Powered By Blogger

Friday, June 12, 2020

புக்ஸ் ரெடி..! படிக்க ரெடியா ?

நண்பர்களே,

வணக்கம். சீசனுக்கு குற்றால அருவிக்கரையில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கிருப்பின் அதனை சற்றே ஞாபகங்களுக்குக் கொண்டு வந்துகொள்ளுங்களேன்  !  பஜ்ஜி மாஸ்டர்  வாழைக்காயை கடலைமாவுக்குள் முக்கும் போதே வாய்க்குள் ஊற்றடிக்கும் ஜொள்ளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு  - சுற்றி லைன் கட்டி நிற்கும் மண்பானை தொந்திக்காரப் போட்டியாளர்களை கண்ணாலேயே அளவெடுத்தபடிக்கே முண்டியடித்து, நாலு செந்நிற பஜ்ஜிகளை ஆவி பறக்கும் சூட்டோடு உள்ளுக்குள் தள்ளியிருப்போம் அல்லவா ? கிட்டத்தட்ட அதே நிலவரம் தான் இம்மாத 4 புக் கூட்டணிக்கு ! 

கலர் இதழ்கள் இரண்டுமே 10 நாட்களுக்கு முன்னரே பணி முடிந்திருக்க, மீதமிருந்த 2 black & white இதழ்களில் மட்டும் வேலை ஜவ்வாய் இழுத்து வந்தது ! ஒரு மாதிரியாய் வியாழனன்றே அவை இரண்டுமே அச்சாகிட, அந்தக் கறுப்பு மசியின் 'கப்பு' துளி கூடக் குறைந்திருக்காச் சூட்டில் பைண்டிங்குக்குச் சென்று, ஒரே நாளில் அங்கே வேலைகள் முடிந்து, அதே சூட்டோடு சூடாய் நம் ஆபீசுக்கு முழு புக்குகளாய்த் திரும்பி, மூச்சிரைக்கும் பரபரப்பில் பேக் ஆகி, டப்பிகளுக்குள் ஐக்கியமாகி, வெள்ளி மாலையே கூரியரில் புறப்பட்டும் விட்டுள்ளன ! And சொதப்பல்களின்றிப் பணிகள் நடந்திடும் பட்சத்தில் ST கூரியரில் சென்றுள்ள பெரும்பான்மை பார்சல்களும் ; DTDC-ல் பயணிக்கும் குறைவான எண்ணிக்கையிலான பார்சல்களும் நாளைக்கே உங்கள் இல்லக் கதவுகளைத்  தட்டி நின்றிட வேண்டும் ! மறுக்கா இம்மாதமும் ஒரு 'கூரியர் கும்மியடி'க்கு அவசியமின்றி தலைதப்பிக்க பெரும் தேவன் மனிடோ அருள்பாலிப்பாராக !! And சகல பார்சல்களும் இங்கிருந்து கிளம்பி விட்டன என்பதையும் ஊர்ஜிதம் செய்து விட்டோம் ; so மறு முனையில் இருக்கக்கூடிய கூரியர் ஏஜென்சிகள் முறையாய்ப் பணியாற்றினால் all should be well !! 

ஆன்லைன் லிஸ்டிங் நமது www.lioncomics.in தளத்தில் ரெடி ; இன்னொரு தளம் maintenance காரணமாய் இயங்கிட இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகிடக்கூடும் ! 


Happy Shopping & Happy Reading all !! Bye for now !! 

152 comments:

  1. பாரசல் கெடைச்சா நாங்களும் ரெடிதான் சார்.

    ReplyDelete
  2. I am waiting for 9 books! After 3 months going to read our comics!!

    ReplyDelete
  3. காமிக்ஸ் காதலர்களுக்கு இரவு வணக்கங்கள்..!

    ReplyDelete
  4. புக்ஸ் ரெடியாம்! ஆத்தா ரெடியா?!!

    ReplyDelete
  5. கடந்த இரண்டு வாரங்களாக தூத்துக்குடியில் இருந்து எனது அண்ணன் DTDC மூலம் எனக்கு அனுப்பும் பார்சல்கள் அனுப்பிய மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் கிடைத்து வருகிறது! அதே போல் நமது காமிக்ஸ் புத்தகங்கள் நாளை கிடைத்தால் பார்சலை ஒருநாள் தனிமைபடுத்தி விட்டு Sunday நமது புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கலாம் என உள்ளேன்!

    மற்றும் ஒரு விஷயம் தற்சமயம் இந்த கூரியர் கம்பெனி எல்லாம் தாறுமாறாக charge செய்வதாக சொன்னார்கள்! தூத்துகுடியில் இருந்து அனுப்பும் 1 கிலோ எடை உள்ள பொருள்களுக்கு Rs.150 (பழைய ரேட் Rs.80) திருச்சியில் தற்சமயம் 1 கிலோ எடை உள்ள பொருள்களுக்கு Rs.200-250 வரை கேட்கிறார்கள்! கொடுமை!

    ReplyDelete
  6. உள்ளேன் அய்யா.

    ReplyDelete
  7. ஆஹா அருமையான செய்தி புத்தகங்கள் கிளம்பியது. மிகவும் ஆவலுடன் நான்

    ReplyDelete
    Replies
    1. வண்டி கிளம்பிடுச்சு குமார். சில பல தூறல்களுடன் இரண்டு நாட்களாக சில்லென்று உள்ள சென்னை வானிலை போல வரவேற்கிறேன்.

      Delete
  8. சுடச் சுட பஜ்ஜியா? எடிட்டர் சார்?
    இருக்கும் பல் கூச்சத்தில் இதை நினைத்து தான் பார்க்க முடியும் (ஒரு பேஸ்ட்டிலும் பலன் கிடையாது, வெற்று marketing). டெக்ஸின் படத்தை close up இல் காமித்து பல்லை மிரட்டி பார்க்கிறேன். ஆறிப் போன பஜ்ஜியானாலும், சுவை இருந்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. ////டெக்ஸின் படத்தை close up இல் காமித்து பல்லை மிரட்டி பார்க்கிறேன்.////

      அப்படியே 'செவ்விந்திய நாய்களே'ன்னு ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்க சகோ.. மொத்தப் பல்லையும் செலவில்லாம பிடுங்கிடலாம்! :D

      Delete
    2. சுட சுட பஜ்ஜி I like it. உண்மை தான் எடிட்டர் சார் நீங்கள் விவரிக்கும் போதே எனக்கு நாவில் ஜலம்...

      Delete
    3. // அப்படியே 'செவ்விந்திய நாய்களே'ன்னு ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்க சகோ.. மொத்தப் பல்லையும் செலவில்லாம பிடுங்கிடலாம்! :D //

      :-) :-)

      அப்புறம் உப்புமா என சொல்லி பாருங்கள் டெக்ஸ் கூட குப்புற அடித்து கொண்டு ஓடுவதை பார்க்கலாம் :-) அப்படியே நான் எஸ்கேப் :-)

      Delete
    4. Vijay and PFB, you bad boys 😁 உங்கள்ளுக்கு சகோதரி ஆவதற்கு நான் பொக்கை வாயோட உலாவனுமா? காலம் இப்படியே போய் விடாது. புத்தக விழாவில்
      நேரில் சந்திக்கும் போது நடக்கும் கச்சேரி.

      Delete
    5. நல்ல வேளை முன் கூட்டியே சொல்லிட்டீங்க அனு நன்றி:+)

      அன்றைக்கு நாங்கள் ஹெல்மெட் போட்டு கொண்டு வருவோம்ல :-)

      Delete
    6. அப்படியே நம்ப சகோதரி அனுவுக்கு ஒரு பல் செட் பார்சல்ல்ல்ல்.

      Delete
    7. // நேரில் சந்திக்கும் போது நடக்கும் கச்சேரி //

      கொரோனா கச்சேரி முதலில் முடியட்டும்.

      Delete
    8. /// கொரோனா கச்சேரி முதலில் முடியட்டும் ///

      அதச் சொல்லுங்க பரணி. எப்ப முடியும்னு தெரியலை.

      Delete
    9. ஆனாலும் இந்த லாக் டௌன் புண்ணியத்தில் உப்மாவுக்கு நாக்கு பழகிவிட்டது !

      இனி வரும் கதைகளில் அதிகாரி வறுத்த கறிக்குப் பதிலாய் உப்மாவை வாங்கித் தந்து வெள்ளிமுடியாரை சரிக்கட்டிடுவது போல கதையினை அமைத்து - உப்மா புகழை வேர்ல்டு லெவெலுக்கு பேமஸ் ஆக்கலாமோன்னு கூட தோணுது ?!! எல்லாப் புகழும் உங்களுக்கே சிஸ் !

      என்ன ஒரே பிரச்சனை - "அதிகாரியின் உப்மா' என்று பாயசப் பார்ட்டிகள் கிளம்பி விடுவார்கள் !

      Delete
    10. அதிகாரியின் உப்மாவா?? அதிகாரியே உப்புமா தானே..

      Delete
    11. வேர்த்திடுமே...எங்கிருந்தாலும் மூக்கிலே வேர்த்திடுமே !!

      Delete
    12. பின்னே அதிகாரியின் தீவிர ரசிகர் அல்லவா :-)

      Delete
    13. ///அதிகாரியின் உப்மாவா?? அதிகாரியே உப்புமா தானே..///

      ஹாஹாஹா!!!

      Delete
  9. ரெடியோ ரெடி சார்...:-)

    ReplyDelete
  10. சோடா பஜ்ஜியே இம்மாதம் இத்தாலி பஜ்ஜியளவிற்க்குசபலத்தை கிளப்புகிறது. விஆர் வெய்ட்டிங். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  11. அய்ய்யோ ஹாலிவுட் பஜ்ஜியையும் கவுண்டர் அண்ட் கோவையும் விட்டுட்டேனே, மொத்த்தில் இம்மாதம் பட்டையைக்கிளப்பும் என்பது உறுதி.

    ReplyDelete
  12. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  13. தாமதமில்லாமல் இன்னிக்கு இதழ்கள் கிடைச்சிட்டா,நாளைய ஞாயிறு இனிதாய் செல்லும்....

    ReplyDelete
  14. எல்லோருக்கும் வணக்கம்

    ReplyDelete
  15. நான் இந்த வருடம்தான் சந்தா காட்டினேன். புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. வருக வருக.

      Delete
    2. சூப்பர்!!!
      சந்தா கட்டிய சதா!! :)

      Delete
    3. வணக்கம் நண்பரே. நமது தளத்திற்கு நல்வரவு....

      Delete
    4. வெல்கம் நண்பரே சதா 💐💐💐💐💐

      Delete
    5. @சேலம் TEX விஜயராகவன் அதற்குள் சின்ன வேலையாக வெளியே சென்று விட்டதால் தளத்திற்கு வர முடியவில்லை. இதோ மறுபடியும் வந்து விட்டேன் அண்ணா

      Delete
  16. படிக்க ரெடி, புக் ரெடியா? ஏன்னா இப்போ பெருந்தேவன் மானிடோவின் அருளை விட மிகப் பெருந்தேவன் dtdcயின் அருள் தான் அவசியம் தேவைப்படுகிறது.

    ReplyDelete
  17. புத்தகம் கைக்கு வந்ததும் புக்கை படிக்கிறோமோ இல்லையோ முதலில் கண் தேடுவது அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்களின் விளம்பரங்களை மட்டுமே 😊அதன் பிறகுதான் படிக்கும் படலமே ஆரம்பிக்கும் 😄

    ReplyDelete
    Replies
    1. //முதலில் கண் தேடுவது அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்களின் விளம்பரங்களை மட்டுமே 😊// நானும் ஹாட்லைன் மற்றும் அடுத்த வெளியீடுகள் எப்போதுமே

      Delete
    2. செம்ம கலீல் ஜி

      Delete
    3. //முதலில் கண் தேடுவது அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்களின் விளம்பரங்களை மட்டுமே 😊//

      உண்மை. நமது காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த நாள் முதல் இவைகளை தான் எனது கண்கள் முதலில் பார்க்கும்.

      Delete
  18. Replies
    1. உங்களை தான் நினைத்தேன் எங்கே ஆளை காணோம் என்று

      Delete
    2. Sorry sir .சில நாட்களாக அதிகப்படியான தலைவலி மற்றும் கழுத்துவலி. (எலும்பு தேய்மானம்). இததுடனே regular Shift duty ம். So too tired. அதனால்தான் frequent ஆக வர இயலவில்லை.

      Delete
    3. நன்றிகள் சார்.

      Delete
  19. இளவரசி வாழ்க!
    இளவரசி வாழ்க!

    அப்புறம்....
    ஆசிரியர் அவர்களின்
    வேண்டுகோளுக்கிணங்க
    கார்வினும் வாழ்க!

    ReplyDelete
  20. டெக்ஸ் வாழ்க!
    கார்சன் வாழ்க!
    கிட் வாழ்க!
    டைகர் ஜாக் வாழ்க!

    ReplyDelete
  21. ஆர்டின் வாழ்க !
    பெல்ஹாம் வாழ்க !
    ஜோ டால்டன் வாழ்க !
    ரின்டின் கேன் வாழ்க !
    ஜாலி ஜம்ப்பர் வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. அப்படியே
      மாயாவி வாழ்க
      லாரென்ஸ் டேவிட் வாழ்க
      ஸ்மூர்ப் வாழ்க

      என சேர்த்துக்கோங்க சார்! இவர்களின் கதைகள் தான் இப்போது வரவில்லை! atleast வாழ்க என சொல்லிவைப்போம்!

      Delete
    2. ஸ்டெல்லா ஜானி நீரோ வாழ்க!
      சார்லி வாழ்க!
      காரிகன் வாழ்க!
      ரிப் கெர்பி வாழ்க!
      ஜார்ஜ் வாழ்க!
      வேதாளர் வாழ்க!

      Delete
    3. அதிகாரியின் உப்புமா வாழ்க.

      Delete

  22. காமிக்ஸ் வாழ்க!
    எடிட்டர் வாழ்க!
    S.T கூரியர் வாழ்க!
    கொரோனா(மட்டும்) ஒழிக!
    பொக்கிஷங்கள் வந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஜூரம் 104 டிகிரியைத் தாண்டி பாடாய் படுத்திக் கொண்டிருப்பதால் (கொரோனா பீதி வேறு!) நாளைதான் பார்சல் திறக்கப்படும்.

      Delete
    2. அச்சோ....உடம்பை முதலில் கவனியுங்கள் சார் ; கூரியரை அப்புறமாய் உடைத்துக் கொள்ளலாம் !!

      Delete
    3. நன்றி எடிட்டர் சார்.

      Delete
    4. நன்றி டெக்ஸ் விஜய். என்னதான் படுக்கையில் கிடந்தாலும் நம்ம பொக்கிஷங்கள் வந்த உடனே நம்மையறியாமல் எல்லா கவலைகளும் பறந்து போவதென்னமோ மறுக்க முடியாத உண்மை.

      Delete
    5. உடம்பை முதலில் கவனியுங்கள் ATR!

      Delete
    6. நன்றி பரணி.

      Delete
    7. ஏடிஆர் உடல்நலனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்..விரைவில் நலமடையை என்னுடைய வேண்டுதல்கள்...

      Delete
    8. நன்றி தலீவரே.

      Delete
    9. ATR சார். கொரானா செக்கப் செய்து கொள்வது நல்லது. Take Care Sir.

      Delete
    10. ATR சார் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உண்மை தான் பொக்கிஷம் கிடைத்ததும் எல்லாமே மாறிவிடும்

      Delete
    11. ATR சார், உடம்பை பார்த்துக்குங்க. தேவைப்பட்டால் homeopathyஇல் வரும் Arsenicum Album 30 அல்லது Booster 120 எடுத்து கொள்ளுங்கள். கொரோனா மட்டுமல்லாமல் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ஆகியவையும் கட்டுப்படும். டேக் கேர்.

      Delete
    12. Arsenicum Album 30 இதனை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீர்கள். எனது மருத்துவ நண்பர்கள் சிலர் இதனை அதிகமாக அல்லது தொடர்ந்து சாப்பிட்டால் இது உடம்புக்கு பக்க விளைவுகளை கொடுக்கும் என சொன்னார்கள். எனவே அளவுக்கு அதிகமாக இதனை உபயோக படுத்தாதீர்கள்.

      Delete
    13. உடன் பிறப்புகள் எல்லோருக்கும் நன்றி. பயப்படும்படி ஒன்றும் இல்லை. பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவி தேவைப்பட்டதால் கொஞ்சம் வெய்யிலில் அலைய வேண்டி வந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புதான்.வேறொன்றுமில்லை. இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும். அப்புறம் மறுபடி இம்சை அரசன் 23ம் புலிகேசியாகி விடுவேன்.

      Delete
    14. // பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவி தேவைப்பட்டதால் கொஞ்சம் வெய்யிலில் அலைய வேண்டி வந்தது. //

      நல்ல செயல். பாராட்டுக்கள்.

      நமது நண்பர்கள் அனைவரும் முடிந்த அளவு இந்த இக்கட்டான சூழ்நிலையில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு உதவுங்கள்.

      Delete
    15. Thanks PFB but I myself knew about this medicine only after doctor prescribed it. I never advise self medication, it is very dangerous. That's why I said - தேவைபட்டால். Most of the homeopathy pharmacies won't issue medicine without doctor's prescription, except repeated refills. Atleast we have to show our whatsapp conversation with the doctor for confirmation. Arsenicum is a 333 mantra like 666. It has only 3 tablets per dose, only 3 doses for 3 days in a whole month. Beyond that is overdose. (தமிழில் அடித்தது தீடீரென எகிறி விட்டது, so english)

      Delete
    16. சீறி வரும் சிறுத்தை என்று இல்லாவிட்டாலும் பொறுமையாய் வாருங்கள் ATR. நாங்க கொஞ்சம் கதி கலங்கிப் இருக்கோம். எங்கள் நண்பர்கள் பலர் குடும்பத்துடன்
      positive. நாங்கள் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும், மிகுந்த மனவேதனையாக இருக்கிறது.

      Delete
    17. // has only 3 tablets per dose, only 3 doses for 3 days in a whole month. Beyond that is overdose. //

      Yes. Right.

      Delete
    18. // எங்கள் நண்பர்கள் பலர் குடும்பத்துடன்
      positive. நாங்கள் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும், மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. //

      வேதனையாகவும் கவலையாகவும் உள்ளது. கவனமாக இருங்கள். வெளியே சென்றால் முகமூடியை மறக்காமல் போட்டு செல்லவும். முகமூடி மிகவும் முக்கியமானது.

      Delete
    19. ATR சார் உடல்நலனை கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்கோங்க......

      Delete
    20. சென்னையின் நிலவரம் ரொம்பவே மிரட்டுகிறது தான் ! தமிழகத்தின் இருதயமே நோய்வாய்பட்டுக் கிடக்கும் இந்த வேளையில் - 'நாம் தான் தொலைவில் இருக்கிறோமே ; we are ok !' என்றெல்லாம் நினைக்க முடியவில்லை ! தினமும் கைகளைக் கழுவிக் கழுவியே ரேகைகள் அழிந்து போவதும் ; பயந்து பயந்தே பாதி ராத்திரி வரை தூக்கம் பிடிக்காது உருள்வதும் நிச்சயம் நான் மட்டுமல்ல என்றமட்டுக்கு நிச்சயம் !

      ATR சார் ; அனு & family & நமது சென்னைவாழ் நண்பர்களே ....நிச்சயமாய் நீங்கள் ஒவ்வொருவரும் நலமாய் இருந்திடுவீர்கள் !! One for all ....all for one .....!!! அனைவரது பிரார்த்தனைகளும் நிச்சயமாய் வீண் போகாது !! Please stay safe !!

      Delete
    21. Thank you எடி சார். இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறோம்.

      Delete
    22. நன்றி எடிட்டர் சார்.
      அறிவரசு சகோதரரே உங்களுக்கும் நன்றி.

      Delete
    23. ///நாங்க கொஞ்சம் கதி கலங்கிப் இருக்கோம். எங்கள் நண்பர்கள் பலர் குடும்பத்துடன்
      positive. நாங்கள் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும், மிகுந்த மனவேதனையாக இருக்கிறது.///
      அனு உங்கள் நிலமை வேதனையளிக்கிறது. பாதிப்பில் உள்ளவர்களை நேரில் பார்க்க இயலாதுதான். ஆனால் மொபைல் மூலம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு உற்சாகமும், தைரியமும் தரும் வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருங்கள். விரைவில் நிலமை மாறும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

      Delete
  23. சிறப்பு ஐயா.நன்றி.கொரானா இல்லாத வேளையில் புத்தகம் நிறைய வெளிவந்தது படிக்க நேரம் இல்லாமல் போனது.கொரானா வந்தவுடன் படிக்க நேரம் அதிகமாக உள்ளது. ஆனால் படிக்க புத்தகம் தான் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே...

      எனவே தான் டிசம்பர் 31 ஓட்டு அதகளமாக ஓடுகிறது..:-)

      Delete
  24. விஜயன் சார்,
    இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் புத்தகங்களை சொன்னபடி தயார் செய்து அவைகளை சொன்ன தேதியில் எங்கள் கைகளில் ஓப்படைத்த உங்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு Royal Salute! நன்றி! மிக சரியான திட்டமிடல் குட் டீம் ஒர்க்!!

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்...:-)

      Delete
    2. PFB யின் கருத்தை வழிமொழிகிறேன்...

      Delete
    3. இந்த மாதம் சற்றே light ஆன மாதம் தானே சார் ; பெரிதாய்ச் சுமை இல்லையே !

      Delete
    4. Lightஓ heavyயோ தற்போதைய சூழ்நிலையில் இது பாராட்டுக்குரியது.

      Delete
  25. ST கொரியர் வாழ்க....வாழிய வாழவே!

    வழக்கம் போல DTDC ஆபீஸ்ல ஒரு பார்வை பார்த்துட்டு கடைக்கு வந்தா,
    பார்சல் எனக்கு முன்னே வரவேற்குது.

    அட்ரா சக்கை-னு பார்த்தா ST கொரியர் ஸபீடு

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் டெக்ஸ் விஜய்.

      Delete
  26. பார்சலை கையில் எடுக்காம அப்படியே சானிடைசர் அடிச்சி,
    மேலால ஒரு புரட்டு,
    கீழால ஒரு புரட்டுனு எல்லா பக்கமும் தெளிச்சி விட்டு,
    சரக்குனு சார்ப்பான பிளேடுலு கீறி,
    உள் கவரையும் சானிடைசர் அடிச்சி உரிச்சி எடுத்து விட்டு புக்குகளை அலேக்கா தூக்கியாச்சி!

    4புக்கும் 4 லட்டு!

    ReplyDelete
    Replies
    1. பார்சலுக்கு மட்டும் உயிரிருந்தால்....!
      பார்சலுக்கு வந்த கதியை கேட்டால்
      Saw படம் பார்த்த மாதிரி என்னா ஒரு த்ரில்லிங்கு!
      நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய...!

      Delete
  27. இன்றும் நாளையும் அழகான நேரங்கள் என நினைத்தேன்...


    பட்...பட்...



    புத்தகம் வரவில்லை...:-(

    ReplyDelete
    Replies
    1. இன்று மாலை வரை பொறுத்து இருங்கள் பரணி! இரண்டாவது லோடில் வந்தாலும் வரலாம்!

      Delete
  28. வருத்த கறி வாழ்க
    லெமனேட் வாழ்க
    விருதுநகர் சுக்கா வாழ்க
    பார்டர் கடை பரோட்டா சிக்கன் வாழ்க :-)

    ReplyDelete
    Replies
    1. அருப்புக்கோட்டை பானு ஹோட்டல் காளான் பிரியாணி வாழ்க.

      Delete
  29. பெருந்தேவன் DTDC அருள் கிடைத்துவிட்டது. கொரியர் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் பத்து சார்.

      Delete
  30. புத்தகங்களை ஆசை தீர பார்த்தாச்சுது....

    4அட்டைகளும் ஒன்றோடொன்று போட்டி போடுது.

    டாப் சோடா-திசை மாறிய தேவதை!

    சொற்பவாக்கு வித்தியாசம்ல ப்ளூகோட் 2வது இடம்!

    007-க்ளாசிக் அட்டைபடம். இதே போஸ்ல பிராஸனன் இருந்து இருந்தா டாப் வந்து இருக்குகோ???

    007ல அந்த 007ம் லயன் லோகோவும் பார்த்துட்டே இருக்க சொல்லது...(மேலே மட்டுமே இக்கருத்து)

    டெக்ஸ் வழக்கமான மிடுக்கு... உம்னா அந்த மிலிட்ரிகாரனை பதம் பார்க்க துடிக்கும் முஷ்டி!

    பின் அட்டைகளில் டெக்ஸின் வெள்ளை பேக்கிரவுண்டல சும்மா ஸ்டன்னிங் சார்.

    ப்ளூகோட் பின்னட்டையும் கலக்குது!

    ReplyDelete
  31. நீண்ட நாள் எனது கொரோனா பற்றிய ஆராய்ச்சி இன்று முடிவுக்கு வந்து விட்டது. கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து ஏன் இந்தியா அட உலகத்தை விட்டே துரத்த மக்களை காப்பாற்ற சிறந்த வழி....




    நமது தலைவர் தாரை பரணியை ஒரு கடுதாசி எழுத சொல்லலாம் என உள்ளேன்; கொஞ்சம் காட்டமாகவே எழுத சொல்லலாம் ஏன் என்றால் அதன் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆகிவிட்டது. அதனை படித்த உடன் கண்ணீர் மல்க அரண்டு போய் இந்த உலகத்தை விட்டே ஓடிப்போகும். :-)

    தலைவர் வருவதற்கு முன்னர் நான் இங்கு இருந்து ஓடிபோய் விடுகிறேன். :-)

    ReplyDelete
  32. பொட்டி வந்துருச்சி...

    ReplyDelete
  33. DTDC இந்த முறை பக்கா டெலிவரி. புத்தகங்கள் கிடைத்து விட்டன. சோடா முடிந்து விட்டது. சூப்பர் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்மே ..i நன்றி - DTDC ...ii

      Delete
  34. அன்றும்
    இன்றும்
    என்றும் மாறாமல் இருப்பது...
    பரபரவென ஹாட்லைன்& அடுத்த வெளியீடு பார்க்கும் போது உண்டாகும் குதூகலம்!

    இம்முறையும் அதே!
    கூடுதலாக ஏகப்பட்ட வருகிறது விளம்பரங்கள் அசரடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாதம் வர உள்ள புத்தகங்கள் எவை?

      Delete
    2. லக்கி ஆண்டுமலர்

      டெக்ஸ்-எதிரிகள் ஓராயிரம்

      லாரன்ஸ் & டேவிட்-புத்தம்புதிய கதை

      கி.நா.--- இருவண்ணங்களில்...!!

      Delete
    3. நன்றி.
      லாரன்ஸ் & டேவிட்-புத்தம்புதிய கதை ஆர்வத்தை கிளப்புகிறது.

      Delete
    4. அடுத்த மாத புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் ஆர்வத்தை கிளப்புகிறது. லக்கி ஆண்டு மலர் இரண்டு கதைகளுடன். முதலில் படிக்க விரும்பும் கதை.

      இளம் டெக்ஸ் இதுவரை வந்த கதைகள் மனதிற்கு புத்துணர்ச்சி கொடுத்தன. எனவே ஆர்வமுடன் வரவேற்கிறேன்.

      கி.நா. இரு வண்ணத்தில் ஆர்வத்தை கிளப்புகிறது. சமீபத்தில் நமது மறு வருகைக்கு பிறகு இரு வண்ண கதைகள் ஏதும் வந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை? நண்பர்களே கடைசியாக வந்த இரு வண்ண இதழ் எது என்று சொல்ல முடியுமா?

      Delete
  35. ஆல டெக்ஸ் ரசிக அன்பர்களே@@@

    த வெயிட்டிங் ஈஸ் ஓஓஓஓஓஓஓஓவர்....

    அடுத்த மாசம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இளம் டெக்ஸ் வருகிறது!

    ஹூர்ரா...யாஹீ...ஹீ...ஹீ...யாய்யாயாஆஆஆஆஆ!!!

    """"" எதிரிகள் ஓராயிரம் """"

    ---என்ற நீஈஈஈண்ட 248 பக்க சாகசம் வருது.

    இத்தாலில கரண்ட்ல இருக்கும் சீரியஸ் எனும்போது சமகால கதையை படிக்கப்போகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. நானும் வெயிட்டிங் இளம் டெக்ஸ் க்கு. அடுத்த மாதம் ஜாக்பாட் லக்கி லூக் , கிராஃபிக் நாவல் அனைத்தும்.

      Delete
    2. ஐ அம் வெயிட்டிங் கிராஃபிக் நாவல்

      Delete
    3. என்னதான் நான் ப்ளூபெர்ரி ரசிகன் என்றாலும் அதிகாரியையும் எனக்கு பிடிக்கும். எனவே இளம் TEX கு நானும் வெயிட்டிங்

      Delete
  36. இரு வண்ணங்களில் வர இருக்கும் கி.நா. -பனியில் ஒரு குருதிப்புனல்...!! எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது!

    இது போன மாதம் தள்ளிப்போனதால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் அடுத்த மாதம் என்சாய் பண்ணலாம்.

    ReplyDelete
  37. Is international (UK) shipping started sir?
    Waiting for our books..

    ReplyDelete
  38. sorry எஸ்டி கொரியர் தான் ஸ்ரீ கொரியர் என்று விழுந்துவிட்டது

    ReplyDelete
  39. எஸ்டி கொரியர் இல் பார்சலை வாங்கியாச்சு. சோடாவை படித்தும் ஆச்சு.

    ReplyDelete
    Replies
    1. கூடவே ஏவ்....வ்வ்னு ஏப்பமும் விட்டாச்சுதானே சார்?

      Delete
    2. நல்லா ஜீரணம் ஆயிருச்சுங்க

      Delete
  40. எஸ்டி கொரியர் வாழ்க

    ReplyDelete
  41. எப்பவும் " வருகிறது விளம்பரங்கள்" லயன்ல ரொம்பவும் எதிர்பார்க்க வைக்கும் பகுதி!

    ஹாட்லைன்,
    அடுத்தவெளியீடு என்னானு பார்த்தவுடன்
    அடுத்த தேடல் "வருகிறது விளம்பரங்கள்" தான்...

    என்னதான் சந்தா அறிவிப்பு புக்லெட்ல ஓராண்டுக்கு முன்னரே பார்த்தாலும் மாதா மாதம் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது...!

    ரொம்ம நாளைக்குப்பிறகு ஏஏஏஏஏஏகப்பட்ட "வருகிறது விளம்பரங்கள்" கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகின்றன இம்முறை!

    பழைய க்ளாசிக் 007னின் "டாக்டர் நோ" சந்தா Dல வருது! இந்த Dr.No படமாக வந்தபோது கனவுக் கன்னி ஊர்சலா ஆன்டர்சனை பார்த்து உலகமே ஜோள்ளு உட்டது! ஹூம் நம்ம காமிக்ஸ்ல கலரில் ஊர்சலாவை கற்பனை பண்ணி பார்த்து....உய்ய்யய்னு விசில் கிளம்பும்!

    புதிய பாண்ட்-டின் "நில்...கவனி..கொல்...!!!"-ஜம்போவுல முக்கியமான இதழ்!

    மறதிக்காரமன்னர் 13ன் புதிய தொடரின்(???) முதல் கதை "2132 மீட்டர் " ----எதிர்பார்ப்பு ரீடிங்கை ஏகமாக ஏற்றி விடுகிறது. 2"13"2--இந்த எண்ணிலும் கூட 13 வருகிறது! (நன்றி நம்ம கவிஞர்& நண்பர் சகோ பார்த்திபன்).

    கி.நா.வுல யும் 13 தொடர்கிறார்... கால்வின் வாக்ஸின் "சதியின் மதி!"
    (ஸ்பின் ஆப்புகளின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் இதழ் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுது)

    "பழம்பீசு"களை கவரக்கூடிய அம்சமாக "மிஸ்டர் ஜென்டில்மேன்" ரிப்கெர்பி ரிட்டன்ஸ் ஆப்டர் லாங் டைம்! "கம்பி நீட்டிய குருவி"-- சந்தா Dல் குறிப்பிடத்தக்க இதழ்!

    லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், டெக்ஸின் தீவாளி ராக்கெட்...." தீபாவளி with TEX"

    2 maxi ட்ரிபிள் ஆல்பங்கள்!

    யுத்த பூமியில் டெக்ஸ்... & பனிவனப்படலம்...!

    672 பக்கங்கள்* black&white*ஹார்டுகவர்!

    ஆண்டின் டாப் இதழ் "இளம்டெக்ஸ் Vs தீபாவளி டெக்ஸ்" -டியூவலின் வின்னர் தான்!


    ஓகே சோடா குடிக்க கோயிங்ங்ங்ங்ங்...!!!

    ReplyDelete
  42. கிர்ர் எனக்கு இன்னும் டீ வரல

    ReplyDelete
  43. ப்ளூ கோட்சே முடிச்சாச்சு அடுத்து ஜேம்ஸ்பாண்ட்

    ReplyDelete
  44. ஞாயிறை இனிமையாக்க இதழ்கள் கிடைத்தாயிற்று,
    முதல் புரட்டலில் இதழ்கள் அனைத்தும் நன்று,
    ப்ளுகோட் வண்ணத்தில் அசத்தல்,
    டெக்ஸ் முன்னட்டையில் பொருந்தா உடையில் இருப்பதான உணர்வு,எனினும் அசத்தல் வில்லன் என்பதால் கதை கலக்கும்.
    ஜேம்ஸ் அட்டையில் மிளிர்கிறார் பொழுதுபோக்கான நல்லதொரு வாசிப்புக்கு உத்திரவாதம் அளிப்பார் என்று நம்புகிறேன்...
    சோடா அட்டையின் வித்தியாசமான வடிவமைப்பு கவர்கிறது,வசனங்கள் கொட்டிக் கிடப்பதால் வாசிச்சிட்டு ஒரு சோடா குடிக்கனும் போல......

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார்...அதிகாரியின் சொக்காயோ - கால்சராயோ ஒரு சைஸ் சின்னதாயோ - பெருசாவோ தெரியுதா ?

      Delete
    2. தல கழுத்தை ஏதோ கவ்விக் கொண்டு நிற்பதான உணர்வு சார்...

      Delete
  45. போர்முனையில் ஒரு பாலகன் முடிச்சாச்சேய்ய்..!!


    எப்பவும் சின்சியரான ராணுவ சார்ஜென்டாக மட்டுமே பார்த்திருந்த ரூபியை காதல் மன்னனாக பார்ப்பது வித்தியாசமான நகைச்சுவை அனுபவம்... செம்ம...!

    ReplyDelete
  46. அடுத்த மாத வெளியீடுகள் ஆர்வத்தை கிளப்புகின்றன...
    இன்னும் 17 நாட்கள் தான் மடமடன்னு ஓடிடும்...

    ReplyDelete
  47. சந்தா C ல எடிட்டர் கைவச்ச நேரந்தான் உலகம் முழுக்க C-orona பரவிட்டிருக்கு!

    அடுத்த C சந்தா இதழ்களை ஜாஸ்தி பண்ணிருங்க அதுதான் உலகத்துக்கு நல்லது!!

    ReplyDelete
    Replies
    1. ST வாழ்க!
      புக் வந்தாச்சு!!

      Delete
    2. //அடுத்த வருடம்//

      Delete
  48. புத்தகங்கள் வந்துவிட்டன! ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தில் பக்கம் 15 முதல் 30 வரை பக்கங்கள் எல்லாம் அடுத்த பக்கம் பிரிண்ட் தெரிகிறது.

    முதல் 14 மற்றும் 31 பக்கங்கள் தெளிவான பிரிண்ட் உள்ளது!
    வேறு யாருக்காவது இந்த மாதிரி உள்ளதா?

    விஜயன் சார்! எனக்கும் ஜேம்ஸ் பாண்ட் க்கும் என்ன பிரச்னை என்று தெரிய வில்லை! "நிழலும் நிஜமும்" கடைசி 8 பக்கம் இல்லாமல் வந்தது! இன்று விண்ணில் ஒரு வேதாளம்" நடுவே 15 பக்கம் இப்படி ஆகி விட்டது!

    ReplyDelete
  49. ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல இருந்தது சோடா படித்தது. இன்னும் சரியாக சொல்வது என்றால் ஒரு பரபரப்பான detective series போல.
    நிறைய விஷயங்களை படம் பார்த்து கவனிக்க வேண்டும். என்னை போல பற பற என்று படிப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனிக்காமல் விட்டு விட வாய்ப்பு உள்ளது.
    அந்த ஓவிய ஸ்டைல் அருமை.

    Soda is here to stay. Good choice Editor சார்.

    9/10

    ஒரு மார்க் குறைக்க காரணம் கதை சரியாக இன்னும் சிங்க் ஆகவில்லை. மீண்டும் ஒன்று இரண்டு முறை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  50. சோடாபடிச்சாச்சு. 80களின் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் தமிழ் டப்பிங் போல பரபரஆக்ஷன் நடுவில் விஜயகாந்த் படம் போல வில்லன் மற்றும் வில்லனின்வக்கீலுடன் போலீஸ் நையாண்டி. மற்றும்நடுவில் கொஞ்சம் ப்ளாக் ஹ்யூமர் மேலும் அம்மா மற்றும் வயதானோர் செண்டிமெண்ட் என கலந்து கட்டி புதிய ஒரு கதைபாணி. ஒரே கதையில் இத்தனையும் இருந்தாலும் கொஞ்சம்கூட அலுப்புத்தட்டாமல்புதிய. ஒரு வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது திசைமாறிய தேவதை. மொத்தத்தில் பரபரபட்டாசு. புதிய இந்தபாணி மிகவும்நன்றாக உள்ளது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  51. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  52. For any types of tamil english or hindi comics magazine like rani lion muthu tamil indrajaal Dc marval ack ambulimama tulsi manoj diamond or any types of comics magazine once contact whatsapp 7870475981

    ReplyDelete