நண்பர்களே,
வணக்கம்! "பு பா மான், ஜியூ பா டிங்''! இன்னா மேன் - ஆரம்பமே ஒரு மார்க்கமா கீதே? என்று புருவங்களை உசத்துகிறீர்களா? மேற்படி வரி சீன மொழியில் ஒரு பழமொழி! அதாவது- "மெல்ல மெல்ல அடி வைத்து நடப்பதை எண்ணித் தயங்காதே! நடையே போடாமல் ஒற்றை இடத்தில் தேங்கிக் கிடப்பதை எண்ணி மட்டுமே பயம் கொள்!'' என்று பொருளாம் இதற்கு! "ஆஹாங்?'' என்கிறீர்களா? Oh yes- இம்மாதத்தின் V காமிக்ஸ் இதழானது தான் எங்கோ, எப்போதோ படித்த இந்த வரியைத் தேடிப்பிடித்து நினைவுபடுத்திக் கொள்ளத் தூண்டியது!
"வதம் செய்வோம் வேங்கைகளே!'' இம்மாதத்தின் டபுள் V காமிக்ஸ் இதழ்களுள் ஒன்று! நாயக/நாயகியரென்று யாருமில்லாத; கதையே ஹீரோவென்றானதொரு கிராபிக் நாவல்! பொதுவாய் கி.நா.க்கள் என்றாலே heavyweights வெளிவரும் மாதத்தில் அவற்றைக் கண்ணில் காட்டவே மாட்டேன் தான்! சுமோ மல்யுத்த வீரர்கள் கச்சை கட்டிக் கொண்டிருக்கும் போது ஓமகுச்சி நரசிம்மனை உள்ளே புகுத்திய கதையாகிடக் கூடுமே என்ற பயத்தில்! ஆனால், இந்த முறை ஒன்றுக்கு இரண்டாய் ஜாம்பவான்கள் டெக்ஸ் & ஸாகோரின் ரூபத்தில் களம் காணும் போதிலும் இந்த கி.நா.வை கோதாவுக்குள் இறக்கி விடத் தோன்றியது - simply becos இதனில் தென்பட்டதொரு இனம் புரியா வசீகரம் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையிருந்தது! ஆனால், ஜாம்பவான்களையே ஓரமாய்ப் போய் விளையாடச் சொல்விட்டு "வதம் செய்வோம் வேங்கைகளே'' முன்சீட்டைப் பிடுத்திடுமென்றெல்லாம் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை தான்! Of course - இது முதல் வாரம் மட்டுமே! And துவக்க அலசல்களை மட்டும் தான் பார்த்திருக்கிறோம்! இருந்தாலுமே பாராட்டுகளின் அந்த scale - இந்த ஆல்பத்தின் தாக்கத்தை அழகாய் உணர்த்துகின்றன! " சரி, ரைட்டு- இதுக்கும், ஆரம்பத்தில் நீ அலம்பல் விட்ட சீனப் பழமொழிக்கும் இன்னாய்யா சம்மந்தம்?'' என்கிறீர்களா? சொல்கிறேனே!
2026-ன் அட்டவணை கிட்டத்தட்ட ரெடி என்ற நிலை! ஆகஸ்டில் தான் ஐரோப்பியக் கோடை விடுமுறைகள் என்பதால் நமது படைப்பாளிகளில் பலரும் நெடும் லீவில் இருக்க, இறுதி இரண்டு ஆல்பங்களுக்கான ஒப்புதலை மட்டும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்! இந்த இரண்டுமே கிட்டியவுடன் "சுபம்'' சொல்லிவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பலாம் தான்! ஒவ்வொரு ஆண்டுமே அட்டவணையினை நான் இறுதி பண்ணும் காகிதத்தின் ஒரு மூலையில் கடைசி நிமிடத்தில் ஏதேதோ காரணங்களால் தேர்வு காணத் தவறிய கதைகளை சின்னதாயொரு லிஸ்ட் போட்டு எழுதி வைத்திருப்பேன்! Maybe இடைப்பட்ட நாட்களில் ஒரு window கிட்டினால் யாரை நுழைப்பதென்ற தடுமாற்றமே வேணாமென்ற நோக்கத்தில்! And இம்முறையும் அதைப் போலவே ஒரு list ஓரமாய் இருந்தது தான்! அவற்றுள் இடம் பிடித்திருந்த ஆல்பங்களோ - ஜாம்பவான் ஹீரோக்களையோ, ஹீரோயின்களையோ கொண்டதாக இருக்கவில்லை! மாறாக- கடைசி ஒரு மாதமாய் நான் உருட்டிப் பிடித்த சில வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட one-shots அவை! ஒரு வேகத்தில் அவற்றையெல்லாம் பரிசீலனைக்கு செம சீரியஸாய் எடுத்துக் கொண்டிருந்தேன் & அவற்றிற்கான விலைகளையும் கணக்கிட்டு மொத்தமாய் பட்ஜெட் போட்டும் பார்த்தேன்! அங்கே அடிச்சது தான் ஜெர்க்! மொத்த சந்தாத் தொகை நாம் விடாப்பிடியாய் தொங்கிக் கொண்டு திரியும் அந்த ஆறாயிரத்தைத் தாண்டிச் சென்றிருந்தது! ஆஹா.. அது தப்பாச்சே?! என்றபடிக்கு எவற்றையெல்லாம் லிஸ்டிருந்து அப்புறப்படுத்தலாமென்று யோசிக்க ஆரம்பித்தேன்!
🕸️ஆங்.. இவரு பெரிய "தலக்கட்டு''! இவருக்குக் கல்தா தந்தா - குரல்வளையில் கடி வாங்க நேரிடும்!
🕸️அச்சச்சோ.. இவரா? இவரு பயங்கரமான ஆளாச்சே?
🕸️ஆத்தீ.. இந்த யீரோயினி இல்லாட்டி தமிழகமே கொந்தளிச்சிடுமே?!
என்று பல சிந்தனைகள் தலைக்குள் ஓட- அந்தக் கத்திரி போடும் லிஸ்டிலிருந்து hero centric கதைகளின் பெரும்பான்மை தப்பிவிட்டன ! And பாவப்பட்ட 'கதையே, ஹீரோ' களங்கள் கீழேயிருந்த அந்த ஒப்புக்குச் சப்பாணி லிஸ்டிற்குக் குடி மாறிச் சென்றிருந்தன! இங்கே தான் உட்புகுகிறது "வதம் செய்வோம் வேங்கைகளே''!!!
பெரிய பெயர்கள் எல்லா நேரங்களிலும் தேவையல்ல! பெரிய பெரிய பில்டப்கள் சதா சமயங்களிலும் ஜெயத்துக்கு உத்தரவாதம் தருபவையல்ல! படைப்பினில் வீரியமிருந்தால், ஜாம்பவான்களையே தண்ணீர் குடிக்கச் செய்யலாமென்று இந்த ஒற்றை ஆல்பம் உணர்த்தியுள்ளது! So "இவுகள்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டோர்; அட்டவணைகளில் நிரந்தரர்கள்!'' என்றிருந்த சில மிதமான performers-களை ஓரம் கட்டவும் செய்யலாம் போலும் ; உலகம் நிச்சயமாய் மாற்றிச் சுழலவெல்லாம் செய்யாது! சரக்கு முறுக்காக இருந்தால் big names-களை சற்றே ஓய்வெடுக்க அனுமதிக்கவும் செய்யலாமென்ற தைரியத்தை எனக்கு "வதம் செய்வோம் வேங்ககைளே'' தந்துள்ளது! So அந்த நாயக பிம்பங்களோடு ஒரே இலக்கில் நிலை கொண்டிருப்பதை இனியும் தொடராமல், நல்ல கதைகளென்று மனதுக்குப்படுபவற்றினை அட்டவணைக்குள் நுழைப்பதில் பிழையில்லை என்ற புரிதலோடு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க நினைக்கிறேன் 2026-ன் அட்டவணையினில்! "பு பா மான்.. ஜியூ பா டிங்..!'' So wish me luck folks!
🗿கிழிஞ்சது! வருஷம் முழுக்க கி.நா.க்களைப் போட்டு இனி முழியாங்கண்ணன் கொலையா கொல்லப் போறானா?
🗿சொந்தக் காசிலே சூனியம் வச்சுக்கலாம்! ஆனா, நம்ம காசிலேல்லே விளையாடப் போறான்?
🗿போச்சா? "அவர்" கிடையாதா? "இவர்" கிடையாதா? உருப்பட்ட மாதிரித் தான்!
🗿ஒரு கதையை ரசிச்சது தப்பாய்யா? அதுக்கோசரம் ஓடற குதிரைகளை.. லாயத்திலே பிடிச்சா அடைப்பே?!
என்று பற்பல சிந்தனைச் சிதறல்கள் ஆங்காங்கே தெறிக்குமென்பதை யூகிக்க முடிகிறது! எனது பதிலோ ரெம்ப சிம்பிள்! சாதித்துக் காட்டிவரும் நாயக/நாயகியர் யாருக்குமே இடமில்லாமலோ ; உரிய மருவாதிகளோ இல்லாது ஒருக்காலும் போகாது! மாறாக, பெருங்காய டப்பிகளை நினைவூட்டும் பார்ட்டிகள் மட்டுமே கொஞ்சமாய், சுழற்சி முறையில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவர் ! அவர்களது ஸ்லாட்களில் மாத்திரமே இந்த "கதைகளே ஹீரோஸ்'' என்றான ஆல்பங்கள் உட்புகக் கூடும்! And மொது - மொதுவென கணிச எண்ணிக்கையிலும் அவை இராது; இரண்டோ- மூன்றோ slots கிட்டினாலே பெரிய பாடு!
So மெது மெதுவாய் அடியெடுத்து, சின்னச் சின்ன மாற்றங்களை நோக்கி மெதுநடை போடலாமா? என்பதே இம்மாத கி.நா.வின் சிலாகிப்புகள் என்னிடம் சொல்லும் சேதி! பார்ப்போமே - இதை நடைமுறை செய்திட முடிகிறதா? என்று ! யார் கண்டது- கடைசி நொடியில் பயம் மேலோங்க "இது எதுக்கு விஷப் பரீட்சை?" என்றபடிக்கே "நாயகரே பலம்''என்று நான் பால் மாறிடவும் வாய்ப்புண்டு தான்! But இந்த நொடிக்கு - சமுராய் பெரியவர் தந்திருந்த கெத்தில் மீசையை லைட்டாக முறுக்கித் திரியத் தோன்றுகிறது!
இம்மாத இளம் டெக்ஸ்+ ஸாகோர்+ சிக் பில் நிச்சயமான breezy reads என்பதால் அவை சீக்கிரமே உங்களது வாசிப்புகளுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளது! அந்த நம்பிக்கை தரும் தைரியத்தில் பெரிய பில்டப்களின்றி அடுத்த மாதம் காத்துள்ள தீபாவளி மலர் பணிகளுக்குள் மும்முரமாகிடத் தோன்றுகிறது! And காத்துள்ள கலர் டெக்ஸ் அதிரடி- block buster என்பதில் இம்மி கூட சந்தேகமில்லை எனக்கு! அது என்னவோ தெரியலை- சமீப காலங்களில் "தல'' மெக்ஸிக மண்ணை மிதிக்கும் போதெல்லாம் அனல் பறக்கிறது! Mexico Magic ஸ்பெஷலின் இரண்டு ஆல்பங்களும் பட்டையைக் கிளப்பிய அதே பாணியில் தீபாவளி மலரிலும் நம்மவர் மெக்சிகோவில் போட்டுத் தாக்குவது வேற லெவல்! So 336 பக்கங்களா??? என்று துவக்கத்தில் வாயைப் பிளந்தவன்- கதைக்குள் ஐக்கியமான சற்றைக்கெல்லாம் செம குஷியாகிப் போனேன்! தீபாவளிக்கு அற்புதமாய் மெருகூட்ட "தல'' சீக்கிரமே ரெடியாகிடுவார்! இங்கே ஒரே சிக்கல் தீபாவளி அக்டோபரின் மூன்றாம் வாரம் வரை தள்ளிப் போவது தான்! அக்டோபர் ஆரம்பத்திலேயே தீபாவளி இதழ்களை அனுப்பி விட்டால், பண்டிகை நேரத்துக்கு இவை பழசாகியிருக்கும்! So கொஞ்சமே கொஞ்சமாய் அக்டோபர் இதழ்களை லேட்டாய் அனுப்பலாமா? என்ற சிந்தனையும் ஓடுகிறது! What say folks??
அப்புறம் நமது கம்பேக்குக்குப் பின்பான சில out of stock டெக்ஸ் ஆல்பங்களை மறுபதிப்பிட எண்ணி வருகிறோம் - 2026-ன் புத்தகவிழா circuit-க்காக! அவற்றுள் ஒரு பகுதியாய் 'தலையில்லாப் போராளி'' MAXI சைஸில், கலரில் போட்டுத் தாக்கிடலாமா? என்ற திட்டமிடலும் உள்ளது! இது முழுக்கவே நமது இரண்டாவது இன்னிங்ஸின் பின்பான மறுபதிப்புத் திட்டமிடலே! ஆகையால் ரொம்ப முந்தைய டெக்ஸ் சாகஸங்கள் இதனில் இடம்பிடித்திடாது!
அப்புறம் அந்த golden age டெக்ஸ் க்ளாஸிக்ஸ் மறுபதிப்பு(கள்) தெறி கலரில் வரவுள்ளதைப் பற்றியுமே வாகானதொரு வேளையில் திட்டமிடலாம் folks! That again will be for later in 2026!
Bye for now! See you around! Have a wonderful weekend 👍
ஹாய்
ReplyDeleteசூப்பர் சகோ
Delete🙏
Deleteஅட கலக்குறீங்க அறிவரசு
Deleteஹைய்யா புதிய பதிவு.....
ReplyDeleteவணக்கமுங்க
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteMe in😘💐👍
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete9th
ReplyDelete10 kulla
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete// இனம் புரியா வசீகரம் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையிருந்தது! //
ReplyDeleteசரிதான் சார்...
வணக்கம்
ReplyDelete// தீபாவளி மலரிலும் நம்மவர் மெக்சிகோவில் போட்டுத் தாக்குவது வேற லெவல்! //
ReplyDeleteதீபாவளி மலர் தெறிக்குது...
// So கொஞ்சமே கொஞ்சமாய் அக்டோபர் இதழ்களை லேட்டாய் அனுப்பலாமா? //
ReplyDeleteஆயுத பூஜை அக்டோபர் 1,2 இல் வருது,அப்ப அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் ?!👀👀👀
😂😂😂
Deleteடெக்ஸ் கிளாசிக் ஏதாவது வந்தால் நன்றாக இருக்கும்.
Deleteதீபாவளி அட்டைப்படம் அடிதூள்
ReplyDeleteபின்னட்டை 😊😊😊👌👌👌👌
அப்புறம் சார், கதை தலைப்பு தேர்வு செஞ்சாச்சாசுங்களா,😁😁😁
இந்த தீபாவளி டெக்ஸ் கதைக்குதான், கம்னியூட்டி யில் நிறையா குடுத்து இருந்தோம்😅😅😂😂😂
// தலையில்லாப் போராளி'' MAXI சைஸில், கலரில் போட்டுத் தாக்கிடலாமா? //
ReplyDeleteசிறப்பு...
தீபாவளிக்குன்னா இன்னுஞ்சிறபப்பு
Deleteஇந்த மாதம் வந்த புத்தகங்களில் லயன் காமிக்ஸ் மிஸ்ஸிங். இது போல் நமது மறுவருகைக்கு பிறகு லயன் பேனரில் புத்தகம் மாதம் உண்டா நண்பர்களே. சரியான விடையை சொல்பவர்களுக்கு கம்பெனி சார்பாக ரவுண்டு பன்னு பரிசு ☺️
ReplyDeleteOctober புத்தகங்கள் Septemberலியே வந்தால் நன்றாக இருக்கும் சார்...
ReplyDelete1000 பக்கம்பு ஆயிரம் பக்கம் அப்பு
Deleteசார் தீபாவளிக்கு எதுனா ....மறுபதிப்பு .இப்பத்திலிருந்து முன் பதிவு ஆரம்பிக்கலாங்களா
ReplyDeleteஇந்த வருடம் டெக்ஸ் கிளாசிக் மறுபதிப்பு கதைகள் உண்டா சார், அதாவது நமது மறுவருகைக்கு முந்தைய கதைகள்?
ReplyDeleteபுதிய கி.நா-க்களுக்கு ஜெ
ReplyDeleteதீபாவளி முன் மற்றும் பின் அட்டைகள் அட்டகாசமாக உள்ளது சார். செம மாஸ்.
ReplyDeletePresent sir
ReplyDelete// ஆங்.. இவரு பெரிய "தலக்கட்டு''! இவருக்குக் கல்தா தந்தா - குரல்வளையில் கடி வாங்க நேரிடும்! //
ReplyDeleteநம்ப இளவரசர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார் சார்.ரவுண்டு பன்னு கொடுத்தா குஷி ஆகிவிடுவார் சார்.
நல்லா சொல்லுங்க PfB! பன்னையும், சம்சாவையும் கடிக்கவே நேரம் பத்தலையாம்.. இதுல குரல்வலைய எங்க கடிக்க?!! அப்படியே கடிக்க நேர்ந்தாலும், கடிக்கும்போது கொஞ்சம் அண்ணாந்து அவரோட கண்ணை பார்த்துப்புட்டேன்னா அப்புறம் என் சோலி முடிஞ்சுடுமே?!!🥶
DeleteROFL
Delete// ஒரே இலக்கில் நிலை கொண்டிருப்பதை இனியும் தொடராமல், நல்ல கதைகளென்று மனதுக்குப்படுபவற்றினை அட்டவணைக்குள் நுழைப்பதில் பிழையில்லை என்ற புரிதலோடு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க நினைக்கிறேன் //
ReplyDeleteஇந்த பதிவில் இது தான் சார் ஹைலைட். சரியான முடிவு.
புதிய முயற்சிக்கு வெற்றி கிட்டுகையில் நிச்சயம் மகிழ்ச்சியே.. கொள்கைப் பிடிப்புள்ள ஜப்பானிய சாமுராய் வீரர்கள் வெற்றி காண்பது அருமை.. தொடருங்கள் இப்படிப்பட்ட ஒன் ஷாட் முயற்சிகளை சார்.
ReplyDeleteவிஜயன் சார், 2026 இல் கி. நாக்கள் குறைந்தது 3 ஆச்சு தேவை 🙏
ReplyDelete2026க்கான காமிக்ஸ் அட்டவணை 90% தயார் என்பது மகிழ்ச்சியான செய்தி சார்.
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDeleteசார் முன்னாடியே இதை அனுப்பி விட்டு தீபாவளிக்கு வேறு ஸ்பெசல் திட்டமிடலாமே...
ReplyDelete👍😁
Deleteஅதே குமார்...தீபாவளிக்கு நிச்சயமா ஏதாச்சும் வேணும்
Deleteஆமாம் வீட்டுல ஏதாவது உனக்கு சாப்பிட கொடுப்பாங்கல. தைரியமாக இரு
Deleteஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய இரவு வணக்கம்..
ReplyDeleteசார்.. எனக்கு சுத்திவளைச்செல்லாம் பேசத் தெரியாது! நச்சுனு சொல்றேன்.. 'தீபாவளி மலர் - அதுவும் 'தல' தீபாவளி மலர் - அதுவும் கலர்ல - அதுவும் இளவரசர் சைஸ்ல - என்னிக்கு எங்க கைகளில் கிடைக்குதோ - அன்னிக்கு தான் எங்களுக்கு நிஜமான தீபாவளி!!
ReplyDeleteஇனி உங்க வசதியப்போல செய்யுங்க!
பி. கு : அக்டோபர் 1ம் தேதியே புத்தகத்தை அனுப்பினாலும் நாங்க படிச்சு முடிக்க எப்படியும் தீபாவளி ஆகிடும்!
இனி உங்க இஷ்டம்!!😌
போல ஆசப்பட்டா தீபாவளிக்கு ஓர் கதை வரட்டுமே பழசாயிடுமென எண்ணமிருந்தா
Deleteசுத்தி வளைச்சு பேசுவது கடினம் என்பது புரிந்து கொள்ள முடிகிறது இளவரசரே
Deleteஅதுவும் இளவரசரை சுத்தி வந்து பேசுவது ரொம்ப கடினம். அப்புறம் நான் இளவரசரின் இடையை சொல்லவில்லை.
Deleteஇளவரசர் சொல்லுறத பார்த்தா அவருக்கு தீபாவளி எல்லோரும் கொண்டாடும் தேதி தெரியவில்லை என்று நினைக்கிறேன், அதைதான் இப்படி சுத்தி வளைத்து சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
Delete//அதுவும் இளவரசரை சுத்தி வந்து பேசுவது ரொம்ப கடினம். அப்புறம் நான் இளவரசரின் இடையை சொல்லவில்லை.//
Delete😂😂😂😂😂
PfB!! 😁😁 காலையிலேயே செம ஃபார்ம்ல இருப்பீங்க போலிருக்கே?!! வீட்டுக்காரம்மா ஊருக்கு போயிருக்காங்களாக்கும்?!!😝😝
Deleteஇல்லை பக்கத்துல தான் இருக்காங்க
Deleteஉங்க மனோதிடம் ஆச்சரியப்படுத்துங்க PfB!!😁😁
Delete😂 சத்தமாக சொல்லாதீங்க
Deleteஅதானே பார்த்தேன்!! தூங்கிட்டிருந்துப்பாங்க போல!!😁😁😁
DeleteThis comment has been removed by the author.
Deleteமெடிட்டேட் பண்ணுறாங்க
Delete40th
ReplyDeleteHi..
ReplyDeleteசூப்பர் சார்....சில கதைகள் சூப்பரா இருந்தும் விற்பனையாகாதது ஆச்சரியம் தருது....சில கதைகள் சூப்பரா இருந்தும் விற்பனையாகுது....கொண்டாட்டம்தான்.திண்டாட்டம்தான்...சித்திரமும் கொலைப் பழக்கம் போல....இங்கும் அந்தத் தலைப்பே நிலை என்பது போல வேடிக்கையான வேதனைதான்...உங்க ஆசைப்படி புத்தகம் படிச்சு விமர்சிப்பதால் உங்களுக்கும் ஓர் எனர்ஜி தரும் என்பதை இந்த திகில் டெரர் லைப்ரரி உணர்த்துவது அருமை...நேத்து சும்மா எடுத்து படித்தேன்...அள்ளிச் செல்லுது மனதை சித்திரத் தரங்களும்...தவறு செய்தால் தண்டனை எனும் எச்சரிக்கையும் ...வேற லெவல் ஓவியங்களும்...சிறுவர்கள் காண்/ன நன்னெறிக் கதைகள்னு தலைப்பை மாத்தலாமோ....நாளைய உலகம் சொல்லும் சார் ...தயவு செய்து சமந்தாவை உயர்த்துங்கள்....அந்த ஐநூறு சொச்சம் நிச்சயமா எதை விட்டாலும் வாங்கிடுவோம்...வேண்டாமென்போர் செலக்ட் செய்து வாங்கிடலாமே....மெதுவாய் வருவோரும் வரட்டும்...
ReplyDeleteதீபாவளி அட்டையே தெறிக்க விடுவதே சார்
Deleteவணக்கம் நண்பர்களே..
ReplyDelete"தீவிரவாதி சிக்பில்"
ReplyDelete'டாக்புல் & கிட் ஆர்டின்' மசாலாக்கள் கலந்த சூடான பிரியாணி.
மேலே 'தீவிரவாதி சிக்பில்' ன்னு முட்டை வேற!
ஙே! சூப்பரப்பு! ஒரு பிடிபிடிதான்!
அப்படின்னு படிச்சு முடிச்சா.....
அய்யய்யோ!
புளியோதரை மேலே முட்டையை வைச்சு பிரியாணின்னு கொடுத்திருக்காங்கப்பா!'
பின்ன என்னங்க!
பழைய எம்ஜிஆர் காலத்து கதை. கிளைமாக்ஸில நடந்தது என்ன? ன்னு சுருள் சுருளா வட்டம் போட்டு flashback வேற காட்டுறீங்க!
இதுல, ஒரு ஸ்பூன் 'வெற்றி விழா', ஒரு ஸ்பூன்
'போக்கிரி' படம்ன்னு கலந்து கிண்டி எடுத்து, பிரியாணின்னு கொடுக்கலாமுங்களா! இது ஞாயங்களா!
மேலே கலர் கலர் வடகம் வேற! அது மட்டும் தான்ங்க நல்லா இருந்தது.
அட! நம்ம எடிட்டரோட வசனங்களைத் தாங்க சொல்றேன்.
'அங்கேதான் பளிங்காட்டம் காலியா கிடக்குதே'
'டேய், ஒரு கட்டை பிரம்மச்சாரிக்கு கால்கட்டா போடறீங்க'
'மயிரே இல்லாதவர் மயிரிழையில் தப்பிச்சாரா?'
இந்த மாதிரி மொறு மொறுன்னு வடகம் மென்று கொண்டே, லேசா புன்முறுவல் செஞ்சிட்டோமுங்க!
அப்படியே, மெக்ஸிக்கோ எல்லையில ரியோகிராண்டே ஆறு ஓடுதுன்னாவது தெரிஞ்சுக்கிட்டோமுங்க!
அப்புறம்,
அந்த சிக்பில்லோட 'கண்டவுடன் சுடும் உத்தரவு' போஸ்டர் மட்டும் வுட்சிட்டிக்கு இன்னும் வரலீங்கறாங்கங்கங்க!
ஒரு வேளை சிவகாசியிலேயே தங்கிடுச்சா? 😉
சிரிங்கோ!
சாரி! சரிங்கோ!
வரனுங்கோ! 🫠 🙄
ஹா ஹா!!😁😁😁😁 கண்ணன் சார்.. நீங்களா இது!! காமெடியா எழுதியும் கலக்கறீங்களே!!! செம செம!!💐💐💐😍😍😍
Deleteநன்றி நண்பரே 😊
Deleteசிறப்பு
Delete// அந்த சிக்பில்லோட 'கண்டவுடன் சுடும் உத்தரவு' போஸ்டர் மட்டும் வுட்சிட்டிக்கு இன்னும் வரலீங்கறாங்கங்கங்க!
Deleteஒரு வேளை சிவகாசியிலேயே தங்கிடுச்சா? //
ROFL
ஆமாம் நண்பரே! கர்னல் கையெழுத்து போடும் முன்னரே போஸ்டரை அனுப்பி விட்டோமே என்று பதறினார்கள். ஏதோ சம்பவம் நடக்கும் போல என்று எதிர் பார்த்திருந்தேன். போஸ்டர் என்னாச்சு என்றே தெரியவில்லை.
Deleteஅதனால் அப்படி ஒரூ வர்ணனை.! ஹி..ஹி..😉
வரிகளைக் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே!👍
"எட்டும் தூரத்தில் யுத்தம்"
ReplyDeleteதீவிரவாதி சிக்பில்லைப் படித்து விட்டு, இந்த கதையைப் படித்தால், கற்பனைக்கதைக்கும், நிஜத்தின் அடிப்படையில் உருவான கதைக்கும் தான் எத்தனை வேறுபாடு.!
அட்டையைப் புரட்டியதுமே 'சிந்தியா ஆன் பார்க்கர்' பற்றிய சரித்திர நிகழ்வுகளைப் பார்த்து, மனம் லேசாய் கனமாய்ப் போனது.
அந்தப் பெண்மணி பற்றிய கதையா இது என்று மேலும் படித்தேன்.
இறுக்கமான முகத்தோடு, கமான்சேக்களின் தலைவனாக, போராளியாக அந்தப் பெண்ணின் மகன் கிவானா பார்க்கர்.
வெள்ளையர்களுக்கும், கமான்சேக்களுக்கும் மூளப் போகும் யுத்தம்தான்...
'எட்டும் தூரத்தில் யுத்தம்'.
இதற்குள், டெக்ஸ், சாஹோர், கிட் கார்சன் என அனைவரும் யுத்தம் மூளாமல் இருக்க போராடுகிறார்கள். அவ்வப்போது அடிதடி, ஆக்க்ஷன் என்று கதை பறக்கிறது.
நடுவில் பாசம், சோகம், துரோகம், வஞ்சம் என அனைத்தும் கலந்து கட்டி, கதையில் பயணிக்கின்றன.
ஓவியங்கள் தெளிவாக கதைக்கு கை கொடுத்துள்ளன.
நிஜத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அக் காலத்தில் இப்படி ஒரு போராட்டமா என்று யோசிக்க வைக்கிறது.
வசனங்கள் கதையோட்டத்துக்கு இயல்பாக இருக்கின்றன.
படித்து முடிக்கும் போது, கதையாகவும், ஆக்க்ஷனாகவும், மனிதர்களின் மாறுபட்ட குணங்களாகவும், சரித்திரமாகவும் எல்லாம் கலந்த உணர்வு ஏற்படும்.
Excellent
Deleteசூப்பர்!!💐😍😍😍
DeleteHappy sunday folks
ReplyDeleteசார்...இதழ்கள் வரும் நாளே எங்களுக்கான தீபாவளி எனவே வழக்கம் போல் கொண்டு வாருங்கள் சார்...இதுவே ஏமாற்றம் போல் உள்ளது சார்..ஏனெனில் தீபாவளி மாதத்தில் இரண்டே இதழ்கள் தான் என அடுத்த வெளியீடு விளம்பரம் பார்க்கையில் கொஞ்சம் வெறுமையும் ப்ளஸ் ஆகிறது..:-(
ReplyDeleteTest
ReplyDeleteதல டெஸ்ட் பண்ண ஆர்ம்பிச்சுட்டார் இன்னைக்கு ஆசிரியர் பாடு திண்டாட்டம் தான்
Deletegood
ReplyDeleteஎட்டும் தூரத்தில் யுத்தம்..
ReplyDeleteஉடனடியாக இந்த இதழை வாசிக்க ஆர்வப்பட்டு இருந்தாலும் ஆசிரியர் கலவர பூமியில் கனவை தேடி இதழை ஒரு புரட்டு புரட்டிவிட்டு இந்த இதழை வாசித்தால் சிறப்பு என தெரிவித்து இருந்த படியால் இரண்டு இதழையும் இணைத்து வாசிக்க இன்றே நேரம் படிந்தது..க.பூ.கனவை தேடி இதழை வாசிக்காமல் இந்த இதழை வாசித்தாலுமே ஒரு தனித்த சாகஸமாக இருப்பினும் அந்த இதழுடன் இணைந்து இந்த இதழையும் ஒரே சமயத்தில் வாசிக்கும் பொழுது ஓர் அட்டகாச வன்மேற்கு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது என்பதும் உண்மை..பர்ஸ்ட் ஆப் சுமார் செகண்ட் ஆப் செம பாஸ்ட் என சொல்வது போல் கலவர பூமியில் கனவை தேடி இதழை பொறுத்தவரை க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயம் டெக்ஸ் அன்ட் ஸாகோர் இணைந்த பின்னர் தான் வேகம் எடுத்தது..ஆனால் எட்டும் தூரத்தில் யுத்தம் சாகஸத்தை பொறுத்தவரை ஆரம்ப பக்கத்தில் இருந்தே எக்ஸ்பிரஸ் வேகமாய் பயணமாகிறது ..ஸாகோரின் நண்பன் சீகா மூன்றாம் பக்கத்திலியே அட்டகாசபடுத்த திடீர் என்ட்ரியாய் அங்கே கார்ஸனும் தலை காட்ட மீண்டும் அட்டகாசம் எனில் அடுத்து இளம் டெக்ஸ்..ஸாகோரின் தொடக்க காட்சிகள் ..பின் அனைவரும் இணைந்து என முழு அட்டகாச ஆக்ஷன் விருந்தை அளித்து விட்டது இந்த எட்டும் தூரத்தில் யுத்தம்.
டெக்ஸ் எல்லாம் ரேஞ்சராகி விட்டாரா என உரையாடும் பொழுது விட்டால் ஜெஸ்லிஜேம்ஸ் எல்லாம் நீதிக்காவலன் போல் ஆகிவிடுவானா ..பொடியன் பில்லியை விட்டு விட்டீர்களே என்றெல்லாம் வசனங்கள் வரும் பொழுது மனம் விட்டு நகைக்க முடிந்தது.. அதே போல் ஸாகோர் ..டெக்ஸ்..உரையாடல்களும் கலகலப்பான சுவராஸ்யத்தை அளித்தது..கதையின் விறுவிறுப்பிற்கு ஏற்றவாறு கதையின் சித்திரங்கள் அவ்வளவு தெளிவான துல்லியமான அழகு..கதையில் வரும் வில்லன்கள் கூட சித்திரத்தில் கண்ணை கவர்கிறார்கள்..இறுதி முடிவு நிஜத்தை தெரியப்படுத்தி ஒரு வித கனத்த ஆதங்கத்தையும் ஏற்படுத்தி விட்டது..மொத்தத்தில் இந்த முறை டெக்ஸ் ஸாகோர் கூட்டணி ஆயிரம்வாலா சரவெடி போல் பட்டஸாய் வெடிக்கிறது...
( இந்த இதழில் இளமை கிட் கார்ஸனை காணும் பொழுது டெக்ஸ்.. கார்ஸன் முதன் முறையாக அறிமுக சாகஸமான ஓர் இதழ் வருவதாக இருந்ததே அந்த இதழ் எப்பொழுது சார் வருகை புரிகிறது என வினவ தோன்றுகிறது..ஒரு வேளை வந்து விட்டு நான்தான் மறந்து விட்டேனா..?!...)
தல தன் கடமையை சரியாக செய்து விட்டார். நாமும் தல வழியில் எல்லா புத்தகங்களுக்கும் விமர்சனம் போடுவோம்மா நண்பர்களே?
Deleteசமீப ஒவ்வொரு வருடமும் மாதம் ஒரு டெக்ஸ் என அறிவிப்பு வந்தாலும் அதனை 100% முழுமையாக நிறைவேற வில்லை என்பது மறுக்க முடியாத நிஜம் சார்...எனவே வரும் வருடமாவது மாதம்.ஒர் டெக்ஸ் என்பது உறுதியாக நிஜமாகுமா என்பது இந்த மாத டெக்ஸ் இதழை படித்த பின்னர் தோன்றிய வினா சார...
ReplyDelete( அதற்காக மாதம் ஒரு இளம் டெக்ஸ் தொடர் என்ற பதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று சார்..:+)
❤️❤️❤️❤️❤️👍🙏..
ReplyDelete