Powered By Blogger

Monday, March 26, 2018

புதனுக்கு "பொட்டி" !

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் "பொட்டிகள்" கூரியரை நாடி நாளை மாலை புறப்படவிருக்கின்றன ! So புதனன்று எதிர்பார்த்திடலாம் - ஏப்ரலின் இதழ்களை !! இன்னமும் ரெண்டு நாள் கழித்தே புக்குகளை அனுப்பிட எண்ணியிருந்தோம் - ஆனால் தொடர் விடுமுறைகள் காத்திருப்பதால் மூடாக்குகளைப் பிரிக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டிப் போனது ! Anyways -சிலபல  'கையப் புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துக்களில் விரயமாகிடும் நேரத்தை - புது இதழ்களுக்கு நல்கிடுவது நலமே என்பதால் வேகமாய் பேக்கிங் பணிகளைப் பார்த்து வருகிறோம் !

இந்தாண்டின் ஒரு கணிசமான தூரத்தை ஏற்கனவே நாம் கடந்துவிட்டுள்ளோம் - கொஞ்சம் அட்வான்சாகவே இதழ்களைத் தயாரித்ததன் பொருட்டு !! So ஜூலை இறுதியிலும், ஆகஸ்டின் துவக்கத்திலும் துவங்கிட வேண்டிய மறுஆண்டுக்கான சிந்தனைகள் - இம்முறை கொஞ்சம் சீக்கிரமே ! And as always - ஏகப்பட்ட புதுக் கதைகள் ; தொடர்கள் என்று வரவழைத்து மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அவற்றுள் மேய்ந்து வருகிறேன் ! எத்தனை காலமானாலும், புதுக் கதைகளைப் பார்க்கும் நேரங்களின் அந்த 'ஜிலீர்' உணர்வு மட்டும் போகாது போலும் ; சமீப வாரங்களில் அவற்றை தவறாது உணர்ந்து வருகிறேன் ! இக்கணத்தில் எனது கேள்வி இது தான் :

2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும்  genre ஏதுவாக இருக்கும் ? கீழ்க்கண்ட ரசனைகளும் எதற்கு எத்தனை சதவிகிதம் தந்தால் ஓ.கே. என்று படுகிறது ?

A . கௌபாய் 
B . ஆக்ஷன் & fantasy 
C . கார்ட்டூன்
D . டிடெக்டிவ்
E . கிராபிக் நாவல்
F . புதுசாய் ஏதாவது ?

புதன் காலையில் இன்னமுமொரு பதிவோடு சந்திக்கிறேன் folks ! (மார்ச்சில் பதிவு எண்ணிக்கை ஏற்கனவே எகிறிக் கொண்டுள்ளது !! Phew !!) Bye for now !!

279 comments:

  1. வணக்கம்.

    ReplyDelete
  2. எனக்கு எல்லாமே வேணும்

    ReplyDelete
  3. // ஏப்ரலின் "பொட்டிகள்" கூரியரை நாடி நாளை மாலை புறப்படவிருக்கின்றன.//
    சூப்பர் சார்.

    ReplyDelete
  4. // ஏகப்பட்ட புதுக் கதைகள் ; தொடர்கள் என்று வரவழைத்து மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அவற்றுள் மேய்ந்து வருகிறேன் ! //
    ஹைய்யா சூப்பர் சார்,அடுத்த வருசத்துக்கு இன்னும் சிறப்பா பொக்கிசங்களை கொடுப்பிங்கன்னு நம்பிக்கை இருக்கு சார்.

    ReplyDelete
  5. // புதன் காலையில் இன்னமுமொரு பதிவோடு சந்திக்கிறேன் folks.//அட,ஆர்வத்தோட காத்திருப்போம் சார்.

    ReplyDelete
  6. F . புதுசாய் ஏதாவது ?
    +11111

    ReplyDelete
  7. விஜயன் சார், மேக் & ஜாக் எந்த மாதம் வர உள்ளது?

    ReplyDelete
  8. 2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும் genre ஏதுவாக இருக்கும் ?

    கௌபாய் + Fantasy + கார்ட்டூன்

    கீழ்க்கண்ட ரசனைகளும் எதற்கு எத்தனை சதவிகிதம் தந்தால் ஓ.கே. என்று படுகிறது ?

    A . கௌபாய் - (25% out of 100%)
    B . ஆக்ஷன் & fantasy (25% out of 100%)
    C . கார்ட்டூன் (20% out of 100%)
    D . டிடெக்டிவ் (10% out of 100%)
    E . கிராபிக் நாவல் (10% out of 100%)
    F . புதுசாய் (10% out of 100%)

    ReplyDelete
  9. விஜயன் சார், பவளச்சிலை மர்மம் தவிர ஏப்ரல் மாதம் வேறு ஏதாவது மறுபதிப்பு கதைகள் வருகிறதா? கொஞ்சம் மறந்து விட்டது.:-)

    ReplyDelete
    Replies
    1. சிக்பில் ஸ்பெசல் மறுபதிப்பு உள்ளதே பரணி...

      Delete
    2. நன்றி. ஆமாம். அது ஞாபகம் வருகிறது. ஆனால் நம்ப மும்மூர்த்திகள்?:-)

      Delete
  10. 2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும் genre ஏதுவாக இருக்கும் ? கீழ்க்கண்ட ரசனைகளும் எதற்கு எத்தனை சதவிகிதம் தந்தால் ஓ.கே. என்று படுகிறது ?

    A . கௌபாய்
    B . ஆக்ஷன் & fantasy
    C . கார்ட்டூன்
    D . டிடெக்டிவ்
    E . கிராபிக் நாவல்
    F . புதுசாய் ஏதாவது ?


    ANYTHING IS OK FOR ME. FOR ME IT IS A COMICS.

    ReplyDelete
  11. பவளச்சிலை மர்மம் அட்டை படம் பழைய டிசைனாகத் தெரிந்தாலும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பழைய டிசைன் மாதிரியெல்லாம் கிடையாது ; பழைய டிசைனே தான் !

      நமது ஒரிஜினல் இதழின் பின்னட்டை இது

      Delete
    2. இந்த மாதம் முதலில் வாசிக்க விரும்பும் கதை இதுதான். Waiting for Wednesday.

      Delete
    3. தளத்திலேயே கண்ணை பறிக்குது நேர்ல சான்ஸே இல்லை.... வாவ்...வாவ்....செம சார்...

      Delete
    4. விஜயராகவன் @ கூலிங் கிளாஸ் கண்ணாடி ஒன்று ரெடி பண்ணிக் கொள்ளுங்கள்; கண்ணு பத்திரமாக இருக்கத்தான் :-)

      Delete
  12. A . கௌபாய் - (25% out of 100%)
    B . ஆக்ஷன் & fantasy (25% out of 100%)
    C . கார்ட்டூன் (20% out of 100%)
    D . டிடெக்டிவ் (10% out of 100%)
    E . கிராபிக் நாவல் (10% out of 100%)
    F . புதுசாய் (10% out of 100%)

    ReplyDelete
  13. A . கௌபாய் -25% (15)
    B . ஆக்ஷன் & fantasy -20% (12)
    C . கார்ட்டூன் -25% (15)
    D . டிடெக்டிவ் -10% (6)
    E . கிராபிக் நாவல் -10% (6)
    F . புதுசாய் ஏதாவது ? -10% (6)
    மொத்தம் 60 இதழ்கள் சார், அதற்கு மேல் கொடுப்பது உங்கள் பிரியம் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் உங்க ஆசை எனக்குப் புடிச்சிருக்கு சார்

      Delete
    2. 48 + 6கி.நா.க்கள் என் சாய்ஸ் சார்

      Delete
    3. // ஆனாலும் உங்க ஆசை எனக்குப் புடிச்சிருக்கு சார்.//
      சார் அடுத்த வருஷம்தான் எந்த பெரிய இதழும் மறுபதிப்பில் இல்லையே,அதனால் என் ஆசை அதிகமானதல்ல,நம்பிக்கையுடன் காத்திருப்போம் சார்.

      Delete
    4. "லயன் டெக்ஸ் 100" இருக்கு சாமிஈஈஈஈஈ...

      Delete
    5. லயன் 350வரலாம், முத்து 450வரலாம்...

      Delete
    6. // லயன் டெக்ஸ் 100" இருக்கு சாமிஈஈஈஈஈ...//
      இருக்கட்டுமே,அது கண்டிப்பாக இரத்தப்படலம் விலைக்கு நிகரா வரப் போறதில்லையே,நான் சொல்வது மறுபதிப்புகளை.

      Delete
    7. அட ஆமால்லே...

      அப்டீனா மறுபதிப்பு ஒரு 12 போட்டு விடலாம்...நல்ல அகுடியா...

      Delete
    8. சூப்பர் டெக்ஸ்.
      எப்பன்னு கேட்டு சொல்லுங்க.

      Delete
    9. திகில் கிளாசிக்ஸ் 1 என்று பழைய திகில் கதைகளை போடலாமே ? நான் எந்தக் கதைகளையும் படித்ததில்லை..

      Delete
  14. ///
    A . கௌபாய்
    B . ஆக்ஷன் & fantasy
    C . கார்ட்டூன்
    D . டிடெக்டிவ்
    E . கிராபிக் நாவல்
    F . புதுசாய் ஏதாவது ?///

    எதிர்பார்ப்பது ஆக்ஷன் & fantasy மற்றும் கார்ட்டூன் மற்றும் கௌபாய் மற்றும் கிராபிக் நாவல்ஸ் .

    புதிதாய் என்றால் பராகுடா போன்ற கடல்சார்ந்த சாகசக் கதைகள்.!
    அப்புறம் க்ரீன் மேனர் மாதிரியான வித்தியாச ஜானர்கள் .!

    அப்புறம் நிறைய்ய்ய்யய புதுப்புது கார்ட்டூன் தொடர்கள்.!

    அ...அ..அந்...அந்த ஆ...ஆஸ்...ஆஸ்ட்..ஆஸ்ட்டெ....

    ஓடீர்ரா கைப்புள்ள ...!!;-)

    ReplyDelete
  15. அட்டகாசமான பதிவு சார்... தமிழ் காமிக்ஸ் தலையெழுத்தையே மாற்றி அமைக்க போகிறது இந்த பதிவு...

    ReplyDelete
    Replies
    1. அடடே...அப்படியாக்கும் ?

      Delete
    2. செம ரூமி - டி ரி சி க்கு

      Delete
  16. விஜயன் சார்,
    // So ஜூலை இறுதியிலும், ஆகஸ்டின் துவக்கத்திலும் துவங்கிட வேண்டிய மறுஆண்டுக்கான சிந்தனைகள் - இம்முறை கொஞ்சம் சீக்கிரமே !//

    இது எல்லாம் நடக்கட்டும். ஏப்ரல் மாதமும் இன்னும் ஐந்து நாட்களில் வந்து விடும். புதன் அன்று வர உள்ள பதிளாவது ஜம்போ பற்றி சொல்லலாமே?

    ReplyDelete
  17. /
    A . கௌபாய்
    B . ஆக்ஷன் & fantasy
    C . கார்ட்டூன்
    D . டிடெக்டிவ்
    E . கிராபிக் நாவல்
    F . புதுசாய் ஏதாவது ?///

    காமிக்ஸ் என்ற பெயரில் தாங்கள் எதை வெளியிட்டாலும் நான் படித்து விடுவேன்... நான் ஓரளவு நல்ல நிலைமையில் இருப்பதே தாங்கள் வெளியிட்ட காமிக்சுகளை படித்ததானால் தான் ..்் நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை இப்பவாவது சொன்னீங்க ருமி :-)

      Delete
    2. Rummy அண்ணன் சொல்வது எனக்கும் பொருந்தும்.
      நீங்கள் காமிக்ஸ் தொடர்ந்து வெளியிட்டாலே போதும்.
      அனைத்தையும் வாங்கிடுவோம்.

      Delete
  18. FANTASY கதைகள் பெரும்பாலும் காதில் கூடைப்பூவை சுற்றும் ரகமாகவே இருக்கும் .அதைத் தவிர மற்ற அனைத்து கதைகளுக்கும் வெல்வெட் கம்பள வரவேற்பே ..

    ReplyDelete
  19. 2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும் genre ஏதுவாக இருக்கும் ?

    A . கௌபாய் - 30%
    B . ஆக்ஷன் & fantasy - 20%
    C . கார்ட்டூன் - 5%
    D . டிடெக்டிவ் - 10%
    E . கிராபிக் நாவல் - 15%
    F . புதுசாய் - 20%

    - Total out of 100%

    ReplyDelete
  20. முடிந்தால் அடுத்த ஆண்டு ஒரு ஸ்பின் ஆப் டபுள் ஆல்பம்
    கால்வின் வாக்ஸ்
    ஜானதன் ப்ளை
    மார்த்தா இதில் எதாவது

    குறிப்பு
    முடிந்தால் மட்டும் சார்

    ReplyDelete
    Replies
    1. அருமை.
      அதே அதே.
      மூன்றுமே இணைந்து வந்தால்
      சொக்கா ஆயிரம் பொன்னும் எனக்கே.

      Delete
    2. அண்ணா ஒண்ணுக்கே ஒன்னுக்கு போற அளவுக்கு அடி விழுது .....!

      Delete
    3. ஆனா மார்த்தாவில் ஏதோ உள்ளது அண்ணா ...!

      Delete
    4. எப்படியும் அடுத்த ஐந்தாறு வருஷங்களுக்குள் கையிருப்பில் உள்ள spin -offs -ல் ஒரு பாதியாவது காலியாகி விடும் பழனிவேல் ! அப்புறமா பார்த்துக்குவோமே ?

      Delete
    5. ஏன்டா உனக்கு வேற ஏதும் இல்லையா என கேட்கும் நண்பர்களுக்கு மட்டும்
      மொத்தம்
      பதினோரு ஸ்பின் ஆப் வந்திருக்கு நாம
      நாலு படிச்சிட்டோம் இன்னும் ஏழுதான் வருஷம் ஒரு ஸ்லாட் கொடுத்தா எப்படியும் மூணு நாலு வருஷத்தில் கதை ஓவர் அப்புறம் சிவனேன்னு கிடப்பேன் அவ்ளோதான் வேற ஒன்னும் இல்ல
      முடிஞ்சா சமுகம் ஏற்பாடு பண்ணுங்க

      Delete
    6. //கையிருப்பில் உள்ள spin -offs -ல் //
      எவ்வளவுதான் உள்ளது சார்..?

      Delete
    7. அந்த சோகக் கதை தேவையா - என்ன ?

      சில ஆயிரம் பழனிவேல்கள் எழுந்து வர வேண்டிவரும் - அவற்றைக் காலி பண்ணிட !

      Delete
    8. இதுக்குதான் எல்லா Spinoffsஐயும் சேத்து ஒரே குண்டு புக்கா போட்டிருக்கனும். குண்டு புக்குன்னா சீக்கிரமே காலியாகிடும்.

      Delete
  21. கருப்பு கிழவி வண்ணத்தில்

    ReplyDelete
  22. 'பவளச்சிலை மர்மம்' அட்டைப்படம் அபாரம் சார்! முன்னட்டையில் நமது மாலையப்பரின் அந்நாளைய தூரிகையும், பின்னட்டையில் ஒரிஜினல் ஓவியங்களும் பட்டையைக் கிளப்புகின்றன!!

    'பாராட்டுக்கள்' சார்!

    ReplyDelete
    Replies
    1. நானும் "பாராட்டுகள்" தெரிவித்து கொள்கிறேன் சார்...

      Delete
  23. கடற்கொள்ளையர்கள் சம்பந்தமாக ஏதோ தொடர் வெளியிடுவதாக வாக்கு கொடுத்து விட்டு இப்போ வேற ஏதோ ஜெனர்களை கேட்பதின் உள்நோக்கம் என்னவோ... அதற்க்கும் % போட்டு சில குறிப்பிட்ட ராக கலைஞர்கள் சொல்ல நினைப்பதும் என்னவோ...காமிக்சு காதலர்களை மற்றும் நடு நிலை நண்பர்களை, மௌனப் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளகையும் அவமானப்படுத்துவது உங்களுடைய எண்ணமாக இருக்காது என்றே நம்புகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி @ கடற்கொள்ளை இந்தாண்டு....

      F&Fல் வருவது உறுதி....

      Delete
    2. நம்பிக்கை தானே வாழ்க்கையே ரம்மி ? So தாராளமாய் நம்புங்களேன் ?

      Delete
    3. //காமிக்சு காதலர்களை மற்றும் நடு நிலை நண்பர்களை, மௌனப் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளகையும் அவமானப்படுத்துவது உங்களுடைய எண்ணமாக இருக்காது என்றே நம்புகிறேன்..//

      LOL :-))))

      Delete
    4. ///கடற்கொள்ளையர்கள் சம்பந்தமாக ஏதோ தொடர் வெளியிடுவதாக வாக்கு கொடுத்து விட்டு இப்போ வேற ஏதோ ஜெனர்களை கேட்பதின் உள்நோக்கம் என்னவோ... அதற்க்கும் % போட்டு சில குறிப்பிட்ட ராக கலைஞர்கள் சொல்ல நினைப்பதும் என்னவோ...காமிக்சு காதலர்களை மற்றும் நடு நிலை நண்பர்களை, மௌனப் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளகையும் அவமானப்படுத்துவது உங்களுடைய எண்ணமாக இருக்காது என்றே நம்புகிறேன்..///

      ரம்மி அல்லது ருமி (courtesy pfb) !
      ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல ..!!
      சிரிச்சி மாளலைய்யா ..!!😝😝😝😝

      Delete
  24. நண்பர்களே பழைய காமிக்ஸ் அதுவும் "குண்டு புக்" நினைவுகளில் மூழ்கி முத்தெடுப்பதே நம்மை ரிஃபெரஷ் செய்யும் அருமருந்து.... அந்த வகையில் கோடைமலர் 1987பற்றிய நினைவுகளில் மூழ்குவோமா????

    ReplyDelete
    Replies
    1. இதை நான் ஒரு திசை திருப்பும் முயற்சியாகவே பார்க்கிறேன்... இது போன்ற நிகழ்வுகளாலேயே காமிக்சு விவாதங்கள் ஏதும் தளத்தில் நடப்பதில்லை..

      Delete
  25. A,B,C,D,E,F&horror comics👽👾👿👹👺💀💀

    ReplyDelete
  26. விஜயன் சார், பராகுடா சித்திரங்கள் அருமையாக இருந்தது. அதேபோல் கதையும் நன்றாக இருக்கும் என நண்பர்கள் சிலர் சொன்னார்கள். இந்த கதை f & f கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையும் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பராகுடா செம்மயா இருக்கும் பரணி.! அந்த சித்திரங்களையே வெகுவாக ரசிக்கலாம். கதையும் சூப்பராக இருக்கும்.! ப்ரீத்திக்கு நான் கியாரண்டி.!

      எடிட்டர் சார்.!

      பராகுடா நடப்பாண்டிற்கு தேர்வாகி இருந்தாலும் லாங் ஜான் சில்வர் உள்ளிட்டோரின் கடல் சாகசங்களை தொடர்ந்து வெளியிடுமாறு பேங்களூரு பரணி மற்றும் பனங்கிழங்கு ஸ்மர்ஃப் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.! :-)

      Delete
    2. உங்களைப் போன்றவர்களின் கருத்துகளே ஆசிரியரை influence செய்கிறது... மேலும் இது போன்ற துதிகளை தளத்தில் பதிவிட வேண்டாம்... இங்கு காமிக்ஸ் சம்பந்தமான கருத்துகளையே எதிர் நோக்குகிறேன்...

      Delete
  27. ஆசிரியர் சார்,

    எனக்கு பத்து வயதிருக்கும் போது முதல் லயன்காமிக்ஸ் வந்தது. அப்போதிருந்து படித்து வருகிறேன். என்னுடைய சிரமமான பள்ளி மற்றும் கல்லூரி பிராயத்தை கடக்க உங்கள் எழுத்துக்கள் மிகவும் உதவியாக இருந்தது. வழி தவறாமல் இருக்கவும், தன்னம்பிக்கையோடு இருக்கவும் உதவியாக நீங்கள் வெளியிட்ட காமிக்ஸ்கள் இருந்தன.

    காலம் மாறி தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் இப்போதும் அழுத்தம் களைய உதவுவது உங்கள் காமிக்ஸ்களே. இதனால் நமது நிறுவனத்தின் மீதும் காமிக்ஸ்களின் மீதும் தீராத காதல் உண்டு.

    அப்போது எனக்கு பத்து வயதில் கிடைத்த புத்தகத்தை வெளிய்யிட்டதே இன்னொரு 17 வயது சிறுவன் என தெரியாது. தெரிந்த பின்னாட்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமானது.

    இதில் என் உணர்வுகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. உங்களைப் பாராட்டுவதால் உங்களை ஊக்குவிப்பதாகவே உணருகிறேன். என்னுடய பாராட்டுகள் பார வண்டி இழுக்கும் மனிதனுக்கு அந்த வழியில் செல்லும் சக பயணிகள் பாடும் ஐலேசா தான். இந்த டெக்இனிக்கை தான் நிர்வாகத் துறையில் உள்ள என்னை போன்றோருக்கு வேறு விதமான டெக்னிகல் ஜார்கண்ட் களை உபயோகப்படுத்தி சொல்லிக் கொடுத்தார்கள்.

    அதே சமயம் குறைகளை ஓங்கி அடிக்காமல் தாங்கி அடிப்பதும்்நயமாக வெளிப்படுத்துவதன் காரணமுமே அது தான். இதில் உள்ள ஒரே சுயநலம் மேலும் நிறய காமிக்ஸகள் உங்களால் கிடைக்கும் எனபதே.

    எங்களுக்காக உங்கள் தேடல்களை தொடருங்கள்.





    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்க சொன்ன உங்களையும் பாராட்டுகிறேன் நண்பரே...:!

      Delete
    2. ///இதில் என் உணர்வுகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. உங்களைப் பாராட்டுவதால் உங்களை ஊக்குவிப்பதாகவே உணருகிறேன். என்னுடய பாராட்டுகள் பார வண்டி இழுக்கும் மனிதனுக்கு அந்த வழியில் செல்லும் சக பயணிகள் பாடும் ஐலேசா தான்.///

      அருமை அருமை, MP அவர்களே!!

      ஆகவே நண்பர்களே... மனம் விட்டுப் பாராட்டுங்கள்! அதனால் ஒன்றும் குறைந்துபோய்விடாது!!

      Delete
    3. ///என்னுடய பாராட்டுகள் பார வண்டி இழுக்கும் மனிதனுக்கு அந்த வழியில் செல்லும் சக பயணிகள் பாடும் ஐலேசா தான்.///

      அருமையான உவமானம் ஷெரீப்.!!

      +1

      ///அப்போது எனக்கு பத்து வயதில் கிடைத்த புத்தகத்தை வெளிய்யிட்டதே இன்னொரு 17 வயது சிறுவன் என தெரியாது. ///

      ஆனாப்பாருங்க .. உணர்ச்சி வேகத்துல உங்க வயசை வெளியே சொல்லிட்டீங்க ..!!:):) 😝

      Delete
    4. தாராளமா ஈ.வி,பாராட்டுகள் நல்லது.

      Delete
    5. // எங்களுக்காக உங்கள் தேடல்களை தொடருங்கள்.//
      அதே,அதே.
      +11111

      Delete
    6. அட்டகாசமான முகஸ்துதி... இதன் மூலம் தாங்கள் விற்பனைக்கு வரப் போகாத அந்த 400 பக்க கதையை உங்களுக்கு மட்டும் வர செய்து விட்டீர்கள்... என் போன்ற மௌனப் பார்வையாளர்கின் வாழ்த்துகள்

      Delete
    7. ஷெரீப் அய்யா@ செம...
      அத்துனை கருத்துகளுக்கும் +10000000

      Delete
    8. மௌனப் பார்வையாளராகிப்போன நானும்

      +1

      Delete
    9. அருமையான மலரும் நினைவுகள் மஹி.
      பாராட்டுகள்.

      Delete
    10. //ஆனாப்பாருங்க .. உணர்ச்சி வேகத்துல உங்க வயசை வெளியே சொல்லிட்டீங்க//
      நான் ஷெல்டனை விட சின்னப்பையன் கண்ணரே...நான் இருக்கிற ஊர்ல இது தான் இளம் வயது 🤣

      Delete
    11. மகேந்திர பாகுலி ஜி
      👌👌👌👌👌👌👌👌👌

      Delete
    12. சூப்பரா சொன்னீங்க மஹி ஜி

      Delete
  28. அதிகம் எதிர்பார்த்திடுவது

    கெளபாய்..கெளபாய்..கெளபாய்...( நாங்க எல்லாம் மாட்டுகார பயலுக சார்..)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரே எங்க ஊர் மாடு கரை ங்க அதனால எங்களுக்கு மாட்டுக்கார பயலுகள ரொம்பப் புடிக்கும்

      Delete
  29. அப்பாடா ...பொட்டி பதிவு வந்துருச்சு...


    பாராட்டுகள் சார்...:-)

    ReplyDelete
  30. பளிங்கு சிலை மர்மம்..

    பழைய போராட்ட குழு மாதிரி பழைய அட்டைப்படத்தில் கலக்குகிறது...


    தங்களுக்கும் ,ஓவியருக்கும் பாராட்டுகள் சார்..

    ReplyDelete
  31. சதவீத கணக்கு...

    கெளபாய் 40%

    ஆக்‌ஷன் 20%

    மீதி 40%

    உங்கள் விருப்ப படி ...


    எப்படி வந்தாலும் எனது பாராட்டுகள் சார்...!

    ReplyDelete
  32. ஹாலோ யாராவது இருக்கீங்களா??

    ஹலோ......??!!

    ReplyDelete
  33. கோடைமலர் 1987...

    *1986கோடைமலரின் அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து 1986தீபாவளிமலரும், அதேபோல அதகள மலராக வெளியிடப்பட்டு பட்டையை கிளப்பியது. இதுபற்றி என்னுடைய தீபாவளிமலர் கட்டுரைகள்ல 2016லயே விரிவாகப் பார்த்துட்டோம்.

    *1987ம் வருடம் இந்தியாவுக்கே பரபரப்பான வருடம். ஏன்னா அதுவரை இங்கிலாந்தில் மட்டுமே கிரிக்கெட் உலகக் கோப்பைகள் நடந்து வந்தன. முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே, இந்தியாவில் நடந்த வருடம் அது. "வீட்டோ" அதிகாரம் கொண்ட இங்கியும்-ஆஸியும் எத்தனையோ தடைபோட அத்தனையும் உடைத்து உலக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் திரு அனில் அம்பானி.

    *சிக்ஸர் சித்து உருவான கப் அதுதான். உலக ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்த இந்தியா vs பாகிஸ்தான் ஃபைனல் வர்ல. காரணம் இந்த 2ஆண்ணன் தம்பிகளும் அந்த இங்கி-ஆஸி பயலுகள்ட்ட செமி ஃபைனல்லயே முறையே மண்ணை கவ்விட்டது தான். கவாஸ்கர் தன் வாழ்வின் ஒற்றை ஒரு நாள் சதத்தை அப்போது தான் எடுத்தார். நம்ம மியான்தத் சார்ட்ட "சாத்து" வாங்கிய சேத்தன் சர்மாகூட ஹாட்ரிக் எடுத்து தன்னுடைய காயத்தை ஆற்றிக் கொண்டார்.

    *///யோவ், சர்மாவோட ஹாட்ரிக் கடக்குது; நம்ம லயன் மலர்கள்ல 1986ன் இரட்டை வெற்றிக்கு பிறகு, 3வது மினிகுண்டு புக்ல ஹாட்ரிக் அடிச்சாரா இளம் எடிட்டர் சார்னு சொல்லுயா???...///அப்டீனு நீங்க கேட்பது இங்கயே கேட்குது நண்பர்களே...!!! பதில் எ பிக் யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தான் ப்ரெண்ட்ஸ். 1986ன் இரண்டு மலர்களிலும் ஸ்பைடர் எனும் மேதையே வெற்றியில் பாதியை தந்துட்டார். மீதியை மற்றவர்கள் பார்த்து கொண்டார்கள். இதிலும் அதே ஃபார்முலா சிறப்பாக ஒர்க்அவுட் ஆகி, செமத்தியான சக்சஸ்.

    *முதல் இரு குண்டு புக்ஸ்லயும் நோ டெக்ஸ் வில்லர். அப்டீனா அந்த சமயத்தில் ஹீரோக்களின் ஆதிக்கத்தை பாருங்க. இந்த 1987கோடைமலர்ல ஒருவழியாக மனமிறங்கிய எடிட்டர் சார் டெக்ஸக்கு ஓகே செய்கிறார். டெக்ஸ் & ஸ்பைடர் என்ற இரு பிரமாண்டங்கள் போதாதா அதகளத்திற்கு. எதிர்பார்த்த மாதிரியே இதுவும் மாஸ்தான். இதில் என்னா ஆச்சர்யம்னு கேளுங்க, டெக்ஸின் படம் அட்டைல போடப்படவேயில்லை; அப்டீனா தானைத்தலைவர் ஸ்பைடரின் புகழ் எந்தளவு உச்சத்தில் இருந்து இருக்கும் இருந்து இருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.

    *1987கொளுத்தும் ஏப்ரலில் ரூபாய் 5க்கு பாக்கெட் டைனமைட்டாக 306பக்கங்களில் 6சித்திர கதைகள் கொண்ட அட்டகாசமான பேக்கேஜ் ஆக ரிலீஸ் ஆனது. ஆளுயர ஸ்பைடர் இடது கையை உயர்த்தி உயரே பறக்கும் ஹெலிகாரை தொட முயற்சிப்பது போன்ற அட்டையை பார்த்தவுடன் நம்ம சீனியர்ஸ் அள்ளிட்டு போயிருப்பாங்க. பின் அட்டையில் மற்றொரு அதகள இதழ் "மே" மாத திகில் கோடைமலரின் விளம்பரம் இடம்பெற்று இருந்தது.......

    ReplyDelete
    Replies
    1. #ஆறு கதைகளையும் சுருக்கமாக பார்ப்போம்:-

      1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி

      #கதை கொஞ்சம் சுமாராத்தான் இருக்கிறது. இப்பொழுது படிப்பதனால் அப்படி தெரிகிறதோ என்று தெரியவில்லை. ஸ்பைடர் மேனியா உச்சத்தில் இருந்தபோது எதுவாயினும் ஹிட்தான்.

      #சிவப்பு தளபதி என்ற ஒரு அயோக்கியன் ஒரு பெரிய விமானத்தில் வந்து நியூயார்க் நகர மக்களிடம் இருந்து மிரட்டி பணம் கேட்கிறான்.

      #தனக்கு போட்டியாக உருவாகியுள்ள எதிரியை கண்டு கொதித்து எழும் ஸ்பைடர் அவனை தனது ஹெலிகாரில் சென்று முறியடிக்கிறார்.

      2. மாடஸ்டி& கார்வினின் "கார்வினின் யாத்திரைகள்"

      #இதுஒரு சிறிய சாகசம் இருந்தும் பரவாயில்லை.

      #தனது தோழி ரீனாவுடன் விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு வருகிறார் கார்வின். அங்கு அவர்கள் இருவரையும் ஒரு விஞ்ஞான தம்பதியினர் பிடித்து சென்று மயக்க ஊசி செலுத்தி பிரமாண்ட பொருட்கள் இருக்கும் ஒரு அறையில் அடைத்து அவர்களுக்கு தங்களது உருவம் தான் சிறிதாகிவிட்டது என்ற பிரேமையை உருவாக்குகின்றனர்.

      #டாரண்டின் வேண்டுகோளிற்கு இணங்கி அந்த கூட்டத்தினரை பிடிக்க வரும் மாடஸ்டி எதிர்பாராவிதமாக கார்வினையும் ரீனாவையும் கண்டுபிடித்து காப்பாற்றுகிறார்.

      3. லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை

      #மினி சாகசம் இது. ஒரு வித ஒலியை ஒலிக்க செய்து நகரில் இருக்கும் எலிகளை வெறிகொள்ள செய்து மக்களை கடிக்க செய்கிறான் ஒரு ஆ.கொ.தீ.கா. வை சேர்ந்த ஒரு தீவிரவாதி.அவனை முறியடித்து அந்த எலிகள் மூலமே அவனை கொல்கின்றனர் நமது நாயகர்கள்.

      4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி

      #முழு நீஈஈஈஈள சாகசம் இது.
      வேறு ஒரு எதிரியை விரட்டி வரும் வில்லரும் கார்சனும் சில்வர் பெல் நகரை அடைகின்றனர்.

      #அங்கு எதார்த்தமாக அந்த நகரின் பெரும் பணக்காரர் பேக்கரின் மகன் ஆல்பர்ட் பணத்திமிரில் தனது பிறந்த நாளை கொண்டாட மதுபான கடையில் கண்டபடி சுட்டுக் கொண்டிருப்பதை காண்கின்றனர்.

      #அது மட்டும் இல்லாமல் ஒரு குண்டு நமது கார்சனின் காதில் உரசி செல்கின்றது .பொங்கி எழும் டெக்ஸ் அவனை நையப்புடைத்து பாடம் புகட்டுகிறார்.

      #கோவப்பட்டு செல்லும் ஆல்பர்ட் தனது பண்ணையை சேர்ந்த நான்கு பேரை அழைத்து வருகிறான். அவர்களையும் சுட்டு வீழ்த்துகின்றனர் டெக்ஸ்ம் கார்ஸூம்.

      #ஆங்காரமான ஆல்பர்ட்,பின் அந்த விஷயத்தை தனது தந்தையிடம் கூறுகிறான்.அதற்கு அவன் தந்தை ரூபி ஸ்காட் என்ற கொலைகாரனை அனுப்புகின்றார்.

      #முதலில் அவனால் நயவஞ்சகமாக குண்டு காயம் அடையும் டெக்ஸ் மீண்டும் வந்து இடது கையை பயன் படுத்தி அவனை சுட்டு வீழ்த்தி விடுகிறார்.


      #ரூபி இறந்ததற்கு காரணமான ஆல்பர்ட்டை அவனது செவ்விந்திய மனைவி சுட்டு வீழ்த்தி விடுகிறாள். தனது மகன் இறந்ததை கேட்ட பேக்கர் புத்தி பேதலித்து பண்ணைக்கு தீயிட்டு அதில் தானும் வெந்து இறந்துவிடுகிறார்.

      #வெகு விரைவில் மறுபதிப்பாக வரக்கூடிய சாகசமிது.

      5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன்

      #இதுவும் ஒரு மைக்ரோ சாகசமே.சிறைசாலையில் இருந்து தப்பிக்க பார்க்கும் ப்ரீவ்ஸ்டர் என்ற திருடனின் சதி வேலையே முறியடிக்கின்றனர் SI 6 உளவுபிரிவை சேர்ந்த ஜார்ஜும் டிரெக்கும்

      6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி

      #இதுவும் ஒரு நீஈஈஈண்ட சாகசம். வெனிஸ் நகருக்கு சுற்றுலா வரும் நமது ஆர்ச்சி குழுவினர் அப்படியே அங்கு இருக்கும் ஒரு பாங்கின் தங்கம் பட்டுவாடா செய்யும் வேலையே செய்கின்றனர்.

      #அப்பொழுது சீதோசன நிலையை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றும் ஒரு கருவி கொண்டு அந்த நகரின், ஆறு முழுவதையும் ஐஸ் கட்டியாகி ஆர்சியை உறைய செய்து தங்கத்தை கடத்தி சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து பல சாகசங்கள் செய்து நமது குழுமினர் தங்கத்தை மீட்கின்றனர்.

      *வீச்சு கிச்சி+ ஜோக்கரும் உண்டு. 6கதைகள் கொண்ட புதையலை மீண்டும் மீண்டும் தடவி அழகு பார்க்கும் ஆசையை அடக்கவே முடியாது. அடுத்த கோடைமலர் அனைவரையும் கட்டிப்போட்ட ட்ராகன் நகரம். அதுபற்று அடுத்த பதிவில்.

      *கதை சுருக்கங்கள் நம்ம நண்பரும் அதிதீவிர டெக்ஸ் ரசிகருமான கிருஷ்ணா V.V. தன்னுடைய தளத்தில் ஒரு சிறப்பு பதிவு போட்டு கோடைமலர் 1987ஐ சிறப்பித்திருந்த பதிவில் இருந்து. அந்த சிறப்பு பதிவை இந்த லிங்கில் காணலாம்...

      Delete
    2. காமிக்ஸ் விமர்சனத்திலும் கிரிக்கெட்டா...

      ஆனாலும் பாராட்டுகள் டெக்ஸ்..:-)

      Delete
    3. எல்லாத்தையும் பாராட்டுற உங்க பெருந்தன்மைக்கு பாராட்டுகள் தலைவரே.

      Delete
    4. இதை உங்ளுக்கு மட்டுமே அனுப்பி வைத்த எடிட்டர் அவர்களை வன்மைநாக கண்டிக்கிறேன்...

      Delete
    5. நன்றி தலீவரே....

      கிரிக்கெட்டும், காமிக்ஸ்சும் பிரிக்க முடியா பந்தங்கள்....

      ரம்மி@ நானே இதை சேர்த்த கதையை ஒரு தடவை சொல்லி சாத்து வாங்கி உள்ளேன்....

      Delete
    6. ரூமி @ எனக்கு வரவில்லை. என்ன செய்யலாம்?

      Delete
    7. இது அந்த குரூப்போட சதி தான் பரணிஜி்...

      Delete
    8. 6கதைகளின் சுருக்கம் போட்டுள்ளேன்...
      காமிக்ஸ் பற்றி கலந்துரையாட நினப்பவர்கள் வரவேற்கப் படுகிறார்கள்...

      Delete
    9. @ டெக்ஸ் விஜய்

      கோடை மலரையும், அன்றைய காலகட்டத்து கிரிக்கெட் நிகழ்வுகளையும் கோர்வையாய் தொகுத்த விதம் அருமை!! அருமையான எழுத்துநடை!! மனமார்ந்த 'பாராட்டுகள்'!

      என்னிடமிருந்து தொலைந்துபோன புத்தகம் என்பதால் கதைச் சுருக்கங்களைப் படித்து பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது!!

      Delete
    10. டெக்ஸ் அடிச்சிட்டிங்க சிக்ஸ்

      Delete
    11. பாராட்டுகளை இது போன்ற நல்ல விவாதங்களையும், விமர்சனங்களையும், மற்றும்கட்டுரைகளையும் கொண்டு வரும் நண்பர்களுக்கும் தொடர்ந்து அளியுங்கள். இவை நண்பர்களை உற்சாகப்படுத்தி மேலும் பங்கு பெறத்தூண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடும் நண்பர்களை கம் ஆன், கம் ஆன் என்று கூறுவது போலத்ததான். பசங்க படத்துல இந்த கன்செப்டை அருமையா விளக்கி இருப்பாங்க.

      நண்பர்கள் உற்சாகப்படுத்தியதாலே கார்டடுன்களுக்கு மொழிபெயர்க்கும் வேலையை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவர் சிறப்பாக செய்கிறார். செம்மைப்படுத்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், உற்சாகப்படுத்த பாராட்டுதல்களையும் அள்ளி வழங்குங்கள். புறங்கூறும், வம்பிழுக்க வேண்டும் என்று வரும் பதிவுகளை தயவு செய்து தாண்டி செல்வோம். யாதும் பயனில்லை அவற்றால். அதில் செலவு செய்யும் சக்தியை பாராட்டுவதில் செலவு செய்வோம்.

      Delete
    12. அருமையான கருத்து MP அவர்களே!!

      பாராட்டுக்கள்!! :)

      ///புறங்கூறும், வம்பிழுக்க வேண்டும் என்று வரும் பதிவுகளை தயவு செய்து தாண்டி செல்வோம்.////

      தாண்டிச் செல்லும்போது சில சமயங்களில் கால் இடறி, மிதிக்க வேண்டியதாப் போயிடுதுங்களே மஹி ஜி?!!
      ஆனா, அதுகூட அவங்களுக்கு மஜாஜ் பண்ண மாதிரி இதமாத்தான் இருக்கும் போலிருக்கு! என்ஜாய் பண்றாங்க!! :D

      Delete
    13. ///கோடைமலர் 1987...///

      நான் பிறப்பதற்கு முன் வெளியான கோடைமலர் பற்றி அழகாக விவரித்த டெக்ஸ் வி ரா மாம்ஸ்க்கு முகஸ்துதிகளும் பாராட்டுகளும் பல.!!

      போனபதிவில் சிவப்பாய் ஒரு சொப்பனத்தை அற்புதமாக விவரித்த அறிவரசு ரவிக்கும் முகஸ்துதிகளும் பாராட்டுகளும் பலப்பபல.!!

      Delete
    14. // தாண்டிச் செல்லும்போது சில சமயங்களில் கால் இடறி, மிதிக்க வேண்டியதாப் போயிடுதுங்களே மஹி ஜி?!! //
      எவ்ளோ தூரம்தான் தாண்டறது,நமக்கும் கொஞ்சமாவது வயசாவாதா ஹி,ஹி.

      Delete
    15. // நான் பிறப்பதற்கு முன் வெளியான கோடைமலர் பற்றி அழகாக விவரித்த//
      ஹி,ஹி,நீங்களும் நம்ம கட்சிதானா.

      Delete
    16. பாராட்டுக்களுக்கு நன்றிகள் நண்பர்களே...!!!
      ரசித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      விசயத்தை தெரிவிக்கும் முறையில் முழுத் சேர்த்து இல்லையென்றாலும், அதை உங்களிடம் எனக்கு தெரிந்த வழியே சேர்ப்பித்து விடுகிறேன்...
      இன்னும் சிறப்பாக செய்ய முயல்வேன்.
      முன்பே சொன்னபடி இந்த இடத்தில் மினி பிரேக் விட்டு விட்டு ஏப்ரல் இதழ்களை ருசித்து விட்டு, மீண்டும் இந்த சீரியஸ்ஸை தொடரலாம்...

      Delete
    17. ரவி @ மாம்ஸ்தான் சோக்கு பண்றாப்புல... நீங்களுமா...
      எனக்கு 41அகவை என்றால் உங்களுக்கும் மாம்ஸ்க்கும் ஓரிரண்டு குறையலாம். அதற்காக 10 வயதையா குறைத்து சொல்வது...ஹி..ஹி...

      Delete
    18. பாராட்டுகளின் அருமையை அருமையாக விளக்கி சொன்ன எங்கள் ஷெரிப் அவர்களுக்கு

      மனமார்ந்த பாராட்டுகள்..

      Delete
  34. நாளைக்கு இதழ்கள் வந்தாலும் பாராட்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. அதைத் தவிர வேறு என்ன தெரியும் நமக்கு.... அதையே செய்வோம்...

      Delete
  35. Replies
    1. // 85😊 //

      8 + 5 = 13

      அதாவது XIII

      அதாவது 'இரத்தப்படலம்'

      இதனருகே ஒரு ஸ்மைலியைப் போட்டிருப்பது படைப்பாளியை இழிவுபடுத்தும் செயல்!!

      இதுபோன்ற செயல்களை எடிட்டர் இத்தளத்தில் அனுமதிப்பது அனேக மெளனப் பார்வையாளர்களைப் பாதிக்கும்! :P

      Delete
    2. செயலர்@👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

      Delete
    3. தேவுடா....கூரியர்களை இன்னிக்கே அனுப்பாது போய் விட்டேனே !!

      Delete
    4. ஈ வி சிரிச்சி மாளலை போங்க.

      Delete
    5. // இன்னிக்கே அனுப்பாது போய் விட்டேனே !! //

      விஜயன் சார், இதுக்குத் தான் போனவாரமே புத்தகங்களை அனுப்பி வையுங்கள் எனறோஎன்.

      Delete
    6. 124 1+2+4 = 7

      7 கூட 7 கூட்டினா 14

      அதுலோ்ந்து 1 கழிச்சா

      ஐய்யா 13 வந்திருச்சு

      😂😂😂😂

      Delete
    7. நண்பர்களே எலுமிச்சை விலை எகிறிக்கிடக்கிறது.இதுல நீங்க அடிக்கிற
      காமெடில மிடீல.

      Delete
    8. " மெளன பார்வையாளர்களை பாதிக்கும் " என்ற உண்மையை உரக்க சொன்ன எங்கள் செயலரே

      உங்களை பாராட்ட வார்த்நைகளே இல்லை..!

      Delete
  36. A . கௌபாய்
    B . ஆக்ஷன் & fantasy
    C . கார்ட்டூன்
    D . டிடெக்டிவ்
    E . கிராபிக் நாவல்
    F . புதுசாய் ஏதாவது ?

    ஹீ..ஹீ.. கம்முன்னு எல்லாத்துக்கும் தனித்தனி சந்தாவா போட்டுருங்க..

    ReplyDelete
    Replies
    1. 6பிரியாணி சாப்பிட முடியாது....

      பிரியாணி,
      சிக்கன்65,
      தந்தூரி,
      பிஸ் பிங்கர்,
      முட்டை மசால்,
      இப்படி இருப்பதே சிறப்பு...

      Delete
    2. ஒவ்வொரு பிரியாணியும் ஜீரணம் ஆனவாட்டி அடுத்த பிரியாணிய சாப்புடுங்க.

      Delete
    3. அனைத்து வகை படைப்புகளுக்கும் தனி தனி சந்தாவாக வெளியிட சொல்லி அட்டகாசமான யோசனையை சொன்ன கரூர் சரவணாருக்கு

      எனது மனமார்ந்த பாராட்டுகள்..:-)

      Delete
  37. அன்பு எடிட்டர் டிடெக்டிவ் ஜானருக்குத்தான் எனது 100-/- ம்

    ReplyDelete
  38. A . கௌபாய் 80%
    B . ஆக்ஷன் 10%
    C . கார்ட்டூன் No
    D . டிடெக்டிவ் 10%
    E . கிராபிக் நாவல் nahi
    F . புதுசாய் ஏதாவது ? lethu

    ReplyDelete
  39. ஆசிரியர் சார்@ பவளசிலை பெரிய சைசா??? பாக்கெட் சைசா சார்????

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுக்கும் நடுவிலியோ???

      Delete
    2. புதன் காலையில் சொல்லுவாரோ? இல்ல பொட்டிய பிரிச்சாத்தானா?
      சஸ்பென்ஸ் நல்லது.

      Delete
    3. பிரிச்சே பார்த்து விடலாம்....

      Delete
    4. பவள சிலை மர்ம இதழை எந்த அளவில் வெளீயிட்டு இருந்தாலும்

      எங்களது மனமார்ந்த பாராட்டுகள் சார்..

      Delete
  40. அங்கே நள்ளிரவாக இருக்கும் என்ற நம்மபிக்கையில் தூங்க செல்கிறேன் தலீவரே... அதிகாலையில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நள்ளிரவில் என்னை விழீக்க வைக்காமல் அதிகாலையீல் சந்திக்க காத்திருக்கும் தங்களின் நல் மனதுக்கு

      எனது மனமார்ந்த பாராட்டுகள் ரம்மி :-)

      Delete
  41. 2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும் genre ஏதுவாக இருக்கும் ?

    F .புதுசா ஏதாவது ...


    கீழ்க்கண்ட ரசனைகளும் எதற்கு எத்தனை சதவிகிதம் தந்தால் ஓ.கே. என்று படுகிறது ?
    கௌபாய் ...35%
    ஆக்ஷன் & பேண்டசி .. 10 %
    கார்ட்டூன்..... 25%
    டிடெக்டிவ் ....10%
    கிராபிக் நாவல் ...10 %
    புதுசா ஏதாவது ....10%

    ReplyDelete
  42. விஜயன் சார் ஜம்போ காமிக்ஸ் மற்றும்
    F&Fசந்தா
    மாத நடுவில் (15 -- 16) தேதிகளில்
    வருவது போல் வைத்தால் மாதம்
    இரண்டு பொட்டி வந்தமாதிரி இருக்கும்.
    எப்படி நம்ம அகுடியா.(டெக்ஸ் Ok)

    ReplyDelete
    Replies
    1. இந்த ரெண்டு பொட்டி ஐடியாக்களுக்கு பதில் சொல்லி எடிட்டர் சாருக்கு அயர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை கணேஷ் சார் ,ஆனால் அவர் பதில்களை படித்து படித்து நிறைய பேருக்கு அயர்ச்சி ஏற்பட்டு இருக்க கூடும் ...மாசம் ரெண்டு கூரியர் செலவுகளை வாசகர்கள் ,கம்பெனி ரெண்டு பேரும் தாங்க மாட்டார்கள் ..

      Delete
    2. @ ganesh kv ஜி

      நேரிலும், ஃபோனிலும் இதைப்பற்றி நாம் நிறையவே டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோமே?!! எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு எளிதாக மறந்துவிடுவது உங்கள் குணங்களில் ஒன்று என்பதை நானறிவேன்!
      ஆனால்,இது வரமா சாபமா என்பதுதான் புரியவில்லை!!

      Delete
    3. நன்றி ஈ வி.
      இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு நப்பாசை.
      13 கதய படிச்சு படிச்சு அத தவிர மற்ற
      எல்லாம் அடிக்கடி மறந்து போகுது.
      ஒரு விதத்தில் வரம்
      ஒரு விதத்தில் சாபம்.

      Delete
    4. கணேஷ் சார்...நாம எல்லோரும் நல்லவங்க தான் .ஆனா ஒண்ணு பாண்டவர்களை ஆதரிக்கனும் ,அல்லது கெளரவ்வர்களை ஆதரிக்கனும் .ரெண்டுக்கும் ஆதரவு கொடுத்துட்டு இருந்தா பினிஷீங் நல்லாருக்கும்.

      எண்டிங் நல்லாருக்காது ..:-)

      Delete
  43. என்னுடைய தேர்வு;
    B . ஆக்ஷன் & fantasy
    D . டிடெக்டிவ்
    F . புதுசாய் ஏதாவது...

    ReplyDelete
  44. A . கௌபாய் - 25%
    B . ஆக்ஷன் & fantasy -25%
    C . கார்ட்டூன் - 15%
    D . டிடெக்டிவ் - 15%
    E . கிராபிக் நாவல் -10%
    F . புதுசாய் ஏதாவது ? -10%

    பவள சிலை - அட்டை படம் - செம

    ReplyDelete
    Replies
    1. பவள சிலை - அட்டை படம் - செம +1

      Delete
  45. Expecting more on the below 3
    D . டிடெக்டிவ்
    E . கிராபிக் நாவல்
    F . புதுசாய் ஏதாவது ?

    ReplyDelete
  46. A . கௌபாய் - (20%)
    B . ஆக்ஷன் & fantasy (20%)
    C . கார்ட்டூன் (2%)
    D . டிடெக்டிவ் (10%)
    E . கிராபிக் நாவல் (18%)
    F . புதுசாய் (30%)

    ReplyDelete
  47. ஆசிரியர் mind voice ..
    "ஆஹா.. இங்க நடக்கிற குடுமி பிடிய குறைக்கனும்னா, ஒரே வழி.. இனிமே வாரம் ஒண்ணு ரெண்டு புக் அனுப்பனும் போல..'

    ReplyDelete
  48. A . கௌபாய் 12
    B . ஆக்ஷன் & fantasy 12
    C . கார்ட்டூன் 24
    D . டிடெக்டிவ் 12
    E . கிராபிக் நாவல் 6
    F . புதுசாய் ஏதாவது ? 6

    அவ்ளோதான் சார். போதும். அப்புறமா மறு பதிப்புகள், புக் ஃபேர் ஸ்பெஷல் எல்லாம் தனியா பார்த்துக்கலாம் சார்.

    கனவு காணுங்கள் - அப்துல் கலாம்;
    கனவு மெய்ப்பட வேண்டும் - காமிக்ஸ் ரசிகர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கௌபாய் 20
      ஆக்சன் 50
      கார்ட்டூன் 10
      டிடக் 5
      கி நா 10
      புதுசா 5...கடல் கொள்ளையர் , மர்மம் , பிரமிட் , பெர்முடா , விலங்குக...call of wild buck போல , விமானந்தாங்கிக....

      Delete
  49. A.கௌபாய் - 35
    B.ஆக்ஷன் & pantasy - 15
    C.கார்ட்டூன்- 15
    D.டிடெக்டிவ்- 20
    E.கிராபிக் நாவல்- 10
    F.புதுசாய் எதாவது- 5

    ReplyDelete
  50. A . கௌபாய் (20%)
    B . ஆக்ஷன் & fantasy (15%)
    C . கார்ட்டூன் (10%)
    D . டிடெக்டிவ் (35%)
    E . கிராபிக் நாவல் (10%)
    F . புதுசாய் ஏதாவது ? (10%)

    ReplyDelete
  51. Radja27 March 2018 at 02:28:00 GMT+5:30
    A . கௌபாய் (15%)
    B . ஆக்ஷன் & fantasy (20%)
    C . கார்ட்டூன் (15%)
    D . டிடெக்டிவ் (20%)
    E . கிராபிக் நாவல் (15%)
    F . புதுசாய் ஏதாவது ? (15%)

    ReplyDelete
  52. நண்பர்களே, இவைகள் நமது smurfs கதைகளில் வரும் சில smurfs ஆங்கில பெயர்! இவை இதுவரை நமது காமிக்ஸ்ஸில் வராத சில smurfs. இவற்றிக்கு தமிழில் பேர் சூட்டலாமா?

    Actor Smurf
    Alchemist Smurf
    Archaeologist Smurf/Timid Smurf
    Astro Smurf
    Barber Smurf
    Camper Smurf
    Clockwork Smurf
    Clockwork Smurfette
    Clueless Smurf
    Coalminer Smurf
    Cobbler Smurf
    Complimentary Smurf


    ReplyDelete
    Replies
    1. Alchemist இரசவாதி ஸ்மர்ப்ஸ்
      Actor நடிகன் ஸ்மர்ப்ஸ்
      Archaeologist ஆர்க்கி ஸ்மர்ப்ஸ்
      Complimentary புகழ்ச்சி ஸ்மர்ப்ஸ்
      Barber முடிவெட்டி ஸ்மர்ப்ஸ்
      Clockwork சுறுசுறுப்பு ஸ்மர்ப்ஸ்

      Delete
    2. Complimentary புகழ்ச்சி/ஐயா சாமி ஆளைவிடுங்க ஸ்மர்ப்ஸ்

      Delete
    3. இதுவரை அறியாத இருந்த " சமர்புகளை " அறியவைத்த பெங்களூர் பரணி நண்பரே

      தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

      Delete
    4. செம பரணி... சூப்பர்...
      பாராட்டுகள் நண்பரே...

      Delete
    5. நீங்க இப்படி பாராட்டியதால் மேலும் சில ஸ்மர்ப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்

      Flying smurfs
      Flighty smurfs
      Farmer smurfs

      நீங்க மறுபடியும் பாராட்டி மேலும் சில ஸ்மர்ப்ஸ்களை பகிர வேண்டிய நெருக்கடியை எனக்கு தயவுசெய்து ஏற்படுத்தி விடாதீர்கள்.

      Delete
    6. பாராட்டுகள் PFB,
      உங்ககிட்ட இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் PFB,ஹி,ஹி.

      Delete
    7. எல்லா ஸ்மர்ஃப் களுக்கும் சொல்லத்தெரியலேன்னாலும் ஏதோ எனக்குத் தெரிஞ்ச ஒண்ணுரெண்டு ஸ்மர்ஃப்க்கு சொல்கிறேன் பரணி ..!

      Actor smurf - வருங்கால முதல்வர் பொடியன்.!
      (நடிகர் பொடியன்னா ..அப்புறம் அதுதானே ..!!)

      Clueless smurf) லயன்ப்ளாக் பொடியன்!
      (என்ன நடக்குது, எதுக்கு நடக்குது, என்ன பண்றது, எதுக்கு பண்றது, எதை எழுதறது, எதை நம்புறதுன்னே தெரியாம திருதிருன்னு க்ளூவே கிடைக்காம முழிக்கிற பொடியன்னு வெச்சிக்குவோமே ..)

      Archaeologist smurf - தலீவர் பரணி பொடியன்.!

      (ஏன்னா பதுங்கு குழி ஸ்பெசலிஸ்ட் தலீவர்தானே.! தொல்பொருள் ஆராய்ச்சி பண்றாருன்னு தப்பா நினைச்சிடக்கூடாது.)

      Complimentary smurf - முகஸ்துதி பொடியன் ..!!

      ஹிஹிஹி ...😝😝😝

      Delete
    8. அறிவரசு @ உங்கள் பாராட்டுக்கள் என்னை உற்சாகப்படுத்தி ஸ்மர்ப்ஸ் மேல் உள்ள ஆர்வத்தை பலமடங்கு உயர்த்திவிட்டது. உங்களுக்காக சில ஸ்மர்ப்ஸ்

      Fakir smurfs
      Fisher smurfs - மீன்பிடி ஸ்மர்ப்ஸ்/பிஸ்சர் ஸ்மர்ப்ஸ்
      Finance smurfs - பொருளாளர் ஸ்மர்ப்ஸ்

      Delete
    9. சூப்பர் கண்ணா.
      நம்ப விஜய் என்ன பெயர் வைக்கிறார் எனப் பார்க்கலாம்.

      Delete
    10. இதிலொரு சின்ன சுவாரஸ்ய குறுந்தகவல் !

      Smurfs படைப்பாளிகள் - ஒவ்வொரு பொடியனுக்கும் தமிழில் நாம் வழங்கும் பெயர்களையும் கேட்டு வாங்கி, அவர்களது database -ல் பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள் ! So பீப்பீ smurf என்றும், பீம்பாய் smurf என்றும் நாம் பெயர் வைக்கும் போதெல்லாம் - அதனை ஞாபகமாய்க் கேட்டு வாங்கி விடுகிறார்கள் !!

      உலகின் ஒவ்வொரு மொழியிலும் smurfs வெளியாகும் போதெல்லாம் இதுவே நடைமுறையாம் !!

      Delete
    11. //Archaeologist smurf - தலீவர் பரணி பொடியன்.!

      (ஏன்னா பதுங்கு குழி ஸ்பெசலிஸ்ட் தலீவர்தானே.! தொல்பொருள் ஆராய்ச்சி பண்றாருன்னு தப்பா நினைச்சிடக்கூடாது.)//

      :D :D :D

      Delete
    12. ஹைய்யா.!
      அப்படீன்னா மேலே உள்ள நான்கு பெயர்களையும் அனுப்பிடுங்க சார்.! ;-)

      Delete
    13. /ஒவ்வொரு பொடியனுக்கும் தமிழில் நாம் வழங்கும் பெயர்களையும் கேட்டு வாங்கி, அவர்களது database -ல் பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள் // வாவ்... பொடியர்களை முதன் முதலில் தமிழுக்கு கொண்டுவந்து ஒரு மொழி நடையை ஆரம்பித்துவைத்த நண்பர்களுக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றி.

      Delete
    14. இது என்ன ..போற போக்கை பாத்தா நம்ம நாயகர்களை விட சமர்ப் நிறைய்ய இருப்பாங்க போல இருக்கே...

      போதூங்க போதும்..அப்புறம் ஆசிரியர் ஒவ்வொரு மாசத்துக்கும் ஒரு சமர்பை போட்டுற போறாரு..:-(

      Delete
  53. கிராபிக் நாவல் மற்றும் புதுசா ஏதாவது

    ReplyDelete
  54. action & fantasy 30%
    graphic novels 20%
    cartoon 10%
    detective 10%
    cowboy 10%
    new 20%

    ReplyDelete
  55. B,D,E,F equal share.இவற்றில் எத்தனை வந்தாலும் ஓகே.

    ReplyDelete
  56. A . கௌபாய் 20%
    B . ஆக்ஷன் & fantasy 20%
    C . கார்ட்டூன் 20%
    D . டிடெக்டிவ் 0%
    E . கிராபிக் நாவல் 20%
    F . புதுசாய் ஏதாவது ? 20%

    ReplyDelete
  57. Padmanaban ranadurai
    உங்கள் DP க்காககவே உளம் கனிந்த
    வணக்கம்.
    உலகில் ஒப்பற்ற பொன்மனசெம்மல்.

    ReplyDelete
  58. புதன் எதிர்கொள்வோம்

    ReplyDelete
  59. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
    ஆனால் நமக்கோ இரண்டுமே கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்..சரியாக சொன்னீர்கள் புதன் அன்று புத்தங்களை அனுப்பும் ஆசிரியருக்கும் ,அவர்தம் அலுவலர்களுக்கும் " மனமார்ந்த பாராட்டுகள் "

      இந்த பழமொழியை நினைவுபடுத்திய தங்களுக்கும் பாராட்டுகள் கணேஷ் ஜீ...:-)

      Delete
  60. Radja27 March 2018 at 02:28:00 GMT+5:30
    A . கௌபாய் (20%)
    B . ஆக்ஷன் & fantasy (15%)
    C . கார்ட்டூன் (10%)
    D . டிடெக்டிவ் (35%)
    E . கிராபிக் நாவல் (10%)
    F . புதுசாய் ஏதாவது ? (10%)

    ReplyDelete
  61. 2019-ல் புத்தக எண்ணிக்கையில் எனது கருத்து -

    A . கௌபாய் - 15 Book
    B . ஆக்ஷன் & fantasy - 12 Book
    C . கார்ட்டூன் - 4 Book
    D . டிடெக்டிவ் - 6 Book
    E . கிராபிக் நாவல் - 6 Book
    F . புதுசாய் - 9 Book

    - Total 52 Books

    * இவை புத்தக எண்ணிக்கையில் மட்டுமே. ஒரு புத்தகத்தின் விலையை
    பொருத்து எத்தனை கதைகள் வேண்டுமானாலும் வெளியிடலாம். இந்த
    விஷயத்தில் எடிட்டரை வாசகர்கள் யாரும் நிர்பந்திக்கக்கூடாது.

    * “புதுசாய் ஏதாவது” என்பதில், கௌபாய், ஆக்‌ஷன், பேண்டஸி, டிடெக்டிவ்
    என்று எது வேண்டுமானலும் கலவையாக வரலாம். இதிலும் எடிட்டரை
    நிர்பந்திக்காமல் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.

    ** இவையனைத்தும் எனது சொந்த கருத்து மட்டுமே. கருத்து சொல்லிவிட்டோம் எடிட்டர் சமூகம் இதை அப்படியே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் வழக்கம்போல் எதிர்பார்ப்பதில்லை.

    ReplyDelete
  62. இந்த மாத இதழகள் list pls

    ReplyDelete