Powered By Blogger

Sunday, March 19, 2017

கழன்ற மறையும் நல்லதே ?!!

நண்பர்களே,

வணக்கம். போன இடத்தில் குளிரின் தாக்கம் பற்களை வெடவெடக்கச் செய்ததென்றால் - இங்கேயோ உங்கள் அன்பின் கதகதப்பு பேஸ்மெண்டை வீக்காகுகின்றது ! தனித்தனியாய் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் சகலருக்கும் ஒட்டுமொத்தமாய் “நன்றி” சொல்லிட மீண்டுமொரு முறை சிரம் தாழ்த்துகிறேன் !  Thanks from the bottom of my heart all !! நிறையத் தடவைகள் நான் பாடிய அதே கானம் தான் (நாங்களும் பறவை தானுங்களே?!) என்றாலும் - இது போன்ற தருணங்களில் இன்னொரு முறை அதனைத் தொடர்ந்திடுவதில் தவறில்லை என்று பட்டது ! பணம் பண்ண நூறு மார்க்கங்கள் பரந்து விரிந்து நிற்கலாம் ; ஆனால் நிஜமான புன்னகைகளை உருவாக்கும் பயணப் பாதைகள் மிகுந்திருப்பதில்லை ! ஆளரவம் குறைச்சலான அந்த இரண்டாவது பாதையை நமக்கு முன்நிறுத்தித் தந்த ஆண்டவனுக்கு நமது நன்றிகள் என்றைக்கும் இருந்திடும் ! நமது இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கிய நாள் முதலாய், உங்களோடு மெய்யாகவே கரம் கோர்த்து நடைபோடும் உணர்வானது முன் எப்போதையும் விடக் கூடுதலாய் வியாபித்து நிற்பது இப்போது என்று நான் சொன்னால் அது   நிச்சயம் எனது கற்பனையல்ல ! எல்லைகளில்லா இந்தப் பயணம் என்றைக்கும் இதே உற்சாகத்தோடு தொடரட்டுமே !!

மார்ச்சின் march past ஞாபகப் பேழைகளுக்குள் ஐக்கியமாகியுள்ள நிலையில், எதிர்நிற்கும் ஏப்ரலில் பார்வைகளைப் பதிக்கும் தருணமிது ! இம்மாதம் சந்தா A-வில் இதழ்கள் ஏதும் கிடையாதென்ற நிலையில் பிரதானமாய் கவனத்தை ஈர்க்கக் காத்திருப்பது நமது Million & More ஸ்பெஷலாகத் தானிருக்குமென்று நினைக்கிறேன்! ஜெரெமயா பணிகள் இங்கே பரபரப்பாய் நடந்திட - இந்த இதழின் பின்னணியை யோசித்துப் பார்க்கும் போது எனது மலைப்பு இரு தனித்தனி திசைகளில் விழி விரிந்து நிற்கின்றது !

தட்டுத் தடுமாறி பாதி ஜீவனோடு நாம் இதழ்களை வெளியிட்டு வந்த காலத்தில், நமது (அப்போதைய) வலைத்தளத்தில் ஒரு discussion பக்கம் இருந்தது மிதமாக நினைவுள்ளது. வரிசையாய் உங்களது விமர்சனங்கள்; பின்னூட்டங்கள் என்று ஒரே தொடர்ச்சியாய் அது ஓடியதாக ஞாபகம்! இடையே spam போட்டுத் தாக்கிட - நமது வெளியீடுகளின் துரிதமும் ‘லைட்டாக‘ப் பல்லைக்காட்டத் துவங்கிட - குதிங்கால் பிடரியிலடிக்க மூட்டையைக் கட்டி விட்டோம் ! தொடர்ந்த காலங்களில் உங்களோடு நிறைய கண்ணாமூச்சி ஆடிவிட்டு ஒருவழியாக மறுவருகை புரிய நினைத்த நேரத்தில் எனக்குள் ரொம்பவே கூச்சமும், தயக்கமும் நிறைந்திருந்தது ! எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு உங்களை எதிர்கொள்வது ? என்ற தடுமாற்றம் ஒரு பக்கம் ; ஏஜெண்ட்கள் வழியாக விநியோக முறைகள் சொதப்பலாகியிருந்த நிலையில் நேடியான சந்தா / புத்தக விழா விற்பனைகள் தான் மார்க்கமென்ற தருணத்தில் உங்களிடம் நமது நம்பகத்தன்மையை நிலைநாட்டுவது எவ்விதமென்ற தயக்கம் இன்னொரு பக்கம் ! Maybe அன்றைக்கு நீங்கள் மேலோங்கிய நையாண்டியோடே என்னை வரவேற்றிருப்பின் நிச்சயம் உங்கள் மீது குறை சொல்லிட எனக்கு முகாந்திரங்களிருந்திராது ! சொதப்பல்களைத் தொடர்ந்திடாது, நமது இதழ்களைத் தொய்வின்றி வெளியிட உள்ளுக்குள் நான் உறுதியாகயிருந்திருப்பினும் - காற்றில் கரைந்து போயிருந்த நமது Credibility-ன் தேடலில் எனது உறுதிகள் எத்தனை காலம் தாக்குப் பிடித்திருக்குமோ ? - நானறியேன் ! ஆனால் தொடர்ந்ததோ கனவிலும் எதிர்பார்த்திருக்கா சங்கிலித் தொடர் நிகழ்வுகள் !

2012-ன் ஆண்டுச் சந்தாவே ரூ.620/- தான் என்பதும், வண்ண இதழ்கள் வெகு சொற்பமே அன்றைய திட்டமிடலில் இருந்ததென்பதும் ஆண்டுக்கு ரூ.5000+க்கு வெடி வைத்திடும் இன்றைய பொழுதில் சிரிக்கச் செய்யும் மேட்டராகத் தென்படுகிறது ! ஆனால் - நமது மறுவருகையின் ஆரம்ப நாட்களில் அதுவே ஒரு அசாத்திய உச்சமாகத் தோற்றம் தந்தது தான் நிஜம் ! “இன்னொரு வாய்ப்புத் தந்து பாருங்களேன் - ப்ளீஸ் !" என்று கோரிடக் கூட எனக்கு அன்றைக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்றது ; ஆனால் நீங்களோ நிபந்தனைகளின்றி உங்களது பணத்தையும், அன்பையும், நேசத்தையும் நம் மீது வாரிக் குவித்த போது எனக்குள்ளே நிறைய விஷயங்கள் புதுப்பரிமாணங்களில் தோற்றம் தரத் தொடங்கின ! இந்தப் பளா-பளா கலர்; ஆர்ட் பேப்பர் அவதாரெல்லாமே post 2012 சமாச்சாரங்களே என்ற போது - அதற்கு முன்பான அந்தச் “சாணித் தாள் நாட்களை” - சாதனை நாட்களாகப் பார்த்தி்ட சத்தியமாய் எனக்குத் திராணியிருந்திருக்கவில்லை ! So அது வரையிலான அந்த ‘சஸ்தா‘ இதழ்களின் தாக்கமே இத்தனை ஆதர்ஷத்தை ஈட்டித் தந்துள்ளதென்ற போது, ‘புது யுக‘ இதழ்கள் உங்களை இன்னும் எத்தனை லயிக்கச் செய்திடக் கூடுமென்ற எதிர்ப்பார்ப்பே எனது சோம்பேறிமாடன் அவதாரத்தைக் கடாச உதவியது ! உங்கள் உற்சாகங்கள்; விமர்சனங்கள்; விவாதங்கள் ஒவ்வொரு மாதமும் இங்கே பதிவாகத் தொடங்கத் தொடங்க, பணிகளின் சவாலை விடவும் சுவாரஸ்யமானதொரு சவாலாக எனக்கவை வளர்ந்து நிற்பதாய்த் தோன்றியது ! So உங்களது அபிமானங்களைத் தக்க வைத்துக் கொள்ள எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் தேவலாமென்ற தைரியம் துளிர்விடத் தொடங்கியது அந்த நாட்களில் தான் !

NBS தான் இந்தப் பதிவுப் பக்கத்தின் முதல் வெற்றிக் குழந்தை என்று சொன்னால் மிகையாகாது! “என் பெயர் லார்கோவும்; டபுள் த்ரில் ஸ்பெஷல்; Wild West ஸ்பெஷலும் வரிசையாய் ஹாட்ரிக் அடித்த போது எனக்கு வழக்கம் போலவே கிட்டிய அசட்டுத் துணிச்சலின் பலனே NBS-ன் அறிவிப்பு ! இன்றைய நிலையில் 400+ பக்கங்கள் கொண்டதொரு இதழை நான் அரைத் தூக்கத்தில் சுற்றி வந்தால் கூட, நம்மவர்கள் ஃப்பூ என்று ஊதித் தள்ளி விடும் தேர்ச்சியைக் கண்டெடுத்து விட்டார்கள் ! ஆனால் 2013-ல் இந்தப் பணித் தேர்ச்சியோ ; ஆட்பலமோ இல்லா நிலையில் NBS-ஐக் கரைசேர்க்க முடிந்தது நிச்சயமாய் வடதிசையின் தேவன் தோரின் புண்ணியமே என்பேன் ! ஆனால் அந்தக் கனவை எனக்குத் தந்தது இந்தப் பதிவுப் பக்கங்களில் நீங்கள் உற்பத்தி செய்து தந்த உத்வேகமே என்பதில் சந்தேகம் கிடையாது ! ஒரு பதிவுக்கு நூறு அல்லது நூற்றைம்பது பின்னூட்டங்கள் கிட்டினாலே பெரும் பாக்கியமென்றிருந்த நிலை சிறுகச் சிறுக NBS-ன் நெருக்கத்தில் எகிறத் தொடங்கியதை இப்போதும் பார்த்திட முடிகிறது stats பகுதியில் ! So வண்டியை இயக்கும் பெட்ரோலுமாகி; பிரயாணத்தை ரசிக்கும் பயணிகளுமாகி, நம் பாதையைப் படுசுலபமாக்கிய  பெருமை இந்தப் பக்கத்தைச் சுற்றி வரும் ஒவ்வொரு அன்புள்ளத்தையும் சாரும் ! Oh yes - நிறைய காரசாரங்கள் இடையிடையே தலைதூக்கியுள்ளன ; ஏகப்பட்ட அபிப்பிராய பேதங்கள் முளைவிட்டுள்ளன ; ஆரம்ப நாட்களது நண்பர்களில் சிலர் தற்போது இங்கு பதிவிடுவதில்லை தான் ! ஆனால் உரக்கவோ; மௌமாகவோ இந்தப் பக்கத்தை விடாப்பிடியாய்த் தொடர்ந்திடும் இயல்பே நம்மை ஒன்றிணைக்கும் காமிக்ஸ் நேசத்தின் வலிமைக்கொரு பறைசாற்றல் என்பேன் !

விளையாட்டாய் ஒரு லட்சம் பார்வைகள் ; இரண்டு லட்சம் பார்வைகளென்ற மைல்கல்களைத் தாண்டினோம் - கோவையிலுள்ளதொரு பாவப்பட்ட கீ-போர்ட் ஓடாய்த் தேய்ந்து போனதன் புண்ணியத்தில் ! ஆனால் தொடர்ந்த நாட்களில் LMS ; மின்னும் மரணம் ; லயன் 250 ; எ.பெ.டை. என்று விதவிதமான ஸ்பெஷல் இதழ்களும், நம் கருத்துகளுக்குத் தீனி போட, சுவாரஸ்ய மீட்டரும், பார்வைகளின் பதிவு மீட்டரும் எகிறத் தொடங்கியதை நாமறிவோம் ! Of course - Refresh பட்டனை நம்மவர்கள் அத்தனை பேரும் கதறக் கதறத் துவைத்தெடத்த புண்ணியவான்கள் என்பதை நான் மறந்து விட்டு, “ஹை... 40,000 பேர் மாசாமாசம் இங்கே ஆஜராக்கும்?!” என்று துள்ளிக் குதித்ததில்லை! மாறாக - "200 பேர்... 200 தடவை வருகை தந்திருக்கிறார்களே !!” என்று வியந்த நாட்களே அதிகம் ! உங்கள் நேரங்களைப் பங்குபோட்டுக் கொள்ள குடும்பப் பொறுப்புகள் ; பணிச் சுமைகள் ; நமது அரசியல் அஜால் குஜால்கள் ; டி.வி. ; இன்டர்நெட் என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ரவுண்ட் கட்டி நிற்கும் தருணத்திலும் கூட இந்தப் பக்கத்தின் காமிக்ஸ் நடப்புகளுக்கும், நட்புகளுக்கும் நீங்கள் நல்கிடும் நேரமானது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் என்பேன்! So எப்போதோ தாண்டிச் சென்று விட்ட அந்த “2 மில்லியன் பார்வைகள்” என்ற மைல்கல்லைப் பெருமைப்படுத்திடவே ஜெரெமயா வரக்காத்திருக்கிறார் ! கையில் சிக்கியுள்ளது ரவையா ? சுண்ணாம்பா ? கோலப் பொடியா ? என்றே தெரியாமல் 60+ மாதங்களுக்கு முன்பாகச் சின்னதாய் நாங்கள் போட முனைந்த புள்ளிக் கோலத்தை இன்றைக்கு ஒரு அழகான ரங்கோலியாக்கித் தந்திருக்கிறீர்கள்! So காத்திருக்கும் இந்த MMS இதழானது உங்கள் ஒவ்வொருவரின் நேரங்களுக்கும், நேசங்களுக்கும் நாங்கள் செய்திடும் மரியாதையாகப் பார்க்கிறேன் !

மலைப்பு # 2 – இந்த இதழுக்குக் கிட்டியுள்ள பிரெஞ்சு தேசத்தின் ஒத்தாசையை எண்ணி ! நிறையவே எழுதியிருக்கிறேன் - இந்த இதழின் தயாரிப்புச் செலவுகளுக்குப் பிரெஞ்சுக் கலாச்சார மையம் தொகையொன்றை மான்யமாக வழங்கியுள்ளதைப் பற்றி ! அந்த நாட்களை இப்போது சாவகாசமாய் அசைபோடும் போது நிஜமாகவே ‘டர்ராகிறது‘ - “ஆஹா. மெய்யாகவே நமக்கு இந்த அருகதையுள்ளதா?” என்று ! பார்வைக் கோணங்கள் ஆளாளுக்கு மாறும் என்பதில் ரகசியமேது ? So மாதாமாதம் ஒரு இதழ் மாற்றி  இதழ்   அடுத்த இதழ் பின்னேயெனத் தடதடவென ஓடிக் கொண்டேயிருக்கும் எங்களுக்கு பணிகளின் பரிமாணங்களாகவே எல்லா இதழ்களும் தோன்றிடுவது வாடிக்கை ! ‘ஹை... இந்த அட்டைப்படம் சூப்பராக வந்துள்ளதே !‘; “இந்த புக் செமையாய் அமைஞ்சு போச்சு!” என்ற சுவாரஸ்யத்தோடு அந்தந்த மாதத்து புக்குகளைப் புரட்டுவது ரொம்பச் சொற்ப நேரத்திற்கே ! அதற்கு மேல் புரட்டினால் எட்டிப் பார்த்துப் பல்லிளிக்கக் கூடிய எழுத்துப் பிழையோ ; கோடியில் திட்டுத் திட்டாய்த் தெரியும் மசியின் காரணமாய் கிட்டக் கூடிய திட்டுக்களோ ; ‘அட... இதுக்குப் பதிலா அந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கலாமோ?‘ என்ற காலம் கடந்த ஞானோதயங்களோ முளைத்திடும் ஆபத்துக்கள் அதிகம் என்பதால் எங்களது ரசனைப் படலம் ரொம்பவே லிமிடெட் ! ஆனால் இத்தனை காலம் நாம் சிந்திய வியர்வைகளை பிரெஞ்சு மையம், புருவம் உயர; கண்கள் அகல ரசித்த போது வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ‘ஏக் தம்மில்‘ செண்டா மேளத்தை முழக்கிக் கொண்டே கதக்களி ஆடியது போலிருந்தது ! “Don’t tell me all these are from french?” என்று வந்த மின்னஞ்சலிலேயே அவர்களது நாடிகள் அதிரடியாய்த் துடிப்பதை உணர முடிந்தது ! பற்றாக்குறைக்கு அந்தத் துறையின் தலைவரும், உபதலைவரும் காமிக்ஸ் காதலர்கள் எனும் போது கேட்கவும் வேண்டுமா அவர்களது குதூகலத்தை ?!! So ஏகமனதாய் நமக்கு ஒத்தாசை செய்திட அவர்கள் தீர்மானித்த அந்தத் தருணமும், அதனை நடைமுறைப்படுத்திடக் காத்துள்ள இந்த இதழும் நமது பயணத்திலொரு அசாத்திய மைல்கல் என்பேன்! அருகிலுள்ளோரின் அபிமானத்தையும், தொலைவிலுள்ளோரின் வாஞ்சையையும் ஒருசேர ஈட்டிடும் பெருமை எல்லா இதழ்களுக்கும் கிடைப்பதில்லை தானே ?

JEREMIAH தொடரைப் பொறுத்தவரையிலும் இதனில் பணியாற்றுவது ரொம்பவே மாறுபட்டதொரு அனுபவமாய் எங்களுக்கு இருந்து வருகிறது ! For starters - இது எதிர்காலக் கதையல்ல முழுமையான அர்த்தத்தில் ! So ராக்கெட்டிலிருந்து ‘ஜம்ப்‘ பண்ணும் அயல்கிரகவாசிகளோ ; ஏழு காது- மூன்று மூக்கு கொண்ட ஜந்துக்களோ இங்கே வலம் வரப் போவதில்லை ! அதே போல பால் மண்டலம்... விண்மண்டலம் என்று காலப் பிரயாணங்களும் இங்கே நஹி ! ஒரு அணு ஆயுதப் போருக்குப் பின்பாய்ப் பிளவுண்டு போய்க் கிடக்கும் சுடுகாடு போலான அமெரிக்கப் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் கதையிது ! So வழக்கமான சதையும், இரத்தமுமான மனிதர்களும் ; கரடுமுரடான அமெரிக்கப் பாலைப் பிரதேசமுமே நீங்கள் காணவிருக்கும் காட்சிகள் ! அதே போல கதையின் நாயகர்கள் இருவருமே நீதிக்காவலர்களோ; போலீஸ்காரர்களோ கிடையாது ; ஹெர்மனின் மாமூலான கச்சா-முச்சா மண்டையும், கேசமும் கொண்ட சாமான்யர்கள் ! இங்கே பூமியும்... மனிதர்களும் மட்டுமே கரடுமுரடாகப் படைக்கப்பட்டிருக்கவில்லை ; பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்களுமே ரொம்பவே கடா-முடா பணி ! So அதற்கு நியாயம் செய்யும் விதமாகவே மொழிபெயர்ப்பும் இருந்திடும் ! அதை நாசூக்காக்குகிறேன் பேர்வழி என்றோ ; அவர்களுக்கு சற்றே கண்ணியமான மொழிநடையை தானம் செய்கிறேன் என்றோ முயற்சிக்கவில்லை - simply becos ஹெர்மனின் அந்தக் கற்பனையுலகில் அனைவருமே - "ஏக் மார்..தோ துக்கடா !! பார்ட்டிகள் தான் ! கதையே ஒரு தொடரும் பயணத்தின் நூலிழையில் சுழல்கிறதென்பதால் ஒவ்வொரு ஆல்பத்தையும் தனித்தனியாகக் கூட வாசிக்கலாம் ! ஆனால் ஒரு தொகுப்பாக்கி (சு)வாசிக்கும் அனுபவத்தை ட்யுராங்கோ பச்சைக் கொடி காட்டித் துவக்கி வைத்து விட்டதால் ஜெரெமியாவுக்கும் அதே pattern தொடர்கிறது ! சக்கரங்கள் சுழலச் சுழல  - அற்புத வேகமெடுக்கும் தொடரிது ! ஓவியர் ஹெர்மனுக்குக் கதாசிரியர் ஹெர்மன் சவாலிடுவதை இந்தத் தொடரின் பயணப்போக்கில் நாம் காணவிருக்கிறோம் ! So நிதானமாய்ப், பொறுமையாய் இந்தப் புது வரவுக்கு ஸ்வாகதம் சொல்லின் இவரும் நம் நாயகர் பட்டியலில் ஒரு உச்சயிடத்தை ஆக்கிரமிக்கும் நாள் தொலைவில் இல்லை என்பேன் ! பாருங்களேன் ஒரு உட்பக்க ட்ரைலரை !
சித்திர மிரட்டலைப் பார்த்தீர்களா ? A maestro at work !!

Moving on,  இடையிடையே - "ஜாக்கி சான் கூப்டாகோ ; மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ !!"என்று நான் விட்டு வந்த புதுக் கதை நாயகர்கள் / படைப்பாளிகள் பற்றிய அடுத்த கட்ட update / உசுப்பேற்றல் !!
  1. சில காலமாகவே அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பீச்சாங்கைப் பக்கமிருக்கும் தேசத்தின் ஒரு அதிரடி நாயகருக்குத் தூண்டில் போட்டுக் கொண்டேயிருந்தேன் ! பேட்மேன் ; ஸ்பைடர்மேன் போல - ஏக் தம்மில், ஏகப்பட்ட கதைகளை ஆண்டொன்றுக்கு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற கண்டிஷன் போட்டிடாத நாயகர் இவர் ! So விடாப்பிடியாய் இவரை விரட்டித் திரிந்தவனுக்கு ஜெயம் கிட்டியுள்ளது ! காண்டிராக்ட் போடும் படலம் துவங்கவுள்ளதால், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் அவர் தமிழ் பேசக் கற்கத் தொடங்கிடுவார் ! இந்தாண்டில் காலியாகி நிற்கும் அந்த ஒற்றை "சஸ்பென்ஸ் இதழ் " ஸ்லாட்டில் இவரை நுழைத்திடலாமா ? என்ற ரோசனை பலமாய் ஓடிக் கொண்டுள்ளது உள்ளுக்குள் !! 
  2. அட்லாண்டிக்குக்குச் சோத்தாங்கைப் பக்கமிருக்கும் தேசத்திலோ - புதிதாயொரு நிறுவனத்தோடு 3 நாட்களுக்கு முன்பாய் ஒரு காமிக்ஸ் புதையலையே தோண்டிப் பிடிக்க இயன்றுள்ளது !! "ஐயோ...ஆயிரம் பொன்னும் எனக்கே எனக்கா ? ஒண்ணா..ரெண்டா..? ஆயிரம் ஆச்சே !! சொக்கா !! " என்று வியாழன் முதலாய் அரை மறையைக் கழற்றிய நிலையிலேயே சுற்றித் திரிகிறேன் ! "அந்தக் கதை ; அப்புறம் இந்தக் கதை ; ம்ம்ம்...அதுவும் கூட...எல்லாத்துக்கும் சாம்பிள் வேணுமே !" என்று நான் பிடுங்கிப் பிறாண்டுவதைப் பார்த்தவர்கள் 'சிவனே' என்று    அவர்களது வலைத்தளத்தில் கதைகளை முழுமையாய்ப் பார்வையிட அனுமதியும் ; அதற்கென ஒரு password -ம் வழங்கியுள்ளார்கள் ! So அரை மணி நேரத்திற்கொரு முறை அங்கே ஆஜராகி லிட்டர் லிட்டராக H2O உற்பத்தி செய்து வருகிறேன் !! ஒன்று மட்டும் நிச்சயமடா சாமி - இந்தாண்டு, எங்கள் பகுதிகளில் எத்தனை கடும் வறட்சி நிலவினாலும் சரி - எங்கள் வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இருந்திடப் போவதில்லை ! இவற்றையெல்லாம் காண்டிராக்டுகளாக உருமாற்றம் காணச் செய்து, பணம் அனுப்பி, உரிமைகளை பெற்றிடும் பணிகள் சுலபமாய் சில பல மாதங்களை விழுங்கிடும் தான் ! இவற்றையெல்லாம் எங்கே ? எப்போது ? எவ்விதம் ? களமிறக்குவது என்ற குடைச்சலில் எனது நாட்கள் கழிந்து வருகின்றன !! 
  3. பல காலம் முன்பாய் வேறொரு நிறுவனத்தின் மத்திம நிலை ஊழியராக பரிச்சயமுள்ளதொரு மனுஷன் தற்போது உலகின் டாப் காமிக்ஸ் நிறுவனங்களுள் ஒன்றின் டாப் பதவியில் அமர்ந்திருப்பதை ஏக சந்தோஷத்தோடு தற்செயலாகக் கவனித்தேன் ! அதற்கப்புறம் விடுவேனா மனுஷனை நிம்மதியாகத் தூங்க ? ஆரம்பிச்சாச்சு - தலீவரின் பாணியிலான கடிதமுனைத் தாக்குதல்களை !! வாழைப்பூ வடைகளுக்கோ ; நண்டு வறுவல்களுக்கோ மயங்குவதாகயில்லை என்று ஸ்பைடரின் SINISTER 7 கதை மீது சத்தியம் செய்து கொண்டு இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன் ! எனது 'குய்யோ-முறையோ' ஆர்வக் கூக்குரல்களுக்கு அவர்களது நிறுவனங்களது சம்பிரதாயப்படி இசைவு தெரிவிப்பதாக இருப்பினும் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்கள் ஆகி விடும் ! ஆனால் அவர்களது இன்றைய top man எனது அன்றைய தோஸ்த் என்பதால் - பதுங்குகுழிப் போராட்ட பாணியில் இம்முயற்சி இராதென்று சொல்லலாம் !கனவெல்லாம் கலர் கலராய் !!  
  4. இன்னமும் முடிந்தபாடில்லேங்கோ ! கருப்பு முகமூடியும், வேளைக்கொரு முகமும் கொண்ட இத்தாலியக் கூர்மண்டைப் பார்ட்டியின் படைப்பாளிகளிடம் "அவரை" புனர்ஜென்மம் எடுக்கச் செய்யும் ஆர்வமுள்ளதா ? என்று வினவியுள்ளனர் !! என்ன பதில் சொல்லலாமென்று சொல்லுங்களேன் folks ?
  5. More to come !! புதிதாயொரு கவ்பாய் தொடர் ; 12 கதைகள் கொண்டதொரு சங்கிலியை black & white -ல் உருவாகி வருகிறது ஐரோப்பிய தேசமொன்றில் ! அதன் படைப்பாளிக்கு பரஸ்பர நண்பர்கள் வாயிலாக நம்மைத் தெரிந்துள்ளது ! So புதிதாய் தயாராகி வரும் இந்தத் தொடரை தமிழில் வெளியிட ஆர்வமிருக்குமா ? என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் !! கதையின் கருவையும், சித்திர மாதிரிகளையும் இணைத்தே அனுப்பியுள்ளார் ! முதல் பார்வைக்கு மிரட்டலாகவே தெரிகிறது ! மேற்கொண்டு விபரங்கள் கேட்டுள்ளேன் ; அடுத்த சில நாட்களுள் அவை கிட்டினால் - ஸ்டார்ட் தி மியூசிக் தான் !
  6. Before I sign off : ஜனவரியில் புத்தக விழா சமயத்துப் பதிவில் - எனது திடீர் டெல்லிப் பயணம் பற்றியும், ஒரு புது ஐரோப்பிய படைப்பாளியுடனான சந்திப்பைப் பற்றியும் எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! அவர்களோடு புதிதாயொரு கதை ஒப்பந்தம் இப்போது ரெடி ! இது வரையிலும் நாம் முயற்சித்தே பார்த்திரா ஒரு முற்றிலும் மாறுபட்ட கதை பாணிக்குள் குதிக்கவிருக்கிறோம் ! அதிரடியான, மிரட்டலான ZOMBIES களமிது !!!

"ஏற்கனவே உள்ள நாயகர் கும்பலுக்கு மத்தியில் புதுசு புதுசாய் இந்த வரவுகளை அழைத்து வந்து எங்கே நுழைப்பதாம் ? இதற்கான முன்பணங்களை எங்கிருந்து புரட்டுவதாம் ? " என்ற கேள்விகளை எனது மறை களறாத பாதி மண்டை கேட்டு வைக்கிறது ! ஆனால் புதுக் கதைகளைக் / களங்களைக் காணும் போதெல்லாம் 'லொடுக்குப் பாண்டி' யாகிப் போகும் அந்த மறு பாதியோ - "போய்க்கோடே..போய்க்கோடே...!! போற வழியிலே பார்த்துக்கலாம் !!" என்று சொல்லிய கையோடு டப்பாங்குத்து ஆடத் தொடங்கி விடுகிறது  ! 

ஏனோ தெரியவில்லை - " கறை நல்லது" என்று சொல்லும் SURF EXCEL அம்மாவைப் போலவே "கழன்ற மறையும் நல்லதே !!" என்று சொல்லத் தோன்றுகிறது !! வெயில் ஜாஸ்தியாகும் வேளைகளில் இதெல்லாம் சகஜம் தானே guys ?

மீண்டும் சந்திப்போம் all ! Bye for now !

P.S : பறவைகளாகிட இன்றைக்கு last chance !! இரத்தக் கோட்டை (WWF ஸ்பெஷல்) இதழுக்கான முன்பதிவுகளை இந்த ஞாயிறில் செய்திட்டால் - EARLYBIRD பட்டியலுக்குள் இடம் பிடிக்கலாம் !! Go for it guys !!
காற்றில் வந்த சேதி :  சீர்மிகு சீர்காழியில் நேற்றைக்குத் திடீரென பீதியாம் - நடப்பன ; பறப்பன ; நீந்துபவன காணாது போனதால் !! மன்னர் வீட்டில் "விலாவை"...சாரி..சாரி..."விழாவை" சிறப்பிக்கச் சென்ற அணியின் புண்ணியமென்று ஊருக்குள் பலமான பேச்சாம் !! 

329 comments:

  1. Replies
    1. //கருப்பு முகமூடியும், வேளைக்கொரு முகமும் கொண்ட இத்தாலியக் கூர்மண்டைப் பார்ட்டியின் படைப்பாளிகளிடம் "அவரை" புனர்ஜென்மம் எடுக்கச் செய்யும் ஆர்வமுள்ளதா ? என்று வினவியுள்ளனர் !! என்ன பதில் சொல்லலாமென்று சொல்லுங்களேன் folks ?//

      வரச் சொல்லுங்க சார் அவரை..!

      Delete
    2. சமூக விரோதி என்றாலும்,ஸ்பைடர் மாதிரி இன்னொரு திருடனிடம் மோதும் மாதிரி கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிட்டால் சந்தோசம்.!

      இல்லாவிட்டால்.......


      எங்க பிஞ்சு மனசில் நஞ்சை விதைத்த பெருமை உங்களுக்கே என்று நாளைய சமூகம் சாடும்.!

      Delete
    3. Mv+1....அது கூட பரவால்ல...பாக்குறவங்கள எல்லாம் போட்டு தள்றத நிறுத்துனா ..அல்லது அத நாம கத்தரி போட்டுத் தள்ளுனா சூப்பர் . அந்த கிங்கோட மோதுற கதய கண்ல காட்டுங்க

      Delete
    4. // எங்க பிஞ்சு மனசில் நஞ்சை விதைத்த பெருமை உங்களுக்கே என்று நாளைய சமூகம் சாடும்.!// well said. ±100000

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. தமிழ்கா மிக்ஸ் கம்பர் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
      திரு. விஜயன் சார்

      Delete
  2. எடிட்டர் சார்,

    நீங்கள் கொடுத்திருக்கும் புதிய தொடர் பற்றிய முன்னுரைகளைப் பார்த்தால், அடுத்த வருடம் ஒரு அதகள வருடமாக இருக்கப்போவது கண்கூடாக தெரிகிறது :-)))

    ReplyDelete
  3. எடிட்டர் சார்,

    டயபாலிக் மீண்டு(ம்) வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ReplyDelete
  4. அருமை சார்.. எல்லா கதைகளையும் சீக்கிரமே வெளியிடுங்கள். படிக்கும் போதே நாக்கில் இங்கும் ஊற்றிக் கொண்டுள்ளது. தமிழ் காமிக்ஸ்ன் பொற்காலம் ஒவ்வொரு வருடமும் மாறட்டும். கிளப்புங்கள் வண்டியை...

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..

    ReplyDelete
  7. டயபாலிக்கை வரவேற்கிறோம் சார்...!

    ReplyDelete
  8. இனிய காலை வணக்கம் நண்பர்ளே.

    ReplyDelete
  9. இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே..

    ReplyDelete
  10. இதை..இதை எதிர்பார்த்து தான் இரவு ஒரு மணிவரை முழித்திருந்தேன் சார்..
    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தாங்கள் தரும்,இந்த உற்சாக டானிக் DOZE,நம்மை எப்படி குதூகலப்படுத்துகிறது என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
    Sunday நான் பணிபுரியும் பங்கு தனி.

    ReplyDelete
  11. Good morning editor Sir
    ஆறு விசயங்களும் அற்புதம் அனைத்துக்கும் ஈரோட்டில் ரோடு போடப்பட வேண்டும்

    ReplyDelete
  12. விஜயன் சார், 1. can you please increase the font size of this post. 2.new stories can be on santha "Z". 3.please publish selective stories of diabolic, less violence stories.

    ReplyDelete
  13. அறிவிப்பு ஒவ்வொன்றும் அருனம,காமிக்ஸ் குதினர தடதடக்க ஓடும் ராஜ பாட்னட அருனம சார்.....
    இன்று அறிவித்த நாயகர், கனதகனள கண்டிப்பாக ரெடி பண்ணி முதல் விருந்து ஆகஸ்டில் சர்ப்னரஸ் ஆக ரூ.1000 க்கு மெகா காமிக்ஸ் மேளா நனடபெற ஆவண செய்யவும் எங்கள் காமிக்ஸ் தனலவா!
    தொடரும்டும் பயணம் வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  14. டயபாலிக்கை வரவேற்கிறோம் சார்...!

    ReplyDelete
  15. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  16. மாத்தியோசி-59

    ஸார் மொபைல் ஃபான்டு மிக சிறியதாக உள்ளது. படிக்க சிரமமாக உள்ளதால் அதை கொஞ்சம் கவனிங்க ப்ளிஸ் .!

    ReplyDelete
    Replies
    1. ஓகே ஸார்...படிச்சிட்டு வர்றேன்................>>>>>>>

      Delete
    2. நன்றி சார்....அதுக்குள்ள எனக்கு வயசாயிறுச்சான்னு பயந்து போயிட்டேன்....:-)))

      Delete
    3. @ தலீவர். ஹா.ஹா.ஹா.

      Delete
    4. ஓகே ஸார்...படிச்சிட்டு வர்றேன்................>>>>>>>

      Delete
    5. ஹிஹிஹி......அதுக்குத்தான் என்னைமாதிரி கண்ணாடி போடுங்க.! சந்தோசமா படிங்க.!

      Delete
  17. Diabolicக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே! Diabolicன் சிறந்த கதைகளை வெளியிடவும்.

    ReplyDelete
    Replies
    1. வருடம் ஓரு கதை மட்டும் வெளியிடலாம் என்பது என் கருத்து.

      Delete
    2. அதானே....
      வருடத்திற்கு ஒன்று என்ற அளவில் இருக்கலாமே.

      Delete
  18. உற்சாகமான பதிவு - நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. அப்புறம் திடீர்னு 'updates'ன்ற பேர்ல ஆரம்பிச்சுது... "அந்த பப்ளிஷர்களிடம் நான் அது பற்றி அது பண்ணியிருந்தேனே... அது இப்போ அதுவாயிடுச்சு. அந்த பப்ளிஷரிடம் நமக்கு ஏற்கனவே ஒரு அதுன்றதால, அது அப்படியொன்னும் அதுவா இருக்காது. அது சீக்கிரமே அதுவாகவும் ஆகப் போகுது. அது எதுன்றதைப் பத்தி நான் அப்புறமாய் அது பண்றேன். இப்போதைக்கு அது அப்படியொரு அதுன்றதை மட்டும் என்னால ஒரு அதுவோட சொல்லமுடியும். அவ்வளவுதான்"

    இதுக்கு updates பேர் வச்சதுக்கு பதிலா 'இந்தாவாரக் கிசுகிசு'னு வச்சிருக்கலாம், எடிட்டர் சார்! :P

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் : இந்தாவாரக் கிசுகிசு - கீழேயுள்ளது !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வணக்கம் திரு. விஜய் சார்
      திரு.விஜயன் சார்

      Delete
    5. வணக்கம் திரு. விஜய் சார்
      திரு.விஜயன் சார்

      Delete
    6. வ..வணக்கம் கோவிந்தராஜ் நண்பரே! ப்பூஊஊவ்.. ப்பூஊஊவ்..
      ஒரே நபர், திரும்பத் திரும்ப இத்தினி தபா எனக்கு வணக்கம் சொன்னதே கிடையாது. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.

      ப்பூஊஊவ்...ங்கா..

      Delete
  19. Expecting a very very very great comics year for 7-80 sir.

    ReplyDelete
  20. Spoiler Alert

    சேந்தம்பட்டி குழுவின் சுய புராணமிது நண்பர்கள் மன்னிக்க 🙏🏼🙏🏼🙏🏼

    காலை வணக்கம் விஜயன் சார் & நண்பர்களே

    விஜயன் சார் நேற்றைய தினம் எப்படி உங்களுக்கு மறக்கவியலா தினமோ அதேபோல சேந்தம்பட்டி குழுவினருக்கும் ஒரு மறக்கவியலா நாளாகும்

    விருந்தோம்பலை நண்பர் ராஜா ஜி அவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல இருக்கிறது

    மனிதன் அன்பால் அனைவரையும் அசரடித்துவிட்டார்

    இதன் மையப்புள்ளியாக இருப்பது காமிக்ஸ் எனும் ஒரு மந்திரச்சொல் என சொல்லிக்கொள்வதிலும் அதில் ஒருவனாக நானும் இருப்பதை நினைத்து மிகவும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

    எங்களது சேந்தம்பட்டி குழுவில் ஒரு நண்பர் கீழ்கண்ட வரிகளை கடந்த 15 நாட்களாக தினமும் எங்களது வாட்ஸ் ஆப் குருப்பில் சொல்லிக்கொண்டு இருப்பார்

    // நினைவு பெட்டகத்தில் வைத்து பத்திரமாக பூட்டிக் கொள்ள,நண்பர்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒரு அற்புதமான உல்லாசப் பயணத்திற்கான அந்த நாள் வந்தே விட்டது.🤓 //

    அது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது

    இதற்கு மூல காரணமான தங்களுக்கு எங்களின் மனமினிய நன்றிகள் சார் 🙏🏼

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்..:-)

      Delete
    2. சித்தரே செம,அசத்திட்டிங்க போங்க. உங்களோட ஸ்பெஷல் கவனிப்பையும்,கருர் ஜியோட கவனிப்பையும் சொல்லி இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

      Delete
    3. சித்தரே செம,அசத்திட்டிங்க போங்க. உங்களோட ஸ்பெஷல் கவனிப்பையும்,கருர் ஜியோட கவனிப்பையும் சொல்லி இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

      Delete
    4. சித்தரே செம,அசத்திட்டிங்க போங்க. உங்களோட ஸ்பெஷல் கவனிப்பையும்,கருர் ஜியோட கவனிப்பையும் சொல்லி இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

      Delete
    5. அருமையாக சொன்னீங்க சிபிஜி..
      டெக்சும் கார்சனும் சொல்லுவது போல இன்னமும் ஒரு மாதமாவது வயிறு தாலாட்டு பாடப் போவது உறுதி.. யப்பா ராஜ விருந்து

      Delete
    6. சே! மிஸ் பண்ணிட்டேன்! ஹூம்.. எனக்கு நேரம் சரியில்லை!

      கொண்டாடுங்கள் நண்பர்களே!

      Delete
    7. நானும் மிஸ் பன்னிடேன்.

      Delete
    8. வழிமொழிகிறேன்..:-)

      Delete
  21. ஆஹா.....எதிர்வரும் இதழ்களின் முறையான அறிவிப்பிற்கு முன்னரே....இந்த அறிவிப்பின் ட்ரையலர்களே அதிரடியாய் இருக்கிறது.

    தீபாவளி இந்த வருடத்தில் இருந்தே ஆரம்பமா....அல்லது அடுத்த வருடத்தில் இருந்தா என குழப்பமாக உள்ளது சார்...:-)

    நீங்க பட்டையை கிளப்புங்க....


    நாங்க இருக்கோம்....:-)

    ReplyDelete
  22. //இன்னமும் முடிந்தபாடில்லேங்கோ ! கருப்பு முகமூடியும், வேளைக்கொரு முகமும் கொண்ட இத்தாலியக் கூர்மண்டைப் பார்ட்டியின் படைப்பாளிகளிடம் "அவரை" புனர்ஜென்மம் எடுக்கச் செய்யும் ஆர்வமுள்ளதா ? என்று வினவியுள்ளனர் !! என்ன பதில் சொல்லலாமென்று சொல்லுங்களேன் folks ?//
    Waiting for daibolik

    ReplyDelete
    Replies
    1. இத்தாலிக் கூர் மண்டையர் மறுபடி மறுஜென்மம் எடுப்பது எனக்கு சம்மதமே.

      Delete
  23. டயாபாலிக் கதைகளை வெளியிடலாம் சார்....ஆனால் அவரின் அனைத்து கதைகளையும் ( வரிசைப்படி ) வெளியிட வேண்டும் என்பதில்லாமல் ஆக மிக சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் மீண்டும் ஒரு " வட்டம்" வரலாம் சார்....முக்கியமாக வில்லன் டயபாலிக் வில்லன்களிடமும் காவலர்களிடமும் மட்டும் வித்தையை காட்டும் கதைகளாக தேர்ந்தெடுத்து....போவார் வருவோர் என வரும் அப்பாவிகளிடம் "திறைமையை" காட்டும் களங்களை மறைந்தெடுத்தால் டயபாலிக் வெற்றி நடை போடலாம்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தலைவரே.!

      எதிர்ப்பு தெரிவிப்பதைஅடுத்தவர் மனம் புண்படாதபடி நாசூக்காக தெளிவா இதமா சொல்வதெப்படி என்பதை தலைவரிடம்தான் கத்துக்கனும்.!

      தலைவரே உங்க நம்பிக்கை தீர்மனத்திற்கு நான் ஆதரவு கொடுக்கின்றேன்.!+1

      Delete
    2. தலீவர்

      +1000000000000000

      நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க தலீவரே!

      Delete
    3. // முக்கியமாக வில்லன் டயபாலிக் வில்லன்களிடமும் காவலர்களிடமும் மட்டும் வித்தையை காட்டும் கதைகளாக தேர்ந்தெடுத்து.. //

      +1௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

      Delete
  24. Good Morning Vijayan Sir 😃
    Good Morning Comics Frnds😃

    ReplyDelete
  25. பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர்
    அளித்த பிரம்மாண்ட பரிசு இந்த அறிவிப்பு.புதிய கதைகள் தனி சந்தாவாக
    வரவேண்டும்

    ReplyDelete

  26. வணக்கம் சார், எந்த கதையாக இருந்தாலும் ட்யுராங்கோ மற்றும் வரப் போகும் ஜெராமைய போல் இனி வரும் கதைத்தொடர்களை 4 பாகங்கள் கொண்ட 'Hardbound' இதழாக வெளியிட்டால் ஒரே மூச்சில் நான்கு கதைகள் படித்தது போல் இருக்கும் + வருடத்திற்கு ஒரு ஸ்லாட் என ஒதுக்கினாலும் தகும். கலெக்சனுக்கும் கச்சிதமாக இருக்கும்.டயபாலிக் பற்றிய கேள்வியே வேண்டாம் சார்... தாராளமாக களமிறக்கி விடலாம். வரப்போகும் வெளியீடுகளை பற்றிய ஆவல் மிகுதியாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. //Hardbound//
      ஆமாம். Hardbound தான் வேண்டும். எங்களை அந்த மாதிரி பழக்கிடிங்க. இனிமேல் 50 பக்கம் மேல் உள்ள கதைகளை A4 size (largo winch மாதிரி) கதைகளை Hardbound லே யே வெளியிலாம்.

      Delete
  27. //பேட்மேன் ; ஸ்பைடர்மேன் போல //

    Dear Editor,

    Most our current comics readers in Muthu/Lion comics may have started their comics interest mainly through Steel Claw / The Spider / Robot Archie / James bond (thru ..Rani Comics). So you should certainly release Batman/Spider man/Super man in separate subscription to get new generation of comics readers. Smurfs/Lucky Luke/Benny may help to some level, but they are not equal to the level of American super heroes. Please do your homework on this :)

    Diabolik: Good to hear about Diabolik. If you are planning to bring back Diabolik, Please plan it better, so that readers are introduced to the various story arc's and all the Diabolik characters in a proper way. It has every chance to become a best seller in Tamil. (I was a big fan of James bond stories, during its initial run in Rani Comics) Diabolik can be our new James bond :) (Sorry Modesty Blaise)

    Thanks
    Rama

    ReplyDelete
  28. //வேளைக்கொரு முகமும் கொண்ட இத்தாலியக் கூர்மண்டைப் பார்ட்டியின் படைப்பாளிகளிடம் "அவரை" புனர்ஜென்மம் எடுக்கச் செய்யும் ஆர்வமுள்ளதா ? என்று வினவியுள்ளனர் !! என்ன பதில் சொல்லலாமென்று சொல்லுங்களேன் folks ?//

    இந்த வருடமே வந்தால் டபுள் சந்தோஷம் சார். :-)

    சீக்கிரம் அந்த புது அறிமுகங்களைப் பற்றி சொல்லுங்கள் எடிட்டர் சார். பிபி எகிறுதுல்ல.....

    ReplyDelete
  29. சார்
    நேற்று காலைதான்( 11.00 A.M)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்
    "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" வங்கி கணக்கில் WWF க்காக ₹500 செலுத்தினேன்.
    எனக்கும் பறவைகள் பட்டியலில் இடம் கிடைத்துவிட்டதா?
    விடை தெரிந்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை தான் சொல்ல சொல்லுங்களேன். அப்புறம் தெரியும் செய்தி(நானும் வெள்ளி கிழமை தான் கட்டினேன்.) Book வருதோ இல்லையோ பேட்ஜ் வந்தாகனும்.

      Delete
  30. ////
    P.S : பறவைகளாகிட இன்றைக்கு last chance !! இரத்தக் கோட்டை (WWF ஸ்பெஷல்) இதழுக்கான முன்பதிவுகளை இந்த ஞாயிறில் செய்திட்டால் - EARLYBIRD பட்டியலுக்குள் இடம் பிடிக்கலாம் !! Go for it guys !!///

    இதுவரைக்கும் பறவையானவர்களின் எண்ணிக்கை தோராயமாக எம்புட்டு இருக்கும், எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் : தோராயமாய் 200 !!

      Delete
    2. நல்ல எண்தான் சார்! 'இரத்தக் கோட்டை' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாத புத்தகங்களில் வெளியான பின்னே இதே 'பறவை' வாய்ப்பை இணையத்துக்கு அப்பாலுள்ள நண்பர்களும் கேட்டால் என்ன பண்ணுவீங்களாம்? என்ன பண்ணுவீங்களாம்? ( ஹை! எடிட்டர் மாட்டிக்கிட்டாரு!)

      Delete
  31. Replies
    1. சகோ கடல்யாழின் பொழுதுபோக்கு 'watching birds' என்று ப்ரோஃபைலில் இருக்கிறதே?!! அடடே!!

      இந்தமுறையும் EBF வந்தீங்கன்னா தினுசு தினுசா டெரர் பறவைகளை நிறையப் பார்க்கலாம். :)

      Delete
  32. விஜயன் சார், உங்களுக்கு மறை அரை குறையாக கழறுவதை விட மறை முழுமையாக கழர்வது எங்களுக்கு நல்லது.

    ஆமா பின்ன என்ன சார், இப்போது எல்லாம் நீங்கள் சஸ்பென்ஸ் என்ற பெயரில் வாராவாரம் எங்களை மறை கழன்று சுற்ற விட்டு விடுறிங்க.

    நான் சொல்லுவது போல் நடந்தால் அந்த பெவிகால் ராமசாமி முழுமையாக எல்லா விசயம்களையும் சொல்லி விடுவாரில்லையா!

    அதனால் மறை முழுமையாக கழருவது நன்று!

    ReplyDelete
  33. எடிட்டர் சார்.!

    இன்றைய பதிவு கோடைகாலத்தில் எங்கள் தலையில் ஐஸ் வைத்த பீலீங் .! இதமா இருந்தது.!


    புது வரவுகள் பற்றிய உற்ச்சாகம் எங்களுக்கு அவளை தூண்டுகிறது.புதுகதைகளை தேர்வு செய்யும் போது என்னை போன்ற சராசரி வாசகர்களும் ரசிக்க முடியுமா.? என்று மனதில் வைத்துக்கொண்டால் போதும்.!மற்றபடி சந்தோசம்.!


    போன மச்சன் திரும்பி வந்த கதையா அக்யூஸ்டு டயபாலிக்கை திரும்ப கொண்டுவருவதை ஜீரணிக்க முடியவில்லை.!


    நீங்கள் ஒரு பத்திரிகைக்கையாளர் உங்களுக்கு சமூக பொறுப்பும் உண்டு.ஆனாலும் நாங்கள் உங்களை மூத்த சகோதரரைப்போலத்தான் பார்க்கின்றோம்.!


    நான் (ம்) படித்த காலத்தில் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு ஒன்று உண்டு.ஆனால் காலப்போக்கில் கல்வி கமர்ஷியல் ஆனபோது அந்த வகுப்பு நீக்கப்பட்டது.அதன் எதிர் விளைவை சமூகத்தில் நடந்த கொடூரமான அருவருக்க தகுந்த குற்றங்களை படித்தவர்களே செய்தபோது ,எல்லோரும் நீதி போதனைகளை கற்றுதரவில்லையே என்று குய்யோமுறையோ என்று கதறினார்கள்.!

    நாங்கள் விளையாட்டாக ஆரம்ப காலங்களில் படித்தாலும் எங்களது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவானதற்கு காரணமே இந்த காமிக்ஸ்தான்.!

    நாமது ஹீரோக்கள் பெரும்பாலோர் வழிமுறைகள் பல்வேறு இருந்தாலும் அனைவரும் நீதிமான்கள்தான்.!இதில் சில விதிவிலக்குகள் இருந்தாலும்.,

    வால்மீகி ஆரம்பத்தில் திருடனாக இருந்தவர்தான் ஆனால் பின் நாட்களில் திருந்தி சரித்திரம் படைத்தார்.!

    வாழ்க்கை எப்படி ஆரமிப்பது என்பது தலையெழத்து ஆனால் அதை எப்படி வாழ்ந்தார்கள் என்பதே முக்கியம்.!

    அதற்கு உதாரணமாக இளவரசி,லார்கோ,பௌன்சர்.

    நமது ஸ்பைடர் சமூகவிரோதி என்றாலும் பயங்கரமான வில்லன்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவார்.!

    இப்படி எல்லா கதைகளிலுமே ஒரு நியாயம் என்று ஒன்று உண்டு.!

    ஆனால் நாளைக்கு சாகவேண்டிய கிழவிகளையெல்லாம் சாகடிக்கும் ஒருவன் ஹீரோவா.? அதேபோல் ஒரு கதையில் கிட் ஆர்ட்டின் போன்ற அப்பாவியை சுட்டு கொலை செய்பவரை ஹீரோ என்று எப்படி ஏற்றுக்கொள்வது.தமிழ்நாட்டில் இப்படி ஒருவன் இருந்தால் எண்கவுண்டர்தான்.!


    உலகில் ஊழல் செய்வதில் இரண்டாம் இடத்தில் இத்தாலி இருப்பதாக செய்திதாளில் படித்தேன்.அவர்களுக்கு வேண்டுமானால் டயபாலிக் ஒரு ஹீரோவா தெரியலாம்.!ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தளவில் எண்கவுண்டர் அக்யூஸ்ட்தான்.

    மாட்டுக்கு அநியாயம் நடந்தால் கூட பொங்கி எழம்கூட்டம் எங்கள் கூட்டம் .!

    .......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மேலே சொன்னதை அப்படியே நான் வழி மொழிகிறேன்.

      ஏதோ ஓரு கதையில் கணவரை கொன்று விட்டு வருடக் கணக்கில் அவருடைய மனைவியை இவர் வேஷம் போட்டு பயமுறுத்துவது போல் கதை வரும். ஓரு அப்பாவி பெண்ணை வருடக் கணக்கில் கொடும படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

      Delete
    2. //ஆனால் நாளைக்கு சாகவேண்டிய கிழவிகளையெல்லாம் சாகடிக்கும் ஒருவன் ஹீரோவா.? //

      ஹி..ஹி...ஹி..!!!

      Delete
    3. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க M.V சார்! ஒவ்வொரு வரியிலும் யதார்த்தம் இழையோடுகிறது! ஒரு சராசரி காமிக்ஸ் தமிழனின் அற்புத எண்ணச் சிதறல்!

      Delete
    4. நமது இதழ்களில் டயபாலிக் தலைகாட்ட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவரது ரசிகன் நான். முன்பு பல தடவை இங்கே பதிவுகளிலேயே டயபாலிக்குக்காக நண்பர்களோடு கடுமையாக விவாதித்துமிருக்கிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக தமிழ் பேசும் சமுகத்துக்குள்ளேயே நடக்கும் கொடூரங்களைப் பார்க்கும்போது, டயபாலிக் வேண்டாமே! என்றுதான் சொல்லிடத் தோன்றுகிறது. அவரது கதைகளில் வயலன்ஸ் அதிகமில்லாமல் டெக்னிக்கலாக நகரும் ஏதேனும் கதைகளிலிருந்தால் முயற்சித்துப்பாருங்கள் சார். 'நடக்கும் குற்றங்களைப் பார்க்கும்போது பயமாருக்குங்க, மற்றப்படி ஐ லவ் டயபாலிக்குங்க!' :-P

      Delete
    5. ///அவரது கதைகளில் வயலன்ஸ் அதிகமில்லாமல் டெக்னிக்கலாக நகரும் ஏதேனும் கதைகளிலிருந்தால் முயற்சித்துப்பாருங்கள் சார். ///

      +1

      டயபாலிக்குக்கு ச்சும்மா கெஸ்ட் ரோல் இருக்காப்லயும், இன்சுபெக்டர் ஜிங்கோவுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறா மாதிரியும் பார்த்துக்கோங்க எடிட்டர் சார்!

      இல்லேன்னா, அப்பாவி கிழவிகளைப் போட்டுத்தள்ளும் சீனில் மட்டும் கருப்புமையை கொட்டி விட்டுடுங்க.

      Delete
    6. //கருப்புமையை கொட்டி விட்டுடுங்க.// சீனியர் எடிட்டர் பற்றி பேசும்போது இரும்புக்கை மாயாவியை கொண்டாந்தவர் என்று அடையாளப் படுத்துவதுபோல, நம் எடிட்டரை வருங்காலத்தில் அடையாளப்படுத்தும்போது, ட்ரெஸ் கொஞ்சம் விலகினாலே கறுப்பு மைய பூசிடுவாரே, அவரா? ன்னுதான் பேசப்போறாங்க போல....

      Delete
    7. திரு.ஈ.வி
      கறுப்பு மையை வேஸ்ட் பண்ணுவானேன்.
      கறுப்பு மை உருவானதே நம்ம மாட்ஸ்டிக்கு டிசைன் டிசைனாக உடைகளை மாட்டிவிடத்தானே!
      அதற்கு பதிலாக அப்பாவி கிழவிகளை போட்டுத் தள்ளும் சீனையே கதையிலிருந்து போட்டுத்தள்ளி விடலாம்!!(,அந்த காட்சியையே " கட் " பண்ணிடலாம்னு சொன்னேன். தப்பாக எண்ண வேண்டாம்!!)

      Delete
    8. இன்னொரு ஐடியா!
      டயபாலிக் கதைக் குவியலில் தேடி எந்த கதையிலாவது நாளைக்கு மண்டையை போடப் போகும் ஆயாக்கள் எல்லோரும் டயபாலிக்கை போட்டுத்தள்ள கதை முழுவதும் தேடி அலைகிறமாதிரியும் கதை முழுக்க டயபாலிக் ஆயாக்களுக்கு எப்படி டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிறார் என்பது போன்ற கதையாக இருந்தாலும் அதனை வெளியிடலாம்!
      கதைக்கு தலைப்பும் ரெடி!
      "பாயாவுக்கு அலையும் ஆயாக்கள்".

      Delete
    9. ஆண்டுக்கு ஒரு கறுப்பு வெள்ளை குண்டு புத்தகம்.
      அதில்----
      காரிகன், ரிப்கெர்பி,விங்கமாண்டர் ஜார்ஜ், வனரேஞ்சர், இவர்களுடன் டயபாலிக் கதையை இணைத்து வெளியிடலாம்!!

      Delete
    10. +1 மாடஸ்டி வெங்கடேஸ்வரன்

      தீமையை மையமாககொண்ட கதைகள் மற்ற கதைகளை விட அதிகமாக மனோ தத்துவத்துவத்தாயோ அல்லது குற்றப்பின்னணிகளையோ கொஞ்சமாவது தொடுவதாக இருந்தால் ஓகே. ஆனால் ஒரு Plain Adventure கதையாக டயபாலிக் ஒரு குறைபாடே. படைப்பாளர்களுக்கு நமது Feedbacks சென்று சேரும்பட்சத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

      கதையின் பிரதான பாத்திரம் நல்லவராக இருந்தாக வேண்டிய அவசியமில்லை என்றாலும் பிரதான பாத்திரம் வாசகர்களால் புரிந்துகொள்ளப்படுமளவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ விளக்கப்பட்டிருக்க வேண்டும். 3 கதைகளைப் படித்தபின்பும் டயபாலிக்கின் குணாதிசயம் இதுவரையில் எனக்கு புரிபடவில்லை!

      Delete
  34. டெக்ஸ்: இந்த வருடத்தின் முதல் அக்மார்க் டெக்ஸ் கதை இ.கு.த.பு. என்று தாரளமாக சொல்லலாம். முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு, கடந்த ஆறு மாதம்களில் புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்கச்செய்த டெக்ஸ் முதல் கதை இது.

    சரியான வில்லன், தனி ஆள் என்றாலும் டெக்ஸ்க்கு சமமான பலத்தில் இவரின் கதாபாத்திரத்தை அமைத்தது கதையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

    எதிர்பாராத திருப்பம்கள், அதிலும் தங்க மூட்டை என்று திறக்கும் இடத்தில் இரும்பு வலையம்கள், சரி மெயின் வில்லன் பேங்க் மேனேஜர் என்றால் அவரும் இல்லை, இப்படி மேலும் சில சுவாரசியமான திருப்பம்கள் கதைக்கு வலுசேர்த்து உள்ளன என்றால் அது மிகையில்லை.

    குறை என்றால்: டெக்ஸ் முகம் கதை முழுவதும் சீரியஸ் ஆக இருக்கிறது, அவர் கார்சனை கலாய்க்கும் போதும் அவர் முகம் சீரியஸ் வரையபட்டு இருப்பது நெருடலாக இருந்தது.


    இந்த கதை சிறப்பாக இருக்க காரணம் கதையின் அனைத்து கதாபத்திரம்களும் அருமையாக அமைக்கபட்டு இருப்பதே, இதுவே இந்த கதையின் வெற்றி. good team performance.

    ReplyDelete
    Replies
    1. போன டெக்ஸ் வெளியீடு எனக்கும் பிடித்து இருந்தது.
      ஓரு விஷயம் கவனித்திர்களா டெக்ஸ்& கிட் 226 பக்க கதையில் அவர்கள் மொத்தம் நன்கே பேரை தான் கொன்று இருக்கிறார்கள்.

      Delete
    2. ரொம்ப உன்னிப்பாக உங்களை போல் கவனிக்கவில்லை ஜி!

      Delete
  35. டயபாலிக்கை வரவேற்கிறேன்..

    ReplyDelete
  36. டயபாலிக் மறுபடி களம் இறக்கலாம் சார்.....
    தயக்கம் வேண்டாம்....

    ReplyDelete
  37. டியர் எடிட்டர்

    அப்படியே சந்தடி சாக்குல அந்த 'மாதம் இரண்டு Tex' கொஞ்சம் அமல் படுத்தினால் ....! ஹி ஹி !!

    ReplyDelete
    Replies
    1. புது வரவு நிறைய ஏன் டெக்ஸ் பிடிச்சு தொங்குறிங்க.
      உங்க திட்டம் என்ன தெரிஞ்சு போச்சு. மாதம் இரண்டு டெக்ஸ் வெளியிட்ட எல்லருக்கும் சலிச்சிடும் டெக்ஸ் சந்தா 'B'இழுத்து முடிடலாம் . இது கூட நல்ல தான் இருக்குது.

      Delete
    2. "சந்தா B இழுத்து மூடிடலாம்" இந்த திட்டம் நல்லாவே இல்ல. மார்டின்,ஜுலியா,ராபின் போன்றோர்கள் அதை நம்பித்தானே இருக்கிறாங்க.அதுவுமில்லாம நம்ம டெக்ஸ் வில்லரே சந்தா Bல் தான் ஜொலிக்கிறாரு.
      இன்னொரு ரகசியத்தை சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாதிங்க கணேஷ் சார்.
      இருக்கிறதுல சல்லிசா கிடைக்கிறது சந்தா B தானே.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. /* உங்க திட்டம் என்ன தெரிஞ்சு போச்சு. மாதம் இரண்டு டெக்ஸ் வெளியிட்ட எல்லருக்கும் சலிச்சிடும் டெக்ஸ் சந்தா 'B'இழுத்து முடிடலாம் */

      கொஞ்சம் உங்கள் அதிமேதாவி வாயைப் பொத்திக்கொண்டு இருப்பது நலம். எனக்கு வேண்டுவதை நான் எடிட்டோருக்கு கோரிக்கை வைப்பது எப்படி ஒரு சந்தாவை மூடுவதாகும். நிறைவேற்றுவதும் செய்யாததும் அவர் இஷ்டம். என் நினைவுகள் இவை என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ?

      Delete
    5. நீங்கள் தான் டண் கணக்குல அட்வைஸ் குடுப்பிங்களே ராகவன். ஏதோ எனக்கு உங்கள் கருத்தில் உடன் பாடு இல்லை என்பதை சற்று மாற்றி கூறினேன். அவ்வளவு தான். இதை இவ்வளவு சிரியஸ எடுத்துபிங்கன்னு எதிர்பார்க்க வில்லை.

      Delete
    6. விருப்பம் இல்லை என்று தெரிவிப்பது வேறு. சந்தா B மூட வேண்டும் என்று தெரிவிப்பது வேறு அல்லவா? மார்ட்டின், ராபின், ஜோலியாவுக்கு நானும் ரசிகன் என்பதும் உங்களுக்கு இங்கே நான் பதிவதன் வாயிலாக தெரிந்திருக்குமே ? பின் எப்படி ? நான் கேட்பது 24 Tex - simply becos இன்னும் படிக்க tex 500 இருக்கு பாஸ் - அத நாம படிக்கிறதுக்குள்ளாற இன்னொரு 200 போட்ருவானுக !

      Delete
    7. ராகவன் கனிவான மறுப்பு வார்த்தைகளுக்கா பஞ்சம்....

      Delete
    8. ஐயா அவர்களே - யாம் ஒரு self-declared பண்பற்ற, இங்கிதம் தெரியாத முரட்டு காட்டான் அல்லவா ? :-)

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. GP ராகவன் சொன்ன மாதிரி சொன்ன மாதிரி நான் அதிமேதாவியா இல்லையான்னு தெரியாது. ஆன சந்தா 'B' ஆசிரியரே நினைத்தால் கூட மூட முடியாதுன்னு தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை.

      Delete
    11. அப்புறம் why this கொலவெறி ? /* மாதம் இரண்டு டெக்ஸ் வெளியிட்ட எல்லருக்கும் சலிச்சிடும் டெக்ஸ் சந்தா 'B'இழுத்து முடிடலாம் */

      Delete
    12. எல்லாம் மாத்தி யோசி டெக்னிக் தான். நான் ஆரம்பம் முதலே 12 டெக்ஸ் வருவதற்கு almost தன்னந் தனியாக எதிர்தவன். இனிமேலும் எதிர்க்க தான் போகிறேன்.
      //சந்தா 'B'இழுத்து முடிடலாம்//
      சும்மா காமெடி பன்னாதிங்க கணேஷ்.

      இப்படி பதில் கமண்ட் போட்டு இருந்தால். உங்களை ஆதரித்து நிறைய replay கமண்ட் வந்திருக்கும்.

      Delete
    13. நீங்கள் சொல்வது காமெடியா இல்லையா என்று எனக்கு எப்படித் தெரியும் - அதுவும் நான் மூடச் சொல்வதாய் சொல்லும் போது அதை நான் எப்படி காமெடியாய் பார்ப்பது? மேலும் யார் எனக்கு ஆதரவு என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே எழுத வேண்டிய அவசியமில்லையே? நான் கேட்பது எடிட்டரிடம்.

      Delete
    14. ராகவன் ஜி

      டெக்ஸ் கதைகள் இதுவரை வந்துள்ளது மொத்தமே முன்னூறு க்குள்தான்
      !!

      Delete
    15. எது எப்படியோ நம்மாளை உள்ளே இழுத்தாச்சி...
      Thanks Ganeshji...!!

      Delete
  38. ஜெரமையா வை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  39. சார் மீண்டுமொரு அட்டகாசப்பதிவு...ஓவியருடன் , கதாசிரியரும் அதகளப்படுத்துகிறார்...அடடா ...அப்ப ஹெர்மன் நமக்காக அசத்தியிருக்கிறார்....ஓவியங்களில் அம்சா அம்சம் .அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகள் ...திரை விலக காத்திருக்கிறோம் .அந்த திகில் கதய zல தாக்கப் போவதில்லயா ....மாறு பட்ட பாணி கதைகள் லார்கோவ , இரத்தப்படலத்த மிஞ்சும் போல உள்ளதோ ....ஜெரம்யா வடிவமைப்பிலும் மைல் கல்லாய் இருக்கும் போலுள்ளதே....அடுத்த மாதம் மூன்றுதான் என அடங்கிய என்னை ஜெரமயா முன்னோட்டம் சட்டையின் மேல் பட்டனிலிருந்து நனையும் வண்ணம் காத்திருக்கச செய்கிறது ..பென்னி வேற வர்ராப்ல...டெக்ஸ் கதை தலைப்பே அதனை எதிர்பார்கக செய்கிறது...கடுகு சிறுத்தாலும் காரம் குறயாதலலவோ

    ReplyDelete
  40. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்தில் வெளியீடு எண்ணை போடும்போதே அந்த மாதத்தையும் , வருடத்தையும் சேர்த்தால் எங்களுக்கும் சுலபமாக இருக்கும். செய்வீர்களா ?

    ReplyDelete
  41. ஆசிரியருக்கு ஓரு வேண்டுகோள். இந்த மாதம் ஏப்ரல் 1 சனிக்கிழமை வருவதால், முடிந்தால் ஏப்ரல் 29 (புதன்கிழமை) அல்லது ஏப்ரல் 30 தேதியே அனுப்பி விடுமாறு கேட்டு கொல்கிறேன். சனிக்கிழமை office லீவு புத்தகம் கைக்கு கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மார்ச்சு் 30 ஆம் தேதி .......

      Delete
    2. சாரி மார்ச் 29 அல்லது 30 தேதிகளில்

      Delete
  42. விஜயன் சார் ரொம்ப நல்லவர். அவர் கொடை வள்ளல். கலியுக கர்னண். அவர் பாதம் பட்ட இடத்தில் தாமரை பூக்கும். அவர் அன்னார்ந்து பார்த்தால் மாம்பழம் பழுக்கும்.
    இந்த கொடை வள்ளல் கர்ணன் கிட்ட ஓரு யாசகம்.
    ////
    கதைகளை முழுமையாய்ப் பார்வையிட அனுமதியும் ; அதற்கென ஒரு password -ம் வழங்கியுள்ளார்கள் ! So அரை மணி ////
    அந்த password மட்டும் குடுத்திங்கனா தங்களை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பை அடக்க முடியல.

      Delete
  43. கேப்ஷன் போட்டிகக்காண்டி.

    கார்ஸன் (A):
    ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை வா. ...,
    முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள்
    முத்த மழை தூவாதோ
    வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்
    உள்ளவரை நீ ஆடு...,
    தினம் நீயே செண்டாகவே. அங்கு
    நான்தான் வண்டாகவே,,,,,

    டெக்ஸ்(B):
    கண்ணை நம்பாதே.
    உன்னை ஏமாற்றும்.
    நீ காணும் தோற்றம் உண்மையில்லாதது.
    அறிவை நீ நம்பு .
    உள்ளம் தெளிவாகும்.
    அடையாளம் காட்டும்.பொய்யே சொல்லாதது.
    கார்ஸன்: போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. கார்ஸன் பாடும் மேற்கண்ட 'ஆசை நூறுவகை' பாடல் 'அடுத்த வாரிசு' படத்திற்காக இசைஞானி இசையமைத்தது! அமெரிக்க மாகாணம் ஒன்றில் அவர் இந்தப் பாடலைப் பாட இசைஞானியிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறாரா? அவ்வாறு இல்லையெனில், காப்புரிமை சட்டப்படி கார்ஸனுக்கு விரைவில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதமும் விதிக்கப்படலாம்!

      ஐயோ.. கார்ஸனூ...

      Delete
    2. @ erode vijay..lovely.

      enjoyed it.

      only-or almost only-vijay can think and write like this.to incline towards current affairs and connect it relevantly to a comment is a rare gift.

      Delete
    3. //only-or almost only-vijay can think and write like this.to incline towards current affairs and connect it relevantly to a comment is a rare gift.//

      +1111111 :-))) Very True

      Delete
    4. அய்யய்யோ!ஒரு பாட்டு பாடனதுக்கு கேஸ் போடப்போறாங்களா?
      நம்ம வக்கில் சார்கிட்ட சொல்லி கார்ஸனுக்கு ஒரு முன்ஜாமின் வாங்கிட வேண்டியதுதான்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @ செனாஅனா, Radja

      நன்றி நண்பர்களே! நீங்கள் இப்படியெல்லாம் சொல்லும்போதுதான் 'அட நாம அப்படியெல்லாம் எழுதறோமா!'னு எனக்கே தெரியுது!

      இப்படி யாராச்சும் பாராட்டும்போது வெட்கம் பிடுங்கித் திங்குது ஹிஹி! ( மேக்கிங் ஹாஃப் சர்கிள் யூசிங் கால்க் கட்டை விரல்)

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. ஜெரெமையா வரவு நல்வரவாக அனமயட்டும்.....

    ReplyDelete
  46. உங்களிடம் பிடிக்காத விசயமே இதுதான் சார்.ஏற்கனவே அறிவித்த புத்தகத்தை எல்லாம் எப்போது படிக்கிறது என்று ஏங்கிக்கொண்டு இருக்க .புதுசு புதுசா உங்களின் அறிவிப்பை பார்க்கும்போது கீழ்பாக்கத்திற்கு ஒரு டிக்கெட் புக் செய்ய வேண்டும் போல் இருக்கிறது.
    எது எப்படியோ உங்களின் மறை கழன்றே இருக்கட்டும்.
    புது ஹுரோக்களாக வந்து எங்களை மறை கழற செய்யட்டும்..
    உங்கள் தேடல் எங்களுக்கு விடியல்(காமிக்ஸ் புதையல்) .ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  47. எடிட்டர் அவர்கள் இந்தமுறை ,வாரமலர் கறுப்பு பூனை படித்த பீலிங்.! ரெகுலராக படிப்பவர்களுக்கு ஜாலியா இருந்தது.! புது வாசக நண்பர்களுக்கு புரியாதே.?

    ReplyDelete
  48. Diabolik ku innoru chance kudukalam ...

    ReplyDelete
  49. டயபாலிக் மீண்டு(ம்) வர வேண்டும். ஜெராமியா படிக்க ஆர்வமாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  50. கூர்மண்டையர் அவராகவே வந்தால் தேவலை....mission impossible போல மாறு வேடம் தரிக்காமல் வர வேண்டும்

    ReplyDelete
  51. எடிட்டர் சார்,புதிய முயற்சிகள்,செய்திகள் உற்சாகம் தருகிறது.பீச்சாங்கை பக்கம் உள்ள நாட்டிலிருந்து வருவது சூப்பர் ஹீரோவா இல்லையா என்று ஊகிக்க முடியவில்லை.பல வடங்களுக்கு தொடரப்போகும் இந்த புயல், சுனாமிகளையும் நண்பர்கள் கோரிய மறுபதிப்புகளையும் முழூ நலத்துடன் தாங்கள் வெளியிடவும்,வாசகர் எல்லோரும் படித்திடவும் ஓடீனும் மானிடோவும் அருள் புரிவார்களாக,

    கூர்மண்டையர்,மேஜிக் விண்ட்,ஜூலியா இவர்கள் மேல் மார்ட்டீன் போல் நம்பிக்கை இருந்தால் வாய்ப்பு கொடுக்கலாம்.மீண்டும் சொதப்பி தனி இதழாக போடுவதில் தயக்கம் இருந்தால் படைப்பாளிகள் புன்னகைக்காக,

    நமது WWE(WWF) பாணியில் சில சிங்கிள் தடியர்களுக்கு Tagteams or stables என ரூட்டை மாற்றுவது போல் ஆண்டுமலர் போல் ஷ்பெஷல்ஸில் அவ்வப்போது சாய்ஸ் கொடுத்து பாருங்களேன்.




    ReplyDelete
  52. கழுகு மலைக்கோட்டை
    My feelings
    ஏற்கனவே இது சூப்பர் டூப்பர் கிட்டாகிவிட்டது. இதன் 2-ம் பதிப்பை வெளியான 2-ம் மாதத்திலேயே 2-ம் பதிப்பை, பதிவு செய்வதாக கேள்வி.
    இதற்கு மேல் இதற்கு விமர்சனம் தேவையா என்ன.
    நான் சிறு வயதில் மாடஸ்டியை படித்தபோது, லயன் காமிக்ஸ்லோ,ராணி காமிக்ஸ்லயோ வித்தியாசம் கண்டதில்லை. ஆனால் என் சிறு வயதில் அது ஏற்படுத்திய பிரகல்யம் விளக்க முடியாதவை. என் சிறு லயதில் மாடஸ்டியை ஒளித்து வைத்து ரகசியமாய் படித்திருக்கிறேன்.
    இப்பொழுது வந்த இந்த கதையை படித்த போது என் அம்மா என் காதை பிடித்து திரிகினார்கள். அம்மாவிடம் நான் சொன்னேன்.இது அடல்ட் ஒன்லி கதை தான் இல்லை என்று. அதோடு அம்மா பாரம்மா மாடஸ்டி னைட்டி போட்டிருக்கிறார்.அவள் தமிழச்சி. இடையில் யாரோ
    உல்டா செய்து அவளை நாடு கடத்தி விட்டனர். அம்மா உனக்கு தெரியுமா. புலியை சுலவால் விரட்டினாளே நம் தமிழ் பெண், அவள் மாடஸ்டியின் கொள்ளு பாட்டி. நமது எடிட்டரும் கூட அடுத்த இதழாக "சேலை கட்டிய மாடஸ்டி" வெளியிட இருக்கிறார். என்னது மாடஸ்டி தமிழச்சியா. எப்டியோ நான் தப்பித்து விட்டேன்.
    இதற்கு மேல் நம் எடிட்டர் பாடு,தலைவர், செயலாளர் மற்றும் தானைத்தலைவர் மடிப்பாக்கம் பாடு.

    ReplyDelete
  53. இங்கு பலதரப்பட்ட ரசனை மாறுபாடுகள்தான் சிக்கலே.கதைத் தேர்வு களில் கூடுதல் கவனத்துடன் இயங்குவது பாராட்டுதலுக்குரியது.அசரடிக்கர கதை எதுனாலும் வரவேற்பை பெறுவது உறுதி.தனிப்பட்ட முறையில் steelclow,spider,jonynero,clipton,smarps,benny,leardonoஆகிய கதை வரிசைகல் பெரிதாக ஈர்க்கும் விதமாக இல்லை.ஆனால் steelclow,spider,johnynero கதைகள் சிறு வயதில் மிகுந்த எதிர்பார்போடு வாசிக்கப்பட்ட கதை வரிசைகள் என்பது நிதர்சனம்.smarf,benny,clipton,learnodo கதைகளில் அடுத்த காமிக்ஸ் தலைமுறைய படைக்கும் ஆசிரியரின் மேலான உழைப்பும் புரிகிறது.வியாபார நோக்கில் எந்த வெளியீடுகளில் கல்லா கட்ட இயலும் என்பதை உணராதவர்கள் அல்ல அனைவரும்.குறைந்த விற்பனைத் திறன் உள்ள மாத இதழ்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடிய அந்த ஆளுமைதான் உங்களை உணரத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///.குறைந்த விற்பனைத் திறன் உள்ள மாத இதழ்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடிய அந்த ஆளுமைதான் உங்களை உணரத்துகிறது. ///

      +1 'நச்' பாயிண்ட்!

      Delete
  54. இங்கு பலதரப்பட்ட ரசனை மாறுபாடுகள்தான் சிக்கலே.கதைத் தேர்வு களில் கூடுதல் கவனத்துடன் இயங்குவது பாராட்டுதலுக்குரியது.அசரடிக்கர கதை எதுனாலும் வரவேற்பை பெறுவது உறுதி.தனிப்பட்ட முறையில் steelclow,spider,jonynero,clipton,smarps,benny,leardonoஆகிய கதை வரிசைகல் பெரிதாக ஈர்க்கும் விதமாக இல்லை.ஆனால் steelclow,spider,johnynero கதைகள் சிறு வயதில் மிகுந்த எதிர்பார்போடு வாசிக்கப்பட்ட கதை வரிசைகள் என்பது நிதர்சனம்.smarf,benny,clipton,learnodo கதைகளில் அடுத்த காமிக்ஸ் தலைமுறைய படைக்கும் ஆசிரியரின் மேலான உழைப்பும் புரிகிறது.வியாபார நோக்கில் எந்த வெளியீடுகளில் கல்லா கட்ட இயலும் என்பதை உணராதவர்கள் அல்ல அனைவரும்.குறைந்த விற்பனைத் திறன் உள்ள மாத இதழ்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடிய அந்த ஆளுமைதான் உங்களை உணரத்துகிறது.

    ReplyDelete
  55. யெஸ்! கண்டிப்பாக புனர்ஜென்மம் எடுக்கச் செய்யுங்கள் டேஞ்சர் டயபாலிக்-ஐ!

    ReplyDelete
  56. தளத்தோட ஓரத்தில உட்காந்து நகத்தை கூர் தீட்டிட்டு இருக்கும்போது கபால்னு மனசாட்சி முழிச்சிகிட்டு ‘’கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...டயபாலிக் பத்தி நெஜங்காட்டி இன்னா நெனக்கிரன்னு எடிட்டர் கையில சொல்லிபோடு ‘’ அப்டின்னுச்சு....
    ‘’ டயபாலிக் வேணாம்னு தோணுது எடிட்டர் சார்!!!!’’’



    ReplyDelete
    Replies
    1. மேல இருக்கிறது நான் போட்ட மெசேஜ்தான் ....
      ஏதோவொரு காரணத்துக்காக டயபாலிக் வச்சிருந்த ஈனா வினா ‘’முகமூடிய ‘’ திருடி டயபாலிக்குக்கு எதிராக போட்ட கமென்ட்..:)

      Delete
    2. பூனையார் மேல விழுந்து பிறாண்ட கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..:)

      Delete
    3. @ செனாஅனா

      கிர்ர்ர்ர்...கிர்ர்ரா...உர்ர்ர்...

      ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய்ட்டேன்!! வால் வானத்தை நோக்கி நட்டுக்கிச்சு! 'ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடேசியா பூனைகளையும் கடிக்க வந்துட்டாங்களே இந்த ட்ரோல் பசங்க'னு பயந்துட்டேன்! அந்தப் படபடப்புல இப்ப பிறாண்டறதுக்கெல்லாம் தெம்பில்லை! ஆசுவாசப் படுத்திக்கிட்டு அப்பால ஒரு நாள் பிறாண்டுறேன்!

      ஊஸ்ஸ்...நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய!

      Delete
    4. இதுக்கெல்லாம் பயப்படாதீங்க ஜீ.

      பூனைக்கு 9ஆயுள்'னு போன வாரம்தான் 'வான் ஹாமே' சொல்லியிருக்கார்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @ G.P

      வான்ஹாமே சொன்னா சரியாத்தான் இருக்கும்! அ..ஆனா எனக்கு இது 9வது ஆயுளா இருந்துச்சுன்னா...?!! ய்யீஈஈக்!!! லேசா கீழே இறங்கின வால் மறுபடியும் நட்டுக்கிச்சே...!

      எடிட்டர்ட்ட சொல்லி 'நட்டுக்கிட்ட வாலும் நல்லதே!'ன்ற தலைப்புல ஒரு உபபதிவு போடச்சொல்லணும்... அப்படியாச்சும் மனசு ஆசுவாசமாகுதான்னு பாக்கலாம்!

      Delete
  57. //புதுக் கதை நாயகர்கள் / படைப்பாளிகள் பற்றிய அடுத்த கட்ட update / உசுப்பேற்றல் !!//

    கலர் உசுப்பேற்றல் இருந்தாலும் எனக்கு RAY OF HOPE ! கொண்டு வாங்க நிச்சயம் கொண்டாடுவோம் எடிட் SIR! :)


    REMIAH WELCOME

    ReplyDelete
  58. டயபாலிக் ஒரு நல்ல விறுவிறுப்பான தொடராக வரட்டும் எடிட் .... ONE SHOT வேண்டாம்.

    ReplyDelete
  59. ZOMBIES -அய்யயய்ய (personal opinion).

    ReplyDelete
  60. கழுகு மலைக்கோட்டை

    நானும் முதல் முறை படித்தேன் ரசித்தேன். sympathy, action, love வித்யாசமான அனுபவம். இத்தகைய கதையை reprint செய்ததற்கு நன்றி, பிரின்டிங் தரத்திற்கு ஒரு நன்றி , இத்தகைய formatக்கு மற்றும் ஒரு நன்றி எடிட்.

    ReplyDelete
  61. //ஓவியர் ஹெர்மனுக்குக் கதாசிரியர் ஹெர்மன் சவாலிடுவதை இந்தத் தொடரின் பயணப்போக்கில் நாம் காணவிருக்கிறோம் ! So நிதானமாய்ப், பொறுமையாய் இந்தப் புது வரவுக்கு ஸ்வாகதம் சொல்லின் இவரும் நம் நாயகர் பட்டியலில் ஒரு உச்சயிடத்தை ஆக்கிரமிக்கும் நாள் தொலைவில் இல்லை என்பேன் !//

    அஹ்ஹா .....!

    ReplyDelete
  62. பத்திரிகைக்கையாளர் - சமூக பொறுப்பு morality.-


    அப்படி பார்த்த அமெரிக்காவில் ஒருசாராருக்கு துப்பாக்கி culture தப்பு தான் எடிட் இப்படி Jean Giraud நினைச்சிருந்த நமக்கு blueberry இப்போ இல்லை . so...

    ReplyDelete
  63. zombies நமக்கு வேண்டவே வேண்டாம் !

    ReplyDelete
    Replies
    1. //zombies நமக்கு வேண்டவே வேண்டாம் !//
      +11111111111111111111111111111111

      Delete
    2. /////zombies நமக்கு வேண்டவே வேண்டாம் !//

      +111

      ஏற்கனவே இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில ரோடுகளிலும், ஆபீஸிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும், இன்னபிற இடங்களிலும் zombiesதானே பார்க்கிறோம்? எல்லா zombiesம் மொபைல் ஃபோனை வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டே உட்கார்ந்திட்டிருக்கறதும், நடக்கறதும்... அப்பப்பா, என்னா ஒரு ஜோம்பேறித்தனம்!!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  64. Dear Editor

    டயாபாலிக் வரலாம். ஆனால் ZOMBIES - வேண்டவே வேண்டாம். அதற்குப் பதிலாக திகில் வெளியீட்டில் தாவரங்களுக்கு உயிர் வந்த மாதிரி உள்ள கதைகளில் கவனம் செலுத்தலாம். மீண்டும் கேட்கிறேன் - THE INCAL - தமிழில் வர வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
  65. ///இது வரையிலும் நாம் முயற்சித்தே பார்த்திரா ஒரு முற்றிலும் மாறுபட்ட கதை பாணிக்குள் குதிக்கவிருக்கிறோம் ! அதிரடியான, மிரட்டலான ZOMBIES களமிது !!!///

    Zombies ஐ நம்மால் இரசிக்கமுடியுமாவென சொல்லத்தெரியவில்லை சார்.!

    ஆனால் ஒன்று நிச்சயம். நம்மூரு கருப்புசாமி கோயில் பூசாரிக்கு வருமானம் கொட்டோகொட்டுன்னு கொட்டப்போகுது.!

    (இந்த ஒருபக்க விளம்பரத்துக்கே ₹150 செலவு பண்ணி தாயத்து கட்டவேண்டியதா போச்சு..! :-)

    ReplyDelete
  66. ///புதிதாயொரு கவ்பாய் தொடர் ; 12 கதைகள் கொண்டதொரு சங்கிலியை black & white -ல் உருவாகி வருகிறது ஐரோப்பிய தேசமொன்றில் ! அதன் படைப்பாளிக்கு பரஸ்பர நண்பர்கள் வாயிலாக நம்மைத் தெரிந்துள்ளது ! So புதிதாய் தயாராகி வரும் இந்தத் தொடரை தமிழில் வெளியிட ஆர்வமிருக்குமா ? என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ///

    அதெல்லாம் ஒரே புக்கா போட்டுத் தாக்கிடுவோம்னு பதில் அனுப்பிடுங்க சார்.!
    12 கதைகளையும் ஒரே மூச்சுல படிக்கத்தான் எங்க பசங்க விரும்புவாங்கன்னு ஸ்ட்ராங்கா போல்டு லெட்டர்ஸ்ல தெரிவிச்சிடுங்க. 2018 ல பட்டையக் கிளப்பட்டும் இந்த குதிரைக்கார அண்ணாச்சி..!!

    ReplyDelete
    Replies
    1. ////12 கதைகளையும் ஒரே மூச்சுல படிக்கத்தான் எங்க பசங்க விரும்புவாங்கன்னு ஸ்ட்ராங்கா போல்டு லெட்டர்ஸ்ல தெரிவிச்சிடுங்க. 2018 ல பட்டையக் கிளப்பட்டும் இந்த குதிரைக்கார அண்ணாச்சி..!!///

      +111111

      Delete
  67. /// கருப்பு முகமூடியும், வேளைக்கொரு முகமும் கொண்ட இத்தாலியக் கூர்மண்டைப் பார்ட்டியின் படைப்பாளிகளிடம் "அவரை" புனர்ஜென்மம் எடுக்கச் செய்யும் ஆர்வமுள்ளதா ? என்று வினவியுள்ளனர் !! என்ன பதில் சொல்லலாமென்று சொல்லுங்களேன் folks ?///

    ம்ம்ம்ம்..! புலிக்கேசி! உறையில் போட்ட வாளுக்கு மீண்டும் வேளை வந்துவிட்டதாய் தெரிகிறது..!! :-)

    ReplyDelete
  68. ///அட்லாண்டிக்குக்குச் சோத்தாங்கைப் பக்கமிருக்கும் தேசத்திலோ - புதிதாயொரு நிறுவனத்தோடு 3 நாட்களுக்கு முன்பாய் ஒரு காமிக்ஸ் புதையலையே தோண்டிப் பிடிக்க இயன்றுள்ளது.///

    ///இவற்றையெல்லாம் எங்கே ? எப்போது ? எவ்விதம் ? களமிறக்குவது என்ற குடைச்சலில் எனது நாட்கள் கழிந்து வருகின்றன !! ///

    சோ சிம்பிள்..!!

    சந்தா சோத்தாங்கைன்னு ஒரு தனிட்ராக் போட்டு பொறுப்பை ஜூ.எடிட்டர்ட்ட விட்டுடுங்க சார்.!!

    ReplyDelete
  69. ///ஓரிரு மாதங்களுக்குள் அவர் தமிழ் பேசக் கற்கத் தொடங்கிடுவார் ! இந்தாண்டில் காலியாகி நிற்கும் அந்த ஒற்றை "சஸ்பென்ஸ் இதழ் " ஸ்லாட்டில் இவரை நுழைத்திடலாமா ? என்ற ரோசனை பலமாய் ஓடிக் கொண்டுள்ளது உள்ளுக்குள் !///

    இப்படிகூட சஸ்பென்ஸை மெய்ன்டெய்ன் பண்ணலாமா!!? ஹிஹி..!!

    இதுல ரோசிக்க என்ன இருக்கு சார்.

    நல்லா குண்ட்ட்ட்ட்டு புக்கா போட்டுவிடுங்க..!!

    ReplyDelete
  70. ஹலோ நண்பர்களே என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு புது ஜெனர் கதையை அதாவது ஜோம்பி கதையை ஒரு இஸ்யூ கூட படிக்காம எடுத்த எடுப்பிலேயே வேண்டாம்னு சொல்வது சரிதானா? என் பையன் எதையாவது சாப்பிடக் கொடுத்தால் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கையில் நான் அவனுக்கு சொல்வதையே உங்ளுக்கும் சொல்லறேன். முதல்ல ஒரு வாய் சாப்பிட்டுப் பாரு அப்புறம் பிடிக்கலை வேண்டாம்னு சொல்லு. ஓ.கே யா.

    ReplyDelete
    Replies
    1. நியாயமான கருத்து .!

      படித்துப்பார்த்துவிட்டு சுவாரஸ்யமான கதைகளாகத் தெரிந்தால் தொடரச்சொல்லலாம்.! எனவே Zombies நம்ம ஏரியாவுக்கும் வந்துதான் பார்க்கட்டுமே?

      (மொத்தமா தாயாத்து வாங்கினாலோ, அல்லது வருடசந்தா கட்டி தாயத்து வாங்கினாலோ ஏதாச்சும் டிஸ்கவுண்ட் கிடைக்குமான்னு பூசாரிகிட்ட நாளைக்கு மொத வேலையா விசாரிச்சு வெச்சுக்கணும்.! :-)

      Delete
  71. ///So நிதானமாய்ப், பொறுமையாய் இந்தப் புது வரவுக்கு ஸ்வாகதம் சொல்லின் இவரும் நம் நாயகர் பட்டியலில் ஒரு உச்சயிடத்தை ஆக்கிரமிக்கும் நாள் தொலைவில் இல்லை என்பேன் ! பாருங்களேன் ஒரு உட்பக்க ட்ரைலரை !///

    ராமய்யா வஸ்தாவைய்யா!!
    ராமய்யா வஸ்தாவைய்யா!!

    ReplyDelete
  72. அடேடே! போன பதிவு மறந்து போயி !
    சரி இங்க போட்டு வைப்போம் !


    Caption 1

    கார்சன்:
    டெக்ஸ்.! இப்போ அந்த பொண்ணுங்க உன்ன 'அங்கிள்' 'அங்கிள்'னு சொன்னா கோச்சிக்கப்படாது !
    வயசாகுதோ நோ! சோ பொறுமையா இருக்கணும் !

    பெண்கள்: (கார்சனிடம் கோரஸாக ) 'தாத்தாவ்'!!!

    டெக்ஸ்: ஹோ ஹோ ஹோ ...;-)

    ReplyDelete
  73. Caption: 2

    கார்சன்:
    ஹே செல்லா குட்டிஸ்…!
    அந்த அங்குளுக்கு கல்யாண வயசுல பைய்யன் இருக்கான் !
    யு சி ! ஐம் பேச்சுலர்…! இன்னும் ஒருவாட்டி கூட கல்யாணம் ஆகல !
    கம் கிளோஸ் செல்லாஸ் !
    கம் கிளோஸ்!

    டெக்ஸ்:
    ஆமா! தாத்தாக்கு போன மாசம் ஸ்ட்ராயிட்'ஆ அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தாங்க ! ஆனா இன்னும் ஒரு வருசத்துல எழுபதாம் கல்யாணமே பண்ணிக்கலாமேன்னு கடேசி நேரத்துல நிறுத்திட்டாங்க !
    அவர் பேச்சை கேட்டு ரொம்ப கிளோஸ்ஆ போகாதீங்க ! அப்பறம் அவரே கிளோஸ் ஆயிடுவாரு !

    ReplyDelete
  74. Caption 3
    கார்சன் (வேடத்தில் இருக்கும் கிட் ஆர்டின்) :
    ஐயோ ! பாஸு! பாஸு!
    ஹாப்பி அவர் !
    ஹாப்பி ஹவர்ன்னா…. இதுதானா !
    இப்போ ஒன்னு வாங்குனா! ஒன்னு பிரீ தான்னா !

    டெக்ஸ் (வேடத்தில் இருக்கும் டாக்புல்):
    அடேய்! அது பீருக்கு மட்டும் தான்!
    உஹும் ! அநேகமா உனக்கு ஒரு செருப்பு வாங்கினா ஒரு செருப்பு பிரீயா குடுப்பாங்கனு நெனைக்கிறேன்!
    நீ இருந்து வாங்கிட்டு வா!
    ஐ'யாம் எஸ்கேப் !

    ReplyDelete
  75. Caption:4
    (நம்ம பொருளாளர் காண்டி :-) )

    (மேற்கே எங்கோ ஒரு ரிசார்ட்டில்.....)

    கார்சன்:
    அட அட அட! ஏப்பா! இந்த ஓட்டிங்கெலாம் முடிஞ்ச அப்பறம் இங்க இருந்து ஒன்னு ரெண்டு கெளப்பிகிட்டு போயிரணும்!
    என்ன சொல்ற நீ!

    டெக்ஸ்:
    ஹ்ம்ம்! முதல்ல ஓட்டிங் முடிச்சப்புறம் உன் ஜீன்ஸ்சை ஒருவாம விடறாங்களானு பார்க்கலாம் !
    கெளப்பிகிட்டு போரறமுள்ள கெளப்பிகிட்டு....!

    (கௌண்டமணி ஸ்டைலில்) கார்சன்:
    அட்கோன்னியா !!! ஐயோ டெக்ஸ்!
    நான் போதைல கொஞ்சம் அப்டி இப்டி இருந்தா நீதானப்பா ஏ அண்டடாயடா உருவமா பார்த்துக்கணும்!
    ஏன்னா நமக்கு மானந்தாய பெருசு !!!

    டெக்ஸ்:
    (முனகலாக....) அட பெருசு! ஊருக்குள்ள இதுக்கும் மேல போறதுக்கு என்ன இருக்கு !

    ReplyDelete
  76. Caption :5

    (நம்ம தலீவர் & செயலர் காண்டி )
    (காமெடிக்கு மன்னிச்சுசுசு....
    லெஜென்டரி கம்பரீசன்க்கு பெருமை படிங் ப்ளீஸ் ;-))

    டெக்ஸ்:(வேசத்தில் தலீவர்) :
    ஹே! என்னப்பா இது!
    கொஞ்சம் டீஜென்டா பார்க்க கூடாதா ?
    ஓவர்'ஆ வெறிக்கறயேப்பா ?

    கார்சன் (வேசத்தில் செயலர்):
    சே! சே! நானு நம்ப எடிட்டருக்கு உதவியா எங்க எங்க கருப்பு மை ஊத்தலாமுன்னு உத்து பார்த்துகிட்டு இருக்கேன் !
    என்னிய போய் தப்பா நெனைச்சுட்டேயப்பா ;-(

    டெக்ஸ் (வேசத்தில் தலீவர்) :
    (அடங்....)
    அது சரி! இந்த பூனையும் பீர் குடிக்குமான்னு மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்கறதெல்லாம் ஓகே !
    ஆனா கருவாட்ட கண்ட பூனை மாதிரி அந்த கடவா ஓரமா வழியுற ஜொள்ள நிறுத்தி தொலையும் ;-)

    ReplyDelete
    Replies
    1. ////சே! சே! நானு நம்ப எடிட்டருக்கு உதவியா எங்க எங்க கருப்பு மை ஊத்தலாமுன்னு உத்து பார்த்துகிட்டு இருக்கேன் !
      என்னிய போய் தப்பா நெனைச்சுட்டேயப்பா ///

      ஹா ஹா ஹா! :)))))))))
      அப்படியே நான் பேசுறமாதிரியே இருக்கு!

      Delete