நண்பர்களே,
வணக்கம்! கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற சந்தேகம் தான் சமீப வாரங்களில்! நான் பதிவுகளின் பக்கம் சரிவர வராததால் தான் இங்கே தொய்வா? அல்லது நீங்கள் சரிவர இங்கே பங்கேற்காததால் தான் நானும் தலைகாட்டலியா? புதிராகவே தொடர்கிறது இக்கேள்வி என்னுள்! Of course வாரயிறுதிகளில் இங்கே வருகை தருவோரின் எண்ணிக்கைகள் பெரியதொரு உதை வாங்காமல் தொடரத் தான் செய்கின்றன; ஆனால், தற்போதைய சின்ன பட்ஜெட் படங்களைப் போல வாரநாட்களில் பதிவுப் பக்கமானது ஈயோட்டுவதையே பார்க்க முடிகிறது! இப்போதெல்லாம் வாட்சப் கம்யூனிட்டியில் கட்டும் களையினை வலைப்பக்கத்து சலனமற்ற அமைதிகளோடு ஒப்பிட்டால் "ஙே'' என்றே முழிக்கத் தோன்றுகிறது! Of course ஏதேனும் ஸ்பெஷல் இதழ்கள் பற்றியோ, மறுபதிப்புகள் பற்றியோ, மூ.ச.பஞ்சாயத்துக்கள் சார்ந்தோ பதிவில் எழுத நேரிடும் நாட்களில் views & comments அள்ளுகின்றன தான்! ஆனால், நெதத்துக்கும் அதற்கென ஸ்பெஷல் இதழ்களைப் போட்டுக் கொண்டிருக்க முடியாதே?!
"ஸ்பெஷல் இதழ்கள்'' என்ற தலைப்பிலிருக்கும் போதே ஒரு சமீபத்தைய மகா சிந்தனையை பற்றியும் பகிர்ந்து விடுகிறேனே?! எல்லாம் துவங்கியது 2026-ன் அட்டவணைக்கென கதைத் தேடல்களுக்குள் முத்துக் குளிக்க ஆரம்பித்த வேளைகளில் தான்! இந்த முறை என்ன மாயமோ தெரியலை - மாமூலான நாயகர்களைத் தாண்டி ஏகமாய் புதுப்புது ஆல்பங்கள் "பளிச்' "பளிச்' என கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தன! புரட்டாசி மாத விரதத்தில் இருப்பவன் ஸோமாட்டோவில் scroll செய்தால் - தெரிவதெல்லாம் தலப்பாக்கட்டி பிரியாணியும், புஹாரியும், KFC & பர்கர்-கிங்களாக இருந்தால் எப்படியிருக்குமோ- அப்படியே இருந்தது எனக்கு! இங்கேயோ பட்ஜெட்டின் காரணமாய் இதழ்களின் எண்ணிக்கையினை சிக்கனமாக வைத்திருக்க வேண்டிய இக்கட்டு ; ஆனால், கண்ணில் தென்படும் சகலமும் கடைவாயோரம் குற்றாலத்தை ஓடச் செய்தன!
அந்த வேளையில் தான் நமது ஜம்போ காமிக்ஸை ரொம்பவே மிஸ் செய்தேன்! நாயகர்களுக்கென எவ்வித முன்னுரிமைகளும் இல்லாது, ஒன்-ஷாட்ஸ்; புது வரவுகள் என எதை எதையோ முயற்சிக்க அதுவொரு களம் ஏற்படுத்தித் தந்திருந்தது! ஆனால், விற்பனை ரீதியில் அங்கு பெருசாய் ஜெயம் நஹி என்பதால் ஊற்றி மூட வேண்டிப் போனது!அதையெல்லாம் நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்த போது சின்னதொரு வருத்தம் இழையோடியது உள்ளாற! எப்போவுமே எங்கிட்டாவது ஒரு திக்கிலே இன்டிக்கேட்டரைப் போட்டுப்புட்டு, அதுக்கு நேர்மாறான திசையிலே கையைக் காட்டிப்புட்டு, நேராக புளியமரத்திலோ- புங்கை மரத்திலோ ஸ்கூட்டரைக் கொண்டு போய்ச் செருகும் நம்ம ட்ரேட்மார்க் பாணிக்கு இப்போல்லாம் வேலையே இல்லாமப் போச்சே என்று! வருஷ அட்டவணையினை நிரம்ப திட்டமிடலுடன் போட்டுவிட்டு good boy ஆக அதனுடன் பயணிப்பது ரெகுலர் தடம்! இடையிடையே கிட்டும் ஆன்லைன் மேளாக்களின் போதும் சரி, புத்தகவிழாக்களின் ஸ்பெஷல்களிலுமே விடுபட்ட நாயக / நாயகியரையோ; விற்பனையில் சாதிக்கக் கூடியவர்களையோ களமிறக்கும் கட்டாயங்கள்! ரொம்பவே மாறுபட்ட நொடிகளில் தான் "பயணம்''; ""சாம்பலின் சங்கீதம்'' போன்ற off-beat படைப்புகளை முயற்சிக்கவே சாத்தியமாகிறது!
To cut a long story short- இன்டிக்கேட்டருக்கே அவசியமில்லாமல் ; கையையோ- காலையோ - மண்டையையோ எந்தத் திசையிலும் திருப்ப அவசியமில்லாமல்; மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட, சாத்தியப்பட்ட சமயங்களில் மட்டுமே பயணம் பண்ணவொரு சாலையை நாமளாய் போட்டாலென்னவென்று தோன்றியது! நமக்குத் தான் மண்டைக்குள் ஏதாச்சுமொரு சிந்தனை எழுந்துவிட்டால் அப்புறம் "அடம் அப்பாசாமி' அவதார் எடுத்துப்புடுவோமே! So ரெகுலர் தடத்தில் அல்லாத இதழ்களை நாம் வெளியிடப் பயன்படுத்தி வரும் லயன் லைப்ரரி லேபிலில் "திசைகள் நான்கு'' என்றதொரு series அறிமுகமாகவுள்ளது!
அதென்னய்யா பெயர் என்கிறீர்களா? காசிக்குப் போக நினைத்தால் வடக்காலே சலோ என்று கிளம்புவோம்! பயண இலக்கு பம்பாய் என்றால் மேற்கின் திக்கில் நடை போடுவோம்! அட, கல்கத்தாவில் ரசகுல்லா சாப்டுவோமே என்ற எண்ணம் தலைதூக்கினால் கிழக்காலே நடையைக் கட்டுவோம்! மாறாக ஐயன் வள்ளுவர் சிலையின் காலடியில் குந்தி புளிசாதத்தைச் சாப்பிடத் தோன்றினால் தெற்காலே தானே பயணப்படுவோம்?! ஆனால், இலக்கென்று எந்த ஊரும் மனசில் fix ஆகலை ; பச்சே பயணம் போகும் ஆசை மட்டும் ஊற்றெடுக்கிறது! என்ன செய்யலாம் அந்த நொடியில்? எந்த ரயிலில் டிக்கெட் காலியிருக்குதோ - அதில் ஏறி, எந்த ஊரைப் பார்க்கும் நொடியில் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிகிறதோ, அங்கே இறங்கி, ஜாலியாய் சுற்றலாம்! So அந்த மாதிரியான சமயங்களில் திசைகள் நான்குமே நமக்கு நண்பர்களே!
எனது அவாவும் கச்சிதமாய் அதுவே!
* இது விற்குமா- விற்காதா? என்ற வணிகரீதியிலான கேள்விகளுக்கு செவிசாய்க்கும் அவசியங்களின்றி....
* இவர் பெரிய ஈரோவாச்சே; இவருக்கு துண்டு விரிச்சே தீரணுமே என்ற நிர்ப்பந்தகளின்றி...
* இந்த விலை கூடுதலா? குறைச்சலா? என்ற கறைச்சல்களின்றி...
* இதை தீபாவளிக்குப் போடறதா? பொங்கலுக்குப் போடறதா ? எனக்கு மொத தபா பல்லு விழுந்த anniversary-க்குப் போடறதா? என்ற குழப்பங்கள் கிஞ்சித்துமின்றி...
* ஐயையோ.. இது கிராபிக் நாவலாச்சே? அச்சச்சோ.. அது கார்ட்டூனாச்சே..? அடடா.. அது யுத்தக் கதையாச்சே..? ஆத்தாடி இது பழசாச்சே..? என்று இல்லாத சிண்டைப் பிய்த்துக் கொள்ளவும் தேவைகளின்றி...
* "அடங்கப்பா.. தேதி இப்போவே 25 ஆச்சு.. மாசம் பிறக்க இன்னும் அஞ்சே நாட்கள் தானே பாக்கி...?" என்றபடிக்கே அரக்கப் பரக்க பல் விளக்கக் கூட நேரம் ஒதுக்க முடியாது குட்டிக்கரணமடிக்கவுமே கட்டாயங்களின்றி....
😁ஜாலியாய்- நினைத்த நேரத்திற்கு..!
😁குதூகலமாய்- இஷ்டப்பட்ட கதைக்களங்களை..!
😁கட்டாயங்களின்றி- சந்தாக்கள், முன்பதிவுகள் என இல்லாமலே..!
😁இஷ்டப்பட்டால் வாங்கிக்கலாம்! என்ற சுதந்திரத்தோடு...
😁எந்தத் திசையிலும், பயணிக்கலாமென்ற சுதந்திரத்தோடு travel செய்திடும் முயற்சியாக இது இருந்திடும்!
இங்கே டெக்ஸ் வில்லரும் தலைகாட்டக் கூடும்; தில்லையாடி வள்ளியம்மையுமே தலைகாட்டக் கூடும்! So முதல்வாட்டியாக அக்கட தேசத்தின் ஆரஞ்ச் கேசக்கார பெரியவரைப் போல, எல்லைகளற்ற சுதந்திரத்தை எனதாக்கிக் கொண்டு அவரைப் போலவே ஒரு தடாலடிப் பயணத்தைத் துவக்கிட உத்தேசித்துள்ளேன்! இது சிறப்பான முயற்சியாகவும் இருக்கலாம், புத்தம்புது மூ.ச. கிளைகளின் முன்னுரையாகவும் அமையலாம்! But பார்க்கும் நொடியில் எனக்குப் பிடித்திடும் ஆல்பங்களை - ஆராமாய் தயார் செய்து, டென்ஷனின்றி பரிமாறும் திருப்திக்கு முன்பாக மூ.ச.க்களின் கிளைகளானவை அம்புட்டுப் பெரிய டெரராகத் தெரியக் காணோம்! So நம் முன்னே காத்திருப்பன திசைகள் நான்கு!
அதன் முதற்பயணம் எந்தப் பக்கமாய்? எப்போது? என்பது பற்றிப் புத்தாண்டில் பார்க்கலாமுங்களா?
ரைட்டு! காத்திருக்கும் டிசம்பர் இளம் டெக்ஸின் அட்டைப்பட preview & உட்பக்கப் பிரிவியூஸ் இதோ! இம்முறை இளம் வெள்ளிமுடியாருமே இந்த 320 பக்க 5 அத்தியாயப் பயணத்தில் ஸ்டைலாக டெக்ஸுக்குத் துளியும் விடுதலின்றி ஆற்றலோடு பயணிக்கும் கட்டிளங்காளை என்பதால் அவருக்கு நையாண்டி அவதார் தந்திடவில்லை! இயல்பாய், கம்பீரமாய் இவரும் பயணம் பண்ணவிருக்கிறார்! So டிசம்பரில் கலரில் பில்லியனரா? கறுப்பு- வெள்ளையில் காளையரா? என்பதே உங்களது dilemma வாக இருந்திடப் போகிறது!
லார்கோவில் பணிகள் முடிந்த நிலையில், going to print shortly. இளம் டெக்ஸில் இந்த நொடியில் பிஸி! So அவரை சடுதியில் முடித்த கையோடு ஜனவரிப் பக்கமாய் பார்வையைத் திருப்பிட நடையைக் கட்டுகிறேன்! அதற்கு முன்பாக சில updates மக்களே!
அச்சாகிக் கொண்டிருப்பது "சாம்பலின் சங்கீதம்'' மெகா இதழுமே தான்! திங்களன்று முழுவதுமாய் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டிட வேண்டும்! And இதனை எதிர்வரவுள்ள சேலம் புததகவிழாவினில் ரிலீஸ் செய்திடலாமென எண்ணியுள்ளோம் ! And இன்று தான் டிசம்பர் 19 to 29 தேதிகளில் சேலம் விழா என்பது உறுதியாகியுள்ளது! நமக்கு ஸ்டாலுமே உறுதியாகி விட்டால் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை ஆரம்பித்து விடலாம்! Fingers crossed!
அப்புறம் Bapasi அமைப்பிலும் டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு மொத்தமாய், சகலப் பொறுப்புகளுக்குமான தேர்தல் அரங்கேற இருப்பதால் கடந்த சில வாரங்களாகவே அவர்கள் செம பிஸி! So - புத்தக விழாக்களின் circuit சற்றே ஸ்லோவாகி உள்ளது ! ஏற்கனவே திருச்சி விழா மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது! கரூர் விழா பற்றியும் தகவல் இல்லை! Bapasi தேர்தல் முடிந்து வெற்றி பெறுவோர் பொறுப்பேற்ற பின்னே தான் circuit மீண்டும் வேகம் எடுக்கும் என நம்பிக்கொண்டுள்ளோம்!
புறப்படும் முன்பாக as usual சந்தா நினைவூட்டலும் ! 2026-ன் கதை + பேப்பர் கொள்முதல்களை நடத்திட உங்களின் சந்தா தொகைகளையே மலை போல நம்பியுள்ளோம்! Please do your best folks!
Bye all have a safe weekend!




First
ReplyDeleteவாழ்த்துகள்
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteரொம்ப நாளைக்கு பிறகு, அருமை
வணக்கம் நண்பர்களே
ReplyDelete10 kulla
ReplyDeleteவணக்கம் 🙌
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு
ReplyDeletePresent sir
ReplyDeletepresent sir
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஆஜர்
ReplyDeleteதிசைகள் நான்கிலும்..
ReplyDeleteபின்தொடர நாங்கள் இருக்கிறோம்...
முன்னேறிச் செல்லுங்கள் சார்..!
💪💪💪
Deleteவெற்றி வேல் 👍
Deleteவீர வேல் 👍👍
போர் 💐😘
போர் 💐🥰
நாங்க ரெடி சார் 😘😘
Nice initiative sir... all the very best
ReplyDelete✨😀
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteSir
ReplyDeleteதிசைகள் நான்கு
முதல் பயணம்
உங்களுடன்
பயணிக்க ஆவலுடன்....
நன்றிகள்
Ratatouille படத்தில் climaxசில் Egoவிடம் என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்க
ReplyDeleteஅவர் surprise me என்பார்...
அந்த பதில் தான் உங்கள் திசைகள் நான்கு முயற்சிக்கும்
Waiting eagerly sir
அதே அதே
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteயாதும் ஊரே... யாவரும் காமிக்ஸ் வாசகர்!!
அனைவருக்கும் வணக்கங்கள்
ReplyDelete//அச்சாகிக் கொண்டிருப்பது "சாம்பலின் சங்கீதம்'' மெகா இதழுமே தான்! திங்களன்று முழுவதுமாய் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டிட வேண்டும்! //
ReplyDeleteபைண்டிங் செல்லும் முன் இதழ்களின் பண்டிலின் புகைப்படம் ஒன்றை கம்னியூட்டி பக்கம் பகிருமாறு கேட்டு கொள்கிறேன், சார்
சாம்பலின் சங்கீதம் அட்டைபடத்திற்கு வெயிடிங் 😊😊😊
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteதிசைகள் நான்கு
ReplyDeleteபட்டைய கிளப்ப
வாழ்த்துகள்...
😍🌹🔥♥️
திசைகள் நான்குஅனைத்து திக்கிலும் வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐💐
ReplyDeleteதிசைகள் நான்கு.
ReplyDeleteஇப்போதைய திருமண reception dinner போல போலிருக்கிறது.
விதம் விதமான பழைய, புதிய உணவு வகைகள். எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் போல!
அதையும் பார்த்து விடலாம். o.k 👍
Wow super announcement
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteI too...
ReplyDeleteவாங்க நண்பரே
Deleteசார் எதிர்பாராததை எதிர் பாருங்கள் 2026 இல் என்று நீங்கள் சந்தா அறிவிப்பின் போது சொல்லி இருந்தீர்கள். அது தான் இது சூப்பர் சூப்பர்
ReplyDeleteபுத்தாண்டு அன்று அந்த தித்திப்பான அறிவிப்புக்கு இப்போது இருந்தே காத்திருப்பு தொடங்குகிறது.
ReplyDeleteஎப்படியும் அடுத்த வார இறுதிக்குள் புத்தகங்கள் கிடைத்துவிடும் என்பது திண்ணம். I'm waiting
ReplyDeleteதிசைகள் நான்கு.
ReplyDeleteஎட்டுத் திசைகளிலும் புகழ் பெற்றிட நல்வாழ்த்துக்கள்.
வணக்கமுங்க!
ReplyDeleteவட கிழக்கு தென் மேற்கு போன்ற பல திசைகள் உள்ளது சார்
ReplyDeleteநம்ம டிசைனும் சரி,நாம போற திசையும் சரி, வித்தியாசமாவே இருக்கும் நண்பரே!
Delete//எனக்கு மொத தபா பல்லு விழுந்த anniversary-க்குப் போடறதா? என்ற குழப்பங்கள் கிஞ்சித்துமின்றி...//
ReplyDelete😂😂😂
Most Expected story "யலில் ஒரு சூறாவளி.. " ஆவல் மிக காத்திருக்கிறேன்.. கூடவே லார்கோ.. ஆஹா. திக்கெட்டும் வெற்றி முரசம் கொட்டட்டும்.. அள்ளிவந்து அருமையான கதைகளை சேர்க்கட்டும் இந்தத் திசைகள் நான்கு..
ReplyDeleteHi Editor sir,
ReplyDeleteThisaigal Nangu - great initiative sir.
Ithu vetri pera vazthuthual sir
சூப்பர் சார்....இதுவரை வந்த டெக்சட்டைகளிலே டாப் இதான் இருக்குமென
ReplyDeleteஅணுகுண்டுலயே பெஸ்டா நான்கு திசைகளிலும் பயணிக்க ஆவலாய்....அந்த சிஸ்கோ ஜெயில்ல என்று பன்றார்னு பாக்க நெனச்சா நீங்களும் சிறையிலடச்சிட்டீங்களே...அந்த காலன் கதைகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுயலில் ஒரு சூறாவளி...கதையின் தலைப்பும் துவக்க வரிகளும் தமிழமுதை சுரக்க ...காட்சிகளோ ஓவிய அழகியலை அழகை அள்ளியல்லி நீராய் இறைத்து தெளிக்க....நானோ சலனத்தோடு காத்திருக்கிறேன்...இப்ப வருமோ எப்ப வருமோவென
ReplyDelete❤❤❤
Delete❤️👍🙏...
ReplyDeleteதிசைகள் நான்கு.. ஆஹா... அட்டாஹாச title... வாழ்த்துக்கள் sir... நன்றி.. ❤️👍🙏...
ReplyDeleteநல்ல முடிவுங்க சார், ற"தனித்தடம் பற்றிய தங்களின் முடிவுக்கு".
ReplyDeleteயாருடைய பிக்கல் பிடுங்கலுமின்றி, ஜாலியா பயணிக்க ஏற்றதொரு தடம். இதில் நீங்க "4 திசை என்ன, 8 திசை"களில் போனாலும், எந்தவொரு கேள்வியுமின்றி ஹேப்பியாக உங்களுடன் பயணிக்க இங்க பலர் ரெடிங்க சார். ஆனால் பயணத்தை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்தால் சிறப்பா இருக்கும்.
வாழ்த்துக்கள் சார் 💐❤️.
வழக்கம்போல டெக்ஸ் பின் அட்டை டாப்.
யங் டெக்ஸ்க்காக ஆவலுடன் waiting..
" திசைகள் நான்கு".
ReplyDeleteதிடீரென்று ஒரு நாள் கம்யூனிட்டி மில் அறிவிப்பு வரும். இந்த புத்தகம் வெளியிடப் படுகிறதென்று. வருடம் முழுவதுமே இந்த இன்ப அதிர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்
80'களில் திடீரென்று ஏதாவது கடையில் எதிர்பாராமல் நாம் படிக்காத நமது புதிய காமிக்ஸ் ஒன்று கண்ணில் படும்போது ஒரு உணர்ச்சி தோன்றுமே அதே..... அதே உணர்வுகள் இனி அடிக்கடி
தேங்க்ஸ்
திசைகள் நான்கிற்கு
😘😘😘
DeleteHi..
ReplyDeleteதிசைகள் எட்டும் எமதே 💐💐👍👌
ReplyDeleteநாலா பக்கமும் மானா வாரியா போட்டு தாக்குங்க சார் 😘😘 😘😘😘💐🥰
ReplyDeleteநாங்க வாங்க ரெடி 👍😘
😁😁👏👏👏
Deleteதிசைகள் நான்கு
ReplyDeleteஅருமையான புது தொடக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்
//பார்க்கும் நொடியில் எனக்குப் பிடித்திடும் ஆல்பங்களை - ஆராமாய் தயார் செய்து, டென்ஷனின்றி பரிமாறும் திருப்திக்கு முன்பாக மூ.ச.க்களின் கிளைகளானவை அம்புட்டுப் பெரிய டெரராகத் தெரியக் காணோம்! So நம் முன்னே காத்திருப்பன திசைகள் நான்கு!//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார்😊😊😊😍😍
மிக்க மகிழ்ச்சி சார்+1
ReplyDeleteஇந்த தடவை பனி மலைகளில் சுற்றிடும் இளம் டெக்ஸ் வின்டர் மலராக வருவது பொருத்தம்
ReplyDeleteஅட்டைப்படத்தில் பனி மலை பின்னனியில் ஸ்டைலாக புன்னைகைக்கும் நம் போக்கிரி டெக்ஸ் அட்டகாசம்
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// லார்கோவில் பணிகள் முடிந்த நிலையில், going to print shortly. இளம் டெக்ஸில் இந்த நொடியில் பிஸி! //
ReplyDeleteவார இறுதியில் டிசம்பர் இதழ்களை எதிர்பார்க்கலாமா சார்...😍🤩
Yes சார்...
Deleteசிறப்பு...
Deleteசார்.. ஐ லவ் 'திசைகள் நான்கு' கான்செப்ட்!!😍😍😍😍 எதிர்பார்போடு காத்திருக்கிறேன்....
ReplyDeleteஇளம் டெக்ஸ் அட்டைப்படம் அபாரம்!!😍😍😍 இளம் டெக்ஸின் கண்களில் நேசபாவமும், மெல்லிய புன்னகையும் செம! 😍😍😍
சேலம் புத்தக திருவிழா, வாசகர் சந்திப்பு, 'சா. ச' வெளியீட்டு விழா, லார்கோ கதை விளக்கக் கூட்டம் ஆகியவற்றுக்காகவும் ஆவலோடு வெயிட்டிங்கு.. 😍😍😍😍
//சேலம் புத்தக திருவிழா, வாசகர் சந்திப்பு, 'சா. ச' வெளியீட்டு விழா, லார்கோ கதை விளக்கக் கூட்டம் ஆகியவற்றுக்காகவும் ஆவலோடு வெயிட்டிங்கு.. 😍😍😍😍//
Deleteமிகுந்த ஆவலுடன்
லாருகோக்கு கதை விளக்கம் சொல்லணும்னா அல்லாரும் ஒரு லார்ஜ் போட வேண்டி கீதும் 🥹🥹
Deleteசார்.. நீங்க விஷத்தை கொடுத்தாக்கூட குடிப்போம் சார்.. அதுவும் மடக்கு மடக்குன்னு!☺️
Deleteஇளவரசர் அதிலும் சமோசாவை தொட்டு சாப்பிடுவார் சார்...🤣🤣🤣
Deleteஅறிவரசு.. 😁😁😁😁
Deleteடேஸ்ட்டா இருக்குமா
Delete// எனக்கு மொத தபா பல்லு விழுந்த anniversary-க்குப் போடறதா? //
ReplyDeleteசார் இது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா சார். என்ன ஒரு நாபக சக்தி.
ஒரு வரலாற்று நொடியாச்சே சார்?!
Delete😍
Delete//இளவேனிற் காலப் பொழுது அது- சலனமின்றி ஓடிக் கொண்டிருந்த நதியின் அமைதி அங்கு நிலை கொண்டிருந்த படகுகளையும் ஆட்கொண்டிருந்தது//
ReplyDelete🥰🥰🥰🥰🥰
😍😍😍😍😍 படிக்கும்போதே மனசும் அந்த படகு போல சலனமின்றிப் போகிறது!🤘🤘
Deleteநம்பள் எக்ஸ்ட்றா நம்பர்...
Deleteஎக்ஸ்ட்ரா நம்பர் டபுள் ஓகே சார்.
Delete// காத்திருக்கும் டிசம்பர் இளம் டெக்ஸின் அட்டைப்பட preview //
ReplyDeleteகலக்கலான அட்டைப்படம்,ஆர்வ மீட்டர் இப்பவே எகிறி விட்டது சார்...
தெறி ஆக்ஷன் சார் 🔥
Deleteஆர்வ மீட்டர் எகிறுகிறது
Delete🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Delete///கண்ணில் தென்படும் சகலமும் கடைவாயோரம் குற்றாலத்தை ஓடச் செய்தன!//
ReplyDeleteகுற்றாலத்தை ஓட வைத்த அந்த கதைகளை காண ஆவலாய் உள்ளதுங்க
எங்களுக்கும் புது பது கதைகளை பற்றி நீங்கள் சொல்லும் போது இந்த ஜலம் வந்திடும் சார்🤩🤩🤩
// So அந்த மாதிரியான சமயங்களில் திசைகள் நான்குமே நமக்கு நண்பர்களே! //
ReplyDeleteஅருமை,அருமை,அருமை...
// அதன் முதற்பயணம் எந்தப் பக்கமாய்? எப்போது? என்பது பற்றிப் புத்தாண்டில் பார்க்கலாமுங்களா? //
ReplyDelete2026 இல் ஒரே அதிரடி மழைதான் போல,சிறப்போ சிறப்பு சார்,ஆவலுடன்...
எனக்கு ஜன்னலோர சீட். பயணத்துக்கு காத்திருக்கிறேன். 🙏
ReplyDeleteஎனக்கு டிரைவர் பக்கத்துல இன்ஜின் பக்கத்துல அந்த முன் பக்ககண்ணாடிக்கு பக்கத்துலே இருக்க முதல் சீட் 😘😘👍🥰
Deleteஜம்பிங் ஜி.. 🤣🤣🤣🤣
Deleteநான் பஸ்ஸுக்கு மேலே படுத்துக்கறேன்.. அப்பத்தான் காத்தோட்டமா நான்கு திசைகள்லயும் வேடிக்கை பார்த்துட்டு வர வசதியா இருக்கும்!!😍😍😍
Delete😂😂😂😂😂
Deleteசடன் பிரேக் போட்டாக்கா 🤔🤔?
Deleteமேலே ஏற்றிய பொருள்களை பத்திரமாக கொண்டு செல்ல பெரிய கயிறு வைத்து கட்டுவது போல் இந்த இளவரசரை கட்டி விடுவோம் சார்.
Delete///சடன் பிரேக் போட்டாக்கா 🤔🤔?///
Delete😳
இப்படி ஏடாகூடமா ஏதாவது பண்ணுவீங்கன்னு தெரியும்! அதான் பிரேக்கை கழட்டி கக்கத்துல வச்சுட்டு படுத்திருக்கேனாக்கும்!!😇😇
விஜய் 😂😂😂😂😂😂🤣
Deleteஇளவரசரே 😂😂😂
Deleteசடன் ப்ரேக் போட விட மாட்டோம் சார்
நான்கு திசைகளிலும் யூடர்னோ, அந்தர் பல்டி அடித்து கூட பயணித்து கொண்டே இருப்போம்
நான் படி இல்ல தொங்கி கிட்டே வரேன். அப்பதான் நெனச்சப்ப ஏரிக்க முடியும் நினைச்சப்ப இறங்கி வைக்க முடியும்
Deleteபஸ்சு பின்னாடியே ஓடி வந்தீங்கன்னா டிக்கெட்டே எடுக்கவேண்டியதில்லை பாருங்க ஸ்ரீதரன் ஜி.. 😁
Deleteஅந்த கியரை நீங்கள் கழற்றி விடமால் இருந்தால் ஓகே விஜய் .
Deleteகியரா?!! ஓ.. லாலிபாப் மாதிரி இருக்குமே அதுவா?!! இஞ்ஜின் பக்கத்துல உட்கார்திருக்கும் நம்ம ஜம்பிங் தலீவரின் இடுப்புல இடிக்குதேன்னு நான்தான் அதை அப்போவே கழட்டி அந்தண்டை வீசிட்டேனே!!🤔
Deleteசரி விடுங்க. எல்லாம் நம்ம டிரைவர் பார்த்துக்குவார்!😁
கட்டுபாடுகளின்றி ஓடிடும் வண்டி
Deleteஅப்படிதானே இளவரசரே 😁😁😁
ஆமாங்க சகோ. பஸ்ஸை காடு, மேடு, வாய்க்கா, வரப்பு, மூ. ச ன்னு விட்டு நம்ம டிரைவர் பட்டைய கிளப்பப் போறார்! 😁
Deleteஎல்லாம் சரி வண்டிய மல்லாக்க உருட்டி விடாமல் இருந்தா மகிழ்ச்சி
Delete// முதல்வாட்டியாக அக்கட தேசத்தின் ஆரஞ்ச் கேசக்கார பெரியவரைப் போல, எல்லைகளற்ற சுதந்திரத்தை எனதாக்கிக் கொண்டு அவரைப் போலவே ஒரு தடாலடிப் பயணத்தைத் துவக்கிட உத்தேசித்துள்ளேன்! //
ReplyDeleteசூப்பர் சார். கண்டிப்பாக வெற்றி பெறும் சார்.
என்றும் உங்களுடன் இருப்போம் சார்
நன்றி சார் 🙏
Delete// ஐயையோ.. இது கிராபிக் நாவலாச்சே? அச்சச்சோ.. அது கார்ட்டூனாச்சே..? அடடா.. அது யுத்தக் கதையாச்சே..? ஆத்தாடி இது பழசாச்சே..? என்று இல்லாத சிண்டைப் பிய்த்துக் கொள்ளவும் தேவைகளின்றி... //
ReplyDeleteஇப்படியாவது எங்களுக்கு வருடம் ஒரு எக்ஸ்ட்ரா கார்ட்டூன் கதை கிடைக்க போகுது. ரொம்ப மகிழ்ச்சி சார்.
// தில்லையாடி வள்ளியம்மையுமே தலைகாட்டக் கூடும் //
ReplyDeleteஆரு சார். நின்று போன நிமிடங்கள் ஜூலியா சார்?
PfB.. 😂😂😂😂
Deleteஜூலியா வந்தால் சூப்பராக இருக்கும்
Deleteஎனக்கு ஜூலியா கதைகள் எல்லாம் மிகவும் பிடித்திருந்தது. நமது காமிக்ஸில் வந்த இவரின் முதல் கதை மற்றும் நின்று போன நிமிடங்கள் பேவரைட்.
Delete// இன்று தான் டிசம்பர் 19 to 29 தேதிகளில் சேலம் விழா என்பது உறுதியாகியுள்ளது! //
ReplyDeleteஇத இதத்தான் எதிர் பார்த்தேன். சார் 20-ம் அல்லது 21-ம் (சனிக்கிழமை/ஞாயிற்று கிழமை ) வாசக சந்திப்பு உண்டா சார் ? சிக்கிரம் சொல்லுங்க சார்.
அப்புறம் நமக்கு கண்டிப்பாக ஸ்டால் கிடைக்கும். எனவே வாசகர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள் சார். வருடத்தின் முடிவில் இதுபோன்ற சந்திப்பு எங்கள் அனைவரையும் அடுத்த வருடத்தை எதிர்கொள்ள தேவையான உந்து சக்தியை கொடுக்கும் சார்.
கபீஷ் அடுத்த இதழ் சேலம் புத்தக விழாவில் வர வாய்ப்பு உள்ளதா சார்?
ReplyDeleteயெஸ் சார் 👍
Deleteநன்றி சார் 🤩😍
Deleteசூப்பர்
Deleteஅருமே
Deleteடெக்ஸ் அட்டைப்படம் அட்டகாஷ். பின் அட்டையில் கார்சன் அதுவும் இளமையாக, சூப்பர் சார்.
ReplyDeleteஎங்கள் சுக்கா மன்னன் கார்சனுக்கு பின் அட்டையில் இடம் கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம் சார்.
// நான் பதிவுகளின் பக்கம் சரிவர வராததால் தான் இங்கே தொய்வா? //
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது என்று நீங்கள் வாட்சப் கம்யூனிட்டி போய் விட்டீர்கள் சார். நீங்கள் அங்கே மிகவும் ஆக்டிவாக இருப்பது, பல கேள்விகளுக்கு அங்கு விடை கிடைப்பது புதிய விஷயங்களை பேசுவது பலருக்கு பிடித்து விட்டது எனவே இங்கு வரும் நண்பர்கள் குறைவு அல்லது ஆக்டிவ் ஆக இருப்பதில்லை சார்.
இது எனது எண்ணம் மட்டுமே.
+1
DeleteYes! இதான் உண்மை!!
Deleteகாலத்தால் அழியாத நீடித்த பதிவுகளுக்கு - blog தான் சிறந்தது!
சிம்பிளா சொல்லனும்னா..
Blog - ஒரு புத்தகம் போல!
Community - ஒரு பிட் நோட்டீஸ் போல!!
காலத்தின் கட்டாயம் இரண்டும் தேவை. அதனால் இரண்டையும் தொடரவேண்டும்.
Deleteதிசைகள் நான்கு....
ReplyDeleteவெற்றி முரசு கொட்டும்..
என்பது உறுதி சார்...
இனிய ஆச்சர்ய அதிர்ச்சி..
வாழ்த்துக்கள் சார்..
இளம் டெக்ஸ் இரு பக்க அட்டைப்படங்களும் அருமை சார்..இதழை எப்பொழுது கைகளில் ஏந்துவோம் என்ற ஆவல் இப்பொழுதே ...
ReplyDeleteவன்மேற்கின் அத்தியாயங்கள் தொடருக்கு இனியாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்
ReplyDeleteGood chance to publish CISCO , ALPHA , MAGGI , CARTOONS AND GRAPHIC NOVELS ..
ReplyDeleteசின்ன தவறு in perception நண்பரே!
Delete"அங்கே விடுபட்டுப் போனவை ; இங்கே மூலை சேர்ந்தவை" என்பனவற்றை தாண்டி இங்கு பயணிக்க உள்ளோம்!
For a change, இந்தப் பயணத்தில் என்னை இம்ப்ரெஸ் செய்த படைப்புகள் தான் முன்னுரிமை பெற்றிடும்!
// இந்தப் பயணத்தில் என்னை இம்ப்ரெஸ் செய்த படைப்புகள் தான் முன்னுரிமை பெற்றிடும்! //
Deleteவாரே வா. இது இன்னும் சிறப்பு. கலக்குங்க சார்.
நீங்களா உங்க இஷ்டத்துக்கு தான் புக்கு போடுவீங்க - அப்படித்தானே சார்?
Deleteபோடுங்க போடுங்க!
வாங்குறோம்!😁
ஆனா ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒன்று என்று போட வேண்டாம் சார்.
Deleteவருஷம் 6 புத்தகங்கள் என்று நீங்கள் மனதில் நினைத்து இருந்தால்
அவை அந்த வருடத்தில் கண்டிப்பாக வரும்மாறு ஆனால் உங்களுக்கு தோதான நேரத்தில் வருமாறு செய்யுங்கள் சார்.
*ஒரு மழை பெய்து பூமி குளிர்ந்த நாள்....!
Delete*நல்ல மரங்கள் மண்டிய அழகான சாலை!
*ஒண்டியாய் நீங்களே நீங்கள் மட்டும்!
*இத்தனை மணிக்கு ஊடு திரும்பணும்... பத்து பாத்திரம் தேய்க்கணும்..என்ற நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி ஆராமாய் வாக்கிங் போகும் ஒரு வாய்ப்பு!
*உசிரை வாங்க செல்போனும் நஹி!
இந்த வேளையில் - "இன்னிக்கி 6000 steps நடந்தே தீரணும் ; 280 calories காலி பண்ணியே தீரணும்" - என்ற ரீதியிலான கட்டுப்பாடுகள் / இலக்குகள் சுகம் சேர்க்குமா? சுமை சேர்க்குமா?
சொல்லுங்கோ சார்?
//For a change, இந்தப் பயணத்தில் என்னை இம்ப்ரெஸ் செய்த படைப்புகள் தான் முன்னுரிமை பெற்றிடும்//
DeleteThat's something definitely to look forward to
எல்லாம் சரிதான் சார். ஆனால் எப்ப வருமோ என்று எங்களை ரொம்ப காத்திருக்க வைத்தது விடாதீர்கள் சார்.🙏🏻
Delete// நீங்களா உங்க இஷ்டத்துக்கு தான் புக்கு போடுவீங்க - அப்படித்தானே சார் //
Deleteஅதே அதே சபாதே
சூப்பர்
Delete//For a change, இந்தப் பயணத்தில் என்னை இம்ப்ரெஸ் செய்த படைப்புகள் தான் முன்னுரிமை பெற்றிடும்!//
Deleteright sir .. give some surprise lyk manga , batman ..
"இளவேனிற் காலப் பொழுது அது- சலனமின்றி ஓடிக் கொண்டிருந்த நதியின் அமைதி அங்கு நிலை கொண்டிருந்த படகுகளையும் ஆட்கொண்டிருந்தது"
Delete*ஒரு மழை பெய்து பூமி குளிர்ந்த நாள்....!
*நல்ல மரங்கள் மண்டிய அழகான சாலை!
*ஒண்டியாய் நீங்களே நீங்கள் மட்டும்!
smooth heart touching words, our Editor becomes a poet.
பதிவு கம்யூனிட்டி இது இரண்டுமே வேண்டும்.
ReplyDeleteவாரம் தவறாமல் அவசியம் பதிவு வர வேண்டும் சார்.
கம்யூனிட்டி என்பது தினந்தோறும் சாப்பிடும் சாப்பாடு மாதிரி.
ReplyDeleteயாரப்பதிவு என்பது ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டு போன்று. எனவே இரண்டும் வேண்டும் சார். பதிவிலும் ஆக்டிவாக இருப்போம் கம்யூனிட்டிவிலும் ஆக்டிவாக இருப்போம்.
Good 👍👏👏
Delete🤩✅
DeleteAbsolutely correct Sir
Deleteவாரப்பதிவு
ReplyDeleteதிசைகள் நான்காக இருந்தாலும் சரி நாற்பதாக இருந்தாலும் சரி எங்கள் பயணம் உங்களோடு
ReplyDeleteஅதே அதே
DeleteThanks a ton👍😊Very good initiative and we will always support you!
ReplyDeleteபுதிதாக வரும் ஒரு கார்ட்டூன் உங்களை இம்ப்ரஸ் செய்தால் அதையும் களம் இறக்குவீர்களல்லவா?
ReplyDeleteWill support ur effort sir. Great news.
ReplyDeleteகண்டிப்பாக உண்டு
ReplyDelete
ReplyDelete---------- Forwarded message ---------
From: Selvam
Date: Sun, 30 Nov, 2025, 11:47 pm
Subject: MPD
To: Selvam
எடிட்டர் சார் பன்மனப்பான்மை ஆளுமை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது போல் தெரிகிறது 😁.
1. அம்பி : சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் வரும்படி சந்தா புத்தகங்களை தீர்மானிப்பது. அதன்படியே நடப்பது
2. ரெமோ:
சித்திரக் கதைகள் மேல் காதல்
பீறிடும்போது சாம்பலின் சங்கீதம்,
போன்ற சிறப்பு வெளியீடுகள்
3. அன்னியன்:
இது எல்லாம் போதாது என்று காமிக்ஸ் மீது உள்ள காதல் பொங்கி வெடிக்கும் போது
திசைகள் நான்கு போன்றவை வெளிப்படுகின்றன 😊. இந்த அவதாரை கட்டுப்படுத்துவது கடினம். நினைத்ததை நினைத்த நேரத்தில் வெளியிடும் ஆக்ரோஷமான அவதார். 😊.
திசைகள் நான்கு ஜெயிக்கும். ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வைப்போம்.💐
சூப்பர் செல்வம் அபிராமி சகோ
Deleteஇதுபோன்று ரசனையான பதிவுக்கு காத்திருந்தேன்
ஹா ஹா.. செமயா சொன்னீங்க செனா அனா!!😁😁😁
Delete///பன்மனப்பான்மை///
ஓ.. இப்பதான் புரிகிறது!! அதனால்தான் அடிக்கடி பன்னுகள் பரிசளித்து நம்மை பரவசப்படுத்தியிருக்கிறார் போல!🤔
ஓ.. இப்பதான் புரிகிறது!! அதனால்தான் அடிக்கடி பன்னுகள் பரிசளித்து நம்மை பரவசப்படுத்தியிருக்கிறார் போல!🤔
Delete😂😂😂
@ ரம்யா சிஸ்..
Delete😊😊😊
This comment has been removed by the author.
ReplyDelete152nd
ReplyDeleteஅட , ஆமாம்ல , ஜம்போ காமிக்ஸ் நின்று விட்ட்து. 'திசைகள் நான்கு' என்னும் உங்கள் ஐடியா க்கு மனமார்ந்த வரவேட்பு சார்!
ReplyDelete"புயலில் ஒரு சூறாவளி" இல் இளம் டெக்ஸ் இனை விட கட்டிளம் காளை கார்சன் இனை தரிசிக்க ஆவல்.
ReplyDeleteதிக்கெட்டும் முரசுகள் கொட்டட்டும்.
ReplyDeleteதிக்கெட்டும் புகை சமிஞைகைகள் பரவட்டும். அனைத்து ஜானர் கதைகளையும் படிக்கும் என் போன்றவர்களுக்கு இது ஒரு தலைவாழை விருந்து என்று ஊர் எங்கும் அறிவிக்கட்டும்.
முழங்கட்டும் முரசு.
பறக்கட்டும் புகை சாமிஞை.
🎆🎆💪💪💪💪
திசைகள் நான்கு: லோகோ + கொடுக்க பட்ட வண்ணம் + காம்பஸ் சித்திரத்தின் துல்லியம் செமயாக இருக்கிறது.
ReplyDeleteஅட்டகாஷ்
+1
Deleteஎனக்கு இது போன்ற கலர் combination ரொம்ப பிடிக்கும்.
Delete///எனக்கு இது போன்ற கலர் combination ரொம்ப பிடிக்கும்.///
Deleteவெளிர் மஞ்சள் + லைட் பிரவுன் combo!
இந்த கலர் காம்போ பிடித்துப்போவதில் ஆச்சரியமில்லை தான்! ரவுண்டு பன்னின் நிறம் கூட இதுதான்! முதுகுப்புறம் - லைட் பிரவுன், நெஞ்சுப்புறம் - வெளிர் மஞ்சள்!😁😁
//எனக்கு இது போன்ற கலர் combination ரொம்ப பிடிக்கும்.//
Deleteஅருமை சகோ
எனக்கும் - Hifive
"பன்"பான இளவரசரே 😁😁😁
Deleteநன்றி ரம்யா.
Deleteவிஜய் @ பன் கனவுகளுடன் தூங்க குட் நைட் 😴
திசைகள் நான்கு ஒரு நல்ல independent effort. "Rome" albums வெளியிட முயற்சியுங்கள் எடிட்டர் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்ன குமாரு நாளைக்கு ரெடியா?
ReplyDeleteபுத்தகம் நாளை கிடைக்குமா? அல்லது தாமதமாகுமா?
விடை நாளைய பதிவில்
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteடிசம்பர் மாத புத்தகங்கள் எப்போது கிடைக்கும் சார்?
டிசம்பர் மாதம் கிடைக்கும்
Deleteஎப்படிபட்ட வரிகள்...
Delete🤩☺️😉😍
Deleteஎல்லாருமே காத்துக் கிட்டு இருக்கோம்.
ReplyDeleteஎங்கப்பா நம்ப கடலம்மாவ காணோம். இன்றைக்கு சனிக்கிழமை என்பதை மறந்து விட்டார் போல.
ReplyDelete