Powered By Blogger

Saturday, October 14, 2017

கோட்டை அழியுங்க...!

நண்பர்களே,

வணக்கம். உங்களையெல்லாம் பார்த்தாக்கா நேக்கு பாவம் பாவமாத் தோணுது !! "இஸ்பைடரையும்...பூப்போட்ட அண்டராயர்காரையும்  இப்போவும்  3 வருஷமா தான் படிச்சிட்டு வர்றோமே..இதிலே புதுசா அனுதாபப்பட மேட்டர் என்னவோ ?" என்று கேட்கிறீர்களா ? விஷயம் அதுவல்ல ! 32 ஆண்டுகளுக்கு முன்னே பொட்டியைத் தூக்கிக் கொண்டு சுள்ளானாய்ப் பிராங்க்பர்ட் புத்தகவிழாவுக்குப் போன கதையையே காதிலே இரத்தம் கசியும் அளவுக்கு சொல்லி வருகிறவன் -  ஜுனியரையும் உடனழைத்துக் கொண்டு இப்போது அங்கே மறுக்கா பயணமானால் உங்கள் கதி தான் என்னவாகும் ? இந்தக் கூத்தை கொண்டே இன்னமும் எத்தனை ஆண்டுகளை ஓட்டப் போகிறேனோ ? என்பதை நினைத்தால் எனக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறதே - உங்கள்பாடைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? கடவுள் காப்பாற்றுவாராக ! 

ஒவ்வொரு வருடத்து அக்டோபர் புலரும் போதும் மண்டைக்குள் ஒரு ஓரமாய் விசனமும் குடிகொள்ளும் - "ஹக்கூம்...புத்தகவிழா அங்கே ஜெர்மனியில் துவங்கும் நேரமிது....எது எதுக்கோ தெருத் தெருவாய் சுற்றும் உனக்கு - இந்தவாட்டியும் அங்கே தலைகாட்டத் தீரலியாக்கும் ?" என்று !! சிக்கல் என்னவெனில் - பிரத்யேகமாய் இதற்கென திட்டமிட்டு, இதெற்கென செலவழித்துப் போவதாயின் குறைந்த பட்சம் ஒரு லட்சத்தி சொச்சம் பழுத்து விடும் ! நம்மூர் மங்கம்மாள் சத்திரம் கிரேடில் உள்ள ஹோட்டல்கள் கூட "புக்பேர் ரேட்ஸ்" என்று புத்தகவிழா நடக்கும் அந்த ஐந்து நாட்களுக்கு கட்டணங்களை ரெண்டு மடங்கு  உசத்தி விடுவது வாடிக்கை ! ஒரு லட்சத்தை அங்கே போய் சூறை போடுவதற்குப் பதிலாய் இங்கிருந்தபடிக்கே நமது "கே-மெயில் பாணியை" கடைபிடித்தால் அந்தப் பணத்தை மிச்சம் செய்தது போலாகுமே என்பது தான் அடியேனின் சித்தாந்தமாய் இருந்துவரும் ! அது சரி..அது என்ன "கே-மெயில்" என்கிறீர்களா ? வேறென்ன - "குடலை உருவிடும் மெயில் " தான் ! நமக்குத் தேவைப்படும் தகவல்கள் கிட்டிடத் தாமதமாகிடும் தருணங்களில் இங்கிருந்தபடிக்கே படைப்பாளிகளின் சிறுகுடல் ; பெருங்குடல்களோடு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளும் யுக்தி ! நிச்சயமாய் பிரான்சிலும், பெல்ஜியத்திலும், இன்ன பிற ஐரோப்பிய காமிக்ஸ் தலைநகரங்களிலும்  - 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா !' என்று சிலபல அலுத்துக் கொள்ளும் படலங்கள் நடைபெறும் என்பதில் இரகசியமில்லை என்ற போதிலும், எனக்கு வேறு மார்க்கங்கள் இருப்பதில்லை ! வேறு பணிகளின் நிமித்தம் ஐரோப்பாவில் கால் பதிக்க சமயம் கிட்டும் தருணங்களில் - படைப்பாளிகளில் முக்கியமானோரை பார்த்து ஒரு வணக்கத்தைப் போட்டு வைப்பது வாடிக்கையே எனினும், சகலரையும் பார்த்திடுவது சாத்தியமாவதில்லை !  

So இந்தாண்டு கள்ளத்தோணியில் எறியாவது ஜெர்மனிக்குப் போய் சேர்ந்திட வேண்டுமென்ற உத்வேகம் சில பல மாதங்களுக்கு  முன்கூட்டியே குடி வந்திருந்தது என்னுள் ! முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையின்றி முன்கூட்டியே ரூம் புக் செய்யும் இன்டர்நெட் தளங்கள் இப்போது ஏகம் என்பதால் ஒன்றரையணாவுக்கு அதனுள் ஏதாச்சும் ரூம் சிக்குகிறதா ? என்று பார்க்கத் துவங்கினேன் ! ஓலப்பாய் விரித்து ஓரமாய்ப் படுத்துக் கொள்வதானால் கூட நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும் போல் தெரிந்தது ! 'அடேய் ..பாவிப் பயல்களா...எங்க ஊரிலே இந்தப் பணத்துக்கு ஜனாதிபதி மாளிகைக்கு கிட்டக்கே கூட ரூம் கிடைக்குமே !!" என்று உள்ளுக்குள் பொங்கினாலும், செய்வதற்கு வேறெதுவும் இல்லையென்பதால் ரூமை மட்டும் புக் செய்து வைத்திருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்னே விமானக் கட்டணங்களை ஒரக் கண்ணால் அவ்வப்போது நோட்டம் விடும் போதெல்லாம் - போய் வர ரூ.34,000 சுமாருக்கு டிக்கெட்கள் கண்ணில் பட்டன ! 'அடடே .....இந்த டீலிங் ரொம்ப நல்ல இருக்கே ; டிக்கெட் முப்பத்தி நாலாயிரம் ப்ளஸ் ரூமுக்கு இருபதாயிரம் என்றால் 54-ல் முடிந்து விடுகிறது ! அப்புறமாய் சாப்பாட்டுச் செலவுதான் ! இங்கிருந்தே கொஞ்சம் புளியோதரையை பொட்டலம் கட்டிப் போனால், ரெண்டே நாள் தாக்குப் பிடிக்க முடியாமலா போய்டப் போகுது ? ஏற்கனவே இது புரட்டாசி வேற..!" என்று திவ்யமாய் மனக்கணக்குகள் ஓடியவண்ணமிருந்தன ! ஆனால் கணக்குகள் வேறு ; பைக்குள் நிஜத்தில் கைவிடுவது வேறு தானே ? "நாளைக்குப் பார்த்துக்கலாம் ; இந்த மாச ஏஜெண்ட் வசூல் வந்த உடனே பார்த்துக்கலாம் !" என்று நாட்களைக் கரைத்துக் கொண்டே போக, இடைப்பட்ட தருணத்தில் ஜுனியரின் திருமணமும் நிச்சயமானது ! வழக்கம் போல் ஒரு காலையில் விமான கட்டணப் பரிசோதனையில் ஆழ்ந்த போது - பிட்டத்துக்கு அடியில் டைம் பாம் வெடித்தது போலொரு உணர்வு ! கட்டணம் அறுபதாயிரத்துச் சொச்சம் என்று கம்பியூட்டர் காட்டிய மறு கணமே கலாமிட்டி ஜேனை நல்ல பிள்ளையாக்கும் விதமாய்த் தான் மனசுக்குள் வார்த்தைகள் @#%*&^"=@!!  ஓடின !! முப்பத்தி ஐந்துக்கே முக்கு முக்கென்று முக்கியவன் அறுபதை பார்த்தவுடன் சுத்தமாய் off ! இந்தாண்டுமே மறுபடியும் ஒரு கானல் நீர் தான் என்றபடிக்கே - மனதைத் தேற்றிக் கொள்ளத் தொடங்கினேன் - "அட..என்ன பொல்லாத புக் பேர் ! அது தான் எல்லாரையும் நமக்குத் தெரியுமே ! புதுசா என்ன ஆணி பிடுங்கப் போறேன் ?" என்றபடிக்கே ! நொடிப் பொழுதில்தான் பழங்கள் என்னமாய் சுவை மாறித் தோன்றுகின்றன மனுஷனின் மனக்கண்ணில் ?!! 

"சரி..இது ஆகுறதில்லே !" என்றபடிக்கு அன்றாட வேலைகளுக்குள் புகுந்த போது தான் நமது காமிக்ஸ் தேவர் புனித மணிடோ கண்ணைத் திறந்தார் !! நமது மிஷினரி வாடிக்கையாளர்  - அவசரமாய் ஒரு மிஷின் தேவையென்று கோரிக்கையை வைத்திட, அதன் தேடலில் நாட்கள் நகர்ந்தன ! ஜுனியருக்குமே அந்தப் பணிகள் அத்துப்படி என்பதால் அவருமே தேடிட, "ஜெர்மனியில் உள்ள இது ஆகுமா - பாருங்களேன் ?" என்றபடிக்கு என்னிடம் ஒரு மின்னஞ்சலைக் காட்டிய போது நானொரு 'ஜிமிக்கி கம்மல் ' டான்ஸ் ஆடாத குறைதான் ! ஆபீசில் உள்ள பெண்பிள்ளைகளை தெறித்து ஓடச் செய்த பாவம் வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் அடியேனுக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்த நடன வேட்கையை உள்ளுக்குள்ளேயே ஒருமாதிரியாக அடக்கிக் கொண்டேன் ! ஜெர்மனியில்  உள்ள விற்கும் முகவர் எனக்குத் தெரிந்த நண்பர் என்பது மட்டுமல்லாது மிஷின் இருந்ததுமே பிராங்க்பர்ட் நகரிலிருந்து 500 கி.மீ. தொலைவில் தான் என்பதால் பர பரவென்று இங்கும் அங்கும் பேச்சு வார்த்தைகள் நடத்தியதன் பலனாய் இந்த வாரத்தின் புதனிரவு சென்னை விமானநிலையத்தில் "ஈஈ" என்று ஜோக்கரின் இளிப்புக்குச் சவால்விடும் விதத்தில் ஒரு ஆந்தைவிழியனின் நடமாட்டம் சாத்தியமானது ! "புள்ளைக்கு கல்யாணத்தை வைத்துக் கொண்டு இன்னமும் ஊர் சுற்றித் திரியணுமாக்கும் ?" என்ற குரல் வீட்டில் ஒலித்தாலும், "தோ...ரெண்டே நாள் - ஓட்டமாய் ஓடிட்டு, ஓட்டமாய் திரும்பிடுவேன் !" என்றபடிக்கே மூட்டையைக் கட்டியிருந்தேன். And ஜுனியரின் தேடலில் கிட்டிய மிஷின் என்பதாலும், நமது படைப்பாளிகளை ஜூ எ-க்கு அறிமுகம் செய்து வைக்க கிட்டிய பொன்னான வாய்ப்பு என்பதாலும், ஒன்றுக்கு இரண்டாய் மூட்டைகளைக் கட்ட முடிந்திருந்தது !

கடைசியாய் ஐரோப்பாவில் அந்த வில்லங்கக் கிழவிகளிடம் வாங்கிய பல்ப் இன்னமும் ஸ்பஷ்டமாய் நினைவில் நிற்க, ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்மானித்திருந்தேன் - இரண்டடி சுற்றுவட்டத்துக்குள் நெருங்கி வரும் முதல்  வெள்ளைக்காரக் கிழவியைக் குரல்வளையை நெரித்து விட்டு, அப்புறமாய் அவசியப்பட்டால்  விசாரிப்பது என்று !! அது போதாதென்று தேர் இழுக்கும் வடம் கனத்தில் ஒரு அருணாக்கொடியை சுற்றி, பாஸ்போர்ட்களை அதோடு ஒரு சுருக்குப் பையில் மாட்டி, மேம்போக்காய் கொஞ்சம் பாடி ஸ்பிரே அடித்தும் கண்ணுக்கே தெரியாதபடிக்கு பதுக்கி விட்டிருந்தேன் ! தகுந்த முன்னெச்சரிக்கைகளோடு கிளம்பியது  ; பாரிசில் தரையிறங்கி அங்கிருந்து ஜெர்மனியின் தென்கோடியில் உள்ள ம்யூனிக் நகருக்குப் போய் அந்த  மிஷினைப் பார்வையிட்டது - எல்லாமே நிழல் நிகழ்வுகளாய் ஓடின ! என் மண்டை முழுக்கவே புத்தகவிழாவில் நிலை கொண்டிருந்தன !! 

ஒரு மாதிரியாய் வியாழனிரவு பிராங்க்பர்ட் நகருக்குள் நுழைந்த போது - எனக்குமட்டும் ஊரே செண்டா மேளம் அடித்து வரவேற்புக் கொடுப்பது போலொரு உணர்வு ! அதே ரெயில்வே ஸ்டேஷன் - இம்முறை கொஞ்சம் பள பளவென்று...அதே வானளாவிய கட்டிடங்கள், துணைக்கு கூடுதலாய் சகாக்களோடு ; அதே ஜனத்திரள் - என்று பரிச்சயமான காட்சிகள் கண்முன்னே விரிய - கிடைத்த அத்தனை வாடகை சைக்கிள்களையும்  ஒட்டுமொத்தமாய் எடுத்துக் கொண்டு ஆட்டோகிராப் சேரன் பாணியில் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன் ! ஆனால் இன்றைய தலைமுறையோ  சந்திர மண்டலத்துக்கே போனாலும் - "இப்போ இன்னாங்கிறே ?" எனும் nonchalant தலைமுறை என்பதை நூற்றியோராவது தடவையாக உணர்ந்தேன் -  ஜுனியர் எனது பெனாத்தல்களை சன்னமானதொரு கொட்டாவியை அடக்கிக் கொண்டே கேட்டுக் கொண்ட போது ! வெள்ளைத் தோல் ஜனங்களும், வானளாவிய கட்டிடங்களும் இன்றைய IPhone தலைமுறைக்கு எவ்விதத்திலும் ஒரு வேற்றுமையை உணர்த்துவதில்லை எனும் போது 30 ஆண்டுகளில் தான் என்னமாய் மாற்றங்கள் வேர் விட்டுள்ளன என்பதை எண்ணி வியக்காது இருக்க இயலவில்லை !! 

ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தி விட்டு கோழி கூவும் முன்பாய்க் குளித்துக் கிளம்பிய கையோடு  ஜுனியரை உசுப்பிட  - "ஐம்பது வயசுக்கு மேலான அப்பன்கள் எல்லாமே மறையைக் கழற்றி பாக்கெட்டுக்குள் வைத்திருப்பாங்களோ ? ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும் விழாவுக்கு 7 மணிக்கே பிராணனை வாங்குறாரே ?" என்ற பார்வை தெரிந்தது ! இதோ அதோவென்று ஒன்பது மணிக்கு பிராங்க்பர்ட் நகரின் மையத்தில் உள்ள புத்தக விழா மையத்துக்கு செல்லும் டிராமில் ஏறிய நொடியில் -  32 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துக்கனூண்டு பர்மா பஜார் பிரீஃப்-கேஸை கையில் ஏந்தியபடிக்கு ஒரு சைஸ் பெரிதான கோட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டு, தொடரும் நாளில் மாத்திரமன்றி, தொடரவிருக்கும் வாழ்க்கையிலும்  என்ன காத்திருக்கிறதென்று துளியும் அறிந்திராது, மனது முழுவதும் வியாபித்து நின்ற பதட்டத்தையும்  பயத்தையும்  கண்களில் காட்டாதிருக்கத் தவித்த ஒரு முரட்டு மீசை டீனேஜர் என் கண்ணில் நிழலாடினான் ! வாழ்க்கை தான் எத்தனை பெரிதானதொரு ஆசான் என்று மறுபடியும் உணரச் செய்த நொடியது ! கூட்டத்தோடு கூட்டமாய் புகுந்து, கிரவுண்டின் முகப்பில் இறங்கி புத்தகவிழா வாசலில் ஜுனியரை நிற்கச் செய்து ஒரு க்ளிக் செய்த கணம் -  ஊதைக் காற்றினாலா என்று சொல்லத் தெரியவில்லை - விழியோரம் துளியூண்டு ஈரமிருந்தது ! 
உள்ளே புகுந்தோம் ! 

திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு தேசத்துப் பதிப்பகத்தார் சர சரவென்று தத்தம் ஸ்டால்கள் பக்கமாய் வேக நடை போட்டுக் கொண்டிருக்க, எங்கள் கைகளிலோ நாம் சந்திக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் படபடத்தது ! உள்ளே நுழைந்த முதல் கணத்தில் எனக்குத் தோன்றிய முதல் எண்ணமானது - "ஹே...நான் பார்த்து மலைத்த புத்தகவிழா தானா இது ? அந்தப் பரபரப்பும், ஜனப்பிரவாகமும் ரொம்பவே குறைகிறதே !!" என்பதே ! 2008 அல்லது 2009 வாக்கில் ஒரு ஒற்றை நாள்குட்டி விசிட் அடித்திருந்த போது கூட ஜே ஜே வென்ற கூட்டத்தைப் பார்த்த நினைவிருந்தது ! அதற்கும் தற்போதைய நடைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு மெகா குறைபாடு அப்பட்டமாய்த் தெரிந்தது ! உலகெங்கும் வாசிப்புகள் குன்றிடுவதும், அதன் பலனாய் இத்தகைய தொய்வு நிகழ்வதும் தெரிந்த செய்தியே என்றாலுமே, அத்தனை நேருக்கு நேராய்ப் பார்ப்பதன் தாக்கமே வேறாக உள்ளது ! 'என்னமோ போடா மாதவா !' என்றபடிக்கே நமது அப்பாயிண்ட்மெண்ட் டயரியைப் பார்க்க, புதியதொரு பிரான்க்கோ-பெல்ஜியப் பதிப்பகம் முதலில் இருந்தது ! 
அவர்களைத் தேடிப் பிடித்துச் சென்ற போது அங்கே ஒரு அழகான தோட்டம் போலொரு அமைப்பில் ஸ்டால் இருப்பதைக் காண முடிந்தது ! இப்போதெல்லாம் இது போன்ற சர்வதேச விழாக்களில் ஸ்டால் வடிவமைப்புகளுக்கே ஏகமாய் ஒவ்வொரு  பதிப்பகமும் செலவிடுவதையும், இதெற்கென இப்போதெல்லாம் நிறுவனங்கள் செயல்படுவதையும் பார்க்க முடிகிறது ! "நாலு ரேக்கை பார்சல் பண்ணினோமா ; நாலு பேனரைப் போட்டோமா - ஸ்டாலுக்கான ஏற்பாடுகள் முடிஞ்சது " என்ற நமது பாலிசியை நினைத்துக் கொண்டேன் ; சிப்பு சிப்பாய் வந்தது ! கொஞ்சம் சிறுவர் இதழ்கள் ; கொஞ்சம் காமிக்ஸ் ; கொஞ்சம் activity books என்று அவர்களது ஸ்டாலின் முகப்பில் மாதிரிகள் அழகாய்க் காட்சி தர, அவற்றை புரட்டிக் கொண்டே - நாம் சந்திக்க வேண்டிய பெண்மணி யாராக இருக்குமோ ? என்று நோட்டம் விட்டேன் ! இருந்த நாலு பேருமே பிசியாக இருக்க, நானாகச் சென்று விசிட்டிங் கார்டை நீட்ட - ஒரு சின்னப் பெண் புன்னகையோடு நம்மை வரவேற்று அமரச் செய்தார் ! "ஆத்தாடியோவ்...தப்பிச்சேன்..பாட்டிம்மா யாரும்  நமது அக்கவுண்ட்டை கையாளவில்லை !" என்று உள்ளுக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு சந்தோஷப்பட்டுக் கொண்டது !

இந்த நிறுவனம் அத்தனை பெரிதுமல்ல ; புராதனமானதுமல்ல - so பெரிதாயொரு ஹிட் தொடரோ / நாயகரோ இவர்கள் வசம் இப்போதுவரையிலும் கிடையாது ! ஆனால் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்கும் வேகம் இவர்களிடம் இருப்பதை இவர்களது கேட்லாக்கை பார்த்த போதே அறிந்திருந்தேன் ! In fact அவர்களாகவே நம்மைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டாய் மாதிரிகளை அனுப்பி வருகின்றனர் ! அவற்றுள் 2 ஆல்பங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் விரிவாய் அலசிட்டால் தேவலாம் என்ற எண்ணம் இருந்தது என்னுள் ; ஆனால் மாமூலான பணிகளுக்கு மத்தியில் மறந்தே போயிருந்தேன் ! சரி, நேரில் சந்திக்கும் சமயம் பார்த்துக் கொள்ளலாம் எனநினைத்திருந்தேன் ! பேசுவதை குறிப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜுனியரிடம் சொல்லிவிட்டு நம்மைப் பற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லிய கையோடு, நமது சமீப மாதிரிகளையும் அந்த யுவதியிடம் காட்டிக் கொண்டிருந்தேன். ஜுனியர் ஜாலியாக கையைக் கட்டிக்க கொண்டு அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து - "நோட்ஸ் எடுக்கச் சொன்னேனிலே ?"  என்று கண்களால் ஜாடை காட்ட - சிம்பிளாய் தனது செல்போனை உயர்த்திக் காட்டினார் - அங்கே voice recorder ஓடிக் கொண்டிருந்தது ! "ச்சை..எனக்கு இந்த டெக்னாலஜியே புடிக்காது !' என்று உம்மணாமூஞ்சி smurf போல பல்ப் வாங்கிய என் முகம் போனது !! அந்தப் பெண்ணோ - இரு ஆல்பங்களையுமே எடுத்து என் முன்னே போட்டு - இரண்டுக்குமே கதைச் சுருக்கங்களை ரம்யமாய்ச் சொன்னார் ! இரண்டுமே வன்மேற்கின் களங்கள் தான் என்றாலுமே - இரண்டுமே கிராபிக் நாவல்கள் என்று சொல்லலாம் ! முதலாவதன் artwork -ஐ முழுவதுமாய்ப் பார்த்த பொழுது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது !! வர்ணங்களிலும், சித்திரங்களிலும் ஒரு ருத்ரதாண்டவமே நடத்தியுள்ளனர் அந்த டீம் ! இரண்டாவது ஆல்பமோ நமது "க்ரீன் மேனர் " யுக்தியைக் கையில் எடுத்திருப்பது போல தோன்றியது - செமி கார்ட்டூன் சித்திர பாணியோடு ஒரு வித்தியாசமான கதை சொன்ன  விதத்தில் ! இந்த ஆல்பத்தின் கிளைமாக்ஸை அந்தப் பெண் விவரித்த போதே எனக்குள் "approved " என்ற சாப்பா குத்திய உணர்வு மேலோங்கியது ! ஜுனியரும் பலமாய்த் தலையாட்ட - இந்த 2 ஆல்பங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம் உறுதியாய் - ஊருக்குப் போய் மேற்கொண்டு விவரங்களை மின்னஞ்சல் வாயிலாய்ப் பேசிக் கொள்ளலாம் என்றபடிக்கு விடை பெற்றேன் ! வெளியே வந்த நொடியே - "ரெண்டு கதையையும்  2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க - நான் மலங்க மலங்க முழித்தேன் ! ஏற்கனவே அட்டவணை சகலமும் தயார் என்ற நிலையில் - இவற்றை எதற்குப் பதிலாய் எங்கே நுழைப்பது என்று தெரியாமல் நான் முழிப்பதை மெதுவாய் சொல்லி வைத்தேன் ! "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" என்றபடிக்கு நடையைக் கட்ட - "ரைட்டு...பாத்துப்போம் !" என்று சொல்லிக் கொண்டேன்  !
அடுத்த சந்திப்புக்கு 45 நிமிடங்கள் அவகாசம் இருந்ததால் புதிதாய் காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடி புறப்பட்டோம் ! "அட..என்ன பொல்லாத பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ? எங்களிடம் இல்லாத திறமைகளா ?" என்றபடிக்கே ஒரு மெகா ஆசிய நாட்டு காமிக்ஸ் ஸ்டால் கண்ணில்பட - உள்ளே நுழைந்து கார்டை நீட்டினேன் ! ஆங்கிலம் பேசத் தெரியா படைப்பாளிகள் என்பதால், அவர்களது தேசத்து பதிப்பகக் கூட்டமைப்பின் குடையின் கீழ் ஒருங்கிணைந்து வந்திருந்தனர். ஆங்கிலம் / ஜெர்மானிய மொழிகள் தெரிந்த இளம் பெண்கள் -மொழிபெயர்ப்புக்கு ஒத்தாசை புரிந்திட  ; விருந்தினரை டீ ; காபி ;  கோக் என்று கொடுத்து உபசரிக்க இன்னொரு அணி -  என்று அந்த விசாலமான அரங்கிலுமே no பாட்டீஸ் ! நாலைந்து பதிப்பகங்களின்  பெயர் பலகைகள் கண்ணில்பட்டன - ஆனால் என் பார்வையோ, அங்கே ஒட்டப்பட்டிருந்ததொரு கார்ட்டூன் கதையின் போஸ்டர் மீதே லயித்து நின்றது ! அவர்களது  கிழக்காசிய ஸ்டைலில் அல்லாது - பிராங்கோ-பெல்ஜிய பாணியில் ஓவியங்கள் இருப்பது போல எனக்குத் தோன்ற - அதனை வெளியிடும் நிறுவனத்தோடு பேசிட இயலுமா ? என்று மொழிபெயர்க்கும் அழகுப் பெண்களிடம் வினவினேன் ! 'கிச்சாங்-முச்சாங்' என்று அவர்கள் பாஷையில் நீட்டி முழக்கி என்னவோ பேச, ஒரு தாத்தா இடுங்கிய விழிகளோடு நெருங்கி வந்து அமர்ந்தார் - முகம் நிறைய புன்னகையோடு ! நான் அந்த கார்ட்டூன் போஸ்டர் பற்றிக் கேட்க - அந்தப் பெண் மறுபடியும் ஒரு பாட்டம் பேசினார் ! தாத்தா - "இல்லை ; இல்லை" என்பது போல ஏதோ பதில் சொல்ல - எனக்கோ தூர்தர்ஷனில் சப்-டைட்டில்ஸ் இல்லாமல் போஜ்பூரி திரைப்படத்தைப் பார்த்தது மாதிரியே ஒரு பீலிங்கு ! இறுதியில் தான் தெரிந்தது - தாத்தாவின் படைப்பல்ல அந்த கார்ட்டூன் ; அவர் வேறு மாதிரியான சீரியஸ் படைப்பாளி என்று ! நாம் தான் கார்ட்டூன் ; லாரிடூன் ; பசுட்டூன் என்று சகல genre-களுக்குள்ளும் தலைநுழைக்க முற்படுவோராயிற்றே - "உங்களின் படைப்புகளை பார்க்கலாமா சார் ?" என்று கேட்டு வைத்தேன் ! மிகுந்த சந்தோஷத்துடன் அவரது கையிலிருந்த ஒரு கற்றைப் பக்கங்களை என்னிடம் தந்தார் ! சீன முகங்கள் ; சீன கதையோட்டம் என இருந்தாலுமே அந்தச் சித்திரங்களில் ஒரு வசீகரம் இருப்பதை உணர முடிந்தது ! "ஒரு பூ  மலர்ந்த நொடியில் ஒரு பறவை கானம் பாடியது !"  என்ற கதையின் தலைப்பைப் படித்த போது  எனது மையல் இன்னமும் அதிகமானது ! மெதுவாய் அந்தக் கதையின் பின்புலம் பற்றி, அந்தப் படைப்பின் பின்னணி பற்றி இயன்ற அளவிற்குத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன் ! எனது கேள்விகள், நீண்டு கொண்டே போகப் போக  - மொழிபெயர்க்கும் பெண்ணின் சிரிப்பு சுருங்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது ! "இவனுக்கு  மெய்யாலுமே தாத்தாவிடம் கேட்க இதனை கேள்விகள் உண்டு தானா ? - இல்லாங்காட்டி நம்ம கிட்டே  கடலை போடுவதற்காக குடலை உருவுகிறானோ ?"  என்று நினைத்ததோ என்னவோ - "மேற்கொண்டு விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புவாராம் !" என்று சொல்லி விட்டு எழுந்துவிட்டார் !  வேறு வழியின்றி நானும் புறப்பட - முதியவர் தந்திருந்த சித்திரங்கள் எங்களது பைக்குள் பத்திரமாய் அடைக்கலம் புகுந்திருந்தது ! பாருங்களேன் - அவரது ஜாலத்தின் ஒரு சிறு மாதிரியை !
வெளியே வந்த போது மங்கு மங்கென்று மண்டையைப் பிறாண்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது - தற்செயலாய் சந்தித்ததொரு படைப்பாளியின் கைவண்ணத்தை முழுமையாய் ரசிக்கும் நாளொன்று புலருமா ? என்ற ஆதங்கத்தில் ! அதற்குள் இன்னொரு மொழிபெயர்க்கும் பெண் அருகில் வந்து - "நீங்கள் விசாரித்த அந்த கார்ட்டூன் கதையின் பதிப்பகப்  பிரதிநிதி இவர் தான் " என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியைச் சுட்டிக் காட்டினார் ! அவர் முன்னே போய் கடைவிரித்து - "இன்ன மாதிரி..இன்ன மாதிரி ஊர்லே இருந்து வர்றோம் ; ஏற்கனவே இன்ன மாதிரி இன்னமாதிரி கதைகள் வெளியிடுறோம்  ; உங்க கார்ட்டூன் போஸ்டர் பார்த்து இன்ன மாதிரி, இன்ன மாதிரி விபரம் தெரிஞ்சிட்டுப் போலாம்னு வந்தோம் !" என்று சொல்லி வைத்தேன் ! அவருக்கே ஆங்கிலம் தெரிந்திருந்தபடியால் - பாதியில் கழற்றிக் கொண்டு கிளம்பிய அம்மணியை மறுபடியும் கூப்பிடும் அவசியமில்லாது போனது ! நான் செய்த புண்ணியமோ ; அவர் செய்த புண்ணியமோ !!  அவரும் அந்த ஆல்பங்களை எடுத்துப் போட்டு படு ஆர்வமாய் கதை சொன்னார் ! ஒன்று மட்டும் நிச்சயம் - வெள்ளியும், சனியும் சிறுபிள்ளைகளுக்குப் போல எங்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு கவளம் சோறை மட்டுமே விழுங்கியிருந்தாலே, இந்நேரத்துக்கு நானும், ஜுனியரும் பகாசுரர்கள் சைசுக்கு வீங்கி இருக்க வேண்டும் ! எத்தனை பொறுமையாய் ; எத்தனை நயமாய் ஒவ்வொரு ஆல்பத்துக்கும் ஒரு கதை பின்னணியும், சுருக்கமும் சொல்கிறார்களடா சாமி !!! என்னவொரு ஞாபகத் திறன் ;ஆற்றல் !!

ஆனால் அந்த கார்ட்டூன் நாயகனின் கதைக் களம் எனக்கு அத்தனை சுகப்படவில்லை  என்பதால் - "போய் யோசிச்சு கடுதாசி போடறேன் !" என்று சொல்லி விட்டு கிளம்பினோம் ! அடுத்த சந்திப்புக்கு நேரமும் ஆகியிருந்தால் ஓட்டமும், நடையாய் அந்த ஜெர்மானிய பதிப்பகத்தில் ஆஜரானோம் ! அவர்களோ ஒரு பெரும் குழுமம் ; ஏகமான வெளியீடுகளின் மத்தியில் சன்னமாய் காமிக்ஸிலும் கால்பதிக்கும்  ஈடுபாட்டோடு ! பொதுவாய் இது போன்ற "காமிக்ஸ்சும் போடுவோர்" சங்கத்தின் மீது எனக்குப் பெரிதாயொரு ஈடுபாடு எழுவதில்லை - simply becos பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ் வெளியிடும் நிறுவனங்களிடம் அதற்குத் தேவையான பொறுமை பெரும்பாலும் இருப்பதில்லை ! And இந்த நிறுவனமும் எனது அபிப்பிராயத்துக்கு வலு சேர்ப்பது போலவே இருந்தது ! பள்ளிக் கல்வி சார்ந்த புக்குகள் ; CD க்கள் என்று எக்கச்சக்கமாய் அவர்கள் தயாரித்து வருவதால் - அவற்றின் விற்பனை சார்ந்த மேனேஜர்கள் மாத்திரமே அங்கே புத்தக விழாவிற்கு வருகை தந்திருந்தனர் ! காமிக்ஸ் செக்ஷனின் நிர்வாகியோ தலைமையகத்தில் தான்இருக்கிறார்  என்றும், பிராங்க்பர்ட் வர தோதுப் படவில்லை என்றும் ;   ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளப் பாருங்களேன்என்றும் சொன்னார்கள் !  அட..போங்க சாமிகளா ! உங்களுக்கே ஆர்வம் இல்லாத பட்சத்தில் நாங்களாய் வெறுமனே கையைக் கையை வீசி என்ன ஆகப் போகிறதென்று தீர்மானித்து நடையைக் கட்டினோம் !

நண்பகலுக்கே மக்களுக்கு பசி பிறாண்டத் துவங்கி விடுமோ - என்னவோ அதற்குள்ளாகவே பாதி பேர் வெளியரங்கிலிருந்த வெவ்வேறு உணவகங்களில் செம கட்டு கட்டிக் கொண்டிருந்தனர் ! புரட்டாசியும் அதுவுமாய் - புலாலுக்கு நோ சொல்லி நிற்பவனை எத்தனை ரூபங்களில் கொடுமைப்படுத்த முடியுமோ - அத்தனை விதங்களில் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர்  ! பாம்பு, பல்லி , தேள் தவிர்த்து பாக்கி விலங்குகள் ; பறவைகள் ; மீனினங்கள் அங்கே படையலாகியிருக்க, நட்ட நடுவில் ஒரு ராட்சச Asterix உருவம் பலூனாகி கம்பீரமாய் நின்றது !
சிக்கிய சாப்பாட்டை விழுங்கிய கையோடு திரும்பிய போது நமது பவுன்சர் நிறுவனத்துடனான சந்திப்பு காத்திருந்தது ! ஆர்வமாய் பவுன்சரின் புது ஆல்பங்களைக் காட்டியவர் - அவற்றை முயற்சிக்க ஆர்வம் கொண்டிருப்போமா ? என்று கேட்டார் ! ஆனால் அவருக்கே அந்த புது ஆல்பங்களின் கதைக்களங்கள் ரொம்பவே அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருப்பதும் ,அதீத விரசங்களை சென்சார் செய்திட சென்றமுறையே நாம்  நிறையவே சிரமப்பட்டதும் நினைவிருந்ததால் - "இதுக்கு நீங்க செரிப்படமாடீங்க !" என்று அவரே தீர்ப்பும் சொல்லி விட்டார் ! அப்புறமாய் The Incals ; Metabarons போன்ற அவர்களது bestsellers science - fiction கதைகளுக்குள் நமக்கு ஆர்வமிருக்கிறதாவென்று கணிக்க முயன்றார் ! வழக்கம் போலவே - Maybe after awhile !" என்று மழுப்பலாய் நான் பதில் சொல்லி வைத்தேன் ! அப்போது கண்ணில் பட்டது ஒரு படு வித்தியாசமான ஹாரர் கிராபிக் நாவல் ! அட்டகாச சித்திரங்கள் ; மிரட்டலான கதை பாணி என்று ஓடும் இந்த ஆல்பத்தை பார்த்த கணமே எனக்கு கால் கட்டைவிரல் ; மட்டைவிரல் என்று சகலத்திலும் நமைச்சல் ஏற்பட துவங்கிவிட்டது ! "அட..போங்கப்பா..கோட்டை அழிச்சிட்டு முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுவோம் ! என்னாலே முடிலே !" என்று கையைத்  தூக்கி விடலாம் போலிருந்தது ! கிட்டத்தட்ட 50 நாட்களாய் நான் ஊரில் போட்ட திட்டங்களில் முக்காலே மூன்று வீசத்தை மறு பரிசீலனை செய்தாலென்னவென்று தோன்றியது !! ஒரு மாதிரியாய் அவர்களிடம் அந்த ஆல்பத்துக்கு காண்டிராக்ட் அனுப்பிடக் கோரி விட்டு அடுத்த சந்திப்புக்கு ஆயத்தமான போது - எனது இந்த மண்டை குடைச்சலுக்கு நிச்சயமாய் சீக்கிரமொரு  விடிவுகாலம் இருக்கப் போவதில்லை என்று மட்டும் புரிந்தது ! Simply becos - காத்திருந்த புதுப் பதிப்பகத்தின் கதைக் கிட்டங்கி சோழர் நெற்களஞ்சியதை விடவும் பெரிதாய்த் தென்பட்டது !

காத்திருந்த புதுப் பதிப்பகத்தோடு நிறைய மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்திருந்தும், வண்டி இம்மி கூட அசைந்து கொடுத்திருக்கவில்லை ! செம பிஸியான அவர்கள்  -ஆடிக்கொரு பதில், அமாவாசைக்கொரு மின்னஞ்சல் என்று செயல்பட்டு வந்ததால் பரிமாற்றங்களில் ஒரு தொய்வு தொடர்ந்திடவே செய்தது ! நேரில் சந்திக்கும் போது "அய்யா...சாமி...தேவுடு....சேட்டா...ப்ரோ... ஜி...நைனாகாரு " என்று ஏதேனுமொரு பாஷையில் டோட்டலாய் சரணாகதியாகிடுவது என்று ஊரிலேயே தீர்மானித்து ரிகர்சல் பார்க்காத குறைதான் ! ஆனாலும் ஜுனியரைக் கூட வைத்துக் கொண்டு கெத்தான அந்த "சூனா.பானா." வேஷத்தை விட்டுக் கொடுக்க மனம் ஒப்பவில்லை ! ஒரு மாதிரியாய் அவர் முன்னே சந்திப்பின் நேரத்துக்கு டாணென்று போய் நிற்க - "நீர் தான் அந்த கட்டபொம்மனோ ?" என்ற மாதிரியொரு பார்வை பார்த்தார் ! ஆனால் இது மாதிரியானஜாக்சன் துரைகள் தான் நமக்கு ஏகப்பட்ட நாட்களாய்ப் பரிச்சயம் அன்றோ - சத்தமின்றி நமது சமீபத்தைய hardcover இதழ்களைத் தூக்கி அவர் முன்னே அடுக்கினேன் ! 'செங்கல்கட்டிகளைப் பெட்டிக்குள் தூக்கி அடுக்கி வந்தது போல, பிசாசாய்க் கனக்கும் இவை அவசியம் தானா ?' என்று கேள்வியை முன்வைத்திருந்த ஜுனியரை ஓரக்கண்ணால் பார்த்து "எப்பூடி ?" என்பது போலொரு லுக் விட்டேன் ! ஜாக்க்ஸன் துறையோ நமது ட்யுராங்கோ ராப்பரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது மாத்திரமன்றி - அட்டையில் நாம் செய்திருந்த நகாசு வேலைகளைத் தடவோ தடவென்று தடவி, ரசித்துக் கொண்டிருந்தார் ! 'இது...இது..இதைத் தான் எதிர்பார்த்தேன்' என்றபடிக்கு நமது டிசைனர் பொன்னனுக்கு நமது  நிதிநிலைமை சீராகும் பொழுது, மரீனா கடற்கரையில் இல்லாவிட்டாலும், எங்கள் ஊர் ஊரணிக் கரையிலாவது ஒரு சின்ன சிலையை எழுப்புவது என்று தீர்மானித்தேன் ! "Is this Yves Swolf 's work ?" என்று கேட்டார் அவர் - ட்யுராங்கோவின் ஓவிய பாணியை அடையாளம் பார்த்தபடிக்கே ! எப்படா கோடைப் போடுவார் - நாம் ரோடைப் போடலாமென தார் சட்டிகளோடும், ரோடு ரோலர்களோடும் காத்திருந்த எனக்கு இவ்வளவு போதாதா ? Yes ..Yes ....in 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுச்சா...நாங்க 1972 -லே காமிக்ஸ் போட ஆரம்பிச்சுச்சா..." என்று நமது வரலாற்றை எடுத்து விட்டுக் கொண்டே மின்னும் மரணம் hardcover ; TEX - சர்வமும் நானே hardcover என்றுஅவர் முன்னே அடுக்கிக் கொண்டே இருந்தேன் ! "Oh Blueberry too ? My favorite hero !! "என்றபடிக்கே பிரகாசமான மனிதர் அதன் பின்னர் மொத்தமாய் மாறியே போனார் ! ஒவ்வொரு பதிப்பகப் பிரதிநிதியுமே காமிக்ஸ் சுவாசிக்கும் ஆர்வலரே என்பதை yet again உணர முடிந்தது - அந்த நொடியில் ! "ஆமாங்கோ....எங்க ஊரில் தட்டை மூக்கர் ஏக பிரபலம் எங்களது சின்ன வாசக வட்டத்தில்"  என்று சொல்லி வைத்தேன் ! அவர்பாட்டுக்கு தடி தடியான நமது புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு, நமது பேங்க் பேலன்ஸ்களுமே தடியாய் இருக்குமென்று நினைத்து விடக்கூடாதல்லவா ? ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களுக்கு நாம் வழங்கிடும் ஆடிட்டரின் கையொப்பம் தாங்கிய விற்பனை படிவங்களைக் காட்டியபடிக்கே, நாசூக்காய் நமது வாசக வட்டம் பொடியன் பென்னியைப் போல அளவில் சிறிது ; ஆனால் வீரியத்தில் பெரிது   என்பதை விளக்கினேன் !   ஒரு மாதிரியாய் அவரது முகத்தில் புன்னகை தவளத் துவங்க - நாம் இத்தனை காலமாய் வீசிய கற்கள் திரும்பவும் சொட்டைத் தலையிலேயே விழுந்து வைக்காமல் - மாம்பழங்களாக  உருமாறிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது புரிந்தது ! இவரிடம் நாம் தேர்வு செய்திருந்ததோ - ஆக்ஷன் கதைகளும் ; ஒரு வித்தியாசமான கௌபாய் தொடரையும் ; சுவாரஸ் யமானதொரு one shot தனையும் !

சகலத்தையும் தொடரும் ஆண்டுக்குள் நுழைக்க நமது காமிக்ஸ் தேவர் மனிடோவுக்குக் கூட  சாத்தியமாகாது என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது தான் ; ஆனால் மிட்டாய்க்கடைக்குள் ஒரு பச்சைப்புள்ளையை நுழைத்தால் என்ன நிகழுமோ - அதுவெல்லாமே இந்த ஏழு கழுதை வயதிலும் நிகழும் போது - நானொரு "அம்பியாய்" மாத்திரமே வேடிக்கை பார்க்க முடிகிறது - ரெமோக்களும், அன்னியன்களும் வெளிக்கிளம்பி அதகளம் செய்ய ஆரம்பிக்கும் போது ! அவரிடமிருந்து நாங்கள் விடைபெற்றுப் புறப்படும் சமயம் - ஜுனியரின் தோளைத் தட்டிக் கொடுத்து சின்னதொரு புன்னகையை பரிசாகத் தந்தார் ! எனக்கென்னவோ - "பாவமடாப்பா நீ !!" என்று சொல்லாமல் சொன்னது போல் தோன்றியது ! அதுவரையிலும் மீசையை வருடிக் கொண்டே சூனா.பானா. கெத்தை maintain செய்த எனக்கு, வெளியேறிய மறுகணம் வாயெல்லாம் பல் ; பல்லெல்லாம் வாய் !! தொடரும் நாட்களில் -  கட்டணங்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகள் ; அவை நமக்குக் கட்டுப்படியாகும் சாத்தியங்கள் ; அவற்றிற்குப் பணம் புரட்டும் படலங்கள் என ஏகப்பட்ட ஸ்பீடு பிரேக்கர்கள் உள்ளன என்பதை நான் உணராதில்லை ; ஆனால் அந்த நொடியில் ஆசைப்பட்ட பொம்மையை வாஞ்சையோடு தடவிப் பார்த்து, ஒரு முறை அணைத்துக் கொண்ட திருப்தி உள்ளுக்குள் விரவியது ! அந்த நொடிதான் இன்னமும் ஒரு விஷயமே உறைத்தது ! ஒவ்வொரு புதுப் படைப்பைப் பார்க்கும் அந்த நொடியிலும் மின்னலடிக்கும் iஇந்த ஜிலீர் உணர்வுகள் எனக்குள் தொடரும் வரையிலும் - இந்தத் தேடல்களும், ஓட்டங்களும் தொடர்கதையாகவே இருந்திடும் என்று !

காத்திருந்த மாலை சந்திப்போ ஒரு ஜாம்பவான் பதிப்பகத்தோடு ! இந்தாண்டின் ஏதோவொரு தருணத்தில் - ஒரு ஜாம்பவான் நாயகர் நம் அணிவகுப்பினில் இணையவிருக்கிறார் என்று இங்கே நான் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அவர்களது பிரதிநிதியைச் சந்திக்க வேண்டியிருந்தது ! ஏற்கனவே அவர்களிடமிருந்து காண்ட்ராக்ட் கிட்டி, கையெழுத்தாகி ; பணமும் அனுப்பப்பட்டு விட்டதால் - மெய்யாகவே நெஞ்சைத் தூக்கிக் கொண்டே நடைபோட்டேன் ! வேளா வேளைக்கு அப்பன் போடும் வேஷங்களையெல்லாம் பார்த்து புள்ளையாண்டானுக்கு என்ன தோணுச்சோ ஆண்டவனுக்கே வெளிச்சம் ; ஆனால் எனது கோக்கு மாக்குத்தனங்களிலும் கொஞ்சம் லாஜிக் இல்லாதில்லை என்பதை புரிந்ததால் எவ்விதக் கேள்விகளும் எழவில்லை ! And அந்த புது ஹீரோ யாரென்று இங்கே சொல்லி விடுகிறேனே - மேற்கொண்டும் சஸ்பென்ஸை நீட்டிக் கொண்டே போகாமல் ?  அவர் நமக்கு முற்றிலும் புதியவரல்ல ; ஆனாலும் புதியவரே ! தெளிவாய்க் குழப்புகிறேனா ? காத்திருக்கும் அவரது முதல் ஆல்பத்தின் பெயரைச் சொல்கிறேன் - அப்புறம் பச்சைப் புள்ளையே அவரை அடையாளம் தெரிந்து கொள்ளும் : "என் பெயர் 007 !"

And இப்போது வெளிவர இருப்பதோ - நாம் ராணி காமிக்சிலும், நமது இதழ்களிலும் பார்த்துப் பழகிய black & வைட் புராதனைக் கதைகளல்ல ! வண்ணத்தில், செம ஹை-டெக்காக வெகு சமீபமாய் உருவாக்கப்பட்ட படைப்புகள் ! இந்தப் பதிவின் இறுதியில் கொஞ்சம் previews காட்டுகிறேன் - மெர்ஸெல் ஆகிப் போவீர்கள் !
Back to the meeting : அவர்களது பிரதிநிதி முன்சென்று நின்றால் - மாமூலான கோட்-சூட்டெல்லாம் அணியாது,  casual ஆக - நீண்ட கேசத்தைச் சுருட்டி ஒரு குட்டியான ponytail போட்டுக் கொண்டிருந்ததொரு 40 வயது மனுஷன் ஜாலியாய் கையை நீட்டினார் ! நமக்கும் இந்த கோட் சூட்டுக்குமே ஏழாம் பொருத்தம் என்பதால் நொடியில் எனக்கு அவரை ரொம்பவே பிடித்துப் போய் விட்டது ! ஏற்கனவே மின்னஞ்சலில் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்த போதிலும், அவரை நேரில் பார்க்கும்  போது, அவர் கண்களில் தெறித்த ஸ்நேஹம் இன்னமும் நட்பாக உணரச் செய்தது. நமது சமீபத்தைய சாம்பிள்கள் ; நமது திட்டமிடல்கள் என்று நிறைய நேரம், நிறைய பேசினோம் ! பொறுமையாய் சகலத்தையும் குறித்துக் கொண்டவர், அவ்வப்போது  ஜுனியரையும்  பேச்சு வார்த்தைகளில் இணைத்துக் கொள்ளவும் நேரம் எடுத்துக் கொண்டார் ! அவர்களது புதுப் படைப்புகள் ; காத்திருக்கும் புது இதழ்களின் previews என தனது ஐபேடில் ஒரு குட்டி பயாஸ்கோப் படத்தையே ஒட்டிக் காட்டினார் ! எத்தனையைப் பார்த்தாலும், அத்தனையையும் சாப்பிட்டு விட முடியாதா ? என்று அங்கலாய்ப்பு எடுத்துத் திரியும் பகாசுரன் போல எனது மண்டைக்குள்ளும், வயிற்றுக்குள்ளும் பசி அலாரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது இந்நேரத்துக்கு ! 'ரைட்டு...சைத்தான் சைக்கிள்லே ஏறப் போகுது"  என்பது போலொரு லுக்கை ஜுனியர் வீசினாலும், உள்ளுக்குள் இந்தப் புதுக் சரக்குகள் அவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது !

ஒரு மாதிரியாய் மணி மாலை ஐந்தை நெருங்கிட, விடைபெற்றோம் - இதற்கு மேலிருந்தால் கூர்க்காவோடு தான் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்பதால் ! நாள் முழுக்க நமது  முக்கிய சந்திப்புகளுக்கு இடையிடையே சிறுசிறு புதுப் பதிப்பகங்கள் ; சில காலெண்டர் தயாரிப்பாளர்கள் என நிறைய பேரின் ஸ்டால் கதவுகளையும் தட்டியிருந்தோம் என்பதால் குறுக்கெல்லாம் வலி பின்னியது ! உள்ளங்கால் விண் விண்ணென்று தெறித்தது ! ஆனால் மனசெல்லாம் மத்தாப்பூ தான் ! நில்லாமல் ஓடிக் கொண்டே செல்லும் படைப்பாளிகளின் இன்றைய ஓட்டத்தை ரசித்த சந்தோஷம் ; அவற்றுள் நமக்கு ஏற்புடைய கதைகளைத் தேர்வு செய்யக் கிட்டயிருந்த வாய்ப்புகள் ; ஜுனியரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த திருப்தி என்று ரூமுக்குச் சென்று கட்டையைக் கிடத்திய போது மனதெல்லாம் நிறைந்து கிடந்தது ! ரெண்டு வாழைப்பழத்தைப் போட்டபடிக்கே கண்ணை மூடிய போது உலகமே ஒரு அழகான இடமாய்க் காட்சி தந்தது ! நிதிச் சிரமங்கள் ; காத்திருக்கும் தீபாவளி போனஸ் ; திருமண ஏற்பாடுகள்  - என எதுவுமே அந்த வேளையின் புளகாங்கிதத்தை தொந்தரவு செய்திடவில்லை ! காமிக்ஸ் எனும் அதிசய உலகினுள் மட்டுமே சாத்தியமாகும் அந்த அசாத்திய சந்தோஷத்தை அசை போட்டபடிக்கே தூங்கிப் போனேன் - மறு நாளைய  முக்கிய சந்திப்புகளும் காத்துள்ளன என்ற புரிதலோடு ! தொடர்ந்த இன்னமுமொரு அற்புத தினத்தைப் பற்றி, அடுத்த பதிவில் !

ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் guys ! பட்ஜெட் எனும் சிரமங்களும், அவை சார்ந்த நெகட்டிவ் விமர்சனங்களும் மட்டும் நமக்குத் தடைகளாக இல்லாதிருப்பின் - ஒரு அலிபாபா புதையல் குகைக்குள்ளே அட்டகாசமாய் ஒரு பிக்நிக் போவது சாத்தியமே ! முடிலே...கண்முன்னே நர்த்தனமாடிடும் இந்த அசாத்தியங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நிற்கும் போது - தாரை தாரையாய் வடியும் ஜொள்ளைக் கட்டுப்படுத்தவே முடிலே ! எத்தனை கோடி இன்பம் வைத்தாயோ இறைவா ??!!!!

இன்று ஊர் திரும்பும் படலம் என்பதால் இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் பின்னூட்டங்களுக்குள் புகுந்திட முயற்சிப்பேன் ! So ஜாலியாய் இந்த ஞாயிறை ஒட்டிவிடலாமென்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் ! அப்புறம்  கால் சராயை ஒட்டுமொத்தமாய் உருவி, அருணாக்கொடியை  ஆட்டையைப் போடும் யுக்திகளை இங்குள்ள வில்லங்கக் கிழவிகள் படித்தறிந்திருக்கா பட்சத்தில், நாளைய பொழுதை நம்மூரில் கழித்திடுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது ! நம்பிக்கை தானே வாழ்க்கையே guys ? Bye for now ! Have a wonderful Sunday !



324 comments:

  1. மூன்றாவது... இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  2. Frankfurtல் புது மாபிள்ளை என தலைப்பு வைத்திருக்கலாமோ ?!

    ReplyDelete
  3. புது மாப்பிள்ளைக்கு நல்ல நேரமடா ...ஜெர்மனியில் அடிக்குது ஊதக் காற்றுடா....

    ReplyDelete
  4. ஊதக் காற்றினால் வந்த கண்ணீர் அல்ல.அது...அது....😂😂😂😂

    ReplyDelete
  5. நாங்களும்உள்ளேன் ஐயா _/|\_
    .

    ReplyDelete
  6. /// ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்மானித்திருந்தேன் - இரண்டடி சுற்றுவட்டத்துக்குள் நெருங்கி வரும் முதல் வெள்ளைக்காரக் கிழவியைக் குரல்வளையை நெரித்து விட்டு, அப்புறமாய் அவசியப்பட்டால் விசாரிப்பது என்று !! அது போதாதென்று தேர் இழுக்கும் வடம் கனத்தில் ஒரு அருணாக்கொடியை சுற்றி, பாஸ்போர்ட்களை அதோடு ஒரு சுருக்குப் பையில் மாட்டி, மேம்போக்காய் கொஞ்சம் பாடி ஸ்பிரே அடித்தும் கண்ணுக்கே தெரியாதபடிக்கு பதுக்கி விட்டிருந்தேன் ///

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  7. /// 32 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துக்கனூண்டு பர்மா பஜார் பிரீஃப்-கேஸை கையில் ஏந்தியபடிக்கு ஒரு சைஸ் பெரிதான கோட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டு, தொடரும் நாளில் மாத்திரமன்றி, தொடரவிருக்கும் வாழ்க்கையிலும் என்ன காத்திருக்கிறதென்று துளியும் அறிந்திராது, மனது முழுவதும் வியாபித்து நின்ற பதட்டத்தையும் பயத்தையும் கண்களில் காட்டாதிருக்கத் தவித்த ஒரு முரட்டு மீசை டீனேஜர் என் கண்ணில் நிழலாடினான் ! வாழ்க்கை தான் எத்தனை பெரிதானதொரு ஆசான் என்று மறுபடியும் உணரச் செய்த நொடியது ! ///

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    That's why we love our beloved editor's writing...!

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா!! செம ஜாலியான பதிவு!!

    ReplyDelete
  9. உள்ளேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. Kok நிச்சயம் நீங்கள் போட்ட
      உள்ளேன் ஐயாவ பாக்கல. ஆனாக்கா
      நம்ம ரெண்டுபேருக்கும் நெனப்பு
      ஒரே மாரி கீது.

      Delete
    2. ///ஆனாக்கா
      நம்ம ரெண்டுபேருக்கும் நெனப்பு
      ஒரே மாரி கீது.///

      ஹிஹி..! நல்லதுதானே கணேஷேஜி..! 😃

      Delete


  10. அட்டகாசமானதொரு தொடக்கம் சார்

    எல்லாம் நலமே நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

    ஜூ எ சார்பில் நிறைய கி நா கிடைக்க புனித மானிடோ அருள் புரியட்டும் _/|\_
    .

    ReplyDelete
  11. சிங்கத்தின் சிறுவயதில்!

    ReplyDelete
    Replies
    1. சிங்கத்தின் சீற்றமான சிறுவயதில்

      Delete
    2. சி ஹே
      சி வ ஹே
      வே ஹே

      Delete
    3. சிங்கம் தன் சிறிய வயதில்

      Delete
    4. சிங்கத்தின் சிற வயதில் ...

      Delete
  12. ///புத்தகவிழா வாசலில் ஜுனியரை நிற்கச் செய்து ஒரு க்ளிக் செய்த கணம் - ஊதைக் காற்றினாலா என்று சொல்லத் தெரியவில்லை - விழியோரம் துளியூண்டு ஈரமிருந்தது ! ///

    தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே.. .!!

    ReplyDelete
  13. வாத்யாரே பதிவு 13 வரை போகுமா?

    ReplyDelete
  14. பாதி பதிவை புன்முறுவலுடன்...

    மீதி பதிவை சிரிப்புடனும்....

    ReplyDelete
  15. தூங்கவே மாட்டாங்களோ

    ReplyDelete
    Replies
    1. ஜெர்மனிலருந்து வர்றப்ப ஹிட்லர் மீச குச்சி முட்டாயி வாங்கிட்டாங்க மாமோய்

      Delete
    2. வாழ்க்கை வாழ்வதற்கே எடி சார்.
      அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு தொடக்கம் காட்டிவிட்டால் போதும் சார்.இப்பொழுது அவர்களுக்கு வசதிகள் கையடக்கம்.
      1987 ல் சிங்கப்பூருக்கு வேலை தேடி வெறும் 15 நாள் டூரிஸ்ட் விசாவில் சென்ற ஞாபகம் வருகிறது.
      லிட்டில் இந்தியா ஏரியாவில் ஒரு நூதனமான லாட்ஜில் (நாள் வாடகை 7 வெள்ளி) தங்கி சீனர்களின் கம்பெனிகளில் ஏறி இறங்கி 10 நாளில்
      வேலை வாங்கியது தனி கதை.
      3 வருட ஓர்க் பெர்மிட்டோடு ஊர் திரும்பி மீண்டும் ஓரு வாரத்தில் சிங்கப்பூர் சென்று குப்பை கொட்டி.....

      ஹும்ம்ம்ம்...
      அந்த வலிகள், வாழ்க்கையின் எதிர் கால எதார்த்தங்களில் கரைந்து போயின.

      முன்பின் தெரிந்திரா தேசத்தில் அதே முரட்டு மீசை மட்டுமே பயங்களை மறைத்த கம்பளி பூச்சிகள்.
      J

      Delete
    3. இந்த பதிவுல 300 ரொம்ப லேசா தாண்டிருவோம்ல.

      Delete
  16. காமிக்ஸ் காதலர்களுக்கு நள்ளிரவு வணக்கம்!!!!!!!!

    ReplyDelete
  17. ஃப்ராங்க்பர்ட் மாப்புள்ள போஸு டக்கரு...!!!

    ReplyDelete
  18. ஜாலியான பதிவு.
    சிரித்து சிரித்து சிரித்து மாளலை.
    பயணப் பதிவு என்றாலே உங்கள் வார்த்தைகளில் சொற்களில் நகைச்சுவை தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளுமோ?!!!!
    உங்கள் பண்பட்ட எழுத்தில் இப்படி நகைச்சுவை தெறிக்கும் சொற்பிரயோகங்கள் எங்கள் மனசைச் சுண்டியிழுக்கின்றன என்றால் அது மிகையில்லை!!!!

    ReplyDelete
  19. பதிவிற்கு "புதிய மாப்பிள்ளையும், பழைய மாப்பிள்ளையும்" என்று தலைப்பிட்டி௫க்கலாமோ?!!!!!!!!

    ReplyDelete
  20. தாய் பத்து மாதம் தான் சுமப்பாள்.
    ஆனால் தந்தை தன் பிள்ளையை சுமந்து கொண்டு இ௫ப்பான் எப்போதும் !!!!!!
    பாசக்கார தந்தை@!@@

    ReplyDelete
  21. Create a note
    Tap the plus to create a note.
    பாகம் 1கறுப்பு கதிரவன் தினம்.
    தலையில் குண்டுகாயத்துடன் கண்டெடுக்கப்பட்டு ஆபோ-ஷாலி
    தம்பதியால் டாக்டர் மார்த்தா உதவியால்
    காப்பாறப்பட்டு ஆலன் என்ற XIII
    அம்மூவரின் கொலைக்கு பழி வாங்கவும்
    தன் நினைவுகளை தேடி புறப்பட
    பெரும் தொகைக்கு அமெரிக்க
    ஜனாதிபதியை கொன்ற நாடே தேடும்
    குற்றவாளி என்பதோடு தன்னை தேடியலையும் கும்பலில் இருந்து
    தப்பி செல்வதோடு முடிகிறது.
    பாகம் *2செவ்விந்தியன் போகுமிடத்தில்.
    ஸ்டீவ் ராலண்ட் என்று பெயரிடப்பட்டு
    புதிய குடும்பத்திற்குள் ஜெனரல்
    காரிங்டனால் வந்த13தன் மனைவி
    கிம்ராலண்டை பற்றி அறியும்போது
    தன் புதிய சிற்றன்னை பெலிசிட்டியால்
    தந்தை மற்றும் சித்தப்பாவை கொன்ற
    பழி விழ. கர்னல் ஜோன்ஸின் உதவியால்
    தப்பி மனைவி கிம்மை சந்திக்கும்போது
    அவளிடம்XVIIஎன்ற எண் பச்சை குத்தப்படிருக்க குழம்பிய நிலையில்
    கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில்
    மன நோயாளிக்கான சிறையில் ஆயுள்
    கைதியாக அடைக்கப்படுகிறார்.
    பாகம் * 3 நரகத்தின் கண்ணீர்.
    ப்ளைன் ராக் சிறைக்கூடத்தில் அடைக்கப்பபடும் ராலண்டை கொலை
    வெறியுடன்13ஐ கொல்ல பின் தொடரும்
    மங்கூஸ் . அதிலிருந்து மீண்டும் ஜோன்ஸ்
    உதவியுடன் தப்பி காரிங்டனிடம்
    சேர்கிறார்.
    பாகம் *4 SPADS அதிரடிப்படை.
    ராஸ் டான்னர் என்ற புதிய பெயருடன்
    காரிங்டனால் SPADS அதிரடிப்படையில்
    சேர்க்கப்பட்டு அங்கு பெட்டிபார்னோவ்ஸ்கி
    மற்றும் ஜோன்ஸுடன் கர்னல் மாக்கால்
    ஷெரிடன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்
    என்று அறியும் 13 மற்றும் பெட்டி,ஜோன்சுடன்
    தப்புகிறார்.
    பாகம் * 5 உச்ச நிலை உஷார்.
    கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஹென்றி
    ஷெரிடன் தந்தையை சவஅடக்கம் செய்யுமிடத்தில் அவர் தம்பி வாலியை
    கொல்ல முயற்சி நடக்கிறது அவர்
    தப்பித்துக்கொள்ள கொல்ல முயன்றவன்
    சுடப்படுகிறான்.அரசியல் சூதாட்டத்தில்
    துணை ஜனாதிபதி கால்வின்வாக்ஸ்
    ஜெனரல் காரிங்டனை கைது செய்கிறார்.
    சான்மிகுவலில் நண்பர் மார்குயிஸின்
    உதவியுடன் அமெரிக்கா திரும்பிய 13
    கர்னல் ஆமோசின் உதவியுடன் வாலி
    ஷெரிடனுடன் தளம் SSH1ல் உள்ள
    தற்போதய ஜனாதிபதி கால்பிரெயினை
    சந்திக்க மாறு வேடத்தில் நுழைய அங்கு
    கர்னல் மாக்கால் அனைவரையும் கொல்ல
    முயற்சிக்க அதனை13முறியடிக்கிறார்.
    மேலும் கால்வின் வாக்ஸ் நம்பர்2 என்று
    கண்டுபிடிக்க அவர் தற்கொலை செய்து
    கொள்கிறார்.பிடிபட்ட ஸ்டான்ட்வெல் முலம்
    அவர் எண்3என்றும் மேலும் 52 பேர்
    சதியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வாலி ஷெரிடன் புதிய ஜனாதிபதியாக
    தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
    பாகம் 6.ஜேஸன் ஃப்ளை படலம்
    தனது நினைவுகளைத்தேடி கிரீன்ஃபால்ஸ்
    வரும் 13ஃப்ளெமிங் என்ற மாற்றுப்பெயரில்
    ஜுடித்&டேவிட்ரிக்பிக்கு அறிமுகமாகிறார்.
    இடையே அமெரிக்காவில் ஜோன்ஸை
    கொல்ல முயற்சி நடக்க தப்புகிறாள்.
    காரிங்டன் உதவியால் தனது தந்தை ஜோனதன்ஃப்ளை பற்றி அறிந்து அவர்
    மர்ம மரணம் பற்றிவிசாரிக்கிறார்.
    மௌண்டன்நியூஸ் பத்திரிகையின் முன்னாள்
    உரிமையாளர் முதியவரால் 13 ஜேஸன்ஃப்ளை
    என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார்.13ஐ
    தேடி ஜோன்சும் 13கொலைசெய்ய மங்கூசும்
    கிரின்ஃபால்ஸ் வர அங்கே நிகழும் பனிச்சரிவு
    வெடிவிபத்தில் ஜோன்ஸ் காயமடைகிறாள்.
    13 ஐ தேடி கொலை வேட்டை தொடர்கிறது.
    பாகம் 7*ஆகஸ்ட்3ன் இரவு.
    தன் தந்தையை கொன்றது ரிக்பி &ஷெரீப் கீய்ன் மர்டோக் டாக்டர் ராபபர்ஸ்சன்
    மேலும் சிலர் குக்ளக்ஸ்கான் வேடமணிந்து
    என்றறியும் ஜேஸன் மங்கூஸின் மற்றும்
    ரிக்பியின் கொலை தாக்குதலில் பெரியவர்
    ஜேகே ஹட்டாவேயினால் காப்பாற்றப்படுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. பாகம் 8* பகைவர்கள் 13
      சிறையில் அடைக்கப்பட்ட மங்கூஸ் தந்திரமாக
      தப்புகிறான்.புதிய ஜனாதிபதி வாலி நம்பர்1
      யாரென்று கண்டுபிடிக்குமாறு மக்லேனிடம்
      பணியை ஒப்படைக்கிறார்.காரிங்டனின்
      சகோதரியிடன் விசாரணை செய்யும் ஜோன்ஸ்
      வாலிக்கும் கிம்முக்கும் உள்ள உறவை பற்றி
      அறிகிறாள்.13மிச்சேல் என்ற பெயரில் வாலி
      அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையில் துப்பறியும்போது
      இரினா என்ற பெண் கொலையாளியின்
      முயற்சியில் தப்பி கர்னல் ஆமோஸை
      சந்திக்கிறார்.வாலிதான் நம்பர்1 என்று
      கண்டுபிடிக்கும்போது நடக்கும் தாக்குதலில்
      ஆமோஸ் காயமடைகிறார்.நார்த்ஷோர்
      தீவில் ஒளிந்திருக்கும் தன் மனைவி கிம்மை
      சந்திக்கும்13 மங்கூஸால் சிறைபிடிக்கப்பட்டு
      ஜோன்ஸ் கிம் மற்றும் கிம்மின் மகன் காலின்
      ஆகியோருடன் படகில் கட்டப்பட்டு படகில்
      பொருத்தப்பட்டுள்ள குண்டால் கொலை
      முயற்சி நடக்க 13ம் ஜோன்ஸும் மட்டும் தப்பிக்கின்றனர்.வாலியை சந்திக்கும்13
      அவர்தான் நம்பர்1 என்று கண்டுபிடித்து அவரை அடித்து விட்டு வெள்ளை மாளிகையை
      விட்டு வெளியேறுகிறார்.

      Delete
    2. பாகம் * 9 மரியாவுக்காக
      ஸான் மிகுவலில் தங்கியிருக்கும் மக்லேனுக்கு பாதர் ஜஸின்டோ என்பவரிடம்
      இருந்து அவர் மனைவி பற்றிய தகவல்
      உள்ளதாக சொல்கிறார் அங்கே கோஸ்டா
      வெர்டில் உள்ள போராளி மரியாதான் உன்
      மனைவி உன்பெயர் கெல்லி என்கிற
      ஸ்டன்ட்மேன் என்று கூறி மெரிடித் என்ற
      ஆயுதவியாபாரியின் மாறுவேடத்தில்
      கோஸ்டாவெர்டிக்கு அனுப்புகிறார்.அங்கே
      அதிபர் ஓர்டிஸின் ஆசைநாயகியாக தனது
      சிற்றறன்னை பெலிசிட்டியை காண்கிறார்.
      அரண்மனையில் இருந்து கடத்தப்படும் 13
      போராளி ஏஞ்சலை சந்திக்கிறார்.மரியா
      அவனது சகோதரி என்றும் ரோகாநெக்ரா
      சிறையில் 4நாட்களில் கொல்லப்பட உள்ளதாக
      அறிய அரண்மணை திரும்பி பெலிசிட்டியுடன்
      தப்ப முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டு
      ரோகாநெக்ரா சிறையில் அடைக்கப்படுகிறார்.
      கோஸ்டாவெர்டிக்கு ஜோன்ஸ் பெட்டி மற்றும்
      மார்குயிஸ் மல்வே&பாதர் ஜஸின்டோவை
      சந்திக்கின்றனர்.இந்த சதி வேலையில்
      அமெரிக்காவை சேர்ந்த மினார்கோ என்ற
      கம்பெனி இயங்குகிறது.

      Delete
    3. பாகம் * 10 *புதையல் வேட்டை
      சிறையை தாக்க போராளிகளின் உதவியோடு
      ஜோன்ஸ் பெட்டி ஜஸின்டோ வர அங்கிருந்து
      தப்பி மரியாவை காப்பாற்றுகிறார்13.பிறகு
      நடக்கும் ஆட்சி மாற்றத்தில் ஏஞ்சல் அதிபராக
      13கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
      போராளிகளுக்கு துரோகம் இழைத்ததாக
      கூறப்பட 13க்கு ஆதரவாக மல்வே வாதம்
      செய்கிறார்.ஜெர்மானியம் என்ற தாதுவை
      வெட்டிஎடுக்க மினார்கோவினர் ஒரு போராளிக்கு பெரும் செல்வத்தை லஞ்சமாக
      வழங்கியதை கூற ஏஞ்சல் தற்கொலை செய்து
      கொள்கிறான்.மரியா புதிய அதிபராக பதவி
      ஏற்கிறார்.தனது உண்மை தந்தை மல்வே
      என்று அறியும் ஜேஸனுக்கு தங்கள் முன்னோர்
      வரலாறை விளக்கமாக கூறுகிறார்.

      Delete
    4. பாகம் * 11 * வெள்ளிக்கடிகாரங்கள் 3 .
      முன்னோர்களான. ஸாம் மக்லேன்
      ஜாக் கல்லஹன் ஜோர்ஜ் மல்வே மூவரும்
      அயர்லாந்தில் இருந்து பிழைப்பு தேடி
      அமெரிக்கா சென்றனர்.மெக்சிகன் போரில்
      ஈடுபட்டு அங்கே களவாடப்பட்ட பெரும்
      செல்வத்தை மறைத்து அந்த ரகசியத்தை
      மூன்று சங்கேத குறியீடுகளால் மூன்று
      வெள்ளி கடிகாரங்களில் செதுக்கி தங்கள்
      சந்ததியினர் பலன் பெற தகவல் தருகின்னர்
      இந்த சம்பவம் நடந்தது1911ம் ஆண்டு.
      முன்னாள் அதிபர் ஓர்டிஸின் தளபதி
      பெரால்டா ஒரு படையை திரட்டிவந்து
      சண்டையிட முயற்சி செய்ய அவரையும்
      படைகளையும் அழிக்கிறார் ஜேஸன்.பின்னர்
      மரியாவிடம் விடைபெற்று அமெரிக்கா
      திரும்புகிறார்.

      Delete
    5. பாகம் * 12 *தீர்ப்பு
      ராணுவ தலைமையகம் பென்டகனில் வந்து
      இறங்கும் ஜனாதிபதி வாலியை ஜெனரல்
      காரிங்டன் கடத்தி ஆளில்லா நெவாடா பாலை
      வனத்தில் சிறைவைக்கிறார்.கர்னல் ஆமோசுடன் இணைந்த 13 ஜோன்ஸ் தீவு
      ஒன்றில் ஒளிந்திருக்கும் மங்கூஸை கைது
      செய்கிறது.இரினா காயத்துடன் கடலில்
      மூழ்குகிறாள்.மங்கூஸை விசாரிக்கும்
      ஜியார்டினோ ( 13 ன் தாய் மாமன்) வெடிகுண்டு பொருத்திய துப்பாக்கியை
      ரகசியமாக கொடுத்து காரிங்டனை கொல்ல
      சொல்கிறார்.பாலை வன தளத்தில் கடத்தப்பட்ட ஜனாதிபதி வாலியை நேரடி
      விசாரணை TVல் ஒளிபரப்ப அங்கு நடக்கும்
      குழப்பத்தில் வாலி மங்கூஸை சுட்டுவிட்டு
      தப்பிக்கீறார்.இறக்கும் தருவாயில் மங்கூஸ்
      வாலி உண்மை குற்றவாளி என கூறி உயிர்
      விடுகிறான்.தப்பி ஓடும் வாலி துப்பாக்கியில்
      உள்ள குண்டு ஜியார்டினோவால் தவறாக
      தூண்டப்பட்டு வெடித்து இறக்கிறார்.பின்
      தங்கும் 13 சிறைப்படுகிறார்.

      Delete
    6. பாகம் * 13 தேசத்துக்கொரு அபாயம்.
      ஜியார்டினோவால் கைது செய்யப்பட்டு
      விசாரணையில் பல சூழ்சிகளால் மல்வே
      ஜேஸனை தன் மகன் அல்ல என்றும் அவர்
      பெயர் ஸீமஸ் ஓ நீல் என்ற கியூபாவை
      சேர்ந்த பயங்கரவாதி என்றும் குற்றம்
      சாட்டப்பட்டு அரிஸோனா சிறையில் அடைக்க
      கொண்டு செல்கிறார்கள்.புலனாய்வு நிருபர்
      டான்னியுடன் வரும் ஜெஸிக்கா மார்டின்
      இவள் CIAதலைவர் ஜியார்டினோவால்
      அனுப்பப்பட்ட இரட்டை வேடதாரி உளவாளி
      கொலைகாரி.13 மற்றும் டான்னியை கடத்திய
      ஜெஸிக்கா அவர்களை இரினாவிடம் கொண்டு சேர்க்கிறாள்.பழிக்குபழி வாங்க
      துடிக்கும் இரினா இருவரையும் மனித
      வேட்டைக்காக அருகில் உள்ள திவுக்கனுப்ப
      இருவரும் தப்புகின்றனர்.

      Delete
    7. பாகம் * 14 * கட்டவிழ்த்த வெறிநாய்கள்
      இஇரயிலில் ஏறி தப்பிக்கும் ஜேஸனை
      பின் தொடரும் ஜெஸிக்கா அவரிடம் சிக்குகிறாள். கொலையாளிகளிடமிருந்து தப்பி செல்கையில் இருவருக்கும் நட்பு
      மலர்கிறது.தன்னை கொல்ல முயன்ற
      ஜியார்டினோவை பழிவாங்க ஜேஸனுடன்
      செகிறாள்.பிறகு நடக்கும் சண்டையில்
      துப்பாக்கி குண்டடி படுகிறாள்.விமானத்தில்
      தப்பும் ஜேஸன் தன் நண்பர்களான ஜோன்ஸ்
      பெட்டி மார்குயிஸ் காரிங்டனை கோஸ்டா
      வெர்டிக்கு வரச்சொல்லி தானும் அங்கு
      செல்கிறார்.அங்கே மரியா இருக்கிறார்.

      Delete
    8. பாகம் *15 * மான்டிகிரிஸ்டோ படலம்
      கோஸ்டாவெர்டியில் அடைக்கலம் புகுந்த
      13 நண்பர்கள் அங்கே கைதியாக பெலிஸிட்டி
      இருப்பதையும் மரியாவின் திட்டத்தின் மூலம்
      கடத்தல் நாடகத்தில் அனைவரும் வேறு இடம்
      மாறுகின்றனர்.அங்கிருந்து பெலிசிட்டி தப்பி
      செல்கிறாள்.13ன் தந்தை மல்வேயின் கனவு
      தங்கள் மூதாதையர் மறைத்த தங்கத்தை
      மீட்பது அதற்கு 13 உதவுகிறார்.மூழ்கிய
      நகரத்தில் இருந்து வெள்ளி கடிகாரத்தை
      மீட்கின்றனர்.தப்பிய பெலிசிட்டி ஜேசனின்
      எதிரிகளுடன் சேர்ந்து தாக்க அதில் கர்னல்
      ஆமோஸ் உயிரிழக்கிறார்.மற்ற அனைவரும்
      அமெரிக்கா திரும்புகின்றனர்.

      Delete
    9. பாகம் * 16 * தங்கத்தேட்டை
      வெள்ளி கடிகாரங்களின் புதிரை விடுவிக்க
      ஜேஸன் மற்றும் நண்பர்கள் முயற்ச்சிக்க
      ஜியார்டினோ ஜேசனை கொல்ல முயற்சி
      மேற்கொள்கிறார்.தங்கம் தேடும் முயற்சியில்
      தகவல் அறிந்துஜேஸன் ஜோன்ஸ் அந்த
      பகுதிக்கு செல்ல பின் தொடரும் உள்ளுர்
      கேடி கும்பலால் தாக்கப்பட்டுகிடைத்த தங்ககாசுகளும் வீணாக
      மலைச்சரிவில் யாரும் எடுக்க இயலாமல்
      யாருக்கும் பயன்படாமல்1000000 தங்க
      காசுகளும் சிதறி விழுகிறது.கடைசியில்
      மிஞ்சியது13தங்க காசுகளே.வாஷிங்டனில்
      ஜனாதிபதியை சந்திக்கும் ஜெஸிக்கா
      ஜியார்டினோவை கைது செய்யவும் 13
      அவர்தம் நண்பர்களை விசாரணை கமிஷன்
      முன் சாட்சி அளிக்கவும் நியமிக்கப்படுகிறாள்.

      Delete
    10. பாகம் * 17 * அயர்லாந்து படலம்
      ஸிமஸ் ஓ நீல் என்ற அயர்லாந்து போராளி
      புரட்சி இயக்தின் உதவியுடன் அமெரிக்கா
      சென்று கெல்லி ப்ரையன் என்ற பெயரில்போல்டர் யுனிவர்சிட்டியில் சேர்ந்து
      படிக்கிறான்.அவனுக்கு ஜேஸன் ஃபிளையின் நட்பு கிடைக்ககிறது.தாய்மாமன் ஜியார்டினோ
      ஸிமஸ் என்ற கெல்லிபிரையனையும்
      ஜேஸன்பிளையையும் வேவு பார்க்க இளம்
      உளவாளி ஜெஸிக்காவை அனுப்புகிறார்.
      கெல்லியை காதல் வலையில் வீழ்த்தும்
      ஜெஸிக்கா அவன் சுடப்பட்டடதும் ( கெல்லி)
      ஜேஸனை கெல்லியின் பெயரோடு க்யூபாவுக்கு போராளியாக அனுப்புகிறாள்.

      Delete
    11. பாகம் * 18 *இறுதிச்சுற்று
      புலனாய்வு நிருபர் டான்னி (13 ல் காப்பாற்றப்பட்டவர்) ஜெஸிக்கா மார்டின்
      உதவியுடன் எழுதிய புதிர்மனிதன் XIII
      என்ற புத்தகம் நாட்டில் பெரும் அதிர்வலையை
      உண்டாக்கியது.இடையே தனது மாபியா
      சொந்தங்களுடன் சேர்ந்து13 கொல்ல
      ஜியார்டினோ எடுத்த முயற்சிகள் தோல்வியில்
      முடிய விசாரணை தீர்ப்பு 13 நிரபராதி என்று
      அறிவித்து விடுதலை செய்கிறது.தனக்கு
      கொடுமை இழைத்த இரினா மற்றும்
      ஜியார்டினோவை கொன்று ஜெஸிக்கா
      வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாள். தன்னை
      குண்டு காயத்துடன் மீட்ட ஆபோ ஷாலி யின்
      வீட்டில் தன் புது வாழ்க்கையை தொடங்குகிறார் நம் ஜேஸன்.

      Delete
    12. நண்பர்களே எனக்கு தெரிந்தவகையில்
      இரத்தப்படலம் கதையை சுருக்கமாக
      கொடுத்துள்ளேன்.தவறுகள் குறைகள்
      இருப்பின் மன்னிக்கவும்.சுருக்கமாக
      சொவதால் பல பகுதிகள் விடுபட்டிருக்கலாம்
      இது என் சிறு முயற்ச்சியே.முழுவண்ண
      பதிப்பாக வெளிவரவிருக்கும் காமிக்ஸ்
      இதிகாசம் இரத்தப்படலம் அதிக முன்பதிவு
      பெற முன்பதிவு செய்ய நண்பர்களை வேண்டி
      கேட்டுக்கொள்கிறேன்.
      நன்றி.
      என்றும் அன்புடன்
      K.V.GANESH.

      Delete
    13. ganesh kv நண்பரே- பிரமாதம்.
      அழகு.அற்புதம்.அ௫மை. அட்டகாசம்.பாராட்ட வேறு வார்த்தைகளே எனக்கு கிடைக்கவில்லை. well said.7

      Delete
    14. தினம் ஒரு பார்ட்டாக போட்டு இருந்தீர்கள் என்றால் அந்த எஃபெக்ட்ஸ் தனி சாரே....
      தொடரும் போட்டு,
      எதிர்பார்ப்பை எகிறச்செய்து,
      சும்மா அதகளப் பதிவாக ஆக்கியிருக்கனும் இந்த ஆக்கத்தை....
      மிஸ் த ட்ரிப்...ஓகே..!!!
      அசாத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுகள்....👌👌👌👌👌👌👌👌👌

      Delete
    15. பிண்ணிட்டிங்க கணேஷ் சார்

      Delete
    16. @ KV கணேஷ்

      எடிட்டரின் ஜம்போ பதிவுக்கு போட்டி போடும் படியா அசத்தலா...

      ஜம்போ ஸ்பெஷல் பற்றிய கதைசுருக்கம் செமையோ...செமை.! (கை தட்டும் படங்கள் இஷ்டத்துக்கு)

      திருக்குறள் அளவில் கமெண்ட்களை டைப்பும் நீங்களா இம்மா பெரிய கதைக்கு கதைச் சுருக்கம் டைப்பியிருக்கீங்க..(ஆச்சரியத்தில் புருவம் உயர்ந்த ரிபோர்ட்டர் ஜானி படங்கள் நான்கு)

      தினமும் காலை, மாலை வணக்கம் (வாட்ஸ் ஆப்பில்) சொல்லும் பண்பு ஒருபுறம் என்றால்....

      ஜம்போ ஸ்பெஷலுக்கு கதைசுருக்கம் எழுதிய காமிக்ஸ் மேல் கொண்ட காதல் மறுபுறம் என...

      நாணயத்தின் இருபக்கமும் மதிப்பை கூட்டும் விஷயங்கள்.!!

      என்மனமார்ந்த பாராட்டுக்கள் கணேஷ் அவர்களே.!!!!!

      Delete
    17. எல்லா பாகங்களையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதி அசத்தியிருக்கீங்க கணேஷ் ஜி!

      நல்லா படிச்சு XIII கதையில மாஸ்டர் டிகிரி வாங்கிட்டீங்க! பேஷ் பேஷ்!! பலே பலே!!! :)

      Delete
    18. சூப்பர் கணேஷ் சார்.

      இரத்தப் படலம் மீதான ஈடுபாடு வியக்க வைக்கிறது.

      Delete
    19. கணேஷ் ஜி!

      படிக்கிறதுக்கே இம்மாநேரம் ஆயிடுச்சே..! இதை டைப்ப உங்களுக்கு எம்மாநேரம் ஆயிருக்கும். நினைச்சாலே மலைப்பா இருக்கு..!

      சூப்பர்னு சிம்பிளா சொல்லி பாராட்டமுடியவில்லை.. அதுக்கும் மேலே..!!


      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    20. கணேஷ் தம்பி பின்னிட்டீங்க போங்க ....யாராவது ஓநம்ம ஈரோட்டு ஸ்டாலினுக்கு காட்டுங்க....

      Delete
    21. முதலில் வாழ்த்துக்கள் சாா்!

      பிரமாதம்!!

      இதோ படிச்சுட்டு வா்ரேன்!

      Delete
    22. கணேஷ் ஜி,கடினமான முயற்சி,ஆனால் நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
      👌👌👌👌👌

      Delete
    23. கணேஷ் ஜீ..

      நீங்க விரிவா விவரிச்ச பதிவுக்கு நான் சுருக்கமா சொல்லி விடுகிறேனே..


      "இது வேற லெவல் "

      Delete
    24. ராமருக்கு அணில் செய்த உதவி போல் தங்களின் இந்த முயற்சி இரத்தப் படலத்திற்கு வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை ...
      நல்ல முயற்சி. பாராட்டுகள்....

      Delete
    25. அருமை கணேஷ் ஜி
      .

      Delete
    26. நன்றி நண்பர்களே.

      Delete
  22. ஆசான் மற்றும் நண்பர்கள் அனைவ௫க்கும் எமது இதயங்கனிந்த
    தித்திக்கும் தீப ஒளித் தி௫நாள் நல் வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  23. எல்லா௫க்கும் ஒ௫ தீபாவளி தான்.
    ஆனால் காமிக்ஸ் காதலர்களாகிய நமக்கு மட்டும் இந்த ஆண்டு இரண்டு தீபாவளி நண்பர்களே!!!!!
    இனிப்பு எடு கொண்டாடு!!!!!!!

    ReplyDelete
  24. பயணக்கட்டுரை எழுத புறப்படும் அத்தனை காமிக்ஸ் வாசகர்களுக்கும் இந்த விசயத்தில் ஆசிரியர் தாங்கள் தான் சார்...

    முஸ்தீபுகள்..
    ஏற்பாடுகள்..
    புறப்பாடு..
    வழிதடங்கள்..
    உசாரான உணரவுகள்...
    நடப்புபளை நளினமாக அறியச் செய்தல்...
    .......
    ......
    .......
    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சார்... எத்தனை எத்தனை நடுச்சாமங்பள் விழித்திருத்து பதிவு படித்தாலும் சொக்க வைக்க சொக்குப்போடி உங்கள் பதிவுகளில் ஏராளம்... அதற்கு ஓடிவரும் சில்வண்டுகள் எத்தனை காலமானாலும் தொடருவோம்....

    சும்மா அசத்தலான கேசுவல் பதிவு , செம சார்.... எழுந்து நின்று ஏகத்துக்கும் ராக்கெட் கொளுத்தும் படங்கள்...👏👏👏👏👏👏👏👏👏👏🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

    ReplyDelete
  25. எடி அவர்களே, முன்னமே பதிவிட்டிருந்தா, நாங்களும் வந்திருப்போம்ல....
    சனி, ஞாயிறு தானே...
    இனி கடைசி பஸ்ஸ பிடிக்க முடியாதே..??

    பாரிஸ் ரிட்டர்ன் உண்டா???
    - ஹசன்

    ReplyDelete
  26. Mmm ! Aanaal enakku thookkam varalaye !😐

    ReplyDelete
  27. Mmm ! Aanaal enakku thookkam varalaye !😐

    ReplyDelete
  28. மான்செஸ்டர் UK பக்கம் வந்தா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார். எங்களுக்கு வர்ற வருஷம் புது கதைகள் வந்தே ஆகணும்...ஹாங் சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  29. கல்யாண மாப்பிள்ளைக்கு மீண்டும் வாழ்த்துகள்.....சார் இந்த கதைகள பன்னெண்டு புக்குகள்னு உடலாமே....உங்க உற்சாகம் உடனே எங்களயும் தாக்கட்டுமே....கோட்டை அழிக்காம பக்கத்துலயே இன்னும் கோடுகள போடலாமே....

    ReplyDelete
  30. சூப்பர் பாஸ்!
    ஏற்கனவே போட்ட கோட்ட அழிக்காம நம்ம ஏன் சந்தா G for ஜெர்மனி புக் fair னு ஒன்னு போட்டு தாக்க கூடாதுன்றேன் !

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னிங்க...

      "G for Good."

      Delete
    2. ஆமாமா!

      சந்தா F : அதாங்க FAT புக் சந்தா ஆல்ரெடி சொல்லியாச்சு!

      அடுத்தது G தானே!

      Delete
  31. அழகான..அமர்களமான...பதிவு..

    இன்றும் தொடருகிறதா ...


    சூப்பர் சார்...

    ReplyDelete
  32. சிங்கத்தின் "நிகழ்" வயதில்....

    படிக்கும் பொழுதே இவ்வளவு சுவையாக உள்ளதே..


    இன்னும் "சிறுவயது " நிகழ்வை படித்தால் எவ்வளவு சுவையாக இருக்கும்....!

    ReplyDelete
  33. சூப்பர் பதிவு... பயணக் கட்டுரைகளில் உங்கள் எழுத்து நடைக்கு 404 match not found தான் எப்போதும்... சீக்கிரம் எழுந்திருச்சு மீதியையும் எழுமுங்க சார்..

    ReplyDelete
  34. எவ்ளோ பெரிய (பதிவு) மாத்திரை.

    ReplyDelete
  35. லக்கிலூக் சிக்பில் கதைகளை திரும்ப திரும்ப படிக்கிறமாதிரி இந்த பதிவையும் படிக்கத்தோன்றுகிறது! (ஏற்கனவே மூன்றுமுறை சிரித்தாகிவிட்டது..அதாவது படித்தாகிவிட்டது) செம்ம ஜாலியான கதைசொல்லும் ஸ்டைல்..! சூப்பர் சார்.!

    😂😂😂👏👏👏😂😂😂

    ReplyDelete
  36. ////ஜுனியர் ஜாலியாக கையைக் கட்டிக்க கொண்டு அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து - "நோட்ஸ் எடுக்கச் சொன்னேனிலே ?" என்று கண்களால் ஜாடை காட்ட - சிம்பிளாய் தனது செல்போனை உயர்த்திக் காட்டினார் - அங்கே voice recorder ஓடிக் கொண்டிருந்தது ! "ச்சை..எனக்கு இந்த டெக்னாலஜியே புடிக்காது !' என்று உம்மணாமூஞ்சி smurf போல பல்ப் வாங்கிய என் முகம் போனது !!////

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    காலங்காத்தால கெக்கபிக்கேனு சிரிக்க வச்சுட்டீங்க எடிட்டர் சார்!

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  37. பதிவோட தலைப்பை பாக்கிறப்ப அட்டவணையோட ரீலீஸ் தள்ளி போகுமோனு பயந்து வருது.

    ReplyDelete
  38. ஐம்பது வயசுக்கு மேலான அப்பன்கள் எல்லாமே மறையைக் கழற்றி பாக்கெட்டுக்குள் வைத்திருப்பாங்களோ ? ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும் விழாவுக்கு 7 மணிக்கே பிராணனை வாங்குறாரே ?" \\\\
    ஈரோடு புத்தக திருவிழா
    இரவு இரண்டு மணிக்கு வந்து. எப்படா கலையில் 9 மணி ஆகும் பார்த்து கிட்டு இருந்தது மாதிரி தருனங்கள் உங்களுக்கும் வரும் என்பதை நினைத்து கூட பார்க்க வில்லை.

    ReplyDelete
  39. ///"ரெண்டு கதையையும் 2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க - நான் மலங்க மலங்க முழித்தேன் ! ஏற்கனவே அட்டவணை சகலமும் தயார் என்ற நிலையில் - இவற்றை எதற்குப் பதிலாய் எங்கே நுழைப்பது என்று தெரியாமல் நான் முழிப்பதை மெதுவாய் சொல்லி வைத்தேன் ! "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" என்றபடிக்கு நடையைக் கட்ட - "ரைட்டு...பாத்துப்போம் !" என்று சொல்லிக் கொண்டேன்///----

    ஆகா ஜூனியர் எடிட்டரை பிடித்தா நிறைய புதுசு புதுசா ஹீரோக்களை பார்த்து விடலாம் போலிருக்கே...

    உங்களை மாதிரி யோசித்து யோசித்தே வருடங்களை கடத்தாமல், அடுத்த வருடமே வரணும்னு சொல்றார்னா அந்த கதைகளின் தரம் எப்படி இருக்கனும்...!!!

    இப்பவே படிக்க தூண்டுதே... ஆகா!! ஆகா!!!

    ReplyDelete
  40. ///வெளியே வந்த நொடியே - "ரெண்டு கதையையும் 2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க -///

    எங்களை மாதிரி யூத்துகளின் எண்ணங்களை இன்னொரு யூத்தாலதான் பிரதிபலிக்க முடியும்னு அவ்வபோது நிரூபித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் எடிட்டருக்கு யூத்களின் சார்பாக நன்றிகள் பல பல..!!


    ☺☺☺☺☺☺

    ReplyDelete
    Replies
    1. ஆஹான்...

      மக்கழே கிட் மாம்ஸோட மகர் 8ப்பு படிக்கிறாரு, இவரு யூத்தாமாம்...

      Delete
    2. நானும் அதே எட்டாப்பு தானப்பு படிச்சிட்டு இருக்கேன்..!


      😜😜😜

      Delete
    3. எட்டாப்பு பாஸ் பண்ணாமலே கண்ணாலம்
      பெத்த புள்ள பக்கத்து பெஞ்சு.
      இஸ்கூல்ல டேய் மச்சி
      வூட்ல ( டேய்) அப்பாவா.??
      ஜுப்பரப்பு.

      Delete
  41. எடிட்டர் சார்.

    உங்க நையாண்டி கலந்த, ஹாஸ்யமான எழுத்துக்கள் எங்கள் ஞாயிறுகளின் மந்தமான பொழுதுகளை உற்சாகமாக மாற்றுகிறது.

    அதிலும் பயணக் கட்டுரையைப் பபடிக்கும் போது கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் ஆவலைக் கூட்டுகிறது.
    Hats off sir.

    ReplyDelete
  42. / நானொரு 'ஜிமிக்கி கம்மல் ' டான்ஸ் ஆடாத குறைதான் /

    // கிளம்பும் போதே தீர்மானித்திருந்தேன் - இரண்டடி சுற்றுவட்டத்துக்குள் நெருங்கி வரும் முதல்  வெள்ளைக்காரக் கிழவியைக் குரல்வளையை நெரித்து விட்டு, அப்புறமாய் அவசியப்பட்டால்  விசாரிப்பது என்று //

    ///ஆனால் இன்றைய தலைமுறையோ  சந்திர மண்டலத்துக்கே போனாலும் - "இப்போ இன்னாங்கிறே ?" எனும் nonchalant தலைமுறை என்பதை நூற்றியோராவது தடவையாக உணர்ந்தேன் -  ஜுனியர் எனது பெனாத்தல்களை சன்னமானதொரு கொட்டாவியை அடக்கிக் கொண்டே கேட்டுக் கொண்ட போது ! ///

    //// "ஐம்பது வயசுக்கு மேலான அப்பன்கள் எல்லாமே மறையைக் கழற்றி பாக்கெட்டுக்குள் வைத்திருப்பாங்களோ ? ////

    /// "நோட்ஸ் எடுக்கச் சொன்னேனிலே ?"  என்று கண்களால் ஜாடை காட்ட - சிம்பிளாய் தனது செல்போனை உயர்த்திக் காட்டினார் - அங்கே voice recorder ஓடிக் கொண்டிருந்தது ! "ச்சை..எனக்கு இந்த டெக்னாலஜியே புடிக்காது !' என்று உம்மணாமூஞ்சி smurf போல பல்ப் வாங்கிய என் முகம் போனது !! ///

    // "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" என்றபடிக்கு நடையைக் கட்ட - "ரைட்டு...பாத்துப்போம் !" என்று சொல்லிக் கொண்டேன்  ! //

    / "இவனுக்கு  மெய்யாலுமே தாத்தாவிடம் கேட்க இதனை கேள்விகள் உண்டு தானா ? - இல்லாங்காட்டி நம்ம கிட்டே  கடலை போடுவதற்காக குடலை உருவுகிறானோ ?"  என்று நினைத்ததோ என்னவோ /

    எடிட்டர் சார்.. காலைல சிரிச்சு மாளல... இதற்காகத் தான் நாங்கள் " சிங்கத்தின் சிறுவயதில் " கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. அதே...அதே...
      சிங்கத்தின் சிறுவயதில்...

      Delete
    2. இப்படி ..அதே அதே...என்றெல்லாம் வாயால் வடை சுட்டு கொண்டு இருந்தால் ஆசிரியரிடம் ப ப் பு வேகாது என்பதை அறிந்து கொண்டு சி.சி.வயதில் வேண்டுவோர் தயவு செய்து அடுத்த மாதம் முதலாவது போராட்டத்தில் ஈடுபடுமாறு வேண்டிகொள்கிறேன் ..

      Delete
    3. சரி.. தலிவரின் ஆணைப்படி சிங்கத்தின் சிறுவயதில் பற்றிய அறிவிப்பு வரும் வரை, அடுத்த மாதச் சந்தாவை நான் கட்டமாட்டேன் என தெரிவித்துக் கொள்கிறேன்..

      Delete
    4. ஆமா சார். சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சீங்கன்னா, அது செல்லையே செதைச்சிடும் பரால்லையா.

      Delete
    5. எடிட்டர் சார்.. காலைல சிரிச்சு மாளல... இதற்காகத் தான் நாங்கள் " சிங்கத்தின் சிறுவயதில் " கேட்டுக் கொண்டு இருக்கிறோம்..

      Delete
  43. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்
    சிலபஸ் (ச)பல மாற்றங்கள் கண்டுள்ளபடியால் டைம் டேபிள் வெளியீடூ டூ டூ தள்ளி போகும் என்று தெரிகின்றது.
    கட்டை விரலை விட்டு ஜொள் ஜாஸ்தி ஆகிவிட்டபடியால்
    சின்ன விஜயனை
    பெரிய பிரகாஷ்

    பாத்து பத்தரமா இட்டாரச் சொல்லி ...
    சலாம் வக்கிறோம்.
    j

    ReplyDelete
  44. Vijayan sir,
    Wow, What a nice writing. Enjoyed reading each and every word in this post. You brought Frankfurt book fair in front of our eyes. And I can understand the father's feelings too in this post.

    We should print few books with the name "Vijayanin payana katturaigal".


    No need to erase the existing line. (Kodu pOttadhu appadiye irukkattum, azhikka vendam). We can draw another line near year 2018 line.
    So that it will lead to win win situation.


    ReplyDelete
  45. எடிட்டர் சார்,

    அடுத்த வருசம் ஜெர்மனி புத்தகத் திருவிழாவுல (GBF) ஒரு ஸ்டால் புடிச்சுட்டீங்கன்னா, நம்ம அடுத்த வாசகர் சந்திப்பை அங்கே வச்சுக்கிடலாம்! கடன் வாங்கியாச்சும் ஃப்ளைட் டிக்கெட்டுக்கு காசு சேர்த்தி, சேந்தம்பட்டி குழு மொத்தமும் அங்கே வந்து இறங்கிடும்!
    இளையராஜா சார்கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி 'ஜெர்மனியின் செந்தேன் மலரே' பாட்டை லைட்டா குத்துப் பாட்டா மாத்தி GBF நுழைவாயில்ல வச்சு ஒரு பெர்ஃபாமன்ச குத்திட்டோம்னா, மொத்த ஜெர்மனியும் - ஜெர்க் மணி ஆயிடும் பாருங்க!


    ReplyDelete
    Replies
    1. செயலரே!ஸூப்ரப்பு'நம்ம கம்பேனி சாங்கோட ஸொப்ன சுந்தரி பஞ்சாயத்தயும் அங்க வெச்சு முடிச்சு கலாம்;எடிட்டரும் நம்ம கஷ்டம் தெரியாதவரா என்ன? எப்பூடி.

      Delete
  46. @ ALL : ஆறு மணியாகியும் விடிய மறுக்கும் இந்த ஊரிலிருந்து குட் மார்னிங் all ! லைட்டைப் போட்டுக் கொண்டு ரூமுக்குள் அமர்ந்து டைப் செய்தால் ஜுனியர் எடிட்டர் உம்மணாமூஞ்சி smurf ஆகிடுவாரென்பதால் - கதவை மெலிதாய்த் திறந்து வைத்துக் கொண்டு வெராண்டாவில் குந்தியபடிக்கே டைப் அடிக்க ஆரம்பிக்கிறேன் ! பக்கத்துக்கு ரூம்காரர்கள் காலங்கார்த்தாலே ஒரு டிரவுசர் போட்ட முட்டைக்கண்ணனைப் பார்த்துத் திகில் அடித்துப் போகாதிருந்தால் சரி தான் ! பதினெட்டாம்படிக் கருப்பசாமி காப்பாற்றட்டும் அவர்களை !

    ReplyDelete
    Replies
    1. Wow..வெயிட்டிங் சார்...

      அந்த சோழர் கால களஞ்சியம் பற்றி தெரிஞ்சிட்டா பெட்ல இருந்து எழுந்திடலாம் பாருங்க...!!!

      Delete
    2. Updated....பதிவில் ஒரு பெரிய பாரா சேர்ந்துள்ளது இப்போது !

      Delete
    3. இதோ....மேலே போய்விட்டு வருகிறேன் சார்...:-)

      Delete
  47. மொத்த ஜெர்மனியும் - ஜெர்க் மணி ஆயிடும் பாருங்க!
    ஈ வீ அங்க நிக்கிறீங்க. நீங்கள். ( பரவாயில்லை)
    (உக்காரலாம்)

    ReplyDelete
  48. // "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்"
    விஜயன் சார்
    மாப்பிள்ளை பேச்சுக்கு
    மறு பேச்சு கூடாது.

    ReplyDelete
  49. ////நாலைந்து பதிப்பகங்களின் பெயர் பலகைகள் கண்ணில்பட்டன - ஆனால் என் பார்வையோ, அங்கே ஒட்டப்பட்டிருந்ததொரு கார்ட்டூன் கதையின் போஸ்டர் மீதே லயித்து நின்றது !////

    அய்யோ அய்யோ "காா்ட்டூன்"னாலே அப்புடி தானுங்களே சாா்!

    ReplyDelete
  50. மீண்டும் " அருமை " சார்...:-)

    ReplyDelete
  51. முடிச்சாச்சா இன்னமும் பாக்கி இருக்குங்களா சாமி.

    சாமியாடி முடிச்சு குறி சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா

    ReplyDelete
  52. சார் விவரிப்புடன் சிலபல படங்கலும் சேர்ந்தால் நாங்களும் கர்பனை செய்ய முடியும்.

    ReplyDelete
  53. சார்..!
    தயவு செய்து ஜூனியர்ட்ட சொல்லி உங்களுக்கு சுத்திபோடச் சொல்லுங்க..!
    இந்தப் பதிவின் துள்ளல் நகைச்சுவையே உங்கள் மனஉற்சாகத்தை தெளிவாக எங்களுக்கு காட்டிவிட்டது.!
    ஒன்றிரண்டு போட்டோக்களை போட்டிருந்தால் இன்னும் நெருக்கமாக உணர்ந்திருப்போம்.!!
    👏👏👏👏👌👌👌👌👌👌

    ReplyDelete
  54. ///என் பெயர் 007 !" போதுமா ? And இப்போது வெளிவர இருப்பதோ - நாம் ராணி காமிக்சிலும், நமது இதழ்களிலும் பார்த்துப் பழகிய black & வைட் புராதனைக் கதைகளல்ல ! வண்ணத்தில், செம ஹை-டெக்காக வெகு சமீபமாய் உருவாக்கப்பட்ட படைப்புகள் ! இந்தப் பதிவின் இறுதியில் கொஞ்சம் previews காட்டுகிறேன் ///

    அடடே.. !!

    007 புதியபாணியிலா??

    சூப்பரப்பு!!

    ReplyDelete
    Replies
    1. 007ன் ப்ரீவியூக்கள் பட்டையை கிளப்புது.!
      அப்புறம்.. . .அப்புறம்.. .அந்த வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் 'சாகசங்களும் ' புதுபாணியில் உண்டுதானே?? :-)

      Delete
    2. ///அப்புறம்.. .அந்த வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் 'சாகசங்களும் ' புதுபாணியில் உண்டுதானே?? ///

      இதைக் கேட்கத்தான் நான் ரொம்ப நேரமா வெட்கப்பட்டுகிட்டிருந்தேன். ஹிஹி! கிட் னா கிட் தான்!

      Delete
  55. ஹைய்யா! 007 மறுபடியும் தமிழில்!!

    ReplyDelete
  56. ///
    ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் guys ! பட்ஜெட் எனும் சிரமங்களும், அவை சார்ந்த நெகட்டிவ் விமர்சனங்களும் மட்டும் நமக்குத் தடைகளாக இல்லாதிருப்பின் - ஒரு அலிபாபா புதையல் குகைக்குள்ளே அட்டகாசமாய் ஒரு பிக்நிக் போவது சாத்தியமே ! முடிலே...கண்முன்னே நர்த்தனமாடிடும் இந்த அசாத்தியங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நிற்கும் போது - தாரை தாரையாய் வடியும் ஜொள்ளைக் கட்டுப்படுத்தவே முடிலே ! எத்தனை கோடி இன்பம் வைத்தாயோ இறைவா ??!!!!///

    ஒரு சின்ன ஆலோசனை சார்.!

    இப்போது அறிவிக்கப்போகும் சந்தாவை ஜனவரி 2018 -டிசம்பர் 2018 க்கு என்று வைத்துக்கொண்டு,
    ஜூலை 2018 - ஜூன் 2018 வரை ஒரு சந்தாவை அறிவித்து இந்த கோட்டானகோட்டி இன்பங்களை கொஞ்சாமாய் தரிசிக்க வழிசெய்யலாமே சார்.!
    போதிய இடைவெளி இருப்பதால் பட்ஜெட்டும் பெரிய பாரமாக தெரியாதல்லவா?
    இந்த ஃபார்முலா சக்ஸஸ் ஆனால் வருடந்தோறும் பின்பற்றலாமே???!!

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் ஜூ.எடி'க்கு புதுசா ஒரு காமிக்ஸ் கம்பேனி ஆரம்பிச்சுக் கொடுத்துடுங்க. 'ஜூனியர் லயன் கிராபிக் நாவல்'(JLGN) ன்ற பேர்ல ஒரு தனி ட்ராக் ஓடட்டும்! ன்னான்றீங்க? :)

      Delete
    2. ஜூலை 2018 - ஜுன் 2019

      Delete
    3. புரூப் ரீடிங் பணிக்கான தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் கரூர்கார்! ;)

      Delete
    4. அது தான் எனக்கும் புரியலை

      Delete
    5. அது தான் எனக்கும் புரியலை

      Delete
    6. எனக்குப் புரிஞ்சிடுச்சி.

      Delete
    7. எனக்கும்

      Delete
    8. ///ஜூலை 2018 - ஜுன் 2019 ///

      காலத்தை புரட்டிப்போடும் கதைகளை வெளியிட வேண்டும் என்பதால் சந்தா காலத்தை தலைகீழாக குறிப்பிட்டு இருக்கிறேன் கருவூராரே! இது ஒருவகை குறியீடாக்கும் .!!


      (ஷ்ஷ்ஷப்பா.. தப்பு பண்ணிட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..ஹிஹி)

      Delete
    9. அஜத்தான்

      Delete
  57. வணக்கம். ..அன்று ஒரு முறை கூறினேன் ஞாயிறு எப்போது வரும் என்று ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஆசிரியரின் பதிவை படிப்பதில் கிடைக்கும் சுகத்தை சுவைப்பதற்கு.அந்த ஒவ்வொரு பதிவையும் சுவை குன்றாமல் கொண்டு செல்லும் ஆசிரியரின் எழுத்துக்கு தான் என்ன ஒரு லாவகம்.பிரமிக்கிறேன்.......
    ஒவ்வொரு தந்தைக்கும் தான் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய வேண்டும் என்று ஆசை படுவார்கள்.
    இங்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு விஜயன் அல்ல ஓராயிரம் விஜயன் வந்தாலும் நம்ம விஜயன் சாரின் பாய்ச்சல் வேறு யாரிடம் வராது.வரவும் முடியாது. ....
    காமிக்ஸ் என்ற இந்த பொம்மை (சில அதிமேதாவிகள் கருத்து)புக்குக்கு காட்டும் இந்த அர்ப்பணிப்பு...
    சொல்ல வார்த்தை இல்லை. ...தலை வணங்குகிறேன்....
    ஆசிரியரின் தேடல் என்றும் ஓயாது....
    ஜெய்ஹிந்த்..நன்றி. .வணக்கம்.

    ReplyDelete
  58. நீளமான பதிவு ஆனால் போரடிக்காமல் ரசித்து படித்த பதிவு.
    நன்று எடிட்டர் ஸார்.

    ReplyDelete
  59. Why don't bouncer with deep cuts ?
    2 yearly subscriptions is a fantastic idea

    ReplyDelete
  60. பிரமாதமான பயணப் பதிவு. இன்னமும் நிறைய தகவல்களையும் புகைப்படங்களையும் எதிர்பார்க்கிறோம் சார்.

    ReplyDelete
  61. அப்புறம், இந்த 007 கதைகளை வெளியிடும் Dynamite (King) பதிப்பகம்தான் நவீன வேதாளர் கதைகளையும் போட்டுத்தாக்கிட்டு இருக்கு! சோ, அந்தப்பக்கமும் ஏதாவது காத்தடிச்சுதா சார்?

    ReplyDelete
  62. 007 ஜேம்ஸ் பாண்ட்

    ஆஹா. அட்டகாசமான செய்தி.நேத்து கனவுல ஒரு நல்ல செய்தி வரும்னு ஒரு பட்சி சொன்னது பலிச்சிடுச்சே.

    உற்சாகத்துல மனசு துள்ளுது. கால்கள் இரண்டும் பூமியில நிலைகொள்ளாமல் துடிக்குது. இன்னைக்கு ஈரேழு லோகங்களிலும் ஆசிரியரை அடுத்து, ஹேப்பியாக இருப்பது நானாகத்தான் இருப்பேன்.

    என்னதான் 007ஐ படத்துல பாத்தாலும், காமிக்ஸ்ல பாக்கற லுக்கே தனிதான்.

    ஏறக்குறைய இருபது வருஷத்துக்கு முன் 'நிழலும் கொல்லும் ' என நிழலாகி மறைந்தவரை, மீண்டும் தரிசிப்பது பகல் கனவே என்று எண்ணியிருந்தேன்.

    ஆனால் ' பகல் கனவாக இருந்தாலும், அதைக் காணுங்கள். அதை என்னளவில் சாத்தியமாக்குவேன் ' என மௌனமாக சாதனை செய்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

    கடைசியாக ஒரு பன்ச்.
    (பாண்ட் குரலில்)
    "வந்துட்டேன்னு சொல்லு.
    திரும்ப வந்திட்டேன்னு சொல்லு.
    இருபது வருஷத்துக்கு முன்னால
    எப்டி போனேனோ அத விட செமயா திரும்பி வந்துட்டேனு சொல்லு.






    ReplyDelete
    Replies
    1. @ GP

      செம்ம!

      ///ஆனால் ' பகல் கனவாக இருந்தாலும், அதைக் காணுங்கள். அதை என்னளவில் சாத்தியமாக்குவேன் ' என மௌனமாக சாதனை செய்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.///

      +1

      Delete
    2. ரோஜா் மூரா? சீன் கேனாியா? இவரு யாருன்னு தொியலையே??

      Delete
    3. ///ரோஜா் மூரா? சீன் கேனாியா? இவரு யாருன்னு தொியலையே??///

      அவங்க பழையபாணி மிதுன்!

      இவரு டேனியல் க்ரெய்க்கா இல்ல பியர்ஸ் பிராஸ்னனா ன்னு கேளுங்க!

      Delete
    4. என்னோட சாய்ஸ் பியர்ஸ் ப்ராஸ்னன்

      Delete
    5. பியர்ஸ் ப்ராஸ்னன்...😎😎😎😎😎😎😎

      Delete
    6. Rough &tough லுக்கை பாத்தா, அது டேனியல் க்ரைக்காத்தானிருக்கும்.

      மற்ற பாண்ட் போஸ்கள், கொஞ்சம் ஸ்மைலியாகவே இருக்கும்.

      அதுவுமில்லாம நவீன யுக கதையெனும் போது 'க்ரைக் ' தான் செட் 'டாவார்.

      மற்ற பாண்ட் 'களை விட க்ரைக் 'ன் படங்கள் என்ன ஸ்பெஷல் என்றால், கதாசிரியர் இயன் ஃப்ளெமிங் சிருஷ்டித்த ஜேம்ஸின் ஒரிஜினல் கேரக்டரை அசலாக நிரூபித்ததே.அந்த ஒரிஜினால்டியே டேனியல் க்ரைக்கை அடுத்த படத்திலும் இடம்பெற வைத்தது.

      Delete
    7. ///இயன் ஃப்ளெமிங் சிருஷ்டித்த ஜேம்ஸின் ஒரிஜினல் கேரக்டரை அசலாக நிரூபித்ததே.அந்த ஒரிஜினால்டியே டேனியல் க்ரைக்கை அடுத்த படத்திலும் இடம்பெற வைத்தது.///

      உண்மைதான் GP sir!

      ஆனால் ஜேம்ஸ்பாண்டுக்கான தோற்ற ஒற்றுமையில் என்னை பெரிதும் கவர்ந்தவர் பியர்ஸ் பிராஸ்னன்தான்.!

      Delete
    8. அப்பீடி போடு போடு.

      Delete
  63. ஆசிரியரே 007 ரீ என்ட்ரீ ஆவது கனவு போல இருக்கிறது மனசு முழுவதும் சந்தோஷம் விரவிக்கிடக்கிறது ஒரு சிறு சந்தேகம் பறக்கும் பாவைப் படலத்தில் வந்த 007 பாணி ஓவியமா

    ReplyDelete
  64. சார் நீர்தான் அந்த கட்டபொம்மனோ ,,,,,,விழுந்தேன் .....சிரித்தேன்.....விழுந்து எழுந்து சிரித்தேன்.....இரண்டாமத்யாயம் அனல் வேகம் ....என்னாலயு வேகத்த கட்டுப்படுத்த ஏலல.....பாண்ட் யம்மா....அருமையான பதிவு சார்...உயிரிருக்கும் , உணர்விருக்கும் வரைக்குதான் படிக்க முடியும் ..அலிபாபா குகைய கண்ல காட்டுங்க சார்...உயிரை வாழ விடுங்கள் ....நம்ம ஷெல்டன் , ஸ்மர்ப படிக்கும் போதே ஓடிய வரிகள் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...

    ReplyDelete
  65. My name is bond. James bond.
    என் பெயர் பாட்ஷா மாணிக் பாட்ஷா.

    ReplyDelete
    Replies
    1. தவறு
      பாட்ஷா மாணிக் பாட்ஷா.

      Delete
  66. எடிட்டர் சார் ,

    ஜேம்ஸ்பாண்ட் வருகை அட்டகாஷ்... சூப்பரப்பு...செம...
    VARGR ஒரு தெறிக்கும் சீரிஸ். வரும் ஜனவரி புத்தக கண்காட்சிக்கு கொண்டு வர முடியுமா? if possible.

    அப்புறம் ஒரு 1250 பக்க கதையை பற்றி சொன்னீர்களே? அதை பற்றி சற்று கோடி காட்டலாமே சார்

    ReplyDelete
  67. // 2 ஆல்பங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம் உறுதியாய் - ஊருக்குப் போய் மேற்கொண்டு விவரங்களை மின்னஞ்சல் வாயிலாய்ப் பேசிக் கொள்ளலாம் என்றபடிக்கு விடை பெற்றேன் ! வெளியே வந்த நொடியே - "ரெண்டு கதையையும் 2018 -லே போடுறோமலே ?" என்று ஜுனியர் கேள்வி கேட்க - நான் மலங்க மலங்க முழித்தேன் ! ஏற்கனவே அட்டவணை சகலமும் தயார் என்ற நிலையில் - இவற்றை எதற்குப் பதிலாய் எங்கே நுழைப்பது என்று தெரியாமல் நான் முழிப்பதை மெதுவாய் சொல்லி வைத்தேன் ! "என்னமோ பண்ணிக்கோங்க - ஆனாக்கா இவற்றை வெளியிட்ட தீரணும்" //

    வாவ் சூப்பர் விக்ரம் ஜி

    இத இத இதைத்தான் எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து

    விடாதீங்க அப்பாவை கண்டிப்பாக 2018 ல் எதிர்பார்க்கிறோம்
    .

    ReplyDelete
    Replies
    1. ///
      வாவ் சூப்பர் விக்ரம் ஜி

      இத இத இதைத்தான் எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து ///

      +1 சிபிஜி.!

      Delete
    2. அப்படி போடு போடு

      Delete
  68. // புரட்டாசியும் அதுவுமாய் - புலாலுக்கு நோ சொல்லி நிற்பவனை எத்தனை ரூபங்களில் கொடுமைப்படுத்த முடியுமோ - அத்தனை விதங்களில் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர் ! பாம்பு, பல்லி , தேள் தவிர்த்து பாக்கி விலங்குகள் ; பறவைகள் ; மீனினங்கள் அங்கே படையலாகியிருக்க, நட்ட நடுவில் ஒரு ராட்சச Asterix உருவம் பலூனாகி கம்பீரமாய் நின்றது ! //

    அப்படீன்னா ஆஸ்ட்ரிக்ஸ் வராருங்களா சார்
    .

    ReplyDelete
  69. இன்றைய இந்தப் பதிவின்மூலம் பலப்பல உபயோகமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது எடிட்டர் சார்!
    குறிப்பா, பிராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவுல ஒவ்வொரு ஸ்டால்லயும் பார்வையாளர்களை உட்காரவச்சு கதை சொல்லுவது அழகான இளம் பெண்கள் - அப்படீன்ற அம்சமான செய்தி!!

    அடுத்தவருசம் எப்படியாவது அந்த புத்தகத் திருவிழாவுக்குப் போய் பலப்பல கதைகள் கேட்டுப்புடணும் ஒரு வெறி கிளம்பிடுச்சு போங்க!

    கரகரப்பான குரல்ல கருப்புக்கிழவி சொல்லும் கதைகளையே கண்சிமிட்டாம கேட்கிற ஆளுங்க நாங்க! ப்பூ!!

    ReplyDelete
  70. // ஆர்வமாய் பவுன்சரின் புது ஆல்பங்களைக் காட்டியவர் - அவற்றை முயற்சிக்க ஆர்வம் கொண்டிருப்போமா ? என்று கேட்டார் ! ஆனால் அவருக்கே அந்த புது ஆல்பங்களின் கதைக்களங்கள் ரொம்பவே அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சில் இருப்பதும் ,அதீத விரசங்களை சென்சார் செய்திட சென்றமுறையே நாம் நிறையவே சிரமப்பட்டதும் நினைவிருந்ததால் - "இதுக்கு நீங்க செரிப்படமாடீங்க !" என்று அவரே தீர்ப்பும் சொல்லி விட்டார் ! //

    அடடா

    வட போச்சே
    .

    ReplyDelete
  71. // "அட..போங்கப்பா..கோட்டை அழிச்சிட்டு முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுவோம் ! என்னாலே முடிலே !" என்று கையைத் தூக்கி விடலாம் போலிருந்தது ! கிட்டத்தட்ட 50 நாட்களாய் நான் ஊரில் போட்ட திட்டங்களில் முக்காலே மூன்று வீசத்தை மறு பரிசீலனை செய்தாலென்னவென்று தோன்றியது !! //

    இன்னிக்கி நேத்திக்கா இதெல்லாம் நடக்குது

    உங்களுடைய தேடலின் பலன்களை அனுபவிக்க போவது நாங்கள் தானே சார்

    அதனால் நல்லதாக இருந்தால் முதலில் இருந்து ஆரம்பிக்கலாமே சார்
    .

    ReplyDelete
    Replies
    1. ///உங்களுடைய தேடலின் பலன்களை அனுபவிக்க போவது நாங்கள் தானே சார்////....டெஃபெனெட்லி...😎😎😎

      Delete
  72. // காமிக்ஸ் எனும் அதிசய உலகினுள் மட்டுமே சாத்தியமாகும் அந்த அசாத்திய சந்தோஷத்தை அசை போட்டபடிக்கே தூங்கிப் போனேன் //

    அருமை அருமை

    உண்மை உண்மை முற்றிலும் உண்மைதான் சார்

    .

    ReplyDelete
  73. 007- டன்ட ட டன்ட ட டைன் டன்டன்..டன் டட டட டன்ட டனட ட டைன் டுமூல்... பாண்ட் மை நேம் ஈஸ் ஜேம்ஸ் பாண்ட்...!!!

    007என்ன உடனே மனசு அந்த,
    "அழகியைத் தேடி" புத்தகத்தில் லயித்து விடுகிறது.... கூடவே ஓரு நீண்ட்ட்ட பெருமூச்சு வெளிவருவதையும் தவிர்க்க முடியல...ஹூஊஊஊஊஊம்...!!!

    ReplyDelete
    Replies
    1. ///007என்ன உடனே மனசு அந்த,
      "அழகியைத் தேடி" புத்தகத்தில் லயித்து விடுகிறது.... ///

      லயிக்கும்டி..!

      அந்த ரெண்டு பக்கங்கள் மட்டும் உம்ம புத்தகத்துல காணாமப்போகக் கடவது..!

      Delete
    2. ஏன் இந்த கொலை வெறி KOK

      Delete
    3. ஓய் மாம்ஸே@ அந்த அழகியைத் தேடியை நம்ம மருத்துவர் சுந்தரய்யா அன்புப் பரிசாக வழங்கினார்... நண்பனோட விருப்பத்தேர்வான புத்தகங்களை தருவதில் அவரு எப்பவுமே வல்லவர்...

      இன்னொரு நண்பர் PDF ஆகவே தந்துள்ளார்... இப்பவும் என் போன்ல இருக்கு... உம்ம பதிவை பார்த்த உடன் ஒரு தபா அந்த பக்கங்களைப் பார்த்த்துட்டு படிச்சுட்டுத்தான் வந்தேன்...ஹி..ஹி..😎😎

      Delete
    4. ஹல்லோ..ஹல்லேல்லலோ..இங்க டவர் சரி இல்லே...ஹெலோ !!

      Delete
  74. //"Oh Blueberry too ? My favorite hero !!//
    :)

    //பெயரைச் சொல்கிறேன் - அப்புறம் பச்சைப் புள்ளையே அவரை அடையாளம் தெரிந்து கொள்ளும்//

    WOW 2018!

    ReplyDelete
  75. G.V. Ganesh sir wonderful teaser for rathapadalam👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

    ReplyDelete
  76. ஒரு ஷெரீஃப் சிப்பாய் ஆகிறார் : கதையின் முதல் சில பக்கங்களை படித்த உடன் இதுதான் கதை இப்படிதான் இருக்கும் என்பதை எளிதில் சொல்லி விடலாம்; ஆனால் அதனை சிரிப்பு கலந்து ஒரு மெசேஜ் உடன் சொல்லியது ரசிக்கும் படி இருந்தது, என்ன மெசேஜ்ஜா அதான்ப்பா பொது இடத்தில் குளிக்கும் போது ஆடைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டு சிறுகதைகள் அருமை, கடுகு போல் சிறிதாக இருந்தாலும் மிளகு போல் காரம் மற்றும் மனத்துடன் நன்றாக இருந்தது.

    ஒரு ஷெரீஃப் சிரிப்பாகிறார் :-)

    ReplyDelete
    Replies
    1. ///என்ன மெசேஜ்ஜா அதான்ப்பா பொது இடத்தில் குளிக்கும் போது ஆடைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.///

      :))))

      Delete
  77. Editor sir &Junior Editor sir, my dear friends wish you happy deepavali. Eagerly waiting to read James bond new version story.😃🙌🎁🍒🍓🍍🌺💐🎆🎇🎆🎇

    ReplyDelete
  78. அப்பறம் விஜயன் சார், இந்த வருட தீபாவளி மலரை செவ்வாய்கிழமைக்குள் எங்கள் கைகளில் கிடைக்கும்படி மட்டும் பார்த்து கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  79. Children bill
    Done it again superb story line
    9/10
    Tex
    Best story of tex
    10/10

    ReplyDelete
  80. அருமையான பதிவு.!!!

    உங்கள் பயண அனுபவத்தை மிகவும் ரசித்து படித்தேன். ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதேபோல, வேதாளருக்கும் ஏதேனும் வாய்ப்பு வருமா?

    இம்மாத புத்தகம் "ஒரு ஷெரீஃப் சிப்பாயாகிறார்" மட்டுமே படித்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது! GST வந்த பிறகு எனக்கு வேலைபளு அதிகம் ஆகிவிட்டதால் புத்தகம் படிக்க நேரம் கிடைப்பதில்லை. இங்கே கமெண்ட் போடவும் நேரம் கிடைப்பதில்லை. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள். ட்யுராங்கோவின் அடுத்த தொடர்ச்சியை படிக்க மிக ஆவலாக இருக்கிறேன். ஜனவரியிலேயே வெளியிடுங்கள் சார்.

    நன்றி! அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : ட்யுராங்கோ நிச்சயம் வருவார் ஜகத் - ஆனால் ஜனவரியில் அல்ல !

      Delete
  81. Replies
    1. ஜனவரியில் ட்யூராங்கோ இல்லைன்னா, நிச்சயமா அதைவிட பெருசா ஏதோ இருக்கக்கூடும்.! இந்தவருடத்தைவிட புதுவருடம் உங்களுக்கு பெட்டராக அமையக்கூடும்.!

      இப்படி எடுத்துக்குவோமே PFB! :-)

      Delete
  82. ட்யுராங்கோ ஜனவரியில் வந்தால்தான் புதுவருடம் நல்லா ஆரம்பிக்கிற மாதிரி எனக்கு இருக்கிறது.எல்லாம் இந்த வருட அனுபவம்தான்.... பார்த்து செய்யுங்கள். எனது எவர் கீரின் இந்த வருடம் வந்த ட்யுராங்கோ மற்றும் ஜெரோம்யா

    ReplyDelete
  83. அப்ப ஜனவரியில் வேற சர்ப்ரைஸா?!

    ReplyDelete
  84. வணக்கம் சார். நீங்க பிரிச்சு பிரிச்சு போட்டதாலோ என்னவோ சில காரணங்களால் இன்று தொடர்ச்சியாய் படிக்க முடியாமல் இடைவெளிகளோடு படிக்க நேரிட்டது. இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை வடிக்க வார்த்தையில்லை. ஜூனியர் சிங்கத்தின் குட்டி வயதில்னு விக்ரம்ஜி இதே பயணத்தை பற்றி எழுதுவதை படிக்கும் வாய்பபை இறைவன் எங்களுக்கு அளிப்பானாக.

    வித விதமான கதைகளுக்கு கண்டுபிடிக்கும் உங்கள் தேடலும் காமிக்ஸ் காதலும் எங்களுக்கு தொடர்ந்து விருந்து படைக்கட்டும். புதுக் கதைகளை உங்கள் வசதிக்கு தகுந்தாற் போல் கொண்டு வாருங்கள் சார். கிட் ஆர்டினின் ஆலோசனை கூட நன்றாக தோன்றுகிறது.

    ஒரு புறம் பழய காமிக்ஸ்களை ஒன்று 2500க்கு வாங்குபவர்கள். மறுபுறம் நமது பழய காமிக்ஸகளை அந்த அந்த விலைக்கு விற்றுக் கொண்டு நமது காமிக்ஸ் விலைகளை தொடர்நது விமர்சிக்கும் கும்பல். இவரகளுக்கு நடுவில் உண்மையுலுமே குறைந்த வாங்கும் சக்தி ஆனால் நிறைந்த காமிக்ஸ் காதல் கொண்டவர்கள். இவற்றை பாரக்கும் போது உங்ககிட்ட தொடர்நது எங்கள் வேண்டுகோளகளை வைத்து சங்கடப்படுத்தவும் ஷேடாக உள்ளது.

    சீனியர் எடிட்டர் வழிகாட்டுதலின்படி உங்கள் உடல்நலம் மற்றும் கிட்டங்கியின் இருப்புகளை நினைவில் கொண்டு நீண்ட கால திட்டத்தை செயல்படுத்துங்கள். என்றும் எங்கள் ஆதரவு உண்டு.


    ReplyDelete
    Replies
    1. ///சீனியர் எடிட்டர் வழிகாட்டுதலின்படி உங்கள் உடல்நலம் மற்றும் கிட்டங்கியின் இருப்புகளை நினைவில் கொண்டு நீண்ட கால திட்டத்தை செயல்படுத்துங்கள். என்றும் எங்கள் ஆதரவு உண்டு. ///

      +1

      Delete
  85. டியர் விஜயன் சார்,

    பெரிய பதிவாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்க கூடாதா என நினைக்க வைத்த பதிவு ...

    //புத்தகவிழா வாசலில் ஜுனியரை நிற்கச் செய்து ஒரு க்ளிக் செய்த கணம் - ஊதைக் காற்றினாலா என்று சொல்லத் தெரியவில்லை - விழியோரம் துளியூண்டு ஈரமிருந்தது ! //

    ஜூனியரின் ஜூனியரை, ஜூனியரின் சேர்த்து இதே போல போட்டோ எடுத்து வரும்காலத்தில் ஒரு பதிவில் நீங்கள் எழுதத்தான் போகிறீர்கள். அதை நாங்களும் படிக்கத்தான் போகிறோம் :)

    பயணம் உண்மையிலேயே ஒரு சிறந்த ஆசான், அதுவும் நமக்கு நெருங்கியவர்களுடன் இப்படிப்பட்ட பயணங்கள் அமையும் பொழுது வாழ்நாள் முழுவதும் இந்த நினைவுகள் நமது நெஞ்சை விட்டு அகல்வதில்லை.

    இது போன்ற பயணங்கள் இன்னும் நூறு அமைய ஆண்டவனை பிராத்திக்கிறேன் (இதில் சுயநலமும் உள்ளது - இன்னும் எத்தனை ஆயிரம் புதிய புத்தகங்களை நாங்கள் பார்க்க போகிறோமோ :) சொக்கா அத்தனையும் எங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்)


    "என் பெயர் 007 !" - அட்டகாசம் சார் ... இது போல இன்னும் நிறைய்ய நிறைய்ய எதிர்பார்கிறோம்..


    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. ///பயணம் உண்மையிலேயே ஒரு சிறந்த ஆசான், அதுவும் நமக்கு நெருங்கியவர்களுடன் இப்படிப்பட்ட பயணங்கள் அமையும் பொழுது வாழ்நாள் முழுவதும் இந்த நினைவுகள் நமது நெஞ்சை விட்டு அகல்வதில்லை.///

      உண்மை மற்றும் செம!

      Delete