Powered By Blogger

Sunday, May 18, 2014

மேய்ச்சலில் ஒரு சிந்தனைக் குதிரை !

நண்பர்களே,

வணக்கம். 2014-ன் முதல் பாதியை 'பர பர'வென்று தாண்டி வந்து விட்டோம் ! சென்னைப் புத்தக விழாவும், அது சமயம் வெளியான ஜனவரியின் 4 இதழ்களும் நேற்றைய நிகழ்வுகளைப் போல நினைவுகளில் நிழலாடினாலும்  என் கையிலிருக்கும் ஜூன் மாதத்து லார்கோ + சிக் பில் இதழ்களோ - 'கனா கண்டது போதும், அப்பனே..! Wake up ! ' என்று தட்டி எழுப்புகின்றன ! ஆண்டின் இரண்டாம் பாதியை எவ்வளவு முடியுமோ - அவ்வளவு இடியாப்பமாக்கிக் கொள்வதை நாமே ஒரு சமீப வழக்கமாய் ஆக்கி வைத்திருப்பதால் - நம் முன்னே விரியவிருக்கும் அடுத்த 180 நாட்களும் பிசியோ பிசியாக இருக்கப் போகின்றன !  'லொங்கு-லொங்கென்று' குதிரைகளில் தொங்கித் திரியும் முருட்டு உருவங்கள் ஒரு பக்கமாகவும், பள பள ஜெட் விமானங்களில் உலாற்றும் கோமான்கள் இன்னொரு பக்கமாகவும், ஆவிகளையும், அமனுஷ்யங்களையும் விரட்டிச் செல்லும் விசித்திரஙன்கள் பிறிதோர் பக்கமாகவும் என் தலையைக் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளனர் என்பது போலொரு பிரமை ! டி.வி.யில் Magnum ஐஸ்க்ரீம் விளம்பரம் ஓடினால் கூட என் மண்டைக்குள் பதிவாவதோ LMS -ல் இன்னமும் பணி செய்ய வேண்டிய கதைகள் பற்றிய சிந்தனைகள் தான் ! Anyways இந்தப் பரபரப்போடு வாழப் பழகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவமே என்பதால் எங்கள் கடப்பாரை நீச்சல் தொடர்கிறது ! 

LMS எனும் மலை ; மில்லியன் ஹிட்ஸ் ; அந்த ஸ்பெஷல் - இந்த ஸ்பெஷல் என அட்டவணை நிரம்பி வழியும் போதும் கூட எனது சிந்தனை அவற்றையும் தாண்டிய பொழுதுகளின் மீது படிவது அவசியமாகிறது ! கண் மூடித் திறக்கும் முன்பாக இன்னொரு 3 மாதங்கள் ஓடி இருக்கும் எனும் போது - 2015-ன் அட்டவணையை இறுதி செய்யும் வேளை புலர்ந்திருக்கும் ! So - இப்போதே சிறுகக் சிறுக 2015-ன் பக்கமாகவும் சிந்தனைக் குதிரைகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளேன் ! இந்தாண்டின் பாக்கியுள்ள வெளியீடுகளுக்கான திட்டமிடல்கள் ; கதைக் கொள்முதல்கள் ; அட்டைப்பட டிசைன் பணிகள் ; பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஏற்கனவே தொடக்கம் கண்டு விட்டபடியால் அவற்றின் மீது பணி செய்து ஒவ்வொன்றாய் பூர்த்தி செய்யும் வேலைகளே பாக்கி ! So சிந்தனைக் குதிரைகளானது தற்சமயம் சோம்பல் முறித்துக் கொண்டிருப்பதால் - அடுத்த அட்டவணையை கோர்த்திடும் வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றேன் ! 

2014-ன் பாணியான சிங்கிள் இதழ்கள் ; ரூ.60 விலைகள் - என்ற பார்முலா தான் தொடரும் நாட்களிலும்  நமக்குக் கைகொடுக்கவிருக்கிறது என்பதை கடந்த 5 மாத விற்பனைகள் நமக்குச் சொளின்றன ! அதே போல, இரு கதைகள் இணைந்து ரூ.120 விலையில் வெளியாகும் இதழ்கள் விற்பனை முனைகளில் தடுமாறுகின்றன என்பது குண்டு புக் ரசிகக் கண்மணிகளுக்கு நான் சொல்லியாக வேண்டியதொரு சேதியும் கூட ! இரு பாகங்கள் கொண்ட கதைகளை மட்டுமே நாம் இவ்விதம் combo-வாக வெளியிடுகிறோம் எனும் போது இந்தச் சிக்கலுக்கு உடனடித் தீர்வை எனக்கு ஏதும் புலப்படவில்லை ! Maybe ரூ.120 என்ற விலை தான் நெருடலா ? ஒரு வேளை filler pages  ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ? Or maybe சினிபுக் செய்வது போல் இரு பாகக் கதைகளையும் கூட பார்ட் 1 ; பார்ட் 2 என்று தனித் தனி இதழ்களாய் தலா ரூ.60 விலைகளில் வெளியிடுவது தீர்வாகுமா ? என்னோடு சேர்ந்து நீங்களும் கொஞ்சமாய்த் தலையைப் பிய்த்துக் கொள்ளலாமே ? 

நிறைய திறமையான ஆட்டக்காரர்கள் அணியில் இருப்பதும் கூட சில சமயங்களில் சற்றே சிரமமான தீர்மானங்களுக்கு அவசியம் ஏற்படுத்தும் என்பதை 2015-ன் மேலோட்டமான சிந்தனைகள் தெரியப்படுத்துகின்றன ! நம் காமிக்ஸ் கூட்டணியிலிருக்கும் எக்கச்சக்க நாயகர்களுள் - 'கட்டாயம் தேர்வு செய்தே ஆக வேண்டும்' என்ற ரகத்திலான current ஆசாமிகள் யாராக இருப்பார்களென்று எழுதிப் பார்த்தேன் ! இதோ என் முன்னே விழுந்த பெயர்கள்:
  • டெக்ஸ் வில்லர்
  • கமாஞ்சே
  • வேய்ன் ஷெல்டன்
  • லார்கோ வின்ச்
  • லக்கி லூக்
  • சிக் பில்
  • கேப்டன் டைகர்
  • XIII 

இந்தப் பட்டியலில் உள்ளோர் 'கட்டாயம் களம் இறங்கியே தீர வேண்டிய players தான் !' என்பதில் நமது அபிப்ராயங்கள் ஒத்துப் போகுமென்று நான் கருதுதல் சரி தானா ? அவ்விதமிருக்கும் பட்சத்தில் இந்த 'A ' லிஸ்ட் டீமை நமது 2015-ன் அட்டவணையில் முதலில் நுழைத்து விடலாம் அல்லவா ? (நண்பர் XIII -ன் தேர்வு பற்றி லேசாய் mixed reactions இருக்கக் கூடும் தான் ; ஆனால் புதிய திசையில் பயணமாகும் இத்தொடரின் 2 புதிய கதைகள் 2015-க்குள் தயாராகி இருக்கும் என்பதால் அவற்றை முயற்சிப்பது தவறில்லை என்று நினைத்தேன் !)


அடுத்ததாய் நான் போட்ட பட்டியல் - 'நல்ல ஆட்டக்காரர்கள் தான் ; ஆனால் தொடர்ச்சியாய் consistency காட்டாதது மாத்திரமே மைனஸ் ' என்ற ஆசாமிகளின் பெயர்களோடு : 
  • ப்ளூ கோட் பட்டாளம்
  • ரிபோர்ட்டர் ஜானி 
  • மர்ம மனிதன் மார்டின் 
  • CID ராபின்
ப்ளூகோட் பட்டாளத்தின் கதைகள் எல்லா நேரங்களிலும் விலா நோகச் செய்யும் காமெடிக் களங்களாய் இருக்கப் போவதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் ! கிட ஆர்ட்டின் + ஷெரிப் ஜோடியைப் போலவே ஸ்கூபி & ரூபி duo அமைந்திருக்கும் போதிலும், இவர்களது கதைகளில் out & out காமெடி மாத்திரமே குறிக்கோளாய் இருந்திடப் போவதில்லை ! யுத்தப் பின்னணி ; சிற்சிறு வரலாற்றுக் குறிப்புகள் ; அதன் மத்தியினில் நம் ஜோடி என்பது தான் இத்தொடரின் template எனும் போது ஒவ்வொரு முறையும் ஒரு சிரிப்புத் தோரணத்தை எதிர்பார்த்திடாமல் இருக்கும் பட்சத்தில் இந்தத் தொடர் தேறி விடும் ! ரிபோர்ட்டர் ஜானியாரைப் பொறுத்த வரை அவரொரு 'player on eternal trial' என்று சொல்லலாம் ! நல்ல கதைகள் பல தந்திருந்தாலும், இடையிடையே தலைகாட்டும் குழப்பமான plots இவரை ஒரு அக்மார்க் வெற்றி நாயகராக அடையாளம் காணச் செய்வதை சிரமாக்குகிறது ! மர்ம மனிதன் மார்டினின் நிலையோ முற்றிலும் வேறு ! 'என் கதைகளின் சகலமும் இடியாப்பங்களே !' என்று தைரியமாய் பறைசாற்றிடும் இவரது ஆழமான கதைகளுக்கு உள்ள வரலாற்றுப் பின்னணிகளை கண்டு வியப்போரும் உண்டு ; மிரள்வோரும் உண்டு ! LMS மூலம் மீண்டும் வருகை தரும் இந்த நாயகரை 2015-ல் நாம் எவ்விதம் கையாள வேண்டுமென்று விரும்புகிறீர்கள் folks ? இன்னுமொரு low profile நாயகர் நமது C.I.D ராபின் என்று சொல்லலாம் ! பல சுவாரஸ்யமான கதைகளை அவர் வழங்கி இருப்பினும், பெரியதொரு ரசிக மன்றத்தை உருவாக்கிடல் இது வரை  இவருக்கு சாத்தியமாக இருந்ததில்லை ! 2015 இவரது அதிர்ஷ்ட ஆண்டாய் அமைந்திடுமா ? பார்ப்போமே !  

எனது அடுத்த பட்டியல் - புது வரவுகள் ; காத்திருக்கும் அறிமுகங்களின் பெயர்களைக் கொண்டது :
  • டிடெக்டிவ் ஜூலியா
  • ரின் டின் கேன்
  • மேஜிக் விண்ட்
  • டிடெக்டிவ் டைலன்
இவர்கள் ஒவ்வொருவரது தொடர்களிலும் எக்கச்சக்கமான கதைகள் உள்ளன என்பதால் குறைந்த பட்சம் ஒரு 20 ஆண்டுகளாவது அவரவர் மார்கெட்களில் வலம் வந்த அனுபவம் நிச்சயமிருக்கும் ! (ஜூலியா மாத்திரம் 1998-ன் குழந்தை ; பாக்கி அனைவரும் 1980-களின் படைப்புகள் !) ஒரு தொடரில் வலு குறைச்சலாய் இருக்கும் பட்சத்தில் இத்தனை காலம்  குப்பை கொட்டுவதென்பது நிச்சயமாய் இயலாக் காரியம் ! So 2014-ல் அறிமுகம் காணும் இவர்களது துவக்கக் கதைகளின் ரிசல்ட் எவ்விதம் இருப்பினும் - அடுத்தாண்டின் திட்டமிடல்களில் இவர்களுக்கு வாய்ப்புகள் தருவதே நியாயமாக இருக்குமென்பது என் எண்ணம் ! Hopefully I'm right !

கடைசியாய் நான் போட்ட பட்டியல் - 'சற்றே தடுமாற்றம் கண்டுள்ளோர் ' சங்கத்தினரின் பெயர்களைக் கொண்டது ! 'ஐயோ சாமி - வேண்டாமே !' என்ற ரீதியிலிருந்து, சற்றே நாசூக்காய் விமர்சிக்கும் நண்பர்களிடமிருந்து 'ஹாவ்' என்ற கொட்டாவிகளை வரச் செய்துள்ள சமீபத்துக் கதைகளுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் :
  • டிடெக்டிவ் ஜெரோம்
  • சாகச வீரர் ரோஜர்
  • ப்ருனோ பிரேசில் 
  • ஜில் ஜோர்டான்
  • டயபாலிக்
"ஆஹா...இவர்களுக்கென்ன குறைச்சல் ?" என்று நமது die hard ரசிகர்கள் பொங்கி எழுந்தாலும், இந்தக் கூட்டணியின் சமீபக் கதைகள் வெவ்வேறு காரணங்களுக்காக thumbs down பெற்றுள்ளது மறுக்க இயலா உண்மை ! இவை ஒன்றுக்கொன்று நெருக்கமான இடைவெளியில் வெளியானதும் கூட ஒரு விதத்தில் அவற்றின் வெற்றியின்மைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் தான் ! தொடரும் ஆண்டில் நாயகர்கள் தேர்வில் செலுத்தும் கவனத்தை - கதைகளை space out செய்வதிலும் காட்டியாக வேண்டுமென்பது புரிகிறது ! இந்த ஐவர் பட்டியலை கொஞ்ச காலம் ஓரம் கட்டுவது உசிதமா ? அல்லது இவர்களது தொடர்களில் இன்னும் கவனமாய்க் கதைகளைத் தேர்வு செய்து இன்னுமொரு வாய்ப்புத் தந்து பார்க்கலாமா ? What's your take on this guys ?


சமீப வரவான "தோர்கல்" இந்தப் பட்டியல்களில் எவற்றிலுமே இடம் பிடிக்கவில்லையென்ற போதிலும், 2015-ல் மட்டுமன்றி ; தொடரும் சமயங்களிலும் நம் திட்டமிடல்களில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பார் ! பின்னே செல்லச் செல்ல இத்தொடரின் வேகமும், பிரம்மாண்டமும் பன்மடங்கு கூடுவதால் இதற்கொரு சுதந்திரம் தருவது அவசியமாகிறது ! சந்தாவில் "திணிக்கப்படும்" இதழாய் இராமல் - 'பிரியப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் !' என்ற status இத்தொடருக்கு இருக்குமென்பது மாத்திரமே வித்தியாசம் ! 

பழகிப் போன நாயகர்களின் பரிச்சயமான பாணிக் கதைகளோடு உலா செல்வது சுலப வேலை தான் எனினும், கொஞ்சமேனும் வித்தியாசம் காட்ட வேண்டுமென்ற உத்வேகம் என்னிடம் மங்கிடவில்லை ! (தாரமங்கலத்தில் ஒருவர் தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதாய் flash news !!) "மாறுதல்" என்றாலே அது வரலாறாகவோ  ; அலுகாச்சியாகவோ தான் இருக்க வேண்டுமென்ற template-ஐ முதலில் மாற்றியாக வேண்டுமென்ற சிந்தனையின் பிரதிபலிப்பை இந்தாண்டின் "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் " + "தீபாவளி மலர்" தெளிவாய்த் தெரிவிக்கும் ! அனல் பறக்கும் அதகளங்களும் கிராபிக் நாவல்களுக்குச் சாத்தியமே என்பதை தொடரும் மாதங்களில் நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள் ! 2015-ல் கூட இதே போல் சின்னதாய் ஒரு சாளரத்தை திறந்து வைத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு - ஏதேனும் வித்தியாச பாணிகளை பரிசோதிக்க முயற்சிப்பேன் ! 

இவை அனைத்துமே எனது தற்போதைய சிந்தனைகளின் உரத்த பிரதிபலிப்புகள் மட்டுமே என்பதால் இவை தான் 2015-ன் உறுதியான blueprint என்று சொல்ல மாட்டேன் ! தொடரும் மாதங்களில் ஒவ்வொரு கதைகளும் perform செய்யும் விதங்கள் எனது தீர்மானங்களை ஏதோ ஒரு விதமாய் மாற்றிடவும் செய்யலாம் !  உங்களின் reactions ; அபிப்ராயங்கள் -எனது கணிப்புகளின் நம்பகத்தன்மையினை செப்பனிட உதவும் என்பதால் இதனை இப்போதே இங்கு பதிவிடுவது தேவலை என்று நினைத்தேன் ! அதே போல - இது முழுக்க முழுக்க புது இதழ்கள் தொடர்பானதொரு சிந்தனைச் சங்கிலியே ; மறுபதிப்பு நாயகர்களை இந்த உரையாடலுக்குள் கொணர வேண்டாமே ப்ளீஸ் ?! வெவ்வேறு பட்டியலுக்குள் நான் பிராக்கெட் போட்டு வைத்திருக்கும் நாயகர்களை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள் என்பதை அறிந்திடவே இம்முயற்சி ! So - கொஞ்சம் அவகாசம் ஒதுக்கி நண்பர்கள் அனைவருமே இதனில் பங்கேற்றால் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது ! தவிர, தற்போது இங்கு தென்படும் மெல்லியதொரு இறுக்கத்தை இலகுவாக்கிட  இந்த கலந்துரையாடல் கொஞ்சமேனும் உதவினால் கூட மகிழ்ச்சியே ! 

சின்னச் சின்ன updates :
  1. லார்கோ + சிக் பில் இதழ்களை வரும் புதன்கிழமை (21 May) இங்கிருந்து அனுப்பிடுவோம் ! இப்போதே அவை தயார் தான் என்ற போதிலும், பொறுமையாய் சந்தாப் பிரதிகள் அனைத்தையும் ஒரு முறை புரட்டிச் சரி பார்த்து அனுப்பிட ஒன்றிரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று தோன்றியது ! So வியாழன் காலைகள் உங்கள் நகரத்து ST கூரியர் கதவுகளைத் தட்டலாம் !
  2. LMS வெளியீட்டுத் தேதி பற்றி நண்பர்கள் கடந்த பதிவின் இறுதியில் வினா எழுப்பி இருந்தனர் ! ஈரோடு புத்தக விழாவின் விண்ணப்பமே இன்னமும் கிட்டவில்லை எனும் போது - அமைப்பாளர்களின் LMS வெளியீட்டுத் தேதி பற்றி நண்பர்கள் கடந்த பதிவின் இறுதியில் வினா எழுப்பி இருந்தனர் ! ஈரோடு புத்தக விழாவின் விண்ணப்பமே இன்னமும் கிட்டவில்லை எனும் போது - ஆண்டவன் கருணையும், -அமைப்பாளர்களின் confirmation-ம்  தான் இப்போதைக்குப் பிரதானம் ! Anyways நமக்கு இம்முறையும் ஸ்டால் கிட்டும் என்ற நம்பிக்கையோடு பார்ப்பதாயின் LMS வெளியீடு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு என்று கொள்ளலாம் ! வெள்ளிக்கிழமை மாலை கூரியரில் பிரதிகளை அனுப்பி விட்டு, சனிக்கிழமை விழாவில் விற்பனையைத் துவக்கினால் எல்லா நண்பர்களுக்கும் ஒரே வேளையில் இதழ் கிட்டிய திருப்தி இருக்குமே ! So ஆகஸ்ட் 2 என்ற தேதியினை வட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் guys ! இப்போதைக்கு நான் "விரியனின் விரோதியோடு " மல்லுக் கட்டக் கிளம்புகிறேன் ! Have a great Sunday ! 

189 comments:

  1. Replies
    1. இரண்டு வட்டம் போட்டாச்சு, இனி திட்டம் போட வேண்டும்

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : திட்டம் போடுவது சிஸ்டரிடம் என்ன கதை சொல்லுவதென்பது பற்றியா ? :-)

      Delete
    3. இல்லை இருவரும் வருவதால் தான் இரண்டு வட்டம். திட்டம் எப்படி லீவ் போடுவதென்று. ஹி ஹி

      Delete
    4. well said sir! always your selections are good! so i am expecting the stories whichever you are printed! rock the tamil comics world!!!

      Delete
  2. சிந்தனையை தூண்டும் சுவாரஸ்யமான பதிவு. பதில் விரைவில்.

    ReplyDelete
  3. டியர் எடிட்டர்ஜீ!!!

    அடுத்த சில நாட்களுக்கு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தப்போகும் பதிவு. 2015ஆம் ஆண்டுக்கான கதைத்தேர்வை இப்போதே ஆரம்பித்துவிட்டதன் அவசியம்தான் என்னவோ...? அதிலும் கதைத்தேர்வில் இத்தாலிய கூர்மண்டையரை கடைசி இடத்தில் தள்ளியது அடியேனுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.குறைவான விலையில் வரும் நாயகர் என்பதுதான் அவர் செய்த பாவமோ...?

    2015 பட்டியலில் கேப்டன் டைகரையும் சேர்த்துள்ளீர்கள்.அதில் வில்லியம் வான்ஸ் பணியாற்றிய மிச்ச இரண்டு கதைகளையும் ஒரே இதழாக வெளியிட்டால் மகிழ்வேன்.

    அப்படியே கண்களை குளமாக்கும் ஒரு அதிசோக கிராபிக் நாவலையும் வெளியிட்டால் (இலவச இணைப்பாக ஒரு கர்சீப்) படித்துவிட்டு ஓரமாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் அழுவோம்.ஆவன செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. saint satan : தெளிவாய்ப் படித்துப் பாருங்களேன் சாத்தான்ஜி.... இது திட்டமிடல் அல்ல....! இந்தாண்டு + சமீபத்திய ஆண்டின் நாயகர்களின் தரவரிசைப் பட்டியல் பார்க்கும் பணியே ! தேர்தலுக்கு முன்பான சென்சஸ் மாதிரியான முயற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

      அதிசோக கிராபிக் நாவலா ? யாரோ உருட்டுக் கட்டை சகிதமாய் பள்ளிப்பாளயத்துக்கு பஸ் ஏறுவதாகத் தகவல் வந்ததே..!!

      Delete
    2. ஐயாம் எஸ்கேப் ;-)

      Delete
  4. வழக்கமான இதழ்களோடு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை, ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் சிறப்பிதழ் வெளியிடலாமே. LMS அளவில் ஒரு 4 கதைகளோடு வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
    Replies
    1. Srithar Chockkappa : LMS அளவில் 3 மாதத்திற்கொரு ஸ்பெஷல் ?!!

      நிச்சயமாய் என் சீட்டை சூப்பர்மேனுக்குத் தான் தாரை வார்த்தாக வேண்டும் !! அவரை தவிர இதனை செயல்படுத்திட வேறு யாருக்கும் ஆகிடாதே !!

      Delete
  5. இந்த லிஸ்ட்ல கிராபிக் நாவல் இல்லை என சநதோசப்பட்டேன்.
    ஆனா அந்த சந்தோசமும் போச்சா

    ReplyDelete
    Replies
    1. R.Anbu : இந்தாண்டின் இறுதிக்கு முன்பாக 'அடுத்த கிராபிக் நாவல் எப்போது ? ' என்ற கேள்வியை நீங்களே கேட்கும் நாள் புலர்கிறதா - இல்லையாவென்று தான் பாருங்களேன் !!

      Delete
    2. சார் பொதுவாகவே நான் எந்த மாதிரி காமிக்ஸ் வந்தாலும் படிப்பேன். ஆனா என்னமோ தெரியல கிராபிக் நாவல்னா படிக்க விருப்பமில்லாம தா இருக்கு.
      நீங்க சொன்ன மாதிரி இருந்தா எல்லோருக்கும் சந்தோசமே

      Delete
  6. டியர் எடிட்டர்,

    இரண்டே இரண்டு கருத்துக்கள்:

    *) இரு பாக தொடர்களை அடுத்தடுத்த மாதங்கள் ரூபாய் அறுபது விலையினில் பிரசுரிக்கலாம் - ஆனால் கண்டிப்பாய் அடுத்தடுத்த மாதங்கள் - எனவே இவ்வாறான கதைகள் வருடத்திற்கு மூன்று மட்டும் தேர்வு செய்தல் நலம் பயக்கும்- இன்னொரு ஐடியா: ஸ்பெஷல் (தீபாவளி, பொங்கல், புக் பேர் இத்யாதி நேரங்களில் ஒரு தனித் தொகுப்பாய்க் கொணரலாம்)

    **) ஜில் ஜார்டன் இரண்டாவது கதை மிகவும் நகைச்சுவையுடன் இருந்தது - இன்னொரு வாய்ப்பளிக்கலாமே (ஆங்கிலத்தில் வெளி வந்த second story in that collected volume கண்டிப்பாய் வேண்டாம் - அது ஒரு மொக்கை)

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //இரு பாக தொடர்களை அடுத்தடுத்த மாதங்கள் ரூபாய் அறுபது விலையினில் பிரசுரிக்கலாம் - ஆனால் கண்டிப்பாய் அடுத்தடுத்த மாதங்கள்//

      லார்கோ போன்ற கதைகளை ஒரு மாத இடைவெளியில் அந்தரத்தில் தொங்க விடுவது கூட அதன் சுவாரஸ்யத்தைக் குறைத்திடக்கூடும் என்பதால் - இரு இதழ்களையும் ஒரே மாதத்தில் 2 தனித்தனி பாகங்களாய் வெளியிட்டால் என்ன ?

      Delete
    2. / * இரு இதழ்களையும் ஒரே மாதத்தில் 2 தனித்தனி பாகங்களாய் வெளியிட்டால் என்ன ? */

      இங்கேதான் எனக்கு ஒரு டுபுக்கு சிந்தனை எட்டிப் பார்க்கிறது.

      இரு பாகங்களாய் வெளிவரும் பொது விற்றுவிடும் எனில் ஓகே தான் - ஆனால் just for thoughts - இரு பாகங்களும் இணைந்து நூற்றிப்பத்து ரூபாய் எனும் பொது கூட வாங்கும் திறமைக்கு அது சவால் எனின் -
      பிரிந்து வரும்போது விற்றுவிடும் என்ற உங்கள் (விற்பனையாளர்களின்) நம்பிக்கை சேர்த்து விடும்போது இல்லை என்பது தான் எனக்கு பிடிபடவில்லை !

      படிப்பவர்கள் இரு கதைகளைச் சேர்த்து வாங்கினால் பத்து ரூபாய் மிச்சம் என்பதைக் கூடவா அலச மாட்டார்கள் ? (This is not an 'angry' offshoot - I am really wondering about this point !!).

      Delete
  7. அருமையான திட்டமிடல். படிக்கப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. கீப் கோயிங்!

    1. டயபாலிக் கடைசி லிஸ்டில் தள்ளப்பட்டது சற்று அதிர்ச்சி.

    2. ஆக்‌ஷன் கிராபிக் நாவல்கள் வரும் என்று நீங்கள் சொன்னாலும், கலையம்சம் மிக்க கிராஃபிக் நாவல்களுக்கு கிட்டத்தட்ட இடமே இல்லாது போய்விட்டது வருத்தம், அட்லீஸ்ட் 2015ல் ஒரே ஒரு இதழுக்காவது திட்டமிடுங்கள். ஒரு இதழுக்குக் கூட நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், சந்தாவில் இல்லாத இதழாக தரலாம். அதோடு இப்போதுதான் ஞாபகம் வருது. 2014ல் சந்தாவோடு, கிராபிக் நாவலுக்காக என தனி சந்தாவும் கோரப்பட்டதல்லவா? அதில் வரவேற்பு எப்படி இருந்தது? போதுமான சந்தா கிட்டியதா? அந்த இதழ்கள் 2014ல் வருமா? அந்தத் திட்டத்தின் நிலை என்ன?

    3. போலவே ப்ளூகோட் முதல் லிஸ்டில் வரத்தகுந்தது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  8. 4. டெக்ஸ் கதையோ, பிறர் கதையோ, நில்,கவனி,சுடு தடிமன் அல்லது அதைவிட அதிக தடிமனுக்கு அதே குவாலிடியில் பிளாக் ஒயிட் இதழ்கள் நிறைய கொண்டுவர முயற்சியுங்கள். அதன் காம்பாக்டான புத்தக அளவு, தடிமன், குறைந்த விலை போன்றன அதன் சிறப்பாகும்.

    5. குண்டு இதழ்கள் அல்லாது, 120 ரூ ஒல்லி (ஆமா, நான் அபப்டித்தான் சொல்லுவேன்) இதழ்களுக்குக் கூட வழியில்லாது போனது என் பர்சனல் சோகம். வேறென்ன செய்ய? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். அதனால்தான் பி&ஒ குண்டாவது தர முயற்சியுங்கள் என்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //கலையம்சம் மிக்க கிராஃபிக் நாவல்களுக்கு கிட்டத்தட்ட இடமே இல்லாது போய்விட்டது வருத்தம்//

      நிச்சயமாய் உண்டு ; இப்போதே ஒரு கதையைக் கூட லேசாய் அடையாளம் பார்த்து வைத்து விட்டேன் ! சந்தாத் திணிப்பில் இடம்பிடிக்காமல் 'விரும்புவோர் வாங்கிக் கொள்ளலாம்' என்ற ரீதியில் இதுவும் கூட இருக்கும் !

      Delete
    2. சார், பாயின்ட் நம்பர் 2 வுக்குப் பதில் தேவை! (எங்க எஸ்கேப் ஆவப்பாக்குறீங்க?)

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அடுத்த வருட திட்டமிடல் இன்னும் சில மாதங்கள் கழித்து முடிவு எடுக்காலேமே சார்

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : இதுவொரு உரத்த சிந்தனை மாத்திரமே நண்பரே..!

      Delete
  11. My choice...
    first list appadiye
    + Blue coats
    And welcome to all new heroes..
    ungal sinthanai kuthiraigal engal karpanai kuiraigalaiyum Parakka vaithuvittathu...
    santhegamillamal tamil comics in Golden age ithuthan..

    ReplyDelete
  12. I like 120 rs " kundu book" (.!?) personally. But whatever i love lion muthu comics unconditionally.

    ReplyDelete
    Replies
    1. Jil jordan marupadiyum padithu parthen.. Avarukum innum konjam vaaippu tharalame sir..

      Delete
  13. 2015 பற்றிய திட்டமிடல் ஜூன்2014 லிலேயவா???? என்ன நடக்குதுனே புரியலையே....
    ம்ம்ம்ம்
    ப்ளூகோட் ஒரு வம்படியாக இறக்கிவிடப்படும் ஆட்டக்காரர் என்பது என் அபிப்பிராயம்...
    கடல் சாகசங்கள் ஏதாவது 2015லிவாது படிக்க முடியுமா????\
    "சற்றே தடுமாற்றம் கண்டுள்ளோர் " பட்டியலுக்கு பதிலாக புதிதாக ஏதாவது முயற்சிக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : கடல் சாகசமா ? கேப்டன் பிரின்ஸ் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் தொடர்வதைப் புரிய முடிகிறது ! அதே தரத்தில் கதைகள் சிக்கினால் முயற்சிக்கலாம் தான் !

      Delete
  14. @செயிண்ட்சாத்தான்,

    இந்தப் பதிவுக்கோ, தளத்துக்கோ சம்பந்தமில்லா இணைப்பை ஏன் தந்திருக்கிறீர்கள்? அதோடு அது உங்கள் சொந்த அரசியல் நிலைப்பாடுகளை பேசும் இணைப்பாகும். அது இங்கு அவசியம்தானா?

    ReplyDelete
    Replies
    1. டியர் ஆதி!!!

      நீங்கள் சொல்வது நியாயம்தான். அதை நீக்கிவிட்டேன்.

      Delete
    2. புரிதலுக்கு நன்றி நண்பரே!

      Delete
  15. அதெல்லாம் சரி. தோர்கல் அட்டையில் moi ,jolan என்ற பெயர் இடம்பெறுகிறதே. அதன் கதாசிரியர் வான் ஹாமே இல்லையா...?

    ReplyDelete
    Replies
    1. saint satan : வான் ஹாமே நிறையத் தொடர்களுக்குள் பணியாற்றிய காலம் ஒன்று இருந்தது தான் ! ஆனால் திரைத்துறைக்குள் கொஞ்சம் கவனம் செலுத்தும் பொருட்டு 2002 முதலாய் தன காமிக்ஸ் பணிகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டுவிட்டார் !

      தோர்கலில் ஆல்பம் # 29 வரை வான் ஹாமே முத்திரை உண்டு !

      Delete
  16. வணக்கம் சார் ...

    தங்களின் 2015 நாயகர் தேர்வு 2014 ஐந்தாவது மாதமே என்பது ரொம்பவே "அட்வான்ஸ் " ஆக தெரிந்தாலும் உங்களுக்கு இது தான் சரியான கால கட்டம் என்பது போன பதிவில் பெங்களூர் கார்த்திக் அவர்களுக்கு தாங்கள் சொன்ன பதில் மூலம் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது .எனவே எனது கருத்தும்......

    வந்தே தீர வேண்டிய தங்களின் முதல் பட்டியல் எனக்கு கண்டிப்பாக உடன்பாடு உண்டு சார் .அதே சமயம் " டைகரை " பொறுத்தவரை மார்ஷல் டைகர் போல ஒரே முழு நீள கதை என்றால் ஓகே .பட் தொடர் பயணம் என்றால் "ஒரு மலராக " வெளி வந்தால் இன்னும் மகிழ்ச்சி .அதே போல X111 ஒரு அட்டகாசமான தொடர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனினும் அது " தொடர் " என்பதில் வரும் ஒரு குழப்பம் வந்தே தீர வேண்டிய பட்டியலில் அது இல்லை ( எனக்கு ).

    தங்களின் இரண்டாவது பட்டியலில் முதல் இரண்டு நாயகர்களும் எப்பொழுதும் எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை .ப்ளுகோட் பட்டாளம் ...ஜானி கண்டிப்பாக களம் இறங்க வேண்டிய நாயகர்கள் .அவர்களை கைவிட்டு விடாதீர்கள் சார்.என்னை பொறுத்தவரை ப்ளூ கோட் பட்டாளம் இரண்டு சாகசத்திலும் என்னை கவர்ந்தவர்கள் .அவர்கள் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் .மார்டின் ,ராபின் ஓகே ரகம் தான் .என்ன மார்டின் ஓவராக பூ சுற்ற வில்லை எனில் தே றி விடுவார் .ராபினும் மோசம் அல்ல .எனவே பார்க்கலாம் .

    அடுத்த "புது வரவு " பட்டியலுள் நான் நமது இதழ்களில் வந்தால் மட்டுமே அவர்களை பற்றி என்னால் கருத்து கூற முடியும் .எனவே படித்து விட்டு மதிப்பெண் அளிப்பது தான் சரி .இவர்கள் அனைவரும் 1980 நாயகர்கள் என்பதால் எனக்கு பிடிக்கும் என்றே நம்புகிறேன் :-)

    கடைசி பட்டியலில் " டயபாளிக் " அவர்களுக்கு ஒரு சான்ஸ் அளிக்கலாம் என்பது எனது கருத்து .மற்றவர்களை நான் எதிர் பார்க்கவில்லை . "கிராபிக் நாவல் "பற்றிய தங்கள் இப்போதைய முடிவு எனது கண்ணீரை துடைத்து விட்டதால் சந்தோசத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் .

    கடைசியாக ஒரு ஷொட்டு :

    ஆகஸ்ட் 2 ம் நாள் " ஆண்டு மலர் " வரவிற்கு ....

    கடைசியாக ஒரு குட்டு :

    புத்தகம் ரெடி ஆனாலும் இன்னும் மூன்று நாள் காக்க வைத்ததற்கு ...

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //"புது வரவு " பட்டியலுள் நான் நமது இதழ்களில் வந்தால் மட்டுமே அவர்களை பற்றி என்னால் கருத்து கூற முடியும் .எனவே படித்து விட்டு மதிப்பெண் அளிப்பது தான் சரி .இவர்கள் அனைவரும் 1980 நாயகர்கள் என்பதால் எனக்கு பிடிக்கும் என்றே நம்புகிறேன் :-)//

      எண்பதுகளின் அடையாளமான பெல் பாட்டம் பேண்டும் ; ஸ்டெப் கட் முடியும் உங்களுக்குப் பொருந்தும் பரணி சார் !!

      Delete
    2. //கிராபிக் நாவல் "பற்றிய தங்கள் இப்போதைய முடிவு எனது கண்ணீரை துடைத்து விட்டதால் சந்தோசத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் //
      +1.

      Delete
  17. editor sir
    1st list will be accepted by all . (i am surprised by your expectation of ' mixed reactions' to X111 . despite new creators the story still travels with full speed.)

    2nd list
    blue coats seems good.
    martin,robin, johnny - though not favourites are welcome
    3rd list
    yet to see

    4th list
    jil jordan can be included ( last story is very hilarious)
    bruno.rojer are least liked stories

    PLEASE RECONSIDER ABOUT JEROME AND DIABOLIC . THAANGA MUDIYALAI ! ! !

    ReplyDelete
    Replies
    1. டியர் லக்ஷ்மி செல்வம்!!!

      நமது வலைத்தளம் ஆங்கில வலைத்தளம் அல்ல.நாம் வெளியிடுவது ஆங்கில காமிக்சும் அல்ல.எனவே முடிந்தவரை தமிழில் பதிவிட உங்களையும்,மற்ற நண்பர்களையும் வேண்டுகிறேன்.என்னைப்போன்ற எழுத படிக்க தெரியாத பாமர ஆசாமிகளின் நலனுக்காக இந்த கோரிக்கையை பரிசீலிக்க கோருகிறேன்.

      Delete
    2. SORRY SAINT. WILL COMEBACK SHORTLY AFTER HAVING LEARNED TO TYPE FASTLY IN TAMIL. I ALREADY SOUGHT THE HELP OF SOME FRIENDS TO DO THE SAME. INFACT THE FORCE OF THE EDITOR'S WRITING IN TAMIL AND THE HUMOUR IN MANY OF TAMIL COMMENTS (INCLUDING YOU) ATTRACTED ME TOWARDS THIS BLOG .[ I WONT FORGET YOUR FUNNY EXPRESSIONS LIKE ASTHINAPURAM( PALLIPALAYAM) ,PALACE YOUR HOME) AND HA! HA! ANNA HASARAY}

      I LOVE THIS BLOG . BUT YOUR STAND IS CORRECT . WILL COME BACK AGAIN WITHIN A WEEK WITH WRITINGS IA TAMIL

      Delete
    3. lakshmi selvam : கம்ப்யூட்டருக்கும், கமர்கட்டுக்கும் பெரியதொரு வேற்றுமையைத் தெரிந்து வைத்திருக்காத நானே தமிழ் டைப் அடிக்கப் பழகி விட்ட போது - உங்களுக்கெல்லாம் அதுவொரு சமாச்சாரமாகவே இராது நண்பரே !

      Delete
  18. Sir'' I think we should give one more chance for Gil Jordan' I like his second story. Gil Jordan series are more welcomed by other countries as much as other. Belgian comedies. I love Jordan series rather than chic bill &co.And martin mystery must be admitted in your first ROW. But we should choose good stories from martin series. It is the same principle to be applied for other Italian diabolique. In my childhood I like Bob morane sagas with his counterpart bill. But we should choose story and plot.

    ReplyDelete
    Replies
    1. leom : 67 கதைகள் கொண்டதொரு தொடரில் plot ; தரம் ; கதையின் போக்கு என்று முழுமையாய் அறிந்து கொள்வது எத்தனை சிரமம் என்பது ரோஜர் கதையின் நாம் சந்திக்கும் சிக்கல். டயபாலிக்கிலோ 300+ கதைகள் ! சொல்லவே வேண்டாம் !

      But still முடிந்தவரை முயற்சிப்போம் !

      Delete
  19. HURRAY !!!! EAGERLY EXPECTING AUGUST 2ND. JUNE BOOKS ON MAY LAST WEEK NATURALLY JULY BOOKS ON JUNE 3RD WEEK. AUGUST BOOKS.LMS,MILLION HITS, DEEPAVALI SPECIAL . WOW ! WOW! W0W!

    DOWNPOUR OF COMICS RAIN AHEAD. COULD NOT HELP BUT TO SMILE INSPITE OF THE KNOWLEDGE THAT EDITOR WILL BE IN NEED OF CARTONS OF IODEX BOTTLES

    ReplyDelete
    Replies
    1. lakshmi selvam : அயோடெக்ஸ் ஏஜென்சியே எடுத்தாச்சே !

      Delete
  20. டியர் எடிட்டர் ,
    2015 இற்கான திட்டமிடல் , ஜூன் இலேயே அவசியப்படும் அளவுக்கு எமது வேகம் சென்றுள்ளதை எண்ணும்போது பெருமையாக உள்ளது . இதற்கு முழு பங்களிப்பை வழங்கிய உங்களுக்கும், டீம் இற்கும் நன்றிகள் . தவிர்க்க முடியாத நாயகர்கள் பட்டியலில் XIII இனை சேர்ப்பித்தது சரியானதே . ப்ளூ கோட் பட்டாளத்தின் அதகள சிரிப்புக்கு வரவேற்பு குறைவா? தயவு செய்து அவர்களையும் பட்டியலில் இணைக்கவும் . சார், "அந்த விமானங்களின் கதி " மூன்று பாகமும் வெளி வந்து விட்டதாக அறிந்தேன் . எப்போது எமது லயனில் பார்க்க முடியும் . 2015?மேலும் ரிப்போர்ட்டர் ஜானி & டயபாலிக் இருவருக்கும் இன்னொரு சான்ஸ் கொடுப்பதில் தவறில்லையே ? 120 ரூபா விலையில் இரு பாக கதைகளினை ஒன்றாக வெளியிடுவது சூப்பர் காம்பினேஷன் . ஆனால் அவை விற்பனையில் தடுமாறுவது ," குண்டு புக் கிளப் " மெம்பர் ஆக கவலையாக உள்ளது . முடிந்தால் பில்லெர் பேஜ் ,விளம்பரங்கள் இனை தவிர்த்து 100 ரூபா விலையில் வெளிடும் தங்களின் ஆலோசனைக்கு எனது வோட்டுகள் . தயவு செய்து இரு பாகமாக 60 ரூபா விலையில் அடுத்தடுத்து வெளியிடும் யோசனை இனை தவிர்க்கலாமே .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : நீங்கள் சொல்லும் அந்த "விமானக் கதை" - பாகம் 1 & 2 இந்தாண்டு வெளியாகும் (வானமே எங்கள் வீதி ) புதிதாய் வந்துள்ள பாகம் 3 & தொடரக் காத்திருக்கும் # 4 maybe 2015-ன் இறுதியில் !

      Delete
    2. "வானமே எங்கள் வீதி " இந்த ஆண்டு வெளியாகும் என்ற உங்களின் அறிவிப்பு காதில் தேன் பாய்ந்தது போலுள்ளது . அதன் சித்திர தரம் அருமை.

      Delete
  21. எடிட்டர் சார்,

    எதிரே மலைபோல குவிந்துகிடக்கும் LMS உள்ளிட்ட இமாலயப் பணிகளின் நடுவிலும் அடுத்த வருடத்திற்கான நாயகர்கள் தேர்வில் நீங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.

    * என்னைப் பொறுத்தவரை, இந்த வருடம் இதுவரை வந்த இதழ்களில் 'காலத்தின் கால் சுவடுகளில்' மற்றும் 'காவியில் ஒரு ஆவி' தவிர மற்ற எதுவும் கதைத் தேர்வில் சோடை போகவில்லை. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டாவது 'நல்ல கதை' என்ற ஒன்றை அமைத்துக் கொள்ள முடியுமானால் 'நாயகர் யார்?' என்ற பாரபட்சமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு வழங்கலாம் என்பதே என் கருத்து.

    * ரிப்போர்ட்டர் ஜானிக்கு வழங்கப்படும் வாய்ப்பை டிடெக்டிவ் ராபினுக்கு வழங்கலாம்.

    * டயபாலிக்கிற்கு இன்னொரு வாய்ப்புத் தரலாமே? அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஸ்பைடரையே பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வு!

    * அடுத்த வருடம் உங்களது 'க்ராபிக் நாவல்' பரீட்சார்த்த முயற்சியில் மனதை வருடும் ஒரு மென்மையான, (விரசமில்லாத) வித்தியாசமான 'காதல் கதை'யை களமிறக்கிப் பார்க்கலாமே சார்?

    * LMS வெளியீட்டை ஆகஸ்டு-2 சனிக்கிழமையன்று வைத்திருப்பது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. IT துறையிலிருப்பவர்களைத் தவிர பெரும்பான்மையான நண்பர்களுக்கு சனிக்கிழமை என்பது ஒரு வேலை நாள் ஆயிற்றே? ஞாயிறன்று வெளியிட்டால் குதூகலத்தில் பங்கு கொள்ள எல்லா நண்பர்களுக்கும் உகந்ததாய் இருக்குமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே டிடெக்டிவ் ஜெரோமிற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் கூட சந்தோசப் படுவேன் (குறைந்தபட்சம் கருப்பு-வெள்ளையிலாவது). நல்ல பையன் சார், ப்ளீஸ்!

      Delete
    2. Erode VIJAY : காலெண்டரைப் புரட்டிப் பாருங்கள் பூனையாரே ! ஞாயிறு ஆடிப்பெருக்கு தினம் ! நண்பர்களில் பலர் அன்றைய பொழுதை குடும்பங்களோடு செலவிட எண்ண வாய்ப்புண்டல்லவா ?

      Delete
    3. ஆடிப்பெருக்கன்று நண்பர்கள் 'காமிக்ஸ் குடும்பத்தோடு' பொழுதை செலவிட எண்ணியிருக்கலாமில்லையா, சார்?

      Delete
    4. //ரிப்போர்ட்டர் ஜானிக்கு வழங்கப்படும் வாய்ப்பை டிடெக்டிவ் ராபினுக்கு வழங்கலாம். //
      +1

      Delete
  22. விஜயன் சார், ஒரு சிலர் விரும்பவில்லை என்பதற்காக இயல்பான கிராபிக்-நாவல் கதைகளை வெளி இட தயங்குவது சரி இல்லை; வருடம் வெளிவரும் 30 கதைகளில் இது போன்ற கதைகளை வருடம் 2-3 வெளி இடலாம். இதில் இன்னும் தயக்கம் இருந்தால் இவைகளை கூட கலெக்டர் ஸ்பெஷல்-இல் வெளி இடலாம்.

    என்னை பொறுத்தவரை ஜில் ஜோர்டான் கதைகளை தொடர்ந்து நமது காமிக்ஸ்-ல் வெளி இட வேண்டும், குறைந்தது ஒரு கதையாவது வெளி இட வேண்டும். அது போலவே டயபாலிக் கதைகள் வருடம் ஒன்று மட்டும் வெளிஇட்டால் நலம்.

    2014 இரண்டாம் பாதியில் வரும் புதிய நாயகர்களின் கதைகளை நமது வாசகர்கள் படித்து விமர்சனம் செய்த பின் அதை பற்றி சிந்திப்பது நலம்.

    // தோர்கல்" சந்தாவில் "திணிக்கப்படும்" இதழாய் இராமல் - 'பிரியப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் !' //
    நல்ல யோசனை, காமிக்ஸ் காதலர்கள் அனைவரும் இதனை வாங்குவார்கள்.

    'கட்டாயம் தேர்வு செய்தே ஆக வேண்டும்' பட்டியலில் ப்ளூ கோட் பட்டாளத்தை சேர்த்து கொள்ளவும்.

    மர்ம மனிதன் மார்டின் & CID ராபின் இரண்டாம் பட்டியலில் இடம் பெற சரியான காரணம் இல்லை, இதனை தெளிவு படுத்தினால் நலம். இவர்களை "கடைசி பட்டியலில்" சேர்ப்பது நன்று.

    //ஒரு வேளை filler pages ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ?//
    நல்ல யோசனையாக உள்ளது. ஹாட்-லைன் தவிர மற்றவைகளை கத்திரி போட்டு விடலாம் ரூ.100 புத்தகம்களில்; சிங்கத்தில் சிறுவயதில் தொடரை ரூ.60 புத்தகத்தில் சேர்த்து மாதம் தவறாமல் வரும்மாறு பார்த்து கொள்ளலாம். நமது புத்தகம்களின் விற்பனையை அதிகரிக்க இது போன்ற சில முயற்சிகள் முக்கியம் ஆசிரியரே :-)

    //லார்கோ + சிக் பில் இதழ்களை வரும் புதன்கிழமை (21 May) இங்கிருந்து அனுப்பிடுவோம் ! இப்போதே அவை தயார் தான் என்ற போதிலும், பொறுமையாய் சந்தாப் பிரதிகள் அனைத்தையும் ஒரு முறை புரட்டிச் சரி பார்த்து அனுப்பிட ஒன்றிரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று தோன்றியது//
    இத இததான் எதிர் பார்த்தேன் .. இதனை ஒரு வழமையாகவைத்து கொள்ளவது நலம்.

    கடைசியாக இது போன்று 2015 மறுபதிப்புக்கும் உங்கள் மனதில் உள்ள கதைகள் மற்றும் நாயகர்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நமது வாசகர்களிடையே உள்ள நிறைய குழப்பம்கள் விலக வாய்ப்புள்ளது; செய்வீர்களா ?

    ReplyDelete
  23. vanakam sr,

    (1)ப்ளூ கோட்:-Grade A il varavendiyavarkal

    (2)120/= puthakangalai vilambaram matrum etc kalai cut panni 100/= viayil veliiduvathu nalla idea!!!

    (3)Larco Sri Lankavirukum same weekil vanthittal nanraka irukkum

    Dylan dog asthuvar ena edhir parkiren!!!

    ReplyDelete
  24. கட்டாய தேர்விலே காமன்சே?ஏன் அந்த இடத்திற்கு நம்ம ப்ளூ கோட் பட்டாளம் வரக்கூடாது ?

    ReplyDelete
    Replies
    1. sariyana kelvi!!!
      comanche vai vida ப்ளூ கோட்
      பட்டாளம் double madangu nanraka uladhu

      Delete
  25. Sir, 01-05-2014, ஞாயிற்றுக்கிழமை, வைகாசி 18. ஆடி பெருக்கு அல்லவே. எனவே 2 ந்தேதிக்கு பதில் 1 ந்தேதி என்று மாற்றிக்கொன்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Sorry Sir ஆர்வம் அதிகமானதால் மாதத்தை கவனிக்கவில்லை.

      Delete
  26. Dear எடிட்டர்,

    ஜூன் இதழ்கள் இம்மாதம் 22ம் தேதியே எங்கள் கையிலா ? சூப்பர் advance வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.. தொடரட்டும்

    உங்களது "கட்டாயத் தேர்வு" & "நல்ல ஆட்டக்காரர்கள் தான்" - பட்டியல் வரிசை மிகச்சரியே

    சற்றே தடுமாற்றம் கண்டுள்ளோர் ' சங்கத்தினரின் பட்டியலில் உள்ள, "டயபாலிக்" மட்டும் " நல்ல ஆட்டக்காரர்கள் தான்" - பட்டியலுக்கு உயர்த்தப்பட பொருத்தமானவரே

    ப்ளூகோட் கூட வரட்டும் ஆனால், தயவுசெய்து ஜில் ஜோர்டான் & ஜெரோம் மட்டும் எக்காரணம் கொண்டு திரும்ப வேண்டாம்

    //...அனல் பறக்கும் அதகளங்களும் கிராபிக் நாவல்களுக்குச் சாத்தியமே என்பதை தொடரும் மாதங்களில் நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள் ..//

    புதிய அறிவிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..

    ReplyDelete
  27. //..ஒரு வேளை filler pages ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ?//

    நல்ல யோசனையே ... ரூபாய் நூறு என்பது round-ஆக ஒரு psychological comfort தரும் என நினைக்கிறேன்


    //..Or maybe சினிபுக் செய்வது போல் இரு பாகக் கதைகளையும் கூட பார்ட் 1 ; பார்ட் 2 என்று தனித் தனி இதழ்களாய் தலா ரூ.60 விலைகளில் வெளியிடுவது தீர்வாகுமா ? ..//

    தயவுசெய்து பிரித்து வெளியிடவேண்டாம் ஒரே புத்தகமாகவே வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. //தயவுசெய்து பிரித்து வெளியிடவேண்டாம் ஒரே புத்தகமாகவே வரட்டும் //

      +1

      Delete
  28. விளம்பரங்களும் பில்லர் pages ம் தேவை தான்
    கூடவே ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பொது அறிவு கேள்வி பதில் வந்தால் இன்னும் நன்று.
    மாணவர்களுக்கும் பயன்படும்.

    ReplyDelete
  29. சார்,
    உற்சாகத்தை வரவழைக்கும் வகையில் அருமையான பதிவிற்கு முதல் பாராட்டுக்கள் .லார்கோ தயாராகியும் காத்திருக்க வைத்து விட்டீர்களே ! வியாழனுக்காக காத்திருக்கிறேன் கோமானுடன் வெனிஸ் பயணத்திற்காக . 120 விலையில் புத்தக விற்பனை சுணக்கம் கண்டால் லார்கோ போன்ற கதைகளை இரு புத்தகமாக விடலாம் . முதல் கதை பிடித்தால் இரண்டாவது கதையும் எப்போதோ வாங்கும் வாசகர்களாலும் வாங்கப்படும் . 100 விலையில் சில குறிப்புகளுடன் எனில் தலையங்கம் மட்டும் கதையுடன் இருக்க வேண்டும் . அதே மாத 60 விலை புத்தகத்துடன் அடுத்த மாத வெளியீடுகள் குறித்த விளம்பரங்கள் இடம் பெறட்டும் .

    கட்டாய தேர்வில் பதிமூன்று குறித்து யாரும் எதிர்ப்பை கிளப்ப மாட்டாகளே ! இப்போதைய கதை வான் ஹெம்மேயை விட அருமை . தயக்கம் கொண்டு முதலிடம் தருவதை தவிருங்கள் . இந்த வரிசையில் டயபாளிக் நிச்சயம் இடம் பெற வேண்டும் . அதிலும் ப்ளூ கோட் பட்டாளம் அருமையான நகைச்சுவை விருந்தல்லவா . அதனை தவிர்க்க வேண்டாமே . முதல் இரு இதழ்களுமே பட்டய கிளப்பின என்றால் மிகை அல்லவே !

    ஜானியை பொறுத்தவரை சமீப கால கதைகள் வெகுவாய் ரசிக்க இயலவில்லை , நினைவுகளை துரத்துவோம் தவிர ! cid ராபின் அப்போது என்னை கவரவில்லை . இப்போது நண்பர் விஜெய் கூறிய பின் படிக்க ஆரம்பித்தேன் , அற்புதமான வரிசைகள் , அநேகமாய் இப்போதைய நண்பர்கள் என்னை போல ரசிக்கும் வாய்ப்புகள் அதிகம் . மர்ம மனிதனுக்கு வாய்ப்புகள் கொடுத்து பார்ப்போமே .சாகச வீரர் ரோஜரின் சிறந்த கதைகளை முயற்ச்சிக்கலாம் . ஒரிஜினலில் படித்த நண்பர்கள் சிறந்த கதைகளை கூறலாமே . ஜில் ஜோர்டான் வண்ண கலவைக்காக படிக்கலாம் . சூப்பராக இல்லை என கூறினாலும் கதை மோசமில்லை !

    ReplyDelete
    Replies
    1. கடல் கொள்ளை சாகசங்கள் , ஒரு கிரேக்க கதை ஒன்று கூறினீர்களே , அதற்க்கு இடம் உண்டா ? கிராபிக் நாவல்களில் வரலாற்று அவலங்கள் இல்லாத , சோக காவியங்கள் எமனின் திசை மேற்கு போன்ற கதைகளை வழங்கலாம் . அது போல சிறந்த கதைகள் இருந்தால் வருடம் இரு முறை அழ வைக்கலாமே !

      Delete
    2. //அது போல சிறந்த கதைகள் இருந்தால் வருடம் இரு முறை அழ வைக்கலாமே !//
      +1

      Delete
  30. 1. Reporter Johnny and detective robin should be in list#1
    Because reporter Johnny stories rarely miss the mark and detective robin we haven't even released any story for past 2 years. Both the stories have beautiful line drawing.

    ReplyDelete
  31. Dear Editor,
    I was really astonished to find BRUNO BRAZIL's name on the "Disliked List". Oh how the mighty have fallen. To tell you the truth from my school days Bernard Prince and Bruno Brazil have fulfilled all my heroic dreams. They made me feel that I was taken along the best rides of my life. From the deepest oceans to the hustle and bustle of city crimes I have lived the adventures along with them. Even the last Bruno Brazil adventure was a great visual treat for me. I read it last to savour it fully. I have read the old b&w editon zillion times and it is always kept in my room at arms length (most of my Lionmuthu Collections accompany it), but still I enjoyed reading the colour edition so much. On my mobile i have most of Bruno Brazil's French editions (I know nothing of French but William Vance rocks). I was pleasantly expecting all our old BW Bruno editions to be reissued in colour, so your post has really shocked me, even the exciting news about LMS has not registered yet properly. I know I may be one of the very miniscule of your readers who love Bruno and what you are suggesting may be prudent for the well being of our comics in the long run, but still, it hurts me to realise I may never read another Bruno in colour in tamil. May be I should start learning French...!!!

    ReplyDelete
  32. Diabolik and Bob morane should be in list#2.
    Particularly diabolik stories won't impress in the first read but second and third read gives immense satisfaction.

    Rest of the stories are allocated to perfect bucket.

    One request, is there a way to introduce new detective series as our recent entries in that area (Jerome and Jill Jordan) didn't do well.

    Thorgal coming in collectors special is perfect.

    As a fat book club member please maintain fat books whatever sizeit can be.

    ReplyDelete
  33. ரிபோர்ட்டர் ஜானி
    மர்ம மனிதன் மார்டின்
    CID ராபின் அப்படியே கேப்டன் பிரின்ஸ் லிஸ்ட் ல கொண்டு வந்தா நல்லா இருக்கும்.

    Frankly speaking Comanshe stories are just pass only not that impressive.

    "சற்றே தடுமாற்றம் கண்டுள்ளோர் ' சங்கத்தினரின் " i'm not sure why "Bruno" added to this list :(

    ReplyDelete
  34. Diabolik , Johnny , Robin ,and Martin should be given one more chance .. Jill Jordan is not suited for single issue .. It can be used in special issues along with other stories ..

    ReplyDelete
  35. வழக்கமானவை என்றாலும் அருமையான தேர்வுகள் சார்..
    எது எப்படியென்றாலும் இரத்தப்படலம் போலவும் கம்பார்த்துக்கொள்ளுங்கள்சே போலவும் நீண்ட காலத்திற்க்கு தொங்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...அப்புறம்
    ஜெரோம் கதைகள் வேண்டாமே ...பிளீஸ்

    ReplyDelete
  36. i am not a hater of graphic novels, but i cant read stories with sad tone f. That effect my day to day activity for at least a week. i will feel sad and disoriented in whatever I do. So please when u r choosing graphic novel choose something that is less saddening. I liked the Emanin Thisai Metku although the ending was bit sad. Its digestible. However pralayathin pillaigal was not my cup of tea, and I didn't even touch the Sippayin suvadugal yet and I will never touch it for certain. Please more selective when u r choosing graphic novels so that will match our taste. This is just my personal opinion, sorry if i offend anyone.

    ReplyDelete
  37. Sir, 120 ஐ 60+60 என்று பிரிசசலும் விற்பனை அதே போல் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது 60+60 என்று வரும் போது ஏதாவது ஒரு புக் வாங்குவார்கள். So filler pages குறைத்து 100 விலையில் விற்றால் நலம் என்பது என் கருத்து.
    எங்களின் நாடிததுடிப்பை அறிந்து, அதெற்கு ஏற்றார் போல் 2015 ப்ளான் அமைக்க நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டுகுறியது.

    ReplyDelete
  38. டெக்ஸ் வில்லர்
    XIII
    லார்கோ வின்ச்
    கமாஞ்சே
    சிக் பில்
    வேய்ன் ஷெல்டன்
    லக்கி லூக்
    கேப்டன் டைகர்
    இந்த வரிசையில் கீழே உள்ளவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வப்போது, Thriller & Suspense கதைகளையும் சேர்த்து கொள்ளுங்கள் Please....
    டயபாலிக்
    Captain Prince
    ரிபோர்ட்டர் ஜானி

    ReplyDelete
  39. Sir i am refusing your grading, my all time best are as following-

    Gil jordan,
    Thorgal,
    Diabolik
    CID Robin,
    Martin mystere,
    Jerome,
    Dylan dog
    Comanche
    chick bill,
    Bruno Brazil
    Roger

    Please publish these series one by one.

    ReplyDelete
  40. Sir, Lucky luke and Tiger series are not good as like as earlier, so don't go for publishing.

    ReplyDelete
  41. Sir நமது home page இல், இன்னுமும் பழைய பதிவு தான் உள்ளது...அதை கொஞ்சம் கவனிக்கவும்...

    ReplyDelete
  42. Dear editor sir, vanakam,nan nanmathu comicskalin neeeeenada varuda vasagan.nan ithuvarai mouna parvaiyalaraga irunthn tamil typing theriyathu mobilil than ippadi typ seikirn athan ipadi thanglish. Enathuu patiyal tex,tiger,xiii mystery( mongoose,steve rolland,irina,bety,amose,jonesh,billy stocton) and xiii puyhiya pathai,magic wind,dylan dog,martin mystery,joni,madesty.price list 25,60,100.maplitho paper thanir pattal gali enavey mediamana tharathil kuraivana vilai niraya comics ennal vanga mudiyavillai.karanam comics villai mattum alla mo comisson courier matrum phn call.annachi destpatchil irunthal nallathu.largo winch nalla qulitl epothumpol vendum ithu enthu aasai, vendukol,virupam,ava anathu comics rasikar mandra nanbarkal sarbaga.nanri.vanakkam.

    ReplyDelete
  43. 2015 ஆட்டம் ஆரம்பமானது மிக்க மகிழ்ச்சி! 2015ல் கண்டிப்பாக மார்டின் வேண்டும் !

    ReplyDelete
  44. வருடா வருடம் "ஆண்டு மலர்கள்" அட்லீஸ்ட் ஒரு 500 பக்கங்களாவது, சிறந்த கதைகளை (கருப்பு வெள்ளை மற்றும் வண்ணங்களின் கலவையாக இருக்கும்படி) பெரிய சைசில் வெளியிடுமாறு நண்பர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் சார்!

    ReplyDelete
  45. டியர் எடிட்டர்,
    2015 ல் வான்டுகலையும் கவர ஒவ்வொரு மாதமும் ஒரு காமெடி நயகர் வருதல் நலம்,
    புதிய சந்தாக்கலையும் பெருவதற்க்கு இவர்கல் மிகவும் உபயொகமாக இருப்பார்கல், என்னதான் கோடிஸ்வர கோமன்கலும், குதிரை வீரர்கலும் நம்மை கவர்ந்தாலும் நமது அடுத்த தலைமுரைக்கு தர்சமயம் பிடிப்பது
    லக்கி லுக்
    சிக் பில்
    ஜில் ஜோர்டான்
    ரின் டின் கேன்

    போன்ட்ற நாயகர்களெ

    Suresh

    ReplyDelete
  46. எனக்கும் இன்னும் வாண்டுகளின் வயது ஆவதால் என்னுடைய A லிஸ்ட்

    1. லக்கி லுக்
    2. சிக் பில்
    3. புளு கோட் பட்டாளம்
    4. ரின் டின்
    5. ஜில் ஜோர்டான்
    6. ரிபோர்ட்டர் ஜானி
    7. தோர்கள்
    8. iznogud - (மந்திரியாரை மறந்தது ஏனோ )

    மற்ற நாயகர்கள் அனைவரும் குருதி கொப்பளிக்க உங்கள் கைகளில் கத்திரியை கொடுப்பதால் B லிஸ்ட் நாயகரக்ள் :)

    ReplyDelete
  47. விஜயன் அவர்களுக்கு,

    லார்கோ-வை சொன்னது போலவே ஒரு வாரம் முன்பாக அனுப்புவதற்கும் அடுத்த வருட நாயகர்கள் தேர்வுக்கு இப்போதே ஒரு தொடக்கம் தந்திருப்பதற்கும் மிக நன்றி.

    தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நாயகர்கள் மார்டின் மற்றும் டயபாலிக்!
    இருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாம்!

    விலை குறித்த விஷயத்தில் - விற்பனையையும் கதை தொடர்களையும் பாதிக்காத ஒரு முடிவினையே நீங்கள் தெரிவு செய்வீர்கள் என நம்புகின்றேன்!

    இறுதியாக சிந்தனை குதிரையை நன்றாக (ஓய்வாகவும் ) மேயவிடுங்கள்,வளமான புல்வெளியில்! வருடம் முழுதும் அயராமல் ஓடி அழகான காமிக்ஸ்-களை தருவதற்காக!

    ReplyDelete
  48. உங்கள் A-லிஸ்டில் சிக் பில் மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோரை சேர்க்கலாம். திட்டமிடுதலை இப்பொழுதே ஆரம்பித்தது மிகச் சரி. புதிய அறிமுகங்களுக்கு என சில இதழ்களை ஒதுக்குவது நலம். இல்லையெனில் கோமஞ்சே, ஷெல்டன், & வின்ச் ஆகியோர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார்கள்.

    அப்படியே மறுபதிப்பு பட்டியல் பற்றியும் யோசிக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் ஒரு பட்டியல் போட்டு அதில் வாசகர்களை தேர்ந்து எடுக்க சொல்லலாம். எங்களை கேட்டால் டைகரின் (11 பார்ட் ) சாகசத்தையும் XIII தொடரையும் வண்ணத்தில் கேட்போம்.

    ReplyDelete
  49. சார் ...120 விலை புத்தகத்தை பில்லர் பக்கங்களை குறைத்து 100 விலையில் வெளி இடுவது ஓகே தான் ....ஆனால் அதற்காக தற்போது வரும் "சன்ஷைன் " கிராபிக் நாவல் வருவது போன்று வெறும் கதையை மட்டும் வெளி இட்டால் கண்டிப்பாக அது தவறு .உங்களின் நீண்ட " ஹாட் -லைன் " .., சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை ..,ஒரு பக்கம் வாசகர் கடிதம் ..,அடுத்த வெளியீட்டு விளம்பரம் ( அட்டையில் கூட ) வரவேண்டும் .அப்போது தான் அது "லயன் காமிக்ஸ் " .

    நண்பர்களின் ஆங்கில வினாவிற்கு தங்களின் "தமிழ் " பதில் உரைக்கு மிக்க நன்றி சார் .இதை எப்பொழுதும் மறவாமல் இருந்தால் இந்த " பாமரன் " பெரிதும் மகிழ்வான் .


    2015 நாயகர் பட்டியல் ஓகே தான் சார் .ஆனால் மறவாமல் ஒவ்வொரு வருடமும் 500 ரூபாய் கட்டை விரலை உங்கள் வாயில் நுழைக்க முற்படும் போது எங்களுக்கு தாங்க முடியாத சந்தோசம் ஏற்படுவதால் அதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம் .

    அப்புறம் இந்த கோயமுத்தூர் காரருக்கு வருடம் இரு முறை அழ வேண்டுமாம் .( நற..நற... ) நண்பரே உங்களை அழ வைப்பதற்கு " காமிக்ஸ் " தான் வேண்டுமா ..? பாவம் .விட்டு விடுங்கள் ." காமிக்ஸ் "அனைவரையும் சந்தோஷ படுத்தட்டும் .உங்களுக்கு அழ வேண்டுமானால் எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள் போதும் .சொந்த கதை ..,சோக கதை ..,பாசமலர் கதை ..நொந்த கதை அனைத்தையும் இலவசமாக சொல்லி உங்களை அழ வைக்கிறேன் . காமிக்ஸை விட்டு விடுங்கள் .அப்படியும் முடிய வில்லை என்றல் பிழிய ..,பிழிய " சோக நாவலை அனுப்பி வைக்கிறேன் .படித்து கவலையோடு மகிழவும் .

    அப்புறம் எங்கள் சங்க செயலாளர் அவர்களுக்கு "காதல் கதை " வேண்டுமாம் .அட ...கொடுமையே ...சங்கம் ஏன் இன்னும் அபராதத்தில் ஓடி கொண்டு இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிகிறது .செயலாளர் அவர்களே..." காதலை " தேடி ஆண்கள் ஓட கூடாது ..." காதல் " தான் ஆண்களை தேடி வர வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் விடுங்கள் ..... மாந்த்ரீகனின் கதை , இரத்த படலம் , எமனின் திசை மேற்கு போன்ற சோகம் நிஜம்மாகவே பிடிக்கலையா உங்களுக்கு !

      Delete
  50. டியர் ஆல்,
    இந்த வருடத்தின் ஐந்தாவது மாதத்தில் நாம் அடியெடுத்துவைதிருக்கும் நிலையில், இந்த வருடத்தின் எஞ்சியிருக்கும் புத்தகங்களின் வரிசை தோராயமாக நாம் அறிந்திருப்பதும் அடுத்த வருடத்துக்கான ப்ளூ பிரிண்ட் பற்றி இப்போதே யோசிப்பதுமாகிய இந்த நிலை பாராட்டப்படவேண்டிய ஒரு ACHIEVEMENT. வெற்றிகரமான, வளர்சிமிகுந்த ஒரு எதிர்காலம் நமக்காக காத்துள்ளது என்பதை நமக்கு கோடிட்டுக்காட்ட, இதை விட ஒரு அடையாளம் வேறு என்ன இருக்க முடியும்?

    //இரு கதைகள் இணைந்து ரூ.120 விலையில் வெளியாகும் இதழ்கள் விற்பனை முனைகளில் தடுமாறுகின்றன //

    இப்போதுதான் புத்தக கடைகளில் மீண்டும் பரவலாக கிடைக்கும் எனும் நிலை ஏற்பட்டிருப்பதால், அவசரப்பட்டு புத்தகங்களில் மாறுதல் செய்யக்கூடாது எனபது என் கருத்து. இன்னமும் கொஞ்சம் பிரீதிங் டைம் கொடுத்து பார்ப்போம். புதியதாக முதலில் புத்தகம் வாங்கியவர்கள் மீண்டும் நமது புத்தகத்தை தேடி வருவார்கள். அப்போது இது போன்ற FREQUENT மாறுதல்கள் ஏமாற்றம் தரலாம். மேலும் ரூ.120 புத்தகம் தற்போதைய நிலையில் "VALUE FOR MONEY" என பார்போருக்கும் நிச்சயம் ஏமாற்றத்தை கொடுக்காது. இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதில் அவசரப்படவேண்டாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாய் இது குறித்து புத்தக கடைகாரர்கள் ஆசிரியரிடம் கேட்டிருக்கலாம் !

      Delete
  51. தற்போதைய காமிக்ஸ் நாயகர்களை பொறுத்தவரையில் அனைத்து தரப்பு வாசகர்களையும் ENTERTAIN செய்யும் MINIMUM GUARANTEE நாயகர்கள் என்று பார்த்தல் இப்படி வரிசை படுத்தலாம்.

    1.லார்கோ
    2.ஷெல்டன்
    இவர்கள் இருவரும் முதல் இடத்தில இருப்பதகான காரணங்கள் சொல்ல தேவை இல்லை. GUARANTEED ENTERTAINERS.

    3.XIII( மற்ற கதை தொடர்கள் யாவும் பல வருடங்களுக்கு முதன்தய படைப்புகளாக இருக்கும் போது சம காலத்தில் படைக்கப்படும் தொடர் சுட சுட நமக்கு படிக்க கிடைப்பது தனி சிறப்பு.வாசகர்களுள் ஒரு தரப்பினருக்கு இவரது கதைகளின் பின்புலத்தில் உள்ள கடினமான PLOT சற்றே அயர்ச்சியை தரும் என்றாலும், இவருக்கும் பெரும்பான்மையான நமது வாசக குடும்பத்துக்கும் EMOTIONAL மற்றும் நீண்ட கால பிணைப்பு உள்ளதால் முதல் பட்டியலுக்கு நிச்சயம் தகுதி செய்வார்)

    4.டெக்ஸ் & லக்கி ( ஸ்டார் VALUE உள்ளதால் மொக்கையான கதைகளும் ஹிட் ஆகின்றன. அவ்வப்போது வரும் ஒருசில மொக்கை கதைகள் இவர்களது ஸ்டார் வேல்யுவை DENT செய்வதில்லை)

    5. லக்கியை விட சிக்பில் என்னைபொருத்தவரை நகைசுவை தோரணம் கூடுதலாக உள்ள தொடர். லக்கியை போல ஒரு ஸ்டார் VALUE இல்லாததால் சற்று பின் தங்குகிறது.

    6.காமன்சே ஒரு PROMISING தொடர் என்ற போதிலும், ஸ்டார் VALUE இல்லாதது மற்றும் பழமையான ஆக்கம் என்பதால் முதல் பட்டியலில் இடம் பிடித்தது எனக்கு ஆச்சர்யம்.


    7.கேப்டன் டைகர், இனி வரப்போகும் கதைகள் AVERAGE ரக கதைகள் என்பதால், நிச்சயம் முதல் பட்டியலில் இருந்து இவரை கழட்டி விடலாம். ஸ்டார் VALUE இருக்கிறது என்பதற்காக வாசகர்களை மிகவும் சோதிக்கக்கூடாது.

    //என்பதில் நமது அபிப்ராயங்கள் ஒத்துப் போகுமென்று நான் கருதுதல் சரி தானா ? //

    இல்லை சார்! உங்கள் கருத்தில் சில இடங்களில் மாறுபடுகிறேன்.

    ஜில் ஜோர்டான் நிச்சயம் முதல் பட்டியலுக்கு தகுதியான நாயகர். முதல் இரண்டு கதைகளும்
    அருமையானவை. இவ்வாறே மற்ற கதைகளும் இருக்கும் எனும் போது இவரை முதல் பட்டியலுக்கு மாற்றலாம்.

    டெக்ஸ்,லக்கி யை போலவே ரிபோர்ட்டர் ஜானி யும் ஸ்டார் VALUE (சற்றே குறைவாக)உள்ள ஒரு நாயகர்.கடைசியில் வெளிவந்த "நினைவுகள துரத்துவோம்" அருமையான கதை.
    டெக்ஸ்,லக்கி கதைகள் மொக்கையாக இருந்தாலும் பாராட்டை பெரும் என்றாலும் இவரது கதை மொக்கையாக இருந்தால் கண்டனகளை பெரும் என்பது மட்டுமே இவருக்கு உள்ள வித்தியாசம். கதை தேர்வில் கவனமாக இருக்கும் பட்சத்தில் இவரையும் முதல் பட்டியலுக்கு PROMOTE செய்யலாம்.

    ப்ளூ கோட்ஸ் என்னை பொறுத்தவரை ஒரு டார்க் ஹ்யூமர் ரகம். வன்முறையில்/யுத்தத்தில் /ரத்தத்தில்/மரணத்தில் காமெடி என்பது ஒரு வித அருவருப்பை தருகிறது.

    மர்ம மனிதன் மார்டின்,CID ராபின்,டயபாலிக்,சாகச வீரர் ரோஜர்,ப்ருனோ பிரேசில் போன்றோரை BLACK&WHITE புத்தகங்களில் தொடர்ந்து இடம் பெற்றிருக்கசெயயலாம்.

    ஆமா சுட்டி லக்கி என்ன ஆச்சு சார்? அவரையும் முதல் பட்டியலில் இணைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும், முந்தைய பதிலின் முதல் பாரா என் நண்பருக்கு எழுதிய பர்சனல் மெயிலின் ஒரு பகுதி, தவறாக காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டது.. அதை அழித்துவிட்டேன்! Sorry!

      ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍==================

      உங்கள் கருத்துகள் அனைத்தும் ஏற்புடையவை! ரூ.120க்கு இன்னும் கொஞ்சம் ப்ரீதிங் டைம் தந்து பார்க்கலாம் என்பதெல்லாம் அருமையான யோசனை.

      ஒன்றைத்தவிர..!

      //ப்ளூ கோட்ஸ் என்னை பொறுத்தவரை ஒரு டார்க் ஹ்யூமர் ரகம். வன்முறையில்/யுத்தத்தில் /ரத்தத்தில்/மரணத்தில் காமெடி என்பது ஒரு வித அருவருப்பை தருகிறது. //

      இந்த ஒரு விஷயத்தில்தான் உங்கள் புரிதல் கண்டு அதிர்ந்தேன். ப்ளூகோட்ஸ் யுத்தத்தை, ரத்தத்தை ஹ்யூமராக்கி, காசு பார்க்கும் அற்பமான கதைகளே அல்ல! அவை உங்கள் கருத்துக்கு நேரெதிராக யுத்தத்தையும், ரத்ததையும் கேள்விக்குள்ளாக்கி, நமது அரசியல் நிலைப்பாடுகளை, நம்மை, நிஜத்தை.. சுய எள்ளலுக்கு ஆளாக்கி சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தும் அற்புதமான கதைகள். பிடிக்கவில்லை, காமெடி குறைவு போன்றெல்லாம் சொல்லலாம், அது தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயம். ஆனால், அருவருப்பு என்ற சொல் ஒரு காமிக்ஸின் மீது சொல்லப்படுவதை என்னால் ஏற்கவே முடியவில்லை. அதனால்தான் இந்த பதில்!

      Delete
    2. // ப்ளூகோட்ஸ் யுத்தத்தை, ரத்தத்தை ஹ்யூமராக்கி, காசு பார்க்கும் அற்பமான கதைகளே அல்ல! //
      +1

      Delete
    3. நண்பர் ஆதி,

      //யுத்தத்தையும், ரத்ததையும் கேள்விக்குள்ளாக்கி, நமது அரசியல் நிலைப்பாடுகளை, நம்மை, நிஜத்தை.. சுய எள்ளலுக்கு ஆளாக்கி சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தும் அற்புதமான கதைகள்.//

      நீங்கள் பார்க்கும் இந்த பார்வை மனதிருப்தியை கொடுக்கிறது. இந்த தொடரை படிக்கும் ரசிகர்களை பொதுவாக மூன்றாக வகை படுத்துகிறேன்.

      *முழு நீள நகைசுவை கலாட்டா எனும் பார்வையில் கதையின் முதல் பக்கம் முதல் முடியும் வரை ரசித்து சிரித்தபின் புத்தகத்தை மூடி வைக்கும் வகையினர்.

      * கதையின் பின்புலத்தை உணர்ந்து, மனித உயிர்களின் மதிப்பை அறியாதவர்கலாய், உடல் உறுப்புக்களை இழந்து மரண அவஸ்தைப்படும் சக மனிதர்களின் உணர்வுகளை உணராதவர்களாய் இருக்கும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டு மனம் வருந்தும், சிந்திக்கும் வகையினர்

      *வன்முறையையும் நகைசுவையும் கலக்கும் இந்த ரிஸ்க் எதற்கு? நகைசுவையை அல்லது வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்த களங்களா இல்லை? இரண்டையும் இணைப்பது கத்தி மேல் நடப்பதை போன்றது,இதை தவிர்க்கலாம் எனும் சொற்ப வகையினர்.

      முதலில் சில facts.

      * இந்த கதையின் முதல் புத்தகத்தின் அட்டைப்படத்தில் (ஆகாயத்தில் அட்டகாசம்) இது ஒரு முழுநீள நகைசுவை கலாட்டா என்று அறிமுகப்படுத்தியிருந்தோம்.

      *மனித உயிர்களின் மதிப்பையும்,அடிதடி வன்முறையின் குரூரத்தையும் சரியாக புரிந்துகொள்ளாத, உரிய முறையில் கையாளத் தெரியாத கலைத்துறையை/அதனடியில் அதற்கு பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட சமுதாயம் நமது சமுதாயம்.

      *அமெரிக்க வடக்கத்தியருக்கும் தேற்க்கத்தியருக்கும் நடத்த யுத்த வரலாற்றை அறிந்து,உணர்ந்து இந்த கதையின் பின்புலத்தை அறிந்து புத்தகத்தை கையில் எடுப்பவர்கள்,நமது ரசிகர்களுள் எத்தனை சதவீதம் எனபது கேள்விக்குறி.


      "பிரளயத்தின் பிள்ளைகளை" போல ஒரு straight forward வரலற்றுகதையை யார் வேண்டுமானாலும் படித்து ரசிக்கலாம்/ வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு "சூப்பர் சர்க்கஸ்" போன்ற காமெடி கதையை யார் வேண்டுமானாலும் படித்து விழுந்து விழுந்து சிரிக்கலாம்.மாறாக "ப்ளூ கோட்ஸ்" போன்ற கதைகளில் வரலாற்று சம்பவங்களை எள்ளி நகையாடுவதை, நிஜத்தில் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சில eccentric அதிகாரிகளின் கேலிக்கூத்தான செயல்களை விமர்சனம் செய்வதை போன்ற கதையமைப்பை புரிந்து கொள்ள, ரசிக்க, அமெரிக்க வரலாற்றை கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் பெரும்பான்மையோரை போல அடிபட்டு விழுவதையும், மார்பில் தொட்ட பாய்வதையும், "ஐயோ" என அலறுவதையும் நகைசுவையாக எடுத்துக்கொண்டு கடந்து விடலாம்.

      அமெரிக்காவில் கதை ஹிட் அடிக்கிறது என்றால் அதற்கு காரணம் உள்ளது. இந்த கதை அவர்களது வரலாற்றை மையப்படுத்தி புனையப்பட்டுள்ளதால் அவர்கள் பார்வையில் தெரியும் கதையின் எதார்த்தம்/ காட்சியமைப்பின் பின்னே உள்ள நகைசுவையை புரிந்துகொள்ளும் திறன் வேறு ஒரு லெவலில் உள்ளது. நாம் இங்கே எந்த லெவலில் உள்ளோம்? நமது சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து இப்படி ஒரு நகைசுவை கதை வந்தால் நமது level of understanding ஏனைய உலகத்தோரை விட நிச்சயம் மாறுபடும்.

      Delete
    4. விஸ்கி-சுஸ்கி : உங்கள் பார்வைகளோடு இங்கு நிறைய உடன்பாடிருக்கும் என்பது உறுதி. ஆனால் ப்ளூகோட்ஸ் பட்டாளம் - ரத்தம் சிந்துவதை சித்தரிக்கும் முதல் தொடருமல்ல - இறுதித் தொடருமல்ல என்பதையும் நினைவில் கொள்ளத் தானே வேண்டும் ?! யுத்தத்தின் வெறுமையை ; அர்த்தமின்மையை ஒரு satire போலச் சொல்ல நினைப்பதே இத்தொடரின் லட்சியம். இழப்பின் ஆழங்களை ஒரு சீரியஸ் பின்னணியில் சொல்வது ஒரு பாணி எனில் - அதனையே கார்ட்டூன் பாணியில் சொல்லிட முனைகிறது ப்ளூகோட் பட்டாளம் !டெக்ஸ் வில்லரில் அடிக்காத மரண வாசனையா ? விஸ்கியின் நெடியா ? டைகரில் நாம் பார்க்காத போர் கோலங்களா - மரண தாண்டவங்களா ?

      ப்ளூகோட் தொடரின் ஒரே நெருடல் அதன் கார்ட்டூன் பாணிச் சித்திரங்களால் இதுவொரு முழுநீள நகைச்சுவைத் தொடராக முன்னிறுத்தப்படுவதாக மட்டுமே இருக்கலாம் !

      Delete
    5. //ஆனால் ப்ளூகோட்ஸ் பட்டாளம் - ரத்தம் சிந்துவதை சித்தரிக்கும் முதல் தொடருமல்ல - இறுதித் தொடருமல்ல என்பதையும் நினைவில் கொள்ளத் தானே வேண்டும் ?! //

      இதை நிச்சயம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது சார். in-fact "the walking dead " தொடரை தமிழுக்கு கொண்டுவரமுடியுமா என முன்பொருமுறை கேட்டவனும் நான் தான்.

      படைப்பாளியின் ஒரு படைப்பை நாம் எவ்வாறு conceive செய்கிறோம் என்பது மிக முக்கியமாக பார்கிறேன். அந்த படைப்பில் உள்ள அதீத வன்முறை, விரசம், சார்புநிலை, சித்தரிக்கப்படும் அவலம், ஆகிய இவை வாசிப்பாளர்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை விட அந்த படைப்பில் உள்ள சிறிய சிறிய விஷயங்களை, எந்த அர்த்தத்தில் சித்தரிக்கப்படுகிறதோ அதற்கு மாறாக, தவறாக புரிந்துகொண்டு அர்த்தம் கொள்ளும் நிலை, படைப்பின் purpose சை கேலிக்குரியதாக்கி விடுகிறது. :-(

      நாம் கற்பனை செய்துகூட பார்த்திராத குரூரமும் அவலமும் "the walking dead " இருந்தாலும் அந்த படைப்பின் நோக்கம் புத்தகத்தை கையில் எடுக்கும்முன் மனதில் தெளிவாக உள்ளதால் அவை பெரிய நெருடலாக தெரிவதில்லை. சீரியஸ் ரக கதைகளில் வன்முறை,ரத்தம்,கொலை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

      அதற்கு மாறாக comedy series suitable to all readers எனும் தொனியில் நிஜ வரலாற்றை ஒட்டி படைக்கப்படும் "ப்ளூ கோட்ஸ்" போன்ற படைப்புகளில் தொனிக்கும் நகைசுவை ஒரு சாராருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் கதையின் மறுபுறத்தில் உள்ளவர்களின் நிலையில் இருந்து எண்ணி பார்க்கும் போது, ஆழ் மனதில் காய்ந்த ரணங்களை கிளரிப்பார்பதை போன்று வேதனையை அவர்களுக்கு தரும் என்பது என் எண்ணம். அடுத்தவர்களின் துன்பம்,பொது இடத்தில வழுக்கி விழுவதை போல, பெரும்பாலும் பெரும்பான்மையோருக்கு சட்டென்று சிரிப்பை வரவழைத்து விடும். அவர்களின் நிலையில் இருந்து நாம் அனைவரும், ஒரு சில வேலைகளில் பார்க்க தவறுகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் மன வருத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. :-( .

      இந்த புத்தகமும் என் மனதில் அவ்வாறாகவே பதிகிறது. (சிக்பில் போன்ற கதைகள் கற்பனை கதைகள் என்பதை மனதில் கொள்ள தவற வேண்டாம் pls)


      Delete
    6. //அதற்கு மாறாக comedy series suitable to all readers எனும் தொனியில் நிஜ வரலாற்றை ஒட்டி படைக்கப்படும் "ப்ளூ கோட்ஸ்" போன்ற படைப்புகளில் தொனிக்கும் நகைசுவை ஒரு சாராருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் கதையின் மறுபுறத்தில் உள்ளவர்களின் நிலையில் இருந்து எண்ணி பார்க்கும் போது, ஆழ் மனதில் காய்ந்த ரணங்களை கிளரிப்பார்பதை போன்று வேதனையை அவர்களுக்கு தரும் என்பது என் எண்ணம். அடுத்தவர்களின் துன்பம்,பொது இடத்தில வழுக்கி விழுவதை போல, பெரும்பாலும் பெரும்பான்மையோருக்கு சட்டென்று சிரிப்பை வரவழைத்து விடும். அவர்களின் நிலையில் இருந்து நாம் அனைவரும், ஒரு சில வேலைகளில் பார்க்க தவறுகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் மன வருத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. :-(//
      போரில் ஈடு பட்ட வீரர்கள் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது குறைவே ! ஆகவே ஒரு நகை சுவை இவரை தாக்குமோ அவரை தாக்குமோ என யோசித்து கொண்டிருந்தால் அற்புதமான சோக கதைகள் வேண்டுமானால் வெளி படலாம் நண்பா ! cool ! கதை என்றே படிப்போமே ! அப்போ நீங்கள் சொன்ன காமெடி கதையும் செரிப்பயோ அல்லது பிறரையோ புண் படுத்தும் அல்லவா ! அது போல இது ஒரு வரலாறு சிறிது கலந்த பெரும் வெற்றி பெற்ற நகைச்சுவை கதையே ! அவ்வளவுதான் !

      Delete
    7. //நாம் கற்பனை செய்துகூட பார்த்திராத குரூரமும் அவலமும் "the walking dead " இருந்தாலும் அந்த படைப்பின் நோக்கம் புத்தகத்தை கையில் எடுக்கும்முன் மனதில் தெளிவாக உள்ளதால் அவை பெரிய நெருடலாக தெரிவதில்லை. சீரியஸ் ரக கதைகளில் வன்முறை,ரத்தம்,கொலை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
      //
      அப்போ இந்த கதையும் இது போல என தெளிவாகி கொள்வோமே !

      Delete
  52. 1.Tex
    2.Largowinch
    3.wayne sheldon
    4.Diabolic
    5.Lucky
    6.others

    ReplyDelete
  53. கமாஞ்சே இடத்தை டயபாலிக் கொண்டு நிரப்பலாம் ....

    ReplyDelete
  54. @அன்பு எடிட்டர்

    மாடஸ்டிஐ மறந்து விட்டதற்கு முதலில் கண்டனங்கள் தெரிவிக்கிறேன்

    லயன்னின் கருப்பு வெள்ளை நாயகர்களில் இருவரை தவிர (டெக்ஸ்,ஜானி) யாரயும் தொடர்வதில்லை

    என்று முடிவு செய்துவிட்டீர்களா என்ன?

    பட்டியல் ஒன்று மற்றும் நான்கை பொறுத்தவரை மாற்றுக்கருத்துக்கு இடமில்லைதான்

    பட்டியல் இரண்டில் மாடஸ்டியை சேர்க்கலாம் என்பது எனது கருத்து

    மூன்றை பொறுத்தவரை இப்பொது எந்த கமென்ட் சொல்வதும் சரியல்ல .........

    வருடத்தின் ஆரம்ப மாதங்களிலும் உங்களை பிசியாக வைத்துக்கொள்ள இடியாப்பங்களை

    ஏற்படுத்திக்கொண்டால் வருடம் முழுவதும் உங்களுக்கு ஒரே மாதிரி இருக்குமல்லவா?

    (எல்லாமே பழக்கம்தானுன்களே!!!)







    ReplyDelete
    Replies
    1. மாடஸ்திக்கு முழு ஆதரவு

      Delete
    2. Senthil Madesh : கொஞ்சமாய்க் கீழே ஸ்க்ரோல் செய்யுங்களேன் - இன்னொரு நண்பருக்கு இது தொடர்பான பதிலைப் பதிவு செய்தேன் இப்போது தான் !

      Delete
  55. சார் , குண்டு புத்தகங்கள் முழுதும் விற்று தீர்ந்தவுடன் அடுத்த புத்தகங்களை முயற்சிக்கலாம் . nbs விற்று தீர்ந்து ஒரு வருடம் கழித்து அடுத்த தற்போதைய குண்டு புத்தகம் . இந்த நீண்ட இடை வெளி தவிர்க்கலாம் . lms விற்று தீர்ந்ததும் அடுத்த வரிசையில் காத்திருக்கும் மின்னும் மரணம் தயாராகி விடும் . அது விற்று தீர்ந்தவுடன் இரத்த படலம் தயார் செய்யலாம் .
    நீங்கள் தொடர்களுக்கே முக்கியத்துவம் தருவது போல படுகிறது. மாந்திரீகனின் கதை , எமனின் திசை மேற்கு போன்ற ....சிறந்த தொடர் நாயகர்கள் இல்லாத ஒரே கதைகளையும் முயற்சி செய்யலாமே !

    ReplyDelete
    Replies
    1. ///// நீங்கள் தொடர்களுக்கே முக்கியத்துவம் தருவது போல படுகிறது. மாந்திரீகனின் கதை , எமனின் திசை மேற்கு போன்ற ....சிறந்த தொடர் நாயகர்கள் இல்லாத ஒரே கதைகளையும் முயற்சி செய்யலாமே !/////

      அருமையான யோசனை +999

      இரத்தபடலத்திற்கு முன்பு ரத்த கோட்டை சரியான தேர்வாக இருக்கும்.

      Delete
    2. இரத்த கோட்ட்டைக்கு +9999999999999

      Delete
  56. டியர் விஜயன் சார்,

    நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! :P
    //இரு கதைகள் இணைந்து ரூ.120 விலையில் வெளியாகும் இதழ்கள் விற்பனை முனைகளில் தடுமாறுகின்றன என்பது குண்டு புக் ரசிகக் கண்மணிகளுக்கு நான் சொல்லியாக வேண்டியதொரு சேதியும் கூட !//

    இரு பாகக் கதைகளை பிரித்து வெளியிடுவதை விட, 100 விலையில் வெளியிடலாம்! பிரித்து வெளியிட்டாலும், அட்டையில் "தொடர்கதை" என்ற எச்சரிக்கை வாசகம் அவசியம் இருக்க வேண்டும் புத்தக விழாவில், தவறுதலாக, ஏதோ ஒரு பாகத்தை மட்டும் வாங்கும் ஒருவர், பின்னர் அது தொடர்கதை என்று தெரிய வந்தால் கடுப்பாகி விடுவார் அல்லவா?!

    //ஒரு வேளை filler pages ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ? //

    டபுள் கதைகளுக்கு மட்டும் என்றில்லை; இது பற்றிய என் கருத்துக்களை பிப்ரவரியில் சொல்லியிருந்தேன். கட்டுமானத் தொழிலில் இருந்து தற்சமயம் விலகி விட்டதால், பழைய பில்டிங்கின் சில ஃப்ளோர்களை மட்டும் தகர்த்து விட்டு, எஞ்சியதை அலேக்காக தூக்கி, இங்கே வைத்திருக்கிறேன்! ;)

    ஃபில்லர் கதை - //பிரச்சினையே வேண்டாம் என்றால், 10% பக்கங்கள் & ஃபில்லர் கதைகளுக்கான ராயல்டி தொகை - இவை மிச்சமவதால் சிறியதாக விலை குறைப்பு கூட செய்யலாம் - ₹60 என்பதை சற்றே குறைக்கலாம் (₹50 அல்லது ₹55?) - இதன் மூலம் (நேரடி) விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது!//

    //என்னைப் பொறுத்த வரை பிரதானக் கதையையும், உள்ளட்டைகளைச் சேர்த்து அதிக பட்சம் ஆறு பக்கங்களுக்கு மிகாத ஆசிரியர் பகுதிகளையும் (தலையங்கம் + சி.சி.வ. + விளம்பரம் + வெளியீடு விபரம்) தவிர்த்து வேறெதுவுமே முக்கியம் கிடையாது! முக்கியத்துவம் குறைவான பகுதிகளை தவிர்ப்பதன் மூலம், இதழின் விலையை ₹50 அல்லது ₹55 ஆக நிர்ணயிக்க முடியுமானால், என் ஓட்டு அதற்கே! அடுத்த வருடம் விலை உயர்ந்தால் மீண்டும் ₹60-க்கே திரும்பி விடலாம், டோன்ட் வொர்ரி! ;)

    //50-50: ஐம்பது பக்கம், ஐம்பது ரூபாய்! ;) ஃபில்லர் கதைகளை தவிர்ப்பதன் மூலம், சந்தா கட்டியவர்களுக்கு, ஆண்டு இறுதியில் மீதமிருக்கும் தொகையில் சில கூடுதல் புத்தகங்களும் கிடைக்கும் (அதாவது, முழுநீளக் கதைகள்!)!

    இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது! இனி வரும் காலங்களில் ஆசிரியர் புத்தகத்தின் விலையை ஏற்றினாலும், இதற்கு மேலும் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே முடியாது அல்லவா?! ;)

    ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக "விலையேற்றம் + பக்கங்கள் குறைப்பு" என்று இரண்டு பக்கமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்குப் பதில், எப்போதும் ஒரே போல ஐம்பது பக்கங்கள் என்ற கான்செப்ட் எவ்வளவோ பெட்டர் அல்லவா?! (விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று!)//

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : பிரதான கதைக்கு ஆகும் தயாரிப்பு நேரத்தில் ஒரு பாதி filler pages -ன் பணிகளுக்கு அவசியப்படுவதே எனது தலைவலி ! பர பர வென்று கதையை முடித்து விட்டு, காலியுள்ள பக்கங்களை ரொப்பிட விழிக்கும் நாட்கள் நிறைய உண்டு !

      Delete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 2005ம் வருடத்தின் என்னுடைய எதிர்பார்ப்பு

      1) ////கேப்டன் டைகர்////
      மீதம் இருப்பவற்றை விரைந்து முடித்துவிடலாம். சிறந்த கதைகளை தக்க சமயத்தில் மறுபதிப்பு செய்யலாம்.

      2) ///////// டெக்ஸ் வில்லர், கமாஞ்சே, வேய்ன் ஷெல்டன், லார்கோ வின்ச், லக்கி லூக், சிக் பில், XIII,
      ரின் டின் கேன்,மேஜிக் விண்ட், கிராபிக் நாவல், டயபாலிக், சுட்டிலக்கி, தோர்கல், மதியில்லா மந்திரி,
      மாடஸ்தி ////////
      போன்றோர் கதைகளை தொடர்ந்து வருடம் முழுவதும் அதிகமாக வெளியிடலாம்.

      3) ////////ரிபோர்ட்டர் ஜானி, மர்ம மனிதன் மார்டின், CID ராபின், டிடெக்டிவ் ஜூலியா, டிடெக்டிவ் டைலன்,
      சாகச வீரர் ரோஜர், ப்ருனோ பிரேசில், கேப்டன் பிரின்ஸ் /////////
      வருடத்திற்கு ஒவ்வொரு புக் என அனைவருக்கும்.

      4) /////தற்சமயம் வெளியிட்ட 25 மதிப்புள்ள மியாவிபோல் சில பல காமெடி இதழ்கள் புத்தக விழாவின்போது /////

      5) ///// LMS அளவில் வருடத்திற்கு 2 புத்தகங்கள் (தீபாவளி மலர், கோடை மலர்) /////

      6) ///// 60க்கு மாதம் 4 இதழ்கள் தொடர்ந்து வருடம் முழுவதும் ///////

      7) ////// ப்ளூ கோட் பட்டாளம், ஜில் ஜோர்டான், டிடெக்டிவ் ஜெரோம் இவர்கள் 3 பேரையும் பரணில்போட்டுவிட்டு
      புதிய கதைத் தொடர்களை முயற்சிக்கலாம் ////////

      பில்லர் பேஜ், ஹாட்-லைன், அடுத்த வெளியீடு விளம்பரங்கள், வாசகர் கடிதம், சிங்கத்தின் சிறுவயதில் இவைகள் அனைத்துடன் காமிக்ஸ் வந்தால்தான் அழகு. ஆகையால் 120க்கு வெளியாகும் காமிக்ஸ்சை சிறிது காலம் ஒத்தி வைத்துவிட்டு, 60க்கு காமிக்சை மாதம் 4 முதல் 6 என்ற எண்ணிக்கையில் வெளிவருவதே நன்று.

      Delete
    2. //1) ////கேப்டன் டைகர்////
      மீதம் இருப்பவற்றை விரைந்து முடித்துவிடலாம். சிறந்த கதைகளை தக்க சமயத்தில் மறுபதிப்பு செய்யலாம்.
      //
      +1

      Delete
    3. Mugunthan Kumar : 1.இன்னமும் 11 கதைகள் உள்ளன - இளம் டைகர் கதை வரிசையில்...! ஆண்டுக்கு 3 கதைகள் என்றால் கூட இன்னமும் 4 ஆண்டுகளுக்கு வண்டி ஓடும் !

      2.கேப்டன் பிரின்ஸ் தொடரில் முழு நீளக் கதைகள் ஏதும் எஞ்சி இல்லை என்பதால் அவரது presence மறுபதிப்புகளில் மட்டுமே சாத்தியம் ! ஒரு சிறுகதைத் தொகுப்பு மட்டுமே பாக்கி உள்ளது - துவக்க நாட்களது ஓவியங்களோடு !

      3.மியாவி போல் அளவில் ; but இன்னும் நிறைவான தரத்தில் புத்தக விழாக்களை டார்கெட் செய்யும் இதழ்களின் தயாரிப்பு வேலைகள் சமயம் கிட்டும் போதெல்லாம் ஓசையின்றி நடந்து வருகிறது !

      4.LMS அளவிற்கு ஆண்டிற்கு ஒன்றே பட்ஜெட் எகிறுகிறதே...!! எங்களுக்கும், உங்களுக்கும் !

      5.மாதந்தோறும் ரூ.60 x 3 நிச்சயம் ! 4 லட்சியம் !

      6.ப்ளூகோட்ஸ் + ஜில்லார் தொடரட்டும் என்பதே இது வரை இங்கு நான் கிரகித்துள்ள சேதி...!

      Delete
  58. கேப்டன் டைகர் கதைகளில் மீதம் இருப்பவைகளை விரைந்து முடித்திடலாம். டெக்ஸ் வில்லர் கதைகளில் best மட்டுமே வெளியிடவும் !

    ReplyDelete
  59. Wayne Sheldonக்கு அடுத்த ஆண்டில் அதிக வெளியிடு தேவை !

    ReplyDelete
  60. சோகம் தாங்கிய கிராபிக்நாவல்கள் தயவு செய்து வேண்டாம் என்பதே என் கருத்து

    ReplyDelete
  61. மாடஸ்டி ,காரிகன் ஆரம்ப கால சாகசங்கள் மறுபடியும் கிடைக்குமா ?
    //இரு கதைகள் இணைந்து ரூ.120 விலையில் வெளியாகும் இதழ்கள் விற்பனை முனைகளில் தடுமாறுகின்றன / காமிக்ஸ் காதலர்களின் மனதை நோகடிக்கும் , ஆனால் நிதர்சன உலகின் உண்மை நிலை.குண்டு பொக்கோ ஒல்லி பொக்கோ ஆசிரியரின் கையை கடிக்காத புக்தான் நாம் வேண்டுவது

    ReplyDelete
    Replies
    1. selvas : மாடஸ்டி ; காரிகன்; ரிப் கிர்பி போன்ற கதைத் தொடர்களுக்கு நானும் ரசிகனே ! ஆனால் சற்றே கவனித்தீர்களானால் நாம்கடந்த 2+ ஆண்டுகளாய் வெளியிட்டு வரும் கதைகள் சகலமும் காமிக்ஸ் ஆல்பம்களின் தமிழாக்கங்களே ! மேற்சொன்ன தொடர்கள் சகலமும் தினசரி செய்தித்தாள்களுக்கென உருவாக்கப்பட்ட strips ! இவற்றின் தன்மைகள் ; அளவுகள் ; அமைப்புகள் நமது தற்போதைய பாணிக்கு ஒத்து வராத விஷயங்கள். தவிர, இவற்றில் பணியாற்ற கம்ப்யூட்டர்களை விட, ஓவியர்களே தேவலாம் ! துரதிஷ்டவசமாய் இன்று ஓவியக் கலைஞர்கள் அழிந்து வரும் ஒரு இனமாகி விட்டனர் !

      Delete
  62. # கோவை ஸ்டீல் : மாந்திரிகனின் கதை ..,ரத்த படலம் ..,எமனின் திசை மேற்கு ஆகியவை நிஜமாக பிடிக்க வில்லை #

    மூன்றுமே மிக பிடித்த கதை நண்பரே ...இவை மூன்றிலும் " சோகம் " மட்டுமே மெயின் கிடையாது .அனைத்து வித சுவைகளும் பரிமாறி கடைசியில் ஒரு மென் சோக சுவையை பரிமாறிய கதைகள் இவை .இப்படிப்பட்ட கதைகளுக்கு என்றுமே எனது எதிர்ப்பு கிடையாது .ஆனால் " சோகத்தை " மட்டும் மெயின் ஆக கொண்டு கூட " வராலாற்றை " இணைத்து வந்தால் என்னிடம் வருவது கண்ணீர் மட்டுமல்ல தலைவலியும் தான் ...

    # விஸ்கி & சுஸ்கி : ப்ளூ கோட் அருவருப்பான காமெடி கதையா ....முதன் முறையாக உங்கள் கருத்தில் சறுக்கி விட்டதாகவே நான் உணர்கிறேன் .இதில் நண்பர் ஆதி அவர்களின் கருத்தில் உடன் படுகிறேன் .

    # செந்தில் மாதேஷ் : மாடஸ்தியை மறந்து விட்டதற்கு எனது கண்டனம் #

    என்னுடைய கண்டனமும் ....சார் ...சிறந்த மாடஸ்தி கதையை கொஞ்சம் சுமாரான சித்திரம் போல இருந்தாலும் ஒரு "ட்ரையல் " விட்டு பார்க்கலாமே ..?

    # முகுந்தன் குமார் & ஸ்டீல் அவர்களுக்கு இருவரும் ரத்த கோட்டை ..,ரத்தபடலம் என்று அருகாமை மற்றும் 90 % அனைவரிடம் இருக்கும் இந்த மறுபதிப்பு இதழ்களை வேண்டுவதை விட அவர்களின் புதிய சாகசத்தை வேண்டுவது நலம் பயக்கும் ..வண்ணத்தில் என்ற ஒரே காரணத்தினால் அவற்றை வேண்டுவது தேவை இல்லை என்பதே எனது கருத்து.அந்த இதழ் தயாரிக்கும் முயற்சி ...மற்றும் நமது பணம் புது இதழ்களுக்கோ அல்லது ஆரம்ப இதழ்களுக்காக ( மறுபதிப்பு ) என இருந்தால் அனைவருக்கும் நலம் பயக்கும் .

    # கார்த்திக் சோமலிங்கம் : ஒரு பாக புத்தகத்தை மட்டும் வாங்கும் நண்பர் பின்னர் தொடர் கதை என்றால் கடுப்பாகி விடுவார் அல்லவா..

    உண்மையோ உண்மை ....எனவே 2 இன் 1 பாகத்தை பிரிக்காதிர் ஆசிரியர் அவர்களே ...

    # செல்வாஸ் :சோகம் தாங்கிய கிராபிக் நாவல்கள் வேண்டாம் என்பதே என் கருத்து...

    நன்றி நண்பரே ..கை கொடுங்கள் ... :-)

    ஒரு முக்கிய முன் &பின் குறிப்பு :

    இப்படி சின்ன பையனா இருந்தா இப்படிதான் .எல்லாத்தையும் அடிக்கடி மறந்து போய் பல பெரியவங்க சொன்னதை மீறி நண்பர்களுக்கு நீ பதில் சொல்ற பரணி ...வேண்டாம் ..கலவரம் வந்துரும் ....

    பராவாயில்லை.....மனசாட்சி ...பல பேருல...பல பேரு வந்து என்னை திட்டினாலும் அதையும் நான் மறந்திருவேன் ...குழந்தை மனசு பாரு...நமக்கு சந்தோசம் மட்டும் தான் முக்கியம் .

    மீசை வச்ச குழந்தையடா ...ஹி ...ஹி ..

    ReplyDelete
    Replies
    1. /////பரணி/////

      இப்பவே கேட்டாதான் இன்னும் 3 வருடம் கழித்து கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான்.

      Delete
  63. @ பரணிதரன்

    வாங்கின திட்டு மறந்துபோச்சா? என்ன ஒரு தைரியம்! பள்ளிபாளையத்துக்கு உருட்டு கட்டையோட போன

    கும்பல் வேலைய முடிச்சவுடன் தாரமங்கலம் பக்கம் சுமோவை திருப்பிட்டு வர திட்டம் போட்டுருக்காங்கலாம்

    ReplyDelete
  64. நண்பர்களே,

    யாரிடமாவது கார்சனின் கடந்த காலம் - 2 ம் பாகம் இருந்தால் சொல்லுங்களேன் என்னிடம் உள்ள "மடஸ்ட்டி இன் இஸ்தான்புல் " மாற்றிகொள்ள விரும்புகிறேன்.

    தொடர்புக்கு
    sundaramudpt@gmail.com

    ReplyDelete
  65. What about new entries sir?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : இது முழுக்கவே தற்போதுள்ள மாணாக்கர்களின் progress rating என்று வைத்துக் கொள்ளலாம் ! New admissions அவ்வப்போது இணைந்து கொள்வார்கள் - மேஜிக் விண்ட் ; தோர்கல் ; ரின் டின் கேன் போல..!

      Delete
  66. What about Mini lion or spl book for children?

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் மாதிரி.......

      Delete
    2. சூப்பர் விஜய் : பூந்தளிர் மாதிரியான இதழ்களைத் தொடர்ச்சியாய்த் தயாரிக்க ஒரு தரமான பின்னணி டீம் தேவை ! அது மட்டுமன்றி இன்றைய தலைமுறை இது போன்ற இதழ்களைப் படிக்கும் பொறுமை கொண்டுள்ளதா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி !! தமிழில் எஞ்சி நிற்கும் சுட்டி விகடன் & கோகுலம் இதழ்களின் சர்குலேஷன் அந்நிறுவனங்களின் பாரம்பரியத்துக்கும், ஆற்றலுக்கும் நிச்சயம் நியாயம் செய்யும் ஒரு எண்ணிக்கை அல்ல ! இன்றைய ரசனைகள் light years ahead என்று தான் சொல்லத் தோன்றுகிறது !

      Delete
  67. அன்பு எடிட்டர்

    ஆகஸ்ட் இரண்டாம் தேதி காலை உங்களை ஈரோட்டில் எதிர்பார்க்காலாமா?

    ReplyDelete
    Replies
    1. Senthil Madhesh : ஸ்டால் இருப்பின், நானும் இருப்பேன் ! கொஞ்சமாய் புத்தக விழா அட்டவணைக்குள் நம்மை இணைத்துக் கொண்டு மேற்கொண்டு திட்டமிடுவோமே ?

      Delete
  68. http://myetvmedia.com/feature/best-comics-book-of-all-times-buck-danny/ Buck Danny பற்றிய சிறு தொகுப்பு! Editor Sir, Franco-Belgium comics heroவான Buck Danny ன் கதைகளை தமிழில் வந்துள்ளதா? அப்படி வராவிட்டால் நாம் ஏன் முயற்சிக்க கூடாது ?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : ஊஹும் ....நம் அளவுகோல்களுக்கு ஏற்ற தொடரல்ல !

      Delete
  69. மர்ம மனிதன் மார்டின், CID ராபின், டயபாலிக், சாகச வீரர் ரோஜர் ஆகியோரை தொடர்வது நலம்.

    இத்தாலியின் ஒரு புகழ் பெற்ற ஹீரோ, தமிழ் நாட்டில் எடுபடவில்லை என்று 3 கதைகளை கொண்டு ஆசிரியரே! கற்பனைக்கு பஞ்சமில்லாத கதைகளை டயபாலிக்-ஐ மறக்கவும் வேண்டாம், மாற்றவும் வேண்டாம்!

    சிறந்த துப்பறிவாளராக இருக்கும் CID ராபினுக்கு நானும் ஒரு ரசிகன் தான். அவருடைய இழப்பை என்னால் ஏற்கனவே தாங்க முடியவில்லை. இப்பொழுது நிரந்தர இழப்புக்கான முயற்சி ஏன் உங்கள் புண்ணியத்தில்!

    மர்ம மனிதன் மார்டின் இதுவரை எந்த ஒரு குறையும் வைகாவில்லை காமிக்ஸ் பசிக்கு! ஆதரவு தர நாங்கள் ரெடி! தொடருவதற்கு நீங்கள் ரெடியா!

    சாகச வீரர் ரோஜரின் 'நடக்கும் சிலை மர்மம்' போன்ற செலெக்டிவ் கதைகளை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள்!

    by
    Boopathi

    ReplyDelete
    Replies
    1. நடக்கும் சிலை மர்மம் ன்னா ...................மாடஸ்டி.தானே ...........

      Delete
    2. discoverboo : கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கலாமே ? கடைசிப் பட்டியலைத் தாண்டிய இதர நாயகர்கள் எவருக்கு எதிராகவும் கேள்விக் குறிகள் எழுப்பப்படாத போது ராபினின் "இழப்பு" குறித்த ஆதங்கக் கவலைகளுக்கு ஏது முகாந்திரம் ?

      Delete
  70. மாடஸ்டி இல்லையா ................எனக்கு குளிர் காய்ச்சல் வந்து விடும் போல இருக்கு ...........??...........புர்ர்ர்ர்ர்ர்ர்....... புர்ர்ர்ர்ர்ர்ர் ........

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கு ஒதுக்கீடு இல்லையா ..............??.........கோடஸ்டி நல விரும்பிகன்

      Delete
    2. மந்திரியாரே என்ன அநியாயம் ! உங்களுக்கும் இட ஒதுக்கீடு இல்லையா ?

      Delete
    3. அமாம் என்னையே மறந்துட்டேனே

      Delete
  71. //ஒரு வேளை filler pages ; வள வளா விளம்பரங்கள் ; தலையங்கம் இத்த்யாதிகளைக் கத்திரி போட்டு விட்டு இது போன்ற டபுள் கதைகளை ரூ.100 விலைக்குள் அடைக்க முயற்சிக்க வேண்டுமா ?//

    100 விலைக்குள் கொண்டுவருவது நல்லதே. சிறு கதைகள் எனக்கு பிடித்தமானது அல்ல.அவை செலவு பிடிக்கும் விஷயம் என்றால் அந்த செலவை தவிற்கவே விரும்புவேன்.

    ReplyDelete
  72. இஸ்கூல்..தொறக்கபோகுது ..........
    பேசாம லயன் காமிக்ஸை கண்டிப்பா ஒரு பாட திட்டமா அறிவிக்கலாம்ல..........
    அதுல மட்டும் பாஸான எல்லா பாடமும் பாஸ் தான் .............
    கணிதம் ஆங்கிலம் அறிவியல் பௌதீகம் இயற்பியல் புவியல் அனைத்தும் இதுல வந்துடுதுல.................
    முக்கியமா கோடு போடுதல் ,உடை சீரமைத்தல் போன்ற துணை பாடங்களும் அமையுதுல்ல ................

    சீக்கிரமா யாராவது இந்தி பேச தெரிஞ்சவங்க கிளம்புங்கப்பா வடக்கு நோக்கி ................................................

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி : B.LC ....M.LC என்றெல்லாம் நாமாகப் பட்டம் போட்டுக் கொள்ளலாம் அல்லவா ?

      Delete
    2. நீங்களெல்லாம் இன்னும் டிக்ரியே பண்ணலையா.?
      நாங்களெல்லாம் லயன் காமிக்ஸ்ல பி.ஹெச்டி பண்ணவங்களாக்கும்...

      Delete
    3. காமிக்ஸை பொறுத்தவரை நான் ஒரு கை நாட்டுங்கோ ..........

      Delete
  73. To: Editor,
    கடந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தின் சில பகுதிகளை இங்கே மீள் பதிவிடுகிறேன்:

    "புத்தக எண்ணிக்கை அதிகரிப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, 'இப்படியொரு புத்தகமும் வந்தது' என்றவாறு எண்ணிக்கைக்காக மட்டும் சில புத்தகங்கள் வருவதுதான் கவனித்துச் சரிசெய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

    புத்தக எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மாதாமாதம் காமிக்ஸ்களை வாங்குவதற்கு செலவிடும் தொகை தொடர்பாக பலரும் எண்ணத் தலைப்படுகிறார்கள். எனவே, இங்கே குறித்த சில புத்தகங்களை மட்டும் தமது பட்ஜெட்டுக்குள் தெரிவு செய்து வாங்க நினைக்கிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் 'காலத்தின் கால் சுவடுகளில்' போன்ற கதைகள் அவர்களால் ஒதுக்கப்படும் கதைகளாகிவிடுகின்றன.

    முன்பு 100 ரூபாவில் இரண்டு கதைகள் வந்தபோது, ஒரு கதை பிடித்தமானதாக இருந்தாலும் அந்தப் புத்தகத்தை அவர்கள் வாங்கினார்கள். எனவே, அவர்களால் ஒதுக்கப்படும் வாய்ப்புள்ள 'காலத்தின் கால்சுவடுகளில்' போன்ற கதைகளும் அவர்களைச் சென்றடைந்தன. ஆனால், இப்போது தனித்தனியாக கதைகள் வருவதால், 'தெரிவு' என்பது சாத்தியப்படுகிறது. எனவே, ஆசிரியரும் தனது கதைத் தெரிவுகளில் மேலும் மேலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

    புத்தக விழாக்கள், சந்தாதாரர்கள் மூலம் இத்தகைய புத்தகங்களும் வாசகர்களிடம் சென்று விடும் என்பது சாத்தியம்தான். ஆனால், கடைகளில் இத்தகைய புத்தகங்கள் வாங்கப்படுவது என்பது மிகக் குறைவான சாத்தியங்களையே கொண்டுள்ளது என்பதை ஆசிரியர் கவனத்தில் எடுப்பார் என்றே நம்புகிறேன்.

    கதைத் தெரிவுகளில் இன்னும் இன்னும் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தினால் ஒரு மாதத்தில் 10 புத்தகம் வந்தாலும் வரவேற்க வாசகர்கள் தாயாராகவே இருப்பர்!"

    ReplyDelete
  74. நமது காமிக்ஸ்களின் விற்பனை எல்லையைப் பொறுத்தே கதை ஒன்றை வாங்குவது அமைகிறது என்பது எமக்குத் தெரியும். இலட்சக்கணக்கிற்கும் ஆயிரக்கணக்கிற்கும் நிறையவே வேறுபாடு உண்டுதான். ஆயினும், தெரிவுசெய்யப்படும் கதைகள் சரியாக அமைந்துவிட்டால் விற்பனையில் சீரான அதிகரிப்பு ஏற்படுமென்பது எனது எண்ணம்.

    ஜில் ஜோர்டன், டிடெக்டிவ் ஜெரோம், ப்ளூ கோட் பட்டாளம் - போன்றவை, அறிமுகமானதிலிருந்து பெரியதொரு அதிர்வை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை! ஆயினும் அவை மோசமான அறிமுகங்கள் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஜெரோமின் இரண்டு பாகக் கதையை ரசித்து ரசித்து அந்த விறு விறுப்பில் லயித்து வாசித்தவன் என்ற வகையில் அவரை வரவேற்க எப்போதுமே காத்திருக்கிறேன்.

    ஒரு காலத்தில் 'பேட் மேன்' கதைகளை வெளியிட்டபோது கதைகளை தெரிவு செய்வதிலும், எடிட் செய்வதிலும் பட்ட பாடுகளை நீங்கள் பல தடவை குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆயினும், இப்போது புதிய நாயகர்கள் அறிமுகமாகும்போது, அவர்களின் கதைகளை வரிசைப்படி கொண்டுவர (பதிப்பாளர்களின் டிமாண்ட்??!!) முயல்வதால், 'டாப்' கதைகளை மட்டும் தெரிவுசெய்யும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதோ?

    முன்பு கறுப்பு-வெள்ளையில் நமது இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தபோது எந்த நாயகராக இருந்தாலும் அவர்களின் கதை வரிசை பற்றி எண்ணாமல், வாசகர்களின் வரவேற்பைப் பெறக்கூடிய கதைகளை தெரிவுசெய்ய நீங்கள் முயன்றதுபோன்று இப்போதும் உங்களுக்கு 'பெஸ்ட்' என்று தோன்றும் கதைகளை மட்டும் தெரிந்து வெளியிட்டால் எல்லா நாயகர்களுமே வெற்றிநாயகர்களாகிடமுடியும்.

    மொழிச்சிக்கல், உரிமைக் கட்டணங்கள், பதிப்பகங்களின் டிமாண்ட்கள் என்று பல சவால்கள் இதில் உள்ளன என்பது நாம் அறிந்ததே! வாசக நண்பர்களும் தாம் வாசித்த பிற மொழி (ப்ரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலி..) கதைகளின் விபரங்களை அல்லது கதைகள் பற்றிய ரிவ்யூக்களை ஆசிரியருக்கு அனுப்பிட்டால் அது அவருக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  75. To: Editor,
    சுட்டிகளுக்கென்று தனி இதழ் ஒன்று ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், ப்ளூ கோட் பட்டாளம், ஜில் ஜோர்டான் - போன்ற கதைகளை அந்த ஸ்லாட்டில் ஒதுக்கிவிடலாம் அல்லவா? நீட் அண்ட் க்ளீன் ரக கதைகள் என்பதால் அந்த டைட்டிலுக்கு பொருத்தமாக இருக்கும்.

    கதைகளை வெறுமனே வாசித்து ரசிக்கும் வயதையெல்லாம் கடந்து, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி விடைதேடும் வயதுகளில் இருப்பதால் இத்தகைய கதைகள் 'சின்னபுள்ளத்தனமா'னவையாக இருக்கின்றன போலும்!

    நமது இதழ்கள் புது வடிவில் வர ஆரம்பித்த பின்னர் மர்ம மனிதன் மார்டின்,
    CID ராபின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அவர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு தயவுசெய்து வந்துவிடாதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : குட்டிகளுக்கு ஜில் ஜோர்டன் ஒ.கே.வாக இருக்கலாம் - but கதை சொல்ல ஆளின்றி ப்ளூகோட் பட்டாளத்தை அவர்களாக சமாளிப்பது சுலபமாக இராது ! And - மார்டின் + ராபின் ஜோடியை ஒதுக்கப் போவதாய் நீங்களும். நண்பர்களில் ஒரு சாராரும் அபிப்ராயப்படுவது ஏனோ - புலனாகவில்லை ! எனது கடைசிப் பட்டியலில் இருக்கும் நாயகர்களைத் தாண்டி வேறு எவரும் danger zone -ல் இல்லை !

      Delete
  76. கருப்பு & வெள்ளை கதாநாயகர்களுக்கு என்று தனியாக ஒரு காமிக்ஸ் மாதா மாதம் Rs 100 or 65 விலையில் தயார் செய்யலாமே. ஏற்கனவே இருக்கும் இட நெருக்கடியில் கருப்பு & வெள்ளை கதாநாயகர்களுக்கு இடம் ஒதுக்க முடியாது. எனவே தான் இந்த யோசனை.

    ReplyDelete
    Replies
    1. Srithar Chockkappa : கொஞ்சம் கொஞ்சமாய் அடியெடுத்து வைப்போமே...! ஏற்கனவே மாதம் 3 இதழ்கள் இருக்கும் நிலையில் - இன்னொரு புது track அத்தனை சுலபம் அல்லவே...!

      Delete
  77. புதிதாக இன்னும் பல நாயகர்களை அறிமுகம் செய்யலாம். லார்கோவையும், ஷெல்டனையும் போல கிடைக்காமலா போய்விடுவார்கள். உலகை வலம் வரும் நாயகர்கள் என்றாலே கொள்ளை ஆசை. அறிமுகமே அட்டகாஷமாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். போரடிக்காத கதைகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Meeraan : தேடுவோம் - உலகம் சுற்றும் வாலிபர்களை !

      Delete
  78. எடிட்டர் சார்,


    Comanche நல்ல தொடர் தான், ஆனால் கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய நாயகர் அல்ல அவர்.

    Blue Coats பற்றி ஜட்ஜ் பன்ன இன்னும் சிறிது காலம் தேவை படுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், மார்டின் அறிமுகமாக "அமானுஷ்ய அலைவரிசை" செம மொக்கையான கதை (எ எ க) அனால் அடுத்து வந்த "காலத்திற்கு ஒரு பாலம்" மற்றும் "பேழையில் ஒரு வாள் " கதைகளை மறக்க முடியுமா? சூப்பர் டுப்பர் ஹிட் அல்லவா.

    ஜில் ஜோர்டான் என்னை பொருத்த வரையில் ஒரு மிக நல்ல தொடர். காவில் ஒரு ஆவி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் பிரெஞ்சில் இவருடைய பல நல்ல கதைகள் படித்திருக்கிறேன். பழைய ஆக்கம் என்றாலும் கார்டூன் கதை என்பதால் பழைய நெடி இத்தொடரில் தெரியவில்லை என்று நினைக்கிறன்.

    ரிபோர்ட்டர் ஜானி, மர்ம மனிதன் மார்டின், ராபின் ஆகியோர் என்றுமே எனக்கு பிடித்த நாயகர்கள்.

    தடுமாற்றம் கண்டுள்ளோர் பட்டியலில் டயபாலிக் இடம் பெற்று இருப்பது சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் வெளியிட்ட இரண்டு கதைகளும் நன்றாக இருந்தன.

    ஜெரோமை சற்று ஒதுக்கி வைப்பது நல்லது என்றே தோன்றுகிறது. இவரது பல கதைகளை பிரெஞ்சில் படித்துள்ளேன். ஆர்ட் வொர்க் மிக அருமையாக இருந்தாலும் கதையில் pace பத்தாது.

    ப்ருனோ பிரேசில் மற்றும் ரோஜர் ஆகியோருக்கு அவ்வப்போது சில ஸ்லாட்கள் கொடுக்கலாம்.

    கடைசியாக, சென்ற வாரம் தான் எஞ்சி நின்றவனின் கதை படித்தேன். பர பர action மற்றும் பஞ்ச் டயலாக் ஆகியவற்றால் கதை மிக அருமையாக இருந்தது. அதிலும் பக்கம் 85 ல் "மரமண்டை! அரிசி சோறே கதியென கிடக்கும் உங்கள் தேசத்தில் உருப்படியான ஒரே ரெஸ்டாரன்ட் இது தான். இங்கே வைத்து அவளை கொன்றால் அப்புறம் இங்கே ஆயுசுக்கும் நான் காலடி வைக்க முடியாது போய்விடும்" என்ற டயலாக் சுப்பெரோ சூப்பர். பல முறை சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. Radja : கொஞ்சமாய் மாற்றுக் கருத்துக்கள் :

      மார்டினின் அமானுஷ்ய அலைவரிசை - ஆங்கிலத்தில் வந்த Poltergeist திரைப்படத்தின் கதை பாணியை ஒத்தது ! நிச்சயமாய் இதனை மொக்கை என்ற பட்டியலுக்குள் (இதர) வாசகர்கள் அடைத்ததாய் நினைவில்லை !

      அதே போல - கமான்சே தொடர் எதற்காக ரசிக்கிறோமோ - இல்லையோ ; அந்த சித்திரத் துல்லியத்திற்கும், யதார்த்த wild west -ன் சித்தரிப்புக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம் அல்லவா ?

      Delete
  79. சார் ,
    உங்கள் சிந்தனை குதிரைகளை இந்த பசுமையான நினைவுகளிலும்/கனவுகளிலும் மேய விடுங்களேன் !
    http://lion-muthucomics.blogspot.in/2013_07_01_archive.html
    http://lion-muthucomics.blogspot.in/2013/03/blog-post_18.html
    http://lion-muthucomics.blogspot.in/2013_01_01_archive.html

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் வாக்குறிதி போல........................சிவகாசிக்கு ஒரு டன் வல்லாரை லேகியம் பார்ஸேஏஏஏல் ....

      Delete
  80. சார் ,
    கிட் லக்கி மீண்டும் எப்போது மறுபிரவேசம் செய்கிறார்?

    ReplyDelete
  81. நேற்றுதான் தோர்கல் படித்தேன் வித்தியாசமான கதைகளம்! இனிவரும் பாகங்களில் விறுவிறுப்பு கூடும் என எதிர்பார்கிறேன் ! முகமற்ற கண்கள் படித்த வண்ண பதிப்பு அருமை ஆனால் fonts fade ஆனது போல் இருந்தது.

    ReplyDelete
  82. vanakkam sir.. august thiru vizha vai aavalodu aedhir parkkinrom.. erode matrum bhavani komarapalayam lion nanbargalin thodarbu kidaikkuma?
    Babu.M
    LIC of India,
    B.Komarapalayam.
    Pin:638183

    ReplyDelete
  83. டியர் எடிட்டர்ஜீ!!!

    சென்ற வருட ஈரோடு புத்தகவிழாவில் உங்களோடு மல்லுக்கட்டி மின்னும் மரணம் வண்ண மறுபதிப்பு "வாக்குறுதி"யை வாங்கியதைபோல,இந்த ஆண்டு ஈரோடு புத்தகவிழாவில் "ரத்த கோட்டை" வண்ண மறுபதிப்பு கோரி உங்களை ஹிம்ஸிக்க காத்திருக்கிறோம். வருக! வாக்குறுதி தருக!!

    தோட்டா தலைநகரம் & ரத்த கோட்டை இரண்டும் இணைந்த வண்ண மறுபதிப்பு ஜனவரி 2016-இல் வெளியிட நீங்கள் நிச்சயம் சம்மதிப்பீர்கள்.

    காரணம்..... நீங்க....ரொம்ப நல்லவர் ;-)

    ReplyDelete
  84. 120ரூ புத்தகத்தை இரண்டாகப் பிரித்து போடும் போது முதல் பாகம் சுமாராக இருந்து இரண்டாம் பாகம் சூப்பரா இருந்தாலும் விற்பனை பாதிக்கும் என்பது என் கருத்து

    ReplyDelete
  85. Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Yes !

      Delete
  86. சார் லிஸ்ட் எல்லாம் ஓகே. தயவு செய்து ஜெரோம் வேண்டாம். ஜில் ஜோர்டான் நிச்சயமாக ஒதுக்க வேண்டியவர் இல்லை. காவியில் ஒரு ஆவி நன்றாகவே இருந்தது. பழைய கதாநாயகர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் சார்.

    ReplyDelete
  87. மே’ -ல் ஜூன் வந்துவிட்டதால்,ஜூனில் ஜூலை வருமா...........................????????????

    ReplyDelete
  88. மர்ம மனிதன் மார்டினும், டிடெக்டிவ் ராபின் கதைகளும் என்றுமே தொய்வாக எனக்கு தோன்றியதில்லை. வித்தியாசமான கதைகளன் கொண்ட அந்த நாயகர்களுக்கு நாம் சரியான் வாய்ப்பளிக்கவில்லையோ என்ற எண்ணம் எனக்கு உள்ளது.

    ReplyDelete
  89. இன்னும் எங்க வூர் பொட்டி வரலை ! வாங்கிய நண்பர்கள் யாரேனும் உண்டா ?

    ReplyDelete
  90. @ஸ்டீல் க்ளா! புத்தகங்களை வாங்கியதும் சொல்லுங்கள்!

    மேக்னம் ஸ்பெஷல் + சூப்பர் சிக்ஸ் விளம்பரங்கள் அசத்தல்!

    டைலன் கதையின் பெயர் "நள்ளிரவு நங்கை"-க்கு பதிலாக "அந்தி மண்டலம் " என்று உள்ளது. கதை மாற்றம் போலும்?

    கனவெல்லாம் காமிக்ஸ் - வாசகம் LMS -க்கு பொருத்தமானது!

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே !
      வாங்கியதும் கூறுகிறேன் !
      வாழ்த்துகள் !

      Delete
  91. காத்திருந்தது வீண்போகவில்லை.அதிரடி ,பரபர சம்பவங்கள் நிறைந்தது வேட்டை நகரம் வெனிஸ் .விடி துணை எழுத்து லி எப்படி உச்சரிப்பது என்றுதான் தெரியவில்லை.பைங்கிளி ரோக்சானா பலே பலே .மொத்தத்தில் இரண்டுமே சூப்பர்.

    ReplyDelete
  92. புதிய பதிவு ரெடி,நண்பர்களே!

    ReplyDelete