Powered By Blogger

Sunday, March 18, 2018

உச்சமும், மிச்சமும்...!

நண்பர்களே,

வணக்கம். அன்பு நிறைந்த வாழ்த்துக்களும், TOP 3 / BOTTOM 3 என்ற பட்டியல்களும் ஒன்றிணைய -  ஒரே நாளில் மந்திர எண் 300-ஐ தொட்டுப் பிடித்திடுவது சாத்தியமாகியிருப்பதால் - இதோவொரு உ.ப. !! கடந்த மூன்று பதிவுகளிலுமே காலம் கற்றுத் தந்துள்ள சில பாடங்களை அமல்படுத்த முனைந்து வருகிறேன் ! And ரசனை ; தேர்வு ; ஹீரோக்கள் சார்ந்த பதிவுகளாய் அவை மூன்றுமே அமைந்து போனது ஒரு சந்தோஷத் தற்செயலோ / திட்டமிட்ட நற்செயலோ - நண்பர்கள் பலரும் மௌனங்களைக் களைய முன்வந்திருப்பது அழகான பலன் என்பேன்   ! 

சந்தாக்களின்றி நம் பயணமில்லை என்று மூச்சுக்கு முன்னூறு தபா ஒப்பிப்பது பற்றாது - உங்களுக்கு மெய்யாகவே என்ன வேண்டுமென்ற தேடலுக்கும் மெனக்கெட்டிட வேண்டும் என்ற ஞானோதயம் எனக்குள் அழுந்த எழுந்தது இந்த பிப்ரவரி & மார்ச் மாதங்களின் துவக்கங்களிலேயே ! ஜனவரியில் தோர்கல் ஹார்டகவர் ; நிஜங்கள் நிசப்தம் கி.நா ; டெக்சின் "கணவாய் யுத்தம்" இத்யாதி என அதகளப் பந்திவிரிக்க, எல்லோருக்கும் ஏதேனும் கிடைத்த திருப்தி தென்பட்டது ! ஆனால் come பிப்ரவரி & மார்ச் - 'ரின்டின் கேனா ? smurf-ஆ ? ஜில் ஜோர்டானா ? என்ற நெளிதல்கள் தலைகாட்டிய போதுதான் நெருடல் துவங்கியது எனக்கு ! Not that it hasn't happened before - ஆனால் இம்முறை அது கவனத்தைக் கோரும் விதமாய் அடுத்தடுத்த மாதங்களில், ஒருசேர அமைந்து போனதே வேறுபாடோ - என்னவோ ?!  அதற்காக கார்ட்டூன் அணி ஒட்டுமொத்தமாய் ஜார்கண்ட் பக்கமாய் தேசாந்திரம் கிளம்பிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; இருப்போரில் மறுவாய்ப்புக்கு யார் அருகதை கொண்டுள்ளார்களென்று பரிசீலனை செய்வோம் ; அப்புறமாய் புதுசாய் (கார்ட்டூன்) தொடர்களை முயற்சிப்போம் (மேக் & ஜாக் போல) ! அவர்களுள் யாரேனும் தேறாமலா போய் விடுவார்கள் ? 

Make no mistake - ரின்டின்னோ ; நீலக் குட்டிப்பசங்களோ ; ஜில்லாரோ நமது சான்றிதழ்களால் குறைந்தோ-உயர்ந்தோ போகக் காத்திருக்கும் புதுமுகங்களல்ல !! ஒவ்வொருவரும் சில பல இலட்சம் விற்பனை ; வர்ணனை கண்டுள்ள சாதித்த நாயகர்களே ! So நமது thumbs down அவர்களது படைப்புகள் மீதானதொரு விமர்சனமாகிட இயலாது தான் ! அதே சமயம் - ரசனை எனும் அளவுகோல்கள் ஆளாளுக்கு மாறுபடும் போது - "இது எனக்கு லயிக்கலை !!" என்று உரிமையோடு சொல்லும் நண்பர்களிடமும் தவறில்லை என்பதும் புரிகிறது ! So நம்மளவுக்கு யாரை விசனமின்றி ரசிக்க இயல்கிறதோ - அவர்களோடே குடித்தனம் நடத்துவோமே என்று தோன்றுகிறது ! End of the day - உங்களின் சந்தோஷங்கள் தானே நமது இலக்கே ? 

Oh yes - 2019-ல் நிறைய கல்தாக்கள் on the cards என்பதில் சந்தேகமில்லை !! ஆனால் ஒரு  நாயகர் ஒரு potential கல்தாவிலிருந்து தப்பவும் செய்திருப்பதும் உங்கள் புண்ணியத்திலேயே  !

நமது நரைமீசை ஷெல்டன் புத்தகவிழா விற்பனைகளில் அவ்வளவாய் கம்பு சுத்திய பாடைக் காணோம் என்பதால் அடுத்த வருஷத்தில் அவரை ஓரம் கட்டினால் தேவலை என்றொரு எண்ணம் எனக்குள் துளிர்விட்டிருந்தது நிஜமே ! ஆனால் இங்கே உங்களின் பெரும்பான்மையின் TOP 3-க்குள் மனுஷன் குத்துக்கல்லாட்டம் இருப்பதைப் பார்த்த கணமே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தினை வரவழைத்து மொழிபெயர்ப்பிற்கும் அனுப்பியாச்சு ! So உங்கள் மௌனக் கலைவுகளின் முதல் வெற்றி இதுவென்பேன் !
அதே சமயம் உங்கள் அபிப்பிராயங்களை ஓரளவுக்கு அறிந்த பிற்பாடுமே,  இணைதடத்திலேயே வண்டி ஓட்டுவதும் தொடர்ந்திடவே போகிறது ! எப்படி என்று கேட்கிறீர்களா ?

உங்களின் Bottom 3 பட்டியலைப் பார்க்கும் போது நிறைய கார்ட்டூன் கோஷ்டிகளும் ; ஜெரெமியாவும் ; டைலன் டாகும், மேஜிக் விண்டும் இடம்பிடித்திருப்பது புரிகிறது ! அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But  ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel ! ஒத்துக் கொள்கிறேன் - முதல் தொகுப்பின் கதைகள் தேம்ஸ் நதிக்குத் தீ வைத்திடவில்லை தான் ; அட...தேம்ஸ் வரைப் போவானேன் - நம்மூர் தட்டான் ஊரணியைக் கூட அவை பற்றியெரிய செய்யவில்லை தான் !  ஆனால் ஹெர்மன் எனும் ஜாம்பவானின் portfolio-வில் ஒரு பிரதான இடம்பிடிக்கும் தொடருக்கு இன்னொரு வாய்ப்புத் தராது மறுக்க மனம் ஒப்பவில்லை ! Maybe அடுத்த 3 ஆல்பங்கள் இணைந்த இரண்டாம் தொகுப்பிலுமே, சொதப்பல் தான் பலனாகிப் போயின் - இருக்கவே இருக்கு நமது விசாலப் பரண் !! என்ன ஒரே வித்தியாசம் - ஜெரெமியா-2 தலையில் திணிப்பாய் இருந்திடாது ! இஷ்டப்பட்டால் வாங்கிடலாம் என்ற சுதந்திரம் அங்கிருக்கும் ! அது எப்படி ? என்கிறீர்களா - சீக்கிரமே விடை கிட்டும் ! 
Before I sign off - முந்தைய பதிவில் கேட்ட அதே கேள்விகளை இங்கேயும் copy paste செய்கிறேன் - இன்னமும் அவற்றிற்கு பதில் சொல்லியிரா நண்பர்களின் பொருட்டு ! Let's keep it going guys !!

And  அன்பால் நனைத்த நண்பர்கள் சகலருக்கும், சார்ந்தோருக்கும் உளமார்ந்த நன்றிகள் !! Bye for now !! 
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்விகளோ கேள்விகள் - பதிவிலிருந்து : 

ரசனை”; “நாயகர்களின் தரவரிசைகள்” என்று சீரியஸாக கடந்த 2 வாரங்களைக் கடந்திருக்க – அதன் தொடர்ச்சியாய் எனக்குள் எழுந்து நின்ற கேள்விகளை கேட்பதோடு பதிவைத் துவங்கிட நினைக்கிறேன் ! தற்போது நம்மிடையே active ஆக உள்ள நாயகர்களுள் யாருக்கு எந்த க்ளாசில் டிக்கெட் வழங்குவது ? என்பது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள் ! இப்போது நான் கோருவது - நமது 2012 -ன் மறுவருகைக்குப் பின்பாய் அறிமுகம் கண்டுள்ள நாயக / நாயகியருள் - TOP  1 - 2 -3 என்ற இடங்களை யாருக்கு வழங்குவீர்களென்பதையே ! Please note : டெக்ஸ் வில்லர் ; டைகர் ; மாயாவி ; பிரின்ஸ் போல ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருந்த & தற்போதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் நாயகர்களை ஆட்டத்துக்கே சேர்த்திட வேண்டாமே ? முற்றிலும் புதுசாய் இந்த 6+ ஆண்டுகளில் நம்மிடையே உலாவத் துவங்கியுள்ளவர்களில், உங்களின் TOP 3 தேர்வுகளைச் சொல்லுங்களேன் ? 

இதோ - உங்கள் வசதிக்காக - இந்த 74 மாதங்களில் நாம் பார்த்திருக்கும் புதியவர்களின் லிஸ்ட் : (விடுதல்கள் இருப்பின் சொல்லுங்களேன் !!)
  1. லார்கோ வின்ச்
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. டேஞ்சர் டயபாலிக்
  4. கமான்சே 
  5. ஸ்டீல்பாடி ஷெர்லாக் 
  6. ஜில் ஜோர்டன் 
  7. மேஜிக் விண்ட்
  8. டைலன் டாக்
  9. ஜூலியா 
  10. ரின்டின் கேன்
  11. பௌன்சர் 
  12. ஜேசன் ப்ரைஸ்
  13. அண்டர்டேக்கர்
  14. ஜெரெமியா
  15. டிடெக்டிவ் ஜெரோம் 
  16. ப்ளூ கோட் பட்டாளம்
  17. கர்னல் கிளிப்டன்
  18. SMURFS 
  19. பென்னி 
  20. லியனார்டோ 
  21. தோர்கல் 
  22. லேடி S
  23. ட்யுராங்கோ

நானிதைக் கோரிட "சும்மாக்காச்சும்" என்பதைத் தாண்டியொரு காரணமுள்ளது ! ஒரு நாயகரை / நாயகியை அறிமுகம் செய்திடுவது சுலபம் ; அவர்களது தொடர்கள் உங்களது ஈர்ப்பைத் தக்க வைப்பது தான் கடினம் என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறேன் ! Very clearly - அந்நாட்களைப் போல யாரைக் கொணர்ந்தாலும் ரசிக்கும் வயதிலோ, ரசனை விளிம்புகளிலோ நாமிப்போது இல்லை ! So இனி வரும் நாட்களில் ஒரு புதியவரை கையைப் பிடித்து நம்பக்கமாய் இழுத்து வரும் முன்பாய் ஒன்றுக்கு நாலு தடவை நான் யோசிக்கத் தேவைப்படுமென்பது புரிகிறது ! So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 !

கேள்வி # 2 : TOP 3 யாரென்று அடையாளம் காட்டி விட்டு - "உப்மா 3 ' யாரென்று சொல்லாது போவது முறையாகாதே ? So இந்தப் புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? அவ்வப்போது வனவாசம் போகும் நாயகர்கள் சில காலத்து கடும் உறக்கத்துக்குப் பின்பாய் நம்மிடையே புனர்ஜென்மம் எடுப்பது உண்டெனும் போது  - யாரை தொடர் உறக்கத்திலேயே ஆழ்த்திடல் நலமென்று தெரிந்து வைத்திருப்பதும் தேவலாம் தானே ? 


கேள்வி # 3 : Comeback ஸ்பெஷல் துவக்கம், இப்போது வரை சுமார் 230 இதழ்கள் வெளிவந்திருக்கும் என்பது ஒரு மொட்டைக் கணக்கு ! சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ ? 'டப்'பென்று பதில் ப்ளீஸ் ? No ஆழ்ந்த சிந்தனைஸ் !!  உங்கள் மனக்கண்ணில் அவை இடம்பிடிக்க காரணம் எதுவென்பதல்ல முக்கியம் இங்கே  ! கதையின் பொருட்டோ ; தயாரிப்பின் பொருட்டோ ; சேகரிப்பின் பொருட்டோ - எதன் காரணமாய் அவை உங்கள்  மனதுகளில்  நிழலாடினாலும் பரவாயில்லை - just let us know please !

"ஆங்...ஒண்ணுமே நினைவில்லியே கண்ணு ....மச மசன்னு என்னமோ கலர் கலரா மட்டுமே மண்டையிலே ஓடுது.....அப்பாலிக்கா ஒண்ணுமே நிக்கலியே  !!" என்று பதிலளிக்கும்  அணியாக இருப்பினும் no issues (?!!!) இதற்கான பதிலை -  "Only மச மச " என்று சொன்னாலும் போதும் ! 

கேள்வி # 4 : இந்த 230-க்கு முந்தைய சுமார் 500 + இதழ்களை தேடித் திரிந்து, பழைய பேப்பர் கடைகளுக்கு படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கள் சொற்பமாகவேணும் இன்னமும் உண்டென்பதில் ஐயமில்லை ! எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ? என்பதே ! அலாவுதீன் கில்ஜி ரேஞ்சுக்கு இறங்கிப் படையெடுக்காவிடினும், நம்ம ஸ்டீல் பாடி ஷெர்லாக் ரேஞ்சுக்காச்சும் எந்த இதழையாவது தேட முற்படுகிறீர்களா ? 

கேள்வி # 5 : அந்தக் காலம் போல வருமா ?" என்பது நமக்கெல்லாம் ஏதேதோ விதங்களில் பிடித்தமான டயலாக்கே !! "சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே படிச்ச இதழ்" ; "10 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுப் போய் வாங்கிட்டு வந்த புக்கு" ; "பைக்குள்ளாற மறைச்சு வய்சு ஸ்கூலிலே படிச்ச இதழ் " என்று ஏதேதோ காரணங்களின்  பொருட்டு நமக்கு வாஞ்சையான இதழ்களை பத்திரப்படுத்தி, அவ்வப்போது மறுவாசிப்புப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கலாம் ! அல்ல எனது இப்போதைய வினவில் !! நான் கேட்பதெல்லாம் - "இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? இங்கேயுமே ஒரு FIRST 3 என்று இருந்தால் போதும் !!

"அக்காங்...முதவாட்டி படிக்கவே நேரத்தை காணோம்...இதிலே மறுக்காவா  ?? சும்மா போவியா ?"  என்ற பதில் கொண்டுள்ள அணியா நீங்கள் ? No worries - உங்கள் பதிலை : "No மறுக்கா !!" என்று போட்டாலும் போதும் ! 

Last Question : நமது சட்டித் தலையன் ஆர்ச்சியிடன் அந்தக் கால இயந்திரத்தை ஆட்டையைப் போட்ட கையோடு, குடு குடுவென்று காலத்தில் முன்னோக்கிச் செல்வது மட்டும் சாத்தியமாகின் - இன்றிலிருந்து இன்னுமொரு 5 ஆண்டுகள் கழித்து நாமெல்லாம் எப்படியிருப்போம் / எங்கிருப்போமென்று கண்கூடாய்ப் பார்த்திடவே செய்யலாம் ! இன்னும் டாலடிக்கும் மண்டையோடும், காது வரை நீளும் வாயோடும் நான் சுற்றித் திரிவேன் என்ற மட்டில் நிச்சயம் ! ஆனால் நம்மிடம்  ஒரு கால இயந்திரம் இல்லை எனும் போது - கற்பனை + ஆழ்சிந்தனை   என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? இன்றைக்கொரு 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரு பௌன்சரை நம்மிடையே கனவில் கூட உருவாக்கப்படுத்தியிருக்க இயலாது தானே ? ஒரு லார்கோ பாணிக்  கதையை நாம் ஆர்வத்தோடு ஏற்றிருப்போமென்ற யூகங்கள் தான் இருந்திருக்க முடியுமா ? So ரசனைகளில் நிகழ்ந்திடும் மாற்றங்கள் ஓசையின்றி நம்மிடையே படர்ந்துள்ளன ! 5 years down the line - அந்த ரசனை மாற்றங்கள் எவ்விதம் இருக்கக் கூடுமென்ற யூகங்கள் ? Please note : இதுவொரு ஜாலியான / சிரத்தையான யூகமாய் மாத்திரமே இருந்திடட்டுமே  !!
-----------------------------------------------------------------------------------------------------------
காத்திருக்கும் LADY S-ன்பிரிவியூ ! 

322 comments:

  1. Top 3

    Tex
    Tiger
    Modesty blaise
    Bouncer
    Wyne Sheldon
    Larco
    Lady s
    Duraango
    Thorgal


    உப்புமா ...3

    Smarf
    Rintinken
    Leonardo
    Blugoat
    Penny

    ஒக்லஹோமா- டெக்ஸ் கதை அட்டகாசமான கதை....
    சர்வமும் நானே - ஒரே நாளில் மூன்று முறை படித்த கதை இது....
    பெளசன்சர் கதை மீண்டும் தோன்றும் அலாதியான வெரைட்டி.... இதுபோன்ற கதை தொடரலாம்

    ReplyDelete
  2. முதல் முறையாக எனக்கு முதலிடம் .....

    ReplyDelete
  3. முதல் கேள்வி!

    லார்கோ
    தோர்கல்
    ப்ளூகோட்ஸ்

    இரண்டாம் கேள்வி!

    ஜில் ஜோர்டன்
    மேஜிக் விண்ட்
    டயபாலிக்
    பென்னி

    மூன்றாம் கேள்வி!

    லயன் மேக்னம் ஸ்பெஷல்
    இரத்தக்கோட்டை
    டிராகன் நகரம்

    நான்காம் கேள்வி!

    நெவர் பிபோர் ஸ்பெஷல்.
    வல்லவர்கள் வீழ்வதில்லை
    நியு லுக் ஸ்பெஷல்

    ஐந்தாம் கேள்வி!

    தோர்கல் ஆல்பங்கள்.
    க்யூபா படலம்
    அந்திமண்டலம்
    ஜேசன் ப்ரைஸ்

    ReplyDelete
    Replies
    1. ஆறாவது கேள்வி!

      கறுப்பு வெள்ளை கதைகள் முக்காடு போட்டு விடைபெற்றிருக்கும்.
      கிராபிக் நாவல்களுக்கு தனி ரசிகர்மன்றங்கள் உருவாகியிருக்கும்.

      சோதனை முயற்ச்சியாக ஏதேனும் ஸ்பெஷல் வெளியீடுகளில், உள்ள ஒரு கதையில் 3D எபெக்ட்டுடன் வெளிவரும். (ஐடியா நல்லாருக்கே)

      அதுக்கும் மேல

      'சிங்கத்தின் சிறு வயது'தொகுப்பைக் கேட்டு, சினங்கொண்ட சிங்கம், தங்க மனங்கொண்ட தங்கம், தானைத் தலைவர் அவர்கள் தமது 1001தடவையாக போராட்டத்தை அறிவிப்பார்.

      Delete
    2. கோவிந்த் உங்ககிட்ட LMS இல்லையா ஆச்சிரியம் தான்.வல்லவர்கள் வீழ்வதில்லை
      நியு லுக் ஸ்பெஷல் இதெல்லாம் எப்படி தவற விட்டிங்க.

      Delete
    3. அது NBS சார். நிதி நெருக்கடியிலே தவற விட்டு விட்டேன்.
      வல்லவர்கள் வீழ்வதில்லை என்னோட கவனக்குறைவால தவற விட்டுவிட்டேன். நியூலுக் ஸ்பெஷல் இருக்கும்னுதான் நினைக்கிறேன்.

      Delete
    4. ஓகே,வல்லவர்கள் வீழ்வதில்லை இன்னொரு காப்பி வேண்டுமெனில் தருகிறேன்.

      Delete
    5. // அது NBS சார். நிதி நெருக்கடியிலே தவற விட்டு விட்டேன்.//
      அடடே.

      Delete
    6. ///ஓகே,வல்லவர்கள் வீழ்வதில்லை இன்னொரு காப்பி வேண்டுமெனில் தருகிறேன்///

      ஓ... இன்ப அதிர்ச்சி. தேங்க் யூ சார்.

      Delete
    7. 'சிங்கத்தின் சிறு வயது'தொகுப்பைக் கேட்டு, சினங்கொண்ட சிங்கம், தங்க மனங்கொண்ட தங்கம், தானைத் தலைவர் அவர்கள் தமது 1001தடவையாக போராட்டத்தை அறிவிப்பார்...

      ######

      ஹீம்..இப்படி ஆயிறுச்சே நம்ம நிலைமை..

      இனி வேலைக்கு ஆவாது .சார் சீரியஸா கேக்குறேன் சி்சி்வ அடுத்த மாசமாவது வருமா வராதா ..வராதுன்னா சொல்லிருங்க..
      இதுவரை வந்த சி்சிவ தொகுப்பா போட சொல்லி போராடனும் ..

      Delete
    8. தல...சி. சி. வ. தொகுப்புக்கு எனக்கு செம ஐடியா இருக்கு. ஆகஸ்ட்ல பேசலாம்.

      Delete
    9. கீரை வடையா ? வாழைப்பூ வடையா ? எது சுகப்படும் தலீவரே ?

      Delete
    10. ஐயகோகோகோஓஓஓ
      மறுபடியுமா

      Delete
  4. Replies
    1. ரெடிமேட் பதிவா
      சார்
      Thanks

      Delete
    2. போட்டோ கீழ விழுந்த சத்தம் கேட்டுட்டு நம்ப 💝S நைட் ட்ரஸ்ல வந்து பாக்குறாங்க.....
      தடிதடியா மூணு முகமூடி குண்டனுங்க
      என்ன நடக்குமோ?
      திக்.,திக்.,
      மீதி கலர் தாளில்
      ரசியுங்கள்...

      டட்ட டாங்.,,,,,☺

      Delete
  5. ஆசிரியருக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாவ்,அதுக்குள்ள புதுப் பதிவா.

    ReplyDelete
    Replies
    1. மொதல்ல எல்லாம், கட் பண்ணி ஓபன் பண்ணா, புது கமெண்ட்தான் வரும்.

      இன்னிக்கி கட் பண்ணி ஓபன் பண்றதுக்குள்ள புது பதிவே வந்திடுச்சி.😃😃😃

      Delete
    2. அட...இன்றைக்கு ஒரு நாளாவது வேலைகளுக்குள் குதிக்காது take it easy என்றிருக்க எண்ணினேன் ! But சும்மா இருப்பது செம மொக்கையாச்சே ; அவ்வப்போது இங்கே தலை காட்டிட முடிந்தது ! And உங்களின் வேகங்களுக்கு ஈடு தந்தாக வேண்டுமன்றோ ?

      Delete
  7. ///உங்களின் Bottom 3 பட்டியலைப் பார்க்கும் போது நிறைய கார்ட்டூன் கோஷ்டிகளும் ; ஜெரெமியாவும் ; டைலன் டாகும், மேஜிக் விண்டும் இடம்பிடித்திருப்பது புரிகிறது ! அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel !////

    ஒப்புக்கொள்கிறேன் எடிட்டர் சார்! நான் என்னுடைய பாட்டம்-3 லிஸ்ட்டில் ஜெரெமியாவைக் கொண்டுவந்திருக்கக்கூடாது தான்! இன்னும் ஓரிரு வாய்ப்புகளுக்குப் பிறகு இந்த லிஸ்ட்டில் பெயர் சேர்க்க முனைவதே சரி!

    மன்னிச்சூ!!

    ReplyDelete
  8. // TOP 3-க்குள் மனுஷன் குத்துக்கல்லாட்டம் இருப்பதைப் பார்த்த கணமே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தினை வரவழைத்து மொழிபெயர்ப்பிற்கும் அனுப்பியாச்சு.//
    அருமை,அருமை,மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. கட்டை விரல் காதலர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. பிறந்த நாளுக்கு கடை அடைப்பு இல்ல இல்ல.. ஒரு குண்டு புத்தகம் கூட இல்லியா...

    ReplyDelete
    Replies
    1. அதானே.

      வர வர யாருக்குமே பொறுப்பில்லாம போய்டுச்சி.

      Delete
    2. ரம்மி ஜீ பிறந்த நாள் சிறப்பா அடுத்த மாத புத்தகத்தை இந்த வாரமே அனுப்புறதா என் நடுநசிகனவுல வந்தது..

      பகல் கனவு தான் பலிக்காது ...

      ( சார் ..நீங்க என்னை ஏமாத்துனாலும் பரவாலை ..பழமொழியை ஏமாத்தீராதிங்க .சாமீ கண்ணை குத்திரும்..)

      Delete
    3. ஹா ஹா சூப்பர் ரூமி!

      Delete
  10. TOP 3-க்குள் மனுஷன் குத்துக்கல்லாட்டம் இருப்பதைப் பார்த்த கணமே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தினை வரவழைத்து மொழிபெயர்ப்பிற்கும் அனுப்பியாச்சு

    #########

    வாவ்...சூப்பரான மகிழ்ச்சியான செய்தி சார்..ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ..உண்மையாகவே லார்கோ ..ஷெல்டன் இவர்களின் கதை அறிவிப்பு வந்தாலே மனசு குஷியாகுது.அவங்கள்ல ஒருத்தரை நிறுத்துற அளவுக்கு போயிட்டீங்களே..நல்ல வேளை..கேள்வி கேட்டீங்க..


    புத்தக விழாவுல ஷெல்டனை எப்படியாச்சும் கரை சேர்க்க ஒரு யோசனை பண்ணனுமே..என்ன பண்ணலாம் சொல்லுங்க நண்பர்களே..!?

    ReplyDelete
    Replies
    1. சும்மாங்காச்சும் ஷெல்டன் புக் ஜூப்பர்
      அப்பிடின்னு பந்தா பண்ணி புக்கை கையில வச்சிகிட்டு சத்தமா பேசணும்

      புக் தீரப்போகுது மச்சி சீக்கிரமா ஸ்டாலுக்கு போ

      வாவ்
      ஆவ்
      அப்பிடி இப்பிடின்னு அளந்து விடணும்

      புக் பேர் வாசல்ல பெரிசா
      ஷெல்டன் பேனர போடணும்
      வேய்ன் ஷெல்டன் வருக வருக ன்னு

      அம்புட்டுதே

      Delete
  11. ///உங்களின் Bottom 3 பட்டியலைப் பார்க்கும் போது நிறைய கார்ட்டூன் கோஷ்டிகளும் ; ஜெரெமியாவும் ; டைலன் டாகும், மேஜிக் விண்டும் இடம்பிடித்திருப்பது புரிகிறது ! அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel !////


    கண்டிப்பாக வழிமொழிகிறேன் சார்..எனக்கு தெரிந்து கெளபாய் களத்தில் விசித்திர தீர்ப்பு பொற்றவர் ஜெராமியாவாக தான் இருப்பார்.எனவே மீண்டும் ஒரு முறை அவரை டெஸ்ட் ட்ரைவ் செய்வதில் தவறு இல்லை..:-)

    ReplyDelete
    Replies
    1. செஞ்சுறுவோம்....(தனுஷ் ஸ்டைல்ல)

      Delete
    2. I loved jeramaiha, the art work was awesome - கதை களம் was very unique.

      Delete
    3. நான் ஜெரமியா வாங்க வில்லை கருத்து சொல்ல எனக்கு தகுதி கிடையாது ஆனால் பெரும்பாலான நண்பர்கள் விமர்சனங்கள் ஈ.வி சொன்னது போல இருந்தது .

      Delete
  12. என்னுடைய டாப்3... லார்கோ ... ஷெல்டன்.. மூணாவது யோசிச்சு கி.நா குரூப்..

    ReplyDelete
  13. டியர் விஜயன் சார் மனமினிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...

    ஸ்பைடரும், ஆர்ச்சியும் என் பால்யத்தை இனிமையாக்கினார்கள் என்றால், .

    டெக்ஸீம், கேப்டன் டைகரும் என் கல்லூரி காலங்களை இனிமையாக்கினார்கள் எனில்

    லார்கோவும், ஷெல்டனும் இதோ என் மத்திம வயதில் என் வாழ்க்கை பயணத்தை இனிமையாக்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் நீங்க மட்டுமே....

    காமிக்ஸ்2017 ல் காணாமல் போகும் என சிலர் கிண்டல்
    செய்தபோது, அந்த வருடம்தான் அதிக காமிக்ஸ் தந்து அவர்களுக்கு எழுத்தின்மூலம் பதில் சொல்லாமல் செயலின்மூலம் பதில் சொன்னீர்கள்...

    உங்களின் வளர்ச்சி தமிழ்காமிக்ஸின் வளர்ச்சி...

    தங்களை காயபடுத்தி காமிக்ஸை வரவிடாமல் செய்ய சில புண்ணியாத்மாக்கள் திட்டமிட்டாலும் வாசகர்களின் பிரதிபலன் எதிர்பாரா அன்பு உங்களை கவசம்போல காத்திருக்கும்....


    ReplyDelete
    Replies
    1. கண்கள் தளும்புகின்றன

      Delete
    2. கனிவான வார்த்தைகள்...!! நன்றிகள் டாக்டர் !!

      காமிக்ஸ் எனும் ஆலமரம் நமக்கு விலாசமாகிடுமே தவிர, நாம் அதற்கு விலாசமாகுவதில்லையே சார் ! நாட்களின் ஓட்டத்தோடு அந்த மரம் விசாலமாகிடும் சமயம், நமக்கு வாய்க்கின்ற நிழலுமே பெரிதாகிடுகிறது !! அவ்வளவே !!

      Delete

  14. ///உங்களின் Bottom 3 பட்டியலைப் பார்க்கும் போது நிறைய கார்ட்டூன் கோஷ்டிகளும் ; ஜெரெமியாவும் ; டைலன் டாகும், மேஜிக் விண்டும் இடம்பிடித்திருப்பது புரிகிறது ! அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel !////

    ஜெரெமையா கண்டிப்பாக ஜெயிப்பார் என்றே நம்புகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை தானே வாழ்க்கையே சார் !

      Delete
  15. ***** லயன் - ALL NEW SPECIAL *****
    ***** கிரீன்மேனர் கதைகள் *****
    **** போதையில் வந்த போதனை ****


    நள்ளிரவைத் தாண்டிய பொழுதில் கிரீன்மேனர் க்ளப்பின் கதவுகளைத் திறந்துகொண்டு வெளிப்படுகிறார்கள் அந்த பணக்காரப் பெரிசுகள் இருவரும்! ஒருவர் - புரொபஸர்; இன்னொருவர் - டாக்டர்! போதையில் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொள்வது இவர்களின் அன்றாட வழக்கம்! புரபஸர் தன் குதிரைவண்டியில் கிளம்ப, இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் தன் வீட்டிற்கு நடந்தே போகிறார் டாக்டர்!
    அதிகாலையில், ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் புரபஸரை போலீஸ் எழுப்பி, டாக்டரைக் கொன்றதற்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்கிறது! பலமாக மறுக்கிறார் புரபஸர். தன் நண்பனைக் கொல்ல தனக்கு எந்த முகாந்திரமும் இல்லையெனவும், இன்ஸ்பெக்டர் விரும்பினால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க புலனாய்வில் தானே உதவுவதாகவும் தெரிவிக்கிறார்.

    சடலம் கண்டெடுக்கப்பட்டதோ தெருவோரத்தில், ஒரு சவப்பெட்டியின் அளவுள்ள கடிகாரத்தில்! அந்தத் தெருவில் வசிக்கும் சாலையோரவாசிகள் வரவழைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறார்கள். தெருவில் அனாதையாகக் கிடந்த பிணத்தை தாங்கள்தான் கடிகாரத்தில் போட்டு அப்புறப்படுத்த யத்தனித்ததாக ஒப்புக்கொள்கின்றனர். அதற்குமுன்பு சிறுவர்கள் சிலர் அச்சடலத்தைச் சுற்றிவந்து ஆடிக்கொண்டிருந்த தகவலையும் வெளியிடுகிறார்கள்! அச்சிறுவர்களில் ஒருவன் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறான். தங்களுக்கு 'தேட்டை' அகப்படும்போதெல்லாம் குத்தாட்டம் போடுவது வழக்கமென்கிறான் அந்தச் சிறுவன். மேலும், தான் கஷ்டப்பட்டு மரத்தின் மேலிருந்த சடலத்தை இறக்கியதாகவும் சொல்கிறான்!

    மரத்தின் மீது டாக்டரின் சடலமா?!! காரணம் புரியாமல் குழம்பும் இன்ஸ்பெக்டருக்கு 'அடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்து மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கலாமே!' என்று ஐடியாக் கொடுக்கிறார் புரபஸர். சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரிக்க, பில்லி எனும் ஆசாமி குடிபோதையில் தெருவில் விழுந்துகிடந்த டாக்டரை தான்தான் தன்னுடைய ஐந்தாவது மாடியிலுள்ள அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், கதவைத் திறக்க முற்படும் வேளையில், குடிபோதையில் நிதானமிழந்திருந்த டாக்டர் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகவும் கூறுகிறான்!

    ஆக, டாக்டரின் மரணம் ஒரு விபத்து எனத் திட்டவட்டமாகத் தெரியவந்த நிலையில்... புரபஸரை அதிரடியாகக் கைது செய்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர்!!

    * விபத்து என்று நிரூபிக்கப்பட்ட நிலையிலும் புரபஸர் ஏன் கைது செய்யப்படவேண்டும்?
    * புரபஸர் செய்த குற்றமென்ன? குற்றப் பின்னணி என்ன?
    * இன்ஸ்பெக்டர் எப்படிக் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்?


    என்பதையெல்லாம் கார்ட்டூன் ரகத்திலான திகைக்கவைத்திடும் சித்திரங்களோடும், ஆச்சரியப்படுத்தும் வசனங்களோடும் 'லயன் ALL NEW SPECIAL' ல் படித்து ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைப் பெற்றிடுங்கள்!!



    ReplyDelete
    Replies
    1. க்ரீன் மேனர் கதைகளின் உருவாக்கப் பின்னணியை என்றைக்காவது முழுமையாய்ப் பகிர்ந்திட நேரம் கிட்டினால் சுவாரஸ்யமாகத் தானிருக்கும் !!

      மறக்க இயலா நாட்களவை !

      Delete
    2. ஒருநாள் போட்டுத் தாக்குங்களேன் சார்? கேட்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் என்பதோடு, புதிய வாசகர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்ததுபோலவும் இருக்குமில்லையா?

      கிரீன்மேனர் கதைகளின் மகத்துவம் நிறையப் பேசப்படவேண்டும் என்பது என் உள்ளூர ஆசைகளில் ஒன்று!

      Delete
    3. அவை வெளியான நாட்களில் SURF EXCEL ஏகமாய் விற்பனையானதுமே கிளைக் கதை தானே ?

      Delete
    4. ஹஹ்ஹ்ஹஹ்ஹா
      நம்ம மன்னர்கள் ரொம்ப சுத்தபத்தமா இருப்பாண்ணா

      Delete
  16. சார் Tex 70 பற்றி ரெண்டு வார்த்தை ஏதும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Dynamite Special தான் ஆகஸ்டில் வருகிறதே நண்பரே ?

      Delete
    2. என்ன என்ன கதை வருகிறது என நைசா கேட்டு பார்த்தேன். எந்த பக்கம் போனாலும் கேட் போட்ரீங்க சார்.

      Delete
    3. புத்தகத்தைக் கையில் ஏந்தும் போது கொஞ்சமேனும் சஸ்பென்ஸ் எஞ்சி நிற்கட்டுமே நண்பரே ?

      Delete
    4. சின்ன,சின்னதா மூணு க்ளு கொடுங்க சார் போதும்.

      Delete
  17. 1) முற்றிலும் புதுசாய் இந்த 6+ ஆண்டுகளில் நம்மிடையே உலாவத் துவங்கியுள்ளவர்களில், உங்களின் TOP 3 தேர்வுகளைச் சொல்லுங்களேன் ?
    a. தோர்கல்
    b. ட்யுராங்கோ & ஜெரெமியா
    c. ப்ளூ கோட் பட்டாளம்

    2. TOP 3 யாரென்று அடையாளம் காட்டி விட்டு - "உப்மா 3 ' யாரென்று சொல்லாது போவது முறையாகாதே ?
    a. ஸ்டீல்பாடி ஷெர்லாக்
    b. டேஞ்சர் டயபாலிக் (இவர் நல்லவரா கெட்டவரா என்பதே இன்னும் தெரியவில்லை)
    c. லேடி S (இந்த அம்மா கதையில் வேகம் இல்லை, அதே நேரம் இவர் கதையில் ஊறுகாய் போல் மற்றவர்கள் பயன் படுத்துவது, இவருக்கு என்று பெரிய action இல்லை)

    3. Comeback ஸ்பெஷல் துவக்கம், இப்போது வரை சுமார் 230 இதழ்கள் வெளிவந்திருக்கும் என்பது ஒரு மொட்டைக் கணக்கு ! சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ?
    a. Comeback பிறகு முதலில் வந்த குண்டு புத்தகம் NBS (??) தை பொங்கல் நேரத்தில் வந்த மாதிரி ஞாபகம்; புத்தகம் அனுப்பி இரண்டு நாட்கள் ஆன பின்பும் கையில் வரவில்லை அதே நேரம் அடுத்த சில நாட்கள் விடுமுறை என்பதால் கொரியர் அலுவலகத்திற்கு படையெடுத்தது நன்றாக நினைவில் உள்ளது
    b. நிலவொளியில் ஒரு நரபலி – படிக்கும் போதும் சரி படித்து முடித்த பின்பும் சரி மனது பட படவென அடித்தது. நேரம் கிடைக்கும் போது மீண்டும் படிக்க விருப்பபடும் ஒரு கதை.
    c. மின்னும் மரணம் வண்ணத் தொகுப்பு – இந்த கதை தனித்தனியாக கருப்பு வெள்ளையில் வரும் போது அந்த அளவு ரசிக்கவில்லை’ ஆனால் வண்ணத்தில் ஒரு புத்தகமாக வந்த போது மிகவும் ரசிக்க வைத்தது.

    மூன்று தான் என்றாலும் பல கதைகள் எனக்கு நினைவில் உள்ளது
    d. எமனின் திசை மேற்கு (அதில் உள்ள வசனங்கள் மிக பெரிய பிளஸ், குறிப்பாக அவன் விரலை வெட்டும் இடத்தில் உள்ள வசனம் மனதை என்னவோ செய்தது)
    e. கிரீன் மானேர் – பெரிய மனிதர்களின் இருட்டு பக்கத்தை வெளிச்சம் போட்ட கதை. நேரம் கிடைக்கும் போது மீண்டும் படிக்க விருப்பபடும் ஒரு கதை.
    f. நின்று போன நிமிடங்கள் – என்ன ஒரு கதை; செம திரில் விறுவிறுப்பு
    g. மர்ம மனிதன் மார்டின் கதை – வித்தியாசமான மழை பெய்யும் கதை, அதில் உங்களின் மொழி பெயர்ப்பு மிக பெரிய பிளஸ்! மார்டினின் பெருமையை பறைசாற்றி பலரை இவர் பக்கம் இழுத்த கதை.

    ReplyDelete
    Replies
    1. //எமனின் திசை மேற்கு (அதில் உள்ள வசனங்கள் மிக பெரிய பிளஸ், குறிப்பாக அவன் விரலை வெட்டும் இடத்தில் உள்ள வசனம் மனதை என்னவோ செய்தது//

      மறந்தே போய் விட்டதொரு இதழ் !! என்றாவது ஒரு நாள் இது போன்ற இதழ்களை தூசு தட்டி வெளியே எடுத்து அதனை ஒரு பதிவாக்கி ; அலசிடுவோமா ? சுவாரஸ்யமாக இருந்திடக்கூடும் !

      Delete
    2. இது தான் நமது முதல் கிராப்பிக் நாவல் என நினைக்கிறேன்.

      Delete
    3. இந்த கதையை படிக்க ஆரம்பித்த போது என்ன தலைப்பு என்ன யோசித்து கொண்டே படித்தேன், கடைசி சில பக்கங்களை நெருங்கும் போது ஆக எவ்வளவு சரியான தலைப்பு என எனது மனம் உங்களை பாராட்டியது.

      Delete
    4. நமது முதல் கிராபிக் நாவல் "இரத்தப் படலம்" என்பேன் !

      Delete
  18. 4. எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ?

    வேதாளன் வேண்டும். இந்திரஜால் புத்தகத்தில் வந்த இவரின் கதைகளை எல்லாம் படித்து இருக்கிறேன்! ஆனால் நமது முத்துவில் வந்த வேதாளன் கதைகளை இன்னும் படிக்கவில்லை. இவரை கண்ணில் காட்டுவீர்கள் என நம்பிக்கை உள்ளது! விரைவில் !!

    5. இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ?
    a. நிலவொளியில் ஒரு நரபலி
    b. எமனின் திசை மேற்கு
    c. கிரீன் மானேர்
    d. நின்று போன நிமிடங்கள்
    e. நளளிரவில் காலன் வருவான் (ஜூலியா)
    f. தோர்கல் முழுவதும்
    g. ஜெரெமியா

    தற்சமயம் ரின்டின் மற்றும் பொடியர்கள் எல்லாம் இரவு நேரம் குழந்தைகளுக்கு கதை சொல்வதால் பலமுறை மறுவாசிப்பில் இடம் பெற்று உள்ளார்கள்!

    ReplyDelete
  19. மார்டின்
    மறக்க முடியல....
    வித்தியாசமான ஹீரோ...

    ReplyDelete
    Replies
    1. மண்டையைப் பிய்க்கச் செய்பவரும் கூட !!

      Delete
  20. // அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel ! //

    எனக்கு இவர் தொடர்த்து வர வேண்டும்! ஏதாவது ஒரு வகையில் இவர் எனக்கு வேண்டும்! அதே போல் ஜூலியாவின் கதைகள், குறிப்பாக நின்று போன நிமிடங்கள் போன்ற கதைகள்!

    அதே போல் காமன்சே இன்னும் சில கதைகள் இவரின் ஆல்பத்தில் உள்ளது என நினைக்கிறன், அவைகளை ஏதாவது ஒரு வழியில் கொடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. //அதே போல் ஜூலியாவின் கதைகள், குறிப்பாக நின்று போன நிமிடங்கள் போன்ற கதைகள்! //

      ஜூலியாவின் தொடர் அங்கே செம வெற்றி கண்டு வரும் சமாச்சாரம் ! இதுவரையிலும் 232 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன ; and இப்போதும் தொடர்ந்து வருகிறது ! இந்தத் தொடருக்குமே நாம் கொஞ்சம் மூச்சு விட வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் தான் ! ஆனால் நண்பர்களுக்கு ஆரம்பம் முதலே இது ரசிக்காது போய் விட்டதே !!

      Delete
    2. பௌர்ணமியில் காலன் வருவான் கதையில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி மிக அழகாக இருந்தாள் அவளை ரசிக்க ஆரம்பிக்கும் வேளையில் கல்தாவில் சிக்கி விட்டாள் அழகி ஜீலியா வை இனி எப்போது பார்ப்பேனோ ஏங்கும் படங்கள் எக்கச்சக்கம்

      Delete
  21. Sir, Jumbo SPL pathi Etavathu vishesham Undo?

    ReplyDelete
  22. # அதே போல் காமன்சே இன்னும் சில கதைகள் இவரின் ஆல்பத்தில் உள்ளது என நினைக்கிறன், அவைகளை ஏதாவது ஒரு வழியில் கொடுங்கள்! #

    ஆமாம் சார்!ஹெர்மனின் கைவண்ணத்தில் வன்மேற்கை காட்டி விட்டு பாதியில் விடுவது நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு ஒன்பது இதழ்களாய் வெளியிட்டும், படிக்காது விட்டீர்களே - இது நியாயமா ? என்று நண்பர்களிடம் நான் கேட்க முடியுமா சார் ?

      Delete
    2. காமன்சே ரசிக்கவில்லை ஆனால் ஓவியம் செம டாப்.

      Delete
  23. இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்..

    ReplyDelete
  24. கேள்வி 2;
    1.ஸ்டீல் பாடி ஷெர்லாக் .
    2.டிடெக்டிவ் ஜொரோம்.
    3.லியனோர்டோ.

    ReplyDelete
  25. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  26. சார் நீங்கள் தளத்தில் பதில் பதிவிடும் போது கமெண்ட்ஸ் சர்வ சாதாரணமாக 300ஐ எட்டி பிடித்து விடுகிறது.எனக்கு
    உங்களோடு உரையாடுவது மிக பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  27. கேள்வி 5;
    1.சர்வமும் நானே.
    2.சட்டம் அறிந்திரா சமவெளி.
    3.நில் கவனி சுடு.
    4.பூத வேட்டை.
    5.ஒக்லஹோமா.
    6.இ௫ம்புக் குதிரையில் ஒ௫ தங்கப் புதையல்.
    7.தலையில்லாப் போராளி.
    8.மின்னும் மரணம்.
    9.தங்கக் கல்லறை.
    10.X111
    11.இரவே இ௫ளே கொல்லாதே.
    12.எமனின் திசை மேற்கு.
    13.அனைத்து லார்கோ வின்ச் கதைகள்.
    14.அனைத்து பிரின்ஸ் கதைகள்.
    15.கமான்சே அனைத்தும்.
    16.அனைத்து ஜானி கதைகள்.
    17.தேவ ரகசியம் தேடலுக்கல்ல.
    18.அனைத்து டாக் புல் -கிட் ஆர்டின் கதைகள்.
    19.அனைத்து ஷெல்டன் கதைகள்.
    20.ட்யூராங்கோ.
    21.தோர்கல் 22.மார்ட்டின் கதைகள்.
    இப் புத்தகங்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்கவில்லை.

    ReplyDelete
  28. சார் ஒருவேண்டுகோள்
    டெக்ஸ் 70 ஐ கொண்டாட இத்தாலிய மாடல் Tex பொம்மைகளை இறக்குமதி செய்ய முடியுமா சார்..?

    ReplyDelete
    Replies
    1. போதும் சாமி - இந்தாண்டில் உங்களின் பட்ஜெட்களுக்கு நாம் வைத்து வரும் வெடி குண்டுகள் !

      Delete
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்

    ReplyDelete
  30. முதல் 3

    லார்கோ
    பவுன்சர்
    அண்டர்டேக்கர்

    கடைசி 3

    லியோ தாத்தா
    Rin டின் கேன்
    Smarfs

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....பௌன்சர்....அண்டர்டேக்கர்....offbeat நாயகர்கள் தான் !

      Delete
  31. Top 3:
    1. ஜெரெமியா
    2. அண்டர்டேக்கர்
    3. தோர்கல்


    bottom 3:
    1.டேஞ்சர் டயபாலிக்
    2.டைலன் டாக்
    3.ட்யுராங்கோ

    Comeback special top 3:

    1. மின்னும் மரணம் வண்ணத் தொகுப்பு
    2. Karsanin kadantha kalam
    3. LMS (how can i forget my first time experience of that X Hit man Graphic Novel)

    Required Reprint :
    1. XIII (its coming still)
    2. Comanche senkuruthi pathaigal
    3. NBS

    Books that's i have Re-read:

    1. oru-sippaiyin-suvadukalil(no words needed)
    2.இறந்த காலம் இறப்பதில்லை(I still remember my armature English reviews of those days)
    3.தேவ ரகசியம் தேடலுக்கல்ல(it gave me visual treat, i was so obsessed with quality of art details, its impeccable details its always number one among Lionmuthus' books when its comes to art rating )

    Honor mention in the list (can take it as my rating in same order):
    Green manor, Jeromia, Tanga Kalarai, Karsanin Kadantha kalam, பெளசன்சர், Nil gavani Sudu, Jason brise,


    what am i doing ......I literally stroll little into my memory lane. thanks for it Edit sir!

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை அசை போடும் படலங்களுக்கு எப்போதுமே ஒரு சுவையும், சுகமும் உண்டு !Enjoy !!

      Delete
    2. கடேசி கேள்வி :

      Graphics novel will rule, and more new young readers will rule this block comment section too..... :) nambikkai than vazhkai !

      Delete
  32. ம்ம்ம் breakfast ஆயிருக்கும்னு நெனக்கிறேன்.
    This side டின்னர் முடிச்சி தூங்கப்போறோம் சார்.
    Goodday to you

    ReplyDelete
  33. விஜயன் சார், ஸ்மர்ப்ஸ் கதைகளில் வரும் ஸ்மர்ப்ஸ்களுக்கு ஒரே பெயரை எல்லா கதைகளிலும் பயன்படுத்தவும். உதாரணமாக விண்வெளியில் ஒரு பொடியன் கதையில் வரும் உம்மணாமூஞ்சி ஸ்மர்ப்ஸ் பெயர் வானம் தந்த வரத்தில் சிடுமூஞ்சி ஸ்மர்ப்ஸ் என உள்ளது.

    கார்டூன் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கும் எல்லா கதைகளிலும் ஒரே பெயரை தொடர்ந்து உபயோகபடுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவர் அவருக்கு ஒண்ணு விட்ட பங்காளி என்ற பையனிடம் இப்போதைக்குச் சொல்லி சமாளித்து விடுங்கள் !!

      Delete
    2. ஒண்ணுக்கு விட்ற பையன்ட்ட போயி,

      ஒண்ணு விட்ட பங்காளின்னோம்னு வைங்க நம்பள மங்குணி ஸ்மர்ப்னு நெனச்சிடப் போறாப்ல

      Delete
    3. கார்டூன் கதைகளில் இது போன்ற இனி விசயங்களில் கவனம் தேவை என்பது எனது கோரிக்கை.

      Delete
  34. டாப் 3 என கூறமுடியவில்லை சார். 3 மேலே முடிக்கும். ஆகையினால் பாட்டம் 3 மட்டும் கிழே.

    ஸ்டீல்பாடி ஷெர்லாக்
    டைலன் டாக் (பலரின் விருப்பம் ஆனால் எனக்கு என்னவோ பிடிப்பதில்லை.)
    ஜெரெமியா

    லார்கோ வின்ச் .. அந்த சேரில் உட்கார்ந்து முழு வெள்ளை பச்சை அட்டையில் அருமையாக இருக்கும்.
    கதையும் நாம் இதுவரை பார்க்காத கதை. நமது லயன்-முத்து ஒரு புது அவதாரம் எடுத்ததை பறை சாற்றிய கதை. மறக்க முடியாத புத்தகம் எனக்கு நமது மீள்வரவில்.

    அவ்வாறு தேடும் கதை எதுவும் இல்லை காரணம் வந்த அனைத்து கதைகளும் என்னிடம் உள்ளதே.

    No மறுக்கா !! காரணம் எப்பொழுது படிக்க புது புத்தகங்கள் இருப்பதால்.

    கண்டிப்பாக கவ்பாய் காதல் போகாது.

    ReplyDelete
  35. கேள்வி ஒன்று
    அ.லார்கோ
    ஆ.ஷெல்டன்
    இ.ஜில் ஜோர்டான்


    கேள்வி இரண்டு

    அ. மேஜிக் விண்ட்
    ஆ.டயபாலிக்
    இ.டிடக்டிவ் ஜெரோம்

    கேள்வி மூன்று

    A. LMS
    B. NBS
    C. தலையில்லா போராளி
    கேள்வி நான்கு
    எதுவும் இல்லை

    கேள்வி ஐந்து
    நோ மறுக்கா ..விவாதங்கள் பொருட்டு புரட்டினால்தான் உண்டு

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சார்
      எதுக்கு சார் தீவிரமா பேசணும்
      எல்லாமே கதைகள் சார்

      சில காலம் மட்டுமே எல்லாம்.
      யாரும் மனம் வருந்தக்கூடாதில்லையா.

      உன்னதம் அறிவோம்
      உன்மத்தம் கொள்ளோம்

      Delete
    2. அப்படியா சொல்றீங்க ஜனா சார் !!! தளம் வந்த புதிதில் மாற்றம் பற்றி எழுதியதை பற்றியும் நண்பர்கள் தங்கள் ஆதர்ச நாயகர்கள் கொண்டு இருந்த தீவிர அபிமானம் பற்றிய எனது அறியாமை பற்றியும் அல்லவா எழுதியதாக நினைத்து கொண்டு இருந்தேன் ..தவறுக்கு வருந்தி இப்பதிவை உடனே நீக்குகிறேன் .

      Delete
    3. விவாதமும் நல்லதே ஜி. ஆரோக்கியமான விவாதமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் நம்மதே, பதிவை நீக்கி இருக்க வேண்டியதில்லை.

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நல்லதே செய்வோம்.
      விவாதமே வேண்டாம்.
      பிரஷர் கூடும்

      இருப்பதோ ஒரு நிம்மதி சார்

      Delete
    2. ஹா...ஹா...

      பொருளர் ஜி@ செம.. அற்புதமான நினைவு கூறல் பதிவு...

      "மாற்றம் ஒன்றே மாறாதது"
      இதுவே சாஸ்வதம்..// என எளிதாக விளக்கியிருத்தீர்கள். ஆகவே உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள தயக்கமேயில்லை ஜி.
      மேலும் தளத்தின் கமெண்ட் போடும் முறைகளை வைத்தே நண்பர்களை நான் கணித்து விடுவது வழக்கம்...இது 99% தவறியதேயில்லை.
      உங்கள் கமெண்ட்களே உங்களை அப்போதே உணர்த்தி விட்டது.

      Delete
  38. I am all is good group, so no comments

    ReplyDelete
  39. I have never missed reading a book or story.

    ReplyDelete
  40. கவலய விடுங்க....இபப்ப முன்னிலை பெற்ற ஷெல்டன் , நண்பர்கள் கலைந்த மௌனத்தால் முனஂனிலை வகிப்பபாராக

    ReplyDelete
  41. கேள்வி # 1 : Top 3
    ---------------
    1. லார்கோ வின்ச்
    2. வெய்ன் ஷெல்டன்
    3. தோர்கல்

    கேள்வி # 2 : Bottom 3
    ------------------
    1. SMURFS
    2. பென்னி
    3. ரின்டின் கேன்
    (கார்ட்டூன் கோஷ்டி all, "Mudiyala sir!")

    கேள்வி # 3 : 'டப்' பதில்
    -------------------
    1. மின்னும் மரணம்
    2. தோர்கல் all
    3. ட்யூராங்கோ

    கேள்வி # 4 : தேடித் திரியும் out of print
    ----------------------------------
    1. NBS
    2. LMS
    3. Karsanin kadantha kalam
    4. வல்லவர்கள் வீழ்வதில்லை
    5. நியு லுக் ஸ்பெஷல்
    6. Few more published from 2012 to 2014

    கேள்வி # 5 : மறுவாசிப்பு
    --------------------
    Not yet மறுக்கா !! - Hope I will retire soon and read all of it again..

    ReplyDelete
  42. Question 1: Top 3
    Largo without any doubt. Oru hollywood action film style.
    Durango. Superb stories
    Thorgal

    From cartoons.
    Blue coat
    Benny

    Question 2: Bottom 3
    Julia
    Dylon Dog

    Question 3: Top 3 books since 2012
    I dont remember the name of the book. It is a Tex Willer book. Where the artist took 7 years to complete the drawings. I dont remember the name of the book, but I still remember the pictures.
    Sandha E all books.
    Largo books.

    Question 4: Allaudin khiliji
    I am not khiliji

    Question 5:
    Ditto

    Question 6:
    Graphic Novels and Sandha E will help us bring new readers and that is what will be the biggest selling point for us. It might even beat Tex. Tex ippave thigatta arambikkudhu.

    ReplyDelete
    Replies
    1. ///I dont remember the name of the book. It is a Tex Willer book. Where the artist took 7 years to complete the drawings. I dont remember the name of the book, but I still remember the pictures.////--

      தீபாவளி வித் டெக்ஸ் 2015 மலரில் 2வது கதையாக இடம்பெற்ற "எமனின் வாசலில்" - என்ற கதைதான் நண்பரே இது... அசாத்தியமான ஓவியங்கள். கருப்பு வெள்ளைக்கே பட்டைய கிளப்பியது. கலரில் சில பக்கங்கள் பார்த்து மிரண்டு போனேன்...

      Delete
  43. கேள்வி #1: TOP 3
    1. லார்கோ வின்ச்
    2. பௌன்சர்
    3. தோர்கல்

    கேள்வி #2: BOTTOM 3
    1. ரின்டின் கேன்
    2. பென்னி
    3.SMURFS

    கேள்வி #3:
    மின்னும் மரணம்

    கேள்வி #4:
    None

    கேள்வி #5:
    No மறுக்கா

    கேள்வி #6:
    We will start to like (may be)
    Science fictions like "The Incal"
    Biographies like "Maus"
    Crime series like "Scalped"
    Zombie series like "The Walking Dead"
    We will get more readers and get the copyrights to publish books like (may be)
    Frank Miller`s The Dark Knight Returns
    100 Bullets

    ReplyDelete
  44. Q1 Top 3
    1. கமான்சே 
    2. அண்டர்டேக்கர
    3. ட்யுராங்கோ

    Q2 Bottom 3
    1. டேஞ்சர் டயபாலிக்
    2. மேஜிக் விண்ட்
    3. ரின்டின் கேன்

    Q3. Only மச மச "

    Q4 Tex:
    Diwali special
    Thalai Vangi kurangu
    Nilavoliyil oru narabali

    ReplyDelete
  45. Top 3
    1.largo(high level )
    2.shelton (hot and grippy)
    3.durango
    Bottom3
    1.smurfs
    2.Julia
    3.holms
    3.2.jerom
    3.3.jil Jordon

    Greatest impact
    1.vallabargal veelvathilai
    2.karsanin kadantha kalam
    3.minnum maranam
    4.nbs
    5.tex Cuba story
    6.ratha kottai
    7.kavari mankalin kathai
    8.thanga kallari
    9.deva ragasiyam theduvakku illam
    10.xiii spin offs

    ReplyDelete
  46. //MP sir's comment about Magic wind last post//

    magic wind was generic genre it had romance, friendship, magic, unreachable villain,.. it was family favorite. may be thats why i was thumping for it ...thats the only book that reached most number of hands in my home.... good old days.... nowadays parcel not even opened for few weeks ...

    to be honest MP sir, my attempt to promote comics among ladies in my family stopped with Magic wind. they stopped asking about it. they are not interested in any other comic books. some thing in that book in the sleek size and silent hero, that funny reporter, and it was appearing like series mostly it was moving towards one villain (like Sherlocks Professor Moriarty).... haahm i lost hope.. that's the only series i was following in modern times and lost my interest on it as well....

    we need good series to keep comic reading interesting, to keep the reading fresh. these fat books (i am reading some of fattest believe me ) are good but the fact of keeping end to end story in hand dilutes curiosity .... I/We need to unearth the curiosity back with good series....

    ReplyDelete
    Replies
    1. @சதீஸ். சாரெல்லாம் போட்டு வயசான பீலிங்க கொண்டு வந்துட்டீங்களே. பேண்டசி, மந்திர ஜாலக் கதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். இருந்தாலும் என்னால் மேஜிக் விண்டுடன் ஒன்ற முடியவில்லை. இருந்தாலும் எந்த நாயகராக இருந்தாலும் வெரைட்டியின் பொருட்டு, நமது காமிக்ஸே கூட்டுறவு என்பதால் ஆதரிப்பதே எனது வழக்கம். எனக்கு போர்ஸ் ரேங்கிங்கே பிடிக்காது. ஆனால் இந்த தடவை ஆசிரியர் பெவிகோல் பெரியசாமியாகி நம்மையெல்லாம் ஓ. வா. உ. ஆக்கி விட்டார். 🤣

      Delete
  47. @ ALL : கேப்டன் பிரின்ஸ் கதைத் தொடரின் உரிமை குறித்து நமது நலம்விரும்பி ஒரு பதிவிட்டிருப்பதாய் நண்பரொருவர் எனக்கு இன்றைக்கு காலையில் தகவல் அனுப்பியிருந்தார்.

    விசாலமாய், பதில் போட நேரமுமில்லை ; அவசியமுமில்லை என்றாலும், நண்பரைப் போன்றோரின் பொருட்டு சுருக்கமாய் நாலே வரிகள் !

    1985-ல் பிரின்ஸ் தொடரின் உரிமைகள் இருந்தது பெல்ஜியத்து லோம்பார்ட் நிறுவனத்தில். பின்னாட்களில் தான் அது டார்கோ குழுமத்துடன் இணைப்பானது. 1985-ல் லோம்பார்டில் இருந்த சர்வதேச rights manager திருமதி விவியன் ரூசி. அவர்களுடன் நாம் போட்டிருந்த ஒப்பந்தமும், பிரின்ஸ், ஜானி, புருனோ பிரேசில் கதைகளின் இன்வாய்ஸ்களும் இன்னமும் நம்மிடம் உள்ளன !

    அந்நாட்களில் ஒவ்வொரு பணப் பட்டுவாடாவுக்கும் ஆடிட்டரிடம் ஒரு certificate வாங்கிடல் அவசியம் என்பதால், அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட files பத்திரமாய் உள்ளன !

    Just for your info folks !

    ReplyDelete
    Replies
    1. And இது தொடர்பாய் கருத்துக்கள் வேண்டாமே - ப்ளீஸ் ! இதுவொரு பகிர்வு மாத்திரமே !

      Delete
    2. இது தொடர்பாய் நான் கருத்துகள் ஏதும் சொல்லப்போவதில்லை சார்! ஆனா, ஒரே ஒரு தபா சிரிச்சுக்கறேனே ப்ளீஸ்?

      "ஹே.. ஹே.. ஹே... ஹேய்"

      Delete
    3. நாம நேத்தே சிரிச்சாச்சு சார்.. இந்த எஸ்டிடி பத்தி முன்னமே நீங்க சொல்லீருந்தது ஞாபகமிருந்துது...

      Delete
    4. சனிக்கிழமை அரை குறையாகவும், நேற்று முழுமையாக உங்களை நோக்கி அந்த பொறாமை கற்கள் வீசப்பட்டு இருந்தன சார்.

      ஏற்கெனவே பிரின்ஸ் கதைகள் காப்பிரைட் பற்றி நீங்கள் தெளிவாகவே விளக்கி இருந்தீர்கள்.
      Miss Dynamite-இந்த கதையின் உரிமை தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள நிருவனத்திடம் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தீர்கள் சார்.அது எந்தப் பதிவுனு சட்டுனு ஞாபகம் வர்ல.

      நேற்று இரவு T20 பைனலுக்கு இடையேயும், வீட்டுக்காரிட்ட பெர்மிசன் வாங்கிட்டு பழைய இரும்பு பெட்டியை குடைந்து, கம்பேக் ஸ்பெசல், டபுள் த்ரில் ஸ்பெசல், லயன் ஆண்டுமலர் 2016ல் வந்திருந்த பிரின்ஸ், வண்ண மறுபதிப்பு பிரின்ஸ் என அனைத்திலும் நீங்கள் வெளியிட்டிருந்த காப்பிரைட் டெக்ளரேசன் பார்த்து நானும் மறுக்கா ஒருக்கா சிரித்து கொண்டேன் சார்....

      Delete
    5. ஆகா இவர்களுக்கு பதில் சொல்லி நம்ப நேரத்த என் சார் வீணாக்கணும்! நமக்கு ஆயிரம் காமிக்ஸ் வேலை இருக்கு சார் அதை நோக்கி பயணிப்போம்!

      Delete
    6. ஆகா இவர்களுக்கு பதில் சொல்லி ///நம்ப நேரத்த என் சார் வீணாக்கணும்! நமக்கு ஆயிரம் காமிக்ஸ் வேலை இருக்கு சார் அதை நோக்கி பயணிப்போம்!///

      +1

      Delete
    7. கொசுத்தொல்லை தாங்க முடியலையே நார(வாயா)யணா

      Delete
    8. Thanks for the explanation Edi sir, even though its not needed its better to clear the air if and only if time permits (as u cant respond for every face book posts :)

      Delete
    9. // நமக்கு ஆயிரம் காமிக்ஸ் வேலை இருக்கு சார் அதை நோக்கி பயணிப்போம்.//
      +111111111111
      ஆமா நிறைய குண்டு புக் நீங்க போடனும்,அத நாங்க படிக்கனும்,வாங்க சார் ஆகற வேலைய பார்ப்போம்.

      Delete
    10. We should put a case against these people as they are trying to discredit your character by posting these lies publicly

      Delete
    11. ஆகா இவர்களுக்கு பதில் சொல்லி நம்ப நேரத்த என் சார் வீணாக்கணும்! நமக்கு ஆயிரம் காமிக்ஸ் வேலை இருக்கு சார் அதை நோக்கி பயணிப்போம்!

      #####

      + 1

      பயபுள்ளகளுக்கு பதில் சொல்ற நேரத்துல சி்சி வயதில் ஆவது எழுதுங்க சார் ..:-)

      Delete
    12. // பதில் சொல்ற நேரத்துல சி்சி வயதில் ஆவது எழுதுங்க சார் ..:-) //

      ஆகா சைக்கிள் கேப் கிடைத்த உடன் சி.சி.வ. :-)

      Delete
  48. சார் லயன் காமிக்ஸ் எண் 315 மிஸ்ஸிங்கா..?

    ReplyDelete
  49. விஜயன் ஆசிரியர் அவர்களுக்கு
    தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) :) :)

    ReplyDelete
  50. கேள்வி # 3 :
    கிரீன் மேனர்
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல
    ஜெரேமியா

    ReplyDelete
  51. Question #1:Top 3
    *****************
    1. லார்கோ வின்ச்
    2. பௌன்சர்
    3. ஜேசன் ப்ரைஸ்

    Question #2:Bottom 3
    ********************
    1. லியனார்டோ
    2. ஜெரெமியா
    3. SMURFS

    Question #3:Remarkable ones
    **************************
    1. Bouncer, all parts
    2. இரவே இருளே கலையாதே
    3. Jason Price


    Question #4:Dream come true, if can lay my hands on these
    *********************************************************
    1. கொள்ளைக்கார கார்
    2. கொலைகார காதலி
    3. அதிரடி படை

    Question #5:
    ************
    Too many to note, so Most comics மறுக்கா. except for some marana mokkai like noted in Question #2.

    ReplyDelete
  52. நண்பர்களுக்கு, கிராஃபிக்ஸ் காமிக்ஸ்க்கும் மற்ற காமிக்ஸ்க்கும் ஓவியங்களில் என்ன வித்தியாசம்? நான் முதலில் நினைத்தது கிராஃபிக்ஸ் காமிக்ஸ்னா 3டி மாதிரின்னு... இது என்னுடைய நெடுநாளைய கேட்க மறந்த கேள்வி. நமது தளத்தில் இதைப்பற்றி முன்பே விவாதித்திருந்தால் அந்த லிங்கை பகிரவும்..

    விக்கிபீடியா டெபினிஷனும் குழப்புகிறது....
    The term is not strictly defined, though Merriam-Webster's full dictionary definition is "a fictional story that is presented in comic-strip format and published as a book", while its simplest definition is given as "cartoon drawings that tell a story and are published as a book".

    ReplyDelete
    Replies
    1. சார் ...கிராபிக் நாவல்களுக்கென ஒரு ஓவிய பாணி ; இதர கதைகளுக்கெல்லாம் வெறொரு பாணி என்றெல்லாம் பாகுபாடுகள் கிடையாது. ஓவியங்கள் என்பது ஒவ்வொருவரின் கைரேகையைப் போல பிரேத்யேகமானது எனும் போது - அவற்றைக் கொண்டு classify செய்திடுவதில்லை ; செய்திடவும் இயலாது!

      மாறாக - கதை செல்லும் / சொல்லும் பாணிகளில் மாத்திரமே அந்த கி.நா .ஸ்டைல் ; காமிக்ஸ் ஸ்டைல் என்ற வேற்றுமைகளை முன்மொழியலாம்.

      உதாரணத்துக்கு :

      ஒவிய பாணியைக் கொண்டு மட்டுமே ஒரு கதையின் தன்மையை நிர்ணயிப்பதாயின் 'க்ரீன் மேனர் " ஒரு கார்டூனாக அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும் . ஆனால் அதுவோ ஒரு கிராபிக் நாவல் அல்லவா ?

      INCALS ; VALERIAN போன்ற எதிர்காலக் கதைகளின் ஒவிய பாணிகளும் கார்ட்டூன் ஸ்டைல்களே

      Delete
    2. விளக்கத்துக்கு நன்றி சார்! அனைத்து கிராஃபிக் காமிக்ஸ்களும் கடினமான கதை தளத்தை கொண்டதா அல்லது நேர்கோட்டு கதைகளும் இதில் உண்டா ? ஏனென்றால் டெக்ஸ் தீபாவளி இதழும் கிராஃபிக் காமிக்ஸ்சே.

      Delete
    3. கி.நா.க்களின் அடையாளத்தை "கடினம்" என்பதை விட - 'அழுத்தம்" என்று வைத்துக் கொள்ளுங்களேன் ?!

      Delete
  53. Graphic novel means the story with picture description .
    Characters rarely spoke dialect.

    ReplyDelete
    Replies
    1. நன்றி Sridhar! என்னுடைய குழப்பமே அதில் தான். ஏனென்றால், என்னால் இரண்டிற்குமிடையான வேறுபாட்டை ( காமிக்ஸ் vs கிராபிக் காமிக்ஸ் ) உணரமுடியவில்லை.

      Delete
    2. சார்..இப்படி வைத்துக் கொள்ளுங்களேன் :

      கி.நா.க்கள் சற்றே ஆழம் அதிகம் ; இதர ரகங்கள் சற்றே இலகுத்தன்மை வாய்ந்தவை !

      ஆனால் எல்லாமே "காமிக்ஸ்" தான் !

      Delete
  54. நண்பர்களுக்கு, கிராஃபிக்ஸ் காமிக்ஸ்க்கும் மற்ற காமிக்ஸ்க்கும் ஓவியங்களில் என்ன வித்தியாசம்? நான் முதலில் நினைத்தது கிராஃபிக்ஸ் காமிக்ஸ்னா 3டி மாதிரின்னு... இது என்னுடைய நெடுநாளைய கேட்க மறந்த கேள்வி. நமது தளத்தில் இதைப்பற்றி முன்பே விவாதித்திருந்தால் அந்த லிங்கை பகிரவும்..

    விக்கிபீடியா டெபினிஷனும் குழப்புகிறது....
    The term is not strictly defined, though Merriam-Webster's full dictionary definition is "a fictional story that is presented in comic-strip format and published as a book", while its simplest definition is given as "cartoon drawings that tell a story and are published as a book".
    This question over to செனா அனா சார்.please explain.

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சொல்றது உங்களுக்கு சரியா புரிய வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்! :)
      செனா அனாவும் அப்பாலிக்கா வந்து சீரியஸா சில விளக்கங்கள் சொல்லுவார். இப்போ நான் சொல்றத கேட்டுகங்க sridhar! (ச்சும்மா ஜாலிக்காண்டி!)

      அ..அதாவது, படிக்கப்படிக்கவே புரிஞ்சதுன்னா அது - சாதா காமிக்ஸ்
      படிச்சுப் பல மணிநேரங்கள்/பலநாட்கள் கழிச்சுப் புரிஞ்சா அது - கி.நா

      பரபரன்னு பக்கங்களைப் புரட்டினா அது - சாதா
      நடுவுல சில பக்கங்களை மிஸ் பண்ணிட்டமோன்னு அடிக்கடி நினைச்சீங்கன்னா அது - கி.நா

      எத்தினி தபா படிச்சாலும் ஒரே மாதிரியே இருந்தா அது - சாதா
      ஒவ்வொரு தபா படிக்கறப்போவும் புதுசா ஒரு கதைய படிக்கறாப்லயேஏஏ இருந்துச்சுன்னா அது - கி.நா

      கடந்தகாலத்தில் ஆரம்பிச்சு கடந்தகாலத்துலயே முடிஞ்சா அது - சாதா
      மூனு பக்கம் படிக்கறதுக்குள்ள முக்காலத்துக்கும் தாவிட்டு வந்தீங்கன்னா அது - கி.நா

      வேற எதுனா டவுட்? ;)

      Delete
    2. அப்புறம், ஒரே கதைய எல்லோரும் ஒரே மாதிரியே புரிஞ்சுக்கிட்டா அது - சாதா!
      ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சுக்கிட்டா அது - கி.நா! ;)

      Delete
    3. இன்னொன்னும் இருக்கு!
      படிக்கறவங்க எல்லோருக்குமே புரிஞ்சா அது - சாதா
      படிக்கறவங்கள்ல பாதிபேருக்கு மட்டும்தான் புரியுதுன்னா அது - கி.நா!

      Delete
    4. \\படிக்கறவங்க எல்லோருக்குமே புரிஞ்சா அது - சாதா
      படிக்கறவங்கள்ல பாதிபேருக்கு மட்டும்தான் புரியுதுன்னா அது - கி.நா!\\
      உண்மைதாங்க!! :)

      Delete
    5. அப்புறம்...
      படைப்பாளிங்க கதைய முழுசா சொல்லிட்டாங்கன்னா அது - சாதா!
      படைப்பாளிங்க பாதிக்கதைய மட்டும்தான் சொல்லியிருக்காங்கன்னா அது - கி.நா! :)

      Delete
    6. அல்லது

      ஓரே மூச்சுல படிச்சு முடிச்சா அது சாதா.

      படிச்சு முடிக்கிறதுக்குள்ளே மூச்சுக்கு முன்னூறு தபா மூச்சு வாங்கினா அது கி.நா.

      Delete
    7. Vijay @ please update this simple definition in wikipage

      Delete
    8. படித்தவுடன் மண்டையில் குட்டிக் கொண்டே 'காதல்' பரத் போல திரியச் செய்தால் அது செயலரின் விளக்கம் !

      படித்தவுடன் திறந்த வாய் மூடாது போயின் அது பொருளாளரின் விளக்கம் !

      படித்தவுடன் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கெடுத்தால் - அது தலீவரின் விளக்கம் !

      Delete
    9. கி.நா.= படம் பார்த்து கதை சொல்க (புரிந்து கொள்க)...

      1ஆப்புல ஒரு போஸ்டர் மாட்டி வெச்சி இருப்பாங்க,
      மாடுகளும், சிங்கமும்;
      பாட்டி வடை சுடுதல்;
      இதெல்லாம் தான் கி.நா.; படத்தைப் பார்த்து அங்கே விரவியுள்ள கதையைப் புரிந்து கொள்வது.

      இப்ப நாம வயசுக்கு தக்க வடிவில் பார்க்கிறோம்....

      கதையை கேரக்டர்களே சொல்லி நகர்த்தினால் அது காமிக்ஸ்...

      சம்டைம் 2ம் கலந்து வரும்; அங்கேதான் ங...ங..ங...ங...

      Delete
    10. ஈவி. சிரிச்சு மாளல. இனி செனா ஆனா க்காக வெயிட்டிங.

      Delete
    11. //அப்புறம்...
      படைப்பாளிங்க கதைய முழுசா சொல்லிட்டாங்கன்னா அது - சாதா!
      படைப்பாளிங்க பாதிக்கதைய மட்டும்தான் சொல்லியிருக்காங்கன்னா அது - கி.நா! :)//

      :P :D

      Delete
    12. // பரபரன்னு பக்கங்களைப் புரட்டினா அது - சாதா
      நடுவுல சில பக்கங்களை மிஸ் பண்ணிட்டமோன்னு அடிக்கடி நினைச்சீங்கன்னா அது - கி.நா //

      LOL

      Delete
    13. செயலர் # ஆசிரியர் சார்..



      :-))))))))))))))

      Delete
    14. //
      படித்தவுடன் மண்டையில் குட்டிக் கொண்டே 'காதல்' பரத் போல திரியச் செய்தால் அது செயலரின் விளக்கம் !

      படித்தவுடன் திறந்த வாய் மூடாது போயின் அது பொருளாளரின் விளக்கம் !

      படித்தவுடன் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கெடுத்தால் - அது தலீவரின் விளக்கம் ! //

      முடியல உங்கள் காமெடி :-) செம

      Delete
    15. ஈவி சார் செம்ம....

      Delete
    16. கிராபிக் நாவல் vs காமிக்ஸ்
      இதுபற்றி ஏற்கனவே எல்லோரும் விரிவாக விவாதித்து உள்ளதாக ஞாபகம் ...
      எனினும்
      தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் எல்லாரும் எம்எல்ஏக்கள்தான் .
      ஆனால் எம்எல்ஏக்கள் அனைவரும் அமைச்சர்கள் அல்ல ..
      கிராபிக் நாவல்கள் அனைத்தும் காமிக்ஸ்கள்தான் ..
      ஆனால் காமிக்ஸ்கள் அனைத்தும் கிராபிக் நாவல்கள் அல்ல
      காமிக்ஸ்கள் பொதுவாக –(விதிவிலக்குகள் உண்டு – )
      Periodicals –என இருக்கும்
      அதாவது
      தினசரி ஸ்ட்ரிப்களாக
      வாரம் ஒருமுறை என
      இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை
      மாதம் ஒருமுறை
      இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
      இப்படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும்

      பெரும்பாலும் ஐம்பது பக்கங்களுக்கு குறைவாகவே இருக்கும்
      சன்னமான பேப்பர் அட்டை தாங்கி நிற்கும்
      முதுகில் பின் அடிக்கப்பட்டு இருக்கும்
      பொதுவாக தரம் சற்று குறைவான தாளில் வெளியாகும்
      விலை கட்டுபடியாகும் வண்ணம் இருக்கும்
      ஒரே தலைப்பில் வரும் கதைகள் இதழ் எண் தாங்கி வரும்
      சர்வதேச சந்தையில் சர்வதேச தரக்குறியீட்டு சீரியல் எண் (ISSN) பெற்று வரும்
      கதைகள் பொதுவாக தொடராக இருக்கும் .
      சிலவற்றில் அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டி அடுத்த எபிசோடை எதிர்பார்க்கவைக்கும் –CLIFFHANGER- இருக்கும்
      பொதுவாக உள்ளடக்கம் எளிமையானதாக ,நேர்கோட்டுவகையில் இருக்கும்

      Delete
    17. கிராபிக் நாவல்கள்

      பொதுவாக
      பெரும்பாலும் ஒரே இதழாக இருக்கும் .சிலசமயம் இருபாகங்களாக இருக்கலாம் .
      ஒரு கிராபிக் நாவலில் ஒரே கதைதான் இருக்கும்.
      அதற்கு
      ஆரம்பம்
      நடுப்பகுதி
      முடிவு என ஒரு நாவலை போல தெளிவாக இருக்கும்

      பக்கங்கள் பெரும்பாலும் ஐம்பது பக்கங்களுக்கு அதிகமாக இருக்கும்

      முதுகில் பின் இருக்காது

      தடிமனான அட்டையில் பைண்ட் செய்யப்பட்டு இருக்கும்
      விலை பெரும்பாலும் அதிகமே .
      உள்ளே தாள்கள் –GLOSSY FINISH- என இருக்கும்
      சர்வதேச சந்தையில் சர்வதேச தரக்குறியீட்டு நூல் எண் (ISBN) பெற்று வரும் .
      உள்ளடக்கம் –பொதுவாக –MATURE CONTENT –என்றவகையில் இருக்கும் .கதை சொல்லப்படும்விதத்திலும் மரபு மீறலும் ஒழுங்கற்ற ஒழுங்கும் இருக்கலாம் .


      Delete
    18. ஒரு கேள்வி ..
      டெக்ஸ் கதையை போனேல்லி பதிப்பகம் 120 பக்கங்களில் வெளியிடுகிறது. அதில் ஒரு முழுகதையும் உள்ளது .. ஒரு முழுகதையும் உள்ளது என்பதால் இது கிராபிக் நாவல் அல்லவா ?
      அல்ல ..ஏனெனில் டெக்ஸ் என்ற நாயகனின் காமிக்ஸ் தொடரின் ஒரு வெளியீடு என்றே கருதப்படும். மேலும் அது கண்டிப்பாக ஒரு வெளியீட்டு எண்ணை தாங்கி நிற்கும் .ISSN கோட்எண்ணையும் பெற்றே வரும் .அதுவுமல்லாது அம்மாத வெளியீடு என்றமுறையில் –PEERODICAL – என்றவகையில் சேருவதால் கிராபிக் நாவல் அந்தஸ்தை இழக்கும் .

      இன்னொரு கேள்வி ...
      போனெல்லி தனது டெக்ஸ் எழுபதாம் ஆண்டிற்காக முன்னூறு பக்கங்களில் ஹார்ட் பௌவுண்டில் வண்ணமயமாக –GLOSSY FINISH-ல் வெளியிடுமாயின் அது கிராபிக் நாவலா ?
      அவ்வெளியீடு எழுபதாம் ஆண்டு சிறப்பு வெளியீடு என முத்திரை தாங்கி வெளியீடு எண்ணுடன் வருமாயின் எழுபதாம் ஆண்டு என்பது –PERIODICAL –என்பதை உணர்த்துவதால் கிராபிக் நாவல் என்னும் அந்தஸ்தை தானாகவே இழந்து விடும்.

      எழுபதாம் ஆண்டு என்னும் முத்திரை இல்லாது
      வெளியீட்டு எண் இல்லாது ISBN எண் தாங்கி வருமாயின் அது கிராபிக் நாவலே .
      ஆயினும் போனேல்லி போன்ற பதிப்பகங்கள் நடைமுறை நிர்வாக காரணங்களுக்காக அவ்விதம் செய்ய மாட்டார்கள்
      வெளியீடுகளுக்கான ஆவணங்கள், வாசகர்கள், வெளியீடுகளுக்கான ஏஜன்சிகள் ,சில்லறை விற்பனையாளர்கள் என அனைவரையும் இது சிரமப்படுத்தும் என்பதால் .

      Delete
    19. வேறொரு கேள்வி ..
      காமிக்ஸ் என அறியப்பட்டது கிராபிக் நாவலாக மாறுமா ??
      ஆம் ....................
      என்னய்யா குழப்புறீங்க ?? என்ற வினாவுக்கு இதோ ஒரு உதாரணம்
      பொன்னியின் செல்வன் கல்கியில் வாரம்தோறும் வெளிவந்த வரலாற்று தொடர் ..
      இல்லையே ..சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் உள்ள ஐந்து பாகங்கள் உள்ள –ஏன் ஒரே பாகமாக கூட உள்ள வரலாற்று நாவல் அல்லவா ??/
      இரண்டுமே உண்மைதான் .....
      வாரம்தோறும் வந்த கல்கியின் எழுத்துக்கள் நாவலின் அத்தியாயங்களாக மாறிவிட்டன .
      குமுதத்தில் வாரம்தோறும் வெளிவந்து நாவலாக மாறிய சாண்டில்யனின் ராஜபேரிகைக்கும் இது பொருந்தும் ..
      காமிக்ஸ் –ல் இதை பொருத்தி பாருங்களேன் ..

      மாதம் ஒருமுறை என இரண்டாண்டுகள் தொடர்ந்து வெளி வந்த ஒரு காமிக்ஸ் படைப்பு மொத்தமாக தொகுக்கப்படுமாயின் ஒரே கதையாக மாறுகிறது ..கிராபிக் நாவல் அந்தஸ்தை அது அடைகிறது ...
      இரண்டுக்கும் மேற்பட்ட பாகங்களை அது கொண்டிருக்குமாயின் கிராபிக் நாவல் சீரிஸ் எனப் பெயர் பெறுகிறது
      பிரான்க் மில்லரால் 1986-ல் நான்கு இதழ்களாக –லிமிடட் காமிக்ஸ் மினி சீரிஸ் –என வெளிவந்த THE DARK KNIGHT RETURNS பின்னர் தொகுக்கப்பட்டு கிராபிக் நாவல் அந்தஸ்தை அடைந்தது .
      பன்னிரண்டு காமிக்ஸ் இதழ்களாக வெளிவந்த ஆலன் மூரின் ‘’வாட்ச்மேன் ‘’ பின்னர் தொகுக்கப்பட்டு உலகின் மிக சிறந்த கிராபிக் நாவல்களில் ஒன்றாக இன்றளவும் அறியப்படுகிறது ....

      கிராபிக் நாவல் என்ற பதம்–என்ற காமிக்ஸ் ,கிராபிக் நாவல்களின் பிதாமகர்களில் ஒருவரான –WILL EISNER – என்பவரால் பிரபலமாக்கப்பட்டது ...கவனிக்கவும் ...பிரபலமாக்கப்பட்டது
      இவரது A CONTRACT WITH GOD AND OTHER TENEMENT STORIES –என்ற நான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு முதன்முதலில் வெளிவந்தபோது A GRAPHIC NOVEL BY WILL EISNER –என்ற தகவலை அட்டையில் தாங்கி வந்தது....இது உண்மையில் கிராபிக் நாவல் அல்ல ..ஆனால் காமிக்ஸ் ,கிராபிக் நாவல்கள் தயாரிப்பு மேன்மையடைய WILL EISNER ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது ..
      ஆக கிராபிக் நாவல் என்பது ஒரே கதையை உடைய ,பைண்ட் செய்யப்பட்ட,செய்தரம் மிகுந்த,கிரகிப்பதற்கு சற்று சிரமமான உள்ளடக்கம் கொண்ட ,
      காமிக்ஸேதாங்க...

      கிராபிக் நாவல் என்பது ஒரு மார்க்கெட்டிங் யுக்தி சொல்லாடல் ..அச்சொல்லின் மேல் எனக்கு எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை ..காமிக்ஸ் என்பதே எனக்கு போதுமானது ..
      -ஆலன் மூர் ஒரு நேர்காணலில் சொன்னது -------




      Delete
    20. திரு செல்வம் அபிராமி. உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி!

      Delete
  55. கேள்வி #1:Top 3

    1. தோர்கல்
    2. அண்டர்டேக்கர்
    3. லார்கோ வின்ச்

    கேள்வி #2:Bottom 3

    1. ஸ்மர்ஃப்
    2. லியார்னோடே
    3. மேஜிக்விண்ட்

    கேள்வி #3:

    1. Comeback ஸ்பெஷல்
    2. NBS & LMS
    3. மின்னும் மரணம் & க்ராஃபிக் நாவல் - 2017 (நி.நி தவிர்த்து)


    கேள்வி #4

    அப்படியொரு அனுபவமிலலை.

    கேள்வி #5 மறுவாசிப்புக்கான இதழ்கள்

    ஏகப்பட்ட இதழ்கள் இருக்கு. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில்-
    1. சாத்தான் வேட்டை-டெக்ஸ்
    2. யானைக் கல்லரை தொடர்
    3. இரத்தப்படலம்

    கேள்வி # 6

    இதே போல சில பல கேள்விகள் கேட்பிங்கலாம், இதே போல நாங்களும் பதில் சொல்லிட்டு இருப்போமாம் ! :)

    ReplyDelete
  56. கேள்வி # 1

    Top 3:

    ப்ளூ கோட் பட்டாளம்
    தோர்கல்
    லேடி S

    ReplyDelete
  57. கேள்வி #2:

    என்னை பொறுத்தவரை லியார்னோடே மட்டுமே

    ReplyDelete
  58. கேள்வி # 5

    மறுவாசிப்பு

    தோர்கல்
    என் பெயர் டைகர்
    நிலவொளியில் ஒரு நரபலி
    மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள்
    லார்கோ வின்ச் அட்வெஞ்சரஸ்
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல
    தலையில்லா போராளி
    எஞ்சி நின்றவனின் கதை
    ஆத்மாக்கள் அடங்குவதில்லை
    ஒரு சிப்பாயின் சுவடுகளில்
    கமான்சே
    ரிப்போர்ட்டர் ஜானி
    ஜெரோமியா

    ReplyDelete
  59. Top 3: Durango, Wayne Sheldon, Thorgal
    Bottom 3: Leonardo,Sherlock, Blue coats
    Top 3 edition: Durango, Julia-recent one, Jason price
    Collection : Thorgal all in one by sequence
    2023 : more towards Fantasy, science fiction & ever green cowboy stories

    ReplyDelete
  60. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தலைவா அப்படியே ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு போங்கள்

      Delete
  61. //நமது நரைமீசை ஷெல்டன் புத்தகவிழா விற்பனைகளில் அவ்வளவாய் கம்பு சுத்திய பாடைக் காணோம் என்பதால் அடுத்த வருஷத்தில் அவரை ஓரம் கட்டினால் தேவலை என்றொரு எண்ணம் எனக்குள் துளிர்விட்டிருந்தது நிஜமே ! ஆனால் இங்கே உங்களின் பெரும்பான்மையின் TOP 3-க்குள் மனுஷன் குத்துக்கல்லாட்டம் இருப்பதைப் பார்த்த கணமே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தினை வரவழைத்து மொழிபெயர்ப்பிற்கும் அனுப்பியாச்சு ! So உங்கள் மௌனக் கலைவுகளின் முதல் வெற்றி இதுவென்பேன் !//

    ஷெல்டனின் பிப்ரவரி மாத இதழும் இதற்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.


    ReplyDelete
  62. Q1. Top 3

    1. Bouncer
    2. Lady S
    3. Largo

    Q2. Bottom 3

    1. Detective Jerome
    2. Steel body Sherlock
    3. Leonardo

    Q3. Favorite 3

    1. Never Before Special
    2. Lion magnum Special
    3. தலையல்லா போராளி & Lucky Luke Special (சூப்பர் சர்க்கஸ் & பயங்கர பொடியன்)

    Q4. Out of Print

    அனைத்தையும் தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன்.

    Q5. மறுவாசிப்பு

    நிறைய உள்ளது. படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.

    Q6. After 5 years

    அனைத்து புத்த்கங்களும் HARD COVER BINDING'ல் இருக்கும்.
    மும்மூர்த்திகள் மற்றும் ஸ்பைடர் மோகம் குன்றியிருக்கும்.
    TEXVILLER & LUKY LUKE இன்று போலவே TOP ஸ்டார்ஸ் ஆக இருப்பர்.

    நன்றி


    ReplyDelete
    Replies
    1. திருநாவுக்கரசு ஜி @

      // அனைத்தையும் தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன் //
      அப்ப மே மாதம் கடைசியில் ஓட்டை பிரிச்சு இறங்கி விட வேண்டியதுதான்.

      Delete
  63. நண்பர்களே
    பு வி பார்சல் வந்து விட்டது.
    20 பக்கங்களை (முழி) மொழி பெயர்த்து விட்டேன்.

    இதில் பாருங்கள்
    3 பக்கங்கள் மட்டுமே காமிக்ஸ் பேனல்களில் பேச்சு வசனங்கள்.
    மொழி பெயர்த்த நேரம் 2 விநாடிகள்.

    ஆனால் அடுத்து வந்தது ஒரு பக்கம்.
    அட ஆண்டவனே! என்றாகி விட்டது.

    ஒரே ஒரு A4 ஆங்கிலபக்கம் தமிழில் 4 A4 பக்கங்கள் தாண்டுகிறது.
    சரி அதை சுருக்கி வரைக என்றால் 2.5 பக்கங்கள்.
    இதில் மிக மிக முக்கியமான சமாச்சாரம் " சப்போர்ட்டிங் படங்கள்" .
    அவைகளும் சேரும் பட்சத்தில் 4பக்கங்கள்.
    இதெல்லாம் சரி.
    Print type setting ?
    ஙே.....
    காமிக்ஸ் பலூனில் வசனங்கள் படித்து பழக்கப்பட்ட நமக்கு இது இனிக்காது.

    நீண்ட கட்டுரை மாதிரி பாரா பாராவாக வருகிறது.
    பொன்னியின் செல்வனைப் போல இருந்தால் நல்லது எனலாம்.
    ஆனால் திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை மாதிரி சாமியோவ்....


    எடிட்டரின் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கோனார் நோட்ஸ் உழைப்பு நிச்சயம் வீணாகப் போகும்.

      Delete
    2. உங்கள் பதில்கள் ப்ளீஸ்.....

      Delete
    3. ஜனா சார் ...ஒரு பொறுப்பை ஏற்று கொண்டாகிவிட்டது ..இனி பின் வாங்கலாமா ?? ஊக்கத்துடன் -மனத்தளர்வின்றி- செய்து முடியுங்கள் .

      Delete
    4. முயற்சியை கை விட வேண்டாம் ஜனா ஜி மோதிப்பாருங்கள்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. @ j

      உங்க மொழிபெயர்ப்பு வேகமும், ஆர்வமும் ஆச்சரியப்படுத்துகிறது! வாழ்த்துகள்!! உங்கள் மொழிபெயர்ப்புத் திறமையின்மீதும், மொழிப் புலமையின் மீதும் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது!'கொஞ்சம் சிரமப்பட்டாலும் சுவாரஸ்யமாய் முடித்துவிடலாம்' என்று உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து எழுதி முடித்துவிடுங்கள்!!
      'ம்ஹூம் இது பூட்ட கேஸு மாமு' என்று உறுதியாகத் தோன்றினால் எடிட்டரிடம் உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்!!
      ஒருவேளை இது வெளிவந்தாலும் நண்பர்களிடம் வரவேற்பைப் பெறுவது கடினமே என்று தோன்றினால் அதையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிடுங்கள்! விற்காமல் தேங்கிப்போனால் முடங்கிப்போகும் பணத்தாலும், பலநாட்கள் உழைப்பாலும் இங்கே அதிகம் பாதிக்கப்படப்போவது எடிட்டரே! நண்பர்களின் அதீத ஆர்வம் எடிட்டரைப் பலிக்கடாவாக்கிவிடக் கூடாது என்பதில் நாம் எல்லோருமே முனைப்புடன் இருக்கவேண்டியது மிகமிக அவசியம்! இதை புலன்விசாரணையின் தீவிர அபிமானிகளும் புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன்!

      Delete
    8. வாழ்த்துக்கள் j அவர்களே,உங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும்.
      மற்றபடி ஈ.வி அவர்களின் கருத்துக்கள் நிச்சயம் கவனத்தில் கொள்வது ஏற்புடையதே.புலன் விசாரணை எந்தவிதமான காரணிகளை முன்னிலைப்படுத்தியும் பின் தங்குவது மிகப்பெரிய ஏமாற்றத்தையே தரும்.இது வில்லியம் வான்ஸ் மற்றும் வான் ஹம் எனும் இரு ஜாம்பவான்களின் படைப்பு என்பதாலேயே இதன் மீது தீரா மையல்.

      Delete
    9. வாழ்த்துக்கள் j அவர்களே,உங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும்.
      மற்றபடி ஈ.வி அவர்களின் கருத்துக்கள் நிச்சயம் கவனத்தில் கொள்வது ஏற்புடையதே.புலன் விசாரணை எந்தவிதமான காரணிகளை முன்னிலைப்படுத்தியும் பின் தங்குவது மிகப்பெரிய ஏமாற்றத்தையே தரும்.இது வில்லியம் வான்ஸ் மற்றும் வான் ஹம் எனும் இரு ஜாம்பவான்களின் படைப்பு என்பதாலேயே இதன் மீது தீரா மையல்.

      Delete
    10. ஈ.வி
      இது கண்டிப்பா பூட்ட கேஸ் தான்.
      காமிக்ஸே இல்லை ஐயா இதில்.

      இதை குண்டு புக்காக போட்டால் எடிட்டர் பாவம்.
      அவரை விட்டு விடுங்கள்.

      சரி யார் வாங்குவார்கள் என்று நம்புகிறீர்கள்.
      நல்ல காமிக்ஸ் புக்கையே நமது மக்களுக்கு டுஸ்கவுண்ட் போட்டு மெனக்கெட்டு கஷ்டப்பட்டு விற்க வேண்டி உள்ளது நண்பர்களே.
      சரி , தெரியாமல் தான் கேட்கிறேன்.

      அதுதான் இரத்தப்படலம் அழகாக கலரில் அட்டகாசமாக படிக்க போகிறோமே.
      அப்புறம் ஏன் அதை மீண்டும் கஷ்டப்பட்டு எழுத்தாக படிக்க வேண்டும்.

      ஒன்று நிச்சயம்.
      நான் பொறுப்பை ஏற்றுக்கொண்டது உண்மை.
      அதற்காக மிகவும் சிரமப்படவும் தயார் நண்பர்களே.

      ஆனால் இதை பதிக்கவும் சாத்தியமில்லை.

      ஏங்க! அப்டி அதுல ஒண்ணுமில்லை.
      ஒரு மண்ணுமில்லை.

      இரண்டு செய்தியாளர்கள் இரத்தப்படலத்தை வார்த்தை கோப்புகளாக வர்ணிப்பது தான் புலன் விசாரணை.
      எடிட்டரிடமும் பேசியாகி விட்டது.
      அவர் வார்த்தைகளில் தொனித்த வேதனை காயப்படுத்துகின்றது.
      அவரை நம்மளவு யார் புரிந்து கொண்டிருக்க முடியும்.

      சரி வெகு சிரமப்பட்டு முதல் போட்டு பிரிண்ட் செய்து விற்றாக முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்துள்ளார்.
      குடோனில் வைத்து அழகாக அடுக்கி வைக்கலாம்.
      எடிட்டரை சிரமப்பட்டு வற்புறுத்தி காயப்படுத்த வேண்டாம் நண்பர்களே.

      அவரை இரத்த கண்ணீர் வடிக்க வைத்து விட வேண்டாம்.
      தயவு செய்து புரிந்து கொள்வோம்.

      Delete
    11. j : சார் ....இல்லாத ஒன்றின் மீதான மையல், கொட்டிக் கிடப்பன மீது என்றைக்குமே தோன்றுவதில்லை ! இது இயல்பு தானே ?

      ௮௫௦ பக்க கதை ஏற்படுத்தாத வேட்கையை இந்த ௧௧௦ பக்க பு.வி.ஏற்படுத்துகிறதெனில் - "அதிலே என்ன தான் இருக்குதோ ?" என்ற குறுகுறுப்பே காரணம் ! இதுவும் ஒரு இதழாய் வெளியானால் தவிர ; அவரவர் தாமே அந்தக் கட்டுரைக் குவியலினுள் மூழ்கிட முயற்சித்துப் பார்த்தாலொழிய - யதார்த்தம் நிச்சயம் புரிந்திடாது ! And அது வரையிலும் நான் கூரை மீதி ஏறி நின்று கூவினாலுமே எனது விளக்கங்கள் ஒரு சப்பைக்கட்டாகவே தோன்றிடும் !

      So லாப - நஷ்ட கணக்குகளை பார்த்திடும் தருணமாய் இதை நான் கருதிடவில்லை சார் ! ஆனால் மொழியாக்கத்தில் நேர்ந்திடக் கூடிய சிரமங்களை யூகித்த நான் இன்னொரு விஷயத்தைக் கோட்டை விட்டு விட்டது இப்போது உங்கள் பதிவைப் பார்த்த பின்பே உறைக்கிறது ! அது தான் ஆங்கில ஒற்றைப் பக்கமானது தமிழாகும் சமயம் - மூன்றோ, நான்கோ பக்கங்களாகிடக் கூடிய சாத்தியம் !! அது நிஜமாகிப் போயின் இந்த இதழை ஒரிஜினல் வரையறையான ௧௧௦ பக்கங்களுக்குள் சத்தியமாய் வெளியிட்டிட இயலாது !!

      பார்க்கலாமே - மற்ற இரு நண்பர்களும் இவ்வாரத்தின் போக்கில் தங்கள் முயற்சியினில் எத்தனை தூரம் பயணிக்கிறார்களென்று !

      Delete
    12. வாசகர்களாகிய நமக்கு நிறைவேற்றப்படாத நீண்டநாள் கோரிக்கை என்ற ஒன்று எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதுதான் நம் காமிக்ஸ் வாழ்க்கையை ஒரு எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும்! பலவருடத் தொடர் கோரிக்கைகளுக்குப் பின்னே என்றோ ஒருநாள் அது சாத்தியமாகி நம் கைகளில் தவழும்போது அதன் சந்தோசமே தனி தான்! இரத்தப்படலம் வண்ணத்தில் வரயிருப்பதும், கடந்த காலங்களில் மின்னும் மரணம் உள்ளிட்ட மெகா கோரிக்கைகள் நனவாகியதும் அப்படியாப்பட்ட நம் நீண்டநாள் கோரிக்கைகளின் பலனே!

      இப்போது அந்த லிஸ்ட்டில் புலன்விசாரணையைப் போட்டுவைத்திடுவதே சாலச் சிறந்ததாகத் தோன்றுகிறது!

      ///சரி வெகு சிரமப்பட்டு முதல் போட்டு பிரிண்ட் செய்து விற்றாக முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்துள்ளார்.
      குடோனில் வைத்து அழகாக அடுக்கி வைக்கலாம்.
      எடிட்டரை சிரமப்பட்டு வற்புறுத்தி காயப்படுத்த வேண்டாம் நண்பர்களே.

      அவரை இரத்த கண்ணீர் வடிக்க வைத்து விட வேண்டாம்.///

      மேற்கண்ட வரிகளே போதும்! நம் புலன் விசாரணைக் கனவு தோதான ஒரு நேரத்தில், யாருக்கும் பாதகமின்றி (குறிப்பாக எடிட்டருக்கு) வந்துவிட்டுப் போகட்டும்! அதுவரை காத்திருப்போமே?!!

      நான் சிலநாட்களுக்கு முன்பே சொன்ன வரிகளை மீண்டும் இங்கே (துளியூண்டு மாற்றத்தோடு) சொல்கிறேன்! "எடிட்டரை மனதாலும், உடலாலும், பொருளாதாரத்தாலும் சிரமப்படுத்தித்தான் ஒரு புத்தகம் கிடைக்கிறது என்றால் - அது எனக்குத் தேவையே இல்லை!"

      Delete
    13. ஈ.வி
      ம்ம்ம்உம்ம்மா

      Delete
    14. "//அவரவர் தாமே அந்தக் கட்டுரைக் குவியலினுள் மூழ்கிட முயற்சித்துப் பார்த்தாலொழிய - யதார்த்தம் நிச்சயம் புரிந்திடாது //"
      EBF ல இதன் எதார்த்தம் அனைவருக்கும் புரிந்து -புரிய
      வைக்கவும் முடியும்
      காத்திருப்போம்
      அது வரை.

      Delete
    15. இதுவரை பார்க்காத ,படிக்காத நண்பர்கள் சொன்னபொழுது புரிபடாத நண்பர்கள் உண்டு.ஆனால் இப்பொழுதோ அதே ஆர்வத்தில் இருந்த நண்பர் j அவர்கள் படித்து ,மொழிபெயர்த்து தீர்வை சொல்லும் பொழுதாவது நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

      மேலும் இரத்தபடல வண்ண தொகுப்பு ஒரு பிரமாண்ட ஆக்க முயற்சி.அது வரும் சமயம் நமது பார்வை முழுவதும் அதன் மேல் மட்டும் இருந்தால் அதன் சிறப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.அந்த சமயத்தில் இந்த விசாரணையிலும் ஈடுபட்டு நண்பர் j சொன்னது போல நிகழ்வு ஏற்பட்டால் அதன் பாதிப்பு ஆசிரியருடையது மட்டுமல்ல .அந்த பாதிப்பினால் வெளிவரும் இரத்தபடல இதழின் புகழும் ,பெருமையும்,உழைப்பும் கூட என அனைத்துமே அதன் தோல்வி மூலம் இதுவும் மங்கி விடும்.

      புலன் விசாரணை நண்பர்கள் உணர்ந்தால் மட்டுமே இரத்தபடலத்தையும் ,ஆசிரியரையும் நாம் தாங்கி பிடிக்க முடியும் .

      எனும் பொழுது நாம் தாங்கி நிற்க போகிறமோ...இல்லை கீழே இழுத்து விட போகிறோமா..

      காத்திருக்கிறேன்..

      Delete
  64. //எடிட்டரிடமும் பேசியாகி விட்டது.
    அவர் வார்த்தைகளில் தொனித்த வேதனை காயப்படுத்துகின்றது.//

    வருத்தமளிக்கும் வரிகள் ...நேசத்துக்கும் மரியாதைக்கும் உரிய ஒருவரின் மனதை துயர் கொள்ள செய்து கிடைக்கும் இதழ் ...மன்னிக்கவும் எனக்கு வேண்டவே வேண்டாம் ...

    ReplyDelete
    Replies
    1. உங்களை மானசீகமாக கட்டி அணைக்கிறேன் செல்வம் சார்

      Delete
    2. சார் ....எனது வலிகளின் ஆயுட்காலம் எப்போதுமே நீண்டதாக இருப்பதில்லை ! அடுத்த லக்கி லூக்கையோ, டெக்ஸையோ கையில் எடுத்த கணத்தில் உள்ளக் குதிரையானது பசுமையான வெளிகளுள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிடும் ! So எனது சலனங்களையோ, சங்கடங்களையோ பெரிதாய்ப் பொருட்படுத்திட வேண்டாமே -ப்ளீஸ் !

      இரத்தப் படலமெனும் ஆனையை கண்ணிற் காட்டிவிட்டு அந்த அங்குசத்தை காட்டாது விட்டால், நண்பர்களிடையே நேரக் கூடிய வெறுமையும் வெறுப்பும் தற்போதைய எனது சங்கடத்தை, ஆகஸ்டில் பன்மடங்காய் பல்கிடச் செய்திடுமென்பதில் சந்தேகமில்லை ! தவிர, இதை காலத்துக்குமொரு ஏமாற்றமாகவே நண்பர்கள் மணத்தில் சுமந்து திரிவது வேண்டாமே ?

      So நாளைய பெரும் இக்கட்டைத் தவிர்க்க இன்றைக்கு மித சலனத்தை விழுங்கிக் கொள்வதில் தவறு இராது சார் !

      Delete
    3. "//இரத்தப் படலமெனும் ஆனையை கண்ணிற் காட்டிவிட்டு அந்த அங்குசத்தை காட்டாது விட்டால், நண்பர்களிடையே நேரக் கூடிய வெறுமையும் வெறுப்பும் தற்போதைய எனது சங்கடத்தை, ஆகஸ்டில் பன்மடங்காய் பல்கிடச் செய்திடுமென்பதில் சந்தேகமில்லை ! தவிர, இதை காலத்துக்குமொரு ஏமாற்றமாகவே நண்பர்கள் மணத்தில் சுமந்து திரிவது வேண்டாமே ?"//

      கண்டிப்பாக ஏமாற்றமடைய மாட்டார்கள் சார்.
      எங்கள் அனைவரையும் நீங்கள் அறிந்தவரே.
      உங்களளவு நாங்களும் இந்த பொம்மை உலகத்தை உயிராக நேசிக்கிறோம்.
      சுவாசிக்கிறோம்.
      மருந்து விஷக்கசப்பாக இருந்தால் விழுங்கி விடலாம் சார்.
      ஆனால் நோயே இல்லாத போது மருந்து எதற்கு சார்.

      சைட் எபெக்ட்ஸ் இலவசமாக வரும்.
      இருப்பதை விட்டுட்டு பறக்குற ஆசை வேண்டாம் சார்.

      Delete
    4. So நாளைய பெரும் இக்கட்டைத் தவிர்க்க இன்றைக்கு மித சலனத்தை விழுங்கிக் கொள்வதில் தவறு இராது சார் !


      #######


      சார் இது உங்கள் முடிவு .சொல்ல கூடாது என இருந்தேன் .ஆனால் நண்பர் j அவர்களின் கருத்தை படித்தவுடன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பல காமிக்ஸ் நண்பர்கள் ஏற்கனவே எடுத்த முடிவை இங்கே பகிரங்கமாக உடைக்கிறேன்.இதுவரை நமது காமிக்ஸ் பிராண்ட் பெயரில் ஒரு சிறிய தாள் வந்தால் கூட பத்திரபடுத்தும் கூட்டம் நமது வட்டம்.ஆனால் புலன் விசாரணை இதழ் வெளிவரும் சமயம் அது ஒன்று மட்டுமே நான் வாங்காத காமிக்ஸ் இதழாக இருக்கும் என ஏற்கனவே முடிவெடுத்த நண்பர்கள் பலர் உண்டு.இப்பொழுது மொழிபெயர்த்த நண்பரின் கருத்தை படித்தவுடன் அந்த வட்டம் இன்னும் பெரிதாகும் என்பது மறுக்க முடியா உண்மை.

      அந்த வட்டத்தில் நானும் ஒருவனே என்பதையும் மறைக்க விரும்பவில்லை சார்..!

      Delete
    5. /////எடிட்டரிடமும் பேசியாகி விட்டது.
      அவர் வார்த்தைகளில் தொனித்த வேதனை காயப்படுத்துகின்றது.//

      வருத்தமளிக்கும் வரிகள் ...நேசத்துக்கும் மரியாதைக்கும் உரிய ஒருவரின் மனதை துயர் கொள்ள செய்து கிடைக்கும் இதழ் ...மன்னிக்கவும் எனக்கு வேண்டவே வேண்டாம் ...///

      + infinity

      Delete
  65. J அவர்களின் விளக்கத்தைப் பார்க்கும்போது புலன் விசாரணை மீதான மையல் மங்கிவிட்டது

    இரு பத்திரிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில், பத்தி பத்தியாக கட்டுரை கணக்கான விளக்கம் எனும்போது இன்னும் ஆர்வம் குன்றுகிறது.

    இரத்தப்படலம் வெளிவந்த பின்னே எப்படியும் குறைந்தபட்சம் 200பேரால் (அது நாமதான்.) பிரித்து மேயப்படும் எனும்போது, அந்த இருவரின் விசாரணை குறைவதால் பாதிப்பு ஏதும் நேராது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. /இரு பத்திரிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில், பத்தி பத்தியாக கட்டுரை கணக்கான விளக்கம் எனும்போது இன்னும் ஆர்வம் குன்றுகிறது."//
      குன்றுவது கூட பரவாயில்லை நண்பரே.
      வெறுத்துப்போய் விடுவீர்கள்.

      Delete
    2. நண்பர் j அவர்களே..

      அவர்கள் என்ன நினைப்பார்களோ ,இவர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணாமல் கடினப்பட்டு உழைத்த பின்னரும் தயங்காது உண்மையை பட்டவர்த்தனமாக சொன்னீர்களே..

      உங்கள் உண்மைக்கு இப்பொழுது நான் மானசீகமாக உங்களை கட்டி அணைக்கிறேன் நண்பரே..

      Delete
  66. "//இரு பத்திரிக்கையாளர்களின் கண்ணோட்டத்தில், பத்தி பத்தியாக கட்டுரை கணக்கான விளக்கம் எனும்போது இன்னும் ஆர்வம் குன்றுகிறது."//
    குன்றுவது கூட பரவாயில்லை நண்பரே.
    வெறுத்துப்போய் விடுவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்த்த உங்களுக்கே இப்படினா ( படிச்சா..) எங்களுக்கு...:-(

      Delete
  67. எனது WhatsApp எண் 9843808392
    அன்பு சால் நண்பர்களே.
    எனது ஸ்டேட்டஸ் பாருங்கள்
    4 பக்கங்களை.
    நண்பர்களே.
    நான் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்

    ReplyDelete