Powered By Blogger

Saturday, July 05, 2025

ஜாலி ஜூலை!

நண்பர்களே,

வணக்கம்! இந்த முறை மாதத் துவக்கமானது வாரத்தின் துவக்கத்தோடு கைகோர்த்துப் போனதால் டெஸ்பாட்ச் உங்களது பிஸியான பொழுதுகளிலேயே அமைந்திடுவதை தவிர்க்க இயலவில்லை! So உங்களில் நிறையப் பேருக்கு அச்சு மையின் மணத்தை நுகர்ந்திடவும், பக்கங்களைப் புரட்டி- "பொம்ம'' பார்க்கவுமே நேரம் பற்றியிருக்காது தான்! இதோ இந்த வாரயிறுதியினை "தல'' அல்லாததொரு மாதத்தின் படைப்புகளை சுவாசிப்பதனில் செலவிட்டீர்களெனில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி!

"இந்த மாதத்தின் highlight" என்பதை விடவும், லக்கி லூக் டபுள் ஆல்பத்தினை - "ஆண்டின் hightlight-களுள் முக்கியமானது'' என்று சொல்லவே எனக்குத் தோன்றுகிறது! Becos லக்கி லூக் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்ப்பமுமே கொண்டாடப்பட வேண்டியதொன்று! தடி தடியாய் கௌபாய்கள்; டிடெக்டிவ்கள், சாகஸ வீரர்கள் என்று உலவிடும் நமது காமிக்ஸ் பிரபஞ்சத்தில் கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாய் தனது பிரத்தியேக பாணியில் கார்ட்டூன் கொடியினை ஒண்டி ஆளாய் உயரப் பிடித்து நிற்பதென்பது சாமான்யக் காரியமே அல்ல தானே? எண்ணற்ற கார்ட்டூன் நாயகர்கள் இதே வட்டத்தின் முன்னே ஆஜரான வேகத்திலேயே - "ஆட்டம் க்ளோஸ்டா மாப்பு'' என்றபடிக்கே மூட்டையைக் கட்டவுமே செய்துள்ளனர்! ஆனால், வெயிலோ, மழையோ, முதல் இன்னிங்ஸோ, இரண்டாம் இன்னிங்ஸோ- இம்மி கூட "தம்'' குறையாது தாக்குப் பிடித்து நிற்கும் இந்தக் கார்ட்டூன் ஜாம்பவான் in his own rights ஒரு சூப்பர் ஸ்டார் ஆச்சே?! So அவரை ரசித்திடக் கிடைக்கும் ஆண்டின் ஒரே சந்தர்ப்பத்தை உற்சாகமாய் கொண்டாடுவதில் தப்பே இல்லை தானே?!

பெர்சனலாக 40+ ஆண்டுகளுக்கு முன்பாய் "சூப்பர் சர்க்கஸ்' இதழின் ஆங்கிலப் பதிப்பைப் பார்த்த தருணத்தில் எவ்விதம் அகம் மகிழ்ந்ததோ- அதற்குக் கிஞ்சித்தும் குறைவின்றி இன்றளவிற்கும் இந்தத் தொடர் மகிழ்விக்கத் தவறுவதே இல்லை! And கடந்த பத்தாண்டுகளாய் லக்கியின் மொழிபெயர்ப்புகளை முழுமையாய் கையில் எடுத்துக் கொண்ட பிற்பாடு லக்கி- டால்டன்கள்- ஜாலி- ரின்டின் கேன் யூனிவர்ஸில் இன்னமுமே பக்காவாய் ஐக்கியமானது போலொரு உணர்வு உள்ளுக்குள்! Oh yes - துவக்கக் காலகட்டங்களில் லக்கிக்குப் பேனா பிடித்தது நானே; ஆனால், "மாதம் நான்கு புக்ஸ்'' என்று 1988 வாக்கிலேயே இழுத்துப் போட்டுக் கொண்ட பிற்பாடு கருணையானந்தம் அங்கிள் வசம் அந்தப் பொறுப்பு சென்றிருந்தது! இன்று பல லக்கி இதழ்களை மறுபதிப்புக்கென கையில் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சபலம் தட்டும் - முழுசையுமே fresh ஆக இன்னொருக்கா, நம்ம பாணியில் எழுதினாலென்னவென்று! ஆனால், 'அக்டோபர் 2013' அவ்வப்போது மனத்திரையில் நிழலாடிப் போவதால்- "தங்கக் கல்லறை'' ஸ்டை­லில் ஒரு மெகா பிக்னிக் ஸ்பாட்டுக்கு மறுக்கா போக வேணாமே என்று மனசு எச்சரிக்கை பண்ணும்!

இம்மாத Lion ஆண்டுமலர் # 41-ல் உள்ள இரண்டு கதைகளும் அங்கே ஹாட்லைனில் நான் குறிப்பிட்டது போல 2 வெவ்வேறு காலகட்டங்களில் உருவானவை! சித்திரங்களில் மட்டுமன்றி ஸ்டை­லிலுமே மாற்றங்கள் பார்த்திருப்பீர்கள்! முதல் கதையில் லக்கியின் இதழ்களில் ஒரு "தம்'' சதா நேரமும் ஓட்டிக் கிடக்கும்! இரண்டாவதிலோ ஒரு நீளமான புல் மாத்திரமே! "புகை பிடித்தல்'' ஆரோக்கியக் கேடு எனும் போது, ஒரு உலகளாவிய நாயகரை கதை நெடுக சிகரெட்டோடே உலவ அனுமதிப்பது தப்பான முன்னுதாரணமாகிடும் என்ற புரித­லில் படைப்பாளிகளே செய்திட்ட மாற்றத்தை "நல்ல காலம் பிறக்குது'' கதையில் பார்க்கலாம்! 

கதையைப் பொறுத்த வரையில் இரண்டுமே சர்வ நிச்சயமாய் "புரட்சித் தீ''.. "சூப்பர் சர்க்கஸ்''... "பொடியன் பில்லி­'' ரேஞ்சுக்கான cult classics அல்ல தான்! ஆனால், 83 ஆல்பங்களில், கிட்டத்தட்ட 81 ஆண்டுகளாய் ஒரு தொடரினை இட்டுச் செல்லும் போது சில ups & downs சகஜமே! அதிலும் "The Prophet'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான "நல்ல காலம் பிறக்குது'' புதுயுகக் கதாசிரியரின் கைவண்ணம்! So தொடரின் ஜாம்பவான்களின் ஸ்டை­லில் கதை நெடுக சிரிப்பை அள்ளித் தெளிப்பதில் அவருக்கு அனுபவம் பற்றாது தான்! ஆனாலும், டால்டன்களும், ரின்டின் கேனும் கதை நெடுக வலம் வருவதால் ஆங்காங்கே புடைப்பான நம்ம மூக்கை உட்புகுத்தி humor content-ஐ உசத்திட முயற்சித்துள்ளேன்! Cinebook-ன் இங்கிலீஷ் இதழையும், நமது தமிழ் பதிப்பினையும் படித்திடும் பட்சத்தில், இது நன்றாகவே புலனாகிடும்..!

"ஒரு நாயகன் உதயமாகிறான்'' கதையோ ஜாம்பவான் கோஸினியின் படைப்பெனும் போது, மருவாதியாய் அவர் போட்ட கோட்டிலேயே ரோடைப் போட்டு வண்டியை செலுத்தியிருந்தேன்! இந்த வாரயிறுதியினையும் சரி, தொடரவுள்ள வார நாட்களையும் சரி, நமது கார்ட்டூன் தலைமகனின் அலச­லில் நீங்கள் செலவிட்டால் அட்டகாசமாகயிருக்கும்! Give it a shot folks?

இம்மாத ஆக்ஷன் நாயகரான "டேங்கோ'' செம raw ஆனதொரு அதிரடியில் ரகளை செய்திருப்பதை படங்களைப் புரட்டும் போதே புரிந்திருப்பீர்கள்! வரலாற்றின் சில பல அனாமதேயப் புள்ளிகளைத் தேடிப் பிடித்து, அவற்றோடு நமது கதை நாயகர்களையும் இணைக்கும் விதமாய் கதைகளை உருவாக்குவதெல்லாம் சுலப வேலையே அல்ல! ஆனால், நமது ப்ரான்கோ- பெல்ஜியப் படைப்பாளிகளுக்கோ அது இளவரசர்களின் சமோசா மொசுக்கும் ஆற்றலைப் போல, மெச ஜுஜுப்பி மேட்டரே! Operation Condor!! 1970-களின் மத்தியில் தென்னமெரிக்காவில் கட்டவிழ்க்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை போலும்! முதன்முறையாக "வேட்டை மறக்கா மறக்கா வல்லூறுகள்'' ஆல்பத்தில் தான் இந்த ஆபரேஷன் பற்றி வாசித்தேன்! முன்பெல்லாம் இது போலான கதைச் சம்பவங்களைப் பற்றிப் பெருசாய் ஆராய்திட வழியும் இராது; எனக்குத் தோன்றவும் செய்திடாது! ஆனால், திருவாளர் கூகுள் மட்டுமன்றி, அவரது சித்தப்பு, பெரியப்பு என இன்று எண்ணற்ற செயற்கை அறிவுக்கிட்டங்கிகள் ம­லிந்து கிடப்பதால், அரை நொடி செலவிட்டாலே கதாசிரியர்களின் ஆய்வுகளின் ஆழங்கள் புலப்பட்டு விடுகின்றன! So கதையினூடே பணியாற்றும் போது தான் இந்த Operation Condor ஒரு டப்ஸா பெயரல்ல; மெய்யாலுமே நிகழ்ந்ததொன்று என்பது புரிந்தது! அதை அத்தனை லாவகமாக கதைக்குள் புகுத்தி, நமது கதை மாந்தர்களை அதனோடு களமாடச் செய்வதெல்லாம் stroke of genius என்பேன்! நீங்களுமே இந்த டேங்கோ ஆல்பத்தினுள் பயணிக்கும் போது, இந்தப் பின்னணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரம் செலவிடுங்களேன் folks? அடுத்தவாட்டி உங்க நட்புக்கள் "இன்னுமாடா மாப்ளே இதையெல்லாம் படிக்கிறே?'' என்று லந்தடிக்கும் போது, "லேடன் தெரியுமா? பின்ன்ன்ன் லேடன்!'' என்ற ரேஞ்சுக்கு கவுண்ட்டர் கொடுக்க புதுசாயொரு மேட்டர் கிட்டியது போலி­ருக்கும்!

Last but not the least- இளவரசி!! காலத்தால் கரையா யௌவனமும், நேர்த்தியும், கீர்த்தியும் கொண்ட நமது பிரதம நாயகியின் MAXI ஆல்பம்! 2 தெறி புது சாகஸங்கள்; இரண்டு அம்மாஞ்சி புது Boyfriends! இது போதாதா- செமத்தியான வாசிப்புக்கு? ஏற்கனவே வாங்கியிருக்கா பட்சத்தில்- இப்போது ஆர்டர் போடுங்கள் மக்கா- you won't regret it for sure! 

Moving on, நம்ம புத்தக விழா கேரவன் இந்த நொடியில் நெய்வேலியில் நிலைக்கொண்டுள்ளது! கூப்பிடு தொலைவில் கோவையும், அதைத் தொடர்ந்து ஈரோடும் வெயிட்டிங் எனும் போது புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பணியில் இவ்விட ஒரே பிசி! அடுத்த வாரம் அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

இப்போதைக்கு உங்கள் சிந்தனைக்கு இதோ ஒரு picture quiz.... 🥹🥹

Have a wonderful weekend all... முன்கூட்டிய முகர்ரம் வாழ்த்துக்கள்! Bye for now!

55 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. திகில் கதைகள் ட்ரேயிலர் அடுத்த வாரம் தானா, சார்

    ReplyDelete
  3. லயன் ஆண்டு மலரில் அதிகம் இடங்களை பிடித்தது நமது லக்கி லூக் மட்டுமே என்று நினைக்கிறேன் சார்.

    ReplyDelete
  4. G.O.A.T - டைகர் & டெக்ஸ்

    ReplyDelete
  5. // தம்'' குறையாது தாக்குப் பிடித்து நிற்கும் இந்தக் கார்ட்டூன் ஜாம்பவான் in his own rights ஒரு சூப்பர் ஸ்டார் ஆச்சே?! So அவரை ரசித்திடக் கிடைக்கும் ஆண்டின் ஒரே சந்தர்ப்பத்தை உற்சாகமாய் கொண்டாடுவதில் தப்பே இல்லை தானே?! //

    கண்டிப்பா சார்

    ReplyDelete
  6. லக்கி லூக் டால்டன்களுடன் ஆஜராகிடும் போது , சிரிப்புகளுக்கும் ரகளைக்களுக்கும் பஞ்சமில்லை

    ReplyDelete
  7. லக்கி லூக் இரண்டும் கிளாசிக்குகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் 100% நல்ல கதைகள்.டேங்கோ ஒரு நல்ல எளிமையான நேரடி ஆக்‌ஷன்.இளவரசி இளமைபருவ நினைவுகளை தூண்டும் கதைகள்,ஆக்‌ஷன் ஒரு மிடறு குறைவு.ரொமான்ஸ் ஒரு மிடறு தூக்கல்.

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி - ஒரு பழைய கதையும், புதிய கதையும்
      தரலாம்.. "கத்தி முனையில் மாடஸ்டி ..
      மாடஸ்டி in இஸ்தான்புல். "
      இவைகளோடு இணைத்து ஒரு புதிய கதை. என்று...

      Delete
  8. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  9. வந்துட்டேன்...

    ReplyDelete
  10. ஒரு அறிவுக் களஞ்சியம் ,சர் ஜெரால்டு கிட்ட மாட்டிக்கிட்டதங்கள் நாட்டு 3 ஏஜண்டுகளுக்கு பதிலாக மாடஸ்டிய பிடிச்சு வைச்சு பண்ட மாற்றுபண்ணிக்க plan பண்றார். இதற்காக மாடஸ்டிய தங்கள் நாட்டுக்கு வரவழைக்க மாடஸ்டியின் நண்பரை அடியாள் மூலம் கொடூரமாக கொலை செய்கிறார்.கடைசியில் மாடஸ்டிய வரவழைத்த முட்டாள் தனத்தை எண்ணி கதறுகிறார் .செம மசாலா&ஹீரோயினிச கதை. மாஸ் காட்டியிருக்கிறார் இளவரசி

    ReplyDelete
  11. //இப்போதைக்கு உங்கள் சிந்தனைக்கு இதோ ஒரு picture quiz..//

    Durango
    Trent
    Dylan dog
    Cid robin
    Tango

    The underdogsனு ஒரு தலைப்பு கொடுத்து அதில் சேர்த்துடுங்க சார்

    Deadwood dick
    Magi garrison
    Blue coats
    IRS
    Bear tooth

    The heart winners
    னு ஒரு தலைப்பில் அணி சேர்த்துடுங்க சார.

    ReplyDelete
  12. //காலத்தால் கரையா யௌவனமும், நேர்த்தியும், கீர்த்தியும் கொண்ட நமது பிரதம நாயகி//

    எங்கள் இளவரசி 💐💐💐

    ReplyDelete
  13. // இன்று பல லக்கி இதழ்களை மறுபதிப்புக்கென கையில் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சபலம் தட்டும் - முழுசையுமே fresh ஆக இன்னொருக்கா, நம்ம பாணியில் எழுதினாலென்னவென்று! //

    சார் சார். தயவு செய்து உங்கள் மொழி பெயர்ப்பில் லக்கி மறுபதிப்பு கதைகளை கொடுங்கள் சார்.

    கார்ட்டூன் ரசிகர்கள் மிகவும் நல்லவர்கள் சார். ப்ளீஸ் சார்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  14. நீண்ட நாட்கள் கழித்து பெட்டி வந்த மறுநாளே இரண்டு கதைகளைப் படித்து விட்டேன்!

    "ஹனிகன்", 1995-ஆம் ஆண்டு வெளியானதாகத் தெரிகிறது - ஆனால் கதை மற்றும் ஓவியங்களில் 1970 அல்லது 80-களின் வாடை தூக்கல்! ஒரு A4 பக்கத்திற்கு 12 கட்டங்கள், புத்தகத்தை விரித்து வைத்து இரண்டிரண்டு பக்கங்களாகப் படிக்கும் போது அந்த 24 கட்டங்களில் கண்கள் சிக்கிக் கொண்டு, தூக்கத்தில் சொக்கிப் போகின்றன! கிளாசிக் கதைகளை படிக்கும் ஆர்வம் குன்றுவதற்கு, இவ்வடிவமைப்பு தரும் அசதியும் கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும்!

    கதை மோசமில்லை, மொழிபெயர்ப்பில் குறையில்லை, ஆங்காங்கே கொண்டாட்டமான வசனங்கள், கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இன்றி அந்த குஜால்ஸ் டாக்டர் ஜைல்ஸ் செய்யும் அலப்பறை, மாடஸ்டியின் முகபாவனைகள் என்று ஓரளவுக்கு இரசிக்க முடிகிறது!

    அந்த காலத்தில் மாடஸ்டியின் சேட்டைகள் பெரிதாக உறுத்தவில்லை, இப்போது கார்வினைப் பார்த்தால் தான் பாவம் பாவமாக வருகிறது - இந்த அழகில் அட்டையில் வேறு அவரை வைத்துச் செய்து விட்டதால் மனம் தாளாது, ChatGPT-இடம் ரொமெரோ அவர்களின் ஓவியத்தை சேதாரப் படுத்தாது வண்ணமேற்றித் தரச் சொல்லி வாங்கியுள்ளேன்!

    "ஒரு நாய்-யகன் உதயமாகிறான்" - 1962-இல் வெளியான கதை! ஆனால், புதிதாகப் பார்ப்பவர்களிடம் - "இது இவ்வாண்டு உருவாக்கப் பட்ட ஒரு புத்தம் புதிய காமிக்ஸ் ஆல்பம்..." என்று சொன்னாலும் நம்பி விடுவார்கள்! கதையிலும், ஓவியங்களிலும், வண்ணத்திலும் அப்படியொரு புத்துணர்ச்சி - மொழிபெயர்ப்பில் தற்காலச் சொல்லாடல்களும், நகைச்சுவையும் ஒரு படி தூக்கல்! மாடஸ்டியை தான் தம் கட்டி படிக்க வேண்டியிருந்தது, ஆனால் இது அதற்கு நேர்மாறு! கடமையே என்று படிக்காமல், கடகடவென்று படிக்க வைக்கும் இவை போன்ற கதைகளைத் தான் இப்போதெல்லாம் பிடிக்கிறது!

    பையன் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளுக்கு மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருக்கிறான்! நானோ, நெட்பிளிக்ஸ் பார்ப்பதா, டேங்கோ படிப்பதா என்ற குழப்பத்தில் நெளிந்து கொண்டிருக்கிறேன்! பேசாமல் மரணப் பொறியை ஒரு பக்கம் படித்து விட்டு தூங்கப் போகிறேன்! :-)

    ReplyDelete
    Replies
    1. // ரொமெரோ அவர்களின் ஓவியத்தை சேதாரப் படுத்தாது வண்ணமேற்றித் தரச் சொல்லி வாங்கியுள்ளேன்! //

      Super! Very nice picture.

      Delete
  15. Moharram is a period of mourning and remembrance. It is not a happy festival to send greetings. This is for your information

    ReplyDelete
  16. இதில் கேப்டன் பிரின்ஸ் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. அவருக்கென்று ஒரு தனி இடம் என்றுமே நமது வாசகர்கள் மத்தியில் உண்டு.

    நிச்சயம் மேலே வெறும் quota அடிப்படையில் மட்டுமே இடம் பிடித்திருக்கும் ஒரு அம்மணியை விட பிரின்ஸ்க்கு கூடுதல் ஆதரவு உண்டு. இன்றைக்கும். இன்றைக்கும் அக்காவின் பேரில் ஒரு பஞ்சாயத்துக்கு கொளுத்தி போட்டாச்சு

    ReplyDelete
  17. இது தான் எனது வரிசை. இதில் கேப்டன் பிரின்ஸ்க்கு நிச்சயம் முதல் பத்து இடத்தில் ஒரு இடம் உண்டு. இப்போது அவர் சேர்க்கப்படவில்லை என்பதால் இருப்பதில் My Top 20.

    1. டெக்ஸ் வில்லர்
    2. XIII
    3. லக்கி லூக்
    4. கேப்டன் டைகர்
    5. லார்கோ வின்ச்
    6. தோர்கல்
    7. டின்டின்
    8. பெளன்சர்
    9. ரிப்போர்ட்டர் ஜானி
    10. கிட் ஆட்டின் & கோ
    11. தாத்தாஸ்
    12. மர்ம மனிதன் மார்ட்டின்
    13. ஸ்மர்ஃப்
    14. ஜாகோர்
    15. ஸ்டெர்ன்
    16. முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்)
    17. மாடஸ்டி பிளைசி
    18. ஸ்பைடர்
    19. C.I.D. லாரன்ஸ் & டேவிட்
    20. இரும்புக்கை மாயாவி



    ReplyDelete
  18. The G.O.A.T-
    டெக்ஸ்,
    ஸாகோர்,
    டைகர்.

    சகாப்தங்கள்-
    இரும்புக் கை மாயாவி,
    பெளன்சர்,
    டின் டின்,
    தோர்கல்,

    உலகத் தரம்...
    லார்கோ,
    XIII,
    லக்கி லூக்,
    தாத்தாஸ்,
    மார்ட்டின்.
    ஸ்டெர்ன்,

    அட்டகாச நாயகர்கள்.
    CID லாரன்ஸ்,
    கிட் ஆர்ட்டின்,
    ரிப்போர்ட்டர் ஜானி,
    மாடஸ்டி,

    சூப்பர் நாயகர்கள்...
    ஸ்மார்ப்,
    வேதாளர்,
    ஸ்பைடர்.

    எங்க சார் - டைலன் டாக்
    ப்ளூகோட் பட்டாளம்,
    காணம்.?

    ReplyDelete
  19. காலத்தால் கரையா யவ்வனம்... ஆஹா.❤️❤️. Sir.. உண்மை சொல்லுங்க... பிளேசி மேல ஒரு, ஒரு இனம் புரியாத love உங்களுக்கும் உண்டுதானே... 😄
    😄❤️👍...

    ReplyDelete
  20. "நல்ல காலம் பிறக்குது" . லக்கி லூக் கதை என்றாலே எடிட்டருக்கு ஜாலி மூட் தன்னால் வந்து விடும் எக்ஸ்ட்ரா பிட்டு களை எடுத்து போட்டு நகைச்சுவையில் வூடு கட்டி அடிக்க ஆரம்பித்து விடுவார்.இங்கு தமிழில் விளையாட நல்ல சாய்ஸ் ,கதையின் போக்கிலேயேஅமைந்துவிட (பல் வலி,இறைதூதர்,சீடர்களாகும் டால்டன்ஸ் ,ஒரிஜினல் ஃபாதரின்4மனைவிகள், எடிட்டிர் பாஷை என்ற சுய பகடி)சொந்தத்திலேயே சிரிப்பு வெடிகளை கதை முழுதும் தெறிக்க விட்டுள்ளார் வயிறு வலிக்குது சிரித்து சிரித்து

    ReplyDelete
  21. ஆண்டு மலர் ,சாரி ஆனந்த மலர் இரண்டாம் வாசிப்பில் அசத்துது இம்மாத எனது தர வரிசையில் மாற்றம் .முதல் இடம் மூன்று கதைகளுமே . இரண்டாமிடம் என்று எதுவும் இல்லை. மூன்றுமே முதல் தரம், முதல் இடம். அட்டகாசம்.

    ReplyDelete
  22. *ப்ளைசி ஸ்பெஷல்*

    உண்மையிலேயே எதிர்பார்க்காத ஆச்சர்யம் என்னை பொறுத்தவரை இந்த மாடஸ்திப்ளைஸி ஸ்பெஷல் தான்..பெரிய அளவில் ..சூப்பரான சித்திரத்தரத்தில் தெளிவான அச்சுத்தரத்தில் தான் இளவரசி இதழை கவர்ந்து விட்டார் எனில் கதைகளிலுமே அதே சிக்ஸர் இரு கதைகளிலுமே..

    எனக்கு நினைவு தெரிந்து இந்த முறை தான் இளவரசியின் எதிரியாக ஒரு பெண்ணே வருவதாக நினைவு..மாடஸ்தியின் நிகராகவே அந்த ஹனிகன் இருப்பது என்னவோ நிஜமே...ஆக்‌ஷனில் தான் கதை கலக்கியது எனில் வி்ல்லனையே காப்பாற்ற துடிக்கும் மருத்தவ நண்பரும் இளவரசியும் பேசும் உரையாடல்கள் அனைத்தும் லக்கி கதையில் வரும் காமெடி போல் பெரிதாகவே புன்னகைக்க வைத்து ..முதல் கதை எப்படி மனதில் நின்றதோ அதே போல் மரணப்பொறி இதழுமே பழிவாங்குதலிலுமே ஒரு பொறுமையை கடைப்பிடித்தது மாடஸ்தி இந்த கதையில் தான் எனவும் நினைவு..

    மொத்தத்தில் இந்த முறை இளவரசி... இளவரசி அல்ல மகாராணி

    இந்த இரு சாகஸங்களை வாசித்தவுடன் ஆசிரியருக்கு சொல்ல தோன்றுவது ஒன்றே ஒன்று தான்

    "இளவரசியை என்றுமே மறந்து விடாதீர்கள் சார்.."

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் சார்..
      மாடஸ்டி - கதையில் ஆக்ஷனையும், கவர்ச்சி யையும் தாண்டி மனதைத் தொடும் நிறைய விசயங்கள் உண்டு ..
      இளவரசியை பிடிக்கும் என்பவர்கள் அதையும் கவனிப்பார்கள்.

      Delete
  23. லக்கி ஆண்டு மலர் LC41. இந்த வருடத்தின் மிகச் சிறந்த ஆக்கங்களில் ஒன்று. புத்தக தரம் ஆகட்டும். அதில் வந்த இரண்டு கதைகள் ஆகட்டும். உண்மையிலேயே அருமை.

    ReplyDelete
  24. ஈரோட்டு விழா கூப்பிடும் தூரத்திற்கு வந்து விட்டது. இடம் மற்றும் தேதி உறுதி செய்து விட்டீர்களா?

    ReplyDelete
  25. லக்கி வருகைக்காக (எனக்கு சொன்னேன்) ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  26. ஒரு நாயகன்
    உதயமாகிறான்
    கார்ட்டூன் ரசிகர்களின்
    இதயமாகிறான்
    நினைத்ததை யார்
    முடிப்பவன் சொல்
    அவனிடம் நான்
    ரசிகன் என்று சொல்- எல்லாம் எங்க மட சாம்பிராணி தலைவன் ரின் டின் கேன் தான் 😍

    ReplyDelete
  27. தென்னமெரிக்க நாடுகளின் கலாச்சாரத்தின் மீதும், அதற்கு சற்று மேலே வட அமெரிக்காவின் தென் மூலையில் வேண்டா வெறுப்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் (டெக்ஸாஸ் உள்ளிட்ட) மெக்சிக மண்ணின் மீதும் எனக்கு ஒரு மோகம் உண்டு! உணவு, உடை மற்றும் கலாச்சார அடிப்படையில் நமக்கும் அவர்களுக்கும் ஏதோ ஒரு அறுபட்ட தொடர்பிருப்பதாக எனக்கு(ம்) தோன்றும்! பேக் பேக்கர் குமார் முதற்கொண்டு தென்னமெரிக்கா தொடர்பான சுவாரசியத் தகவல்களை யார் பதிவு செய்தாலும், கண்ணில் பட்டால் விட்டு வைப்பதில்லை.

    இவற்றுக்கெல்லாம் அடிகோலியது லயன், ராணி உள்ளிட்ட நமது தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் தான் என்பதில் ஐயமில்லை! உலகின் மற்றொரு மூலையில் இருக்கும் நாம் - வன்மேற்குக் கதைகளுக்கு அடிமைப் பட்டுக் கிடப்பதற்கும், செவ்விந்தியர்கள் மீது கரிசனம் கொள்வதற்கும், இன்கா மற்றும் இதர பூர்வகுடிகள் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருப்பதற்கும் நமது காமிக்ஸ்களே காரணம்!

    நேற்று தான் "பெட்ரோ பராமோ"-வை நெட்பிளிக்ஸில் பார்த்து முடித்தேன்! நம்மூரில் மாய யதார்த்தம் என்ற பெயரில் நாம் தற்போது வழங்கி வரும் மேஜிகல் ரியலிஸக் கதைகளில் குறிப்பிடத் தக்க ஒன்று! நானொரு இலக்கிய அறிவிலி... இளகிய அறிவு பெற்றவன் என்பதால், கதை குறித்த ஒரு சில ஐயங்களை, வழக்கம் போல கூகிள் மற்றும் அரட்டை நுண்ணறிவின் துணையுடன் கேட்டுத் தெளிவு பெற்றேன். தவிர, இது போன்ற கதைகளை எழுத்து வடிவில் படிக்கும் போது தான் அதன் முழு வீச்சையும் புரிந்து கொள்ள முடியும் என்பதால், அதை நண்பர் கா.பா. அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்துப் பார்க்கும் ஆவல் மேலிடுகிறது - மனமார்ந்த வாழ்த்துக்கள் நம்ம மதுரைக்கார நண்பரே! :-)

    தமிழ் சினிமாவில் மேஜிகல் ரியலிசம், என்று பார்த்தால் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் ஒரு சில காட்சிகளும், வேறு (மிகச்) சில படங்களும் நினைவுக்கு வருகின்றன! தமிழ் காமிக்ஸ் என்று வரும்போது, தோர்கல் தொடர் அதன் கீழே வருமா என்பதை கா.பா. தான் சொல்ல வேண்டும்!

    இதே வகையில் வரும் "கார்டோ மால்டிஸ்"-இன் (கா.மா.) கதைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த காலத்தில் நமது எடிட்டர் பிரின்ஸுக்கு டிக் அடித்தது பற்றிய விவரமான பதிவை இங்கே வாசிக்கலாம் - பதிவு வெளியான ஆண்டு 2013! நாம் இப்போதாவது (கார்டோ மால்டிஸ் படிக்கும்) வயதுக்கு வந்து விட்டோமா?! காமா கதைகளை எடிட்டர் இனியாவது வெளியிடுவாரா? (காமக் கதைகள் அல்ல ஈ.வி., ரிலாக்ஸ்) இணைப்பில் இருங்கள்... தொடர்ந்து பேசுவோம்! :-)

    https://lion-muthucomics.blogspot.com/2013/08/blog-post_22.html

    ReplyDelete
  28. இளவரசி கதைக்கு தமிழில் காமிக்ஸ் வரலாற்றில் முதல் முதலாக மொழி பெயர்ப்பு செய்தது ஒரு பெண் சகோதரி என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் சகோதரி. சிறப்பு மிக சிறப்பு.

    ReplyDelete
  29. ஜானி நீரோவை கிளாசிக்ஸ் நாயகர்கள் லிஸ்டில் கொண்டு வராதை வன்மையாய் கண்டித்து,
    மாடஸ்டி ஸ்பெசலில் ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறேன்.
    'ஹனிகன்' கதையில், 12 வது பக்கம் 4வது கட்டத்தை whatsup community ல் original படத்தைப் போட்டு, இதை எப்படி எடிட் செய்வது? என்று அக்கறையாய் கேட்டு விட்டு, இதழில் கட்டம் போட்டு அந்த அரை குறையை மறைத்தீர்கள்!.
    ஆனால், முத்து காமிக்ஸ் 500 வது இதழில்,
    'கொடூரனும்,கடற் கன்னியும்' இதழில், 51 வது பக்கம் 10வது கட்டத்தை மட்டும், எந்த கேள்வியும் கேட்காமல் அப்பட்டமாய் வெளியிட்டிருக்கிறீர்கள்?
    தங்களுக்கு மாடஸ்டி மீதுள்ள possessivenes கலந்த ஈர்ப்பு புரிகிறது!
    அப்படிப்பார்த்தால் மஞ்சள் மாடஸ்டியையும் வெளியிட்டிருக்கக் கூடாது!
    அதற்கு தனி இதழ் போட்டு அழகு பார்த்திருக்கிறீர்கள்.
    சரி, சரி தமிழாக்கம் அருமை. நல்ல தமிழ் வார்த்தைகள் தென்பட்டன.
    தமிழாக்கம் செய்த சகோதரி சுகன்யாவுக்கு வாழ்த்துகள்.
    சரி பார்த்த தங்களுக்கும் வாழ்த்துகள் ஐயா!
    (51 வது பக்கத்தை தேடிப் பார்த்த வாசக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்).

    ReplyDelete