நண்பர்களே,
வணக்கம். பு.வி.யின் பொருட்டு சீரியஸும், ஜாலியுமாய்ப் பின்னூட்டங்கள் ஓடி வரும் இந்த கணத்தில் - இன்றைய பொழுதை ஈஸ்ட் டவுனில் நம்மவர் XIII -உடன் கழித்தேன்! Oh yes - "இரத்தப் படலம் - பாகம் 1-ன் உள்ளே மேலோட்டமாய்ப் புகுந்தவனுக்கு அதனை முழுவதுமாய் மேயாது விட மனம் ஒப்பவில்லை ! 32 ஆண்டுகளுக்கு முன்பாய் இந்தத் தொடரானது இத்தனை பெரிய அடையாளத்தை நம் மத்தியில் விட்டுச் செல்ல வல்லது என்பதைக் கிஞ்சித்தும் அறியாதவனாய் இதனுள் நீச்சல் அடித்த நாட்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது லேசான 'கெக்கே பிக்கே' தான் தோன்றுகிறது ! இன்றைய க்ரீன் மேனர்களும் ; நிஜங்களின் நிசப்தங்களும், அண்டர்டேக்கர்களும் நமது (காமிக்ஸ்) புரிதல்களை நிறையவே உசத்தி விட்டிருப்பது யதார்த்தம் ! ஆனால் அன்றைக்கோ - எனக்கு பரக்கப் பறக்க முழிக்க மட்டுமே தோன்றியது - இந்தக் கதைக்களத்தின் தன்மையைப் பார்த்து ! சம்மர் கிராப் அடித்த ஏதோவொரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோ போலும் ; செம fight சீன்ஸ் உள்ளன ; படங்களும் பிரமாதம் ; நிச்சயம் ஹிட் அடிக்குமென்ற யூகத்தில் திரிந்தவனுக்கு XIII தந்த அனுபவம் ஆயுளுக்கும் மறக்கவியலா ஒன்று ! இன்றைக்கும், இத்தனை காலத்துக்கும் பின்பாய் இந்த மனுஷன் இப்படியொரு தாக்கத்தை நம்முள் கொணர்கிறாரெனில் - திரைக்கதையின் வலிமைக்கு ஒரு மெகா சல்யூட் அடிப்பதைத் தாண்டி வேறென்ன செய்வது ?
எனக்கும் நமது நண்பர் XIII -க்கும் இதில் ஒத்துப் போகிறதோ இல்லியோ - அந்த ஞாபக மறதி விஷயத்தில் மட்டும் செமையாக ஒத்துப் போகும் ! So கதையின் முதல் பாகத்தினுள் புகுந்திடும் போது - முக்கிய கணங்கள் மட்டுமே நினைவில் தங்கி நிற்க, பாக்கி சகலமும் ரொம்பவே பிரெஷ்ஷாகத் தென்பட்டன! So என்னைப் போலவே இன்னும் நிறைய 'வெண்டக்காய்ப் பார்ட்டிகள்' நம்மிடையே இருக்கும் பட்சத்தில் -காத்திருக்கும் XIII - The Collection ஒரு அசாத்திய வெற்றியைக் காணக் கூடுமென்பேன்! டப்ஸா விடாது சொல்லுங்களேன் பார்க்கலாம் - உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? கோட்டை அழிச்சிடுங்க...முதல்லேருந்து பரோட்டா சாப்பிடலாம் !!
எனக்கும் நமது நண்பர் XIII -க்கும் இதில் ஒத்துப் போகிறதோ இல்லியோ - அந்த ஞாபக மறதி விஷயத்தில் மட்டும் செமையாக ஒத்துப் போகும் ! So கதையின் முதல் பாகத்தினுள் புகுந்திடும் போது - முக்கிய கணங்கள் மட்டுமே நினைவில் தங்கி நிற்க, பாக்கி சகலமும் ரொம்பவே பிரெஷ்ஷாகத் தென்பட்டன! So என்னைப் போலவே இன்னும் நிறைய 'வெண்டக்காய்ப் பார்ட்டிகள்' நம்மிடையே இருக்கும் பட்சத்தில் -காத்திருக்கும் XIII - The Collection ஒரு அசாத்திய வெற்றியைக் காணக் கூடுமென்பேன்! டப்ஸா விடாது சொல்லுங்களேன் பார்க்கலாம் - உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? கோட்டை அழிச்சிடுங்க...முதல்லேருந்து பரோட்டா சாப்பிடலாம் !!
அப்புறம் ஏப்ரலின் சந்தா C சார்பாய்க் களமிறங்கும் (புது) சிக் பில் & கோ.வின் அட்டைப்பட முதல்பார்வை இதோ ! As in recent times - ஒரிஜினல் ராப்பரே ; மெலிதான மெருகூட்டல்களோடு ! And உட்பக்கத்துப் preview -ம் கீழே உள்ளது !
Before I sign off, உங்களின் ஞாபகத் திறனுக்கு இன்னுமுமொரு சோதனை ! நமது recent ஆன சிலபல ஆண்டுகளுக்குள் இன்னொரு கதையிலுமே ஒரு பசு மாட்டுக்கென சீன்கள் சில இருந்தன ! எந்த இதழ் அது ? அந்தப் பசுவின் பெயரென்ன ? சொல்லுங்கண்ணே - பிட் அடிக்காமல் ?
Bye all !! See you around !
Bye all !! See you around !
Please send the books
ReplyDeleteWaiting for kid ஆர்டின் & கோ
Deleteஇந்த மாசம் சின்ன புத்தகங்களாக வந்ததால் காமிக்ஸ் படித்து பல மாதங்கள் ஆனது போல் உள்ளது. எனவே ஏப்ரல் புத்தகங்களை வரும் சனிக்கிழமை எங்கள் கைகளில் கிடைப்பது போல அனுப்பி வையுங்கள் சார்.
Deleteகடைகளில் விற்பனைக்கு அவகாசம் ; புது இதழ்களின் வருகையைத் தொடர்ந்து முந்தைய மாதத்து இதழ்களுக்கான வசூல் ; என்று நிறைய சமாச்சாரங்கள் உள்ளன சார் ! பொறுமையே ஜெயம் !
Deleteசந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புங்களேன் சார் என் சொல்ல ஆசைதான்.. உங்கள் எண்ணங்களை புரிந்து கொண்டேன்; காத்திருப்பேன்.
Delete2
ReplyDelete4th
ReplyDelete// So என்னைப் போலவே இன்னும் நிறைய 'வெண்டக்காய்ப் பார்ட்டிகள்' நம்மிடையே இருக்கும் பட்சத்தில் -காத்திருக்கும் XIII - The Collection ஒரு அசாத்திய வெற்றியைக் கணக்கு கூடுமென்பேன்! டப்ஸா விடாது சொல்லுங்களேன் பார்க்கலாம் - உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? //
ReplyDeleteஎன்னது இரத்த படலமா? அப்படியா? எப்ப வந்தது எனக்கு சொல்லவே இல்ல? இது தான் சார் என் நிலைமை:-)
ஷப்பாடி !!!
Deleteநான் படித்த உடன் பொதுவாக அதனை சில நாட்களில் மறந்து விடுவேன். அதுவும் கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால்
Deleteஅவர்கள் பெயரை நினைவில் வைப்பதே கடினம்; அதனால் படித்த உடன் மறந்து விடுவேன். :-) எப்படி.
கொசுறு தகவல்:- படிக்கிற காலத்தில் exam hallஐ விட்டு வெளியே வந்த உடன் படித்ததை எல்லாம் மறந்து விடும் ரகம் நான்:)
Deleteகொஞ்சம் ஊருபக்கம் வாங்க ஞாபகப்படுத்துறேன்.....🤒🤕
Deleteபழனிவேல் @ அதற்கு தான் வண்ணத் தொகுப்பு வருதுல்ல; அதப்படிப்போம்ல :-)
Delete@ PfB
Deleteவருஷத்துக்கு நாலு புக்கு மட்டும் வாங்குங்க போதும்! அதையே திரும்பத் திரும்பப் படிச்சுக்கிடலாம்!!
///கொசுறு தகவல்:- படிக்கிற காலத்தில் exam hallஐ விட்டு வெளியே வந்த உடன் படித்ததை எல்லாம் மறந்து விடும் ரகம் நான் //
எனக்கு அந்தப் பிரச்சினை கிடையாது! படித்தால்தானே மறப்பதற்கு!! ;)
கல்லூரித் தேர்வில் சிலசமயங்களில், ராஜேஷ்குமார் நாவலை ஆங்கிலத்தில் எழுதிவைத்து, அதற்கு மார்க்கும் வாங்கியிருக்கிறேன் நான்!
///கொசுறு தகவல்:- படிக்கிற காலத்தில் exam hallஐ விட்டு வெளியே வந்த உடன் படித்ததை எல்லாம் மறந்து விடும் ரகம் நான்:)///
Deleteக்கும்.. நாங்க ஹாலுக்குள்ளே போறப்பவே மறக்கிற ஜாதி..
///சிலசமயங்களில், ராஜேஷ்குமார் நாவலை ஆங்கிலத்தில் எழுதிவைத்து, ///
Deleteகாப்பிரைட் வாங்கிட்டீங்களா .!? ;)
///க்கும்.. நாங்க ஹாலுக்குள்ளே போறப்பவே மறக்கிற ஜாதி..///
Deleteடைனி ஹாலுக்கு போகாமே, சரியா ஞாபகம் வெச்சி எக்ஸாம் ஹாலுக்கு போனதுக்கே உங்களுக்கு நூறு மார்க் போட்டிருக்கணும் சரோ.! ;)
///டைனி ஹாலுக்கு போகாமே, சரியா ஞாபகம் வெச்சி எக்ஸாம் ஹாலுக்கு போனதுக்கே உங்களுக்கு நூறு மார்க் போட்டிருக்கணும் சரோ.! ///
Deleteகிட்!! :))))))))
உங்களைப் பற்றி உண்மையைச் சொன்னதற்கு நன்றி சாமிகளா:-)
Deleteஒரே கணக்கு பரிட்சைய 3 வாட்டி எழதிருக்கேன்
Delete//எனக்கு அந்தப் பிரச்சினை கிடையாது! படித்தால்தானே மறப்பதற்கு!! ;)
Deleteகல்லூரித் தேர்வில் சிலசமயங்களில், ராஜேஷ்குமார் நாவலை ஆங்கிலத்தில் எழுதிவைத்து, அதற்கு மார்க்கும் வாங்கியிருக்கிறேன் நான்!//
:D :D :D :D :D
//ஒரே கணக்கு பரிட்சைய 3 வாட்டி எழதிருக்கேன்//
Deleteha ha
இப்போது தான் புரியுது நம்ம மறதிகாரரின் தீவிர ரசிகர் தாங்கள் ஏன் என்று :P :P :P
கடல்நலமா ..? எப்போ வெளிநாட்ல இருந்து வந்திங்க...?
Delete@palanivel arumugam
Deleteநலம் சகோதரரே
தாங்களும், தங்கள் துணைவியாரும் நலமா ?
மற்றும் இரு தேவதை வாண்டூஸ் எப்பிடி இருக்கின்றனர்
அதெல்லாம் ஒன்றும் இல்லை சகோதரரே
கொஞ்சம் வேலை பளு , அப்புறம் வீட்டில் நெட் கனக்க்ஷன் இல்லை
வாவ்,சர்ப்ரைஸ் பதிவு.
ReplyDeleteஉள்ளேன் ஐயா ..!
ReplyDeleteEast Town?எந்த மாநிலம் சார்?
ReplyDeleteமஹி ஜி, எடிட்டர் சார் XIII கதையில் உள்ள ஊரை குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். அவர் எப்போதோ, இந்தியா திரும்பியிருக்க வேண்டும். சரிதானே சார் !
DeleteOui m'sieu !!!
Delete🙏🙏🙏🙏
Delete///Oui m'sieu ///
Deleteஇப்பல்லாம் உங்களுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வந்துடுது எடிட்டர் சார்! MPஅப்படி என்ன கேட்டுட்டார்னு அவரை இந்தத் திட்டு திட்றீங்களாம்?!!
லொள்ளு புடிச்ச EV!!! :) "Oui m'sieu" அப்படின்னா ஈவிய ஆவியாக்க பு.வி ய மொழி பெயர்க்க அனுப்பியாச்சுன்னு அர்த்தம்...
Delete///ஈவிய ஆவியாக்க பு.வி ய ///
Delete*வர்ரான்பாரு வர்ரான்பாரு வீராச்சாமி
இவன் வந்துபுட்டா நிக்கிறது யாரு காமி*
ஷெரீப் @
உங்க கமெண்ட்டைப் படிச்சப்போ இந்தப்பாட்டு என் காதுக்குள் ஒலித்த மாதிரி இருந்ததே ..!?, என்ன காரணமாக இருக்கும்.!?
Oui m'sieu - yes, yes
Deleteஇரத்த படலம் முதல் பாகம் மறக்க முடியுமா சார்?
ReplyDeleteவாங்க செந்தில்.
ReplyDeleteநம்பர் போடுகிற அளவு வந்து விட்டீர்கள். அப்படியே நமது காமிக்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள் விரைவில்.
ReplyDeleteபுலன் விசாரணை தர்க்கம் பின்பாய் கலர் எடிஷன்க்கு எப்படியாவது பணம் ரெடி செய்து அனுப்பி விட வேண்டும் என்ற வெரி பிடித்து விட்டது.
ReplyDeleteஇ.ப கலரில் படித்தே ஆக வேண்டும்.
இதற்குத்தானே ஆசைப்பட்டோம்
Deleteபால குமாரா!!!
///டப்ஸா விடாது சொல்லுங்களேன் பார்க்கலாம் - உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? ///
ReplyDeleteநல்ல்லா ஞாபகமிருக்கு சார்னு சொல்லலாம்னா, மனசாட்சி உறுத்துதே..!
முழுத்தொகுப்பையும் ஐந்து முறைகளுக்கு குறையாமல் படித்திருக்கிறேன்.!
ஆனாலும் முழுக்கதையும் நினைவில் இல்லையென்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் சார்.!
ஆனாலும் முக்கிய சம்பவங்கள் பலவும், பெட்டி, ஜோன்ஸ், ஜூடித், ஜூலியானா போன்ற முக்கிய கதாப்பாத்திரங்கள் பலரும் நன்றாக நினைவில் இருக்கிறார்கள்.
இந்த வியாதிக்கு "பெமினோபோபியா" என்று பெயர் !! லேட்டஸ்ட் ஆராய்ச்சியின்படி உறுதியான ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பூரிக்கட்டையால் மட்டுமே இந்த நோயைச் சரி செய்ய இயலுமாம் !
Deleteமரியாவ விட்டுட்டிங்களே கிட் மாமா...?
Deleteஸ்டைன்லஸ் ஸ்டீலா ...அய்யகோ!
Deleteஅப்புறம் நானும் பழசெல்லாம் மறந்து XIII க்கு அடுத்து XIV ன்னு ஆயிடுவேனே சார்.!
ஹிஹி .. அதிலும் ஒரு வசதி இருக்கத்தான் செய்கிறது ..!!:)
பெலிசிட்டி பாப்பாவை மறந்து விட்டீங்கலெ kid.
DeleteIrina செல்லம் அதையும் விட்டு விட்டீங்க ஜி.
Delete///பெலிசிட்டி பாப்பாவை மறந்து விட்டீங்கலெ kid.///
Deleteஅதானே Sridhar sir. .!
ஜிம் காரிங்டன், பெலிசிட்டி ...எப்படி மறந்தேன்.!
இப்பவே எனக்கு XIV ஆகும் தகுதி கொஞ்ச்சம் கொஞ்ச்சம் வந்திடுத்து போலயே.! ;)
இரினா கொன்னுடுவா அதான்
Deleteமரியா ...இரினா ...போதும் போதும் லிஸ்ட்டு பெருசா போய்ட்டு இருக்கு..!
Deleteஆனா ஒருவிதத்துல பெரிய நிம்மதியா இருக்கு ஃப்ரண்ட்ஸ்.!
நிறைய முக்கிய பாத்திரங்கள் நினைவில் இல்லாததால், ரத்தப்படலத்தை மீண்டும் (கலரில்) படிக்க நான் முழுத்தகுதியுடன் இருக்கிறேன். .!
என் கடை சப்ளையர்கள்ல ஒரு பார்ட்டி ஸ்டீல் பூரிக்கட்டை சாம்பிள் காட்டினார் சார். நார்மல் மரத்திலான கட்டையை விட சன்னமா இருக்கு; ஆனா நவம்பர் மாச லக்கி கதை ஒற்றைக்கை பகாசூரனில் வருவது போல கட்டை உடையாது, பன்னு பிஞ்சு ஜாம் லிட்டர் கணக்கில் வருவது உறுதி...
Deleteபல ஆண்களை நினைத்து நான் ஆர்டர் தர்ல...
கிட் மாம்ஸ்க்காக ஒன்று ஆர்டர் போடனும் போல தெரியுதே...!!!
ஜிம் காரிங்டன், பெலிசிட்டி ...எப்படி மறந்தேன்.!
Deleteஇப்பவே எனக்கு XIV ஆகும் தகுதி கொஞ்ச்சம் கொஞ்ச்சம் வந்திடுத்து போலயே.! ;)
கொஞ்சம் இல்ல இன்னும் அதிகம் அது கிம் காரிங்டன்.
///கொஞ்சம் இல்ல இன்னும் அதிகம் அது கிம் காரிங்டன்.///
Deleteநல்லவேளை கும் காரிங்டன்னு சொல்லாம போனேனே.!! ;-)
/// கிட் மாம்ஸ்க்காக ஒன்று ஆர்டர் போடனும் போல தெரியுதே...!!!///
க்கும். .! இந்தமாதிரி நல்லகாரியம்னா சொந்த செலவுலயே வாங்கிக் கொடுப்பீங்களே..!? ;)
பகல் கனவு ஸ்மர்ப்ஸ்க்கு எங்கள் வீட்டு பொடியன் வைத்த பெயர் பனங்கிழங்கு ஸ்மர்ப்ஸ்.
ReplyDeleteஆஹா ..! நம்ம செல்லக்குட்டி ஆர்டின் கௌபாயா அவதராம் எடுத்திருப்பார் போலிருக்கே ..!!
ReplyDeleteஆர்வம் தாங்லையே ...சீக்கிரம் புத்தகங்களை அனுப்புங்க சார் ப்ளீஸ் ..!!
ஸ்மர்ப்ஸ் சம்மந்தப்பட்ட கேள்வி:- ஆல் இன் ஆல் ஸ்மர்ப்ஸ் மற்றும் மெக்கானிக் ஸ்மர்ப்ஸ் இருவரும் ஒரே நபரா ? இல்லை இரு வேறு நபர்களா?
ReplyDelete///ஆல் இன் ஆல் ஸ்மர்ப்ஸ் மற்றும் மெக்கானிக் ஸ்மர்ப்ஸ் இருவரும் ஒரே நபரா ? இல்லை இரு வேறு நபர்களா?///
Deleteஎனக்கும் அந்த ட்ரெஸ்கோடில் ஒரு சந்தேகம் உண்டு.! கேரேஜில் வேலை செய்வதுபோல அவ்வபோது ஒரு ஸ்மர்ஃப் ட்ரெஸ் பண்ணியிருப்பார் . அவர்தான் மெக்கானிக் ஸ்மர்ஃப்பா இருக்குமோன்னு .!
ஆனால் ஆல் இன் ஆல் ஸ்மர்ஃப் மற்ற ஸ்மர்ஃப்களைப் போலத்தான் ட்ரெஸ் பண்ணியிருப்பார்.!
//ஆனால் ஆல் இன் ஆல் ஸ்மர்ஃப் மற்ற ஸ்மர்ஃப்களைப் போலத்தான் ட்ரெஸ் பண்ணியிருப்பார்//
Deleteஆனால் அவர்கள் ஒர்க் ஷாப் ஒரே மாதிரி உள்ளது.
///ஆனால் அவர்கள் ஒர்க் ஷாப் ஒரே மாதிரி உள்ளது ///
Deleteஆமால்ல...!!
அப்படீன்னா அந்த மேல்சட்டையை ட்ரைவாஷூக்கு போட்டிருந்த சமயத்துல இந்த கதையில தோன்றினார்னு எடுத்துக்குவோம்.!
இல்லேன்னா இப்படி வெச்சிக்குவோம் பரணி.!
மேல்ச்சட்டை போட்டிருந்தா மெக்கானிக் ஸ்மர்ஃப்.., போடலேன்னா ஆல்இன்ஆல் ஸ்மர்ஃப்.!
இன்னமும் உங்களுக்கு சந்தேகம் தொடருதுன்னா, பீயோவுக்கே போன் அடிச்சி கேட்டுடுறதுதான் ஒரே வழி.!;-)
// இன்னமும் உங்களுக்கு சந்தேகம் தொடருதுன்னா, பீயோவுக்கே போன் அடிச்சி கேட்டுடுறதுதான் ஒரே வழி.!;-) //
Deleteஅந்த அளவுக்கு வசதி இல்லை! நமக்குதான் நம்ம ஆசிரியர் இருக்காரே! :-)
இரத்த படலம் முதல் பாக அட்டை படம் மறக்க முடியாத அளவு அழுந்த பதிந்து விட்டது.
ReplyDeleteகருப்பு வெள்ளையில் உள்ளது போல சித்திரங்கள் நுணுக்கமாக உள்ளதை சமீபத்தில் பார்த்தேன். உபயம் fb .
என்ன படக்குனு பிரிவியு படத்தை மாற்றி வைத்து விட்டீர்கள்.
ReplyDelete'நண்பணுக்கு நாலு கால்' அட்டைப்படம் - அருமை! ஷெரீப் & கிட்ஆர்டினின் காமெடி ரகளைகளை ரசித்திடப் போகிறோம் என்ற நினைவே குதூகலத்தை எகிறவைத்திடும் சாமாச்சாரம் - சிறுவயதிலிருந்தே!!
ReplyDeleteபலப்பல வருடங்களுக்கு முன்பு வெளியான கிட்ஆர்ட்டின் கதைகளிலுள்ள காமெடி வசனங்களோடு ஒப்பிட்டால் நாம் தற்போது பலப்பல மடங்குகள் உயர்ந்திருக்கிறோம் என்பதும் அப்பட்டமான உண்மை!!
வாய்விட்டுச் சிரிக்கும் நாளுக்காக வெயிட்டிங்!
முதல்பாகம் அமோஸ் உண்மையை சொல்ல சொல்ல முழிப்பாரே தலைவர். .!
ReplyDeleteWaiting for the mega comics.. Going to read for the first time with editor's great effort.
ReplyDeleteஒரு அருமையான காமிக்ஸ் விருந்து காத்திருக்கிறது நண்பரே!! அதுவும் முதன்முறையாக கலரில் எனும்போது நீங்கள் பிரம்மிக்கப்போவது உறுதி!! வாழ்த்துகள்!!
Deleteஎன்ன சார் படக்குனு பிரிவியு படத்தை மாற்றி வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஒரே தடவைதான்தூக்கிப்புடிச்சி தம்புடிச்சி(அந்த தம் அல்ல) படிச்சு வெச்சேன்.அத்தோட பரணைதான்.. கலர் சுற்று நிச்சயம் இரசிக்க வைக்கும்.. பசுமாடா?? கமான்சே பண்ணையில பார்த்தேனுங். நீங்கள்ளாம் பார்க்கலையா???
ReplyDeleteபுது பதிவா
ReplyDeleteஇப்பத்தான் பார்த்தேன்.
பாஸுவோட சாசு அப்டீன்னு
ஜில் ஜோர்டன் கதையில் வருமே அதுவா
பசு வ௫வது ஜில்லாரின் "காவியில் ஒ௫ ஆவி"யில் தானே?
ReplyDeleteஅதே அதே நண்பரே....
Deleteஅவரின் கதையில் தான் வருது, ஆனா பசுவின் பெயர் கடேசி வரை சொல்லப்படாது...
இரத்தப் படலத்தில் முதல் பாகம் மட்டும் பசுமையாக நினைவில் உள்ளது ஆசிரியரே !
ReplyDeleteஎனக்கு 75 சதவிகிதம் நினைவில் உள்ளது
ReplyDeleteமாடஸ்டி பிளைசி
ReplyDeleteவாங்க. ரொம்ப நாளாக உங்களை இங்கு காணோம். நலமா?
DeleteQ 1:
ReplyDelete1.அண்டர்டேக்கர்
2.ட்யுரங்கோ
3.ஜெரமயா
4. பௌன்சர்
5.கமான்சே
Q 2:
1.SMURFS,ரின்டின் கேன்,பென்னி,லியனர்டோ,கர்னல் கிளிப்டன்
2.லார்கோ
3.ஷெல்டன்
Q 3:
1.மனதில் மிருகம் வேண்டும்
2.நிஜங்களின் நிசப்தம்
3.பிணத்தோடு ஒரு பயணம்
Q 4:
NO
Q 5:
1.தங்க கல்லறை
2.
மனதில் மிருகம் வேண்டும்
3.ரௌத்திரம் பழகு
கதை தேர்வு என்பது என்னைப்பொருத்தவரை நிகழ்கால சாயல் இருக்ககூடாது என்பதே.ஏனெனில் இன்றைய உலகில் அது சார்ந்த மீடியாவிற்க்கு பஞ்சமா என்ன?
Star movies ல் pogo வில் பார்த்ததை (ex: லார்கோ,smurfs) repeat செய்வதால் ஒருவித அயர்ச்சி தான் சார் ஏற்படுகிறது. மாறாக இன்றைய மீடியாக்களில் ஒரு கிரீன் மேனரையோ ஒரு நிஜங்களின் நிசப்தமோ ஒரு பௌன்சரையோ FBI விட்டு தேடினாலும் கிடைக்காது.இது போன்ற வித்யாசமான கதைகளே என்றுமே நிலையானது.இன்னும் நூறு லார்கோ smurfs கதைகள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கதையை காட்டவே முடியாது எல்லா கதைகளுமே தொடரும் ரகம்தான்.எனவே மாறுபட்ட கதைக்களமே ரசிக்க மற்றும் வாங்க மற்றும் சேமிக்க மற்றும் ஆசிரியரை நினைத்து பெருமைப்பட எந்த காலத்திலும் சிறந்தது.
///உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? கோட்டை அழிச்சிடுங்க...முதல்லேருந்து பரோட்டா சாப்பிடலாம் !!///--- ஒற்றை ஒற்றையாய் வந்த 10பாகங்களை எண்ணற்ற முறை படித்து உள்ளேன் சார்...
ReplyDeleteஈஸ்ட் டவுனும்,
கொல்லேனி ஏரியும்,
மனநலம் குன்றிய மருத்துவமனையும்,
காட்டின் நடுவே நடக்கும் பயிற்சியும், பெட்டியின் அதிரடியும்,
வாழைக் கொல்லை முதலாளியும்,
ஹென்றியின் சவ அடக்க சடங்கும்,
ஒத்திகை வேளையும்,கடேசி பக்க விளக்கங்களும்,
க்ரீன்பால்ஸ் கெமிஸ்ட் ஜூடித்தும்,
மான் வேட்டையர்களும்,
படிக்கடியில் டைரியும்,
"ஹட்டாவே" யும்,
"இத்தனை ஆண்டுகள் ஏன் தாமதித்தாய்" ஜேசனும்,
தோள் ஆபரேசனும், ஷரீடனை தாக்கும் ஜேசனும், கையில் கத்தியால் குத்திக் கொள்வதும்,
கோஸ்டா வெர்டேயும், ஜெர்மானிய தாதுவும்,
காண்டோரின் துரோகமும், பெரால்டாவுக்கு ஆசை வேகம் போதாததும், மரியாவை தூக்கி கொண்டு நடப்பதும், கிழங்குகளை உண்பதும்,
காபியில் விசம் வைத்து அந்த மினார்கோ கம்பெனி பங்கு தார்ர்கள் கொல்லப்படுவதும்,
நள்ளிரவு கதையில் 3இளைஞர்கள் வெளியுலகில் காலடி வைப்பதும்.....
சீன் பை சீன் இன்றும் கண்ணில் வந்து போகுது....
ஆனால் வெள்ளிக் கடியாரங்கள் 3ல் இருந்து அந்தளவு கவரவில்லை...
என்னைப் பொறுத்து இரத்தப்படலம் என்றால் தனித்தனியே வந்த, அந்த முதல் 10பாகங்கள் தான்....
வியாரத்திற்காக நீட்டி முழக்கப்பட்ட பாகங்களில் ஆர்வம் இல்லை....
ஐரீஸ் படலம் மட்டுமே விதிவிலக்கு...
கலரிலும் கூட முதல் 10பாகங்கள் எத்தனை முறை படிப்பேனோ...???? ஆண்டுக்கு ஒருமுறை என்பது நிச்சயம்...!!!
@ டெக்ஸ் விஜய்
Deleteஉங்கள் நினைவாற்றல் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தும் ஒன்று!
விஜயராகவன் @ இனிமேல் உங்கள் பெயர் வல்லாரை பார்ட்டி:-)
Deleteவல்லாரை வீழ்வதில்லை
Deleteதேங்யூ நண்பர்களே...!!!
Deleteஉங்களின் உற்சாகப் படுத்தலே, வல்லாரை டானிக் எனக்கு...
மாலையில் நிஜமாவே வல்லாரை வைத்தியம் இருக்கு...!!!
வெண்டைக்காய் vs வல்லாரை !!
Deleteசபாஷ்...சரியான போட்டி !
Super+1111111
ReplyDeleteஇரத்த படலம் முதல் 13 பாகங்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. பிற்பாடு வந்த 5+1 ஆல்பங்கள் நினைவில் இருந்தாலும் வியாபாரரீதியாக நீட்டி முழக்கபட்டவை என்பதே என் கருத்து.
ReplyDeleteமுதல் 8 ஆல்பங்கள் நமது இதழ்களின் மூலம். பின்பு 1-16 வரை சினிபுக் வழியாக. கடைசி இரண்டு பாகங்கள் நமது ஜம்போ ஸ்பெஷலி
10 ஆல்பங்கள் நமது தமிழ் காமிக்ஸ் வழியே என்பதே சரி... கிளைமாக்ஸ் 3 ஆல்பங்கள் படிக்க 10± வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஜம்போ ஸ்பெஷலுக்காக காத்திருந்து கடைசியில் பொருமையின்றி சினிபுக் வழியே மட்டுமே படிக்க முடிந்ததது, தனி கதை... :(
Delete//பிற்பாடு வந்த 5+1 ஆல்பங்கள் நினைவில் இருந்தாலும் வியாபாரரீதியாக நீட்டி முழக்கபட்டவை என்பதே என் கருத்து.//
Deleteபாகம் 12 + ஒரு இறுதி wind up பாகம் - ஆக மொத்தம் 13 என்று முடித்திருப்பின் இந்தத் தொடர் வேறொரு லெவலுக்குச் சென்றிருக்கும் என்பது நிச்சயம் !
68th
ReplyDeleteபதினொன்றாம் வகுப்பு படித்த என்னை ஆழமாக மனதில் பதிந்த முதல் பாகத்தை மறக்கவே முடியாது.. Frame by frame நினைவில் உள்ளது
ReplyDelete//சிக் பில் & கோ.வின் அட்டைப்பட முதல்பார்வை இதோ ! As in recent times - ஒரிஜினல் ராப்பரே ; மெலிதான மெருகூட்டல்களோடு ! And உட்பக்கத்துப் preview -ம் கீழே உள்ளது !//
ReplyDeleteசிக்பில்லில் வசனங்களே பாதி ஓவியத்தை மறைக்கிறது
கார்டூன் கதைகளுக்கு ஓவியங்கள் தெளிவாக இருப்பது அவசியம் என நினைக்கிறேன்...
கார்ட்டூன்களுக்கென்றில்லை ; சகல ரகக் காமிக்ஸ்களுக்கும் இது பொருந்தும் தான் சார் ; ஆனால் எல்லா நேரங்களிலும் இது சாத்தியமாவதில்லையே ?!
Deleteரத்தப்படலத்தில் வான் ஹாம்மெக்கு இணையாக சித்திராஜலம் செய்திருப்பார் வான்ஸ்.அதிலும் குறிப்பாக கிரீன் ஃபால்சின் பனிப்பொழிவு மற்றும் அங்கே நடக்கும் தேடுதல் வேட்டை இன்னும் கண் முன்னே நிற்கிறது. அதி கலரில் பார்க்க காத்திருக்கிறேன்.
ReplyDelete//ரத்தப்படலத்தில் வான் ஹாம்மெக்கு இணையாக சித்திராஜலம் செய்திருப்பார் வான்ஸ்.அதிலும் குறிப்பாக கிரீன் ஃபால்சின் பனிப்பொழிவு மற்றும் அங்கே நடக்கும் தேடுதல் வேட்டை இன்னும் கண் முன்னே நிற்கிறது.//
Delete+9
அந்த Ku Klux Klan பிளாஷ்பேக் பகுதி எனக்கு மனதில் நிற்கும் சங்கதி !!
DeleteHi...
ReplyDeleteCreate a note
ReplyDeleteTap the plus to create a note.
பாகம் 1கறுப்பு கதிரவன் தினம்.
தலையில் குண்டுகாயத்துடன் கண்டெடுக்கப்பட்டு ஆபோ-ஷாலி
தம்பதியால் டாக்டர் மார்த்தா உதவியால்
காப்பாறப்பட்டு ஆலன் என்ற XIII
அம்மூவரின் கொலைக்கு பழி வாங்கவும்
தன் நினைவுகளை தேடி புறப்பட
பெரும் தொகைக்கு அமெரிக்க
ஜனாதிபதியை கொன்ற நாடே தேடும்
குற்றவாளி என்பதோடு தன்னை தேடியலையும் கும்பலில் இருந்து
தப்பி செல்வதோடு முடிகிறது.
பாகம் *2செவ்விந்தியன் போகுமிடத்தில்.
ஸ்டீவ் ராலண்ட் என்று பெயரிடப்பட்டு
புதிய குடும்பத்திற்குள் ஜெனரல்
காரிங்டனால் வந்த13தன் மனைவி
கிம்ராலண்டை பற்றி அறியும்போது
தன் புதிய சிற்றன்னை பெலிசிட்டியால்
தந்தை மற்றும் சித்தப்பாவை கொன்ற
பழி விழ. கர்னல் ஜோன்ஸின் உதவியால்
தப்பி மனைவி கிம்மை சந்திக்கும்போது
அவளிடம்XVIIஎன்ற எண் பச்சை குத்தப்படிருக்க குழம்பிய நிலையில்
கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில்
மன நோயாளிக்கான சிறையில் ஆயுள்
கைதியாக அடைக்கப்படுகிறார்.
பாகம் * 3 நரகத்தின் கண்ணீர்.
ப்ளைன் ராக் சிறைக்கூடத்தில் அடைக்கப்பபடும் ராலண்டை கொலை
வெறியுடன்13ஐ கொல்ல பின் தொடரும்
மங்கூஸ் . அதிலிருந்து மீண்டும் ஜோன்ஸ்
உதவியுடன் தப்பி காரிங்டனிடம்
சேர்கிறார்.
பாகம் *4 SPADS அதிரடிப்படை.
ராஸ் டான்னர் என்ற புதிய பெயருடன்
காரிங்டனால் SPADS அதிரடிப்படையில்
சேர்க்கப்பட்டு அங்கு பெட்டிபார்னோவ்ஸ்கி
மற்றும் ஜோன்ஸுடன் கர்னல் மாக்கால்
ஷெரிடன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்
என்று அறியும் 13 மற்றும் பெட்டி,ஜோன்சுடன்
தப்புகிறார்.
பாகம் * 5 உச்ச நிலை உஷார்.
கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஹென்றி
ஷெரிடன் தந்தையை சவஅடக்கம் செய்யுமிடத்தில் அவர் தம்பி வாலியை
கொல்ல முயற்சி நடக்கிறது அவர்
தப்பித்துக்கொள்ள கொல்ல முயன்றவன்
சுடப்படுகிறான்.அரசியல் சூதாட்டத்தில்
துணை ஜனாதிபதி கால்வின்வாக்ஸ்
ஜெனரல் காரிங்டனை கைது செய்கிறார்.
சான்மிகுவலில் நண்பர் மார்குயிஸின்
உதவியுடன் அமெரிக்கா திரும்பிய 13
கர்னல் ஆமோசின் உதவியுடன் வாலி
ஷெரிடனுடன் தளம் SSH1ல் உள்ள
தற்போதய ஜனாதிபதி கால்பிரெயினை
சந்திக்க மாறு வேடத்தில் நுழைய அங்கு
கர்னல் மாக்கால் அனைவரையும் கொல்ல
முயற்சிக்க அதனை13முறியடிக்கிறார்.
மேலும் கால்வின் வாக்ஸ் நம்பர்2 என்று
கண்டுபிடிக்க அவர் தற்கொலை செய்து
கொள்கிறார்.பிடிபட்ட ஸ்டான்ட்வெல் முலம்
அவர் எண்3என்றும் மேலும் 52 பேர்
சதியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாலி ஷெரிடன் புதிய ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
பாகம் 6.ஜேஸன் ஃப்ளை படலம்
தனது நினைவுகளைத்தேடி கிரீன்ஃபால்ஸ்
வரும் 13ஃப்ளெமிங் என்ற மாற்றுப்பெயரில்
ஜுடித்&டேவிட்ரிக்பிக்கு அறிமுகமாகிறார்.
இடையே அமெரிக்காவில் ஜோன்ஸை
கொல்ல முயற்சி நடக்க தப்புகிறாள்.
காரிங்டன் உதவியால் தனது தந்தை ஜோனதன்ஃப்ளை பற்றி அறிந்து அவர்
மர்ம மரணம் பற்றிவிசாரிக்கிறார்.
மௌண்டன்நியூஸ் பத்திரிகையின் முன்னாள்
உரிமையாளர் முதியவரால் 13 ஜேஸன்ஃப்ளை
என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார்.13ஐ
தேடி ஜோன்சும் 13கொலைசெய்ய மங்கூசும்
கிரின்ஃபால்ஸ் வர அங்கே நிகழும் பனிச்சரிவு
வெடிவிபத்தில் ஜோன்ஸ் காயமடைகிறாள்.
13 ஐ தேடி கொலை வேட்டை தொடர்கிறது.
பாகம் 7*ஆகஸ்ட்3ன் இரவு.
தன் தந்தையை கொன்றது ரிக்பி &ஷெரீப் கீய்ன் மர்டோக் டாக்டர் ராபபர்ஸ்சன்
மேலும் சிலர் குக்ளக்ஸ்கான் வேடமணிந்து
என்றறியும் ஜேஸன் மங்கூஸின் மற்றும்
ரிக்பியின் கொலை தாக்குதலில் பெரியவர்
ஜேகே ஹட்டாவேயினால் காப்பாற்றப்படுகிறார்.
பாகம் 8* பகைவர்கள் 13
Deleteசிறையில் அடைக்கப்பட்ட மங்கூஸ் தந்திரமாக
தப்புகிறான்.புதிய ஜனாதிபதி வாலி நம்பர்1
யாரென்று கண்டுபிடிக்குமாறு மக்லேனிடம்
பணியை ஒப்படைக்கிறார்.காரிங்டனின்
சகோதரியிடன் விசாரணை செய்யும் ஜோன்ஸ்
வாலிக்கும் கிம்முக்கும் உள்ள உறவை பற்றி
அறிகிறாள்.13மிச்சேல் என்ற பெயரில் வாலி
அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையில் துப்பறியும்போது
இரினா என்ற பெண் கொலையாளியின்
முயற்சியில் தப்பி கர்னல் ஆமோஸை
சந்திக்கிறார்.வாலிதான் நம்பர்1 என்று
கண்டுபிடிக்கும்போது நடக்கும் தாக்குதலில்
ஆமோஸ் காயமடைகிறார்.நார்த்ஷோர்
தீவில் ஒளிந்திருக்கும் தன் மனைவி கிம்மை
சந்திக்கும்13 மங்கூஸால் சிறைபிடிக்கப்பட்டு
ஜோன்ஸ் கிம் மற்றும் கிம்மின் மகன் காலின்
ஆகியோருடன் படகில் கட்டப்பட்டு படகில்
பொருத்தப்பட்டுள்ள குண்டால் கொலை
முயற்சி நடக்க 13ம் ஜோன்ஸும் மட்டும் தப்பிக்கின்றனர்.வாலியை சந்திக்கும்13
அவர்தான் நம்பர்1 என்று கண்டுபிடித்து அவரை அடித்து விட்டு வெள்ளை மாளிகையை
விட்டு வெளியேறுகிறார்.
பாகம் * 9 மரியாவுக்காக
Deleteஸான் மிகுவலில் தங்கியிருக்கும் மக்லேனுக்கு பாதர் ஜஸின்டோ என்பவரிடம்
இருந்து அவர் மனைவி பற்றிய தகவல்
உள்ளதாக சொல்கிறார் அங்கே கோஸ்டா
வெர்டில் உள்ள போராளி மரியாதான் உன்
மனைவி உன்பெயர் கெல்லி என்கிற
ஸ்டன்ட்மேன் என்று கூறி மெரிடித் என்ற
ஆயுதவியாபாரியின் மாறுவேடத்தில்
கோஸ்டாவெர்டிக்கு அனுப்புகிறார்.அங்கே
அதிபர் ஓர்டிஸின் ஆசைநாயகியாக தனது
சிற்றறன்னை பெலிசிட்டியை காண்கிறார்.
அரண்மனையில் இருந்து கடத்தப்படும் 13
போராளி ஏஞ்சலை சந்திக்கிறார்.மரியா
அவனது சகோதரி என்றும் ரோகாநெக்ரா
சிறையில் 4நாட்களில் கொல்லப்பட உள்ளதாக
அறிய அரண்மணை திரும்பி பெலிசிட்டியுடன்
தப்ப முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டு
ரோகாநெக்ரா சிறையில் அடைக்கப்படுகிறார்.
கோஸ்டாவெர்டிக்கு ஜோன்ஸ் பெட்டி மற்றும்
மார்குயிஸ் மல்வே&பாதர் ஜஸின்டோவை
சந்திக்கின்றனர்.இந்த சதி வேலையில்
அமெரிக்காவை சேர்ந்த மினார்கோ என்ற
கம்பெனி இயங்குகிறது.
பாகம் * 10 *புதையல் வேட்டை
Deleteசிறையை தாக்க போராளிகளின் உதவியோடு
ஜோன்ஸ் பெட்டி ஜஸின்டோ வர அங்கிருந்து
தப்பி மரியாவை காப்பாற்றுகிறார்13.பிறகு
நடக்கும் ஆட்சி மாற்றத்தில் ஏஞ்சல் அதிபராக
13கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
போராளிகளுக்கு துரோகம் இழைத்ததாக
கூறப்பட 13க்கு ஆதரவாக மல்வே வாதம்
செய்கிறார்.ஜெர்மானியம் என்ற தாதுவை
வெட்டிஎடுக்க மினார்கோவினர் ஒரு போராளிக்கு பெரும் செல்வத்தை லஞ்சமாக
வழங்கியதை கூற ஏஞ்சல் தற்கொலை செய்து
கொள்கிறான்.மரியா புதிய அதிபராக பதவி
ஏற்கிறார்.தனது உண்மை தந்தை மல்வே
என்று அறியும் ஜேஸனுக்கு தங்கள் முன்னோர்
வரலாறை விளக்கமாக கூறுகிறார்.
பாகம் * 11 * வெள்ளிக்கடிகாரங்கள் 3 .
Deleteமுன்னோர்களான. ஸாம் மக்லேன்
ஜாக் கல்லஹன் ஜோர்ஜ் மல்வே மூவரும்
அயர்லாந்தில் இருந்து பிழைப்பு தேடி
அமெரிக்கா சென்றனர்.மெக்சிகன் போரில்
ஈடுபட்டு அங்கே களவாடப்பட்ட பெரும்
செல்வத்தை மறைத்து அந்த ரகசியத்தை
மூன்று சங்கேத குறியீடுகளால் மூன்று
வெள்ளி கடிகாரங்களில் செதுக்கி தங்கள்
சந்ததியினர் பலன் பெற தகவல் தருகின்னர்
இந்த சம்பவம் நடந்தது1911ம் ஆண்டு.
முன்னாள் அதிபர் ஓர்டிஸின் தளபதி
பெரால்டா ஒரு படையை திரட்டிவந்து
சண்டையிட முயற்சி செய்ய அவரையும்
படைகளையும் அழிக்கிறார் ஜேஸன்.பின்னர்
மரியாவிடம் விடைபெற்று அமெரிக்கா
திரும்புகிறார்.
பாகம் * 12 *தீர்ப்பு
Deleteராணுவ தலைமையகம் பென்டகனில் வந்து
இறங்கும் ஜனாதிபதி வாலியை ஜெனரல்
காரிங்டன் கடத்தி ஆளில்லா நெவாடா பாலை
வனத்தில் சிறைவைக்கிறார்.கர்னல் ஆமோசுடன் இணைந்த 13 ஜோன்ஸ் தீவு
ஒன்றில் ஒளிந்திருக்கும் மங்கூஸை கைது
செய்கிறது.இரினா காயத்துடன் கடலில்
மூழ்குகிறாள்.மங்கூஸை விசாரிக்கும்
ஜியார்டினோ ( 13 ன் தாய் மாமன்) வெடிகுண்டு பொருத்திய துப்பாக்கியை
ரகசியமாக கொடுத்து காரிங்டனை கொல்ல
சொல்கிறார்.பாலை வன தளத்தில் கடத்தப்பட்ட ஜனாதிபதி வாலியை நேரடி
விசாரணை TVல் ஒளிபரப்ப அங்கு நடக்கும்
குழப்பத்தில் வாலி மங்கூஸை சுட்டுவிட்டு
தப்பிக்கீறார்.இறக்கும் தருவாயில் மங்கூஸ்
வாலி உண்மை குற்றவாளி என கூறி உயிர்
விடுகிறான்.தப்பி ஓடும் வாலி துப்பாக்கியில்
உள்ள குண்டு ஜியார்டினோவால் தவறாக
தூண்டப்பட்டு வெடித்து இறக்கிறார்.பின்
தங்கும் 13 சிறைப்படுகிறார்.
பாகம் * 13 தேசத்துக்கொரு அபாயம்.
Deleteஜியார்டினோவால் கைது செய்யப்பட்டு
விசாரணையில் பல சூழ்சிகளால் மல்வே
ஜேஸனை தன் மகன் அல்ல என்றும் அவர்
பெயர் ஸீமஸ் ஓ நீல் என்ற கியூபாவை
சேர்ந்த பயங்கரவாதி என்றும் குற்றம்
சாட்டப்பட்டு அரிஸோனா சிறையில் அடைக்க
கொண்டு செல்கிறார்கள்.புலனாய்வு நிருபர்
டான்னியுடன் வரும் ஜெஸிக்கா மார்டின்
இவள் CIAதலைவர் ஜியார்டினோவால்
அனுப்பப்பட்ட இரட்டை வேடதாரி உளவாளி
கொலைகாரி.13 மற்றும் டான்னியை கடத்திய
ஜெஸிக்கா அவர்களை இரினாவிடம் கொண்டு சேர்க்கிறாள்.பழிக்குபழி வாங்க
துடிக்கும் இரினா இருவரையும் மனித
வேட்டைக்காக அருகில் உள்ள திவுக்கனுப்ப
இருவரும் தப்புகின்றனர்.
பாகம் * 14 * கட்டவிழ்த்த வெறிநாய்கள்
Deleteஇஇரயிலில் ஏறி தப்பிக்கும் ஜேஸனை
பின் தொடரும் ஜெஸிக்கா அவரிடம் சிக்குகிறாள். கொலையாளிகளிடமிருந்து தப்பி செல்கையில் இருவருக்கும் நட்பு
மலர்கிறது.தன்னை கொல்ல முயன்ற
ஜியார்டினோவை பழிவாங்க ஜேஸனுடன்
செகிறாள்.பிறகு நடக்கும் சண்டையில்
துப்பாக்கி குண்டடி படுகிறாள்.விமானத்தில்
தப்பும் ஜேஸன் தன் நண்பர்களான ஜோன்ஸ்
பெட்டி மார்குயிஸ் காரிங்டனை கோஸ்டா
வெர்டிக்கு வரச்சொல்லி தானும் அங்கு
செல்கிறார்.அங்கே மரியா இருக்கிறார்.
பாகம் *15 * மான்டிகிரிஸ்டோ படலம்
Deleteகோஸ்டாவெர்டியில் அடைக்கலம் புகுந்த
13 நண்பர்கள் அங்கே கைதியாக பெலிஸிட்டி
இருப்பதையும் மரியாவின் திட்டத்தின் மூலம்
கடத்தல் நாடகத்தில் அனைவரும் வேறு இடம்
மாறுகின்றனர்.அங்கிருந்து பெலிசிட்டி தப்பி
செல்கிறாள்.13ன் தந்தை மல்வேயின் கனவு
தங்கள் மூதாதையர் மறைத்த தங்கத்தை
மீட்பது அதற்கு 13 உதவுகிறார்.மூழ்கிய
நகரத்தில் இருந்து வெள்ளி கடிகாரத்தை
மீட்கின்றனர்.தப்பிய பெலிசிட்டி ஜேசனின்
எதிரிகளுடன் சேர்ந்து தாக்க அதில் கர்னல்
ஆமோஸ் உயிரிழக்கிறார்.மற்ற அனைவரும்
அமெரிக்கா திரும்புகின்றனர்.
பாகம் * 16 * தங்கத்தேட்டை
Deleteவெள்ளி கடிகாரங்களின் புதிரை விடுவிக்க
ஜேஸன் மற்றும் நண்பர்கள் முயற்ச்சிக்க
ஜியார்டினோ ஜேசனை கொல்ல முயற்சி
மேற்கொள்கிறார்.தங்கம் தேடும் முயற்சியில்
தகவல் அறிந்துஜேஸன் ஜோன்ஸ் அந்த
பகுதிக்கு செல்ல பின் தொடரும் உள்ளுர்
கேடி கும்பலால் தாக்கப்பட்டுகிடைத்த தங்ககாசுகளும் வீணாக
மலைச்சரிவில் யாரும் எடுக்க இயலாமல்
யாருக்கும் பயன்படாமல்1000000 தங்க
காசுகளும் சிதறி விழுகிறது.கடைசியில்
மிஞ்சியது13தங்க காசுகளே.வாஷிங்டனில்
ஜனாதிபதியை சந்திக்கும் ஜெஸிக்கா
ஜியார்டினோவை கைது செய்யவும் 13
அவர்தம் நண்பர்களை விசாரணை கமிஷன்
முன் சாட்சி அளிக்கவும் நியமிக்கப்படுகிறாள்.
பாகம் * 17 * அயர்லாந்து படலம்
Deleteஸிமஸ் ஓ நீல் என்ற அயர்லாந்து போராளி
புரட்சி இயக்தின் உதவியுடன் அமெரிக்கா
சென்று கெல்லி ப்ரையன் என்ற பெயரில்போல்டர் யுனிவர்சிட்டியில் சேர்ந்து
படிக்கிறான்.அவனுக்கு ஜேஸன் ஃபிளையின் நட்பு கிடைக்ககிறது.தாய்மாமன் ஜியார்டினோ
ஸிமஸ் என்ற கெல்லிபிரையனையும்
ஜேஸன்பிளையையும் வேவு பார்க்க இளம்
உளவாளி ஜெஸிக்காவை அனுப்புகிறார்.
கெல்லியை காதல் வலையில் வீழ்த்தும்
ஜெஸிக்கா அவன் சுடப்பட்டடதும் ( கெல்லி)
ஜேஸனை கெல்லியின் பெயரோடு க்யூபாவுக்கு போராளியாக அனுப்புகிறாள்.
பாகம் * 18 *இறுதிச்சுற்று
Deleteபுலனாய்வு நிருபர் டான்னி (13 ல் காப்பாற்றப்பட்டவர்) ஜெஸிக்கா மார்டின்
உதவியுடன் எழுதிய புதிர்மனிதன் XIII
என்ற புத்தகம் நாட்டில் பெரும் அதிர்வலையை
உண்டாக்கியது.இடையே தனது மாபியா
சொந்தங்களுடன் சேர்ந்து13 கொல்ல
ஜியார்டினோ எடுத்த முயற்சிகள் தோல்வியில்
முடிய விசாரணை தீர்ப்பு 13 நிரபராதி என்று
அறிவித்து விடுதலை செய்கிறது.தனக்கு
கொடுமை இழைத்த இரினா மற்றும்
ஜியார்டினோவை கொன்று ஜெஸிக்கா
வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாள். தன்னை
குண்டு காயத்துடன் மீட்ட ஆபோ ஷாலி யின்
வீட்டில் தன் புது வாழ்க்கையை தொடங்குகிறார் நம் ஜேஸன்.
நண்பர்களே எனக்கு தெரிந்தவகையில்
Deleteஇரத்தப்படலம் கதையை சுருக்கமாக
கொடுத்துள்ளேன்.தவறுகள் குறைகள்
இருப்பின் மன்னிக்கவும்.சுருக்கமாக
சொவதால் பல பகுதிகள் விடுபட்டிருக்கலாம்
இது என் சிறு முயற்ச்சியே.முழுவண்ண
பதிப்பாக வெளிவரவிருக்கும் காமிக்ஸ்
இதிகாசம் இரத்தப்படலம் அதிக முன்பதிவு
பெற முன்பதிவு செய்ய நண்பர்களை வேண்டி
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
என்றும் அன்புடன்
K.V.GANESH.
அடேங்கப்பா என்ன ஞாபகசக்தி.
Delete👌👌👌👌👌👌👌
DeleteGanesh sir அசத்திவிட்டீர்கள்.
Delete
Deleteஅசத்தலான பதிவு கணேஷ் ஜி!!
Deleteஅற்புதம் சார் !
Deleteசூப்பர் நண்பரே .
Deleteரெடியா இருக்கிங்க சூப்பர்
Deleteஇரத்தப் படலத்தை கையில் ஏந்தும் அதி அற்புத தருணத்திற்காக காத்திருக்கும் வாசகர்களுக்கு இது போன்ற பின்னூட்டங்கள் உற்சாகத்தை தருகிறது.மிக சிரமமான காரியமானபோதும் உங்களுடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள் கணேஷ் சார்,வணங்குகிறோம்.
Deleteஇரத்தப் படலத்தை கையில் ஏந்தும் அதி அற்புத தருணத்திற்காக காத்திருக்கும் வாசகர்களுக்கு இது போன்ற பின்னூட்டங்கள் உற்சாகத்தை தருகிறது.மிக சிரமமான காரியமானபோதும் உங்களுடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள் கணேஷ் சார்,வணங்குகிறோம்.
Deleteஇம்புட்டு எழுதியதற்கு பு.வி.யையே எழுதி இருக்கலாமே கணேஷ் சார்...
Delete🍫🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍰🍨🍨🍨🍨🍧🍧🍧
ReplyDeleteகாமிக்ஸ் இதழ்களை கூர்ந்து வாசிப்பவரும்,
விமர்சன கலந்துரையாடல்களில் பங்கு பெறுபவரும்,
பிடிவாதமாக மெளனமாகவே இருக்கும் நண்பர்களுக்கு மத்தியில், தன் கடும் பணி சுமைக்கு நடுவேயும் தன் கருத்துக்களை தெரிவிப்பவரும்,
இனிய நண்பருமான ஜெகத் குமாருக்கு இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
🍭🍭🍭🍭🎈🎈🎈🎈🎈🍦🍨🍧🎈🍭🍰🍰🍫🍫🍫
நவம்பர் 2014சேலம் புத்தக விழாவிற்கு, தன்னுடைய மாற்றுத் திரணாளி டூ வீலரிலேயே கொட்டும் மழையில் நனைந்து கொண்டே, வேலூரிலிந்து வந்திருந்து நண்பர்களை அசத்தியவர் தான் இவர். பிறகு சேலத்திலேயே பணியில் அமர்ந்து, நம்ம காமிக்ஸ் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டார்....
Deleteஇனிய நண்பர் ஜெகத் குமாருக்கு இனிய
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள்.
நமது காமிக்ஸ் குடும்பத்தின் சின்ஸியர் வாசகர் ஜெகத் குமாருக்கு ஈவியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Deleteஇனிய நண்பர் ஜெகத் குமாருக்கு இனிய
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள்.
அன்புடன்
பழனிவேல்
நண்பர் ஜெகத்குமார் சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெகத்குமார் சார்.
Delete@ சேலம் Tex விஜயராகவன்
Delete@ ganesh kv
@ ஈரோடு விஜய்
@ palanivel arumugam
@ kannan s
@ Mahendran Paramasivam
அனைவருக்கும் மிக்க நன்றி.!!!
ஜெகத்குமார் சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் மேடம்.!!!
Deleteஇரத்தப்படலம் சமீபத்தில் படித்ததால் நல்லாவே ஞாபகத்தில் உள்ளது
ReplyDeleteநண்பர் ஜெகத்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteமிக்க நன்றிகள் செந்தில் சத்யா சார்!!
Deleteநண்பர் ஜெகத்குமார் சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர் ஜெகத்துக்கு அட்டகாச பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Deleteநண்பர் ஜெகத்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Deleteநண்பர் ஜெகத்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Deleteஇந்த வாரம்...
ReplyDeleteஜானதிபதி வில்லியம் ஷெல்டன் 'இரத்தப்படலம்' கதையில் சுட்டுகொல்லப்பட்டது போலவே நிஜத்தில் ஜனாதிபதி JFK எப்படி கொல்லப்பட்டார்..?
http://xiiiorupulanaayvu.blogspot.in/2018/03/xiii-page-05-to-08.html
This comment has been removed by the author.
Deleteவில்லியம் ஷெல்டனா அல்லது வில்லியம் ஷெரிடனா என்பதை சரியாக புலனாய்வு செய்தால் பரவாயில்லை.! : D
Deleteபூவை
Delete'பூ' என்று சொல்லலாம்
'புய்ப்பம்' என்று சொல்லலாம்
நீங்க சொல்லுற மாதிரியும் சொல்லலாம்.
நமக்கு பூவிலிருந்து நல்ல வாசம் வந்தாலே போதும்.
வாழ்த்துக்கள் "XIII ஒரு புலனாய்வு".
எல்லா பூவில் இருந்தும் நல்ல வாசம் வராது நண்பா.........
Deleteபூ வாங்கும் போதே எந்த பூவை வாங்குகிறோம் என்றும் தெரிந்தே வாங்குபவன் நண்பரே.
Deleteநீங்க எப்படி?
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
ReplyDelete"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாடட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
நண்பரே மிக மிக அருமை
Delete👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை சகோதரரே
Delete///
Deleteசில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்///
இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!
அச்சு மை'யில் ஏதாவது மசாலா ஐட்டத்தை சேர்த்த முடிகிறதா என்று பாருங்களேன் எடிட்டர் சார்? :D
அருமை!!! அருமை!!!!
Deleteஇரத்தப்படலத்தையும்.புலணாய்வையும் என் கைல கொடுத்துட்டு பாருங்க அப்புறம் நான் என்ன செய்ரேண்ணு...!
Delete@palanivel arumugam
Delete:|
ஸ்ரீ ஜி@ 👌👌👌👌👌👌
Delete@Sridhar
Delete👌 Super!
//Vijayan22 March 2018 at 18:53:00 GMT+5:30
ReplyDeleteரம்யாவுமே பு.வி.பணிக்கு கைதுதூக்கிய ஞாபகம் உள்ளதே எனக்கு ?! யாராச்சும் சரி பாருங்களேன் - பழைய பின்னூட்டங்களுக்கு மத்தியில் ?//
கை தூக்கி இருந்தேன் ஆசிரியரே
ஆனால் மெயிலில் :)
புலன் விசாரணை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன்
ஆகையால் மொழி பொய்ப்பு வேண்டாம் என்று விட்டு விட்டேன் ஆசிரியரே :D :D
செல்லாது...செல்லாது....கேட்டது ; கேட்டது தான் !! ரம்யாவுக்கு ஒரு பார்சல் !!!!!!
Deleteஉடனே சார்.. முடிஞ்சா எனக்கும்
Deleteஹிக்!!!! ஹீக்!!!!!
Deleteகூடவே தண்ணிபாட்டில்.
Delete@palanivel arumugam
Deleteசகோதரருக்கு என் மேல் எவ்வளவு பாசம் :|
@Paranitharan
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி தலீவரே
@ஈரோடு விஜய்
ReplyDelete//பாராட்டுகள் கடல்யாழ்!!//
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரரே :)
எனக்கு அதிகம் நினைவில் உள்ளது ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் பாகங்கள், இம்மூன்று பாகங்கள் முதன் முதலில் படித்தவை
ReplyDeleteஇவை இரத்தப்படலாம் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தின பாகங்கள்
ஆறாம் பாகமும், ஏழாம் பாகமும் எத்தனை தடவை படித்தாலும் சலிப்பு தட்டாதவை
ஆறாம்பாகம்தான் நான் முதலில் படித்தது லயனில் முதலில் வாங்கியது...😊
Delete@palanivel arumugam
Deleteசூப்பர் சகோதரரே
ReplyDeleteஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
ஜுலியஸ் சீசர் இப்போது இல்லை இருந்து இருந்தால் நமது ஆசிரியர் மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்கள் பக்கம் கை நீட்டியிருப்பேன்.
எனக்கு இரத்த படலம் 60% ஞாபகத்தில் உள்ளது . ஏனெனில் சமீபமாகத்தான் மருத்துவமனையில் இரத்த படலம் இதழினை மாரு வாசிப்பு செய்தேன் .
ReplyDeletewood city கோமாளிகளின் அட்டை படம் அழகு.அத்துடன் கண்ணுக்கு இதமாகவும் உள்ளது .
ReplyDeleteகோடைமலர்களும் கோலாகல கொண்டாட்டங்ளும்....
ReplyDelete*லயன் காமிக்ஸ் தொடங்கப்பட்ட சூலை 1984ஐ அடுத்து வந்த ஆண்டுகளில் விஷ்வரூபம் எடுத்தது இரண்டு விசயங்கள்; ஒன்று இளம் எடிட்டர் சார், மற்றது சிறப்பு மலர்கள். பொங்கல் மலர், கோடைமலர், ஆண்டுமலர், தீபாவளிமலர் - அடேங்கப்பா சொல்லுப்போதே எப்படி இனிக்கிறது மனதில்...!!! அந்நாளில் இப்படி லைவாக பார்த்த நண்பர்களுக்கு எப்படி இருந்து இருக்கும். ஆர்ச்சியின் கோட்டையோ, டைம் மெசினோ கைவசம் இருந்தா அவர்களின் ஆகா, ஓகோ,...போன்ற ரியாக்சன்களைப் பார்த்து இருக்கலாம்.
*ஏன் இத்தனை மலர்கள் வந்தாலும் கோடைமலரில் அப்படியென்ன ஸ்பெசல்???... மற்ற ரெகுலர் இதழ்கள் நாம வெள்ளிக்கிழமையோ, சனிக்கிழமையோ, அமாவாசையோ இன்னும் பிற நாட்களிலோ கோவிலில் சென்று வழிபடுதல் போன்றது. ஆனால் கோடை மலர் பண்டிகையை போன்றது. பண்டிகையில் சாமியே ஊர்வலவமாக நம்ம தெரு வழியே வருதில்லையா...!!! வருடம் ஒருமுறை மட்டுமே நிகழும் இது எத்தனை உற்சாகமானது. அத்தகைய உற்சாகத்தை அளிப்பதுதான் கோடைமலர்கள்.
*"கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் கிடைத்த குளிர் தருவே, தரு நிழலே, நிழல் கனிந்த கனியே...."---- கோடையின் வெம்மையை தனிக்க நிழல் தரும் மரங்களும், அவற்றின் கனிகளும் இன்றியமையாதவை. காமிக்ஸ் ரசிகர்களுக்கு அத்தகைய விருட்சங்கள் தான் இந்த கோடைமலர்கள்.
பள்ளி விடுமுறையில் உள்ள காமிக்ஸ் ரசிகர்கள் இளைப்பாறும் கோடைவாசஸ்தலங்கள் இந்த கோடைமலர்களே....
*முதல் பொற்காலமான 1980களிலும், 19990களிலும் கோடைமலர்கள் ஆண்டுதோறும் கோலாகலக் கொண்டாட்டங்களாக அமைந்தன. காமிக்ஸ் தொய்வை சந்தித்த 2000களின் பிற்பகுதியிலும், கம்பேக் ஆகி 6ஆண்டுகளாகியும் கோடைமலர் என்ற கனியை சுவைக்காமலே இருந்தோம். ஏப்ரல், மே மாதங்களில் அன்அஃபிஷியலாக மலர்கள் வந்தாலும், பிரத்யேக டைட்டில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கியது இந்தாண்டு ஷெட்யூலில் டியூராங்கோவின் 2வது இதழ் "மெளனமாயொரு இடிமுழக்கம்" கோடைமலராக அறிவிக்கப்பட்ட நொடி.
*பரவலான பார்வையில் முத்து, திகிலை விட லயன் காமிக்ஸ் கொஞ்சம் தரத்தில், சுவையில் ஒருபடி முன்னிலையில் இருந்து. இந்த விசயம் நம் ஆசிரியர் சாரோடு இந்த ஆகஸ்டில் பிரத்யேகமாக விவாதிக்கப்பட்டது. பதிலென்னவோ ஆசிரியர் சாரின் வழக்கமான புன்னகை தான். இந்த தாக்கம் லயனில் வெளிவந்த அதிகப்படியான ஸ்பெசல் இதழ்களால் இருக்கக்கூடும்.
*கோடைமலர்கள் என்றால் லயனில் மட்டுமா என்றால் இல்லை, முத்துவில் சம்மர் ஸ்பெசலாகவும், திகில் கோடை மலராகவும் வந்துள்ளன. இப்படி எல்லா பிராண்டிலும் கோடைமலர்கள் வந்திருந்தாலும் லயன் கோடைமலர்கள் பட்டையை கிளப்பின. ஏன்??? ஏன்???ஏன்???
*கோடைமலர்கள் என்றாலே கொண்டாட்டம் எனும்போது, அதை அதிகப்படுத்துவது லயன் கோடைமலர்கள் தானே...!!!
மரடோனாவும் நபோலியும்;
மெஸ்ஸியும் பார்சிலோனாவும்;
ரொனால்டோவும் ரியால் மாட்ரிட்டும்;
CSKவும் தோனியும்;
ஈ.வி.யும் நகைச்சுவையும்...போல கோடைமலர்கள் என்றாலே லயன் கோடைமலர்கள் தான் உற்சாகத்தை பன்மடங்கு அதிகப்படுத்தின......
.........
Delete*லயன் கோடைமலர்களும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோடையிலும் அசத்தின. கோடைமலர், சம்மர் ஸ்பெசல், ஹாலிடே ஸ்பெஷல், சென்சுவரி ஸ்பெசல், Top10 ஸ்பெசல், ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெசல் என்பன அவ்வப்போது காலத்திற்கும், சாதனை மைல்களின் போதும் சூட்டி, நம்மை மகிழ்வித்து- எடிட்டர் சாரும் மகிழ்ந்தவை
*சதி வலை-1985
*கோடைமலர்-1986
*கோடைமலர்-1987
*ட்ராகன் நகரம்-1988
*வைக்கிங் தீவு மர்மம்-1989
*திக்குத் தெரியாத தீவில்-1990
*லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
*இரத்த வெறியர்கள்-1993
*லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
*லயன் Top10 ஸ்பெசல்-1995
*மரணமுள்-1996
*கார்சனின் கடந்த காலம்1&2-1997
*மந்திர மண்டலம்-1999
*இருளின் மைந்தர்கள்-2003
*மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
*லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
*லயன் கெளபாய் ஸ்பெசல்-2006
----இந்த 17கோடை மலர்களும் (ஏதாவது விட்டுப் போயிருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்) இதுவரை லயனில் வெளிவந்துள்ளன.
*முதல் கோடைமலரான சதிவலை ரூ4ற்கு (4ரூவா தான் சாமீஸ்) 1985 கோடையில் தகிக்கும் மே மாதம் ரிலீசானது. அதே ஆண்டு ஜனவரியில் பொங்கல் மலராக வெளிவந்து அகில லோகத்தையும் கலக்கிய தானைத்தலைவர் ஸ்பைடரின் கொலைப்படையை போன்றே இதுவும் பெரிய்ய்ய சைஸ். ஜான் மாஸ்டர் தோன்றும் சதிவலை; கோட்டைச்சாமி ஆர்ச்சி தோன்றிய நதிஅரக்கன் என்ற இரு கதைகளை தாங்கி வந்திருந்தது. அப்போது அடியேன் 8வருட கொயந்தஹே...
*இரண்டே இரண்டு கதைகளில் வந்திருந்தாலும் நிறைய பேரின் ஆதர்ஷ நாயகர் தான் இந்த ஜான் மாஸ்டர். அவரது மற்றொரு சாகசம் , மாஸ்கோவில் மாஸ்டர். இந்த இதழை திருப்பூர் நண்பர் ஒருவரிடமிருந்து ஓசி வாங்கி படித்துள்ளேன். கதை துளியும் ஞாபகம் இல்லை. நினைவுள்ள சீனியர்கள் எழுதவும்.
*2வதாக 1986கோடைமலர் அகில உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது... அதுபற்றி அடுத்த பதிவில்...
*குறிப்பு:- ஏப்ரல் மாத இதழ்கள் வெளிவரும் வரையிலான கேப்பிலும், அதன் ரிவையூ காலமான 2வாரங்கள் முடிந்தபின், மே மாத கோடைமலர் கைக்கு வர இருக்கும் 15 நாள் கேப்பிலும் மீதி உள்ள கோடைமலர்கள் பற்றிய நினைவு கூறலை சொல்லி முடித்து விடுகிறேன். அந்நாட்களில் குதூகலத்தை வழங்கிய இதழ்களுக்கு என்னால் முடிந்த மினி மரியாதை; அடுத்த 16பாகங்களுக்கும் என் "கத்தி"யில் இருந்து நீங்கள் தப்ப முடியாதுன்னேன்...ஹி...ஹி...ஹி...
//1986கோடைமலர் அகில உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது... //
Deleteசார்...கோபால் பல்பொடி கூட சீலோன் ; மலேஷியா ; சிங்கப்பூர் என்றுதான் விளம்பரம் பண்ணுவார்கள் அந்நாட்களது பொருட்காட்சிகளில் !
நீங்களோ நேராக அகில உலக ரேஞ்சுக்கு கிளம்பி விட்டீர்களே !!
@ டெக்ஸ் விஜய்
Deleteஅருமை அருமை!!!
///*சதி வலை-1985
*கோடைமலர்-1986
*கோடைமலர்-1987
*ட்ராகன் நகரம்-1988
*வைக்கிங் தீவு மர்மம்-1989
*திக்குத் தெரியாத தீவில்-1990
*லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
*இரத்த வெறியர்கள்-1993
*லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
*லயன் Top10 ஸ்பெசல்-1995
*மரணமுள்-1996
*கார்சனின் கடந்த காலம்1&2-1997
*மந்திர மண்டலம்-1999
*இருளின் மைந்தர்கள்-2003
*மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
*லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
*லயன் கெளபாய் ஸ்பெசல்-2006////
இந்த லிஸ்டை ச்சும்மாவேணும் படித்தாலே மனதுக்குள் ஒரு குதூகலம் பொங்குகிறதே... அதை வார்த்தைகளால் வடிக்கவே இயலாது!!
விஜயன் சார், இந்த வருட கோடைமலர் பற்றி முன்னோட்டம் ப்ளீஸ்.
Deleteசெயலர்@
Delete///இந்த லிஸ்டை ச்சும்மாவேணும் படித்தாலே மனதுக்குள் ஒரு குதூகலம் பொங்குகிறதே... அதை வார்த்தைகளால் வடிக்கவே இயலாது!!///----
மதியம் இந்த லிஸ்ட்ல உள்ள புத்தகங்கள் அனைத்தும் (சதிவலை& திக்கு தெரியாத தீவு தவிர) ஒன்றாக வைத்துப் பார்த்து மலைத்துத் தான் போனேன்....
பாக்கெட் சைஸ் டூ மெகாஆஆ சைஸ்;
விதவிதமான தடிமன்களில்;
ரூபாய் 4 டூ 100;
அடேங்கப்பா நிஜமாவே பொக்கிஷம் தான்...
அதிலும் அந்த டாப்10 ஸ்பெசல், கன்னத்தோடு வைத்து அழகு பார்க்காம இருக்கவே முடியாது....
XIII முழுவதும் - especially முதல் 18 பாகங்கள் 2013ல் தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தேன் ஒரு சேர - எனவே நன்றாக ஞாபகம் உள்ளது. இந்தத் தொகுப்பை நான் வாங்காமல் விடுவதற்கு இதுவே பிரதான காரணம்.
ReplyDeleteமேலும் XIII தான் நமது ஆகச்சிறந்த வெளியீடு என்பதை ஆணித்தரமாக மறுக்கும் காட்சியாக்கும் நான் :-)
It's more banal given the times and would be a good display on the shelf.
Salem டெக்ஸ் ஜி சாத்தான் வேட்டை கோடை மலரா அல்லது தீபாவளி மலரா சரியாக நினைவில் இல்லை.
ReplyDeleteதீபாவளி மலர் தான் ஜி, 2003ல்...
Deleteதீபாவளி
Deleteஏர்வாடி பக்கமா கீழக்கரைங்கிற ஊர்ல இருக்கேன்.
ReplyDeleteஊருக்கு கிளம்பப்போறேன் ன்னு சொன்னேன்.
வெயிலு ஸாஸ்தியா இருக்குவே.
இந்தப்பக்கமா ஏர்வாடி வழியா போயிருங்க அப்டிங்கிறாங்கே.
மாப்பூ வச்சுட்டாங்கே ஆப்பு....
எடிட்டர் சார்
Deleteஇருபதே இருபது..,
இதுக்கே கீழக்கரைன்னா...,
ஏதாவது பாத்து போட்டு குடுங்க சாமி
ஊரு போயி சேரணும்.
ஈ.வி.தான் இப்போது மொத்தமாய் sponsor பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம் !! ஓவர்..ஓவர்...!
Deleteமன்னிக்கவும் J சார்! 20 பக்கங்களுக்கு கீழக்கரை வரை மட்டுமே அனுமதிக்க முடியும்! :P
Deleteஆத்தாடி
Deleteஇன்னொரு பிரியாணியா
/// Vijayan23 March 2018 at 15:19:00 GMT+5:30
ReplyDeleteநண்பர் ஜெகத்துக்கு அட்டகாச பிறந்தநாள் வாழ்த்துக்கள் !///
மிக்க நன்றிகள் சார்!! உங்களிடமிருந்து வாழ்த்து பெறுவேன் என்று இந்த நிமிடம் வரை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை சார். எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது ஸார். இந்த ஆண்டு ஈரோடு புத்தக விழாவிற்கு கண்டிப்பாக வந்து உங்களை நேரில் பார்த்து இரத்தப்படலம் புத்தகத்தை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவலில் காத்திருக்கிறேன் சார்!
மேலும் என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!!!
நானுஞ் சொல்லிட்றேன்
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Jagaty kumar..!!💐💐💐
Deleteஜெகத்குமார் சா௫க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!!
Deleteஜகத்....தொலைவிலிருந்து கொண்டு மனசுக்குள் என்னை பற்றி பெருசாய் உருவாக்கப்படுத்தியிருப்பது புரிகிறது ! இதை நான் சொல்வது நிச்சயமாய் அவையடக்கத்தின் பொருட்டல்ல நண்பரே -ஆனால் நானெல்லாம் அத்தனை பெரிய கம்பு சுத்தும் மாஸ்டர் கிடையவே கிடையாது ! பக்கத்து வீட்டு பூனைக்குட்டிக்குக் கூட என்னை இங்கே அடையாளம் தெரியாது ! நமக்கெல்லாம் பிரியமானதொரு பணியை ஜாலியாய் செய்து வரும் யோகம் கொண்டவன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் ! So நான் வாழ்த்துச் சொல்வதெல்லாம் ஒரு மெகா மேட்டரா ? Chill ஜகத் !!
ReplyDelete///ஆனால் நானெல்லாம் அத்தனை பெரிய கம்பு சுத்தும் மாஸ்டர் கிடையவே கிடையாது !///
Deleteசே.. சே... அதுக்கெல்லாம் நாங்க வேற ஆள் வச்சிருக்கோம் சார்!!
////பக்கத்து வீட்டு பூனைக்குட்டிக்குக் கூட என்னை இங்கே அடையாளம் தெரியாது !///
Deleteபரவாயில்ல விடுங்க சார்! அதான் பல கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் ஒரு பூனைக்கு உங்களை நல்லா அடையாளம் தெரியுதே!!
மெய்யாவா மிய்யாவ்
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா..
ReplyDelete183rd
ReplyDeleteI 184😊......புவியா
ReplyDeleteசார் நானும் ஞாபக மறதி பார்டஂடிதான் . இப முதல் பாகம் இப்ப புரட்னாலும் சுவாரஷ்யம்தான் . ஏக தடவை நான் படித்தாலும் புதிதாய் படிப்பத போல இருப்பதுதான் அதன் சுவாரஷ்யமே . எல்லா பக்கங்களும் விறூவிறுப்பினால் எழுதப்பட்டிருக்கும் . எல்லா பாகமும் சுவாரஷ்யமா இருக்கும் . ஜவ்வாய் எனக்குத் தோன்றியதே இல்லை . ஏன்னா இதிகாசம்தான் . சார் வாழ்க்கை மீது சுவாரஷ்யத்த கூட்டியது பதிமூன்றுதான் என அடித்து சொல்வதில் தயக்கமில்லை என்னிடம் . அற்புத தன்னம்பிக்கை உலகமது . கணேச போல ஹிண்ட் டெவலப் செய்து வைத்து மூன்று வருடமா துயிலுது . அத சரி செய்து அனுப்பி வைக்கிறேன் . தலையனைக்கு அருகே இப்ப கூட துயில்வது இந்த இதழ்தான் .
ReplyDeleteஆசிரியரின் புதிய பதிவு ரெடி.
ReplyDelete