Powered By Blogger

Saturday, November 07, 2020

938 !!

 நண்பர்களே,

உஷார் : நெம்ப பொறுமையுடையோருக்கு மாத்திரமே இது !! பாக்கிப்பேர் அட்டைப்படங்களையும், preview-க்களையும் பார்த்த கையோடு அமெரிக்க எலெக்ஷன் காமெடிகளை ரசிக்கக் கிளம்பிடலாம் ! Don't tell me that I didn't tell you !!

வணக்கம். மிக்ஸி… க்ரைண்டர்ளோடு மட்டுமே பரிச்சயம் கொண்ட புதிய தலைமுறையினராக நீங்கள் இருந்திடும் பட்சத்தில், அந்தக் காலங்களது ஆட்டுஉரல்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைச்சல் தான் ! Ditto with அம்மிக்கல் ! ஒரு காலத்தில் இவையின்றி சமையலறைகளே இயங்கிடாது ! ரைட்டு… "அது எதுக்குடா அம்பி இப்போ ?” என்ற கேள்வியா ? சின்ன வயதுகளில் தாத்தா-பாட்டி-அப்பச்சி வீடுகளிலோ ; ஏதேனும் படங்களிலோ ; வாசிப்புகளிலோ இந்தக் கனமோ கனமான வஸ்துக்களை நீங்கள் சந்தித்திருந்தால் அந்த நினைவுகளைச் சேகரித்துக் கொள்ளுங்கள் ! அது தான் Step # 1 ! பிடாரியாய்க் கனக்கும் அந்த ஆட்டு உரலை தலைச் சுமையாய் ஏற்றிக் கொள்வது Step # 2. வலது தோளில் அம்மிக்கல்லைக் கட்டித் தொங்கச் செய்வது Step # 3 ! இடது புஜத்தோடு அம்மிக் குழவியைக் கோர்த்து விடுவது Step # 4. "அட… முதுகுப் பக்கம் காலியாத் தானே கீது…? உரலுக்கான உலக்கையைக் கட்டிப்புடலாம் !" என்பது Step # 5. இவை ஐந்தையும் செய்த கையோடு – “டேய் தம்பி… பார்த்துப் பத்திரமா 3 வாரத்திலே இதையெல்லாத்தையும் கொண்டு போய் புள்ளீங்க வூட்டிலே சேர்த்துப்புடணும் ! தீவாளிக்குப் பலாரம் சுடணுமாம் !” என்று ஒரு சுமாரான உடம்புக்காரனை வழியனுப்புவதை visualize செய்து கொள்ளுங்களேன் - Step # 6 பூர்த்தியாகிவிடும் !  And கடந்த 3 வாரங்களாய் இவ்விடம் நான் / நாங்கள் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி லேசாய் ஒரு ஐடியா கிடைத்திட மேற்படி 6 ஸ்டெப்கள் ரெம்போவே உதவிடும் என்பேன் ! 

ஆரம்பிச்சுட்டான்டா… பீற்றல் படலம் # 774’ என்று தோன்றுகிறதா folks ? On the contrary இது பீற்றல் புராணமேயல்ல… கழன்று போனதொரு புஜம் சார்ந்த புலம்பல் புராணம் ; and ஒரு  ஓமக்குச்சி நரசிம்மன் சைசிலான டீம் விஸ்வரூபமெடுத்து சுமோ மல்யுத்த வீர்களின் சாகசங்களை செய்திட்ட பெருமிதக்  கதை  ! இதன் துவக்கம் மே மாதத்தினில் ஒரு சுபமுகூர்த்த லாக்டௌன் தினத்தில் நமது DTP அணியின் முக்கியச் சக்கரமான கோகிலா திருமணமாகிக் கிளம்பிச் சென்று விட்டதில் இருந்து எனலாம் ! தவிர்க்க இயலா சந்தோஷ வாழ்க்கை முன்னேற்றமது என்பது புரிந்தது ; ஆனால் நமது பணிகளில் ஒற்றை நாளில் விழுந்த சுணக்கங்களின் பரிமாணங்கள் தொடரும் நாட்களில் தெரிந்தனவோ – இல்லையோ - இதோ இந்த தீபாவளியின் நவம்பரின் போது அசுரத்தனமாய், விஸ்வரூபமெடுத்துத் தெரியத் துவங்கி விட்டன ! To her lasting – credit – நமது DTP அணியின் இன்னொரு அங்கமான இவாஞ்சலின், post lockdown பணிகள் மறுதுவக்கம் கண்ட ஜுன் முதலாய் – ஒற்றையாளாய் இத்தனை மாதங்களது பணிகளையும் சமாளித்து வந்திருக்கிறார் ! கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாக அத்தனை ஞாயிறுகளிலும்  நமது அலுவலகத்தில் DTP பணிகள் ஓடிவந்துள்ளன…! வாரத்தின் ஏழு நாட்களும் பணிகளே ; மாதத்தின் முப்பது நாட்களும் பிசியே ! 

And then approached நவம்பர் !!!!

ஒவ்வொரு மாதமுமே ‘இழுத்துக்கோ-பறிச்சுக்கோ‘ என்ற கதையாய் வேலைகள் நிறைவுற்று வந்த நிலையில் – என் அடிமனசில் நவம்பர் சார்ந்த பீதி ஏகமாய்க் குடி கொண்டிருந்தது ! 672 பக்கங்கள் ‘டெக்ஸ் தீபாவளி மலரில்‘ மட்டுமே எனும் போது, இங்கே செமத்தியாய் மாட்டுவோம் என்பதை ஷெரீப் டாக்புல் கூட யூகித்திருக்க முடியும் தான் ! 'ஏன்டா  பேமானி - அது தான் தெரியுதுலே ? வேலைக்கு இன்னொரு ஆளை போட்டா என்னவாம் ?" என்ற மைண்ட்வாய்சா ? சிக்கலே வேலைக்குப் புதிதாய் பணியாட்களைத் தயார் செய்வதில் தான் இருந்து வருதுங்கண்ணா ! படித்து முடித்த கையோடு “டிசைனிங் தெரியும் சார்… Photoshop தெரியும் சார்!” என்று ஆர்வமாய் விண்ணப்பிப்போர்க்குப் பஞ்சமேயில்லை தான் ; ஆனால் தமிழில் டைப்பிங் ; வண்டி வண்டியாய் – லோடு லோடாய் டைப்பிங் என்பதைப் பார்த்த கணத்தில் தெறித்து ஓடுபவர்களை உசேன் போல்ட்டால் கூடத் துரத்திப் பிடிக்க இயலாது என்பேன் ! அதற்கு மீறி இரண்டோ – மூன்றோ நாட்களுக்குப் பணி செய்ய வருவோர் – மூணாம் நாளே ‘கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது சார்‘ என்றபடிக்கு ஜகா வாங்கிடுகின்றனர் ! “டமில்” “டமில்” என்று எத்தனை மேடைகள் போட்டு ; ஸ்பீக்கர் கட்டிப் பேசினாலும் – நம் புதிய தலைமுறைக்கு அதன் மீதுள்ள பாசம், பரீட்சைகளில் பாஸாவதைத் தாண்டி பரவலாய் இருப்பதில்லை என்பதே என் மட்டிலான observation ! So மேற்கொண்டு ஆள் கிட்டும் வரையிலும் ஒத்தாசை செய்யும்படி கோவையில் செட்டிலான கோகிலாவிடம் குடலை உருவும் படலத்தைப் போன மாதமே துவக்கியிருந்தோம் !

 ஆட்டு உரலின் கதை :

தீபாவளி with டெக்ஸ் ! 2 மாக்ஸி நீளத்து டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்கள் – so மொத்தமாய் 640 + பக்கங்கள் !! சரியாக மூன்றரை  வாரங்களுக்கு முன்னே இதனைக் கையில் எடுத்த போதே நான் தீர்மானித்திருந்தேன் – புக்ஸ் டெஸ்பாட்ச் இம்முறை நவம்பர் 10-க்கு முன்பாகவே இருந்தி்ட வேண்டுமென்று ! And இது ஹார்ட்கவர் பைண்டிங் எனும் போது, சுத்தமாய் ஒரு வாரம் பைண்டிங்கிற்கே அவசியமாகிடும் ! So நிதரிசனமாய்ப் பார்த்தால் பதினேழு நாட்களிலிருந்தன – நவம்பரின் 906 பக்கங்களையும் டைப்செட் செய்து ; எடிட்டிங் செய்து ; அச்சிட்டு ; பைண்டிங் முடித்து ; மாமூலான மறந்து போன சமாச்சாரங்களுக்கோசரம் ஸ்டிக்கர்களும் ஒட்டி ; டப்பிக்குள் அடைத்து அவற்றை டெஸ்பாட்ச் செய்தி்ட !! And இந்த மொத்தக் கூத்தையும் அரங்கேற்ற நம் வசமிருந்ததோ - 75 அகவைகளைக் கடந்ததொரு மொழிபெயர்ப்பாளர் ; ஒற்றை DTP பணியாளர் ; ஒற்றை ஆல்-இன்-ஆல் அழகுராஜா & ஒற்றை முழியாங்கண்ண எடிட்டர் plus நமது front office !! குட்டிக்கரணங்கள் நமக்குப் புதிதேயல்ல தான் ; ‘மூன்றாம் பிறை‘ கமலஹாசன் பிச்சையெடுக்குமளவுக்கு ரக ரகமாய் ; விதவிதமாய் ; வீதி வீதியாய்க் கரணங்கள் போட்டிருக்கிறோம் தான் ! ஆனால் இம்முறையோ முற்றிலுமே வேறொரு லெவல் !

இங்கே எல்லாமே நேர்கோடுகளே; பெருசாய் மண்டையைப் பிய்க்க முகாந்திரங்கள் இராது ; உள்ளாற புகுந்திடறோம் ; வூடு கட்டி டெக்ஸ் & கோ அடிக்கிறதை ரசிக்கிறோம் ; அப்டியே அச்சுக்குக் கொண்டு போறோம் !” என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது - டெக்ஸோடு பணி துவக்கிய தருணத்தினில் ! ஐயகோ.. ஐயகோ... பெரும் தேவன் மனிடோ காமிக்ஸ் காதலர் மட்டுமல்ல ; காமெடிகளின் காதலருமே என்பதைப் புரிந்து கொள்ள பரபரவென சந்தர்ப்பம் வாய்த்தது – எனது எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாய் பொய்த்த நொடிகளில் ! மேலிருந்து ஆட்டுவிப்பவர் சத்தியமாய் சத்தமாய்ச் சிரித்திருப்பார் – எனது முட்டைக்கண்கள் ஆனை முட்டை சைஸுக்கு விரிந்ததைப் பார்த்து !

யுத்த பூமியில் டெக்ஸ்” – அமெரிக்க உள்நாட்டு யுத்தம் சார்ந்த கதையாக இருக்குமென்பதை யூகித்திருந்தேன் தான் ! இரண்டு பிடிவாதக்கார மீசைமாமா கர்னல்களைச் சாத்துவார் ‘தல‘ ; நாலு எதிரி முகாமில் குண்டு வைத்துத் தெறிக்க விடுவார் என்ற ரீதியில் கதையிருக்குமென்றும் யூகித்திருந்தேன் ! ஆனால்... ஆனால்... அங்கு தான் டெக்ஸின் பிதாமகர் G.L. போனெலியின் கதை சொல்லும் ஆற்றல் விஸ்வரூபமெடுப்பதை உணர முடிந்தது ! நடந்த யுத்தத்தின் வரலாற்றுத் தகவல்களை ; பின்னணிகளைப் பிசகின்றித் தக்க வைத்துக் கொண்டு – நிஜத்தையே பின்புலமாக்கி ; நிஜ மனிதர்களையும் கதைக்குள் பிசிறின்றிப் புகுத்தி ; அவர்களோடு அற்புதமாய் டெக்ஸை sync ஆகச் செய்து களமாடச் செய்துள்ளார் எனும் போது, “ஐயா... தெய்வமே... கூகுள் ஆண்டவா!” என்றபடிக்கே இம்மாதமும் இன்டர்நெட் தேடலுக்குள் ஐக்கியமானேன் - 2 பதிவுகளுக்கு முன்னமே விவரித்திருந்தபடி ! அமெரிக்க யுத்த வரலாறு ; வடக்கு vs. தெற்கு மோதலின் பின்னனி ; யுத்தத்தின் உச்சம் என்று வரிசையாகத் தோண்டித் துருவ வேண்டிப் போனது ! நான் பாட்டுக்கு எதையேனும் புரிதலின்றி எழுதி வைத்துத் தாண்டி விட்டால், அவை factual errors ஆகிடுமென்ற பயம் ! So மின்சார வேகத்தில் பாய்ந்தோடும் கதையோடு ஈடு கொடுத்த படிக்கே ; சைடில் கூகுளின் துணையோடே இந்த 320 பக்க சாகஸத்தோடு நான் உருண்ட உருளை ‘முதல்வன்‘ படத்து சேற்றுக்குள் சண்டை sequence–ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட உருண்டிருக்க மாட்டார் ! புரட்டப் புரட்டப் பக்கங்கள்... பார்க்கப் பார்க்க எழுத்துப் பிழைகள் ; தோண்டத் தோண்ட நிஜம் சார்ந்த தரவுகள் என்று நாட்களை சகட்டுமேனிக்கு விழுங்கிய “யுத்த பூமியில் டெக்ஸ்” சாமான்யத்துக்கு எனக்கு மறவாது !

அச்சா ஹை... சிக்கல் தீர்ந்துச்சு ; இனி காத்திருப்பது நம்பள் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான “பனிவனப் படலம்” ! இதிலே கூகுளும் தேவைப்படாது ; கும்மிடிப்பூண்டிக்குப் போகவும் தேவைப்படாது !” என்று பரபரவென பணிகளுக்குள் புகுந்தேன் – எடிட்டிங் செய்திட! ஐயகோ... ஐயகோ... இம்முறையும் விண்ணிலிருந்து ஒரு எக்காளச் சிரிப்பு காதில் விழுந்தது ! டெக்ஸ் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இருக்கும் ! அவரது க்ளாஸிக் எழுத்துக்கள் டெக்ஸின் ஜனரஞ்சக / கமர்ஷியல் பாணிக்கு சற்றே அந்நியமாய்ப்படுவதாகத் தோன்றியதால் – டெக்ஸைத் தக்க வைத்துக் கொண்டு ; அவரது நடைக்கு suit ஆகிடும் கதைகளை மட்டுமே அவரிடம் ஒப்படைப்பது என்ற policy decision பரஸ்பரப் புரிதலின் பேரில் கொஞ்ச காலத்துக்கு முன்னமே எடுத்திருந்தோம் ! இதுவோ சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடிக்கப்பட்ட ஆல்பம் எனும் போது திருதிருவென முழிக்கத் தோன்றியது simply becos ஒரே ஆல்பத்தின் முதல் முன்னூறு பக்கங்களுக்கு சகஜமாகவும் ; தொடரும் முன்னூறு பக்கங்களுக்கு இலக்கிய நடையிலும் ஒரே நாயகர் வாயசைத்தால் ரொம்பவே இடருமே என்ற ஞானோதயம் புலர்ந்தது ! And ரொம்ப காலம் கழித்து இந்த ஆல்பத்தில் கார்சனுக்கு துவக்கம் முதலே வேலைகள் இருப்பதும், மனுஷன் செமத்தியாய் score செய்திட ஏகப்பட்ட டயலாக் வாய்ப்புகள் இருப்பதும் கண்களில்பட்டன ! நடையில் பெரிதாய் நெருடல்கள் தெரியலாகாது ; அதே சமயம் கார்சனின் வரிகளில் நகைச்சுவை + வீரியம் ஏற்றிடல் அவசியம் என்ற 2 point agenda பிடாரியாய் முன்நிற்க – ஏற்கனவே தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்த கையோடு - கோட்டை மொத்தமாய் அழிச்சுப்புட்டு இன்னொரு 320 பக்க பரோட்டாவை விழுங்கத் தயாரானேன் ! 

அங்கே யுத்த பூமி...அரிசோனா..கென்டக்கி...டெக்ஸாஸ் என அமெரிக்க மத்திய மண்டலங்களெனில் - இக்கடவோ அலாஸ்கா ; கனடா ; வட துருவம் - என மெர்சலூட்டும் குளிர்ப்பின்னணி ! அங்கேயோ - 'பீப்ப்பீ " என்றபடிக்கே குழல் ஊதிக்கொண்டு, குதிரைப் பண்ணைகளையே கண்ணில் காட்டியபடிப் பாயும் சிப்பாய்களெனில் - இங்கேயோ மருந்துக்குக்கூடக் குதிரைகள் கிடையாது ! முழுக்கவே ஸ்லெட்ஜ் இழுக்கும் நாய்களின் ராஜ்ஜியமே ! ஆளுக்காள் முரட்டு-முரட்டுப் பனி அங்கிகளோடு - காலில் டென்னிஸ் மட்டைகள் போலான பனிக்காலணிகளோடு வலம் வந்துகொண்டிருந்தனர் !  அங்கே பூம்-பூம் டிக் என்றதொரு மொட்டை பாஸ் தான் டெக்சின் தோழனெனில், இங்கே நமது ஆதர்ஷ வெள்ளிமுடித் தாத்தா ! So முதல் கதைக்கும், தொடர்ந்திட்ட இரண்டாம் கதைக்கும் மத்தியில் தம்மாத்துண்டு ஒற்றுமை கூட லேது ! 

மௌரோ போசெல்லியின் இந்த த்ரில்லருக்குள் மெது மெதுவாய்ப் புகுந்தபடிக்கே,  ரொம்பவே உயர்நடையிலான சொற்களை   மாற்றிக் கொண்டே ; டெக்ஸ் & கார்சனுக்கு வரிகளில் வேகத்தையும், கொஞ்சமாய் காமெடியையும்  நெடுக நுழைத்துக் கொண்டே போக, பக்கங்கள் முளைத்துக் கொண்டே ; முளைத்துக் கொண்டே வந்தது போலவே தோன்றியது ! எப்போதுமே டெக்சில் பணிகள் சுலபத்தன்மையோடு இருந்திடும் தான் ; ஆனால்  அந்த 200 + பக்க நீளங்களோ பணியாற்றும் போது புரட்டியெடுத்திடும் ! இம்முறையோ 320 பக்க ட்ரிபிள் ஆல்பங்கள் எனும் போது - திறக்கத்திறக்கக் குவியும் ஜோ பைடெனுக்கான தபால் ஓட்டுகள் போல - முடிவின்றி நீண்டு சென்றன பணிகள் ! கதை மட்டும் அசுர வேகத்தில் இல்லாது போயின், சத்தியமாய் ஏதாச்சுமொரு கரடி விட்டுப்புட்டு நடுவாக்கில் கம்பிநீட்டிடலாமா ? என்ற சபலம் தலைதூக்கியிருக்கும் ! 320 பக்கங்களுக்குள்ளும் திருத்தங்கள் ; வசன மாற்றங்களை போட்டு விட்டு, 'அக்கடா' என ஓய்ந்திருக்கவும் மார்க்கங்களில்லை - becos உங்கள் கண்களில் தட்டுப்படும் எழுத்துப் பிழைகளின் பெரும்பான்மையே நான் பார்த்துத் தரும் பிழைத்திருத்தங்களினில் விடுதல்கள் + நான் மாற்றி எழுதுவதனை டைப்செட் செய்திடும் சமயங்களில்  நிகழும் புதுப் பிழைகளே ! இங்கேயோ ஏகமாய் மாற்றி எழுதும் படலம் அரங்கேறியிருப்பதால் - இந்த வம்பே வேணாமென மறுக்கா 320 பக்கங்களையும் இரண்டாவதுவாட்டியும் வரவழைத்து மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு வாசிக்கும் படலங்கள் அரங்கேறின ! நான் பிழைத்திருத்தம் செய்து முடிக்கும் பக்கங்களை அப்பாலிக்கா ஆபீசில் proof reader சங்கவி பார்த்த பிற்பாடு அச்சுக்கு எடுத்துக் போக ஏற்பாடு ! So கடந்த ஒரு வாரமாய் 'தல' கூடவே முழுக்க முழுக்கக் குப்பைகொட்டியதில் நம் அலுவலகக் கம்பியூட்டர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - காது, மூக்கு, என நவதுவாரங்களிலும் மஞ்சளாய்ப் புகை வராத குறை தான் !! And தொடர்கதையாய்த் திருத்தங்கள் போட்ட எனக்கே நாக்குத் தொங்கியதெனில் - அவை சகலத்தையும் நடைமுறை செய்த இவாஞ்செலினின் பாடை நினைத்தாலே கிறுகிறுக்கிறது ! இது அத்தனைக்குப் பிறகுமே எழுத்துப் பிழைகள் தலைதூக்கும் போது தான் யாரையாச்சும் 'தல' பாணியில் நடுமூக்கிலேயே குத்தணும் போல் பரபரத்திடும் ! 

டாஸ்மாக் வாசலில் பரதநாட்டியம் பயிலும் பொறுப்பான குடிமகனைப் போல ஒரு மாதிரியாய் 640 பக்கங்களையும் முடித்து விட்டு ஒரு ஓரமாய்க் கட்டையைக் கிடத்தத் தயாரான போது மைதீனின் நிழல் தெரிந்தது ! 'கிழிஞ்சது போ..! இன்னும் என்ன  குண்டைப் போடப்போறானோ ?'  என்ற பதட்டத்தோடு நிமிர்ந்தால் - "அந்த 32 பக்க கலர் டெக்ஸ் கதையை எழுதித் தரேன்னு சொன்னீங்களே அண்ணாச்சி !!" என்றபடிக்கே ஒரு கத்தையை நீட்டினான் ! இதுவோ - கலரிலான ஆக்கம் எனும் போது பிராசஸிங் ; அச்சு என சகலத்துக்குமே கொஞ்சமாச்சும் டயம் அவசியப்படும் ! பேஸ்தடித்துப் போய் நான் நின்ற போது இரவு மணி ஒன்பதரை ! 'விடாதே..பிடி..!!' என அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நம்ம 'தல' தெறிக்க விடும் அந்த 32 பக்கங்களையும் எழுதி இவாஞ்செலினின் வீட்டுக்கு ராவோடு ராவாய் அனுப்பி டைப்செட்டிங் செய்து வாங்கி, அதிகாலையில் திருத்தங்கள் போட்டு - அச்சகம் திறக்கும் நேரத்துக்கு ரெடி செய்திருந்தான் மைதீன் !! 320 + 320 + 32 = 672 பக்கங்கள் கொண்ட ஆட்டு உரலை நாங்கள் சுமந்த கதை இது தான் !! 

அம்மிக் கல்லின் கதை ! 

ஆட்டு உரலைச் சுமந்தது நானும், நம்மவர்களுமெனில், அம்மிக்கல்லை ஒப்படைத்தது நமது கருணையானந்தம் அவர்களிடமே !! போன மாதமே வந்திருக்க வேண்டிய நம்ம கூர்மண்டை சாரின் "சர்ப்பங்கள் சாபம்" சத்தியமாய் ஸ்பைடர் ரசிகர்களுக்கொரு தலப்பாக்கட்டி விருந்து என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு ! நண்பர் JSK-ன் tribute ஆக வெளிவந்திடவுள்ள இந்தக் கதை மட்டும் 30 வருஷங்களுக்கு முன்பாய், ஸ்பைடர் மேனியா உச்சத்தினில் இருக்கும் நாட்களில் வெளியாகியிருப்பின்- கூரையைப் பிய்த்துக் கொண்டு போயிருக்கும் சேல்ஸ் ! ஸ்பைடரின் ரகளையான template-ல் ரவுசு விடும் இந்தக் கதையினை நான் ஆங்கிலத்தில் படித்த போதே தீர்மானித்து விட்டேன் - இதற்குப் பேனா பிடிப்பது ஒரு டஜன் கி.நா.க்களை விடவும் சிரமமென்று ! 72 பக்க நீளம் ; and பக்கத்துக்குப் பக்கம் டிரம்ப்பை விடவும் ஜாஸ்தி வசனம் பேசும் கதை மாந்தர்கள் என்பதைக் கவனித்த போதே - 'ஆத்தாடி.... கடைசி நிமிடம் வரைக்கும் ஜவ்விழுக்கும் நமக்கெல்லாம் இது சுட்டுப்போட்டாலும் ஒத்து வராது ! எழுதுவதனில் ஒரு அசாத்திய discipline கொண்ட அங்கிளால் மட்டுமே இதைச் சமாளிக்க முடியும் !" என்பது புரிந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் அவருக்கே தண்ணி காட்டிப்புட்டான் நம்ம 'எத்தனுக்கு எத்தன்' ! ஒரு முரட்டுக் கத்தைப் பக்கங்களோடு ஸ்பைடரின் தமிழாக்கம் நம்ம ஆபீசுக்கு வந்த சேர்ந்த தருணத்திலோ - இக்கட TEX மேளா செமத்தியாய் ஓடிக்கொண்டிருந்தது ! நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை என்ற நிலையில் -வேலையினை outsource செய்திட எண்ணிய நேரத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்பாய் நமக்கு பணியாற்றியதொரு அம்மணி, " வேலை ஏதாச்சும் உள்ளதா ? வீட்டில் வைத்துப் பணிசெய்து தரலாமா ?" என்று கேட்டிட - எக்குத்தப்பான நிம்மதிப் பெருமூச்சு  எனக்கு ! ரைட்டு - ஒரு நோவு தானாய்த் தீர்ந்தது என்று நான் துள்ளிக்குதித்து என்னவோ நிஜம் தான் ! ஆனால் நமது மனிடோ பெரும் தேவனின் திருவிளையாடல்களை அந்த நொடியில் நான் அறிந்திருக்கவில்லை ! முழுசாய் 2 வாரங்களுக்குப் பணியினைக் கையில் வைத்திருந்துவிட்டு - இது இப்போதைக்கு எனக்கு முடியாது போலிருக்கு ! என்று கையை விரித்தே விட்டார் - வெறும் 15 பக்கங்களை மட்டும் முடித்திருந்த நிலையில் ! இவ்ளோ தமிழா ?? என்ற கேள்வி வேறு இந்த அழகில் !! வெறுத்தே போச்சு எனக்கு ! "இந்த மாசமும் இந்த புக்குக்கு பீப்பீ தானா ?  அசிங்கமாகிடுமே !!" என்று உள்ளுக்குள் பதறத் துவங்கியது ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்தபடிக்கே , நமக்கு அவ்வப்போது கொஞ்சம் உதவிடும் குருமூர்த்தியின் கதவுகளைத் தட்டினோம் ! சமீபமாய் ஆர்ச்சி கலரிங் + டைப்செட்டிங் இவரது கைவண்ணமே ! மனுஷன் பிசியாக இருந்த போதிலும் மறுக்காது பணியை ஏற்றுக்கொண்டார் ! So உள்ளே டெக்ஸ் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே தருணங்களில் வெளியே ஸ்பைடரும் ஓடிக்கொண்டிருக்க - உள்ளுக்குள் எனக்கோ - "தேதிகள் ஓட்டமாய் ஓடியவண்ணமுள்ளன ; வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றனவே" என்ற டென்க்ஷன் ! கூர்மண்டையருக்குப் பிழைத்திருத்தங்கள் போடவும் இக்கட நேரமில்லை எனும் போது - அந்தப் பொறுப்பையும் பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளிடம் மறுக்கா ஒப்படைத்தேன் ! அவரும் இயன்ற மட்டிலும் பார்த்துத் தந்த பக்கங்களுக்கு - 'டமால்..பணால்' என்ற அறிவுபூர்வமான ஓசைகளை இணைத்தது மட்டுமே எனது பொறுப்பாகியது ! வியாழன் மாலை சகலமும் முடிந்து, வெள்ளி காளைக்கு அச்சில் ஏறிட - 2 down ; 2 more to go என்று மண்டைக்குள் ஒலித்தது ! Maybe இந்த இதழினில் பிழைகள் கொஞ்சம் கூடுதலாய்க் கண்ணில்பட்டால் - மன்னிச்சூ ப்ளீஸ் !! And இதோ - நமது பிரிட்டிஷ் ஜித்தரின் அட்டைப்பட முதல்பார்வை : 


இந்த அட்டைப்படத்தின்பின்னுள்ள கதையைக் கேட்டால் தெறித்தடித்து ஓடி விடுவீர்கள் என்பதால் I'll make it simple !! துவக்கத்தினில் நாம் தயார் செய்திருந்த டிசைன் இதுவல்ல ; புதிதாய் நமக்கு ஒத்தாசை செய்திடும் சென்னையின் டிஜிட்டல் ஓவியருக்கு நான் வேறொரு ஸ்பைடர் டிசைனைத் தந்திருக்க, அவருமே அதனை நீட்டாக முடித்துத் தந்திருந்தார் ! நானும் குஷியாய் அதனை படைப்பாளிகளின் பார்வைக்கு அனுப்பிவிட்டு, "இது ஜுபரா கீதாங்க சார் ?" என்று கேட்டிருந்தேன் ! ரைட்டு - proceed என்ற பதில் வருமென்று காத்திருந்தால் - வந்ததோ -"ஐயகோ...ஸ்பைடர் ஏதோ பாங்க்ரா டான்ஸ் ஆடுற மாதிரியிருக்கே ; இதையா அட்டைப்படமாக்கப் போறீங்க ? என்ற பதில் ! "இல்லீங்க சார் ; இதுவும் ஸ்பைடரின் ஒரிஜினல் டிசைன் தான் ; பாருங்க - இதோ இருக்கு நாங்க பயன்படுத்திய reference !" என்று நான் அந்த ஒரிஜினலை அனுப்பியிருப்பினும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை என்பது புரிந்தது ! "ஸ்பைடர் போன்றதொரு ஆக்ஷன் நாயகருக்கு அட்டைப்படத்தில் தெறிக்கும் வீரியம் தென்படணுமே !" என்பது அவர்களது உணர்வாக இருந்தது ! Moreover - இதே சாகசத்தை அவர்கள் வெகு சீக்கிரமே இங்கிலாந்தில் வெளியிட உள்ள நிலையில், நாம் ஏதேனும் சுமாரான ராப்பரோடு களமிறங்கிடக்கூடாதே  என்ற பதைபதைப்பும் அவர்களுக்கு ! நொடியும் யோசிக்காது - நமது புது ஓவியரை மறுக்கா தொடர்பு கொண்டோம் சர்ப்பங்களோடு மல்யுத்தம் செய்திடும் இந்த டிசைனோடு ! அவருமே நமது அவசரம் புரிந்து சடுதியில் பணியாற்றித் தர - எனக்கோ அதன் பின்னணி வர்ணத்தில் திருப்தியில்லை ! 'ஓடு...ஓடு...கோகிலாவைப் பிடி !' என்று டிசைனை அவரிடம் ஒப்படைத்து, பின்னணியை மட்டும் இன்னும் glitzy ஆக்கி வாங்கிய கையோடு லண்டனுக்கு மறுக்கா மெயில் அனுப்பினோம் ! இம்முறையோ - "சூப்பர் !!" என்று பதில் கிட்டிட, அடித்துப் பிடித்து அட்டைப்படத்தினை அச்சிட விரைந்தோம்  ! இதோ உள்ளது - முதலில் போட்ட பாங்க்ரா டான்ஸ் போஸ் & the others !!



So ரகம் ரகமாய் பல்பு வாங்கிய கதை இதுவே - நமது இஸ்பைடராரோடு !! இதோ - உட்பக்க preview : 


அம்மிக் குழவியின் கதை :

புக் # 3 ஆக வந்திருக்க வேண்டியதோ - கார்டூனான "ஹெர்லக் ஷோம்ஸ்" & இதற்குப் பேனா பிடித்திருக்க வேண்டியவன் நானே ! ஆனால் தீபாவளி மலரின் களேபரங்கள் நிறைவுற்ற நொடியில் கன்னித்தீவு சிந்துபாத்துக்கு நாலு வரிகள் எழுதிடும் 'தம்' கூட என்னிடம் எஞ்சியிருக்கவில்லை ! Herlock மறுக்கா எழுத ஆரம்பித்து & டைப்செட்டிங் மண்டகப்படிகளை மறுக்கா அரங்கேற்ற சத்தியமாய் நேரமும் இல்லை என்ற போதே டிசம்பருக்கென நான் திட்டமிட்டிருந்த ஜம்போவின் இதழ் # 5 தயாராகயிருப்பது நினைவுக்கு வந்தது !! And இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமானதொரு இதழே !! And இதனை நாம் பின்சீட்டிலிருந்து முன்னுக்குக் கொணரத் துணிந்ததற்கு நமது ஜாகஜ வீரர் ரோஜரும் ஒரு காரணமென்பேன் ! Simply becos - ரோஜரின் "நேற்றைய நகரம்" இதழினை நீங்கள் மத்தளம் கொட்டித்தள்ளி விடுவீர்கள் என்ற பயத்திலேயே அதனை ஒரிஜினலாக அறிவித்த தருணத்தில் வெளியிடவில்லை நான் ! இப்போது ஆன்லைன் புத்தக விழாவிற்கு அதனை வெளியிட்ட போதுமே 'மடக்..மடக்;க்கென எச்சிலை கணிசமாய் விழுங்கத்தான் செய்திருந்தேன் ! ஆனால் Surprise ...surprise ....'கதை சூப்பர் ; சித்திரங்களும் சூப்பர் ; கலரில் இதை வெளியிடாமல் சொதப்பிப்புட்டியே !!" என்ற கண்டனங்கள் !! ரொம்பவே பெரியதொரு pleasant surprise என்றே சொல்லுவேன் உங்களின் அந்த ரியாக்ஷன்ஸ் ! நிச்சயிக்கப்பட்ட சப்பல்ஸ் சாத்துக்களின்றித் தலைதப்பியது மட்டுமன்றி, பண நெருக்கடிகளின் மையத்தில் நிற்கும் வேளையில், கொஞ்சமே கொஞ்சமாய் ராயல்டி மீட்பும் சாத்தியமாயிற்றே என்று ஓசையின்றி சந்தோஷப்பட்டுக் கொண்டேன் ! 

அந்த நொடியில் தீர்மானித்தது தான் "கால வேட்டையர்" இதழினை இனியும் பதுக்கிப் போட வேண்டாமென்பது ! கதையும் வாங்கி ; அச்சைத் தவிர்த்து தயாரிப்புப் பணிகளின் சகலத்தையும் செய்து முடித்து ; பற்றாக்குறைக்கு அட்டைப்படத்தையும் அச்சிட்டு வைத்திருக்கும் நிலையினில் - அதனில் லாக் ஆகிக் கிடக்கும் கணிசமான தொகையானது மனசுக்குள் நெருடலாகவே தொடர்ந்தது ! ரோஜரே தலைதப்பி விட்டார் எனும் போது இந்த மிரட்டும் ஆக்ஷன் த்ரில்லர் நிச்சயமாய் நான் பயந்தது போல் சோடை போகாதென்ற நம்பிக்கை பிறந்தது ! தவிர, ஜம்போ சீசன் 3-ன் சந்தாத் தொகையான ரூ.900-க்கு நாம் வழங்கிட வேண்டியது இன்னமும் ஒரேயொரு அறுபது ரூபாய் புக் மட்டுமே என்பது நினைவில் நின்றது ! (இதுவரை வந்துள்ளவை : பிரிவோம் சந்திப்போம் - ரூ.120 + ஜேம்ஸ் பாண்ட் ரூ.200 + மா துஜே ஸலாம் - ரூ.180 + தனித்திரு..தனித்திரு - ரூ.90 + (காத்துள்ள) Lone ரேஞ்சர் - ரூ.250)  அந்த அறுபது ரூபாய் புக்கின் இடத்தினில் ரூ.120 விலையிலான "கால வேட்டையர்" புக்கை வழங்கிடும் பட்சத்தில் - உங்களுக்கு அந்தக்கதை ரசிக்காமலே போய் விட்டாலும் no big deal என்று தோன்றியது ! டைப்செட்டிங் செய்து ; ராப்பரும் ரெடியாக உள்ளதெனும் போது - ஒரேயொரு நாள் எடிட்டிங்கினில் மெனெக்கெட்டால் ஒரு முழு புக் தேறிவிடும் என்று பட்டது ! கண்முழி பிதுங்கிய நிலையில் deadlines உடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த டீலை மறுக்க திராணியில்லை ! So அவசரம் அவசரமாய் எடிட்டிங் ; அச்சு & அதே கையோடு அட்டைப்படத்தின் முகப்பில் ஸ்டிக்கர் ; உட்பக்கத்தில் ஸ்டிக்கர் ; கடைசி உட்பக்கத்தினிலும் ஸ்டிக்கர் என்று நம்மாட்கள் புஜங்களையும் இன்றைக்குப் பதம் பார்த்தாயிற்று !! இதோ - பொன்னனின் கைவண்ணத்தில் ஓராண்டுக்கு முன்னமே ரெடியாகிக் காத்திருக்கும் அட்டைப்பட முதல்பார்வை - with the Season 3 sticker : 

 
And இதோ - அசாத்தியச் சித்திரங்களுடனான அதன் உட்பக்க preview !மேற்கொண்டு டைப்படிக்க சத்தில்லை என்பதால் கதை பற்றிய விளக்கங்களை இன்னொரு மழை நாளுக்கென ஒத்திப் போடுகிறேன் guys ! So உங்களின் கூரியர் டப்பிக்கு கனம் சேர்க்கக் காத்திருப்பது இந்த black & white த்ரில்லரே ! 

உலக்கையின் கதை !!

எஞ்சியிருந்த ஒற்றை இதழ் - ஹி..ஹி..!!!! ."இரவின் மழை" என்ற பொருள்படும் பெயரோடு மச்சான்ஸைச் சந்திக்கக் காத்திருந்த அமாயா தோன்றும் - "வானமும் வசப்படும் !" "புரட்சிப்பெண் ஷீலா" என்று ராணி காமிக்சில் இவர் ஏற்கனவே ஒரு ரவுண்டு வந்துவிட்டார் என்பதை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன் ! ரைட்டு...தீபாவளி ஜோரில் கூட்டத்தோடு அம்மணியை இறங்கிவிட்டால், எப்படியாச்சும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கையோடு - டைப்செட் செய்யப்பட்டு தயாராக இருந்த 30 பக்கங்களைக் கையில் எடுத்த போது - மூச்சிரைத்தது ! அம்மணி எதனில் புரட்சி செய்கிறாரோ இல்லியோ - கதை நெடுக சிக்கன உடுப்புகளோடு 'சிக்'கென்று வலம் வருவதைக் கச்சிதமாய்ச் செய்து கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு வசன வரிகள் அனைத்துமே ஒரிஜினலின் அதே அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தினில் இருந்திட, அவையும் ஏகமாய் விரசத்தில் நெருடின ! So கோகிலாவைக் கொண்டு அமாயாவுக்கு ஆடைதானங்கள் நடத்திய அதே நேரத்தில் - பெருமூச்சோடு மறுக்கா எழுதும் பேடைத் தூக்கி வைத்துக் கொண்டே விரச ஜாடை தொனித்த வரிகள் சகலத்துக்கும் வீரிய வார்னிஷ் பூச ஆரம்பித்தேன் ! படிக்கும் போது பெரிதாய் நெருடாது ; இன்னும் சொல்லப்போனால் சற்றே feminist ஜாடையிலும் டயலாக்குகளை நான் அமைத்து முடித்தது நேற்றிரவினில் ! (வெள்ளியிரவினில்) And சனி பகலில் அச்சாகி, பைண்டிங்குக்கும் புறப்பட்டு விட்டன !! இதோ - அம்மணியின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியரின் கலரிங்கில் : 


இந்தக் கூத்துக்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரங்களில் - அந்நியன் ரெமோ ஜாடையில் எனக்கு இன்னொரு பணி ராப்பொழுதுகளில் காத்திருந்தது !! And அது தான் நமது புது அட்டவணைக்கான பாம்பன் பாலத்து நீளத்திலான பதிவைத் தயார் செய்து டைப்பிடிக்கும் ராக்கூத்துக்கள் ! அத்தனை பேருமே  ஏதேதோ பணிகளில் நம் சார்பில் பிசியே எனும் போது யாரையும் டைப்பிடித்துத் தரச்சொல்ல இயலவில்லை ! And அட்டவணையை ஒத்திப் போடுவோமா ? என்றால் - உங்களை disappoint செய்தது போலாகிடுமே என்று அதற்கும் மனசு ஒப்பவில்லை ! பின்னென்ன - பகலெல்லாம் தயாரிப்பினில் மூழ்கியிருந்தது விட்டு, ராவினில் பதிவுக்குள் உலா வந்தேன் ! அதனில் ஒரு இரவில் எதிர்வீட்டு வாசலில் ராத்திரி 2 மணிக்கு குடுகுடுப்பைக்காரன் நின்று ஜக்கம்மாவை அழைத்துக் கொண்டிருக்க, சத்தமின்றி லைட்டை அணைத்துவிட்டு இருட்டுக்குள் டைப்படித்த கூத்துக்களும் அடக்கம் !  And உங்களின் பின்னூட்டங்களுக்கு இயன்றமட்டிலும் பதில் ; மீதமிருக்கும் நேரத்தில் எடிட்டிங் என இந்தக் கடைசி ஒரு வாரம் கரணங்களின் உச்சமென்பேன் ! And இதோ - இன்று மாலை டெக்சின் தீபாவளி மலர் + கலர் டெக்ஸ் + ஸ்பைடர் + காலவேட்டையர் என 4 புக்குகள் பைண்டிங்கிலிருந்து வந்திறங்கிய நொடியில் - கடந்த 3 வாரங்களது நோவுகள் எல்லாமே போனயிடம் தெரியவில்லை ! பாக்கியுள்ள அமாயா + 2021 கேட்லாக் இரண்டுமே திங்கள் காலை பைண்டாகி வந்து விடுமென்ற நம்பிக்கையில் திங்களன்று despatch செய்திட we are all set !! 

ஒரு ஓமக்குச்சி டீம் பாஹுபலி அவதாரமெடுத்திருக்கும் இந்த தீபாவளி வேளையினை சத்தியமாய் சீக்கிரத்துக்குள் மறக்க மாட்டேன் ! அடிக்கடி சொல்லியிருக்கிறேன் - எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி !! 938 !! இம்மாதத்து output !!! Phew !!! Absolutely remarkable my team !!


228 comments:

  1. Replies
    1. இதெல்லாம் போங்காட்டம் சார்....!!!

      Delete
    2. 😂😂😂😂

      எடி சார்..
      பதிவில் தான் நகைச் சுவை தெறிக்கிறதன்றால்...

      பின்னூட்டத்திலும் மீ போட்டு பின்றீங்களே..!

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. அம்மாடி!!! இவ்ளோ டென்ஷன் உடம்புக்கு ஆகாது சார்!!

    டெக்ஸ் + எடிட் பண்ணாத அமாயா மட்டும் போட்டிருந்தாலே எல்லாரும் கூலா இருந்திருப்பாங்க!! :-)

    ReplyDelete
    Replies
    1. அப்டியும் லைட்டா ஒரு சபலம் தலைதூக்குச்சு சார் ; but கூர்மண்டையர் இல்லாது களை கட்டாதென்று நினைத்தேன் !

      Delete
    2. என்னைப் பொறுத்த வரையில், நீநீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள ஸ்பைடர் நமக்கெல்லாம் கிடைத்துள்ள அற்புதமான தீபாவளி பரிசு என்பேன். ஆர்ச்சியின் பனி அசுரர்கள் படலம் போல, ஸ்பைடரும் கண்டிப்பாக சாதிப்பார் என்று நம்புகிறேன்.

      இறுதியாக களம் கண்டுள்ள அட்டைப்படைமும், வர்ணச் சேர்க்கையும் ஏ1 ரகம்.

      ஸ்பைடரை பரிகசிக்காமல், நமது பால்யத்தை ரசிக்கச் செய்தவனாக அனைவரும் எடுத்துக் கொண்டால் தீபாவளியின் மிகச்சிறந்த பரிசு ''சர்ப்பத்தின் சவால்'' தான்...

      Delete
  4. கால வேட்டையர் மறுபதிப்பா ? புது கதையான்னு தெரியல...

    ReplyDelete
    Replies
    1. Doc,
      ரொம்ப முன்னாடியே வெளியிட rights வாங்கப்பட்டு பலவித காரணங்களால் ஓரம் காட்டப்பட்டு ஜம்போ season 2 வில் சேர்க்கப்பட்டு அப்பாலிக்கா அங்கேயும் நீக்கப்பட்ட கதை. ஒரு பக்கம் படிச்ச ஒடனே சூப்பர் ஹிட்னு பட்சி சொல்லுது - பாப்போம் !

      Delete
    2. This book was supposed to be Muthu 300 issue .last minute tiger story replaced it

      Delete
  5. அமாயாவிற்கு ஓர் வஸ்திர யாகமே நடத்தி இருக்கிறார் எடி சார். நியாயமாக பார்த்தால் கோகிலாவிற்கு தலை திபாவளி சீர் செய்யதிருக்கலாம் 😁

    ReplyDelete
  6. Hearty thanks to Evangeline on behalf of readers for her tireless work!

    ReplyDelete
  7. Woooooowwww.... Wait is over... Happy to see, vera level Spider Cover... Amazing Sir.... Lovely... Beautiful.... Awesome.... Much more than expected..... Thank you so much.....Gudos to the Artist...

    ReplyDelete
  8. இந்த தீபாவளிப் புத்தகங்கள் என் கையில் கிட்டும் போது நீங்கள் பட்ட சிரமங்கள் தான் என் முன்னே தோன்றிக் கொண்டே இருக்கும்.உங்கள் சிரமங்கள் எங்கள் சந்தோஷங்கள் என்பதை நினைவில் என்றும் கொண்டிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. மனதில் இருந்து வந்த வார்த்தைகள் சார்.

      Delete
  9. எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி !! 938 !! இம்மாதத்து output !!! Phew !!! Absolutely remarkable my team !!



    அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்...

    ReplyDelete
    Replies
    1. எனது சார்பிலும் ஒரு சல்யூட் நமது டீம் மற்றும் ஒன் மேன் ஆர்மியான உங்களுக்கும்.

      Delete
  10. கால வேட்டையர் ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் விருந்துதான் சார்! பல வருடங்களாக (முத்து காமிக்ஸ் 300 வது இதழாக வரவேண்டியது) தண்ணி காட்டிய இதழை இப்போதாவது கண்ணில் காட்ட முடிவெடுத்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சார்! டெக்ஸ் + கால வேட்டையர் + அமாயா (பேரை மட்டும் கொஞ்சம் மாத்தியிருக்கலாம்) ஸ்பைடர்ருன்னு தீபாவளி களைகட்டப் போகுது! புதன் அல்லது வியாழன் அன்று புத்தகங்களை கைப்பற்றி விட்டால் பட்டாசுதான் 😍

    ReplyDelete
    Replies
    1. இந்த தீபாவளி உண்மையாகவே பட்டாசு தான்.

      Delete
  11. அனுபவமிக்க பழைய இளைய பணியாளர்கள் திருமணம் கருதி விலக நேர்கையில் அதே இடத்துக்கு வரும் இளைய புதிய பணியாளர்கள் பணியினை பெரும் சுமையாக கருதி விலகுவது கண்கூடாக காண நேருவதால் எடிட்டர் சாரின் கஷ்டம் புரிகிறது..

    நமக்கான தொழிலில் Skilled workers ஒரு

    Rare breed என்பது அவர்கள் போனபின்புதான் தெரிய வருகிறது..

    ReplyDelete
    Replies
    1. நமக்கான தொழிலில் Skilled workers ஒரு Rare breed என்பது அவர்கள் போனபின்புதான் தெரிய வருகிறது

      உண்மை டாக்டர் சார்.

      Delete
    2. 100% உண்மை செநா.அநா அவர்களே

      Delete
  12. கோட் நேம் மின்னல் தான் காலவேட்டையரா சார்?

    ReplyDelete
  13. தானைத் தலைவர் ஸ்பைடர் சும்மா தகதகனு ஜொலிக்கின்றார் தங்கமாய்.இன்னும் இரண்டு நாட்களில் மின்னப் போகின்றார் எங்கள் கரங்களில்.

    ReplyDelete
  14. எங்கள் தல மஞ்சள் சட்டை மாவீரரின் இரண்டு கதைகளும் செம ஹிட்டடிக்கப் போகின்றன என்பதை தங்கள் முன்னோட்டம் மூலம் அறிய முடிகிறது ஆசானே.

    ReplyDelete
  15. ///
    “யுத்த பூமியில் டெக்ஸ்” – அமெரிக்க உள்நாட்டு யுத்தம் சார்ந்த கதையாக இருக்குமென்பதை யூகித்திருந்தேன் தான் ! இரண்டு பிடிவாதக்கார மீசைமாமா கர்னல்களைச் சாத்துவார் ‘தல‘ ; நாலு எதிரி முகாமில் குண்டு வைத்துத் தெறிக்க விடுவார் என்ற ரீதியில் கதையிருக்குமென்றும் யூகித்திருந்தேன் ! ஆனால்... ஆனால்... அங்கு தான் டெக்ஸின் பிதாமகர் G.L. போனெலியின் கதை சொல்லும் ஆற்றல் விஸ்வரூபமெடுப்பதை உணர முடிந்தது ! நடந்த யுத்தத்தின் வரலாற்றுத் தகவல்களை ; பின்னணிகளைப் பிசகின்றித் தக்க வைத்துக் கொண்டு – நிஜத்தையே பின்புலமாக்கி ; நிஜ மனிதர்களையும் கதைக்குள் பிசிறின்றிப் புகுத்தி ; அவர்களோடு அற்புதமாய் டெக்ஸை sync ஆகச் செய்து களமாடச் செய்துள்ளார் எனும் போது, “ஐயா... தெய்வமே... கூகுள் ஆண்டவா!” என்றபடிக்கே இம்மாதமும் இன்டர்நெட் தேடலுக்குள் ஐக்கியமானேன் - 2 பதிவுகளுக்கு முன்னமே விவரித்திருந்தபடி ! அமெரிக்க யுத்த வரலாறு ; வடக்கு vs. தெற்கு மோதலின் பின்னனி ; யுத்தத்தின் உச்சம் என்று வரிசையாகத் தோண்டித் துருவ வேண்டிப் போனது ! நான் பாட்டுக்கு எதையேனும் புரிதலின்றி எழுதி வைத்துத் தாண்டி விட்டால், அவை factual errors ஆகிடுமென்ற பயம் ! So மின்சார வேகத்தில் பாய்ந்தோடும் கதையோடு ஈடு கொடுத்த படிக்கே ; சைடில் கூகுளின் துணையோடே இந்த 320 பக்க சாகஸத்தோடு நான் உருண்ட உருளை ‘முதல்வன்‘ படத்து சேற்றுக்குள் சண்டை sequence–ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட உருண்டிருக்க மாட்டார் ! புரட்டப் புரட்டப் பக்கங்கள்... பார்க்கப் பார்க்க எழுத்துப் பிழைகள் ; தோண்டத் தோண்ட நிஜம் சார்ந்த தரவுகள் என்று நாட்களை சகட்டுமேனிக்கு விழுங்கிய “யுத்த பூமியில் டெக்ஸ்” சாமான்யத்துக்கு எனக்கு மறவாது !
    ////

    என்னாலும் என்றும் மறக்க இயலாதுங்க எடி .. கூகுள் ட்ரான்ஸ்லேட் சகிதமாய் கிட்டத்தட்ட ஒன்னரை மாதங்களாய் இதனோட முழுக்கதையும் க/வெ படித்தபோதே புரிந்து போயிற்று

    போன பதிவிற்க்கு முந்தின பதிவில் நீங்க வெகுசாதாரணமாக இக்கதையை பற்றி சொல்லும்போதே புரிந்து கொண்டேன் இனிதான் உங்களுக்கு விசயமே இருக்கிறதென்று ...

    நல்லவிதமாய் இக்கதையை நம் வாசகர்களுக்கு ககொண்டு போய் சேர்க்க நினைக்கும் உங்க எண்ணம் ரொம்ப மகத்தானதுங்க சார் ..

    வாழ்த்துக்கள் & ஹேட்ஸப் 10000 🙌🙌🙌🙌

    ReplyDelete
    Replies
    1. // நல்லவிதமாய் இக்கதையை நம் வாசகர்களுக்கு ககொண்டு போய் சேர்க்க நினைக்கும் உங்க எண்ணம் ரொம்ப மகத்தானதுங்க சார் //

      +1

      Delete
  16. ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் இந்த மாத வெளியீடுகளுக்கு Sir,

    ReplyDelete
  17. சூப்பர் புத்தகங்கள் சார்!

    ReplyDelete
  18. அட்டைப படங்கள் ஒன்னொன்னும் ச்ச்சும்ம்மா அள்ளு வுடுது..

    ReplyDelete
  19. எல்லாமே நல்லாருக்கு

    ReplyDelete
  20. சார், ஸ்பைடர் முதல் அட்டைப்படம் அவர்கள் சொல்வது போல் பங்கரா டான்ஸ் ஆடுவது போல் தான் உள்ளது.

    சர்ப்பத்தோடு உள்ள அட்டைப்படம் செம மாஸ்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ இரண்டுமே சிரிப்பு மூட்டுது!! :-)

      Delete
    2. 'அதான் கெக்கபிக்கேன்னு சிரிச்சுக் கெடக்க ஸ்பைடர் இருக்கே.. அப்புறம் எதுக்கு இன்னொன்னு'னு நினைச்சுத்தான் இந்த மாசம் கார்ட்டூனை கட் பண்ணியிருக்கார் நம்ப எடிட்டர்!

      வெவரமான எடிட்டரல்லோ?!!

      Delete
    3. இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது...

      அந்த பாட்டு தான் நினைவு வருது சகோ...

      என்னதான் இருந்தாலும், இறுதியாக வெளியிட்ட அட்டைப்படம் சூப்பர் என்பதை மறுக்க முடியாது...

      Delete
    4. ஆர்ச்சி பலர் மனத்தை வென்றது போல் ஸ்பைடரும் வெல்வார். விற்பனையில் சாதிப்பார். ஜெய் ஸ்பைடர்.

      Delete
  21. மிக நீளமான பதிவு. உங்களின் பல பணிகளுக்கு இடையே இந்த நீளமான பதிவை எங்களுக்காக கொடுத்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  22. 🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.. உங்களுக்கும், உங்கள் டீமின் அயராத உழைப்பிற்கும்!!

    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. அது காலிபிளவர் கொத்தா இருந்தாலாச்சும் மதியம் ரோஸ்டுக்கு ஆகியிருக்குமோ ?

      Delete
  23. சாமீ.. கடவுளே.. கோகிலா செஞ்ச வேலையில் இந்தத் தடவை நிறைய கவனக் குறைவுகள் இருக்கணும் சாமீ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மேக்ஸிமம் எல்லாம் லாங் ஷாட்டாயிருக்கும்.இல்லைனா க்ளோஷ் அப் ஆ இருக்கும்.அதனால கவனக்குறைவினால பயனிருக்காது சார்.

      Delete
    3. அப்டி சொல்லிப் புரிய வையுங்க GP சார் !

      Delete
  24. இந்தப் பதிவைப் படிக்கும்போது உங்களுடைய சிரமங்கள் அப்பட்டமாத் தெரிகிறது.ஆனால் அது அப்படித் தெரிய விடாமல், மேலாக நகைச்சுவை பாணியைத் தெளித்திருப்பது உங்கள் ட்ரேட் மார்க்.அதையும் மீறி ஒரு அவல நகைச்சுவை தென்படுவதை தவிர்க்க முடியவில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீங்க GP

      Delete
    2. எந்தப் பணி தான் இன்றைக்குச் சிரமமின்றியுள்ளது சார் ? எனக்காச்சும் உரக்கப் புலம்பிட ஒரு மேடை உள்ளது ; அப்படி எதுவுமின்றி ஓசையின்றிப் புழுங்கிடும் நண்பர்கள் ஒன்றா ? இரண்டா ? எல்லாம் கடந்து போகும் சார் !

      And இதோ - நேற்று ராவுக்குப் புலம்பி முடித்த கையோடு ஜனவரியின் LIC கட்டிடமான தோர்களுக்குள் புகுந்திடத் தயாராகியாச்சே !!

      Delete
  25. சபையோருக்கு ஙணக்கம் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இதில் இல்லை)

    ReplyDelete
  26. ஹே...

    ஒருவழியா காலவேட்டை வந்தே விட்டது.!
    டைம் ட்ராவல் கதைகளில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் சார்.ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகும் போது கொஞ்சம் ஏமாற்றமா இருக்கும்.ஆனாலும் தீபாவளிக்கு சர்ப்ரைஸா வரும்னு சத்தியமா எதிர்பார்க்கலை சார்.



    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நான் விக்ரமாதித்தன் போல திரும்ப திரும்ப கேட்டுகொண்டே இருந்த கதை இது. எப்படித்தான் இருக்கும் என்று பார்த்து விடுவோமே. ஒரு வழியாக ஜம்போ இதழ் 7 வந்தே விட்டது.

      Delete
    2. நானே எதிர்பார்க்கலைங்கிறது தானே சார் நிஜம் ?

      Delete
  27. முத்து காமிக்ஸின் 300வது இதழாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட கதையா சார் காலவேட்டையர்..?

    ReplyDelete
  28. Thanks for the post inspite of your busy "November"schedule. Hats off to your team as well.

    "டெக்ஸ் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இருக்கும் ! அவரது க்ளாஸிக் எழுத்துக்கள் டெக்ஸின் ஜனரஞ்சக / கமர்ஷியல் பாணிக்கு சற்றே அந்நியமாய்ப்படுவதாகத் தோன்றியதால்" I miss that old style of writing without punch dialogues ��

    ReplyDelete
    Replies
    1. பத்தியங்களும் ரசிக்கவே செய்யும் சார் ; ஆனால் வெகுஜன தடத்துக்கு கொஞ்சம் காரம் தூக்கலாய் இருப்பது தேவலாம் தானே !

      Delete
  29. டியர் எடி,

    இரு கிளாசிக் கதைக்கான அட்டைகள் அலாதி அழகு... அதிலும் ஆக்‌ஷா அட்டை ஏ1 ரகம்... இனி அமெரிக்க ஓவியை ஏறகட்டி, சென்னை ஓவியருக்கே பாத்தியம் செய்துவிடலாம்.

    ஸ்பைடர் அட்டையில் சிரித்துகொண்டே நம்மை பார்க்கும் அந்த போஸிலேயே சர்ப்பங்களுடன் விளையாட வைத்திருக்கலாம்... சைட் போஸில் ஓவராக வர்ணம் பூசிட்டார் ஓவியர்...ஏதோ 80 வயது கிழத்திற்கான ஒப்பனை போல தெரிகிறது.

    ஆனாலும், AXA விற்கு நீங்க செய்த துகில்சேர்பிற்கு, 90ஸ் கிட் கோபம் உங்களை சும்மா விடாது ;)

    ReplyDelete
    Replies
    1. //ஸ்பைடர் அட்டையில் சிரித்துகொண்டே நம்மை பார்க்கும் அந்த போஸிலேயே சர்ப்பங்களுடன் விளையாட வைத்திருக்கலாம்...//

      எனது தேர்வுமே அதுவாகத் தானிருந்தது சார் ; ஆனால் படைப்பாளிகள் அது விளையாட்டுத்தனமாய் இருப்பதாய் நிராகரித்துவிட்டனர் !

      Delete
  30. ராணி காமிக்ஸில் 34 ஆண்டுகளுக்கு முன்னர் (1986 ஆகஸ்ட்) வெளிவந்த புரட்சிப் பெண் ஷீலா (இங்கு அமாயா) கதையை இவ்வளவு காலம் கழித்து வெளியிட முன்வந்த காரணம் சுத்தமாக புரியவில்லை சார். 🙄🙄🙄. எவ்வளவு மெனக்கெடல்கள்???
    அதே ராணி காமிக்ஸில் குள்ள நரியில் ஒரு கள்ள நரி (நமது விங் கமாண்டர் ஜார்ஜ்) கதை 1989ல் வெளியிட்டது தெரிந்து அந்த கதை வராது என்று நீங்கள் பின்னர் அறிவித்தது மனதில் தற்போது நிழலாடுகிறது சார். 😫😫😫
    எனது பார்வையில் ஒரு மைல்கல் இதழ் (ஸ்பைடர்) அச்சுப் பிழைகளுடன் அவசர கதியில் வருவதை காட்டிலும் சிறிது காலம் கழித்தே பிழைகள் இன்றி வந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது சார். இன்றைய கடினமான பணி சூழலை இங்கு இருப்போர் புரிந்து கொள்வார்கள் தானே சார்???

    ReplyDelete
    Replies
    1. ராணி காமிக்ஸ் live ஆக இருந்த தருணத்தில் ஒரே கதையை வெகு short notice -ல் திரும்பவும் வெளியிட வேண்டாமே ! என்று அன்றைக்குத் தோன்றியது சார் ! இப்போதோ க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் சகலமும் ஏற்கனவே ராணியில் வெளியானவையே என்பது தெரிந்தே தானே வெளியிடுகிறோம் - நண்பர்களின் வரவேற்பின் காரணமாய் ? அமாயாவும் அதே லாஜிக்கில் தான் சார் ; ஆனால் ஒட்டுமொத்தமாய் வேறொரு விதத்தினில் நமது கையாளல் இருந்திடும் பாருங்களேன் !

      Delete
  31. ஆசிரியரே ரூ.90/- அனுப்பினால் சந்தா பார்சலில் சர்பத்தின் சவால் சேர்த்து வருமா.

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; இனி அதற்கு நேரமில்லை ! எல்லா டப்பிகளும் அட்ரஸ் ஒட்டப்பட்டு, சந்தா ரகங்கள் பிரித்து தயாராக உள்ளன ; நாளை பகலில் அவற்றினுள் புக்ஸ் நுழைத்து அனுப்பவே நேரம் போதாது ! So ஸ்பைடரை தனியாக வாங்கிடத்தான் வேண்டி வரும் ! Sorry !

      Delete
    2. ஆஹா...நல்ல வேளை திரு ரவி அறிவரசு அவர்கள் மூலம் முன்னரே பதிவு செய்து கொண்டது நல்லதாக போயிற்று...:-)

      Delete
  32. ஆக மொத்தம் இந்த தீபாவளி உங்களால்தான் களை கட்டுகிறது ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. உண்மையோ உண்மை

      Delete
    2. நம்ம குட்டி வட்டத்துக்கு ஒரு குட்டி சீரியல் செட் போட்டு அழகு பார்த்துக் கொள்வோம் சத்யா !

      Delete
  33. இந்த வருட covid 19 தீபாவளி சிறப்பான தீபாவளியாக அமைய நம் team Hard work தான் காரணம். நண்றிகள் பல சார்!

    ReplyDelete
    Replies
    1. நம் சிறுவட்டத்துக்காவது இந்த தீபாவளியினை சற்றே வெளிச்சமானதாக்கிட கொஞ்சம் மெனெக்கெட்டதில் தப்பில்லை தானே சார் !

      Delete
  34. Oh I had been thinking of bluish background on spider book's cover sir. Cover picture is very nice. Lion comics logo.....But what to do? ...Lion comics logo really adds something to the cover sir...I thought the same for Archie book too. OK...our comics is a part of Diwali celebration. No doubt.

    ReplyDelete
    Replies
    1. குறுக்காலே நுழைத்த இதழாச்சே சார் ; லயன் வரிசையினில் இணைக்க வழியில்லாது போய் விட்டது !

      Delete
  35. அனைத்து அட்டைப்படங்களும் அருமை .அசத்துகிறது.இந்த தீபாவளி திருநாள் உங்கள் குழுவின் கடினமால் தான் எங்கள் தீபாவளி இனிக்க போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை சார்...


    லயன் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. தீவாளிக்காச்சும் பதுங்கு குழிக்கு வெளியே வந்துப்புடுவீங்களா தலீவரே ?

      Delete
    2. விதி விளையாடுகிறது சார்..

      கேம் விரைவில் ஓவர் ஆகிவிடும் என்ற நம்பிக்கை பலமாகவே உண்டு...அதன் பின் பதுங்கு குழியே அழைத்தாளும் நோ பதுங்கிங்...:-)

      Delete
  36. ஸ்பைடர் மேனியா 2.0 துவக்கம் என்றே தோன்றுகிறது அட்டை மற்றும் முன்னோட்டத்தைப்பார்த்தால். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  37. பெரிய குண்டு புக், இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். தீபாவளின்னாலே நமக்கு டெக்ஸ் தான்.ஹை ஜாலி

    ReplyDelete
  38. அமாயா மாடஸ்டி மாதிரியே தோன்றுவது எனக்கு மட்டும் தானா. கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
    Replies
    1. மாடஸ் டி ஒவியரே தான் அமாயா வின் ஓவியரும் சார். அதனால் தான்

      Delete
  39. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  40. Thanks for mind blowing hard work you and your team are doing sir.

    இந்தியாவிலேயே தாய்மொழியில் உலக காமிக்ஸ் பதிப்பவர் கடந்த நாற்பது வருடங்களாக தாங்கள் மட்டுமே. உங்கள் imagination, தைரியம், எந்த எல்லைக்கும் போய் காரியத்தை சாதிப்பது, விடாமுயற்சி, உடல் நோக உழைத்தல்-இவையெல்லாம் தான் எங்களுக்கு மாதாமாதம் நாங்கள் அறியா ஒரு உலகில் நாங்கள் ஹீரோவாக சாகசம் செய்யக் காரணம். காமிக்ஸ்க்கு செலவழித்த நேரத்தை வேறு எதற்காவது பயன் படுத்தியிருந்தால், உங்கள் dedicationக்கு ஒரு engineering காலேஜ் ஓனராவது ஆகியிருக்கலாம். காமிக்ஸ் மேல் உள்ள Passion மட்டுமே உங்களது உந்து சக்தி என்பது நாங்களெல்லாம் அறிந்ததே. ஆனால் 40 வருடமாக அதைத் தக்க வைப்பது எப்படி என ஆச்சரியமாக உள்ளது.

    தமிழ் காமிக்ஸ் ஆர்வலர் எனும் சமூகம் உயிர்ப்போடு இருப்பதற்கு தற்போது நீங்கள் மட்டுமே காரணம்

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் சார் இதைவிட சிறப்பான பாராட்டு யாராலும் நமது எடிட்டர் சாருக்கு தந்து விட முடியாது. நீங்கள் சொல்லிய அனைத்து வார்த்தைகளும் நூற்றுக்கு நூறு உண்மை.

      Delete
    2. @ AKK

      அடிமனதின் ஆழத்திலிருந்து வந்திருக்கும் அற்புதமான வார்த்தைகள் டாக்டர் சார்!

      உங்களுடைய இந்தப் புகழ் மாலையையே நம் மதிப்பிற்குரிய எடிட்டருக்கு ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்களும் ஒன்றுசேர்ந்து அணிவிக்கும் மலர் மாலையாகப் பிரகடனம் செய்கிறேன்!!🙏🙏🙏
      💐💐💐💐💐

      Delete
    3. ரொம்பவே பெரிய வார்த்தைகள் டாக்டர் சார்..நன்றிகள் அவற்றிற்கு !

      ஆனால் ஒரு கை ஓசை உருவாக்கியதாய் சரித்திரமேது சார் ? உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புமில்லாது போயின் - நானாய் காற்றில் தானே கத்தி சுழற்றிக் கொண்டிருந்திருக்க முடியும் ?! As always - Teamwork !!

      Delete
    4. அப்புறம் எஞ்சினியரிங் காலேஜ் ஓனராகிடுவதெனில் 'கல்வித்தந்தை' அவதார் அவசியப்பட்டிருக்கும் ; அந்த அவதாருக்குக் கரைவேட்டியும் அவசியப்பட்டிருக்கும் ! இடுப்பில் நிக்காத அந்தச் சமாச்சாரங்களெல்லாம் நமக்கெதுக்கு சார் ?

      Delete
    5. Dr.Hariharanஐ கவனக்குறைவாக AKK என்று குறிப்பிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும்!

      Delete
    6. அருமை சார்...

      உண்மையான வரிகள்...


      அப்படியே வழிமொழிகிறேன்...

      Delete
  41. தீபாவளி!
    உண்மையில் தீபாவளிதான்!!!

    இந்த மாதம் மொக்கையில்லாத மாதமாக இருக்கும் (👌)

    ReplyDelete
  42. அட்டகாசமான பதிவு சார். உங்கள் சங்கடங்களை நகைச்சுவையுடன் சொல்வதில் உங்களை மிஞ்ச முடியாது. ஆனாலும் நீங்கள் பட்டபாடு இந்த முறை கொஞ்சம் அதிகம் தான். இதை படிக்கும் போது எனக்கு முதுகு வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு சிறிய டீமை வைத்து கொண்டு எங்களுக்காக நீங்கள் செய்யும் விசயங்கள் உங்களால் மட்டுமே முடியும்.

    பல வருடங்களாக நான் கேட்டு கொண்டு இருந்த கால வேட்டையர் வருவது மிகவும் மகிழ்ச்சி. இது உண்மையாகவே அருமையான தீபாவளி தான்.

    தானை தலைவன் ஸ்பைடர், புரட்சி பெண் அமாயா இருவரையும் காண வெயிட்டிங்.

    இந்த தீபாவளி அதிர் வேட்டு தான். இன்னும் ஒரு ஹிட் மாதம் உங்கள் மைல் கல்லில்.

    ReplyDelete
    Replies
    1. ////ஆனாலும் நீங்கள் பட்டபாடு இந்த முறை கொஞ்சம் அதிகம் தான். இதை படிக்கும் போது எனக்கு முதுகு வலிக்க ஆரம்பித்து விட்டது. ////

      உண்ம!

      Delete
    2. இதில் கொடுமை என்ன தெரியுமா சார் ? நேற்றிரவு இந்தப் பதிவையும் போட்டு முடிச்ச பிற்பாடு பார்த்தாக்கா கையில் வேறு வேலைகளே சுத்தமா இல்லை !! காலங்கார்த்தாலே ஆபீஸைத் திறந்து தோர்கல் பக்கங்களை எடுத்து வரச் சொன்னேன் ! உருளு உருளென்று உருண்டுவிட்டு, இப்போ சும்மா இருப்பது என்னவோ போலுள்ளது !

      Delete
    3. // ! உருளு உருளென்று உருண்டுவிட்டு, இப்போ சும்மா இருப்பது என்னவோ போலுள்ளது ! //

      உங்களிடம் மிகவும் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. வேலை பார்த்துக் கொண்டே இருப்பது.

      Delete
    4. / ! உருளு உருளென்று உருண்டுவிட்டு, இப்போ சும்மா இருப்பது என்னவோ போலுள்ளது ! //

      :-)))))

      Delete
  43. // பாக்கியுள்ள அமாயா + 2021 கேட்லாக் இரண்டுமே திங்கள் காலை பைண்டாகி வந்து விடுமென்ற நம்பிக்கையில் திங்களன்று despatch செய்திட we are all set !! //
    அடடே,அடடே கேட்கவே சந்தோஷமா இருக்கே.....
    எப்படியோ கனவு கெலிக்கப் போகுது...

    ReplyDelete
  44. இதழ்கள் தயாரான கையோடு ஆன்லைன் லிஸ்டிங்க்கும் போட்டு விட்டுடுங்க சார்.. நாங்களுமே தீபாவளிக்கு முன்னதாய் இதழ்களை பெற்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறோம்.. 💜💜❤️❤️

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போமே பிரஷாந்த் !

      Delete
  45. இதுக்குத் தான் சார் எதைப் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்... செமையா உழைச்சிருக்கீங்க.

    எனக்கென்னமோ ஸ்பைடர் பாங்கரா டான்ஸ் ஆடுற மாதிரி தெரியலை. பக்கத்துல ரெண்டு பாம்பு படம் போட்டிருந்தாலே சூப்பரா இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ///இதுக்குத் தான் சார் எதைப் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்...///

      😂😂😂😂

      Delete
    2. பக்கத்திலே சும்மா போட்டு வைத்தால் பாம்புகள் set property மாதிரித் தெரிஞ்சிருக்கும் சார் ! படைப்பாளிகள் எதிர்பார்த்தது அட்டையில் ஒரு ஆக்ஷன் வேகத்தினை !

      Delete
    3. ஸ்பைடர் முகத்தை இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக வரைந்து இருந்தால் இன்னும் டாப்பாக இருந்து இருக்கும்.

      Delete
  46. // And இதோ - இன்று மாலை டெக்சின் தீபாவளி மலர் + கலர் டெக்ஸ் + ஸ்பைடர் + காலவேட்டையர் என 4 புக்குகள் பைண்டிங்கிலிருந்து வந்திறங்கிய நொடியில் - கடந்த 3 வாரங்களது நோவுகள் எல்லாமே போனயிடம் தெரியவில்லை ! //
    நிறைய குட்டிக் கரணங்கள் அடித்துள்ளீர்கள் போல சார்,இந்த தீபாவளி எங்களுக்கும் சரி,உங்களுக்கும் சரி மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும் போல....
    தங்களது சிறப்பான உழைப்பிற்கு சிறப்பான விமர்சனங்கள் பாராட்டாய் அமையும் சார்...

    ReplyDelete
  47. // இதோ உள்ளது - முதலில் போட்ட பாங்க்ரா டான்ஸ் போஸ் & the others !! //
    பார்த்தால் கொஞ்சம் காமெடியாதான் சார் இருக்கு....
    அது மட்டுமா நம்ம ஸ்பைடரைப் பார்த்து யாரோ Hands Up னு சொல்ற மாதிரி இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. ஆராச்சும் நம்மாள்கிட்டே ஹாண்ட்ஸ் அப் சொல்லிப்புட்டு முழுசாய் போய்ட முடியுமா சார் ?

      Delete
  48. // அந்த அறுபது ரூபாய் புக்கின் இடத்தினில் ரூ.120 விலையிலான "கால வேட்டையர்" புக்கை வழங்கிடும் பட்சத்தில் - உங்களுக்கு அந்தக்கதை ரசிக்காமலே போய் விட்டாலும் no big deal என்று தோன்றியது ! //
    இருக்கும் பிரச்சனையில் இந்த நஷ்டம் உங்களுக்கு தேவையா என்று தோன்றுகிறது சார்,கால வேட்டையரை ஜம்போ சீஸன் -4 ற்கு கூட மாற்றி இருக்கலாமே சார் ?!
    எது எப்படியோ காலவேட்டையர் வருவது மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. ///இருக்கும் பிரச்சனையில் இந்த நஷ்டம் உங்களுக்கு தேவையா என்று தோன்றுகிறது சார்///

      உண்மை உண்மை!

      Delete
    2. நானிருந்த நெருக்கடியில் நம்பர்களோடு மல்யுத்தம் செய்திட எங்கே சார் நேரமிருந்தது ? தவிர, ஐந்தாயிரம், பத்தாயிரம் ; அறுபதாயிரம், ஒரு லட்சம் என நண்பர்களின் தயாளங்கள் கரைபுரண்டோடுவதைப் பார்த்த பின்னேயும் இந்த அறுபது ரூபாய்க்கு கணக்குப் பார்க்க மனசு வருமா சார் ?

      இங்கே நாம் விதைப்பது என்றைக்குமே நஷ்டங்களாகிடாது !!

      Delete
    3. அள்ளி கொடுத்த வாசகர்கள்;

      அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் புத்தகங்களை வழங்கும் ஆசிரியர்!

      காணக்கண்கோடி வேண்டும்!

      Delete
    4. // இங்கே நாம் விதைப்பது என்றைக்குமே நஷ்டங்களாகிடாது !! //
      உண்மைதான் சார்....

      Delete

    5. இங்கே நாம் விதைப்பது என்றைக்குமே நஷ்டங்களாகிடாது

      #######

      அழகான வரிகள்...ஆழமான வரிகள்...


      உண்மை...

      Delete
  49. Hatsoff to all your team members for this remarkable achievement

    ReplyDelete
  50. 938 - simply awesome. அயராத, கடின உழைப்பைக் கோரும் பணி.. மிக்க நன்றி எடிட்டர் சார்!!
    இன்னும் 62 பக்கங்கள் சேர்ந்து வந்தருந்தால் 1000 வாலா சரத்துடன் அபார தீபாவளியாக பட்டையை கிளப்பியிருக்குமே!! கட்டைவிரல் வாய் காம்போ ஆசிரியருக்கு புதிதா என்ன?? :-))

    எடி மைண்ட் வாய்ஸ்: அடேய்களா!! அடங்க மாட்டீங்களா??
    மீ : என்னா பண்றது சார்!! பொம்மை புத்தக பேராசையை விட முடியவில்லையே!!

    ReplyDelete
    Replies
    1. இந்த 938 -ஐப் படிக்க ஆளாளுக்கு முதலில் நேரத்தைத் தேடித் பிடியுங்க சார் !! புக் வரும் முன்பாய் விடும் உதார்களெல்லாம் - புக்கைத் தடவிப் பார்த்து ரசிப்பதோடே இப்போதெல்லாம் அடங்கிடுகிறதே !! அதுவும் இது பண்டிகைப் பொழுது ; அடுப்பங்கரையில் ஆளுக்கு ஆள் ஒருவண்டி ஜோலிகள் இருக்கும் தான் !

      But still - அடுத்த ஞாயிறுக்கு உங்களின் அலசல்கள் இந்தப் பக்கத்தைப் பிசியாக்கினால் மகிழ்ச்சி !

      Delete
    2. ஒரு புத்தகத்தைக்கூட இதுவரை வாங்காமலும் படிக்காமலும் விட்டதில்லை சார்.படித்த பிறகு விமர்சனமோ, கருத்தோ (குணா கமல் சொல்வது போல) எழுதத்தான் வர மாட்டேன் என்கிறது!!
      தற்போது அக்டோபர் இதழ்களை முடித்துவிட்டு இரத்தப்படலம் ரிவிஷனில் உள்ளேன் ஐயா!!

      Delete
    3. என்ன செய்ய எடி சார், சில சமயங்களில் வேலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முட்டி மோதி deadlock ஆகி நிற்கிறது. நான் இப்போது வரை கால்வின் வாக்ஸ் பக்கம் போகலை. ஆங்கிலத்தில் படித்ததோடு சரி. நல்ல மழையில் மடிசார் நனையாமல் காப்பாற்றி, சராத்த பவனம் சென்று, 45 வது நாள் காரியம் முடிப்பதற்குள் இந்தியாவிற்கு டஜன் தடவை சுதந்திரம் வாங்கிடலாம். ஆனால் உங்கள் டீமின் உத்வேகம், உழைப்பு யாருக்கும் வராது. மாக்ஸி சைசில் ஆர்ச்சியை கையில் எடுத்த போது அடைந்த சந்தோஷம் இருக்கே, வார்த்தைகளில் சொல்லி மாளாது. கண்டிப்பாக தளத்தில் விமர்சனம் வரும்.Assured.

      Delete
    4. அட..சும்மா ஜாலியாகச் சொன்னேன் சார் ! படிக்கும் வரையிலும், ரசிக்கும் வரையிலும் all is well !!

      இங்கு அலசல்கள் இத்யாதியெல்லாமே ஜாலியான முயற்சிகள் தானே ; no அடிபிடிக் கட்டாயம்ஸ் !

      Delete
  51. // ஓமக்குச்சி டீம் பாஹுபலி அவதாரமெடுத்திருக்கும் இந்த தீபாவளி வேளையினை சத்தியமாய் சீக்கிரத்துக்குள் மறக்க மாட்டேன் ! அடிக்கடி சொல்லியிருக்கிறேன் - எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி //


    உண்மை சார். பாராட்டுக்கள். சிரம் தாழ்ந்த நன்றிகள் அவர்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. சின்னதொரு போனசாய் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிய தொகையை நாளை ஒப்படைத்து விடுவேன் சார் ! அவர்கள் சார்பில் நன்றிகள் !!

      Delete
    2. சூப்பர் சார். அருமை பரணி அருமை

      Delete
    3. அருமையான பணி நண்பரே பரணி!

      உங்கள் நல்ல மனம் வாழ்க!

      Delete
    4. நமது குட்டி பாகுபலி அணிக்கு நிறைய செய்ய ஆசை சார்.எங்கள் முகத்தில் மாதம் மாதம் சிரிப்பைக்காண உங்களுடன் உறுதுணையாக இருக்கும் அவர்களுக்கு கடந்த வருடமே ஏதாவது அவர்களுக்கு செய்ய நினைத்தேன் ஆனால் சூழ்நிலை சரியில்லை.

      என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி சார். நன்றி.

      பங்குனிப் பொங்கல் வரும் போது நிலைமை இன்னும் கொஞ்சம் சரியாகி விடும் என நம்புகிறேன்..

      Delete
    5. // சின்னதொரு போனசாய் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிய தொகையை நாளை ஒப்படைத்து விடுவேன் சார் ! அவர்கள் சார்பில் நன்றிகள் !! //
      அடடே,இது வேறயா...
      PFB உண்மையில் வேற லெவல் நீங்க,அசத்தறிங்க நண்பரே...
      உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்வது அவர்களுக்கு என்ன மாதிரியான மனமகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை அனுபவத்தின் வாயிலாக அறிந்துள்ளேன்...
      கலக்கறிங்க நண்பரே...

      Delete
    6. @ PfB

      தொடர்ந்து நண்பர்களுக்கு நீங்கள் செய்துவரும் உதவிகள் பாராட்டுக்குரியது! வாழ்க உங்கள் ஈகை குணம்! வாழ்க உங்கள் மனிதநேயம்!!

      🙏💐💐

      Delete
    7. நன்றி நண்பர்களே 🙏

      Delete
    8. அருமை நண்பரே PfB! வாழ்த்துகள்!

      Delete
    9. வாவ்....சூப்பர் பரணி சார்...அருமை....

      மனமார்ந்த பாராட்டுகள்...

      Delete
  52. கதையும் உங்களின் முன்னோட்டமும் போட்டி போட்டு கொண்டு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பெயரறிய இங்கே ஆர்வம் மேலோங்குது சார் !

      Delete
  53. Dear Editor
    Kudos to completing super heavy job in time!
    I love spider.He was my favorite hero during childhood.Eagerly waiting for him ahead of Tex!
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. Half the reason why I didn't opt to postpone Spider sir...!!

      Delete
  54. 🎆🎆🎆🎆🎆🎆🎇🎇🎇

    டெக்ஸ் தீபாவளிமலர்

    இலவச கலர் டெக்ஸ்

    சந்தா அட்டவணை

    அமாயா

    ஸ்பைடர்

    காலவேட்டையர்கள்

    ---அடேங்கப்பா அரை டஜன் புத்தகங்கள்!!!!😍😍😍😍😍😍


    நிசமான தீபாவளி நமக்குத்தான் போல


    சத்தமில்லாமல் சாதனை படைத்த எடிட்டர் சார்+ பாகுபலி அணிக்கு,

    வாழ்த்துகள்💐💐💐💐💐
    பாராட்டுகள்🌹🌹🌹🌹🌹
    நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  55. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.GPAY பயன்படுத்தி பணம் அனுப்பிய பிறகு நாம்தான் பணம் அனுப்பினோம் என்று நமது லயன் அலுவலகத்திற்க்கு தெரிய வைப்பது எப்படி?.வாட்ஸ் அப் எண்ணுக்கு ரெசிப்ட்டின் ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் போதுமா? மெயில் செய்ய வேண்டுமா ?
    விரிவாக விளக்க முடியுமா? What's up எண் என்ன? என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. 98423 19755 என்ற நம்பருக்கு முதல்வாட்டி மட்டும் வாட்சப் அனுப்பினால் போதும் சார் ; அதன் பின்பாய் நீங்கள் அனுப்பிடும் எல்லா payments-ம் உங்களின் பெயருக்கு கீழேயே சேமிப்பாகிடும் !

      Delete
    2. விவரம் அளித்ததற்க்கு நன்றி சார்

      Delete
  56. Dear Editor
    With regard to your feeling that some people have no time to read 4 books per month.
    In my case i read very fast and thus accumulate 8 to 10books so that i feelenough content is there.
    Dreaming for a time when 8 to 10 books per month become norm .Just to tell that a smallminoritylike me do exist.
    Regards
    Arvind

    ReplyDelete
  57. பல வருடங்களுக்கு பின்... ஒரு அருமையான தீபாவளிப் பரிசை தந்ததிற்கு மிக்க நன்றி... அன்பு விஜயன் சார்..

    என்னதான்.. இளவரசியும்... தங்கத் தலைவனும் என் உள்ளத்தில் நிறைந்திருந்தாலும்... என் காமிகஸ் பயணத்தை தொடங்கிவைத்த தானைத் தலைவனுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடுவதில் மிக்க உவகை அடைகிறேன்..

    ஏனோ எனக்கு என்றுமே spider கதைகள் காலம் கடந்துவிட்டவை போன்று தோன்றுவதில்லை... Grendellஐ படிக்கும் போது அவ்வப்பொழுது ஏற்படும் அயற்ச்சி... Spider கதைகளில் ஏற்படுவதில்லை...

    Spider கதைகளை அவ்வப்பொழுது நீங்கள் தலைக்காட்டினால்... அதை விட மகிழ்ச்சி வேரொன்றுமில்லை...

    நண்பர் சரவணக்குமார் மிகிழ்வுறும் வகையில் அற்புதமாக அட்டைபடம் அமைந்துள்ளது... அவருக்கு இந்தப் புத்தகத்தை விட அற்புதமாக காமிக்ஸ்ஞ்சலி செலுத்த வழியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை...

    மீண்டும் என் நன்றிகள் சார்...

    ReplyDelete
  58. சார் இதுவரை வந்த அட்டைகள்ளயே பெஸ்ட் இந்த ஸ்பைடர்தான் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அனைத்து அட்டைகளும் அருமை.காத்திருக்கிறேன் தீபாவளி பாம்பு பட்டாசுக்காய்

    ReplyDelete
  59. ஒரே ஒரு புத்தகம் வந்திருக்குமா என்று தீபாவளியன்றுபூட்டியிருக்கும் புத்தகக் கடை முன்காத்துக்கிடந்த காலம் போயாச்சு. திகட்ட திகட்ட தீபாவளிபுத்தகங்கங்கள் கையில். அனைத்தும் ஒருமனிதரின் தளராதகாமிக்ஸ்ஆர்வத்தினால். நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ///திகட்ட திகட்ட தீபாவளிபுத்தகங்கங்கள் கையில். அனைத்தும் ஒருமனிதரின் தளராதகாமிக்ஸ்ஆர்வத்தினால். நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. ///

      சரியா சொன்னீங்க ராஜசேகர் ஜி!

      Delete
    2. ஆம் ராஜசேகரன் ஜி! ஒரேயொரு மலருக்காக ஓரிரு மாதங்கள் காத்துக்கிடந்தோம். இன்னிக்கி 6புத்தகங்கள்....

      விஜயன் சார் செய்யும் மாயம்!!!

      நான்லாம் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவை ஒட்டியிருந்த பழமுதிர் கடையில் காமிக்ஸ் வாங்குவேன். தூரமாக சைக்கிள்ல CSI polytechnicரோட்ல இருந்து ரவுண்டானாவை நெருங்கும்போதே, கயிறில் புதிதாக மாட்டப்பட்டு இருக்கும்நம்ம இதழ் கண்ணில் பட்டுடும்... சும்மா சரக்குனு அந்த 50 மீட்டர் தூரத்தை கடந்து புக்கை அள்ளும்போது..ஆஹா...ஒற்றை இதழ் என்றாலும் கூட அது கிளப்பும் உற்சாகம் தனிதான்!!!

      Delete
    3. // ஒருமனிதரின் தளராதகாமிக்ஸ்ஆர்வத்தினால். நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது //

      +1

      Delete
  60. கால வேட்டையர்கள் அட்டைப்படம் அனல் பறக்கிறது.

    ReplyDelete
  61. 🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎇🎆🎆🎇🎇🎆

    """""""தீபாவளிமலர்""""""

    இந்த ஆண்டின் தீபாவளி மலர் இந்த வாரம்வந்து விடும். அதற்கான நாள் நெருங்க நெருங்க இந்த தீபாவளி மலர் பற்றிய எதிர்பார்ப்பு சுமார் 20வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே சற்றும் குறையாமல் இருக்கிறது..........

    முன்பெலாம் தீபாவளிமலர் பற்றிய முன்அறிவிப்புகளை ஒரு சில மாதங்களுக்கு முந்தைய இதழ்களில் இருந்தே வெளியிட்டு உற்சாக மீட்டரை தெறிக்க விடுவார் எடிட்டர் சார். அப்போது அவரது பெயர் மட்டுமே நம்மை காமிக்ஸ் உடன் இணைக்கும் பாலம்.

    2013ல் இருந்து முன்னோட்ட அட்டவணை நம்கையில் ஓராண்டுக்கு முன்னரே கிடைத்து விடுகிறது. அட்டவணை வெளிவரும் நாளில் அடுத்த ஆண்டின் தீபாவளிமலர் என்ன என்றே ஒவ்வொரு முறையும் மனசு தேடுகிறது. தீபாவளிமலர் அறிவிப்பை பார்த்து குதூகலித்த பின்னரே மற்ற இதழ்களை கண்கள் மேய்கின்றன!

    நம்ம மனசுகளை "மத்தாப்பாக" மலரச்செய்யும் தீபாவளிமலருக்கு வயது இப்போது 36!

    லயன் காமிக்ஸ்ஸின் முதல் தீபாவளி மலர், 1984 நவம்பரில் ரூபாய் 4க்கு இருவண்ணத்தில் பெரிய மெகா சைசில் "இரும்பு மனிதன்" வெளியானது. அன்று தொடங்கி இதுவரை 21தீபாவளிமலர்கள் வெளிவந்துள்ளன. இடையில் சூழல் காரணமாக தீபாவளிமலர் வெளிவராத ஆண்டுகளில் முந்தைய தீபாவளிமலர்களை புரட்டி பாரப்பது என் வழக்கம்!

    இன்றும் பழைய பெட்டியில் உள்ள தீபாவளிமலர்களை எடுத்து பார்த்தேன். ஒவ்வொரு அட்டைபடமாக பார்க்கும் போது உள்ளம் "பூந்தொட்டி"யாக சொரிகிறது.

    ஒவ்வொரு இதழாக எடுத்து கன்னத்தோடு வைத்து அழகு பார்க்கும் போது, உவகை "பொங்கு"கிறது.

    குண்டு டெக்ஸ் தீபாவளிமலர்களை பார்க்கும்போது "சரவெடி" பின்னாடி தோரணம் கட்டுது.

    பாக்கெட் சைஸில் உள்ள தீபாவளிமலர் 1987-லயன் சூப்பர் ஸ்பெசலை கையில் இருந்து மீண்டும் பெட்டிக்குள் வைக்க முடியாத மனசு "சங்கு சக்கரம்" போல அதை சுற்றி சுற்றி வருகிறது.

    இதுவரை வந்துள்ள தீபாவளிமலர்கள்....

    1.இரும்பு மனிதன்-1984

    2.தலைவாங்கி குரங்கு-1985

    3.தீபாவளிமலர்-1986

    4.லயன் சூப்பர் ஸ்பெசல்-1987

    5.இரத்தமுத்திரை-1988

    6.அதிரடிக் கணவாய்-1989

    7.மீண்டும் ஸ்பைடர்-1990

    8.கழுகு வேட்டை-1992

    9.நள்ளிரவு வேட்டை-1996

    10.இரத்தப்படலம் VII-1997

    11.இரத்தப்படலம் VIII-1998

    12.இரத்தநகரம்-1999

    13.மரண தூதர்கள்-2000

    14.சாத்தான் வேட்டை-2003

    15.தீபாவளிமலர்2013-நீதியின் நிழல்&மெக்ஸிகோ படலம்.

    16.இரவே இருளே கொல்லாதே-2014

    17.தீபாவளி வித் டெக்ஸ்-2015-டைனோசரின் பாதையில் & எமனின் வாசலில்.

    18.சர்வமும் நானே-2016

    19.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-2017

    20.காதலும் கடந்து போகும்-2018

    21.தீபாவளி மலர்2019

    இன்னும் ஓரிரு நாளில் கையில் தவழப்போகும் "தீபாவளி வித் டெக்ஸ் "-யை எண்ணி மனம் "ராக்கெட் " ஆக ஜிவ்வுனு பறக்குது!

    எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் அரை டஜன் இதழ்கள் கொண்ட பெட்டியை ஓப்பன் பண்ணப்போகும்போது மகிழ்ச்சி ஒவ்வொரு இல்லத்திலும் "ஆயிரம் வாலா" வாக மலரப்போகிறது!

    இந்த மகிழ்ச்சியை விளைவிக்கும் சிவகாசி அணியினருக்கு முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. // அட்டவணை வெளிவரும் நாளில் அடுத்த ஆண்டின் தீபாவளிமலர் என்ன என்றே ஒவ்வொரு முறையும் மனசு தேடுகிறது. //
      உண்மை,உண்மை.......

      Delete
  62. விஜயன் சார்,;
    வரும் காலங்களில் DTP வேலை இருந்தால் சொல்லுங்கள், தமிழில் டைப் அடிக்கும் வேலையை சொன்னேன். முடிந்தால் நமது அலுவலகத்தில் இதே வேலையை செய்பவர்கள் ஒரு இரண்டு மணிநேரம் அவர்கள் எப்படி என்ன செய்ய வேண்டும் என ஆன்லைனில் ஒரு நாள் சொல்லி கொடுத்தால் போதும். ஒரு இரண்டு நாட்கள் அந்த softwareல் training எடுத்து விட்டு என்னால் முடிந்ததை செய்யத் தயார்.

    ReplyDelete
  63. ஆயிரம் பக்கங்கள் just miss, இன்னும் ஒரு 62 பக்கங்கள். விரைவில் இந்த இலக்கை நமது பாகுபலி டீம் விரைவில் நிகழ்த்திக் காட்ட வாழ்த்துக்கள்.

    இது போன்ற மெகா இலக்கை இரத்த படலம் முழு தொகுப்பில் நமது பாகுபலி அணி சாதித்து காட்டி உள்ளது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  64. //
    இந்த 938 -ஐப் படிக்க ஆளாளுக்கு முதலில் நேரத்தைத் தேடித் பிடியுங்க சார் !! //

    உண்மை சார்.

    நல்ல நாளிலே நமது புத்தகங்கள் படிக்க நேரம் கிடைப்பது கடினம. அதுவும் இப்போது வீட்டில் இருந்து ஆபிஸ் வேலையை செய்ய ஆரம்பித்த பிறகு அலுவலகம் + வீடு இரண்டையும் பேலஸ் செய்வது என்னளவில் மிகவும் கஷ்டமாக உள்ளது.

    ஆனால் இந்த சூழ்நிலையில் எனக்கு மிகப்பெரிய வடிகால் என்றால் கிடைக்கும் சைக்கிள் கேப்பில் நமது காமிக்ஸை படிப்பது.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் வீட்டு வேலையை அலுவலகத்திலும் ,அலுவலக வேலையை அலுவலகத்திலியுமே செய்து விடுவதால் எந்த சிரமமும் தெரிவதில்லை போல...:-)

      Delete
  65. ரெகுலர் ஐந்து இதழுடன் புத்தக விழா ஸ்பெஷல் இதழ் இரண்டும் சேர்த்து ஆக மொத்தம் ஏழு இதழ்கள் எனக்கு வரவிருக்கின்றன. இந்த வருடம் கணமான தீபாவளி கொண்டாட்டம் தான். போடுடா வெட்டிய #$%&&%$#

    ReplyDelete
  66. பத்து பக்கங்கள் படிப்பதற்கே சோம்பல் முறிக்கும் இக்காலத்தில், மாதா மாதம் நூற்றுக் கணக்கான பக்கங்களை மொழிபெயர்ப்பது, பிறர் மொழிபெயர்த்த பக்கங்களை சரிபார்ப்பது / மாற்றியமைப்பது எல்லாம் லேசுப்பட்ட வேலைகளா என்ன?! அர்ப்பணிப்புடன் பணி புரிந்தால் மட்டுமே ஆகக் கூடிய ஒன்று, வாழ்த்துகள் சார் (உங்கள் குழுவினர்க்கும்)! இதற்கு சற்றாவது மதிப்பு தரும் வகையில், இம்மாத விடுமுறை நாளொன்றை பனிவனத்திலும், யுத்த பூமியிலும் செலவழிக்க எண்ணியுள்ளேன்!

    வானமும் வசப்படும் - முன்னட்டை அருமை - பழைய காமிக்ஸ் இதழ்களின் அழகிய அட்டை ஓவியங்களை நினைவுறுத்துகிறது! அம்மணியின் ஆடையழகினைப் பார்க்கையில், முன்னொரு காலத்தில் லயனில் வெளியான சாகச வீரர் சாம்சன் (மந்திர ராணி) நினைவுக்கு வருகிறார்! சிறுவர் மலரில் வெளியான உயிரைத் தேடி, ராணி காமிக்ஸின்  ஷீலா / அக்ஸா / அமாயா - இவை தாங்கி வந்த கதைக்களங்கள் தொற்று நோய், பேரழிவு என்ற ரீதியில் இருந்தமையால், மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்திய கதைகளாகவே நினைவில் தங்கியுள்ளன.

    //பாக்கிப்பேர் அமெரிக்க எலெக்ஷன் காமெடிகளை ரசிக்கக் கிளம்பிடலாம்//
    காலவேட்டையரின் விலை ரூபாய் $120 - இதற்கும் அமெரிக்கத் தேர்தல் காமெடிகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா சார்? :)

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட ஒன்றரையாண்டுகளுக்கு முன்பே அச்சான கவர் என்பதால் சனியிரவு அதன் final version ஐத் தேடிட முடியலை கார்த்திக் ! அந்த டாலர் symbol அச்சானதில் லேது !

      ஆனாக்கா ஜனமாப் பாத்து இதை 120 டாலருக்கு வாங்கினாக்கா - ஒரு வெள்ளை மாளிகை கட்றோமோ இல்லியோ - சன்னமாய் ஒரு வெள்ளை குடவுனாச்சும் கட்டிப்புடுவோம் !

      Delete
  67. விஜயன் சார்,
    // 938 //
    நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் காமிக்ஸ் காதலால் ஊறிப்போன ஒருவரால் தான் இந்த மாதிரி
    அர்பணிப்புடன் வேலை பார்க்க முடியும் சார்! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல்.

    ReplyDelete
  68. மா துஜே சலாம்
    தாயுள்ளம், தேச பக்தி இவற்றுக்கு எல்லாம் மேலே மனித நேயம் பற்றி சொல்லும் கதை!

    ReplyDelete
  69. இந்த முறை காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து வாசகர்களுக்கு அனுப்பவுள்ள தீபாவளி இனிப்பு என்ன? ரவுண்டு பன் ? chocolate? லட்டு :-) மில்லியன் dollar கேள்வி ? :-)

    ReplyDelete
    Replies
    1. டப்பிக்குள் டெக்ஸ் தாட்டியமாய் அமர்ந்திருக்க, வேறு எதை நுழைத்தாலும் ஒரே பிதுக்காய்ப் பிதுக்கி விடுவார் போலுள்ளது சார் ! So இந்தவாட்டி இனிப்பு புத்தாண்டுப் பொட்டிக்குள்ளே தான் !

      Delete
  70. All in santha is always better.. this year 2020 I went for tex illa santha and am perenially confused as some tex I get some I don't. Will I get Diwali special?

    My sincere advice if possible best to subscribe all in + jumbo

    ReplyDelete