Powered By Blogger

Tuesday, September 30, 2014

ஒரு மழை நாளின் நன்றிகள் !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய மாலை அக்டோபரின் சந்தாப் பிரதிகளை கூரியர்களில் அனுப்புவதே ஒரு பெரும் சாகசமாய்ப் போய் விட்டது ! சனிக்கிழமை மதியம் வரை கார்சனின் கடந்த காலம் அச்சுப் பணிகள் நடந்து கொண்டிருக்க, பைண்டிங்கிலோ "வீதியெங்கும் உதிரம் " ஓடிக் கொண்டிருந்தது ! 'திடு திடுப்பெனக் ' கடையடைப்பு ; சங்கடமான சூழல் என்றானவுடன் கதவுகளைப் பூட்ட வேண்டிய நெருக்கடி ! 'சரி..இம்முறை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியப் போவதில்லை ...அசடு வழிய என்ன வழி ? என்று யோசிக்கத் தொடங்கினேன் ! 'இரவில் பணி செய்ய வாய்ப்புக் கிட்டுகிறதா - பார்ப்போம் என நம்மவர்களிடம் மெதுவாய்க் கேட்டுப் பார்த்தேன் ; துளியும் தயக்கமின்றி அச்சகப் பிரிவினர் இரவில் ஆஜராகி விட்டனர் ! ராக்கூத்து முழு வீச்சில் அரங்கேற ஞாயிறு காலையில் பக்கங்கள் சகலத்தையும் தயார் செய்தும் விட்டோம் ! அதே போல நமது பைண்டிங் கான்ட்ராக்டரிடமும் ஞாயிறு வேலை செய்து தர முடியுமா என ஒரு கொக்கியைப் போட்டு வைத்திருந்தேன் ; 'சரி' என்று அவர் தலையசைத்திருந்த போதிலும் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது ! ஆனால் ஞாயிறு காலையில் 'டாண்' என அவர்களும் வந்து மடிப்பு இயந்திரத்தில் வேக வேகமாய் கா.க.கா. பக்கங்களை மடிக்கத் துவங்க ; திங்கள் பகல் பொழுதில் சுடச் சுட 3 இதழ்களுமே நம் ஆபீசில் இருந்தன !! புத்தகங்கள் வந்து மட்டும் கதைக்கு ஆகாதே - அவற்றை டெஸ்பாட்ச் செய்யவும் வேண்டுமல்லவா ? மதிய உணவிற்கு 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் பேகிங் பணிகளில்  பம்பரமாய் சுழல - பிற்பகலில் கூரியர் அலுவலகங்களை முற்றுகை இட முடிந்தது ! இரவு வீட்டுக்குச் செல்லும் போது தலைக்குள் ஒற்றை சிந்தனை மட்டுமே - "எப்படி இருந்த நாங்கள் - இப்படியாகி விட்டோமே ?!!" இலக்குகளை நிர்ணயம் செய்வது ; அந்தத் தேதிக்குள் பணிகளை முடிப்பது ; என்பதெல்லாம் சமீப காலங்கள் வரை நமக்கு ரொம்பவே அந்நியமானவை ! ஆனால் இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும்  ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! Thanks all - for driving us on..! 

இம்மாத இதழ்களின் பின்னணியில் எங்கள் டீமின் சாகசங்கள் இன்னமும் கூட உள்ளன ! 'அதைக் கிழித்தேன் ; இதைப் பாய்ந்தேன்!' என நான் விடும் வழக்கமான உதார்களின் மத்தியினில் கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு எங்கள் அணியின் பணிகளைப் பற்றி சிலாகித்துக் கொள்கிறேனே ?!! நமக்குப் பிரதானமாய் டைப்செட்டிங் செய்து கொண்டிருந்த பெண்மணிக்குத் திருமணம் என சமீபத்தில் நான் இங்கு எழுதியது நினைவிருக்கலாம் ! பெண்ணுக்குத் திருமணமாகி ஊர் விட்டுச் செல்கிறாளே ! என பெற்றோர் கலங்கினார்களோ - இல்லையோ ; நான் ரொம்பவே கவலைப்பட்டேன் ! துவக்கத்தில் கொஞ்சமாய்த் தடுமாறினாலும், பின்னாட்களில் நமது தேவைகளை ; அவசரங்களை ; அந்தர்பல்டிகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு அழகாய்ப் பணி செய்த பொறுமைசாலி ! கடந்த 2.5 ஆண்டுகளில் நமது பணிகளின் 70% செய்த புண்ணியம் அவரையே சாருமெனும் போது - திடுதிடுப்பென அவருக்கொரு replacement தேடுவதில் நிறையவே மொக்கை போட்டோம் ! ஆனால் இன்றைய கணினியுலகில் திறமைசாலிகளுக்கா பஞ்சம் ? ரமேஷ் என்றதொரு டிசைனர் நம்மிடம் தற்போது பணியாற்றி வருகிறார் - மிகவும் திறன்படவே ! இம்மாதத்து கா.க.கா. ராப்பர் ; காலனின் கைக்கூலி உட்பக்க டைப்செட்டிங் என அனைத்தும் அவரது கைவண்ணங்களே ! இவர் தவிர நமது அலுவலகத்தில் இன்னும் இரு புதுமுகங்கள் டெஸ்பாட்ச் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளுக்காக இணைந்துள்ளனர் ! சுகவீனத்திலிருந்து சிறுகச் சிறுகத் தேறி வரும் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இனி முழு நேரமும் பணியாற்றும் பொறுப்பில் இருக்கப் போவதில்லை ; வாரம் இரண்டல்லது ; மூன்று நாட்கள்  மட்டுமே வந்து செல்வார் ! அவரது இடத்தை இட்டு நிரப்பும் பணியினை அற்புதமாய்ச் செய்து வருவது ஸ்டெல்லா தான் ! தினமும் ஒலிக்கும் நம் தொலைபேசிகளை சமாளிப்பது முதல், சந்தாப் பிரதிகளின் அனுப்புதல் ; முகவர்களின் ஆர்டர்களைக் கவனிப்பது என 'ஆல்-இன்-ஆல்' இவரது பொறுப்பே ! Pre Production-ல் சகலமும் மைதீன் எனில் ; Post Production-ல் அத்தனை பொறுப்புகளும் ஸ்டெல்லாவுக்கே ! இது போன்றதொரு dedicated ஒத்தாசை இருக்காவிடின் நான் சுவற்றைப் பிறாண்டத் தான் அவசியமாகியிருக்கும் ! Thanks my team !!


கா.க.கா.வின் அட்டைப்படம் இதோ - மாலையப்பன் + நமது டிசைனர் ரமேஷின் கூட்டணிக் கைவண்ணத்தில் ! இந்த டிசைன் 2015-ன் பிறிதொரு டெக்ஸ் சாகசத்திற்காக வரையப்பட்டதொன்று ; கா.க.கா.விற்கென வரையப்பட்ட ஓவியம் எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்ததால் - கடைசி நிமிட switch இது ! 'மண்டை ஓட்டிற்கு இங்கென்ன வேலை ?' என்ற யோசனைக்கு நேரமிருக்கவில்லை என்பதால் டெக்ஸ் + கார்சனோடு திருவாளர் மண்டையாரும் அட்டையில் ஆஜர் ! கா.க.கா. இதழும் ஒரு விதத்தினில் one-off ! இந்தப் பக்க எண்ணிக்கைகளுக்கும் - விலைக்கும் துளியும் சம்பந்தமோ - ஒப்பீடோ கிடையாது ! சந்தாத் தொகைக்குள் இதனை இணைத்ததாக வேண்டிய கட்டாயம் என்பதால் கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டோம் ! But - இதே சைஸ் ; பக்கங்களோடு இன்னுமொரு இதழ் வெளியாகும் வேளையில் விலை சத்தியமாய் நிரம்ப மாறுபடும் ! இப்போதைக்கு happy reading guys !!

COMING in 2015.....
அப்புறம் அந்த CAPTIONS எழுதும் போட்டி தொடர்கிறது ; புது பின்னூட்டங்களை இனி இங்கே   போட்டு வைத்தால் எனக்குத் தேடித் பிடிக்கும் பணி கொஞ்சம் மிச்சமாகும் ! Carry on the fun !!


விடுமுறைகளுக்கு முன்பாக இம்மாத இதழ்கள் மூன்றையும் உங்களிடம் கூரியர் அன்பர்கள் ஒப்படைத்து விடுவார்களென்ற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! காலனின் கைக்கூலி இதழைப் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை அறிந்திட எக்ஸ்ட்ரா ஆவலாய்க் காத்திருப்போம் ! (நம் அலுவலகம் வியாழன் & வெள்ளியில் விடுமுறை என்பதை நினைவூட்டுகிறேன் !) தீபாவளி மலரின் பணிகள் மேஜையில் நடுநாயகமாய்க் காத்திருப்பதால் அதற்குள் மூழ்கிடும் நேரமிது ! Adios amigos !

P.S : Facebook மற்றும் சமூக வலைத்தளங்களே புதிய தலைமுறையை எட்டிப் பிடிக்கும் சுலப வழி என்றாகிப் போன நிலையில் - உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ? Please do share our posts folks ! (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) )

291 comments:

  1. ஜட்டி விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தா நிறைய காசு கிடைக்கும்னு கூட்டிட்டு
    வந்தீங்களே என்ன கொடுமை சார் ஜ் இது
    நான் என்னத்தடா கண்டேன் இந்த காட்டு பயலோட ஜட்டி இதுதான்னு

    ReplyDelete
  2. கார் சனின் கடந்த காலம் என்னை மிக மிக கவர்ந்த கதை..அதை வண்ணத்தில் எப்போது
    பார் ப்போம் என்று துடித்து கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  3. புத்தகங்கள் கிடைத்துவிட்டன.LMS-தரத்தில் க.க.கா..வந்துள்ளது கச்சிதமான ,படு ஷார்ப்பான பிரின்டிங் .வண்ணங்கள் அட்டகாசம் ..பாராட்டுகள் .ஆனால். ஃப்ரம் 2mm அதிகம் அகலமா பப்பரப்பா என விரித்துக்கொண்டுள்ளது ஒரிஜினாலிட்டிக்கு ஆப்பு ...
    உங்கள் கவனம் தேவை சார்..
    .சரியான அளவில் வேறு புத்தகம் அச்சாகியிருந்தால் அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  4. எமனின் agent (காலனின் கைக்கூலி )ம் , தெருவெல்லாம் இரத்தம் (வீதியெங்கும் உதிரம்)மும்
    போனஸ் கதைகள்தான்.. கார்சனின் கடந்த காலம் ஒன்றே விலை மதிப்பில்லா காமிக்ஸ்
    கதைகளின் சிகரம்..அந்த சின்னப்பெண் நான் விட்டு பிரிந்த அழகு தேவதை என்னுடைய
    இளமை காலங்களின் சின்னம் எத்தனை நன்றி சொன்னாலும் தகும் எடிட்டர் சார்

    ReplyDelete
  5. எப்பொழுதும் அடுத்த நாளே கைக்கு கிடைக்கும் புத்தகம். இம்முறை இன்னும் கூரியர் அலுவலகத்திற்கே வந்து சேரவில்லை என்று தகவல்.... (வெளிநாட்டு சதி!!!)

    ReplyDelete
  6. எனக்கு புக் இன்னமும் கிடைக்கவில்லை, அனைவருக்கும் ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அட எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் ஒரு பதிவ போட்டு அசத்தறிங்க சார்!
    மத்தபடி மாடஸ்டியின் மேல் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது. :-))

    ReplyDelete
  8. Replies
    1. நிச்சயம் ஸ்டீல் !
      fb ல் இரத்தபடலம் முதல் பாகம் சில பக்கங்கள் கலரில்,
      (தமிழில்) கசிவது பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது !

      Delete
    2. mayavi sivakumar : FACEBOOK-ல் நமது official பக்கத்தில் வெளியாவதைத் தவிர்த்து இதர சங்கதிகளுக்கும், நமக்கும் துளியும் தொடர்பு கிடையாது நண்பரே..!

      Delete
    3. நன்றிகள் சார் !

      //உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ?
      (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) ) //

      வலைப்பக்கம் வந்து சில மாதங்களே ஆனாலும்,ஜுனியர்
      கோரிக்கையை, தங்கள் பதிவிட்ட உடனே...சுமார் 2000 fb
      காமிக்ஸ் நண்பகளுக்கு share செய்துகொண்டு இருக்கிறேன் சார் !

      Delete
  9. மாயாவி சார் நன்றி.. புதிய பதிவை முகநூலில் ஷேர் செய்ததற்காக...

    ReplyDelete
  10. சார் வண்ணத்தில் ஸ்பைடர். ஒன்றே ஒன்று மட்டும் அடுத்த வருடம்.. ப்ளீஸ் சார்...

    ReplyDelete
    Replies
    1. நமது விலையில்ல வலை மன்னனுக்கு ஒரு பிரிவுபசாரம் ! சிங்கத்தின் சிறு வயதில் அந்த கால ஸ்பைடர் ஏக்கங்களை மிகையின்றி சொல்கிறது !

      Delete
    2. Spider the king of all hero's and a legendary villain...

      Delete
    3. அதுக்குள்ளே எண்டு கார்டா???? ஒரு ஸ்பைட்ர் டைஜெஸ்ட் கேட்டு ஆட்டத்தை மொதலேருந்து ஆரமிக்கலாம் தலைவா!!!!

      Delete
    4. ரம்மி இப்படி சொல்லி வாங்குவோம் ! அப்புறம் முதல்லேர்ந்து ...

      Delete
    5. I Support Spider in colour and digest....

      Delete
    6. //I Support Spider in colour and digest..//
      +1111111111111

      Delete
  11. இம்மாத புத்தகங்கள் காலை 10மணியளவில் கிடைத்தது !நன்றி !

    ReplyDelete
  12. கா.க கா worldmart ல் எப்போது தனியாக கிடைக்கும் சார்?

    ReplyDelete
    Replies
    1. கா.க.கா மட்டும் தனியாக வேண்டும் சார்.. worldmart ல் அந்த வசதி செய்யுங்கள் சார்...

      Delete
  13. புத்தகங்கள் வந்து சேர்த்து விட்டது ஆனால் காலனின் கைக்கூலி முனைகள் மடங்கி போய் வந்தது

    ReplyDelete
  14. Replies
    1. எதுக்கு மங்கூஸ் ....?

      Delete
    2. @ Selvam.,
      இன்று கைகளில் வைத்து அழகு பார்த்து கொண்டிருக்கும் இதழ்களை காலத்தே கிடைக்கச் செய்த அத்தனை திறமைசாலிகளுக்கும் நன்றி. அவர்களின் அதிகப்படியான உழைப்புக்கு வந்தனங்கள்.

      (நீங்க டாட்டா குடுத்துட்டு கிளம்பறேன்னு நினைச்சிட்டிங்களா செல்வம்.? ஹாஹாஹா அது நடக்காது.ஏன்னா நான் கீரிப்புள்ள (Mangoose) .கீர்ர்ர்ர்..,கீர்ர்ர்ர்.)

      Delete
  15. happy pooja holidays .....for press workers and office staffs ......:)

    ReplyDelete
  16. வீதியெங்கும் உதிரம் செம!!!! ஸ்டீவ் ராலாண்ட் மறுபடியும் ஒருமுறை படித்து பார்த்துதான் சொல்ல முடியும்... ( ஒன்னும் புரியலே )... கார்ஸனின் கடந்த காலம் சாப்பாட்டுக்கு அப்புறம் படிக்க ஆரம்பித்தேன்... இந்த கதை படிக்க ஆரம்பித்த அப்புறம் நான் டெக்ஸின் மகன் கிட்டின் ரசிகன் ஆகிவிட்டேன் போலிருக்குது...59 வது பக்கத்திலேயே நானும் கொர்ர்ர்...இப்போதான் ஆஃபீஸ்ஸில் டிங் டிங் என்று காஃபிக்கான மணி அடித்தார்கள்...

    ReplyDelete
  17. பழைய சினிமா பாணியில் வில்லி கதாநாயகனை துப்பாக்கி முனையில் மடக்கி வைத்து கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும் , க்ளைமாக்ஸ் செம!!!! ( இப்போவே டைலான் டாக் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு போட்டி வர்றதக்கு முன்னாலே தலைவர் ஆயிடலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்)

    ReplyDelete
  18. மரணத்தின் முத்தம் .....
    முத்தத்தின் சப்தத்தை மகிழ்ச்சியுடன் எதிரொலிக்க பாக்தாத் -ன் முக்கிய புள்ளியை இன்னும் காணலியே .....:(

    ReplyDelete
  19. சிங்கத்தின் சிறு வயதில் சூப்பர்!!! நானே நேரில் நின்று அட்டை படம் அச்சாவதை பார்த்த உணர்வு!!! வாக்கியத்தை வடிக்கும் வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள்!!! அட்டகாசமான வார்த்தைகள்.. பிரமாதமான நடை... படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : கனிவான வார்த்தைகள்..! நன்றிகள் பல !

      இங்கு சின்னதொரு இடைச்செருகல் இருக்கச் செய்தால் தப்பில்லை என்று தோன்றுகிறது.....! சமீப நாட்கள் வரையிலும் "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியினை நண்பர்களின் ஆர்வத்தின் பொருட்டே எழுதி வந்து கொண்டிருந்தேன் ; அடிமனதில் இது லேசானதொரு பீற்றல் படலமாகவே எனக்குத் தோன்றுவதை தவிர்ப்பது சிரமமாக இருந்து வந்துள்ளதால் !

      ஆனால் சில காலத்துக்கு முன்பாய் - தினசரி நாளிதழின் ஆன்லைன் பதிப்பு ஒன்றில் முத்து காமிக்ஸ் பற்றிய கட்டுரையையும் ; அதற்கு வாசகர்கள் சிலரது follow up கமெண்டுகளையும் படிக்க நேர்ந்த போது - என் திருவிழிகள் 'திரு திரு' விழிகளாகின !

      அந்நாட்களில் (1970's ) முத்து காமிக்ஸின் துவக்கம் பற்றிய topic மீது விருதுநகரில் வசிக்கும் ஒரு வாசகர் பதிவிட்டிருந்த கருத்தே என்னை பேய்முழி முழிக்க வைத்தது ! எனது தந்தையின் இளைய தம்பி (என் சித்தப்பா) 'இந்தக் கதைகளையெல்லாம் காமிக்ஸாய் வெளியிடுங்கள் அண்ணா !' என்று என் தந்தையிடம் கேட்டாராம் ; உடனே என் தந்தையும் அடுத்த ப்ளைட்டைப் பிடித்து இலண்டன் சென்று அவற்றை வாங்கி வந்தாராம் !! எனக்கு அதைப் படித்த போது சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை ; 5 சகோதரர்களில் கடைக்குட்டியான என் சித்தப்பா எப்போதுமே ஒரு ஜாலியான கேரக்டர் ! தொழில் சார்ந்த எவ்வித முடிவுகளிலும் அவர் தலை நுழைப்பதே கிடையாது ! தவிரவும் 1986-ல் முத்து காமிக்ஸ் என் பொறுப்புக்கு வரும் வரையிலும் அது முழுக்க முழுக்க என் தந்தை + முத்து காமிக்ஸில் பணியாற்றிய பாலசுப்ரமணியன் எனும் மேலாளரின் பொறுப்பில் மட்டுமே இருந்ததொரு விஷயம் ! இதனில் "சித்தப்பா படலங்கள்" எவ்விதம் உருவாகினவோ நானறியேன் !

      அதைப் படித்த கணம் தான் - 'ஆத்தாடி - இன்னுமொரு 20 வருஷம் கழித்து இதே பாணியிலான 'உட்டாலக்கடிகள்' நம் தொடர்பாகவும் உருவாக வாய்ப்புள்ளதோ என்று மண்டைக்குள் உரைத்தது ! 'வரலாறு முக்கியம் அமைச்சரே..!' என்பது அன்றைக்கு புரிந்தது ! So - "சி.சி.வ." எதற்காக எழுதுகிறேனோ - இல்லையோ நம் பயணத்தில் நமக்குத் தோள் கொடுத்தோரை சரி வர அடையாளம் காட்டிய பொறுப்பை நிறைவேற்றிட உதவிடுமே !!

      Delete
    2. சி.சி.வ தனி புத்தகமாக வெளியிடுங்கள் சார்...

      Delete
    3. வரலாறு மிக முக்கியம்... :)

      Delete
    4. //வரலாறு முக்கியம் அமைச்சரே..!'//
      வரலாறு ன்னா STD தானே :D

      // So - "சி.சி.வ." எதற்காக எழுதுகிறேனோ - இல்லையோ நம் பயணத்தில் நமக்குத் தோள் கொடுத்தோரை சரி வர அடையாளம் காட்டிய பொறுப்பை நிறைவேற்றிட உதவிடுமே !!//

      +100 :)

      Delete
  20. ////இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும் ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! ////

    hats off ....team lion .....

    ReplyDelete
  21. யம்மா!!! எத்தனை இச்சு... நம்ம அமெரிக்க கோடீஸ்வரரையே வெட்கப்பட வெச்சுட்டியே டைலான்!!!!!

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : பெரும்காதல் மன்னராக்கும் இந்தத் திகில் நாயகர் ! அவ்வப்போது இவர் அடிக்கும் லூட்டிகளுக்கும் சென்சார் தேவையே !

      Delete
    2. சென்சார் என்ற வார்த்தையை கேட்ட உடனே மெர்சல் ஆவது எனக்கு மட்டும் தானா???? ( தங்க தலைவியையும், பில்லியனரையும் நினைத்தால் மெர்சல் இன்னும் அதிகம் ஆகுதே...சைமன் தான் காப்பாத்தனும்)

      Delete
    3. @edi

      வர வர உங்க சென்சார் தொல்லை - என்ன சொல்வது! உங்களுக்கு வயதாகிவிட்டது போங்க.....

      Delete
  22. 'கா.க.கா' எனும் காவியத்தை கலரில் கண்டிடும் கனவு இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்குக் காரணமான அனைவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    கா.கா.கா - அட்டைப்படம் அழகு, அட்டகாசம்! மாலையப்பன் அவர்களின் தூரிகை - ஜாலம் காட்டியிருக்கிறது.

    இரவிலும், ஞாயிரன்றும் வேலை செய்து புத்தகங்கள் குறித்த நேரத்தில் ரெடியாகிட ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!

    முழுநேரம் பணியாற்றிட முடியாத நிலையிலிருக்கும் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் அவர்களின் உடல்நலத்திற்காக வேண்டிக்கொள்வோம் நண்பர்களே! வேறு என்ன செய்ய? :(

    ReplyDelete


  23. 'Operation இரத்தப்படலம்'
    ATTEMPT NO. 7

    ஆர்டின் : பூஊஊவ்... எங்க அப்பன்-ஆத்தா கூட எனக்கு இப்படியெல்லாம் மொட்டையடிச்சு காது குத்தி அழகு பார்த்ததில்ல பாஸ்! என்னோட நீண்ட நாள் குறையைத் தீர்த்துவச்ச நீங்க ஒரு தெய்வம் பாஸ்!

    ஷெரீப் : உணர்ச்சிவசப்படாதேடா செல்லம்! இதென்ன பிரமாதம்? கரும்புள்ளி-செம்புள்ளி குத்தி, உன்னைக் களுதை மேல உட்கார வச்சு ஊரைச் சுற்றிலும் ஜோரா ஒரு பவனி வரச் செய்யறதுக்கெல்லாம் கூட இந்த தெய்வம் ஏற்பாடு பண்ணியிருக்கு!

    ஆர்டின் : ப..பாஸ் உ..உங்களை இனிமே நான் 'தெய்வ பாஸ்'னே கூப்பிடலாமா பாஸ்?

    ReplyDelete
  24. Editor sir,
    இப்படி பண்ணிட்டீங்களே.?
    கா.க.காலத்தில், கார்சனுடைய காதலின் ஜீவனே அந்த பாடல்தான். ஒரு காதலனின் தவிப்பை உருவகப்படுத்தி அற்புதமாக எழுதப்பட்டிருந்த கவிதையை மாற்றி சராசரியான திரைப்பட பாடல் போல மாற்றிவிட்டீர்களே.!! முதல்முறையாக படிக்கப்போகும் நண்பர்களுக்கு இது தெரியாமல் போகலாம்.ஆனால் மூன்னூறாவது முறையாக படிக்க இருக்கும் எனக்கு ஏமாற்றம்தான்.

    (பழைய புக்க மறுபடி படிச்சி மனச தேத்திக்கிறேன்.)

    ReplyDelete
    Replies
    1. Mecheri Mangoose : மனப்பாடப் பகுதியினைப் போல் அன்றைக்கு எழுதியதைக் "கவிதை" என்று சொன்னால் - caption எழுதும் போட்டியில் ஆர்டினைப் பிடித்துக் கட்டி வைத்திருப்பது போல என்னையும் பார்சல் பண்ணி விடுவார்கள் கவிதையில் நாட்டம் கொண்டோர் !! (இப்போது உள்ளதும் "கவிதை" category -ல் புகுந்து விட்டதாக்கும் ? என்பது வேறு விஷயம் !!)

      Delete
  25. கார்சனின் கடந்த காலம் எனக்கு மிகவும் பிடித்த கதை 90 கலீல் அதை படித்து பின்பு நண்பர் ஒருவரிடம் கொடுக்க அதை அவர் தொலைக்க அதை மிண்டும் தேடு தேடு என்று தேடி கலைத்த போது ஆசிரியர் மறு பதிப்பு என்று கூரி வயற்றில் பாலை வார்த்தார் ஆனா படிக்க முடிய வில்லை என்னோட Ph .D thesis எழுத bahrathidasan university ல ஒரு மாசம்மா மாட்டிகிட்டேன் நவம்பர் 1தன் வீட்டுக்கு போக முடியும் வெரி sad புக் வந்துருச்சுன்னு அம்மா சொன்னேங்க any way friends உங்க கமெண்டும் ஆசிரயர் எழுதும் ப்ளாக் தான் துணை happy reading

    ReplyDelete
    Replies
    1. kabdhul : எதிர்காலத் தேடலுக்கு முன்னுரிமை கொடுத்திட (கார்சனின்) கடந்த காலத்தைப் பின்சீட்டுக்கு அனுப்புவதில் தவறில்லையே ! Allthe very best !

      Delete
  26. விஜயன் சார்,
    // கா.க.கா. இதழும் ஒரு விதத்தினில் one-off ! இந்தப் பக்க எண்ணிக்கைகளுக்கும் - விலைக்கும் துளியும் சம்பந்தமோ - ஒப்பீடோ கிடையாது ! சந்தாத் தொகைக்குள் இதனை இணைத்ததாக வேண்டிய கட்டாயம் என்பதால் கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டோம் ! But - இதே சைஸ் ; பக்கங்களோடு இன்னுமொரு இதழ் வெளியாகும் வேளையில் விலை சத்தியமாய் நிரம்ப மாறுபடும் ! இப்போதைக்கு happy reading guys !! //
    உண்மை! நீங்கள் சொல்லமலே புரிந்து கொண்ட விஷயம்! இதற்கு எனது நன்றிகள் பல!

    நமது தற்போதைய வெற்றி பயணத்தின் முழு முதற்காரணம் நமது அலுவலக நண்பர்களே; எதையும் ஒரு சவாலாக எடுத்து செய்யும் நமது அலுவலக நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி உழைப்பாளி நண்பர்களே!

    மாடஸ்டி கதையின் தலைப்பு அருமை, ஆனால் நீங்கள் நமது கதை தலைப்புகளில் "மரணம்" என்ற வார்த்தையை விடமாட்டிங்க போல. இளவரசி கதையை சீக்கிரம் கைகளில் கொடுங்க.

    இந்த மாத புத்தகம்கள் இன்னும் இங்கு வரவில்லை, தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்கலாம்.

    நம் அலுவலக நண்பர்களுக்கு சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஒரே மாதத்தில் 8 பதிவுகள், இந்த மாத கமெண்ட்களின் எண்ணிக்கை மற்றும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகம்; இந்த வருட ஏப்ரல் மாதமும் 8 பதிவுகள்.

      மின்னும் மரணம் முன்பதிவு எப்படி உள்ளது என 2 வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும்.

      Delete
    2. நமது 1958இல் வெளியான நமது டெக்ஸ்-ன் முதல் கதையை தமிழ் வெளி ஈட முடியுமா?
      - நன்றி விஸ்வா!

      Delete
    3. Parani from Bangalore : //மின்னும் மரணம் முன்பதிவு எப்படி உள்ளது என 2 வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும்.//

      S-l-o-w.....!

      Delete
    4. வாரம் இரண்டு பதிவுகள் வேண்டும் சார்...

      Delete
  27. சார் , நமது டீமுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் !
    இந்த விலையில் தயக்கமின்றி அளித்த தங்களுக்கும் நன்றிகள் !
    காலனின் கைக்கூலி இரண்டு பக்கங்களை புரட்டும் போதே ஆயிரம் அதிர்வுகள் , விளக்கங்கள் , கேள்விகள் ....வேலை பளுவிநூடே எட்டி பார்க்கிறேன் . படித்ததும் பகிர்வேன் ! அனைத்துக்குமே ஆயிரம் கோடி நன்றிகள் !

    ReplyDelete
  28. சிங்கத்தின் சிறுவயதில் அருமை ! ஒவ்வோறு புத்தகமும் ஒரு வரலாற்று சுவடு போல ! உங்கள் சுவாரஸ்யமான விவரிப்பே மாபெரும் உற்ச்சாகத்தை சிதற விட்டு செல்கிறது என்பது மிகை அல்ல ! அனுபவம் அருமை !

    ReplyDelete
  29. //தீபாவளி மலரின் பணிகள் மேஜையில் நடுநாயகமாய்க் காத்திருப்பதால் அதற்குள் மூழ்கிடும் நேரமிது ! //

    ஆஹா.!!

    ஆகட்டும்., ட்டும்., டும்..

    ReplyDelete
  30. மாடஸ்டியின் முத்தம் - மன்னிக்கவும் "மரணத்தின் முத்தம் " விளம்பரம் செம...

    தயவுசெய்து பெயிண்ட் பிரஷ் கம்மியா யூஸ் பண்ணுங்க சார்!! :)

    ReplyDelete
  31. தீபாவளிக்கு டெக்ஸ் வருகிறார்.. worldmart ல் கா.க.கா order போட்டு தீபாவளி அன்று படிக்க உத்தேசம்...

    ReplyDelete
  32. டியர் எடிட்டர்,

    கார்சனின் கடந்த காலம் அற்புதமான அமைப்புடன் வந்துள்ளது. சித்திரங்கள் சற்றே சினிமாஸ்கோப் பாணியில் இருந்தாலும் - probably due to resizing - அவ்வளவாய் ஒன்றும் தெரியவில்லை. ஒரு collector's edition என்று சொல்லும் அளவில் உள்ளது

    [ கவிதைகள் மட்டும் ... ஹி ஹி ... வேண்டாம் :-) விட்டு விடுவோம் ]

    நூற்றுக்கு வாங்கி ஆயிரத்துக்கு விற்போர் சங்கத்துக்கு இந்த இதழ் ஒரு வரப்ரசாதம் - விரைவாய் விற்று விடும் :-)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //நூற்றுக்கு வாங்கி ஆயிரத்துக்கு விற்போர் சங்கத்துக்கு இந்த இதழ் ஒரு வரப்ரசாதம்//

      Phew...!

      Delete

  33. நீங்க இவ்ளோ சத்தமா கிராபிக் நாவல் கேட்டிருக்க கூடாது..

    நல்ல வேளை போரட்ட குழு தலைவர் நல்ல மூட் ல இருந்ததால இப்டினசும் தப்பிச்சோம்!!!

    வூட் சிட்டி :

    படுவா டைகர் பத்தி தப்பா பேசுவியா??!!

    அட நான் பேசினது அந்த டைகர் பத்தி இல்ல.... டெல்லி டைகர் பத்தி ..

    ReplyDelete
  34. டியர் விஜயன் சார்,

    காலனின் கைக்கூலி: சிறிய மற்றும் பெரிய புத்தகங்கள், ஒரே மாதத்தில் இணைந்து வராத படி வெளியிட முயற்சிக்கலாமே?! பிரெஞ்சுக்காரரை, இத்தாலியர்கள் இருவரும் இணைந்து (கார்சன் & டைலன்) நசுக்கி எடுத்து விட்டார்கள்!

    கார்சனின் கடந்த காலம்: ஒரிஜினல் அட்டைகளையே பயன்படுத்தி இருக்கலாமே? இந்த புதிய பதிப்பில், ஒவ்வொரு பக்கத்தையும், இழுத்து விரித்து வைத்துப் பார்த்தால் தான் மையப் (பைண்டிங்) பகுதியில் உள்ள சித்திரங்களும், எழுத்துக்களும் முழுதாகத் தெரிகின்றன! தவிர, பக்கத்திற்கு நான்கு வரிசைகள் என்பதால், ஓவியங்கள் அமுங்கியது போல எனக்குத் தெரிகின்றனவா? இருப்பினும், எழுத்துக்களின் அளவு மோசமில்லை, படிக்கக் கூடிய அளவிலேயே இருக்கிறது!

    வீதியெங்கும் உதிரம்: மேற்கண்ட காரணங்களால், சிக்கென்று காட்சி தரும் டைலன், இம்மாத வாசிப்புப் பட்டியலில் முதலிடத்தை பெறுகிறார்! :)

    பணியாளர்கள் மாறுகையில், புத்தகங்களின் வடிவமைப்பில் consistency-ஐப் பேணுவது கடினம் தான்! அவ்வகையில், குறைந்த அளவு resources உடன், நீங்கள் பேணி வரும் தரம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. Dear Editor,
      அன்பு நண்பர் கார்த்திக் கூற்று முற்றிலும் சரி. அடுத்த முறை அளவு வித்தியாசம் உள்ள புத்தகங்களை அனுப்பும் போது சற்று அதிக கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Please post all shop names in each city selling our comics. Just an reminder :)

    ReplyDelete
  37. உங்க தலையிலே டோப்பா ..என் தலைக்கோ மொட்டை எதுக்கு பாஸ் இந்த பம்மாத்து?
    அந்த பிளாக் ஸ் கெலெட் பய ஜெயில்லே இருந்து தப்பிச்சுட்டானாம்டா ..நேரா இங்கேதான்
    வருவான் அவனை ஏமாத்தத்தான் இந்த ஏற்பாடுடா என் செல்லம்

    ReplyDelete


  38. 'Operation இரத்தப்படலம்'
    ATTEMPT NO. 8

    ஷெரீப் : அழாதேடா செல்லம்... நீதான் சாத்தானின் பிள்ளைனு ஊருக்குள்ள எவனோ கதை கட்டிவிட்டுட்டான். உன்னோட உச்சி மண்டைல சாத்தானின் குறியீடு எதுவுமில்லைனு இந்த ஊர்மக்களுக்கு நிரூபிச்சுக் காட்ட எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியலைடா கண்ணா!

    ஆர்டின் : அ..ஆனால் என் அப்பா பேரு சாத்தான் இல்லையே சீஃப்? ஒருவேளை நான் சாத்தானின் பிள்ளைதான்னு வச்சிக்கிட்டாலும், என் மாதிரி ஒரு சமத்துப் பிள்ளையின் அப்பா ஒரு புனித சாத்தானாகத்தானே இருக்கமுடியும்?

    ReplyDelete
  39. 'கார்சனின் கடந்த காலம்' கலரில் பார்த்ததும்,கடந்த பதிவின்
    CAPTIONS போட்டியில்,என்ன எழுதினோம் என பலர் மெய்
    மறந்து போயிருப்பீர்கள் என்பதாலும்...

    CAPTIONS எழுதும் போட்டி தொடர்வதால்,இது வரை போட்டிக்கு
    பதிவிட்டவைகளை மீண்டும் (ஒருசேர) படித்தால், புது புது ஐடியாகள்
    CAPTIONS தோன்றும் என்பதாலும்....

    கடந்த பதிவில் வந்தவைகளை 300 க்கு இடையில் தேடிகொண்டு
    இருப்பதைப்பதை தவிர்ப்பதர்க்ககவும்...

    எனக்கு புதிய இதழ்கள் கிடைக்க சில நாட்களாகும் என்பதால்
    கிடைத்த நேரத்தை (மீண்டும் கடையடைப்பு) போட்டிக்கு உதவ
    ஏதாவது செய்யலாம் என தோன்றிய ஐடியா பார்க்க....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. வாழ்க மாயாவியின் மெனக்கெடல்கள்!

      Delete
    2. //வாழ்க மாயாவியின் மெனக்கெடல்கள்!//

      +1

      Delete
    3. பரிசு உங்களுக்குத்தான் மாயாவி சிவா அவர்களே !
      நன்றி !

      Delete
    4. இந்த வலைதளம் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு காரணம், ஆசிரியரின் துள்ளல் நடை எழுத்துக்கள் மட்டும் அல்ல, நமது நண்பர்களின் அளவு கடந்த உற்சாக பங்களிப்பும் ஒரு காரணமே என்றால் அது மிகையாகாது. கிங் விஸ்வா, மாயாவி சிவா, புனித சாத்தான், பெங்களூர் பரணி ஆகியோரின் காமிக்ஸ் அறிவு, ஈரோடு விஜய், ஸ்டீல் கிளா, மேச்சேரி மங்கூஸ், மதியில்லா மந்திரி, சதீஸ், சத்யா, செல்வம் அபிராமி ஆகியோரின் நகைச்சுவை நடை, கார்த்திக் சோமலிங்கா, ஆதி தாமிரா, மரமண்டை, பரணீதரன், ரமேஸ் குமார் ஆகியோரின் LIC கட்டிடங்கள், என்னை போலவே புளுபெரி வெறியர்களான ரம்மிXIII, முகந்தன் குமார், முதலியோரின் கருத்துக்களை படிப்பது எனது நாளை மிகுந்த மகிழ்ச்சியாக்குகிறது. நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

      Delete
    5. நன்றி AKK அவர்களே! :)

      Delete
  40. டியர் எடிட்டர்,

    காலனின் கைக்கூலி படித்து முடித்தேன் !

    Just brilliant plot - வேறு வார்த்தைகள் இல்லை. கதை நகர்தலும், panel shotsம் அசத்தி விட்டது.

    LMS-உடன் இதுவும், விரியனின் விரோதியும் ஒன்றாய் வந்திருக்க வேண்டியது - just missed a milestone!

    ஜூன் தொடக்கமாய் இவ்வருடம் பல டாப் கிளாஸ் கதைகள் அமைந்து விட்டிருக்கிறது - சந்தோஷம்.

    ReplyDelete
  41. Re-post
    ********************************************************************************************************************
    senthilwest2000@ Karumandabam Senthil21 September 2014 12:25:00 GMT+5:30
    அனைத்து ஊர்களிலும் நமது வெளியிடுகள் கிடைக்கும் கடைகளின் முகவரிகளை, தொலைபேசி எண்ணையும் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் !

    Satishkumar S21 September 2014 12:52:00 GMT+5:30
    +1
    it will be usefull if this details publish this details in lionmuthucomics.com

    Vijayan21 September 2014 15:53:00 GMT+5:30
    @ FRIENDS : நாளையே செய்திடுவோம் ; பணிகளின் மும்முரத்தில் மறந்து போய் விடுகின்ற விஷயமிது !
    ********************************************************************************************************************

    Edit sir before next Sunday(?) plz ...

    ReplyDelete
  42. Ice bucket challenge, Rice bucket challenge மாதிரி யாராவது comics bucket challenge எடுக்க யாராவது இருக்கிங்களா? 2013 தீபாவளிக்கு முன் வந்த புத்தகங்கள் எதுவும் என்னிடம் இல்லை. comics bucket challenge கொடுக்கும் புத்தகங்களை வாங்க நான் ரெடி...கொடுக்க யார் ரெடி? இரத்தப்படலம் படிக்க அதிக ஆர்வம் ஆனால் புத்தகம் கிடைக்க மாட்டேங்கிறது.. (படிச்சுட்டு திருப்பி தந்துவிடுவேன்)

    ReplyDelete
    Replies
    1. டியர் சங்கர் , நீங்கள் சென்னையில் வசிப்பவர் என்றால் என் வீட்டுக்கு வந்து 2013 புத்தகங்களை பெற்று கொள்ளலாம். 9841446021. இரத்தப்படலம் - கண்டிப்பாக படிப்பதற்கு மட்டும், விலைக்கு அல்ல.... மற்றவை விலைக்கு உண்டு.

      Delete
    2. Thank you sir.. but I am in Trichy.. when I come to chennai call you sir.. once again thank u...

      Delete
  43. //"எப்படி இருந்த நாங்கள் - இப்படியாகி விட்டோமே ?!!" இலக்குகளை நிர்ணயம் செய்வது ; அந்தத் தேதிக்குள் பணிகளை முடிப்பது ; என்பதெல்லாம் சமீப காலங்கள் வரை நமக்கு ரொம்பவே அந்நியமானவை ! ஆனால் இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும் ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! //
    +1
    sir thumps up for maintaining this timely delivery ..! I wish Lion to convert (already it I see signs that) this practice as habit!

    ReplyDelete
  44. ஹம்ம்... புக் இன்னும் வரல! அந்த ஆட்டுத்தாடி தாத்தாவின் ரொமான்ஸ் பக்கங்களை கலரில் புரட்டிட நான் இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்கணும் போலிருக்கே....

    ReplyDelete
  45. எடிட்டர் சார்... “கார்சனின் கடந்த காலம்” பழைய அட்டைப்படத்தைக் காண ஆவலாய் இருந்தேன்... கடைசி நேரத்தில் புது அட்டைப்படத்துடன் வெளியிட்டு விட்டீர்களே...

    பரவாயில்லை புது அட்டைப்படமும் வெகு அருமை...732 பக்க டெக்ஸ் கதைக்குத் தயார் பண்ணிய அட்டைப்படமா சார் இது...?

    மாடஸ்டியின் வரவுக்கு மிக்க மகிழ்ச்சி...

    ஏன் பலர் இன்னும் மாடஸ்டிக்கு diehard fan ஆக இருக்கிறார்கள் என இப்பொழுது தான் புரிகிறது... என்ன கண்ணுப்பா அது...காந்த விழிகள்...!!!

    B&W இல்லாமல் கலரில் வெளிவந்தால்...நான் காலி...: D

    ReplyDelete
    Replies
    1. // என்ன கண்ணுப்பா அது...காந்த விழிகள்...!!! B&W இல்லாமல் கலரில் வெளிவந்தால்...நான் காலி //+1. நானும் நண்பரே!

      Delete
  46. Received the books. Disappointed.
    1. K.kai kooli - Crushed in courier
    2. K.kalam - Stretched printing
    3. DYLAN - Excess ink in printing.

    Editor sir if needed please reduce number of books per month and take additional time to avoid these kind of issues.

    It is sad to see your staff's superb effort not resulting in good quality :-(

    ReplyDelete
  47. கடைசியில் கார்சனின் கடந்த காலம் கையில் கிடைத்து விட்டது :)

    வண்ணத்தில் தான் வேண்டும் என்று அடம்பிடித்தவர்களில் நானும் ஒருவன் .... அப்படியே வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி

    இம்முக்கியமான, தல டெக்ஸ்-ன் milestone இதழின் அட்டை பெரிய சொதப்பல்

    உள்ளே திறந்தால் மிகப்பெரிய அதிர்ச்சி .. மொத்த பக்கங்களை குறைப்பதற்காக panel-கள் உயரம் குறைக்கப்பட்டு, ஒரு பக்கத்துக்கு மூன்று panel-களுக்கு பதில் நான்காக, ஓவியங்கள் நசுக்கப்பட்டுள்ளன :(

    புத்தக விலையை இன்னும் 50/75 ரூபாய் அதிகமாக்கி, ஓவியங்களை/panel-களை சரியான/original அளவிலேயே, கூடுதலான பக்கங்களுடன் வெளியிட்டிருக்கலாம்.

    தல டெக்ஸ் milestone இதழின் கதி இப்படியா ஆக வேண்டும் :(

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் பெரியார் !.....இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிறு விளக்கம்.............................
      உலகெங்கும் பெரும்பாலும் 3:2 அல்லது 2:3 என்ற சைசில்தான் காமிக்ஸ் புத்தகங்கள். வெளியாகின்றன ....(2:3 க்கு ஒரு உதாரணம் ...ஜிம் டேவிஸ் -ன் கார்ஃபீல்ட் ஸீரிஸ் (நமது மியாவி போல ).....இதில் எந்த ஒரு பக்கமும் tier -களாக பிரிக்கப்படுகின்றன ..ஒரு tier -ல் ஒன்றோ அதற்கு மேற்பட்டோ panel -கள் இருக்கலாம் ....ஒரு panel என்பது ஒரு drawing -மட்டுமே உள்ளடக்கியது ....ஒரே பக்கத்தில் 3-horizontal tier -கள் மற்றும் ஒரு vertical tier -ம் இருக்க கூடும் ...(தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல ...இதில் நிறைய பக்கங்கள் இதே போல் நீங்கள் காணலாம் ....)அதாவது நான் சொல்ல விழைவது ...ஆசிரியர் அதிகரித்து இருப்பது பேனல்களை அல்ல ...tier களை என்பதுதான் .....(ஏற்கனவே புக்கை பார்த்து மன வருத்தத்தில் உள்ள உங்களுக்கு இந்த விளக்கத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய கஷ்டமும் சேர்கிறது )

      Delete

    2. காலத்திற்கும் பாதுகாத்து வைக்கப்படும் ஒரு பொக்கிஷம் தான் நமது முத்து &லயன் .வண்ணத்திற்கு மாறி புது சகாப்தங்களை படைத்த நமது காமிக்ஸ் 2012 ற்குப்பின் தரத்தில் அடைந்த பின்னடைவால் ஏன் தான் வண்ணத்திற்கு மாறினோமோ?பேசாமல் கருப்பு/வெள்ளையிலேயே முழுமையாக ரசித்திற்கலாம் என எண்ணுமளவிற்கு தரை தொட்டபின் இப்போது தான் ஒரு வழியாக LMS-ற்கு பின் முன்னேற்றம் கண்டோம் .
      அதற்குள் க.க.கா ....எனும் ஒரு கனவு இதழில் தட்டையான சித்திர அச்சுத்தரம் ....
      இதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் வரும் காலத்தில் இது போன்ற சொதப்பல்களை தவிர்க்க முடியும் .தொடர் சொதப்பல்களை
      நியாயப்படுத்தும் படியான கருத்து பதிவுகள் எந்த வித்த்திலும் உதவப்போவதில்லை....

      Delete
    3. AHMEDBASHA TK : உங்கள் கருத்தைப் பதிவிட உள்ள அதே சுதந்திரம் மற்றவர்களுக்கும் உண்டன்றோ ? உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் அனைவருக்கும் அதே போல் தோன்றிட வேண்டிய அவசியம் உண்டா - என்ன ?

      பக்கமொன்றுக்கு 3 லேயர் உள்ள படங்களை நான்காக ஆக்கும் பொது ஒவ்வொரு தனிப்பட்ட கட்டத்துக்கும் ஆகிடும் compression 15% க்கும் குறைவே. ஓர் அடுக்கின் உயரம் 0.375 இன்ச் குறைவதால் நாம் மிச்சம் செய்வது சுமார் ரூ.50. இந்த ஐம்பது ரூபாய் உங்களுக்கோ ; சந்தாவில் வாங்கிடும் இதர சில நண்பர்களுக்கோ ஒரு பெரிய தொகையாகத் தெரியாதிருக்கலாம் தான். ஆனால் நாம் அச்சிடுவதோ ; விற்பனை செய்வதோ சந்தாக்களின் முழுமைக்கு மாத்திரம அல்லவே ..?!

      ரூ.125 விலையில் உள்ள ஒரு இதழை விற்பனை செய்திடுவதற்கும் ரூ.175 / 180 என்றதொரு odd விலைக்கு ஒரு இதழை விற்பனை செய்திடுவதிலும் உள்ள சிரமங்களை / சுமைகளை சீர்தூக்கிப் பார்க்கும் தலைவலி என்னது தானே ?! ரூ.120 விலைகளைத் தாண்டும் போது நம் முகவர்களில் பாதிப் பேர் ஆர்டர் தருவதில்லை என்பதை நான் சொல்லி நண்பர்களை சங்கடப்படுத்துவது முறையாகாதே என்பதால் அது பற்றி வாய் திறப்பதில்லை !

      0.375 இன்ச் உயரமா ? விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கு கிட்டும் வாய்ப்பா ? என்ற கேள்வி என் முன்னே மீண்டுமொருமுறை வைக்கப்பட்டால் - என் பதில் என்னவாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தான் தெரிந்திட வேண்டுமென்பதில்லையே ?! ஒரு மறுபதிப்புக்கு இது போன்ற compromises அவசியமாகும் வேளைகளில் கூட 'கொள்கை வீரனாய்' விடாப்பிடியாய் நிற்க நாம் அத்தனை உயரங்களை எட்டவுமில்லை ; நம் வாசகர்களின் சகல தரப்பினரும் அத்தனை affluent -ஆக உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை !

      அதே போல "தொடர் சொதப்பல்கள்" அரங்கேறும் பட்சங்களில் தொடர் நியாயப்படுத்தல்களைச் செய்திடவும் நண்பர்கள் தயாள சிந்தையோடு பின்நிற்கப் போவதில்லை என்பதையும் நான் உணராதில்லை !

      Delete
    4. ///தொடர் சொதப்பல்களை நியாயப்படுத்தும் படியான கருத்து பதிவுகள் எந்த வித்த்திலும் உதவப்போவதில்லை....///

      @அகமது பாஷா .......இனிய நண்பர் பாஷா .....மேலே உள்ள உங்கள் கருத்து என்னுடைய பதிவிற்கு பின்பு வந்திருப்பதால் அது என்னுடைய பதிவினை பற்றியது என நினைத்து இதை எழுதுகிறேன் ......நான் பதிவு தபால் சந்தாதாரர் என்பதால் இன்னும் கா.க.கா -வை இன்னும் கண்ணால் பார்க்கவேயில்லை ......எனவே அதன் சித்திர தரம் பற்றி என்னால் எழுதவே முடியாது .......நான் எழுதியிருப்பது tiers மற்றும் panels பற்றிய technical discriminative detail மட்டுமே .....
      பின் குறிப்பு :சித்திர வரைகலையின் அடிப்படை அறிவை பெற இப்போதுதான் முயன்று வருகிறேன் .....நான் +2 படிக்கும்போது எனது பாட்டனி டீச்சர் "ஏன்டா தலைவிரிகோலமா என் மூஞ்சிய எக்ஸாம் பேப்பர் -ல வரைஞ்சி வச்சிருக்க "என கைய நீட்ட சொல்லி குச்சியால் அடித்தார் .....அது சைகஸ் மரத்தின் நீள் வெட்டு தோற்றம் என நான் எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவேயில்லை .....:)

      Delete
    5. //அதே போல "தொடர் சொதப்பல்கள்" அரங்கேறும் பட்சங்களில் தொடர் நியாயப்படுத்தல்களைச் செய்திடவும் நண்பர்கள் தயாள சிந்தையோடு பின்நிற்கப் போவதில்லை என்பதையும் நான் //உணராதில்லை !

      நான் நிற்பேன் சார் ....இன்ஷா அல்லாஹ் ...
      மேலே கூறப்பட்டிருக்கும் சிக்கல்களை சமாளித்து விலையை கட்டுக்குள் வைக்க நீங்கள் பெரும் முயற்சிகள் எடுப்பது புரியாமலில்லை .ஆனால் உங்கள் எழுத்துக்கள் தாங்கிய காமிக்ஸை பொக்கிஷமாக நினைத்து சேர்த்து வைத்து பாதுகாத்து வரும் என் இடத்திலிருந்து நின்று பாருங்கள் .
      என்னுடைய ஆதங்கம் புரியும் .மற்றபடி உங்களை விட்டால் என் காமிக்ஸ் உலகம் முடிந்துவிடும் என்பதையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன் ...

      Delete
    6. பேனல்களின் உயரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற எடிட்டரின் பதில், பல விதமான யூகங்களுக்கு சிறந்த பதிலாக இருக்கிறது.

      விற்பனை மற்றும் இதர வகையில் எடிட்டர் சொல்வது சரி என்றாலும், காலம் காலமாக அட்டைப் போட்டு அழகு படுத்தி மாதத்திற்கு ஒரு முறை எடுத்து பக்கங்களைப் பிரித்துப் பார்த்து, ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்கிறதா என்று சரிசெய்து, “அச்சுமையின் நாற்றம் தாங்கவில்லை. ஏன் அங்கே வைக்கிறீர்கள் என்ற” இல்லத்தரசியின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், பாதுகாத்து வைக்கும் போது...

      இந்த குறைபாடுகள்....

      கவலையளிக்கிறது :(

      Delete
  48. இன்று திருச்சியில் கடையடைப்புக்கு நடைபெற்ற போதும், கடுமையான பணிசுழலுக்கு மத்தியிலும் காலை 10 மணிக்கே வீட்டிற்கு அருகிலேயே உள்ள professional courier அலுவலகத்தில் நமது புத்தகங்களை வாங்கிய போது அடைந்த thrill அடடா ! சொல்லி மாளாது!அப்போதுதான் சந்தாவின் மகிமை புரிந்தது! Hats off to Hard working our tamil comic makers and Professional Courier!

    ReplyDelete
    Replies
    1. //professional courier அலுவலகத்தில் நமது புத்தகங்களை வாங்கிய போது அடைந்த thrill அடடா ! சொல்லி மாளாது!அப்போதுதான் சந்தாவின் மகிமை புரிந்தது! ///

      பார்த்தீங்களா மக்களே!! நீங்களும் நம்ம செந்தில் மாதிரி 'சந்தா கட்டுங்க... சந்தோசமா இருங்க' :)

      Delete
  49. காலனின் கைக்கூலி.:
    செம்ம விறுவிறுப்பு.
    விரியனின் விரோதியும் காலனின் கைக்கூலியும் சங்கமிக்கும் இடம் அட்டகாசம்.

    Xlllஐ கரைத்து குடித்தவர்களுக்கு இவ்விரண்டு கதைகளும் (வி.வி&கா.கை.) பொக்கிஷம். ஆனால் இரத்தப்படலம் அறியாதவர்களுக்கோ நிலவேம்பு கஷாயம். கா.கைக்கூலியில் நம்ம "பெட்டீ "யும் க்ராஸ் ஆகுது.அடாஅடா.!! என்னத்த சொல்ல.?

    அடுத்து வீதியெங்கும் உதிரம்.

    ReplyDelete
  50. ரூபி: சுடாத குதிரை வேணும்னுதானே கேட்டேன்!

    ஸ்கூபி: அப்பவே சொன்னேன். சுட்ட குதிரை இருக்குதான்னே கேட்டுருகலாம்.

    _______

    ஆர்ட்டின்: உங்களுக்கு உடம்பெல்லாம் வழுக்கை என்கிறதுக்காக என்னை பலிகடாவா ஆக்கிடீங்க. கேள்வி கேட்க யாரும் இல்லியா!

    டாக்புல்: எவ அவா! டிங்! டாங்! உன்ன மொட்டபோட்டு நேந்துபேன்.


    AZ

    ReplyDelete
  51. ஒரு ரகசியம் தேவரகசியம் தேடலுக்கு அல்ல ஒரு பாகம்தான் முடித்துளேன்! மற்ற இரு பாகங்களை படித்திட சரியான தருணத்தை எதிர்நோக்கியுள்ளேன் !

    ReplyDelete
  52. Caption 5 க்கு “இங்கே” க்ளிக் செய்யவும்...

    படங்கள் உதவி-நண்பர் மாயவி சிவா :D

    ReplyDelete
    Replies
    1. Caption 5 contd...
      ஸ்கூபி : இதுக்கும் மேலே tune பண்ண இங்க ஒண்ணும் இல்ல...

      Delete
  53. Blue coat caption
    மொத்தமா அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க ..காட்டுவாசி dress ல அரிப்பு தங்க முடியலே ..இப்படியே எப்படி டா போறது ...

    கோணி பை uniform விட இரு ரொம்ப comfort அஹ இருக்கு ...ஜாலிya வாங்க chief ...அவ்வ்... எங்கே போகுதோ வானம் ..அங்கே போகிறோம் நாமும் ..அவ்வ் அவ்வ்..

    Chick bill caption
    உங்களை மாதிரியே எனக்கும் மொட்டை போட்டுடீங்களே ..இனிமே நான் அந்த “ரீட்டா” வ எப்படி பாப்பேன்...

    என்னோட விக் க கிண்டல் பன்னேன்ல ..இப்படியே போ ..ரீட்டா இல்ல ..பிஞ்சி போன BATA செருப்பு கூட கிடைக்காது ....கர்ர்ர்ர்



    Blue coat caption

    “Glamour appi” scent போட்டு உடபெல்லாம் அரிக்குது …கொரில்லா தலையன் எல்லாத்தையும் உருவிட்டு விட்டுட்டான் ..நீ என்ன டா ந ..ஜாலி ல டான்ஸ் ஆடிக்கிட்டு வரே ..

    Aww ..aww ..cheif இதுதான் இப்போ லேட்டஸ்ட் பேஷன் ..காட்டுவாசி டிரஸ், தொப்பி , ஷீ …combination அட்டகாசம் ...இப்படியே பேஷன் ஷோ வுக்கு போனோம்ன.. first prize நமக்குதான். Awa ..awa .. avvawwa ..awa ..awa


    Chick bill caption
    சூப்பரா hairstyle பன்றேனுட்டு ..இப்படி பண்ணிட்டேன்களே ..நான் இப்போ எப்படி பொண்ணு பாக்க போறது ...அவ்வ்வ்வ் ..ஹ்ம்ம்ம்ம் ..ஹ்ம்ம்ம்ம்

    நானே இன்னும் bachelor la இருக்கேன் ..அதுக்குள்ள அய்யாவுக்கு அவசரமோ ..உன்னோட மண்டை la tattoo போட்ட தான் da ..என்னோட கோவம் தீரும்.. karrrrr..


    ____________________________________________________________________



    ReplyDelete
    Replies
    1. //இப்படியே போ ..ரீட்டா இல்ல ..பிஞ்சி போன BATA செருப்பு கூட கிடைக்காது ....கர்ர்ர்ர்///

      :D

      Delete


  54. 'Operation இரத்தப்படலம்'
    ATTEMPT NO. 9

    ரூபி : பட்டாளத்துல சேர்ந்த புதுசுல 'உடல் முழுக்க மெடல்களா தொங்கணும்'னு ஆசைப்பட்டேன்டா ஸ்கூபி! இப்போ உடம்புல கொஞ்சூண்டு இலைதழைகள் மட்டும்தான் தொங்கிக்கிட்டிருக்கு...

    ஸ்கூபி : விட்டுத்தள்ளுங்க சார்ஜ்! நாம ஆசைப்பட்டதெல்லாம் நடந்துடுதா என்ன? எனக்குக் கூடத்தான் ஒரு புத்திச்சாலி சார்ஜெண்ட்டு கிட்ட சோல்ஜரா இருக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...

    ReplyDelete
  55. எப்பா என்னவொரு அழுத்தமான கதை ! பதிமூன்றின் தேடல்களுக்கிடையே என் மனதை அப்படியே கட்டி போட்ட கதை ! இரத்த படலத்தின் ஒவொரு பாத்திரத்திற்கும் அற்புதமாய் கதை பின்னலாம் போல ! வான் ஹாம்மே வேண்டுமென்றே சில முடிச்சுகளை விட்டு வைத்தாரா என்ன ...பிறர் விளக்கட்டும் என எண்ண வைக்கிறார்கள் அழுத்தமான கதைக்களம் மூலம் ! இனம் புரியாத இன்பமான அற்புதமான உணர்வுகளை வருவித்த இதழ் என்றால் மிகை அல்ல ! சூப்பர் சார் நமது லயன் இல்லையேல் இதனை அனுபவிக்கும் வாய்ப்பு நிச்சயம் கிட்டியிராது ! ஸ்டீவிடம் எல்லா விசயங்களையும் எடுத்துரைக்கும் கிம்மின் மேல் ஏக கோவம் வருகிறது ! அற்புதமாய் செதுக்க படும் இளைஞன் நண்பர்களை கூட காட்டி கொடுக்கிறான் காதல் என்ற இறைவனின் எதிர்பால் ஈர்ப்பால் ! காதலுக்காக அனைத்தையும் இழக்கும் ஸ்டீவ் அற்புதம் ! பக்கத்திற்கு பக்கம் ,,,,,பினோக்கி செல்வதும் ....மாக்காள், கால்வின் வாக்ஸ் இருவரும் பதிமூன்றை பகடையாய் உபயோகிப்பதும் ....காரிங்டன், ஹெயடேகேர் இருவரும் காரிங்க்டன் மகளால் எமாற்றபடுவதும் அடடா அருமை .....பின்னியிருக்கிறார்கள் அறுபட்ட இழைகள் போல சந்தேகத்தை எழுப்பி இணைப்பதன் மூலம் ....ஓவியங்களும்....வண்ணமும் அப்பப்பா ....சூப்பர் ! அதுவும் இருபத்தோன்பதாம் பக்க முதல் பேணல் கானகத்திநூடே வளைந்து செல்லும் நதி அருமை ! பல இடங்களில் அற்புதம் ! கிம் கடிதம் படித்த படி கண்ணீர் வடிக்கும் இடம் ஏமாற்றுவதை எண்ணி கண்ணீர் வடிக்கிறாரா ?.....கடைசியில் சாகும் தருவாயில் அவளது கண்ணில் வழியும் கண்ணீர் அவன் மேல் காதல் கொள்வதை காட்டுகிறதா ? என சில கேள்விகளை மீண்டும் முன் வைக்கிறது ....ஒருவேளை கிம்மின் முளுதொகுப்பும் வரலாம் என நினைக்கிறேன் ! மாக்கால், கால்வின் வாக்ஸ் இருவருக்கும் ஒரு தொகுப்பு வரலாம் ! ஆனால் இங்கே ஒரே யோசனை கப்பலில் கிம் ஏமாற்றியதை உணர்ந்து சண்டை போட்டதை பதிமூன்றி தொகுப்பில் மங்கூஸ் உரைப்பது ஒன்று மட்டும் சொதப்பியது போல படுகிறது....விடை சொல்வார் யாரோ ?

    ஆனால் ஏறத்தாள இருபது வருடங்கள் முன்பை தெரிந்த ஸ்டீவின் கதை இப்போது முடிச்சு அவிழும் சந்தோசத்தை என்னவென்று சொல்வது ! அருவியாய் வரும் வார்த்தைகள் எனது சந்தோசத்தை, நிம்மதியை ,இனம் புரியாத பரவச உணர்வை பறைசாற்றும் ! அருமை சார் ...ஏதோ மனதின் ஓரத்தில் இருந்த சந்தேகம் , பரிதவிப்பு ,நிரடல் அனைத்தும் விலகியதாய் ஒரு உணர்வு ! பேரமைதி ....

    ஆனால் காதல் என்று வந்து விட்டால் அந்த பெண்ணை முழுமையாய் நம்பி வரும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டுமே ! அவளே பிடிக்கவில்லை என்று கூறியும் ....அவளின் மகன் பொருட்டுத்தான் தனக்கு துரோகமிழைத்தால் என என்னும் ....பரிதாபத்திற்குரிய கட்டு கோப்பாய் வளர்க்கப்பட்ட, முதலிடம் பிடிக்க ஓடும் ஸ்டீவை என்னவென நொந்து கொள்வது ! நிச்சயமாக நான் காதலித்து ஏமாந்தவன் கிடையாது ! எனது ஆள் எனக்கு துரோகம் செய்யமாட்டாள் ...அது பிறரை ஏமாற்ற என்று எண்ணி நம்பி தொடர்ந்து முட்டாள்தனமாய் நம்பி வாழும் பல நண்பர்களை ...நம்பி ஏமாந்த உறவினர்களை சந்தித்தவன் என்ற முறையில் இதனை கூறுகிறேன் ! கடவுளின் படைப்பில் பெண் ஒரு அதிசயம் என்றால்... நம்பி ஏமாறும் பரிதாபத்திற்குரிய ஆண்கள் பேரதிசயமன்றோ ! பெண் என்னவொரு அற்புதமான படைப்புதா சாமி !

    சார் என்னை அதிகம் பேச வைத்த இந்த படைப்பிற்கு ஒரு மாபெரும் பாராட்டெனில் ...கதையோடு பின்ணி பிணைந்து செல்லும் அற்புதமான நிரடாத தங்களது மொழி பெயர்ப்புக்கு இன்னுமொரு பாராட்டு !

    பதிமூன்றின் காட்டிலே ஏகப்பட்ட புதையல்கள் காத்திருக்கின்றன ! ஒவ்வொரு பாத்திரமும் அற்புதமாய் கனமாய் பின்னபட்டுள்ளதால் .....அடுத்தடுத்து சந்தோஷ புதையல்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்க போகின்றன ! ஆமோசின் வருகைக்காக காத்திருக்கிறேன் !
    கோபால்... என சரோஜா தேவி சிவாஜியை ஏமாற்றி மாட்டவைப்பது நினைவில் ! வேறு ஏதாவது உபயோகிக்கலாமே என்னை மடக்க காதல்தான் இதற்க்கு பயன்பட்டதா லதா என விலங்கோடு சிவாஜி வந்து செல்கிறார் !

    ReplyDelete
    Replies
    1. நான் படிக்க எடுத்து கொண்ட நேரம் மிக மிக அதிகம்....பதிமூன்றின் தொகுப்பை நினைவில் வைத்துள்ள நண்பர்களுக்கு இது ஒரு வரம் என்பதால் முடிந்தால் அதனை படித்து விட்டு இங்கே வாருங்கள் ....அற்புதம் காத்திருக்கிறது ! சார் இவ்ளோ பேசிருக்கேனே அடுத்த தீபாவளிக்கு ......

      Delete
    2. spades...ஸ்டீவ் மாக்காலிடம் பெறும் பயிற்சிகள் என அனைத்தும் விளங்க வைக்கிறார்கள் ! ஸ்டீவின் செவிலி பெண் ,,,,நாற்காலியில் கதியாய் கிடக்கும் அப்பா , சித்தி, சித்தப்பா என அனைவரும் இங்கே விளக்கமாய் காட்சி தருகிறார்கள் ! பல இழைகள் இணைக்கபடுகின்றன !

      Delete
    3. மன்கூசால் உயிரிழந்தாலும் ...வில்லியம் செரிடனை சுட்டதாள் முதலிடம் உனக்கே ஸ்டீவ் ...நிம்மதியாய் துயில் கொள்வாய் உனது சாரி சிந்தனைகளில் வெற்றி பெற்றதனால் !

      Delete
    4. இதில் அவிழும் இன்னொரு முடிச்சு..... அந்த பணம் நேசனல் பேங்கிற்கு ஏன், எதற்கு , எப்படி வந்தது என என்னை அப்போது வாட்டிய ஒரு விசயமும் ! ஜாக் ஷெல்டன் என்ற இன்னொரு புதிரான நபரும் இல்லை என்பதே ! ஸ்டண்ட் மேன் போன்ற அற்புத மனிதரை விவரிக்க வேண்டும் .....உண்மையான பதிமூன்று பெரிய அளவில் வந்தால் இன்னும் அற்புதமாய் இருக்கும் ! காலத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான் !

      Delete
    5. இந்த இதழில் வசீகரிக்கும் அழகாய் காட்சி தரும் ஸ்டீவ், கிம் இருவரும் துவக்க பேனல்களில் நிறையும் போது ஓவியரின் தூரிகைக்கு அடிமையாகிறேன் என்னை அறிந்தே !

      Delete
    6. @ ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

      காலை வணக்கம் நண்பரே...உங்கள் 'காலனின் கைக்கூலி' கதை பற்றிய அலசல் அருமை!
      'சார் இரத்தபடலம் கலரில்...' என காதில் இரத்தம் வராத குறையாக கேட்டும் ஆர்வத்திற்கு
      ஈடான, ஆழமான விமர்சனம் நண்பரே...கதையை எவ்வளவு ரசித்து படித்திருக்கிறீர்கள்
      என்பது அருமையாக உங்கள் எழுத்துகள் சொல்கிறது.

      நீங்கள் கேட்கும் கேள்விகள் என் ஆர்வத்தை தாறுமாறாக எகுறச்செய்கிறது.புத்தகங்கள்
      கைக்கு கிடைத்தவுடன்,என் சந்தேகங்களையும் (?) உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...!

      Delete
    7. நண்பரே உங்களின் அற்புத பதிவிற்காக காத்திருக்கிறேன் !
      //என் சந்தேகங்களையும் (?) உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...!//
      நிச்சயமாக உங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்வீர்கள் !

      Delete
    8. அமோசின் கதை வந்தால் போலி பதிமூன்றின் முடிச்சு அவிழுமென நினைக்கிறேன் ! ஆனால் பலிகடாவாக்கப்பட்ட நமது நண்பரின் சாகசம் வேறு திசையில் தற்போது பயணிக்கும் நிலையில் இணைப்பு சங்கிலி சாத்தியமா ...அல்லது இவர்களும் ஒரு புதிய திசையில் பதிமூன்றை பரிதவிக்க வைக்க போகிறார்களா .....நாமும் சாகும் வரை தன்னை தேடும் பதிமூன்றை எண்ணி ....பல திசைகளில் பல கதாசிரியர்களோடு தேடித்திரிய வேண்டுமா ?

      Delete
    9. இது கூட பரவால்லன்னு பாத்தா இங்க தமிழ் நாட்டுல ஒரு பச்சை குத்திய பதிமூணு ஒன்னு திரியுது ! எத்தன பதிமூணு ....எவ்வளவு மர்மம் .....யப்பா ! அவருக்கு ஒரே மறதி படிக்குற டெக்ஸ் கதையெல்லாம் ஒரே மாதிரி தெரியுற நோயாம் ! கார்சனின் கடந்த காலத்த படிச்ச பெறகும் அந்த நோய் மட்டும் சரியாகாம போகட்டும்......டெக்ஸ் டம்மின்னு சொல்லி திரியுற அந்த ரம்மிய கும்மி விட பதிமூணு படைப்பாளிகளுக்கோ அல்லது CIA வுக்கோ தகவல் தந்து தூக்கிட்டு போய் ஆராய்ச்சி செய்ய சொல்லிடலாம் !
      மாயாவி நீங்க அந்த படங்கள தட்டி எனக்கு ஒரு தொகுப்ப அனுப்புங்க ரம்மிய ....CIA வுக்கு ணா ஒரு தட்டு தட்டி விடுறேன் !

      Delete
    10. XIII கதைவரிசையின் கிளைக்கதைவரிசையே XIII மிஸ்டரி.
      அந்த வரிசையில் வந்த 7 கதைகளில் 5 வது கதை தான்,
      1.5 Tome 5 : Steve Rowland (2012)காலனின் கைக்ககூலி.
      1.1 Tome 1 : La Mangouste (2008) விரியனின் விரோதி.

      ஸ்டீல் க்ளா நீங்கள் குறிப்பிடும் கார்னல் அமொஸ் கதை....
      1.4 Tome 4 : Colonel Amos (2011) என நினைக்கிறேன்...!

      கிளைக்கதைவரிசையில் (XIII மிஸ்டரி) எதிர்காலத்தில் இன்னும்
      13 பாகங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,அதன் வரிசைகள்,
      வெளியிட திட்டமிடபட்டிருக்கும் வருடங்கள் பார்த்தால்,தலையே
      சுற்றுகிறது..நண்பரே ! நீங்களே பாருங்கள்....
      8.Martha (Wilson-Giroud, 2015)
      9.Calvin Wax (Rouge-Duval, 2015/16)
      10.Felicity Brown (Rossi-Matz, 2015/16)
      11.Jonathan Fly (Taduc-Brunschwig, 2016/17)
      12.Alan Smith (Buchet-Pecqueur, 2016/17)
      13.Judith Warner (Grenson ou Bonhomme-Van Hamme, 2018)
      இன்னொருபக்கம் பட்டியல் இப்படி நீள்வது சந்தோஷமாகவும்
      உள்ளது.

      Delete
    11. aahaa ... மார்த்தாவை கூட விட்டு வைக்கவில்லையா ?
      அழுத்தமான கதைகள் காத்திருக்கின்றன ....கலக்கல்தான் !

      Delete
  56. மாடஸ்டி .ஈரோட்டில் தங்களிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி

    ReplyDelete
  57. சார் அடுத்த மாதம் இருபது நாட்களில் இரவே , இருளே கொல்லாதே தீபாவளி மலர் என்ற வாக்கியம் தாங்கி அலங்கரிக்க போவதை நினைத்தால் சந்தோசமாய் இருக்கிறது !
    அதனுடன் லார்கோ மற்றும் சைமன் , ஜானியின் அந்த கதை வந்தது நினைவில் உண்டு ஆனால் சுத்தமாய் கதை நினைவில் இல்லை ....ஏதேனும் அந்த கால நினைவுகளை கிளருகிறதா என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் !
    சொன்ன நாளில் அதாவது தீபாவளிக்கு முதல் நாள் மூன்று புத்தகங்களும் கிட்டிடுமா ! இரண்டு நாட்கள் முன்னதாகவே அனுப்பி விடுங்கள் ....பல நண்பர்களை அடுத்த நாள் கூட சென்றடைவதால் ஏமாற்றத்தை தவிர்க்க உதவக்கூடும் ! சிலருக்கு முதல் நாள் கிடைக்கவில்லை ....ஒரு வேலை தீபாவளிக்கு முன்னர் எனக்கும் கிடைக்காமல் பொய் விடக்கூடாதே என்ற சுய நலம் கலந்த பொது நலம்தான் !

    ReplyDelete
    Replies
    1. // அடுத்த மாதம் இருபது நாட்களில் இரவே , இருளே கொல்லாதே தீபாவளி மலர் என்ற வாக்கியம் தாங்கி அலங்கரிக்க போவதை நினைத்தால் சந்தோசமாய் இருக்கிறது !// +1.

      "இரவே இருளே கொல்லாதே"-வின் விளம்பரத்தில் உள்ள படங்களில் ஒன்று - "Friday the 13th" படத்தில் வரும் "Jason Voorhees" போலவும், இன்னொன்று jeepers creepers -படத்தில் வரும் சோளக்கொல்ல பொம்மை போலவும் இருக்கிறது.

      http://en.wikipedia.org/wiki/Friday_the_13th_(2009_film)



      கையில் எப்போது கிடைக்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது,எனக்கு!

      Delete
    2. பத்து நாள் முன்னரே கிடைத்தாலும் ...சந்தோசமே !

      Delete
    3. நம்ம ஆளுங்க மகா கெ ட்டிகாரங்கய்யா என்ன பால் போட்டாலும் சிக்ஸர் அடிச்சுடராங்களே
      முக்கியமாக சிவசுப்ர மணியன்

      Delete
  58. Editor Sir, ST Courier seems not upto mark in service (especially in Erode)....My Dad complained as they don't even care to call and let know book there...Its expected they don't deliver as my village is bit far from Erode but they should atleast tell us...I did paid extra fees to switch professional courier but thought of let you know about it...

    Thank you.

    ReplyDelete
  59. "வீதியெங்கும் உதிரம்" மட்டும் படித்து விட்டேன். கொலைகள் செய்வது அமானுஷ்ய சக்தி அல்ல என்று டைலான் கண்டுபிடித்தது, பின் கதையின் இறுதியில் "ஜாக் தி ரிப்பர்" வருவது தன்னுடைய பெயரில் கொலைகளை செய்த பெண்ணை "ஜாக்" கொள்வது எதிர்பாராத திருப்பம்,

    (ஆனால் "ஜாக்" இருப்பது உண்மை எனில் தன் பெயரில் கொலைகள் செய்த பெண்ணை முதல் கொலை செய்த உடனே ஏன் கொல்லவில்லை? தன் மீதான பயம் மக்களிடம் தொடர்ந்து செல்ல தான் அவளை அனுமதித்தோ?

    தன்னுடைய இருப்பு வெளிப்படாது போகும் இறுதி சுழலில் அவளை கொன்றதின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொண்டதோ, ஜாக் தி ரிப்பர்?)

    ReplyDelete
  60. இப்போது தான் புத்தகங்கள் வந்து சேர்ந்தன சார். ஆடித்தான் போய் விட்டேன் சார்.. கா.க.க. 250பக்கங்கள் வெறும் 125தானா ? , கொடுத்த வாக்கின் பொருட்டு இத்தகைய நட்டங்களை ஏற்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது சார் ?. 5நாட்கள் ஹோம் எக்ஸ்பிசன் செல்கிறேன் சார். அடுத்த வாரம் தான் படிக்க முடியும், ஊருக்கே விடுமுறை ஆனால் எனக்கு . சோதனை கட்டம்.

    ReplyDelete


  61. 'Operation இரத்தப்படலம்'
    ATTEMPT NO. 10

    ஸ்கூபி : உடம்புல ஒட்டுத் துணியில்லாம இந்த வனாந்திரத்தை மூனு தடவை சுத்தி வந்தா உடனே உயர் பதவி கிடைக்கும்னு காட்டுமுனி சாமி உங்க கனவுல வந்து சொன்னதெல்லாம் ஓகேதான் சார்ஜ்! ஆனா, உங்களோட பதவி உயர்வுக்காக நான் ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படணும்?

    ரூபி : கடைசி ரவுண்டை முடிச்சதுக்கப்புறம் ஒரு கருங்குரங்கை பலி கொடுக்கணும்னும் காட்டுமுனி கட்டளை போட்டிருக்கேடா ஸ்கூபி! இந்தக் காட்டுல கருங்குரங்குக்கு நான் எங்கே போவேன்? எனக்கு உன்னை விட்டா வேற யாரைத் தெரியும்?

    ReplyDelete
  62. துப்பாக்கி முனையிலே நம்மளை டிரில் பண்ண வைக்கிற இந்த காட்டானை தீர்த்துகட்ட
    வழி சொல்லுடா scoby
    பூ ..முன்னாடியே கேட்டிருந்தா சொல்லியிருப்பேன் சார்ஜ் நைசா உங்க சாக்ஸை கழ ட்டி
    அவன் மூக்குக்கு நேரா காட்டுங்க .பய வாயை பொ ள ந்திடுவான்

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய்..ஏகப்பட்ட smilies நீங்க திட்டுரீங்களா .ரொம்ப திட்டுறீங்களா புரிய மாட்டே ங்குது

      Delete
  63. சார் ....மூன்று இதழ்களும் நேற்று கிடைத்து விட்டது .மிக்க மகிழ்ச்சி . இரண்டு சின்ன புத்தகளை பார்த்து விட்டு காலனின் கைக்கூலி புத்தகத்தை எடுத்தால் வெறும் "அட்டையை " மட்டும் எடுப்பதாக ஒரு பீலிங் .இந்த சைசில் வரும் போது 120 ரூபாய் விலையில் வரும் புத்தகம் அதிகம் சந்தோஷ படுத்துகிறது .

    அட்டைபடம் டைலன் சாகசம் ...டெக்ஸ் சாகசம் இரண்டும் பட்டையை கிளப்புகிறது .இரண்டில் வெளி நாட்டவர் முத்திரை பதித்தாரா அல்லது உள்ளூர் மாலையப்பன் அவர்களா என பார்த்தால் "உள்ளூர் நபர் "தான் என் பார்வையில் முந்துகிறார் .அட்டகாசம் .இந்த இரண்டில் இடையில் மாட்டி கொண்ட "13 " அட்டைபடம் டல் அடிக்கிறது .

    காலனின் கை கூலி படித்து விட்டேன் .பரவாயில்லை ரகம்.மேலும் "மங்கூஸ் " கதை சித்திரத்தை விட இதில் சித்திரம் நன்றாக இருப்பதால் ஒன்றி போக முடிந்தது .முடிவில் கடைசி பக்கம் கொஞ்சம் குழம்பியது போல தோன்றியது .அப்புறம் "ஜேசன் " இடம் சொல்வது போல இருப்பதை பிறகே புரிந்து கொள்ள முடிந்தது .
    அப்புறம் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை ஒரு "கதை "மட்டுமே இருந்தது வெறுக்க வைத்தது .

    கார்சனின் கடந்த காலம் அட்டைபடம் அட்டகாசம் .ஆனால் உள்ளே படங்கள் அகலமாய் அமைந்தது போல இருப்பது எனக்கு மட்டும் தானா ? ஆனால் நல்ல வேலை "தலை வாங்கி குரங்கு " போல சுத்தமாக அப்படி தோன்ற வில்லை .அது வரைக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியையும் கொஞ்சம் தொலைத்தது எது எனில் முதல் பக்கம் வரை கடைசி பக்கம் வரை ஒரு "கதை " மட்டுமே இருந்தது தான் .அது சுத்தமாக வெறுக்க வைத்து விட்டது .

    டைலன் சாகசம் அட்டைபடம் .....உள்ளே சித்திரங்கள் ...வண்ண கலவை ...ஹாட் -லைன் ...சிங்கத்தின் சிறு வயதில் .....விளம்பரம் என இன்னும் கதையை படிக்காமலே புத்தகத்தை ரசிக்க வைத்தது .கதையை இன்று தான் படிக்க வேண்டும் .

    மீண்டும் அனைத்தும் படித்து விட்டு வருகிறேன் சார் .
    அப்புறம் மறந்து விட்டேன் சார் ...மாடஸ்தி விளம்பரம் அட்டகாசம் சார் .அவரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .விலை அதிகமானாலும் பரவாயில்லை சார் .அவரின் சாகசத்தின் பக்கத்தை குறைக்காதிர்கள் .

    ReplyDelete
  64. இந்த கஸ் ட்டத்திலே இருந்து வெளியே வந்ததும் உன்னை ஐஸ் பீராலெ குளிப்பாட்டுறேண்டா ஸ்கூபி
    அப்படின்னா உங்க இலை தழை dress ஐ நான் இருக்கிமுடுச்சு போடுறதுதான் நியாயம் chaarge

    ReplyDelete
  65. நண்பர்களே,
    நான் ஒரு Bookworm என்பதை விட ஒரு Bibliophile (புத்தக வெறியன்). என்னிடம் 3000 புத்தகங்களுக்கு மேல் உள்ளது. நான் வாங்கும் புத்தகங்களில், வாங்கிய நாள், கிழமை, மாதம், வருடம், நேரம், இடம் முதலிய விவரங்களை உள்பக்கத்தில் குறித்துவிடுவேன். பல வருடங்கள் கழித்து பார்க்கும் பொழுது, அந்த நாளை நினைத்து மகிழ்ச்சியடைவேன். உங்களுக்கு முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் நான் சிறு வயது முதல் இதை பின்பற்றி வருகின்றேன். நமது லயன், முத்து காமிக்ஸ் என்னிடம் ஒரு 300 புத்தகங்கள் உள்ளது. ஆனால் அதன் வெளீயீட்டு மாத விவரங்கள் என்னிடம் இல்லை. நண்பர்கள் யாரிடமாவது புத்தக வெளீயீட்டு எண், வெளீயீட்டு மாதம், வருடம் தெரிந்தால் அதை இங்கு வெளியிட்டால், மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

    ReplyDelete
    Replies
    1. @ Dr.AKK raja

      உங்கள் email கொடுங்கள் or எனது fb க்கு வாருங்கள் !

      Delete
    2. மிகவும் நன்றி மாயாவி சிவா,
      எனது email : a2kraja@gmail.com

      Delete
    3. Dear Editor,
      முந்தைய காலங்களில் புத்தக வெளியீடே கேள்விக்குறியாக இருந்ததால், நமது புத்தகங்களில் வெளியீட்டு மாதமோ, வருடமோ இருந்ததில்லை. ஆனால் இப்போழுது நிலமை மாறிவிட்டதே, இனி வரும் புத்தகங்களில், வருடமும், மாதமும் வெளியிட்டால், (“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”) மிக நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

      Delete
    4. Mayavi sir.. எனக்கும் இதுவரை வந்த நமது காமிக்ஸ் விவரங்கள் வேண்டும். sankarjmc@yahoo.com

      Delete
    5. //இனி வரும் புத்தகங்களில், வருடமும், மாதமும் வெளியிட்டால், (“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”) மிக நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. //

      இதற்கான பதில் ஆசிரியர் ஈரோட்டில் சொல்லி விட்டார் (அந்த வீடியோவை யாராவது லிங்க் போடுங்கப்பா :)). "வருடம் மாதம் போட்டால் சிறிது காலத்தில் பழைய இதழ் என்று வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் வாங்காமல் விட்டு விடலாம். ஆனால் காமிக்ஸ் என்பது பத்திரிகை போன்றது அல்ல. எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்."

      Delete
  66. நமது அலுவலகத்தில் இருந்து புத்தகம்கள் அனுப்பிவிட்ட போதும், எனக்கு இன்னும் இந்த மாத புத்தகம்கள் வரவில்லை (S.T கூரியர்), காரணம் புரியவில்லை :-(

    ReplyDelete
    Replies
    1. Parani, Got books yesterday through ST courier.

      Delete
    2. என்னத்த சொல்ல டெக்ஸ் கிட்... :-(

      Delete
  67. @EDI,

    Firstly Magnum Special -
    1st book - BIG FAT BOOK - அற்புதம்! @that price நிச்சயமாய் எட்டாவது அதிசயம்!! பார்த்த உடனேயே படித்த திருப்தி - இது உங்கள் வெற்றி
    2nd book - in comparison to 1st vol rombavae weak fellow

    Secondly,
    பில்லர் பக்கங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறேன் - ஸ்டீல் ஆனாலும் பரவாயில்லை - Please restart

    Thirdly,

    In my opinion, it would be really fair only if such competions which u announce in your blog are included in that months printed editions and then you decide the winner. That too when the prize is out of print issues!!

    ReplyDelete
  68. Replies
    1. @ சத்யாவுக்கு காபி காபி

      நன்றி நண்பரே! :)

      Delete
  69. சார் வணக்கம் புத்தகங்கள் படித்து விட்டேன்.500 பக்கங்கள் மின்னும் மரணம் 900 ரூபாயில்

    என்னும்போது 250 பக்கங்கள் 450 ரூபாயில் தரவேண்டிய கார்சனை வெறும்1 25 ரூபாயில்

    மணக்க மணக்க தந்து இருக் கின்றீர்கள் ..தமிழ் கூறும் நல் லுலகம் உங்கள் சேவையை

    வியந்து பாராட்டட்டும் ..பழைய சின்னபெண்ணு க்கு பதிலாக இளம் காற்று பைங்கிளிக்கு

    காதல் சொல்வது புதியவர்களுக்கு பிடிக்கும்.dylandog ன் பின் அட்டை புதுமையான மிரட்டல்

    xiii மர்மம் தொடர்வது ஒற்றைகையர் கர்னல் அமோஸ் மூலம் விரைவில் எதிர் பார்க்கிறோம்

    நன்றிகள் பல

    ReplyDelete
  70. ஹலோ மிஸ்டர் வேட்டைகார் ..ஒக்க நிமிஷம் பாபு இல்லி நோடுரி ,,ஞான் சம்சாரிகுன்னு

    இந்த காட்டை விட்டு goingout .. please ஹெல்ப் us

    இன்னும் எத் தனை பாசையிலே நீங்க கரடியா கத்தினாலும் அவன் காதிலே ஏறாது சார் ஜ்

    அவனோட செவிட்டு மெசினை நான்சுட்டுட்டேன்

    ReplyDelete
  71. எடிட்டர் சார்,

    மின்னும் மரணம் புக்கிங் நெம்பர் 224 P.கார்த்திகேயன் - பாண்டிச்சேரி என்றுதானே இருக்கவேண்டும், ஆனால் P.கார்த்திகேயன் - பெங்களூர் என்று இருக்கிறது!! தயவுசெய்து சரிபார்த்து சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : சரி பார்க்கச் சொல்லி விடுவோம் சார்..!

      Delete
  72. விஜயன் ஐயா,

    நான் 90-களின் லயன் ரசிகன். இப்போ கடந்த 2 மாசமா மீண்டும் காமிக்ஸ் படிக்க - சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன். உங்க கிட்ட ஸ்டாக்-ல இருக்குற, இந்த மாத வெளியீடு உட்பட, 34 புத்தகங்கள் வேண்டும்.

    வழக்கம் போல worldmart-ல் ஆர்டர் பண்ணிடுவேண். ஆனால், ஒரே பிரச்னை, புக் ஒன்றிற்கு 35-40 ரூபாய் கொரியர் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. அந்தப் பணத்தில் அடுத்த 3 மாசம் புக் வாங்கலாமே - என்ற நப்பாசை தான்.

    சனிக்கிழமை இது சம்பந்தமா ஈ-மெயில் அனுப்பினேன். திங்கள் கிழமை followup கால் பண்ணினேன், செக் பண்ணி சொல்வதாக சொன்னார்கள். மறுபடி followup கால், ஈ-மெயில் செய்தேன், சரியான response இல்லை.

    சரி, தலைவர் கிட்டயே அப்பீல் பண்ணாலமே-னு இங்க போஸ்ட் பண்றேன். ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணி, disscount-bulk shipping மூலமாக உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள்.

    நன்றி...
    Gokul
    gokul2787@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Shannon : Worldmart நாம் லிஸ்டிங் செய்ய பயன்படுத்தும் ஒரு ஆன்லைன் வியாபரத் தளம் மாத்திரமே ; அங்கு நம் வசதிகளுக்கேற்ப ஷிப்பிங் கட்டணங்களை முன்னும், பின்னுமாய் மாற்றி அமைக்க வசதிகள் பற்றாது ! So நேரடியாக நம்மிடம் வாங்கிடும் பட்சத்தில் இதழ் விலை + சின்னதொரு handling சார்ஜ் + கூரியர் கட்டணம் மாத்திரமே வசூலிக்கப்படும். பணம் அனுப்ப bank transfer அல்லது DD அனுப்பலாம்.

      Delete
    2. நன்றி விஜயன்... I was aware of the fact that worldmart prices cannot be changed, That is the reason I reached out to Lion-Muthu directly through e-mail and phone. Got a positive response @ midnight and I am glad we could work it out!!! மீண்டும் எனது நன்றி... :)

      Thank you Parani!

      Delete
  73. Caption 1

    ஏம்பா ஜார்ஜ், இப்ப நான் என்ன கேட்டுபுட்டேன் "இரத்தப்படலம் கலர்ல வருமாம்னு" தானே கேட்டேன். மனுசன் என்ன கோபத்துல இருந்தார்ன்னு தெரியல! அதுக்கு போயி இப்படி டவுசர கழட்டிபுட்டாரே!

    டேய் டப்பாத்தலையா! கொஞ்சம் பொறுமையாயிருடா; மின்னும் மரணம் முடியட்டும்ன்னு சொன்னேனே கேட்டியாடா. இப்ப பாரு! உன் கூட வந்ததுக்கு என் டவுசரையும் கழட்டிபுட்டாரு!...

    ReplyDelete
  74. கிட் ஆர்டின் : ம்ம்ம்ம்ம்....... எனக்கு "இரத்தப்படலம்" கலர்ல வேனும்... எனக்கு "இரத்தப்படலம்" கலர்ல வேனும்... ம்ம்ம்ம்....

    செரீப்: டேய் பண்ணு வாயா! இப்பதான் ரெண்டு பேரோட டவுசர உறுவிட்டார் எடிட்டர். என் டவுசரையும் கழட்ட வைக்கலாம்னு நெனைக்கிறீயா! படவா, கொரவளையா அப்படியே கடிச்சிபுடுவேன்! ஜாக்கிரதை.

    ReplyDelete
  75. கிட் ஆர்ட்டின் : பாப்கார்ன் ஆசை காமிச்சு இப்படி செஞ்சுட்டீங்களே பாஸ் ......

    டாக்புல் : பைங்கிளி படலம் கதை முடிஞ்சவுடனே ரோக்ஸானா பொண்ணு என்னை பாத்து ஏன் உங்க தலையிலே முடியே இல்லை -ன்னு கேட்டா ...நான் வெட்டி பந்தாவுக்கு மூளை நிறைய இருக்கிறவுங்க யோசனை பண்ணியே முடி கொட்டி போவும் -னு சொன்னேன் ...அந்த நேரம் பாத்து நீ ஏன்டா அவளை பாத்து "உங்களுக்கு எவ்வளவு நீளமான அடர்த்தியான முடி -ன்னு சொன்னே ?அதுக்குத்தான் உனக்கு இந்த தண்டனை .....

    ReplyDelete
  76. டாக்புல் : ஏன்டா இப்படி ஊளையிட்டு கத்துற ?

    கிட் ஆர்ட்டின் : பாப்கார்ன் வாங்கி தர்றேன் ...நம்ம ஆபிஸ் சூப்பிரண்ட பத்தி மேலிடத்துக்கு மொட்டை கடுதாசி எழுதுன்னு சொன்னீங்க ....சரி ...மொட்டை கடுதாசி எழுத கண்டிப்பா மொட்டை அடிச்சிதான் ஆவனுமா ?

    ReplyDelete
  77. @ FRIENDS : இந்தப் பதிவிலா - கடந்த பதிவிலா என்று நினைவில்லை - நண்பரொருவர் "பெம்மிக்கன்" என்பது பேபி கார்னின் எழுத்துப் பிழையா ? என்று கேட்டிருந்தது நினைவில் உள்ளது ! பதிலை அங்கே பதிவிட இயலாமைக்கு சாரி ; பெம்மிக்கன் - எருதுக் கறியில் செய்யப்படும் ஒரு வகை உப்புக் கண்டம் ! பக்காவான அசைவ ஐட்டம் !!

    ReplyDelete
  78. ஐஸ்வர்யா ராய் மறுபடியும் நடிக்க வந்தா நான் மொட்டை அடிச்சு க்கிறேன்னு சொன்னது
    வாஸ்தவம்தான் பாஸ் ..படம் வெளியே வர்ற வரை பொ று க்க கூடாதா
    மடையா இந்த மொட்டை அஞ்சலிக்காக டா

    ReplyDelete
  79. நண்பர்களே....ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் !
    பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வெளியூர் ஆயுதமா இருக்கே.. டெக்ஸ் கைல ஒரு அருவாளும், டைகர் கைல ஒரு சம்மட்டியும் குடுத்த கலக்கலா இருக்கும் :P

      ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் !

      Delete
    2. மாயாவிக்கும் மற்ற நண்பர்களுக்கும், எடிட்டருக்கும் மற்ற அலுவலக நண்பர்களுக்கும்... என்னுடைய வாழ்த்துகளும்!

      Delete
  80. நேற்றிரவுதான் புத்தகங்கள் கைக்கு வந்தன. முதல் பார்வையிலேயே ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தது - க.கா.கா தான்! அட்டைப்படம் அடர் பச்சை நிறத்தில் அழகோ அழகு! உள்ளே புரட்டியபோது பளபளப்பான பக்கங்களும், வண்ணங்களும் இனம்தெரியாத உற்சாகமூட்டின. ஏதோவோர் அதிகாலைக் கனவு சாத்தியமாகி இன்று நம் கைகளில் புரளுவதைப்போல ஒரு சிலிர்ப்பு!! ஆனால் சற்றே இழுத்துவிட்டாற் போலிருந்த சித்திரங்களைக் கண்டதும் கரைபுரண்ட உற்சாகம் வடிந்து, மனம் மெல்லிசாய் வயலின் வாசிக்க ஆரம்பித்தது. அகழ்வாராய்சியில் கிடைத்த அழகான பெண் சிலையின் நுனிமூக்கு சேதமடைந்திருப்பதைப் போல ஒரு உணர்வு!
    ஆனால், வாசகர்களுக்காக இப்புத்தகத்தின் தயாரிப்புச் செலவை எடிட்டர் தாங்கிக் கொண்டிருப்பதை நினைத்தபோது, இந்த சின்னக் குறையையும் தாங்கிக்கொள்ள மனம் தயாராகிவிட்டது. குறையோடு கிடைத்தாலும் பொக்கிஷம் பொக்கிஷமே! நன்றி எடிட்டர் சார்!

    டைலன் அட்டைப்படத்தை இத்தளத்தில் பார்த்தபோது கிடைத்த பிரம்மிப்பு, நேரில் பார்த்தபோது ஏனோ கிடைக்கவில்லை! இன்னும் கொஞ்சம் பளிச் வண்ணங்களில் இருந்திருக்கலாம். வீதியில் சிதறிய உதிரம் கூட வெளுத்துப்போனதைப் போலிருந்தது. உள்ளே பக்கங்களைப் புரட்டியபோது எல்லாமே பளிச் பளிச்!

    காலனின் கைக்கூலி அட்டைப்படத்தில் ஸ்டீவ் ராலண்ட் இன்னும் முழுமையாக நிரைவடையாத ஓவியம் போல பரிதாபமாக நிற்கிறார். உள்ளே ஓவியங்கள் பளிச் பளிச்!

    அடுத்த சில நாட்களுக்கு ஆபீஸ் லீவு. எங்கே போய் படிக்கறதுன்னுதான் தெரியல! ;)

    ReplyDelete
    Replies
    1. //டைலன் அட்டைப்படத்தை இத்தளத்தில் பார்த்தபோது கிடைத்த பிரம்மிப்பு, நேரில் பார்த்தபோது ஏனோ கிடைக்கவில்லை!//
      +1. I too have the same feeling

      Delete
  81. கா.க.கா மட்டும் தனியாக வேண்டும் சார்.. worldmart ல் அந்த வசதி செய்யுங்கள் சார்.. நன்றி...

    ReplyDelete
  82. பச்சையா சொல்றேன் சார்ஜ் எனக்கு இந்த டிரஸ் பிடிக்கவே இல்லை
    ஹன்சிகா ஓபன் பண்ணபோற நீச்சல் குளத்துக்கு இப்படி போனாதான்டா
    நமக்கு பெருமை

    ReplyDelete
    Replies
    1. @ பாம்பாம்

      ஏதோ உங்க உள்மன ஆசைகளைச் சொல்லுற மாதிரியே இருக்கே? ;)

      Delete
    2. பின்னே நமக்கு சாவித்திரி பத்மினியே போதும்னு நின ச்சீங்களா

      Delete
  83. //////////// டியர் எடிட்டர் ////////////
    கார்சனின் கடந்த காலத்தை இப்பொழுதுதான் முதன் முறையாக படித்தேன். அற்புதமான கதை. இதேபோன்ற கதைகளை தேர்வு செய்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். தொடர் சொதப்பல்களால் தொய்ந்துபோன டெக்ஸ் கார்சனின் புண்ணித்தால் சிறிது தலைநிமிர்ந்து உள்ளார். (சாதாரண டெக்ஸ் கதைகளுக்கே ஸ்டீல் கெட்ட ஆட்டம் போடுவார். இவ்வளவு நல்ல கதை கிடைத்தால் சும்மாவா இருப்பார்)

    விரைவில் சந்தா தொகையை அறிவிக்க வேண்டுகிறேன். நான் இன்னும் மின்னும் மரணத்திற்கு சந்தா செலுத்தவில்லை. இரண்டையும் ஒன்றாக கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். மாடஸ்தியின் மறுவருகை உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த ஆண்டின் முதல் இதழாக மாடஸ்தி வந்தால் சந்தோசமே.

    ReplyDelete
  84. கார்சனின் கடந்தகாலம் :
    குறை சொல்ல ஒன்றுமில்லை. தட்டையான படங்கள் என்பதெல்லாம் பெரிதாய் பாதிக்கவில்லை. அட்டை டூ அட்டை கதை மட்டுமே இருப்பது சற்று (நிறையவே.) சங்கடமாக உள்ளது. ஹாட்லைன் என்று ஒருபக்கம், விரைவில் என்று சில விளம்பரங்கள் (இதுவும் ஒரு பக்கம் கூட போதும்) , இவையெல்லாம் இல்லாத புத்தகங்கள் ஏதோ ஒருவித நிறைவடையாத ,திருப்தியடையாத மன உணர்வை தருகின்றன.
    மற்றபடி இந்த இதழை பொருத்தவரை குறித்த விலையில் நிறைந்த தரத்தில் வெளியிட நீங்கள் எடுத்துக்கொண்ட அக்கறை மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட பெரிதாக தெரிகிறது.
    குறைகள் சொல்லவேண்டுமெனில் 138ஆம் பக்கத்தில் வாகோவும் கிரைம்ஸும் பேசிக்கொள்ளும் இடத்தில் வசனம் (பலூன்) இடம் மாறியுள்ளதாக தெரிகிறது.
    145ஆம் பக்கத்தில் டெக்ஸும் டைகர் கிட்டும் பேசும் பலூன்கள் தவறாக உள்ளது.(டெக்ஸ் தன் மகனை டாடி என அழைக்கிறார்)
    ஆனால் கதை மற்றும் புக்கின் தரத்திற்க்கு முன்னால் மேற்குறிப்பிட்ட குறைகள் எல்லாம் அடிபட்டு போகின்றன.
    ஆனாலும் அந்த பாட்டுதான்.,,,"

    ReplyDelete
    Replies
    1. //138ஆம் பக்கத்தில் வாகோவும் கிரைம்ஸும் பேசிக்கொள்ளும் இடத்தில் வசனம் (பலூன்) இடம் மாறியுள்ளதாக தெரிகிறது.
      145ஆம் பக்கத்தில் டெக்ஸும் டைகர் கிட்டும் பேசும் பலூன்கள் தவறாக உள்ளது.(டெக்ஸ் தன் மகனை டாடி என அழைக்கிறார்)//

      ஸாரி.,ஸாரி, தவறு நடந்துவிட்டது.

      கிரைம்ஸ் -வாகோ டோலன் :பக்கம் எண்:135.
      டெக்ஸ் -டைகர் கிட்:பக்கம் எண்:148.

      Delete
  85. கிட் ஆர்ட்டின் : எதுக்கு பாஸ் இப்படி எனக்கு கதற கதற மொட்டை அடிக்கிறீங்க ?...

    டாக் புல் : ஒரு ட்ரெய்னிங் -க்காகத்தான்டா ....அரசியல் -ல குதிக்கலாம்னு இருக்கேன் ....

    ReplyDelete
  86. டியர் எடிட்டர்,

    கார்சனின் கடந்த காலம் இந்த அமைப்பில் வந்தது ஏற்புடையது தான் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால் 120க்கு மேல் விலை வைப்பதை agentகள் விரும்புவதில்லை என்னும் காரணம் இந்த புத்தகத்திற்கு மட்டும் என்பதை ஏற்க இயலவில்லை.

    அப்போது,

    LMS - 2
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல
    தீபாவளி horror ஸ்பெஷல்

    ஆகியவை 150 விலைகளில் வருவது எங்கனம் ? ஏற்கனவே அறிவித்து விட்டபடி என்றால் இன்னொரு dylan dog குறைக்கப்பட்டு இவ்விதழ் சிறப்பாக செய்யப்படிருக்கலாமே - அந்த பெயர் தெரியா detective கதையை எந்தவித அறிவிப்பும் இன்றி நீங்களே விலக்கி வைக்கும் பொது இதையும் அவ்வாறு கையாண்டிருக்கலாமே ?!?!

    Finally, decision is yours, so should be consistency !!!

    பி.கு : போலி ஐடி பார்ட்டிகள் பின்னாடி வந்து கும்மலாம் - welcome :-)

    ReplyDelete
    Replies
    1. நட்டநடு ராத்திரியில கூட என்னமா யோசிக்கறாங்க!!

      ஒரு அட்டகாசமான மைல்கல் இதழுக்காக இன்னொரு டைலன் கதையைக் காவு கொடுத்திருக்கலாம்தான், தப்பில்லை!
      நாலு பேருக்கு நல்ல காமிக்ஸ் கிடைக்கும்னா எதுவுமே தப்பில்லை! :)

      Delete
    2. விஜய் ,

      நீங்கதான் 'அந்த' போலி ஐடி பார்டியா ? :-) :-p

      Delete
    3. கிர்ர்ர்ர்ர்....

      Delete
    4. சொல்லுங்கண்ணே ...
      சொல்லுங்க .....

      Delete
  87. டியர் எடிட்டர்,

    Dylan Dog பற்றி -

    இக்கதை LMSல் வந்ததை விட வெகு சுமார் - எனினும் அந்த அமானுஷ்ய element நன்று. வர்ணங்களும் நன்று. டைலனும் அந்த இன்ஸ்பெக்டர்ம் சேர்ந்து பேசும் இடங்கள் லொட லொட என்று இழுத்து விட்டது. கிளைமாக்ஸ் சற்றே நீண்டுவிட்டது.


    ஒரு யோசனை : இவ்வாறான கதைகளை black and whiteல் 35 ரூபாய்க்கும், இன்னும் சிறப்பான கதைகளை வண்ணத்திலும் வெளியிட்டால் விற்பனைக்கும் உதவும்.

    ReplyDelete
  88. நண்பர்களே இனிய விஜய தசமி கொண்டாட்டம்
    பார்க்க .....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. மாயாவி,
      சூப்பரப்பு.
      நல்வாழ்த்துக்கள் நண்பரே.!

      Delete
    2. அட்டகாசம் மாயாவி சார்! ஆனாலும் உங்க புக்ஸுக்கு காவலாளியா டைகரை நிறுத்தி வச்சுட்டீங்களே!! சரி, அவரை அந்த வேலையையாவது ஒழுங்கா பார்க்கச் சொல்லுங்க! ;)

      Delete
    3. மேற்கண்ட படத்துக்கு ஒரு கேப்ஷன் போட்டி வைக்கலாமே மாயாவி ஜி? ;)

      Delete
  89. போக்கர் ஆட்டத்தின் விதி முறைகள் நமக்கு தெரியாது என்ற போதிலும் என்னிடம்
    ஒன்பதில் இருந்து ராஜா வரை வரிசையாக இருக் கிறது எல்லாமே ஒரே நிறம்
    என்று சொல்லி டெக்ஸ் ஜெயிக்கும்போது ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு நம்பவே முடியவில்லை
    என பில்லி கிரைம்ஸ் சொல்வதை கேட்டால் தல தலைதான் என்று சந்தோசம் அடைகிறோம்

    ReplyDelete