பழங்களே....சாரி...சாரி..நண்பர்களே,
வணக்கம். சென்னை விழாவின் இறுதி இரு நாட்கள் கொணரக் காத்திருக்கும் நண்பர்களையும், நம்பர்களையும் செம ஆவலோடு எதிர்பார்த்துக் கிடக்கின்றோம் ! Of course முன்னவர்கள் ஜரூராய் வருகை தந்தால், பின்னது தானாய் பின்தொடர்ந்து விடுமென்பது நிச்சயம் ! விற்பனை சார்ந்த புள்ளி விபரங்கள் என் கைக்குக் கிட்ட இன்னும் ரெண்டு / மூணு நாட்களாகும் என்றாலுமே, இந்தாண்டின் highlight பற்றி இப்போதே சொல்ல சாத்தியமாகிறது - சிவகாசியிலிருந்து நெதமும் புறப்பட்ட வண்ணமிருந்த பண்டல்களின் contents என்னவென்பதை அறிந்திருக்க முடிவதால் !
**கொட்டாவி விட்டபடிக்கே - "வேற எதுனாச்சும் புச்சா சொல்லு மாமே !" என்று நீங்கள் பல்ப் தர மாட்டீர்களென்றால் சொல்கிறேன் - இம்முறையும் ரவுண்டு கட்டிப் பின்னி எடுத்துள்ளார் நம்ம லூயி கிராண்டேல் சார் !! மாயாவியின் 4 மறுபதிப்புகளை for the umpteenth time மறுக்கா மறுபதிப்பிட்டிருந்தோம் - சென்னை விழாவுக்கென !! And அச்சிட்டதில் கிட்டத்தட்ட பாதி காலி ! And ஏற்கனவே கைவசமிருந்த "உறைபனி மர்மம்" is gone & "கலரிலான "கொரில்லா சாம்ராஜ்யம்" சீக்கிரமே சுப மங்களம் பாட தயாராகி விடும் ! இதோ - இறுதி தினத்துக்கென, சனி இரவில் கூட பார்சலில் இரும்புக்கையாரே பயணம் பண்ண தயாராகி வருகிறார் ! 2024-க்கு மட்டுமல்ல ; 2042-க்குக் கூட இவரைத் துணைக்கு அழைச்சுண்டு தான் சென்னையின் பக்கமே தலை வைத்துப் படுக்க முடியும் போலும் !! நீர் இரும்பு தேவுடு !! (உங்கள இல்ல கவிஞரே !!).......But மாயாவியின் batchmates யாரும் இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கக் காணோம் ! CID லாரன்ஸ்-டேவிட்டும் சரி, ஸ்டெல்லாவின் முதலாளியும் சரி, மித வேகப் பயணிகளே ! Surprised yet again !!
Apart from the now familiar மாயாவி புராணம் - நடப்பாண்டின் highlight கலவையாய் ; கிட்டத்தட்ட எல்லா ஜானர்களிலுமாய் கலந்து கட்டி புக்ஸ் விற்பனை ஆகியுள்ளதே !! சிண்ட்ரெல்லாவும் விற்றுள்ளது ; ஜேசன் ப்ரைஸும் விற்றுள்ளது ; லார்கோவும் தான் ; பென்னியும் தான் ; ஆல்பாவும் தான் ; கலரிலான கிராபிக் நாவல்களும் தான் ! அட, "விண்ணில் ஒரு வேங்கை" கூட விற்றுள்ளதுங்கோ இந்த தபா ! In fact - டெக்ஸ் & ஸாகோர் நீங்கலாய் விற்பனை கண்டுள்ள பெரும்பான்மை கலர் புக்ஸ் தான் ! (Of course மாயாவியை ஆட்டத்துக்கே சேர்த்துக்காதீங்கோ....அவர் மசியே இல்லாம பிரிண்ட் ஆனாலும் போணியாகிடுவார் !) புக்கைப் புரட்டும் போதே வர்ணங்கள் குபீரென்று தாக்கினாலொழிய பெரிதாய் ஸெல்ப் எடுக்காது போலும் - இன்றைய ஸ்டராபெரி தலைமுறையிடம் ! So ரொம்ப காலமாய் சீந்துவார் யாருமின்றி ஒவ்வொரு ஊராய் சும்மா 'ஜிலோ' என்று பராக்குப் பார்த்துவிட்டு பத்திரமாய் ஊடு திரும்பி வந்த ஏக color இதழ்கள், இந்தாண்டினில் புது இல்லங்களைத் தேர்வு செய்துள்ளதே - most heartwarming feature of this year's புத்தக விழா ! Of course - கணிசமான இதழ்களுக்கு கிட்டத்தட்ட 40% வரை விலைகளில் சலுகைகள் தந்திருந்ததும் இந்தப் புது உத்வேகத்துக்கு ஒரு காரணியாக இருந்திடும் என்பது புரிகிறது - but கிட்டங்கியில் தேவுடு காக்கும் நேரத்துக்கு, புது நண்பர்களின் இல்லங்களில் ஒரு மரியாதைப்பட்ட ஓரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கிடந்தாலும் அவற்றின் பிறவிப் பயனை அடைந்த திருப்தியாவது மிஞ்சுமே !! காசை கணக்கிடும் எல்லைகளுக்கெல்லாம் அப்பால், ஒவ்வொரு புக்கின் ஒவ்வொரு இம்மியிலும், ஒவ்வொரு புள்ளியிலும், கமாவிலும், கடந்த ஒரு டஜன் ஆண்டுகளின் எண்ணற்ற உறக்கமறியா இரவுகளின் வியர்வைகளும், நேசமும் விரவிக் கிடக்கும் போது, அவற்றை பழைய பேப்பருக்கு எடைக்குப் போட மனசு வலிக்கிறது ! So விலைகளில் தளர்வு - விற்பனையில் துளிர் விடும் வேகமாய் உருமாற்றம் கண்டுள்ளதே இந்தாண்டின் பிரதம மகிழ்ச்சி !
And news # 3 - மறுஒலிபரப்பே ; but worth a listen again என்பேன் ! Smashing '70s - பெயருக்கேற்ற தெறி வேக பார்ட்டிக்களாக இருந்து வந்துள்ளனர் - இந்த இறுதி வாரத்திலுமே ! வேதாளர் ஸ்பெஷல் # 1 - எப்போதோ ஓவர் ! அடுத்ததாய் ரிப் கிர்பி ஸ்பெஷல் # 1 - ஓவர்...ஓவர்..ஓவர் ! And மாண்ட்ரேக் ஸ்பெஷல் # 1 - கிட்டத்தட்ட ஓவர்..ஓவர்..சென்னையில் இவருமே கையைத் தட்டி விடுவார் போலும் ! And இறுதியாய் வந்த காரிகள் ஸ்பெஷலில் மாத்திரம் 60 புக்ஸ் போல கையிருப்பு இருக்குமென்று படுகிறது ! Phew .... "இரத்தப் படலம்" வண்ணத் தொகுப்பு மொதவாட்டி வெளியான சமயத்தின் absolute பரபரப்பை, அதற்கப்பால் இப்போது தான் விற்பனையினில் பார்த்திட இயன்றுள்ளது ! இங்கே, இந்த நொடியினில் சூட்டோடு சூடாய் ஒரு சில கேள்விகள் கேட்டல் நலமென்று தோன்றுகிறது ! SUPREME '60s - நடப்பாண்டினில் அதே தயாரிப்புத் தரங்களில் ஒவ்வொரு நாயகரின் தொகுப்புகளாய் வலம் வந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே ! 2024-க்கு சில பல மாற்றங்கள் சகிதம், க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடம் தொடர்வது குறித்த திட்டமிடல் நம்மிடம் உள்ளது ! உங்களின் கருத்துக்களை அறிந்திட விழைவதால் - here are my questions :
***1.மாற்றமெனும் ஆணியே பிடுங்க வேணாம் ! உடையாத ஒண்ணை ரிப்பேர் பார்க்க ஏதுப்பா அவசியம் ? இதே பாணியில் தொடரட்டும் !
இந்த அணியில் எத்தினி பேரோ ? நீங்கள் இதனில் ஒரு அங்கமெனில் TEAM 1 என்று பதில் ப்ளீஸ் !
***2.இத்தினி கதைகள் ஒரே புக்கில் படிக்க மிடிலே !! பக்கம்ஸ் + கதைஸ் + விலைஸ் குறைச்சூ !
இந்த அணியில் எத்தனை பேரோ ? நீங்கள் இதனில் ஒரு அங்கமெனில் TEAM 2 என்று பதில் ப்ளீஸ் !
***3.படிச்சா தானே இந்தப் பிடுங்கலே ? நாங்கள்லாம் வாங்குனதோட சரி ; சும்மா பந்தாவா அடுக்கி வைச்சு அழகு பாப்போம்லே ?!
இந்த அணியில் எத்தனை பேரோ ? நீங்கள் இதனில் ஒரு அங்கமெனில் TEAM 3 என்று பதில் ப்ளீஸ் !
***4.இந்தப் பட்டியலில் யாரேனும் ஒரு க்ளாஸிக் நாயகருக்கு கல்தா தரும் உரிமை உங்களிடம் இருப்பின், 2 வாரம் டேரா போட்டுப்புட்டுக் கிளம்பும் மாமனாருக்கு டாட்டா சொல்லும் அதே குஷியில் இக்கட யாருக்கு டாட்டா காட்டுவீர்களோ ? (Smashing '70s நாயகர்களிலிருந்து மட்டுமே !)
Option A - ரிப் கிர்பி ; Option B - மாண்ட்ரேக் ; Option C - காரிகன். (வேதாளர் இந்தப் பட்டியலுக்கே வரில்லா !)
***5."வேதாளர் in கலர்" என்பது நீங்கலாய் அடுத்தாண்டிற்கென வேறென்ன கோரிக்கைகள் / பரிந்துரைகள் இருக்கக்கூடும் guys ? சொல்லுங்களேன் ! எங்கள் தலைக்குள் குடி கொண்டிருக்கும் மாற்றங்களும், உங்களின் பரிந்துரைகளும் ஒத்துப் போனால் செம !!
Of course, இந்தக் கதைகளின் புராதனம், நமது புதுயுகக் கதைகளோடு செட் ஆகி விட்டிருக்கும் நண்பர்களுக்கு போன வாரத்து புளியோதரை போல, நூல் நூலாய்க் காட்சி தரலாமென்பது புரிகிறது தான் ! ஆனால் க்ளாஸிக் நாயகர்கள் கொண்டு வந்து சேர்க்கும் நம்பர்களானவை உதாசீனப்படுத்தும் ரகத்திலேயே நஹி எனும் போது, அவற்றை உங்கள் ரசனைகளுக்குமே உகந்த விதத்தில் லைட்டாக tweak செய்திட முனைவதில்லை தப்பே இல்லை என்று தோன்றுகிறது ! For starters , அறுபதுகளின் இறுதிகளில் நிலை கொண்டிருக்கும் கதைகளின் தொகுப்புகளை, அப்டிக்கா பத்தாண்டுகள் forward போட்டு விட முயற்சிக்கலாம் ! So "இதையெல்லாம் எப்புடி சாமீ படிக்கிறாக ?" என்ற ரீதியிலான அந்தப் பார்வைகளை நாசூக்காய் அகற்றி / மறைத்து விட்டு வேதாளர் பாசறையிலோ ; மாண்ட்ரேக்கின் ஜாநாடு நிலவறையிலோ ஐக்கியமாகிட்டால் சிக்கல்கள் தீர்ந்து விடும் ! Anyways, இது உங்களின் வாசிப்புகளுக்கு இடைஞ்சல் தாரா தனித்தடமே எனும் போது shouldn't be too big a bother !
ரைட்டு..."ஜனவரி..புத்தக விழா..." என்றபடிக்கே மேற்கொண்டும் கும்மிகளைத் தொடர்ந்தால், குமட்டோடு ஒரு குத்து குத்தியபடிக்கே பிப்ரவரி ஆஜராகி விடுமென்பதால் அதன் பக்கமாய் இனி திரும்பிடலாமா ? And வழக்கம் போலவே 'தல' டெக்ஸ் தான் பிப்ரவரியிலும் நாட்டாமை செய்திடவுள்ளார் - இன்னொரு டபுள் ஆல்பத்துடன் ! இம்முறை ஒரு செம சந்தோஷச் சேதி - சமீப சில டெக்ஸ் இதழ்களின் சித்திரத் தரங்களில் அத்தனை சுகமில்லை என்ற குறையினை "பறக்க மறந்த பறவைகள்" ஆல்பம் காலுக்குள் போட்டுக் கதக்களி ஆடி விட்டிருப்பதே ! சூறாவளியாய் சமீப ஆண்டுகளில் சித்திரம் போட்டு வரும் Freghieri Giovanni என்ற ஓவியர் சும்மா பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஒவ்வொரு பக்கத்திலும், பிரேமிலும் ! டெக்ஸை மாத்திரமன்றி, வெள்ளிமுடியார் கார்சனையுமே இத்தினி கம்பீரமாய்ப் பார்த்தே ரொம்ப காலமாகி விட்டது என்பேன் ! இதே ஓவியர் தான் நமது V காமிக்சின் ஸாகோர் இதழுக்கும் சித்திரங்கள் போட்டுள்ளார் & இவரது புராணம் மேற்கொண்டும் தொடரும் ! More about that later !
கதையைப் பொறுத்தவரை, செம ரகளை என்பேன் !!
ஒரு அழகான இலக்கு....
அதை விரட்டும் ஒரு வெறிக் கும்பல்....
அந்த கும்பலை விரட்டும் இன்னொரு கழிசடைக் கும்பல் .....
And ஒட்டு மொத்தத்தையும் விரட்டும் நம்மவர்கள் !
இந்த "ரயில்வண்டி ரகளை" மிரட்டும் சித்திரங்களில், நொடி கூட தொய்வின்றி சிட்டாய்ப் பறக்க - பெயரிலும் பறவையுடன் ஆஜராகிறது இந்த இதழ் ! And இதோ - "ப ம ப" இதழின் அட்டைப்பட முதல் பார்வை + உட்பக்க பிரிவியூ ! நமது சென்னை டிஜிட்டல் ஓவியரே இம்முறையும் அட்டைப்படத்தினில் ! நிச்சயமாய் ஒரு அதிரடி வாசிப்பு வெயிட்டிங் என்பேன் ! (நண்பர் ஜகத்தின் எழுத்துருக்கள் கிட்டும் முன்பாய் அச்சாகி விட்ட ராப்பர் இது ; so அவரது fonts இங்கில்லை !)
பிப்ரவரியில், ஆண்டின் முதல் கார்ட்டூன் களம் காண்கிறது - நம்ம ப்ளூ கோட் பட்டாளத்தின் "பின்விளைவுகள் ஜாக்கிரதை" பெயரைச் சொல்லி ! வழக்கம் போலவே ஒரு யுத்த களம் ; இம்முறையோ ஒரு சரித்திர நிகழ்வுமே in the mix ; அப்புறம் நமது மாமூலான கவுண்டமணி, செந்தில் பாணியிலான ஸ்கூபி & ரூபி ஜோடி ! இது போதாதா 44 பக்கங்களில் ஒரு ஜாலி ரகளையை சிருஷ்டிக்க ? அட்டகாசக் கலரில், ஆண்டின் முதல் கார்ட்டூன் ! அப்புறம் நீங்க எத்தினி வற்புறுத்தினாலும் நான் சொல்லவே மாட்டேன், இந்த இதழுக்குப் பேனா பிடித்திருப்பது ஒரு கார்ட்டூன் நாயகரையே பெயரோடு சுமந்து திரியும் ஒரு கார்வண்ணர் என்பதை ! ஊஹூம்...முடியவே முடியாதுங்கோ ! இதோ - அதன் அட்டைப்படம் + உட்பக்க பிரிவியூ :
பிப்ரவரியில் காத்திருக்கும் V காமிக்ஸ் பற்றியும், "தரைக்கு வந்த வானம்" பற்றியும் அடுத்த பதிவினில் எழுதுகிறேன் ! And அதனில் ஒரு ஜாலியான சர்ப்ரைஸுமே இருக்கக்கூடும் ! இடத்தைக் காலி செய்யும் முன்பாய் இன்னொரு ஜாலி ஜம்பிங் நியூஸுமே !! இத்தாலியிலுள்ள ஒரிஜினல் ஸாகோர் பேரவையானது, நம்மிடம் ஒரு கணிசமான எண்ணிக்கையில் V காமிக்சின் முதல் இதழை வாங்கியுள்ளனர் !! அங்கேயுமே யூத்தான லீடர் பொறுப்பில் உள்ளார் போலும் - யூத் களமிறங்கும் இடமெல்லாம் கலக்கிங்ஸ் தான் என்பதை நிரூபிக்கும் விதமாய் !! And இவர்கள் அக்மார்க் யூத்துங்கோ !!
Bye all...see you around ! Have a fun weekend !
First
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteHi..
ReplyDelete3rd
ReplyDelete4 மு பாபு
ReplyDelete4வது வகுப்பு
ReplyDeleteநான் 5 வது
ReplyDeleteI feel "zagor" Better than tex viller
ReplyDelete😘😘😘வாருங்கள் ஜி..
Deleteஸாகோர் பேரவையினருடன் பழகலாம்..😍😃💪👍👌
❤️
ReplyDelete10 க்குள்ள
ReplyDeleteவணக்கம்
ReplyDeletePresent sir !!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am Team 1
ReplyDeleteகிளாசிக் நாயகர்கள் யாருக்கும் கல்தா கொடுக்க விருப்பமில்லை Sir
Team 2 - இத்தினி கதைகளை படிக்க மிடில, மிடில, சுத்தமா மிடில, விலை, கதை, பக்கம் குறைச்சா தப்பிச்சு.
ReplyDeleteஒன்று இல்ல ரெண்டு பேருக்கு கல்தா கொடுத்தா சந்தோஷம்.
1. மாண்ட்ரேக் - திரும்ப திரும்ப க்ளைமாக்ஸ்ல பண்ணின மேஜிக்கையே எல்லாகதையிலும் பண்ணி டார்ச்சர் பண்னுது.
2. காரிகன் - அவரையாவது கஷ்டப்பட்டு படிக்க முடிஞ்சது. இவரது கதைகளை பார்த்தாலே தெரிச்சு ஓட வைக்குது. எங்கே படிக்க.
மாற்றம் என்ன செய்யலாம்.
1. சைஸ் குறையுங்கள். (Tex Size)
2. ஒரே புத்தகத்தில் அனைவரையும் சேர்த்து வெளியிடுங்கள். போரடிப்பது ஓரளவு குறையும்.
3. கிடைக்கும் ஸ்லாட்டுகளை மற்றவர்களுக்கு அளியுங்கள். உதாரணம்: நார்மன், இரட்டைவேட்டையர் etc.
4. அளவோடு இருத்தல் மிக்க நலம்.
Super
DeleteGood
Delete+10
Deletesuper idea
DeleteTeam 3
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteTeam 2:
Deleteஇதுவரை S70யில் எந்த புத்தகத்தையும் முழுதாக படித்து முடிக்க முடியலைங்க சார்!
நான் டீம் 2 சார்.
ReplyDeleteMe வந்துட்டேன்😍😘
ReplyDeleteSir,
ReplyDeletePongal holidays - I re-read smashing 70s - most of the tales were swift and straightline and provided a soothing time pass. I would request not to drop any hero and if possible add classic heroes.
My only problem is the full maxi size - it takes some effort to read it and it does not feel easy to hold this size in hands. If we can go with Half Maxi it could be more compact.
Color Phantom - yes - but say 120 pagers with about 4 tales in regular color comics size would be good. Maxi Color with 208 pages could be overdose.
🙋♂️
ReplyDeleteடீம் 3 .
ReplyDelete5. டெக்ஸ் நீங்கலாய் அனைத்தும் வண்ண இதழ்களாய் இருக்க சாத்தியப்படுமென்றால் அதுவே கோரிக்கை..
நல்ல கலரிஸ்ட் தேடி வைத்துக் கொள்ளலாம்.
Team - 1 BTW.
ReplyDeleteHowever Corrigan prints need to be more clear - currently they are hazy and in most stories unclear - one more album with this print quality will make it unmarketable.
Edi Sir..😍😘
ReplyDeleteCBF தகவல் தெறிமாஸ்..😃😀😍😘💪💪 ரொம்ப சந்தோஷம் சார்.. கிட்டங்கி சீக்கிரம் காலியானால் இன்னும் இன்னும் சந்தோசங்கள் எங்களுக்கு வந்தடையுமே..😍❤
அப்புறம்..
*நம்பிள் டீம் 1* சாரே.😍😃😀😘(ஒரே ஒரு கதைட்டும் கலரில்❤💛💙💚💜)
அப்புறம்..
#இந்த இதழுக்குப் பேனா பிடித்திருப்பது ஒரு கார்ட்டூன் நாயகரையே பெயரோடு சுமந்து திரியும் ஒரு கார்வண்ணர் என்பதை ! ஊஹூம்...முடியவே முடியாதுங்கோ ! #
எனக்கு தெரிஞ்சு போச்சு சார்..😍😃
அவரு நம்ப கோக்குமாக்கார்தானே..😍😃😀
*பொருத்தமானவர்*😍😃😀
வாழ்த்துக்கள் KoK ஜி..💪👍👏❤💐
நமது அரங்கிற்கு வருகை தந்த *அரண்மனை நாயகரை* (ஸாகோர் பேரவை திரைப்படபிரிவு தலைவரை) ஜம்பிங் செய்து வரவேற்கிறோம்..😍😘😃🙏❤💐
ReplyDeleteஅவர் டெக்ஸ் புக் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஜம்பிங் பேரவை திரைப்படபிரிவு தலைவராக நியமனம் செய்து விட்டீர்களே. உங்கள் செயல் வேகம் புயல் வேகம்ங்க...👌
Deleteவணக்கம்....மாலை வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteTex மற்றும் zagor ஒரு ஜாலி பார்வை.
ReplyDeleteஎன்னங்கனா, டெக்ஸ புதுசா வந்த ஒரு ஆளோடு கம்பேர் பண்ணுவதே முதல் தப்பு. தமிழ் காமிக்ஸ்ல டெக்ஸ் ஒரு தொட முடியாத உச்சம் பாஸ்.
மாயாவி புத்தகவிழாவுக்கு மட்டும் தான், நெடும் தூக்கத்தில் இருந்த கிளாஸிக் நாயகர்கள் தற்சமயம் ஏதோ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் துயிலுக்கு செல்லலாம். ஆனால் டெக்ஸ் எல்லா நேரத்திலும், எல்லா ஏரியாவிலும் கில்லி.
நம்ம V காமிக்ஸில் இளம் டெக்ஸ் வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் தான் தொகுப்பாக வேண்டும் என்று அடம் பிடித்ததால் காத்திருக்கிறார். அவிழ்த்து விட்டால் அங்கும் ஆளப்போவது டெக்ஸ் தான்.
சாரே, டெக்ஸ் கதைகள் வரிசையாக வருவது போல் மற்றவர்களுக்கு சாத்தியமா. நீங்கள் சொல்லலாம் இப்ப தான் zagor வந்திருக்காரு, இனி மேல் படிப்படியா டெக்ஸ் இடத்த பிடிச்சுருவாருன்னு.
அது முடியாதுங்கண்ணா, ஏன்னா டெக்ஸ் ஒரு தோப்பு, அவர் ஏதேனும் தவறிப்போய் சறுக்கினாலும், தாங்கிக்கொள்ள கார்ஸன், டைகர், கிட்டுனு ஒரு டீம் இருக்குது. ஆனா உங்காளு தனி மரம். என்றும் தோப்பாகாது.
தொடர்ச்சியாக கதைகள் வருவதால் சில எதிர்மறை விமர்சனங்கள் வரலாம். ஆனால் திடும்மென "நிழ்ல்களின் ராஜ்ஜியம்" போல் ஓரு கதை வந்து மீண்டும் உச்சானிக்கு கொண்டு போய் விடும்.
நாங்க எல்லாரையும் வரவேற்கிறோம், நேசிக்கிறோம்,
புதியவர்களின் ஆட்டத்தையும் ரசிக்கிறோம். ஆனால் அண்ணன் (டெக்ஸ்) களம் இறங்கும் போது ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க. உள்ள வந்து டேமேஜ் ஆகிடாதிங்க.
இங்கனம் ஸேகோரை நேசிக்கும் டெக்ஸ் ரசிகர்களின் அறிவுரை
துள்ளலான ஒரு ( ஸாகோர்)டீம் களத்தில் இருப்பது அவசியமே!
Deleteஸாகோர் பேரவையை ஊக்குவிக்கலாம்.அது ஆரோக்கியமான விஷயம்தான்.
இவ்வளவு உற்சாகமுடன் ஒரு குழு செயல்படுவது சந்தோஷத்தை அளிக்கிறது.
தவிர V காமிக்ஸ்-ல் டெக்ஸ்,இளம் டெக்ஸ் வர வேண்டாம் என்பது தனிப்பட்ட விருப்பம்.அது தனி முத்திரை பதிக்க வேண்டும் என்பது எனது அவா.
இது ஜாலி பார்வை மாதிரி தெரியலையே. எச்சரிக்கை விடுப்பது போல இருக்கே?
Deleteஅது மட்டும் இல்லாமல் டெக்சுக்கு ஸாகோர் போட்டி என்று நாங்க யாரும் சொல்லலையே? இது போன்ற comparison ஒன்று கூட நாங்கள் செய்யவில்லை.
Deleteநண்பரே,
Deleteஇது ஜாலிக்காக எழுதியது தான். நீங்கள் சொன்னதாக நானும் சொல்லவில்லையே. பொதுவாக இந்த comparison எழுந்து வருவது உண்மையே. மேலே கூட ஒரு கமெண்ட் உள்ளது. அது அவருடைய பார்வை. அதில் தவறேதும் இல்லை. இது போல் ஆரோக்ய ஜாலியான விவாதங்கள் நமக்கு புதிதல்லவே.
ஆசிரியர் ஒரு தந்தையின் வாஞ்சையோடு சகோரை ஆதரிக்கிறார் வேறு ஒன்றும் இல்லை.
Deleteஅவரும் நம்மை போல் டெக்ஸின் தீவிர ரசிகரே அவர் இல்லை என்றால் நமக்கு டெக்ஸ் உள்ளது பற்றி தெரிந்து இருக்கவே இருக்காது.
ஆனாலும் டெக்ஸ்ட் குரூப் உடன் மோதுவது ஜம்பிங் குரூப்பிற்கு நல்லதல்ல.
Deleteஜம்பிங் பேரவை டெக்ஸ் குரூப்புடன் மோதவில்லைங்க. அவர்கள் ஜாலியாக புதிய நாயகரை கொண்டாடுகிறார்கள். ஸாகோரும் டெக்ஸும் ஒரே நிறுவனத்தின் வாரிசுகள் என்பதால் அண்ணன் தம்பிங்க மாதிரி. இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் கலாய்த்தால் கூட ஜாலியாகத்தான் இருக்கும். டெக்சின் இடம் ஏற்கனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் செதுக்கப்பட்டு விட்டது . இன்னொரு நாயகரையும் அந்த ரசிகர்கள் வளர்ப்பதில் பிரபலமாக்குவதில் எந்த தப்பும் இல்லை.
Delete// ஜம்பிங் பேரவை டெக்ஸ் குரூப்புடன் மோதவில்லைங்க. அவர்கள் ஜாலியாக புதிய நாயகரை கொண்டாடுகிறார்கள். //
Delete💯 True.
// டெக்ஸ்ட் குரூப் உடன் மோதுவது ஜம்பிங் குரூப்பிற்கு நல்லதல்ல.//
அப்படி ஏதும் இல்லை. இது போன்ற தேவையற்ற கற்பனை வேண்டாமே🙏
2.இத்தினி கதைகள் ஒரே புக்கில் படிக்க மிடிலே !! பக்கம்ஸ் + கதைஸ் + விலைஸ் குறைச்சூ
ReplyDelete*5."வேதாளர் in கலர்"
நான் மாற்றமே வேண்டாம் அணி டீம். 1 .4ல் கல்தா நாயகர் என்றால் காரிகன்.மாமனாருக்கு டாடா காட்டும் குஷி எல்லாம் இல்லைங்க சார்.வருத்தத்துடனே பிரியாவிடைதந்து அனுப்புகிறேன் .நெப்போலியன் பொக்கிசம்.தீவிபத்தில் திரைப்படச்சுருள் போன்ற மாஸ் ஹிட் கதைகளுடன் என்றால் காரிகன் வரலாம்.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசார் இந்தக்ளூ பற்றாதாங்கசார் கண்ணாணகண்ணரைக்கண்டுபிடிக்க .நாள் பூரா கனவுலகத்துலதான் அன்னந்தண்ணி புலங்கறார் .இதுபற்றிவாய்திறக்கணுமே மனுசன்.கரூர்ராஜ சேகரன்
ReplyDelete1. //மாற்றமெனும் ஆணியே பிடுங்க வேணாம் ! உடையாத ஒண்ணை ரிப்பேர் பார்க்க ஏதுப்பா அவசியம் ? இதே பாணியில் தொடரட்டும் //
ReplyDeleteTeam2
ReplyDeleteTeam 1
ReplyDeleteTeam 1
ReplyDelete***5 : பழைய Tex கதைகளை தொகுப்புகளாக.
என்னைப் போன்ற புது வாசகர்களுக்கு. நான் நிறைய மிஸ் பண்ணிட்டேன் :-(
//***1.மாற்றமெனும் ஆணியே பிடுங்க வேணாம் ! உடையாத ஒண்ணை ரிப்பேர் பார்க்க ஏதுப்பா அவசியம் ? இதே பாணியில் தொடரட்டும் ! //
ReplyDeleteTeam -1 சார்
எல்லா நாயக நாயகியர்களுக்கும் இப்படி ஒரு புக் வந்தா நல்லா இருக்கும்........ (Tex, Lucky luke, Tiger, Durango, XIII எலலாம் அட்லீஸ்ட் hardcoverல் வந்து).
WW2 - பெருச்சாளி பட்டாளம், அதிரடி படை, இரட்டை வேட்டையர்கள்...
/எல்லா நாயக நாயகியர்களுக்கும் இப்படி ஒரு புக் வந்தா நல்லா இருக்கும்........ (Tex, Lucky luke, Tiger, Durango, XIII எலலாம் அட்லீஸ்ட் hardcoverல் வந்து)/
Delete- 👌
+1
Team 1
ReplyDeleteTEAM 1
ReplyDeleteநா வந்துட்டேன்.
ReplyDeleteபகை பல தகர்த்திடு - டெக்ஸின் நண்பர் ஜானி-க்கு ஆபத்து அவரை காப்பாற்ற வேண்டும் என ஒரு கடிதம் வர நண்பர்கள் இருவரும் கிளம்புகிறார்கள், யார் இந்த ஜானி எப்படி நண்பராகினர் என்பதை ஒரு குட்டி பிளாஷ்-பாக் மூலம் சொல்லி அட போட வைக்கிறார்கள்; ஒருவரை நண்பர் என ஏற்றுகொள்ள பல நாட்கள் பழக தேவையில்லை, ஒரு சில மணி ஒரு சந்திப்பு போதும் என அழகாக சொல்லியுள்ளார்கள்.
ReplyDeleteஜானி சிறையில் இருக்க அவரை சிறையை உடைத்து காப்பாற்றி கர்னல் ஷெல்பி செய்த படுகொலைகளுக்கு நீதி மன்றம் மூலம் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்ற உடன் பயணம் செய்கிறார்கள். கர்னல் ஷெல்பியை ஒரு கும்பல் கடத்தி செல்ல ஒரு அருமையான திட்டமிடலுடன் இருக்க இடையில் டெக்ஸ் & கார்சன் பூகுந்து மீட்டு செல்வது செம ஆக்ஷன் மற்றும் சுவாரசியமான காட்சி அமைப்புகள் சிறப்பு. இடையில் கோகன், லோலா, ராசிட்டர் என கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள், ஆனால் வலுவான கதாபாத்திரங்கள் இவர்கள்! அதிலும் லோலா செம, கொஞ்சம் கூட சந்தேக பட முடியாத ரசிக்கும் படி இருந்தது!
கர்னல் ஷெல்பி ராணுவத்தில் இருந்து எங்கே சென்றார் என்ன ஆனார் என அவரை பற்றி ரசிக்கும் படி கதையை அமைத்து இருந்தார்கள், கதையின் முக்கியமான கதாபாத்திரமே இவர் தான்.
கதையில் மற்றும் ஒரு முக்கிய பலம் ஆசிரியரின் மொழி பெயர்ப்பு, அதுவும் டெக்ஸ் & கார்ஸன் கலாய்ப்பு வேற லெவல், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தது. டெக்ஸ் மற்றும் கார்ஸனை குதிரையில் வில்லன்கள் கட்டி எடுத்து செல்லும் இடத்தில் இருவரும் இருக்கும் கடினமான சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் கலாய்க்கும் (அட அவனும் வவ்வாள் போல தொங்குகிறான் & ஏதாச்சும் ஒரு தாலாட்டு பாடேன்! லேசாக ஒரு தூக்கத்தை போட முடிகிறதா என்று பார்க்கலாம்) சிரிப்பை வரவழைத்த வசனங்கள்.
கதையில் குறை என பார்த்தால் ஆங்காங்கே தென்படும் வார்த்தை பிழைகள். சித்திரங்கள் கொஞ்சம் சுமார், கதையின் ஆரம்பத்தில் யார் டெக்ஸ் யார் கார்ஸன் என கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது, ஆனால் கதையின் வேகத்தில் சித்திரங்கள் எனக்கு குறையாக தெரியவில்லை!
வருடத்தின் ஆரம்பத்தில் அட்டகாசமான வழக்கமான + வித்தியாசமான டெக்ஸ் கதை; வாரே வா.
Not only spelling mistakes sir ... I'm not sure whether you noticed that or not, the flow is definitely not our editor's. Its done by some one else :-)
DeleteI meant "Flow" in the sense, translation is not our edi's ...
Delete***1 Team 1
ReplyDelete***4 No omission. I want Kirpy Mandrake Corrigon
***5 Reprint of Muthu Comics Vethalar Kirpy Mandrake Corrigon
5 எனது சாய்ஸ் அதே தான். முத்துவில் வெளியான வேதாளர், கிர்பி, மாண்ட்ரேக், காரிகன் கதைகளை வெளியிடவும். ரொம்பவே அட்டகாசமான கதைகள் அவை.
Deleteவெளியே ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து அந்த புத்தகங்களை வாங்க வேண்டியது இருக்காது.
4 எனக்கும் யாரையும் Omit செய்ய விருப்பம் இல்லை.
Delete2024 முதல் இந்த கிளாசிக் நாயர்களை தனி தடத்தில் முடிந்தால் 2-3 நாயகர்கள் கதைகளை இணைத்து மாதம் ஒரு புத்தகமாக கொடுக்க முடியுமா சார்! ஒரே நேரத்தில் 8-10 கதைகளை படிக்க கொஞ்சம் போர் அடிக்கிறது; இளமை பருவத்தில் ஒரே நேரத்தில் 10-15 புத்தகங்கள் படித்த எனக்கு இப்போது ஒருநாளுக்கு ஒரு கதை அல்லது ஒரு புத்தகம் தான் படிக்க முடிகிறது, நேரமிண்மையும் ஒரு காரணம்.
ReplyDeleteகாரிகன் சுத்தமாக முடியவில்லை சார்; கடந்த வருடம் வந்த எல்லா கிளாசிக் நாயகர்கள் கதையையும் படித்து விட்டேன் இவரது கதைகள் முடியவில்லை, வரும் வருடம் வைரஸ்-X, இரெண்டாம் வைரக்கல் போன்ற கதைகளை கொடுக்க முடியமா, முகநூலில் 4-5 வருடங்களுக்கு முன்னர் 1000-2000 ரூபாய்க்கு விற்ற கதைகள் என்பதால் எனக்கு படிக்கும் ஆர்வத்தை கிளப்பி விட்டவை; இந்த வருடம் வந்தால் சந்தோச படுவேன்; இந்த வருடம் இவர் நீங்கள் அறிவித்த படி வரட்டும் சார்.
"இரண்டாவது வைரக்கல் எங்கே?"
DeleteMy most favorite Corrigan story in Muthu Comics..
வைரஸ்-X, இரெண்டாம் வைரக்கல் போன்ற கதைகளை கொடுக்க முடியமா//
Delete+1
எல தம்பி...நேரங் கிடைக்கைல எடுத்தெடுத்து படிக்கதாம்ல இது...ஒரே மூச்ல படிக்க டெக்ஸ்...நீ வச்சி வச்சே படில...ஒரே மடக்ல குடிக்க அது மருந்தா...விருந்துல மக்கா...ரசிச்சி படி வாய்க்கும் நேரத்ல...இன்னும் காலமிருக்குல.....சேகரிப்பு வைல தயங்காம...முடிஞ்சா இன்னும் கேப்பியா
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete3-4 மாத இடைவெளிக்கு பிறகு கார்ட்டூன் கதை வருகிறது என நினைக்கிறேன், ஒரு கார்ட்டூன் ரசிகனாக கதையை படிக்க மிகவும் ஆர்வமுடன் உள்ளேன்! கடந்த வருட இறுதில் கார்ட்டூன் கதை வரும் என நினைத்தேன் வரவில்லை இந்த வருட ஆரம்பத்திலாவது கார்ட்டூன் கதை வரும் என நினைத்தேன் ஆனால் ஏமாற்றமே. ஒரு வழியாக அடுத்த மாதம் கார்ட்டூன் கதை அதுவும் ப்ளூகோட் பட்டாளம், நினைத்தாலே முகத்தில் சிரிப்பு வருகிறது! கண்ணா அட்வான்ஸ் பாராட்டுக்கள்!
ReplyDeleteTeam 1
ReplyDeleteபறக்க மறந்த பறவைகள் அட்டைப்படம் டெக்ஸ் மற்றும் கார்ஸனுடன் சூப்பர் சார், அதுவும் கார்ஸன் சட்டைக்கு கொடுத்த (கத்திரிபூ) வண்ணம் சூப்பர். உட்பக்க சித்திரங்கள் தெளிவாக அருமையாக வரைந்து உள்ளார் ஓவியர்.
ReplyDeleteTeam 1
ReplyDeleteS70 & S60: வாங்கிங் & அடுக்கிங் டீம் நான். மேக்ஸி சைஸ் சிரமமா இருக்கு. கலரில் வந்தால் படிக்க முடியுமோ என்னவோ. க. வெ. புராதானத்தை அதிகப்படுத்தி காட்டுகிறது.
ReplyDeleteTeam 1
ReplyDelete62nd
ReplyDeleteTeam 1
ReplyDeleteசூப்பர் சார்....
ReplyDeleteஆணிய பிடுங்க வேண்டாம் அணிண்ணாலும்...பாக்கெட் சைசுல பக்கட் சைசுல பாப்போமா
லாரன்ஸ் டேவிட் ஜொலிக்காததது ஆச்சரியமே...அன்று மாயாவிக்கப்புறம் ...வராதா என ஏங்கியது இவர்கள் கதைகளே
Deleteஒவ்வொருவருக்கு ஓர் நாயகர் பிடித்தம் என்பதால் ...நோ கல்தா
Deleteடெக்ஸ் அட்டை அதகளம்...அவர்கள் அட்டையும் சூப்பர்....ஃபிப்ரவரி வி காமிக்ஸ் ஏக எதிர்பார்ப்பில்...
Deleteநோக்கு யெஸ்
Team 1 or 2 எதுவானாலும் ஓகே. ஆனால், யாருக்கும் கல்தா கொடுக்க வேண்டாம் ஐயா. கிளாசிக் நாயகர்களை இப்போ ஒத்தி வைத்து விட்டால் அவர்களை திரும்ப கொண்டு வருவது பெரும்பாடு ஆகி விடும். மேலும், இவர்கள் எல்லாம் புராதான நெடியுள்ள நாயகர்கள் என்றாலும், 49-59 ஆண்டுகளை (49-59 தான்) அனாயாசமாக கடந்து வந்தவர்கள். வாய்ப்பு கொடுங்கள், வழியமைத்து கொடுப்பார்கள்.
ReplyDeleteமுக்கியமாக, மாண்ட்ரெக் வேண்டும்...
மாண்ட்ரேக் அநேகருக்கு favorite ஆக இருப்பதை பார்க்க முடிகிறது... "பயங்கர பல்வலி" போன்ற யதார்த்தம் கலந்த கதைகள் தேர்வு செய்து கொடுத்தால் நன்று.
Deleteஇன்னொரு விண்ணப்பம்: டெக்ஸ் கதை அட்டைகளின் பின்னணியில் வெள்ளை நிறம் வந்துள்ளது (அந்த ஒரிஜினல் அட்டையை சொல்கிறேன்) அசத்தலாக உள்ளது.
ReplyDeleteஅதே போல, டெக்ஸ் வில்லரின் Western Classics அட்டைப் படங்களும் கூட வெண்மை நிற பின்னணியில் நன்றாக இருக்கும். ஒருமுறை, முயற்சி செய்து பார்க்கலாமே!
+1000
DeleteSir - 6 Million page views approaching - please target a new TEX 75 book to mark the same :-)
ReplyDeleteTeam 2
ReplyDeleteசாதாரண புத்தகங்களை போல் விரும்பிய இடத்தில விரும்பிய நேரத்தில் தூக்கி வைத்துப் படிக்க முடியவில்லை.😔
5 )
ReplyDelete1- வேதாளர் கலரில் வேண்டும். (அவரது ட்ரேட் மார்க் நிற உடையில்)🙏🙏🙏
2- வருடத்துக்கு குறைந்தது 3-4 வேதாளர் புத்தகங்கள் ரூ100 விலையில் 🙏🙏🙏
3- பழைய ஜேம்ஸ்பாண்ட் மற்றும் விடைபெற்ற மற்றும் டல்லடிக்கும் நாயகர்களின் ஸ்லாட்க ளில் சிலவற்றை வேதாளருக்கு தரவும்.🙏
4- வேதாளர் பொங்கல் அல்லது கோடை அல்லது தீபாவளி மலர் 🙏
5- வேதாளரில் டயானா மற்றும் ரெக்ஸ் சம்மந்தப்பட்ட சில கதைகள் தொடர்கள் போல் உள்ளன. அவற்றை ஒன்றாக தொகுத்து முழு நீள சாகசமாக தரவும்.🙏
6- வேதாளரின் கதைகளில் காணப்படும் குறையான 60s-70s களின் புராதனம் அவரது நவீன கதைகளில் மற்றும் அவுஸ்திரேலிய Frew கதைகளில்
குறைவு. வேதாளர் கணனி போன்றவற்றை கூட பயன்படுத்துவதாக கதைகள் உள்ளன. தயவு செய்து அவற்றிலும் சற்று தங்கள் கடைக்கண் தரிசனம் கிடைப்பின் என்றால் பலருக்கும் நெருடாத வேதாளரை பார்ப்பது சுலபமாகிடும். 🙏🙏🙏
ஒரு கார்ட்டூன் நாயகரையே பெயரோடு சுமந்து திரியும் ஒரு கார்வண்ணர்//
ReplyDeleteநண்பர் டெபுடி ஷெரிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அவரின் கைவண்ணம் எனில் கண்டிப்பாக வயிறு குலுங்க வைக்கும் நகைசுவைகளுக்கு பஞ்சம் இராது🥰
வாவ், புதிய அட்டையில் டெக்ஸ்க்கு பக்கத்தில் நிற்கும் அழகர் கார்சன் தானா😱
ReplyDeleteபுதிய நிற சட்டையில் அழகாக இருக்கிறார்.🥰 எடி சார் இந்த உடையையே தொடருங்களேன்
Team 1
ReplyDeletePlease add Modesty Blaise in this classic series. Rip Kirby, Mandrake, Johnny Hazard, Buz Sawyer all wanted in this series. Please do not stop anyone. Phantom Sy Barry, Jim Aparo stories in colour or B&W needed regularly. Any possibilities to mix all these heros stories in single book?
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete83வது
ReplyDeleteEdi Sir..😍😘
ReplyDeleteஎல்லாமே சரிங்க..😃
அந்த *உயிரைத்தேடி*
என்ன ஆச்சுங்க?..😏
தற்போதைய நிலவரம் என்ன?..😒
எப்ப வரும்ங்க?..😟
வரவேற்பு போஸ்டர் ரெடி பண்ணனுங்க..😍😘😃😀
முதலில் "கார்வண்ணருக்கு " மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete********
கல்தா எனில் அது என்னை பொறுத்தவரை காரிகனுக்கே..
********
டெக்ஸ் அட்டைப்படம் வழக்கம் போல்..பட்டையை கிளப்புகிறது..
******
சென்னை புத்தகவிழா அடித்து ஆடுவதில் மிக்க மிக்க மகிழ்ச்சி சார்..சூப்பர்..
******
Team 1
ReplyDelete//அப்புறம் நீங்க எத்தினி வற்புறுத்தினாலும் நான் சொல்லவே மாட்டேன், இந்த இதழுக்குப் பேனா பிடித்திருப்பது ஒரு கார்ட்டூன் நாயகரையே பெயரோடு சுமந்து திரியும் ஒரு கார்வண்ணர் என்பதை ! ஊஹூம்...முடியவே முடியாதுங்கோ //
ReplyDeleteநெம்ப கஷ்டம் சார் .. கண்டுபுடிக்க .. அந்த "கார்வண்ண"அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ..
team 2 .. SIZE தான் பிரச்னை SIR ..TEX SIZE கொண்டு வரவும் .. முடிந்தால் அனைத்து நாயகர்களின் கதைகளை கலந்து கொடுக்கலாம் ..
//இந்தப் பட்டியலில் யாரேனும் ஒரு க்ளாஸிக் நாயகருக்கு கல்தா தரும் உரிமை உங்களிடம் இருப்பின்//
BASED ON FIRST SEASON CORRIGAN WAS BAD .. காரிகனின் best கதைகள் வந்தால் ஓகே .. இல்லை என்றால் காரிகனுக்கு கல்தா கொடுக்கலாம் ..
Team 1
ReplyDeleteSmashing 70 அனைத்து புத்தகங்களும் படித்து முடித்து விட்டேன். வேதாளர் 2ல் 7கதைகள் பிடித்துவிட்டேன்.
ReplyDeleteTeam 2 - டெக்ஸ் size வந்தால் பரவாயில்லை.. மொத்தமாக வந்தாலும் சரி.. இரண்டு மூன்று கதைகளாக வந்தாலும் சரி... தற்போதைய மாயாவி மறுபதிப்பு பேனல்கள் size படிக்க எளிதாக, கையாளவும் எளிதாக இருந்தன..
ReplyDeleteGood bye to மாண்ட்ரேக். காரிகனுக்கு மாயாவி மறுபதிப்பு sizeஇல் மறுவாய்ப்பு தரலாம்..
2023 வேண்டுகோள்.... வேறென்ன கேட்க .. வழக்கம் போல தான்.. அந்த கார்சனின் கடந்த காலம் ... கலெக்டர்ஸ் எடிஷனாக... ஒரிஜினல் பேனல்கள் சைஸில்... முடிந்தால் பழைய மொழிபெயர்ப்பு, பாடல்களுடன் :)
அப்போ தங்கக் கல்லறை?
Deleteகேட்டா அடிக்க வருவாங்கன்னு தான் கார்சனை கோர்த்து விட்ருக்கேன் :)
DeleteTeam 3.... ஆனால் Team 1 க்கே என் ஓட்டு. எந்த மாற்றமும் இல்லாமல் இப்படியே தொடருங்கள்.
ReplyDelete+++111
Delete//அவர் டெக்ஸ் புக் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஜம்பிங் பேரவை திரைப்படம் பிரிவு தலைவராக நியமித்து விட்டீர்களே .உங்கள் வேகம் புயல் வேகங்க // இது ரொம்பவே ஓவர் தானுங்க அபி.கரூர் ராஜசேகரன்.
ReplyDelete😁😄 தலைவரின் வேகத்தில் வியந்து போனேன் ராஜசேகரன் சார்.
Deleteஅவர் எதைச் செய்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது.
கார்சனின் கடந்தகாலம் பழைய மொழிபெயர்ப்பு பாடல்களுடன்,+தங்கக் கல்லறை ரெண்டுமே வேணும் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎடி ஜி,
ReplyDeleteஎனக்கு mandrake, காரிகன், Ripkirby ,phantom,, ஜார்ஜ், சார்லி ஆகிய அனைவரது collection கதைகள் இப்போது வருவது போல வந்து கொண்டே இருக்கட்டும்.
படங்களின் சைஸ் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்று.
கதைகளில் மட்டும் இன்னும் சுவாரசியமான அதிகமாக இருக்கும் போது பார்த்துக் கொள்ளவும்
சிக் பில் அவர்களே..
Deleteஎன் ஒத்த கருத்தும் இதுதான்..
படங்களின் சைஸ் பெரிதாக வேண்டும்..
ஆவண செய்யுங்கள் ஆசிரியரே..!!
படங்களின் சைஸ் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தால்//
Delete+1
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கிட்...
ReplyDeleteபழைய துப்பறியும் கதைகள் - க்ரைம் கதைகளில் நல்ல காமிக்ஸ்கள்-ஸ்பெஷல் முயற்சிக்கலாமே,ப்ளாஷ் கோர்டன் ,லெப்.டிரேக்நல்ல கலெக்ஷன் முயற்சிக்கலாமே
ReplyDeleteTeam1 💪
ReplyDeleteFlash gardon, drake good choice. Ediror sir, please consider.
ReplyDeleteV COMICS வழக்கமான நமது லயன் பாணியிலேயே உள்ளது..
ReplyDeleteஇன்னொரு காமிக்ஸ் எனும் போது அதற்கென தனியான ஓர் அடையாளத்தைக் கொடுக்கலாமே..
குறைந்த பட்சம் அதன் வடிவத்திலாவது..
ஸாகோர்..
ReplyDeleteடாப் ஸ்கோர்..!
@Edi Sir..😍😘
ReplyDelete#இந்தப் பட்டியலில் யாரேனும் ஒரு க்ளாஸிக் நாயகருக்கு கல்தா தரும் உரிமை உங்களிடம் இருப்பின்//
Big *NO*..
No கல்தா to anybody Sir.. Please..🙏💐
நல்லமாதிரிதானே போயிட்டுறுக்கு..😍😃
அப்புறம் ஏனுங்க சார்..
இப்படி..😔
க்ளாசிக் ஸ்பெஷல்களில் பேனல்களை பெரிதாக்கினால் முழுமையான திருப்தி கிட்டும்..
ReplyDeleteபக்கங்களை சமன் செய்ய எட்டு கதைகளுக்குப் பதிலாக ஐந்து அல்லது ஆறு கதைகள் மட்டும் இருந்தால் போதுமானது..
இது என் கருத்து..!
இதைத் தான் நானும் இந்த தடம் வெளியான நாள் முதல் சொல்லி வருகிறேன். ஒன்று பேனல்களை பெரிதாக்குங்கள், இல்லை சைஸை குறையுங்கள். 70mm ஸ்கீரினில் 35mm படம் பார்ப்பது போல் உள்ளது. புத்தக அட்டையில் இருக்கும் பிரமாண்டம், இருக்க வேண்டிய இடத்தில் (உள்ளே) இல்லை.
Delete+1
Deleteசித்திரங்கள் பெரிதாக இருந்தால் நன்னா இருக்கும் ரசிக்க.
அப்படி இல்லைன்னா ரெகுலர் டெக்ஸ் சைஸ்சுக்கு மாத்தி பார்க்கலாம்.
////க்ளாசிக் ஸ்பெஷல்களில் பேனல்களை பெரிதாக்கினால் முழுமையான திருப்தி கிட்டும்..
Deleteபக்கங்களை சமன் செய்ய எட்டு கதைகளுக்குப் பதிலாக ஐந்து அல்லது ஆறு கதைகள் மட்டும் இருந்தால் போதுமானது../////
என்னுடைய எண்ணமும் இதுவே...
இதைத் தான் நானும் இந்த தடம் வெளியான நாள் முதல் சொல்லி வருகிறேன். ஒன்று பேனல்களை பெரிதாக்குங்கள், இல்லை சைஸை குறையுங்கள். 70mm ஸ்கீரினில் 35mm படம் பார்ப்பது போல் உள்ளது. புத்தக அட்டையில் இருக்கும் பிரமாண்டம், இருக்க வேண்டிய இடத்தில் (உள்ளே) இல்லை.////
Delete100% உண்மை...
மாண்ட்ரேக் வேண்டாம் காரிகன் இன்னும் வர வேண்டும்..
ReplyDeleteசூப்பர் ரம்மி
DeleteTeam 2
ReplyDeleteமாண்ட்ரேக் நாட் இன்ரஸ்ட் ..
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டாலும் சரி.குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டாலும் சரி. எனக்கு காமிக்ஸ் என்ற ஒன்று வந்தால் போதும்.S60 நாயகர்களை டெக்ஸ் சைசில் குண்டு புத்தகமாகக் கொடுத்தால் மேலும் மகிழ்வேன்.நன்றி சார்.
ReplyDeleteTeam 2 - smaller size, kadambam instead of single hero
ReplyDeleteOption C - Corrigan
S60 தொகுப்புகள் வண்ணத்தில் டெக்ஸ் இதழ் அளவில் வந்தால் இன்னும் இன்னும் இன்னும் மகிழ்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஆசிரியர் அவர்களே.நன்றி.
ReplyDeleteSir - if you consider Kings Features Heroes and classics of 60s and 70s whose authors would have either shifted to the other world or on the verge of it :-) - more chance to get a KADHAMBAM out ? Like 8 tales of 4 different heroes once every 3 months rather than 8 tales of one hero for the year?
ReplyDeleteசூப்பர் கோடை மலர் ரெடி
DeleteMe in Team 2 , Maxi Size க்கு பதில் டெக்ஸ் size கொண்டு வரலாம்., Mandrake க்கு டாடா, கோரிக்கை: கழுகு மலை கோட்டை, பூத வேட்டை , Phantom போன்றவை கலரில்..
ReplyDeleteU once said western history as single shot albums. I think one already came oru veeranin kathai. Pls start publishing them in v comics
ReplyDeleteமைக் ஹேமர்...
ReplyDeleteகதைப்படி பார்த்தால் நல்ல ட்விஸ்டோட போகுது.
முதல் கதையில...
தன்னுடைய நெருங்கிய நண்பனை கொல்லும் கொலைகாரனை சேஸ் செய்து (ஜம்பிங் ஸ்டார் போல) பிடிச்சு விசாரிக்கும் போது தான் கொலை செய்ய சொன்னதே அவரோட மனைவி தான் என்ற ட்விட்ஸ்டோட முதல் கதை முடியுது.
அடுத்த கதையில ஹேமர ஏமாற்றி, பொய் கதை சொல்லி அவரோட அனுதாபம் பெற்று அவர்கிட்ட அடைக்கலம் ஆகுறா ஒரு அழகி.
ஹேமர் அந்த அழகிய புள்ள பூச்சின்னு நினைச்சா அது சரியான பொல்லாத பூச்சின்னு சில ட்விஸ்டோட இறுதியில் அத கண்டு பிடிக்கிறார்.
இரண்டு கதையிலுமே புள்ள பூச்சி மாதிரி இருக்கும் 2 பெண்கள் தான் வில்லியாக கதையின் மையமாக வர்றாங்க.
கதைப்படி பார்த்தால் சூப்பர் கதை.
Team - A
ReplyDeleteTeam 1
ReplyDeleteSir, We have achieved this Mega size quality with Hard binding all these years... Pls don't go back in any kind of compromise with this MEGA size collector edition...
நானும் இரவில் படுத்தபடியே தான் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன்... ஒரு அரைக்கிலோ வெயிட் தூக்கி இன்னமும் படிக்க பழகவில்லை என்றால் இனியாவது பழகி கொள்ளலாம். டேபிளில் வைத்தும் சிரமம் அற்று படிக்கலாம்.
Team B, டெக்ஸ்வில்லர் சைஸில் .
ReplyDeleteமைக் ஹேமர் போல் கதைகள் இனி வேண்டாம் சார். ஓவியங்களும் ரசிக்க முடியவில்லை. கதை மிகப் பெரிய ஏமாற்றம். சமீப காலங்களில் மிகப் பெரிய ஏமாற்றம் இவர் தான்.
விஜயன் சார்,இப்போதெல்லாம் வசனப்பிழைகள், எழுத்துப்பிழைகள், ஆங்காங்கே கதாபாத்திரங்களின் பெயர்களிலேயே ஏற்படும் தவறுகள் போன்றவற்றை சரி பார்க்கும் பொறுப்பை வேறு யாரிடமும் கொடுத்துள்ளீர்களா? பொதுவாக டெக்ஸ் வில்லர் போல் தங்களின் தனிக் கவனம் அதிகமுள்ள சில கதைகள் தவிர்த்து பெரும்பாலான கதைகளில் இவை அதிகரித்து வருகின்றன. இவற்றில் சற்று கவனம் செலுத்துவது தேவை சார்.
ஆம். காலத்தை வென்ற காவியங்களான தங்கக்கல்லறையும் கார்சனின் கடந்த காலமும் கண்டிப்பாக அவை எம்மைக் கவர்ந்த அதே பழைய மொழிபெயர்ப்பில் சிறந்த தரத்தில் மறுபதிப்பு வேண்டும்.
ReplyDeleteஆமோதிக்கின்றேன்.
Deleteவரவேற்கின்றேன்.
1: TEAM - A
ReplyDelete4: காரிகளை நீக்கிவிட்டு மாண்ட்ரேக் ஐ வெளியிடலாம்.
கதம்ப ஹீரோக்கள் வேண்டும் ..........ஒரே ஹீரோ எட்டு கதை போர் .............
ReplyDeleteTeam A
ReplyDeleteஆனால் அடுத்த வருடத்தில் இருந்து சைஸ் மாற்றினால் மகிழ்ச்சி.
ஆமோதிக்கின்றேன்.வரவேற்கின்றேன்.
Deleteபிரியமுடன் ஒரு போராளி - கதையின் முதல் பக்கத்தில் ஒரு பெண்ணை கைது செய்ய முயல்கிறார் ஸாகோர், அந்த பெண் யார், அவளின் உண்மையான முகம் என்ன 63 பக்கங்களில் சொல்லியுள்ளார் கதாசிரியர்! கதையில் பிளஸ் படங்கள், கதை விறு விறுப்பாக செல்வது. கதையில் வசனங்கள் குறைவு, நிறைய பக்கங்கள் படத்துடன் விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது; 10 நிமிடத்தில் இந்த கதையை படித்து விட்டேன்! குறை என பார்த்தால் டெக்ஸ் மினி கதைபோல் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற விதத்தில் எழுதி உள்ளது போல் உள்ளது!
ReplyDeleteமிகவும் சரியான தலைப்பை கதைக்கு விஜயன் சார் சூட்டி உள்ளார்!
சார் சென்னை புத்தக விழாவில் நமது sales பற்றி கூறுங்கள் சார். இந்த முறை பழைய sales record எல்லாம் தவிடு பொடி ஆகி இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
ReplyDeleteஇது போல இனி வரும் திருப்பூர் புத்தக விழாவிலும் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன்...
16,070 views just for 6 million reach - Friends, start music !!
ReplyDeleteரம்மி ஜி சில வருடங்களுக்கு முன்பு டெக்ஸ் வில்லனின் இருளோடு ஒரு யுத்தம் கதையை கழுவி கழுவி ஊத்தியிருந்தார் .அதே பாணியில் ஸாகோரின் பிரியமுடன் ஒரு போராளி யைவிமர்சித்தால் செமையாக இருக்கும்.கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteஆமா. இப்படி தா கழுவி , கழுவி ஊத்துவீங்களா. எனக்கு இது சத்திய சோதனை தா. நா இன்னும் இதை படிக்கலை. நானே படிச்சுட்டு நேர்மையா பதில் சொல்றேன். Ok friends ..!
Deleteஇந்தமாதம் ஜனவரியில்பிப்ரவரிங்களாங்கசார் .திருப்பூர் புத்தகவிழாசிறப்பிதழ் எதுவும் சஸ்பென்சாக உள்ளதாங்க சார் கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteஅடடே ஆமா சார். February மாத புத்தகங்கள் எப்போது கிடைக்கும்? செவ்வாய் அனுப்பினால் புதன் கிடைத்து விடும்.
Deleteசார் ஒரு குடியரசு தின சிறப்பு பதிவு பிளீஸ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteகொரியர் அனுப்பி ஒரு வாரம் ஆகிறது என்கிறார்கள். இங்கோ தபால் உங்கள் பெயருக்கு வரவே இல்லை என்று சொல்கிறார்கள். சிவகாசி st கொரியர் ஆபீஸ் ல் தகவல் அறிய முடியுமா.
😍😃🙏சீனியர் எடிட்டர் சார் அவர்களுக்கும், நம்ப எடிட்டர் சார் அவர்களுக்கும், இளைய தளபதி எடிட்டர் விக்ரம் அவர்களுக்கும் ஜம்பிங்ஸ்டார் ஸாகோர் பேரவை சார்பாக குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🤓💐🙏🤝🇮🇳🇮🇳
ReplyDelete75 ம் ஆண்டு தொடக்கம் டெக்ஸ் கதை என்னைப் பொறுத்தவரை சிறப்பாக இல்லை.
ReplyDeleteசித்திரங்கள் சுமார் ரகம்.
பல இடங்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
கதையும் ஈரோட்டில் இத்தாலி போல மனதில் ஒட்டவில்லை.
Team -1.
ReplyDeleteவேதாளர் கதைகள் ஒவ்வொன்றும் மிக அருமை.
ReplyDeleteகாரிகன் கதைகள் போன முறை அவ்வளவாக சுகப்படவில்லை.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Edi Sir..😍😘😃
ReplyDeleteநாளை பதிவுகிழமைங்க சார்..😃
நம்ம ஸாகோர் பேரவை செயலாளர் சேலம் குமாரும், பொருளாளர் சின்னமனூர் சின்ன மச்சான் சரவணனும் உங்களுக்கு ஞாபகபடுத்த சொன்னாங்க சார்..😍😘😘😘🙏❤💐
இந்த மாத கதைகளின் வரிசை
ReplyDelete1. வேதாளர் ஒவ்வொரு கதையும் ஒரு வகை. பல்சுவை களஞ்சிய புதையல் இது.
2. டெக்ஸ் - சித்திரம் நன்றாக இருந்திருந்தால் இவருக்கு முதல் இடம் கிடைத்து இருக்கும்.
3. ஜாகோர் காட்டில் ஒரு ப்ளே பாயாக சில காட்சிகளில் தெரிகிறார். அடுத்த கதைகளில் எப்படி என் பார்க்கலாம்.
4. மைக் முதல் கதை படித்து முடித்து விட்டேன் வெகு சுமார். இரண்டாம் கதை கடந்த இரண்டு நாட்களாக ஓடுகிறது ஓடிக் கொண்டே இருக்கிறது. படங்கள் மனதில் ஒட்டவில்லை பெரிய ஈர்ப்பு கொடுக்க வில்லை. கதையை நம்புவதை விட சதையை நம்பியது போல உள்ளது. இது போன்ற கதைக்கு பதில் கடந்த வருடம் வந்த ராபின் கதைகள் போன்ற கதைகளை கொடுக்கலாம். முத்து ஆண்டு மலர் மிகப்பெரிய ஏமாற்றம் எனக்கு.
+108
Deleteகடந்த வருடம் வந்த ராபின் கதைகள் போன்ற கதைகளைக் கொடுக்கலாம்.யெஸ் ஸார்..ராபின் கதைகளை தொடர்ந்து கொடுக்கலாம். ராபினின் கொலைப் பொக்கிசம் மறு பதிப்பு+புது ராபின் கதை ஒன்று . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteOption1: TEAM A
ReplyDeleteOption 4: Montrake can be postponed/withheld
Suggestion:
1. Next Year you can open Door for other classic Heros...Like...Irattai Vettaiyar, Irumbukai Maayavi, Charlie, Modesty, James Bond, Captain Prince, Reporter Johny, Minnal Padaiyinar, Mini Lion Stories, Junior Lion Stories, Dhigil Stories, etc...
2. Forth coming S60s, S70s, S80s...in 2024...you can bring (reprint/new) old classics stories/Heros instead of Repeated Heros like RIP, Corrigon, Vethalar etc..
Team 1
ReplyDeleteஇன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteஆமாம் Sir.. இன்று பதிவுகிழமை.
CBF வெற்றி விபரத்தை சொல்லுங்க Sir..💪 ஆவலுடன் காத்திருக்கிறோம்..😃
V காமிக்ஸ் ல் எங்கள் தலைவர் ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் மாபெரும் வெற்றி பெற்ற வெற்றிகதையை சொல்லுங்க Sir..😍😘😘😘💐💐
****பிரியமுடன் ஒரு போராளி***
ReplyDeleteஇருப்பதே 60 பக்கங்கள், அதில் முன்னுரை முடிவுரை போக 52 பக்கங்கள் தான் கதை, ஆணால் ஒரு complete package, கதை முழுக்க ஒரு சஸ்பென்ஸ், கெண்றா நல்லவளா இல்லையா என்ற கேள்விக்கு ஸகோரோடு நாமுமே பயனிக்கிறோம்.
ஓவியங்கள்.. உப்ப்ப்ப்....அழகு.
அந்த முன்னுரை & முடிவரையிலும் ஒரு சஸ்பென்ஸ், கெண்றாவின் கூட்டு என்று அடுத்து வரும் கதைகளுக்கும் கொக்கி உள்ளது
Crisp tea time read, Perfect.
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteசார் இன்றைய பதிவில்
ReplyDeleteசென்னை புத்தக விழா Sales பற்றிய stats
தலைகீழாய் ஒரு தினம், V காமிக்ஸ்
Mr. No தோன்றும் அமேசானில் அதகளம் previews
நீங்கள் சொன்ன அந்த ஜனவரி இறுதியில் அறிவிப்பதாக இருந்த சர்ப்ரைஸ்
எல்லாம் வேண்டும்.
ஜனவரி துவக்க சர்ப்ரைஸ் V காமிக்ஸ் ஆக இருந்தது. இந்த மாத இறுதி சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்???
// பிப்ரவரியில் காத்திருக்கும் V காமிக்ஸ் பற்றியும், "தரைக்கு வந்த வானம்" பற்றியும் அடுத்த பதிவினில் எழுதுகிறேன் ! And அதனில் ஒரு ஜாலியான சர்ப்ரைஸுமே இருக்கக்கூடும் ! // அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கக் கூடும்? Keeping the Fingers crossed.
ReplyDeleteஆவலுடன் பதிவை எதிர்பார்த்து பாய் தலையணையுடன் இங்கிட்டு குந்தியிருக்கேங்க சார்.
ReplyDelete@Saravanan ..😍😘
ReplyDeleteமரத்துமேலேதானே பொருளாளரே..😶
பத்திரம்..😍😃
ஆமாங்க தலீவரே. நீங்க எனக்கு பக்கத்து மரத்துல தானே இருக்கின்றீர். பத்திரம்...பத்திரம்.
ReplyDeleteபதிவு வரும் வரை பத்திரம் பத்தரம்😀😀😀
ReplyDelete@பொருளாளர்..😍😘
ReplyDeleteஆமாங்க.. நானும் நம்ப செயலாளரும் பக்கத்து மரத்துலதான் பத்திரமா இருக்கோம்..😃😍💪
நம்ப பூனைக்குட்டி 😻எனக்கு முன்னாடி உள்ள மரத்துலதான் பதுங்கி இருக்காரு..😃😃😃😀😀😀
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete