நண்பர்களே,
வணக்கம். மாதத்தின் இந்த வேளையின் பதிவுகள் தான் கொஞ்சம் tricky ஆகிடுவதுண்டு ! புது இதழ்கள் பற்றிய பின்னணிகளைச் சொல்லி முடித்திருப்பேன் ; so அதே சாலையில் இன்னொருக்கா வண்டியை விட ரசிக்காது ! அதே சமயம் அடுத்த மாதத்து இதழ்களின் பிரிவியூக்களுக்குள் புகுந்திடவும் too early ஆக இருந்திடும் ! So எதையேனும் அறிவிக்கிறேன் பேர்வழி என தத்துப் பித்தென்று ஏழரைக்குள் கால்பதிப்பது பெரும்பாலும் இது போன்ற தருணங்களிலே தான் ! இம்முறை அந்த மாதிரியான சொதப்பல்களுக்கு இடம் தராது - எதைப் பற்றி எழுதிடலாமென்று யோசிக்கும் போதே MAXI சைசில் என் மேஜையில் ஜெகஜோதியாய் இடம்பிடித்து நிற்கும் சட்டித்தலையன் தான் கண்ணில் படுகின்றான் ! வண்ணத்தில் டாலடிக்கும் ஆர்ச்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது - மனசுக்குள் கலவையாய் எண்ணங்கள் அணிவகுக்கின்றன ! நமது அபிமான இரும்பு மண்டையனின் அறிமுகமே இந்த மாக்சி சைசில் தான் (தீபாவளி 1984) எனும் போது - ஒருவித சன்னமான சந்தோஷம் உள்ளுக்குள் - கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு நமது லயனின் ஒரு flagship நாயகனை, அதே மெகா சைசில் தரிசிப்பதன் பொருட்டு ! கதைக்களங்கள் இன்றைய நமது ரசனைகளுக்கு ஏற்புடையவைகளாய் உள்ளனவா ? இல்லையா ? என்ற கேள்விகளையெல்லாம் ஓரமாய் ஒதுக்கி விட்டு, for once நம் வயதுகளையும் மறக்க முயற்சித்தால், ஆர்ச்சியோடு குதூகலிப்பது அத்தனை பெரிய பிரயத்தனமாகிடாது என்று தோன்றுகிறது ! இதே "வண்ணத்தில் ஆர்ச்சி" முயற்சியினை கால்நூற்றாண்டுக்கு முன்னே செய்திட நமக்கு சாத்தியப்பட்டிருப்பின் - அன்றைக்கு பயல் இன்னும் எந்த அளவிற்குத் தெறிக்க விட்டிருப்பான் ? என்பதையும் யோசித்துப் யோசித்துப் பார்க்கிறேன் ! ஆர்ச்சி on his own இந்த மெகா சைசில் கருப்பு-வெள்ளையில் வெளியாகியிருப்பின் நிச்சயமாய்த் தற்போதைய தாக்கம் missing ஆகியிருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை ! So "கலர்" எனும் அந்த ஒற்றை விஷயத்தின் நிஜமான தாக்கம் நிதரிசனமாய்ப் புரிகிறது ! ஒரு அச்சக உரிமையாளரின் பிள்ளைக்கு வர்ணங்கள் என்பது வாழ்வின் ஒரு eventual அங்கமாகிடுவது சகஜமே ; ஆனால் எனக்கு "கலர்" அறிமுகமான கதை ரொம்பவே ஸ்பெஷல் - என் மட்டிற்காவது ! So இதோ இன்னொரு வாடகை சைக்கிளில் பின்னோக்கிய பயண moment !!
முதன்முதலாய் முழு வண்ணம் என்பதை 1986 -ன் பாக்கெட் சைஸ் கோடைமலரில் - "ஈகிள்மேன்" கதையின் புண்ணியத்தில் தான் ரசித்தோமென்ற ஞாபகம் எனக்கு ! ஐந்து ரூபாய் எனும் அன்றைய அசாத்தியத் தொகைக்கு நியாயம் செய்திட, கொஞ்சமேனும் கலர் இருந்தால் தான் சுகப்படும் என்ற எண்ணம் ஒருபக்கமிருக்க, ஈகிள் மேனை கலரில் கொணர்ந்திட நான் தேர்வு செய்ததற்கு அப்போது இன்னொரு காரணமும் இருந்தது என்னிடம் ! 1980 களின் துவக்கம் முதலாய் ஒரு கனவாய் எனக்குள் குடிகொண்டிருந்த பூந்தளிர் பாணியிலான சிறுவர் இதழ் "டிங்-டாங்' என்ற பெயரோடு உள்ளுக்குள் உலாற்றிக் கொண்டிருந்தது ! இதுபற்றி ஏற்கனவே இங்கே விரிவாய் எழுதிய நியாபகமும் உள்ளது ! (http://lion-muthucomics.blogspot.com/2014/04/blog-post_23.html) கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு - நின்றால், நடந்தால், படுத்தால் வேறு சிந்தனைகளே லேது - என்பது போலானதொரு காலகட்டம் அது ! பள்ளிக்கூடம் போவதே எப்போது சாயந்திரமாகும் ? ; வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஆபீசுக்கு எப்போது விசிட் அடிக்கலாம் ? என்றதொரு எதிர்பார்ப்போடே தான் ! If I am not mistaken - ஒன்பதாம் வகுப்பின் முழு ஆண்டு விடுமுறையில் சீனியர் எடிட்டரின் உபயத்தில் உருவான கனவு அது ! இது நிஜமாகுமா ? வயசுக்கு மீறிய அன்றைய கனவுகள் ரொம்பவே டூ மச்சா - இல்லையா ? என்றெல்லாம் யோசிக்கும் பக்குவம் ஏது அந்நாட்களில் ? வானமே எல்லை என்று தோன்றிய அந்நாட்களில் நான் வீட்டுப்பாடங்களை செய்தது கூட ஆபீசில் வைத்துத் தான் ! எனெக்கென அன்றைக்கே முத்து காமிக்ஸ் அலுவலகத்தில் ஒரு மேஜை தந்திருந்தார்கள் ! "முதலாளியின் பிள்ளை " என்ற அடையாளத்தை தாண்டி, 'இது வெறும் ஆர்வக்கோளாறு பார்ட்டி அல்ல ; தட்டிக்கொடுத்தால் தேறும் கேஸ் !' என அந்நாட்களில் எனக்கு ஊக்கம் தந்தவர் முத்து காமிக்ஸின் மேனேஜராக பணியாற்றிய பாலசுப்ரமணியன் என்பேன் ! நமது கருணையானந்தம் அவர்களின் சகோதரி மகன் அவர் ! தரப்பட்ட பணிகளை பிசிறின்றிச் செய்திடும் அமைதியான திறமைசாலி ! ஆட்டையைப் போடும் பெருச்சாளிகள் ஆபீஸெங்கும் விரவிக்கிடந்த பொழுதிலும், பத்து பைசாவுக்கு கூட ஆசைப்படாது, தானுண்டு - தன வேலையுண்டு என கண்ணியமாய்ப் பணியாற்றியவர் ! ஒவ்வொரு மாதமும் முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென பேப்பர் வாங்கிட ; கதைக் கொள்முதல் செய்திட - அவர் சீனியர் எடிட்டரிடம் பணம் கோரிக் காவடியெடுக்கும் படலங்களை ஒரு நூறு முறைகள் பார்த்திருப்பேன் நான் ! பிடுங்கல்கள் தலைக்கு மேல் இருந்த காலகட்டம் அது எனும் போது - காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பணம் தருவதென்பதெல்லாம் priority list-ல் கட்டக்கடைசியில் தான் அன்றைக்கு இடம்பிடிக்கும் ! So "முத்து காமிக்ஸ் வரும்-ஆனா வராது" என்ற கண்ணாமூச்சி ஆட்டங்களுக்கு மத்தியில் தான் "டிங்-டாங்" என்ற அல்வாவை வாய் நிறைய இருத்திக் கொண்டு திரிந்தேன் நான் !
ஏற்கனவே on track ஓடிக்கொண்டிருக்கும் இதழுக்கே பணம் புரட்ட இயலாச் சூழல்களில் புது முயற்சிக்கு எங்கிருந்து பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரப்போகிறதோ ? என்ற கேள்விகளெல்லாம் அந்த வயதில் பெரிதாய் எழவில்லை எனக்குள் ! ஆபீசில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் ஒரு வண்டி ஆங்கில புக்ஸை அள்ளிப்போட்டுக் கொண்டு, அவற்றிலிருந்து சுவாரஸ்ய வரலாற்றுத் துணுக்குகள் ; பொது அறிவுச் சமாச்சாரங்கள் என எதையேனும் தேர்வு செய்து, அவற்றை மாங்கு மாங்கென்று தமிழில் எழுதி வைப்பேன் ! அந்நாட்களில் அச்சுக் கோர்ப்பெல்லாம் கையால் தான் எனும் போது, உள்ளுக்குள் 3 பணியாட்கள் ஈயோட்டிக் கொண்டிருப்பார்கள் - முத்து காமிக்ஸ் அம்மாதம் வெளியாகாது போயிடும் பட்சங்களில் ! So சும்மா சொரிந்து கொண்டிருக்கும் ஆட்களுக்கு வேலை தந்தது போலவாவது ஆச்சே என - நான் எழுதித் தள்ளும் கட்டுரைகளையெல்லாம் (!!!!!) அச்சுக் கோர்க்கச் சொல்லிப் பணிப்பார் பாலசுப்ரமணியன் ! முன்தினம் கிறுக்கித் தந்ததை மறுநாள் அச்சுக் கோர்ப்பு செய்யப்பட்டு type transfer எனப்படும் பிரிண்டில் பார்க்கும் போது உள்ளுக்குள் நாலு பாஹுபலி...ஏழு ஆர்ச்சி..பன்னிரண்டு ஸ்பைடரின் உத்வேகம் ஊற்றெடுத்தது போலிருக்கும் ! மறுக்கா ஏதாச்சும் புக்ஸ் ; மறுக்கா தகவல் தேடல் ; மறுக்கா எழுதுதல் என்ற routine-ஐ இன்னும் ஆர்வமாய்த் தொடர்ந்திடுவேன் ! அந்நாட்களில் பள்ளி நூலகங்களில் நான் எடுத்திருக்கக்கூடிய புக்சின் பெரும் பகுதி கூட, அடியேனின் டிங்-டாங் கனவுகளின் பிரதிபலிப்புகளாகவே இருந்திருக்கும் ! அந்நாட்களில், அந்த வயசுப் பசங்களுக்கான கனவுகளோ, கற்பனைகளோ எனக்குள் ஓடிட்டதே கிடையாது ! அவனவன் லேட்டஸ்ட்டாய் அறிமுகமாகியுள்ள திரை நட்சத்திரங்களைப் பற்றிப் பெனாத்திக் கொண்டிருக்கும் போது - 'நட்சத்திரங்களின் தூரம் - புவி மண்டலத்திருந்து எவ்வளவு ? என்ற சிந்தனை இங்கே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ! Looking back, அன்றைய முயற்சிகள் எவையுமே நனவாகிடவில்லை என்றாலும், எழுத்தென்பது ரசித்துச் செய்திடக்கூடியதொரு விஷயமே ; பள்ளிக்கூடத்தோடு முழுக்குப் போடப்பட வேண்டியதொரு சங்கதி அல்ல என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓசையின்றி துளிர் விட்டிருக்கக்கூடியது அப்போது தான் என்று தோன்றுகிறது ! Maybe, just maybe அன்றைக்கு எனக்குள் இந்தத் துறையின் மீதொரு மோகமும், பேனா பிடிப்பதில் ஒரு ரம்யமும் மட்டும் எழாது போயிருப்பின், ஸ்கூல் முடித்த பின்னே what next ? என்ற கேள்விக்கு விடை தெரிந்திராது போயிருக்கலாம் ! வசதியான fiireworks முதலாளிகளாக இருந்த எனது நண்பர்கள் யாரிடமேனும் கேட்டு, அவர்களது அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலைக்குப் போயிருக்கவும் கூடும் ! தப்பிச்சது பட்டாசுத் தொழில் !! 😃😃
So புக்ஸ் ; தேடல்கள் ; கட்டுரைஸ் - என்று ஒரு மார்க்கமாய் ஓடிக்கொண்டிருந்த வேளையில், இந்த இதழில் கொஞ்சமாய் காமிக்ஸ் பக்கங்களையுமே புகுத்தினாலென்ன ? என்ற சிந்தனை மெதுவாய் உருப்பெற்றது ! தொடர்கதையாய் எதையேனும் நுழைத்தால் சூப்பராக இருக்குமே என்று தோன்றிட, அப்போதைய நமது கதை சப்ளை நிறுவனங்கள் மூன்றுக்குமே லெட்டர் போட்டு வைத்தேன் ! டில்லியில் ஒருவரும், மும்பையில் இருவரும் இருக்க, அவர்கள் அத்தனை பேருக்குமே "உயிர்ப்பயம் காட்டிப்புட்டாங்கடா பரமா !!" என்ற ரீதியில் முத்து காமிக்ஸின் payment schedules புளியைக் கரைத்து வைத்திருந்தது நானறியாச் சமாச்சாரம் ! So முத்து காமிக்ஸ் லெட்டர்பேடில் நான் பந்தாவாய் அனுப்பிய ஓலையானது கச்சிதமாய்க் குப்பைக்கூடைக்குப் போயிருக்க வேண்டும் போலும் - யாருமே பதில் போடவில்லை ! 'பதிலே வரலே அண்ணாச்சி !' என்று நான் பாலசுப்ரமணியனிடம் புலம்பிய போது அவர் தான் விளக்கினார் - இன்ன மெரி இன்ன மெரி ஜவ்வு மிட்டாய்களை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிரித்துத் தந்து வந்திருக்கிறோம் ; இந்த லட்சணத்தில் புதுசாய் உன் பங்குக்கு மஸ்கொத் அல்வா ரெடி பண்ண முற்பட்டால் யார் தான் வாயைத் திறப்பார்கள் என்று !! காற்றுப் போன பலூன் போலாகிப் போனது எனக்கு ! இருந்தாலும், மண்டைக்குள் அந்த அவாவைச் சுமந்து கொண்டே திரிய, பத்தாம் வகுப்பின் நெடுவிடுமுறையில் அதற்கொரு தீர்வும் பிறந்தது - சீனியர் எடிட்டருடனான எனது மும்பை பயணத்தின் புண்ணியத்தில் !
அங்குள்ள காலெண்டர் ஏஜெண்ட்களையும், ஆர்டிஸ்ட்களையும் சந்திக்க தெருத்தெருவாக சுற்றியவரோடு நானும் தெரியாத்தனமாக இணைந்து கொள்ள - மும்பையின் நீள அகலங்களை கண்ணில் காட்டிய பின்னே ஒரு மாலையில் மும்பையின் Fort ஏரியாவிலிருந்ததொரு புராதன அலுவலகத்துக்கு இட்டுச் சென்றார் சீனியர் எடிட்டர் ! அவர்கள் தான் வேதாளம், மாண்ட்ரேக் ; காரிகன் ; சார்லீ போன்ற தொடர்களின் இந்திய விநியோகிஸ்தர்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் ! காலெண்டர் வசூலின் தொகை கையில் இருக்க, அவர்களிடம் முந்தைய கதை பில் பாக்கியை செட்டில் செய்த போது - எனது துண்டு சரேலென்று நடுவாக்கில் விரித்தேன் - "ஒரு மாதமிருமுறை இதழில் தொடராகப்போட ஏதாச்சும் ரெண்டு காமிக்ஸ் வரிசைகளை பரிந்துரை செய்யுங்களேன் ?' என்றபடிக்கே ! இவன் யார்டா புதுசா ? என்பது போலொரு பார்வையோடு, லேட்டஸ்ட்டாய் அப்போது வந்திருந்த CONDORMAN என்ற டிஸ்னி திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவத்தை மேஜையில் போட்டார் ! சித்திரங்கள் அட்டகாசமாய்த் தோன்றிட, எனக்கு வாயெல்லாம் பல் ! டிஸ்னியின் ஆக்கம் எனும் போது நிச்சயமாய்ப் பட்டையைக் கிளப்பும் என்ற நம்பிக்கையும் உள்ளுக்குள் இருந்தது ! So வேக வேகமாய் மண்டையை ஆட்டினேன் ; இதை வாங்கி விடலாமென்று ! அதற்கும் சேர்த்து பில் போடப்பட்டு கையில் தரப்பட்ட கையோடு, கதையின் bromide prints-ம் ஒப்படைக்கப்பட்ட போது எனக்குள் எதையோ அசாத்தியமாய்ச் சாதித்துவிட்டதொரு உணர்வு ! விருந்தில் பாயாசமாக மட்டுமே அந்நாட்களில் காமிக்ஸ்சுக்கு எனது திட்டமிடல் இருந்ததென்றாலுமே - ஏதோ ஒரு வகைப் பெருமிதம் உள்ளுக்குள் ! பின்னாட்களில் இந்தப் படக்கதைகளே என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியினை ஆக்ரமிக்கவுள்ளன என்பதை அந்த நொடியில் யாரேனும் எனக்கு ஆரூடமாய்ச் சொல்லியிருந்தால் - 'போங்கப்பு..போயி புள்ளீங்களைப் படிக்க வைக்கிற வழியைப் பாருங்கப்பு !' என்று சிரித்து வைத்திருப்பேன் தான் ! அத்தனை தூரத்துக்கு அந்தப் பூந்தளிர்- அம்புலிமாமா -கோகுலம் பாணியின் template எனக்குள் ஊன்றியிருந்தது !
ஊர் திரும்பிய பின்னே வேக வேகமாய் CONDORMAN-க்கு "ஈகிள் மேன்" என்ற பெயர் சூட்டலோடு - முதல் 4 பக்கங்களை டிங்-டாங்கில் தொடராகப் பயன்படுத்தும் நோக்கில் பேனா பிடித்தேன் ! அப்போது தான் லைட்டாய் தலைக்குள்ளே ஆசை எழுந்தது - இதைக் கலரில் போட முடிந்தால் எவ்விதமிருக்கும் என்று ! அதுவரையிலும் டிங்-டாங் black & white இதழாகவே திட்டமிடப்பட்டிருந்தது எனும் போது எனது கலர் கனவு தேறும் வாய்ப்புகள் வெகு சொற்பமாகவே தென்பட்டது ! Black & White-ல் ஒரு sample புக்கை பிரிண்ட் செய்து பார்த்திடலாம் என்று ஒரு ஓய்வான நாளில் சீனியர் எடிட்டருக்குத் தோன்றிட, எனக்கோ மவுண்ட் ரோடில் யாரோ நாற்பதடி உசரத்துக்குக் கட்டவுட் வைத்திருப்பது போலொரு ஜிலீர் உணர்வு ! அத்தனை நாட்களாய் வெறும் வாயால் வடை சுட்டுக்கொண்டிருந்தவனின் முன்பாய் திடு திடுப்பென ஒரு modular kitchen பிரசன்னமானது போலொரு பீலிங்கு !
வேக வேகமாய் நெகடிவ்கள் எடுத்தோம் ; அவற்றை பிராசஸ் செய்து அச்சிடும் பிளேட்களாக்கினோம் ; யாரோ ஒரு புண்ணியவான் , எதையோ அச்சிடக் கொண்டு வந்து இறக்கியிருந்த பேப்பரிலிருந்து கொஞ்சத்தைச் சோமாறி - 32 பக்கங்கள் கொண்ட டிங்-டாங்கில் வெறும் 100 பிரதிகள் மட்டும் அச்சிட்டோம் ! அவை பைண்டிங் செய்யப்பட்டு கையில் புக்காய் தரப்பட்ட போது சந்திராயன் ; சென்றாயன் என எல்லா ராயன்களையும் ஏவியது போலான பெருமிதம் ஊற்றெடுத்தது ! ஆனாலும் என்னமோ குறைவது போலவே உறுத்திட, அது வண்ணமின்மை தான் என்பதும் புரிந்தது ! மெது மெதுவாய் சீனியரிடம் அதைச் சொல்ல - அவரோ "ஓ...பேஷாய் கலரில் பிளான் பண்ணிடலாம் !' என்றபடிக்கே பாலசுப்ரமணியத்தை கூப்பிட்டு - "முழுசையும் கலருக்கு ஒர்க் பண்ணிடுங்க !' என்று சொல்லி விட்டார் !
தொடர்ந்த ஒரு வாரத்துக்கு கால் தரையில் படுவேனா என்று மறுக்கிறது ; சைக்கிளில் போனாலும், பென்ஸ் காரில் சவாரி செய்வது போல் படுகிறது ; எதிர்ப்படும் ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் கடைக்காரர்கள் முகங்களை மறைத்து கலரில் டிங்-டாங் தொங்குவது போலவே தெரிகிறது !! உச்ச சந்தோஷத்தில் நான் திளைத்துத் திரிந்திட, முத்து காமிக்ஸ் அலுவலகத்திலோ ஒரு மாதிரியான ஹி..ஹி..ஹி..மூட் தான் பரவலாய்த் தென்பட்டது ! ஆண்டாண்டு காலங்களாய் அல்வாக்கள் பல உண்டு உரமேறிய அனுபவசாலிகள் என்ற வகையில் - "இதுவும் கடந்து போகும் !!" என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதால், பாவம், பொடியனின் ஆசையைக் கெடுப்பானேன் ? என்ற நோக்கத்தோடு கலருக்கான பணிகளைத் தொடங்கினார்கள் ! அன்றைய நாட்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் லேது எனும் போது எல்லாமே திறமை வாய்ந்த கலைஞர்களின் வேலைப்பாடுகளே ! தொடர்ந்த 1 மாதத்துக்கு அவர்கள் கலர் மாற்றம் செய்திடப் பணியாற்றியதை அகலத் திறந்த வாயோடு பராக்குப் பார்த்திருந்து இன்னமும் நினைவில் உள்ளது ! திடீர் திடீரென வேறு அவசர வேலைகளைத் திணித்தது ; அதன் பலனாய் டிங்-டாங் வேலைகள் கிடப்பில் போடப்பட்டது ; அப்புறமாய் நான் கெஞ்சிக்கூத்தாடி வேலைகளை மறுபடியும் துவங்கச் செய்தது என ஏகமாய் குரங்கு பல்டிக்கள் அந்நாட்களிலேயே பழக நேரிட்டது ! ஒன்றரை மாதங்களது உழைப்பின் பின்னே வண்ணத்தில் அச்சிட எல்லாமே தயார் என்ற போது - சொல்ல இயலா மலைப்பு எனக்குள் ! அந்த பிராசசிங் நுணுக்கங்கள் எனக்கு பாதி புரிந்திருந்தது ; பாதி புரிந்திருக்கவில்லை எனும் போது - பணியாற்றும் ஒவ்வொரு technician-ம் ஒரு மாண்ட்ரேக்காகத் தான் தென்பட்டனர் எனக்கு ! அந்நாட்களில் இப்போதைப் போல ஒரே நேரத்தில் 4 கலர்களை அச்சிடும் வசதிகளோ ; technology-யோ கிடையாது ! So முதலில் மஞ்சள் ; அப்புறமாய் ப்ளூ ; சிகப்பு & இறுதியாய் கருப்பு என்று முன்பக்கத்தை அச்சிட்டு விட்டு உலர விட்டு விடுவார்கள் ! அப்புறமாய் மறுபடியும் பின்பக்கத்தினில் அதே Yellow ; Cyan ; Majenta & Black அச்சு ! ஆக 16 பக்கங்கள் கொண்டதொரு காகிதத்தில் முன்னும் பின்னும் அச்சிடுவது என்பது புளிசாதத்தைக் கட்டிக் கொண்டு மிஷின் அருகேயே தேவுடு காக்கும் அனுபவத்துக்குச் சமானம் ! திடீர் திடீரென அச்சக சூப்பர்வைசர் வந்து - "இது அவசரம் !! இதை இப்போவே பிரிண்ட் பண்ணனும் !' என்று நின்றால், டிங்-டாங் பணால் -டாங் ஆகி விடும் ! அப்புறமாய் மறுக்கா வேலையைத் துவக்கச் செய்வதற்குள் ஒருநூறு குட்டிக்கரணங்கள் அவசியமாகிடும் ! அத்தனையையும் நான் சகித்துக் கொண்டிருந்ததே - ஈகிள் மேன் பக்கங்களை வண்ணத்தில் தரிசிப்பதன் பொருட்டு ! மற்ற பக்கங்களில் கட்டுரைகள் with some illustrations தான் எனும் போது அங்கெல்லாம் கலரில் ரொம்பவே டாலடிக்கும் வாய்ப்புகள் குறைவு ! மாறாக டிஸ்னியின் காமிக்ஸ் ஆக்கமானது கலரில் ரகளை செய்திடுமே ?!! So ஒரு வழியாய் அச்சு முழுவதுமாய் நிறைவுற்று - ஈகிள்மேனை மட்டுமன்றி, முழு புக்கையும் வண்ணத்தில் பார்த்த போது கரைபுரண்டோடிய உற்சாகத்தை கட்டுக்குள் கொண்டிட மிடிலே ! 40 ஆண்டுகள் சுமாருக்கு முன்பான அந்த நாட்களில் கலர் என்பது இன்றைக்குப் போல் சகஜ சமாச்சாரங்கள் அல்ல ! So நானே நானாய் உருவாக்கியதொரு இதழை முழு வண்ணத்தில் பார்க்க சாத்தியப்பட்ட அந்த தினத்தின் ரம்யம் எனக்குள் நிரந்தரமாய்த் தங்கி விட்டுள்ளது ! வண்ணத்திலான அந்த மாதிரி இதழ்களில் எதுவுமே இன்றைக்கு என்வசமில்லை ; நினைவுகளைத் தவிர்த்து ! ஆனால் எத்தனை மெகா ரப்பரைக் கொண்டு அழிக்க முற்பட்டாலும் அந்த கலர் நாட்கள் மட்டும் விலகிடவே செய்யாது !
And பின்னாட்களில் டிங்-டாங் வெடிக்க மறந்ததொரு வெடிகுண்டாக நமத்துப் போனாலும் - என்னோடு தொடர்ந்த எண்ணச்சிதறல்கள் 1986-ன் கோடைமலரின் போது மீண்டு எழுந்தன ! 1981-ல் உருவாக்கியிருந்த ஈகிள் மேன் வண்ணப்பக்கங்களை கோடைமலரில் நிஜமாக்கிப் பார்த்த போது கலர் சார்ந்த எனது வேட்கைக்கு ஒரு ஜென்ம சாபல்யம் கிட்டியது போலிருந்தது ! இன்றைக்கு எங்கெங்கோ பயணித்து விட்டோம் தான் ; "கலர்" என்பது பட்டனைத் தட்டும் நொடியில் சாத்தியமாகிடும் சுலபமும் ஆகி விட்டது தான் ! ஆனால் இதன் துவக்கப் புள்ளி 39 ஆண்டுகளுக்கு முன்னே ; அகல விரிந்த கண்களுடனானதொரு டீனேஜரின் ஒரு அனாமதேய நாளில் தான் என்பதை, கலரில் ஆர்ச்சியை பார்த்திடும் இந்த நொடியினில் நினைவூட்டுகிறது மண்டை !!
நம்ம சென்னைக்கு மாத்திரமன்றி, கலருக்கும் ஒரு விசில் போட்டபடிக்கே கிளம்புகிறேன் - "மா துஜே சலாம்" இதழினில் பணியாற்றிட !! Bye guys ...see you around ! Have a safe sunday !!
மீ த பர்ஸ்ட் - ஃபார் த பர்ஸ்ட் டைம் இன் மை லைஃப்!😇😇
ReplyDeleteரியலி!!!!!
Deleteவாழ்த்துக்கள் செயலரே
Deleteபோங்கு ஆட்டமிது...
Deleteவழக்கம்போல் ஆத்தாவுக்கு கூழ் பாக்கியா???!!!
Deleteஏமாத்து வேலை!?
Deleteசெந்தில் சத்யாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் பக்கத்து வீட்டு பாட்டி நறுக்குனு கிள்ளிவச்சுட்டு ஓடிரணும்னு சாபம் கொடுக்கறேன்!
Deleteமீ த பர்ஸ்ட் - ஃபார் த பர்ஸ்ட் டைம் இன் மை லைஃப்!😇😇
Delete######
எனவே கூழ் பாக்கியை விரைந்து முடிக்கவும்...
பின் குறிப்பு :
Deleteஎனது பக்கத்து வீட்டில் பாட்டிகள் இல்லை..."இளவரசிகள் " மட்டுமே...எனவே செயலரின் தண்டனையை ஆவலுடன் எதிர்நோக்கி ...
மெய்யாலுமா
DeleteHi
ReplyDeleteஹலோ
ReplyDeleteடிங் - டாங் விளம்பரங்களைப் கார்க்கும்போதெல்லாம் அந்த ஒலியும் காதில் கேட்பது போல ஒரு உணர்வு வரும்!
ReplyDeleteபார்க்கும்போதெல்லாம்.
DeleteMe too
ReplyDeleteMAXI Modesty வண்ணத்தில் வாழ்க!
ReplyDeleteMAXI Modesty வண்ணத்தில் வாழ்க!
எண்ணத்தில் மட்டுமே வாழ்க!
Deleteஹிஹிஹி!!
பாபு நானும் மேக்ஸி மாடஸ்டி வண்ணத்தில்
Deleteகத்தி முனையில் மாடஸ்டி
மாடஸ்டி இன் இஸ்தான்புல்
மரணக் கோட்டை மூன்றும் ஒரே புத்தகமாக வாழ்க
/// எண்ணத்தில் மட்டுமே வாழ்க!
Deleteஹிஹிஹி!!///
இன்றைய எண்ணம்..நாளைய வண்ணம்.
ஜெய் ஜக்கம்மா!!!..
துணியே போடாத அந்தம்மாக்கு மேக்ஸி எதுக்கு? மினி மிடியே சாஸ்தி.
Deleteஷெரீஃப் ஹிஹிஹி செம்ம செம்ம
Delete// துணியே போடாத அந்தம்மாக்கு மேக்ஸி எதுக்கு? மினி மிடியே சாஸ்தி //
Delete:-) :-)
9
ReplyDelete10
ReplyDelete11th
ReplyDeleteOru 10 nimisa gap la pathivu vanyhuduchuu..antha 10 kkulla miss agiduchuu
ReplyDeleteHi..
ReplyDeleteMe 14
ReplyDelete39 வருடங்களுக்கு முன்பான உங்களின் வண்ணக் கனவை நிஜமாக்கிய 'டிங் டாங்' - ஒரேயொரு பிரதி கூட இப்போது இல்லாமல் போனது எங்களின் துரதிர்ஷ்டம் தான் எடிட்டர்!!
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteComing..coming..
ReplyDeleteஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
.
Maxi modestyவண்ணத்தில்வாழ்க எடிட்டரின் கருப்பு மை கை வண்ணம் இல்லாமல்வாழ்க, வாழ்க வாழ்ககரூர் ராஜ சேகரன்.
ReplyDelete////எடிட்டரின் கருப்பு மை கை வண்ணம் இல்லாமல்வாழ்க///
Deleteஆவ்!! கலக்கறீங்க ராஜசேகர் ஜி!!🙀🙀🙀
AXA புள்ளை வரட்டும் ; அப்புறம் பார்க்கலாம் ராஜசேகர் சார் எந்தக் கட்சியிலே கீறாருன்னு !
DeleteThis comment has been removed by the author.
Deleteஅப்படிப் போடு AXA அருவாள..
Deleteஆஹா அட்டகாசமான கதல்லா
Deleteவிஜயன் சார், இந்த மாதம் வந்த அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டேன், கடுமையான வேலைக்கு இடையில்.
ReplyDeleteஓவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் இருந்தது. லக்கி-லூக் நான்கு கதைகள் மிகவும் அருமையான சிரிப்பு தோரணம்.
தனித்தனி தணித்திரு புத்தகத்தை கையில் எடுத்ததும் தெரியவில்லை படித்து முடித்ததும் தெரியவில்லை செம வேகம். படங்கள் பல இடங்களில் கதை சொன்னது. வசனங்கள் இயல்பாக நச் என்று இருந்தது. ஒரு பரபர பாலா ஸ்டைல் கமெர்சியல் படம் பார்த்த உணர்வு. 10 நிமிடத்தில் படித்து முடித்து விட்டேன்.
பந்தம் தேடிய பயணம் முதல் சில பக்கத்தில் தனது ரேஞ்சர் கனவு நனவானதை கொண்டாட சலூன் வரும் இளைஞன் எதிர்பாராது கொல்லப்படுவது பகீர் என்ற ஆரம்பம். அங்கு இருந்து ஒரேகானுக்கு எம்மா மற்றும் டெக்ஸ் கார்சனுடன் நானும் பயணம் செய்து குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்கி விட்டு வந்தது போல் ஒரு உணர்வை தந்தது.
இந்த வருடத்தில் மிகவும் நிறைவான காமிக்ஸ் மாதம் இது.
@PfB
Deleteசெம & உண்ம!
அருமை பெ.ப அவர்களே...!
Deleteசெம்மையான விமர்சனம் சகோதரரே
Deleteஎங்களுக்கும். பனியனுக்குள் லயன் இருக்கும்போது. சைக்கிளில் செல்லும்போதேபென்ஸ்காரில்பறக்கும் உணர்வு. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபதிவு மிகவும் அருமை. நன்றி.
ReplyDeleteவெல்கம் பேக் கிட்!💐💐
ReplyDeleteஎங்களுக்கும், பனியனுக்குள் லயன் இருக்கும்போது சைக்கிளில் செல்லும்போது பென்ஸ்காரில் பறக்கும் உணர்வு. ஆசிரியருக்கு நன்றி
ReplyDeleteடிங் டாங் மற்றும் கருணையானந்தம் அவர்களின் உறவினர் பாலாசுப்பிரமணியன் பற்றிய தகவல்கள் அருமை. சிறுவயதில் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளை கவனித்து அதனை ஞாபகம் வைத்து எழுதுவது உங்களின் சிறப்பு.
ReplyDeleteஎழுத இன்னமுமே நிறைய உள்ளது தான் சார் ; ஆனால் காத்துக் கிடக்கும் இதர பணிகளின் நிமித்தம் அடக்கி வாசிக்க வேண்டிப் போகிறது ! இதுவே காலை 7 முதல் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களை எடுத்துக் கொண்டு விட்டது !
Deleteயார் காரணம்னு மட்டும் கொஞ்சம் யோசிங்க எடிட்டர் சார்! 😏😏
Deleteஆமாம் சார்...இணையத்தில் சி.சி.வயதில் வந்தாலே இப்படி தான் விட்டு விட்டு போவது ...எனவே...
DeleteWarm welcome back கண்ணா.
ReplyDeleteவருக,வருக...
ReplyDeleteவண்ணத்திலே..
ReplyDeleteமேக்சி சைசிலே..
நம்ம சட்டித் தலையன்...
ஆகா..
ஆகா...
ச்சும்மா தக தகன்னு ஜொலிக்கிறான் சட்டி மண்டையன்!
நன்றி ஆசானே...
மறக்க இயலா இதழாகிப் போனது இம்மாத ஆர்ச்சி..!
வெல்கம் பேக்யா🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
ReplyDeleteடிங் டாங்கை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் எடிட்டர் சார்..
ReplyDeleteபோலவே, அந்நாட்களில் 'திகில் லைப்ரரி'க்காக நீங்கள் எழுதிய நாவல்களை படித்திடும் வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை!
(நண்பர்கள் யாரிடமாவது 'திகில் லைப்ரரி' இருந்தால் சித்தே கண்ணுல காட்டுங்களேன் ப்ளீஸ்?!!)
ஒரே ஒரு நாவலாவது நீங்கள் மீண்டும் எழுதிட வேண்டும் எடிட்டர் சார்! எங்களின் நீண்டநாள் ஆசைகளில் ஒன்று!
ஏனுங்கோ - நான் பேனா புடிக்கிற கி.நா எல்லாமே நாவல் ரேஞ்சுக்கு நீளற சமாச்சாரங்கள் தானே ? இதிலே புதுசா வேற எழுதணுமா - என்ன ?
Delete/// ஏனுங்கோ - நான் பேனா புடிக்கிற கி.நா எல்லாமே நாவல் ரேஞ்சுக்கு நீளற சமாச்சாரங்கள் தானே ? இதிலே புதுசா வேற எழுதணுமா - என்ன ?///
Deleteபதிவ வுட்டுப்புட்டீங்களே கோப்பால்.
சார் இந்த வருட லாயல்டி பாயிண்டுக்கு ஈடாக ஆர்ச்சியை கொடுத்தமேரியே.. அடுத்த வருசத்துக்கு உங்க நாவலைக் கொடுத்தா செமயா இருக்குமேங் சார்?!!
Deleteஒரு பரபரப்பான த்ரில்லர்.. அல்லது காமெடிக் கதைக் களம்! செமத்தியா இருக்குமே?!! கோவிட்டு பிரச்சினையால அடுத்த வருடத்திற்கான தயாரிப்புப் பணிகளும் குறைவாத்தானே இருக்கப் போவுது? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிடைக்கும் கேப்பில் ஒரு நாவலை ரெடி பண்ணுவது அப்படியொன்னும் சிரமப் பணியல்லவே?!! ப்ளீஸ் சார்!
(நண்பர்கள் யாரிடமாவது 'திகில் லைப்ரரி' இருந்தால் சித்தே கண்ணுல காட்டுங்களேன் ப்ளீஸ்?!!)
Delete#####
அன்று இருந்தது செயலரே...
இன்று இல்லை செயலரே...:-(
எதுக்கும் பதுங்கு குழியின் எல்லா பொந்துகளிலும் நல்லாத் தேடிப்பாருங்க தலீவரே!
Delete"மீண்டும் சிங்கத்தின் சிறு வயதில் "
ReplyDeleteமகிழ்ச்சி சார்...:-)
வருக! வருக!!
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteவருக ரவிக்கண்ணரே...:-)
ReplyDelete// எதையேனும் அறிவிக்கிறேன் பேர்வழி என தத்துப் பித்தென்று ஏழரைக்குள் கால்பதிப்பது பெரும்பாலும் இது போன்ற தருணங்களிலே தான் ! //
ReplyDeleteஉண்மை சார்.
எதையேனும் அறிவிக்கிறேன் பேர்வழி என தத்துப் பித்தென்று ஏழரைக்குள் கால்பதிப்பது பெரும்பாலும் இது போன்ற தருணங்களிலே தான் ! //
Deleteகொரானா ஒழிக...
நமது லயனின் ஒரு flagship நாயகனை, அதே மெகா சைசில் தரிசிப்பதன் பொருட்டு ! கதைக்களங்கள் இன்றைய நமது ரசனைகளுக்கு ஏற்புடையவைகளாய் உள்ளனவா ? இல்லையா ? என்ற கேள்விகளையெல்லாம் ஓரமாய் ஒதுக்கி விட்டு, for once நம் வயதுகளையும் மறக்க முயற்சித்தால், ஆர்ச்சியோடு குதூகலிப்பது அத்தனை பெரிய பிரயத்தனமாகிடாது
ReplyDelete######
உண்மை..சார்.. கதை எப்படியோ .இதழை ரசித்து ரசித்து பார்க்கிறேன்...
Hi ya
ReplyDelete
ReplyDeleteகனவுகளை உள்ளுள் கனன்று கொண்டிருக்கும் தீப்பொறி போல அணையாது வைத்திருந்து, விடாமுயற்சியும் இருந்தால் எந்தக் கனவும் சாத்தியமே என உங்கள் அனுபவமே பாடம் கற்பிக்கின்றது!!
எந்த வாழ்க்கை நெருக்கடிகளையும் சற்று நேரமாவது மறந்து , வேறோர் உலகினுள் சஞ்சரிக்க செய்வதில் நமது பொம்மை
புத்தகங்களே பெரும்பங்கு வகிக்கின்றன!!
தங்களுக்கு நன்றிகள் பல கோடி!!
டிங் டாங் இதழை அனைவரும் பார்க்க சிறிதளவு சாத்தியக்கூறுகள் இருப்பினும் முயன்று பார்க்கலாமே சார்!!
டிங்டாங்குக்கு வாய்ப்பு தரனும் சார் வாண்டுமலராய்
Delete1.TEX பந்தம் தேடிய பயணம் :
ReplyDeleteவல்லவர்கள் வீழ்வதில்லை , சாத்தான் வேட்டை , மரண முள் , ஒரு தலைவன் ஒரு சகாப்தம் வரிசையில் வித்தியாசமான TEX கதை .. "தல"னாலே மஞ்சள் சட்டையில் தான் இருப்பார்களோ .. (TEX ,MSD , LUCKY )..
RATING :9.5/10 ..
2.தனித்திரு,தணிந்திரு:
இன்னொரு சிறந்த கி .நா இந்த வருடத்திற்கு ... YEAR END REVIEWல் BEST கி நா SELECT பண்ணுவது தான் TOUGH ஆக இருக்கும் போல .. 9/10 ..
3.பிசாசு பண்ணை
எல்லாமே முதல் முறையாக படித்தது .. MY FAVORITE சிலை செய்யும் கதையும் , ஜோசியம் பார்க்கும் கதையும் ... 9/10 ..
4. ஆர்ச்சி மாக்ஸி கலர் :
FIRST THANKS SIR .. FOR GIVING IT AS FREE .. PERSONALLY NOT A FAN OF ARCHIE , SPIDER .. ஆனால் இம்மாதிரி மேக்கிங்ல்,கலரில் வரும்னா வருடம் ஒன்று வெளியிடலாம் சார் ..
8.5 /10 ..
ஆர்ச்சி கலர்தான்
Deletenice review.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBlogil மாதம் ஒரு முறை டைப் செய்யுங்கள். இல்லை என்றால் லயன் காமிக்ஸ் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து விடலாம். சுட சுட கருத்துகள் நயாகரா நீர்வீழ்ச்சி போல பாயும். Blogil அப்டேட் செய்ய லேட்டாகிறது
ReplyDeleteமாவீரரே ; இல்லாததை நாடுவதற்குப் பதிலாய் இருப்பதை ரசித்து விட்டுப் போவோமே !
Deleteதனித்தனி தணித்திரு ஆண்டர்சன் என்ற வயதானவர் தனது பேத்திக்கு நடந்தது என்ன என்று கண்டுபிடித்து அவர்களை தண்டிப்பது கதை. இதில் கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கதையோட்டத்தில் இணைத்தது சிறப்பு. கதையில் அனைத்து கதாபாத்திரங்களையும் இயல்பாக நடமாட செய்து ஒரு கமர்ஷியல் கதையை கொடுப்பது கடினம்; ஆனால் இந்த கதையில் அதனை செய்து காட்டியுள்ளனர்; அதற்கு பெரும் துணையாக ஓவியம் அதுவும் கருமை கலந்த ஓவியங்கள் நம்மை கதைக்குள் இழுத்து ஆண்டர்சனுடன் துணைக்கு செல்ல வைக்கிறது; அடுத்து வசனங்கள் இயல்புக்கு மிகாமல் செம ஷார்ப்.
ReplyDeleteஇறுதியில் ஆண்டர்சனுக்கு நேரும் கொடுமை மனதை கனமாக்கியது. அவரின் இறந்து போன பேத்தியை ஆண்டர்சன் விருப்படி அடக்கம் செய்ய எடுத்து வரும் அந்த வெள்ளை அதிகாரியின் மனிதம் சிறப்பு.
ஆண்டர்சரனின் நண்பரின் குடும்பம் மற்றும் ஒரு சிறப்பு.
ஆண்டர்சன் போன்று வயதானவர் மனதில் கடந்த காலத்தில் நடந்த எதாவது கசப்பான அனுபவங்கள் இருக்கும் அவைகளை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நடைமுறையில் பலர் இருக்கலாம்.
அந்த சிறுமிக்கு நேரும் கொடுமையை கதை ஓட்டத்தில் புரியவைத்து சரியாக ஐடியா.
ஒரு சோகமான கதை என நினைத்தாலும் தவறு செய்தவர்கள் ஆண்டர்சன் தனது கையால் தண்டனை கொடுத்தது மனதுக்கு நிறைவை தருகிறது.
ஆண்டர்சன் என்ற இந்த ஹீரோ எனது மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார்.
சூப்பர் PfB!
Deleteஒரு சினிமாவாக எடுக்கத் தகுதியான படம்! ஆண்டர்ஸனின் கதாபாத்திரத்துக்கு கமல் அல்லது சரத்குமார் பொருத்தமாய் இருக்கும்!
கமல் தான் மிகவும் சரியாக பொருந்துவார்.
Deleteஅஜித் ?
Deleteஇல்லை சார் கமல் இருந்தால் நாளைக்கு ஷூட்டிங் கிளம்பலாம் :-)
Deleteஅட அவசரத்துக்கு நம்ம தலீவரை வைச்சு ஷூட்டிங் ஆரம்பிச்சுக்குவோம் sir ; கமல் பிக் பாஸ் 4 முடிச்சிட்டு வந்த பிற்பாடு : 'இவர் இடத்திலே இனி இவர்' என்று கார்ட் போட்டு தலீவரை மறுக்கா பதுங்குகுழிக்கு பேக் அப் பண்ணிடுவோம் !
Deleteஅடடே,என்னே தலைவருக்கு வந்த சோதனை...
Deleteநம்ம தலைவருக்கு அழுகாச்சி சீன் எல்லாம் புடிக்காது சார்,ஒன்லி ஆக்ஷன்,காமெடிதானாம்.....
தலைவர் தாரை பரணி அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் :-)
Deleteசரியா சொன்னீங்க...வயதானவர்கள் இளமையான மேக்கப் போடலாம்...ஆனால் என்னை போன்ற சிறுவனுக்கு வயதான கெட்டப் போட்டால் உலகம் ஒத்துக்கொள்ளாது சார்...:-)
Delete74வது
ReplyDeleteமகாநதி கிட்டத்தட்ட இதே கதைதானே சார். மகளின் வாழ்வை வீணடித்த கயவர்களை கண்டுபிடித்து தண்டிப்பது என்ற கான்செப்ட்.
ReplyDeleteஉண்மை தான் பத்து சார்! சமீபத்திய 'பாபநாசம்' கதை கூட கிட்டத்தட்ட இதைப் போன்றதுதானே!
Deleteஇதே மாதிரி இந்திரஜித்(Indrajeet) என்று அமிதாப் பச்சனின் பழைய படம் ஒன்று வந்தது. வளர்ப்பு மகள் மற்றும் மருமகனின் சாவிற்கு பழி வாங்கும் அப்பாவின் கதை.
Deleteஇரும்பு மனிதன் ஆர்ச்சி பற்றிய முதல் பத்தியை வரிக்கு வரி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். இனிமேல் ஆர்ச்சி வந்தால் வண்ணத்தில் தான் வரனும் என்ற அளவுக்கு ஈர்த்து விட்டான் இரும்பு மண்டையன்... இந்த கதையின் வசனங்கள் அப்படியே 1985-90 களில் வந்த ஆர்ச்சி கதைகளின் வசனங்களை நினைவுபடுத்தின என்றால் மிகையல்ல... பல இடங்களில் ஆர்ச்சியின் வசனங்கள் கைதட்டல்களையும், குதூகலத்தையும் வரவழைத்தன...
ReplyDeleteஇந்த கதையை காதில் பூச்சுற்றல் கொண்டவையாக சத்தியாமாக பார்க்கத் தோன்றவில்லை... செப்டம்பர் மாதத்தின் ஜாக்பாட், அக்மார்க் நம்பர் ஒன் நமது இரும்பு மண்டையன் மட்டுமே...
ஆர்ச்சி 2.0 அதகளமாக தொடங்கி விட்டது நண்பர்களே...
ஆர்ச்சி இன் கலர் - வாழ்க வாழ்க!!
Delete//1985-90 களில் வந்த ஆர்ச்சி கதைகளின் வசனங்களை நினைவுபடுத்தின என்றால் மிகையல்ல..//
DeleteSame pen ; same feelings !!
அருமை...இன்றைக்கு வாய்ப்பு கெடச்சா படிச்சிப்புடனும் படிச்சி
Deleteபந்தம் தேடிய பயணம் மிகவும் இயல்பான நபர்கள் ஆனால் ஆக்ரோஷமாக நகரும் கதை. டெக்ஸ் மற்றும் கார்சனுக்கு கதைக்கு ஏற்ப வசனங்கள் மற்றும் ஆக்சன். கதையில் மிகவும் பாதித்தவர்கள் கெவின் மற்றும் எம்மா மற்றும் அவர்களுடன் பயணம் செய்யும் பெண்கள்.
ReplyDeleteகெவினின் கூச்ச சுபாவம் அதனால் அவனுக்கு ஏற்படும் பாதிப்பு அதில் இருந்து வெளிவர தெரியாமல் அடுத்து அடுத்து செய்யும் தவறுகள்.
எம்மா மற்றும் அவருடன் உள்ள பெண்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் மனதை கவர்ந்து விட்டார்கள். எம்மா பாத்திரம் படைப்பு. அவர்கள் ஒரு குழுவாக இவ்வாறு பயணம் செய்வதற்கான காரணம் அதில் ஒரு வரலாற்று உண்மையும் இருப்பது மிகவும் சிறப்பு. இறுதியில் இவர்களின் குறிக்கோள் நிறைவேறாது வருத்தமாக இருந்தது அதேநேரத்தில் டெக்ஸ் அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை கொடுத்தது இன்ப அதிர்ச்சியாக மனதிற்கு நிம்மதியை தந்தது.
எம்மா குழுவில் நடுவே வரும் சகோதரர்கள் குழு, கெவின் சித்தப்பா மற்றும் பெண்களை ஏமாற்ற காத்திருக்கும் கூட்டம் மற்றும் காயூஸ் கூட்டம் இவர்களுடன் டெக்ஸ் அண்ட் கார்சன் நடத்தும் சண்டைகள் செம விருந்து டெக்ஸ் ரசிகர்களுக்கு.
எம்மா மற்றும் அந்த பெண்கள் குழுவை மீண்டும் எப்போது பார்ப்போம் என உள்ளது. இவர்கள் மீண்டும் வரும் கதை ஏதாவது இருந்தால் அதனை தேடிப்பிடித்து வெளியிட ஆசிரியரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
போனெல்லியிடம் சொல்லணும் சார் - இதுக்கொரு பார்ட் 2 ரெடி பண்ணுங்கன்னு !
Delete///இறுதியில் இவர்களின் குறிக்கோள் நிறைவேறாது வருத்தமாக இருந்தது///
Deleteஎனக்கும் வருத்தமே! அத்தனை சிரமங்களைத் தாண்டிச் சென்ற பின்னரும் எல்லாமே வீண் என்பதைப் போல்!!
// போனெல்லியிடம் சொல்லணும் சார் - இதுக்கொரு பார்ட் 2 ரெடி பண்ணுங்கன்னு ! //
Deleteஅடுத்த முறை நீங்கள் அவர்கள் குழுமத்தை சந்திக்கும் போது இதனை ஒரு கோரிக்கையாக நமது வாசகர்கள் சார்பாக வைக்கலாமே.
அடடே,அடடே,அருமை...
Delete// இறுதியில் இவர்களின் குறிக்கோள் நிறைவேறாது வருத்தமாக இருந்தது //
Deleteகுறிக்கோள் நிறைவேறவில்லை எனினும் பெரும் இடர்பாட்டில் இருந்து தப்பித்தார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்,சில நேரங்களில் நம் எண்ணங்கள் ஈடேறாமல் போவது நன்மையில் முடியும்...
// குறிக்கோள் நிறைவேறவில்லை எனினும் பெரும் இடர்பாட்டில் இருந்து தப்பித்தார்கள் என்பதுதான் சரியாக இருக்கும், //
DeleteAgreed.
அவர்களின் ஆசை நிறைவேறி இருந்தால் பந்தம் தேடிய பயணம் கதை கதையில் வெற்றியை கொண்டு வந்திருக்கும் தான்..ஆனால் இந்த முடிவு மனதிற்குள் வெற்றியை ஈட்டியுள்ளது எனலாம்..
Delete// சில நேரங்களில் நம் எண்ணங்கள் ஈடேறாமல் போவது நன்மையில் முடியும்.. // உண்மை இதை தான் நானும் உணர்ந்தேன். அருமை ரவி அண்ணா
Delete'தனித்திரு.. தணிந்திரு'வில் அந்தப் பெரியவர் ஆன்டர்ஸனுக்கு சுமார் 65 வயது மதிக்கலாம்! ஆரம்பப் பக்கங்களில் ஒரு பாருக்குச் சென்று குடித்துவிட்டு, அங்கிருக்கும் விலைமாதுவிடம் 'டிஸ்கஷன்' நடத்திவிட்டு, பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பும் போது 'இந்தப் பெரிசு ஏன் இப்படிப் பண்ணுது?'னு கேள்வியெழுகிறது!
ReplyDeleteஆனால் அதன் பிறகான பக்கங்களைப் புரட்டும்போது அதற்கான காரணங்களை பூடகமாக விளங்கிக் கொள்ள முடிகிறது!!
அப்பாவும் , பிள்ளையும் இணைந்தே கதையை நகற்றியுள்ளனர் என்பது நிதானமாய் புரட்டும் போது தான் புரியும் !
Deleteஒரு கிராமமே சேர்ந்து துரத்த, ஆன்டர்ஸன் இருட்டில் - அந்தக் காட்டுக்குள் - குறிப்பாக ஏரியில் மூழ்கித் தப்பிக்கும் காட்சிகளெல்லாம் - திக் திக்!!
Delete// ஒரு கிராமமே சேர்ந்து துரத்த, ஆன்டர்ஸன் இருட்டில் - அந்தக் காட்டுக்குள் - குறிப்பாக ஏரியில் மூழ்கித் தப்பிக்கும் காட்சிகளெல்லாம் - திக் திக்!! )//
Deleteஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசித்தேன். இந்த கதையும் சரி டெக்ஸ் கதையும் பற்றி நிறைய எழுதலாம். நேரம் இல்லாத காரணத்தால் விரிவாக எழுத முடியவில்லை.
சார் அந்நாளில் ஈகிள் மேன் என்ற பெயரே ஓராயிரம் உணர்வுகளைத் தட்டியது...அதுவும் மே மாதக் கொண்டாட்டம்....அதை உயர்த்த அந்தக் குண்டு புக்க கையிலேந்திய தருணம்...பக்கத்தப் புரட்டுணா புரட்டிப் போட்ட வண்ணம்...அஞ்சிலே யின் வண்ணங்கள் மங்கி இங்கு நீங்கள் போட்டிருந்தாலும்...மனதில் அடிக்கப்பட்ட முதல் நிறமும்...அந்தப் பளீர் வண்ணங்களும் மாறிடாதே....சிங்கத்தின் சிறுவயதில் அற்புதப் பதிவு மீண்டும்...வாய்ப்பிருந்தா வண்ண மேக்சில
ReplyDelete*அஞ்சிலே*...அச்சிலே
Delete*அஞ்சிலே*...அச்சிலே
ReplyDeleteரின் டின் கேன் மற்றும் ஸ்மர்ப் கதைகள் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கதைகள். அந்த கதைகள் வரும் போது கதை சொல்ல கேட்டு மகிழ்வார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் வரவில்லை.
ReplyDeleteஇந்த முறை ஆர்ச்சி வண்ணத்தில் பார்த்தவுடன் அதனை அவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆர்ச்சியை பார்த்தவுடன் "அப்பா யாரோ ஒரு அங்கிள் உங்களை புனை போல் பிராண்ட போவதாக சொன்னதற்கு இந்த ஆர்ச்சி டவுசரை போட்டுக்கொண்டு தானே அடுத்த ஈரோடு புத்தகத் திருவிழா போக போவதாக சொன்னீர்கள்" என மகள் ஈரோடு விஜயை ஞாபகபடுத்தி கதைக்குள் ஆர்வமுடன் சென்றோம். தினமும் 10 பக்கங்கள் விதம் கடந்த ஐந்து நாட்களின் இரவு நேரம் அவர்கள் ஆர்ச்சியுடன் பயணம் செய்து ஆர்ச்சிக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். ஆர்ச்சி யின் பஞ்ச் டயாலாக்குகளை சினிமா பட மாடுலேசனில் பேசி சொன்னதை மிகவும் ரசித்தார்கள்.
கிம்லெட் என்ற அந்த துளை போட்டு நிலப்பரப்புக்கு கீழே பயணம் செய்யும் இயந்திரத்தை பற்றி சொன்ன உடன் "incredible 2" படத்தில் ஆரம்ப காட்சியில் வரும் "under miner" பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். Incredible 1&2 படத்தை நாங்கள் பல முறை பார்த்து ரசித்து சிரித்த படம்.
Deleteவாழ்க ரின்டின்கேன்!
Deleteவாழ்க ஆர்ச்சி!
வாழ்க பிறாண்டும் பூனைகள்!!
சூப்பர்ல
Deleteசார் ஆயிரம் axaக்கள் வந்தாலும்மாடஸ்டியை மிஞ்சமுடியாதுங்சார். இன்றைய கலர், மாக்ஸி, லயன்புத்தகங்கள் ஆயிரம் இருந்தாலும் பழையநியூஸ் பேப்பர் ப்ரிண்ட் கபாலர் கழகம்அட்டைப்படத்திற்க்குஈடாகாதுங்சார்அத்தனையும். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமுத்து காமிக்ஸின் முதல் இதழான 'இரும்புக்கை மாயாவியை' முடிந்தால் வண்ணத்தில் வெளியிடலாமே சார்.
ReplyDeleteசீனியர் எடிட்டரை கௌரவித்தது போலவும் இருக்கும், சீனியர் ஹீரோவையும் கௌரவித்தது போலவும் இருக்கும்.
முத்து காமிக்ஸின் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக இதனை வெளியிடலாம்.
முத்துவின் வண்ண வெளியீடுகள் அனைத்தும் வண்ணத்ல வரும்கிறது காலத்தின் கட்டாயம் நண்பரே
Deleteநாங்கள் மாடஸ்டியை ரசிப்பதுலயனின் பால்ய நினைவுகளினால் தான் சார் நம்மஜான்மாஸ்டர்வந்தால் என்ன உணர்வோ அதுதான்சார் மாடஸ்டி வந்தாலுமே. நம்புங்கசார்லயன்மேலசத்தியமா.
ReplyDeleteஜொல்லிட்டோம் சாரி நம்பிட்டோம் ராஜசேகரன் :-)
Deleteஅப்படியே லாரன்ஸ் / டேவிட் , ஜானி நீரோ இவர்களது முதல் கதைையையும் வண்ணத்தில் வெளியிடலாம். (ஹி..ஹி..ஸ்டெல்லா வண்ணத்தில் வருவாங்க இல்ல..பக்கத்து இலைக்கு பாயாசம்)
ReplyDelete////ஸ்டெல்லா வண்ணத்தில் வருவாங்க இல்ல.////
Delete😻😻😻😻😻😻
கதையைப் படித்துமுடித்த கணத்தில் 'தனித்திரு.. தணிந்திரு' என்ற தலைப்பு எந்தவகையில் இக்கதையோடு பொருந்திப்போகிறது என்று சற்றே குழம்பினேன் தான்!
ReplyDeleteகருப்பினத்தவர்கள் - ஊருக்கு ஒதுக்குப்புறமாய் காலனி அமைத்துக்கொண்டு வாழ நேர்ந்திருப்பதை 'தனித்திரு' என்பதற்கான அர்த்தத்தையும்,
வெள்ளையர்களால் மிருகங்களை விட கேவலமாக நடந்தப்பட்டாலும், எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாத அவர்களது பரிதாப நிலைமையை 'தணிந்திரு' என்பற்கான அர்த்தமாகவும் பிற்பாடு புரிந்து கொண்டேன்!
புரிந்துகொள்ள உதவியாய் இருந்தது - கடந்த பதிவில் எடிட்டரின் ஒரு பின்னூட்டமே!!
கருப்பினத்தவரின் அவலத்தைச் சொல்லும் இக்கதைக்கு இதைவிடவும் அழகான, பொருத்தமான தலைப்பு கொடுத்துவிட முடியாதுதான்!!
kudos to you, எடிட்டர் சார்!!
அதன் காரணமாகவே நான் இதனை படித்து முடித்ததும் மார்ட்டின் லூத்தர் கிங் சீனியர் நினைவுக்கு வருகிறார் என்று பதிவிட்டேன்.அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழில் என் பள்ளிப்பருவத்தில் படித்தது நினைவு வந்தது.
Delete/// கருப்பினத்தவர்கள் - ஊருக்கு ஒதுக்குப்புறமாய் காலனி அமைத்துக்கொண்டு வாழ நேர்ந்திருப்பதை..///
Deleteஇந்த அவலங்கள் அங்கு மட்டும்தானா? நிறத்தை வைத்து மனிதனை எடை போடும் அவலங்கள் எல்லா இடத்திலும் உள்ளது. மனிதருக்கு நிறம் உண்டு.. மனிதத்திற்கு நிறம், இனம் என்ற பேதமெல்லாம் இல்லை.
'வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர்தம்
உள்ளத்தனையதுயர்வு' என்கிறது வள்ளுவம்.
இங்கும் தலைவரின் பாடல் பொருந்தி வருகிறது.
'நான் ஏன் பிறந்தேன்' படத்தில், குழந்தைகளுக்காக எம் ஜி ஆர் பாடும் 'தம்பிக்கு ஒரு பாட்டு' எனும் பாடலில் வரும் வரிகள் இவை.
பிறப்பால், வளர்ப்பால் இருப்பவர் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்.
இனத்தால் அல்ல, மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்.'
மனிதம் எது என்பதை உணர்த்தும் திரு.அவினாசி மணி அவர்களின் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
( Sorry போரடித்திருந்தால் மன்னிக்கவும்)
ஏங்காணும் பத்து சாரே... நீங்கள் பழைய PUC யா இல்ல ஐயர் செகண்ரியா
Delete'தனித்திரு.. தணிந்திரு'வில் மனதைத் தொட்ட இன்னொரு சம்பவம் :
ReplyDeleteவிலாவில் துப்பாக்கிக் குண்டை வாங்கிய நிலையில், போலீஸின் கண்களில் படாமல் பெரியவர் ஆன்டர்ஸன் தன் ஆருயிர் நண்பனின் வீட்டுக்கதவைத் தட்டுவார். நண்பனின் மனைவி நர்ஸ் வேலையில் அனுபவமுள்ளவர் என்பதால் அவரிடம் முதலுதவி பெற்றுக் கொள்வார்! ஆன்டர்ஸனுக்கு உதவியது போலீஸுக்குத் தெரியவந்தால் தன் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள் என்ற இக்கட்டான நிலையில், முதலுதவி பெற்று வெளியேறும் ஆன்டர்ஸனிடம் அந்த நண்பன் சொல்லுவான் "சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதேப்பா.. நீ மறுபடியும் இங்கே வந்துடாதே. உன்னை மறுபடியும் சந்திக்க நாங்க விரும்பலே" என்று!
அதற்கு ஆன்டர்ஸன் "கவலைப்படாதே நண்பா! நாம் சந்திப்பது இதுவே இறுதி முறை!" என்று உறுதியுடன் சொல்லிக்கிளம்புவார் - தன் முடிவு எப்படியாகப் போகிறது என்பதை நன்கறிந்தவராய்!!
மனதை கனமாக்கிய காட்சி!!
மிகவும் அற்புதமான காட்சி அமைப்பு; என்னை மிகவும் பாதித்தது. வாழ்கையில் இதுபோன்று சம்பவங்கள் நடப்பதும் உண்டு என்பது உண்மை.
Deleteஇவை கற்பனை காட்சிகள் இல்லை.
Dear Editor,
ReplyDeleteஅந்நாளில் 1983-84 என்று நினைவு - condorman படமும் வந்தது சார். 1981ல் US ரிலீஸ் - அப்போவெல்லாம் world premiereல் இந்தியா சேர்த்தி இல்லை என்பதால் இது இரண்டு வருடங்கள் கழித்து இங்கே வந்தது. அதனைப் பார்த்திருந்த நான் நமது காமிக்ஸ் பார்த்தவுடன் என்னடா eagle man -ன்னு போட்டிருக்கு அனால் condor man படத்துல வர மாதிரியே இருக்கே என்று நினைத்ததுண்டு.
ஹ்ம்ம் .. அப்போ blog எல்லாம் இல்லியா - நீங்க தப்பிச்சுடீங்க ? :-) இப்போது மறுபதிப்பு செய்ய முடியுமா பாருங்கள் சார்.
பனி அசுரர் படலம் - ஆர்ச்சியை வண்ணத்தில் இந்த Maxi size ல் பார்க்கும் பொழுது வரும் உணர்வே வேறு, இந்த தரத்தில் இந்த விலையில் கொடுப்பது உண்மையில் இத்துறைக்கு செய்யும் சேவைதான் Sir, நன்றி என்று ஒரு வார்த்தையில் கூற இயலவில்லை, இது போல இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் Sir
ReplyDeleteவரும் நாட்களின் ஆன்லைன் புத்தக விற்பனையில் சர்ப்ரைஸ் இதழ்கள் எத்தினி என்று,எம்மாம் பெரிசு என்று ஏதேனும் குறிப்புகள் கிடைக்குமா சார்...
ReplyDeleteஒரு சில புத்தகங்கள். எனக்கு தெரிந்து இரண்டு புத்தகங்கள் ஆன்லைன் புத்தக திருவிழாவிற்கு வரும் என நினைக்கிறேன்.
Deleteஅடுத்த மாதம் டெக்ஸ் புத்தகம் எதுவும் இல்லை எனவே ஏதாவது ஒரு டெக்ஸ் இதழ் வர வாய்ப்புள்ளது.
Deleteமற்றொரு கதை கென்யா அல்லது ஏதாவது ஒரு கார்டூன் கதையாக இருக்கலாம் :-)
எனது கணிப்பு ஒரு புத்தகம் ஏதேனும் ஒரு reprint கொரில்லா சாம்ராஜ்யம். இரண்டாவது புத்தகம் எடிட்டர் சொன்ன ஈரோட்டில் வெளியிடுவதாக இருந்த கருப்பு வெள்ளை புத்தகமோ????
Deleteகொரில்லா சாம்ராஜ்யம்னா கூடுதல் மகிழ்ச்சி...இன்னோர் கத மெக்சிகன் பழிக்குப்பழின்னாலும் மகிழ்ச்சி...ரண்டும் மேக்சிங்றதால மேக்சிமம் மகிழ்ச்சிய்ய்ய்
DeleteMaxi புத்தகத் திருவிழா போது வரும் என்று ஆசிரியர் சொன்னதாக ஞாபகம். இந்த வருடம் ஈரோடு புத்தகத் திருவிழா இல்லை எனவே கண்டிப்பாகm maxi reprint கதை ஒன்று ஆன்லைன் புத்தக திருவிழா போது வர வாய்ப்புகள் அதிகம்.
Deleteஎல ரெண்டு வருதுன்னு ஆசிரியரே அறிவிச்சாச்சி....இங்ன வந்து எட்டுக்கால் பூச்சிக்கு நாலு கால்னு கூவுறது அதிகமாப் படுதல
Deleteஇந்த மாத இதழ்களில் எது முதல் இடம் என்பதில் தனித்திரு தணித்திரு மற்றும் பந்தம் தேடிய பயணம் இரண்டுக்கும் இடையில் சரியான போட்டி இருக்கும். மிகுந்த மன போராட்டத்திற்கு இடையே தனித்திரு தணித்திரு என்னளவில் முதல் இடம் பிடிக்கிறது. டெக்ஸ் என்ற மெகா ஸ்டாரை ஒரு இயல்பான கதைக்களத்தில் ரசிக்க செய்தாலும் ஒரு இயல்பான கதையில் ஒரு இனத்திற்கு நடக்கும் கொடுமை மற்றும் அந்த இனத்தில் உள்ள ஒரு வயதானவரின் வலியை ஒரு இயல்பான ஆக்சன் மூலம் காண்பித்து ஆண்டர்சன் என்ற மனிதரை என்றும் மனதில் உட்கார வைத்தது இந்த கதைக்கு முதலிடம் என்னளவில்.
ReplyDelete// இன்ன மெரி இன்ன மெரி ஜவ்வு மிட்டாய்களை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிரித்துத் தந்து வந்திருக்கிறோம் ; இந்த லட்சணத்தில் புதுசாய் உன் பங்குக்கு மஸ்கொத் அல்வா ரெடி பண்ண முற்பட்டால் யார் தான் வாயைத் திறப்பார்கள் என்று !! //
ReplyDeleteஒரு சீரியஸான விஷயத்தை இப்படி காமெடி கலந்து சொல்வது உங்களுக்கு கைவந்த கலை சார். மிகவும் ரசித்தேன் உங்கள் எழுத்துக்களை.
பனி அசுரர் படலம்!!!
ReplyDeleteஆர்ச்சி ஆற்றில் இறங்கி அம்மாம் பெரிய ஸ்டீம் படகை இழுக்க ஆரம்பித்தவுடன் ( செந்தில் கவுண்டமணியிடம்: கப்பல்ல வேலைண்ணே! கடல்ல கப்பல் நின்னவுடனே நீங்க கீழே இறங்கி தள்ளணும்) துவங்கிய சிரிப்பு அடுத்த பத்து பக்கங்களுக்கும் நிற்காததால் மூடி வச்சிட்டேன்...
எடிட்டர் ஏமாத்திட்டார்தான்னுதான் சொல்லணும்!
பின்னே?
அர்ஸ் மேக்னா முன்னாடி வரும்
வாண்டு ஸ்பெஷல் பின்னாடி வரும்னாரு..
ஆனா பனி அசுரர் படலத்தை முன்னாடியே விட்டுட்டாரு!! :-)
எடிட்டரின் "வண்ணக்கனவுகள்' நிறம் மாறாத பூக்கள்தான்...
ஆனா ப.அ.ப என்னவோ மழலைப்பட்டாளம்தான்...
லக்கி லூக்,கிட் ஆர்ட்டினுக்கு கூட இவ்வளவு சிரிச்சதில்ல...
// லக்கி லூக்,கிட் ஆர்ட்டினுக்கு கூட இவ்வளவு சிரிச்சதில்ல. //
Deleteஅப்படியா நல்லா சிரிச்சுக்கோங்க. ஏதோ ஓர் விதத்தில் எங்கள் கோமுட்டி மண்டையன் உங்களை கவர்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியே :-)
செனா அனா ஜீ...டேவிட்டே தென்னை மரத்தை பிடித்து வளைக்கும் பொழுது இரும்பு மனிதன் மரத்தை வளைப்பதும் ,கப்பலை இழுப்பதும் நடவாத காரியமா என்ன...?
Deleteதனித்திரு...தணிந்திரு..
ReplyDeleteஈவி சொன்னதுதான்...ட்யூராங்கோ கதையிலேயே கடேசி கதைக்கு சன்னமான எதிர்ப்பை பதிவு செய்திருந்தேன்..
அதில் ப்ரீ டீன் அப்யூஸ்
த.த...வில் டீன் அப்யூஸ்
பொதுவாக இது மாதிரி கதைக்களங்கள் - விட்டு விலகி நிற்பது சுபாவம்...
ஆண்டவனுக்கே படைக்கப்படும் அரளி மலர்கள் தாங்கி நிற்கும் விதைகளிலும் விஷம் உண்டு ..
டெக்ஸ்!!
ReplyDeleteபந்தம் தேடிய பயணம்!!!
வன்மேற்கில் உயிர் வாழ்வதே சிரமம் என மறுபடியும் எடுத்து காட்டும் கதை..
பலமுறை சொல்லியிருப்பதுதான்..
டெக்ஸ் உலா வரும் பிராந்தியங்கள் கதையையும் தாண்டி பூகோள ரீதியாக எப்போதும் வசீகரிப்பவை...
இக்கதையோ அப்பப்பா !!!!
ஒருவேளை யங் டெக்ஸ் பயணித்திருந்தால் அப்பெண்களில் யாரேனும் ஒருவர் மேல் காதல் வயப்பட்டு குடும்பம் ,குழந்தை என ஓரிடத்தில் செட்டில் ஆகியிருக்கலாம்...
பலருக்கும் பாயாசம் காட்டும் வேலை மிச்சமாயிருக்கும்..:-)
கதைக்களம் பிரமாதம்...
பெண்களை கட்டுபடுத்த டெக்ஸால் முடியவில்லை என படித்தபோது இனம் புரியாத நிம்மதி உணர்வு மனதில் நிரம்பியது ..
எடிட்டர் கொடுத்துள்ள வரலாற்று குறிப்பினை நேரம் கிடைக்கையில் ஆராய வேண்டும்
9.5/10
////பெண்களை கட்டுபடுத்த டெக்ஸால் முடியவில்லை என படித்தபோது இனம் புரியாத நிம்மதி உணர்வு மனதில் நிரம்பியது ..///
Deleteசெனா அனா...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
This comment has been removed by the author.
Delete// பெண்களை கட்டுபடுத்த டெக்ஸால் முடியவில்லை என படித்தபோது இனம் புரியாத நிம்மதி உணர்வு மனதில் நிரம்பியது ..//
Deleteநம்மை படைத்தவரால் கூட முடியாது என நினைக்கிறேன். :-)
///பெண்களை கட்டுபடுத்த டெக்ஸால் முடியவில்லை என படித்தபோது இனம் புரியாத நிம்மதி உணர்வு மனதில் நிரம்பியது ..///
Delete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பந்தம் தேடிய பயணம் புதிய வாழ்க்கைக்கான தேடல் பற்றி, ரசனை+விறுவிறுப்பு கலந்து புனையப்பட்டது.
ReplyDeleteதனித்திரு, தணிந்திரு தொலைந்துபோன ஒரு உறவை தேடும் இன்னொரு உறவைப் பற்றி வலி+வேதனை கலந்து புனையப்பட்டது.
இரண்டு கதைகளிலும் முதியவர் உண்டு.
ப.தே.ப.த்தில் கதைக்குள் முதியவரும் வருகிறார்.
த.த.வில் முதியவர்தான் கதையே.
த.த.கதையை படித்து முடித்தவுடன் எனக்கு முதலில் தோன்றியதே தலைப்பின் தேர்வு தான்.
ஆசிரியரின் பெரும்பாலான தலைப்புகள் எல்லாம் ஒன்று, பனாவுக்கு பனா , தானாவுக்கு தானா, இனாவுக்கு இனா என்றிருக்கும் அல்லது கதை, படலம் என்று முடியும் வகையில் இருக்கும். ஆனால் எல்லாமே கதைக்குப் பொருந்தி வரக்கூடிய டைட்டில்களாகத்தான் இருக்கும்.
இந்தக் கதையின் தலைப்பையும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால்..
படித்து முடித்ததும், அந்த தலைப்பு சொல்லும் அர்த்தமே வேறு ஒரு வகையான வேதனை தருவது.
கருப்பினத்தவரின் அன்றைய அவல வாழ்வை இந்த இரண்டு வாாத்தைகள் மிகுந்த தெளிவுடனும், வலியுடனும் விளக்கி விட்டன. There is no words.
hats of to you sir, a your title Chosen.
///இரண்டு கதைகளிலும் முதியவர் உண்டு.
Deleteப.தே.ப.த்தில் கதைக்குள் முதியவரும் வருகிறார்.
த.த.வில் முதியவர்தான் கதையே.///
சூப்பரா சொன்னீங்க பத்து சார்!
பை த வே, ப.தே.ப'வில் முதியவர்னு நீங்க சொன்னது கார்சனை இல்லேன்னு நம்பறேன்!
// படித்து முடித்ததும், அந்த தலைப்பு சொல்லும் அர்த்தமே வேறு ஒரு வகையான வேதனை தருவது.
Deleteகருப்பினத்தவரின் அன்றைய அவல வாழ்வை இந்த இரண்டு வாாத்தைகள் மிகுந்த தெளிவுடனும், வலியுடனும் விளக்கி விட்டன //
தலைப்பு வைப்பதில் நமது ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர் தான்.
டிங்டாங்குக்கு வாய்ப்பு தரனும் சார் வாண்டுமலராய்
ReplyDeleteஈகிள்மேன் துவக்க வரிகள் அருமை
ReplyDeleteகார்சன்: ஏம்ப்பா.. டெக்ஸு.. நீ மட்டும்தான் என்னை ஓட்டறேன்னு பார்த்தா, இப்ப நம்ம கதைய படிக்கிறவங்க எல்லாம் சேர்ந்து என்னை ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நான் முதியவராமே..எல்லாம் என்னோட நேரம்.
ReplyDeleteடெக்ஸ் : கோவிச்சுக்காத பெரிசு. வேணும்னா உனக்கு, அவங்க வெச்சிருக்கிற சங்கத்துல சொல்லி, ' வெண்தாடி வேந்தன்' அப்படின்னு பட்டம் தரச் சொல்லவா?
கார்சன்: நீ ஆணியே புடுங்க வேணாம் ஆளை விடுப்பா சாமி..
138
ReplyDeleteஉள்ளேன் ஐயாஸ்..!!
ReplyDeleteஎடிசார் மேக்ஸி கலரில் உங்களின் முதல் நாயகி மாடஸ்டிக்கு வாய்ப்பு வழங்கினால் மிகவும் மகிழ்வோம்
ReplyDeleteகடந்த மாத கடைசியில் தான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன்..
ReplyDeleteமேக்ஸி இதழில் சித்திரங்கள் பெரியதாக உள்ள கதை இருந்தால் வெளியிடலாமே என்று..
இந்த மாத இதழில் ஆர்ச்சி பட்டைய கிளப்பி விட்டது..
பக்கங்களில் அளவான ஆறு கட்டங்களில் சித்திரங்கள் முழு பக்க அளவில் சித்திரங்கள் என கலக்கலாக இருந்தது..
கதை என்னவோ வழக்கம்போல காதில் பூ சுற்றுவதாக இருந்தாலும் மிக மிக ரசித்தேன் சார்..
இதே சைஸில் அடுத்து கூர் மண்டையரின் இதுவரை வெளிவராத கதை ஒன்று எதிர்பார்க்கிறேன் சார்..
இதே போல சித்திர அதகளத்துடன் வேறு புதிய கதை இருந்தாலும் வெளியிடுங்கள் சார்..
///இதே சைஸில் அடுத்து கூர் மண்டையரின் இதுவரை வெளிவராத கதை ஒன்று எதிர்பார்க்கிறேன் சார்..///
Delete+1
ஆர்ச்சிக்கு கிடைத்த மேக்ஸி சைஸ் மரியாதையைப் பார்த்து குற்றச்சக்கரவர்த்தி கோபத்தில் கொந்தளித்துக் கிடக்கிறாராம்! கோபம் தலைக்கேறி புரபசர் பெல்ஹாமைப் போட்டுத் தள்ளுவதற்குள் ஒரு அறிவிப்பை வெளியிட்டாத் தேவலாம்!
//ஆர்ச்சிக்கு கிடைத்த மேக்ஸி சைஸ் மரியாதையைப் பார்த்து குற்றச்சக்கரவர்த்தி கோபத்தில் கொந்தளித்துக் கிடக்கிறாராம்!//
Deleteகும்பகோண வெற்றிலை குப்பண்ணா:
ஆர்ச்சி,ஸ்பைடர் ரீப்ரிண்ட் பத்தி என்ன நினைக்கிறீர் ஓய்!
பன்னீர் சீவல் பரந்தாமன்!
கிழடு கட்டைகளுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வைக்கறதா நினைச்சு மனச தேத்திக்க வேண்டியதுதாங்காணும்
கு.வெ.குப்பண்ணா:
அவங்களுக்கு மேக்ஸி சைஸ்,கலர் எல்லாம் கொடுக்கறத பத்தி...?
ப.சீவல் பரந்தாமன்:
அறுபதாம் கல்யாணம் கட்டிகிட்டவாளுக்கு ஸ்விட்சர்லாந்து ஹனிமூன் பேக்கேஜ் கொடுக்கறதெல்லாம் டூமச் என படுகிறது ஓய்!
////அறுபதாம் கல்யாணம் கட்டிகிட்டவாளுக்கு ஸ்விட்சர்லாந்து ஹனிமூன் பேக்கேஜ் கொடுக்கறதெல்லாம் டூமச் என படுகிறது ஓய்!////
Delete😂😂😂😂😂😂 எப்படில்லாம் யோசிக்கறாங்க!! 😂😂😂😂😂😂
ஆர்ச்சி இதழின் Maxi சைஸ் சூப்பர், வர்ணம் அட்டகாசம், சித்திரம் பேஷ், பேஷ்,மேக்கிங் அதகளம். ஆனாாா இந்த கதைதான்... வந்து வந்து...,ரசனையின் முதிர்ச்சி கண் கூடாகத் தெரிகிறது! ஒரு 15 பக்கங்கங்கள் படித்திருப்பேன்...கண்ணை கட்டிடிச்சி. அப்புறென்ன ஹாவ் ...
Delete/// அறுபதாம் கல்யாணம் கட்டிகிட்டவாளுக்கு ஸ்விட்சர்லாந்து ஹனிமூன் பேக்கேஜ் கொடுக்கறதெல்லாம் டூமச் என படுகிறது ஓய்! ///
Delete😁😁😁😁😁😁😅😅😅😅😅😅😅😅
வண்ணக்கனவான டிங்பாங் இன்று வண்ணத்தில் காமிக்ஸ் என மாற dingdong ஒரு catalyst! Ding dong வெளிவராமல் போனாலும் இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் உரம் என்பது நிதர்சனம்!
ReplyDeleteபனி அசுரர் படலம் வண்ணத்தில் மிரட்டல்! ஆண்டுக்கு ஒரு முறையேனும் இதுபோன்று maxi size spider, ஆர்ச்சி கதைகளை வெளியிட வேண்டுகிறேன்.இந்த மாதத்தின் பெரிய highlight பனி அசுரர் படலம்!
ReplyDeleteஉண்மை
Deleteஉண்மை!! இந்த மாதத்திற்கான limelightஐ ஆக்கிரமித்திருப்பது சட்டித்தலையனே என்பது என் யூகமும்!!
Deleteஆர்ச்சிக்கு இணையேது...துணையா ஜுனியர் ஆர்ச்சிய போட்டா பரணி பயபுள்ள புள்ளகுட்டியோட சிரிச்சி ரசிப்பான்....அப்டியே நம்ம எலைக்கும்
Deleteநேற்றுக் கிடைத்த ஒரு ஓய்வுப் பொழுதில் 'இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்' - அதிகாரியின் கதையை ஒரு மறுவாசிப்பு விட்டேன்!! என்னவொரு தடதடக்கும் சாகஸம்!! முதல்பக்கத்திலிருந்து கடேசி பக்கம் வரை குதிரையிலும், ரயிலிலும் மாற்றிமாற்றிப் பயணித்து மூச்சிரைத்துவிட்டது!!
ReplyDeleteசில கதைகளில் பக்கங்களை நாம் புரட்டவேண்டியதிருக்கும்.. சில கதைகள் நம்மைப் புரட்டிப்போடும்!!
இது இரண்டாவது ரகம்!!
உங்களை புரட்டிப்போடற அளவுக்கு இருந்தால் அது கண்டிப்பா வலுவான கதையாத்தான் இருக்கனும் ஈ.வி......!!!!!
Delete@AR
Deleteகுறும்பு!!🤨🤨
// கண்டிப்பா வலுவான கதையாத்தான் இருக்கனும் ஈ.வி......!!!! //
Delete:-)
செமை'யான கதைதா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteகடந்து வந்த பாதையில் மனதில் தங்கிய விஷயங்களை மீண்டும் நினைத்து பார்ப்பது ஒரு தனி சந்தோஷம் தான். நண்பர்கள் புண்ணியத்தில் அந்த கருப்பு வெள்ளை புத்தகமாவது கண்ணில் பட்டது. வண்ணத்துப் பிரதியை எந்த அதிர்ஷ்டசாலி கையகப்படுத்தி இருக்கிறாரோ தெரியவில்லை.
அந்த சமயத்தில் பூந்தளிர், ரத்னபாலா, சிறுவர் மலர் 'விற்கு போட்டியாக இன்னொரு பதிப்பகம் கிடைக்காதா என்ற ஏக்கத்திற்கு டிங்டாங் ஒரு நல்ல தொடக்கமாக இருந்திருக்கலாம். A missed opportunity for sure.
முன்பே கேட்டிருப்பேன் இருந்தும் திரும்ப சொல்லி வைக்கிறேன். உங்கள் நினைவாற்றலுக்கு என்ன மருந்து வைத்திருக்கிறீர்கள் ?! :) அந்த 'ரகசியத்தை' எங்களுக்கும் கொஞ்சம் தெரிவியுங்களேன். ;)
நிச்சயமா பட்டய கிளப்பியிருக்கும்....ஆனா ஸ்பைடர்..ஆர்ச்சி...டெக்ஸ நிச்சயமா இழந்திருப்போம் .... இல்லையா ஆசிரியரே
Delete// முன்பே கேட்டிருப்பேன் இருந்தும் திரும்ப சொல்லி வைக்கிறேன். உங்கள் நினைவாற்றலுக்கு என்ன மருந்து வைத்திருக்கிறீர்கள் ?! :) அந்த 'ரகசியத்தை' எங்களுக்கும் கொஞ்சம் தெரிவியுங்களேன். ;) //
Deleteநானும் பலதடவை இதனை யோசித்து வியந்ததுண்டு. ஒரே மாதிரியான Rountine Life'ல் வாழ்க்கையை நகர்த்தாமல் புதிய விஷயங்களை, பிரச்சனைகளை, இடங்களை சந்திக்கும் மனிதர்களுக்கு மறந்து போகும்படியான முக்கியத்துவமற்ற அனுபவங்கள் குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
Glad that he decided to shares those and understands how the passionate readers value it! :)
இன்னு பாயாசங் கொதிக்கி.....????
ReplyDeleteரம்மி குய்யாங்கிளியா எவ்வளவு அழுது புலம்பினாலும் டெக்ஸ் கதை ஹிட்டடிக்கறதை தவிர்க்க முடியாது.
Deleteஅவரு தீவிர டெக்ஸ் ரசிகராச்சே....நாம் ஒரு வழில ரசிச்சா...அவரு ஓர் வழில ர'சிரிப்பார்...ரம்மியாச்சே....அவரு ரசனய ரசிக்க நாம இருக்குமே...பாயாசத்த கொதிக்க வச்சாச்சி...பக்குவப்படுத்றாப்லயாம்
Deleteமுத்து காமிக்ஸ் 50 ம் ஆண்டு மலர். என்ன என்ன கதைகள் போடலாம் என்று எடி முடிவு செய்து வைத்திருப்பார். இருந்தாலும் நம் பங்குக்கு கொஞ்சம் கொளுத்தி போடலாம்.
ReplyDeleteபுக் செட் 1
முத்து காமிக்ஸ் என்றாலே மாயாவி தான். இதுவரை மறுபதிப்பு காணாத
1.கொலைகார குள்ளநரி முழு வண்ணத்தில்
2. அதிகமுறை மறுபதிப்பு காணாத ஜானி இன் ஜப்பான் முழு வண்ணத்தில்
3. இதுவரை மறுபதிப்பு காணாத காணாமல் போன கடல் முழு வண்ணத்தில்.
இந்த மூன்றும் ஒரே புத்தகமாக.
புக் செட் 2
எவர்கிரீன் துப்பறியும் ஹீரோக்கள் ரிப் கிர்பி, காரிகன், விங் கமாண்டர் ஜார்ஜ் மூன்று புதிய கதைகள் ஒரே புத்தகமாக.
புக் செட் 3
மூன்று வேதாளர் கதைகள் முழு வண்ணத்தில் ஆர்ட் பேப்பரில்.
எடி சார் போதுமா
மாண்ட்ரெக், ஃப்ளாஷ் கோர்டனை விட்டுட்டீங்களே!
Deleteஇதுவரை பதிப்பே காணாத ஸ்பைடரோட அந்த500பக்க குண்டு புக்க விட்டுப்புட்டியல...சிறப்பு அழைப்பாளராக முத்துக்கு கூப்ட்டா வராமலா போயிருவாரு
Deleteகேளுங்கள் தரப்படும்
ReplyDeleteதட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்.
அடுத்த மாத ரெகுலர் சந்தாக்களில் வர வேண்டிய புத்தகங்கள் 3, நண்பர் JSK ஸ்பெஷலும் அடுத்த மாதம்தான் வரும் என நினைக்கிறன். இது எல்லாம் போக ஆசிரியர் ஆன்லைன் புத்தக திருவிழாவிற்கு ஓரிரு surprise புத்தகங்கள் இருக்கும் என சொன்னதை பார்த்தால் அடுத்த மாதம் மொத்தம் 5-6 புத்தகங்கள் வரும் போல் தெரிகிறது! அடுத்த செம காமிக்ஸ் கொண்டாட்டமான மாதமாக அமைய போகிறது நமக்கு என நினைக்கிறன். காமிக்ஸ் தீபாவளி ஒரு மாதம் முன்னால் ஆரம்பிக்கிறது ஐ ஜாலி ;-)
ReplyDeleteஆமால...அளவா குதில....தலை மாடிய பொத்துடப் போவுது
Delete// யாரோ ஒரு புண்ணியவான் , எதையோ அச்சிடக் கொண்டு வந்து இறக்கியிருந்த பேப்பரிலிருந்து கொஞ்சத்தைச் சோமாறி - 32 பக்கங்கள் கொண்ட டிங்-டாங்கில் வெறும் 100 பிரதிகள் மட்டும் அச்சிட்டோம் ! அவை பைண்டிங் செய்யப்பட்டு கையில் புக்காய் தரப்பட்ட போது சந்திராயன் ; சென்றாயன் என எல்லா ராயன்களையும் ஏவியது போலான பெருமிதம் ஊற்றெடுத்தது ! //
ReplyDelete:-) :-)
மறந்துட்டோமே எல்லாரும்இன்னும் 50 நாளில் தீபாவளி. வழக்கம் போல் தலைதீபாவளி என்றாலும் அறிவிப்பே பட்டாசு வெடிக்குமே. வரும் வாரம் அறிவிப்புங்க ஸார் ப்ளீஸ்
ReplyDelete.. கரூர்ராஜ சேகரன்
கோரோனா எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது :-(
Deleteஹார்டுபௌண்ட்ல
Deletesir,Your gpay amount received, Spider -sarpathin savaal pre booking no-220.thank you
ReplyDeleteநாங்களும் கட்டிட்டமுள்ள
Deleteமறந்துட்டேன் ஸ்டீல்!!! எவ்ளோ கட்டணும்?
Deleteகூரியரோட?
@செனா அனா
Delete'சர்ப்பத்தின் சவால்' cover price Rs.90 (+55 கூரியர் தமிழகத்துக்குள்)
மூன்று பிரதிகள் வரைக்குமான மொத்த கூரியர் செலவு ரூ.55 மட்டுமே என்று lion comics app சொல்கிறது!
(நீங்க இன்னும் நம்ம lion comics appஐ நிறுவவில்லை போலிருக்கே?!!)
ஈவி!! டாங்ஸ்!! ஆப் டவுன் லோடிட்டு விட்டேன்...ஆனா அதுல பாக்கல!
Deleteதோ ரெண்டு காப்பி ஆர்டர் பண்ணப் போறேன்..
தீவாளிக்கு ஸ்பைடர் வண்ணத்தில் உண்டா சார்
ReplyDeleteஈகில் மேன் என்கிட்ட இருக்கு.....
ReplyDeleteஎன்னோட நீங்கா நினைவுகளும்...
ஆர்ச்சி வண்ணத்தில் அற்புதம்.... சார்....
ReplyDeleteமீண்டும் பனி அசுரர் படலம் படிக்கப்போறேன்...அஞ்சாம் வகுப்பு மணவனாய்
ReplyDeleteவிசில் போட்டாச்சு சார்
ReplyDeleteஇன்றைய மாலைப் பொழுது 'என் பெயர் டைகர்' (மறுவாசிப்பு) உடனும், சகதர்மிணியின் லேசான முறைப்புடனும், (படிச்சதையே திரும்ப படிக்கிற அளவுக்கு, அதில் அப்படி என்னதான் இருக்கோ?) பாவனையுடனும், இனிதே ஆரம்பம்.
ReplyDeleteபுத்தத்தை பிரித்து காமிக்ஸ் டைம் படித்ததும், இளம் டைகர் கதைகளுக்கு ஆசிரியரிடம் மறுபடியும் துண்டை விரிக்கலாமா என்று ரோசனை மனதிற்குள் அலையடிக்கிறது.
/// ஏங்காணும் பத்து சாரே... நீங்கள் பழைய PUC யா இல்ல ஐயர் செகண்ரியா..///
ReplyDeleteதாமதமான பதிலுக்கு, மன்னிக்கணும் J சார். நான் உங்கள் கமெண்ட்டை கவனிக்கவில்லை. நான் PUC அல்ல. 'ஐயர்' செகண்ட்ரிதான்.அதுவும் தலைவர் முதல்வராக இருந்த காலகட்டமான 1978 ல் அறிமுகப்படுத்தப்பட்ட +2 முதல் பேட்ச் மாணவர்களில் (முதல் மாணவன் அல்ல) நானும் ஒருவன் என்னும் பெருமைக்குரியவன்.
Reply