Powered By Blogger

Friday, February 28, 2020

சேமியா ? ஜவ்வரிசி ?

நண்பர்களே,

வணக்கம். மார்ச்சில் மார்ச் புலர்வதில் ஸ்பெஷலாய் ஏதும் இல்லை தான் ; ஆனால் இந்த மார்ச்சின் இதழ்களில் நிறையவே ஸ்பெஷல் சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்கொரு எண்ணம் !! And yes - இன்று காலைப்பொழுதிலேயே உங்களது கூரியர்கள் சகலமும் நம் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டன ! And yes - இரவு கூரியர் அலுவலகத்திலிருந்தும் அவை கிளம்பி விட்டதை உறுதி செய்தும்  விட்டோம் ! So நாளைய பொழுது உங்கள் இல்லங்களின் கதவுகளை Damocles & டீம் தட்டுமென்று எதிர்பார்த்திடலாம் ! Of course - கூரியர்கள் சொதப்பும் ஊர்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிவரும் என்பதும் புரிகிறது ; and -  "வெள்ளிக்கிழமைகளில் டெஸ்பாட்ச் பண்ணாதேன்னு உனக்கு எத்தினிவாட்டி படிச்சுப் படிச்சுச் சொன்னாலும்  புத்தியே வர்றதில்லே ; ஏழு கழுதை வயசானாலும் - தேற மாட்டேங்கிறியே போ !!" என்று கண்சிவக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதும் புரிகிறது ! ஆனால் இருபத்தியெட்டே தேதிகள் கொண்ட மாதத்திலும் நம் அவசரங்களை பைண்டிங் பணியாளர்களின் சிரங்களில் குவிப்பது நடைமுறை சாத்தியம் அல்ல எனும் போது, இந்த friday despatch தவிர்க்க இயலாது போயிற்று !

இதுவொரு லீப் ஆண்டு என்பதையும், இந்த பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்பதையும் ரொம்ப லேட்டாகவே கவனிக்கிறேன் !! So "பிப்ரவரியில் மார்ச்" என்று காலரை லைட்டாகத் தூக்கி விட்டுக் கொள்வோம் ! 

Anyways, இம்மாதத்து 4 இதழ்களோடு கொசுறாய் ஒரு Color Tex இதழும் தொற்றிக் கொண்டிருக்கும் கூரியர் டப்பிகளுக்குள்ளே ! இந்த மார்ச்சில் மெகா இதழ்கள் நிறையவே இருந்தாலும், அவை சார்ந்த  உங்களின் ரியாக்ஷன்களை அறிந்து கொள்ளும் அவாவும் என்னுள் கணிசமாகவே இருந்தாலும் - இந்தக் குட்டி புக் கொணரக் காத்திருக்கும் அலசல்களை தான் நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்திருப்பேன் ! இதழ் கைக்கு கிடைத்த பின்னே ; அந்த 32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே - 'அதிகாரிப் பாயசம்' எவ்விதம் சுவைக்க உள்ளதென்று தெரிந்து கொள்வதில் மாமூலான ஜாலிகளைத் தாண்டியும் ஒரு காரணம் உள்ளது ! அதை தொடரும் நாட்களில் உங்கள் பாயசங்களைச் சுவைத்துக் கொண்டே சொல்லி வைக்கிறேனே ? So நாளைய தினம் எனக்கு சேமியாவா ?  அதிகாரிக்கு ஜவ்வரிசியா ? என்று அறிந்து கொள்ளும் ஆவலோடு  இப்போது நடையைக் கட்டுகிறேன் - ஒரு குளிர்நடுக்கும் கி.நா.வோடு மல்லுக்கட்ட !! Bye guys ; see you around !! 
P.S : www.lioncomics.in தளத்தில் ஆன்லைன் லிஸ்டிங் செய்தாச்சு ; இன்னொரு தளத்தில்  நாளைக் காலை !! http://lioncomics.in/monthly-packs/693-january-2019-pack-.html

199 comments:

  1. Replies
    1. If I am unlucky, I will get the payasam tomorrow :-(:-)

      Delete
    2. If I am lucky I will get the books tomorrow else Monday only :-) :-(

      Delete
    3. நீங்கள் விருப்பபட்டால் நாளைக்கே பருப்பு பாயசம் ரெடி பண்ணி அனுப்பி வைக்கிறோம் சார் :-)

      Delete
  2. வெயிட்டிங் ஃபார் tomorrow

    ReplyDelete
  3. // நம் அவசரங்களை பைண்டிங் பணியாளர்களின் சிரங்களில் குவிப்பது நடைமுறை சாத்தியம் அல்ல எனும் போது, இந்த friday despatch தவிர்க்க இயலாது போயிற்று !//

    புரிகிறது சார்! அவசரம் வேண்டாம்;இதழ்கள் உங்களுக்கு முழு திருப்பதி என்ற பின்னே அனுப்பவும். உங்களுடன் எப்போதும்!

    ReplyDelete
    Replies
    1. ///உங்களுக்கு முழு திருப்பதி என்ற பின்னே அனுப்பவும்///

      முழு திருப்பதி ன்னா.. பெரிய லட்டா இருக்குமோ..!? :-)

      Delete
    2. முழு திருப்பதின்னா 'மொட்ட'ன்னு அர்த்தம். பரணி சார். Sorry.

      Delete
    3. திருப்பதின்னா -> திருப்தின்னா என வாசிக்கவும். ஒரு பிழையிருந்தா போதுமே எல்லாம் உடனே வந்துடுவீங்களே :-) இனிமேல் இப்படி ஏதாவது கண்டுபிடிச்சு காமெடி பண்ணுங்க "பாதாம் பாயாசத்தை போட்டு விட வேண்டியதுதான்" :-)

      Delete
    4. பத்து சார் ஹிஹிஹி

      Delete
    5. நாங்கள்ளாம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களாக்கும்.

      Delete
  4. அடிக்கடி பாயாசத்தப் பத்தியே பேசுறாரே... என்னவோ மர்மம் இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. வேற என்ன வீட்டில் ஸ்வீட் குறைவாக சாப்பிட சொல்லி இருப்பாங்க! :-)

      Delete
    2. பாயாசப் படலம்..?!
      😀😀😀😀😀😀😀😀

      Delete
    3. பாயசத்தப் பத்தி இனி யாரும் பேசாதிங்ப்பா.

      அடுத்து வர்ற கிராஃபிக் நாவலுக்கு எதுக்காவது;
      ""பாயாசத்தில் ஒரு பிரளயம்""னு டைட்டில் வைச்சுருவாரோனு பயந்து வருது.

      Delete
  5. இந்த முறை முதலில் படிக்க விரும்பும் இதழ் நில் கவனி வேட்டையாடு; அந்த பசுமையான காடு மனதை கொள்ளைகொள்கிறது!! அடுத்து சிக்-பில் கதை.

    ReplyDelete
    Replies
    1. இந்த கலர் டெக்ஸ் கதையில் டைகர் வருபது எனது படிக்கும் ஆர்வத்தை பண்மடங்காக ஆகிவிட்டது! எப்படி இருந்தாலும் முதலில் படிக்க உள்ளது நில் கவனி வேட்டையாடுதான் யுவர் ஆர்னர் :-)

      Delete
    2. "டைகர் ஜாக்" ன்னு சொல்லுங்க சார் ; எனக்கே ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிப் போச்சு - தல கதையிலே தளபதியான்னு ?!!

      Delete
    3. அந்த பயம் இருக்கட்டும் :-)

      Delete
    4. எனக்கு பக்கோ nu aaiduchu

      Delete
    5. அதே.. பச்சைப்பசேல் கதைக்கே வெயிட்டிங்...அப்பால கிட், மாடஸ்டி..

      Delete
    6. ///டைகர் ஜாக்" ன்னு சொல்லுங்க சார் ; எனக்கே ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிப் போச்சு - தல கதையிலே தளபதியான்னு ?!!///
      நானும் ஒரு நிமிஷம் Stunஆயிட்டேன்.அட இது வித்தியாசமா இருக்கேன்னு.(சொல்லில் குற்றமில்லை.பொருளில் தான் பிழை இருக்கிறது. - நக்கீரர் (A.P.நாகராஜன்)

      Delete
  6. ஜம்போ காமிக்ஸ் க்கு வெயிட்டிங்..

    ReplyDelete
  7. ////இதழ் கைக்கு கிடைத்த பின்னே ; அந்த 32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே - 'அதிகாரிப் பாயசம்' எவ்விதம் சுவைக்க உள்ளதென்று தெரிந்து கொள்வதில் மாமூலான ஜாலிகளைத் தாண்டியும் ஒரு காரணம் உள்ளது !////

    ரொம்பத்தான் ஆர்வத்தைக் கிளப்புறாரே..! ஒரே ரோசனை ரோசனையா வர்தே..!!

    ReplyDelete
    Replies
    1. // ஒரே ரோசனை ரோசனையா வர்தே.. //
      உங்களுக்கு தூக்கம் தூக்கமாக வராமல் இருந்தால் சரிதான்!

      Delete

    2. ///தூக்கம் தூக்கமாக வராமல் இருந்தால் சரிதான்!///

      அது எதிர்காலம் எனதே படிக்கறச்சே வரும்..!:-)

      Delete
    3. படிக்காதீங்க. மாடஸ்டிய பாருங்க. தூக்கம் போயிடும்.

      Delete
    4. பத்து சார் செம்ம reply

      Delete
  8. மாடஸ்டி க்காக வெயிட்டிங்.. ii
    மேலும் நீண்ட நாள் கழித்து கிட் ஆர்ட்டின்...

    ReplyDelete
  9. Replies
    1. நான் எப்போதும் color Tex ரசிகன் தான். I'm waiting

      Delete
  10. ///அந்த 32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே - 'அதிகாரிப் பாயசம்' எவ்விதம் சுவைக்க உள்ளதென்று தெரிந்து கொள்வதில் மாமூலான ஜாலிகளைத் தாண்டியும் ஒரு காரணம் உள்ளது !///


    பால் பாயாசம்
    பருப்பு பாயாசம்
    சேமியா பாயாசம்
    ஜவ்வரிசி பாயாசம் இப்படி எந்த பாயாசமா இருந்தாலும் டெக்ஸ் வில்லர் போட்டால் ருசிக்கவே செய்யும்..!


    ஆனா அந்ந பாட்டீமா பாயாசம்னாத்தான்...

    ReplyDelete
  11. மேலே மாடஸ்டியைப் பார்த்துட்டு அப்படியே கீழே அந்த டெமக்லீஸ் பாப்பாவைப் பார்த்தால் மாடஸ்டியின் கார்ட்டூன் வெர்ஷன் மாதிரி இருக்கு! ரெண்டு பேருமே ஸ்கின் டைட் கருப்பு ட்ரெஸ் வேற!

    'நில் கவனி வேட்டையாடு'வில் கொலைவெறியோடு முறைக்கும் அந்த ஆசாமியைப் பார்த்தால் சிலகாலம் முன்பு 'இங்கே க்ளிக்'கிய பழைய நண்பர் ஒருவரின் முகம் ஞாபகத்துக்கு வருகிறது!

    எந்தக் கடினமான எண்ணமும் எழாமல், பார்த்தவுடன் மனசு லேசாவது 'ஆர்டின் ஒரு ஆச்சரியக்குறி' அட்டைப்படத்தைப் பார்த்துத்தான்!

    ஐ லவ் ஆர்டின்!
    ஐ லவ் ஷெரீப்!
    ஐ லவ் கார்டூன்ஸ்!

    மனசு லேசாகணுமின்னா - கார்டூன் படிங்க!

    ReplyDelete
    Replies
    1. ///ஐ லவ் ஆர்டின்!
      ஐ லவ் ஷெரீப்!
      ஐ லவ் கார்டூன்ஸ்!///

      +12345..

      Delete
    2. ///மேலே மாடஸ்டியைப் பார்த்துட்டு அப்படியே கீழே அந்த டெமக்லீஸ் பாப்பாவைப் பார்த்தால்///
      ஈ.வி. ஹி.ஹி.ஹி..

      Delete
  12. ஹைய்யா புதிய பதிவு.......

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  14. அருமை. காமிக்ஸ் மீதான உங்கள் அர்ப்பணிப்பும் வாசகர்களின் ஆர்வமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. காமிக்ஸ் உடனான எனது பயணமும் விரைவில் ஆரம்பமாகும். அதுவரை, இருப்பில் உள்ளவற்றை மீள வாசிக்க வேண்டும்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சேமியா? ஜவ்வரிசி? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. ///காமிக்ஸ் உடனான எனது பயணமும் விரைவில் ஆரம்பமாகும். ///

      அருமை! காத்திருக்கிறோம்... உங்கள் காமிக்ஸ் அனுபவப் பகிர்தலுக்காக

      Delete
    2. ///காமிக்ஸ் உடனான எனது பயணமும் விரைவில் ஆரம்பமாகும். ///

      போன பதிவில் இதே தான் சொன்னீங்க :-)

      Delete
  15. அதிகாரியும்... அற்புத விளக்குகளும்..

    அட்டைபடத்திலியே ஆரம்பிக்கிறது அதிகாரியின் "விளக்கு" வாங்கும் படலம்.
    வழக்கம் போலவே தனது முரட்டு சிங்கிள் நண்பரை ஆசையை தூண்டி விட்டு ஏமாற்றி அழைத்து செல்கிறார் தான் எப்படி எல்லாம் விளக்கு வாங்கிய கதையை சொல்ல.. அப்போது தான் ஒரு அதிகாரி இல்லை எனவும், அப்போது தான் ஆடு மேய்த்துக் கொண்டு தகுதித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்றும் ஆரம்பிக்கிறார்.
    வழக்கம் போலவே வம்புச்சண்டைக்கு ஒரு விலாவாரியான மெயில் அனுப்பி விட்டு சரியான நேரத்திற்க்கு ஆஜராகிறார். வம்பிழுத்து விட்டு வெளியேறி அந்த ஊரின் முக்கிய புள்ளி வீட்டுக்கு அவருடைய ஒரு மருமானுடன் சென்று சேர்கிறார்.. அங்கே இன்னொரு மருமானுடனும் வம்பு வலிக்கிறார்.. அட இது கதை விமர்சனம் போல செல்வதால் இனி அதிகாரி "விளக்கு" வாங்கும் படலத்தை மட்டும் பார்ப்போம்..
    முக்கியப் புள்ளியின் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே லெஸ்லியின் படைகளிடம் முதல் "விளக்கு" வாங்கிக் கொண்டு முழிக்கிறார்.
    அடுத்த "விளக்கு" மேஜர் டார்க்கிடம் ஜெனரல் லீயின் போலிக் கையெழுத்திட்ட காகிதம் வழியாக கிடைக்கிறது. அந்த கடிதாசுடன் தெற்கத்தி பிரதேசத்தில் நுழையும் அதிகாரி தன் தனிச்சிறப்பான ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லும் பாணியை கடைபிடிக்க அடுத்த "விளக்கு" லெஸ்லீ மூலம் மறுபடியும் கிடைக்கிறது. ஒரு கட்டாயக் குளியலுக்கு பின் குதிரை மற்றும் ஆடை திருட்டுகளை நடத்தி விட்டு ஆனடர்வில் சிறைக்குள்ளே நுழைந்து அங்கேயும் சில "விளக்கு"களை வாங்கி கொண்டு ஜானுடன் தப்பிக்கிறார். வழியில் தான் காப்பாற்றிய அடிமையை மறக்காமல் காவு கொடுத்துவிடுகிறார்.தங்கத்தப் பார்தியா என அதிகாரி கேட்க, என்ன தங்கத்தப் பார்தியா என பதில் தருவதன் மூலம்
    அடுத்த "விளக்கு" ஜானிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்.
    மறுபடியும் முக்கியப் புள்ளி வீட்டிற்கு சென்று அவர் தரும் "விளக்கு"களை வாங்கி கொண்டு பதுங்குமிடம் செல்கிறார்.
    லெஸ்லீயை காண போயி அதிர்ஷ்ட தேவதையை கையப் புடிச்சி இழுத்து அவனிடம் பேச்சு கொடுத்து அங்கே ஒரு சூப்பர் "விளக்கு" வாங்குகிறார். எப்படின்னா ஜானை லெஸ்லீயே ஆண்டர்வில்லிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்த விசயத்தை கேட்டதும்.. மொத்தத்தில் அதிகாரியின் ஆண்டர்வில் பயணம் பருத்தி மூட்டை பேசாமே குடோனிலியே இருந்திருக்கலாமே என்ற சந்தானத்தின் காமெடி போல ஆகிவிட்டது.
    சரி இது தான் சூப்பர் "விளக்கு"என நினைத்தால் கிளைமேக்சில் அந்த முக்கிய புள்ளி குடுத்தார் பாருங்க ஒரு "விளக்கு"... அடடா.. பிரமாதம்... அட்டகாசமான ஆயிரம் வாட்ஸ் "விளக்கு".

    இத்தனை "விளக்கு"களை வாங்கினாலும் தானே ஒரு சிறந்த "குழல்விளக்கு" என்று அடித்து கூறுகிறார் அதிகாரி.

    புரியாத நண்பர்கள் "விளக்கு" பதத்தை தமிழில் "பல்ப்பு" என மாற்றி வாசித்து கொள்ளவும்..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா... நல்லாருக்கு.!

      யங் புலி அதாவது அரை டவுசர் வரட்டும்..! :-)

      Delete
    2. எல்லா விளக்கும் விளக்கல்ல அதிகாரி
      வாங்கும் விளக்கே விளக்கு 😛😝😜. செம்ம விமர்சனம் சார் 🙏👍

      Delete
    3. // பருத்தி மூட்டை பேசாமே குடோனிலியே இருந்திருக்கலாமே என்ற சந்தானத்தின் காமெடி போல ஆகிவிட்டது. // ரம்மி செம்ம செம்ம எப்புடி ஷெரீஃப் நீங்க போட்ட விமர்சனத்திற்கு பதில் விமர்சனம் :))))))))))

      Delete
    4. ரம்மி @ பருத்தி மூட்டை மற்றும் எல்லா விளக்கும் காமெடி நன்று.

      ஆனால் கார்சன் நண்பரின் காலை வாருகிறேன் என்று நீங்கள் முழு கதையை படித்து விமர்சனம் (அதுவும் முக்கிய விஷயங்களை தெளிவாக) எழுதியதன் மூலம் நீங்கள் ஸ்லீப்பர் செல் என்பதை உறுதிபடுத்தி விட்டீங்க :-)

      Delete
    5. ரம்மி..

      ஹா ஹா ஹா! செம்ம செம்ம! :)))))

      Delete
    6. ///நீங்கள் ஸ்லீப்பர் செல் என்பதை உறுதிபடுத்தி விட்டீங்க ///

      ஹா ஹா! உண்ம!!

      Delete
  16. // இம்மாதத்து 4 இதழ்களோடு கொசுறாய் ஒரு Color Tex இதழும் தொற்றிக் கொண்டிருக்கும் கூரியர் டப்பிகளுக்குள்ளே//
    ஆகா.. அடுத்த பாயத்துக்கு அடுப்பை பத்த வெச்சிட்டீங்க.. ஐயாம் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. அப்ப உங்களுக்கு "பாயாசம்" ரொம்ப பிடிக்கும் என சொல்லுங்க :-)

      Delete
  17. எனக்கும் பச்சைமேல ஒரு கண்ணு உண்டு....

    ReplyDelete
  18. @ ALL : இதுவொரு லீப் ஆண்டு என்பதையும், இந்த பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்பதையும் ரொம்ப லேட்டாகவே கவனிக்கிறேன் !! So "பிப்ரவரியில் மார்ச்" என்று காலரை லைட்டாகத் தூக்கி விட்டுக் கொள்வோம் !

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் சார்.

      Delete
    2. ///இந்த பிப்ரவரிக்கு 29 நாட்கள் என்பதையும் ரொம்ப லேட்டாகவே கவனிக்கிறேன் ////

      மாடஸ்டி கதைக்காண்டி பணியாற்றும்போது ஓவரா இன்வால்வ் ஆகாதீங்க சார்னு சொன்னா கேட்டாத்தானே?!!

      Delete
  19. இன்று ஆத்தா எனக்கு அளிக்கப்போவதென்ன?

    பாயசமா? பன்னா?

    எதிர்பார்ப்புடன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பாயசம் உறுதி

      Delete
  20. Replies
    1. Books catched. பாயசமான்னு இனிமே தான் பிரிச்சு பாக்கணும்.

      Delete
    2. Books caught; not catched

      ஹி..ஹி..நக்கீரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் வம்சம்..:-)

      Delete
    3. செனா அனா ஹிஹிஹி

      Delete
    4. ///Books caught; not catched///

      Oh I sight!

      Delete
    5. நாங்க படிக்குறப்ப (!) அப்புடிதான் இருந்தது. இப்ப மாத்திட்டாங்க போல.

      Delete
    6. //////oh I sight!
      லெப்ஃட்டு ஐயா, ரைட்டு ஐயா, ஈ.வி ஐயா!

      Delete
  21. ###32 வண்ணப் பக்கங்களுக்குள்ளே நீங்கள் குதித்து முடித்தான பின்னே####

    ஜய் அப்ப மெபிஸ்டோ வர போறான்..


    அந்த அறுநூறு பக்க மெபிஸ்டோ கதைக்கு அச்சாரம் என இந்த 32 பக்க கதையை எடுத்துக் கொள்ளலாமா ஆசிரியரே ??

    ReplyDelete
    Replies
    1. நன்றாக இருந்தாலும் tex கதை படிச்ச மாதிரி feel இல்லையே.!

      Delete
    2. அப்படி உண்மையை சொல்லுங்க சார்

      Delete
    3. குமார் சார்... இந்தக் கதையின் நாயகன் டெக்ஸ் அல்லவே! மோரிஸ்கோதான் கதாநாயகன் சரிதானே! மோரிஸ்கோ வரும் கதைகளில் டெக்சுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்பது நிஜம் தான்.

      Delete
  22. சந்தா பரிசு ஆர்ச்சிபுக் ஓகேதான் சார்..ஆனால்

    ஈரோட்ல கெத்தா புத்தகதிருவிழாவில் வலம்வர டீ சர்ட்டே எனது சாய்ஸ்....!

    முதல்ல நான் போட்டிக்கு உண்டான்னே தெரியல இருந்தாலும் சொல்லிடுவோம்....!

    ReplyDelete
  23. கொரியர் தம்பிட்டேர்ந்து ஃபோன் வந்துச்சு!

    ஆத்தா ஈஸ் கிரேட்!

    இன்னிக்கு சாயந்திரம் எப்போ வருமின்னு ஒரே ஏக்கமா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. கிர்ர்ர்...இங்கே திங்கள்தான்....😢😢😢

      Delete
    2. கரூர் ஆத்தாவை டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டு, ஈரோட்டு ஆத்தாவை வேண்டிப் பாருங்களேன்?

      Delete
    3. ///கரூர் ஆத்தாவை டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டு, ஈரோட்டு ஆத்தாவை வேண்டிப் பாருங்களேன்?///


      :-))))

      ஈரோட்டு ஆத்தாவுக்கு மார்க்கெட்டிங் மேனேஜர் எல்லாம் உண்டு போல!!! :-)

      Delete
    4. //கரூர் ஆத்தாவை டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டு, ஈரோட்டு ஆத்தாவை வேண்டிப் பாருங்களேன்?//
      என்ன ஒரு மகிமை பொட்டி வந்துருச்சே... 😊😊

      ஈரோட்டுல இருக்குற ஆத்தா கிரேட்...எல்லாம் வேண்டிக்குங்க....

      Delete
    5. ///ஈரோட்டு ஆத்தாவுக்கு மார்க்கெட்டிங் மேனேஜர் எல்லாம் உண்டு போல!///

      "யய்யா ஈவி.. கூழுதான் ஊத்த மாட்ற.. ரெண்டு ஆளாவது புடிச்சுக் குடுக்கலாமேப்பா?"ன்னு ஆத்தா கனவுல வந்து வெசாரப்பட்டாங்க! அதான் நல்ல போராளியாப் பாத்து புடிச்சுக்குடுத்துருக்கேன்! :)

      Delete
    6. ///ஈரோட்டுல இருக்குற ஆத்தா கிரேட்...எல்லாம் வேண்டிக்குங்க....///

      சூப்பர்!!
      வேண்டிக்கறதெல்லாம் அப்புறம்! மொதல்ல குலவைய போட்டு குஷிப்படுத்துங்க ஆத்தாவை!

      Delete
    7. நல்ல போராளியாப் பாத்து புடிச்சுக்குடுத்துருக்கேன்! :)

      நல்ல போராளியா....??
      நன்றி ஈவி

      Delete
    8. ///லுளுளுளுளு////

      ஃபெயிலு!
      'கோமாதா குலவை பயிற்சி நிலையத்துல' நாலு வாரம் ட்ரெயினிங் போங்க - அப்பத்தான் சரிப்படுவீங்க!

      Delete
    9. *//லுளுளுளுளு////

      ஃபெயிலு!//*


      :-))))

      Delete
  24. அதே கரூர் ஆத்தா (DTDC)எனக்கு குடுத்திட்டாளே. பையன் மேல ஆத்தாவுக்கு என்ன கோபமோ?.

    ReplyDelete
    Replies
    1. வந்தாச்சு வந்தாச்சு.....! இவுக ST ஆனாலும் வந்தாச்சு...

      Delete
  25. லாரண்ஸ் & டேவிட் மீண்டும் புத்தம் புதிய சாகஸத்துடன் வரப்போவது எதிர்பாரா இன்ப அதிர்ச்சி நன்றி ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதிர்ச்சி தான் சத்யா:+)

      Delete
    2. எனக்கு " அதிர்ச்சி " மட்டும்தான் !!!

      :)

      Delete
    3. அதிர்ச்சி "மட்டுமே" தான்..

      Delete
  26. பொட்டிக்குள் என்ன பூகம்பமோ என பாத்தா சந்தோஷசெய்தி.....வாழ்க ஆசிரியர்...

    ReplyDelete
    Replies
    1. என்னதான் அந்த சந்தோசச் செய்தின்னு யாராவது சொல்லுங்களேன் - மீதியிருக்கும் நாலு முடியையும் பிச்சுக்கறதுக்குள்ள?

      Delete
    2. ஆமா பழனி சார் சொல்லுங்கள் என்ன செய்தி என்று

      Delete
    3. அது என்ன என்று சொன்னால் புத்தகங்கள் வராத எங்களை போன்றவர்களுக்கு சந்தோஷம் தருமே?

      Delete
    4. லாரண்ஸ் & டேவிட் மீண்டும் புத்தம் புதிய சாகஸத்துடன் வரப்போவது?

      Delete
    5. அதே அதே புத்தம் புதிய.....!

      Delete
  27. இருளோடு யுத்தம்!

    Tex கதைகளில்தான் எத்தனை ஜானர்களோ...?!
    எதிர்காலத்தில் 'செவ்வாய் கிரகத்தில் டெக்ஸ்...' என்று ஒரு கதை வந்தாலும் வரலாம்! கதை சுவாரசியமாகத்தான் இருக்கும். ஆனால் டெக்சுக்கு பொருந்துமா?

    Jokes Apart...
    ரெகுலர் டெக்ஸ் கதைகளை விட எனக்கு இதுமாதிரியான கதைகளைத் தான் பிடிக்கிறது. அந்த விருப்பம் 'மரண முள்' படித்து விட்டு இரவெல்லாம் அந்த ஸ்..ஸ்..ஸ்... சத்தத்தை நினைத்து பயந்த காலந்தொட்டு இன்று வரைக்கும் தொடர்கிறது. டெக்ஸ் கதைகளில் இந்த வெரைட்டி இருப்பதால்தான் அனைத்து தரப்பையும் திருப்திபடுத்த முடிகிறது என நினைக்கிறேன். அதே சமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதையும் மறந்துவிடக் கூடாது.

    ReplyDelete
  28. இருளோடு யுத்தம் -- மெபிஸ்டோவுக்கு முன்னோட்டம். நன்றாகவே உள்ளது. 32 பக்கங்களுக்குள் முடிந்தவரை விறுவிறுப்பு காட்டியிருக்கிறார்கள்டெக்ஸின் வழக்கமான மோதல்கள் சில கட்டங்களுக்குள் முடிந்து விடுகிறது. A short fantasy story of tex.

    ReplyDelete
  29. இந்த மாதம் ஜம்போவுக்குதான் நான் காத்திருந்தேன் என்னோட எதிர்பார்ப்பு வீண் போகலை...
    பரபரன்னு பக்கம் போனதே தெரியவில்லை...

    அடுத்தது டெமக்லீஸ் கையில எடுத்தாச்சு...

    ReplyDelete
  30. உலக மகா அதிசயமாக புக்குகள் என் கைகளில், டெஸ்பாட்ச் செய்த அடுத்த நாளே. Comics Courier ஜோசியப்படி இந்த மாதம் சிறப்பாக இருக்க போகிறது :)

    ReplyDelete
  31. இருளோடு யுத்தம், 300 பக்க கதைக்கான சரக்கை 32 பக்கத்தில்!!! விறுவிறுப்பாக செல்கிறது. மினி டெக்ஸ் புக்கில் one of the best.

    ReplyDelete
    Replies
    1. உண்மை....வழக்கமான டெக்ஸ் கதை போல் டமால் டுமீல் னு இல்லாமல் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது..வருடத்திற்கு 1&2 முழுநீள கதைகள் இதுபோல் வெளியிடலாம் ...

      Delete
    2. நீங்க மெபிஸ்டோவுக்கு கொடிப் பிடிக்கும் பார்ட்டியாச்சே யுவா ; இது பிடிக்காமல் போகுமா ?

      அந்த ஸ்லீப்பர் செல்காரரும் வரட்டும் - இது மாதிரிக் கதைகளை தொடர்வது பற்றி ஒரு பாயசத்தோடு யோசிப்போம் !

      Delete
    3. படிச்சிடுறேன்..்

      Delete
    4. நான் தான் மெபிஸ்டோ கதையை போடுங்கன்னு ரொம்ப நாளா கேட்டு போராடிகிட்டிருக்கேன். எடி சார்வாள் மனது வைத்தால் சாத்தியமே. மினி டெக்ஸ் சைஸில் ஹார்ட் பவுண்டில் லிமிடெட் பதிப்பாக பிரிமீயம் விலையில் போடலாம். 1000 காப்பிகள் விற்கும் என நினைக்கிறேன்.

      Delete
  32. லாரன்ஸ் - டேவிட் சாகஸம் புதிதாக . அடுத்த வெளியீடாக டயபாலிக். இரண்டுமே ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.

    ReplyDelete
  33. குயிக் கா அங்கிள்...

    கிட் ஆர்டினும், தலைவரும்
    பேரிக்கா தொழிலதிபரின் கோமித்தூர் எஸ்டேட்டில் அஸ் யூஸ்வல் பொழுது போக்குகிறார்கள்.

    பிம்பி-தலைவரிடம் இ"ரெண்டு நாள் இருந்து சட்னி அரைத்துவிட்டு போகலாமே" என்று கேட்கிறார். அதற்கு தலைவர் சிவகாசி ஆங்கிள் "ஜயாயிரம் பக்கம் டொக்ஸ் காமிக்ஸ்" ரெண்டு குண்டு புக்குகள்- ஈரோடு புக் பேருக்கு தயாராகி அதை கேரவனில் வைத்து முழி பெயர்க்க - இங்கு ஜே கொண்டு வருவதாக கூறுகிறார்.

    அவ்வளவு ரகசியமான உண்மையை கூறியபின்பும்- தலைவரும் &கிட்டும்,அவர்களுடைய மாட்டு வண்டியில் கிளம்பி விடுகிறார்கள்...

    போகும் வழியில் திருப்பூர் புளூபெர்ரியின் ஓட்டலில் காக்கா பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவர்களை ஈரோட்டு பூனையும்,மாஸ்கோ சர்வாதிகாரியும், கோ பெருமாளும்,சித்தரும் பார்த்துவிடுகிறார்கள்.
    நமக்கு தராமல் அங்கே சாப்டுட்டு இருக்கிறது தலீவரும் கிட்டும் தானே , என்று புலம்பி சலம்புகிறார்கள்.
    ரகசியமாக நோக்கியா போனில் பேரிக்கா பிம்பியிடம் பேசுகிறார் பூனை.

    அப்படீன்னா அவங்களுக்கு பேதி மாத்திரம் கொடுத்து சீக்கிரம் வெரட்டுன்னு பேரிக்கா பர்கொலக்ஸ் மாத்திரை உத்தரவிடுகிறார்...

    ReplyDelete
    Replies
    1. சரின்னுட்டு,,, அவங்களோட பஞ்சராப்போன அட்லஸ் சைக்கிள்ல நாலு பேரும் ஏறிக்கிட்டு ஊத்துக்குளி ரயில்வே குட்ஸ் குடோன்ல போயி ஒளிஞ்சிக்கினு தலீவருக்கு போன்பண்றாங்க,..என்ன ஒங்களுக்கு வெசயம் தெரியாதா--- பத்தாயிரம் பக்கம் டொக்ஸ் அரைச்ச மாவாம்ல"ன்னு சொன்ன உடனே தலீவரும் கிட்டும் தல கால் புரியாத புல்லட் ட்ரெய்லர் வேகத்துல ஊத்துக்குளிக்கு வந்து பார்த்தா - இவங்க நாலு பேரும் _ பல்லெல்லாம் வாயா காட்டிக்கிட்டு ஜொள்ளு விட்டு புலம்புறாங்க... தலீவரு குப்புற விழுந்து ரெண்டு ஃபுல்ல எடுத்து காட்ட, கிட்டு கந்தர்வ கான கொரல்ல " மை நேம் ஈஸ் பி(பு)ல்லா ன்னு பாடி தள்றாரு.
      அம்புட்டுதே- ஈரோடு மொத்தமும் மட்டயாயிட்றாங்க....

      Delete
    2. நாம் இத சும்மா துப்பு துப்புனு துப்பறியாம விடக்கூடாது ன்னு தலீவரு தொடைய தட்றாரு.முழி பெயர்க்குறதுக்கு நம்ம தலீவரும்,கிட்டும் பயங்கரமா உதவவாங்கன்ன சொல்ல, பேரிக்கா பிம்பி சரி அவங்களையும் எஸ்டேட்டுக்கு வரட்டும் ன்னு ஆமோதிக்கிறாரு...
      போறாங்க...அங்கன செனா ஆனா இருக்குறாரு....இப்ப பாருங்க ....ஆறு மாசத்துக்கு அப்புறமா வரப்போற ககக காமிக்ஸ் குண்டு ரெண்டு ஐயாயிரத்த பத்தி நம்ம ஸ்டீல்கிளா ஒளறி வைப்பாருன்னு அவர - பிம்பி கூப்பிட்றாரு...

      அவரும் உள்ள வந்து இதாண்டா சாக்குன்னு- தந்தி பாஷைல பொழிந்து கட்றாரு...

      Delete
    3. சரி புக்கோட சிவகாசி சாமக்கோடாங்கி இப்ப திடிர்னு தொபுக்கடீர்னு குதிப்பார்னு - செனா ஆனா -அருஞ்சொற்பொருள் உரைக்கிறாரு...தலீவரும் ,கிட்டும் அம்மாள் பெரிய புக்க -எப்பூடி முக்கி முக்கி படிக்கிறதுன்னு பேரிக்காட்ட மாத்தி மாத்தி குடையுறாங்க...நல்லா பாருங்க இப்ப கோடாங்கியே படிச்சி காட்டுவாருன்னு - செனா அனா - புற நானூறுல இருந்து நப்பின்னைய பத்தி தாறுமாறான கோணத்துல புலம்பறாரு...

      Delete
    4. எல்லாரும் ஸ்டீல்கிளாவ வச்ச கண்ணு காது_ வாங்காம- பாக்க பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்காங்க...அவரும் தன் பங்குக்கு ஆஆஆஆர்ர்ச்சி பத்தாயிரம் பக்கம்- இந்த பக்கமா ஐயாயிரம்- அந்த பக்கமா ஐயாயிரம்னு சொல்லப் போக..." குயிக் கா அங்கிள்" னு ஹிப்னாடிச மந்திரம் போட்டுட்றாரு செனா அனா...
      பேரிக்கா பிம்பி முழி பேத்துகிட்டே தூங்கிட்றாரு...இதெல்லாம் நம்புற மாதிரி இல்லன்னுட்டு தலீவரும் ஜூட் விட்டுட்டு ஒப்பணக்காரவீதியில பொட்டிக்கட மாடியில் ஏறி உக்காந்துகிட்டு ரகசியமான ஒண்ரக் கண்ணுல வேவு பாக்குறாங்க...

      பார்த்தா ,"ஸ்டீலு துண்டு கட்டிகிட்டு குறி சொல்லவும் இல்ல - பரணியோட போன்லருந்து ரகசியமா பெனாத்துறதையும் யூகிக்கிறாங்க...

      ஆக மொத்தமா ," ஐயாயிரம் பக்கம் புக்க ஆட்டையப் போட , ஜேயும் -செனா அனாவும் போட்ட பிளான்னு தெரிஞ்சி போச்சி - தலீவருக்கும் கிட் கண்ணருக்கும்.


      Delete
    5. //பூனையும்,மாஸ்கோ சர்வாதிகாரியும், கோ பெருமாளும்,சித்தரும் //

      இன்னா மேரி தெறிக்க விட்ற வில்லன்ஸ் ! ஆத்தாடியோவ் !

      Delete
    6. இன்னமும் புக் புரட்டல்களைத் தாண்டியிரா நண்பர்கள் பேந்தப் பேந்த முழிக்கவிருப்பது உறுதி !

      :-))))

      Delete
    7. மீதி

      "எதிர்காலம் எனதே"

      புக் திரையில் ----

      Delete
  34. டெமக்லீஸ்::
    ப்ராக்ஸ்டன் எல்லி 20 ம் பக்கத்திற்க்கும் 35 ம் பக்கத்திற்க்கும் நடுவே மனம் மாற எந்த ஒரு நிகழ்வும் நடக்காதபோது பர்பெக்ட் சைல்ட் நிறுவனத்தை ஏளனமாக நினைக்கும் வசனங்கள் ஏற்புடையதாக இல்லை..

    மற்றொரு விறுவிறுப்பான கதை டெமக்லீஸ்.

    ReplyDelete
    Replies
    1. நிதானமாய் இன்னொருவாட்டி கதையையும், எல்லியின் கேரக்டரையும் அசை போடுங்கள் ; உங்களின் குறைபாட்டுக்கு முகாந்திரமில்லை என்பது புரியும் நண்பரே !

      Delete
    2. குறை என கருத வேண்டாம் சார்..


      சரிதான்,
      சிரிக்கும் வாந்தியெடுக்கும்,இரவு முழுவதும் தூங்காமல் அலறிக் கொண்டும் இருக்கும் !
      இதுதான் பூமியிலேயே அழகான சமாச்சாரமாக்கும் ?

      வாலில்ல வானரங்களை பெற்று வளர்ப்பதெல்லாம் நமக்கு ஆகாது !
      மற்ற பெண்களே பார்த்துக் கொள்ளட்டும் !

      குழந்தை வளர்ப்பு பற்றி இப்படி நினைக்கும் கதாநாயகி சில ஆக்ஷன் க்கு பிறகு

      ஒரு உயிர் ஜனிக்கும் அற்புதத்தை அரசியல் மேடை பேச்சு போல இவர்கள் கையாள்வதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை ..


      இப்படி நினைக்க வைத்த காரணம்தான் சரியாக இல்லை..

      அதுவே படிக்கட்டு சம்பவத்திற்க்கு பின் என்றால் பெண்மை,ஆணின் ஸ்பரிசம்,காதல்,காமம்,தாய்மை என அனைத்து நிகழ்வுகளும் வருவதால் அப்போது குழந்தைகள் பற்றிய பாசத்தில் 35 ஜந்தாம் பக்க வசனம் வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்..

      அப்படி எதுவுமில்லாமல் அந்த வசனங்கள் வந்தற்க்கான (மனமாற்ற) காரணம் வலுவாக இல்லை அதனாலேய குறிப்பிட்டிருந்தேன்...
      அதற்காகவே அப்படி கூறினேன்..
      தவறிருந்தால் மன்னிக்கவும் ஆசானே ..

      Delete
    3. உங்கள் பின்னூட்டத்திலேயே உங்களுக்கான பதிலும் இருப்பதைச் சுட்டிக்காட்ட எனக்கு ஆசை தான் சிவா ; ஆனால் இன்னமும் புக்கைக் கையில் ஏந்தவே நிறையப்பேருக்கு அவகாசம் வாய்த்திராது எனும் போது - 'விளக்குகிறேன் பேர்வழி' என்று எதையேனும் சொல்லி வைத்து, அவர்களது வாசிப்புகளை பாழாக்கி விடக்கூடாதென்பதால் மௌனம் காக்கிறேன் - இப்போதைக்கு !

      கொஞ்சமாய் மக்கள் இதனுள் புகுந்து புழங்கத் துவங்கட்டுமே - உங்களுக்கான பதிலைச் சொல்லிடலாம் !

      Delete
    4. நன்றி சார் தங்கள் பதிலுக்கு..

      Delete
  35. ஈவி! உள்ளூர் முப்பாத்தாவை விட்டுட்டு குலவையை ஈரோட்டு ஆத்தாவுக்கு மாத்த என்ன புரஸீஜர்??? :)

    ReplyDelete
    Replies
    1. அப்படிக்கேளுங்க!

      1st step : முப்பாத்தாவை சினம் கொள்ளச் செய்து TC வாங்குவது! அதற்குக் குலவையை எசகுபிசகாக 'கிரிமுரிகிரிமுரி' என்று போடவேண்டும்! (இதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை செனாஅனா.. சாதாரணமா பாடினீங்கன்னாலே அப்படித்தான் இருக்கும்!). முப்பாத்தா "கெட் லாஸ்ட்"னு கத்தியவுடன் அங்கிருந்து TCயை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட வேண்டும்!

      2nd step : ஈரோட்டு ஆத்தாவின் முரட்டு பக்தர்களில் முதலானவராக நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ.. (மனக்கண்ணில் சட்டென்று தோன்றும் நபரையே தேர்ந்தெடுக்க வேண்டும் - நோ ஊழல் ப்ளீஸ்!) அந்த நல்லவருக்கு - அந்த வல்லவருக்கு - கொத்து பரோட்டாவும், கோழி குழம்பும் வாங்கிக் கொடுத்து கெளரவிக்கவேண்டும்!

      இதன்பிறகு மேச்சேரி கோமாதா குலவைப் பயிற்சி நிலையத்தில் உங்களுக்கு ஓரிரு வாரங்கள் சிறப்புப் பயிற்சியளிக்கப்பட்டு, மகிமை வாய்ந்த ஈரோடு ஆத்தாவின் முரட்டுப் பக்தர்களில் ஒருவராகப் பணியிலமர்த்தப்படுவீர்கள்!

      Delete
    2. //இதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை செனாஅனா.. சாதாரணமா பாடினீங்கன்னாலே அப்படித்தான் இருக்கும்//

      :-))

      //அந்த நல்லவருக்கு - அந்த வல்லவருக்கு - கொத்து பரோட்டாவும், கோழி குழம்பும் வாங்கிக் கொடுத்து கெளரவிக்கவேண்டும்!//

      ஹா..ஹா..ஹா..

      ஆத்தாவுக்கு வெறும் குலவை..

      பக்தருக்கு பரோட்டா + கோழிக்குழம்பு

      ஆத்தா ஆசிரமம் ஆரம்பிக்க அடிப்படை தகுதி உங்க கிட்டே நிறையவே இருக்கு!!!

      :)

      Delete
  36. புத்தகம் கிடைத்து விட்டாலும் இதழை பிரித்து புரட்டி பார்க்க போவது நாளை மாலை தான் எனவே...

    விமர்சனங்கள் ,பார்வைகள் விரைவில்...:-)

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் கிடைத்து விட்டாலும் இதழை பிரித்து புரட்டி பார்க்க போவது நாளை மாலை தான் எனவே...

      விமர்சனங்கள் ,பார்வைகள் விரைவில்...:-)

      Delete
  37. சார் இன்று பதிவு எப்போது?

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு நண்பர் 'ஜெ ' விவரித்திருக்கும் நெடுங்கதையே பதிவின் இடத்தில் !!

      Delete
    2. சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை எனக்கு? புத்தகங்களும் என் கையில் இல்லையே என்ன செய்வது?

      Delete
  38. இருளோடு யுத்தம் - தரமான சம்பவம். அப்படியே அந்த டிராகுலா கதையும் போட்டிங்கன்னா இன்னும் அருமையா இருக்கும். வெயிட்டிங் ஃபார் மெபிஸ்டோ.. 11/10

    ReplyDelete
  39. ஈரோடு 2018 புத்தகத்திருவிழாவில் ஆசிரியரிடம் நான் கேட்டது லாரன்ஸ் டேவிட் கதை இதுதான். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டார். இரண்டு வருடம் கழித்து என் கனவு நிறைவேற போகிறது. இதேபோல பெரும்பாலான வாசகர்களின் கனவான வேதாளர் தரமான மொழிபெயர்ப்பில் வண்ணத்தில் ஆண்டில் பத்து கதைகள் ஒரே புத்தகமாக அப்படின்னு பிட்ட போட்டு வைக்கிறேன் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அட ..நீங்க வேற ஏன் சார் ?! ஆளாளுக்கு கேட்கிறீங்களேன்னு வேதாளர் கதைகளுக்கு இயன்ற குட்டிக்கரணம் எல்லாம் போட்டுப் பார்த்தாச்சு ; ஊஹூம், அவர்கள் மசியும் வழியைக் காணோம் ! அலுத்துப் போய் விட்டது !

      Delete
  40. வேதாளருக்கு நானும் ஒரு ஜே போட்டு வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சந்தா D இல் இன்னும் இரண்டு காலி இடங்கள் உள்ளன அதை நிரப்ப போவது யார் யார்? இது தான் இப்போதைய 80 ரூபாய் கேள்வி

      Delete
    2. // வேதாளருக்கு //

      வேதாளர் வேண்டாம்.

      Delete
  41. Color TEX .. இருளோடு யுத்தம் ..

    மரண முள் , மந்திர மண்டலம் , இருளின் மைந்தர்கள் type TEX கதை .. அப்பப்போ இந்த மாதிரி TEX கதைகளும் வேண்டும் .. To show variety in TEX genre.. மெபிஸ்டோவை மெயின் சந்தாவில் கொண்டு வாருங்கள் சார் ..

    ReplyDelete
    Replies
    1. நான் சும்மா முழிச்சாலே ஒரு மார்க்கமாய்த் தான் இருக்கும் சார் ; 'திரு திருன்னு ' முழிச்சா பயம்மா இருக்கும் !! தற்சமயம் 'திரு திரு' தான் !!

      Delete
    2. சார் .. if possible .. வருடம் ஒன்று மட்டும் இம்மாதிரி TEX கதையை "கண்ணை" மூடிக் கொண்டு இறக்கி விடுங்கள் ..

      Delete
    3. இந்த 32 பக்கங்களுக்கே நான் முழிச்சி முழி எனக்குத் தான் தெரியும் சார் !!

      Delete
    4. சார் பொதுவாக தல கதை குட்டீஸ்கிட்ட சொல்ற அளவுக்கு அவ்வளவு விஷேசமா எதுவும் விஷயம் இருக்காது.. ஆனால் இந்த கதையை எங்க வீட்டு குட்டீஸ்கிட்ட சொன்னப்ப அவ்வளவு ஆர்வமா கேட்டாங்க.. நம்ம அடுத்த தலைமுறையை தல ஃபேன் ஆக்க இந்த மாதிரி கதைகள் மிக்க அவசியம்..

      Delete
  42. அப்படியே மாண்ட்ரேக்குக்கும் ஒரு ஓஓ..

    ReplyDelete
    Replies
    1. இக்கட வாஸ்து சரி இல்லேன்னு தோணுது பத்து சார் ; எதிரொலி கூட ரொம்பவே ஈனஸ்வரத்தில் தான் ஒலிக்குது !!

      Delete
    2. // மாண்ட்ரேக்குக்கும் ஒரு ஓஓ.. //

      வேண்டாம்.

      Delete
  43. பேப்பர் விலை - பேய் விலையா இருக்குமே சார்

    எப்டி சமாளிக்கிறீங்களோ....

    எல்லாம் சைனா பகவானோட வைரஸ் கைங்கரியம்....

    ஏற்கனவே எல்லாபிஸினஸூம் சும்மா பொளந்து கட்டீட்டு இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேக்குறீங்க சார் ...பேப்பர் ஸ்டோர் நடத்தணும் இப்போல்லாம் கோடீஸ்வரர் ஆகணும்னா ! ஒரே நாள் ராவிலே கையிருப்புக்கும் சேர்த்து டன்னுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் என்று எகிற விட்டுக் கொண்டிருக்கிறார்கள் !!

      அங்கே, இங்கே என்று பிச்சை எடுக்காத குறையாய் மே மாதத்தின் பாதி வரைக்கும் தாள் வாங்கிப் போட்டுவிட்டேன் ! விலை ஒருபுறமிருக்க, இப்போ மார்க்கெட்டில் பேப்பரே இல்லை யாரிடமும் ! ஸ்ரீ லங்கா ; பங்களாதேஷ் என்று குட்டி தேசங்களும் இப்போது இங்குள்ள மில்களில் காவடி எடுத்து நிற்பதால் தட்டுப்பாடோ - தட்டுப்பாடு தான் !

      எங்கே போய் முடியப்போகிறதோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !

      Delete
    2. J &
      ஆசிரியர்..

      திருப்பூரில் தற்போது தட்டுப்பாடு எதற்கு என்றால் மாஸ்க் க்கு தான்
      ஒவ்வொரு ஆர்டரும் ஜந்து லட்சம், பத்து லட்சம் பீஸ் என ஆர்டர்கள் குவிந்து வருகிறது..
      தயாரிப்பாளர்கள் குறைவு என்பதால் டிமாண்ட் அதிகம் உள்ளதால் விலையும் சர்ரென ஏற்றி விட்டார்கள்..

      Delete
    3. நச்சுன்னு நாலு ஸ்பெஷல் புக்க போட்டுட்டு நாலு மாசம் கேப் விட வேண்டியது தான் நல்ல வழி. அதுக்குள்ள கொரானோ வைரஸுக்கு கூழ் ஊத்திட்டுருப்பாங்க. நிலைமையும் சகஜ நிலைமைக்கு திரும்பிடும்.

      Delete
    4. சுந்தர்@ எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க :-)

      Delete
    5. \\\நிற்பதால் தட்டுப்பாடோ - தட்டுப்பாடு தான் !\\\

      சந்தா "B" ஐ தற்காலிகமா நிறுத்திட்டா பேப்பர் தட்டுப்பாடு குறையும். ஏதோ எனக்கு தோனுனதை சொன்னேன்.

      Delete
    6. //சந்தா "B" ஐ தற்காலிகமா நிறுத்திட்டா பேப்பர் தட்டுப்பாடு குறையும். ஏதோ எனக்கு தோனுனதை சொன்னேன்//

      :-))

      Sarcasm is there!! But one cannot ignore the sense of humour behind it..

      Delete
  44. *** இம்மாதப் புத்தகங்கள் - முதல் பார்வையில் *****

    முதல் புரட்டலிலேயே மூச்சிரைக் வைக்கிறது! ஆத்தாடிக்காத்தாடியோவ்.. என்னவொரு அசாத்திய சித்திரங்கள்.. என்னவொரு கலரிங் பாணி!!! அடர்ந்த கானகத்தின் அழகு, அபாயங்களையெல்லாம் அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறதே?!!! என்னவொரு துள்ளியமான பிரின்ட்டிங்!!! கதையின் போக்கு மட்டும் சரியாக இருந்துவிட்டால் நிச்சயம் இதுவொரு கண்களுக்கு விருந்தளிக்கும் வாசிப்பு அனுபவத்தைத் தரப்போவது உறுதி என்று எட்டுத்திக்கும் முழங்கிடுவேன்!!

    * டெமக்லீஸ் - அட்டைப் படத்தில் உடல் முழுக்க கருப்பு ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டு துப்பாக்கி சகிதம் போஸ் கொடுப்பவர்களெல்லாம் உள்ளே பாதிநேரம் துண்டுத்துணியில்லாமல் தான் இருப்பார்கள் என்பதற்கு நல்லதொரு உதாரணம்! இந்தமாதிரி புத்தகங்களின் அட்டையில் - கீழே - பாதாளத்தில் - தம்மாத்துண்டு ஸ்டிக்கரில் '18+ பெரிசுகளுக்கு மட்டும்'னு ஒட்டியிருந்தா போதாதுங்க எடிட்டர் சார்! நல்ல டைட்டில் சைசுக்கு பெரிசா ஒட்டுங்க! (மீதி அர்ச்சணைகள் படித்த பிறகு தொடரும்)

    * 'எதிர்காலம் எனதே' - அட்டைப்படம் பிரம்மாதம்! எதிர்பார்த்ததைவிட நன்றாகவே வந்திருக்கிறது! உள்பக்க சித்திரங்களும் 'அட பர்ர்ரால்லியே' ரகம்!

    * 'ஆர்டின் ஒரு ஆச்சரியக்குறி' - வழக்கம் போலவே 'நன்று'! இதை படிக்கப்போகும் தருணத்திற்காக புன்னகையோடு காத்திருப்பேன்!

    ReplyDelete
  45. சார், கலர் ஆர்ச்சி விற்பனைக்கு வருமெனில் T சர்ட் வாங்கிக் கொள்வோமே. மேலதிக விவரங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
  46. வீட்டில் யாருமில்லாமல் தனித்து இருப்பதால் விமர்சனம் நாளை.்்

    ReplyDelete
  47. வெகு நாள் கழித்து ஒரே முறையில் படித்த முதல் கதை நில் கவனி வேட்டையாடு, கதைக்கு மனித வேட்டை என்று பெயர் வைத்திருக்கலாம், அற்புதமான சித்திரங்கள், எங்கும் தொய்வில்லாமல் செல்லம் கதைக்களம், நாய் வேட்டை ஜாகுவார் வேட்டை முதலை வேட்டை மனித வேட்டை என்ற அனல்பறக்கும் கதைக்களம்.

    ReplyDelete
  48. புத்தகங்கள் வரவில்லை என்ற ஏமாற்றம் ஒரு புறம் என்றால் சனிக்கிழமை இரவு பதிவும் வரவில்லை என்பது மற்றும் ஒரு ஏமாற்றம்.

    ஏமாற்றம் நிறைந்த நாள் இது. :-(

    ReplyDelete
  49. ஏக் தம்முல அந்த மெபிஸ்டோ யுமா கதைகளை ( 1000 பக்கங்கள் வரும்ன்னு நினைக்கிறேன் ) மினி டெக்ஸ் புக் சைஸ்ஸூல போட்டிங்கனா மெர்சலாகி பிகில் ஊதி தெறிக்க விட்டுராலாம் .

    ReplyDelete
    Replies
    1. 400 பக்கங்கள் வரும் நண்பரே கதை இந்தியாவில் நடப்பது... மெபிஸ்டோவின் மகன் டெக்ஸை பழிவாங்க துடிக்கும் மாயாஜால கதை....

      Delete
    2. ///டெக்ஸை பழிவாங்க துடிக்கும் மாயாஜால கதை....///

      எனக்கென்னவோ பெரும்பாலான எல்லா டெக்ஸ் கதைகளும் மாயாஜால கதைகள் மாதிரியே ஒரு பிலிங்.

      இதுல தனியா வேற டெக்ஸ் மயாஜலம் பன்னியிருக்கார???!!.

      Delete
    3. //பெரும்பாலான எல்லா டெக்ஸ் கதைகளும்//

      :-)

      Almost all -அப்டிங்கறதை இப்படித்தான் மொழிபெயர்க்கணும் போல!!

      ;-)

      Delete
    4. //Almost all -அப்டிங்கறதை இப்படித்தான் மொழிபெயர்க்கணும் போல!!///

      அப்படியா சென ஆனா!!!!!.

      உண்மையில் எல்லா டெக்ஸ் கதையும் தான் ஆரம்பிச்சேன். ஆனா பச்சோந்தி பகைவன், வல்லவர்கள் வீழ்வதில்லை எனக்கு பிடித்த டெக்ஸ் காமிக்ஸ் என்று ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன். அதனால் தான் "almost all" வந்து விட்டது.

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. I have receive the book. Regarding the gift shall i get the TShirt and will the Archie comics be available for sales in future.

    ReplyDelete
  52. வணக்கம் வேதாளர் கதைகள் வருமா

    ReplyDelete
    Replies
    1. வரும்! வாய்ப்பிருக்கிறது! (ஹிஹி.. பாஸிட்டிவ் திங்க்கிங்!)

      Delete
  53. இன்றாவது பதிவு உண்டா சார்?

    ReplyDelete
  54. இருளோடு யுத்தம்...
    அட்டகாசமான அமானுஷ்ய திரில்லர்.. பல இடங்களில் ஜேசன் பிரைஸை நியாபகம் படுத்தியது..
    கார்சனும் அதிகாரியும் சும்மா ஒப்புக்கு சப்பாணிகள் தான்..
    ஆனா.. கண்ணாடியை திருப்பினா எப்பிடி ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்ன்னு தான் தெரியலை..

    ReplyDelete
  55. , சின்னதா ஒரு கற்பனை. டெமக்லீஸ் டீமில் எமிலிக்குப்பதில் மாடஸ்டி வேலைக்கு சேர்ந்தால் அதிரடி எப்படி இருக்கும்னு கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  56. நிலவிலா வானம்..
    நீரில்லா மேகம்...
    பாட்டில்லா புலவன்..
    பாட்டி சொல்லாக் கதை...


    பதிவில்லா ஞாயிறு!

    ReplyDelete
  57. நில்..கவனி..வேட்டையாடு..! மேக்கிங்-ம் சரி சித்திரங்களும் சரி மிரட்டல் ரகம். பச்சைப்பசேல் என்ற அந்த காட்டின் சித்திரங்களுக்கு ஏற்ப வண்ணக்கலவை கண்களுக்கு செம்ம விருந்து. கதையோ ~மனித~ வேட்டை பற்றி, ஆனால் அதனில் பின்னி பிணைந்திருப்பதோ ஒரு சித்திர வேட்டை. A Sure fire shot hit.

    சமீபத்திய சிக் பில் கதைகளில் உள்ள சித்திரங்கள் எல்லாம் சோ சோ ரகம். ஆனால் இந்த முறை சித்திரங்கள் பார்க்க டீசென்ட் டாக உள்ளது.

    டெமக் லீஸ் இந்த இறுதி சுற்றும் சென்ற இதழ் போல் ஹிட் அடிக்கும் என்று தோன்றுகிறது சித்திரங்களும் வர்ணக்கலவையும் வேற லெவல். இந்த மூன்று வண்ண இதழ்களின் மேக்கிங் மற்றும் அச்சுத் தரமும் first class.

    மாடஸ்டி ம் ம் உதட்டை பிதுக்கும் படங்கள் நூறு. சுமாரான சித்திரங்கள் சொல்லிக் கொள்ளும் படியில்லை. 'அலமாரில் ஒரு அலங்காரம்'.

    பட்டாபட்டி புகழ் லாரன்ஸ் டேவிட் வேறு தலைக் காட்ட போறாங்களா...! பழையதின் படையெடுப்பு ஏக பலமா இருக்கிறதே, கொஞ்சம் பார்த்து செய்யுங்கோ.

    டெக்ஸ் மினி: மெபிஸ்டோ வின் பெரிய கதைக்கு இது ஒரு வெள்ளோட்டமா...? சிவிடெல்லி-யின் கைவண்ணத்தில் 'யுமா' நீ சீக்கிரமே வாம்மா...!
    M H MOHIDEEN

    ReplyDelete
  58. இம்மாதம் வந்த அனைத்துக் கதைகளையும் படித்து விட்டேன்.

    இந்த அனைத்துக் கதைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளன.

    இருந்தபோதும் எனவே இந்த மாத வரிசை
    1. நில் கவனி வேட்டையாடு.

    சித்திரங்களும் கதையும் மிக அருமை.
    கதைக்களம் ஒரு சாதாரண மனித வேட்டை.
    அதை வண்ணத்தில் செதுக்கி இருப்பார்கள்.
    பார்க்க பக்கம் 37 மேலே உள்ள மூன்று படங்கள் அதில் கோடு போட்ட பேண்ட் ஷர்ட் அணிந்து இருப்பவர்.
    முதுகில் அம்பு தாக்கி இருந்திருப்பார்.
    பக்கம் 41 ல் இறந்தவர் முதுகிலிருந்து அம்பினை எடுப்பார்.
    பக்கம் 45 இல் கோடு போட்ட பேண்ட் சட்டை அணிவார்.
    ஒவ்வொரு படமும் படு நேர்த்தியாக இருக்கும்!

    பக்கம் 76 77 உள்ள கேத்தரினா உடலை பல கோணங்களில் காணலாம்.

    வில்லனாய் இருந்து எழுவாய் மாறும் வேட்டைக்காரன் நம்பர் ஒன்.



    2. ஆர்ட்டின் ஒரு ஆச்சரியக்குறி.

    சோப்பைத் தின்றதால் வார்த்தைகளுக்குப் பதில் நுரை வரும் காட்சி.
    மரண தண்டனை வழங்கப்பட்ட பிறகு கடைசி ஆசை கேட்கும் காட்சிகள்
    நகைச்சுவை கதை.

    3. எதிர்காலம் எனது.
    எளிய கதை. அறிவியல் புனைவு எழுத்தாளர் ஒரு அறிவியல் புனைவினை வசிய முறையில் நம்பச் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைய நினைக்கும் எளிய மனிதர்கள்.
    துன்பம் இழைக்க நினைக்கும் வில்லன்களை பந்தாடி எளிய மனிதர்களை காப்பாற்றும் மாடஸ்டியின் கதை.

    4. பிழையில்லா மழலை.
    இன்று நடக்கும் கருத்தரிப்பு மையம் போன்ற கொள்ளை கூடங்களை இங்கிலாந்து பாணியில் வெளிநாட்டு பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை.
    இதில் வரும் இந்தியத்தாய் எல்லா இந்தியர்களைப் போலவே திருமணம் செய்து கொள் என்று வலியுறுத்திக் கொண்டே வருவார்.
    ஆக்ஷன் த்ரில்லர்.

    5. இருளோடு யுத்தம்.
    டெக்ஸ்க்கு நடிக்கச் சொல்லிக் கொடுக்கும் கதை.
    ஹீரோ மோரிஸ்கோ.
    நிழல் அரக்கனை அழிக்கும் டெக்ஸ் கதை.
    நிழல் யுத்தம் என்று தலைப்பு இருந்து இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  59. Editor sir Puthiya pathivu please 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🙁🙁🤔🤨🤔

    ReplyDelete
  60. எடிட்டரின் புதிய பதிவு எப்பியோ ரெடி பிரியாடெல்ஸ்! :)

    ReplyDelete