Powered By Blogger

Thursday, June 18, 2020

Here we go...!

நண்பர்களே,

வணக்கம். As always கொஞ்சம் குடிமிப்பிடிகள் இருந்தாலே ஒரு லாஜிக் அறியா தேடல் களைகட்டும் போலும் ! இந்த முறையும் அதற்கொரு விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்க கடந்த சில தினத்து டிக்கிலோனா பின்னூட்ட ஆட்டங்கள் உதவியுள்ளன ! எது எப்படியோ - இதோ இன்று முதல் இந்த "இரத்தப் படல 300" -க்கான  முன்பதிவு & கவுண்ட்டௌன் துவக்கம் காண்கிறது !  ஏற்கனவே அறிவித்த விபரங்களை இன்னொரு தபா ஸ்பஷ்டமாய் இங்கே அறிவித்தும் விடுகிறேனே - குழப்பங்கள் எவ்விதத்திலும் தலைகாட்டக் கூடாதெனும் பொருட்டு :

*"இரத்தப் படலம்" பாகம் 1 to 18 ப்ளஸ் புலன்விசாரணை முழு வண்ணத்தில் - ஏற்கனவே வெளியான அதே ரெகுலர் சைசில் !

**ஆர்ட்பேப்பரில் 1000 பக்கங்கள் கொண்ட ஒற்றை புக் பைண்டிங்கில் நடைமுறை சாத்தியமா ? என்பதைக் கண்டறிந்த பின்னே இது குறித்து இறுதி செய்யப்படும் ! ஒருக்கால் அத்தனை கனமான புக்கினை பைண்ட் செய்வதில் டெக்னிகல் சிக்கல்கள் இருப்பின், 2 வால்யூம்களாய் புக்ஸ் தயாரிக்கப்படும் ! Ultimately, உங்கள் பணத்துக்கும் , பொருளுக்கும்  நானே பொறுப்பு எனும் போது - எனது தீர்மானத்தை லாஜிக் மாத்திரமே வழிநடத்துமே தவிர்த்து, இஸ்தரியோ , ஜாங்கிரியோ பெயர் சொல்லுமென்ற கற்பனைகளாக இராது ! So இதனில் எனது முடிவு விவாதங்களுக்கு உட்பட்டதாக இராது ! லட்சியம் ஒன்றே ! சிக்கலெனில் இரண்டே ! 

**ஸ்லிப்கேஸ் கிடையாது. 

**குறைந்த பட்சமாய் 300 புக்குகளுக்கு முன்பதிவு - முழுத் தொகைகளுடன் 90 நாட்களுக்குள் கிட்டினால் மட்டுமே இந்த பிராஜெக்ட் முன்னெடுத்துச் செல்லப்படும் !

**முன்பதிவுக்கான கால அவகாசம் : 17 ஜூன்'20 முதல் செப்டம்பர் 15' வரையிலும் !

**இதழின் விலை : ரூ.3900 + கூரியர் & பேக்கிங் கட்டணமாய் ரூ.200 ; ஆக மொத்தம் ரூ.4100 . Rs.4200 for Bengaluru.

**முன்பதிவு இலக்கைத் தொட்ட 120 நாட்களுக்குள் - அதாவது ஜனவரி 15 2021-க்கு முன்பாக புக் தயாரித்து அனுப்பப்படும் ! 

**ஒருக்கால் முன்பதிவு இலக்கை எட்ட இயலாது போயின் வசூலித்த தொகைகள் திரும்ப அனுப்பப்படும் ; அல்லது பணம் செலுத்தியவர் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களது பெயரில் 2021-ன் சந்தாவில் வரவு செய்யப்படும் ! முன்பதிவு செய்திடும் நேரமே இந்த option குறித்து தெரிவித்திடல் அவசியம் ! 

**எவ்விதக் குறிப்புகளும் இன்றிச் செய்யப்படும் முன்பதிவுகள் - சந்தாவிற்கு carry forward செய்திடும் சம்மதத்துடனானதாய்க் கருதப்படும் !  

**இதழினைத் தயாரிப்பதாகயிருப்பின், இந்தக் கொரோனா மந்த நாட்களில் மட்டுமே பணிகள் சாத்தியமாகிடும் என்பதால்  இந்த முன்பதிவின் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. So it's either 90 days or bust !! 

**ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது : http://lioncomics.in/pre-booking-xiii/732-xiii-the-collector-s-300-a-19-part-full-collection-limited-edition-in-colour-tn-courier-post.html

**அயல்நாட்டு போஸ்டல் சேவை தற்காலிகமாய் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த இதழினை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பிட கட்டணங்களைக் கண்டறிய சாத்தியமாகாது ! உத்தேசமாய் இப்போதைக்கு இதழின் விலையினை மட்டும் (ரூ.3900) அனுப்பி முன்பதிவு செய்து கொண்டு அப்புறமாய் ஏர் மெயில் கட்டணத்தொகைகளை அனுப்பிடலாம் !  

**இதர நாட்டினருக்குமே நடைமுறை இதுவே ! Cost of the book now ; the shipping costa later on...!

**தினம்தோறும் முன்பதிவு விபரங்கள் இங்கே update செய்யப்படும் ! 

**இந்தச் சிரம நாட்களில் இத்தகையதொரு முயற்சியினை முன்னெடுப்பதில் எனக்குள் நிரம்பவே நெருடல்கள் குடியிருப்பதை இங்கே ஒளிவின்றிப் பதிவு செய்கிறேன் ! வாசகர்களின் தொடர் வலியுறுத்தல்களுக்கு செவி சாய்க்கும் பொருட்டு மாத்திரமே இத்தனை பணத்திலான இதழை மறு-மறு-மறுபதிப்பிட சம்மதம் தெரிவித்துள்ளேன்  ! ஒருக்கால் இலக்கை எட்டிட  இம்முறை சாத்தியப்படாது போயின் - எனது பணிநாட்களுக்குள் இந்த முயற்சி இனியொருமுறை தூசி தட்டிடப்படாது என்பதையும் சந்தேகங்களுக்கு இடமின்றிப் பதிவு செய்திடுகிறேன் ! So "இரத்தப் படலம்" இதழின் பொருட்டு இன்னொரு 'மறுபதிப்பு முஸ்தீபு' அடுத்த 7 ஆண்டுகளுக்கு மத்தியிலாவது  சர்வ நிச்சயமாய் சாத்தியமாகாது !

**P.S :இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சம், வசூல் தொகையிலிருந்து ரூபாய் .ஒரு லட்சம் அரிய வகைப் புற்று நோயால் அவதிப்படும் 5 வயதுச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கொரு சிறு பங்காய் அனுப்பிடப்படும். In case சிறுமிக்கான பணம் அதன் முன்பாகவே வசூலாகி, அவளது வைத்தியங்கள் நிறைவுற்றிருக்கும் பட்சத்தில் நமது ஒரு லட்சம் அடையாறு கேன்சர் செண்ட்டருக்கு நன்கொடையாய் வழங்கப்படும் ! 

Good luck with the bookings guys ; you are going to need it for sure !!

Bye all !! See you around !

315 comments:

  1. இன்ப அதிர்ச்சி!!!!

    ReplyDelete
  2. வந்து விட்டேன்...:-)

    ReplyDelete
  3. நான் வாங்கப் போவதில்லை என்றாலும் ரத்தப் படல ரசிகர்களுக்கு கனவு மறுக்கா நனவாக வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நன்றி ஆசிரியரே...

    ReplyDelete
  5. உங்களது தெளிவான இரத்தப்படல அறிவிப்புக்கு. மிக்க நன்றி சார்...பல குழப்பங்களுக்கு தெளிவான விடைகிடைத்துள்ளது சார்...நன்றி சார்...

    ReplyDelete
  6. நேனு ஒஸ்தானு 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
    .

    ReplyDelete
  7. தீபாவளிக்கே கிடைக்குமென நினைத்திருந்த எங்களது கனவை தகர்த்துவிட்டீர்களே சார் 🤷🏻‍♂️
    .

    ReplyDelete
    Replies
    1. கையிலருக்கிற கலர்ரத்தப்படலத்தை எடுத்து தீபாவளி அன்னிக்கு படிச்சுக்குங்க

      Delete
    2. ஷெரீஃப் ஹிஹிஹி

      Delete
  8. ////
    **தினம்தோறும் முன்பதிவு விபரங்கள் இங்கே update செய்யப்படும் !
    ///

    அப்படீன்னா அடுத்த 90 நாட்களுக்கு தினமும் இங்கே 'பார்டா!!' என்று ஆச்சரியப்படுவதற்கோ 'த்சொ த்சொ' என்று உச்சு கொட்டுவதற்கோ சமாச்சாரம் இருக்கும் போலிருக்கே!! :)

    ReplyDelete
  9. இதுவரை கிடைக்கப்பெறா கனவான்களுக்கு எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்த சந்தோஷமும்..இரத்தப்படல இரசிகர்களுக்கு இன்னொரு ஜூகல் பந்தியும்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  10. ***ஸ்லிப்கேஸ் கிடையாது.**
    டக்குன்னு படிச்ச போது பகிர்ன்னு ஆகி போச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. அப்போ நீங்களும் அப்பிடித் தான் படிச்சீங்களா??

      Delete
  11. இரத்த படலம் புத்தகம் இது வரை கிடைக்காத நண்பர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. பார்க்கலாமே 90 நாட்களில் 300 முன் பதிவை எட்டுமா என்று???

    ஒன்று அல்லது இரண்டு புத்தகமாக வெளியிடுவது பற்றிய முடிவை ஆசிரியரே வைத்து உள்ளது நல்ல முடிவு.

    I'm also keeping my fingers crossed to see how this goes.

    ReplyDelete
    Replies
    1. பேசாம நாமெல்லாம் ஒரு பக்கம் இலக்கை எட்டுமா எட்டாதான்னு பந்தயம் கட்டி விளையாடலாம். என்ன சொல்றீங்க?

      Delete
    2. கம்பேக்கிற்கு பிறகு எடிட்டர் சார் அறிவிப்பு செய்த எல்லா புராஜெக்ட்ம் வெற்றிதான் நண்பர்களே!

      இம்முறையும் அப்படியே!

      உங்களுக்கு பெட்டிங் வேற மாதிரி வைக்கலாம்.

      ஏற்கெனவே எடிட்டர் சார் அறிவிப்பு செய்து நடைமுறைபடுத்திய ஒரேயொரு புராஜக்ட் மட்டுமே தோல்வியை தழுவியது!

      அது எந்த புராஜக்ட்????

      புகைப்படங்கள் உடன் என் வாட்ஸ்ஆப் நெம்பரில் "9629298300" ல் பதிலை தெரிவியுங்கள்!

      2021 ஈரோடு விழாவில் சரப்ரைஸ் பரிசு உண்டு!

      Delete
    3. ///பேசாம நாமெல்லாம் ஒரு பக்கம் இலக்கை எட்டுமா எட்டாதான்னு பந்தயம் கட்டி விளையாடலாம். என்ன சொல்றீங்க?///

      Super!!! Bet 1.25 pisa??

      Delete
    4. @ Selam tex vijaragavan
      Detective special
      சரியா ஜி? 😜

      Delete
    5. இல்லை ஜி! கம்பேக் கிற்கு முன்பு நடந்தது அது.

      Delete
  12. எடிட்டர் சார் சனி இரவு vlog kku waiting.

    ReplyDelete
    Replies
    1. Me too. ஒரு நிமிஷம் சன்டே ஆகிடுச்சோ என்று பயந்தே போயிட்டேன்.

      Delete
  13. என்னிடம் கலர் எடிசன் இருக்கிறது.

    இருந்தும் யோசிப்போம்!👍

    ReplyDelete
  14. ஒரு முழு குண்டு புக்கா போடுங்க. கண்டிப்பா நான் வாங்குவேன்.

    ReplyDelete
  15. Sir. I think this website address changed from http://lion-muthucomics.blogspot.in/ to http://lion-muthucomics.blogspot.com/. i used to open the site from bookmarks tab in laptop and for last one month the site didnt open

    ReplyDelete
  16. online listing site is not user friendly sir. it requires sign in. as usual i will debit in bank ac and send mail

    ReplyDelete
  17. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லோருக்கும் நல்லது!

    நண்பர்ர்களுக்குள் அபிப்ராய பேதம் வந்த இந்த இரண்டு, மூன்று நாட்களை பல்லை கடித்துக்கொண்டு அசாத்திய பொறுமையுடன் கடத்திவந்தேன்.
    நல்லவேளையாக யாருடைய சட்டைக்கும் சேதாரம் இன்றி நல்ல முடிவு கிடைத்துள்ளது.

    கடேசி வாய்ப்பு இதுவரை வாங்கத் தவறிய நண்பர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

    நிச்சயமாக ஜேசன் தோல்வியை தழுவமாட்டார்.

    ட்ரிபிள் செஞ்சுரி அடிப்பார்.

    புலரப்போகும் 2021ம் புத்தாண்டு காமிக்ஸ் நண்பர்களுக்கு புதிய விடியலை கொணரும்..........💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  18. திசைமாறிய தேவதை :

    ஆரம்பத்தில் ஒரு அதிரடி ஆக்சன் சம்பவத்துடன் தொடங்கும் கதையானது.. சில பக்கங்களை சற்று மெதுவாக கடந்து பாதியில் வேகமெடுத்து இறுதிவரை விறுவிறுவென்று பயணிக்கிறது.!

    அம்மாவிடம் தான் ஒரு போலிஸ் அதிகாரி என்பதை எவ்விதம் எத்தனை நாட்களுக்கு சோடாவால் மறைக்கமுடியுமென்று தெரியவில்லை.! மப்டியில் வேலைபார்க்கும் ரகசிய போலிஸ் என்றால்கூட ரகசியமாக வைத்திருக்க வாய்ப்புண்டு.. ஆனால் இவரோ யூனிபார்ம் துப்பாக்கி சகிதம் வேலைபார்க்கும் ஒரு சராசரி போலிஸ் அதிகாரி.! என்னதான் விட்டுக்கு வரும்போது பாதிரியார் ட்ரெஸ்ஸில் வந்தாலும்.. ட்யூட்டி டைமில் தெரிந்தவர்கள் யாருமேவா பார்த்து அம்மாவிடம் சொல்லமாட்டார்கள்..!சரி.. அது சோடாவோட பிரச்சினை நமக்கெதுக்கு.. நாம் கதைக்கு வருவோம்.!

    கதையின் ஆரம்பத்தில் நடக்கும் ஆக்சன் சம்பவத்தில் கொலைகார போக்கிரி ஒருவனை சோடா என்கவுண்டர் செய்துவிடுகிறார்.! இதனால் வெறியேறிய போக்கிரியின் தந்தையான பெரும்போக்கிரி சோடாவுக்கு இழப்பின் வலியை புரியவைக்க நினைத்து., சோடாவின் தாயாரின் உயிருக்கு மிகப்பெரிய தொகையை வெகுமதியாக அறிவித்துவிடுகிறான்.!
    அதனால் புற்றீசல் போல் கிளம்பும் கொலைகாரர்களிடம் இருந்து (தன்னுடைய ரகசியம் வெளிப்பட்டுவிடாமல்) தாயாரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை இரண்டாம் பாதி முழுக்க செம்ம விறுவிறுப்பாக சொல்லி(காட்டி)யிருக்கிறார்கள்.!

    கதையோடு சேர்ந்து ஓவியங்களில் கிளைச் சம்பவங்கள் சிலவும் சுலாரஸ்யமாக ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன.!

    சில சம்பவங்கள் கதைக்கு சம்மந்தப்பட்டு.. சில சம்பவகள் கதையின் போக்கில் சம்மந்தப்படாமல்.. உதாரணமாக.. தொட்டியில் விழும் சிகரெட் துண்டை விழூங்கிவிட்டு மீன் வாந்தியெடுப்பது.. பார்க்கில் போகிற போக்கில் ஒரு பிக்பாக்ட் திருடனை மாட்டிவைத்து அடிவாங்க வைப்பது..!
    மற்றபடி சில இடங்களில் வசனமே இல்லாமல் ஓவியங்களின் துணையாலேயே கதை சிறப்பாக சொல்லப்பட்டும் இருக்கிறது.! உதாரணமாக.. சோடாமம்மியை கார் ஏற்றி கொல்ல வரும் கொலைகாரன் பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக்கொண்டு வந்து டைமிங் மிஸ்ஸாகி குடைக் கவரை ஏற்றிவிட்டு செல்வது.. எதிர் அப்பார்ட்மெண்ட் ஓனரை மடக்கி அங்கிருந்து ஜன்னல் வழியாக சோடாமம்மியை போட்டுத்தள்ள நடக்கும் திட்டம்... இப்படி பல.!

    அட.. இவனும் கொலைகாரனா..!? அட.. இவளும் கொலைகாரியா..!? அட.. இவங்களும் கொலைகாரங்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு செம்ம த்ரில்லிங்கான இரண்டாம் பாதி.!

    குறைகள் என்று பார்த்தால் சில இடங்களில் ரொம்பவே டீட்டெய்லாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் கொகொசவென்று இடத்தை அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை உண்டாக்குகின்றன.!

    மற்றபடி சோடா ஒரு வித்தியாசமான அறிமுகம் . தாராளமாக தொடர்ந்து குடிக்கலாம்(ரசிக்கலாம்) என்பது என் அபிப்ராயம்.!

    திசை மாறிய தேவதை - (சோடாவின் மம்மிக்கு) திசை மாறாத தேவதை.

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
  19. இம்மாதம் வந்த புத்தகங்களில் கடைசியாக படிக்க எடுத்தது ப்ளூகோட் பட்டாளத்தை. படிக்க ஆரம்பித்தவுடனே புரிந்து விட்டது இதைத்தான் முதலில் எடுத்திருக்க வேண்டும்!
    ரொம்ப நாளைக்கு பிறகு மனம்விட்டு சிரிக்கக்கூடிய முழுமையான கார்ட்டூன் கதை(பாதிவரை படித்ததிற்கே இந்த விமர்சனம்)

    எனது மார்க் 10க்கு மேல்தான்.
    நான்கில் இதுதான் முதலிடம்! சூப்பரோ சூப்பர்👌

    ReplyDelete
    Replies
    1. ///இதைத்தான் முதலில் எடுத்திருக்க வேண்டும்!///

      Super

      Delete
    2. ///எனது மார்க் 10க்கு மேல்தான்.
      நான்கில் இதுதான் முதலிடம்! சூப்பரோ சூப்பர்👌.///


      சூப்பர் சார்..!

      2021 ல் மாதமொரு கார்ட்டூன் இடம்பிடிச்சிடும்கிற நம்பிக்கை துளிர்விட ஆரம்பிச்சிடுத்து..!

      Delete
    3. ஷையோ..ஷையோ...!!

      வேணும்னா இப்படி பண்ணுவோமா ? செமையா 300 புக்ஸ் கார்டூனிலேயும் ; அதுக்கொரு முன்பதிவு ; ஒரு குத்து மதிப்பா ஐஞ்சாயிரம் விலை ! இன்னிக்கே விளம்பரம் பண்றோம் ; பைனான்ஸ் கிடைச்ச ஒடனே ஷூட்டிங் போறோம் ; தெறிக்க விடறோம் ! ரைட்டா ?

      Delete
    4. ஒரு கார்ட்டூன் சந்தா வ இப்படி அறிவிச்சிருக்கலாம் சார், 12 புக் , நீங்களே லிஸ்ட் ரெடி பண்ணிட்டு, 2021 கார்ட்டூன் முன்பதிவு சந்தா னு சொல்லியிருக்கலாம். 300 பேர் வந்தா, சந்தா வரும், புக்கும் வரும். இல்லனா வழக்கமான சந்தா மட்டும் தான்.

      நான் எனக்கு ஒன்னு என் அம்மாக்கு ஒன்னு னு ரெண்டு புக் பண்ணியிருப்பேன்.

      :(

      எல்லாரையும் சமாளிக்கணுமங்கிற உங்க கஷ்டம் உங்களுக்கு.

      கன்னத்தில் கை வைத்து ஆசையோடு கனா காணும் படங்கள் பத்து..

      Delete
    5. ///2021 ல் மாதமொரு கார்ட்டூன் இடம்பிடிச்சிடும்கிற நம்பிக்கை துளிர்விட ஆரம்பிச்சிடுத்து.///

      நேக்கும் தான்!!

      ////இன்னிக்கே விளம்பரம் பண்றோம் ; பைனான்ஸ் கிடைச்ச ஒடனே ஷூட்டிங் போறோம் ; தெறிக்க விடறோம் ! ////

      ஹை! எடிட்டர் சினிமா எடுக்கப்போறார்!
      சார் அப்புறம்.. ஹீரோ வேஷங்கட்ட நீங்க ஆள் தேடி அலையவேண்டியிருக்காது.. ஒரு பொட்டி நிறைய அட்வான்ஸ் பணத்தை எடுத்துகிட்டு ஈரோடு பக்கமா வந்தீங்கன்னா கால்ஷீட் வேலைய முடிச்சுடலாம்! என்னான்றீங்க?!

      Delete
    6. வில்லன் ரோலுக்கு ஞான் ரெடி..கால்சீட்டு கைசீட்டு எந்த பிரச்சினையும் கிடையாது. எப்போ கூப்பிட்டாலும் ஓடிவந்திடுவேன்.. பொட்டி அட்வான்ஸ் எதுவுமே வாணாம்.!

      80s 90s ல வந்தமாதிரி அஞ்சாறு ரேப் சீன்ஸ் மாத்திரம் இருந்தாப் போதும்..!:-)

      Delete
    7. //ஒரு பொட்டி நிறைய அட்வான்ஸ் பணத்தை எடுத்துகிட்டு ஈரோடு பக்கமா வந்தீங்கன்னா கால்ஷீட் வேலைய முடிச்சுடலாம்! என்னான்றீங்க?!//

      ஆமால்லே...நம்ம ஸ்டாலின் சார் சூப்பரா செட் ஆவார் !!

      Delete
    8. மாமா எப்பவுமே வில்லனுக்கு நாங்கதான் செட் ஆவோம்.. பெரிய கிருதா வச்சுகிட்டு கோவமா மூஞ்சி எங்களுக்குதான் செட்ஆகும்...

      Delete
    9. செயலரு கெடக்காரு சார்..நான் free யா ஹீரோவா நடிக்கிறேன் ..:-)

      Delete
    10. வாட்ஸ்ஆப்புல நம்ம போட்டோவை பார்த்துட்டு ஹீரோ கணக்கா இருக்கீங்களேனு நிறைய பேர் பாராட்டுனாங்க! ஏதோ சோல்லனும்னு தோணுச்சி!

      Delete
    11. ///ஆமால்லே...நம்ம ஸ்டாலின் சார் சூப்பரா செட் ஆவார் !!///

      ஔவையார் படத்தை ஆம்பிளை கெட்டப்புல எடுக்கப் போறிங்களா சார்.!?

      Delete
    12. ///செயலரு கெடக்காரு சார்..நான் free யா ஹீரோவா நடிக்கிறேன் ..:-)///

      முன்னேயெல்லாம் மலையாளப்படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு மருத்துவத்துறை விளம்பரம் போடுவாங்க தலீவரே..

      "என் பெயர் முகேஷ்.. எனக்கு 24 வயது ஆகிறது"

      அப்படீன்னு அந்த விளம்பரம் ஆரம்பிக்கும்.! நம்ம பாடி கன்டிசன் அதுக்குதான் தலீவரே ஒத்துப்போகும்.!

      Delete

      Delete
    13. ///மாமா எப்பவுமே வில்லனுக்கு நாங்கதான் செட் ஆவோம்.. பெரிய கிருதா வச்சுகிட்டு கோவமா மூஞ்சி எங்களுக்குதான் செட்ஆகும்...///

      அசால்ட் ஆறுமுகத்தோட அடியாள் போண்டாமணி மாதிரி இருக்கும்.!

      ///வாட்ஸ்ஆப்புல நம்ம போட்டோவை பார்த்துட்டு ஹீரோ கணக்கா இருக்கீங்களேனு நிறைய பேர் பாராட்டுனாங்க! ///

      நம்பினாத்தான் சோறா..!?

      Delete
    14. கிட்!! சிரிச்சு முடியல! :)))))))))

      Delete
    15. ////ஆமால்லே...நம்ம ஸ்டாலின் சார் சூப்பரா செட் ஆவார் !!///

      கதை முதியோர் இல்லத்தை சுற்றிச்சுழன்று வருதுங்களா சார்?!! :D

      Delete
    16. நடிச்சா ஹீரோ தான் சார்..!

      Delete
  20. அன்பார்ந்த நண்பர்களே!

    கடந்த முறை மூன்று பாகங்களாய் வந்ததால் கையில் தூக்கி வைத்து படிக்க முடிந்தது.
    புத்தகத்தை வாங்கி விட்டு ஒரு முறை மட்டுமே படிக்கப்பவர்களுக்கு மற்றும் வெறும் காமிக்ஸ் கலெக்சன் செய்ப்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஒற்றை புத்தகம் சரிப்பட்டு வரும்.

    எனவே பழையபடி மூன்று பாகங்களாக போட்டால் பிரித்து படிப்பதற்கு எதுவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தீர்மானம் எனது கையில் மட்டுமே நண்பரே ; ஆகையால் இதன் பொருட்டு இன்னொரு அலசலோ, விவாதமோ அரங்கேறிடாது !

      Delete
  21. இரண்டு புத்தகங்களாக போட்டால்கூட நன்றாக இருக்கும் நண்பரே. அதாவது குண்டு புக் ஆசை ஓரளவு நிறைவேறும்.

    ReplyDelete
  22. P.S :இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சம், வசூல் தொகையிலிருந்து ரூபாய் .ஒரு லட்சம் அரிய வகைப் புற்று நோயால் அவதிப்படும் 5 வயதுச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கொரு சிறு பங்காய் அனுப்பிடப்படும். In case சிறுமிக்கான பணம் அதன் முன்பாகவே வசூலாகி, அவளது வைத்தியங்கள் நிறைவுற்றிருக்கும் பட்சத்தில் நமது ஒரு லட்சம் அடையாறு கேன்சர் செண்ட்டருக்கு நன்கொடையாய் வழங்கப்படும் !

    ReplyDelete
    Replies
    1. நல்ல விசயம் எடிட்டர் சார்!! இதற்காகவாவது இந்த ப்ராஜக்ட் வெற்றியடையணும்!!

      Delete
    2. நிச்சயமா நடக்கும் சார்....

      Delete
    3. நல்ல முடிவு ..வாழ்த்துக்கள் சார்..!

      Delete
    4. நல்ல விசயம் எடிட்டர் சார்.
      தங்களது எண்ணப்படி நல்லது செய்ய , இந்த புராஜக்ட் நிச்சயமாக வெற்றி பெறும்!

      Delete
    5. நல்ல முடிவுங்க சார். இதுக்காகவே இந்த திட்டம் வெற்றி அடைய வேண்டும்.

      Delete
  23. Already having b&w and Colour collector's Edition so I am not participating in the mela. But I pray to have grand success of this project for its noble cause.

    ReplyDelete
  24. எடிட்டர் சார், முன்பதிவு செய்பவர்களுக்கு XIII படம் போட்ட ஒரு t shirt அன்பளிப்பாக தரலாமே! அல்லது ஒரு hand band ....

    ReplyDelete
  25. அல்லது ஒரு கேப். இப்படி எதாவது ஒரு memento புத்தகத்துடன் தர வாய்ப்பு இருந்தால் பரிசீலனை செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு லேது Unknown நண்பரே !

      Delete
    2. கண்டீப்பா ஏதாவது நெனைச்சு வச்சிருப்பார் நம்ம ஆசிரியர்.. முன் பதிவு முடிந்தவுடன் அறிவிப்பார் நிச்சயமா நம்மல வெறும் புக்கோட அனுப்ப மாட்டார்....

      Delete
    3. பழனி....வாயால் சுடும் வடைகள் ஒரு போதும் பசிக்கு உதவாது !

      போக வேண்டிய இலக்கில் கவனம் செலுத்தும் நேரமிது ; குருவி ரொட்டியா ? குச்சு முட்டாயா ? என்ற அலசலுக்கானதல்ல !

      Delete
  26. கைதியாய் டெக்‌ஸ்..


    மீண்டும் ஓர் அட்டகாசமான ,பொழுது போக்கான ,விறுவிறுப்பான சாகஸத்தை படித்தாயிற்று...எடுத்தவுடன் வில்லனாக வரும் டெக்ஸ் என கதை ஆரம்பித்தவுடனே முழுவேகத்தில் சூடு பறக்கிறது.அழகான சித்திரங்கள் டெக்ஸ் குழுவினருடன் இன்னும் நெருக்கமாகவும் உலவ வைக்கிறது.டெக்ஸ் கதையை திரும்ப திரும்ப எத்துனை முறை பாராட்டுவது ..அதே அதே தான்...ஆனால் இக்கதையில் டெக்ஸ் மீது ஓர் சிறு வருத்தம் ஏற்பட்டது உண்மை..தன்னுடைய உருவத்தில் வந்து வங்கி அதிபரிடம் வில்லன் பணம் வாங்கி சென்றதற்கு அவர் பொறுப்பாக முடியுமா..? ஆனால் பணம் வராவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வங்கி அதிபரை மிரட்டுவது இந்த முறை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.யானைக்கும் அடி சறுக்கும் என நினைத்து கொண்டு சமாதானமாகி கொள்கிறேன்.

    மற்றபடி அருமையான நேரக் கடத்தலுக்கு உகந்த இதழ் கைதியாய் டெக்ஸ்

    ReplyDelete
  27. இரத்த படலம் மறுபதிப்பு பற்றிய விளக்கத்துக்கு நன்றி. நான் சந்தாவில் இல்லை, அவ்வப்போது பிடித்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து வருவித்து கொள்கிறேன். அது போல மே ஜூன் புத்தகங்களை வாங்க ஆன் லைன் லிஸ்டில் பார்த்தால், ஜூன் புத்தகங்கள் தனித்தனியாக லிஸ்டில் உள்ளது, மே மாத லிஸ்ட்ல may2020 pack என்று மொத்தமாக இருக்கிறது. ஜூம் செய்து பார்த்தாலும் புத்தகங்களின் பெயர் விலை சரியாக தெரியவில்லை, மே பேக் தனிதனியாக லிஸ்டிங் செய்தால் நன்றாக இருக்கும். சில புத்தக வெப்சைட்டில் புத்தகத்தின் முகப்பை நன்றாக ஜூம் செய்து பார்க்க முடியும், மேலும் புத்தகம் உள்ளடக்கம் பற்றிய இரண்டு வரியில் சிறு குறிப்பு இருக்கும். வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  28. ////Jegan G18 June 2020 at 10:26:00 GMT+5:30
    இம்மாதம் வந்த புத்தகங்களில் கடைசியாக படிக்க எடுத்தது ப்ளூகோட் பட்டாளத்தை. படிக்க ஆரம்பித்தவுடனே புரிந்து விட்டது இதைத்தான் முதலில் எடுத்திருக்க வேண்டும்!
    ரொம்ப நாளைக்கு பிறகு மனம்விட்டு சிரிக்கக்கூடிய முழுமையான கார்ட்டூன் கதை(பாதிவரை படித்ததிற்கே இந்த விமர்சனம்)

    எனது மார்க் 10க்கு மேல்தான்.
    நான்கில் இதுதான் முதலிடம்! சூப்பரோ சூப்பர்👌///

    -----சூப்பரோ சூப்பர் அண்ணா!


    டயலாக்ஸ்லாம் நிறைய மெனக்கெட்டு, நேரம் எடுத்து கொண்டு எழுதி இருக்கார். சாதாரணமாக-சரளமாக நாம பேசுவது போல எழுதி இருப்பதுதான் ஹைலைட்; கதையில் நாமும் இருப்பது போன்ற பீலிங்! சிப்பாய்கள் பேசுவது, பார்ல நடக்கும் ரியாலிட்டி சீக்வன்ஸ் வசனங்கள்... என நிறைய இடங்களில் எடிட்டர் சாரின் உழைப்பு தெரிகிறது.

    பிஸ்டலுக்குப் பிரியா விடைக்கு அடுத்து இயல்பான வசனங்கள் ரொம்பவே ரசிக்க வைத்தன!

    காட்சிகளுக்கு ஏற்ற வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது...,

    ###பக்கம் 11-சார்லி ஒயின்ஸ்ல ரூபியும், ஸ்கூபியும் நுழையும் சீக்குவன்ஸ் செம! ஆர்ட்டும்-டயலாக்ஸ்ம் போட்டி போடும் இடங்கள்! ஒவ்வொரு நபராக ஒவ்வொரு காரணங்கள் சொல்லிட்டே நைசா நழுவானுக...!!!

    ####பக்கம் 15- பார் ஓனர் ஆந்திரத்தின் உச்சத்தில் கத்துறான், *"எல்லோரும் வெளியே போங்கனு* ...." ----தொடர்ந்து...

    "இஸ்டாப்! இல்லேனா சுட்டுத் தள்ளிடுவேன்" என கத்துவான்!

    ஆனா... ரிசல்ட்....ஹா...ஹா...!!

    பயலின் துப்பாக்கி பறக்க,கூடவே அவனும்....!!!!

    ###பேஜ்27- செவ்விந்திய சிறுவனை சுட்ட குற்றத்தை ஒப்புக்க ஆளாளுக்கு போட்டி போடும் சீக்வென்ஸ்!
    செமயான ஆர்ட்!
    டாப் ஒன், *ஜெனரலின் ரியாக்சன*

    ###பேஜ்32- காதல் பித்துல ரூபியின் குடாக்குத்தனங்கள் -ரகளையான காட்சிகள்..!!

    ###பக்கம் 33- "தண்டனையாக 22வது குதிரைப்படைக்கு அனுப்புவதற்கு பதிலாக இங்கயே குற்றவாளிகளை போட்டுத்தள்ளிடலாமே"--- என செவ்வியதிய தலைவர் கிரே உல்ஃபே பேசுவது 22வது குதிரைப்படையின் " "உன்னதத்தை" காட்டுது!


    ஓவியங்கள் கதையோட்டத்துக்கு போட்டி போடும் விதமாக நிறைய இடங்களில் டஃப் பைட் தருகிறது!

    நிறைய இரட்டை பேணல் இணைந்த நீண்ட ஓவியங்கள் இடம்பெற்று இருக்கு! ஓவியரின் அசாத்திய கைவண்ணத்தில் ஒவ்வொன்றும் நச்!

    துவக்க பக்கத்தில் உள்ள ஓவியத்தில் துவங்கி, கதை முடியும் கடேசி பேணலும் பிரமாண்டமான அசத்தல் ஓவியங்களே!

    சித்திரக்கதை என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கு, உயிரோட்டமான ஓவியங்கள்!

    "போரின் நடுவே ஒரு போர்ட்ராய்டு"

    "மிரண்டு ஓடும் எருமை கூட்டம்..."

    கதையின் இறுதி பேணல்.... கலரிங்லாம் வேற லெவல்...!! பாலைவனத்தின் நடுவே நாம இருக்கும் பீலிங்!

    இத்தனை அம்சங்கள் நிறைந்து இருப்பதால் எல்லா தரப்பு வாசகர்களை கவரனும், பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. //இத்தனை அம்சங்கள் நிறைந்து இருப்பதால் எல்லா தரப்பு வாசகர்களை கவரனும், பார்ப்போம்!//

      கார்ட்டூன் கதையைப் படித்த கையோடு செய்துள்ள விமர்சனம் என்பதால் அந்த காமெடி flow உங்கள் பின்னூட்டத்திலும் இழையோடுகிறது சார் !

      Delete
    2. செம்ம விமர்சனம்..... டெக்ஸ் இந்த முறை ப்ளூ கோட்ஸ் மிகவும் ரசித்தேன்...

      Delete
    3. எடிட்டர் சார்@ Euro 2000 foosball சேம்பியன்ஷிப்!

      குரூப் A- group of death- only 2from 4 can qualify for next round.

      Germany
      England
      Portugal
      Romania

      Some wrote even before the tournament, "Portugal and Romania already buried in the group of death".

      But the result.....was astonishing.

      Germany and England knocked out!!!

      டெக்ஸ் & 007 எனும் இரு இமயங்களோடு களமிறங்கிய ரூக்கிஸ்- சோடா & ப்ளூகோட்ஸ் அபாரமாக ஸ்கோர் செய்து வருகின்றனர்.

      இது மாற்றத்திற்கான நேரம் போல!

      ப்ளூகோட்ஸ்-இம்முறை டாப் ஆஃப் த மன்த் ஆக வருவார்கள்!

      Delete
  29. Xiii பற்றிய முறையான அறிவிப்பு மகிழ்ச்சி சார்..
    இந்த இதழுக்கு வெளியீட்டு எண் புதியதாக ஒரு எண் தந்தால் வாங்காத நண்பர்களுக்கு வரிசை எண் குழப்பம் நேரலாம் அதனால் பழைய வெளியீட்டு எண்னையே அச்சிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சிவா....நல்லவிதமா, சுகப்பிரசவமா புள்ளை பிறக்கட்டுமே ! அப்புறமாய் பாட்டையா பெயரை வைப்பதா ? 'முனீஸ்காந்த்' என்ற ரேஞ்சில் லேட்டஸ்டாய் பெயர் வைப்பதா ? என்ற யோசனைக்குள் தொபுக்கடீர் எனக் குதிப்போமே ?

      Delete
  30. மறு பதிப்பு குறித்த அறிவிப்புக்கு நன்றி!!!



    XIII அனைத்து பாகங்களையும் பதிப்பிக்கலாமே.

    ஏன் 18 பாகங்கள் மட்டும்?

    அணைத்து பாகங்கள் என்றால் அனைவருமே வாங்குவார்கள்!


    எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ////XIII அனைத்து பாகங்களையும் பதிப்பிக்கலாமே.

      ஏன் 18 பாகங்கள் மட்டும்?////

      அதானே?!! நச்சுனு கேட்டீங்க நண்பரே!!

      இந்த நியாயமான கோரிக்கைக்கு எடிட்டர் சமூகம் பதிலளிக்குமா?!! - என்பதே என் 3900 ரூவாய் கேள்வி!!

      Delete
    2. ///இந்த நியாயமான கோரிக்கைக்கு எடிட்டர் சமூகம் பதிலளிக்குமா?!! - என்பதே **என் 3900 ரூவாய்** கேள்வி!!///


      ஹிஹி..குருநாயரே.. முன்பதிவு பண்ணிட்டிங்க போல..! :-)

      Delete
    3. இன்னும் இல்லீங்க கிட்! எப்போ அனுப்பினாலும் அது 'என்' ரூவாய் தானுங்களே?!!

      Delete
    4. பேஷாய்ப் போடலாமே..! விலையில் இன்னொரு ஆயிரத்துச் சொச்சத்தை சேர்த்துக்கிட்டு 'ஊம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க, போட்டுத் தள்ளிடலாம் நண்பரே ! (புக்கைத் தான் !)

      Delete
  31. அதே சைஸ் என்னும்பொழுது நான் ஆர்டர் செய்யவில்லை சார். இது வரை வாங்காத நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  32. திசை மாறிய தேவதை!
    ஒரே ஒரு வருத்தம்....! இந்த தேவதைகளெல்லாம் கிழடுகளாக இருக்குதுங்க! ஒன்னு படுத்து கெடக்கு. ஒன்னு வீல் சேர்ல பவனி வருது. இன்னும் சிலது பார்க்கில் கைப்பைய்ய வச்சி ஜேப்படிகாரன துவட்டி எடுக்குதுங்க. (ஜீன்ஸ் படத்து ஐஸ்வர்ராயை எதிர்பாத்தாக்கா எல்லாம் வெள்ளைக்கார பறவை முனியம்மாவாக் கீதுங்க!) இன்னும் சிலது உத்துப்பாக்குறதுக்குள் காணாம போயிடறதுங்க. என்னடா சோமாறி.... கதையை பற்றி பேசாமல் ஆயாக்களப்பத்தி பேசி பேஜார் பண்றானேன்னு பாக்காதீங்க? தேவதையை பாக்க வந்து (என்னப்போல!) யாரும் ஏமாறவேண்டாம்னு உசார் பண்ணேன். ஆனா கடைசில ஒரு டுவிஸ்டு! எடிட்டர் தேவதைன்னு சொன்னது அதிர்ஷ்ட தேவதையாம்!!
    சரி...சோடாவுக்கு வருவோம். இது ஆக்ஷன் கதையா? ஆமாம்!
    காமெடி இருக்கிறதா? கதையை மட்டும் படித்தால் காமெடியைவிட ஆக்ஷன்தான் தூக்கலாக தெரியும். நிதானமாக ஓவியங்களை ரசித்துக் கொண்டே கதையை வாசித்தோமானால் ஓவியர் கதைக்கு ஏற்ப ஓவியங்களையும் தீட்டி அதே ஃப்ரேமில் நம்மை சிரிக்க வைக்கவும் முயன்று அதில் வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். நிறைய ஃப்ரேம்கள் நம் முகத்தில் புன்னகையை வர வைக்கிறது. பல நண்பர்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டனர். மறுபடியும் எதுக்கு ரிப்பீட்டு? அடுத்தமுறை இன்னமும் சிலது கண்ணில்படும். அப்போ பாத்துக்கலாம். நாயகனுக்கு இடது கையில் இரண்டு விரல்கள் மைனஸ். கண்ணாடியில் நாம் பார்க்கையில் வலது கையில் விரல்கள் இல்லாதது போலத்தானே தோன்றும். அதையும் ஓவியர் விட்டு வைக்கவில்லை! நமது தளத்தில் சமீப காலமாய் புகழ் பெற்றுவரும் ஒரு 'உணவை' எடிட்டரும் தன் பங்குக்கு இடம் பார்த்து பரிமாறியிருக்கிறார்!! ஆக்ஷன் காட்சிகளும் அதனுள்ளே காமெடியுமாக என்பதுகளில் வந்த ஜாக்கிசான் படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது கதையை முடிக்கும்போது. இந்த சோடா வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்குமான ஸ்பெஷல் சோடா! பருகுபவர்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுப்பது நிச்சயம். கொரோனா தரும் (மனக்) காயங்களுக்கு மருந்தாக நேரம் பார்த்து எடிட்டர் வழங்கிய பரிசு இது. அதற்காக அவருக்கு ஒரு தேங்ஸ்.
    எடிட்டர் சார் அடுத்த ஆண்டு பந்தியில் சோடாவை பரிமாற மறந்துடாதீங்க. ஆனா கதையில் நம்மள மாறி யூத்தான தேவதைங்களா பாத்து பண்ணுங்க! கடசியா ஒன்னு!
    இது டாஸ்மாக் போக வேண்டிய சோடா இல்ல.
    பாஸ்மார்க் போட வேண்டிய சோடா!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! சூப்பர் விமர்சனம் ATR சார்!

      Delete
    2. ///(ஜீன்ஸ் படத்து ஐஸ்வர்ராயை எதிர்பாத்தாக்கா எல்லாம் வெள்ளைக்கார பறவை முனியம்மாவாக் கீதுங்க///

      ATR சார்.. எங்கியோ போயிட்டிங்க..!:-)

      Delete
    3. ஏடிஆர் சார் அருமை...:-)

      Delete
    4. தேவதைகளைத் தேடிப் புறப்படும் நாமெல்லாம் இக்கட தெலுங்குப் பட வில்லன்களாட்டம் இருந்தால் - அக்கட பரவை மின்னீம்மாக்கள் காத்திருப்பது தானே இயற்கை ATR சார் ?

      Delete
    5. எடிட்டர் சார்
      என்ன'படக்'னு நாமெல்லாம்னுட்டீங்க? நான் ஒண்ணும் தெலுங்குப்பட வில்லன் மாதிரியில்லீங் சார். நம்ம பவர்ஸ்டார் கணக்கா 'அடர்த்தியான கூந்தலுடன்! அவருக்கு வாய்த்த அழகான முத்துப்பல் சிரிப்புடன் இருக்கிறேன்னு இக்கட கீற பாட்டிம்மாக்கள் சொல்றத கேட்டு புளகாங்கிதத்தில் வாழ்ந்து வந்தேன்.
      என் சந்தோசத்த இப்புடி பொட்டுனு போட்டு ஒடச்சிபுட்டீங்களே!

      Delete
    6. பரவை முனியம்மாவை பறவையாக்கி விட்டேன். மன்னிக்கவும். அந்த அம்மாவின் பெயரை எழுதும்போது வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வந்து விட்டது.( பரவை முனியம்மான்னு ஒரு கெழவி திரியிது. அது என்ன ரெக்க வச்சுகிட்டு பறந்துகிட்டா இருக்கு.
      வசனத்தில் பிழையிருக்ககூடும்) அந்த ஜோக்கின் நினைப்பில் பரவை ரெக்கை முளைத்து பறவையாகி விட்டது. மன்னிச்சுக்கோங் சார்.

      Delete
    7. ATR சார் சூப்பர் விமர்சனம். நன்றாக நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் மிகவும் ரசித்தேன்.

      Delete
    8. இந்த மாதிரி கதைகள கடல்ல முத்தெடுக்கிறமாதிரி தேடிப்பிடிக்கிறாரே நம்ம எடிட்டர் அவருக்கு தெரிவியுங்க குமார் பாராட்டுகளை.

      Delete
    9. பாஸ்மார்க் போட வேண்டிய சோடா!///பலமான விமர்சனத்தை ரசித்தேன்ATR sir. ஃப்னிஷிங் டச் செம!

      Delete
    10. இந்தக் குழந்தை!!! (எழுதுவதில் தாங்கோ) விமர்சனம் என்ற பெயரில் உளறிக் கொட்டுவதை பாராட்டும் தளத்தின் ஜாம்பவான்களுக்கு நன்றிகள் பல.

      Delete
  33. போர் முனையில் ஓர் பாலகன்...

    ப்ளூகோட் பட்டாளம் எப்பொழுதுமே என் மனம் கவர்ந்தவர்கள் .ஆனால் இந்த முறை இன்னும் அதிகமாக கவர்ந்து விட்டார்கள்.பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்ததும் உண்மை.லக்கி ,சிக்பில் போல் கார்ட்டூன் செலக்‌ஷனுக்கு இனி கண்டிப்பாக இந்த பட்டாளத்தையும் இறக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கையுடன்...


    இனி அடுத்த மாத இதழ்கள் எப்பொழுது கிடைக்கும் சார் என்ற கோரிக்கையும்..

    ReplyDelete
    Replies
    1. முப்பது நாட்களை ஒண்ணொன்னா காலண்டரில் கிழிச்சிட்டே வந்தீங்கனா - டிங்-டாங்-ன்னு கூரியர் அடுத்த பார்சலோட பெல்லடிக்கிற சத்தம் கேட்கும் தலீவரே !

      Delete
    2. 🤣🤣🤣. சார் நீங்க என்ன ஏதாவது கார்ட்டூனை மொழிபெயர்த்துட்டிருக்கீங்களா? செம பார்ம்ல இருக்கீங்க. கடந்த மூணு பதிவா சிரிச்சு மாளலை. இதை படிச்சு மீட்டிங் நடுவுல வாய்விட்டு சிரிச்சு மாட்டிகிட்டேன்.

      Delete
  34. தாயில்லாமல் நானில்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்...

    வெறொன்னுமில்ல.. சோடா எபெஃக்ட். இதுவரைக்கும் இப்படி ஒரு அம்மா செண்டிமெண்ட் நிரம்பி வழியும் பொம்ம பொஸ்தகம் படித்ததாக நினைவில்லை. ஆரம்ப பக்கங்களில், ”என்னடா இது சித்திரங்கள் எல்லாம் SHIN-CHAN சிரியலில் வரும் மூஞ்சிகளா இருக்கே, ஓ இதுவும் கிச்சு..கிச்சு.. மூட்டும் கார்ட்டுன் கதை போலயோ” என பயந்து பயந்து படிக்க ஆரம்பித்தால், நீ நினைக்கிறாப்ல இல்லப்பா நான் வேற மாதிரியாக்கும் என கடைசி பக்கம் வரை தனது அதிரடி ஆக்‌ஷனால் பட்டைய கிளப்புகிறார் SODA. தாய்க்கு மரியாதை.

    இனி தைரியமாக இந்த சோடாவ அவ்வப்போது பருகலாம்.

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே...

    ReplyDelete
    Replies
    1. கவித..கவித..! சும்மா அருவியா கொட்டுதே !!

      Delete
    2. @P.Karthikeyan

      செம விமர்சனம்!! :)

      Delete
  35. நண்பர்களுக்கும், எடிட்டருக்கும் அன்பு வணக்கம்! புதிய தொழில் முயற்சியில் இறங்கிய காரணத்தால் ஏழெட்டு மாதங்களாக நம் தளத்துக்கு வர இயலவில்லை. எத்தனைச் சிரமம் இருந்தாலும் பதிவை மட்டுமாவது படித்திடுவேன். சில மாதங்களாக பதிவையே தவற விடுமளவுக்கு சூழல் ஆகிவிட்டது. அனைவரையும் மிஸ் செய்தேன்.

    இப்போது மீண்டும் வந்து பார்க்கையில் எல்லாம் அப்படி அப்படியே இருக்கிறது. சில மாதங்கள் வெளியூர் போய்விட்டு மீண்டும் வீட்டுக்குள் வருவதைப்போன்ற உணர்வு! இனி இயன்றால் கருத்துரை, குறைந்தபட்சம் பதிவைப் படிக்கவாவது தவறாமல் வந்திடுவேன்.

    நிச்சயமாய் ஈரோடு விஜய், கிட் கண்ணன் போன்றோரின் நகைச்சுவையான கருத்துரைகளை மிஸ் செய்திருப்பேன்.

    இந்தப்பதிவை பொறுத்தவரை, மீண்டும் XIII! ஆச்சரியம் ஒருபக்கம், இதிலென்ன ஆச்சரியம் என்ற எண்ணம் ஒரு பக்கம்! நிச்சயமாய் இன்னும் இரண்டு வருடம் கழித்து வந்து பார்த்தாலும் இன்னொரு குழு XIIIஐ கேட்டு உண்ணாவிரதம் இருந்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்! அதற்குத் தகுதியானதொரு படைப்பே அது!

    எடிட்டரின் நிலைதான் சற்று கடுப்பாக இருக்கிறாரோ என்று எண்ண வைத்தது. ரெண்டு கிலோ, ஒரே கோழி வேணும்னு சொல்ற கஸ்டமரைப் பார்த்து கடுப்பாகியிருக்கும் கமல் போல தோன்றுகிறது. 'இல்லைனாலும் விடமாட்டிங்கிறிங்க.. ஒரே கோழி, ரெண்டு கிலோ! சரிடா, ஆச்சுடா, ரூவாய அட்வான்சா குடுங்க! அப்பாலிக்கா நா வளத்துக் காண்பிக்கிறேன்'னு கோவத்துல பண்ணைக்காரர் சொல்ற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது.

    :-)))))))

    ReplyDelete
    Replies
    1. அடடே..!
      யாரு... நம்ம ஆதியா..!? இந்தப்பக்கம் எட்டிப்பாக்கப்போறதா நேத்து சொல்லவே இல்லையே சாமீ..!?

      வாங்க வாங்க வந்து அஞ்சாறு அப்பார்ட்மெண்ட் கட்டுங்க.!

      Delete
    2. @ஆதி

      வெல்கம் பேக் நண்பரே!! _/\_

      @கிட்

      ஆதி இங்கிட்டு வர்றதுக்கு நீங்க தான் 'முக்கிய' காரணம்! அதாவது, 'ப்ளாக்ல கமெண்ட் போடலேன்னா கிட் பாடின வீடியோவை வாட்ஸ்அப்ல அனுப்பி வச்சுடுவேன்'னு ஒரு வார்த்தை தான் அவர்ட்ட சொன்னேன்!!

      இதோ வந்திட்டாரில்ல?!! :D

      Delete
    3. வாங்கோ சார் ; warm welcome back ! நீங்கள் பிஸியாய் இருந்த இடைப்பட்ட நாட்களில் இங்கே பெருசாய் எதுவும் மாறியிராது தான் ! அதே குசும்புகளோடும், அதே அன்போடும் , அதே லூட்டிகளோடும், அதே 'கையைப் பிடிச்சு இழுத்தியா ?' பஞ்சாயத்துகளோடும் இங்கு வண்டி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்திட முடியும் ! என்ன - ஒரு சுற்றுப் பெருத்த தொப்பைகள் & ஒரு ரவுண்ட் பின்சென்ற கேசங்கள் மாத்திரமே வேறுபாடுகளாய் இருந்திடக்கூடும் !!

      P.S. : அந்த 'டைல்ஸ் போட்டி' ஜூப்பர் !

      Delete
    4. @கிட், வலுத்த பிளாக்மெயில் ஐயா! பதறிப்போய் வந்தேன். :-)))

      @எடிட்டர், வரவேற்புக்கு நன்றி. இம்புட்டுக்காண்டி டைல்ஸ் போட்டி வைச்சதுக்கே பஞ்சாயத்து ஆகிப்போச்சு. நம்ம ராசி அப்படி! இப்பக்கூட பண்ணைக்காரர்னு உங்க கைய புடிச்சி இழுக்கப்பார்த்தேன். நைசா எஸ்கேப் ஆகிட்டீங்க! :-)))

      Delete
    5. காலையிலே குளிச்சு கிளம்பறப்போ உடம்பு முழுக்க விளக்கெண்ணையை தடவிக்கிடுவோம்லே !! உதை விழுந்தாலும் வலி தெரியாது ; கையப் பிடிச்சு இழுக்க நினைத்தாலும் வழுக்கும் ! காலத்தை வென்ற கைப்புள்ளையின் டிரைனிங் சும்மா போகுமா ?

      Delete
    6. ///'ப்ளாக்ல கமெண்ட் போடலேன்னா கிட் பாடின வீடியோவை வாட்ஸ்அப்ல அனுப்பி வச்சுடுவேன்'னு ஒரு வார்த்தை தான் அவர்ட்ட சொன்னேன்!!///

      மசூதியில போய் மந்திரிச்சிகோங்க ஆதி..!

      ///@கிட், வலுத்த பிளாக்மெயில் ஐயா! பதறிப்போய் வந்தேன். :-)))///

      ஆக்சுவலா நேத்து பேசும்போது அந்த கருப்புமெயிலை நானே பண்ணலாமின்னுதான் இருந்தேன்.. உங்க குரலை கேட்டப்போ பரிதாபமா இருந்துச்சா.. அதான் கைவிட்டுட்டேன்..!
      ஆனா விடாது கருப்புன்னு புரூவ் ஆயிடுச்சி பாத்தேளா..!? :+)

      Delete
    7. @கிட்,

      :-))))

      பை தி வே, ரொம்ப நாள் கழிச்சி பேசினதால நாம ரெண்டு பேருமே நம்ம குணத்துக்கு மாறா சீரியஸா பேசின மாதிரியே இருந்தது. விட்டு குடும்ப வரவு செலவு கணக்கே பாத்திருப்போம் போல! :-))

      Delete
    8. Every house has their own doorsteps

      (நேத்து செஞ்ச மாதிரியே இதையும் கூகுள்ல குடுத்து ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க ஆதி..!!)

      Delete
    9. எனக்குத் தெரியாம நேத்து என்ன பழமொழி சொன்னிங்கன்னு குருநாயர் கோவப்படுறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன்..!

      என்னெய்யா ரொம்ப பிசியா இருக்கியான்னு ஆதி கேட்டாரு..

      Dog has no job to do but no time to stand
      ன்னு பதில் அனுப்பி கூகுள்ல குடுத்து ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கச் சொன்னேன் குருநாயரே..! ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் தெரியாத ஆதி,, அச்சிலே ஏற்ற முடியாத வார்த்தைகளால என்னைய வஞ்சிட்டாரு.!

      Delete
    10. @செயலர்

      'ப்ளாக்ல கமெண்ட் போடலேன்னா கிட் பாடின வீடியோவை வாட்ஸ்அப்ல அனுப்பி வச்சுடுவேன்'னு//

      நான்தான் அப்பப்ப கமெண்ட் போடறேனே. அப்புறம் எனக்கு மட்டும் ஏன் வாட்ஸ்அப்ல அது வருது (பாட்டுன்னு சொல்ல பிரியப்படலை)

      Delete
    11. கையாலே அணைபோட்டு இந்த காவேரி அடங்காது.!

      Delete
    12. ///வாட்ஸ்அப்ல அது வருது (பாட்டுன்னு சொல்ல பிரியப்படலை)///

      ஹிஹி!! 'வசனம்'னாவது சொல்லியிருக்கலாம்!! :)))

      ///கையாலே அணைபோட்டு இந்த காவேரி அடங்காது.!///

      கங்கை நதிக்கு மண்ணில் அணையா?!!

      ///Dog has no job to do but no time to stand///

      'வேலையை இழந்த அந்த நாய் நேரங்காலமில்லாமல் நின்று கொண்டிருந்தது' - எப்படி என் மொழிபெயர்ப்பு?!!

      Delete
    13. சரியான மொ. பெ.

      நாய்க்கு வேலையே இல்லியாம்ஆனா நின்னு பேச நேரமில்லையாம்.

      Delete
  36. Editor sir,

    I have tried many times for making the payment through our website, but the server is not responding. There might be 2 possibilities,

    1. The sever is not able handle the load due to our comic lovers. Or

    2. There may be some technical issue.

    I will be happy if 1 is causing the problem.

    Waiting for the issue to be resolved.

    Thanks.

    ReplyDelete
  37. எடிட்டர் சார்... எங்களை விட உங்கள் வாசகர்கள் குறித்து உங்களுக்கு நன்றாக தெரியும்... ஆகையால்.. இந்த இரத்தப்படலம் 300 க்கு எவ்வளவு முன்பதிவு வரும் என்று யூகம் ஏதாவது செய்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. தண்ணீருக்குள் இறங்கித் தான் நீச்சல் பழக முடியும் நண்பரே ! நீர் குளிருதா ? ஆழமா இருக்கா ? நீரோட்டம் விசையா இழுக்குதா ? என்று கரையில் நின்றபடிக்கே விசாரித்து, அப்பாலிக்கா இறங்குவது பற்றித் தீர்மானம் செய்வதற்குள் மழைக்காலம் முடிந்து ஆறும் வற்றிப் போய் விடும் ! கறுப்புச் சந்தைக்காரர்களுக்கெதிரான போரில் நீங்களே தயங்கினால் எப்புடி ?

      Delete
    2. ஆயிரமாயிரம் லைக்குகள்...

      Delete
  38. நான் இறங்க முடிவு செய்துட்டேன்.. உங்கள் கனக்கை தெரிந்து கொண்டால் இன்னும் அநேகர் தொபுக்கடீர்னு குதிப்பாங்கன்னு ஒரு நப்பாச தான் சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆளாளுக்கு உடம்பு முழுக்க எண்ணையைத் தேய்ச்சிட்டு ; கரையில் பத்திரமா நின்னுக்கிட்டே -'ஓங்கியடிச்சா ஒன்னரை டன்' என்று டயலாக்கா அடிச்சு விட்டுக்கிட்டு இருந்தா எப்புடி நண்பரே ?

      Delete
  39. ஓரமா நின்னு யோசிச்சுகிட்டு இருக்குறவங்கள உள்ள இழுத்து போட திட்டம் போட்டேன்... Idea fuse போயிடுச்சு சாரே

    ReplyDelete
    Replies
    1. புலிக்குப் பயந்தவங்கள்லாம் எம்மேலே படுத்துகோங்க !! பாணியிலா ப்ரோ ?

      Delete
  40. இல்ல சார்... லகான் படத்துல ஆமீர் கான் teamக்கு ஆள் புடிப்பாரே... அந்த மாதிரி சார்

    ReplyDelete
  41. இரத்தப்படலம் இதழ் 300 எண்ணிக்கை புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காகவது இலக்கை அடைய வாழ்த்துகிறேன்! அந்த இலக்கில் நானும் பங்கேற்க எண்ணியுள்ளேன்! இலக்கு 300 வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  42. நேற்றைக்கு + இன்றைக்கு என இது வரையிலும் இ.ப.புக்கிங்ஸ் :

    K பார்த்திபன் - 1
    K V கணேஷ் - 1
    Dr .ஹரிஹரன் - 1
    S செந்தில்குமார் -1
    கிருஷ்ணமூர்த்தி தாராபுரம் - 1
    அருண்குமார் நாமக்கல் - 2
    M பாபு மொஹம்மத் அலி , கங்கவல்லி - 1
    T சவுந்தர் ராஜபாளையம் - 2

    ஆக மொத்தம் : 10

    ReplyDelete
    Replies
    1. அறிவிப்பு வெளியாகிய 12 மணி நேரத்திற்குள்ளாகவே 10 முன்பதிவுகள்!! அட்டகாசம்!!!

      Delete
    2. நல்ல முன்னேற்றம். தொடரட்டும்..!

      Delete
    3. நல்ல தொடக்கம்!
      இலக்கை கெடுவுக்கு முன்பே அடைவார் ஜேசன் என நம்பிக்கை இருக்கிறது. நல்லதே நடக்கும்!

      Delete
  43. இம்மாத சோடா சரியாக சோபிக்கவில்லையோனு நெனச்சேன்! ஆனாக்கா கைதியாய் அதிகாரிய படிச்சதும் "சோடா" ஆயிரம் மடங்கு தேவலாம்கிற உணர்வு தானாகவே நிலை கொண்டுவிட்டது!

    இனிமேல் அதிகாரிய படிச்சிட்டு, படிக்க முடியாம திணறி நிக்கும் போது, கோனார் தழிழுரையோ, அகநானூறு, புறநானூறு எடுத்து படிச்சாகூட ரொம்ப எளிமையாய் இருப்பதான உணர்வு சட்டென கிடைக்கும்னு நெனைக்கிறேன்!?

    "கைதியாய் அதிகாரி"
    அதரப்பழைய கதைப்பாணி!?

    மார்க் : "விலைமதிப்பற்றது??0??"

    குறிப்பு : இம்மாத அதிகாரியை விட போன் மாத டேஞ்சர் டயபாலிக் நூறு மடங்கு தேவலாம்!

    இம்மாத இதழ்களுள்...

    007 : 9/10
    புளுகோட் : 8/10
    சோடா : 7/10

    அதிகாரி : ஹிஹிஹி!!!/10

    பின்குறிப்பு : சோடாவ கொஞ்சம் கடகடனு ராப்பொழுதுல அடிச்சதாலே, மறு ரவுண்ட் போலாம்னு இருக்கேன்! மார்க் மாறினா ரீவேல்யு பொடறேன்!!

    ReplyDelete
    Replies
    1. // இம்மாத சோடா சரியாக சோபிக்கவில்லையோனு நெனச்சேன்! ஆனாக்கா கைதியாய் அதிகாரிய படிச்சதும் "சோடா" ஆயிரம் மடங்கு தேவலாம்கிற உணர்வு தானாகவே நிலை கொண்டுவிட்டது! // ஹிஹிஹி

      Delete
  44. சார்,
    சாளரம், ஸ்பஷ்டமாய் போன்ற வார்த்தைகளை எங்கிருந்து சார் புடிச்சிட்டு வரீங்க..? ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அறிய அகராதியை தேடியது போய் , இப்போது தமிழ் வார்த்தைக்கே அர்த்தம் பார்க்க ஒரு அகராதியை தேட வேண்டியதாயிருக்கிறது..! அட தேவுடா...!

    ReplyDelete
    Replies
    1. அட...இந்தக்காலத்துப் பசங்க இந்த வார்த்தைகளைக் கண்டு மிரண்டாக்கா அதை என்னால் புரிஞ்சுக்க முடியும் ! நீங்களும் மிரட்சி காட்டி "யூத்" அணியில் ஒட்டிக் கொள்கிறீர்களே சார் ! "யூத்தோ" இல்லியோ - நீங்க நிச்சயமாய் என்னோட போதி தர்மர் செட் இல்லைங்கிறமட்டில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுவதில் தப்பில்லை தான் !

      மண்டைக்குள் உதிக்கும் முதல் வார்த்தைகள் தான் எப்போதுமே பயன்பாட்டுக்கு வந்திடும் சார் ! எடிட்டிங்கின் போது அவற்றை மாற்றுவோமா ? வேண்டாமா ? என்று தீர்மானிப்பேன் ! பதிவுகள் ; விளம்பரங்கள் போன்றவைகள் எடிட்டிங்குக்கு உட்படா சமாச்சாரங்கள் எனும் போது ஒரிஜினல் வார்த்தைப் பிரயோகம் தொடர்கிறது !

      மற்றபடிக்கு 'புலமையைக் காட்டறேன் ; புலவைப் போடறேன் !' என்ற ரீதியில் நெவெர் !

      Delete
    2. //அட...இந்தக்காலத்துப் பசங்க இந்த வார்த்தைகளைக் கண்டு மிரண்டாக்கா அதை என்னால் புரிஞ்சுக்க முடியும் ! //

      AU CONTRAIRE SIR! என் மகனை பொருத்தமட்டில்...கல்லூரியில் காமிக்ஸ் –ல் படித்த உங்களது சொற்களை அவன் வழக்கு மொழியில் உபயோகப்படுத்த ஆரம்பத்தில் விநோதமாக பார்த்த அவனது நண்பர்கள் கூட இப்போது அதற்கு பழகி விட்டனர்...

      Delete
    3. சாளரம் என மொஹிதீன் சார் ஆரம்பித்து வைக்க துழாவியதில் நாம் அதற்கு மாற்றாக பயன்படுத்தும் ஜன்னல் என்பது போர்ச்சுகீசிய சொல் என தெரிய வந்தபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது...
      மொஹிதீன் சார் குறிப்பிடவில்லை என்றால் அதுவும் தெரிய போவதில்லை

      கம்ப ராமாயணத்தில் மிதிலை காட்சியில் ராம இலக்குவர்கள் விசுவாமித்திர முனிவருடன் மிதிலை நகர வீதிகளில் செல்லுகையில் தெருக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை காண சாளரங்கள் தோறும் சந்திரர்கள் பல தோன்றியதாக கம்பர் குறிப்பிடுகிறார்
      வாளரம் பொருத வேலும். மன்மதன் சிலையும். வண்டின்
      கேளொடு கிடந்த நீலச் சுருளும். செங் கிடையும். கொண்டு.
      நீள் இருங் களங்கம் நீக்கி. நிரை மணி மாட நெற்றிச்
      சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்.

      பகலிலும் ஒளிரும் களங்கமற்ற கன்னிகளின் முகங்களாம் ..
      [நான் வீதி வழி போகையிலே சாளரங்களில் ஆளரவம் இல்லை ..அமாவாசைதான் ]
      எனது கணினியின் இயக்கு மென்பொருள் சாளரங்கள் என சொல்லி பார்க்கையில் இதழோரம் மெல்லிய புன்னகை வரத்தான் செய்கிறது
      நங்கை ஒருத்தி என் ரவிக்கையில் சாளரம் வைத்து தா என சொன்னால் பெண்களுக்கான பிரத்தியேக ஆடை தைப்பவர் முகம் போகும் போக்கை காண ஆவல் ‘

      Delete
    4. ‘ஸ்பஷ்டம் ‘’...எடிட்டரின் சமஸ்கிருத சொல்லாட்சி குறித்து தளத்தில் ஏற்கனவே பல சுவையான உரையாடல்கள் நிகழ்ந்தது உண்டு
      கார்த்திக் சோமலிங்கா எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒரு செய்தியை எழுதியது அப்போதுதான் என நினைக்கிறேன்

      மொழிகலப்பில்லாத தனித்தமிழ் குறித்து பல மேதைகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொண்டது உண்டு ..
      அவ்வகையில் மாபெரும் கவி கண்ணதாசன் அவர்களின் நிலை சுவாரஸ்யமானது
      மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தினை ஒருவர் குறை கூறியபோது
      வெகுண்டு எழுந்தவர் கண்ணதாசன்

      ‘’............................
      அஸ்திகளும் பட்ஷிகளும்
      வேத பாராயணமும் சமிதிகளும் தமிழா?
      பல வீட்டு பிச்சைதனை தமிழென்பாயா

      என சீறினார்

      வெட்ட முயன்றாலும் விழிஉருட்டி பார்த்தாலும்
      தட்டி பறித்தாலும் தமிழல்லால் யாதுமில்லை

      என பொங்கினார்
      திருக்குறள் போல் ஒரு பொருளுமில்லை
      மூவாத சிலம்பு போல் கூத்துமில்லை
      தப்பாத புறம் போல வீரமில்லை
      தளிர்போல் அகம் அல்லால் காதலில்லை
      எப்போதும் தமிழ் போல் ஒரு மொழியேயில்லை
      இருக்கிறது என்பான் தாய் பெண்ணே இல்லை

      என எழுதியவர்


      மொழிகலப்பில்லா தனித்தமிழ் மேல் எனக்கு விருப்பமில்லை என தனது புஷ்பமாலிகா நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்
      மொழிகலப்பால் வரும் சுகத்தை இழக்க விரும்பவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்

      பின்னாளில் வந்த சத்தியமுத்திரை நூலில் தனித்தமிழ் எனும் கட்டுரையில்

      மலாய் மொழி ரோமன் லிபியில் எழுதப்பட்டது
      சீன மொழியில் பாலி மொழி கல்ந்துள்ளது

      அவ்வப்போது கடன் வாங்குவதால்தான் ஆங்கிலம் வளர்கின்றது

      எனவே தனித்தமிழ் என்பதெல்லாம் பொழுது போகாதவன் வேலை
      என எழுதியுள்ளார்
      சர்ச்சில் காலத்து மக்கள் சாசர் காலத்து ஆங்கிலம் பேச விரும்பாத போது எமை தொல்காப்பியர் காலம் நோக்கி இழுத்து செல்ல முனைவதேனோ என கேட்டார் ...

      இது முரண்பாடு எனினும் கவியரசு தமிழின் மேல் மாறாத அன்புடையவர் என்பதை யாராலும் ‘’ஸ்பஷ்டமாக ‘’சொல்ல இயலும்

      [ சுப.வீரபாண்டியன் சிங்கப்பூரில் கண்ணதாசன் குறித்து ஆற்றிய உரையில் இருந்து எடுத்து காட்டப்பட்டுள்ளது}

      Delete
  45. /// இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சம், வசூல் தொகையிலிருந்து ரூபாய் .ஒரு லட்சம் அரிய வகைப் புற்று நோயால் அவதிப்படும் 5 வயதுச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கொரு சிறு பங்காய் அனுப்பிடப்படும். In case சிறுமிக்கான பணம் அதன் முன்பாகவே வசூலாகி, அவளது வைத்தியங்கள் நிறைவுற்றிருக்கும் பட்சத்தில் நமது ஒரு லட்சம் அடையாறு கேன்சர் செண்ட்டருக்கு நன்கொடையாய் வழங்கப்படும்.///

    "எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்..
    அன்புள்ள ஆசிரியரே.. அஸ்ஸலாமு அலைக்கும்."

    இ.ப.முழுத்தொகுப்பு மூன்றாம் பதிப்பு நிச்சயம் இலக்கை எட்டி வெற்றி பெறும். வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ///"எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்..
      அன்புள்ள ஆசிரியரே.. அஸ்ஸலாமு அலைக்கும்."///

      எல்லாத்துக்கும் வாத்தியாரை வைத்தே மேற்கோள் காட்டும் உங்க பாணி ரசிக்க வைக்குது பத்து சார்.!

      Zamjeer னு 1973 ல் அமிதாப், ஜெயபாதுரி, ப்ரான் போன்றோர் நடித்து ஹிட்டான படத்தை தமிழில் சிரித்து வாழவேண்டும் என ரிமேக் செய்தார்கள்.!
      அமிதாப். ப்ரான் இருவர் செய்த இரண்டு கேரக்டர்களையும் தமிழில் வாத்தியார் ஒருவரே செய்தார்.! ஜெயபாதுரி கேரக்டரில் லதா.!

      அதில் அப்துல் ரஹ்மான் என்ற கேரக்டரின் அறிமுகப் பாடலே மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எண்ணத்தில் நலமிருந்தால் பாடல்..

      எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.!

      Delete
    2. Zamjeer அல்ல Zanjeer
      எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.!

      Delete
    3. I liked that abdhul rehman chatacter in that movie.

      Delete
    4. நல்ல எடுத்துக்காட்டாக சொல்றீங்க... சிறப்பு நண்பர்களே!!!

      Delete
    5. எம்.ஜி.ஆர். என்னும் இந்த மந்திர மூன்றெழுத்து என் உணர்வுகளோடு கலந்த ஒன்று.
      'அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.
      அது கடைசி வரை என் பேச்சிலிருக்கும்.'

      Delete
    6. நன்றிகள் சார் !

      Delete
    7. Kalyanji - Anandji இசையில் Manna Dey பாடி சூப்பர் ஹிட்டான பாடல் "Yaari Hai Imaan Mera Yaar Meri Zindagi" இதில் ஹிந்தியில் Pran கேரக்டர் பெயர் Sher khan. தமிழில் அப்துல் ரஹ்மானாகியது. அமிதாப்பின் குரலில் Sher khan என அழைக்கும் ஒலி இப்போதுகூட காதில் கேட்கிற மாதிரி ஒரு உணர்வு!

      Delete
    8. ///எம்.ஜி.ஆர். என்னும் இந்த மந்திர மூன்றெழுத்து என் உணர்வுகளோடு கலந்த ஒன்று.///

      மக்கள் திலகத்தின் படங்களை எல்லாம் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

      ஆனால் நடிகர்திலகத்தின்பால் கூடுதல் ஈடுபாடு எனக்குண்டு.!

      Delete
    9. சிவாஜியின் என்றும் பார்க்கத் தூண்டும் சிறந்த படங்கள் என ஒரு நீண்ட பட்டியலே நான் வைத்திருக்கிறேன்.

      Delete
  46. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் புகழ் மறைவதில்லை...


    #########

    கைதியாய் டெக்ஸ் ...கடுகு சிறிதானாலும் பொறித்த ஒலி அதிகம்..

    மீண்டும் இந்த வில்லனுடன் டெக்ஸை சந்திக்க ஆசைப்படுகிறேன்..

    ReplyDelete
  47. டியர் விஜயன் சார்,

    இரத்தப் படலத்தைத் தவற விட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட வாசகர்களை மகிழ்வடையச் செய்யும் அறிவிப்பு என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. மற்றபடி கலெக்டர்ஸ் இருக்கும் வரையில், நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு எடிஷனும் கலெக்டர்ஸ் எடிஷனாக மாறிக் கொண்டே தான் இருக்கும்! ஆகவே, முன்பதிவுச் சாளரத்தை உடனடியாக எட்டிப் பார்க்கும் எண்ணம் தற்போது இல்லை. தவறவிட்டவர்கள் முதலில் பயன்படுத்திக் கொள்ளட்டும்!

    //*"இரத்தப் படலம்" பாகம் 1 to 18 ப்ளஸ் புலன்விசாரணை முழு வண்ணத்தில் - ஏற்கனவே வெளியான அதே ரெகுலர் சைசில் !//
    மறுபதிப்பை, மரு ஒட்டாத பதிப்பாக, அச்சு அசலாக ஏற்கனவே வெளியான அதே பாணியில் வெளியிட முடியுமா? (மூன்று தொகுதிகள் + புலன் விசாரணை + புத்தகப் பெட்டி + வெளியீட்டு எண், உட்பக்கங்கள், ஆசிரியர் கட்டுரைகள், விளம்பரங்கள் மற்றும் இன்னபிற...)! என்ன ஒன்று, அட்டையில் அதே பழைய விலையையும் அச்சடிக்க இயலாது தான் - அதையும், மறுபதிப்பாகும் வருடத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டால், சேகரிப்பாளர்கள் சேதாரத்தைத் தவிர்க்கலாம். 

    //In case சிறுமிக்கான பணம் அதன் முன்பாகவே வசூலாகி//
    அத்தொகை, நீங்கள் இது பற்றிய முதல் பதிவு எழுதிய ஓரிரு நாட்களிலேயே  எட்டி விட்டிருந்தது சார்! மைரோசைட்டின் முகப்பில் அத்தகவலைக் காணலாம்:
    https://www.ketto.org/stories/savenoorjahan

    //அடையாறு கேன்சர் செண்ட்டருக்கு நன்கொடையாய் வழங்கப்படும்//
    நல்ல விஷயம் சார். அடுத்த ஆண்டுக்கான சந்தாத் தொகையை, இந்த நன்கொடைக்கான ப்ரீமியத்தையும் இணைத்து அறிவித்ததால், அதனை வேண்டுமானால் உடனே கட்ட ரெடி!

    ReplyDelete
    Replies
    1. உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி.
      அந்த நல்ல செய்தியை இங்கு பகிர்ந்து கொண்ட உமக்கும் நன்றி.

      Delete
    2. //அத்தொகை, நீங்கள் இது பற்றிய முதல் பதிவு எழுதிய ஓரிரு நாட்களிலேயே எட்டி விட்டிருந்தது சார்!//

      அற்புதமான சேதி கார்த்திக் ! Truth to tell - இந்த கொரோனா காலத்திலும் இத்தனை விலையிலான இந்த Collector 's 300 இதழினை நான் அறிவிக்கக் காரணமே அந்தக் குழந்தையின் அல்லலைப் பார்த்துத் தொலைத்த தூக்கத்தினால் தான் ! இல்லாத பட்சத்தில் நிச்சயமாய் இந்த முறையுமே சிரித்து மழுப்பியபடியே கழன்று கொண்டிருப்பேன் தான் !

      Anyways நம் உதவிகளின்றியே தேவையான பணம் கிட்டி விட்டதில் மனது நிறைவாய் உணர்கிறது ! இந்த சந்தோஷம் இனி "முன்னூறு in தொண்ணூறு" முயற்சியில் பிரதிபலிக்காது போகாது ! பார்க்கலாமே

      Delete
    3. /////அத்தொகை, நீங்கள் இது பற்றிய முதல் பதிவு எழுதிய ஓரிரு நாட்களிலேயே எட்டி விட்டிருந்தது சார்!////

      அருமையான செய்தி!!

      Delete
    4. அருமையான நல்ல தகவல் கார்த்திக் சார். நானும் வெயிட் அண்ட் வாட்ச் game விளையாட உத்தேசித்து உள்ளேன்.

      Delete
  48. Replies
    1. ஆஹா !! தூள் கிளப்புங்கள் நண்பரே !

      Delete
    2. Even better investment than real estate :-D

      Delete
    3. "சென்னைக்கு மிக மிக அருகில்"னா இப்போ தெறிச்சுல்லே ஓடறாங்க எல்லாரும் !!

      Delete
  49. புளூ கோட் - மரண மாஸ்.. படித்து, சிரித்து உருள இந்த ஜோடி கேரண்டி.. இவர்கள் சேட்டை பல பெண்டிங் இருக்கிறதா கேள்வி.. வருஷத்துக்கு 4 தடவை தலய காட்டலாமே?? - 10/10

    ReplyDelete
    Replies
    1. ஒரு தடவைக்கே இங்கே நான் படற பாடு இருக்கே.....!!

      Delete
  50. இரத்தப்படலம் மீண்டும் மீண்டும் வருவதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  51. பார்ப்போம் 300 தாண்டப் போவதை.

    ReplyDelete
  52. @ ALL : அப்புறம் "இளம் டைகர்" தொகுப்புக்கும் சேர்த்து தற்போது பணம் அனுப்பிடும் நண்பர்களின் கவனங்களுக்கு : PLEASE - இப்போதைய சூழலில் சத்தியமாய் "இளம் டைகர்" தொகுப்பினை ஜனவரிக்கு நடைமுறைப்படுத்திட கிஞ்சித்தும் வாய்ப்புகள் இல்லை ! மேஜரான புத்தக விழாக்கள் மறுபடியும் நார்மலாய் இயங்கத் துவங்கிடும் வரையிலும் ; முகவர்கள் நார்மலாய் செயல்படும் வரையிலும் அடக்கி வாசிப்பதே அத்தியாவசியம் ! So இப்போதைக்கு Project இளம் டைகர் is on hold !! ப்ளீஸ் - அதன் பொருட்டு பணம் அனுப்பிடாதீர்கள் !

    ReplyDelete
    Replies

    1. நண்பர்களே..
      'முத்து பொன்விழா ஆண்டு மெகா ஸ்பெஷல்' இதழுக்கும் இப்போதே முன்பதிவுத் தொகையை அனுப்பிடலாமே ?

      Delete
    2. EV,

      Ranagalathilum oru kilugiluppu? :-D

      Delete
    3. @ ஈ. வி.
      போகிறப் போக்குல எது சீரியஸ்னெஸ் எது காமெடினே தெரியல, அவனவனக்கு பிடித்த ப்ராஜெக்ட் பற்றி கொளுத்தி போட்டு பணம் அனுப்புவத பார்த்த ஒரே ரணகளமாயிருக்கு....!
      MH MOHIDEEN

      Delete
    4. எடிட்டர் சார்..

      எனக்கு மிகவும் பிடித்த
      'ஸ்மர்ஃப் ஸூப்பர் ஸ்பெஷல்'
      'ரின்டின்கேன் ரிவார்டு ஸ்பெஷல்'
      'ஜூலியா ஜாலி ஸ்பெஷல்'

      ஆகியவற்றுக்கான முன்பதிவுத் தொகையை இன்றே அனுப்பிவிடுகிறேன். நன்றி!

      @ராக் ஜி & மொய்தீன் ஜி

      இது எப்படி இருக்கு? ஹிஹி! :)

      Delete
    5. Amazon -லே நல்ல செமத்தியா ; பெரூஸாஆஆ ஒரு கல்லாப் பொட்டி பாத்து வைச்சிருக்கேன் ; உங்க "ஜூ..ஜா.ஸ்பெ".முன்பணத்திலே அதை ஆர்டர் பண்ணிப்புட்டா, வர்றது எல்லாத்தையும் கப்பு-கப்புனு வாங்கி உள்ளே போட்டுப்புடலாம் ! "கல்லாப்பெட்டி சிங்காரம்" மேரி "கல்லாப்பெட்டி சிங்கம்" ன்னு ஒரு அடைமொழி வேற இலவச இணைப்பா கிடைக்கும் பாருங்க !!

      Delete
    6. ////"கல்லாப்பெட்டி சிங்கம்" /////

      ஹா ஹா ஹா!! காலங்காத்தால கெக்கபிக்கேன்னு சிரிச்சுக் கெடக்கேன்!:))))))))

      Delete
    7. ///எனக்கு மிகவும் பிடித்த
      'ஸ்மர்ஃப் ஸூப்பர் ஸ்பெஷல்'
      'ரின்டின்கேன் ரிவார்டு ஸ்பெஷல்'
      'ஜூலியா ஜாலி ஸ்பெஷல்'

      ஆகியவற்றுக்கான முன்பதிவுத் தொகையை இன்றே அனுப்பிவிடுகிறேன். நன்றி!///

      நேக்கும் ஒரு காப்பி புக் பண்ணிண்டுடுங்கோ எடிட்டர் சார்.!

      Delete
  53. டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை கலர்ல்ல ஹார்ட் பவுண்டுல ஏக் தம்மா போட்டா 700 காப்பிகளுக்கு மேலும் விற்க வாய்ப்புண்டு. 1000 முன்பதிவுகள் கிடைத்தால ஜாக்பாட் தான். யோசித்து முடிவெடுங்க தலைவரே. விலையையும் குறைக்கலாம்.2 புத்தகங்கள் ‌முன்பதிவு செய்பவர்களுக்கு கொரியர் பேக்கிங் இலவசமாக கொடுக்கலாம்.இல்லை போடலாமா ?? வேண்டாமா ??? ஆன்லைன் தேர்தல் நடத்துங்க. மெபிஸ்டோ புக்குக்கு டிமாண்ட் இருக்கிறது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சீக்கிரமே எனக்கு வேலையே இருக்காது போல் படுகிறது ! எதை - எந்த விலைக்கு-எப்படிப் போட்டால் எவ்வளவு விற்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லும் அளவுக்கு ஏகப்பட்டோர் தேறி விட்டீர்கள் எனும் போது, வரும் காலங்களில் no problems எனக்கு !

      கொஞ்ச காலத்துக்கு விட்ருங்க நண்பரே ; maybe நான் மூட்டையைக் கட்டியான பின்னே, இந்த விட்டலாச்சார்யா பாணி டெக்ஸுக்கு இசைவு சொல்ல ஜூனியரை அசைத்துப் பார்க்கலாம் !

      Delete
    2. ///கொஞ்ச காலத்துக்கு விட்ருங்க நண்பரே ; maybe நான் மூட்டையைக் கட்டியான பின்னே, இந்த விட்டலாச்சார்யா பாணி டெக்ஸுக்கு இசைவு சொல்ல ஜூனியரை அசைத்துப் பார்க்கலாம் !///
      காலையில் கண்ணில்பட்ட நமது எடிட்டரின் பதிவு!
      என்னங்க எடிட்டர் சார்...?
      உங்களை நம்பி இங்கே ஒரு சிறு கூட்டம் வாழ்ந்து வருகிறது. நீங்க பாட்டுக்கு இந்த மாதிரியான வார்த்தைகளை (விளையாட்டாக்கூட)பதிவிட வேண்டாம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெறும் பொம்மை புத்தகம் தரும் பதிப்பாளராய் இருந்திருந்தால் எவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும் எதற்காக ஒரு நாளைக்கு இருபது முப்பதுதடவை நமது தளத்தின் பக்கம் வந்து போகிறோம்?
      இங்கே வருபவர்கள் கொஞ்சமேயானாலும் அவர்களில் சிலருக்கு நீங்கள் ஆசிரியர், சிலருக்கு எடிட்டர், சிலருக்கு அண்ணன், சிலருக்கு தம்பி(வயதால் மட்டும்) சிலருக்கு குரு, வழிகாட்டி, தாய், தகப்பன், உறவுப் பாலம் இப்படி எத்தனையோ பொறுப்பில் இருந்து வருகிறீர்கள். எல்லோருக்கும் கிடைக்காத வரம் இது. அதேபோல் எல்லோராலும் எளிதில் இந்த இடத்துக்கு வந்துவிட முடியாது. சிரமப்பட்டு இந்த இடத்துக்கு வந்தடைந்த நீங்கள் அவ்வளவு எளிதில் இந்த பொறுப்புகளை தட்டிக்கழித்து விட்டு போக முடியாது. போகவும் கூடாது. காமிக்ஸ் சம்மந்தமான கோரிக்கைகள் அதீத ஆர்வத்தினால் நிச்சயம் வரத்தான் செய்யும். முடிந்தால் நிறைவேற்றுங்கள். முடியாவிட்டால் உங்களது நிலையை சொல்லிவிடுங்கள்.அதுவும் இயலாவிட்டால் மௌனமாக கடந்து விடுங்கள்.அப்படி செய்யாமல் நான் மூட்டையை கட்டுகிறேன் என்பதுபோன்ற வார்த்தைகளை பதிவிட்டு மனம் நோகச் செய்யாதீர்கள். எனது வார்த்தைகள் உங்களுக்கு எரிச்சல் மூட்டாது என்ற நம்பிக்கையில் எனது வரம்பைமீறி உதிர்த்துவிட்டேன். அழகான வார்த்தைகளில் பதிவிட நண்பர்கள் நிறைய பேர் வரிசையில் நிற்கின்றனர். நான் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன். தவறென்றால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன். காரணம் என்னுடைய உடன்பிறவா சகோதரர் நீங்களென்ற நம்பிக்கையில்.

      Delete
    3. ஆத்மார்த்தமான வரிகள் ஏடிஆர் சார்..!

      Delete
    4. // மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன். // மனதில் தோன்றியதை சொல்வது தவறு அல்லவே ATR சார்.

      Delete
    5. அருமையான வரிகள்.்

      Delete
    6. உண்மையான கருத்துக்கள்...உண்மையான வரிகள்..

      அருமை ஏடிஆர் சார்..

      Delete
    7. நெகிழச் செய்யும் அன்புக்கு நன்றிகள் சார் ! உறவுகளின் இத்தனை பரிமாணங்களுக்கு நான் அருகதையானவனா என்பது சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை !

      நானிட்டிருந்த அந்தப் பதிவு, நண்பரின் தொடர் மெபைஸ்டோ வினவலுக்கு அலுத்துக் கொண்டல்ல சார் ! மாறாக - it was stating the obvious !

      மண்டை முழுக்கக் கேசத்தோடும், கண் நிறைய ஆர்வத்தோடும் இந்தத் துறைக்குள் நான் கால் பதித்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டுள்ளன என்பதை இன்றைக்கும் ஆர்வம் குன்றிடாது மிளிரும் கண்கள் மூடி மறைத்தாலும், பொட்டலாகி வரும் சிரம் காட்டிக் கொடுத்து விடுகிறது தானே ? ஐம்பதுகளின் பயணத்தில் - அறுபதும், அது மாமூலாய் அனைவருக்கும் கொணரும் ஓய்வும் கண்ணில் அவ்வப்போது தென்படுவது இயல்பு அல்லவா சார் ? இள ரத்தம் ; புதுச் சிந்தனைகள் என்பன ஒவ்வொரு துறைக்குமே காலத்தின் கட்டாயம் என்பது நீங்கள் அறியாததா ?

      Of course - என் நாற்காலியைக் கோரி யாரும் அவசரத்தில் இல்லை தான் ; in fact - ஜூனியர் எடிட்டர், இன்றைய அதே பதவியிலேயே என்றைக்கும் தொடர விரும்புகிறார் ! ஆனால் பழையன கழிதலும் ; புதியன புகுதலும் இயற்கையின் நியதியாச்சே சார் ?

      Anyways, அதற்கு இன்னமும் நிறைய காலம் உள்ளதெனும் போது கவலை எதற்கு !

      Delete
    8. நன்றாகச் சொன்னீர்கள் ATR sir.

      வரிக்கு வரி வழி +1!

      எடிட்டர் சாரின் மேற்கண்ட வார்த்தைகள் வரக்காரணம் நாமே!

      கியூபா படலம், இருளோடு யுத்தம் போன்ற அமானுஷ்ய டெக்ஸ் கதைகள் வந்தபோது கழுவி கழுவி ஊற்றினார்கள் நம்ம நண்பர்கள்; அதை அடுத்து அமானுஷ்யன் மெபிஸ்டோ & யுமா கதைகளை தவிர்த்து வருகிறார். நாளை வெளிவந்தாலும் கழுவி ஊற்றப்படும் என்பது திண்ணம்!

      இரத்தப்படலம்- எதுமாதிரியான சூழலில் மறு-மறுபதிப்பாகிறது எனவும் விளக்கிவிட்டார்.

      ஆயினும் இதை புரிந்து கொள்ளாமல்,
      நாளொரு ஸ்பெலுக்கு வேண்டுகோளும், பொழுதொரு குண்டுபுக்குக்கு வழியும் கேட்பது--- அவரது நெஞ்சத்தை பதம் பார்க்காதா???
      இப்படி பதம் பார்ப்பதும் காமிக்ஸ் காதலென்ற போர்வையில்!!!

      தாய்க்கு தெரியாதா சேய்க்கு அமுதூட்டும் சமயம்???

      நண்பர்கள் புரிந்து கொள்ளனும்!

      Delete
    9. Dear Editor,

      People retire from their business/work - not their passion ! You have to handover your business / work to Junior - not comics !

      Delete
    10. மாவீரரே..

      ரொம்ப நாளாவே விடாமுயற்சியோடு மெபிஸ்டோ கதைகளைக் கேட்டுக்கிட்டிருக்கீங்க.. ஆனா, தனியாவே கூவிக்கிட்டிருந்தா இங்கே எதுவும் எடுபடாது!

      அதனால,

      * வாட்ஸ்அப்லயும், முகநூல்லயும் 'மாவீரன் மெபிஸ்டோ க்ரூப்'னு ஒன்னு ஆரம்பியுங்க.
      * நாலுபேர புடிச்சு அந்த க்ரூப்ல போட்டுவுடுங்க!(வேணுமின்னா என்னையும் அதுல சேர்த்துக்கங்க). அப்பப்போ மெபிஸ்டோவின் வீரதீர சாகஸங்களை அதில் எழுதி அந்த 4 பேரையும் வெறியேத்துங்க.
      * முடிஞ்சா டீ-ஷர்ட், பர்ஸ், டாலர் செயினில் மெபிஸ்டோவை பிரின்ட் பண்ணி அந்த 4 பேருக்கும் பரிசாக் கொடுங்க!

      * அந்த 4 பேரையும் மாசத்துக்கு ஒருதடவை இங்கே வந்து 'மெபிஸ்டோ கதைகளைத் தேடி நூற்றுக்கணக்கான நண்பர்கள் பேய் மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்காங்க.. உடனே ஒரு ஸ்பெஷல் எடிஷன் போட்டு எடிட்டர் சமூகம்தான் அவங்களைக் காப்பாத்தணும்' ன்னு சொல்ல வையுங்க!

      அவ்வளவு தான் - வேலை முடிஞ்சது! 90 + 110 நாட்களில் உங்கள் கைகளில் 'மெபிஸ்டோ மெகா ஸ்பெஷல்' இதழ் ரெடி! :)

      Delete
    11. @ATR sir

      மனதைத் தொட்ட பதிவு!

      @ Raghavan ji

      நெத்தியடி!! :)

      Delete
    12. ///Anyways, அதற்கு இன்னமும் நிறைய காலம் உள்ளதெனும் போது கவலை எதற்கு !///
      இது போதும் சார்.
      எதையும் காலம் தீர்மானிக்கட்டும். சீனியர் எடிட்டர் அவர்கள் மூலம் அறிமுகமான காமிக்ஸ் எங்களது இல்லங்களில் அடியெடுத்து வைத்தது. அப்போது எங்களுக்கு தெரியாது வருங்காலத்தில் அவரது புதல்வர் காமிக்ஸூடன் சேர்ந்து எங்களது இல்லங்களில் மட்டுமல்லாது இதயங்களிலும் குடியேறுவாரென்று!
      இதையும் காலம்தான் தீர்மானித்தது. வரும் காலங்களில் ஜூனியர் எடிட்டர் உங்களையும்விட இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும்.
      அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிகழ்வை காணும் வாய்ப்பை இயற்கை எனக்கு வழங்காமல்கூட போகலாம். அதையும் காலம்தான் தீர்மானிக்கும். நடக்கப்போகும் அனைத்தும் நல்லதாக நடக்கட்டும். அதுவரை இந்த பந்தம் தொடரட்டும் என்ற ஆதங்கத்தில் உங்களிடம் சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான்தான் சார். மற்றபடி உங்களது உடல்நிலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்களுக்காக உழைத்தே தீரவேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை சார்.

      Delete
    13. ஈ.வி. 😂😂😂😂😂இனியும் மெபிஸ்டோ கோரிக்கை எழும்னு நெனக்கிறீங்க?
      😂😂😂😂😂

      Delete
  54. என்னது k. V. கணேஷ் சார் ஒண்ணா, இதிலே ஏதும் குறியீடு இருக்கா. அருண் குமார் சார், 2 , வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  55. Bluecoats poorele oru balaban மிகவும் அருமை. Bluecoats continue பண்ணலாம்

    ReplyDelete
  56. இ.ப.மூன்றாம் பதிப்பு :
    என்னுடைய புத்தக சேமிப்பு கிடங்கில், கருப்பு - வெள்ளையில் ஒன்று, கலரில் ஒன்று என இரண்டும் உள்ளன. எனவே நான் இந்த முறை வாங்குவதாக இல்லை. வாங்காதவர்கள் வாங்கிட வழிவிட்டு நின்று அவர்களை வரவேற்கிறேன்.
    அனைத்தும் விற்றுவிடும் என்ற நம்பிக்கையில் கல்கி, சாண்டில்யன், சுஜாதா நாவல்கள் எல்லாம் பெருமுதலீடுகளில் பதிப்பக ஜாம்பவன்களால் ஆண்டுதோறும் மறுபதிப்பு காண்கின்றன. நமது வட்டம் சிறிது. அவ்வளவு முதலீடு செய்ய இயலா நிலையில் குறைந்த ப்ரிண்ட் ரன் என்ற வகையில் முன்பதிவு மூலமாக வெளியிடப்படுகிறது. அதுவும் பலரது கோரிக்கைகளுக்கு இணங்கவே. எனவே இதில் குறை காண எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முன்பதிவு திட்டமிடப்பட்ட இலக்கினை எட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஏற்கெனவே வாங்கிட தவறியவர்கள். இந்த முறையாவது வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. /// எனவே இதில் குறை காண எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை///----ஆம் பத்து சார்.

      குறையொன்றும் இல்லை!

      இரத்தப்படலம் வெளிவரும் சூழல் அனைவரும் அறிந்ததே!

      இதன் பின்னுள்ள நண்மையும் எடிட்டர் சார் எடுத்து இயம்பிட்டார்.
      நல்லபடியாக நடந்தா எல்லோருக்கும் நன்மை!

      Delete