நண்பர்களே,
வணக்கம். புது புக்குகள் பெரும்பான்மைக்குக் கிடைத்தும், சிறுபான்மைக்குக் கடுப்பேத்திக் கொண்டும் இருப்பது புரிகிறது ! இம்மாத இதழ்கள் எல்லாமே light reading சமாச்சாரங்கள் என்பதாலோ என்னவோ, ஹாயாக ஜமுக்காளத்தையும், சொம்பையும் வெளியெடுத்து ஆலமரத்தடியில் குழுமிட ஜனத்துக்கு நேரம் கிட்டியுள்ளது ! And ஒரு மதியப்பொழுது அந்த ஜரூரில் ஓடியிருப்பினும், இது ஜூன் இதழ்களின் நேரம் என்பதிலோ, ஒளிவட்டம் அவற்றின் மீது பதிந்து நிற்பதே பிரதானம் என்பதிலோ எனக்குக் குழப்பமே இருக்கவில்லை !
SODA !! இதுவரைக்குமான விமர்சனங்கள் எல்லாமே செம பாசிட்டிவ் என்பதில் லேசாய் உள்ளுக்குள் ஒரு உற்சாகத் துள்ளல் ! இது ரொம்பவே சீக்கிரம் & இன்னமும் அலசல்களின் பெரும்பகுதி காத்துள்ளது என்பது புரிகிறதால் - இப்போதே பீப்பீ smurf ஆகிடும் அவாவுக்கு அணை போட்டு வருகிறேன் ! தொடரும் நாட்களில் இம்மாத இதழ்களை வாசித்திடவுள்ள நண்பர்கள், "திசை மாறிய தேவதை" யிலிருந்து துவங்கிடும் பட்சத்தில், இந்தப் புதியவரின் எதிர்காலம் குறித்தொரு தீர்மானத்துக்கு வர இயலும் என்பேன் ! And போன பதிவில் சொன்ன அதே விஷயத்தை இங்குமொருவாட்டி ரிப்பீட் செய்கிறேன் : மட மடவென வாசித்துப் போனீர்களெனில், திரு திருவெனத் தான் முழித்து நிற்பீர்கள் - இறுதியில் ! சித்திரங்களும், கதை சொல்லும் ஆற்றல் கொண்டவை என்பதை நிரூபிக்கும் இந்தக் கதைக்கு உரிய கவனம் + அவகாசம் ப்ளீஸ் !
அதே போல உங்களின் வாசிப்பு # 2 ஆக ஜேம்ஸ் பாண்ட் 007 அமைந்திடின் மகிழ்வேன் - simply becos இன்றைய hyper modern உலகினில், எழுபதுகளின் பாண்டுக்கு இன்னமும் எவ்வித வரவேற்பு உள்ளதென்றறியவொரு curiosity ! ராணி காமிக்சில் அந்நாட்களில் இவற்றை நாம் படித்த நாட்களில் நமது வயதுகளும் வேறு, உலகமும் வேறு ! இன்றைக்கு எல்லாமே மாறியிருக்க, இந்த classic 007 எவ்விதம் உங்களோடு அன்னம் தண்ணி புழங்குகிறார் என்று தெரிந்திட ஆவல் !
பாக்கி 2 இதழ்களையும் வாசிப்பு வரிசையின் எந்த இடத்தினில் பொருத்தினாலுமே ஓ.கே. தான் - ஏனெனில் அவற்றின் தீர்ப்புகள் பற்றி தோராயமான ஞானம் எனக்கு ஏற்கனவே உண்டு ! நமது 'தல' ஒரு breezy read சாகஸத்தில் தலை காட்டும் போது யாருக்கும் அலுப்புத் தட்டாது என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தானே ?!
அப்புறம் ப்ளூகோட் பட்டாளம் ! கதை எப்படியிருந்தாலும் "இது கார்ட்டூன் ; நமக்கு சுகப்படாது" என்பதே பாதிக்கும் மேலானோரின் தீர்மானம் என்பது ஆன்லைன் ஆர்டர்களில் இந்த ஒற்றை புக் விடுபட்டு நிற்கும் போதே புரிகிறது ! எத்தனை அழகான சித்திரங்களோடும், மிரட்டும் வர்ணங்களோடும் கார்டூன்களைக் கையில் தந்தாலும் 'உவ்வே' என்பதே ரியாக்ஷனாகிடும் போது நான் செய்திடக்கூடியது அதிகம் இருப்பதில்லை தான் ! So கார்ட்டூன் காதலர்களின் ஆராதிப்பையும், இந்த ஜானரை வெறுப்போரின் துவேஷத்தையும் மாறி மாறிப் பெற்றிடவுள்ள இதழான "போர்முனையில் ஒரு பாலகன்" இம்மாத personal favorite ! இயன்றால் இம்மாதத்து இதழ்கள் நான்கையுமே வாசித்திட / வாங்கிட முயற்சியுங்கள் folks - எல்லாமே சுலப வாசிப்புக்கு களங்கள் தான் !
அப்புறம் "தாலி கட்ட விடுபட்டோர் படலம்" பற்றி......oops..."இரத்தப் படலம்" பற்றிப் பேசும் முன்பாய் இன்னொரு நிகழ்வு - எதற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லா வகையில் :
ஐந்தே வயதானதொரு சிறுமி ! ஏதோவொரு அரிய வகைப் புற்று நோயின் தாக்கத்தால் முகத்தின் வலது பாதி மட்டும் விகாரமாய் வீங்கிப் போய் அல்லாடுகிறாள் ! அவளது தந்தையோ தினக்கூலி வேலை செய்திடும் சாமான்யர் ! மகளின் வேதனையைப் பார்க்கச் சகிக்காதவராய் இயன்ற அத்தனை சமூக நல அமைப்புகளிடமும் கையேந்தி நிற்கிறார் ! அவற்றுள் ஒன்று ketto எனும் பணம் திரட்டித் தரும் வலைத்தளம் ! இந்தச் சிறுமியின் புகைப்படத்தோடு, அவளது சுகவீனம் பற்றி எழுதி, ketto அனுப்பியிருந்ததொரு நிதி கோரல் தற்செயலாய் நெட்டில் உலாற்றிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது - நேற்று காலையில் ! பார்த்த நொடி முதலாய் நெஞ்சைப் பிசைந்தது ! எனக்கு முடிந்ததொரு மிகச் சிறு தொகையை அனுப்பிவிட்ட பின்னரும் கூட வேலையில் கவனத்தைத் திருப்பிட இயலவில்லை ! அந்தக் குழந்தையின் அல்லலும், அந்தப் பெற்றோர்களின் ஆற்றமாட்டாமையையும் எத்தனை முயன்றும் மனதிலிருந்து நீக்கிட முடியவில்லை !
சரி, blog பக்கமாய் விசிட் அடிப்போமென்று வந்தால் இங்கே "படலம்" பற்றிய படலம் நாற்பத்தி எட்டாவது தபா ஆரம்பித்திருந்தது ! 'ஆறடி உசரத்துக்கு ஜேசன் வேணும் ; அவரோட சித்தப்பாரு நாலடி உசரத்துக்கு நல்லா கலரா இருக்கோணும் ; அவுக கூடவே விசாரணையும் வரணும் ; அப்புறம் டப்பி போடறதா ? தொப்பி போடறதா ? என்று யோசித்துச் சொல்றேன் !' என்ற ரீதிகளில் யோசனைகள் 'சொய்ங் சொய்ங்' என்று குறுக்கும் மறுக்குமாய்ப் பறந்திடுவதைப் பார்த்த அந்த முதல் நொடியில், மாமூலான அயர்வைத் தாண்டி ஒரேயொரு விஷயம் தான் உள்ளுக்குள் ஓடியது : எங்கோ இருக்கக்கூடிய உபரிப் பணங்களும், என்னிடமிருக்கக்கூடிய உபரி உழைப்பும் ஒன்றிணைந்து - அந்தப் பிஞ்சிற்கு வளர்ந்திருக்கும் உபரித் திசுக்களை களைந்திட உதவிடக்கூடுமெனில் - எந்தக் கூத்துக்கும் தயார் என்றுபட்டது !
So "உசரத்திலும், அகலத்திலும் ஒன்னரை இன்ச் பெருசாய் அதே புக் வந்தா மட்டும் தான் இஸ்டரி ; ஜாங்கிரி எல்லாமே நம்மைப் பாராட்டும் ! அதற்கென ஆயிரம் ரூவா ஜாஸ்தியானாலும் பரவாயில்லை !" என்ற முன்மொழிவுகள் ஜரூராய்க் கிளம்பி வந்த போதிலும், நான் சகலத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டிருந்ததே மேற்படிக் காரணத்துக்காகத் தான் ! Of course அந்தச் சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு அவசியப்படுவது ரொம்பப் பெரிய தொகை & அது நம் சக்திக்கு மீறியதும் கூட ! ஆனால் இந்த "பொ.தே.ப." project நிஜமாகிடும் பட்சத்தில், நமக்கு கிடைக்கக்கூடிய பணத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு ஒரு லட்ச ரூபாய் தர சாத்தியமானால், கொஞ்சமேனும் உதவிகரமாக இருக்குமே என்றுபட்டது ! அப்புறம் முதவாட்டி கண்ணாலத்தை மிஸ் செய்தோருக்கு, மறுக்கா தாலி ஏற்பாடுகள் செய்திட விழையும் நமது ஆர்வலர்களின் முயற்சிகளுக்கும் இக்ளியூண்டு லாஜிக் சாயம் பூசியது போலிருக்குமேயென்றும்பட்டது ! "ஏலே...தேங்காய் உடைக்கிறதானா உன் காசிலே உடைச்சுக்க வேண்டியது தானே வெண்ணெய் ? என்கிட்டே வசூல் பண்ணி உடைச்சு புண்ணியம் தேடணுமாக்கும் ? " என்ற கேள்வியா ? No worries : நான் தேட முனையும் புண்ணியம் இருவருக்கும் சேர்த்தே தான் ! அதே போல "இந்த ஒத்தைப் புள்ளைக்கு ஏதோ சிறு ஒத்தாசை செஞ்சுப்புட்டா - லோகத்தையே காப்பாத்திட்டதா நினைப்பாக்கும் ?" என்ற கேள்வியும் எழலாம் தான் ! நிச்சயமாய் இல்லை தானுங்க ! This is way too big a world for us to hold an umbrella to ! ஆனால் சிறு துளிகள் தானே பெருவெள்ளங்களின் துவக்கப் புள்ளிகள் ? 300 பேரின் நிதியுதவியோடு நாம் செய்திட நினைக்கும் இந்த முயற்சி maybe ஒரு 30 பேரிடமாவது சன்னமாய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திடாதா ? அவர்கள் பின்னாட்களில் இது போல் தம் சக்திகளுக்கு உட்பட்ட உதவிகளை செய்திட மாட்டார்களா ? என்ற எதிர்பார்ப்பும் தான் உள்ளுக்குள் !
So முதல்கட்டமாக ஆர்வலர்களுள் யாரேனும் நமக்கு ரூ.25,000 பணம் அனுப்பி வைத்தால் , அதனை அந்தப் பிள்ளையின் வைத்தியச் செலவிற்கொரு தற்சமயத்து contribution ஆக அனுப்பிவிட்டு, தாலிகள் தேடும் படலத்துக்குள் புகுந்திடலாம் !
So முதல்கட்டமாக ஆர்வலர்களுள் யாரேனும் நமக்கு ரூ.25,000 பணம் அனுப்பி வைத்தால் , அதனை அந்தப் பிள்ளையின் வைத்தியச் செலவிற்கொரு தற்சமயத்து contribution ஆக அனுப்பிவிட்டு, தாலிகள் தேடும் படலத்துக்குள் புகுந்திடலாம் !
***இஸ்டரி போற்றாவிடினும் பரவாயில்லை ; ஏற்கனவே வெளியான அதே சைசில் ; புலன் விசாரணை சகிதம் ஒற்றை புக்காய் ரூ.3900 விலையில் வெளியிடலாம் - 300 பேருக்கு இந்தத் தேடல் அத்தியாவசியமாகயிருக்கும் பட்சத்தில் !
***இல்லே.. தேடலும் முக்கியம் ; இஸ்டரியும் போற்றியே தீரணுமெனில் - "வாய்ப்பே இல்லே ராஜா !" - என்பதே எனது பதிலாக இருந்திடும் ! ஏற்கனவே சுட்ட வட்ட வடையை, புதுசாய் சதுர வடிவில் சுட்டு வைத்து , இரட்டிப்பு விலையையும் நிர்ணயித்து, ஏற்கனவே வாங்கியிருப்போரையுமே இந்தக் கடின நாட்களில் சபலம் கொள்ளச் செய்வதன் லாஜிக் எனக்குப் பிடிபடவில்லை ! தவிர, புதுசாய்த் தாலி கட்ட சாரை சாரையாய் நண்பர்கள் வெயிட்டிங் என்பது மெய்யாகின் ஏற்கனவே நிம்மதியாய்க் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருப்போரைப் பார்த்துக் கண் சிமிட்ட வேண்டிய அவசியங்கள் தான் ஏதோ ?!கிடைக்கத் தவறிய புக் அதே சைசில் மறுபடியும் புதுசாய்க் கிடைக்குமெனில் அதைக் கொண்டாடாது அக்கரையே இன்னும் பச்சை என்று தடுமாறுவானேன் ? Collectors கோசரமும் புது சைசுக்கென இன்றைக்குக் குரல் கொடுப்பதே உங்கள் அவாவெனில் - sorry & no thank you ! The collectors are doing just fine ! Smurfs இதழ்களை போடுங்களேன் என்று கூடத் தான் சில Collectors என்னிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள் ! கொடி பிடிப்பது என்றாகி விட்டால் அப்புறம் அவர்களின் சார்பிலும் ஒரு கொடியைப் பிடித்திடலாமே ? வியாபாரி எனும் குல்லாயைக் கூட அணிந்து கொள்ளலாம் தான் ; ஆனால் கசாப்புக்கடைக்காரரின் குல்லாய் எனக்கு வேண்டவே வேணாம் சாமி ! So மாக்சி ; மினி என்ற இஸ்டரிப் போற்றல்களுமே எனக்கு வேண்டாம் ! Not my cup of tea at all !!
***பேக்கிங் & கூரியர் கட்டணங்கள் தனி ! தற்போதைய ரேட்களில் அது என்னவென்பதை நாளைக்கு கண்டறிய இயலும் ! And there will be NO slipcase !
***தயாரிப்புக்கு 120 நாட்கள் ; This will be AFTER the succesful completion of the pre-bookings !
***மினிமம் இலக்கு 300 பிரதிகள் & அதனைத் தொட்டிட மாக்ஸிமம் அவகாசம் 90 நாட்களே ! முழுதாய் முன்பதிவுகளும், முழுதாய்த் தொகைகளும் கிடைக்கப் பெற்ற பின்னரே இது சார்ந்த பணிகள் துவக்கம் கண்டிடும் ! In case பிரம்மச்சார்யமே தேவலாம் என்ற ஞானத்திலோ ; புதுசாய் மனையாளைத் தேட முனைந்தால், ஆத்தில் பூரிக்கட்டைகள் பறக்கும் வாய்ப்புகள் எழக்கூடும் என்ற பீதியிலோ, அல்லது வேறேதேனும் காரணங்களாலோ மினிமம் இலக்கைத் தொட இயலாது போயின், மொத்த புராஜெக்டும் ஊத்தி மூடப்படும் !
***"இல்லே....ஒன்னரை இன்ச்சில் வரலாறை மிஸ் பண்ணிடும் பட்சத்தில், தாலி கட்ட எங்களுக்கு ஆர்வமே லேது ; மணந்தால் MAXI மகாதேவி தான் !! என்பது தான் நிலைப்பாடெனில், களைப்பு நீங்க ஒரு சோடா குடித்த கையோடு, இம்மாதத்து SODA படியுங்களேன் நண்பர்களே ! We'll just move on from this & get on with life !
***"இல்லே....ஒன்னரை இன்ச்சில் வரலாறை மிஸ் பண்ணிடும் பட்சத்தில், தாலி கட்ட எங்களுக்கு ஆர்வமே லேது ; மணந்தால் MAXI மகாதேவி தான் !! என்பது தான் நிலைப்பாடெனில், களைப்பு நீங்க ஒரு சோடா குடித்த கையோடு, இம்மாதத்து SODA படியுங்களேன் நண்பர்களே ! We'll just move on from this & get on with life !
இந்தத் தருணத்தில் ஆர்வலர்கள் அல்லாதோரின் மனங்களில் ஒரு கேள்வி நிழலாடிடும் என்பது புரிகிறது எனக்கு ! "விடாப்பிடியாக இப்படி நாலு பேர் சேர்ந்திட்டுக் கேட்டாக்கா அவரவர் ஆசைப்படும் புக்குகளையும் தயார் பண்ணுவியா அப்பு ?'" என்ற வினா நிறைய மனங்களில் ஒலித்து வருமென்பது சர்வ நிச்சயம் !
எனது பதில் சிம்பிள் !
இதுவொரு பரீட்சை ! இந்தச் சிரம நாட்களிலும், இத்தனை பணம் தந்து அரைத்த அதே மாவை ஆர்வமாய்க் கொள்முதல் செய்திட வாசகர்கள் மெய்யாகவே முண்டியடித்துக் கொண்டு இருக்கும் பட்சத்தில், அவர்களை ஒரு untapped business opportunity என்று கருத வேண்டியது தான் ! அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்திடும் பொறுப்பை நாம் விடாப்பிடியாய் நிராகரித்து வருவதே, தொடர்ச்சியாய் யார் யாரோ - ஏதேதோ கூத்துக்களை அரங்கேற்றிடக் காரணமாகிப் போகின்றன ! இந்த முறை நாமே முயற்சித்துப் பார்ப்போம் ; ஜெயமெனில் அவசியமாகிடும் இதழ்களை ஆடிக்கொருவாட்டி, அமாவாசைக்கு இன்னொருவாட்டி என இதைப் போலவே ஒரு premium விலையில் தயாரிப்போம் - முன்பதிவுகளின் பெயரில் ! இதனில் கிட்டக்கூடிய பணத்தைக் கொண்டு நமது ரெகுலர் சந்தாத்தடத்தை வலுப்படுத்திக் கொள்ள சாத்தியப்படுமேயாயின் - why not ?
And if this trial falls flat on its face - கையைத் தட்டி விட்டு ரெகுலர் பணிகளை எப்போதும் போல் கவனிப்போம் !
அப்புறம் ச்சும்மா ஒரு பின்குறிப்பையுமே இங்கு இணைத்தல் நலமென்று நினைக்கிறேன் : உரத்த குரல்களோ ; பிடிவாதக் குரல்களோ, உத்தரவிடும் குரல்களோ, ஏளனக் குரல்களோ, ஒரு போதும் இந்தக் கோவேறு கழுதையின் போக்கினை / பயணத்தைத் தீர்மானித்திடாது ! அதுக்கே தாகமெடுத்து ; எதிர்ப்படும் சுனையும் ரசித்தாலொழிய - சொட்டு நீர் நாவில் ஒட்டாது - தடிப்போடவோ, தாஜா செய்யவோ ஜாம்பவான்கள் எத்தினி பேர், எத்தினி திக்கிலிருந்து படையெடுத்தாலுமே ! 'திமிர பாரேன் !' என்பதே இதற்கான ரியாக்ஷனாய் இருப்பின் - 'டாங் யூ !' என்பதே பதிலாக இருக்கும் !
அப்புறம் ச்சும்மா ஒரு பின்குறிப்பையுமே இங்கு இணைத்தல் நலமென்று நினைக்கிறேன் : உரத்த குரல்களோ ; பிடிவாதக் குரல்களோ, உத்தரவிடும் குரல்களோ, ஏளனக் குரல்களோ, ஒரு போதும் இந்தக் கோவேறு கழுதையின் போக்கினை / பயணத்தைத் தீர்மானித்திடாது ! அதுக்கே தாகமெடுத்து ; எதிர்ப்படும் சுனையும் ரசித்தாலொழிய - சொட்டு நீர் நாவில் ஒட்டாது - தடிப்போடவோ, தாஜா செய்யவோ ஜாம்பவான்கள் எத்தினி பேர், எத்தினி திக்கிலிருந்து படையெடுத்தாலுமே ! 'திமிர பாரேன் !' என்பதே இதற்கான ரியாக்ஷனாய் இருப்பின் - 'டாங் யூ !' என்பதே பதிலாக இருக்கும் !
Please stay assured, என்ன குட்டிக்கரணங்கள் அடித்தாலும் எனது focus ஒரு போதும் மாறிடாது ! As always, we march looking ahead ! Bye for now all !
இப்போது களைப்பு நீங்க SODA டைம் !! Please do keep the June reviews going ! See you around all !
மீ பர்ஸ்ட்!
ReplyDeleteமீ 2
ReplyDeleteமீ 3
ReplyDeleteMe 3 !
ReplyDelete??
ReplyDeleteஹி ஹி. தமிழ் மீ 3 தான் ஜெயிச்சது.
ReplyDeleteஹா ஹா!! சபாஷ்.. சரியான போட்டி! :)))
Deleteஅடுத்தவாட்டி மலையாளத்தில் !
Deleteபுதியதொரு பதிவு.
ReplyDeleteமுடிவெடுக்க கால அவகாசம் தேவை!
நிச்சயமாக சார் !
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteப்பா!!! பதிவைப் படிச்சு முடிச்சப்போ அதிகாரியின் சாகஸத்தைப் படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு!!!
ReplyDeleteஅதுக்காக ஆபீசில் யாரையாச்சும் சில்லுமூக்கில் குத்திப்புடாதீங்க !
Delete// அதுக்காக ஆபீசில் யாரையாச்சும் சில்லுமூக்கில் குத்திப்புடாதீங்க ! //
Delete:-)
வீட்டில் இருந்து வேலை செய்வதால் இதற்கு வாய்ப்புகள் குறைவு! நம்மை யாராவது மூக்கில் குத்தாமல் இருந்தால் போதும்!
அந்தச் சிறுமிக்கு உதவிடும் உத்தேசமும் இப்போது சேர்ந்து கொண்டுள்ளதால் என்னுடைய பிரதிக்கு இப்போதே ஆர்டர் செய்கிறேன்!
ReplyDeleteமுன் பதிவு தொகை இரண்டு தவனையாக கட்ட முடியுமா ஆசிரியரே
ReplyDeleteசத்யா....சபலங்களும், சில பொம்மை புக்குகளும் பின் நிற்க வேண்டிய தருணமிது ! வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கிடக்கும் இந்த நாட்களில் உங்களது priority -'சேமிப்புப் படலம்" மட்டுமே !
Deleteஉயிரை இழந்தது போல் இரத்தப்படலத்தை இழந்து நிற்க்கிறேன் ஆசிரியரே கண்ணில் கண்ணீர் வரவில்லையே தவிர ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து வேதனை படுகிறேன் அதுவும் மகி ஜி எனக்கு பரிசாக அளித்த புத்தகம் இன்று என்னிடமில்லையே என ஏங்குகிறேன் ஆசிரியரே உயிரே மீண்டும் அந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது ஆசிரியரே இதுதான் இரத்தப்படலம் கடைசி அறிவிப்பு இனிமேல் கனவில் கூட இது நடக்காது என தெரியும் கடைசி முயற்சியாக கயிறு வீசிகிறேன் ஐயா
Deleteஇங்கு நிலவும் லாஜிக் இல்லா மாயையில் இன்றைய சூழலில் நாலாயிரத்தின் நிஜ மதிப்பை மறக்கும் பிழையைச் செய்யாதீர்கள் சத்யா !
Delete//இதுதான் இரத்தப்படலம் கடைசி அறிவிப்பு இனிமேல் கனவில் கூட இது நடக்காது என தெரியும்//
Deleteஅப்புறம் காமெடி பண்ணாதீங்க சத்யா ! அடுத்த ஒன்னரை வருஷத்தில் இன்னொருக்கா யாராச்சும் "உடல் மண்ணுக்கு..உயிர் ஜேசனுக்கு !" என்று கிளம்பாமலா போய் விடுவார்கள் ? அந்நேரத்துக்கு இன்னொரு ஆயிரம் ரூபாய் உசத்தி இன்னொருவாட்டி இதே வடையை ரெடி பண்ணிப் போட்டுட்டா போச்சு !
// இங்கு நிலவும் லாஜிக் இல்லா மாயையில் இன்றைய சூழலில் நாலாயிரத்தின் நிஜ மதிப்பை மறக்கும் பிழையைச் செய்யாதீர்கள் சத்யா ! //
Delete+1000000000000001111111111111111111111
// சபலங்களும், சில பொம்மை புக்குகளும் பின் நிற்க வேண்டிய தருணமிது ! வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கிடக்கும் இந்த நாட்களில் உங்களது priority -'சேமிப்புப் படலம்" மட்டுமே ! //
Delete+111111111111111111111111 Very true! but many of us not realized this!
சார் நிச்சயமாக அடுத்த வருடம் பெரிய சைசில் கேக்க வாய்ப்பதிகம்
Deleteஅடுத்த வருஷம் வரைக் காத்திருப்பானேன் ஸ்டீல் ? 3900 க்கு ஒரு 300 புக் ; 4900 க்கு ஒரு 300 புக் என்று சோலிய ஒரே தபாவிலே முடிச்சுபுடலாமே ?
Deleteஎனக்கும் ஒரு பிரதி
ReplyDeletePRIYATEL!
ReplyDeleteஎடிட்டர் சார் நகைச்சுவை உணர்வுடன் சொன்னதற்கான என் பதில் அது ..
கேட்பது உங்கள் உரிமை
அதற்கான எதிர்வினை அவரது உரிமை
ஆனால் என் நிலைப்பாடு என்னவென்றால் இதுவே ..
ஏற்கனவே சொன்னதுதான்
நான் சொன்னதல்ல ...
வசீகர புன்னகையால் மதி மயக்கவல்ல வாசுதேவ கிருஷ்ணன் சொன்னது
சுயதர்மம் முக்கியத்துவம் அற்றது
பொதுதர்மமே மேலானது
எடிட்டர் ஒரு விவசாயி
நன்செய் ,புன்செய் ,என நிலம் கொண்டு உணவுப்பயிர் ,பணப்பயிர் விளைவிப்பவர் ...
இரத்தப்படலம் அதில் ஒரு பணப்பயிர் ..அவ்வளவே
அனைத்திலும் விற்றது போக மீதி மகசூலை தனது சரக்ககத்தில் வைத்து இருப்பவர் .
பருவ மழை பொயித்துவிட அடுத்த வருட ஓட்டுமொத்த விதை பயிருக்கு அலைபாயும் நேரம் இது
கரும்பு தோட்டத்துக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து தருகிறேன் ..கரும்பு மட்டும் விளைவித்து தாருங்கள் என நீங்கள் கேட்பது சரியா ?
இதுவும் தர்மமே ...தன்னுடைய நலன் கருதும் செயல் ..
நீர் கிடைக்காத சூழல் அசாதாரணமானது ..
பொதுதர்மம் ?
மூவாயிரம் ரூபாய்கள் கொடுக்கவல்லவர்கள் முன்னூறு பேரும் –சுமார் ஒன்பது லட்சம்- ஒட்டுமொத்த விவசாயத்துக்கு கொடுத்தால் ?
ஒட்டுமொத்த விவசாயத்துக்கு அது பெரு நன்மையாய் முடியும் ..
அவர்கள் சும்மா கொடுக்க போவதில்லை ..
மகசூலில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும்..
மூவாயிரம் ரூபாய் கொடுக்கமுடியாதவர்கள் சில்லரையாக வாங்கி கொள்வர் ..
கரும்பு இனிப்பானது ....அது சிலருக்கு மட்டுமே தேவை ..
நெல் ,சோளம் ,விளைவிக்கும் விவசாயிக்கும் கரும்பு மட்டுமே விளைவிப்பதால் கிடைக்க இயலாத ஆத்ம திருப்தி கிடைக்கும்
விவசாயம் , விவசாயி இருவரையும் கணக்கில் எடுத்து கொண்டு செயலாற்றுவது பொதுநல சிந்தனை மற்றும் பொது தர்மம் ...
சென்னை ,ஈரோடு புத்தக விழாக்கள் போன்ற வடகிழக்கு ,தென்மேற்கு பருவ காற்று கொணரும் மழை நீர் கைவிட்டுவிட, விதைப்பயிர் உள்ளிட்ட மூலபொருள்கள் விலை உயர தத்தளிக்கும் விவசாயம் ,விவசாயி இரண்டையும் உற்று நோக்க வேண்டிய நேரம் இது
தனிப்பட்ட அபிலாஷைகள் நியாயமானவைகளாக இருக்கலாம்
அவற்றை தள்ளி வைக்க வேண்டிய தருணம் இது
பழநிவேல் சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு வேண்டுகோள் ..ரத்தபடலம் என்ற ஒரு இதழுக்கு செலுத்த போகும் தொகையை அடுத்த வருடம் சந்தா தொகை என செலுத்துங்கள்..
பொது தர்ம புருஷர்கள் என சரித்திரம் சொல்லும்
கை கூப்பி வணங்கும் படங்கள் ஒரு நூறு சார் !
Deleteஅருமையான எடுத்துக்காட்டு! தேர்ந்த, முதிர்ச்சியான வாக்கியங்கள்!!
Deleteசெமைங்க செனாஅனா!!
ஆனாலும் பிரயோஜனம் இல்லியே ராஜா !!
Deleteமிக சிறந்த கருத்து. செ.அனா சார்.
Deleteதெளிவான சிந்தனை சார். உங்கள் உதாரணங்கள் எப்போதுமே அருமை.
Deleteபொது தர்மம் பற்றிய உங்கள் கருத்து விளக்கிய விசயங்கள் பல
///பொது தர்மம் பற்றிய உங்கள் கருத்து விளக்கிய விசயங்கள் பல///
Delete///ஆனாலும் பிரயோஜனம் இல்லியே ராஜா !!///
:))))
செல்வம் அபிராமி @ அருமை. அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.
Deleteசெல்வம் அபிராமி @ அருமை. அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.
Delete
Delete///ரத்தபடலம் என்ற ஒரு இதழுக்கு செலுத்த போகும் தொகையை அடுத்த வருடம் சந்தா தொகை என செலுத்துங்கள்..///
செல்வம் அபிராமி சார் நீங்கள் சொன்ன இந்த வார்த்தைதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரத்தப்படல புத்தகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அதனால் ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் அடுத்த ஆண்டிற்கான சந்தா செலுத்த இயலாது. இதில் எதை செய்வது என்ற குழப்பத்திலிருக்கும்போது உங்களது பதிவு என் எண்ணத்தை பிரதிபலிப்பது போல வந்திருக்கிறது.
உண்மை சார்.!
Delete####//இரத்தப்படல புத்தகம் இப்போது என்னிடத்தில் இல்லை. அதனால் ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் அடுத்த ஆண்டிற்கான சந்தா செலுத்த இயலாது.//
Deleteபொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து. 269
பொன்போலும் நிறமுடைய செந்நெற் பயிரானது, தன்னுள் பொதிந்திருக்கும்
கதிர்களுடன் வாடிக் கொண்டிருக்க, மின்னல் விளங்கும் மேகமானது, அங்கே பெய்யாது, கடலிலே பெய்துவிடும். ####
தங்கள் பணப்பெட்டியாகிய மேகத்தை ஏவுங்கள் ...
சந்தா நெற்பயிரின் மேல் காசு மழை பெய்யட்டும்
இரத்தப்படலம் எனும் கடலின் மேல் காசு மழை பொழிவதால் ஆவதென்ன ?
குழந்தை ?
இயன்றவர்கள் எடிட்டருக்கு இயன்றதை அனுப்புங்கள் ..அவர் மொத்தமாக
அனுப்பட்டும்
உதவிகள் உடனே கிடைப்பதே நலமாகும்....உண்மை நண்பரே....
Deleteசெனா அனா..
Deleteஅருமை. ஏதாவது ஒரு ஈபுவி யில் உங்களோடு ரவுண்ட்பன் டீ யோடு உட்கார்ந்து 2-3 மணி நேரம் நீங்கள் பேசுவதைக் கேட்க வாய்ப்பு கிடைக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.
செனா நல்லாருக்கு... கிடைத்த நமக்கு அது கரும்பு... கிடைக்காதோர்க்கு அதுவே உணவு... படைத்தத மாத்தி படைச்சா படைப்போர்க்கும்... அத நேசிப்போர்க்கும் ஓரளவு லாபமே.... ஓடுற குதிரை மேல் பயணம் செய்வதும் திருப்திதானே
Deleteசெல்வம் அபிராமி சார்.
Deleteநல்ல தெளிவாக கருத்து.நன்றிகள் பல. அப்புறம் அந்த குழந்தை விஷயம் நெஞ்சை உருக்குவதாகத்தான் இருக்கிறது. ஆனால் உடனடியாக எதுவும் செய்ய இயலவில்லை. கொஞ்சம் சென்றைய எடிட்டர் பதிவை சிரமம் பார்க்காமல் படிக்க வேண்டுகிறேன். அதில் நான் ஒருவரியில் சொல்லியிருப்பேன். பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வெய்யிலில் அலைய வேண்டிவந்ததையும். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதையும். எப்போது நான் பணிபுரிந்த நிறுவனம் திவாலாகி மூடப்பட்டதோ அன்றிலிருந்து இன்றைய நாள்வரை சட்ட சிக்கல்களை மட்டுமே சந்தித்து வருகிறேன்.அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை பார்த்துவருகிறேன்.இந்த நிலையில் கொரோனா மூன்று வேளை உணவுக்கே திண்டாட வைத்துவிட்டதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்ற மாதம் நண்பர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பொருளாதாரத்தில் மிக மிக பாதிக்கப்பட்டோருக்கு உணவுப்பொருட்கள் இன்னும் சில உதவித்தொகைகளை வழங்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். என்னிடம் கொடுக்க பணமாக இல்லாத காரணத்தால் 3 கிராமில் செய்த மோதிரத்தை விற்று காசாக்கி மற்றவர்கள் அவரவர் பங்குக்கு பணத்தை திரட்டி தேவைப்படுபவர்களுக்கு கொண்டு சேர்த்தோம்.சென்றவாரத்திலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் என்னை விட்டுவிட்டு நண்பர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய இன்றைய சூழ்நிலையில் அந்த குழந்தைக்கு உடனடியாக எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளதால் இந்த செய்தியை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் என்னால் செய்யக்கூடியது இவ்வளவுதான்.மன்னிக்கவும்.
///என்னிடம் கொடுக்க பணமாக இல்லாத காரணத்தால் 3 கிராமில் செய்த மோதிரத்தை விற்று காசாக்கி மற்றவர்கள் அவரவர் பங்குக்கு பணத்தை திரட்டி தேவைப்படுபவர்களுக்கு கொண்டு சேர்த்தோம்.///
Deleteஉங்களைப் போன்றவர்கள் இருப்பதாலேயே இப்புவியில் இன்னும் மழை பொழிகிறது ATR sir!!
உங்கள் நல்ல மனம் வாழ்க!!
எல்லா கஷ்டங்களும் விலகிடுவது பணத்தால் மாத்திரமல்ல ATR சார் ; உள்ளன்புடனான வாழ்த்துக்களும், ஆசிகளும் , பிரார்த்தனைகளும் அந்தச் சிறுமியின் வேதனையை மட்டுப்படுத்தவும் உதவிடுமே !
Deleteஅன்பார்ந்த வணக்கம்
ReplyDeleteவிஜயன் சார்.
ஒரே குண்டு புக்காக புவி உடன் இப
வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
முன்பதிவுகாலம் மூன்று மாதம் வரும்
அக்டோபர் 2020வரை என்றும் மூன்று
தவணையாக மிதம் 1000/-செலுத்தலாம்
என்றும் அறிவித்தால் மேலும் பலர்
பணம் அனுப்ப உதவியாக இருக்கும்.
மீண்டும் ஒருமுறை நன்றி.
மூன்று தவணைகளைக் கணக்கிட்டு வரவு செய்வதெல்லாம் நடைமுறையில் சிக்கல் சார் ; அதுவும் புதுச் சந்தாக்களின் சேகரிப்புகள் மத்தியில் ! குளறுபடிகளும், சிக்கல்களும் மேலோங்கும் ! 89 வது நாளுக்கு மொத்தமாய்ச் செலுத்தினாலும் போதும் நமக்கு !
DeleteKv தயார்... பாய்க
Deleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteஇன்று நீலச்சொக்காய்கார்ர்களோடு பயணம்!
13 WAnt ONe BOok FOr ME
ReplyDeleteஇன்னாது மறுக்காவும் நத்த பொரியலா?
ReplyDeleteசார்வாள் நேத்திக்கு ஊரில் இல்லியோ ?
Deleteநல்ல காரியத்துக்காக நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி வெற்றியடைய வேண்டும் ஆசிரியரே உங்களுக்கு நன்றி
ReplyDeleteஅறிவிப்புக்கு மிக்க மகிழ்ச்சி சார்...
ReplyDeleteஎனக்கு 5 புத்தகங்கள். தேவை விரைவில் பணம் அனுபுகிறேன் சார்....
பேஷாய் அனுப்புங்கோ ; இப்போதைக்குத் தான் பள்ளிக்கூட fees கிடையாதே !!
Deleteதம்பி பத்தா கேளுப்பா
Delete//;பேஷாய் அனுப்புங்கோ ; இப்போதைக்குத் தான் பள்ளிக்கூட fees கிடையாதே !! //
Deleteஉங்கள் பதில் மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாக தெரிந்தாலும் அதில் பொதிந்துள்ள உங்களின் மன வலி நன்றாக புரிகிறது சார்.
எல்லா ஆசிரியர் நல்லாதான சொல்றார்
Delete***** போர் முனையில் ஒரு பாலகன் *******
ReplyDeleteகர்னலின் மகளிடம் நம்ம ரூபி காதல் வயப்படுவதும், தன் காதலுக்கு தடையாக வந்த ஒரு இளைஞனை ரூபி எந்த நிலைக்கு ஆளாக்குகிறான் என்பதுமே கதை!
'இளைஞன்' யாரென்பது தெரிய வருவது ஒரு அழகான ட்விஸ்ட்! இந்த இளைஞன் ஒரு செவ்விந்தியச் சிறுவனை சுட்டுவிட, அந்தச் சிறுவனின் தந்தை க்ரே உல்ஃபின் மகனாய் அமைந்துவிட, தொடர்ந்த காட்சிகள் எல்லாம் காமெடி ரகளைகள்!!
கர்னலின் மகளிடம் நம்ம ரூபி காதலில் விழுவது எப்போது என்ற கேள்விக்கு விடை இல்லை! இது ஏதோவொரு முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது! (ஒருவேளை, நான்தான் மறந்துவிட்டேனோ என்னமோ?!!)
ஒரே ஒரு சீன்தான் என்றாலும், ஸ்கூபின் குதிரை செய்யும் ரகளையும், அதற்கேற்ற வசனங்களும் ('போல்கா டார்லிங், பெர்ஃபாமன்ஸு போதும்மா.. எழுந்திரு' ) - தெறிக்கும் காமெடி!!
கிட்டத்தட்ட பாதி கதை இராணுவக் கோட்டையினுள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பது மட்டும் ஒரு மெல்லிய அயர்ச்சியை ஏற்படுத்துகிறது!!
'போர் முனையில் ஒரு பாலகன்' - மனசை லேசாக்கும் ஒரு உற்சாக வாசிப்பு அனுபவத்திற்கு!
என்னுடைய ரேட்டிங் : 9.5/10
ஹைய்யா புதிய பதிவு.....
ReplyDeleteCountdown start
ReplyDeleteDay 1
கடந்த ஞாயிறு அன்றுதான் வீட்டம்மாவுடன் டிஸ்கஷன். இந்த கடினமான சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று. ஏற்கனவே என்னிடம் மிஸ்டர் மறதி நீங்கள் வெளியிட்ட கருப்பு வெள்ளை மற்றும் கலரிலும் தூங்குகிறார். எனவே ஸாரி சார், எனக்கு இதில் ஆர்வமில்லை. மேலும் அந்த சிறுமிக்கு என்னாலான சிறு தொகை அனுப்ப முடியும். தயவுசெய்து விபரங்கள் மட்டும் கொடுங்கள்.
ReplyDeleteExcellent sir !!
Deleteநெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு அடுத்த கொஞ்ச நேரத்தை தாக்குப்பிடிக்க உங்களுக்கு இயலுமெனில் இந்த லிங்கில் சென்று பாருங்கள் சார் : https://www.facebook.com/ketto.org/videos/892887394526856/
அப்புறமாய் இயன்ற உதவி செய்தால் ஓராயிரம் படலங்களைத் தாண்டிய ஆத்மதிருப்தி கிட்டுமென்பது நிச்சயம் !
I repeat - this is NOT for the faint hearted !
// அவர்களை ஒரு untapped business opportunity என்று கருத வேண்டியது தான் ! அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்திடும் பொறுப்பை நாம் விடாப்பிடியாய் நிராகரித்து வருவதே, தொடர்ச்சியாய் யார் யாரோ - ஏதேதோ கூத்துக்களை அரங்கேற்றிடக் காரணமாகிப் போகின்றன ! இந்த முறை நாமே முயற்சித்துப் பார்ப்போம் ; //
ReplyDeleteExcellent.
கிட் ஆர்டின் கண்ணனுக்கு(தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நண்பரே
Deleteமிக்க நன்றி ATR சார்..!
Deleteமிக்க நன்றி Unknown சார்..!:-)
(இப்போதுதான் பார்த்தேன். தாமதமான பதிலுக்கு ஸாரி சார்ஸ்.! )
ஒன்று நன்றாக புரிகிறது சார்,தவறான விஷயமெனினும் அடம் பிடித்து கொண்டே இருந்தால் அது கிடைத்து விடும்.......
ReplyDeleteஎட்டிப் பிடிக்க எவ்வளவோ இலக்குகள் இருப்பினும் இப்படி செக்கு மாடாய் சுற்றி வருவது எரிச்சலையே உண்டு செய்கிறது...
நான் போய் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் முட்டிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கிறேன்....
அகலமான சுவ்ரா சார் ?
Deleteஆமா சார் எவ்வளவு முட்டினாலும் தாங்கும்,என்ன செய்ய அவ்வப்போது தேவைப்படுகிறதே,ஹி,ஹி......
Deleteதிசை மாறிய தேவதை:
ReplyDeleteநம்ம சோடா ஹீரோ பார்க்க காமெடியா இருந்தாலும் பண்ற வேலையெல்லாம் சீரியஸாதான் இருக்கு.
கதை பாணி கொஞ்சம் சீரியஸாகவும்,ஓவிய பாணிகள் கொஞ்சம் நகைச்சுவையாகவும் உள்ளது போல் தோன்றுகிறதே.!
ஜில்லார் மாதிரி செமி கார்ட்டூன் பாணியோ???
வித்தியாசமான ஓவிய பாணிகள் அந்த கட்டிடங்களை டாப் ஆங்கிளில் வரைந்துள்ள டாப்போ டாப்,முன் அட்டையின் வித்தியாசமான வடிவமைப்பு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்தது சிறப்பு.
பின்னட்டையில் பார்கோடில் உள்ள வெளியிட்டு எண் மாறுபட்டிருப்பது ஏனோ?
எமது மதிப்பெண்கள்-9/10.
போர்முனையில் ஒரு பாலகன்:
ReplyDeleteரூபி & ஸ்கூபி கூட்டணியின் நகைச்சுவை கதகளி இந்த முறை கர்னலின் வாரிசு ஜார்ஜுடன் தொடர்கிறது....
கடினமான ஒரு தருணத்தில் மனதை இலகுவாக்கும் கதைக்களம்,ஆங்காங்கே முகத்தில் புன்னகை வரவைக்கும் வசனங்களும்,அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கும் உடல்மொழியுமாய் நிறைவாய் ஒரு காமெடி கூட்டணி.
சில இடங்களில் சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவெனினும் வசனங்கள் சற்றே தாங்கிப் பிடிக்கின்றன.
போர்முனைக் காட்சிகள் அடர்பச்சை வண்ணத்தில் டாலடிக்கிறது.
எமது மதிப்பெண்கள்-9/10.
விண்ணில் ஒரு வேதாளம்:
ReplyDeleteசும்மா சொல்லக் கூடாது கோல்டன் கோஸ்ட் சாகஸம் கில்லி மாதிரி சொல்லி அடிக்குது,
விறுவிறுப்பான வாசிப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் களம்,
வாய்ப்பு கிட்டாமல் போன கதைகளை பார்ப்பதும்,படிப்பதுமே அலாதியான அனுபவம்தான்.
ஜேம்ஸ்பாண்டின் அடுத்த சாகஸத்திற்கு வெயிட்டிங்.
எமது மதிப்பெண்கள்-9/10.
கைதியாய் டெக்ஸ்:
ReplyDeleteடெக்ஸின் தோற்றத்தில் P செய்யும் நரித்தந்திரத்தில் கேலப்பில் காலைப்பொழுதில் துவங்கும் கதையானது முதல் பக்கத்திலேயே நம்மை கதைக்களத்தில் இழுத்துக் கொள்கிறது....
P யினுடைய தந்திர வேலைகளை அறியாத டெக்ஸ் தன் குழுவினருடன் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருக்க தன்னை சுற்றி இறுக்கும் வலையிலிருந்து வெளிவருவது எப்படி?
பொதுவில் கதையின் வில்லன் வலுவான பாத்திரமாக இருந்தால் கதை இயல்பாகவே விறுவிறுப்பாய் அமைந்துவிடும்,அதற்கு இந்தக் கதையும் விதிவிலக்கில்லைதான்...
எனக்குத் தெரிந்து டெக்ஸை மண்டை காய வைக்கும் குறிப்பிடத்தக்க வில்லன்களின் பட்டியலில் இந்த P தாராளமாக இடம்பிடிக்க வாய்ப்புண்டு.
எந்த குழப்பமும் இல்லாமல் நேர்கோட்டில் விறுவிறுப்பாய் நகர்த்திச் செல்வதே டெக்ஸ் கதைகளின் பலம்.
அடுத்து என்ன,அடுத்து என்னவென்று விரட்டும் சேஸிங்கில் நாமும் மூச்சிரைக்க ஓடுவதான உணர்வு...
மூச்சிரைக்க நடக்கும் ஒரு ஓட்டப்பந்தயத்தில் போக்கு காட்டும் வில்லனை போட்டுத் தள்ளுகிறார் டெக்ஸ்....
இறுதிவரை தண்ணி காட்டும் வில்லன் P சரியான எத்தன் தான்.
சந்தேகம் என்னவெனில் வில்லன் P மாறுவேடத்தில் ஜித்தனாக இருந்தாலும் குற்றமிழைக்குமிடத்தில் பேசும்பொழுது குரல் வித்தியாசம் காட்டிக் கொடுக்காதா?
இதற்கு என்ன வியாக்கியானம் இருக்க முடியும்?
ஒருவேளை வில்லன் P குரலை மாற்றிப் பேசுவதிலும் ஜித்தனோ?
மொழிபெயர்ப்பு வார்த்தைகளில் வித்தியாசமான சொல்லாடல்கள் இடம்பிடித்திருப்பதாக தோன்றுகிறதே?
"மவுத்தாகியிருந்தால்"
"யூத்"
எமது மதிப்பெண்கள்-10/10.
//மொழிபெயர்ப்பு வார்த்தைகளில் வித்தியாசமான சொல்லாடல்கள் இடம்பிடித்திருப்பதாக தோன்றுகிறதே?//
Deleteகொஞ்சமாச்சும் உப்பரிகையிலிருந்து கீழிறங்குவோம் என்று நினைத்தேன் சார் ! And இது கடைசி ஓராண்டுக்கும் மேலாகவே டெக்சின் கதைகளில் சத்தமின்றிக் கடைபிடிக்க முயற்சித்து வரும் பாணி ! இளைய வாசகர்களிடமிருந்து ரொம்பவே அந்நியப்பட்டிடக்கூடாதென்று பட்டது !
///
Deleteகொஞ்சமாச்சும் உப்பரிகையிலிருந்து கீழிறங்குவோம்///---திடீர்னு என்ன ஆயிரம் வருட முன்பான மன்னர்கள் கால வர்ணனைக்கு சென்று விட்டீர்கள் எடிட்டர் சார்!
ஏதும் வரலாற்று பின்னணி கொண்ட காமிக்ஸ் மொழி பெயர்ப்புல இருக்கா? அல்லது பார்வையில் பட்டதாங் சார்!???
வரலாற்றில் பிரயாணம் னாவே எனக்கு தனி குஷி வந்துடும்!
சீசர், கிரேக்க ராஜ்யங்கள், ரோம் சாம்ராஜ்யம், பாரோக்கள், அப்புறம் அந்த கறுங்கிளி... கிளியோபாட்ரா...னு எங்காவது படிச்சாவே தனி உற்சாகம் பிறக்கும். இதுபோன்ற கதைகள்லாம் வருமா???
//
Deleteசீசர், கிரேக்க ராஜ்யங்கள், ரோம் சாம்ராஜ்யம், பாரோக்கள், அப்புறம் அந்த கறுங்கிளி... கிளியோபாட்ரா...னு எங்காவது படிச்சாவே தனி உற்சாகம் பிறக்கும். இதுபோன்ற கதைகள்லாம் வருமா???
//
அடுத்த மாதம் வரும்... நெப்போலியனோடே
வர்ணனையாவது - ஒண்ணாவது ! நான் சொல்ல முனைந்த கருத்துக்கு நியாயம் செய்திட தலைக்குள் தோன்றிய முதல் வார்த்தை இது தான் சார் ; அப்படியே டைப்பி விட்டேன் !
Deleteசம்முவத்துக்கு இன்னிக்கு தான் பொஸ்வதம் கெடைக்குங்கோவ்..
ReplyDeleteபோஸ்ட் ஆபீஸ் போய் பொஸ்தவத்தே மீட்டு வந்த சம்முவத்துக்கு ஒரு 'O' போடுங்க !
Deleteசார் சங்கடப் படுத்திட்டோமோ... தயவு செய்து மன்னியுங்கள்...
ReplyDeleteஸ்டீல்
Deleteஉருண்டாலும் புரண்டாலும் இப்போது பெரிய சைசில் வராதுன்னிட்டீய.... ஆனா வரலாற்று மசூதியில் மிஸ் பண்ணிட்டம்ங்ற வேதனை மட்டும் நீங்காது... மற்றபடி தேடும் நண்பர்களுக்கு சந்தோசம்... அத வச்சு கல்லா கட்ட நினைக்கும் கொள்ளையர் க்கு கூடுதல் சந்தோசம்...
Deleteஉருண்டாலும் புரண்டாலும் இப்போது பெரிய சைசில் வராதுன்னிட்டீய.... ஆனா வரலாற்று சாதனய மிஸ் பண்ணிட்டம்ங்ற வேதனை மட்டும் நீங்காது... மற்றபடி தேடும் நண்பர்களுக்கு சந்தோசம்... அத வச்சு கல்லா கட்ட நினைக்கும் கொள்ளையர் க்கு கூடுதல் சந்தோசம்...
Deleteஒரே புத்தகம் என்பது ஆர்வலர்க ள ஈர்க்கலாம்...
Deleteபெரிய சைஸ் இன்னும் கூடுதல் கவனத்தை கோர உதவியிருக்கலாம்...
ஆனா இதன் வெற்றிகரமான முன் பதிவும் விற்பனையும் வரும் நாளை எண்ணி மகிழ்வுடன்
உங்க வேதனை புரியுது தான் ஸ்டீல் ; இங்கேயும் கண்ணெல்லாம் தண்ணி ! இஸ்திரி போச்சேன்னு ஒரே அழுகாச்சி !
Deleteவிண்ணில் வேதாளம் அட்டகாசம்... அன்று பாண்டிய ஒதுக்கியது நினைவில்... வளந்துட்டனோ
ReplyDeleteநமக்கு நேரம் சரியில்ல.....
ReplyDeleteஇன்றும் புத்தகம் வரவில்லை..:-(
This comment has been removed by the author.
Deleteஅலுவலகத்தில் booking number வாங்கி track பண்ணி பாருங்கள் தலீவரே.
Deleteஎனக்கும் வரவில்லை.tracking செய்து பார்த்தால் in-transit என வருகிறது. எனக்கு வெள்ளிக்கிழமை எந்த பார்சல் அனுப்பினால் 3-4நாட்கள் கழித்து தான் (ஞாயிற்றுக்கிழமையை சேர்க்காமல்) வருகிறது.
Deleteஆஹா....மறுபடியுமா ? முதல்லேர்ந்தா ?
Deleteநல்ல விசயம்...உதவும் கரங்கள் அதிக அளவில் சேர வேண்டும். என்றால் என் மனதில் தோன்றியது....பலரிடம் கருப்பு வெள்ளையிலும்,கலரிலும் பீரோவில் உறங்கி கொண்டு இந்த இரத்தப் படல தொகுப்பை அனைவரும் வாங்குவார்களா என்பது கேள்வி குறியே??????
ReplyDeleteஇதுவே புதுக் கதைகளின் தொகுப்பாக ரூபாய் 2000 +ரூபாய் 1000(உதவித் தொகை) =ரூபாய் 3000 யாக களம் இறக்கினால் நிறைய உதவித் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ...
நல்ல ஐடியா.
Deleteகொரோனா காலம் முடிவுக்கு வரட்டும் நண்பரே !
Deleteஇப்போதைய இந்த இரத்தப் படல முயற்சி நண்பர்களின் நம்பிக்கைகளின் பேரில் மட்டுமே ! சரியானால் சந்தோஷம் ; சொதப்பினால் வருத்தங்களில்லை !
இரத்தப் படலம் ரீ-ரீபிரிண்டிங்குக்கு பதிலாக தளபதியாரின் *தங்க கல்லறை* ( பழைய B&W மொழிபெயர்ப்பில் ) மற்றும் *இரும்புக்கை எத்தன்* ( இதன் இரண்டாவது புத்தகம் படுமோசமான பிரிண்டிங்கில் வந்ததால் ) கதைகளை ரீபிரிண்டலாம் சார்.
ReplyDelete(இது எனது விருப்பம் மாத்திரமே.மற்றபடி இரத்தப் படலம் ரீ-ரீபிரிண்டிங்குக்கு எதிரான கருத்தல்ல.)
//இரத்தப் படலம் ரீ-ரீபிரிண்டிங்குக்கு பதிலாக //
Delete?!
அப்புறமென்ன சார் - ஒரு நல்ல நாளாய்ப் பார்த்து அதுக்குமொரு பந்தக்கால் ஊனிட்டாப் போச்சு !
Deleteகுழந்தை....
ReplyDeleteஅதற்க்கு உதவ ஏன் காத்திருக்க வேண்டும் சார்....ஒரு பேங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க இயன்ற அனைவரும் இப்போதே உதவலாமே...
https://www.ketto.org/stories/savenoorjahan?utm_source=external_Ketto&utm_medium=fbad&utm_campaign=savenoorjahan&utm_content=savenoorjahan_video&utm_term=savenoorjahan_004_VA_FB_LM_60_ENG&fbclid=IwAR2Jq9_rLUuBw73RZvz3d2uyK8ak_3NQZVekq4i1rfFrIqVbKVtIsAMstI0&payment=form
Deleteமேலே இருக்கும் லிங்கிலிருந்து நேரிடையாக அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர்்மூலம் பண்ண இயலும் பழனி.
Deleteஇல்ல நம்ம ஆசிரியர் முன்நின்று நடத்துகிறார் ஒரு நல்ல தொகையாக கிடைக்க நாம் சேர்ந்து அனுப்புவதே நலமாகும்...
Deleteஅதுவும் நல்ல ஐடியா. எடிட்டர் கன்பர்ம் செய்தால் லயன் அக்கவுண்டிற்கே அனுப்பிடலாம்.
Delete//அதுவும் நல்ல ஐடியா. எடிட்டர் கன்பர்ம் செய்தால் லயன் அக்கவுண்டிற்கே அனுப்பிடலாம்//
DeleteYES.... I AGREE ...
இல்லை நண்பர்களே, சின்னதோ-பெரிதோ அவரவர் சக்திக்கு இயன்ற தொகைகளை அவரவராய் அனுப்பிடலே நலமென்பேன் ! நம் பிரார்த்தனைகள் அவர்களுக்கும், அவர்களது நன்றிகள் உங்களுக்கும் முறையே சேர்வதே பொருத்தமாக இருக்கும் !
Deleteஇந்த மாதிரியான நேரத்தில் 4000 ரூபாய் 300 பேர் இணைந்தால் ஜெயமே என்பது தேவையற்றது என்பதே எனது கருத்து சார் சமீபத்தில் வெளிவந்த கதையை மறுபதிப்பு செய்வது தேவையற்றது என்றே கருதுகிறேன்! சிறுமிக்கு உதவி செய்வது நல்ல நோக்கம்தான் ஆனாலும், இம்மாதிரியான நேரத்தில் புத்தகத்தை போட்டு, அவருக்கு உதவி செய்வதை விட நேரிடையாக (உதவ நினைப்பவர்கள்) கொடுத்து விடலாம் சார்! லிமிடெட் சர்க்குலேஷன் விஷயத்தில் வேற ஏதாவது புதுக்கதைகளை போட முடிவெடுக்கலாமே? கென்யா (5பாகம்) ஒற்றை நொடி 9 தோட்டா (3 பாகம்) அர்ஸ் மேக்னா (3பாகம்) ஒரே இதழாக போட்டால் நிச்சயம் தெறிக்க விடும் சார். மூன்று புத்தகத்தையும் ஒன்றாக போட்டாலும் 1500 க்குள்தான் அடங்குமென நினைக்கிறேன்! இதற்கான வரவேற்பு இருந்தால் இந்த வருடத்திலே கொண்டு வர முயற்சிக்கலாம்! வரவேற்பு இல்லையென்றால் இத்திட்டத்தை கைவிட்டு விடலாம்! இது சக்ஸஸ் ஆனால், இது போன்ற காம்போ இதழ் ஸ்பெஷலை வருடந்தோறும் ஒன்று இறக்கி பார்க்கலாம்! இது சிறிய யோசனைதான் நல்லாயிருந்தால் பரீட்சித்து பார்க்கலாம்!
ReplyDelete@ கலீல் ஜி
Deleteவெவ்வேறு படைப்பாளிகள் என்பதால் காம்போ சாத்தியம் மிக குறைவு என்று நினைக்கிறேன் . வேண்டுமானால், SLIPCASE -ல் எல்லா இதழ்களையும் HARD BOUND-ல் உள்ளே திணிக்கலாம். இது கூட LA LISTE 66 கதையும் மற்றும் கைவசமிருக்கும் ஒரு புது கௌ பாய் கதையையும் சேர்த்துக்கலாம். எல்லாமே ஒரு ரூ.2500/- குள் தான் வரும்.
P N :ஒற்றை நொடி 9 தோட்டா (3 பாகம்) அல்ல மொத்தம் 5 பாகங்கள்.
இப்போது நிலவரம் கலவரமாக இருப்பதால் ஸ்பெஷல் இதழ்கள் வெளிவரும் நாட்கள் கண்ணுக்கு எட்டிய மட்டிலும் புலப்படக் காணோம். இந்த மேரி போட்ட தான் ஆச்சு...? இல்லேன்னா... போச்சு..!
Deleteஅருமை... இத விட்டா வழி கிடையாது. . இதுவும் வரட்டும். இணைதடத்தில்
Deleteகலீல் @ சரியான கருத்து. ஆசிரியரும் பல ஆயிரம் தடவைகள் இதனை சொல்லிவிட்டார். நண்பர்கள் புரிந்து கொள்ளவில்லை எனும் போது என்ன செய்ய.
Deleteதம்பி உங்கிட்ட இருக்கு... இல்லாதவர்க்கு இது புதுசு... ஆசிரியருக்கு நட்டம் தர எண்ணல...
Delete@கலீல்
DeleteCorrect👍
// தம்பி உங்கிட்ட இருக்கு... இல்லாதவர்க்கு இது புதுசு... ஆசிரியருக்கு நட்டம் தர எண்ணல. //
Deleteஏலே சீரியஸா பேசும் போது, மறுபடியும் காமெடி பண்ணாதே! இத்தனை நாள் அமைதியாக இருந்தது போல் இன்னும் ரெண்டு நாள் அமைதியாக இரு! :-)
@ Mh mohideen
Deleteஜி ஏதாச்சும் காம்போ பேக்கோ அல்லது சிலிப் கேஸோ எதில் வந்தாலும் நலமே வரலன்னாலும் நலமே 😊 எல்லாம் ஆசிரியரின் முடிவே
Parani from Bangalore
Deleteஒன்றும் செய்ய முடியாதுதான் ஜி பந்தை வைத்து விளையாடுபவர்களின் விளையாட்டை ரசித்து பார்க்க வேண்டியதுதான் 😄
//சமீபத்தில் வெளிவந்த கதையை மறுபதிப்பு செய்வது தேவையற்றது//
Deleteசமீபத்தில் வந்த "மறு மறுபதிப்பை"....!!
//கென்யா (5பாகம்) ஒற்றை நொடி 9 தோட்டா (3 பாகம்) அர்ஸ் மேக்னா (3பாகம்) ஒரே இதழாக போட்டால் நிச்சயம் தெறிக்க விடும் //
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா கூட 5 பாகம் தான் சார் ! In fact பக்க நீளத்தில் அது தான் கென்யாவை விடவும் ஜாஸ்தி ! ஒன்றாய் சேர்த்துப் போட்டால் ரகளை செய்யும் தான் !
ஆனால் வெவ்வேறு படைப்பாளிகளின் 3 மெகா தொடர்களை ஒன்றிணைக்க அனுமதி கிட்டாது !
வித்தியாசமான மெகா காம்போ இதழாக இருந்திருக்கும் சார் (வெளிவந்தால்) ஆனால், அனுமதி கிட்டாது எனும் போது ஒன்றும் செய்ய இயலாதுதான் அடுத்த வருடமோ அல்லது அதற்கு அடுத்த வருடமோ ஏதாச்சும் மூன்று மெகா கதைகளை ஒன்றிணைத்து போடப் பாருங்கள் (அனுமதி கிட்டுகிற கதைகளாகப் பார்த்து முயற்சி செய்யுங்கள்)
DeleteReceived both months books in chennai thro ST. Thanks.
ReplyDeleteசார்...
ReplyDeleteஇது அடியேனின் கருத்து...
ஏன்னா ஈரோடு நஹின்னு ஆயிருச்சு...
சென்னை இருக்குற நெலமைல அடுத்த வருஷ புக் ஃபேர் - எப்படியோ...
இந்த வருஷ கடைசியில மக்கள்ட்ட பணபழக்கம் என்ன மாதிரி இருக்குமோ... யூகிக்க முடியல...
சர்வ நாசம் நிச்சயம்.
ஆத்தா கு...டி காத்தாடுது.
மகன் மதுரை வரைக்கும் நடை பாவாடை போடச் சொன்ன கதை ஆயிடக்கூடாது நம்ப நெலம...
தயவு செஞ்சு புது முயற்சி கள் வேண்டாமே...
இருக்குறத உட்டுட்டு
பறக்குறதுக்கு ஆசப்படக் கூடாது...
நாமளே ஆண்டிங்க சார்...
இதுல பண்டார வேஷம் எதுக்கு...
ஜனா, புரிகிறது. ஆசிரியருடன் துணை இருப்போம். நம்மால் முடிந்ததை செய்வோம்.
Deleteஆசிரியருடன் துணை இருப்போம். நம்மால் முடிந்ததை செய்வோம்.//
Delete+1. செபுவி, ஈபுவி இதெல்லாம் இல்லாத நிலைமையில் நிலை மிகச்சிரமம். எப்படியாவது இந்த கடின காலத்தை தாண்ட வேண்டும்.
//நாமளே ஆண்டிங்க சார்...
Deleteஇதுல பண்டார வேஷம் எதுக்கு..//
சீட்டாட்டத்தின் போது கையில் இருக்கும் சீட்டுக்களை நெஞ்சுக்கு நெருக்கமாகவே வைத்துக் கொண்டு செம நேக்காக ஆடும் திறன் சிலருக்கு உண்டு சார் ! சிலரோ கையில் இருப்பது ஜோடியே சேரா சமாச்சாரமாய் இருந்தால் கூட - பில்டப்பிலேயே ஜமாய்ப்பதுண்டு ! ஆட்டத்தின் ஏதேனும் ஒரு கட்டத்தில், இது என்ன மாதிரியான திட்டமிடல் என்பதைக் கண்டறியும் தருணமும் புலரவே செய்யும் ! Calling the bluff என்பார்கள் !
இரத்தப் படல விளையாட்டில் கூட இது அத்தகையதொரு வேளை என்று வைத்துக் கொள்ளுங்களேன்! "எங்களுக்கு வாய்ப்பு தர மறுத்திட்டே இருக்கே ; தந்து மட்டும் பாரேன் - அத்தினி பந்தும் சிக்சருக்குப் பறக்குதா - இல்லியான்னு அப்புறம் தெரியும் !' என்று 2 வருடங்களாய் சொல்லி வரும் நண்பர்களை இதோ இப்போது கிரவுண்டில் இறக்கி விட்டாச்சு ! தொடரவுள்ளது சிக்ஸர் மழை எனில், பார்வையாளர்களும் மகிழட்டும் ; அதன் பெயரைச் சொல்லி வறண்டு கிடக்கும் பூமிகளும், காடுகளும் செழிக்கட்டும் !
மாறாக - "இல்லே....வானிலை சரியில்லை ; பந்து மச மசன்னு தான் தெரியுது ! பிட்ச் சரியில்லை !" என்று சொல்வார்களெனில் ஸ்டம்ப்பை உருவி உள்ளே போட்டு விட்டு, மேட்ச் பாக்க வந்த சொற்பப் பார்வையாளர்களின் டிக்கெட் பணங்களை வாபஸ் தந்து விட்டு, எல்லோருமாக வீடு திரும்பலாமில்லையா ?
ஜெயமெனில் - நமக்கொரு படிப்பினை !
ஜெயமில்லையெனில் - ஆர்வங்களால் மட்டுமே ஆற்றைக் கடக்கச் சாத்தியப்படாதென்றோரு படிப்பினை !
This comment has been removed by the author.
ReplyDeleteஇப்போது இருக்கும் கடினமான சூழலில் இந்த மாத சந்தாவை மார்ச் வரை நீட்டிக்க நீங்க கேட்ட ஐடியாவே சிறப்பாக பட்டது எனக்கு. ஆனால் நம்மாட்கள் மாதத்துக்கு ஐந்து புக் கொடுத்தாலே ஆச்சு என்று உள்ளனர். எல்லாராலும் பெரிய தொகை கொடுத்து வாங்குவது இயலாத காரியம். என்னை கேட்டால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரிய சைஸ் புத்தகம் போன்ற அந்தர் பல்டிகள் இல்லாமல் வழக்கமான இதழ்களை கொண்டு சில மாதங்களை ஓட்டலாம். போதாக்குறைக்கு புத்தக விழாக்களும் நிறுத்தப்படுகின்றன. அவசரப்பட்டு அதிக விலை புத்தகம் போட்டு குடோன் நிறைத்து நோவானேன்..
ReplyDeleteதிருத்தம்: இந்த வருட சந்தாவை என்பதை மாத சந்தா என குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்க
Deleteதம்பி சரியான கோணத்தில் உள்ளது உனது சிந்தனை. பாராட்டுக்கள்.
DeleteWell said Prasanth Karthick.
Delete@கார்த்திக்
Delete👍👍👍
கவலையே வேண்டாம் பிரஷாந்த் ; ஒவ்வொரு மாதமும் அப்போதைய நிலவரங்களுக்கேற்பவே நமது திட்டமிடல்கள் இருக்கும் ! இந்தச் சூழல் சகஜமாகும் வரையிலும் அடக்கி வாசிப்பதே நமது modus operandi !
Deleteஇந்த "இ.ப." சமாச்சாரங்களெல்லாம் 'கையில் காசு ; பையில் புக்கு' - என்ற தெளிவோடே இயங்கிடும் ! முந்தையது இல்லையெனில், பிந்தையது இராது ! Simple !
விஜயன் சார், நேற்றும் இன்றும் நீங்கள் பலருக்கு பதில் சொன்னதை கவனித்தேன், மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாக பதில் சொன்னதாக தெரியும். ஆனால் அதனை தான்டி புரிந்து கொண்டது உங்கள் ஆதங்கம் மற்றும் வேதனை.
ReplyDeleteஇப்போது வாழ்வாதாரம் பாதிக்கபட்டு அடுத்த சில மாதங்களில் இன்னும் என்ன நடக்குமோ என யாருக்கும் தெரியாத சூழ்நிலையை இதனை நண்பர்கள் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை.
எல்லா தம்பி நாளை என்பது எப்பவுமே நிச்சய மில்லை... சந்தோசமா வேலை பாரு நல்லாருக்கும்னி... நல்லாருக்கும்... படைத்தவனருளால்
Deleteஏலே காமெடி பண்ணாதலே :-)
Deleteநானால...
DeleteSometimes hope is a bad thing. Really really bad thing.
Deleteஉன்னைத்தான் சொன்னேன் மக்கா! புரிஞ்சிக்கோ !!
Deleteஇங்கு நிலவும் லாஜிக் இல்லா மாயையில் இன்றைய சூழலில் நாலாயிரத்தின் நிஜ மதிப்பை மறக்கும் பிழையைச் செய்யாதீர்கள் சத்யா ! // Its true every day situation is changing.
ReplyDeleteவாழ்க்கை என்பது எளிதானது....
ReplyDeleteவருவத அனுபவித்து தான் தூரமும்...
தேவை எப்போதுமே இருக்கும்... இருப்பதற்கேற்ப வாழப்பழகுது சுலபமே...
பிரியாணி இல்லாட்டி சோறு அதுமில்லாட்டி கூழுன்னி... யாரும் சொல்லித் தராமல் கத்துத் தரும் வாழ்க்கை...
கிடைக்கும் சிறிய சிறிய சந்தோச௩்கள் தரும் இமாலய உற்ச்சாகத்த இழந்து விடாதீர்கள் நண்பர்களே
//வருவத அனுபவித்து தான் தூரமும்//
Deleteவருவத அனுபவித்து தான் தீரணும்
கவலையேபடாதீங்க ஸ்டீல். நீங்க எப்படி எழுதினாலும் புரிஞ்சுக்குவோம் 🤣
Deleteநண்பர்களே..
ReplyDeleteநாளை வெளியாகவுள்ள குமுதத்தில் (24-06-2020) நமது சமீபத்திய கி.நா'வான 'கண்ணான கண்ணே!' குறித்த அழகிய விமர்சனமும் 'அரசு பதில்கள்' பகுதியில் வெளியாகியிருக்கிறது! அதைக் காண "இங்கே கிளிக்குங்க பாஸு!"
ஏ.பி.கு : அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு top right corner பகுதியை உற்றுநோக்குபவர்களுக்கு நடிகை அஞ்சலியின் ஒரு மூச்சிறைக்கச் செய்யும் போஸ் முற்றிலும் இலவசம்!!!!!
கையில் கர்சீப் வைத்துக்கொண்டு இங்கே-க்ளிக் செய்யவும்! :P
நறுக் விமர்சனம்;
Deleteநல்ல விளம்பரம்!
குறிப்பு:நல்லாவே இறைக்குது!
புக்கு வர லேட்டாகுங்கறதால் எல்லா விமர்சனத்தையும் தாண்டினாலும், இங்கே க்ளிக்கலைன்னா ஈவி வருத்தப்படுவாரேன்னு க்ளிக்கி விமர்சனத்தை பாத்துட்டேன். ஆனா படிக்கலை.
Delete///பாத்துட்டேன். ஆனா படிக்கலை.///
Deleteஆங்! புரிஞ்சுடுச்சு ஷெரீப்! ;)
நான் விமர்சனம் படித்ததை மறந்து விட்டேன்!
Deleteஅஞ்சலி தெரிஞ்சுது.. விமர்சனமும் அதே பக்கத்துல இருந்துச்சா என்ன!?
Deleteதலைவர் கவுண்டரின் சிஷ்யருக்கு ஆறு மணிக்கு அப்பாலே எதுவும் தெரியாட்டி புரிஞ்சுக்க முடியும் ; அது எப்புடி selective ஆ ?
Deleteரெண்டு பக்கத்தையும் படம் போட்டுக் காட்டியபோதே, உங்களோட கலைநயம் நல்ல்லா புரிஞ்சது ஈ.வி சார்.
Delete///தலைவர் கவுண்டரின் சிஷ்யருக்கு ஆறு மணிக்கு அப்பாலே எதுவும் தெரியாட்டி புரிஞ்சுக்க முடியும் ; அது எப்புடி selective ஆ ?///
Deleteதலைவர் தியேட்டர்ல உக்காந்துகிட்டு முன்சீட்டில் இருக்குறவங்களை தடவிப்பாத்து கண்டுபிடிப்பாரில்லையா சார்.. சிஷ்யனும் அவ்விதமே..!:-)
இப்பதான் இந்த மாச புக்குகள் கைக்கு கிடைத்தன.முதல்ல சோடா குடிச்சிட்டுதான் மறுவேலை.
ReplyDeleteGas இருந்தாலும், இல்லாங்காட்டியும் சொல்லுங்க சார் !
Deleteஅஞ்சலியைக் காட்டி மைண்டை டைவர்ட் செய்தாலும், நான் மனசு மாற மாட்டேன்.
Deleteஏன்னா...
நான் ரெம்ப ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...
//இங்கே க்ளிக்கலைன்னா ஈவி வருத்தப்படுவாரேன்னு க்ளிக்கி விமர்சனத்தை பாத்துட்டேன். ஆனா படிக்கலை.//
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு பெரிய மனசு சார் !
நான் அதிகாரியின் உப்புமாவை தின்று சாலமன் சோடாவை கடக் கடக் என்று குடித்து, சாத்வீகமான ஒர் ஏப்பம் விட்ட குஷியில் இருக்கிறேன். BTW டெக்ஸ் கொஞ்சம் நாஸ்தி பண்ணிட்டீங்க. கிறிஸ்தவ கும்பல் கடக்கும் போது, "அவங்களை விடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்த வேண்டும் போல இருக்கு. மாமூலாய், சுலபமாக தடத்தை கண்டுபிடிக்கும் டெக்ஸே தடுமாறும் போது, நமக்கும் கொஞ்சம் தள்ளாடுகிறது. எப்படியோ, பணமாவது கிடைத்ததே, சந்தோஷம் தான்.
ReplyDeleteசோடாவின் சித்திரபாணி, கதைகளம்
90s முடிவில் வந்த Agent 327யின் சாகஸம்
மாதிரியே உள்ளது. அந்நாளில் அந்த இதழ் பல வாசகர்கள் விரும்பவில்லை என்றும் ஜப்பானிய மாங்கா வகை காமிக்ஸ் பற்றியும் எடி ஹாட்லைனில் பின்னர் எழுதியது ஞாபகம் வருது. எனக்கு அன்று வந்த Agent 327னும் பிடிக்கும், இன்று வந்த சோடாவையும் பிடித்திருக்கிறது. 18ஆம் பக்கத்துல உப்மா வை பற்றி படிக்கும் போது, சிரிச்சு முடியலே.
ஒரே ஒர் புகார் உள்ளது. முதல் பேனலில் வரும் வசனம் ரொம்ப காம்ப்ளக்ஸ் sentencing. அதே விஷயத்தை குறைந்த வரிகளில் சொல்ல முடியும். என்னைப்பற்றி கவலை இல்லை, ஆனால் படித்த பின்னர் நான் அவற்றை distribute செய்யும் மக்கள் 13 - 20 வயதுக்கு உட்பட்டவர்கள். முதல் பேனலே சிரமப்பட்டு படித்து, புரிய வேண்டும் என்னால் "நீங்களே வச்சுக்குங்க ஆண்டி" என்று ஒரு அட்டகாசமான காமிக்ஸை தொடமாட்டாங்க. Kindly consider this issue while translating further issues. அப்புறம் சோடா ஒரு slow falling spring water. சுருட்டை முழுங்கி தவிக்கும் தங்கமீன், பூங்காவில் வரும் இதர மனிதர்கள், கூத்துக்கள் என்று எல்லா மூலையிலும் சைலன்ட் ஜேக்கஸ், பட்டையை கிளப்புகிறது. Slow but steady dose of entertainment.
SODA : இது ஒரிஜினலாய் கிராபிக் நாவல் தடத்தில் அறிமுகமாகவிருந்த தொடர் சிஸ் ; நிச்சயமாய் சிறார்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன் ! Would be too complex a pill for them - even if the illustrations make it look otherwise !
DeleteAnd நீங்கள் குறிப்பிடும் அந்த complex துவக்க வரிகளை இவ்விதம் நான் அமைத்ததன் காரணம் பற்றி இந்த ஞாயிறின் vlog-ல் சொல்கிறேனே !
Vlog - ஹைய ஹய்யா, எடியின் வீடியோ ஹாட்லைன் வரப் போகுது.... டைம் இப்பவே செப்புங்க எடி சார். முஸ்தீபுகளை தயார் நிலையில் வைக்க தான்.
Deleteசனிக்கிழமை இரவு - blog பதிவுகள் வரும் அதே வேளையில் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! Maybe 9 pm !
Deleteஒகே. I'm waiting.
Delete// 18ஆம் பக்கத்துல உப்மா வை பற்றி படிக்கும் போது, சிரிச்சு முடியலே.// எனக்கு அந்த டயலாக் படித்த போது உங்கள் நினைவு தான் வந்தது.
Deleteஅட்டகாசமான விமர்சனம் அனு. நீங்கள் சொல்லும் நிறைய விசயங்கள் யோசிக்க வைக்கிறது. Practical ஆகவும் உள்ளது.
தாங்க்ஸ் குமார், அந்த பக்கத்தை படிக்கும்போதே புரிந்தது ஏன் போன பதிவில் நீங்க என் விமர்சனத்தை எதிர்பார்த்தத காரணம். ஆனாலும் டெக்ஸை ஒரு
Deleteதெலுங்குப் பட பாலகிருஷ்ணா ஆக்கிட்டாங்க...நினைக்க நினைக்க துக்கம் அவல் உப்புமா மாதிரி தொண்டையில் சிக்கி தவிக்கிறது.
@ Unknown
ReplyDeleteஇல்லாதவர்களுக்கு கிடைப்பது நல்லதுதான் நண்பரே! ஆனால், இது அதற்கான சமயமான்னு நாம யோசிக்கணும்! கொஞ்சம் யோசித்து இரத்தப்படலம் வருதுன்னு ஒரு வருடமாக முன்பதிவு செய்ய சொல்லி ஏகப்பட்ட இதழ்களில் விளம்பரம் செய்தும் புக் பண்ணல!சரி புக் வந்த பிறகாவது வாங்கி இருக்கலாம் அதுவும் செய்யலை! எல்லா புக்குமே இருக்கும் போது வாங்க முயற்சிக்காதவர்கள்தான் அது விற்றுத் தீர்ந்ததுமே புலம்புகின்றனர். நல்ல கதைகளை யோசிக்காமல் வாங்குவதுதான் எல்லாத்துக்குமே நல்லது விற்றுத் தீர்ந்த பிறகு புலம்பி பிரயோஜனம் இல்லைதானே நண்பரே
//இரத்தப்படலம் வருதுன்னு ஒரு வருடமாக முன்பதிவு செய்ய சொல்லி ஏகப்பட்ட இதழ்களில் விளம்பரம் செய்தும் புக் பண்ணல!சரி புக் வந்த பிறகாவது வாங்கி இருக்கலாம் அதுவும் செய்யலை! எல்லா புக்குமே இருக்கும் போது வாங்க முயற்சிக்காதவர்கள்தான் அது விற்றுத் தீர்ந்ததுமே புலம்புகின்றனர். //
Deleteமுன்பதிவில் அன்றைக்கே தென்பட்ட அயர்வு, ஒரு கட்டத்தில் இந்த முயற்சியே சொதப்பலாகிடுமோ ? என்ற பயத்தை எனக்கு உருவாக்கியது ! அந்தக் கதைகள் பின்னாட்களின் சிலாகிப்புகளில் மறந்து போயின என்பது தான் சிக்கலே சார் !
SODA அட்டைப்படம் வெகு நேர்த்தியாக உள்ளது. வித்தியாசமான ஓவியம் சட்டென ஈர்க்கிறது.
ReplyDeleteஆனால் SODA துப்பாக்கியை பிடித்துள்ள விரல்கள் மூன்றுதானே உள்ளது.கட்டை விரல், ட்ரிக்கரில் ஒரு விரல் அப்புறம் நடுவிரல்.பாக்கி விரல்கள் காணோம்.
ஓவியப் பிழையா? காட்சிப்பிழையா?
இடது கையில் பிஸ்டலை பற்றியிருக்கும் மனுஷனின் பெருவிரல் பின்னேயுள்ளது சார் ; குட்டி விரல் கீழே சப்போர்ட் செய்கிறது & மோதிர விரல் ட்ரிக்கரைப் பற்றி நிற்கிறது ! ஆள்காட்டி விரலும், நடுவிரலும் பிஸ்டலின் மறுபக்கம் உள்ளதை லேசாகக் கோடியிட்டுக் காட்டியுள்ளார் ஓவியர் ! இன்னொருவாட்டி பாருங்களேன் சார் !
Deleteஎடிட்டர் சார்.. தவறான புரிதல்! இடது கையில் அவருக்கு 3 விரல்களே! இதை நண்பர் மொய்தீன் கூட முந்தைய பதிவில் கோடிட்டுக் காட்டியிருந்தார். உறுதிபடுத்த பக்கம் 13ன் கடேசி ஃப்ரேமைப் பாருங்கள்!!
Deleteஇடது கையில் 2 விரல்கள் இல்லாததை மறைக்கவே கதைநெடுக இடது கையில் மட்டும் க்ளவுஸுடன் திரிகிறார்! பின்னட்டையில் கூட இது தெளிவாகவே காட்டப்பட்டிருக்கிறது!
Delete///பாக்கி விரல்கள் காணோம்.
Deleteஓவியப் பிழையா? காட்சிப்பிழையா?///
இரண்டுமே இல்லைங்க GP! உண்மை நிலவரமே அதுதான்!
ஸ்கூலிலே வண்ணாத்திப்பூச்சி வரைய சொன்னா டைனோசர் வரைஞ்சவனுக்கு டிராயிங் ஞானம் பூஜ்யத்துக்குப் பக்கமே ! இப்போவரைக்கும் பின்னட்டையில் மனுஷன் விரலை மடக்கி வய்ச்சிருப்பதாகவே நினைத்திருந்தேன் !
Delete///மோதிர விரல் ட்ரிக்கரைப் பற்றி நிற்கிறது///
Deleteமோதிர விரலால் ட்ரிக்கரை பற்றுவதும் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத சமாச்சாரம்!! துப்பாக்கியின் டிசைன் அப்படி!!
ஒருவேளை கஷ்டப்பட்டாவது மோதிர விரலே ட்ரிக்கரைப் பற்றியிருந்தாலும், ஆட்காட்டி விரல் அளவுக்கு மோதிரவிரலால் வலுவாகவும், வேகமாகவும் இயங்க முடியாது!! எதிரி முந்திக் கொண்டுவிடும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்!
////இப்போவரைக்கும் பின்னட்டையில் மனுஷன் விரலை மடக்கி வய்ச்சிருப்பதாகவே நினைத்திருந்தேன் !////
Deleteமடக்கி இல்லீங் சார்.. கழட்டி வச்சிருக்கார்!! :)
எடிட்டர் மைண்ட் வாய்ஸ் :
Deleteவலிய போய் மாட்டிகிட்டோமோ.. இதுக்குதான் படங்களை உன்னிப்பாக பார்த்து படிங்கபான்னு சொல்லக்கூடாது என்பது.
:-))
சோடாவின் இடது கையில் ரெண்டு விரல்கள் கிடையாது. ஏன், என்ன ஆச்சு என்பதை இனி எதிர் வரவிருக்கும் ஒரு ஆல்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. Let's wait and watch!.
DeleteM H MOHIDEEN
தகவலுக்கு நன்றி மொய்தீன் சார்! _/\_
Deleteசோடா ரெண்டு விரலை கழட்டி வைத்த மாதிரி நீங்க போட்டிருக்க நாலு வார்த்தைல ரெண்டை கழட்டிடுங்க ஈ. வி.
Delete1. நன்றி
2. சார்
MH MOHIDEEN
இதோ செஞ்சுடறேன்! :)
Deleteதகவலுக்கு மொய்தீன்! _/\_
கைதியாய் டெக்ஸ் படித்து முடித்து விட்டேன். பிரிகேடியஸ் சரியான வில்லன்.அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அதிகாரிக்கு மீண்டும் குடைச்சல் குடுப்பார் என நம்புகிறேன்.?!
ReplyDeleteதாராளமாய் நம்பலாம் சார் ! 'தல' யோடு மாத்திரமன்றி, ஜூனியர் தல கூடவும் ஒரண்டை இழுக்கிறார் மனுஷன் !
Deleteபோர்முனையில் ஒரு பாலகன் :
ReplyDeleteசார்ஜெண்ட் ரூபி என்ற பெயரில்
முறைப்பாய் இருக்கும் ராணுவ அதிகாரியின் விறைப்பாய் இருக்கும் சீருடைக்குள் இரும்பாய் இருக்கும் இதயத்தில் கரும்பாய் இனிக்கும் ஒரு கட்டழகி குடியிருக்க...
அந்த அழகிய ஒருதலை ராகத்துக்கு அபஸ்வரமாய் ஒரு இளைஞன் இடைஞ்சல் ஏற்படுத்த..
காட்டாறாய் பொங்கியெழும் சார்ஜெண்டை , கார்போரல் ஷ்கூபி அவ்வபோது கையாலேயே அணைபோட்டு கட்டுப்படுத்த முயல..
இதற்கிடையே சந்தர்ப்ப வசத்தால் செவ்விந்திய தலை க்ரேசி உல்ஃபின் மகன் சில்வர் மூனை அந்த இளைஞன் சுட்டுவிட.. அவனை பாதுகாக்கும் பொறுப்பும் ரூபியிடமே ஒப்படைக்கப்பட...
அந்த இளைஞன் யார்..?! சார்ஜெண்ட் ரூபியின் காதல் கைகூடியதா.?! என்றெல்லாம் கதையில் படித்து தெரிந்துகொள்க..!
காதல் ரசம் சொட்ட ரூபி ஜொள்ளு விட்டு நிற்கும் இடங்களும்., ஷ்கூபி அவரை வாரிவிடுவதும் நகைப்பான காட்சிகள்.!
கர்னல் ஆப்பிள்டன், கேப்டன் ஸ்டார்க் போன்றோரின் பங்கும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கேப்டன் ஸ்டார்க்.. ஹாஹா..கருமமே கண்ணாயினார்..!
ஸ்கூபியின் குதிரை செய்யும் அழிச்சாட்டியம் செம்ம..! காதலில் விழுந்த சார்ஜெண்டின் அலப்பறைகளால் கடுப்பாகி ஷ்கூபி பேசும் வசனங்கள் கலகலப்பு.!
மொத்தத்தில் நிறைவானதொரு கார்ட்டூன் இதழ்.!
ரேட்டிங் 10/10
Solomon David (soda)
ReplyDeleteதமிழில்
சாலமன் டேவிட் (சாடே)
இன்றுதான் கையில் எடுக்கப்போகிறேன்.!
இதுவரை விமர்சனம் எதையும் படிக்கவில்லை.!
ஜில் ஜோர்டான் மாதிரி இருப்பாரோன்னு ஒரு எண்ணம் தலைதூக்கினாலும் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமலேயே கதைக்குள் நுழையப்போகிறேன்.!
இன்னொரு ஜில் ஜோர்டனல்ல இவர் என்பது மட்டும் உறுதி !
Deleteஅந்த தங்கத்துக்கு என்ன கொறைச்சலாமா?? நீங்களா கடி சோக்கு சொல்லட்டே இருந்தீங்கன்னா நம்ம எப்பிடிங்க தாங்க முடியுங்க??
Deleteஜில் ஜோர்டன் டிடெக்டிவ் + காமெடி கலந்த பாணிக்குச் சொந்தக்காரர் !
DeleteSODA - டிடெக்டிவ் + அழுத்தம் கலந்த பாணிக்குச் சொந்தக்காரர் !
நான் சுட்டிக் காட்ட விரும்பிய வேறுபாடு இது தான் சம்முவம் சார் !
ReplyDeleteபோர் முனையில் ஒரு பாலகன்!
லாக்டவுன் முடிஞ்சி வந்த கதைகள் 5ல் 4 சொல்லி வெச்சாமாதிரி சீரியஸ் ரகம்!
காமெடி கதை படிச்சி ஒரு மாமாங்கம் ஆன பீலிங்கு! ஆகவே இம்மாத காமெடி கதை ப்ளூ கோட்ஸை பார்த்தவுடன் முதலில் எடுத்து விட்டேன்!
கதை இத்தனை ஸ்பீடாக இருக்கும்னு நினைக்கல! வழக்கமான ஸ்லோ பிக்கப்புக்கு மாறாக, முதல் பக்கத்தில் ஸ்கூபியும் ரூபியும் பெளவி கோட்டையில் நுழைவதில் இருந்தே விறு விறுனு ஆரம்பித்து, இருவரும் பின்னங்கால் பிடறில அடிக்க தெறிச்சிஓடும் கடேசி பேணல் வரை சர்ர்ர்னு ஓடுது கதை!
காதல் பித்து கதைநெடுக ரூபியையும், நம் வயிறையும் "படுத்தி" எடுக்கிறது.
காதலுக்கு போட்டி உயரதிகாரின்னு தெரிஞ்சும் விட்டு கொடுக்க முடியாமல் சலூனில் ரூபி செய்யும் சேட்டைகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.
காதலியின் சகோதரன் தான் தனக்கு போட்டினு தப்பா புரிந்து கொண்டதை தெரிந்து கொண்ட நொடி முதல் ரூபியின் அசடும் பித்தும் புதிய பரிணாமம் காண்கிறது; நமக்கு வயிறு "மேலும்" புண்ணாகிறது.
காதலியின் சொல்லை காப்பாற்ற ரூபி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற ஸ்கூபியும்,அவரது குதிரையும் அடிக்கும் கூத்துகள் ரகளையான கட்டம்!
கதையின் ஓட்டத்தில் கர்னல், ஜெனரல், பிரையன், சார்லி ஒயின்ஸ் ஓனர், 22வது குதிரைப்படை ஜெனரல் &கேப்டன் என பலரும் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்!
செவ்விந்திய சிறுவனை சுட்ட குற்றத்தை ஏற்றுக்கொள்ள வரிசையாக எல்லோரும் "பறக்கும்" காட்சி குபீர் சிரிப்பை வரவைக்கும் இடம். மறுபடி மறுபடி பார்த்து பலமுறை ரசித்தேன்!
வசனங்கள் நாம சரளமாகப் பேசும் இயல்பான நடையில் இருப்பது ரொம்பவே பிடிச்சிருக்கு!
ரொம்ப நாளைக்குப் பிறகு படிச்ச திருப்தியான காமெடி கதை!
கதை 30%,
ஓவியங்கள் 30%,
வசனங்கள் 30%,
அட்டைபடம் 10% என ஒன்றோடொன்று போட்டி போட்டு கலக்கும் இதழ்கள் எப்போதும் சோபிப்பது வழக்கம்!
இம்முறை இதே ஃபார்முலாவில் வெளியாகியுள்ள "போர்முனையில் ஒரு பாலகன்"-டோட்டலாக ஒர்த்திபுள் பேக்கேஜ்.
ரேட்டிங்....
கதை9/10;
ஓவியங்கள் 10/10;
வசனங்கள் 10/10.
என்ன இருந்து என்ன செய்ய - கார்டூன்களைக் கழற்றி விட்டுத் தானே ஆர்டர் செய்கிறார்கள் பெரும்பான்மை நண்பர்கள் !
Deleteஜெயமெனில் - நமக்கொரு படிப்பினை!
ReplyDeleteஜெயமில்லையெனில் - ஆர்வங்களால் மட்டுமே ஆற்றைக் கடக்கச் சாத்தியப்படாதென்றோரு படிப்பினை!
13 - No Idea
Deleteநீங்க நி.நி.ய மறுபடியும் வெளியிட்டா கூட நான் வாங்கமாட்டேன்!
என் வாழ்நாளுக்கு 200 காமிக்ஸ் புத்தகங்கள் போதும்! ஆல்ரெடி அதுக்கு மேலயே இருக்கு! இப்பவே சட்டரை சாத்தினாலும் நோ ப்ராப்ளம்! கிடைக்கும் வரை லாபம்!
என்னளவில் ஆகச் சிறந்த என்டர்டெய்னர்னா அது "டைகர்" மட்டும் தான்! பலமுறை மறுவாசிப்புக்கு உள்ளாவதும் டைகர் மட்டும் தான்!
மின்னும் மரணம்
Deleteஇரத்தக் கோட்டை
என் பெயர் டைகர்
தங்கக் கல்லறை
எல்லாம் ஆயுள் முடியரத்துக்குள்ள பத்து பத்து வாட்டி படிச்சா போதாது?
மிதுன் சூப்பர்
Deleteஉங்கள் எல்லா கருத்துக்களுக்கும் +1000000
///ஆயுள் முடியரத்துக்குள்ள பத்து பத்து வாட்டி படிச்சா போதாது?///
Deleteபத்து வாட்டிப் படிச்சா ஆயுள் முடிஞ்சிடாது? :P
பாதர் ஜஸின்டோ ஸான் மிகுவலில் சொன்னது உண்மை தான்..
ReplyDeleteமருத்துவ விஞ்ஞானம் இன்னும் முன்னேறவில்லை போல தான்.. இல்லையெனில் இப்போது இது தேவையா தேவையில்லையாவென நண்பர்களுக்குள் சச்சரவு வர வாய்ப்பே இல்லை..
Soda, எதிர்பார்த்ததை விட நன்றாகவே உள்ளது, தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள், காமெடியாக இல்லாமல் சீரியஸாக கதையாக எனக்கு பட்டது
ReplyDeleteஇது சீரியஸ் ஆன கதை தான் நண்பரே.
DeleteSoda, கொலை செய்வதற்கு காண்ட்ராக்ட் என்றதும் ஜானி wick படம் என் நினைவுக்கு வந்தது
ReplyDeleteஇந்த அதிகாரி ஏதாச்சும் பெரிசா பண்றேன்னு நினைச்சுட்டு பண்ணினா நமக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கும்.. ஒதை வாங்கிட்டு ஓடற போது பாயாசம் போட நெம்ப சங்கடமா இருக்குங்க.. சம்முவம் உன்னும் எந்த பொஸ்தவத்தையும் படிக்கிலீங்க..
ReplyDeleteஆனாலும் அந்த சோடா அட்டைப்படம் கலக்கிட்டீங்க.. நமக்கு வேற பொட்டி ஒடைச்சிதூம் அந்த பொறாகான்டை அட்டையை தா பார்த்துனுங்களா.. அந்த மேட் பினிசிங்க நம்மளை அடிச்சி போட்டுறுச்சுங்க.. அதிலியும் அந்த ஆளு துவாக்கியை புடிச்சிட்டிருக்க நேக்கை பார்த்தா ஒரு திருட்டு பையனுங் கூட தப்பிக்க முடியாதாட்டா இருக்குங்க இவுருகிட்டே இருந்து.. பெரிய கை தானாட்டா இருக்குதுங்க.. பார்க்கலாங்க.. மனுசன் என்ன தான் பண்றாப்பிலுன்னு..உன்னும் ஒரு பொஸ்தகத்தையும்
படிக்கலீங்க..
சோடா செம கேஸ் உள்ள சோடாவே
ReplyDeleteஇரத்தபடலத்தை அடுத்த வருடம் 2021 இல்போட்டு கொள்ளாலாலாமே ?? புதிய பாகங்கள் ஸ்பின் ஆஃப் கதைகள் விசாரணை படலம் 1 2 எல்லாவற்றையும் சேர்த்து
ReplyDeleteஇப்போது டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை கலர்ல்ல ஹார்ட் பவுண்டுல ஏக் தம்மா போட்டா 700 மேலும் விற்க வாய்ப்புண்டு. 1000 முன்பதிவுகள் கிடைத்தால ஜாக்பாட் தான். யோசித்து முடிவெடுங்க தலைவரே. விலையையும் குறைக்கலாம்.2 புத்தகங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு கொரியர் பேக்கிங் இலவசமாக கொடுக்கலாம்.இல்லை எந்த புத்தகத்தை போடலாமுன்னு ஆன்லைன் தேர்தல் நடத்துங்க.
*** சோடாவின் விறுவிறுப்பான சாகஸத்தில் ***** திசை மாறிய தேவதை *****
ReplyDeleteநியூயார்க் போலீஸான நம் 'சோடா' ஒரு தாதாவை கைது செய்ய - அந்த மோதலில் தன் மகனை இழந்த அந்த தாதா ஜெயிலில் இருந்தபடியே கூலிப்படையின் உதவியோடு சோடாவின் அம்மாவைக் கொன்று பழிதீர்க்க முனைவதும், சோடா எவ்வாறு தன் மம்மியைக் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை!!
இதே பாணியில் ஏகப்பட்ட திரைப்படங்களை நாம் பார்த்தாகிவிட்டோமென்றாலும், ஒரு காமிக்ஸாக இதைப் படைத்திருக்கும் விதமும், கதையை நகர்த்தியிருக்கும் விதமும் ரொம்பப் புதுசு - அதுவும் ஒரு திணுசு!
சித்திரங்களும், வண்ணங்களும் - பார்ப்பதற்குக் கார்டூன் போல தோன்றினாலும் இது காமெடி களமல்ல!! உண்மையில் மிகப் பரபரப்பான - கதையிலும், சித்திரங்களிலும் பல நுட்பமான சமாச்சாரங்களைக் கொண்ட சீரியஸான - டிடெக்டிவ் த்ரில்லர்!! முதல் பக்கத்தில் - அந்த இறைச்சி குடோனில் நடக்கும் வித்தியாசமான ஆக்ஸன் காட்சிகளே அமர்களமென்றால், தன் அன்னையைக் காத்திடும்பொருட்டு நம் ஹீரோ காலில் சுடுதண்ணி ஊற்றிக்கொள்ளாத குறையாய் பரபரவென இயங்குவதும், சின்னச் சின்ன தடயங்களையும் மிக நுட்பமாக/வேகமாகக் கண்டறிந்து உடனடியாக எதிர்வினை புரிவதெல்லாமே ஹை-வோல்டேஜ் ஆக்ஸன் அட்டகாசங்கள்!!
வைத்திருப்பது ஒரு துப்பாக்கிதான் என்றாலும், இரண்டு கைகளாலுமே ஒரே மாதிரியான இயக்கத்திறனுடன் மாறிமாறி சுடும் வல்லமை நம் சோடாவுக்கு!!
எடிட்டர் ஏற்கனவே நம்மிடம் சிலபல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லியிருப்பதைப் போல, சித்திரங்கள் சில பல இடங்களில் சத்தமின்றி கதைக்கு அழுத்தமும், அர்த்தமும் கொண்டு சேர்க்கும் காரணிகளாய் திகழ்வது - இக்கதையின் சிறப்பம்சங்களுள் ஒன்று! குறிப்பாய் - அந்த அபார்ட்மென்ட் லிஃப்ட் காட்சிகள், லிஃப்டிலிருக்கும் எடை காட்டும் டிஸ்ப்ளே, ஜன்னலில் வைக்கப்பட்ட பூச்செடி, மீன் தொட்டியில் மீனுக்கு ஏற்படும் கதி - என்று கூர்ந்து கவனிக்க வேண்டிய சமாச்சாரங்களும் கணிசமாகவே!
வித்தியாசமாய் இருக்குமென்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் தான்! ஆனால் நான் நினைத்ததைவிடவும் வித்தியாசமாய் அமர்க்களப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை!!
அடுத்தடுத்த கதைகளும் இதே ரீதியில் அமைந்துவிட்டால் 'சோடா'வுக்கு அதிக ஸ்லாட்டுகள் ஒதுக்கச் சொல்லி போராட்டங்கள் நடைபெற வாய்ப்புகளும் அதிகமே!
எனது ரேட்டிங் : 10/10
டியர் எடி,
ReplyDeleteபதிமூன்று மறுபதிப்பு பற்றிய திட்டமிடல், என்னை பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொள்வது மட்டுமில்லாமல், நமது சிறிய வாசகர்வட்டம் கொண்ட பதிப்பகத்திற்கு, ஒரு அனாவசியமான முயற்சி.
300 முன்பதிவுகளுக்கு மட்டும் என்று அறிவிக்கபட்டாலும், இதை சேகரிப்பாளர்கள், மற்றும் முன்பு தவறியிவர்கள் என்ற சொற்ப நபர்களுக்கு தவிர மற்றவர்கள் 3,4 என்று வாங்கி வைத்து பிற்பாடு மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் நிலைதான் ஏற்படும்.
அந்த பணம் எவ்விதத்திலும் பதிப்பாளருக்கு உதவாதது மட்டுமில்லாமல், நமது நவீன காமிக்ஸ் பயணத்திற்கும் புதிய சந்தாதரர்கள் சேர்ப்பதற்கு உதவவும் போவதில்லை. கிளாசிக் ரீப்ரிண்ட்கள் தனிதடமாக வெளியான சமயம், இதை கண்கூடாக நாமே கண்டிருப்போம். அவர்களின் பால்ய நாயகர்களின் புத்தகங்களை 1,2 என்று ஒரு நோஸ்டால்ஜிக்காக மட்டுமே வாங்கி கொண்டு, தற்போது வெளிவரும் மற்ற புத்தகங்களை பற்றி பேசும்போது, ஆர்வமில்லை, என்று ஒற்றை வாதத்தில் நகர்ந்தவர்கள் அதிகம்.
இந்த தாறுமாறு ரீப்ரிண்ட் மாயையில் உண்மையில் பணம் இழப்பவர்கள், தமிழ் காமிக்ஸ் அனைத்தையும் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் ஆர்வலர்கள் மட்டுமே. தங்க வாத்திடம் தொடர்ந்து கறக்க முயன்றால், ஒரு சமயத்தில், அவர்கள் ஆர்வத்தையும் நாம் இழக்க நேரிடலாம்.
மேலே கூறிப்பிட்டது எனது ஆதங்கம் மட்டுமே. இந்த பரீட்சையில், உண்மையில் 300 தனி நபர் முன்பதிவு நடந்தால், வரவேற்கவும் தயாராக இருப்பேன்... அதில் ஒரு அங்கத்தினராக மாறி. அது வரை எனது approach, Wait and Watch மட்டுமே.
Well said!! Agreed!!
Deleteஇரத்தப் படலம் நான் முதன் முதலாக வாசித்த காமிக்ஸ் தான். பாகம் 4ன்னு நினைக்கிறேன்.. ரெண்டு கேர்ள்பிரன்ட்சோடே கடைசி பேணலில் காலை நீட்டி அக்கடான்னு உட்கார்ந்துட்டு நம்ம 13 பேசறது இன்னும் எனக்கு XIII அளவுக்கே எனக்கு நியாபகமிருக்கு..அந்த பச்சை கலர் அட்டைபடம் அதுவும் எனக்கு அ ஆ இ ஈ சொல்லிக் கொடுத்த வாசுகி டீச்சர் வீட்டிலே தான் படிச்ச நியாபகம் கூட இருக்கு.. அதே வீட்டிலியே தான் சாண்டில்யனும், சுஜாதாவும் , ராஜேஸ்குமாரும், பிகேபியும், சுபாவும் கூட அறிமுகமானர்கள்.. கூடவே தூர்தர்சனும், அரசியலும்(ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன், தராசு,சதுரங்கமும் ( தோத்தவங்களுக்கு ஒரு கொட்டு), அப்புறம் (ரம்மி) நானுமே..
ReplyDeleteஅப்போ இருந்தே என்னுடைய முதல் மெயில் ஐடி ரம்மி13 தான்.. ஏன்னா 13 என்னுடைய பிறந்த நாள் என்பதால் தான்.. 2010 ல் ஜம்போ முழு தொகுப்பு கையில் கிடைத்த போது உலகத்தையே வென்று விட்டாதாக நினைப்பு.. கிட்ட தட்ட ஒரு மாதம் என்னுடைய நிரந்தர உறுப்பாகவே ஆகிவிட்டது அந்த புத்தகம்.. காலையில் கண்விழிப்பதும், அதையே இரவில் முகத்தில் போர்த்தியவாறுமே தூங்குவதாகவுமே பொழுது போனது. கமிட்டேட் பாய்பிரன்டின் கைப்பேசியை விட அதை சுமந்து திரிந்தேன்.. மூச்சா போகும் போதும் கூட அது இடது கையில் இருக்கும் விரித்த நிலையில் ( ஆபாசமாக இல்லை) இருக்கும்... சாப்பாட்டில் சோறு இருந்துததா, குழம்பு இருந்த்தா, ஏன் தட்டு கூட இருந்ததா என்று உணர முடியாத மோன நிலை..
நாலாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பது வயது.. கிட்டத்தட்ட 20 வருட தேடலுக்கு அந்த கனமான விடை (ரூ.200 என்ற காஸ்ட்லி விலையில்) கையில் கிடைத்த போது உணர்ந்த உற்சாகம், பரபரப்பு வாழ்க்கையில் திரும்ப கிடைக்க வாய்ப்பேயில்லை.. இதை விடவும் அதிக உணர்ச்சிபூர்வமான தருணம் மின்னும் மரணம்.. ( வாரிச் சுருட்டி கொண்டு போய் விட்டது).
2012 முதன் முதலாக கோவா டூரிஸ்ட் போன போது பார்த்த முதல் டாட்டூ சென்டரில் பச்சை குத்தி கொண்டேன் .. கண்ணாடியில் பார்க்கும் போது நான் XIII ஆகவே தெரிய வேண்டும் என்பதற்காக இடவல மாற்றத்துடன்.. இரத்த படலம் வண்ண மறுபதிப்பாக அறிவிப்பு வந்ந போது அது எனக்கு ஒரு பெரிய பொருட்டாக தோணவில்லை.. அசிரத்தையாக முன்பதிவை விட்டு விட்டேன்.. ஈரோட்டில் வாங்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்.. ஆனால் அந்த வருட புத்தக திருவிழாவில் அதை வாங்க முடியவில்லை.. கடைசியில் சமீபத்தில் தான் உ.ச (உழவர்சந்தையல்ல.. U.S) நண்பர் ஒருவர் மூலமாக லாக்டவுன் சமயத்தில் அன்ன்ன்ன்பளிப்பாக கிடைத்தது. மொத்த கதையையுமே XIII ஒரே டயலாக்கில் சொல்லி விடுவார்..பிளேனிலிருந்து குதிக்கும் முன்பாக.. " அப்படியில்லை.. நான் ஒரு பாவப்பட்ட ஜென்மம்.. ஆனால் என்னுள் பதுங்கி கிடக்கும் பேயை எதிர்த்து போராட திராணி இருக்கிறது" என்று..
இவ்வளவும் ஏன் சொல்றேன்னா
13ங்கிறது ஒரு எமோசன், ஒரு பீலீங்.. அதை அப்பிடி இருந்தா தா, இல்லே இப்பிடி இருந்த தா பீல் பண்ண முடியம்ங்கிறது நம்பற மாதிரி இல்லே..
அதே போல நிஜக் காதலர்கள் தன்னுடைய காதலியின் கழுத்தில் வேறு யாரோ தாலி கட்டி தள்ளிட்டு போறதை இரு முறை வாய்ப்பு கிடைச்சும் கண்டு வாளாவியிருப்பார்களா என்பதும் உறுத்துகிறது..
இறுதியாக.. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் இரத்தப்படலம் கிடைச்சிருச்சு என கேட்ட வாசகன்..
///13ங்கிறது ஒரு எமோசன், ஒரு பீலீங்.. அதை அப்பிடி இருந்தா தா, இல்லே இப்பிடி இருந்த தா பீல் பண்ண முடியம்ங்கிறது நம்பற மாதிரி இல்லே..///
DeleteSuper
####ஏற்கனவே வாங்கியிருப்போரையுமே இந்தக் கடின நாட்களில் சபலம் கொள்ளச் செய்வதன் லாஜிக் எனக்குப் பிடிபடவில்லை ! தவிர, புதுசாய்த் தாலி கட்ட சாரை சாரையாய் நண்பர்கள் வெயிட்டிங் என்பது மெய்யாகின் ஏற்கனவே நிம்மதியாய்க் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருப்போரைப் பார்த்துக் கண் சிமிட்ட வேண்டிய அவசியங்கள் தான் ஏதோ ?!####
ReplyDeleteமேக்ஸி சைஸ் என்றதும் மனதில் சபலம் தட்டியது சார்..
தற்போது உங்கள் விளக்கம் சற்று நிம்மதியை தருகிறது..
இதுவரை கிடைக்காத ( வாங்காத) நண்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..
வெளி மார்கெட்டில் ஆயிரக்கணக்கில் விலை போவதால் இந்த இதழுக்கு இதுவரை மவுசு குறையவில்லை.
உங்களின் இந்த முடிவை வரவேற்கிறேன் சார்..