நண்பர்களே,
வணக்கம். 2 வாரங்களுக்கு முன்னமே வந்திருக்க வேண்டிய பதிவிது - ஆனால் ஆங்குலெம் ; மில்லிமீட்டர் ; சென்டிமீட்டர் என்ற ஏதேதோ சமாச்சாரங்கள் குறுக்கிட்டதால் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது ! So here it is finally & அது நமது சமீபத்தைய புத்தக விழா சார்ந்த விற்பனைத் தகவல்களும் ; அவை சொல்லக்கூடிய சில சேதிகளையும் பற்றிய பதிவே :
புத்தாண்டைத் துவக்கித் தந்த சென்னை விழாவின் அதிரடிகளே இங்கே பிரதானமாய்ப் பேசப்படும் simply becos - சென்னை கண்ணில் காட்டியிருந்த நம்பர்கள் அந்த ரகம் !! And ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்தது போல, இந்தாண்டின் சென்னை தாதா - 'தல' டெக்ஸ் அல்ல ; முகமூடி வேதாளரும் அல்ல ; ஒல்லியார் லக்கியும் அல்ல - it was இரும்புக்கை மாயாவி all the way ! இந்த evergreen நாயகரின் ஆல்பங்களில் நம்மிடம் இரண்டே titles மட்டும் தான் டிசம்பர் 2022-ல் கூட ஸ்டாக்கில் இருந்தன & மேற்கொண்டு மறுபதிப்பிடும் எண்ணங்களெல்லாம் எனக்கு இருந்திருக்கவே இல்லை தான் ! In fact இப்போதெல்லாம் ஏதேனுமொரு title ஸ்டாக் காலியாகிறதென்றால் - "ஹை..ஜாலி..! ஜாலி !" என்று குதூகலிப்பதோடு அடுத்த வேலைக்குள் மூழ்கி விடுகிறேன் ; மறுக்கா அதனை அச்சிட்டு காலியானதை ரொப்பிடும் எண்ணங்கள் பெரிதாய் தோன்றிடுவதில்லை ! ஆனால் நவம்பரிலும், டிசம்பரிலும் சேலம் ; கள்ளக்குறிச்சி ; காஞ்சிபுரம் புத்தக விழாக்கள் என்று பயணித்திருந்த நம்மாட்கள் சொன்ன ஏகோபித்த சேதி - "மாயாவி ஸ்டாக் இல்லை என்றால் திட்டுறாங்க சார்" என்பதே ! 'ஆஹா...சின்ன ஊர்களில் திட்டோடு போச்சு ; தலைநகரில் வெளுத்துப்புடுவாங்களே ?!'' என்ற பீதி தலைதூக்க, அவசரம் அவசரமாய் மேற்கொண்டு 4 மாயாவி டைட்டில்களை மறுபதிப்பிட ஏற்பாடுகளை செய்தோம் & in hindsight - சென்னையில் அது தான் நம் தலை தப்பிக்கச் செய்துள்ள பிரதான சமாச்சாரம் !
தலையில் நரையும், கண்களில் ஒரு புது உற்சாகமும் இழையோட, நம் ஸ்டால் பக்கமாய் வந்தோரின் பெரும்பான்மை - ஏதோவொரு மாமாங்கத்தில் மாயாவியோடு சந்தோஷமாய் அன்னம் தண்ணீர் புழங்கிய முன்னாட்களின் வாசகர்கள் என்பதில் சந்தேகங்களே இருக்கவில்லை ! And ஏதோ நெடு நாள் தொலைத்த பிள்ளையை மறுக்கா சந்திக்கும் வாஞ்சையோடு, மாயாவியின் 4 black & white இதழ்கள் + கொரில்லா சாம்ராஜ்யம் கலர் இதழினை அள்ளிக்கொண்டனர் ! ஊட்டாண்ட போனவுடன், "பாத்தியா...பாத்தியா...? நான் கொயந்தையா இருந்தச்சே படிச்ச பொஸ்தவம்மா !" என்று ஆத்துக்காரம்மாவையும், பிள்ளைகளையும் உசுப்பி விடுவதே இந்தக் கொள்முதல்களின் பயன்களாக இருந்திடுமென்பதில் ஒற்றை இம்மி கூட சந்தேகமில்லை ; ஆனால் nostalgia எத்தனை விலைமதிப்பற்றது என்பதற்கு நடப்பாண்டின் விற்பனைப் புள்ளிவிபரங்கள் சான்று என்பேன் ! And விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையின்படிப் பார்த்தால் - இந்தாண்டின் டாப் performer "கொரில்லா சாம்ராஜ்யம்" தான் ! இரண்டாமிடம் : நாச அலைகள் ! மூன்றாமிடம் : "இமயத்தில் மாயாவி" ! And சொல்லவும் வேணுமா - நான்காமிடம் "நயாகராவில் மாயாவி" என்பதை ? டிசம்பரின் இறுதி நாட்களில் நாம் அடித்துப் பிடித்து அச்சிட்டிருந்த 4 டைட்டில்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் அதற்குள் காலி - திருப்பூரில், சிவகங்கையிலுமே மாயாவி mania தொடர்ந்திட்டதால் !
சில நேரங்களில் எனக்கே என்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது, கிட் ஆர்டினுக்குப் போட்டி தரவல்லதொரு கோமாளியே தெரிகின்றான் ! 'தம்' கட்டி, ஏதேதோ கூத்தெல்லாம் கட்டி, டிசைன் டிசைனாய் புக்ஸை ரெடி பண்ணி வைத்துக் கொண்டு ஈயோட்டிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு, மாயாவியையும், டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும், வேதாளரையும் மட்டும் வருஷத்துக்கொரு பாணியில் வெளியிட்டு விட்டு கல்லா கட்டிவிட்டுப் போயிடலாமோ ? என்று தோன்றும் ! And நமது இரண்டாவது இன்னிங்சில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளும், 500 இதழ்களும், எண்ணற்ற நாயகர்களும், ஜானர்களும் கடந்திருக்கும் வேளையிலும் கூட, ஒரு 51 ஆண்டுக்கு முந்தைய பெரியப்பா சாரோடு போட்டி போட இயலாது தடுமாறுவதை என்ன சொல்லி விளக்குவது ? என்று சத்தியமாய்த் தெரியலை guys ! Rest assured, தொடரும் நாட்களில் மாயாவி நமது கிட்டங்கிகளின் நிரந்தர அங்கத்தினராவார் ! அதுமட்டுமல்லாது இனி ஒவ்வொரு மேஜர் புத்தக விழாவின் போதும் ஸார்வாள் ஏதாச்சுமொரு புது அட்டைப்படத்துடன் ஆஜராவார் ! காலத்தின் கட்டாயம் moment #
க்ளாஸிக் புராணத்தில், ஒரு பக்கக் காதில் தக்காளி சட்னி கசியுதா ? கவலையே வேணாம் - ரெண்டு பக்கமுமே வழியப் பண்ணிவிட்டால் ஒன்று போலாகி விடுமல்லவா ? So அடுத்த தகவல் - 'அண்ணன் ஆர்ச்சியார்' சார்ந்ததே ! வெளியான போது கூட செம கலாய் மட்டுமே ஈட்டியிருந்த நமது சட்டித்தலையன், இம்முறை சென்னையில் வீறு கொண்டு பொங்கி எழுந்துள்ளான் ! Of course ஆர்ச்சி இதழ்களின் விலைகள் சல்லிசு என்பதும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் தான் - but all the same பயல் ஏகப்பட்ட புது வீடுகளுக்குப் பயணித்திருப்பது கண்கூடு !
தக்காளிச் சட்னிப் பிரவாகம் தொடர்கிறது - இம்முறை நமது தானைத் தலைவரின் பெயரைச் சொல்லி ! ரொம்ப காலமாய்ப் புத்தக விழாக்களில் ஸ்டைலாக தனது வலைப்படுக்கையில் மட்டையாகியே பொழுதைக் கழித்திருந்த ஸ்பைடர் சார் இந்தமுறை சென்னையில் amongst the top performers ! அதிலும் "டாக்டர் டக்கர்" எகிறியடித்துள்ளதை "ங்ங்ங்கிங்ஙனங்.." என்றபடிக்கே பராக்குத் தான் பார்த்து நிற்கிறேன் !
தெறிச்சு ஓடிடாதீங்கோ - still have more - இளவரசி மாடஸ்டியின் அதிரடிகளின் ரூபத்தில் ! இங்கேயும் விலைகள் ஒரு பிரதான factor-ஆ ? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் மாடஸ்டி இதழ்களில் இம்முறை சாத்தியப்பட்டுள்ள விற்பனை நம்பர்களைப் பார்த்து "ஆ" என்று வாய்திறந்து நிற்கிறேன் ! அதிலும் recent இதழான "சிரித்துக் கொல்ல வேண்டும்" has been a blast !! அதைக் கவனிக்கும் போது - வாங்கியுள்ளோரெல்லாமே casual readers தான் ; விலை குறைவு என்பதால் சிக்கியதை வாங்கியுள்ளார்கள்" என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை ! தெளிவாக மாடஸ்டி தொடரினைப் பின்தொடர்ந்து வருகின்றனர் & அதனில் லேட்டஸ்ட் ரிலீஸ் பற்றியெல்லாம் கூட அறிந்து வைத்துள்ளனர் எனும் போது - கையில் சிக்கியதை வாங்கிடும் spur of the moment கொள்முதலாய் இதனைப் பார்த்திட இயலவில்லை ! எண்ட குருவாயூரப்பா !
'மிடிலே' என்கிறீர்களா ? அவ்ளோ லேசுக்குள் உங்களை ஓட அனுமதிக்க முடியாதே - SMASHING '70s க்ளாஸிக் நாயகர்களின் காலட்சேபம் காத்துள்ளதால் !! And surprise ...surprise ..... வேதாளர் ஸ்பெஷல்-1 இரண்டாம் தினத்திலேயே காலியாகிப் போயிருக்க, மீதமிருந்த மூவருள் பின்னியெடுத்துள்ளவர் நமது மாயாஜால மன்னனே ! Oh yes - "மாண்ட்ரேக் ஸ்பெஷல்" கண்டுள்ள அதிரி புதிரி வெற்றிக்கு விளக்கம் சொல்ல முயன்றால் டைகர் ஜாக் பாணியில் "வோ" என்பதைத் தாண்டி வேறெதுவும் வெளிப்பட மாட்டேன்கிறது ! And அடுத்தபடியாக ஊடு கட்டி அடித்திருப்பது "ரிப் கிர்பி ஸ்பெஷல் - 1" தான் ; கைவசம் இன்னும் கொஞ்சம் பிரதிகள் இருந்திருப்பின், நிச்சயமாய் மாண்ட்ரேக்குக்கு நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் செம tough தந்திருப்பார் தான் ! கட்டக் கடைசியிடம் amongst the Smashing 70s நாயகர்கள் - காரிகனுக்கே ! In fact அவரது மித விற்பனை & வரவேற்பு, சீரியஸாய் நெருடுகின்றது ! இந்திய அணியில் உள்ள K.L. ராகுலைப் போல இவரது நிலைமை தொங்கலில் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் !! Sad ..but true !!
Last but not the least - CID லாரன்ஸ் & டேவிட்டின் "மஞ்சள்பூ மர்மம்" ! Has been a stunner !! கொஞ்ச காலம் முன்பாய் யூடியூப் சேனலில் "சாய் with சித்ரா" என்ற புரோகிராமில் இந்த குறிப்பிட்ட ஆல்பம் பற்றி தமிழ் டைரக்டர் ஒருவர் நிறையவே பேசியிருந்தார் என்பதை நண்பர்கள் எனக்குச் சொல்லியிருந்தனர் ! அதன் தாக்கமா ? அல்லது உள்ளபடிக்கே nostalgia நண்பர்களின் நினைவுப் பேழைகளில் தங்கிய சூப்பர் ஹிட் இதழ் என்ற விதத்தில் இது விற்பனையில் சாதித்துள்ளதா ? என்று தெரியலை - but அதிரடி விற்பனை !
மேலே சொல்லியுள்ள க்ளாஸிக் பார்ட்டிக்களின் ஒட்டுமொத்த பங்களிப்பானது - சென்னைப் புத்தக விழாவின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 23% எனும் போது மெய்யாலுமே மிரட்டுகிறது ! "ஆங்...இதெல்லாம் சோப்புக் குமிழி மாதிரி....சீக்கிரமே தெறிச்சிடும்" என்று புறம்தள்ளுவோர் அணியினில் கொஞ்ச காலம் நானுமே இருந்தவன் தான் ! ஆனால் கவாஸ்கரைப் பார்த்து ; அஸாருதீனைப் பார்த்து ; சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து ; விராட் கோலியைப் பார்த்து ; இப்போது ரிஷாப் பண்டையும் பார்த்து விட்ட பிறகும் கம்பாய் நிற்பது நமது க்ளாஸிக் அணியே ! ஆனால் 'குறுக்கு பிடிக்கி ; தோள்பட்டை வலிக்கு ; உப்புக்குத்தி கஷ்டப்படுத்தி' - என்று மூப்பின் புலம்பல்களை வெளிப்படுத்தும் நமக்குத் தான் (at least எனக்கு) வயசாகுதே தவிர, என்றும் மார்க்கண்டேயர்களான இவர்கள் அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ரவுசு பண்ணி வருகிறார்கள் ! Of course - போன பதிவினில் கூட உலகமே மங்கா திக்கிலும், கி.நா.திசையிலும் தடதடத்து வருவதைப் பற்றியும், நாம் மாத்திரம் 'ரிங்கா ரிங்கா ரோஸஸ் ஆடி வருகிறோமோ ?' என்ற நெருடலை வெளிப்படுத்தவும் செய்திருந்தேன் தான் ! இந்த விற்பனைப் புள்ளி விபரங்களே எனது அந்தப் புலம்பலுக்கு வலு சேர்த்தவை ! Phewww !! ஆராச்சும் ரெண்டு மாயாவி மங்காவும், மூணு வேதாள கி.நா.வும் போடுங்களேம்பா....உங்களுக்குப் புண்ணியமாப் போகும் !!
'அட..ப்ரீயா விடும் ஓய்...இதெல்லாம் வருஷத்துக்கு ஒருக்கா நிகழும் கூத்துக்கள் மட்டும் தானே ?' என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது folks ! ஆனால் யதார்த்தங்களில் சின்னதொரு மாற்றம் !! கொரோனா பின்சீட்டுக்குப் போயானதைத் தொடர்ந்து, மாவட்டங்கள்தோறும் புத்தக விழாக்கள் ரெகுலராய் நடத்திட வேண்டுமென்று அரசிடமிருந்து ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் போயிருக்க, இப்போது மாதத்துக்கு மூன்று விழாக்களாவது ஆங்காங்கே நடக்க ஆரம்பித்துள்ளன - கடந்த 6 மாதங்களாகவே ! நாமே தருமபுரி ; ஓசூர் ; ஈரோடு ; கோவை ; கரூர் ; திருச்சி ; மதுரை ; விருதுநகர் ; கள்ளக்குறிச்சி ; சேலம் ; காஞ்சிபுரம் ; சென்னை ; திருப்பூர் ; சிவகங்கை ; காரைக்குடி என கிட்டத்தட்ட 15+ விழாக்களில் தலை காட்டிவிட்டோம் - கடந்த 7 மாதங்களில் ! And இதோ பிப்ரவரி இறுதியில் திருநெல்வேலி ; கடலூர் & திருவள்ளூர் நகர்களில் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ! ஏதேனும் ஒன்றில் நாமும் பங்கேற்கவுள்ளோம் எனும்போது, தொடரவுள்ள மாதங்களில் / ஆண்டுகளில் இந்த bookfair circuit ஒரு ரெகுலர் நிகழ்வாகவே ஆகிவிடும் போலும் ! So நிறையவே Tier 2 சிறுநகரங்களுக்குச் செல்லும் போது - நாம் அடுக்கிடும் "கபாப்...ஸ்பிரிங்ரோல்..டக்கிலோ...லார்கோ...வெய்ன் ஷெல்டன்..Lady S" போன்ற பதார்த்தங்களைக் காட்டிலும், "பரோட்டா கீதாப்பா ? மாயாவி கீறாராப்பா ? "என்ற கேள்விகளே மிகுந்திடும் என்பதை யூகிக்க முடிகிறது ! அதுவே என்னை இப்போது மண்டையை சொரியச் செய்யும் சமாச்சாரம் !
வருஷத்தின்மிகக் கணிசமான நாட்களில், மக்களைத் தேடிச் சென்று கடைவிரிக்கும் வாய்ப்புகள் காத்திருக்கும் போது - அவற்றை பயன்படுத்திக் கொள்ளாது இருப்பதென்பது ஒரு முட்டாள் வியாபாரியின் அடையாளமாகிடக் கூடுமன்றோ ? So இந்த க்ளாஸிக் நாயகர்களை, சென்னையில் மட்டுமே வித்தை காட்டவல்ல வித்வான்களாய் முன்போல பார்த்திடல், ஆகப் பெரிய பிழையாகிப் போகும் போலும் ! இந்த சிக்கல் ஷண்முகசுந்தரர்களை இனிமேல் உதாசீனம் செய்வது, சிக்கலுக்கு வழிவகுத்திடும் - for sure !!
So புத்தக விழாக்களுக்கெனவே இனிமேல் தனியாய் ஒரு track ; தனியாய் ஒரு திட்டமிடல் ; தனியாய் சில விலைகள் என்ற சிந்தனை மண்டைக்குள் ஓட்டமெடுத்து வருகிறது ! Moreso because இந்த சிறுநகர விழாக்களுக்கு பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் !
Having said that , சமீபமாய் முடிந்துள்ள திருப்பூர் புத்தக விழாவின் போது நண்பர் பல்லடம் சரவணகுமார் முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் ! தனது பள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இதழ்களை வாங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, தனக்குப் பரிச்சயமுள்ள பள்ளிகளிலும் நம்மைப் பற்றிச் சொல்லி, அந்தந்த நூலகங்களுக்கென அவர்களையும் ஆர்டர் செய்திடச் செய்துள்ளார் ! ஒட்டு மொத்தமாய் ஆர்டர்களைத் திரட்டித் தந்ததோடு நிறுத்திக் கொள்ளாது, அவரவர் பணம் அனுப்பிடவும் தேவையான ஒத்தாசைகள் செய்து அசத்தியுள்ளார் ! ஊருக்கொரு ஆசிரியர் நமது காமிக்ஸ் வாசகராய் மட்டும் இருப்பின், ஆங்காங்கே ஒரு காமிக்ஸ் பட்டாளமே வெகு விரைவில் உதயமாகிடும் எனலாம் !
And இங்கே இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வுமே - this time from சிவகங்கை ! என்றைக்குமே நமக்கு ரொம்பவும் பரிச்சயமெல்லாம் இல்லாத பகுதி தான் சிவகங்கைச் சீமையும், சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதிகளும் ! ஊருக்கொரு ஏஜெண்ட் இருந்து நூறு, இருநூறு என்றெல்லாம் விற்பனைகள் அரங்கேறிய காலங்களிலேயே இந்தப் பகுதிகளில் நமக்கு பெருசாய் வரவேற்பு இருந்ததில்லை ! இன்றைக்கோ அந்தப் பக்கங்களில் மருந்துக்கும் நமக்கு விற்பனை முகவர் லேது ! இந்தப் பின்னணியில் சிவகங்கை புத்தக விழாவினில் நாம் ஸ்டால் போட்டிருக்க, முதல் சில நாட்களுக்கு நம்மை ஏதோ லெமூரியா கண்டத்திலிருந்து வந்துள்ள புதிர் பிறவிகளாய் மக்கள் பார்வையிட்டனர் ! "அட...இது தான் காமிக்சா ?" என்று வியக்காத குறை தான் ! காலைகளில் பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர் மட்டும் கும்பல் கும்பலாய் நமது ஸ்டாலுக்கு வந்து புக்ஸை செம ஆர்வமாய்ப் புரட்டுவதும், போவதுமாய் இருந்தனர் ! சிறுகச் சிறுக அவர்களுள் ஓரிருவர் வாங்கிப் போக, அவற்றைப் படித்து விட்டு தங்கள் நண்பர்களிடம் சொல்ல, மறு நாள் அந்தப் பசங்கள் செம ஆர்வமாய் வந்து மேற்கொண்டு எதையாச்சும் வாங்கிப் போக ; அது பற்றி வீட்டில் உள்ளோரிடமும் சொல்ல ; அவர்களும் அதன் பின்பாய் வந்து பிள்ளைகளுக்கென கொஞ்சமாய் வாங்கிப் போக - ஒரு fascinating புது / சிறு வட்டம் அங்கு உருவாகியுள்ளது ! மொத்த விற்பனை என்னவாக இருந்தாலும் சரி, வரவுகள்-செலவுகளைத் தாண்டி இது போலான புது உறவுகளை நமது வாசகக்குடும்பத்தினுள் வரவேற்பதே பிரதானம் என்பதால் செம ஹேப்பி !!
Other highlights from Chennai - in a nutshell :
1.இந்த முறை கார்ட்டூன்கள் have done much better !
*லக்கி லூக் எப்போதும் போல பிரித்து மேய்ந்திருக்கிறார் ! நம்மிடம் லக்கி வரிசையில் கையிருப்பு ரொம்ப ரொம்ப சொற்பம் என்றாகி விட்டதால், சில மறுபதிப்புகளை சீக்கிரமே எதிர்பார்க்கலாம் ! உங்களின் பரிந்துரைகள் ப்ளீஸ் ?
*சிக் பில் : இம்முறை சிரிப்பு போலீஸ் - சிறப்புப் போலீஸாகவும் இருந்துள்ளதில் சந்தோஷம் அண்ணாச்சி ! லக்கி லூக் ரேஞ்சில் எல்லாம் இல்லை தான் ; ஆனால் முன்னைவிட better !
*ப்ளூகோட்ஸ் : ம்ம்ம்....average performers தான் ! சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை !
*க்ளிப்டன் : ஓ.கே. என்று சொல்லலாம் - மீசைக்காரரை ! மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டிருக்கிறார் !
*பென்னி & Smurfs : வழக்கமான புத்தக விழா பாணியில் கிட்டத்தட்ட அதே நம்பர்களில் விற்றுள்ளனர் ! கூடவும் இல்லை ; குறையவும் இல்லை ! Again - டிஸ்கவுண்ட் கழித்த பிற்பாடு இந்தக் கலர் இதழ்கள் செம bargains என்பதுமே இவை நகன்றதன் பின்னணிகளாக இருக்கலாம் !
*ரின்டின் கேன் : ஐயகோ....நம்ம 4 கால் ஞானசூன்யத்துக்கு டின் கட்டிவிட்டார்கள் - சென்னை நண்பர்கள் !! Sad ...!
*இந்தாண்டின் செம சர்ப்ரைஸ் : ஹெர்லாக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் கூட்டணி தான் ! லக்கி லூக்குக்கு அடுத்தபடியாக ஜாஸ்தி விற்றுள்ளது இவர்களே !
2.ரெகுலர் நாயகர்களுள் :
*ரிப்போர்ட்டர் ஜானி - தெளிவான performance இம்முறை ! டிக்கெட் போட்டு ஊருக்குக் கூட்டிச் சென்றதற்கான நன்றி மறக்காது ரிப்போர்ட்டர் சார் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் !
*ஜாகஜவீரர் ரோஜர் : ஊஹூம்.... சிகப்பு மசியில் மார்க் போட்டுள்ளனர் !
*லார்கோ வின்ச் : ஆச்சர்யமாய் இம்முறை கோடீஸ்வரர் மனசிறங்கி புது இல்லங்கள் தேடிச் சென்றுள்ளார் ! இந்த நகர்வு தொடரும் நாட்களில் வேகமெடுக்க புனித ஒடின் அருள்புரியட்டும் !
*பிரெஞ்சு ஏஜெண்ட் SISCO : புது வரவு என்றாலும், ஓரளவிற்கு வாசகர்களின் தோள்களில் கைபோட்டு நட்புப் பாராட்டக் கற்றிருக்கிறார் ! Not bad at all !
*தோர்கல் : Phew ! சோகக்கதையே !! நம்மிடமுள்ள 11 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்துமே இரட்டை இலக்க நம்பரில் தான் விற்பனை ! ஒவ்வொன்றிலும் நாலு ; ஐந்து என்ற ரேஞ்சுக்கே விற்பனை ! For sure இனி வரும் நாட்களில் இவர் முன்பதிவுகளின் தடத்தில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் போலும் ! மெய்யாலுமே நெருடுகிறது இந்தத் தொடரின் தடுமாற்றம் !
*அண்டர்டேக்கர் : செம அதிரடி காட்டியுள்ளார் (சீரியஸ்) வெட்டியான் !
3.மாமன்னரைப் பற்றி பேசாது, சாமான்யர்களைப் பற்றியே பேசியாச்சல்லவா - time now for TEX & team !!
மொத்தம் 27 ஆல்பங்கள் - 'தல' தொடரினில் நமது கையிருப்பு ! அவை அத்தனையும் வரிசையாய், அழகாய், அடுக்கப்பட்டிருக்க, ஸ்டாலுக்கு வரும் எந்தவொரு வாசகரும் நின்று, நிதானித்து இரவுக்கழுகாரை ரசிக்காது போனதை நான் பார்க்கவே இல்லை ! கண்ணைமூடிக் கொண்டு 27 புக்ஸையும் அள்ளிய நண்பர்கள் நான் பார்த்த 2 நாட்களிலேயே எக்கச்சக்கம் ! And மாயாவி கண்ணில் காட்டிய நம்பர்களுக்கு சவால் விடும் விதமாய் தெறிக்க விட்டுள்ளது டெக்ஸ் மாத்திரமே ! அதிலும் "பகை பல தகர்த்திடு" & "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" சும்மா தெறி சேல்ஸ் ! இந்த 27 இதழ்களின் கையிருப்பு மட்டும் இல்லாது போயின், நாம் சென்னைக்குப் போனதில் அர்த்தமே இருந்திராது ! தி KING is still தி KING !!! Very much so !! கிட்டத்தட்ட சிவகாசியிலிருந்து சென்னைக்குப் பயணித்த பண்டல்களில் மாக்சிமம் இடம் பிடித்திருந்தோர் மாயாவியும், டெக்ஸும் தான் & ஊருக்குத் திரும்பிய பண்டல்களில் மினிமம் இடத்தைப் பிடித்திருந்தோரும் அதே இருவரே ! முன்னவர் அந்நாட்களது ஜாம்பவான் எனில், பின்னவர் இந்த யுகத்தின் அசகாயர் !
4.கி.நா. ??
*ரொம்பவே up & down நம்பர்கள் இக்கட ! பெரிதாய் எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை தான் ! சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பான "இரவே..இருளே..கொள்ளாதே" & "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல" செமையாக விற்றுள்ளன ; அதே நேரத்தில் சமீபத்து black & white கி.நா.க்கள் தட்டுத் தடுமாறியுள்ளன ! ஒரு சில ஆல்பங்களிலெல்லாம் வெறும் 2 புக்ஸ் தான் மொத்தத்துக்கே விற்றுள்ளன - டிஸ்கவுண்ட்டெல்லாம் போட்டுத் தந்தான பின்னும் ! "அழுகாச்சிகளெல்லாம் வேணாம்டா அம்பி" என்று சொல்லாது சொல்வது போலுள்ளது இங்கே காணக்கிடைக்கும் சேதியினில் ! நான் எக்கச்சக்க யூ-டர்ன் எல்லாம் அடிச்சு, மேஜையைக், கீஜையை உடைச்சி பண்ணினதெல்லாமே வீணா கோப்பால்ல்ல்ல் ??? என்றே கேட்கத் தோன்றுகிறது ! And லோகமே கி.நா. நோக்கிப் பயணித்து வரும் நாட்களிவை !!
*அதே போல இன்னொரு முரணுமே தென்படுகிறது : கணிசமான டிஸ்கவுண்ட் போட்டுத் தந்தாலாச்சும் சில இதழ்கள் இடம் காலியாகுமென்ற கணக்கெல்லாம் பப்படம் தான் போலும் ! கொஞ்ச ஆண்டுகளாகவே உறங்கி வழியும் சில நாயக / நாயகியர் கிட்டத்தட்ட 35% டிஸ்கவுண்டுக்குப் பின்னுமே நம் மீதான மையலைக் கைவிடக் காணோம் ! So சென்னையைப் பொறுத்தவரைக்குமாவது - டிஸ்கவுன்ட்ஸ் பெருசாய் ஆணிகள் எதையும் பிடுங்கித் தர உதவிடாது போலும் !
5.Last but not the least - ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் ?
டி-வி.யில் வருஷா வருஷம் காட்டும் அந்த திரைப்பட awards பங்க்ஷனில் "சிறந்த புது வரவு" என்றதொரு பிரிவை ஏற்படுத்தி பரிசு தருவார்களல்லவா ? அவ்விதமோரு category நம் மத்தியினில் இருக்குமெனில் இம்மி சந்தேகமுமின்றி அதனைத் தட்டிப் போகிறவர் நமது ஜம்பிங் ஸ்டார் ஸாகோராகவே இருந்திட முடியும் ! அவர் அறிமுகமான அந்த வண்ண hardcover இதழும் சரி ; V காமிக்ஸின் முதல் இதழாய் வெளியான black & white சாகசமும் சரி, டெக்ஸுக்கு அடுத்தபடியான விற்பனை கண்டுள்ளன ! அதிலும் V காமிக்ஸ் 70 ரூபாய் இதழ் மாஸ் விற்பனை ! ஜம்பிங் பேரவை தொடர்ச்சியாய் இதே எழுச்சியோடு பயணத்தைக் தொடர்ந்தால், பாக்கி நடுமட்ட ஈரோக்களுக்கு "வாய்ப்பில்ல ராஜா...!" என்று டாட்டா காட்டுவது பெரியதொரு கம்பு சுத்தும் கஷ்டமாகவே இராது தான் ! NEWCOMER OF THE YEAR - சந்தேகங்களே இன்றி ZAGOR !!
That winds up my report for CBF'23 folks !
இங்கு கற்றுள்ள பாடங்களை ஒற்றை ராத்திரியிலே நடைமுறைக்கு கொண்டு வந்திடவெல்லாம் இயலாது தான் ; ஆனால் in the long run இவற்றை உதாசீனப்படுத்துவது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடலாம் ! முன்னேயும் போயாகணும் ; ரிவர்ஸ் கியரையும் போட்டுக்கினே இருக்கணும் ; புளிய மரத்தில் வண்டியை டப்பி சாத்திடவும் கூடாது !! யாராச்சும் இதுக்கு ஏற்ற மாடல் வண்டியை கொஞ்சம் பரிந்துரை பண்றீங்களா - ப்ளீஸ் ?
ரைட்டு...SODA ஒருபக்கமும் I.R.$ இன்னொரு பக்கமும் காத்துள்ளதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around folks ! Have a fun Sunday ! Bye for now !
1st
ReplyDelete///////மாயாவி ஸ்டாக் இல்லை என்றால் திட்டுறாங்க சார்"/////?
Deleteபாவங்க ரசிக கண்மணிகள்...
/////??4 மாயாவி டைட்டில்களை மறுபதிப்பிட ஏற்பாடுகளை செய்தோம் //////
Deleteஆஹா மதுரைக்கு கேரவன் எப்ப வருது. அள்ளு அள்ளு புத்தகத்தை அள்ளு...
///////ஏதோவொரு மாமாங்கத்தில் மாயாவியோடு சந்தோஷமாய் அன்னம் தண்ணீர் புழங்கிய முன்னாட்களின் வாசகர்கள் என்பதில் சந்தேகங்களே இருக்கவில்லை !/////
Deleteகாமிக்ஸ்னாலே மாயாவின்னு தான்னு ஓர் வசந்த காலம்ன்னு எப்பவும் இருக்கும்.
//////க்ளிப்டன் : ஓ.கே. என்று சொல்லலாம் - மீசைக்காரரை ! மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டிருக்கிறார் !//////
Deleteஅடுத்த புக் ரிலீஸ் எப்போ சார்.
////????(ரின்டின் கேன் : ஐயகோ....நம்ம 4 கால் ஞானசூன்யத்துக்கு டின் கட்டிவிட்டார்கள் - சென்னை நண்பர்கள் !! Sad ...! //////
Deleteபிறகென்ன மொத்தமா 4 கதையை, ஒரு தண்டி புக்கா Limited edition வெளியிட வேண்டியது தான்.அப்புறம் சூப்பர்-டூப்பர் கிட் ஆகுதா இல்லையா பாருங்க.
///??ஜாகஜவீரர் ரோஜர்///???
Deleteயாருங்க இவரு ...ஞாபகம் இல்லையே.
.////கி.நா. ??//???
Deleteஆத்தாடி எடு ஓட்டம்.
//////இங்கே காணக்கிடைக்கும் சேதியினில் ! நான் எக்கச்சக்க யூ-டர்ன் எல்லாம் அடிச்சு, மேஜையைக், கீஜையை உடைச்சி பண்ணினதெல்லாமே வீணா கோப்பால்ல்ல்ல் ??? என்றே கேட்கத் தோன்றுகிறது !/////
Deleteஜுலியா பாப்பாவை அனுப்பி இருந்தா, ஊரே திரண்டு இருக்காதா.
Me 1st
ReplyDeleteMe I Top 10
ReplyDelete3rd 😁
Delete4th
ReplyDelete10 க்குள்ள
ReplyDeleteஎம்மாம் பெரிய மாத்ரே
ReplyDeleteமூனு வாட்டி மாத்திரை சாப்பிட்டாச்சு.
Delete//////தோர்கல்///??
DeleteLimited edition ...ok...ok...
வந்திட்டேன்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteபடிச்சிட்டு திரும்ப வரேன் Sir
ReplyDelete/லக்கி லூக் எப்போதும் போல பிரித்து மேய்ந்திருக்கிறார் ! நம்மிடம் லக்கி வரிசையில் கையிருப்பு ரொம்ப ரொம்ப சொற்பம் என்றாகி விட்டதால், சில மறுபதிப்புகளை சீக்கிரமே எதிர்பார்க்கலாம்/
ReplyDelete- இன்பமயம் :-)
வணக்கம் நண்பர்களே🙏
ReplyDeletesaar antha tharaikku vandha vaanam மறந்துடாதீங்க pls
ReplyDeleteஎடு ஒரு ஓட்டம்...நல்ல வேளை ஜம்போல தா நாம இல்லையே.
Deleteஇரவு வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஇந்த பதிவுக்கு தான் வெயிட்டிங், எனது சென்னை புத்தக விழா அனுபவத்தை சீக்கிரம் டைப்பிங்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteHai
ReplyDelete19th
ReplyDeleteவந்துட்டேன் :-)
ReplyDeleteதோர்கல்:
ReplyDelete//முன்பதிவுகளின் தடத்தில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் போலும் !//
ஒரு சிறப்பான கதைத் தொடர் & விடுபடாமல் இந்த தனி தடத்திலாவது வர வேண்டும்.
தோர்கல் சங்கம்
+100
Delete// ஒரு சிறப்பான கதைத் தொடர் & விடுபடாமல் இந்த தனி தடத்திலாவது வர வேண்டும்.
Deleteதோர்கல் சங்கம் //
+1
தோர்கல் குண்டு புத்தகம் ப்ளீஸ்!
DeleteThe king is still the king! பறக்க மறந்த பறவைகள்...! Tex புத்தகத்தின் FREGHIERI இன் art work very fantastic. Especially rain வரும் panel work very very well.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDeleteஅப்ப மாயாவி மாமாவின் கலர் இதழ்களை எதிர்பார்க்கலாமா? பறக்கும் பிசாசு மாதிரி
ReplyDeleteஓகோ...
Deleteஇருவண்ணம்ல
Delete####சமீபமாய் முடிந்துள்ள திருப்பூர் புத்தக விழாவின் போது நண்பர் பல்லடம் சரவணகுமார் முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் ! தனது பள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இதழ்களை வாங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, தனக்குப் பரிச்சயமுள்ள பள்ளிகளிலும் நம்மைப் பற்றிச் சொல்லி, அந்தந்த நூலகங்களுக்கென அவர்களையும் ஆர்டர் செய்திடச் செய்துள்ளார் ! ஒட்டு மொத்தமாய் ஆர்டர்களைத் திரட்டித் தந்ததோடு நிறுத்திக் கொள்ளாது, அவரவர் பணம் அனுப்பிடவும் தேவையான ஒத்தாசைகள் செய்து அசத்தியுள்ளார் ! ஊருக்கொரு ஆசிரியர் நமது காமிக்ஸ் வாசகராய் மட்டும் இருப்பின், ஆங்காங்கே ஒரு காமிக்ஸ் பட்டாளமே வெகு விரைவில் உதயமாகிடும் எனலாம் !#####
ReplyDeleteபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சரவணன் சகோ
Hats off, SK!
DeleteGood mission ....
Deleteவாழ்த்துக்கள் அன்பு நண்பர் சரவண குமார் அவர்களுக்கு.
Deleteஆம்.. இளங்கோ சகோ... மாடஸ்ட்டி கதைகள்.. வித்தியாசமானது... எல்லாம் இருக்கும்... அன்பு பிரதானமாய் இருக்கும்... நன்றி. ❤️
Deleteஅருமை நண்பரே..
Deleteமனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
###சிவகங்கை புத்தக விழாவினில் நாம் ஸ்டால் போட்டிருக்க, முதல் சில நாட்களுக்கு நம்மை ஏதோ லெமூரியா கண்டத்திலிருந்து வந்துள்ள புதிர் பிறவிகளாய் மக்கள் பார்வையிட்டனர்###
ReplyDeleteபடிக்க படிக்க சிரிப்பு பொத்துக்கிட்டு வருது ஆசானே..
###இளவரசி மாடஸ்டியின் அதிரடிகளின் ரூபத்தில் ! இங்கேயும் விலைகள் ஒரு பிரதான factor-ஆ ? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் மாடஸ்டி இதழ்களில் இம்முறை சாத்தியப்பட்டுள்ள விற்பனை நம்பர்களைப் பார்த்து "ஆ" என்று வாய்திறந்து நிற்கிறேன் ! அதிலும் recent இதழான "சிரித்துக் கொல்ல வேண்டும்" has been a blast !! அதைக் கவனிக்கும் போது - வாங்கியுள்ளோரெல்லாமே casual readers தான் ; விலை குறைவு என்பதால் சிக்கியதை வாங்கியுள்ளார்கள்" என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை ! தெளிவாக மாடஸ்டி தொடரினைப் பின்தொடர்ந்து வருகின்றனர் & அதனில் லேட்டஸ்ட் ரிலீஸ் பற்றியெல்லாம் கூட அறிந்து வைத்துள்ளனர் எனும் போது - கையில் சிக்கியதை வாங்கிடும் spur of the moment கொள்முதலாய் இதனைப் பார்த்திட இயலவில்லை ! எண்ட குருவாயூரப்பா !###
ReplyDeleteஇளவரசி அழகில் மயங்காதவரும் உண்டோ...
வாழ்க இளவரசி ..
இளவரசி வாழ்க. .
வரணும் இளவரசி..
Deleteநீ வரணும்..
அருமை...
Delete###மீதமிருந்த மூவருள் பின்னியெடுத்துள்ளவர் நமது மாயாஜால மன்னனே ! Oh yes - "மாண்ட்ரேக் ஸ்பெஷல்" கண்டுள்ள அதிரி புதிரி வெற்றிக்கு விளக்கம் சொல்ல முயன்றால் டைகர் ஜாக் பாணியில் "வோ" என்பதைத் தாண்டி வேறெதுவும் வெளிப்பட மாட்டேன்கிறது !####
ReplyDeleteஎனக்கு பழசு பிடிக்காது ...
இருந்தாலும் மாண்ட்ரேக் வருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை சார்..
60s ல மாண்ட்ரேக் கட்டாயம் இடம் பெறனும் ஆசானே..
// இந்த சிறுநகர விழாக்களுக்கு பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் ! //
ReplyDeleteஎன் மகனாரும் பள்ளி வாயிலாக வந்து நமது ஸ்டாலில் அவன் வாங்கிய புத்தகங்கள் மொத்தமே மூன்றுதான் அதில் ஒன்று எலியப்பா & ஜாகோர் & இன்னோர் புத்தகம் ..மகன் என்னிடம் கேட்ட கேள்வியே அப்பா 100/- ரூநாய்க்கு பத்து புக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்களா? அப்படி இருந்தா நெறைய புஸ்ரீ வாங்கி எல்லாருமே படிக்கலாமே என்றுதான் .. எனவே மட்டி பேப்பராக இருந்தாலும் கூட 25/- விலையில் வெளியிடுங்க டியர் எடி .. 🙏🙏🙏..
*புக்ஸ்
ReplyDeleteபாவம் சார்... மஹேந்திரன்... பாட்டி கிழவி... அப்படினு... ப்ளைசி ய.. கிண்டல் பண்ணிட்டு இருந்தாரு... நீங்க கரிய பூசுனாலும் பரவால்ல.. அங்க ஒருத்தரு... "Madusty அழகில மயங்காதவர் உண்டோ "அப்படினு பாடி.. மஹி மூஞ்சில பெயிண்ட் பூசிடாரே... நான் என்ன பண்ணுவேன், எது பண்ணுவேன்... 😄
ReplyDelete🤣🤣🤣
Delete😂😂😂
Delete32வது
ReplyDeleteஅருமையான தகவல்களை அள்ளி தெளித்து விட்டீர்கள் ஐயா!
ReplyDeleteமாயவியாரின் மறுபதிப்பு வராத சாகசங்களை கொண்டு வந்து சேர்க்க இதைவிட வேறு நன்னாளும் உண்டோ! (முடிந்தால் அந்த ஒற்றைக்கண் மர்மம்ம்ம்ம்ம்)
ஆர்ச்சியின், ஸ்பைடரின், CID லாரன்ஸின் விற்பனை கண்டு மகிழ்ந்தோம்... விரைவில் கொலைப்படை அறிவிப்பு போல, இரும்பு மனிதன் அறிவிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
தேவ ரகசியம் போன்ற கதைகள் என்றென்றும் மனதில் நிற்கும்... இது போன்ற கி. நா கதைகள் கொண்டு வருவது சிறப்பு...
நன்றி! மீண்டும் வருவேன்...
Hi..
ReplyDeleteLessons learnt.
ReplyDelete1.Steelclaw, spider, tex, lucky Luke, zagor are top performers. So all the book fairs must revolve around them. All ads, banners must be theirs.
2. No discounts.
3. Cheap books needed
4. Subscribers/online buyers different than book fair buyers
5. No specials inbetween regular books
6. 90% pre-order only. Reprints based on book fair sales
A small correction sir :
DeleteCertain heros & heroines on 90% pre-orders !......Not all !
லக்கிலூக் மறுபதிப்பு. 1அடிதடிஜேன் .part 2பேய்நகரம் . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete+ 1616
Delete"ஜேன் இருக்க பயமேன் ?" போட்டுப்புட்டோமா சார் மறுபதிப்பில் ?
Deleteஇல்லை ஆசிரியரே
Delete
ReplyDelete// பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் ! //
WOW super super news sir. Good idea
நாளைய சமுதாயத்தை நோக்கிய திட்டங்கள், 100 % பலன் தர உங்களை வாழ்த்துகிறேன்.
Delete(மாடஸ்டி.)இளவரசியின் ரசிகர்களான சிலநண்பர்களை கலாய்ப்பதற்காகவே இளவரசியின் கதைகள் சரியில்லை என்று நண்பர்கள் பதிவிட்டு வருவர்என்றாலும் நேர்கோட்டுக்கதைகளில் இளவரசி ஒரு சூப்பர்ஸ்டார்.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு❤️👌👏👏👏.
ReplyDeleteதங்களின் பதிவுகள் மென்மெலும் மெருகேறிக் கொண்டே போகிறது
நம் காமிக்ஸ் குழுமத்துக்கு.
பல்லடம் சரவணகுமார் ஐயாவுக்கு இனிய வாழ்த்துக்கள் 💐.
சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளீர்கள். உங்களைப்போன்ற ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இருந்தால் காமிக்ஸ் உலகம் மீண்டும் எழுச்சி பெறும். பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
//மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் ! //
அருமையான அறிவிப்பு சார்.மகிழ்ச்சி.
முக்கியமாக குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள்.
குட்டீஸ்களை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்டாலுக்கு வருகை தரும் பெற்றோர்களுக்கு இந்த விலை பெரும் மகிழ்ச்சியாகும். "அண்ணா இந்த புக் 100 ரூபாய்க்கு கமியா இல்லீங்களா?"
என தனக்கு பிரியமான புத்தகங்களை குட்டீஸ் கேட்கும் போது சற்று கவலையாகதான் உள்ளது. இனி இந்த குறை நீங்கும்.
இதனை முன்னெடுக்கும் பட்சத்தில்,
அடுத்தடுத்த புத்தக திருவிழாக்களில் குட்டீஸ்களின் வரத்து அதிகரிக்கும்.
இரும்பு கை மாயாவி தவிர,
லாரன்ஸ் டேவிட்டின் காமிக்ஸ்களையும் 3&4 தலைப்புகளை கொஞ்சம் ஸ்டாக் ஏற்றலாம்.
ராஜா ராணி ஜாக்கியும்.
மேலும் ஒரு வேண்டுகோள்...
இனி வரும் புத்தக திருவிழாக்களில்,
வேதாளர் கதைகளையும் சிறு புத்தகங்களாக களமிறக்க வேண்டும் சார்.
காமிக்ஸ் என்றாலே இந்த வேதாளரையும் தேடும் கூட்டம் இல்லாமல் இல்லை.வேதாளரின்
450 ரூபாய் புத்தகங்களை விட, சிறு சிறு புத்தகங்கள் வராதா என, நீண்ட கால வாசகர்களை எதிர்பார்க்க வைக்கின்றன.
காமிக்ஸ் விட்ட குறை தொட்ட குறையாக வரும் வாசக, வாசகிகள் கூட கேட்பதும் இதுவே.
பரிசீலனை செய்யவும் சார்.
தங்களின் முயற்சிகளுக்கு என்றும் ஆதரவுடன் வாழ்த்துக்கள்
Smashing 70s அறிவித்த சமயமே இந்த template 2 ஆண்டுகளுக்கு மாத்திரமே ; அதன் பின்னே திட்டமிடல்களில் மாற்றமிருக்கும் என்பதைச் சொல்லியிருந்தேன் நண்பரே ! And வேதாளர் வண்ணத்திலும் மிளிர வாய்ப்புகள் உண்டென்றுமே சொல்லியிருந்தேன் ! So நோ worries !
Deleteகாத்திருக்கோம்....சூப்பர்சார்
Deleteஒரு மாடஸ்டி ஸ்பெஷல் போடுங்கள் சார்.
ReplyDeleteஅதுவும் ஸ்மாஷிங் 70 மாதிரி பெரிய அளவில் வந்தால் கலக்கலாக இருக்கும்.
நான் சென்னை புத்தக விழாவில் நேரிலேயே கேட்டேன் சில பதிவிற்கு முன்னால் மாடஸ்டி கிளாசிக் லிஸ்ட்டும் போட்டேன் எடிட்டர் சமூகம் தான் இன்னும் பதில் சொல்லல
Deleteவேண்டாமே பேராசை..
Deleteஇரண்டு-இரண்டாக ..
Delete/////ஒரு மாடஸ்டி ஸ்பெஷல் போடுங்கள் சார்.
Deleteஅதுவும் ஸ்மாஷிங் 70 மாதிரி பெரிய அளவில் வந்தால் கலக்கலாக இருக்கும்.////
100% ok....
உண்மை சக்தி... என்னதான் ஓவியம் அற்புதமாக உருவாக்கியிருந்தாலும் முக்கிய விஷயம் கதை... Peter o donnal 2ம் உலகப்போரில் இருந்தவர்..... மனதை கவ்வும் கதைகளை அவர் உருவாக்க அந்த பயங்கர அனுபவம்.. மாடஸ்ட்டி மூலம் வெளிப்படுத்தி விட்டார்...
Deleteஒரு உள்ளூர் மாப்பிள்ளையும், அசலூர் மச்சானும் வருவாங்க சார் ! ஆளுக்கு ரெவ்வெண்டா, மொழிபெயர்ப்பை அவுக செய்வதாக இருந்தால் - வேலை முடிஞ்சு !!
Deleteபோட்டுத் தள்ளிடலாம் - புக்கை !!
மாப்ளே' தப்பிச்சு எங்காவது ஓடிடு
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteI am in..😃
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete// சமீபமாய் முடிந்துள்ள திருப்பூர் புத்தக விழாவின் போது நண்பர் பல்லடம் சரவணகுமார் முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் ! தனது பள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இதழ்களை வாங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, தனக்குப் பரிச்சயமுள்ள பள்ளிகளிலும் நம்மைப் பற்றிச் சொல்லி, அந்தந்த நூலகங்களுக்கென அவர்களையும் ஆர்டர் செய்திடச் செய்துள்ளார் ! ஒட்டு மொத்தமாய் ஆர்டர்களைத் திரட்டித் தந்ததோடு நிறுத்திக் கொள்ளாது, அவரவர் பணம் அனுப்பிடவும் தேவையான ஒத்தாசைகள் செய்து அசத்தியுள்ளார் ! ஊருக்கொரு ஆசிரியர் நமது காமிக்ஸ் வாசகராய் மட்டும் இருப்பின், ஆங்காங்கே ஒரு காமிக்ஸ் பட்டாளமே வெகு விரைவில் உதயமாகிடும் எனலாம் ! //
Deleteவணக்கம் ஆசிரியரே!!
எங்கள் பள்ளி நூலகத்தில் ஏற்கனவே நமது இதழ்கள் இடம்பெற்று மாணவர்கள் அதற்கு அறிமுகமாகி உள்ள நிலையில், பிற அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளி நூலகங்களில் நமது காமிக்ஸை இடம்பெறச் செய்வதே திட்டமாக இருந்தது. இதற்காக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் பேசும்போதுதான் அதன் சிரமம் தெரிந்தது. ஏறத்தாழ அனைவருமே தம் பால்ய வயதில் காமிக்ஸூக்கு அறிமுகமாகி இருந்தாலும் அதை பள்ளிக்காக வாங்கச் சொன்ன போது தயக்கமே காட்டினர். அதற்கான தொகையை நூலகநிதி மூலம் விடுவிக்க சில சிக்கலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருந்தது.
வாங்கும் தொகை குறைவாக இருந்தாலும், பில் இப்படி இருக்க வேண்டும்... இவ்வளவு டிஸ்கவுண்ட் வேண்டும்... இப்படித்தான் பணம் அனுப்ப இயலும்... இந்த முறையில் டெலிவரி அனுப்புங்கள்... என்று நாம் வைத்த விதவிதமாக கோரிக்கைகளை எல்லாம் சிரத்தையுடன் செவிமடுத்து அத்தனையையும் சிறப்பாய் செய்து கொடுத்த ஆசிரியருக்கும் அதை செயல்படுத்திய அலுவலக சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி ஆசிரியரே!!
நன்றி நண்பர்களே!!
Excellent job sir.
Deleteஅற்புதம் சரவணகுமார் ...
Deleteஅருமை நண்பரே..
Deleteசூப்பர் நண்பரே
Deleteமிகவும் சிறந்த பணி.வாழ்த்துக்கள் சார்.
Deleteபள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் !
ReplyDelete👍👍👍👍👍
😀😀😀😀😀
Deleteதிருச்சி மகேஷ் மாடஸ்டி கிளாசிக்கல் லிஸ்ட் மறுபடி ஒரு பதிவு போடுங்கப்ளீஸ். முன்பதிவுக்கென. மாடஸ்டிகுண்டுபுக்ப்ளீஸ் ஆசிரியர் சார். . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete## NEWCOMER OF THE YEAR - சந்தேகங்களே இன்றி ZAGOR !! ##😍😘😘
ReplyDeleteசாரே.. நிரம்ப சந்தோஷமாயிட்டு சாரே..😃😍💪👍👌
விரைவில் முதலிடம் நிச்சயம்..😍😃😘😀
எப்போதுமே முதலிடம் என்பது லட்சியம்..😘😘😘😍
ஸாகோராய நமஹ!!!
💐🌷🌹🌸🌺
*ஜம்பிங் ஸ்டார் பேரவை*😍😘😘
ஹ்ம்ம்...."நிச்சயம்...லட்சியம்" ...என்று இங்கே சிலேடை சத்தம் கேக்குது !
Deleteஅக்கடயோ....கொர்ர்..கொர்ர்...என்ற குறட்டைச் சத்தம் கேக்குது !
என்ன கொடுமை இது சரவணன் ?
@பல்லடம் சரவணகுமார்..🙏🙏🙏
ReplyDeleteஜி..அருமையான முன்னெடுப்பு..👌
ஆக்சிஜனை சிலிண்டர் கணக்கில் அல்ல டன் கணக்கில் கொடுத்ததற்க்கும்,
கொடுக்க போவதற்க்கும் கோடானுகோடி நன்றிகள் ஜி..🙏❤💐🌷😎
Carrigon எனக்கு மிகவும் பிடித்தமான favorite ஹீரோ ,நீங்கள் தனித்தனியாக வெளியிட்ட அத்தனை கதைகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஆனால் கடந்த வருடம் கலெக்ஷனாக வந்த carrigon கதைகளில் இருந்த ஓவியமே ஓவியம் தெளிவுவின்மை , படிக்கும் அந்த ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. காரிகன் கதை தேர்வுகளில் நம்மிடம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஹிட்ஸ் கதைகளை ஒன்று இரண்டு சேர்த்து போடுங்கள்.
சிக் bill கதைகளில் அதிரடி மன்னன் வெளி நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் ப்ளீஸ்
+ 5
Deleteசிக் பில் வரிசையில் கையிருப்பு கொஞ்சம் குறையட்டும் நண்பரே ; நிச்சயமாய் "அதிரடி மன்னனை" போட்டுத் தாக்கிடலாம் !
Delete//பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருந்தோ இருபத்தைந்தோ ரூபாய்கள் .இனியும் அவர்களை வெறும் கைகளுடன் அனுப்புவதாக இல்லை//வரும் ஏப்ரல் முதலாய்அவர்களின் பட்ஜெட்டிற்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத்துவங்கும்..ஏப்ரலிலிருந்தேவாங்க சார் .மறுபடி கால் கட்டைவிரல் வாயில் வைக்க ஆரம்பித்து விட்டீர்களாங்க சார்.எங்களுக்கு ம் கொண்டாட்டம்தான்.நாங்களும் அந்த பட்ஜெட்டர்கள்தான்.கரூர்ராஜசேகரன்
ReplyDeleteகம்மி விலை, ஆக்ஷன் கதை/ முடிந்தால் சூப்பர் ஹீரோ மாதிரி
ReplyDeleteபுக்ஸ்ல விளம்பரம் வெளியிடுவதன் மூலமும் பட்ஜட்டை சமாளிக்களாம்
முக்கிய கோரிக்கை :
Deleteதயை கூர்ந்து அந்த 25 ரூபாய் ; 30 ரூபாய் புக்சிலும் நமது ரசனைகளுக்கேற்ற கதைகளைத் தேடிட வேணாமே folks ! ஒரு இளம் வட்டத்துக்கான சமாச்சாரங்களாய் அவற்றை அமைத்திட விழைவோம் என்பதால், நமது (இன்றைய) அளவுகோல்களை அக்கட நுழைத்திடாதிருப்பின் சூப்பர் !
யாரு இந்த மாதம் பாப்பாய் ஷோ கதை பத்தி சொல்லவே இல்லை. சின்ன வயசில செம சூப்பரான கார்டூன் ஷோ. அந்த ஒரு பக்க கதை படா சோக்கு.
Delete"பாப்பாய் ஷோ கதை "
தனி கதை புக்கா வந்தா, அதோட ரேஞ்சே வேற.
Best choice for students ...
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஹைய்யோ...புதிய விமர்சனங்களைக் காணோம் !
Deleteகதை சொல்லும் காமிக்ஸ்...முதல் இரண்டு புத்தகங்கள் கெட்டி அட்டையில் வந்தது..கடைசி இரண்டுக்கு அட்டை மெலிதாக மாறியது குறித்த விமர்சனம் படித்தீர்களா சார்?
Deleteபதிலும் போட்டிருந்தேன் - படித்தீர்களா சார் ?
Deleteஇந்த இரண்டையு, நா பாக்கவே இல்லை. யாரோ இதை மறைச்சுட்டாங்க மைலாட்.
Delete// கொசு முட்டை சைசிலான சந்தா மட்டுமே இந்த வரிசைக்கு சாத்தியப்பட்டுள்ளது சார் ; so வீராவேசமாய் முதல் இதழை மட்டும் கணிசமாய் அச்சிட்ட பின்பாய், பிரிண்ட் ரன்னை பற்பல மடங்கு குறைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி ! ஆனால் அறிவித்த அதே விலைகள் தான் தொடர்ந்தன எனும் போது, கையைக் கடிக்கும் செலவினங்களில் எதையாச்சும் குறைக்கும் முனைப்பில் கெட்டி அட்டைக்கு கல்தா தர வேண்டிப் போனது !
Deleteஒரு அழகான முயற்சி முதல் சீசனோடு காணாது போகவிருப்பதில் நிரம்பவே வருத்தம் எங்களுக்கு ! //
Agreed and understand sir :-(
// ஹைய்யோ...புதிய விமர்சனங்களைக் காணோம் ! //
Deleteஇரண்டு மாத புத்தகங்களும் கைக்கெட்டும் தூரத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன சார்,பணி சார்ந்த பளு,நேரச் சிக்கல்களால் நம்ப முடியாத ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது...
இதழ்களை பெட்டியில் இருந்து பிரித்து முதல் புரட்டலோடு நிற்கிறது...
பணி நேரத்து சிந்தனையில் தல குதிரையில் வந்து மிரட்டுகிறார்,எண்ணத்தில் எப்போதும் நம் இதழ்கள்...
விரைவில் மீள்வருகை நிகழும் என்று நம்புகிறேன்,அது வரும் நாட்களில் நடந்தால் மகிழ்வேன்...
இயன்றால் மார்ச் இதழ்களுக்கு மின்னல் விமர்சனம் இடுவேன்...
பல்லடம் சரவணகுமார் சார் .வாழ்த்துக்கள் .உங்கள் பணி வணங்கிப் போற்றத்தக்கது. ஒரு ஆசிரியராக உங்கள் பயணம் மென்மேலும் விரிவடைகிறது . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteராயல் சல்யூட் சார்.
Delete@புன்னகை ஒளிர்..😍😘😃😃
DeleteRoyal salute..🍻.. நேரில வந்தா கிடைக்குங்களா ஜி..😃😘👍
ஐம்பிங்ஜி,
Deleteஉங்களுக்கு
ராயல் சேலஞ்சர் தான். அதுக்கு மசியலனா 8Pm தான். இன்னும் மேல போனா கிரீன் லேபில் தான்.
/////சிறுகச் சிறுக அவர்களுள் ஓரிருவர் வாங்கிப் போக, அவற்றைப் படித்து விட்டு தங்கள் நண்பர்களிடம் சொல்ல, மறு நாள் அந்தப் பசங்கள் செம ஆர்வமாய் வந்து மேற்கொண்டு எதையாச்சும் வாங்கிப் போக ; அது பற்றி வீட்டில் உள்ளோரிடமும் சொல்ல ; அவர்களும் அதன் பின்பாய் வந்து பிள்ளைகளுக்கென கொஞ்சமாய் வாங்கிப் போக - ஒரு fascinating புது / சிறு வட்டம் அங்கு உருவாகியுள்ளது !/////
ReplyDeleteநல்ல துவக்கம் சார்.
//பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் ! //
ReplyDeleteமிகவும் தாமதமான அறிவிப்பு என்றாலும்,, வரவேற்கத்தக்கது
இத்தனை காலம் இதைச் செய்திடும் அவசியமின்றிப் போனது - simply becos தெற்கு சுற்றி, மேற்கே சுற்றி, வடக்கே சுற்றி வந்தாலும் - அதே வாசக வட்டத்தைத் தான் எட்டியாக வேண்டும் என்பதே நிலவரமாயிருந்தது நண்பரே !
Deleteஆனால் "மாதம்தோறும் புத்தக விழா" என்ற இந்த concept கொரோனா அலையின் ஓய்வுக்கு அப்புறமான புது நிகழ்வென்பதால், ஒரு புது ; இளம் வாசக வட்டத்தை நேரடியாய் எட்டித் தொடும் வாய்ப்பு புலர்ந்துள்ளது !
Dear Editor Sir
ReplyDeleteShould we look at total value of the books sold and not number of books. We have a tendency to buy more books for less price :-).
Not belittling Mayavi and other oldies though
The classic oldies score on the values too : Smashing '70s : Rs.450 each ; மாயாவி : Rs .100 each ! மாடஸ்டி வேண்டுமானால் விலை குறைச்சலாக இருந்திருக்கலாம் !
Deleteஆசிரிய நண்பர் சரவணக்குமாரின் காமிக்ஸ் நேசமும், மாணவர்களிடத்தே காமிக்ஸ் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டுசேர்ப்பதிலான அவரது மெனக்கெடல்களும் - போற்றுதலுக்குரியவை! நன்றிகள் & பாராட்டுகள் SK நண்பரே!💐🌷🌹🌸🌺
ReplyDeleteயெஸ்...+1000
DeleteYes +1
Deleteயெஸ்...+1000
Deleteபதிவை பற்றிய பகிர்வு...
ReplyDeleteசூப்பர்..சூப்பர்..சூப்பர்..
என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை சார்...
மனம் முழுவதும் மகிழ்வு...
// மனம் முழுவதும் மகிழ்வு //
Delete+1
தலைவர்ன்னா சும்மாவா. ஒரே வரியில் கவிதை....
Delete//////எடு ஒரு ஓட்டம்...நல்ல வேளை ஜம்போல தா நாம இல்லையே.///
ReplyDelete----ஐயா@ அது ரெகுலர் சந்தாவுல இருக்குதுங்க... அப்படி எல்லாம் நீங்க ஓடிப்போய் தப்பிக்க இயலாதுங்கோ....🤪🤪🤪🤣🤣🤣
முடிவே பண்ணீடீங்களா டெக்ஸ்ஜி....
DeleteThe King is still and always the King.... 😇😇😇
ReplyDeleteதல...
Always...!!
Deleteபறக்க மறந்த பறவைகள் ஒரு full தல கதையாய் இருந்தது சார்...
Deleteநிழல்களின் ராஜ்யத்தில் எனக்கு அவளவா திருப்தியா இல்லை...
But this was superb... I loved it.. 💐
மீ 100
ReplyDeleteவிஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழா செய்திகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு திருப்பி வருவதையே இது காட்டுகிறது, தொடரட்டும் இந்த வாசகர்கள் படையெடுப்பு நமது காமிக்ஸ் ஸ்டாலுக்கு! ஆர்ச்சி விற்பனையில் சாதிக்க ஆரம்பித்து உள்ளது ஒரு வியப்பு! ஆர்ச்சியின் சிறந்த 1-2 கதைகளை (உலகப்போரில் ஆர்ச்சி / ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி கதைகளை குழந்தைகள் விரும்புவார்கள்) மறுபதிப்பு செய்யும் வாய்ப்பு இருந்தால் செய்யுங்கள்
ReplyDeleteஒரு சிறிய வேண்டுகோள்: இனிவரும் புத்தகத் திருவிழாக்களுக்கு மாயாவியின் மறுபதிப்பு காணாத கதைகளை கொடுத்தால், இவைகளை இதுவரை படிக்காத தற்போதைய ரெகுலர் வாசகர்களும் வாங்கி பயன் பெறுவார்கள் சார்! ப்ளீஸ் இதனை பரிசீலனை செய்யுங்கள் சார்!
சிவகங்கையில் சிறுவர்கள் வாய் வார்த்தைகள் மூலம் நமது காமிக்ஸ்க்கு விளம்பரம் கிடைத்து வருவது சிறப்பு. இது போன்ற நிகழ்வுகள் அரிது, ஆனால் நீண்டகால வாசகர்களை நமது காமிக்ஸ்க்கு கொண்டு வந்து கொடுக்கும்! மகிழ்ச்சி!
நண்பர் ஆசிரியர் சரவணக்குமார் காமிக்ஸ் சிறுவர்கள் மத்தியில் வளர செய்துவரும் செயல்கள் பாராட்டுக்குரியது. உங்களிடம் பாடம் பயில மாணவர்கள் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி.
"டாக்டர் டக்கர்" எனக்கு மிகவும் பிடித்த கதை, அதுவும் "ஏத்தனுக்கு எத்தன்" கதையில் நியூயார்க் நகரையே கட்டி இழுத்து செல்வதை திறந்த வாயை மூடாமல் பல தடவை படித்து இருக்கிறேன் சார்.
மாணவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அவர்களால் வாங்கும் விலையில் இனிவரும் காலங்களில் புத்தகத் திருவிழாவில் வெளி ஈட முடிவு செய்தது சிறப்பு & பாராட்டுக்கள் சார்! விரைவில் இதனை நடைமுறைப் படுத்துங்கள் சார்.
"மாயாவி" கோப்புகள் அங்கே தயாராகத் தயாராக, நாமும் வெளியிட்டு வருவோம் சார் ! சமீபமாய் "தவளை மனிதர்கள்" + "கொலைகாரக் குள்ளநரி" வெளியிட்டார்கள் - நாமும் வாலைப் பிடித்தபடியே பயணம் பண்ண ரெடியாகி விட்டோம் ! So இங்கே எனது தேர்வு / உங்களது தேர்வுகள் என்பதை விடவும், மாயாவியின் முதலாளிகளின் தேர்வுகள் என்னவாக இருக்குமோ ? என்பதே கேள்வி !
Deleteசூப்பர் சார்...வண்ணமா
Delete// "தவளை மனிதர்கள்" + "கொலைகாரக் குள்ளநரி" //
DeleteSuper!
மாண்ட் ரெக்கந்தான Slot ஐ உறுதி செய்து கொண்டு விட்டார்.
ReplyDeleteமாயாஜால மன்னனாச்சே சார்....வாடிக்கையாளர்களை வசியம் செய்து விட்டார் போலும் !! இன்னும் கொஞ்சம் உருப்படியான கதைத் தேர்வுகள் இருந்தால் could be even better !
Deleteவரனும்!
Deleteநடுநிசி வேட்டை!
மர்மத் தலைவன்!
குறும்புக்கார சுறா!
போன்ற மாயாஜால வசியம் செய்யும் கதைகள் நிறைய வரனும்!
முக்கியமாக, மாண்டிரேக் கையில் மந்திரக் கோலுடன் வரனும்...
பாரதிக்கு மீசையும் முண்டாசும் எப்படி அவசியமோ அது போல அட்டைப்படத்தில் மாண்ட் ரெக் கையில் மந்திரக் கோல் இருப்பது அவசியம்.
Deleteஒரு உள்ளூர் மாப்பிள்ளையும் அவரோட மச்சானும் வருவாங்ஙகசார் ஆளுக்கு ரெவ்வெண்டா மொழி பெயர்ப்பைஅவுக செய்வதாக இருந்தால் வேலை முடிஞ்சு. யாருங்கசார் அந்த ரெண்டு பேர் .அவுங்கள விடறதாஇல்ல கையில் கால்ல விழுந்தாவது மொழி பெயர்ப்பு நாங்க வாங்கிடறோம் . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete@Karur Rajasekar ji..😍😃😘
Deleteவேற யாரு...
நம்ப அமெரிக்க மாப்பிள்ளையும், மேச்சேரி ஜமீனும்தான்..😃😀😀👍💪
ராபின் வழங்கிய
ReplyDeleteப்ளாக் மெயில் பண்ணி விரும்பு
வீவீவீவீ
மடேர்
க்ராஸ்
வ்ர்ர்ரூம்ம்ம்
க்றீறீறீ
க்றீச்ச்ச்ச்
என் ஒரு ஆக்சன் த்ரில்லர் 9/10
பின் விளைவுகள் ஜாக்கிரதை .!
ReplyDeleteதெறிக்க விடும் கார்டூன் மேளா ரகம் இல்லை
சிரிக்க வைக்கும் கார்டூன் மேளா😀😀😀😀😀😀
9.5/10
சூப்பர் சார்.....பட்டைய கிளப்பியாச்சு...சோடா அட்டைப்படம் செம சூப்பர்.....
ReplyDeleteகொலைப்படைய சீக்கிரமா போடுங்ங
சரவணக் குமார் சூப்பர் ஆசிரியரே
Deleteபல்லடம் ஆசிரியருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteசிறார் மத்தியில் காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தை துளிர் விடச் செய்வது என்பது சற்று சிரமமான முயற்சியே.
அதில் வெற்றி கண்டிருப்பது சந்தோஷமான விஷயம்.
தொடரட்டும் உங்கள் பணி.
ஜேன்இருக்கபயமேன்(ஜேன்part2) இன்னும்மறுபதிப்பு வரவலைங்க சார்.இருந்தாலும்part2 பேய்நகரம்.லக்கிலூக் கதைகளில் டாப் three'sல் இடம்பிடிக்கும் கதைங்க சார்.சிக்கலான சிச்சுவேசன்களைஸசும்மா அசால்டாக டீல் பண்ணியிருப்பீங்க .செம காமெடிமேளா சார் .கரூர்ராஜசேகரன்
ReplyDelete//.சிக்கலான சிச்சுவேசன்களைஸசும்மா அசால்டாக டீல் பண்ணியிருப்பீங்க//
Deleteஆகா....ஒரு பேய் கோச் வண்டி வரும்னு மட்டும் தான் இப்போ நினைவிருக்கு ; அசால்ட்டா நான் எதைக் கையாண்டேனோ - புக்கை தேடிப் பாக்கணுமே ?!
Yes sir. ஜேன் இருக்க பயமேன் மறுபதிப்பு வேண்டும்.
ReplyDeleteசீக்கிரமே போட்றலாம் சார் !
Deleteஇந்த மாத கதைகளின் வரிசை
ReplyDelete1. ப்ளூ கோட் - காட்டூன் தான் எனக்கு ரொம்ப பிடித்த காமிக்ஸ் - சிந்திக்க வைத்து சிரிக்க வைத்தது
2. டெக்ஸ் - தல ராக்ஸ் - ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்றது - ஓவியங்கள் சிறப்பு
3. ராபின் 2.0 - நன்று, இறுதி குற்றவாளி பெரிய திருப்பம். வசனங்கள் குறைவு படங்கள் கதையை வேகமாக நகர்த்தி சென்றது!
மொத்தத்தில் வருடத்தில் இந்த இரண்டாம் மாதம் முழு திருப்தி :-)
இந்த மாத கதைகளின் வரிசை :
Delete1. ராபின் 9.5 / 10
2.ப்ளு கோட் 9 / 10
3.டெக்ஸ் 7.5 / 10
My ratings for the month
Delete1.டெக்ஸ் 4.6 / 5
2. ராபின் 4 / 5
வோ
ReplyDeleteOLD IS GOLD ALWAYS..
ReplyDeleteஎந்த வருடமும் சென்னை புத்தக திருவிழாவை மிஸ் பண்ணியதில்லை.இந்த முறை தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு மமாதங்களாக கூடவே இருந்து மருத்துவமனையில் கவனித்துக்கொள்ளும் நிலை.வருத்தத்துடன் புத்தக திருவிழாவை தவறவிட்டேன்.ஆனாலும் அது தொடர்பான வெற்றிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மாயாவி கதைகள் வருவதும் டபுள் ஓ.கே. மற்றும் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும்... நிறைய நன்றிகளும்..
ReplyDeleteசார்.ஆன்லைன் லிஸ்டிங்கில் லைப்ரரி பேக்கிங் என்றபெயரில் கைவசம் இருக்கும் கார்ட்டூன் லிஸ்ட் பதிவிடுங்கங்கள்.இயன்றவர்கள்ஒரு ப்ளானோடு பள்ளிகளை தொடர்புகொள்ளலாம். . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபோட சொல்லியுள்ளேன் சார் ! நல்ல ஐடியா !
Deleteபறக்க மறந்த பறவைகள்....;
ReplyDeleteஇமைகளை மறக்க செய்த ரேஞ்சர்கள் 9.5/10
பல நாயகர்களும் சாதித்துள்ளது மிக்க மகிழ்ச்சியான செய்தி சார்.🥰
ReplyDeleteமாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை.//
மிகவும் சிறப்பு. எங்கள் மாணவப்பருவத்திலும் அன்று மட்டும் குறைந்த விலையில் காமிக்ஸ் கிடைத்திராவிட்டால் நம்மில் பலரும் கூட இன்று காமிக்ஸ் படிக்கும் பாக்கியம் பெற்றிருப்போமா என்று தெரியவில்லை. காலத்தின் கோலத்தால் விலையேற்றங்கள் எகிறியடித்தாலும் மாணவர்களுக்காக நீங்கள் செயற்படுத்தவுள்ள திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 💘
💥ஆரம்ப கால காமிக்ஸ் வாசகர் இரும்புகையாரை தேடுவது போல்,
💥80 & 90ஸ் கிட்ஸ் வேதாளரை தேடுவது போல்,
💥கண்டிப்பாக XIII, டைகர் போல் 2000ஸ் நாயகர்களையும் ஆவலாக தேடும் ஒரு காலம் வரும்.
தோர்கல் விற்பனை....😳இந்தச் செய்தி ஆச்சரியமளிக்கின்றது. 90ஸ் இல் ஹிட்டான ஹீமேன் ரக பல சிறுவர்களின் கார்டூன்களில் உள்ள அத்தனை அம்சங்களும் உள்ள இக்கதைகள் இளைய தலைமுறை வசம் புழங்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இந்த நிலை மாறும்.
ReplyDeleteதோர்கல் கதைகள் பெரும்பாலும் சொற்ப ஆல்பங்களாகவும் ஸ்பெஷல் வெளியீடுகளாக கனமான சைஸிலும் கனமான விலையிலும் இருப்பது தான் பிரச்சினையாக இருக்கும். தொடராக இல்லாத சிங்கிள் ஷாட் கதைகளை சிங்கிளாகவே வெளியிட்டுப் பாருங்கள் சார்.
அதிக ஆல்பங்கள் குறைந்த விலையில் பரவலாக பளிச்சென்று பார்வையில் படும்போது பலன் கிடைக்கலாம். ஒன்றை படித்தார்கள் என்றால் போதும். மீதியை வாங்க ஆரம்பிப்பார்கள்.
+1
Deleteபிழையான லாஜிக் நண்பரே !
Deleteஹார்ட்கவர் இதழ்களில் மொக்கை போட்டிடும் இதழ்கள் இரண்டே ; தோர்கல் புக்ஸ் முதலாவது & "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இரண்டாவது ! பாக்கி சகல ஹார்ட் கவர் இதழ்களும் தூள் பறத்துகின்றன !
And தோர்கலில் சிங்கிள் இதழ்களும் நம்மிடம் கணிசமாகவே உள்ளனவே ; அவற்றிலும் விற்பனையில் சுகமில்லையே !
😐😑😐
Deleteவிரைவில் வரவுள்ள முத்துக்காமிக்ஸ் 500 க்கு NBS போல் ஒரு மெகா சைஸ் சிறப்பு இதழ் வேண்டும் சார். தற்போதைய முன்னணி நாயகர்களுடன் இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, வேதாளர், கிர்பி, காரிகன் கிளாசிக் கதைகளும் முழுவண்ணத்தில் சிறப்பிக்க வேண்டும் சார் 🥰🙏
ReplyDelete+1
Delete"விரைவில்" என்பது குறைந்தபட்சமாக 2025 நண்பரே ; ஆண்டினில் முத்து இதழ்கள் அத்தனை அதிகமில்லை ! So இன்னும் நேரமுள்ளது !
Deleteஒரு மறக்க முடியாத ட்ரீம் ஸ்பெஷல் கண்டிப்பாக தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. காத்திருப்போம் சார்
Deleteநிச்சயமாய் மாணவர்களுக்கான மினிமம் பட்ஜெட் புத்தகங்களில் எங்கள் தற்போதைய ரசனைகளுக்குகதைகளை எதிர்பார்க்க மாட்டோம் சார்.பதிதாகப்படிக்கும் மாணவர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கும்தரத்தினில் ஜனரஞ்சகமாய் புத்தகங்கள் அமைய வேண்டும்என்பதே எங்கள் எதிர்பார்ப்பு .மீண்டும் பால்யத்திற்கு நாங்கள் திரும்பும் நல்ல வாய்ப்பினை தவறவிடமாட் டோம்.கரூர் ராஜசேகரன்
ReplyDelete// நிச்சயமாய் மாணவர்களுக்கான மினிமம் பட்ஜெட் புத்தகங்களில் எங்கள் தற்போதைய ரசனைகளுக்குகதைகளை எதிர்பார்க்க மாட்டோம் சார். //
Delete+1
As always we buy and read :-)
+1+2+3
Deleteநன்றி சார் !
Deleteஆசிரியர் சில பதிவுக்கு முன் மாடஸ்டி டைஜெஸ்ட் பற்றி சொன்னதாக ஒரு நினைவு. அதற்கு என்னுடைய சாய்ஸ்
ReplyDelete1. கத்தி முனையில் மாடஸ்டி
2. மாடஸ்டி in இஸ்தான்புல்
3. மரண கோட்டை
4. கானகத்தில் கண்ணாமூச்சி
5. கற்கால வேட்டை
6. நடுக்கடலில் அடிமைகள்
7. இரத்த சிலை
8. மந்திர மண்ணில் மாடஸ்டி
9. மரண இயந்திரம்
10. கார்வினின் யாத்திரைகள்
மற்றும் சில புதிய கதைகள்
சார்...மசாலா டீயோ ; ஏலக்காய் டீயோ ; மாடஸ்"டீயோ"- நீங்களும், நானுமா தான் ஆத்திட்டு இருக்கோம் ! அப்பப்போ கரூர் ராஜசேகரன் சார் மாத்திரம் வந்து ஒரு போண்டாவை போட்டுப்புட்டு போறார் !
Deleteகம்பெனிக்கு பாய்லரை பத்த வைக்க கரி வாங்கக் கூடக் கட்டாது !
மன்னிக்கவும் சார்.... இளவரசி பற்றிய உங்கள் கருத்துக்களை மிக தாமதமாகத்தான் நான் அறிந்துகொண்டது எனது தவறுதான்... மற்றபடி இளவரசி வெளி வந்தாலே எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சிதான்... எனது ஆசை Phantom போன்ற ஆர்டினரி ப்ளேயருக்கெல்லாம் Deluxe edition இரண்டு வெளியிட்டுள்ளீர்கள்... அப்படியிருக்க காமிக்ஸ் உலகின் நிரந்தர விராட் கோலியான இளவரசிக்கு கண்டிப்பாக ஒரு Absolute editionஆவது வெளியிட வேண்டும்... எந்த கதைகளை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் எங்களுக்கு கொண்டாட்டமே... ஏனென்றால் இளவரசியின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு கருப்பு முத்து என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ...
Deleteஎங்கள் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்ற விழைந்துள்ள இளவரசியின் முதல் ரசிகரான உங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி... இவண் இளவரசியின் நிரந்தர செயல் வீரர்கள்
@Dr.AKK..
Deleteமுத்து, ராணி, இந்திரஜால் என பல நிறுவனங்களிலும், பல மொழிகளிலும் வெளிவந்து இன்றும் சக்தி காமிக்ஸ் ல் ஆங்கிலத்தில் வெளிவருகின்ற மங்கா புகழ்பெற்ற எங்கள் வேதாள மாயாத்மாவை ஆர்டினரி பிளேயர் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்..😡👿👺😠💪
இவண்
இதயதெய்வம் வேதாளர் ரசிகர் மன்றம்..😍
டிசம்பரில் வெளிவந்த இளவரசி கதைகள் அட்டகாசம்.
Deleteதெளிவான ஓவியங்கள் & நல்ல கதைகள் கொண்ட ஒரு தொகுப்பாக வெளியிடலாம்.
ஏலே சம்முவம்..பாய்லரை தேய்ச்சு கழுவ போடு லே ....!
Deleteமக்கா இப்போ தான் தூங்கி முழிக்கிறாக ! ஆராச்சும் சாயா அடிக்க வாராவுகளான்னு பாப்போம் லே !
சார் வரும் ஞாயிறு பதிவு நம்ம மாடஸ்டி கிளாசிக் கலெக்சன் பற்றிய வோட்டிங் போடுங்க சார். எப்படி இருக்குனு பார்ப்போம்
Delete@Trichy Vijay..😍😘😃
ReplyDeleteSemma list ji..😍👍💪
பறக்க மறந்த பறவைகள்: கொள்ளையடித்த பணத்துடன் தான் இறந்து விட்டதாக நாடகமாடி பில்லி தன் காதலியுடன் எஸ்கேப். அவர்களைத் தேடி கொள்ளை கும்பல் தலைவன் குழுவுடன் பின்தொடர, இவர்களோடு ஒரு வெகுமதி வேட்டைக்காரன் இணைய தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. டெகஸ் & கார்சன் பில்லியை கண்டு பிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். கொள்ளைக் கும்பளைப் பிடித்தார்களா? பில்லை காப்பாற்றினார்களா என கொஞ்சம் பொறுமை சோதித்து சொல்கிறார்கள்.
ReplyDeleteகும், ணங், சத், டாமல் டூமில் என டெக்ஸ்க்கு இங்கு வேலை அதிகமில்லை. ஒரு பேமிலி டிராமா போல் கதை நகருகிறது. எனக்கென்னவோ டெக்ஸ் இந்த கதைக்கு சரியாக பொருந்தாததுப் போல தோன்றுகிறது. கிட் & டைகரை அனுப்பியிருந்தாலே பாதி வேலை முடிந்திருக்கும். சிங்கிள் ஆல்பத்தில் சொல்ல வேண்டியதை இரண்டு ஆல்பமாக இழுத்திருக்கிறார்கள்.
75-வது ஆண்டில் கொஞ்சம் பட்டாஸாக பறக்க விடு தல. ஓவியர் Freghieri ன் நேர்த்தியான சித்திரங்கள் பக்கங்களை புரட்ட வைக்கின்றன.
சிறக்கொடிந்தப் பறவைகள்....
//கிட் & டைகரை அனுப்பியிருந்தாலே பாதி வேலை முடிந்திருக்கும்//
Deleteஹி..ஹி...வயசுப் பசங்க வேற எங்கயாச்சும் பிசியா இருந்திருப்பாங்க சார் !
//////கொஞ்சம் பொறுமை சோதித்து சொல்கிறார்கள்.//////
Deleteகொஞ்சம் இல்லை.
ரொம்பவே சோதிக்கிறார்கள். ஊரு பட்ட கேரக்டர்ஸ். கினைமாக்ஸ் தேடி ஓட வேண்டியதா போச்சு. .
Marks : 7.5 / 10
This month Robin and tex are simply great in artwork and story telling. Blue coats as usual rocked
ReplyDelete:-)
Deleteஆமாங்க சார் தினமும் அதிகபட்சம் 5அல்லது6பதிவு கள் மட்டுமே வருகின்றன. . . மாடஸ்டி மொழிபெயர்த்தே ஆகணும்ன்னு ஷெரிப் புக்கும் பிரபல பிண்ணனி பாடகருக்கும் வேண்டுகோள் வைத்து ஒரு பதிவு போடுங்க சார்.தளமே தெறிக்கும்.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉங்களுக்கு எவ்வளவு கொலை வெறி???
Deleteஹிஹிஹி .அவங்களும் இண்ட்ரஸ்ட்டாதாங்க சார்.இருப்பாங்க.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteசார் வரும் ஞாயிறு பதிவு நம்ம மாடஸ்டி கிளாசிக் கலெக்சன் பற்றிய வோட்டிங் போடுங்க சார். எப்படி இருக்குனு பார்ப்போம்
ReplyDelete////Vijayan15 February 2023 at 21:42:00 GMT+5:30
ReplyDeleteபிழையான லாஜிக் நண்பரே !
ஹார்ட்கவர் இதழ்களில் மொக்கை போட்டிடும் இதழ்கள் இரண்டே ; தோர்கல் புக்ஸ் முதலாவது & "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இரண்டாவது ! பாக்கி சகல ஹார்ட் கவர் இதழ்களும் தூள் பறத்துகின்றன !
And தோர்கலில் சிங்கிள் இதழ்களும் நம்மிடம் கணிசமாகவே உள்ளனவே ; அவற்றிலும் விற்பனையில் சுகமில்லையே !///----
ஆசிரியர் சார்@
"பிஸ்டலுக்குப் பிரியா விடை"- மொக்கையை போடுதா....என்ன கொடுமை சார் இது???
மார்கோ எனும் மதனமோகன சுந்தரி😍😍😍 சும்மா தெறிக்க விட்டாளேங் சார்...
இதழ் வெளியான 2019ல சில மாதங்கள் தளமே அல்லோகலப் பட்டதே...!!!
இதழும் இடையே ஸ்டாக் அவுட் ஆனதாகவே இருந்தது. சில பதிவுகளுக்கு முன்னால், ஓரு பெட்டியை தங்களது பணியாளர்கள் உடைக்காமல் வைத்து இருந்ததாகவும், அதை உடைத்து பார்த்தபோது அது பி.பி.வி. எனுவும், அதில் உள்ள இதழ்கள் மாத்திரமே விற்பனைக்கு எஞ்சியுள்ளதாக தெரிவித்து இருந்தீர்கள்...
இப்போது மொக்கை போடும் ஹார்டு கவர் லிஸ்டில இணைத்தது எங்ஙனம்?? மார்கோவின் அகில உலக ரசிகர் மன்றம் சார்பில் வழிந்து வழிந்து கண்ணடிக்கி ச்சே மறுப்பை பதிவு செய்கிறோம்....🤪🤪🤪
இதுவரை வெளியான ஹார்டு கவர் இதழ்களில் போக்கு காட்டி மொக்கை போட்டு வருவது இரண்டு தான்
1.ஆகஸ்ட் 2016ல வெளியாகி எல்லா விழாக்களுக்கும் உலா போய்வரும் " ஈரோட்டில் இத்தாலி"
2.மென்நடை போடும் தோர்கலின் இரண்டு ஹார்டு கவர் புக்ஸ்
பி.பி.வி. வெளியானது 2019ஆகஸ்டு.... எத்தனை எத்தனை பரபரப்பை அப்போது அது கிளறியிருந்தது.... அனைத்தும் ரீவைன்ட் பண்ணி பாருங்கள் சார்...
இப்படி மார்கோ மேல பழியை போட எப்படித்தான் தங்களுக்கு மனசு வந்ததோ....!!!
---இவன் மதனமோகன சுந்தரி மார்கோ மன்றம்-சகல கிளைகள்!🥰🥰🥰😘😘😘😘
+11111111111111
DeleteI am big fan for that Sandaaaaaleeeeeeeee
Deleteமார்கோவெல்லாம் ரசிப்பாராம் .மாடஸ்டிமட்டும் புடிக்காதாம்..புள்ளிவிபரபுலியாரே. இது நியாயமாரே.கரூர்ராஜசேகரன்.
ReplyDeleteபுலி பசித்தாலும்.......!!!!😉
Deleteபுலிக்கு சரி உங்களுக்கு ஏன் சாமி :-)
Delete40வருசமா புல்லு சாப்டபுலி இப்ப பெமிகான்தான் பெஸ்ட்டுங்கறதுதான் உறுத்துது.அந்த ஊர்லயே பெமிகான்லாம் நல்லால்லன்னு தட பண்றாங்களாம் .
ReplyDelete@Editor Sir..😍😘
ReplyDeleteவேதாளர் புத்தம்புது கதைகளை S70/S60/S50/S40 ..ல் B/wல் வெளியிடுங்கள்.🙏💐🌷
வேதாளரின் Good oldiesகளை கலரில் மாதம்தோறும் வெளியிடுங்கள்..😍🙏🙏💐
வேதாளரின் சிறு சிறு கதைகளை B/wல் Rs.50/75 விலையில் புக்ஃபேரில் வெளியிடுங்கள்..😘😃👏👍❤💜
வேதாளர் போஸ்டர்,
Deleteவேதாளார் புக்மார்க்
வேதாளர் பேட்ஜ்
வேதாளர் டீ டர்ட்
வேதாளர் கேப்
வேதாளர் முகமூடி.....
இதெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சுங்க... இதுகளும் ஒரு பக்கம் வரட்டுமே....?!
அடுத்த வருடம் வேதாளர் கிட்வாக்கருக்கு 90வது பிறந்தவருடம் வருது... அதுக்கு ஒரு மெகா குண்டுபுக்....🤪
@STV...😍
Deleteரொம்ப நன்னிங்கோ..
வேதாளம் முத்திரை
Deleteவேதாளர் ஷு
வேதாளர்...
வேதாளர் பெல்ட்
Deleteவேதாளர் டுப்பாக்கி