நண்பர்களே,
வணக்கம். சில நேரங்களில் மிகச் சுலபமான தீர்மானங்களே- மிகவும் கடினமானவைகள் என்பதை சிறுகச் சிறுகப் புரிந்து வருகிறேன்! ‘அட... தெளிவாய்க் குழப்புகிறானே?‘ என்று யோசிக்கிறீர்களா ? – எல்லாமே நமது இரவுக் கழுகாரின் உபயமே! ஏப்ரல் முதல் தேதியன்று கூரியர் பார்சல்கள் உங்கள் கதவுகளைத் தட்டுமென்பது உறுதியான கணமே எனக்குள் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொண்டது! ஏழு கழுதை வயதாகி விட்டது தான்; ‘கெட்-அப்‘களை கமல் மாற்றுவதைப் போல் நமது இதழ்களின் சைஸ்களை நான் திருக்கி விளையாடுவதும் சகஜமே என்பதில் இரகசியமே கிடையாது தான் ; டெக்ஸ் & கோ.வின் மிரட்டலான இந்த மெகா அதிரடியில் நாம் வாய் பிளந்து நிற்கவிருப்பது நிச்சயம் என்பதிலும் ஐயமிருக்கவில்லை - ஆனால் எல்லாவற்றிற்கும் பின்பாய் 30+ ஆண்டுகளுக்கு முன்பானதொரு மனநிலையில் உலாற்றித் திரிந்தேன்! அன்றைய நாட்களில் இன்டர்நெட்டும் கிடையாது; செல்போனும் கிடையாது; வலைப்பதிவுகளோ - வாசக சந்திப்புகளுக்கு சந்தர்ப்பங்களோ கிடையாது! So- ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்துக் கடிதப்போக்குவரத்தின் அளவே அம்மாத இதழின் வெற்றி / மித வெற்றி / தோல்விகளின் அளவீடுகளாக இருந்திடும்! காலை 11 மணிக்குத்தான் சிவகாசி மெயின் போஸ்ட் ஆபீஸில் தபால்களைப் பிரித்து நமது தபால் பெட்டியில் போடுவார்கள்! பதினொன்றேகால் சுமாருக்கு நமது ஆபீஸ்பாய் கையில் ஒரு பையோடு ஆபீஸுக்குள் நுழையும் போது நான் சுவாரஸ்யமே காட்டிக் கொள்ளாதது போல மூஞ்சை வைத்துக் கொண்டு – "ஆங்... தபால் வந்திடுச்சாப்பா? சரி... சரி... மேஜையில் வச்சிட்டு போய் ஒரு டீ குடிச்சிட்டு வா!" என்று அனுப்பி வைப்பேன்! அவன் தலை அந்தப் பக்கம் மறைந்த மறுகணம் காய்ஞ்ச மாடு பாய்வது போல அந்தத் தபால்களைப் பரபரவென்று துளாவத் தொடங்கி விடுவேன்! ‘ஹை... திண்டுக்கல் கவரா? உள்ளே ரூ.1200/- க்கு டிடி இருக்கும்!; அடடே... சேலம் கவரும் இருக்கா? – இன்னிக்குக் காலைப் பொழுது நரி முகத்திலே தான் முழிச்சிருக்கோம்‘; ‘ஹைய்யோ... திருச்சி ஏஜெண்ட் கூட தபால் போட்டிருக்கிறார்!‘ என்று கவரை வைத்தே உள்ளேயுள்ள தொகைகளை யூகித்து விடுவேன்! எப்போதாவது – டிராப்டுக்குப் பதிலாக முந்தைய மாதங்களது வி்ற்பனையாகாப் பிரதிகளை நமக்குத் திருப்பியனுப்பிய லாரி ரசீதுகளும் கவரினுள் இருந்து எனக்கு செம ‘பல்பு‘ நல்கிடுவதும் நடக்கும் தான்! ஆனால் சராசரியாக மாதத்தின் முதல் வாரத்தில் நம் கதவைத் தட்டும் ஏஜெண்ட்களின் கவர்களும்; பின்தொடரும் உங்கள் பாராட்டுப் போஸ்ட்-கார்டுகளுமே எனக்கான அம்மாதத்து ரிப்போர்ட் கார்ட் எனலாம்! ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்திலிருந்த சமயங்களில் ‘ட்ரிங்... ட்ரிங்‘ என்று தெருவில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டால் கூட – ‘ஆங்... நாகர்கோவிலுக்கு இன்னொரு 50 காப்பி போடுங்கப்பா!‘ என்று எழுந்து உட்கார்ந்துவிடுவேன் - becos தபால் போட்டு மறு ஆர்டர்களுக்காகக் காத்திருக்க விரும்பாத ஏஜெண்ட்கள் ஃபோன் போட்டு- ‘உடனே அனுப்புங்க சார்!‘ என்று நச்சரிப்பதும் முதல் வாரத்தில் நம் கூர்மண்டையர் கதைகளுக்கு மட்டுமே நடந்திடுவதுண்டு ! So ஸ்பைடர் இதழ்கள் வெளியாகும் மாதங்களில் - "போன் அடிக்குதா ?" என்ற குறுகுறுப் பார்வையோடு மேஜையிலே ‘தேமே‘ என்று தூங்கிக் கிடக்கும் அந்தக் காலத்துக் கறுப்புப்புராதனத்தை பார்த்துக் கொண்டேயிருந்த நாட்களும் உண்டு! அதே கூத்துத் தான் இந்த வெள்ளிக்கிழமை பகலில் இங்கே நமது வலைப்பதிவிலும் ! ‘அட... கூரியர் கிடைச்சிடுச்சா...? யார்-யார் என்ன அபிப்பிராயப்படுகிறார்கள்?‘ என்று நோட்டமிடுவதை ஓரிரு மணி நேரங்களுக்கு ஒருமுறை செய்து கொண்டிருந்ததேன் ! சிறுகச் சிறுக உங்கள் உற்சாகப் பின்னூட்டங்கள் பதிவாகத் தொடங்கிய போது வறுத்தகறியைக் கண்ட கார்சனானேன் !! என்னதான் ஒரு விஷயத்தின் பலன் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் கூட, அது நம் கண்முன்னே மெய்யாகும் தருணங்களில் உள்ளே பளிச்சிடும் சன்னமான மின்னலுக்கு வோல்டேஜ் அதிகமென்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தேன்!
பெரிய சைஸ் ஒரு novelty என்பது ஒருபுறமிருக்க – இதற்கென நாம் தேர்வு செய்திருந்த கதை தான் highlight என்பதை – சித்திரங்களை சிலாகிக்கும் உங்களது பின்னூட்டங்களைப் படித்த போது ஊர்ஜிதம் செய்து கொண்டேன்! நிஜத்தைச் சொல்வதானால் – ‘சட்டத்தின் சவக்குழி‘ தான் இந்த மெகா சைஸிற்கென முதலில் தேர்வான கதை! சென்றாண்டின் ஈரோட்டுத் திருவிழாவுக்கு நான் கிளம்பிய சமயமே அதன் பணிகளும் துவங்கியிருந்தன! So- ஒரு மெகா சைஸில் ஒரு MAXI டெக்ஸ் என்பது தான் எனது ஒரிஜினல் திட்டமிடல்! ஆனால் இதழின் விலை எகிறிக் கொண்டே போவதும்; சந்தாத் தொகையினை கட்டுக்குள் கொணரும் அவசியமும் தலையெடுத்தபோது – எங்கெங்கே செலவினங்களுக்கு ஒரு முடிவெட்டுத் திருவிழா நடத்த முடியுமென்ற யோசனையில் ஆழ்ந்தேன்! அப்போது தலையில்லாப் போராளியும்; சிவிடெல்லியின் சித்திரங்களும் (என்) தலைக்குள் அணிவகுக்க – ‘டப்‘பென்று உல்டாவாக்கினேன் கதைகளின் slot களை – நூறு ரூபாய் மிச்சம் பிடிக்க! இந்த அட்டகாசச் சித்திரங்களைப் பெரிய சைஸில் பார்க்க முடிந்தால் – அதகளமே பலனாகும் என்று அக்டோபர் 2015-ல் எனக்குள் சொன்ன பட்சி – இத்தனை காலமாய் வாய்மூடிக் கிடந்தது தான் மெகா அதிசயமே! நிறைய ஞாயிறுகளில் ஒரு வேகத்தில் ஓ.வா.உ.நா. துள்ளிக் குதித்து விடுவாரோ என்ற பயமிருக்கும் – ஆனால் ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற தண்டவாளம் நிச்சயமான பிற்பாடு இது போன்ற சிற்சிறு ஆச்சர்யங்களைத் தக்க வைப்பது சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்ய உதவிடும் என்று நினைத்தேன்! So வாய் நிறைய கணிசமாய் பெவிகாலை பூசிக் கொண்டேன்!
‘எல்லாம் சரி தான் – பதிவின் ஆரம்ப வரிகளுக்கு அர்த்தமென்ன?‘ பழநியில் ஆரம்பித்து பாரிஸ் வரைக்கும் பயணம் போயாச்சா?‘ என்று நெளியத் தோன்றுகிறதா? Very Simple! ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற அட்டவணையை 2014-ன் ஒரு மத்தியப் பகுதியிலேயே நான் லேசாகப் பரிசீலிக்கத் தான் செய்தேன்- ஆனால் ‘பௌன்சர்‘; ‘தோர்கல்‘; கிராபிக் நாவல்கள் வழித்தடமென்பது override செய்து போனதால் ஓசையின்றி ஜகா வாங்கி விட்டேன்! இம்முறை கூட உங்களில் பெரும்பகுதியினர் டெக்ஸுக்கு ‘ஜே‘ போட்ட போதிலும் என் மண்டைக்குள் – ‘இது சரிப்படுமா? பொன் முட்டையிடும் வாத்தை அஞ்சப்பர் ஹோட்டல் ஐட்டமாக்கிடுவோமோ?‘ என்ற பயம் நிறையவே இருந்தது! ஆனால் ஒரு வழியாக ‘டெக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ தண்டவாளமேறி – ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் விதவிதமான கதைகளோடு அழகழகாய் வெற்றி கண்டான பின்னே – காத்திருக்கும் மே & ஜுன் சாகஸங்களும் variety-ல் சற்றும் சளைத்தவையில்லை என்பதையும் பார்க்க முடிகின்ற போது – ‘இதுக்குத் தானா இத்தனை யோசனை சாமி?‘ என்று என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது!
Early days yet – இன்னும் மூன்றில் இரு பங்குத் தூரம் பாக்கியுள்ளது தான்; ஆகையால் இப்போதே “வெற்றி! இமாலய வெற்றி!“ என்று போஸ்டர் அடிப்பது பேமானித்தனம் என்பதும் புரிகிறது; ஆனால் ‘தல‘யின் ஒவ்வொரு தாண்டவமும் உங்களிடையே உருவாக்கும் எனர்ஜியை என்னால் நன்றாகவே உணர முடிகிறது! அதிலும் கடந்த பதிவில் நண்பர் M.H.மொஹிதீனின் பின்னூட்டம் ரொம்பவே சுவாரஸ்யமானது என்பேன் – simply becos டெக்ஸின் ஜுவாலைக்கு முன்பாக லார்கோவே பின்வாங்க வேண்டிவருமென்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். Make no mistake - இன்றைய ரசனைகளின் பிரதிபலிப்புக் கதைகளுள் லார்கோ தான் நமது டாப் ஸ்டார் ! And ‘கடன் தீர்க்கும் நேரமிது‘ ஒரு அக்மார்க் லார்கோ சாகஸம்! Hi-tech கதை; ரம்யமான சித்திரங்கள்; பளீரிடும் வர்ணக் கலவை; அழகான பிரிண்டிங் என சிலாகிக்க நிறைய விஷயங்களைத் தன்னுள் கொண்டது! ஆண்டின் அட்டவணையில் லார்கோ இடம்பிடிக்கும் தருணங்கள் எல்லாமே ரொம்பவே விசேஷமானவைகள் என்பதில் நம்மிடையே பேதங்ககளும் கிடையாது! ஆனால் இத்தனையும் இருந்தும் டெக்ஸின் விஸ்வரூபத்தின் முன்னே புதுயுகத்தின் டாப் ஸ்டார் லார்கோவே டெபாஸிட் காலியாவதைப் பார்த்தால் – மிரட்சியாகத் தானிருக்கிறது! இந்த ஆர்ப்பரிப்புகள் தீவிர டெக்ஸ் ரசிகர்கள் சிலரது ஆர்வங்களின் வெளிப்பாடுகளே என்ற ரீதியில் லைட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை – வெள்ளி & சனிக்கிழமைகளில் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது!! கடந்த 2 நாட்களில் “தலையில்லாப் போராளி“ மட்டுமன்றி – ‘தல‘யின் சகல சாகஸங்களும் ‘ஏக் தம்மில்‘ பார்சலாகி வருகின்றன நமது ஆன்லைன் ஸ்டோரில் ! Facebook-ல் சிறிது சிறிதாய் நமது பக்கத்தின் reach கூடி வருவது காரணமா? ; நண்பர்களுக்கு நீங்கள் செய்திடும் சிபாரிசுகள் காரணமா? ; அல்லது புத்தக விழாப் பரிச்சயங்கள் தொடர்கின்றனவா? என்று pinpoint செய்திடத் தெரியவில்லை எனக்கு! ஆனால் இந்த 2 நாட்களது ஆன்லைன் வேகம் மூச்சிரைக்கச் செய்வது நிஜம் – thanks to டெக்ஸ் & கோ!
And இதில் மிகப் பெரிய வேடிக்கையே – இம்மாத இதழ்களின் எந்தக் கதைக்குள்ளும்; யாருமே புகுந்திருப்பதாகத் தெரியக்கூடவில்லை! இதழின் தோற்றமும், இரவுக் கழுகாரின் கம்பீரமும், சித்திரங்களின் அசாத்தியமுமே இத்தனை தீப்பறக்கச் செய்துள்ளதெனும் போது - அனலடிக்கச் செய்யும் அந்தக் கதையை நீங்கள் ரசிக்கத் தொடங்கும் போது வாணவேடிக்கைகள் சர்வ நிச்சயம் என்றும்படுகிறது! இது தான் “டெக்ஸ் வில்லர்“ என்ற பெயரின் பின்னே புதைந்துள்ள மாயாஜாலம் என்பேன்!
“சீக்கிரமே சீஸன் ஆரம்பித்து விட்டதோ?“ என்று கேட்கத் தூண்டும் வகையில் என் கடைவாய்க் குற்றாலம் ஆர்ப்பரிப்பது கொஞ்சம் ஓவராய் நண்பர்களுள் ஒரு சாராருக்குத் தோன்றிடலாம் என்பதும் எனக்குப் புரியாதில்லை! இன்னும் பரவலாய் பகிரப்பட வேண்டிய ஒளிவட்டம் ஒரு மஞ்சள் சட்டைக்காரரைத் தாண்டி வேறெங்கும் நகர மறுப்பதில் அவர்களுக்கு ஒரு வித அயர்வு தோன்றிடலாம் தான்! But trust me all – இதுவொரு சுலபமான வெற்றியே அல்ல, becos – இவை சுலபான நாட்களே அல்ல! Comeback ஸ்பெஷல் என்று திரும்பவும் நாம் கடைவிரித்த போது – ‘நீங்க வந்தா மட்டும் போதும்!‘ என்று சிகப்புக் கம்பளத்தை விரித்தீர்கள் – அதன் லாஜிக் புரிந்தது! லார்கோ; டபுள் த்ரில்; தங்கக் கல்லறை; ஷெல்டன் என்று வரிசையாக வர்ணத்தில் விருந்துகள் பரிமாறப்பட்டபோது உங்கள் உத்வேகம் உயரே சென்றதும் புரிந்தது ! NBS; LMS : லயன் 250; MC 350 என்று ஏதேதோ மைல்கல் moments வந்தன – ஆனந்தித்தோம் ; அதனையும் புரிந்திட சிரமம் இருக்கவில்லை! ஆனால் தாண்ட வேண்டிய உயரங்களை சிறுகச் சிறுக நாமே உயர்த்திச் செல்லும் போது – நமது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நம்மையறியாது விண்ணைத்தொட்டு நிற்பதும் ஒரு அறிவிக்கப்படா சங்கதி தானே?! 'அட... ஆயிரம் ரூபாய் பார்த்தாச்சு......ஆண்டுக்கு 50 இதழ்கள் என்பதெல்லாம் ஜுஜீப்பி என்றாகி விட்டது...‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; ‘பௌன்சர்‘ போன்ற heavyweight தொடர்களைகட கூட ஊதித்தள்ளியாச்சு ! What next ?' என்ற லெவலுக்கு வந்தமர்ந்துள்ளது உங்களது ரசனைகள்! ஒரு மெகா ட்ரீம் ஸ்பெஷலைப் போட நான் அந்தக் காலத்தில் அடித்த அந்தர்பல்டிகளும், அந்த ஒற்றை இதழை சிலாகிக்க நீங்கள் தொடர்ச்சியாய் மெனக்கெட்ட சிலபல ஆண்டுகளையும் லேசாக இப்போதைய மனக்கண்ணிற்குக் கொண்டு வந்துதான் பாருங்களேன்? எத்தனை பெரிய கொம்பனின் ஆல்பமாகயிருந்தாலும் முப்பதே நாட்களுக்குள் படித்து; ரசித்து; ஜீரணித்து; ஏப்பமும் விட்டு விட்டு – ‘இவ்ளோ தானா ?‘ என்று அனாசயமாய் நீங்கள் கேள்வி கேட்கும் தருணமிது! So- இந்தச் சூழலில் உங்கள் ஆர்வங்களை / உத்வேகங்களை இத்தனை வீரியமாய் தூண்டிடும் ஆற்றல் ஒரு ஹீரோவுக்கு இருப்பது சுலப விஷயமே அல்ல guys ! அந்த ஆற்றல் ‘டெக்ஸ்‘க்கு மாத்திரமே உள்ளதென்பதை ஒரு neutral பார்வையாளர் கூட உணர்ந்திட முடியும் எனும் போது - "இவன் டைகருக்கு விரோதி!" என்ற ரீதியிலான சாத்துகளுக்கு அவசியமிராது தானே? ஒரு டெக்ஸ் ரசிகனாய் மட்டுமே இதை நான் எழுதிடவில்லை ; எவ்விதச் சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் – ஒரு பதிப்பகத்தின் நிர்வாகியாய் பார்க்கும் போதும் எனக்குள் தோன்றும் சிந்தனைகளையே இங்கே எழுத்துக்களாக்கியுள்ளேன்!
இங்கே தான் என்றில்லை; “டெக்ஸ்“ என்ற பெயர் அழுத்தமாய் உச்சரிக்கப்படும் எந்தவொரு தேசத்து காமிக்ஸ் மார்க்கெட்டிலும் – அவர் ஆலமரமாய் வேர்கொண்டு நிற்பதைப் பார்த்திட முடிகிறது ; வெறித்தனமான ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்பதையும் ரசித்திட முடிகிறது! இதோ – 50 ஆண்டுகளாய் பிரேசிலில் வெளியாகியுள்ள 600+ Tex ஆல்பங்களின் ஒரு சின்னத் தொகுப்பு !
போர்சுகலில்; நார்வேயில்; ஸ்பெயினில்; பின்லாந்தில்; குரோவேஷியாவில்; துருக்கியில்; சமீபமாய் ஹாலந்தில்; ஜெர்மனியில் டெக்ஸ் சகாப்தம் என நம்மை விடப் பன்மடங்கு ஆரவாரத்தோடு தொடர்கிறதெனும் பொழுது – இந்த மஞ்சள் சட்டைக்காரரின் வெற்றி ஒரு fluke கிடையவே கிடையதாதென்றாகிறது!
நான் போனெல்லியில் அவர்களது CEO-வை பார்க்கும் போதெல்லாம் கேட்கும் முதல் கேள்வியே – "தலைவர் எப்படியிருக்கிறார்?" என்பதே! அது குழுமத்தின் தலைவரான அவரை நலம் விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா? ; போனெல்லியின் ‘தலை‘வரான டெக்சை விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா? என்பதை நானறியேன் – ஆனால் அவரது பதில் ‘Tex is great & we are good too!’ என்ற ரீதியிலேயே இருந்திடும்! ஒரு மாதாந்திர இதழ்; ஒரு மாதாந்திர மறுபதிப்பு; அவ்வப்போது (புது) கலர் பதிப்புகள்; ஆறு மாதங்களுக்கொருமுறை டெக்ஸ் கிராபிக் நாவல் (!!) என்று பாப்கார்ன் கொறிப்பது போல கதைகளை அவர்கள் தொடர்ச்சியாய் உற்பத்தி செய்வது ஒரு அசாத்திய அதிசயமெனில் – அத்தனையையும் அசராமல் வாங்கிப் படித்து, ரசித்திடும் இத்தாலிய ரசிகர்களை நினைத்தாலும் மலைப்பாகவுள்ளது! அதிலும் அந்த மாதாந்திரப் புது இதழ்கள் நெருக்கி 2 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன எனும் போது – இந்த மாயாஜாலத்தை விளக்கிட வழியில்லை! இதில் MAXI Tex; Tex Almanac என்ற சைக்கிள் கேப் சேர்க்கைகளை நான் சேர்த்திடக்கூட இல்லை! ஒன்று மட்டும் நிச்சயம் – சந்திர மண்டலத்திலேயே பிளாட் போட்டு, வீடு கட்டும் ஒரு நாள் புலர்ந்தால் கூட, அங்கேயும் இந்தக் குதிரை வீரரின் கதைகள் ஏதேனும் ஒரு மொழியில் ரவுண்டடித்துக் கொண்டேயிருக்கும் போலும்! இதர ரசனைகள் சகலத்திலும் நவீனங்கள்; மாற்றங்கள்; முன்னேற்றங்கள் என்று புகுந்தாலும் – குளிக்காத ஒரு ரேஞ்சர் கும்பலை ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பானதொரு கரடுமுரடான பின்னணியில் ரசிக்கும் ஆசை மட்டும் நம்முள் மங்கிடவே செய்யாது போலும்!
சரி, இதற்கும் மேலே இந்த ‘இ.க.பு.‘வைத் தொடர்ந்தால் உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியக் கூடுமென்பதால் கடையை மூடி விடுகிறேன்! கிளம்பும் முன்பாக – சின்னதாகவொரு கேள்விப் பட்டியல் மாத்திரமே:
1. ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?
2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?
3. மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?
4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?
இந்தக் கேள்விகளுக்கு இது ரொம்பவே early days ஆகத் தோன்றிடலாம் தான்; ஆனால் டெக்ஸ் எக்ஸ்பிரஸின் வேகத்துக்குக் கொஞ்சமேனும் நாமும் ஈடு கொடுத்திட வேண்டாமா? இந்தாண்டின் இறுதிவரைக்குமான சகல சாகஸங்களின் ஆங்கில மொழியாக்கங்கள் தயாராகி விட்டன! அவற்றை அவ்வப்போது நாம் தமிழ்ப்படுத்தும் வேலைகள் மட்டுமே பாக்கி! So நமது French & Italian மொழிபெயர்ப்பாளர்களை 2017-ன் களத்திற்கு இப்போதே இறக்கி விடும் அவசியம் தலைதூக்குகிறது! லக்கி லூக்; லார்கோ; ப்ளுகோட்ஸ் போன்ற தொடர்கள் ஆங்கிலத்திலேயே இருந்திடுவதால் – அவை நீங்கலான மற்ற தொடர்களுள் நமது கதைத் தேடல்களை இப்போதே தொடங்கியாக வேண்டும்! So அவசியமாகிடும் மாற்றங்கள் பற்றிச் சின்னதாய் இப்போதே கோடுகள் போட்டீர்களெனில் தொடரும் ஆண்டுக்கான ரோடுகளைப் போடும் சிந்தனைக்குள் லயித்திட இப்போதே தயாராகத் தொடங்கிவிடுவோம்! Of course – இன்னமும் நடப்பாண்டின் நாயக / நாயகியர் பலர் களமிறங்க அவகாசமுள்ளது & இப்போதே 2017-ன் அட்டவணையைப் பற்றிய சிந்தனைகள் ரொம்பவே premature ஆக இருந்திடும் என்பதை நான் அறியாதில்லை! இது நமது ரொம்ப ரொம்ப முதல்நிலைச் சிந்தனைகள் மாத்திரமே! ஆகையால் உங்களின் பொதுவான அபிப்பிராயங்கள் பற்றி மேலோட்டமாய் பதிவிட்டாலுமே கூடப் போதும்!
இப்போதைக்கு ஒளிவட்டம் ஏப்ரலின் இதழ்கள் மீதே லயித்திருப்பதைத் தான் நானும் விரும்பிடுவேன்! மீண்டும் சந்திப்போம்! அது வரை – enjoy the action & keep writing! See you around soon !
1St....படித்து விட்டு வருகிறேன் சார் ...
ReplyDeleteடெக்ஸ் விஜயராகவன்.!
Deleteஅச்ச்ச்சூசூசூ.....(தும்மல்.ஐஸ் கட்டியே தலைமேல் வச்ச மாதிரி இருக்குமே.?)
கீழே உங்களை பஞ்சாயத்துக்கு கூப்பிடறாங்க பாருங்கள் MV sir...
Deleteme the first! வடை போச்சே..!
ReplyDelete// நண்பர் மொய்தீன் அவர்களின் பின்னனூட்டம் ரெம்பவே சுவராசியமாக இருந்தது.!//
Delete" வடை போனால் என்ன பீட்சாவே கிடைத்துவிட்டது.! "
June விழாவில் 4வடையாக வாங்கி தந்துவிடுகிறேன் மொகய்தீன் நண்பரே...
Delete@ M. V.
Deleteபீட்சாவா... இது அதற்கும் மேலே...
@ S. T. V.
முன்பே தெரிந்திருந்தால், ஒரு பிரியாணியோ.. வறுத்தக்கறியோ போச்சேன்னு போட்டிருக்கலாமோ...?
3வது
ReplyDeleteமுதலாவது....!
ReplyDeleteஞானும் வந்துட்டேன்.!!
ReplyDeleteஞானும் வந்துட்டேன்.!!
ReplyDeleteவாங்க மாமேதை மேஸ்ட்ரோ அவர்களே...
Delete//3.மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா.?//
Delete" மாப்பு வெச்சுட்டாங்க ஆப்பு ! "
ஆக நமக்கு ஒரு கண்ணு போன்லும் பரவாயில்லை அடுத்தவங்களுக்கு இரண்டு கண்ணும் போறதுல இருக்குற சுகம் இருக்கே..........யப்பப்பா..!
படித்து விட்டு வந்து பார்த்த போது....முதல் ஆள் நான்...முதலாவது என்று போடுவதற்குள் நான்காவது... என்ன கொடுமை இது நண்பர்களே....!
ReplyDeleteபடித்து விட்டு வந்து பார்த்த போது....முதல் ஆள் நான்...முதலாவது என்று போடுவதற்குள் நான்காவது... என்ன கொடுமை இது நண்பர்களே....!
ReplyDeleteஎன்ன இது, இதற்கெல்லாம் போய் சின்னப்புள்ள மாதிரி அழுந்துக்கிட்டு...
Deleteமுதலாவது....!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் எடிட்டர்.
நான் எட்டாவது
மேலே படித்து விட்டு வருகிறேன்
Tex super and rocks. Plz. Follow the same maxi size for the rest of the Tex issues sir.
ReplyDeleteTex super and rocks. Plz. Follow the same maxi size for the rest of the Tex issues sir.
ReplyDeleteநான் 9வது , நண்பர்களே , படித்துவிட்டு வருகிறேன்
ReplyDelete///ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?///
ReplyDelete99 / 10. (Smash hit)
இந்த மாதத்து 4 கதைகளில்
ReplyDeleteNo 1 Tex
No 2 Tex
No 3 Tex
No 4 Tex
தலை தலை தான்
தலைக்கு முன் எல்லாமே ஜு ஜுபி தான்
விஸ்வரூப Tex கொடுத்த ஆசிரியருக்கு 2 கிலோ கோவை கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பாகு பார்சல்.
///ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?///
ReplyDeleteஒரேயொரு இதழ் இருக்கிறது. மொக்கைன்னு சொல்லிட முடியாது. ஆனால் நானும் சரி, தொடர்பில் உள்ள நண்பர்கள் சிலரும் சரி இன்னும் படிக்கவே இல்லை. (படிக்காத ஒன்றை எப்படி குறை சொல்ல போச்சு என்று கோபம் வருவது நியாயமே. ஆனாலும் ஞாயிறுக்கு பிறகு திங்கள்தான் வரும் என்பதை விடிந்தபிறகுதான் சொல்ல வேண்டுமென்பதில்லையே?! தவிரவும் எடிட்டர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் சேர்ந்ததால் சொல்லிவிட்டேன்.)
அந்த இதழ். . . .
ஆமாமா அதேதான்.!!!
KiD ஆர்டின் KannaN : சும்மா அப்படியே கதையின் பெயரையும் சொல்லியிருக்கலாமே! நம்ம M V சார் மீது அவ்வளவு பயமா :-)
Deleteதங்க தலைவியை தப்பாக நினைக்கும் Radja வீட்டுக்கு ஒரு ஆட்டோவ அனுப்புங்கப்பா...
Deleteசென்னையிலிருந்து சேலம் மேச்சேரிக்கு பயங்கர ஆயுதங்களுடன் ஒரு டெம்போ கிளம்பி வந்து கொண்டிருக்கிறது
Deleteபயங்கர ஆயுதங்கள் - புளியோதரை ,தயிர்சோறு,தக்காளி சாதம் தான் என்ற கம்பெனி ரகசியத்தை அடிச்சி கேட்டா கூட சொல்லீடாதீங்க செந்தில் ...
Deleteசரியாக சொன்னீர்கள் டெக்ஸ் கூடவே குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
Deleteஇதோ ஸிலிப்பர் செல் மனித வெடி குண்டுகள் உலகத்தின் மூலைமுடுக்கிலிருந்து மெச்சேரிக்கு கிளம்பிவிட்டார்கள்.!
Delete///ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?///
ReplyDeleteகாமிக்ஸ் நலக் கூட்டணி - ஹாஹாஹா!!!
உண்மையை சொல்வதெனில் இந்த வருட அட்டவணை முன் எப்போதும் இல்லாத ஒரு திருப்தியையும் அடுத்த மாதத்திற்கான எதிர்பார்ப்பையும் எப்போதும் ஜீவனுடன் வைத்திருக்கிறது சார்.
மாதாமாதம்
ஒரு டெக்ஸ்
ஒரு கார்ட்டூன்
ஒரு ஆக்ஷன்
ஒரு ரீபிரின்ட்
இதுவே அடுத்தவருடமும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை சார்.
(அப்படியே அந்த சந்தா Z யும் அவ்வபோது டைஜஸ்ட்டுகளையும் ஆங்காங்கே தூவி விட்டீர்களானால் ஆஹா ஆஹா ஆனந்தம் ஆனந்தமே!!!)
1. ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?
ReplyDelete* 100/100 அட்டகாசம், அருமை, வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?
* ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்/சுவை. என்னைப் பொறுத்தவரையில் அனைத்து இதழ்களும் திருப்தியாக இருந்தன.
3. மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?
* 200/100. 2004-ம் வருடம் உங்களை சிவகாசியில் சந்தித்த போது கார்ட்டூன் கதைகளை முழு வண்ணத்தில் போட வற்புறுத்தினேன். இப்போது கனிகளை சுவைத்து இன்புறுகிறேன். மாதமொரு கார்ட்டூன் முடிவுக்கு மிக்க நன்றி.
4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?
* ஒரே சுவை திகட்டிவிடும். இந்த கூட்டணி எங்களுக்கு அடை மழை.
மேலும் மேலும் எங்களை ஆச்சிரியப்படுதுங்கள். வளர்க உங்கள் பணி/பாணி.
என்ன, இப்போது ஹைதராபாத்தில் இருப்பதால் இதழ்கள் சற்று தாமதமாக கிடைக்கிறது. ஏப்ரல் இதழ்களுக்காக காத்திருக்கிறேன்.
///nd இதில் மிகப் பெரிய வேடிக்கையே – இம்மாத இதழ்களின் எந்தக் கதைக்குள்ளும்; யாருமே புகுந்திருப்பதாகத் தெரியக்கூடவில்லை! .///
ReplyDeleteமன்னிக்கவும் தவறான தகவல்.
ஆர்டினின் ஆயுதம் சற்று முன்னர்தான் மூன்றாவது முறை படித்து (சிரித்து) முடித்தேன்.
நாளை தலையில்லா போராளி!
///ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?/// நிஜமான நிஜம் சார் .....
ReplyDeleteநாமும் ஒரு பஞ்ச பாண்டவர் அணி அமைத்து அடுத்து ஆண்டு போட்டி போடலாம் சார் , பின்வருமாறு :-
மாதாமாதம்......
ஒரு டெக்ஸ்
ஒரு கார்ட்டூன்
ஒரு ஆக்ஷன்
ஒரு ரீபிரின்ட்
ஒரு கிராஃபிக் நாவல்
டெக்ஸ் ..கார்ட்டூன் ..ஆக்ஷன் ..ரீ பிரின்ட் ...ஓகே ...
Deleteமாதம் ஒரு கிராபிக்ஸ் ...
ஏப்பா ....இதுவரை நல்லா தானே போய்ட்டு இருக்குது ....அப்புறம் ஏன் ....
ஓய் மாம்ஸ் கிராபிக் நாவல் பத்தி சொல்லி தலீவரை பீதியில் பதுங்கு குழிக்குள் அனுப்பறீரா?
DeleteThis comment has been removed by the author.
Delete///மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?///
ReplyDeleteமந்தியிடம் (என்னிடம்) மலைவாழைப்பழம் (கார்ட்டூன்) பிடிக்குமா என்று கேட்பதுபோல் எனக்கு தோன்றுகிறது .
இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். ப்ளுகோட்ஸ், சுட்டி லக்கி, ஜோர்டான் ஜில் ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் இவையெல்லாம் இந்த வருட அட்டவணையில் இடம் பிடிக்கழுடியாமல் போனதில் சற்று வருத்தமே.!!!
///மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?///
ReplyDeleteமந்தியிடம் (என்னிடம்) மலைவாழைப்பழம் (கார்ட்டூன்) பிடிக்குமா என்று கேட்பதுபோல் எனக்கு தோன்றுகிறது .
இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம். ப்ளுகோட்ஸ், சுட்டி லக்கி, ஜோர்டான் ஜில் ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் இவையெல்லாம் இந்த வருட அட்டவணையில் இடம் பிடிக்கழுடியாமல் போனதில் சற்று வருத்தமே.!!!
//மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா.?//
Deleteகிட் ஆர்ட்டின் சார்.!
இந்த கேள்வியே ஒரு ரெட் அலார்ட் சிக்னல் மாதிரிதான்.!
எனக்கென்னவோ டிஸ்மிஸ் ஆர்டரை ரெடி செய்துவிட்டு மெமோ கொடுத்து விளக்கம் கேட்கிறமாதிரிதான். தோன்றுகிறது.!
எப்பூடி..........???????
///and இதில் மிகப் பெரிய வேடிக்கையே – இம்மாத இதழ்களின் எந்தக் கதைக்குள்ளும்; யாருமே புகுந்திருப்பதாகத் தெரியக்கூடவில்லை! .///
ReplyDeleteமன்னிக்கவும் தவறான தகவல் சார்....
டெக்ஸை ரசித்து ருசிச்சி சாப்பிடுவோம்னு , லார்கோ கடன் தீர்க்கும் வேளையில் புகுந்தேன் சார் . லார்கோ இதழ்களில் இது ஒரு அக்மார்க் டாப் ஹிட் நிச்சயம் சார் . ஒருவேளை அடுத்த மாதம் வந்து இருந்தால் மேன் ஆஃப் த மன்த் வாங்கி இருக்க கூடும் சார் ...
இன்னும் நிறைய நண்பர்கள் புத்தகங்களை பார்த்து இருக்க மாட்டார்கள் ,எனவே விமர்சனம் பிறகு சார் ...
ஆனாலும் என்னை அசரவைத்த காட்சி , அந்த போலி சிறையில் டான் னின் சடலத்தை எலிகள் குதறி திண்ணும் இடம் சார் . பெளன்சருக்கு போட்டி போடும் கட்டம் அது...
நிறைய பெலிசிட்டி கூட்டாளிகள் இந்த கதை முழுதும் உலவுகிறார்கள் , ஏஏஏஏகப்பட்ட பெயிண்டிங் ஒர்க்ஸ் பார்த்து உள்ளீர்கள் போல ...ஹி...ஹி...
சைமன் - அந்த குச்சியில் சாப்பிட முடியாமல் பல்ப் வாங்கும் காட்சியில் சத்தம் போட்டு சிரித்து விட்டேன் ...
ஐனவரி to ஏப்ரல் ரெக்ஸ் தனித்தடம் என்னை பொறுத்த வரை மிகத் திருப்தியாக உள்ளது ஸார்.
ReplyDeleteஎன்னை பொறுத்த வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எல்லாமே இனிக்கிறது.
இது வரை வெளி வந்த இதழ்களில் என்னை பொறுத்த வரை, சுமார் என்றோ மொக்கை என்றோ எவையும் இல்லை.
தனி தடத்தில் மாதமொரு கார்டூன் இதழ் சூப்பரோ சூப்பர். இன்னும் வராதா என ஏங்க வைத்து விட்டது.
மாதா மாதம் ஆக்ஷன்+கார்டூன்+டெக்ஸ் என்ற கூட்டணி ரசிக்கிறேன். இன்னும் எதிர்பார்க்கிறேன்.
பிரேசிலில் வெளியாகி உள்ள ரெக்ஸ் ஆல்பங்களின் சிறு தொகுப்பே மனதை அள்ளுகிறதே. முழுவதும் பார்த்தால், மலைத்து விட மாட்டோமா?
ReplyDeleteஇரவு கொலை மர்மம் வில்லி ஒரே மாதிரியான டெக்ஸ் கதைகளை தொடர்ந்து வெளியிட வேண்டாமே.திகில் நகரில் டெக்ஸ் சைசுக்கு தலையில்லா போராளியை போட்டிருந்தால் இரண்டுக்கும் இடையில் அதிக வித்தியாசம் தெரியாது. கதை அதே ஒன் லைன்தான்.சைஸ்தான் வித்தியாசப் படுகிறது.
ReplyDelete//குளிக்காத ஒரு ரேஞ்சர் கும்பலை ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பானதொரு கரடுமுரடான பின்னணியில் ரசிக்கும் ஆசை மட்டும் நம்முள் மங்கிடவே செய்யாது போலும்!//
ReplyDeleteஹா..ஹா.... சார் என்ன இருந்தாலும் டெக்ஸ் அன்ட் கோவை நீங்கள் இப்படி கிண்டல் செய்திருக்கக்கூடாது!
ஸார் இந்த புத்தகத்த பார்த்ததும் எனக்கு மனதில் தோன்றியது யார் அந்த மினி ஸ்பைடர் விற்பனை குறித்து தாங்கள் சிலாகித்ததுதான்...அது போல இதும் நிச்சயம் வெற்றி என ுறுதிபடுத்துகிற தங்கள் வரிகள் எங்க சந்தோசத்த மேலும்கூட்டுகிறது ...140பக்கங்கள் தாண்டி விட்டேன் ...அருமை...அதும் இருள் சூழும் நேரமெல்லாம் ஓவியர் பின்னிப் பெடலெடுக்கிறார்...பக்கங்கள் விறு விறுப்பாய் புரண்டு படுக்கின்றன..
ReplyDeleteதாங்கள் அறியாததல்ல...ிந்த மாபெறும் வெற்றிக்கு காரணம் இரண்டுதான்...இரண்டும் தாங்கள்தான்.....1 .சத்தமில்லாமல் அடக்கபட்ட ஓவாஉநா....2.இந்த மாபெறும் சைஸ்..அதான லார்கோவயே பின்னுக்கு தள்ளியது..
சார் இப்போதும் பின்னட்டை பிரம்மிப்பாக ுள்ளது ..வேஸ்ட் செய்து விட்டீர்கள் என் வார்த்தை வாபஸ்..இந்த பிரம்மாண்ட எழுச்சிக்கு அதும் துனண சேர்க்க.....கச்சிதமாக வரயபட்ட முன்னட்டை டெக்ஸும் தூள்
இந்த நான்கு கூட்டணி பிரம்மாதம் சார்...இதனுடன் மர்மம் +துப்பறியும் கூட்டணி அடுத்த வருடம் இணைந்தால் அறுசுவை உணவு......
ReplyDeleteஇது வரை வந்த கதைகள் தூள்..
அனைவருக்கும் வணக்கம். மாதம்தோறும் எத்தனை டெக்ஸ் இதழ்கள் வெளியிட்டாலும் அது கண்டிப்பாக ஹிட் ஆகும். 2017 க்கும் தற்போது உள்ளது போல் மாதம் 4 இதழ்கள் வெளியிடல் நலம். தலைக்கு கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை இல்லை.tex always rocks.
ReplyDeleteப்ளூகோட்சுக்கு வாய்ப்பளியுங்கள்...
ReplyDeleteகர்னல் அமோஸ்...பென் காரிங்டனுக்கும்
1. ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?
ReplyDelete1000/1000
2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?
அறுசுவை உணவை கொடுத்துவிட்டு எது நன்றாக இருக்கின்றதென்றால் எப்படி விடையளிப்ப்பது இதற்க்கு ஆச்சர்யக்குறிகளே என் பதில்
3. மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?
சுகமே!
என் குழந்தைகள் விருப்பமும் இதுவே.
நான் மறந்தாலும் மாதத்தொடக்கத்தை அவர்களே நினைவூட்டுகிறார்கள்
4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?
மழைக்காலப்பொழுதில் உணர்வை/மனதை சூடாகவும்
கோடை வெயில் காலத்தில் குளிர்வாகவும்
என் சின்னஞ்சிறிய வயது காமிக்ஸ் வாழ்க்கையை மீட்டெடுத்துக்கொண்டு எங்கள் வாழ்க்கையை மேன்மேலும் சுவராஸ்யம் ஆக்கிக்கொண்டிருப்பதை
எப்படி விவரிப்பது
ஜெய சேகர் சார்.!
Deleteவணக்கம்.!உங்கள் வரவை அடிக்கடி ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
யப்பா தல மிரட்டி விட்டார். புத்தகத்தை தலையில் வைத்து கூத்தாடாத குறைதான். என்னா சைஸு என்னா சித்திரங்கள். கதையம் சூப்பர். எங்க ஊர் லைப்ரரிக்கு ஒன்று பைண்ட் பண்ணி குடுக்க ஆவல். நிச்சயமா இது காமிக்ஸ் படிக்கதவர்களையும் படிக்க வைக்கும். ப்பா செம சர்ப்ரைஸ் குடுத்தீங்க.
ReplyDelete+1
Deleteபுதைகுழியில் புதைந்து போன மினிலயனை நீங்கள் மறுபடியும் [விரைவாக] மீட்டெடுக்கவேண்டும் என்பதே என் [குழந்தைகள்]அவா..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் விடுமுறை நாள் வணக்கம் ஆசிரியரே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்
ReplyDelete1.டெக்ஸின் ரசிகனாக இல்லை உண்மையில் சொல்கிறேன் 100 க்கு 100 மார்க் தாரளமாக கொடுக்கலாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் உங்களின் தேர்வு மிக அருமை ஒரே மாதிரி கதை களாக இல்லாமல் இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம்
2.மொக்கையென்று எதுவும் இல்லை சுமார் என்று சொன்னால் சாத்தானின் உள்ளங்கையில்
3.மாதமொரு கார்ட்டூன் உண்மையிலேயே மன மகிழ்வை தருகிறது அதுவும் டாக்புல் கிட் ஆர்ட்டின் என்றால் மனம் துள்ளிக் குதிக்கிறது
4.இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் கூட்டணி ஒவ்வொரு மாதமும் ஏங்க வைக்கும் கூட்டணி சுவாரஸ்யம் மட்டுமல்ல சுவையாகவும் உள்ளது அடுத்த வருடமும் தொடரட்டும் இந்த கூட்டணி
அடுத்த வருடம் மட்டுமல்ல ஆயுசுக்கும் இந்த கூட்டணி தொடரட்டும்
ReplyDeleteDear Editor,
ReplyDeleteJan - April:
1) Tex - all were fine - too early to comment on numbers
2) Cartoon - Iznogoud and Chik-Bill were good - made me laugh; Lucky Luke and Clifton were average; Lucky's English version made me laugh more than the Tamil version
3) Action: Modesty was old-time and boring, Wayne Sheldon - was average, Largo and Comanche were fine
I believe for 2017 it can be differently tracked:
a) 6 cartoons
b) 6 action
c) 6 Tex
d) 6 classic reprints
e) 6 mix - 3 bonnelli heroes, 2 thorgals, 1 good graphic novel
f) 6 Color reprints of old Franco Belgian
More than 36 looks certainly too much. We have already seen 16 books this year which is too much. In May 2016 alone, we will have 4+5+6 = 15 books (Blueberry is a 5 volume collect). This is certainly getting overboard and too much to read !!!
Raghavan : எனது மிகப் பெரிய சிக்கலே - மும்மூர்த்திகள் + ஸ்பைடரின் மறுபதிப்புகளை manage செய்திடுவது தான் ! அவற்றினுள் புதைந்து கிடக்கும் முதலீட்டை உங்களுக்கும், எங்களுக்கும் நெருடலின்றி மீட்கும் கட்டாயம் இல்லையெனில் ஆண்டுக்கு 48 புத்தகங்கள் என்ற அட்டவணை நிச்சயமாய் கற்பனையில் கூட சாத்தியமாகியிராது !
Deleteமறுபதிப்புகளும் வந்தாக வேண்டும் ; அவற்றின் எண்ணிக்கைகளோ ; புராதன நெடிகளோ தற்கால வாசகர்களை முகம்சுளிக்கச் செய்திடக் கூடாதெனும் catch22 சூழல் எனக்கு ! So பலதரப்பட்ட ரசனைகள், கதைகள், என்ற பல்டிகள் அவசியமாகின்றன !
//More than 36 looks certainly too much. We have already seen 16 books this year which is too much//
Delete-1
லார்கோவும் கிட் ஆர்டினும் இரண்டாவது இடத்துக்கு சரியான போட்டி சின்ன இடைவெளியில் லார்கோ முந்துகிறார் இம் மாத இதழ்களின் விரிவான விமர்சனம் நாளை பதிவிடுகிறேன் ஆசிரியரே
ReplyDeleteஆண்டின் இறுதியில் வழக்கமாய் கேட்கப்படும் கேள்விகள் இப்போதே....!?
ReplyDeleteஎடிட்டா் சாா்..! மொக்கைக்கொரு மருந்து என்றதொரு பதிவுக்கு இவ்வருடம் அவசியமிராது..!!
மதிப்பீடுகளுக்கு அப்பாற்ப்பட்டது இந்த நான்கு மாதங்களும்..!
தொடரும் மாதங்களிலும், இதுவே தொடரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..!
Guna Karur : //மொக்கைக்கொரு மருந்து என்றதொரு பதிவுக்கு இவ்வருடம் அவசியமிராது..!!//
Deleteலட்சியமும், கனவும் அதுவே !!
வணக்கம் எடிட்டர் சார்...!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....!
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். கேள்வி 1: நூற்றுக்கு நூறு கேள்வி2: எதுவும் சொல்லத்தோன்றவில்லை கேள்வி 3: மாதம் ஒரு கார்ட்டூன் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. குறைந்தபட்சம் இரண்டாவது வெளியிடுங்கள் (மினி லயன் அல்லது ஜூனியர் லயன் என்று பெயர் தாங்கி வந்தால்? ???) கேள்வி4: A+tex+c கூட்டணி அற்புதம். இதுவே வெற்றிக் கூட்டணி.தொடரட்டும். புதுக்கதைகளை சந்தா Z ல் கொண்டு வாருங்கள் சார். (விலையும் காமிக்ஸ் படிக்கும் அனைவரும் வாங்கும்படி கொண்டுவருவீர்கள் என நம்புகிறோம்) நன்றி சார்
ReplyDelete)
லார்கோ ஒரே வார்த்தையில் சொல்வதானால் அதகளம்...
ReplyDeleteஆர்டின் அமர்க்களம்...
தலையில்லா போராளி வாசிப்பில்...
Rummi XIII : லார்கோ ஜெட்வேகம் தான் ! வேறொரு மாதத்தில் வெளிவந்திருந்தால் இன்னமும் அதிகமாய் மின்னியிருக்கும் !!
Deleteடெக்ஸை பற்றி நீங்கள் எழுதும் ஒவ்வொரு முறையும் மனம் பரவசப்பட்டு போகிறது.அவரை சிலாகித்து,பெருமிதத்தோடு எழுதும் வரிகளைப்படிக்கும்போது புல்லரித்துப்போய்விடுகிறது.
ReplyDeleteடெக்ஸுக்கு இணை அவர் மட்டுமே...!இன்னும் இம்மாதத்து வில்லரின் விஸ்வரூபத்தை தரிசிக்கவில்லை.நண்பர்களின் குதூகலமான கமெண்ட்டுகளை பார்க்க,பார்க்க நாளைய பொழுது எப்போது விடியும் என்று ஏக்கமாய் இருக்கிறது.
இரவுக்கழுகின் தனித்தடத்திற்கு என் மார்க்:1000/1000.
ReplyDeleteமொக்கையெல்லாம் இவ்வருடத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.கர்னல் க்ளிப்டனை சுமார் ரக பட்டியலுக்குள் இடம்பெறச்செய்யலாம்.
ஆர்டினின் ஆயுதம் அருமை. ஒரே வரியில் சொல்வதானால் சிரிப்பு போலிஸ்.நேற்று மாலை சிவகாசி வந்து புத்தகங்கள் வாங்கி வரும்போது பஸ்சிலேயே படித்துவிட்டேன். படித்துக்கொண்டிருக்கும்போதே ஏதோ குறுகுறுப்பு. நிமிர்ந்து பார்த்தால் இரண்டு மூன்று பேர் என் முகவிலாசத்தையே பாத்துக்கொண்டு. நமக்குத்தான் காமிக்ஸ் கைல கெடச்சாத்தான் ஒலகமே மறந்துருமே. சில சமயங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன் போலிருக்கிறது (சிரிக்கிறது தப்பா ஐயா) என்னையும் புத்தகத்தையும் மாறி மாறி பாத்த பக்கத்துல உக்காந்திருந்தவர் மெல்ல நகர்ந்து உட்கார்ந்துகொண்டார் ( இந்த காலத்துல எது எப்படி வருதுன்னே தெரியலன்னு வடிவேலு பட காட்சியை நினைத்துக்கொண்டாரோ என்னவோ) .
ReplyDeleterajasekarvedeha : //என்னையும் புத்தகத்தையும் மாறி மாறி பாத்த பக்கத்துல உக்காந்திருந்தவர் மெல்ல நகர்ந்து உட்கார்ந்துகொண்டார்//
Deleteமாறும் நண்பரே....சித்திரக் கதைகள் மீதானதொரு வெகுஜன அபிப்பிராயம் - அபிமானமாய் மாறிடாது போகாது !
தலையில்லாப் போராளி அட்டைப்படம் செம்ம்ம. தங்கத்தில் டாலடிக்கும் தானைத்தலைவனுக்கு ஜே.( சிவப்பு வண்ண ரேப்பரை பின்னட்டைக்கு பயன்படித்தியது ஏன்னு இப்ப புரிஞ்சிடிச்சு) சித்திரங்கள் அனைத்தும் மனதைக்கொள்ளை கொண்டன. சத்தியமாக டெக்ஸ் இதழ்களில் இது மறக்க இயலா இதழாக அமைந்துவிட்டது. படித்து முடித்ததும் ஒரு ஆலிவுட் படம் பார்த்த உணர்வு. சில நண்பர்களைப்போல் எனக்கு கதையை விமர்சனம் செய்யத்தெரியாது. ஆனால் மொத்தமாக ஒரே வார்த்தையில் சொல்வதானால் Super Super super
ReplyDeleteஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
ReplyDeleteVijayan sir, Tex maxi suggestion - can you please use hardcovers for upcoming Tex maxi stories. It gives us to keep the book in good condition; addion to this attract many people and give gran look.
ReplyDeleteVijayan sir, this years book so for really super. Last month book clifton second story is good but not that great as compare with other stories which were published this year.
ReplyDeleteThis month books I received on Friday, will read them after reaching Bangalore on Wednesday.
ReplyDeleteஇந்த மாத லார்கோ கதை மிக அருமை... டெக்ஸ் கதை அப்பா எடுத்துக் கொண்டு விட்டார்... நாளை தான் எனக்கு கிடைக்கும்... ஆனாலும் அடுத்த வாரமே படிக்க திட்டம்... ஒரே நாளில் படித்து விட்டு மாசம் முடிய பழைய புக் கப் போர்டை பிராண்ட முடியவில்லை... எடிட்டர் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்... முடிந்தால் பதினைந்து நாளுக்கு ஒருமுறை புத்தகங்களை வெளியிடலாமே.. பேக்கிங் மற்றும் கூரியர் செலவு எவ்வளவுன்னு சொன்னீங்கின்னா அனுப்ப சௌகரியமா இருக்கும்..
ReplyDeleteகரூர் சரவணன் : மாதமொருமுறை அனுப்புவதை 15 நாட்களுக்கொருமுறையாகப் பார்சல் செய்வதில் கூரியர் செலவுகள் கூரையைப் பதம் பார்த்து விடும் !
Delete15 நாட்களுக்கொருமுறை புதுசு புதுசாய் இதழ்களை தயாரிப்பதெனில் நாங்கள் காலி !
ReplyDeleteஅட்டகாசமான பதிவு எடிட்டர் சார்! உண்மையான உற்சாகத்தின் வெளிப்பாடை உங்களது ஒவ்வொரு வரியிலும் உணர்ந்துகொள்ள முடிகிறது! உங்களது உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது - எப்போதுமே இப்படித்தான்! தல'யின் இந்த ஆரவார வெற்றி நாமெல்லாம் முன்பே யூகித்த ஒன்றுதான் எனினும், இந்த வெற்றியின் பின்னே எளிமையாக வீற்றிருக்கும் ஒரு ஒற்றை வரி - 'ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பாணியிலான கதை'!
தல'யே என்றாலும்கூட வெறுமனே 'டமால், டுமீல், தட், தடால்'கள் வெற்றிக்கு வித்திட்டுவிடாது என்பதையும்; சன்றே அழுத்தமான ஒரு 'கதை' அவசியமென்பதையும் (The Lion-250க்குப் பிறகு?) நீங்கள் புரிந்துகொண்டிருப்பதாய் தோன்றுகிறது! ரொம்பவே திட்டமிட்டு அதை அழகாக செயல்படுத்திவருகிறீர்கள்! சூப்பர் & செம!
ஒவ்வொரு இதழுக்குமான உங்களது மெனக்கெடல் நாளுக்குநாள் கூடி வருவதை எங்களால் கண்கூடாக உணரமுடிகிறது! எனினும், உங்கள் உடல்நலன் மீதும் ஒரு கண் வையுங்கள் சார்! ஓய்வுக்காக இயற்கை படைத்திருக்கும் இரவுப்பொழுதுகளை ரொம்ப நேரம் கண்விழித்து வீணடிக்கிறீர்களோ என்றொரு கலக்கம் எழுகிறது ( ரொம்ப நாளாகவே எனக்கொரு சந்தேகம் உண்டு - நீங்கள் Average ஆக நாள் ஒன்றுக்கு எத்தனை நிமிடங்கள்(!) தூங்குகிறீர்கள்? )
இன்னும் இந்தமாத இதழ்கள் வந்துசேரவில்லை ( லோக்கல் விடுமுறை - கொரியர் ஆபீஸ் லீவு). அதனால் நண்பர்களின் சிலாகிப்பை கொஞ்சம் கொஞ்சம் எனதாக்கிக்கொண்டு பிரம்மாண்ட சைஸில் தல'யை தரிசிக்கவிருக்கும் நாளைய பொழுதுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்......
Erode VIJAY : //ரொம்ப நாளாகவே எனக்கொரு சந்தேகம் உண்டு - நீங்கள் Average ஆக நாள் ஒன்றுக்கு எத்தனை நிமிடங்கள்(!) தூங்குகிறீர்கள்?//
Deleteஒரு காலத்தில் அடியேன் கும்பகர்ணனின் பூலோகப் பிரதிநிதி ! ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் எழுந்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிடும் ஷெர்லாக் ஹோம்ஸ் தொடரையும், 'கரம்சந்த்' என்றதொரு ஹிந்தி துப்பறியும் தொடரையும் பார்த்து விட்டு மட்டையாகிப் போனால் மறுபடியும் மாலையில் தான் கண்கள் திறக்கும் ! Maybe அந்த பாணி நமது இதழ்களுக்கும் அந்நாட்களில் தொற்றிக் கொண்டிருந்ததோ என்னவோ - எனக்குப் போட்டியாய் அதுவும் குறட்டை விட்டுத் திரிந்தது !
இன்றைக்கு யாருக்காக-யார் முழித்திருப்பது என்ற போட்டி எங்களுக்கிடையே ! இதிலுமொரு சுகம் இல்லாதில்லை !!
@Vijayan Sir
Delete//இன்றைக்கு யாருக்காக-யார் முழித்திருப்பது என்ற போட்டி எங்களுக்கிடையே ! இதிலுமொரு சுகம் இல்லாதில்லை !! //
:)
லாா்கோ:9.5/10சூப்பா் அக்மாா்க்கு கதை
ReplyDeleteடெக்ஸ்:10/10 சொல்ல தமிழிள் வாா்தை இல்ளை
டக்புல் :9/10சூப்பா்
மாயவி:11/10
1)டெக்ஸ் அனைத்தும் சூப்பா் இந்த கேள்வி pass
ReplyDelete2)மொக்தை எதுவும் இல்லைஇல்லை
3)a,b,c,d is the super
ஆசிரியரே ....!
ReplyDeleteஅட்டைப்படங்களில் கூடுதல் கவனம் தேவை.லார்கோ வரிசையில் இம்மாத அட்டைப்படம் தான் ரொம்ப ரொம்ப சுமார் ரகம்.டெக்ஸ் பின்அட்டை முந்தியதைவிட டாப்....!
க்ளிப்டன் கதைகள் நான்கு பக்கத்திலேயே சோர்வடைய வைத்துவிடுகின்றது.மற்றபடி 2016 ன் முதல் நான்கு மாதங்களும் திருப்தியானவை.
அதிலும் இம்மாதம் டாப்...!
AHMEDBASHA TK : நண்பரே, லார்கோவின் இம்மாத அட்டைப்படமும் ஒரிஜினலின் பிரதிபலிப்பே ! இந்தத் தொடரின் ஓவியர் பிலிப் பிரான்க் - உலகெங்கும் பிரசுரமாகும் லார்கோ கதைகளுக்கும் தனது ஒரிஜினல் சித்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ! அதனால் தான் அவரது ஒரிஜினல் டிசைன்களை நோன்டிடாது - வர்ணங்களில் மட்டும் லேசாய் எதாவது மாற்றங்கள் அவப்போது செய்துள்ளோம் ! இம்மாதம் அடர்சிகப்பில் ஒரிஜினல் இருந்ததே அழகாய்த் தென்பட்டதால் அந்த வர்ண மாற்றத்தைக் கூடச் செய்திடத் தோன்றவில்லை !
Delete"துரத்தும் தலைவிதி" நீங்கலாய் பாக்கி எல்லா லார்கோ ஆல்பங்களுக்கும் ஒரிஜினல் டிசைனைத் தானே பயன்படுத்தியுள்ளோம் !
Tex கதைகளை பொறுத்தவரை 2016 வெளியிடுகள் அனைத்தும் above 90 marks. ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ இதே நிலையில் தொடர்வது நல்லது. Action genreல் இன்னும் speedஆன சுவாரசியமான கதைகளை எதிர்பார்க்கிறோம்! உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம் !
ReplyDeleteஎடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் நம் இனிய எடிட்டர் பதிவுநாள் வணக்கம்.
ReplyDeleteஅற்புதம் என்றஒரு வார்த்தையில்
ReplyDeleteஎனது பதில்
வாவ் ...எதிர் பார்க்க வில்லை சார் ..டெக்ஸை இப்படி கொண்டு வருவீர்கள் என்று ..பெரிய சைஸ் என்றவுடன் லார்கோ அளவில் எப்போதும் போல என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் ..ஆனால் கொரியர் பாக்ஸை பிரித்ததும் அசந்து விட்டேன் ..அவ்வளவு பெரிய சைசில் டெக்ஸ் அசத்தல் போஸில் நிற்க மினுமினுக்கும் அந்த டெக்ஸ் எழுத்து என அந்த இதழையை புரட்டி புரட்டி ரசிக்க அரைமணி நேரம் ஆகியது ...இந்த முறை எடுத்தவுடன் படா டெக்ஸ் தான் முதலில் என்று மனது தன்னால் முடிவெடுத்தது ..கதையை படிக்கும் முன்னர் சித்திரங்களை பற்றி பலர் சிலாகத்தி இருந்த படியால் ஓவியங்களை மட்டும் புரட்டி பார்த்தேன் ...கோட்டு ஓவியங்களாக இருந்தாலும் வழக்கம் போல வரும் டெக்ஸ் கதைகளில் உள்ள ஒரு நிஜ உணர்வை இந்த ஓவியங்கள் ஏற்படுத்தாமல் இது ஓவியம் தான் என்று பல இடங்களில் உணர்வை ஏற்படுத்தியதால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது போல இருந்தது ...சரி கதையை சித்திரங்களோடு ஒன்றி படிப்போம் என்று பொறுமையாக ஓவ்வொரு பேனலாக கூர்ந்து கவனித்து ...ரசித்து ...படித்து கொண்டே செல்ல அப்பொழுது தான் ஓவியரின் திறமை தெரிந்தது ....
ReplyDeleteஅடேங்கப்பா ....என்ன நுணுக்கமான ...சித்திரங்கள் ..தெளிவான ...அட்டகாசமான பின்னணி ஓவியங்கள் ...புதரில் இருந்து கிராமங்கள் வரை இரவு ...பகல் என மாறுபட்ட நேரங்களில் அவ்வளவு தெளிவாக ..அழகாக ...வரைந்த அந்த ஓவியருக்கு டெக்ஸ் ..காரசன் ...என வரும் க்ளோசப் காட்சிகளில் கூட அவ்வளவு அழகாக படைத்து பட்டைய கிளப்பி விட்டார் ..டெக்ஸ் கார்சன் ..மட்டுமல்லாமல் கதைகளில் வரும் அனைத்து மாந்தர்களுமே அவ்வளவு அழகு ...
கதையை பொறுத்த வரை படிக்க ஆரம்பித்தவுடன் வழக்கமான டெக்ஸ் கதை போல ஆரம்பத்திலியே சூடு பிடிக்காமல் கொஞ்சம் கூட்ஸ் வண்டி போல மெதுவாக நகர ....டெக்ஸ் குழு வருகை பிறகு பேசன்ஜர் வண்டி போல இன்னும் கொஞ்சம் வேகம் பிடிக்க ...பிறகு பட பட வென எக்ஸ்பிரஸ் வேகத்தில் கதை ஓட வண்டி நிற்கும் வரை ......சாரி....' கதை முடியும் வரை இடையில் எங்கும் இறங்க முடிய வில்லை ...திகில் கதையா ..அமான்ஷ்ய கதையா ..துப்பறியும் கதையா ..வழக்கம் போல டெக்ஸின் அதரடி கதையா என படிக்காத நண்பர்கள் வினவினால் இவை அனைத்தும் கலந்த கலவையப்பா இந்த "தலையில்லா போராளி "என்று தான் சொல்ல முடியும் ...மொத்ததில் டெக்ஸ் ...டெக்ஸ் தான் என்று ஒவ்வொரு மாதமும் நிரூபித்து கொண்டே இருக்கறார் ..இவ்வளவு அட்டகாசமான பொக்கிஷத்தை அளித்த தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் அந்த இதழை போலவே பெரிய்ய்ய்ய்ய்ய பாராட்டுக்கள் சார் ..
Paranitharan K : //.இவ்வளவு அட்டகாசமான பொக்கிஷத்தை அளித்த தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் அந்த இதழை போலவே பெரிய்ய்ய்ய்ய்ய பாராட்டுக்கள் சார் ..//
Deleteஅந்தப் பெரிய்ய பாராட்டுக்களில் ஒரு 10% -ஐ மட்டும் நாங்கள் பகிர்ந்து கொண்டு - பாக்கி 90% ஐ இத்தாலிக்குப் பார்சல் செய்து விடுவது தான் முறையாகயிருக்கும் !! அந்தக் கற்பனை வளமும், கதை நகர்த்தும் யுக்தியும், சித்திர மாயங்களும் "போசெல்லி-சிவிடெல்லி" என்ற ஜாம்பவான்களின் பிள்ளைகள் அல்லவா ?
"போனெல்லி-போசெல்லி -சிவிடெல்லி"---எந்த சுவீட் கடையில் இதெல்லாம் அறிமுக படுத்தி உள்ளார்கள் சார் ???....
Deleteஇல்லை ,கொத்துகறி-குடல் கறி-வறுத்த கறி "--மாதிரி ஏதும் புதிய நான்வெஜ் அயிட்டமா சார் ????
Deleteசேலம் Tex விஜயராகவன் : ஞாயிறு என்றாலே ராஜ்கிரண் அவதாரம் எடுத்து விடுவீர்களோ ? புரட்டாசி மட்டுமே ஆட்டுக்களுக்குப் பாதுகாப்பான மாதம் போலும் !!
Delete//வாவ் ...எதிர் பார்க்க வில்லை சார் ..டெக்ஸை இப்படி கொண்டு வருவீர்கள் என்று ..பெரிய சைஸ் என்றவுடன் லார்கோ அளவில் எப்போதும் போல என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் //
Delete+1
தல டெக்ஸை ரசித்து ருதித்து முடித்தவுடன் தான் லார்கோவும் ..ஆர்ட்டினும் கைகளில் சிக்கினார்கள் ..லார்கோ அட்டை படத்தில் எந்த அசத்தல் போஸும் கொடுக்காமல் சாதாரணமாக நிற்க ...அட்டை படமும் சாதாரணமாக பார்வையில் பட உள்ளே புரட்ட புரட்ட சித்திரங்களும் ...லார்கோவின் ஆக்ஷன் காட்சிகளும் பிரமிப்பூட்டுகின்றன ....வண்ண கலவைகளும் அச்சு தரமும் அவ்வளவு அட்டகாசம் ..நீண்ட நாட்களுக்கு பிறகு லார்கோ வை கண்ட ஆனந்தம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது ..டெக்ஸை போலவே லார்கோவின் சாகஸங்களையும் எந்த குறுக்கீடும் இல்லாமல் நானும் சைமன் போல அவருக்கு உறுதுனையாக நின்று லார்கோவிற்கு கைகொடுக்க வேண்டும் என்பதால் காத்திருக்கிறேன் ..ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி ..அதேபோல .சிக்பில் ஆர்ட்டின் குழு அட்டை படம் கலக்கல் போலவே உள்ளே அச்சு தரமும் செம ...காமெடி கொண்டாட்டமும் காத்திருக்கிறது ..எனவே ஆக்ஷன் காமெடி இரண்டிலும் இன்று தாம் புக வேண்டும் ..இதை விட சந்தோசம் அடுத்த மாதமும் ஷெல்டன் என்ற அறிவிப்பு தான் ..ஆவலோடு காத்திருக்கும் அதே நேரத்தில் இன்னும் ஒரே ஒரு சாகஸத்தோடு அவர் நிறைவு பெறுகிறார் என்பது வருத்தத்தை அளிக்கிறது ...அதே சமயம் சாதாரண வெற்றி பெற்ற நாயகர்களே தொடர்ந்து கலக்கும் பொழுது ஷெல்டன் போன்ற அதிரடி வெற்றி நாயகரை ஏன் தொடராமல் நிற்கிறார்கள் இந்த படைப்பாளிகள் என அவர்கள் மேல் கோபமும் வருகிறது ..அவர்கள் மறந்தாலும்..... மிஸ்டர் ஷெல்டன் உங்கள் நினைவு எங்கள் நெஞ்சங்களில் எப்பொழுதும் குடி இருக்கும் டெக்ஸை போலவே என்று தெரிவித்து கொள்கிறோம் ..
ReplyDeleteParanitharan K : //சாதாரண வெற்றி பெற்ற நாயகர்களே தொடர்ந்து கலக்கும் பொழுது ஷெல்டன் போன்ற அதிரடி வெற்றி நாயகரை ஏன் தொடராமல் நிற்கிறார்கள் இந்த படைப்பாளிகள்//
Deleteஒவ்வொரு மார்கெட்டிலும் ஒரு மாறுபட்ட ரசனை நிலவிடக்கூடுமன்றோ ? ஆண்டுக்கு சுமார் 3500 புதுப் படைப்புகளைப் பார்த்திடும் அந்த பிரான்கோ-பெல்ஜிய மார்கெட்டில் ஷெல்டன் போன்ற ஆக்ஷன் கதைகளுக்கு வரவேற்புக் குன்றியிருக்கலாம் ! தவிர கதாசிரியர் வான் ஹாம்மே சிறுகச் சிறுக பணிகளைக் குறைத்து வருகிறார் என்பதும் கண்கூடு - லார்கோ தொடரிலிருந்தும் விடைபெறுகிறார் என்பதைப் பார்க்கும் பொழுது !
எல்லாவற்றிற்குமே ஒரு ஆயுட்காலம் உண்டு தலீவரே - மஞ்சள் சட்டைக்காரர் மாத்திரமே அதற்கொரு விதிவிலக்கு !
1. ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்?
ReplyDelete1000/10
2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please?
சுமார் -கிளப்டன் 2வது கதை...(கிளிப்டன் முழு நீள கதையை மட்டுமே இனிமேல் போடுங்கள் சார் )
மொக்கை - சாத்தானின் உள்ளங்கை (மேல மினுக்கு உள்ள லொடுக்கு , ஓவியங்கள் மட்டுமே போதும்ன்னா....)
3. மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ?
தி பெஸ்ட் பார்முலா ,சந்தா zம் சேர்ந்தால் அதகளம் தான் ...
4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா?
தற்போதைய காலங்களில் 1ம் தேதி வந்தாலே பரபரப்பு தொற்றி கொண்டு விடுகிறது சார் .முக்கனிகளை சுவைக்க,ஆவல் அதிகம் ஆகிவிடுகிறது இப்போதெல்லாம் . வாழ்க்கை அர்த்தம் கொண்டதாக இருப்பதே முதல் வாரம் மட்டுமே .
என்னை போன்ற நண்பர்கள் ஆங்கில காமிக்ஸ்களோ,வெளிநாட்டு ப்ரென்ச் காமிக்ஸ் களோ வாங்க வசதியும் இல்லை ,அப்படியே வாங்கினாலும் மொழி புரியாது .தயவுசெய்து மாதம் 4என்ற எண்ணிக்கை குறைக்க வேணாம் சார் .அடுத்த ஆண்டு மாதம் 5ஆக ,மாதம் ஒரு கி.நா.வும் சேர்த்து வெளியிட வேண்டுகிறேன் சார் .
சேலம் Tex விஜயராகவன் : "மாதமொரு கி.நா" !! அடடே...தலீவரை வச்சுகிட்டே இவ்ளோ தில்லா ஒரு statement !!
Deleteஆசிரியர் சார் @எங்கள் கட்சியில் ச்சே குழுவில் சகலருக்கும் சம உரிமை உண்டு...'
Deleteமேலும் இப்பல்லாம் தலீவரே கி.நா.தொண்டர் ஆயிட்டாரே....
//மாதம் ஒரு கி.நா.வும் சேர்த்து வெளியிட வேண்டுகிறேன் சார் .//
Deletenice +1
நைசா ....எல்லாம் போச்சு ...;-(
Delete@Paranitharan K
Deleteஏன் தலீவரே கி. நா- கள் அருமையாக உள்ளன
அதுவும் அந்த வியட்நாம் போர் வீரனை தேடி ஒரு பத்திரிகைகாரர் சுற்றுவாறே, எனக்கு மிகவும் பிடித்த கதை
//அதுவும் அந்த வியட்நாம் போர் வீரனை தேடி ஒரு பத்திரிகைகாரர் சுற்றுவாறே, எனக்கு மிகவும் பிடித்த கதை//
Deleteகொஞ்சம் கொஞ்சமா கிராபிக் நாவல் பக்கமா அடிச்ச அனல் காத்து அணையுதுன்னு பார்த்தா, ஆஹா.. மறுபடியுமா? இது எங்கே போய் முடியப் போகுதோ? எல்லாம் அந்த சிப்பாய்க்கே வெளிச்சம்!!
SeaGuitar9 : தலீவருக்கொரு கொரிய மாங்கா பார்சல் பண்ணுங்கள் ரம்யா !
DeleteVijayan SIR
Deleteதங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது சார் :)
கொரியாவிலும் கி. நா ரேஞ்சுக்கு கதைகள் உள்ளன,தலீவருக்கு ஒன்று அனுப்பி விட்டால் போச்சு :D
கொரியர் நண்பர்களே எனது முகவரிக்கு ஒரு வாரம் விடுமுறை ..;-)
Delete//வியட்நாம் வீரனை தேடி அலையும் நிருபர் //
Deleteஇந்த கதையின் பெயர் ஒ.சி.சு.இந்த கதையை முதலில் படித்தபோது காருக்குள் அமர்ந்து பலத்த மழையில் ஸ்வைப்பர் இல்லாமல் வெளியே பார்ப்பது போல் குத்து மதிப்பாக படித்தேன்.ஆனால் மேச்சேரிக்காரரின் உதவியால் டிஜிட்டல் தரத்தில் படம் பார்த்தது போல் இந்த கதை புரிந்தது.!கதை மற்றும் சித்திரங்கள் நானும் நிருபருடன் சேர்ந்து சுற்றுவதுபோல் மனதை வருடிய ஆனந்த உணர்வை கொடுத்தது.!
காமிக்ஸ் படிப்பது ஆனந்தம் என்றால் கி.நா.படிப்பது பேரானந்தம் ஆனால் புரியவேண்டுமே.?
ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களை நம்பி காமிக்ஸ் படிப்பது சாத்தியம் இல்லையே.?
This comment has been removed by the author.
Delete//தயவுசெய்து மாதம் 4என்ற எண்ணிக்கை குறைக்க வேணாம் சார் .அடுத்த ஆண்டு மாதம் 5ஆக //
Delete+1
//மாதம் ஒரு கி.நா.வும் சேர்த்து வெளியிட வேண்டுகிறேன் சார் .//
விஜி தலைவரையும், MV யும் எங்காவது கடத்திட்டுப் போய் ஒரு ரெண்டு மாதம் அடைச்சு வச்சா தான் கி.நா வரும். மாதம் ஒன்று என்பது கிட்டங்கியை நிரப்பி விட்டாலும் விடும். நல்ல சிறந்த கி. நா வா ஒரு வருடத்திற்கு ஒரு ஆறு வந்தால் சரியா இருக்கும். தோர்கல், XIII கிளைக் கதைகள் எல்லாம் இந்த ஆறில் வந்தால் சரியாய் இருக்கும். திரும்ப திரும்ப கி.நா எதிர்ப்பு பதிவுகள் மிகுந்த அயர்ச்சியை தருகிறது. பிடிக்காத கதைகளை தனித் தண்டவாளத்தில் வரும் போது தவிர்ப்பது அனைவருக்குமே எளிது. வேண்டாமென்றால் வாங்காமல் விட்டு விடலாம். விற்பனையை பொருத்து ஆசிரியர் அவற்றை தொடரலாம் அல்லது கஸ்டம் பிரின்டாக வெளியிடலாம் அல்லது சுத்தமா நிறுத்திடலாம். இராவணன் இனியனின் "மாடஸ்டிக்கு மாமியாராக இருக்காதீர்கள்" என்ற பின்னுட்டம் தான் நினைவுக்கு வருகிறது.
MV சாருக்கு ஒரு மிரட்டல் : :)
எங்கிட்ட 99 மாடஸ்டி கதையும் இங்கிலிஷ்ல வந்தது இருக்கு. அதனால் எனக்கு இனிமே மாடஸ்டி கதையே வேண்டாம். :) இனிமே நீங்க எப்ப கி.நா. எதிர்ப்பு பதிவு போட்டாலும் நான் மாடஸ்டி எதிப்பு பதிவு போடலாம்னு இருக்கேன். எப்படி வசதி :)
தலீவர் மற்றும் MV - நிறைய smiley போட மறந்துட்டேன்... அதனால சீரியஸா எடுத்துக்காதீங்க..
Deleteமஹி சார் @ அட்டகாசமான ஐடியாஸ் ...
Delete1.வருடம் ஆறு கி.நா.கள்.,ஒரு மாதம் விட்டு மறுமாதம் ....
2.கி.நா.எதிர்ப்பு =இளவரசி எதிர்ப்பு
இன்னும் சில கி.நா.க்கள் கண்ணில் ஆடுகின்றன ..
எமனின் திசை மேற்கு...
க்ரீன் மேனர்...
மனதில் மிருகம் வேண்டும் ...
சிப்பாயின் சுவடுகள் ...
இரவே இருளே கொல்லாதே ...
தேவ ரகசியம் தேடலுக்கல்ல....
ரெளத்திரம் பழகு....
சர்ப்பங்களின் சாபம்...
கறுப்பு விதவை ....
சொர்க்கத்தின் சாவி...
மூன்றாம் உலகம் ...
.....
.....
.....
இன்னும் இந்த வரிசையில் வரக் காத்திருக்கும் எண்ணிலடங்கா பொக்கிஷங்கள்....
அதுவும் அந்த கிரீன் மேனர் -ரியல் ஸ்டன்னர் ....
காத்திருக்கும் பெளன்சர் பாகங்கள் 8&9- மயிர்கூச்செரியும் காட்சிகள் நிறைந்தவை ...மேலும் படிக்கும் போதே மனசை கனக்கச் செய்யும் ..
இந்த இரண்டும் ஆங்கிலத்தில் படிப்பதற்குள் தாவு தீர்ந்தது ,ஆசிரியரின் அழகு தமிழில் காண ஆவலுடன் ...ஆவன செய்யுங்கள் ஆசிரியர் சார் ....
இனிய காலை வணக்கங்கள் எடிட்டர் சார் :)
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)
1. சட்டத்திற்கொரு சவக்குழி - 7/10
ReplyDelete2. திகில் நகரில் டெக்ஸ் - 6.5 / 10
3. விதி போடும் விடுகதை - 7.5 / 10
புத்தங்கள் கோவைக்கு நாளைதான் வந்து சேரும்மாம்
ReplyDeleteஇம்மாதம் புக்ஸ் ரொம்பவே எதிர் பார்கிறேன்
அனைத்தும் சூப்பர் ஹிட் தான் சார்
டெக்ஸ் ராப்பர் இரண்டாவது அட்டை படம் தானே சார்
உங்க சாய்ஸ் செரியாக guess பண்ணி விட்டேன் Sir :)
தங்கள் வீட்டு குட்டீஸ் photo வில் டெக்ஸ் புத்தகத்தின் முன்னட்டை படமும், மற்றும் பின்னட்டை படம் கண்ணாடியில் தெரியுமாறு எடுத்தது சிறந்த idea Sir :)
SeaGuitar9 : :-)
Deleteகூடவே டிவியில் சீனியர் எடிட்டர் தூள்
Deleteடெக்ஸின் தனிதடத்திற்கு எனது மதிப்பெண்
ReplyDeleteபத்துக்கு பத்து இன்டூ பத்து
இதுவரை மொக்கை இதழ்கள் தென்பட வில்லை சார் ..ஆனால் சுமார் என்று சொல்ல ஒரு கதை வந்து விட்டது ..அது காமெடி கர்னலின் இரண்டாம் கதை ..என்னை பொறுத்த வரை ...
******
அந்த நல கூட்டணி எப்படி வேண்டுமானாலும் போகட்டும் ..எப்போது வேண்டுமானாலும் பிரியட்டும் ...ஆனால் இந்த காமிக்ஸ் நல கூட்டணி இந்த வருடம் மட்டுமல்லாமல் இனி எவ்வருடமும் பிரியாத கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதே காமிக்ஸ் தொண்டர்களின் வேண்டுதல்கள்....சார் ..
உங்கள் பதிவில் சொன்னபடி உண்மையோ உண்மை சார் ஒரு கருத்து ...
ReplyDeleteலார்கோ வரும் பொழுது அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும் ..ஆனால் டெக்ஸ் என்ற பெயருக்கு முன்னாள் லார்கோ வே ஆடி போய் விட்டார் என்பது உண்மை ...ஆனால் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை பலமாகவே உண்டு ...;-)
தப்பு தலீவரே ...தல வேற...லார்கோ எல்லாத்துக்கும் மேல...வடிவமைப்பே எல்லாத்தயும் மிஞ்சி விட்டது ...இதே சைசுல லார்கோ வந்தால்..ஓ..ஓ..ஓ..ஓ
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //இதே சைசுல லார்கோ வந்தால்..ஓ..ஓ..ஓ..ஓ//
Deleteஒரு நிகோலாவுக்கே குற்றாலப் பிரவாகம் என்றால் - MAXI size லார்கோவின் பட்டாம்பூச்சிக் கும்பலுக்கு நயாகரா நடைமுறை கண்டுவிடும் நண்பரே ! கோவை தாங்காது !
சார் நீங்கள்ளாம் பேசாதீங்க சார்...கான்கிரீட் கானகத்துல எதுக்கெல்லாமோ கத்திய வச்சிட்டு கான்கிரீட் கானகத்துல அந்த பட்டாம் பூச்சிய கொன்னு லார்கோவயு , என்னயும் கதற விட்டீங்களே...அங்க கத்திய வச்சு கடசில லார்கோவோட டூயட் ..அப்போ சொல்வேன் நல்ல ெடிட்டர்னு....
Deleteசார் மதல் பக்கம் அந்த எழுத்துக்களாலும்...ஓவியங்களாலும் காற்றில் நெருப்பு சடசடக்கும் ஓசை நிஜமாய் கேட்க ...பாலை நில கள்ளிகளும் புதர்களும் வசீகரிக்க மெதுவாய் நகரும்கதய பாதி படித்து காலை பார்ப்போம் என நினைத்தால் மாறி மாறி டெக்ஸ்...கிட்...மோரிஸ்கோ என கதயினூடே ஜெட் வேகத்தில் பரபரப்பாய் டெக்ஸ் துரத்தி சென்று நிகோலாவை பிடிக்கும் வரை கீழே வைக்கவில்லை...பின் பாதி ஜெட் வேகம்....அதிலும் நிகோலா அட்டகாசம்...ஓவியங்கள் பிரம்மிப்பு...கள்ளிகள் , புதர்கள் ,காற்றாலை பின்னணி வீடு வண்டி , அதிலும் அந்த நாணல் நிறைந்த சதுப்பு நில ிரவு பல பக்கங்களில் கண்களை வருடிச்சென்றால் ...நிகோலா அழகு வரம்வாங்கி வந்த கண்களை வாய்பிளக்க செய்தது அற்புதம்....காலை எழுந்து மீதியை முடிக்கும் போது பின்னட்டை இந்த பிரம்மாண்டத்திற்க்கு கூடுதல் அழகு செர்த்தது மிகை அல்லவே....மூடி வைக்கும் போதும் வசீகரம்...... அற்புதமான விவரிக்க இயலா உணர்வை வழங்கிய ....அமைப்பில் ,அளவில் ,அழகில் ,பின்னட்டயில் கூடபிரமம்மாண்டத்தில் வழங்கிய தங்களுக்கு நன்றி தவிர ஏதும் சொல்ல முடியவில்லயே என்பதே குறை......கனவுக் கன்னி என்பார்களே அது நிகோலாதானோ
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : விபரமான ஆள் சார் நீங்கள் ! காலையில் எழுந்திருக்கும் போதே கடைவாயோரம் ஒரு "நிகோலா நீர்வீழ்ச்சி" இருந்தாலும் - சமாளித்துக் கொள்ளலாமல்லவா ?!!
Deleteபோங்க சார் விவரமெல்லாமில்ல...ெங்க கனவு கன்னிய கொன்னுறுவீங்களோன்னுதான் ...நல்ல வேள நடமாட விட்டீங்களே...காலயில பாலூத்த விடாம பால் வாத்தீங்கள சாமி..நீங்க நல்லா இருக்கணும்
Deleteஇ ப வண்ண வெளியீடு எப்போது??????
ReplyDeleteஆர்வமுன் காத்திருக்கிறேன்.
durai kvg : நிச்சயம் உண்டு....நம்பிக்கை + பொறுமை ப்ளீஸ் !
Deleteபொறும பொறுமன்னு சொல்றீங்களே எத்தன காலத்துக்குதான் பொறும....இரத்த படலம் திரும்ப வரது எப்போ...டயானா முகத்த வண்ணத்துல பாக்குறது எப்போ...
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : பொறுமை என்ற பதத்துக்கு விளக்கவுரை பார்த்தேன் :
Delete**காத்திருக்கும் சூழ்நிலைகளில் எரிச்சலையோ, கோபத்தையோ கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும் ஆற்றல் !
**அயர்ச்சியின்றி நிதானத்தைக் கடைபிடிக்கும் குணம்.
**களைப்போ, சங்கடமோ, இடர்பாடுகளோ தலையிட்டாலும் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பாங்கு.
**மாறுபட்ட கருத்துக்களோ, பழக்க வழக்கங்களோ முன்னின்றாலும் அவற்றை அரவணைக்கும் எண்ணவோட்டம் !
ஆனா நாங்க கேட்டது இது இல்லய சார்....இன்னும் பொறுமய சோதிக்கிறீங்களேஏஏஏஏஏள....சோதனை மேல் சோதனை போதுமடா சாமி இரத்தபடலம் இல்லை என்றால் தாங்காது பூமி....
Deleteசார் இந்த விளக்க உரைகளுக்கு கொஞ்சம் கீழ போயிருந்தீங்கன்னா எ..கா . ச.பொன்ராஜ் என போட்டிருப்பதை காண முடிந்திருக்கும்....
Deleteஅந்த அப்பாவிகள் காத்திருப்பது இப்போதிலிருந்தல்ல ...ஏறத்தாழ இருபது ஆண்டுகளாய் (நன்றி டெக்ஸ்....கார்சனின் கடந்த காலம் )
சீக்கிரம் சார் என் மகள் வளர்ந்துகொண்டிருக்கிறாள் எட்டு மாத குழந்தையாக இருந்த போது முதல் கேட்கிறேன் இப்போ மூணு முடிஞ்சு நாலு ஆச்சு
Deleteடெக்ஸ் கதை அருமை். மதலில் பெரிய சைஸில் பார்த்தது். டெக்ஸ எழுத்துக்கள் மின்னுவது சூப்பர். கதையின் களம் பாலைவனம் என்பதால் கதை ஒரு பயங்கர thriller பாணியில் ஒரு அமானுஷ்யமாக நகருகிறது். பாலைவனங்களில் நடக்கும் அமானுஷ்ய கதைகள் கண்டிப்பாக எல்லா வாசக்ர்களாலும் ரசிக்கப்படுகின்றன். TeX Cult classic வகைபடுத்தப்படும் அருமையான கதை இது.
ReplyDeleteleom : நவீன டெக்ஸ் கதைகளுள் இதுவொரு cult classic !
Delete//டெக்ஸ எழுத்துக்கள் மின்னுவது சூப்பர்.//
Delete+1
TeX கதை சித்திரங்கள் மிக அருமை். ஓவியருக்கு பாராட்டுக்கள் இப்படிபட்ட ஒரு பாலைவன அமானுஷ்ய thriller ஐ வழங்கிய உங்களுக்கும் என்னுடைய பாராட்டக்களும், நன்றிகளும் எடிட்டர் சார்
ReplyDeleteமேலும் பாலைவனத்தில் நடக்கும் இது போன்ற மர்ம, மந்திர,தந்திர horror வகை கதைகளுக்கென்றே பல படங்கள எடுக்கபடுகின்றன என்று கேள்விபட்டு உள்ளேன் எடி சார்
ReplyDelete// ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள் //
ReplyDeleteசந்தேகமே இல்லாம 100 / 100 தான்,
டெக்ஸ் இன் தனி தண்டவாளம் மேலும் மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது,அதற்கு ஏற்றார்போல் வெளிவரும் ஒவ்வொரு இதழும் எதிர்பார்ப்பைமுழுமையாக பூர்த்தி செய்து வருகிறது என்பததே உண்மை.
நான் சிறு வயதில் படித்தது. கதை பெயர் தெரியவில்லை். அதில் டெக்ஸ் "மாஷை" என்ற இளம் சூனியக்காரியுடன் மோதுவார். யாருக்கேனம் தெரியுமா்.... Guys.
ReplyDeleteசைத்தான் சாம்ராஜ்ஜியம் -திகிலில் வந்த ஒரே டெக்ஸ் கதை அது நண்பரே..
Deleteதிகில் கோடை மலர்
Deleteஎடிட்டர் சார்..!
Deleteடெக்ஸ் க்ளாஸிக் ரீபிரிண்ட் லிஸ்ட்டில் சைத்தான் சாம்ராஜ்யமும் இருக்கிறதில்லையா....?
// ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும்? மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please? //
ReplyDeleteஎனது ரசனை,பார்வையின்படி இதுவரை அப்படி எந்த இதழும் இல்லை.
இதுவும் ஒரு பாலைவன அமானஷய கதைதான் ஆனால் செவ்விந்திய நரபலி கொடுக்கும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கதை். பல நாட்கள் என்னை ஒரு வித அச்சத்தில் ஆழ்த்திய கதை்
ReplyDeleteஞாயிறு வணக்கம் எடிட்டர் சார்.
ReplyDeleteஞாயிறு வணக்கம் நண்பர்களே.
ஞாயிறு வணக்கம் Calamity Jane :)
Deleteவணக்கம் sea guitar 9.
DeleteThis comment has been removed by the author.
DeleteJanuary - April காமிக்ஸில் மொக்கை என்று எதுவும் என் கணிப்பில் இல்லை
ReplyDeleteகர்னல் கிளிப்டன் கதைகளில் இரண்டுவது கதை கொஞ்சம் சுமார்
SeaGuitar9 : Clifton கதைகளுள் லேட்டஸ்ட் எவ்விதமுள்ளன என்று பார்வைகளை ஓடவிட்டுப் பார்த்தாக வேண்டும் ! இதுவரை வெளிவந்துள்ள 3 கதைகளுமே தொடரின் துவக்க நாட்களின் படைப்புகளே !
Deleteடெக்சின் தனித்தடத்திற்க்கு 10/10
ReplyDeleteமொக்கை சுமார் கதைகள் என்று எதையும் சொல்லத் தோணவில்லை.
மாதம் ஒரு கார்ட்டுன் சந்தோசம் மட்டுமே தருகிறது.
மாதம் நாலு புக்சும் நாலு விதத்தில் நன்றாக இருக்கிறது. இதையே தொடர்ந்து செய்யலாம். இவற்றுடன் ஆண்டிற்கு ஓரிரண்டு ஷ்பெஷல் குண்டு புக்சும் எதிர்பார்க்கிறேன் சார் .
Calamity Jane : //ஆண்டிற்கு ஓரிரண்டு ஷ்பெஷல் குண்டு புக்சும் எதிர்பார்க்கிறேன் //
Deleteஜேன் இருக்க பயமேன் ? குண்டு புக்குகள் இல்லாத ஆண்டே இராது !
டியர் விஜயன் சார்..
ReplyDeleteடெகஸ் Maxi Size ஒரு சந்தோஷ அதிர்ச்சி. நமது வழக்கமான வண்ணப்புத்தகங்களின் அளவில்தான் எதிர்பார்த்தேன். Hard Cover இருந்திருந்தால் இன்னும் அருமையாக அமைந்திருக்கும்.
இதே சைசில் நமது அனைத்து வண்ணப்புத்தகங்களையும் வெளியிட்டால் என்ன சார். ஒரிஜனல் Cinebook Sizeல்.
Jan - Apr வந்த டெக்ஸ் கதைகளில் இதுவரை எதுவும் அலுக்கவில்லை.
புதுவை செந்தில் : //இதே சைசில் நமது அனைத்து வண்ணப்புத்தகங்களையும் வெளியிட்டால் என்ன//
Deleteஸ்வீட்டும், காரமும் அளவாய் இருக்கும் வரையே தித்திக்கும் ! நித்தமும் சாப்பிட்டால் அஜீரணமாகிப் போகாதா ?!
This comment has been removed by the author.
Delete// மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா ? //
ReplyDeleteகண்டிப்பாக சுகப்படுகிறது,இந்த தனி தண்டவாள யோசனை மிக சிறப்பானது,இதில் மாற்றம் ஏதேனும் செய்ய விரும்பினால் A + B + C + D சந்தாவுடன் துணைக்கு E + F + G + H மற்றும் Z என கூடுதல் சந்தாக்களை இணைத்துக் கொள்ளவும்.
Arivarasu @ Ravi : பாக்கி எழுத்துக்கள் மீதென்ன கோபம் சார் ? அவற்றையும் பட்டியல் போட்டு விடலாமே ?
Deleteஹா,ஹா,ஹா.
Deleteஹி,ஹி,ஹி.
// ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும்? இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா? //
ReplyDeleteமுக்கனிகள் சுவையும் எப்படி அசத்துகிறதோ அதுபோலத்தான்,இந்த முக்கூட்டு காமிக்ஸ் நலக் கூட்டணியும் சுவையோ சுவை அசத்தல் சுவையாக்கும்.
தலையில்லா போராளி கண்டிப்பாக பிளாக் பஸ்டர்தான் ஓவியங்கள் மிக பிரமாதம் ஓவியங்கள் எமனின் வாசலில் ஓவியங்களோடு போட்டி போடுகிறது ரொம்ப நாட்களுக்கு பிறகு கிட் கலக்குகிறார் கல்லால் அடித்தவர்களை நையைப்புடைப்பது தலையில்லா போரளியை தனியாக தைரியமாக எதிர் கொள்வது என பிரமாதப்படுத்துகிறார் டெக்ஸின் மகன் என்பதை கம்பீரமாக நியாயம் செய்கிறார் கார்ஸன் அதிரடியில் மட்டுமல்ல காமெடியிலும் விலா நோக்கி வைக்கிறார் ஒரு இளம் பெண்னோடு டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைக்கும்போது டெக்ஸ் தடுக்கும்போது டெக்ஸை பார்கிறார் பாருங்கள் ஒரு பார்வை செம அதையே நினைத்து புலம்புவது ஆர்டினுக்கு சவால் விடுகிறார் டெக்ஸ் தலையில்லா போரளியை சாய்கிறார் பாருங்கள் அது ஒன்றே போதும் தல தலதான் மொத்தத்தில் 4 டெக்ஸ் கதைகளில் முதலிடத்தை தலையில்லா போராளி தட்டி கொண்டது
ReplyDeleteSenthil Sathya : 'தல' கதைகள் கூடுதலாய் ஜொலிக்க கார்சன் + கிட + டைகர் கூட்டணி ஒரு முக்கிய காரணமும் கூட ! இந்தாண்டின் கதைத் தேடல்களின் போது அதனையும் ஒரு முக்கிய விஷயமாய்க் கருதியதன் பலன் இன்றைக்கு கண்கூடாய்த் தெரிகிறது !
Delete//'தல' கதைகள் கூடுதலாய் ஜொலிக்க கார்சன் + கிட + டைகர் கூட்டணி ஒரு முக்கிய காரணமும் கூட !//
Delete+1
+1
Deleteஇந்த வாரம் நிறைய பேரை காண வில்லை Sir :)
ReplyDeleteMind Voice -(காமிக்ஸ் படிப்பதில் எல்லாரும் மூழ்கிட்டாங்களோ )
தாங்கள் சொன்ன மாதிரி போன வாரம் மறுபதிப்பின் மாயாஜாலத்தின் ஈர்ப்பு
SeaGuitar9 : "ஆல்-இன்-ஆல் அழகுராஜா சைக்கிள் கடை - இங்கே வாடகை சைக்கிள்கள் கிடைக்கும்" என்ற போர்டுக்கும், "முந்தைய வெளியீடுகள்" பற்றிய பதிவுக்கும் நெருங்கிய சொந்தம் உண்டு !! டபாரென்று ஒரு சைக்கிளை எடுத்துப் பின்னோக்கிச் சவாரி செய்வது சுகமான பொழுதுபோக்கு !
Deleteஎடிட்டர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். . இப்போதெல்லாம்ஞாயிறு விடுமுறை நாள் என்பதை மறந்து நமது எடிட்டரும் நண்பர்களும் சங்கமிக்கும் நாள் என்பதுமட்டுமே நினைவிற்கு வருகிறது. பொக்கிஷபெட்டியை கைபற்றியாகிவிட்டது. டெக்ஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மனது பழைய நிலைக்கு திரும்பவில்லை. புத்தகத்தை புரட்டி ரசிக்கவே இன்றைய நாள் ஓடிவிடும்.கதையெல்லாம் நாளைக்குத்தான் படிக்கமுடியும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் நம்பவே முடியவில்லை. மாதம் நான்கு இதழ்கள். அவ்வளவும் அற்புதம். எப்படி இது சாத்தியமாகிறது சார். இதற்காக எவ்வளவு முறை உங்களுக்கு நன்றி தெரிவித்தாலும் தகும். இப்போதைக்கு சூப்பர் சார்.சூப்பர்.பல கோடி நன்றிகள்.
ReplyDeleteசாா் history tv 18ல் omg yeh mera india என்ற show ஒளிபரப்புகிறா்கள் அதில்நாமும் பங்கேற்க +91-959508 2082 என்ற எண்ணுக்கு missed call செய்யுங்கள் இந்தியவிள் நாம் மட்டுமே eroupe காமிக்சை வெளிஇடுகிறோம்
ReplyDeleteமேலும் செய்திக்கு என்னை தொடா்பு கொள்ளவும்
8903132348 whats app.....
ஆர்ட்டினின் ஆயுதம்
ReplyDeleteஒன் மேன் ஆர்மியாக ஆர்டின் கலக்குகிறார் ஆர்டினின் கிறார் வாசிப்பில் கூறுகிறார்கள் பாருங்கள் குழந்தைகள் மீது இரக்கம் காட்டப்பா சொத்தை எழுதி தருகிறேன் நிறுத்து என் மொத்த ஆஸ்தியையுமே ரொக்கமாகத் தந்துடுறேன் கண்ணில் நீர் வர சிரித்தேன் என்னை என் மனைவி வித்தியாசமாக பார்த்தாள் மொத்தத்தில் மன நிறைவு தந்ந தந்த சூப்பர் காமெடி இதழ்
தங்க தலைவன் எப்போதும் வருவார்???
ReplyDeleteஈரோட்டில் அறிவித்த கேப்டன் பிரின்ஸ் டைஜஸ்ட் எப்போது????
இந்த மாத டெக்ஸ் இதழ் ஒரு அசத்தலான இதழ்,சித்திரங்கள் மிக அருமையாக உள்ளது,கதை சொல்லும் படங்கள் என்பதை தாண்டி உணர்வுகளை கடத்தும் படங்கள் என்று தாரளமாக கூறலாம்,மெகா சைஸ் இல் தல இதழை பார்க்கும்போது இதை மாதாமாதம் தரிசிக்க முடியாதா என்ற ஏக்க உணர்வை ஏற்படுத்துகிறது,இத்தாலி ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் மெகா சைஸ் இல் அடிக்கடி தரிசிக்கலாமே.
ReplyDeleteமொழிபெயர்ப்புகள் சிறப்பாக உள்ளது,இரண்டு நாட்களாக இந்த இதழை மட்டுமே பார்த்துக் கொண்டு உள்ளேன்,கதையாக விவரித்தால் தனிக் கட்டுரையே போடலாம்.
கதையின் போக்கு விறுவிறுப்பையும்,திரில் உணர்வையும் சரிவிகித கலவையில் ஏற்படுத்துகிறது,கார்சனுடனான வசனங்கள் இதழோர புன்னகைகளை வரவழைத்தாலும்,கதையின் ஓட்டத்தை சற்றே மட்டுபடுத்துவது போல் தோன்றுகிறது,மேலும் வசனங்களாகவே பெரும்பாலான காட்சிகள் கடந்து செல்கிறது.
இந்த வருடம் வெளிவந்த தல இதழ்களில் இந்த மாத இதழே பெஸ்ட்.
ReplyDelete1 ஏப்ரல் அன்று, மாலை வீட்டிற்கு வந்தவுடன், பார்சலை என் மகள் கொண்டு வந்து "அப்பா நான் பிரிக்கிறேன்" என்று கூறி பிரிக்க ஆரம்பித்தாள். அதே சமயம் நான் கணினியில், நமது ப்ளாக் பக்கத்தை ஓபன் பண்ணேன், ஆனால் பதிவை படிபதற்கோ, scroll பண்ணி பாற்பதற்கோ முன்பாக எதோச்சையாக திரும்பி பார்த்தால்.... அப்படியே வியப்பில் ஆழ்ந்து அசந்து விட்டேன். அப்பவும் ஒரு சிறு சந்தேகம் மனதில் "என்ன இது லார்கோ புத்தக சைஸ் சின்னதாக இருக்கு" என்று நினைத்து கொண்டே, அவசரமாக என் மகளின் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி பார்த்தால்.... Wowwwwwwwwwwww அப்படியே மலைத்து விட்டேன். காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த எனது இத்தனை வருட காலங்களில், இது வரை நான் அனுபவிக்காத ஒரு புது வித உணர்வு என்னுள் எழுந்தது . அப்பப்ப்ப்ப்ப்ப்பா விவரிக்க இயலாத உணர்வகள்... இந்த தருணத்தை தந்த எடிட்டர் சார், ஜூனியர் எடிட்டர் மற்றும் டீம் கு Hats off.
ReplyDeleteஇவைகளுக்கு பிறகு தான் நமது ப்ளாக் ஐ பார்த்தேன், அதில் ஏற்கனவே மெகா சைஸ் பற்றிய தகவல்கள் படத்துடன் இருப்பதையும் பார்த்தேன். முன் கூட்டியே பார்த்து இருந்தால், இந்த புது அனுபவத்தை முழுதாய் உணர்ந்து இருக்க முடியாது.
மீண்டும் நன்றிகள் பல..
ஆசிரியருக்கு ஒரு கேள்வி: உண்மையை சொல்லுங்கள், இம்மாம் பெரிய புத்தகத்தை 200 ரூபாய்க்கு கொடுத்ததில் உங்களுக்கு சிறிதேனும் நட்டம் ஏற்படவில்லையா?
பிகு: இன்னும் கதையை படிக்கவில்லை.
Dasu Bala : நஷ்டப்பட்டு, மான்ய விலையில் விற்பனை செய்வதெல்லாம் அரசாங்கத்துக்கே கட்டுபடியாகாத இந்நாட்களில் நாமெல்லாம் நினைத்தாவது பார்க்க முடியுமா நண்பரே ? நிச்சயமாய் நஷ்டம் கிடையாது ; ஆனால் லாபம் பார்க்க இந்த இதழ் தீரும் வரைக் காத்திருக்க வேண்டும் !
Deleteமற்ற இதழ்களை இனிமேல்தான் படிக்க வேண்டும்.
ReplyDeleteகடன் தீர்க்கும் நேரமிது
ReplyDeleteஅமர்களமான அட்டையில் ஆரம்பித்து கதையும் அமர்களமாகவே போகிறது கையில் கத்தியுடன் லார்கோ தியானம் செய்யும் பின்னட்டையே பல நூறு கதை சொல்கிறது டான் கழுத்தறுப்பட்டு கிடப்பதை பார்த்து லார்கோ கதறுமிடத்தில் தன் இயலாமையை முகத்திலேயே துல்லியமாக காட்டி விடுகிறார் நண்பன் சாவிற்கு பலி வாங்கும்போது லார்கோவின் ஹீரோயிஸம் பிரமாதம் இம் மாதிரி அருமையான கதைகளை வழங்கியதற்கு உங்கள் கடனை நாங்கள் எப்போது தீர்க்க போகிறோமோ தெரியவில்லை மொத்தத்தில் இதுவரை கடந்து போன நான்கு மாதங்களில் ஐனவரியை ஏப்ரல் தூக்கி சாப்பிட்டு விட்டது டெக்ஸின் புத்தக சைஸ் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏப்ரலை எளிதில் மறக்க முடியாது நன்றி ஆசிரியரே
சார் சத்தியமாஆஆஆஆ என்னோட லார்கோ புக்கு கையிலெடுத்தால் சின்னதாயிட்டேஏஏஏஏ போகுதேஏஏஏஏ...
ReplyDelete@ ALL : செல்பிக்கள் குவிகின்றன - பாருங்களேன் அந்தப் பக்கத்தையும் !
ReplyDeleteசார் ..நல்ல வேளை சொன்னீங்க ..நான் அந்த பக்கத்தையை (பதிவையே )இப்பொழுது தான் பார்க்கிறேன் ...அனைத்தும் அழகு ...எனது புகைப்படத்தை மெயிலில் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் இருந்த எனக்கு உதவி புரிந்த ஈரோடு ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி ..;-)
Deleteஎடிட்டருக்கும், நண்பர்களுக்கும் மதிய வணக்கங்கள்..!
ReplyDeleteவரும் ஜூன் மாதம் தீவுதிடலில் புத்தகதிருவிழா நிச்சயமாகையுள்ளதால், டிவியில் கூட செய்தியாக வந்து உறுதியாகிவிட்டதால், என் பெயர் டைகர்+முத்து மினி செட் இரண்டும் புத்தகதிருவிழாவில் வெளியிட்டால் நண்பர்கள் வருகைக்கும், விற்பனைக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்..!
அல்லது புத்தகத்திருவிழாவிற்கு வேறு ஏதும் அதிரடி திட்டம் [தோர்கல் நாலுகதை டைஜஸ்ட்] இருந்தால் டபுள் ஒகே..! ஸ்பெஷல்ஸ் இல்லாமல் வெறுங்கையோடு மட்டும் வந்துடாதிங்க ஸார் ப்ளிஸ்...!
மாயாவி.!
Delete+1
மாயாவி ஜி சென்னைக்கு ஒண்ணரை டிக்கெட் எனக்கும் என் மகளுக்கும்
DeleteSir
ReplyDeleteEven 100 albums a year is insufficient . Need moreeeeee......
LION COMICS = TEX
ONE CANT IMAGINE LION EXCLUDING TEX...
PLEASE INTODUCE "Z" soon.
தலையில்லா போராளி
ReplyDeleteகதாசிரியர் ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை எழுதியிருப்பவராக இருக்கக்கூடும்
நிகோலா ஓவியரின் முன்னாள் காதலியின் முகமாக இருக்கக்கூடும்
This comment has been removed by the author.
ReplyDeleteபொருத்தது போதும் பொங்கியெழு மனோகரா ஸாரி பழனிவேலா ......!
DeleteNamathu kolgai mulakka padalஎரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் ரத்தபடலத்துக்கு இன்னுமா உறக்கம்
Deleteஎரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் ரத்தபடலத்துக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் ரத்தபடல சிறையின் கதவு தெறிக்கும்
நாம் இரத்தப்படலம் படிக்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டிவிட்டது; புத்தகம் கேட்போர் எண்ணிக்கை வற்றிவிட்டது காலம் இங்கே ஆசிரியர் கையைக் கட்டி விட்டது; விற்பனை சுட்டுவிட்டது புத்தகம் பிடித்தவர் கேட்டு இளைத்தவர் எண்ணம் விதைத்தவர் ரயிலில் படித்தவர் போராடிக் கேட்கும் காலம் வந்தால் ரத்தப்படலங்கள்தூங்காது.
இரத்தப்படலம் கேட்பவர் சீதனம்
இரத்தப்படலம் கேட்பவர் சீதனம் எழுதியபடி தான் நடக்கும் எல்லாம்
ஆசிரியர்வசம் என்பதை விட்டுவிடு தேவை உன் மனதில் இருக்கும்போதே எது நிசம் என்பதை காட்டிவிடு
காலம் புரண்டு படுக்கும் நம் இரத்தத்த் துளியைத் துடைக்கும்
இரத்தப்படலம் படிப்பவர் சீதனம்
இரத்தப்படலம் படிப்பவர் சீதனம்
எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் ரத்தபடலத்துக்கு இன்னுமா உறக்கம்
எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் ரத்தபடலத்துக்கு இன்னுமா உறக்கம்
எங்கள் வர்க்கம் ரத்தபடலத்துக்குள்ளே முத்துக் குளிக்கும்;. பின்பு ரசித்து பிழைக்கும் மாடஸ்தி வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும் அதில் மடிப்பாக்க கண்ணீர் மிதக்கும்
வேண்டி உழைத்தவர் கிடைக்காமல் இளைத்தவர் சுடச்சுட அழுதவர் அடிக்கடி கேட்டவர்
வெற்றிச்சங்கூதும்போது ரத்தபடலங்கள் தூங்காது எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நம் ரத்தபடலத்துக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
இரத்தப்படல சிறையின் கதவு தெறிக்கும்
நாம் இரத்தப்படலம் படிக்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
இரத்தப்படலம் படிப்பவர் சீதனம்
இரத்தப்படலம் படிப்பவர் சீதனம்
atr 2018 தங்களுக்கே ஓவரா படலீயா...அதற்கெதுக்கு போராட்டம்னேன்...இந்த தலையில்லா போராளி முழுதும் விற்றுத் தீர்ந்ததும் ஆசிரியர் அறிவிக்க வேண்டும்....இப செயல் திட்டத்தை...பிடித்த நண்பர்கள் இதற்கொரு அட்டை படத்தை xiii எனும் எண் தங்கத்தில் அட்டய பெரிதளவில் ஆக்கிரமிக்கும் வண்ணம் அனைத்து நாயகர்களும் அட்டை முழுதும் வியாபிக்கும் வண்ணம்...இவன்
Deleteஇப போராட்டக் குழு
தோழரே நம் ஆசிரியரை பற்றி உங்களுக்கு தெரியாதா? நாம் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும் அசைந்து கொடுக்க மாட்டார். அவருக்கே எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் அசைந்து கொடுப்பார். கடந்த கால நிகழ்வுகளை நீங்கள் பார்த்தாலே புரியும். எனவே இந்த மாதிரியெல்லாம் போட்டு வாங்கினால் தான் உண்டு. உங்களது உள்ளத்தின் ஆசைதான் எனக்கும் நண்பரே. ஒன்று சொன்னால் நம்புவீர்களா என தெரியவில்லை. இரத்தபடலம் கதையை பாதியிலே நிறுத்திவைத்துள்ளேன். சத்தியமாக சொல்கிறேன். அந்த கதை செல்லும் தடமும்,ஓவியங்களும் படித்தால் கதையை வண்ணத்தில் படிப்பது இல்லையேல் அதுவரை படிக்காமல் இருப்பது என்ற உறுதியுடன் இருக்கிறேன்..அந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தை வண்ணத்தில் நம் கையில் ஏந்தும் பாக்கியம் கிடைத்தால் அது நமக்கும் பெருமை. நம் எடிட்டர் இந்திய அளவில் காமிக்ஸ் சாதனையாளராவதும் உறுதி.அது போல் காமிக்ஸ் வந்ததுமில்லை. இனி வரப்போவதுமில்லை. நாளைக்கே இதுபற்றி எடிட்டர் அறிவித்தால் முதல் சந்தா என்னுடையதுதான். என்மேல் எந்த சந்தேகமும் வேண்டாம்.
Deleteஆனால் நான் எததனை முறை படித்திருப்பேன் என்பது நினைவிலில்லை...லார்கோ வருவதற்க்கு முன் ஏதேனும் ஒரு பக்கத்த புரட்டி அங்கிருந்து துவங்குவேன்...ஆச்சரியம் ...அற்புதம்...அனைத்து சோதனைகளையும் தாங்கி மீறி வரும் xiiiநம்பிக்கையின் உச்சமென்றால்...இக்கதை ஒன்று போதும் சிறுவர்களுக்கு ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்கள் தருவதை கதை வாயிலாக சுவாரஷ்யமாக புகட்டிட....மேலும் கிளைக் கதைகள் விற்பனை குறயக் காரணம் கூட ிதை முழுதும் படிக்காதவர்களாலேயே...அதற்கினையான ெண்ணிக்கையில் இதனை விட்டால் போதும்...
Deleteதயவு செய்து படியுங்கள்..தனிமை விரட்டப்படும்....தனிமை கூட வரமாய் தெரியும்...உங்கள் உடல் நலம் கூட சடுதியில் ஊக்கப்படும்.....தன்னம்பிக்கையின் மறு உருவ அடயாளம்தான் xiiii
ஒரு ஆச்சரியமான விஷயம் ...இக்கதை ஆரம்பம் 1986 என ஆசிரியர் குறிப்பிட்டதாய் நினைவு ..லட்சக்கணக்கில் விற்பனயாகும் கதை...முப்பது வருடமாய் வருவதால் படிக்காமல் ...ஆசையுடன் இறந்தவர்கள் ஆவிகள் எத்தன சுத்தி வருதோ... ஒரு வேள நானே இறந்தால் கூட ாசிரியரால் எனது ஆவிக்கு பதிலளிக்க முடியுமா...சொல்லுங்க சார்..
Deleteஎன்ன இது அநியாயம். லார்கோவும், ஷெல்டனும் விடைபெறப்போகிறார்களா? "என்ன கொடுமை சார் இது? அவர்களது இடத்தை நிரப்ப வேறு தகுதியான நாயகர்களை இந்நேரம் பார்த்து வைத்திருப்பீர்களே! அப்படி இருக்குமானால் அவர்களை பற்றி முடிந்தால் ஒரு வரி கூறுங்கள் சார். ஆனால் ஒன்றுமே தெரியாதமாதிரி இருந்துவிட்டு எங்களுக்கு திடீரென ஆனந்த அதிர்ச்சிஅளிப்பதே உங்களுக்கு வழக்கமாகிவிட்டது. பரவாயில்லை இதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDelete//லார்கோ வும் ஷெல்டனும் விடைபெறப்போகிறார்கள்.!//
Delete" உண்மையிலே வருத்தமான செய்திதான்.!"
டெக்சின் நல்ல கதை ஏதாவதொன்று வரும் வரை இந்த மெகா சைஸை பூதம் காத்திருக்கலாமென்பதே உண்மை....
ReplyDeleteடெக்ஸின் அட்டைபடத்தை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பரிசேதும் கிடையாதா சார். முத்து மினி காமிக்ஸ் ஒன்று கொடுக்கலாமே? கேள்வி கேட்க தெரிந்தவருக்கு சரியான விடை சொன்னவருக்கு பரிசளிக்கவும் தெரியவேண்டுமே !
ReplyDeleteஆர்ட்டினின் ஆயுதம் ...
ReplyDeleteஅட்டைபடமும் கலக்கல் ...கதையும் கலக்கல் ..முதல் பக்கத்தில் குறட்டையில் ஆரம்பித்த மித சிரிப்பு ...வாசிக்க ஆரம்பித்தவுடன் தலைவலி வந்துவிட்டது என்ற ஆர்ட்டினின் வாக்குமூலத்தில் பலமான சிரிப்பாக மாற அந்த நகைச்சுவை கடைசி பக்கத்தை மூடும் வரை குறைய வில்லை சார் ..அட்டகாசமான நகைச்சுவை படைப்பு ...அருமையான மொழி பெயர்ப்பு ..என்னை கேட்டால் சிக்பில் குழுவின் ஆக மிக சிறந்த படைப்பு இதுதான் என்பேன் ...அருமை ..அருமை ...
சொல்ல போனால் கதை நடப்பு மனதில் நிழடாட இதை எழுத எழுதவே சிரிப்பு தான் ..சார் ...அடுத்து லார்கோ பற்றி சொல்ல தேவை இல்லை ...மொத்ததில் இந்த மாதமும் கலக்கி விட்டீர்கள் சார் ..
எப்படி சார் இப்படி ஒவ்வொரு மாதமும் ...கலக்குறீங்க ....;-)
ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு..!!
ReplyDeleteதெய்வமே..ஒரு ஒரு பெருச்சாளிக் கூட்டமே சுற்றித் திாியும் பிராந்தியத்தில் ஒரேயொரு முரட்டு மசால் வடையாக என்னை நடுவில் நிற்கச் செய்துவிட்டு வேடிக்கை பாா்க்கிறானே என் தோஸ்த்!
சீரியஸான கதையோட்டத்தின் நடு நடுவே நக்கலும், நையாண்டிகளும் தூள் பறக்கின்றன..!
இம்மாத இதழில் டாப் ஹீரோ நமது லார்கோதான் என்று நினைத்து அதுவும் அவர் பேர்வல் பார்டி இதழ் என்று கருதி ஆவலுடன் கூரியரை வாங்கினேன்.! டெக்ஸை பார்த்த பிரமிப்பில் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்.! அதன் பின் தொடர்ச்சியாக தொடர்ந்த வேலை பளு காரணமாக இன்னும் ஒரு புத்தகத்தை கூட முழுமையாக படிக்க முடியவில்லை.! இன்று குட்டீஸ் களுக்கும் விடுமுறை என்பதால் புத்தகங்களை தொடக் கூட முடியவில்லை.! அவ்வப்போது இங்கு தலைகாட்டுகிறேன்.!
ReplyDeleteநிதானமாக ரசித்து படிக்க வேண்டும் என்பதால் சூழ்நிலைக்காக வெயிட்டிங்....................!!!!
இனிய இரவு வணக்கங்கள் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய வணக்கங்கள் நண்பர்களே!!!
உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள் சார்:
ReplyDelete1. 100/100-மாதா மாதம் டெக்ஸ் அருமையாக உள்ளது சார்...அதற்கு மெயின் காரணமே இவ்வொரு மாதமும் பார்த்து பார்த்து variety ஆன டெக்ஸ் கதைகளாய் நீங்கள் வெளியிடுவதே முக்கிய காரணம் என்பேன்...
ஆனால் டெக்ஸ் விஷயத்தில் முக்கிய மான ஒன்றை மிஸ் செய்கிறேன்...அது என்னவென்று ஆண்டின் இறுதியில் சொல்கிறேன் சார்...
2.அந்த அளவுக்கு மொக்கையான கதை எதுவும் இதுவரை வரவில்லை...
3.மாதமொரு கார்ட்டூன் கண்டிப்பாக வேண்டும் சார்...
4.கூடவே நாலாவதாக கிராபிக் நாவலும் சேர்ந்து வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் சார்...
தேவ ரகசியம் தேடலுக்கல்ல,க்ரீன் மேனர் கதைகளை ரொம்பவே மிஸ் செய்கிறேன்...(தலைவர் & M.V.sir மன்னிச்சூ...)
ஏடிஆர் சார்.!
Deleteஹஹஹஹஹஹஹ.........
சத்தியா சார்.!
கிரீன் மேனர் கதைகள் அட்டகாசமாய் இருக்கும்.நான் அடிக்கடி படித்து ரசிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று.!
///இந்த கேள்வியே ஒரு ரெட் அலார்ட் சிக்னல் மாதிரிதான்.!
ReplyDeleteஎனக்கென்னவோ டிஸ்மிஸ் ஆர்டரை ரெடி செய்துவிட்டு மெமோ கொடுத்து விளக்கம் கேட்கிறமாதிரிதான். தோன்றுகிறது.!///
M V sir,
அப்படியெல்லாம் இருக்காதுன்னு நம்புகிறேன்.!
ஒருவேளை இன்னும் அதிகப்படுத்த நாடி பிடித்து பார்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம் அல்லவா?
நண்பர்களின் எனைக்குறித்த கருத்துகள் சிலவற்றுக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் போயிருக்கலாம் .
கவனிக்காமல் விட்டதே காரணம் நண்பர்களே.!
தயைகூர்ந்து சிறுவனை மன்னிப்பீராக!!!
சின்னதாய் ஒரு மனசஞ்சலம். தீர்ந்ததும் வூடுகட்டி விளையாடுவோம் நண்பர்களே! _/|\_