந்தப் பதிவினை  வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் ! இதன் முழுமையையும் படித்து ; உள்வாங்கிக் கொண்டிருக்கும் நொடியில் மறுக்கா மணியைக் குறித்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? Start to finish - எவ்வளவு நேரத்தை இது விழுங்கியது என்று தெரிந்து கொள்ளவோரு குழந்தைத்தனமான ஆசை தான் !! வேறொன்றுமில்லை ! 

வணக்கம். வருஷத்தின் “அந்த” வேளையும் புலர்ந்தே விட்டது! ‘பட்ஜெட் தாக்கல் செய்யப் போகிறேன் பேர்வழி‘ என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ப்ரீப்கேஸோடு சட்டமன்ற வாசலில் நின்று மந்திரிகள் போஸ் கொடுப்பார்களல்லவா ? அதே போல அடியேனையும் உருவகப்படுத்திப் பார்த்துக் கொள்ளுங்களேன் – மைனஸ் the கரைவேட்டி! 'அந்தப் பெட்டிகளுக்குள்ளே என்ன தான் இருக்குமோடா சாமி ?' என்று நிறைய நாட்கள் நான் யோசித்ததுண்டு – becos பட்ஜெட் பேப்பர்கள் என ஒரு லாரி லோடு காகிதங்களை அப்புறமாய் இறக்கிக் கொண்டு போவார்கள் ! ஆனால் என் கையிலிருக்கக்கூடிய ப்ரீப்கேஸிலோ ஒரேயொரு காகிதம் மாத்திரமே ! And அது தான் 2019-ன் அட்டவணையுமே!

ஒரே நேரத்தில் ரொம்பவே சுலபமுமான சிரமுமான பணி என்னவென்று யாரும் என்னிடம் மைக் நீட்டிக் கேட்கப் போவதில்லை தான்! ஆனாக்கா அப்படி யாரேனும் கேட்டு வைத்தால் “ஓராண்டின் அட்டவணையை, ஓரளவுக்கேனும் எல்லோருக்கும் ஏற்புடைய விதமாய் முன்கூட்டியே நிர்ணயிக்கும் முயற்சி தானுங்கோ !“ என்று பதில் சொல்லுவேன் ! ”அடுத்த மாதம் என்ன புக்னு விளம்பரம் போடறது அண்ணாச்சி?” என்று மைதீன் கேட்கும் போதே – அது சார்ந்த மகாசிந்தனையில் மோவாயைத் தடவுவது வாடிக்கை – 2010-க்கு முன்பான அந்த நாட்களில் ! பீரோவைத் திறந்து உள்ளே சிதறிக் கிடக்கும் சொற்பக் கதைகளுள் எதையாவது இன்க்கி-பின்க்கி போட்டு எடுத்து வருவது மாத்திரமே அன்றைய “திட்டமிடல்கள்” ! ஆனால் காலங்களும் மாறிப் போய் ; விற்பனை முறைகளும் மாற்றமோ மாற்றம் கண்டான பின்பு – அதே பழைய “ஃப்ரீயா வுடு” approach வேலைக்கு ஆகாது என்றான பிற்பாடு – இந்த ஓராண்டுக்கான அட்டவணை நாட்கள், காலத்தின் கட்டாயமாகிப் போய் விட்டுள்ளன! And genre-களின்படி சந்தாக்களை / கதை வரிசைகளைப் பிரித்தான பின்னே – தெளிவானதொரு ப்ளூபிரிண்டை உங்கள் முன்னே சமர்ப்பிக்கும் அவசியம் முன்னெப்போதையும் விட, இன்னும் ஜாஸ்தியாகிப் போயுள்ளன !

So – இந்தப் பின்னணியில் தான் 2019-க்கான ரோசனைகளையும் துவக்கினேன் – சுமாராக 3 மாதங்களுக்கு முன்பாகவே ! நடப்பாண்டின் ஓட்டத்தின் மத்தியினிலேயே இந்தத் திட்டமிடல்களைச் செய்வதில் நிறையவே நிறைகளுண்டு – simply becos ஒவ்வொரு நாயகரையும் / நாயகியையும் நீங்கள் current ஆக எவ்விதம் அணுகுகிறீர்கள் என்று பார்த்திட முடிவதால் ! அது மட்டுமன்றி கோவை, ஈரோடு, மதுரை என வரிசையாகத் தொடர்ந்திடும் புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களுமே எனக்கு லேசாகக் கோடிகாட்டிடும்  – யார் நொண்டியடிக்கும் குதிரை ? யார் துள்ளிப் பாயும் குதிரையென்று ! சின்னதொரு உதாரணம் சொல்லலாம்... புது வரவான ட்ரெண்டை எடுத்துக் கொண்டு ! நடப்பாண்டில் அறிமுகமாக மனுஷன் “பார்த்தாலே பத்திக்கும்!” என்று சொல்லக் கூடிய firebrand நாயகரல்ல என்பதில் இரகசியமே கிடையாது ! வித்தியாசமான களம்… நிதானமான நாயகர்… சிம்பிளான plots என்பதே இவரது template ! ஆக இவரை ஒரே இதழில், கேப்டன் டைகர் ரேஞ்சுக்கோ, இரவுக் கழுகார் ரேஞ்சுக்கோ நாம் உச்சி மோர்ந்திடுவோமென்றெல்லாம் நான் நிச்சயம் கனா கண்டிருக்கவில்லை ! முதல் இதழுக்கு மிதமான வரவேற்பு ; இதழ் # 2-க்கு அட்டகாச வரவேற்பு என்பதை live ஆகப் பார்க்க சாத்தியப்பட்ட கணமே 2019-ன் பட்டியலில் இவருக்கு எவ்வித இட ஒதுக்கீடு சுகப்படுமென்று தீர்மானிக்க இயன்றது ! So இந்த “அட்டவணைத் தேர்வு” என்ற பந்தாவை நான் விட்டுத் திரிந்தாலுமே, இதன் நிஜமான பின்னணிகள் - நீங்களும், உங்களது ரசனைகளின் வெளிப்பாடான குரல்களுமே ! I pick what you choose ! Simple as that ! ஒவ்வொரு இதழையும் படித்த பின்னே அது சார்ந்த உங்களது அபிப்பிராயங்களை நான் ஓட்டை ரெக்கார்ட் போல மறுக்கா, மறுக்கா கோரிடுவதே இந்த மையப் புள்ளியின் பொருட்டே ! எனக்கு எட்டிடும் feedback-கள் மாத்திரமே எனது தேர்வுகளை influence செய்திடக் கூடும் எனும் போது – மௌனங்களை மொழிபெயர்க்கும் வித்தையை அறிந்து வைத்திருக்க வழியில்லையே?!

Without more ado – விஷயத்தினுள் புகுந்திடலாமா ?

2019-ன் அட்டவணைத் தேர்வின் பின்னணியில்  எனது முதலிரண்டு லட்சியங்கள் இவையாகவே இருந்தன :

* ஓராண்டின் சந்தாத் தொகை நடப்பிலுள்ள தொகைகளை அனுசரித்தே இருக்க வேண்டும் ! செலவினங்கள்....முக்கியமாக கூரியர் கட்டணங்கள் ஏகமாய் உயர்ந்து விட்டுள்ள போதிலும் என்ன குட்டிக்கரணம் அடித்தாவது மொத்த பட்ஜெட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் !

* நடப்பாண்டின் 4 சந்தாப் பிரிவுகளும் சேர்ந்து இதழ்களின் மொத்த எண்ணிக்கை 36. ஜம்போ ; பிரத்யேக முன்பதிவுகள் etc…தனித்தடங்கள் என்பதால் நமது தற்போதைய ரெகுலர் சந்தாத் தடத்தின் நம்பர் 36 தான் ! தொடர்ந்திடவுள்ள 2019-ல் இதற்கு அதிகமாக்கிட இயல்கிறதோ - இல்லையோ ; நிச்சயமாய் குறைந்திட அனுமதிக்கலாகாது ! 

ரெகுலர் சந்தாவில் இதழ்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு – முன்பதிவுக்கான Special இதழ்களை அறிவித்து balance செய்திடும் option-ம் என் முன்னே இருந்தது தான் ! ஆனால் மாதாமாதம் புஷ்டியான Plus Size கூரியர்களை சமீப ஆண்டுகளாய்ப் பார்த்துப், படித்துப், பழகிப் போனவர்களுக்கு திடீரென டயட்டில் இருந்து ‘சிக்‘கென்று ஆஜராகக் கூடிய Size Zero கூரியர்கள் ரசிக்கவே ரசிக்காது என்பதால் அதை rule out செய்து விட்டேன் !

அதே போல 36-ஐ இன்னும் ஜாஸ்தியாக்கும் சபலமும் எட்டிப் பார்க்காதில்லை தான் ! ஆனால் மாடிக்குப் போய் கிட்டங்கிக்குள் லேசாய் நானே எட்டிப் பார்த்த நொடியில் எனக்குள் எட்டிப் பார்த்த சபலமானது தெறித்தடித்து ஓடி விட்டது ! So status quo @ 36 என்று உறுதி கொண்டேன் !
2017-ஐப் போலவே இம்முறையும் 5 சந்தாப் பிரிவுகள் !

And வழக்கம் போலவே சந்தா A – ACTION & ADVENTURE கதைகளுடனான வரிசை ! இங்கு எனக்கிருந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது – simply becos ஒருவித ஸ்திரத்தன்மை கொண்ட இந்த சந்தாப் பிரிவை இன்னும் கொஞ்சம் dynamic ஆக்கினால் தேவலாமென்றுபட்டது ! அதே லார்கோ ; அதே ஷெல்டன் ; அதே ரிப்போர்ட்டர் ஜானி ; எனும் போது இங்கே ஒரே மாதிரியான template-கள் தொடர்வதாகவே எனக்குள் ஒரு சன்னமான உறுத்தல்!

* லார்கோவின் பயணங்கள் இட்டுச் செல்லும் ஊர்கள் மாறிடலாம்… ஆனால் வான் ஹாம் லார்கோவை மாட்டி விடும் இக்கட்டுகள் கிட்டத்தட்ட அதே பாணியிலேயே இருப்பது வாடிக்கை ! அவற்றைத் தகர்த்தெறிந்து Larg ஜெயம் காண்பதை நிறைய பார்த்து விட்டோம்!

* பணமே ஷெல்டனின் driving force ! இங்குமே தேசங்கள் / கதைக்களங்கள் மாறிடக்கூடும்; ஆனால் கதையோட்டங்களின் பொதுவான pattern அத்தனை மாறிடுவதில்லை!

* ரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை ! குழப்போ குழப்பென்று குழப்பி விட்டு – கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் விடை சொல்லும் template-கள் நமக்கு 1986 முதல் பரிச்சயம் !

So ஒருவித செக்கு மாட்டு routine கொஞ்சமேனும் மாற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடே சந்தா A-வில் கவனம் செலுத்தினேன் ! இந்தப் பகுதியினை நான் எழுதும் நேரம் வரையிலும் லார்கோ புது ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் பாகம் ப்ரெஞ்சிலேயே வெளிவரவில்லை என்பதால் – நமது மறுவருகைக்குப் பின்பாக “An year without Largo” என்பது இதுவே முதல் தடவையாக இருந்திடப் போகிறது !

* ஷெல்டன் தொடரின் இறுதி ஆல்பம் (at least for now) மாத்திரமே எஞ்சி நிற்பதால் பட்டியலில் நான் முதலில் அவர் பெயரைத் தான் குறித்து வைத்தேன் ! So நரைமுடி ரோமியோ தான் 2019-ன் தேர்வுகளுள் புகுந்த முதல் வரவு !

* ரிப்போர்ட்டர் ஜானியின் இந்த பழகிப் போன பாணி படைப்பாளிகளுக்கே போரடித்துப் போச்சோ – என்னவோ, “ரிப்போர்ட்டர் ஜானியின் புதிய புலனாய்வுகள்” என்றதொரு வரிசையைத் துவங்கி இதுவரையிலும் 3 ஆல்பங்களை மிதமான வெற்றியோடு வெளியிட்டுள்ளனர் ! இதன் ஆல்பம் # 2 பற்றி நண்பர் (பிரான்ஸ்) ராட்ஜா ஏற்கனவே இங்கே சிலாகித்திருந்தது கூட நினைவிருக்கலாம் ! So ஜானியின் புது பாணிக்கு நாமுமே இம்முறை தாவிப் பார்க்கலாமே என்ற சிந்தனையோடு அதனையே இரண்டாவது தேர்வாக்கினேன் ! ஜானி 2.0 !! 

* சமீபமாய் அறிமுகமாகி, அழகான சித்திரங்களோடும், தெளிவான கதைகளோடும் நம்மை லயிக்கச் செய்துள்ள ட்ரெண்ட் எனது அடுத்த தேர்வாக அமைந்தார் ! நடப்பாண்டைப் போலவே 2019-லும் இவருக்கு 2 நார்மல் இதழ்கள் என்று தீர்மானித்தேன் – 3 காரணங்களின் பொருட்டு! Reason # 1 : ஒவ்வொரு கதையுமே அதனுள்ளேயே முடிவுறும் ரகங்களாயிருப்பினும் – ஒரு மெலிதான நூலிழை அடுத்தடுத்த ஆல்பங்களைப் பிணைத்து நிற்கின்றது - ஆல்பம் # 3 & 4-ல்! So அவற்றை அடுத்தடுத்த மாதங்களில் வெளியிடும் வகையில் திட்டமிட்டால் தேவலாமென்று நினைத்தேன் ! Reason # 2 : ட்ரெண்ட் தொடரின் முழுமையிலுமே மொத்தம் எட்டே ஆல்பங்கள் தான் ! So ஜவ்வாய் அவற்றை நீட்டிக்காது – ஆண்டுக்கு 2 என்ற வேகத்தில் நடத்திச் சென்றால், ‘நறுக்‘கென்று தொடரை நிறைவு செய்த திருப்தி சாத்தியம் அல்லவா ?! Reason # 3: காத்திருக்கும் 2 கதைகளுமே (ஆல்பம் # 3 & 4 in the series) செம அட்டகாசமாய் உள்ளன ! 

* சத்தமேயின்றி என் பிடரியோடு ஒரு பிஸ்டல் அழுத்தும் உணர்வு ஏற்பட்ட நொடியில் புரிந்தது! – மிரட்டலாய் நிற்பது வேறு யாருமல்ல – ட்யுராங்கோ தானென்று ! 2 ஆண்டுகளாய் – தனது அலட்டலிலா அதிரடிகளோடு நமது அட்டவணைகளில் ஒரு fixture ஆகிப் போயிருக்கும் இந்த அதிரடி ஆட்டக்காரர் இம்முறையும் ஒரு முப்பாக தொகுப்போடு ஆஜராகிறார் ! “வதம் செய்ய விரும்பு” – கோடை மலராய் 2019-ல் களம் காணவுள்ள ட்யுராங்கோவின் hardcover ஆல்பம்!

* சமீப ஆண்டுகளில் இவருமே நமக்கு “Mr. அவசியத் தேவை” என்றாகியிருக்கிறார் என்பதால், இன்னமுமொரு சுலபத் தேர்வின் சொகுசு சாத்தியமானது – தோர்கலின் பெயரைச் சொல்லி !! நடப்பாண்டின் முதல் இதழான “கடவுளரின் தேசம்” 4 பாகங்கள் கொண்டதொரு நெடிய கதை என்பதால் அதனை ஒற்றை இதழாய், ஒரே தொகுப்பாக்கிட வேண்டிய அவசியமிருந்தது ! ஆனால் தற்சமயம் நம் முன்னே காத்திருப்பவை தொடரின் one shots ! இருப்பினும், 40 ஆல்பங்கள் கொண்ட நெடும் தொடரை சுவாரஸ்யம் குன்றிடாது முன்னெடுத்துச் செல்ல- கொஞ்சமேனும் கூடுதல் slots அவசியமே என்று பட்டதால் - மறுக்கா ஒரு பெரிய ஆல்பம் – 3 one-shots இணைந்து ஒரே புக்காக வரவுள்ளது ! ஜனவரியில் - முத்து காமிக்சின் ஆண்டுமலராகவும் வரவுள்ள இதழிது ! 

* தொடர்வது ஒரு டபுள் ஆல்பம் – இம்முறை லேசான surprise தரக்கூடிய தேர்வோடு ! கிராபிக் நாவல் சந்தாவில் அறிமுகமாகி, தனது அசாத்தியக் கதை வலிமையால் நம்மை மிரட்டோ மிரட்டென்று மிரட்டிய அண்டர்டேக்கர் இம்முறை ரெகுலர் சந்தாவுக்கே தாவுகிறார் ! இந்தத் தொடரில் ஆல்பம் # 3 & 4 இணைந்து ஒரே இதழாக வரவுள்ளது ! Gory… gruesome…. என்று சொல்லும் விதமாய் இந்த ஆல்பங்களில் ஏதுமில்லை என்பதால் ரெகுலர் வரிசையிலேயே இவரை வரவேற்பது ஓ.கே.வென்று பட்டது ! So The Undertaker adds to the Action scene...!

* “லார்கோ” எனும் established ஆட்டக்காரர் அணியில் இல்லை எனும் போது – அவரிடத்தில் ஒரு seasoned புதுவரவை நுழைக்க எண்ணினேன் ! எனது முதல் சாய்ஸ் துப்பறியும் நாயகரோ / ஆக்ஷன் ஹீரோவோ தான்! ஆனால் for some reason, தரமான டிடெக்டிவ்களைக் கண்ணால் பார்ப்பது – டால்டன்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பதை விடவும் சிரமமாகி வருவதால் பெரியதொரு வெற்றியில்லை என் தேடலுக்கு ! சைக்கிளில் சுற்றி வரும் கண்ணாடிக்கார டிடெக்டிவ் ஜெரோமை பரிசீலித்தேன் ; ஆனால் அவரது பாணி நமக்கு ரசிக்குமென்று தைரியமாய் சொல்லத் தெரியவில்லை !முன்னர் விளம்பரப்படுத்திய ஜான் டைனமைட்டை மறுக்கா நம் ரேடாருக்குக் கொணர முயற்சித்தேன் ! ஆனால் அங்கோ தொடரை நீட்டிக்கப் போவதில்லை என கதாசிரியர் முடிவு செய்த கையோடு – ஏற்கனவே வெளியாகியுள்ள 2 கதைகளுக்குமே தற்போதைக்கு உரிமைகளை விற்பனை செய்திட வேண்டாமென சொல்லி வைத்திருக்கிறாராம் author ! ரிப் கிர்ப்பி… காரிகன்… ஜார்ஜ் என்று நீங்கள் முன்மொழிய நினைப்பதையும் நான் மறக்கவில்லை தான்! ஆனால் அவற்றை இது போன்ற சிற்சிறு ஒற்றை இதழ்களாய் வெளியிடும் சாத்தியங்கள் பூஜ்யமாகி விட்டன – அவற்றின் உரிமைகளை சந்தைப்படுத்தும் ஏஜென்சியின் தீர்மானத்தால் ! எதுவாகயிருப்பினும் ஒரு குறைந்தபட்சத் தொகைக்கு உத்தரவாதம் தந்தாலொழிய சின்ன விலைகளுக்கான, சிங்கிள் இதழ்களாய் வெளியிட அனுமதிப்பதில் இனிமேற்கொண்டு ஆர்வம் லேது என்று சொல்லி விட்டார்கள் ! So அமெரிக்காவில் வெளிவருவது போல “The Best of Rip Kirby”; The Best of Corrigan என்று உசத்தியான தயாரிப்புத் தரங்களோடு ; அவர்கள் எதிர்பார்த்திடும் உசத்தியான விலைகளில், ஆண்டுக்கு மூன்றோ – நான்கோ திட்டமிட்டால் மாத்திரமே அந்த நாயகர்கள் பக்கமாய் இனி நாம் ஒதுங்கிட முடியும் ! So இங்கும் அங்கும் சுற்றித் திரிந்த பின்னே – இருக்கவே இருக்கிறதே அந்த வன்மேற்கின் களமென்று திரும்பினேன் – நமக்கிப்போது தாய்வீடு மாதிரியாகிப் போய்விட்டுள்ள அந்த கௌ-பாய் உலகிற்கு! பழகிப் போன அந்தக் களத்தில் – சற்றே புதுமையானதொரு உலகத்தை ரசிக்க முயற்சிப்போமே என்பதே எனது தேடலின் objective ஆக இருந்தது ! 

அப்போது தான் Jonathan Cartland பற்றிய ஞாபகம் வந்தது – நண்பர் சௌந்தரின் புண்ணியத்தில் ! 2014-ல் ALL NEW SPECIAL -ல் இவர் அறிமுகமாக வேண்டியவர், விளம்பரத்திலெல்லாம் இடம் பிடித்திருந்தார் ! ஆனால் இறுதி நிமிடத்தில் கமான்சே better தேர்வென்று எனக்குத் தோன்றிட, அந்த மனுஷன் குறுக்கே புகுந்துவிட்டிருந்தார் ! So better late than never என்ற கதையாக – ஜானதன் கார்ட்லேண்டுக் சிகப்புக் கம்பளம் விரித்தேன் ! இவரொரு Wild West நாயகரே தவிர, மாமூலான கௌ-பாயல்ல ! பொறி வைத்து விலங்குகளைப் பிடித்து விற்கும் trapper ! பனி படர்ந்த மலைப்பிராந்தியங்களே இவரது ஜாகை ! செவ்விந்தியப் பழங்குடியினரைப் பரிவோடு பார்க்கும் வெள்ளைக்காரர் ! Again – வெறும் பத்தே கதைகள் கொண்ட தொடரிது என்பதால் என் கொள்ளுப் பேரன் காலம் வரைக்கும் நீண்டிடக் கூடிய தொடராக இது இராது ! ஜானதன் கார்ட்லேண்ட் – 2 கதைகள் கொண்டதொரு டபுள் ஆல்பத்தோடு அறிமுகம் காண்கிறார் 2019-ல் ! And நமது லயனின் இதழ் # 350 ஆக இருந்திடத் போவதும் இவரது சாகஸமே ! பக்கத்துக்கு ஆறோ / எட்டோ bold ஆன சித்திரங்கள் மட்டுமே என்பதால் - அவற்றை compact ஆன Tex சைசில் வண்ணத்தில் ரசித்திடவுள்ளோம் ! புதுத் தொடர் என்பதால் - ஆரம்பம் முதலே இதனை இந்த Compact சைசில் பயணிக்கச் செய்வதெனத் தீர்மானித்துள்ளேன் !  

இது வரையிலுமான 8 இதழ்களின் தேர்வுகளும் பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்திடாது கரை சேர்ந்து விட்டிருக்க, எஞ்சியிருக்கும் ஸ்லாட்கள் எத்தனை? என்ற கேள்வி எழுந்தது ! 2018 நடப்பாண்டில் ஒவ்வொரு ஜானருக்கும் 9 இதழ்கள் வீதம் மொத்தம் 36 என்பதே திட்டமிடல் ! ஆனால் - 2019-க்கென நாம் திட்டமிட்டிருப்பதோ 5 சந்தா ரகங்கள் எனும் போது arithmetics-ல் கொஞ்சம் மாற்றம் கண்டிட வேண்டுமென்று புரிந்தது ! ஆனால் ஏகப்பட்ட நாயகர்கள் கொண்ட சந்தா A-வில் எண்ணிக்கையினில் வெட்டு ஏதும் சுகப்படாது என்று தெரிந்ததால் - as usual இங்கே 9 இதழ்கள் என்று டிக் அடித்தேன் !

அதன் நீட்சியாய் இதழ் # 9 ஆக நான் தேர்வு செய்தது ஒரு suspense த்ரில்லரை ! சமீபமாய் வெளியாகிய இந்த ஆல்பத்தின் கதாசிரியர் ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநரே ! இரு பாகங்கள் கொண்ட இந்த த்ரில்லர் – புது யுகத்தின் அத்தனை அடையாளங்களையும் தாங்கி நிற்கும் ஒரு mystery whodunit ! ஆளரமிலா தீவில் ஒதுங்கிடும் நண்பர் குழுவின் மத்தியில் ஒரு கொலையாளியும் இருக்க – மரணம் அங்கே சத்தமில்லாது முகாமிடுகிறது ! யாரந்தக் கொலையாளி ? ; தொடர்ச்சியாய் அரங்கேறும் மரண தாண்டவத்தின் பின்னணி என்ன ? பதில் சொல்லவுள்ள taut ஆன இந்த த்ரில்லரே – final album of சந்தா A ! நீரில்லை....நிலமில்லை...!
So – பஸ்ஸைப் பிடித்துள்ள நாயகர்களின் பட்டியல் பின்வருமாறு!

* வேய்ன் ஷெல்டன்

* ரிப்போர்ட்டர் ஜானி

* ட்ரெண்ட்

* தி அண்டர்டேக்கர்

* தோர்கல்

* ஜானதன் கார்ட்லேண்ட்

* ட்யுராங்கோ

கல்தா கண்டுள்ள ஒரே நாயகி – மதிமுக Lady S ! அறிமுக ஆல்பத்தைத் தாண்டி, தொடர்ந்த 2 இதழ்களிலுமே இவர் உங்களது அபிமானங்களை ஈட்டிடத் தவறி விட்டிருப்பது கண்கூடு ! எனக்கோ இது “Still an o.k series” என்றே தோன்றினாலும் – உங்களது பரவலான அபிப்பிராயங்கள் நெகடிவ்வாக இருப்பதால் வேறு வழியில்லை – தாண்டிச் செல்வதைத் தவிர்த்து ! இதுவொரு நிரந்தர break ஆக இருந்திடுமா ? அல்லது சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாய் ஷானியாவின் மறுவருகைக்கும் காலம் கனியுமா ? பதில் உங்களிடமே folks !

Thus ends சந்தா: A !

இவருக்கு இத்தனை ஏன்? அவருக்கு இத்தனை மட்டும் ஏன் ? வேதாளர் இல்லியா ? ரிப் கிர்பி இல்லியா ? XYZ இல்லியா ?” என்ற ரீதியிலான கேள்விகள் இருந்திடுமென்பது உறுதியே ! ஆனால் இருப்பதே ஒன்பதே ஸ்லாட்கள் எனும் போது  எனது தேர்வுகளின் பின்னணிகளையும், தேர்வின்மைகளின் லாஜிக்களையும் புரிந்திட கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டால் மகிழ்வேன் ! ஆசையிருக்கு இன்னும் ஒரு நூறு நாயகர்களைக் கண்ணில் காட்ட ; ஆனால் பையிலுள்ள பணமும், நமக்குள்ள வட்டத்தின் விஸ்தீரணமும், போடும் வேலிகள் முரட்டுத்தனமானவைகள் அல்லவா ? 

* Moving on to சந்தா B ! Best of Bonelli & More…!

இங்கே எனது ஒரே கேள்வி : HOW MUCH IS TOO MUCH FOR TEX ? என்பது மாத்திரமே ! விற்பனை நம்பர்களை மட்டுமே ஒரு வழிகாட்டியாக்கிக் கொண்டு நான் செயல்படுவதாயின் – “ஆங்… 12 டெக்ஸ் கதைகள்பா இந்த சந்தாவில் ; பஞ்சாயத்து முடிஞ்சது !!” என்றபடிக்கே, சொம்பையும், ஜமுக்காளத்தையும் எடுத்துக் கொண்டு  நடையைக் கட்டியிருப்பேன் ! ஆனால் ஓவர் exposure உடம்புக்கு ஆகாது என்பதோடு – மற்ற நாயகர்களையும் பேலன்ஸ் செய்திடும் தேவை உண்டென்பதால் அடக்கி வாசிக்க வேண்டி வருகிறது ! So இங்கே எனது தேர்வுப் படலமானது இவ்விதமிருக்கும்:

* TEX – Single + Double + Bigger Doubles என Black & White-ல்   - 6

* மர்ம மனிதன் மார்டின் – Black & White-ல்    -    1

* வில்லியம் வான்சின் ரிங்கோ - Black & White-ல் - 1

அப்புறம்..ஆங்… அஹ்ஹாங்… அது வந்து… சித்தே பொறுத்து சந்தா B -ன் 9-வது இதழ் பற்றிச் சொல்கிறேனே ?

- TEX-ன் சாகசக் கடலினுள் இங்கி -பிங்கி -பாங்க்கி போட்டுப் பார்த்து, கதைகளைத் தேர்வு செய்வது மட்டுமே பணி என்பதால் no problems in selection !

- மர்ம மனிதன் மார்டினின் slot பற்றி யாருக்கும் எந்த வருத்தமும் இராதென்றே நினைக்கிறேன் ! ஆட்டோமேடிக் தேர்வல்லவா மனுஷன் ?

- மறைந்த ஓவியர் வில்லியம் வான்சிற்கு நமது tribute ஆக 2019-ல் ஏதேனுமொரு இதழினை அமைத்திடலாமென கொஞ்ச காலம் முன்பாய் நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம் ! வான்ஸின் சித்திரங்களை ரசிக்க b&w தான் பெஸ்ட் எனும் போது – அவரது ரிங்கோ மினி தொடரின் முதல் ஆல்பத்தை நாம் black & white-ல் வெளியிடவுள்ளோம் ! மொத்தமே 2 இதழ்கள் கொண்ட மினி-தொடரிது !

* ஆங்… அப்புறம் சந்தா B –ன் இதழ் நம்பர் 9 பற்றி....!!

சமீபமாய் நமது பதிவுப் பக்கத்தின் 500-வது post சார்ந்த ஸ்பெஷல் வெளியீட்டு option-களுள் - கென்யா ; அமெரிக்கா ; அப்புறமாய் இத்தாலி என 3 சாய்ஸ்கள் தந்திருந்தது அத்தனை சுலபத்தில் மறந்திருக்காது ! முதலிரண்டு தொகுப்புகள் ஜம்போவிலும் ; பிரத்யேக முன்பதிவுத் திட்டமிடலிலும் இடம் பிடித்திருக்க – இந்த மூன்றாவது அணி மட்டும் ‘அம்போ‘வென அல்லாடிக் கிடந்தல்லவா? அதற்கென்றும் ஆசையாய் (நல்ல) வோட்டுப் போட்ட நம்மவர்களை அத்தனை சுலபமாய் மறந்திடலாமா ? So - ஐவர் அடங்கிய போனெல்லியின் படைப்புகள் தாங்கிய அந்த இதழே 2019-ன் தீபாவளி மலராக வரவுள்ளது ! 
* இந்த ஐவருமே, தத்தம் பணிகளிலும் இந்த இதழில் டிடெக்டிவ் அவதாரில் அதகளம் செய்யவிருப்பதால் “The டிடெக்டிவ் ஸ்பெஷல்” என்ற நாமகரணத்துடன் இந்த இதழ் அன்போடு அழைக்கப்படுமாக !

* Without much ado – இந்த இதழின் நாயகர்களின் பட்டியல் இதோ:

The Detective of the Impossible : மர்ம மனிதன் மார்டின்

The Detective of the Nightmares : டைலன் டாக்

Criminologist                  : ஜுலியா

NYPD Detective               : C.I.D. ராபின்

Texas Rangers                  : டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன்

* போனெல்லியின் ஆதர்ஷப் புத்திர / புத்திரிகளை ஒன்றிணைத்திருப்பதில் சில புருவங்கள் உயரக் கூடும் என்பது புரிகிறது! குறிப்பாகப் பென்சில் இடையழகி ஜுலியா & டைலன் டாக்கின் தேர்வுகளில் ! But அவற்றிற்குத் தெளிவான காரணங்கள் உள்ளன folks!

* நம் மத்தியில் இது வரையிலும் மூன்றே வாய்ப்புகளைப் பெற்றிருந்த ஜுலியா – அவற்றுள் இரண்டில் decent ஆக ஸ்கோர் செய்திருந்தாலும், சொல்லிக் கொள்ளும் பாணியில் ஆக்ஷனில் இறங்கவில்லையென்ற மனத்தாங்கல் பரவலாக உண்டு என்பது புரிகிறது ! யதார்த்தங்களை ஒட்டியே பயணிக்க விரும்பும் ஒரு தொடரில் மிகைப்படுத்தல்களை எதிர்பார்த்தது தான் நமது பிழையோ ?! தவிர, நம் மத்தியில் தேர்ந்த டிடெக்டிவ்கள் என்று சொல்லிக் கொள்ளும் விதமான ஹீரோக்களோ / ஹீரோயின்களோ ஜாஸ்தி இல்லை எனும் போது – இந்த 250+ கதைகளுடனான தொடரை கடாசிடுவதில் நிறைய தயக்கம் என்னுள் ! And இம்முறை ஒரு அட்டகாசமான கதைக்களத்துடனான ஆல்பம் சிக்கியிருப்பதால் – இது அவரது மறுவருகையின் துவக்கப் புள்ளியாக அமைந்திடுமென்று gut feeling சொல்கிறது ! இந்த ஒற்றைத் தேர்வை என் பொருட்டு ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன் guys!

* டைலன் டாக்கைப் பொறுத்த வரையிலும், டெக்ஸ் வில்லருக்கே விற்பனையில் சரியான சவால் தந்த நாயகர் இவர் என்பதை நாமறிவோம் ! ஆனால் நாமறியாத தகவல் என்னவெனில் சமீப காலங்களில் வெளியாகி வரும் டை.டா. கதைகள் நாம் பார்த்துப் பழக்கப்பட்டுள்ள துவக்க ஆல்பங்களிலிருந்து wholesale மாற்றங்களோடு செம ஸ்டைலிஷாக வெளிவந்து கொண்டுள்ளன என்பதை ! 2019-ன் கதைப் பரிசீலனைகளின் ஒரு பகுதியாக ஒரு லோடு புக்குகளை வரவழைத்ததன் பலனாக இந்த சமாச்சாரம் தெரிய வந்த மறுகணமே தீர்மானித்தேன் – இது ஒதுக்கக்கூடியதொரு தொடரல்ல என்று! நீங்கள் இந்த ஸ்பெஷல் இதழில் சந்தித்திடவுள்ளது ஒரு டைலன் டாக் 2.0!! And – மிரட்டலான black & white-ல்!

* மார்டின் & C.I.D.ராபின் சமாச்சாரங்களில் எந்தவிதக் கேள்விக்குறிகளும் இராதென்பதால் அந்த இறுதித் தேர்வுப் பக்கமாய்ப் போகலாமா ?

* "டெக்ஸ் வில்லர் என்றைக்கு டிடெக்டிவ் ஆனார் அப்பு? சொல்லவேயில்லே?!” என்று குறுந்தகவல்கள் வாட்சப் & FB வட்டங்களில் ஸ்மைலிக்களோடு சுற்றி வரப் போவது புரிகிறது ! ஆனால் இந்தக் கதையைப் படித்தான பின்னே – எனது தேர்வின் பின்னணி புரியாது போகாது guys! Trust me on that !!

* So சில ஜனரஞ்சகத் தேர்வுகள் + சில “எதிர்நீச்சல் தேர்வுகள்” என்ற கூட்டணியோடு இந்த ஸ்பெஷல் இதழ் அடுத்த தீபாவளியை அதிரடியாக்கிடும் ! ஹார்ட்கவர்; வழக்கமான ஜிகினா வேலைகள் என்று எதற்கும் பஞ்சமிராது! சந்தோஷமா இத்தாலி அணி ?

Thus ends சந்தா B 

Now On to சந்தா: C

கார்ட்டூன் சந்தாவே என் மனதுக்கு நெருக்கமானது என்பதை கூரை மேலேறி நின்று எத்தனையோ தடவைகள் நான் தம்பட்டம் அடித்துள்ளேன் தானே ? So இந்தத் தேர்வுகளுள் புகுந்திடும் தருணத்தில் எனக்குள்ளே ஒரு ஜிலீர் feeling! ஆனால் – இம்முறை கல்தாக்களின் பெரும்பான்மையே கார்ட்டூன் சந்தாவில் தான் எனும் போது மனசு கனக்கிறது ! இம்முறை தேர்வுகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாய் கல்தாக்களை லிஸ்ட் செய்கிறேன் வருத்தத்தோடு!

* நீலப் பொடியர்கள் SMURFS ! நிறைய தொடர்களைப் பரிசீலித்துள்ளோம்; கழற்றியும் விட்டுள்ளோம் ! ஆனால் அவற்றுள் எதையுமே ஓரம்கட்டும் தருணத்தில் இந்தளவுக்குச் சங்கடப்பட்டதில்லை ! 3+ ஆண்டுகள் ; 8 முழு வண்ண ஆல்பங்கள் - என்பது more than sufficient grounds எனும் போது – அதன் முடிவிலும் உங்களது 100% அபிமானங்களை சேகரிக்க நமது நீலப் பொடியர்களுக்கு சாத்தியப்படவில்லை ! காரணங்கள் எதுவாகயிருப்பினும் – இதனை நமது ஒட்டுமொத்த ரசனைகளின் தோல்வியாகவே நான் பார்த்திடுகிறேன்! “பொடி பாஷை சகிக்கலை; ரொம்ப சின்னப்புள்ளைத்தனமாக உள்ளது” போன்ற காரணங்கள் முன்வைக்கப்படலாம் தான் ; ஆனால் end of the day – அந்த வான் நீல நிச்சலன உலகோடு ஐக்கியமாகிட சாத்தியப்படாது போனது நிச்சயம் நமது இழப்பே ! Adieu boys in blue…! I will miss you !

* சுட்டிப் பயல் பென்னி ! மேலுள்ள வரிகளை மறுக்கா இங்கே கட் & பேஸ்ட் ப்ளீஸ் ! ஓவராய் சிறுபிள்ளைகள் ரகத்திலுள்ளது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டே இந்த அரை நிஜார் அழகனிடமும் ! Phew!!

 * ரின் டின் கேன் !!!! இங்கேயோ கல்தாவின் காரணம் இந்த நாலுகால் ஞானசூன்யத்தின் கதைகளின் வலுவின்மையே என்பேன் ! ரசிக்கவல்ல பாத்திரமே ; ஆனாலும் கொஞ்சமாச்சும் வண்டியை ஒட்டிட, ஓரளவுக்கேனும் எடுபடக்கூடிய கதையும் வேண்டாமா ?

* மதியில்லா மந்திரி ! சின்னச் சின்ன கதைளெல்லாமே filler pages-க்கு மட்டுமே சுகப்படுமென்ற நமது mindset தான் காரணமா ? அல்லது இந்தக் கதைகளின் மையம் துளியும் மாற்றமின்றித் தொடர்வதால் எழுந்துள்ள அயர்ச்சியா? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் மதியிலா மந்திரி கொஞ்ச காலமாகவே danger zone-ல் இருந்து வருவது தான் யதார்த்தம் ! And இப்போது ஒரு ஓய்வை நாடிச் செல்லும் கட்டாயம் எழுந்துள்ளது !

நம் இல்லத்துக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல வாகான அத்தனை கதைவரிசைகளுக்கும் இம்முறை ஒருங்கே கல்தா என்பது புரிகிறது ; உறுத்துகிறது ; வருத்துகிறது !! ஆனால் - மீசையும், கிருதாவும் வைத்துள்ள சில பல ஆறடி "குட்டீஸ்கள்" மனம் குளிர்ந்தாலன்றி, வண்டிகள் ஓடாது என்பதே யதார்த்தம் எனும் போது இந்த வெட்டுக்களை கனத்த மனதோடு செய்திடுகிறேன் ! Trust me folks - நீங்களும் என் போலவே ஒரு கார்ட்டூன் காதலராக இருக்கும் பட்சத்தில் எத்தனை சங்கடப்படுவீர்கள் என்பது எனக்குப் புரியாதில்லை !! ஆனால் சூழ்நிலைகளை மதிக்க வேண்டிய அவசியம் என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டுள்ளது !

ஆக 9 இதழ்களுடன் 2018-ல் வலம் வந்திடும் சந்தா C-ல் 4 தொடர்களின் கல்தாவானது அதன் ஆற்றலை நிறையவே மட்டுப்படுத்தியுள்ளது! பொதுவாகவே காமிக்ஸ் என்றால் ஆக்ஷன் சார்ந்த கதைகள் மாத்திரமே ரசித்திடும் என்பதான mindset நம்மில் ஆழமாய் வேரூன்றியிருக்க, கடந்த 3 வருடங்களது dedicated கார்ட்டூன் வழித்தடத்தால் கூட அதனில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திட முடிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டியுள்ளது ! 'லக்கி லூக் ஓ.கே… சிக் பில் ஓ.கே….' என்பதைத் தாண்டி இதர சிரிப்பு கோஷ்டிகளின் மீதான judgements reserved என்பதே யதார்த்தம் எனும் போது – அதனை சங்கடத்தோடே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி வருகிறது!புத்தக விழா sales நம்பர்கள் கார்ட்டூன்களுக்கு உரக்க ‘ஜே‘ போடுவதை மனதில் இருத்திப் பார்க்கும் போது – கார்ட்டூன்களின் றெக்கைகளைக் கத்தரிக்க மனம் ஒப்பாது தான் ! ஆனால் சந்தாதாரர்கள் எனும் மதில் சுவரின் மீதே இதர சித்திரங்களை நாம் வரைகிறோம் எனும் போது – அந்த மதிலுக்குச் சேதமோ, அயர்ச்சியோ நேர்ந்திடக் கூடாதென்பதே எனக்கு முதல் priority ஆகத் தோன்றுகிறது ! நமது தீவிர அபிமானிகளுக்குமே நீலப் பொடியர்களை, பென்னியை, லியனார்டோ தாத்தாவை ; ரின் டின் கேனை ரசிக்க முடியவில்லை என்று குரல் கேட்கும் போது – அதனை உதாசீனப்படுத்த முடியமாட்டேன்கிறது ! “எது போட்டாலும் வாங்குவார்கள்!” என்று அவர்களை taken for granted – ஆகக் கருதுவது மரியாதையாகாதே ! So கனத்த இதயத்தோடு – மேற்படி quartet-க்கு இதயத்தில் மட்டுமே இடம் தருகிறேன் ! கார்ட்டூன் காதலர்களே : நானுமே நொந்து தான் போயிருக்கிறேன் இந்தத் தருணத்தில் ; So உங்களது வருத்தங்களில் நியாயம் இருப்பினும் – மறுதரப்பின் கண்ணோட்டத்துக்கும் மதிப்பளிக்க வேண்டிய எனது கட்டாயத்துக்குப் புரிதலைக் கோருகிறேன் ! ஆற்றமாட்டாமையில் கைகளைப் பிசைவதைத் தாண்டி வேறென்ன செய்வதென்று தெரியாத நிலை எனக்கு !

So- அரை டஜன் இதழ்களோடு மட்டும் இம்முறை களமிறங்கும் சந்தா C-ன் கார்ட்டூன் நாயகர்கள் இதோ !

* லக்கி லூக்  (டபுள் ஆல்பம்)

* சிக் பில்

* மேக் & ஜாக் 

* ப்ளூகோட் பட்டாளம்

* கர்னல் க்ளிப்டன்

* லக்கி லூக் (செம புது single album) 
(விற்பனையின் Top 3 இடங்களுள் இடம்பிடிக்கிறார் லக்கி என்பதால் - அவருக்கு 1 ஸ்லாட் அதிகமாய் !! )


Thus concludes the (brief) சந்தா C...!

Moving on… அடுத்து வருவது சந்தா: D !

முதலில் ஒரு ஹெல்மட்டை மாட்டிக் கொண்டு வந்து விடுகிறேன் folks – மும்மூர்த்திக் காதலர்களிடமிருந்து பாயக் காத்திருக்கும் அழுகின முட்டைகளும், கற்களும் என்னைப் பதம் பார்ப்பதிலிருந்து தப்பிக் கொள்ளும் பொருட்டு!கண்கள் சிவக்க, திட்ட வாகான வார்த்தைகளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் இந்த நொடியில் – தொடரும் நிஜங்களைப் புரிந்திட லேசாய் முயற்சித்துப் பாருங்களேன் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் : 

* துவக்க வருடத்தில் ; அதாவது மறுபதிப்புத் தடம் பிரத்யேகமாய் துவங்கிய வருடத்தில் - சந்தாதாரர்களின்  break upA + B + C + D = 100%

நடப்பாண்டு = 65% (அதாவது மறுபதிப்புச் சந்தா வேணாமென்று சொல்லியுள்ள நண்பர்களின் சதவிகிதம் 35%)

* 2017 வரைக்கும் ஒவ்வொரு புத்தக விழாவிலும் மும்மூர்த்திகளின் விற்பனை stats : இரும்புக்கை மாயாவி : 200 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும் ! ஸ்பைடர் : 70 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும் ! But 2018-ல் : 15 பிரதிகள் per title - மாயாவி  & ஸ்பைடர் - Less than 5 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும்..!

* 2017 வரைக்கும் மாதாந்திர ஆன்லைன் விற்பனையில் மும்மூர்த்திகளின் பங்களிப்பு : 25 - 30% ...நடப்பாண்டில் : 5% - 7% !

*2017 வரைக்கும் விற்பனையாளர்களின் ஆர்டர்களுள் மும்மூர்த்திகளின் இதழ்களுக்கான  average ஒதுக்கடு : 25% .......தற்போது : ம்ம்ம்ம்… வேணாமே… ப்ளீஸ் !

இது தான் நிஜம்… யதார்த்தம்… நடப்பு… நடைமுறை…! “கிடைக்காது!” என்றிருந்த வரையிலும் விடாதே – பிடி – என்று விரட்டோ விரட்டென்று விரட்டியதன் மோகம் படிப்படியாய் taper down ஆகி, இன்றைக்கு புளித்த ஏப்பமிடும் நிலையை எட்டியிருக்கிறோம் என்பதை மேற்படிப் புள்ளி விபரங்கள் தெள்ளத் தெளிவாக்குகின்றன ! இன்றைய புத்தக விழாக்களில்  கூட மும்மூர்த்திகளின் இதழ்களை (அதிலும் மாயாவியை !!!!!) சீரியஸாக வாங்கிட ஆளில்லை எனும் போது ரொம்பவே சங்கடமாயுள்ளது !  நம் மீதான அபிமானத்தின் ஒரே காரணத்தால் இன்னமும் தொடர்ந்து மறுபதிப்புச் சந்தா செலுத்தும் நண்பர்களுள் பெரும்பாலானோர் அவற்றை சேகரிப்பிற்கோ, பகடிக்கோ மாத்திரமே பயன்படுத்திடுகின்றனர் என்பதிலும் இரகசியமில்லை ! So இது தான் நிலவரமெனும் போது – தொடர்ந்து மும்மூர்த்திகளோடும், ஸ்பைடரோடும் பயணம் செய்யும் இந்த பாணிக்குக் கொஞ்ச காலமாவது break தருவது தவிர்க்க இயலா நெருக்கடி என்றாகிறது ! ஆனால் அதே சமயம் - மெருகூட்டப்பட்ட / வண்ணத்திலான மறுபதிப்புகள் - Day One முதலாய் நம்மைக் கரை சேர்த்து வருகின்றன ! 2018 -ன் ஏஜெண்ட் விற்பனையில் இன்றுவரைக்கும் முதலிடம் வகிப்பது : "சைத்தான் சாம்ராஜ்யம்" & "பவளச் சிலை மர்மம்" தான் ! அதே போல லக்கி கிளாஸிக்ஸ் ; பிரின்ஸ் ஸ்பெஷல் இதழ்களும் கிட்டத்தட்ட காலி ! 

- "போச்சு! தலையிலே கல்லைப் போட்டுப்புட்டீங்க… மாயாவி இல்லா ; லாரன்ஸ்-டேவிட் இல்லா-ஜானி நீரோ & இஸ்பய்டர் இல்லா தேசத்தை விட்டே வெளியேறுவதைத் தாண்டி எனக்கு வேறு வழி இல்லே…!"

- "போச்சு! மறுக்கா க்ரே-மார்கெட் தலைதூக்கப் போகுது !"

-"போச்சு! பழசில்லாட்டி, புதுசை நான் வாங்கவோ / படிக்கவோ போறதில்லே !"

என்ற ரீதியில் nostalgia குரல்கள் ஒலித்தால் நான் நிச்சயமாய் ஆச்சர்யப்படமாட்டேன் ! ஆனால் யதார்த்தத்தை – வார்னிஷ் பூச்சின்றி விளக்குவது மாத்திரம் தானே நான் செய்யக் கூடிய சமாச்சாரம் ?

There's another angle to this too folks ! கற்பகோடி வருஷங்கள் திடமாய், தாட்டியமாய், ஆற்றலோடு தொடர்ந்திட முடிவதெல்லாம் டெக்ஸ் வில்லருக்கு ஓ.கே.யாக இருக்கக் கூடுமே தவிர்த்து, 51-ன் மத்தியில் நிற்குமொரு சராசரி ஆசாமிக்கல்ல தானே ?! 60 வரை உருப்படியாய்ப் பணியாற்றிட முடிந்தால் அதுவேவொரு பெரும் வரமாக இருந்திடும் என்பதை நான் உணர்ந்தேயுள்ளேன் ! So எஞ்சியுள்ள work years-ன் ஒரு கால்வாசியை – அரைத்த மாவையே புதுசாய் பாக்கெட் போட்டு போணி பண்ணிச் செலவிடுவதில் மனசுக்கு என்ன ரம்யம் இருந்திடப் போகிறது ? ‘நான் ஏழு வயசில் – எட்டு பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே படிச்ச புக் இது !‘ என்று ஒரு 1960-s கதையை இன்றைக்கும் சிலாகிப்பதில் சிலபல பால்யங்களது நினைவுகள் நிழலாடிடலாம் தான் ; ஆனால் அறுபதுக்கு அப்புறமாய் வாழ்வின் அடுத்த கட்டத்திலிருக்கும் தருணத்தில் – நான் கடந்து வந்துள்ள பாதையின் highlights என்று நினைவு கூர்ந்திட, எனக்குமே ஏதாவது உருப்படியான நினைவுகள் வேண்டாமா ? Nostalgia is fine when you are in inertia ; but probably not when you can be in a state of motion !! So மறுபடியும் மும்மூர்த்திகள் et al சார்ந்த தேடல் வீரியமாகிடும் வரையிலாவது, சந்தா D-யினில் சில பல புராதன நாயகர்கள் தற்காலிக ஓய்வினில் இருக்க நேரிடும் ! 

But மறுபதிப்புகளை ஒரேயடியாய் ஓரம்கட்டிவிடவில்லை என்பதற்கு அடையாளமாகவே இம்முறை சந்தா D-ன் இதழ்களைத்   திட்டமிட்டுள்ளேன் ! Here is the list : 

* கேப்டன் பிரின்சின் "மரண வைரங்கள்" - (உங்களது "குத்தோ குத்தோ தேர்வு !!)

* டெக்ஸ் வில்லரின் "வைக்கிங் தீவு மர்மம்" (உங்களின் ஈரோட்டுத் தேர்வு)

* ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தோன்றும் "விற்பனைக்கு ஒரு பேய்" (இந்தத் தொடரின் மொத்தத்திலுமே 10 கதைகளே !! So அவற்றுள் மறுபதிப்புகள் தவிர்க்க இயலா சங்கதிகளே !)

* மாடஸ்டி பிளைசியின் "பழி வாங்கும் புயல்" : இளவரசியின் evergreen அதிரடி !! இன்றைய மிதமான புதுசைகளைக் காட்டிலும், அதகள பழைய adventure தேவலாமென்று நினைத்தேன் ! And நானே முந்திக் கொள்கிறேன் - இதனோடு இணைந்து வந்த அந்த இரட்டை வேட்டையர் கதையையும் இங்கே லிங்க் செய்திட வழி நஹி என்ற தகவலோடு !! So அதன் பொருட்டாக கோரிக்கைகள் வேண்டாமே - ப்ளீஸ் ?

* "இளமையில் கொல் !"  உடைந்த மூக்கார் ; 'மின்னும் மரண' நாயகரான கேப்டன் டைகளின் இளம் வயதிலான சாகஸத் துவக்கம் - முழு வண்ணத்தில் - compact ஆக டெக்ஸ் வில்லர் சைசில் ! இந்தக் கதைவரிசையினை துவக்கத்தில் திட்டமிட்ட போதே ஒருவித பாக்கெட் சைசுக்கே இதனை அமைக்க படைப்பாளிகள் எண்ணியிருந்தனர் ! So மாமூலான பிரான்க்கோ-பெல்ஜிய பாணியில் இல்லாது - பக்கத்துக்கு ஆறே சித்திரங்கள் என்றதொரு அளவீட்டில் பக்க அமைப்பிருக்கும் ! So  அதனையே நாமும் பின்பற்றிடவுள்ளோம் - in a compact size !

* இதழ் # 6 : அந்நாட்களில் black & white-ல் வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் "தலைமுறை எதிரிகலரில் !


மீண்டும் படிக்கும் இதழ்களாகவே இருப்பினும், துளி கூட புராதனம் தென்படா - மெருகூட்டப்பட்ட தரத்திலானவைகளாய் இந்த அரை டஜனுமே இருந்திடுமென்பது எங்களது promise ! So பழசு தான் ; ஆனால் புதுசாய் !!

Thus ends the Planning for சந்தா : D 

 உப்ப்ப்ப்…!! இனி சந்தா : E பக்கமாய் !!

கிராபிக் நாவல்… அல்லது செல்லமாய் “கி.நா.“ ! 2017-ல் அறிமுகம் – தனித் தடத்தில் ! And அந்த ஆண்டிலேயே செம வரவேற்பும், ஆதர்ஷமும் கிட்டியது ! So லாஜிக்படிப் பார்த்திருந்தால் நடப்பாண்டிலும் ‘நச்‘சென்று இடம்பிடித்திருக்க வேண்டும் தான்! ஆனால் “இரத்தப் படலம்” எனும் பீம்பாய்,நமது பட்ஜெட்டின் பெரும்பகுதியை லபக்கிட, கல்தா கிட்டியது இந்த வித்தியாச genre-க்குத் தான் !

2019-ல் அந்தத் தவறைச் செய்வதாகயில்லை !

அதே போல கிராபிக் நாவல்கள் என்றாலே மூச்சுக்கு முன்னூறு தபா மூக்கைச் சிந்தியபடிக்கே,இருட்டுக்குள் அழுது பயணிக்கும் இருண்ட களங்கள் மட்டுமே தான் - என்றவொரு மாயையைத் தொடரச் செய்வதுமாகயில்லை !

எனது பார்வையில் – சராசரியான காமிக்ஸ் தொடர்களில் தென்படுவதை விட ஒரு மடங்கோ, பல மடங்கோ அழுத்தம் ஜாஸ்தியான கதைகளின் சகலமுமே ‘கிராபிக் நாவல்கள்‘ என்ற குடைக்குக் கீழே வரத் தகுதியுடையவைகளே ! So "E for EXOTIC TALES" என்ற பெயருடன் களமிறங்கவிருக்கும் இந்தத் தடத்தின் இதழ்களின் பட்டியல் இதோ :

* பராகுடா : 3 பாக முழுவண்ண ஆல்பமாய் ; நமது 3 மில்லியன் ஹிட் ஸ்பெஷலாகவும் மிளிரக் காத்திருப்பது இந்த long awaited கடற்கொள்ளையர் தொடரின் முதல் சுற்றே ! இதுவரைக்கும் நாம் முயற்சித்தே இராததொரு genre ; மிரட்டலான சித்திர தரம் ; சற்றே முதிர்ந்தோருக்கான கதையோட்டம் என்று இருக்கும் இந்த ஆல்பம் "EXOTIC" என்ற இந்தச் சந்தாப்பிரிவின் அடைமொழிக்கு கச்சிதமாய் நியாயம் செய்யும் !

* பிரளயம் : மீண்டுமொரு 3 பாக முழுவண்ண one-shot கதைக்களம் ! ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணியோடு புனையப்பட்ட பிடரியில் அறையும் ரகத்திலான திகில் ஆல்பம் ! நிச்சயமாய் வயதும், ரசனைகளும் முதிர்ந்தோருக்கு மாத்திரமே ! இதனை போன வருஷமே வாங்கி விட்டோம் - ஆனால் இதனில் தெறிக்கும் சில "அந்த மாதிரி" சமாச்சார sequence-களை எவ்விதம் கையாளப் போகிறோமென்று இன்னமும் திட்டமிட்ட பாடில்லை !! தெய்வமே !! 

* வஞ்சம் மறப்பதில்லை : “அழுகாச்சிகள்” மட்டுமே கிராபிக் நாவல்களல்ல என்று அழுத்தமாய்ச் சொல்ல வருமொரு சித்திர சுனாமி இது! தெறிக்கும் ஆக்ஷன்; சித்திரங்களில் / கலரிங்கில் ஒரு புது உச்சம்; கதை சொல்லும் விதத்தில் மிரட்டலென - "பழிவாங்கும் படலங்களை” ஒரு புதுப்பார்வை பார்த்திட முயற்சிக்கவிருக்கிறோம் இங்கே !

அப்புறமாய் தொடர்வன 3 black & white ஆல்பங்கள் : 

* நித்திரை அறியா நியூயார்க்..!

* முடியா மூடுபனி..!

*  கதை சொல்லும் கானகம்..!               :

ஒரு முடியா இரவு“ ; “என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம் பாணியிலான dark-ஆன அக்மார்க் கிராபிக் நாவல்கள் - black & white–ல் ! வெவ்வேறு காலகட்டங்கள்; வெவ்வேறு பூமிகள்; வெவ்வேறு மனிதர்கள் என்று இந்தக் கதைகள் சித்தரிக்கவிருப்பது வாழ்க்கையின் ஒரு நிழலான பக்கத்தை ! Please don’t miss these!!


ஆக மேற்படி 6 இதழ்களோடு சந்தா : E 2019-ல் தடதடக்கவுள்ளது !

So -

சந்தா A : 9 புக்குகள் - நடப்பாண்டைப் போலவே ! 

சந்தா B : 9 புக்குகள் - நடப்பாண்டைப் போலவே ! 

சந்தா C : 6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

சந்தா D : 6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

சந்தா E :  6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

Total =     36 புக்குகள்

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் 3 பிரதிகள் என்ற எண்ணிக்கையில் சரியாய் 12 மாதங்களைக் கடக்கவுள்ளோம் ! Of course – ஜம்போ காமிக்ஸின் இதழ்கள் இடைச்செருகலாக ஆண்டு முழுக்க இருந்திடும் ; உங்களுக்கு காமிக்ஸ் வறட்சியென்ற உணர்வு தலைதூக்கிடாது இருக்கும் விதமாய் !

சந்தா E–க்கென நான் ஒரு லாரி லோட் கதைகளைப் பரிசீலனை செய்து ; shortlist செய்தும் வைத்துள்ளேன் தான் guys ! ‘ஆனால் ஒற்றை நாளில் உங்கள் ரசனைகளை மாற்றுகிறேன் பேர்வழி‘ என்ற குடாக்குத்தனங்களைச் செய்து பல்பு வாங்கிக் கொள்ள இஷ்டமில்லை என்பதால் – slow & steady-யான பாணியே தேவலாமென்று தீர்மானித்தேன் ! So இன்னும் ஜாஸ்தி emotions-களை இங்கே எதிர்பார்த்திருந்த நண்பர்கள் – பட்ஜெட் மீதான நமது கவனத்துக்கும் உரிய மதிப்பளித்திடக் கோருகிறேன் ! சில பல புதுக் கதவுகளை மெதுவாய், சிரத்தையாய்த் திறக்க முற்படுவோம் நண்பர்களே - இயன்றமட்டிலும் அனைவரையும் கைகோர்த்துக் கொண்டு ! "Niche audience" ; "பிரத்யேக ரசனை" என்பனவெல்லாம் கேட்க உசத்தியாய் தோன்றுகின்றன தான் ; ஆனால் இருக்கும் சொற்ப வட்டத்தினுள் இன்னுமொரு அணி பிரித்தலுக்கு  அவசியமின்றி - "எல்லாப் பயணங்களும், எல்லாரும் ரசிக்கும் விதத்தில்" என்றிருப்பதன் ரம்யமே அலாதியாகிடாதா ?  அப்புறம் வானமே எல்லையாகிடாதா  ?

So thus ends the planning for 2019 !

"அட… இதுக்குத் தான் இவ்ளோ ‘தம்‘ கட்டுனியாக்கும்வே ? இதை குழந்தைப் புள்ளை யூகம் பண்ணியிருக்குமே..?"

 என்றோ…

உப்புமில்லே… புளியுமில்லே. காரமுமில்லே… சாரமுமில்லே‘ என்று ஒவ்வொரு பட்ஜெட்டையும் விமர்சிக்கும் எதிர்கட்சிகளின் முன்னாள் நிதியமைச்சர்கள் போல நீங்கள் உங்களது FB பகிர்வுகளில் / வாட்சப் வட்டங்களில் அலுத்துக் கொண்டாலும் சரி…

"மொந்தை புதுசு… கள்ளு பழசுதாம்லே" என்று தீர்ப்பெழுதினாலும் சரி…

"ஆங்....ஜெஸ் லாங் நஹி ; அலிபாபா இல்லியா ? வேதாளர் க்கு இடம் லேதுவா ? உருப்பட்ட மாதிரி தான் !" என்று அவரவரது பக்கங்களில் தாளித்தாலும் சரி ...

அவற்றின் சகலத்தையும் நிச்சயம் நான் புரிந்து கொள்வேன் guys ! ரசனை சார்ந்த விஷயங்களில், நூற்றுக்கு நூறு சதவிகித uniform ஏற்புகள்  அசாத்தியம் என்பதை இத்தனை கழுதை வயதான பிற்பாடும் நான் புரிந்து கொள்ளாமல் சுற்றி வருவேனா ? So - எனது அறிவுக்கும், ஆற்றலுக்கும், நிதி நிலமைக்கும் இயன்றதொரு combination-ல் இதழ்களை அமைத்திட விழைந்துள்ளேன் என்பதே bottomline.

உங்களின் ஆதர்ஷ நாயக / நாயகியர் யாரேனும் விடுபட்டிருப்பின் அல்லது குறைவான / கூடுதலான இடங்களோடு வலம் வர நேரிட்டிருப்பின் – அவற்றின் பின்னே ரசனை சார்ந்தோ… வணிகம் சார்ந்தோ காரணிகள் இருக்கக்கூடுமென்ற உங்களது புரிதலுக்கு எனது முன்கூட்டிய நன்றிகள் guys ! குறிப்பாய் கார்ட்டூன் பிரியர்கள் & பழமை விரும்பிகளுக்கு எனது commiserations ! எனது கரங்கள் கட்டப்பட்டுள்ள நிலை இரண்டிலுமே ! So சிவகாசியின் திசையில் வீசிட தக்காளிகளையோ ; கூமுட்டைகளையோ தயாராக்கிடும் பட்சத்தில்,  யதார்த்தங்களை மதிக்க அவசியப்படும் எனது இக்கட்டின்பால் கொஞ்சமே கொஞ்சமாய் உங்கள் சிந்தனைக் குதிரைகளை மேய விடுங்களேன் - ப்ளீஸ் ! அதற்கு அப்புறமும் அபிஷேகம் தவிர்க்க இயலா அவசியமென்று பட்டால் - you know where to find me guys !!

Right..! What next...? காத்திருப்பதிலொரு சுகமுண்டு தான்; அதனில் உங்களைத் திளைக்கச் செய்தாகி இதோ – தற்போது விடைகளையும் முன்தந்து விட்டோம் ! இனி பந்து உங்கள் தரப்பில் ! “சந்தாக்கள்” எனும் சுவாச வாயுவை எங்களது காலியான டேங்குகளில் நிரப்பி, கடப்பாரை நீச்சலடித்து வரும் நம்மை ஆழ்கடல் நீச்சலுக்குத் தயார்ப்படுத்திடுங்களேன் – ப்ளீஸ்? Yet another கலக்கலான / கலர்புல்லான காமிக்ஸ் உலகம் தொட்டு விடும் தூரத்தில் தயாராகக் காத்துள்ளதெனும் போது அதன் திறவுகோல், சந்தாதாரர்களான உங்கள் ஒவ்வொருவர் வசமுமே folks! எப்போதும் போல நம்மை உந்தித் தள்ளும் சக்திகளாகிடுங்களேன்- please ?
அப்பாலிக்கா ஒரு கேள்வி-பதில் session-ம் கூட :

1 . TEX வில்லருக்கு ஸ்லாட்கள் குறைச்சலோ ?

ஊஹூம்...! சந்தா B-ல் உள்ளதே மொத்தம் 9 இடங்கள் தான் !

And அந்த ஒன்பது  இதழ்களுள் 7-ல் நம் மஞ்சள்சட்டை மாவீரர் இடம்பிடிக்கிறார் !

அப்புறம் வண்ணத்தில் ஒரு மறுபதிப்பு !

பற்றாக்குறைக்கு 4 Color TEX சிறுகதைகள் !


And அந்த ஜம்போ காமிக்ஸ் சீசன்-2-ன் விளம்பர பக்கத்தையுமே  இன்னொரு தபா பாருங்களேன் ! கைவசமுள்ள சொற்ப இடங்களை பகிர்ந்திட இதற்கு மேலும் வழி நஹி !

2 ."அடுத்த தலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையினைக் கொண்டு போக வேண்டுமெனில் கார்டூன்களே வழி !" என்று வாய் கிழிய பேசிய கையோடு - கார்டூன்களையே காவு கொடுத்தால் எப்படியாம் ?

Doubtless - இதுவொரு பின்செல்லும் நகர்வே !! நிச்சயமாய் இத்தீர்மானம் ஒரு knee jerk ரியாக்ஷனாகவும்  தெரிந்திடலாம் தான் !! ஆனால் நிஜத்தைச் சொல்வதாயின் - லக்கி லூக் ; Smurfs நீங்கலாய் கார்ட்டூன் ஜானரில் தலைதப்பிக்கும் விற்பனை கண்டுள்ளது சமீபத்தைய ஹெர்லக் ஷோம்ஸ் மாத்திரமே  ! சிக் பில் கதைகளில் கூட, நம்மிடமுள்ள கையிருப்பு எண்ணிக்கையை நான் வெளியே ஒப்பித்தால் கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள் ! So கொஞ்சமே கொஞ்சமேனும் கையில் உள்ள ஸ்டாக் குறைந்திடும் வரைக்கும் மேற்கொண்டும் வெளியிட்டு பாரத்தை ஏற்றிக் கொள்ள வேண்டாமே என்பதன் பொருட்டே இந்த cuts !! இது தாற்காலிகமேயன்றி - நிரந்தரமாகாது !

3.  மறுபதிப்புகள் மறுக்கா கோவிந்தா தானா ?   

இல்லாத வரைக்குமான தேடல்கள் - அவை சரளமாய்க் கிடைக்கும் போது தேயத் துவங்குவது இயல்பே ! என்ன - ஆர்வங்களின் இந்தத் தேய்மானம் கொஞ்சம் ரொம்பவே ஜாஸ்தி என்று எனக்குத் தோன்றுகிறது !  புத்தக விழாக்களில் கூட இப்போதெல்லாம் மாயாவியை ஒரு சராசரி இதழாய்ப் பார்த்திடுவது தான் வலிக்கச் செய்கிறது ! At least அவருக்கேனும் அந்த ஈர்ப்பும், தேடலும் திரும்பும் வரையிலுமாவது புராதன b&w மறுபதிப்புகள் on ice !

4. சந்தா E ??? என்ன எதிர்பார்ப்பது இதனில் ?

Dark ஆன கதைகள் மட்டுமே இந்தச் சந்தா வரிசையில் இடம்பிடித்திடுமென்று இருக்கக்கூடியதொரு மனப்பாங்கை மாற்றுவதே முதல் பொறுப்பு ! "அலைக்கடலில் அசுரர்கள்" - முற்றிலும் புதியதொரு திக்கு நம் ரசனைகளின் பயணத்துக்கு ! "வஞ்சம் மறப்பதில்லை" ஒரு பிடரியில் அறையும் ஆக்ஷன் மேளா - மிரட்டும் சித்திரங்களோடு ! "பிரளயம்" ஒருவித horror கலந்த கதை - நிஜ சம்பவமொன்றின் பின்னணியில் ! பாக்கியிருக்கும் 3 black & white கதைகள் அந்த typical கிராபிக் நாவல் பாணியிலிருக்கும் ! So ஒளியும் உண்டு ; இருளுமுண்டு இம்முறை !

5. ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வித விலையில்  இருப்பது ஏனோ அம்பி ?

நாமாய் உருவாக்கும் கதைகளெனில் - ஒரே சீரான செலவினங்கள் இருந்திடும்  ; ஒரே சீரான விலைகளை  நிர்ணயிப்பதிலும்  சிரமமிராது ! அதே போல முக்காலே மூன்று வீசம் இங்கிலாந்தின் Fleetway கதைகளையாய் நாம் வெளியிட்டு வந்த நேரங்களிலும் - பெரியதொரு ஏற்ற இறக்கங்கள் இருந்ததில்லை செலவுகளில் !

ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதத்திலான ராயல்டி கோரிக்கைகளை முன்மொழிவது சகஜமாகி விட்டது ! பௌன்சர் கதைகளுக்கான ராயல்டி ஒரு உச்சமெனில் ; ஹெர்லக் ஷோம்ஸ் இன்னொரு உச்சம் ! டெக்சின் கட்டணங்கள் ஒரு விதமெனில், ட்யுராங்கோவின் ராயல்டி வேறொரு விதம் ! So மிக்க குறுகிய பிரிண்ட்ரன் கொண்டு நாம் செயல்படும் போது, இந்த நிலையான செலவினங்கள் ஒரு மிகப் பெரிய பங்காகிக் போகின்றன ! So அதனைக் கொண்டே விலைகளை நிர்ணயிக்க வேண்டிப் போகிறது & ஒரே சீராய் அமைத்தல் சிரமமாகிடுவதும் இதன் பொருட்டே !

6 . வரும் காலங்களில் காமிக்ஸ் படிக்க விரும்புவோர் 'கோன் பனேகா கிரோர்பதி ?' நிகழ்ச்சியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக முயற்சித்தாக வேண்டுமோ ?

கடந்த 45 நாட்களில் டாலரும், யூரோவும் வாங்கியுள்ள தர்ம அடியைப் பார்க்கும் போது, நானே அந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ ? என்று தான் தோன்றுகிறது ! நமது உள்ளீட்டுச் செலவுகளில் 50 % க்கு மேலானவை அயல்நாட்டு வணிகத்தின் பலன்களே ! ராயல்டியில் துவங்கி ; அங்கே செய்யப்படும் இத்தாலிய மொழிபெயர்ப்பு ; அயல்நாட்டு ஆர்ட் பேப்பர் ; அயல்நாட்டு அச்சு மசிகள் ; அட்டைகள் என்று நம் இதழ்களுள் Made in அயல்நாடு சமாச்சாரங்கள் தான் பெரும்பான்மை ! So அன்னியச் செலாவணியின் மதிப்பு எகிறும் போது நமது செலவுகளும் தெறிக்கின்றன !! உஷைக்கே போன செலவுகள் ஒருநாளும் தரை இறங்கியதாய் சரித்திரம் கிடையாதெனும் போது - இதற்கான ஒரே தீர்வு - நமது பிரிண்ட்-ரன்னை ஜாஸ்தியாக்கிட முயற்சிப்பது மாத்திரமே !

உங்கள் கோணங்களில் இந்தாண்டின் அட்டவணையைப் பார்த்திடும் சமயத்தில் என் சிறு மூளைக்கு எட்டிய சில கேள்விகளுக்கான பதில்களையும் தந்திட முனைந்துள்ளேன் - சில பல க்ரூப்களில் நம்மை சலவை செய்திடப் பயன்படுத்திடும் ஏரியலின் அளவாவது குறையட்டுமே, என்ற நப்பாசையில் ! ஆனாக்கா - "நீ என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும் உனக்கு மண்டகப்படி இல்லாது போகாதுடீ !!" என்ற மைண்ட்வாய்ஸ்கள் ஓரிரு மூலைகளில் ஒலிப்பதும்  கேட்காதில்லை தான்  ! So அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ;  சொற்பமான இந்த விளக்கங்கள் எனது திருப்திக்கோசரம் இன்னொரு பக்கம் !

Before I sign off – சில ரத்தினச் சுருக்கத் தகவல்கள் :

* அயல்நாட்டுத் தபால் கட்டணங்கள் ஏகத்துக்கு உயர்ந்து விட்டுள்ளன ! So வரும் நாட்களில் அயல்நாட்டுச் சந்தாக்கள் நிறையவே உசந்திடும் ! ஆனால் பார்சல்களை நான்கு மாதங்களுக்கொருமுறை அனுப்புவதாயின் - அந்தக் கட்டண விகிதங்கள் சற்றே சகாயமாகின்றன ! வெறும் 3 புக்குகளை மாதந்தோறும் அனுப்பிடும் போதும்  -  குறைந்த பட்ச எடை சார்ந்த கட்டணங்களையே வசூலிக்கிறார்கள் ! ஆனால் அந்தக் குறைந்த பட்ச எடையளவிற்குள் பிடிக்கக்கூடிய புக்குகளை மூன்றல்லது / நான்கு மாதங்களுக்கு ஒருவாட்டி சேர்த்தே அனுப்பிடும் போது மிச்சமாகிறது ! So அயல்நாட்டில் வாழும் நண்பர்களே : the choice is yours !

* ரெகுலர் கலர் இதழ்களில் ரூ.5/- & டெக்ஸ் வில்லர் b&w இதழ்களில் ரூ.10/- விலையேற்றம் செய்யும் நெருக்கடி! ஒரே நேரத்தில் கணிசமாய் ஏற்ற கை உதறுவதால் சின்னதான hikes மட்டுமே ! 2020-ல் இதே வீதத்தில் இன்னொரு ஐந்து ரூபாய் ஏற்ற வேண்டி வரலாம் ! புரிதலுக்கு இப்போதே நன்றிகள்!

* As always – கதைத் தேர்வுகள் / தலைப்புகள் கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டவைகளே !

*  ஆண்டுச் சந்தாவினை 2 தவணைகளில் செலுத்தும் வசதி இம்முறையும் உண்டு !! ஆனால் - இரண்டாம் தவணை மார்ச் 31 -க்கு முன்பாய் செலுத்திடல் அவசியம் ப்ளீஸ் !! "ஏன்..? நான் தான் 6 மாசத்துக்கு பணம் கட்டியிருக்கேன்லே...ஜூன் வரைக்கும் புக் அனுப்பாம - ஏன் ஏப்ரலிலேயே நிறுத்திடறீங்க ?" என்று நம்மவர்களிடம் ஏப்ரல் மல்லுக்கட்டுக்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? கூரியர் கட்டண சலுகைகளை முழு ஆண்டுச் சந்தாக்களில் மட்டுமே அனுபவித்திடலாம் எனும் போது - 2 தவணைகளிலான சந்தாக்கள் புதுப்பிக்கப்படுமென்ற உத்திரவாதம் நமக்கு அவசியமாகிடுகிறது ! நிறையவே இதன் பொருட்டு சங்கடங்களை சந்தித்து விட்டோம் என்பதால் - இந்த சற்றே கறார் பாலிசிக்கு உங்கள் புரிதலைக் கோருகிறோம் ! 

* போன வருட இறுதியிலேயே சந்தாதாரர்களுக்கான லாயல்டி பாஸ்போர்ட் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை தற்போது தயாராகி வருகின்றன – உங்களது நடப்பு பாய்ண்ட்கள் சகிதம் ! நவம்பர் பிரதிகளோடு அவை அனுப்பிடப்படும் ! And உங்களது புள்ளிகளுக்கு ஈடாக நீங்கள் விலைகளின்றிப் பெற்றுக் கொள்ளக் கூடிய சமாச்சாரங்களின் விபரங்களும் அடுத்த வாரப் பதிவினில் !

*   அப்புறம் இன்னொரு சேதியும் guys : நமது முதல் வாசகரான (சிவகாசி) டாக்டர் திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் பிரசன்னாவுமே  நமது தீவிர வாசகர் ! கம்பியூட்டர் துறையில் சாதித்து வரும் இவர் நமக்கென ஒரு அழகான website-ஐ உருவாக்கித் தந்துள்ளார் - ஒற்றை ரூபாய் கூட இதற்கென கட்டணமாய் வாங்கிடாது !! அவருக்கு ஒரு மில்லியன் நன்றிகளையே நமது சன்மானமாய் வழங்கிட நினைக்கிறேன் !! Thank you ever so much பிரசன்னா !! பாருங்களேன் : www.lion-muthucomics.com இங்கேயே இனி ஆன்லைன் கொள்முதல்களும் செய்திடலாம் ! And of course - ஏற்கனவே உள்ள www.lioncomics.in ஆன்லைன் தளமும் செயல்படும் தான் ! புத்தாண்டின் சந்தா லிங்குகளை இரு தளங்களிலும் கொடுத்துள்ளோம் !




*  இன்னமும் ஒரு tech சேதியும்  ! ரொம்ப காலம் முன்பாகவே நமக்கென ஒரு YouTube சேனலைப் பதிவு செய்திருந்தார் நம் ஜூனியர் எடிட்டர் ! But அதனை அதற்குப் பின்பாய் இயக்கிட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ! சமீபமாய் அதற்கென ஒரு பகுதி-நேரத்து பணிப்பெண்ணை அமர்த்தி கொஞ்சம் வெள்ளோட்டங்களை சத்தமின்றி செய்து வந்தோம் ! And so நமது சந்தா கேட்லாக்கை  அங்கேயும் அரங்கேற்றியுள்ளோம் !! பாருங்களேன் : https://youtu.be/LZIsVjPKiko ! Of course - early days for us....சிறுகச் சிறுக இந்த முயற்சிகளை ரம்யமாக்கிட முயற்சிப்போம் ! And வாசகர்கள் நமது இதழ்களை பற்றி ஏதேனும் அலசல்களைச் செய்து video files-களாய் அனுப்பினால், அவற்றையும் நமது சேனலில் பயன்படுத்திட முயற்சிப்போம் folks !!  Wish us luck on this please !!

* அப்புறம் அந்த ALL-IN சந்தா நண்பர்களுக்கு 32 பக்க Color டெக்ஸ் சிறுகதைகள் விலையின்றி வழங்கிடுவது இம்முறையும் தொடர்ந்திடும் - 4 இதழ்களோடு !  
* அப்புறம் சந்தாக்களை 'ஏக் தம்மில்' செய்திடல் தேவலாமென்று எண்ணும் நண்பர்களின் வசதிக்கேற்ப - இதோ ஜம்போ காமிக்சின் சீசன் 2-ன் சந்தா அறிவிப்புமே !! இதற்கான கதைகளின் அறிவிப்பு மார்ச் 2019 -ல் !! "மாப்ளே ....ஒரே போடா போட்டு வசூல் பண்ண நினைச்சுட்டான்டா ஆந்தைக்கண்ணன் !" என்று விழிவிரிக்கக் கூடிய நண்பர்களின் கவனத்துக்கு : இது உங்கள் வசதிகளுக்கானதொரு ஏற்பாடு மாத்திரமே தவிர - we are in no hurry now for ஜம்போ சந்தா !
இதற்கு மேலும் எழுதினால் – இதை டைப்செட் செய்து தரும் நண்பர் குருமூர்த்தி ஜார்கண்ட் பக்கமாய் நடையைக் கட்டி விடுவாரென்பதால் – சுபம் போட்டு விட்டுக் கிளம்புகிறேன் folks - எப்போதும் போல ஆண்டவனின் அருளும், உங்களது அன்பும் வேண்டுமென்ற கரம்கூப்பலுடன் !! Bye all ! See you around ! Let's start the Music !!

And lest I forget....
ஒவ்வொரு ஆண்டும் ஏகமாய் சந்தித்து, ஏதேதோ கணக்கிட்டு அட்டவணைகளை உருவாக்கி முடிக்கும் போது - "ஹா ...பின்னிட்டே அப்பு !" என்று உள்ளுக்குள்ளேயே சிலாகித்து எனக்கு நானே ஒரு சிலை வைத்துக் கொள்ளத் தோன்றிடுவது வாடிக்கை தான் ! ஆனால் ஆண்டின் ஓட்டத்தின் போது தான் நான் விட்டுள்ள ஓட்டைகள் மெது மெதுவாய் கண்ணுக்குத் தென்பட துவங்கிடும் ! அந்த அனுபவப் பாடங்களை மறு ஆண்டுக்கு முன்னெடுத்துச் சென்று, அதே தவறுகள் திரும்பவும் தலைகாட்ட அனுமதிக்கலாகாது என்று முயற்சிப்பதுண்டு ! அதே பாணியில் இம்முறையும் இயன்றமட்டிலும் உழைத்துள்ளோம் folks - இந்த அட்டவணையினையும், அதனைத் தொடரவிருக்கும் இதழ்களையும் கொண்டு, உங்கள் முகங்களில் புன்னகைகளை மலரச் செய்திட !! அதனில் சிறிதேனும் வெற்றி கண்டிருப்போமெனின் - ஆண்டவன் எங்கள் மீது கருணையோடு இருந்திருக்கிறார் என்று யூகித்துக் கொள்வோம் !! சரியோ - தப்போ ; என் ஆற்றலுக்குட்பட்டதைச் செய்து விட்டேனென்ற சன்னமான சந்தோஷத்தோடு புறப்படுகிறேன் guys ! இனி தீர்ப்புகள் நிரந்தர ஜூரிகளான உங்கள் வசம் !  Adieu for now !! God be with us all !!

304 comments:

  1. Replies
    1. தொடர்ந்து பாஷா ஜிடம் ஜஸ்ட் மிஸ்💐💐💐💐

      Delete
    2. நலம் ஜி.. தாங்கள் & குடும்பத்தார் அனைவரும் நலம் தானே??

      Delete
    3. நலம்..நலமறிய ஆவல்...

      Delete
  2. 1ஸ்ட்...!!!

    வணக்கம் சார்...
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...!

    ReplyDelete
  3. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  4. நானும் வந்திட்டேன்..!

    ReplyDelete
  5. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  6. ஆத்தாடி

    எம்மாம் பெரிய மாத்திரை

    டைப்ப எம்புட்டு நேரம் பிடிச்சிருக்குமோ

    சார் உங்களுடைய அர்பணிப்பு மனதிற்கு எங்களது பணிவான _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. சித்தர் அய்யா டைப்புவது டிடிபி அஸிஸ்டென்ட் என போன ஆண்டே அறிவித்து விட்டார்.

      டைப்படித்த உதவியாளருக்கு பாராட்டுகள்.

      Delete
  7. Replies
    1. சார்,

      1. அருமையான கதை/நாயகர் தேர்வுகள். Hat's off to you.

      2. டெக்ஸ் ஒரு triple ஆல்பம் இல்லாதது ஒரு வருத்தம். அதுவும் color ஆல்பம் மிஸ்ஸிங்.
      2a. Tex vs mepisto அடுத்த வருடம் மிகவும் எதிர்பார்த்தேன். முடிந்தால் ஜம்போவில் சேர்த்துவிடவும்.

      Tex never a over dose.

      3. அந்த ஆறு மறுபதிப்புகளையும் தவிர்த்துவிட்டு புது கதைகளை வெளியிட்டிருக்கலாம். In 2020 a big no to reprints in regular subscription. Only new stories please.

      4. கார்ட்டூன் கதைகள், லக்கி + சிக் பில் போதுமானவை.

      5. 2019 இல் ஒரு மெகா இதழாவுது அறிவிதிருக்கலாம்.

      6. 1000 வது இதழ் பற்றிய அறிவிப்பு இல்லாதது பெரிய வருத்தமாக உள்ளது.

      7. தயவுது செய்து 1000 வது இதழை ஒரு டெக்ஸ் vs மெபிஸ்டோ வண்ண மெகா இதழாக அறிவிக்கவும்.





      Delete
  8. 2019ம் வருட நமது காமிக்ஸ் அட்டவணை பல ஆயிரம் புது சந்தாக்களை மலர வைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
    வாழ்க காமிக்ஸ்!
    வளர்க நமது காமிக்ஸ் வாசகர் வட்டம்!!

    ReplyDelete
  9. மறுபதிப்பு ஏமாற்றமே அதனை கொஞ்சம் ஈடு செய்வது தலைமுறை எதிரியும் பழிவாங்கும் புயலும்தான்

    ReplyDelete
    Replies
    1. அதே அதே, ஏனோ மனம் ஒப்பவில்லை இந்த வருட மறுபதிப்புகளுக்கு.

      Delete
  10. ஆசிரியரே பதிவை படிக்க செலவான நேரம் 22 நிமிடம்

    ReplyDelete
  11. வணக்கம். இப்போது தான் ஈஷாவில் நுழைகிறேன். தங்கும் இடத்திற்கு சென்ற பின்பு தான் இதனை படிக்க முடியும். அதுவரை பல் இருந்தும் பட்டானி கடிக்க முடியாதவனின் நிலை 😄

    ReplyDelete
  12. விஜயன் சார், கடந்த வருடம் போன்று அனைத்து புத்தகங்களும் எனக்கு வேண்டும். என்றும் போல் இந்த முறையும் சந்தாவில் நான் தொடருவேன்.

    ReplyDelete
  13. ஆசிரியரே வைக்கிங் தீவு மர்மம் பாக்கேட் சைசிலா

    ReplyDelete
  14. வணக்கம் சார்,
    சந்தா இரண்டு தவணைகளில் செலுத்தலாம் என்பது நல்ல செய்தி

    ReplyDelete
  15. ஸ்ஸ்ப்ப்பா... 9.39 க்கு ஆரம்பிச்சு 10.13 க்கு படிச்சி முடிச்சாச்சு !! ரொம்ப டையர்டா இருக்கு. இருங்க சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாரேன்...

    ReplyDelete
  16. உங்களின் ஒரு வருட உழைப்பின் விதை ஆலமரமாக கடவுளை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  17. Replies
    1. சந்தா C யோடு படிப்பதை நிறுத்திவிட்டேன் 🤔🤔😭😭😤😤

      சற்றே நிதானமான பிறகு மிச்சத்தை பாா்ப்போம்!

      சை! இந்த ஆறடி குழந்தைகளே புடிக்காது!

      Delete
  18. சார் சந்தா தேர்வுகள் அருமை.. கதை தேர்வுகளும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள். சந்தா மற்றும் ஜம்போவிற்கான பணம் செலுத்தி ஒரு ஈமெயிலும் அனுப்பிட்டேன்.

    உங்களது கேள்விக்கான பதில் பதிவை படிக்க 45 நிமிடங்கள் ஆகின

    ReplyDelete
    Replies
    1. பாரகுடா தேர்வு ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி.

      அப்பாடா என்னை மீண்டும் ஆச்சர்ய படுத்தியவிஷயம் எவ்வளவு பேர்களின் கேள்விகளை அனுமானித்து அதற்கான பதில்களை பதிவில் கூறி இருப்பது.

      2018 மிஸ் செய்த GN மீண்டும் வருவது மகிழ்ச்சி.

      Delete
    2. R. Giri narayanan: Sir, 10.01 to 10.41. stories selection are super, super,super. Awesome.Awesome.Awesome. Thank you for selecting Julia as well as italy combo and herlock shomes in virpanikku oru pei , but i kiss sutti puiyal benni.

      Delete
    3. Krishna VV : Truth to tell, பராகுடா இந்த நடப்பாண்டிலேயே வந்திருக்க வேண்டியது ! இரத்தப் படலம் காரணமாய்த் தள்ளிப் போய் விட்டது !

      Delete
    4. சந்தோஷம் கிருஷ்ணா.

      Delete
  19. சரியாக நாற்பத்தியொரு நிமிடங்கள் உங்கள் அருகாமையிலியே உலவி வந்து கொண்டுள்ளேன்...

    சிறப்பு...




    மிக சிறப்பு....




    மகிழ்ச்சி....:-)

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே...

    25 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது பதிவை படித்து முடிப்பதற்கு.

    ReplyDelete
  21. சரியாக 50 நிமிடங்கள் பதிவைப்படிக்க இந்த வருடமும் முழுமையான சந்தாவே என் விருப்பம்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. முழுதாக 45 நிமிடங்கள் செலவானது ..!!

    ReplyDelete
  24. 9.42 to 10.15 மணி வரை படித்ததில் பிடிக்காத ஒன்று இளமையில் கொல் மறு பதிப்பு மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. அட...உடைந்த மூக்காரின் மறுபதிப்பு தான் செமையாய் வரவேற்கப்படவிருக்கிறது - பாருங்களேன் !

      Delete
  25. It took me half an hour to read the blog editor Sir. Awesome பதிவு. மிகவும் மகிழ்ச்சி. எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் போனல்லி தீபாவளி மலர் . மேலும் ஆகஸ்ட் மாதம் குறைந்தது மூன்று புத்தகங்களை எதிர்பார்க்கிறேன். I'm totally satisfied with your choices sir.😊

    ReplyDelete
    Replies
    1. This year too I'll join the சந்தா as always.

      Delete
  26. கலக்கலான பதிவு..நிறைவான கதைகள்...நல்ல தேர்வு .டைலன் டாக் ஒன்றைத்தவிர ..இருந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக ஐந்து கதைகளில் ஒன்றாக வரப்போவது சரி சரி..2019 வெற்றி பெறும் ஆண்டாகி
    மாடியின் கோடோன் காலியாக வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. டைலன் டாக் 2.0-வைப் பார்த்தால் மனதை சடுதியில் மாற்றிக் கொள்வீர்கள் சார் ! அதகளம் !!

      Delete
  27. 32 நிமிடம் பிடித்தது... நான் ஸ்டாப் கொண்டாட்டம்

    கார்ட்டூன் இதழ்களை குறைத்தது வருத்தமே...

    மற்றபடி கதை தேர்வுகளை வரவேற்கிறேன்.

    இன்றே 2019 சந்தா கட்டிவிடுகிறேன்.

    2019-ல் அனைத்து இதழ்களும் வெற்றிபெற்று விற்பனையில்சாதிக்க வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. கார்டூனில் cut என்பதில் எனக்கும் சங்கடம் நண்பரே...காலத்தின் கட்டாயம் !

      Delete
  28. 35 நிமிடங்கள்...!


    முதல் பார்வையில்..,

    சந்தாA : புதுஸ்சா இருக்கு (புது ரத்தம் பாய்ந்த ஃபீலிங்)

    சந்தா B :டெக்ஸ் இருக்க பயமேன்?.(கூட மார்டினும் இருக்க ,கவலையேது.)

    சந்தா C :பின்ணணியில் சோக இசை. (சோகமே சுகம் ஆகுமே..!)

    சந்தா D :Reprint 2.0

    சந்தா E :எவரெடி ஃபார் எவரெஸ்ட் ..

    இன்னொரு முறை ஆழமா படிக்கப் போறேன்.

    ReplyDelete
    Replies
    1. //சந்தாA : புதுஸ்சா இருக்கு (புது ரத்தம் பாய்ந்த ஃபீலிங்) //

      :-) :-)

      Delete
  29. Replies
    1. ஒரேயொரு கவிஞர் வரார்...ஒரேயொரு கவிஞர் வரார் ..!

      Delete
    2. ஹா ஹா ஹா!! எடிட்டர் சார்... :))))))

      Delete
  30. எனக்கு சந்தா தொகையைப் பார்க்க 30 வினாடிகளுக்கு குறைவாகவே ஆனது.. இந்த முறை நண்பர்களுடன் சேர்ந்து மொத்தமாக அனுப்ப ஆசை.. அதனால் ஒரு வாரத்தில அனுப்பிவிடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. இயந்திரன் படத்தின் ரோபோ சிட்டி கூட உங்கள் வேகத்தில் வாசித்திடுமாவென்று தெரியவில்லை சார் !

      Delete
  31. 32 நிமிடங்கள் முழுவதும் வாசிக்க. விரைவில் சந்தா செலுத்துகிறேன்

    ReplyDelete
  32. ப்பா..36 நிமிடங்களானது..இதனை வாசித்து முடிக்க... நல்ல திடமான அழுத்தமான ஆழமான கருத்துக்களோடு நகைச்சுவை பாணியிலேயே தகவலை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள் சார்.. வழக்கம்போல சிறப்பான பதிவு.. சிறந்த சிந்தனைப்பூக்களைக் கொண்டு தோரணம் கட்டியிருக்கிறீர்கள் 2019 சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மிக...ஜானி சின்னப்பன்.

    ReplyDelete
  33. சந்தோசப்பதிவு..காமிக்ஸ் ரசிகர்கள் கொண்டாடவேண்டிய பதிவு..ஒன்றிரண்டு எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் வரவேற்கவேண்டிய கதை தேர்வுகள்..நெடுநாட்களாய் நாம் விரும்பிக்கேட்ட கடற்கொள்ளைக்காரர்கள் பற்றிய கதை வரவிருப்பது ஆவலை அதிகப்படுத்துகிறது..பெங்களூர் 5400 அதிகமே ஆனாலும் சந்தா தொகையை அனுப்பிவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. ///பெங்களூர் 5400 அதிகமே ஆனாலும் சந்தா தொகையை அனுப்பிவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .///

      அட்டகாசம் வெட்டுக்கிளி சார்!!

      Delete
    2. பெங்களூருவுக்கு கூரியர்கள் போட்டுத் தாக்குகிறார்கள் சார் - வேறு வழியில்லை !

      Delete
  34. நேர்மையான, வெளிப்படையான அறிவிப்புகள். லார்கோ இல்லாத இடத்தில் மீண்டும் ஒரு வன்மேற்கு நாயகரை சேர்ப்பது சரிப்படாது என நினைக்கிறேன். லார்கோ மாதிரி நவீன யுக நாயகர் யாரையாவது தேர்வு செய்திருக்கலாம். வன்மேற்கு ஓவர்டோஸ்!!? கார்ட்டூன் கதைகளில் பென்னி இல்லாமல் போனது வருத்தமே! மற்ற கதைகள் மற்றவர்களை போல் எனக்கும் அவ்வலவாய் ஈடுபாடு இல்லை என்பதே உண்மை. அதே சமயம் கார்ட்டூனில் கிட் லக்கி சாகசம் எதாவது இடம் பெறும் என்று எதிர்பார்த்தேன். மறுபதிப்புகளில் இரும்புக்கை மற்றும் ஏனையோர் வேண்டாம் என்ற முடிவு சரியே! பழைய நினைவுகளுக்காக அதை சேர்க்கலாமே ஒழிய புதிய வாசகர்களை கவர்வது கடினமே! பொனெல்லி சந்தாவில் சொல்ல ஏதும் இல்லை. மார்ட்டின் கதைகள் வெளிவருவது மிக மகிழ்ச்சி. நாதன் நெவர் போன்ற விஞ்ஞான கதைகள் எதிர்வரும் காலங்களில் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. கி.நா சந்தா சிறப்பு.. அதில் சிறு முயற்சியாக விண்வெளி கதைகள் ஏதாவது இருந்தால் வரும் காலத்தில் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிரேன்.. திருப்தியாக இல்லாவிட்டாலும் மோசமாக இல்லை! எல்லாரயும் திருப்தி செய்யவும் முடியாது என்பதே உண்மை. நன்றி வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. பிரஷாந்த் : Sci -fi கதைகளுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாய் நாம் தயாராக இன்னமும் நிறைய காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் !

      அப்புறம் ஒரு நவீன லார்கோவின் இடத்தைப் பிடித்திட "நவீனம்" என்ற அடையாளம் மாத்திரமே கொண்ட தொடர் போதாது என்பேன் ! லார்கோக்களும், வான் ஹாம்களும் ஒரு தலைமுறைக்கொருமுறை துளிர் விடும் அதிசயங்கள் !

      Delete
  35. சென்ற ஆண்டு சந்தா எனக்கு 20% திருப்தி இல்லாமல் இருந்தேன். அதனால் 2019 க்கு சந்தா தொடரலாமா இல்லை குறிப்பிட்ட இதழ்களை மட்டும் வாங்கிக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருந்தேன். ஆனால் 2019 க்கான அசரடிக்கும் கதை தேர்வுகளை ஆசிரியர் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்திலும் சந்தா தொகை ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் அறிவித்து சந்தாவை தொடரச்செய்ய வைத்துவிட்டார். எனக்கு 100% திருப்தி. கண்டிப்பாக வழக்கம்போல எனது முழு சந்தா தொடரும்.

    ReplyDelete
  36. 2019 அட்டவணை திருப்திதான் சார்.கதைகளின் எண்ணிக்கையை குறைத்து சந்தா தொகையை கட்டுக்குள் வைத்ததும் நல்ல முடிவு. கார்ட்லாண்ட். ரிங்கோ, பல புதிய கிராபிக் நாவல் போன்ற கதைகளை தேர்வு செய்ததும் சிறப்பா இருக்கு .அதே போல ஈரோட்டில் அறிவித்தபடி வைக்கீங் தீவு மர்மம் வெளிவருவதும் இரட்டை சந்தோஷம் சார்.

    ReplyDelete
    Replies
    1. வைகிங் தீவு மர்மம் 2 ஆண்டுகளாய் waiting ஆச்சே ?! மிஸ் பண்ணிட முடியுமா ?

      Delete
  37. வணக்கம் விஜயன் சார், நண்பர்களே
    முழுதாக முக்கால் மணி நேரம் ஆச்சு.
    I AM VERY HAPPY.

    ReplyDelete
  38. அன்பின் ஆசிரியருக்கு

    நீங்கள் எப்படிப்பட்ட அட்டவணை போட்டாலும் வாங்கக்கூடிய டை ஹார்ட் வாசகன் நான்,இதுவரை இந்த நிலைபாட்டிலேயே இருந்த நான் இந்த அட்டவணையை பார்த்தபின் மனதிற்குள் ஒரு ரம்மியமான சந்தோஷம் வந்ததை மறுக்க இயலாது.மிக்க நன்றி ஆசிரியரே.

    கார்டூன் குறித்த உங்களது நிலைப்பாட்டை கனத்த இதயத்தோடே தெரியப்படுத்தினார், நாங்களும் அதை கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

    திங்கள்கிழமை சந்தா செலுத்தி எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்போம்.

    ReplyDelete
  39. This yr all books Sandhya as usual

    ReplyDelete
  40. ரின்டின்கேன் காமிக்ஸ் தவிர்க்கப் பட்டதற்கு காரணம் கதை வலுவாக இல்லாததா ? இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? கர்னல் க்ளிப்டன், மேக்& ஜாக், ப்ளூ கோட் இவையெல்லாம் அற்புதமான கதைகளை கொண்டவைகளா? ப்ளூகோட் போன்ற சலிப்பூட்டும் கதைகள் ஏதாவது இருக்கிறதா என்ன? தவிர ரின்டின்கேன் தொடரில் அழுத்தமான கதை என்று பெரிதாக ஏதாவது தேவைப்படுவதற்கு இதென்ன கிராபிக் நாவலா? எனக்கு தெரிந்து யாரும் ரின்டின்கேன் மோசமென்று கருத்து சொன்னதில்லை. லக்கி லூக் கதைகள் கூட நகைச்சுவை பஞ்சத்துடன் வந்ததுண்டு. ஆனால் ரின்டின்கேன் கதைகள் அனைத்துமே( நீங்கள் சொன்னது போல் வலுவான கதை அமைப்பு இல்லாத போதும் கூட) பக்கத்துக்கு பக்கம் வெடிச்சிரிப்பை கிளப்ப தவறியதே இல்லை. அது போதும். Dear editor please consider Rintincan again....

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையினில் 2 ரகங்களுண்டு ! கதையோட்டத்தோடு இழையோடும் நகைச்சுவை முதல் ரகமெனில் .... வசனங்களில் ; slapstick -ல் ; பகடிகளில் சிரிப்பைக் கொணர்வது - பாணி # 2 ! முன்னது நாகேஷ் பாணி humor ; பின்னது சந்தானம் பாணி ! ஒவ்வொரு முறையும் மொழிபெயர்க்க அமரும் போது இந்த வேறுபாட்டை உணர்ந்திடும் முதல் முதல் ஆள் நானே சார் ! ஒவ்வொரு ரின்டின் கேன் கதையிலும் நீங்கள் சந்தித்திடும் நகைச்சுவை வரிகளின் அறுபது சதவிகிதம் நானாய் வம்படியாய் புகுத்திடும் சமாச்சாரங்களே தவிர்த்து - ஒரிஜினலின் சங்கதிகளல்ல !

      கிளிப்டன் ; மேக் & ஜேக் : இரு தொடர்களுமே ஒரு authentic பின்னணியில், அரங்கேறும் நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து சொல்ல முற்படும் பாங்கு ! So அங்கே களமும் உண்டு ; (சின்னதாகவேனும்) கதையுமுண்டு !

      And ப்ளூ கோட் தொடரினில் வலுவில்லை என்று சொல்வதாயின் - இந்தாண்டு காத்திருக்கும் ஆல்பத்தைப் படித்துப் பாருங்கள் !! கார்ட்டூன்களுள் Bluecoats ஒரு அசாத்திய ரகம் சார் !

      Delete
    2. என் தொப்ளா செல்லத்துக்காக குரல் கொடுக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் வாழ்க நண்பரே!

      Delete
    3. நான் இந்தியாவுக்கே போறத தவிர வேறு வழி இல்லை

      Delete
  41. கதைத்தேர்வுகள் அனைத்தும் அனைவருக்கும் என்ற கோணத்தில் சென்றதில் மகிழ்ச்சி சார்.அட்டவணை அருமை.அந்த compact size ஒருவேளை நிலவோளியில் நரபலி சைஸா சார்.?
    இளம்டைகர்க்கு ஒரு ₹.5 சேர்த்து வழக்கமான சைஸிலே போடலாமே சார்..அதே போல் ரிங்கோ.வண்ணத்தில் எதிர்பார்க்கிறேன் சார்.ஜம்போ சீஸன் 2 மகிழ்ச்சி . ஒரே ஒரு விண்ணப்பம் ஜம்போவில் XIII Spinoff க்கு இடம் உண்டா சார் காத்திருக்கலாமா...?

    ReplyDelete
    Replies
    1. ///compact size ஒருவேளை நிலவோளியில் நரபலி சைஸா சார்.?///

      எனக்கும் இதே டவுட்தான்.

      Delete
    2. தற்போதைய ரெகுலர் Tex சைஸ் !

      Delete
  42. கதைகள் சந்தா தொகை அனைத்தும் திருப்தி மகிழ்ச்சி சார் அருமையாக தொடரட்டும் இனிய 2019 ம் ஆண்டுப்பயணம்

    ReplyDelete
  43. Started reading at 10.19, finished at 10.45, disappointed by reprints selection, i expect more

    ReplyDelete
  44. மதியில்லா மந்திரி எதாவது கோம்போ வில் நுழைக்க முடியாதா......

    ReplyDelete
    Replies
    1. பிரான்க்கோ-பெல்ஜிய கதைகளில் சாத்தியப்படும் ஒரே combo லக்கி லூக் + ரின்டின் கேன் மட்டுமே மந்திரியாரே !

      Delete
  45. குறையாக அல்ல...

    எண்ணங்களாக..


    கர்னலுக்கு பதில் பென்னி இடம் பெற்று இருந்தால் செம செம அட்டகாசமாக தோன்றியிருக்கும் ( எனக்கு ..:-)


    மறுபதிப்பில்

    இளமையில் கொல் ...( மாற்றம் இருந்திருக்கலாமோ..? டைகரை அல்ல.:-)


    மற்றபடி 100 % முழு திருப்தியான சமையல் பட்டியல்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே : கர்னலுமே ஆபத்தின் விளிம்பில் தான் நின்று வருகிறார் என்று நினைத்திருந்தேன் ! ஆனால் அவருக்கும் ஒரு கணிசமான ரசிக வட்டம் இருப்பதை, சமீபத்துக் கருத்துக் பகிர்வுகள் புரிந்து கொள்ளச் செய்தன ! பென்னிக்கு இதுவொரு ஒய்வு மட்டுமே ; கவலை வேண்டாம் !

      Delete
  46. முதல் முறையாக 18+ என்ற முத்திரையுடன் பிரளயம்..
    பாரகுடா வும் அவ்வாறு வருமா? அல்லது கத்திரி செய்து அதனை தவிர்த்துவிடுவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. கத்திரி இல்லாமலும் மேனேஜ் செய்யப் பார்ப்போமே !

      Delete
  47. கமான்சே கதைகள் இன்னும் ஆறு கதைகள் வெளியிடப்படாமல் தொங்கலில் நிற்கிறது அதை ஜம்போவில் மூன்று மூன்று இதழாக போட்டு முடித்து விடும் எண்ணம் உண்டா சார்?

    ReplyDelete
    Replies
    1. கூடவே ஏற்கனவே வந்த ஓநாய் கணவாயும் மறுபதிப்பு லிஸ்டில்

      Delete
    2. சார்..விற்பனையில் தடுமாறியதே கமான்சே தொடரை நாம் ஓரம் கட்டியதன் பின்னணி ! அப்படியிருக்க, "லேபிள் மட்டுமே வேறு ; கதையும், நாயகரும் அதுவே !" என்றதொரு அடையாளத்தோடு நாம் மறுக்கா களமிறங்க நினைத்தாலும், ultimate ஆக அதனைச் சமர்ப்பிக்க வேண்டியது அதே audience ஆன உங்களிடம் தானே ?

      Delete
    3. Comanche as limited edition is also okie pls!

      Delete
  48. விஜயன் சார், பதிவை இன்னும் முழுமையாக படித்தது முடிக்கவில்லை. கார்டூன் சந்தாவில் எனது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்மர்ப் மற்றும் ரின் டின் கேன் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. :-( எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதற்கு இந்த நாயகர்களே காரணம்.

    மற்ற கார்டூன் நாயகர்களின் கதைகளை நான் படித்தது காட்டினாலும் அவர்கள் புரிந்து கொள்ளும் வயதில் அவர்கள் இல்லை.

    இது போன்ற கதைகளை ஒரு ஆல்பமாக லிமிடெட் எடிசன் என வரும் காலங்களில் வெளியீட முடிந்தால் சந்தோஷப்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. //இது போன்ற கதைகளை ஒரு ஆல்பமாக லிமிடெட் எடிசன் என வரும் காலங்களில் வெளியீட முடிந்தால் சந்தோஷப்படுவோம்.//

      சர்வ நிச்சயமாய் !

      Delete
    2. பூவ்வ்வ்...., பூவ்வ்வ்......
      ஆனந்த கண்ணீர்

      Delete
  49. இளமையில் கொல் கதை சுமார் ரகம் தானே? கதையின் ஆரம்பத்தில் டைகர் (மைக் டொனோவன்?) அடிமைகளை அடிப்பதும்,புளூபெர்ரியாக மாறுவதற்கு காரணமான வில்லனை அப்படியே விட்டுவிட்டு தப்பித்து வருவதும் எனக்கு பிடிக்காமல் போனது

    ReplyDelete
    Replies
    1. But இளம் டைகரின் கதைகளுக்குள் என்றேனும் மீண்டும் கால்பதிக்க எண்ணிடும் பட்சத்தில் இந்தத் துவக்கம் அவசியமாகிடுமே நண்பரே ? And in any case - எஞ்சியிருக்கும் டைகர் கதைகள் சகலமுமே Young Blueberry வரிசையினைச் சார்ந்தவைகளே எனும் போது, inevitable !

      Delete
  50. அட்டவணையைப் படிக்கும்போது ஏகப்பட்ட கவலையான எண்ணங்கள் வந்து போயின.

    ஆனால் இரண்டாம்முறை படிக்கும் போதுதான் அதன் பிரமாண்டம் புரிகிறது.அதன் உள்ளடக்கம் புலப்படுகிறது.
    உதாரணமாக,

    சந்தா Aவில் ,ஷெல்டன் ,டியூராங்கோ தவிர மீதியுள்ளவை விஷேசமானவை.தோர்கல் பழகிய தொடர் என்றாலும் ,முற்றிலும் வேறுவகையான பயணம் .ஜானியினுடையதோ புதுவகையான தொடர்.ஜோனதன் மற்றும் 'நீரில்லை ,நிலமில்லை 'தொடர்கள் அப்நார்மல் கதைகள் எனப் புரிகிறது.ட்ரெண்ட் மற்றும் அண்டர்டேக்கர் ஏறக்குறைய புது கதைவரிசை என்றே சொல்லலாம். ஆக சந்தா A ஒரு வித்தியாச அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது.

    சந்தா Bயில் ஆச்சரியமானது டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கையே. தீபாவளி மலரின் செலக்ஷன் இன்னும் ஆச்சரியமே. போனெல்லியின் பேமிலி மெம்பர்ஸ் அனைவருக்கும் ? இடமளித்திருப்பது
    நல்ல தீர்மானமே..! மார்டினுக்கு மேலும் ஒரு ஸ்லாட் தந்திருப்பது தைரியமான முடிவு.ஒருவழியாக ஜூலியாவிற்கு ஒருவழி கிடைத்து விட்டது.

    சந்தா Cல் ஸ்மர்ப் இடமில்லை எனும்போது கொஞ்சம் வருத்தம் வருகிறது.மந்திரியை எந்திரி 'னு சொன்னது அதிர்ச்சி.

    சந்தா D
    விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டு வந்த மும்மூர்த்திகள் தடா வாங்கி விலக ,அந்த இடத்தில் சத்தமின்றி இடம்பிடித்த ஜாம்பவான்களால் ஒரே நாளில் உலகப் புகழ்பெற்றது..

    சந்தா E
    இதுதான் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.அந்த சஸ்பென்ஸே சாதனையாக மாற்றும்எனத் தெரிகிறது.

    ஒவ்வொரு சந்தாவிலும் வழக்கத்திலிருந்து கொஞ்சம் மாற்றி யோசித்து அமைத்துள்ளார் ஆசிரியர்.அந்த மாற்றமே அட்டவணையின் வெற்றிப் பார்முலாவாக மாறிவிட்டது..!

    ReplyDelete
    Replies
    1. சார்....தலப்பாக்கட்டு பிரியாணியே ஆனாலும் சரி, அமெரிக்க வரவான KFC ஆனாலும் சரி, மெனுவில் அவ்வப்போது ஏதாச்சும் பட்டி-டிங்கரிங் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறார்கள் ? 'அட..நல்லாத் தான் ஓடுதுலே - அப்புறம் அதை இப்போ நோண்டுவானேன் ?' என்று சும்மா இருந்து விட்டால் - ஒரு கட்டத்தில் நம்மவர்களுக்கு போர் அடித்து விடும் என்ற பயம் தான் ! அதே பின்னணி தான் நம் அட்டவணைத் திட்டமிடலிலுமே !

      Delete
  51. Replies
    1. The same place where he was earlier....! Not too many takers for GJ !

      Delete
  52. ஐ ஆம் வெரி ஹேப்பி. டைகர் இன்னும் அதிகமாக இருந்தால் தேவலை

    ReplyDelete
  53. மும்மூர்த்திகள் இடத்தில் நல்ல ஹிட்டான மறுபதிப்புகள் வந்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
  54. Well-balanced 2019 schedule������

    The new additions are what makes the excitement..

    Will miss Smurfs though!!

    ReplyDelete
    Replies
    1. இயன்றமட்டிலும் முட்டி மோதிப் பார்த்தாச்சே - நீலப் பொடியர்களை நாம் ஒருங்கே அணைத்துக் கொள்ள ?! பருப்பு வேகலியே !!

      Delete
    2. என் மகள் 3 வயது ஸ்மர்ப் கதை சொல்ல கேட்டு,பின் படம் பார்த்து ஓரளவு கதை சொல்வாள் சார்!

      எனினும், பெரும்பான்மை ரசனையை ஏற்கிறேன் மகிழ்ச்சி..

      Delete
  55. எடிட்டர் சார்...

    பதிவைப் படிக்க சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் பிடித்தது!!ஆனாலும் முழுசா புரிஞ்சுக்கிட்டிருப்பேன்னு தோனலை!! புரிஞ்சுக்கிட்ட வரையிலும், மிக மிக நேர்த்தியாக ஸ்லாட் + சந்தா நிர்ணயம் பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது! சந்தா-C யில கைவச்சது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் - இதுவும் கடந்து போகும் - கார்ட்டூனின் அருமையை தமிழ்கூறும் நல்லுலகம் என்றாவது புரிந்துகொண்டு வாரியணைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது! குறிப்பாக, நீலப் பொடியர்களை நாம் மிஸ் பண்ணுவதன் காரணம் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது!! ஹம்ம்...

    "இதான் அட்டவணை - இதோ அதுதான் நீங்க கட்டவேண்டிய சந்தா! சட்டுப்புட்டுனு கட்டிடுங்கோ என நீங்கள் ஒற்றை வரியில் சொல்லியிருந்தாலும் மறுப்பேதுமின்றி "சந்தா கட்ட எந்த க்யூவிலே நிக்கணும்?" அப்படீன்னு நாங்க கேட்டிருப்போம் தான்! ஆனால், எல்லா தரப்பு வாசகர்களுக்கும் உங்கள் தரப்பு நாட்டுநடப்புகளை உங்கள் பாணியில் விவரிக்கும் அழகே தனீஈஈ தான்!! உங்கள் மெனக்கெடல் வாழ்க!!

    அட்டவணைகளையும், தலைப்புகளையும் நிதானமாக ரசிக்கவேண்டியிருப்பதால் கிடைக்கும் கேப்புகளில் எல்லாம் அதைச் செய்து இன்புறலாம் என்றிருக்கிறேன்!!

    நிறைப் புது நாயர்களின் வரவும், சந்தா-Eயும் இப்பதிவின் ஹை-லைட்டுகளாகத் தெரிகிறது!! கூடவே தீபாவளிமலர், லயன்-350, 3 மில்லியன் ஸ்பெஷல், ஜம்போ சீஸன்-2, விலையில்லா கலர் டெக்ஸ் இம்முறையும் தொடருவது, யூட்யூப் சானல், ஜூலியாவின் மறுவருகை, புதிய வலைத்தளம் என்று ஏகப்பட்ட கிளுகிளுப்புகள் இந்தப் பதிவில்!!

    பல மாத திட்டமிடல்களை அழகாகச் செதுக்கி ஒரு சிலைபோல எங்களிடம் அளித்திருக்கிறீர் - நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. //நீலப் பொடியர்களை நாம் மிஸ் பண்ணுவதன் காரணம் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது!! //

      Bermuda Triangle -க்குக் கூட விடை கண்டு பிடித்து விடலாம் சார் ; ஆனால் இந்தப் புதிருக்கு no பதில்ஸ் !!

      Delete
  56. விட்டு விட்டு படித்ததால் 10:30 க்கு தொடங்கியது இப்பொழுது தான் முடிந்தது.

    முதல் அதிர்ச்சி Compact Size.

    இது குறித்து முந்தைய பதிவில் ஏறக்குறைய அனைவருமே தெளிவாக குறிப்பிட்டு விட்டோம் தரத்தில் கை வைக்க வேண்டாம் என்று. படத்தின் அளவைக் குறைத்தால் நிச்சயம் வீரியம் குறைந்து விடும். பெரிய size ல் உள்ள தெளிவு compact size ல் கிடைக்காது. மறுபரீசலனை பட வேண்டியது அவசியம்.

    Dylon in black & white

    கறுப்பு வெள்ளையில் வேண்டாம் என்று கூறியும் விடாப்பிடியாக சேர்த்து விட்டீர்கள். வந்தால் வண்ணத்தில் இல்லையென்றால் வேண்டாம்.

    முந்தைய காலகட்டங்களில் தாங்கள் எடுத்த ஒரு சில தவறான முடிவுகளை வாசகர்கள் சுட்டிகாட்டிய பின் பெருந்தன்மையுடன் ஏற்று, உடனடியாக சரி செய்தவர் என்கிற முறையில் இக்கோரிக்கையை வைக்கிறேன்.

    இன்னும் நாயகர்கள் தேர்வில்
    நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அதை தெரிவிக்க விரும்பவில்லை. இங்கே தலையாய பிரச்சனையாய் compact size and black & white (dylon) இருக்க நாயகர்கள் தேர்வு பெரிதாய் தெரியவில்லை.


    ReplyDelete
    Replies
    1. சார்...4 மாதங்களாய் இந்தக் கதைகளோடு வாழ்ந்து பார்த்திருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் - இந்தத் தீர்மானங்களில் எவையுமே 'எடுத்தோம்-கவிழ்த்தோம்' ரகங்களல்ல !

      அப்புறம் நவீன டைலன் டாக் கதைகளை அவர்களே வண்ணமூட்ட முயற்சித்திருக்கவில்லை ; simply becos அதற்கான அவசியம் இருப்பதாய் அவர்களுக்குத் தோன்றவில்லை ! So இல்லாத வர்ணங்களை நாம் கொணர வழியேது ?

      Delete
  57. Took 20 minutes to read. Need to read again to make a conclusion. Everymonth we need one tex. I know how this industry struggle due to Dollar and paper cost. We will support you sir. We are benefited because of you.

    ReplyDelete
  58. மதிமுக Lady s அப்படீங்றது சடார்னு வாசிச்சதுல இந்த புள்ளய எப்ப கட்சியில சேர்த்தாங்கன்னு ஒரு நொடி குழம்பி அப்புறம் வாய் விட்டு சிரிச்சுட்டேன்!
    ☺️☺️☺️

    ReplyDelete
    Replies
    1. கட்டி வைத்துச் சாத்தி விடுவார்கள் சார் நம்மை !

      Delete
  59. சார் சான்சே இல்ல,,,,சந்தா A எப்பவும் போல என எண்ணம் மேலோங்கும்! இமுமுறையோ லார்கோ இல்லனுனலும் அத்தனையும் தயவுதாட்சன்யம் இன்றி டாப்பே,,,A முடியவே இவ்ளோ நேரம்! உங்க கணிப்பு சரியே! மீண்டு வரேன்

    ReplyDelete
  60. Dear Editor,

    I took 41 minutes to ready - 1:45 to 2:26 ... will be back with my comments soon.

    ReplyDelete
    Replies
    1. 41 நிமிடங்கள் !! That's quite a bit !!

      Delete
  61. சந்தா A...

    *ஜோனதன் கார்ட்லேண்ட்-2013ல வரவேண்டியது 6ஆண்டுகள் கழித்து இப்ப வருது. ஆவலுடன் வெயிட்டிங்....

    *அண்டர்டேக்கர் ப்ரமோசன். வரவேற்கப்பட வேண்டிய அம்சம்.

    *தோர்கல் பல்க்காக தொடருது மகிழ்ச்சி

    *லார்கோ இல்லா இடத்தை நீரில்லை,நிலமில்லை--- ஈக்வல் படுத்துமா சார்???

    இது ஒன்றை தவிர மீதம் 11ம் 100%திருப்தி.

    ட்ரெண்ட் 2இடங்களில் தொடருவது. ஆச்சர்யம்+மகிழ்ச்சி.

    பாஸிடிவ்ஸ் நிறைய இருக்கு சந்தா Aல்....பெஸ்ட் வழமைபோல!

    ReplyDelete
    Replies
    1. நீரில்லை,நிலமில்லை -ஒரு நவீன one-shot thriller சார் ; லார்கோவின் இடத்தை இட்டு நிரப்பும் எண்ணத்தில் இதனைக் களமிறக்கவில்லை !

      Delete
    2. நவீன த்ரில்லர்-சூப்பர் சார்...!!!

      Delete
  62. டியர் எடிட்டர்

    சென்றாண்டைப் போலவே ஒரு ஜனரஞ்சகமான அறிவிப்பு. அனைவரையும் திருப்தி படுத்தக்கூடிய ஒரு முயற்சி. இம்முறை அனைத்து சந்தாக்களும் கட்டவிருக்கிறேன் + ஜம்போ2 - மாத இறுதி சம்பளம் வந்தவுடன்.

    (ரெண்டு ட்ரெண்ட் மற்றும் "பிரளயத்தை" அன்பளித்து விடலாம் ;-) :-)).

    Best of Bonneli க்கு ஒரு ஷொட்டு ..
    ஒரு smurfs வராததுக்கு ஒரு குட்டு ..

    உலக காமிக்ஸ் "பணக்கார படிப்பு" வட்டத்தினை தமிழ் காமிக்ஸும் அடைந்தது மென் சோகம் .. but we knew this day was coming !

    பி கு : என்னமோ குறையுதே ? ஆங் XIII சைஸ் குண்டு புக்கு .. ஹி ஹி .. :-D

    ReplyDelete
    Replies
    1. டிரெண்ட் இம்முறை உங்களைக் கவர்வார் என்றே நினைக்கிறேன் சார் !

      அப்புறம் அந்த "குண்டு புக்" மேட்டருக்கு ......ம்ம்ம்ம்....இப்போ வேணாம் ! அதுக்கான நேரத்தில்..!

      Delete
    2. // அப்புறம் அந்த "குண்டு புக்" மேட்டருக்கு ......ம்ம்ம்ம்....இப்போ வேணாம் ! அதுக்கான நேரத்தில்..! //

      போட்றா வெடிய... அப்ப என்னமோ திட்டமிருக்கு !! :)

      Delete
  63. சந்தா B

    *இருக்கும் 9இடங்களில் இத்தனை பேரை அடைக்க ரொம்பவும் சிரமம் பட்டு இருப்பீர்கள் என்பதால் முதலில் ஒரு தொடர் சரவெடி கைதட்டலை போட்டு விடுகிறேன் சார்.

    *இரவுக்கழுகு இல்லா மாதங்கள் இல்லை என்பதற்கு 6தனி இடங்கள்+ போனெல்லி டிடெக்டிவ் இதழில் ஒரு கூட்டணி தொகுதி... செம ப்ளானிங் சார்.

    *கதம்ப இதழ்கள் என்றாலே ஒரு தனி குஷிதான். இம்முறை தீபாவளிமலர் 2019அந்த குஷியை அதிகப்படுத்தியது திருப்தி.

    *மார்டின்- இரு இடங்கள்(தனி+கூட்டணியில்)- சூப்பர்.

    *சர்ப்ரைஸ் ஆஃப் த சந்தா-ரிங்கோ-அறிமுகம். மீண்டும் மாஸ்டர் ஸ்ட்ரோக். வான்ஸின் ஓவியங்கள், மற்றொரு திகட்டா விருந்து.

    *ராபின், ஜீலியா, டைலன்- கூட்டத்தோடு கோவிந்தாவை வரவேற்கிறேன் சார். தனி இதழ்கள் கான்செப்ட் இவர்களுக்கு செட் ஆகாது,இனியும்.

    *ஒன்ஸ் எகெய்ன் பரம திருப்தி.

    *கலர் ரெகுலர் டெக்ஸ் இல்லாமல் இருப்பது மட்டுமே மிகச் சின்ன ஏமாற்றம். ஆகஸ்ட் சர்ப்ரைஸ் ல் அதையும் போக்குவீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது தங்கள் மேல்!

    ReplyDelete
  64. சார் வணக்கம்,
    2019 அட்டவணை அருமை விரைவில் முழு சந்தா தொகையும் அனுப்பி விடுகிறேன்.. அதே நேரத்தில் நான் உங்கள் வலைதளத்தில் சில புத்தகங்கள் வாங்கினேன் எனது HDFC Net banking மூலம் பணம் எடுத்து விட்டார்கள் ஆனால் ஆர்டர் complete ஆகவில்லை.
    இது சம்பந்தமாக நான் ஒரு மெயில் கூட நேற்று அனுப்பியுள்ளேன்... இது மாதிரி நடப்பது இரண்டாவது முறை...
    கொஞ்ச பாருங்க சார் நன்றி

    ReplyDelete
    Replies
    1. அதற்கான புக்குகளை நேற்றே அனுப்பி விட்டார்கள் சார் ! எங்களது ஆன்லைன் ஸ்டோரை நிர்வகிக்கும் Worldmart அவ்வப்போது ஏதேனும் software update செய்யும் போதெல்லாம் இது போல சிறுசிறு தலைவலிகள் எழுகின்றன ! அவற்றைத் தவிர்க்க கேட்டுள்ளோம் ; ப்ளஸ் நமது புது தளத்தில் PayTm மூலமாய் payment gateway ஏற்பாடு செய்துள்ளோம் ! So இந்த நோவுகள் தொடராது !

      Delete
  65. நிறைவான அட்டவணையைத் தர ஆனமட்டிலும் முயற்சித்து உள்ளீர்கள்,எல்லாம் ஓகே,ஆனா ஏதோ ஒன்று குறைவது போல் பீலிங்,அது என்னன்னு சொல்லத் தெரியலை,
    பெரும்பாலான கதைகள் நல்ல தேர்வாக அமைந்துள்ளது மகிழ்ச்சி சார்.
    ரிப்போட்டர் ஜானிக்கும்,மார்ட்டினுக்கும் இரண்டு ஸ்லாட்கள் அளித்தது மிக மிக மகிழ்ச்சியான விஷயம்,குண்டு புக்ஸ்கள் எண்ணிக்கை 4 க்குள் இருப்பது சற்றே கவலை அளிக்கிறது,ஸ்பெஷல் இதழ்களுமே சற்று புஷ்டியில்லாமல் இருப்பது போல் ஒரு எண்ணம்,கார்ட்டூன் எண்ணிக்கை குறைந்ததும் வருத்தமே,உடைந்த மூக்காரை சற்று தாமதமாக மூன்று பாகங்களுடனே ஸ்பெஷல் வெளியீட்டில் இறக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது,
    மீண்டுமொரு கொத்துக்கறி படலமோ???
    கதை தேர்வுக்காகவும்,விலையை கட்டுக்குள் வைக்கவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது,விலையப்பர்தான் பிரச்சினை என்பதும் புரிகிறது.
    டெக்ஸ் கலர் குண்டு ஸ்பெஷல் இல்லாததும் ஒரு குறை
    ஆகஸ்டிலாவது இந்தக் குறை தீர ஆவண செய்யவும்.
    மீண்டும் அட்டவணைக்காக நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் - ட்ரிபிள் ஆல்பம்
      ட்யுராங்கோ - ட்ரிபிள் ஆல்பம்
      ஜானதன் கார்ட்லெண்ட் - டபுள் ஆல்பம்
      அண்டர்டேக்கர் - டபுள் ஆல்பம்
      நீரில்லை..நிலமில்லை...டபுள் ஆல்பம்
      அலைகடல் அசுரர் - ட்ரிபிள் ஆல்பம்
      பிரளயம் - ட்ரிபிள் ஆல்பம்
      வஞ்சம் மறப்பதில்லை - டபுள் ஆல்பம்
      Best of Bonelli - 600+ பக்கங்கள்
      லக்கி லூக் ஆண்டுமலர் - டபுள் ஆல்பம்

      இதற்கு மேலும் புஷ்டிக்கு எங்கு போவது சார் ? இதற்கு மேலும் பட்ஜெட்டில் இடமேது சார் ?

      Delete
    2. // இதற்கு மேலும் பட்ஜெட்டில் இடமேது சார் ? //
      புரிகிறது சார்,கதை தேர்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.எப்போதும் போல் எங்கள் ஆதரவு முழுமையாக உண்டு சார்.

      Delete
  66. அருமையான கதைத்தேர்வுகள்.எப்பொழுதும் போல இம்முறையும் அனைத்து பிரிவுகளுக்கும் சந்தா செலுத்திடுவேன்.
    மாலும்மாவின் மறுபதிப்பிற்க்கு மிக்க நன்றி.
    ப்ளுகோட்ஸூம் அருமையான தேர்வு.
    பென்னி இருந்திருக்கலாம். ரின்டின்கேன், ஸ்மர்ஃப்ஸ்- வருத்தமில்லை.
    கி.நா- கில்லினா!
    ஒரு சிறு வேண்டுகோள், தணிக்கை இன்றி கி.நா வெளியிடுங்கள், 18+ என போட்டாவது. வீரியமிழக்காது இருக்கும் என்று நம்புகிறேன்.
    இறுதியாக- 51/60 என்ற எண்ணங்கள் வேண்டாமே! தங்கள் சந்தாவில் பல துணிகர முடிவுகளை பார்க்கையில் நரைமுடி ஷெல்டன் மனதில் வந்து போகிறார்.

    ReplyDelete
    Replies
    1. நரைமுடி மனுஷாள்ஸ் அதிரடி செய்வதெல்லாம் திரையில்...ரீலில் சகஜமே நண்பரே ! நிஜ வாழ்வென்பது முற்றிலும் மாறுபட்டதொரு சமாச்சாரமல்லவா ?

      Delete
  67. சார் சந்தாவை போன் பே ஆப் மற்றும் பீம் ஆப் மூலமாக கட்ட முடியுமா???

    ReplyDelete
  68. குறைந்த பதிப்புகள் கொண்ட. (500) ஒரு
    தனி சத்தா மற்றும் மறுபதிப்பு சந்தா
    ஒன்றை அறிவித்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. சார்...கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது நம்மளவுக்கு ஏற்பாக இருக்குமென்றே வைத்துக் கொண்டாலும் - படைப்பாளிகள் கட்டி வைத்து துவைக்காமல் விட்டாகணுமே ? 500 என்று சொல்லிக் கொண்டு போனால் உருட்டுக்கட்டைகள் சர்வ நிச்சயம் ! துளியும் நடைமுறை சாத்தியமிலா விஷயம் !

      And தற்போதுள்ள தனி தடம் ; தனி சந்தா என்பன கிட்டத்தட்ட முன்பதிவுகளுடனான பிரேத்யேகத் தடம் போன்றவை தானே ? இங்கேயே ; நார்மலான விலைகளிலேயே, 500 சந்தாக்கள் தேறாத நிலையில் - கூடுதல் விலைகளில் பிரத்யேக புக்கிங்களில் 500 -ஐ எட்டுவது சாத்தியமென்று நம்புகிறீர்களா சார் ?

      Delete
  69. சார்! இளமையில் கொல் நீண்ட நாள் எதிர்பார்ப்பு! ஆனால் மூன்று பாகத்தையும் ஒரே இதழாக வழக்கமான சைஸில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.அடுத்து ரிக்கோ மொத்தமே இரண்டு பாகங்கள் எனும்போது அதையும் ஒரே இதழாக வண்ணத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ரிங்கோ # 1 டிசம்பர் 2019 & ரிங்கோ # 2 - ஜனவரி 2020 என்று திட்டமிடுவோம் சார் !

      Delete
  70. வீட்டுச் சுட்டீஸ்களின் ஏகோபித்த கோரிக்கை... Smurf, rin-tin-can, மத்தியில்லா மந்திரி.... மருக்கா பரிசீலியுங்களேன்.

    ReplyDelete
  71. நாலு கால் செல்லங்கள் மியாவியும் தான்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணங்களை ; அபிப்பிராயங்களை தவறாது பகிரக் கோருவதே இது போன்ற எண்ணப் பரிமாற்றங்களுக்கே ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நம்மில் பலருக்கும் அதற்கான அவகாசமோ, மெனெக்கெடலோ இருப்பதில்லை ! Smurfs ; மந்திரியார் ; பென்னி சார்ந்த நெகட்டிவ் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட வேளைகளில் கூட அவ்வளவாய் ஆத்ரவுக் குரல்கள் இல்லாது போய் விட்டனவே சார் ! என்னை எட்டும் feedback தானே எனது தீர்மானங்களின் பின்னணி !!

      இங்கே பதிவுடுங்களேன் ப்ளீஸ் என்று நான் கோருவது - என் முதுகை வருடித் தந்திடும் பொருட்டல்ல சார்...நாயக / நாயகியரின் நிறை-குறைகளை பறைசாற்றிட !

      Delete
  72. அனைவருக்கும் வணக்கம். 2019க்கான கதை தேர்வுகள் அருமை. ஆனால் எண்ணிக்கை குறைப்பு ஓர் குறையாக உள்ளது. தாங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இருப்பினும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. Tex கலர் இதழ்களும் குறைவாக உள்ளது. மாதம் 4 புத்தகம் என்று template ஐ மாற்ற வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டிலும் இதழ்களின் எண்ணிக்கை 36 தானே சார் ? எண்ணிக்கைக்கு குறைப்பு ஏதும் இல்லை என்பது தானே - எனது பதிவின் முன்னுரையே ?

      Delete
  73. சார் கார்டூனில் ஸமர்ஃப் இல்லாத ஒன்றே அதிர்ச்சி! பிற கதைகள் வந்தாலும் வராட்டியும் சந்தோசமே !ஆனா இம்முறையும் சமரசமின்றி அற்புத் தேர்வுகள் ! மகிழ்ச்சி !அந்த லக்கி புது ஸ்டைல் ஆவலத்தூண்டுது !
    மறுபதிப்புத்தேர்வுகள் டெக்சோட பழிக்கிப் பழி எதிர்பார்த்தேன் !பிற கதைகள் பெரிய எதிர்பார்ப்பில்லை ! ஆனா புதுசாய், அற்புதமாய் என்ற உங்க வாக்குறுதியால் எதிர்பார்க்கிறேன் ஆவலாய் !
    பார்ரா பரகுடா இர்க்குடா....சூப்பர் சாழு E சந்தா பல்லெல்லாமு ஈஈஈஈஈஈஈஈ.....அடி தூள்! அண்டர் டேக்கர் சூப்பர்
    டெக்ஸ் ஆரம்பத்தில் நீங்க கேட்டப்போ ஓவர் டோசாகிடுமோ ₹என எதிர்த்ததில் நானும் ஒருவன்! ஆனா அற்புதம் ஓவர்டோசில்லை என்பது என்னளவில் மட்டுமல்ல விறுபனயாலும் நிச்சயமாயிற்றே!
    ஜம்போக்கும் சந்தா இதோடே செலுத்துவேன் !ஜம்போ பன்னென்டா வந்தா சநுதோசம் !48ஆகுமே!ஈரோடுட்டு அதிரடி அந்த ஆயிரத்தைனூறு பக்க கௌபாய்னா கொண்டாட்டம் அதகளம்தான்

    ReplyDelete
  74. சிறந்த திட்டமிடல் சார், அடுத்தவருடம் தெரிவுகள் உண்டு 90/100 தீபாவளி மலர் தான் 2019 இன் ஹைலட் சார்

    ReplyDelete
    Replies
    1. சிறந்த கதை தெரிவுகள்

      Delete
    2. //தீபாவளி மலர் தான் 2019 இன் ஹைலட்//

      சந்தா E வெளியாகும் ஒவ்வொரு மாதமும் கூட விசேஷமாக இருக்கப் போகின்றது சார் !

      Delete
  75. 12.55 மணிக்கு ஆரம்பித்து, 1.30 மணிக்கு முடித்தேன்=35 நிமிடங்கள் சார் :)

    ஒரு வேண்டுகோள்: டெக்ஸ் தரிசனம் ஒவ்வொரு மாதமும் வேண்டும்!! அதனால் 7 புக்+ 1 மறுபதிப்பு போக, மீதி நாலு மாதமும் color டெக்ஸ் வெளியிடவும் pls..

    மும்மூர்த்திகள் பற்றிய உங்கள் முடிவு 100% சரி! முதல் முறை நம் ஸ்டால் நோக்கி இழுத்தது இரும்புக்கை தான்.. ஆனால் நம் வெரைட்டி கதைகள் படிக்க படிக்க இவர்களின் மேல் ஈர்ப்பு குறைந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் தரிசனம் ஒவ்வொரு மாதமும் வேண்டும்!! அதனால் 7 புக்+ 1 மறுபதிப்பு போக, மீதி நாலு மாதமும் color டெக்ஸ் வெளியிடவும்//

      திட்டமிடலே அது தான் !

      Delete
  76. Very good selection sir 80/100
    *Correct decision on cartoon slots
    *Santa A selection
    -20 cons
    ?Julia is worth than sania(I am not fan for both but sania is much better than Julia(always put negative image )

    ?why tiger with one part(always young tiger was dead by non continuity style)please add other two parts also(young tiger special ,it will enriched tiger stories)instead of Sherlock Holmes(I thought no rise against)

    ?why reporter johni is alloted for one slot in every year(but 2 for trend)....Johnny is mass in our niche comics group...

    ReplyDelete
    Replies
    1. ஜானிக்குமே 2 ஸ்லாட்ஸ் உள்ளன தானே ?

      Delete
  77. கழற்றி விடப்பட்ட நாயகர்களை பற்றி வருத்தப்படுவதை விட ( எனக்கு பென்னி ,மந்திரி..)


    கூட்டி வரப்பட்ட நாயகர்கள் அனைவருமே எதிர்பார்ப்பை எகிறவைப்பவர்கள் என்ற விதத்தில்

    அட்டவணை டீசரில் நீங்கள் வென்றுவிட்டீர்கள் சார்..

    ReplyDelete
  78. முதலில் வருத்தத்தை சொல்லிடுவோம்..!!

    Smurfக்கு இடமில்லாதது பெரும் அதிர்ச்சி..!
    மதியில்லா மந்திரி ..காலத்தின் கட்டாயம்..!
    பென்னி ...சொல்லத்தெரியவில்லை..!

    இனி கொண்டாட்டங்கள் ..!

    அறிமுகங்கள் :-

    ஜானதான் கார்ட்லாண்ட் ...செம்ம அறிமுகம்.!
    ரிங்கோ ...Good one ..!


    மற்றவை விரைவில் ..!

    ReplyDelete
    Replies
    1. Smurf-களுக்கு இடமிராது என்பதை யூகிக்காது போயிருந்த வெகு சொற்பமானோரில் நீங்களும் ஒருவர் என்பது தெரிகிறது ! ஒவ்வொரு முறையுமே இந்த நீல குட்டி மனுஷர்களை களமிறக்கும் போதும் காணக் கிடைத்த நெகட்டிவ் அதிர்வுகளின் ஏது ரகசியம் சார் ?

      Delete
    2. புரிகிறது சார்..! இருந்தாலும் ஒட்டுமொத்தமாய் மூடுவிழாவை எதிர்பார்க்கவில்லை..! இது இடைவெளிதான் என்றால் மகிழ்ச்சி ..இல்லையென்றால் ..ப்பூஊஊ..மூச்மூச்..!!

      Delete
    3. ஒரு தொடருக்கு ஏகோபித்த ஆதரவோ ; ஏகோபித்த எதிர்ப்போ பதிவாகும் போது - அவை சார்ந்த தீர்மானங்கள் தாமாய் என் கைகளை விட்டு அகன்றிடுவது தான் யதார்த்தம் சார் !

      "மாயாவி & முமூர்த்திகள் வேண்டும்" என்று விடாப்பிடியாய் ஆதரவு தென்பட்ட போது - அந்தத் திக்கில் போகவே வேணாமே என்றிருந்த என் வைராக்கியம் தானாய் மாறிப் போனது ! அதே மறுபதிப்புகள் இன்றைக்கு போர் அடித்துப் போய் விட்டன என்று அநேகர் அபிப்பிராயம் கொண்டிட - அதன் தீர்மானமும் இதோ - இப்போது நம் முன்னே !

      Smurfs விஷயத்தில் தெறித்த எதிர்ப்பின் பரிமாணங்களில் ஏது ரகசியம் ? So அதன் தீர்மானமுமே என் மார்க்கமாய் நீங்கள் எடுத்துள்ளதே !

      Delete
  79. Very good story selection sir.80/100
    Pros
    *Good decision -cortoon selection
    *A Santa 100%
    *E mersal
    *Cortland intro
    Cons_(-20)
    ?why one slot for.johny (jonhy is mass in our comic readers ,this third continious year but 2 slot for trend )

    ?how Julia is better than sania(I am not fan for both..I thought sania is much better than julia)

    ? Is this modesty story came in Rani comics(doubt)

    ?why always kill the tiger mass(please add another two.parts sir -instead of Sherlock Holmes no one against it(no one need it ..
    ?Vance Ringo (please add one part with it sir. Don't spoil the this double album)


    Mathabadi nan kelambitein to book 2 subscription in this year..thank you


    ReplyDelete
    Replies
    1. Ringo டபுள் ஆல்பம் அல்ல நண்பரே ; 2 one shot சாகசங்கள் !

      Delete
  80. I missed it sir please add mafesto Tex special in future

    ReplyDelete
  81. சந்தா A

    முன்பே சொன்னது போல் ஜானதான் அட்டகாச அறிமுகம்.. சித்திரங்கள் செம்ம விருந்தாக இருக்கும் .

    ஜானி 2.0 ...வர்ரே வாஹ் ..!ஆர்வங்கா வெய்ட் சேசி உன்னேனு ..!!

    அப்புறம் அந்த நீரில்லை ..நிலமில்லை .. பட்டைய கிளப்பும்னு பஜ்ஜி சொல்லுது ..!

    ட்யூராங்கோ, ஷெல்டன், தோர்கல் என அக்மார்க் சந்தா A ..வெல்டன் சார்..!

    ReplyDelete
    Replies
    1. ஆங் ..ட்ரெண்ட்டை விட்டுட்டேன்..மன்னிச்சூ ..!!

      Delete
    2. Trent 3 & 4 : கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்துகள் !!

      Delete
  82. சந்தா கட்டியாச்சு

    ReplyDelete
  83. சந்தா 2019:

    Hits:
    1. கேப்டன் டைகரின்"இளமையில் கொல்
    2. Bonelli Special ...
    3. Baracudda ..

    Misses:

    1.சுட்டிப் பயல் பென்னி and மதியில்லா மந்திரி.. கர்னலுக்கு பதிலாக பென்னி தேர்வு பண்ணியிருக்கலாம் என்று தோன்றுகிறது சார் ..
    But totally சந்தா 2019 Balanced ஆக உள்ளது ..

    ReplyDelete
    Replies
    1. நிஜத்தைச் சொல்வதானால் - மந்திரியார் புத்தக விழாக்களிலும் அவ்வளவாய் சோபிக்க மாட்டேன் என்கிறார் ! இங்கும் மித ஆதரவு ; அங்கும் மித விற்பனையே எனும் போது அவரது கேஸ் ரொம்பவே வீக்காகிப் போகிறது சார் !

      Delete
    2. It took me 30 minutes to read fully sir .. forgot to mention it ..

      Delete
  84. ஜம்போ சந்தா இப்போ கட்டனுமா இல்லை முழு அறிவிப்பு வந்த பிறகா??

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சாய்ஸ் தான் சார் !

      Delete
  85. Lady s க்கு தடை , ஜூலியாவுக்கு வாய்ப்பா ....
    ஜூலியாவைவிட பலமடங்கு பெட்டர் ஷானியா ....
    கால கொடுமை.....
    கமான்சே க்கு சென்ற ஆண்டு 2019 வாய்ப்பு உண்டு என சொன்னார் ....
    இந்த ஆண்டும் இல்லை.. .
    ஷானியாவுக்கும் அதே கதைதான். ..

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி சார் ஒரு நாயகரோ / நாயகியோ அட்டவணையை விட்டு வெளியே போன பிற்பாடு மட்டுமே அவர்களது நிறைகள் டாலடிக்கின்றன நமக்கு ?

      Lady S இருக்கும் களம் முற்றிலும் வேறு ; ஜூலியா இடம்பிடிக்கும் களமோ இன்னொன்று ! அவரால் அங்கே ஒரு காம்போ இதழில் இடம்பிடிக்க இயல்வதால் உட்புகுகிறார் ! Lady S க்கு அது சாத்தியமாகாது போவதால் விடுபடுகிறார் ! ஒவ்வொரு முறையும் LADY S கதைகளுக்கு அர்ச்சனை கிட்டும் போது அந்தக் குறைகளுக்கு உங்கள் பார்வையிலான நிறைகளை பதிலாக்கியிருக்கலாம் தானே ?

      Delete
  86. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடந்த 2000 ஆண்டிலிருந்து தவறாமல் சந்தா கட்டி வரும் காமிக்ஸ் வாசகர் நான். என்னை பொருத்தவரை மாதத்திற்கு ஐந்து புத்தகங்கள் வந்தாலும் நல்லது என்பேன். ஏனெனில் என்னுடைய டென்ஷனை குறைப்பதே நமது புத்தகங்கள் தான். நன்றி

    ReplyDelete
    Replies
    1. பட்ஜெட் இடம் தந்தால் ஐந்தென்ன - ஐம்பது கூட சாத்தியம் தானே சார் ?

      Delete
  87. படித்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகியது.

    பென்னி இல்லை என்பது ஏமாற்றமே.

    மறுபதிப்பு இனி தேவை இல்லை என்பது என் கருத்து.

    மேலும் நான் பங்களோரில் இருந்து கோவை வந்து இருக்கிறேன்.

    பாரதி book storil thaan Namma comics வாங்கி செல்வது வழக்கம்.

    ஆனால் October இதழ்கள் இது வரை கடைக்கு சென்று அடையவில்லை. பலமுறை கடாயில் இருந்து நெறய தடவை போன் செய்தும்.

    இதனால் வெறும் செப்டம்பர் மாத
    இதழ்களுடன் Bangalore செல்கிறேன்.

    இனிமேல் சரியான சமயத்தில் கடைகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார்...சந்தாவின் வசதிகளுள் இவையே பிரதானம் ! உங்கள் நகரத்துக் கடைக்காரர் பணம் அனுப்பியுள்ளாரா ? இல்லையா ? அவருக்கு புக்குகள் அனுப்பப்பட்டுள்ளனவா ? இல்லையா ? என்ற நோவுகளெல்லாம் சந்தாவினில் இராது !

      ஒரு கடைக்கு புக்குகள் செல்லவில்லையெனில், அங்கே payment சார்ந்த விஷயங்கள் இருக்குமென்பது தான் bottomline !

      Delete
  88. Replies
    1. புரியவில்லையே சார் ?

      Delete
    2. ரிங்கோ கலரில் வந்தால் நன்றாக இருக்குமே?

      Delete
  89. Evening friends will come back after reading the post:)

    ReplyDelete
  90. சந்தா B

    தீபாவளி மலராய் ஐந்து நாயகநாயகிர் கூட்டணாயில் ஒரு புஷ்டி என்பது இந்த தடத்தில் இவ்வாண்டின் ஹைலைட் என்பேன்.!
    டெக்ஸ் வழக்கம்போல் 220+110 என கலந்துகட்டி கலக்கப்போகிறார்...மனம் மகிழ்சியில் ததும்புகிறது.! என்ன...330 பக்க குண்டு கதையோ, கலர் டெக்ஸோ இல்லாதது மிக மிக லேசான ஏமாற்றமாய் தோன்றினாலும் வைகிங் தீவு மர்மம் கலர் என்பது ஆறுதல் ..பெரிய சைஸூக்கு ஏதாச்சும் வழி கிடைக்காமலா போய்விடப்போகிறது ..ஹிஹி..!!

    ReplyDelete
  91. அட்டவணையில் மறு பதிப்புகளை (மாடஸ்டி) வண்ணத்தில் மாற்ற வழி உண்டா

    ReplyDelete