Powered By Blogger

Saturday, June 07, 2025

கேள்விகள் ஒரு தொடர்கதையே...!

 நண்பர்களே,

வணக்கம்! இன்னொரு வாரயிறுதி.. இன்னொரு பதிவு.. இன்னுமொரு upcoming release பற்றிய ப்ரிவியூ படலம்! ஆனால் this is a moment with a difference, becos இது எது போலவும் அல்லாததொரு மைல்கல் இதழுக்கான தருணம் !!

பயணம்! Manu Larcenet என் ஜாம்பவானின் இருண்டதொரு கிராபிக் நாவல்! அவ்வப்போது, இது குறித்த தகவல்களை நானும் பகிர்ந்துள்ளேன் தான்; நண்பர்களும் க்ரூப்களில் பதிவு செய்துள்ளனர் தான்! நம்மில் ஒரு சிலர் இந்த ப்ரெஞ்சு ஆக்கத்தின் இங்கிலீஷ் வார்ப்பினை ரசிக்கவும் செய்துள்ளனர்! But trust me guys- தமிழில் நமக்குக் காத்திருக்கும் அனுபவமானது மெர்சலூட்டத் தவறவே செய்யாதென்பது எனது நம்பிக்கை!

152 பக்கங்கள்! இந்த மொத்தப் பக்கங்களுக்கும் அவசியமாகிட்ட வசனங்கள் ஒரு ரெகுலர் ரிப்போர்டர் ஜானி கதைக்குத் தேவையாகிடுவதில் பாதி தானிருக்கும்! So அந்த வித்தியாசமான சித்திர ஜாலங்களை ரசிப்பதே இங்கு பிரதானப் பொறுப்பாக இருந்திடக்கூடும்! And அங்கு தான் காத்துள்ள MEGAAAA சைஸின் ஆற்றல் ஒரு மிடறு கூடுதல் வீரியத்துடன் புலப்படவுள்ளது என்பேன்!

நிறையவாட்டி சொன்ன அதே விஷயம் தான் - இந்த சைஸின் பின்னணியிலுமே! ஏதாச்சும் குரங்குக் கூத்தடித்தாவது, உங்கள் புருவங்களை அவ்வப்போது உயரச் செய்ய முயல்வது தான் ஆந்தையனின் பிரதம இலட்சியம்! ஏதாச்சும் புதுசாய் ஒரு நாயகரையோ/ தொடரையோ தேடி நான் இன்னமும் ஓடுவது அதற்காகவே! எதோ ஒரு விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கும் கதைகளா? "ஆவோ.. ஜி ஆவோ ஜி..." என்று வாஞ்சையாய் நான் அவற்றை வரவேற்றிட முனைவதும் அதற்காகவே! So இந்தப் "பயணம்'' கிராபிக் நாவ­லின் அறிவிப்பைச் செய்த போது, "அடடே..!' என்று நீங்கள் ஸ்லாகித்த போது, ஒரு பவன்டோவை சுர்ரென்று குடித்த மகிழ்வு கிட்டியது! ஆனால், அது போதாது - அதே பவன்டோவை ப்ரிட்ஜில் வைத்து இன்னும் செமயாக்கி ரசித்தாலென்ன என்று யோசித்த தருணத்தில் எழுந்தது தான் இந்த ராட்சஸ சைஸ் தீர்மானம் ! சித்திரங்கள் தான் இங்கே show stoppers எனும் போது, அவற்றை ரசிக்க ஏதுவாய் இதுவரையிலும் அல்லாததொரு பெரிய சைஸை போட்டுத் தாக்கினால் சர்வநிச்சயமாய் உங்களது புருவங்கள் விட்டத்தைத் தொட்டு நிற்குமென்று பட்டது! நமக்குத் தான் ஏதாச்சும் புதுசாய் மண்டைக்குள் உதயமாகி விட்டால் "ட்றா ராமா.. ஆட்றா ராமா'' என்ற நமைச்சலும் கைகோர்த்து விடுமே?! So மெகா சைஸ் ; Coffee table புத்தக சைஸ் என்று அறிவிப்புக்கு நகாசு பண்ணி விட்டாச்சு!

But trust me when I say this folks - புத்தகத்தைக் கையில் நீங்கள் ஏந்தவுள்ள நொடியினில் கிட்டவுள்ள அனுபவத்திற்கு, இந்த பில்டப் படலங்களெல்லாம் எத்தனை முயன்றாலும் நியாயம் செய்யச் சாத்தியமே ஆகிடாது! மாதந்தோறும் அச்சுக்குச் செல்லும் போது முதல் ஷீட்டை கலர் இதழ்களில் மட்டுமே நான் பார்வையிடுவது வாடிக்கை ; black & white இதழ்களுக்கெல்லாம் பக்க நம்பர் வரிசைக்கிரமமாய் சரியாக வருகிறதா? என்பதைச் சரிபார்த்த கையோடு மைதீனே அச்சுக்கு approval தந்திடுவதுண்டு! ஆனால், இந்த மெகா சைஸ் b&w இதழின் பிரிண்டிங் நான் பார்த்திடாமல் நடந்திடக் கூடாதென்று சொல்லியிருந்தேன்! So மூன்று நாட்களுக்கு முன்னே பேங்க்கிற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த காலைப் பொழுதில் "அண்ணாச்சி தாளை எங்கே கொண்டு வரட்டும்?'' என்று ஃபோன் அடிக்க, "பேங்கிற்கே வந்திடு மைதீன்' என்றிருந்தேன்! அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பயணத்தின் முதல் அச்சான தாளோடு பேங்க் வாசலில் மைதீன் நின்று கொண்டிருந்தான்!

Oh yes - நான் பார்த்திடும் ஆயிரத்துச் சொச்சமாவது இதழின் தயாரிப்பே இது! Of course- 41 ஆண்டுகளாய் இதே routine-க்குள் ஷண்டிங் அடித்து வருகிறேன் தான்! ஆனாலும், இந்த ராட்சஸ சைஸ் திப்பினை நேரில் பார்த்த நொடியில் மிரண்டே போய்விட்டேன்! நம்மள்லாம் சுனாமியிலேயே சுவிம்மிங்க போடற எருமைக்கடாக்கள் ஆச்சே! என்று நினைத்திருந்த எனக்கு - பேங்க் வாச­லில் வாயடைத்துப் போய் நின்ற அந்த நொடி அத்தனை சீக்கிரத்திற்குள் மறக்கவே மறக்காது! So இந்தமுறை "பயணம்'' கூரியர் டப்பிகளைத் திறக்கும் நொடிகளை மறவாது உங்களது செல்பிக்களோடு சிறப்பித்திடலாம் folks - சர்வ நிச்சயமாய் இதுவொரு மேஜிக் தருணமாக இருந்திடவுள்ளது ! சகல அச்சுப் பணிகளும் முடிந்தன; அட்டைப்படமும் நகாசு வேலைகள் பூர்த்தி கண்டு பைண்டிங் போயாச்சு! Hopefully அடுத்த வார வெள்ளிக்கு despatch அமைந்திட வேணும் & அடுத்த வாரம் இதே தருணத்தில் நமது பதிவுப் பயணத்தின் நாயகனாக கி.நா."பயணம்'' அமைந்திட வேணும்! ஜெய் பைண்டிங் பாகுபலி­!!! Fingers Crossed big time!!

Moving on ஜுலை சார்ந்த முன்னோட்டங்களுக்கு இது தருணமாகிடாது, becos ஜுனின் 2 இதழ்களும் இந்த நொடி வரையில் ரொம்பவே fresh ஆக இருந்து வருகின்றன! அதிலும் ரிப்போர்டர் ஜானியின் கலர் சாகஸமானது ஓரளவுக்கு அலசப்பட்டிருக்க- "தல'' சரவெடி கொளுத்திடும் "சட்டத்தோடு சடுகுடு'' இன்னமுமே படம் பார்க்கப்பட்ட நிலையில் பல கட்டில் முகப்புகளில் ஆராமாய் தொற்றிக் கொண்டிருக்குமென்றுபடுகிறது! So அதனுள் புகுந்திட உங்களுக்கு அவகாசம் தந்த கையோடு, 2026 அட்டவணை சார்ந்த (மாமூலான) கேள்விகள் படலத்தினுள் புகுந்திடலாமென்று நினைக்கிறேன்! ஆண்டுதோறும் அதே மாவை கேள்விகளின் ரூபத்தில் அரைப்பது போலி­ருக்கலாம் தான்- ஆனால் இந்தச் சவாரியின் மத்தியில் உங்களது எண்ணங்களில்/ அபிப்பிராயங்களில்/ ரசனைகளில் ஏதேனும் சிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொறுப்பு எனக்குள்ளதே?! So here we go one more time மக்களே:

1. எல்லாம் சுழல்வது "டெக்ஸ்'' எனும் மாயனைச் சுற்றியே எனும் போது, வினாவினையும் அவரிடமிருந்தே துவக்குதல் தானே பொருத்தம்?

"மாதமொரு டெக்ஸ்'' என்ற அந்த வேட்கை இன்னமுமே அதே வீரியத்துடன் தொடர்கிறதா folks? இயன்ற மட்டிலும் கதைத் தேர்வுகளில் வித்தியாசம் காட்ட நாங்கள் முயற்சித்தாலுமே - வாசிப்பு அனுபவ அளவுகோல்களில் இந்த நொடியின் ரீடிங் என்னவோ? என்பதே எங்களது கேள்வி! So "மாதமொரு டெக்ஸ்'' இல்லாது போனால்- இளவரசரை மனித எரிகுண்டாக்கிக் கடாச முற்படும் பிரயத்தனத்தில் நீங்களெல்லாம் இறங்குவீர்களா? மாட்டீர்களா? என்பதைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்?!

2. எனது கேள்வி # 2 கூட டெக்ஸ் சார்ந்ததே!

மாதா மாதம் 224 பக்க நெடும் TEX சாகஸங்களைப் படிக்க நேரமும்/அவகாசமும்/ ஆர்வமும் கீதா மகா ஜனங்களே?

அல்லது இடையிடையே மித நீளக் கதைகளையும் நுழைத்தால் ஒரு welcome relief ஆக இருந்திடுமா?! Honest answers please ?

3. கேள்வி நம்பர் மூன்றுக்கு ஓரளவுக்கு எனக்கு விடையும் கிட்டிவிட்டது தான்! இருந்தாலும் ஒரு மறு ஊர்ஜிதம் கோரிட விழைந்தே இந்த மறு கேள்வி - moreso just after"ஜெர்மனியில் ஜானி''!

இன்னமும் க்ளாஸிக் ஜானியே தான் தொடரணுமா? பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு சித்தே ஓய்வு தந்துவிட்டு 2026-க்கு மட்டுமாச்சும் ஒரு LED பல்பாய் ஜானி 2.0- முயற்சித்தாலென்ன folks?

ஒத்துக் கொள்கிறேன்- ஜானி 2.0-ல் இதே கர்லிங் ஹேர் + ஸ்டைலான புன்னகையோடு வலம் வருவதில்லை தான்! அங்கே நாடீனுடன் மனுஷன் சில ஸ்பூன்லி­ங் ஆட்டங்களில் ஈடுபட்டதில் உங்கள் காது வழியாகப் புகை சமிக்ஞைகள் வெளிப்படுகின்றதன் வலி­யும் புரிகிறது தான்! Yet- இந்த க்ளாஸிக் கதைகளில் புராதனம் இழையோடுவதை மறுப்பதற்கில்லையே? இதோ இம்மாத "ஜெர்மனியில் ஜானி'' ஒரிஜினலாய் உருவானது 1972-ல் !! So கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் கழிந்த பின்னேயும் அவரோடு அன்னம், தண்ணீர் புழங்கி வருகிறோம்! வாழைப்பூ வடை; வேப்பிலை ஜாக்கி என்றெல்லாம் வலம் வரும் நவீன யூத்களான நாம் 2024-ல் வெளியான 2.0 கதையினை பகிஷ்கரித்து விட்டு, நம்ம பெரியப்புகளின் காலங்களது கதைகளோடே டிராவல் பண்ண நினைப்பது ஓ.கே.தானா?

Of course ரெகுலர் ஜானி கதைகளும் 2010 வரைக்குமே தொடர்ந்துள்ளன தான்! அவற்றி­லிருந்து தேர்வு செய்தால் "சிரிச்ச முக' ஜானியை தரிசித்தது போலவுமிருக்கும்; புராதனங்களைத் தவிர்த்தது போலவுமிருக்கும் தான்! ஆனால், சிக் பில் தொடரைப் போலவே இங்குமே சிக்கல் ஒன்றே! இரு நெடும் தொடர்களின் பின்பகுதியிலும் வந்த கதைகளின் பெரும்பகுதி படு சுமார்! பேஜாரே அது தான்!

So ஸ்டைலான ஜெமினி கணேசனா ? யூத்தான துல்கர் சல்மானா? 2026-ல் நீங்க பார்க்க விரும்புவது யாரை folks?

4. Absence makes the heart grow fonder என்பது பழமொழி! தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு டிபனுக்கு உப்மாவை காணோம்னு  வச்சுக்கோங்களேன் - அதுவே கூட ராஷ்மிகா மந்தனாவின் புன்னகையைப் போல மனசை ஆர்ப்பரிக்க வைக்குமாம் ! "சர்ப்ரைஸா உப்மா பண்ணியிருப்பாளோ?'' என்றபடியே கிட்சனுக்குள் போய் எட்டிப் பார்க்கத் தோணுமாம்!

அந்தக் கதையாய் இரண்டு ஆண்டுகளின் பிரிவானது, பாஸ்டர் மீது ஏதேனும் பரிவுப் பார்வைகள் எழுந்திடச் செய்துள்ளதா ? என்பதே எனது நான்காவது கேள்வி! புத்தக விழாக்களில் சுத்தமாய் washout ஆன நாயகர்களுள் SODA முக்கியமானவர்! ஏனோ தெரியலை - சென்னைப் புத்தகவிழாக்களில் கூட இந்தக் கறுப்பு அங்கிப் போல்ஸ்காரை யாரும் பெருசாய் ரசிக்கக் காணோம்! So சந்தாத் தடத்தில் நீங்கள் மனசு வைத்தாலன்றி இவரது எதிர்காலமெல்லாம் நம்பர் நடிகையின் ஈரோயினி வாய்ப்பைப் போலவே கானலாகிப் போகும்! So...

SODA? பேடாவா?

5. தர்மசங்கடத்தின் உச்சத்திலான வினா இது! இதற்கான உங்களது பதிலும் எனக்குத் தெரியும் தான்! But கேட்டாக வேண்டிய நிலையில் உள்ளேன்!

தோர்கல்!!

கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆண்டுகளாகப் போகின்றன இந்த fantasy நாயகர் நம்மோடு இணைந்து! ஜாம்பவான் வான் ஹாமின் பேனா ஜாலம் செய்த தொடரே! Yet கிட்டத்தட்ட 30 பாகங்கள் கழிந்த நிலையிலும் விற்பனைகளில் ரொம்பவே தடுமாறிடும் அந்த துரதிர்ஷ்டம் மட்டும் இன்றளவில் தொடர்கிறது! "ஏக் தம்''மில் மூன்று அத்தியாயங்களை இணைத்து ஹார்ட்கவரில் போட்ட இதழ்களிலும் ஸ்டாக் குவிந்து கிடக்கிறது ; தனித்தனி ஆல்பங்களாய் வெளியான இதழ்களிலும் ஸ்டாக் நிறைந்து நிற்கிறது! And 14 நாட்கள் அரங்கேறிய 2025-ன் சென்னைப் புத்தகவிழாவில் மொத்தமாய் விற்பனை கண்ட தோர்கல் இதழ்களின் எண்ணிக்கையே 43 தான்! And நம்மிடமோ கிட்டத்தட்ட 12 தோர்கல் titles உள்ளன! So சந்தாக்களில் காணும் விற்பனையினைத் தவிர்த்து தோர்கலுக்கான movement பூஜ்யத்துக்கு மிக மிக அருகில்!

இந்த நொடியில் நம் முன்னே உள்ள options நான்கு !

A. ஆனானப்பட்ட ரோஹித் ஷர்மாவுக்கும், விராத் கோலி­க்குமே டாட்டா சொல்ல இயன்றுள்ள நமக்கு- "பிள்ளைகுட்டிகளோட நல்லபடியா வாழுங்க தோர்கல் சார்! ஜோலனுக்கோ, ஓநாய்குட்டிக்கோ, கண்ணாலம் வைக்கிறப்போ மறக்காமச் சொல்லுங்க!'' என்றபடிக்கே தோர்கலுக்கொரு விடை தருவது அசாத்தியமாகிடக் கூடாது! So நம் முன்னுள்ள Option -A- டாட்டா to தோர்கல்!

B. Option-B இந்த ரெகுலர் தோர்கல் வரிசைக்கு முழுக்குப் போட்டு விட்டு THORGAL SAGA என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்குமொரு ஸ்பெஷல் தடத்தில் தொற்றிக் கொள்வது! இங்கே மாறுபட்ட படைப்பாளிகளின் கைவண்ணங்களில் One Shot சாகஸங்கள் வெளிவருகின்றன! ஆனால், இதனுள் புகுவதும் அத்தனை சுலபமும் அல்ல தான்!

To start with- பிரதானத் தொடரை முடிக்காமல் இந்த வண்டியில் சவாரி செய்ய படைப்பாளிகள் அனுமதிப்பார்களா? என்பது தெரியலை! வாய்ப்புகள் 50-50 தான்! தவிர, மெயின் தொடரில் நாம் இதுவரைப் பார்த்திராத சில கதாப்பாத்திரங்களுமே இந்த THORGAL SAGA தடத்தில் வரும் வாய்ப்புகளுண்டு ! So அங்கே நாம் பேந்தப் பேந்த விழிக்க நேரிடலாம்!

இது தான் Option-B !

Option C. ரெகுலர் தொடரையே தொடர்வது - ஆனால், மிகச் சுருக்கமான பிரிண்ட்ரன் சகிதம்! அதாவது சந்தா எண்ணிக்கை என்னவோ- அதை விட ஒரு நூறு பிரதிகள் மட்டுமே கூடுதலாக அச்சிட்டால், அந்தந்த இதழில் கையிருப்பே விழாது! புத்தகவிழாக்களுக்கும் சுமந்து போய் பல்ப் வாங்கும் நோவுகள் இராது!

ஆனால், சிக்கல் என்னவெனில்- ரூ.120/-க்கு தற்சமயமாய் நாம் விற்பனை செய்து வரும் 48 பக்க தோர்கலை limited பிரிண்ட்ரன்னுக்குக் கொண்டு செல்லும் போது ரூ.175/- போல் ஏதோவொரு விலைக்கு விற்றிட வேண்டி வரும்! So 3 அத்தியாயங்கள் இணைந்ததொரு story arc என்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஹார்ட்கவரில் பண்ணும் பொது ரூ.550 விலையாகிப் போகும் ! அது பட்ஜெட்டை எகிறச் செய்யும் ! "பேங்கிலே லோன் போட்டுத் தான் தோர்கலைப் படிக்கணும்!" என்ற ஆர்வலர்களின் கோரஸ் உற்சாகமாய் சிம்பனி இசைக்கும் வாய்ப்புகள் இங்கே உண்டு! ஆர்வலர்களின் சங்கீதங்கள் ஒருபுறமிருக்க - அவர்களது டாப் விற்பனைத் தொடர்களுள் ஒன்றான தோர்கலை ஒரு இக்ளியூண்டு சர்குலேஷனுக்கு படைப்பாளிகள் தரச் சம்மதித்து இருப்பதே தெய்வச் செயல் ; இந்த நிலையில் அதனிலும் ஒரு பாதியான தம்துண்டு நம்பரை இனி சொல்லி, அதற்கும் படைப்பாளிகளின் இசைவைப் பெறுவதை கற்பனை பண்ணிப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது !! இதற்கான சாத்தியங்கள் 30 - 70 என்பேன் !! Phew !!

So இது தான் Option C....!

Option D : சின்னதொரு பிரேக் ; அதன் பின்பாய் புதுசாய் ஜோலனைப் பிரதானப்படுத்தி தொடரை ஒரு மீள்வருகை செய்திடச் செய்வது ! Maybe அந்த இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சமே கொஞ்சமாய் அபிமானம் கூடிடும் என்ற நம்பிக்கை கொள்வது ! This will be Option D....!

இப்போது சொல்லுங்களேன் folks? - A? B? C? D ?


ரைட்டு "சட்டத்தோடு சடுகுடு'' இதழுக்குள் புகுந்திடவும், மேலேயுள்ள கேள்விகளுக்குள்ளும் மூழ்கிட நீங்கள் பிஸியாகிடும் நேரத்தில் லக்கி லூக்கோடும், டின்டினோடும் கரம் கோர்க்க நான் புறப்படுகிறேன்!

Bye all.. Have a lovely weekend! See you around!

184 comments:

  1. No.1 . மாதமொரு டெக்ஸ் o.k.சார் . நான் கை தூக்கறேன்

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. சூப்பர் சார்....
    தோர்கள் ஆப்சன் சி
    ஜானி எப்படி வந்தாலும் ஓகே
    பாஸ்டர் வரட்டும்
    டெக்ஸ் விறுவிறுப்பாருக்கு....இரண்டாவது கதையை கீழ் வைக்கவே முடியல
    டெக்ஸ் மாதந்தவறாம

    ReplyDelete
  4. மாதம் 1 டெக்ஸ் ஓகே. டபுள் ஆல்பம் (224+ பக்கங்கள்) ஓகே.

    ReplyDelete
  5. 1. மாதம் ஒரு டெக்ஸ் கட்டாயம்
    2. மித நீளம் ஓகே
    (இளம் டெக்ஸ் அதிகம் வேண்டும்.. அதற்கும் ஏதாவது ஐடியா செய்ங்க சார்)
    3. 2.0 ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் சார்.
    4. சோடாவும் limited print run try செய்ங்களேன்..
    5. Thorgal - option c
    Limited print run

    ReplyDelete
    Replies
    1. ஒரு லிமிடெட் பிரிண்ட் ரன் முயற்சிக்கே எங்கே கட்டி வைத்து வெளுப்பார்களோ என்று பயந்து பயந்து வருது சார்! இதில் சோடாவுமா 😵‍💫😵‍💫

      Delete
    2. ஒரு try தானே சார்

      Delete
  6. //மாதமொரு டெக்ஸ்'' இல்லாது போனால்- இளவரசரை மனித எரிகுண்டாக்கிக் கடாச முற்படும் பிரயத்தனத்தில் நீங்களெல்லாம் இறங்குவீர்களா? மாட்டீர்களா? //

    இளவரசரேரே எரிமலையாக பொங்கிடுவாருங்க

    ReplyDelete
    Replies
    1. அந்த மனித எரிகுண்டை வீசும் முயற்சியே ஒரு suicide mission ஆகிப் போகுமே ரம்யா - ஓகே தானா?

      Delete
    2. டெக்ஸ் கொஞ்சமாய் ஓவர்டோஸ் தாங்க, ஆனால் சிறந்த பயணதுணைவன், எதிரிகளை துவம்சம் செய்திடும் போது ஆங் அப்படிதான் என என்ஜாய் பண்ண தவறுவதில்லை

      மூணு மாதத்திற்கு ஒருக்கா சின்ன கதைகளாக முயற்சி பண்ணிடலாம்

      இல்லையெனில் ஒரு மாத ப்ரேக்

      Delete
    3. ///அந்த மனித எரிகுண்டை வீசும் முயற்சியே ஒரு suicide mission ஆகிப் போகுமே ரம்யா - ஓகே தானா?///

      வீசறதாவது??!! மொதல்ல அசைக்க முடியுமான்னு பாக்கசொல்லுங்க சார்..!😝

      'வெடிகுண்டு சரிந்து விழுந்ததில் காமிக்ஸ் கும்பல் படுகாயம் - சேலத்தில் சம்பவம்'😐

      Delete
    4. // இளவரசரேரே எரிமலையாக பொங்கிடுவாருங்க //

      ஆங்ரி பேர்டு பாமர் மொமென்ட் 😆

      Delete
    5. // வெடிகுண்டு சரிந்து விழுந்ததில் காமிக்ஸ் கும்பல் படுகாயம் - சேலத்தில் சம்பவம்'😐 /:

      ஃபர்ஸ்ட் டைம் இன் வரலாறு 😊

      Delete
    6. இளவரசரே சொல்லிட்டாருங்க

      ஆக மாதம் ஒரு டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும்

      அடுத்த மாதம் இதுவரை டெக்ஸ் அறிவிப்பு எதுவும் இல்லை
      ஒரு மினி டெக்ஸாவது போட்டு விடுங்க, எஜமான்
      புத்தக விழாக்களிலும் நல்லா சேல்ஸ் ஆகி விடுவாருங்க

      Delete
    7. இளவரசை வருடம் குறைத்தது 6 கார்ட்டூன் கதை புத்தகங்கள் வேண்டும் என்று ஆசிரியரிடம் சொல்ல சொல்லுங்கள் 😊

      Delete
  7. Eagerly Waiting for payanam book sir . Definitely one of the milestone book in this year. Thanks for bringing it sir . Though some books we can read in other languages, I don’t like it other than reading in Tamil . So thanks again for bringing this experience sir

    ReplyDelete
  8. Question 1 & 2
    வருடத்திற்கு ஆறு 224 பக்க புத்தகங்களும் மூன்று சிறிய கதைகளை கொண்ட புத்தகங்களும் வெளியிடலாம்..

    இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இடைவெளி விடலாம் சார்.

    Question 3
    2.0 இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் சார்.

    Question 4
    Soda கதைகள் நன்றாகவே இருக்கிறது ஒரேயொரு வாய்ப்பு கொடுக்கலாம் சார்.

    Question 5
    Option D
    தோர்கள் மிக பிடித்த கதை வரிசை என்றாலும் விற்பனையில் சாதிக்க வில்லை என்பது வருத்ததிற்க்கு உரியது..

    வேறு வழியில்லை என்பதால் சிறிய இடைவெளி விடலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. Practical பதில்ஸ் நண்பரே!

      Delete
  9. On the questions sir , I already liked thorgal . If possible option C.
    For tex - definitely monthly 1

    ReplyDelete
  10. ஏப்ரல் மாநம் வந்த "சாபங்கள் சாவிதில்லை" பக்கங்கள் குறைவு, இது போன்று கூட கொண்டு வரலாங்க, ஆனால் டெக்ஸ் நிறுத்த வேண்டாம்

    கேட்கனும் நினைத்திருந்தேன்
    அடுத்த மாதம் டெக்ஸ் பற்றி தகவல் எதுவும் இல்லைங்க

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாசத்திலும் ஒரு மஞ்ச சொக்காய் கௌபாய் இருக்கார்...!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சார் ஒரு நிமிடம் டெக்ஸ் வருகிறார் என நினைத்து விட்டேங்க😐😐😐

      அவர் லக்கி லூக்,
      லக்கி லூக் ஜூலை மாதத்தில் ஆஜராக வேண்டியவர்

      Delete
  11. ஏற்கனவே சொன்ன பதில்தான், சார்

    ஜ லைக் SODA, இந்த பாஸ்டரின் அதிரடிகள் மிக பிடித்துள்ளன

    ReplyDelete
  12. 1. மாதமொரு டெக்ஸ் அறிவித்த போது எனக்கு திகட்டி விடுமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று வரை சலிக்கவில்லை
    2. இரண்டும் ஓகே
    3. 2.O
    4. SODA - YES
    5. தோர்கல் தொடரலாம். எனக்கு பிடித்த கதை வரிசைகளில் ஒன்று

    பயணத்துடன் பயணிக்க ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  13. வந்துட்டேன்...

    ReplyDelete
  14. வெளிவந்துள்ள இரண்டு ஜானி 2.0 கதைகள் நன்றாகவே இருந்தன.
    பழையை ஜானியை பார்த்துவிட்டு புது ஜானியை அதில் வைத்து பார்க்க முடியவில்லை

    ஜானி 2.0 அருமையான கதை களங்களே

    ReplyDelete
    Replies
    1. லைட்டா கேரா கீது ரம்யா.... Thuglife எதும் பாத்தீங்க?

      Delete
    2. 2.0 கதைகளங்கள் அருமை தாங்க, சார்

      Yes to ஜானி 2.0...But not my personal favorite like old Johnny

      Delete
    3. //லைட்டா கேரா கீது ரம்யா.... Thuglife எதும் பாத்தீங்க?//


      😂😂😂

      Delete
    4. செத்தாண்டா சேகர் மொமென்ட் 😄

      Delete
  15. 1. மாதம் ஒரு டெக்ஸ் அவசியம் வேண்டும் சார்.

    2. ஆண்டு ஒரே ஒரு சிங்கிள் ஆல்பம் மற்றவையெல்லாம் டபுள் / மாக்ஸி.

    3. ஜானி கிளாஸிக் புராதனம் தான். ஆனால் அந்த தரமான சித்திரம் & கலரிங் தான் அதன் சிறப்பே! மற்றும் ஒரு வித வசீகரிப்பு இருப்பதுதான் அதனுடைய தேடலுக்கு காரணம். So மீண்டும் க்ளாஸிக் ஜானி தான்.

    4. சோடா வரலாம் பேஷா...!

    5. தோர்சல் ஆப்ஷன் C. Minimum print run.
    (இப்போதே தோர்கல் Self எடுக்காதப் போது, பிற்பாடு, in a Case சிறிய இடைவெளிக்கு பிறகு வரும் ஜோலன் மட்டும் எப்படி ஹிட் அடிக்கும், லாஜிக்.)

    ReplyDelete
    Replies
    1. மினிமம் பிரிண்ட் ரன் ஓகே ஆகிடும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு சார்! முயற்சித்துப் பார்க்கலாம் - but சம்மதம் கிட்டுவது 😵‍💫😵‍💫😵‍💫

      Delete
  16. Monthly tex can be less pages and even thodar kathaigal

    ReplyDelete
    Replies
    1. அட, தொடர்கதைகள் 😁😁

      Delete
  17. 1.Big yes for Tex every month
    2.Tex stories with at least 224 pages minimum required every month
    3.Classic Jhony or 2.0 jhony welcome to interesting stories
    4.Soda-Chance may be given for interesting stories
    5.Thorgal -Warm welcome to Thorgal Option C

    ReplyDelete
  18. 1. மாதமொரு டெக்ஸ் கண்டிப்பா வேணும்
    2. 224 டெக்ஸ் படிப்பது easy peasy japanesey
    3. ஜானி நோ கமெண்ட்ஸ்.
    4. சோடா பேக்கு
    4. தோர்கல் needs a big break.

    ReplyDelete
    Replies
    1. பிரேக் தேவைப்படுவது நமக்கா - தோர்கலுக்கா 🤔🤔?

      Delete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. தோர்கல்😶😶😶
    2014-இல் இருந்து எனது மனம் கவர்ந்த கதாநாயகர்

    ஆனால் புத்தக விழாக்களில் மக்களை ஈர்ப்பதில் குறைவாகவே உள்ளார் என்பது கவலை கொள்ள செய்கிறது
    ஆப்ஷன் B

    காரணம்:
    இவரது சிங்கிள் ஷாட்டை முன்னிலை படுத்தி புத்தக விழாக்களில் விற்பனை ஆச்சுன்னா, இவரது வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் என மக்களை தோர்கல் தொடரில் ஈர்த்திடலாம்

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. 1. மாதமொரு டெக்ஸ்! சில கதைகள் ஒரே மாதிரி இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வரட்டும் சார்!!

      2. சிறிய டெக்ஸ் கதைகள் பெரும்பாலும் ஈர்ப்பது இல்லைங்க சார்.. மினிமம் 224 பக்கங்கள் அவசியம்!!

      Delete
    2. 3. ஜானி 1.0 / 2.0 எதுவானலும் சரிங்க சார்... ஜெர்மனியில் ஜானி மாதிரி கதை அமைந்தால் ஹிட்தான்..

      4. சோடா: எனக்கு பிடித்துதான் இருக்கு...

      Delete
    3. தோர்கல்: முதல் சுற்று: 29 ஆல்பங்கள். 2014 ல் ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகளில் அனைத்தும் தமிழில் வெளிவந்தாகி விட்டது. ஆனால் இன்னமும் முதல் வெளியீடு கூட இருப்பில் உள்ளதென நினைக்கிறேன்.

      நீங்கள் சொல்வது போல் சந்தா + 100 தான் தோர்கலின் லிமிட். எனவே லிமிடட் பிரிண்ட்ரன் சரியானதென முடிவெடுக்கலாம். கூடுதல் விலைகூட ஓகேதான். ஏனெனில் சினிபுக் ஆங்கில தோர்கல் பதிப்பின் ஒரு ஆலபத்தின் விலை சற்றேறக்குறைய ஏழுநூறு ரூபாய்கள்.

      ஆனால் இதை எத்தனை நாட்கள் எடுத்துச் செல்ல முடியும்?

      தோர்கல் சாகா உற்சாகமான தொடர்தான். முதல் சுற்றினை நாம் முடித்து விட்டதால் பிரச்சினை இல்லை. இதுவரை வந்துள்ள சாகா இதழ்கள் 5யையும் முதல் சுற்றின் கதையோட்ட நிகழ்வுகளைக் கொண்டே புரிந்து கொள்ள இயலும். இவை அனைத்தும் முதல் சுற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பித்தான் வெளிவந்துள்ளது.

      தோர்கலின் இரண்டாம் சுற்றுக்குள் நுழைவது என்பது புலிவாலை பிடித்த மாதிரிதான். மூன்று இணைத்தடங்களில் பயணிக்கும் இக்கதையை ஏதேனும் ஒற்றை வரிசையில் வெளியிட முடியாது. மூன்று தடங்களிலும் பிரெஞ்சில் வெளியான அதே வரிசையில் தான் வெளியிட முடியும். ஆங்கில சினிபுக் வரிசையிலேயே அவை இன்னும் முழுவதுமாக எட்டி பிடிக்கவில்லை. ஆக ஆரம்பித்தால் மூன்று தடங்களையும் வெளியிட வேண்டும். இது நமக்கு எந்த அளவு சாத்தியம்?

      இதற்கான விடைகளே தோர்கல் நம்மிடையே வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளை முடிவு செய்யும்.

      Delete
    4. கனவுலகம் சார்பில் நீங்களும் நண்பர்களும் தோர்கலுகாக எடுத்த முயற்சிகள் பாரட்டுகளுக்கு உரியது.

      ஆனால் பலர் இன்னும் இந்த பான்டசி நாயகரை ஏற்றுகொள்ளவில்லை என்பது மனதை கனக்கசெய்கிறது.

      Delete
  22. நிஜமான பேய்கள் (அப்படி இருந்து) நேரில் வந்து நின்றால் கூட சிரிப்பா சிரிக்கிற மாதிரி பண்ணிடீங்க... 😄😄😄வாழ்த்துக்கள்... நன்றி எடிட்டர் sir... 👍🙏❤️...

    ReplyDelete
  23. 1&2 பதில் லேது. ஞான் tex ரசிகன் இல்லை
    3. ஜானி 2.0 வேண்டாம். ஒரிஜினல் ஜானி இருக்க டூப்ளிகேட் எதுக்கு.
    4.Option B தோர்கல் கதைகள் பெரும்பாலும் நன்றாக இருக்கும்

    Collecting them.

    ReplyDelete
  24. Option b or option c for Thorgal.
    Johnny ethunalum ok
    Tex every month Venum chinna booka irunthalum ok than .
    Soda ok than chance kodukalam

    ReplyDelete
  25. 1. மாதம் ஒரு tex ok . 2. Texலா சின்ன கதையை விட பெரிய கதைதான் நல்ல இருக்கு 3 . ஓகே 4. போடா,5. ஆப்ஷன் c sir

    ReplyDelete
  26. Option -A- டாட்டா to தோர்கல்!

    ReplyDelete
    Replies
    1. இவர் கிட்டங்கியில் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே இவர் கிட்டங்கியை காலி செய்த பிறகு இவரை வாடா தோர்கல் என்பேன் 😊

      Delete
  27. மேக்சி ஸைசில் 'பயணம்' படைப்பை கையில் ஏந்திட ஆர்வமாய் இருக்கிறோம் சார்.. 😍😍😍

    ReplyDelete
  28. 1. மாதமொரு டெக்ஸ் கண்டிப்பா வேணும்
    2. 224 டெக்ஸ் படிப்பது easy
    3. சோடா வேண்டும் படிக்க

    ReplyDelete
  29. 1. கண்டிப்பாக மாதம் ஒரு டெக்ஸ் வேண்டும்.

    2. குண்டு புக் (மினிமம் 220 பக்கங்கள்) 10 மாதங்களுக்கு. சட்டத் தோடு சடுகுடு படித்து விட்டேன். பலமுறை ரிவிஷன் போகும். இன்னும் இரண்டு டெக்ஸ் புக் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    3.ஜானி 2.0 வேண்டாம்.
    3.சோடா வேண்டும்
    4. லிமிடட் பிரிண்ட் தோர்கல் ஓகே.

    ReplyDelete
  30. 1. மாதம் ஒரு டெக்ஸ் - என்னை கேட்டால் வேண்டாம் என்று சொல்வேன்

    2. படிக்க நேரம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. அந்தந்த மாதங்களில் வரும் கதைகளை அந்த மாதத்திலேயே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் மெயின்டெயின் செய்து வருகிறேன்.

    3. ஜானி 2.0 - 1, ஜானி - 1.0 என்று வருடத்திற்கு மொத்தம் இரண்டு கதைகள் வெளியிட்டால் இரண்டு பேரையுமே பார்த்தது போல ஆகிவிடுமே.

    4. சோடா வேண்டாம். என்னவோ தெரியவில்லை இந்த நாயகர் உடன் ஒன்ற இயலவில்லை.

    5. தோர்கல் - C

    ReplyDelete
  31. சோடா ஜேனரில் ரூபின் அசத்தறார்
    .எனவே சோடா ஸ்லாட் ஏதும் இருந்தா இன்னொரு ரூபின் we want

    ReplyDelete
  32. தோர்கல் கனத்த இதயத்துடன் டாட்டா. .

    ReplyDelete
  33. ஜானியின் சிறப்பு இடியாப்ப சிக்கல்களே. என்றாலும் சிக்கல்கள் இல்லாத ஜானியின் ஆக்சன் கதைகளும் அசத்தலாக உள்ளன.இதுபோன்ற கதைகள் 2. O.அல்லது classicஎதுவானாலும் ஜானி o.k.ங்க சார்

    ReplyDelete
  34. சட்டத்தோடு சடு குடு இந்த ஆண்டு டாப் டென்னில் இடம் பிடிக்க கூடிய சிறப்பான கதை. நண்பர்கள் அனைவரும் மறுவாசிப்புக்கு கையில் எடுத்துள்ளனர்.

    ReplyDelete
  35. டெக்ஸ் வில்லர் மாதம் ஒரு புக் 244+ பக்கங்கள் குறையாமல்** சென்னை to ஈரோட்டுக்கு மட்டும். டெக்ஸ் குண்டு புக்ஸ் வேண்டும்!!!

    ஜானி 2.0 + classic ஜானி எது வந்தாலும் வாங்குவோம்

    தோர்கலை நிறுத்த வேண்டாம் உங்கள் வசதிக்கு ஏற்ப.. ஒன்னு..

    அவ்வளவு தான் எடி!!

    ReplyDelete
  36. 1. மாதம் ஒரு டெக்ஸ் அவசியம் தான். 224 பக்க குண்டு புக் என்றால் டபுள் OK.
    2. ஜானி கிளாசிக் தொடரலாம்.
    3. SODA அவசியம் வேண்டும். வெள்ளை அங்கி வேட்டையன் ரசிக்கவே வைக்கிறார்.
    4. தோர்கலை தொங்கலில் விடுவது நியாயமில்லை.
    தொடர்ச்சி விடுபடாமல் வேண்டும்.

    ReplyDelete
  37. 3.ஜானி 2.0 வேண்டாம்.

    ReplyDelete
  38. For THORGAL

    OPTION A Only

    For tex

    Monthly 2 books need

    For SODA
    We welcome him

    For Jony
    We can take break for some time

    ReplyDelete
  39. 1."மாதமொரு டெக்ஸ்'' - yes monthly TEX must ..

    2. 224 pages or 350 pages tex i prefer sir .. single album dont interest me ..

    3.ஜானி 1.0 / 2.0 எதுவானலும் சரிங்க சார்... ஜெர்மனியில் ஜானி மாதிரி கதை அமைந்தால் ஹிட்தான்.

    4. சோடா: எனக்கு பிடித்துதான் இருக்கு... MUST TRY ONCE AGAIN ..

    5 தோர்சல் ஆப்ஷன் EITHER B THORGAL SAGA
    OR
    C Minimum print run.

    ReplyDelete
  40. Replies
    1. கம்பிக்கு இந்த பக்கமா அந்த பக்கமா ☺️

      Delete
    2. கட்டிலில் பரணி..!
      கடுமையான காய்ச்சல்.. பெட் ரெஸ்ட்.!

      Delete
    3. நேற்று ஓவர் கொண்டாட்டமா 😊 take care and get well soon 😊

      Delete
  41. கேள்விக்கென்ன பதில்.. சாரி சாரி.. கேள்விக்கான பதில்..

    1. மாதம் ஒரு டெக்ஸ் தொரட்டும் சார்.! சலீப்பே ஊட்டாத ஆட்கள் டெக்சும் கார்சனும்..😍

    2. 220 பக்க ஆல்பங்கள் ரெண்டு மாசம் தொடர்த்து.. மூணாவது மாசம் ஒரு 330 பக்க ஆல்பம்.. இப்படியே வருசம் முழுக்க.! அப்புறம் இடைஇடையே சென்னை ,சேலம் ஈரோடு... தீபாவளி ,பொங்கல், என்னோட பொறந்தநாளு போன்ற பண்டிகை நாட்களுக்கு கலரில் மெகா குண்டு டெக்சுகள்.!

    3. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்.! கிளாசிக் ஜானிதான் என்னோட சாய்ஸ்.! அந்த காலகட்டத்து கார்களும்.. ட்ரெஸ்ஸிங்ஸும் ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.! புதுசு வேணாம்னு சொல்லலைங்க சார்.. ஆனா பழசை நிறுத்திட்டு புதுசுன்னாதான் வேணாம்னு சொல்றோம்.! ரெண்டுமே வரும்னா பால சந்த்த்தோஷம் அண்ணய்யா.!

    4. சோடா மிக்ஸ் பண்ணிக்கிறதா வேணாமான்னு.. பஞ்சாயத்தாரோட முடிவுக்கு கட்டுப்படுறேனுங்க.!

    5. நாட்டாமையோட தீர்ப்பு எதுவா இருந்தாலும் நாயமாத்தான் இருக்குமுன்னு தெரியுமுங்க.. அதனால தீர்ப்புக்கு கட்டுப்படுறேனுங்க.!

    ReplyDelete
  42. Tex is the one book I read immediately sir - so yes - keep it coming once a month - huge stress relief.

    On Thorgal - gonna miss him if the decision is against him - suggestion: Seperate Track / minimum print runs - not part of Sandhaa

    On SODA - thirumbi VADA !!

    ReplyDelete
  43. சட்டத்தோடு சடுகுடு....


    நேற்று இரவு தான் உறங்குவதற்கு முன் இதழை வாசிக்க எடுத்தேன்...வழக்கம் போல டெக்ஸ் இதழை வாசிக்க தொடங்கினால் அந்த சாகஸம் முடியும் வரை நாமும் அந்த வன்மேற்கு உலகில் தான் உலவி வருவோம் என்பதை மீண்டும் நிரூபித்த சாகஸம்...

    இந்த முறை கிட் கார்ஸன் இல்லாமல் டெக்ஸ் துணையாய் டைகர் மட்டும் முழுவதுமாய் உடன் நின்று வந்ததே ஒரு மாறுதலாய் மட்டும் அல்லாமல் டைகர் இரண்டாம் நாயகர் போல் அட்டகாசமாய் மனதில் நின்று அவரின் அதரிடி சாகஸங்களால் பட்டையை கிளப்பி கார்ஸன் இல்லாத குறையை தீர்த்து விட்டார்...இந்த முறை சட்டத்தின் காவலர்கள் போர்வையில் திரியும் மனித வேட்டையர்களை அவர்களுக்கு எதிராக தூள் பரத்தும் ஆக்‌ஷனில் டெக்ஸ் அன்ட் டைகர் ஒரு கெளபாய் திரைப்படத்தை பார்த்த திருப்தியை அளித்து விட்டார்கள்..அதே சமயம் சார்ஜென்ட் டோரன்ஸ் அனைத்து தடைகளையும் தாண்டி இறுதியில் வெற்றிக்களிப்போடு வெளிவரும் போது அவரது மகிழ்ச்சி எனது மகிழ்ச்சியாய் மனது நிறைந்து புன்சிரிப்போடு தொடரும் சில நொடிகளில் அது மாறி போய் டோரன்ஸின் இறுதி முடிவு மிக பாரமாய் அமைந்து போனது ஏதோ என்னுள்ளும் ஏமாற்றம் போல் ஓர் கனத்த உணர்வு..க்ளைமேக்ஸைஅந்த கோர்ட் விசாரணையோடு முடிந்து மகிழ்ச்சிகரமாய் அமைந்து இருந்து இருந்தால் மனதில் வாசித்து முடித்தவுடன் ஓர் சந்தோஷ உணர்வு பூத்து இருக்கும் ஆனால் ...?!

    அதே சமயம் இறுதியில் டோர்ன்ஸின் வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்குமான வசிப்பிட உரிமையை பற்றி டெக்ஸ் டைகர் உரையாற்றும் முடிவு அந்த சோக முடிவின் கனத்தை பாதியாக குறைத்து விட்டதும் உண்மை தான் எனினும் அந்த டோரன்ஸின் முடிவு மனதால் ஏற்க முடியவில்லை.....

    மீண்டும் ஓர் மறக்க முடியாத டெக்ஸ் சாகஸம் இந்த சட்டத்தோடு சடுகுடு என்பது இக்கதையை வாசித்து முடித்தவுடன் அடுத்து புரட்டியது அடுத்த மாதம் எந்த டெக்ஸ் சாகஸம் என்ற அடுத்தமாத விளம்பர பக்கங்களை தேடியது தான்...

    ஆனால்...?!

    சட்டத்தோடு டெக்ஸ் சடுகுடு விளையாடலாம்..ஆனால் டெக்ஸோடு லயன் சடுகுடு விளையாடக கூடாது சார்..மாதம் ஒரு டெக்ஸ் என்பதில் விளையாடக் கூடாது என்று கூறிக்கொண்டு....!

    ReplyDelete
    Replies
    1. // மீண்டும் ஓர் மறக்க முடியாத டெக்ஸ் சாகஸம் //

      உங்கள் கடிதங்களையும் மறக்க முடியுமா தல 😊 அதுவும் போஸ்ட் கார்ட் காலத்தில் எல்லா பத்திரிகைகளுக்கும் நீங்கள் எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் 😊

      Delete
  44. முதல் இரு டெக்ஸ் வினாக்களுக்கான விடை இந்த பதிவை படிக்கும் முன்னரே எழுதிய மேற்கண்ட விமர்சனம் தான்...

    மாதம் ஒரு 224....அடுத்த மாதம் 324..

    சிறப்பு இதழ் சமயம் 500+

    ReplyDelete
  45. 1. கண்டிப்பாக மாதம் ஒரு டெக்ஸ் வேண்டும்.
    2. குண்டு புக் (மினிமம் 220 பக்கங்கள்) 12 மாதங்களுக்கு. சட்டத் தோடு சடுகுடு படித்து விட்டேன். இன்னும் இரண்டு டெக்ஸ் +++.
    3.ஜானி 2.0 வேண்டாம்.
    3.சோடா வேண்டாம்
    4. லிமிடட் பிரிண்ட் தோர்கல் double ஓகே.

    ReplyDelete
  46. ஸ்டைல் ஜெமினி கணேசனுக்கே எனது ஓட்டு....


    லேட்டஸ்ட் ஜானி நாடீனோடு நிம்மதியாய் வெளிநாட்டிலியே இருக்கட்டும்.சார்...

    ReplyDelete
  47. TEX மாதம் இரண்டு, மினிமம் 224 பக்கங்கள்... இடைவெளி வேண்டவே வேண்டாம்..

    வருசத்துக்கு ஒன்னு, எப்படி வந்தாலும் ஒகே..

    சோடா ok தான்

    Option C

    ReplyDelete
  48. சோடா மோசம் என சொல்லவில்லை ஆனால் அவரை விட திறைமையானவர்கள் பலர் இருப்பதால் சோடா வேண்டாம்...

    ReplyDelete
  49. தோர்கல் இவ்வளவு கடினப்பட்டு எல்லாம் தோர்கல் வேண்டாம் சார்...

    நிம்மதியாய் அவர்கள் ஓய்வில் இருக்கட்டும்

    ReplyDelete
  50. விஜயன் சார் @ கடந்த ரெண்டு நாட்களாக வாட்ஸ் அப் குழுவில் நீங்கள் போட்ட கேப்சன் அனைத்தும் சிரிப்பு மருந்து ☺️

    ReplyDelete
  51. தோர்கலை ( தற்காலிகமாக ) பரணில் கடாசி விட்டு , ஆஸ்டெரிக்ஸ் & ஓபெலிக்ஸ் முயன்றால் என்ன ? பட்ஜெட் எகிறும் என்பதை தவிர்த்து ஆஸ்டெரிக்ஸை தவிர்க்க வேறேதேனும் காரணம் உண்டா சார் ?

    ReplyDelete
    Replies
    1. இந்த சாத்தான்.. பூதம்.. பேய் பிசாசுகளுக்கெல்லாம் காரணம் சொல்றதில்லையாம்.!

      Delete
    2. சார் முதலில் நமக்கு கிடைத்த டின் டின்னை மெகா வெற்றி பெற செய்வோமே 😊

      Delete
  52. சட்டத்தோடு சடுகுடு

    டெக்ஸ் & டைகர் ஜாக் அதகளம், அதுவும் டைகர் ஜாக்கின் திறமையை நன்றாக வெளிபடுத்தி உள்ள இன்னுமொரு கதையாக அமைந்துள்ளது இந்த சாகஸம். ஆக்ஷன் காட்சி சித்திரங்கள் தெறி. அவை அசையும் காட்சிகளாக உணர்வை தந்தன. தன்னில் இருந்து மாறுபடும் மனிதர்களை வெறுக்கும் மனிதர்களால் கண்டு நிம்மதி இழந்து அவர்களை வெறுத்து ஒதுக்குவதில் என்ன லாபம் இருக்க முடியும்? வில்லன் டெரர் கிளப்பவே செய்தான். இறுதிவரை வெறுப்பு சுமந்து திரிவதில் இழப்பு மட்டுமே கிட்டிடும். கதையோட்டத்தை குன்றாமல் வைத்திடும் வசனங்கள் சூப்பர்.
    கார்சன் இருந்திருந்தால் கொஞ்சம் நையாண்டிகள் வந்திருக்கும், ஆனால் டைகர் ஜாக்கின் செயல்கள் நமக்கு அந்த குறை தெரியாமல் பார்த்து கொள்கின்றன். டெக்ஸை ஓவராக புகழாமல், அவரின் ஆற்றலை மட்டுமே சொல்கிறார் டைகர் ஜாக். மேலும் இந்த சீரியஸான கதைக்கு டைகர் ஜாக் சரிவிகிதமாக அமைந்துள்ளார். "வோ" டூ டைகர் ஜாக்.

    இந்த சடுகுடு ஆட்டம் விறுவிறுப்பு, மனதையும் வாட்டி செல்கிறது

    ReplyDelete
  53. 1 & 2 : டெக்ஸ் மாதம் ஒன்று..224 பக்கங்கள்.. ஒருமாதம் ரெகுலர் டெக்ஸ், அடுத்த மாதம் இளம் டெக்ஸ்..

    Please.. Please Consider this option..

    ReplyDelete
  54. 1. மாதம் ஒரு இளம் டெக்ஸ் மற்றும் ஒரு கிழ டெக்ஸ் போட்டே ஆகணும் சார்
    2. டெக்ஸ் மாதம் ஒரு 500 பக்கம் போடலாம் சார். முடியலன்னா குறைந்தபட்சம் 224 பக்கமாவது போடலாம்.
    3. ஜானி விறுவிறுப்பான கதைகள் மட்டுமே போடுங்கள் ஜானியோ ஜானி 2.0 எதுவா இருந்தாலும் பரவாயில்லை சார்
    4. சோடா விறுவிறுப்பான கதையாக இருந்தால் ஓகே.
    5. தோர்கல் போட்டே ஆகணும். உங்களுக்கு பாரமாக இருக்கும் என்பதால் ஆப்ஷன் சி ஓகே சார்

    ReplyDelete
  55. 2025 at 11:07:00 GMT+5:30
    1. மாதம் ஒரு டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும் சார் அதுவும் இந்த வருடம் உங்கள் கதை தேர்வுகள் அபாரம்
    2. 224 பக்கம் டெக்ஸ் கதைகள் ஓகே சார்
    3.கிளாஸிக் ஜானி தான் வேண்டும் சார்
    4.சோடா பெரும் பான்பையான ஆதரவு கிடைத்தால் போடுங்கள் இல்லையெனில் ரிஸ்க் வேண்டாம்
    5.கடினமான முடிவு தோர்கலுக்கு ஓய்வு கொடுத்து விடலாம் ஏனென்றால் விற்பனை முனையில் பாதிக்கப்படுவது நீங்கள் தான் ஆன்லைன் மேளாவில் அழகிய அகதிக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்தும் பெரிதாக விற்பனையானது போல் தெரியவில்லை இனிமேலும் இந்த சிரமத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் 120 ரூபாய் இதழை 175 க்கு வாங்க தயாராக இருக்கிறார்களோ அப்போது மீண்டும் களமிறக்குங்கள்

    ReplyDelete
  56. டெக்ஸ் மாதம் 224 பக்கங்கள் எங்களுக்கு ஓகே சார். உங்களுக்கு இதனால் மாதம் தோறும் சிரமம் ஏற்பட கூடாது சார். பார்த்து கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  57. //அதுவும் இந்த வருடம் உங்கள்கதைதேர்வுகள் அபாரம்//+1

    ReplyDelete
  58. //சத்ய சாய் நாதன் ஜி . கிழ டெக்ஸ் அப்படிங்கறிங்க அப்புறம் 500பக்க டெக்ஸ். . //வெல்கம் toடெக்ஸ் பேரவை.

    ReplyDelete
  59. // பேங்க்கிற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த காலைப் பொழுதில் "அண்ணாச்சி தாளை எங்கே கொண்டு வரட்டும்?'' என்று ஃபோன் அடிக்க, "பேங்கிற்கே வந்திடு மைதீன்' என்றிருந்தேன்! அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பயணத்தின் முதல் அச்சான தாளோடு பேங்க் வாசலில் மைதீன் நின்று கொண்டிருந்தான்! //

    Work from Anywhere anytime sir neengal!

    ReplyDelete
  60. // ! Hopefully அடுத்த வார வெள்ளிக்கு despatch அமைந்திட வேணும் & அடுத்த வாரம் இதே தருணத்தில் நமது பதிவுப் பயணத்தின் நாயகனாக கி.நா."பயணம்'' அமைந்திட வேணும்! //

    Super! Super!! Waiting for the WOW moments sir.

    ReplyDelete
  61. மெக்ஸிக எல்லைக்குள் வந்துவிட்டதால் எதிரிகளின் நியமன உத்தரவு செல்லாது என்பது பாய்ண்ட். சாமர்த்தியமாக சட்டத் தோடு சடுகுடு நடத்தி நல்லவர்களுக்கு உதவுகிறார் டெக்ஸ். காமிக்ஸில் நான்தான் தல என்று மீண்டும் ஒரு முறை ஓங்கி அடித்து சொல்கிறார்.

    ReplyDelete
  62. 1. மாதம் ஒரு டெக்ஸ் -
    காலத்தின் கட்டாயம். அவசியம் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் இதை நடைமுறை படுத்துவது இல்லை. 99 சதவீதம் பேர் மாதம் ஒரு டெக்ஸ் வேண்டும் என்று தான் வாக்களிக்கிறோம். ஆனால் வாசகர் விருப்பம் நிறைவேற்ற படுவதில்லை. ஏதாவது ஒருமாதம் டெக்ஸ் இல்லாமல் வருவது வாடிக்கை ஆகி விட்டது. இந்த வருடமும் அது தொடர்கிறது. அடுத்த மாதம் டெக்ஸ் இல்லை.

    2. 220 பக்க கதைகளே டெக்சின் பலம். ஆகையால் அதுவே தொடரட்டும். 100 பக்க கதைகளை 2 வெளியிடலாம். வருடத்திற்கு குறைந்தது ஒரு 330 பக்க கதை அவசியம்

    3. ஜானி 2.0 போடுங்கள் அல்லது போடாமல் போங்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால் "கிளாசிக் ஜானி" வந்தே ஆக வேண்டும். நிறுத்தினால் போராட்ட குழுவோடு முற்றுகை இடப்படும்.

    4. SODA 50/50 - இருந்தாலும் OK. இல்லாவிட்டாலும் OK

    5. Break விட்டு தொடரலாம். Limited edition வேண்டாம்.

    "பயணம்" கதை சார்ந்த உழைப்பிற்கு தங்களுக்கும், நமது சிறு அணிக்கும் special thanks. வரவேற்கிறோம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. //நிறுத்தினால் போராட்ட குழுவோடு முற்றுகை இடப்படும்//

      சகோ நீங்களா 😮😮😮

      Delete
    2. இது ஜானி கிளாசிக் உரிமை போராட்டம். அன்போடும், கோரிக்கையோடும் கலந்த ஒரு அஹிம்சை போராட்டம். வன்முறையாக உருட்டுகட்டைகளுடன் அல்ல

      Delete
  63. *சட்டத்தோடு சடுகுடு*

    பூர்வகுடி அமெரிக்கர்களின் குலம் குறித்த தேடலில் நான் ஈடுபட்டதே இல்லை. ஆனால் சமீப காலமாக வெளியாகும் டெக்ஸ் கதைகளில் பல்வேறு இனக்குழுக்கள் குறித்து விவரிக்கப் படுகிறது.

    இந்த கதையிலும் அபாச்சே அதிலும் யவப்பை என்று ஒரு குலம், பாபகோ கிராமத்தினர், கமான்சே, பாயுட், நமக்கு பரிச்சயமான நவஹோவும். இவர்களை குறித்த வரலாறை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த புத்தகம் கிளப்பி விட்டது என்றால் அது மிகையல்ல. இனி கதையின் கருவுக்கு வருவோம்.

    பூர்வகுடிகள் கலப்பினத்தவரை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பது பல்வேறு திரைப்படங்கள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் நான் அறிந்ததே. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கலப்பினத்தவனுக்கு, தன் இனமக்களால் நடக்கும் கொடுமையானது, கொடூரமானது. இப்படிப்பட்ட குழந்தைகளை அந்த சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கொடுமைப்படுத்தக் கூடாது. அப்படி கொடுமைப் படுத்தினால் அந்த குழந்தை மனரீதியாக என்னவாகும் என்பதற்கு மிக்கி பின் தான் ஒரு சிறந்த உதாரணம்.

    தற்கொலை என்பது கோழைகள் செய்யும் வேலை. ஆனால் தன் மீது வெறுப்பை சுமந்து திரியும் ஒரு மனிதன், அந்தக் கோழைத்தனமான முடிவை எடுக்க முடியாமல் அல்லாடும் நிலை என்பது யாருக்கும் வரக் கூடாது. மிக்கி பின் கிட்டத்தட்ட மரணத்தின் விரல் பிடித்தே தன் வாழ்நாள் முழுவதும் சமர் புரிகிறான். அவன் உயிரை காப்பாற்றியவன் மீதே வெறுப்பை உமிழும் அளவுக்கு அவன் வாழ்வது நரக வேதனையாக உள்ளது. அதை இந்தக் கதை பதிவு செய்கிறது. வரலாற்றின் பக்கங்களில் தொற்றுப் போனவர்களின் கதை மிகவும் சொற்பமே. அப்படிப்பட்ட தொற்றுப் போனவரின் கதையாகவே இதை பார்க்கிறேன்.

    இந்தக் கதையிலும் ஒரு வரலாற்று நிகழ்வின் ஓரத்தை ருசிக்காக சேர்த்துக் கொண்டு வெற்றிகரமான ஒரு படைப்பை நிறுவி இருக்கிறார் கதாசிரியர். 1862ல் நியூ மெக்சிகோவின் பிரிகேடியர் ஜெனரல் சிப்லியின் தலைமையில் போர் புரிய வந்த 2500 வீரர்களை கொண்ட CONFEDERATE ராணுவம், க்ரெய்க் கோட்டையை நெருங்கிய சமயம், அதனை தாக்காது சுற்றி சென்றனர்.

    ஏனெனில், அந்த கோட்டையின் மீது அமைக்கப் பட்டிருந்த போலி பீரங்கிகள் மற்றும் போலி வீரர்கள் போன்ற பொம்மைகளை கண்டு ஏமாந்து போரிடாமல் தவிர்த்தபடி முன்னேறி சென்றனர். இதே க்ரெய்க் கோட்டையை சேர்ந்த படைப்பிரிவினர் இதே உத்தியை ஒரு சமயத்தில் கையாளும் பொழுது "அட" போட வைக்கிறது.

    இந்தக் கதையில் டெக்சின் சமயோசிதம் கை கொடுக்கிறது. டைகர் ஜாக் கதை முழுவதும் வேற லெவலில் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பகைவரின் பாசறைக்கே சென்று தகவல் சேகரித்து வந்து சரியான சமயத்தில் டெக்சின் உயிரை காப்பாற்றி எடிட்டரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் சொற்ப வார்த்தைக்கு சொந்தக்காரனான, டைகர் செயலில் அதிரடி காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

    இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்புற செய்துள்ளனர். வழக்கமாக டெக்ஸ் கதைகளில், டெக்சின் கைகளால் தான் மரணங்கள் நிகழ்வதுண்டு. ஆனால் இந்தக் கதையில் கிளைமாக்ஸ் வரை டெக்ஸ் மற்றும் டைகர் ஜாக்கும் யாரையும் கொல்ல முடியாமல், இறந்து போன நல்லவர்களுக்காக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதை காண முடிகிறது. ஒரு வித மன இறுக்கம் கடைசி வரை தொடர்கிறது. என்ன தான் கடந்து செல்வோம் என்பது போல் டெக்ஸும் டைகர் ஜாக்கும் கடைசி இரு பக்கங்களில் பயணித்தாலும் மனம் கனமாகவே உள்ளது.

    கதை தேர்வுக்கு ஒரு நன்றி, அருமையான படைப்புக்கு ஒரு நன்றி, என்று கூறி இதே போன்ற பொன்னான கதைகளை அடுத்தடுத்த மாதங்களில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அட்டையின் பின்பக்கத்தில் வீரப்பெண்மணிகளான அந்த யவப்பை மகளிரில், யாராவது ஒருவரின் உருவத்தை வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
    Replies
    1. எப்படி இப்படி 😍

      Delete
    2. இன்னும் வாசிக்க நேரமிருந்திருந்தால் சிறப்பாக அலசியிருக்கலாம்.. ஆனால் நேரம் கைகூடவில்லை நண்பரே

      Delete
    3. முக்கியாக அபாச்சேக்கள் உலகம் அற்புதமாக இருக்கிறது.. வாசித்துக் கொண்டு இருக்கிறேன்

      Delete
  64. 1.மாதம் ஒரு டெக்ஸ் ok
    2.220 பக்க டெக்ஸ் ok
    3.கிளாசிக் ஜானி வேண்டும்
    3.சோடா no
    4.லிமிடெட் பிரிண்ட் ரன் தோர்கல் ok

    ReplyDelete
  65. 'ரம்மி'யமான பதில்கள் :

    1. அதிகார போதையில் துள்ளும் அதிகாரியின் கதைகள் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதுஅறியாமை சேறில் உழல வைப்பதால் அதிகாரியின் கதைகள் தேவையா என எதார்த்த நாயகன் தங்கத் தலைவனின் ரசிகன் கேட்பதில் என்ன தவறு?

    2. பக்கங்கள்? ஆம் அதிகாரியின் கதைகளின் போதையில் இருந்து போதை மீட்பு மறுவாழ்வு மைய நடவடிக்கைகளின் ஒரு பங்காக பக்கங்களை சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டே வரலாம். பின் அட்டைகளை மட்டும் வெளியிட்டு பின்பு அதையும் நிறுத்தி விடலாம். எதிர் நச்சு பொருளாக அதாவது ஆண்டி டோட் தங்கத் தலைவனின் பழைய கதைகளின் சில பக்கங்களை பிரசுரித்து அவற்றை ரசிகர்களுக்கு கொடுத்து விடலாம்.

    3. கிளாசிக் ஜானிவாக்கர் பிளாக் லேபிளாக இருந்தாலும் சரி அல்லது டூ பாயிண்ட் ஜீரோ ஜானிவாக்கர் ப்ளூ லேபிளாக இருந்தாலும் சரி பேப்பர் பேக்காக அதாவது சாஷெ யாக கொடுக்கவும்.

    4. மூன்றாவது ஐட்டத்துடன் கிளப் சோடா கொடுக்கலாம்.

    5. சில வாசகர்களுக்கு தோர்கல் வைரக்கல்.
    பல வாசகர்களுக்கு தோர்கல் செங்கல்.
    கிட்டங்கியிலோ தோர்கல் நகராத பாறாங்கல்.

    ஏன் சிக்கல்? நிறுத்தி விடலாம்

    ReplyDelete
    Replies
    1. செல்வம் சார் @ மதிய விருந்து பலமா 😊

      செம சார். ROFL 😂

      Delete
    2. ஆ.. பாயாச பார்ட்டிக்கே proxyயா

      Delete
  66. 1. மாதம் ஒரு டெக்ஸ் வரலாம்.
    2. 220 பக்கங்களுக்கு சம்மதமே.
    3. ஜானி 2.0 வருவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
    4. ஏதாவது ஒரு வழியில் சோடாவை வர வைக்கவும். நிதிச் சுமையை ஏற்படுத்துமாயின் இதுவும் வேண்டாம்.
    5. பணச் சுமையை அதிகரிக்கும் தோர்கல் வேண்டாம்

    ReplyDelete
  67. "பயணம்" குறித்த அப்டேட் மேலும் ஆவலை தூண்டுகிறது சார். waiting 🔥.

    சென்ற வருடத்தில் நீங்கள் சொன்ன மாதிரியே "இந்த வருட கதைகள் அட்டகாசமான தேர்ந்தெடுப்புகள்" சார்.
    So,
    1)
    இந்த வருடத்தின் எந்த டெக்ஸ் கதையும்
    படிப்பதிலும் சரி, படித்த பின்பும் சரி 💯💯 திருப்தியான கதைகளே, அந்த வகையில் ஹேப்பி ரீடிங்.
    இது மாத மாதம் கொடுத்தாலும் ஓகே அல்லது ஒரு மாதம் விட்டு ஒரு மாதம்
    (ஸாகுவாரே, ஸாகோர் போன்ற நாயகர்களுக்கு வழி விட்டு) தந்தாலும் ஓகேதான் சார்.

    2)
    224 பக்கங்கள் மகா ஆனந்தம் சார் படிக்க படிக்க.
    "மாதம் தவறாத டெக்ஸ்" எனில் இந்த மிதமான கதைகளுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம்.

    3)
    எது கொடுத்தாலும் ஓகே.

    4)
    கைவசம் உள்ள கதைகளை தாராளமாக போடுங்கள் சார்.

    5)
    மற்ற கதைகளிலிருந்து வித்தியாசமான ஃபான்டஸி கதைத்தொடர், விடவும் மனசில்லை, ஆனால் சிரமத்துடன் இதை வெளியிடுவதை விட, "ஸ்டாக் கொஞ்சம் நகரும் வரை" இவருக்கு சின்னதாக ரெஸ்ட் தரலாம்.

    ReplyDelete
  68. jhonny 2.0 should come instead of classic.
    Tex willer ok for once for two months
    Thorgal should be stopped for a while for at least one year then we can arrange.
    SODA like thorgal

    ReplyDelete
  69. Tex கதைகள் இல்லையேல் கொஞ்சம் சிரமம் தான்
    ஜானி 1.0 தான் best
    சோடா போடலாம் sir
    தோர்கல் சிரமம் தான் நிறைய கதைகள் நான் படிக்கவே இல்ல

    ReplyDelete
  70. // பல கட்டில் முகப்புகளில் ஆராமாய் தொற்றிக் கொண்டிருக்குமென்றுபடுகிறது! //
    இனிதான் படிக்கனும் சார்...

    ReplyDelete
  71. ஜெர்மனியில் ஜானி :

    சந்தர்ப்ப சூழ்நிலைகளால்.. அறிந்தோ அறியாமலோ ஒருவனை பாதித்து விட்டோமென்றால்.. அதிலும் அவன் ஒரு பக்குவப்படாத உன்மத்தனாக இருந்துவிட்டால்.. அவனுடைய பழி உணர்ச்சியானது எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் நீர்த்துப் போகாமல்.. நீரு பூத்த நெருப்பாய்.. அல்லது அமைதியான எரிமலையின் அடிவயிற்றில் விரவியிருக்கும் தீக்குழம்பாய் கனன்று கொண்டேதான் இருக்கும்.!

    அப்படி ஒரு வெறியன்தான் மிஸ்டர் B என்கிற ஹேங்மேன்.. இக்கதையின் வில்லன்.! போர்க்குற்றவாளியான தன்னை விரட்டி விரட்டி வேட்டையாடிய ஜெனரல் வாலியண்ட்டை பழிவாங்குவதற்காக மிக நேர்த்தியான சதிவலை ஒன்றை பின்னுகிறான்.! அவனுடைய சூழ்ச்சி நாடகத்தில் தன்னையறியாமல் ஒரு பாத்திரமாக ஆக்கப்படுகிறார் ரிப்போர்ட்டர் ஜானி.!

    ஹேங்மேனின் சகுனித் திட்டத்தை ஜானி கண்டுபிடித்து விட.. ஆனால் அதுவுமே ஹேங்மேனுடைய சூழ்ச்சியின் ஒரு அங்கம்தான் எனத் தெரியவரும்போது.. அடேங்கப்பா பயங்கரமான ஆளா இருக்கியேடான்னு சொல்லத்தோணும்.!

    எல்லாவற்றையும் ஜானி முறியடித்து விட்டார்.. இனி ஜெனரலை போட்டுத்தள்ளும் ஹேங்மேனின் ஆசை நிறைவேறப்போவதில்லை என்று நாம் நினைத்திருக்கையில்.. பாமை லட்டுல வெச்சேன்னு நினைச்சியா தாஸூ.. நட்டுல வெச்சேன்னு அயன் படத்து கமலேஷ் சொல்வாரே.. அதுமாதிரி செம்ம ட்விஸ்ட் ப்ளானை வெச்சிருக்கான் ஹேங்மேன்.!

    ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே நீ நட்டுல வெச்ச பாமை நான் உன் பெட்டுல வெச்சிட்டேன்டான்னு ஜானி செம்ம ஷாக் கொடுக்கிறார்.! ஹேங்மேனின் திட்டம் இப்படித்தான் போகுமென்று கணித்து அவனுடைய துருப்புச் சீட்டையும் ஆட்டத்துக்கு முன்னரே செயலிழக்கச் செய்திருப்பார் ஜானி.!

    அதாவது அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்கிற புதுமொழிக்கேற்ப.. ஹேங்மேனைப் போலவே ஒரு போலி நாடகத்தை அரங்கேற்றி சகுனியின் சூழ்ச்சிதனை முறியடிக்கும் கண்ணனாய் நிமிர்ந்து நிற்கிறார் ஜானி.!

    ஜானியின் போர்ஷ் கார் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.! கரினா.. நாடின் என கண்கவர் அம்சங்களும் கதையில் உண்டு.! க்ளைமாக்ஸில் தந்தை மகளுக்காக ஜானி செய்யும் சிறு பித்தலாட்டம் நெகிழ்ச்சியான ஒன்று.!
    நாற்பது பக்கங்களுக்கு பரபர ஆக்சன்களுடன் போய் கடைசி சில பக்கங்களில் பல ட்விஸ்ட்டுகளுடன் முடியும் அருமையான கதை இது.!

    ஜானி 2.0 வந்தாலும் வரவில்லை என்றாலும் கிளாசிக் ஜானி நிற்காம வந்தே தீரணும்.!

    ReplyDelete
    Replies
    1. //சந்தர்ப்ப சூழ்நிலைகளால்.. அறிந்தோ அறியாமலோ ஒருவனை பாதித்து விட்டோமென்றால்.. அதிலும் அவன் ஒரு பக்குவப்படாத உன்மத்தனாக இருந்துவிட்டால்.. அவனுடைய பழி உணர்ச்சியானது எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் நீர்த்துப் போகாமல்.. நீரு பூத்த நெருப்பாய்.. அல்லது அமைதியான எரிமலையின் அடிவயிற்றில் விரவியிருக்கும் தீக்குழம்பாய் கனன்று கொண்டேதான் இருக்கும்.!//

      👌👌👌👌👌

      Delete
    2. அடேங்கப்பா என்ன ஒரு விமர்சனம் 😊

      Delete
  72. சட்டத்தோடு சடுகுடு..

    ஆரம்பமே ஈர்ப்பா இருக்கு....👌

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சகோ
      டெக்ஸ் & டைகர் ஜாக் அதகளம்

      Delete
  73. // மாதமொரு டெக்ஸ்'' என்ற அந்த வேட்கை இன்னமுமே அதே வீரியத்துடன் தொடர்கிறதா folks? //
    கண்டிப்பாக சார்...

    ReplyDelete
  74. // மாதா மாதம் 224 பக்க நெடும் TEX சாகஸங்களைப் படிக்க நேரமும்/அவகாசமும்/ ஆர்வமும் கீதா மகா ஜனங்களே? //
    கண்டிப்பாக ஆர்வம் இருக்கு சார்,நேரம் கொஞ்சம் முன்னே,பின்னே...
    2026 இல் மாதாமாதம் 224 பக்க மேளா இருப்பின் அதகளமா இருக்கும்...

    ReplyDelete
  75. // இன்னமும் க்ளாஸிக் ஜானியே தான் தொடரணுமா? //
    க்ளாஸிக் ஜானியைத்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்...

    ReplyDelete
  76. // SODA? பேடாவா? //
    சோடா ஓகேதான்,இருப்பினும் விற்பனை நிலவரத்தைப் பொறுத்து நீங்கள் முடிவெடுப்பது தவறில்லை சார்...

    ReplyDelete
  77. 5.மாயாஜால நாயகனின் நிலை கவலைக்குரியது சார்...
    இதில் Option D தற்போதைக்கு நலம்னு தோணுது...

    ReplyDelete
  78. 1. மாதம் ஒரு டெக்ஸ் ஓகே தான்.
    2. 224 பக்க டெக்ஸ் தான் மித நீள டெக்ஸ் போல எனக்கு தெரிகிறது. அதைவிட பக்க எண்ணிக்கை குறைவு என்றால் ஒரு snack சாப்பிட்ட பீலிங் மட்டுமே.
    3. சோடா கட்டாயம் வேண்டும்.
    4. தோர்கல் Option C

    ReplyDelete
    Replies
    1. ஜானி 2.0 கண்டிப்பாக வெளியிடலாம். ஜானி ஒரு மாதிரி Monotonous ஆக இருப்பது போல எனக்கு தெரிகிறது.

      Delete
    2. //சோடா கட்டாயம் வேண்டும்.//

      +9

      Delete
  79. 1. Tex overdose. Even though the stories are interesting, it's hard to pickup the book and start reading
    2. Shorter tex prefarable
    3. Soda. Can be stopped
    4. Johnny. 2.0 yes
    5. Thorgal can be stopped. Too costly for less pages.

    ReplyDelete
  80. 1) மாதமொரு டெக்ஸ் -> அவசியம் ஸார்
    2) 224 பக்க டெக்ஸ் சாகஸங்கள் -> படிக்க நேரமும் அவகாசமும் இல்லாது விட்டாலும் உருவாக்கும்வோம்ல
    3) ஜானி 2.0 -> முயற்சித்து பார்க்கலாம் ஸார்
    4) SODA -> come back
    5) option B, இல்லை எனில் option c -> குறைந்த பிரிண்ட் ரன். கண்டிப்பாக தோர்கலுக்கு டாட்டா சொல்லக் கூடாது

    ReplyDelete
  81. *ஒரு தோழனின் கதை* 

    நெகட்டிவ் கமெண்ட்களால் கழுவி ஊற்றப்பட்ட ஒரு கதை. எனக்கு இந்த கதை முதல் வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்தாததால் மறுவாசிப்புக்கு கையில் எடுத்தேன். இந்தக் கதை குறித்து மேலதிக தகவல்களை பெற நான் இணையத்தில் உலவிய சமயம், இந்தக் கதையின் கதாசிரியர் ஓபியன் அவர்களின் வலைத்தளத்தை பார்வையிட நேர்ந்த்தது. புத்தகத்தை குறித்து ஒரு விளம்பரம், அதை ஒட்டி அவர் சிலாகித்து எழுதியவை மிகவும் சொற்பமே. ஆனால் இந்த புத்தகத்துக்காக அவர்கள் குறைந்தது 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறார் என்பது காண கிடைத்தது. ஓவியரும் தன் பங்குக்கு கலக்கி இருக்கிறார்.

    இந்தக் கதையை இவர்கள் தொடங்கிய பொழுது, ஒரு சராசரி மனிதன், அவனது பாட்டு ரிக்கார்ட் கடை மற்றும் அவன் எதிர்கொள்ளப் போகும் ஒரு வேற்றுகிரக வாசி என்பதைத் தவிர வேறு என்னென்ன சொல்லப் போகிறோம் என்பது தெரியாமலே இந்தக் கதைக்கான முன்னேற்பாட்டை எடுத்துள்ளார்கள். ஆனால் நாட்கள் போக போக இந்தக் கதையில் இவர்கள் சொல்லிச்சென்ற செய்திகள். அப்பப்பா...

    வேற்றுகிரகவாசிகள் என்ற பெயரைக் கேட்டாலே எரிச்சலாகும் கதாநாயகன், அவனிடம் நட்பு பாராட்டும் வேற்றுகிரகவாசி. இது போதாதா  படைப்பாளிகளுக்கு.(கதாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர்.) சும்மா சுழன்று அடித்துள்ளார்கள். 

    இந்தக் கதையில் ஒரு மியூசிக் ஆல்பத்தை நமது கதாநாயகன் அந்த வேற்றுகிரகவாசியிடம் விற்கிறான். சூப்பரான இசை என்று சிலாகித்து விற்றாலும், அது JAZZ மியூசிக்கிலேயே மிகவும் மோசமான இசை என்பது போல் கதையை கொண்டு செல்கிறார்கள். அந்த கொடூரமான இசையை ரசிக்கும் அந்த வேற்றுகிரகவாசி மீண்டும் நமது கதாநாயகன் கடைக்கே வந்து இதே போன்ற இசைத்தட்டுக்களை கேட்டுப் பெறுகிறான். 

    JOHN COLTRANE எனும் சிறந்த JAZZ இசைக் கலைஞனின் ASCENSION எனும் இசைத்தட்டை (இங்கு கவனிக்க படவேண்டிய விஷயம், அந்த ஆல்பத்தின் அட்டையை வரையாமல், போட்டோவையை இந்தக் கதையில் பயன்படுத்தி இருக்கிறார்கள்) நக்கலடிக்க செம தில் வேண்டும். ஒரு வேளை, இவர் கறுப்பினத்தவர் என்பதால் RASCIST பார்வையாக இருக்குமோ என்று அந்த பாடலைக் கேட்டேன். நிச்சயமாக அந்த பாடலை கேட்டவுடன் இதை விட கொடூரமான இசையைக் கேட்க முடியாது என்று எனக்கும் தோன்றியது.

    சுதி சேராத பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தபடி பயணிக்கும் அந்த இசை, ஒரு கட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சுதி சேரும் பொழுது, அதுவரை இரைச்சலில் இருந்த மனம், ஒரு நிம்மதியாக இருந்தது. அதே போன்ற ஒரு சுதி சேராத காட்சிகளை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கடைசியில் ஒரு அற்புதமான படைப்பை படைத்திருக்கிறார்கள் 

    கதை முழுவதும் வட்டம், குறித்தே பயணிக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை பிரதிபலிக்கும் வகையில். கிட்டத்தட்ட இளமையை தொலைத்து விட்டு, முதுமையின் வாசலின் கதவை தட்டிக் கொண்டு நிற்கும் கதாநாயகன், தன் வாழ்க்கையின் மீதே உள்ள எரிச்சலுடன் தன் வாழ்நாளை கழித்தபடி, அந்த எரிச்சலை பிறர் மீது காட்டியபடி சுழன்று சுழன்று வாழ்ந்தவனுக்கு, வித்தியாசமாக, தான் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைத்த பொழுது, திரும்ப திரும்ப அதையே செய்யும் செயல் மீது ஏற்படும் சலிப்பு, தனக்கு பிடித்ததை செய்யும் பொழுதும் நடப்பதை கண்டு அதிர்ச்சியாகிறான். நாம் ஆசைப்பட்டது கிடைத்து விட்டால், மனம் உல்லாசமாக இருக்கலாம் எனும் மாயை எவ்வளவு அபத்தமானது என்று புரியும் பொழுது நண்பனின் உதவிக்கரம் நீள்கிறது. 

    அது வரை அவன் செய்யத் தயங்கிய விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று கதையை முடித்திருக்கிறார்கள் கதாசிரியர். 

    "வாழறது கலீஜான வாழ்க்கைன்னாக் கூட அதைச் சொர்க்கலோகம் மாதிரியா படங்களிலே வரைஞ்சு சுவத்திலே மாட்டிகிட்டு உச்சுக் கொட்டி ரசிப்போம்"

    "இது என்னான்னு வரைஞ்சவனுக்கு தெரியாது, பராக்கு பார்க்கிறவனுக்கும் புரியாது"

    "உலகத்தை ரசிக்கத் தெரியாமல் போனால், இந்த பூமியே சுருங்கிக்கிட்டே போறது போல் தோணும்."

    போன்ற வசனங்கள் JUST AWESOME 

    கடைசி பக்கத்தில், அந்தக் கடைசி பேனலில், நம்பிக்கையோடு வாழ்வேன் என்ற அந்த ஒற்றை வசனம் தான் நம் அனைவருக்குமான அறிவுரையாக இருக்க முடியும். இன்னும் மனம் அந்த பக்கத்திலேயே லயித்து கிடக்கிறது. இதே போல வித்தியாசமான கதை களத்தை தேடி அலையும் நம் எடிட்டர், இதே போன்ற சிறந்த மற்றொரு படைப்பை நமக்கு கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.

    https://lion-muthucomics.com/graphic-novels/841-oru-thozhanin-kathai-graphic-novel.html

    ReplyDelete
  82. *ஜெர்மனியில் ஜானி*

    ஒரு பழிவாங்கும் முயற்சி, அதை நேரடியாக செய்ய முடியாததால், தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்கிறார்கள். சரி பழிவாங்கும் முயற்சி தான் அப்படி இருக்கு, வில்லனை கைது செய்வதும் நேரடியாக இருக்கும் என்று பார்த்தால் அதையும் தலையை சுற்றி மூக்கை தொட்ட முயற்சியாகவே இருக்கிறது. இப்படி செய்வதற்கான காரணமும் லாஜிக்குடன் விளக்கப் பட்டிருப்பது சிறப்பு.

    இந்த கதையில் வில்லன் சதுரங்க ஆட்டத்தின் சமர்த்தனாக இருக்கிறான். சதுரங்க ஆட்டத்தின் சூத்திரமே, எதிராளியின் நகர்வுகளை நாம் தீர்மானிப்பதே. எப்பொழுது எதிராளி நாம் எதிர்பார்த்த நகர்வுகளை செய்ய ஆரம்பிக்கிறானோ அப்பொழுதே அந்த ஆட்டம் நம் கையில் என்பது கண்கூடு. அதே போல எதிராளியும் அவன் எதிர்பார்த்திருந்த நகர்வுகளை நாம் செய்யாமல் தப்பிப்பதே சிறப்பு. 

    அந்த வகையில் இந்தக் கதையை வில்லன் சாதுரியமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் செயல்படுத்துகிறான். இதை மிகவும் லேட்டாக தெரிந்துக் கொள்ளும் ஜானி, அதே யுக்தியை கையாண்டு வில்லனை சமாளிப்பது கடைசி வரை நம்மை நுனி சீட்டில் உட்கார வைக்கும் யுக்தியாகும்.

    கதை 9/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 9.5/10

    இந்தக் கதையை நான் பலமுறை திருப்பி திருப்பி புரட்டி விட்டேன். ஆனால் எங்கே கோட்டை விட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் குழப்பத்தின் இடியாப்பா சிக்கலை கிளைமாக்சில் அவிழ்ப்பார்கள் என்பது ஜானி கதையின் சிறப்பு என்று ஜானியின் ரசிகர்கள் சிலாகிப்பார்கள். ஆனால் எனக்கு சில குழப்ப சிக்கல்கள் விடை கிடைக்காமலே போய் விட்டது.

    *spoilers alert* 
    குழப்பம் 1

    22 ஆம் பக்கத்தில் ஹேங்க்மென் இன்ஸ்பெக்டர் ஜூல்ஸ் தன் பணியைக் கச்சிதமாய் செய்து விட்டான் என்று கூறுகிறார். என்ன பணி என்பது புரிபடவில்லை.

    அதே பக்கத்தில் ஜானி, ஹேங்க்மென் குறித்து பேசுகிறார். ஆனால் அது வரை ஹெங்க்மென் தான் இந்த சிக்கலின் சூத்திரதாரி என்பதை விட்டெக்கும் சொல்லவில்லை. பின் எப்படி ஜானிக்கு தெரிந்தது?

    குழப்பம் 2

    23 ஆம் பக்கத்தில் விட்டேகின் மகள் பாரிசில் பத்திரமாக இருப்பதாக அந்த பெரியவர் கூறுகிறார். ஆனால் பக்கம் 26ல் உங்கள் மகளுக்கு பாரிசில் அடைக்கலம் கிடைக்காமல் போகாது என்று ஜானி அந்த பெரியவரிடம் கூறுகிறார்?

    குழப்பம் 3

    ஜானி தொலைபேசியில் வந்து சேரும் வழியைப் பாருங்கள் இன்ஸ்பெக்டர் என்கிறார். ஆனால் வந்தது என்னவோ கமிஷனர் போர்ட்டன். ஜானி போனில் பேசியது யாரிடம்?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஆல்பிரட் என்ற பெயர் போலிஸுக்கும், வில்லனுக்கும். நிறைய சின்ன சின்ன குழப்பங்கள் என்று நானும் கூறியிருந்தேன்.

      Delete
  83. பயணம், சாம்பலின் சங்கீதம் ஒரு வழியாய் முன்பதிவு செய்தாயிற்று. அப்பாடா!

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. தோர்கல் உண்மையில் நல்ல படைப்பு. ஆனால் அது ஏன் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்

    ReplyDelete
  86. சார் நீங்க கேட்டது மாதம் ஒரு டெக்ஸ் என்பது ஓவர் டோஸா என்று? நாங்கள் சொல்லியிருப்பதுமாதம் 224பக்கம் படிக்க தயார் என்று. 2026 டயரிக்கு, நோட் தி மேஜிக் நம்பர் 224 சார்

    ReplyDelete
  87. சட்டத்தோடு சடுகுடு :

    வன்மேற்கு கதைகளில் பொதுவாக ராணுவத்தை விட்டு ஓடுவோரை பற்றி பல கதைகள் படித்திருப்போம்.! அவையெல்லாம் இராணுவ சட்டதிட்டங்களை.. கெடுபிடிகளை.. கட்டுப்பாடுகளை.. தாக்குப்பிடிக்க முடியாத ஓரிருவர் தப்பியோடிய கதைகளாத்தான் இருக்கும்.!

    ஆனால் முதல்முறையாக.. ஒரு பட்டாலியனே ஒட்டுமொத்தமாக இராணுவத்திற்கு கல்தா கொடுத்துவிட்டு கோட்டையைவிட்டு வெளியேறி விடுகிறது.!

    அப்படி தப்பியோடும் படைப்பிரிவை சார்ந்த இருவர்.. டெக்ஸ் வில்லர் & டைகர் ஜாக் முன்னிலையிலேயே வேட்டையாடப்பட... பிறகென்ன.. வேட்டையாடியது யார் என்று தெரியவந்ததும்.. பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாவலார்களாக டெக்ஸும் டைகரும் களமிறங்க.. தொடர்வது ஒரு விறுவிறுப்பான கதை.!

    தப்பியோடியவர்களை உயிருடனோ பிணமாகவோ திரும்பக் கொண்டுவரும் பொறுப்புடன் களமிறங்கும் மிக்கி ஃபின், டெக்ஸ் கதைகளின் மறக்கவியலா வில்லன்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிப்பான்.!
    மிக்கி ஃபின்னும் அவனுடைய அல்லக்கைகளான ஸகுவாரோ.. ஒற்றைக்கண் ஹோஸ் ஓ ப்ரெய்ன் மூவருமே திகிலூட்டுகிறார்கள்.!

    சார்ஜெண்ட் டோரன்ஸின் புகழ் மீது கொண்ட பொறாமையால் அவருடைய படைப்பிரிவின் மேல் வெறுப்பை கொட்டியும் மட்டம் தட்டியும் அவர்களை தப்பியோடும் நிலைக்கு தள்ளி.. கௌரவத்தையும் பதவியையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அந்த படைப்பிரிவு மொத்தத்தையுமே பலி கொடுக்கத் துணியும் மேஜர் க்ரெக் மெயின் வில்லனாக இருந்துமே ஏனோ பெரிதாக மனதில் ஒட்டவில்லை.! ஒருவேளை மிக்கி ஃபின்னின் வில்லத்தனம் அவரை டம்மி ஆக்கியிருக்கலாம்.!

    சட்டத்தை துணைக்கு வைத்துக்கொண்டு மோதும் எதிரிகளை கொல்லவும் கூடாது.. அதேநேரம் தப்பியோடும் நண்பர்கள் கொல்லப்படவும் கூடாது.. ஆனால் எல்லையை தாண்டியாக வேண்டும் என்ற ஒரு படு இக்கட்டான சூழலை டெக்ஸும் டைகரும் அசால்ட்டாக கையாண்டு வெற்றியும் பெறுகிறார்கள்.! வன்மேற்கின் எழுதப்படா விதிகளில் ஒன்றான தலைவன் ஒருவனின் இழப்புடன் கதை இனிதே முடிகிறது.!

    ரொம்ப நாட்களுக்கு பிறகு டெக்ஸின் வசனங்களில் அனல் பறப்பதாக தோன்றியது. சித்திரங்களும் குறையில்லை..! சட்டத்தோடு சடுகுடு மின்னும் மரணம் தொடரின் காற்றில் கரைந்த கூட்டத்தை ஞாபகப்படுத்தினாலும் சுவாரஸ்யத்துக்கும் விறுவிறுப்புக்கும் உத்திரவாதமான கதை.!

    ReplyDelete
    Replies
    1. //கௌரவத்தையும் பதவியையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அந்த படைப்பிரிவு மொத்தத்தையுமே பலி கொடுக்கத் துணியும் மேஜர் க்ரெக் மெயின் வில்லனாக இருந்துமே ஏனோ பெரிதாக மனதில் ஒட்டவில்லை.! ஒருவேளை மிக்கி ஃபின்னின் வில்லத்தனம் அவரை டம்மி ஆக்கியிருக்கலாம்.!//
      அதே அதே ஜமீனய்யா

      Delete
  88. சார் இன்று 'பயணம்' கிளம்பிவிடுமா?

    ReplyDelete
  89. நாளைக்கு கிடைத்து விடுமா?

    ReplyDelete
    Replies
    1. வெற்றி வெற்றி நாளை புத்தகம் வந்து விடும். Community குரூப்பில் தகவல் வந்து விட்டது.

      Delete
  90. மாதம் ஒரு டெக்ஸ் OK மிதமான நீளத்துடன், reporter Johnny க்கு 2.0, தேர்தலுக்கு option d

    ReplyDelete
  91. தோர்கலுக்கு option d என படிக்கவும்

    ReplyDelete
  92. சார் இன்று பதிவுக் கிழமை...

    பொக்கிஷ தினமும் கூட

    ReplyDelete
  93. 1. மாதம் ஒரு டெக்ஸ் கண்டிப்பாக வர வேண்டும் .
    2. 220 பக்கங்களுக்கு PLUS என்றாலும் டபுள் சம்மதம்.
    3. ஜானி 2.0 - சாரி .
    4. சோடா - சாரி .
    5. தோர்கல் வரவேண்டும். 175 பிளஸ் எனினும்

    ReplyDelete