நண்பர்களே,
வணக்கம். ஒரே நேரத்தில் காலியாகவும், நிறைவாகவும் உணர்ந்திட இயலுமா ? முடியும்ங்கிறேன்....!! ஒண்ணு இல்லை...ஆனா இருக்குங்கறேன் ! எப்புடின்னு நீங்க கேக்கவே கேக்காட்டியும்,நான் சொல்லியே தீருவேனே !!
மாலை 6 மணி சுமாருக்கு ஆபீசுக்கு சும்மா எட்டிப் பார்ப்போமே என்று போயிருந்தேன். மாடியில் அத்தனை பேருமே கேம்ப் அடித்திருக்க, கீழே நிசப்தம் ! எனது ரூமுக்குள் போய் லைட்டைப் போட்டால் - ரூமே காலியாய் ; வெறிச்சோடிக் கிடப்பது போல் சுத்தமாய் பள பளத்தது ! இந்த வாரத்தின் துவக்கம் முதலாய் நம்ம XIII & பட்டாளம் எனது அறையினை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருக்க - தொடர்ந்த ஒவ்வொரு நாளிலும் அங்கேயே அமர்ந்து புக்ஸை சரி பார்ப்பது ; பபுள் ராப் செய்வது ; பேக் செய்வது ; அட்ரஸ் ஓட்டுவது - என நம்மவர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் ! ஆனால் நேற்றைக்கு XIII முன்பதிவுப் பிரதிகளின் முழுமையும் புறப்பட்டிருக்க, இன்றைக்கு முகவர்களின் ஆர்டர் அனைத்தும் கிளம்பியிருக்க, இப்போது அறையினுள் மேஜையும், நாற்காலிகளும், வித வித பாஷைகளிலான காமிக்ஸ்களும் மட்டுமே உள்ளன !!
காலியானது அறையாக இருந்தாலும், உள்ளே சென்று அமர்ந்த போது மனசில் ஒருவித நிறைவு !! Of course - இது மறுபதிப்புக்கு மறுபதிப்புக்கு மறுபதிப்பு தான் ; எப்போதோ ஒரு சமயம் துவங்கி, எப்போதோ ஒரு வேளையில் நனவாகியுள்ளது தான் ; அட்சர சுத்த நகலுமே தான் ; and நாம் பார்த்திடும் முதல் பெரிய இதழும் அல்ல தான் ! ஆனால் இத்தனை பெரியதொரு தேரை இழுத்துக் கொணர்ந்து எல்லை சேர்க்கும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ந்திட வேண்டியதொன்று தானே ?
தவிர, நேற்று முதலாய் இங்கு நாம் சாட்சியாக இருந்து வருவது அசாத்தியமானதொரு ஈகைப் பிரவாகத்திற்கு ! இங்கே காமிக்ஸ் ரகளைகளை ஒருநூறுவாட்டி பார்த்திருப்போம் ; கையைப் புடிச்சி இழுத்தியா ? பஞ்சாயத்துக்களோடு இருநூறுவாட்டி குப்பை கொட்டியிருப்போம் ; ஏதேதோ அலசல்கள் உற்சாகங்களில் திளைத்திருக்கிறோம் ! And yes - சுகவீனங்களில் சங்கடப்பட்டு வந்த நண்பர்களுக்கென நாம் பணம் திரட்டிட முயன்றுள்ளதுமே பல முறைகள் நிகழ்ந்துள்ளன தான் ! ஆனால் நேற்று முதலாய் நண்பர்கள் இங்கே கரங்கள் சிவக்கக் காட்சி தந்திடுவது இரு காரணங்களின் பொருட்டு என்று எனக்குப்பட்டது ! முதலாவதும், பிரதானமானதும் : அசாத்திய மருத்துவச் சேவை செய்து வரும் ஒரு அமைப்புக்கு தம் சிறு பங்கினைச் செய்திட, இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள நண்பர்கள் முன்வந்தது ! இரண்டாவதும் & நமது காமிக்ஸின் பார்வைக்கோணத்தினில் significant ஆனது : வாசிப்பினில், வணிகம் ஒரு இடராகிட அனுமதிக்கலாகாது என்பதை highlight செய்திட முனைந்தது என்பேன் ! Of course, 'காதிலே புகை கழகம்' இதனில் மாற்றுக் கருத்து கொண்டிருக்கும் தான் & இந்த ஒற்றை நாளினில் சகல 'ஏலேலோ ஐலசா' நிகழ்வுகளும் காற்றில் கரைந்து போய்விடவும் போவதில்லை தான் ! In fact - 'நீயென்ன சொல்றது ? நான் என்ன கேக்குறது ?' பாணியினில் எதிர்வினையாற்றும் முனைப்புகள் வேகமெடுக்கும் என்பதை யூகிப்பதிலும் சிரமங்களில்லை தான் ! ஆனால் எல்லா மாற்றங்களுக்கும் ஏதேனுமொரு புள்ளியில் துவக்கம் இருந்திடத் தான் வேணுமெனும் போது - அந்தப் புள்ளியை நண்பர்கள் தங்களின் தயாளங்கள் வாயிலாக அழகான கோலமாய்ப் போட்டிருப்பது எனக்கு அளவிலா மனா நிறைவைத் தந்துள்ளது ! சம்பந்தமே இல்லாதோர் கூட, தெருவில் ஒரு அழகான மாக்கோலம் போடப்பட்டிருக்கும் போது, அதனை மிதிக்காது சுற்றிப் போக முனைவதுண்டு தானே ? அது இங்கே கிஞ்சித்தேனும் நடந்திடாது போகாதென்ற நம்பிக்கையினை இன்றைய பொழுது விதைத்துள்ளது !
இதோ, இப்போது வரையிலும் போணியாகியுள்ள 11 புக்ஸ் நிகழ்த்தியுள்ள மாயாஜாலம் இது :
அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !!
நண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!
Here are the donors :
1.Mr.Shanthakumar, Chennai.
2.Mr.Sathya Sainath, Chennai
3.*************** (name withheld on request)
4.Mr.Srinivasa Raghavan, Chennai
5.Master.Kanishk, Srirangam.
6.Mr.Prem, Nagercoil / U.S.A.
7.Mr.Kumar Raghavan, Salem.
8.Mr.Sanjay, Chennai.
9.Dr.Rajesh Ranganathan, Chennai.
10.Mr.Sundarapandian, Nellai
11.Mr.Gautham
And ரூ.2900 வீதம் 11 புக்சின் பொருட்டு நமக்கு வந்துள்ள / வந்து கொண்டுள்ள தொகை - ரூ.31900 !! இந்தத் தொகையானது நாளையே சன்ஷைன் லைப்ரரியின் பெயரினில் அடையாருக்கு அனுப்பிடப்படும் !
And திங்களன்று உங்கள் சார்பினில் + பிரகாஷ் பப்ளீஷர்ஸ் சார்பினில் இன்னொரு தொகை அடையாருக்கு புறப்பட்டிடும் - இந்த நடப்பு இ.ப. புராஜெக்டின் பணத்திலிருந்து !! Thanks a million : அத்தனை நண்பர்களுக்கும் !!
இந்த சிந்தனை போதாதா - ஒரு காலி அறையின் நிசப்தத்திலும், நிறைவாய் உணர்ந்திட ?! என்ன ஒரே சிக்கல் - 'ரூமை மறுக்கா ரொப்பிப் பார்க்க இன்னா செய்யலாம் மன்னாரு ?'ன்னு மனசு கேட்கும் போது தான் பதில் சொல்ல முழிச்ச பிழைப்பாய்ப் போகுது ; கட்டைவிரல்கள் நமைச்சல் எடுக்கிறா மெரியே தோணுது !! And அதுக்கோசரம் ஒரு திட்டமிடல் லேசாய்த் துளிர் விடவும் துவங்கியுள்ளது - வரும் நாட்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள்புரிவாராக !!
அப்புறம் இன்று காலை முதலாய் ஆபீசில் நடந்து வரும் E ROAD ஆன்லைன் புத்தக விழா - ஒரு smashing success !! காலையில் ஒரு ரெண்டு மணி நேரம் ; மாலையில் ஒரு மணி நேரம் நம்மவர்களோடு அமர்ந்திருந்தேன் !! Phewwwwwwwww !!! தாரை தாரையாய் தக்காளிச் சட்னி அந்த அறையெங்கும் ஒவ்வொருவரின் காதிலிருந்தும் வழிந்திடாத குறை தான் என்றாலும், அடுத்த போன் அழைப்பிற்கு அதே புன்னகையோடு அவர்கள் தயாராவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே பெருமையாய் இருந்தது ! "நான் தென்..நான் தென்..." என்று சொட்டைத் தலையை முன்னே நீட்டிக்க கொண்டு நிற்கும் வாய்ப்பு எனதாகிடும் போது, நான் பணிகளின் பொருட்டு மெனெக்கெடுவதில் பெருசாய் வியப்புகளில்லை தான் ! ஆனால் சொற்பமோ, ஜாஸ்தியோ - வாங்கும் சம்பளங்களுக்கு உண்மையாய் ; வாசகர்களின் ஆவல்களைப் புரிந்து கொண்டு, இயன்றமட்டிலும் யார் மனதும் நோகிடாது பணியாற்றுவதென்பது சாமான்யக் காரியமில்லை !! And பொதுவாய் நான் அருகே இருக்கும் பட்சங்களில் 'சொடலைமுத்து ரொம்ப ஸ்டிக்கட்டுப்பா !" என்ற பயத்தில் பணிகளில் கவனம் செலுத்தத் திணறிடுவார்கள் ! So இதற்காகவே நான் 'மாசா மாசம் பொழியுதா மழை ?" என்ற கேட்ட கையோடு எனது அறைக்குச் சென்றுவிடுவேன் தான் ! ஆனால் இன்றைக்கு இந்த Slipcase XIII புக்ஸ்களை அனுப்பும் பணியினையும் அவர்கள் தலைகளில் சுமத்திட வேண்டாமே என எண்ணியவனாய் அங்கே இருக்க வேண்டிப் போனது ! And உங்களின் ஆர்வங்கள், துள்ளல்கள், என சகலத்தையும் ஒரு ஓரத்திலிருந்து பார்க்க / கேட்க முடிந்த போது - நேரம் போனதே தெரியலை !! End of the day - உங்கள் ஒவ்வொருவரின் காமிக்ஸ் நேசங்களும், இறைவன் நஇந்த காமிக்ஸ் சிறுவட்டத்திற்கென தந்துள்ள பிரத்யேக வரம் என்பதைத் தாண்டி இந்த நொடியில் வேறெதுவும் சொல்லத் தோணலை !!
ரைட்டு...தடி தடியாய் ; கலர் கலராய் ஒரு வண்டி புக்ஸை கையில் ஏந்தியிருக்கும் உங்கள் மீதே இனி limelight ! அலசுங்கள்...ஆராயுங்கள் guys ; நான் "அந்தியும் அழகே" தாத்தாஸ் கூட கரம் கோர்க்கக் கிளம்புகிறேன் !! Bye all ; see you around !! அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! And நாளைய பொழுதையும் நமது புத்தக விழாவுக்கு மெர்ச்சலூட்டும் தினமாக்கிட உங்களைக் கோரியபடிக்கே I am அப்பீட் ! Have a Safe Sunday !!
P.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ?
1
ReplyDelete2
ReplyDelete3
ReplyDeleteவந்தாச்சேய்
ReplyDelete6
ReplyDeleteSlipcase XIII vaanga aasai, puthusa comics padika start panni iruken, palaya post um padichu paarthen donation entha address send pananum therla. therinthavargal enaku uthavungal, inaiku book fair la um purchase panni iruken. Books epo veetuku varum nu வழி மேல் விழி வைத்து iruken.anyone from publication XIII epdi vaangurathunu guide pannunga please.
ReplyDelete98423 19755 இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் அப் கால் செய்யுங்கள்
Deleteமகிழ்ச்சி.... தொடரட்டும் பயணம்...
ReplyDelete9th
ReplyDeleteஇரவு 🙏
ReplyDeleteஅருமையான உறவுகள்....
ReplyDeleteஅருமையான நிறைவான பதிவு சார்....
ReplyDeleteஅந்த ஆயிரம் பக்க கௌபாய் கதையா
வாழ்த்துக்கள் நண்பர்களே
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete🙏🙏
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஎடிட்டர் சார்…
ReplyDeleteஈ-ரோடு புத்தக விழா மிக சிறப்பாக வெற்றி அடைய வாழ்த்துகள். 13 புத்தகங்களை ஏலம் விட நேரிட்ட போது நல்லபடியாக முடிய வேண்டும் என்ற பதைபதைப்பு இருந்தது. கடவுள் அருள் மற்றும் நண்பர்களின் தயாளத்தோடு நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.
இந்த மாதம் போல அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு கமர்சியல் கதைகளாக போட்டுத் தள்ளுங்கள். பரீட்சார்த்தமான முயற்சிகளை சுற்று வட்டாரமும் சூழ்நிலையும் சரியான பிறகு தொடரலாம்.
இன்றைய மன நிறைவு இனி வரும் வருடங்களிலும் எல்லா நாட்களிலும் இருக்க இறைவன் அருள்வான்.
/* இந்த மாதம் போல அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு கமர்சியல் கதைகளாக போட்டுத் தள்ளுங்கள். பரீட்சார்த்தமான முயற்சிகளை சுற்று வட்டாரமும் சூழ்நிலையும் சரியான பிறகு தொடரலாம் */
Deleteவழிமொழிகிறேன் - இந்த இடர் மிகுந்த நாட்களில் விற்பனையாளர்களுக்கு சரி எடிட்டர் அவர்களுக்கும் சரி - விற்பனைக்கு சுலபமானது எதுவென்று ஆராய்ந்து அவற்றை வெளியிட வேண்டுகிறேன் ! சில வருடங்களுக்குப் பிறகு all new special மாதிரி விஷயங்களைக் கட்டி மேய்வோம்.
இப்போதைய குறிக்கோள் விறைப்பினையாள நண்பர்கள், பணியாளர் குடும்பங்கள் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும் !
ஆசிரியரும் ஏற்கனவே சொன்னதுதான்... கட்டைவிரலை கமர்சியல் கதைகளுக்குள் விடத் தயாராம்....பதிமூன்று கதைக்கிணையான விலைல புதிய கதையாமுல்ல
Deleteஅடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !!
ReplyDeleteநண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!
Here are the donors :
1.Mr.Shanthakumar, Chennai.
2.Mr.Sathya Sainath, Chennai
3.*************** (name withheld on request)
4.Mr.Srinivasa Raghavan, Chennai
5.Master.Kanishk, Srirangam.
6.Mr.Prem, Nagercoil / U.S.A.
7.Mr.Kumar Raghavan, Salem.
8.Mr.Sanjay, Chennai.
9.Dr.Rajesh Ranganathan, Chennai.
10.Mr.Sundarapandian, Nellai
11.Mr.Gautham
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிறைவான நாள் உண்மையில்.
ReplyDeleteநல்ல காரியத்திற்கு தங்கள் பங்களிப்பை செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் பாராட்டுக்கள்.
என்னோடு கலந்த இரத்தப்படலம் கைப்பத்தியாச்சு அட்டைப்படங்கள் வேற லெவல் சார்..DARGUD EDITION போல அருமையாக வந்துள்ளது..நைட்ஷிப் சுதந்திர தின பரேடு என நெட்டிவாங்கினாலும் புக்கவாங்காம தூக்கம் வர்ல சார்...ஷிப்ல இருந்தாலும் வீட்டில் இருக்கிற புக்நினைவாகவே உள்ளது...
ReplyDeleteபபுள் கவர்ஷகெட்டி அட்டைப்பெட்டி சகிதம் சேதாரம் இல்லாமல் அட்டகாசமாக வந்து சேர்ந்தது..சார்...
ReplyDeleteஇன்னைக்கு ஃபுல்லா Online book fair la கலந்துக்க Try பண்ண ஒரு சிலருக்கு Line கிடைக்கலை.
ReplyDeleteஅவர்களை நாளைக்கும் Try பண்ண சொல்லிருக்கேன்.
நாளைக்கும் கிடைக்கலைன்னா நாளை மறுநாள் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது உங்கள் பொறுப்பு!
சொல்லிட்டேன்.
இப்பவே அவர்களது தேவைகளை நமது அலுவலக What's app எண்ணுக்கு அனுப்ப சொல்லிட்டேன்.
திங்கட்கிழமை இவர்களது தேவைகளுக்கு இதே சலுகை விலையில் செவிசாய்ப்பது உங்கள் பொறுப்பு!
நமக்கு தேவையான புத்தகங்களின் பெயர்.தள்ளுபடி போக தொகையை gpay அனுப்பிவைத்தால் முடிந்தது பாபு...அவர்கள் அங்கு செம பிஸி...ஒரு மெசேஜ். ஒரு ஸ்கீரீன்ஷாட் வேலை முடிந்தது.ஏமாற்றம் அடைய தேவையில்லை பாபு...இருந்தாலும் நம்ம ஆசிரியர் ஏதாவது செய்வார்...
Deleteகூட்டம் அதிகம் என்பதால் ஸ்லாட் கிடைக்காமல் இருக்கலாம்...
Deleteவாட்ஸ்ஆப்பில் அனுப்பினால் சலுகை விலை உறுதி... ஆசிரியர் சார் அதை உறுதி செய்தால் இன்னும் மகிழ்ச்சி!
டென்ஷனின்றி நாளை தகவல் அனுப்பச் சொல்லுங்கள் பாபு ; டிஸ்கவுண்ட் இல்லாது போகாது !
Deleteநன்றி ஆசிரியர் அண்ணா!(சார்!)
Deleteசிபாரிசு செய்த மூத்த தலைமுறையினர்களுக்கு இந்த வருங்கால தலைமுறை குழந்தையின் நன்றிகள் கோடி!
ஏதே ஆசிரியர் அண்ணா வா?
Deleteநான்லாம் அண்ணா லெவல் தான் ; பாக்கி பார்ட்டிஸ் பெருசு லெவெல்ஸ் ! இதுக்காகவே ஒரு எக்ஸ்ட்ரா மாடஸ்டி புக் போடலாம் போலிருக்கே பாபு !!
Deleteஅண்ணனுக்கு ஜே!
Deleteமாடஸ்டிக்கு ஜே!
///பாக்கி பார்ட்டிஸ் பெருசு லெவெல்ஸ் ! இதுக்காகவே ஒரு எக்ஸ்ட்ரா மாடஸ்டி புக் போடலாம் போலிருக்கே பாபு !!///
Delete---பெரிசு லிஸ்ட்ல உள்ள டாக்டர்கள், தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துகள்.
லிஸ்ட்ல இணைய விரும்பும் குரு & சிஷ்யன் சோடிக்கும் வாழ்த்துகள்🌹
///--பெரிசு லிஸ்ட்ல உள்ள டாக்டர்கள், தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துகள்.
Deleteலிஸ்ட்ல இணைய விரும்பும் குரு & சிஷ்யன் சோடிக்கும் வாழ்த்துகள்///
எங்களுக்கு பிளைசி பாபுவே அண்ணன்தான்.. போவியா..!:-)
ஏஜெண்ட்களுக்கு அனுப்பியுள்ள புக்ஸ் கூட, புக்ஸ் சுற்றிலும் கண்ணடித்தாள் ; ஒரு டப்பாவுக்குள் புக்ஸ் ; அந்த டப்பாவே இன்னொரு டப்பாவுக்குள் ; அப்புறமாய் பெல்ட் போட்டு, மேலே பிளாஸ்டிக் சாக்கு என்று பேக்கிங்கில் ரணகள கவனமெடுக்க முனைந்துள்ளோம் !//
ReplyDeleteநாங்கள் அடைந்த பேரானந்தம் எங்களிடம் புக் பண்ணிய நண்பர்களும் அடையனும் சார்...இன்னும் பார்சல் கெளம்பிய தகவல் இல்லை சார். நாளை ஞாயிற்றுக்கிழமை லாரி ஆபிஸ் லீவு இங்கு கரூரில்..நண்பர்களை சென்றடைய புதன் ஆகிவிடும் போல் உள்ளது சார்...
///And அதுக்கோசரம் ஒரு திட்டமிடல் லேசாய்த் துளிர் விடவும் துவங்கியுள்ளது - வரும் நாட்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள்புரிவாராக !! ///
ReplyDelete---இவர்தாங்க எங்க ச்சே நம்ம எடிட்டர்😍😍😍
ஒரு பெரும் சுமை குறைந்தவுடனே அடுத்த சுமையை தானாகவே வலிய சுமக்கிறார்... சிம்ப்ளி யூ ஆர் கிரேட் சார்.🙏🙏🙏🙏
அது அதுதான் அவர்...🎉🎊🎉🎉
Delete// ---இவர்தாங்க எங்க ச்சே நம்ம எடிட்டர் //
Delete+1
அதேதான் அந்த திட்டமிடல் பற்றி சீக்கிரம் அறிய ஆவல்
Deleteஸ்பைடரோட குண்டுதான்
Delete///அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !!
ReplyDeleteநண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!
Here are the donors :
1.Mr.Shanthakumar, Chennai.
2.Mr.Sathya Sainath, Chennai
3.*************** (name withheld on request)
4.Mr.Srinivasa Raghavan, Chennai
5.Master.Kanishk, Srirangam.
6.Mr.Prem, Nagercoil / U.S.A.
7.Mr.Kumar Raghavan, Salem.
8.Mr.Sanjay, Chennai.
9.Dr.Rajesh Ranganathan, Chennai.
10.Mr.Sundarapandian, Nellai
11.Mr.Gautham
///
----🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த போட்டோல பச்சைக் கலரு இருக்கு 🤔
ReplyDeleteலயன்"400" அட்டை படம் & மேக்கிங் சும்மா அள்ளுதுங்க சார்...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல....முன் அட்டையில தல செம்ம கம்பீரமா அட்டகாசமா மின்னுகிறாரு சார்........
ReplyDeleteகாதைக் கொண்டு வாங்க கிட்டே...ஒரு ரகசியம் சொல்றேன் !
Deleteடெக்சின் இந்தச் சித்திரம் ஒரிஜினலாய் "நெஞ்சே எழு" ஆல்பத்துக்கானது ! பார்த்த நொடியிலேயே 'தல'யின் கம்பீரத்தை ஏதேனுமொரு ஸ்பெஷல் இதழுக்குத் தான் பயன்படுத்திட வேண்டுமென்று தீர்மானித்தேன் ! So 'நெஞ்சே எழு" கதைக்கு வேறொரு ஒரிஜினல் சித்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த கம்பீர டெக்ஸை லயன் 400 க்கென பதுக்கி விட்டேன் !!
ஒரிஜினலாய் அவர்கள் போட்டிருந்த படத்தின் பின்னணியில் நிறைய மஞ்சள் இருந்தது ; நம்மவரின் சட்டையும் மஞ்சள் எனும் போது பெரியளவுக்கு வேறுபட்டுத் தெரியாதென்பது புரிந்தது ! So அடர் நிறம் ஏதேனும் தான் இங்கே ஒத்து வருமென்ற எண்ணத்தோடே தேட ஆரம்பித்த போது கண்ணில் பட்டது மேலுள்ள பச்சை !! மீதம் நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமே !
//டெக்சின் இந்தச் சித்திரம் "நெஞ்சே எழு" ஆல்பத்துக்கானது ! பார்த்த நொடியிலேயே 'தல'யின் கம்பீரத்தை ஏதேனுமொரு ஸ்பெஷல் இதழுக்குத் தான் பயன்படுத்திட வேண்டுமென்று தீர்மானித்தேன் !! So 'நெஞ்சே எழு" கதைக்கு வேறொரு ஒரிஜினல் சித்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த கம்பீர டெக்ஸை லயன் 400 க்கென பதுக்கி விட்டேன் ! ///
Deleteஉண்மையிலேயே அருமையான முடிவு சார்.....அட்டையில் இருக்கும் தல ஸ்ட்டில்லு செம்ம கெத்து & மாஸுங்க சார்..
சமீப காலங்களில் வந்ததில் மிகச் சிறந்த அட்டைப்படம் லயன் 400 இந்த வருடம் வந்ததில் இது தான் பெஸ்ட். ஆங்கில Hardbound இதழ்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஆக்கம். அட்டைக்கு மட்டுமே எனது மதிப்பெண் 1000/10
Deleteபொன்னும் கலக்கிபுட்டாரு கருப்புதான் எனக்குப் புடிச்ச கலருண்ணு
Delete// P.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? //
ReplyDeleteTEX 400 Cover page background
This comment has been removed by the author.
Deleteஅதுதான் கரெக்ட் சகோதரரே சமிபத்தில் பார்த்தது மட்டுமல்ல கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது லயன் 400
Delete/////And ரூ.2900 வீதம் 11 புக்சின் பொருட்டு நமக்கு வந்துள்ள / வந்து கொண்டுள்ள தொகை - ரூ.31900 !! இந்தத் தொகையானது நாளையே சன்ஷைன் லைப்ரரியின் பெயரினில் அடையாருக்கு அனுப்பிடப்படும் !
ReplyDeleteAnd திங்களன்று உங்கள் சார்பினில் + பிரகாஷ் பப்ளீஷர்ஸ் சார்பினில் இன்னொரு தொகை அடையாருக்கு புறப்பட்டிடும் - இந்த நடப்பு இ.ப. புராஜெக்டின் பணத்திலிருந்து !! Thanks a million : அத்தனை நண்பர்களுக்கும் !! ////
அருமையான செயல் ஆசிரியர் சார்....🙏🙏🙏🙏🙏
சொன்னதை செய்து காட்டி உள்ளீர்கள்; சொல்லாததையும் செய்து காட்டி உள்ளீர்கள்!!!
இதற்கு முழு முதற் காரணமாக இ.ப.1.0& இ.ப.2.0 இருப்பது மகிழ்ச்சி!😍
நான் காலை 11.30 மணிக்கு பேசினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.புக்ஸ் வீடியோ கால்ல காமிச்சாங்க. ஆர்டர் பண்ணிவிட்டேன்.
Deleteபணம் டிரான்ஸ்பர் மதியம் 3 மணிக்கு மேலதான் பண்ண முடிஞ்சது.Server busy..
But பணம் அனுப்பிச்சிட்டு confirmation பண்ணலாம்னா..கால் பிஸி.பிஸி..
அப்புறம் Whatsapp போட்டிருக்கேன்..
வெரிகுட்... உங்களது புத்தகங்கள் சேஃபாக வந்து சேரும்... வாழ்த்துகள் & என்சாய்🌹
Deleteபொதுவாய் நான் அருகே இருக்கும் பட்சங்களில் 'சொடலைமுத்து ரொம்ப ஸ்டிக்கட்டுப்பா !" என்ற பயத்தில் பணிகளில் கவனம் செலுத்தத் திணறிடுவார்கள்//
ReplyDeleteஅது தெரியும் சார்...
எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? //
ReplyDeleteநல்லா கேட்டிங்களே..12வகுப்பு படிக்கயில அவங்க எங்களுக்கு கனவுகன்னி...
LION 400 - இந்த அட்டைப்படத்தை மேலோட்டமாக தடவி தொட்டு பார்த்தால் சில நகாசு விஷயங்கள் தெரியும்; கண்ணுக்கு விருந்தாக உள்ளது இவை.
ReplyDeleteமுன் பக்க அட்டையை கொஞ்சம் சாய்த்து பார்த்தால் டெக்ஸ் நண்பர்கள் குதிரையில் வருவது அந்த பிரவுன் கலரில் தெரியும் படி பிரிண்ட் செய்தது செம! முதலில் அட்டை படத்தை பார்க்கும் பொது டெக்ஸ் மற்றும் தெரிந்த எனக்கு இது மிகவும் ஆச்சரியமான விஷயம். சூப்பர் சார். இதனை எத்தனை நண்பர்கள் கவனித்தீர்கள் என சொல்ல முடியுமா!
கதை விறுவிறுப்பாக செல்கிறது, 60 பக்கங்கள் முடித்து விட்டேன்!
எல
Deleteகிறுக்கா....அது கருப்பு....இந்த யோசனை எப்படி வந்ததுன்னு ஆசிரியர் சொல்வாரா
வணக்கம் நண்பர்களே
ReplyDelete///எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? ///!
ReplyDeleteலயன் 400ல தலைக்குப்பின்னாடி....😍😍😍
40th
ReplyDelete////: எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? ///
ReplyDeleteநில்.. கவனி.. வேட்டையாடு!
ஒண்ணுமே தெரியாத மாதிரி கமெண்ட் போட எங்க ஈவிய விட்டா யாரு...😃😃😃😃
Deleteஅச்சச்சோ! "இங்கே க்ளிக்குங்க பழனி பாஸு!"
Deleteஅப்போ நீங்க அந்தம்மாவோட படத்தை பார்த்ததில்லை...நம்பிட்டேன்..
Deleteபால் குடிக்காத பூனை லோகத்தில் ஏதுங்க.....😉
Deleteதெனாலி ராமன் பூனை
Deleteடியர் சார்,
ReplyDeleteநண்பர் (XIII) வீடு வந்து சேர்ந்தாச்சு..
முதல் தொகுப்பின்-அட்டைப்படம்தான் எனக்கு சோபிக்கவில்லை..
நண்பர் ஸ்டீல் க்ளா-வேறு கருத்துண்டிருக்கலாம்..
இதழ் தயாரிப்பு-ஓவியம் கூடுதல் வண்ணச்
சேர்க்கை அருமை.
புதிதாக வாங்கியவர்கள்தான் கூடுதலாக ஒரு அட்டைப்படத்தை இழந்துவிட்டார்கள்..
(இன்னும் வேறு ஏதும் கம்பேரிஷன்-செய்தால் முந்திய தொகுப்பு கூடுதல் விலை ஏறிவிடும்.)
ஆனாலும், முதல்பாகத்தின் முகப்பு ஓவியத்தை என் விருபத்திற்குரிய - X 111-தனித்து நிற்கும் ஓவியத்தைத்தற்கு நன்றி.
(இதையே அட்டைப்பட ஓவியமாக - உங்கள் நகாசு வேலைகளுக்கு உட்படுத்தி இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
நான் முன்பே கேட்டது தான். அனைத்து பாகங்களின் முகப்பு ஓவியத்தையும் வெளியிடுங்களேன் சார். ப்ளீஸ். சேர்த்து ரசிக்க அருமையாக இருக்கும்..
இதழுக்கு & உழைப்பிற்கு நன்றிகள் சார்..
முதல்பாகத்தின் முகப்பு ஓவியத்தை என் விருபத்திற்குரிய - X 111-தனித்து நிற்கும் ஓவியத்தைத்தற்கு நன்றி.//
Deleteஎனது நன்றியும் சார்..
எனதும்....பின்னட்டைகள் தூள்....முதல் புத்தகம் வண்ட
Deleteணமிலாது டாலடிக்கல...புலன் விசாரணை பக்கங்கள் செம...இதிலைலே இணைத்தால் மிஸ்ஸாக வாய்ப்பில்லை...பிரிண்டிங் A1....
Hi..
ReplyDelete///எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ?
ReplyDeleteP.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? ///
இந்த போட்டோவுல பச்சைக் கலருமா இருக்குது...!?
அதானே???
Deleteலயன் 400 செம்ம மிரட்டல் மேக்கிங்.!
ReplyDeleteஎத்தனையோ விதவிதமான ஷ்பெசல்கள் வந்தாலும் கூட..
இப்படி ஒரு கலர் குண்டு டெக்ஸ்வில்லர் புக்கை கையில் ஏந்தும்போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு எதுவுமே ஈடில்லை.!
நான்: என்ன ரம்மி ஒரே மாசத்துல மூணு தல புக்காம்? மூணும் வண்ணத்திலாம்? இரண்டு ஹார்ட் கவர் வேறயாம்? படிச்சியா?
ReplyDeleteரம்மி: அட்டையைக் கிழிச்சா எல்லாம் ஒரே கதை தானுங்.
நான்: உன் அலும்பு தான் எடிட்டருக்குத் தெரியுமே. அதான் ஒரு கதைக்கு அட்டையில்லாம ப்ரீயா அனுப்பிருக்காறாம். .
அது மட்டும் தான் படிக்கிறாப்பிலே இருக்கு... நல்ல வேளை மாசத்திலே ஒன்னாவது படிக்கிறாப்பிலே போட்டாரேன்னு கோயமுத்தூரிலே சத்தம் கேட்குதுங்க..
Deleteமகி அப்ப ரம்மிக்கு வேலையில்லைங்கிறீங்களா
DeleteP.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா //
ReplyDeleteகடைசியாய் 2012 கோவாவிலே என்னுடைய தோள் பட்டையிலிங்க சார்.. இன்னும் இருக்கு..
ஹூம்.. இம்புட்டு பேரு இருக்காகளே.. ஒருத்தராச்சும் பொறுப்பா கேள்வி கேக்குறாங்களா பாரு..!
ReplyDeleteசரி.. நம்மளாச்சும் கேட்டு வைப்போம்.!
SPECIES ஏதும் கலர்ல மேக்ஸி சைஸ்ல போடுற ஐடியா இருக்குங்களா சார்.!? :-)
மாமா நீங்கதான் நம்மாளு...
Deleteஅப்புறம்.. நாமளும் கேக்கலைன்னா.. இந்த தேசத்தை முன்னேத்துறது எப்படி பழனி.?
Deleteகண்டீப்பா மேக்ஸி சைஸ்லதான் வேணும்...
Deleteஅட்லீஸ்ட் அந்தம்மாவ மேக்ஸி போட்டுட்டு வரச் சொல்லுங்கய்யா 🤓
Deleteநா கேக்கனும்னு நெனச்சேன் நண்பரே...ஆசிரியர் புதுக்கதை என்று சொன்னது நெனச்சி...ஆனா அட்டயத்தான் கேக்குறாரேன்னு நெனச்சி விட்டுட்டேன்
DeleteThis comment has been removed by the author.
Delete///அட்லீஸ்ட் அந்தம்மாவ மேக்ஸி போட்டுட்டு வரச் சொல்லுங்கய்யா 🤓///
Deleteஅதுக்கு வராமயே இருந்துகிடட்டும் பூபதி..!
லயன் 400.. அட்டகாசமான மேக்கிங்.. இதை விடவும் இன்னொரு அட்டைப்படம் வருமான்னு தெரியலை.. அதுக்காகோசரம் கதையைப் படச்சிறாலாம்ன்னு நெனைச்சிறக் கூடாது..
ReplyDeleteபுளுகுனாலுங்கூட கொஞ்சமாச்சும் நம்பறாப்ல புளூகோணுங் ரம்மீ..!
Deleteநானெல்லாம் டெக்ஸ் ரசிகன்னு பொழுதன்னைக்கும் பெருமைக்கி சொல்லிக்கிட்டு திரியறதுதானுங் ரம்மீ..
ஆனா பாருங்க அஞ்சாறு டெக்ஸ் கதை வுன்னமும் படிக்காம கெடக்குதுங்க ர்ம்மீ..
நீங்க என்றான்னா.. அன்னன்னிக்கே படிச்சிம்போட்டு பாயாசமும் காச்சிபோட்றிங்க ரம்மீ..!
வுப்ப சொல்லுங்.. ஆருங்.. நெசமான டெக்ஸ் ரசிகரு.. ஆங்.?
நம்ம கெரகமோ என்னவோ... அதிகாரி கதையிலே எப்பவுமே ஒரு செகப்பு நாடா கட்டிருப்பாங்க.. இந்த கடவு கட்டறதுக்கு மறந்து போயிட்டாங்களாட்டா இருக்குது.. எந்த பக்கத்தை திருப்பினாலும் ஒரே மாதிரி இருக்குது..
ReplyDeleteஅதுக்கு தானே புக் மார்க் அனுப்பியிருக்கு ?
Delete///அதுக்கு தானே புக் மார்க் அனுப்பியிருக்கு ?///
Deleteஅதை கை நடுக்கத்துல எடுத்து கரெக்டா வைக்க முடியலையாம் சார்.!
ஒரே மாதிரி சூப்பர்ல்ல
Deleteபக்கம் 198.. முப்பத்தியாறவது பக்கத்தலியே அவனை புடிச்சி ரெண்டு அப்பு அப்பியிருந்தா சோலியே முடிஞ்சருக்குங்க... ஆனா இந்தாளு இன்னும் குருதையை உட்டே எறங்கலைங்க.. அந்த பிரச்சனையலே கொரோனா பரவக் கூடாதாங்கிற நல்லெண்ணத்திலே மூஞ்சிக்கு துணி கட்டிட்ட்டு வர்ற ரெண்டு பேரை போட்டுத் தள்ளயாச்சு.. ஒரு அப்பாவி தொழிலதிபர்கிட்டே இருந்து கிட்டத்தட்ட 22 லட்சத்தை ஆட்டையைப் போட்டாச்சு... ரெண்டு நாளா தூங்காத ஒரு செயன்னீ வீரனை அடிச்சு போட்டாச்சு.. நல் புத்தியோட இருக்கிற ஒரு செரீப்பை மண்டையை கழுவயாச்சு.. விசுவாசமான ஒரு மளிகை கடை வேலையாளை மண்டையை ஒடைச்சாச்சு...
ReplyDeleteஇன்னும் என்னென்ன கொடுமையை பார்க்க மோறோமா??
எழுத்துப் பிழைகளை மன்னிச்சுக்கங்க... அக்கரமங்களை படக்கும் போது கோவத்தலே ஒடம்பெல்லாம் நடுங்குதி..
Deleteதாங்க முடியலீங்க ரம்மீ! இன்னைக்கு பாயாசம் படுபயங்கரமான டேஸ்ட்டூ! 🤣🤣🤣
Deleteடியர் எடி,
ReplyDeleteXIII உருவாக்கம், மிக பிரமாதமாக வந்திருக்கிறது..ழ முதல் தொகுப்பு அட்டைப்படம் தேர்வுதான் சுமார். இரண்டாவது தொகுப்பு அட்டை போல மிக்ஸ் செய்த லாங்ஷாட் இன்னும் பொருந்தி இருக்கும்.
லயன் 400 டெக்ஸ் கலக்குகிறது.
// 'ரூமை மறுக்கா ரொப்பிப் பார்க்க இன்னா செய்யலாம் மன்னாரு ?'ன்னு மனசு கேட்கும் போது தான் பதில் சொல்ல முழிச்ச பிழைப்பாய்ப் போகுது ; கட்டைவிரல்கள் நமைச்சல் எடுக்கிறா மெரியே தோணுது !! And அதுக்கோசரம் ஒரு திட்டமிடல் லேசாய்த் துளிர் விடவும் துவங்கியுள்ளது //
இன்னொரு ஸ்பெஷலா? அடுத்த வருடம் செய்யலாமே... காமிக்ஸ் பட்ஜெட் ஓவராக எகிறிவிட்டது :)
If he plans now it will take six months for release na? :-)
Deleteஇதை தான் நான் சொல்ல வந்தேன். எப்படியும் அடுத்த வருடம் ஆகி விடும் Rafiq ஜி.
Deleteஇந்த வருடம் லட்சியம்..அடுத்த வருடம் நிச்சயம்.....
Deleteமினி டெக்ஸ்/கார்சன் :
ReplyDeleteஇந்த இதழ் மினி டெக்ஸ் என்று சொல்வதைவிட, மினி கார்சன் என சொல்வதுதான் சாலப் பொருத்தமாகயிருக்கும். யெஸ், இது the one & the only கார்சன் காதல் சரம் சொட்டும் சாகஸம். (காவியம்).
-------
Spoiler Alert: தன் நண்பன் ப்ராங்கின் கொலைக்குப் பழி வாங்க ஜாக்சன் ஹோல் வரும் கார்சனை, விதவை சாரா தன் கணவனை கொன்ற கேங்ஸ்டரில் ஒருவர் என நினைத்து கார்சனை துப்பாக்கிக் கொண்டு தோட்டாவால் தாக்குகிறாள். மயக்கமுறும் கார்சனை முன் ஜாக்கிரதையாக வீட்டுக் கொண்டு வரும் சாரா, பின்பு கார்சன் ஒரு ரேஞ்சர் என அறிகிறாள்.
காயமுற்றிருக்கும் கார்சனுக்கு மருந்திட்டு, கூடவே சுக்கா வறுவல், சாப்ஸ், பாயா என கவனிக்க ஒரிரு நாளில் கார்சன் துப்பாக்கியைக் கையாளும் வகையில் தேறுகிறார். இடைப்பட்ட நாளில் இந்த இருவருக்குள்ளும் படர்வது காதலோ, நட்போ, பாசமோ, நேசமோ ஏதோவொன்று இவர்களை நெருக்கமாக்கிறது.
ஷெரீஃப்பின் மரணத்திற்கு காரணமான டெபுடி ரெட் மீண்டும் பனி ஒய்ந்தவுடன் தன் கேங்ஸ்டருடன் வீட்டில் கார்சனுடனிருக்கும் சாராவை பழிவாங்க வருகின்றான்: இதை எதிர்பார்த்து தயாராகயிருக்கும் கார்சன் & சாரா அந்த gang-யை போட்டுத்தள்ளிவிட்டு ரெட்டை மட்டும் உயிருடன் பிடித்து சாட்சி சொல்ல நீதிமன்றதிற்கு இழுத்து செல்கிறார்கள். படம் முடியும் போது கடைசி கட்டத்தில் வரும் போலீஸ் மாதிரி நம்ம டெக்ஸ் கடைசி பக்கத்தில் என்ட்ரி கொடுக்கிறார். அதோடு சுபம்.
-------------
கார்சன் இல்லாமல் டெக்ஸ் சாகஸம் பார்த்தாச்சு. ஆனால் டெக்ஸ் இல்லாமல் கார்சன் Solo சாகசம் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். டெக்ஸ் இல்லாவிட்டாலும் கதையில் விறுவிறுப்பிற்கோ, பரபரப்பிற்கோ சிறிதும் பஞ்சமில்லை. கதையாசிரியர் போசெல்லி கார்சனை முன்னிறுத்தி ஒரு புது முயற்சியாக இக்கதையை may be முன் நிறுத்தியிருக்கலாம். இப்ப பார்க்க, இந்த கதைக்கு வேற ராப்பர் இல்லாமல் போச்சு, இல்லையென்றால் கார்சனை Solo - வாகப் போட்டுத் தாக்கியிருக்கலாம்.?!
எடிட்டர் சார்..
ReplyDeleteபிரிக்கப்படாமல் இரண்டு டப்பிகள் என் முன்! ஒன்று சந்தா டப்பி; மற்றொன்று இ.ப! நள்ளிரவு வரை காத்திருந்தேன் - டப்பிகளைப் பிரித்துக் குதூகலித்திட தோதான ஒரு தனிமைக்காக! பின்னிரவு 1:30க்கு அது சாத்தியமாகிற்று!
டப்பியைப் பிரித்து லயன்-400 புத்தக வடிவமைப்பை பார்த்த கணத்திலேயே ஒரு சில கணக்களுக்கு ஸ்தம்பித்துப் போனேன்! என்னவொரு நேர்த்தியான வடிவமைப்பு! அபாரம் சார்! அட்டையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் தல'யாகட்டும், அந்த நகாசு வேலைகளாகட்டும், வண்ணங்களாகட்டும் - 100 க்கு 100 தரலாம் - தாராளமாய்! குறிப்பாக, 'புத்தம் புது பூமி வேண்டும்' எழுத்துருவில் டாலடிக்கும் வேலைப்பாட்டை ஒற்றை வெளிச்சத்தில் இப்படியும் அப்படியுமாக புத்தகத்தின் கோணங்களை மாற்றிப் பார்த்து வெகுநேரம் ரசித்துக் கொண்டிருந்தேன்! அழகு அழகு! பின்னட்டையும் சூப்பர்!
பரபரவென்று 'ஹாட்லைனை' படித்துவிட்டு உள்ளே புரட்டினால் இதமான வண்ணங்களிலும், நேர்த்தியான பிரின்டிங்கிலும், கச்சிதமான வடிவமைப்பிலும் ஒட்டு மொத்தமாய் கவர்ந்து "அட்டகாசம்" என்று முணுமுணுக்க வைக்கிறது!
நம் குண்டு இதழ்களில் எதைக் கையில் ஏந்தினாலும் ஒரு உற்சாகம் பிறப்பது இயல்பே! ஆனால் ஏந்துவது 'தல'யின் குண்டு என்றால் அந்த உற்சாகம் பிறந்து, வளர்ந்து, வாலிபனாகி விசிலடிக்கவும் செய்கிறது!
ஹாட்லைனில் வாசகர்களாகிய எங்களைச் சிலாகித்திருக்கிறீர்கள்! ஆனால் எங்களுக்கோ எப்போதும் உங்களின் அளவில்லாத காமிக்ஸ் காதலையும், தணியாத தேடலையும், ஒவ்வொரு இதழையும் முதல் இதழாகவே கருதி மெனக்கெடும் அந்த அயராத உழைப்பையும், தொடர்ந்து வாசகர்களின் பல்ஸை தெரிந்து கொண்டு செயலாற்றும் திறமையையுமே சிலாகிக்கத் தோன்றுகிறது!
சீக்கிரமே குடோனை காலி செய்யயிருக்கும் இந்த 400ஐ தொடர்ந்து இன்னும் பல மைல்கற்களை இந்த சிங்கக்குட்டி கண்டிட எங்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தணைகளும்!
இன்னுமா சிங்கம் குட்டியாவே இருக்குது.?ii
Deleteஇளங்கோ முதலட்டயே நீங்க கேட்ட படிதான்
Deleteநண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இன்னும் எனக்கு 13 கிடைக்கவில்லை
ReplyDelete77th
ReplyDelete400 cover awesome one of the finest work
ReplyDeleteXiii vera level
Little zoomed version ? Than last slipcase reprint ...very nice sir
I followed long time for pulan visaranai ...last time achieved with separate issue...
This time my dream come true
Appadiyey antha xiii all mystry in hardbinding try pannunga sir..we will get the same response
S 70 முன்பதிவு எப்படி போயிட்டிருக்குங்க சார்.
ReplyDeleteஆமா சார் இது வரை எத்தனை முன்பதிவு சார்.
Deleteநூற்றி எண்பது+ என்பதாக ஞாபகம் சார் !
Deleteநம்பள்க்கி ஒரு 30 சாரே...!!
Deleteவணக்கம் 🙏🙏🙏
ReplyDeleteஅட்டையில் மஞ்ச சட்டை போட்ட ஒருஆளின் படம்இருந்த தால் போதும். டெக்ஸ் புத்தகம் உடனே விற்றுவிடும் என்பதுதான் விற்பனை நிலவரம். போதும் என்று திருப்தியடையாமல்இன்னும். இன்னும் என்றுஅட்டையை மெருகு படுத்தியிருக்கிறீர்கள். என்னதவம் செய்தனமோஇங்கிவரை யாம் பெறவே.பூவுடன் சேர்ந்தநாரும் மணக்குமல்லவா. உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு காமிக்ஸ் உருவாக்கத்தில்ஈடுபாடுவருவதில் வியப்பேது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஆன் லைன் புத்தகத் திருவிழா முதல் நாள் விற்பனை நன்றாக சென்று கொண்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய விற்பனையும் மிக சிறப்பான நடக்கட்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDelete// ஆன் லைன் புத்தகத் திருவிழா முதல் நாள் விற்பனை நன்றாக சென்று கொண்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. //
Deleteஆம் நேற்று முழுக்க அவர்கள் பிஸி போல...
நமக்கு இன்னிக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்...
அந்தப் பச்சை புத்தம்புது பூமி தான
ReplyDeleteவந்து விட்டேன் ஐயா
ReplyDelete**** நன்றிகள் பல ****
ReplyDeleteஎனக்கும் இரத்தப் படலத்துக்கும் ஒரு 'இலவச பந்தம்' இருக்கிறது!
* நான் அன்றைய காலங்களில் தவறவிட்டிருந்த இ.ப - கலெக்ட்டர்ஸ் எடிஷன் - கருப்பு வெள்ளைத் தொகுப்பை நண்பர் சாக்ரடீஸிடமிருந்து (மிகக் குறைந்த விலைக்கு கொடுத்தார் என்பதால் ) கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைக்கப்பெற்றேன்!
* 2018ல் இ.ப வண்ணத் தொகுப்பு வெளியானபோது அதை அன்புப் பரிசாகக் கொடுத்து அகம் மகிழச் செய்தார் நமது மீன்பிடி டாக்டர் செனா அனா!
* இதோ நேற்றுக்கிடைத்த இந்த இ.ப'வும் விரைவில் களம் காணயிருக்கும் நமது புதிய வன்மேற்கு நாயகன் 'டெட்வுட் டிக்'கிற்கு கொஞ்சும் தமிழில் 'பட்டமரக்**சு' என்ற பெயரை முன்மொழிந்த சிறப்புக்குரிய நண்பரின் அன்புப் பரிசே! தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அவ்வப்போது சிரமத்திலிருக்கும் நம் நண்பர்களை வலிய அணுகி உதவிவரும் நல்லுள்ளம் கொண்ட அந்தச் சென்னை வாழ் நண்பரின் மனது மட்டுமே பரந்ததல்ல!
* என்ன தவம் செய்தேனோ - இவ்வருடச் சந்தாவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு நல்லுள்ளத்தால் சில விதிமுறைகள் சகிதம் பரிசாகவே அளிக்கப்பட்டிருக்கிறது! அவர் யாரென்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றாலும் அவரது விருப்பத்தின்படியே நானும் அவரை அடையாளம் காணாததைப் போல் நடந்துகொள்வதே அவருக்குச் செய்யும் சிறப்பு என்பதால் - கப்சிப்!
மகிழ்வித்து மகிழும் அந்த அன்புள்ளங்களுக்கு என் கரம் கூப்பிய நன்றிகள்!🙏🙏💐
இப்போது புரிகிறதா 'தலையில்லா போராளி' சைஸில் ஒரே தொகுப்பாக இரத்தப்படலம் மீண்டும் வேண்டும் என்று நான் கோரிக்கை வைப்பதின் பின்னணி?!! 😝😝😝😝
// இப்போது புரிகிறதா 'தலையில்லா போராளி' சைஸில் ஒரே தொகுப்பாக இரத்தப்படலம் மீண்டும் வேண்டும் என்று நான் கோரிக்கை வைப்பதின் பின்னணி?!! 😝😝😝😝 // புரிகிறது புரிகிறது EV
DeleteXIIIக்கு தலையில்லாப் போராளி சைஸ் சுகப்படாது EV ! இப்போ வந்த சைஸ் போரும். திக் பேப்பரில் - ஒரே புக்காய் - சீக்கிரமாய் !
Deleteதனித்தனி பாகங்களாக ஒரிஜினில் அட்டைகளோடு ஓரு சூட்கேஸ் செட்டில் போட்டா கூட வேணாம்னா சொல்ல போறீங்க...😜
Deleteஒன்னு 2025க்கு ஒன்னு 2028க்கு - சேலம் Tex !! :-)
Deleteல..ல...லயன்ல இ.ப.வெளியான 50வது வருடம் 2036..அதற்கு ஏதாவது ராக்ஜி??
Deleteஅருமை ஈவி....ராகவரே நெசமாத்தான் கேக்குறீங்களா...கேட்டா தலையில்லா போராளி சைசுலயோ...ஆசிரியர் ஆசப்படி 8000பக்க பாக்கெட் சைசுலயோ கேட்போம்....முதல் பாகத்த படிக்கத் துவங்கியாச்..மார்த்தா பதிமூன்று உரையாடல்கள் வான்ஹாம்மே நம்ம செனா போன்ற நண்பர்கள் கேள்வி கேக்கக் கூடாதுன்னு கச்சிதமா செதுக்கி இருக்கார் ஹாமே
DeleteStvr...அதுக்கு 3டில ஜெனிஃபர் வரும் காட்சிகள் மட்டும் கத்தரிக்காம
Deleteமறுபடியும் தொட்டு தொட்டு விளையாடலாமா என் புருஷன் எனக்கு குழந்தை மாதிரி படத்தில் வரும் வடிவேலு காமெடி ஞாபகம் வருகிறது. :-)
Deleteபோதும் எனக்கு இந்த இரத்த படலம் விளையாட்டு. இந்த ஆட்டத்திற்கு நான் வரலை சாமி. ஆளைவிட்டுங்க சாமி.
விடாதுல படலம்
Deleteதம்பி கொஞ்சம் அடக்கிவாசி. புதிய கதைகள் நிறைய உள்ளன இனி அவற்றை தரிசிக்க தயாராவோம்.
Deleteநமது கவனத்தை smashing 70s மெகா வெற்றி அடைய செலுத்துவோம்.
குட்டி கார்சன் அட்டகாசம் சார்...கார்சனின் கடந்த காலத்துக்குப் பின் காதல் வசப்படும் கார்சன் பார்க்கிறோம்...சின்ன கதைக்கே வில்லன அட்டகாசமா உருவபடுத்துகிறார்கள்...கடைசில ஹாய்னு வர்றார் டெக்ஸ்...டெக்ஸ் மீண்டிடுவார்னு பதைபதைப்பா கார்சன் நம்பிக்கையை தனக்குத்தானே விதைக்கும் வசனங்கள் சூப்பர்.....கதை முழுக்க வசனங்கள் நிறைவால் பெரிய கதை படித்த திருப்தி...மொழி பெயர்ப்பு உற்ச்சாகம்
ReplyDelete/* அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !! */
ReplyDelete12ஆம் நபரும் ரெடி சார் - இன்று மதியத்திற்குள் தகவல்கள் உங்களை அடைந்திருக்கும் !
சூப்பர்
Deleteஅருமை ராகவன் சார் அருமை
Delete:-)))
Deleteபுத்தகங்கள் நேற்று மதியம் கைக்கு கிடைத்தது. சந்தா இதழ்கள், இரத்தப் படலம் இரண்டும் ஒரே நேரத்தில். அட்டகாசமான பேக்கிங் லிமிடெட் எடிஷன் என்பதால் bubble wrap செய்யப் பட்ட இரத்தப் படலம் அட்டகாசமாக இருக்கிறது.
ReplyDeleteஅட்டைப்படம் making எல்லாமே வேற லெவல். நண்பர் ஒருவர் சொன்னது போல அந்த ஒரிஜினல் அட்டை படத்தை அந்த அந்த அத்தியாயங்களில் பயன் படுத்தியது அருமை. இரண்டு புத்தகங்களையும் எடுத்து அனைத்து அத்தியாயங்களின் அட்டையை பார்த்து விட்டு தான் வைத்தேன். இந்த முறை பிரிண்ட் மிக அழகாக வந்து இருக்கிறது. இன்னும் புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க வில்லை.
சந்தா இதழ்களில் முதலில் படித்தது மினி கார்சன் அசத்தலான ஆரம்பம், அட்டகாசமான முடிவு. சும்மா ஜெட் வேகத்தில் செல்கிறது கதை. டாப் கிளாஸ்
எனது மதிப்பெண் 100/10
பிறகு படித்தது தோர்கல், புத்தகத்தை எடுத்ததும் தெரியவில்லை படித்து முடித்ததும் தெரியவில்லை அட்டகாசம் இழந்த நினைவை மீட்க எந்த எல்லைக்கும் செல்ல துணிந்த தோர்கல்.
எனது மதிப்பெண் 10/10
இன்னும் புத்தம் புது பூமி வேண்டும் மட்டும் படிக்கவில்லை அதையும் படித்து முடித்து விட்டு வருகிறேன்.
நன்றி சார் உங்களுக்கும் நமது அலுவலக நண்பர்களுக்கும் இது மட்டும் இன்றி இன்னும் நடந்து கொண்டு இருக்கும் புத்தக விழா மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.
முதன் முறையாக இன்னமும் இதழ்களை கைப்பற்றாமல் காத்திருக்கும் சூழலில்..:-(
ReplyDeleteகவலை வேண்டாம் பரணி. எல்லாம் நன்மைக்கே. விரைவில் புத்தகங்கள் கிடைக்கும் உங்களுக்கு.
Deleteஇதழ் வந்து விட்டது நண்பரே்..நான் தான் தொலைவில்...:-)
Deleteஓகே. வேலையை விரைவில் முடித்து விட்டு இதழ்கள் இருக்கும் இடத்திற்கு ஓடிச் செல்லுங்கள் :-)
Delete// இதழ் வந்து விட்டது நண்பரே்..நான் தான் தொலைவில்...:-) //
Deleteபொறுமையா நாளைக்கு பார்த்துக்கலாம் தலைவரே,எனக்கும் இன்னும் பெட்டி வரலை,ஆமை கூட போட்டி போட்டுகிட்டு இருக்கு போல,நாளைக்குதான் வருமாம்...
திரும்ப கூரியரை மாற்றி பார்க்கனும்...
மறுபடியும் முதல்ல இருந்தாங்கற வசனம்தான் நினைவுக்கு வருது...
இன்னும் மகிழ்ச்சி காத்திருக்கே
Delete//ரூமை மறுக்கா ரொப்பிப் பார்க்க இன்னா செய்யலாம் மன்னாரு //
ReplyDeleteஇந்த புத்தக விழா சிறப்பிதழ்கள் சந்தாவில் வருமா வராதா? இவற்றிக்கு தனியே செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு? அடித்து நொறுக்கும் 70-க்கு பணம் கட்ட மறந்தது நேற்றுதான் நினைவுக்கு வந்தது. இந்த அழகில், நடுநடுவே பதிவுக்கு இடையில் எதையாவது அறிவித்து விடுகிறீர்கள்! இப்படி வாங்காமல் விட்டவை எத்தனையோ தெரியவில்லை!.ஒவ்வொரு புது அறிவிப்புக்கும் ஓரிரு குழப்பமான போஸ்டர்கள் தயாரித்து, அவற்றை அந்தந்த பதிவுக்குள் புதைத்து வைப்பதைத் தாண்டி... அனைவருக்கும் புரியும் வகையிலான ஒரு எளிதான விலைப் பட்டியலை வலைப்பூவின் முகப்பில் வைத்து, அதை ஒவ்வொரு முறையும் சந்தா தாண்டிய புது இதழ்கள் அறிவிக்கும் போதெல்லாம் புதுப்பித்துக் கொண்டே வரலாமே?
எடுத்துக்காட்டு:
1) 2022 சந்தா: ₹6100 (த.நா), ₹3100 (ஆர்.டி.நகர், பெங்களூரு), ₹6500 (இதர இடங்களுக்கு)
2) வீட்லேர்ந்து ஒக்காந்தபடிக்கு கலந்து கொள்ளும் புத்தக விழா ஸ்பெஷல்: இங்கே இங்கே அனுப்பி வைக்க இவ்ளோ இவ்ளோ
3) XIII மேரா கம்ரா காலி ஹை ஸ்பெஷல்: விலை பின்னர் அறிவிக்கப்படும்
வாங்கியதை எல்லாம் உடனே படித்துக் கிழித்து விடுவதில்லை தான். ஆனால், இந்த காமிக்ஸ் ஆர்வம் திடீரென்று எப்போது மறுபடி விழித்துக் கொள்ளும் என்று தெரியாது. அதனால்தான் வருவதை எல்லாம் ஒன்று விடாமல் வாங்கி, டப்பா பிரிக்காமல் அடுக்கி வைத்து விட்டுத்தான் மறுவேலை!
//அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !!
ReplyDeleteநண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!
Here are the donors :
1.Mr.Shanthakumar, Chennai.
2.Mr.Sathya Sainath, Chennai
3.*************** (name withheld on request)
4.Mr.Srinivasa Raghavan, Chennai
5.Master.Kanishk, Srirangam.
6.Mr.Prem, Nagercoil / U.S.A.
7.Mr.Kumar Raghavan, Salem.
8.Mr.Sanjay, Chennai.
9.Dr.Rajesh Ranganathan, Chennai.
10.Mr.Sundarapandian, Nellai
11.Mr.Gautham
///
பெருமை மிகு வாழ்த்துக்கள் ..
நண்பர்களுக்கும் ,ஆசரியருக்கும்..
விஜயன் சார்,
ReplyDeleteலயன் 400 சிறப்பு மலரை இரத்த படலம் வந்த பேக்கிங் செய்து வந்த அட்டை பெட்டி மேல் டொம் என போட்டாலும் பெட்டி ஒன்றும் ஆகவில்லை. மிகவும் கனமான பெட்டி. இது ஒன்று போதும் நீங்கள் இரத்த படலத்தை (மட்டும் அலங எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும்) நம்மிடம் பத்திரமாக வந்து சேர காட்டும் ஆர்வம். இந்த அட்டை பெட்டிக்கு கண்டிப்பாக நீங்கள் நிறைய செலவு செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஆசிரியர் மற்றும் அவரது எண்ணத்தை பக்கபலமாக இருந்து செயல்படுத்திய காமிக்ஸ் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
வாழ்க உங்கள் காமிக்ஸ் காதல்.
புத்தக விழாவில் எப்படி கலந்து கொள்வது உதவுங்கள் ப்ளீஸ்
ReplyDelete+91 98423 19755 இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் அப் கால் செய்யுங்கள்.
Deleteஅப்படி முடியவில்லை என்றால் உங்களுக்கு வேண்டிய புத்தகங்கள் பெயரை குறிப்பிட்டு அவற்றிற்கான பணத்தை அனுப்பி வையுங்கள் நாளை புத்தகங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்கொண்டு விபரங்கள் இந்த பதிவில் உள்ள. எந்த புத்தகங்கள் உள்ளன அவற்றிற்கு எவ்வளவு தள்ளுபடி என்று.
Deletehttp://lion-muthucomics.blogspot.com/2021/08/e.html?m=1
thank you sir
Delete// அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !! //
ReplyDeleteசிறப்பு,சிறப்பு...
// P.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? //
ReplyDelete1995 களில் தியேட்டரில் பக்,பக் என பார்த்தது,இந்த அடர் பச்சை நில் கவனி வேட்டையாடு இதழிலும் வரும்தானே...!!!
இந்த மாத டெக்ச பாருங்க
Deleteஓகே ஸ்டீல்.,
Deleteநண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteDear Editor Sir, received the xIII book. Quality is awesome. No damage in transit. Antha slipcase mattum maranthuttanga. No complaints
ReplyDeleteThis book wasn't planned with a slipcase at all sir...
DeleteThanks sir for the confirmation. I dont know where did i read slipcase 😁
Deleteசுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசுதந்திரம் என்றவுடன் நேற்றைய கனவு நினைவு வருகிறது..
பல்லாண்டுகளாக அடைபட்டு புழுங்கி கிடப்பதாக கமான்சேக்களும், மேஜிக் விண்ட்களும் ,ஸ்மர்ப்களும் இன்ன பிறரும் பொருமி தீர்த்தனர்..
அவர்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க உதவுங்களேன்..
சுதந்திரத்தின் மகோன்னத்தத்தை நாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்த வேண்டிய நாள் அல்லவா இது..
அடையாறு புற்றழிக்க ஆங்காங்கே நன்னெஞ்சங்கள் ஆறுதல் கைகள் நீட்டுதல் போல்
சிவகாசி கிட்டங்கி கரையான் புற்றழிக்க கரங்கள் நீளும் என்ற கலையாத நம்பிக்கை
நெஞ்சிலேயுண்டு..
///சிவகாசி கிட்டங்கி கரையான் புற்றழிக்க கரங்கள் நீளும் என்ற கலையாத நம்பிக்கை
Deleteநெஞ்சிலேயுண்டு..///
உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் வீண் போகாது! ஈ-ரோடு ஆன்லைன் திருவிழா இதுவரை கண்டிராத ஹிட் அடிக்கும்!
நண்பர்களிடமிருந்து நிறைய கோரிக்கைகள் எழுமானால் ஆன்லைன் திருவிழாவை எடிட்டர் ஒன்றிரண்டு நாட்கள் நீட்டிக்கவும் முடிவெடுக்கக் கூடும்!
அப்படியே XIII மறுபதிப்பும் BW திக் பேப்பர்ல செஞ்சு - ஒரே புக்கா - அதுக்கு தனி விழா எடுத்தம்னா ... ஆஹா நெனச்சாலே இனிக்குதே !
Deleteஅந்த பெயருள்ள கதையை படிச்சு முடிச்சாச்சு ... என்பதாம் பக்கத்திலே காணாமே போற மெயின் வில்லன் கடைசி வரைக்கும் சொகுசா தான் இருக்குறாரு போல.. பாவம் இந்த அதகாரி தான் படாத பாடு பட்டுட்டு சுத்திட்டு இருக்கிறாப்பிலே.. சைடு வில்லனுக தான் ஜாஸ்தி..(நன்றி: சின்ன தம்பி கந்தசாமி)
ReplyDeleteஅடடடா…யாராவது இந்து கொசுக்கு கொஞ்சம் மருந்தடிங்கப்பா…
Deleteஈ-ரோடு ஆன்லைன் திருவிழாவில் 15 புத்தகங்கள் ஆர்டர் செய்திருக்கிறேன். பெரும்பாலும் கார்ட்டூன்களே! 'கூரியர் செலவு இலவசம்' என்ற ஆஃபரையும் கைப்பற்றியிருக்கிறேன்.
ReplyDeleteச்சும்மா ஒரு பெருமைக்காண்டி! :)
இதுக்கெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கலாம்..
Deleteஅடிச்சிக்கனும்..
சூப்பர் ஈவி!!!
இரக்க சிந்தையுள்ள இளவரசன்னா சும்மாவா!!!!
///இரக்க சிந்தையுள்ள இளவரசன்னா சும்மாவா!!!!///
Delete😂😂😂😂
நல்லதை செய்வதை வெளியில் சொல்வதே உத்தமம்..
Deleteஇன்னும் பல பேர் உத்வேகம் கொள்ள இது உதவும்..
ஈவி ப்ளாக்கில் அனைவராலும் நேசிக்கப்படுபவர் என்பதால் ஈவி சொல்வதும் செய்வதும் பல மடங்கு பிரதிபலிக்கும்..
'ஈவி' என்பதை 'இ.சி.இளவரசர்' என்று மாற்றிப்படிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!
Deleteசூப்பர்.
Delete///'ஈவி' என்பதை 'இ.சி.இளவரசர்' என்று மாற்றிப்படிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!///
Deleteஅதெல்லாம் படிக்கமுடியாது.! வேணும்னா இ.வா. இளவரசர்னு படிக்கிறோம்..!
ஆன்லைன் புத்தக விழாவில் கலந்து கொண்டு ஆர்டர் செய்தாகிட்டது....😍
ReplyDeleteஎன்னுடைய சனநாயக கடமையை ஆற்றியாச்சி....
நண்பர்களே விரையுங்கள்....
குட்!
Deleteஆன்லைன் புத்தகத் திருவிழாவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய இயலாமல் போய்விட்டது.கடுமையான வேலையின்மை தான் காரணம்.
ReplyDeleteஅடுத்தாண்டு ஆற்றிடுவோம் ஜனநாயகக் கடமையை.
இரத்தப்படலம் அனைத்தும் நன்று தான்.
ReplyDeleteஒரே ஒரு சிறுகுறை.
புக்மார்க் இல்லாதது தான்.
மன்னிக்கவும்.
இதுக்கு மூணுவிதமா ரீயாக்ட் செய்யலாம்
Delete1. எடிட்டர் சார் மறந்திருப்பாரு..xiii இதழுக்கான குறியீடாக அதை எடுத்துக் கொள்ளலாம்..:-)
2. குறைகளை சுட்டிக்காட்டுகையில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை
காசோ வின் வார்த்தைகளில் "நிஷ்டூரமாக " குறைகளை சுட்டி காட்ட முயல்வதை தவிர்ப்பது போதுமானது!!
3. எல்லாரும் ஓடியாங்க ...ஓடியாங்க ..
பெரிய தப்பு நடந்து போச்சு...இதே எடிஷனை புக்மார்க்கோட புரட்டாசி மாசத்துக்குள்ள ரீப்ரிண்ட் பண்ணியாகனும்னு எடிட்டர் சார்ட்ட சொல்லியாகணும்..
:-)
That third option with Black and White and thick paper - ONE book - I love :-) Odiyaangappaa !!
Delete///எல்லாரும் ஓடியாங்க ...ஓடியாங்க ..
Deleteபெரிய தப்பு நடந்து போச்சு...இதே எடிஷனை புக்மார்க்கோட புரட்டாசி மாசத்துக்குள்ள ரீப்ரிண்ட் பண்ணியாகனும்னு எடிட்டர் சார்ட்ட சொல்லியாகணும்..
///
😂😂😂😂
ஏற்கனவே வந்த பல புத்தகங்களுக்கு கொடுத்த புக் மார்க் இருக்கும். அதனை நண்பர்கள் உபயோகபடுத்தி கொள்ளலாம்.:-)
Deleteஒவ்வொரு புத்தகத்திற்கும் தனி தனி புக் மார்க் என்பது வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல் உள்ளது :-)
இது எனது தனிப்பட்ட கருத்து :-)
ஏற்கனவே வந்த புத்தகங்களின் புக் மார்க் இருக்கு.... ஆனால் அதை விட சிறப்பு " புத்தகத்துடன் சேர்த்து தைக்கப்பட்டு வரும் ஒரு மஞ்சா கலரு நாடா துணி"
Deleteவிஜயன் சார், அது என்னமோ தெரியலை இந்த முறை டெக்ஸ் கதையை வண்ணத்தில் படிக்கும் போது மனது ரொம்பவே இலகுவானது. ஓவ்வொரு மாதமும் இதே போன்ற ஒரு டெக்ஸ் கதையை வண்ணத்தில் தரமுடியுமா சார். அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு வண்ண டெக்ஸ் கதை கிடைக்குமா. பட்ஜெட் என்று சொல்லி டெக்ஸ் கதைகளுக்கு தடை போட வேண்டாம் சார்.
ReplyDelete"பட்ஜெட் என்று சொல்லி டெக்ஸ் கதைகளுக்கு தடை போட வேண்டாம் சார்."👍👍
Deleteதல டெக்ஸ்வில்லர் புத்தகத்திற்குப் பட்ஜெட் என்றை சொல்லி தடை போட வேண்டாம்.
Deleteஅதுவும் 10 நாளில் 300+ பக்கம் முடிச்சதா சொன்னாரு. நிறைய நண்பர்கள் கதை முழுதும் செம காமெடியா இருக்குங்கறாங்க. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30-40 பக்கம். அப்படின்னா என்ன அர்த்தம்? வேகமா எழுதும் போது ஆட்டோமேட்டிக்கா காமெடி வந்து கொட்டுதுன்னு அர்த்தம்.
Delete// ஓவ்வொரு மாதமும் இதே போன்ற ஒரு டெக்ஸ் கதையை வண்ணத்தில் தரமுடியுமா சார் //
Deleteகேட்கும் போதே செவிக்கு இனிமையாக உள்ளது,அந்த நாள் விரைவில் வாய்க்கட்டும்...
இந்த முறை ஆன்லைன் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. கடந்த புத்தகத் திருவிழாவில் வாங்கிய தோர்கல் செட் மற்றும் பந்தம் தேடிய பயணம் புத்தகங்களை தூத்துக்குடியில் உள்ள நூலகத்திற்கு வரும் நாட்களில் கொடுக்க போகிறேன்.
ReplyDeleteநிலை சரியான பின்னர் கார்டூன் இதழ்களை வாங்கி நண்பர் ஒருவரின் மருத்துவமனைக்கு கொடுக்க உள்ளேன். அங்கு வரும் அன்பர்கள் படிக்கட்டும்.
எடிட்டர் சார்..
ReplyDeleteநேற்றுக்கிடைத்த இ.ப புத்தகங்களின் வடிவமைப்பு, பிரின்டிங் தரம், பைன்டிங் தரம், நகாசு வேலைகள் எல்லாமே - அபாரம்!
முதலாவது புத்தகத்தின் அட்டைப்படம் மட்டும் வெகு சுமாரானதாக அமைந்துவிட்டதாகத் தோன்றுகிறது!முதுகில் ஒரு மசில் கூடிய 'பேரழகன்' சூர்யாவைப் போல காட்சியளிக்கும் ஜேசனின் சுமாரான படத்தை - அதுவும் முதல் பாகத்திற்கான அட்டைப்படமாய் - போட எப்படி முடிவெடுத்தீர்களோ தெரியவில்லை! அந்த ஓவியத்தின் கீழ் வில்லியம் வான்ஸின் கையெழுத்து மட்டும் இல்லாவிட்டால் அது வான்ஸுடைய ஓவியமென்று சத்தியமாய் நம்பியிருக்க மாட்டேன்!
சரி, எந்தக் குறையுமில்லாத அழகான குழந்தைக்கு இது சன்னமாய் ஒரு திருஷ்டிப் பொட்டாகக் கருதுகிறேன்!
போவட்டும்! அடுத்த மறுபதிப்பில் இந்தக் குறை இல்லாமல் பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
இ.சி.ஈ. இளவரசன்
வணக்கம் சார்.....புத்தகங்கள் இன்று மாலை எனக்கு வருகிறது... ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.....btw....as committed.... என்னுடைய பங்களிப்பாக ₹1000 நன்கொடை லயன் office ku அனுப்பி உள்ளேன் சார். ஏற்று கொள்ளவும்
ReplyDelete..நன்றி
////என்னுடைய பங்களிப்பாக ₹1000 நன்கொடை லயன் office ku அனுப்பி உள்ளேன் சார்.///
Deleteவாவ்! கிரேட்!!
நல்ல விஷயம் நண்பரே.
Deleteவணக்கம்!
ReplyDeleteஈ-ரோடு ஆன்லைன் திருவிழாவில் 33 புத்தகங்கள் ஆர்டர் செய்திருக்கிறேன். பெரும்பாலும் கார்ட்டூன்களே! 'கூரியர் செலவு இலவசம்' என்ற ஆஃபரையும் கைப்பற்றியிருக்கிறேன்.
ReplyDeleteகார்ட்டூன் புத்தகங்கள் அனைத்துமே (22 புத்தகங்கள்) கொடுமுடியில் உள்ள நூலகத்தை விரைவில் சென்று அடையும்..
நன்றி
சூப்பர் சூப்பர் நாகராஜன்
Deleteவாவ்!! அட்டகாசம் ப்ளூ!!
Deleteமற்ற நண்பர்களும் கூட இந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதலாமே? உற்சாகம் பெருகும், மற்றவர்களுக்கும் உத்வேகமளித்திடும்!
எனது சிறிய பங்களிப்பு அடையாருக்கு ரூ.1000 மட்டும் அனுப்பியுள்ளேன்..கடந்த சில மாதங்களாக கொஞ்சம் டைட்...
ReplyDeleteஇரத்தப்படல அட்டைப்பங்களை அப்லோடு பண்ணுங்க சார் ப்ளீஸ்...
ReplyDeleteஒரு XIII னோட போஸ்டர் கொடுத்திருக்கலாம் சார்.. டெக்ஸ்க்கு கொடுத்தது போல் பெரிய சைஸில்..வாய்ப்பிருந்தால் நேரம் கிடைக்கும்போது கொடுங்க சார்...பிரேம் போட்டு நடுவீட்டுல மாட்டி வைக்கனும்...நம்ம AKK ராஜா சார் ஆபீஸ்போகும்போதெல்லாம் அந்த டெக்ஸ் பிரேம் கண்ணக்கட்டுது சார்...
ReplyDeleteஅடுத்த முறை ஆன்லைன் திருவிழாவை 4 நாட்களாவது திட்டமிடுங்கள் சார்...
ReplyDeleteநம்மவர்களுக்கு முதல் நாள் போனில் பேசவே பொழுது சரியாகி விட்டது போல,வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகளையும் பார்க்கனும்...
நேரம் கூடுதலாய் கிட்டும்போது அவர்களுக்கு பணி எளிதாகும்...
புத்தம் புது பூமி வேண்டும்..
ReplyDelete1. அட்டைப்படம் அள்ளுது அந்த நகாசு வேலைகளுடன். பச்சை கலர் பின்னணியில் மஞ்சள் சட்டை செம கம்பீரம்.
2. கதை தீபாவளி சரம் போல படார் படார் என்று வெடித்து தள்ளிவிட்டது. போதா குறைக்கு தலை வேறு யாரையும் பேசவிடுவதில்லை முதலில் கவனிப்பு பின்பு தெளிய வைத்து தான் பேச்சே.
3. கதை ஆரம்பம் வழக்கம் போல ஒரு கொலை நடக்கும் இடத்தில் எதார்த்தமாக இருந்து பின்பு வலிய நுழைவது போல இருந்தாலும், ஸ்டேஜ் கோச் வண்டிகளுக்கு பாதுகாப்பாக செல்வது புதிதாக இருந்தது. நன்றாகவும் இருந்தது.
4. வசனங்கள் தெறி, மொழிபெயற்பின் போது நடந்த இடர்கள் பற்றி கூறி இருந்தாலும் அட்டகாசமாக அமைந்துள்ளது. அதுவும் நகைச்சுவை ஒரு மிடறு அதிகமாகவே இருந்தது. முக்கியமாக முதலில் வரும் ஷெரிப்பை போட்டு படுத்தி எடுத்தது, பிரதர் எலியாவின் போதனைகள் என சிறப்பாக அமைந்தது.
5. ஒரு சந்தேகம் பக்கம் 189 இல் கார்சன் எனக்கும் இரவு நரி, பகல் நண்டு என பெயர் வைக்க சொல்கிறார், ஆனால் இரவு கழுகுடன் இருக்கும் வெள்ளிமுடியார் மிக பிரபலம் ஆயிற்றே சமீப கதைகளில் அதை பார்கமுடிவதில்லையே ஏன்?
மொத்தத்தில் தலையின் ஹாட்ரிக் வெற்றி, நெஞ்சே எழு, ஒரு பிரளய பயணம் ஆகியவைகளை தொடந்து.
ReplyDeleteஊர் :சிவகாசி
இடம் : முன்பு திரையரங்கமாக இருந்து இப்போது திருமண மண்டபம்
வருடம் : 2050
சூழ்நிலை: வாசக சந்திப்பு முடிந்து வெளிவருவதாக தெரிகிறது..
வெளியில் சாலையோரத்தில் இருவர் நின்று பேசிக் கொள்கிறார்கள்
அவர் : யாருங்க இவங்கல்லாம்?
இவர்: காமிக்ஸ் வாசகர்கள்.. எடிட்டர் - ரசிகர்கள் சந்திப்பு முடிஞ்சு வெளியே வர்றாங்க.
அவர்: நிறைய பேரு பச்சை குத்தியிருக்கற மாதிரி தெரியுது.
இவர்: க்ரீன் வேர்ல்ட் ங்கறதை தப்பா புரிஞ்சுகிட்டாங்கன்னு நினைக்கறேன்
அவர்: xiii ங்கறதை பச்சை குத்தியிருக்காங்கன்னு தெரியுது..
α, β, Γ γ, Δ δ, ε, ζ, η, Θ θ, ι, κ, Λ λ, μ, ν, Ξ ξ, ο, Π π, ρ, Σ σ/ς, τ, υ, Φ φ, χ, Ψ ψ, and Ω ω.
இப்படி இன்னொரு கையிலும் பச்சை குத்தியிருக்கற மாதிரி தெரியுதே...
இவர்: முரட்டுக்காளை ரஜினி , மன்னன் ரஜினி, போக்கிரி ராஜா ரசிகர் மன்றம் மாதிரி
ரொம்ப வருஷம் முன்னாடி கொரானா வந்தப்போ ஒவ்வொரு வேரியன்ட் தாக்குனப்பவும் எடிட்டரை உலுக்கியெடுத்து ஆல்ஃபா , பீட்டா ,எப்ஸிலான் , ஈட்டா ,தீட்டா ன்னு ரத்தப்படல எடிஷனை கேட்டு வாங்கி அதை பச்சை குத்திகிட்டவங்க
அவர்: சதுரமா பச்சை குத்தியிருக்காங்களே அவங்க?
Deleteஇவர் : அவங்க ஸ்டாம்ப் சைஸ் ரத்தப் படலம் வந்தப்ப அதுக்கான ரசிகருங்க
அவர் : i
x
i
i
இப்படி பச்சை குத்துனவங்க?
இவர்: அது ஜம்பிள்ட் எடிஷன்..
பக்கம் மாத்தி மாத்தி ப்ரிண்ட் ஆகியிருக்கும்..
நாமதான் சரி பாத்து படிச்சுக்கணும்
அவர்: காங்ம - ன்னு பச்சை குத்தியிருக்காங்களே அவங்க?
இவர்: மங்கா எடிஷன்...முதல் பக்கம் கடேசிலேர்ந்து ஆரம்பிக்கும்..
அவர்: காதுல வையர்லஸ் ப்ளூடூத் - தோட வர்றாரே அவர் யாருங்க ?
இவர்: அவரு பழனிவேலு...ரொம்ப நல்ல மாதிரி ..அவருக்கு ரத்தப்படலம் இல்லன்னா கைகால் நடுக்கும்ங்கறதால அவருக்கு மட்டும் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி ஆடியோ எடிஷன் கொடுத்திருக்கிறார் எடிட்டர்..அதை எப்பவும் பழனிவேல் கேட்டுட்டே இருப்பார்..
அவர்: அவருக்கு இந்த காதுல வேற ஒரு வயர்லஸ் ப்ளூடூத் இருக்கே ?
இவர்: அது ஸ்பின் ஆஃப்க்கு..ரெண்டும் ஒரே நேரத்துல ஓடும்
அவர்: மேலே அண்ணாந்து பாத்துட்டே வர்றாரே அவரு யாருங்க?
Deleteஇவர்: அவர் பரணி ப்ரம் பெங்களூரு..இந்த மாதிரி சந்திப்பெல்லாம் அவருதான் செமயா போட்டோ எடுப்பாரு..
அவர்: அதுக்கு ஏன் மேலே பாத்துட்டு இருக்கிறாரு?
இவர்: முதல்ல கேமராவுல எடுத்தாரு..அப்புறம் மொபைல்...அப்புறம் ட்ரோன் கேமிரா யூஸ் பண்ணாரு...ரெண்டு வருஷம் முன்னாடி இதுக்காகவே ஸாட்டலைட் வாங்கி வுட்டுட்டாரு
அதான் க்ளவுட் இருக்கான்னு மேல பாக்குறாரு..
அவர்: அங்க களையான பையன் தெரியிராரே
அவர் யாரு?
இவர்: திருச்செந்தூரூலிருந்து ஸ்டீல் க்ளா செந்தூரன் கோயம்புத்தூரிலிருந்து ச. பொன்ராஜ் பழனியிலிருந்து தண்டாயுதபாணி ஸ்டீல் சுவாமிமலையிருந்து..
அவர்: இருங்க ..இருங்க... அறுபடைவீடுகள் அப்புறம் தமிழ்நாட்டிலுள்ள எம்பெருமான் முருகன் பேரையெல்லாம் போட்டுக்கறேன்..அவருதான் ஸ்டீல் க்ளாவா?
இவர்: அவர் பையன் செந்தூரான்...களையான பையன்ல்ல?
அப்பா மாதிரி வெள்ளந்தி ..ஜூனியர் , எடிட்டர் ரெண்டு பேருக்கும் படா தோஸ்த்...
அப்பா வர முடியிலைன்னு பையனை கொலைப்படை, சினிஸ்டர் செவன் வண்ண மூன்றாம் பதிப்பு வாங்க அனுப்பி வச்சிருக்காரு...அப்பா மாதிரி சிறந்த காமிக்ஸ் ரசிகர்...
Deleteஅவர்: அங்க ஒருத்தர் போட்டோ காட்டி பேசிட்டிருக்காரே அவரு யாரு?
இவர்: நடிகை ஜிகினாஸ்ரீ கூட முந்தாநாள் புஸ்தகவிழாவில எடுத்துகிட்ட போட்டோவை எல்லாத்துகிட்டயும் காமிச்சுட்டுருக்கிறார்..
இரக்க சிந்தனையுள்ள ஈ. இளவரசன்னு பேரு.
காமிக்ஸ் காஸநோவா!!!
எல்லா விழாவுலேயும் யாராவது ஒரு நடிகையோட போட்டோ எடுத்துடுவார்..
அவர்: அவரு ்மூக்கு லேசா வளைஞ்சிருக்கிற மாதிரி தெரியுது..
இவர்: இந்த போட்டோக்கள்ள ஏதோ ஒண்ணு அவங்க வீட்ல பாத்துட்டப்போ நடந்த சம்பவத்தின் விளைவு அதுன்னு பேசிக்கிறாங்க.
அவர்: இடுப்புல அண்டாவோட நிக்குறாரே அவரு யாரு?
இவர் : அவரு ( பாய் + ) ஆசம் ரமேஷ்..தலை சிறந்த டெக்ஸ் ரசிகர்...ஆனாக்க பாவம் அவருக்கே இந்த விஷயம் தெரியாது..
அவர்: தோள்ல மம்பட்டியோட இருக்காரே அவரு யாரு?
இவர் : அவரு பேசுறத கவனியுங்க ..
அவர்: "ரத்தப்படலம் முர்தாபாத்..., ..பெரும்பாணாற்றுப்படையில பேர் வாதி, நன்னூல்ல நாலுவீசம், அக நானூறில அரைக்கால் சேர் எடுத்து ஒண்ணா கலந்தா ""
அப்படி பேசுறது கேக்குது
இவர்: அவரு செ அ
அவர்: எப்பவும் தோள்ல மம்பட்டியோட திரிவாரா? விவசாயியா?
இவர்: அது சிக்நேச்சருங்க...கதையை ரசிக்கிறாரோ இல்லையோ..கதைய தோண்டி எடுத்துடுவாரு...திடீர்னு புதுகதை கிடைச்சிட்டா அப்டீங்கறதால மம்பட்டியோட திரிவாரு..
அவர்: ரசிகர்ங்கள்ளாம் எலக்ட்ரிக் பைக்ல போறாங்க..ஃபோர்டு எலக்ட்ரிக் கார்ல போறவரு யாரு?
Deleteஇவர்: அவரு பச்சை குத்துறவரு
அவர்: ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெஷல் எடிஷன் எலக்ட்ரிக் வர்ஷன் - ல போறவங்க யாரு?
இவர்: அவங்க க்ரே மார்க்கெட்ல ரத்தப்படலம் விக்கிறவங்க
அவர்: 30 வருஷ பழைய பெட்ரோல் ஹீரோ ஹோண்டாவுல ஏறிப் போக கிளம்புகிறாரே அவரு யாருங்க?
இவர்: அவருதான் ரத்தப்படலம் இத்தனை எடிஷன் போட்டு மத்த காமிக்ஸூம் வெளியிடறவரு...எடிட்டர் விஜயன் சார்!!
//அது ஸ்பின் ஆஃப்க்கு..ரெண்டும் ஒரே நேரத்துல ஓடும்//
Deleteஅம்மாடி.... என்னால முடியலை... வயிறு வலிக்குது!!!
இது போன்ற சிறப்பான சம்பங்களை வெளியில் சொல்றதெல்லாம் பெருமை இல்லைங்க செயலரே. கடமை. உங்களைப் போல மற்ற வாசகர்களையும் இதுபோல் செய்யத்தூண்டும்,கடமை. கரூர் ராஜ சேகரன்
ReplyDelete